Powered By Blogger

Sunday, September 10, 2017

ஒரு காமிக்ஸ் கொத்தவால்சாவடி !

நண்பர்களே,

வணக்கம். கால ஓட்டத்தின் பல பரிமாணங்களை நமது லியனார்டோ தாத்தாவைப் போல் ஆராய்ச்சி செய்து வருகிறேன் !  நாலைந்து மாதங்களுக்கொரு இதழை வெளியிட்டு வந்த நாட்களிலெல்லாம்   - ஒரு மாதத்தின் பயணம் என்பது -"ப்ப்பூ.30 நாள் தானே ஆகியிருக்கு ! சாவகாசமாய் பாத்துக்கலாம் !" என்ற மாதிரித் தான் தலைக்குள் பதிவாகும் ! ஆனால் இன்றைக்கோ - "தேவுடா...அதுக்குள்ளாற 10  நாள் ஜூட்  விட்டுடுச்சே ; அடுத்த கத்தை இதழ்களை உங்களிடம் ஒப்படைக்க 3 வாரங்கள் கூடப் பாக்கியில்லையே ?" என்ற படபடப்பு தொற்றிக் கொள்கிறது ! அன்றைக்கும், இன்றைக்கும் பூமி சுழல்வது அதே வேகத்தில் தானென்றாலும், நமக்குள்ளான தாக்கங்களில் தான் எத்தனை மாற்றங்கள் ? இதோ - செப்டெம்பரின் இதழ்களை உங்களுக்கு அனுப்பிய கையோடு -  விமர்சனங்களை எதிர்நோக்கிக் காத்திருந்தது சரியாக 9 நாட்களுக்கு முன்னர் தான் ! ஆனால் அதற்குள் 'துவைச்சுக்கா-தொங்கப்போட்டுக்கா' syndrome தாக்கியது போல முக்கால்வாசி இதழ்களை வாசித்து ; விமர்சித்தும் முடித்து விட்டது போல் தோன்றுகிறது !! And 'அலுப்பாட்டிக்கா-சலிப்பாட்டிக்கா' இல்லாது இங்கும், FB /வாட்சப் க்ரூப்களிலும் அரங்கேறிடும் உங்களின் interactions-களின் பலனாகவோ, என்னவோ - ஆன்லைன் விற்பனையிலும் வேகம் தென்படுகிறது! சிறு துளிகளே ஒரு பிரவாகத்தின் முன்னோடி என்பது நிஜமாகின் - கரம்கோர்த்து நீங்கள் நிகழ்த்தும் சமீப மாதங்களின் அட்டகாசங்கள் நம் பயணத்தின் ஒரு முக்கிய தருணமாகிடும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் ! Awesome show all !

உசிலம்பட்டி, வாடிப்பட்டி என்று ஆரம்பித்து நான் துபாய் வரை வண்டியைக் கிளப்பும் முன்பாக - இதோ நமது updated இரத்தப் படல   முன்பதிவுப் பட்டியலை உங்கள் கண்களில் காட்டி விடுகிறேன் ! 

நிச்சயமாய் இதிலும் விடுதல்கள் இருக்கக்கூடும் ; அருள் கூர்ந்து கோபித்துக் கொள்ளாது ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டால் திங்கட்கிழமையே பட்டியலை revise செய்து விடுவோம் ! And இந்த முன்பதிவுகளைப் பார்க்கும் போது எழும் நம்பிக்கை - ரொம்பவே வித்தியாசமானதொன்று ! இதுவரையிலும் நிறையவே முன்பதிவுச் சமாச்சாரங்களை அரங்கேற்றியுள்ளோம் தான் ; அப்போதுமே -  "இத்தனை எண்ணிக்கை புக்கிங் கிடைத்தால்தான் எஞ்சினே ஸ்டார்ட் செய்திட சாத்தியமாகிடும்!" என்ற ரீதியில் பூச்சாண்டிகளும் காட்டியிருப்பேன் தான் ! ஆனால் அன்றைக்கெல்லாமே இதழ்களின் விலைகள் ஆளைத் தூக்கிப் போகும் ரகத்தில் இருக்கவில்லை என்பதால் - "என்ன ஆனாலும் இதைக் கரைசேர்த்து விடலாம் !" என்ற நம்பிக்கை எனக்குள் மௌனமாய்க் குடியிருப்பதுண்டு ! ஆனால் முதன்முறையாக - இந்த இரத்தப் படல முன்பதிவிற்கு முன்பாய் நான் செய்த caution-ல் பூச்சாண்டி லேது ! முழுவதுமே அக்மார்க் நடைமுறை உண்மை ! "400" என்ற அந்த மினிமம் புக்கிங் எண்ணிக்கையை எட்டிப் பிடிக்க மட்டும் இயலாது போயின் - நமது XIII காரு அந்த சம்மர் கிராப்போடு அதே மௌனச் சாமியார்ப் பார்வையைப் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே நேரிட்டிருக்கும் ! ஆனால் பாதித் தூரத்தை 30+ நாட்களிலேயே கடந்துவிட்டதைப் பார்த்த பின்பே எனக்குள் நம்பிக்கை பிறந்துள்ளது - "இது நனவாகிடப் போகும் கனவே" என்று !! The project is now on for sure !! தொடரும் நாட்களில் முன்பதிவுகளின் வீரியம் குன்றாது தொடர்ந்து நானூறைச் சீக்கிரமே தொட்டுப் பிடித்து விட முடிந்தால் -கதையின் டிஜிட்டல் கோப்புகளை வரவழைக்க ஆயத்தமாகி விடலாம் ! So - தொடரட்டும் இந்த உற்சாகம் ! 

Moving on, ஆண்டின் பெண்டு கழற்றும் இதழ்களின் பெரும்பான்மையை தாண்டி விட்ட உற்சாகத்தில் காலாட்டிக் கொண்டிருக்கிறோம் ! எஞ்சியிருக்கும் மாதங்களில் "நிஜங்களின் நிசப்தம்" கிராபிக் நாவல் மட்டுமே நிறைய நேரத்தை விழுங்கக் காத்திருக்கும் ஆக்கம் எனும் போது - லக்கி லூக் ஒருபக்கம் ; சிக் பில் இன்னொருபக்கமென்று, எனது நாட்கள் சூப்பர் ஜாலியாக ஓடிவருகின்றன ! மொழிபெயர்ப்புப் பணிகளானது - அரைத்த அதே மாவை, கலர்கலராய் அரைக்கும் அயர்ச்சியை சில வேளைகளில்  உருவாக்கக் கூடியதொரு வேலை தான் ! முன்பெல்லாம் ஒரே பாணியிலான கதைகளாக நாம் வெளியிட்டு வந்த சமயங்களில் பெரிதாயொரு உற்சாகம் எழாது - மேஜையில் கிடக்கும் பணிகளைப் பார்க்கும் போது ! ஆனால் இன்றைக்கோ நிலைமையே தலைகீழ் ! கார்ட்டூன் கதைகள் மைசூர்பாகாய் கண்ணுக்குத் தெரிய, புதுவரவான லயன் கிராபிக் நாவல் தலப்பாக்கட்டு பிரியாணி போல காட்சி தருகிறது ! செப்டம்பரையே எடுத்துக் கொள்ளுங்களேன் : தோர்கல் முற்றிலும் ஓர் கிளாசிக்கல் ஸ்டைல் மொழிநடை கொண்ட கதை எனும்போது அங்கே  தூய தமிழில் 'மாட்லாட' மெனெக்கெட வேண்டியிருந்தது ! நீலப் பொடியன்களின் சமாச்சாரத்திலோ - "டொக்குபஞ்சர் ; பொடிதெரபி" என்று மனம்  போன திக்கில் பேனாவை  ஓட விடும் சுதந்திரம் கிட்டியது ! கிராபிக் நாவலிலோ - முற்றிலும் புதுமாதிரியானதொரு அனுபவம் ! இதற்கான பொருத்தமான நடையை நான் கையாண்டுள்ளேனா என்று சொல்லத் தெரியவில்லை - but இந்த இதழுக்கு பேச்சுத் தமிழிலும் ; தூய தமிழிலும் ஒரே நேரத்தில் முதல் 10 பக்கங்களுக்கு வசனங்களை எழுதி வைத்து விட்டு - அந்தப் பேப்பர்களை அரை நாளுக்கு முறையோ முறையென்று  முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன் என்பது தான் நிஜம் !  ஒரு மாதிரியாய் கதையின்அந்த இருண்ட பாணி  + 40 ஆண்டுகளுக்கு முன்பான கதைக்களம் என்ற கூட்டணிக்கு தூய தமிழே தேவலாம் என்று பட்டது ! So இது போன்ற ஆராய்ச்சிகள் செய்யத் தூண்டும் கதைகளுக்குள் புகுந்து பணியாற்றுவது ஒரு செம ரகளையான அனுபவம் ! ஒரே மாதத்தில் நமக்கு சாத்தியமாகிடும்இத்தகைய variety படிக்கும் உங்களுக்கு மாத்திரமல்ல - பணியாற்றும் எனக்கும் ஏகமாய் refreshing !! விற்பனையிலும் அதேபோல முத்திரை பதித்தால் - சந்தா E நமது முதல் தேர்வாக அமைந்து போகும் நாள் வெகு தூரமிராது ! Fingers crossed !

Looking ahead - இந்த கிராபிக் நாவல் தேர்வுகளுக்கென நான் படித்துவரும் ஆல்பங்களைக் கொண்டு ஒரு சின்ன ஆபீஸே கட்டி விடலாம் ! வரலாற்றுப் புனைவுகள் ; எதிர்காலக் கதைகள் ; பௌன்சர் பாணியில் மூஞ்சில் குத்தும் சமரசமில்லா கதைகள் ; ரொமான்ஸ் கதைகள் ; zombies கதைகள் என்று ஒரு லாரி லோடு புத்தகங்கள் வீட்டுக்குள் ! சாப்பாட்டு மேஜையில் கொஞ்சம் ; தலைமாட்டில் கொஞ்சம் ; பணியாற்றும் மேஜையில் கொஞ்சம் ; அட- குளியல் அறையிலும் கொஞ்சம் என்று வீடுமுழுக்க நான் விரித்து வைத்திருக்கும் காமிக்ஸ் கொத்தவால்சாவடியைப் பார்த்தும் ஆத்துக்காரி என் நடுமூக்கிற்குச் சேதாரம் செய்யாது விட்டுவைத்திருக்கிறாளெனில் - பெரும் தேவன் மனிடோவின் கிருபை லைட்டாகவேணும் எனக்கிருக்கிறது என்றே அர்த்தம் ! இதோ - தற்போதைய எனது தினங்களை டாலடிக்கச் செய்யும் சில ஆல்பங்களின் previews - இந்த ஞாயிறின் பதிவாக !!

எதிர்காலம் ; ஒரு மூன்றாம் உலக யுத்தத்தின் பின்பாக நிர்மூலமாகிக் கிடக்கும் உலகினில் உலவும் zombies - என்ற களங்கள் உலகெங்கிலுமுள்ள காமிக்ஸ் படைப்பாளிகளுக்கு ரொம்பவே இஷ்டமான கதைக்கருக்கள் ! ஒவ்வொரு ஆண்டும் அவற்றுள் கணிசமான கதைகளைப் புரட்டுவேன் ; புரட்டுவேன் - விறல் ரேகைகள் தேயும் வரைப் புரட்டுவேன் ! ஆனால் இறுதியில் - "maybe next year !" என்று எனக்கு நானே சமாதானம் சொல்லி விட்டு அவற்றை திரும்பவும் பீரோவில் அடுக்கி வைத்து விடுவேன்..! Valerian & Laureline ஜோடியின் சாகசங்கள் இப்போதெல்லாம் Cinebook ஆங்கிலப் பதிப்புகளில் கிட்டுகின்றன எனும் போது - கலர் கலராய் அந்த ஆல்பங்களை வாங்கி வைத்துக் கொண்டு - மோவாயைத் தடவிக் கொண்டு தானிருக்கிறேன் ! இந்தத் தொடர் பற்றி கொஞ்ச மாதங்களுக்கு முன்பாய் நான் எழுதியது மறந்திருக்கக்கூடிய நண்பர்களுக்கு இந்த லிங்க் : http://lion-muthucomics.blogspot.in/2017/01/blog-post.html
இந்தத் தொடர் சமீபத்தையது அல்ல ; 45 ஆண்டுகளுக்கு முன்பான படைப்பு என்பதால் - அந்தக் காலகட்டத்துக்கு இதுவொரு அசாத்தியக் கற்பனை என்றே சொல்ல வேண்டும் ! நாம் இத்னை ரசிக்க / ருசிக்க - complan குழந்தைகளாகத் தயாராகி விட்டோமா ? என்பது மட்டுமே எனது தற்போதைய சிந்தனை !!
இந்த எதிர்காலத் தேடல்களில் திரும்பத் திரும்ப எனக்கு நமைச்சலை ஏற்படுத்தும் இன்னொரு நாயகர் உள்ளாரெனில் - அவர் நமது அந்நாளைய சொற்பப் பரிச்சயத்தின் JUDGE DREDD தான் ! "நீதிதேவன் நம்பர் 1 " என்ற நாமகரணத்தோடு ஒன்றோ / இரண்டோ இதழ்களில் தலைகாட்டிய இந்த cop of the future-ஐ நம்மில் எத்தனை பேருக்கு நினைவுள்ளதோ - தெரியவில்லை ! ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இவர் எனது ஆகஸ்ட் / செப்டெம்பர் மாதங்களது வாசிப்பு நண்பரே !
இங்கிலாந்தில் அநியாயத்துக்கு மெகா ஹிட் ஆன இந்தத் தொடரைப் பற்றி அறிந்திருக்கா நண்பர்களுக்கு மட்டும் ஒரு குட்டியான ட்ரைலர் ! இந்த முகமூடி போட்ட மனுஷன் எதிர்கால உலகின் ஒரு போலீஸ் அதிகாரி ! சட்டத்தை அட்சர சுத்தமாய் மதிக்க வேண்டிய அந்த லோகத்தில் - சட்ட பரிபாலனத்தை ஈவு இரக்கமின்றிச் செய்திடும் ஒரு கடமை வீரர் ! நாலு தலை கொண்ட mutants ; 'சொய்யங்கென' வானத்தில் பறக்கும் மோட்டார்சைக்கிள்கள் ; நொடியில் கொடியவர்களைக் கொண்டு சென்று அடைக்கும் "தண்டனைக் கிரகங்கள்" - என்று கற்பனை பிரவாகமெடுத்து ஓடும் தொடரிது ! 2000 AD என்ற வார (காமிக்ஸ்) இதழில் பிரதான நாயகரான இவருக்கு - சரிந்துகொண்டிருந்த  Fleetway -ன் விற்பனைகளை பல காலம் தாங்கிப் பிடித்த பெருமையும் உண்டு !
தினசரி strips களாக ; 4 பக்க / 8 பக்கக் கதைகளாக ; அப்புறம் சற்றே நீளம் கூடுதலான கதைகளாக இந்தத் தொடரில் ஏராளமாய் சரக்கு உள்ளது ! வண்ணத்திலும் உருவாக்கப்பட்டு - அமெரிக்காவிலுமே decent விற்பனை கண்ட தொடர் என்பது கொசுறுச் சேதி ! 'மடக் மடக்' கென்று காம்பிளான் குடிக்கச் செய்து  தலீவரையும், நண்பர்களையும் ஒரே ராத்திரியில் தயாராக்கி விட்டால் - இந்த பிரிட்டிஷ் சூப்பர் ஹீரோவை தமிழ் பேசச் செய்ய முனைந்திடலாம் ! இதிலுள்ள ஒரே சிக்கல் - கதைகளை நம் ரசனைகளுக்கேற்பத் தேர்வு செய்யும் சாத்தியங்கள் ரொம்பவே குறைவாக இருந்திடுமென்பது தான் ! அவர்களது ஒரிஜினல் வரிசையினைப் பின்பற்றி லைனாக பயணிக்க வேண்டியிருக்கலாம் ! லாஜிக் ஓட்டை ; இத்யாதி இத்யாதி என்ற ஆலமரத்தடிப் பஞ்சாயத்துகளுக்கு அவசியம் ஏற்படுத்திடாது - "ஒரு வீரியமான கற்பனையின் பிரதிபலனை ரசிக்கிறோம் !" என்று மட்டும் ஏற்றுக் கொண்டோமெனில் - இதுவொரு செம வித்தியாசமான வாசிப்பு அனுபவத்துக்கு வித்திடக்கூடும் ! Think about it guys ?!

அடுத்ததாய் கண்ணைப் பறிப்பது - ஒரு அட்டகாசமான முழுவண்ண ஆக்கம் - அழிவின் விளிம்பில் நிற்குமொரு எதிர்கால உலகை மையப்படுத்தி ! உயிர் வாழ - சில உயிர் பலிகள் அவசியம் என்றதொரு சூழலில் - மனிதன் தனது சுயநல முகத்தை ; உயிர் பிழைக்கும் யுத்தத்தை நடத்துவது போலிந்த கிராபிக் நாவல் அமைக்கப்பட்டுள்ளது ! கதையின் தன்மைக்கேற்ப சித்திரங்கள் கொஞ்சம் ரணகளமாய் இருப்பதை இந்த டீசர்களில் நீங்கள் பார்த்திட முடியும் ! வண்ணத்தில், இத்தனை கோரத்தை பார்ப்பதென்பது எவ்வித அனுபவமாய் நமக்கு இருக்கக் கூடுமோ ? என்பதே எனது மில்லியன் டாலர் கேள்வி !

அடுத்ததாய் இன்னுமொரு 'அழகுசுந்தரம்' கோஷ்டி உங்களின் தலையசைப்பு கிட்டினால் களமிறங்க ரெடி ! ZOMBIES என்ற இறந்தும்-இறவா மிருதன்களை கொண்டொரு 132 பக்க கிராபிக் நாவல், அசாத்திய சித்திரத் தரத்துடன் உள்ளது ! இந்தக் கதைவரிசை நமக்குத் புதுசே ; ஆனால் உலகெங்குமே செம popular ! அப்படி இந்த அழகப்பன்களிடம் என்னதான் சரக்கிருக்கிறது என்பதை ஒருமுறை தெரிந்து கொள்ள முயற்சித்துத் தான் பார்ப்போமா ? அல்லது தற்போது பிடுங்கி கொண்டிருக்கும் ஆணிகள் போதும் என்பீர்களா ?
கோர முகங்களின் அணிவகுப்புக்கு மத்தியில் இதோவொரு ஜிலீர் முகம் ! "ரொமான்ஸ் கதைக்கு வாய்ப்புண்டா ?" என்ற கேள்வியை நெடுநாளாய் நம்மவர்களில் ஒரு சிறு அணி கோரி வருவதில் இரகசியமில்லை ! நம்மூர்களைப் போல மரத்தைச் சுற்றி தொட்டுப் பிடித்து விளையாடும் காதல்களோ ; பஸ்ஸில் முண்டியடிக்கும் கூட்ட நெரிசலில் பெண்ணின் சுட்டுவிரல் பட்ட மறு கணமே  குபீரென பிரவாகமெடுத்து - நேராக சுவிட்சர்லாந்தில் ஒரு கனவு பாட்டுக்கு இட்டுப் போகும் காதல்களோ காமிக்ஸ்களில் கிடையாது என்றமட்டுக்குப் பிழைத்தோம் ! இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னணியில்,  ஒரு ஆக்ஷன் + ரொமான்ஸ் கலந்ததொரு கிராபிக் நாவல் இருப்பதை கொஞ்ச ஆண்டுகளாகவே நோட்டம் விடுவது என் வாடிக்கை ! இந்தாண்டும் அதற்கு விதிவிலக்கல்ல ! இந்த இதழ் ஒருக்கால் தொடரும் ஆண்டினில் நிஜமாகிடும் பட்சத்தில் - முரட்டுக் காடா துணியில் நல்ல  கர்சீப்புகள் கணிசமாய்ச் செய்து இணைப்பாகத் தர வேண்டியிருக்கலாம் !

முழுக்கவே பிரெஞ்சு மண்ணில் நடைபெறும் இந்த கதையொரு   visual delight ! கண்களுக்கு மாத்திரமன்றி, சிந்தைக்கும்  ஓரளவுக்கு ஓ.கே. எனில் - start music என்பதற்குப் பதிலாய், start the waterfalls என்று சொல்ல அவசியப்படலாம் ! பார்க்கலாமே !

பட்டியலில் அடுத்தது : SEULS என்ற பெயரில் வெளி வந்து பிரெஞ்சில் சக்கை போடு போட்டு வருமாறு கிராபிக் நாவல் தொடர் ! நமது க்ரீன் மேனர் தொடரின் கதாசிரியர் Fabien Vehlmann தான் இங்கேயும் பிதாமகர் & கிட்டத்தட்ட அங்கு பயன்படுத்தப்பட்ட அதே கார்ட்டூன் பாணிச் சித்திர யுக்தியையே  இந்த SEULS தொடரிலும் அபாரமாய்க் கையாண்டுள்ளார்கள் ! ஒருநாள் காலையில் நியூ யார்க் நகரமே ஒட்டு மொத்தமாய்க் காலியாகிக் கிடக்கிறது - சின்னதொரு எண்ணிக்கையிலான பொடியார்களைத் தவிர்த்து ! அவர்களது பெற்றோர்கள் ; சுற்றம் ; நட்பு ; ஊர் மக்கள் என அனைவரும் என்னவானார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை ! தனித்து விடப்பட்டிருக்கும் இந்தச் சின்னதுகள் ஒன்றிணைந்து அந்த எதிர்கால உலகில் உயிர் பிழைக்கும் சாகசங்கள் இந்தத் தொடரின் பின்னணி ! ஆங்கிலத்திலும் ALONE என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட் நடித்துள்ள இந்தத் தொடரைப் பார்த்து பெருமூச்சு விடும் படலம் சில ஆண்டுகளாகவே தொடர்கிறது ! இந்தாண்டாவது பெருமூச்சைத் தாண்டி வேறேதும் சாத்தியமாகிடுமா ? என்பதே மண்டைக்குள் குடியிருக்கும் கேள்வி !
யுத்தக் கதைகள் மீது எப்போதுமே எனக்கொரு மிருதுவான மையல் உண்டென்பதில் no secrets ! இது நாள் வரையிலும் நாம் பார்த்திருக்கக் கூடியதெல்லாமே இரண்டாம் உலக யுத்தப் பின்னணியிலான கதைகளையே ! ஆனால் முதல் யுத்தத்தை background ஆகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள Charley's War என்ற Fleetway தொடரானது ஆண்டாண்டு காலமாய் என்னை லயிக்கச் செய்திடுமொரு படைப்பு ! காலாட்படையில் ஒரு சராசரி சிப்பாயாக சேர்ந்திடும் சார்லிக்கு வயது 16 மட்டுமே ! யுத்த நெருக்கடியில் சிக்குவோர் அனைவரையும் போர் முனைக்கு அனுப்பும் அதிகார வர்க்கத்தின் முனைப்பில் இந்தப் பாலகனுமே ஒரு போராளியாகிறான் ! சுற்றுமுற்றும் நிகழும் மரண தாண்டவம் ; போரின் கோர முகம் என்பதனை இந்தப் 16 வயதுச் சிப்பாயின் கண்ணோட்டத்தில் சொல்ல முனையும் தொடரிது ! நாம் இதுவரைக்கும் பார்த்திரா ஒரு கால கட்டம் ; படித்தறிந்திரா ஒரு யுத்தம் என்ற ரீதியில் மட்டுமல்லாது - ஓவராய் பிரிட்டிஷ் தரப்பைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் பாங்கு தெரியா இந்தக் கதை பாணியும், நானிதை ரசிக்க உதவிய சமாச்சாரங்கள் ! "The Greatest British Comics Ever" என்று சிலாகிக்கப்படும் சில தொடர்களுள் முக்கிய இடம்பிடிக்கும் இந்தப் போராளியின் கதைக்கு நம் கதவுகள் திறவும் நாளொன்று புலருமா ?

பௌன்சரின் பிதாமகரின் இன்னொரு மூக்கில் குத்தும் ரகக் கதையும் என்னை கடந்த ஓராண்டாய் உசுப்பேற்றி வரும் புண்ணியத்தைத் தேடிக் கொள்கிறது ! EL TOPO என்ற பெயரில் Jodorowski உருவாக்கிய திரைப்படத்தின் பின்தொடர்ச்சி ஒரு பிரெஞ்சு கிராபிக் நாவலாகவும் சென்றாண்டு வெளிவந்துள்ளது ! அசாத்தியச் சித்திரத் தரம் ; அந்த trademark கதை பாணி என்று ரொம்பவே அதகாலமாய்த் தெரிகிறது இந்த ஆல்பம் ! ஆனால் அதிரடி adults only விஷயங்களும் வழக்கம்போலவே கதையோடு இழையோட - நான் நெளிந்த பிழைப்பாகவே உள்ளது ! EL TOPO - கனவாகவே தொடருமா ?

இன்னமும் வண்டி வண்டியாய் புதுக் கதை பாணிகள் + தொடர்கள் என்னைச் சுற்றி கும்மியடிக்கின்றன தான் ; ஆனால் அவற்றை இன்னொரு மழை நாளின் பதிவுக்கென பத்திரப்படுத்திய கையோடு - இந்த ஞாயிறு எனக்குத் துணையாக இருக்கக் காத்துள்ள லக்கி லூக்கையும், அடுத்த கிராபிக் நாவலையும் நோக்கி  இப்போதைக்கு கிளம்புகிறேன் ! See you around all ! Bye for now !

242 comments:

 1. இனிய காலை வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 2. செப்டம்பர் மாத இதழ்களின் விமர்சனம்:
  க) டெக்ஸ் வில்லர்

  அட்டைப்படம்: சுமார்
  சித்திரங்கள் : அருமை
  கதை : சுமார்
  ஒரு வரி விமர்சனம்: ஒரு பக்கம் காணவில்லை(25 பக்கம் – 26 பக்கம்). யாரை கூப்பிடலாம் துப்பறிய(ஆசிரியரையா அல்லது ரிப் கேர்பியா அல்லது ஜானி / ஸ்டால்லாவையா) மற்றும் கார்சன் -டெக்ஸ் உரையாடலில் வழக்கமாக தென்படும் கிண்டல் கேலியை உணர முடியவில்லை.
  ங) டாக்டர் பொடியன்

  அட்டைப்படம்: அருமை
  சித்திரங்கள் : அருமை
  கதை : அருமை
  ஒரு வரி விமர்சனம்: தேவை எப்படி உருவாகிறது…அதன் மூலம் லாபம் எப்படி அடையலாம் என்ற சின்ன கரு…. நடைமுறை உலகை கிண்டல் (பொடியன்கள்) மூலம் பொடித்திருப்பது அருமை…!

  க) தோர்கல்

  அட்டைப்படம்: அருமை
  சித்திரங்கள் : அருமை
  கதை : அருமை
  ஒரு வரி விமர்சனம்: இந்த முறை தோர்கல் நிஜமாகவே கலக்கி விட்டார்.

  ச) என் சித்தம் சாத்தனுக்கே சொந்தம்
  அட்டைப்படம்: சுமார்
  சித்திரங்கள் : அருமை
  கதை : அருமை
  ஒரு வரி விமர்சனம்: நாட்டு பிரிவினையால் ஏற்படும் துயரங்கள்…அதனால் சித்தம் கலங்கி…நடைபிணமாக வாழும் வாழ்க்கையை துயரமாக சொன்ன விதத்தில் கதாசிரியருக்கு வெற்றியே….

  ReplyDelete
 3. விடுமுறை நாள் வணக்கம்
  ஆசிரியர் & நண்பர்களே

  ReplyDelete
 4. ///முழுக்கவே பிரெஞ்சு மண்ணில் நடைபெறும் இந்த கதையொரு visual delight ! கண்களுக்கு மாத்திரமன்றி, சிந்தைக்கும் ஓரளவுக்கு ஓ.கே. எனில் - start music என்பதற்குப் பதிலாய், start the waterfalls என்று சொல்ல அவசியப்படலாம் ! பார்க்கலாமே !///

  ஜொள்Come!! 😍😍😍

  ReplyDelete
 5. காலை வணக்கம் சார் ! நமக்கு zombies ஒத்து வராது. மற்றபடி war genre, science fiction முயற்சி செய்து பார்க்கலாமே குறிப்பாக fleetway படைப்புகள்.

  ReplyDelete
 6. 'நமக்கு' என பொதுமைப்படுத்தாமல் 'எனக்கு' என - தங்கள் ரசனைகளை நண்பர்கள் பதிவிடலாமே? ஏனெனில், நானொரு ஸோம்பி ரசிகன். என்னைப் போல பலரிருக்கலாமல்லவா?

  ReplyDelete
  Replies
  1. +11111(zombies படங்கள் பிடிக்கும் போது.காமிக்ஸ் பற்றி கேட்கவும் வேண்டுமோ???)வரவேற்கிறேன்.

   Delete
 7. My first choice will be ZOMBIE, second, judge dredd, third, French love story.

  ReplyDelete
 8. புதிய ஆல்பங்களின் ப்ரிவியூக்கள் பிரம்மிப்பு + பெருமூச்சு + ஜலப்பிரவாகம் ஆகியவற்றை ஒருசேர ஏற்படுத்துகின்றன!

  வேணும் வேணும்... எல்லாமே வேணும்... ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ்...

  ReplyDelete
  Replies
  1. ஈ வி யின் சார்பாக நானும் வழிகிறேன்.
   மன்னிக்க
   வழி மொழிகிறேன்.

   Delete
 9. இவற்றை எல்லாம் திரைப்படமாக பார்த்து உள்ளோம்.......?!

  ReplyDelete
 10. KiD ஆர்டின் KannaN10 September 2017 at 08:19:00 GMT+5:30
  ///முழுக்கவே பிரெஞ்சு மண்ணில் நடைபெறும் இந்த கதையொரு visual delight ! கண்களுக்கு மாத்திரமன்றி, சிந்தைக்கும் ஓரளவுக்கு ஓ.கே. எனில் - start music என்பதற்குப் பதிலாய், start the waterfalls என்று சொல்ல அவசியப்படலாம் ! பார்க்கலாமே !///

  ஜொள்Come!! ������//// அதே நேரத்தில் விஜயன் சார் வைத்திருக்கும் கருப்பு மை டப்பாவும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை :-)

  ReplyDelete
 11. KiD ஆர்டின் KannaN10 September 2017 at 08:19:00 GMT+5:30
  ///முழுக்கவே பிரெஞ்சு மண்ணில் நடைபெறும் இந்த கதையொரு visual delight ! கண்களுக்கு மாத்திரமன்றி, சிந்தைக்கும் ஓரளவுக்கு ஓ.கே. எனில் - start music என்பதற்குப் பதிலாய், start the waterfalls என்று சொல்ல அவசியப்படலாம் ! பார்க்கலாமே !///

  ஜொள்Come!! ������//// அதே நேரத்தில் விஜயன் சார் வைத்திருக்கும் கருப்பு மை டப்பாவும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை :-)

  ReplyDelete
 12. Xlll
  Hi thaliver,secretary, what next our war movement?

  ReplyDelete
 13. ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் வணக்கம்.

  ReplyDelete
 14. இரத்த படலம்திற்கு முதலில் பணம் ஸ்டீல்(கோயம்புத்தூர்). இரணடாவதாக நான். எங்கள் இரண்டு பேர் பேரும் list ல இல்லை.
  நாங்கள் இரண்டு பேரும் பணம் கட்டி விட்டு அங்கு இருந்த நோட்டில் entry போட்டு உள்ளோம்.

  ReplyDelete
  Replies
  1. @ Ganeshkumar Kumar

   பட்டியலில் வரிசை எண்.89 & 90 களைப் பாருங்களேன்! :)

   Delete
  2. 'முன்பதிவுப் பட்டியலை இங்கே போடும்போது கூடவே அழகான யுவதிகளின் படங்களைப் போடாதீங்க சார்'னு சொன்னா கேட்டாத்தானே? :P

   Delete
  3. நன்றி ஈ.வி

   நன்றி ஈ.வி.

   எங்கள் பெயர் முதலில் வந்து இருக்க வேண்டும். எதனால் 89 சென்றது என்பது புரியவில்லை.

   Delete
  4. \\முன்பதிவுப் பட்டியலை இங்கே போடும்போது கூடவே அழகான யுவதிகளின் படங்களைப் போடாதீங்க சார்'னு சொன்னா கேட்டாத்தானே?\\

   அதன முக்கிய மான விஷயம் போடும் போது முன் பட்டியலை போடாதீர்கள் னு சொன்ன கேட்ட தானே.

   Delete
  5. ஆசிரியர் அறிவிக்கும் போதே அரங்கில்
   Online மூலம் மூதலில் பணம் செலுத்தியது
   அடியேன்.2ம் இடம் கிடைத்தது ஏன்???

   Delete
  6. இது கள்ளாட்டம். எல்லா முன் பதிவையும் அழிங்க. நான் முதல்ல இருந்து பணம் கட்டுகிறேன்.

   Delete
  7. முதலாவதா வர்றது , 100வதா வர்றது முக்கியம் இல்லை...
   13வதாக யார் புக்கிங்னு பார்க்கனும், அதான் பெருமை...

   இல்லியா 113,213,313,413....இப்படி வர முயற்சி பண்ணுங்க சார்ஸ்...

   பணம் முதலில் அனுப்பினாலும், வரிசையாக e-transfer பண்ணும்போது யாரோடது சிவகாசி அக்கவுண்ட்டை முதலில் ரீச் ஆகுதோ அதானே கணக்கு...பேங்கு ஸ்லோவா இருந்தா என்ன செய்ய...

   Delete
  8. ///அதன முக்கிய மான விஷயம் போடும் போது முன் பட்டியலை போடாதீர்கள் னு சொன்ன கேட்ட தானே.///

   :)))))) :P

   Delete
 15. டியர் விஜயன் சார், இம்மாத டெக்ஸின் சித்திரங்களை மட்டுமே புரட்டி புரட்டி பார்த்து ரசித்து கொண்டுள்ளேன்.இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.


  காலப்பணி ஓவியங்களில் டெக்ஸின் வசீகரம் அதிகம் என்பது அனைவருமே ஒத்துக்கொள்ளும் உண்மை.வருடம் பத்து டெக்ஸ் கதைகள் வந்தால் அதில் சரிபாதி காலப்பணி ஓவீயம் கொண்ட கதைகள் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்பது என்கருத்து. மேலும் டெக்ஸ் கதையென்றாலே நினைவுக்கு வருவது செவ்விந்தியர்கள், புகை சமிக்சை, பாலைவனம் போன்றவை. சமீப டெக்ஸ் கதைகளில் அவைகள் அதிகம் இடம்பெறாதது வருத்தமாக இருக்கிறது. டெக்ஸ் கதைகளில் ரொம்பவே அதிகமாக வெரைட்டியை தேடி, ஆரம்ப கால டெக்ஸை மிஸ் செய்ய ஆரம்பித்துவிட்டோமோ என்று எண்ண தோன்றுகிறது.


  அப்புறம் டெக்ஸின் ஆல்டைம் பேவரெட்டான பழிக்கு பழி எப்போது மறுபதிப்புன்னு சொல்லிட்டீங்கன்னா :-)

  நானும் வடிவேலு கணக்காக கேட்டுகொண்டிருக்க. நீங்களும் சங்கிலிமுருகன் மாதிரி திரும்பதிரூம்ப பேசற நீ ங்கிற மாதிரி, திரும்ப திரும்பபழிக்கு பழியை கேட்டுகொண்டிருப்பேன்.

  டெக்ஸ் முதன்முதலில் ஒற்றைக்குஒற்றை போட்டியில் ரூபிஸ்காட்(?) என்ற அரை செவ்விந்தியனிடம் குண்டடி பட்டு தோற்ற
  கதை. பிறகு கைக்கு கட்டு போட்டு கொண்டு வந்து ரூபியை வெல்வதெல்லாம் அக்மார்க் டெக்ஸ் மசாலா.பலமுறை படித்தகதையிது. வண்ணத்தில்மறுபதீப்பில்
  படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. ///காலப்பணி ஓவியங்களில் டெக்ஸின் வசீகரம் அதிகம் என்பது அனைவருமே ஒத்துக்கொள்ளும் உண்மை.///

   இளமையா, வசீகரமா இருப்பதெல்லாம் ஓகே தான்! ஆனால் மனித உணர்வுகளை முகபாவங்களில் நுணுக்கமாகக் கொண்டுவரும் வித்தையில் காலெப் சற்று பின்தங்கியே இருக்கிறார் எ.தா.க! குறிப்பாக, பக்கம் பக்கமாக பேசும் டெக்ஸின் வாய் எப்போதும் மூடியபடியேதான் இருக்கிறது. முகபாவமும் ஒரேமாதிரி, இறுகிப்போய்... ஒரு இஸ்மைல் கூட இல்லை!

   டெக்ஸுக்கு தற்போது வரையும் ஓவியர்கள் இந்த நுணுக்கமான முகபாவங்களை வெகு நேர்த்தியாகச் செய்கிறார்கள் எ.எ.க!

   Delete
  2. ///அப்புறம் டெக்ஸின் ஆல்டைம் பேவரெட்டான பழிக்கு பழி எப்போது மறுபதிப்புன்னு சொல்லிட்டீங்கன்னா :-)///----இது நம்மோட ஆல்டைம் பேவரைட் டாப்5ல் ஒன்று...

   இத்தாலியில் ஆல்டைம் பேவரைட் எதுன்னு பார்ப்போமா????

   அதுவும் நம்ம ஆல்டைம் பேவரைட்ல இடம் பெற்றதுதான்..

   அது...

   அது...

   அது...
   //"கழுகு வேட்டை"//....

   இதன் ரசிகர்கள் லாம் ஒரு ஓ போடுங்க....

   இத்தாலியில் இதுவரை 5விதமான பார்மேட்ல அடிக்கப்பட்டு அத்தனையிலும் வரவேற்பை பெற்ற கதை இது....

   TeX monthly,

   Sergio bonelli special-color,

   Almanac Tex,

   Tex collection and

   historical edition....என அங்கே இந்த 5வித எடிசன்களிலும் பட்டையை கிளப்பி உள்ளனர் டெக்ஸும் எல்மியூர்டோவும்.
   இதிலும் பிரம்மாண்டமான ஓற்றைக்கு ஒற்றை மோதல் கடுமையாக இருக்கும்.

   நண்பர்களே இப்போ நாம நம்ம பேவரைட் ஒற்றைக்கு ஒற்றை சண்டையை தேர்த்தெடுப்போமா!!!

   டெக்ஸ் Vs ரூபி ஸ்காட்- (பழிக்குப்பழி)

   டெக்ஸ் Vs எல் மியூர்டோ- (கழுகுவேட்டை)

   இரண்டு துப்பாக்கி மோதலில் உங்கள் டாப் எது???

   Delete
  3. நல்ல தகவல் டெக்ஸ் விஜய்!

   ஒற்றைக்கு ஒற்றை சண்டையில் என்னுடைய டாப் - பழிக்குப்பழி!

   ஆனால் மறுபதிப்புக்கு (இவ்விரண்டு கதைகளில்) என்னுடைய தேர்வு - கழுகு வேட்டை!

   Delete
  4. //காலப்பணி ஓவியங்களில் டெக்ஸின் வசீகரம் அதிகம் என்பது அனைவருமே ஒத்துக்கொள்ளும் உண்மை.வருடம் பத்து டெக்ஸ் கதைகள் வந்தால் அதில் சரிபாதி காலப்பணி ஓவீயம் கொண்ட கதைகள் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்பது என்கருத்து.//


   வழி மொழிகிறேன்.அதிலும் போனெல்லி + காலெப்பினி சூப்ப்ப்ப்பர்!


   @ஈரோடு விஜய்

   டெக்சின் 600 சொச்சம் கதைகளில் 1 முதல் 200 வரையிலான கதைகளே ஒரிஜினல் எ.எ.க!மற்றவை எல்லாம் அவைகளின் repeated கதைகளே (புதிய மொந்தையில் பழைய கள்)

   Delete
  5. பேசாம ரெண்டையும் போட்டுட வேண்டியது தான். டெக்ஸ் 70 க்கு ஒரு மறுபதிப்பு குண்டு ஸபெசல் போட்ட மாதிரியும் ஆச்சு.

   Delete
  6. கழுகு வேட்டை படிச்சிருக்கேன்,செம கதைதான்,ஆனால் பழிக்குப் பழி படிச்சதில்லை எனவே என்னோட முதல் சாய்ஸ் பழிக்குப் பழிதான்.

   Delete
  7. பேசாம ரெண்டையும் போட்டுட வேண்டியது தான். டெக்ஸ் 70 க்கு ஒரு மறுபதிப்பு குண்டு ஸபெசல் போட்ட மாதிரியும் ஆச்சு.

   ++++++1111111

   Delete
  8. கழுகு வேட்டை என் சாய்ஸ்.
   1.தன் வாழ்க்கையை நாசம் செய்தவனை (தவறாக புரிந்து கொண்டு) தன் கையால் கொல்ல வேண்டும் என்ற வெறி கொண்ட வில்லன் .
   2.ஒற்றைக்கு ஒற்றை சவாலி்ல் நேர்மையை கடைப்பிடித்தல்.(வில்லனாகவே இருந்தபோதிலும்).
   3.டெக்ஸை போட்டு தள்ள சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் குறித்த நேரத்தில் தன்னை சந்திக்க சொல்வதும்...
   இன்னும் நிறைய ப்ளாஷ் பாயிண்ட் உள்ள இந்த கதை my all time favorite store.இது 5முறை இத்தாலியில்(தகவலுக்கு நன்றி சேலம் Tex)வெளிவந்தது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.நாம் எப்போது பார்க்க போகிறோம்! !!!!

   Delete
 16. வணக்கம் எடிட்டர் சார்...!
  வணக்கம் நண்பர்களே...!

  ReplyDelete
 17. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

  ReplyDelete
 18. Selus: படங்கள் மற்றும் அனுபவம் நன்றாக இருக்கும் போல் தெரிகிறது. மற்ற கதைகளில்/படங்களில் தோன்றும் அதிக வன்முறை இதில் இருப்பதாக தெரியவில்லை. இதனை முயற்சிக்கலாமே?

  ReplyDelete
 19. எடிட்டர் சார்...!
  பது பாணி கதைகளுக்கு எப்போது நாங்கள் தயார்தான்.சும்மா..சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகள் அட்டகாசமாக இருக்கும்...நம்மில் எத்தனை அதை ரசிக்க ரெடி என்று கேட்டுக்கொண்டிராமல் சீக்கிரம் களம் இறக்குங்கள் சார்...! கொண்டாடி விட மாட்டோமா என்ன..?

  ReplyDelete
 20. அன்புள்ள ஆசிரியருக்கு¸

  ZOMBIE - கதைகளில் இரத்த கறை கதைகளை தவிர்க்கலாம். - science fiction - கதைகள் தேவைதான். அதிலும் ப்ளாஸ் கார்டன்-டேல் வரும் அண்டவெளியில் உள்;ள கிரகங்களுக்கு சென்று வரும் கதைகளை பரிசீலிக்கலாம்.

  இடையிடையே வார் கதைகளை வெளியிடலாம். ரொமன்ஸ் கதைகளும் வரலாம்.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே zombies என்றாலே இரத்தம் தான் .இத்ல் எப்படி? ??

   Delete
 21. இந்த மாத இதழ்:

  எ. சி. சா.சொ:
  முதல் இருந்து முடிவு வரை அருமை. சமீபத்தில் தான் "confession of Hitman"(தமிழில் "பொருளதார குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்') படித்தேன். அதன் சாயல் நிறைய இருந்தது.

  ReplyDelete
 22. //முழுக்கவே பிரெஞ்சு மண்ணில் நடைபெறும் இந்த கதையொரு visual delight ! கண்களுக்கு மாத்திரமன்றி, சிந்தைக்கும் ஓரளவுக்கு ஓ.கே. எனில் - start music
  In my desire list it is FIRST
  second one is ! Valerian & Laureline
  Then EL TOPO
  SEULS
  ALONE
  CHARLEYS WAR

  I am not yet ready to zombie's

  ReplyDelete
 23. என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்

  நம் இதழ்களில் வந்த மிக வித்தியாசமான கதைகளில் ஒன்று. வசனங்களின்றி
  சித்திரங்களின் வழியே கதையை நகர்த்துவதே மிகச் சிறப்பு. ( உடைந்த மூக்கார் கதைகள் ஞாபகத்திற்க்கு வருகின்றன :-) ).
  துரோங்களின் சதுரங்க விளையாட்டில் அதிகாரத்தின் பகடைகளாக பாசம் , காதல் , நட்பு என அனைத்துமே அனாயசமாக வெட்டப்படுகின்றன. (கிழக்கு ஜெர்மனி, முன்னாள் சோவியத்தைப் பற்றி பேசினாலோ, எழுதினாலோ அது நரகமேதான் என்ற மற்றொரு மேற்கத்திய பிரச்சாரக் கதை.)

  இந்த வருடத்தின் அட்டகாசமான கதைகளில் ஒன்று. க்ராஃபிக் நாவல் வரிசை இதே போல் தொடர்ந்தால் மகிழ்ச்சி. அடுத்த புத்தகத்திற்க்காக வெய்ட்டிங் வித் ஃபிங்கர்ஸ் க்ராஸ்ட்.

  இந்த கதைத் தேர்விற்காக எடிட்டருக்கு டபுள் தம்ப்ஸ் அப்.

  எனக்கு ஸோம்பி கதைகள் பிடிக்காது. மற்ற அனைத்தையும் மிக விரைவில் காண , ஐ ம் வெய்ட்டிங்.

  ReplyDelete
  Replies
  1. -///எனக்கு ஸோம்பி கதைகள் பிடிக்காது. மற்ற அனைத்தையும் மிக விரைவில் காண , ஐ ம் வெய்ட்டிங்.///-

   +நானும்.

   Delete
  2. +2 நானும்.. நோ சோம்பீஸ் ப்ளீஸ்...

   Delete
  3. நன்றி நட்பூஸ்..இணைந்த கைகள் ++++ :-)

   Delete
  4. zombie தவிர பாக்கி அம்புட்டும் எனக்கும் வேணும் இப்போவே ,
   இல்லாட்டி அடுத்த ஆண்டே வேணும் வேணும் வேணும்.!!!

   Delete
 24. பிரிட்டிஷ் (fleet way) கதைகள் தற்போதைய சுழலுக்கு சரிப்படாது. நமது மறுபதிப்பு பலருக்கு கொட்டாவியையும் மற்றும் பல நண்பர்களின் ஆதர்ச மற்றும் பால்யகால நினைவுகள் பொருட்டு ஆதரிக்கும் சூழ்நிலையில் இந்த புதிய நீதிதேவன் விபரீதமான முயற்சி தேவையில்லை என்பது எனது எண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. மற்றும் படங்கள் கொசகொச என இருக்கிறது.

   Delete
  2. நன்று சொன்னீர் பரணி.

   Delete
  3. +1
   நீதிதேவன் கருத்துக்கு மட்டும்

   Delete
  4. என்னாலும் ரசிக்க முடியும் என்று தோன்ற வில்லை.

   Delete
  5. நச்சுனு சொன்னீங்க பரணி...

   நீதியும் வேணாம் தேவனும் வேணாம் அய்யா... கச கசனு இருக்கும் ஓவியங்களை பார்த்தாலே காத தூரம் ஓட தோணும்.
   பிரிட்டிஷ் கதைகள் 3ஜென்மத்திற்கு தேவையான அளவு பார்த்து விட்டோம், எனவே உங்கள் ஃப்ளைட்டை ப்ரான்சோடு திருப்பிடுங்க சார்...

   Delete
 25. ZOMBIESலயே பார்க்க லட்சணமா, மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு, சிரிச்ச முகத்தோட நடந்துவராப்ல ஏதாச்சும் கதை இருந்தா பாருங்களேன், எடிட்டர் சார்?
  இரத்தம் வழியும், சதை கிழிந்து தொங்கும் அந்தப் பயபுள்ளைகளைப் பார்க்கும்போது எங்க ஊர் 'மாயாண்டி மட்டன் ஸ்டால்'லில் நின்னுக்கிட்டிருக்காப்ல ஒரு ஃபீலிங்!

  ReplyDelete
  Replies
  1. //ZOMBIESலயே பார்க்க லட்சணமா, மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு, சிரிச்ச முகத்தோட நடந்துவராப்ல ஏதாச்சும் கதை இருந்தா பாருங்களேன், எடிட்டர் சார்? // செம தாக்கு!

   Delete
  2. எப்படி இப்படி விஜய் தேவையில்லை என்பதை அழகாக சொல்ல முடியுது. சூப்பர்.

   Delete
  3. தோற்றங்கள் மட்டுமே ஸம்பி காமிக்ஸ் இல்லை.
   உலகப் புகழ் பெற்ற 'train to busan' 'residecial evil' போன்ற படங்கள் வெற்றி அடைந்தது கதை மற்றும் திரைக்கதை யால். அது மாதிரி வெற்றி பெற்ற கதைகளை ஆசிரியர் தேர்தெடும்பார் என்று நம்புவோம்.

   Delete
 26. இத்தனை கோரத்தை பார்ப்பதென்பது எவ்வித அனுபவமா\\

  ரொம்ப கொடுயமான சித்திரம் உள்ள கதைகளை நான் ரசிப்பதில்லை.

  ReplyDelete
 27. கனவு மெய்ப்பட வேண்டும் இதழின் முதல் பக்கத்தில் "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற டேக் லைனோடு இரத்தப்படல முழுத்தொகுப்பின் விளம்பரம் அசத்தல்...அமர்க்களம்...!

  ReplyDelete
 28. விஜயன் சார்
  தற்போது பிடுங்கும் ஆணியை சரியாக
  பிடுங்கினாலே போதும்.
  காமிக்ஸ் படிக்கும் போது கிடைக்கும்
  மகிழ்ச்சி நிம்மதி ஸோம்பி மற்றும் பிற
  கொடூரபடக்கதைகளில் கிடைக்காது.
  கிளுகிளுப்பு காதல் கதைகள் மனதை
  வருடக்கூடும்.Scifi, judge dredd போன்ற
  பிளேடுகள் தேவையில்லை.Topo வில்
  சித்திரங்கள் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. +1111111222222222333333334444444445555555555666666666777777777777888888888999999999

   ///காமிக்ஸ் படிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி/// சரியாக சொன்னீங்க கணேஷ் சார்...
   நாம பெரும்பாலான நண்பர்கள் காமிக்ஸ் படிப்பது ஒர்க் டென்சன், வாழ்க்கை டென்சன்ல இருந்து விடுபடவும், நமக்கே நமக்குனு ஒரு கனவுலகத்தில் நிம்மதியாக இருக்கவும் தான்....

   அந்த கிளுகிளுப்பு ரொமான்ஸ் கதை அடுத்த ஆண்டே எங்கயாவது நுழைக்க முடிஞ்சா நல்லா இருக்கும்...

   Delete
  2. ஆணிபதில் ஆசிரியரின் கேள்விக்கு
   மறு பதிலே.

   Delete
  3. அப்படி இந்த அழகப்பன்களிடம் என்னதான் சரக்கிருக்கிறது என்பதை ஒருமுறை தெரிந்து கொள்ள முயற்சித்துத் தான் பார்ப்போமா ? அல்லது தற்போது பிடுங்கி கொண்டிருக்கும் ஆணிகள் போதும் என்பீர்களா

   Delete
  4. க்கும் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு தான் பதம்...

   இந்த போட்டோக்கள்ல இருக்கும் அழகன்ஸ் தான் புக் நெடுக வளைய வந்தா அதை பார்க்கத்தான் முடியுமா..!!!

   Delete
  5. சோம்பீஸ் வேண்டவே வேண்டாம்

   Delete
 29. //"நீதிதேவன் நம்பர் 1 "// மறக்கமுடியாத நபர். தமிழில் சிறிய கதைகளாக மட்டுமே வந்துள்ள அவரை, முழுத் தொகுப்பாக கொண்டுவாருங்கள் சார். அந்த தெனாவட்டு மனுசன் ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. ஆனால், நீங்கள் சொல்லியிருப்பதுபோல கதைவரிசைத் தேர்வுதான் சற்றே சிக்கலாயிடலாம். முயன்று பார்ப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. பொடியன் ஜி@ ஏற்கெனவே மினி கதை தொகுப்புகளில் ஏகப்பட்ட ஏமாற்றம்...

   இந்த ஜட்ஜ் அய்யாவை செலக்ட்வ்வாகவும் போட கூடாதாம்...

   Delete
 30. ALONE - நிச்சயமாக ஓர் அருமையான கதைக்களம். நம் நண்பர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக, சிறுவயதில் தாங்கள் சாகசம் செய்வதாக வரித்துக்கொண்ட கற்பனைகளை களத்தில் பார்ப்பதாக இருக்கும்!

  ReplyDelete
 31. Valerian & Laureline - இந்த பழைய கதையின் ஓவியம் சரி இல்லை. வண்ணத்தில் நாம் பட்டையை கிளப்பும் இந்த நேரத்தில் ஓவியத்திற்கு முக்கியத்துவம் தேவை.

  இந்த சயின்ஸ் கதையின் புதிய கதைகள் & ஓவியமும் நன்றாக இருந்தால் மட்டும் முயற்சிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. யெஸ்... மீண்டும் நச் பாயிண்ட் பரணி...

   காமெடியில் கலக்குவீங்க;இன்று பாயிண்ட்டா புடிக்கிறீங்க... .்சூப்பர...

   Delete
  2. ///யெஸ்... மீண்டும் நச் பாயிண்ட் பரணி...///

   +1

   Delete
 32. கிட்டத்தட்ட தோர்கலின் சாயலில் உள்ள ...நாம் முன்பொருகாலத்தில் ரசித்த...மந்திர ராணி, தங்க நகரம் கதைகளின் நாயகன் சாம்ஸனின் இதர கதைகளை தற்போது வண்ணத்தில் வெளிவர வாய்ப்புள்ளதா...!

  (டெக்ஸுக்கு டைகர் மாதிரி தோர்கலுக்கு ஒரு சாம்ஸனை கோர்த்து விடுவோம்....!?!?)

  ReplyDelete
 33. Charley's War - யுத்தக் கதைகளின் காதல் அகலாதவன் என்ற வகையில், இந்தத் தொடருக்கும் அடிமையே! வாண்டு மாமாவின் தொடர்களிலொன்று - வங்காள தேச சுதந்திரப் போர் பற்றி பேசியிருக்கும். அதை எழுதத் தூண்டியது இந்தத் தொடராக இருக்கலாம். சித்திரங்களும் அவ்வப்போது பொருந்திப்போகும்.

  ReplyDelete
 34. கனவு பலித்ததே.. ஹே.. ஹே.. கனவு பலித்ததே..! சயின்ஸ் பிக்சன், டைம் டிராவல், ஸோம்பி கேட்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது.. நண்பர்கள் இவ்வளவு பேர் அதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதும் எதிர்பாரா மகிழ்ச்சி.. வெல்மானின் சியுல் கதையை தமிழில் கொண்டு வர இருப்பது அசாத்திய மகிழ்ச்சி. க்ரீன் மெனருக்கு பிறகு அவரின் கதை ஏதாவது வராதா? என ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன். அவருடைய Beautiful darkness போன்ற கதைகளையும் எதிர்காலத்தில் வெளியிட இயலுமா என்று பாருங்கள் சார்! ஐ லவ் யூ லயன்முத்து அண்ட் காமிக்ஸ் பிரெண்ட்ஸ்.. and also Editor..

  ReplyDelete
  Replies
  1. ++++++++9999999999999999999999999999999999999999999999

   Delete
  2. ////வெல்மானின் சியுல் கதையை தமிழில் கொண்டு வர இருப்பது அசாத்திய மகிழ்ச்சி. க்ரீன் மெனருக்கு பிறகு அவரின் கதை ஏதாவது வராதா? என ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன்.///

   நானும்!

   Delete
 35. கதை முழுவதும் கொடுரமான சித்திரம் உள்ள கதைகள் தேவையில்லை.

  சினிமா படங்களில் பார்ப்பதும் பத்திரிகை மற்றும் what's up போன்றவற்றில் வருவதே தாங்கமுடியாத நேரத்தில் நமது காமிக்ஸிலுமா? வேண்டாம்,...

  ReplyDelete
  Replies
  1. அதே அதே....
   +1000000000000000(இப்போது வரும் கி.நா. கொலைகளே போதும்)

   Delete
  2. ///கதை முழுவதும் கொடுரமான சித்திரம் உள்ள கதைகள் தேவையில்லை.

   சினிமா படங்களில் பார்ப்பதும் பத்திரிகை மற்றும் what's up போன்றவற்றில் வருவதே தாங்கமுடியாத நேரத்தில் நமது காமிக்ஸிலுமா? வேண்டாம்,...///

   +1

   Delete
 36. Xlll iku strike undaa? Sec no answer. Me?(Jan book fair)

  ReplyDelete
  Replies
  1. இரத்தப்படலம் பற்றி ஏதோ சொல்ல வரீங்கன்னு மட்டும் புரியுது டாக்டர் சார்! மற்றபடிக்கு நீங்க எழுதித்தர்ற ப்ரிஸ்கிரிப்ஷன் ஷீட்ட பார்த்த மாதிரியே (கசமுசான்னு) இருக்கு! ;)

   Delete
 37. லார்கோ மற்றும் ஷெல்டன் கதைகளில் ஆங்காங்கே தென்படும் ரொமான்ஸ் என்ற பெயரில் நடக்கும் நமக்கு ஒவ்வாத விஷயங்கள் தாங்க முடியவில்லையே :-( தேவையில்லை ரொமான்ஸ் என்ற பெயரில் கதைகள் எதுவும்.

  ReplyDelete
  Replies
  1. இதில் சில இளவரசியின் கதைகளும் அடங்கும், எ.கா. சிறையில் ஒரு சிட்டுக்குருவி.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 38. Replies
  1. ஏன் நல்லாத்தானே போயிட்டுருந்தது.

   Delete
 39. Valerian & Laureline தொடரின் ஓவியர் Jean-Claude Mézières இன் ஓவிய நுணுக்கம் பிரமாதமானது. லக்கி லூக் தொடரின் மொரிஸ் அவர்களால் ஈர்க்கப்பட்டு, அப்படியொரு பாணியைக் கைக்கொள்ள ஆரம்பித்தவராகத் தன்னைப்பற்றிச் சொல்லிக்கொள்பவர். தோர்கல் - கதையின் ஓவிய மேதையின் சித்திரங்களுக்கு நிகரான படைப்புகளாக இவரது படைப்புகளும் கொண்டாடப்படுகின்றன. படங்களை இரசிக்க: சில பக்கங்கள் இங்கே உள்ளன:
  Jean-Claude Mézières

  ReplyDelete
 40. Dear sir, we already tried to put up with Dylan Dog's bloody, cruel pictures & stories. One more bloody colour album? Our aanium . . . . .

  ReplyDelete
 41. Dear sir, we already tried to put up with Dylan Dog's bloody, cruel pictures & stories. One more bloody colour album? Our aanium . . . . .

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்! இப்போதைக்கு டைலன் டாக்கின் வன்முறை களமே போதும்!
   ஆரம்பத்தில் பிரம்மிக்கச் செய்த பெளன்சரின் இறுதி ஆல்பங்கள்கூட திகட்டும் வன்முறை + ஆபாசத்தால் கைவிடப்பட்டதை நாம் இங்கே நினைவுகூர்ந்திட வேண்டும்!

   ஆனால், ஒரு வித்தியாசத்தின்பொருட்டு ஒன்றே ஒன்றை முயன்றுபார்த்திடுவதிலும் தவறில்லைதான்!

   Delete
 42. சூப்பர் சார்..அந்த alone , நீதி தேவன் , அந்த காதல் நாவல சீக்கிரமா தாங்க...

  ReplyDelete
 43. //"நீதிதேவன் நம்பர் 1//
  முயற்சி செய்து பார்க்கலாம் தவறில்லை.
  //EL TOPO - கனவாகவே தொடருமா?//
  கொஞ்சம் நெளிய வைக்கும் கனவு.
  // Charley's War என்ற Fleetway தொடரானது ஆண்டாண்டு காலமாய் என்னை லயிக்கச் செய்திடுமொரு படைப்பு ! //
  கசகசன்னு இருக்கும்போல,கொஞ்சம் கண்ணை கட்டுமோ?
  // ஆங்கிலத்திலும் ALONE என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட் நடித்துள்ள இந்தத் தொடரைப் பார்த்து பெருமூச்சு விடும் படலம் சில ஆண்டுகளாகவே தொடர்கிறது !//
  இது டபுள் ஓகே.
  // ஒரு ஆக்ஷன் + ரொமான்ஸ் கலந்ததொரு கிராபிக் நாவல் இருப்பதை கொஞ்ச ஆண்டுகளாகவே நோட்டம் விடுவது என் வாடிக்கை !//
  வாய்ப்பு கிடைச்சா முயற்சி செய்து பார்க்கலாம்.
  // ZOMBIES என்ற இறந்தும்-இறவா மிருதன்களை கொண்டொரு 132 பக்க கிராபிக் நாவல், அசாத்திய சித்திரத் தரத்துடன் உள்ளது !//
  இதை ரசிக்கும் மனநிலையில் பெரும்பாலனோர் இருக்கிறோமோ என்பது மில்லியன் டாலர் கேள்வி,கண்டிப்பாக தற்போது நான் இல்லை.
  // Valerian & Laureline ஜோடியின் சாகசங்கள் இப்போதெல்லாம் Cinebook ஆங்கிலப் பதிப்புகளில் கிட்டுகின்றன எனும் போது - கலர் கலராய் அந்த ஆல்பங்களை வாங்கி வைத்துக் கொண்டு - மோவாயைத் தடவிக் கொண்டு தானிருக்கிறேன் !//
  சுவாரஸ்யமான களமாக இருந்தால் கொஞ்சம் எட்டிப் பார்ப்பதில் தவறில்லை.

  ReplyDelete
 44. மாயாவி, லாரன்ஸ் டேவிட், ஜானி ஸ்டெல்லா மனப் பாடமா
  ரிப் கெர்பி, சார்லி,மாண்ட்ரேக், வேதாளர்னு காலம் போச்சு
  கறுப்பு கிழவி, ஆர்ச்சி,ஜேம்ஸ்பாண்டா மாறியாச்சு
  ஸ்பைடர்,இத்யாதிகள் பல பேர் வந்து பார்த்தாச்சு
  ரெட், டெக்ஸ் வில்லர், டைகர் னு துப்பாக்கி யால சுட்டாச்சு
  லார்கோ,ஷெல்டன்னு மாடர்ன்னா ஆயாச்சு
  நடுவால ஷெரிப்'கிட்ஆர்டின், டால்டன்ஸ், மதிமந்திரின்னு சிரிச்சாச்சு
  இப்ப விஞ்ஞானி, ரின்டின்கேன், பளூகோட், புளு குட்டி மனுசங்கனு 'ஙே'ன்னு விழுந்தாச்சு
  அப்பப்ப புது ஜென்ரி ன்னு பல டைப் மிக்சர் மென்னாச்சு
  இப்ப என்னடா ன்னா ஜோம்பி, யுத்த குண்டுன்னே மெர்சல் ஆக்கியாச்சு

  என்ன,டேஸ்ட் டேஸ்ட்ன்னு போய்ட்டே இருந்தாச்சு

  காமிக்ஸ் மேல வெறி காதலாச்சு
  ஒண்ணாம் தேதி பாக்குறதே வேலையா போச்சு

  ஆகோ
  அய்யாகோ
  கம்ப குத்தி
  கவர குத்தி
  வேல்வேல்
  வேலாயுதம்
  சூல்சூல்
  சூலாயுதம்
  ஆத்தாத்தா
  பெரியாத்தா
  778க்கு மேல
  காமிக்ஸ் பெத்தாத்தா
  வருஷத்துக்கு 50
  போடாத்தா
  மாரியாத்தா கும்பம்
  மாவிடிச்சி திம்போம்
  காளியாத்தா கும்பம்
  காச போட்டு வாங்குவோம்
  கரும் புள்ளி
  செம்புள்ளி
  ஹிஹ்ஹி அ ஹிஹ்ஹி

  அ ஹிஹ்ஹி அ ஹிஹ்ஹி.

  ReplyDelete
  Replies
  1. போனவாரம்கூட நல்லாத்தான் இருந்தாரு..!

   என்ன நடந்துச்சோ தெரியல..! இப்படி ஆயிட்டாரே..!! 😱😱😱

   Delete
  2. Dear kit and Tex
   Does any of our wishes going to change the 2018 list.
   It has been already finalised by edy.
   J

   Delete
  3. சூப்பர் ஜி ! சூப்பர் ஜி !

   Delete
 45. சூப்பர்-6க்கு போட்டோவை அனுப்பிவைக்க இன்றே கடைசி நாள்னு நினைக்கிறேன்!

  ஒரு ஆலோசனை : எடிட்டருடன் நின்றுகொண்டிருப்பதைப் போல ஃபோட்டோக்களை அனுப்பிவைப்பதை முடிந்தமட்டிலும் தவிர்த்துவிட்டு, உங்கள் குழந்தைகளின் படங்களையோ அல்லது குடும்பத்துடன் நீங்கள் இருக்கும் படங்களையோ அனுப்ப முயற்சியுங்கள்! இது உங்கள் குடும்பத்தார்க்கும் நமது காமிக்ஸ் மீதான புரிதலையும், ஆர்வத்தையும் அதிகரிக்க உதவிடும்!

  ReplyDelete
  Replies
  1. நல்லது விஜய்
   அப்பறமா அடி வாங்கிக்குவோம்.

   Delete
  2. ஆம்மா நீங்க தம்பதி சமேதரா புகைப்படம் போட்டு அடி வாங்கி , புகை விட்டாச்சா

   Delete
  3. நம்பளக்கி கல்யாணமே .....,,,
   கல்யாணமே ஆக............,,,

   இந்தா வந்துட்டேம்மா
   இங்கன தான இருக்கே
   பக்கத்தூட்டுக்கு கேக்கற மாதிரி
   (கத்தாதே)
   பட்... படீர்
   ஆஆஆஆஆஆ

   Delete
 46. //"நீதிதேவன் நம்பர் 1//

  ஏற்கெனவே முயற்சித்து ஏகத்துக்கும் ஏமாற்றம் அடைந்த கதை.சாரி...

  //EL TOPO-அந்த trademark கதை பாணி என்று ரொம்பவே அதகாலமாய்த் தெரிகிறது இந்த ஆல்பம் //

  விரசங்களை கட் செய்ய வாய்ப்பிருந்தால் இதை முயற்சிக்கலாம் தான்.

  // Charley's War என்ற Fleetway தொடரானது ஆண்டாண்டு காலமாய் என்னை லயிக்கச் செய்திடுமொரு படைப்பு ! //

  கசகச ஒவியம் இப்பவே கண்ணை கட்டுதே...!!!

  // ஆங்கிலத்திலும் ALONE என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட் நடித்துள்ள இந்தத் தொடரைப் பார்த்து பெருமூச்சு விடும் படலம் சில ஆண்டுகளாகவே தொடர்கிறது !//

  இது இதைத்தான் சார் கேட்கிறோம்.இது போல வித்தியாசமான களங்களில் விருந்துண்ண ஆவல் தான்...

  // ஒரு ஆக்ஷன் + ரொமான்ஸ் கலந்ததொரு கிராபிக் நாவல் இருப்பதை கொஞ்ச ஆண்டுகளாகவே நோட்டம் விடுவது என் வாடிக்கை !//

  இது அற்புதமான சித்திரங்களை கொண்ட இரு பாக சாகசம்.ரொமான்ஸ் வெரி வெரி லைட்தான்.நெளிய வைக்கும் காட்சிகள் இல்லை. இது க்ளிக் ஆகும் சார்.


  // ZOMBIES என்ற இறந்தும்-இறவா மிருதன்களை கொண்டொரு 132 பக்க கிராபிக் நாவல், அசாத்திய சித்திரத் தரத்துடன் உள்ளது !//

  உவ்வே...கொலை..குரூரம் ஒரு வகை ரசிக்கலாம். ஆனால் அதுவே அருவெறுக்கத்தக்க அளவில் இருந்தால் ரசிக்க முகாந்திரம் ஏது...

  //valerian & Laureline ஜோடியின் சாகசங்கள் இப்போதெல்லாம் Cinebook ஆங்கிலப் பதிப்புகளில் கிட்டுகின்றன எனும் போது - கலர் கலராய் அந்த ஆல்பங்களை வாங்கி வைத்துக் கொண்டு - மோவாயைத் தடவிக் கொண்டு தானிருக்கிறேன் !//

  45 ஆண்டுகளுக்கு முந்தைய கற்பனை இப்போது ரசிக்கும் வகையில் இருக்க கூடுமோ?.இந்த ஜானரில் சமகால கற்பனையாக இருந்தால் கூடுதலாக ரசிக்க இயலுமோ சார்.

  ReplyDelete
 47. ஆசிரியர் புதிதாய் அமைய வைத்த அந்த கொத்தவால்சாவடிக்கு மன கற்பனையின் மூலம் உள்ளே நுழைந்து பார்த்தேன் ..கொஞ்சம்.. காம்ப்ளான் குடித்த தெம்பில் தைரியமாகவே உள் நுழைந்தேன்..அட டா ..அட டா...சுற்றி சுற்றி வண்ணத்தில்..கறுப்பு வெள்ளையில் ..என குவிந்து போய் கிடந்தது. மொழி தெரியாவிட்டாலும் ..,கருத்து புரியாவிட்டாலும் சித்திரத்தின் அட்டகாச தரத்தை பார்த்தே தேர்ந்தெடுக்க முனைந்தேன் ..நல்லா பளீச்ன்னு எனக்கு புடிச்ச சிவப்பு கலர்ல இருந்த காய்கனியை முதலில் எடுத்தேன் .ஆனா அது சிவப்பு கலர் அல்ல .ரத்த கலர் .ஆஹா நம்ப ஸோம்பி போல ..ஏற்கனவே மனித மாறுவேசத்துல நிறைய ஸோம்பிகள் இருப்பதால் இதை வேற சாப்பிடனுமா என நினைத்தபடியே அதை ஓரங்கட்டி வைத்து விட்டு ..கிராபிக் கனியை பார்த்தேன் .முதலில் எல்லாம் கிராபிக் கனியை கண்டாலே பார்த்தும் பார்க்காதது போல தள்ளி வைத்து விடுவேன் .ஆனால் இப்போது எல்லாம் காய்கனி கடை முதலாளி நல்ல தேர்ந்தெடுத்த கிராபிக் கனியை மட்டுமே விற்பனைக்கு கொண்டு வருவதால் திருப்தியாய் புரட்டி பார்த்து கைப்பைய்யில் போட்டு கொண்டேன் .அப்புறமா சில காய்கனிகளை புரட்டி பார்க்க நீதிக்கு தலைவணங்கும் இரும்பு போலீஸ் போல சில காய்கனிகள் கிடைத்தன.ஆனால் இந்த கனிகள் நான் குழந்தையா இருக்கச்சே ஏற்கனவே ருசித்த நினைவு வந்தது. ஆனால் அந்த கனி வாயில் போட்டவுடன் ருசி தெரிவதற்குள் வயிற்றுக்குள் போய் விடுவதால் எப்படி இருக்குன்னே சொல்ல முடியறதில்லை.கடை முதலாளி பெரிய கனியாய் விற்பனைக்கு கொண்டு வந்தால் இன்னொரு முறை சுவைத்து பார்த்து திரும்ப வாங்கலாமா வேண்டாமான்னு முடிவு செய்திருலாம் என நினைத்த படியே மற்ற கனிகளை புரட்டி புரட்டி பார்த்தேன் . நிலாகனி ..,காதல் கனி,போர் கனி என நிறையவே கண்ணை பறித்தது.ஆனா நாம அதிகமா எல்லா கனியின் டேஸ்ட்டையும் பார்த்தது இல்லை என்பதால் கடை முதலாளியிடம் ..அண்ணா ..இந்த கனியெல்லாம் நான் சாப்பிட்டது இல்லை..ஆனா உங்க மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு ..கிராபிக் கனியை போல நல்ல கனியை மட்டும் கொஞ்சம் கெஞ்சி கேட்டாவது தேர்ந்தெடுத்து வையுங்கன்னா ..உங்களுக்கு கனியை சப்ளை பன்றவங்க ஏமாத்திற போறாங்க என ......கடை முதலாளி தலை அசைத்தார் .சரிண்ணா வரேன் என்ற படி திரும்பி நடை போட கடை முதலாளி என்னை அழைத்தார் .

  கண்ணு ..,இந்த க்ரீன் கனியை நீ பாக்கவே இல்லை ..இதை எடுத்துட்டு போ என்றார் .அந்த க்ரீன் கனியை பார்த்தவுடன் தான் எனக்கு நினைவுக்கு வந்தது.

  "அண்ணா ...வீட்ல காம்ப்ளான் குடிச்சுட்டு கடைக்கு போக சொன்னாங்க மம்மீ ..நான் மறந்துட்டு வந்துட்டேன் .போய் குடிச்சுட்டு வந்துறேன் அண்ணா என்ற படியே ஒரே ஓட்டமாக இல்லம் நோக்கி பாய்ந்தேன் ..

  ReplyDelete
 48. Kindly post the photo uploading link to super 6, anybody else...

  ReplyDelete
 49. எடிட்டர் சாருக்கு வணக்கம்!

  2018 அட்டவணை வெளியாக இருக்கும் இந்த தருணத்தில் ,

  விலை அதிகம்னு போராளிகள் சிலர் ஆங்காங்கே ஸ்டேட்டஸ் போடுவதையும் அதை காமிக்ஸே வாங்காத. அல்லது படிக்காத, ஆனாலும் காமிக்ஸ் வாசகன்னு சொல்லிக்கிற சிலர் ஆமாஞ்சாமி ஆமாஞ்சாமின்னு ஆதரிக்கிறதையும் பாத்துட்டு , சரி விலை குறைப்புக்கு என்ன பண்ணலாம்னு இல்லாத முடிய பிச்சிகிட்டு யோசிச்சதுல உதிர்ந்த சில முத்தான மணியான யோசனைகள் உங்க பார்வைக்கு..

  அடுத்த வருசம் வரப்போற கதைகள் எதையும் பேப்பரில் பிரிண்ட் போடுற வேலையே வாணாம்.

  குறைஞ்ச வாடகைக்கு ஒரு டெம்போவ புடிக்கிறோம், அதை எடுத்துகிட்டு எல்லா பட்டிகாட்டுலயும் பூந்து, அங்கே, பாக்கை கடிக்க பல்லு இல்லாம காலை நீட்டிப்போட்டு உக்காந்துகிட்டு பாக்கை இடிச்சி பொகையிலையோட சேத்து வெத்தலை போடுற பாட்டிம்மாக்களா பாத்து ஒரு நூறு இறநூறு பேத்த தூக்குறோம்.

  அவிங்களை எல்லாம் ஆபீசுக்கு கூட்டியாந்து, ஆளுக்கொரு ஜியோ சிம் போட்ட செல்போனை வாங்கிக் குடுத்துடுறோம்.
  ஒவ்வொரு மாசமும் முதல்நாள்ல சந்தாவுல இருக்குற ஆளுகளை போன்ல கூப்புட்டு அந்த மாசத்து கதைகளை சொல்ல வைக்கிறோம். ( கடையில வாங்குறவங்களுக்கு ஒருநாள் கழிச்சி அடுத்தநாள் கதைசொல்லிடுவோம்.) ஓவியம் எப்படி வரைஞ்சிருக்காங்கன்றது முதற்கொண்டு டீட்டேய்லா சொல்லவைக்கிறோம்.

  உதாரணமா
  " செவ்விந்தியருங்க வூட்டு பெரியமனுசருங்களோட பஞ்சாயத்து பேசப்போற ஆபீசர, அந்த நாசமத்துப்போற நாவப்பாம்பு பொதரு சந்துல இருந்து வந்து பொட்டுன்னு போட்டுருது. மவராசனாட்டம் இருக்குற ஆபீசரு கட்டையில போற கண்டீசனுக்கு போயிடுறதுனால, பஞ்சாயத்து பேச அந்த எடுவட்ட படுபாவிப்பய பால்கம் போறாமாரி ஆயிப்பூடுது.
  டைகரும் குரோவும் எம்புட்டோ சொல்லியும் கேக்காமே, கோசீசையும் கூட வந்த பெரியமனுசருகளையும் கைது பண்ணப்பாக்குறான் அந்த கூறுகெட்டப்பய பால்கம்மு.!
  கோசிசூக்கு கடுங்கோவம் வந்துடுது. அரணாகயித்துல முடிஞ்சிவெச்சிருந்த பிச்சுவாவ உருவி, கூடாரத்தை கிழிச்சிப்போட்டு குருதையில ஏறி தப்பிச்சிப்போயிடுறாரு. இதனால வெள்ளக்காரங்களும் செவப்புக்காரங்களுக்கும் சண்டை வந்துடுமேன்னு கவலைப்படுறாப்புல நம்ம டைகரு "

  இப்படி கதையை சொல்ல வெச்சிடலாம். கால் ஃப்ரீன்றதாலே பில்லும் பெருசா வந்திடப்போறதில்லே. பாட்டீம்மாக்களுக்கு ஒரு கதைக்கு ஒரு கவுளி வெத்தலை, பன்னீர் பொகையில ஒரு பாக்கெட்டு, வாசனை சுண்ணாம்பு ஒரு டப்பின்னு சம்பளமும் போட்டுடுவோம்.

  இப்படி பண்ணினா விலை அதிகம்ன்ற ரிப்போர்ட்டே வராது ஆம்மா.!

  இதே மாதிரி இத்தாலி, ப்ரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனின்னு அங்கங்கே பாட்டீமாக்களை புடிச்சிட்டோம்னா மொழிபெயர்ப்பு செலவும் சுண்ணாம்பு பொகையிலையோட போயிடும்.
  என்ன ஒண்ணு, பாரீன் பாட்டீமாங்க வெத்தலை போடுவாங்களான்னு தெரியலை, அதான் சங்கடம்.

  ReplyDelete
  Replies
  1. @ Parthasaarathy P

   :))))))) ROFL

   அட்டகாசமான ரகளை பாஸ்! உங்க நகைச்சுவை உணர்வும், அதை வார்த்தைகளில் வடிக்கத் தெரிந்த அழகும் - செம்ம செம்ம செம்ம்ம்ம!

   Delete
  2. செம பாஸ்..!!! அட்டகாசம்...
   சிரிச்சி சிரிச்சி வயிறே பசிக்குது...

   ////அந்த படத்துல அடுப்பே பத்த வைக்காம காபி போடற மாதிரி,
   காமிக்ஸே வாங்காம, படிக்காம- காமிக்ஸ் வாசகர்கள்னு சொல்ற சோக்கு///-- உச்ச கட்டம்...செம...

   Delete
  3. ஆசிரியருக்கு பாட்டிகள்னாலே
   அலர்ஜி.(அவரின் சொந்த பாட்டிகள்
   அல்ல) இந்த லட்சணத்தில் 200
   பாட்டிகளா.???? கவுளி வெற்றிலை
   பன்னீர் புகையிலை வாங்கினீங்களே புளீச் புளீச்சென்று
   துப்ப 200அண்டா வாங்கினீங்களா?

   Delete
  4. சூப்பர் கற்பனை ஜி

   Delete
  5. பார்த்த சாரதி சார் ....இதுக்கு முன்னாடி நீங்க பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க ..

   உங்களை இப்பவே பாக்கனும் போல இருக்கே...:-))

   Delete
  6. பார்த்து கண்ணா சூப்பரே,நிறைய பேரின் மனசுல இருக்கறதை கோர்வையா தொகுத்து செமையா சொல்லியிருக்கிங்க,உங்களோட இந்த நக்கலு சில காமிக்ஸ் சர்பதுகளுக்கு,காமிக்ஸ் சேவகர்களுக்கு கடுப்பாதான் இருக்கும்.என்ன பண்ண,பாட்டியம்மாக்களை ஒரு டீமா போடற மாதிரி,அப்படியே தாத்தாக்களையும் சேர்த்து ஒரு டீமா போட்டு ஜியோ சிம்மும்,போனையும் குடுத்து விளம்பர பிரிவுக்கு பயன்படுத்திக்குவோம் என்ன நான் சொல்றது.
   பாட்டிகளுக்கு புகையிலை,வெத்தலை மாதிரி,தாத்தாகளுக்கு ஒரு கட்டு பீடி போதுமே.

   Delete
  7. அந்த அண்டா??????????

   Delete
  8. ///விலை அதிகம்னு போராளிகள் சிலர் ஆங்காங்கே ஸ்டேட்டஸ் போடுவதையும் அதை காமிக்ஸே வாங்காத. அல்லது படிக்காதஇ ஆனாலும் காமிக்ஸ் வாசகன்னு சொல்லிக்கிற சிலர் ஆமாஞ்சாமி ஆமாஞ்சாமின்னு ஆதரிக்கிறதையும்///

   தவறான கருத்து காமிக்ஸ் வாங்க காசில்லாமல் இத்தளத்தினை பார்த்து பெருமூச்சு விடும் ரசிகர்கள் பலபேர் உள்ளனர். அனைத்து காமிக்ஸ்களையும் வாங்கிடுவோர் சிலரே என்பது எனது கணிப்பு. வாங்க இயலாமல் ஆற்றாமையினால் சிலபேர் சிலபதிவுகளை போடும் பொழுது விட்டேனே பார் பலர் வரிந்து கட்டிக் கொண்டு போட்டு தாக்கும் பொழுது அவர்களால் என்ன செய்ய இயலும் ஒதுங்கித்தான் போக முடியும். எனவே அவர்களை சீண்டாமல் இருக்கலாம்.

   Delete
  9. Jokes apart .. காமிக்ஸ் ஒரு மலிவான பொழுதுபோக்கல்ல என்பது நிதர்சனம். விலை அதிகமே. அனைவராலும் வாங்கி வாசிக்கப்பட முடியாது என்பதும் ஏற்கக்கூடியதே. ஒருவர் வாங்கக்கூடிய அளவு மலிவல்லதான். இந்த அளவு circulationல் வரும் காமிக்ஸ் இவ்வளவு விலை வைத்தால் கட்டுப்படியாகும் என்பது எடிட்டர் முடிவு.

   எனினும் வாங்க முடியாதவர்கள் 2-3 பேராய் இணைந்து சந்தா செலுத்தி புத்தகங்களை பங்கிட்டுக் கொள்வதை யாரும் தடுக்கவில்லையே. அப்படியாவது இன்னொரு 500 சந்தாக்கள் கிடைத்தால் - மொத்தமாய் வாங்க இயலா நண்பர்கள் வரும் 48 புத்தகங்களை பங்கிட்டுக் கொண்டால் அனைவருக்கும் நன்றே ! ஆனால் விலை அதிகம் என்று கூறிவிட்டு எல்லாரும் எல்லாவற்றையும் வாங்க இயலாததால் காமிக்ஸ் விலை மலிவான வர வேண்டும் என்பது ஏற்கத் தக்க வாதமல்ல. That is sheer greed coupled with possessiveness. அது வெளியிடப்பட்டு கை சுட்டுக்கொள்ளாமல் இருக்கக்கூடிய விலையில் தான் காமிக்ஸ் வரும் - வந்துகொண்டிருக்கிறது.

   Delete
  10. // ஆனால் விலை அதிகம் என்று கூறிவிட்டு எல்லாரும் எல்லாவற்றையும் வாங்க இயலாததால் காமிக்ஸ் விலை மலிவான வர வேண்டும் என்பது ஏற்கத் தக்க வாதமல்ல///+1000...

   Delete
  11. பண வீக்கம்னு ஒன்னு இருக்கு. இருபது வருசத்துக்கு முன்னே இருந்த விலையும் இப்ப இருக்கர விலையும் ஒப்பிட்டு பாத்தா தெரியும். மிகப் பெரிய நாளிதழ் லோக்கல் எழுத்தாளர் மற்றும் ஓவியரோட கருப்பு வெள்ளைல ஒரு காமிக் வெளியிடறாங்க. நம்ம காமிக் விட பக்கம் குறைவு ஆனால் விலை மூணு மடங்கு. லயன் மற்றும் முத்துவின் குறைந்த விலைல வேற யாராலும் காமிக் விட முடியமுன்னு சொல்லுங்க பாக்கலாம்.

   என்னால வாங்க முடியல அதனால் எண்ணிக்கை குறைங்கன்னு வேற ஒரு சிலர். சினிமா டிக்கெட் விலை எல்லாம் எவ்வளவு ஏறிருக்கு. என்னால பாக்க முடியல அதனால் வருசத்துக்கு பத்து படத்துக்கு மேல வரக் கூடாதுன்னு சொன்ன சரியாய் இருக்குமா? நமக்கு வேணுங்கறத வாங்கிக்கணும். இல்லன்னா ராகவன் சார் சொன்ன வழிய பின் பற்ற வேண்டியது தான்... அப்படியே இல்லன்னாலும்எ ப்படியும் ஸ்டாக்கில் இருக்கும். பின்னாடி வேணும்னா வாங்கிக்கலாம்

   Delete
  12. ///வாங்க இயலாமல் ஆற்றாமையினால் சிலபேர் சிலபதிவுகளை போடும் பொழுது  ///

   உண்மையிலேயே வாங்க இயலாத நண்பர்களின் பதிவாக இருந்திருந்தால் இப்படி பேசியிருக்க தேவையில்லை என்பது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தெரியும்.
   அப்படி உண்மையாகவே வாங்க இயலாத யாரும் இந்தமாதிரி பிரகாஷ் பப்ளிசர்ஸை மட்டம்தட்டி எங்கும் பதிவிடுவதில்லை.
   பழங்காமிக்ஸ் விற்பன்னர்களும் வெளிநாட்டு காமிக்ஸைகூட பாஷை புரியலேன்னாலும் வாங்கிக்குவிக்கும் சிலருமே இப்படிப்பட்ட பதிவுகளை போடுகிறார்கள். இதில் ஒருமாதம் கழித்து பாதிவிலைக்கு விற்போரும் அடக்கம் .
   அவர்களுக்கான பதிவே இது. So தவறுதலான பதிவு அல்ல.!

   Delete
  13. ஹா ஹா ஹா . செம நண்பரே

   Delete
 50. Sir,

  Smurfs dialogue is very boring, I don't know how many friends felt this. Regarding story selection for 2018 I know you would have already finalized the list. So no use debating now. Hope you have ticked all box. This month graphic novel is not bad. Rest books are waiting for reading.

  ReplyDelete
 51. சார்,
  கோரமான சித்திரங்கள் நிறய உள்ள கதைகள் வேண்டாமே. வெரைட்டியான த்ரில்லிங் அனுபவங்களைத் தரும் ஜோம்பி கதைகளை பார்ததிருக்கிறேன். சில கோரமான சித்திரங்கள் ஒரு சில ப்ரேம்களில் வந்து உடனே மறைந்து விடும். அந்த மாதிரி என்றால் கூட ஓகே. உதாரணமாக வேர்ல்ட் வார் Z திரைப்படம்.

  சில உலக பேரழிக்கு பின் நிகழ்வு கதைகளில் கூட அதிக கோரம் இல்லாத வெரைட்டியான த்ரில்லர் கதைகள் உண்டு. திரைப்பட உதாரணம். ரோடு, புக் ஆப் எலை, மற்றும் மேட் மேக்ஸ்.

  இந்த ஆயிரக்கணக்காண கதைகளில் ஏகப்பட்ட நேரம் செலவழித்தால் நிறய முத்துக்கள் தேற வாயப்பு இருக்கும். என்னுடய வேண்டுகோள் ஒன்றே. கோர சித்திரங்கள் இல்லாத வெரைட்டியான த்ரில்லர்கள்.

  ReplyDelete
  Replies
  1. அங்கே அமெரிக்காவுல உட்கார்ந்துகிட்டு எல்லா இங்கிலீச் படங்களையும் ஒன்னுவிடாம பார்க்கிறதுதான் பிரதான வேலை போலிருக்கே, MP அவர்களே? ;)

   Delete
  2. நிறய மொக்கைப் படந்தான் வருது. வருசத்துக்கு ஒரு 10-20 படம் தான் தேறுது. அந்த 20 கட்டாயம் பாத்துடுவேன். வீடலயே. தியேட்டருக்கு போறது கிடையாது. 2003 ஓட தியேட்டருக்கு போற வழக்கம் ஒழிஞ்சுடுச்சு. அதுக்கப்புறம் ஒரு நாலு படம் மகள் அனுபவம் பெற வேண்டும் எனபதற்காக ஜங்கிள் புக் மாதிரி படங்களுக்கு அழைத்து சென்றோம். அவருக்கும் தியேட்டருக்க போக பிடிப்பதில்லை.

   Delete
 52. இந்த மாதம் எனது தரவரிசைப் பட்டியல் :

  1. தோர்கல் (கனவு மெய்ப்பட வேண்டும்)
  2. கி.நா ( என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்)
  3. ஸ்மர்ஃப் (டாக்டர் பொடியன்)
  4. டெக்ஸ் ( கடல் குதிரையின் முத்திரை)

  ReplyDelete
 53. ஆசி்ரியர் சார் ....இந்த பக்கம் வந்துட்டு போங்களேன் ...:-(

  ReplyDelete
 54. இந்த மாதம் எனது தரவரிசைப் பட்டியல் :

  1. கி.நா ( என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்)
  2. தோர்கல் (கனவு மெய்ப்பட வேண்டும்)
  3. டெக்ஸ் ( கடல் குதிரையின் முத்திரை)
  4. ஸ்மர்ஃப் (டாக்டர் பொடியன்)

  ReplyDelete
 55. என்னுடைய விருப்பப் பட்டியல்

  1 ஜாம்பீஸ் - என்னுடைய முதல் விருப்பம். ( ஆனால் மத்தவங்க கமென்ட்ஸை பார்த்தால், தமிழிலே இந்த ஜானரையே வர விட மாட்டாங்க போல இருக்கே)

  2 வலேரியன் - இதன் படம் 2 மாதம் முன்பு ஹோலிவுட்டில் ரிலீஸ் ஆகி மாபெரும் தோல்வியை தழுவியது. ஆனால் சயின்ஸ் பிக்ஷனுக்கு ஏற்ற கதை தொடர் இது தான் என்று எண்ணுகிறேன்

  3 ஜட்ஜ் ட்ரேட் - எனக்கு மிகவும் பிடிக்கும் (ஸில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்து வந்து தோல்வியை தழுவியது ஆனால் சில வருடங்களுக்கு முன்னாள் வந்து நன்றாக ஹிட் அடித்தது. அது போல் முன்னே நம்மிடம் தோல்வி கண்டு இருந்தாலும், மறுபடியும் புது பொலிவில் வந்து என் ஹிட் அடிக்க கூடாது?

  4 அலோன் - சித்திரங்கள் நன்றாக இருக்கிறது, முயற்சிக்க வேண்டும்.

  5 எல் டோபோ - லார்கோ போல எடிட் பண்ணி களத்தில் இருக்கலாம்

  6 ரொமான்ஸ் - மொக்க போடுமே... ஒன்னு விட்டு பார்த்து முடிவு பண்ணலாம்

  7 வார் - சில சமயம் நன்றாக இருக்கும் சில சமயம் போர் அடிக்கும்.

  இந்த வாரம் நான் படித்த பழைய புதையல்களில் இருந்து

  1 திகில் டெலிவிஷன் - ரிப்போர்ட்டர் ஜானியின் வழக்கமான துப்பறியும் கதை. நன்றாக இருந்தது

  2 நிஜம் ஒன்று நிழல் ரெண்டு - இது பழைய கருப்பு வெள்ளை காமிக்ஸ். சிக் பில்லின் முக்கியமான கதை. சிரிப்பிற்கு பஞ்சமே இல்லை

  3 பழி வாங்கும் பிசாசு - CID ராபினின் கதை. இது ஒரு தெளிவான நேர்வாக்கில் செல்லும் ஒரு ஆள் கடத்தல் கதை. விறுவிறுப்பான கதை. (ஆமாம் தலைப்புக்கும் கதைக்கும் கொஞ்சமும் சமமந்தம் இல்லை)

  ReplyDelete
 56. விலையினை ஓரளவுக்கு நிதானமாக நிர்ணயிங்கள்!

  ReplyDelete
 57. இம்மாத இதழ்கள் எனது வரிசைப்படி
  1. டெக்ஸ்
  2.என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்
  3. தோர்கல்
  4. ஸ்மர்ப்

  ReplyDelete
 58. Replies
  1. ///This is Golf Club?///

   நோ நோ! எதுக்கும் பக்கத்து ப்ளாக்ல விசாரிச்சுப் பாருங்களேன், தனியொருவன் ஜி? ;)

   ( ப்ளாக்கின் டெம்ப்ளேட்டை பச்சைக் கலர்ல வைக்காதீங்கன்னு அப்பவே எடிட்டர்ட்ட சொன்னேன்... கேட்கல!)

   Delete
 59. My personal feeling is comics prices are increasing beyond the scope of Tamil readers. We may be far below international comics prices. But you need to also see Indian scenario, here newspaper is sold at rs6 against one dollar abroad which is 66 11 times of here. As a regular collector of comics since 80 's my request is find economical ways to print comics. So that we have lion comics in print for few more decades at least. ReducING paper quality maintaining good print quality more black and white reducing wrapper cost could be options. We loved the lion muthu comics from the days it was simple and we all not started from the glossy ones. Only for me glossy may look abnormal. Please think.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. @ MP
   அதுக்கு பேசாம நாங்கல்லாம் U.Sக்கே வந்திடறோம்! :)

   Delete
 60. இன்றைய லயன், முத்து காமிக்ஸ்களின் அச்சுத் தரத்தினால்தான் புதிய பதிப்பகங்கள் தங்கள் ரைட்ஸினை வழங்குகின்றன. இல்லாவிட்டால் அதே பழைய பிரிட்டன் காமிக்ஸ் மட்டுந்தான் வாங்கிடவியலும். அதையும் நாம் கவனித்திட வேண்டுமே!

  ReplyDelete
  Replies
  1. உண்மை...
   இன்னமும் அந்த மும்மூர்த்திகளிடம் இருந்தும் தாத்தாக்களின் காதலியிடமும் இருந்தும் விடுதலை கிட்டியிருக்காது...
   மேலே இருக்கும் கொச கொச சித்திரங்களில் நாமும் நசநசவென நசிங்கி கிடக்க வேண்டியதுதான்...

   Delete
 61. எல்லாரும் எல்லாவற்றையும் வாங்க இயலாததால் காமிக்ஸ் விலை மலிவான வர வேண்டும் என்பது ஏற்கத் தக்க வாதமல்ல. That is sheer greed coupled with possessiveness. அது வெளியிடப்பட்டு கை சுட்டுக்கொள்ளாமல் இருக்கக்கூடிய விலையில் தான் காமிக்ஸ் வரும் - வந்துகொண்டிருக்கிறது.


  ######


  உண்மை.....


  அப்படி உண்மையாகவே வாங்க இயலாத யாரும் இந்தமாதிரி பிரகாஷ் பப்ளிசர்ஸை மட்டம்தட்டி எங்கும் பதிவிடுவதில்லை.
  பழங்காமிக்ஸ் விற்பன்னர்களும் வெளிநாட்டு காமிக்ஸைகூட பாஷை புரியலேன்னாலும் வாங்கிக்குவிக்கும் சிலருமே இப்படிப்பட்ட பதிவுகளை போடுகிறார்கள்.

  உண்மையோ உண்மை.....:-(

  ReplyDelete
 62. Whatever may be, this is what I got from the places I regularly pick up. Circulations are dropping with price increases. I just posted it with my own feeling that comics should not again vanish from the shelves again as it happened in 90 's there was huge spike with muthu lion thigil comics lined up. Then the bubble burst. I hope publishers will have better idea of things going on in market. My view could be wrong.

  ReplyDelete
  Replies
  1. //there was huge spike with muthu lion thigil comics lined up. Then the bubble burst.//

   huum... ! thinks to be noted !over using of certain style of books may lead to bubble bust agree sty. Edit plz note.

   Delete
  2. ////it happened in 90 's there was huge spike with muthu lion thigil comics lined up. Then the bubble burst.////

   துளியூண்டு அதிர்ச்சியடைய வைத்தாலும், தக்கணூண்டு சிந்திக்க வைத்த வரிகளே!

   25+ வருடங்களுக்கு முன்பான விற்பனை முறையின் கஷ்ட-நஷ்டங்களை தற்காலத்தோடு ஒப்பிடுவது சரியா எனப் புரியவில்லை!

   மேலும், இத்தனை வருடங்களில் நாள்தோறும் நம் எடிட்டர் கற்றுக்கொண்ட அனுபவங்கள் 'அப்படியெதுவும்' நிகழ்ந்துவிடாமல் காப்பாற்றும் என உறுதியாக நம்பலாம்!

   (இதுபற்றி எடிட்டர் இரண்டு வரிகளில் பதிலளித்தால் கொஞ்சம் படபடப்புக் குறைஞ்சா மாதிரி இருக்கும்!)

   Delete
 63. //EL TOPO, Charley's War//


  aaha ! (happy)

  //SEULS (Alone)//

  schedulelil oru slot poote aaganum!

  //ஆனால் பாதித் தூரத்தை 30+ நாட்களிலேயே கடந்துவிட்டதைப் பார்த்த பின்பே எனக்குள் நம்பிக்கை பிறந்துள்ளது - "இது நனவாகிடப் போகும் கனவே" என்று !! The project is now on for sure !!//

  ! i though the moment you announced its for sure thats why i payed subscription

  ReplyDelete
 64. ரொம்ப கன்பீசனா இருக்கு
  எல்லாத்துலயும் ஒண்ணு போட்டு விடுங்கள் ......  கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் சரியா தான் வரும்

  ஆர்ச்சியை மறந்துடாதீன்ன்ன்ங்

  ReplyDelete
 65. டியர் எடிட்டர் மற்றும் நண்பர்களே

  எனக்கு வந்து சேர்ந்த இரண்டு tex பாட்ஜ்களில் ஒன்றை என் மேலாளருக்கு பரிசளித்தேன் - அவர் ஒரு tex ரசிகர் மற்றும் சந்தாதாரர். கொடுத்த உடனே அதனை மார்பில் அணிந்து கொண்டு அலுவலகத்தில் சுத்திக்கொண்டிருக்கிறார். கேட்பவர்களிடம் காமிக்ஸ் பாட்ஜ் என்கிறார் :-) போதும்டா சாமீ !!

  பி.கு : நான் பணிபுரியும் நிறுவனம் பன்னாட்டு முன்னணி நிறுவனம் !!

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் ராக் ஜி...

   டெக்ஸ் ரசிகாரா...!!!
   அப்டீனா அவர இந்தப் பக்கமும் ஒரு எட்டு வரச் சொல்லுங்க ஜி...

   Delete
  2. எட்டுத் திக்கும் ஒலிக்கிறது எங்கள் டெக்ஸின் புகழ்!

   Delete
  3. ராகவன் ஜீ...
   இதைத்தானே பல வருஷங்காய் செய்துவருகிறோம்....!!!
   ஜிப்பா போடும் மசூதி குருவுக்கே பேட்ஜ் அணிவித்து அழகு பார்த்தவன் நான்....!!!
   என் புத்தகங்களை எனக்கு முன்பே அவர் வாசித்துவிடுகிறார் இமாம் சாஹெப்....!!

   Delete