Saturday, December 08, 2018

வருடங்கள் 7 !!

நண்பர்களே,

வணக்கம். 515 பதிவுகள் ! அவற்றுள் ஒரு 100 துண்டும், துக்கடாவுமான ரகமென்றே வைத்துக் கொண்டாலும், எஞ்சிடக் கூடிய பாக்கி 400+ பதிவுகள் full fledged ones என்பதில் சந்தேகமே கிடையாது ! அந்த 400+ நாட்களிலும், கம்பியூட்டரின் முன்னே குந்திடும் போதோ ; பேப்பரையும், பேனாவையும் எடுத்துக் கொண்டு அமரும் போதோ - "என்ன எழுதுவது ?" என்று விழித்த தருணங்கள் ரொம்ப ரொம்ப சொற்பம் ! ரயில்வே பிளாட்பாரங்களில் ; ஸ்லீப்பர் பஸ்களில் ; ஏர்போர்ட்களில் ; வீட்டின் மொட்டை மாடியில் ; ஹோட்டல்களில் ; அட - பாத்ரூமின் வாஷ்பேசின் திண்டின் மீது அமர்ந்தும் கூட டைப்பியுள்ளேன் - தங்குதடைகளின்றி ! ஆனால் சமீபமாய் காற்று வாங்கி வரும் நம் தளத்தைப் பார்க்கும் போது திடீர் கற்பனை வறட்சி தலைதூக்குகிறது !இந்த கிருஸ்துமஸ் வந்தால் நமது பதிவுப் பக்கத்துக்கு 7 வயது பூர்த்தியாகிறது ! And "உசக்கே-கீழே" என்று roller coaster சவாரி செய்து வந்துள்ள இதற்கான வரவேற்பு, தற்சமயமாய்த் தரைதட்டி நிற்பது இன்றைய யதார்த்தம் ! 

இப்படியொரு பொழுது என்றேனும் புலருமென்பதை நான் எதிர்பார்க்காதோ ; யூகிக்காதோ இருக்கவில்லை தான் ! சொல்லப் போனால், இத்தனை நெடியதொரு பயணம் சாத்தியப்பட்டிருப்பதே nothing short of a miracle என்பேன் ! "வாட்சப்" எனும் அட்டகாசம் கோலோச்சத் துவங்கிய போதே ; ஆங்காங்கே நிறைய க்ரூப்கள் உருவாகத் துவங்கிய போதே - இந்த வலைப்பக்கச் சமாச்சாரங்கள் எல்லாமே ஹைதர் அலி காலத்துச் சம்பவமாய்த் தோன்றத் துவங்கியது நிஜமே ! நினைக்கும் போது பதில் போட்டுக் கொள்ளலாம் ; குறுகியதொரு closed வட்டம் எனும் போது - பொதுவெளியில் அவசியமாகிடக் கூடிய formalities-க்கு அங்கே அவசியங்கள் லேது ; எதிர்மறைக் கருத்துக்களாக இருப்பினும் தயக்கங்களின்றிப் பகிரலாம் ; இத்யாதி ; இத்யாதி என்று அவற்றுள் வசதிகள் ஏராளம் அல்லவா ? But வாட்சப்பின் ஆளுமைக்குப் பின்னேயும், இங்கே ஜாலியாய்க் குழுமுவது, ஒருவித நண்பர்களின் மீட்டிங் போன்றே என்பதில் ஏது ரகசியம் ? கொஞ்சம் அரட்டை ; கொஞ்சம் கலாய்ப்பு ; கொஞ்சம் காமிக்ஸ் அலசல் என்ற routine வாரயிறுதிகளுக்கு set ஆகியிருந்தது ! ஆனால் வெவ்வேறு காரணிகளின் பொருட்டு அதனில் ஸ்பீட்-பிரேக்கர் எழுந்துள்ளது தான் துரதிர்ஷ்டம் ! Without a doubt - அந்தக் காரணிகளின் மையமே அடியேன் தான் என்பதில் எனக்குச் சந்தேகங்களில்லை! விலகிப் போக ஆளுக்கொரு காரணமிருந்திருக்கலாம் - ஆனால் அவை சகலங்களுக்கும் மத்தியிலுள்ள ஒரே common factor - yours truly தானே ? 

டாப் கியரில் க்ரே மார்க்கெட் ;  ஏதேதோ விற்பனைகள்  ; வியாபாரங்கள்  - என்ற தனித் தடத்தில் ஓடிக் கொண்டிருந்ததொரு  வண்டி, சிறுகச் சிறுக தொய்வு கண்ட போது - அது சார்ந்த இறுக்கங்கள் என் மீதான எரிச்சலாய் உருமாற்றம் கண்டது பழங்கதை ! இன்றைக்கோ ஸ்கேன்லேஷன்கள் எனும் பணியிலும், "ஆவணப்படுத்தும்" மும்முரங்களிலும் ; அவற்றை படித்து ரசிப்பதிலும் ஒரு அணி ஈடுபட்டிருக்கும் வேளையில் - 'சற்றே அடக்கி வாசித்தால் நலமல்லவா ?" என்று நான் முன்வைக்கும் கேள்வி பிடிக்காது போய் கணிசமான முகஞ்சுளிப்புகளுக்கு ஆளாவது இன்றைய புதுக்கதை ! "இது உலகெங்கும் நடக்கும் விஷயம் தானே ? உனக்கு ஏன் காந்துது அப்பு ?" என்று அவர்களது வாட்ஸப்வாய்ஸ்களும், மைண்ட்வாய்ஸ்களும் கேட்கின்றன தான் ! ஆனால் உலகெங்கும் நடக்கும் இதே  ஸ்கேன்லேஷன் முயற்சிகளின் பின்னே, இங்கு வெகு சிறப்பாய் அரங்கேறும் "நீ இப்டிக்கா குத்துனா- நான் அப்டிக்கா குத்துவேன் !" என்ற குடுமிபிடிச் சண்டைகள் நடைபெறுமா ? என்று சொல்லத் தெரியவில்லை எனக்கு !! பவுன்சரின் முதல் இதழ் வெளியாகவிருந்த வேளையில் - நம்மவர்கள் முதல் ஆல்பத்தின் ஒரு பகுதியினை தமிழாக்கி நெட்டில் வெளியிட்டிருந்தது நினைவுள்ளதா ? அது சார்ந்த தகவல் எனக்குக் கிட்டியதே - பாரிஸிலிருந்து - பவுன்சர் படைப்பாளிகளிடமிருந்து தான் ! இங்கேயே - அணி அணியாய்ப் பிரிந்து கிடக்கும் நண்பர்களுள் சிலர், அந்த pdf file-ஐ பாரிசுக்கு அனுப்பிய கையோடு  - "இந்த ஸ்கேன்லேஷன் செய்திருக்கும் வாசகர்கள் எடிட்டருக்கு ரொம்பவே வேண்டப்பட்ட கோஷ்டியாக்கும் ; so அவர் அதன் மீது நடவடிக்கை எடுக்காது கண்டும்-காணாதும் இருக்கிறார் !! பவுன்சரை இந்தியாவில்   வெளியிட, ஏகப்பட்ட பிற மொழிப் பதிப்பகங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கும் இந்த வேளையில் - இது போன்ற முயற்சிகளை கிள்ளிடாவிட்டால் - சுத்தமாய் மார்க்கெட் நாசமாகிடும் !" என்றொரு மின்னஞ்சலையும் தட்டி விட்டிருந்தார்கள் ! அவர்களோ இதுபோன்ற ஒரு நூறு பஞ்சாயத்துக்களை உலகெங்கும் பார்த்து, கடந்து சென்று , முற்றிலும் வேறொரு உச்சத்தைத் தொட்டு நிற்போர் எனும் போது - அந்த மின்னஞ்சலை எனக்கு forward செய்து விட்டிருந்தனர் - "இதை என்னான்னு பார்த்துக்கோப்பா !" என்றபடிக்கு ! அன்றைக்கு காலையில் நான் கண்விழித்ததே இந்த மின்னஞ்சலில் தான் !  So பல் கூட விளக்காது, அந்தக் காலைவேளையில் ஒரு  காரமான பதிவை சுடச் சுடத்  தட்டி விட்டிருந்தேன் என்பது நினைவுள்ளது ; அதன் நீட்சியாய் கணிசமான அதிருப்தியையும் ;வருத்தத்தையும் உங்களிடம் ஈட்டியிருந்தேன் என்பதும் நினைவுள்ளது ! மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்று சும்மாவா சொன்னார்கள் ??

இன்றைக்கும் இங்கே பகிரங்கமாய் - "நான் தான் பவுன்சர் பாகம் எட்டை மொழிபெயர்த்துப் போட்டேன் ; கென்யாவுக்குப் படம் வரைந்ததே நான் தான்  ; டெக்ஸ் வில்லருக்குக் கதை எழுதியது அடியேனே " என்றெல்லாம் மார்தட்டிப்  பதிவிடும் கூத்துக்களைப் பார்க்கும் போது - "அடக்கி வாசிக்கலாமே ?" என்று நான் கோருவதன் பின்னணியே - "இது கூரையினில் ஏறி நின்று கூவிடும் சமாச்சாரமல்லவே ?" என்பதையாவது புரியச் செய்யும் பொருட்டே ! தொடர்ந்து - "லயன் காமிக்ஸ் ; முத்து காமிக்ஸ் இதழ்களை ரெஜிஸ்டர் செய்து விட்டுள்ளோம் !" என்ற எனது அறிவிப்பு - சில பல கடுப்பு மீட்டர்களை உச்சத்துக்கு கொண்டு செல்ல உதவியதையும் யூகிக்க லியனார்டோ தாத்தாவின் ஜீனியஸ் அவசியமில்லை தானே ? ஆனால் "இது எங்களது ஜனநாயக உரிமையாக்கும் ; முட்டைக்கண்ணன் நீயென்ன நாட்டாமை பண்ணுறது ? " என்று பூரணகும்ப மரியாதை செய்து விட்டு,இங்கிருந்து விலகிப் போயுள்ளோரும் கணிசம் என்பதில் ஏது இரகசியம் ? உங்களது ஆர்வங்களின் வெளிப்பாடுகள் - உங்களுக்கு மத்தியிலேயே ; உங்களின் closed க்ரூப்களுக்குள்ளேயே ஒரு விவாதப் பொருளாகிடும் போது, அதன் நோவுகள் விடிவது என் தலையில் தான் ! ஆனால் அதைக் கருத்தில் கொள்ள நேரமின்றி - "பயபுள்ளே சோலோவா காமிக்ஸ் மார்க்கெட்டை  ஆட்டைய போட நினைக்கிறாண்டோய் ; அதான் இடைஞ்சல் பண்ணுறான் !!" என்ற ரீதியில் வருந்துவோரே கணிசம் !!

அதன் இன்னொரு பரிமாணம் தான் -  "போன வருஷம் சந்தா + ரத்தப் படலம் என்று 9000 ரூபாய்க்கு வெடி வைச்சாச்சு ; இந்தவாட்டி இப்போதே 6000 க்கு வேட்டு வைச்சுப்புட்டான் ! இன்னமும் ஈரோடு புத்தகவிழாவின் இதழ்கள் பற்றிய அறிவிப்பும் பாக்கி இருக்குது !! மிடிலே !!" என்ற வாட்சப் புலம்பல்ஸ் !! ஆனால் "இரத்தப் படலம் வேண்டாமே - ப்ளீஸ் ?" என்று தலைகீழாய் நின்றவனே நான் தான் என்பது வசதியாய் மறந்து போவது தான் சங்கடமே ! For sure - ஆண்டின் காமிக்ஸ் பட்ஜெட் எகிறி வருவதில் எனக்கு நிறையவே தர்மசங்கடம் !! ஆனால் நமக்கொரு குறைந்த பட்ச வெளியீட்டு எண்ணிக்கையின்றிப் போயின் - எகிறி வரும் நிர்வாகச் செலவினங்களைக் கட்டுக்குள் வைத்திருத்தல் அசாத்தியம் என்பதை எத்தனை பேர் உணர்ந்திருப்பர் என்று தெரியவில்லை !  Front desk-ல் 3 பெண்கள் ; புத்தக விழாக்கள் / ஏஜெண்ட் தொடர்புகளின் பொருட்டு இராதாகிருஷ்ணன் அண்ணாச்சி ; அப்புறம் DTP ; டிசைனிங்கிற்கென 3 பெண்கள் ; accounts-ன் பொருட்டு ஒரு பெண் ; பேக்கிங்கிற்கென பையன் ஒருவன் ; அப்புறம் மைதீன் என்ற குறைந்தபட்ச ஆட்பலமே 10 பேர் என்றாகிறது ! விரலைச் சப்பியபடிக்கே பணியாற்றத்  தயாராய் நான் ஒருத்தன் இருந்தாலுமே - இதரவர்கள் மாதம் பிறந்த முதல் தேதிக்கு சம்பளம் ஏதிர்பார்ப்பவர்களே ! இட வாடகை கிடையாது  என்றாலும், இவர்களது சம்பளங்கள் ; போன் செலவினங்கள் ; பயணச் செலவுகள் ; போனஸ் ; நிலுவைச் சேதாரம் என்று மாதமொன்றுக்கு குறைந்த பட்சமாய் ஒரு லட்சமாவது தேவை நமக்கு ! ஆண்டுக்கு சுமார் 12 இலட்சம் எனும் போது - இந்தத் தொகையினை ஒவ்வொரு இதழின் costing-களிலும் இணைத்திடல் அவசியம். So ஆண்டுக்கு 40 புக் வெளியிட்டால் - ஒவ்வொன்றின் தலையிலும் ஏறிடும் நிர்வாகச் செலவினச் சுமை சுமார் ரூ.30000 ! இதையே நான் ஆண்டுக்கு 30 புக்காகிடும் பட்சத்தில், நி.சு.ரூ.40000  என்ற கணக்குப் போடுவது ராக்கெட் விஞ்ஞானம் அல்ல தானே ? So மொத்த எண்ணிக்கையைக் குறைப்பது - இதழ்களின் individual விலைகளைக் கூடச் செய்யும் inverse effect கொண்டிருக்கும் !

2014-ன் சமீபத்தினில், புத்தக விழாக்களில் இடம்கிட்டிட வேண்டுமெனில் கைவசமுள்ள இதழ்களின் எண்ணிக்கையைக் கணிசமாய்க் கூட்டிட வேண்டும்ன்ற நிர்பந்தம் எழுந்த பின்னரே நாம் மறுபதிப்புக்கென ஒரு தடம் ஒதுக்கினோம் ; இதழ்களின் / ஜானர்களின் எண்ணிக்கையினைக் கூட்டினோம் என்பதில் இரகசியமேது ? அதுவரையிலும் ஆண்டொன்றுக்கு 24 இதழ்களோடு தானே வண்டி ஒட்டிக் கொண்டிருந்தோம் ? Oh yes - தற்போது நம்மிடம் கணிசமான எண்ணிக்கையில் டைட்டில்கள் உள்ளன எனும் போது வேகத்தை மட்டுப்படுத்திக் கொள்ளல் சாத்தியமே ! 2019-க்கு இப்போதுள்ள பட்ஜெட்டே ஜாஸ்தி எனும் சங்கடம் நிலவிடுவது நிஜமே எனில் - "ஈரோடு ஸ்பெஷல்" என்று புதுசாயொரு வெடியினைப் பற்ற வைக்காது - ஜம்போ சீசன் 2-ன் ஸ்பெஷல் இதழொன்றை அதற்கென ஒதுக்கிட்டால் சிக்கல் தீர்ந்தது ! காலங்காலமாய் எங்கள் ஊர்க்காரர்கள் செய்துவரும் நிஜ வெடிகளுக்கே தடா போடுவது சாத்தியமாகிடும் போது - தம்மாத்துண்டான நமது வெடிகளெல்லாம் ஒரு மேட்டரா ? So யதார்த்தங்களின் இன்னொரு பரிமாணத்தை உள்வாங்கிட இயலாது, ஏதேதோ கூத்துக்களை தன்னிச்சையாய் நானே அடித்து வருவதாய் நினைத்துக் கொண்டு இங்கே பங்கேற்க மனமின்றிப் போவோரும் கணிசமே ! Gentlemen : இந்த நொடியினில்  கடிவாளம் பூட்டப்பட்டிருக்கும் குதிரையோ / கழுதையோ சாட்சாத் நானே தான் ; வண்டியோட்டும் இடத்தில அமர்ந்தபடிக்கே  நிறையத் தீர்மானங்களை எடுப்பது  இந்தத் தொழிலின் கட்டாயங்களும், நிர்பந்தங்களுமே என்பது தான் நிஜம் ! ஆனால் நிஜங்கள் தான் எப்போதுமே நிசப்தங்களில் கரைந்திடுகின்றனவே ?

கொடுமையெனும் வானவில்லின் மறுமுனையோ  - "நீ இந்த ஸ்கேன்லேஷன் ; ஸ்கேனிங் அணியிடம் கூட கண்சிவக்க மறுக்கும் இநா-வாநாவா இருக்கியே ?!! உனக்கோசரம் குரல் கொடுத்து நான் பல்ப் வாங்கிக்கிட்டது தான் மிச்சமென்று" கோபித்துக் கொண்டு புறப்படும் நண்பர்கள் !! அட - இது ஒருபக்கமெனில், "நீ என் கேள்விக்குப் பதில் சொல்லலை ; நான் நாலு சாத்து சாத்தினாலும், நீ சிரிச்சமானிக்கே எனக்கு பதில் சொல்லலை ; எனக்குப் பிடிக்காதவர்களின் வினாக்களுக்குப் பதில் சொல்லிக்கிட்டே இருக்கே ; நீ சொல்லும் பதில்களில் எனக்கு திருப்தியில்லை ; நீ புளுகுறே !!" என்ற ரீதியினில் பின்னூட்டங்களினூடே ரௌத்திரங்களை வளர்த்துக் கொண்டு ஒதுங்கிக் கொண்டோரும் கணிசம் ! இன்னொரு பக்கமோ - "என் ஆதர்ஷ ஹீரோ / ஹீரோயின் / தொடருக்கு நீ வாய்ப்புக் கொடுக்காது இழுத்தடிக்கிறாய் ! கரடியாய்க் கத்தினாலும் என் பேச்சுக்கு நீ காது குடுக்க மறுக்கிறாய் !! So உன்னோடு காய் " என்று மௌனம் காப்போரும் உண்டு தானே ?!

இந்தக் களேபரங்கள் எவற்றினுள்ளும் தலை நுழைக்காது, திரளாய் இங்கே நடமாட்டம் தென்படும் தருணங்களில் ஜாலியாய் தலைகாட்டி விட்டுச் செல்லும் நண்பர்களும் கணிசமாய் உண்டு ! ஆனால் இங்கே ஜனத்தைக் காணோமெனும் போது - 'சரி...வேலையைப் பார்ப்போம் !" என்றபடிக்கே அவர்கள் நடையைக் கட்டிவிடுவது இயல்பு ! And இப்போதும் அதுவே நடந்தும் வருகிறதென்பது எனது யூகம் ! இவைகளெல்லாம் ஏதேதோ காரணிகள் என்றால் - ரொம்ப ரொம்ப சிம்பிளான இன்னொரு காரணத்தையும் கை காட்டிடுவேன் !! அது தான் மிஸ்டர் Boredom-ன் கைங்கர்யம் !! வயதுகள் ; ரசனைகள் ; பொறுப்புகள் - என எல்லாமே மாறிடும் தருணத்தில், ஒரே மாதிரியான நமது routine 7 வருடங்களில் போர் அடித்துப் போயிருக்க வாய்ப்புகள் ஏராளம் !! Maybe a classic case of The Seven year itch ?!!

இவை சகலத்துக்கும் மத்தியினில், அமைதியாய் இங்கே வருகை தந்த கையோடு - பதிவுகளை படித்து விட்டுக் கிளம்பிடும் மௌன வாசகர்கள் ! And விடா நம்பிக்கையோடு அவ்வப்போது இங்கே எட்டிப் பார்த்து, நிலவரத்தில் மாற்றம் ஏதும் உள்ளதா ? என்று தவிக்கும் நண்பர்கள் !! இவர்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாய் - சீனியர் எடிட்டர் !! இங்கே அரூபமாய் அரங்கேறி வரும் அதிருப்திகளைப் புரிந்து கொள்ளத் தெரியாதவராக - இன்று மதியம் என்னிடம் - "பதிவை யாராச்சும் hack பண்ணி, பின்னூட்டங்கள் விழ விடாது தடுக்கிறார்களா ?" என்று சீரியசாகக் கேட்டார் !! ஒவ்வொரு வாரமும் சிறுபிள்ளையின் உற்சாகத்தோடு இங்கே அரங்கேறும் அமளிகளை ரசித்து வருபவருக்கு இந்த திடீர் மௌனத்தின் பின்னணி புரியாது போனதன் வெளிப்பாடே - வெள்ளந்தியான அந்தக் கேள்வி ! அழுவதா-சிரிப்பதா ? என்று தெரியாத எனக்கு, அவருக்கான  பதில் சொல்லிடவாவது இந்தப் பதிவு பயன்படுமென்று நினைக்கிறேன் !

"அட..தம்பி சென்டிமென்ட்டைப் புளியோ புளின்னு புளியறாண்டோய் !!" என்ற நமட்டுச் சிரிப்புகளுக்குப் பஞ்சமிராது என்று புரிந்தாலும் - as usual மனதில் பட்டதை அப்படியே பதிவிட்டுள்ளேன் ! எது எப்படியோ - ஒற்றை ஆசாமியின் மீதான அபிமானமோ, அபிமானமின்மையோ, காமிக்ஸ் எனும் சுவையினை எவ்விதத்திலும் பாதித்திடக் கூடாது என்ற எண்ணம் கொஞ்ச காலம் முன்னேவே எனக்குள் தலை தூக்கிவிட்டிருந்தது ! அதன் வெளிப்பாடே ஜம்போ காமிக்சில் 'நறுக்' என கதையைத் தாண்டி எவ்வித சமாச்சாரங்களுக்கும் இடம் நஹி & ஆசிரியர் ; புடலங்காய் ; புண்ணாக்கு என்ற பெயர்களே வேண்டாமே என்ற தீர்மானம் ! 45+ ஆண்டுகளாய்க் காத்து  வருமொரு சமாச்சாரத்தை நான் ஒருத்தன் கோக்கு மாக்காகிடக் கூடாதல்லவா ?  இது சகலத்துக்கும் ஒரு ஜாலியான flipside-ம் இல்லாதில்லை ! நிசப்தமே கச்சேரியென்றாகிடும் போது - "ஜால்ரா அணி" என்ற வாதமே காணாது போகின்றதல்லவா ? 😃😄

அந்தமட்டிற்கு சந்தாக்களின் துரிதத்தினை இந்த சமீப நிகழ்வுகள்  எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதில் உங்களின் பெருந்தன்மைகளும், ஆண்டவனின் கருணையும் பிரதிபலிக்கின்றன ! அதிலும் icing on the cake - 'பரபர' வென பதிவாகி வரும் சந்தாக்களின் 90% - A B C D E என சர்வ ஜானர் சந்தாக்களே ! Thank you ever so much guys !! Much appreciated !! And keep it going please !!

So முன்செல்லும் நாட்களில் இங்கிருந்து நாம் பயணிப்பது எங்கே ? என்ற கேள்வி எழுந்திடலாம் தான் ! Simple !! எப்போதும் போல் இங்கே நமது திட்டமிடல்கள் ; இதழ்களின் previews ; reviews என்று நான் பகிர்ந்திடுவது தொடரும் ! Maybe வாராவாரம் ஒரு பதிவு என்பதை இனி 10 நாட்களுக்கொருமுறை என்று மாற்றம் செய்து கொள்ளலாம் ! நண்பர்களின் பங்களிப்பு கிட்டிடும் பட்சத்தில் interactive ஆகவும் ; அவ்விதம் இல்லாது போகும் பட்சத்தில் Facebook-ல் நாமிடும் பதிவுகள் போல - இதுவொரு தகவல் பலகையாக செயல்பட்டிடும் !

அதன் முதல் கட்டமாய் - இதோ புத்தாண்டின் ஒரு மைல்கல் இதழின் அட்டைப்பட preview ! கொடுமை என்னவெனில் - 30 இலட்சம் பார்வைகளைக் கொண்டாடும் இதழ் சார்ந்த பதிவு - ஆளில்லா டீ கடையின் ஆற்றலாகிடக் கூடுமென்பதே !! Anyways - இதோ "அலைகடல் அசுரர்கள்" இதழின் அட்டைப்பட & உட்பக்கப் previews !

ஓராண்டின் இடைவெளிக்குப் பின்பாய்த் தலைகாட்டிடும் "லயன் கிராபிக் நாவல்" ஒருவித சந்தோஷத்தைக் கொணர்கிறது - simply becos இதன் இதுவரையிலான 6 இதழ்களுமே ஒவ்வொரு விதத்தில் செம சுவாரஸ்யமான அனுபவங்களைக் கொணர்ந்துள்ளன ! இம்முறையும் அதனில் துளி கூட மாற்றமிராது என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாய் உள்ளது ! (நமக்கு) முற்றிலும் புதியதொரு கதை பாணி ; மெர்செலாக்கும் சித்திரங்கள் ; கலரிங் - என இந்த 3 பாக ஆல்பம் - புதிதாய்ப் படிக்கவுள்ளோருக்கு நிச்சயமொரு அட்டகாச அனுபவமாய் இருக்கும் ! அட்டைப்படங்கள் இரண்டுமே ஒரிஜினல்கள் என்பதால் நம் பணி அந்த எழுத்துருக்களை வடிவமைப்பதோடு நிறைவுற்றது ! பராகுடா - 2019-க்கொரு அதகளத் துவக்கமாக அமைந்திடுமென்று நம்புவோமாக !! Fingers crossed !!

அப்புறம் ஜம்போ - சீசன் 2-ன் பொருட்டு ஒரு செமத்தியான தொடர் ஏற்பாடாகியுள்ளது ! நிச்சயமாய் Jumbo-ன் அடுத்த சுற்றுக்கு இந்த ஆல்பங்கள் செம கெத்தைத் தந்திடும் என்பது நிச்சயம் !! பிப்ரவரியில் அறிவிப்பு  !!

அப்புறம் டிசம்பர் இதழ்கள் சார்ந்த நமது YouTube வீடியோ இங்கே : https://youtu.be/DXWvbsvb_28

Before I  wind off -  புத்தக விழா சார்ந்த சில சேதிகள் :

 • திண்டுக்கல் நகரில் ஞாயிறன்று (9th Dec ) நிறைவுறும் புத்தக விழாவினில் நமக்கு "மோசமில்லை" என்ற ரகத்தில் விற்பனை அமைந்துள்ளது ! Of course - மதுரையின் விற்பனையில் பாதி கூட லேது என்றாலும், முதல் தடவைக்கு நமக்கு இது ஓ.கே தான்  !!
 • வரும் 21-ம் தேதி கும்பகோணத்தில் இன்னொரு புத்தக விழா துவங்கிட, நமது கேரவன் அடுத்ததாய் அங்கே பயணிக்கவுள்ளது ! அங்கும் நமக்கிது முதல் அனுபவம் என்பதால் என்ன எதிர்பார்ப்பதென்று தெரியவில்லை !! பார்ப்போமே !!
 • சிறு நகரங்களில் இப்போதெல்லாம் தொடர்ச்சியாய் புத்தக விழாக்கள் நடைபெறுவது ரெகுலராக நிகழ்வாகி விட்டது ! ஒற்றை வருடமாவது, சளைக்காது அவற்றின் பெரும்பான்மைக்குப் பயணித்துப் பார்ப்பதென்ற உத்வேகத்தில் உள்ளோம் - கைவசமுள்ள ஸ்டாக்கின் பளுவைக் கருத்தில் கொண்டு !! ஆண்டவன் நமக்குத் துணை புரிவாராக !! 

Bye guys ; have a lovely weekend !! நான் தோர்கலோடு பொழுதைக் கழிக்கப் புறப்படுகிறேன் ! See you around !

295 comments:

 1. கனவெல்லாம் கலீபா...மதிமந்திரி இனிமே 2020 தானா...

  ReplyDelete
  Replies
  1. அதுவும் நண்பர்களின் பெரும்பான்மை மனசை வைச்சாக்கா !!

   Delete
 2. பத்து எண்றதுக்குள்ள..!

  ReplyDelete
 3. டியர் விஜயன் சார்

  "அலைகடல் அசுரர்கள்" - கண்டியப்பாக நமது வெளியீடுகளில் இந்த இதழ் தனி இடம் பிடிக்க போவது உறுதி .....

  புது வருடத்தில் வெளி வரும் "தோர்கல்" + "அலைகடல் அசுரர்கள்" + "டெக்ஸ்" மூன்றுமே சரவெடியாக வெடிக்க போகிறது ....

  உண்மையாகவே ஜனவரி மாதத்திற்காக I am waiting ....


  திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்

  ReplyDelete
  Replies
  1. சென்னை புக் பேரை மேற்பார்வை எடுத்து கலக்குங்க ப்ளூ..

   Delete
  2. //புது வருடத்தில் வெளி வரும் "தோர்கல்" + "அலைகடல் அசுரர்கள்" + "டெக்ஸ்" மூன்றுமே சரவெடியாக வெடிக்க போகிறது ....//

   ஒரு கிலோ சர்க்கரை பார்சல்லல் !!

   Delete
 4. அட்டைப்படமே அசத்துது..2019 ஆரம்பத்திலேயே அட்டகாசம் தான்

  ReplyDelete
 5. ஞாயிறு பதிவு உண்டா சார்...??

  ReplyDelete
 6. போன பதிவுலியே என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாமே ஏமாத்திப்புட்டீங்கன்னு கடுப்புல தான் இருந்தேன்..

  ReplyDelete
  Replies
  1. போன வாரம் பதிவே போடலைங்கிறப்போ கேள்வி எங்கே வந்துச்சோ ?

   Delete
  2. அதை தான் கேட்டிருந்தேன்...

   Delete
  3. யோவ்...ரம்மி என்னை மாதிரி வழவழான்னு சொல்லாம கரீட்டா கேளுய்யா...:-)


   சார்....போனவாரம் ஞாயித்து கிழமை இன்னிக்கு பதிவு வருமா ன்னு கேள்வி கேட்டிருந்தாரு ..பதிலும் வரல .பதிவும் வரல அப்படின்னு கடுப்புல இருந்தாராம் நம்ப ஆளு..:-))

   Delete
 7. அவரவர் பார்வையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள். But இதுவும் கடந்து போகும். Any Way 2019 ஐ இரு கரம் நீட்டி வரேற்போம்.

  ReplyDelete
 8. Dear Edi, I don't understand why you get into situations like this way to often! மசூதில சொல்லி மந்திரிச்சு விடனும் போல இருக்கே 😉

  ReplyDelete
  Replies
  1. பேசாம மாரியாத்தா வேப்பிலை அடிக்க வேண்டியதுதான். ஸ்டாக் விழுந்தா மட்டும் அதை சொல்லி புலம்பினா நல்லாருக்கும்.. ஜால்ரா பாய்ஸ் அனைவருமே ஒரே மாவை அரைத்துத் தள்ளுவது போரடிச்சிருக்கும்.சார்... பதிவுகள் அதிகமானால் பார்வையாளர்கள் குறைவது சகஜமே. எதையும் போட்டு மனச உருட்டாமே அடுத்த வருடகதைகளை செம்மையாக வெளியிட்டு அனைவரையும் மகிழ்விக்க வேண்டுகிறேன்.

   Delete
  2. ஹலோ சார்...

   வருத்தமும் ,மனத்தாங்கலும் அனைவருக்கும் போலவே "ஜால்ராபாய்ஸ்களுக்கும் " வரவேண்டிய ஒன்றே.

   இங்கே ,ஜால்ரா பாய்ஸ்களுக்கு வராத ஒன்று "காலரா பாய்ஸ்களுக்கு " போல ஆசிரியர் மேலும் லயன் மேலும் காட்டும் கோப பொறாமைகளும்,எரிச்ச்லும் மட்டுமே..


   அதுவரை "ஜால்ரா பாய்ஸ் " களின் ஆட்டம் நிற்காது...

   தூர்தர்ஷன் அன்றைய "தடங்கலுக்கு வருந்துகிறோம் " போல...:-)

   Delete
  3. // பதிவுகள் அதிகமானால் பார்வையாளர்கள் குறைவது சகஜமே.//
   வாய்ப்பே இல்லை சார்,நேரமமின்மையும்,வேலையும் கூட பிரதான காரணங்களாக இருக்கலாம்,கவுண்டிங் லிஸ்டை பார்த்தாவே இது எளிதில் புரியும்,
   அப்புறம் உங்களுக்கும் ஜால்ரா பாய்ஸ் மேல ஒரு கண்ணு போல...ஹிஹிஹி இருக்கட்டும்,இருக்கட்டும்...

   Delete
  4. இரும்புக்கை மாயாவியின் கொலைகார குள்ளநரியிலிருந்து காமிக்ஸ் வாசகன் நான்.அழுத்தமாய் ஒருஹீரோ உடனடி தேவை.சந்தாவில் இல்லாத எங களுக்கு சிங்கத்தின் சிறுவயதில் புக் கிடைக்காதா

   Delete
  5. ஜேம்ஸ் பாண்ட் 007 அழுத்தமான நாயகர் தானே சார் ?

   Delete
  6. @ ஜான் சைமன் C : வேப்பிலை எனக்கு மாத்திரம் போதும் தானா ?

   Delete
 9. முன்பு போல கமென்ட்டுகள் குறைந்தாலும் சந்தா விஷயத்தில் எப்போதும்போல நண்பர்கள் காட்டும் வேகமும்,ஆர்வமும் மகிழ்ச்சியே.

  ReplyDelete
 10. Dear Edi,

  Barracuda will be a great addition for our comics lineup. 2019 couldn't have started on a better note than this.

  The calm in the blog, could very well pave way for real comicd reviews, from New readers too, which will now be prominently listed, without those unnecessary 1-on-1 talks or out of topic discussions, which kept visitblo the comment threads. So let's look at the bright side of the coin.

  ReplyDelete
  Replies
  1. //The calm in the blog, could very well pave way for real comics reviews, from New readers too, which will now be prominently listed, without those unnecessary 1-on-1 talks or out of topic discussions, which kept visible the comment threads. So let's look at the bright side of the coin.// Valuable Point!!!

   Delete
  2. காமிக்ஸ் மீதான ஆர்வங்கள் தளர்வடையாது தொடரும் வரையிலும், வெறெந்தச் சலனங்களும் பாதித்திடாது சார் !

   Delete
 11. ஹலோ சார்,
  சில சூழ்நிலைகளின் காரணமாக (முக்கியமாக சொந்த விசயங்கள்) இங்கு பதிவிடுவதில்லை என்பதை தவிர்த்து வேறு ஏதும் உள்நோக்கம் கொண்ட காரணங்கள் கிடையாது. ஆனால் இந்த ஒரு வரி விசாரிப்புகள் உங்களின் ஓட்டத்தையும் சுலோவாக்கிடும் என்பதை புரிய வைத்துள்ளீர்கள். காரணம் எதுவாகினும், எங்களின் காமிக்ஸ் காதல் நிற்க போவதில்லை. அந்த குடகுமலையே நீங்கள்தான் எனும்போது, அதன் நீரோட்டத்திற்க்கு எந்த பங்கமும் வராமல் பார்த்து கொள்கிறோம் சார்...

  சியர் அப்!!!

  ReplyDelete
  Replies
  1. சார்...எனது பணியின் தன்மை கொஞ்சம் வித்தியாசமானது ! இங்கோ-எங்கோ உள்ள சங்கடங்களை நான் தலைக்குள் சுமந்து சென்றால், அது அம்மாதத்து இதழ்களிலேயே பிரதிபலித்து விடும் ! So எது எவ்விதமிருப்பினும், நான் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு குந்திடல் அசாத்தியம் ! டோண்ட் வொரி !

   Delete
 12. பராகுடா முன்னோட்டம் அருமை !!!

  ReplyDelete
 13. பராகுடா பட்டையக் கிளப்பும் போல் தெரிகின்றதே....!!.
  ஜனவரிக்காக இப்போதிலிருந்தே காத்திருக்க ஆரம்பித்துவிட்டேன்.
  நண்பர்கள் இத்தளத்தில் அதிகமாக வருகை தந்து உயிர்ப்புடன் தளத்தை வைத்திருக்க பணிவன்புடன் இரு கரம் கூப்பி வேண்டுகின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. //பராகுடா பட்டையக் கிளப்பும் போல் தெரிகின்றதே....!!.//

   போன வருஷமே வந்திருக்க வேண்டிய இதழிது நண்பரே ; லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாய் வரச் செய்வோமென்று நினைத்தேன் !

   Delete
 14. Hi all keep the good work continued

  ReplyDelete
 15. Most time i dont understand your pulambals. I love comics and buy it. Enjoy reading it. Understand editor has some issues with others. Lets discuss when we meet on book fair this year

  ReplyDelete
  Replies
  1. அவற்றைப் பற்றி புரியாத வரைக்கும் சந்தோஷமென்றே தொடருங்கள் நண்பரே !! காமிக்ஸ் வாசிப்புக்கு மாத்திரமே என்றிருப்போருக்கு நிச்சயம் நிம்மதியே !!

   Delete
 16. பராகுடா அட்டைப்படம் மிக அருமை ஆசிரியரே

  ReplyDelete
 17. பழைய கம்பெனிகளில் இருந்து கழன்று கொண்டு புதிய கம்பெனிக்கு பணியாற்றத் துவங்கியதால், வேலைப்பளு பன்மடங்காய் தலைமேல் ஏறி தாண்டவமாடுவதால் தளத்தின்பால் கவனஞ் செலுத்த இயலாது போயிற்று!

  சொல்லப் போனால் பொதுவாக நான் லக்கியின் கதைகளை வாங்கிய நாளில் படிக்காது போனது இதுவே முதல்முறை!

  மூச்சுவிட சில வாரங்கள் ஆகலாம்!

  மற்றபடி என்னளவில் வேறோரு காரணமும் இல்லை!

  😁😁😁😣😣😣😋😋😋

  ஆனாலும் நீங்க காா்ட்டூன கொரச்சது வருத்தம் வருத்தம் தான்

  😁😁😁😋😋😋

  ReplyDelete
  Replies
  1. இம்மாத லக்கியின் புக் ஒன்றை அமமுக தலைவா் TTV க்கு ஒன்ன அனுப்புனீங்கன்னாக்க, அட்டைபட கருப்பு செகப்பு டிசைனுக்கு மத்தியில ஒரு நட்சத்திரத்தை போட்டு கட்சி கொடியா அறிவிடுவாருன்னு நெனைக்கறேன்! ஹிஹிஹி

   Delete
  2. கட்டி வைத்துச் சாத்தப் போகிறார்கள் சார் !

   Delete
 18. 2018 கதைகள் அனைத்தும் ரசிக்கும்படி இருந்தன (டிசம்பர் இதழ்கள் இன்னும் வந்து சேரவில்லை).
  2019லும் கலக்கல் கதைகளை வெளியிடுங்கள். வாழ்த்துக்கள்.

  கார்ட்டூன் கதைகளின் எண்ணிக்கை குறைத்தது வருத்தமே.

  ReplyDelete
  Replies
  1. //கார்ட்டூன் கதைகளின் எண்ணிக்கை குறைத்தது வருத்தமே.//

   எனக்குமே நண்பரே !

   Delete
 19. காலமும் காமிக்ஸ் காதலும் எல்லா வருத்தத்திற்கும் மருந்து போட்டுடும். எவ்வளவு வருத்தம் இருந்தாலும் லயன், தளம் மற்றும் ஆசிரியர் மேல் இருக்கும் அக்கறை ஜால்ரா பாய்ஸுகளுக்கு குறையாது. எனவே இங்கே தான் இருப்பாங்க. மறுபடி ஆக்டிவா இயங்குவாங்க. நல்லது நடக்கும். நல்லதே நடக்கும்.

  ReplyDelete
  Replies
  1. // லயன், தளம் மற்றும் ஆசிரியர் மேல் இருக்கும் அக்கறை ஜால்ரா பாய்ஸுகளுக்கு குறையாது. //
   100 % உண்மையான கருத்து.
   வழிமொழிகிறேன் மஹி...

   Delete
  2. வழிமொழிகிறேன் ஷெரீப்..


   Delete
  3. //காலமும் காமிக்ஸ் காதலும் எல்லா வருத்தத்திற்கும் மருந்து போட்டுடும். //

   அந்த மெடிக்கல் ஷாப்போடே தான் குடித்தனம் பண்ணி வருகிறேன் என்ற முறையில் உங்கள் கூற்றின் நிஜம் எனக்குத் தெரியும் சார் !

   Delete
 20. ஆசிரியர் அவர்களுக்கு,

  டிசம்பர் இதழ்கள் நேற்று தான் எனக்கு வந்தன. வெளிமாநிலமாக இருப்பதால் எப்பொழுதுமே தாமதமாகவே புத்தகங்கள் கிடைக்கும். அதை நான் வாசித்து கருத்துக்களை பதிவிடும் நேரத்தில்15-20 தேதிகள் கடந்திருக்கும்...

  இருந்தாலும் அவ்வப்போது பதிவுகளில் என் பெயரும் இருக்கும்.

  வாராந்திர பதிவுகளை தங்களுடைய புத்தகங்கள் அளவிற்கு எதிர்பார்த்து இருப்பவர்கள் பட்டியலில் நானும் ஒருவன். வாராந்திர பதிவுகளையே தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்:)

  ReplyDelete
  Replies
  1. //அதை நான் வாசித்து கருத்துக்களை பதிவிடும் நேரத்தில்15-20 தேதிகள் கடந்திருக்கும்... //

   அயல்நாட்டுச் சாதாதாரர்களுக்கும் ; தொலைவில் வசிக்கும் சந்தாதாரர்களுக்கும் சற்றே முன்கூட்டிப் பிரதிகளை அனுப்பிட இயல்கிறதாவென்று 2019-ல் பார்ப்போம் சார் !

   Delete
 21. அன்பின் ஆசிரியருக்கு,

  2018 இதழ்கள் அனைத்தும் அருமை.95% மன நிறைவை தந்தன.ஆசிரியருக்கு மிகப்பெரிய நன்றி.இதழ்கள் வெளிவர உதவிய அலுவலக பணியாளர்கள் மற்றும் அச்சக பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி.

  2019 இதழ்கள் இதேபோல் சிறப்பாக வெளிவர ஆசிரியருக்கும் அவரது பணியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. வாரந்தோறும் தங்களின் பதிவை படிக்க மறப்பதில்லை. தொடர்ந்து பதிவிடுங்கள்.

  ReplyDelete
 23. ஆக்ஷன் ஸ்பெஷல்
  நண்பர்கள் அனைவரும் டைம் மிஷினில் ஏறிக்கொள்ளுங்கள்.
  1960 மற்றும் 1980 ஆம் வருடங்களுக்கு ட்யூன் செய்து கொள்ளுங்கள்.....! ரைட்....! ஜாலியாய் ஒரு காலப்பயணம் சென்று வருவோமா....?
  பழைய மினி லயனை ...சற்றே பெரிய சைஸில் புதிதாய் புரட்டியதைப்போன்ற உணர்வு.இந்த இதழின் நாயகர்கள் அனைவரும் ஏற்கனவே நமக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான்.
  ஒற்றைக்கண் ஜாக் மினி லயனில் மூன்று இதழ்களிலும்..மர்ம மண்டலம் திகில் காமிக்ஸில் இரண்டு இதழ்களிலும்...இயந்திரன் ஜூனியர் லயனில் ஒரு இதழிலும் ( முழு வண்ணத்தில் ) பல முக மன்னன் சிறுவர் மலரில் பலப்பல இதழ்களிலும் சாகஸம் செய்ததை நன்கறிவோம்.எல்லாமே குட்டி குட்டி கதைகள்.அன்றைய காலகட்டத்தில் மிகவும் ரசித்துப்படித்தேன்.
  மினி லயனில் பல சிறுகதைகளுடன் ஒன்றாக ஜாக் வந்த போது ரசிக்க முடிந்த என்னால் ...மொத்தம் பத்து கதைகளுடன் இரண்டு பக்கம் மூன்று பக்கம் என தொடர்ந்து ஜாக் சோதித்துவிட்டார்.மற்ற கதைகளும் அப்படியே.
  வெறும் பக்க நிரப்பிகளாய் வரவேண்டிய கதைகளை ஒன்று திரட்டி முழு இதழ் ஆக்கியிருக்கிறார்கள்.
  இப்படி துண்டும் துக்கடாவுமாய் போடுவதற்கு பதில் இரண்டு மூன்று முழுநீளக்கதைகளை
  ப்போட்டு...அவற்றுடன் இந்தக்கதைகள் சிலவற்றை இணைத்திருக்கலாம்.
  சரி....போனது போகட்டும்...! அடுத்த முறை எடிட்டர் ஃப்ளீட் வேயின் படைப்புகளை எவ்விதம் கையாள்கிறார் என்று பார்க்கலாம்.
  இங்கிலாந்தின் ஃப்ளீட்வே படைப்புகளுக்கு நான் என்றென்றும் ரசிகனே.
  ஆனால் இந்த மாதிரி சிறுகதை தொகுப்புகளுக்கல்ல....!

  ReplyDelete
  Replies
  1. வாராந்திர இதழ்களில் வெளியிடும் பொருட்டு அவர்கள் அந்நாட்களில் தயாரித்த சிறுகதைகள் இவை !

   சில பல முழுநீளக் கதைகளையும் தற்போது மெருகூட்டி Rebellion வெளியிட்டுள்ளனர் ; ஆனால் நாம் எதிர்பார்த்திருக்கும் தொடர்களின் பக்கமாய் அவர்களது கவனங்கள் இன்னும் திரும்பிடவில்லை ! So அதற்காகக் காத்திருப்போம் !

   Delete
 24. காலை வணக்கம் சார். மாதம் ஒரு புத்தம் புதிய டெக்ஸ் குறைந்ததுதான் வருத்தம். 600+ கதைகளில் குறைந்பத பட்சம் 250 கதைகளாவது சிறப்பானவை என blind காக கணக்கு வைத்தாலும், படித்த/வெளியான 100 போக, மிச்ச 150 கதைகளை படிக்க 15 வருடங்கள் ஆகிவிடும். மினி கலர் டெக்ஸ் கதைகளும் சித்திரங்களும் ரகளை. Ex: விரட்டும் விதி கதையில் உள்ள பாலைவன day மற்றும் இரவு சித்திரங்கள்.

  பராகுடா நன்றாக இருக்கும் போல் தெரிகிறது. ஆனால் சில முந்தைய இருண்ட காமிக்ஸ்களின் அனுபவம்காரணமாக பயந்து E சந்தா 2019க்கு எடுக்கவில்லை :-). தனியாக பராகுடா வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

  Scanlation திருட்டுத்தனம்(if no copyrights is taken) தமிழ்ராக்கர்ஸ் போல தவிர்க்க முடியாதது. எனினும் லயன்/முத்துக் காமிக்ஸ் தமிழ் translation quality க்கு நிகராக முடியாது. எனவே impact இருக்காது எனவே எண்ணுகின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. //சில முந்தைய இருண்ட காமிக்ஸ்களின் அனுபவம் காரணமாக பயந்து E சந்தா 2019க்கு எடுக்கவில்லை//

   :-) :-)அட.."நிஜங்கள் நிசப்தம்" காட்டிய பூச்சாண்டியின் பலனென்று சொல்ல வருகிறீர்கள் ! அப்படித்தானே சார் ?

   Delete
  2. :-) :-)அட.."நிஜங்கள் நிசப்தம்" காட்டிய பூச்சாண்டியின் பலனென்று சொல்ல வருகிறீர்கள் ! அப்படித்தானே சார் ?


   ######


   :-))))))

   Delete
 25. Good decisions. You post international comics trends and upcoming issues only.

  Scanlation are normal process in world wide. It won't affect your readers

  ReplyDelete
 26. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏

  ReplyDelete
 27. இளம் டெக்ஸ் பதிவு ஒன்றை போட்டுபாருங்க சார்.நம்மாளுங்க எந்த கோடியில இருந்ததாலும் ஓடி வந்துடுவாங்க.
  டெக்ஸ் கதைகள் ரொம்ப குறை வாக உள்ளது சார்.
  B ந்னா டெக்ஸ் மட்டுமே.

  ReplyDelete
  Replies
  1. உண்மை...சந்தா 'B" யில் டெக்ஸ் மட்டுமே இருப்பது போல இருப்பின் மாஸாக இருக்கும் .அதற்காக அதில் வரும் நாயகர்களை மறுக்க வில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.அவர்கள் வேறு வரிசைகளில் இணைத்தால் செமயாக இருக்கும்..:


   ( ஆனால் இதற்கே டெக்ஸ் ஓவர் என ஆங்காங்கே சிறு சிறு குரல்கள் முன்னெடுக்கும் போது ஆசிரியர் தாம் என்ன செய்ய முடியும்..:-(

   ம.ரெ.ப.இ.ன்னு ஆசிரியரே பதிவிலியே சொல்லிட்டாரே்.)

   Delete
  2. ஒரு மத்திம நிலையினில் தொடர்வோம் நண்பரே ; பொன்முட்டையிடும் வாத்தும் போர் அடித்துப் போய் விடக்கூடாதல்லவா ?

   Delete
 28. எடிட்டர் சார்,
  மாற்றங்கள் நிகழும் தருணங்களிலெல்லாம் மன வருத்தங்கள் எழுவது இயற்கை தானே!!! தங்களுக்கு தெரியாததல்லவே!! நான் பல்வேறு தளங்களில் வாசிக்கும் பழக்கமுடையவன் ஆனால் மனச் சோர்வுறும் தருணங்களிலெல்லாம் நாடுவது எனதபிமான , உங்கள் உருவாக்கங்களைத்தான்!!!
  தங்கள் நலத்திற்காகவும், பணிகள் தொய்வின்றி உற்சாகமாக தொடர்வதற்காகவும் எனது பிரார்த்தனைகள்!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் சார் ; காமிக்ஸ் மீதான ஆர்வங்கள் குன்றிடா வரையிலும் என்னை எதுவும் பாதிக்காது !! பாக்கி சமாச்சாரங்கள் எதுவும் நிரந்தரமாகிடாது என்பதை நன்கறிவேன் !!

   Delete
 29. பரகுடா அட்டைப்படம் அருமை! ஜனவரிக்காக வெயிட்டிங்! இம்மாதம் வெளிவந்த ஆக்ஷன் ஸ்பெஷல் கதைகளில் 13 வது தளத்தை தவிர மற்ற கதைகள் கொஞ்சம் சுமார்தான். ஆனால், இப்படியொரு சைஸ், பேப்பர் குவாலிட்டி எதிர்பாராதொரு விஷயம். இதே போலவே அடுத்த பிரிட்டிஷ் கதை தொகுப்பை போட்டு அசத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. 13 வது தளம் + ரப்பர் மண்டையன் ரிக்கி - ACTION SPECIAL -ன் சாதனையாளர்கள் என்பது புரிகிறது !! British Special ஆண்டுக்கொன்று தப்பில்லை என்றே இதுவரையிலான feedback சொல்லுகின்றன சார் !

   Delete
 30. Dear editor Sir I really felt bad for the whole situation happened here. And yet I'm not in any group and I'm not taking any sides. All along I've been a silent reader of our blog and started to post recently and not only me so many of our friends expect your posts every week and there is never a dull moment with you. I hope you realize this keep posting us as usual on Saturday nights. Regarding barracuda both the cover and the inside pages looks so so good. That too I've never seen a color filled page like this ever. I'm so eagerly waiting for my favorite hero thorgal and this barracuda in January.

  ReplyDelete
  Replies
  1. // I've never seen a color filled page like this ever.//

   இதுவொரு சித்திர அதகளம் சார் !

   Delete
 31. நான் அடிக்கடி இங்கே சொல்றது தான்..

  இந்த பதிவை படித்தவுடன் மீண்டும் சொல்ல தோன்றியது அவ்வளவு தான்..


  "ஆண்டவனால் கூட 100% எந்த மனிதரையும் திருப்திபடுத்த இயலாது "


  எனும் போது


  தாங்கள்...?

  ReplyDelete
  Replies
  1. அட..முயற்சித்துத் தான் தோற்போமே தலீவரே !

   Delete
  2. வாழ்த்துகள் சார்...:-)))

   Delete
 32. இதுவும் கடந்து பாேகும்...

  ReplyDelete
 33. பரகுடா அட்டைப்படம் அட்டகாசமாக கலக்குகிறது ...காத்திருக்கிறேன்..!

  ReplyDelete
 34. வாரம் ஒரு பதிவு வேண்டும். பாரகுடா அட்டைப்படம் செம.

  ReplyDelete
 35. அந்தமட்டிற்கு சந்தாக்களின் துரிதத்தினை இந்த சமீப நிகழ்வுகள் எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதில் உங்களின் பெருந்தன்மைகளும், ஆண்டவனின் கருணையும் பிரதிபலிக்கின்றன ! அதிலும் icing on the cake - 'பரபர' வென பதிவாகி வரும் சந்தாக்களின் 90% - A B C D E என சர்வ ஜானர் சந்தாக்களே ! Thank you ever so much guys !! Much appreciated !! And keep it going please !


  #########  மகிழ்ச்சி....:-)

  ReplyDelete
 36. அஸ்ஸலாமு அலைகும் To All...!!
  அன்பு ஆசிரியரே...இங்கு தளம் டல்லடிப்பதற்கு பல காரணங்களை பட்டியலிட்டுள்ளீர்கள்.
  Might be இவைகளும் ஒரு காரணமாய் இருந்திடலாம் தான்...
  ஆனால் என் கண்ணுக்கு பிரதானமாய் தெரிவது இலவச இன்டரநெட் எனும் சைத்தான் ...!
  இந்த சைத்தான் நமக்குள் நுழைந்த பின் சுமார் இரண்டு வருடங்களாய்,வீட்டாரிடமும்,குழந்தைகள்,நண்பர்கள் என அனைவரிடமிருந்தும் நாம் விலகிவிட்டோம் என்பது தான் நிஜம்.
  வீட்டில் யாரிடமும் சரியாக பேசுவதில்லை,பழக நேரம் ஒதுக்காமல் சதா நேரமும், ஃபோனையே நோன்டிக்கொண்டிருப்பதாய் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் மனைவிமக்கள் இல்லாத இல்லங்கள் ஏதேனும் உண்டா?

  இந்த சாத்தானின் பிடியிலிருந்து எப்படி வெளிவரப்போகிறோமோ படைத்தவனுக்கே வெளிச்சம்.
  மற்றபடி தங்களின் மீதோ,காமிக்ஸ் மீதோ எந்த ஒரு வெறுப்பும் இல்லை.

  தாங்கள் கூறுவது போல் இதுவும் கடந்து போகும்.

  இன்ஷா அல்லாஹ் மீண்டும் வசந்தம் வீசும்...

  இங்கு தளத்திலும்,

  நம் வீடுகளிலும்..!!

  ReplyDelete
  Replies
  1. // தாங்கள் கூறுவது போல் இதுவும் கடந்து போகும்.//
   உண்மை,உண்மை....

   Delete
  2. சாத்தானை தேவதூதனாக்கிடும் வல்லமை நம் கையில் தானே சார் ? அவசியத்துக்குத் தாண்டி நெட்டை உருட்டும் பழக்கம் எனக்கு துவக்கம் முதலே இருந்ததில்லை என்பதாலோ - என்னமோ வாசிக்க ; எழுத ; டிவி பார்க்க ; என்று இன்னமும் நேரத்தைப் பங்கீடு செய்ய முடிகிறது !!

   ஆனால் சீனியர் எடிட்டர் உங்களது அணி !! நெட் இல்லாது போனால் எதையோ பறிகொடுத்தது போலாகி விடுகிறார் !!

   Delete
 37. இந்த மாதம் வெளியான ஆக்ஷன் ஸ்பெஷல் சூப்பர் ...நமது வெளியீடுகளில் அமானூஷ்யக் கதைகள் மிகக் குறைவே .. '13Th floor' போன்ற crisp ஆன அமானுஷ்யக் கதைதத் தொகுப்பை வெளீயிட்டால் சிறப்பு.

  ReplyDelete
 38. இந்த மாதம் வெளியான ஆக்ஷன் ஸ்பெஷல் சூப்பர் ...நமது வெளியீடுகளில் அமானூஷ்யக் கதைகள் மிகக் குறைவே .. '13Th floor' போன்ற crisp ஆன அமானுஷ்யக் கதைதத் தொகுப்பை வெளீயிட்டால் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. 13 வது தளம் மட்டுமே கொண்டொரு இதழ் !! என்ன நினைக்கிறீர்கள் folks ? என்னைக் கேட்டால் ஓ.கே. என்பேன் !!

   Delete
 39. சார் 10 நாட்களுக்கு ஒருமுறை பதிவு என்னால் எற்கதக்கதில்லை...
  தயவு செய்து எப்பவும் போல பதிவிடுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. படிக்கும் பிள்ளை நீங்கள் அகில் ; so கவனம் அங்கேயே முதலில் இருக்கட்டும் !

   Delete
 40. புத்தகவிழா வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் சார்...

  ReplyDelete
 41. அட்டைப்படம் மிகவும் நன்றாக உள்ளது...
  I am waiting சார்...

  ReplyDelete
 42. Replies
  1. விஜயன் சார், இங்கு விழும் பின்னூட்டங்கள் குறைவு என்பதை பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். வழக்கம் போல் பல நண்பர்கள் வருகிறார்கள்/பார்வையிடுகிறார்கள், ஆனால் பதிவிடுவதில்லை. அதற்கு பல சொந்த காரணங்கள் இருக்கலாம் ஆனால் உங்களின் பதிவுகளை எப்போதும் போல் தொடர்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

   வருகை பதிவு குறைவு என்பதற்கு நீங்கள் தான் காரணம் என்று இந்த நீளமான பதிவு தேவை இல்லை.

   இதே தளத்தில் ஒரு முறை இங்கே நடத்த அமளியை கண்ட நீங்கள் இந்த தளத்தை காமிக்ஸ் நோட்டீஸ் போர்டாக மாற்றி விடுவேன் என்று சொன்னீர்கள். எனவே பின்னூட்டம் குறைவு என்று கவலை கொள்ள வேண்டாம். எப்போதும் போல் வாரம் தோறும் பதிவிடுங்கள். தொடர்வோம் அமைதியாக, தேவையான போது மட்டும் பின்னூட்டமிடுவோம்.

   Delete
 43. நமது காமிக்ஸ் நண்பர் செந்தில் சத்யாவின் துணைவியார் நலமாக உள்ளார். அவர் இன்னும் ஒரு வாரத்தில் வீடு திரும்புவார்!

  செந்தில் சத்யாவின் துணைவியார் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவரின் மருத்துவ செலவுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!சிறு துளி பெருவெள்ளம் என்பதை நிரூபித்து உள்ளது உங்களின் உதவி.

  இதுவரையான மருத்துவ செலவுக்கான 90% பணத்தை திரட்டிவிட்டார்! அவருக்கு உதவ வேண்டும் என நினைக்கும் நண்பர்கள் எனக்கு whatsup (9900515000) அனுப்புங்கள் மேற்கொண்டு தகவல்கள் தருகிறேன்!

  காமிக்ஸ் என்ற மந்திர சொல்லில் இணைந்த நாம் அவ்வப்போது இது போன்று நமது காமிக்ஸ் நண்பர்களுக்கு உதவும் செயல் பாராட்டுக்குரியது! தொடரட்டும் இந்த காமிக்ஸ் நட்பு!

  ReplyDelete
 44. இன்று 2019 சந்தா மற்றும் ஜம்போவிற்கு பணம் செலுத்திவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. அலைகடல் அசுரர்கள் இதழின் அட்டைப்படம் அருமை.

   Delete
 45. மத்திரியாரை முழுவதுமாக படித்து விட்டேன். கதைகள் அனைத்தும் அருமை. இனிவரும் காலங்களில் மந்திரியாரை தனி புத்தகமாக வெளியிட முடியாவிட்டால் நமது ரெகுலர் இதழ்களில் அவ்வப்போது சில பக்கங்களை இவருக்கு ஒதுக்கி வெளியிட முடியுமா?

  ReplyDelete
 46. ஜம்போ: கடந்த சில நாட்களாக படித்துக் கொண்டு இருக்கிறேன். ஒற்றை கண் ஜாக்: இது வரை ஐந்து கதைகளை படித்து உள்ளேன், முடியவில்லை. இன்றும் மும்மூர்த்திகள் கதையை ரசிக்கும் நான் இவரின் கதையை எவ்வளவு முயன்றும் ரசிக்க முடியவில்லை.

  எனது மனைவிக்கு ரப்பர் மண்டையன் பிங்கி பிடித்து உள்ளது. மிகவும் ரசித்தார்.

  புத்தக வடிவமைப்பு மற்றும் தரம் செம.

  மந்திர மண்டலம் எனக்கு மிகவும் பிடித்தது கதை. இதனை முதல் முதலில் படித்த போது அந்த 13 மாடியை மனது சுற்றி சுற்றி வந்தது.

  மந்திர மண்டலம் மற்றும் இயந்திர மனிதன் கதையை வரும் நாட்களில் படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. சார்...அது "மர்ம மண்டலம்" !! மந்திர மண்டலமல்ல !!

   Delete
 47. 7ம் ஆண்டு பதிவிற்கு வாழ்த்துகள்! இங்கு பதிவிடும் வாசகர்களின் வருகை குறைவிற்கு Google input toolsஏற்பட்டுள்ள மாற்றங்களும் ஒரு காரணம். புதிய input tools ல் தமிழ் typing தெரியாமல் டைப்பிங் செய்வது இயலாது. System problemஎன்று format செய்தால் அதோடு தமிழ் டைபிங் கோவிந்தா! என் அனுபவம். போன் or tabல் டெஸ்க்டாப் அளவுக்கு user friendlyஇல்லை.officialஆக நமக்கு whatsapp closed groupஆரம்பித்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் மாற்றம் ஒன்றே மாறாதது! dec இதழ்களில் காலனின் கானகம் படித்து வருகிறேன். இரத்த படலம் இப்போதுதான் 17ம் பாகம் படித்து முடித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. //.officialஆக நமக்கு whatsapp closed groupஆரம்பித்தால் நன்றாக இருக்கும். //

   சார்..அதற்கென கணிசமான நேரத்தைத் தர எனக்கு சாத்தியப்படாத வரைக்கும் wouldn't be my choice !!

   Delete
 48. பாராகுடா அட்டைப் படம் மற்றும் டீசர் பக்கங்கள் இது ஒரு அருமையான சித்திர விருந்து என சொல்கிறது. ஆர்வமுடன் உள்ளேன்.

  இந்த ஜனவரி எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் கொடுக்கும் மாதம்.. தோர்கல் மற்றும் பராகுடா.

  ReplyDelete
 49. google Keyboardல் தமிழ் hand Writing என்று ஒரு Option உள்ளது. நான் அதன் மூலமாக எழுதி பதிவிடுகிறேன். சுலபமாக உள்ளது. ACtion Special ல் மந்திரமண்டலம் தவிர்த்து மற்றவை சுமார் ரகம்.ஒற்றை கண் ஜாக் மற்றும் எந்திரன் Single Slot ஆக இருந்தால் ஒரு வேளை ரசிக்க முடியுமோ என்னவோ?

  ReplyDelete
  Replies
  1. துரதிர்ஷ்டவசமாக அந்த 2 தொடர்களுமே சிறுகதைகளாகவே உருவாக்கப்பட்டுள்ளன சார் ! 13 வது தளம் எனக்கும் செம favorite !

   Delete
 50. பராகுடா அட்டைப் படம் செமையோ செம சார்,டீசரும் ஓவியங்களும் பட்டையைக் கிளப்புகின்றன,ஜனவரியில் வாசகர்களுக்கு செம வேட்டை காத்திருக்கிறது என்றே தோன்றுகிறது சார்....

  ReplyDelete
 51. // நிச்சயமாய் Jumbo-ன் அடுத்த சுற்றுக்கு இந்த ஆல்பங்கள் செம கெத்தைத் தந்திடும் என்பது நிச்சயம் !! //
  வாவ்,மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்...

  ReplyDelete
 52. // Maybe வாராவாரம் ஒரு பதிவு என்பதை இனி 10 நாட்களுக்கொருமுறை என்று மாற்றம் செய்து கொள்ளலாம் ! //
  இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது சார்,நம் நண்பர்களின் பதிவு புயல்கள் தற்காலிமாக வலு இழந்திருக்கலாம், ஆனால் வெகு சீக்கிரமே புயல் மீண்டும் வலுவடையும்,தேவையற்ற வார்த்தைகளை உதிர்ப்பவர்களை புரட்டி போட்டு புயல் தன் திசையில் வலுவாக பயணிக்கும்..

  ReplyDelete

 53. பழையது:
  ---------
  1. இரத்த ஒப்பந்தம் - டெக்ஸ் தன் மனைவி லிலித் சாக காரணமாக இருந்த கயவர்களை சாகடிப்பதாக சபதம் எடுக்கும் கதை, டெக்சின் வாழ்க்கையில் முக்கியமான சம்பவம் இந்த கதை.
  2. மரணத்தை முறியடிப்போம் - கார்வினை கடத்தி போய் உலகத்தின் தலை சிறந்த சண்டை விளையாட்டு வீரர்களோடு சாகும் வரை சண்டை போட வைக்கிறான் ஒரு பணக்கார கிறுக்கன். அவனை வீழ்த்தி வில்லியையும் மத்த வீரர்களையும் மாடஸ்டி காப்பாத்துவதே கதை. அருமையான கலக்கல் கதை.

  மன்மதனை மன்னிப்போம் - டெஸ்மாண்ட் தன்னை காதலிப்பதாக சொல்லும் ஒரு பித்தலாட்டக்காரியிடம் மாட்டி கொள்ள ரிப் கிர்பி சரியான தருணத்தில் காப்பாற்றுகிறார். அருமையான கதை.


  புதியது
  -------
  1. காதலும் கடந்து போகும் - டெக்ஸ் டைகர் ஜாக்க்கை முதல் முறையாக சந்திக்கும் கதை. இதில் டைகர் ஜாக்கின் காதல் கதையும் அதற்காக அவன் மேற்கொள்ளும் சாகசம் தான் கதை.

  இரத்த ஒப்பந்தமும், காதலும் கடந்து போகும் கதைகளை ஒரே வாரத்தில் படிக்க நேர்ந்தது ஒரு தற்செயலான ஒற்றுமை. இரண்டு கதைகளிலும் டெக்ஸ் தன் மனைவி லிலித்துக்காக பழி வாங்க துடிக்கிறார், இன்னொன்றில் டைகர் ஜாக் தன் காதலி தானியாவுக்காக பழி வாங்குகிறான்.

  2. கர்னல் ஆமோஸ் - இந்த கதை அவ்வளவாக புரியவில்லை. புரிவதற்கு கஷ்ட பட வேண்டி இருந்தது. ஆனாலும் நல்ல கதை.

  3. Lion all new special - க்ரீன் மேனர் கதைகள் அனைத்துமே கொன்று விட்டன. அட்டகாசமா அட்டகாசம். இந்த மாதிரி கதை ஹோலிவுட்டில் எடுத்தால் சூப்பராக இருக்கும்.

  தோட்டா தேசம் - கமான்சே ஒரு பெண் என்பது இந்த கதையில் தான் சரியாக புரிந்தது. இது தான் ஒரிஜின் ஸ்டோரி இல்லையா? ஆர்பாட்டமில்லா கதை.

  பிரளயத்தின் பிள்ளைகள் - நெஞ்சை உலுக்கிய கதை. perfect graphic novel . கலரில் இல்லாமல் செபியா கலரில் இருந்தது இந்த கதைக்கு நல்ல பொருத்தம். ஹிட்லர் ஒரு அரக்கன்.

  steelbody ஷெர்லாக் - எல்லாமே தப்பாக போகும் ஷெர்லாக் கதைகள். எனக்கு எனோ பிடிக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. //steelbody ஷெர்லாக் - எல்லாமே தப்பாக போகும் ஷெர்லாக் கதைகள். எனக்கு எனோ பிடிக்கவில்லை.//

   A real pity !! எனக்கு ரொம்பவே பிடித்திருந்த தொடர் அது ! But பெரும்பான்மையான வாசகர்களுக்கும் பிடிக்காது போய் விட்டது !!

   Delete
 54. // So மொத்த எண்ணிக்கையைக் குறைப்பது - இதழ்களின் individual விலைகளைக் கூடச் செய்யும் inverse effect கொண்டிருக்கும் ! //
  இந்த விளக்கம் எல்லாம் எதற்கு சார்,என்ன விளக்கம் சொன்னாலும் நாங்கள் இப்படித்தான் பேசுவோம் என்று முடிவு செய்து கொண்டு பேசுபவர்களிடம் நீங்கள் என்ன விளக்கம் சொன்னாலுமே அது விரயம் தான் சார்..

  ReplyDelete
  Replies
  1. கண்ணாடிக் கூண்டை நோக்கிக் கல்லெறிவது அவர்கட்கொரு பொழுதுபோக்காக ; ஒரு மூடப்பட்ட வட்டத்துக்குள் ஹீரோவாய்ப் பார்க்கப்படும் வாய்ப்பாகத் தோன்றிடலாம் சார் ! ஆனால் கண்ணாடிக்குச் சேதம் நேராது பாதுகாக்கும் கடமை எனக்குண்டல்லவா ?

   Delete
 55. // "ஈரோடு ஸ்பெஷல்" என்று புதுசாயொரு வெடியினைப் பற்ற வைக்காது - ஜம்போ சீசன் 2-ன் ஸ்பெஷல் இதழொன்றை அதற்கென ஒதுக்கிட்டால் சிக்கல் தீர்ந்தது ! //
  இந்த டீல் செல்லாது,செல்லாது...கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது....

  ReplyDelete
 56. விஜயன் சார், இங்கு விழும் பின்னூட்டங்கள் குறைவு என்பதை பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். வழக்கம் போல் பல நண்பர்கள் வருகிறார்கள்/பார்வையிடுகிறார்கள், ஆனால் பதிவிடுவதில்லை. அதற்கு பல சொந்த காரணங்கள் இருக்கலாம் ஆனால் உங்களின் பதிவுகளை எப்போதும் போல் தொடர்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

  வருகை பதிவு குறைவு என்பதற்கு நீங்கள் தான் காரணம் என்று இந்த நீளமான பதிவு தேவை இல்லை.

  இதே தளத்தில் ஒரு முறை இங்கே நடத்த அமளியை கண்ட நீங்கள் இந்த தளத்தை காமிக்ஸ் நோட்டீஸ் போர்டாக மாற்றி விடுவேன் என்று சொன்னீர்கள். எனவே பின்னூட்டம் குறைவு என்று கவலை கொள்ள வேண்டாம். எப்போதும் போல் வாரம் தோறும் பதிவிடுங்கள். தொடர்வோம் அமைதியாக, தேவையான போது மட்டும் பின்னூட்டமிடுவோம்.

  +1

  ReplyDelete
  Replies
  1. //அமைதியாக, தேவையான போது மட்டும் பின்னூட்டமிடுவோம்.//

   Sounds good sir !!

   Delete
 57. நீங்கள் பதிவை குறைத்துக்கொண்டால் 'அவர்கள்' ஜெயித்தது போல் ஆகிடுமே? ஆகையால் வாரம் ஒரு பதிவு நிச்சயம் வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. "அவர்கள்" ; "இவர்கள்" என்ற வேறுபாடுகளெல்லாம் நமக்கெதற்கு நண்பரே ? தவிர பதிவின் எண்ணிக்கையினைக் கட்டுக்குள் வைத்திடுவோமென நான் அபிப்பிராயப்பட்டது - இங்கே காற்று வாங்கி வந்த 2 வாரங்களின் தொடர்ச்சியாய் மாத்திரமே !

   Delete
 58. காலை வணக்கம் சார் 🙏🏼

  உரிமையானவரகளிடம் தானே உரிமை எடுத்துக்கொள்ள இயலும் அதுபோல தான் இந்த நிகழ்வும்

  இ(எ)துவும் கடந்து போகும் 🙏🏼

  2019 கலக்கலாக அமைய எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பார் 🙏🏼🙏🏼🙏🏼

  தொடருங்கள் தொடருகிறோம் நன்றி 🙏🏼

  ReplyDelete
  Replies
  1. சார்...காமிக்ஸ் மீதான ஆர்வம் மட்டும் கடந்து போகாத வரைக்கும் எல்லாமே ஓ.கே. தான் !

   Delete
 59. பாரகுடா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 60. கமெண்ட்ஸ் பத்தி நோ கமெண்ட்ஸ்....

  Blogஇல் கமெண்ட் போடுவது whatsapp போல சுலபமாக இல்லை....

  ReplyDelete
  Replies
  1. Facebook ஈஸி ....அதுக்கு போயிடலாம்....இது ஒரு தகவல் பலகையா இருக்கட்டுமே சார்.....

   கமெண்ட்ஸ் indication பெல் தெரிந்தவுடன் ஆர்வம் மிகுந்து உடனே ஓபன் செய்து விடலாம்.....

   கமெண்ட் போட முடியாதவர்கள் like பட்டன் பயன்படுத்தலாம்...

   பிடிக்காதவர்கள் unlike பட்டன் அழுத்தாலாம்...


   என் பார்வையில் facebook சுலபம்....

   அதையும் ஏன் விட்டு வைப்பானேன்.....

   இன்னா சொல்றீங்கோ....😊😊😊😊

   Delete
  2. மந்திரியாரே....fruit salad சாப்பிடுவது சுலபம் தான் ; ஆனால் அதற்காகப் பழங்களை உரிப்பதையும் ஒரு சிரமமாய்க் கருதத் தான் வேண்டுமா ?

   Delete
 61. மாதா மாதாம் காமிக்ஸ் இதழ்கள் என்பது போல ..


  வாரா வாரம் பதிவு வாரம் என்பதையே  வழக்கம் போல தொடர வேண்டும்

  மிக பணிவுடனும் ,மிக துணிவுடனும் ,மிக மிக கெஞ்சியும் கேட்டு கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இல்லாங்காட்டி கடுதாசிக் கணைகள் ஆரம்பித்திடுமோ ?? ஆத்தாடியோவ் !!

   Delete
 62. Dear Edi, In my opinion the success of this blog is 80% due to ur main posts only. There are many silent viewers like me they just read ur post. As such pls. Continue ur posts weekly as usual.

  ReplyDelete
 63. போன வாரம் ஒரு முழுமையான பதிவு போட்டிருந்தால் தளம் சுறுசுறுப்பாக இருந்திருக்கும்.. அதை விடுத்து ஏன் இப்படி கூறுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. பின்புல காரணங்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், நான் கூறிய கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆளே இல்லாத டீக்கடையில் லிட்டர் லிட்டராய்ப் பால் வாங்க தோன்றுமா நண்பரே ?

   Delete
 64. Dear Sir,

  Coming Pongal Festival 2019, will be a Super Feast for me, with

  Visuarl Feast of Thorgal and Barraguda, and Action Feast of Tex viler.

  I am eagerly waiting. Thank you.

  ReplyDelete
 65. அன்பின் ஆசிரியருக்கு,
  ஸ்கேன்லேஷன்கள் உங்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பது தெளிவாக புரிகிறது..வருகை குறைவாக இருப்பதற்கு இன்னும் புவி வெப்பமயமாதலை மட்டும் தான் நீங்கள் காரணமாக யோசிக்கவில்லை..சந்தா நன்றாக சென்றுகொண்டிருப்பதாக நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்..இதிலிருந்து ஸ்கேன்லேஷன்கள் தொட்டுணரும் புத்தகங்களின் விற்பனையை பாதிக்கவில்லை என்பது தெளிவு..சரவண பவனில் சாப்பிடுபவர்கள் கையேந்திபவனில் அவ்வப்போது சாப்பிடுவது வழக்கம் தான்..அதற்காக சரவண பவன் காத்தாட போவதாக அண்ணாச்சி நினைத்து குழம்புவது சரியா?..தரமான காமிக்ஸ்களை வழங்கி வரும் உங்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு..

  நிற்க..பாரக்குடா அட்டை மிகவும் அருமை..இதை நான் ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் தமிழில் வாங்கத்தான் போகிறேன்..ஸ்கேன்லேஷன்கள் நல்லது..வெளிநாட்டு காமிக்ஸ் நிறுவனங்கள் இதற்கு மறைமுகமாக ஆதரவு அளித்தே வருகின்றன..அடுத்த வருடம் இதே நேரம் நீங்கள் இதை உணர்வீர்கள்..ஐயம் கொண்டிருக்கும் மற்ற வாசகர்களும் உணர்வார்கள்..

  பி.கு: புதுப்புத்தகங்களை ஸ்கேன் செய்து சுற்றலில் விடுவதுதான் ஸ்கேன்லேஷன் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள் இங்கு வந்து கேட்டை ஆட்ட வேண்டாம்..

  ReplyDelete
  Replies
  1. // வருகை குறைவாக இருப்பதற்கு இன்னும் புவி வெப்பமயமாதலை மட்டும் தான் நீங்கள் காரணமாக யோசிக்கவில்லை.. //

   ஹா ஹா. உண்மை தான் ;-)

   Delete
  2. Note: My above comment in tamil appears as unknown which sounds like i preferred to stay anonymous. This is Dr.Rajesh Kumar from Kanchipuram

   Delete
  3. வாங்க ராஜேஷ். தொடர்ந்து பதிவிடுங்கள்.

   Delete
  4. //ஸ்கேன்லேஷன்கள் உங்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பது தெளிவாக புரிகிறது..//

   On the contrary ! இந்தக் கூத்துக்கள் நடந்து வருவது நேற்றோ-இன்றோ தான் என்றிருப்பின் இவற்றின் பொருட்டு நான் சலனம் கொள்ள முகாந்திரங்கள் இருக்கக்கூடும் ! ஆனால் இவை தான் எட்டு - பத்து ஆண்டுகளாய்த் தொடர்கின்றன எனும் போது டிசம்பரின் ஒரு திடீர் பொழுதில் நானெதற்கு ஜெர்க் ஆகப் போகிறேன் ? வாசகர்களாய் ஆளாளுக்கு வித விதமான perspectives இருக்கலாம் - and அவரவருக்கு அவை ஒவ்வொன்றுமே கனகச்சிதமானதாய்த் தோன்றவும் செய்யலாம் தான் ! ஆனால் இங்கே எனக்கு வாய்த்திருக்கும் பார்வைக் கோணமானது ரொம்பவே unique ! அது சார்ந்த புரிதல்கள் சாத்தியமாகாது தான் ! So please rest assured that I have ample reasons to have written what I wrote !!

   //.ஸ்கேன்லேஷன்கள் நல்லது..வெளிநாட்டு காமிக்ஸ் நிறுவனங்கள் இதற்கு மறைமுகமாக ஆதரவு அளித்தே வருகின்றன.//

   அவையெல்லாமே நமக்குப் பரிச்சயமில்லா நிறுவனங்களாய் இருக்கும் போலும் சார் !!

   Delete
 66. வாரம் தவறாமல் ஞாயிறு அன்று வழக்கம்போல் பதிவிட வேண்டுகிறேன்..பத்து நாள் கணக்கெல்லாம் ஒத்து வராது .ஒரு ரெகுலர் நடைமுறையில் சென்றுகொண்டு இருப்பதை மாற்ற வேண்டாம் .போனவாரம் ஞாயிறு பதிவு இல்லாது போனதும் தளம் காத்தாட ஒரு காரணம் . அப்புறம் 15 புள்ளிகள் கை வசம் இருப்பதால் சிங்கத்தின் சிறுவயதில் முழுமையடைந்த கதைப்புத்தகத்தை தெரிவு செய்கிறேன்.கடல்கொள்ளையர் பற்றிய கதை பாரகுடா ஆவலுடன் காத்திருக்கிறேன். 2019 நமக்கே..வரும் காலமெல்லாம் நமக்கே ..மனசோர்வு வேண்டாம் .

  ReplyDelete
  Replies
  1. //போனவாரம் ஞாயிறு பதிவு இல்லாது போனதும் தளம் காத்தாட ஒரு காரணம் //

   சார்..கோழி வந்துச்சா முதலில் ? முட்டை வந்துச்சா ?

   Delete
 67. அன்புள்ள ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு தளத்தின் பதிவுகள் குறைந்துவிட்டது என்ற உங்கள் வருத்தத்திற்கு எனது பதில் தற்போதுள்ள சூழ்நிலையில் பல்வேறு வேலைப் பளு மற்ற சில குடும்ப விஷயங்கள் மேலும் பல்வேறு whatsapp குழுக்கள் உள்ளதால் அனைவரும் தளத்தில் பதிவிட முடிவதில்லை மேலும் whatsapp போன்று ஈஸியான பதிவுகளை தளத்தில் பதிய. முடிவதில்லை மேலும் பல நண்பர்கள் கூறுவது போல் தனியாக whatsapp குரூப் ஆரம்பித்தால் 250 நபர்களுக்கு மேல் பங்களிக்க முடியாது ஒரு குரூப்ல இதுக்காக நாலு குரூப் வச்சா அனைவரது கருத்தும் மற்றவர்களுக்கு தெரியாமல் போய்விடும் அதுமட்டுமல்லாமல் பேஸ்புக் பக்கங்கள் என்னை போன்ற நபர்களுக்கு புரியாமல் இருக்கிறது ஆயிரம் pdf புத்தகங்கள் வந்தாலும் ஒரு புத்தகத்தைக் கையில் ஏந்தி படிக்கும் சுகம் என்றும் எங்கேயும் எப்போதும் எதிலும் கிடைக்கப்போவது இல்லை இதில் மாற்றுக் கருத்தும் இல்லை பரவலாக பெருகிவிட்ட வாசகர்களின் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க சந்தா எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் உதாரணத்திற்கு ஏ பி சி டி இ என்று ஐந்து வகை மட்டும் இருக்கிறது அதிலும் புத்தகங்கள் குறைவாகவே உள்ளது இதை போக்க இன்னும் அதிகமாக சந்தாக்களை ஆரம்பித்து குறைவான பிரிண்ட் ரன் சற்று அதிகமான விலை என்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை சந்தா வந்தால் மட்டுமே தொடர முடியும் என்பது போல்தான் யோசித்து கொண்டு வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  தங்களை முதல் முறையாக நேரில் சந்தித்தபோது வாரம் இரண்டு பதிவுகள் வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன் நண்பர்களின் பல்வேறு பதிவுகள் மூலம் அதுவும் சாத்தியம் ஆயிற்று இப்போது பத்து நாளைக்கு ஒரு பதிவு என்பது ஏற்றுக்கொள்ள இயலாது. ஞாயிறு பொழுது விடுவதே உங்கள் பதிவுடன் தான் ஒருவார களைப்பை உடனே போக்கும் சக்தி உங்கள் பதிவுக்கு உண்டு எங்களை உற்சாகம் கொள்ளச் செய்கிறது தயவுசெய்து ஞாயிற்றுக்கிழமை பதிவை நிறுத்த வேண்டாம். மேலும் மறுபதிப்பு கதைகளை பொறுத்தவரை தாங்கள் அதனை குறைத்தாலே pdf பக்கம் மக்கள் திரும்பிவிட்டதாக எனது எண்ணம் அதேசமயம் ஒன்று இரண்டு என்று இல்லாமல் ஒரு நான்கு கதைகளை மொத்தமாக போட்டு அதற்கு ஒரு தனி சந்தா ஏற்படுத்தினால் குறைந்தபட்ச நிறைவான விற்பனை என்ற இலக்கை அடைய முடியும் தேங்கி நிற்கும் பல்வேறு புத்தகங்களை பொறுத்தவரை புத்தக விழாக்களின் போது ஐந்து அல்லது பத்து புத்தகங்கள் கொண்ட செட்டாக எடுத்தால் அதற்கு 10% க்கு அதிகமாக 20% என்று அறிவித்தால் அதன் விற்பனை நிச்சயமாக உயரக்கூடும் உதாரணமாக லார்கோ செட் இரத்தபடலம் செட்
  மாடஸ்டி செட் லக்கிலுக் செட்
  என்று மொத்தமாக அறிவித்தால் நிச்சயம் விற்பனை உயரும்..
  எனது கருத்துக்களில் தவறு ஏதும் இருந்தால் ஆசிரியரும் நண்பர்களும் மன்னிக்க வேண்டும். தற்போதைய எலக்ட்ரானிக் உலகில் நம் கைகளில் ஸ்மார்ட்போன் மூலம் உலகமே வந்திருக்கிறது. படிக்கும் பழக்கம் குறைவதற்கு தொலைக்காட்சிகளே காரணம் மேலும் 1985 அதற்கு பிறகு பிறந்த குழந்தைகள் புத்தகத்தை எடுத்து படிக்க ஆர்வம் காட்டுவதில்லை 2010 அதற்கு பிறகு பிறந்த குழந்தைகள் கையில் ஸ்மார்ட்போன் தவிர வேறு எதையும் தருவதில்லை புற குறுகிய வட்டத்தில் பழைய வாசகர்களை தக்கவைத்துக்கொள்ள அதிகமான சந்தாக்கள் பல்வேறு தலைப்புகள் புதிய கதைகள் போன்றவற்றை புகுத்தினால் வெற்றி பெற முடியும் என்பது எனது கருத்து ஒருசில சந்தாக்களை பொறுத்தவரை நான்கு அல்லது ஐந்து கதைகள் முறையான அறிவிப்பு இரண்டு மாதம் முன் பதிவு மூன்றாவது மாதம் புத்தகம் என்ற கணக்கில் கொண்டு சென்றால் பல்வேறு புதிய கதைகளை அல்லது மறுபதிப்புகள் ஓ நண்பர்கள் வாங்க உதவியாக இருக்கும் என்பது எனது கருத்து.

  ReplyDelete
  Replies
  1. சார்....ABCDEFGH என்று எழுத்துக்களுக்கொரு சந்தா பிரிவு ; ஒவ்வொன்றுக்கும் ஒரு குறைந்தபட்ச பிரிண்ட்ரன் என்பனவெல்லாம் நடைமுறை சாத்தியமென்று நினைக்கிறீர்களா ? நமது தற்போதைய மொத்த சர்குலேஷன் ஒரு கையெழுத்துப் பத்திரிகையின் எண்ணிக்கைக்கு நிகரானது தான் ! இதற்கும் கீழே போக நாம் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் தயாராகவே இருக்கிறோம் என்றே வைத்துக் கொண்டாலும், படைப்பாளிகளின் சம்மதம் என்றொரு சமாச்சாரமும் அங்கே உண்டே ?!! தலைகீழாய் நின்றாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் சார் !

   Delete
 68. எடிட்டர் சார்வாள்,

  நீங்கள் தேவையில்லாமல் டென்ஷன் ஆக வேண்டாம். உங்கள் பாதையில் எங்களை போன்ற உண்மையான வாசகர்களை கொண்டு பயணத்தை தொடருங்கள். மற்றவற்றை இறைவன் பார்த்து கொள்வான். ₹6000 சந்தா அல்லது மாதத்திற்கு ₹500 என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால் அதற்கு மேல் வரும் போது சிலருக்கு குடும்ப பட்ஜெட்டில் இடிக்கிறது. அதை தவிர்க்க குறைந்த அளவு பிர்திகளாக முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து புத்தகங்களை வெளியீடலாம். இந்த உலகத்தில் யாரையும் திருப்தி படுத்த முடியாது. ஆனால் ஓரளவுக்கு திருப்தி படுத்த முயற்சி செய்யலாம். வாசகர்களுக்கு பிடித்த தேவையான கதைகளை புத்தகமாக வெளியீட்டால் அதிருப்தி கண்டிப்பாக குறையும். சில கிடைப்பதற்கரிய பழைய முத்துக்காமிக்ஸ்களையும், டெக்ஸ் வில்லர் மெபிஸ்டோ,யுமா கதைகளையும், ராணிக்காமிக்ஸில் வந்த 007 ஜேம்ஸ் பாண்ட் கதைகளை போடும் பட்சத்தில் விற்பனை அதிகரிக்க வாய்ப்புண்டு. ஸ்கேனலேசனை பொறுத்தவரை நீங்கள் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்காததே தவறுகள் நடப்பதற்கு காரணம். அதனால் நீங்கள் உரிமை வாங்கிய கதைகளை யாரேனும் தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மற்றவர்கள் திருந்திவிடுவார்கள் என்பது உண்மையான வாசகர்களின் எதிர்பார்ப்பு.

  மற்றவை நேரில் சென்னை புத்தக விழாவின் போது

  ஐ.வி.சுந்தரவரதன்
  சின்ன காஞ்சிபுரம்.

  ReplyDelete
  Replies
  1. // ஸ்கேனலேசனை பொறுத்தவரை நீங்கள் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்காததே தவறுகள் நடப்பதற்கு காரணம். அதனால் நீங்கள் உரிமை வாங்கிய கதைகளை யாரேனும் தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மற்றவர்கள் திருந்திவிடுவார்கள் என்பது உண்மையான வாசகர்களின் எதிர்பார்ப்பு. //

   +1

   Delete
  2. பொறுத்தவரை நீங்கள் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்காததே தவறுகள் நடப்பதற்கு காரணம். அதனால் நீங்கள் உரிமை வாங்கிய கதைகளை யாரேனும் தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மற்றவர்கள் திருந்திவிடுவார்கள் என்பது உண்மையான வாசகர்களின் எதிர்பார்ப்பு. //
   ++11

   Delete
  3. நிறைய பேசியாச்சு சார் இது பற்றியெல்லாம் ! நமது நிலைப்பாடு பற்றி கீழே பதிவிட்டுள்ளேன் ! இனி அமலில் இருக்கப் போவது அதுவே !

   Delete
 69. விஜயன் சார்,

  // "ஈரோடு ஸ்பெஷல்" என்று புதுசாயொரு வெடியினைப் பற்ற வைக்காது - ஜம்போ சீசன் 2-ன் ஸ்பெஷல் இதழொன்றை அதற்கென ஒதுக்கிட்டால் சிக்கல் தீர்ந்தது ! //

  பல நல்ல விஷயங்கள் இருக்கும் போது இது போன்று உப்பு சப்பு இல்லா விஷயங்களை பற்றி நீங்கள் கவலை பட தேவை இல்லை; அதுவும் இந்த வயதில் இது போன்ற கவலைகள் தேவையில்லாத ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. உரக்கப் பேசினால் - அது பலருக்கும் லாஜிக்காகத் தென்படக்கூடும் என்பது இன்றைய வாட்சப் யதார்த்தம் அல்லவா சார் ! 'அட...ஆமால்லே..?! அவர் சொல்றது கூட சரி தானோ ?' என்று அதற்கு likes தட்டி விடுவதையும் பார்க்கத் தான் முடிகிறதே ! அதனால் தான் இத்தகைய flippant கருத்துக்களுக்குக் கூட விளக்கம் தர நேரம் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது - moreso புதுச் சந்தாக்களின் சேர்க்கை பிஸியாய் நடந்து வரும் இந்தத் தருணத்தினில் !

   Delete
  2. //உரக்கப் பேசினால் - அது பலருக்கும் லாஜிக்காகத் தென்படக்கூடும் என்பது இன்றைய வாட்சப் யதார்த்தம் அல்லவா சார் ! 'அட...ஆமால்லே..?! அவர் சொல்றது கூட சரி தானோ ?' என்று அதற்கு likes தட்டி விடுவதையும் பார்க்கத் தான் முடிகிறதே//


   உண்மை. இது தான் இன்றைய நடைமுறையில் இருக்கிறது. வருத்தமான விசயமே.

   Delete
 70. வாரம் ஒரு பதிவு அவசியம் சார். பங்கேற்க முடியவில்லை என்றாலும்
  வாரம் தவறாமல் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் அதிகம். பதிவைக் குறைப்பதினால் எதிர்பார்த்திருப்பவர் களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஆகையால்
  எப்பொழுதும் போல் தொடரட்டும் தங்கள் பணி.

  ReplyDelete
 71. யாருக்காகவும் எதற்காகவும் காலம் நிற்க போவதில்லை.
  ஆசிரியர் மிது மிகுந்த மதிப்பு வைத்து உள்ளேன் என்று கூறுபவர்கள் ஸ்கேன்லேஷன் தவறு என்று ஆசிரியர் கூறினால் பொசுக்கென்று கோபப்பட்டு தளத்தில் பதிவு இட மாட்டேன் கூறுவது நியாயம் என்று நினைகிற்களா?

  காமிக்ஸ் ஒரு குடும்பம் அப்படி ன்னு பக்கம் பக்கமாக டையலாக் பேசுனது எல்லாம் சும்மா பேச்சுக்கா?

  இந்த காமிக்ஸ் தளத்தின் கேப்டன் ஆசிரியர் மட்டுமே. முடிவு எடுக்கும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு.

  நான் விமர்சணம் போடுவதால் காமிக்ஸ் ஒரளவு விற்பனை ஆகிறது என்ற ஒற்றை வாதத்தை வைத்து கொண்டு நான் ஸ்கேன்லேஷன்(திருட்டுதன்) செய்தால் கண்டு கொள்ள கூடாது என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.

  ஆசிரியர் ஸ்கேன்லேஷன் விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. எனது நிலைப்பாடு simple சார் ! நமது இதழ்களை ஸ்கேன் செய்து சுற்றில் விடுவது தொடர்ந்தால் ; அது சார்ந்த ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை நமது வக்கீலிடம் ஒப்படைப்பது !

   நாம் கால்பதித்து நிற்கும் தொடர்களின் முன்னுள்ள ; பின்னுள்ள ; சைடிலுள்ள கதைகளை ஸ்கேன்லேஷன் செய்து சுற்றில் விடுவது குறித்த ஆதாரங்கள் கிடைத்தால் - அவற்றை படைப்பாளிகளுக்குத் தெரிவிப்பது !

   Delete
  2. //ஆசிரியர் மிது மிகுந்த மதிப்பு வைத்து உள்ளேன் என்று கூறுபவர்கள் ஸ்கேன்லேஷன் தவறு என்று ஆசிரியர் கூறினால் பொசுக்கென்று கோபப்பட்டு தளத்தில் பதிவு இட மாட்டேன் கூறுவது நியாயம் என்று நினைகிற்களா?//
   அவங்க இவங்க இல்லை.

   Delete
 72. விஜயன் சார்,
  // இந்த ஸ்கேன்லேஷன் செய்திருக்கும் வாசகர்கள் எடிட்டருக்கு ரொம்பவே வேண்டப்பட்ட கோஷ்டியாக்கும் ; so அவர் அதன் மீது நடவடிக்கை எடுக்காது கண்டும்-காணாதும் இருக்கிறார் !! பவுன்சரை இந்தியாவில் வெளியிட, ஏகப்பட்ட பிற மொழிப் பதிப்பகங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கும் இந்த வேளையில் - இது போன்ற முயற்சிகளை கிள்ளிடாவிட்டால் //

  இந்த ஒரு விஷயத்தில் ஆரம்பத்திலேயே நீங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. எதுவுமே மாறியிருக்காது சார் ! Simple as that !

   நேரம் கிடைக்கும் போது 2015-ன் மத்தியிலான எனது அந்தப் பதிவினையும், அதற்கே எழுந்த சலனத்தையும் பற்றிப் படித்துத் தான் பாருங்களேன் - எனது சிக்கல்களின் பரிமாணம் புரிபடும் !

   ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பாய் நிகழ்ந்ததொரு சமாச்சாரத்தையுமே குறிப்பிடுகிறேன் இங்கே ! கம்பியூட்டர்களும், ஸ்கேன்னர்களும் அறிமுகமான வேளையது ! சேலத்திலிருந்து வாசகர் ஒருவர் நமது ஆரம்ப இதழ்களை வடை சுட்டு CD-களில் ஏற்றி விற்று வந்துகொண்டிருப்பதாகப் புகார்கள் நிறையவே வந்து சேர்ந்தன ! அப்போது நம்மிடம் பணியாற்றிய பொன்னுச்சாமி அண்ணாச்சியை, சேலத்துக்கு வசூலுக்குப் போகும் வேளையினில் கொஞ்சமாய் நேரம் எடுத்துக் கொண்டு இந்த வாசகரைச் சந்தித்து, இந்த முயற்சியினைக் கைவிடும்படி வலியுறுத்தச் சொல்லி அனுப்பியிருந்தேன் ! அவரும் அந்தமுகவரியைத் தேடிப் பிடித்து அங்கே போன சமயம் ஆள் நஹி ! So "முத்து காமிக்சிலிருந்து தேடி வந்ததாகச் சொல்லுங்கள் !" என்றபடிக்கு புறப்பட்டுவிட்டார் !! நடந்தது இது தான் ! And பொன்னுச்சாமி அண்ணாச்சிக்கு அப்போதே வயது 55 + இருக்கும் ! சீண்டினால் கூட கோபப்படாத மனுஷன் !!

   ஆனால் இந்த நிகழ்வு எவ்விதம் நமது வாசக வட்டத்தினுள் சுற்றில் உள்ளதென்று தெரியுமோ ? நாங்கள் இங்கிருந்து அடியாட்களை சேலத்துக்கு அனுப்பி வைத்து, அந்த வாசகரை மிரட்டி, எழுதி வாங்கினோமாம் ! அந்த வாசகரும் ரொம்பவே உளைச்சலுக்கு ஆளானாராம் !! ஊரையே காலி பண்ணிவிட்டுப் போய் விட்டாராம் ! "கொலையா பண்ணிட்டார் அந்த வாசகர் ?" என்ற பச்சாதாபம் தான் அவர் மீது எழுந்து நின்றது !! பின்னாட்களில் இதை கேள்விப்பட்ட போது முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது எனக்கு !! இந்த மாதிரியான அபத்தங்கள் துளிர் விடுவது எவ்விதம் என்று தெரியவில்லை ; ஆனால் அவை ஏற்படுத்தும் negativity-களை சுலபமாய் நம்பிட கணிசமானோர் உள்ளனர் என்பதே யதார்த்தம் !

   ஆகச் சின்ன வாசக வட்டத்தோடு பிரயாணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சார் நமக்கு ; so இங்கே இயன்ற மட்டிலும் எதிர்மறைகளைத் தவிர்க்க நினைக்கிறேன் நான் ! அது பலவீனத்தின் அடையாளமாய்ப் பார்க்கப்படலாம் என்றாலுமே ! ஆனால் நெட்டில் உலவிடும் நமது காமிக்ஸ் வாசகர்களை மனம் திறந்து அபிப்பிராயம் சொல்லச் சொல்லித் தான் பாருங்களேன் - இந்த ஸ்கேன்லேஷன் கூத்துக்களை ஆதரிப்போர் எத்தனை சதவிகிதம் - எதிர்ப்போர் எத்தனை சதவிகிதம் என்று ? முடிவுகள் உங்களை ஆச்சர்யப்படுத்திடக்கூடும் சார் !

   Delete
  2. சேலம் cd வாசகர் தொடர்பான நிகழ்வு மாயி படத்தில் கோவை சரளா விட்டு கொல்லைப்புறத்தில் இருந்து வடிவேலு கோட்டைச் சுவர் தான்டி செல்லும் போது ஊறார் பேசும் காமெடி தான் ஞாபகம் வருகிறது.

   சார் சின்ன வட்டம் சின்ன வட்டம் என நீங்கள் கவலை படுகிறீர்கள் ஆனால் இது பெரிய வட்டம் அதானாலே இது போன்று சிலரால் சம்பாதிக்க முடிகிறது.

   // எத்தனை சதவிகிதம் - எதிர்ப்போர் எத்தனை சதவிகிதம் என்று ? முடிவுகள் உங்களை ஆச்சர்யப்படுத்திடக்கூடும் சார் ! // யூகிக்க முடிகிறது சார். நான் கம்யூட்டரோ இல்லை மொபைலோ பெரும்பாலும் பயன்படுத்துவது எனது அலுவலக வேலை மற்றும் நமது அவ்வப்போது தளத்தில் பதிவிடவே.

   படிப்பது என்றால் புத்தகமாக வேண்டும். என்றும் இது போலவே இருப்பேன்.

   Delete
 73. சிறய கதை...

  தொழிலதிபர் ஒருவருக்கு திடீரென மார்பு வலி வந்து விட்டது.

  மருத்துவர் அவரை சிந்திக்க வேண்டாம் வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறார்.

  ஆனால் தொழிலதிபர் "எப்படி என்னால் சிந்திக்காமல் இருக்க முடியும். நூறு கோடி ரூபாய் லாபம் இலக்காக வைத்து உள்ளேன். அதை செயல்படுத்த நிறைய முதலிடு செய்து உள்ளேன். நான் இல்லாமல் என் கம்பெனி என்ன ஆகும்?."

  என்று கவலை பட்டு கொண்டு இருந்தார்.

  அவரின் தங்கை மகன் அவரை பார்ப்பதற்கு ICU வந்து இருந்தான்.

  "ரொம்ப நாள் கழித்து என்னை பார்ப்பதற்கு வந்து இருக்கிறான் பார்பதற்கு என் தந்தை போலவே இருக்கிறான். என் தந்தையும் கிட்டதட்ட நான் இப்போது இருக்கும் வயதில் நான் இருக்கும் நிலையில் தான் உயிர் இழந்தார்.அட ஆமாம்"

  அவருக்கு existentialism அவருக்கு புரிந்தது.

  சிறந்த விமர்சகர்கள் தளத்திற்கு வரலாம் போகலாம். அவர்கள் சிலாகிக்க படுவது இந்த தளத்தின் மூலமாக தான். அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சிலர் வருவதும் போவதும் நடப்பது இயல்பு.சிலர் வெளியேற்றம் இழப்பு களை கொண்டு வந்தாலும், இழப்புகளை சமாளித்து ஆசிரியர் தனது பதிவை ரசிக்கும் கடைசி வாசகர் இருக்கும் வரை பதிவு இடுவது அவரின் கடைமை.

  ReplyDelete
  Replies
  1. பதிவை மூட்டை கட்டும் எண்ணம் துளியும் நஹி சார் !

   மௌன வாசகர்களும் சரி , எது நடந்தாலும் தவறாது ஆஜராகும் ரெகுலர் வாசகர்களும் சரி, இங்கே வருகை தரும் வரையிலும் - நான் நிச்சயமாய் எப்போதும் போலவே active ஆகயிருப்பேன் !

   Delete
 74. இத்தான் சார் நம்ம கெத்து

  ReplyDelete
 75. விஜயன் சார், இந்த தளத்தை பார்வையிடும் மௌனப் பார்வையாளர்கள்
  அதிகம்.

  மூன்று வாரங்களுக்கு முன்னர் எனக்கு ஒருவர் ஃபோன் செய்து ஈரோடு புத்தகத் திருவிழாவில் 1000 பக்கம் உள்ள கௌபாய் கதை ஒன்று இருக்கிறதாமே ? அதை எப்போது ஆசிரியர் வெளியிடுவார்? 2019ல் வருமா? நான் சந்தா செலுத்தி தொடர்ந்து நமது காமிக்ஸ் படிக்கிறேன் என்றார். நான் அடுத்த ஆண்டு அட்டவணையில் இல்லை இந்த மெகா கதை இல்லை. ஒரு வேளை ஈரோடு புத்தகத் திருவிழா ஸ்பெஷல் இதழாக வரலாம். இல்லை என்றால் வரும் ஆண்டுகளில் நமது வாசகர்கள் எண்ணிக்கை அதிகமானால் கண்டிப்பாக நமது ஆசிரியர் வெளியிடுவார் என கூறினேன்.


  அவருக்கு நான் ஈரோடு சென்றது எப்படி தெரியும் அதே போல் நண்பர்கள் இங்கே உரையாடுவது அனைத்தும் அவர் தவறாமல் படிக்கிறார்.

  அவர் ஆறுமுகநேரி ஊரில் உள்ள பாலசுப்பிரமணியன் என்ற வாசகர்.

  எனவே இங்கு பின்னூட்டம் குறைவு என்பதை விட இங்கு உங்கள் பதிவுகளை படிக்கும் வாசகர்கள் அதிகம் சார்.

  ReplyDelete
  Replies
  1. மௌன வாசகர்கள் நிறையவே உண்டென்பதை நானும் அறிவேன் சார் ; அதனால் தான் "பதிவுக்கு ஒய்வு" என்ற எண்ணமே எனக்கு எழவில்லை !

   Delete
 76. We want at least one post in a week. I'm a silent but regular spectator/ visitor of this at least twice a week. To me every Sunday begins with your post.So please, you don't be distracted unwanted, unreal and unjustified comments. Thank you very much Sir, for your strenuous, painstaking and lovely efforts to make comic- reading a pleasure. With Regards G Siva, Trichy.

  ReplyDelete
  Replies
  1. கரம் கூப்பிய நன்றிகள் சார் !

   Delete
 77. This comment has been removed by the author.

  ReplyDelete
 78. பராகுடா அட்டைப்படம் கருப்பு வெள்ளையில் சூப்பரா இருக்கு.

  ReplyDelete
 79. பாண்ட் மாதிரி ஒரு அட்டகாசமான கதையை படிச்சிட்டு அதற்கு அடுத்த மாதமே இப்படி ஒரு மொக்கையை (" ஆக்‌ஷன் ஸ்பெஷல் ")கொடுத்துட்டீங்களே சார்....சத்தியமா முடியலை சார்.....மூனு நாளா படிக்கிறேன் , ஆனா இன்னும் அந்த ஜாக் பையன தாண்டி போக முடியல....கடைசியில என்னையும் இங்க கமெண்ட் போட வெச்சிட்டீங்களே சார்.....

  ReplyDelete
 80. This comment has been removed by the author.

  ReplyDelete
 81. எனக்கு உதவிகள் செய்த செய்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கு மிகவும் நன்றிகள் 🙏🙏🙏🙏

  ReplyDelete