Powered By Blogger

Tuesday, May 02, 2017

ஒரு "முன்குறிப்பு" !!

நண்பர்களே,

முன்குறிப்பு :

வணக்கம். வழக்கமாய் இடைச்செருகல் செய்திகளை பின்குறிப்பாய் இணைத்திடுவேன் ; ஆனால் இதுவோ முத்தான சேதி எனும் போது - "முன்குறிப்பு மரியாதை" தந்திடுவதே பொருத்தமென்று நினைத்தேன் !! நேற்று காலை புதியதொரு நம்பரிலிருந்து ஸ்நேகமானதொரு குரலில் ஒரு அழைப்பு ! மறுமுனையில் இருந்தவர்   குமுதம் வார இதழின் "அரசு" என்பதைத் தெரிந்து கொண்ட போது இதயம் ஒரு நொடி துள்ளியது !! மக்களின் நாடித் துடிப்பில் ஒரு கையும், முத்திரை பதிக்கும் எழுத்துக்களை வாரித் தந்திடும் பேனாவை இன்னொரு கையிலும் பிடித்து நிற்கும் இந்த ஆற்றலாளர் "நல்லா இருக்கீங்களா ?" என்று நலம் விசாரித்த போது எனக்கு பெப்பே பெப்பே என்ற மட்டுக்கே பேச்சு வந்தது ! "நாளைய குமுதத்தைப்பாருங்களேன்..!" என்றவாறே அன்போடு பேசியதெல்லாம் ஒரு கனவு போலவே இருந்தது ! ஜெரெமியா புதுவரவினைப் பற்றிய அவரது பார்வைகளை முன்வைத்திட, அக்னி நட்சத்திரமாவது - ஒண்ணாவது - கொடைக்கானலின் குளிர்ச்சி தான் என்னுள்  !!


And இன்று காலை குமுதம் இதழை வாங்கிப் பார்த்தால்  - அட்டைப்படத்தோடு நமது MILLION & MORE SPECIAL க்கு அவர் நல்கியிருந்த சிலாகிப்பு அசாத்திய ரகம் என்பது புரிந்தது  !! புத்தக தின வாசிப்புக்கென அவர் தேர்வு செய்தது நமது ஜெரெமியாவையே என்பதை மிகப் பிரமாதமாய் எழுதியுள்ளார் !! ஒரு காமிக்ஸ் ஆர்வலரான தனது ரசனையை தமிழகத்தோடு பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கும் அவரது அன்புக்கும், பெருந்தன்மைக்கு நமது சிரம் தாழ்த்திய நன்றிகள் !!


அதுமாத்திரமன்றி மாறுபட்ட களப் பயணங்களின் வீச்சு எத்தகையது என்பதையும் அழுத்தமாய் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கும்  "அரசு" சாருக்கு பூங்கொத்துக்கள் - உங்கள் சார்பிலும், நம் சார்பிலும்  !!


மே மாதத்து இதழ்கள் கைக்குக் கிடைக்கும் முன்பாகவே பின்னூட்டங்கள் load more புதைகுழிக்குள் சிக்கித் தவிப்பதால் - இதோ மூச்சு விட வாய்ப்புத் தருமொரு உபபதிவு !! 'தல' இல்லா மாதத்தில்  உங்கள் கவனங்களை முதலில் ஈர்த்திருக்கக் கூடியது நமது கேரட் மீசைக்காரராகத் தானிருக்கும் என்றொரு யூகம் என்னுள் ! So நமது மே அலசல்களை  அவரிடமிருந்தே ஆரம்பிப்பதும் பொருத்தமாயிருக்கும் என்று பட்டது ! சிறுத்தையோடு, சிரத்தையாய்ச்  சுற்றித் திரியும் நம்மாளை இம்மாத கார்ட்டூன் இதழில் ரசிக்க இயன்றதா ? இதழ் பற்றிய உங்களின் முதல் பார்வை சொல்லும் சேதிகள் என்னவோ ?
And சந்தா E புரட்டலைத் தாண்டிய கவனங்களைப் பெற்றிருக்கிறதா இது வரையிலும் ? ஆவலாயிருப்போம் உங்கள் அபிப்பிராயங்களை அறிந்திட !! Let the fun begin !!

P.S : May online listing : http://lioncomics.in/monthly-packs/354-may-2017-pack.html

245 comments:

 1. அன்பு எடி,புக் கிடைக்கவில்லை,அலசல் எப்படி

  ReplyDelete
 2. காமிக்ஸ் வரட்டுமே சார் ......!!!!

  ReplyDelete
 3. இது வரை புத்தக பாா்சலை வாங்கவில்லை சாா்..

  ReplyDelete
 4. எப்படியும் என் கைக்கு புக் வர ஒரு வாரமாயிடும்.
  அடுத்த வாரம்தான் எல்லாமே.

  ReplyDelete
 5. வடையே இன்னும் கைக்கு வரல.இதுல அலசலா.

  ReplyDelete
 6. within 10 again..! But still not received the books... ;(

  ReplyDelete
 7. அனைவருக்கும் விஸ்வரூப இரவு வணக்கம்!

  ReplyDelete
 8. இதழ்களை கைப்பற்றி ஒவ்வொரு இதழாக ரசித்து புரட்டி மை வாசனையை நுகர்ந்து ரசிக்கும் சமயம் திடீர் என்டரியாய் இல்லாள் நுழைய

  முறைப்போ முறைப்பு....

  நாங்க பாக்காத முறைப்பா என முறைப்பை தள்ளுபடி செய்து விட்டு ஒரு உப பதிவில் விரைவாக வாருங்கள் சார் என தெரிவிக்க இங்கே வந்தால் உப பதிவு ரெடியாக உள்ளது ..

  :-)

  ReplyDelete
 9. உள்ளேன் ஐயா :)
  .

  ReplyDelete
 10. @ திரு விஜயன்

  ஙே...மதியம் தான் பார்சலை கைபற்ற முடிந்தது. லார்கோவுடன் இப்போது சுவிஸ்சில் இருக்கேன்,ரயிலோ ப்ளைட்டோ பிடிச்சி லண்டன் வர டைம் ஆகுமே சார்.!

  ReplyDelete
  Replies
  1. mayavi.siva : பில்லியனரோடு பயணமா ? நிதானமாகவே ஊர் திரும்பிக்கலாம் சார் !! On the way back இலண்டனிலும் ...அப்புறமாய் வாஷிங்டன் DC நகரிலும் கால்பதித்துக் கொள்ளலாம் !!

   Delete
  2. @ திரு விஜயன்

   அப்பாடா...ஒருவழியா டிரிப் முடிச்சது.! கோமானோட சுவிஸ் போய்...
   அப்படியே U போட்டு நியூயார்க் போய்...
   அங்கேருந்து அப்படியே துருக்கி துறைமுகத்துல இறங்கி...
   சிகாகோ தி வின்ச் டவர்ல கொண்டாடிட்டு....
   அங்கிருந்து லண்டன் வந்து இறங்கி கேரட் மண்டையனை பார்க்கலாம்னு நினைக்கிறேன்....

   "வேதாளரே...வாஷிங்டன் வரை போய்ட்டு வந்துடுங்கோ...பிடிங்க ப்ரி டிக்கெட்.." ன்னு கோடையிடியார் கொடுக்க...

   சரியா 9:30 க்கு அவர் குறிப்பிட்ட மெண்டல் ஹாஸ்பிடல்ல புல் நைட்டும் சுத்தி சுத்தி வந்து...

   ஒருவழியா ப்ளைட்டை புடிச்சி திரும்ப லண்டன் வந்து கேரட் மீசையாரோட செமத்தியா லூட்டி அடிச்சி சிரிச்சுட்டு...

   அப்படியே மாயன்களின் அஸ்டெக் நகரமுள்ள மெக்சிகோ போய்...

   சுவப்ப்பபா....ஸ்ஸ்ஸ்ஸ்....ஒரு வழியா...வீடுவந்து சேர்ந்தாச்சி.!

   அது ஏன்கிறேன்.? ரெண்டுநாள எனக்கு மட்டும் இப்படி ஏன்கிறேன்.?

   Delete
 11. /// சிறுத்தையோடு, சிரத்தையாய்ச் சுற்றித் திரியும் நம்மாளை இம்மாத கார்ட்டூன் இதழில் ரசிக்க இயன்றதா ? ///

  ரொம்பவே ரசிக்க முடிந்தது சார்.! சீறிவந்த சிறுத்தையை நம்மாளு ஒரே அதட்டலில் உட்காரவைப்பது செம்ம காமெடி. அன்பிறகு சிறுத்தை கிளிப்டனின் செல்லாக்குட்டி ஆகிட கலகலப்புக்கு பஞ்சமே இல்லை.!

  கேரட்மீசை கிளிப்டன் சிறுத்தையை விட அந்த ஆக்ஸிடென்ட் செய்யும் சிட்டுவிடம்தான் அதிக சிரத்தையோடு சுற்றிவருகிறார். .! :-)

  ReplyDelete
 12. /// சந்தா E புரட்டலைத் தாண்டிய கவனங்களைப் பெற்றிருக்கிறதா இது வரையிலும் ? ///

  மனநல மருத்துவமனையை சூறையாட ப்ளான் போடும் போக்கிரி கும்பல், அந்த ஹாலில் டாக்டர்கள் யார், பார்வையாளர்கள் யார், நோயாளிகள் யார் என்று புரியாமல் சொதப்பிவிட்ட திட்டத்தோடு திருதிருவென விழிக்கும் கட்டத்தோடு தற்போது நிற்கிறேன்..! இந்த ஆரம்ப பக்கங்களே போதும் சார். ., சந்தா E க்கு அடுத்தவருடம் 12 இதழ்கள் வேண்டுமென்ற போராட்டத்தை கையிலெடுக்க..!
  முழுதாய் பொறுமையாய் படித்துவிட்டு ரேப்புக்கு ஒஸ்தானு..!

  ReplyDelete
  Replies
  1. ரேப்புக்கு ஒச்சலாமுன்னுதான் நினைச்சிருந்தேன் நண்பரே.., ஒரு முடியா இரவை படித்து முடித்ததும் இங்கே ஓடிவந்து பிலாக்கினம் வைக்காமல் தூக்கம் வராதேன்னு இன்னிக்கே ஓடிவந்துட்டேனுங்க..!!:-)

   Delete
 13. வெளியூர் பயணம்... நாளைக்காவது புக்கை கண்ணில் பார்க்க முடியுமான்னு தெலியலையே..

  ReplyDelete
 14. மாலை நேர மழையோடு குளிர்ந்த வணக்கம்....

  ReplyDelete
 15. சந்தா E சூப்பர் சார்.
  கதையை படிக்கிற உணர்வே எழவில்லை.
  திரைப்படம் பார்க்கிற உணர்வே மேலோங்கியது.
  அடிக்கடி "டமால் டுமீல்" என்று காதை பஞ்சராக்கும் ஓசை கிடையாது.
  அட்டகாசமான அட! ஒரு பவர் ஸ்டார் அளவுள்ள ஹீரோவும் கிடையாது!
  ஒரு மனநல மருத்துவமனைக்குள் நடக்கும் சம்பவத்தை
  முதல் பக்கத்தில் துவங்கி கதை முடிகிறவரைக்கும் எங்கேயும் போரடிக்க வைக்காமல் வேகம்...வேகம்...வேகம்.....என்று கொண்டு சென்று கதையை முடிக்கும் வரை ஒரு வித்தியாச அனுபவத்தை உணரவைத்து முதல் இதழிலேயே " ஹிட்"டாக்கிவிட்டீர்கள்.
  இந்த வரிசையில்
  இனி வரப்போகும் இதழ்களும் கலக்கப்போவது நிச்சயமானால்
  வரும் ஆண்டில் சந்தா "E" எண்ணிக்கை கூடுமென என நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. AT Rajan : நன்றிகள் சார் ! சுத்தத் தமிழா ? பேச்சு நடைத் தமிழா ? இக்கதைக்கு எது பொருந்தும் என்று கணிக்கவே கொஞ்சம் அவகாசம் அவசியமானது ! அதன்பின்பாய் கதைமாந்தர்களுக்குப் பொருந்தும் விதமாய் மிகைப்படுத்தலின்றி மொழியாக்கத்தை அமைக்க நிறையவே தண்ணீர் குடித்தேன் !! இம்மாத இதழ்களின் டெஸ்பாட்ச்சுக்கு இரு நாட்கள் முன்பு வரை இந்தப் பணிகள் நீடித்தன !!

   எனக்கும் இது ரொம்பவே மாறுபட்டதொரு அனுபவம் !

   Delete
  2. நன்றி என்பது நாங்கள் சொல்லவேண்டிய ஒன்று சார்.
   உங்களது உழைப்பும், கடின முயற்சியும், காமிக்ஸ் எனும் வேள்வித்தீயில் இத்தனை ஆண்டுகளாக சலிப்பின்றி விழுந்து எழும்
   உங்களுக்கு நான் ஆயிரமாயிரம் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன் சார்.
   "எங்களை வாழ வைக்கும் காமிக்ஸூக்கு ஜே"
   உங்கள் விடாமுயற்சியின் பலன்தான் இன்று எங்களுக்கு விதவிதமான வகைகளில் காமிக்ஸ்கள் கிடைத்துக் கொண்டு இருக்கிறது.
   அதற்காக மறுபடி மறுபடி எனது நன்றினை தெரிவித்துக் கொள்கிறேன் சார்.

   Delete
  3. கிட்ஆர்டின் மற்றும் திரு.ATR அவர்களின் விமர்சனங்களும், சிலாகிப்புகளும் 'ஒரு முடியா இரவு' குறித்த ஆவலை ஏகத்துக்கும் எகிறச் செய்கின்றன!

   கடவுளே... நாளைக்காச்சும் கொரியர் சாமிங்க மனசு வைக்கணும் சாமி...

   Delete
 16. செல்வம் அபிராமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. E ஏமாற்றமல்ல +1111

  ReplyDelete
 18. I paid 2 SANDHAs for SANDHA E. But I received one book only. The cheque of rs.5200/- debited from my account on 28.12.2016 ( 4300+ 900 ), so I request you to kindly send a book (2 SANDHAs ) tomorrow. Please update your records for this 2 nd SANDHA.

  Thanking you
  V. SUNDARAVARADAN
  LITTLE KANCHEEPURAM
  CELL : 7667291648.

  ReplyDelete
 19. வீட்ல வாஷிங் மெஷின் ரிப்பேர்
  so அலசல் ஆரம்பிச்சாச்சு

  ReplyDelete
 20. Replies
  1. சேலம் Tex விஜயராகவன் : 'எனக்குப் பிடிக்கா விஷயம் அரங்கேறுமிடத்தில் என் பின்னூட்டம் கூட இருக்க வேண்டாம் !" என்று அழி ரப்பரைக் கொண்டு சுத்தம் செய்து விட்டீர்கள் போலும் சார் !

   பூமி வெப்பமாகிறதென்று ஏற்கனவே எச்சரிக்கை ஒலித்து வருகிறார்கள் விஞ்ஞானிகள் ; தமக்கு ஏற்பிலா விஷயங்களின் பொருட்டு ஒவ்வொருவரும் இத்தனை உஷ்ணத்தை உருவாக்கத் துவங்கினால் ஆண்டவன் கூடத் தடுமாறிப் போவார் நம்மைக் காத்திட !

   Delete
 21. ஒரு வழியா புத்தகங்களை காலையில் கைப்பற்றியாகி விட்டது.முதல் புரட்டலில் எல்லா இதழ்களும் சிறப்பு,அட்டைப் படங்களில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

  ReplyDelete
 22. நண்பர்களே..திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காமிக்ஸ் பெற அழைக்கவும் ; பிரகாஷ் , 9487243494, 8667666736.

  ReplyDelete
 23. அன்பர்களே..இப்பொழுது திருப்பூரில் நமது காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் ; நிவேதிதா புக் ஸ்டால்,பி.என்.ரோடு ,போயம்பாளையம். சுபா புக் ஸ்டால் ,புஷ்பா தியேட்டர் அருகில் , புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப். மற்றும் பத்மா புக் ஸ்டால் , அன்னபூர்ணா ஹோட்டல் அருகில் , டவுன்ஹால். மற்றும் செந்தில் புக் ஸ்டால் , மாநகராட்சி பில்டிங் நேரெதிரில் ,பழைய பஸ் நிலையம்.

  ReplyDelete
  Replies
  1. @ பிரகாஷம் கதிரேஷன்

   அடேங்கப்பா...இத்தனை இடங்களில் காமிக்ஸ் கிடைக்கசெய்துவரும் உங்கள் உழைப்பையும்,ஆர்வத்தையும் மனதார பாராட்டுகிறேன் ஸார்.! தொடருங்கள்.!!

   Delete
  2. சார் உங்களுடைய ஊக்குவிப்புக்கு நன்றி.! நான் இப்போதுதான் தொடங்கியுள்ளேன்.விரைவில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் காமிக்கை கொண்டுசெல்லவேண்டும் என்பதே என் ஆவல்!

   Delete
  3. வெல்டன் உங்களை போல் ஊருக்கு 4 பேர் இருந்தால் போதும் மாதத்திற்கு 4 என்ன 40 தே கொண்டு வரலாம்.

   Delete
 24. நண்பர்களே..விரைவில் கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலத்தில் கடைகளில் காமிக் பெறலாம். ஆகவே ஆங்காங்கு இருக்கும் அன்பர்கள் ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் மேலே குறிப்பிட்ட ஊர்களுக்கு அருகிலுள்ள ஊர்களில் காமிக்குகள் தேவைப்பட்டால் ஊரின் பெயரைக் குறிப்பிட்டு எழுதுங்கள் அதனையும் கவர் செய்கிறோம். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. @ பிரகாஷம் கதிரேஷன்

   கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சில வாசக நண்பர்களுக்கு [50 வயதை நெருங்கும் அரசு ஊழியர்கள்] உங்கள் எண்ணை கொடுத்து பேசசொல்கிறேன். அவர்களின் காமிக்ஸ் தாகத்திற்கு உதவியாக இருக்கும்.! மீண்டும் பாராட்டுகள்.உங்கள் முயற்சி திருவினையாக்கும்.!!

   Delete
 25. காமிக்ஸ் விவாத தளத்தில் வியாபார விளம்பரங்களை தொடர்ந்து அனுமதிக்கும் பிராகஷ் பப்பளிசர்ஸ் உரிமையாளர் திரு விஜயன் சார் அவர்களுக்கு என்னுடைய கண்டனத்தை பதிவு செய்துவிட்டு தளத்தில் இருந்து வெளியேறுகிறேன். குட் பை நண்பர்களே...!!!

  ReplyDelete
  Replies
  1. @ சேலம் இரவுகழுகார்

   இந்த மாசம் 'தல' டெக்ஸ் வரலைன்னு கண்டனம் தெரிவிக்கிறதுல உங்களவில சத்தியமா நியாயம் இருக்கு. எவ்வளவோ வெட்டி அரட்டை கமெண்ட்ஸை தாண்டி போற நீங்களா இப்படி சின்ன வரி விளம்பரதகவலை தாண்டவா மறுக்கிறிங்க..??????

   நம்ப முடியலைங்க....மனசும் கேக்கலை.... :((((

   உங்க வேகமும் விவேகமும் எப்பவும் சமன்பாடா இருக்குமே...கொஞ்சம் யோசியுங்களேன் ப்ளிஸ்...[கை கூப்பும் படம் ஒன்று] :((((

   Delete
  2. சார் ..இது வியாபார விளம்பரம் கிடையாது..இது ஒரு அறிமுகம்தான்..திருப்பூரில் காமிக்குகள் கொஞ்சநாள் விடுபட்டுப் போயிருந்தது..மீண்டும் அது புத்துணர்வு பெறுகிறது என்பதைச் சொல்லத்தான்..இங்கில்லாமல் வேறெங்குபோய் சொல்வது..மேலும் நீங்கள் பொசுக்கென்று கோபித்துக்கொண்டு வெளியேறும் அளவுக்கு இங்கு ஏதும் தவறாக நடந்துவிடவில்லையே?...

   Delete
  3. நண்பரே..வருந்துகிறேன்..தயவுசெய்து வெளியேறாதீர்கள்..

   Delete
  4. @ PRAKASAM KATHIRESAN

   உங்களுடைய தொடர் முயற்சிகளுக்கும், ஆர்வத்துக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

   இங்கே ஏற்பட்டிருக்கும் உங்கள்மீதான சிறு சலசலப்புகள் துரதிர்ஷ்டவசமானவையே! ஆனால் வருத்தம் வேண்டாம், உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள்! 'யாம் பெற்ற காமிக்ஸ் இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற நோக்கில் நமது காமிக்ஸ் விற்பனையை அதிகரிக்க நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் ஏற்புடையதே!

   உற்சாகத்துடன் செயல்படுங்கள். மீண்டும் எனது வாழ்த்துகள்!

   Delete
  5. ////நண்பரே..வருந்துகிறேன்..தயவுசெய்து வெளியேறாதீர்கள்..///

   இந்த ஒற்றை வரியே உங்கள் நல்ல மனதை இனங்காட்டிவிடுகிறதே! மகிழ்ச்சி!

   Delete
  6. நண்பர் சேலம் tex அவர்களே கோபத்தை விட்டு களத்திற்கு வர வேற்கிறேன்.இங்கு அலசல் அரட்டை மட்டுமல்ல காமிக்ஸ் வளர்ச்சிக்கு உதவும் எந்தவொரு விசயமுமே வரவேற்க பட வேண்டிய ஒன்றல்லவா!!!!pls come

   Delete
  7. நண்பர் சேலம் tex அவர்களே உங்கள் கோபத்தை விட்டு வெளியே வாருங்கள். இந்த பகுதி அலசல், அரட்டை மட்டுமல்ல காமிக்ஸ் வளர்ச்சிக்கு உதவும் எந்தவொரு விசயமும் வரவேற்க பட வேண்டிய ஒன்றவல்ல.பிரகாஷ் அவர்களை மனதார வரவேற்போம்.BE COOL PLS COME....

   Delete
  8. திரு.பிரகாசம் கதிரேசன்
   உங்களது முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
   உங்களது முயற்சியின் பலனாக மாதம் தலா ஐம்பது புத்தகம் விற்பனையானால்கூட அதன் பலன் உங்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியருக்கும்தானே.
   ஆசிரியரின் கிட்டங்கி காலியாவதை இங்கு வரும் அனைவருமே விரும்புபவர்கள்தான்.
   ஆசிரியர் நஷ்டப்பட வேண்டுமென இங்கு நினைப்பவர்கள் யாரும் கிடையாது. புரிதல்களில் ஏதோ சிக்கல். அதனால் சிறுசலசலப்பு.
   தயவுசெய்து இந்த விஷயத்தை தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
   திரு.மாயாவி சிவா அவர்கள் மாத்தியோசி மூலம் காணக்கிடைக்காத முத்து காமிக்ஸ்களின் அட்டை படத்துடன் ஒரு பொன்மொழியும் சேர்த்து பதிவிடுவதுகூட நமது இதழ்கள் பலரையும் சென்றடையவும், காமிக்ஸ் தொடர்பு விட்டுப்போனவர்களை மறுபடி நம் காமிக்ஸூடன் இணைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தானே.
   அதுபோலவே திரு.பிரகாசம் கதிரேசன் அவர்களது ஆர்வத்தையும் தயவுசெய்து தவறாக எண்ணாமல் வழக்கம்போல் அனைவரும் சங்கடம் ஏதும் மனதில் இல்லாமல் தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்.

   Delete
  9. நறுமணங்களுடன் மலரும் பதிய நட்புகளுக்கான தருணமும் தளமும் இது.மாற்று கருத்துக்கள் பகைமைய. விளைக்குமா?.வாருங்கள் நண்பர்களே பரஸ்பரம் புரிவோம் கரம் இணைவோம்.

   Delete
  10. திரு.பிரகாசம் கதிரேசன்...

   பயப்படாதீர்கள். சேலம் டெக்ஸ்-ஐ புரிந்து கொள்ளுங்கள்....

   நீங்கள் காமிக்ஸ்க்கு விளம்பரம் செய்கிறீர்கள். சேலம் டெக்ஸ் உங்களுக்கு விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார் என்பதை உணருங்கள்....

   Delete
  11. @ SVV

   ஹாஹாஹா...கணக்கை சரியா டேலி பண்ணிட்டீங்க.! :P

   Delete
  12. ஙே... புரிஞ்சு போச்சா...

   Delete
  13. //உங்களது முயற்சியின் பலனாக மாதம் தலா ஐம்பது புத்தகம் விற்பனையானால்கூட அதன் பலன் உங்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியருக்கும்தானே.//
   இதில் நமக்கும் கூட பலன் உள்ளதே...கூடுதல் விற்பனை...கூடுதல் புத்தகம் நமக்கு கிடைக்க வழி செய்யும் அல்லவா

   Delete
  14. //நண்பர் சேலம் tex அவர்களே கோபத்தை விட்டு களத்திற்கு வர வேற்கிறேன்.இங்கு அலசல் அரட்டை மட்டுமல்ல காமிக்ஸ் வளர்ச்சிக்கு உதவும் எந்தவொரு விசயமுமே வரவேற்க பட வேண்டிய ஒன்றல்லவா!//
   +1

   Delete
  15. Salem tex இந்த வார கோபக்கோட்ட உங்களோடதா அட போங்க பாஸ் சும்மா சிரிப்பு முட்டாதிங்க.

   Delete
  16. டெக்ஸ் விஜயராகவன் கோபத்திற்கு காரணம் இந்த மாதம் டெக்ஸ் வில்லர் இல்லாத வாரம் அதாவது மாதம்.


   ஒரு மாதத்திற்கே இப்படி கோவப்பட்டால்........வருடத்தில் பதினோரு மாதம் இளவரசி இல்லாமல் நாங்கள் எரிமலையாக அல்லவா குமுறனும்.????????

   Delete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. வாங்கி சேகரித்து வைத்து இருக்கிறேன். ஒரு வருட புத்தகமாவது படிக்காமல் இருக்கிறது.
  புது அறிமுகத்தை வரவேற்கிறோம். நல்ல கதை தேர்வு மகிழ்ச்சியே.
  சரித்திர கதைகள் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. ////வாங்கி சேகரித்து வைத்து இருக்கிறேன். ஒரு வருட புத்தகமாவது படிக்காமல் இருக்கிறது. ////

   ரிடயர்மெண்ட்டுக்குப் பிறகு படிச்சுக்கலாம்னு வச்சிருக்கீங்களா நண்பரே?!! ;)

   Delete
  2. நல்ல ஐடியா!!!!

   Delete
 28. ஒரு முடியா இரவு :-

  (No spoiler - தைரியமாக படிக்கலாம்)

  வெகு சுலபமாக வெற்றியீட்டிவிடலாம் என்று, ஒரு பக்கா ப்ளானிங்கோடு மனநல மருத்துவமனையில் நுழையும் ஒரு கும்பல், சின்னதொரு பிழையினால் தாங்கள் தொடங்கிய திட்டத்தாலேயே மாட்டிக்கொள்வதும்,
  தொடங்கிய திட்டத்தை முடிக்கும் தார்மீக உரிமையை இழந்து தவிப்பதும், காரியம் கைமிஞ்சிப்போய் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுவுமே கதை..!

  ஒரு சாதாரண திருட்டு சம்பவம் போல ஆரம்பிக்கும் கதை, அடுத்தடுத்த ட்விஸ்ட்டுகளால் படுக்கையின் நுனிக்கே வரவைத்துவிடுகிறது. ( சாதாரணமாக உட்கார்ந்து படிப்போர் சீட்டு நுனிக்கு வரலாம். நான் படுத்துக்கொண்டு படித்ததால் பெட்டின் நுனிக்கு வந்தேன் :-))

  அதுவும் பாதிக்குமேல் போனதும், "பக்கத்துக்கு பக்கம் பரபரப்பு " என்று சொல்வார்களே அதை அனுபவிக்க முடிந்தது.!

  நிறைய சொல்ல ஆசையிருந்தாலும், கதையை படித்திராத நண்பர்களுக்காக சில நச் மேட்டர்களோடு மட்டும்.. அடக்கி வாசித்துவிடுகிறேன்..!

  நோயாளிகளின் உடையிலேயே டாக்டர், கம்பவுண்டர், நர்ஸ்கள் எல்லோரும் திரிவதால், இனம்பிரித்து கண்டறிய முடியாமல் போன போக்கிரிகள், அந்த உடை விசயத்தையே சாதகமாக்கிக்கொண்டு போலிசை டபாய்க்க நினைப்பது....

  தப்பிக்கும் வழிதெரிந்த நபரையும் தெரியாத்தனமாய் போட்டுத்தள்ளிவிட்டு விழிப்பது,

  ம்ஹூம். .இப்படியே போனா எல்லாத்தையும் உளறி வெச்சிடுவேன்.., இருந்தாலும் இன்னும் ஒரேயொரு விசயத்தோட நிப்பாட்டிக்கிறேனே. .ப்ளீஸ்..!!

  பீட்டரின் ட்விஸ்ட், மார்வினின் ட்விஸ்ட், டேனியல் கும்பல் முடிவின் ட்விஸ்ட் - படிக்கும்போது நிச்சயம் மெர்சலாயிடுவிங்க நண்பர்களே..!

  மெதுவாய் தொடங்கும் கதை மெல்ல மெல்ல வேகமெடுத்து, பாதிக்குமேல் அசுரவேகத்தில் பயணித்து, அட. .! அதுக்குள்ள முடிஞ்சிடுச்சான்னு கேக்குறாப்போல முடியுது.!

  ஒரு முடியா இரவு -
  சந்தா E ன் சரியான தொடக்கம் .

  ரேட்டிங் 10/10

  ReplyDelete
  Replies
  1. இன்னும் புக்ஸ் வராததாலோ என்னவோ லேசா வயிறு எரியறாப்லயே இருக்குங்க கிட்ஆர்டின்! :)

   Delete
  2. வயித்தெரிச்சலுக்கு நுரை பொங்கும் ரின் மார்க் சூப் மிகவும் நல்லது

   Delete
  3. அப்போ இந்த மாதம் டெக்ஸ் க்கு பதில் சந்தா E யை whatsup அனுப்ப சொல்லலாமா என் துணைவியாருக்கு?

   Delete
  4. ரின் டின் கேன் @ செம காமெடி ஜி!

   Delete
  5. வாவ்,நல்ல விமர்சனம்.

   Delete
  6. ரவி கண்ணரே நீங்க பெரிசா விமர்சனம் எழுதியிருப்பதன் காரணமாய் விரிவான விமர்சனம் எனபது புரிபடுகிறது...எனவே இதழை படித்து விட டு இந்த விமர்சனத்தை படிக்கலாம் என தாண்டி செல்கிறேன் ..மன்னிக்க...:-)

   Delete
  7. //அதுவும் பாதிக்குமேல் போனதும், "பக்கத்துக்கு பக்கம் பரபரப்பு " என்று சொல்வார்களே அதை அனுபவிக்க முடிந்தது.!
   பீட்டரின் ட்விஸ்ட், மார்வினின் ட்விஸ்ட், டேனியல் கும்பல் முடிவின் ட்விஸ்ட் - படிக்கும்போது நிச்சயம் மெர்சலாயிடுவிங்க நண்பர்களே..!

   மெதுவாய் தொடங்கும் கதை மெல்ல மெல்ல வேகமெடுத்து, பாதிக்குமேல் அசுரவேகத்தில் பயணித்து, அட. .! அதுக்குள்ள முடிஞ்சிடுச்சான்னு கேக்குறாப்போல முடியுது.!//
   +1 same feel
   My rating is 9.5/10. -0.5 is due to book published in BW instead of color.

   Delete
 29. Replies
  1. E OK என்பது இப்போது அல்ல ஆசிரியர் அறிவித்த போதே தெரிந்து கொண்டேன். ஆசிரியர் தேர்வில் 10 ல் 9 எப்போதுமே சக்ஸஸ் தானே.

   Delete
 30. விஜயன் சார், டீ இன்னும் வரவில்லை, அது பத்தி அலச நான் ரெடி நீங்கள் ரெடியா☺

  ReplyDelete
 31. லார்கோ சூப்பர்.ப டி த் து வி ட் டே ன்.விர் விரு விருப்பு.

  ReplyDelete
 32. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் HISTORY DOCTOR ! :)

  ReplyDelete
 33. வேலாயதம்பாளையம் புகளூர் TNPL வேலூர் கொடுமுடி மற்றும் அருகில் உள்ள வாசக நண்பர்களுக்கு நமது காமிக்ஸ்கள் கிடைக்கும்
  பழனிவேல
  9789214198
  டோர் டெலிவரியோட உண்டு

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் பழனிவேல்! நிறைய எண்ணிக்கையில் விசிட்டிங் கார்டுகளைத் தயார் செய்து வைத்துக்கொண்டு எதிர்படுவோரிடமெல்லாம் ஒன்று கொடுங்கள். நிறையவே பலனளிக்கும்!

   Delete
  2. வாழ்த்துக்கள் பழனிவேல் சார் ! தொடருங்கள் .

   Delete
 34. Tharpodu than puthakangalai vasanai parthu mudinthulladu.Larcovil kadasi pakka vanna sidarulukae puthakam motha kasum poivittathu.

  ReplyDelete
 35. நான்கு இதழ்களையும் ப்ளஸ் இலவச இணைப்பையும் கைப்பற்றியாகி விட்டது .

  இலவச இணைப்பு அருமை...பின் பக்க டெக்ஸ் ப்ளோ அப் "செம " சார்...அதை தனியாக கொடுத்து இருந்தால் வீட்டு சுவற்றில் ஒட்டியிருப்பேன்..இனைப்பாக வந்த காரணத்தால் கிழித்து ஒட்ட மனது வர வில்லை.. விச்சு கிச்சு...சிரிப்பின் நிறம் சிவப்பு மிதமான சிரிப்பை வரவழைக்க பூசனி தலை டைகரும்..ராமு சோமுவும்..நல்ல செய்தி கெட்ட செய்தியும் வாய்விட்டு சிரிக்க வைத்தன.அதிமேதை அப்பு சிறப்பு :-)
  (இந்த இணைப்பை பார்த்தவுடன் தான் ஒரு நினைவு சார்..தாங்கள் காமிக்ஸ் பற்றிய செய்திகள் ..பேட்டிகள்.தகவல்கள் .போன்றவைகளை செய்தி தாள் போல அளிப்பதாக சொல்லி இருந்தீர்களே அது எப்போது சார்..)

  கர்னலுக்கொரு சிறுத்தை முன்னட்டையும் சரி பின்னட்டையும் சரி வித்தியாசமாக மின்னுவது போல கலக்குகிறது..

  தலை கேட்ட தங்க புதையல் இதழின் அட்டையோ அந்த ஒரிஜினல் கால கட்டத்தை நினைவில் நிறுத்துகிறது..இந்த முறை மறுபதிப்பின் அட்டை படம் மங்களகரமாக மின்னுகிறது .. அப்பொழுது எல்லாம் லாரன்ஸ்டேவிட் கதைகளிலியே மஞ்சள் பூ மர்மத்திற்கு பிறகு இந்த கதை எனது டாப் லிஸ்ட்லில் இருந்த ஒன்று...பளீர் வெள்ளையில் அழகான சித்திரங்களும் ..தெளிவான எழுத்துக்களும் உடனே படிக்க ஆவலை கிளப்புகிறது..(இன்றைய பயணத்தில் புதையலை முடித்து விடுவேன் என்றே நினைக்கிறேன் இருக்கை கிடைத்தால் )

  ஒரு முடியா இரவு புது லோகாவுடன் ஒரு வித்தியாச அட்டைப்படமாக உள் சித்திரங்களும் நிறைவாக இருக்க உட்புக காத்திருக்கிறேன்..

  லார்கோ பற்றி சொல்ல வேண்டுமா என்ன...அட்டை படத்தில் இப்படி தான் பொசுக்குன்னு சோகமா இருப்பாரு ..உள்ளே களம் இறங்கினால் அதிரடி அடிதடி தான்னு இதழை புரட்டி பார்க்கும் பொழுதே தெரிகிறது..சித்திரங்களும் அச்சு தரமும் நச்..

  அடுத்த வரவில் ரிப்போர்ட்டர் ஜானி அறிவிப்பை பார்த்ததும் இனம் புரியா ஒரு கூதுகலம் மனதில் ஒட்டிகொண்டது.( பழைய ப்ரெண்ட் அல்லவா..)

  இவ்வளவு அழகான இலை விருந்தில் அனைத்தும் இருந்தும் ஸ்வீட்டை மறந்தது போல டெக்ஸ் இல்லாதது ஒரு குறையே....


  இனி விருந்தை சுவைத்து விட்டு.....

  ReplyDelete
 36. இந்த இடத்துல எர்வாமாட்டின் விளம்பரம் பண்ணா தப்பு

  காமிக்ஸ் விளம்பரம் பண்ணாக்கூடவா தப்பு

  ஆசிரியரையே மெரட்டுறாங்களேப்பு


  நானும் வில்லன் தான் என விறைத்து பார்க்கும் படங்கள் பல

  ReplyDelete
  Replies
  1. ரின்டின்கேன்:இந்த புஜ்ஜிக் குட்டி வேற தபா தபா வந்து காமெடி பண்ணிக்கினு.நேசத்துடன் வாலாட்டும் படங்கள் பத்து.

   Delete
  2. இவ்வளவு அழகான இலை விருந்தில் அனைத்தும் இருந்தும் ஸ்வீட்டை மறந்தது போல டெக்ஸ் இல்லாதது ஒரு குறையே....//
   கரெக்டா சொன்னிங்க.

   Delete
 37. sir how are you E series oru mudiya iravu story super.please read kumudam arasu pathilgal 10.5.2017.kumudam high lighted jeremiah.😄🙌👌

  ReplyDelete
  Replies
  1. ///please read kumudam arasu pathilgal 10.5.2017.kumudam high lighted jeremiah.///

   அடடே!!!

   Delete
 38. இங்கே எவ்வளவோ மகிழ்ச்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்து இருப்பினும் அவ்வபொழுது சில விரும்ப தகாத பதிவுகளும் வந்ததை யாரும் மறுக்க முடியாது..ஆசிரியரை சங்கட படுத்தியும் இங்கே பதிவுகள் களம் கண்டுள்ளன தான் .அதை விடவா நமது காமிக்ஸ் நண்பர் தனது காமிக்ஸ் விற்பனை நிலையத்தை பற்றி அறிவிப்பு செய்வது தவறாகி விட்டது..கோபித்து வெளியேற ..

  இங்கே சந்தா கட்டாத நண்பர்களும் பார்வையாளர்கள் தானே...அவர்களுக்கு இந்த முகவர் நண்பரின் அறிவிப்பு அருகே இருந்தால் அவர்கள் மனது கொண்டாடாதா...

  ஏன் நமது இதழ்களிலேயே முகவர்களின் இட முகவரி விளம்பரம் வருகிறதே (இந்த மாதம் கூட )..இதனால் இதழ்களை விட்டும் தள்ளி நின்று விட முடியுமா நம்மால்...?

  இவையும் ஆசிரியருக்கு உதவும் ஊன்றுகோல்களே....என புரிந்தோர் இங்கிருந்து விலக மாட்டார்கள் என்றே நம்புகிறேன்..

  இறுதியாக ...

  சில விசயங்களில் நாம் எதிலும் மாறாமல் ஒரே இடத்தில் நிற்கலாம்..ஆனால் அனைத்து விசயங்களிலும் நான் இப்படி தான் ..நான் மாற மாட்டேன் எனில் நம்மை சுற்றி எவருமே இருக்க மாட்டார்கள்..

  மாற்றம் ஒன்றே மாறாதது....இது காமிக்ஸ் இதழ்களுக்கு மட்டுமல்ல....வாழ்க்கைக்கும் உரித்தான ஒன்றே...

  ReplyDelete
  Replies
  1. ////சில விசயங்களில் நாம் எதிலும் மாறாமல் ஒரே இடத்தில் நிற்கலாம்..ஆனால் அனைத்து விசயங்களிலும் நான் இப்படி தான் ..நான் மாற மாட்டேன் எனில் நம்மை சுற்றி எவருமே இருக்க மாட்டார்கள்..
   /////

   யதார்தத்தை நச்'னு சொல்லிட்டீங்க தலீவரே!

   Delete
  2. ///
   சில விசயங்களில் நாம் எதிலும் மாறாமல் ஒரே இடத்தில் நிற்கலாம்..ஆனால் அனைத்து விசயங்களிலும் நான் இப்படி தான் ..நான் மாற மாட்டேன் எனில் நம்மை சுற்றி எவருமே இருக்க மாட்டார்கள்..///

   அடா அடா..!! நம்ம தலீவரா இது..!
   யதார்த்தத்தை ரொம்ப எளிமையா நச்சுன்னு சொல்லிட்டாரு..!!

   Delete
 39. சந்தேகம் இல்லாமல் லார்கோதான் No-1
  அதிரடி கதை அற்புதமான சித்திரங்கள்.
  ப-42 முரட்டுமனிதனும் மனதில் குழந்தை
  என்பதை காட்டும் ஓவியர் ப-92ல் தனது
  விஸ்வரூப திறமயை வெளிக்காட்டியுள்ளார்.நேரில்பார்த்தால்
  கூட இந்த அழகு ஆங்கிள் கிடைக்குமா
  என்று தெரியாது.வழக்கறிஞர் பாத்திரத்தில் வருபவரே கதாசிரியர் என்று
  நினைக்கிறென்.த கே த பு மிக அருமை.
  சந்தா E அற்புதம். லார்கோவின் கடைசி
  கதையை அடுத்த வெளியிட வேண்டுகிறேன்.சேலம் TEX என்ன இது
  சின்ன குழந்தைபோல் கோபம். உடனே
  சினம் தணிந்து வழக்கம் போல தளத்திற்கு வரவும்.ஈவி நேற்றே 3 புக்கை நான் படிச்சாச்சு.
  படிச்சாச்சு???

  ReplyDelete
  Replies
  1. என்னா ஒரு வேகம்?!

   Delete
  2. @ கணேஷ் KV

   லார்கோவுடன் நேற்று நள்ளிரவே லண்டனில் நான் தரையிரங்கிவிட்டாலும், லார்கோவை பிரித்து மேய லேபுக்கு அனுப்பியிருக்கேன். :D

   நீங்கள் குறிப்பிடும் பக்கம் 42 அல்ல. பக்கம் - 45.

   மலைபோல மாமிசமனிதனாக இருந்தாலும்கூட....அந்த குண்டு காவலாளி 'கேப்டன் அமெரிக்கா' வின் காமிக்ஸ் புத்தகத்தை படிப்பதை தானே நீங்கள் குறிப்பிட வந்தது. வில்லனுக்குள்ளும் பாலகன் உண்டு என்பதை, சித்திரம் சொல்லும் செய்தி செம்மை.!

   அதே பக்கம் 45-ல் எடிட்டர் எடிட்டிங்கில் கோட்டைவிட்டதையும் சொல்லவேண்டிய ஒன்று. :P

   Delete
  3. தொடர்ச்சி..

   மாடஸ்டியின் மானத்தை காக்கிறேன்னு தலையில் கறுப்புசட்டியுடன் பாகுபலி சிவகாமி அம்மையார் போலவே வலம்வந்தவர்...சைமனுக்கு அநீதி இழைத்து விட்டாருங்கோ...[லார்கோவின் வக்கீல் ஜான் அவர்கள் குறும்பாய் சிரிக்கும் படம் மூன்று]

   Delete
  4. அடிக்கிற வெயிலுக்கு ஆங்காங்கே கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது.இதுல
   விளக்கெண்ணெய்விட்டு ஆராய்ந்து சுட்டிக்காட்டினால் உருப்டமாதிரிதான்.
   பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம்கண்டுபிடித்ததே??
   விடுங்க சிவா கொஞ்சம் இருந்துவிட்டு
   போகட்டுமே.நாங்கள்ளாம் கதையில் வந்த
   காமிக்ஸை மட்டுந்தான் முதல்ல பார்த்தோம்

   Delete
 40. நண்பர்களே,

  முன்குறிப்பு :

  வழக்கமாய் இடைச்செருகல் செய்திகளை பின்குறிப்பாய் இணைத்திடுவேன் ; ஆனால் இதுவோ முத்தான சேதி எனும்போது - "முன்குறிப்பு மரியாதை" தந்திடுவதே பொருத்தமென்று நினைத்தேன் !!

  நேற்று காலை புதியதொரு நம்பரிலிருந்து ஸ்நேகமானதொரு குரலில் ஒரு அழைப்பு ! மறுமுனையில் இருந்தவர் குமுதம் வார இதழின் "அரசு" என்பதைத் தெரிந்து கொண்ட போது இதயம் ஒரு நொடி துள்ளியது !! மக்களின் நாடித் துடிப்பில் ஒரு கையும், முத்திரை பதிக்கும் எழுத்துக்களை வாரித் தந்திடும் பேனாவை இன்னொரு கையிலும் பிடித்து நிற்கும் இந்த ஆற்றலாளர் "நல்லா இருக்கீங்களா ?" என்று நலம் விசாரித்த போது எனக்கு பெப்பே பெப்பே என்ற மட்டுக்கே பேச்சு வந்தது ! "நாளைய குமுதத்தைப்பாருங்களேன்..!" என்றவாறே அன்போடு பேசியதெல்லாம் ஒரு கனவு போலவே இருந்தது ! ஜெரெமியா புதுவரவினைப் பற்றிய அவரது பார்வைகளை முன்வைத்திட, அக்னி நட்சத்திரமாவது - ஒண்ணாவது - கொடைக்கானலின் குளிர்ச்சி தான் என்னுள் !!

  And இன்று காலை குமுதம் இதழை வாங்கிப் பார்த்தால் - அட்டைப்படத்தோடு நமது MILLION & MORE SPECIAL க்கு அவர் நல்கியிருந்த சிலாகிப்பு அசாத்திய ரகம் என்பது புரிந்தது !! புத்தக தின வாசிப்புக்கென அவர் தேர்வு செய்தது நமது ஜெரெமியாவையே என்பதை மிகப் பிரமாதமாய் எழுதியுள்ளார் !! ஒரு காமிக்ஸ் ஆர்வலரான தனது ரசனையை தமிழகத்தோடு பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கும் அவரது அன்புக்கும், பெருந்தன்மைக்கு நமது சிரம் தாழ்த்திய நன்றிகள் !!

  அதுமாத்திரமன்றி மாறுபட்ட களப் பயணங்களின் வீச்சு எத்தகையது என்பதையும் அழுத்தமாய் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கும் "அரசு" சாருக்கு பூங்கொத்துக்கள் - உங்கள் சார்பிலும், நம் சார்பிலும் !!

  ReplyDelete
  Replies
  1. உற்சாகத்தில் மனம் துள்ளுகிறது.

   Delete
  2. சூப்பர். இது உங்களுக்கும், உங்கள் ரீமுக்கும் கடின உழைப்பால் கிடைத்த அங்கீகாரம் சார்.

   Delete
  3. ஆசிரியர் திரு விஜயன் அவர்களுக்கு;
   தமிழகத்தில் வெளிவரும் பத்திரிகைக்கைகளில் நம்பகத்தன்மையுடன் இயங்குவது நமது இதழ் மட்டுமே.ஏனைய அனைத்து பத்திரிக்கைகளின் சமூக ஆக்கம் விரும்பப்படுவதாக இருந்தாலும் அவைகளின் அரசியல் சார்பான நிலைப்பாடுகளும் பத்திரிக்கை தர்மங்களையும் சற்றே அருவருப்போடுதான் பார்க்க வேண்டியுள்ளது.தமிழக மக்களின் சமூக வாழ்வியலில் குமுதம் பத்திரிக்கை குழுமத்தின்"" பங்களிப்பும்""சேவையும்"" போற்றுதலுக்குரியது(💐💐💐💐💐💐💐💐💐💐💐). குமுதம் வார இதழின்" அரசு" அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற நேசமும் மனம் திறந்து அதை வெளிப்படுத்தும் பண்பாடும் நிச்சயமாக வணங்குதலுக்குரியது.அது உங்கள் உழைப்புக்கு கிடைத்த மதிப்பு.நமது பயணத்தின் அர்த்தங்களை மேலும் கூடுதல் கவனத்துடன் அமைத்துக்கொள்ள உதவும்.மின்மினிகளின் ஒளியில் அல்ல தேயாத முழுமதியின் ஒளியில் காமிக்ஸ் இதழ்கள் ஒளிரும் ஓர் பொன்னால் வெகு விரைவில் உதயமாகும்.திரு.அரசு அவர்களுக்கு நன்றியும் தங்களுக்கு வாழ்த்துக்களும் உரித்தாகுக.

   Delete
  4. நல்ல தகவல் மகிழ்ச்சி.

   Delete
  5. Sri Ram @
   // மின்மினிகளின் ஒளியில் அல்ல தேயாத முழுமதியின் ஒளியில் காமிக்ஸ் இதழ்கள் ஒளிரும் ஓர் பொன்னால் வெகு விரைவில் உதயமாகும். //

   Lovely statement! well said!!

   Delete
  6. திரு.பரணி;தனிப்பட்ட அங்கீகாரத்திற்காகவோ"நிராகரிப்புக்காகவோ இதில் நேரமிழக்க முயன்றதில்லை.தனிப்பட்ட சுய விருப்பு வெறுப்புகளையும் பதிவிட விரும்பியதில்லை.பல முகமறியா நண்பர்களாலும் மதிப்பிற்குரிய ஆசிரியராலும் இத்தலம் முன்கூட்டியே வெகு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.காமிக்ஸ் நேசம் ஒன்றே இங்கே இணைந்திருக்க சில நல்ல உள்ளங்களைஸ அழைக்கிறது.

   Delete
  7. திரு.பரணி;தனிப்பட்ட அங்கீகாரத்திற்காகவோ"நிராகரிப்புக்காகவோ இதில் நேரமிழக்க முயன்றதில்லை.தனிப்பட்ட சுய விருப்பு வெறுப்புகளையும் பதிவிட விரும்பியதில்லை.பல முகமறியா நண்பர்களாலும் மதிப்பிற்குரிய ஆசிரியராலும் இத்தலம் முன்கூட்டியே வெகு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.காமிக்ஸ் நேசம் ஒன்றே இங்கே இணைந்திருக்க சில நல்ல உள்ளங்களைஸ அழைக்கிறது.

   Delete
 41. முன்குறிப்பு . அட்டகாசம் . அப்புறம் வருகிறேன்.

  உற்சாகம் அள்ளுகிறது.:)

  ReplyDelete
 42. வாவ்....அருமையான செய்தி சார்....பத்திரிக்கையில் "இந்த சமயம் " இந்த அழகான செய்திகள் வருவது இன்னமும் மனதை துள்ள வைக்கிறது....

  உடனே குமுதம் புக்கு வாங்கனும் ...ஓடுறா பரணி.....

  ReplyDelete
 43. குமுதம் @ நமக்கு நல்ல விளம்பரம்! நன்றி "அரசு" அவர்களே!! சந்தோசம்!!!

  ReplyDelete
 44. எனதுபார்சல் நாகப்பட்டினம் மாவட்டம் கிடக்கு ஆகவே எனது தாய் தந்தையர் எனது குலசாமி கோவில் கமுதிக்கு போய்ட்டு வரும்போது சிவகாசிக்கு போய் இம்மாத காமிக்ஸ் புதையலை இரண்டு செட் வாங்கி வர சொன்னேன், நேற்று மாலை எடிட்டர் அவர்களை சந்தித்து வாங்கி வந்தனர்.....
  தல கதை இல்லாதது வருத்தமே....
  இம்மாதிரி சங்கடம் இல்லாமல் பார்ப்பது எடிட்டர் பொறுப்பு,
  சந்தா இ லோகோ அருமையாக உள்ளது....
  நல்ல முயற்சி வாழ்த்துகள் சார்.....
  முதலில் "முடியாத இரவு"இருந்து ஆரம்பிக்றேன்....

  ReplyDelete
 45. குமுதம் தந்த அங்கீகாரம்....
  சாமான்யமான ஒன்றல்ல...
  வாழ்த்துக்களுடன் பெருமிதமும் கொண்டேன்!

  எடிட்டர் சார்... காமிக்ஸ் பயணத்தின் வழிப்பாதையில் குத்தும் முட்கள் மட்டுமல்ல... மகிழ்வுறச் செய்யும் மலர்களையும் சந்திக்கிறீர்கள்...

  மீண்டும் வாழ்த்துக்களுடன் பெருமிதமும் கொள்கிறேன்!

  ReplyDelete
 46. தற்போது சிம்லா வில் உள்ளேன்(குடும்ப சுற்றுலா). அடுத்த வாரம் தான் காமிக்ஸ் பார்சலை பிடிக்க முடியும். குமுதம்மும் வாங்க முடியாது.

  ஹரே பாய் மே கியா கரும்.

  ReplyDelete
  Replies
  1. இத பாருடா! வரும் போது ரெண்டு கிலோ சிம்லா ஆப்பிள் ப்ளீஸ் :-)

   Delete
 47. இன்னைக்கு ஏழு மணிக்கே போன வரல சார்ன பணியாள நண்பர் , அந்த பெரிய பைய பிரிக்க சொல்ல அதில் வரும்னு பாத்தா அதிர்ச்சி ...சரி வந்தா கலெக்சன் சென்டர்ல வைக்க சொல்லுங்கண்ணிட்டு வந்து விட்டேன் .. இருவது நிமிடம் கழித்தொலித்த காலில் உற்சாகமாய் அண்ணா சிகப்பு பார்சல பிரிக்கல அதுல இருந்தது , வநது வாங்கிக்கங்கனு சொல்ல , நான் தொலைவா வந்துட்டேன் கலெக்சன் சென்டருக்கு அனுப்பிடுங்கன்னு , அவரது உற்சாகத்துக்கு நன்றிய உதிர்து விட்டு வைத்தேன் . அடுத்த ஒரு மணி நேரத்தில் கலக்சன் சென்டரில் அழைப்பி..இதோ வந்துட்டேன் .. சார் மெய்யாலுமே வானவில் ஐஸ்கிரீம்தான்..வண்ணமய இலவச இணைப்பில் கண்ணில் மங்கலாய் தட்டுபட்ட டெக்ச பிரிச்சா அற்புத வண்ணத்தில் சிறு கதைகளின் தொகுப்பு அருமை .லார்கோ பின்புறத்த காட்டியபடி இரவை போர்த்திய படி நீல வண்ணம் தெறித்திருக்க பின்னட்டைகளில் பிரம்மாதமாய் உள்ளது ...வரும் புத்தகங்களில் இதப் போல வெளியிடலாமோ என கேட்க வைக்க....முன்னட்டயும் வித்யாசம் காட்ட உள்பக்கங்களும் படபடக்கின்றன மனம் போலவே , ஐ ! லார்கோ சார் ....என்னா கலக்கல்....லார்கோவ மிஞ்சத்தான் ஏதுமில்லயே ...ஏக்கத்தோட ...அடுத்த புத்தகத்துக்கு போனா கர்னலும் அட்டயில அசத்த... ஒரு முடியா இரவு எகிப்த நினைவு படுத்தும் அட்டகாச ஸ்பிங்ஸ் லோகோவும் , அட்டகாச அட்டயும் மிரட்ட ,தலை கேட்ட தங்கப்புதையல் அட்டை சும்மா பின்னி எடுக்குது ...அருமை ...மகிழ்ச்சி....

  ReplyDelete
 48. E So so.... Not in the Muthu Lion reading standard

  ReplyDelete
 49. அன்பின் டெக்ஸ் விஜயராகவன்,

  இந்த 2017 வருடத்தில் மொத்தம் எத்தனை புத்தகங்கள் வரவிருக்கிறது..? எந்த ஹீரோவிற்கு எத்தனை இடம் என அட்டவணையும் நமக்கு வழங்கப்பட்டு,அதற்கான சந்தா தொகையும் கட்டியுள்ளோம் எனும்போது...

  எடிட்டர் எப்படி அதை தவிர்க்க முடியும்..? வரும் மாதங்கள் மாறலாம்.... எண்ணிக்கையில் மாற்றமுடியாதல்லவா.! இந்த மாதம் வந்துள்ள 'லயன் கிராபிக்ஸ் நாவல்' சந்தாவில் இணைந்தது பயணிக்கும் ரசனையில் முதிர்ந்தவர்களுக்கான தடம். அது முகவர்களுக்கோ, கடைதவறாமல் [கடனுக்கு] விற்பனைக்கு அனுப்பும் பட்டியலிலோ சேராது. இந்த கிராபிக்ஸ் நாவல் வேண்டிய வாசகர்களின் தேவையை பணம் கொடுத்து உறுதி செய்த முகவர்களுக்கு மாத்திரமே அனுப்பப்பட்டுள்ளது. அப்படி அனுப்பிய பிரதிகள் அவர்களுக்கு விற்பனையாகவில்லை என்றால் திரும்ப பெறமாட்டாது என்பது அட்டவணையிலேயே குறிப்பிட்டுள்ளார்.

  ஆகையால் இந்த மாதம் எல்லா கடைகளுக்கும் விற்பனைக்கு செல்வது மூன்று புத்தகங்கள் மாத்திரமே.! அதே அடுத்த மாதம் நான்கு புத்தகங்கள் விற்பனைக்கு செல்கிறது. ஐந்தாவது...'பிணத்தோடு ஒரு பயணம்' லயன் கிராபிக்ஸ் என்பதை கவனியுங்கள்.!

  இந்த மாதம் ஒரு எண்ணிக்கை குறைவு, அடுத்த மாதம் ஒரு எண்ணிக்கை கூடுதல் என்பது முகவர்களுக்கு தான் சுமை. இந்த மாதம் ஒரு புத்தகத்தின் விற்பனையை குறைத்துள்ளது எடிட்டருக்குதான் நஷ்டம். அடுத்த மாதம் பள்ளிகள் திறந்து பரபரப்பாக இருக்கும் வேளையில் உபரியாக ஒரு விற்பனை பார்க்க வாய்ப்புகள் குறைவு. இந்த கோடைவிடுமுறையில் கூடுதல் விற்பனைக்கு வாய்ப்பிருப்பது...

  காமிக்ஸ் ஆரம்பித்த காலம் தொட்டே எடிட்டருக்கு தெரியுமே.! இருந்தும்கூட இந்த மாதம் 'டெக்ஸ்' வாராமல் போனதற்கு வேறு காரணங்கள் இருக்கும் என்றே கணிக்கிறேன்.

  இந்த மாத 'லார்கோ' 'கிராபிக்ஸ்' இவை மொழிபெயர்ப்பு செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம். அல்லது அடுத்த மாத 220 பக்க 'டெக்ஸ்' கதை மொழிபெயர்ப்பு செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம்.! அவசரகதியில் 'டெக்ஸ்' மொழிபெயர்ப்பு சொப்பிவிடாமல் தவிர்க்க நினைத்திருக்கலாம்.!! அல்லது பள்ளி புத்தகங்கள் அச்சிடவேண்டியதான ஒரு நெருக்கடி இருக்கலாம்.! இதில் நாம் மூக்கை நுழைப்பது, அதை அவர் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அழகல்லவே.!

  மேலும் இந்த வருட கணக்கில் 'டெக்ஸ்' 11 இதழ்கள் தானே. ஒரு இடம் காலி என்பது [அட்டவணையில் உள்ளது] நமக்கு தெரிந்த ஒன்று தானே.!

  முகவர்கள் வேண்டுகோள் என எடிட்டர் குறிப்பிட்டது ஒரு சமாளிப்பு. அவர்களின் மனமும் சாந்தமாகும்படியான ஒரு பதில்..அவ்வளவே.! அதன் உண்மையான பிண்ணனி காரணங்களை [எடிட்டர் சொல்ல தேவையில்லாமலேயே] புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் நண்பரே.!!

  இது சமாதானம் அல்ல. நிதர்சனமானது.! வேறு எங்கோ காட்ட வேண்டிய உங்கள் உணர்வுகள் தடம் மாறிவிட்டதாவே உணர்கிறேன். விழித்துக்கொள்ளுங்கள் நண்பரே.!!

  நட்புடன்,
  மாயாவி.சிவா

  பின் குறிப்பு : கி.நா படிச்சுட்டு இருக்கேன், அலசலுக்கு தயாராகுங்கள்..!

  ReplyDelete
  Replies
  1. நண்பர்கள் மாயாவி சிவாவுக்கும் செந்தில் சத்யாவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் சில விளக்கங்களின் மூலமாக என்னுடைய குழப்பத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.இந்த நேரத்தில் ப்ளூபெரி நாகராஜனுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். காமிக்ஸ் உலகைப் பொருத்தவரையில் நான் நேற்றுப் பிறந்த குழந்தை..ஆகவே பிரிந்துசென்ற நபரும் நம்முடன் வந்து இணைவாரேயானால் நான் மகிழ்வேன்.

   Delete
  2. பிரகாசம் சார்.!

   அவர் ஒரு நல்ல & இனிய நண்பர்.! ஏன் அப்படி கூறினார் என்று புரியவில்லை.!ஒரு வேளை டெக்ஸ் இல்லை என்றுஔகோபமோ என்னவோ.???

   Delete
  3. டெக்ஸ் வி.ராகவனின் கோபம் கி.நா போலவே சிக்கலானது.

   எடிட்டர் 23,april 2017 பதிவில்...

   //சின்னதாயொரு கசப்பு மாத்திரையும் இங்கே ! "மாதம்தோறும் maximum 4 இதழ்களுக்கு மேலாக வேண்டாமே - ப்ளீஸ் ?! கடைகளில் வாங்க வரும் வாசகர்கள் அவற்றுள் ஏதேனும் மூன்றை மட்டும் தேர்வு செய்து வாங்கிடும் போது எப்படியும் 1 இதழ் அடிவாங்கி விடுகிறது ! இதில் நீங்கள் இதழ்களின் எண்ணிக்கையைக் கூட்டி விட்டால் அம்மாதம் சேதாரம் ஜாஸ்தியாகிப் போகிறது !" என்று நமது முகவர்கள் சொல்லி வருவது சமீப நாட்களது நடப்பு ! அவர்களது கூற்றிலும் நியாயம் உள்ளது என்று தோன்றுவதால் - இதழ்களின் எண்ணிக்கை வரம்பை 4-ஐத் தாண்டிட இனி வரும் நாட்களில் அனுமதிக்க வேண்டாமே என்று தோன்றுகிறது ! So சந்தா E-க்கு வழி விடும் பொருட்டு இம்மாதம் மட்டும் 'தல' தலைகாட்டாது இருந்திடுவார் ! சமீப சமயங்களில் - டெக்ஸ் இலா மாதமே லேது என்றிருந்ததை இந்த மே மாற்றிக் காட்டிடுகிறது ! So "கவரிமான்களின் கதை" யோடு டெக்ஸ் ஜுனில் காத்திருப்பார் ! //

   இப்படி குறிப்பிட்டிருந்தார், இதன் எதிரொளியாக...சரண் செல்வி //ஏஜெண்ட்கள் சொன்னார்கள் புடலங்காய் சொன்னார்கள் என்று 4 புத்தகத்திற்காக எங்கள் தல புக்கை வெட்டியது மனதிற்கு மிகவும் கஷ்டமாகி விட்டது.// என வருத்தங்களை பதிவிட்டார்.

   பதிலடியாக ஏஜெண்ட் பிரகாசம் //மேலும் ஏஜெண்டுகள் சொல்கிறார்கள் என ஆசிரியரே குறிப்பிடாதபோது நீங்கள் ஏன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுகிறீர்கள்..!// என வினா எழுப்பினார்.

   இந்த இடத்தில் எடிட்டர் "சரண் செல்வியின் வருத்தத்திற்கு என் சின்னதாயொரு கசப்புபதிவே காரணம், உண்மையில் பத்து டெக்ஸ்வில்லர் கதைகளே இந்த வருட கோட்டா என்பதால் இரண்டு மாதங்கள் துண்டு விழும், அதை இப்படி சரிகட்டி சொல்லிவிட்டேன். இதை வேறுவிதத்தில் ஈடுகட்டிடுவோம்.!" ன்னு பதில் சொல்லியிருந்தால் நிறைய டெக்ஸ் ரசிகர்களுக்கு பாலை வார்த்தபடி இருந்திருக்கும். உண்மையில் பிரகாஷம் புரிதலில்தான் சின்ன குழப்பம்அ;வர்பக்கமும் தவறில்லை,காரணம்... நம் தளத்தில் நிகழ்வுகளை ஒரே வாரத்தில் புரிந்துகொள்வது என்பது கி.நா. அல்லவா..!

   இவ்வளவுதான் விஷயம்..! ஆனால் எது நதிமூலம்.? எது ரிஷிமூலம்.? என ஆராய்ந்து பதிலிட எடிட்டருக்கு ஆசையிருந்தாலும் கூட...நேரமில்லை என்பதே சத்தியமான நிதர்சனம்.! [சுவப்பா...விடுமுறைக்கு பின் வீடுவந்து...படிக்காத மூன்று பதிவுகள் & ஆயிரம்+ கமெண்ட்ஸ்களில் பாதியை ஒரு பக்கம் படித்துவிட்டு...வந்த நான்கு புத்தகங்களும் முடித்து விட்டு...சுவரோசு சுவராக நாக்குதள்ளி உட்கார்ந்திருப்பதை பாத்து என் மனைவி ஆம்புலன்சுக்கு போன் போட்டாலும் போடலாம்....முடியலை...இதுல 'பேனா போன போக்கில்' பதிவை மட்டும் படிக்காதிங்க மாயா ஸார் என பீதியை வேற கிளப்புறாங்க....உஸ்ஸ்ஸ்....3000 வாட்ஸ்ஆப் கமெண்ட்ஸ் ஆல் டிலைட்...]

   Delete
  4. மாயாவி சிவா ..நீங்கள் அப்படியே உண்மையைப் புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள்..உண்மையில் நான் ஏதோ ஆர்வக்கோளாறினால் சில விஷயங்களைக் கவனிக்க மறந்துவிட்டேன்..நண்பர் ஏஜெண்டுகளைப் பற்றிக் குறிப்பிட்டவுடன் "தல"யும் தெரியாத வாலும் புரியாத நான் உடனடியாக பதிலைத் தட்டிவிட்டேன். இனிமேல் இவற்றையெல்லாம் கவனித்து எழுதுவேன் என்றே நினைக்கிறேன் ("நினைக்கிறேன்" என்று சொல்வதன் காரணம் இனிவரும் நாட்களில் என்னையுமறியாமல் நான் ஏதாவது தவறு செய்தால் கூட -அறியாப்பையன் தெரியாமல் பேசுகிறான்-என மன்னித்திடுவீர்களாக)..எது எப்படியிருந்தாலும் வெகு சிரத்தையோடு இந்தப்பிரச்சினையின் பரிமாணத்தை எடுத்துச்சொன்ன நண்பர் மாயாவி சிவாவுக்கும் செந்தில் சத்யாவுக்கும் நன்றிகள் பல..பின் குறிப்பு ; குட்டையைக் குழப்பியதற்காக வருந்துகிறேன்...

   Delete
  5. @ பிரகாஷம் கதிரேஷன்

   உங்கள் பக்கம் ஒரு தவறும் இல்லை;ஏனென்றால் இந்த தளம் அவ்வளவு சிக்கலானது, இதன் நாடியை புரிந்துகொள்ள சில மாதங்கள் ஆகலாம்.ஒரு வாரத்தில் புரிதல் என்பது சாத்தியமேயில்லை என்பதே நிதர்சனம். மற்றபடிக்கு ஜாலியாக விடுங்கள்,உங்கள் பணியை தொடருங்கள் ஸார்.! புதியவர்களை கையாள நிறையவே நாடி தெரிந்தவர்கள் இங்குள்ளனரே.!!

   முடிந்தால் நீங்கள் ராஜேஷ்குமார் நாவல்களின் இரசிகர் என்பதால்...இந்த மாத 'லயன் கிராபிக்ஸ் நாவல்' படித்து நாலுவரி எழுதி அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்களேன்.!

   Delete
  6. சார் ..நான் ராஜேஷ்குமாரின் ரசிகன் என சொல்லமுடியாது.."குற்றம் 23" படம் பார்த்தபிறகு அவருடைய தளத்தைத் தேடினேன்..இருந்தாலும் கிராபிக் நாவலைப் படித்தவுடன் ராஜேஷ் குமார் மட்டுமல்ல வாய்ப்புக் கிடைக்கும் அனைத்துத் தளங்களிலும் நிச்சயம் எழுதுவேன்..

   Delete
 50. Largo.... OK...

  Clifton.... OK...

  ஒரு முடியா இரவு.... 'E' அட்டகாச ஆரம்பம்...

  ஒரு வேண்டுகோள்...

  .... தயவு செய்து Undertakerன் பத்தகத் தலைப்பை மாற்ற வேண்டுகிறேன்...

  ..என்னதான் கதைக்கு aptஆக இருந்தாலும்.... ஏனோ சற்றே மனதை நெருடுகிறது...

  ReplyDelete
 51. லார்கோ..9.8/10

  ஒரு முடியா இரவு..9.6/10

  க்ளிப்டன்..9.5/10

  த.கே.த.பு..8.9/10

  சந்தா E ..exceeded the expectation.செம .

  ReplyDelete
  Replies
  1. Exceed expectation ஆ போச்சு இதை படிக்க இன்னும் ஓரு வாரம் ஆகுமே? நா என்ன பன்னுவேன்.

   Delete
 52. குமுதத்தில் அரசு அவர்கள் நமது காமிக்கைப் பற்றி எழுதியதைப் படித்தேன். வார இதழ்களிலும் சரி நாளிதழ்களிலும் சரி நூல் மதிப்புரை எனும் பெயரில் பல நூல்களை அறிமுகம் செய்கிறார்கள் விமர்சனம் செய்கிறார்கள். காமிக்குகள் அதில் இடம்பெறுவதே இல்லை எனும் குறை ஓரளவு நீங்கியது. குமுதத்துக்கும் அரசுவுக்கும் நன்றி..!

  ReplyDelete
 53. ஒருவழியாக சற்று முன்பு புத்தகங்களைக் கைப்பற்றியாச்சு! ஆனந்தம்!

  'லயன் கிராஃபிக் நாவல்' என்ற பெயரும், கம்பீரமான சிங்கமுக லோகோவும் ( உபயம் : கார்த்திக் சோமலிங்கா) 'அட!' எனும்படியாக அழகாகப் பொருந்திப் போகிறது! லயன் வெளியீடுகளில் வித்தியாசமான கி.நா பாணி கதைகளுக்கு ஒரு அழகான தனித்தடம் உருவாக்கப்பட்டிருப்பதை உணரும்போது 'குபுக்'கென்று ஒரு ஆனந்தம் குடிகொள்ளுகிறது!

  வழக்கம்போல 'ம்...ஹா', தடவல்ஸ், அட்டைப்பட அழகுபார்த்தல் போன்ற சம்பிரதாயங்களைச் செய்தானபின்னே காமிக்ஸ் டைம், அடுத்த வெளியீடு, வருகிறது, வாசகர் கடிதம் இத்யாதிகளை மேய்ந்துவிட்டு முதலில் கையிலெடுத்தது 'ஜாலி டைம்ஸ்' இலவச இணைப்பை!

  விச்சு-கிச்சு : 7/10
  சிரிப்பின் நிறம் சிகப்பு : 10/10
  பூசணித் தலை டைகர் : 8/10
  நல்ல செய்தி/கெட்ட செய்தி : 6/10
  சைலன்ஸ் ப்ளீஸ் : 8/10
  மிஸ்டர் பூனைகாரு : 9/10
  அடடே அப்படியா & இயற்கையின் பாதையில் : 10/10
  ராமு-சோமு : 8/10
  அதிமேதை அப்பு : 7/10

  இந்த 8 பக்க வண்ண விருந்தை அப்படியே இரண்டாக மடித்திருந்தால் அடக்கமான 16 பக்க புத்தகம் ரெடி! அதையே நான்காக மடித்திருந்தால் (அடடே, பாக்கெட் சைஸ்!) 32 பக்க மினி புத்தகம் கிடைத்திருக்குமே என்ற ஆதங்கம்!

  பின்பக்க அட்டையில் Tex-2018 - மிரட்டல்!!!


  ReplyDelete

 54. ஜெரெமயா! ரொம்ப வருடங்களாய்ப் படிக்க வேண்டும் என்றிருந்த, உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காமிக்ஸ் புத்தகம். அதுவும் தமிழில் பிரம்மாண்டமாய் கிடைத்தது பாக்கியம் என்றுதான் சொல்வேன் என குமுதத்தில் 'அரசு' அவர்கள் தனது ஆரம்ப வரிகளில் தெரிவித்திருந்ததைப் பார்த்தபோது 'அப்படியொன்னும் ஆஹா ஓஹோ ரகமாகத் தெரியலே' என்ற ரேஞ்சுக்கு இங்கே விமர்சனம் எழுதித்தள்ளியிருந்த எனக்கு உடனே ஒரு குற்றவுணர்வு வந்து ஒட்டிக்கொண்டது நிஜம்! எனினும், என் கருத்துக்களின் ஸ்திரத் தன்மையை இனி வரயிருக்கும் பாகங்களைக் கொண்டு முடிவு செய்யலாம் என எனக்கு நானே ஒருவழியாக சமாதானம் சொல்லிக்கொண்டேன்!

  'குழுதம்' கைக்குக் கிடைத்தால் நான் தவறாமல் படிக்கும் பக்கங்கள் 'அரசு பதில்கள்'. அவரது பதில்களில் விரவிக்கிடக்கும் ஒருவகை குறும்புத்தனத்துக்கு நான் சிறுவயதிலிருந்தே ரசிகன்! உலகப் புத்தக தினத்தன்று அவர் வாசிக்கத் தெரிவு செய்திருந்த புத்தகம் 'ஜெரெமயா' என்பது மகிழ்ச்சியான விசயமென்றால், அதை குழுதத்தில் (அட்டைப்படத்தோடு) சிலாகித்து எழுதியிருப்பது மகிழ்ச்சியின் உச்சம்!

  மீதி 32 ஆல்பங்களுக்காகவும் காத்திருக்க வைத்துவிட்ட பொக்கிஷம் இது! என அவர் முடித்திருப்பது ஜெரெமயா மீது ஒரு எக்ஸ்ட்ரா மரியாதையை ஏற்படுத்திவிட்டிருக்கிறது!

  இனி ஜெரெமயாவின் அடுத்த பாகங்களைப் படித்திடும்போது எடிட்டரின் அபார உழைப்போடு, கூடவே திரு.அரசு அவர்களின் (இதுவரை நான் பார்த்திராத) முகமும் நிழலாய் வந்துபோகும்!


  ReplyDelete
  Replies
  1. ///மீதி 32 ஆல்பங்களுக்காகவும் காத்திருக்க வைத்துவிட்ட பொக்கிஷம் இது! என அவர் முடித்திருப்பது ஜெரெமயா மீது ஒரு எக்ஸ்ட்ரா மரியாதையை ஏற்படுத்திவிட்டிருக்கிறது!

   இனி ஜெரெமயாவின் அடுத்த பாகங்களைப் படித்திடும்போது எடிட்டரின் அபார உழைப்போடு, கூடவே திரு.அரசு அவர்களின் (இதுவரை நான் பார்த்திராத) முகமும் நிழலாய் வந்துபோகும்! ///

   +1

   Delete
 55. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே,நமது காமிக்ஸுக்கு இப்போதைய தேவை உங்களைப் போன்ற ஆக்கபூர்வமான விற்பனையாளர்கள்தான்.

  ReplyDelete
 56. This comment has been removed by the author.

  ReplyDelete
 57. வாவ்! காலையிலேயே குமுதம் வாங்கிவிட்டேன். இன்னும் பார்க்கவில்லை. இந்த பதிவை இபோது படித்ததும் உடனே அரசு பதில்கள் பகுதியில் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. ”அரசு” முதல் ”தளபதி” வரை நம் காமிக்ஸ் புகழ் பரவியுள்ளது பெருமைபடும் விசயமாக இருக்கிறது.

  ReplyDelete
 58. லைவ் ரிலே...
  கொஞ்சம் டிலே..

  Present sir

  ReplyDelete
 59. ஒரு முடியா இரவு............
  இரவு 10.30க்கு தொடங்கி .....
  நள்ளிரவு தாண்டி படித்து முடித்தாகி விட்டது ......

  காலை ஆறு மணிக்கு .....
  இருக்கிடியோய் உங்களுக்கு என்று பீடிகை போடும் போது .....
  எனக்கு தோன்றியது ...
  இது தான் .....

  செத்தாண்டா சேகரு ......

  ReplyDelete
 60. Bangalore people haven't received the book yet sir :(

  ReplyDelete
  Replies
  1. Giri @ me tooo... i got the courier tracking number from our lion comics office.
   It seems the courier guys are going to deliver today. It is the problem with courier guys because of long week-end on last week!

   Delete
 61. யாரு எந்த ஊர்ல காமிக்ஸ் போடுறாங்களோ தெரியாது ..........
  என்னை பொறுத்த வரை .....
  கதை
  ஓவியம்
  வண்ண சேர்க்கை
  பட்டி
  டிங்கரிங்
  துணுக்கு...
  விசு கிச்சு ...வரை ...
  எல்லாமே காமிக் ஆசான் .....


  இப்பிடி தான் வளர்ந்து இருக்கேன்.....

  டூ டூ மச்.....
  சொன்னாலும் பரவாயில்லே ......சார்

  இப்பிடியே இருந்துட்டு போறேனே .....
  ஏங்கிறீங்க....

  ReplyDelete
  Replies
  1. பின்றீங்க மந்திரியாரே!
   ஆயிரம் லைக்ஸ்!

   Delete
  2. மிக்க நன்றி வெள்ளை பூனையாரே.....!!!!

   Delete
 62. Hi editor sir, please ready an another option to pay amount by PAYTM.

  ReplyDelete
 63. ஒரு முடியா இரவு....


  என்ன சொல்வது...எப்படி சொல்வது ..எப்படி விவரிப்பது ...எதுவுமே தெரியவில்லை..ஒரே வார்த்தையில்...ஒரே வரியில் " அட்டகாசம் " என சொல்லலாம் என்றாலும் கூட படித்து முடித்த அடுத்த வினாடி இங்கே வருகை புரிவதாலும் ..க்ளைமேக்ஸின் அதிரடி திருப்பம் ...ஒரு வித ஆதங்கத்தை..ஏன்...பாரத்தை என கூட சொல்லலாம் அந்த வார்த்தையையும் இட தோணவில்லை என்பதே உண்மை...அந்த மனநோய் விடுதியில் உட்புகுந்து நானும் அந்த டேனியலின் கூட்டாளியாய் மாறி போனது நிஜமோ நிஜம்..அவர்களின் மேல் ஆரம்பத்தில் ஏற்பட்ட கருத்து கதை பயணம் பயணமாக செல்ல இறுதியில் அவர்களின் மேல் பரிதாபமே ஏற்பட்டது..அவர்கள் தவறானவர்கள் என்ற போதிலும்..அதிலும் டேனியலின் முடிவு...ம்ஹீம் நினைத்தே பார்க்க முடியா ஒன்று..இதனிடையில் எதிர்பாரா திடீர் திருப்பங்கள் ..இவற்றை எல்லாம் இங்கே நான் பகிர விரும்ப வில்லை...நண்பர்கள் படித்து திகைகட்டும் .ஒரு மனநல விடுதியில் கதை களம் சென்றாலும் அழுகாச்சியோ ..சோகங்களோ இல்லாமல் ஒரு க்ரைம் திரில்லர் ஆக கொண்டு சென்ற கதை ஆசிரியருக்கும்..எந்த தடுமாற்றமும் இல்லாமல் மனநல விடுதியில் நானும் அங்கத்தினாய் இருக்க வைத்த தங்கள் மொழி பெயர்ப்பிற்கும் எழுந்து நின்று பாராட்டுகிறேன் சார்..(இந்த வரியை உண்மையிலேயே எழுந்து நின்று டைப் செய்கிறேன் சார்..).


  இந்த முடியா இரவில் நானும் களத்தில் இருந்த அனுபவம் ஏற்பட்டாலும் நான் டேனியல் குரூப்பா...காவலர்களின் குரூப்பா..மருத்துவர்களின் குரூப்பா ..இல்லை அந்த மனநோயாளிகளின் குரூப்பா சத்தியமாக புரியவில்லை சார்..ஆனால் ஒரு இதழை படித்து விட்டு அதன் தாக்கம் சில நிமிடங்களுக்காவது இருப்பதே சிறந்த படைப்பு.இந்த "முடியா இரவு"..சில நிமிடங்கள் அல்ல சில மணி நேரங்களுக்கு எனக்கு நீடிக்கும் என்பதே உண்மை...காரணம் நானும் பத்து வயது சிறுவன் போல தான்...


  எனது வழக்கமான நன்று ..சூப்பர் ..பரவாயில்லை ..சுமார் போன்ற மதிப்பெண்கள் இதற்கு இட முடியாது சார்..இந்த படைப்பு இந்த மதிப்பெண்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒன்று ..


  இன்னும் கதையை பற்றி ஒவ்வொரு பக்கத்தையும் பாரா பாராவாக பாராட்டி எழுத தோன்றினாலும் மனது அந்த மனநோய் விடுதியிலேயே சுற்றுவதால் வரிகள் தோன்ற வில்லை சார்...இறுதியாக ..உறுதியாக ஒன்றே ஒன்று  உங்களின் முதல் கிராபிக் நாவலே முத்தான படைப்பு...

  ReplyDelete
  Replies
  1. ///இறுதியாக ..உறுதியாக ஒன்றே ஒன்று   உங்களின் முதல் கிராபிக் நாவலே முத்தான படைப்பு...///

   கிநா என்று ஒரு பேச்சுக்கு சொன்னால்கூட ஃபாரினுக்கு பஸ் ஏறிடும் தலீவரே ரொம்ப சிலாகித்து எழுதியிருப்பது. . .,

   லயன் கிராபிக் நாவல் வரிசை அடுத்த அடுத்த ஆண்டுகளில் இன்னும் அதிகப்படுத்தி மாதம் ஒரு LGN வெளியிட வேண்டுமென்றும்,

   தவறினால் போராட்டக்குழுவின் பலவிதமான போராட்டங்களை எடிட்டர் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மறைமுகமாக விடப்பட்டிருக்கும் அறைகூவலாக்கும். .! :-)

   Delete
  2. காரணம் நானும் பத்து வயது சிறுவன் போல தான்...
   🔫🔫🔫🔫🔫
   அப்போ நீங்களும் டுப்பாக்கி கேப்பீங்களா

   Delete
  3. தவறினால் போராட்டக்குழுவின் பலவிதமான போராட்டங்களை எடிட்டர் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மறைமுகமாக விடப்பட்டிருக்கும் அறைகூவலாக்கும். .! :-)


   ஹாஹா....:))))

   Delete
  4. @தலீவர். அப்ப இது மாஸ் ஹிட்.

   Delete
  5. தலைவரின் பதவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருகிறேன்.!

   Delete
  6. பின்னிப் பெடலெடுத்துட்டீங்க தலீவரே!! ( உடனே அந்த சைக்கிள் பெடலை பையிலேர்ந்து வெளியே எடுத்து வைக்கறீங்க பாருங்க... அங்க நிக்கறீங்க தலீவரே!)

   இதுநாள்வரை 'கி.நா எனக்கு வேணா' கும்பலின் பிடியில் சிக்கியிருந்த எங்கள் தங்கத் தலீவர், இன்றுமுதல் அதிலிருந்து முற்றிலுமாக வெளியேறி, இனி 'கி.நா இல்லாம நானா?' கழகத்தின் தலீமை பொறுப்பை ஏற்றுக் கழகக் கண்மணிகளை வழிநடாத்திச் செல்வார் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்!

   Delete
  7. தலைவரின் பதவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருகிறேன்.!


   #####


   படிச்சு முடிச்சவுடன் "தலீவர்" பதவிக்கே போட்டிக்கு வருவீங்க மாடஸ்தியாரே...:-)

   Delete
 64. சார் அருமை...இன்னும் சில படி உயர நிச்சயம் இதும் உதவட்டும்...நல்லவர்களை வெற்றி தேடி வரட்டும்...ஜாலி ஸ்பெசல் பூசனி டைகர தவிர அனைத்தும் அருமை...

  ReplyDelete
 65. காரணம் நானும் பத்து வயது சிறுவன் போல தான்...
  🔫🔫🔫🔫🔫
  அப்போ நீங்களும் டுப்பாக்கி கேப்பீங்களா

  ReplyDelete
  Replies
  1. கேக்குறோனோ இல்லையோ நண்பரே இப்ப எனக்கு டுப்பாக்கி கிடைச்சா கண்டிப்பா பாதுகாப்பு வால்வை ரிலீஸ் பண்ணிட்டு தான் வாங்குவேன் ...:-)))

   Delete
  2. தலீவர் பிளந்து கட்டி எழுதியுள்ள விமர்சனமே LGN க்கு ஒரு அட்டகாச விசிட்டிங் கார்ட் என்று சொல்லலாம் போலும் !!

   Delete
 66. ***** கர்னலுக்கொரு சிறுத்தை *****

  என்னுடைய ரேட்டிங் : 10/10

  முகபாவங்களாலேயே சிரிக்க வைப்பதில் ஷெரீப் டாக்புல்லை மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது நம் காமெடி கர்னல்! பல இடங்களில் சித்திரங்களே சிரிக்க வைத்திடுகின்றன என்றால், கூடவே நம் எடிட்டரின் கெக்கபிக்கே வசனங்களும் சேர்ந்துகொண்டால்...? ஹா ஹா ஹா... சிரிச்சு மாளலை சாமி! :))))))))

  ஒவ்வொரு ஃப்ரேமையும் சிலாகிக்கலாம், சிரிக்கலாம் - அவ்வளவு விசயங்கள் உள்ளது! குறிப்பாக ஆரம்பப் பக்கங்களில் கர்னலும், சிறுத்தையும் அடிக்கும் கூத்துகள் விலாநோக வைத்திடும் சிரிப்பு வெடிகள்! ( காரின் பின்சீட்டில் உட்கார்ந்தபடி சிறுத்தையை கிளிப்டன் திட்டுவதும், அதற்கு தேம்பித் தேம்பி அழும் சிறுத்தையும், அதை சமாதானப் படுத்த கர்னலின் கொஞ்சல்களும் - ஹா ஹா ஹா - சிரிச்சு மாளல!)

  கர்னல் கிளிப்டனின் அதிதீவிர ரசிகனாக மாறிக்கொண்டிருக்கிறேனோன்னு ஒரு டவுட் வருது!

  அந்த சிறுத்தைக்கு இன்னும் அதிக வாய்ப்புக் கொடுத்திருக்கலாமோ என்ற ஏக்கமும் எழுகிறது!  ReplyDelete
  Replies
  1. அப்துல்லா : சிறுத்தையை சொன்னாரு.....கர்னலை சொன்னாரு ...கதை முழுக்க விலா நோக சிரிக்க வச்ச என்னைய ஈரோட்டுக்கார் சொல்லாம விட்டுட்டார் ...

   அது ஏன்கிறேன்? இந்த கொடுமை எனக்கு மட்டும் ஏன்கிறேன்?...

   Delete
  2. ////அது ஏன்கிறேன்? இந்த கொடுமை எனக்கு மட்டும் ஏன்கிறேன்?...///

   ஹா ஹா ஹா...

   நான் மிகவும் ரசித்த வசனங்களில் இதுவும் ஒன்று! இனி நம் நண்பர்களிடையேயும் இது கொஞ்ச நாளுக்கு உலா வரும்; குறிப்பாக கொரியர் வந்துசேராத நாட்களில்! :)

   Delete
  3. ஈரோடு விஜய் : நிஜத்தைச் சொல்லவா ? கேரட் மீசைக்காரரின் கதைகளை ரொம்பவே யோசித்து -யோசித்துத் தான் தேர்வு செய்தென் 2017 -ன் அட்டவணைக்கு !

   நம்மவர்களில் இன்னமும் ஒரு 30% க்கு குறைவிலா நண்பர்கள் கார்டூன்களா ???? என்று கஷாயப் பார்வை பார்ப்பதில் இரகசியமில்லை தானே ?! அப்படியே கார்ட்டூன்களை ஏற்பதாக இருப்பினும், லக்கி லூக் & சிக் பில் என்ற ஆதர்ஷ, நெடுநாள் பரிச்சய நாயகர்களைத் தாண்டிப் பார்வைகளை பதிக்க ரொம்பவே பிரயத்தனப்படுகின்றனர் என்பதும் தெரிந்த சமாச்சாரமே ! இந்நிலையில் கிளிப்டன் போன்ற ஜாலி ஆக்ஷன் பார்ட்டிகளை நம்மவர்கள் எவ்விதம் ரசிப்பார்களோ ? என்றதொரு மெல்லிய பதைபதைப்பு எனக்குள் எப்போதுமே இருந்திடுவதுண்டு ! சித்திரங்களில் ஒரு கண் ; கதையோட்டத்தில் ஒரு கண், சின்னச் சின்ன நகாசு வேளைகளில் கவனம் என்ற ரீதியில் கேரட் மீசைக்காரரை ரசிப்பது அவசியமல்லவா ?

   மொழிபெயர்ப்பிலும் இயன்றளவு சிரிப்பு மூட்ட முனைவதை இங்கு முக்கியமாய் நான் கருதிடுவது - கார்ட்டூன் அபிமானம் குறைவாயுள்ள நண்பர்களையும் கவர்ந்திடும் யுக்தியாகவே !! சில நேரங்களில் சுலபப் பணிகளின் பின்னேயும் நிறைய சித்தனை அவசியமாகிடுகிறது - நண்பர்களுள் உள்ள ரசனை வேற்றுமைகளை balance செய்வதில் !!

   Delete
  4. ////நம்மவர்களில் இன்னமும் ஒரு 30% க்கு குறைவிலா நண்பர்கள் கார்டூன்களா ???? என்று கஷாயப் பார்வை பார்ப்பதில் இரகசியமில்லை தானே ?!////

   சமீபத்தில்கூட இதை எண்ணி வியந்ததுண்டு சார்! கெக்பிக்கே என்று சிரித்துதள்ளியோ, அல்லது குறைந்தபட்சம் ஒரு புன்முறுவல் புரிந்தோ நம் மனதை லேசாக்கிக்கொள்ள காமிக்ஸ் ரசிகர்கள் என்ற வகையில் நமக்குக் கிடைத்த வரமல்லவா இந்தக் கார்ட்டூன்கள்? ( அந்தக் கார்ட்டூன்களை தாய்மொழியிலேயே ரசிக்கும் பாக்கியம் பெற்றவர்களல்லவா நாங்களெல்லாம்?)
   'கார்ட்டூன்களை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை' என்று சொல்லும் நண்பர்களைப் பார்த்து திக் பிரம்மை அடைந்தவன் போல விக்கித்து நிற்கவே முடிகிறது! "நிறைய சிரிக்கலாம். கொஞ்சம் முயற்சி பண்ணுங்களேன் பாஸு" என்று கோரிக்கை வைத்திடவும் தோன்றுகிறது! அவர்களுடன் கொஞ்சநாள் கூடவே இருந்து 'அவர்கள் என்னமாதிரியான விசயங்களுக்கெல்லாம் சிரிக்கிறார்கள்' என்று ஆராய்ச்சி செய்து ஒரு ஆய்வுக்கட்டுரை தயார் செய்திடவும் ஆசை எழுகிறது!

   ஹூம்... மனிதர்களின் ரசணைகளில்தான் எத்தனை விதங்கள்!! என்னவோ போங்க எடிட்டர் சார்!

   Delete
  5. ஈரோடு விஜய் : அது என்கிறேன் ?

   Delete
  6. நண்பர் ஈரோடு விஜய் அவர்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். கார்ட்டூன் கதைகள்தான் மனதை இலேசாக்குகிறது.

   Delete
 67. லார்கோ கதையை படித்து முடித்துவிட்டேன்.!

  வான்ஹாமே விடைபெறப்போகிறார் என்ற மனபாரத்துடனும் ஏக்கத்துடன் இன்றே கடைசி என்ற சினிமாவை பார்க்கும் உணர்வோடு நிதானமாக ரசித்து படித்தேன்.

  அற்புதமான கதை.! வளர்ப்பு மகன் லார்கோ என்று தெரிந்தும் மட்டமாக நடக்கும் லாக்வுட் தலையில் கண்டெயினர் விழுந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். லார்கோ நண்பர் அனைவரும் செட்டிலாகி கொண்டிருக்கும் சமயத்தில் சைமனுக்கும் கால் கட்டு போட்டுவிடுவார்களோ என்ற விறுவிறுப்பு பதைபதைப்பு + காமெடியுடன் ரசித்து படித்தேன்.மொத்தத்தில் அன்பே வா.,காதலிக்க நேரமில்லை,எங்கவீட்டு பிள்ளை,உள்ளத்தை அள்ளித்தா படங்களை பார்த்தது போல் நிறைவான க்ளைமேக்ஸ்.!எனக்கு மிகவும் பிடித்து விட்டது.!

  ReplyDelete
  Replies
  1. மாடஸ்டி வெங்கடேஸ்வரன். : வளர்ப்பு மகனிடமே சரசமாடத் துணியும் அந்தக் கதாப்பாத்திரம் தான் எனக்கும் நெருடியது சார் ! ஆனால் கதையோட்டத்தோடு கலந்த சங்கதி என்பதால் கை வைக்கவில்லை !

   Delete
  2. ///அன்பே வா.,காதலிக்க நேரமில்லை,எங்கவீட்டு பிள்ளை,உள்ளத்தை அள்ளித்தா படங்களை பார்த்தது போல் நிறைவான க்ளைமேக்ஸ்.!எனக்கு மிகவும் பிடித்து விட்டது.!///


   சூப்பர்!

   Delete
  3. ///வளர்ப்பு மகனிடமே சரசமாடத் துணியும் அந்தக் கதாப்பாத்திரம் தான் எனக்கும் நெருடியது சார் ! ஆனால் கதையோட்டத்தோடு கலந்த சங்கதி என்பதால் கை வைக்கவில்லை !/////


   ''காரியத்தில்''
   சைமன்

   லார்கோ

   பைலட்

   கோ பைலட் .....


   இவர்கள் எல்லாம் ''அதிரடி ஹெர்குலஸ்''... மூசாவை மிஞ்சிவிட்டார்கள்...


   அந்த மென்டல் கருவியும் மூசாவும் அடிக்கிற கூத்தை .......ஒளிச்சு ஒளிச்சு படிச்சது ஒரு காலம் ........

   ஹி ஹி

   Delete
  4. ஒ!என்னுடைய கலெக்ஷனில் அதிரடி வீரர் ஹெர்குலஸ் இல்லை.என்னவோ தெரியலை இரண்டு நாட்களாக இக் கதை நினைப்புதான்.நீங்கள் குறிப்பிட்ட பிறகுதான் உணர்ந்தேன்.சைமன் கேரக்டர் மூசாவை நினைவுபடுத்தி உள்ளதுபோலும்.!

   Delete
  5. கலெக்ஷனில் அதிரடி வீரர் ஹெர்குலஸ் இல்லையா .......யாரிடமாவது வாங்கி முதலில் படியுங்கள் .....ஆயுள் கூடும் ...

   :)

   Delete
 68. நெஞ்சிலே வஞ்சம் குடிகொண்டால் எந்த
  எல்லைக்கும் பெண்கள் செல்வார்கள்
  என்பதை உணர்த்தும் கதாபாத்திரம் அது.
  கதையின் முக்கிய பாத்திரம் வில்லி
  தவிர்க்க முடியாத பெண்.லார்கோ இது
  வரை சந்தித்த வில்லன்கள் 1-2 வருடத்தில் தோன்றியவர்கள். லார்கோ
  பிறக்கும் முன்பே வில்லியாக உருவானவள் ஸிபில்.அந்த வகையில்
  ஸிபிலே சிறப்பான வில்லி.ஸிபில் இல்லையேல் இந்த கதையே இல்லை.

  ReplyDelete
 69. ***** ஒரு முடியா இரவு ******

  'பல மாதங்களாக எதிர்பார்த்து ஏங்கிக்கிடந்த சந்தா-E உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறதா?' என்று யாராவது என்னிடம் கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு "ஆமா ஆமா ஆமா" என்பேன்!
  இது.. இது.. இதைத்தான் எதிர்பார்த்தேன். என்னாவொரு வித்தியாசமான கதையமைப்பு! எத்தனை ட்விஸ்ட்டுகள்!!
  கூட்டியோ குறைத்தோ கொஞ்சம் நகாசு வேலைகள் செய்தால், இதில் வரும் கும்பலின் தலைவன் டேனியலின் கதாபாத்திரத்திற்கு கமலை நடிக்கவைத்து, மனதைத் தொடும் ஒரு திரைப்படத்தை எடுத்துவிட முடியும்!

  மூன்று உறுத்தலான விசயங்கள் :
  * வண்ணத்தில் வந்திருக்கலாம்
  * பொதுவாக, கி.நா'க்களில் வசனங்கள் சற்று குறைச்சலாகத்தான் இருக்கும். இதிலோ, வசனங்கள் சற்றே கூடுதல்!
  * இந்தக் கதையை 'சைக்கோ-த்ரில்லர்' என்று அடையாளப்படுத்தியிருப்பது சரியாகப் பொருந்துமா? ( செனா அனா ஜி... விளக்கம் ப்ளீஸ்!)

  LGN - தனது முதல் ஆட்டத்திலேயே முத்திரை பதித்திருக்கிறது!

  எனது ரேட்டிங் : 9.75/10

  ReplyDelete
  Replies
  1. கண்ணை மூடிக்கொண்டு "ஆமா ஆமா ஆமா" என்பேன்!
   அதே athey

   Delete
  2. ///இந்தக் கதையை 'சைக்கோ-த்ரில்லர்' என்று அடையாளப்படுத்தியிருப்பது சரியாகப் பொருந்துமா?//

   நீங்கள் நினைப்பது சரிதான் ஈனா வினா ....

   சைக்கோ-த்ரில்லர் -ன் இலக்கண வரம்பு எதையும் கதை தொடவில்லை ..

   அட்டகாசமான க்ரைம் -த்ரில்லர் என்பது உண்மை ....

   Delete
  3. // வாசனங்கள் சற்று அதிகம்.//

   ஈரோடு விஜய்.!

   நான் புத்தகத்தை புரட்டும் போதே கவனித்தேன்.இடையில் சில பக்கங்கள் மட்டுமே வசனங்கள் இல்லாமல் இருப்பதை கவனித்தேன்.!


   அந்த புத்தகத்தை புரட்டியபோது , ஆரம்ப கால திகில் காமிக்ஸை நினைவு படுத்தியது.!ஆகவே கடைசியில் படித்துக் கொள்ளலாம் என்று ஓரங்கட்டிவிட்டேன்.!


   தலைவரை கி.நா.ரசிகர் ஆகிவிட்டாரே என்று நம்பி கொஞ்சம் மிரண்டுதான் போனோம்.!

   அதானே.? நாங்கள் சேர்த்த கூட்டமல்ல.! அதுவா உணர்வோடு சேர்ந்த கூட்டமல்லவா எங்கள் கூட்டம்.!.!

   Delete
  4. ஈரோடு விஜய் : குறைகளுக்கு வழக்கம் போல கவனம் தருகிறேனே :

   1 .இதன் ஆக்கமே black & white -ல் தான் எனும் பொழுது - கலருக்கு ஞான் எங்கே செல்லும் ?

   2 .வசனங்கள் இந்தக் கதையின் ஜீவநாடி...! சித்திர பாணியில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அட்சர சுத்தமாய்ப் பிரித்துக் காட்டும் பாங்கு இங்கில்லை எனும் பொழுது - இது யார் ? அது யார் ? என்ற குழப்பங்கள் வாசிப்பின் நடுவே தலைதூக்கிடக் கூடாதென்று நினைத்தேன் ! So இயன்ற மாட்டிற்குத் தெளிவாய் வசனங்களை அமைக்கும் அவசியத்தின் பொருட்டு - சுருக்கமாய் எழுத முயற்சிக்கவே இல்லை ! தவிர, ஒரிஜினலிலேயே வசனங்களும் ஜாஸ்தி !

   3 ."சைக்கோ -த்ரில்லர்" என்று நான் எழுதியிருந்தது - ஒரு "சைக்கோவின் த்ரில்லர்' என்ற அர்த்தத்தில் அல்ல ! Psychological thriller என்று பொருள்படும் விதமாகவே !!

   பாருங்களேன் விக்கிப்பீடியா காரு இதுபற்றி என்ன பறைகிறாரென்று : "Psychological thriller is a thriller story which emphasizes the unstable psychological states of its characters! the category is a sub-genre of the broader ranging thriller category"

   மேற்கண்ட வரிகளை நமது கதையோடு ஒத்துப் பாருங்களேன் ?!

   Delete
 70. கர்னலுக்கொரு சிறுத்தை!

  மிஸ்டர் பீம் போலவே ரெண்டு பேர் அமரும்படியான சிண்ணுடு கார். அதை ரிபேர் செய்ய ஒரு குடோன் நிறைய சாமான்கள் வாங்கி, பொறுப்பாய்(?) சரிசெய்யும் அருமையான(!) மெக்கானிக்.

  அந்த மெக்கானிக் நீட்டும் பில் பார்த்து நொள்ளையாகி போன கண்களுடன் அங்கிருந்து 'ஜூட்' விடும் கர்னல்...அடுத்த தெருவிற்கு வந்து காரை விட்டு இறங்கி "ஸும்மா சொல்லப்படாது,சொக்க தங்கமாட்டம் ஜொலிக்குதுடோய்!" என குத்தாட்டம் போடுவதில் துவங்குகிறது கதை.!

  பூனை பிரியரான கர்னல் [இங்கு ஒரு வாசகி பூனைகளின் படங்கள் உள்ள பெத்தபுக் பரிசுதான் நியாபகம் வருது..ஹீ..ஹீ..] கடையில் நுழைந்ததும்...
  "சிக்கிட்டாண்டா கேரட் மண்டையன்!" என ரெண்டறிவு கிளியே கலாய்க்கிறது.

  பூனைக்கு தீனி வித்தே..அதுவும் கர்னலுக்கு விற்றே கடைநடத்தும் ஓனர் தரும் வரவேற்ப்பும், அவரின் பாராட்டு அறிவிப்பும் செம கலாய்; இங்கு கவனிக்க வேண்டியது பிரிட்டிஷ் கவர்மெண்ட் உளவாளிகளுக்கு பணத்தை வாரியிறைப்பதும்,உளவாளிகளுக்கு பணம்பற்றிய விஷயத்தில் ஞானம் பூஜ்யம் என்ற மறைமுகதகவல் அதைவிட கலாய்ப்பு.

  பஞ்சுமிட்டாய் காரை கடுப்பில் ஓட்ட,காதுகிழியும் 'ஐயையோ..க்ரீச்ச்ச்ச்சச்ச்ச்' அலறல்கள் மிக்சாகி முத்தமிடம் அளவில் நிற்க..கட்டை விரல் கீறல் அளவு காரில் அடிவிழ...அதற்கு காரோட்டியவள் 'பசக்' என பேண்டேஜ் ஒட்டுவது கர்னலை விழுந்து விழுந்து அழவைக்க....நம்மை விழுந்து லிழுந்து சிரிக்கவைக்கிறது.! இங்கு கவனிக்க வேண்டியது கர்னல் மெதுவாக வரவேண்டிய சாலையில்அதிவேகமாக வருவதை குறிக்கும் ப-8 வளைந்த சாலை குறியீடுகள்.!

  பெட்டி பெட்டியாய் பூனைக்கு தீனியுடன் கர்னல் வர, காத்திருந்த பூனைகள் ஜெட் வேகத்தில் பாய்ந்து அதை பறிக்க...அதை அந்தரத்திலேயே பிரிச்சு மேய்ந்து கபாளீகரம் செய்வதும், "இதுக்கு மேலே புதுசா என்ன இழவு கொட்ட முடியும்டா சாமீ?" என புலம்பும் கர்னலுக்கு 'ணங்' என பதில் கிடைத்து உச்சந்தலையில் முட்டை விழுவது...ஹாஹஹாஹாஹா...; இங்கு கவனிக்கவேண்டியது பூனைகள் வந்த வேகத்தில்திரும்ப ஓடும்போது இரட்டை சைஸில் ஓட்டம் பிடிப்பது மட்டும்மல்ல..."புடிக்கலை! இந்த பூனைகளையும் புடிக்கலை...அதுக பண்ற அழிச்சட்டியங்களும் புடிக்கலை!" என கர்னல் காது கிழிய சவுண்டு விடுவது, சட்சாத் பூனையாரை பாத்து சிங்கமுத்து வாத்தியார் புலம்புற மாதிரிக்கீது..ஹீ..ஹீ.. :P

  தொடரும்

  ReplyDelete
  Replies
  1. ////புடிக்கலை! இந்த பூனைகளையும் புடிக்கலை...அதுக பண்ற அழிச்சட்டியங்களும் புடிக்கலை!" என கர்னல் காது கிழிய சவுண்டு விடுவது, சட்சாத் பூனையாரை பாத்து சிங்கமுத்து வாத்தியார் புலம்புற மாதிரிக்கீது..ஹீ..ஹீ.. :P ///

   ஹிக்!

   Delete
  2. மக்களே .....!!! இதிலே உள்குத்து..வெளிக்குத்து...நடுக்குத்து...என்று எது இருப்பினும், அதற்கு நான் பொழுப்பல்ல....சாரி...பொறுப்பல்ல !!

   Delete
  3. மக்களே...!!! நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை...ஹீ..ஹீ...! பினிஸிங் டச்சிங் படித்து எல்லோரும் துண்டை காணும்..துணியை கானும்ன்னு ஓடினா,அதற்கு நான் பொழுப்பல்ல....சாரி...பொறுப்பல்ல !! :P

   Delete
  4. ஹீ ஹீ... எடிட்டர் சமூகம் அப்பாவி பூனைகளை ஒருபோதும் வெறுப்பதில்லை!

   ( இந்த நேரத்தில் எனக்கு ஏனோ 'கர்னலுக்கொரு சிறுத்தை'யில் காரின் பின்சீட்டில் கதறியழும் சிறுத்தையும், கர்னலின் கொஞ்சல்களும் ஞாபகம் வருகிறது!)

   :D

   Delete
  5. -2-
   கர்ர்ர்ரர்ர்ர்ர்-------என உறுமும் சிறுத்தையிடம் "இந்த அம்மணிதான் கோபமா இருக்கங்களாக்கும்?" என விருட்டென திரும்பும் கர்னல்..

   மொக்கையான பூனை நீ !
   சத்தம் காட்டாமப் படு!
   மூச் காட்டப்படாது! கபர்தார்!
   என பயங்கர சவுண்டுடன் ஒரு அதட்டு அதட்ட... அடுத்த நிமிடம் அரண்டுபோய் கம்பளத்தில் பல்லிபோல படுத்து விசும்ப, "...போறச்சே இந்தக் கால்மிதியையும் மறக்காம எடுத்திட்டுக் கிளம்பு!" என கர்னல் கதறும்போது இங்கு நாம் கவனக்க வேண்டியது....அதட்டுனா அதட்டலில் அந்த சிறுத்தை கம்பளத்தில் 'உச்சா' போய்ட்டதுங்கிறதே.

   "ஹல்லோ.....ஹல்லல்லோ.."
   "ஆமாரரரரர!! நானே தான்!!"
   "அதுக்கு என்னாங்கிறே இப்போ??"
   "முடியாதுன்னு நான் இங்கே தலையாட்டிட்டேன்!"
   "திட்டவட்டமா,தீர்மானமா,தீர்க்கமா முடியாது!"

   'டமால்' 'மடேர்' என அரங்கமே அதிரும்படி மறுப்பு சொல்லும் கர்னல்...அடுத்த பக்கத்தில் பிரிட்டன் ராணியார் பேசும்போது, அப்படியே உள்டாவாக பேசுவது என் காதுகளில் என்ன கேட்டிச்சி தெரியுமா.!

   சரிங்க மோடிஜி! இல்லிங்க மோடி ஸாப்! நிச்சயமா மோடிஜி! வாழ்க மோடி சர்கார்! உத்தரவுங்க மோடி ஸாப்!

   மோடிஜி உத்தரவுக்கு...சாரி...ராணியார் உத்தரவுக்கு கட்டுபடவேண்டி கடுப்பில் "கேட்டேனா? உன்கிட்டே இப்போ நமஸ்காரத்தை கேட்டேனா?" என காட்டுக்கத்தல் கத்திவிட்டு...கண்ணில்படும் கதவுகளை எல்லாம் 'மடேர்' 'மடேர்' என அறைந்து சத்தி காரில் அமர்ந்ததும், அருகில் அமர்ந்திருக்கும் சிறுத்தையிடம் பிம்மிளிக்கா..பிலாக்கி!" என ஹாரன் போட, சிறுத்தை உடனே "வேவவவவவவ.."ன்னு சைரன் போட.............................................அய்யோடா..சாமீ...வயி...வயிறு...வலிக்கு சாமீ.......ஹஹஹஹா.....

   தொடரும்

   Delete
  6. ///////"...போறச்சே இந்தக் கால்மிதியையும் மறக்காம எடுத்திட்டுக் கிளம்பு!" என கர்னல் கதறும்போது இங்கு நாம் கவனக்க வேண்டியது....அதட்டுனா அதட்டலில் அந்த சிறுத்தை கம்பளத்தில் 'உச்சா' போய்ட்டதுங்கிறதே.////

   புரிந்துகொள்ளும் திறன்களில்தான் எத்தனை விதங்கள்!!
   அதே காட்சியை நான் புரிந்துகொண்ட விதம் : பயத்தில்/விசுவாசத்தில் கம்பளத்தோடு கம்பளமாக படுத்துக்கிடக்கும் சிறுத்தையையே கர்னல் மறைமுகமா அப்படி 'கால்மிதி' என்று நக்கலடிக்கிறார்!

   இதை 'இரட்டுறமொழிதல் உவமையணி' என்று சொல்லலாமா... தெரியவில்லை!

   Delete
 71. தலை கேட்ட தங்க புதையல் ..


  பழுது பட்டு விடும் என்ற எண்ணம் இல்லாமல் தங்க புதையலுக்காக கடத்த உதவி ஆற்றிய அந்த பேருந்தை போலவே பழுது ஏற்பட்ட பேருந்து போலவே தோற்றமளித்த அரசு நகர பேருத்தில் தலை கேட்ட தங்க புதையலுக்குள் எனது தலை நுழைய பயணம் செய்த பேருந்தை விட வேகமாக ..பரபரவென சென்றது இந்த மாத காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இதழ்...ஏற்கனவே படித்த கதை தான் எனினும் அழகான அட்டை படமும் ...அசத்தலான வடிவமைப்பும்...தெளிவான சித்திரங்களும் ..பெரிய எழுத்துக்களும் இதழை வாரி அணைக்க சொல்வதால் ஒரு புது இதழை போலவே படிக்க ஆரம்பித்தேன்..நூற்றாண்டுகளுக்கு முன்னரான வரலாற்று சம்பங்களோடு நடப்பு நிகழ்வோடு ஒண்றினைந்த இந்த லாரன்ஸ் டேவிட் சாகஸம் ஆசிரியர் சொன்னது போல முதன் முறையாக படிப்பவர்களுக்கு (ம்)..ஒரு அசாத்திய சித்திர கதை விருந்து தான்..

  தலைகேட்ட தங்க புதையல்

  நன்று...

  ReplyDelete
  Replies
  1. சிறு வயதில் படித்தபோது தொண்டை தண்ணீர் காய்ந்து போய் திகிலுடன் படித்தேன்.!

   Delete
 72. லார்கோ ...

  ஒரே வரி....


  ஆக்‌ஷன் காமெடி பட்டாசு....  சூப்பர்...

  ReplyDelete
 73. மாடஸ்தி சார்....

  ஒரு முடியா இரவு இதழை கிராபிக் நாவல் என எண்ணாமல் எடுத்து படிக்க ஆரம்பியுங்கள்...

  நீங்களும் அந்த இரவோடு ஐக்கியமாவீர்கள்....:-)

  ReplyDelete
 74. லயன் கிராபிக் நாவல்.......விட
  திகில் காமிக்ஸ் நு பெயர் வச்சா என்ன சார் .....

  திகிலில் உறைய ...

  திகில் காமிக்ஸ்
  திகில் காமிக்ஸ்
  திகில் காமிக்ஸ்
  திகில் காமிக்ஸ்
  திகில் காமிக்ஸ்.....

  ஆதரவு தாரீர் .....மக்கழே....ப்லீஷ்

  ReplyDelete
  Replies
  1. ///ஆதரவு தாரீர் .....மக்கழே....ப்லீஷ்.///

   மந்திரியாருக்கு என்னுடைய *ஆதரவு*

   ஆனா LGN ஏ இருக்கட்டும் என்பது என்னுடைய *விருப்பம்*

   Delete
  2. LGN - என்பதே சரியான தேர்வு! காரணம் - 'இது ஒரு லயன் காமிக்ஸ் வெளியீடு' என்று முன்னட்டையில் போட நேர்ந்த அதே காரணம்! அதாவது, புத்தகத்தை விற்க 'பிராண்ட் வேல்யூ' கொஞ்சமாவது அவசியமாகிறது. அது லயன்/முத்து என்ற நாமகரணங்களுக்குப் பொருந்தும் அளவுக்கு 'திகில்' என்ற பெயருக்குப் பொருந்திப்போகாது!

   மற்றொன்று, எல்லா கி.நா'க்களுமே திகிலான கதையமைப்புடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. கி.நா க்களில் 'மெல்லிய காதல் கதை'களும் உண்டு! ;)

   Delete
  3. கி.நா.வில் காதல் கதைகளும் உண்டா.???


   சொல்லலலவே இல்லை.!

   அழுகாச்சி காவியம ஆரம்பித்த கி.நா.வை இப்படி காதல் காவியத்தில் இருந்து ஆரம்பித்து இருந்திருக்கலாம்.!


   உதாரணமாக,

   கமல் ஆரம்ப காலங்களில் பீல்டில் நிலைநிறுத்திக்கொள்ள உணர்ச்சிகள் போன்றபடங்களில் நடித்தார்.!   தனுஷ் துள்ளுவதோ இளமை போன்ற படத்திலும்......

   விஜய் கோயமுத்தூர் மாப்பிள்ளை போன்ற படத்திலும்.....


   பாய்ஸ் படத்தில் தெலுங்கு முன்னனி நடிகரான சித்தார்த்தும்......

   ஜி.வி.பிரகாஷ் திரிஷா இல்லைன்ன திவ்யா போன்ற படங்களிலும் நடித்தார்.

   அங்கே ஏன் போகனும்....நம்ம மக்கள் இன்று லார்கோவை தலையில் தூக்கி வைத்து ஆடினாலும் ஆரம்ப கதைகளில் இந்த தளமே அதிரும்படி லார்கோவை போட்டு துவைத்து எடுத்ததை மறந்து இருக்கமாட்டீர்கள்.!

   பௌன்சரை போட்டு துவைதுவை என்றுதுவைத்து விட்டு, பின் ஆகா ஒகோ என்று புகழவில்லையா.?

   இளவரசிக்கு 25% ஆதரவு இதனாலயே.!

   இது கண்றாவி பார்மூலா என்றாலும் தன்னை ஒரு இடத்தில் நிலைநிறுத்திக்கொள்ள எல்ல பிரபலங்களும் ஆரம்ப எண்டரிக்கு பயன்படுத்துகின்றனர்.!

   Delete
  4. உங்களை இனி 'மினி பிலிம் நியூஸ் ஆனந்தன்' என்று அழைக்கலாம் போலிருக்கிறதே M.V சார்?

   Delete
  5. மாடஸ்டி வெங்கடேஸ்வரன். : மென்மையான உணர்வுகளுடனான கிராபிக் நாவல்களும் உண்டு சார் ! தற்போது நான் படித்துக் கொண்டிருப்பது கூட அத்தகையதொரு ஆல்பமே ! கலக்கலாக 2018-ன் கி.நா. பட்டியலில் அது இடம்பிடிக்கவுள்ளது !

   Delete
 75. இம் மாத விருந்தில் நான்குமே அட்டகாசம்.சின்ன குறை பாயாசம் (டெக்ஸ்) இல்லை.
  மற்ற படி இந்த மாதிரி கதைகள் தான் தேவை ஆசிரியரே.

  ReplyDelete
 76. @ Editor,

  "சைக்கோ -த்ரில்லர்" என்று நான் எழுதியிருந்தது - ஒரு "சைக்கோவின் த்ரில்லர்' என்ற அர்த்தத்தில் அல்ல !

  நான் சந்தா E காட்டாமல் விட்டதுக்கு இந்த வாக்கியம் ஒரு காரணமாகும் ! Undertaker மட்டும் வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். Anyways, Undertaker ஹார்ட் பவுண்டா?

  அடுத்த மாசம் ரெண்டையும் ஆர்டர் பண்றேன் சேர்த்து !

  ReplyDelete
  Replies
  1. Raghavan : இல்லை சார் ; அண்டர்டேக்கர் ரெகுலர் பைண்டிங் + dust jacket cover !

   Delete