Powered By Blogger

Wednesday, September 06, 2017

க்யூபா முதல் பெர்லின் வரை..!

நண்பர்களே,

வணக்கம். பின்னூட்டங்களின் எண்ணிக்கை 300-ஐ எட்டிப் பிடிக்க அதிக தூரமில்லை என்பதால் இதோவொரு முன்கூட்டிய உபபதிவு ! இப்போதெல்லாம் நமது அலசல்களின் ரேஞ்சைப் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது ! "முடியா இரவை" அலசினீர்கள்  ; கியூபாவின் வரலாறு, பூகோளம் என்று பிரித்து மேய்ந்தீர்கள் ; அப்புறம் அண்டர்டேக்கரை அடித்துத் துவைத்துக் காயப் போட்டீர்கள் ; தொடர்ந்த நாட்களில் இஸ்ரேல், மோஸ்சாட் உளவுத் துறை பற்றியெல்லாம் பின்னிப் பெடல் எடுத்தீர்கள் ; & இப்போதோ பெர்லின் / Cold War / உலக யுத்த அரசியல் என்று ரகளையாய் பயணம் !! காமிக்ஸ் எனும் மர நிழலானது உங்களிடையே புதைந்து கிடைக்கும் ஓராயிரம் ஆற்றல்களை ரம்யமாய் showcase செய்திடும் அழகை ரசித்திடுவதொரு அட்டகாசமான உணர்வு ! ஏதேனுமொரு விதத்தில் மாதம்தோறும் நமது 4 இதழ் கூட்டணியானது இதே போல சுவாரஸ்யத்தைத் தக்க வைத்துக் கொண்டிடும் பட்சத்தில் - all will be well !

இம்மாத இதழ்களுள் "எ.சி.சா.சொ." ஒரு முன்னணிப் போட்டியாளராக வலம் வருமென்று எதிர்பார்த்தேன் தான் ; ஆனால் உங்களது ஏகோபித்த  thumbs up எனது எதிர்பார்ப்புகளுக்கு மிஞ்சிய ரகம் ! Still early days ; ஆனால் பானைச் சோறையும் கபளீகரம் பண்ணி, ஏப்பம் விட்டுத் தான் கருத்துக் சொல்ல வேண்டுமென்பதில்லை தானே ? இப்போது வரையிலான எண்ணச் சிதறல்கள் பறைசாற்றுவது - வாசிப்பினில் நீங்கள் நிகரில்லா ஆல் ரவுண்டர்ஸ் என்பதையே !

இன்னமும் அந்த நீலப் பட்டாளத்தையும், தோர்கலையும் உங்களின் reviews பட்டியலில் இணைத்துக் கொண்டீர்களெனில் இம்மாதத்தின் நாட்கள் விறுவிறுப்பான ஓட்டம் காணுமன்றோ ? 

அப்புறம் "இரத்தப் படலம்" பற்றிய update ! இதுவரையிலும் 172 இதழ்களுக்கு புக்கிங் ஆகியுள்ளது ! நாளைய பொழுதினில் அந்தப் பட்டியலை இங்கே கண்ணில் காட்டுகிறேன் ! சேலம் யுவா கண்ணன் ; "பேபி" சுசீ  & அறிவரசு ரவி ஆகிய மூன்று நண்பர்களுக்கும் அனாமதேய நண்பரொருவர் பணமனுப்பி புக்கிங் செய்துள்ளார் ! ஏற்கனவே செந்தில் சத்யா ; அகில் & தலீவருக்கு புக்கிங் செய்துள்ள அதே அனாமதேய நண்பரின் கைங்கர்யமே இதுவும் ! பற்றாக்குறைக்கு இன்றைக்கு ராஜபாளையம் வாசகரான டாக்டர் விஜய் பாபு 10 பிரதிகளுக்கு முன்பதிவு செய்திருக்கிறார் !!! Awesome show & Keep it going folks !! இந்த அசாத்திய வேகம் தொடரட்டும் !! Bye for now !

166 comments:

  1. Replies
    1. மாலை வணக்கம் சார்..
      வணக்கம் நண்பர்களே...

      நீஈஈஈஈஈஈஈண்ட காலத்திற்கு பிறகு வந்தம்ல ஃபர்ஸ்ட்டா...

      Delete
    2. சூப்பா் சூப்பா் 👏👏👏

      Delete
  2. //சேலம் யுவா கண்ணன் ; "பேபி" சுசீ & அறிவரசு ரவி ஆகிய மூன்று நண்பர்களுக்கும் அனாமதேய நண்பரொருவர் பணமனுப்பி புக்கிங் செய்துள்ளார் ! ஏற்கனவே செந்தில் சத்யா ; அகில் & தலீவருக்கு புக்கிங் செய்துள்ள அதே அனாமதேய நண்பரின் கைங்கர்யமே இதுவும் !//

    காமிக்ஸ் என்பது வெறும் பொம்மை புத்தகம் இல்லை என்பதை இது போன்ற நிகழ்வுகள் நிருபிக்கின்றன ... அந்த அனாமதேய நண்பருக்கு நன்றிகள் பல ....

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய வாழ்த்துள்களும் நண்பர்களுக்கு....

      அந்த அநாமதேய அன்புள்ளத்திற்கு நன்றிகள் நெகிழ்ச்சியுடன்...

      இப்படிப்பட்ட அன்புள்ளங்கள் துணை இருக்கும் வரை ஆசிரியர் சாருக்கு வானமே எல்லை...

      Delete
    2. நல்ல மனம் வாழ்க.

      Delete
    3. நாடு போற்ற வாழ்க!

      Delete
    4. எங்கிருந்தாலும் வாழ்க.
      இன்று போல் என்றும் வாழ்க.
      பல்லாண்டு வாழ்க.

      Delete
    5. காமிகஸ் கொடை வள்ளலுக்கும்,
      பரிசு பெறும் நண்பர்களுக்கும்
      மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!!!

      Delete
  3. ஆசானுக்கு ஒரு பகிங்கர கேள்வி
    இரத்தப்படலம் வாங்க ஆதார் எண் தேவையா .....?

    சொல்லுங்க ஆசான் சொல்லுங்க ...ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. ஆதாா் காா்டோட பேன் காா்டு, ரேஷன் காா்டு, போஸ்ட் காா்டு எல்லாவற்றையும் இணைச்சிருக்கனும்!!

      Delete
    2. கிரடிட் கார்ட் விட்டுப்போச்சே...சார்

      Delete
    3. கிரடிட் கார்ட் விட்டுப்போச்சே...சார்

      Delete
  4. சேலம் யுவா கண்ணன் ; "பேபி" சுசீ & அறிவரசு ரவி ஆகிய மூன்று நண்பர்களுக்கும் அனாமதேய நண்பரொருவர் பணமனுப்பி புக்கிங் செய்துள்ளார் ! /////


    ஏற்கனவே ஒரு நண்பர் இந்த வருடம் முழுவதற்கும் எனக்காக சந்தா செலுத்தி , இந்த வருடம் பூராவும் என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்...தற்பொழுது இன்னொரு நண்பர் ( ஒருவேளை அதே நண்பராக கூட இருக்கலாம் ) இரத்தப் படலம் பொக்கிஷத்திற்கும் எனக்காக முன்பதிவு செய்து என்னை மகிழ்ச்சிக் கடலில் போட்டு அழுத்தோ .. அழுத்துன்னு அழுத்தியுள்ளார்.....என்ன சொல்வதென்றே தெரியவில்லை ...இப்படிப்பட்ட அருமையான நண்பர்கள் எனக்கு அமைய காரணமாக இருந்த எடிட்டர் சார் அவர்களுக்கும்.....மற்றும் அந்த முகமறியா அருமை நண்ப(ர்களுக்கும்)ருக்கும் என்னுடைய மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் ...நன்றி...நன்றி ..நன்றி ...

    ReplyDelete
  5. Asss nice story, thorgal artworks semma

    ReplyDelete
  6. வரிக்கு வரி வழிமொழிகிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்க ....இந்த கமெண்ட்ஸ் நண்பர் யுவா கண்ணன் அவர்களின் கருத்துகானது.நடுசாம நேரம் வர இன்னும் சிறு மணி துளிகளே உள்ளதால் தூக்க கலக்கம் ..

      நண்பர்கள் மன்னிக்க ....:-(

      Delete
  7. வினா தாளில் வாரம் ஒரு பதிவு ஓகே தானா என்ற கேள்வியை பார்த்ததும் ...ஆசிரியருக்கு ஏன் இப்படி யோசிக்கிறார் ...உப பதிவை நிறுத்தம் செய்ய இந்த யோசனையா என்று பயந்து போய் இருந்தேன் .

    மகிழ்வுடன் உப பதிவை அதுவும் விரைவாக கண்டதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி சார் ...


    நன்றி....:-)

    ReplyDelete
  8. டாக்டர் பொடியன் :-):-)


    அழகான முன்னட்டை :-)பின்னட்டை அட்டைப்படம் மனதை கவர உடப்பக்க வண்ண சித்திரங்களும் கண்ணை கவர :-):-)

    வாசிக்க ஆரம்பித்தால் கடைசிவரை பல இடங்களில் கவனிக்கவும் பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டனர் :-) மருத்துவ நிலைமைகளையும் :-) முக்கியமாய் இன்றைய அரசியல் நிலவரங்களை கூட பொடியரில் பொடிய வைத்து அட்டகாச படுத்தி விட்டீர்கள் .இதுவரை சிறிது :-) சிறிதாக மனதை கவர்ந்த இந்த பொடியர்கள் இந்த முறை மனதை மிகவும் அதிகமாகவே கவர்ந்து விட்டார்கள் :-)

    இதுவரை இந்த பொடியர்களின் கதையை பொடியாதவர்கள் சிலரை நான் அறிவேன் :-) காரணம் நானும் பொடியர்களை பொடிந்தது உண்டு தானே :-) ஆனால் அவர்கள் இந்த டாக்டர் பொடியனை முதல் முறையாக படிக்க ஆரம்பித்தால் பொடியர்களுக்கு பொடி மன்றமே வைத்து விடுவார்கள் என்பது உறுதி :-) இந்த சமர்புகளை வேண்டா வெறுப்பாய் படித்தவன் என்ற முறையில் எம்மனதை மாற்றிய இந்த டாக்டர் பொடியன் மற்ற நண்பர்களையும் மாற்றுவான் என உறுதியாக நம்புகிறேன் :-) இம்முறை இவர்களை ஒதுக்கி வைக்காமல் பொடிந்து பாருங்கள் நண்பர்களே என பொடிந்து வேண்டுகிறேன் .

    ஆரம்பத்தில் தள்ளி இருந்த பொடியர்கள் :-)சென்ற முறை மனதிற்கு அருகில் வந்து நிற்க :-) இந்த முறையோ மனதினுள் நெருக்கமாகி விட்டார்கள் :-)

    இந்த முறை இந்த சமர்புகளின் மதிப்பெண் பத்துக்கு பத்து என பொடிந்து கூறுவேன் என்பது எனக்கே ஆச்சர்யம் :-)



    பின்குறிப்பு : என்னடா இது கருத்தில் கமா ,புள்ளி,டாட் ஏதும் இல்லாமல் அனைத்திலும் நகைப்பு குறிகளே உள்ளதே என தவறாக எண்ண வேண்டாம் .இந்த முறை டாக்டர் பொடியன்களின் கிராமத்தில் உலவ ,உலவ சிரிக்க வைத்து கொண்டே இருந்தார்கள் .அதற்கான குறியீடே அந்த "ஒரே குறியீடு"

    :-)

    ReplyDelete
    Replies
    1. தலைவரே செம.
      👏👏👏👏👏

      Delete
    2. ///இந்த முறை இந்த சமர்புகளின் மதிப்பெண் பத்துக்கு பத்து என பொடிந்து கூறுவேன் என்பது எனக்கே ஆச்சர்யம் :-)////....

      பெரியவங்க சும்மாவா சொன்னாங்க,
      "ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்;
      வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்"-னு....

      செமயான விமர்சனம் தலீவரே பொடியர்களுக்கு,.....

      சூப்பர்...சூப்பர்...சூப்பர்...

      கி.நா.வில் Phdபண்ணிட்டாரு தலீவர்,
      இப்ப பொடியன் களையும் சமர்த்தா பொடியராரு...

      அடுத்து நல்ல டாஸ்க்கா கொடுங்க சார்...

      ஏதோ ப்ளூவேலாமே, அது நீந்தும் கடல்ல நாமும் நீந்துவோமா...!!!

      அல்லது ஓடத்தில் ஏறி விண்ணில் பறப்பமா...!!!

      அல்லது பண்டைய கால ரோமானயர்கள் காலத்தின் போர்களங்களில் சமர் புரிய புறப்படலாமா...!!!

      அல்லது சப்பானிய மாங்கா பறிப்போமா...!!!

      எதுவானாலும் தலீவர் தலைமையில் நாங்கள் பயணம் புறப்பட ரெடி சார்...

      Delete
    3. தலீவரே...வர வர நீங்க கமா, முற்றுப்புள்ளி வைக்கறதுலயும் கி. நா. வ பின்பற்றுவத நினைச்சா 🤧 அழுகாச்சியா வருது.

      Delete
  9. வெற்றி!வெற்றி!!வெற்றி!!!
    மாபெ௫ம் வெற்றி!!!!
    மூன்றாவது லயன் கிராபிக் நாவலும் வெற்றி!!!!!
    என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்-
    பல இடங்களில் சித்திரங்களே கதை சொல்லின. ப்ரட்ரிக் என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். அவர் மனந்தி௫ந்தி பேசும் இடம் உணர்ச்சிமயமானது. இன்னும் பல இடங்களில் ஆசிரியரின் பண்பட்ட மொழிபெயர்ப்பு சபாஷ் போடவைத்தது.என்னால் கடைசிவரை முடிவை ஊகிக்கவே முடியவில்லை. பரிதாபப்பட வைத்த படைப்பு மர்லின் . இன்னும் இரண்டு முறை படிக்கவேண்டும்,ஏற்கனவே இரண்டு முறை படித்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை நண்பரே ....எந்த வகை கதை என்றாலும் ஒரு மொழி மாற்று கதையை நாம் விரும்பும் வண்ணம் ..,இருக்க வேண்டுமானால் அதன் மொழி ஆக்கம் தான் முதலில் சிறப்பு செய்ய வேண்டும் .மொழி ஆக்கத்திற்கு நமது ஆசிரியரை எவ்வளவு முறை வேண்டுமானாலும் பாராட்டலாம் .

      நமது லயன் குழுமத்தின் வளர்ச்சியின் பெரும் பங்கு அதன் மொழி ஆக்கமே என்பது மறுக்க முடியா உண்மை...

      Delete
    2. @ saravanan

      உற்சாகம் கொப்பளிக்கிறது - உங்களது விமர்சனத்தைப் படிக்கும்போது!

      Delete
    3. சரவணன் விமர்சனம் அருமை

      Delete
    4. ஈரோடு விஜய் சா௫க்கும் ,செந்தில் சத்யா சா௫க்கும் ,
      தலைவர் பரணிதரன் சா௫க்கும் நன்றிகள் பலப்பல!!!!!!!!

      Delete
  10. தோர்கல் கனவு மெய்ப்பட வேண்டும் இலக்கிய இதழ்களுக்கான அட்டைப்பட தர ஓவியம் ...உள்ளே அழகியலாக உள்ள ஓவியங்களையே இன்னும் ..,இன்னும் ரசித்து கொண்டே இருக்கிறேன் ...இன்னும் படிக்க வில்லை .

    ( முன்கூட்டிய இங்கி பிங்கி போராட்டமா என அசந்து விடாதீர்கள் சார்..).இந்த இதழையும் படித்து விட்டால் இன்னும் 25 நாள்களுக்கு படிக்காத புது இதழுக்காக காத்து கொண்டே இருக்க வேண்டுமே என்ற அச்சமே இன்னும் படிக்காத காரணம் ..ஆனால் நாளை கண்டிப்பாக படித்து விடுவேன் சார்..:-)

    ReplyDelete
  11. ////ஆனால் உங்களது ஏகோபித்த thumbs up எனது எதிர்பார்ப்புகளுக்கு மிஞ்சிய ரகம் ! Still early days ; ஆனால் பானைச் சோறையும் கபளீகரம் பண்ணி, ஏப்பம் விட்டுத் தான் கருத்துக் சொல்ல வேண்டுமென்பதில்லை தானே ? இப்போது வரையிலான எண்ணச் சிதறல்கள் பறைசாற்றுவது - வாசிப்பினில் நீங்கள் நிகரில்லா ஆல் ரவுண்டர்ஸ் என்பதையே !
    ////


    என்னவோ தெரியலைங்க.. ஒரே பெருமை பெருமையா வந்ததுல முகமெல்லாம் சிவந்து போச்சு எனக்கு!

    ReplyDelete
  12. இரத்தப்படலம் முன்பதிவு வேகம் பிடித்தி௫ப்பது மிக்க மகிழ்ச்சி த௫கிறது.!.போகின்ற போக்கைப் பார்த்தால் ஜனவரி சென்னைப் புத்தக விழாவிலேயே நமது மறதிக்கார நண்பர் வந்துவிடுவார் போல் தெரிகின்றதே!!!?.நன்று. நன்றி.

    ReplyDelete
  13. இரத்த படலம் இறுதி தவணை நேற்று செலுத்தி விட்டேன். கடல் குதிரையின் முத்திரை படித்து முடித்து விட்டேன்.கதை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக இருந்தது. படைப்பாளியின் நூற்றாண்டு துவக்கத்தில் மிகவும் சரியான தேர்வு. தற்போது என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் படிக்க துவங்கியுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. ////தற்போது என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் படிக்க துவங்கியுள்ளேன்.////

      ஊரடங்கிப்போன இரவிலே படிக்க முயற்சியுங்கள். ஒருவிதமான அமானுஷ்யத்தையும் உணரமுடியும்!

      Delete
  14. ////அப்புறம் "இரத்தப் படலம்" பற்றிய update ! இதுவரையிலும் 172 இதழ்களுக்கு புக்கிங் ஆகியுள்ளது ! ///

    எடிட்டர் சார்,

    இந்தமாத இறுதிக்குள் முன்பதிவு எண்ணிக்கை 300ஐ தொட்டுவிட்டால் ஜனவரி-CBFக்கே நீங்கள் இ.ப'வை வெளியிடத் தயாரா?

    இந்த சேலஞ்ஜை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?

    ReplyDelete
    Replies
    1. இந்த சேலஞ்சை நீங்கள் ஏற்று கொண்டால் கணிசமான இரத்த படல பாகங்களை பிழை திருத்தம் பண்ண சேந்தம்பட்டி ரெடி சார்....

      நாங்க ரெடி...!!! நீங்க ரெடியா, சார்...

      (சிவகாசி பக்கம் கால் சாக்ஸை யாரோ கழட்டிட்டி கட்டை விரலை ஆசையுடன் பார்ப்பதாக நவஹோ சகோக்கள் சமிஞ்கை அனுப்பினார்கள்)

      Delete
    2. 'பிழை திருத்தும் படலத்தில் ' என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

      Delete
    3. அவசரப்பட்டு ஏதாவது குறையுடன் வராமல், ஆற அமர அருமையாக வரட்டுமே - ஷங்கர் படங்கள், பாகுபலி-2 போல?

      Delete
    4. // இந்தமாத இறுதிக்குள் முன்பதிவு எண்ணிக்கை 300ஐ தொட்டுவிட்டால் //
      இப்ப இருக்குற வேகத்த பார்த்தா வந்தாலும் வரும்.

      Delete
    5. @ ALL : "இரத்தப் படலம்" இதழுக்குப் பிழை திருத்தம் செய்திடவெல்லாம் நிறையவே அவகாசமுள்ளது ; இப்போதைக்கு ஸ்பைடரின் "குற்றத் தொழிற்சாலை" & டெக்சின் "டிராகன் நகரம்" மீது பணியாற்ற யாரேனும் ரெடியா ?

      Delete
  15. ////சேலம் யுவா கண்ணன் ; "பேபி" சுசீ & அறிவரசு ரவி ஆகிய மூன்று நண்பர்களுக்கும் அனாமதேய நண்பரொருவர் பணமனுப்பி புக்கிங் செய்துள்ளார்////

    எந்த கேப்ஷன் போட்டியிலும் கலந்துகொள்ளாமலேயே பரிசு பெற இருக்கும் அன்பு நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்!!

    அந்த அன்புள்ள அனாமதேயாவுக்கு _/\_

    ( என்னவோ தெரியலை... வீட்டம்மா எந்த டோஸும் கொடுக்காமலேயே கண்களில் ஜலம் ஜலமா வருது!)

    ReplyDelete
  16. சார் நமது மதுரை அரங்கில் 'மரணத்தின் நிறம் பச்சை மற்றும் ஒ௫ சிலந்தியின் வலையில் " புத்தகங்கள் இல்லை என்று நண்பர் ஒ௫வர் கூறினார்.அதைக் கொஞ்சம் கவனியுங்கள் சார்!?

    ReplyDelete
  17. Smurf இப்பத்தான் தேறி இருக்கு....

    ஆனால் 2017லிஸ்டுல இல்லியே..சார்....

    வேட்டையாடு விளையாடு
    விண்ணில் ஒரு பொடியன்
    மட்டும் தானே இருக்கு...


    யாரேனும் கவனிச்சீங்கலா....????

    ReplyDelete
  18. Smurf இப்பத்தான் தேறி இருக்கு....

    ஆனால் 2017லிஸ்டுல இல்லியே..சார்....

    வேட்டையாடு விளையாடு
    விண்ணில் ஒரு பொடியன்
    மட்டும் தானே இருக்கு...


    யாரேனும் கவனிச்சீங்கலா....????

    ReplyDelete
  19. முன்பதிவு எண்ணிக்கை திருப்திகரமாக அமையுமெனில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கஷ்டப்பட்டாவது இ.ப'வை ஜனவரி-CBFல் வெளியிட்டுவிடுவது கீழ்கண்ட நன்மைகளைப் பயப்பதாக இருக்கக்கூடும்:

    * இ.ப'வை ஜனவரியில் முடித்துக்கொண்டால் ஆகஸ்ட்டில் 'தல-70' முழுவீச்சில் EBFக்கு தயாராகிட ஏதுவாய் இருந்திடும். இல்லையென்றால், இரண்டு மெகா இதழ்களை ஒரே நேரத்தில் தயாரிப்பதும், கையாள்வதும், விற்பதும் - சிரமமாகிவிடலாம்!

    * மற்ற எங்கேயும் விட 'இ.ப' சென்னையில் விற்றுத் தீர்ந்துவிடும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பதால் - ஸ்டாக் சேராது - இடத்தை அடைத்துக்கொண்டு காத்திருக்காது - போட்ட முதலீட்டின் கணிசமான பகுதியும் கைக்கு வந்துவிடும்!

    * 'ஜனவரியில் இ.ப' என்ற நிலைவருமானால் CBF களைகட்டும் - CBFல் பங்கேற்று குதூகலிக்க நண்பர்களுக்கு ஒரு காரணமும் கிடைத்திடும்.

    * தமிழில் இத்தனை விலையிலான ஒரு பிரம்மாண்ட இதழ் சென்னை போன்ற பெருநகரங்களில் வெளியிடப்படும்போது மீடியாக்களின் வெளிச்சம் கிடைத்திடவும் கணிசமான வாய்ப்புகள் அமைந்திடும்!

    * இன்ன பிற!


    'எடிட்டர் சமூகம் மனது வைக்குமா?' என்பதே இப்போது என்னுடைய 2,350 ரூபாய் கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. இது நல்ல யோசனை ஈ. வி. ஆனா இன்னும் 4 மாதம் தான் இருக்கு. அதனால ஏப்ரல் விழா பாஸிபள்னு நினைக்கிறேன். என்ன என்னை மாதிரியான ஆளுங்க ஆகஸ்ட்ல தான் வருவோம். இந்த விழா மிஸ்ஸாயிடும். இருந்தாலும் பரவாயில்லை. ஆகஸ்ட்ல தலைக்கு மிகப்பெரிய குணடா புக்கும் செலிப்ரேசனும் இருக்கும்னா ர. ப. வை மிஸ் பண்ணின துக்கம் ஓடிப் போயிடும்.

      Delete
    2. ஈ.வி உங்கள் கருத்தின் கோணங்கள் சரியானவை,எனினும் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எடிட்டர்தான் அறிவார்.ஜனவரியில் வாய்ப்பு கிட்டினாலும் மகிழ்ச்சியே.

      Delete
    3. // ஆகஸ்ட்ல தலைக்கு மிகப்பெரிய குணடா புக்கும் செலிப்ரேசனும் இருக்கும்னா ர. ப. வை மிஸ் பண்ணின துக்கம் ஓடிப் போயிடும்.//
      ஆம் மஹி ஜி அடுத்த வருஷம் தல 70 க்கு E B F விழாவை சும்மா தெறிக்க விடறோம்.

      Delete
    4. ஈ வி உங்கள் கருத்துக்கு 1000 / 100
      நமது சின்னம் Xiii
      நம் தலைவர் ஜேசன் மக்லேன்.
      வருங்கால அமெரிக்க ஜனாதிபதி நம் 13.

      Delete
    5. போன வாரம் தான் வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி ' டெக்ஸ் வில்லர் 'னு சொன்னாங்க.
      போனமாசம் 'கிட் ஆர்டின் ' தான் ஜனாதிபதி ன்னாங்க.
      இப்ப நீங்க ஜேசன் ப்ளை ய வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அப்டீங்கிறீங்க.

      ஒருவேளை ஒண்ணு வாங்கினா ரெண்டு ஃப்ரீ ங்கிற டெக்னிக் அமெரிக்கா வரை பரவிடுச்சோ.?

      இல்ல ரெண்டு பேருக்கு ' துணை முதல்வர் 'ச்சீ 'துணை ஜனாதிபதி ' போஸ்ட அலாட் பண்ணிட்டாங்களோ?

      Delete
    6. அடுத்த மாசம் சிக்பில்லும், நவம்பரில் லக்கியும் கூட அமெரிக்க சனாதிபதி ஆவாங்க நண்பரே கோவிந்த்...!!!

      Delete
  20. நள்ளிரவு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே

    ReplyDelete
  21. தோர்கல் அட்டைப்படம்:ஓவிய அலசல்;- மஞ்சள் நிறத்தில் மரங்கள் மற்றும் பூக்கள் என ரம்மியமான சூழல். அதே நேரத்தில் ஆரிசியா மற்றும் ஜோலன் கண்களில் பயம், அது அலினோவை பார்த்துதான் என்பதை படத்தில் அவன் உடம்பு இருக்கத்துடன் இருப்பது போலவும் மற்றும் தலைமுடியை மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் வடிவமைத்தது காட்டியது சூப்பர். அந்த இருக்கமான சூழலுக்கு பொருத்தமாக வேகமாக வீசும் காற்று, அதனை அலினோ மற்றும் ஆரிசியாவின் தலைமுடி பறப்பது போன்று அமைத்து சிறப்பு, அதிலும் காற்று எந்த திசையில் இருந்து வீசுகிறது என்பதையும் காட்டி இருப்பது ஓவியரின் ஈடுபாட்டை காண்பிக்கப்படுகிறது.

    ஓவிய அலசல் தொடரும்.....

    ReplyDelete
    Replies
    1. அருமை அருமை PfB!

      ஒரு அட்டைப்பட ஓவியத்தை இதற்கு முன் நீங்கள் இப்படி ரசித்து எழுதி நான் பார்த்த ஞாபகமில்லை!

      உங்கள் ரசிப்புத்தன்மை வீறுகொண்டெழ வினையூக்கியான அந்த ஆற்றலாளர்களை நினைத்து ஆச்சரியப்படத் தோன்றுகிறது!

      (அட்டைப்படத்துக்கே இவ்வளவு சிலாகிப்புகள்னா... உள்ளே ஒவ்வொரு பிரேமையும் எப்படியெல்லாம் ரசித்து எழுதப்போறீங்களோ... உங்களை நினைச்சா பாவமா இருக்கு ;) )

      Delete
    2. தோர்கலின் தீவிர விசிறியாமாம்...ஹா...ஹா...

      Delete
    3. //தோர்கலின் தீவிர விசிறியாமாம்...ஹா...ஹா//

      Tex Vijay : செம! ஹா ஹா ஹா !!

      Delete
    4. ரதிஜா @ நீங்கள் கொடுத்த ஃபிரஞ்சு புத்தகம் மற்றும் நமது தமிழ் புத்தகத்தை எடுத்து ஒப்பிடும் படலம் இந்த வார இறுதியில்...

      Delete
    5. // சிலாகிப்புகள்னா... உள்ளே ஒவ்வொரு பிரேமையும் எப்படியெல்லாம் ரசித்து எழுதப்போறீங்களோ... உங்களை நினைச்சா பாவமா இருக்கு ;) ) //
      அத படிக்கப்போற உங்களை நினைத்தால் இன்னும் கஷ்டமாக இருக்கிறது :-)

      Delete
    6. @ PfB

      ///அத படிக்கப்போற உங்களை நினைத்தால் இன்னும் கஷ்டமாக இருக்கிறது ///

      நல்ல நண்பர்கள் எப்போதுமே ஒருவர் கஷ்டத்தை மற்றொருவர் புரிந்து வைத்திருப்பார்கள் எனச் சொல்வார்கள்... அது உண்மைதான்! :P

      Delete
  22. விஜயன் சார்,
    அந்த மங்கா பத்தி நீங்க எதுவும் சொல்லலையே.....

    ReplyDelete
    Replies
    1. Karthikeyan L : நண்பரே.. "நீங்களும் எடிட்டராகலாம் !" என்றதொரு 4 பக்க ஷீட்டை இம்மாதம் நம் சந்தாதாரர்களுக்கு அனுப்பியிருந்தோம் - 2018 -ன் அட்டவணையின் மாதிரியை நீங்களே தயார் செய்ய முனையும் பொருட்டு ! ஒருமுறை அதனை முயற்சித்துத் தான் பாருங்களேன் - மங்கா கதைகளுக்குமே slot (s ) சகிதம் !

      யாரைச் சேர்ப்பது ?
      யாரைக் கழற்றி விடுவது ?
      பட்ஜெட் எகிறாது எல்லாத் தரப்பையும் திருப்தி செய்திட வழி என்ன ?

      அனைவரது ஆதர்ஷ நாயக / நாயகியாரும் அட்டவணைக்குள் இடம் பிடித்து நிற்கிறார்களா ?
      என்ற கேள்விகளுக்குப் பதில் அத்தனை சுலபமல்ல என்பது 'பளிச்' என்று புரியும் !

      நீங்கள் ரசிக்கும் மங்கா மாத்திரமன்றி, ரசிப்புக்கு உகந்தவைகளாக ஒரு லோட் கதைகள் இன்னமும் உள்ளன - என் தூக்கத்தைக் கெடுக்கும் புண்ணியத்தைத் தேடிக் கொண்டு !

      "இட ஒதுக்கீடு " + "பட்ஜெட் " என்பதில் நமக்குள்ள கால்கட்டுக்களை ஏற்றுக் கொண்டே ஓட்டப் பந்தயம் ஓடிப் பார்ப்பது ரொம்பவே ஒரு இக்கட்டான அனுபவம் சார் !

      Delete
    2. விஜயன் சார்,
      உங்கள் பதிலுக்கு நன்றி. 2018ல் இரத்தப்படலம் மற்றும் டெக்ஸ் 70 இருப்பதால், 2019ல் மங்கா முயற்சிக்கலாம் சார்.

      Delete
    3. +23222222222
      கார்த்திகேயன் சார்.
      2018 இல் இரண்டு மெகா இதழ்கள் இ௫க்கின்றன.இ ப மற்றும் டெக்ஸ்70. டெக்ஸ் மெகா இதழாக வ௫வதை வேறு யா௫ம் தடுக்க விடமாட்டோம். மங்கா கடிக்கும் ஆசையை 2019 க்கு ஒத்திவைப்போம்!!

      Delete
  23. தோர்கல்.

    'அறிவை விட மேலானது கற்பனையே ' என்றவர் டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். வறட்சியான அறிவானது அவ்வளவாக சுகப்படாது.
    மாறாக அறிவோடு அரவணைத்துக் கொண்ட கற்பனைகள் உண்டுபண்ணும் உணர்வுகள் அலாதியானது.

    வான் ஹாமே அத்தகையதொரு ஆற்றலாலரே என்பது மீண்டும் உறுதியானது.

    அவரது கதை சொல்லும் உத்தி, ஒவ்வொரு ப்ரேமையும் நுணுக்கமாக அமைக்கும் பாங்கு, குழப்பங்களைக் கடந்து கதையினை வடிவமைக்கும் நேர்த்தி
    என ஆசிரியர் ஒவ்வொரு முறையும் புது சிகரத்தை எட்டுகிறார்.

    ஒவ்வொரு படைப்பிற்கும் குறிப்பிட்ட எல்லையுண்டு. ஆனால் எல்லையே இல்லாத இந்தப் பிரபஞ்சத்தையே தன் கற்பனைக் களமாக தேர்ந்தெடுத்து, தன் கற்பனைக்கும் எல்லையே இல்லை என வான் ஹாமே நிரூபித்து விட்டார்.

    முதல் கதை எளிமையாக தொடங்கிறது. தோர்கல் சென்றபின், இரவில் ஆரிசியாவும், ஜோலனும் பேசும் கட்டம் மிகவும் இனிமையானது. கவித்துவமானது.
    குழந்தை ஜோலன் தன் மழலைக் கேள்விகளைக் கேட்க, சமையல் செய்துகொண்டு, பரிமாறிக் கொண்டு, சாப்பிட்டபடி தூங்க வைத்துக்கொண்டு என பொறுமையாக பதில் சொல்லும் நான்கு பக்கங்கள் அற்புதமாக அமைந்தன.
    பின் மெல்லப் படரும் திகிலானது, மீதி பக்கங்களை அநாயசமாக கடக்கிறது.

    அடுத்த கதையானது சாகஸக்கதையாக முகம் மாறுகிறது.
    வில் வித்தைப் போட்டியை விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி காட்சியாக்கியது அப்பப்பா..!

    மரக்காலனின் வகைவகையான அம்புகள்.சூது நிறைந்த கிறிஸ் ஜோடி, ஜால் ன் அபாரமாக அம்பு விடும் திறன் என ரசிக்க ஏகமாக நிறைந்துள்ளன.

    மிகவும் ரசிக்க வைத்தது ப்ரேம்களின் அமைப்பே.குறிப்பாக தோர்கல் அம்பு விடுத்து மண்ணுருண்டைகளை வீழ்த்தும் காட்சி.
    எறியப்படும் உருண்டைகள் முதலில் அதிகபட்ச உயரத்தை எட்டும்.So மேல் நோக்கி அம்பு விடும் முதல் காட்சி. பின் மெதுவாக கீழிறங்கும் உருண்டைகளை வீழ்த்த சற்றே பார்வையை தாழ்த்தி அம்பெய்யும் 3வது காட்சி.அடுத்து பார்வைக்கோணத்திற்கு சற்று மேலே அம்பு விடுவது. ஏறக்குறைய கீழே வந்து விட்ட உருண்டையை கீழ் நோக்கி வீழ்த்தும் 7வது காட்சி. தரையைத்தொடும் முன் ஐந்தாவது உருண்டையை, வில்லினை தாழ்த்தி சாய்வாக கீழ் நோக்கி அம்பு விட்டு சிதைக்கும் 9வது ப்ரேம். இத்தனை நுட்பமாக விவரிப்பது கை தட்ட வைத்தது.

    இவ்வளவு அருமையான கதையினை மூலத்திலிருந்து சிறிதும் மாற்றாமல், அதன் சுவையை சற்றும் சிதைக்காமல் அழகுதமிழில் மொழிபெயர்த்தது இன்னும் சிறப்பினைக் கூட்டியது.

    ReplyDelete
    Replies
    1. சூப்பரா எழுதி இருக்கீங்க GP.

      Delete
    2. சூப்பர் கோவிந்த்...
      அனுபவித்த படித்து உள்ளீர்கள்... நன்று...
      இப்படி ஆழ்த்து படிக்கும் போது நீண்ட நாள் நினைவில் இருக்கும்... தொடர்ந்து கலக்குங்கள்....

      Delete
    3. அப்படி போடுங்க கோவிந்தா!

      Delete
    4. ரசிச்சு ரசிச்சு படித்து-பார்த்து, அழகாய் அதை வார்த்தைகளில் வெளிப்படுத்தி - ரொம்பவே ஆச்சரியப் படுத்துகிறீர்கள் கோவிந்தராஜ்!

      நீங்கள் எழுதியிருக்கும் விதத்தைப் பார்த்து 'அட! நமக்கு இப்படித் தோனாமப் போச்சே...!'னு யாருக்காவது நினைக்கத் தோன்றினால் அங்கே நீங்கள் மிளிர்கிறீர்கள் என்று அர்த்தம்! நானும் அப்படி நினைத்தேன்!

      தொடரட்டும் உங்கள் இரசணை!

      Delete
    5. நண்பர் கோவிந்தராஜ் பெருமாளின்
      விமர்சனம் காமிக்ஸ் ரசனையின் பல
      பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது.
      மனம் கனிந்த பாராட்டுக்கள் GP.

      Delete
    6. அழகான விமர்சனம் ...

      வாழ்த்துக்கள் நண்பரே...:-)

      Delete
  24. கடல்குதிரையின் முத்திரை!
    ==========================
    ஓய்வாக பொழுதை போக்க வேட்டைக்கு செல்லும் ""தல"" டெக்சும் அவரது மகன் கிட்டும் கழுகுகளின் பிடியில் சிக்கி கிடக்கும் மனிதர்களை காப்பாற்ற விரையம்போது அவர்களில் ஒருவன் தரும் வாக்குமூலம் அதிர்ச்சி அளிக்கிறது தன்னை ரேஞ்சர் என வெளிபடுத்தும்போது டெக்ஸ் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார், அத்தோடு புதிரான அடையாள முத்திரை அவர்களிடம் கப்படுகிறது அதனை கடல் குதிரை என கிட் விளக்கும்போது கதையின் தீவிரம் சூடுபிடிக்கிறது மேலும் காயம்பட்ட ரேஞ்சரிடம் மேஜர் கார்சன் எழுதிய கடிதம் மூலம் புதிய பிரச்சனையின் தொடக்கத்தோடு இனணந்திருப்பதை அடித்த டெக்ஸ் அதனை உறுதிபடுத்த தன் நண்பரை தேடி புறப்படுகிறார்.

    ஸாண்டாபேயில் கிட் தன் மேல் அதிகாரி ஹோவேன்டால்ஐ சந்தித்த பின் பிரச்சனையின் தீவிரம் உணர்ந்து அதனை கலைந்து உதவ முன்வருகிறார் தல....

    பிரச்சனைகளை தீர்க்கமுயலும் ஒவ்வொருமுறையும் அதனை எதிரிகள் முன்கூட்டியே தெறிவிக்கவும் துரோகியாக கேப்டன் கிராபோர்டு இருப்பதை தன் மகன் கிட்டின் மூலம் தல நிறுபித்து கிராபோர்டை கைதுபண்ண முயலும்போது கிரா போர்டு தப்பியோடுகிறான் அவனை கிட்கார்சன் காலில் சுட்டு லாவகமாக பிடிக்கிறார்.....

    எதிரிகளை கண்காணித்து வரும் கிட் அவர்கள் தப்பியோடும்போது சமயோசிதமாக ஒரு கடிதம் எழுதி சிறுவனிடம் கொடுத்து மேஜர் கார்சனிடம் ஒப்படைக்க சொல்லிவிட்டு எதிரியை பின்தொடர்ந்து செல்கிறார்....
    அங்கு எதிரியின் கோட்டையில் தொலை நோக்கி மூலம் கிட்டின் வரவு தெரிந்து அவரை கைது பண்ணி சிறை வைக்க அங்கு உள்ள சூழலை தனக்கு சாதகமாக்கி தப்பி கிறார் அத்தோடு தலசிக்கலில் மாட்டும்போது தனயன் மீட்க என கதை ஜெட்வேகத்தில் பறக்கிறது.....

    இதில் கதையின் வில்லியாக மானுயுலா எனும் மெக்சிகோ புரட்சி கும்பலின் தலைவி பிரச்சனையின் சூத்திரதாரி எனும்போது அழகோடு சேர்ந்த ஆபத்தை தல எப்படி முறியடிக்க போகிறார் என்ற பரபரப்பு அதிகரிக்கிறது.

    மானுயுலா தப்பியொட அவரை தல அன்ட் கோ துரத்தி ஒருவழியாக நெருங்கும்போது கப்பலில் உள்ளே வைத்து தீ வைக்க சாதுர்யமாக கப்பலின் கீழ் புறத்தை உடைத்து தப்பிகின்றனர் தல அன்ட் கோ....

    மானுயுலாவை தேடி பாலைவனத்தில் தல அன்ட் கோ புறப்படுகிறார் அங்கு எதிர்பாராத புது வில்லனொடு மானுயுலா கரம்கோர்க்க கதை மேலும் சூடு பிடிக்கிறது.
    எல் லாபோ எனும் ஒற்றை கண்ணன் அவனிடம் உதவி கிடைக்கும் என எண்ணி வலிய போய் பிரச்சனையில் மானுயுலா விழ அவளை காப்பாற்ற தல முயற்சியின் முடிவில் மோதலாகிறது இறுதியில் பாலைவனப்புயலில் இரு எதிரிகளும் சமாதியாகின்றனர் ....
    கதை நிலப்பரப்பில் தொடங்கி நீரில் பயணித்து பாலைவனத்தில் முடிகிறது.....
    அருமையான கதையோட்டம், சரளமான மொழிபெயர்ப்பு அட்டகாசமான சித்திரம்....
    தலயின் பயணத்தில் ஒரு மைல்கல் இது.....
    ஆக்சன் சூறாவளி இது.... . ...

    ReplyDelete
    Replies
    1. அடிச்சி தூள் பண்ணிட்டீங்க செல்வா... தலயின் கதை போல உங்கள் விமர்சனமும் நச்...
      ///கதை நிலப்பரப்பில் தொடங்கி நீரில் பயணித்து பாலைவனத்தில் முடிகிறது..... ////---சூப்பர்... ரசிக்க வைத்த வரிகள்...

      Delete
    2. @ yazhisai selva

      மேலோட்டமாகப் பார்க்கும்போது பின்னிபெடலெடுத்திருக்கீங்கன்னு தெரியுது. நானும் இன்னும் இந்தக் கதையைப் படிச்சு முடிச்சுட்டு அப்பால வர்றேன்!

      Delete
    3. // கதை நிலப்பரப்பில் தொடங்கி நீரில் பயணித்து பாலைவனத்தில் முடிகிறது.....//
      செம,செம.

      Delete
    4. @ all : நம்மிடையே இப்போதெல்லாம் கைதேர்ந்த கட்டிடக் கலைஞர்கள் நிறையவே உள்ளனர் - அழகாய் LIC கட்டிடங்களை உருவாக்கிட ! அசத்துங்கள் !!

      Delete
    5. எல்லாம் தல கதை செய்த மாயம்.....
      ஆசிரியருக்கு நன்றிகள் கோடி.....

      Delete
    6. நண்பர்கள் சேலம் டெக்ஸ் விஜயராகவன், ஈரோடு விஜய், அரிவரசு ஆகியோருக்கு நன்றிகள்....

      Delete
  25. கடல் குதிரையின் முத்திரை க்கு இரண்டாம் பாகம் உள்ளதா?
    தெரிந்த நண்பர்கள் மற்றும் ஆசிரியர்
    சார் சொல்லுங்களேன்?

    ReplyDelete
  26. க.கு.மு வுக்கும் டிராகன் நகரத்திற்கும் இடையேயான ஆறு ஒற்றுமையை, போன பதிவுலதான் விஜயராகவன் விளக்கமா சொன்னாரு.

    அப்படின்னு பார்த்தா ' டிராகன் நகரம் ' ரெண்டாவது பாகமா இருக்குமோ?

    ReplyDelete
  27. தோர்கல் கதையில் வரும்
    விதவிதமான அம்புகள்
    போல உண்மையில் பயன்படுத்தப்பட்ட அம்புகள் படங்களை இங்கு பார்க்கவும்: https://www.google.co.in/search?q=அம்பு+வகைகள்&oq=அம்பு+வகை&aqs=chrome.1.69i57j33.15740j0j4&client=ms-android-xiaomi&sourceid=chrome-mobile&ie=UTF-8#imgrc=CL2YPhixWcLQ8M:

    ReplyDelete
  28. வணக்கம் நணபர்களே இது என்னுடைய முதல் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் டூ லயன் ப்ளாக்...🌷🌷🌷🌷🍫🍫🍫

      Delete
    2. இம்மாத இதழ்கள்லாம் படிச்சாச்சா...???
      உங்கள் பேவரைட் ஹீரோ,
      குண்டு புக் பிரியரா, உங்கள் மனங்கவர்ந்த இதழ் இப்படி ஏதாவது மினியா ஒரு அறிமுகம் போடுங்களேன் நண்பரே...!!!

      Delete
    3. @ செந்தில் குமார் P.S

      நல்வரவு நண்பரே! _/\_

      Delete
    4. செந்தில் குமார் P.S
      வருக வருக என காமிக்ஸ் முன்னேற்ற
      கழகத்தின் சார்பாக வரவேற்கிறேன்.

      Delete
    5. வாருங்கள் நண்பரே!

      Delete
    6. வ௫க வ௫க நண்பரே!!!
      வந்து எங்கள் ஜோதியில் ஐக்கிய மாகுங்கள்!!!!

      Delete
    7. வாருங்கள் நண்பரே!

      Delete
    8. செந்தில் குமாருக்கு
      செந்தில் சத்யா வின்
      இனிய நல்வரவு

      Delete
  29. 🎉🎉🎉🎉🎉🎁🎁🎁🎁🌷🌷🌷🌷🌷🌹🌹🌹டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகரும் நல்ல நண்பருமான சரண் செல்விக்கு இனிய இனிப்பான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்🍫🍫🍫🍫🎂🎂🎂🎂🍰🍰🍰🍰🍰🍧🍨🍦🍧🍨🍦🍧🍨🍦🍬🍬🍬🍬🍭🍭🍭🍭🎆🎆🎆🎆🎆🎇🎇🎇

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சரண் செல்விக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

      Delete
    2. லயன் 3000-முத்து4000 படித்து எள்ளு
      கொள்ளு பேரன்களுக்கு கதை சொல்ல
      வேண்டும் என்று நண்பர் சரண்செல்வியை
      வாழ்துகிறேன்.

      Delete
    3. சரண் செல்வி சா௫க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.!!
      பதினாறும் பெற்று பெ௫வாழ்வு வாழ வாழ்த்துக்கள்!!!!

      Delete
    4. நண்பர் சரண் செல்விக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

      Delete
    5. எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும் நண்பர் சரண் செல்வி அவர்களுக்கு.

      Delete
  30. சரண் செல்வி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    வாழ்க பல்லாண்டு

    ReplyDelete
  31. // அப்புறம் "இரத்தப் படலம்" பற்றிய update ! இதுவரையிலும் 172 இதழ்களுக்கு புக்கிங் ஆகியுள்ளது ! நாளைய பொழுதினில் அந்தப் பட்டியலை இங்கே கண்ணில் காட்டுகிறேன் ! ///


    waiting sir ...........

    ReplyDelete
  32. சரண் செல்வி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. நண்பர் சரண் செல்வி அவர்களுக்கு சிறிது தாமதமான மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

    இன்று போல் என்றும் வாழ்க ...

    ReplyDelete
  34. நண்பர் P S செந்தில் குமார் அவர்களை இந்த லயன் மாமன்றம் வருக வருக என வரவேற்கிறது....:-)

    ReplyDelete

  35. கடற் குதிரை முத்திரை:-

    *1845ல் டெக்ஸாஸ் மாகாணத்தை மெக்சிக்கோவிடம் இருந்து அமெரிக்கா பறித்து தன்னோடு சேர்த்து கொள்கிறது. இதை தாங்கி கொள்ள இயலாத மெக்சிக்கோ ஆத்திரத்தில் கருவிக்கொண்டே இருக்கிறது.
    1846ல் மீண்டும் டெக்ஸாஸ்க்கு மேற்கே ரியோ கிராண்டே ஆற்று பகுதியில் வம்புக்கு வந்த அமெரிக்கா, மீண்டும் மெக்சிக்கோவுடன் போரை தொடங்குகிறது. 2ஆண்டுகள் நீடித்த போரின் முடிவில் தோற்ற மெக்சிகோவிடம் இருந்து நியூமெக்சிகோ பகுதிகளை அமெரிக்கா தன்னோடு இணைக்கிறது. இதற்கும் சேர்த்து மெக்சிகோ, அமெரிக்காவை பழி தீர்க்க வாகான வாய்ப்பை எதிர்பார்த்து வரும் சூழலில் நம் கதை தொடங்குகிறது.

    *ஏற்கெனவே நாம் ரசித்துள்ள தீம் தான் இது. "மரணதூதர்கள்" என்ற 2000ல் வந்த தீபாவளிமலர் தான் அது. அதிலும் வடக்குனான யுத்தத்தில் தோற்ற தெற்கின் முன்னாளைய ராணுவ அதிகாரி ஒருவர் கொள்ளையடித்து பெரும்பணம் ஈட்டி தெற்கின் ராணுவத்தை மீண்டும் உயிரூட்ட முயல்வார். செம இன்ரஸ்ட் ஆன கதையோட்டம். தல தலையிட்டு ஆட்டத்தை மாற்றுவார்.

    *இம்முறையும் அதே மாதிரியான தீமுடன் களமிறங்கியுள்ள நீஈஈஈஈஈஈஈஈஈண்ட சாகசம் தான் இம்மாத கடற் குதிரை முத்திரை. "விடுதலை வேட்கை"- என்ற ரகசிய சட்டவிரோத அமைப்பு, இழந்த நியூமெக்சிகோ பகுதியில் கொலை, பேங்கொள்ளை, வழிப்பறி, ஆயுதக்கடத்தல் மூலம் ஒரு ரகசிய படையை நிறுவி மெக்சிகோவின் இழந்த இறையாண்மையை மீட்டெடுக்க முயல்கிறது. அதன் தலைவி ஸ்பானிஷ் ராஜவம்சத்தில் வந்த அழகி மானுயுலா; ஆங்காரம் ஆட்டிப்படைக்கும் ஆணவ பெண்மணி. எல்லா மட்டத்திலும் செல்வாக்கு பெற்று வலிமையான கட்டமைப்பு உடையதாக "விடுதலை வேட்கை" யை மாற்றி தக்க வாய்ப்பில் மீண்டும் ஒரு போரை துவக்குவதே பிரதாணம்.

    *கொலை , கொள்ளை, வழிப்பறி மூலம் அப்போதுதான் அமெரிக்கா வோடு இணைந்த நியூமெக்சிகோ மக்களின் மனதில், "நிர்வாகத்தில் முந்தைய நாடே பரவாயில்லை, புதிய நாட்டில் நிம்மதியான வாழ்க்கை இல்லை, மீண்டும் மெக்சிக்கோ வோடே போவோமா"-எஎன்ற எண்ணத்தை விதைப்பதே அடிப்படை நோக்கம்.

    *ஸ்பானிய அரசு வம்சாவளியில் வந்த மங்கை, ஒரு படை, அவளுக்கு ஒர அரசை ஸ்தாபிப்பது--- என்றவுடன் இதை இதற்கு முன்பே படித்து உள்ளோமே என சிலருக்கு தோணும். ஆம் எனக்கும் அப்படி நினைவில் வந்து நின்றது மரியாதைக்குரிய திரு சாண்டில்யன் அய்யா அவர்களின் "யவனராணி" புதினமே. அதிலும் ஒரு அரச குடும்பத்தில் வந்த அழகிய யுவதி, வேறு நாட்டில் எதையும் செய்ய தயங்காத சிறு ரகசிய படை-என இந்த ஒரே "தீம்" மூலம் கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் காமிஸ்ஸாகவும், வரலாற்று புதினமாகவும் உலகின் இருவேறு படைப்பாளிகள் படைத்து உள்ளனர். ஆச்சர்யமான ஒற்றுமை....

    ReplyDelete
    Replies
    1. @ சேலம் Tex விஜயராகவன்

      செம்ம! குறிப்பாக, முதல் பத்தியும், கடேசி பத்தியும்!

      Delete
    2. அருமை. சேலம் தல...என்னை உங்களுடய கதை விமர்சனங்களுக்கும், பயணக் கட்டுரைகளுக்கும் ரசிகனாக மாற்றி விட்டீர்கள். 👏🏻👏🏻👏🏻👏🏻

      Delete
    3. நீங்கள் விமர்சிக்கும் விதமே ஆச்சரியமாக உள்ளது.

      Delete
    4. நீங்கள் விமர்சிக்கும் விதமே ஆச்சரியமாக உள்ளது.

      Delete
    5. கடல் அமைதியாகத்தான் காட்சியளிக்கும்
      ஆழ்கடல் அற்புதங்கள் நாம் அறிந்தது
      குறைவே.சேலம் டெக்ஸ் அதுபோலத்தான்.
      பார்க்க பார்ட்டி சைலன்ட்டு ஆனால்
      உள்ளே உள்ள தகவல்கள் ஏராளம்.

      Delete
    6. வித்தியாசமான அலசல்,அழகான ஒப்பீடு.

      Delete
    7. ஓவ்...நன்றிகள் நண்பர்களே...!!!

      வரலாற்று புதினங்கள் படிக்கையில் கையில் தமிழ்நாட்டின் வரலாறும், அட்லஸும் இல்லாமல் படிக்கவே மாட்டேன்.
      காமிக்ஸ் படிக்கும் போதும் அப்படியே, அந்த காலகட்டத்தின் நிலை, அப்போதைய மேப், சகிதம் படிக்கும் போது மனக்கண்ணில் நாம் அப்படியே உணரலாம்.

      கடற் குதிரையிலும் அந்த மலைத்தொடர், சான்டாபே நகரம் போன்றவற்றை ஒரு தடவை பார்த்து கொண்டோமானால் கதையோடு நாமும் பயணிக்கலாம்.

      பிறகு இருக்கவே இருக்கு பழைய தகவல்கள், இந்த கதையுடன் நாம் ஏற்கெனவே படித்தவை எப்படி லிங் ஆகுதுனு க்ளிக் ஆகனும். கொஞ்சம் பயிற்சி+நினைவு திறன் இதற்கு போதும்.

      எல்லாவற்றையும் விட நான் நினைத்ததை வார்த்தைகளில் எழுத நான் கற்று கொண்டது இங்கே தான். ஆசிரியர் சார்& மூத்த பதிவர்களே எனக்கும் எழுத தூண்டியவர்கள்.

      கடைசியாக என்ன எழுதினாலும் ரசிக்க நம் நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் வந்தாலே, துவக்க உதறல்கள் விலகி நாமும் ஒரு பதிவராகலாம்.
      என்னையும் ஒரு பதிவராக மாற்றியதற்கு மீண்டும் என் நன்றிகள் நண்பர்களே...!!!

      Delete
  36. நன்றி என்ற இந்த மூன்றெழுத்து பத்தாது என்றே நினைக்கிறேன். நானும் என் குடும்பத்தாரும் மறந்த(என் மனைவி தவிர)இந்த நாளை முகமறியா நண்பர்கள் ஆகிய நீங்கள் வாழ்த்தும் போது காமிக்ஸ் என்ற இந்த பந்தத்தால் பிணைந்து இருக்கும் என்னை நானே முதுகில் தட்டி கொள்கிறேன்.
    உலகில் அழியாத உறவு நட்பு என்பதை முரசு அறைந்து பறை சாற்றி கொண்டிருக்கும் அந்த நட்பிற்கு என் சிரம் தாழ்த்தி நன்றி எனும் அந்த மூன்றெழுத்தை இங்கு தெரிவித்து கொள்கிறேன்.
    நன்றி. ...நன்றி. ...நன்றி. ...நன்றி. ...நன்றி. ...நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. ///நன்றி என்ற இந்த மூன்றெழுத்து பத்தாது என்றே நினைக்கிறேன். ///

      அப்படியானால், 'மிக்க நன்றி' என்ற ஆறெழுத்தைப் பயன்படுத்திப் பாருங்களேன் சரண்? ;) :P

      (ச்சும்மா... டமாஷுக்காண்டி!)

      Delete
  37. டாக்டர் ஸ்மர்ப்ஸ் என்னை தங்கள் ஊதா கிராமத்திற்கு அழைத்து சென்று என்னையும் குழந்தையாக்கி மனதில் உள்ள கவலைகளுக்கு சிரிப்பு என்னும் மருந்திட்டார்கள் என்றால் மிகையில்லை.

    வண்ணத்தில் பக்கத்திற்கு பக்கம் மிளிரும் இவர்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

    ஊதா(மனிதர்கள்) எனக்கு பிடித்த நிறம்.

    ReplyDelete
  38. பிரியமுடன் ஒரு பிணைகைதி (நம்ப நாலுகால் ரின் டின் கதைதான்) மகளுக்கு கதை சொல்லும் போது படத்தை பார்த்து ரசித்து சிரித்து கொண்டே இருந்த ஒரு காட்சித்தொடர்: ரான்சம் போலீஸிடம் இருந்து தப்பிய பின்னர் ஒவ்வொரு முறையும் சூப் வண்டியில் சென்று பணம் வசூல் செய்ய செல்லும் அந்த தொடர் காட்சி. வீட்டில் இருந்து அட்டகாசமாக உடை அணிந்து நன்றாக மேக்கப் செய்து விட்டு குபீர் என கொதிக்கும் சூப்பில் குதித்து அந்த வண்டியில் போலீஸை வந்து பார்க்கும் இடத்தில் வெளியே தலையை கூட காண்பிக்காமல் அவர்களிடம் பேசிவிட்டு செல்லும் காட்சி.

    மேலோட்டமாக பார்த்தால் பெரிதாக தெரியாது... கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது அட்டகாசமான வெடிச்சிரிப்பை வயிற்றில் உருவாக்கும். அதுவும் போலீஸார் கொடுக்கும் குளிர்பானத்தை வெளியே தலைகாட்டாமல் ஸ்டாரா போட்டு அதனை குடிக்கும் இடம்.

    செம..... உருண்டு உருண்டு சிரிக்கும் படங்கள் பல நூறு.

    ReplyDelete
    Replies
    1. :))

      கொஞ்சம் கவனித்துப் படித்தால் ரசிக்கவும், புன்னகைக்கவும், சத்தம்போட்டு சிரிக்கவும், உருண்டு புரண்டு சிரிக்கவும் கார்ட்டூன் கதைகளில் ஏராளமான வாய்ப்புகள் உண்டு என்பதை - கார்டூன் கதைகளுக்கு 'ஙே' சொல்லும் நண்பர்களும் உணர்ந்தால் சூப்பராக இருக்கும்!

      Delete
    2. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தற்போது வரும் காமெடி கதைகளில் படம்களை பார்த்து சிரிக்கும்படி உள்ள விசயம்கள் ரொம்ப அதிகம். படம்களை உற்று பாருங்கள் சிரித்து கொண்டே இருங்கள் :-)

      Delete
    3. இந்த ஒரு பிரச்னைக்காகவே வெளில போகும் போது படிக்க கார்டடூன் கதைகளை எடுப்பதில்லை. படிச்சுட்டு கெக்கேபிக்கேன்னு சிரிக்க மத்தவங்க என்னடா மென்டலோன்னு பாக்கறாங்க. வீட்ல படிச்சு சிரிச்சாலும்சிரிக்கலான்னாலும் என்னை மென்டல் தான்னு முடிவு கட்டிட்டாங்க. அதனால பிரச்னைஇல்லை. ஜோக்ஸ் அபார்ட், பெரும்பாலும் கார்டடூன்கள் தான் ஸ்டரெஸ் ரிலீப். அதுவும் லக்கி, சிக்பில், ரின்டின், கர்னல், ஸமர்ப் எல்லாம் அருமையா இருக்கு. கடைசி மூனு பேரை சில நண்பர்களுக்கு பிடிக்கலைங்கறது சற்றே வருத்தம். விற்பனை நல்லா இருந்தா ஆசிரியர் 2018லயும் தொடருவருன்னு நம்புகிறேன்.

      Delete
  39. ****** கடல் குதிரையின் முத்திரை *****

    அட்டைப்படம் : 9.5/10
    தலைப்பு : 9/10
    சித்திரங்கள் : 9/10
    கதை : 8/10
    கதை நகரும் விதம் (விறுவிறுப்பு) : 8/10
    வசனங்கள் : 8/10
    அத்தியாயத் தலைப்புகள் : 4/10
    டெக்ஸ் - கார்ஸன் காமெடி ட்ராக் : 4/10
    வில்லத் தனம் : 8.5/10
    கதை முடியும்(?) விதம் : 7/10

    மொத்த மதிப்பெண்கள் : 75/100

    பக்கம் 25க்கும் 26க்கும் நடுவே மாயமாகிப் போன ஒரு பக்கத்திற்கு 5 மதிப்பெண்கள் கழிக்கப்பட்டதுபோக


    நிகர மதிப்பெண் : 70/100

    ReplyDelete
    Replies
    1. 56 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதாலோ என்னவோ கார்ஸனின் மீதான டெக்ஸின் நட்பும், நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது! இயல்பான வசனங்களால் கார்ஸனே இதை பக்கம்-36ல் தெரிவிக்கும்போது நமக்கும் கொஞ்சூண்டு சங்கடம் எட்டிப்பார்க்கிறது! ( யூ டூ தல?)
      இதனால்தானோ என்னவோ, கதை நெடுக டெக்ஸும், கார்ஸனும் ஒன்றாகப்பயணித்தும்கூட அவர்களுக்கிடையேயான ஜாலியான சம்பாஷனைகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன!
      இதனால்தானோ என்னவோ.. டெக்ஸ், கார்சன், கிட் - ஆகிய மூவருமே மிக இளமையாக வரையப்பட்டிருந்தாலும்கூட - EBF2017க்கு பிறகான எடிட்டரைப் போல் - சற்று இறுக்கமான முகங்களோடே உலவுகின்றனர்!

      Delete
    2. வசனங்கள் துவக்கத்தில் கொஞ்சம் வழக்கமான ஸ்டேண்டர்டுல இருந்து விலகி இருந்தாலும் பிற்பாடு கூர்மையாக தீட்டப்பட்டுள்ளன...

      அத்தியாய தலைப்புகள் கொஞ்சம் ஹி...ஹி... தான்...

      துவக்க கால சாகசம் என்பதால் கார்சன்vsடெக்ஸ் ட்ராக் சுகப்படல...

      ஒரு முழு பக்கமும் விட்டுப்போனது துரதிர்ஷ்டவசமானது ஹூம்...

      மற்றபடி என்னுடைய கார்டும் இதுவே...

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. கதையில் மொழி பெயர்ப்பு ஒரு சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும்படி இருந்து.

      40ம் பக்கம் காலில் குண்டடிபட்ட க்ராஃபோர்ட் தொடரும் பக்கங்களில் தகவல் இல்லை, இத்தனைக்கும் வில்லன் கூட்டத்தில் முக்கிய நபர்.

      165ம் பக்கம் டெக்ஸ் எல்லோபோ மற்றும் மானுபுலா எங்கே சென்றார்கள் என தடத்தை ஆராயும் டெக்ஸ் பேசும் வசனங்கள்."நிறைய ஆண்களின் காலடித் தடங்கள்", இதனை படிக்கும் போது எல்லோபோவுக்கு மேலும் சில புதிய நண்பர்கள் கிடைக்க பெற்று தப்பிச் செல்கிறான் போல் என் நினைக்க செய்தது.

      இன்னும் (163ம் பக்கம்) ஒரு இடத்தில் டெக்ஸ் அரைமணி நேரத்தில் திரும்பி வருகிறேன் என்று எங்கோ கிளம்பி செல்வார், ஆனால் தொடரும் பக்கங்களில் அவர் எங்கு சென்றார் என்ன செய்தார் என ஒரு தகவலும் இல்லை :-(

      Delete
    6. இந்த கதையில் தான் டெக்ஸ் எவ்வளவு பெரிய கால்பந்தாட்ட வீரர் என்று புரிந்து கொண்டேன்... அப்பா என்ன ஒரு உதை அந்த வெடிகுண்டு குடுவைக்கு. அவர் உதைத்த வலி தாங்கமுடியாமல் டமால்ன்னு அந்த குடுவை வெடிச்சு விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். :-)

      Delete
    7. // ஒரு முழு பக்கமும் விட்டுப்போனது துரதிர்ஷ்டவசமானது ஹூம்... //

      பக்கம் எல்லாம் விடு படல. அந்த கடைசி கட்ட படத்தில் என்ன எழுதி இருக்காங்கன்னு பாருங்க.

      அவர் ஒரு சூப்பர் ஸ்டார் நீங்களே எப்படி தப்பிசார்னு முடிவு பண்ணிகோங்க விஜய்!

      Delete
    8. சாரி பரணி ஒரு பக்கம் விட்டுப்போனது உண்மையே...!!!

      25ம் பக்கத்தில் ஓட்டல் அறையில் ட்ரஸ் மாற்றி கொண்டு இருப்பாங்க மூவரும்...
      அதற்கு கீழ் அறையில் வெடிகுண்டு பற்ற வைப்பாங்க வில்லி ஆட்கள்...

      26ம் பக்கம் வெடி வெடிக்கும், சன்னல் அருகே நிற்கும் மூவரும் வெளியே வீசப்படுவதால் தப்புகிறார்கள்; அவர்கள் எவ்வாறு சன்னல் அருகே வந்தனர் என்ற விளக்கம் அந்த விடுபட்ட பக்கத்தில் உள்ளது..

      சன்னலில் ஒரு பீரங்கியை, ராணுவ வீரர்கள் இழுத்து போவதை பார்க்கும் கிட்- டெக்ஸையும் கார்சனையும் அதை பார்க்க கூப்பிடுகிறான். அவர்களும் வருகின்றனர். விடுபட்ட பக்கத்தில் உள்ள 5பேனல்களில் இந்த காட்சிகள் உள்ளன.
      பாம் வெடிக்கிறது.

      Delete
    9. சேலம் Tex விஜயராகவன் @ ஹும்

      Delete
  40. கடல் குதிரையின் முத்திரை - நமது ஆசிரியரின் மொழி பெயர்ப்பு இல்லை என்பது எனது எண்ணம். விஜயன் சார் இதனை உறுதிபடுத்த முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்! பொதுவாக, எல்லா டெக்ஸ் கதைகளையுமே திரு.கருணையானந்தம் அவர்கள்தான் மொழிபெயர்க்கிறார். வசன மேம்படுத்துதல் & டெக்ஸ்-கார்சன் காமெடி ட்ராக்- ஆகியவை மட்டும் எடிட்டரின் கைவண்ணம்!

      Delete
    2. இந்த முறை நீங்கள் சொல்லவது போல் இல்லை என்பது எனது எண்ணம் விஜய்!

      Delete
    3. பின்னே? கோயில் மண்டபத்துல யாராவது எழுதிக்கொடுத்து, அதை அப்படியே புக்குல பிரின்ட் பண்ணிட்டாருன்னு சொல்லவரீங்களா? :P

      Delete
    4. சமீபத்தில் ஒரு டெக்ஸ் கதையை நமது காமிக்ஸ் நண்பர் மொழி பெயர்த்து இருந்தார் அதே போல் புதிய நண்பர்கள் யாராவது மொழிபெயர்த்து இருப்பார்களோ என்பது எனது எண்ணம்!

      // கோயில் மண்டபத்துல யாராவது எழுதிக்கொடுத்து, அதை அப்படியே புக்குல பிரின்ட் பண்ணிட்டாருன்னு சொல்லவரீங்களா? :// கண்டிப்பாக நீங்கள் இல்லை என்று புரிந்து கொண்டேன் :-)

      Delete
    5. ஆனாக்கா... எனக்கும்கூட இப்படியொரு டவுட்டு வராமலில்லை. பாலைவனப் பரப்பில் தேங்கிக்கிடக்கும் தக்ளியூண்டு நீரை 'நீர்ச்சுணை'னு ஆண்டாண்டு காலமா நாம சொல்லிக்கிட்டிருந்ததை 'கிணறு'னு இப்போ எழுதியிருக்கறதைப் பார்க்கும்போது எனக்கும் அப்படியொரு டவுட்டு வந்துச்சு!

      Delete
    6. பல பழைய தமிழ் வார்த்தைகளின் உபயோகம் இந்த கேள்விக்கான காரணம்.

      Delete
    7. ///பல பழைய தமிழ் வார்த்தைகளின் உபயோகம் இந்த கேள்விக்கான காரணம்.////

      என்னங்க பண்றது? 'ப்ரோ'னு கொஞ்சம் லேட்டஸ்டா எழுதினா அதை நடிகர் சந்தானத்தின் டயலாக்னு சொல்லிடறாங்க!
      சரி, கொஞ்சம் பழைய தமிழ் வார்த்தைகளைப் பிரயோகிச்சுப் பார்க்கலாம்னு முயற்சி பண்ணினா 'இது திருவள்ளுவர் மொழிபெயர்த்ததுதானே?'னு நாக்கூசாம கேட்டுப்புடறாங்க...
      வர வர நம்ம நண்பர்களைச் சமாளிக்கறது பெரும்பாடா இருக்குங்க!:D

      Delete
    8. இம்மாத 4 இதழ்களுள் டெக்சின் தமிழாக்கம் மட்டும் நமது கருணையானந்தம் அவர்கள் ! வழக்கமாய் அவரது ஸ்கிரிப்ட் வந்த பிற்பாடு நான் பட்டி டிங்கேரிங் செய்திடுவேன் ; குறைந்த பட்சம் டெக்ஸ் - தாத்தா இருவரது உரையாடல் பகுதிகளையேனும் முழுவதுமாய் மாற்றியமைப்பேன் ! ஆனால் இம்மாதம் கிராபிக் நாவலே பெருமளவு நேரத்தை விழுங்கிவிட - டெக்சில் பணியாற்ற அவகாசமிருக்கவில்லை முற்றிலுமாய் ! So சமீப ஆண்டுகளில் டெக்ஸ் & கார்சனுக்கென நாம் நிர்ணயித்திருந்த அந்த நக்கல் / நையாண்டி பாணி இம்முறை கண்ணில் படாது போவதாலேயே உங்களுக்கு வித்தியாசம் தென்பட்டிருக்கக் கூடும் !

      Delete
  41. @ ALL : கல்யாண பந்தியில் தொந்தி ரொப்பல் என்ற காரணத்தினால் - பதிவு காலை 8 மணிக்கு ! நீங்கள் தூக்கத்தைப் பிடியுங்கள் ; நான் கம்பியூட்டரை பிறாண்டத் தொடங்குகிறேன் ! Good night guys !

    ReplyDelete
    Replies
    1. முன்கூட்டிய தகவலுக்கு நன்றிகள், எடிட்டர் சார்!!

      தூக்கம் கண்களைத் தழுவட்டுமேஹே..ஹேஏஏ...

      Delete
  42. எச்சூச்மீ... டைம் ப்ளீஸ்?

    ReplyDelete
  43. லலலலல லலலாஆஆஆ

    நேரம் நல்ல நேரம் - புதுப்
    பதிவு படிக்கும் நேரம்...
    காலம் நல்ல காலம் - கைகள்
    காமிக்ஸ் ஏந்தும் காலம்...

    நேரம் நல்ல நேரம்...

    ReplyDelete
  44. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete