Powered By Blogger

Wednesday, July 05, 2017

ஒரு "ஸ்பெஷல்" மாதம் !

நண்பர்களே,

வணக்கம். ஒரே மாதத்தில் 2 hardcover புக்ஸ் வெளியான முதல் சந்தர்ப்பம் இதுவாகத் தானிருக்குமா ? என்று யோசிக்கும் போதே ட்யுராங்கோ + லக்கி ஸ்பெஷல் சேர்ந்தே வெளியானதா - அல்லது ; வெவ்வேறு தருணங்களிலா ?? என்ற சந்தேகமும் குடைகிறது!  எது எப்படியோ - 2 மைல்கல் இதழ்கள் (300 + 400 ) ஒரே வேளையில் வெளியாவது இதுவே முதன் முறை என்ற மட்டிற்கு உறுதியாய்ச் சொல்லலாமென்றே நினைக்கிறேன் ! தயாரிப்பில் நிறையவே வியர்வை சிந்தச் செய்த இம்மாத 4 இதழ்களும் இப்போது ஆன்லைன் விற்பனைக்கும் தயாராகி நிற்கின்றன : http://lioncomics.in/monthly-packs/409-july-2017-pack.html

அதிரடிக்கு TEX & இளவரசி மாடஸ்டி  ; டிடெக்டிவ் genre-க்கு ராபின் & ஜூலியா ; கார்ட்டூன் கலகலப்பிற்கு உட்ஸிட்டி கோமாளிகள் ; சர்வதேச உளவுக் கதைத் த்ரில்லரின் பிரதிநிதியாய் LADY S & ஜான் சில்வர் - என இம்மாதம் காத்திருக்கும் கலவை ஒவ்வொரு ரசனைக்கும் ஒரு விதத்தில் ரசிக்குமென்ற நம்பிக்கையுள்ளது!!

கிட்டத்தட்ட 820 பக்க வாசிப்புக் காத்துள்ளதால் - இம்மாதத்தில் நமக்கென சற்றே கூடுதல் அவகாசம் எடுத்துக் கொண்டு,படித்ததை பற்றி எழுதிடலாமே all ? அலச - ஆராய - விவாதிக்க இம்மாதம் நிறையவே விஷயங்கள் இருக்குமென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! So அடுத்த 25 நாட்களுக்கு பந்து உங்கள் கோர்ட்டில் தான் folks !! Time for you to get cracking !! Bye for now !

220 comments:

  1. எனக்கு சூப்பர் 6 மட்டும்தான் அனுப்பி இருக்கீங்க சார். மெயின் சந்தா புக்ஸ் வரவேயில்லை ஆபிஸில் கேட்டாலும் சரியான பதில் இல்லை.. திருப்பூரில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் வந்து இருக்கு என்னுடையது மட்டும் ஏன் வரவில்லை சார்

    என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
    Replies
    1. ** உங்கள் ஆபிஸில் கேட்டாலும்

      Delete
  2. ஏற்கனவே ஐந்து நாள் தாமதம்..

    இன்னும் எத்தனை நாள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை..

    திருப்பூர் S.T கொரியரில் சல்லடை போட்டு தேடியாச்சு எனது பாக்ஸ் மட்டும் வரவில்லை :( :(

    என்ன காரணத்தினால் எனக்கு வரவில்லைன்னு செக் பண்ணி சொல்லுங்க விஜயன் சார்

    இதனாலேயே உங்கமேல அதிருப்தி வருதுங்க சார்

    ReplyDelete
  3. கொரியர் வரவில்லை.... நாளைக்குதானோ? :(

    ReplyDelete
  4. நன்றிகள் பல ஆசிரியரே.
    புத்தகங்கள் இன்றே கிடைத்தது.

    ReplyDelete
  5. லயன்300ன் வசீகரம் மற்ற புதையல்கள் மேல் பார்வையை படரவே விடமாட்டேன்கிறது...ஹூம்...

    சென்ற மாதம் "அண்டர்டேக்கர்", இம்மாதம் "லயன்300", அடுத்த மாதம் "இரத்தக் கோட்டை" என சோலோ டாமினேசன்களாகவே போய்விடுமோ என்ற மெல்லிய உறுத்தலை உதறவிட்டு பார்சலின் மற்ற புத்தகங்களை ஒரு லுக் விட்டேன் சார்.

    மீண்டும் ஒரு வாவ் சொல்ல வைத்து விட்டது சிக்பில் Classic...
    இல்லையில்லை இரு "வாவ்" கள் சார். முத்து400மட்டும் சளைத்ததா என்ன?.
    லேடி S எம்பிக் குதிக்கும் காட்சி அட்டை படமாக மனசை அள்ளுது. இந்த பக்கம் கிட் பயலின் பரிதாப முழி;அந்தப் பக்கம் லேடி sன் பரந்த மனசு. அண்மைக்காலங்களில் அட்டைப்படங்களுக்கு மிகுந்த சிரத்தை எடுத்து கொள்கிறீர்கள் சார். இரண்டுக்கும் தலா 10மதிப்பெண்கள்.

    சிக்பில் ஸ்பெசல்...
    முன்அட்டை&பின்அட்டை பளா பளா மினுக்களில் கலக்குறது...
    உள்பக்க அட்டைகளில் உள்ள பழைய வேற்று மொழி இதழ்களின் அட்டை படங்கள் மேலும் ஒரு மதிப்பெண்ணை கூட்டுகிறது...
    5ம் பக்கத்தில் ஒரே குதிரையில் 4வரும் ஸ்டன்னிங் போஸ்...
    அடுத்த சூப்பர்6ன் விளம்பரங்கள் ஹைலைட்...
    98,99&100ம் பக்கங்களில் அட டா செம(....................)கிட் அங்கிள்@குவா குவா..ஹி..ஹி...

    ரோஜர் ரசிகர்கள்@ பலமா விசில் அடிங்கய்யா...
    வருகிறது: சாகசஸ ஸ்பெசல்.செம விளம்பரம். இடம்பெறும் கதைகள்.
    1.மர்மக் கத்தி &2.இரத்தத்தீவு(அடுத்து சூப்பர்6வரிசையில் கொண்டாடுங்கள்)

    முத்து 400...
    க்ளிசிக் அட்டைப்படங்கள். உள்பக்கம் பிரிண்டிங் வித்தியாசமான கலர்களில் கலக்குகிறது.

    அடுத்த வெளியீடான மரணத்தின் நிறம் பச்சை விளம்பரம் செம டாப்.இரவு கழுகின் முக வசீகரம் கண்ணை விலக்க இயலாமல் அதிலேயே லயிக்கச் செய்கிறது.

    முத்து 1டூ400பட்டியல் மிரட்டுகிறது.

    மும்முனை போட்டியில் துவக்க சுற்றில் லயன்300 வலுவான துவக்கத்தில் முன்னணி வகிக்கிறது. F1ரேஸில் அடிக்கடி சொல்வது போல "ஸ்டில் ஏர்லி டேஸ்"...

    இதற்கு மேலும் பொறுமை இல்லை...கியூபாவில் குருநாதர் கூப்பிடுகிறார். பை ஃபார் நவ்...

    லயன்300&முத்து400- இரண்டு ஸ்டன்னிங் இலக்குகளை வெற்றிகரமாக அடைந்ததற்கு வாழ்த்துகள் சார். 400,500,600...1000என சாதனை சிகரங்களில் கால் வைக்க(கண் வைக்க) அட்வான்ஸ்ட் வாழ்த்துகள் சார்...

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் விஜய் இதயத்தில் மாடஸ்டி இடம் பெற்றது மகிழ்ச்சி

      Delete
  6. ////கிட்டத்தட்ட 820 பக்க வாசிப்புக் காத்துள்ளதால்////

    முடிக்கும் வரை தளத்திற்கு லீவ்!!!

    ReplyDelete
    Replies
    1. சக்கரவர்த்தி @ எத்தனை நாள் லீவு என்று சொன்னால் நன்றாக இருக்கும், என் சந்தோசத்தை கொண்டாட :-) ஐ ஜாலி.

      Delete
    2. என்னது??? சந்தோசமா???

      அப்ப லீவு கேன்சல்!!!

      Delete
    3. எப்படி தளத்தை விட்டு யாரும் போகாமல் இருக்க நம்ப ஐடியா.

      இனி யாராவது தளத்தை விட்டு போகிறேன் என்றால் கறி விருந்து சாப்பிட்ட முடிவு செய்து விட்டேன். ஜாக்கிரதை :-)

      Delete
  7. vijayan sir, பல பெருமைகளைதாங்கி வரும் இம்மாத இதழ்கள் அனைத்துமே நமது காமிக்ஸ் வரலாற்றில் மைல்கல். உங்களுக்கும் நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

    உங்கள் பக்கம் இருந்து இதழ்களை அனுப்பிவிட்டீர்கள், இனி எல்லாம் அந்த கொரியர் நண்பர்களின் கைகளில். அவர்கள் கருணை காட்டினால் இன்று அல்லது வரும் நாட்களில் புத்தகம் கைகளில் தவழும். பார்க்கலாம் அந்த கொரியர் சாமி என்னைக்கு புத்தகத்தை கொடுக்க போகிறது என்று.

    ReplyDelete
    Replies
    1. ஆபீஸில் இருந்து வீட்டுக்குள் நுழைந்த உடன் எனது மகள் காமிக்ஸ் பார்சலுடன் வரவேற்றாள். ஆமா நான் வேண்டிய கொரியர் சாமி கண்ணை திறந்துவிட்டது.

      புத்தகங்களை படிக்க வீட்டில் உள்ள குலசாமி இனி அருள்தரவேண்டும். கண்டிப்பாக அடுத்த இரண்டு நாட்களுக்கு புத்தகம்களை பார்க்கமட்டும் தான் முடியும். :-( ஆத்தா மகமாயி என்ன ஒரு சோதனை.

      Delete
  8. Lucky 13புத்தகத்த பத்து மணிக்கே கைப்பற்றி விடலாம்னு பாத்தா ...இங்க நா ஒரே பிசி....நண்பர் கணேஷ் வேற பதினென்னுக்கே ஞாபகபடுத்த ...இரண்டு மணி வாக்குல மெஸேஜ் வேற நான் புக்க கைப்பற்றிட்டேன்ற கணேசின் குத்தாட்டம் என்னயும் உற்சாக படுத்த கலக்சன் சென்டர்ல போய் பாத்தேன் மூனுக்கு..மனமெங்கும் பரவசம் ...இவ்ளோ குண்டா வந்ததில்லைன்னு மனம் சத்தியம் செய்ய ...நீட்ன எடத்லல்லாம் கையெழுத்த போட்டுட்டு பிரிக்காமலே கிளம்பினேன் ....ஆறு மணிக்கு மேல் முருகப் பெருமான்ட காட்டிய பின் பதிவிடுகிறேன்....ஏகப்பட்ட மகிழ்ச்சி சார்....கணேஷ்ட வேற நேத்து எதய்யா மொதல்ல படி ப்பன்னு கேட்டதுக்கு உற்சாகமா சில்வரன்னு சொல்ல...அவரு லேடி s அ படிப்பேன்னு அர நொடில அறுவது காரணங்கள அடுக்க நானும் லேடியதான் மொதல்ல படிப்பன்னு வீர சபதமெடுத்தேன்....சார் ஆறுக்கு மேல் பிரித்த பின் பகிர்வேன் நீங்க பகிர்ந்தத..

    ReplyDelete
  9. Nice,dear editor sir, books received.
    That relaxed feel when I have the books to read is something surreal.

    ReplyDelete
  10. லேடி S, லயன் 300, சிக்பில் க்ளாசிக் மூன்று இதழ்களும் பிரமிப்பூட்டுகின்றன. சரியாக உள்வாங்கிக்கொள்ளாமல் சூப்பர் 6ஐப்பற்றி போன பதிவில் சற்றே உளறிவைத்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. இணைதடம் என்பதை விட சிறப்புத்தடம் எனலாம். இதழ்த்தயாரிப்பு, வடிவமைப்பு, மெனக்கெடல் அட்டகாசம். விரல்களால் வருடி அட்டையின் நகாசு வேலைகளை ரசிக்கவே சற்று நேரம் ஒதுக்கவேண்டியிருக்கிறது. சூப்பர் 6ஐ அடுத்து சூப்பர் 12 ஆக மாற்றிட முன்மொழிகிறேன். :-))

    ReplyDelete
    Replies
    1. ///சூப்பர் 6ஐ அடுத்து சூப்பர் 12 ஆக மாற்றிட முன்மொழிகிறேன். :-))///

      +111

      Delete
    2. //சூப்பர் 6ஐ அடுத்து சூப்பர் 12 ஆக மாற்றிட முன்மொழிகிறேன். :-))//

      நிதானம் அப்படின்னு கதை சொல்லி இருந்தேன் -அதல்லாம் நானும் வாபஸ் வாங்கிக்கிறேன் - ஹி -ஹி -சிக்பில் வடிவமைப்பு ,அட்டை எல்லாம் பாத்தபினாடி எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாங்க !!!

      அதனால ஆதியின் கமண்ட்டுக்கு +++++..

      Delete
    3. ஆதி தாமிரா
      சூப்பர் +1000

      Delete
    4. சூப்பர் 6ஐ அடுத்து சூப்பர் 12 ஆக மாற்றிட முன்மொழிகிறேன். :-))

      Delete
    5. சூப்பர் 12
      இதை ஆசிரியர் கண் கொண்டு பார்க்க வேண்டும் காது கொடுத்து கேட்க வேண்டும் மொத்தத்தில் நடை முறைப் படுத்த வேண்டும்

      Delete
    6. சந்தா S அப்படினு பேர் வைச்சுடுவோம். சிறப்புக்கதைகள், சிறப்புத்தயாரிப்பு, சிறப்பு அட்டை (கொஞ்சூண்டு சிறப்பு விலையும்)!!

      செமல்ல.. சந்தா A, B, C, D, E and S!!

      Delete
    7. @ ஆதி

      ////சரியாக உள்வாங்கிக்கொள்ளாமல் சூப்பர் 6ஐப்பற்றி போன பதிவில் சற்றே உளறிவைத்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. ////

      எனக்குத் தெரியும். நீங்க மாறிடுவீங்கன்னு தெரியும். ஏன்னா என் அளவுக்கு இல்லேன்னாலும், நீங்களும் கொஞ்சூண்டு நல்லவிகதானே! ;)
      என்னதான் பக்கம்பக்கமா வசனம் பேசினாலும் புதுசா ஒரு குண்டுபுக்கை பார்த்தமாத்திரத்தில் அத்தனையும் பிரசவ வைராக்கியம் மாதிரி ஆகிப்புடுதுதானே? இதான் குண்டுபுக்ஸ் ரசிகர்களின் குணாதிசயம்!

      Delete
    8. ////சூப்பர் 6ஐ அடுத்து சூப்பர் 12 ஆக மாற்றிட முன்மொழிகிறேன். :-))////
      +1

      Delete
    9. @ஈவி, ஆக்சுவலா நான் சூப்பர்6 வேணானு சொல்லவில்லை. சந்தா எப்போ ஆரம்பித்து எப்போ முடிகிறது என்பதில் ஒரு கன்பீசன் பீலிங் இருக்கிறது என்றுதான் சொல்ல வந்தேன். உளறிவிட்டேன் போலிருக்கிறது. :-))) அதனால் அதை பிற சந்தாக்கள் போல ஒழுங்குபடுத்திவிடலாம். எனில் இதழ்கள் எண்ணிக்கை இடிக்கிறது. அதனால்தான் எண்ணிக்கையும் உயர்த்திவிட்டால் போகிறது என்று ரூம் போட்டு சிந்தித்து சொல்லியுள்ளேன். எப்படி நம் மகா சிந்தனை?! ஹிஹி!!

      Delete
  11. நன்றி ஸ்டீல் புக்க வாங்கி பிரித்துப்பார்த்து மோந்துபார்த்து பீரோவில் வைத்து பூட்டிவிட்டேன் இரவுதான் படிக்க
    ஆரம்பிக்கனும்.படங்களும் வாசனையும்
    இரவுவரை காத்திருக்கணுமே கடவுளே.
    இதுக்குப்பேர்தான் கல்யாணம் பண்ணியும்
    பிரம்மச்சாரியோ.

    ReplyDelete
  12. காலை 11 மணிக்கே பொட்டியை கைப் பற்றி Tex ஐ படிச்சாச்சி
    செம
    தல தல தான்
    தலக்கு நிகர் தல தான்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எல்லாம் படிக்க எப்படித்தான் நேரம் கிடைக்குதோ... ஹம்... கொடுத்துவைத்தவர்கள் நீங்கள் சார்.

      Delete
  13. புத்தகங்கள் கிடைத்தவுடன் நாங்களும் கலக்குவோம்ல

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு வர்றோம் தியான குரு ரவியாரே

      Delete
  14. 4 நாட்களில் மூன்று பதிவு சூப்பர்

    ReplyDelete
  15. இம்மாத இதழ்களும் சேர்த்து படிக்காத மொத்த மூன்று மாத இதழ்களையும் சுற்றி வைத்துக்கொண்டு எதை முதலில் படிப்பது என்று இங்கி பிங்கி போட்டுக்கொண்டிருக்கிறேன். ஹையா!!

    (ஈவி, காதைக்குடுங்கள். நாளைக்கு எனக்கு வயித்துவலி வரும் என்று சொல்லி லீவு போட்டாச்சு. பப்ஸ், முட்டபஜ்ஜி, சுண்டல், லெமன் ஜூஸ் எல்லாம் தயாரிக்கப்படப் போகிறது. சுற்றி வைத்துக்கொண்டு நாளை பூரா இதான் வேலை! ஹிஹி!)

    ReplyDelete
    Replies
    1. ///நாளைக்கு எனக்கு வயித்துவலி வரும் என்று சொல்லி லீவு போட்டாச்சு.///

      இது நாளைக்கு வர்ற வயித்துவலின்னா...

      ///என்று சொல்லி லீவு போட்டாச்சு. பப்ஸ், முட்டபஜ்ஜி, சுண்டல், லெமன் ஜூஸ் ///

      நாளை மறுநாளும் வயித்துவலி வரப்போறது உறுதியாகிடுச்சு! :P

      Delete
  16. சார் யமது முத்து நிறுவனர்க்கு பெரிய ஓ வுடன் தொடர்கிறேன் .செவ்விந்தியர் சொல்லும் அந்த ஓ' அல்லதான் . அட்டைபடங்களில் இனிமேல் இதை விடச் சிறப்பாய்த் தர முடியுமா எனக்கேட்டபடி இது வர வந்ததிலே பெஸ்டா மனத மயக்கும் வித்தியாச நீலத்தில் , கரு நீலம் கலந்து வசீகரப் புன்னகயுடன காட்சி தரும் லேடி s பின்னட்டயிலும் , அந்த பஞ்சு மிட்டாய் வண்ண எழுத்துகளுடன் மயக்கி வசீகரிக்கிறார் . நம்மார்டின் அட்ட காமிக்சுக்கே உரித்த வண்ணம் நீலம் , சிவப்பு , மஞ்சள் என கலந்து ஓவியத்திலும் கலக்க ,ஸ்பெசல் எபக்டுக்களுடன் பிரம்மாத படுத்துது அட்டை ..உள்ளட்டைகளும் அசத்த முதல் பக்கம் காட்சி படுத்திய அட்டைகள இரசித்த படி பின் செல்ல சிக் பில்லின் வரிசை படி அட்டைகள் அழகுற அமைந்து கண் முன்னே டார்டாய்ஸ் கொசு வர்த்தி சுருளை சுற்றத் தவறலை..காலப் பயணமாயிருக்கலாம் ....அதில் விரைவில் எதிர் பாருஙகள் என மர்மக்கத்தியும் , இரத்தத் தீவும் நேற்று இவ்விரண்டயும் கேட்ட நண்பரின் முகத்தில் புன்னகய வரவழைக்க தவறியிருக்காதென எண்ணிய படி புரட்டுறேன் .அடடா விளம்பரங்கள் ...அடுத்த அட்டை ஜான் சில்வர் பின்னணி ஓவியம் அந்த நீரில் விரயும் படகும் காமிக்சுக்கே உரித்த சிறப்பை உரித்து காட்டியபடி எனக்கே உரித்ததென நற்கிறார் விமானம் பறந்த படி ஜான் .டெக்ஸ் அட்டயும் கலக்க முதல் பக்கம் திருஷ்டிப் பொட்டாய் ஏனோதானேவென காட்சி தர உள் பக்கங்களில்தான் என்னவொரு ஓவிய எழுச்சி ..அருமை சார்...செஞ்சிருக்கீங்க...நநிஜங்களின் நிசப்தம் வித்தியாசமான சைசில் என்ற இரண்டு வார்த்தைதான் எவ்வாறெல்லாம் வசீகரிக்கிறது ...ஆஹா....பிரம்மாதம் ...சீக்கிரம் கண்ணில் காட்டவுள்ள லேடி s விளம்பரங்கள் கலக்கினால் ..முதல் பக்கம் இத விட சிறப்பா யாரும் மையூற்றி சிதறடிக்க மிடியாதென்கிறார் வண்ணச்சேர்க்கை காட்டி அதகளபடுத்திய ஓவியர்..எப்டி சார் வான்ஹாம்மேக்கு மட்டும் வாய்க்கிறார்கள் அசத்தலான ஓவியர்கள் ...

    ReplyDelete
  17. ஆதி நாளை மறுநாள் வயித்துவலி நிச்சயம். எங்களை விட்டுவிட்டு இத்தனை
    ஐட்டங்களையும் தனியே சாப்பிட்டால்.

    ReplyDelete
  18. என்னை முந்தி விட்டீர் ஈ வி.
    ஹிஹிஹி வயித்துவலி பற்றி.

    ReplyDelete
    Replies
    1. இல்ல கணேஷ் சார்... முந்திக்கிட்டது நீங்கதான்! அவருக்கு வயித்துவலி வரணும்றதுல நாமெல்லாம் கணநேரத்துல ஒரே மாதிரி யோசிக்கறோம்ன்றது உறுதியாகிட்டது!

      நாமாவது பரவாயில்லை, சிலபேர் இந்நேரம் பில்லிசூன்யத்துக்கெல்லாம் ஏற்பாடு பண்ணியிருப்பாங்க! :)

      Delete
    2. ///பில்லிசூன்யத்துக்கெல்லாம் ஏற்பாடு பண்ணியிருப்பாங்க///

      😂😂😂😂

      Delete
    3. யோவ்.. நீங்கலாம் ஒரு நாள் ரெண்டு நாள் இதழை பார்க்கமுடிவில்லை என்றாலே எப்படி கொதித்துப்போகிறீர்கள்? நான் இரண்டு மாதமாக காத்திருக்க வேண்டியதாய் போயிற்று. அதனால்தான் இந்த சிறப்பு ஏற்பாடு. நல்ல நண்பராக இருந்தால் சப்போர்டுக்கு ஈரோட்டிலிருந்து ஆமைவடை வாங்கி அனுப்பி வையும்யா.. அதை விட்டுவிட்டு வயித்துவலி வரும் என்று சாபம் விடுறாரு.. :-))))))

      (ஆம்.. மேச்சேரியார் எங்கே கொஞ்ச நேரமாய் காணவில்லை. பில்லிசூனியம் வைக்கப்போயிருப்பாரோ? :-)) )

      Delete
    4. @கணேஷ், உங்கள் ஊரில் என்ன சிறப்பு பதார்த்தம் பேமஸாம்? :-)))

      Delete
    5. வட ஆஆஆம்ம்ம வட.
      அப்பறம் வடைக்குள்ள ஆமைய காணோம்னு கேக்கப்படாது.
      ப்ளு கிராஸ்ல புடிச்சு குடுத்துருவேன்.

      Delete
  19. கத்தப்போறேன்... எல்லாரும் காதை மூடிக்கங்க ப்ளீஸ்!

    ஆச்சா? சரி!

    (((((( எனக்கும் புக்கு வந்திடுச்சேஏஏஏஏய்ய்ய்... )))))

    ReplyDelete
    Replies
    1. தபால்ல புக் அனுப்ப சொல்லி மடத்தனம் பண்ணிட்டேன்!!

      3 நாள் கழிச்சு தான் புக் வருது!!

      வாயோரம் ஜலம் வடிய எல்லா கமண்டையும் திரும்ப திரும்ப படிச்சுட்டிருக்கேன்!!

      Delete
    2. நல்லவேளை புறா மூலம் அனுப்ப சொல்லவில்லை :-)

      Delete
    3. புறா கூட ஒரு நாள்ல வந்திரும்!!

      Delete
    4. வரும் வழியில் யாராவது சுக்கா போட்டு சாப்பிட்டு விடுவாங்க ஜி. அப்படியே காத்துகிட்டே இருக்க வேண்டியது தான்.

      Delete
    5. இது யாரையோ ( கருர்காரரை) மனசில
      நெனச்சு சொன்னமேரிகீது.

      Delete
    6. ச்சே ச்சே அந்த தம்பி நல்ல தம்பி இப்ப எல்லாம் வேறும் புறா சுக்கா மட்டும் தான் சாப்பிடும்மாம் அதுவும் பெப்பர் தூக்கலாக :-)

      Delete
  20. Replies
    1. நானும்தான்
      இருந்தாலும் லார்கோவுக்கும் ஷெல்டனுக்கும் பிறகுதான் ஷானியா.

      Delete
  21. அரம்பமே அசத்தல். விடை கொடு ஷனியா. பெயர் காரணம் super. எப்படி முடிய போகிறது என்ற suspense இறுதி வரை இருந்தது.

    Lady s hi technology மாடஸ்டி. மடஸ்டிக்கும் lady s நிறைய ஒற்றுமை.

    ReplyDelete
  22. Julia - Different genre but easily predictable script
    7/10

    ReplyDelete
  23. சிக்பில் கிளாசிக்கில் வந்து உள்ள கதைகள் இரண்டும் இது வரை படித்து இல்லை. எனவே இதனைத்தான் முதலில் படிக்க ஆர்வத்துடன் உள்ளேன். எப்படியாவது இந்த வாரத்திற்குள் படித்து விட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நானும் சிக்பில் கிளாசிக்கில் வந்து உள்ள கதைகள் இரண்டும் இது வரை படித்து இல்லை.

      Delete
    2. இரும்பு கொபாய் இப்போது தான் முடித்தேன். வழக்கம் போல் காமெடி தோரணம்.

      சிக்பில் அட்டை படம் " சும்மா தகதக ஜெலிக்குது டோய்"

      Delete
    3. PFB & GKK : இரண்டுமே பக்காவான காமெடி மேளாக்கள் !! In for a treat !!

      Delete
  24. விஜயன் சார், புத்தகம்கள் அனைத்தும் அருமை, குறிப்பாக அச்சுதரம் மற்றும் பைண்டிங். கார்ட் பைண்டிங்கில் உங்கள் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட். நன்றி நன்றி நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும்.

    ReplyDelete
  25. அடடா... லயன்-300 குண்டுவைப் பார்த்தமாத்திரத்தில் மனசுக்குள்ளே ஏன்தான் அப்படியொரு உற்சாகம் பிச்சுக்குதுன்னே தெரியலை! கலர் கலராய், விதம் விதமாய், சைஸு சைஸாய்... உள்ளம் கொள்ளை போகிறது போங்க!

    புத்தக வடிவமைப்பில் முதல் பரிசைத் தட்டிச் செல்வது 'லயன்-300'றென்றால், அட்டைப் பட அழகில் முதல் பரிசு லேடி-Sக்கும், சிக்-பில் க்ளாசிக்கிற்கும்!

    குறிப்பாக, லேடி-S அட்டைப்படம் - அந்த நீல வண்ணப் பின்னணியும், அந்த எழில்கொஞ்சும் முகமும் - பார்க்கும்போதெல்லாம் யாரோ மயில்தோகையினால் தடவுவதைப் போன்றதொரு உணர்வு! ப்ப்பா!!

    'ஹாட்-லைன்' - எடிட்டரின் மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாய் - படிக்கும்போதே நமக்கும் உற்சாகம் பன்மடங்கு ஏகிறுகிறது! நமது காமிக்ஸ் பயணங்களை ரயில் எஞ்சினோடு ஒப்பிட்டதும், 33 ஆண்டுகளில் 396 ஆக இருக்கவேண்டிய வெளியீடுகளின் எண்ணிக்கை சிலபல காரணங்களால் 300ஆக பின்தங்கியிருப்பதும்; தான் ஓய்வுபெறும் காலத்திற்குள் அந்த குறைபாட்டை எப்பாடுபட்டாவது நிவர்த்திசெய்ய உறுதியெடுத்திருப்பதும், இப்போதிருந்தே 'அடுத்து லயன்-350க்கு என்ன பண்ணலாம்?'என சிந்தனை வயப்படுவதும் - நிஜமான உற்சாக ஊற்றுகள்!! எங்கள் எடிட்டருக்கு என்றைக்கும் வயதாகிவிடாது!!

    'முத்து-400' காமிக்ஸ்-டைமில் - ஏறக்குறைய அரைநூற்றாண்டுகளுக்கு முன்பு இக்காமிக்ஸ் பயணத்திற்கு அடிக்கல் நாட்டிய, நம் மதிப்பிற்குரிய சீனியர் எடிட்டருக்கு ஒரு 'ஓ' போடச் சொல்லியிருப்பதெல்லாம் சரிதான் எடிட்டர் சார்... ஆனால் இந்த மைல்கல் இதழிலாவது சீனியர் எடிட்டரின் சிறப்புக் கட்டுரையொன்று இடம் பிடிக்குமென்று ஆசையோடு எதிர்பார்த்திருந்த எங்களின் நினைப்பில் ஒரு லோடு மண்ணைக் கொட்டியிருப்பது நியாயம்தானா?!! ஆனாலும் நீங்கள் சீனியர் எடிட்டரை ரொம்பத்தான் ஓரங்கட்டுவதைப் போல உணர்கிறோம். இதற்கு நீங்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை! உங்களாண்ட டூ!

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு விஜய் : காதைக் கொண்டு வாங்களேன் - ஒரு இரகசியத்தைச் சொல்லி வைக்கிறேன் ! முன்பெல்லாம் மாதமொரு புக்கோ ; ஒன்றரை புக்கோ வெளியானால் பெரும் சாதனையாக இருக்கும் தானே ? அப்போதெல்லாம் ஹாட்லைன் ; காமிக்ஸ்டைம் என்று எழுதுவதுமே ஒரு குட்டிப் பக்கம் மட்டும் தான் ! So அந்நாட்களில் பேனா பிடிக்கும் போது கட கட வென்று ஏதேனும் எழுதிட சாத்தியமாகும்.

      ஆனால் இப்போதெல்லாம் எங்கள் தெருவோரப் பூனை குட்டி போட்டது முதல் ; ஜானி நீரோ டான்டெக்ஸ் ஜட்டி போட்டது வரைக்கும் வாரா வாரம் ஞாயிறுதோறும் உங்களிடம் ஒப்பித்து வைக்கும் போது - மாதாந்திர ஹாட்லைன்களை சுவாரஸ்யமாக்கிட மானாவாரியாய் முழிக்க வேண்டி வருகிறது ! அதிலும் இதழ்களின் தயாரிப்புப் பணிகளை மாதக் கடைசிக்குள் முடித்திடும் அல்லலில் - "ஹாட்லைன் இன்னும் பாக்கியுள்ளது அண்ணாச்சி ; அது வந்தா தான் இன்னிக்கு ராத்திரிக்கு பிரிண்டிங் சாத்தியம் !!" என்றபடிக்கே ஆஜராகிடும் மைதீனைப் பார்க்கும் போதே டர்ராக இருக்கும் !! நமக்கிருப்பதோ ஒரே எழுத்து பாணி - அதுவும் அலுத்துப் போகும் நாளில் - வீட்டோரமாய் ஒரு பொட்டிக் கடை தான் (boutique கடை அல்ல !!) போட்டாக வேண்டும் என்ற நிலையில் அன்றைய பொழுது ராவினில் எழுதத் தொடங்குவேன் - குறிப்பிட்ட அந்த நொடியில் தலைக்குள் தோன்றும் பொறியினைப் பற்றிக் கொண்டே ! So இம்முறை மனதில் பட்டது நமது துவக்க நாட்களது ஆமை வேகங்களும் ; சமீப காலத்து முயல் வேகங்களுமே ! So இந்தக் கலவையானது பின்தங்கி நிற்கும் வெளியீட்டு நம்பரைச் சமன் செய்திடுமா ? என்ற மகா சிந்தனை எழுந்த நொடியில் - அதுவே லயன் # 300 -ன் தலையங்கமானது !

      And சீனியர் எடிட்டரை எழுதச் சொல்ல வேண்டாமென்ற எண்ணமெல்லாம் கிடையாது ! ஆனால் ஒவ்வொரு தினத்தின் பாதியையும் காமிக்ஸ் பானைக்குள் தலை விட்டுச் செலவிடும் எனக்கே எழுத சரியானதொரு spark கிட்டுவது குதிரைக் கொம்பாக இருக்கும் போது, ஓய்விலிருக்கும் சீனியரிடம் பத்தி பத்தியாக காமிக்ஸ் கட்டுரைகளை எதிர்பார்ப்பது சிரமமே !
      இதனை அனுபவத்தில் உணர்ந்தவன் என்ற முறையில் தான்
      சீனியரைச் சிரமப்படுத்துவதில்லை !

      Delete
  26. Yet to receive my courier.

    Shall comment once I complete my reading

    ReplyDelete
    Replies
    1. maxo : இம்மாதப் பார்சல்கள் எடை கூடியவை என்பதால் முதல் நாள் இரவின் லோடில் முழுவதையுமே சேர்த்திடுவது சந்தேகமே என்ற எண்ணத்தில், ஒரு சிறு எண்ணிக்கையினை மறு நாளுக்கு புக்கிங் செய்துள்ளனர் ! துரதிர்ஷ்டவசமாக நீங்கள் அந்த "மறு நாள் கோட்டாவில்" இருந்திருக்க வேண்டும் நண்பரே....! நாளைய பொழுது உங்கள் கைகளில் இதழ்கள் இருந்திட வேண்டும் !

      Delete
  27. டியர் விஜயன் சார், சூப்பர் 6 ல் சாகச வீரர் ரோஜரின் ஆல்டைம் பேவரிட் மர்மகத்தியும், இரத்ததீவு ம் வெளிவருவது பெரு மகிழ்ச்சீ.ரோஜரை பிடிக்கவில்லை என்று சொல்லும் நண்பர்களும், இந்த கதைகளை படித்தபின் தங்கள் நிலைபாட்டை மாற்றி கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.


    விஜயன் சார் இன்னும் கொரியர் வரவில்லை. வேண்டுமென்றே எனக்கு தாமதம் செய்கின்றீர்கள். மேலும் கொரியர் அலுவலகத்திற்கு போன் செய்து எனக்கு மட்டும் நான்கு நாட்கள் தாமதமாக. டெலிவரி செய்ய சொல்லியிருப்பீர்களோ என ஐயப்படுகிறேன்.இன்னும் பலபல ஐயப்படும்போதுதான் நான் சந்தா கட்டாதது நினைவுக்கு வந்தது. எனவே வழக்கம்போல சேலம் தேசன் புத்தக நிலையத்தில் வாங்கிகொள்கிறேன். !!!!

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar,Salem. : //ரோஜரை பிடிக்கவில்லை என்று சொல்லும் நண்பர்களும், இந்த கதைகளை படித்தபின் தங்கள் நிலைபாட்டை மாற்றி கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு//


      அவ்விதமே நம்புகிறேன் அடியேனும் !

      Delete
  28. சார் எனக்கு வந்த lady s புக் கசங்கி போன காகிதத்தில் அச்சிடப்பட்டு வந்து இருக்கிறது,replacement copy கேட்டு மெயில் அனுப்பி இருக்கிறேன். Please look into it ...

    ReplyDelete
    Replies
    1. Giridharan V : நாளையே அனுப்பச் சொல்லியுள்ளேன் சார் ! Sorry !!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இலருக்கு மட்டும் ஏன் இப்படி
      வரக் வரக் வரக்


      மலங்க மலங்க முழிக்கும் படம் ஒண்ணே ஒண்ணு

      Delete
  29. நேர்த்தியான தரம் மிரட்டலான அட்டைப்படங்கள்,பிடியுங்கள் பாராட்டுகளை!

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : இதோ பிடித்துக் கொண்டு உரியவர்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடுகிறேன் நண்பரே !

      Delete
    2. ///இதோ பிடித்துக் கொண்டு உரியவர்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடுகிறேன் நண்பரே///

      அப்போ இந்த மாசக் காமிக்ஸெல்லாம் நம்ம கம்பேனில தயாரிச்சதில்லைங்களா, எடிட்டர் சார்? :P

      Delete
    3. ஈரோடு விஜய் : நம்ம கம்பெனிலே நாமளே ஒண்டியா வடை சுடுறது இல்லீங்களே ? மாவு ஊரப் போட ஒரு ஆளு ; ஆட்ட ஒரு ஆளு ; தப்பிக் கொடுக்க ஒரு ஆளுன்னு இருக்க ...அதைச் சட்டியிலே .போட்டு எடுக்கிறே மாஸ்டர் தானுங்களே நானு ?

      So 'வடை செம மாஸ்டர்' ன்னு ஜனம் சொன்னாக்கா உள்ளாற குஷியாகிக்கலாம் தான் ; but வடைக்குமொரு கதையுண்டுன்னு மறக்கப்படாதில்லையோ ?

      Delete
    4. ஐ நம்ம கடையில் வடை எல்லாம் சுடுரிங்கலா! சொல்லவே இல்லை... இதுக்கு எப்படி ஆர்டர் போடுவது?

      Delete
    5. ST ன்னா 6.50 ரூவா
      POST ன்னா 7.50 ரூவா

      BANGALORE ன்னா 9.50 ரூவா

      WITHOUT GST..

      Delete
    6. அய்யா அது ஆம வடைங்களா???

      Delete
    7. சூப்பர் சார் உங்களுக்கு வடை சுட தெரியும். நானும் 2வகைகள் சமைப்பதில் செம எக்ஸ்பர்ட்...
      1.குடிக்க சுடு தண்ணி சமைப்பேன்.
      2.சுவையான "முட்டை வேகவைப்பது" செய்வேன்.
      ஆர்டர் ப்ளீஸ்... ஹி...ஹி...

      Delete
  30. விஜயன் சார், ரோஜர் கிளாசிக் இந்த வருடம் எந்த மாதம் வரப்போகிறது? விளம்பரம் செய்துள்ள இரண்டு கதைகளையும் நான் படித்தது இல்லை. ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  31. விஜயன் சார் அட்டகாசம் ... இந்த வருடத்தின் ஹைலைட் இந்த மாதமும் அடுத்த மாதமுமே ...

    300 & 400 - அருமை .... அதகளம் செய்கிறது ...

    மேலே நண்பர்கள் கூறியது போல சூப்பர் 6 ஐ சூப்பர் 12 ஆக மாற்றலாம் சார் ...

    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : //இந்த வருடத்தின் ஹைலைட் இந்த மாதமும் அடுத்த மாதமுமே ... //

      அட்டவணையை சென்றாண்டு தயாரிக்கும் போதே யூகிக்க முடிந்தது சார் - இந்த மாதங்களின் தாக்கம் எவ்விதமிருக்குமென்று !!

      Delete
  32. புத்தக திருவிழாவிற்கு டிக்கெட் எல்லாம் போட்டாச்சு. குடும்பத்துடனா அல்லது தனியாகவா என்பது சஸ்பென்ஸ்.

    ReplyDelete
  33. இந்த மாத காமிக்ஸ் பார்சலை என் கைகளில் கொடுத்த உடன் என் மகள் ஆர்வத்துடன் கேட்டுத் கேள்வி, ரின் டின் உண்டா.. இப்போது ரோட்டில் ஏதாவது நாயை பார்த்துவிட்டால் அதற்கு ரின் டின் அல்லது டெரர் என பெயர்வைப்பது பழக்கமாகி விட்டது.

    அடுத்த வாரம் முதல் அவளுக்கு அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தை கதையை சொல்ல ஆரம்பிக்க போறேன்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : மெய்யாக முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசத்தைக் கொணரும் சேதியிது சார் !! ஒரு குட்டியின் உலகினுள் புகுவது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட லோகத்தினுள் கால் பதிப்பதற்குச் சமானம் எனக்கு !! அந்த வாண்டின் மனதுக்குள் ரின்டின் நுழைந்திருப்பது, நானே நுழைந்த சந்தோஷத்தைத் தருகிறது !

      Delete
    2. உண்மை சார். அடுத்து ஸ்மர்ப் உலகிற்கு அழைத்துச் செல்ல போகிறேன். நன்றிகள் சார்.

      Delete
    3. பாருங்க சாா்! நம்ம கார்ட்டூன் பவரை!! கொழந்தைங்கெல்லாம் புத்திசாலிங்க அவங்களுக்குப் புாியுது காா்ட்டூன் தான் பெஸ்ட்ன்னு!! ஆனா .....???

      😷😷😷😷😷😷

      எதுக்கு வம்பு!!!

      Delete
    4. ஸ்மா்ப் என்னைய மாதிாி கொழந்தங்களுக்கு ரொம்ப புடிக்கும்!!!

      Delete
    5. பரணி ஐயா கண்ணுல வேர்க்குது

      Delete
    6. ரின் டின் @ மூக்கில் வேர்க்காமல் இருந்தால் சரிதான்.

      Delete
  34. Hi friends enakku Tamil il eppadi comment potuvadhu endru sollungalen?

    ReplyDelete
    Replies
    1. If you are typing from Android phone mean, I suggest you to use sellinum software. Laptop means use Google input tools.

      Delete
  35. கவரிமான்களின் கதை :-

    மெதுவாக நகரும் கதை, ரபேல் தனது காதலியை மீட்க கிளம்பியதும் வேகமெடுக்கத் தொடங்கிவிடுறது. .! கார்சனும் வில்லரும் தனித்தனியே பிரிந்து பணியை பங்கிட்டுக் கொள்ளும் ஒவ்வொரு கதையும் செம்ம சுறுசுறுப்பாக இருக்கும். இதுவும் அதற்க்கு விதிவிலக்கல்ல. .!

    பணயக் கைதிகளை சுட்டுவிடுவேன் என்று சொல்லி, வில்லரையும் கார்சனையும் துப்பாக்கிகளை கீழே போடச்சொல்லி செர்ரோ மிரட்டும்போது வில்லர் எடுக்கும் நடவடிக்கை செம்ம த்ரில்லிங்.

    "கிட் ! அந்த ஈனப்பிறவி நிலைகொண்டுள்ள இடத்தை யூகமாக தெரிந்து கொண்டாயல்லவா "

    "யெஸ் டெக்ஸ்.! "

    "நான் குறிவைக்கும் இடத்தை குறிவைத்து சராமரியாக சுடு "

    என்று மிரட்டலுக்கு பணியாமல் செர்ரோவை துவம்சம் செய்து ஃபாதரையும் ட்ரைவரையும் காப்பாற்றும் இடம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. .

    போலவே, காலவெரா சபென்ஸும்.! ரபேலின் தந்தையாக காலவெராவே இருப்பார் என்பதும், அவரே இத்தனை நாட்களும் உதவியாளராக இருந்தார் என்பதும் எதிர்பாராத ட்விஸ்ட்.!
    திமிர்பிடித்த மாண்டேயா குடும்பத்து ஆணவத்தை அடக்கி சுபமாக கதையை முடிக்கிறார்கள் வில்லரும் கார்சனும். .! மீண்டும் ஒரு நிறைவான டெக்ஸ் வில்லர் தெறிமாஸ் இந்த கதை. .!
    மாயாண்டி குடும்பத்தாரை ச்சே மாண்டேயா குடும்பத்தாரை பார்க்கும்போது மெக்ஸிகோ படலம் ஏனோ நினைவுக்கு வந்தது..!

    ரேட்டிங் 10/ 10

    ReplyDelete
    Replies
    1. யாராச்சும் வந்து

      "என்னாது சிவாஜி செத்துட்டாரா "ன்னு கேட்டிங்க.. .,

      நம்ம ஆதி ஸ்டைல்ல "பிச்சு பிச்சு "

      (பார்சல் வராததால பழைய விமர்சனம் ) :-)

      Delete
    2. நல்லவேளை ட்ராகன் நகரம் விமர்சனம் எழுதவில்லை :-) பார்த்து செய்யுங்கள் ஜி.

      Delete
    3. நீங்க பரவால்ல,

      நான் "என் பெயா் டைகா்" படிச்சிட்டிருக்கேன்!!!

      ஒரு வருசமா இந்த ஒரு புக் மட்டும் பென்டிங்கிலயே இருக்கு!!

      Delete
    4. மிதுன் என் பெயர் டைகரை ஒரே ஷாட்டில் படித்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும்

      Delete
    5. ஒரே ஷாட்டில் படிக்கலாம்னுதான் ஒரு வருசமா பென்டிங் ஆயிருச்சு.

      ஆனா இந்த தடவை விடமாட்டேன்!!

      அப்புறம் EBF ல் அடுத்தது வேற ரெடியாகிட்டிருக்கே!!

      Delete
    6. ஏப்பா புக் வர லேட்டானாத்தான் தல கதைக்கு விமர்சனம் போடுவீங்களா...க்ர்ர்ர்ர்...
      (மாதா மாதம் லேட்டாக கிடைக்க செய்வது)

      Delete
  36. விஜயன் சார் கை கொடுங்க லயன்300
    சூப்பரோ சூப்பர். அதைவிட ஈரோட்டில்
    தாங்கள் அறிவிக்கப்போகும் சந்தா G for
    Gunnduu புக் Lion300போலவே மாதம் 4
    சிறப்பு கதைகளோடு புத்தாண்டு முதல்
    என்று. ம்மா சும்மா எழுப்பாதம்மா
    இப்பத்தான் ஒரு நல்ல கனவு.
    டேய் விடியகாலை கண்ட கனவு பலிக்கும்டா 12-40AMஇன்றைய நாளின்
    விடியல்தானே???

    ReplyDelete
    Replies
    1. சாா்,

      அண்டா்டேக்கா் 3&4 சூப்பா்!

      அதுவும் ஹாா்டுகவா்ல!!

      Delete
    2. வராத கதைக்கெலாம் ஹார்டு பவுண்டு போடுறாங்களே... அடேய் கொரியர் தம்பு எங்கள கொஞ்சம் காப்பாத்தி விடப்பா...
      க்கும் இது புறா விடு தூதா...கிழிஞ்சது தர்மபுரி...
      லயன் 400க்கும் கவர் மாட்டாமல் விடமாட்டாங்க போல...

      Delete
    3. இன்னாச்சி டெக்ஸ்.

      Delete
    4. கணேஷ் ஜியால புக் வந்தும் படிக்க முடியல, குண்டு புக் கனவா வருது...

      மிதுனுக்கு போஸ்டல் சர்வீஸ் 4நாள் டிலேவாத்தான் பார்சல் டெலிவரி ஆகும்போல, அதனால் இன்னும் ஐரோப்பாவிலேயே எழுதாத கதைக்கு ஹார்ட் பவுண்ட் போடுறாப்புல...

      ரவி கண்ணர் அங்கிள் போன மாச கதைக்கு விமர்சனம் போடறாரு...

      இன்னமும் என்னவெல்லாம் செய்ய வைக்குமோ டெலிவரி தாமசம்...
      அதான் பயந்து வருது...
      கியூபா போனால் அங்கிட்டு பாம்புகிட்டயே பேசுறான், பயர்லியே எழுதுறான்...மம்மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ...

      Delete
  37. லேடி S அட்டகாசம், அருமையான கதைக்களம், ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்புக்கும்,திருப்புமுனைக்கும் பஞ்சமில்லை,தாராளமாக சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கலாம்,வாசிப்பவர்களுக்கு
    லேடி S கதாபாத்திரத்தின் மேல் ஏற்படும் ஈர்ப்பே அதன் வெற்றிக்கு சான்று.
    வெல்கம் ஷானியா(லேடி S)

    ReplyDelete
  38. ஹாய் வணக்கம். என் முதல் கமெண்ட். இதழ்கள் 300, 400 மைல்கல் தொட்டதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் நன்றி. காமிக்ஸ் உலகில் உரையாடுவதில் மகிழ்ச்சி. கமெண்ட்ஸ் படிப்பதன் மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. அத்துடன் காமிக்ஸ்மேல் உள்ள அனைவரின் ஆர்வத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.எத்தனை எதிர்பார்ப்புகள். எத்தனை ஆர்ப்பாட்டங்கள். எத்தனை பரிந்துரைகள். கொஞ்சம் வியப்பாகவும் இருக்கிறது.

      Delete
    2. @ Priya Alamelu

      நல்வரவு! _/\_

      Delete
  39. அப்பாடா இப்பொழுது தான் கொரியரில் இருந்து தகவல்...மனம் நிம்மதி ஆயிற்று...இனி மாலை வரை காத்திருக்க வேண்டும்...

    ReplyDelete
  40. புத்தகங்களை கைப்பற்றியாச்சே..!!

    சிக்பில் க்ளாசிக்ஸ் சும்மா அள்ளுது..!
    லேடி S சித்திரங்களும் கலரிங்கும் செம்ம செம்ம..!!
    லயன் 300 ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு குண்டு புக் சூப்பரப்பு..
    சில்வர் ஷ்பெசல் சிக்குன்னு இருக்கு..!
    மொத்தத்தில் செம்மயான விருந்து..!!

    ReplyDelete
  41. எடிட்டர் சார்,

    அப்சல்யூட் க்ளாசிக்ஸுக்கு அழகே லக்கியும் சிக்பில்லும் தான்.!

    மற்றவற்றைப்பற்றி கூட கவலையில்லை சார். தயவு செய்து சூப்பர் சிக்ஸில் லக்கி, சிக்பில் இருவரை மட்டும் கைவிட்டு விடாதீர்கள் ப்ளீஸ்.!

    லக்கி, சிக்பில் இருவரின் கதைகள் ஒவ்வொன்றும் பொக்கிசங்கள். அவற்றை தரமான வெளியீடுகளாக சேர்த்து வைக்கவேண்டும் என்பது எங்களுடைய வாழ்நாள் ஆசை. .!

    ReplyDelete
    Replies
    1. டிராகன் நகரம் வரட்டும் சாரே...பொறவு டெக்ஸ்ம் உங்கள் லிஸ்ட்ல இடம்பிடிப்பார்...

      Delete
    2. லக்கி, சிக்பில் இருவரின் கதைகள் ஒவ்வொன்றும் பொக்கிசங்கள். அவற்றை தரமான வெளியீடுகளாக சேர்த்து வைக்கவேண்டும் என்பது எங்களுடைய வாழ்நாள் ஆசை. .!//
      வழி மொழிகிறேன்.

      Delete
    3. ///டிராகன் நகரம் வரட்டும் சாரே...பொறவு டெக்ஸ்ம் உங்கள் லிஸ்ட்ல இடம்பிடிப்பார்...///

      டெக்ஸ் வில்லர் எப்பவுமே இடம் பிடித்து இருப்பவர்தானே?? அவருக்கு வேண்டுகோள் தனியாக தேவையில்லைன்னு நினைச்சேன்யா.. தப்பா என்ன?? ஹிஹி..!!

      Delete
    4. சிக்பில் classicல அந்த 98,99&100ம் பக்கங்கள் எப்படியா...!

      Delete
    5. ///சிக்பில் classicல அந்த 98,99&100ம் பக்கங்கள் எப்படியா...!///

      98,99 முழுக்க அப்புறம் 100ஆம் பக்கத்தின் முதல் இரண்டு - இவை அனைத்தையும் முழுவண்ணத்தில் மறுபதிப்புகளாக வாங்கிட்டா போதுமே.. ஹிஹி பிறவிப்பய்ன் அடைஞ்சிடலாமே..!!!

      Delete
    6. 75ரூவா வெளியீடுகள்ல வேணுங்களா...இல்ல இம்மாத சூப்பர்6 க்ளாசிக்களாக வேணுங்களா..!!!

      Delete
  42. I am waiting....
    Book vanthatum Baden Firends...

    ReplyDelete
  43. பொக்கிஷம் கிடைச்சிருச்சே
    முதல் சாய்ஸ் சிக்பில் கிளாசிக் தான்
    லயனின் 300 அதகளப் படுத்துகிறது
    லேடி S அட்டைப் படம் சான்ஸே இல்லை அட்டைப் படங்கள் சர்வதேச தரமுடன் உள்ளது
    மற்றவை படித்தவுடன்

    ReplyDelete
  44. அனைத்ததும் படித்தாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. அதற்குள்ளாகவா??

      சூப்பர் சார்..! ரோபோ சிட்டி மாதிரி படிக்கலைதானே?? :):):)

      (தமாஷு சார்.)

      Delete
    2. உண்மை. அனைவரும் தங்களுடை விமர்சனங்களை எழுதட்டும். அதன் பிறகு 2-வது முறையாக படிக்க வேண்டும் ஆராய்ச்சிக் கண் கொண்டு.

      Delete
  45. இந்த மாத புத்தகங்கள் எதுவும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை.முதலிடத்திற்கு கடும் போட்டி உருவாகலாம்.

    ReplyDelete
  46. classic books like maayavi,lawrence and david,johnny nero illaathathu emaatrame

    ReplyDelete
  47. க்யூபா படலம் ...

    இதுவரை வந்த டெக்ஸ் கதைகளில் மிக சிறந்த கதை என்னும் பட்டத்தை தட்டி செல்லும் என நம்புகிறேன் ...

    மாயாஜால அம்சங்கள் இருப்பினும் அவை சொற்பமாகவும் யதார்த்த வரைமுறைக்கு ஓரளவேனும் உட்பட்டே உள்ளன ...

    பொழுது போக்கு அம்சங்கள் சிறப்பாக உள்ள டெக்ஸ் கதைகள் பல உண்டு ..

    ஆனால் க்யூபா படல பக்கங்கள்

    நட்பு ,அதற்கான தியாகம் , அதிரடி சண்டைகள் , வியூகங்கள் , வரலாறு , கதாபாத்திரங்களிடையே நிகழும் உரையாடல்கள் , ஒரு அதிஅற்புதமான விருந்தை நம் கண்முன்னே கொண்டு வருகின்றன ..

    என்வரையில்

    வல்லவர்கள் வீழ்வதில்லை -யையும் தாண்டி

    கார்சனின் கடந்த காலம் -அடைந்திருக்கும் மங்கா புகழை க்யூபா படலம் தொட்டு நிற்கும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை .

    ReplyDelete
    Replies
    1. யாரங்கே பொருளருக்கு ஒரு டஜன் வாங்கா ச்சே மாங்கா பார்சல்...

      Delete
    2. ///ஒரு டஜன் வாங்கா ச்சே மாங்கா பார்சல்.///

      ஹா ...ஹா...ஹா...க்யூபா படலம் முடிச்சிருப்பீங்கன்னு தெரியும் ...

      வாங்கா >>>>> மாங்கா செம டைமிங் ...:-)

      நீங்க டெக்ஸ் கதைக்கு விமர்சனம் பெரும்பாலும் எழுத மாட்டீங்க ...அதுக்கான காரணம் இங்க எல்லாத்துக்கும் தெரியும் ...க்யூபா படலத்துக்கு ஒரு விமர்சனம் தெறிக்க வைக்கும் உங்க நடையில் எழுதி இங்க போஸ்ட் பண்ணுங்க ...அப்கோர்ஸ் பெரும்பான்மையோருக்கு புக் கிடைச்சு படிச்சபின்னாடி.......

      Delete
    3. selvam abirami : இழுத்துப் பிடித்திருந்த மூச்சை லேசாக விட்டுப் பார்த்துக் கொள்கிறேன் சார் - இந்த நொடி முதலாய் !!

      டெக்ஸ் கதைகளின் தேர்வென்பது கிட்டத்தட்ட ஒரு மாதத்தை விழுங்கி கொள்ளுமொரு சமாச்சாரம் என்பதை நாமறிவோம் ! கதைகளுக்கிடையே இயன்றளவு வித்தியாசம் காட்டிட வேண்டுமே என்ற வேட்கையும் உள்ளுக்குள் வரிந்து கட்டிக்க கொண்டு நிற்கும் தருணமது ! க்யூபா படலத்தை நான் 2016 -ன் அட்டவணைக்கே டிக் அடித்து வைத்திருந்தேன் முதலில்....ஆனால் இறுதி நிமிடத் தயக்கம் பின்வாங்கச் செய்தது.

      ஆனால் come what may - நடப்பாண்டில் இதனை வெளியிட்டே தீருவதென்ற வேகம் குடி கொண்டது - அந்த முற்றிலும் மாறுபட்ட களத்தை உங்கள்முன் கொணர்ந்து நிறுத்தும் ஆர்வத்தில் ! க்யூபா எப்போதுமே ஒரு மர்ம தேசமே நமக்கெல்லாம் ; and 'தல' அந்தப் பக்கமாய்த் தலை வைத்துப் படுப்பதுமே ஒரு அன்றாட நிகழ்வல்ல எனும் போது அந்தக் கானகங்கள் ; வூடூ சூன்ய உக்கிரங்கள் ; வரலாறு சார்ந்த கதையோட்டம் - என எல்லாமே exotic ஆகப் பட்டன எனக்கு !

      But கதையை டிக் அடித்த பிற்பாடு ஆண்டின் மையம் புலரும் வரைக்கும் இதனுள் தலைநுழைக்கும் நினைவு எழுந்திடவில்லை ! ஒரு வழியாய் தயாரிப்பினுள் புகுந்த போது வயிற்றை லேசாய்க் கலக்க துவங்கியது - அந்த மாந்த்ரீகம் சார்ந்த விஷயங்களை எவ்விதம் அணுகுவீர்களோ என்று ! தவிர இங்கே wisecracking கார்சனும் கிடையாது ; மாமூலான அரிசோனா, டெக்ஸாஸ் பின்னணியும் கிடையாதெனும் போது - பயப்பந்து பெரிதானது !!

      அன்றைக்கு இழுத்து வைத்தததை தொடரும் நாட்களில் விட்டுப் பார்த்ததாக ் வேண்டும் !

      Delete
    4. selvam abirami : இழுத்துப் பிடித்திருந்த மூச்சை லேசாக விட்டுப் பார்த்துக் கொள்கிறேன் சார் - இந்த நொடி முதலாய் !!

      டெக்ஸ் கதைகளின் தேர்வென்பது கிட்டத்தட்ட ஒரு மாதத்தை விழுங்கி கொள்ளுமொரு சமாச்சாரம் என்பதை நாமறிவோம் ! கதைகளுக்கிடையே இயன்றளவு வித்தியாசம் காட்டிட வேண்டுமே என்ற வேட்கையும் உள்ளுக்குள் வரிந்து கட்டிக்க கொண்டு நிற்கும் தருணமது ! க்யூபா படலத்தை நான் 2016 -ன் அட்டவணைக்கே டிக் அடித்து வைத்திருந்தேன் முதலில்....ஆனால் இறுதி நிமிடத் தயக்கம் பின்வாங்கச் செய்தது.

      ஆனால் come what may - நடப்பாண்டில் இதனை வெளியிட்டே தீருவதென்ற வேகம் குடி கொண்டது - அந்த முற்றிலும் மாறுபட்ட களத்தை உங்கள்முன் கொணர்ந்து நிறுத்தும் ஆர்வத்தில் ! க்யூபா எப்போதுமே ஒரு மர்ம தேசமே நமக்கெல்லாம் ; and 'தல' அந்தப் பக்கமாய்த் தலை வைத்துப் படுப்பதுமே ஒரு அன்றாட நிகழ்வல்ல எனும் போது அந்தக் கானகங்கள் ; வூடூ சூன்ய உக்கிரங்கள் ; வரலாறு சார்ந்த கதையோட்டம் - என எல்லாமே exotic ஆகப் பட்டன எனக்கு !

      But கதையை டிக் அடித்த பிற்பாடு ஆண்டின் மையம் புலரும் வரைக்கும் இதனுள் தலைநுழைக்கும் நினைவு எழுந்திடவில்லை ! ஒரு வழியாய் தயாரிப்பினுள் புகுந்த போது வயிற்றை லேசாய்க் கலக்க துவங்கியது - அந்த மாந்த்ரீகம் சார்ந்த விஷயங்களை எவ்விதம் அணுகுவீர்களோ என்று ! தவிர இங்கே wisecracking கார்சனும் கிடையாது ; மாமூலான அரிசோனா, டெக்ஸாஸ் பின்னணியும் கிடையாதெனும் போது - பயப்பந்து பெரிதானது !!

      அன்றைக்கு இழுத்து வைத்தததை தொடரும் நாட்களில் விட்டுப் பார்த்ததாக ் வேண்டும் !

      Delete
    5. @ எடிட்டர் சார் ...
      அழுத்தமான கதைக்களம் ...பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைய உள்ள டெக்ஸ் கதை இது சார் !!!!

      நண்பர்கள் பலரும் படிக்காத சூழ்நிலையில் கதை பற்றி குறிப்பிடவில்லை....

      ஆனாலும் ...சொல்லவேண்டியதை சொல்லிவிடுகிறேன் ...

      உங்கள் மொழிபெயர்ப்புகளில் இக்கதைதான் தலையாயதாக திகழும் என எண்ணுகிறேன் சார்.அற்புதமான வரிகள் .கறுப்பின ஒரு போராளி பேசும் வசனங்களுக்கு நீங்கள் தேர்ந்து எடுத்து இருக்கும் வார்த்தைகள் படிப்போரை உணர்ச்சி பிழம்பாக மாற்ற வல்லவை சார் ! கதையோடு கதா மாந்தரோடு ஒன்ற செய்யவல்ல இத்தகைய வரிகளுக்கு மனப்பூர்வமான பாராட்டுகள் .(ஸ்பாயிலர் தவிர்க்கும்பொருட்டு அவற்றை குறிப்பிடவில்லை )

      சிவபூஜையில் கரடி வசனம் மட்டுமே சிறு நெருடல் ..ஓரிரண்டு இடங்களில் எழுத்து பிழைகள் லேசான உறுத்தல்

      மற்றபடி க்யூபா படலம் '' மாஸ்டர் பீஸ் ''...

      Delete
    6. மாண்டலேஸ் கார்சன் இல்லாத குறையை ஓரளவு போக்கி விட்டதாக எண்ணுகிறேன் சார் ...ரை ஹ்யூமருக்கு பஞ்சமில்லை மாண்டலேஸ் மூலம் .

      Delete
  48. கீயூபா படலம்...(யார் வேணா படிக்கலாம்)

    20ஆண்டுகளுக்கு முந்தைய டெக்ஸ் கதைகளில் டயலாக்குகளை ஆசிரியர் சார் செதுக்கி இருப்பார்...இதிலும் அப்படியே...தனித்த கவனம் கொண்டு டெக்ஸின் டயலாக்குகளை நக்கல், சீரியஸ் கலந்து பிரத்யேகமாக படைத்திருக்கும் ஆசிரியர் சாருக்கு ஸ்பெசல் நன்றிகள்...

    கதை சும்மா ஜெட் வேகம்...

    1.37ம் பக்கம்...

    ஹைட்டி மற்றும் நியூ ஆர்லியன்ஸிலுள்ள ஊடு பழங்குடியினரிடையே "அது" பிரசித்தம்... அது பற்றி எனக்கு ஏதேனும் தெரியுமா டெக்ஸ்?

    டெக்ஸ்: அவர்களிடையேயும் தீவட்டித் தடியன்கள் உண்டு...அவன்களது நடுமூக்கில் குத்தினாலும் இரத்தம் பொளேரெனப் பீச்சியடிக்கிறது தான்...

    60ம் பக்கம்:-

    தம்பி நீ உள்ளே நுழைந்தபோது உன்னைப் பற்றி நான் தப்பாக நினைத்து விட்டேன்!ஸாரி!

    டெக்ஸ்: முட்டாள்கள் மட்டும் தான் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வதில் தயக்கம் காட்டுவார்கள்!

    62ம் பக்கம்:-

    டெக்ஸ்: வால்கள் ஆடத் தொடங்கினால் என் கைகள் நமநமக்கத் தொடங்கிவிடும் கண்ணா!

    இன்னும் பலப்பல இடங்களிலும் இதே போல பட்டாசான டயலாக்ஸ்....

    ReplyDelete
  49. பெங்களூரூ ....
    சேலம், ஈரோடு காரா்களெல்லாம் நல்ல கேட்டுக்கோங்க!!

    புக் வந்திருச்சே ஏஏஏஏஏஏ ....

    ஒரு போன் கால் போதும்
    POSTALல் வேண்டாம்,
    STல அனுப்புங்கன்னு!!

    பாா்சல் வந்திருச்சுல்ல!! வந்திருச்சுல்ல!!

    அதுக்குள்ளயும் எத்தன அலப்பர!

    புறாவென்ன!!?? சுக்கா ரோஸ்டென்ன!!??

    அதுலயும் இந்த பெங்களூரூஉஉஉஉஉ....
    குசும்பிருக்கே!!!

    ReplyDelete
    Replies
    1. வாய்விட்டு கதறி ஹார்ன் அடிப்பாங்களாம்,கட்டிப்புடிச்சி அழுவாங்களாம், வராத பாகத்துக்கு கவர் போடுவாங்களாம்,போஸ்ட் ஆபீசுக்கும் கொரியர் ஹப்புக்கும் ஷன்டிங் அடிப்பாங்களாம்,கட்டாத சந்தாவுக்கு கவர் வருமோ என கணக்கு பண்ணுவாங்களாம்,கட்டிய சந்தாவுக்கு கட்டங்கட்டிட்டாங்களோனு
      வீணாக கவலைப்படுவாங்களாம்....

      ஏப்பா அலப்பறை பூராவும் புக் வராத நீங்கள்லாம் பண்ணீட்டு, செவனேனு வந்த புக்கை கொஞ்சிட்டிருந்த "பச்சை" மண்ணுகள் மேல பழி போடுவீங்களா...நல்லாயில்லை ஆமாம்...

      Delete
    2. விடுங்கள் விஜய், நல்லதுக்கு காலமில்லை. :-)

      Delete
    3. ////நல்லதுக்கு காலமில்லை.////

      சுக்கா ரோஸ்ட்டுக்கா???

      Delete
  50. விஜயன் சாா்!

    ரொம்ப நன்றிங்க!!

    இந்த 30 வருட வாசனின் விமா்சனத்தை முதல்முறையாக வெளியிட்டதற்கு!!

    அதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்க 400வது இதழில்!!

    ரின்டின்கேனுக்கு ஜே!!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் மிதுன்...
      என்னுடைய முதல் விமர்சனமும் 17ஆண்டுகளுக்கு முன் லயனில் இடம்பெற்ற போது இப்படித்தான் நானும் மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி ஒரு வாரம் இருந்தேன்..., நம்ம எழுத்தையும் அச்சில் பார்க்கும்
      போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கே பேராணந்தம்...அதை வர்ணிக்க முடியாது...அந்த கணத்தில் வாழ்ந்து பார்த்தா தான் புரியும். என்சாய்...

      Delete
    2. சக்கரவர்த்தி @ பார்த்து. ஊருக்குள் சொந்த செலவில் போஸ்டர் அடித்து கொண்டாடுறமாதிரி கேள்விப்பட்டேன். என் ஜாய்.

      Delete
    3. ///நானும் மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி///

      அய்யோ ... அய்யோ ...
      ஒரே டமாஸு!!!

      Delete
  51. சிக்பில் க்ளாசிக்-மூன்று கதைகளும் மூன்று முத்துக்கள்.

    ReplyDelete
  52. கையில் ஒரு புதையல் பெட்டி கிடைத்தால் எப்படி ஒரு வீர நடை போட தோன்றும் ...அப்படி ஒரு நடையுடன் இன்று மாலை கொரியர் பாக்ஸை பெற்று கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.ஆசைஆசையாக பார்சலை பிரித்து புதையலை அப்படியே சாய்வாக கொட்டினேன்.லயன் 300 ..,முத்து 400 ..,காமெடி க்ளாசிக் ..,அசத்தல் லேடி என அனைத்து ரத்தினங்களும் கண்ணை கூச செய்தாலும் நான் முதலில் துழாவி கையில் எடுத்து ரசித்து புரட்டி பார்த்தது....



    சிரிக்க வேண்டாம்...

    "சில்வர் ஸ்பெஷல் "..

    ஆசிரியர் குறிப்பிட்ட படி ஒரு பரிதாபமான ஆனால் என்னை மிகவும் கவர்ந்த அழகான ,அட்டகாசமான உளவாளி .ஒரு மறுபதிப்போடு ஒரு புது சாகஸமும் சேர கூடுதல் மகிழ்ச்சி..உண்மையை சொல்ல போனால் இரண்டுமே எனக்கு புது கதை போல தான்..இந்த முறை முதல் இதழாக படிக்க போவது இவரை தான்...அதுவும் இன்றே தாமதமாகிவிட்டாலும் படித்தாகி விடலாமா என்று ஆனந்த குழப்பம்..

    அடுத்து காமெடி கிக் சிக்பில் ஸ்பெஷல் ..இதிலும் ஒரு சந்தோஷ கிக் விண்ணில் ஒரு எலி இதுவரை படிக்காத இதழ்...அட்டகாசமான தரத்தில் அசத்தலான பாணியில் ஒரு ட்ரூ க்ளாசிக் .விண்ணில் ஒரு எலியின் ஒரிஜினல் ஓவியத்தை ஆரம்ப பக்கத்தில் வெளியிட்டு இருந்தது அருமை சார்..இரும்பு கெளபாய் கதைக்கும் அவ்வாறே அமைந்து இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்குமோ என்பது எனது எண்ணம் மட்டுமே.அதே சமயம் இதுவரை வந்த நமது சிக்பில் சாகஸ அட்டைப்படங்களின் தொகுப்பு அட்டகாசமான அழகு ...இதுவரை..இனிவரும் இதழ்களுக்குமே இந்த பாணியை கொண்டு வாருங்கள் சார்..பார்த்து கொண்டே இருக்கலாம் போல .

    லேடி எஸ்...


    அட்டைப்படமும் சரி உட்பக்க சித்திரங்களும் சரி பார்வையிட்டவுடனே லார்கோ இதழை கையில் ஏந்தியது போன்றே ஓர் உணர்வு..கதையும் அவ்வாறே அட்டகாச படுத்துமா ...காத்து கொண்டு இருக்கறேன்.

    இறுதியாக ..

    அந்த குண்டு புக்...பெரிய சைஸ் ...வண்ணம்...இவற்றை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டு புரட்டி புரட்டி ரசித்து கொண்டே இருக்கறேன்.அட்டை பட டெக்ஸ் போஸ் அந்த முழுதோற்ற டெக்ஸின் சாகஸத்தை காண்பித்து இருந்தீர்களே..அது இருந்திருந்தால் இன்னும் பட்டாஸாக வெடித்திருக்குமோ..ஆனாலும்டெகஸின் அசாத்திய நீஈஈண்ட சித்திர சாகஸம்...இனிமையான இளவரசி...அழகு வீரன் ராபின்...முந்தைய சாகஸத்தில் மனதை கவ்விய ஜூலியா ..என புரட்ட ,புரட்ட அழகு தாளில் அட்டகாச கறுப்பு வெள்ளை திரைப்படத்தை காண போகும் ஆவல்...மொத்தத்தில் இந்த வாரம் முழுவதும் காமிக்ஸ் ரசிகர்களுக்கு தீபாவளியோ தீபாவளிதான் சார்..


    இதை விட அடுத்த மாத வெளியீடுகளின் விளம்பரங்கள்....ஓஹோ...ஓஹோ ...என்கிறது...இனி அனைத்தும் படித்து விட்டு வர கொஞ்சம் தாமதமாகலாம் சார்...நன்றி...




    ம்...மறந்து விட்டேனே....


    சீனயர் எடிட்டர் அவர்களுக்கு ஒரு பெரிய ...."ஓ"...:-)

    ReplyDelete
    Replies
    1. ///இந்த முறை முதல் இதழாக படிக்க போவது இவரை தான்...அதுவும் இன்றே///

      "சில்வா் ஸ்பெஷல்"

      ME TOO

      முதல் கதை படிச்சாச்சு!!
      பிரம்மாண்ட ஹாலிவுட் படமாக எடுக்கக்கூடிய அளவு ஒரு தரமான கதை!! என்ன ஒவியம் தான் ரொம்பவும் தரம் குறைவாக உள்ளது.

      ஆனாலும் சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு, இப்படியொரு கதையைப் படித்தல் என்பது அலாதியானதாகவே இருக்கும்!!

      Delete
  53. முழுதாய் ஆறு நாட்கள் கடந்தும் திருப்பூரில் சந்தா செலுத்திய அனைத்து நண்பர்களுக்கும் பார்சல் வந்து சேர்ந்தும் என்னுடைய மெயின் சந்தா பார்சல் இன்(று)னும் வந்து சேரவில்லையே எடி சார்

    என்ன காரணத்தினால் நிறுத்தி வைத்தீர்கள் என்று கேட்டேன் இதுவரையிலும் நீங்கள் பதில் கூறவில்லை..

    சங்கடமாக இருக்குங்க விஜயன் சார்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே!

      புக் அனுப்பியாச்சான்னு விசாாிச்சுகோங்க!!

      அனுப்பியாச்சுன்னா POD நெம்பா் கேட்டு, நோட் பண்ணிட்டு, கொாியா்ல Enquiry பண்ணினால் Status என்னன்னு தொிஞ்சுக்கலாமே!!

      ஏன்னா எனக்கும் கூட புக் முதலில் வரலை. POD நெம்பா் வைச்சு ST கூாியாில் விசாாித்ததில் புக் வந்திருச்சுன்னு சொன்னாங்க!!

      போய் பாத்த அட்ரஸ்ல கொஞ்சம் மிஸ்டேக்கும், செல் நெம்பா்ல 9 நெம்பா் தான் தவறாக குறிப்பிட்டிருந்ததால கூாியா்காரா்களால் என்னை காண்டக்ட் பண்ண முடியல!!

      So POD நெம்பா் கேட்டு conform பண்ணிக்கங்க ஜீ!!

      எங்க மிஸ்டேக்ன்னு கண்டுபிச்சரலாம்!!

      Delete
    2. Tex Sampath : எனக்கும் கூட சங்கடமாய்த் தானுள்ளது சம்பத் சார் ....! இதழ்கள் கிடைக்காத வருத்தமும், ஆதங்கமும் புரிகின்றது.. ஆனால் -

      4000 மைல் தொலைவில் ஒரு வாரமாய் இருப்பவனுக்கு , உங்களது சந்தாப் பிரதிகளை முடக்கி வைக்கும் கங்கணம் இருக்குமென்றும், அதற்கு இங்கே விளக்கம தந்திட வேண்டுமென்ற எதிர்பார்பிற்கும் பதில் சொல்லத் தெரியவில்லையே என்ற சங்கடம்...!

      இரு தனித் தனிப் பார்சல்களாய்... உங்களது சந்தா பிரதிகளையும் ், சூப்பர் 6 இதழையும் அனுப்பியிருக்கும் நம்மவர்களின் கவனக் குறைவை எண்ணிச் சங்கடமாயுள்ளது....!

      கோழி கிறுக்கல் போன்ற கூரியர் ரசீதுகளில் பெயர் என்ன ? ஊரென்னவென்று சரி பார்க்க முடிய மாட்டேன்கிறதே என்றும் சங்கடமாயுள்ளது... !

      மாதத்தின் 4 -ம் தேதிக்கே இம்முறை பிரதிகள் சாத்தியப்படுமென்று விளக்கியான பின்னரும் - "முழுசாய் 6 நாட்களென்று " மிகைப்படுத்த அவசியம் ஏனோ ? என்பது புரியாதது குறித்த சங்கடமும் உள்ளது ....!

      ஒரு சராசரியான பிழையினை உங்களுக்கு எதிரானதொரு சதி போல உருவகப்படுத்திப் பார்க்க வேண்டும் தானா ? என்ற கேள்விக்கு பதில் தெரியாத சங்கடமும் உள்ளது !

      மன்னிப்புக் கேட்டுக் கொண்ட கையோடு - இன்றைக்கு இன்னொரு செட் பிரதிகளை அனுப்பி வைக்கச் சொல்கிறேன் சார் ...

      Delete
    3. விஜயன் சாா்,

      எங்களுக்கெல்லாம் காமிக்ஸ் மேலான காதலை உண்டாக்கியதே நீங்கள் தானே!!

      புத்தகம் கிடைக்கவில்லையென்றால் "காதலியைப் பிாிந்த காதலனைப் போல் அல்லவா" எங்கள் நிலைமை!!

      வழக்கமான வாராந்திர, மாதாந்திர புத்தகங்களைப் போல் இருந்தால் யாா் கவலைப்படப் போகிறாா்கள்!!

      நண்பா் TEX SAMPATHஐ யாரென்று கூடத் தொியாது!!

      ////ஒரு சராசரியான பிழையினை உங்களுக்கு எதிரானதொரு சதி போல உருவகப்படுத்திப் பார்க்க வேண்டும் தானா ? என்ற கேள்விக்கு பதில் தெரியாத சங்கடமும் உள்ளது !////

      நண்பா் சம்பத் தமது வருத்தத்தை தொிவிக்கிறாா் அன்றி, வெறெந்த உள்நோக்கமும் இருக்காதுங்க சாா்!!

      அப்படியொரு காமிக்ஸ் காதலை உருவாக்கிய நீங்கள் நிச்சயமாக சங்கடம் கொள்ள வேண்டியதில்லை சாா்!

      Delete

    4. ///4000 மைல் தொலைவில் ஒரு வாரமாய் இருப்பவனுக்கு ,///

      உங்கள் ஆத்திரமும், வெறியும் எங்களுக்குப் புரியாமலில்லை எடிட்டர் சார்... பாஸ்போர்ட்டை திருடிய அந்தப் பாட்டீம்மாக்களின் விலாசத்தை எப்படியோ கஷ்டப்பட்டாவது கண்டுபிடிச்சுட்டீங்க... அதானே? அப்புறமா அவங்களை சந்தடியில்லாம 'விஷ்க்.. விஷ்க்... ' - அதானே அதானே, எடிட்டர் சார்? :)

      இதுமாதிரியான காரியங்களை மொதோ தபா செய்யும்போது ராவிலே தூக்கம் வராமப் போறது சகஜம் தான் சார்! ஆனா புரண்டு படுத்தீங்கன்னா பகல்ல நல்லாத் தூங்கிடலாம். அப்படியும் தூக்கம் வரலேன்னா, கையோட எடுத்துப்போயிருக்கும் தலீவரின் கடுதாசிய ஒருதபா படிங்க - சோகத்துலயே கண்ணெல்லாம் இருட்டினமாதிரி ஆகி, கபால்னு தூக்கம் வந்துடும்!

      மேற்கொண்டு எதனாச்சும் பிரச்சினைன்னா அங்கேயிருக்கும் நம்ம நண்பர்கள் ரட்ஜாவையோ, ஹசனையோ, திருட்செல்வத்தையோ, கனவுகளின் காதலனையோ உதவிக்குக் கூப்பிட்டுக்கோங்க. அவங்க அங்கேதான் எங்கயாவது பழைய புத்தகக்கடையில நின்னுகிட்டு காமிக்ஸ் வாங்கிக்கிட்டிருப்பாங்க!

      என்ன... ஒரு ரெண்டு மூனு மாசம் பொறுமையா இருந்திருந்தீங்கன்னா பாட்டீம்மாக்கள் அவங்களாவே போய்ச்சேர்ந்திருப்பாங்க... கொஞ்சம்போல அவசரப்பட்டுட்டீங்களோனு தோனறது. சரி விடுங்க, நமக்கு லச்சியம்தான் பெரிசு, tit for tat!


      ( சங்கடத்திலிருக்கும் எடிட்டரை கொஞ்சூண்டு கூல் செய்வதற்காண்டி...)


      Delete
    5. மிதுனுக்கு டெக்ஸ் சம்பத்தை குறித்து தெரியாது போனதில் எனக்கு வருத்தமே

      Delete
    6. ... ஒரு ரெண்டு மூனு மாசம் பொறுமையா இருந்திருந்தீங்கன்னா பாட்டீம்மாக்கள் அவங்களாவே போய்ச்சேர்ந்திருப்பாங்க... கொஞ்சம்போல அவசரப்பட்டுட்டீங்களோனு தோனறது. சரி விடுங்க, நமக்கு லச்சியம்தான் பெரிசு, tit for tat!//
      ஹா,ஹா,ஹா பூனையாரே செம,செம.சில நேரங்களில் ஹாஸ்யங்கள் தான் நம்மை பல அழுத்தங்களில் இருந்து காப்பாற்றுகிறது.

      Delete
  54. Super six ரொம்ப வேகமா என்னிடம் வந்து சேர்ந்தது. அதற்கான நன்றிகள் சார் :( :(

    ReplyDelete
  55. ****** விண்ணில் ஒரு எலி *******

    சின்ன வயதில் ரொம்பவே ரசித்து ரசித்துப் படித்த கதை! பாதுகாத்து வைத்திட எனக்கென்று பெட்டிகளோ, பீரோக்களோ இல்லாத காலகட்டம் அதுவென்பதால், நான் இழந்த எண்ணிலடங்கா பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று!

    அன்று பிரிந்த நேசமிகு நண்பன் ஒருவனை பலப்பல வருடங்களுக்குப்பிறகு இன்று மீண்டும் சந்தித்ததைப்போல ஒரு உணர்வு - இப்போது இப்புத்தகத்தைக் காணும்போது! பரபரவென்று பக்கங்களைப் புரட்டி என் ஞாபகசக்திக்கு ஒரு பலப்பரிட்சை நடத்தியதில் சுமார் 50% மார்க்குகளையே பெறமுடிந்தது! ( என்னளவிற்கு இதுவே அதிகம்தான்!)

    'விண்வெளியில் ஒரு எலி' என்று பொருட்பிழையோடு அன்றைக்கு வெளியானதை 'விண்ணில் ஒரு எலி' என்று சரியாக மாற்றியிருப்பதற்கே ஒரு சபாஷ் போடலாம்தான்!

    இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் பேச்சுத் தமிழிலேயே வசனங்கள் அமைக்கப்பட்டிருப்பதை முதல் பக்கத்திலேயே தெரிந்துகொள்ள முடிகிறது! இந்த மாற்றியமைக்கப்பட்ட வசனங்களுடன், நம் வுட்சிட்டி கவுண்டமணி-செந்திலோடு ஒரு எலியும், பறக்கும் பலூனும், ஒரு திருடனும் சேர்ந்துகொள்ள - பக்கத்துக்குப் பக்கம் அழகாய் விரிக்கப்பட்ட காமெடித் தோரணம்! பின்னிப்பெடலெடுத்திருக்கீங்க எடிட்டர் சார்!

    குறிப்பாக, பழைய வெளியீட்டில் எலி 'கீச் மூச்' பாஷை மட்டுமே பேசியதாக ஞாபகம்! ஆனால் இம்முறை, பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும் அந்த எலியை - அதன் செய்கைகளுக்கு ஏற்றாற்போல் பேசவும் வைத்து அமர்க்களப்படுத்தியிருப்பது ரொம்பவே ஹைலைட்டான விசயம்! 'மூட்டைகளை அந்தப் பக்கமா வீசுங்கப்பா.. இங்கே ஃபுட்போர்டிலே ஒரு பேஸஞ்சர் தொங்கிட்டு வர்றது தெரியலை?' என்பதில் தொடங்கி, 'அந்த மைதாமாவு மண்டையன் என்ன சொல்றான்?' என்று ஷெரீப் டாக்புல்லைக் காட்டி கிட்டிடம் கேட்பது உட்பட அந்த எலி பேசும் வசனங்கள் அனைத்தும் - ஹா ஹா ஹா... செம! செம!

    கதை - இன்னும் சில பக்கங்களுக்கு நீண்டிருக்கக்கூடாதா - என ஏங்க வைக்கிறது - இந்தக் காமெடித் தோரணம்!

    என்னுடைய ரேட்டிங் : 10/10

    ReplyDelete
  56. லேடி S .உண்மையிலேயே மாஸ்டர் பீஸ்
    அட்டைப்படம் தொடங்கி முற்றும் போடும் வரை லேடி S.மீது வைத்த கண்ணை எடுக்க முடிய வில்லை என் பெயர் லார்கோ படிக்கும் போது அருமையான கதை செமை யான ஹீரோ என்று ரசித்து ரசித்து படித்தேன் அதற்க்குப் பிறகு நான் ( புது அறிமுகமான ஹீரோயின் கதையை) மிகவும் ரசித்து படித்தேன் தன்னை ஆடையை களைய வைத்த ஸாமிரா வை அதே போல் பழி வாங்குமிடத்தில் ஏனோ டெக்ஸ் வில்லரின் முகத்தை பெயர்க்கும் குத்து ஞாபகத்திற்க்கு வருகிறது
    ஆர்ப்பாட்டம் இல்லை அடிதடி இல்லை ஆனாலும் அசத்துகிறாள் லேடி S
    மாடஸ்டி க்கு பிறகு என் மனதை கவர்ந்தவள்
    இந்த லேடி S

    ReplyDelete
  57. கைசீவம்மா கைசீவு .... (நோ ஸ்பாயிலர்)
    ஒரு நர்சரி ரைம் வரியை லேசாக மாற்றி கதைக்கு மிகவும் பொருத்தமாக வைத்த எடிட்டரை எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை ...தலைப்புக்கே ஒரு பெரிய ஷொட்டு....
    CRIMES BY RHYMES என்பது நர்சரி ரைம் வரிகளில் ஒன்றை அப்படியாகவோ அல்லது அதன் வரிகளில் ஒன்றை லேசாக மாற்றியோ கதை தலைப்பாக வைத்து அந்த ரைமின் வரிகளே கதையாக வரும்வண்ணம் எழுதுவது ..
    ஒரிஜினல் தலைப்பு என்னவென்று தெரியவில்லை ....ஆனால் ரைமின் முதல் நான்கு வரிகள் நமது கதைக்கு பொருத்தமாக வருகின்றன ...

    (அகதா கிறிஸ்டி இவ்வகையில் மிகவும் பிரபலம் . AND THEN THERE WERE NONE,A POCKET FULL OF RYE,ONE TWO BUCLE MY SHOE,HICKORY DICKORY DOCK,FIVE LITTLE PIGS(THIS LITTLE PIGGY)CROOKED HOUSE (THERE WAS A CROOKED MAN ),THREE BLIND MICE – போன்றவை மிக சிறந்த உதாரணங்கள் ....

    ராபின் கதை ....திகைக்க வைக்கும் த்ரில்லர் ,

    ReplyDelete
    Replies
    1. ///கைசீவம்மா கைசீவு .... (நோ ஸ்பாயிலர்)
      ஒரு நர்சரி ரைம் வரியை லேசாக மாற்றி கதைக்கு மிகவும் பொருத்தமாக வைத்த எடிட்டரை எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை ...தலைப்புக்கே ஒரு பெரிய ஷொட்டு.///

      அப்படியா சொல்றீங்க?!! இந்தத் தலைப்புக்கு முன்பொரு சமயம் என்னுடைய மெல்லிய எதிர்ப்பைத் தெரிவித்திருந்தேன்!

      நானும் கதையைப் படித்தபிறகு எனக்குள் அந்த எதிர்ப்பு நீடித்திருக்குமா என்றறிய ஆவல்!

      Delete
    2. ///இந்தத் தலைப்புக்கு முன்பொரு சமயம் என்னுடைய மெல்லிய எதிர்ப்பைத் தெரிவித்திருந்தேன்///

      ஆம் ஈவி ! அதை நானும் படித்தேன் ...

      குழந்தைகளுக்கான ஒரு பாடலை வன்முறை தொனிக்கும் வண்ணம் மாற்றலாமா என்பதுபோல் சொல்லி இருந்தீர்கள் ...

      கதையை படித்தபின் அந்த எண்ணம் மாறும் என நம்புகிறேன் ...

      பிணத்தோடு ஒரு பயணம் -தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது ..கதையை படித்தபின் சர்ச்சை அடங்கி விட்டதல்லவா ??

      கைவீசம்மா கைவீசு -கைசீவம்மா கைசீவாக மாறுவதில் ஏதேனும் சிறு உறுத்தல் இருப்பின் அதை களைவதற்கே மேலே அகதா கிறிஸ்டி உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது ....

      Delete
    3. ம்ம்ம்ம்ம்ம்..!!நமக்கு இன்னும் சிக்பில் க்ளாசிக்கே பாதிக் கிணறு மீதமிருக்கு.! இந்த செனா அனா அடுத்த மாச புக்குக்கே விமர்சனம் எழுதுவாரு போலிருக்கே..!! (சுயபுலம்பலுங்கோ..) :-)

      Delete
    4. வழக்கமான எனது மிக மெதுவான பாணியில் இன்று 12.00 மணிக்கு ஆரம்பிச்சு இப்போ இரவு 7.00 மணிக்கு சிக்பில் கிளாசிக்கை முடித்திருக்கிறேன்!!

      வாய்ப்பிருந்தால் எதிா்வரும் ஞாயிறும் சிக்பில்லுக்குத்தான்!!

      Delete
  58. ****** காதலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? ********* ( சிக்பில் க்ளாசிக் - கதை நம்பர் 3 )

    தண்ணீர்க்குழாயில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்க தார் கொண்டுவருமாறு ஆர்டினிடம் சொல்லியனுப்புகிறார் ஷெரீப் டாக்புல். ஆனால், நீண்டநேரமாகியும் ஆர்ட்டின் திரும்பிவராததால் ஏகத்துக்கும் கொதித்துப்போகிறார். மரத்தடியில் படுத்துத் தூங்கிவிட்டிருந்த கிட்ஆர்ட்டினுக்கு, குதிரையில் பணப்பையோடு வரும் ஒரு இளம் கன்னியாஸ்த்திரியை ஆபத்திலிருந்து காப்பாற்றி, அவருக்குத் துணையாக மெக்ஸிகோ எல்லைவரை செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது! அதை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார் நம் காதல் இளவரசர்!
    ஆர்டினுக்கு ஆபத்துநேர்ந்துவிட்டதாக எண்ணி சிக்பில், பொடியன் ( மற்றும் இரண்டு போலீஸ்) உடன் கிளம்பும் நம் ஷெரீப்காரு கிட்ஆர்ட்டினை சந்தித்தாரா?
    கன்னியாஸ்த்திரியிடம் காதல்வயப்பட்ட கிட்டினின் காதல் என்னவாயிற்று?
    அந்தக் கன்னியாஸ்திரி உண்மையில் யார்?
    - என்ற கேள்விகளுக்கெல்லாம் கெக்கேபிக்கே சிரிப்புடன் பதில்களைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

    க்ளைமாக்ஸில் தன் காதலியைக் காப்பாற்ற கிட்ஆர்ட்டின் எடுக்கும் அந்த அதிரடி முடிவு துளியும் எதிர்பாரா மனதைவருடும் + கெக்கபிக்கே ரகம்!

    இக்ளியூண்டு குறை : சிஸ்டர்.. சிஸ்டர் என விளித்தபடியே கன்னியாஸ்திரியிடம் காதல்வயப்படுவது!

    என்னுடைய ரேட்டிங் : 10/10

    ReplyDelete
    Replies
    1. சிக்பில் கிளாசிக்கிற்க்கு எவ்வளவு மார்க் வேண்டுமானாலும் கொடுக்கலாம் செயலாளரே

      Delete
    2. நேத்து முழுக்க விண்ணில் ஒரு எலியும் காதலுக்கும் உண்டோ அடைக்குந்தாழ் மட்டுமே படிச்சேன்.!! பாத்துகிட்டே இருக்கலாம் போலிருக்கு. அதிலும் விண்ணில் ஒரு எலி ஆஸம் ஆஸம்..! மூணு முறை படிச்சிட்டேன்.! எலியும் திருடனும் பேசும் வசனங்கள் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கின்றன..! சூப்பர் எடிட்டர் சார். .! அட்டகாஷம் அட்டகாஷம். .!! மறுக்கா ஒருமுறை படிச்சிட்டு வரேன். .!

      Delete
  59. ////சிக்பில் கிளாசிக்கிற்க்கு எவ்வளவு மார்க் வேண்டுமானாலும் கொடுக்கலாம் செயலாளரே////

    ஆனாக்க பாருங்க!

    அடுத்த சூப்பா் 6 ல சிக்பில்லும் கெடையாது; லக்கியும் கெடையாதுங்கரத நெனைச்சாலே,,

    டாக்புல் சுட்டு நெருக்கின பொம்மைக்காக தாங்க முடியாதா வேதனைக்குள்ளான கிட்ஆா்டின் மாதிாி ஆயிருச்சு என் நெலமையும்!!

    என்ன சொன்னாலும் சமாதானம் ஆக மாட்டேங்குது இந்த அம்மாஞ்சி மனசு!!!

    ReplyDelete
    Replies
    1. Never say never again...

      லக்கி&சிக்பில்&டெக்ஸ் இல்லாமல் இனிமேல் சூப்பர்6 என்ற ஒன்று கிடையவே கிடையாது...

      காமிக்ஸின் பழமைக்கு ஓர் மும்மூர்த்திகள் செட்டுனா இவுங்க சூப்பர்6ன் மும்மூர்த்திகள்...

      Delete
    2. ///Never say never again...

      லக்கி&சிக்பில்&டெக்ஸ் இல்லாமல் இனிமேல் சூப்பர்6 என்ற ஒன்று கிடையவே கிடையாது...///

      நீர் சொல்றது மட்டும் பலிச்சிருச்சுன்னா நம்ம பொருளாளர் செனா அனாகிட்ட சொல்லி சங்கத்து சார்பா, உமக்கு "லெக்பீசோட " ஒரு "மட்டன் " பிரியாணி வாங்கித்தர ஏற்பாடு பண்றேன்யா மாம்ஸ் . .!!

      Delete
    3. ////நீர் சொல்றது மட்டும் பலிச்சிருச்சுன்னா நம்ம பொருளாளர் செனா அனாகிட்ட சொல்லி சங்கத்து சார்பா, உமக்கு "லெக்பீசோட " ஒரு "மட்டன் " பிரியாணி வாங்கித்தர ஏற்பாடு பண்றேன்யா மாம்ஸ் . .!!///

      அதைவிட சுளு,

      ஈ.வி.கிட்ட இருந்து "கடுங்காப்பியும், பிரத்யேக ரவுண்டு பண்ணும்" EBFல் அனைவருக்கும் கிடைக்கும்னு சொல்ரதுதான்!!

      ஹிஹிஹி!!!

      Delete
    4. "விஜயராகவனின் வாங்கா வாக்கு பலித்தால்
      நாம இரண்டு பேரும் சேர்ந்து வாங்கித் தந்துவிடலாம் கிட் " --அப்டீனு சொல்வீங்கனு பார்த்தா ஏற்கனவே ஏகப்பட்ட பேருக்கு சங்க நிர்வாகிகள் சாத்திய மூன்று கோட்டை எனக்கும் சாத்த அகுடியா தர்ரீங்களே மிதுன்....அந்த இரட்டை சர்ப்பங்களை ஆளுக்கொன்னா ஏவி விட்டாதான் வேலை ஆகும் போல...

      Delete
    5. LUCKY MITHUN
      KIDORDIN KANNAN
      TEX VIJAY

      3ம் அடுத்த சூப்பா் 6ல் இல்லை!

      மூன்று கோடுகள் இது தானோ!!

      சிவசிவ

      Delete
  60. உங்களுக்கு எல்லாம் புக் கிடைக்குது. கமெண்ட் போடுறீக. பாளையங்கோட்டைக்கு இன்னும் புக் வந்து சேரல. என்ன கொடுமை இது விஜயன் சார்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை வீர பாண்டியனுக்கு பதிலா வேற பாண்டியனுக்கு அனுப்பியிருப்பாரோ ......

      Delete
  61. இரும்புக் கௌபாய் படிக்கப்போறேன்.. சத்தம் போடாம அமைதியா இருக்கணும் ஆம்மா..!!

    ReplyDelete
    Replies
    1. ஏனுங் ரவி நானும் ரொம்ப நாளாவே பார்த்து கொண்டே உள்ளேன், போன்ல ஏதோ பார்க்கிறீங்க போல...
      எப்போதான் நிமிர்ந்து முகத்தை காட்டுவீங்க...

      Delete
    2. நீங்களும்தான் நின்னுகிட்டே இருக்கிங்களே டெக்ஸ், உட்காருங்க கால் வலிக்கலையா?!
      ஹி,ஹி நாங்களும் காமெடி பண்ணுவோம்.

      Delete
  62. இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் சற்று முன்னர்தான் காமிக்ஸை கைப்பற்றினேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  63. ***** சிறையில் ஒரு சிட்டுக்குருவி *****

    விலைமதிப்பில்லாத, புகழ்பெற்ற ஓவியங்களை அப்படியே அச்சு அசலாக வரைந்துவிடும் திறமை ஒரு பெண்ணுக்கு இருந்தால்...? அவள் யெளவன யுவதியாய் இருந்தால்..? அவள் கொஞ்சம் அப்பாவியாய் இருந்தால்...? போலி ஓவியங்களை அசலென்று விற்றுப் பணம் கொழிக்கும் குறுக்குபுத்திக்காரன் ஒருவன் அவளது காதலனாய் இருந்தால்...? போலிகளை வரைந்துதரச் சொல்லி அவளை அவன் கொடுமைப்படுத்தினால்..? இந்த விவகாரத்தில் யதேச்சையாக மாடஸ்டி தலையிடவேண்டியதாகிவிட்டால்...? மாடஸ்டியோடு வில்லியும் இணைந்துகொண்டால்..?

    அப்புறமென்ன? பட்டையைக் கிளப்பும் ஒரு அட்டகாசமான ஆக்சன் கதை தான்!

    கதையை நகர்த்தும் விதத்திலாகட்டும், வசனங்களை அமைத்திருக்கும் நேர்த்தியிலாகட்டும் - பிரம்மாதப்படுதியிருக்கிறார்கள் இதன் வெளியூர் மற்றும் உள்ளூர் படைப்பாளிகள்!

    'நிழலோடு ஒரு நிஜ யுத்தம்' போலல்லாமல், சித்திரங்கள் நன்றாகவே அமைந்திருப்பதில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு! இளவரசியின் மனநிலையை அதிக ஆர்ப்பாட்டங்களின்றி சில நுணுக்கமான முகபாவங்களின் மூலம் அழகாகக் காட்டிவிடும் ஓவியரின் திறமை ஆச்சரியப்படுத்துகிறது! ஒரு ஃப்ரேமில் எழில்கொஞ்சும் தேவதையாகக் காட்சி தரும் இளவரசி, மற்றொரு ஃப்ரேமில் வேலைக்கார மினியம்மா போல காட்சியளிப்பது மட்டும் கொஞ்சூண்டு குறை!

    கதையைப் படித்துமுடித்தபிறகு 'சிறையில் ஒரு சிட்டுக்குருவி' என்ற தலைப்பு நச்சென்று பொருந்திப்போவதை உணரமுடிகிறது!

    என்னுடைய ரேட்டிங் : 9.75/10


    ReplyDelete
  64. உங்கள் ஆத்திரமும், வெறியும் எங்களுக்குப் புரியாமலில்லை எடிட்டர் சார்... பாஸ்போர்ட்டை திருடிய............



    ##########


    :-)))))))))


    செயலரே ) இப்படி ஒரு கோட்டை போட்டுட்டே போலாம் போல இருக்கு...ஆனா வயித்துவலி கூட கைவலியும் சேரணுமா என்ற அச்சத்தில் இதோட கம்முன்னு விடறேன்...:

    ReplyDelete
  65. சில்வரின் இரண்டாவது கதை .....தி இந்து வில் ஒரு இளமைபுதுமை கட்டுரை ரெடி செய்யும் போலிருக்கே

    ReplyDelete