Powered By Blogger

Sunday, June 04, 2017

ஐந்தின் கதை...!

நண்பர்களே,
வணக்கம். பளபளக்கும் பலவண்ண மசிகளும் மிரட்டும் அடர் கறுப்பும் இன்னமுமே காய்ந்திருக்கக் கூடச் செய்திராத ஜுன் இதழ்களை உங்களிடம் ஒப்படைத்த கையோடு எழுதும் பதிவிது ! So எனது ஓட்டைவாய் மீதல்லாது - இம்மாதப் படைப்புகளின் மீதே ஒளிவட்டம் நிலைத்திடல் நலமென்பதால் அடக்கி வாசிக்க முனைந்திடுவேன் ! ஒற்றை மாதத்தில் 5 இதழ்கள்- வித வித genre-களில் என்பது நமக்கு அன்றாடமல்ல எனும் போது. இந்த சந்தா A to E அணிவகுப்பை ரசிக்கவும், விமர்சிக்கவும் இந்த வாரத்தையும், தொடரும் நாட்களையும் செலவிட இயன்றால் சந்தோஷமே !

Fresh off the Oven என்பதால் ஒவ்வொரு இதழின் தயாரிப்புப் பின்னணிகளைப் பற்றிக் கொஞ்சமாய் பேசலாமே ? ஆங்கிலத்தின் முதல் எழுத்திலிருந்து பார்வைகளை ஓடவிடுவதென்றால் - ரிப்போர்ட்டர் ஜானியின் “ஒரு சிலந்தியின் வலையில்” கைஉயர்த்துவதை காணலாம் ! ஜானியின் கதைகள் எப்போதுமே எனக்கு எங்கள் பகுதிகளின் ‘விருதுநகர் புரோட்டாவை‘ நினைவுபடுத்தத் தவறுவதில்லை ! பசியில் வயிறு கச்சேரி நடத்த ஆரம்பிக்கும் போது, எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் அந்தப் புரோட்டாக்களை நினைத்தாலே கடவாய் ஓரமாய் வடகிழக்குப் பருவ மழையின் தாக்கம் தெரியத் தொடங்கும் ! ஒரு ஃபுல் கட்டு கட்டி விட்டு, லேசாய் தொந்தியை சமனப்படுத்திக் கொள்ள ஒரு பீடாவை குதப்பத் தொடங்கும் போது -  தீனி கொஞ்சம் ஓவர் தானோ ? என்ற சந்தேகம் மண்டையையும், தொப்பையையும் ஒருங்கே குடையத் தொடங்கும் ! நமது ஜானிகாருவுமே இந்த ‘புரோட்டா இலக்கணத்தை‘ அட்சர சுத்தமாய் பின்பற்றுபவர் - at least என்னளவிற்காவது ! பணியாற்றத் தொடங்கும் போது, அந்தப் ‘பர பர‘ கதையோட்டம்; சித்திர லாவகம்; கதைகளின் ஜெட் வேகம் மனுஷனை முழுமையாய் ஆக்கிரமிக்கத் தொடங்கி விடும் ! பணி முடித்து எழும் போது - “ஷப்பா.. இடியாப்ப முடிச்சுகள் கொஞ்சம் ஓவரோ - ஓவர் தானோ ? இவன் அவனைப் போட்டுத் தள்ளினான்... அவன் அப்புச்சியைப் போட்டுத் தள்ளினான்... அப்பத்தா பெரிய அப்பச்சியின் சின்னத் தம்பியோட ஒன்றுவிட்ட கொள்ளுப் பேரனைப் போட்டுத் தள்ளுச்சு... சரி... இப்போ வில்லன் யாரு ?” ங்கிற ரீதியில் ஒரு ஆதங்கம் ‘கொய்ங்ங்ங்‘ என்று மண்டையை முழுசாக takeover செய்து கொள்ளும் ! இம்மாத இதழும் இதற்குத் துளியும் சளைத்ததல்ல ! ஜானியை ஒட்டுமொத்தமாய் சந்துக்குள் போட்டு, பெருச்சாளியைச் சாத்துவது போல ஆளாளுக்கு சாத்த முனைவதை திறந்த வாய் மூடாது ரசிக்கலாம் - மலைப்பாதைகளில் எதிர்ப்படும் கொண்டை ஊசி வளைவுகளைப் போன்ற கதைத் திருப்பங்களின் மத்தியினில் ! இந்த இதழின் highlight என்று நான் சொல்வது இதன் மொழிபெயர்ப்பே ! முன்கூட்டியே பணிகளைச் செய்து வைக்கும் நமது சமீப காலத்துப் பழக்கப்படி இந்த இதழின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நிறைவு கண்டது 2016-ன் மத்தியிலேயே ! தமிழுக்கு மாற்றம் செய்திடுவதை அந்தந்த மாதத்து அட்டவணைக்கு ஏற்ப சாவகாசமாய்த் தான் நான் கையில் எடுப்பதுண்டு ! சென்றாண்டின் ஏதோவொரு தருணத்தில் "மொழிபெயர்ப்புகளில் ஒத்தாசை செய்திட வாசக நண்பர்களுக்கு ஆர்வமிருக்கக் கூடுமா ?" என்ற கேள்வியை முன்வைத்திருந்தது நினைவிருக்கலாம். அந்நேரம் நண்பர்களில் மூன்று பேர் சீரியஸாக விண்ணப்பித்து, அவர்களுக்குக் கதைகளும் அனுப்பப்பட்டிருந்தன. ஆனால் தவிர்க்க இயலாச் சொந்த அலுவல்களின் மத்தியில் பேனா பிடிக்க உரிய அவகாசம் தந்திட அதனில் இரு நண்பர்களுக்கு சாத்தியமாகாது போக - ஒருவரின் பேனாக்கு மட்டுமே வாய்ப்புக் கிட்டியது. அந்தப் பேனா பணி செய்த கதையே “ஒரு சிலந்தியின் வலையில்...!” அடித்துக் கேட்டாலும் அந்தச் சென்னைக்காரர் பற்றியோ ; ஆதி காலத்துப் பாணிகளில் அல்லாது அமர்க்களமாய் தற்போதைய சூழலுக்கேற்ற அவரது எழுத்து ஸ்டைலைப் பற்றியோ பகிரங்கப்படுத்த மாட்டேன் தான் ! ஆனால் நீங்களாக அது இன்னார்... அன்னார் தான் என்று அடையாளம் காட்டினால் நிச்சயம் மறுக்கவும் மாட்டேன் தான்! Of course- நமது வழக்கமான பாணிக்கு நெருங்கிட வேண்டியதன் பொருட்டு, முழுக்கதை மீதும் நான் கைவைத்துள்ளேன் தான் ; ஆனால் இந்தக் கட்டுமானத்தின் பெரும்பகுதி நண்பரது பங்களிப்பே ! நண்பருக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் !   அட்டைப்படத்தைப் பொறுத்தவரை ஒரிஜினல் டிசைனை, அதன் நீலப் பின்னணியோடே உறுதி செய்திருந்தோம் ! ஆனால் சமீப ஜானி சாகஸம் (அந்த ராசிபலன் கொலைக் கதை... ஆங்... பெயர் ஞாபகம் வரமாட்டேன்குதே?!!) இதே போன்ற ப்ளு பேக்கிரவுண்டோடு வந்திருந்ததால் - இம்முறையும் அதே கலர் கூட்டணி வேண்டாமென்று தோன்றியது ! So டாலடிக்கும் சிகப்பைப் போட்டுப் பார்த்த போது அமர்க்களமாய் தோற்றம் தந்தது போலிருக்க - ‘பச்சக்‘ என்று அதனையே உறுதி செய்தும் கொண்டோம் ! வண்ண அச்சைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பான இந்த வண்ணச் சேர்க்கையானது ‘பளீர்‘ ‘பளீர்‘ பஞ்சு மிட்டாய் வர்ணங்களில் இருந்ததால் ரொம்பபே கவனமாய்க் கையாள வேண்டியிருந்தது! கண்ணை உறுத்தாமல் பக்கங்கள் அமைந்திட வேண்டுமென நிறையவே மெனக்கெட்டோம் ! அதற்கான பலன் கிட்டியிருப்பின் சந்தோஷமே !
சந்தா B-ன் TEX “க.மா.க.” இம்மாத highlight களுள் பிரதானமாய் அமைந்திடின் வியப்பு கொள்ள மாட்டேன் தான் ! டிசைனில் பார்த்ததை விடவும் நேரில் அந்த நீல வானப் பின்னணியோடு அட்டைப்படம் டாலடிப்பதாய் எனக்கு மாத்திரமே தோன்றுமென்று சொல்ல மாட்டேன் ! ஒரிஜினல்களின் அழகு என்றைக்குமே அலாதி தான் என்பதை மீண்டுமொரு முறை புரியச் செய்த அட்டைப்படம் ! கதை & சித்திரங்கள் இரண்டுமே இம்மாதம் போட்டி போடுமென்பது உறுதி - உங்கள் கவனங்களை ஈர்த்திடுவதில்! மெக்ஸிகோவை நாம் நிறையவே கதைகளுள் பார்த்திருப்போம் தான் ; ஆனால் இந்த bullfight சமாச்சாரம் நமது கௌபாய் ரசனைகளுக்கேயும் ஒரு புதுப் பரிமாணம் தானல்லவா ? சென்றாண்டு இந்தக் கதையை அட்டவணைக்கு டிக் அடித்த போதே, என் கைகள் பரபரத்தன ; இதனை சடுதியில் தயாரித்து உங்களிடம் ஒப்படைக்கும் பொருட்டு ! அந்த வித்தியாசமான கதைக் களமும், நிறைய இணைய தளங்களில் படிக்க இயன்ற கதை விமர்சனங்களும் எனது ஆர்வத்துக்கு பெட்ரோலாகி இருந்தது !  மொழிபெயர்ப்பு நமது கருணையானந்தம் அவர்கள் என்பதால் பழக்கமான பாணிகள் தொடர்ந்திடும் !

சந்தா C-ன் கார்ட்டூன் கதை இம்மாதம் கடைசி நேர டென்ஷனுக்கு ஆளாக்கியதோடு - ஒரு ராப்பொழுதை மொச்சைக்கொட்டை போல விழித்திருந்தே செலவிடச் செய்த இதழும் கூட ! எப்போதுமே ரின்டின் கேனை மொழிபெயர்ப்பதென்பது ஒரு ஜாலியான அனுபவமே - ஒரு நாயின் கண் வழியாக உலகைப் பார்க்கும் பாணிதனில் ! இம்முறையோ சின்னதொரு கதைக்களத்தினுள் ரி.டி.கே. சற்றே ஞானத்தோடு சுற்றி வருவது தான் template என்பதால் வழக்கமான கெக்கே பிக்கே சிரிப்புகளோடு மட்டுமே குப்பை கொட்ட முடியாதென்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்தேன் ! முதல் பதினைந்தோ - பதினாறோ பக்கங்களை எழுதி மற்ற பணிகளுக்குள் மும்முரமாகிப் போனதால் - ‘அட... நம்ம ரி.டி.கே. தானே...? சாவகாசமாய்ப் பார்த்துக் கொள்ளலாம் !‘ என்ற மெத்தனத்தில் இதர பணிகளுக்கென நேரம் ஒதுக்கினேன். சரி... ஐரோப்பிய பயணத்தின் போது, கிடைக்கும் சைக்கிள் கேப்களில் இதை எழுதி முடித்து விடலாமென்று, ஆங்கில மொழிபெயர்ப்பையும், பக்கங்களையும் உடன் தூக்கிச் சென்றிருந்தேன் ! ஆனால் ஏழுக்கும், எட்டுக்கும் நடுவாக்கிலான சமாச்சாரம் - இரு களவாணிக் கிழவிகள் ரூபத்தில் குறுக்கிட - ஊர் திரும்பும் வரை ரின்னையும் பார்க்கத் தோன்றவில்லை ; டின்னையும் திறக்கத் தோன்றவில்லை ! இங்கே ஊர் திரும்பிய பிற்பாடோ அண்டர்டேக்கர் பணி ; அண்டாவுக்குள் தலை நுழைக்கும் பணி என்று பக்கங்களில் / பருமன்களில் பழு கூடுதலான சமாச்சாரங்களுக்கு முன்னுரிமை தர நேரிட - கடைசி வரை “தடை பல தகர்த்தெழு” – தத்தா புத்தாவென்று தவழ்ந்து கொண்டே திரிந்தது. நாட்களும் ஓட்டமெடுக்க, அண்டர்டேக்கர் பிரிண்டிங் முடிந்து ; ஜானியும் முடிந்து - what next ? என்று நம்மவர்கள் சோம்பல் முறித்த போது தான் முழி பிதுங்கியது எனக்கு ! தேதியோ 26... மொழிபெயர்ப்போ இன்னமும் சுமார் 30 பக்கங்கள் காத்துள்ளன என்ற நிலையில் “ஒரு முடியா இரவு“ தொடர்ந்தாலொழிய இம்மாத கோட்டாவில் துண்டு விழுந்து விடுவது நிச்சயம் என்று அப்பட்டமாய்த் தெரிந்தது ! வேறு மார்க்கமில்லை எனும் போது கொட்டாவிகள் மாயமாவதும் ; கூர்க்கா ‘பிகில்‘ ஊதும் நடுச்சாமம் நார்மலான வேளையாய்க் காட்சி தருவதும்; பக்கத்து வீட்டு வாட்ச்மேனின் குறட்டையொலி கூட நாராசமாயல்லாது காதில் சகஜமாய் புகுந்து வெளியேறுவதும் சாத்தியமே என்பதெல்லாமே புரிந்த இரவின் புண்ணியத்தில் மொழிபெயர்ப்பு பூர்த்தி பெற்றிருந்தது. எழுதி முடிக்க மாதத்தின் முக்கால்வாசியை விழுங்கிக் கொண்டாலும், அதன் மீது பணி செய்ய நம்மவர்களுக்கு முக்கால் நாள் தரவே சிரமமாயிருந்தது ! சும்மா சொல்லக் கூடாது ; சில மணி நேரங்களிலேயே இருவராய் DTP பணிகளை நிறைவு செய்து தந்திட, பிழைதிருத்தம்- எடிட்டிங் என்று சகலமும் “வாம்மா... மின்னல்...!” ஸ்பீடில் அரங்கேறிட - தடைகள் பலவும் தகர்ந்தன ! ஏற்கனவே நண்பர் பிரதீப் அட்டைப்படப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருக்க - 28-ம் தேதி இரவில் அச்சுப் பணிகளை முடித்த கையோடு - 29-ம் தேதி பைண்டிங் ஆபீஸ் வாசலில் தவம் கிடக்கத் தொடங்கினோம் !

சந்தா D-ன் மறுபதிப்புப் படலத்திலோ நேர் எதிர் அனுபவம்- துளியும் சிரமமிலா வகைதனில் ! நிச்சயமாய் “தங்க விரல் மர்மம்” இதழின் அந்நாளைய மொழியாக்கத்தை நமது கருணையானந்தமே செய்திருக்க வேண்டும் என்பது நெருடலிலா வரிகளைப் படிக்கத் தொடங்கிய போது எனக்கது புரிந்தது. அந்நாட்களது வரிகளை சன்னம் சன்னமாய்ப் பட்டி டிங்கரிங் பார்த்தாலே போதுமென்று பட்டதால் அந்தப் பணிகளைத் தாண்டிப் பெரிதாய் வேறெந்தச் சிரமமும் எழவில்லை எனக்கு ! இருந்தாலும், எல்லா வேலைகளையும் செய்து முடிக்கும் ஸ்டெல்லாவுக்கு "காரியதரிசி" என்ற அடைமொழியும், மண்ணுக்குள் தீக்கோழி போல் புதையுண்டு கிடந்துவிட்டு, சிக்கும் மாக்கான்களிடமெல்லாம் நாலு சாத்து வாங்கி விட்டு சுற்றி வரும் பார்ட்டிக்கு "தொழிலதிபர்-ரகசிய ஏஜெண்ட்-ஹீரோ" என்ற பில்டப் எல்லாம்  கொஞ்சம் ஓவரோ ? என்ற  சந்தேகம் மாத்திரம் போகவே மாட்டேனென்றது !! அது ஏன்க்கிறேன்...?

அதற்கு மறுஎதிர்முனை என்பேன் - மயானத்தின் காவலருக்கு முதல் மரியாதை செய்ய முற்பட்ட போது ! அட்டைப்படங்கள் துளியும் சிரமம் தராது போய் விட, மொழிபெயர்ப்பில் தான் துவங்கியது நெட்டி முறிப்பு ! கருணையானந்தம் அவர்கள் இதனையும் மொழிபெயர்த்திருக்க, எனக்கோ அவரது ஸ்க்ரிப்ட்டைப் பார்த்தபோது அந்த பாணி ரொம்பவே ஜென்டில்மேன்லியாகத் தென்பட்டது. கழுகுக்கு சுக்கா ரோஸ்ட் வாங்கிப் படையல் பண்ணும் ஒரு கடாமுடாப் பார்ட்டிக்கு அந்த நாசூக்கெல்லாம் சரிப்படாதென்று நினைத்தேன் ! So வேறு மார்க்கமின்றி ஒரு ஒட்டுமொத்த makeover படலம் அவசியமென்று தீர்மானித்த கையோடு மாற்றியெழுதும் படலம் தொடங்கியது ! புதுசாய் எழுதுவதை விடவும் இந்த ரிப்பேர் பணிகளின் பழு எப்போதுமே ஜாஸ்தி என்பதால் இரு பாகங்களுக்கும் சேர்த்து எக்கச்சக்க நேரம் பிடித்தது ! புது வரவு என்பதால் மாத்திரமின்றி, கதையின் ஒவ்வொரு மனுஷனும், மனுஷியும், ரொம்பவே வித்தியாசமான படைப்புகளென்பதால் பயந்து, பயந்து பணியாற்ற அவசியமானது. இதன் scanlation-ம் எட்டும் தூரத்தில் இருக்கிறதால் ஒப்பீடுகள் தவிர்க்க இயலாது போகுமென்பது தெரியும் ! அதன் பொருட்டும் நிறையவே கவனம் அவசியமானது ! இன்னமுமே இதனைப் பிழையிலா பதிப்பென்று சொல்ல மாட்டேன் தான் ; ஆனால் இயன்ற கவனங்கள் சகலத்தையும் தந்துள்ளோம் என்ற சன்னமான திருப்தி எங்களுள் ! ஒரு மாதிரியாய் நாலைந்து நாள் மொக்கை போடும் படலத்துக்குப் பின்பாய் ஸ்கிரிப்ட் மாற்றம் கண்டிருந்தது ; அப்புறமாய் இதர பணிகள் முடிந்து, அச்சுக்குத் தயார் ஆன போது, ஒரு மார்க்கமான அந்த அடரிருள் கலரிங் பாணிக்கு நியாயம் செய்திடும் பொருட்டு நிறையவே தடுமாறினோம் ! மஞ்சள் வர்ணம் கூடுதலானால், பின்னணியின் இருட்டு மட்டுப்பட்டது போல் பட்டது ; ப்ளூ வர்ணம் கூடிப் போனால் -  அத்தனை பயல்களும் இருட்டுக்குள் உலாற்றுவது போல் தோற்றமே மிஞ்சியது ; சிகப்பு கூடினால் -அவ்வளவு முகரைகளும் செங்குரங்குச் சாயல்களை ஓத்திருக்கக் கண்டோம் ! "இதைக் கூட்டி..அதைக் குறைத்து.." என்று ஏகமாய் யானையின் அகன்ற தூரைத் தடவிப் பார்க்கும் பாணிகளில் பரிசோதனைகள் செய்தான் பின்னர் ஒரு printing template குத்த தயாரானது ! 

ஆக இம்மாதப் "பஞ்ச புத்தக" ஆக்கத்தின் பின்னணி இதுவே ! எல்லாம் முடிந்திருந்த கடைசி நாளில் தான் ஞானம் புலர்ந்தது - "இம்மாதம் சர்ப்ரைஸ் இல்லை என்பது தான் சர்ப்ரைசே" என்று !!' கிழிஞ்சது போ ; என்ன செய்யலாமென்று மண்டையை உருட்டிய போது ஜூனுக்கு உகந்த சிறு அன்பளிப்பாய் நேம்ஸ்லிப்கள் அமைந்திடக்கூடுமென்ற மகா சிந்தனை உதயமானது ! தடா புடாவென - "டிசைனைப் போடு ; ஸ்பைடரைப் போடு ; ஆர்ச்சியைப் போடு " என்று வெண்கலத்தொண்டையில் கூவத் துவங்க - வழக்கம் போலவே மௌனமாய் பணிகளுக்குள் மூழ்கினர் நம் DTP பெண்கள் ! இப்போதெல்லாம் ஆபீசுக்குள் நுழையும் போதே  இந்த அரைலூசு ஆசாமி எந்த சஞ்சீவிமலையைப்  புதுசாய்த் தூக்கித் தலையில்  ஏற்றுவாரோ ? என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்திருப்பின், தவறு நிச்சயம் அவர்களது அல்ல தான் ! So ஒரு rollercoaster பணியனுபவத்தின் இறுதியில் 5 வித்தியாசமான கதைகள் கைகளில் மினுமினுத்தன ! இனி அவை மீது தீர்ப்பெழுத வேண்டிய பொறுப்பு உங்கள் வசம் கனம் ஜுரிக்களே !! ஏதோ டெம்போலாம் வைத்துக் கடத்தியுள்ளதையும் கருத்தில் கொண்டு  மார்க் போடுவீர்களென்ற நம்பிக்கையுள்ளது ! Please do write !!

Before I sign off - குட்டிக் குட்டி updates :
  • ஜூன் 30 -ல் நெய்வேலியில் புத்தக விழா துவங்குகிறது ! நம்பிக்கையோடு இம்முறையும் விண்ணப்பித்துள்ளோம் ! சீக்கிரமே அது பற்றித் தெரியுமென்று நினைக்கிறேன் ! 
  • ஆகஸ்ட் 4 - 15 என ஈரோட்டின் புத்தக விழாத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன ; and நமக்கு ஸ்டால் கிடைத்திடுவதில்  நெருடல் இராதென்றே நினைக்கிறேன் ! 

இரு புத்தகவிழாக்களிலுமே உங்களை ஆவலாய் எதிர்நோக்கியிருப்போம் guys ! 
  • அப்புறம் - நமது ஜெரெமியா இதழினைப் பார்த்துள்ள படைப்பாளிகளும் சரி ; அதற்கு மான்யம் தந்துதவிய பிரெஞ்சுக் கலாச்சார மையமும் சரி - செம ஹேப்பி !! இதழின் தயாரிப்புத் தரத்துக்கும், மொழிபெயர்ப்புக்கு ஒரு பெரிய thumbs up தந்த கையோடு - இன்னொரு அட்டகாச சேதியையும் சொல்லியுள்ளனர் ! முதல் தொகுப்பிற்கு செய்துள்ள மான்ய உதவியினை ஜெரெமியா - Part 2-விற்கும் தொடர்வதற்கு பிரெஞ்சு மையம் உறுதியளித்துள்ளனர் !! வாசகர்களின் கொடையைத் தாண்டி, வேறெந்த வித ஒத்தாசைகளையும் ஆயுசுக்கும் பார்த்திரா நமக்கு, இந்த தேசத்தின் வாஞ்சை மெய்சிலிர்க்கச் செய்கிறது !! சிரம் தாழ்த்துகிறோம் இந்த நம்பிக்கைக்கும், அங்கீகாரத்துக்கும் !! 

  • ஜூன் இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங் இங்கே உள்ளது : http://lioncomics.in/monthly-packs/398-june-2017-pack.html

மீண்டும் சந்திப்போம் ; அதுவரையிலும் have a great Sunday & a week ahead ! Bye for now !

250 comments:

  1. காலை வணக்கம்

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது. தங்க விரல் மர்மம் கார்ட்டூன் அருமை

    ReplyDelete
  3. இன்னும் டீ வரலை
    இதே பொழப்பாபோச்சு
    இனியாவது வெள்ளிக்கிழமை டெஸ்பேட்ச்
    வேண்டாமே.புதன் சாலச்சிறந்தது.

    ReplyDelete
  4. வணக்கம் எடிட்டர் சார்...!
    வணக்கம் நண்பர்களே.....!

    ReplyDelete
    Replies
    1. உங்க போனுக்காக வெயிட்டிங்

      Delete
  5. Book இன்னும் கைக்கு வரவில்லை. அந்த பிரன்ச் கிழவி மட்டும் கையில் கிடைச்சா, 1243 வருடம் ஜெயில் தண்டனை கொடுத்து இருப்பேன்.

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  7. @ edi

    Undertaker சுப்பர் ஹிட். Thank u for bring it.

    டெக்ஸ் டயலாக் சாயல் ஸ்டைல் இன்ஒபூளூண்ஸ் ஒன்று இரண்டு இடங்களில் இயல்பாக இல்லை.. நெருடலாகவே இருந்தது.. of late நிறைய கதைகளில் எனக்கு இந்த feeling...

    Last month - oru mudiya iravu
    This month - undertaker


    Great job- just keep them coming

    தலை தூக்கும் அசுரன் எப்போது தலை தூக்கும்????

    ReplyDelete
  8. ரின்டின்கேன் தடை பல தகர்த்திடு மிகவும் அருமை! மற்றவை படித்தபின்.

    ReplyDelete
    Replies
    1. ரின்டின் எப்போதுமே டாப்புங்ணா!

      Delete
  9. விஜயன் சார், கவரிமான் கதை மற்றும் சித்திரங்கள் செம. புதுமையான கதை களம்.. எருது சண்டை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது. டெக்ஸ் அறிமுகமே 22 பக்கங்கள் சென்ற பின்னரே, அதுவும் ஆர்ப்பாட்டம் இல்லாத நிலையில்... நன்றாக உள்ளது. நண்பர்கள் பலரும் கதையை படித்து இருக்கமாட்டார்கள் என்பதால் விமர்சனத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பரனி உங்கள் நம்பர் மிஸ் ஆகிவிட்டது. எனக்கு call செய்யவும்.

      Delete
    2. எதுக்கு டெக்ஸ் கதை நல்லா இருக்கு​ன்னு சொன்னதுக்கு விருந்து வைத்து "கவனிக்க" போறிங்களா?😁

      Delete
    3. கவனிக்கும் போது முகத்தை மட்டும் தொடக்கூடாதுன்னா "விருந்துக்கு" நான் ரெடி.

      Delete
  10. அண்டா்டேக்கா் அட்டகாசமான புது வரவு நேற்றே படித்து முடித்துவிட்டேன். அடுத்த கதையை ஆவலுடன் எதிா்பாா்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Girr கிர்ர்ர் பிரியாணி வர்லை பாஸ்.

      Delete
  11. கடந்த சில பதிவுகளில் நண்பர்கள் இப்போது வரும் கதைகள் வழ வழ கோல கோல என வசனங்கள் அதிகமாக வருவதாக எழுதியதூக ஞாபகம். அந்த காலத்தில் உள்ள கதைகளை விடவா? உதாரணத்திற்கு​ இந்த மாத ஜானி நீரோ மறுபதிப்பில் உள்ளதை விடவா?

    ReplyDelete
    Replies
    1. எல்லா பழைய கதைகளிலும் வசனங்கள் அதிகம்தான் என்பது எனது எண்ணம்.

      Delete
  12. படிக்கும் முன்னரே ஒரு பார்வை விமர்சனம்...


    நேற்று மாலை இதழ்களை கைபற்றிய பின்னர் கூதுகலத்துடன் இல்லம் திரும்பினேன்..அமைதியான இரவின் மடியில் நமது பொக்கிஷ புதையலை ஒட்டுமொத்தமாக அள்ளி ஒவ்வொரு இதழாக எடுத்து ரசித்து இதழின் அட்டைப்படங்களை நோக்கியவுடன் இந்த முறை எப்பொழுதையும் விட இம்முறை அதிக வியப்பின் ரசனை...காரணம் இதுவரை இதழ்களின் அட்டைபடங்களின் முன்னோட்டத்தை காணாததே..(மாயாஜீ அவர்களின் புண்ணியத்தில் தடை பல தகர்த்தெழு அட்டைப்படத்தை மட்டும் முன்னரே ரசித்து இருந்தேன் )

    டெக்ஸ் வில்லரின் அட்டைபடத்தை முதலில் கண்டு அசந்து போனேன் எனில் அடுத்து நோக்கிய ஜானியின் அட்டைப்படம் (முன்பின்) சில நிமிடங்கள் பார்வையிலேயே சிறை வைக்க வைத்தது... பின் அன்டர்டேக்கர் இதழை கைகளில் ஏந்த அட்டை படம் ஒரு வித்தியாச தோற்றத்தில் ஓகே ரகத்தில் தோன்ற பிறகு பிரித்தவுடன் தான் இது மேல் கவர் மட்டுமே என உணர்ந்து புரட்ட உள் அட்டைப்படம் சிம்ப்ளி சிம்ப்ளி சூப்பர்...அழகு...எனக்கென்னவோ அழகான அந்த நீல மேக வர்ணம் அட்டை படத்தில் இடம் பெற்றாலே ஒரு வித அசத்தல் தோற்றம் அட்டைப்படத்திற்கு வந்து விடுவது போல ஓர் எண்ணம்...வித்தியாசமான தலைப்பின் எழுத்துரு அருமை...ரிப்போர்ட்டர் ஜானி ஆகட்டும்..அண்டர்டேக்கர் ஆகட்டும் ..ரின்டின் தான் ஆகட்டும் அனைவருமே வண்ணத்தில் ...அச்சுதரத்தில் கண்ணை பறிக்கிறார்கள்..( இந்த வண்ணம்..அச்சு போன்றவைகளை பற்றி இனி விவரிக்க வேண்டாம் என்றே நினைக்கிறேன்..பிறகு என்ன சார் ? ஒவ்வொரு மாதமும் பட்டையை கிளப்பி கொண்டு இருந்தால் ஒரே வசனத்தை எத்தனை மாதம் தான் மறுபதிப்பாக்குவது )

    வண்ண இதழ்கள் இப்படி படிக்கும் முன்னரே ரசிக்க வைக்க கறுப்பு வெள்ளை டெக்‌ஸின் சித்திர தரமோ பிரமிப்பை விதைக்கிறது..செம நுணுக்கமான , சித்திரபாணிகள்..ஓவியருக்கு சிறப்பான பாரட்டுகளை தெரிவிக்கும் அதே சமயம் கிட் கார்சன் மிக இளமையாக தோன்ற வைத்த ஓவியருக்கு நமது டெக்ஸ் வில்லரின் முக தோற்றத்தை மட்டும் சிறிது மாற்றி படைத்து விட்டாரே என்ற வருத்தமும் மேலோங்குகிறது..தங்க விரல் மர்மம் காமிக்ஸ் கிளாசிக் அட்டைபடம் வழக்கம் போல கிளாசிக் ஆக கலக்குகிறது...எப்பொழுதையும் விட அடுத்த மாத மறுபதிப்பு அறிவிப்பு துள்ளி குதிக்க வைக்கறது..காரணம் இது வரை வராத மறுபதிப்பு என்பதோடு ஒரு புது கதையும் இலவசம் என்றால் மனம் துள்ளுவதற்கு காரணமும் வேண்டுமா என்ன...


    இதழ்களை படிக்கும் முன்னரே இந்த மாத அனைத்து இதழ்களும் பார்வையிலேயே பிரமிக்க வைக்கின்றன என்றால்


    இனி.....:-)

    ReplyDelete
  13. ////அந்தப் பேனா பணி செய்த கதையே “ஒரு சிலந்தியின் வலையில்...!” அடித்துக் கேட்டாலும் அந்தச் சென்னைக்காரர் பற்றியோ ; ஆதி காலத்துப் பாணிகளில் அல்லாது அமர்க்களமாய் தற்போதைய சூழலுக்கேற்ற அவரது எழுத்து ஸ்டைலைப் பற்றியோ பகிரங்கப்படுத்த மாட்டேன் தான் ! ஆனால் நீங்களாக அது இன்னார்... அன்னார் தான் என்று அடையாளம் காட்டினால் நிச்சயம் மறுக்கவும் மாட்டேன் தான்! ///

    வாழ்த்துகள் ஆதி தாமிரா அவர்களே! கதையைப் படித்த பின்பு சிலாகிக்கிறேன்! :)

    ReplyDelete
  14. சொல்ல மறந்து விட்டேன் இந்த முறை ஒரு சோகம் என்னவென்றால் டைகரின் இரத்த கோட்டை முன் பதிவில் எனது பெயரை காணவில்லை...:-(

    ReplyDelete
    Replies
    1. 'சி.சி.வ'வையும் காணலை தலீவரே! என்ன பண்ணலாம் சொல்லுங்க?

      Delete
    2. இங்கு தலைவரையே காணவில்லை, இது யாருப்பா அது சி.சி.வ காணோம் சி.பெ.வ காணவில்லை என காமெடிபண்ணுறது. 😁 தலைவருக்கு முதல் எதிரி நமது செயலாளர் தான், பார்த்து இருந்துகொங்க.. 😎

      Delete
    3. ஐந்து புக்...அடுத்த மாசம் ரெண்டு ஆண்டு மலர் பிசில ஆசிரியர் இருப்பார் ..எனவே ரெண்டு மாசம் போராட்டத்தை தள்ளி வைக்கலாம் செயலரே...அதன் பிறகு முழு மூச்சாக களம் இறங்கலாம் ...

      ஒரு வேளை அடுத்த மாசம் பிஸியிலும் ஆசிரியர் சிசிவயதில் இடம் பெற வைத்தால் பாராட்டு விழாவையும் செயல்படுத்தி விடலாம் செயலரே..:-)

      Delete
    4. ஏங்க பெங்களூர் பரணி சாரே...வீடு விட்டா ஆபிஸ்...ஆபிஸ் விட்டா இந்த தளம்...தளத்தை விட்டா வீடு ன்னு இருக்கிற என்னை பாத்து காணலேயே ன்னு சொல்றீங்களே..

      நியாயமாரே...:-(

      Delete
    5. தலைவர் பெயர் இல்லைன்னா தலைவரையே காணவில்லை என எடுத்துக்கொள்ள கூடாதா? அது என்கிறேன் 😁

      Delete
    6. ஓ...அப்படி வருதா இது...

      அப்ப சரி அன்ட் சாரி சார்...:-)

      Delete
    7. //சொல்ல மறந்து விட்டேன் இந்த முறை ஒரு சோகம் என்னவென்றால் டைகரின் இரத்த கோட்டை முன் பதிவில் எனது பெயரை காணவில்லை...:-(//

      எனது பெயரும் தான். ஒரு வேளை பெயர் முகவரி தெரியாத லிஸ்டில் நமது பெயர்கள் மாட்டி

      நம்பர் 13 ஆகிவிட்டோமோ?

      Delete
  15. /// அடித்துக் கேட்டாலும் அந்தச் சென்னைக்காரர் பற்றியோ ; ஆதி காலத்துப் பாணிகளில் அல்லாது அமர்க்களமாய் தற்போதைய சூழலுக்கேற்ற அவரது எழுத்து ஸ்டைலைப் பற்றியோ பகிரங்கப்படுத்த மாட்டேன் தான் ! ///


    க்க்கும் ..! இதுக்கு நீங்க பேரையே சொல்லியிருக்கலாம் சார். .!

    இப்போது சென்னைவாசியாக இருக்கும் அந்த திருநெல்வேலிக்கார நண்பர் பெயரை கண்டேபுடிக்க முடியவில்லை போங்கோ .!! :-)

    ReplyDelete
  16. /// அடித்துக் கேட்டாலும் அந்தச் சென்னைக்காரர் பற்றியோ ; ஆதி காலத்துப் பாணிகளில் அல்லாது அமர்க்களமாய் தற்போதைய சூழலுக்கேற்ற அவரது எழுத்து ஸ்டைலைப் பற்றியோ பகிரங்கப்படுத்த மாட்டேன் தான் ! ///


    க்க்கும் ..! இதுக்கு நீங்க பேரையே சொல்லியிருக்கலாம் சார். .!

    இப்போது சென்னைவாசியாக இருக்கும் அந்த திருநெல்வேலிக்கார நண்பர் பெயரை கண்டேபுடிக்க முடியவில்லை போங்கோ .!! :-)

    ReplyDelete
  17. விஜயன் சார், தங்க விரல் மர்மம் முதல் முறையாக படித்தேன், இந்த மாத மறுபதிப்பு மூலம். வித்தியாசமான கதை, முதல் பக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்றது. இந்த முறை ஜானி நீரோவே தனது காரியதரிசியை தன்னுடைய சாகசத்திற்கு துணையாக அழைத்து செல்வது வித்தியாசம்.

    குறையாக கருதுவது: அட்டைப்படத்தில் ஜானி நீரோவை ஜானி நிரோ என குறிப்பிடப்பட்டுள்ளது. கதையில் பல இடங்களில் காணப்படும் எழுத்து பிழைகள். கடந்த சில மாதங்களாக மறுபதிப்பு கதைகளில் எழுத்து பிழைகள் அதிகம் தென்படுகின்றன, இதில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதான் ப்ரூப் ரீடிங்கை நான் கேட்டேன். விடுங்க பாஸ். மீ பிஸி வித் மக்கள் பணி நௌ.

      Delete
    2. நானும் சில கதைகளுக்கு ப்ரூப் ரீடிங் செய்தேன்; தற்போதும் இதனை வாசகர்கள் தான் செய்கிறார்களா என தெரியவில்லை!

      Delete
  18. Undertaker dust cover little bit disappointing, it looked lot better in preview, the inner cover was fantastic.

    ReplyDelete
  19. Dasu Bala3 June 2017 at 19:14:00 GMT+5:30
    அண்டர்டேக்கர்..! 9/10

    கதை விறுவிறுப்பாக நகர்ந்தாலும், அண்டர்டேக்கர் எப்படி பட்டவர் என்பதை கடைசி வரை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரை பிடித்துள்ளது, அது ஏன் என்று கேட்டால் "சொல்ல தெரியலே" னு இறுதியில் பிரைரி சொல்வது போல தான் நானும் சொல்லனும்..

    கஸ்கோ, லின், ஜார்ஜ் மற்றும் அண்டர்டேக்கர் போன்ற வித்தியாசமான மாந்தர்களை கொண்ட கதை இது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். பாத்திர படைப்புகள் அருமை.

    ReplyDelete
  20. Dasu Bala3 June 2017 at 13:08:00 GMT+5:30
    ஒரு சிலந்தியின் வலையில்..! - முதல் பக்கத்தின் முன்றாவது பிரேமில் ஆரம்பிக்கும் குழப்பம்/பரபரப்பு கடைசி பக்கம் வரை தொடர்கிறது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லா ஜானியின் மற்றுமோர் கதைக்களம்.

    Dasu Bala3 June 2017 at 13:28:00 GMT+5:30
    ஜானியை வைத்து பின்னப்படும் சதிவலை தான் கதைக்களம் என்பதை பக்கம் 9 இல் 8 வது கட்டம் துல்லியமாக உணர்த்திவிடுகிறது. ஆனால் எப்பொழுதும் போல இறுதியிலே அணைத்து முடிச்சுகளும் அவிழ்க்கப்படுகிறது

    ReplyDelete
  21. Dasu Bala3 June 2017 at 13:17:00 GMT+5:30
    ஜானி(சிவப்பு மற்றும் மஞ்சள்)/அண்டர்டேக்கர்(அடர் நீலம்)/டெக்ஸ்(வெளிர் நீலம்) அட்டைப்படங்களின் வர்ண சேர்க்கை கண்ணைக்கவரும் விதமாக அட்டகாசமாக உள்ளது.
    ரின்டின்கேன் அட்டைப்படம் கார்ட்டூன் கதைக்கு ஏற்ப பொருத்தமாக நண்பர் பொடியனின் கை வண்ணத்தில் கச்சிதமாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  22. டியர் எடி,

    5 வெவ்வேறு காமிக்ஸ் புத்தகங்களையும் ஒருங்கே பார்த்த பரவசமே, இந்த மாதத்தை தனித்து காட்டுகிறது. நேர்த்திகாக உழைத்த உங்கள் குழு அனைவருக்கும் பாராட்டுகள்.

    அன்டர்டேகர் அச்சு தரம் மிரட்டல் ரகம்.

    ReplyDelete
  23. All the storys are interesting &enthusiastic to read.undertaker is excellent congrats editor sir👏👏👌👌

    ReplyDelete
  24. முதலில் படித்து முடித்தது டெக்ஸ்-தான்...

    கதை சற்றே கார்சனின் கடந்த காலத்தை நினைவு படுத்தியது. மேலும் தற்போதைய மாட்டரசியல் சூழ்நிலையில் இந்த கதை வெளியானது ஆச்சரியகரமான ஒரு ஒற்றுமை!

    மற்றபடிக்கு கதையைப் பற்றி ஏதும் சொல்வதற்கில்லை... இந்த வருடத்தில் இதுவரையிலுமான டெக்ஸ் கதைகளில் இன்னும் ஒரு கதை கூட ஹிட் அடிக்கவில்லை... பார்ப்போம் வருடத்தின் மீதி பாக்கி கதைகளிலாவது ஏதாவது ஹிட் கிடைக்குமா என்று...

    ReplyDelete
    Replies
    1. ஙே...ன்னு சொல்றதை தவிர வேறெதுவும் சொல்ல தோன்றவில்லை நண்பரே..!

      Delete
    2. சொல்வதற்கில்லை... இந்த வருடத்தில் இதுவரையிலுமான டெக்ஸ் கதைகளில் இன்னும் ஒரு கதை கூட ஹிட் அடிக்கவில்லை... ///
      இந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....

      Delete
    3. ஆமாம்.! ஆமாம்.!..............

      குமார் சார்.!

      ( பொறி வச்சாச்சு.!)

      Delete
  25. வாழ்த்துக்கள் ஆதிதாமிரா சார்...:-)

    ReplyDelete
  26. 2016 EBFல் தான் தமது reentryயை கண்டேன். கடைசியாக நான் புத்தகம் வாங்கியது 2007ல் என்று நினைக்கிறேன்.

    புத்தகங்களெல்லாம் வண்ணத்தில் இருந்ததைக் கண்டதும், ஏதோ புதுப்பதிப்பகமா அல்லது விஜயன் சாா் மொத்த பதிப்பகத்தையும் பொிய பசையுள்ள பாா்ட்டிக்கு வித்துட்டாரா? என்ற சந்தேத்தோடே பக்கங்களைப் புரட்டினேன்.

    பிரகாஷ் பப்ளிஷா்ஸ், விஜயன் சாா் பெயரைக் கண்டதும் ஒரு விநாடி ஸ்டன்னாயிட்டேன்.

    "வீழ்வது வீழ்ச்சியல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் வீழ்ச்சி" என்ற பதத்திற்கு நீங்கள் தான் சாலச் சிறந்த உதாரணம் சாா்.

    மேற்கொண்டு எனது 4 வங்கிக் கணக்குகளிலும் இருந்த மினியம் அனைத்தையும் உருவி எடுத்து, தோிய ரூபாய் 7000ல் ஒரு 60 புத்தகங்களை வாங்கினேன்.

    ஏறத்தாழ இப்போதுதான் படித்து முடித்திருக்கிறேன்.

    பிறகு சூப்பா் 6க்கும், சந்தா Eக்கும் பணம் செலுத்தியிருந்தேன்.

    (அடுத்த ஆண்டு நானும் நிச்சயமாக சந்தாதாரா் ஆகிவிடுவேன்)

    இடையில் சென்னை 2017 Book Fairக்குச் சென்றிருந்தேன். கையில் இருந்த 3000 ரூபாயில் சுமாா் 2000 க்கு French learning books களை வாங்கிவிட்டேன்.

    அங்கே இருந்த தங்களது ஸ்டாலில் "ட்யுராங்கோ" வேறு என்னையே பாா்ப்பதுபோல் இருந்தது. எனக்கு நல்ல புத்தகங்களைக் கண்டாலே கை பா்ஸை தொலாவ ஆரம்பித்துவிடும்.

    இனி பா்ஸை எடுத்தால் ஈரோடு வரை பாத யாத்திரைதான் டிரைன்க்கு டிக்கெட் எடுக்க முடியாது என்பது புத்திக்கு உறைக்க புக்கை வைத்துவிட்டு கிளம்பிவிட்டேன்.

    கடந்த 4 - 5 வாரங்களாக தமது வலைப்பதிவுகளிலும் ஐக்கியமாகிவிட்ட படியாலும், முன்பு வாங்கிய மொத்தப் புத்தகங்களையும் படித்துவிட்ட படியாலும் புதுவரவுகளின் மேல் ஆா்வத்தோடு இருந்தேன்.

    ஏதோ ட்யுராங்கோ வாவது கிடைக்குமல்லவா என்ற ஆா்வத்தோடு கோபி ST கொாியா் போய் பாா்சல் வந்ததா என்று கேட்டேன்.

    கொரியரும் வரலை, ஒண்ணும் போயானு தொரத்திட்டாங்க.

    (கொசுருச் செய்தி : காலையிலிருந்து ஒரு 20 முறை போன்ல "சிவகாசிலோ்ந்து மிதுன் சக்ரவா்த்திங்கிற பேருக்கு, எதுனா பாா்சல் வந்திருக்கானு" கேட்டிருப்பேன். அதன் அந்த மாியாதை.😀😀😀)

    புக்க அனுப்புனிங்களா, இல்லையான்னு சிவகாசிக்கே போன் பண்ணிகேக்க வேண்டியதுதான்னு போன் பண்ணினேன்.

    அனுப்பியாச்சு சாா். வேண்ன நெம்பா் நோட் பண்ணிக்கோங்க சாா்னு சொன்னாங்க. இது கொரியா் நெம்பா் மாதிாி தெரியலயேன்னு, ST கொாியா்ல தானே அனுப்புனீங்கனு கேட்டேன்.

    "இல்லை சாா்" போஸ்டல்ல அனுப்பிருக்கேன்னு சொன்னாங்க."

    அசடு வழிய கொரியா்காராிம் சிரித்துவிட்டு "சாாி சாா். போஸ்டல்ல அனுப்பிட்டாங்கலாமனு" சொல்லிட்டு நிக்காம கெளம்பிட்டேன்.

    வேகமா ஊருக்கு வந்து போஸ்டல் ஆபிஸில் கேட்டேன்.

    இன்னிக்குத்தான் அனுப்பிருக்காங்க திங்கட்கிழமை தான் வரும்னு சொன்னாங்க.

    இப்டி ஆயிப்போச்சே! சொிவுடு வண்டி எடுத்துட்டு ஈரோடு போன "ஜானி, ரின்டின்கேன்" ஆவது வாங்கிக்கலாம்னு போன புக் வரலைன்னுட்டாங்க.

    பாத்தேன்.

    சென்னை நம்மல பாத்து சிரிச்ச ட்யுரங்கோவையும், 3 ஜேசன் பிரைஸையும் வாங்கிட்டு வந்திட்டேன்.

    வீட்டுக்கு வந்து பாத்த,
    ட்யுரங்கோவின் முதல் பக்க போஸ் பிரம்மாதம்.

    பெரியபிரேம் போட்டு வீட்டுல மாட்டலாம்.
    அந்தப் பாா்வையே ஆயிரம் கதை சொல்கிறது. அந்த மனிதனுடைய கேரக்டரை இந்த ஒரு படமே விளக்கிவிடுகிறது. என்னவொரு அழுத்தம். என்னவொரு தீட்சண்யம்.

    சாி புதுப்புக்தான் இல்லைன்னு ஆச்சு. உங்களுடைய பதிவை எதிா்பாா்த்து 1.00 மணிவரை காத்திருந்தேன்.

    ம்ம்ம் வருலையே!

    இதுக்குமேல விழியிரணட்டையும் நித்திராதேவி ஆட்கொண்டுவிட்டாள்.

    ஆனால் புத்தித்கு தூக்கமில்லையே.
    பதிவு எதுனா கீதாப்பா? னு பாத்தா இல்லை!!!

    மணி 3.45

    தூக்கம் தொலைந்தது.
    புது புக் கெடைக்கல.
    பதிவும வரலை.

    Youtube ஐ ஆன் பண்ணினேன்.
    Lara Fabian (French Singer) பாடல் கேட்டுக் கொண்டே அதிலேயே முழுகிபே போயிருந்தேன். 2 மணிநேரம் போனதே தெரியவில்லை.

    FRANCE

    கலை இலக்கியத்தில் எவ்வளவு மேம்பட்ட நாடு. அது நமது ஜெரமயாவுக்கும், உதவ முன்வந்திருப்பது நாட்டின் ஒரு பெரிய மரியாதையை உண்டாக்குகிறது.

    ஏற்கனவே தங்களின் தயவாலும், லக்கிலூக்கின் மேல் நான் கொண்ட காதலாலும் French Language படித்துக் கொண்டிருக்கிறேன். (A1 LEVEL)

    Finally,
    கதையை ரசிப்பவா்கள் ஓவியத்தை ரசிப்பதில்லை;
    ஓவியத்தை ரசிப்பவர்கள் இசையை ரசிப்பவா்கள்;
    இசையை ரசிப்பவர் இலக்கித்தை ரசிப்பதில்லை;

    இவையனைத்தும் ரசிக்கும் பேற்றைக் கொடுத்ததற்கு இறைவனுக்கு நன்றி!

    ஐரோப்பிய, பிரெஞ்சுக் காமிக்ஸ்களை வழங்கி வரும் உங்களுக்கும் நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. //மேற்கொண்டு எனது 4 வங்கிக் கணக்குகளிலும் இருந்த மினியம் அனைத்தையும் உருவி எடுத்து, தோிய ரூபாய் 7000ல் ஒரு 60 புத்தகங்களை வாங்கினேன்.//

      இதேபோல் போல் அனுவம் தான் எனக்கு 2014 ஏற்பட்டது.

      புக் பன்னி கொரியர்ல வாங்றதுக்கு எல்லாம் பொறுமை இல்லை, direct டா சிவகாசிக்கு பஸ் புடுச்சு பதிப்பகம் போய் எல்லா காமிக்ஸ் ஸை யும் அள்ளி யாச்சு.

      Delete
    2. வீழ்வது வீழ்ச்சியல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் வீழ்ச்சி"\\

      ரசிக்க தகுந்த வரி.

      Delete
    3. நம் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் ஏற்பட்டிருக்கும், உங்களுக்கு ஏற்பட்டுள்ளதும் ஒரு வித்தியாசமான அனுபவமே.

      Delete
    4. //ஏதோ ட்யுராங்கோ வாவது கிடைக்குமல்லவா என்ற ஆா்வத்தோடு கோபி ST கொாியா் போய் பாா்சல் வந்ததா என்று கேட்டேன்.//

      சந்தா E அண்டா்டேக்கா்னு பதியரதுக்கு பதிலா ட்யுரங்கோனு போட்டுட்டேன்.

      நைட் முழுக்க ட்யுரங்கோவையே பாத்து அசந்து போயிருந்தேனா?
      இதான் டங்க் சிலிப் ஆயிருச்சு!!

      Delete
    5. கோபி செட்டிபாளையத்தாரே.!


      அருமை.!

      Delete
    6. ஹலோ மிதுன் சக்கரவர்த்தி, அடேடே .. நான் மட்டும் தான் பல வருஷம் கழித்து நம்ம லயன் மற்றும் முத்து காமிக்சின் பள பள வழ வழ அட்டையும் உள்ளே கலரில் வந்த காமிக்ஸ்சும் பார்த்து சந்தோஷத்தில் திக்கு முக்காடினேன் என்று நினைத்து இருந்தேன். எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது 2015 அக்டோபர் மாதத்தில்.

      எனக்கென்று இப்பொழுது என்னுடைய மச்சான் புத்தக கடை உள்ளது. அதனால் ஒன்றும் மிஸ் ஆவதில்லை. ஆனால் நான் இப்பொழுது தேடி கொண்டு இருப்பது 2014 முந்தைய பூக்குகள்.

      Delete
  27. //முதல் தொகுப்பிற்கு செய்துள்ள மான்ய உதவியினை ஜெரெமியா - Part 2-விற்கும் தொடர்வதற்கு பிரெஞ்சு மையம் உறுதியளித்துள்ளனர் !! //

    மனமார்ந்த வாழ்த்துகள் எடிட்டர் சார். புத்தகத் தரத்தினைப் பார்த்து அவர்கள் ஆச்சர்யப்படாவிட்டால்தான் ஆச்சர்யம். குறிப்பாக இந்த விலைக்கு.

    ReplyDelete
  28. ஜெராமயா விற்கு அந்த வெளிநாட்டு காரங்க பண்ற உதவிக்காகவது அடுத்த முறை அவர் வெற்றி பெற வேண்டும் என வேண்டுகிறேன் ..:-)

    ReplyDelete
    Replies
    1. முதல் பாகமே வெற்றி என்னும் கவலைகொள்ள வேண்டாமே

      Delete
    2. சாா்,
      இரண்டாம் மூன்றாம் முறையாக படிக்கும் போது கதை நன்றாகவே இருக்கிறது.

      இதை வெற்றிபெறச் செய்யவில்லை என்றால், நாம் தோல்வி அடைந்தவா்கள் ஆகி விடுவோம் சாா்.

      Delete
  29. நோட்புக் ஸ்டிக்கரில் எங்கள் இளவரசி புறக்கணிப்பு.!

    அநியாயம்.! அநியாயம்.!

    இளவரசின் ரசிக கண்மணிகள் வேதனை.! வேதனை.!

    இருந்தாலும் ,அடுத்தமாதம் சிட்டுக்குருவியாக வந்து அதகளம் செய்யப்போவதால்.......

    மறப்போம்.! மன்னிப்போம்.! என்று ரசிக கண்மணிகள் அமைதியாகிவிட்டோம்.!

    ReplyDelete
    Replies
    1. ஸ்டக்கரில் எங்கள் தலைவி திட்டம் இட்டே புறக்கனிப்பு. என்ன ஓரு வில்லதனம்.

      Delete
    2. ஒருவேளை பசங்க மாடஸ்டியைவே பார்த்துட்டு படிக்காம விட்டுட்டா என்ன பண்றதுன்னு ஆசிரியர் நினைச்சுருப்பரோ?

      Delete
    3. மகேந்திரன் சார்.!

      இருந்தாலும் மனசு ஆறல சார்.!

      எடிட்டர் ஒரு கண்ணுல வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கிறார்.!


      தலைவர் பாணியில் ,அடுத்த மாதம் சிட்டுக்குருவியாக இளவரசி வருவதால் ,போராட்டத்தை விட்டுவிட்டோம்.!


      மாடஸ்டி கதைகள் பெரும்பாலும் காம்போ இதழ்களில்தான் வந்துள்ளது.மீண்டும் காம்போ ஸ்பெஷலில் வருவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.!

      இதற்காக.,நம் எடிட்டருக்கும் வானத்தைப்போல மனம் படைத்த போனெல்லி குழுமத்தாருக்கும் அகில உலக மாடஸ்டி ரசிகர்மன்ற சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.!

      _______/|\______.!

      Delete
    4. palanivel arumugam @ மறக்க வேண்டியவர் மறந்து விடுபட்டு விட்டபட்டார் :-)

      Delete
  30. நேற்று லார்கோ வின் "ஆதளினால் அதகளம் செய்விர்" படித்ததேன். எத்தனை முறை படித்தாலும் "பிரம்மிப்பு" வார்த்தை க்கு அர்த்தம் கொடுத்து கொண்டே இருக்கிறது.

    அதுவும் லார்கோ வின் எதிரிகள் சைமனுக்கு மரண தண்டனை கொடுத்து லார்கோ விடுவிக்க நினைப்பது "இவய்களுக்கு என்ன தான் வேனும் "என்று மண்டை யை பிச்சி கிட வைச்சது (முதல் முறை படித்த போது).

    என் friend படக்க "என் பெயர் லார்கோ" கொடுத்தேன். கதை super ரா இருக்கு அப்படி சொன்னது மட்டும் இல்லாமல். மறுநாள் காலையில் அவன் எந்திரிச்ச போது "நேத்து ஏதோ Hollywood படம் பார்த்தோமே" என்று நினைக்க தோன்றி தாம்.
    அடுத்த வாரம் லார்கோ full set பார்சல் கேட்டு order வரும் என்று எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  31. சாா்,

    ஜெரமயா படிச்சா புடிக்கர ரகமில்ல.

    படிக்கப் படிக்கப் புடிக்கப் புடிக்கர ரகம்.

    கமல்ஹாசன் படம் போல.

    நான் மூணு முறை படிச்சுட்டேன்.

    நம்ம நண்பா்களின் கமெண்ட் வேறே சுகப்படல. எங்க இதோட டிராப் ஆயிருமோன்னு பயந்திருந்தேன்.

    பிரெஞ்சுகாரங்க காப்பாத்திட்டாங்க போல.

    3வது கதையிலே 2 வித்தியாசமான குணமுடைய மனிதா்கள் உணவுதேடும் முறையில் உள்ள முரணைப் முதல் 2 பக்கங்களிலேயே ஓவியத்தின் மூலமே எவ்வளவு அற்புதமாக காட்டியிருப்பாா் பாருங்கள்.

    இதுவே ஒரு ஓவியரே ஆசிரியராக இருக்கும் போது கிடைக்கும் மட்டற்ற சுதந்திரத்திற்குச் சான்று.

    அப்புறம் சாா்,
    கேட்டணும்னு இருந்தேன்.
    2வது கதையில் 85 பக்கம் கடைசி பிரேமில் "ஆனாலும் உன் மூளையை முழங்காலுக்கும் கீழேதான் தேடணும்டா ஜெராமயா!" டயலாக் உங்களுடைய கைவண்ணமா? அல்லது ஒரிஜனல்ல எதுனா இருக்கா சாா்.

    Anyway its dhool sir!!

    ReplyDelete
    Replies
    1. "ஆனாலும் உன் மூளையை முழங்காலுக்கும் கீழேதான் தேடணும்டா" நான் அடிக்கடி மேற்கோள் காட்டி பேசும் டயலாக்காக மாறிவிட்டது.

      Delete
  32. இந்த மாத இதழ்கள் அனைத்தும் அருமை,வித்தியாசமான கூட்டணி.
    எனது ரேட்டிங்;
    1.தி அண்டர்டேக்கர்-10/10,
    2.ரிப்போட்டர் ஜானி-10/10,
    3.கவரிமான்களின் கதை-10/10,
    4.தடை பல தகர்த்தெழு-8/10,
    5.தங்க விரல் மர்மம்-7/10.

    ReplyDelete
  33. Rin tin நன்றாக இருக்கிறது. மற்றது இன்னமும் படிக்கவில்லை.

    ReplyDelete
  34. சார்...புக் இன்னும் வரல...!!!

    ReplyDelete
  35. புத்தகத்தை நேற்றே வாங்கி விட்டேன்.!


    அருமையான மணத்தையும் அழகான அட்டைப்படம் என்று மனதை கொள்ளை அடைத்தது.!


    ஹும்.! இருந்தாலும் கோடைவிடுமுறையின் இறுதி நாட்கள் என்பதாலும்,இரண்டு நாட்களில் பள்ளிதிறக்கப்பட இருப்பதால்.வீட்டில் பரபரப்பான சூழ்நிலையில் காமிக்ஸ்புத்தகத்தை எடுத்தால் ,ரணகளம் ஆகிவிடும் .ஆகவே,புத்தகங்களை பீரோவில் அடுக்கி வைத்துவிட்டு ,கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று ஏக்கத்தில் உள்ளேன்.நாளை படிக்கவேண்டும்.!

    ReplyDelete
  36. ****** தடைபல தகர்த்தெழு *****
    ( கதை விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இதைப் படிப்பதால் அப்படியொன்றும் பாதகமிருக்காது)

    நியாயப்படி டெக்ஸ் மாதிரியான அதிரடி ஹீரோக்களுக்கு வைக்கவேண்டிய தலைப்பை இந்த நாலுகால் ஞானசூன்யத்திற்கு வைத்ததிலிருந்தே ஆரம்பிக்கிறது - லூட்டிகள்!

    கதை : பிரதிமாதம் முதல் திங்களன்று வழக்கமாக 'சர்ப்ரைஸ் இன்ஸ்பெக்ஸன்' நடத்தும் சிறைத்துறை உயரதிகாரியை அங்கே 'நாலுகால் ஏஜென்ட்' பொறுப்பிலிருக்கும் ரின்டின்கேன் 'பதம்' பார்த்துவிட, அடுத்த சிலநாட்களில் இடமாற்றல் உத்தரவு வந்துசேருகிறது ரின்டின்கேனுக்கு(!!). சிறுதீவு ஒன்றில் அமைக்கப்பட்டிருக்கும் ரொம்பவே கெடுபிடியான ஜெயிலிலுக்கு அழைத்துவரப்படும் நம் தொப்ளாக்குட்டியின் கோணங்கித்தனங்களால் அங்கிருப்பவர்களெல்லாம் அவதிப்பட, அதேசமயம் - அங்கிருந்து ரின்டின்கேனின் இடத்தை இட்டுநிரப்ப அனுப்பப்பட்ட முரட்டு நாலுகால் ஏஜென்ட்டை வைத்துக்கொண்டு இங்கிருப்பவர்களெல்லாம் அல்லல்பட - தொடரும் ரகளைகள் ரின்டின்கேனின் பிரத்யேகக் காமெடி முத்திரைகள்!

    தடைகள் பல தகர்த்தெறிந்து நம் தொப்ளா வீடுவந்து சேரும்போது நமக்கும் 'அப்பாடா'னு ஒரு 'இனம்புரியாத' சந்தோசம்!

    ரின்டின்கேனின் கடந்த இதழ்களைப் போல ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சிரிக்கும் வாய்ப்பில்லையெனினும், பக்கத்துக்குப் பக்கம் வயிறுவலிக்க முடிகிறது ( எடிட்டருக்குப் போதிய நேரம் கிடைத்திருந்தால் வசனங்களில் இன்னும் கலக்கியிருப்பார் என்பது உறுதி)

    நண்பர் பொடியனின் கைவண்ணத்தில் அட்டைப்படம் அழகு சேர்க்க ( சுவற்றில் தெரியும் அந்த grains உங்களுடைய உபயமா நண்பரே? அருமை!) தொப்ளாக்குட்டியின் காமெடி ரகளைகளுக்கு என் மதிப்பீடு : 9.5/10



    ReplyDelete
    Replies
    1. //சுவற்றில் தெரியும் அந்த grains உங்களுடைய உபயமா நண்பரே? அருமை// ஒரிஜினலிலேயே இருந்ததுதான் சார். அதை பளிச்சென தெரிய வைத்திட மட்டுமே சில அட்ஜஸ்ட்மென்ட் செய்ய நேர்ந்தது.

      Delete
    2. தொப்ளாக்குட்டிக்கு மார்க் 9.5/10?

      மீதி.05 மார்க் எதுக்கு .?

      அதையும் கொடுத்துடுங்க.!


      த்ரீஷா ,விஷால் வரிசையில் பூனையார்.!


      சாட்சி செல்லாது.! செல்லாது.!

      விமர்சனம் அருமை.! அப்படியே அண்டர்டேக்கருக்கும் இதேபோல் ஒரு விமர்சனம் கொடுங்கள்.உங்கள் விமர்சனத்தை வைத்துதான் படிக்க ஆரம்பிக்கனும்.! ஆவலுடன்........

      Delete
    3. @ M.V

      ///த்ரீஷா ,விஷால் வரிசையில் பூனையார்.!


      சாட்சி செல்லாது.! செல்லாது.!
      ///


      :)))))))))

      Delete
  37. இந்தமாத இலவச லேபிள்கள் ரொம்பவே க்யூட்! பள்ளிகள் திறக்கவிருக்கும் இத்தருணத்தில் உபயோகமான, அழகான பரிசு! ( என் ஆபீஸிலும் நிறைய ரெஜிஸ்டர்கள் உண்டு. ஹிஹி!)

    ReplyDelete
    Replies
    1. பூனையாரே.!

      என் சட்ட புத்தகத்தில் ஒட்டி நம் பெயரை எழதி அழகு பார்க்கலாம் என்று ஆவலுடன் பார்த்தால் .......... மாடஸ்டி மிஸ்ஸிங்.........




      கர்ர்ர்ர்ர்.............!

      Delete
    2. M.V சார்,

      குட்டியூண்டு லேபிளில் மாடஸ்டியின் முழு உருவத்தைப் போட இடமில்லாமல் போயிருந்தாலும் கூட, அந்த வசீகரிக்கும் கண்களை மட்டுமாவது போட்டிருக்கலாம்தான்!


      இஸ்கூல் பசங்க கெட்டுப்போய்டுவாங்கன்னு நினைச்சு தவிர்த்திருப்பாரோ என்னவோ?!!

      Delete
  38. புத்தகங்கள் கிடைச்சாச்சு...
    அட்டைபடங்கள் அருமையோ அருமை..

    நன்றிகள் சார்...

    ReplyDelete
  39. எல்லோரும் இப்பொழுது ஜூன் மாச கதைகளை அலசி கொண்டு இருக்கும் நேரத்தில் நான் வித்தியாசமாக கிளாசிக் + லேட்டஸ்ட் என்ற விதமாக லயன் மற்றும் முத்து காமிக்ஸை மிக்ஸ் பண்ணி படித்து வருகிறேன்.

    இந்த வாரம் நான் மறுபடி படித்து முடித்த பழைய மற்றும் புது கதைகள் பற்றி சிறு அலசல்.

    கிளாசிக்:
    1 ஆர்ச்சியோடு மோதாதே
    க்ருல்ல்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகளுடன் சண்டை போடும் ஆர்ச்சி

    2 அதிசய தீவில் ஆர்ச்சி

    அதே க்ருல்ல்ஸ் பூமியின் மீது படை எடுப்பதை வெல்லும் ஆர்ச்சி

    இரண்டும் அருமை

    3 ஜேம்ஸ் பாண்டின் நிழலும் கொல்லும்

    பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அதிகாரிகளை பிளாக் மெயில் பண்ணும் கதை. மிக அற்புதமாக விறு விறுப்பாக சென்ற கதை.

    லேட்டஸ்ட்:

    1 CID லாரன்ஸ் - இது வரை படிக்காத கதை, செம விறு விறுப்பு

    2 கர்னலின் நில் சிரி திருடு - இந்த கர்னல் வூட்சிட்டி ஷெரிப் போல இல்லாமல் ரிப்போர்ட்டர் ஜானி போல சிந்திக்கிறார்

    3 விண்வெளியின் பிள்ளை - தோர்களின் ஒரிஜின் கதைகள். எடுத்த ஒரே மூச்சில் படித்து முடித்த கதை.

    நான் ஜூன் மாத கதைகள் படிக்கும் நேரத்தில் வாசகர்கள் அக்டோபர் மாத கதைகளை படித்து கொண்டு இருப்பார்கள் என எண்ணுகிறேன்.

    ReplyDelete
  40. சார் ஏக எதிர்பார்ப்புடன் நேற்று ஏழரைக்கு கொரியருக்குள் , அவர்களுக்கு ஏழரைய கூட்டியபடி நுழைந்தால் ...பணி நண்பர் மகிழ்ச்சியுடன் வந்தாச்சென புன்னகைக்க ஒரு ஜிலீர்....அந்த சிகப்பு பைய கொட்ட புஷ்...ஷப்பா ...கண்ணக்கட்டுதே...அத கொட்டுவோம்...ஆஹா...வரலயே.....சரி கலக்சன் செண்டருக்கு அனுப்பிடுங்கன்னு கெளம்புனா...அந்தப் பைன்னு இன்னொரு நண்பர் பைய தடவி ..இருக்கு என ....பைய பிரிக்க குவியலில் மூன்றாவதாய் நான் ஆஹா...சாமிய கும்புட்டு பார்சல பரபரன்னு பிரிச்சா என்பதுகளுக்குள் ..அதான் நம்ம காமிக்ஸ் பொற்காலத்துக்குள் உறிஞ்சிழுக்குது ஸ்பைடர் , ஆர்ச்சி தாங்கிய லேபிள்...சத்தியமா புத்தகங்கள மீறி முதல்ல அது என் கையிலகப்பட்டது எப்படி என நினைவு படுத்த முடியல... ஆனா கோகுலம் , ராணி காமிக்ஸ் இவங்கெல்லாம் லேபிள் தரும் போது நம்ம லயன் மட்டும் ஏன் ஆர்ச்சி ,ஸ்பைடர போட்டுத் தரலங்ற தவிப்போடு சுற்றி வந்த பாலய ஏக்கங்கள் வர....யார் சொன்னது சிறுவயதில் ஏங்கியது மத்திம வயதில் காணும் போது சுவாரஷ்யமில்லை எனக் கேட்ட மனது லேபிள யாருக்காவது தந்துர சொன்ன , அருகிலிருந்த நண்பர வெறுப்போடு பார்க்க மனது சொல்ல...இது எனக்காக காலப்பேழையில் நைந்து விடுமென எனக்குதான் ......எனக்கே என்க்குதான் எனக் கூவ ....பகலவன் அறைந்த ஆரஞ்சு வண்ண அண்டர்டேக்கர் அட்டை மீண்டும் கடந்த காலத்துக்கு அழைக்க , பிரித்ததும் உற்சசாக நிகழ் காலம் நீல நிறத்தில் டாலடிக்க அமர்களம்தான் பிற இதழ்களின் அட்டைகளும் . வருகிறது விளம்பரங்கள் கடந்த காலத்தை சிமிட்டிட ....வழவழப்பான கண்ணாடி அட்டைன்னு போடுவீங்களே அதற்கிணையான தற்போதய ஹார்டுபௌண்டு அட்டை வார்த்தை மிஸ்ஸிங்....பார்க்கலாம் திங்களன்று அண்டர்டேக்கர புரட்ட வாய்ப்பிருந்தால் நண்பர்களின் ஜோதியில் கலக்க வாய்ப்புள்ளதா என !சார்ஸ்மர்ஃப்ச பத்தி நினைத்த படி புத்தகத்த புரட்ட ..விளம்பரமாய்...இந்தமாத புத்தகத்தல்..அருமை.....சார் டைகர் ஸ்பெசலில் முன் பதிவில் என் பெயரக் காணோம் .

    ReplyDelete
  41. டெக்ஸ் திரில் .

    ReplyDelete
  42. //ஏதோ டெம்போலாம் வைத்துக் கடத்தியுள்ளதையும் கருத்தில் கொண்டு மார்க் போடுவீர்களென்ற நம்பிக்கையுள்ளது ! //
    வர வர நீங்களும் நகைச்சுவை செய்ய ஆரம்பித்து விட்டீர்கள் சார்.

    ReplyDelete
  43. தி அன்டர்டேக்கர் விமர்சனம் :
    நாயகன் ஜோனாஸ் க்ரோ - கடைசிவரை யாராலும் புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிர்மனிதனாக வலம்வருவதே அவர் மீது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது,
    பிரைரி ரோஸ்,லின் - ஏற்றுக் கொண்ட பணிக்காக முழு மனவிருப்பம் இல்லை எனினும் கடமை எனும் நோக்கை கொண்டு எல்லா கஷ்டங்களையும் ஏற்கும் பரிதாப ஜீவன்கள்,
    ஜோ கஸ்கோ - தான் அழிந்தாலும் மற்றவர்கள் வாழக் கூடாது எனும் சுயநல போக்கையும்,தன்னை சார்ந்தவர்களை உளவியல் ரீதியாக அவர்கள் மனதை குலைக்கும் அற்ப போக்கையும் கொண்ட ஒரு விஷமக்காரன்.
    மாக்கெல்லன் - தான் செய்த பணிக்கு எதையாவது அடைந்து விட மாட்டோமா என துடிக்கும் ஒரு சராசரி மனிதன்.
    ஜார்ஜ் - வறுமையை தொலைத்து ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துவிட மாட்டோமா என்று ஏங்கி தவித்தும்,நேர்மைக்கும்,வன்முறைக்கும் இடையே மதில்மேல் பூனையாக மனக் குழப்பத்துடன் புழுங்கும் ஒரு அப்பாவி.
    இன்னும் பல கதை மாந்தர்களுடன் பயணிக்கும் ஒரு அருமையான வன்மேற்கின் வலைபின்னல் தொடர்ச்சி இது.
    வரவேற்கப்பட வேண்டிய ஒரு தொடர் இது,சித்திரங்களும்,அச்சுத் தரமும் உலகத் தரம்,கதை மாந்தர்களின் உணர்வுகளை சித்திரங்கள் அருமையாகப் பிரதிபலிக்கின்றன.
    பைண்டிங்கில் மட்டும் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ReplyDelete
  44. நண்பர்கள் யாராவது விடை சொல்ல முடியுமா. +6 ல் டெக்ஸ் வில்லர் பதிப்பில் நாம் என்றைக்குள்ளாக நமது படத்தை அனுப்ப வேண்டும். யாராவது எனக்கு தகவல் கொடுங்கள். I am in Andra state.
    My mobile no: 9487309782

    ReplyDelete
    Replies
    1. 30.6.17 க்குள் பெயர் முகவரியோடு photos-lion@yahoo.com என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்பலாம் நண்பரே...:-)

      Delete
    2. நண்பர் அறிவரசு மற்றும் நண்பர் பரணிதரன் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

      Delete
  45. மதிப்பிற்குரிய நண்பர் 'மாத்தி யோசி' மாயாவி சிவா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.....!

    ReplyDelete
    Replies
    1. மாத்தியோசி புகழ் மாயாவி சிவாவுக்கு மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.! இன்னும் பல்லாயிரம் இங்கே க்ளிக்குகள் வழங்கி வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். .!!

      Delete
    2. பிறந்தநாள் எல்லாம் ஒரு மேட்டரா..??? நம்மையும் நம்பி,வாழ்க்கையில் கைகோர்க்க ஒருத்தர் முன்வர்றதுதான் மேட்டரே. அந்த வகையில் இன்று வெற்றிகரமா தன் திருமணநாள் கொண்டாடும் கோடையிடியார் அவர்களுக்கு தான் வாழ்த்துகளை சொல்ல வேண்டும்.!:D

      வாழ்த்துகள் கோடையிடியாரே...வாழ்த்துகள்.!

      [ இன்று ஐந்து...பதிவின் தலைப்பும் 'ஐந்தின் கதை'. இதற்கும் எங்கள் இருவரின் கொண்டாட்டத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லைங்கோ.. :P ]

      இருப்பினும்கூட வாழ்த்துகள் சொல்லி இன்றையதினத்தை இனிமையாக்கும் நண்பர்களுக்கு நன்றிகள்பல..! :)))))))))))

      Delete
    3. நண்பர் மாயாவி சிவா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

      Delete
    4. ////இன்று வெற்றிகரமா தன் திருமணநாள் கொண்டாடும் கோடையிடியார் அவர்களுக்கு தான் வாழ்த்துகளை சொல்ல வேண்டும்.!///

      திருமணநாள் வாழ்த்துகள் கோடையிடியாரே!

      மாயாவி சிவா பிறந்த அதே அன்னிக்குத்தான் உங்களுக்குக் கல்யாணமாகியிருக்குன்னா...... ஆச்சர்யம்தான்!!! ஆனா இப்பப் பார்த்தாலும் சின்னப்பயனாட்டமே இருக்கீங்களே KOK?!! ;)

      Delete
    5. mayavi.siva : லூயி கிரண்டலையும், வேதாளரையும் பெயரில் கொண்டுள்ள நண்பருக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகுக !

      Delete
    6. @ திரு விஜயன்

      வாழ்த்திய அன்புக்கு நன்றிகள்பல ஸார்..!

      எல்லோருமே அது என்ன..??? அது என்ன..??? ன்னு ஒருத்தரை ஒருத்தர் கேட்டுக்கிட்டு பல யூகங்கள் இருக்கிற ஒரு விஷயம்...அதை நீங்களே சொன்னா செமத்தியா இருக்கும்..!

      முதல் தொகுப்பிற்கு செய்துள்ள மான்ய உதவியினை ஜெரெமியா - Part 2-விற்கும் தொடர்வதற்கு பிரெஞ்சு மையம் உறுதியளித்துள்ளனர் !! வாசகர்களின் கொடையைத் தாண்டி, வேறெந்த வித ஒத்தாசைகளையும் ஆயுசுக்கும் பார்த்திரா நமக்கு, இந்த தேசத்தின் வாஞ்சை மெய்சிலிர்க்கச் செய்கிறது !! சிரம் தாழ்த்துகிறோம் இந்த நம்பிக்கைக்கும், அங்கீகாரத்துக்கும் !!

      படிக்கவே ஜவ்வுன்னு இருக்கு..!

      ஆனா பாருங்க...நம்ம ராமையாவுக்கு அவங்க கொடுக்கிற மானியம் எந்தவகையிலானது..??? அந்த மானியத்தால் ஹாட்பவுன்ட் அட்டையுடன் நமக்கு கிடைத்துள்ள படைப்பின் பின்னால் மறைந்துள்ள, மொழிபெயர்ப்பு,பைண்டிங்,டிஸைன்,ராயல்டி,பேப்பர்,பிரிண்டிங் என ஏதேனும் ஒரு செலவில் ஒரு குட்டியூண்டு பங்கு என்றாலும்கூட...அந்த மானியம் குட்டி குட்டியான குண்டுஊசி விஷயமாயினும் பகிர்ந்துகொள்ள பலரின் சார்பாக வேண்டுகிறேன் ஸார்..!

      Delete
    7. மாயாஜீயின் வழக்கமான பிழை தான்...எனவே பொறுத்தருள்க...


      " படிக்கவே ஜிவ்வுன்னு இருக்கு..."

      என தோழமைகள் வாசிக்குமாறு பணிவன்புடன் வேண்டிகொள்கிறேன்..:-)

      Delete
    8. @ தலீவரே

      :))))))))))))

      Delete
    9. அண்ணன் மாயாவியாரின் பிறந்தநாளுக்கு தம்பியின் பாசமிகு வாழ்த்துக்கள். இந்த வாழ்த்தையே பொன்னாடையாக பாவித்து அணிவிக்கிறேன்.

      Delete
    10. ///மாயாவி சிவா பிறந்த அதே அன்னிக்குத்தான் உங்களுக்குக் கல்யாணமாகியிருக்குன்னா...... ஆச்சர்யம்தான்!!! ஆனா இப்பப் பார்த்தாலும் சின்னப்பயனாட்டமே இருக்கீங்களே KOK?!! ;)///

      சின்னப்பையன் சின்னப்பயனாட்டம்தானே இருப்பான் குருநாயரே!?!?

      மாயாவியார் அவதரித்த நாளுக்கும் என்னுடைய திருமணநாளுக்கும் இடைப்பட்டது வெறும் 32 ஆண்டுகள் மட்டுமே ஹிஹி..!

      Delete
    11. ///நம்மையும் நம்பி,வாழ்க்கையில் கைகோர்க்க ஒருத்தர் முன்வர்றதுதான் மேட்டரே.///

      வாஸ்த்தவமான பேச்சுங்க வேதாளரே..!!
      என்னதான் காமெடிக்காக பேசினாலும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்தான். .! அந்த இறைவனுக்கு இன்று நன்றி சொல்லிவந்தேன்.! (யாருக்கும்??!? பயந்துகொண்டு இதை நான் எழுதவில்லைன்னு சொன்னா நீங்க நம்பணும்.. :-) )

      Delete
    12. ///நம்மையும் நம்பி,வாழ்க்கையில் கைகோர்க்க ஒருத்தர் முன்வர்றதுதான் மேட்டரே.///

      வாஸ்த்தவமான பேச்சுங்க வேதாளரே..!!
      என்னதான் காமெடிக்காக பேசினாலும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்தான். .! அந்த இறைவனுக்கு இன்று நன்றி சொல்லிவந்தேன்.! (யாருக்கும்??!? பயந்துகொண்டு இதை நான் எழுதவில்லைன்னு சொன்னா நீங்க நம்பணும்.. :-) )

      Delete
    13. mayavi.siva : சார்..."தயாரிப்புச் செலவுகளுக்கு உதவிட" என்று சொல்லி ஒரு ஐந்திலக்கத் தொகையைத் தந்துள்ளனர் மையத்தினர் ! இவ்வளவு-அவ்வளவு என்று அதனைக் குறிப்பிட்டுச் சொல்வதை விடவும், அதன் பின்னணியில் உள்ள அக்கறையையும், அன்பையும் ஒரு கோடிக்கு ஈடாய்ப் பார்த்திடுகிறோம் !!

      And ஜெரெமியா இதழினை அவர்கள் சிலாகித்துள்ள விதமே இன்னொரு கோடி பெறும் ! So நமது bank balance புஷ்டியாகிறதோ -இல்லையோ - மனம் நிறைந்து வழிகின்றது !

      Delete
  46. மாத்தியோசி புகழ் மாயாவி சிவாவுக்கு மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.! இன்னும் பல்லாயிரம் இங்கே க்ளிக்குகள் வழங்கி வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். .!!

    Happy birthday dear Mayathma ..!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : திருமண நாள் வாழ்த்துக்கள் நண்பரே !

      Delete
    2. திரு.மாயவி சிவா_இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
      திரு.kid ஆர்டின் இனிய மண நாள் வாழ்த்துக்கள்.
      Podiyan,மற்றும் ஆதி தாமிர அவர்களுக்கு உங்களுடைய பங்களிப்பு மேலும் காமிக்ஸ்க்கு வலம் கூட்டுவதாய் அமைய உளமாற வேண்டுகிறேன்(மகிழ்ச்சி).வாய்ப்பளித்த அன்பு ஆசானுக்கு அனைத்து வாசக நல்லுள்ளங்களின் சார்பாக;நன்றி!நன்றி!!நன்றி!!!.💐💐💐.

      Delete
    3. நெஞ்சார்ந்த நன்றிகள் எடிட்டர் சார். .!

      Delete
  47. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாயாவி ஜி.

    ReplyDelete
    Replies
    1. மாயாவிக்கு எனது பிறந்தநாள் நலவாழ்த்துக்கள்.!


      மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.மேச்சேரியாருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.!

      Delete
  48. மாயாவி சிவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்...உங்கள் சேவை எங்களுக்குத் தேவை..!

    ReplyDelete
  49. ரின் டின்: ரெண்டு ஐந்துகள் பணி நிமித்தம் காரணமாக இடம்மாறி போகின்றன. நமது ஹீரோ ஐந்துக்கு தனது பழைய இடத்துக்கு செல்ல வேண்டும் என ஆவல், அதே போல் அதன் பழைய (ஜெயில்) இடத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஐந்து பிடிக்கவில்லை, ஏன்னா அதற்கு கொஞ்சம் அறிவு ஜாஸ்தி :-). நமது ஹீரோ ஐந்து எப்படி தனது பழைய ஜெயில்லுக்கு திரும்ப வருகிறது என்பது தான் கதை, இதனை சுற்றி நடக்கும் கலாட்டா வயிற்றை பதம் பார்கவில்லை என்றாலும் சில இடம்களில் முகத்தில் புன்னகையை கொண்டு வருகிறது. அதிலும் அந்த இரும்புக்கை கேப்டன் கொடுக்கும் தண்டனை காமெடி ரகம்.

    கடந்த வருடம் வந்த ரின் டின் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார், இந்த முறை அப்படி இல்லை.

    இந்த கதையில் நமது ஐந்துக்கு டைலாக் குறைவு, அதில் நமது ஆசிரியர் தன்னால் முடிந்த அளவு நகைச்சுவையை கொடுக்க முயற்சித்து இருக்கிறார்.

    அட்டையில் காமெடி சரவெடி என சொல்லாமல் இருந்தால் கூட மக்கள் இதனை ஒரு சராசரி கதையாக எடுத்து வாசித்து ரசித்து இருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Note: விலங்குகளுக்கு 5 அறிவு என்பதால் ஐந்து என குறிப்பிட்டுள்ளேன்!

      Delete
  50. மாயாவி சிவா சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்கள் சேவை.
    கிட் ஆர்டின் கண்ணன் சாருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். சகல வளங்களும் பெற்று பல்லாண்டுகள் வாழ்வாங்கு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  51. மாயாஜீ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வார்த்துக்களையும்...

    ரவிகண்ணர் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகளையும்


    தெரிவித்து கொள்கிறேன்...


    இன்று போல் என்றும் வாழ்க ( இன்னிக்கு சந்தோசமா தான் இருப்பீங்கன்னு நம்புறேன் :-)

    ReplyDelete
  52. ஒரு சிலந்தியின் வலையில்...


    முதலில் அட்டை படத்திற்கு ஒரு திருஷ்டி சுற்ற வேண்டும்..அவ்வளவு அழகு...ரசித்து கொண்டே இருக்க சொல்கிறது...வழக்கமான அதே இடியாப்பல் சிக்க பாணி என்றாலும் இது வரை மற்றவர்களுக்கு சிக்கல் வர அவர்களை அந்த வலையில் இருந்து விடுவிக்க பாடுபடுவார்...இம்முறையோ அவரே சிக்கல் மேல் சிக்கலாக சிலந்தி வலையில் சிக்கி குற்றவாளி கூண்டில் நிற்க அதனில் இருந்து விடுபடும் நிலைக்கு ஜானி படாத பாடு படுகிறார்....ஜானி கதைகளின் சித்திர தரம் பற்றி சொல்லவே வேண்டாம்...தெளிவான ...தனிப்பட்ட ..ஒரு நிஜபாணி ஓவியம் எப்பொழுதும் அவருடையது ...

    வழக்கமான ஜானி ...வழக்கமான கதை பாணி ...வழக்கமான சித்திரம்....


    வழக்கமான மதிப்பெண்...:-)

    ReplyDelete
  53. கவரிமான்களின் கதை...


    கதை படிக்க ஆரம்பிக்கும் முன்னரும்..படித்த பின்னரும் நேரத்தை கவனித்தேன்...சரியாக இரண்டு மணி நேரம்...ஒரு அட்டகாசமான திரைப்படத்தில் அசத்தலான திரை அரங்கத்தில் பார்த்த உணர்வு...மெக்ஸிகன் தேசத்தில் நம்மையும் உலவ வைத்து விட்டார் கதாசிரியர் ...முக்கியமாக ஓவியர்...கதை ஆரம்பிக்கும் சமயம் டெக்ஸ் முக தோற்றம் சிறிது வேறுபட்டு டெக்ஸாக தோன்றாமல் மனது மல்லுக்கட்ட கதையின் விறுவிறுப்பும்...மொழி ஆக்கமும் ...வழக்கமான டெக்ஸ் கார்சன் உரையாடல்களும் வழக்கமான டெக்ஸ் ஸ்பெஷலாக ஒன்ற வைத்துவிட்டது...ஒரு மாத இடைவெளி விட்டதற்கு ஒரு மாத வட்டியும் முதலுமாக கலக்கி எடுத்து விட்டார்கள்...இவர்கள் மட்டுமல்லாது கதையில் வரும் ஒவ்வொரு மாந்தர்களுமே நினைவில் நிற்குமாறு அமைந்த கதை பாங்கு இந்த கவரிமான்களின் கதையில்...


    சூப்பர் என்ற மதிப்பை தவிர மான்களுக்கு வேறு மதிப்பேது....

    ReplyDelete
  54. இன்று விடுமுறை (எனக்கு ) நாள் ..டெக்ஸ் இப்பொழுது தான் முடித்தாயிற்று...அண்டர் டேக்கரை வழக்கம் நாளுக்கு ஒரு காமிக்ஸ் என்ற படி நாளை படிக்கலாமா ...அல்லது இன்றே படிக்கலாமா என கைகளில் புத்தகத்தை ஏந்தியவாறே பலத்த குழப்பம்....

    விடை கொடு இறைவா..:-)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K @ "விடை கொடு இறைவா.. " அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு விடை கொடுக்கமாட்டோம் :-)

      Delete
    2. இன்று 'விடுமுறை நாள்' காணும் எங்கள் தங்கத்தலைவரை வாழ்த்த வயதில்லை எழுந்து நின்று வணங்குகிறேன்.

      Delete
    3. பரணி சார்..பெருமாள் சார்..

      ஹாஹா....:-))))

      Delete
  55. மாயாவி சிவா சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்கள் சேவை.
    கிட் ஆர்டின் கண்ணன் சாருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். சகல வளங்களும் பெற்று பல்லாண்டுகள் வாழ்வாங்கு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  56. இந்த பதிவில் ஆசிரியர் வாழ்த்து சொல்ல மட்டும் தான் வருவார் போல...:-(

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : தலீவரே....இங்கே ஜாலியாய் தலைகாட்டிட எனக்கும் ஆசை தான் ; ஆனால் காத்திருக்கும் மாதத்தின் பக்கங்கள் 840 !!

      இப்போதே தலை லேசாய் ராட்டினம் போல் சுற்றுகிறது !

      Delete
  57. ஒரு சிலந்தியின் வலையில் விமர்சனம் :
    ஆரம்பம் முதல் இறுதிவரையில் கதை டாப் கியரில் செல்கிறது,அச்சுத்தரம்,கலரிங் நம்பர் ஒன் ரகம்,கிரிஸ்டியன் லெட்டியால் ஆரம்பிக்கும் சிக்கல் ஜானியையும் குழப்பி,நம்மையும் குழப்பி கடைசியில் ஒருவழியாக புதிரை தெளிய வைக்கிறது,கதைக்கான பெயர் தேர்வு கச்சிதமாக பொருந்தியுள்ளது,ஜானியின் டாப் சாகஸகங்களில் இதுவும் ஒன்றாக அமைந்து விட்டது,தயவுசெய்து 2018 லாவது ஜானிக்கு 2 ஸ்லாட் ஒதுக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi //தயவுசெய்து 2018 லாவது ஜானிக்கு 2 ஸ்லாட் ஒதுக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.//

      ஒரு பாகத்துக்கே மூச்சிரைக்குதே சார் !!

      Delete
    2. Arivarasu @ Ravi //தயவுசெய்து 2018 லாவது ஜானிக்கு 2 ஸ்லாட் ஒதுக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.//

      +++++1

      Delete
  58. குருநாயர்
    மாயாத்மா
    தலீவர்
    Shridhar
    Thiruchelvam Prapananth
    மாடஸ்டி பிளைசி வெங்கடேஸ்வரன்
    Sri Ram


    வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே..!

    ReplyDelete
    Replies
    1. Kid ஆர்டின்,
      உங்கள் Listல் என் பெயர் இல்லையா. அருள் கூர்ந்து எனது பெயரை இணைக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன். இது அன்பால் விளைந்ததே.

      Delete
    2. அவரு ரொம்ப ஸ்ட்ரிக்டுங்க.

      Delete
    3. Shinesmile Foundation @

      மன்னிக்கவும் சார்.! (வேலைப்பளுவின் காரணமாக தாமதமான பதிலுக்கு)


      உங்களுக்கு இல்லாத லிஸ்டா சார்!? முதல் பெயராகவே சேர்த்துவிடுவோமே..!!


      புத்தகங்களை வாங்கி நான்கு நாட்களாகியும், இன்னும் ஒரு பக்கம்கூட படிக்கமுடியாமல் இருந்தது இதுவே முதல்முறை..!! :(:(:(:(

      இனிதான் தொடங்கவே வேண்டும்..!

      Delete
  59. ****** பிணத்தோடு ஒரு பயணம் ******
    ( கதை 'லைட்டாக' விவரிக்கப்பட்டிருக்கிறது)

    "எது எப்படியோ, ஜனங்களுக்கு எங்களைப் பிடிக்கிறதில்லைங்கறதுதான் அடிப்படை உண்மை. அதனாலே ஒண்ணும் குடி முழுகிப் போயிடாதுதான்! ஏன்னா, எனக்குமே அவங்களை அறவே பிடிப்பதில்லை!" என்று முதல்பக்கத்திலேயே வித்தியாசமான, ரகளையான இன்ட்ரோவுடன் காட்சிதருகிறார் நம் அன்டர்டேக்கர் aka ஜேனாஸ் க்ரோ!

    கதை : ஏதோவொரு காரணத்தால் தன் கால்களில் ஒன்றை இழந்த தங்கச் சுரங்க அதிபரான கஸ்கோ எனும் பெரிசு, தான் கஷ்டப்பட்டு சேகரித்த தங்கங்கள் எல்லாம் தன் இறப்புக்குப் பிறகும் தன்னுடனேயே இருக்கவேண்டும் என விரும்புகிறது. அன்டர்டேக்கரை வரவழைத்து இறுதிச்சடங்குகளுக்கு ஆகும் செலவை பேரம் பேசிமுடிக்கும் அந்தப் பெரிசு, தங்கக்கட்டிகளை கேக்கினுள் வைத்து விழுங்கிவிட்டு, விஷம்குடித்து உயிரை விடுகிறது. சாகும்முன்பு - தான் எப்படி, எங்கே, எவ்விதம் புதைக்கபடவேண்டுமென்ற விவரங்களை உயிலாகத் தயாரித்து, அப்பணிகளைச் செய்துமுடிக்க தன் நம்பிக்கைக்குரிய பணிப்பெண் ரோஸின் கைகளில் கிடைக்கச் செய்கிறது.
    தன் மாஸ்டரின் கடைசி ஆசையை நிறைவேற்றும்பொருட்டு உறுதியேற்கும் ரோஸ், உயிரற்ற தன் மாஸ்டரின் உடலுடன், நம் வெட்டியான் ஹீரோ மற்றும் ஒரு சீனப் பணிப்பெண்ணையும் உடனழைத்துக்கொண்டு நீண்டதொரு பயணம் மேற்க்கொள்கிறாள். மூன்று நாட்களில் பயண இலக்கை அடைந்தே ஆகவேண்டுமென்ற கட்டாயம் ஒருபுறமிருக்க, கஸ்கோவின் தங்கத்தை தங்களுடையதாக்கிக்கொண்டு வாழ்வில் வளம்பெற நினைக்கும் அவ்வூர் சுரங்கத் தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து இவர்களைத் துரத்துவது மறுபுறமிருக்க, வழிநெடுகிலும் இவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தான சம்பவங்களே விறுவிறுப்பான, பரபரப்பான மீதக் கதை!

    ஒருவேளை சோற்றுக்கு அலையும் வெட்டியானாக வந்து இயல்பான தோற்றம்+செயல்+ வசனங்களால் அசத்தியிருக்கும் நம் ஹீரோ உண்மையில் யார்? - என்பது கதைநெடுகிலும் பரம ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த பாகங்களில் இவரைப் பற்றிய பின்புல உண்மைகள் வெளியாகிடும்போது இன்னும் நம் மனதில் அழுத்தமாகப் பதிவார் என்பது உறுதி!

    கதை நகர்த்தப்பட்ட விதமும், வசனங்களும், சித்திரபாணியும், வண்ணக்கலவைகளும் 'நீயா நானா' போட்டியில் இறங்கி, பக்கத்துக்குப்பக்கம் ஒன்றையொன்று விஞ்சி நிற்கின்றன! சில ஃப்ரேம்களில் வசனங்கள் "அட!" என்றால், சில ஃப்ரேம்களில் சித்திரங்களும் வண்ணக்கலவையும் "அம்மாடியோவ்!". இப்படியாக,
    அட!
    அம்மாடியோவ்!
    அட!
    அட!
    அம்மாடியோவ்!
    அட!
    .
    .
    .

    LGNன் இரண்டாவது பாலும் சிக்ஸர்!!

    என் மதிப்பீடு : 9.75/10

    ReplyDelete
    Replies
    1. அந்த மீதி பாயிண்ட்-.25 மார்க் டஸ்ட் கவருக்கா?!

      Delete
    2. // ஒருவேளை சோற்றுக்கு அலையும் வெட்டியானாக வந்து இயல்பான தோற்றம்+செயல்+ வசனங்களால் அசத்தியிருக்கும் நம் ஹீரோ உண்மையில் யார்? - என்பது கதைநெடுகிலும் பரம ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த பாகங்களில் இவரைப் பற்றிய பின்புல உண்மைகள் வெளியாகிடும்போது இன்னும் நம் மனதில் அழுத்தமாகப் பதிவார் என்பது உறுதி //

      ஹலோ ஈ.வி. சார்! அசத்தலான இந்த ஹீரோ உண்மையில் யார் என்று நெட்டில் தேடி பார்த்தேன். ஆனால், இந்த அண்டர்டேக்கருக்கு இருப்பது 3 கதைகள்தான். அதில் 2 இப்போது வந்துவிட்டது. 'பிணத்தோடு ஒரு பயணம்' THE GOLD EATER என்ற பெயரில் JULY 2016'லும், 'வல்லூறுகளின் தாண்டவம்' THE DANCE OF THE VULTURES என்ற பெயரில் OCTOBER 2016'லும், வரவிருக்கும் 'தலைதூக்கும் அசுரன்' THE OGRE OF CAMP SUTTER என்ற பெயரில் FEBRUARY 2017,லும் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனால் 'விடாது கருப்பு' பற்றி எந்த தகவலும் இல்லை.

      Delete
    3. விஜய். கீழே என் கமென்ட் பார்க்க.

      Delete
    4. பூனையாரே.!


      விமர்சனம் அருமை.படிக்கும் ஆவலை தூண்டுகிறது.!


      எடிட்டர்தான் என் காமிக்ஸ் ரசனையை உருவாக்கினார்.! 99% அவரது ரசனையோடு என்ரசனை ஒத்துப்போகும்.!


      ஆனால் , மீள் வருகைக்கு பின்னர் , கி.நா.வின் காட்பாதராக எடிட்டர் ஆனபின்னர்....அவரது ஒப்பீனியனை கொஞ்சம் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கின்றேன்.!


      கடந்த சில பதிவுகளாக ,90'ஸ் களில் தொலைக்காட்சி வானொலி எதை வைத்தாலும் பஞ்சாயத்து ராஜ்,பஞ்சாயத்து ராஜ்,என்று காது கிழியறமாதிரி திரும்ப திரும்ப சொல்வது போல் எடிட்டர் , அண்டர்டேக்கர் புராணம் பாடியபோது கூட ,தள்ளி நின்னு வேடிக்கை மட்டும் பார்த்தேன்.! கொரியரின் பாக்ஸை உடைத்தபோது அண்டர்டேக்கர் புத்தகம்தான் தோற்றத்தில் நெ.1 ஆக மின்னியது.இருந்தாலும் ஏற்கெனவே சூடுகண்ட பூனை என்பதால் அதை ஓரம்கட்டிவிட்டு எவர்கிரீன் டெக்ஸ் வில்லரை முதலில் தேர்ந்தெடுத்தேன்.......



      கதையில் தங்கம் வந்தாலே சுவராசியம்தான்......பூனையாரே அண்டர்டேக்கரை படித்துமுடித்துவிட்டு வருகிறேன்.!

      Delete
    5. மாடஸ்டி பிளைசி வெங்கடேஸ்வரன். : சார்..ரசனைகள் சார்ந்த விஷயங்களில் தப்பு-ரைட்டு என்றெதுவும் கிடையாது ; எல்லாமே அவரவர் பார்வைக்கு கோணங்கள் சார்ந்தது !

      உங்களுக்கு எல்லாமுமாய்த் தெரியும் இளவரசியை - "10 பக்கங்களைத் தாண்டி வாசிக்க முடியலை சார் ; இந்த 70 -களின் புராதனைச் சின்னங்களை இன்னமும் ஏன் தொடர்கிறீர்கள் ? !!" என்று ஒப்பாரி வைத்த கையோடு, ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்த மூத்த வாசகர் ஒருவர் surf excel போட்டுக் கழுவி ஊற்றியிருந்தார் ! இங்கே பிழை யார் மீதென்று பட்டிமன்றம் நடத்தினாலும் விடை கிட்டாது !

      கிராபிக் நாவல்கள் உங்கள் ரசனைக்கு ஒத்துப் போகவில்லையெனில் நிச்சயம் அதன் பொருட்டு யாரும் விசனம் கொள்ளப் போவதில்லை ! ஆனால் அவற்றினுள்ளும் ஒரு உலகம் உள்ளது ; அதனை ரசிக்கும் ஒரு அணியும் உண்டு என்பதை சிறுகச் சிறுக உணராது போக மாட்டீர்கள் !

      Delete
    6. Erode VIJAY : //கதை நகர்த்தப்பட்ட விதமும், வசனங்களும், சித்திரபாணியும், வண்ணக்கலவைகளும் 'நீயா நானா' போட்டியில் இறங்கி, பக்கத்துக்குப்பக்கம் ஒன்றையொன்று விஞ்சி நிற்கின்றன! //

      கதையின் போக்கில் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது அண்டர்டேக்கரின் அந்த நக்கலான பாணி தான் ! So வரிகளில் அதன் பிரதிபலிப்பு இல்லாது போயின் இந்தக் கதாப்பாத்திரம் ஒரு ரெண்டுங்கெட்டானாகிப் போகிடும் என்ற பயம் தலைகாட்டியதால் - மொழியாக்கத்துக்கு ரொம்பவே கவனம் தர வேண்டிப் போனது ! படைப்பாளிகளின் உசேன் போல்ட் ஓட்டத்துக்கு ஈடு தர வாய்ப்புகள் நமக்கு லேது தான் ; ஆனால் ஓரமாய் உள்ள தடத்திலாவது ஓடிப் பார்த்துக் கொள்ள நமக்கு வாய்ப்புக்கு கிட்டுவது இந்த ஒரு deoartment -ல் மட்டும் தானே ?

      Delete
  60. ஜானி பற்றிய அப்பத்தா ஜோக். செம காமெடி.

    எங்கேயோ இருக்குற பிரன்சுகாரன் அவன் கலாச்சாரத்தை கொஞ்சூண்டு வளர்க்க எவ்வளவு செய்யிறான். தமிழக அரசு நம்ம புக்ஸை எல்லா லைப்ரரிக்கும் குடுக்கனும்னு உத்தரவு போட்டால் என்ன? குழந்தைகளின் படிப்புத்திறனை வளர்க்க அவர்களை மேலும் புத்திசாலியாக்க, புத்தகங்கள் என்றாலே பாடப்புத்தகங்கள் நினைவுக்கு வரும் அளவு வெறுப்பு குறைய இதையாவது செய்ய வேண்டும். லயன் காமிக்ஸ் பிளாக் பாலோயர் நாம் அனைவரும் ஒரு லெட்டர் போட வேண்டும் முதல்வருக்கும் நூலக டைரக்டருக்கும். இந்தப் புரட்சியை யாராவது ஆரம்பிப்பீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. டாக்டா் ஹாிஹரன் சாா்,

      பிரான்சுல கதை எழுதுகிற படைப்பாளிகளுக்கு அரசாங்கமே நிதியுதவி செய்யரதா கேள்விப்பட்டிருக்கேன்.

      அதோடு அம்மக்களின் ரசனையும் மேம்பட்டதாகவே உள்ளது.

      ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 500 புத்தகங்கள் கொண்ட ஒரு சிறு லைப்ரரியாவது இருக்குமாம்!

      நம்ம ஊரிலே புக்கு வாங்கும் போதெல்லாம் பெற்றோரிடம் பேச்சு வாங்குவது தானே வாடிக்கையாக உள்ளது.

      Delete
    2. Dr. Hariharan,

      அருமையான யோசனை சார்! ஓரிரு வருடங்களுக்கு முன்பே நண்பர்களில் சிலர் இதுபற்றி விவாதித்தது உண்டு. ஆனால் செயல்வடிவம் கொடுப்பது எப்படியென்று சரிவரத் தெரியாததால் அப்படியே அழுங்கிப்போய்விட்டது. அடுத்து வரயிருக்கும் ஏதேனுமொரு புத்தகத் திருவிழாவில் எடிட்டரின் முன்னிலையில் இதைப்பற்றி அலசுவோம்!

      Delete
    3. Dr. Hariharan : சார்....எங்களுக்குமே அரசு நூலகங்களையோ ; பள்ளி நூலகங்களையோ எட்டிப் பிடிக்கும் ஆசையுண்டு தான் ! In fact நிறைய பள்ளிகளை நேரடியாகவே அணுகிப் பார்க்கவும் செய்தொம் !" நாங்கோ இங்கிலிபீஸ் புக்குகளைத் தாண்டி வேறெதுவும் வாங்குறான் இல்லே !!" என்று துரத்தியடித்து விட்டார்கள் ! அதன்பின்னே அரசு லைப்ரரி ஆர்டர் வாங்கித் தருகிறேன் என்று சத்தியம் பண்ணியவரிடம் ஒரு கணிசமான தொகையை இழந்தும் இருக்கிறோம் !

      So நீங்கள் முன்மொழியும் முயற்சி சிரமமிலா ஒன்றாய்த் தெரிகிறது ! வந்தால் மாங்காய்...போனால் கல் !

      Delete
  61. லேபில்- செம
    டெக்ஸ்- இந்த மாதிரி கதைக்களங்கள் செம ஜோர். நிறைய கிரிஎட்டிவ்வான கதைக்களம்.
    அன்டர்டேக்கர்-அடுத்த இதழ் பார்ப்போம். இது ஒகே தான்
    ரிண்டின்கேன்- நான் முதலில் படித்ததே அதைத்தான்.
    ஜானி அண்ட் பணக்கரார் - தூக்கம் வரா நாட்கள் இருக்குல்ல. அப்ப பாத்துக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Dr. Hariharan : //ஜானி அண்ட் பணக்கரார்//

      அட...insomina இரவுப் பார்ட்டிகள் பட்டியலில் ரிப்போர்ட்டர் ஜானியையுமா சேர்ப்பது ?

      Delete
  62. “ஒரு சிலந்தியின் வலையில்"
    இதுவரை அடுத்தவர் பிரச்சனைகளை துப்பறிந்து குற்றவாளியை கண்டுபிடிக்க உதவிய ஜானிக்கு, தன்னை சுற்றி பின்னபட்ட வலையின் சூத்திரதாரி யார் என கண்டுபிடித்து வலையில் இருந்து வெளிவருவதே கதை.

    முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு, ஒரு இடத்திலும்
    தொய்வில்லாமல் செல்வது கதையின் சிறப்பு. எங்கே சென்றாலும் இவருக்கு வலை பின்னபடுவது சிறப்பு, இறுதியில் இவரின் மேல் அதிகாரியும் இவரை குற்றவாளி என நம்ம ஆரம்பிப்பது செம!

    இந்த கதைக்கு மிகவும் சரியான தலைப்பை நீங்கள் கொடுத்து இருக்கீங்க. அச்சுதரம் அருமை.

    குறை என எண்ணுவது:
    அனைத்து என வரும் இடம்களில் எல்லாம் "அணைத்து" என குறிப்பிட்டு உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அண்டர் taker இன்னும் படிக்கவில்லை. ஆனால் இந்த மாதம் இதுவரை படித்த கதைகளில் “ஒரு சிலந்தியின் வலையில்" தான் முதல் இடம்!

      Delete
  63. தங்க விரல் மர்மம் கதையில் அட்டையில் உள்ள சந்தன வீரப்பன் அப்புறம் உள்ள காணோம்லே?! :-)

    ReplyDelete
    Replies
    1. Raghavan : பொறுமையாய் பக்கம் 10 வரைப் புரட்டுங்களேன் சார் ?

      Delete
  64. நமது காமிக்ஸ் தலைமையகம் - சிவகாசி அலுவலகத்துக்கு சுட்டிகள் வந்து எடுத்த பேட்டி இம்மாத சுட்டி விகடனில் வெளியாகியுள்ளது.

    ReplyDelete
  65. பக்கங்கள் அச்சாகும் படங்களோடு அட்டகாசமாக உள்ளது பேட்டி.

    ReplyDelete
    Replies
    1. பகுதி 01: காமிக்ஸ் உலகத்துக்கு ஒரு பயணம்!

      சுட்டி ஸ்டார்ஸ் ஸ்பெஷல்

      சிவகாசி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது, பட்டாசு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் குஷிப்படுத்தும் பட்டாசுகள் தயாராகும் சிவகாசியில்தான், குழந்தைகள் முதல் தாத்தா, பாட்டிகள் வரை குஷியாகும் இன்னொரு விஷயமும் தயாராகிறது. அதுதான், கதைப் பட்டாசு. புரியலையா... அதாங்க, காமிக்ஸ்.

      ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பிரபலமான காமிக்ஸ் புத்தகங்களை, 45 ஆண்டுகளாகத் தமிழில் கொடுத்துவரும் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் நிறுவனம் இங்குதான் இருக்கின்றன.

      ‘இரும்புக் கை மாயாவி’, ‘டெக்ஸ் வில்லர்’, ‘ஸ்பைடர்’, ‘லக்கி லுக்’, ‘கேப்டன் பிரின்ஸ்’ என உலக காமிக்ஸ் நாயகர்களை எல்லாம் தமிழில் பேசவைத்தவர்கள், சிவகாசியைச் சேர்ந்த பிரகாஷ் பப்ளிஷர்ஸ். அங்கே ஒரு விசிட் அடித்தோம். முத்து மற்றும் லயன் காமிக்ஸ் பதிப்பாளர் விஜயன், புதிய காமிக்ஸ் கதைகளை வாங்கிவருவதற்காக வெளிநாடு சென்றிருக்க, அவரின் சகோதரர் பிரகாஷ் குமார் நம்மை அன்புடன் வரவேற்றார்.

      பார்த்ததுமே வாரி எடுத்துக்கொள்ளத் தோன்றும் வகையில், வரவேற்பறையில் காமிக்ஸ் புத்தகங்களை அடுக்கிவைத்திருக் கிறார்கள். ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் புரட்டிப் பார்க்கும்போதே, அந்த காமிக்ஸ் உலகத்துக்குள் நுழைந்துவிட்ட உணர்வு. கேப்டன் டைகருடன் சேர்ந்து நாங்களும் குதிரையில் பாய்ந்துசென்றோம். ரிப்போர்ட்டர் ஜானியுடன் சேர்ந்து துப்பறிந்தோம். இரும்புக்கை மாயாவியின் மின்சார அதிர்வு, எங்கள் உடம்பிலும் பாய்ந்தது. லக்கி லுக்கும் அந்த நான்கு பொடியர்களும் எங்களைக் கிச்சுக் கிச்சு மூட்டினார்கள். கிராஃபிக்ஸ் காமிக்ஸ்களின் அட்டைப் படங்கள் ஒவ்வொன்றும் எங்கள் நேரத்தை இமைக்கா நொடிகளாக மாற்றின. இன்று முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தாலும் அந்த இடத்தைவிட்டு அசையத் தோன்றாது போலிருந்தது.

      ‘‘அப்புறம் வந்து, பிடிச்ச காமிக்ஸை எடுத்துப் படிங்க. இப்போ, காமிக்ஸ் பிரின்ட் பண்ற இடத்துக்குப் போகலாம் வாங்க’’ என்று அழைத்துச் சென்றார், பிரகாஷ் அங்கிள்.

      உள்ளே, சத்தத்துடன் இயங்கிக்கொண்டிருந்த அச்சு இயந்திரத்தின் வழியே, புதிதாக வெளிவரப்போகும் காமிக்ஸ் புத்தகத்தின் பக்கங்கள் அச்சாகி வந்துகொண்டிருந்தன. அதன் வாசனையே மாய உலகத்துக்கு அழைத்துச் சென்றது.

      ‘‘காமிக்ஸ் பிரின்டிங் பிரஸ்ஸுக்கு போகப்போறேன்னு சொன்னதும் என் அப்பா, அவர் சின்ன வயசுல படிச்ச காமிக்ஸ் பற்றியெல்லாம் சொல்லி அனுப்பினார். எத்தனை வருஷமா நீங்க காமிக்ஸ் வெளியிடுறீங்க அங்கிள்?’’ எனக் கேட்டோம்.

      Delete
    2. பகுதி 02:

      ‘‘எங்க முதல் காமிக்ஸ் புத்தகம் வெளியானபோது, அநேகமா உங்க அப்பாவே குழந்தையா இருந்திருப்பார்’’ என்று சிரிப்புடன் ஆரம்பித்தார் பிரகாஷ் குமார்.

      ‘‘எங்களுக்குப் பூர்வீகம், மதுரை. சிவாகாசியில் தொடங்கப்பட்ட ஆரம்ப கால அச்சகங்களில் எங்களுடையதும் ஒன்று. எங்கள் தந்தை சௌந்தர பாண்டியனுக்குப் புத்தகங்கள் படிக்கிறதில் ரொம்ப ஆர்வம். நல்ல ஆங்கிலப் புலமையும் அவருக்கு இருந்துச்சு. வெளிநாடுகளில் இருந்து வெளியாகும் காமிக்ஸ் கதைகளை வாங்கிப் படிப்பார். அதைத் தமிழிலும் கொண்டுவந்தால், எல்லோரும் படிச்சு சந்தோஷப்படுவாங்களேனு நினைச்சார். பல வெளிநாட்டுப் பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்களிடம் தொடர்புகொண்டு பேசினார். அவர்களிடம் சட்டப்படி கதைகளுக்கான உரிமை வாங்கி, தமிழில் வெளியிட ஆரம்பிச்சார். அப்படித்தான், 1972 ஆம் வருஷம் ‘முத்து காமிக்ஸ்’ என்கிற பெயரில் ‘இரும்புக் கை மாயாவி’ வெளிவந்தது. 1984 ஆம் ஆண்டு முதல் லயன் காமிக்ஸ் வந்துச்சு. மினி லயன், ஜூனியர் லயன், திகில் காமிக்ஸ் எனப் பல வெரைட்டிகளில் வெளியிட்டோம்’’ என்றார் பிரகாஷ் குமார்.

      ‘‘சமீப காலமாக, காமிக்ஸ் படிக்கிறவங்க எண்ணிக்கை அதிகமாகி இருக்கு. புத்தகக் கண்காட்சிகளில் ‘இரும்புக் கை மாயாவி இருக்கா? ஸ்பைடர் காமிக்ஸ் இருக்கா... எனத் தேடிவந்து வாங்குறாங்க

      புதிய புதிய முயற்சிகளில் வெளியாகும் பல வெளிநாட்டு காமிக்ஸ்களின் உரிமையை வாங்கி வெளியிடுகிறோம். பொதுவா, நம் ஊரில் காமிக்ஸ் படிக்கிறவங்க, வளர்ந்த பிள்ளைகளும் பெரியவர்களும்தான். குழந்தைகளுக்கும் காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் உண்டாகணும்னு அவங்களுக்குப் பிடிச்ச ஸ்மர்ப் போன்ற கேரக்டர்களின் காமிக்ஸ்களையும் வெளியிடுறோம். பெற்றோர்கள் காமிக்ஸ் படித்த அனுபவத்தைப் பிள்ளைகளிடம் சொல்லி, அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும்போது, பிள்ளைகளுக்கும் காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் வரும். தொலைக்காட்சியில் கார்ட்டூன் சேனல்களைப் பார்ப்பது ஓர் அனுபவம் என்றால், காமிக்ஸைப் புத்தகமாகப் படிப்பது, புதுவித அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். கற்பனை சக்தியையும் மகிழ்ச்சியையும் பெற, தொடர்ந்து காமிக்ஸ் படிங்க’’ என்று புன்னகையுடன் சொன்னார் பிரகாஷ் குமார்.

      பை நிறைய காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

      ஒருங்கிணைப்பு: செ.சல்மான்

      கு.ருக்மிணி, பெ.சி. சிதம்பர நாடார் ஆங்கில மே.நி. பள்ளி, விருதுநகர்.

      என்.ஏ.அருள் தர்ஷினி, நோபிள் பதின்ம மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

      Delete
    3. நம் நண்பர்களின் ஆர்வத்துக்காக இந்தப் பேட்டியை இங்கே பதிவிட்டிருக்கிறேன். மற்றப்படி காப்பிரைட்ஸ்லாம் என்கிட்ட கிடையாதுங்கோ! புத்தகத்தை வாங்கிப் படியுங்கோ!!!

      Delete
    4. அருமை! அருமை!! சாா்.

      நானும் கூட ஒருமுறை நோில் சென்று பாா்க்க ஆவலோடு உள்ளேன்.

      எப்போது நேரம் வாய்க்குமோ??

      Delete
    5. ஹை....வாங்கிப் பார்க்கணுமே !

      Delete
    6. ஒரு வருடத்துக்கு முன்பாக க்ரே மார்க்கெட்.ஒரு மாதத்துக்கு முன்பாக இந்துலயோ,சந்துலயோ லயன் காமிக்ஸ் நேரடியா தாக்கி தொடராவே எழுத ஆரம்பித்தார்கள்.அந்த தொடர் எழுதப்பட்ட உள் நோக்கம் முற்றிலும் தடம் மாறி வேறு இலக்கை நோக்கி பயணிக்கிறது.அதைப்பற்றி இந்த ப்ளாக்கில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பிறகு குமுதம் பத்திரிகை குழுமம் திரு.அரசிடம் இருந்து நட்பான உறவு.இப்பொழுது சுட்டி விகடனில் ஒரு அங்கீகாரம்.புத்தக விழாவிற்கு (நமது ஸ்டாலுக்கு)தி.மு.க செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வருகை.வேறொரு கோணத்திலிருந்து ப்ரெஞ்ச் கலாச்சார மையத்தின்(ஜெரோமையா)நிதியுதவி.
      இவற்றையெல்லாம் ஒன்றோடென்று தொடர்புபடுத்தி பொருத்திப் பார்க்கும் பொழுது இவற்றின் பின்னனி காட்சிகளும் இதன் அரசியல் ரேகைகளும் மெலிதாக புலப்படுகிறது.
      எது எப்படியோ நன்மையே விளைந்தால் நலமே.

      Delete
    7. @ Sri Ram

      நல்லதொரு அலசல் பார்வை!

      Delete
    8. @ Sri Ram

      நல்லதொரு அலசல் பார்வை!

      Delete
  66. அண்டா்டேக்கா் இன்னிக்கு தான் கெடச்சிருக்கு.

    ReplyDelete
  67. விஜயன் சாா்,
    அண்டா்டேக்கா் டிஜிட்டல் ஓவியத்தில் அசத்தலாக உள்ளது.

    இனியும் கருப்பு-வெள்ளையெல்லாம் தேவையாங்க சாா்???

    அதிலும் டெக்ஸ் கதைகளை கருப்பு-வெள்ளையில் வெளியிடுவது பெரும் வருத்தத்தையே உண்டாக்குகிறது.

    "ஒரு முடியா இரவு" வண்ணத்திலே எப்படி இருந்திருக்கும் என்று ஏங்க வைக்கிறது.

    70களில் கருப்பு-வெள்ளையில் பாதியும், முழு வண்ணத்தில் பாதியுமாக வெளியான தமிழ் சினிமாவின் நிலைபோல தற்போது நமது காமிக்ஸ்களின் நிலையும் உள்ளதோ?

    கால ஓட்டத்தில் கருப்புவெள்ளை எடுபடாது என்பது என் எண்ணம் சாா்.

    உலகம் டிஜிட்டலை நோக்கி முழுவதுமே மாறிக்கொண்டிருக்கும் வேளையில், இனி கையால் வரையப்பட்ட ஓவியங்களே காணாமல் நிலை உள்ளபோது இன்னமும் கருப்பு-வெள்ளை அவ்வளவாக கவனத்தை ஈா்ப்பதில்லை சாா்.

    மறுபதிப்புகளை வேண்டுமானால் கருப்பு-வெள்ளையில் வெளியிடுங்கள் சாா்.

    புதுவரவுகளை பின்னோக்கி கொண்டு செல்ல வேண்டாமேங்க சாா்.

    இது எனது தாழ்மையான கருத்து அவ்வளவுதான்!!

    ReplyDelete
    Replies
    1. Mithun Chakravarthi : உங்களுக்கோர் சேதி தெரியுமோ ? அண்டர்டேக்கர் - black & white பதிப்பாகவும் ஐரோப்பாவில் வெளியாகி சக்கை போடு போட்டுள்ளது ! மிரட்டலாயிருந்த அந்த edition-ஐ நானே பார்த்தும் இருக்கிறேன் ! சொல்லப் போனால் எனக்கு அண்டர்டேக்கரை அந்த black & white அவதாரில் களமிறக்கவே முதலில் ஆர்வம் மேலோங்கியது !

      வர்ணங்களுக்கும், வர்ணமின்மைக்கும் நாம் தரும் முக்கியத்துவத்தைப் படைப்பாளிகள் தருவதில்லை என்பதற்கு இன்னமுமே black & white-ல் ஜாலியாக மாதம்தோறும் வெளியாகும் டெக்ஸ் வில்லர் கதைகள் ஒரு சான்று !

      XIII இரத்தப் படலம் போன்ற கதைகளில் வர்ணங்களுக்குச் சவால் விடும் வீரியம் கருப்பு-வெள்ளைச் சித்திரங்களுக்கும் உண்டு தானே ?

      Of course - கார்ட்டூன் கதைகளுக்கு கலர் தான் ஜீவநாடி ; இதர ரகங்களுக்கு கலர் ஒரு மெருகூட்டலேயன்றி ; இன்றியமையா சங்கதி அல்ல என்பது எனது எண்ணம் !

      இந்தச் சின்னஞ்சிறு comics உலகில் இரண்டுக்குமே இடமுண்டு சார் !

      Delete
    2. The Walking Dead series is in B&W and grey tones - super hit! It is another proof that B&W is alive and well.

      Delete
  68. சாா்,
    ஜெரெமயா படலம் - 2
    ஹாா்டு கவா் பைண்டிங் தானே !!??

    ReplyDelete
  69. நல்ல பதிவு, அட்டைகள் அருமை சார். ஓர் ரிப்போர்ட்டர் ஜானி கதையையே மொழிபெயர்த்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.

    ஜானி நீரோ விடயத்தில் நீங்கள் சொல்வது சரிதான்.ஜேம்ஸ்பாண்ட், ரோஜர் மூர், ஜுலியன் உட்பட அநேகமான கதைகளில் பெண்கள் கவர்ச்சிக்கு, சிறுபங்களிப்புக்கோ வந்து போவார்கள்.அவற்றைப் போலோ காதல், கத்தரிக்காய் என்றோ இல்லாமல் ஜானி நீரோ கதைகளில் மட்டுமே ஸ்டெல்லாவின் பங்களிப்பு துப்பறிதல், புத்திசாலித்தனம், திட்டமிடல், அடிக்கடி பாஸை காப்பாற்றுதல் என பலவிடயங்களில் ஜானிக்கு நிகராக சிலசமயம் அதிகமாக இருந்து வருவது அக்கதையின் தனிச்சிறப்பு.

    ஓர் மொட்டையரை விடவும் அழகும், திறமையும் உள்ள ஓர் பெண் அசிஸ்டண்டாக (மட்டும்) வரும் கதை பல மடங்கு ரசிக்க வைக்கின்றது.டெக்ஸ்-கார்சன், லக்கி -ஜாலி, டாக்புல்-கிட் ஆர்டின் வரிசைகளில் சிடுமூஞ்சி பாஸ் ஜானியும் அவருக்கு எரிச்சலூட்டிக்கொண்டே இருக்கும் செக்ரட்டரி ஸ்டெல்லாவும் என் பார்வையில் தனித்துவமான ஓர் ஜோடி.லாரன்ஸ் & டேவிட் என்பது போல் ஜானி நீரோ & ஸ்டெல்லா சாகசம் என்று போட்டாலும் பொருத்தமாக இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. @ Abisheg

      நல்ல கருத்து. சொன்ன விதமும் அழகு!

      Delete
  70. எந்த ஒரு காமிக்ஸ் படித்து முடித்த பிறகும் ஒரு திருப்தி கிடைக்கும். படித்து முடித்த பிறகும் திருப்தி கிடைக்காத காமிக்ஸ்களும் உண்டுதான்.

    ஒரு முடியா இரவு... வெகு சுவாரஸ்யமாக ஆரம்பித்த கதைதான். பிறகு படித்து முடித்த பிறகு ஏற்பட்ட உணர்வு இருக்கிறதே.... சொல்லத்தரமன்று.

    நமது பேருந்து நிலையங்களின் சுகாதாரமற்ற கட்டணக் கழிப்பறைகளை தாண்டிச் செல்லும் போது காது வழியே தொண்டை வரை ஏற்படும் ஒரு கசப்புணர்வே இந்த ஒரு முடியா இரவு படித்து முடித்த பிறகு ஏற்பட்டது.

    மிகவும் வருத்தமாய் உணர்கிறேன் விஜயன் சார்...

    ReplyDelete
    Replies
    1. SVV அவர்களே...

      நண்பர்கள் பலரும் ரசித்து சிலாகித்த ஒரு கதையை அப்படியொரு உதாரணத்தோடு ஒப்பிட்டது மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. :(

      ////மிகவும் வருத்தமாய் உணர்கிறேன் விஜயன் சார்...///

      உங்கள் உதாரணத்தைப் படிக்கநேர்ந்தால் எடிட்டருக்கும் அப்படித்தான் இருக்கும்!

      Delete
    2. ஈ.வி. ...
      கதையைப் படித்து முடித்த பிறகு எனக்கு ஏற்பட்ட உணர்வே அதுதான்.
      எனக்கும் இப்படி விமர்சிக்க கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் 24 மணி நேரம் பொறுத்திருந்தும் எனக்கு ஏற்பட்ட உணர்வு நிலை அப்படியே நீடித்ததால் தான் அப்படியே பதிவிட்டுள்ளேன்.

      மேலும் என்னைப் பொறுத்த வரையிலும் நாமெல்லோரும் ஆசிரியரைப் பொறுத்த வரையில் காமிக்ஸ்களை இரந்து பெறும் நிலையில்தான் இருக்கிறோம். ஏனென்றால் தேர்வு செய்யும் உரிமைகள் இல்லை நமக்கு. அது அவருடையதே! அவர் நமது பாத்திரத்தில் இடுவதுதான் கிடைக்கும் படிப்பதற்கு நமக்கு.

      அதுவுமில்லாமல், உங்களிடம் கேட்பதாகவே பொதுவில் ஒரு கேள்வி கேட்கிறேன். டாக்டர் ஹரிஹரன் அவர்கள் முதல்வரிடமும், நு◌ாலக இயக்குநரிடமும் கடிதம் அனுப்பச் சொல்கிறார் அல்லவா? நல்யோசனையேதான். ஆனால் இதுமாதிரி கதைகளை குழந்தைகள் படிக்க பரிந்துரைப்பீர்களா?

      அது வேறு லெவல் கதைகள், இது வேறு லெவல் கதைகள் என்பதாய் உங்கள் பதில் இருக்குமானால், அடல்ட் கதைகள் ஏன் தவிர்க்க வேண்டும்? அதையும் ஒரு லெவல் என்பதாய் சொல்லிவிட்டு பிரசுரம் செய்து விட்டு போகலாமே?

      ஏதேனும் மனம் புண்படும்படியாய் இருப்பின் தயவு செய்து மன்னித்து விடுங்கள். (வெளியூர் பயணம் ஒன்றிற்கு தயார◌ாகிக் கொண்டிருக்கிறேன். ஆகவே வெள்ளி மாலை வரை மீண்டும் இங்கே வர இயலாது.)

      Delete
    3. //இதுமாதிரி கதைகளை குழந்தைகள் படிக்க பரிந்துரைப்பீர்களா?//

      அப்படியானால் 90% சதவிகித தமிழ் சினிமாவைக் காட்டக்கூடாது.

      TV Reality Show களைக் காட்டக்கூடாது.

      சாா், அவரவா் எண்ணம், மனோநிலை, சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உணா்வுகள் ஏற்படும்.

      அது உங்கள் பிரச்னை.

      உங்களுடைய உணா்வுகள் உங்களைத்தான் வெளிப்படுத்துகிறது.

      கதையில் என்ன பிரச்சனை? அதைச் சொல்லுங்கள் சாா்.

      இந்தக் கதையை குழந்தைகள் மட்டுமல்ல, யாா் வேண்டுமானாலும் படிக்கலாம்.

      அதில் அருவருக்க தக்க விஷயம் ஒன்றுமில்லையே !!

      புண்படுத்தும் விதத்தில் பேசிவிட்டு, பிறகு எதற்கு சாா் பாா்மாலிட்டி???

      Delete
    4. Guys, please ignore SV Venkatesh's comments and move on. "ஒரு முடியா இரவு" is a world class story, excellent translation. The editor has taken enormous effort to "trans-culture" it (not just translation). Those who can please check the original.

      Those who read Tamil comics from 1970's will agree with me how much our taste improved just because of one man. There is so much of junk out there in the comics world, our editor extracts best (suitable to our culture) out of them! It is so hard to do this, we don't realise or appreciate it.

      Delete
    5. SV VENKATESHH : சார்...ரசனைகளும், பார்வைக் கோணங்களும் அவரவரது உடைமைகள் எனும் பொழுது நான் ரசித்ததை நீங்களும் ரசித்திட வேண்டுமென்ற கட்டாயம் நிச்சயமாய்க் கிடையாது தான் ; ஆகையால் "ஒரு முடியா இரவு" உங்களளவிற்குத் திருப்தி தரா ஆக்கமாய் அமைந்து போனதன் பொருட்டு நான் வருத்தம் மட்டுமே தெரிவிக்க இயலும். என்ன - பொத்தாம் பொதுவாய் விரல் நீட்டிய நேரத்துக்கு, கதையில் உங்களுக்குத் தோன்றிய சங்கடங்களை highlight செய்திருப்பின் இன்னும் கொஞ்சம் தெளிவு பிறந்திருக்கும்.

      அதே போல உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட நீங்கள் கையாண்டுள்ள உவமையுமே உங்களது தேர்வு என்பதால் அங்கும் எனக்குப் பெரிதாய் நெருடல்களில்லை ! இதைவிடவும் காரமாய் நிறைய கேட்டுப் பழகியவன் தானே ?

      ஆனால் நான் போடும் பிச்சையை பிடித்தாலும், பிடிக்காது போனாலும் வாங்கும் நிலையில் இருப்பதாய் எழுதியுள்ளதை எவ்விதம் எடுத்துக் கொள்வதென்று தெரியவில்லை ! கதைத் தேர்வுக்கென நான் செலவிடும் பணமும், நேரமும் எவ்வளவு என்பதை ஆண்டவன் மட்டுமே அறிவார் !

      எல்லோருக்கும் 100 % ஏற்புடைய கதைகளை உலகினில் சல்லடை போட்டுத் தேர்வு செய்து வழங்கும் மந்திர மாற்று உபாயம் உங்கள் கைவசம் இருப்பின், நிச்சயமாய் அதனை நடைமுறைப்படுத்த நான் ரெடி !

      And சின்னதொரு கோரிக்கை : தயை கூர்ந்து சந்தா E -ஐ skip செய்து விடுங்களேன் ? அண்டர்டேக்கர் தொட்டு தொடரவிருக்கும் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உங்களுக்கு "கவுச்சி நாற்றத்தை" நினைவூட்டக் கூடும் ! So தெரிந்தே சங்கடப்படுவானேன் ?

      "வேற மாதிரி" கதைகளையும் கூட - "ரசனைகள் மாற்றம்" என்ற பெயரில் களமிறக்கலாமே ? என்ற வரிகளை படித்த போது ஒன்றே ஒன்று தான் தோன்றியது ! மீன் மார்க்கெட்டும் நாற்றம் தான் ; முனிசிபல் கழிவறையும் நாற்றம் தான் ! ஆனால் இரண்டுக்குமே வேறுபாடு உண்டு என்பதை நிச்சயமாய் நானோ, நமது வாசகர்களோ மறந்ததில்லை !

      Delete
    6. ////
      பொத்தாம் பொதுவாய் விரல் நீட்டிய நேரத்துக்கு, கதையில் உங்களுக்குத் தோன்றிய சங்கடங்களை highlight செய்திருப்பின் இன்னும் கொஞ்சம் தெளிவு பிறந்திருக்கும். ///

      +1

      ////And சின்னதொரு கோரிக்கை : தயை கூர்ந்து சந்தா E -ஐ skip செய்து விடுங்களேன் ?////

      +1

      Delete
  71. ஏன் சார் ..அப்படியென்ன வருத்தம்..?உங்களது ரசனையில் நான் குறுக்கிடக் கூடாதுதான்..ஆனால் அதற்காக நீங்கள் காட்டும் ஒப்பீடு மிகத்தரமற்றதாகத் தெரியவில்லையா..?அநேகமாக சீண்டிப்பார்க்க வேண்டுமென்றே நீங்கள் இதை எழுதியுள்ளீர்கள் எனக் கருதுகிறேன்..!

    ReplyDelete
    Replies
    1. பிரகாசம் கதிரேசன்.... // அநேகமாக சீண்டிப்பார்க்க வேண்டுமென்றே நீங்கள் இதை எழுதியுள்ளீர்கள் எனக் கருதுகிறேன்..!//

      நீங்கள் நினைப்பது போல சீண்டிப்பார்க்கும் எண்ணமெல்லாம் ஏதுமில்லை எனக்கு. மேலும் அதெற்கென்ன அவசியம் வந்தது?

      மேலும் நீங்கள் சமீபகாலமாகத்தான் இந்த தளத்திற்கு வருகை புரிந்தவராய் இருக்கிறீர்கள் என்பதை உணர்கிறேன். என்னைப் புரிந்து கொள்ள சற்று முயற்சியுங்கள். நம்பிகையுடன் காத்திருக்கிறேன்...

      Delete
    2. வேறு நண்பர்கள் யாராவது இந்த கருத்தை உதாரண விமர்சனத்தை சொல்லியிருந்தால் விளக்கமாக பதில் சொல்லலாம் ..ஆனால் தொடர்ந்து வரும் தங்களிடம் ஒன்றை மட்டுமே சொல்லி கொள்ள விரும்புகிறேன்..

      உங்களுக்கு "மணந்த "அதே கதை பலருக்கு பூ வாசனையாக மலர்ந்து,மணந்து இருந்தது என்பது மட்டும் 100% உண்மை...!

      Delete
    3. அட விடுங்க சார், நம்ம நண்பர் வெங்கடேஷ் "குண்டு சட்டியிலேயே டுபாக்கியோடு காலமெல்லாம் எல்லோருரையும் குதிரை ஓட்ட" சொல்கிறார் போல..

      Delete
  72. நண்பரே..நான் சமீபகாலமாக எழுதுவதாகக் கூறுகிறீர்கள்..இதற்கு கால அளவுகள் ஏதேனும் உள்ளதா..?அல்லது இங்கு எழுதுவதற்கு ஏதேனும் சிறப்பு வகுப்புக்குப் போய் ஏதேனும் பயிற்சிகள் எடுக்கவேண்டுமா என்ன..? காமிக் படிப்பவர்கள் காமிக்கை விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் இங்கு எழுதலாம்தானே..? பார்வையாளர்களாகக் கடந்து செல்பவர்கள் ஏதேனும் ஓரிடத்தில் [உங்கள் பதிவைப்போன்று] உந்தப்பட்டுத்தான் எழுத வருகிறார்கள்..இது சீண்டுதல் இல்லை என்று சொல்லிக் கொண்டே தொடர்ந்து சீண்டுகிறீர்கள் ..இரந்து பெற வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதும் ஆசிரியர் இடும் பிச்சை என்பதுபோலெல்லாம் சொல்வது பண்பான பேச்சுதானா..? நாம் தேர்ந்தெடுக்க உரிமையில்லை என்கிறீர்கள்..ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் கதைகளை அனுப்பி பிறகா அச்சிலேற்ற முடியும்..?பதிப்புலகில் அவ்வாறா நடக்கிறது..? நம்முடைய பிரதிநிதியாகத்தானே ஆசிரியர் கதைகளைத் தேர்வு செய்கிறார்..? அவரே முதலில் ஒரு தேர்ந்த வாசகர்தானே..? மேலும் இம்மாதிரியான கதைகளுக்கு வாசகர்களைத் தயார்படுத்த வேண்டும் என்பதால்தானே இங்கு நிறைய எழுதுகிறார்..? அப்படியும் சில வாசகர்களுக்காக முன் அட்டையிலேயே "ரசனையில் முதிர்ந்த வாசகர்களுக்காக" என்று குறிப்பிடுகிறாரே..? குழந்தைகள் இதைப்படிக்கலாகாது என்கிறீர்கள்..இன்றைய குழந்தைகளுடைய அறிவு முதிர்ச்சியை குறைத்து மதிப்பீடு செய்வதால் நமக்குத்தான் அறிவுப்போதாமை உள்ளதென்று அர்த்தம்..இதைப் படித்தால் குழந்தைகள் பண்புகெட்டுப் போவார்களென்று சொன்னால் எங்கும் வெளியில் விடாமல் கதவு சன்னல்களையெல்லாம் பூட்டிவைத்துவிட வேண்டியதுதான்..ஒரு விஷயத்துக்கு பதில் சொல்லப்போய் தொடர்ந்து மோசமான ஒப்பீடுகளையே தருகிறீர்கள்.."ஒரு முடியா இரவு" கதையை எப்படி நீங்கள் அடல்ட் கதைகளோடு ஒப்பிடுகிறீர்கள் என்றே தெரியவில்லை..? இன்னும் ஐம்பது வருடங்கள் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறீர்கள்..உங்களைப் போன்ற எண்ணமுடைய அனைத்து நண்பர்களுக்கான பதிலாகவும்தான் நான் இதைச் சொல்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. @ PRAKASAM KATHIRESAN

      அருமையான விளக்கம்!

      Delete
    2. சாியாகச் சொன்னீா்கள் நண்பரே!

      Delete
    3. நமது காமிக்ஸை வாங்கி படிக்கும் எவருக்குமே அதனை விமர்சனம் செய்ய முழு உரிமையும் உண்டு என்பதில் சந்தேகம் கிடையாதுதான்.
      ஆனால் அந்த விமர்சனத்திற்கென நாம் கையாளும் வார்த்தைகள் அடுத்தவரை காயப்படுத்தாத வகையில் இருப்பதுதானே நியாயமான விமர்சனமாக இருக்க முடியும்.
      உதாரணமாக ஒரு திருமணத்திற்கு செல்வதாக வைத்துக் கொள்வோம். அங்கு பந்தியில் பரிமாறப்படும் உணவு நன்றாக இருப்பினும் நமக்கு அதில் ஏதோ குறையிருப்பதாக உணர்ந்தால் சாப்பாடு சரியில்லை என்று கூறினால் நம் வார்த்தைகள் அங்கு பந்தியில் உணவருந்தியவர்களையோ அல்லது அந்த உணவை நமக்கு வழங்கியவர்களையோ, பரிமாறியவர்களையோ காயப்படுத்த வாய்ப்பில்லை.
      ஆனால் அந்த பந்தியில் திருப்தியாக உண்டவர்களிடமும் அந்த உணவை வழங்கியவர்களிடமும் இலையில் நரகலை வைத்து பரிமாறியிருக்கிறார்கள் என்று நம்முடைய வாயிலிருந்து வார்த்தைகள் வருமானால் அந்த வார்த்தைகளின் பாதிப்பு எத்தகையது என்பதை உணரவேண்டும். திருப்தியாக சாப்பிட்ட அனைவரும் நரகலை உண்டவர்களாகவும், அந்த உணவை வழங்கியவரும் நரகலை வழங்கியவராகவும் சித்தரிப்பது நம்முனைய தரத்தை நாமே குறைத்துக் கொள்வதற்கான முயற்சியில் நாம் இறங்குவதாகத்தானே இருக்க முடியும்.
      நான் மொய்யெழுதிவிட்டேன். எதை வேண்டுமானாலும் பேச எனக்கு உரிமையுண்டு என்று கூறுவது சரியாக இருக்குமா என்பதை அன்புகூர்ந்து பரிசீலிக்க வேண்டுகிறேன்.
      நமக்காக தேடித்தேடி காமிக்ஸ்களை வழங்கிவரும் ஆசிரியரை இந்த அளவு காயப்படுத்துவதிலும் என்ன திருப்தியோ புரியவில்லை.
      நாம் வாங்குவது ஒரு புத்தகம். ஆனால் இத்தளத்தில் நம்முடைய ஆரோக்கியமான விமர்சனம் வருகையில் அதன் மூலம் நம் புத்தகங்களின் விற்பனையும் அதிகரித்திருக்கிறது என்பதை நம் ஆசிரியர் பலமுறை தெரிவித்தும் இருக்கிறார். அதற்காக சரியில்லாத கதைகளை புகழ்ந்து பேச வேண்டுமென நான் கூறவில்லை. ஆசிரியரும் அதனை விரும்பமாட்டார்.
      " நிறைகளை சத்தம் போட்டு கூறுவோம். குறைகளை சற்று மெல்லவே சொல்வோமே." இதில் தவறில்லையே. அல்லது இத்தளம் அல்லாது வேறு வழிகள் இல்லாமல் போய்விட்டனவா?
      பல வியாபார நிறுவனங்களில் நாம் அடிக்கடி கண்ட வாசகம் இது.
      " நிறைகளை நண்பர்களிடம் கூறுங்கள்.
      குறைகளை எங்களிடம் கூறுங்கள்."
      இந்த வாசகத்தினை நாமும் நடைமுறை படுத்த முயற்ச்சிக்கலாமே.
      ரசனை என்பது நாம் உபயோகப்படுத்தும் வாகனத்தை போன்றது. மிதிவண்டியோ, இருசக்கர வாகனங்களோ, நான்கு சக்கர வாகனங்களோ ஒவ்வொன்றுக்கும் ஒரு வேகமுண்டு.
      ஆனால் அனைத்து வாகனங்களும் ஒரே வேகத்தில் போகவேண்டுமென நினைப்பது எப்படி சரியானதாக இருக்கமுடியும். நமக்கோ நாம் அமர்ந்திருக்கும் வாகனத்தை பொருத்து வேகம் அமையும். ஆனால் நம் ஆசிரியருக்கோ எல்லாவிதமான வாகனத்திலிருப்பவர்கள் அனைவருக்கும் ஈடு கொடுத்து ஓடவேண்டும். இதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.
      மலையின் உச்சியிலிருக்கும் கோவிலுக்கு படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் பத்தடி உயரம் ஏறியபோது குறிப்பிட்ட எல்லை வரை பார்வைக்கு புலப்படும். அதுவே இருபதடி, ஐம்பதடி, அறுபதடி என்று படிக்கட்டி்ல் ஏற ஏற உயரத்துக்கு ஏற்றவாறு காட்சிகள் கண்களுக்கு புலப்படும். இதில் எல்லாமே அதனதன் இடத்தில்தான் இருக்கிறது. தவறு நம் கண்ணில்கூட இல்லை. நாம் எடுத்து வைக்கும் அடிகளை பொருத்து காட்சிகள் மாறுபடுகிறது. ரசனையும் அப்படித்தான். முதல் படிக்கட்டைவிட்டு நகராமல் நின்றுகொண்டு மேலே ஏறியவர்களை குறை சொல்லாமல் நாமும் மெல்லமெல்ல ஒவ்வொரு படிக்கட்டாக அடியெடுத்து வைப்போமே. மெல்லமெல்ல நம் கண்முன்னே காட்சிகள் விரியும். அப்போது நாமே உணரலாம் தவறு எங்கே இருக்கிறதென்று.
      மேலே நான் கூறியது யாரையும் காயப்படுத்தவோ குறைகூறவோ இல்லை என்பதை நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். என் கருத்தில் தவறிருந்தால் இதனை ஒரு பொருட்டாக கருதாமல் தயவுசெய்து தாண்டிச்செல்ல வேண்டுகிறேன்.

      Delete
    4. AT Rajan : //நாம் எடுத்து வைக்கும் அடிகளை பொருத்து காட்சிகள் மாறுபடுகிறது. ரசனையும் அப்படித்தான். //

      +1

      Delete
    5. நன்றி எடிட்டர் சார்.
      அடுத்த மாதத்திற்கான சவாலான பணிகளுக்கிடையே இங்கே வருகை புரிந்தமைக்கும் எனது பதிவின் மீது பார்வையை செலுத்தியமைக்கும்.

      Delete
    6. கதிரேசன் சார்..ஏடிஆர் சார் அழகாக ஆணித்தரமாக சொல்லியுள்ளீர்கள்..

      அருமை...

      Delete
  73. "பிணத்தோடு ஒரு பயணம்" கதையில் எனக்கு 2 சந்தேகங்கள்:

    1.) 25'ம் பக்கத்தில் மாக்கெல்லன் ரோஸிடம் "இவனோட உயிலை படிச்சி பார்த்தியா? நமக்கு என்ன விட்டு போயிருக்கான்?" என்று கேட்கிறான். அதற்கு ரோஸ், "ஸாரி!" என்று சொல்லிவிட்டு, ஒரு காகிதத்தை பின்னால் ஒளித்து வைக்கிறாள். அந்த காகிதம்தான் உயிலா? அப்படியென்றால், அதற்கு முந்தைய பக்கம் 24'ல், உயில் படிக்கும்போது ஒரு காகிதம் விளக்கு நெருப்பில் காட்டி எரிக்கப்படுகிறதே! அது என்ன காகிதம்?

    2.) 31'ம் பக்கம் ஷெரீஃப் பிக்பை அண்டர்டேக்கருக்கு அன்பளிப்பாக ஒரு பாட்டில் கொடுக்கிறார். அதை கூடையில் வைத்து இருவரும் பேசிக்கொண்டு வருகிறார்கள். பின்னர் அந்த கூடையை இறக்கும்போது, அந்த பாட்டில் கீழே விழுந்து "க்ளாங்க்" என்று உடைந்து, சரக்கு மொத்தமும் சிதறிவிடுகிறது. ஆனால், பக்கம் 81'ல் பிக்பை அன்பளிப்பாக கொடுத்த அந்த பாட்டிலை ரோஸிடம் அண்டர்டேக்கர் எடுத்து காட்டுகிறாரே! எப்படி?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. @ Jagath kumar

      1. தன்னுடைய நீண்டகால உயிலை தீயிட்டு எரித்துவிட்டு, தனது 'திடீர் சாவுத் திட்டத்தின்படி' மாற்றி எழுதிய உயிலை மிஸ்.ரோஸிடம் கிடைக்கச்செய்திருக்கிறார் கஸ்கோ!

      2. பக்கம் 81ன் இரண்டாவது பேனலில் "மண்டையைப் போடும் 10 நிமிடங்களுக்கு முன்பாக ஷெரீப் பிக்பை எனக்கு இதை 'அன்பளிப்பாக' கொடுத்து காரியம் சாதிக்க நினைத்தார்" என்று அன்டர்டேக்கர் சொல்வதைக் கவனியுங்களேன். அதாவது 'மண்டையைப் போடும் நேரத்துக்குப் 10 நிமிடம் முன்பாக' என்பது பக்கம்-55 லிருந்து பக்கம்-60 வரையிலான சம்பங்களில் தொடர்புடையது!

      நீங்கள் கதையைக் கூர்ந்துபடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

      Delete
  74. அண்டர் டேக்கர்....

    தனது சாவுக்கு தானே வழி தேடியதோடு சம்பாதித்த தனது சொத்தை தன்னோடு தான் அழைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு மரணத்தை தழுவிய கஸ்கோ...பிடித்தாலும்..பிடிக்கா விட்டாலும் தனது எஜமானின் கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடும் இரு பணிபெண்கள்...அவர்களோடு இனைந்து " பிண தங்கத்தோடு " பயணமாகும் அண்டர்டேக்கர்...பிண தங்கத்தை பறிமுதல் செய்ய பின் துரத்தும் ஒரு கிராம மக்களே...என பிணத்தோடு ஒரு பயணம் விறுவிறுப்புடன் சென்றது..கதைக்கு ஏற்ற தலைப்பு..

    பெளன்சரை விட இங்கு வன்முறை களங்கள் குறைவு தான்..ஒரு வேளை பெளன்சரிடம் ஒன்றி போய்விட்ட காரணத்தால் அன்டர்டேக்கரின் வன்முறை குறைவாக தெரிகிறதோ என்னவோ...

    இவரின் அடுத்த சாகஸத்தை விரைவில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்..அதற்கு மிக முக்கிய காரணம் கிரிமினலான வெட்டியான் அன்டர்டேக்கர் இறுதியில் தனது புது இணையுடன் பயணத்தை முடித்துள்ளான்.இனி இவனின் பயணம் பிணத்துடனா ..அல்லது இணையுடனா ?இணையுடன் என்றால் இனி இவனின் பயணம் எவ்வாறு செல்லும் ?

    விடை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்..


    பின்குறிப்பு..: மேலே நண்பர் மதுபான பாட்டில் உடைந்து போவதையும் ..பிறகு மீண்டும் பயன்படுத்துவதையும் பற்றி சந்தேகத்தை எழுப்பியிருந்தார்..படித்தவுடன் எனக்கும் அதே சந்தேகம் .அந்த இடம் வந்தவுடன் பாட்டில் உடைந்து விட்டதா இல்லையா என மீண்டும் முன் சென்று குழம்பி போனேன்.நிவர்த்தி அடையா சந்தேகத்தை நிவர்த்தி செய்த செயலருக்கு நன்றி..:-)

    ReplyDelete
  75. // மேலும் என்னைப் பொறுத்த வரையிலும் நாமெல்லோரும் ஆசிரியரைப் பொறுத்த வரையில் காமிக்ஸ்களை இரந்து பெறும் நிலையில்தான் இருக்கிறோம். //

    --1௦௦

    ReplyDelete
    Replies
    1. தவறான கருத்து & தவறான எண்ணம்!

      Delete
    2. மேலே உள்ளதை பார்த்தால் நாம் எல்லோரிடமும்தான் கையேந்தி நிக்கிறோம், வீட்டுக்கு வரும் பேப்பர், தினசரி வார இதழ், புத்தகம்கள், etc... அவ்வளவு என் நாம் ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்த அரசியல்வாதிகள் அனைவரிடமும் கையேந்திதான் நிற்கிறோம்.

      Delete
    3. Parani from Bangalore Sir,

      Your correct sir

      Delete
  76. தங்க விரல் மர்மம்...

    நமது ஜானி நீரோ எங்கே துப்பறிய சென்றாலும் தனது காரியதரிசி ஸ்டெல்லாவை வரவிடாமல் தடுக்க ..அதனை மீறி அவருக்கு தெரியாமல் அவருடனே பயணமாவார் ஸ்டெல்லா...ஆனால் இம்முறை ஜானியே ஸ்டெல்லாவை உடன் அழைக்க சொல்லும் பொழுதே ஸ்டெல்லாவிற்கு இந்த சாகஸத்தில் அதிக பங்குண்டு என்பதை உணர முடிந்தது. படித்து நீண்ட காலங்கள் ஆன இந்த தங்க விரல் மர்மம் மறுபதிப்பு என்றாலும் புதிதாய் விறுவிறுப்பாய் சென்று அட்டகாசமாய் முடிந்தது... என்ன ஒன்று இந்த சாகஸத்தில் க்ளைமேக்ஸ் மட்டும் சட்டென்று முடிந்தது போல ஓர் உணர்வு...

    தங்க விரல் தங்கமே...:-)

    ReplyDelete