Powered By Blogger

Sunday, May 21, 2017

ஒரு பயணியின் டைரிக் குறிப்பு !

நண்பர்களே,

வணக்கம். காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்களைத் தாண்டி வேறெதையும் இங்கு எழுதுவதில்லை என்ற கட்டுப்பாட்டை லேசாய்த் தளர்த்திக் கொள்ளுகிறேன் - இந்த ஞாயிறுக்கு மட்டும் ! அதற்காகப் பிரபஞ்சத்தைப் புரட்டிப் போடப் போகும் ஏதோவொரு விஷயத்தைப் பகிரப் போகிறேன் என்ற பீலாவெல்லாம் விடமாட்டேன்  ! சொல்லப் போனால் ஒரு பத்தாண்டுகளுக்குப் பின்னே திரும்பிப் பார்த்துப் படித்து எனக்கே இந்த நாட்களின் நினைவுகளை மீட்டுக் கொள்ளவொரு டயரிக் குறிப்பு இது என்றும் சொல்லலாம் ! So ஞாயிறு காலையில் தூக்கம் பாக்கி இருப்பினோ, பணிகள் ஏதேனும் காத்து நிற்பினோ - அவற்றை சாவகாசமாய் முடித்துக் கொண்டு கூட இங்கே ஆஜராகலாம் நீங்கள் ! கொஞ்சம் பெ-ரி-ய மாத்திரை தொடர்கிறது என்பதால் உங்கள் பொறுமையை தயார்நிலையில் வைத்துக் கொண்டால் நலமென்பேன் !! 

எல்லாம் துவங்கியது சென்ற வார சனிக்கிழமையின் ஐரோப்பியப் பயணத்தோடு ! பொதுவாய் வேலைகளை திங்கள் காலைக்கென அட்டவணை போட்டுக் கொண்டு அதற்கேற்பவே அங்கு  போயிறங்கி, வேலைகள் முடிந்த கையோடே தட தடவென ஊருக்குத் திரும்புவதே என் வாடிக்கை ! ஊர் சுற்றிப் பார்க்கும் வயதுகளையெல்லாம் தாண்டி மாமாங்கங்கள் நிறைய ஓடிவிட்டதால் - வாரயிறுதிகளை எப்போதுமே அயல்நாட்டில் செலவிடுவதில்லை ! ஆனால் இம்முறை ஜுனியரும் என்னோடே பயணத்தில் இணைந்து கொள்வதாக இருந்ததால் ஞாயிறு ஒரு நாளையாவது ஐரோப்பிய பராக்குப் பார்க்கும் படலத்துக்கென ஒதுக்கிடலாமே எனத் தீர்மானித்தேன் ! சனி மாலை இத்தாலியில் போயிறங்கினோம் and நேராக ரூமுக்குப் போய் கட்டையைக் கிடத்தினாலும், அதிகாலையில் blog க்குக்கான பக்கங்களை நம்மவர்கள் அனுப்ப மறந்து போயிருந்ததால் எனக்கு கோழித் தூக்கமே சாத்தியமானது ! அங்கிருந்தே மைதீனின் குடலை  உருவி, நான் எழுதி அனுப்பியிருந்த பக்கங்களை டைப் செய்து வாங்கி ஒருமாதிரியாக வலையேற்றம் செய்து விட்டு, ஒன்றிரண்டு பதில்களையும் கூடப் போட்டு விட்டு, நகருக்குள் புறப்படுவோமென நடையைக் கட்டினோம் !  கண்டம் கண்டமாய் ஒற்றைக் காட்டு முனி போலச் சுற்றியே பழகியவனுக்கு, முதன்முறையாக பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த உற்சாகம் ஒருபக்கம் ; ஜுனியருக்கு ஐரோப்பிய அனுபவத்தைப் புகட்டக் கிடைத்த வாய்ப்பின்மகிழ்ச்சி இன்னொரு பக்கமென பிரவாகமெடுக்க, வெயிலில் குளித்துக் கிடந்த மிலன் நகரமே ஒரு சொர்க்க பூமி போல் எனக்குத் தோன்றியது ! பின்மதியம் வரை ஊர் சுற்றி விட்டு, அப்புறமாய் ரயிலைப் பிடித்து அங்கிருந்து பிரான்சின் லியான் நகரில் இரவு டேரா போடுவதாகத் திட்டம் ! திங்கள் அதிகாலையில் லியோனுக்கு அருகாமையிலிருந்ததொரு சிறு நகரில் நாம் வாங்கவிருந்ததொரு அச்சு இயந்திரத்தினைப் பார்வையிடுவதாகத் திட்டம் ! அதை முடித்துக் கொண்டு, பாரிசுக்கு ரயிலைப் பிடித்து மாலைப் பொழுதினில் அந்த நகரின் வீதிகளில் நமது செருப்புகளைத் தேய்ப்பதாகத் திட்டம் ! சாவகாசமாய் (அங்குள்ள) முனியாண்டி விலாஸில் பரோட்டா ; ஐபல் கோபுரத்தில் வாய் பார்த்தல் என்று மாலையை ஒட்டி விட்டு, மறு நாள் அதிகாலையில் பிளைட்டைப் பிடித்து ஸ்பெயின் நாட்டின் தலைநகரில் இன்னொரு மிஷினைப் பார்வையிடுவதாகத் திட்டத்தின் தொடர்ச்சி ! செவ்வாய் இரவு மேட்ரிட் நகரிலிருந்தே ஊருக்குத் திரும்புவது என்ற "வாம்மா மின்னல்" பாணி அட்டவனையே - ஒட்டு மொத்தமாய் !! 3 தினங்களில் - 3 தேசங்கள் எனும் பொழுது பயணத் திட்டங்களை கோர்வையாய் நிர்ணயம் செய்வதற்குள் சந்நியாசம் வாங்கிடுவதே சாலச் சிறந்தது என்று தோன்றும் டிக்கெட் போட்டுத் தரும் ஏஜெண்டுக்கு !! என் சகோதரனின் கல்லூரித் தோழனே மதுரையில் உள்ள டிராவல் ஏஜெண்ட் என்பதால் - நான் அடிக்கக் கோரும் அத்தனை அந்தர் பல்டிகளையும்   அசராமல் அடிக்க முற்படுவார் அந்த நல்ல மனுஷன் ! ஒவ்வொரு முறையும் எனது திட்டங்கள் இது போலவே கோக்கு மாக்காகவே இருந்திடுவது வாடிக்கை என்பதால் அவருக்கும் பழகிப் போய் விட்டது ! எனக்குமே செலவைக் குறைக்கிறோம் ; வேலை முடிந்த கையோடே வீடு திரும்புகிறோம் என்ற திருப்தி இருந்திடுவதால் இந்த நட்டுக் கழன்ற வேக ஓட்டங்களெல்லாம் பழகிப் போயிருந்தன !   

ஜுனியருக்குமே கூட இந்த 'சடுதியில் வீடு திரும்பும் டீலிங் ' பிடித்திருந்ததால் எந்த முகச் சுளிப்புமின்றி உடன் வந்து கொண்டிருந்தார் ! ஆண்டாண்டு காலங்களாய், ஊர் ஊராய், தெருத் தெருவாய்ச் சுற்றியுள்ளதன் பலனாய்க் கிட்டியிருந்ததுஅனுபவம் மாத்திரமன்றி, ஒருவிதத் தெனாவட்டுமே என்பேன் ! 'ஆஹ்...என்ன பெரிய வெளிநாடு ? எதுவானாலும் பார்த்துக்கலாம் ; சமாளிச்சுக்கலாம் !" என்ற ஒருவித கொழுப்பு எனக்குள் சத்தமின்றி வியாபித்திருந்தது ! So மாமூலாய் ஒவ்வொரு பயணத்தின் போதும் செய்திட வேண்டிய முன்ஜாக்கிரதை ஏற்பாடுகளுக்கெல்லாம் பொறுமையே இருப்பதில்லை ! அந்த மப்புக்கு விலை என்ன தரவிருக்கிறோமென்ற புரிதல் துளியுமின்றி பின்மதியம் வரை ஊரை செம உற்சாகமாய்ச் சுற்றிக் காட்டி விட்டு, ரயிலைப்பிடிக்க தரைக்கடியிலிருக்கும் மெட்ரோவை நாடிச் சென்றோம் ! நாலு காசு மிச்சம் பிடித்தால் - அது நாலு காசை சம்பாதித்தற்கு ஈடே  என்ற மாதிரியான எண்ணம் எனக்குள் வேரூன்றிக் கிடப்பதால் ஒரு நாளும் டாக்சிகளுக்கோ ; ஆடம்பரங்களுக்கோ பாக்கெட்டுக்குள் கைவிடத் துணிய மாட்டேன் ! அதே பாணியில் இம்முறையும் கனமானதொரு சூட்கேஸை உருட்டிக் கொண்டே..தோளில் ஒரு backpack -ஐப் போட்டுக் கொண்டே மெட்ரோ ரயிலுக்குள் புகுந்தேன் ! இரு முதிய பெண்கள் சரியாக எனக்கு முன்னேயும் பக்கவாட்டிலும் நெருக்கியடித்துக் கொண்டு நிற்க, ரயில் கதவுகள் அடைத்துத் தொலைக்கும் முன்பாக உள்ளே புகுந்துவிட வேண்டுமென்பதிலேயே என் கவனம் லயித்து நின்றது ! சரியாக அதே நொடியில் என் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த பையின் ஜிப் மீது ஒரு கை பட்டது போலிருக்க, நானோ  கதவு பூட்டும்போது பை மாட்டிக் கொள்ளக்கூடாதே என்ற நினைப்பிலேயே உள்ளே புகுவதில் தீவிரமாய்  இருந்திட, அந்த இரு கிழக் கோட்டான்களும் உள்ளே ஏறிய அதே வேகத்தில் பிளாட்பாரத்துக்குத் தாவி விட்டன !! கதவு மடேரென அடைபடும் கணமே எனக்குள் சம்மட்டியாய் இறங்கியது என்ன நடந்துள்ளதென்ற புரிதல் ! "என் பேக் திறந்திருக்கான்னு பாரு விக்ரம் !" என்று நான் அலற ; "ஜிப் திறந்து கிடக்குப்பா !!" என்ற பதில் கிட்டியது ! உள்ளே கை விட்டுப் பார்த்த மறு நொடி என் ஈரக்குலையே அறுந்து போனது போலொரு உணர்வு - பாஸ்போர்ட்டும், பணமும் இருந்த ஒரு pouch ஐக் காணோமென்ற போது !! கடவுளின் கிருபை - ஜுனியரின் பாஸ்போர்ட்டும், எங்களது கிரெடிட் கார்டுகளும் தப்பியிருந்தன !! "ஆண்டவா....பணம் கூடப் போயிருக்கட்டும் ; பாஸ்போர்ட் தப்பியிருக்கட்டுமே !!" என்ற வேண்டுதலோடு பைக்குள் கையை விட்டுத் துளாவு-துளாவென்று துளாவினால்- எப்போதோ தின்று விட்டுப் போட்டிருந்த பிஸ்கெட்டின் துகள்கள் மாத்திரமே கையில் ஒட்டின !

6 வருஷங்களுக்கு முன்பாய் இதே போலொரு  இரயில் பயணத்தின் போது எனது பெட்டியை மொத்தமாய் லவட்டிச் சென்றிருந்தனர் இரு ஆப்பிரிக்க தில்லாலங்கடிகள் !! படாத பாடுபட்டு 3 நாட்கள் பிரஸ்ஸல்ஸ் நகரில் தேவுடு காத்து அப்புறமாய் மாற்றுப் பாஸ்போர்ட் பெற்று ஊர் திரும்பிய அல்லல்கள் அத்தனையும் சரம்கோர்த்து தலைக்குள் ஓடிய போது எனக்கு கிறுகிறுத்துப் போனது ! அம்முறையேனும், எனது ரெகுலர் வேலைகள் சகலமும் நிறைவுற்று, ஊர் திரும்பும் தருணத்தில் அந்தக் களவு அரங்கேறியிருந்தது என்பதால் வேலைக்கு பாதிப்பின்றித் தப்பியிருந்தேன் ! ஆனால் இம்முறையோ இரண்டு தினங்களில் இரு வேறு நாடுகளில் பணிகள் ; அதற்கென பயண டிக்கெட்டுகள் ; ஹோட்டல் ஏற்பாடுகள் என அத்தனையும் தயாராக இருந்ததால் - ஒற்றை நொடியில் என் உலகமே சரிந்து மண்ணாகிப் போனது போல் தோன்றியது ! எல்லாவற்றிற்கும் மேலாக - பிள்ளையை உடனழைத்து வந்திருக்கும் தருணத்திலா இந்த இடி இறங்க வேண்டும் ? என்ற குமைச்சலில் அழுகை முட்டிக் கொண்டு வந்தது ! கதவருகே இருந்த அவசர அலாரச் சங்கிலியை இழுக்க நினைப்பதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்திருக்க, அங்கே இறங்கினோம் - திரும்பிச்  சென்று கிழவிகளைத் தேடுவோமென்ற வெறியில் !! ஆனால் எனக்கு உள்ளுக்குள் தெரியும் சிட்டாய்ப் பறந்திருக்கும் அந்தத் திருட்டு ஜோடி என்று ! ஆளரவமின்றி நிசப்தமாய்க் கிடந்த அந்த ஸ்டேஷனில் எல்லாமே சூன்யமாய்த் தெரிந்தது எனக்கு  ! பணம் போச்சு...பாஸ்போர்ட் போச்சு...பயண நோக்கம் போச்சு ; அத்தனையும் ஒரே நொடியின் முட்டாள்தனத்தில் பலியாகிப் போச்சென்று புரிந்த போது என் வயிற்றுக்குள் ஒரு அசுர, அரூபக் கரம் புகுந்து மொத்தத்தையும் பிசைவது போலிருந்தது !! Maybe நான் தனியாக வந்திருப்பின் இந்தச் சூழலை வேறு மாதிரியாய்க் கையாண்டிருந்திருப்பேனோ - என்னவோ தெரியவில்லை ; ஆனால் பிள்ளையையும் கஷ்டத்தில் ஆழ்த்தி விட்டோமே என்ற குற்றவுர்ணர்வு என்னை மென்று துப்பிக் கொண்டிருந்தது ! 

இன்றைய தலைமுறை மனதில் எத்தனை வலிமையானவர்கள் என்பதைத் தொடர்ந்த நிமிடங்களில் பார்க்க முடிந்தது, ஜுனியர் எனக்கு ஆறுதல் சொல்லியபடியே, ஆக வேண்டியதைப் பார்ப்போமே என்று திடமாய்ப் பேசத் துவங்கிய போது ! மறு மார்க்கத்தில் அடுத்த இரயில் வந்து சேர, புறப்பட்ட ஸ்டேஷனுக்கே அடித்துப் பிடித்து வந்து பார்த்தால் - சுவடுகளே இல்லை அந்தக் கிழ ஜோடிக்கு ! நான் உருட்டிக்கொண்டிருந்த பெட்டி திடீரென பிணமாய்க் கனத்துகிடப்பது போல் பட்டது ; எதிரே வந்திடும் அத்தனை பேருமே திருட்டு மொள்ளமாறிகள்போல என் கண்களுக்குத் தெரிகிறார்கள் ! லியான் செல்லும் ரயிலுக்கு இன்னமும் 45 நிமிடங்களே பாக்கி எனும் பொழுது என்ன செய்வதென்று கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை ! "வேண்டுமானால் நான் மட்டும் லியானுக்குப் புறப்பட்டுப் போய் மிஷினைப் பார்த்து விட்டு வரவா ?" என ஜுனியர் கேட்ட போது எனக்குள் ஒரே நொடியில் பெருமிதமும், பயமும் வியாபித்தன! 5 நிமிடங்களுக்கு முன்பு வரை என்னோடு முயல்குட்டி போல வலம் வந்து கொண்டிருந்த இளைஞன், பொறுப்புகளை சுமக்கத் தயாராகி நின்றதில் ஒரு பக்கம் பெருமிதம் ! அதே சமயம்   முன்னனுபவமோ, திட்டமிடலோயின்றி - கத்தி மேல் நடப்பது போலான அட்டவணையில் பயணம் செய்ய தனியாக அனுப்பி விட்டு,  ஏற்கனவே சின்னாபின்னமாக்கிப் போயிருக்கும் என்னால் இந்த டென்க்ஷனையும் சேர்த்தே கையாள முடியாதென்ற பயம் இன்னொரு பக்கம் ! 32 ஆண்டுகளுக்கு முன்னே, 18 வயசில் என்னைத் தண்ணீர் தெளித்து அனுப்பி வைத்த என் தந்தையை நினைத்த போது கிறுகிறுக்கத் தான் செய்தது ! "சரி....5 இருக்கு....அதில் ஒண்ணு தானே பயணம் போகுது ?!" என்றபடிக்கு அன்றைக்கு மனசைத் தைரியப்படுத்திக் கொண்டாரோ - என்னவோ தெரியலை ; ஆனால் "ஒன்றே நன்று" என்ற இந்தத் தகப்பனுக்கு  உலகின் இருண்ட சங்கதிகள் மட்டுமே அந்தக் குழப்ப நொடியில் கண்முன்னே கும்மியடித்தன ! "இல்லேப்பா...லியான் போய் விட்டு, நாளை பாரிஸ் திரும்பி, நாளான்னைக்கு அதிகாலையில் பாரிஸ் ஏர்போர்ட்டில் சரியான டெர்மினலைப் பிடித்து ஸ்பெயின் போறதுலாம் கொஞ்சம் டைட்டாவே இருக்கும் ! பாரிஸ் ஏர்போர்ட்டில் நல்ல நாளைக்கே நாழிப் பால் கறக்க நேரிடும், இதில் அதிகாலை 5 மணிக்கு பிளைட்  எனும் போது மூணு மணிக்கெல்லாம் கிளம்பி டாக்சி பிடித்து ஓடணும் ;  நம்ம ராட்ஜா சாரையோ ; ஹசன் சாரையோ, பிரபாநாத் சாரையோ ஒத்தாசைக்கு கூப்பிட்டுக் கொள்ளலாம்தான் என்றாலும், அந்த அர்த்த ராத்திரியில் அந்தத் தொந்தரவெல்லாம் வேணாமே !! லியான் வேலையை மெஷின் சப்ளை செய்யும் ஏஜெண்டின் பொறுப்பிலேயே விட்டு விடுவோம் ; நாளைக்கு மாற்று பாஸ்போர்ட் வாங்கி விட்டு, இங்கிருந்தே நேரடியாக ஸ்பெயின் போகும் வழியைப் பார்ப்போம் !" என்று சொன்னேன் ! 

சரியென்று ஜுனியரும் தலையாட்ட, இரயில்வே போலீசிடம் புகார் என்பதே அடுத்த வைத்திட வேண்டிய எட்டு என்று நடையைக் கட்டினோம் ! அத்தனை நேரமும் கூத்தும், கும்மாளமுமாய்க் காட்சி தந்த மிலன் நகரம் ஒரு திருடர் பூமியாய் என் கண்களுக்குத் திடீரென்று தெரியாத துவங்கியது ! தத்துப் பித்து இங்கிலீஷ் பேசிய ஒரு காவலரிடம் பிளாட்பாரம் நம்பர் 22 -ல் இருந்த போலீஸ் ஸ்டேஷனின் விபரத்தைக் கேட்டுக் கொண்டு அங்கே நடையைக் கட்டினோம் ! அங்கே போனாலோ - கண்ணாடி ஜன்னலில் ஒரு நோடீஸே அச்சடித்து ஒட்டியிருந்தார்கள் - "ஆங்கிலத்தில் புகார் செய்வதாகயிருப்பின் - Turatti என்ற ஏரியாவில் உள்ள தலைமையகத்தில் தான் சாத்தியம்" என்று ! பிசாசாய்க் கணக்கும் பேட்டியளித்த தூக்கிக் கொண்டே ஊரெல்லாம் சுற்றுவானேன் - இரவுக்கு அருகிலேயே ஒரு ரூமைப் போட்டு விட்டு அங்கே பெட்டியை வைத்துவிட்டு அப்புறமாய் அந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாமே ? என்று தோன்ற, நெட்டில் புக்கிங் செய்துவிட்டு நடக்கும் தொலைவில் இருந்த அந்த ஹோட்டலுக்குச் சென்றோம் ! பாதித் தூக்கத்தில் இருந்த ரிஷப்ஷனிஸ்ட் - எங்களை ஏற இரங்கப் பார்த்தபடிக்கே - "அடையாள அட்டைகள் ?" என்று கேட்டார் ! ஜுனியரின் பாஸ்போர்டைட் கொடுத்து விட்டு, எனக்கு PAN கார்டை எடுத்து நீட்ட, மனுஷன் சுள்ளென்று முறைத்தார் ! I need your passport ! என்ற மனுஷனிடம் என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை ! "உமக்கு மட்டுமல்ல சாமி ; எங்களுக்குமே இப்போது அது தான் தேவை !!" என்று உள்ளுக்குள் எழுந்த குரலை அடக்கிக் கொண்டே எங்கள் இக்கட்டைச் சொன்னேன் ! "No ...no ....I don't  know you ! ஏதாவது போலீஸ் சோதனை நிகழ்ந்தால் நான் வம்பில் மாட்டிக் கொள்வேன் !" என்று அலறிய மனுஷனிடம் - "பெட்டியை மாத்திரம் வைக்க அனுமதி கொடுங்கள் ; போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்துவிட்டு, அவர்கள் பதிவிடக்கூடிய FIR-ன்  நகலை கொண்டு வந்து தந்த பிற்பாடு ரூம் கொடுங்கள் !" என்று சொன்ன போது வேண்டா வெறுப்பாய் ஒத்துக் கொண்டார் ! 

ஒரு மாதிரியாய்ப் பெட்டியை வைத்து விட்டு, அந்தப் போலீஸ் தலைமையகம் தேடிப்புறப்பட்டோம் ! திரும்பவும் metro - கையிருப்பு குறைச்சலே என்பதால் ! அங்கே போனால் போலீஸ் ஸ்டேஷன் தவிர மற்ற சகலமும் கண்ணில் பட்டது ; ஒரு 20 நிமிடத் தேடலுக்குப் பின்பாய் ஒரு மஞ்சள் நிறக் கட்டிடத்துக்குள் கால் வைத்தபோது - ஆஜானுபாகுவான அரை டஜன் ஆபீசர்கள் ஜாலியாய் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர் ! எங்களை பார்த்தவுடன் என்னவென்று வினவ - சோகக் கதையை ஒப்பித்தேன் ! அந்த ஊருக்கு இது ரொம்பவே சகஜம் தான் என்பது உலகுக்கே தெரியும் என்பதால் - "ஜாக்கிரதையாக இருக்க வேணாமாடா முட்டாப் பயலே ?" என்பது போலானதொரு பார்வையைத் தந்து விட்டு, எதிரே இருந்ததொரு ஆபீஸ் பக்கமாய்க் கை காட்டினார் ! அங்கே வேக வேகமாய்ப் போனால் - சின்னதொரு புராதன வரவேற்பறைக்குள் சுமார் 20 பேர் அடைந்து கிடந்தனர் ! வெவ்வேறு தேசப் பிரஜைகள்...வெவ்வேறு மொழிகள் பேசுபவர்கள் ...ஆனால் அத்தனை பேரிடமும் ஏதோவொரு இழப்பின் கதை இருப்பது தெரிந்தது ! "என் காரைக் காணோம் !!" என்றபடிக்கொரு ஐரோப்பியர் உறுமிக் கொண்டே திரிய ; இன்னொரு பக்கமோ "எங்க பாஸ்போர்ட் போச்சு !" என்ற ஈனஸ்வரக்   குரல்களுமே  ! "துணைக்கு ஆள் உள்ளதுடா சாமி !" என்றபடிக்கே பார்த்தால் இரு இளம் பெண்கள் - நம்மூர் ஜாடையில் ! தனியாய் சுற்றுலா வந்துள்ளனர் இருவரும், வந்தஇடத்தில் எங்களை போலவே இரயிலில் அல்வா சுவைக்க நேரிட்டுள்ளது ஒரு திருட்டுக் கோஷ்டியிடம் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டபோது - "ஷப்பா..இந்த ஊரிலே முட்டாப் பிளாஸ்திரி நான் மாத்திரம் தான்னு இல்லே சாமி !" என்பது போலொரு வினோதமான திருப்தி உட்புகுந்தது ! இன்னும் கொஞ்சம் பேசிய போது - அந்தப் பெண்மணி மும்பையில் வக்கீலாய்ப் பணியாற்றுபவர் என்றும், சென்னைப் பூர்வீகமே என்பதும் தெரிந்து கொள்ள முடிந்தது !!  எத்தனை சின்ன உலகமடா சாமி ?! என்றபடிக்கே ஒரு மூலையில் சாய முயற்சித்த கணத்தில் பரபரப்பாக இன்னொரு இந்திய அணி உட்புகுந்தது ! Schneider Electric என்ற பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் ; பஸ் நிலையத்தில் பாஸ்போர்ட் லவட்டல் படலத்துக்கு ஆளானவர்கள் என்பது சற்றைக்கெல்லாம் புரிந்தது ! "நாங்க முதல்லே வந்தோம் ; அவங்க நெக்ஸ்ட் ; இவங்க அதுக்கப்புறம் !" என்று காரைப் பறிகொடுத்தவர் ஒரு வரிசையை உருவாக்க முயற்சித்துக்கொண்டிருக்க, நேரம் மட்டும்  ஓடிக் கொண்டே இருந்தது !  ஆனால் உள்ளே செல்லும் ஒவ்வொரு புகார்தாரரும் முக்கால் மணி நேரத்துக்கு குறைவாய் வெளியே திரும்பிய பாடைக் காணோம் எனும் போது கால்களும், மனங்களும் கடுத்தன ! துளியும் முகச்சுளிப்பின்றி அங்கே ஓரமாய் நின்று கொண்டிருந்த ஜுனியரைப் பார்க்கப் பார்க்க எனக்கு லஜ்ஜை பிடுங்கித் தின்றது ! "இப்படியொரு மாக்கானா இருந்து தொலைத்து விட்டோமே ?!!" என்று என்மேலேயே தோன்றிய வெறுப்பு, எனக்குள்ளிருந்த சில பல தெனாவட்டுச் சேகரிப்புகளை கரையச் செய்துகொண்டிருந்தது ! மூன்றரைக்கு அங்கே காவல் நிற்கத் துவங்கியவர்கள், மணி ஆறாகிய போதும் எவ்வித முன்னேற்றமும் இன்றி நொந்து போயிருந்த கணத்தில் பணியில் ஷிஃப்ட் மாற்றம் நிகழ்ந்ததைக் கவனிக்க முடிந்தது ! புதிதாய் வந்திருந்த பெண் ஆபீசர் இருந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போகாத குறை தான் ; உள்ளே போய் புகார் படிவங்களை மொத்தமாய் ஜெராக்ஸ் எடுத்து வந்து பெருமாள்கோவில் வாசலில் நிற்கும் பண்டாரங்களுக்குப் புளியோதரைக் கட்டிகளை விநியோகம் செய்வது போல் கொடுத்துவிட்டு உள்ளே கிளம்பி விட்டார் ! நமக்குத் தான் பேனா பிடிப்பது பரிச்சயமான சமாச்சாரமாச்சே....? கட கடவென்று எழுதிவிட்டு கண்ணாடிக் கதவினருகே நின்று கொண்டு உள்ளே மண்டையை விட்டேன் ! வந்து அதை வாங்கிச் சென்ற அந்த ஆபீசர் ஒரு சீலைப் போட்டு கையெழுத்தைக் கிறுக்கி விட்டு திரும்ப ஒப்படைத்தார் ! "FIR ஒரிஜினல் + நகல் ! இவற்றை நாளைய காலை இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தால் அவசர கால பாஸ்போர்ட் தந்துவிடுவார்கள் !" என்று 'பாஸ்போர்டைத் தொலைத்த பேமானிகள் ' சங்க உறுப்பினர்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டோம் ! "நாளைக்கு காலையில் சந்திப்போம் !" என்றபடிக்கே அந்த வரலாற்றுச்சிறப்புமிக்க சந்திப்பை முடித்துக் கொண்டு திரும்பிய போது பிராணனில் துளியும் மிச்சம் இருக்கவில்லை எனக்கு ! அப்போதுதான் ஞாபகம் வந்தது ; பெட்டியின் சாவியுமே அபேஸான pouch-ல் தான் இருந்தது என்பதால் - பூட்டை உடைத்தாலொழிய காலையில் பழனியாண்டியைப் போல் கோவணமே உடுப்பாகிட முடியுமென்று ! "நானாச்சு - அதைத் திறக்க !" என்று ஜுனியர் மார்தட்ட -  ஏதேனும் screwdriver கிடைக்குமா ? ஆக்ஸ்சா பிளேட் கிடைக்குமா ? என்று தேடித் திரிந்தோம் ஞாயிறு இரவில் ! ஒரு மாதிரியாய் சிக்கியதை வாங்கி கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம் ! 

புண்ணியத்துக்கு ஹோட்டலில் எந்தப் புது ஏழரையையும் கிளப்பாமல் ரூம் தந்த போது, அடித்துப் போட்டது போல் கட்டிலில் விழுந்தோம் ! துள்ளலாய்த் துவங்கியதொரு பொழுது - ஒரு முடியாத் தீக்கனவாய்த் தொடர்வதை ஜீரணிக்க இயலா நிலையில் பசியும் தலை தூக்கவில்லை ! எப்போது தூங்கினோம் ? எப்படித் தூங்கினோம் ? என்று தெரியாது கண்ணயர்ந்த போதிலும் அதிகாலை 4 மணிக்கு முழிப்புத் தட்டிய மறு நொடியே - தலைக்குள் தாண்டவமாடியது இழப்பின் வேதனையே ! "கடவுளே...தூதரகத்தில் என்னலாம் பேப்பர்களைக் கேட்பார்களோ ? நம்மூர் அரசாங்க ஆபீஸ் போலவே அவர்களும் இருப்பின், எத்தனை நாள் இங்கே கிடந்தது அல்லாடுவதோ ?" என்ற பயம் பிறாண்டிக் கொண்டிருந்தது உள்ளுக்குள் ! 

அதற்கு முன்பாய்ப் பெட்டியைத் திறக்க வேண்டுமென்பதால் - அயர்ந்து தூங்கி கொண்டிருந்த ஜுனியரை தட்டியெழுப்புவதைத் தவிர்த்து வேறு வழி தெரியவில்லை !  தொடர்ந்த அடுத்த 30 நிமிடங்களுக்கு, ஒரு 30 ரூபாய் சீனாப் பூட்டு எங்களின் அத்தனை பாகுபலி அஸ்திரங்களுக்கும் 'பிம்பிலிக்கா பிலாக்கி' சொல்வதைப் பார்க்க முடிந்தது ! இது வேலைக்கு ஆகாது...என்று தோன்றத் துவங்கிய நொடியில் - ஏதோ மாயம் நிகழ்ந்தது - ஜுனியரின் இறுதி முயற்சி பலன் தந்த வகையில் ! "பிழைச்சோம்டா சாமி !" என்றபடிக்கே குளித்துக் கிளம்பும் வேலைகளுக்குள் நுழைந்திட - புதுப் பாஸ்போர்ட்டில் ஓட்ட 2 x 2 சைஸ் போட்டோக்கள் மூன்று தேவை என்பதை நெட்டில் படித்துத் தெரிந்து கொண்டிருந்தேன் ! நம்மூர் பாணிகளில் ஸ்டூடியோ இருந்தால் நொடியில் வேலையாகியிருக்கும் ; ஆனால் அதற்கு வழி எது ? தானியங்கி போட்டோ பூத்கள் ஆங்காங்கே இரயில் நிலையங்களில் பிடாரிகள் போல் நிற்க - அதனுள் ஒன்றில் நுழைந்தேன் போட்டோ எடுத்துக் கொள்ள ! சும்மா நாளைக்குச் சிரிக்கச் சொன்னாலே நிலவேம்புக் கஷாயத்தை குடித்தவன் போலத் தான் போகும் என் முகம் ; இந்த லட்சணத்தில் மண்டைக்குள் இத்தனை பாரத்தை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்க சாத்தியமாகுமா என்ன ? ஒரு மாதிரியாய் முறைக்கும் மிஸ்டர் பீன் போலொரு போட்டவை எடுத்துக் கொண்டு தூதரகத்துக்குப் போனால் - அது முந்தைய தினம் நாங்கள் ஜாலியாய் சுற்றித்  திரிந்த மிலன் தேவாலய சதுக்கத்துக்கு வெகு அருகில் தான் என்பது புரிந்தது ! ஒற்றை நாளில் தான் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள் ?? என்ற சிந்தனையோடு நடையைக் கட்டினால் - தூதரக வாயிலில் நல்ல கூட்டம் ! ஆனால் அவர்களுள் பெரும்பான்மையினர் இத்தாலியில் வசிக்கும் இந்தியர்கள் என்பதும், தத்தம் பாஸ்போர்ட்களில் ஏதேனும் திருத்தங்கள் ; மாற்றங்கள் செய்திட வந்திருக்கிறார்கள் என்பதும் புரிந்தது ! Emergency என்பதால் எங்களை சடக்கென்று உள்ளே நுழைய விட்டது மாத்திரமன்றி, தூதரகத் தலைமை அதிகாரி நொடிப் பொழுதில் நம் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார் ! ஒரு இளநிலை அதிகாரியை உடனனுப்பி - அருகாமையில் இருந்ததொரு இந்திய டிராவல் ஏஜென்சி ஆபீசுக்கு வழிகாட்டச் செய்தார் ! அங்கே போனால் கோட் சூட் போட்டுக் கொண்டு ஜம்மென்று ஒரு பஞ்சாபி முதலாளி ; மூன்று பஞ்சாபிப் பெண்கள் என அழகாய், பிஸியாய்ப் பனி செய்து கொண்டிருந்தனர் ! முந்தைய நாள் போலீஸ் ஸ்டேஷனில் நாங்கள் பார்த்த அந்த தமிழ் பேசும் மும்பை பெண் வக்கீலும் அங்கு தான் இருந்தார் ; படிவங்களை பூர்த்தி செய்து கொண்டு ! அப்புறம்தான் புரிந்தது, இந்த ஊரில் பாஸ்போர்ட் களவு போவதென்பதெல்லாம், பீட்சா சாப்பிடுவதை போல சகஜ நிகழ்வே என்றும் ; மாற்று பாஸ்போர்ட் வாங்கிடும் படிவங்களை இவர்கள் ஒரு கட்டணத்துக்கு தயார் செய்து தருகிறார்கள் என்று ! "ஷப்பா..நிம்மதிடா சாமி !" என்றபடிக்கே எங்கள் turn வரும்வரைக் காத்திருந்தோம் ! அங்கேயே வைத்து மீண்டுமொரு புகைப்படமும் எடுக்க, அந்த பூத்தில் எடுத்த பூச்சாண்டி போலான போட்டாக்களைத் தலையைச் சுற்றித் தூர எறிந்தேன் ! ஒரு மாதிரி படிவங்களை பூர்த்தி செய்து விட்டு, தூதரகத்துக்கு ஓடினோம் - அவர்கள் lunch break -க்கு செல்லவிருந்த தருணத்தில் ! முகம் சுளிக்காது படிவங்களையும்,  கட்டணத்தையும் வாங்கி கொண்டு - மதியம் 3 மணிக்கு வந்து புதுப் பாஸ்போர்ட்டை வாங்கி கொள்ளச் சொன்ன போது - எனக்கு அவர் காலில் விழுந்தால் தப்பில்லை என்று தோன்றியது ! ரூமுக்குப் போய் விட்டு திரும்பவும் ஓடி வருவதற்குப் பதிலாக அங்கேயே பொழுதைக் கழிக்கத் தீர்மானித்தோம் - லேசாய் எதையாச்சும் சாப்பிட்ட கையோடு ! 

மதியம் மூன்றும் புலர்ந்த பொழுது - "டாண்" என்று கையில் பாஸ்போர்ட் இருந்தது என்னிடம் ! கடவுளைக் கண்டது போலிருந்தது - அந்தச் சன்னமான ஊதா நிற சமாச்சாரத்தைப் பார்த்த பொழுது ! அவருக்கு நன்றிகளை சொல்லி விட்டு, ஓட்டமாய் ஓடி, ரூமுக்கு வந்தோம் - அடுத்து இங்கிருந்து ஸ்பெயின் எவ்விதம் செல்வதென்று கண்டுபிடிக்கும் திட்டத்தில் ! மதுரையில் டிராவல் ஏஜெண்டை போனில் பிடித்து, நெட்டில் சிக்கிய அத்தனை விமானங்களையும்  அலசச் செய்தேன்- ஏதேனும் ஒத்து வருகிறதா ? என்று பார்க்க ! ஒரு மாதிரியாய் ஒரு டிக்கெட் வாய்ப்பு கண்ணில் பட்டது ! விமான நிறுவனங்களுக்கொரு விசித்திரப் பழக்கமுண்டு ; மூக்கை நேராகத் தொடாமல் - காதைச் சுற்றித் தொடச் செய்தால்  தேவலாம் என்று நினைக்கும் பாங்கில் ! இங்கிருந்து சென்னைக்கு நேராகப் போவதை விடவும், பெங்களூரு போய் விட்டு, அங்கிருந்து சென்னைக்கு இன்னொரு பிளைட்டைப் பிடிப்பது சீப் என்பது போல் சில சமயங்களில் கட்டணங்கள் இருக்கும், நாங்கள் செல்ல வேண்டியதோ மேட்ரிட் நகரம் ; ஆனால் நேரடியாய் மேட்ரிட் போகாது - பார்சிலோனா நகருக்குப் போய் விட்டு, அதிகாலையில் அங்கிருந்து மேட்ரிட்டுக்கு இன்னொரு பிளைட் எடுத்தால் கட்டணம் 6000 ரூபாய் தான் வந்தது ! முடிந்தால் மாட்டு வண்டியில் கூட வரத் தயார் என்ற நிலையில் இருந்தவனுக்கு இந்த பார்சிலோனா-மேட்ரிட் கூத்தெல்லாம் ஒரு சிரமாகவே தெரியவில்லை ! "இந்தத் திருட்டு ஊரிலிருந்து நடையைக் கட்டினால் போதும்டா சாமி !" என்ற உணர்வே மேலோங்க டிக்கெட்டுகளை போடச் செய்தேன் ! இரவு ஒன்பது மணிக்குத் தான் பிளைட்  என்பதால் கொஞ்ச நேரம் கண்ணசர ஜுனியர் தீர்மானித்த போது நான் பேக்கிங் பண்ண ஆரம்பித்தேன் ! அப்போது எனக்குள் மெல்ல குடைந்து கொண்டிருந்ததொரு சந்தேகம் விஸ்வரூபம் எடுத்தது ! ஐரோப்பியக் கூட்டமைப்பின் கீழே வழங்கப்படும் Schengen விசாக்களைக் கொண்டு கிட்டத்தட்ட 25 + தேசங்களுக்குள் பயணிக்க முடியும் என்றாலும், தொலைந்து போன எனது முந்தைய பாஸ்போர்ட்டில் தான் அந்த விசா முத்திரையும் இருந்ததால் - காலியாகக் காட்சி தரும் இந்தப் புது பாஸ்போர்டைக் கொண்டு என்னை ஸ்பெயினுக்கான விமானதை பிடிக்க விடுவார்களா ? என்ற கேள்வி பெரிதாய் நின்றது ! எனது இந்தியா திரும்பும் டிக்கெட் இருப்பது ஸ்பெயினிலிருந்து தான் என்பதால் - எப்படியேனும் கெஞ்சிக் கூத்தாடி கிளம்பி விடலாம் என்ற நப்பாசை மறு  ஓரத்தில் !! போய்த் தான் பார்ப்போமே - என்றபடிக்கு பேக் செய்தவனுக்கு  ஜுனியரின் துணிகளை தனியாக ஒரு பையில் போடும் அளவுக்கு லேசாய் மூளை செயலாற்றியது ! எப்படியேனும் ஸ்பெயின் வேலைக்கு ஒருவராவது போயே தீர வேண்டுமென்பதால் - ஏர்போர்ட்டில் எனக்குத் தடா போட்டு விட்டால் ஜுனியரை மட்டுமாவது அனுப்பியே தீர வேண்டுமென்பது உள்ளுக்குள் பதிவாகியிருந்தது ! அப்போதைக்கு எதையும் சொல்லிக் கொள்ளாமல் மிலன் ஏர்போர்ட்டுக்குக் கிளம்பினோம் இரண்டு பேருமே - மூட்டை முடிச்சுகளோடு ! 

அங்கே போன போது எனது பயங்கள் ஊர்ஜிதமாயின ! "உங்கள் பாஸ்போர்ட்டில் அவசர விசா வாங்கினால் மட்டுமே பயணம் செய்ய முடியும்...!" என்று ஒரேடியாக மறுத்துவிட, கையைப்பிசைய மட்டுமே முடிந்தது எனக்கு ! துளியும் தயக்கமின்றி - "நான் ஸ்பெயின்போய் மிஷினைப் பார்த்து விட்டு அங்கிருந்தே ஊர் திரும்புகிறேன் ; நீங்க டிக்கெட்டை மாற்றிக் கொண்டு மிலனிலிருந்தே கிளம்புங்க !" என்று ஜுனியர் சொன்ன போது - எனக்கு நெஞ்சு டங்கு டங்கென்று அடித்துக் கொண்டது ! எதிர்பார்த்த சமாச்சாரமே ; 25 வயதில் இன்றைக்கு பெண்பிள்ளைகளே  சந்திர மண்டலத்துக்கே தனியாய்ப் பயணிக்கிறார்கள் தான் ; ஏன் - நான் அடிக்காத ஷண்டிங்கே எதுவும் பாக்கி கிடையாது தான் ! ஆனால் - எதிர்பாரா ஒரு சூழலில் ; ஒரு அசம்பாவித நொடியில் - தண்ணீருக்குள் தூக்கிப் போட்டே தீர வேண்டிய அத்தியாவசியம் எழும் போது தொண்டையைக் கவ்வும் பயத்துக்கு மருந்தெதுவென்று தெரிந்திருக்கவில்லை ! போர்டிங் பாசை வாங்கும் நேரத்துக்குள், என்னிடமிருந்த 2 போன்களில் ஒன்றையும், கைவசமிருந்த பணத்தில் ஒரு பகுதியையும் ஜுனியரிடம் கொடுத்து விட்டு, கண்ணாடிக்கு வெளியே நின்று டாட்டா காட்டிய பொழுது வாழ்க்கைச் சக்கரம் ஒரு முழு வட்டம் சுழன்று வந்து நிற்பது  போல் தோன்றியது !  பணிகளை, பொறுப்புகளை சுமந்து மட்டுமே பழகியவனுக்கு, முதன்முறையாக அந்தப் பாரம்  பகிரப்படுவதை உணர முடிந்த பொழுது சந்தோஷப்படுவதா ?  சங்கடப்படுவதா ? சங்கோஜப்படுவதா ? என்றே தெரிந்திருக்கவில்லை ! செக்யூரிட்டி சோதனைகளை முடித்துக் கொண்டு ஜுனியர் உள்ளே ஐக்கியமான பிற்பாடும் அங்கேயே,அந்த கண்ணாடித் தடுப்புக்கு மறுபக்கம் நின்று கொண்டிருக்க மட்டுமே தோன்றியது ! எத்தனை நேரம் அங்கு நின்றேன் என்பதோ ; ஒரு மணி நேர ஊர் திரும்பும் பஸ் பயணத்தை எவ்விதம் சமாளித்தேன் என்பதோ இப்போது நினைவில்லை ! ஆனால் சிந்தனைகளுக்கு இறக்கைகள் இருப்பின், அவை விசாக்களின் அவசியமின்றி ; தேச எல்லைகளின் பதிவுகளை மறந்து - அந்த விமானதை பின்தொடர்ந்திருக்குமென்பது நிச்சயம் ! நான் ரூமுக்குத் திரும்பிய நேரத்துக்கு இரவு 11 ; அங்கே ஜுனியர் பார்சிலோனா சென்று ரூமும் போட்டுப் படுத்து விட்டிருக்க, என் மூச்சு லேசாய் மறுவருகை செய்தது !! புலர்ந்த காலை ; ஜுனியரின் அடுத்த பயணம் ; மெஷின் பார்வையிடல் - என சகலமும் எனக்கு வாட்சப்பிலும், போனிலும் பரிமாறப்பட்ட - 'இந்த லோகம்  ஒண்ணும் அத்தனை மோசமில்லை தானோ ?' என்ற எண்ணம் எனக்குள் உதயமாகத் தொடங்கியது ! பணிகளை முடித்து   விட்டு மேட்ரிட் விமான நிலையத்துக்கே ஜுனியர் திரும்பிய வேளையில் நான் எனது டிக்கெட்டை டில்லிக்கு மாற்றியமைத்து வாங்கியிருந்தேன் ! புதன் காலையில் இருவருமே டில்லியில் சந்தித்துக் கொள்ளும் விதமிருந்த அட்டவணையைப் பார்த்த பொழுது - அந்த நிலவேம்புக் கஷாயப் புன்னகை மீண்டது முகத்துக்கு ! "இல்லே..உன் பாஸ்போர்ட்லே ஐரோப்பிய விசா முத்திரையே இல்லே....நீ உன் சொந்த ஊருக்குத் திரும்பிப் போறதுனாலுமே அது முறையில்லை ; இங்கே இன்னொரு நாள் தங்கியிருந்து, அவசர விசா எடுத்துக் காட்டிட்டுத் தான் நீ போகணும் !" என்று இம்முறை யாராச்சும் குண்டைத் தூக்கிப் போட்டால் - சப்பணமிட்டு "ஓஒ"வென்று அழுது தீர்த்து விடுவது தான் என்ற தீர்மானத்தில் ஏர்போர்ட்டை எட்டிப் பிடித்தேன் ! "நமஸ்தே !" என்றபடிக்கு எனது பாஸ்போர்ட்டில் ஒரு சாப்பாவைக் குத்தி - "ஓடிப் போய்டு" என்பது போல் பார்த்த immigration ஆபீசர் மேல் எனக்கு கோபமே தோன்றவில்லை ! டில்லி திரும்பும் விமானத்தில் வெந்ததும் வேகாததுமாய் எதையோ சாப்பிடத் தந்த நொடியில் கூட எனக்குள் ஆத்திரம் எழவேயில்லை ; டில்லியில் கால் பதித்த பொழுது - எழுந்த உணர்வுகளுக்கோ ;  2 மணி நேரக் காத்திருப்புக்குப் பின்பாய், ஜுனியரின் விமானமும் தரையிறங்க - தூக்கக் கலக்கத்தில் நடை போட்டு வந்த பரிச்சய உருவத்தைப் பார்த்த நொடியில் எழுந்த அசாத்தியத்  துள்ளலுக்கோ பெயர் சொல்லவும் தெரியவில்லை ! ஒரு மாதிரியாய் சென்னை ; அப்புறம் சிவகாசி என வீடு திரும்பிய பொழுது 2 நாட்களுக்கு முன்பான கசப்புகளின் நினைவுகள் லேசாக மங்கியிருந்தன ! இழப்பின் கிரயத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும் பொழுது ரணமாகிறதே ; ஆனால் சில தருணங்களில் நம்பர்களை மீறியும் வாழ்வில் சில சங்கதிகள் உள்ளதென்பதும் புரிகிறது ! சிறுகச் சிறுக நாட்கள் நகர்ந்திட - மாமூல் பணிகளுக்குள் மூழ்கிட - இதுவும் கடந்து போகும் தான் என்பது புரிகிறது ! ஆனால் எனக்குள்ளிருந்த சன்னமான கொழுப்பு அடுத்தமுறை சிங்கம்புணரி போகும் போது கூடத் தலைகாட்டாது என்றே நினைக்கிறேன் !! அதே போல சங்கடத்திலும் ஒரு சில்வர் கீற்றை பார்த்திட விழைகிறேன் ! 

என்னிடமிருந்து களவு போன பாஸ்போர்ட், ஒருக்கால் ஜுனியரின் தோளில் பை இருந்த சமயம் காணாது போயிருப்பேன், அப்பனின் பாஸ்போர்டைத் தொலைத்த உறுத்தலை வாழ்க்கை முழுவதும்  நல்கியிருக்குமே ?!! At least அந்தக் கஷ்டம் நிகழாததில் சந்தோஷமே ! என் மடமை ; எனக்கே தண்டனை ! என்று எடுத்துக் கொள்கிறேன் !! 

ஒன்றரையணா பெறா சமாச்சாரத்துக்கு இவ்வளவு அலப்பரையா ? என்று உங்களுக்குத் தோன்றினால் நிச்சயம் அதனில் குறை காண மாட்டேன் guys ! ஆனால் அக்கடாவென்று ஒய்வை  நான் நாடும் ஏதோவொரு நாளில் இந்தக் கூத்துக்களெல்லாமே மறந்தும், மங்கியும் போயிருக்கும் என்பது நிச்சயம் !  கண்முன்னே ஒரு ஜோடி இறக்கைகள் மலர்ந்ததை பார்த்த அனுபவத்தை எனக்கு நானே நினைவூட்டிக் கொள்ளவேனும் இந்தப் பதிவைத் தேடிப்  படிப்பேன் ! So அந்தமட்டிற்கு இந்தப் பதிவு எனக்கே ஒரு டைரிக் குறிப்பாகிடட்டுமே ? அந்த ஒரு luxury-ஐ உங்கள் பெயரைச் சொல்லி எனதாக்கிக் கொள்கிறேனே guys ?

Bye all !! See you around !!

P.S : இந்த நாலைந்து நாட்களின் விரயம் காரணமாய் ஜூன் இதழ்களில் ஓரிரு நாள் தாமதம் நிகழக் கூடும் ! இயன்ற மட்டிலும் முயல்வேன் அதனைத் தவிர்க்க ! இதோ - இம்மாதத் 'தல' அட்டைப்பட முதல் பார்வை - ஒரிஜினல் டிசைனோடு !! அசாத்திய சித்திரத் தரத்துடன் நம்மவர் கலக்கக்  காத்திருக்கிறார் !! 
மிலன் நகரில் நமது போனெல்லி & டயபாலிக்  குழுமம் உள்ளது தான் ; எனது 20 ஆண்டு கால மிஷினரி வியாபார நண்பர்கள் ஏகப்பட்டவர்களும் அங்கே உள்ளனர் தான் ! இக்கட்டென்று அவர்களிடம் போய் நின்றிருந்தால் நிச்சயம் துளியும் யோசிக்காது இயன்ற ஒத்தாசைகளை செய்திருப்பார்கள் ! ஆனால் இந்த மாதிரி பல்ப் வாங்கியதை வெளிச் சொல்லக் கூச்சமா ? அல்லது அவர்களை தொல்லைப்படுத்துவானேன்  என்ற எண்ணமா ? - என்று சொல்லத் தெரியவில்லை  - வாயையே திறக்காது இருந்து விட்டேன் ! அங்கே திறக்கா வாய் இங்கே அலிபாபா குகையின் வாயிலைப் போலத் திறந்துவிட்டுள்ளது !! இன்னமும் யோசிக்கிறேன் - ஏனென்று !! 

சென்ற வார பதிவுக்கான உங்களின் பின்னூட்டங்களை இங்கே கொணர்ந்து பதிலளிக்க முயற்சிக்கிறேன் guys !! Bye again !!

200 comments:

 1. //அங்கே திறக்கா வாய் இங்கே அலிபாபா குகையின் வாயிலைப் போலத் திறந்துவிட்டுள்ளது !! இன்னமும் யோசிக்கிறேன் - ஏனென்று !! // :-)

  ReplyDelete
 2. இதே அனுபவத்தை ஜூ எ வின் பார்வையில் அறிய ஆவல்!

  ReplyDelete
  Replies
  1. ///இதே அனுபவத்தை ஜூ எ வின் பார்வையில் அறிய ஆவல்!///

   இதற்கு முன்பு ஜூனியரிடம் பேசியதை வைத்துச் சொல்வேனானால், ஜூனியரின் பதில் இப்படி இருக்கக்கூடும்
   - "அதான் அப்பாவே எல்லாத்தையும் சொல்லிட்டாரில்லே?"

   ;)

   Delete
  2. ஈரோடு விஜய் : அவ்வளவு கூட இராது ; கடைசியிலே போட்டிருக்கும் அந்த ஸ்மைலி மட்டுமே கிட்டியிருக்கும் !!

   Delete
 3. 'தென்னகத்து வாஸ்கொடகாமா'வின் பயணக்குறிப்பை படித்துவிட்டு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மேற்கிலிருந்து ம. ராஜவேல். : "தென்னகத்துத் தெனாலி ராமன்" என்று திருத்திக் கொள்ளுங்களேன் சார் !!

   Delete
 4. போன பதிவில் நீங்கள் பார்த்தீர்களோ இல்லையோ என்று மறு பதிவு...
  Sankar C16 May 2017 at 10:26:00 GMT+5:30
  +1234567890
  ரொம்ப நாளா இத நான் ஆசிரியர் கிட்டே கேட்டுக்கிட்டே இருக்கேன். கார்ட்டூன் கதைகளை இன்னும் நிறைய வெளியிடுங்கள் சார். நிறைய காமிக்ஸ் படித்திருந்தாலும் சேகரிக்க ஆரம்பித்தது பயங்கரப் பொடியன் 2லிருந்துதான். அதோடு 2 பிரதிகள் வாங்க ஆரம்பித்ததும் கார்ட்டூன் இதழ்களைத்தான். 2003-2004ல் ஆசிரியரை நேரில் சந்தித்த போதும் வலியுறுத்தியது கார்ட்டூன் கதைகளை முழு வண்ணத்தில் வெளியிடும்படித்தான்.மனதை லேசாக்குவது கார்ட்டூன் கதைகள்தான் என்பது எனது கருத்து. அதற்காக மற்ற கதைகளை வேண்டாம் என சொல்லவில்லை. பல்சுவைகளை வரவேற்கிறேன். இனிப்பை (கார்ட்டூன்) கொஞ்சம் கூடுதலாக கேட்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. முதலில் மன்னித்துக்கொள்ளுங்கள் சார். பதிவை படிக்காமல் போன பதிவு கமெண்ட் ஐ போட்டதற்கு... என்னவொரு த்ரில்லிங் அனுபவம்... என்னைப்போல வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும், இனி பயணிப்பவர்களுக்கும் இந்த பதிவு ஒரு மிகப்பெரிய பாடம். பல்பு வாங்கினாலும் மற்றவர்கள் நலனுக்காக பதிவிட்டதற்கு நன்றி சார். கண்டிப்பாக இளைய தலைமுறைகளுக்கு இருக்கும் presence of mind ஒத்துக்கொள்ள பாராட்டப்பட வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள் விக்ரம் & எங்கள் ஆசிரியரை பத்திரமாக திரும்ப அழைத்து வந்ததற்கு நன்றி.

   Delete
  2. Sankar C : //பல்பு வாங்கினாலும் மற்றவர்கள் நலனுக்காக பதிவிட்டதற்கு நன்றி சார்//

   அறிவுரை சொல்லும் நோக்கமெல்லாம் நமக்கு செட் ஆகாது சார் ; மனதில் ததும்பிக் கொண்டிருந்த உணர்வுகளுக்கு இங்கொரு வடிகால் தேடிக் கொண்டேன் - அவ்வளவே !!

   Delete
 5. அனுபவத்தில் புதிதாக ஓர் அனுபவம் உங்கள் புண்ணியத் தில் ஜுனியர்க்கு.கெட்டதும் சமயத்தில் நல்லதே.

  ReplyDelete
 6. அதிகாலை வணக்கம்

  ReplyDelete
 7. இந்த வருடத்தின் பெரிய நீளமான பதிவு என இதனைக் கொள்ளலாமா?

  ReplyDelete
  Replies
  1. Jegang Atq : அடுத்த பாஸ்போர்ட்டை இந்தாண்டே தொலைக்காது தலை தப்பிப்பின், Yes !

   Delete
  2. இது பெரிய பதிவா.?

   எடிட்டரும் ஜுனியர் எடிட்டரும் என்னாகப்போறார்களோ என்ற தவிப்பில்....... நேரமே தெரியவில்லை.!

   Delete
 8. விஜயன் சார், எம்மாம் பெரிய பதிவு. இன்னும் கொஞ்சம் படங்கள் போட்டால் பதிவு படிக்க சுவாரசியமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ///இன்னும் கொஞ்சம் படங்கள் போட்டால் பதிவு படிக்க சுவாரசியமாக இருக்கும்.///

   குறிப்பாக அந்த Mr Bean ஸ்டைல் படங்களை..!! ஹிஹி..!

   Delete
  2. ஆனாலும் அந்தக் குசும்பு மட்டும் இல்லாங்காட்டி, நாமெல்லாம் நாலணா பெற மாட்டோம் தான் !!

   Delete
  3. க.க.க. போங்கள் சார். .!! :):):):)

   Delete
 9. ஒரு பாஸ்போட் படலம்.காலை வணக்கம் நட்புகளே.

  ReplyDelete
 10. Good morning Editor sir ⛄⛄⛄💆💆💆

  ReplyDelete
  Replies
  1. Good morning my dear friends 🙌🙌🌹🌹🌹😄😄😄

   Delete
 11. காலை வணக்கம் நண்பர்களே.....

  ReplyDelete
 12. அயல் நாட்டுப் பயணம் என்றாலே திகில் அதிகம்தான் சார். ஆனால் கிழவிங்க செஞ்ச வேலையிருக்கே. ஹீஹீஹீ. அடுத்த தலைமுறை கியர் அப் குறித்த எனது கருத்தை நேற்றுதான் முகநூலில் பதிவிட்டேன். ஒருபுறம் வருத்தமெனினும் மறுபுறம் விக்ரமின் ஆட்சிக்கு அஸ்திவாரம் பலமாவதைக் கண்டு மகிழ்ச்சியே. மற்றவை மறந்து போகக் கூடிய துன்பியல்களே.

  ReplyDelete
  Replies
  1. John Simon C : எனக்கு அந்தக் கிழவிகளை மனக்கண்ணில் பார்க்கும் போதெல்லாம் நமது "கருப்பு ஆயா" தான் நினைவுக்கு வருகிறார் !

   Delete
 13. டியர் எடி,

  வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பாதைகளை நமது பிள்ளைகள் மூலம் மீண்டும் அனுபவிப்பது ஒரு தவம், அதுவும் நம்மை விட அவற்றை திறம்பட கையாள்வதை கண்டுகளிப்பது ஒரு வேள்வி. அப்படிபட்ட ஒரு தருணத்திற்காக தங்களின் இந்த பதிவு என்னையும் எதிர்பார்க்க செய்து விட்டது. என்ன இத்தனை 'டிராமாடிக்காக' இல்லாத வரை தேவலமே ;)

  எல்லாம் நண்மைக்கே ! Welcome Back !!

  ReplyDelete
  Replies
  1. Rafiq Raja : //வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பாதைகளை நமது பிள்ளைகள் மூலம் மீண்டும் அனுபவிப்பது ஒரு தவம், அதுவும் நம்மை விட அவற்றை திறம்பட கையாள்வதை கண்டுகளிப்பது ஒரு வேள்வி//

   அற்புதமான வரிகள் சார் !!

   Delete
 14. அம்மாடியோவ்!!!!

  என்னாவொரு பயண அனுபவம்!!

  ஒரு விறுவிறுப்பான நாவல் படித்த உணர்வு!!

  ஜூனியரை நினைத்துப் பெருமைப்படத் தோன்றுகிறது!

  அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி எடிட்டர் சார்!

  ReplyDelete
  Replies
  1. ///ஜூனியரை நினைத்துப் பெருமைப்படத் தோன்றுகிறது! ///

   தாய் எட்டடி பாய்ந்தால் ………………………

   Delete
  2. ஈரோடு விஜய் : நன்றியெல்லாம் தேவையா சார் ? மனதின் பாரத்தை இறக்கி வைக்கச் சிக்கிய தோள்களல்லவா உங்கள் ஒவ்வொருவரதும் ?

   Delete
 15. தான் அனுபவித்த கஷ்டங்களையும் ஏமாந்த அனுபவத்தையும் கூட இத்தனை சுவாரஸ்யமாய் ஹாஸ்யத்துடன் ஒருவரால் "புலம்ப " முடிவது ஆச்சரியம் சார். .!!

  ReplyDelete
  Replies
  1. அந்தக் கிழவிகளைப் பற்றி எழுதும்போதெல்லாம் ஜேன் பாணியில் மானசீக '#$%@&*®€£¥' இருந்ததை உணரமுடிந்தது என்னால்! :)

   Delete
  2. KiD ஆர்டின் KannaN : திருவிளையாடல் தருமியைப் பார்த்து வளர்ந்த தலைமுறையைச் சார்ந்தவனல்லவா சார் - புலம்பச் சொல்லியா தரணும் ?!!

   Delete
 16. நம்மூர் கிழவிகளையெல்லாம் கையெடுத்துக் கும்பிடணும்போல இருக்கு!

  ReplyDelete
 17. கஷ்டமான சூழ்நிலையை கையான்ட விதம்
  விவரித்த விதம் .வெளிநாடு செல்வோர்க்கு ஒரு
  பாடம்
  புத்தகங்கள் 2 நாள் லேட்டாக வந்தால் பரவாயில்லை சார் நல்லா இருந்தால் போதும்

  ReplyDelete
  Replies
  1. Anandappane karaikal : கலக்கிடுவோம்...கவலை வேண்டாம் !

   Delete
 18. ///ஒரு மாதிரியாய் முறைக்கும் மிஸ்டர் பீன் போலொரு போட்டவை எடுத்துக் கொண்டு ///

  மிஸ்டர் பீன் அந்தப்படத்தில் பின்னந்தலையைத்தான் போட்டோ எடுத்துவைப்பார்.!

  இப்போது நினைத்தாலும் பீறிட்டுவரும் சிரிப்பை அடக்கமுடியவில்லை..:):):):):)

  ReplyDelete
  Replies
  1. KiD ஆர்டின் KannaN : நமது கவுண்டரின் கடல் கடந்த உறவல்லவா மிஸ்டர் பீன் !!

   Delete
 19. எடிட்டா் சாா்,
  எல்லாம் நன்மைக்கே.

  நெருக்கடி நேரத்தில் தான் நம் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை உணரமுடியும்.

  நம் தலையில் எப்போதெல்லாம் கணம் உண்டாகிறதோ, அப்போதெல்லாம் அதை அதைக் கரையச் செய்ய இயற்கை இது போல வேலைகளை, எல்லோருமே செய்கிறது.

  எல்லோரும் எல்லாவற்றையும் அனுபவித்தே தொிந்து கொள்ள வேண்டியதில்லை. உங்களது அனுபவம் எங்களுக்கும் ஒரு பாடமாக உள்ளது.

  நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. அருமையான வரிகள்!!!

   இத்தனை நாளும் எங்கே இருந்தீங்க மிதுன் சக்கரவர்த்தி?!!

   Delete
  2. //எல்லோரும் எல்லாவற்றையும் அனுபவித்தே தொிந்து கொள்ள வேண்டியதில்லை. உங்களது அனுபவம் எங்களுக்கும் ஒரு பாடமாக உள்ளது.//
   உண்மை.

   Delete
  3. //எல்லோரும் எல்லாவற்றையும் அனுபவித்தே தொிந்து கொள்ள வேண்டியதில்லை. உங்களது அனுபவம் எங்களுக்கும் ஒரு பாடமாக உள்ளது.//

   இது துளியேனும் மெய்ப்படின் நிச்சயம் சந்தோசம் கொள்வேன் !!

   Delete
 20. ஒரு முடியா இரவு - தூள்
  நேற்றுத்தான் படிச்சேன்

  நல்ல முயற்சி
  All the best

  அதுவும் சில பக்கங்களை கடந்த பிறகு,
  "ஒரு முடியா இரவு" என்ற டைட்டில் காா்டும், "பீட்டா் - எனக்கு பத்து வயசுதான் ஆகுது" என்று சொல்லி 'டுப்பாக்கியை' கையில் வைத்துக் கொண்டு நிற்கும் படத்தோடு முற்றும் போடுவதும், ஒரு கைதோ்ந்த திரைக்கதையாளாின் சினிமா பாா்த்த உணா்வைத் தருகிறது.

  ReplyDelete
  Replies
  1. Mithun Chakravarthi : //"ஒரு முடியா இரவு" என்ற டைட்டில் காா்டும், "பீட்டா் - எனக்கு பத்து வயசுதான் ஆகுது" என்று சொல்லி 'டுப்பாக்கியை' கையில் வைத்துக் கொண்டு நிற்கும் படத்தோடு முற்றும் போடுவதும், ஒரு கைதோ்ந்த திரைக்கதையாளாின் சினிமா பாா்த்த உணா்வைத் தருகிறது.//

   அந்த டைட்டில் கார்டு பிரேமை நானும் செமயாய் ரசித்தேன் சார் !

   Delete
 21. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
  இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

  ReplyDelete
 22. சங்கடமான இந்த அனுபவத்தை நானே நேரடையாக அனுபவித்த உணர்வு ஆசிரியரே

  ஆனா பாருங்க...

  சங்கடமான அனுபவத்தை பகிர்ந்த லாவகம்..

  இந்த ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு கணக்கா ,வழக்கமான உங்கள் பாணி எழுத்துகளிலே ருத்ரதாண்டவம் ஆடியிருக்கீங்க....!!

  சங்கடங்கள் ஒரு பக்கமென்றாலும்,உங்கள் பதிவுகளில் இது ஒரு ஹை-லைட்.

  ReplyDelete
  Replies
  1. சரியாச் சொன்னீங்க.

   Delete
  2. T K AHMED BASHA : வடிவேலு வலம் வந்த மண்ணின் மைந்தர்களல்லவா சார்...அந்த ரணகளக் கிளுகிளுப்பை கைவிட முடியுமா ? :-)

   என்ன - டைப் அடித்ததில் ரேகையே அழியாத குறைதான் நேற்றிரவு !

   Delete
 23. விஜயன் சார், டெக்ஸ் அட்டைப்படம் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. அதுவும் அவர் வில்லனிடம் அடிவாங்குதை அட்டைப்படம் படமாக வடிவமைத்தது சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : ஒரிஜினல் ராப்பர் சார் ; வண்ண மெருகூட்டலோடு !

   Delete
 24. உங்கள் பயண அனுபவங்கள் ஜிலீரிட வைக்கிறது சார்!!!
  ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு புதிய அனுபவத்தைத் தருகின்றன சார்!!!
  அந்த நேரத்திலும் ஜூனியரின் செயல்பாடு வியக்க வைக்கிறது, பாராட்டப்பட வைக்கிறது சார்...!!!

  ReplyDelete
 25. சாா், உங்கள் பயணானுபவத்தினால் "கலீல் ஜிப்ரானின்" சில வாிகள் நினைவுக்கு வருகிறது.

  "உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல.

  அவா்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறாா்கள்; உங்களிடமிருந்தல்ல.

  உங்கள் அன்பை அவா்களுக்கு நீங்கள் தரலாம். உங்கள் எண்ணங்களையல்ல.

  அவா்களுக்கென்று தனிச் சிந்தனைகள் உண்டு.

  அவா்களின் உடல்களுக்குத்தான் நீங்கள் பாதுகாப்புத்தர முடியும், ஆன்மாக்களுக்கல்ல.

  அவா்களைப் போலிருக்க நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால், அவா்களை உங்களைப் போல் ஆக்கி விடாதீா்கள்."

  பொதுவாக அனைத்துப் பெற்றோா்களுக்குமே இது பொருந்தும்.

  ReplyDelete
  Replies
  1. செம ... அருமையான வரிகள்.

   Delete
  2. அருமை ...உண்மை....:-)

   Delete
  3. என் பிள்ளை இந்த மாதிரி இப்படி தான் ஆக வேண்டும் என்று அவர்கள் மிது நம் விருப்பத்தை தினிப்பது தவறு.
   ஆனால் நம் பிள்ளைகள் நல்லவர்களக வளர நம் வழிகாட்டுதல் அவசியம். அப்பொழுது ஓரு சில எண்ணங்களை நம் அவர்கள் மிது தினிப்பது அவசியம். என்னிடம் இருந்து வரவில்லை என்று அவனுக்கு அறிவரை கூறாமல் இருந்து விட முடியாது.

   Delete
  4. அன்பரே,
   அடிப்படையில் எல்லோரும் நல்லவா்களே.

   நம் இயல்பே அதுதான்.

   ஆனால் நாம் நம் இயல்பை இழந்துவிட்டோம்.

   பெற்றோா் உட்பட நம் சமூகமும், உற்றாா்-உறவினா்களும், நண்பா்களும் நம்மீது எப்போதும் ஆதிக்கம் செலுத்தியே இருக்கிறாா்கள்.

   ஆனால் அதனால் தானா, நாம் நாமாக இருக்கிறோம்.

   நமக்கென்றே ஒரு சுயம் இருக்கிறதல்லவா.

   அதே சுயம் நம் குழந்தைகளுக்கும் உண்டுதானே.

   சுதந்திரமே பொறுப்புணா்வை உண்டாக்கும்.

   நமது குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்பதே நமது விருப்பமாக உள்ளது.

   ஆனால் நாம்படும் கஷ்டங்களே நமக்கு நல்ல புாிதல்களை உண்டாக்கும் என்பதை ஏன் மறந்து போனோம்?

   Delete
  5. \\

   சுதந்திரமே பொறுப்புணா்வை உண்டாக்கும்.
   \\
   அருமை யான வரி...

   Delete
  6. Mithun Chakravarthi : //அவா்களைப் போலிருக்க நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால், அவா்களை உங்களைப் போல் ஆக்கி விடாதீா்கள்//

   "இப்படி இரு...அப்படி இரு.." என்று சொல்லி என்னை ஒருபோதும் என் பெற்றோர் வளர்த்ததில்லை என்பதால் எனக்கும் அடக்குமுறை parenthood-ல் துளி கூட நாட்டம் இருந்ததில்லை !

   காற்று தன்போக்கில் பயணம் செல்லட்டும் என்பதே எனது எண்ணம் !

   Delete
 26. அயல் நாட்டில் மட்டுமல்ல
  உள்ளூரிலுமே உஷாராக இருக்க
  வேண்டியது காலத்தின் கட்டாயம்

  ReplyDelete
  Replies
  1. எனக்கு பிரான்ஸ் ஸில் கூட இந்த மாதிரி திருடர்கள் இருப்பது இன்னைக்கு தான் தெரியும்.!!!!

   Delete
  2. Ganeshkumar Kumar : ரொமானிய நாடோடிகள் ஐரோப்பிய முக்கிய நகரங்களில் சிறுகச் சிறுக ஐக்கியமாகி வருகின்றனர் ! தளர்ந்தோர் பிச்சை எடுப்பதும் ; தாட்டியமாயுள்ளோர் கை நீட்டுவதும் வாடிக்கையாகி வருகிறது !

   Delete
  3. ! தளர்ந்தோர் பிச்சை எடுப்பதும் ; தாட்டியமாயுள்ளோர் கை நீட்டுவதும் வாடிக்கையாகி வருகிறது !


   ####₹₹#   சரியா தான் போச்சு....எல்லா நாடும் நம் நாடு தானா ...:-(

   Delete
 27. டெக்ஸ் அட்டைப்படம் - அருமை! சவுக்கடி வாங்கி, சட்டை கிழிஞ்சு போயி, தூப்பாக்கிய நோக்கி தாவும் டெக்ஸைப் பார்க்கப் பார்க்கப் பாவமா இருக்கு!

  "தல... விடாத தல... அந்தத் தூப்பாக்கி எடுத்து அவனை மடேர்னு அடிச்சு வீழ்த்து தல...
  சட்டை கிழிஞ்சுடுச்சேன்னு கவலைப்படாத தல... நம்ம சிபியாண்ட சொன்னா மஞ்சக் கலருல டீஷர்ட் அனுப்பி வைப்பாரு..."

  ReplyDelete
  Replies
  1. ஈரோடு விஜய் : விட்டால் நம்மவருக்கு பெர்முடாவும் மாட்டி விடுவீர்கள் போலிருக்கே !!

   Delete
 28. விஜயன் சார், விக்ரமின் பாஸ்போர்ட் மட்டும் தொலைந்து போய் இருந்தால் நிலைமை ரொம்ப மோசமாகி இருக்கும். இந்த பதிவைப்படித்து முடித்த உடன் தோன்றியது, உங்கள் கண்முன் விக்ரம் இது போன்ற நேரத்தில் எப்படி சவால்களை எதிர்கொள்கிறான், இன்றைய இளைஞர்கள் மன உறுதி, இது போன்ற விசயங்களை தெரிந்து கொள்ள நடந்த இறைவனின் நாடகமாக தோன்றுகிறது. இனிவரும் காலங்களில் விக்ரம் எதையும் தனியாக சமாளிக்க முடியும் என்ற விதையை இந்த பயணம் உங்கள் மனதில் விதைத்து விட்டது என நினைக்கிறேன். இனி எல்லாம் சுகமே.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : // இன்றைய இளைஞர்கள் மன உறுதி, //

   Oh yes !!

   Delete
 29. Sir very sad to hear this. But when we lose something it does n't always mean we are fool. Almost everyone of us esp. Myself had such experience. Ur sharing this is a warning to all of us. Take care sir.

  ReplyDelete
  Replies
  1. padmaloachan karthikayan : மனதிலிருந்த சமாச்சாரங்களை இறக்கி வைத்தேன் சார் ; அவ்வளவே ! இப்போது கொஞ்சம் இலகுவாக உணர்கிறேன் !

   Delete
 30. MBBS டாக்டர் சின்ன மாத்திரை குடுத்தா கூட அது கஷாயம் போல ...ஆனால் இந்த காமிக்ஸ் டாக்டர் எவ்வ்ளோ பெரிய மாத்திரை கொடுத்தாலும் அது சர்பத் மாதிரி அல்லவா என்று மனதில் நினைத்தவாறே பதிவை தொடர்ந்தேன்..

  இங்கே பதிவில் காமிக்ஸ் இல்லைதான் .ஆனால் அதை விட அதிகமாக படிக்க படிக்க பல கலவையான உணர்வுகள் ..ஏதோ நாங்களும் உங்களுடன் இருந்து ஊர் அலைந்தது போல..மகிழ்ச்சி..,கவலை..,திடுக்..,ஏமாற்றம்..,பயம்...,இறுதியில் பெருமிதம்..


  " சின்ன ஆசிரியருக்கு" ஒரு ஹாட்ஸ் ஆப் ...

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : தலீவரே....உங்க தீர்மானங்கள் தான் டாப் !! விசாவும் வேண்டாம்...விளக்கெண்ணையும் வேண்டாமல்லவா - தாரை தேசத்திலிருந்து ஈரோடு தேசத்துக்குப் பயணமாக ?

   இன்னும் கொஞ்ச காலத்துக்காவது உங்க பாணி தான் நமக்கும் !!

   Delete
 31. டெக்ஸ் அட்டைப்படத்தை பார்த்தவுடனே இதழ் விரைவில் கைக்கு வராதா என்ற எண்ணமும் ...டெக்ஸ்க்கே இந்த கதியா என்ற எண்ணமும் ஒரு சேர எழுகிறது சார்....

  ReplyDelete
 32. இந்த துன்பியல் நிகழ்விலிருந்து நீங்கள்
  மீண்டது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது...
  இதிலிருந்து நாங்களும் சாக்கிரதையாக இருந்து கொள்வோம. விக்ரமின் தைரியமான முடிவு பாராட்டத்தக்கது.

  ReplyDelete
 33. இந்த நிகழ்வை பிரின்ட் out எடுத்து நண்பர்களுக்கு படிக்க கொடுக்கலாம்னு இருக்கேன்.
  சோகத்தை கூட சுகமாக எழுதும் உங்களின் எழுத்து. பிரமிக்க வார்தைகள் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. Ganeshkumar Kumar : சார்..நண்பர்களுக்குள் அடிக்கும் ஜாலி அரட்டையின் சுகமே அலாதி அல்லவா ? நான் எழுத முற்படுவதெல்லாம் அந்த பாணியினை ஒட்டியே என்பதால் நெஞ்சுக்கு நெருக்கமாய்த் தோன்றிடலாம் !

   Delete
 34. டெக்ஸ் அட்டை படத்தில் அடி வாங்கறது யாரு? உங்க டெக்ஸ் வில்லரா. அடி வாங்கறது பார்க்கும் போதே சூப்பரா இருக்கே.
  வின்ஸ்ஸிட்டரை எடுக்கும் முன்னாடி நானே போய் உதைச்சு தட்டு விடனும் போல ஆசையா இருக்கு.😊😄😎😏😂

  ReplyDelete
  Replies
  1. Why This கொலை வெறி???

   Delete
  2. 'தல' பதிலுக்கு வைக்கும் ரிவெட்டைக் கதையில் பார்க்கும் போது, நண்பர் கணேஷ்குமாரே விசில் அடிப்பார் பாருங்களேன் !

   Delete
  3. என்ன ஒரு வில்லத்தனம்.?

   தீயா வேலை செய்யறீங்க கொமாரு.!!

   Delete
 35. //சிறுகச் சிறுக நாட்கள் நகர்ந்திட - மாமூல் பணிகளுக்குள் மூழ்கிட - இதுவும் கடந்து போகும் தான் என்பது புரிகிறது !//
  பயங்கரமான ஒரு அனுபவம் சார்,வாழ்க்கை முழுவதும் நமக்கு கிடைப்பது பாடங்களும்,அனுபவங்களுமே.நீங்கள் சொன்னது போல் இதுவும் கடந்துபோகும்.

  ReplyDelete
 36. Sir, வரேன் என்று சொல்லிட்டு இன்னமும் காணோம். வாங்க்அ சார் சீக்கிரமாக.

  ReplyDelete
  Replies
  1. Sridhar : அண்டர்டேக்கரோடு காலையைக் கழித்துக் கொண்டிருக்கிறேன் சார் !

   Delete
 37. இந்த பதிவுக்கு பொருத்தமான தலைப்பு: மிலன் படலம்

  ReplyDelete
  Replies
  1. Mahesh : "ஒரு முட்டாள் படலம் " என்பது இன்னமும் பொருத்தமாக இருக்கும் சார் !

   Delete
  2. //ஒரு முட்டாள் படலம் //////

   கம்பெனி சிக்ரட்ட வெளியே சொல்லாதிங்க...

   Delete
  3. கொஞ்சம் யோசிச்சு பாத்தா
   இந்த பதிவுக்கேற்ற தலைப்பு

   "முடியா இரவு"

   Delete
  4. "ஒரு எடிட்டரின் டைரி "

   Delete
  5. 'இரு இந்திய எடிட்டர்களும்... ஒருஜோடி பாரீஸ் பாட்டிம்மாக்களும்!'

   ஆங்! எடிட்டர் சார்... தலைப்பே இல்லாம நீங்க ஒரு பதிவப் போடுவீங்களாம்... பதிவப் படிச்சுட்டு நாங்க ஒரு தலைப்பு வைப்போமாம்... போட்டில ஜெயிக்கறவங்களுக்கு ஒரு ஐரோப்பிய டூருக்கான ஃப்ளைட் டிக்கெட்டை அனுப்பி வைப்பிங்களாம்...

   Delete
 38. விஜயன் சார், இங்கு உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள காரணம் நாம் எல்லோரும் காமிக்ஸ் குடும்பம் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : கலப்படமிலா நிஜம் சார் ! என் மனைவிக்கே இந்தக் கூத்தெல்லாம் கிஞ்சித்தும் தெரியாது !!

   Delete
 39. Good morning editor sir,your Milan experience is
  very thrilling to read
  but for you???
  of course for you also when you're thinking about it after some time

  ReplyDelete
  Replies
  1. senthil kumar : எல்லாம் கடந்து போகும் சார் ; இதோ அதற்குள்ளாகவே அடுத்த பாஸ்போர்ட் எடுக்க நல்ல நாள் தேடத் தொடங்கியாச்சே !!

   Delete
 40. ச.சிப்பாய் விமர்சனம்.

  இந்த லார்கோ கதை சற்று சுமார் தான். மகன் வயதில் இருக்கும் லார்கோ மயக்க நினைப்பது கொஞ்சம் ஓவர்.
  ஆனால் duplicate டா ஓரு கம்பெனி ஆரம்பித்து அதை அவர்களே W குழுமத்கு விற்பது மட்டும் இல்லாமல், மாத மாதம் சம்பளம் என்ற பெயரில் இல்லாத கம்பெனி உழியர்கள் பெயரில் ஆட்டய போடுவது corporate crime ஆசிரியர் காட்டி யுள்ளார்.
  இதே மாதிரி போலி கம்பெனி பெயரில் loan வாங்கி வராக்கடனாக உள்ளது மட்டும் இந்திய வில் ஐந்து லட்சம் கோடி. ஓருவர் கூட தண்டிக்க படவில்லை.

  ReplyDelete
 41. சார்... அனுபவங்களே நமக்கு சிறந்த ஆசான் ... ஜூனியர் வாழ்வில் செல்ல வேண்டிய தொலைவு இன்னும் அதிகம் ... சாதிக்க வேண்டிய விஷயங்களும் நிறைய... இந்த அனுபவம் அவருக்கு ஒரு படிக்கல்லாகவே அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை..

  ReplyDelete
  Replies
  1. இன்று தனது திருமணநாளை சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும்
   கேப்டன் டைகரின் தளபதி, அண்ணன்
   நாகு ஜி அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🏼

   அவர் இன்று போல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼

   💐💐💐
   🎂🎂🎂

   Delete
 42. எடிட்டா் சாா்,

  கடந்த பதிவுகளுக்கு பதிலளிப்பதாகச் சோன்னீா்களே?
  இன்னும் காணலையே.

  நாங்கெல்லாம் காா்ட்டுனுக்கு தனிக்கட்சியே ஆரம்பிச்சிருக்கோம்.

  சொல்லங்க காா்ட்டுன் ஆா்வலா்களே!

  விசயத்துக்கு வாங்க நண்பா்களே!

  கடைசியிலே நம்மல மறந்துருவாங்க!

  ReplyDelete
 43. //எடிட்டா் சாா்,

  அதிகம் வேண்டாம் வருசத்துக்கு

  4-லக்கிலூக்
  3-சிக்பில்
  3-ஸ்மா்ப்ஸ்
  2-மதியில்லா மந்திாி

  இதுபோக
  ரின்டின்கேன், சுட்டி லக்கி, பென்னி, புளுகோட்,
  புதுவரவு ஆஸ்ட்ரிக்ஸ், டின்டின்
  இதிலெல்லாம் தலைக்கு 2 வீதம்
  மொத்தம் 24 போதும்.

  சூப்பா் 6-ஐ இதுல சோ்க்க கூடாது.

  அதுக்குமேல உங்க இஷ்டம்.//

  கடந்த வாரப்பதிவு

  ReplyDelete
  Replies
  1. Mithun Chakravarthi : Given a choice - - அட்டவணையை முழுக்கவே கார்ட்டூன் மயமாக்கிடுவேன் ஒரேயொரு வருஷத்துக்காவது !! ஆனால் அதன் பின்னே "டுப்பாக்கியை" தூக்கிட்டு நண்பர்கள் பலரும் தேடிக் கிளம்பி விடுவார்கள் என்பது தான் பயமே !!

   Delete
 44. அடேயப்பா.!

  பயணக்கட்டுரை ஒரு திரிலிங் கதையை படித்த பீலீங்கை கொடுத்து விட்டது.!

  //இந்த ஊரில் எல்லாம் பாஸ்போட் களவு போவதெல்லாம் பீட்ஸா சாப்பிவதை போலும்.!//


  எடிட்டர் சார்.!


  கொலைகாரன் திருடன் டேஞ்சர் டயபாலிக்கை எல்லம் சூப்பர் ஹீரோவாக கொண்டாடும் ஊரில் இப்படித்தான் இருக்கும்.!

  ஊழல் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம் இந்த நாட்டுக்குத்தான் என்று ஏதோ ஒரு பத்திரிகையில் படித்ததாக ஞாபகம்.!!!

  ReplyDelete
  Replies
  1. ///// டேஞ்சர் டயபாலிக்கை எல்லம் சூப்பர் ஹீரோவாக கொண்டாடும் ஊரில் இப்படித்தான் இருக்கும்.!/////

   ஆத்தி பயந்து வருது ........டேஞ்சர் டயபாலிக் புக்கை திருடி தான் படிப்பாயங்களோ

   Delete
 45. நமது தானை தலைவர் தாரமங்கலத்தாருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை என்றபோதே ,எடிட்டர் ஏதோ சிக்கலில் உள்ளார் என்று புரிந்து கொண்டேன்.!!

  ReplyDelete
 46. பாரீஸ் மெட்ரோவில் 15 வருடங்களுக்கு முன் ஒரு பிக் பாக்கெட் திருடனிடம் பர்ஸ் டிக்கெட்டை எல்லாம் பரிகொடுத்துவிட்டு, பாஷை தெரியாமல் மெட்ரோ போலீஸிடம் பேந்த பேந்த முழித்த தினம் பொளேரென முகத்தில் அரைந்தது சார்.. உங்கள் பதிவை படித்த உடன்.
  என்ன ஒரு வித்யாசம்.. அப்போது என் ஜூனியர் 2 வயதில் அவன் அம்மா மடியில் துயில் கொண்டிருந்தான் :-)

  ReplyDelete
  Replies
  1. நானெல்லாம் உள்ளூர் டவுன் பஸ் டிக்கட் எடுத்துட்டு இறங்குற வரைக்கும் பவுனை பாதுகாக்குற மாதிரி அந்த பஸ் டிக்கட்டை பாதுகாப்பேன்...:-))

   Delete
  2. தலீவரே! :))))))

   ஆனா அதுக்காண்டி, பத்து வருசத்துக்கு முன்னாடி வாங்கின பஸ் டிக்கெட்டையெல்லாம் கூட இன்னும் பெட்டில போட்டு பாதுகாக்கிறதெல்லாம் கொஞ்சம்கூட நல்லாயில்லை தலீவரே! :P

   Delete
  3. தவறான பதில் EV. நீங்க யார் அந்த பவுன்னு கேட்டுஇருக்கணும் :P

   Delete
  4. நல்ல வேளை அந்த பவுனு யார்துன்னு கேக்காம போனீங்களே....:-(

   Delete
  5. @ Satishkumar

   ///தவறான பதில் EV. நீங்க யார் அந்த பவுன்னு கேட்டுஇருக்கணும் ///

   நல்ல தெரிஞ்ச பதிலை எதுக்குக் கேட்கணும்றேன்?

   தலீவர்னாலே கொஞ்சம் 'அப்படி இப்படி' இருந்தாத்தானே ஒரு கெத்தா இருக்கும்? முதல்ல வீட்டுக்குள்ள ஒரு ஏழெட்டுப் பேருக்கு தலீவரா இருந்தாத்தானே வெளியிலயும் நல்ல தலீவரா சாதிக்க முடியும்?
   நீங்க கலக்குங்க தலீவரே! ;)

   ( ந்தாப்பா மேஸ்திரி... அந்தப் பதுங்குழி சைஸை கொஞ்சம் அகலப் படுத்துப்பா..) :P

   Delete
 47. உலகின் நகரங்கள் குறிப்பாக சுற்றுலா தல நகரங்களுக்கே உரிய பொதுவான குணம் இதுவே என கொஞ்சம் அதிக விலை கொடுத்தே கற்றேன் சார்.. Public Transport தான் "அவர்களின்" அலுவலகம். சில நகரங்களில் police அவர்களின் பங்குதாரர் என்றும் கேள்வி..

  ReplyDelete
 48. சார், மிகவும் வருந்துகிறேன். உங்கள் அனுபவம் வெளிநாடு செல்லும் அனைவருக்குமே ஒரு பாடம். இருந்தாலும் உங்களது, "பாஸ்போர்ட்டை தொலைத்த பேமானி்கள் சங்கம்" hilarious sir. Meanwhile, சதுரங்கத்தில் ஒரு சிப்பாய் ஒரே மூச்சில் படித்து விட்டேன். சூப்பர் சார், ஒரு ஐரோப்பிய சுற்றுபயண அனுபவம். பக்கம் 92இல் முழுபக்க ஓவியம் அபாரம். முழுநீள ஆங்கில படம் பார்த்த அனுபவம் !

  ReplyDelete
  Replies
  1. saravanan srinivasan : //பக்கம் 92இல் முழுபக்க ஓவியம் அபாரம். முழுநீள ஆங்கில படம் பார்த்த அனுபவம் !//

   +111

   Delete
 49. எடிட்டர் சார்,

  தங்களின் இந்த பயணியின் டைரிக் குறிப்பு பதிவை படிக்கும்போது வருத்தமே மேலோங்குகிறது.
  இந்த ரோமானிய நாட்டின் பிக் பாக்கட்களின் தொல்லை பாரிஸ் நகரிலும் அதிகம். சென்ற ஜனவரியில் எனக்கும் இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது. பாரிஸில் இருக்கும் Porte de Saint Ouen ஏரியாவில் வாரச் சந்தை மிகப் பிரபலம். அங்கு ஒரு கடையில் சில பொருட்களை வாங்கிவிட்டு என்னுடைய பர்ஸை, தோளில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு பையில் வைத்து விட்டு ஜிப்பை மூட மறந்ததுதான் நான் செய்த தவறு. இது மாதிரி கவனக் குறைவு பார்ட்டிகளை சுலபமாக டார்கெட் செய்து காரியத்தை கச்சிதமாக முடிப்பது அவர்களுக்கு கைவந்த கலை. அப்புறம் என்ன, என் பர்சில் இருந்த ட்ரிவிங் லைசென்ஸ், Identity Card, All கிரெடிட் கார்ட்ஸ், மற்றும் சில நூறு euros எல்லாம் ஒரே நிமிடத்தில் போயே போச்சு. என்ன ஒன்று, எல்லா பேப்பர்களையும், எந்த ஆபீஸ்சுக்கும் நேரடியாக செல்லாமல் ஆன்லைன் மூலமாகவே இரண்டு வாரத்தில் கிடைக்கப் பெற்றேன். அதிலிருந்து இன்று வரை, நோ தோள் பை அண்ட் no பர்ஸ் :-))

  ReplyDelete
  Replies
  1. @ Radja

   எனக்கென்னவோ இதுவும் அந்தப் பாட்டிம்மாக்களின் வேலையாத்தான் இருக்கும்னு தோனறது! கையிலே காமிக்ஸோட, ஒருமாதிரியா சுத்திக்கிட்டிருக்கற அப்பாவிகளைத்தான் அந்தக் பாட்டிமாக்கள் குறிவைக்கறாப்ல இருக்கு. பேசாம நீங்க ஒரு டேஞ்சர் டயபாலிக்கா மாறி, பாரீஸ்ல இருக்கும் அத்தனை பாட்டிம்மாக்களையும் போட்டுத் தள்ளிடுங்களேன்? ;)

   Delete
  2. செயலரே.!

   டேஞ்ஜர் டயபாலிக் அந்த கிழவியை போட்டுத்தள்ளியதற்கு நமது வாசகர்கள் அவ்வளவு விசனப்பட்டார்கள்.!


   இத்தாலி கிழவிகள் படும் மோசம்போல......


   மாடஸ்டி கதையான மிதங்கும் மண்டலத்தில் " கெட்ட சுகியாக " வரும் போதைமஃபியா கிழவிகள் போல் உலகத்தில் மோசமான கிழவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.!


   Delete
  3. Radja : "கிழவிகள் ஜாக்கிரதை" என்று ஒரு போர்ட் போடணும் போல ஐரோப்பாவுக்கு !!

   Delete
 50. சார் , உங்கள் பாஸ்போர்ட் திருடு போனது மிகவும் வருத்தத்துக்குரியது சார் . இங்கும் பிரான்ஸ் இல் மெட்ரோ தொடரூந்தில் நிறைய திருட்டு சம்பவங்கள் உள்ளன . இந்த தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்து நீங்கள் மீண்டு வந்தது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது . இந்த சூழ்நிலையில் ஜூனியர் எடுத்த முடிவு பாராட்டுக்குரியது . வாழ்த்துக்கள் விக்ரம் . ஜூனியர் எடிட்டர் பணிகளை தனியே சமாளிக்க தொடங்கியது மகிழ்ச்சியை தருகிறது . அந்த சங்கடமான சூழ்நிலையில் உதவிக்கு எனது பெயரும் உங்கள் ஞாபகத்துக்கு வந்ததுக்கு , கோடி நன்றிகள் சார் . அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் - பெரும் பேறு பெற்றவனாகியிருப்பேன். ஜஸ்ட் மிஸ் . "கவரிமான்களின் கதை " னுடைய அட்டே படம் அருமை .

  ReplyDelete
  Replies
  1. Thiruchelvam Prapananth : அட..உங்களை இங்குள்ளோர் அனைவருமே நம் குடும்பத்தில் ஒரு முக்கிய அங்கமாகத் தானே பார்த்து வருகின்றனர் - நான் மட்டும் விதிவிலக்காகி விடுவேனா சார் ? "பாரிஸ்" எனும் போதே நினைவுக்கு வரும் பெயர்களுள் உங்களதும் இல்லாது போகுமா ?

   தொலைவில் இருந்தாலும், அருகில் தான் சார் உள்ளீர்கள் !! எங்கள் எல்லோருக்குமே !!

   Delete
  2. மிக்க நன்றிகள் சார் .

   Delete
 51. அனுபவமே சிறந்த பாடம் சார்.....
  அனைத்தும் கடந்து போகும்.....

  ReplyDelete
 52. ஒரு பயங்கரமான பயணம் தான் !

  ReplyDelete
 53. //அங்கே திறக்கா வாய் இங்கே அலிபாபா குகையின் வாயிலைப் போலத் திறந்துவிட்டுள்ளது !! இன்னமும் யோசிக்கிறேன் - ஏனென்று !! //
  எங்கையும் சொல்லாம இங்கேவந்து பிறந்த குழந்தையின் அறிவிப்பிலிருந்து கடைதிறப்புவரை சொல்லுபவர்கள்.... அதே உணர்வுதான் எடிட்.

  கெட்டதிலும் நல்லது ஜூனியர் தனியவர்தனம் செய்ய வாய்ப்பு. ஜூனியருக்கு இந்த experience நல்லதே . உங்கள் ஐரோப்பிய விஜயத்தில் ஏதாவது புதுக்கதை புடிசீங்களா...... ?

  ReplyDelete
  Replies
  1. Satishkumar S : "அடிச்சும் கூடக் கேட்பாங்க...ஆனா இன்னிக்கு ஒரு "புதிய வரவுக்கு" காண்டிராக்ட் கையெழுத்தாகி இருப்பதைச் சொல்லவே சொல்லாதே !!" (மேரா மைண்ட் வாய்ஸ் !)

   Delete
  2. :) looking forward for another supper duper six soon :) :)

   Delete
 54. சார்... இந்த special சோகத்தை மரக்க ஓர் special புக் ....

  :`)

  ReplyDelete
  Replies
  1. Gokul C : இது தான்ரணகளத்திலும் ஒரு ஒரிஜினல் கிளுகிளுப்பு !!

   Delete
 55. அந்த ஊர்ல பறக்கும் கம்பளம் எதாவது கிடச்சா (கிடச்சா ).....வாங்கி .....
  ஹி ஹி
  அது...ல வந்திருக்கலாம்ல ......????ஹி ஹி


  எனி வே
  அனுபவம் புதுமை ..........

  ReplyDelete
  Replies
  1. ஓர் பயங்கர பயணம் .....

   இதன் நினைவாக வெளியிடவும் .......

   சூட்டோட சூடா நாமளும் டீ ஆத்திக்கணும்

   Delete
  2. மதியில்லா மந்திாியாரே,

   நம்ம காா்ட்டூன் டீமுக்கு ஒரு ஜே போடுங்க.

   Delete
 56. எடிட்டர் சார்,

  நீங்க எதுக்கும் டெய்லி ஒருதபா இங்ஙனக்குள்ள வந்து ஒரு 'உள்ளேன் ஐயா'வாச்சும் போட்டுட்டுப் போய்டுங்க சார். ஒரு ரெண்டுமூனு நாள் நீங்க சைலண்டா இருந்தாக்கூட எந்த நாட்டுக்குப் போய் எந்தப் பாட்டிம்மாகிட்ட பாஸ்போர்ட்டே பறிகொடுத்திட்டிருக்கீங்களோன்னு பயந்து பயந்து வருது!

  ReplyDelete
 57. சில விஷயங்கள் கதைகளில் தான் சுலபம் என்று தெரிகிறது நடைமுறை வாழ்க்கையில் கஷ்டம் மட்டுமே கை மேல் கண்ட பலன்

  ReplyDelete
 58. @ ALL : "பா.தொ.பே.ச." உறுப்பினனின் அவஸ்தையைக் கண்டு ரொம்பவே ஆடிப் போயுள்ளனர் நண்பர்கள் என்பது நேற்றும், இன்றும் ஆறுதல் சொல்லும்விதமான மின்னஞ்சல்களிலும், வாட்சப் செய்திகளிலும் புரிந்து கொள்ளமுடிந்தது !!! நாட்களின் ஓட்டம் எத்தகைய பாரத்தையும் கரைத்துவிடும் என்பதையும், கடப்பாரையையே டிபன் ஆக்கினாலும் கூட , ஒரு கடுங்காப்பியைச் சேர்த்து அடித்தால் ,மனித மனமானது விழுங்கி ஏப்பம் போட்டுவிடும் என்பதும் யதார்த்தம் தானன்றோ ?

  இதோ - ஜூன் மாத இதழ்களின் பணிகளுக்குள் முழுவீச்சில் புகுந்தான பின்னே, அந்த "முடியா ஞாயிறு" ஒரு தூரத்துக் கனவு போல தோன்றத் தொடங்கி விட்டது ! ஆண்டவனும், நீங்களும் உடனிருக்க, ரெண்டு கிழவிகளால் நமக்கு முட்டுக்கட்டை போடத்தான் முடியுமா ?

  Thanks all !!!

  ReplyDelete
 59. இன்று பொக்கிஷம் லேட்டாக கையில் கிடைத்து விட்டது. நன்றிகள் சார் ."முடியாத இரவு " நிறைய எதிர்பார்ப்பை கிளறி விட்டுள்ளதால் , அதனுள் முதலில் புக போகிறேன் .

  ReplyDelete
 60. இததான் அனுபவிச்சி எழுதுறது என்பதா?! :-)

  வெளிநாடு பயனங்களில் இதுபோன்ற சூழ்நிலைகளில், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பமான நேரங்களில் உங்கள் அனுபவத்தை கூறும் இந்த பதிவு ஒரு அருமையான வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் இது ஒரு ஸ்பெஷல் பதிவுதான் !

  ReplyDelete
 61. வெளிநாட்டு பயணங்களில் passport கையில் இருக்கும் போது public transport தவிர்ப்பது நலம் சார். Booking the taxi from Hotel/Airport will be relatively safer in unknown countries though it costs a bit more. தவிர்க்க முடியா நேரங்களில் நான் tight jeans ல் passport வைத்து திருடலை தவிர்க்க முயல்வேன். உங்களுடைய பதிவு இன்னும் எச்சரிக்கையா என்னை இருக்க வைக்கும்.
  By the way, டெக்ஸ் அட்டைப்படம் அதகளம்.

  ReplyDelete
 62. கில்லாடிக் கிழவிகள் ஐரோப்பா பற்றிய என் எண்ணத்தை தலைகீழாக மாற்றிவிட்டார்கள்.

  ReplyDelete
 63. Dear Vijayan,

  I am sorry to hear about the unfortunate incident. I hope you will recover quickly from the impact it has caused to you.

  "ஒரு முடியா இரவு" புத்தகத்தை நேற்று தான் படித்தேன்.
  வாவ்! அருமையான கதை.
  கடந்த சில வருடங்களாக நான் எல்லா புத்தகங்களையும் வாங்கினாலும், வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து புத்தகங்கள் மட்டுமே படிக்கிறேன்.

  ஆனால் இந்த புத்தகம் என் எண்ணத்தை மாற்றி விட்டது.
  இது போன்ற "ரசனையில் முதிந்தோர்க்கு" புத்தங்களை அதிகமாக எதிர்பார்க்கிறேன்!
  அப்புறம் இது போன்ற புத்தகங்களை படித்த பின்பு எதிர்பார்ப்பு அதிகம் ஆகி விட்டது.
  இனி மேல் என்னால் டெக்ஸ், டைகர் போன்ற புத்தகங்களை படிக்க முடியும் என்று தோன்றவில்லை.
  ஜூலையில் இருந்து மற்றும் ஒரு ஆறு புத்தகங்களை இந்த வரிசையில் வெளியிட வேண்டிக்கொள்கிறேன்.

  ReplyDelete
 64. ஜேம்ஸ்பாண்ட் பாணி காமிக்ஸ் கதை என்ன ஆச்சு சார் ?

  ReplyDelete
  Replies
  1. ரோஜர் மூரே செத்துட்டாரே....

   Delete
 65. டியர் எடிட்டர்

  ஓவர் பில்ட் அப் கொடுக்கப்பட்ட கதைகளில் ஒரு முடியா இரவு ஒன்று 80 N கருத்து. Just an average fare - இதைவிட சிறப்பான கதைகளை Magnum ஸ்பெஷல் மற்றும் இதர கருப்பு வெள்ளை வெளியீடுகள் (நமது) கொண்டிருந்ததது.

  Also ஒரு வெறியனின் தடத்தில் (என்ற) பனியில் ஒரு கண்ணாமூச்சி கதை நன்றாக இருந்தது - ஆனால் 96 பக்கம் - பிரிண்ட் சற்றே மங்கல் எனும்போது 50 ரூபாய் அதிக விலையே - 75 ரூ வழவழா கலர் காமிக்ஸோடு ஒப்பிடுகையில்.

  துரோகத்துக்கு முகமில்லை முற்றிலும் எல்லா தரப்பிலும் satisfactory Tex சாகசம்.

  ReplyDelete
  Replies
  1. ஓவர் பில்ட் அப் கொடுக்கப்பட்ட கதைகளில் ஒரு முடியா இரவு ஒன்று 80 N கருத்து. Just an average fare - இதைவிட சிறப்பான கதைகளை Magnum ஸ்பெஷல் மற்றும் இதர கருப்பு வெள்ளை வெளியீடுகள் (நமது) கொண்டிருந்ததது.///
   +111

   Delete
 66. Sir,

  Take Care,

  There are certain scenarios beyond our hands,

  How we handle those make us different.?

  Now Junior has hanholded, be tension free.

  ReplyDelete
 67. சார் சுவாரஸ்யம் கலந்து வழக்கம் போல இரசிக்க வைத்ததுடன் ...தந்தையும் ஒரு தாய்தான் என உணரச் செ்துள்ளீர்கள் ...விக்ரமும் தனது பொறுப்பை உணர்ந்து சரியாக செயல்பட்டதில் ...அதிர்ஷட தேவதை லார்கோவுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சொந்தம்தான் போலும்..சார் அந்த நீல வண்ண அட்டயில் டெக்ஸ் அள்ளுறார் .

  ReplyDelete
 68. என்னை பொறுத்தவரை ஒரு முடியா இரவு க்கு எந்த பில்டப்பும் இல்லாமல் தானே இருந்தது.... படித்து முடித்து பாராட்டிய பலரின் கருத்தே அதுவரை படிக்காதவர்களுக்கு "ஓவர் பில் டப் " ஆக தோன்றி விட்டதா ...:-)

  ReplyDelete
  Replies
  1. ஆனால் ராகவன் சாருக்கு முடியா இரவு கதை பிடிக்க வில்லை என்பது எனக்கு மிக பெரிய ஆச்சர்யமே...:-)

   Delete
  2. ஙே.!(எழத்தாளர் ராஜேஷ்குமார் அடுத்து தலைவர் உபயோகிக்கும் இந்த " ஙே " எழத்தை நானும் உபயோகப்படுத்துறேன்.!

   Delete
  3. ராஜேஷ் குமார் அல்ல ராஜேந்திரகுமார்.! வருஷம் 26 ஆனாலும் இந்த கொமாரு குழப்பம் இன்னு தீர்ந்தபாடில்லை.!

   Delete
 69. எல்லாரும் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் இறந்த துக்கத்துல மௌன விரதம் இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ரெண்டு குழந்தைகளுக்கு ஷ்கூல்பீஸ் கட்டிட்டு வந்ததிலேருந்து பீதியில வாயடைச்சு உக்காந்துருக்கோம். .! தெளிய கொஞ்சம் டைம் ஆகும் சாரே..!

   Delete
  2. வாங்க சார். இப்படி யாராச்சும் வந்தாதானே கொஞ்சம் பரபரப்பா இருக்கும்.அப்பத்தானே நாலஞ்சு பஞ்சாயத்து நடக்கும். ரெண்டுமூணு 'இங்கே க்ளிக்' கிடைக்கும். பத்துபதினஞ்சு +1,+2ல்லாம் கிடைக்கும்.நமக்கும் டைம் பாஸ் ஆகும்.

   Delete
  3. // ரெண்டு குழந்தைகளுக்கு ஷ்கூல்பீஸ் கட்டிட்டு வந்ததிலேருந்து பீதியில வாயடைச்சு உக்காந்துருக்கோம். .! தெளிய கொஞ்சம் டைம் ஆகும் சாரே..! //

   நீங்கதான் உங்க வீட்டுல குழந்தைன்னு சொன்னீங்க
   இப்ப ரெண்டு குழந்தைக்குன்னு சொல்லுறீங்களே

   (யோசிக்கும் படம் ஒன்று )

   Delete


 70. // கண்முன்னே ஒரு ஜோடி இறக்கைகள் மலர்ந்ததை பார்த்த அனுபவத்தை எனக்கு நானே நினைவூட்டிக் கொள்ளவேனும் இந்தப் பதிவைத் தேடிப் படிப்பேன் ! So அந்தமட்டிற்கு இந்தப் பதிவு எனக்கே ஒரு டைரிக் குறிப்பாகிடட்டுமே ? //

  முற்றிலும் உண்மை சார், ஒருவேளை இத்தருணத்தை வெளிக்கொணரத்தான் இப்படி நடந்திருக்குமோ
  எல்லாம் நன்மைக்கே

  மறுபடியும் இதுபோல நடவாமலிருக்க எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்கட்டும் சார் _/\_
  .

  ReplyDelete
 71. இன்று எடிட்டர் எனக்கு பிடிக்காத அல்லது ஒவ்வாத விஷயங்கள் செயல்படுத்தும்போது , எதிர்ப்புகளை இங்கே , அல்லது கடிதம் ,இமெயில் அல்லது புத்தக கண்காட்சியில் நேரிலோ புலம்பி தள்ளிவிடுகிறேன்.!


  ஆனால் ,


  நான் பள்ளி பருவத்தில் ....


  காமிக்ஸ் முதாலாளி,கல்லூரியில் ஜாலியாக படித்துக்கொண்டிருந்த என் மூத்த அண்ணன் வயதுடைய ஒரு சிறுவயது இளைஞர் என்பதை அறியா பருவத்தில்..........

  முகம் தெரியாத ஆசிரியரை திட்டி புலம்பி சுவற்றை பிராண்டிய சம்பவங்கள்.!


  1)அதிரடிபடைத் தலைவரை கொன்றுவிட்டு சாகஸ தலைவியை களம் இறக்கி விட்டபோது.!

  2) முதன்முதலில் ஐந்து ரூபாயில் (அப்போது அந்த வயதில் மிகப்பெரிய தொகை) கோடைமலர் பாதி புத்தகத்தின் பக்கங்கள் இல்லை. அது ஒரே பக்கங்கள் டபுலாக இருந்தது.ஸ்பைடரின் க்ளைமாக்ஸ் ஆர்ச்சி கதையின் ஆரம்பங்கள் இல்லாமல் இருந்தது.இரண்டு மூன்ற நாட்கள் பாஸ்போட் தொலைத்த எடிட்டர் போன்று மனது ஆற்றமையாக இருந்தது.! திரும்ப ஒரு புத்தகம் வாங்கினேன் அதுவும் அதேபோல்தான் இருந்து.காமிக்ஸ் முதலாளியை மனதில் கண்டபடி வசைபாடினேன்.!

  பிறகு காமிக்ஸ் சிவகாசியில் இருந்து வெளிவருகிறது மற்ற பத்திரிகை போன்று சென்னையில் இருந்து வருவது இல்லை என்றும்.,காமிக்ஸ் ரசிகர் ஒருவரது தனிப்பட்ட ஆர்வத்தினால் ,365 நாட்கள் தொடர்ந்து தியேட்டரில் ஓடிய பவர் ஸ்டார் அவர்களின் ரித்திகா படம் போல் ஓட்டப்படுகிறது.!நஷ்டத்தில் இயங்குகிறது என்று தெரிந்த வுடன்.


  கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டேன்.!

  ஆனாலும்.....


  தீபாவளி மலராக வெளிவந்த இரவே இருளே கொல்லாதே வெளிவந்தபோது மறுபடியும் எரிமலையாய் குமுறிவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. //தீபாவளி மலராக வெளிவந்த இரவே இருளே கொல்லாதே வெளிவந்தபோது மறுபடியும் எரிமலையாய் குமுறிவிட்டேன்.//

   அப்போ - புத்தம் கிடைக்க தாமதமானதால், இங்கே காரசாரமாக விவாதம் நடந்தபோது ஒதுங்கியிருக்க முடிவெடுத்து பார்வையாளனாக இருந்தேன். இவ்வளவு நாளாகிவிட்டதால் இப்போ கேட்கலாம் என நினைக்கிறேன்... ஏன் சார்? அண்மைய வருடங்களில் திரும்பத் திரும்ப வாசிக்கத்தூண்டிய கதைகளில் ஒன்றாச்சே...

   Delete
 72. மாடஸ்டி கதையான பழிவாங்கும் புயல் கதையை மறுபதிப்பாக வெளியிடும் திட்டம் கடந்த ஜுன் மாதம் அறிவித்து ஒரு வருடங்கள் ஓடிவிட்டது.உண்மையில் ஆசிரியரின் தேர்வு அருமையானது.! மாடஸ்டியின் இளமை கதை பழிவாங்கும் புயல் கதையுடன் சேர்ந்து வந்ததால் கதையின் வீரியம் பலமடங்கு கூடியது என்று சொன்னால் மிகையாகாது.!

  அழகான ஓவியங்கள்,அருமையான கதை,தெளிவான நீரோட்டம் போல் கதையோட்டம் ,கதையின் சுவை மாறாத அருமையான மொழிபெயர்ப்பு ,ஆக்ஷன் ,நடபு,தியாகம், உருக்கம் என்று சமச்சீரான கலவையுடன் சாமுத்திரிகா லட்சனங்கள் பொருந்திய அட்டகாசமான கதையிது.!

  மாடஸ்டியின் அறிமுகம் அதாவது இளமைகால கதை.!


  அகதிகள் முகாமில் தாய்தந்தை இல்லாமல், தன் பெயர் கூட என்னவென்று தெரியாத பன்னிரண்டு வயதி சிறுமியான மாடஸ்டி அகதிகள் முகாமில் இருந்து தப்பி வெளியே வருகிறாள். உணவுக்காக கடினமாக வேலை செய்கிறாள்.வேலை கிடைக்காத போது உணவுக்காக பிச்சை எடுக்கின்றாள்.பசிபட்னி வறுமை தாண்டவமாடும் இடத்தில் ஒரு வயதானவர் ஓருவரை திருடன் ஒருவன் அற்ப சிறிதளவு உணவிற்காக தாக்குகின்றான் இதைகண்டு ஆவேசமடையும் அச்சிறுமி கத்தியுடன் பாய்ந்து திருடனை விரட்டி அந்த முதியவரை காப்பாற்றுகின்றார்..அவர் ஒரு புரபஸர் அவர்தான் மாடஸ்டிக்கு ஓய்வு வேளைகளில் பாடம் கற்பிக்கின்றார்.மாடஸ்டி புத்தகங்களை திருடிக்கொண்டு புரபஸரிடம் பாடம் கற்க்கின்றாள்.படுஷார்ப்பான மாடஸ்டியின் கற்கும் திறனை கண்டு ஆச்சர்யம் அடைகிறார். இந்த உறவு தொடர்கிறது.ஒரு நாள் அந்த புரபஸர் இறந்துவிடுகிறார்.வாழ்க்கையில் முதன்முதலில் மாடஸ்டி கதறி அழுகின்றாள்.! பின் சூதாட்ட விடுதியில் பனிப்பெண்ணாக வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்.பின் சமூக விரோத கூட்டத்தில் சேர்ந்து கொள்ளை அடிக்கின்றார்.பின் அக்கூட்டத்தின் தலைவர் இறந்துவிடவே அவர் அக்கூட்டத்தின் தலைமை பொறுப்பை எடுக்கின்றார்.!கார்வின் சட்டவிரோதமாக நடைபெரும் குத்து சண்டையில் பங்கேற்றதால் சிறையில் அடைக்கப்படுகிறார்.அவரை மாடஸ்டி பிரதிபலன் எதிர்பார்க்காமல் காப்பாற்றுகின்றார்.இதனால் அவருக்கு மாடஸ்டி இளவரசியாகவே தோன்றுகிறார்.! பின்பு மாடஸ்டியிடமே வேலையில் சேருகிறார்.!காலப்போக்கில் சமூக விரோத செயல்கள் மாடஸ்டிக்கு வெறுப்பூட்டவே தன் நெட்வெர்க் ஊழியர்களுக்கு பெரும் தொகையை பங்கு பிரித்துக்கொடுத்து கூட்டத்தை கலைத்துவிடுகிறார்.இவர்களுக்கு கிடைக்கும் பணத்தின் மூலம் பெரு கோடிஸ்வரர்களாக மாறுகின்றனர்.மனிததன்மையற்ற செயல்களை அறவே வெறுக்கும் இவர்களை இங்கிலாந்து உளவுபடைத்தலைவர் ஜெரால்டு மோப்பம் பிடித்து அஃபிஸியலாக செய்ய முடியாத வேலைகளை இவர்களிடம் ஒப்படைக்கின்றார்.இவர்களும்ஊதியம் இல்லாமல் வேலைபார்க்கின்றனர்.மாடஸ்டி கார்வின் இருவரும் இணைந்தே செயல்படுகின்றனர்.ஒருவர் காயமடைந்துமுடியாமல் போனால் மற்றவர் கவனித்துக்கொள்வது என்ற வித்தியாசமான் நட்பு தொடர்கிறது.!!

  ReplyDelete
  Replies
  1. பழிவாங்கும் புயல்
   ##################


   நமது காமிக்ஸ் நண்பர் பெருமாள் கூறியது போன்று மாடஸ்டிகதைகளின் சிறப்பு அம்சமே அனைத்து கதை மாந்தர்களுக்கு சரிசமமான முக்கியத்துவம் கொடுப்பதே என்று கூறுவார். இந்த கதைக்கு 100% அவர்கூறியது பொருந்தும்.!

   நான் சிறுவயதாக இருக்கும்போது என் அண்ணன் நண்பர்கள் கமல் நடித்த படமான் மூன்றாம் பிறையில் ,ஸ்ரீதேவி படம் முழுக்க அருமையாக நடித்து இருப்பார். ஆனால் கடைசி ஒரே சீனில் கமல் அட்டகாசமாக நடித்து ஸ்ரீதேவியை நடிப்பில் முந்திவிட்டார் என்றுபெருமை அடிப்பார்கள்.


   அதுபோலத்தான் கழுகுமலைக்கோட்டையும் கதைமுழக்க மாடஸ்டி அசத்தி இருந்தாலும் மலையில் இருந்து இறங்கும் ஒரே சீனில் நெஞ்சை தொட்டுவிடுவார்.அதைப்போலவே தான் பழிவாங்கும் புயலும்.

   மாடஸ்டி இறந்துவிட்டார் என நம்பியதும் மனுஷன் கொலைவெறி தாண்டவம் ஆடிவிடுவார். நமக்கோ சீட்டின் நுனியில் உட்கார்ந்து விடுவோம்.!

   கதை சுருக்கம்.!

   Delete
  2. அமெரிக்கா கனடா இங்கிலாந்து நாடுகளின் உளவுத்துறை உயர்மட்ட அதிகாரிகள் சீரியஸாக விவாதம் செய்து கொண்டு இருப்பதாக கதை ஆரமிக்கிறது.!

   அதாவது உளவுத்துறையின் அதிமுக்கியமான ரகசியம் ஒரு நம்பிக்கையான அதிகாரி மட்டுமே தெரிந்த ரகசியம் எதிரிநாட்டுக்கு தெரிந்தது எப்படி.???

   பலவருடங்கள் பல கோடி செலவு செய்து கண்டுபிடிக்கப்பட்ட பார்மூலாவை எதிரி கம்பெனி வெளியிட்டு கொள்ளை இலாபம் சம்பாதிக்கிறது அது எப்படி.????

   இவ் ரகசியங்கள் மிகமிக நம்பிக்கை உடைய அதிகாரிகளிடம் இருந்து அவர்களிடமே கசிந்துள்ளது அது எப்படி.??????
   இன்னும் பல இரகசியங்கள் களவாடப்பட்டுள்ளது இதனால் நாட்டுக்கு இழப்பு, மற்றும் பலகோடி இழப்பு.......   எல்லாவற்றிற்குமே ஒரே ஒரு ஒற்றுமை அனைவருமே வீனஸ் என்ற மருத்துவமனையில் மனநல சிகிச்சை மேற்கொண்டவர்கள் என்ற உண்மை மட்டும்தான் தெரிகிறது.!!!

   அப்போது ஒரு உளவுத்துறை அதிகாரி... கனடா நாட்டு எல்லையோரத்தில் இருக்கும் வீனஸ் மருத்துவமனை கேப்ரியலுக்கு சொந்தமானது என்கிறார்.


   உடனே அத்தனை உளவுத்துறை உயர் அதிகாரிகளும்

   கேப்ரியலா??????

   என்று கோரசாக பீதியுடன் அலறுகின்றனர்.!


   யார் அந்த கேப்ரியல்.??????

   அவன் யார்.?


   எப்படி இருப்பான்.?

   மிகப்பெரிய கொள்ளைகள் மோசடி செய்திருந்தாலும் அவனை யாருமே பார்த்தது கிடையாது.!

   அவனைப்பற்றிய பதிவேடுகள் யாரிடமும் இல்லை.!

   ஆனால் அவன் பெயரைக்கேட்டால் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி போகிறார்கள்.!!!


   தொடர்ச்சியாக.........

   Delete
  3. ஜெரால்டு அவர்கள் கேப்ரியல் என்ற நபர் உண்மையில் ஒருவன்உள்ளாரா ? என்று மாடஸ்டியிடம் கேட்கிறார்.அதற்கு மாடஸ்டி,தான் கேப்ரியலை நேரில் சந்தித்து உள்ளதாகவும்.பல வருடங்களுக்கு முன் தான் தலைமையில் ஒரு கொள்ளையை நடத்த முயன்றபோது அதே இடத்தை கேப்ரியல் கும்பலும் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருக்கும் வேளையில்,கேப்ரியல் மாடஸ்டியிடம் பெரிய தொகை ஒன்றை கொடுத்து ஒதுங்கிக்கொள்ளுமாறு எச்சரித்தை தொடர்ந்து மாடஸ்டி அந்த கொகையினை பெற்றுக்கொண்டு விலகிக்கொண்டதாகவும்.அதன்பின் நான் அவனைப்பற்றி கேள்படவில்லை என்றும் இதைத்தவிர கேப்ரியலை பற்றிஏதுவும் தெரியாது என்று கூறுகிறார்.அதன்பின் ஜெரால்டு அவர்களின் வேண்டுகோளை ஏற்று வீனஸ் மருத்துவமனையில் மாற்று பெயரில் அங்கு நடக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க செல்கிறார்.!   அதே சமயம் கோடிஸ்வரர் ஒருவரது செல்ல மகளான மர்லின் என்ற பெண்ணோடு விடுமுறையை கழித்துக்கொண்டிருக்சும் கார்வின் தன் பெண்தோழிக்கு தெரியாமல் உளவுத்துறை நண்பருடன் கேப்ரியலை கண்காணிக்கின்றனர்.!

   லெட்ஜர் என்ற பெயருடன் பணக்கார ஜாம் வியாபாரி என்ற போர்வையில் மாடஸ்டி சிகிக்சைக்காக வீனஸ் மருத்துவமனையில் நுழைகிறார்.........

   Delete
  4. மாடஸ்டி மேல் ஏற்பட்ட ஈர்ப்பினை தங்களின் எழுத்துக்களில் உணரமுடிகிறது. இதைப் படிக்கும்போது 'பழி வாங்கும் புயல்'ஐ வாசிக்கும் ஆவல் அதிகமாகிறது.
   ஆசிரியர் மனசு வைக்க வேண்டும்.

   Delete
  5. மாடஸ்டி வீனஸ் மருத்தவமனையில் நுழையும் வேளையில் ,கார்வின் கேப்ரியலை உள்ளூர் உளவாளியுடன் தூரத்தில் பைனாகுலர் மூலம் கண்சாணிக்கின்றனர்.கேப்ரியல் தன் உயர்மட்ட (அடியாட்கள்) நிர்வாகிகளுடன் ஏரிக்கரை பங்களாவில் தங்கி வீனஸ் மருத்துவமனையை வருடாந்திர ஆய்வு செய்கிறார்.!(செய்வது மொள்ளமாறி வேலையாக இருந்தாலும் இன்ஸ்பெக்ஸன் ப்க்காவாக செய்கிறார்.)


   வீனஸ் மருத்துவமனையின் சீப் டாக்டர் வோர்லே வழக்கமான வருடந்திர ஆய்வு என்றபோதும் வியர்த்து விறுவிறுக்கின்றார்.!


   கேப்ரியல் தன் அடியாட்கள் யாரும் இல்லாமல் தனியாக தனது ஊனமுற்ற காலுடன் ஊன்றுகோல் உதவியுன் மெல்ல நடந்து சீப் டாக்டரிடம் இங்கு நடக்கும் விஷயஙளை வளவளலென்று பேசாமல் சுருக்கமாக விளக்குமாறு கட்டளைஇடுகிறார்.


   சீப் டாக்டர் ஒவ்வொரு பகுதியாக சுற்றிகாட்டி விளக்குகிறார்.அதாவது பரந்து விரிந்து சகல வசதிகளும் கொண்ட பிரமாண்டமான மருத்துவமனை பணக்காரர்களின் சொர்க்கபூமியாக திகழ்கிறது.!ஆனால் சொர்க்கம் 8 பிரிவுமட்டும் சீப் டாக்டர் மற்றும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்து ரகசியமாக செயல்படுகிறது இதன் மூலம் ஹிப்னாட்டிஸம் மூலம் அரை மயக்க நிலையில் நோயாளிக்கே தெரியாமல் அந்தரங் விஷயங்களை கேட்டு அதை டேப்பில் பதியவிட்டு அதை உங்களிடம் (கேப்ரியல்) கொடுப்பதாகவும் அதை வைத்து கோடிகோடியாக நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றுகூறி ஒரு பேஷண்டை வைத்து சிகிச்சை என்றபெயரில் ரகசியங்களை கறப்பதை டெமோ செய்துகாட்டுகிறார்.!   அதே வேளையில் மாடஸ்டிக்கும் இந்த சிகிச்சை நடைபெறுகிறது.ஆனால் மாடஸ்டி உள்ளுணர்வு அதிக விழிப்புணர்வுடன் இருப்பதால் ஹிப்னாட்டிஸத்தில் எதையும் கூற மறுக்கிறார்.இதைக்கண்டு அதிர்ச்சியில் உறைகின்றனர்.ஆனால் உண்மையான பெயரை மட்டும் உளறிவிடுகிறார். டாக்டர் அலறிஅடித்து கேப்ரியலிடம் விஷயத்தை கூறுகிறார்.ஆனால் கேப்ரியலோ அலட்டிக்கொள்ளாமல் மாடஸ்டி தாங்கி இருக்கும் முகவர்யை மட்டும் கொடுத்துவிட்டு உன் வேலையை கவனி என்கிறார்.!

   அடுத்த சில மணிநேரத்தில் கேப்ரியல் அடியாட்கள் அவரை சந்தித்து ,கேப்ரியல் உங்களை காலை பத்து மணிக்கு சந்திக்க அழைப்புவிடுகிறார்.கேப்ரியலை மாடஸ்டி நேரடியாக சந்திக்கும் போது.இந்த விவகாரத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுகிறான்.! 24 மணிநேரத்தில் ஊரை விட்டு கிளம்பிடச்சொல்ல அவகாசம் கொடுக்கிறார்.!

   Delete
  6. கேப்ரியலிடம் பொய் சொல்லிவிட்டு அன்றிரவே வீனஸ் மருத்துவமனையில் மாடஸ்டியும் கார்வினும் நுழைகின்றனர்.அதே நேரத்தில் எச்சரிக்கை அலாரம் மூலம் சீப் டாக்டர் இரகசிய லாக்கரை திறந்து திறக்க முயற்சியை அறிந்து.,கேப்ரியலிடம் நள்ளிரவிர் எழப்பி விஷயத்தை தெரியப்படுத்துகிறார்.!


   தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கேப்ரியல் ,மாடஸ்டியையும் கார்வினையும் கொல்லுமாறு தன் கூட்டத்திற்கு உத்தரவு இடுகிறான்.முரடர்கள் கூட்டம் நள்ளிரவில் வீனஸ் ஹாஸ்பிடலில் சிக்கி இருக்கும் மாடஸ்டி கார்வினை முற்றுகை இடுகிறது.!


   அதே சமயம் கேப்ரியலின் தில்லுமுல்லுகள் அடங்கிய மைக்ரோ பிலிம்களை மாடஸ்டி லாக்கரை உடைத்து எடுத்துவிடுகிறார்கள்.தப்ப முற்படும்போது அதிகப்படியான முரடர்களை சமாளிப்பது சிரமம் என்பதை உணர்கிறார்.உடனே அவர்கார்வினிடம் ,நம்மில் ஒருவர் உயிரோடு தப்பி மைக்ரோ பிலிமை ஜெரால்டு அவர்களிடம் ஒப்படைப்பது அவசியம் என்று மைக்ரோ பிலிமமுடன் கார்வினை தப்பி ஓடுமாறு கூறுகிறார்.ஆனால் கார்வினோ நான் இவர்களை சமாளிக்கின்றேன்.நீ தப்பி ஒடிவிடு என்கிறார்.! ஆனால் மாடஸ்டியோ அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து தப்பி விடுகிறேன் என்று கார்வினை மைக்ரோ பிலிமுடன் தப்ப வைக்கிறார்.இதை லேட்டாக உணரும் முரடர்களுக்கு சீப்பானா ரிக்கோ மாடஸ்டியை உயிரோடு பிடிக்குமாறு தன் ஆட்களுக்கு உத்தரவு இடுகிறான்.


   மாடஸ்டியோ மெல்ல நழவி சாலைக்கு வருகிறார்.அங்கே காரின் இஞ்சினை ஓட விட்டு காரை கிளப்ப தயார் நிலையில் கேப்ரியலின் ஆட்களை ஒருனை பார்க்கிறார்.அவனை காரை விட்டு வெளியே வீழ்த்த ,மாடஸ்டி தன் ஸ்வெட்டரை
   ##################

   கழற்றி இஞ்சின் புகைகுழாயை ஸ்வெட்டர் மூலம் அழுத்தி பிடித்து இஞ்சின் இயக்கத்தை நிறுத்துகிறார்.!இஞ்சின் இயக்கம் நின்றதால் காரை விட்டு இறங்கு டிரைவரை ஒரே உதையில் வீழ்த்துகிறார்.அதே சமயம் இன்னொரு முரடன் மாடஸ்டியை துப்பாக்கி மூலம் சுட முயற்சிசெய்கிறார்.உடனே தன் துப்பாக்கியால் அவது தோளில் சுட்டு காயப்படுத்தி காரில் ஏறி தப்பி ஓடுகிறார்.துப்பாக்கி சத்தம் கேட்டு அனைத்து முரடர்களும் ஒருங்கினைந்து காரில் மாடஸ்டியை விரட்டுகிறார்.   மாடஸ்டி காரை வேகமாய் விரட்டுகிறார் .முரடர்கள் கூட்டமும் விடாமல் விரட்டுகிறது.முரடர்களிடம் இருந்து தப்ப கனடா அமெரிக்கா எல்லையை தாண்டி சென்று எல்லையோர பாதுகாப்பு படையினரிடம் சிக்கிக் கொள்கிறார்.பின் தொடர்ந்த முரடர்கள் பாதுகாப்புபடையினருக்கு பயந்து பின்வாங்கிவிடுகின்றனர்.!   இங்கே நடந்தவைகளை கேப்ரியலிடம் தெரிவிக்கின்றனர்.அதைக்கேட்டு கேப்ரியல் சீறுகிறார்.மைக்ரோ பிலிமுடன் வராவிட்டால் உன்னை உயிரோடு விடமாட்டேன் என்று அடியாட்களை மிரட்டுகிறார்.அதே சமயம் மாடஸ்டியின் ஸ்வெட்டரை தன் காயத்திற்கு கட்டுபோட்டபடி அடியாட்களின் ஒருவன் வருகிறான்.அதை பார்த்ததும் அவனது மனதில் ஒரு திட்டம் உருவாகிறது.அதை கேப்ரியலிடம் சொல்ல முற்படும்போது அதை காதில் வாங்காமல் வளவள என்று பேசாமல் காரியத்தை முடி என்று போனை துண்டிக்கின்றார்.!

   Delete
  7. ரிக்கோவின் திட்டம்,எல்லையோர காவலபடையினரிடம் சிக்கிய மாடஸ்டி விடுதலை ஆக இரண்டு மூன்று நாட்களாவது ஆகும் என்தையும் மாடஸ்டியின் ரத்தம் தேய்ந்த ஸ்வெட்டரையும் கொண்டு மாடஸ்டி யை கொன்றுவிட்டதாக கூறி கார்வினை நம்பவைத்தால் அவர் பழிவாங்க அவர்களை தேடிவருவார் கார்வினை பிடித்துவைத்து பணயக்கைதியாக வைத்து மைக்ரோ பிலிமை கைபற்றுவதே திட்டம்.!

   Delete
  8. மாடஸ்டி யை கொன்றுவிட்டதாக கூறி அவரதுரத்தம்தோய்ந்த ஸ்வெட்டரை கார்வின் தோழியான மர்லினிடம் ஒப்படைத்து செல்கிறது கேப்ரியலின் கூட்டம்.!

   மர்லினை காணவரும் கார்வினிடம் மாடஸ்டி கொல்லப்பட்டதாக கூறுகிறார்.!கார்வினோ மாடஸ்டியை அவ்வளவு எளிதில் கொல்ல முடியாது என்று உறுதியாக மறுக்கின்றார்.ஆனால் துப்பாக்கி குண்டு துளைத்த ரத்தம் தோய்ந்த மாடஸ்டியின் ஸ்வெட்டரை பார்த்தவுடன்.நிலைகுலைந்து வெறி கொண்டு ,பத்தடி தூரத்தில் இருக்கு யானையைகூட குறிவைத்து சுடத்தெரியாத கார்வின் ,துப்பாக்கி ,கத்திபோன்ற ஆயுதங்களுடன் சென்று ருத்திர தாண்டவம் ஆடிவிடுகிறார்.!இருந்தாலும் கேப்ரியல் மட்டுமே உயிருடன் தப்பி ஓடிவிடுகிறார்.கேப்ரியல் கும்பலுடன் மோதியதில் படுகாயம் அடையும் கார்வின் ஆஸ்பத்திரியில் குற்றுயிராய் கிடக்கிறார்.மாடஸ்டி உயிரோடு இருப்பதைக்கண்டு உற்ச்சாகம் அடைந்து மிகவேகமாக உடல்நலம் தேறுகிறார்.! மாடஸ்டி கூடவே இருந்து பணிவிடை செய்கிறார்.அத்துடன் கதை நிறைவடைகிறது.!!!

   Delete
  9. கேப்ரியல்
   ##########


   ஜேம்ஸ் பாண்ட் கதையில் வில்லன்களுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பார்கள் அதே போலவே இந்த கதையில் கேப்ரியலுக்கு நல்ல ரோல்.!


   உளவுத்துறை அதிகாரிகள் கேப்ரியல் பெயரை கேட்டவுடன் டென்ஷன் ஆவதும்.!

   மிகப்பெரிய மருத்துவமனை சீப் டாக்டர் கேப்ரியல் வருந்திர ஆய்வுக்கு வருகிறார் என்றவுடன் பயத்தில் வியர்த்து விறுவிறுப்பதும்.!


   எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மாடஸ்டி அடக்கி வாசிப்பதும்......


   கேப்ரியல் மீது அதிக எதிர்பார்ப்பை உருவாக்கிறது.


   ஆனால் அவரது தோற்றமோ, சொட்டை தலையுடன் வயதான தோற்றத்துடன் குட்டையாக,ஒரு கால் ஊனமுற்ற நிலையில் ஊன்றுகோள் உதவியுடன் தோன்றுவது ஏமாற்றத்தை தந்தாலும்......

   வேவ்லென்த் ஒருமித்த கருத்துகள் கொண்ட தன் மெய்காப்ளர்கள் உதவியாளன் சகிதமாக படைசூழ வருவது மிரள வைக்கிறது.!


   மாற்று பெயரில் தன் மருத்துவமனையில் வேவு பார்த்த மாடஸ்டியை தன் பங்களாவிற்கு வரவழைத்து சாப்பிட்டுக்கொண்டே உன் வேலையை என்னிடமே காண்பிக்கின்றாயா ? என்பதுபோல் மிரட்டுவதும்.,மாடஸ்டியை எதிர்பேச்சு பேசவிடாமல் ," உன்னை கொன்று தோட்டத்தில் புதைப்பதற்க்கும் உன்னை எச்சரித்து அனுப்புவதற்கும் அதிக வித்தியாசம் இல்லை" என்று உணர்ச்சிஅற்ற உறுதியான பார்வையில் மாடஸ்டியை எச்சரிப்படை நான் வெகுவாக ரசித்தேன்.!

   சட்டவிரோத செயல்கள் என்றாலும் மிக நேர்த்தியாக கம்பெனி நிர்வாகம் போல் மிக நேர்த்தியாக செயல்படுவதை புன்னகையுடன் ரசித்தேன்.!   தொடர்ச்சியாக........

   Delete
  10. ///மாடஸ்டி பிளைசி வெங்கடேஸ்வரன்.///

   இப்படிப் படிக்கும்போதுதான் உங்க பேரே ஒரு கெத்தா தெரியுது! ஏதோ முழுமையடைஞ்சா மாதிரி இருக்கு!

   Delete
  11. கேப்ரியல் தன் மெய்காப்பளர்களுடன் படைசுழ இருந்தாலும் தன் மருத்துவமனையை வருடந்திர ஆய்வு செய்ய தனியாகவே செல்கிறார் ஆறடிக்கும் மேல் உயரம் கொண்ட சீப் டாக்டர் ஐந்தரைடி உயரம் கொண்ட கேப்ரியல் ,தான் செய்யும் தில்லுமுல்லுகளை குத்திக்காட்டும் போது,முதலில் எச்சரிக்கிறார்.திரும்பவும் டாக்டர் வார்லே கேப்ரியலின் சட்டவிரோத பேச்சை எடுக்கும்போது,டாக்டர் வார்லேவின் கலுத்தில் தன் ஊன்று கோலை அழுத்தி பிடித்து." தேவையில்லாமல் என் விவகாரத்தில் மூக்கை நுழைத்தால்.....போகப்போவது உன் வேலை மட்டும்அல்ல ......புரிந்ததா என்று மிரட்டும்போது...


   அடக்கி ஆள ஊனமோ,தோற்றமோ முக்கியமில்லை,உறுதியான மனதும் ,அறிவும் போதும் என்பதற்கு கேப்ரியல் ஒரு உதாரணம்.!

   அவர் ஒரு சமூகவிரோதி இருந்தாலும்....

   எனக்கு கேப்ரியலின் ஆளுமை மிகவும் பிடிக்கும்.!!!

   Delete
 73. Venkatesan sir ,ஒரு கதையில் மாடஸ்டி & கார்வின் சிறிதளவு வுருவமாக மாற்றி விட்டதாக நம்ப வைக்க நாடக ம் நடதுவார்கலெய் அது என்ன கதை?

  ReplyDelete
  Replies
  1. அந்த கதையின் பெயர்,கார்வின் யாத்திரைகள்.! அது ஒரு குண்டு ஸ்பெஷல் இதழ்.என்னிடம் அந்த புத்தகம் இல்லை.

   Delete
 74. ஹலோ, மைக் டெஸ்டிங்
  123

  ReplyDelete
 75. எடிட்டரின் பதிவைக்காணோம்.? ஜுன் மாத இதழ்களைப்பற்றி தெரிந்துகொள்ள ஆவலுடன் உள்ளேன்.!!!

  ReplyDelete
 76. இந்தவாரக் கிசுகிசு:

  அந்நிய தேசத்துப் பாட்டீம்மாக்களிடம் பாஸ்போட்டைப் பரிகொடுத்த அந்த சிவகாசி வாத்தியார் 'பாட்டிம்மாஃபோபியா' வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறாராம்! இருபது வருடங்களாக வீட்டு வேலைக்கு வரும் பாட்டிம்மாவைப் பார்த்துக்கூட 'வீல் வீல்' என்று அலறுகிறாராம். இப்படியாப்பட்ட நிலையில் 'கறுப்புப் பாட்டியின் கதைகள் மறுபதிப்பாய் வேண்டும்' என்று கேட்டுவந்த வாசகர் கடுதாசி ஒன்றுக்கு இவர் அளித்த பதிலில் கலாமிட்டி ஜேனே காலில் விழுந்து கும்பிடும் அளவுக்கு வார்த்தைப் பிரயோகங்களாம்!
  மொழிபெயர்ப்புப் பணிகளின்போது 'நிற்பாட்டி', 'குளிப்பாட்டி' போன்ற வார்த்தைகளைக்கூட உபயோகிக்க மறுத்து அடம்பிடிக்குமளவுக்கு வியாதி முற்றிப்போயிருப்பதாக சிவகாசி அலுவலகமே பரபரப்பாய் பேசிக்கொள்கிறதாம்!

  ReplyDelete
 77. புதிய பதிவை சீக்கிரம் போடுங்க சார். தற்போது விருதுநகர் வாசம், திங்கள் மாலை வரை இங்கு தான் டெரா.

  ReplyDelete
 78. ஆங்! எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

  ReplyDelete
 79. உங்களின் பயணக் கட்டுரைகளின் நம்பர் ஒன் விசிறி நான் சார். சிங்கத்தின் சிறுவயதில் ஒவ்வொரு எபிசோடும் பத்து முறை படித்திருப்பேன். பல travelogueகள் செம மொக்கையாக இருக்கும். உங்களது எப்போதுமே விறுவிறுப்பு தான்.

  ReplyDelete