Saturday, April 22, 2017

பேனா போன போக்கில்...!

நண்பர்களே,

வணக்கம். எங்கே ஆரம்பிப்பது ? ; எங்கே கொண்டு செல்வது ? என்று தெரியாது பேனாவைக் கையில் பிடிக்கிறேன் - மனம் போன திக்கில் அதுவுமே பயணமாகட்டுமே என்று! ஏற்கனவெ சொல்லியிருந்தேன்- 5 ஆண்டுகள் இங்கே நான் கற்றதும்,பெற்றதும் அதற்கு முந்தைய 45 ஆண்டுகளின் வாழ்க்கைப் பாடங்களை விடவும் மதிப்பில் அதிகமென்று! தொடரும் ஒவ்வொரு நாளும், அதனைப் புதுப்புது பரிமாணங்களில், நல்ல விதங்களிலும், சங்கட சூழல்களிலும் உணர்ந்து வருகிறேன்!

உங்களது தற்போதைய உணர்வுகளை என்னால் அட்சர சுத்தமாய் யூகிக்க முடிகிறது! ஆனால் என் தலைக்குள் ஓடும் சமாச்சாரங்களை அத்தனை இலகுவாய்க் கணிக்க யாருக்கும் சாத்தியமாகாது என்பமே என் எண்ணம்! Because என்னுள் தற்சமயம் விரவிக் கிடப்பது ஒரு விசித்திரமான நிம்மதியே! Yes of course - சங்கடம்; ஆற்றமாட்டாமை ; அய்யரவு என நெகடிவான எண்ணங்கள் வீரியமாய் அலையடிக்கின்றன தான் ; ஆனால் அவற்றோடு ஒரு இனம்புரியா அமைதியும் சேர்ந்து நிற்பது எனக்கே புரியாத புதிராய் உள்ளது! இன்டர்நெட்; FB; சமூக வலைத்தளம்; வலைப்பதிவு என்பனவெல்லாம் புதிதாக இருந்த ஆரம்ப நாட்களில் தட்டுத் தடுமாறி நிறைய ஏழரைகளுக்குள் நான் கால் விட்டதில் இரகசியமில்லை தான்! அவற்றைக் கையாளத் தெரிந்தும், தெரியாமலும் நான் ஈட்டியது நிறைய நட்புகளையும், சில மௌனப் பகைகளையும் என்பதுமே ஊரறிந்த ரகசியம். அந்த வேளையில் தான் இந்த வௌவால் மீது எட்டுக்கால் சமாச்சாரம் தோண்டியெடுக்கப்பட்டு FB-யிலும் சரி, நமது பதிவிலும் சரி ஒரு சூடான விவாதப் பொருளாகியது. அன்றைக்கே எனக்குத் தெரியும், நான் அதே பாணியில் செய்திருந்த லாரன்ஸ் - டேவிட் உல்டா & ஜானி நீரோ makeover என்றேனும் ஒரு நான் வெளிக்கிளம்பி நிச்சயமாய்த் தலைகுனியச் செய்யுமென்று! மாமூலான நாயகர்களின் இடத்தில் சாதனை செய்த ஹீரோக்கள் இடம்பிடிக்கும் பட்சத்தில், அந்நாளைய விற்பனைச் சறுக்கல்கள் சமனப்பட்டு விடுமென்ற பைத்தியக்கார சிந்தனைகள் எழுந்த நாட்களை என்ன செய்தாலும் மாற்றிட முடியாது என்பது புரிந்தது! புத்தியைப் பறிகொடுத்துவிட்ட தருணங்களை என்ன சொல்லியும் நியாயப்படுத்திட இயலாது என்பதுமே புரிந்தது. ஆக தாமதமாகவோ- சீக்கிரமாகவோ இந்த விவகாரத்தில் சங்கடம் உத்தரவாதம் என்பதை 4 ஆண்டுகளுக்கு முன்பாக உணர்ந்த போதே மனதுக்குள் கரையான் கோட்டை ஒரு மூலையில் உருவாகத் தொடங்கியிருந்தது! என்றைக்கோ ஒரு நாள் யார் சொல்லியோ நீங்கள் இதனைத் தெரிந்து கொள்வதை விடவும்- நானே மனம் திறந்திடலாமென்று எத்தனையோ முறைகள் தோன்றியிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு தடவையும் உங்கள் ஒவ்வொருவரது கண்களையும் நேரில் பார்க்கும் திராணியின்றிப் போய் விடும்; அமைதி காத்து விடுவேன்! இது சத்தியமான நிஜம்!

இன்றைக்கு இந்தப் பூசணியை முற்சந்தியில் போட்டு உடைத்த பெருமைக்குச் சொந்தக்காரரின் கர சுத்தத்தைப் பற்றியோ; 'எனக்கு ஒரு கண் போனாலும்- உனக்கு ரெண்டையும் நொள்ளையாக்காது விட்டேனா பார்?' என்ற சிந்தனையைப் பற்றியோ நான் விமர்சிக்கப் போவதில்லை! ஏனெனில் என்றைக்கோ நானாகவே செய்திருக்க வேண்டிய ஒப்புதல் விஷயத்தை இன்றைக்கு என் சார்பில் அவர் செய்து தந்திருக்கிறார்! அதுமட்டுமன்றி, பகைமைக்கு அவர் தலைக்குள் என்ன முகாந்திரங்கள் தோன்றியிருப்பினும் சரி, என்னளவில் அவ்விதம் ஏதும் கிடையாது என்பதுமே நிஜம்.நமக்கு ஸ்டால் கிடைக்க ஏகமாய் பாடுபட்டிருக்கிறார் ஆரம்ப நாட்களில்; டி.வி; மீடியா என்று வெளிச்ச வட்டங்கள் நம் பக்கம் பாய்ந்திட மெனக்கெட்டிருக்கிறார்; எத்தனையோ நாட்கள் நம்மைச் சந்திக்க சிவகாசிக்கு விசிட் அடித்துள்ளார்; நம் பணிகளின் பொருட்டு சென்னையின் வீதிகளில் சுற்றித் திரிந்திருக்கிறார் ; பற்றாக்குறைக்கு சீனியர் எடிட்டரின் அசைக்கமுடியா நம்பிக்கையையும் ஈட்டியிருக்கிறார் எனும் போது- தற்போதைய “புலன் விசாரணைகளையுமே” அந்த ஒத்தாசைகளின் பட்டியலில் சேர்த்து வைத்துப் பார்த்துப் போகிறேனே? நீளமான திரி கொண்ட பட்டாசைப் பக்கத்திலிருந்து பார்த்து நிற்பதை விடவும், அது வெடித்து விட்ட பிறகு ரணத்தைச் சகித்து விடல் தேவலை என்பதைச் சமீப நாட்களில் புரிந்து கொண்டதன் பலனோ என்னவோ- என்னுள் தலைகாட்டும் அந்த அமைதி?! சந்தேகத்துக்கு இடமின்றிக் கூனி நிற்கிறேன்; உங்களின் பொழுதுகளை ஏதோவொரு சிறு விகிதத்தில் வெளிச்சமாக்கியவன் இன்றைக்கு உங்களையும் சங்கடத்தில் ஆழத்தியதுக்கு எவ்விதச் சமாதானமும் கிடையாதென்றும் புரிகிறது! ஆனால் இந்த வார ஜுனியர் விகடனில்  திரு.மனுஷ்ய புத்திரன் ‘ஒரு வரி- ஒரு நெறி‘ பக்கத்தில் எழுதியிருந்த வரிகளைக் படிக்க நேர்ந்தபோது அவை எனது இக்கட்டை மனதில் கொண்டு எழுதப்பட்டவை போலவேபட்டது! வாரந்தோறும் நான் மண்டியிட்டு மன்னிப்புக் கோரத் துவங்கிடும் பட்சத்தில் அது அந்த வார்த்தையினையே கேலிக் கூத்தாக்கி விடுமென்பதால் மறுபடியும் அந்தச் சாலை பக்கமாய் நடை பயில்வதாகயில்லை! ‘செய்றதையும் செஞ்சிட்டு, திமிர் வேண்டிக் கிடக்கோ  ??‘ என்று ஒருசிலருக்குப்படலாம் தான்; ஆனால் நிபந்தனைகளின்றி என் மீது அன்பு காட்ட எஞ்சியிருக்கும் ஒரு சிறுவட்டத்தை திரும்பத் திரும்ப தர்மசங்கடத்துக்கு ஆளாக்கி, அவர்கள் என்னைச் சமாதானம் செய்யத் தத்தளிப்பதென்பது என் ஆன்மாவைச் சித்ரவதை செய்யும் வலியைத் தருகிறது! அதே போல-

தவறென்று இவையனைத்தையும் சுட்டிக்காட்டி பதிவிலோ; FB-யிலோ எழுதியிருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் வருத்தம் நேர்ந்திருக்குமென்று தோன்றவில்லை; ஆனால் ஓரிடத்தில் ததும்பிய “'சீக்கிரப் பறவை'” உற்சாகங்களும், உதிரப்படல உத்வேகங்களும், பிறிதோரிடத்தில் இத்தனை தாக்கத்தை உருவாக்கி, ஒரு முன்னணி ஊடகத்தைக் கொண்டேனும் அதற்கொரு வடிகால் தேடிக் கொள்ள முனையும் போது- நிலவரம் வேறாகிறது! ‘உன்னைக் காவு வாங்கும் முயற்சியில், சுற்றுமுற்றும் சிக்கிடக்கூடிய அந்த ஆகச் சிறிய காமிக்ஸ் வட்டம் மீதும் இரத்தம் தெறித்தாலும் எனக்குக் கவலையில்லை!‘ என்ற தீவிரம் குடிகொண்ட பின்பாய் மன்னிப்புக் கோரல் என்பதையே தொடர்ந்து கேடயமாக்கி நான் நிற்பது மடத்தனத்தின் உச்சமாகப்படுகிறது! அதற்காக- look who’s calling the kettle black?’ என்ற ரீதியில் நானும் சேற்றை வாரி இரைக்க முனையப் போவதில்லை! ‘இழப்பதற்கு ஏதுமில்லை!‘ என்ற நிலையிலிருந்து ஒருவர் எடுக்கும் தீர்மானங்களுக்கும்; 'இழப்பது சுயத்தையே என்றிருந்தாலும்- சேதம் நாமெலாம் நேசிக்கும் காமிக்ஸ்களுக்கும்; அவற்றை (சு)வாசிக்கும் நண்பர்களுக்கும் வேண்டாமே!!'‘ என்று நினைப்பவனின் தீர்மானங்களுக்குமிடையே வேறுபாடு இருக்கத்தானே செய்யும்? So எனது பதிவும், பாதையும், பயணமும் நிதானமாகவே   இருந்திடும்! “"பயந்திட்டான் பாரேன்!”"என்ற நகையாடல்கள் எழும்பிடக்கூடும் என்று தோன்றினால் கூட எனக்குள் அதன் பொருட்டு கவலை ரேகைகள் இல்லை !! 

காமிக்ஸ் உலகைத் தூக்கி நிறுத்தப் பிறந்தவனாய் என்னை ஒருபோதும் நான் பார்த்ததில்லை! எஞ்சி நிற்கும் ஒரே பிரதிநிதி என்பதற்காக தமிழ் காமிக்ஸ் உலகே நம்மைச் சுற்றித் தான் என்ற கற்பனைகளும் எனக்குக் கிடையாது! In fact- இந்தத் துறையில் துணைக்கு யாரேனும் வந்தால் தேவலையே- கிடைக்கும் கவனத்திலும், சாத்துகளிலும் பங்கு போட்டுக் கொள்ளவாவது!” என்று பல முறைகள் நண்பர்களிடம் பகிர்ந்துள்ளேன்! ஆனால் அதற்காக 'நீயொருவன் பந்தி விரித்து டிபன் போட்டுக் கொண்டேயிருக்கும் வரைக்கும் அடுத்த கேட்டரிங் கான்டிராக்டர் உள்ளே நுழைய முடியாதே?” என்ற ஆதங்கத்திற்கெல்லாம் நான் செய்திடல் என்னவாக இருக்க முடியும்? ஏற்கனவே ஏழு கோடிப் பேர் கொண்ட தமிழகத்தில் 1500 பேர் தேறுவது உயிர் போகும் பிரயத்தனமாயுள்ளது - – காமிக்ஸ் எனும் சுவையைப் பகிர்ந்து கொள்ள! அந்த சொற்ப நம்பரையும் கரைத்தலையே ஊன்உறக்கம் பாரா தற்போதைய இலட்சியமாய்க் கொண்டு செயலாற்றும் போது நானிங்கே தடுமாறத் தொடங்கினால் என்னை நம்பி என்னிடம் ஒப்படைக்கப்பட்ட விருட்சத்தைக் கைவிட்டவனாவேன்! So அந்தத் தவறைச் செய்வதாக நானில்லை! 50 வயதில் புதிதாய் பிள்ளையார்சுழியிலிருந்து துவங்க வேண்டியதொரு சூழலில் இருப்பது போல் உணர்கிறேன்! “"அழிக்க"“ இவ்வளவு வியர்வை சிந்திட ஒருவர் கண்முன்னே தயாராய் நிற்கும் போது- “"ஆக்க"” அதே தீவிர உழைப்பைப் பயன்படுத்திடப் படித்துக் கொண்டால் போச்சு என்று தோன்றியது! So முன்னெப்போதையும் விட திடமாய் உழைக்க வேண்டிய நாட்கள் முன்னிற்பதாய் நினைக்கிறேன் ! 

'எல்லாம் சரிதான் ; ஆனால் கடைசி வரையிலும் ‘வள வள‘.... ‘கொள-கொள‘ ஆசாமியாகவே இருந்து விடப் போகிறாயா?' என்று நம்முள் சற்றே சிறுதிரிகள் கொண்ட நண்பர்கள் எரிச்சலோடு சமீப நாட்களது எனது மௌனத்தைப் பார்த்திடக் கூடுமென்பதும் எனக்குப் புரியாதில்லை! செய்த பிழைக்கு தண்டனை என்ற ரீதியில் பார்த்ததோடு மட்டுமன்றி, கற்பனையான மகுடங்களும், காற்றில் மட்டுமே ஜீவிக்கக் கூடிய சில வெற்றிகளையும், தோல்விகளையும் இத்தனை வன்மத்துக்கு பெட்ரோல் ஆக்கிடவும் சாத்தியம்தானா ? என்ற மலைப்புமே அதன் காரணம்! எல்லாவற்றிற்கும் மேலாய் ஒரு 76 வயது முதியவரின் நம்பிக்கையையும், நட்பையும் கூட காலுக்குள் போட்டு நசுக்கியேனும் காரியத்தைச் சாதித்துக்கொள்ளத் தோன்றிடும் பட்சத்தில்- அதன் பின்னுள்ள திட்டமிடலும், agenda-வும் வெளித்தோற்றத்தோடு சம்பந்தம் கொண்டவைகள் தானா? என்றும் நினைக்கத் தோன்றியது!  

தவறைச் சுட்டிக்காட்டிட சரியானவர் தானா ? என்றோ; அவரது தகுதியோ / தகுதியின்மைகளோ எனது பிழைகளைச் சரிசெய்யும் அழிரப்பராகிடும் என்றோ நான் கனவு காணப் போவதில்லை! அதே போல இந்த ஸ்பீட் பிரேக்கரால் நமது பயணமும் தடைபடவோ; தாமதப்படவோ போவதுமில்லை! அதற்காக எதுவுமே நேர்ந்திடவில்லை என்பது போல பதிவுகளில் பாசாங்கும் செய்ய மாட்டேன்! உங்களின் காயங்களுக்கு காலம் மாத்திரமே மருந்திட முடியுமென்பதால் அந்த நலம் பெறலுக்கு அவசியப்படும். அவகாசத்தைத் தந்திடும் பொருட்டு இங்கு மட்டுமாவது உங்களுக்குச் சின்னதொரு ‘பிரேக்‘ தந்திடலாமென்றுள்ளேன் -- நீட்டி முழக்கும் என் வரிகளிலிருந்து ! காணாது போகப் போவதாய் நான் சொல்ல வரவில்லை ; சிந்தையில் கொஞ்சமே கொஞ்சமாய் சகஜம் மீண்டிடும்வரையிலும் பெரும்பங்கு கவனத்தைப் பணிகளின் பொருட்டு தந்து பார்க்கிறேன் என்றுதான் சொல்ல முனைகிறேன் !  எனக்குள்ளும், உங்களுக்குள்ளும் சற்றே ‘நார்மலான‘ அமைதி திரும்பும் வரை இந்தப் பதிவுப் பக்கத்தில் நமது இதழ்களின் அறிவிப்புகளை மட்டும், சுருக்கமான வரிகளோடு  செய்திட அனுமதி தாருங்களேன் - ப்ளீஸ்?! சின்னதொரு இடைவெளியில் நமது பரஸ்பர பேட்டரிகளைச் சார்ஜ் செய்து விட்டுத் திரும்புவோமே ? என் மடமையினைச் சலவை செய்ய முயற்சிக்கவும் இந்த நாட்களைப் பயன்படுத்திக் கொள்கிறேனே ? 'வாட்சப்' க்ரூப்களிலும், தொலைபேசி உரையாடல்களிலும் உரிய இடங்களைக் காமிக்ஸ் இதழ்கள் மீட்டிடும் தருணத்தில் நான் உங்கள் முன்னே ஆஜராகியிருப்பேன் guys! Bye for now!

P.S: துவக்கத்தில் சொன்னது போலவே இது மனம் போன போக்கிலான பதிவு மட்டுமே! கோர்வையோ; வார்த்தைப் பிரயோகங்களோ சற்றே மேம்பட்டும் இருக்கலாம் தான்! ஆனால் மறுவாசிப்பு செய்திடாது தலையில் தோன்றியவைகளை அப்படியே வரிகளாக்கியுள்ளேன் என்பதால் அவற்றைப் பொருட்படுத்த வேண்டாமே? அதே போல ‘சென்டிமெண்டலாகப்‘ பேசுவதோ; வார்த்தை ஜாலங்களில் பூசி மெழுகிடுவதோ என் நோக்கமும் அல்ல! எங்கேனும் அதுபொருட்டு நெருடினால், பிழை என் பேனாவின் வார்த்தைகளில் தானேயொழிய என் உள்ளத்து வார்த்தைகளில் அல்ல என்ற புரிதலுக்கு முன்கூட்டியே நன்றிகள்!

என்னென்னவோ எண்ணங்கள் சிந்தனையை ஆக்கிரமித்திருந்தன! அவற்றையெல்லாம் இங்கே எழுதிவிட்டேனா என்று தெரியவில்லை! Maybe நடுச்சாமத்தில்- ‘ஐயோ; அதைச் சொல்ல மறந்துட்டேனே!‘ என்றோ; அடடா... இதை வேறுவிதமாய்ச் சொல்லியிருக்கலாமோ ?!‘ என்றும் விசனப்படக் கூடும் தான் ! ஆனால் இதற்கு மேலாய் என்னால் காமிக்ஸ்களுக்குப் பாதிப்பு எந்தவொரு இடத்திலும் - நேர்ந்திடக் கூடாதே என்ற ஜாக்கிரதையுணர்வு மிகுந்திருந்ததால் நிறைய ஜாடிகளை மூடியிருக்க அனுமதிப்பதே தேவலை என்று தீர்மானித்தேன்!

அடுத்த ஸ்பெஷல் இதழ் அறிவிப்பின் திட்டமிடலுக்கும்; செயலாக்கத்துக்கும் தொடரும் நாட்களை நிச்சயம் பயன்படுத்திக் கொள்வேன் !! See you around ! Be back soon ! And more than anything else - sorry from the bottom of my heart once again !

216 comments:

  1. மீண்டும் முதலில்

    ReplyDelete
  2. உள்ளேன் ஐயா
    மூன்றாவது

    ReplyDelete
  3. ///எனக்குள்ளும், உங்களுக்குள்ளும் சற்றே ‘நார்மலான‘ அமைதி திரும்பும் வரை இந்தப் பதிவுப் பக்கத்தில் நமது இதழ்களின் அறிவிப்புகளை மட்டும், சுருக்கமான வரிகளோடு செய்திட அனுமதி தாருங்களேன் - ப்ளீஸ்?///

    அய்யய்யோ இதை நான் எதிர்பாக்கவேயில்லையே.

    தயவுசெய்து இதனை மறுபரிசீலனை செய்யுங்கள்.

    பெரிய -1

    ReplyDelete
  4. மகிழ்வித்து மகிழ் என்ற கொள்கையோடு
    பணம் சம்பாதிக்க பலவழிகள் இருந்தும்
    எங்களுக்காக உழைத்த தங்களுக்கு
    ஏற்ப்பட்ட மனவருத்தம் எங்களையும்
    பாதிக்கிறது. இதுவும் கடந்து போகும் .
    வரணும் பழைய பன்னீர்செல்வமாக
    திரும்பி வரணும்.

    ReplyDelete
    Replies
    1. ///மகிழ்வித்து மகிழ் என்ற கொள்கையோடு
      பணம் சம்பாதிக்க பலவழிகள் இருந்தும்
      எங்களுக்காக உழைத்த தங்களுக்கு
      ஏற்ப்பட்ட மனவருத்தம் எங்களையும்
      பாதிக்கிறது. ///

      +1

      Delete
    2. ///////மகிழ்வித்து மகிழ் என்ற கொள்கையோடு
      பணம் சம்பாதிக்க பலவழிகள் இருந்தும்
      எங்களுக்காக உழைத்த தங்களுக்கு
      ஏற்ப்பட்ட மனவருத்தம் எங்களையும்
      பாதிக்கிறது. ///

      +1

      Delete
  5. என்னதான் நடக்கிறது இங்கே..இவ்வளவு நேரமாகியும் யாரையும் காணவில்லை..
    என்ன தவறு..

    ReplyDelete
  6. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  7. எப்படி உள்ளீர்கள் ஆசிரியரே...
    நலமா..?

    ReplyDelete
  8. Dear sir, Dhirusti kalzhindhu vittadhaga eadhukkolungal.we will always support you.

    ReplyDelete
  9. ஆசிரியரே என்றும் நாங்கள் உங்களுடன்

    ReplyDelete
  10. உங்களுடைய மனநிலையும்,வலியும் எத்தகையது என புரிகிறது சார்.
    அனைவரும் ஒருவித இறுக்கமான மனநிலையில் தான் இருக்கின்றோம் இப்போது.
    ஆனால்...
    அதைவிட பெரிய தண்டனை நீங்கள் எழுதப்போவதில்லை என்று சொல்லுவது தான்.
    உங்களை பிடிக்காது என்பவர்களும் கூட,தொடர்ந்து நமது தளத்தை ரசிக்கிறார்கள் என்றால்,
    அதற்கு ஒரே காரணம் உங்கள் எழுத்தாற்றல்.
    மிச்சமிருக்கும் நம் காமிக்ஸ் வாழ்க்கை சந்தோஷமாய் கழியட்டுமே ஆசிரியரே.
    ப்ளீஸ் எழுதுவதை நிறுத்தாதீர்கள்.


    ReplyDelete
  11. எந்த பத்திரிகை ஆசிரியரும் உங்களைப்போல் வாசகருடன் நெருங்கிய
    அன்புத்தொடர்பில் இருந்தது இல்லை.
    உங்கள் எழுத்துநடைக்கு நம் காமிக்ஸ்
    ரசிக உலகம் கட்டுண்டுகிடக்கிறது.
    மனவருத்தங்களை களைந்து மீண்டு வர
    வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ///எந்த பத்திரிகை ஆசிரியரும் உங்களைப்போல் வாசகருடன் நெருங்கிய
      அன்புத்தொடர்பில் இருந்தது இல்லை.
      உங்கள் எழுத்துநடைக்கு நம் காமிக்ஸ்
      ரசிக உலகம் கட்டுண்டுகிடக்கிறது.
      மனவருத்தங்களை களைந்து மீண்டு வர
      வேண்டுகிறேன்.///

      +1

      Delete
    2. ////எந்த பத்திரிகை ஆசிரியரும் உங்களைப்போல் வாசகருடன் நெருங்கிய
      அன்புத்தொடர்பில் இருந்தது இல்லை.
      உங்கள் எழுத்துநடைக்கு நம் காமிக்ஸ்
      ரசிக உலகம் கட்டுண்டுகிடக்கிறது.///

      +1

      Delete
  12. நமது நண்பர்கள் அனைவரும் உடனடியாக
    பதிவிட்டு ஆசிரியருக்கு ஆறுதலும்
    ஆதரவும் அளித்து நம் ஒற்றுமையை
    காட்டுங்கள்

    ReplyDelete
  13. காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு வணக்கம்.

    ReplyDelete
  14. என்ன சார் சொல்றீங்க? ! அந்த விஷயத்தை உங்கள் மனதிலிருந்து நீக்குங்கள். அதைப் டீல் பண்ண நாங்கள் இருக்கிறோம். வாழ்க்கையில் அவரால் மறக்கவே முடியாத பாடத்தை விரைவில் கற்றுகொள்வார். நீங்கள் எழுத்துக்களை எப்போதும் போல் தொடருங்கள். என் உடன் பிறந்த அண்ணன் இழிவு படுத்தப்படுவது போல் துடிப்பு ஏற்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. +1. சீக்கிரம் முழுவதும் குணமடைந்து முழு வேகத்தோடு வாருங்கள் நணபரே.

      Delete
  15. சார் நீங்கள் இம்மாதிரியான சோர்ந்து போகக்கூடியதான பதிவுகளை இடக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் என்னைப் போன்ற புதிதாக வருபவர்களுக்கு இது உற்சாகமிழக்கச்செய்யும். ஆகவே நீங்கள் கூறியது போலவே நாம் நம்முடைய காமிக் விவரங்களைப் பற்றியே முழுமையாகப் பகிரலாம்.இதனை எப்படி இன்னும் பரவலாக்குவது என்றே யோசிப்போம். மற்றுமொரு வேண்டுகோள். உங்களுடைய பதிவுகளிலும் சரி பேட்டிகளிலும் சரி நீங்கள் அடிக்கடி குறிப்பிடக்கூடிய செய்தி "காமிக் வட்டம் மிகச்சிறியது".அது உண்மையானாலும் காமிக் படிக்கும் வாசகர்களிடையே ஏதோவொரு முகவரியற்ற (வி)சித்திரமான புத்தகங்களைப் படிப்பதான உள்ளோட்டத்தை ஏற்படுத்தக்கூடும். நம்முடைய தேர்ந்த வாசகர்கள் புரிந்துகொள்வார்கள் எனினும் புதிதாக இணைபவர்களுக்கு இப்படியான எண்ணவோட்டம் ஏற்பட வாய்ப்பளித்துவிடக்கூடாது. ஆகவே நிச்சயமாக நாம் ஊக்கத்துடன் உழைத்து இந்த வட்டத்தைப் பெரிதாக்குவோம்.அதற்கான பூரண ஒத்துழைப்பை நாங்கள் நல்குவோம்.

    ReplyDelete
    Replies
    1. // நீங்கள் இம்மாதிரியான சோர்ந்து போகக்கூடியதான பதிவுகளை இடக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.//

      எனது எண்ணமும் இதுவே!

      Delete
    2. உண்மை....ப்ளஸ் 1

      Delete
    3. //நீங்கள் இம்மாதிரியான சோர்ந்து போகக்கூடியதான பதிவுகளை இடக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.//
      +1

      Delete
  16. உங்களுடைய மனநிலையும்,வலியும் எத்தகையது என புரிகிறது சார்.
    அனைவரும் ஒருவித இறுக்கமான மனநிலையில் தான் இருக்கின்றோம் இப்போது.
    ஆனால்...
    அதைவிட பெரிய தண்டனை நீங்கள் எழுதப்போவதில்லை என்று சொல்லுவது தான்.
    உங்களை பிடிக்காது என்பவர்களும் கூட,தொடர்ந்து நமது தளத்தை ரசிக்கிறார்கள் என்றால்,
    அதற்கு ஒரே காரணம் உங்கள் எழுத்தாற்றல்.
    மிச்சமிருக்கும் நம் காமிக்ஸ் வாழ்க்கை சந்தோஷமாய் கழியட்டுமே ஆசிரியரே.
    ப்ளீஸ் எழுதுவதை நிறுத்தாதீர்கள்.


    ReplyDelete
    Replies
    1. ///பெரிய தண்டனை நீங்கள் எழுதப்போவதில்லை என்று சொல்லுவது தான்.
      உங்களை பிடிக்காது என்பவர்களும் கூட,தொடர்ந்து நமது தளத்தை ரசிக்கிறார்கள் என்றால்,
      அதற்கு ஒரே காரணம் உங்கள் எழுத்தாற்றல்.
      மிச்சமிருக்கும் நம் காமிக்ஸ் வாழ்க்கை சந்தோஷமாய் கழியட்டுமே ஆசிரியரே.
      ப்ளீஸ் எழுதுவதை நிறுத்தாதீர்கள்.///

      +1

      Delete
    2. ////உங்களை பிடிக்காது என்பவர்களும் கூட,தொடர்ந்து நமது தளத்தை ரசிக்கிறார்கள் என்றால்,
      அதற்கு ஒரே காரணம் உங்கள் எழுத்தாற்றல்.
      மிச்சமிருக்கும் நம் காமிக்ஸ் வாழ்க்கை சந்தோஷமாய் கழியட்டுமே ஆசிரியரே.
      ப்ளீஸ் எழுதுவதை நிறுத்தாதீர்கள்.
      ////

      +1

      :(

      Delete
  17. இதுவும் கடந்து போகும்
    உங்களுக்கு தெரியாததல்ல
    காத்திருக்கிறோம் நாங்கள்
    நன்றி _/\_
    .

    ReplyDelete
  18. அன்புள்ள விஜயன் சார்
    எனக்கு42 வயதாகிறது. ஒரு வறுமையான குடும்பத்தில் தான் பிறந்தேன். சிறு வயதிலிருந்தே பல் வேறு கஷ்டங்களையும் அதனால் நேரிடும் துனபங்களையும் பார்தது விட்டேன். ஒவ்வொரு கடினமான தருணத்திலும் அதனில் இருந்து விடுபட, மறக்க உங்களின் எழுத்துக்களை நாடியுள்ளேன். உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ எங்கள் கவலைகளுக்கும் துயரங்களுக்கும் வலி நிவாரணமாக இருந்து இருக்கிறீரகள். எங்கள் வார இறுதிகளையும் மாதத் துவக்கங்களையும் குதுகலப்படுத்தி இருக்கிறீரகள். சிக்கலான தருணங்களில் உடனிருந்திருக்கிறீர்கள்.

    தவறுகள் செய்யாத மனிதனே கிடையாது. தவறு செய்யாவிட்டால் மனிதனே கிடையாது. அதிலிருந்து என்ன கற்றுக் கொளகிறோம் என்பதே முக்கியம். எனக்கென்னவோ நீங்கள் செய்தது காதலியை இம்ப்ரஸ் செய்ய காதலர்கள் செய்யும் கூத்து போல் தான் தெரிகிறது.

    அது்அனைத்தும் நீங்களே சரி செய்த பிறகு ஏன் கவலைப்பட வேண்டும? நான் தொடரபில் இருக்கும் நணபர்கள் எல்லாம் இதை நனகே உணர்நது இருக்கிறார்கள். திருட்டு ராசாக்களின் நோக்கத்தையும் புரிந்து தானிருக்கிறார்கள். புரியாதவர்களை நாங்கள் புரிய வைத்துக் கொள்கிறோம்.

    எங்களுக்கு உங்கள் மேல் இன்னும் அனபு அதிகரித்திருக்கிறது. கவலைப்படாதீரகள் சார். எதிரியின் டாரகெட் எங்கள் உற்சாகத்தைக் கொள்வது. எங்கள் உற்சாகமெல்லாம் உங்களிடமிருந்தே பிறக்கிறது. இந்த விசயத்தை இங்கு ப்ளாக்கில் போட்டு உடைத்து விட்டு பழயபடி தொடருங்கள். எதிரிக்கு அவனுக்கு வேண்டியதை எளிதில் கொடுத்து விடாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பாக சொன்னிங்க மஹி ஜி.
      +11111

      Delete
    2. டியர் மகி,எல்லோர் மனதிலிருப்பதும் தங்கள் கருத்தே. உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

      Delete
    3. அருமையாக சொன்னீங்க மஹி ஜி....1234567890

      Delete
    4. // காதலியை இம்ப்ரஸ் செய்ய காதலர்கள் செய்யும் கூத்து போல் தான் தெரிகிறது. // semaiya sonnenga ji

      Delete
    5. எனது மன கருத்துகளை அப்படியே பிரதிபலித்தற்கு நன்றி மகிஜீ...

      Delete
    6. /// ஒவ்வொரு கடினமான தருணத்திலும் அதனில் இருந்து விடுபட, மறக்க உங்களின் எழுத்துக்களை நாடியுள்ளேன். உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ எங்கள் கவலைகளுக்கும் துயரங்களுக்கும் வலி நிவாரணமாக இருந்து இருக்கிறீரகள். எங்கள் வார இறுதிகளையும் மாதத் துவக்கங்களையும் குதுகலப்படுத்தி இருக்கிறீரகள். சிக்கலான தருணங்களில் உடனிருந்திருக்கிறீர்கள்.

      தவறுகள் செய்யாத மனிதனே கிடையாது. தவறு செய்யாவிட்டால் மனிதனே கிடையாது. அதிலிருந்து என்ன கற்றுக் கொளகிறோம் என்பதே முக்கியம். எனக்கென்னவோ நீங்கள் செய்தது காதலியை இம்ப்ரஸ் செய்ய காதலர்கள் செய்யும் கூத்து போல் தான் தெரிகிறது. ///

      +1

      Delete
    7. ///தவறுகள் செய்யாத மனிதனே கிடையாது. தவறு செய்யாவிட்டால் மனிதனே கிடையாது. அதிலிருந்து என்ன கற்றுக் கொளகிறோம் என்பதே முக்கியம். எனக்கென்னவோ நீங்கள் செய்தது காதலியை இம்ப்ரஸ் செய்ய காதலர்கள் செய்யும் கூத்து போல் தான் தெரிகிறது. ////

      +1

      +1

      +1

      Delete
  19. தங்களது மனதின் வலியும் வலிமையும் புரிகிறது.. நல்லதே நடக்கும்.._/\_

    ReplyDelete
  20. இதுவும் கடந்து போகும்
    உங்களுக்கு தெரியாததல்ல
    காத்திருக்கிறோம் நாங்கள்
    நன்றி _/\_

    ReplyDelete
  21. இதுவும் கடந்து போகும்
    உங்களுக்கு தெரியாததல்ல
    காத்திருக்கிறோம் நாங்கள்
    நன்றி _/\_

    ReplyDelete
  22. We are always with you sir , whatever you did is just for our happiness , we have lot of faith in you , you gave us lot of joyful moments to us , a small mistake can't delete all great efforts done by you , I am a regular reader of this blog but comments rarely , my humble opinion , please don't stop writing in this blog for a single man , respect your thousands of fans , again I say "WE ARE WITH YOU SIR FOREVER "

    ReplyDelete
    Replies
    1. ///We are always with you sir , whatever you did is just for our happiness , we have lot of faith in you , you gave us lot of joyful moments to us , a small mistake can't delete all great efforts done by you.///

      +1

      Delete
  23. வணக்கம் சார்...
    இதுவும் கடந்து போகும்
    உங்களுக்கு தெரியாததல்ல
    காத்திருக்கிறோம் நாங்கள்
    நன்றிகள் சார்.....🙏🙏🙏🙏🙏...

    ReplyDelete
  24. இதுவும் கடந்து போகும்
    உங்களுக்கு தெரியாததல்ல
    காத்திருக்கிறோம் நாங்கள்
    நன்றி _/\_

    ReplyDelete
  25. மிகுந்த சங்கடத்தையும்,வருத்தத்தையும் தரும் பதிவு சார்,விரைவில் மீண்டும் வருவீர்கள் என்று ஆவலுடனும்,நம்பிக்கையுடனும்.

    ReplyDelete
  26. இதுவும் கடந்து போகும்
    உங்களுக்கு தெரியாததல்ல
    காத்திருக்கிறோம் நாங்கள்
    நன்றி _/\_

    ReplyDelete
  27. படிக்க ..படிக்க கண்களில் நீர் வழிகிறது ..

    எவர் எவர் என்ன சொன்னாலும் காமிக்ஸை நேசிக்கும் நெஞ்சங்கள் எவருமே உங்களை விட்டு தர மாட்டார்கள் ...தர மாட்டோம் சார்...அந்த செய்திகளின் எழுத்தை கூட சுவற்றில் தன் பாட்டுக்கு ஏதோதோ எழுதி திரியும் ஒரு மனிதனின் எழுத்தாக தான் தூக்கி போட்டு கொண்டு போய் கொண்டு இருந்தோம்...

    ஆனால் என்னுடைய பயம் எல்லாம் அந்த பிதற்றல் எழுத்துக்கெல்லாம் மதிப்பு அளித்து தாங்கள் எவ்வாறு வருத்தப்படுவீர்கள் ...அதன் காரணமாய் வருத்தத்தில் எங்களை விட்டு கொஞ்சம் தூரம் விலகி போய் விடுவீர்களோ என்று மட்டுமே பயந்து கொண்டு இருந்தேன் ..அதனை நிஜமாக்கி விடாதீர்கள் சார் ..ப்ளீஸ்...

    தன் சட்டையின் மீது கறையே படாதவன் அடுத்தவரின் கறையை பற்றி பேசினால் அதனை மதிக்கலாம்...ஆனால் கறையையே தோலாக கொண்டவர்களின் கருத்தை எல்லாம் யாரும் மதிக்க போவதில்லை...அவர்களின் செய்கைகளினால் உங்கள் மதிப்பும் எங்களிடம் எள்ளளவும் குறைய போவதில்லை....என்பதை மட்டும் நீங்கள் என்றுமே மறந்து விடாதீர்கள் சார்...

    அந்த ஊடக குப்பை எழுத்தை பற்றி தாங்கள் எதுவும் எங்களிடம் விவரிக்கவோ...பதில் சொல்லவோ முற்பட வேண்டாம் சார்..அந்த எழுத்துக்களுக்கு எங்களுக்கு தலையில் இருக்கும் ரோமத்தின் மதிப்பை கூட கொடுக்க போவதில்லை எனும் பொழுது நீங்கள் வருந்துவது வேண்டாம் சார்...

    உங்கள் வழக்கமான பதிவும் ...அதிரடி அறிவிப்புகளுமே அந்த வீணர்களுக்கு பதிலடியாய் அமையட்டும் ..

    உங்களை குற்றம் சுமத்துபவரின் தளத்திலியே அவரின் குற்றத்தை ..பகிரங்க படுத்திய நண்பருக்கு பதில் சொல்ல முடியாமல் அதனை காணாமல் போக செய்து...அவரும் காணாமல் போய் கொண்டு இருக்கும் பொழுது அந்த நபரின் எழுத்துக்கு இங்கு யார் சார் மதிப்பு அளிக்க போகிறார்கள் ...

    உங்களின் கொடி காமிக்ஸ் உலகில் இஅப்போதைய உயரத்தைவிட இன்னும் உயரத்தில் பறக்க தான் போகிறது....அதனை எங்களுடன் அந்த துரோகிகளான வீனர்களும் அண்ணாந்து பார்க்க தான் போகிறார்கள் ...

    மீண்டும் சொல்கிறேன் சார்...

    உங்களுக்கா நாங்கள்..எங்களுக்காக நீங்கள்...

    இதை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் மாற்ற முடியாது....

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு நண்பரின் மனதில் இருப்பதையும் தெளிவாக உங்கள் கைவண்ணத்தில் தீட்டி விட்டீர்கள்.

      Delete
    2. அருமையா சொன்னிங்க.

      Delete
    3. சூப்பர் தலைவரே....+123

      Delete
    4. ///எவர் எவர் என்ன சொன்னாலும் காமிக்ஸை நேசிக்கும் நெஞ்சங்கள் எவருமே உங்களை விட்டு தர மாட்டார்கள் ...தர மாட்டோம் சார்.///

      +1

      Delete
    5. // படிக்க ..படிக்க கண்களில் நீர் வழிகிறது // இப்படி எழுத வேண்டாமே, அந்த நபர் எதிர்பார்ப்பது இது போன்ற காயம்களை என்பதை புரிந்து கொள்ளுங்கள்​.


      Delete
    6. என்னைப்போன்ற பலரின் உண்மை கருத்துக்களை கூறிய paramasivam sir மற்றும் Paranitharan sir அவர்களுக்கு நன்றி.

      Delete
  28. Sometimes we need negative publicity sir , do you think , is it possible to give such a big advertisement every week in a famous news paper, all is well moment sir ,

    ReplyDelete
  29. எங்களின் உயிரில் ஒளி ஏற்றும் வலிமையை உங்களின் எழுத்துக்கள் கொண்டுள்ளன சார்...

    அந்த ஒளியின்றி எங்களின் ஞயிறுகள் விடியா.....

    எங்களின் மூத்த சகோதரர் ஆகத்தான் உங்களைப் பார்க்கிறோம். சில சமயம் தம்பிகளின் நலனுக்கு நீங்கள் செய்திருக்கும் இதுபோன்ற சிறு சிறு விசயங்களைத் தாண்டிச் செல்லும் முதிர்ச்சியையும் தங்களின் அரவணைப்பு தந்துள்ளது சார்...

    நாளை காலை வழக்கம்போல உங்கள் பதிவிற்காக செல்போனை எங்கள் கைகள் தானாகவே தேடும்....

    உங்கள் பதிவு வரும்வரை தேடல் தொடரும்...

    உற்சாக ஞாயிறா... விடியா இரவா என்பதை உங்கள் போக்கில் விடுகிறோம் சார்...

    ReplyDelete
    Replies
    1. உற்சாக ஞாயிறு thaan Ji. Don't worry. Business as usual for us.

      Delete
    2. வழிமொழிகிறேன்...!

      Delete
    3. ///எங்களின் மூத்த சகோதரர் ஆகத்தான் உங்களைப் பார்க்கிறோம். சில சமயம் தம்பிகளின் நலனுக்கு நீங்கள் செய்திருக்கும் இதுபோன்ற சிறு சிறு விசயங்களைத் தாண்டிச் செல்லும் முதிர்ச்சியையும் தங்களின் அரவணைப்பு தந்துள்ளது சார்...

      நாளை காலை வழக்கம்போல உங்கள் பதிவிற்காக செல்போனை எங்கள் கைகள் தானாகவே தேடும்....

      உங்கள் பதிவு வரும்வரை தேடல் தொடரும்...///

      +1

      Delete
    4. ////எங்களின் மூத்த சகோதரர் ஆகத்தான் உங்களைப் பார்க்கிறோம். சில சமயம் தம்பிகளின் நலனுக்கு நீங்கள் செய்திருக்கும் இதுபோன்ற சிறு சிறு விசயங்களைத் தாண்டிச் செல்லும் முதிர்ச்சியையும் தங்களின் அரவணைப்பு தந்துள்ளது சார்..////

      +1

      :(

      Delete
  30. விஜயன் சார், நேற்று குடும்பத்துடன் smurf (the lost village) படம் பார்த்தேன். படத்தில் கார்மேல் சுமர்பியை எதற்காக உருவாக்கினான் என்பதை ஒரு இடத்தில் சொல்லுவான் அதே நேரம் இந்த கதையில் சுமர்பிதான் நாயகி. இதனை பற்றி "தேவதையை கண்டேன்" கதையில் படித்து விட்டதால் சுமர்பி பற்றி எனது குழந்தைகளுக்கு சொல்ல முடிந்தது, அதே நேரம் இந்த படத்தால் கவரப்பட்ட எனது மனைவி, இதுவரை நமது காமிக்ஸில் வந்துள்ள நமது ஊதா மனிதர்களின் கதைகளை படிக்க ஆரம்பித்து விட்டார்.

    நண்பர்களே முடிந்தால் smurf படம் பாருங்கள்! நமது விட்டு குட்டிகளுக்கு ஊதா மனிதர்களை அறிமுகபடுத்த ஒரு சரியான சந்தர்ப்பம்.

    ஆசிரியரே, முடிந்தால் இந்த மாதம் கர்னல் கதைக்கு பதில் நமது ஊதா மனிதர்களை வெளி இடலாமே?

    ReplyDelete
  31. சார் இனி வைக்கும் அடிகளில் கவனமே அவசியத் தேவை. மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறுங்கள். துணைக்கு நிற்க வாசகர்கள் இருக்கிறோம். 300 திரைப்படம் போல வெளிப்படையாக ஆதரிக்கிறோம். திரைமறைவில் இருந்து எத்தனை வெறி கொண்ட தாக்குதல்கள் நிகழ்ந்தாலும் தாங்கிப் பிடிக்க லயனுக்கு உரித்தான நண்பர் வட்டம் ஒன்று உண்டு. 2008ல் கிட்டத்தட்ட நிலைமை மோசமான போது தூக்கி விட்ட வலைப்பூக்களில் எத்தனை உத்வேகத்தை விதைத்தோமோ அத்தனை உத்வேகம் கொண்டோர் இங்குண்டு. காலத்தாலும் சில கையாலாகா நபர்களாலும் சற்றே விலகி நின்றாலும் இறுதி யுத்தத்தில் கேடயத்தை ஏந்தி நிற்போம். வேறு காமிக்ஸ்கள் வந்தால் நல்லதுதான் தரம் உயரும் என்கிற கருத்தினை எப்போதும் சமரசப் படுத்திக் கொள்ளாது முதுகின் பின் வஞ்சக வாளைச் செருக நிற்கும் கட்டப்பாக்களைத் தாண்டி படகின் பயணத்தை, சிங்கத்தின் பாய்ச்சலை தாங்கி நிற்போம். நீங்க அடுத்தக் கட்ட நகர்தலைப் பற்றி மட்டும் யோசியுங்கள் சார். தண்ணீர் கிட்டா காலத்தில் அருவியாகக் கிட்டிய லயனை எப்படி விழ விடுவோம்?? என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..

    ReplyDelete
  32. இதுவும் கடந்து போகும்
    உங்களுக்கு தெரியாததல்ல
    காத்திருக்கிறோம் நாங்கள்
    நன்றி _/\_

    ReplyDelete
  33. Bitter thoughts லர்ந்து விடுபட்டு அனைவரையும் உற்சாகம் கொள்கிற மாதிரி சீக்கிரம் "Tex 1000" என 1000 pages Tex Special அறிவியுங்கள் சார். Letz move on please.

    ReplyDelete
  34. காமிக்ஸ் தில்லுமுல்லுகளை அம்பலபடுத்தும் நபர், ஒரு முக்கிய காமிக்ஸ் நிறுவனத்திலிருந்து லோக்கல் ஆர்டிஸ்டை வைத்து மாடஸ்டி யை வரைந்ததை அம்பலபடுத்துவாரா.

    ஒரு முக்கிய காமிக்ஸ் பிதாமகர் நம்ம லயன் லோகோவில் திருட்டுதனமாக லயன் விடுமுறை மலர்னு போட்டு விற்பனை செய்தாரே அதை அம்பலபடுத்துவாரா.

    அதையெல்லாம் விடுத்து நம் லயன் மீது விசத்தை கக்குவது எதற்கு! !! எவ்வளவு அடித்தாலும் விஜயன் சார் தாங்குகிறார் என்றுதானே.

    விஷத்திலிருந்துதான் அமிர்தம் கிடைக்குமென்பது சான்றோர் வாக்கு.

    விஷத்தை கக்கும் அந்த நபர் தெரிந்தோ தெரியாமலோ, நம் லயன் நிறுவனத்திற்கு வெள்ளிகிழமை தோரும் விளம்பரம் தந்துகொண்டிருக்கிறார் என்பதாகவே தோன்றுகிறது.அதற்காகவே அந்த நபருக்கு நன்றிகள் பல! !!

    ReplyDelete
    Replies
    1. // தெரிந்தோ தெரியாமலோ, நம் லயன் நிறுவனத்திற்கு வெள்ளிகிழமை தோரும் விளம்பரம் தந்துகொண்டிருக்கிறார் என்பதாகவே தோன்றுகிறது.அதற்காகவே அந்த நபருக்கு நன்றிகள் பல! !! //
      very true.

      Delete
    2. Absolutely correct G. Next year will increasing another 500 copies surely.

      Delete
    3. // விஷத்திலிருந்துதான் அமிர்தம் கிடைக்குமென்பது சான்றோர் வாக்கு // what a thought

      Delete
    4. ///விஷத்திலிருந்துதான் அமிர்தம் கிடைக்குமென்பது சான்றோர் வாக்கு.///

      +1

      Delete
    5. ////விஷத்தை கக்கும் அந்த நபர் தெரிந்தோ தெரியாமலோ, நம் லயன் நிறுவனத்திற்கு வெள்ளிகிழமை தோரும் விளம்பரம் தந்துகொண்டிருக்கிறார் என்பதாகவே தோன்றுகிறது.அதற்காகவே அந்த நபருக்கு நன்றிகள் பல! !!////

      +1

      :(

      Delete
  35. ப்ளு பெர்ரி என்ற நாயகரை நீங்கள் ஏன் டைகராக மாற்றீனீர்கள்..அந்த சமயத்தில் ப்ளூபெர்ரி என்பது நமக்கு அந்நியமாக படும்...கதையினுள் நமக்கு அந்த பெயர் எளிதில் ஒன்றாது என்பதால் தானே...இதற்கு காரணம. எளிதில் நமக்கு எளிதாக தோன்ற வைக்கவும்.. அறிமுக ..கதைக்கும் ஒரு எதிர்பார்ப்பு வரும் என்பதால் தானே அந்த டைகர் என்ற பெயர் ..

    அதே போல தான் இதையும் நாங்கள் பார்ப்போம் சார்..வேறு ஒரு அறிமுகமில்லா பிரபலமில்லா நாயகரை எங்களை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்க ஜானியாகவும்...ஸ்பைடராகவும் படைப்பை உருவாக்கியுள்ளீர்கள்...எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களுக்கு இது குற்றமாக தெரியலாம்...எங்களுக்கு அது பிரசாதம் சார்...

    எனவே எப்பொழுதும் போல வாருங்கள் சார்..ப்ளீஸ்ஸ்ஸ்....

    ReplyDelete
    Replies
    1. ///எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களுக்கு இது குற்றமாக தெரியலாம்...எங்களுக்கு அது பிரசாதம் சார்...///

      +1

      :(

      Delete
  36. அன்பு ஆசிரியர்க்கு..
    எனக்கு 'உலக' காமிக்ஸ் எதுவும் எனக்கு தெரியாது. மங்கவோ மாங்காவோ எதுவும் தெரியாது. எனக்கு தெரிந்தது எல்லாம் காமிக்ஸ் என்றால் முத்து, லயன் மற்றும் விஜயன் சார் மட்டுமே.
    என்னுடைய ஹீரோ கேப்டன் டைகர் தான். Lt. Bluberry அல்ல. Baracuda எல்லாம் தெரியாது.. CID லாரன்ஸ் தான். ரிப்போர்ட்டர் ஜானி இன் ஒரிஜினல் பெயர் சத்தியமாய் தெரியாது. எனக்கும் என் குடும்பத்திற்கும் விஜயன் சார் யாரை வைத்து கதை சொல்கிறாரோ அவர்தான் எங்கள் கதாநாயகன், அதுதான் எங்களுக்கு கதை. என் தந்தை யை விட உங்களிடம் தான் நான் நிறைய கதை கேட்டுருக்கிறேன். உங்கள் மொழியாக்கத்தின் வழியாக நிறைய உலகங்களை மனக்கண் வழியே கற்பனை சித்து வாழ்ந்திருக்கிறேன்.
    கண்மூடி தனமான நம்பிக்கை எங்களுக்கு எங்கள் ஆசிரியர் மீது. காரணம் நீங்கள் உங்கள் எழுத்தில், தொழிலில் காட்டிய, காட்டும் பக்தி, dedication மற்றும் எங்களுக்கு என்ன தரவேண்டும் என்பதில் நீங்கள் காட்டும் நேர்த்தி, உழைப்பு. இது இன்றோ நேற்றோ உருவான bond அல்ல, என் பதின்ம வயதில் தோன்றிய எண்ணம், நம்ம்பிக்கை, உங்கள் மேல் அப்படி ஒரு லயிப்பு.
    ஒரு உண்மை மறுக்கவே முடியாது, இன்று தமிழ் காமிக்ஸ் என்று யார் பேசினாலும் மூலகர்தா நீங்கள் தான். அந்த தொடரோ அல்லது அதன் மூலம் வீசப்படும் விஷயங்களோ எந்த விதத்திலும் எங்களை impact செய்யவில்லை. எதற்கு இவையெல்லாம் இப்போது, இதனால் இவருக்கு என்ன கிடைக்கே போகிறது, இதன் மூலம் இவர் என்ன சாதிக்க போகிறார் என்று தான் தோன்றியது. ஆனால் உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் உறவுக்கன்னியை சிதைக்க நினைக்கும் அந்த எண்ணம் வெற்றி பெற போகிறதோ என்ற பயம் எனக்கு. அதற்க்கு இடம் கொடுத்து விடாதீர்கள் சார்.
    உங்கள் மனசங்கடம் புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயத்தில் அந்த மனசங்கடத்திற்கு மருந்து நாங்கள் தான். எங்களுடன் நீங்கள் பேசும், பதிவிடும் தருணம்தான். எங்களுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கை என்றுமே எங்களை விட்டு போகாது. அதே நேரத்தில் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதும் இல்லை.
    நீங்களின்றி எங்கள் ஞாயிறுகளும் மாதத்தின் ஆரம்ப நாட்களும் நிறைவு பெறாது என்பதை மறந்து விடாதீர்கள். ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. /உறவுகன்னியை சிதைப்பதா/ எங்கப்பா இந்த ஈரோடு விஜய்.....அது உறவு கண்ணி நண்பரே

      Delete
    2. முத்து குமரன் சார் வெகு அழகாக உண்மையை சொல்லி உள்ளீர்கள் ...

      Delete
    3. ///எங்களுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கை என்றுமே எங்களை விட்டு போகாது. அதே நேரத்தில் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதும் இல்லை.
      நீங்களின்றி எங்கள் ஞாயிறுகளும் மாதத்தின் ஆரம்ப நாட்களும் நிறைவு பெறாது என்பதை மறந்து விடாதீர்கள். ப்ளீஸ்.///

      +1

      Delete
    4. ////எனக்கும் என் குடும்பத்திற்கும் விஜயன் சார் யாரை வைத்து கதை சொல்கிறாரோ அவர்தான் எங்கள் கதாநாயகன், அதுதான் எங்களுக்கு கதை. என் தந்தை யை விட உங்களிடம் தான் நான் நிறைய கதை கேட்டுருக்கிறேன். உங்கள் மொழியாக்கத்தின் வழியாக நிறைய உலகங்களை மனக்கண் வழியே கற்பனை சித்து வாழ்ந்திருக்கிறேன்.
      கண்மூடி தனமான நம்பிக்கை எங்களுக்கு எங்கள் ஆசிரியர் மீது. காரணம் நீங்கள் உங்கள் எழுத்தில், தொழிலில் காட்டிய, காட்டும் பக்தி, dedication மற்றும் எங்களுக்கு என்ன தரவேண்டும் என்பதில் நீங்கள் காட்டும் நேர்த்தி, உழைப்பு. இது இன்றோ நேற்றோ உருவான bond அல்ல, என் பதின்ம வயதில் தோன்றிய எண்ணம், நம்ம்பிக்கை, உங்கள் மேல் அப்படி ஒரு லயிப்பு. ////


      +1

      Delete
    5. ///உங்கள் மனசங்கடம் புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயத்தில் அந்த மனசங்கடத்திற்கு மருந்து நாங்கள் தான். எங்களுடன் நீங்கள் பேசும், பதிவிடும் தருணம்தான். எங்களுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கை என்றுமே எங்களை விட்டு போகாது. அதே நேரத்தில் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதும் இல்லை. ///

      அருமையாக கருத்து...

      Delete
  37. ஒரு படைப்பாளிக்கு என்று சில உரிமைகள் உள்ளன. அவர் ஒரு படைப்பை படைக்கும்போது கற்பனையாக உருவாக்கலாம். வேறு ஒரு விஷயத்தில் impress ஆகி அதை தனது ஸ்டைலில் உருவாக்கலாம். மாயாவி என்ற ஒரு பெயரை early 80 களில் அன்று தமிழில் இருந்த காமிக்ஸ் நிறுவனங்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்று மூத்த வாசகர்களுக்கு தெரியும். Barracudda என்ற பெயரை லாரன்ஸ் என்று மாற்றம் செய்யும் நோக்கம் அது நம்மை வந்து சேர வேண்டும் என்பதேயொழிய வேறு எண்ணம் இல்லை. சபாஷ் மீனா படத்தை உள்ளத்தை அள்ளித் தா என்றும் தில்லானா மோகனாம்பாள் படத்தை கரகாட்டக்காரனாக என்றும் தரும்போது அதை மாபெரும் வெற்றி படமாக மாற்றி தரவில்லையா. அம்மா இட்லி மீந்து போகும்போது அதை உப்புமாவாக மாற்றி நமக்கு தந்தது நம் பசியை போக்கத்தான். நம்மை ஏமாற்ற அல்ல. உங்களுக்கு copyright உரிமையை பதிப்பகங்கள் தரலாம். ஆனால் அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றி தரும் உரிமையை நாங்கள் உங்களுக்கு கொடுத்து இருக்கிறோம். இதை விட லோக்கலாக சொல்ல எனக்கு தெரியவில்லை. தமிழ் காமிக்ஸ் க்கு ஒரே தாதா நீங்கள்தான். பட்டையை கிளம்புங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சார்..

      Delete
    2. ///அம்மா இட்லி மீந்து போகும்போது அதை உப்புமாவாக மாற்றி நமக்கு தந்தது நம் பசியை போக்கத்தான். நம்மை ஏமாற்ற அல்ல. ///

      செம்ம..!! +1

      Delete
  38. எடிட்டர் சார்...இந்த விடுமுறைக் காலத்தை பயன்படுத்தும் விதமாக பொதுத்தளங்களில் நமது காமிக் பற்றிய விளம்பரத்தை அதிகமாக்க வேண்டும். நிறைய வெளி மக்களுக்கு சென்றுசேர வேண்டுமானால் தினசரி நாளிதழ்களில் விளம்பரப்படுத்த வேண்டும். ஒரே நாளில் கிழித்தெறியப்பட்டாலும்கூட நாளிதழ்களில் விளம்பரம் செய்தால்தான் பரவலான மக்களைச் சென்று சேரும். அதுவும் சனி ஞாயிறுகளில் விளம்பரம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.!

    ReplyDelete
  39. நாளை வழக்கம் போல் தங்கள் பதிவுக்காக காத்திருப்போம்.

    ReplyDelete
  40. திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காமிக்கை நேரில் பெற அழைக்கவும்; பிரகாஷ், 9487243494மற்றும் 8667666736.

    ReplyDelete
  41. //...காணாது போகப் போவதாய் நான் சொல்ல வரவில்லை ; சிந்தையில் கொஞ்சமே கொஞ்சமாய் சகஜம் மீண்டிடும்வரையிலும் பெரும்பங்கு கவனத்தைப் பணிகளின் பொருட்டு தந்து பார்க்கிறேன்...//

    என்ன சார் இது? ஏதாவது ஒரு விதத்தில் உங்களை முடக்கிவிடுவதுதானே அவரின் நோக்கம்! அதற்கு ஆதரவாக நீங்கள் இப்படி முடிவெடுத்தால் எப்படி?

    இதையெல்லாம் நாங்களே ஜாலியாக எடுத்துக் கொண்டு தாண்டி விட்டோம்... நீங்கள் ஏன் சார் சீரியஸாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள்?

    சார், ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்... நானெல்லாம் காமிக்ஸ் படிப்பது உங்கள் மொழிபெயர்ப்புக்காகத்தான்... அதில் தெறிக்கும் நகைச்சுவைக்காகத்தான்... மற்றபடிக்கு ஹீரோவோ, ஓவியமோ இரண்டாம் பட்சம் தான் என்னைப் பொறுத்த வரையிலும்...

    ஒரு காலத்தில் இப்படி பிகு பண்ணிக் கொண்டு போனது மாயாவி சிவாதான்... சமீபத்தில் டெக்ஸ் விஜயராகவன் தான்... இப்போது நீங்களா?

    சார், வழக்கம் போல் இயங்குங்கள்....

    ReplyDelete
    Replies
    1. // ஏதாவது ஒரு விதத்தில் உங்களை முடக்கிவிடுவதுதானே அவரின் நோக்கம்! அதற்கு ஆதரவாக நீங்கள் இப்படி முடிவெடுத்தால் எப்படி? // well said. We should not give a chance to them. Let covert this as positive energy for us.

      Delete
    2. உண்மை ...விடியலில் உங்கள் புது பதிவை காண காத்து கொண்டே இருப்போம் ...

      Delete
    3. /// நானெல்லாம் காமிக்ஸ் படிப்பது உங்கள் மொழிபெயர்ப்புக்காகத்தான்... அதில் தெறிக்கும் நகைச்சுவைக்காகத்தான்/// அப்ப நாங்களாம் எதுக்காம். எல்லாம் ஆசிரியர் சாரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும் என்பதும் தானே...!!!

      மாதம் ஒரு முறை வரும் புத்தக பார்சலுக்கும்,
      வாரம் ஒரு முறை வரும் பதிவு பக்கத்திற்கும் நாங்கள் காத்து கிடப்பது 101% உங்களுக்கு தெரியும் ஆசிரியர் சார்...

      Delete
    4. //என்ன சார் இது? ஏதாவது ஒரு விதத்தில் உங்களை முடக்கிவிடுவதுதானே அவரின் நோக்கம்! அதற்கு ஆதரவாக நீங்கள் இப்படி முடிவெடுத்தால் எப்படி?//
      +1

      Delete
    5. ////சார், ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்... நானெல்லாம் காமிக்ஸ் படிப்பது உங்கள் மொழிபெயர்ப்புக்காகத்தான்... அதில் தெறிக்கும் நகைச்சுவைக்காகத்தான்... மற்றபடிக்கு ஹீரோவோ, ஓவியமோ இரண்டாம் பட்சம் தான் என்னைப் பொறுத்த வரையிலும்...
      ////

      +1

      :(

      Delete
  42. சார் ignore பன்னுங்க இத்தகைய விஷயங்களை கவனம் கொல்லவேண்டாம். உங்கள் பதிவு இல்லாத ஞ௱யிரு எங்களுக்கு ஒரு இருண்ட ஞாயிறு இந்த முடிவு வேண்டா ம். உற்சகத்தோடு வர்ருங்கள் எங்கலை உற்சகபடுத்த. நாளை உங்கள் பதிவை எதிர் நோக்கி எக்கதுடன் நாங்கள்

    ReplyDelete
  43. ஈ வி போன் செய்து தகவல் சொல்லியும்
    காணோமே.பக்கம் பக்கமாய் கட்டுரை
    தயார் செய்கிறீர்களா????

    ReplyDelete
    Replies
    1. 'ஸ்தம்பித்துப் போவது' என்று சொல்வார்களே... எனக்கும் அப்படியொரு நிலைதான் கணேஷ் சார்!

      :(

      Delete
  44. சார்...அந்த கமெண்ட்டை எடுத்து விடுங்கள்...இந்த கமெண்ட்டை எடுத்து விடுங்கள் என பல கமெண்ட்களை சுட்டி காட்டி உள்ளோம்....

    முதன் முறையாக கேட்கிறோம்....

    இந்த பதிவை நீக்கி விடுங்கள் சார்...ப்ளீஸ்..

    உங்களின் உற்சாக பதிவு தான் எங்களுக்கும் உங்களுக்கும் மருந்து....

    ReplyDelete
    Replies
    1. இது இருக்கட்டும் தலீவரே. நமக்கு இது மறக்கக் கூடாது. உத்வேகம் குறையும் போதெல்லாம் இதைத் திரும்ப படித்து சார்ஜ் ஏற்றிக் கொள்ள இது இருக்கட்டும்

      Delete
  45. சார் முதுகில் குத்துவது என்பது எல்லா துறையிலும் இருக்கிறது தான். இதை எல்லாம் துடைச்சி எறிஞ்சுட்டு போய்ட்டே இருக்கணும் நீயெல்லா எனக்கு ஆறுதல் சொல்ல வந்துட்டே அப்டினு நினைக்காதீங்க ஏறத்தாழ உங்க வயசுதான் எனக்கும் இதை விட பல துரோகங்கள பார்த்தவன் நான் இதற்காக எல்லாம் பதிவு போடாம இருக்காதீங்க ஒவ்வொரு ஞாயிறும் விடியறது இந்த தளத்தில் தான் (நிறைய பேருக்கு) அதிகப்பிரசங்கித்தனமாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. //ஒவ்வொரு ஞாயிறும் விடியறது இந்த தளத்தில் தான்//
      +1

      Delete
    2. ///ஒவ்வொரு ஞாயிறும் விடியறது இந்த தளத்தில் தான் ///

      +1

      Delete
  46. என் மனதிற்கு தோணியதை எழுதுகிறேன்.
    என்றோ ஒருநாளில் (மாமாங்கம்?) நம் ஆசிரியர் ஆர்வமிகுதியால் காமிக்ஸை உயிர்ப்புடன் வேண்டிய ஆசை மிகுதியால் சில தவறை (தப்பை அல்ல) செய்துவிட்டார்.அதன் பலனான குற்றவுணர்ச்சியில் நிச்சயம் தவித்து வருந்திவிட்டார்.
    நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் அப்படி ஏமாற்றி? லட்சக்கணக்கில் சம்பாதித்து லாபம் பார்த்தாரா என்ன?

    அப்படி சம்பாதிக்கும் நோக்கம் கொண்டிருந்தால் நம் பாக்கெட்டில் உள்ள பணத்தை வன்மையாக பிடுங்கும்படியான விலைகளை அல்லவா வைத்திருப்பார்?

    மாறாக 5,10 விலையேற்றத்திற்கும் ஆயிரம் முறை யோசித்து சத்தமேயில்லாமல் ஒரிரு பக்கத்தை அதிகப்படுத்தி வாசகனுக்குள் திருப்தியை விதைத்த கண்ணியவான்.
    தன்னை ஒரு ஜீனியஸ் ஆக மற்றறவர்கள் முன் மார்தட்டி எட்டாத உயரத்தில் தன்னை தகவமைத்துக்கொள்ளும் பதிப்பாசிரியர்களுக்கு மத்தியில், தன்னை நண்பனாக,சகோதரனாக,சகமனிதனாக பாவிக்கும் ஆசிரியர் கிடைப்பது எப்பேர்ப்பட்ட வரம்.அத்துணை வரம் வாங்கியவர்கள் நாம்.

    என்னைக்கேட்டால்
    'கிங்'கும் தெரியாது கிங்காங்'கும் தெரியாது.
    தமிழ் இந்து படிக்கிறதில்லைங்க. இங்கிலீஸ் இந்து படிக்கறதோட சரி'ன்னு போய்ட்டே இருக்கலாம்.அவ்வளவுதான்.


    ReplyDelete
    Replies
    1. ///தன்னை ஒரு ஜீனியஸ் ஆக மற்றறவர்கள் முன் மார்தட்டி எட்டாத உயரத்தில் தன்னை தகவமைத்துக்கொள்ளும் பதிப்பாசிரியர்களுக்கு மத்தியில், தன்னை நண்பனாக,சகோதரனாக,சகமனிதனாக பாவிக்கும் ஆசிரியர் கிடைப்பது எப்பேர்ப்பட்ட வரம்.அத்துணை வரம் வாங்கியவர்கள் நாம்.///

      +1

      Delete
    2. ////மாறாக 5,10 விலையேற்றத்திற்கும் ஆயிரம் முறை யோசித்து சத்தமேயில்லாமல் ஒரிரு பக்கத்தை அதிகப்படுத்தி வாசகனுக்குள் திருப்தியை விதைத்த கண்ணியவான்.
      தன்னை ஒரு ஜீனியஸ் ஆக மற்றறவர்கள் முன் மார்தட்டி எட்டாத உயரத்தில் தன்னை தகவமைத்துக்கொள்ளும் பதிப்பாசிரியர்களுக்கு மத்தியில், தன்னை நண்பனாக,சகோதரனாக,சகமனிதனாக பாவிக்கும் ஆசிரியர் கிடைப்பது எப்பேர்ப்பட்ட வரம்.அத்துணை வரம் வாங்கியவர்கள் நாம்.///

      +1

      :(

      Delete
    3. /தன்னை ஒரு ஜீனியஸ் ஆக மற்றறவர்கள் முன் மார்தட்டி எட்டாத உயரத்தில் தன்னை தகவமைத்துக்கொள்ளும் பதிப்பாசிரியர்களுக்கு மத்தியில், தன்னை நண்பனாக,சகோதரனாக,சகமனிதனாக பாவிக்கும் ஆசிரியர் கிடைப்பது எப்பேர்ப்பட்ட வரம்.அத்துணை வரம் வாங்கியவர்கள் நாம்.//
      +1

      Delete
  47. எடிட்டர் சார்,
    நீங்கள் இவ்வளவு பெரிய விளக்கமெல்லாம் கொடுக்கவேண்டிய அவசியமே இல்லை. எங்களுக்கு காலம் காலமாக காமிக்ஸ்கள் மூலம் சொல்லமுடியாத மகிழ்ச்சியை தந்த நீங்கள், இப்படி கலங்கி பதிவிடுவதை பார்க்கும்போது மனது கலங்குகிறது. தயவுசெய்து பழையபடி உற்சாகத்துடன் தொடர வேண்டுகிறேன். யார் என்ன சொன்னாலும் சரி, உங்கள் மேல் உள்ள மதிப்பு சற்றும் குறையாது. இனியொரு முறை இதை போன்ற பதிவு நமது வலைத்தளத்தில் வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. // இனியொரு முறை இதை போன்ற பதிவு நமது வலைத்தளத்தில் வேண்டாம். // +100

      Delete
    2. ///தயவுசெய்து பழையபடி உற்சாகத்துடன் தொடர வேண்டுகிறேன். யார் என்ன சொன்னாலும் சரி, உங்கள் மேல் உள்ள மதிப்பு சற்றும் குறையாது. இனியொரு முறை இதை போன்ற பதிவு நமது வலைத்தளத்தில் வேண்டாம்.///

      +1

      Delete
    3. ////எங்களுக்கு காலம் காலமாக காமிக்ஸ்கள் மூலம் சொல்லமுடியாத மகிழ்ச்சியை தந்த நீங்கள், இப்படி கலங்கி பதிவிடுவதை பார்க்கும்போது மனது கலங்குகிறது. ////

      +1

      :(

      Delete
    4. ///யார் என்ன சொன்னாலும் சரி, உங்கள் மேல் உள்ள மதிப்பு சற்றும் குறையாது.///


      +1234567890

      Delete
  48. மனது கணக்கிறது ஆசிரியரே
    வேண்டாமே இந்த முடிவு

    ReplyDelete
  49. // 50 வயதில் புதிதாய் பிள்ளையார்சுழியிலிருந்து துவங்க வேண்டியதொரு சூழலில் இருப்பது போல் உணர்கிறேன்! “"அழிக்க"“ இவ்வளவு வியர்வை சிந்திட ஒருவர் கண்முன்னே தயாராய் நிற்கும் போது- “"ஆக்க"” அதே தீவிர உழைப்பைப் பயன்படுத்திடப் படித்துக் கொண்டால் போச்சு என்று தோன்றியது! So முன்னெப்போதையும் விட திடமாய் உழைக்க வேண்டிய நாட்கள் முன்னிற்பதாய் நினைக்கிறேன்! //

    Glad to hear these words Vijayan sir. You are already doing positive and productive works in the recent comeback years and wish the future be even better and brighter for comics and our readers.

    ReplyDelete
    Replies
    1. ///You are already doing positive and productive works in the recent comeback years and wish the future be even better and brighter for comics and our readers.///

      +1

      Delete
  50. வெள்ளி தோரும் நம் காமிக்ஸ்க்கு நல்ல
    விளம்பரம் என்று நினைத்து கொண்டு போங்கள்
    Don't worry be happy

    ReplyDelete
  51. ஒரு விசயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும், அந்த நபர் இனி வரும் காலங்களில் இங்கு வந்து பதிவிட்டால் நாம் புத்தர் போல் மறப்போம் மன்னிப்போம் என்று இருந்தால் நம்மை போல் முட்டாள்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நாம் இதுவரை இப்படி புத்தராக இருந்தால்தான் இது நடந்தது நடக்கிறது. நண்பர்கள் மற்றும் ஆசிரியர் இதனை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்​.

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க பரணி. சின்ன பழி சொல்லுக்கு கூட அஞ்சி நல்லவர்கள் முடங்கி விடுவதால் பைரேடட் எண்ணெய் வயல், மற்றவர்களிடம் சுட்ட பழய காமிகஸ்கள் விற்றது என பல்லாயிரக்கணக்கில் கல்லாக் கட்டிய திருட்டு ராச விஸ்வாசிகள் கூச்ச நாச்சமில்லாமல் தொடர்ந்து சேறு வாரி இறைக்கிறார்கள். இவர்கள் நோக்கமெல்லாம் லயன் முத்தவின் legacyயை களங்கப்படுத்துவதே. இதை முடக்கி விடால் பழயபடி தங்கள் திருட்டுத் தொழிலை தொடங்கலாம் இல்லியா?

      Delete
  52. விஜயன் சார், வரும் காலங்களில் இது போன்ற நபர்களின் பதிவுகளுக்கு மாங்கு மாங்கு என்று பதில் அளிப்பதை தவிர்கவும். இது நாள் வரை இது போன்ற நபர்களுக்கு பதில் அளித்தது வீண் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  53. கடந்த இரண்டு வாரங்களாக நமது தளத்தில் பல புதிய நண்பர்களை காணமுடிகிறது. உங்கள் அனைவருக்கும் வணக்கம் மற்றும் நன்றிகள். தொடர்ந்து பதிவிடுகள் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. ///கடந்த இரண்டு வாரங்களாக நமது தளத்தில் பல புதிய நண்பர்களை காணமுடிகிறது. உங்கள் அனைவருக்கும் வணக்கம் மற்றும் நன்றிகள். தொடர்ந்து பதிவிடுகள் நண்பர்களே.///

      +1

      Delete
  54. கவலை வேண்டாம் ஆசிரியர் சார். நாங்கள் என்றும் உங்கள் பக்கமே.மீண்டு வாருங்கள். Please please please.

    ReplyDelete
    Replies
    1. ///கவலை வேண்டாம் ஆசிரியர் சார். நாங்கள் என்றும் உங்கள் பக்கமே.மீண்டு வாருங்கள். Please please please.///

      +1

      Delete
  55. யாரோ சிலர் தூற்றலாம் சார். அதற்காக உங்கள் எழுத்துக்கு அடிமையான என் போன்ற வாசகர்களை தண்டிக்காதீர்கள் சார் பிளீஸ். தயவு செய்து வருத்தம் மறந்து திரும்ப வாங்கள் சார். ஞாயிறு எமது காலை விடிவது உங்கள் பதிவுடன்தான். அதுவும் சிறிதாகி விட்டால் - ஐயகோ! சிங்கத்தின் சிறு வயதில் கேட்டு, நாம் போராடும்போது, காமிக்ஸ் வெளியீடுகள் பற்றிய பதிவு மட்டும் என்றால் எப்படி ஆசிரியரே? உங்களுக்கு ஆலோசனை சொல்ல எனக்கு வயது பத்தாது சார். யாரோ செய்யும் தவறுக்காக , உங்களை மட்டுமே நம்பியுள்ள எங்களை தண்டித்து விடாதீர்கள். பிளீஸ். நெஞ்சு பதைபதைத்து போய் இதை எழுதுகிறேன். தயவு செய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. ///ஞாயிறு எமது காலை விடிவது உங்கள் பதிவுடன்தான். அதுவும் சிறிதாகி விட்டால் - ஐயகோ! ///

      +1

      Delete
    2. ///நெஞ்சு பதைபதைத்து போய் இதை எழுதுகிறேன்/// ஆம் திரு ஜி. இந்த வார்த்தைகள் தான் பதட்டத்தில் எனக்கு வரவில்லை...

      Delete
  56. டியர் எடிட்,

    நண்பர்கள் பலர் அவரின் உள்நோக்கங்கள் மற்றும் சரித்திரத்தை தங்களுக்கு ஆதாரத்துடன் நிரூபித்த பிறகும், அவரிடம் இருந்து கிடைக்கபெற்ற சமீபத்திய உதவிகளுக்கு நீங்கள் அவற்றை புறக்கணித்ததற்கு என்றாவது பலி வந்து சேரும் என்பது தெரிந்தது தானே. நல்ல பாம்பு என்று தெரிந்தே அதனுடன் நட்பு கொண்ட கதை தான்.

    எடியின் மீதான உண்மையான அக்கறையுடன் இந்த காமிக்ஸ் மாற்றங்களை பற்றி அவரிடம் அந்த காலத்திலேயே கேள்வி கேட்டவர்களை, போலி ஐடிக்கள் மூலம் வரிந்துகட்டி துவைத்து எடுத்தது இதே கூட்டம் தானே. அப்போது அவருக்கு ஒத்து ஊதிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களும், இப்போதைய நிலைக்கான மறைமுக காரணமே.

    என்ன ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, கடைசியில் மனிதரையே கடித்த நிலை தான். என்ன நீங்கள் சொன்னது போல, இந்த விஷயங்களை நீங்களே வலைதளத்தில் எப்போதா போட்டு உடைத்திருந்தால், தற்போதைய பத்திரிக்கை தாக்குதல்களுக்கு முகாந்திரமே இல்லாமல் செய்திருக்கலாம்.

    என்னை பொறுத்த வரை 3+ இதழ்களின் நீங்கள் செய்த தவறுகள், 30+ வருட காலங்கள் உங்களின் மூலம் எனக்கு கிடைத்த காமிக்ஸ் அறிமுகங்களையும், அதன் மூலும் உங்களின் மீதான அணுமானத்தையும் என்றும் குறைத்து விட போவதில்லை. தற்போதைய சூழ்நிலையில் பதிவுலகத்திற்கு ஒரு சின்ன இடைவெளி விட நினைத்திருப்பது சரியான முடிவே... புத்தகங்கள் வாயிலான உங்கள் தொடர்பு என்றும் தொடரும், எனவே காமிக்ஸ் மீதான காதல் மீண்டும் இணையத்திற்கு உங்களை வெகுசீக்கிரமே இழுத்து வரும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.

    இதுவும் கடந்து போகும், அது வரை முண்ணனி பத்திரிக்கை ஒன்றில் வாரா வாரம் நமக்கு கிடைக்கும் இலவச விளம்பரமாக இதை உணருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. ///இதுவும் கடந்து போகும், அது வரை முண்ணனி பத்திரிக்கை ஒன்றில் வாரா வாரம் நமக்கு கிடைக்கும் இலவச விளம்பரமாக இதை உணருங்கள்...///

      +1

      Delete
    2. Rafiq @ உண்மை. நமது ஆசிரியர் இது போன்ற பாம்புகளை இனியாவது ஒதுக்கி வைக்க வேண்டும்.

      Delete
    3. ///காமிக்ஸ் மீதான காதல் மீண்டும் இணையத்திற்கு உங்களை வெகுசீக்கிரமே இழுத்து வரும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை./// அருமையான கருத்து ரஃபீக்.+1000. எனக்கும் அந்த நம்பிக்கை மிக பலமாக உள்ளது.

      ///இதுவும் கடந்து போகும், அது வரை முண்ணனி பத்திரிக்கை ஒன்றில் வாரா வாரம் நமக்கு கிடைக்கும் இலவச விளம்பரமாக இதை உணருங்கள்...///+1000

      Delete
    4. அழகாகச் சொன்னீர்கள் Rafiq..

      Delete
  57. இவ்வளவு விஷயங்கள் நீங்கள் சொல்ல தேவையில்லை எடி சார்

    இதற்கெல்லாமா எடி பீல்பண்ணுவீங்க
    அசிங்கம் கையில பட்டிருச்சின்னு கையை வெட்டிக்கவா போகிறோம்

    அது போல இந்த விஷ(ய)த்தை தூக்கி எறிந்து விட்டு அடுத்து ஆக வேண்டிய வேலையை பார்ப்பீங்களா
    அதை விட்டிட்டு புலம்புவதில் என்ன வந்து விட போகிறது

    இங்கு பார்க்கிறவங்க படிக்கிறவங்க கமண்டுறவங்க எல்லாரும் உங்களை அப்பாவை லயன்/முத்து காமிக்ஸை நல்லா புரிஞ்சிகிட்டவங்க தான்

    இப்படி புலம்புகிற விஜயனை (சார் ஐ ) எனக்கு சுத்தமா பிடிக்கலை

    எங்களுக்கு நீங்க தான் தூண்டுகோல் / நெம்புகோல் லாம்


    So dont feel edi sir

    ReplyDelete
    Replies
    1. குறை சொல்றவன் ஆயிரம்தான் சொல்லட்டும். இதையெல்லாம் எங்க சந்தோசத்துக்குத்தானே செய்தீங்க

      Delete
  58. காமிக்ஸ் அன்றி வேற எதுவும் தெறியாது....
    எல்லாம் சுபமாக முடியும்....

    ReplyDelete
  59. வரணும்......பழைய விஜயனா வரணும்....

    ReplyDelete


  60. நண்பர்கள் அனைவரின் கருத்துகளுக்கும் என்னுடைய வழிமொழிதலும்..!!

    எடிட்டர் சார் ..!

    தயவு செய்து இங்கே எழுதுவதை நிறுத்திவைக்க வேண்டாம். நாம் தொடர்ந்து உற்சாகமாக இருப்பதுதான் எல்லாவற்றிற்கும் சரியான பதிலாக இருக்கும். மறுபரிசீலனை செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்........!!!


    ///அடுத்த ஸ்பெஷல் இதழ் அறிவிப்பின் திட்டமிடலுக்கும்; செயலாக்கத்துக்கும் தொடரும் நாட்களை நிச்சயம் பயன்படுத்திக் கொள்வேன் !!///

    ஓ கே சார். .!

    அடுத்த ஷ்பெசல் இதழுக்கான அறிவிப்புடன் கூடிய வழக்கமான உற்சாகப்பதிவை எதிர்வரும் 23/4/2017 அன்று போட்டால் போதும் சார். அதுவரை நாங்கள் பொறுமையாக காத்திருப்போம் என்று உறுதியளிக்கிறேன். .!!

    ReplyDelete
    Replies
    1. ///நாம் தொடர்ந்து உற்சாகமாக இருப்பதுதான் எல்லாவற்றிற்கும் சரியான பதிலாக இருக்கும். மறுபரிசீலனை செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்........!!!///அதே அதே சார்...
      பதிலாகவும் இருக்கனும், பதிலடியாகவும் இருக்கனும் உங்களது உற்சாகமான நாளைய பதிவு சார்

      Delete
  61. ஒவ்வொரு பதிவும் எவ்வளவு ஆழமான, ஆத்மார்த்தமாக உள்ளன!

    80-களின் அதே உற்சாகத்துடன் பணிகளை தொடருங்கள் விஜயன் சார் !

    ReplyDelete
  62. நாளை ஞாயிறு எடிட்டரின் உற்சாகமான பதிவை படிக்கலாம் என்று நினைத்தால்
    சனி யன்று பதிவு வந்து விட்டது இருமடங்கு உற்சாகத்துடன் பதிவை படித்தால் தலையில் இடி விழுந்தது போல் ஒரு பதிவு தயவு செய்து இனி மேல் இது போல ஒரு பதிவு வேண்டாம் ஆசிரியரே நான் இரண்டரை மாதத்திற்க்கு முன் நம்பிக்கையிழந்து இருந்த போது நீங்களும் காமிக்ஸ் நண்பர்களும் கொடுத்த உற்சாகத்தில் தான் மீண்டெழுந்து நம்பிக்கை யோடு நம் தளத்திற்க்கு வந்தேன் நீங்கள் இது போன்று பதிவை கொடுத்தால்
    எனக்குள் ஒளிந்திருக்கும் மனக்குறையாளன் மீண்டும் எழுந்து வந்து விடுவான் அதணால் நீங்கள் என்று உற்சாகமாக பதிவிடுகிறீர்களோ அன்று தான் நானும் நம் தளத்திற்க்கு வருவேன் நாளையே சந்தோஷமாக பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  63. கண்ணன் சார்
    எல்லோருடைய கமெண்டுக்கும் +1 போடுறீங்க. ஒருவேளை நீங்க +1 படிச்சிட்டுருக்கிறத சிம்பாலிக்கா சொல்றீங்களோ?

    ReplyDelete
    Replies
    1. /// ஒருவேளை நீங்க +1 படிச்சிட்டுருக்கிறத சிம்பாலிக்கா சொல்றீங்களோ?///

      ச்சேச்சே..!!
      அப்படியெல்லாம் பொய் சொல்வது எனக்கு சுத்தமாக பிடிக்காது சார்.!

      SSLC எழுதியிருக்கேன். ரிசல்ட்டுகாண்டி வெய்ட்டிங்கு..! பாஸாயிட்டா +1 ஊத்திகிட்டா டுட்டோரியல்..!

      Delete
    2. என்னாது.. அவ்வளோ பெரிய படிப்பெல்லாம் படிச்சு இருக்கீங்களா...

      Delete
  64. எண்ணற்ற காமிக்ஸ் வாசகர்களுடைய பல தரப்பட்ட உணர்வு நிலைகளையும் உணர்ந்து கொள்ளும் வாய்பாக கருதலாமே.ஆசிரியர் குழு மீது உள்ள மதிப்பீடுகளும்;காமிக்ஸ் மீதான மையலும் ஒருபோதும் பட்டுப்போகாத விருட்சங்கள்.இந்த இணையில்லா அன்பு நெஞ்சங்களுக்கு நீங்கள் செய்யும் நன்றியாக அமைவது நல்ல தரமான கதைகளை தொடர்ந்து வெளியிடுவதே.

    ReplyDelete
  65. அஹ்மத் பாஷா என்கிற என்னுடைய பெயர்,இனி என் ஆசானின் அடையாளத்தோடு இடம் பெறும்.

    ReplyDelete
    Replies
    1. சார்...சார்.....உங்கள் அன்புகளுக்கு முன்னே என் பிடிவாதமெல்லாம் கதிரவனைக் கண்ட பனித்துளியாகிடாதா ? !! இறைதூதரின் பெயர் இருக்க வேண்டிய இடத்தினில் வேறெதுவும் வேண்டாமே - ப்ளீஸ் ?

      காலையில் பதிவோடும், புன்னகையோடும் ஆஜராகியிருப்பேன் !!
      ஒரு எட்டுமணிவாக்கில் !!

      Delete
    2. ///காலையில் பதிவோடும், புன்னகையோடும் ஆஜராகியிருப்பேன் !!
      ஒரு எட்டுமணிவாக்கில் !!///


      சூப்பரப்பு..!! :):):):):):):):):)

      Delete
    3. //காலையில் பதிவோடும், புன்னகையோடும் ஆஜராகியிருப்பேன் !!
      ஒரு எட்டுமணிவாக்கில் !!//--அப்படி வாங்க வழிக்கு ஆசிரியர் சார்...

      ஏ டன்டனக்க டனுக்கனக்க னக்கா னக்கா ஏ...😎😎😎😎😄😄😄💃💃💃💃💖💖💖💖

      👌👌👌👌👌👌👌👌👌👌👌

      குட் நைட் & குட் மார்னிங் சார்...

      Delete
    4. 👍🏻👍🏻👍🏻👍🏻👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾💪💪💪💪💪💪

      Delete
    5. அப்படி வாங்க வழிக்கு... :)

      Delete
    6. அருமை சார். நாம எப்பவும் காமிக்ஸ் பற்றி மட்டும் பேசுவோம், சிந்திப்போம். மத்ததெல்லாம் விட்டுத்தள்ளுங்கள். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

      Delete
    7. ஹெய் சூப்பரப்பு
      எங்கள் மூத்த அண்னன் இந்த தம்பி களை வருத்தப் படுத்தி பார்க்க மாட்டார்

      Delete
    8. சூப்பர் சார் . உங்கள் எனர்ஜி ஊட்டும் பதிவுக்காக waiting .

      Delete
    9. :)

      :)

      :)

      :)

      பாட்ஷா ஜி! பின்னிட்டேள் போங்கோ! எடிட்டரின் மனதை சட்டென்று இளகவைக்க உங்களுக்கு இந்தமாதிரி ஒரு ஐடியாவைக் கொடுத்த அந்த இன்ஷா அல்லாவுக்கு தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் சார்பாக பலநூறு நன்றிகளைத் தெரிவித்துவிடுங்களேன்!

      செம! :)

      Delete
  66. உலகதரம் வாய்ந்த கதைகளை எழுதியவர்
    ஓவியர் என்று அறிமுகம் செய்து கற்பனைக்கெட்டாத கேட்டறியாத அற்புத
    காமிக்ஸ் கதைகளை எங்களுக்களித்த
    தங்களுக்கா இந்த மனவருத்தம்.சூரியனை பார்த்து ஏதோ
    ஒன்று (நாய் என்று சொல்லி அதன்
    மதிப்பை நன்றியை குறைக்க விரும்பவில்லை) குரைத்ததாம்.எங்களுக்கு நீங்கள்தான்
    முக்கியம்

    ReplyDelete
  67. அன்புள்ள விஜயன் சார், நீங்க நடந்த தவறை எந்த வித சப்பைக்கட்டும் கட்டாமல் திறந்த மனதுடன் ஒப்புக்கொண்டதேநீங்கள் ஒரு பெரிய மனிதர் என்பதை நிரூபித்துவிட்டது. மீண்டும் மீண்டும் சுயகண்டனம் செய்து கொள்ளாமல் அதிலிருந்து மீண்டு வருவதுதான் நீங்கள் இப்போது அவசியமாகச் செய்யக்கூடியது ஆகும். தவறே செய்யாத மனிதன் உலகத்தில் யார். இன்னமும் கடவுள் கூட முற்றிலும் தவறே இல்லாம் எதையும் முழுமையாகப் படைக்கவில்லை. அதனால்முடிந்த ஒன்றை நினைத்துக்கொண்டு நிகழ்காலத்தை வேதனையாக்கிக்கொள்ளவேண்டாம். இனி நடப்பதை பற்றியே நினையுங்கள். அதுதான் உங்கள் மீது அன்பு கொண்டுள்ள எங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் காட்டும் பதில் அன்பு. அந்த நம்பிக்கையில் உங்களது ஞாயிறு பதிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். நீங்கள் கடந்த காலத்தில் ஒரு ஆர்வத்தில் செய்த தவறை நினைத்து இப்போது எங்களுக்கு வேதனை ஊட்டாமல் நாம் அனைவரும் சேர்ந்து அதைக் கடந்து போகலாம் வாருங்கள்.

    ReplyDelete
  68. sir don't worry we are eagerly waiting for your writing tomorrow

    ReplyDelete
  69. ஞாயிறு புது பொலிவுடன் புலரும்.

    ReplyDelete
  70. அனைவர் வாழ்விலும் சில சங்கடமான சறுக்கல்கள் ஏற்படத்தான் செய்கின்றன. அனைத்தில் இருந்தும் மீண்டு வந்துகொண்டுதான் இருக்கிறோம். So don't worry we are all with you. காலையில் புது எண்ணவோட்டங்களுடன் சந்திப்போம்.ஞாயிறு புது பொலிவுடன் புலரும்.

    ReplyDelete
  71. நீங்கள் இம்மாதிரியான சோர்ந்து போகக்கூடியதான பதிவுகளை இடக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.//

    ReplyDelete
  72. y this kolaveri ..wat happened...appada naaalikku putu pathivu...nimathiya thoonga polam

    ReplyDelete
  73. மிகவும் வருத்தமாக உள்ளது.உங்கள் மனநிம்மதியும், மனத்தெளிவுமே முக்கியம்.சகஜமாகுங்கள் சார். உங்கள் வருகைக்கு காத்திருப்போம்.

    ReplyDelete
  74. எங்கள் அபிமான நாயகர்களின் கதைகள் தீர்ந்து போன ஒரு தருணந்தில் எங்களின் காமிக்ஸ் பசிக்கு தீணி போடுவதற்காக நீங்கள் எடுத்த ஓரிரு நடவடிக்கைகளையெல்லாம ஒரு பெரிய விஷயமாக கருத தேவையில்லை...
    நீங்கள் இந்த விஷயத்தை புறந்தள்ளிவிட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

    வட்டாள் நாகராஜ் பாகுபலிக்கு கொடுக்கும் இலவச விளம்பரங்கள் போல நமக்கும் ஒரு வட்டாள் நாகராஜ் கிடைத்திருக்கிறார்...கிடைக்கட்டும் இலவச விளம்பரங்கள்

    ReplyDelete
  75. இதுவும் கடந்து போகும்

    ReplyDelete

  76. VIJAYAN AHMED22 April 2017 at 23:19:00 GMT+5:30
    #அஹ்மத் பாஷா என்கிற என்னுடைய பெயர்,இனி என் ஆசானின் அடையாளத்தோடு இடம் பெறும்.

    Reply
    Replies

    Vijayan22 April 2017 at 23:50:00 GMT+5:30
    சார்...சார்.....உங்கள் அன்புகளுக்கு முன்னே என் பிடிவாதமெல்லாம் கதிரவனைக் கண்ட பனித்துளியாகிடாதா ? !! இறைதூதரின் பெயர் இருக்க வேண்டிய இடத்தினில் வேறெதுவும் வேண்டாமே - ப்ளீஸ் ?

    காலையில் பதிவோடும், புன்னகையோடும் ஆஜராகியிருப்பேன் !!
    ஒரு எட்டுமணிவாக்கில்#
    ஆவலுடன் காமிக்ஸ் காதலுடன் எதிர்ப்பார்ப்புடன்​ காத்திருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. 'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது! _/\_ _/\_


      இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!

      Delete
  77. #வட்டாள் நாகராஜ் பாகுபலிக்கு கொடுக்கும் இலவச விளம்பரங்கள் போல நமக்கும் ஒரு வட்டாள் நாகராஜ் கிடைத்திருக்கிறார்...கிடைக்கட்டும் இலவச விளம்பரங்கள்#
    இதற்கு சத்யராஜ் பதிலடி பேட்டியை போல தங்கள் பதிவு எதிர்பார்க்கப்படுகிறது.
    #அவர் நாண நன்னையும் செய்து விடலாம்# இதுவும் கடந்து போகும்

    ReplyDelete
  78. ஈரோடு பூனைக்கு +1 வேண்டாமே.
    உங்கள் மகிழ்ச்சியான​ வேடிக்கை பதில்கள் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ////ஈரோடு பூனைக்கு +1 வேண்டாமே.
      உங்கள் மகிழ்ச்சியான​ வேடிக்கை பதில்கள் வேண்டும்/////

      +1

      ;)

      :D

      Delete
  79. ஆண்டாண்டு காலமாய் மெளப்பார்வையாளராகவே இருந்துவந்தாலும், ஒரு அசாதாரண சூழ்நிலையில் மெளனம் கலைத்து எடிட்டருக்கு ஆறுதல் வழங்கிய அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் ஈனாவினாவின் நன்றி கலந்த வணக்கங்கள்! _/\_ _/\_

    ReplyDelete