நண்பர்களே,
வணக்கம். ஜனவரியின் பணிகளை முடித்த கையோடு பெரும் பெருமூச்சொன்றை விட்டபடிக்கே காலாட்டிக் கொண்டிருக்கிறேன் இந்த வாரயிறுதியில் ! பிப்ரவரியின் ஜானி…ஜெரெமையா & Co-வோடு குசலம் விசாரிப்பைத் தொடர்ச்சியாய் துவக்கியிருக்க வேண்டும் தான் – ஆனால் சென்னைப் புத்தக விழா சார்ந்த பேக்கிங் பணிகளைப் பராக்குப் பார்த்துக் கொண்டு பொழுதை ஓட்டி வருகிறேன் ! வழக்கமாய் ஸ்டெல்லா & வாசுகி இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்களெனும் போது – நான் இதனில் மூக்கை நுழைக்கப் பெருசாய் அவசியங்கள் இருந்திடாது ! ஆனால் தற்போது நமது front office முற்றிலும் புதுமுகங்களுடனானது எனும் போது அக்கடாவென்று ஒதுங்கி நிற்க இயலவில்லை ! And புத்தாண்டுமே கூப்பிடு தொலைவில் நிற்பதால் ஓரிரண்டு நாட்களை லாத்தலாகச் செலவிட்டான பிற்பாடு பிப்ரவரி இதழ்களுள் மூழ்கினால் போச்சு என்றுபட்டது ! So இந்தப் பதிவில் எதைப் பற்றி எழுதுவதென்று யோசிக்க ஆரம்பித்த கணமே மண்டையில் உதித்தது – இதுவரையிலான சில அசாத்திய ஜனவரிகளைப் பற்றிய நினைவு ! ஏழு கழுதை வயதாகியுள்ள நிலையில் இதுவரைக்கும் ஏராளமான புத்தாண்டுகளைப் பார்த்தாகியாச்சு ! ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்நேரத்து சந்தோஷ நினைவுகள் maybe அப்போதைய ஜனவரிகளை ஜாலியானதாக மாற்றித் தந்திருக்கலாம் ! ஆனால் அவை எவையுமே cache memory-ல் தங்கிட்ட ரகங்களில்லை ! But இன்னும் எத்தனை பொழுதுகள் ஓட்டமெடுத்தாலுமே – “ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான ஜனவரிகள்” என்ற அடையாளத்தை விட்டுத் தந்திடாது குறிப்பிட்ட சில ஆண்டுகள் சார்ந்த ஞாபக அலைகள் என்னுள் தொடர்ந்திடுவதை மறக்க இயலாது ! அவற்றைப் பற்றி எழுத நினைத்தேன் இந்த ஞாயிறுக்கு ! ‘போச்சுடா… தம்பியாபுள்ள ரிவர்ஸ் கியரைப் போட்டுட்டாப்லே!‘ என்று சலித்துக் கொள்ளக் கூடிய நண்பர்கள், ஞாயிறின் தூக்கத்தைத் தொடர்தல் தேவலாமென்பேன்! For the rest – here goes:

இன்னும் எத்தனை தூரம் பயணித்தாலும் – தொடரவுள்ள இந்த 5 ஆண்டுகளின் ஜனவரிகள் ரம்யத்தைத் துளியும் இழக்காது என்னுள் தொடர்ந்திடும் என்பது நிச்சயம்!
- 1985: The Start of it all…!
துவைத்துத் தொங்கப் போட்டதொரு காலகட்டமே இது ! இங்கோ ; ‘சிங்கத்தின் சிறு வயதில்" பகுதியிலோ – இந்தத் தருணங்களைப் பற்றி நிறையவே எழுதியிருப்பேன் தான் ! ஆனால் ஞாபகத்திறன் இன்றைக்கு எனது strong point இல்லை என்பதால் – எதை ஏற்கனவே எழுதியிருந்தேன் ? ; எது சொல்லாத சேதிகள் என்ற தெளிவு என்னுள் இல்லை! So மறுஒலிபரப்பு பலமாயிருப்பின் – அடுத்த பத்திக்கு hop…skip & jump ப்ளீஸ் !
1984 இறுதிக்கு வந்து கொண்டிருந்த வேளையில் எனக்கு எல்லாமே ஒருவிதமான கூலிங் க்ளாஸ் effect-ல் குளிர்ச்சியாய் ; ரம்யமாய் தென்பட்டுக் கொண்டிருந்தன ! ஆறே மாதங்களுக்கு முன்பாய் லயன் காமிக்ஸிற்குப் பிள்ளையார் சுழி போட்டிருந்த சிரம நாட்கள் பற்றிய ஞாபகங்களோ ; மாடஸ்டியோடு முதலிரண்டு மாதங்கள் போட்ட மொக்கைகளோ – ரொம்பவே தொலைதூர நிகழ்வுகளாய் மாத்திரமே டிசம்பர் 1984-ல் என்னுள் நின்றன ! ஸ்பைடர் & ஆர்ச்சி எனும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் ஏககாலத்தில் முழங்கத் துவங்கியிருக்க – மாதம்தோறும் 19,000 to 20,000 பிரதிகளின் விற்பனைக்கு உத்தரவாதமிருந்தது ! And அத்தனையுமே முன்பணத்துக்கெதிரான விற்பனைகள் மட்டுமே ! ஏஜெண்ட்கள் யாரேனும் “கடன்??” என்று கேட்டால் – “அப்டீன்னா??” என்று நாங்கள் வினவிய காலமும் கூட அது ! So வங்கியில் ரூ.50,000 கையிருப்பு (trust me guys – அந்நாட்களில் அதுவொரு செம பணக்கார feeling-ஐ தந்திடக் கூடிய தொகை!!!) பீரோவில் கணிசமாய் கதைகளிருப்பு ; அதே வேளையில் “கிட்டங்கி” என்றொரு சமாச்சாரமே அவசியப்படா சூழலில் – வாழ்க்கையே ஒரு வசந்தகாலமாய்க் காட்சி தந்தது! ஆனால் தலைக்குள் எவ்விதம் தோன்றினாலுமே – வெளியே நிலவிடும் டிசம்பரின் குளிர், வெடவெடக்கத் தானே செய்திடும் ?! அந்தக் குளிர் மாலைகளில் ஒரு புதிரான கூத்தை அடிக்கடி அரங்கேற்றினோம் – நானும், எனது தாய்வழித் தாத்தாவும்!!
இங்கிலாந்தின் D.C.Thomson காமிக்ஸ் நிறுவனம் ஏகப்பட்ட காமிக்ஸ் வெளியீடுகளை Fleetway-க்குப் போட்டியாய் வெளியிட்டு வந்தது எனக்கு அந்நாட்களில் நன்றாகவே தெரியும் தான் ! சென்னையின் மூர் மார்க்கெட் பழைய புத்தக மார்கெட்டில் வாங்கிடக் கூடிய ஏகப்பட்ட காமிக்ஸ்களுள் அவையும் சேர்த்தி ! But அது ஏனோ தெரியாது - அவர்களது சித்திர பாணிகளோடு எனக்கு அவ்வளவாய் ஒன்றிட முடிந்ததில்லை ! அவர்களது பாணிகளும் Fleetway-ன் ஸ்டைலிலேயே இருப்பினும், அவ்வளவாய் அவற்றிற்குள் நான் மூழ்கிட எத்தனித்தது கிடையாது !! But மேலோட்டமான புரட்டல்களில் அவர்களது சிலபல prime நாயகர்களை அறிவேன் தான் & so அவர்களது அணிவகுப்பிலும் ஒரு “இரும்புக்கை” பார்ட்டி இருப்பது தெரியும்! (பின்நாட்களில் இரும்புக்கை ஏஜெண்ட் வில்சன் என்று நாம் வெளியிட்டோமே – அவரே தான்!) அந்நாட்களில் முத்து காமிக்ஸ் எனக்கொரு போட்டிக் கம்பெனியே & அவர்கள் வசமிருந்த “இரும்புக்கை மாயாவி” ஒரு அசாத்திய துருப்புச்சீட்டே ! அது என்னை ரொம்பவே உறுத்துவது வாடிக்கை & அது பற்றி தாத்தாவிடமும் அடிக்கடி பேசுவதுண்டு ! ஆக Fleetway-ன் போட்டிக் கம்பெனியின் கைவசமும் ஒரு இரும்புக்கரத்தார் இருப்பதைப் பற்றி ஒரு நாள் பேசி வைக்க – “அதை வாங்கிடற வழியைப் பாரு !” என்று தாத்தா உற்சாகமாகி விட்டார்கள் ! இன்டர்நெட்டோ ; செல்போனோ இல்லாத அந்த நாட்களில் கடுதாசி போடுவது தான் தகவல் தொடர்புக்கான ரஸ்தா ! But தாத்தாவுக்கு அத்தனை காத்திருப்பு காலவிரயமாய்த் தோன்றியதால் – “போன் அடிச்சுப் பேசிடுடா!” என்று அபிப்பிராயப்பட, வாழ்க்கையில் முதன்முதலாய் அயல்தேசத்துக்குத் தொடர்பு கொள்ளும் முஸ்தீபுகளினுள் இறங்கினேன் ! “Trunk Call புக்கிங்” என்ற பாணி தான் வெளியூர்களுக்கு அழைப்பதற்கே ! இந்த அழகில் – அயல்தேசத்துக்குப் பேச வேண்டுமெனில் மதுரையில் இதற்கென உள்ள பிரிவில் புக்கிங் செய்து, அவர்கள் சொல்லும் நேரத்துக்குக் காத்திருக்க வேண்டும் ! “நிமிஷத்துக்கு ரூ.100 ஆகும்... ஞாபகம் வச்சுக்கோங்க” என்று மதுரைக்காரர்களும் பயமுறுத்திவிட்டுத் தான் புக்கிங்கே எடுத்துக் கொள்வார்கள் !
அந்த 1984-ன் டிசம்பரின் மத்தியில் ஒரு நாள் – D.C.Thomson நிறுவனத்தின் இலண்டன் அலுவலகத்து நம்பரை எடுத்துக் கொண்டு தடதடக்கும் இதயத்துடன் போன் புக் பண்ணி வைத்தேன் ! தாத்தாவும், ஆவலோடு அருகே காத்திருக்க – எனக்கோ உள்ளுக்குள் நிறையவே உதறல். “முதல்வாட்டி வெளிநாட்டவரோடு பேசப் போகிறோம் ; தத்துப்பித்தென்று எதையாச்சும் உளறி வைத்துவிடக் கூடாதே! அப்புறம் பேராண்டியை பெரிய பிஸ்தாவாய் உருவகப்படுத்தியிருக்கும் தாத்தாவுக்கு முன்பாக மூக்குடைபட்டு விடப்படாதே!” என்று எனக்குள் ஜெர்க் ! ஃபோன் அடித்தாலே – அடித்துப் பிடித்து எடுத்துக் கொண்டு என்னால் தயார் பண்ண முடிந்த ஸ்டைலான வெள்ளைக்கார accent-ல் “ஹல்லோாா....” என்பேன் ; மறுமுனையிலோ “அண்ணாச்சி... பண்டல் போட கிஸ்தான் சாக்கு வேணுமா?” என்று யாரேனும் பேசிக் கொண்டிருப்பார்கள் ! டிசம்பரின் அந்த மாலை நாட்களில் 3 தபா ஃபோன் புக் பண்ணிக் கொண்டு காத்திருந்து – எதுவும் தேறவில்லை ! ”இன்னிக்கு லைன் கிடைக்கலை சார்... கேன்சல் பண்ணிடட்டுமா?” என்று மதுரையிலிருந்து மூன்று தடவைகளுமே தகவல் வர – நானும் “பிழைச்சோம்டா சாமி!” என்று கிளம்பிவிடுவேன் ! ஆனால் தாத்தா விடுவதாகயில்லை ! நான்காவது தடவை டெலிபோன் டிபார்ட்மெண்டும் கைவிரிக்காது போக – மெய்யாலுமே ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி செம ஸ்டைலாக ‘ஹலோாா‘ என்று விசாரிப்பது காதில் விழுந்தது இன்னமும் நினைவுள்ளது ! நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக் கொள்ள - “அ...அது வந்து... சிவகாசிலேர்ந்து...அதாச்சும் இந்தியாவிலேர்ந்து.. காமிக்ஸ் போடற கம்பெனியிலேர்ந்து பேசறேன்... ‘IRONFIST” வாங்கணும். அது தொடர்பாப் பேசணும் !” என்று எதையோ உளறி வைத்தேன் ! மறுமுனையில் ஓரிரு நிமிடங்களுக்கு மௌனம்... எனக்கோ ஃபோனை வைத்து விட்டு ஓடியே போய் விடலாமா ? என்ற எண்ணம் ! அதற்குள் அவரே மறுபடியும் பேச ஆரம்பித்தார் – இம்முறை நிறுத்தி, நிதானமாகவே கேள்விகள் கேட்கும் தொனியில் ! எனக்கோ இங்கே “மீட்டர் ஓடுதே” என்ற பயமும் கவ்வ, இயன்ற பதில்களை அவசரம் அவசரமாய்ச் சொல்லி வைத்தேன் ! ஒரு மாதிரியாய் எனது தேவை என்னவென்பதைப் புரிந்தவர் – “சாரி சார்... ஆனால் இது D.C. தாம்சனின் விற்பனை அலுவலகம் மட்டுமே! உரிமைகள் சார்ந்த விசாரிப்புகளுக்கு ஸ்காட்லாந்தில் உள்ள எங்களது உரிமங்கள் சந்தைப்படுத்தும் பிரிவான DCT Syndication – உடன் பேசிட வேண்டும்" என்றபடிக்கே அவர்களது ஃபோன் நம்பரைத் தந்தார் ! “சரிங்கோ” என்றபடிக்கே லைனை கட் பண்ணி விட்டு மதுரைக்காரர்களிடம் பேசினால் – பில் தொகை ரூ.500/-க்கு மேலென்றார் ! அந்நாட்களில் சிவகாசியிலிருந்து சென்னைக்கு ரயிலில், ஸ்லீப்பரில் போகவே கட்டணம் ரூ.60/-க்குள் தான் ! நாலு நிமிஷம் வேர்க்க, விறுவிறுக்கப் பேசிய கூத்துக்கு ஐநூறா ?? என்று நான் திகைத்துப் போய் நிற்க – தாத்தா துளி கூட ஜகா வாங்கவில்லை ! "இவையெல்லாமே அத்தியாவசியங்கள்; ரொம்பக் கணக்குப் பார்க்கவெல்லாம் கூடாது !!" என்று சொல்லியபடிக்கே மறுநாள் மாலை ஸ்காட்லாந்திற்கு ஃபோன் அடிக்கச் செய்தார் !
டன்டீ என்ற நகரில் இருந்தது அந்த அலுவலகம் ! மறுக்கா மதுரை டெலிபோன் டிபார்ட்மெண்ட் ; மறுக்கா கால் புக்கிங் ; மறுக்கா தடதடக்கும் இதயத்துடனான காத்திருப்பு ; மறுக்கா ஒரு அயல்தேசத்து ‘ஹலோ‘ தொடர்ந்தது ! ஆனால் இம்முறையோ லைனில் இருந்தது ஒரு ஆண் ! இங்கிலாந்தில் ஒட்டுமொத்தமான பிரதான மொழி இங்கிலீஷ் தான் என்றாலும் – ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு தினுசாய்ப் பேசுவதுண்டு ! உசக்கே போகப் போக – யார்க்ஷையர் பேச்சுபாணிகள் ஒரு மாதிரியெனில், வேல்ஸில் இன்னொரு விதம் ! And ஸ்காட்லாந்தின் பாணி இன்னொரு படு வித்தியாசமான விதம் ! இன்றைக்காவது கிரிக்கெட் கமெண்ட்ரியில் இது போன்ற accent-களைக் கேட்டுப் பரிச்சயமாகிட வாய்ப்புள்ளது நமக்கு ! But 17 வயதுச் சுள்ளானான எனக்கு, அன்றைக்கு அந்த ஸ்காட்டிஷ் பாணியின் தலையும் புரியவில்லை ; வாலும் புரியவில்லை! நான் பேசுவது அவருக்குபப் புரிகிறது ; பதிலும் சொல்கிறார்! ஆனால் அந்த பதில் தான் என்னவென்று கிஞ்சித்தும் புரிந்தபாடில்லை எனக்கு ! ஒரு மாதிரியாய் என் சிரமத்தைப் புரிந்த மனுஷன் – மெதுவாய் மறுக்காவும் சொல்லத் துவங்க – சாராம்சம் புரிந்தது ! மேக்கிரகெர் என்ற அவர்களது மேனேஜர் விடுப்பில் உள்ளதாகவும் – புத்தாண்டுக்கு முன்பாக ஆபீஸிற்குத் திரும்புவார் என்றும், IRONFIST உரிமங்கள் குறித்து பேச விரும்பிடும் பட்சத்தில், அவரோடு தொடர்பு கொள்ள வேண்டுமென்பதையே சொல்லிட முயற்சித்திருக்கிறார் ! ஓ.கே... ஓ.கே... ஓ.கே...!! என்று மங்களம் பாடிவிட்டு தாத்தாவிடம் விஷயத்தை ஒப்பித்தேன் ! 'விடாதே....அவரையும் போட்டுத் தாக்கு !!' என்று எதிர்பார்த்தபடியே தாத்தாவும் சொல்லிட, டிசம்பர் 31-ம் புலர்ந்தது & நான் ஞாபகத்தில் இல்லாதது போலவே பாசாங்கு பண்ணினாலும் – உள்ளுக்குள் இந்த ஃபோன் முயற்சிகளின் த்ரில் எனக்குமே ஒட்டிக் கொண்டிருந்தது ! இம்முறை கொஞ்சம் தெளிவாய்ப் பேசத் தீர்மானித்தவனாய் கால் புக் பண்ணி நேராக மிஸ்டர் மேக்கிரகெரையே பிடித்தும் விட்டேன் ! அடுத்த 10 நிமிடங்களுக்குத் தொடர்ந்தது எங்களது சம்பாஷணை ! எனக்கோ மீட்டர் பிசாசாய் ஓடும் காட்சி மட்டும் தலைக்குள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது ! ஒரு மாதிரியாய்ப் பேசி முடித்த போது – “இரும்புக்கை ஏஜெண்ட் உரிமங்கள் தந்திடலாம்; நமது offer என்னவென்பதைப் பொறுத்து!” என்ற பதிலை அவரிடமிருந்து வாங்கியிருந்தேன் ! இனி நிதானமாய் யோசித்து, லெட்டராய் டைப்படித்து அனுப்பி, மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்த்துக் கொள்ளலாமென்று தீர்மானித்து விட்டிருந்தேன் ! தாத்தாவுக்கோ பேராண்டி ஏதே கோலார் தங்க வயலு்குள்ளே சோலோவாகப் போய் ஒரு பாளத்தை லவட்டி எடுத்து வந்து விட்டதைப் போலொரு சந்தோஷம் ! இங்கே டெல்லியிலும், மும்பையிலும், இருந்த ஏஜெண்ட்களோடு பேசி, கதைகளை வாங்கிய அனுபவங்களைத் தாண்டி வேறு எதுவுமே எனக்கில்லாத நாட்களவை ! So எனக்குமே எதையோ சாதித்து விட்டது போலொரு ஜிலீர் உணர்வு ! அந்த Ironfist கதைத் தொடர் சராசரியானதே என்பதோ ; ஏணி வைத்தாலுமே இரும்புக்கை மாயாவியின் தரத்தைத் தொட்டிட சாத்தியப்படாதென்பதோ அந்த நொடியில் புத்திக்கு எட்டவில்லை ! மாறாக – “எங்ககிட்டேயும் சீப்பு இருக்குல்லே... கலைச்சுவுட்டு சீவிக்குவோம்லே!” என்ற மிதப்பு தான் மேலோங்கியது ! அன்றைக்கிரவு வீட்டுக்குப் புறப்பட சைக்கிளை மிதிக்கும் போது – ஸ்காட்டிஷ் accent-ல் இங்கிலிபீஷில் எனக்குள்ளேயே நானாய் பிளந்து கட்டிக் கொண்டே போனது இப்போவுமே நினைவில் உள்ளது ! And எல்லாவற்றையும் விடத் தூக்கலாய் நினைவில் நிற்பது மறு நாள் டெலிபோன் டிபார்ட்மெண்டிலிருந்து வந்த சேதி தான் ! மொத்தமாய் டிசம்பரின் அயல்நாட்டு போன்கால்களுக்காகியுள்ள பில் ரூ.2700 சுமார் என்று ஒரு பெண்குரல் சொல்லிட – அந்தப் புத்தாண்டின் ஜிலுஜிலுப்பிலும் எனக்கு வியர்த்து விட்டது ! ஆனாலும், ஒரு “சாதனைக்கு” விலையில்லாது போகாது என்று என்னை நானே தேற்றிக் கொண்டு அந்தப் பணத்தை எண்ணி வைத்தேன் ! "அட ..ஒரு தம்மாத்துண்டு போன் காலுக்கு இத்தனை பீலாவா ?" என்று உங்களுக்குத் தோன்றினால் நிச்சயம் justified தான் !! ஆனால் 35 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவினில் - நிலவரங்கள் முற்றிலும் வேறு !! அன்றைக்கெல்லாம் நம்மை நாடி பன்னாட்டு நிறுவனங்களோ, குழுமங்களோ படையெடுப்பதில்லை !! மாறாக - "வெள்ளைக்காரர்கள் " என்றதொரு massive பிம்பம் நிலவி வரும் இங்கு ! So கடல் கடந்த வணிகமென்பது இன்றைக்குப் போலொரு குழந்தைப் புள்ளை மேட்டராய் அன்று காட்சி தந்திட்டதில்லை !! And நானேயொரு அனுபவமிலா குழந்தைப் பையனாக நின்ற தருணத்தில், எனது மலைப்புகள் were that much bigger !!

So எனது முதன் முதல் அயல்தேச வியாபார முயற்சிக்கு (!!) ஒரு ஷேப் தந்த 1984-ன் இறுதிகளும், '85 ஜனவரியின் துவக்கங்களும் இப்போதுமே evergreen in memory ! இதில் கொடுமை என்னவெனில், வேக வேகமாய்த் துவக்கிய பேச்சு வார்த்தைகள் அப்பாலிக்கா slow ஆகிப் போய் விட்டன ! In fact - முதல் முறையாக 1985-ல் frankfurt புத்தக விழாவிற்குச் சென்ற போதுமே, D.C.Thomson நிறுவனத்தைச் சந்திக்க முயன்ற நினைவே இல்லை !! Maybe பிரெஞ்சு & இத்தாலியக் கதைகளைப் பார்த்த பிரமிப்பில் இதனை மறந்து விட்டேனா - தெரியலை ! But மறு ஆண்டு அவர்களை சந்தித்து, கதைகளுக்கு உரிமைகளை வாங்கி, ஒரு மாதிரியாய் 1987-ன் மத்தியில் "இரும்புக்கை வில்சனை" தமிழ் பேசும் நல்லுலகத்தில் உலவ விட்டோம் !! ஒரு புலிக்கு முன்னே - 'மியாவ்' எனும் பூனையாய் அவரும் உலாவினாலுமே - எனக்கோ 'கமான் டைகர் !! கமான் டைகர் !!' என்ற வேகம் தான் ஊற்றெடுத்தது !! ஷப்பா - ஒரு இரும்புக்கை படுத்திய பாடுகள் தான் எத்தனை - அந்நாட்களில் !!
அதே மாதத்தின் ஸ்பெஷல் இதழாய் “கொலைப்படை” வெளியானதும் அந்த மிரட்டலான ஸ்பைடர் சாகஸத்தையும், இரும்பு மனிதன் அதிரடியையும் உங்களிடம் சேர்ப்பித்த குதூகலங்களும், அவற்றை நீங்கள் கொண்டாடிய ஆரவாரங்களும் அதே ஜனவரி 1985-ஐ செம மெர்சலாக்கிய icings on the cake ! நமது வெளியீடுகளுள் இன்றைக்குமே ஒரு செம stand-out ஆக நின்றிடும் பெருமை அந்த இதழுக்கு உண்டெனும் போது – அந்த ஜனவரியின் பிரத்யேகத்தனம் பற்றி சொல்லவும் வேண்டுமா – என்ன?
ஜனவரி 1986 – New forays !
1985-ல் பச்சாவாய் ஆண்டைத் துவக்கியவன் – அந்தாண்டின் இறுதியினை எட்டிய சமயம் – கடல் பல கடந்து ; கலர் கலரான ஐரோப்பியர்களோடு கதை பல கதைத்து ; தொடர் பல வாங்கிய குலேபகாவலியாக உருமாற்றம் கண்டிருந்தான் ! அந்த '85 டிசம்பரின் வெளியீடான “ஆப்பிரிக்க சதி”-ன் தயாரிப்பினையும், அதன் பின்னே வண்டி வண்டியாய் விளம்பரங்களை அள்ளி விடும் பொருட்டு அடித்த லூட்டிகளையும், சத்தியமாய் மறக்க இயலாது ! அதே தருணத்தில் தான் நமது “திகில்” காமிக்ஸின் அறிமுகத்துக்கென அதகள ஜரூரில் வேலைகள் ஓடிக் கொண்டிருந்தன ! இரவுகளில் நமது ஆபீஸில் குறைந்தபட்சம் நான்கோ, ஐந்தோ ஆர்ட்டிஸ்ட்கள், 3 அச்சுக் கோர்ப்புப் பணியாளர்களென பணியாற்றிக் கொண்டிருப்பார்கள் – திகிலின் பெரிய சைஸ் பக்கங்களில் !
ரொம்ப காலமாகவே வாங்கி முத்து காமிக்சில் சும்மா கிடந்த கதைகளின் பட்டியலில் Jetace Logan என்றதொரு சாகஸமும் உண்டு ! முத்து காமிக்ஸில், ஸ்பைடரின் "The Man who stole NewYork" கதையோடு சேர்ந்து, இதுவுமே துயில்பயின்று கொண்டிருக்கும் ! ‘பேய்-பிசாசுகள் வருகை தந்ததே வேற்று கிரகத்திலிருந்து தான்‘ என்பது போலானதொரு கதைக்களத்தோடு பயணிக்கும் இந்தக் கதை எனது all time favourites-களுள் ஒன்று ! ஆனால் திகில் கதைகள் வெளியிடுவதென்பதெல்லாம் அபச்சாரம் என்பது மாதிரியானதொரு கட்டுப்பட்டியான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்க, இவற்றின் மீது கைவைக்க முத்து காமிக்ஸில் யாருக்குமே ‘தம்‘ இல்லை ! எனக்குமே ஒரு பிரத்யேக horror காமிக்ஸ் என்ற தடம் உருவாகிடும் வரையிலும் இதனை ரெகுலரான லயனில் வெளியிடத் தயக்கமே ! So திகில் இதழினை எனக்குள்ளே உருவாக்கப்படுத்திப் பார்த்த முதல் தருணத்திலேயே அந்தக் கதையை லவட்டிடுவது என்று தீர்மானித்தேன் ! "பிசாசு கிரகம்" என்ற பெயரிலோ ; அல்லது அது மாதிரியான வேறொரு பெயரிலோ திகில் # 1 -ல் வெளியான முழுநீள சாகசம் இது தான் !
“திகில்” என்ற நமது template – Fleetway-ன் ‘மிஸ்ட்டி‘ என்ற வார இதழின் பிரதிபலிப்பே ! சிற்சிறு திகில் கதைகள்; சிலபல தொடர்கதைகள் என்பதே Misty-ன் பாணி! நான் அதனை – சிற்சிறு திகில் கதைகள் + ஒரு முழுநீள சாகஸம் என்று tweak பண்ணிட உத்தேசித்திருந்தேன் ! கதைகளை வரவழைத்து – எனக்குத் தெரிந்தமட்டுக்கு மொழிபெயர்ப்பும் செய்து சுடச்சுட அடுத்த 3 மணி நேரங்களுக்குள்ளாகவே அந்தச் சிறுகதைப் பக்கங்களைத் தயார் செய்து ரசித்த நாட்கள் அவை ! லயனில் ஓரிரண்டு ஸ்பெஷல் இதழ்களை மாத்திரமே பெரிய சைஸில் வெளியிடுவது ; பாக்கி எல்லாமே நமது ஆதர்ஷ பாக்கெட் சைஸில் – என்ற பாணிக்கு நாம் முற்றிலுமாய் பழகிப் போயிருந்த தருணத்தில் – ‘திகில்‘ இதழ்களுக்கென நான் திட்டமிட்டு வைத்திருந்த அந்த all-big சைஸ்களைப் பார்த்துப் பார்த்து நானே சிலாகித்துக் கொண்டிருந்தேன் – காத்திருந்த சாத்துக்களை அறியாதவனாய் ! And முதன்முறையாக தமிழில் – சிறு கதைகள் – ஹாரர் கதைகள் – ஒரு முழுநீள சாகஸம் என்ற template துவக்கம் கண்டது அந்தத் தருணத்தில் தான் என்பதால் – ஏதோவொரு மைல்கல்லைத் தொட்டுக் கொண்டு நிற்பது போலவும் ; பெருசாய், புரட்சிகரமாய் காமிக்ஸ் வாசிப்பு இனி இதன் பின்னணியிலேயே இருந்திடப் போவது போலவும், சுகமான கனாக்கள் எனக்குள் ! அது மாத்திரமின்றி – முதன்முறையாக 2 இதழ்களை நமது நிறுவனத்திலிருந்து வெளியிடும் த்ரில்களையுமே முதன்முறையாய் நான் உணர்ந்த வேளையது ! மாதம் 4/5 என போட்டுத் தாக்கும் இன்றைய சூழலில் – அந்தப் பழம் நினைவுகள் கூத்தாய்த் தோன்றிடலாம் தான் ; ஆனால் முதல்முறைகளுக்கு எப்போதுமே ஒரு விசேஷத்தன்மை உண்டு தானே ? பண்டல்களில் 200 லயன் இதழான “மனித எரிமலை” + 200 திகில் # 1 என அடுக்கி விட்டு, அதற்கான பில்லை கெத்தாகப் போட்டு நான் ரசித்த ஜனவரி 1, 1986 – ஒரு awesome timeframe – என்னளவிற்காவது !
பற்றாக்குறைக்கு வெகு சமீபத்து foreign return என்ற கெத்தும் அப்போதைக்கு ஐயாவுக்கு நிரம்பவே உண்டென்பதால் - எனது அப்போதைய பொழுதுகள் செம ஜாலியானவை ! லண்டனின் சந்தையில் ஒன்றரையணாவுக்கு வாங்கியாந்த சட்டைகளையும், டி-ஷர்ட்களையும் மாட்டிக் கொண்டு பண்ணிய லூட்டிகளை இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிப்பு-சிப்பாய் வரும் !! அங்கிருந்து வாங்கி வந்த கேசட்களில் ஒன்லி வெஸ்டர்ன் மியூசிக் கேட்பது ; ஒன்லி இங்கிலீஸ் புக்ஸ் படிப்பது ; ஒன்லி பீட்சா ; பர்கர் ; டக்கிலோ ; கபாப் - என்று லார்ட் லபக்தாஸாய் சுற்றி வந்த கொடுமையை என்னவென்பது ?!! Phew !!

1987... The Big Bangs!!
இரண்டுக்கே காலரைத் தூக்கித் திரிந்தவனுக்கு “4” என்றால் கால்கள் தரையில் நிற்குமா - என்ன ? லயன் காமிக்ஸ் அட்டகாசமாய் நடைபோட்டு வர, ‘திகில்‘ காமிக்ஸ் ஓட்டமும், நொண்டியுமாய் கூடவே ஒட்டிக் கொண்டிருந்த வேளையினில் – புதுசாய் இரண்டை உட்புகுத்தத் தீர்மானித்த crazy தருணம் 1987-ன் துவக்கமே ! ஜுனியர் லயன் காமிக்ஸ் ; மினி லயன் – என இரு புது லேபில்கள் ; ‘கார்ட்டூன் கதைகளுக்கு மட்டுமே‘ என்ற பிரத்யேகத் தடம் ; கலரில் கார்ட்டூன்கள் – என்று என்னென்னமோ firsts அந்த ஜனவரியில் சாத்தியமானது ! அது வரைக்குமே கார்ட்டூன் என்றால் விச்சு & கிச்சு; கபிஷ் ; ராமு/ சோமு ; அதிமேதை அப்பு என்ற filler pages மாத்திரமே என்று தான் நாம் பழகிப் போயிருந்தோம் ! ஆனால் ஒரு முழுநீளக் கார்ட்டூன் கதையின் ஆற்றல் என்னவென்பதை Tintin ; Asterix ; லக்கி லூக் கதைகள் தெள்ளத் தெளிவாய் காட்டியிருந்தன எனக்கு ! So குட்டிக்கரணங்கள் அடித்தாவது இந்த மூன்றுக்குமே; அல்லது இரண்டுக்குமாவது ; அட... ஏதோ ஒரே ஒரு தொடருக்காவது உரிமைகளை வாங்கிட வேண்டுமென்ற அவா எனக்குள் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது 1985 முதலாகவே !
Tintin-காரர்கள் ‘புச்‘ என உதட்டைப் பிதுக்கி விட, நான் எடுத்த அடுத்த காலடி லக்கி லூக்கினை வெளியிடும் Dargaud நிறுவனத்திடம் ! அவர்களும் இசைவு சொல்ல, “ஜுனியர் லயன் காமிக்ஸ்” என்றதொரு கனவு – “சூப்பர் சர்க்கஸ்” இதழ் மூலமாய் நிஜமானது ! அந்த ஒல்லிப்பிச்சான் நாயகர் இன்றளவுக்கு நம்மோடு பயணிப்பாரென்பதோ ; இத்தனை கார்ட்டூன் variety-க்கு மத்தியில் கூட – முடிசூடா மன்னராய் கார்ட்டூன் தேசத்தை ஆண்டிடுவார் என்பதோ சத்தியமாய் அன்றைக்குத் தெரியாது எனக்கு ! But கலரில் – சொற்ப விலையில் ஒரு முழுநீளக் கார்ட்டூனை லக்கி லூக்கின் ரூபத்தில் வெளியிட முடிந்த அந்த ஜனவரி 1987 – எனது career–ல் நிச்சயமாயொரு high point ! அந்த இதழின் பின்னணியில் நான் சந்தித்த சிரமம் முற்றிலும் வேறுவிதமானது ! அது நாள் வரையிலும் பக்காவான நான்-வெஜ் ஆக்ஷன் அதிரடிக் கதைகளையாக மட்டுமே வெளியிட்டிருக்க, நான் பழகியிருந்த மொழிபெயர்ப்புப் பாணி முற்றிலுமாய் அதற்கு ஏற்றே இருப்பதாய் எனக்குத் தென்பட்டது ! So ஒரு கார்ட்டூன் கதையைத் தூக்கிக் கொண்டு மொழிபெயர்க்க முயற்சித்த போது தான் – இந்த ஜானருக்குப் பேனா பிடிப்பது என்ன மாதிரியான சிரமமென்பது புரிந்தது ! இன்றைக்கு அந்த இதழை கையிலேந்திப் புரட்டும் போது – பக்கத்துக்குப் பக்கம் ; பிரேமுக்கு பிரேம் நெருடுகிறது – அன்றைய எனது வார்த்தைத் தேர்வுகளைக் கண்டு ! But எனது அதிர்ஷ்டம், நீங்களுமே அன்றைய தருணத்தில் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிராதவர்களாய் இருந்ததால் தலை தப்பியது ! அதே போல முதன்முறையாய் ஒன்றுக்கு இரண்டு full fledged தலையங்கங்களை எழுதிய சந்தோஷம் எனக்குக் கிட்டியது அந்த ஜனவரியில் தான் ! ஜுனியர் லயன் காமிக்ஸில் ஒன்று ; அம்மாத திகில் வெளியீடான “மரண விளையாட்டு” இதழில் இன்னொன்று என அன்றைக்கு அடித்த கூத்துக்களைத் தான் பாருங்களேன்!!

லயன் + திகில் + ஜுனியர் லயன் + மினி லயன் என நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றைப் போலான பண்டல்கள் அந்த ஜனவரி முதல் தேதியில் நமது ஆபீஸின் முன்கூடத்தை நிறைத்துக் கிடந்தது ஒரு ஆயுட்கால ஞாபகம் ! நம்மிடம் ஆர்ட்டிஸ்டாய்ப் பணியாற்றிய காளிராஜனின் சித்தப்பா நாராயணன் தான் நமது அன்றைய one-man பேக்கிங் இலாகா ! அவர் பண்டல் போடும் வேகத்தையும், லாவகத்தையும் பிரமிப்போடு எத்தனையோ தடவைகள் ரசித்ததுண்டு ! But அந்த ஜனவரி முதல் தினத்தில் மனுஷன் சுற்றிச் சுழன்று ஒரே பகலில் கிட்டத்தட்ட 90 பண்டல்களைப் போட்டுக் குவித்திருந்தது மிரளச் செய்யும் உச்சம் ! கிட்டத்தட்ட 250 முகவர்கள் ; ரயிலில் / லாரியில் இதழ்களைத் தருவிப்போர் பாதிக்கு சற்றே குறைவெனில் – தபாலில் தருவித்துக் கொள்வோர் மீதி ! So போஸ்ட் ஆபீஸிற்குப் போய் ஒரு மெகா-லோடு பாக்கெட்களை இறக்கி வைத்த கையோடு – ரயில்வே புக்கிங்கிற்கு 90+ பண்டல்களை அனுப்பிய அந்த ஜனவரி 1-க்கு எனக்குள் ஒரு அசாத்தியமான உயரத்தில் இடமுண்டு ! பின்நாட்களில் அந்த வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள இயலாமல் போனதோ ; நமக்கு நாமே போட்டியாகிப் போனதோ நாமெல்லாமே அறிந்த நிகழ்வுகளே ! But சங்கிலிகளில்லா கற்பனைகள் அழகாய் சிறகை விரிக்கத் துணிந்த அந்த நாட்கள் still stay very special to me !! கனவுகள் நிலைக்கும்வரை அவற்றின் சுகமே அலாதி தானே ? கலர் கலராய்க் கனவுகள் காணவும், அவற்றுள் கொஞ்ச காலமெனும் திளைத்து நிற்கவும் எனக்கு வரம் தந்த அந்த 1987 ஜனவரி மறக்கவியலா பொழுதே !!
இங்கொரு சன்னமான விசனமுமே !! இன்றைய பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகின் உச்சமோ உச்சமாய் கோலோச்சி நிற்கும் Asterx & Obelix தொடர்களைப் பார்த்து சப்புக் கொட்டாத ஆண்டே இராது எனக்கு !! கொடுமை என்னவெனில், லக்கி லூக்கின் உரிமைகளை நாம் Dargaud நிறுவனத்திடமிருந்து வாங்கிய வேளைகளில் - Asterix சார்ந்த உரிமைகளுமே அவர்களிடம் தான் இருந்திருந்தன !! 'அப்பாலிக்கா பாத்துக்கலாம் !" என்று நானுமே மெத்தனமாய் இருந்து விட்டேன் ! இடைப்பட்ட ஆண்டுகளில் Asterix ஒரு சூப்பர் தொடரென்ற நிலையிலிருந்து சூப்பரோ சூப்பர்-டூப்பர் என்ற அந்தஸ்தையும் தொட்டு விட்டிருந்தது & அவற்றின் உரிமைகளும் கைமாறி விட்டன ! புதிய நிறுவனத்தினரிடம் பேசிட அவ்வப்போது முயன்று பார்த்தாலும், புது ஆல்பங்கள் ஒவ்வொன்றும் 40 லட்சம் பிரதிகள் விற்பனை காணும் நிலையில் - அவர்களிடம் நாம் முன்வைக்கும் கோரிக்கைகள் ரொம்பவே ஈனஸ்வரத்தில் இருப்பதால் முன்னேற்றம் நஹி ! அன்றைக்கே முயற்சித்திருப்பின், அந்த அசகாய ஜோடி நம் கரைகளில் ஒதுங்கியிருப்பது நிச்சயம் !!
Phew !! நீண்டு கொண்டே போகும் பதிவு விரல்களைத் தெறிக்கச் செய்யத் துவங்கி விட்டதால், இந்த இலக்கில் ப்ரேக் போட்டு விட்டு விடைபெறுகிறேன் guys! இன்னொரு சாவகாஸமான ஜனவரி நாளில் – எனது Magnificient 5-ன் இறுதி 2 தருணங்களைப் பற்றி எழுதிட எண்ணியுள்ளேன்!
Before I sign out – சில updates:
1. சந்தாப் புதுப்பித்தல்கள் இந்த வாரம் மின்னல் வேகத்தில் நடைபெறத் துவங்கியுள்ளன என்பது செம சந்தோஷச் சேதி ! ரூ.5000/- என்பது நிச்சயமாய் ஒரு சிறு தொகையல்ல எனும் போது, ஆண்டின் இறுதியினில் இதனையும் உங்கள் பட்ஜெட்களில் இணைத்துக் கொண்டிட நீங்கள் முயற்சிப்பது ரொம்பவே நெகிழச் செய்கிறது ! இயன்றமட்டிலும் பிரமாதமான கதைகளையாய் உங்களிடம் ஒப்படைப்பதே நாங்கள் செய்திடக் கூடிய பிரதியுபகாரம் என்பது புரிகிறது ! புனித தேவன் மணிடோ நமக்கு ஆற்றலைத் தருவாராக !!
2. சென்னைப் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 153. இம்முறை CINEBOOK ஆங்கிலப் பிரதிகளையுமே ஸ்டாலுக்குக் கொண்டு வரும் விதமாய்ப் பதிவு செய்துள்ளோம் என்பதால் ஒரு ரேக் முழுக்க ஸ்டைலாக அவை குந்தியிருக்கும் ! ஜனவரி 4-ல் துவங்கி, ஜனவரி 20 வரையிலும் பதினேழு நாட்கள் நடக்கவிருக்கும் விழா இந்தாண்டு நந்தனம் YMCA மைதானத்துக்கே திரும்புகின்றது ! முன்னெப்போதையும் விட ஒரு உச்சமாய் இம்முறை 810 ஸ்டால்கள் உண்டு BAPASI-ன் இந்த அசாத்திய முயற்சியினில் ! So புத்தக ஆர்வலர்களுக்கு ஒரு மெகா விருந்தே காத்துள்ளது ! நம் பங்கிற்கு – கிட்டத்தட்ட 300+ title-கள் சகிதம் காத்திருப்போம், உங்களை வரவேற்கும் ஆவலுடன்! Please do drop in folks !
3. சென்னையினைத் தொடர்ந்து திருப்பபூரில் புத்தக விழா ஜனவரியின் இறுதியில் துவங்குகிறது ! அங்குமே பங்கேற்க விண்ணப்பித்துள்ளோம்! So இடம் கிடைப்பின், காமிக்ஸ் கேரவன் சென்னையிலிருந்து திருப்பூருக்கு நகரும் !
4. ஜனவரி இதழ்கள் புதனன்று கிளம்பிடும் – விடுமுறைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்திடும் பொருட்டு ! So இன்னமும் சந்தாவில் இணைந்திருக்கா நண்பர்கள், இடைப்பட்ட இந்த அவகாசத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் ஆண்டின் முதல் கூரியர் பட்டியலில் உங்கள் பெயர்களையும் இணைத்தது போலிருக்கும்! Please do your best folks!
5. இம்மாத தோர்கல் கதைகளுள் ஒன்றான "சிகரங்களின் சாம்ராட்" பற்றி இங்கே 2 வாரங்களுக்கு முன்னே நிறையவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம் ! "காலப் பயணம்" ; "இணைப் பிரபஞ்சங்கள்" என்ற இதன் concept பற்றி ; கதையினில் அவை sync ஆகி நிற்கும் இடங்களை பற்றி, கதையின் knot பற்றி ஒரு பொழிப்புரை (!!!!!!) எழுதி வைத்துள்ளேன் - 2 பக்க நீளத்துக்கு !! But அதனை இதழோடு தருவதா- வேண்டாமா ? என்ற குழப்பம் என்னுள் ! பிரதானமாய் - எனது புரிதலே தப்பாகியிருந்து ஒரு முரட்டு பல்பு வாங்கிடப்படாதே என்ற பயம் ! இரண்டாவதாய் - அந்தக் கதையின் முடிச்சுகளை நீங்களாகவே decipher செய்திட முயற்சிப்பதை பாழ் செய்திடக் கூடாதே என்ற பயமும் ! மூன்றாவதாய் - "இதை புரிந்து கொள்ள கூட எங்களுக்கு வலு இராது என்று நினைத்தாயாக்கும் ?? என்று நீங்கள் கண் சிவக்கக் கூடிய அபாயம் !! So சிவனேயென்று கதையை மட்டும் வெளியிட்டு விட்டு - அப்புறமா நமது கச்சேரிகளை இங்கே வைத்துக் கொள்ளலாமா ? What say all ?