Powered By Blogger

Tuesday, March 14, 2017

ஒரு கோட்டையும்...பல பறவைகளும்...!

நண்பர்களே,

வணக்கம். "கோட்டை" என்றவுடனே தூள் கிளப்பும்  பாங்கு நமக்கெல்லாம் இரத்தத்திலேயே ஊறிப் போனதொன்று என்று தோன்றுகிறது ! இந்தக் கோட்டை ஜார்ஜ் கோட்டையோ ; செங்கோட்டையோ இல்லை தான் என்றாலும், வேஷ்டியை மடித்துக் கட்டி செயலில் இறங்கும் வேகத்தில் நாம் யாருக்கும் சளைத்தவர்களல்ல என்பதைக் கடந்த 2 நாட்களாய் நடைமுறையில் காட்டி வருகிறீர்கள்  !! ஆன்லைன் பதிவுகளிலும் சரி ; நேரடிப் பணப் பரிமாற்றத்திலும் சரி, அனல் பறந்து வருகிறது WWF இதழுக்காக முன்பதிவில் !! பணம் அனுப்பிய கையோடு - ஆபீஸுக்கு போன் செய்து "நான் மயிலா ? குயிலா ? கொக்கா ?" என்று சல்லடை போட்டுள்ள நண்பர்களும் எக்கமோ சக்கம் !!

ஊரிலிருந்து நான் புறப்பட்டது வெள்ளி மாலையே எனும் பொழுது இந்த இதழ் பற்றியோ ; முன்பதிவு பற்றியோ பெரிதாய் நம்மவர்களுக்கு எதுவும் சொல்லி இருக்கவில்லை !! நமக்குத் தான் ஞானோதயங்கள் ரயில்வே ஸ்டேஷன்களிலும், விமான நிலையங்களிலும் பிறப்பது வாடிக்கையாச்சே..? இந்த EARLYBIRD சமாச்சாரத்தை சைக்கிள் கேப்பில் பதிவினில் நுழைத்திருந்தேன், அது மண்டையில் உதித்த மறு நொடியே !!  So வழக்கம் போல் ஏதோ புதுக் கூத்தை மனுஷன் அரங்கேற்றியுளான் என்று யூகித்துக் கொண்டு பதிவைப் படித்துப் பார்த்து கொஞ்சமாய் புரிந்து கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்  ! இருந்தாலும் நீங்கள் எடுத்த ட்ரில்லில் குழம்பிப் போய் - நடுச்சாமத்திலிருந்த எனக்கு போன் அடித்து "சார்...ஒருத்தரே 4 புக் பதிவு பண்ணி இருந்தா அவருக்கு 4 பேட்ஜா ? 1 பேட்ஜா ? அவர் EARLYBIRD ஆ ? இல்லே EARLYBIRD கூட்டமா ? என்று  வேளை கெட்ட அந்த வேளையில் கேட்ட போதும் உங்களின் பிரித்து மேயும் உத்வேகத்தை புரிந்து கொள்ள முடிந்தது !!   

திங்கட்கிழமை மாலைக்குள் கிட்டத்தட்ட 150-ஐத் தொட்டிருக்கும்  முன்பதிவுப் பிரதிகளின் எண்ணிக்கை  !! And இன்னமும் உற்சாகமாய் தொடரும் புக்கிங்களையும், மின்னஞ்சல்களையும்  பார்க்கும் போது இந்தப் "பாசப்பறவைகள் கூட்டத்தைப் " பாகுபடுத்திப் பார்க்க மனசே வரமாட்டேன்கிறது ! பற்றாக்குறைக்கு, அயல்நாடுகளில் உள்ள நண்பர்களும் - "நாங்களும் பறப்போம்லே.....எங்களுக்கும் இறக்கை இருக்குலே..?"  என்று Angrybirds பாணியில் முறைப்பது மின்னஞ்சல்களில் பிரதிபலிக்கிறது ! இது போதாதென்று - "மணி ஆர்டர்களை திங்கள் அனுப்பியாச்சு ; அது லேட்டாகக் கிடைத்தால் நாங்க அதுக்கு என்ன பண்றது ? ஆன்லைன் வசதிகள் இல்லாதவர்களும் சிறகுகளுக்கு அருகத்தையுள்ளவர்கள் தானே ?" என்று லாஜிக்கான கொக்கியைப் போட்டுள்ளோரும் உண்டு !! 

இதில் அசாத்திய ஹைலைட்டே - அநேக முன்பதிவுகள் ரூ.500-க்கே என்பது தான் !! அதாவது ஈரோட்டில் நேரில் பெற்றுக் கொள்கிறோமென்ற அணி !! ரொம்பவே சீக்கிரமிது கணிப்புகளுக்கு ; இன்னமும் 5 மாதங்கள் உள்ள நிலையில் பிரயாணத் திட்டங்கள் நிறையவே மாற்றம் கண்டிடக் கூடும் தான் ; ஆனால் இதே வேகம் தொடர்ந்திடும் பட்சத்தில், ஒருத்தர் மடியில் தான் அடுத்தவர் உட்கார வேண்டி வரும் போலும் இந்தாண்டு ஈரோட்டில் !! ஆண்டவா - சந்தோஷத் தலைவலி என்பது இது தானோ ?!! இதுநாள் வரையிலும் மௌனத்தையே மொழியாகக் கொண்ட நண்பர்களும் நேரடிச் சந்திப்பில் கலந்து கொண்டிடும் பட்சத்தில் ஒரு திருவிழா காத்துள்ளது நிச்சயம் என்று தோன்றுகிறது !!

திருவிழாவெனில் பலகாரமும், பட்டாசும் இல்லாது போனால் எப்படி ? அதிலும் பட்டாசு நகரிலிருந்து கொண்டு ரகளை செய்யாது விட்டால் பொருந்துமா ? கலக்கிட இப்போதே சிலபல recipes ரெடி !! ஈரோட்டுக்கு டிக்கெட் போடக்  காரணம் # 3 !!!
சரி..."EARLYBIRD பஞ்சாயத்து என்னாச்சு ?" என்கிறீர்களா ? நியாயமான கோரிக்கைகள் என்பதால் அவற்றிற்கு செவி சாய்க்கிறேன் !! இந்த வார இறுதி வரையிலும் கிட்டும் அனைத்து முன்பதிவுகளுமே மயில் கூட்டத்தில் இணைந்திடலாம் ! அவர்கள் அனைவருக்குமே பேட்ஜ் + sneak previews அனுப்பிடுவோம் ! ஓ.கே.வா guys ? 
அப்புறம் அந்த "கௌபாய் ஓவர்டோஸ்" பற்றிய கேள்விக்கு "ஓவராவது - டோஸாவது !!"  என்ற பதிலே  90% கிட்டியிருப்பதை நீங்களும், நானும் பார்த்தோம் ! So இந்தக் குளிக்காக் குதிரைக்காரர்களின் சகாப்தம் நம்மிடையே தொடரும் - அதே வேகத்தோடு !! ஆகஸ்டில் "இரத்தக் கோட்டை" (WWF ஸ்பெஷல்) இதழுடன் காத்திருக்கும் ஒரு "சஸ்பென்ஸ் இதழும்" cowboy கதையாகவே இருக்குமா ? அல்லது வேறொரு அதிரடியாளரின் அறிமுகமா ? என்ற கேள்விக்கு இந்த நொடியில் நான் பதில் சொல்லப் போவதில்லை - simply  becos தெரிந்த திக்கில் எல்லாமே கல் வீசி வருகிறேன் - சில பல மாம்பழங்களையும், ஆப்பிள்களையும்   நோக்கி ! அவற்றுள் எது - எப்போது ஜெயமாகும் ? என்பது தொடரும் அடுத்த சில வாரங்களில் தெரியுமென்பதால் - அதை பொறுத்தே எனது தீர்மானம் அமையும் !! எது எப்படி இருப்பினும், ஈரோட்டில் உங்கள் கண்ணில் அதைக் காட்டும் வரைக்கும், பெவிகால் பெரியசாமியே களத்திலிருப்பான் !! ஈரோட்டுக்கு டிக்கெட் போடக்  காரணம் # 4 !!!

ஊரில் மண்டையைப் பிளக்கும் வெயிலைப் பார்த்துப் பல்லைக் கடித்துவிட்டுக்  கிளம்பியவனுக்கு, இங்கே உப்பளம் போல வீதியெல்லாம் வெள்ளைப் போர்வை கொண்ட ஊர்கள் - பற்களால் தந்தியடிக்கக் கற்றுத் தந்து வருகின்றன!! ஸ்கூபியும் , ரூபியும் தங்கம் தேடித் திரிந்த பிராந்தியத்தில் "சாமி....வெயிலு..வெயிலுன்னு ஒண்ணு உண்டே..யாராச்சும் பாத்திருக்கீக ??" என்ற கேள்வியோடு சுற்றி வருகிறேன் !! Bye for now !! See you around !!

306 comments:

  1. மாடஸ்டி வாழ்க

    ReplyDelete

  2. இளவரசி முன்னேற்ற கழகம் சார்பில் இந்த வார இறுதிக்குள் பறந்து வரும் மயில்களை வருக வருக என வரவேற்கிறோம்

    ReplyDelete
  3. // "சார்...ஒருத்தரே 4 புக் பதிவு பண்ணி இருந்தா அவருக்கு 4 பேட்ஜா ? 1 பேட்ஜா ? அவர் EARLYBIRD ஆ ? இல்லே EARLYBIRD கூட்டமா ? // அந்த கூட்டமா புக் செஞ்சதுல நானும் ஒருத்தன்.. ஐயா சாமி.. நாலு பேரையும் Early Bird ஆக்கிருங்க, இல்லாட்டி இந்த "மானை" உரிச்சு உப்பு கண்டம் போட்டு வறுத்த கறியாக்கி அங்கேயே பிரிச்சுக்குவாங்க... மீ பாவம்..

    ReplyDelete
  4. ///ஆகஸ்டில் "இரத்தக் கோட்டை" (WWF ஸ்பெஷல்) இதழுடன் காத்திருக்கும் ஒரு "சஸ்பென்ஸ் இதழும்" cowboy கதையாகவே இருக்குமா ? அல்லது வேறொரு அதிரடியாளரின் அறிமுகமா ? என்ற கேள்விக்கு இந்த நொடியில் நான் பதில் சொல்லப் போவதில்லை -///

    இருக்குன்னு சொன்னதே இப்போதைக்கு போதும் சார்.! :-)

    அந்த சஸ்பென்ஸ் புதிய கௌபாயா இருந்துவிட்டால் மட்டற்ற மகிழ்ச்சி.
    அல்லது வேறோரு அதிரடி நாயகர் என்றாலும் அளவற்ற மகிழ்ச்சி.
    ஆகமொத்தம் மகிழ்ச்சி சார். .!!

    ReplyDelete
  5. காலை வணக்கம் சார் & நண்பர்களே

    ReplyDelete
  6. கேக்கவே சூப்பரா இருக்கே
    நேரில் பார்த்தால் சான்சே இல்ல
    சார் தயவு செய்து சரவணன் சாருக்கு ஒரே ஒரு பேட்ஜ் மட்டும் தந்திடுங்கோ 🙏🏼
    .

    ReplyDelete
  7. ங்கே... எனக்கு நானே மசாலா தடவிக்கிட்டேனோ ...

    ReplyDelete
  8. சார் எனக்கு ரெண்டு பேட்ஜ் சார் ... இல்லையின்ன ஜூனியர் என்னைய காலி பண்ணிடுவார் ... சரவணரே உங்களுக்கு ஒரு பேட்ஜ் போதுமே :)

    ReplyDelete
  9. //ஆனால் இதே வேகம் தொடர்ந்திடும் பட்சத்தில், ஒருத்தர் மடியில் தான் அடுத்தவர் உட்கார வேண்டி வரும் போலும் இந்தாண்டு ஈரோட்டில் !! ஆண்டவா - சந்தோஷத் தலைவலி என்பது இது தானோ ?!! //


    விடுங்க சார், ஒரு கல்யாண மண்டபத்தை புக் செய்திடுவோம் ... அப்படியே சமையல்காரர், பந்தி பரிமாற ஒரு பத்து பேரையும் ரெடி பண்ணிட்ட வேலை முடிஞ்சுது ... :)

    ReplyDelete
    Replies
    1. அப்படியே இந்த ஸ்பெஷல் சூப்பும்.....

      Delete
    2. அங்கேயே நம்ம ப்ளூவுக்கு அறுபதாம் கல்யாணத்தையும் செஞ்சி வெச்சிடுவோம்!!

      Delete
    3. மாப்பிள்ளை அவருதான். ஆனா அவரு குத்தியிருக்கிற பறவை பேட்ஜ் என்னுது! :P

      Delete
    4. அப்படியே சம்பந்தி சண்டைக்கும் 10 பேரை ஏற்பாடு பண்ணுங்க. :)

      Delete
    5. பந்தி பரிமாற பத்து பேர் எதுக்கு நான் என மகளுங்க இரண்டு பேர் அப்பறம் நம்ம ஷல்லூம் சாரோட பொண்ணு அப்புறம் நீங்க !

      Delete
  10. EBF2017 - சம்பவம் #1

    "அவரு நாலஞ்சு புத்தகம் புக் பண்ணினவரா இருக்கலாம்... ஆனாலும் இந்த பந்தா ஆகாது சாமி..."

    "ஏன்? என்னாச்சு?"

    "அங்கே பாருங்க, ஏதோ மிலிட்டரியில மெடல் வாங்கினாப்ல எல்லா பேட்ஜையும் வரிசையாக் குத்திக்கிட்டுத் திரியறதை!"

    ReplyDelete
    Replies
    1. EBF2017 - சம்பவம் #1 = எதிர்சம்பவம்

      இங்கே'கிளிக்' பண்ணிட்டு படிக்கவும்.

      "என்னமேன் இது.? பத்து பேஜ் ஒரேமாதிரி சர்ட்டுல குத்திட்டு.??? நீ ஒரு போலீஸ் நியாபகம் இருக்கில்ல..."

      "நோ..ஸார்..! இப்பநான் மிலிட்டரி மேன்..! இந்த பேஜுக்கு அவ்வளவு பவர் இருக்குறதா இங்க கூட்டத்துல பேசிகிறாங்க ஸார்..."

      "அதுக்காக..."

      "இப்ப பத்து பேஜ் குத்தியிருக்குற ஒரே மிலிட்டரி ஆபீசர் நான் மட்டும் தான்..! இந்த ஹையர் மிலிட்டரி ஆபிசரை ஸலியூட் பண்ணுங்க ஸார்..."

      "போய்யா..சிரிப்பு போலீசு..."

      Delete
  11. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  12. EBF2017 - சம்பவம் #2

    "கொடுமைடா சாமி!"

    "ஏன்? என்னாச்சு?"

    "காமிக்ஸ் புத்தகங்களைத்தான் ஸ்கேன் பண்ணி கள்ள மார்க்கெட்ல விக்கறாங்கன்னா, இங்கே பறவை பேட்ஜையும் ஒருத்தர் வெளியே நின்னு 500 ரூவாய்க்கு வித்துக்கிட்டிருக்கார்!"

    ReplyDelete
    Replies
    1. EBF2017 - சம்பவம் #2 = எதிர்சம்பவம்

      இங்கே'கிளிக்' பண்ணிட்டு படிக்கவும்.

      "ஏய்யா இந்த பணத்தை வாங்கமாட்டேங்கிற..உன் கடைவாசல்ல தானே 'பேஜ்' புரா வித்து காசாக்கினேன். அப்பகூட வந்து சுத்தி பாத்தியேய்யா...இந்த பணத்துல என்னய்யா குறைகண்ட..???? பசிக்குது காசை வாங்கிட்டு ஒரு பொட்டலம் பிரியாணி குடுய்யா...சில்லறை கூட அப்பால தருவே..."

      "போய்யா என்டுபுக்கு....இந்த 500 செல்லாதுன்னு சொல்லி வருஷமாச்சி, அதை வாங்கி வியாபாரம் பாத்த உனக்கு சிலைதான் வெக்கணும்..."

      "இது எப்பய்யா நடந்துச்சி...புது புதுசா சொல்லுறிங்க..அவ்வ்வ்வ்...."

      Delete

  13. வணக்கம் சார்...
    ஹாய் மயில்ஸ்& குயில்ஸ்&கொக்ஸ்...

    ///ஆன்லைன் பதிவுகளிலும் சரி ; நேரடிப் பணப் பரிமாற்றத்திலும் சரி, அனல் பறந்து வருகிறது///---"WWF" ஸ்பெசலுனு பேர் வைத்தால் அனல் பறக்கத்தானே செய்யும் சார்...

    ReplyDelete
  14. ///வேளை கெட்ட அந்த வேளையில் கேட்ட போதும் உங்களின் பிரித்து மேயும் உத்வேகத்தை புரிந்து கொள்ள முடிந்தது !!///----- ஹா..ஹா...அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் சார் (சூரியன் பன்னு&டீ ஸ்டைல்)

    ReplyDelete
  15. /// இந்த வார இறுதி வரையிலும் கிட்டும் அனைத்து முன்பதிவுகளுமே மயில் கூட்டத்தில் இணைந்திடலாம்///---சூப்பர் சார்... தொடர்ந்து விசில் அடிக்கும் படங்கள் பல்லாயிரம்....

    ReplyDelete
  16. EBF2017 - சம்பவம் #3

    "ஏன் நம்ம நண்பர் பாட்ஷா கோவமா சுத்திக்கிட்டிருக்கார்?"

    "அவர் பேட்ஜுல பிரின்ட்டிங் சரியில்லையாம்! மயிலு படம் - மான் மாதிரி வந்திருக்காம்!"

    ReplyDelete
    Replies
    1. EBF2017 - சம்பவம் #3 = எதிர்சம்பவம்

      இங்கே'கிளிக்' பண்ணிட்டு படிக்கவும்.

      "ம்ம்ம்...என்னோட பேஜ்ல என்னதான் லென்ஸ் வெச்சி பாத்தாலும் ஒரு பறவையும் காணும்தான், இதுக்காக நான் ஏதும் கவலைபட்டேனா..ஹ..! பறவைன்னா அது அங்க இங்க பறக்கதான் செய்யும்...இந்த ஜெனரல் நாலேஜ் கூட இல்லாம...மயிலை காணும் மானை காணும்ன்னு கம்ளைன்ட் பண்ணிட்டு...டார்சர் பண்றாங்க டார்சர்..!"

      Delete
    2. ///"அவர் பேட்ஜுல பிரின்ட்டிங் சரியில்லையாம்! மயிலு படம் - மான் மாதிரி வந்திருக்காம்!"///

      ஹாஹா..!! Ultimate குருநாயரே!!

      பாஷா ஜி க்கு சிரிப்பு வருமான்னு மட்டும் தெரியலை :-)

      Delete
  17. EBF2017 - சம்பவம் #4

    எடிட்டர் : "சார்... முன்பதிவு லேட்டானதால உங்களுக்கு மயிலு பேட்ஜ் கிடைக்காம நீங்க ஏமாந்துபோனதென்னவோ நிஜம்தான். ஆனா அதுக்காக உயிருடன் நாலஞ்சு மயில்களை புடிச்சுட்டுவந்து இங்கே மீட்டிங் ஹால்ல மேய விடறதெல்லாம் கொஞ்சம்கூட நல்லா இல்லை!"

    ReplyDelete
    Replies
    1. இங்கே'கிளிக்' பண்ணிட்டு படிக்கவும்.

      "ஏட்டைய்யா...காதை கொண்டாங்க...ஒரு ஸுப்பர் அவார்டு கிடைக்கபோது உங்களுக்கு. அதுவும் மோடிஜி கையாலேயே கிடைக்கும்...."

      "என்னய்யா மேட்டரு ? சீக்கிரம் சொல்லு.."

      "நம்ம தேசிய பறவையை நாலஞ்சிய ஒரு ரூம்ல அடைச்சி ஒரு குரூப் விளையாட போவதா ஒரு சீக்ரெட் இம்பர்மேசன் கிடைச்சிருக்கு ஸார்..."

      ஏட்டு மைண்டுவாய்ஸ்: மனுஷ உயரத்துக்கு இருக்குற அந்த மயிலை ஒருதடவையாச்சும் நேர்ல பாத்துடனும்...அதுவும் அது திருப்பதி கல்யாணஉத்சவம் லட்டு சைஸ்ல முட்டை போடுமாமே, அதுக்கு செக்கியூரிட்டி டுயுட்டியை நம்ம பிரதமர் கிட்ட கேட்டுவாங்கி,அது முட்டை போடுறதை பாத்துபுடனும் பாத்து...ஆஆ...

      Delete
    2. யோவ் விஜய்.. இப்ப நீங்க நிறுத்தறீங்களா, இல்ல நான் ஆபீஸுக்கு லீவ் போடனுமா? நாங்க ஒழுங்கா வேலை செய்யறதா இல்லையா? முடியலய்யா... :) :)

      Delete
    3. =="சார்... முன்பதிவு லேட்டானதால உங்களுக்கு மயிலு பேட்ஜ் கிடைக்காம நீங்க ஏமாந்துபோனதென்னவோ நிஜம்தான். ஆனா அதுக்காக உயிருடன் நாலஞ்சு மயில்களை புடிச்சுட்டுவந்து இங்கே மீட்டிங் ஹால்ல மேய விடறதெல்லாம் கொஞ்சம்கூட நல்லா இல்லை!"==

      :) :)

      Delete
    4. @ புதுவை செந்தில்

      முன்னொரு தடவை FBல உங்க கவிதையைப் படிச்சுட்டு நானும்தான் ஆபீஸுக்கு லீவு போட்டவேண்டியதாகிடுச்சு... கூடவே, ஹாஸ்பிடல் செலவு வேற! நான் ஏதாவது கத்தினேனா...?:P

      Delete
  18. "சார்...ஒருத்தரே 4 புக் பதிவு பண்ணி இருந்தா அவருக்கு 4 பேட்ஜா ? 1 பேட்ஜா ? அவர் EARLYBIRD ஆ ? இல்லே EARLYBIRD கூட்டமா ?

    சிரித்து முடியல

    ReplyDelete
  19. ஹையோ நானும் BIRD ...!
    (வடிவேலுவை பார்த்து விஜய் கேட்பது ஞாபகம் வருது.
    நீங்க bird-டா அண்ணே..??
    கா...கா...!!

    ReplyDelete
  20. EBF2017 - சம்பவம் #5

    எடிட்டர் : ஏன் பூனையாரே ரொம்ப சோகமா இருக்கீங்க ?
    பூனையார் : போங்க சார், நீங்க ரொம்ப மோசம் .. என்னைய ஏமாத்திடீங்க
    எடிட்டர் : என்ன ஆச்சு ?
    பூனையார் : இங்கே 100 அல்லது 200 BIRD வருமுன்னு சொன்னத நம்பி ரெண்டு நாளா சாப்பிடாம வந்தா, இங்கே ஒரு பறவையை கூட காணோமே ?

    ReplyDelete
    Replies
    1. கரூர்கார் மைண்ட் வாய்ஸ் : அதுகளைத் தான் நாம புடிச்சு பிரை பண்ண கொடுத்துட்டமே...

      Delete
    2. @ கரூர்காரு

      இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு பசி ஆகாது.100 பிரையா...???????ஆஆஆஆவ்..உப்...

      Delete
    3. @ ப்ளூ

      :)))) செம! :)))


      @ கருர்காரு

      டைமிங்! :)))))

      Delete
  21. நானும் இந்த வாரத்தில்தான் பணம் செலுத்தலாம் என்றிருந்தேன் முன் பதிவு செல்லும் வேகத்தை பாா்த்து இனி பணம் கட்டி பிரயாேஐனமில்லை என்று இருந்தேன் வாய்ப்பளித்தற்க்கு நன்றி ஆசிாிரே....

    ReplyDelete
  22. சார் அருமை...! அந்த புத்தகம் எதா இருந்தாலும் ஐநூறு விலயில் வரனும் சாமியோவ்..அதிரடியா வுடுறதால ...அதிரடியா இருந்தா அதிருமோ..

    ReplyDelete
  23. மயில்கள் (தோட்டத்தில்)கூட்டத்தில் இனைந்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete
  24. டைகர் அட்ட அவங்களோடத அப்டியே விடுறதெல்லாம் சரிதான்...வண்ணமயமான அட்டயா தேர்வு செய்யுங்கோஓஓஓஓ....அப்றமா அந்த ஜிகுனா வேலைகள செய்யாங்காட்டியும் ஜிகுனா துகள்கள அதிகமா..அதிகமா மின்னும் வண்ணம் எழுத்துக மேல தூவிக்காட்ட மறந்துடாதீக !

    ReplyDelete
  25. தங்க தலைவன்னாலே மயில்களும் , குயில்களும் தேடி வருவது இயற்கை தானே

    ReplyDelete
  26. WWF க்கு சந்தா அனுப்பியாச்சு சார்

    ReplyDelete
  27. ஈவி மயிலுன்னா 16 வயதிலே படத்தில் வரும் மயில்தானே???

    ReplyDelete
  28. EBF2017 - சம்பவம் #6

    "அந்த நண்பர் ஏன் கையில் நாலஞ்சு முட்டைகளோட வராரு?!!"

    "மீட்டிங்ல நாலு மணி நேரம் சும்மா உட்கார்ந்திட்டு இருக்கிற நேரத்துல அப்படியே அந்த முட்டைகளை அடை காக்கலாம்னு இருக்காராம்!"

    ReplyDelete
  29. EBF2017 - சம்பவம் #7

    எடிட்டர் : "அதுங்களுக்கு பறக்கத் தெரியும்றது என்னவோ உண்மைதான்! ஆனாலும் பூச்சிகளுக்கெல்லாம் 'பறவை' அந்தஸ்த்து கேட்டு நீங்க போராட்டம் நடத்துறதுல துளிகூட நியாயம் இல்லை, வெட்டுக்கிளி வீரையன் சார்"

    ReplyDelete
  30. மயில்கள் கூட்டம் கூட்டமாய் வருவது இருக்கட்டும் சப்பாணி வருவாரா

    ReplyDelete
  31. நம்ம "பரட்ட " வர்றப்ப சப்பாணி எதுக்கு?

    ReplyDelete
    Replies
    1. @ Govindaraj Perumal

      அடக்கி வாசிக்காதீங்க நண்பரே!உங்களுக்குள்ள ஹாஸ்யமான எழுத்துத் திறமை இருக்குன்றது என்னோட கணிப்பு!

      தயக்கங்களைத் தூரப்போட்டுட்டு பூந்து வெளாடுங்க! :)

      Delete
    2. மயில்கள் கூட்டத்திற்கு தலைவர்
      மொட்ட(மாயாவி) சிவா
      கெட்ட (நல்ல)சிவா தானே

      Delete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. EBF2017 - சம்பவம் #8

    "மீட்டிங் ஹாலுக்கு வெளியே என்ன சலசலப்பு?"

    "அதுவா... 'பறவைக் கூட்டங்களே வருக'னு நாம வெச்சிருந்த போர்டைப் பார்த்துட்டு ஏகப்பட்ட நரிக்குறவர்கள் துப்பாக்கியோட வந்து நின்னுக்கிட்டிருக்காங்களாம்!"

    ReplyDelete
  34. ஹையோ நானும் BIRD ...!
    (வடிவேலுவை பார்த்து விஜய் கேட்பது ஞாபகம் வருது.
    நீங்க bird-டா அண்ணே..??
    கா...கா...!!

    ReplyDelete
  35. ஹையோ நானும் BIRD ...!
    (வடிவேலுவை பார்த்து விஜய் கேட்பது ஞாபகம் வருது.
    நீங்க bird-டா அண்ணே..??
    கா...கா...!!

    ReplyDelete
  36. EBF2017 ஸ்டேஜ் ....

    எடிட்டர்: எங்கே எல்லோரும் வந்துட்டாங்க, ஆனால் ஈனா வினாவை இன்னும் காணோமே ?

    கரூர் சரவணன்: சார், அவரு EBF2018 - சம்பவம் #1 க்கு என்ன எழுதறதுன்னு வீட்டில உட்காந்து யோசிச்சுகிட்டு இருக்கார் சார் ...

    ReplyDelete
    Replies
    1. @ ப்ளூ

      ஆனாலும் என்னை நல்லாத்தான் புரிஞ்சு வச்சிருக்கீங்க! :)))))

      Delete
  37. மயில் பேட்ஜ்-ம் செலிபிரிட்டிகளும்......
    ( மயில் பேட்ஜ் மகத்துவம் தெரிய வர பிரபலஸ்தர்கள் ஈரோடு வந்தால்
    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    ஐஸ்வர்யா தனுஷ் ...
    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : மேடம் ! உங்க கிட்ட மயில் பேட்ஜ் இல்லையே?
    ஐஸ்வர்யா தனுஷ் : ஆனா நான் மயிலு மாதிரி டான்ஸ் ஆடுவேன்..
    நி.ஒ : மேடம் ! நீங்க பேட்ஜ் இல்லாமலே உள்ளே போங்க
    ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    எழுத்தாளர் ஜெமோ.....
    ஜெமோ : ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்! ஆனா டான்ஸ் மட்டும் ஆடாதீங்க! குழந்தைங்கல்லாம் வந்திருக்காங்க ......டு கொண்டு இருக்கும்போது எதிரில் புயல் வேகத்தில் சறுக்கி வந்து கொண்டு இருந்த திரு விஜயன் அவர்களை வழி மறித்து பணம் கட்டி இந்த பேட்ஜை வாங்கினேன் .( புது இதழுக்காக ஒரு பப்ளிஷரை துரத்தி கொண்டுதான் அவர் வந்து கொண்டு இருந்தார் என பின்னர் அறிந்து கொண்டேன் ). ஆல்ப்ஸ் மலைக்கெல்லாம் நான் போயிருக்கிறேன் என்பதல்ல நான் சொல்ல விழைவது. சொல்லப்போனால் என்னிடம் மராட்டி ,ஒரியா ,ராஜஸ்தானி போன்ற மொழிகளில் எல்லாம் மயில் பேட்ஜ் இருக்கிறது.
    நி.ஒ : சார் !! சரி..சரி..நீங்க உள்ளார போய் பாதுகாப்பா உட்காருங்க! தொப்பி போட்ட முக்கியமான நண்பர் ஒருவர் தலை தெரியுது...

    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    ReplyDelete
    Replies
    1. /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      கேப்டன் கோலி...
      நி.ஒ : உங்க கிட்ட பேட்ஜ் இருக்கு ....நீங்க உள்ள போலாம்.
      கோலி: இது நியாயமா வாங்கின பேட்ஜ்...தோ வர்றாரே ஸ்மித் அவரு மாதிரியில்ல...பிரகாஷ் பப்ளிஷர்ஸ்- பிரஸ்ல வேலை பாக்கிற தன் பிரண்டுக்கிட்ட பணத்தை கட்ட சொல்லி பேட்ஜ் வாங்கிட்டார்..கேட்டா ‘’பிரைன் பேட்”” அப்படிம்பார்( அந்த பிரண்டுகிட்ட அவர் அந்த பணம் கொடுக்கவேயில்லை அப்டீங்கரதுக்கு என்கிட்டே ஆதாரம் இருக்கு)
      ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
      கமல்........
      நி.ஒ : சார் !! உங்க பேட்ஜ்???
      கமல்:
      பீலி பெய் சாக்காடும் அப்படின்னு ஒரு ட்வீட் மயிலை பத்தி போட்டேனே அது பத்தாது????
      சரி !!!!
      ஒயிலாய் எழிலாய்
      கயிலாய மலையாய்
      பயிலாய் மயிலாய்
      புயலாய்.....
      நி.ஒ : நீங்க உள்ள போங்க! தலை சுத்துது!!!
      ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    2. ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
      ரிசர்வ் பேங்க் கவர்னர்
      ரிசர்வ் பேங்க் கவர்னர் : என்னப்பா !! இந்த பேட்ஜ் வச்சுகிட்டு உள்ள போக முடியாதா???
      நி.ஒ : ஜூலை எட்டோட இதெல்லாம் செல்லாதுன்னு எடிட்டர் சொல்லிட்டார் சார்!!! புதுசா ரோஸ் கலர் மயிலு போட்ட பேட்ஜ் வந்திருக்கு சார்!!! வெளியே காம்பவுண்டுக்கு பக்கத்தில் ஒரு கியு இருக்கும். அதுல நின்னு புது பேட்ஜ் வாங்கிடுங்க!!!!!
      //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
      நி.ஒ : சார்ஸ்! நீங்க ரெண்டு பேரும் நில்லுங்க !!! அது ஸ்பெஷல் வழி.... ஒருத்தரே நாலு பேட்ஜுக்கு மேல வச்சிருந்தாதான் போக முடியும் ...நீங்க கம்மியாத்தான் வச்சிருக்கீங்க ...
      காவியுடை அணிந்தவர் : நான் மணிப்பூர்... அவரு கோவா...ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருக்கோம்.
      நி.ஒ : இப்படி செய்யலாமான்னு தெரியிலியே!!!!! சரி ...சரி ..போங்க..
      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    3. ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
      பாவனா ...
      நி.ஒ : எங்க மேடம் உங்க மயிலு பேட்ஜ்???
      பாவனா: கார்ல வந்திட்டுருக்கும்போது வழி மறிச்சி அதை கடத்திட்டு போயிட்டாங்க
      நி.ஒ....அச்சச்சோ!!! சரி மேடம் நீங்க உள்ள போங்க..
      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
      சன்னி லியோன்
      நி.ஒ : (தர்ம சங்கடத்துடன் நெளிந்தபடி) மேடம் !!! டிரஸ் மேல பேட்ஜ் போட்டுகிட்டு வாங்கன்னு சொன்னோம் ...பேட்ஜ் மட்டும் போட்டுகிட்டு வாங்கன்னு சொல்லவேயில்லையே!!!!
      சன்னி லியோன் ::: (சிரித்தபடி ) funny man !!!!
      //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
      கீர்த்தி சுரேஷ்
      கீர்த்தி சுரேஷ் (வந்தபடியே ) என்கிட்டே பேட்ஜ் இல்லியே....
      நி.ஒ: உங்க கிட்ட யார் மேடம் பேட்ஜ் கேப்பா???? அப்படி வேணுமின்னாலும் யார் கிட்ட இருந்து பிடுங்கியாவது தரேன்...(கீழே கிடக்கும் திரவத்தில் வழுக்கி விழுகிறார்)
      /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
      நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் யாராக இருக்க கூடும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன் :-)
      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


      Delete
    4. மயில் பேட்ஜ்-ம் செலிபிரிட்டிகளும்......
      ( மயில் பேட்ஜ் மகத்துவம் தெரிய வர பிரபலஸ்தர்கள் ஈரோடு வந்தால்
      //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
      ஐஸ்வர்யா தனுஷ் ...
      நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : மேடம் ! உங்க கிட்ட மயில் பேட்ஜ் இல்லையே?
      ஐஸ்வர்யா தனுஷ் : ஆனா நான் மயிலு மாதிரி டான்ஸ் ஆடுவேன்..
      நி.ஒ : மேடம் ! நீங்க பேட்ஜ் இல்லாமலே உள்ளே போங்க ஆனா டான்ஸ் மட்டும் ஆடாதீங்க! குழந்தைங்கல்லாம் வந்திருக்காங்க
      ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
      எழுத்தாளர் ஜெமோ.....
      ஜெமோ : ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்!......டு கொண்டு இருக்கும்போது எதிரில் புயல் வேகத்தில் சறுக்கி வந்து கொண்டு இருந்த திரு விஜயன் அவர்களை வழி மறித்து பணம் கட்டி இந்த பேட்ஜை வாங்கினேன் .( புது இதழுக்காக ஒரு பப்ளிஷரை துரத்தி கொண்டுதான் அவர் வந்து கொண்டு இருந்தார் என பின்னர் அறிந்து கொண்டேன் ). ஆல்ப்ஸ் மலைக்கெல்லாம் நான் போயிருக்கிறேன் என்பதல்ல நான் சொல்ல விழைவது. சொல்லப்போனால் என்னிடம் மராட்டி ,ஒரியா ,ராஜஸ்தானி போன்ற மொழிகளில் எல்லாம் மயில் பேட்ஜ் இருக்கிறது.
      நி.ஒ : சார் !! சரி..சரி..நீங்க உள்ளார போய் பாதுகாப்பா உட்காருங்க! தொப்பி போட்ட முக்கியமான நண்பர் ஒருவர் தலை தெரியுது...

      //////////////////////////////////////////////////////////////////////////

      மன்னிக்கவும் ....முதல் பத்தியை இப்படி படிக்கவும்

      Delete
    5. யாராவது மனசு விட்டு சிரிக்கணும்னா ஆதித்யா சிரிப்பொலி சானலை திருப்பாதீங்க, நம்ம தளத்துக்கு வாங்க. மனசு மட்டுமல்ல,மமமதையும் விட்டு சிரிக்கலாம்.

      Delete
    6. @ செல்வம் அபிராமி

      ஹாஹஹஹா

      ஹே..ஹே..ஹே..

      ஈ..ஈஈஈ..ஹீ..ஹீ...

      ஹி..ஹி..ஹி...

      இப்படியெல்லாம் சிரிசிரித்து படிக்கிறப்போ....ஒரு மகா பிழை மொத்த மூடையும் கெடுத்து விட்டது. அதுஎன்னனா

      எழுத்தாளர் ஜெமோ.....
      ஜெமோ : ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்!......டு கொண்டு இருக்கும்போது எதிரில் புயல் வேகத்தில் சறுக்கி வந்து கொண்டு இருந்த
      திரு முல்லை தங்கராஜன் அவர்களை வழி மறித்து பணம் கட்டி இந்த பேட்ஜை வாங்கினேன் .( புது இதழுக்காக ஒரு பப்ளிஷரை துரத்தி கொண்டுதான் அவர் வந்து கொண்டு இருந்தார் என பின்னர் அறிந்து கொண்டேன் ). ஆல்ப்ஸ் மலைக்கெல்லாம் நான் போயிருக்கிறேன் என்பதல்ல நான் சொல்ல விழைவது. சொல்லப்போனால் என்னிடம் மராட்டி ,ஒரியா ,ராஜஸ்தானி போன்ற மொழிகளில் எல்லாம் மயில் பேட்ஜ் இருக்கிறது.

      நீங்கள் பெயரை மாற்றி எழுதியதுதான் அந்த பிழை. உலகபிரசித்திபெற்ற எழுத்தாளர் ஜெமோ தகவல்களை சரியாக இப்படித்தான் தருவார் என சுட்டிக்காட்டி கொண்டு, சிரிப்பை தொடர்கிறேன் செல்வம் அபிராமி அவர்களே..அவுக்..அவுக்....

      Delete
    7. @ செனாஅனா

      :))))))) செம்ம்ம்ம!!! :))))

      @ மாயாவிகாரு

      :P

      Delete
    8. குறிப்பா, சன்னிலியோனும், கமலும் - ஹாஹாஹா... ரொம்ப நேரமா சிரிச்சுக்கிட்டேஏஏஏ இருக்கேன்... :))))))))

      Delete
    9. கலாய்ப்பு வாரம்...

      காரமான வாரம்...

      காமெடி வாரம்...

      செம்ம மயில்ஸ்..
      ஆல் மயில்ஸ்
      கலக்கிங்...
      கஸ்டமர் முன்னாடி சிரிச்சிங்...
      ஓனர் மொறைச்சிங்...
      இனிமே வீட் போகும் வரை டெம்ப் எஸ்கேபிங்....

      Delete
    10. படிச்சிட்டே வரும்போது அந்த நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் யாராக இருக்கும்னு சந்தேகமா இருந்திச்சு..


      ==கீர்த்தி சுரேஷ் (வந்தபடியே ) என்கிட்டே பேட்ஜ் இல்லியே....
      நி.ஒ: உங்க கிட்ட யார் மேடம் பேட்ஜ் கேப்பா???? அப்படி வேணுமின்னாலும் யார் கிட்ட இருந்து பிடுங்கியாவது தரேன்...(கீழே கிடக்கும் திரவத்தில் வழுக்கி விழுகிறார்)==


      இதப்படிச்சதுக்கு அப்புறம் சந்தேகமே வரல..

      Delete
    11. நல்ல வேளை இன்னிக்கு இந்த கூத்தெல்லாம் மிஸ் பண்ணாம வந்துட்டேன். ஒரே அதகளமால்ல இருக்கு!

      கீர்த்தி சுரேஷ்கிட்ட பேட்ஜ் கேட்ட நி.ஒ ஈவி, சன்னி லியோன்கிட்ட கேட்டவரு மேச்சேரியார்! கரைக்டா? ஆமா, ஈவியார் ஏதோ திரவத்துல வழுக்கிவிழுந்தாரா அதுதான் என்னான்னு யோசிச்சிகிட்டிருக்கேன்... :-))))))))))

      அப்புறம் கமல் கவிதை உண்மையிலேயே அந்த மனுசன் அப்படித்தான் எழுதுவாரு.. செமை!!

      Delete
    12. @ ஆதி தாமிரா

      வாங்க வருங்கால CM அவர்களே..!

      Delete
    13. @ ஆதி தாமிரா

      வாங்க வருங்கால CM அவர்களே..!

      Delete
    14. ///கீர்த்தி சுரேஷ்கிட்ட பேட்ஜ் கேட்ட நி.ஒ ஈவி, சன்னி லியோன்கிட்ட கேட்டவரு மேச்சேரியார்! கரைக்டா? ///

      சன்னி லியோன்னா யாருங்க ஆதி? இந்த பட்டிமன்றத்துல பாட்டுப்பாடுவாரே அவரா?

      இப்படிக்கி

      பச்சமண்ணு கிஆக

      Delete
    15. ஹேய்...

      இதே கேள்வியை சத்தமுன்னாடி உங்ககிட்ட கேட்டப்போ..அவர் ஒரு பெஸ்ட் பௌலர், கிரிக்கெட்டில் கில்லாடி வீரர்ன்னு சொன்னிங்களே...இப்ப மாத்தி பட்டிமன்றம்ல பேசுறவருங்கிறிங்களே கோடையிடிகாரு..ம்ம்ம்...[தலைசொறியும் ஆதிதாமிரா படம் ஒன்று]

      Delete
    16. ங்ஙே!!!!

      அப்போ சன்னி லியோன்னு நிறைய பேரு இருப்பாங்களோ?

      (சின்ன சந்தேகம் மக்களே?? சன்னி லியோன் - ஆம்பிளைப் பேர்தானே)

      மீண்டும்
      பச்சமண்ணு
      கிஆக

      Delete
    17. செனா அனா ஜி
      சும்மா கிழி கிழி ன்னு கிழிச்சிட்டிங்க
      பின்னிட்டிங்க பிச்சிட்டிங்க என்ன சொன்னாலும் பொருத்தமாக இருக்கும்
      அதுவும் கமல் கவிதை சூப்பர் நம் தளத்திற்கு திருஷ்டி சுற்றி போட வேண்டும் கடந்த மூன்று வாரங்களாகவே சிரிப்பு களை தாண்டவமாடுகிறது எப்போதும் இப்படியே இருந்தால் நன்றாக இருக்கும்

      Delete
    18. சன்னி லியோனை வழி (இடை)மறித்த கிட் ஆர்ட்டின் கண்ணனை புகுந்து விளையாடும் வாலிபர் சங்கத் தலைவராக நியமனம் செய்கிறோம் இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை

      Delete
  38. //ரிசர்வ் பேங்க் கவர்னர்
    ரிசர்வ் பேங்க் கவர்னர் : என்னப்பா !! இந்த பேட்ஜ் வச்சுகிட்டு உள்ள போக முடியாதா???
    நி.ஒ : ஜூலை எட்டோட இதெல்லாம் செல்லாதுன்னு எடிட்டர் சொல்லிட்டார் சார்!!! புதுசா ரோஸ் கலர் மயிலு போட்ட பேட்ஜ் வந்திருக்கு சார்!!! வெளியே காம்பவுண்டுக்கு பக்கத்தில் ஒரு கியு இருக்கும். அதுல நின்னு புது பேட்ஜ் வாங்கிடுங்க!!!!!//


    சூப்பர் ....

    // நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் யாராக இருக்க கூடும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன் :-)//

    அது நம்ம ஈனா வினா அப்படிங்கறது உலகத்துக்கே தெரியுமே :)

    ReplyDelete
    Replies
    1. @ புளுபெர்ரி

      ////// நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் யாராக இருக்க கூடும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன் :-)//

      அது நம்ம ஈனா வினா அப்படிங்கறது உலகத்துக்கே தெரியுமே :)////

      விடைதவறு,அதுயாருன்னா...ஒரு குளு வேண்ணாலும் தர்றேன். ரிசார்ட்ஸ் காம்பவுண்டுல பூராவும் +1 போட்டவருதான் அவரு..[கண்ணடிக்கும் இத்தாலிகாரு படம் ஒன்று]

      Delete
    2. ////அது நம்ம ஈனா வினா அப்படிங்கறது உலகத்துக்கே தெரியுமே////

      வாசல்ல நின்னு டிக்கெட் கிழிக்கிற வேலைக்கு பேரு 'நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்', ஹஹ்?
      கிர்ர்ர்ர்ர்..

      Delete
    3. ///வாசல்ல நின்னு டிக்கெட் கிழிக்கிற வேலைக்கு பேரு 'நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்', ஹஹ்?
      கிர்ர்ர்ர்ர்..///

      விடுங்க பாஸு.!

      வருசாவருசம் புத்தக திருவிழாவுக்குப் போய் என்னெத்த கிழிச்சேன்னு இனிமே நம்மள யாரும் கேக்கமுடியாது இல்லீங்களா??

      Delete
  39. @ ALL :சும்மாவே அந்தரத்தில் அட்டகாசம் பண்ணும் நம்மாட்களுக்கு "மயிலு ; குயிலு ; பேட்ஜ்" என்றெல்லாம் விஷயம் கிடைத்து விட்டால் - அதகளம் செய்யாது விடுவார்களா ? ஷப்பா.....சிரிச்சு மாளலைடா சாமி !!

    அதிலும் நம்ம நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சன்னி லியோனை பேட்ஜோடு பார்ப்பதை கொஞ்சமாய் மனக்கண்ணில் நிறுத்திப் பாருங்களேன் !! முடிலே !!!

    அப்புறம் இம்முறை ஈரோட்டுக்கு செனா.அனா வை கடத்தியாச்சும் கொண்டு வரும் பெரும் பொறுப்பை யாரேனும் ஏற்றுக் கொண்டாகணுமே ?

    ReplyDelete
    Replies
    1. எல்லா பிரபலங்களுக்கும் பேட்ஜ் குத்திவிட்டு சேவை செய்திட சித்தமாய் இருக்கிறேன்!

      Delete
    2. ////இம்முறை ஈரோட்டுக்கு செனா.அனா வை கடத்தியாச்சும் கொண்டு வரும் பெரும் பொறுப்பை யாரேனும் ஏற்றுக் கொண்டாகணுமே ?////

      கடத்த வேண்டிய கஷ்டமெல்லாம் இல்லை சார்; அவராவே பவ்யமா வந்துசேர்ந்துடுவார். அதற்கு நாம செய்யவேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான் - அவர் வீட்டுக்காரம்மாவை நம்ம விழாவுக்கு சீஃப் கெஸ்ட்டா அழைக்கணும் - முடிஞ்ச்!

      Delete
    3. //அவர் வீட்டுக்காரம்மாவை நம்ம விழாவுக்கு சீஃப் கெஸ்ட்டா அழைக்கணும் - முடிஞ்ச்!//

      இந்த அழைத்து வரும் பொறுப்பை ஏத்துக்க சரியான ஆள் கோடையிடியார்.! :)))))))))))))))

      Delete
    4. ///இந்த அழைத்து வரும் பொறுப்பை ஏத்துக்க சரியான ஆள் கோடையிடியார்.! :)))))))))))))))///

      இது காவேரிய கொண்டு வர்ரதவிட கஷ்டமான விசயமாச்சே மாயாவியாரே???

      (கர்ர்ர்ர்ர்ர். . குருநாயரே! காவேரின்றது ஆறு . கற்பனையை கன்ட்ரோல்ல வைங்க)

      Delete
    5. ///அதிலும் நம்ம நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சன்னி லியோனை பேட்ஜோடு பார்ப்பதை கொஞ்சமாய் மனக்கண்ணில் நிறுத்திப் பாருங்களேன் !! முடிலே !!! ///

      என்னுடைய மனக்கண்ணில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் யாரும் தெரியவில்லை , சன்னி லியோன் அணிந்திருக்கும் பேட்ஜும் தெரியவில்லையே சார். .!

      பார்வைக் கோளாறு ஏதாச்சும் இருக்குமோ?!?

      Delete
  40. கடந்த சென்னை புத்தகதிருவிழாவின் போது டைப் செய்து பதிவிடாமல் விட்ட கடைசி பகுதி:

    தன் முன்பதிவை டிடிஆர் இடம் கேட்டு பெறதெரியாமல்...கழிவறை அருகில் பயணிக்க இருந்தவர்...அரைதோசைக்கு சாம்பார் கேட்க தயங்கி வெற்றுமாவையே விழுங்கும் கூச்சம்... இப்படி தன் உரிமைகளை கேட்டுபெறாதவர்,தன்னை சுரண்டும் சூழலை உணராதவர் என ஒருவரின் அந்தரங்கத்திற்கு அருகில் உள்ளதை வெளிச்சம் போட்டு காட்டுவது அவரை நெளியவைக்கவோ அவரின் இயல்பை நகைசுவையாக்கவோ அல்ல.

    மாறாக- சாட்டையால் அடித்து சுவைக்கும் சமூகத்தை கண்டுகொள்ளாமல்...விடுங்க ஸார் என்னோட உழைப்பை தானே சுரண்டறான், என்னோட சந்தோஷத்தை நான் தானே தீர்மானிக்கிறேன்...அது என் மனசுல பத்திரமா இருக்குள்ள..."என நம்மால் ஜீரணிக்கவே முடியாத,நடைமுறைபடுத்தவே முடியாத புத்திஷக் கொள்கையாளரின் மறுபக்கத்தை தான் பதிவுசெய்கிறேன்.

    இதைவிட பலமடங்கு கீழ்நிலையில் உள்ளவர்கள் ஏராளம்,இயலாமையில் இருந்து தப்பிக்க அவர்கள் அடைக்கலமாவது டாஸ்மார்க்,சிகரெட்,பான்பராக் என போதையின் பக்கம்.

    ஆனால் நம் நண்பர் கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலையை சேர்ந்த ராஜசேகர் @ சக்திவேல் அடைக்கலமானது காமிக்ஸ் உலகில்.!இந்த அவசர உலகில் நண்பரால் எங்குமே முன்னோக்கி ஒரு அடி கூட எடுத்துவைக்க தெம்பில்லை என்றாலும்கூட,நம் காமிக்ஸ் உலகில்...முத்து ஸ்டாலில் அவர் எடுத்துவைத்த அடி எல்லோரையும்விட ரொம்பவே முன்னோக்கியவை.இன்றைக்கு பெஸ்ட் பேட்மேனாக இருக்கும் ஈரோடு விஜய் கூட "மறந்தே போய்ட்டேன் பாருங்க மாயாவி...ச்சே..அந்த MAY I HELP U பேட்ஜ் ரூம்லையே வெச்சிட்டு வந்துட்டேன்...வர்றவங்க நம்மளை எப்படி புரிஞ்சிப்பாங்களோ..???"என தயங்கினார்.

    ஆனால் நம்ம சக்திவேலிடம் ஒரு துளிகூட அப்படியொரு தயக்கமேயில்லை.வெளியுலகில் தட்டுத்தடுமாறிய தயக்கமே அவரிடம் அங்கு தென்படவில்லை.இத்தனைக்கும் அவருக்கு நான் ஒரு ரெண்டு ரூபாய் 'பேட்ஜ்' கூட தரவில்லை. அதைபத்தியெல்லாம் யோசிக்காம மனுஷன் காமிக்ஸ் ஸ்டாலில் அப்படி புகுந்து விளையாடினார். ஏதோவொரு விதத்தில் மனதில் தடைகளை தகர்த்தெறிந்த நம் காமிக்ஸ் உலக வலிமையின் அடையாளங்களின் ஒருவராக அவர் என்கண்களுக்கு தெரிந்தார்.! சூழ்நிலைகள் ஒவ்வொருவரையும் வேறு இடங்களில் வைத்திருந்தாலும் காமிக்ஸ் மேல் உள்ள காதல் அத்தனை பேரையும் ஒரு புள்ளியில் இணைகிறது.

    அந்த புள்ளி என்னவென்று தெரிந்துகொள்ளும்முன் இந்த வீடியோ பாருங்கள்...இங்கே'கிளிக்'

    பார்த்துவிடீர்களா..!! நம் உண்மையான வாழ்வின் வெற்றிக்கு கைகோர்க்கும் நண்பர்களை தேர்ந்தெடுத்து இணைக்கும் இடம்தான் அந்த புள்ளி.! நியூஜெஸ்சியில் இருக்கும் மகேந்திரனையும் தான்தோன்றிமலை சக்திவேலையும்... காமிக்ஸ் மேல் உள்ள காதல் என்ற ஒன்றைதவிர வேறுஎந்த சக்தியால் நண்பர்களாக இணைக்க முடியும்.!!!

    தான்தோன்றிமலை சக்திவேலுக்கு ஒரு நண்பர் ரத்தபடலம் வண்ண பதிப்பை சைலண்டாக ஸ்பான்சர் செய்துள்ளார் என்பது ஒரு பக்கம் என்றால்...

    [அந்த நண்பர் யாராக இருக்கும்..? குளு: சன்னி லியோனிங்கிற கிரிகெட் வீரரை பத்தி இங்க போசின இருவரில் ஒருவர்.. :P]

    சென்னைபட்டின டைகர் ரசிகர் மன்ற துணை தலைவர் திரு: ராஜ் முத்துகுமார் அவர்கள் தான் தோன்றிமலை சக்திவேலுக்கு 'இரத்தகோட்டை' வண்ணபதிப்பை ஸ்பான்சர் செய்துள்ளார்.

    தான்தோன்றிமலை சக்திவேல் என்னிடம் முன்பே தெரிவித்த ஒருசின்ன ஆசை..."வீட்ல தொங்கவிட்டு அழகு பார்க்க ஒரு லயன் காலண்டர் கிடைக்குமா ஸார்..?" என்பதே. முடிந்தால் உதவமுடியுமா பாருங்க எடிட்டர் ஸார்..!

    சுபம்.

    ReplyDelete
    Replies
    1. எளிமையின் இருப்பிடமாகவும், காமிக்ஸை சுவாசமாய் கொண்டவருமான நண்பர் ராஜசேகருக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்!

      @ ரா.மு.கு

      அருமை நண்பரே!

      Delete
    2. ///விடுங்க ஸார் என்னோட உழைப்பை தானே சுரண்டறான், என்னோட சந்தோஷத்தை நான் தானே தீர்மானிக்கிறேன்...அது என் மனசுல பத்திரமா இருக்குள்ள///


      என்னவொரு மனநிலை!! செம!!

      Delete
    3. ///நம் உண்மையான வாழ்வின் வெற்றிக்கு கைகோர்க்கும் நண்பர்களை தேர்ந்தெடுத்து இணைக்கும் இடம்தான் அந்த புள்ளி.! நியூஜெஸ்சியில் இருக்கும் மகேந்திரனையும் தான்தோன்றிமலை சக்திவேலையும்... காமிக்ஸ் மேல் உள்ள காதல் என்ற ஒன்றைதவிர வேறுஎந்த சக்தியால் நண்பர்களாக இணைக்க முடியும்.!!! ///

      +1

      ஷோக்கா சொன்னிங்க மாயாவிகாரு..!!

      Delete
  41. Replies
    1. @ செந்தில் சத்யா

      ஏன் பாஸ் கமெண்டை எடுத்துட்டிங்க...ஹாஹஹா....ரசிக்கும்படியாதான் இருந்தது..! என்ன //மொட்ட(மாயாவி) சிவா// கிறதை சொட்ட ன்னு போட்டிருந்தா இன்னுமும் சிரிப்பா இருந்திருக்கும். [உண்மை அதுதானே..ஹீ..ஹீ..ஹீ] ஜாலியா விடுங்கபாஸ்..!!

      Delete
  42. ஏஏஏஏ. யப்ப்ப்பாபா!!!!

    பின்னிட்டிங்க நண்பர்களே..!!

    இன்னிக்கு மாதிரியே இந்த தளம் என்னிக்கும் சந்தோசமா இருக்கணும். .!!

    ReplyDelete
  43. அப்புறம் மக்களே, இங்கே ஏற்கனவே 'பறவை' அந்தஸ்து கிடைக்கப் பெற்றவங்கதான் (சந்தோசத்துல) கூத்துக்கட்டிக்கிட்டிருக்காங்க. இன்னும் அதிகபட்சமா நான்கே நான்கு நாட்கள்தான் இருக்கு - பறவையாகிடும் கெடு முடிய!

    ஆகவே, இதுவரை முன்பதிவு செய்யாதவர்கள் கடைசி நாள்வரை காத்துக்கொண்டிராமல் சட்டுப்புட்டு பணம் கட்டி முன்பதிவு செய்யும் வழியப் பாருங்க! 'பறவைகளுக்கு' இன்னும் சில/பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கறதா எடிட்டர் சொன்னது ஞாபகமிருக்கோல்லியோ?

    ம்ம்... ஆவட்டும், ஆவட்டும்!

    ReplyDelete
  44. ****** ஐயாம் ஸ்பீக்கிங் சீரியஸ்லி - யூ நோ? *****

    சின்ன வயசில் எனக்கு பறவை மாதிரி பறக்கிற கனவு அடிக்கடி வரும். ரெக்கையெல்லாம் இருக்காது - ஆனாலும் கால்களை தரையில் உந்தி, நினைச்சமாத்திரத்தில் ஜிவ்வுனு மேலெழும்பி பறக்க முடியும். பறக்கும் திசைகளை மாற்ற, இரு கைகளையும் லேசா அப்படியும் இப்படியுமா பேலன்ஸ் பண்ணினாலே போதும்! கனவு மாதிரியே இருக்காது, நிஜமாவே பறக்கிற உணர்வு 100% இருக்கும்! ஆனால், மேலெழும்பிடவும், கீழே லேண்ட் ஆகிடவும் அடிக்கடி தடையாய் இருப்பது - கரண்ட் கம்பங்களும், அதில் செல்லும் கம்பிகளுமே! கம்பிகளில் சிக்கிக்கிடாம லாவகமா பறக்கிறது ஒரு தனிக் கலையாக்கும்!

    எனக்கு ரொம்பவும் பிடித்த இப்படியாப்பட்ட கனவுகள் இப்போதும் வருவதுண்டு, ஆனா எப்பியாச்சும்தான்!

    இந்தமாதிரி பறக்கிற கனவு எனக்கு மட்டும்தான்னு இல்லாம, கிட்டத்தட்ட எல்லோருக்குமே வரும்ன்ற விசயத்தை பிற்பாடு என் அறிவியல் குரு - எழுத்தாளர் சுஜாதாவின் ஒரு கேள்விபதில் பக்கத்தில் (கொஞ்சமா) தெரிஞ்சுக்கிட்டேன்! ( இதைப்பத்தி விசயம் தெரிஞ்சவங்க யாராச்சும் விளக்கிச் சொன்னா நல்லா இருக்கும்)

    நம்மில் பலரும் 'பறவையாக' துடிப்பதன் பின்புலம் இதுதான்னு நினைக்கிறேன்!

    உங்களில் யாருக்காவது இதே அனுபவம் கிட்டியிருப்பின் இங்கே பகிர்ந்துகொள்ளலாமே நண்பர்களே? ( பகர்ந்துகொள்ளும் விதம் - 'tex kit'லிருந்து ஆரம்பித்து 'ஸ்டீல்க்ளா பொன்ராஜ்' வரை - எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம்)



    ReplyDelete
    Replies
    1. ///****** ஐயாம் ஸ்பீக்கிங் சீரியஸ்லி - யூ நோ? *****///

      க்க்கும். .! இதை சொல்லாம இருந்திருந்தாலாவது சீரியஸா படிச்சிருப்போம்.!

      ///உங்களில் யாருக்காவது இதே அனுபவம் கிட்டியிருப்பின் இங்கே பகிர்ந்துகொள்ளலாமே நண்பர்களே?///

      எனக்கு கனவில் பறக்கத் தடையாய் இருந்தது எங்கவீட்டுத் தரைதான். பின்னே. .கட்டில் தரையில்இருந்து ஒரு அடி உயரம்தான் இருக்கும்.

      கனவில் டேக்ஆஃப் ஆன அடுத்த நொடியே தரையில் தலைகீழாய் லேண்டாகி விடுவேனே..!!

      Delete
    2. எனக்கும் சின்ன வயதில் இந்த பறக்கும் கனவு பிரச்சினை இருந்தது. ஆனால் உம்மைப்போல சொய்ங்கென்று பறக்காமல் போல் வால்ட் போன்ற உயரங்களை சினிமா ஸ்லோமோஷனில் தாண்டுவது போல அடிக்கடி வரும். மரங்களுக்கு மேலெல்லாம் மெல்லமாக தாவி-கிட்டத்தட்ட பறந்து- வருவேன். ஆனால், திடுமென ஏதோ ஒரு ஜம்பில் உயரம் அதிகமாகி.. அச்சச்சோ.. சரியா லேண்ட் ஆகாமல் பொதகடீர் என விழுந்து வைக்கப்போகிறோம் என்பதை உணர்ந்து, பயந்து, வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டு, பதறியடித்து விழித்துக்கொள்வேன். :-))))))))

      Delete
    3. எனக்கும் பால்ய வயதில் துவங்கி ..முந்தா நேத்து கூட தொபுக்கடீர்னு விழுந்தேன்...விழும் போது கட்டுலயோ , கட்டாந்தரயயோ கிக்கா உதப்பேன் . ஆனா உங்கள மாதிரி நேர்த்தியால்லா பறந்தது கிடயாது ..

      Delete
    4. ராத்திரி இந்த பதிவை படிச்சுட்டு, நாமதான் முன்னாடியே பணம் கட்டி பறவையாயிட்டோமே, நம்ம ஈரோடு விஜயும் சின்ன வயசு கனவு இருந்தா சொல்லுங்கன்னு சொன்னாரேன்னு ரோசனை பண்ணிகிட்டே நானும் அவதார் படத்துல பறக்கிற மாதிரி காடு மலையெல்லாம் டைவ் அடிச்சு பறந்துகிட்டு இருந்தேன்.. கொஞ்ச தூரத்தில ஆறோ, குளமோ, கடலோ தெரிஞ்சுச்சு, சரின்னு தண்ணிக்கு மேலே ஒரு அடி உயரத்துல பறந்துகிட்டு போனா ப்ரைக்கு மீனாச்சும் புடிச்சுகுலாமேன்னு சர்ர்ன்னு பறந்தேன்.. திடீருன்னு பளாருன்னு முதுவுல ஒரு அடி.. என்னடா நமக்கு பின்னாடிதான் எந்த வல்லூருமே வரலயேன்னு திரும்பிப் பார்க்கலாம்னு பார்த்தா, நம்ம ஜோடிப்புறா புலிமாதிரி உறுமிகிட்டு "ராத்திரி கூட ஒழுங்கா படுக்கமாட்டியா, சும்மா எதாவது கனவு கண்டுகிட்டு உளரிகிட்டே இருக்கிறதா." ங்கிற மாதிரி ஒரு பார்வை.. அப்புறம் தான் தெரிஞ்சுது, ரோசனை பண்ணிகிட்டே பெட்டுல குப்புறப்படுத்து தூங்கிபோய்ட்டேன்னு..

      Delete
    5. அன்புள்ள ஈ.வி..

      என்ன ஆச்சரியம்!! எனக்கும் இதே போல 'பறக்கும்' அனுபவம் அடிக்கடி கனவில் வருவது உண்டு. நமக்கு மட்டும்தான் இப்படியா என்றும் தோன்றும்.

      நான் பறப்பதெல்லாம் எங்கள் வீட்டுக்குப் பின்னால் இரண்டு தெரு தள்ளி இருக்கும் ஆற்றின் மேல்தான். ஆறு எங்கெல்லாம் வளைந்து நெளிந்து போகிறதோ நானும் அதற்கு மேலேயே பறந்து சென்று கொண்டிருப்பேன்.

      கொஞ்சம் கூட கனவு மாதிரியே தோன்றாது.. 'Bird View' ஆங்கிளில் தெரு, மரங்கள், வீடுகள், ஆட்கள் எல்லாம் தத்ரூபமாக இருக்கும். ஒரு சுற்று சுற்றி வந்த பிறகு வீட்டின் முன் இறங்கும் போது தரையில் கால் படும் நேரத்தில் உடம்பு ஒரு உதறு உதறும், விழித்து விடுவேன்!!

      ஆனா பாருங்க, கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி 'சுதந்திரமா பறந்து' போற மாதிரி கனவு அடிக்கடி வரும். இப்ப இல்ல. :)

      இப்ப யாரோ நம்மள அடிக்கிற மாதிரி கனவுதான் அடிக்கடி வரும். முழிச்சு பார்த்தா தான் அது கனவு இல்ல நிஜம்னு தெரியுது! உங்களுக்கும் இந்த மாதிரி 'திகில்' கனவுகள் வரும்னு நம்பறேன் :))

      Delete
    6. அன்புள்ள ஈ.வி..

      என்ன ஆச்சரியம்!! எனக்கும் இதே போல 'பறக்கும்' அனுபவம் அடிக்கடி கனவில் வருவது உண்டு. நமக்கு மட்டும்தான் இப்படியா என்றும் தோன்றும்.

      நான் பறப்பதெல்லாம் எங்கள் வீட்டுக்குப் பின்னால் இரண்டு தெரு தள்ளி இருக்கும் ஆற்றின் மேல்தான். ஆறு எங்கெல்லாம் வளைந்து நெளிந்து போகிறதோ நானும் அதற்கு மேலேயே பறந்து சென்று கொண்டிருப்பேன்.

      கொஞ்சம் கூட கனவு மாதிரியே தோன்றாது.. 'Bird View' ஆங்கிளில் தெரு, மரங்கள், வீடுகள், ஆட்கள் எல்லாம் தத்ரூபமாக இருக்கும். ஒரு சுற்று சுற்றி வந்த பிறகு வீட்டின் முன் இறங்கும் போது தரையில் கால் படும் நேரத்தில் உடம்பு ஒரு உதறு உதறும், விழித்து விடுவேன்!!

      ஆனா பாருங்க, கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி 'சுதந்திரமா பறந்து' போற மாதிரி கனவு அடிக்கடி வரும். இப்ப இல்ல. :)

      இப்ப யாரோ நம்மள அடிக்கிற மாதிரி கனவுதான் அடிக்கடி வரும். முழிச்சு பார்த்தா தான் அது கனவு இல்ல நிஜம்னு தெரியுது! உங்களுக்கும் இந்த மாதிரி 'திகில்' கனவுகள் வரும்னு நம்பறேன் :))

      Delete
    7. @ கி.ஆ.க, ஆதி, ஸ்டீல், கரூர்கார், புதுவை செந்தில் & புதுவை செந்தில்

      சூப்பர்! :)))))

      Delete
    8. அடக்கடவுளே! அந்த சின்னப் பொடியன் ஸ்மர்ப்போட பிஞ்சு மனசிலே பறக்கிற ஐடியாவை Inception பட ரேஞ்சில் விதைச்சது நீங்கதானா?

      Delete
  45. அப்பால.. நான் சொல்ல வந்த விஷயத்தை ஆரம்பிக்கிறேன்.

    1. இந்த மாத இதழ்கள் எனக்கு இன்றுதான் வந்து சேர்ந்தன. என்ன இது அநியாயம்.. துவங்கிடவா ஒரு போராட்டம் என நண்பர்கள் பொங்கிட வேண்டாம். ஹிஹி! காரணம் நாந்தான். சென்னைக்குள் எனது முகவரி மாற்றம் காரணமாக வழக்கம்போல் அனுப்பிவிடாதீர்கள் என நிறுத்திவைத்திருந்தேன். ஆனால், இங்கே பதிவுகளில் கழுகுமலைக்கோட்டை பற்றிய செய்திகளைப் படிக்கப்படிக்க ஆர்வம் வேறு தாளமுடியவில்லை. அவஸ்தையாகிவிட்டது.

    2. வந்ததும் அட்டைப்படம், முதல் தடவையாக பாக்கெட் சைஸ் என அந்தக் கச்சிதம், மீடியம் குண்டு என இதழ் வசீகரித்தது ஒரு புறம். மறுபுறம் உள்ளே கிளான்ஸ் பார்த்தால் சற்றே ஏமாற்றம்தான் முதலில் ஏற்பட்டது. சுமாரான படங்கள் மற்றும் கச்சிதமில்லா வண்ணங்கள்! அப்படியும் வாசிக்கத்துவங்கினேன்.. ஆரம்பச் சில பக்கங்கள் தாண்டியதும் கதைக்குள் என்னையறியாது புகுந்துவிட குறைகள் கண்ணிலிருந்து மறைந்துவிட்டன. இறுதிவரை கச்சிதமான ஒரு ஆக்‌ஷன் ஹாலிவுட் படம் பார்த்த மகிழ்ச்சி! ஆஹா.. ஆக்‌ஷன் ஒருபுறம், செண்டிமெண்ட் மறுபுறம். நண்பர்கள் அத்தனை பேரின் பில்டப்புமே இந்தக்கதையைப் பொறுத்தவரை குறைச்சல்தான்! சாதாரண ஆக்‌ஷன், செண்டிமெண்ட்தான்.. ஆனாலும் ஏனோ எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. மிரியத்தை இளவரசி அதிரடியாய் வீழ்த்தும் காட்சி, ப்ளட்சர் காரெக்டரின் தன்மை, வசனங்கள், உளவுத்துறை அதிகாரிகளின் அண்டர்ப்ளே, கார்வினை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்க இளவரசி எடுக்கும் ஃபேடல் ரிஸ்க், அவரை ஒரு படி விஞ்சும்வண்ணம் கார்வின் இளவரசியைக் காக்கச் செய்யும் போராட்டம் என ஒரு இடத்தில் தழுதழுத்துவிட்டேன். இதுவரை கார்ட்டூன் கதைகளைத்தான் மனமொப்பிப் படித்திருக்கிறேன். ஒரு சாதாரண ஆக்‌ஷன் கதையில் தழுதழுத்தது இதுதான் முதல் தடவை! கிரேட்!

    2. சொல்லி இரண்டு நாட்கள்தானே ஆகிறது. ‘இரத்தக்கோட்டை’க்கு முன்பணத்தை நாளை அனுப்பி, முதலிடத்தைப் பிடித்து நல்ல வலுத்த வல்லூறாகிவிடலாம் என நினைத்திருந்தேன். ஆனால், இங்கு நடக்கும் அடிதடியப்பார்த்தால், ஒரு சிட்டுக்குருவி இடம் கூட கிடைக்காது போலிருக்கிறது. டைகர்னா சும்மாவா? பேரைக்கேட்டாலே அதிருதில்ல.. மகிழ்ச்சி!

    3. ஈரோட்டில் ஒரு சர்ப்ரைஸ் இதழ் எனும் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு புக்பேரிலும் வந்து எல்லோரையும் பார்த்துவிட்டு, புத்தகங்களையும் புரட்டிவிட்டு வெறுங்கையை வீசிவிட்டு செல்கையில் சற்று ஏமாற்றமாக இருக்கும். அதைப்போக்க வேண்டுகோளுக்கு செவிசாய்த்த எடிட்டருக்கு நன்றி. ஆனால், வழக்கம்போல அதிரடி ஆக்‌ஷன் என்றில்லாமல்.. ‘கல்லறையில் ரெண்டு சொட்டு கண்ணீர்’ என்பது போல ஏதாச்சும் சோக கி.நா வைப் போட்டு வைத்தீர்கள் என்றால் ஒரு சேஞ்சாக இருக்கும். ஆவன செய்யவும். :-)))))))

    4. லேட்டாக அனுப்பச்சொன்னதால், எனது சந்தா சர்ப்ரைஸ் பெட்டியில் இல்லை. புக்கை எடுத்துவிட்டு வெற்றுப்பெட்டிக்குள் கையை விட்டு துழாவியும் பார்த்துவிட்டேன். என்னடா கண்ணுக்குத் தெரியாத ஓவர் சர்ப்ரைஸாக இருக்கிறதே!! லேட்டானதால் காலியாகியிருக்குமோ? என்ற சிந்தனை ஒருபுறம்! அச்சச்சோ.. எனக்கு தினம் ஒரு தடவை தாயக்கட்டம் விளையாடலைன்னா தூக்கம் வராதே!! :-)))))) சும்மா Just for fun. நாளை போனில் அலுவலகத்தில் முறைப்படி தெரிவிக்கிறேன். எஞ்சிய காப்பி இருந்தால் அடுத்த மாத இதழ்களோடு அனுப்பிவையுங்கள் சார். NO regrets!

    ReplyDelete
    Replies
    1. ///
      ஆரம்பச் சில பக்கங்கள் தாண்டியதும் கதைக்குள் என்னையறியாது புகுந்துவிட குறைகள் கண்ணிலிருந்து மறைந்துவிட்டன. இறுதிவரை கச்சிதமான ஒரு ஆக்‌ஷன் ஹாலிவுட் படம் பார்த்த மகிழ்ச்சி! ஆஹா.. ஆக்‌ஷன் ஒருபுறம், செண்டிமெண்ட் மறுபுறம். நண்பர்கள் அத்தனை பேரின் பில்டப்புமே இந்தக்கதையைப் பொறுத்தவரை குறைச்சல்தான்! ///

      +1

      ////புக்கை எடுத்துவிட்டு வெற்றுப்பெட்டிக்குள் கையை விட்டு துழாவியும் பார்த்துவிட்டேன். என்னடா கண்ணுக்குத் தெரியாத ஓவர் சர்ப்ரைஸாக இருக்கிறதே!! லேட்டானதால் காலியாகியிருக்குமோ? ///

      :)))))))))))

      Delete
    2. ///வழக்கம்போல அதிரடி ஆக்‌ஷன் என்றில்லாமல்.. ‘கல்லறையில் ரெண்டு சொட்டு கண்ணீர்’ என்பது போல ஏதாச்சும் சோக கி.நா வைப் போட்டு வைத்தீர்கள் என்றால் ஒரு சேஞ்சாக இருக்கும். ஆவன செய்யவும்.///

      அய்யய்யோ..!
      இதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியலையே!? :-)

      Delete
  46. ஈரோடு surprise கௌபாய் suspense இதழ் மேலும் நண்பர்களை சந்திப்பில் கலந்து கொள்ள வைக்கும்.

    ReplyDelete
  47. ஆகஸ்ட்டில் வரும் சர்ப்னரஸ் இதழ் குனறந்த்து ரூ. 1000/= ஒரு பிரமாண்டமான விருந்தாக கெளபாய் கொண்டாட்டம் ஆக இருக்கவேண்டும் சார்.... தாழ்னமயான வேண்டுகோள் இது....

    ReplyDelete
    Replies
    1. yazhisai selva : செனா.அனா ஜி ஆரம்பித்து வைத்த சிரிப்புத் தோரணத்தை நீங்களும் தொடர்கிறீர்களோ என்ற சந்தேகம் எழுகிறது நண்பரே !! 1000 ரூபாய்க்கு சஸ்பென்ஸ் இதழா ? இது ஈனா .வீனா வை பேட்ஜ் குத்தி விடும் பொறுப்பிலிருந்து கழற்றி விடுவதை விடவும் கஷ்டமான காரியமாச்சே ?!!

      Delete
  48. டியர் எடிட்டர்

    எப்படியும் 500 சொச்சம் tex இன்னும் படிக்கவிருப்பதால் இந்த கோரிக்கை :

    அடுத்தாண்டு முதல் 15 நாட்களுக்கு ஒரு tex willer புக் போடவும். கூரியர் செலவு அதிகம் எகிராமல் இருக்கு தற்போதைய 4 தட புத்தகங்களில் இரண்டையும் இந்த tex உடன் இணைத்து அனுப்பிடவும்.

    எப்படியும் ஸ்பெஷல் இதழ்கள் உட்பட 24 tex தான் படிக்க முடியும் என்பதால் நோ ஓவேர்டோஸ் !

    இதனை தயவு செய்து பரிசீலிக்கவும் !

    ReplyDelete
  49. ///கமல்........
    நி.ஒ : சார் !! உங்க பேட்ஜ்???
    கமல்:
    பீலி பெய் சாக்காடும் அப்படின்னு ஒரு ட்வீட் மயிலை பத்தி போட்டேனே அது பத்தாது????
    சரி !!!!
    ஒயிலாய் எழிலாய்
    கயிலாய மலையாய்
    பயிலாய் மயிலாய்
    புயலாய்.....
    நி.ஒ : நீங்க உள்ள போங்க! தலை சுத்துது!!!///

    ///சன்னி லியோன்
    நி.ஒ : (தர்ம சங்கடத்துடன் நெளிந்தபடி) மேடம் !!! டிரஸ் மேல பேட்ஜ் போட்டுகிட்டு வாங்கன்னு சொன்னோம் ...பேட்ஜ் மட்டும் போட்டுகிட்டு வாங்கன்னு சொல்லவேயில்லையே!!!!
    சன்னி லியோன் ::: (சிரித்தபடி ) funny man !!!!///

    ///ஐஸ்வர்யா தனுஷ் ...
    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : மேடம் ! உங்க கிட்ட மயில் பேட்ஜ் இல்லையே?
    ஐஸ்வர்யா தனுஷ் : ஆனா நான் மயிலு மாதிரி டான்ஸ் ஆடுவேன்..
    நி.ஒ : மேடம் ! நீங்க பேட்ஜ் இல்லாமலே உள்ளே போங்க ஆனா டான்ஸ் மட்டும் ஆடாதீங்க! குழந்தைங்கல்லாம் வந்திருக்காங்க.///

    சகலகலா வல்லவரான நம்ம செனா அனாவின் இன்றைய அவதாரம் இது..!!

    செஞ்சுட்டிங்க செனா :):):):):):)

    ReplyDelete
  50. நம் தளத்தின் மறக்க முடியாத நாள் இது.சிரிப்பு தாங்கல...

    ReplyDelete
  51. விஜயன் சார், ஈரோடு புத்தக திருவிழாவில் ஏற்கனவே டெக்ஸ் மற்றும் டைகர் போன்ற கௌபாய் வரும் போது மீண்டும் ஒரு (புதிய) கௌபாய் கதையை வெளி இட வேண்டாம். அதற்கு பதில் வேறு புதிய கதைகளை வெளி இட வேண்டும் என்பது எனது ஆவல்.

    தயவு செய்து இது போன்ற புத்தக திருவிழாகளில் அதிகபடியான கௌபாய் கதைகளை வெளி இடாமல் புதிய (எ.கா.... SCI-FIC, கி.நா) கதைகளை வெளி இட்டால் புதியவர்களை கவர வாய்ப்பு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. மேலும் இது போன்ற சந்தர்ப்பம்களில்தான் நமது சிறிய காமிக்ஸ் வட்டத்திற்கு புதிய கதைகளம்களை அறிமுகபடுத்த முடியும்.

      Delete
  52. ஈனா வினா, KAK, மாயாவி, செனா அனா , ப்ளு, கட்டிடம் கட்ட ஆதின்னு இன்னிக்கு தளமே ரகளையா இருந்திருக்கு...எங்க தலீவர் தாரையார் பாணியில் சொல்வதென்றால்... மகிழ்ச்சி .

    @மாயாவி.../நியூஜெஸ்சியில் இருக்கும் மகேந்திரனையும் / யாருங்க இவரு? நான் இப்ப இருக்கிறது தலயோட ஆஸ்டின் அய்யா...

    ReplyDelete
    Replies
    1. ///
      @மாயாவி.../நியூஜெஸ்சியில் இருக்கும் மகேந்திரனையும் / யாருங்க இவரு? நான் இப்ப இருக்கிறது தலயோட ஆஸ்டின் அய்யா.///

      அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. மாயாகாரு சொல்லிட்டாரு.! நீங்க நியூஜெ(ர்)ஸ்சிலதான் இருக்கீங்க..!!

      நம்பிக்கை இல்லேன்னா பக்கத்து வீட்ல கேட்டுப்பாருங்க மஹி ஜி..! :-)

      Delete
    2. பக்கத்து வீட்ல கேட்டா இது யுனைடட் ஸடேட்ஸ் ஆப் ஆந்த்ராங்கறாங்க...😇

      Delete
    3. @ கோடையிடியார்

      ///நம்பிக்கை இல்லேன்னா பக்கத்து வீட்ல கேட்டுப்பாருங்க மஹி ஜி..! :-)///

      ப்ப்பா...என்னா டையமிங் கெளவுண்டர்...எப்படிங்க இப்படி...!!!
      என்ன பதில் சொல்றதுன்னு தடுமாறிட்டிருந்தேன்...ஆந்திரா டொனால்ட் ட்ரம்ப் கிரீன்கார்டு வாங்கி இந்தியர்களை யாரை எங்க வெச்சிருக்கார்..?ன்னு அவிங்கிளுக்கே தெரியாத போது எனக்கு எப்படி தெரியும் மகேந்திரன்..ஹீ..ஹீ..ஹீ... [நம்ம டையமிங் அம்புட்டுதான்]

      Delete
    4. ///...ஆந்திரா டொனால்ட் ட்ரம்ப் கிரீன்கார்டு வாங்கி இந்தியர்களை யாரை எங்க வெச்சிருக்கார்..?ன்னு அவிங்கிளுக்கே தெரியாத போது எனக்கு எப்படி தெரியும் ///

      வாஸ்த்தவந்தானுங்க மாயாவியாரே!!:-)

      உலக அரசியலையே விரல் நுனில வெச்சிருக்கிங்களே. ., அட்டகாஷ் மாஜி..!!

      Delete
  53. இளம் பிராயத்தில் கனவுகளில் வானத்தில் பறந்து செல்வது போல் கனவுகள்,அது ஒரு பரவச அனுபவம்.
    இப்போது நீங்கள் அறிவித்துள்ள மயில்,குயில் அங்கீகாரம் அந்த கனவுக்கு கட்டியம் கூறுவது போலவும், ஆச்சிரியமான சுவராஸ்யங்களையும்,மகிழ்ச்சியையும் தருகிறது.

    ReplyDelete
  54. அடேயப்பா போறபோக்க பாத்தா நம்ம இரத்தப்படல முன்பதிவு ஈரோட்லயே ஆரம்பித்த சில மணித்துளிகளில் நிரம்பிவிடும் போல இருக்கே !

    ReplyDelete
  55. செல்வம் அபிராமி @ உங்களின் காமெடி அவதாரம் என்னை சிரிக்க வைத்துவிட்டது! தொடரட்டும் உங்கள் சிரிப்பு மத்தாப்பூ!

    ReplyDelete
  56. லேட்டான வணக்கத்துடன் ...


    லேட்டான இடி இடியென சிரிப்பு மழை.....


    செனா அனாஜீ.....லக்கி ...சிக்பில் எல்லாம் தோற்றார்கள் போங்கள்.....எப்படி இப்படி....:-))))

    ReplyDelete
  57. EBF2017 ஹாலுக்கு வெளியே:

    இங்கே'கிளிக்' பண்ணிட்டு படிக்கவும்.

    "இதபாருங்க போராட்ட பாய்ஸ்...உங்க எடிட்டர் ஆசை பட்டாருங்கிறத்துக்காக நம்ம சகலகலா டாக்டர்ஸ் ஈரோட்டுக்கெல்லாம் வரமுடியாது.! ஏன்னா...உங்க வாத்தியார் இப்பதான் வளர்ந்துட்டு வர்றார், பல உலகநாடுகள் அவரை பேட்டி எடுக்கறப்ப 'நீங்க ரொம்பநாளா சந்திக்கவே முடியாத வாசகர் யாரு?' ன்னு கேட்டத்தானே பேட்டியில ஒரு பவர்இருக்கும், நீங்களே பியூசை புடுங்கபாத்தா எப்படி...?????"

    "இப்பிடி ஒரு வாசகர் இருக்காரு..அவரை இதுநாள்வரையில் பார்க்க முடியலைன்னு சொன்னாதானே வாசகர்களான உங்களுக்கு பெருமை...
    சஸ்பென்ஸ் கதையில மட்டுமில்ல..லைப்ளையும் நொம்பமுக்கியம். இது புரியாம வாசல்ல நின்னுக்கிட்டு "பேட்ஜை திரும்ப ஒப்படைப்போம்ன்னு போராட்டம் பண்ணின எப்படி...????
    ஜல்லிகட்டு போராட்டத்துல 'மோடிஜி..மோடிஜி.....பன்னீரு..பன்னீரு'ன்னு கோசம்போட்ட மாதிரியே இங்கவந்து....செல்வமு..செல்வமு.....அபிராமி..அபிராமின்னு கோஷம்போட்டா..அவிங்க ரெண்டுபேர் வந்துருவாங்களா....?????"

    "அய்யா ஸ்நேக் பாபு நான் என்ன சொல்லவர்றேன்னா..."

    "சடாப் யூர் மாவூத்...எபவுட்..நான்சன்ஸ் யு ஆர் டாக்கி..."

    காதுக்கருகில் மெல்லிய குரல்: "ஸ்ஸ்...யோவ்...ஸ்நேக்பாபு....அது ரெண்டு பேரில்ல ஒருத்தர்தான்..."

    "என்னய்யா இது....சீரியஸா பேசறப்போ... காதுல வந்து குசுகுசுன்னு குறும்புபண்ணிட்டு...குறுக்க...யாரும் பேசப்படாது...உள்ள கமலும்...பட்டிமன்ற பேச்சாளர் சன்னி லியோனியும் தனி இருக்காங்க, அவங்களை மதிக்காம நாம ரோட்டுல போராட்டம் பண்ணினா எதிர்கட்சிகாரன் நம்மளை பத்திஎன்ன நினைப்பாங்க...எல்லோரும்..உ.....ள்.....ஹலோ..ஹலோ...ஏய்..ஏய்...தா...ஏங்கய்யா...இவ்வளவு நேரம் வாழைப்பூ வடையை சாப்புட்டு அமைதியா....ஏய்ய்..யாருய்யா அது இடுப்புல கிள்ளினது...அய்யோ......திடிர்ன்னு இப்பிடி எகிறிக்குதிச்சி ஓடுறிங்க...அடபாவிங்களா.....இந்த பச்சமண்ணை இப்பிடி மிதிச்சிட்டு ஓடுறிங்களே.....அவ்வவ்வ்வ்வ்.......இந்த காமிக்ஸ்பாய்ஸை புரிஞ்சிக்கவே முடியலையே...இதுக்கு பயந்துதான் அவிங்க தலைமறைவாவே இருக்காங்களோ....ஒரு நிமிஷத்துல நாசம்பண்ட்டாங்களே....அம்மா..அம்மாங்கோ.....

    இந்த நிகழ்ச்சியை பார்க்கும் செ.அபிராமி ரியாக்ஷன் பார்க்க...இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. மாயாவிஜி!!!
      :-))

      சேர்ந்தாப்பல எனக்கு இரண்டு வரி பேசத் தெரியாது ( அப்படி பேசினாலும் பழைய நடிகர் கார்த்திக் பேசற மாதிரி இருக்கும்) என்பதை தாண்டி புக் பேர் வர இயலாமல் போனதன் காரணம் ‘’வூட்டுக்காரம்மாதான் ‘.
      எடிட்டரிடம் எனது புக்கில் கையெழுத்து – நேரில்- வாங்குவதும் அவருடன் புகைப்படம் எடுத்து கொள்வதும் எனது நெடுநாள் கனவு.
      போலவே ஈ வி ,கோடையிடியார், நீங்கள் மற்றும் அனைவருடனும் அளவளாவுவதும் என் கனவே..( அதாவது நீங்க பேசறதை மோவாயில் கை வச்சு கேட்கிறது..:)]
      எடிட்டரை பொறுத்தவரை ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகரும் அவருக்கு முக்கியமானவரே.
      அந்த காமிக்ஸ் ரசிகர் கூட்டத்தில் யானும் ஒரு ரசிகன் என்பதில் மகிழ்வடைகிறேன்.
      அப்புறம் நேற்று ஈனா வினா போட்ட ‘’ முடிஞ்ச் ‘’ கமெண்ட்டை காட்டி (சிரிப்பு ஓய்ந்தபின்) இவ்வருடம் ஈரோடு புக் பேர் வர பர்மிஷன் வாங்கி விட்டேன்....( தொடர்ந்து பல புக்பேர்களாக நச்சரித்து கொண்டேயிருப்பதும் காரணமாக இருக்கலாம்)
      ( வாழ்க ஈனா வினா ) (ஈவி , கண்ணன் பெயர்கள் அவருக்கு மிகவும் பரிச்சயமானதுதான்.)




      Delete


    2. செனா அனா உங்களை ஈரோட்டில் சந்திக்க பெரும் ஆவலாக இருக்கிறோம்.!!!

      ///அதாவது நீங்க பேசறதை மோவாயில் கை வச்சு கேட்கிறது..:)]///

      சின்ன ஆலோசனை.!

      மாயாவி பேசும்போது கைவைத்து கேட்க மோவாயைவிட காதுகளே தோதான இடம் என்பதே உங்கள் நலம் நாடும் நண்பனின் ஆலோசனை..!!

      ஹிஹி.!! மாயாவியாரே.. ஸ்டார்ட் மீஜிக்!! :-)

      Delete
    3. செனா அனா ஜி
      ஈரோட்டில் உங்களை சந்திக்க
      மிக ஆவலாக உள்ளேன்
      ஏமாற்றி விடதீர்கள்

      Delete
    4. ///மாயாவி பேசும்போது கைவைத்து கேட்க மோவாயைவிட காதுகளே தோதான இடம் என்பதே உங்கள் நலம் நாடும் நண்பனின் ஆலோசனை..!!///

      ஹா...ஹா..ஹா...அவரது வேதாள முத்திரை எனது தாடையில் பதியாதவாறு முதலில் பாதுகாத்து கொள்வேன்..:)

      @ செந்தில் சத்யா....ஷ்யூர் ...ஷ்யூர்...

      Delete
    5. @ செனா அனா

      ////இவ்வருடம் ஈரோடு புக் பேர் வர பர்மிஷன் வாங்கி விட்டேன்.///

      அட்டகாசம்! அட்டகாசம்! EBF2017 இப்பவே களைகட்டுது!
      வாய்ங்க.. வாய்ங்க.. வாய்ங்க!

      திருமதி. செனாஅனாவுக்கு எங்க எல்லோர் சார்பிலும் நன்றிகளை தெரிவிச்சுடு்ங்க. முடிஞ்சா அவங்களையும் கூட்டிட்டு வாங்க. இல்லன்னா நீங்க அவங்ககூட வாங்க.

      ///
      சேர்ந்தாப்பல எனக்கு இரண்டு வரி பேசத் தெரியாது ///

      வீட்டுக்காரம்மா பக்கத்துல இருக்கும்போது நம்ம நண்பர்கள் பலருக்கும் இதுதான் நிலைமை! அவ்வளவு ஏன்... வாசகர் சந்திப்புன்னு வந்துட்டா 16GB வீடியோ கேமரா மெமரி தீருமளவுக்கு பேசுற நம்ம எடிட்டரை, அவங்க வூட்டுக்காரம்மாவை பக்கத்துல வச்சுக்கிட்டு பேசச் சொல்லுங்க பாக்கலாம் - KBலயே முடிஞ்சுடும்!

      இன்னொரு ரகசியமும் சொல்றேன், நான் இங்கே பண்ணும் ரவுசுகளைப் படிச்சுட்டு என்னை ஒரு 'வாயாடன்'னு நீங்க நினைச்சிருந்தா - தப்பு! எனக்கும் சரியா பேச வராது - வீட்டுக்காரம்மா இருந்தாலும்,இல்லேன்னாலும்!

      அதனாலென்ன, கண்ணாலயே பேசிக்கிடுவோம் வாங்க! :)

      Delete
    6. @ கி.ஆ.க

      ////மாயாவி பேசும்போது கைவைத்து கேட்க மோவாயைவிட காதுகளே தோதான இடம் என்பதே உங்கள் நலம் நாடும் நண்பனின் ஆலோசனை..!!///

      :)))))

      Like! ( +1 போட்டா பிரச்சினை ஆகுது, அதான்!)

      Delete
    7. @ செல்வம் அபிராமி

      இருங்க..ஒரு தபா கிள்ளிபாத்துகிறேன். ஆவ்வ்...மெய்தான்..!

      திரு விஜயன் அவர்கள் வாசகர்ளின் எவ்வளவோ ஆசைகளை தீர்த்துவைக்க தன்னால் ஆனா முயற்சிகளை செய்து பூர்த்திசெய்கிறார். ஆனால் அவர் ஒவ்வொரு வாசகர் சந்திப்பிலும் தவறாமல் தன் ஆசையை சொல்லுவார். அந்த ஒரேயொரு ஆசையை சொல்ல தவறுவதேயில்லை. அது "யாராவது அந்த மனுஷரை ஒரேயொருதபா வாசகர்சந்திப்பின்போது அழைச்சிட்டு வாங்க ஸாமிகளா.."

      எடிட்டரின் அந்த சின்னஆசையை கூட நிறைவேற்ற முடியாமல் நண்பர்கள் பலரும் தடுமாறியதுண்டு.! "அதுக்கென்னங்க வந்தாபோச்சி.." என நீங்கள் சொல்லும் போதெல்லாம்...நண்பர்கள் 'அதோ வர்றவர் செ.அ தான்..' என சொல்ல, நான் மறுத்து அதற்கு காலம்கனியலைன்னு சொல்வேன்.

      ஆனால் இந்தமுறை என்நிலையில் மற்றவர்களும், நான் 'அதோ வர்றவர் செ.அ தான்..' ன்னு சொல்ல போறேங்கிறதுல எனக்கு டவுட்டே இல்லை. ஏன்னா கிள்ளினா வலிக்குதே..ஹீ..ஹீ...ஹீ.!

      @ கோடையிடியாரே

      ///மாயாவி பேசும்போது கைவைத்து கேட்க மோவாயைவிட காதுகளே தோதான இடம் என்பதே உங்கள் நலம் நாடும் நண்பனின் ஆலோசனை..!!

      ஹிஹி.!! மாயாவியாரே.. ஸ்டார்ட் மீஜிக்!! :-)///

      உங்கள் பொண்ணுக்கு பொறந்தநாளும் அதுவுமா என்னை ஏன் புலம்பவெக்கிறீங்க...நான் என்ன காதுல ரத்தம் வர்றஅளவுக்காக பேசி கொல்றேன்...இருங்க பஞ்சாயத்துக்கு சேலம்டெக்சை புடிக்கிறேன்...

      -தொம்-

      @ இத்தாலிகாரு

      /// Like! ( +1 போட்டா பிரச்சினை ஆகுது, அதான்!) ///

      அப்ப like க்கை வெச்சிசெஞ்சிடுவோம்..! :P

      Delete
    8. @ ALL : அந்தக் காலங்களில் ஸ்பைடர் படத்தை அட்டைப்படத்தில் ஒப்புக்குப் போட்டாலே விற்பனையாளர்கள் குஷி ஆகி விடுவார்கள் ! அந்த பாணியில் செனா.அனா.வின் படத்தை போட்டு - "இந்தத் தடவை ஈரோடு சந்திப்புக்கு இவரும் கலந்து கொள்கிறார் !!" என்று விளம்பரம் செய்வோமா ? சென்றாண்டின் "தலையில்லாப் போராளி" selfie வேளையில் அவர் அனுப்பிய with தலை + without தலை போட்டோக்கள் கைவசம் உள்ளன !!

      வேற வழியே இல்லாது நண்பரும் வந்தே தீருவார் !!

      ஈரோட்டுக்கு டிக்கெட் போட காரணம் # 6 !!

      Delete
    9. ////இந்தத் தடவை ஈரோடு சந்திப்புக்கு இவரும் கலந்து கொள்கிறார் !!" என்று விளம்பரம் செய்வோமா ? /////
      ஆபத்து வரும் சமயங்களில் முன் எச்சரிக்கை செய்வது வழக்கம்தான் சார்!! வர்றவங்க எதையும் தாங்கும் இதயத்தோட வருவாங்க !!!! :-)

      /////சென்றாண்டின் "தலையில்லாப் போராளி" selfie வேளையில் அவர் அனுப்பிய with தலை + without தலை போட்டோக்கள் கைவசம் உள்ளன !! ////
      வித் தலையோட போட்டாக்கள் புக் பேருக்கு வரும் குழந்தைகள் சாப்பிட அடம் பிடித்து அழும்போது பூச்சாண்டி வருது என பயமூட்டி அவர்களுக்கு ‘’ மம்மூ ‘’ ஊட்ட அம்மாக்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் என்பதால்- அவர்கள் பேராதரவால் - புக்பேர் நிர்வாகிகளின் கனிவான பார்வை நம் மேல் விழும் என்பதில் ஐயமில்லை :)

      Delete
    10. செனா அனா,

      இதெல்லாம் கொஞ்சங்கூட நியாயமே இல்லீங்க..!
      நீங்களே உங்களை கலாய்ச்சுகிறிங்களே,
      அப்புறம் நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்னு கேக்குறேன். .!! :-)

      Delete
    11. /// சென்றாண்டின் "தலையில்லாப் போராளி" selfie வேளையில் அவர் அனுப்பிய with தலை + without தலை போட்டோக்கள் கைவசம் உள்ளன !! ///

      இதை படிச்சதும் நினைத்ததும்...

      ஸுப்பர் பவர் உள்ள சூப்பர்மேன்,ஸ்பைடர்மேன்,பேட்மேன் போன்றவர்களின் முகங்கள் கூட நமக்கு கதைகளில் காட்டப்படும். கதாபாத்திரங்களுக்கு தான் காட்டமாட்டார்கள். ஆனால் முகமூடி வேதாளரின் முகம் மட்டுமே வாசகர்களின் கண்களுக்கு கூட நேரடியாக காட்டியிருக்க மாட்டார் ஓவியர்.

      "இதே மாதிரி தன் முகத்தை கூட காட்ட மாட்டேங்கிறாரே செல்வம் ஸார்..." என ஆதங்கப்படும் நண்பர்களிடம் 'எல்லாம் இவர்தான் செல்வம் அபிராமி' என தவறாமல் ஒரு போட்டோவை காட்டுவேன். அதை பார்க்க...இங்கே'கிளிக்'

      ஆனாலும்கூட இதை நம்புவோர் ஒருவரும் இல்லை...என்னை தவிர..! சரிதான் மா.ஜி.! என ஒருபதில் கிடைத்தால், பந்தயம் கட்டிய பல நண்பர்களிடமிருந்து ஓல்டு முத்து&லயன் புக்ஸ்சை கட்டபை நிறைய வசூல் பண்ணிடலாம்.!

      இல்லைன்னா என்னோட ஒருபகுதி கலெக்சன் சுவாகா...இத்தாலிகாருக்கு மட்டும் பன் with டீ மட்டுமே ;)

      கட்டபை கலெக்ஷன் 50% 50% டீல் பிடிச்சிருந்தா like போடுங்க செல்வம் ஸார்..:)))))

      Delete
    12. அவரா இது..... அப்ப ஈரோட்டுல ஒவ்வொரு நேரமும் கெடா வெட்டு தான்.....

      Delete
  58. ///கமல்........
    நி.ஒ : சார் !! உங்க பேட்ஜ்???
    கமல்:
    பீலி பெய் சாக்காடும் அப்படின்னு ஒரு ட்வீட் மயிலை பத்தி போட்டேனே அது பத்தாது????
    சரி !!!!
    ஒயிலாய் எழிலாய்
    கயிலாய மலையாய்
    பயிலாய் மயிலாய்
    புயலாய்.....
    நி.ஒ : நீங்க உள்ள போங்க! தலை சுத்துது!!!///

    செனா-அனா அவர்களே...!!
    கமல் சாரின் இந்த கவிதை மனதை விட்டு அகலவே மாட்டேங்குது.
    நமது ஆசிரியரின் சீடர் தானய்யா நீர்.

    ReplyDelete
    Replies
    1. ////செனா-அனா அவர்களே...!!
      கமல் சாரின் இந்த கவிதை மனதை விட்டு அகலவே மாட்டேங்குது.
      நமது ஆசிரியரின் சீடர் தானய்யா நீர்///

      அப்படீன்னா, நம்ம ஆசிரியர் எழுதும் கவிதைகளும் 'அப்படித்தான்'னு சொல்லவரீங்களா பாட்ஷா ஜி? :P

      Delete
    2. "வல்லவர்கள் வீழ்வதில்லை" நாலே மாசத்தில் விற்றுத் தீர்ந்ததே அடியேனோட "கவிதை"களின் மகிமையாலேன்னு நினைச்சிட்டு இருக்கேன் நான் !!

      Delete
  59. பாஷா பாய் ஒரு தடவை சொன்னா நாலு தடவை சொன்ன மாதிரி.

    ReplyDelete
    Replies
    1. மீதி தொண்ணூத்தி ஆறை எவன்யா சொல்வது..?

      Delete
  60. EBF2017 - சம்பவம் #8

    " மேடைக்குப் பக்கத்துலயே சமாதி மாதிரி ஏதோ செட் போட்டிருக்காங்களே... எதுக்கு?"

    " எல்லாம் நம்ம நண்பர்களின் ஏற்பாடுதான். 'அடுத்த வருசம் இதே நாளில் இரத்தப்படலத்தை உங்க கைகளில் சேர்ப்பிப்பேன் - இது சத்தியம்'னு எடிட்டர் மூனுதடவை அந்த சமாதியில அடிச்சு சபதம் செஞ்சுட்டுத்தான் போகணுமாம்!"

    ReplyDelete
    Replies
    1. இரத்தப்படலம் வர்ர வரைக்கும் நம்ம ஸ்டீல் அங்கேயே தியானத்துல உக்காந்திடுவாரே..!!

      Delete
    2. ஐயா....நான் சபதமும் பண்ணலீங்கோ ; பெங்களூருக்கு ஜாகையை மாத்தறதாவும் இல்லீங்கோ !!

      Delete
  61. திரு.செனா அனா அவர்கள் விட்ட இடத்திலிருந்து....... "ஈரோடு புத்தக விழாவும் செலிபரிட்டிகளும்......"

    ReplyDelete
  62. அடுத்து வருவது சு.சா.
    பாதுகாப்புக்கு சுற்றி பத்து போலீசுடன்...
    "Where are tamil porukkies?
    Where are tamil porukkirs?" என்று கோஷம் போட்டுக்கொண்டு வர..
    நம்மவர்களுக்கோ ரோஷம் அடுப்பில் பால் பொங்குவதைப்போல் பொங்கிவர ஆனால் நம் எடிட்டருக்கு அவப்பெயர் நம்மால் வரக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் அடுப்பை அனைத்துவிட்டு "சார்.மயில் பேட்ஜ் எங்கே சார்?"
    சு.சா:" டமில்
    பொறுக்கீஸ்...கட்டுமரத்தில் இலங்கைக்கு போய் சண்டை போட தைரியமில்லாமல் இங்கே உள்ளே பதுங்கி கொண்டு என்னவோ கோட்டை கட்டுகிற போராட்டம் பண்ணுகிறார்களாமே? அவாள் முகத்த பார்த்து உரைக்கிறமாதிரி கேட்பதற்குத்தான் வந்தேன்."
    நம்மவர்கள்" சார்.கோட்டை கட்டும் போராட்டமெல்லாம் இல்லை சார்.இது புத்தக வெளியீட்டுவிழா மற்றும் வாசகர் சந்திப்பும் நடைபெறுகிறது சார்."
    சு.சா: " டமிள் பொறுக்கீஸ்.நான் வருவதை கேள்விபட்டு போராட்டத்தை கைவிட்டு புத்தகவிழான்னு மாத்திட்டேளா? முதுகெலும்பில்லாத கோழைகளா?"
    நம்மவர்கள்:" சார் பேட்ஜ் இல்லாவிட்டால் பரவாயில்லை.நீங்கள் உள்ளே போகலாம். உள்ளே முதல் வரிசையில் உலகநாயகன் கமலுக்கு பக்கத்து இருக்கை மட்டும்தான் காலியாக இருக்கிறது.அதில் போய் அமர்ந்து கொள்ளுங்கள்..."
    சு.சா:"டேய் டமிள் பொறுக்கீஸ்...இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை. (சு.சா.மைன்ட்வாய்ஸ்...முதுகெலும்புள்ள பிராணிகள் அத்தனையையும் சாப்பிட்டு வளர்ந்தவன் அவன்.நானோ வெறும் தயிர்சாதம்!! அதுமட்டுமில்லாமல் அரசியலுக்கு வந்தால் துப்பாக்கியுடன்தான் வருவேன் என்று பேட்டியெல்லாம் கொடுத்திருக்கிறான்.நான்
    அவனுடன் நேரில் பேச தைரியமில்லாமல் ட்விட்டரில் பேசிவருகிறேன். இனி நைசாக எஸ்கேப் ஆவதுதான் நமக்கு நல்லது.)
    சு.சா:" டமிள் பொறுக்கீஸ். டெல்லியிருந்து அவசரமாக அழைக்கிறார்கள்.நான் போக வேண்டியிருக்கிறது.பை பொறுக்கீஸ்....
    நம்மவர்கள்:" டெல்லியிலிருந்து அழைப்பா? நம்முடன் இருந்தவரைக்கும் செல்போனிலோ வேறு எப்படியும் தகவல் வரவில்லை.அப்புறம் எப்புடீ....!!!???
    அடுத்து...

    ReplyDelete
  63. இப்போது வரும் செலிபரிட்டி "நாம் தமிழர் கட்சி" ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் மற்றும் அவருடன் ஒரு முப்பது பேர் கையில் துடைப்பம், மற்றும் பிய்ய்ந்ந்து போன செருப்புமாக வேக வேகமாக வந்து நம்மவர்களிடம்....
    "தம்பிகளா. இங்கே அந்த சு.சா.வந்தானா? அவன் தமிழ்நாட்டுக்கு எப்போ வருகிறான்.எப்படி போறான்னு தெரியல.அரைமணிநேரத்துக்கு முன்னால்தான் அவன் இந்த பக்கம் வந்த தகவல் கேட்டு கண்டணத்தை தெரிவிக்க தம்பிகளுடன் புறப்பட்டு வந்து தேடிக்கொண்டு இருக்கிறோம்.ஆளே கிடைக்கவில்லை.நீங்கள் பார்த்தீர்களா?" என வினவ
    நம்மவர்கள் சு.சா.வந்து போனதகவல் அத்தனையும் கூறிவிட்டு இறுதியாக "அண்ணே.ஒரு கேள்வி கேட்கலாமா?" என தயங்கியவாறு கேட்க அவர் பதிலுக்கு "தம்பிகளா
    என்ன கேட்கப் போகிறீர்கள்.தயங்காமல் கேளுங்கள்" என
    நம்மவர்கள்:"அண்ணே.கண்டனத்தை தெரிவிக்க கறுப்பு கொடியைதானே காட்டுவார்கள்.நீங்கள் துடைப்பமும், பிய்ந்த செறுப்புமாக வந்திருக்கிறீர்களே!"என வினவ அவர்" தம்பிகளா.சு.சா.வுக்கு கறுப்பு கொடி காட்டினால் அந்த கறுப்பு கொடிக்கே அவமானம்.அதனால் அந்த கறுப்பு கொடியை அவமதிக்கவேண்டாமென்று இவற்றையெல்லாம் கொண்டுவந்தோம். இன்று தப்பிவிட்டான். மறுபடியும் மாட்டாமலா போய்விடுவான்" என்று கூறி கிளம்பி செல்ல நம்மவர்களோ அடுத்து யாரோ என்ற திகிலின் உச்சத்தில் காத்துநிற்க அடுத்து வந்த செலிபரிட்டியோ.....

    ReplyDelete
  64. This comment has been removed by the author.

    ReplyDelete
  65. இப்போது வரும் செலிபரட்டி நம்ம லத்திகா புகழ் "பவர் ஸ்டார்."
    அவர் பின்னாலேயே ஒரு ஐம்பது பேர் "வருங்கால ஜனாதிபதி பவர் ஸ்டார் வாழ்க," "தமிழ்நாட்டு ஹ்ரித்திக் ரோஷன் வாழ்க",
    " இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன் வாழ்க" என்று கோஷமிட்டு வந்து மண்டப வாயிலில் "அண்ணே....எங்களுக்கு கொடுக்க வேண்டிய அமவுன்டை கொடுத்து அனுப்பிவிடுங்கண்ணே.நாங்கள் கெளம்பறோம்" னு சொல்லி அமவுன்டை வாங்கி செல்ல பவர்ஸ்டார் நம் மண்டபத்தினுள் நுழையவர நம்மவர்களுக்கோ ஒரே ஆச்சர்யம்...கேட்டேவிட்டனர்.
    "சார் உங்களை எதோ மோசடி புகாரில் அழைத்து போனார்களே.டி.வி.யில் கூட காட்டினார்களே.இப்ப விட்டுவிட்டார்களா சார்...எப்படி விட்டார்களென்று சொல்லுங்கள் சார்....என கெஞ்ச அவர் "தம்பிங்களா...கொஞ்சம் கிட்ட வாங்க ஒரு ரகசியம் சொல்றேன்.என்னை போலீஸ் அழச்சிக்கிட்டு போனது உண்மைதான். என்னை ஒரு மூன்று மாடி கட்டிடத்திற்கு அழைத்துப் போய் ஒரு அறையில் உட்கார வைத்துவிட்டு " இங்கேயே இருங்கள்.நாங்கள் இதோ வந்து விடுகிறோம்." எனக்கூறிவிட்டு அறையை விட்டு வெளியில் போக அந்த அறையில் ஒரே ஒரு நாற்காலியும், ஒரு Pedestal Fan மட்டுமே இருந்தது. நான் அந்த அதிகாரிகளிடம் "சார் கொஞ்சம் Fanஐ ஆன் பண்ணி விட்டு போங்கள்" என்று சொல்ல அவரும் ஆன் பண்ணிவிட்டுபோனார். அந்த Fan எடுத்த எடுப்பிலே சூறாவளிபோல் காற்றை வாரி இறைக்க என் தலையிலிருந்த "விக்" பறந்து ஜன்னல் வழியே வெளியே போய்விட நான் எனது ஹாலிவுட் "Vindisel மொட்டை" தலையுடன் அமர்ந்திருக்க திரும்ப வந்த அதிகாரிகள் என்னை அடையாளம் தெரியாமல் என்னிடமே "யோவ்...யாரய்யா நீ..எப்படி உள்ளே வந்தாய்...?.பவர்ஸ்டார் எங்கே....? என்று என்னை அடையாளம் தெரியாமல் வெளியே விரட்டிவிட ஐயா எஸ்கேப்....ஆகி விட்டேன்.சரி தம்பி உள்ளே போகலாமா?"
    என நம்மவர்களும் "சார்.அதென்ன உங்கள் கையில் வித்தியாசமான பை என வினவ அவரும் "தம்பிங்களா..எனக்கு இந்த சினிமாவும் மற்ற பிசினஸ்களும் வெறுத்துவிட்டதபழையபடி " அக்குபங்ச்சர்" வைத்தியத்தை கன்டினியூ பண்ணபோகிறேன். ஆனால் ஊசிகளை பற்றியெல்லாம் மறந்துவிட்டது.அதனால் துணி தைக்கும் ஊசி முதல் கோணி தைக்கும் ஊசிவரை அத்தனையும் வாங்கி வைத்துள்ளேன். உள்ளே கூட்டம் அதிகமாக இருப்பதை கேள்விபட்டேன்.அதான் நம்ம தொழிலை இங்கிருந்தே துவக்கலாமென வந்தேன்" என்று உள்ளே சென்று விட்டார்.யார் யார் சிக்கப் போகிறார்களோ??.அதோ அடுத்த செலிபரிட்டி.....

    ReplyDelete
  66. இப்போதைக்கு நம்மவர்கள் சற்று ஓய்வெடுக்கிறார்கள்.

    ReplyDelete
  67. **** பழிவாங்கும் பொம்மை *****

    'அரக்கன் ஆர்டினி'(சூ.ஹி.சூ.ஸ்பெஷல்)க்குப் பிறகு வாய்விட்டுச் சிரித்த ஸ்பைடர் கதை! ஒவ்வொரு முறையும் பொம்மை மனிதனிடம் தன் பாச்சா பலிக்காமல் தேமேன்னு நிற்பதும், பிறகு வாய்ச்சவடால் பேசிவிட்டு அவ்விடத்தைவிட்டு எஸ்கேப் ஆவதும், பாசறைக்குத் திரும்பி பார்ட்னர்களிடம் கொக்கரிப்பதும் - ஹா ஹா ஹா செம காமெடி!

    காலத்தின் கோலத்தால் பிக்ஸெல்களை இழந்திருந்தாலும், இன்றும் சித்திரங்களே இதன் பலம்! ஒவ்வொரு ஃப்ரேமும் பிசகின்றி வரையப்பட்டிருக்கும் கோணத்தில் - அன்று மட்டுமல்ல - இன்றும் மிரட்டுகிறது! காட்சிகளை கண் முன்னே விரியச் செய்து சித்திரங்களே தன் மொத்தப் பணியையும் திறம்பட நிறைவேற்றிவிடுதால், ஸ்பைடரின் 'சாகஸம்' பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை!

    ReplyDelete
  68. அப்பாட கொஞ்சம் மூச்சு வாங்க டைம் கிடைச்சிருக்கு. இதை பயன்படுத்திக்கலாம்.

    ****(கழுகு மலைக்கோட்டை)****
    சிறந்த கதைசொல்லி, ஆசிரியரென நேர்த்தியாக அமைந்துவிட்டால் சித்திரங்களின் தரம் இரண்டாம்பட்சமாகிவிடும். சிறு கரு உயிரோட்டமான கதையாக உருமாறிட எத்தனை ஆராய்ச்சி செய்தார் ஆசிரியர் என்பது அவருக்கே வெளிச்சம்.எளிய கதை இன்னும் சொல்லப்போனால் மாடஸ்தி கதைகளிலே சற்று குறைவான ஆக்சன் கதை இது.

    ஆசிரியர் இதை ஆக்சன் பாணியில் அமைக்காமல் உணர்வுகளின் போராட்டத்தின் வழியே இதனை அணுகியிருப்பார்.

    மாடஸ்டி -கார்வின் இடையேயான உறவு, நேசம் ஆகியவை துல்லியமாக கையாளப்பட்டுள்ளது.
    இருவரின் உறவை கொச்சைப்படுத்துபவர்களுக்கு சரியான சாட்டையடியாக அமைந்துள்ளது.
    மாடஸ்டி கதைகளிலே நான் ரசிக்கும் இன்னொரு விசயம்,கதைமாந்தர்களுக்கு உரிய சரிசமமான பங்களிப்பு.இதில் ஐந்தறிவு ஜீவனையும் பயன்படுத்தி இருப்பது அற்புதம்.
    கதையின் மைய இழையே மனச்சிதைவுக்கு ஆளான வில்லி கார்வினை மீட்க தன்னுயிரை பணயமாக்கும் கட்டமே.
    ஒரு சிறந்த கதையின் தன்மை இரு விசயங்களை உள்ளடக்கியது. ஒன்று:வாசித்த பின் ஏதோ ஒரு வகையில் நம்மை பாதிக்க வேண்டும். மமற்றொன்று:பாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளனுக்கு கடத்தி அதில் ஒன்ற வைக்க வேண்டும்.
    என்னைப்பொருத்த வரையில் இந்த இரண்டையுமே திருப்திபடுத்தியது.

    குறையென்று பார்த்தால் திருஷ்டிபரிகாரம் போல் ஓவியங்களே.

    அதகள ஹிட் அடித்ததே அதற்கு சான்று.

    ஃபைனல் பன்ச்

    "கெட்டப்ப் பொண்ணு சார் இந்த ப்ளைசி"

    ReplyDelete
    Replies
    1. வாரே.. வாஹ்!!

      இத.. இத.. இதத்தான் எதிர்பார்த்தேன்!

      செம்ம்ம!

      Delete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. @ கோவிந்தராஜ் பெருமாள்

      உங்க ஃபைனல் பன்ச் செம்ம்ம..!

      Delete
    2. எல்லாம் நீங்க கொடுத்த ஞானப்பால்தான் காரணம் அரசே!

      Delete
    3. ஆஹா...திரும்ப எதுலயோ சிக்கபோறப்பல படுத்து தூங்கறத்துக்கு முன்னாடியே கனவு ஆரம்பிச்சுட்டதே...அவுக்..அவுக்...

      Delete
    4. ///எல்லாம் நீங்க கொடுத்த ஞானப்பால்தான் காரணம் அரசே!///

      யானை. . யானை..

      Delete
  70. EBF2017 - சம்பவம் #9

    "வருஷத்துக்கு ஒரு தரம் மட்டும் வெளிநாட்டிலேர்ந்து வந்து காமிக்ஸ் வாங்கிட்டுப்போற அந்த நண்பர் ஏன் மூஞ்சியை ஒருமாதிரியா வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கிறார்?"

    "அவரோட பறவை பேட்ஜுல மட்டும் யாரோ 'Yearly bird'னு எழுதியிருக்காங்களாம்!"

    ReplyDelete
    Replies
    1. Masterpiece குருநாயரே. .!!

      கன்ட்டியுனிட்டி... .


      "வருஷத்துக்கு ஒரு தரம் மட்டும் வெளிநாட்டிலேர்ந்து வந்து காமிக்ஸ் வாங்கிட்டுப்போற அந்த நண்பர் ஏன் மூஞ்சியை ஒருமாதிரியா வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கிறார்?"

      "அவரோட பறவை பேட்ஜுல மட்டும் யாரோ 'Yearly bird'னு எழுதியிருக்காங்களாம்!"


      அது சரி! வந்ததிலிருந்தே எடிட்டர் பக்கத்துலயே நின்னுட்டு இருக்காரே! அவர் யாருங்க?

      அவர்தான் nearly bird ஆம். .!!

      Delete
  71. முதல் முறையாக புக்பேருக்கு வரும் செ.அவுக்கான ஒரு கைடு:

    நமக்கு முதலில் ஏதோ +2 பரிட்சை எழுதப்போவது போல நிறையவே பதற்றம் இருக்கும். நம் ஸ்டாலே/ மொத்த ஈரோடை நம்மை வரவேற்கக் காத்திருந்து எதிர்பார்த்து ஆளுயர மாலையைப் போட்டுவிட்டால் என்ன செய்வது, எப்படி உரையாற்றுவது என்ற பயமும் இருக்கும். பொதுவாக அப்படி நடப்பதில்லை. நாம் போகும் வேளையில் ஸ்டாலில் நண்பர்கள் இல்லாது வெளியே போயிருந்தாலோ, அல்லது அவர்களே இன்னும் ஓரொருவராய் வந்து கூடியிருக்காமல் இருந்தாலோ யாருக்கும் நம்மைத் தெரியாது. குறிப்பாக ஸ்டாலில் உள்ள கம்பெனி பணியாளர்கள், வரும் ஆட்களின் முகத்தைக்கூட பார்க்காமல் செவ்வனே அவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்படியே நம் நண்பர்கள் கூடியிருந்தாலும் கூட நாம் அப்படியே அவர்களை சுற்றிக்கொண்டு அப்படிக்கா பொதுஜனத்தோடு கலந்து கூட்டத்தில் பிடிபடாமல் வந்துவிடலாம். எடிட்டர் நின்றிருந்தாலும் கூட இவரிடம் பேசலாமா, வேண்டாமா என்பது போல தயக்கத்தோடே, அதாவது நம்மைப்போலவே நின்றுகொண்டிருப்பார். இது ஓரளவு பழகிய நண்பர்களுக்கு மட்டும்தான். (ஊரே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு சரிப்படாது.)

    உங்கள் கதைக்கு வருவோம். உங்களை அடையாளம் கண்டுகொண்டபின்னர், (கொஞ்ச நேரம் ரவுண்டு கட்டி பொதுஜனம் மாதிரி நடித்து சூழலை உள்வாங்கிக்கொள்ள உங்களுக்கு வாய்ப்புள்ளது. அதற்கு யார் மூஞ்சியையும் பார்க்காமல் புத்தகமே கண்ணாக குனிஞ்ச தலை நிமிராம ஸ்டாலுக்குள்ள சுத்தணும்.) அதாவது நீங்களே யாரிடமாவது ‘நாந்தான் செனாஅனா’ என்று அறிமுகப்படுத்திக்கொண்ட பின்னர், (யாராவது பொது ஜனத்திடம் போய் சொல்லி ‘யார்ரா இவன் லூசு’ என்ற பார்வையை பரிசாக வாங்கிக்கொள்ளாதீரும். இங்குள்ள போட்டோக்களை வைத்து ஈவி, மாயாவி சிவா இவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். அவர்களிடம் போய் சொல்லுங்கள்) கொஞ்ச நேரத்துக்கு வில்லனிடம் சிக்கிய வடிவேலு ரேஞ்சுக்கு உங்களை வைச்சு செய்வார்கள். குய்யாமுய்யா வென்று ஆளுக்கொரு கேள்விகள் பறக்கும். எப்போ வந்தீங்க? என்ன சாப்டீங்க? எங்க தங்குறீங்க? எங்க வேலை பாக்குறீங்க? எத்தனை பாப்பா உங்களுக்கு? என்ன படிக்குறாங்க? நீங்களோ சங்கோஜத்தோடு ’நேத்து சாய்ங்காலம் என் பையன் நாலாப்புல இட்லி சாப்பிட்டேன், சாம்பார் நல்லால்ல’ என்று பதில் சொல்லிக்கொண்டிருப்பீர்கள். அப்புறம் வரிசையாக பெயர்கள் சொல்லி கைகுடுத்து அறிமுகம் ஆவார்கள். ஆனால், ஒருவர் பெயர் கூட ஞாபகமிருக்காது. உங்களுக்குப் பிடித்த பரணீதரனிடம் பேசிக்கொண்டிருப்பதாய் நினைத்துக்கொண்டு கி.ஆ.கண்ணனிடம் பேசிக்கொண்டிருப்பீர்கள். யாராவது ஆர்வக்கோளாறு நண்பர்களிடம் சிக்கிக்கொண்டால் போச்சு.. ஆமா டிசம்பர்ல வந்த ஸ்பைடரின் ‘கொலைகார குப்பி’ படித்து விட்டீர்களா செமைல்ல.. என்பார். நீங்களோ இன்னும் படித்திருக்க மாட்டீர்கள், ஆனால், ரெகுலராக எல்லாவற்றையும் படித்திடுவதாக இங்கே உதார் விட்டிருப்பீர்கள். அப்புறம் என்ன, ‘குப்பியா..அது.. அது குப்பி.. ஆமா குப்பிதான்.. நல்ல குப்பி’ என்று ஏதாவது சொல்லவேண்டிவரும். பிறகு, போட்டோக்கள்லாம் எடுக்கப்பட்டு கொஞ்ச நேரம் கழிந்து ஜோதியில் ஐக்கியமானதும் ஆசுவாசமாகலாம். அப்புறம்தான் எண்டர்டெயின்மெண்டே இருக்கிறது.. அதில் சாமர்த்தியமாக நாம் பார்வையாளராக ஆகிவிட வேண்டும்...

    அந்த எண்டர்டெயின்மெண்டே நம் எடிட்டர்தான். எல்லோரும் அவரை ஏதாவது நச்சு நச்சுவென கேட்டுக்கொண்டிருப்பார்கள். தனித்தனியே கேட்டால் சளைக்காமல் பதில் சொல்லுவார் அவர். ஆனால் தனியே அழைத்துப்போய் ஏதாவது அரங்கிலோ, புத்தகவிழா மரத்தடி போன்ற இடங்களுக்கோ கூட்டிப்போய்விட்டால் அவ்வளவுதான். கூட்டம் கூடிவிட்டால், எடிட்டருக்கு நம்மை விட பேஸ்மெண்ட் வீக்கு. அந்தக்குரலில் இருக்கும் பதற்றத்தை ரசித்துக்கொண்டே இருக்கலாம். (80களில் சிறார்களாக இருந்து இன்று திரையுலகையும், எழுத்துலகையும், இன்னும் பல துறைகளையும் ஆட்சி செய்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டின் முக்கியப்பிரபலங்கள் அத்தனை பேருக்கும் தெரிந்த மதிப்புக்குரிய பெயர் இவருடையது. அது இவருக்கு தெரியுமா என்பதுதான் டவுட்டா இருக்கு. :-))))) ஆனால், நம்மிடம் டாக்புல்லிடம் சிக்கிக்கொண்ட ஆர்டின் போலத்தான் இருப்பார்)

    பேசப்படும் டாப்பிக்குகள், வாங்கப்படும் வாக்குறுதிகள் எல்லாவற்றையும் மீறி, ‘அதுவுந்தே.. இதுவுந்தே..’ என்ற டிபிகல் வட்டார வழக்கில் அவர் பேசுவதை கேட்டு ரசித்துக்கொண்டே இருக்கலாம். முகம் தெரியாவிட்டாலும், நட்பும், அன்பும் அலைபுரளும் அனுபவம் அலாதியானது, அதை தவறாது அனுபவித்துவரலாம். வாருங்கள், சந்திப்போம்!

    ReplyDelete
    Replies
    1. @ ஆத்தர் ஆதி தாமிரா

      அடேங்கப்பா...என்னமா புளோவா நிஜத்தையை மிஞ்சி அடிச்சி விளையாடி டைப்பண்ணி இருக்கிங்க..! இதை டைப்பண்ண எம்புட்டு நேரம் ஆச்சி ஆத்தர் அவர்களே...?????????????

      செல்வம் RK தொகுதியில 'அட்டன்' பண்றது கன்பாம்.! ;))))

      Delete
    2. ஆதிதாமிரா.. அருமை!!

      ==பேசப்படும் டாப்பிக்குகள், வாங்கப்படும் வாக்குறுதிகள் எல்லாவற்றையும் மீறி, ‘அதுவுந்தே.. இதுவுந்தே..’ என்ற டிபிகல் வட்டார வழக்கில் அவர் பேசுவதை கேட்டு ரசித்துக்கொண்டே இருக்கலாம். முகம் தெரியாவிட்டாலும், நட்பும், அன்பும் அலைபுரளும் அனுபவம் அலாதியானது, அதை தவறாது அனுபவித்துவரலாம்==

      இது அருமையோ அருமை!!

      பலதரப்பட்ட எழுத்துக்களை ஒரே இடத்தில் (தளத்தில்) ரசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் நாங்கள்.. தொடருங்கள்...

      Delete
    3. ///அந்த எண்டர்டெயின்மெண்டே நம் எடிட்டர்தான். எல்லோரும் அவரை ஏதாவது நச்சு நச்சுவென கேட்டுக்கொண்டிருப்பார்கள். தனித்தனியே கேட்டால் சளைக்காமல் பதில் சொல்லுவார் அவர். ஆனால் தனியே அழைத்துப்போய் ஏதாவது அரங்கிலோ, புத்தகவிழா மரத்தடி போன்ற இடங்களுக்கோ கூட்டிப்போய்விட்டால் அவ்வளவுதான். கூட்டம் கூடிவிட்டால், எடிட்டருக்கு நம்மை விட பேஸ்மெண்ட் வீக்கு. அந்தக்குரலில் இருக்கும் பதற்றத்தை ரசித்துக்கொண்டே இருக்கலாம். (80களில் சிறார்களாக இருந்து இன்று திரையுலகையும், எழுத்துலகையும், இன்னும் பல துறைகளையும் ஆட்சி செய்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டின் முக்கியப்பிரபலங்கள் அத்தனை பேருக்கும் தெரிந்த மதிப்புக்குரிய பெயர் இவருடையது. அது இவருக்கு தெரியுமா என்பதுதான் டவுட்டா இருக்கு. :-))))) ஆனால், நம்மிடம் டாக்புல்லிடம் சிக்கிக்கொண்ட ஆர்டின் போலத்தான் இருப்பார்)

      பேசப்படும் டாப்பிக்குகள், வாங்கப்படும் வாக்குறுதிகள் எல்லாவற்றையும் மீறி, ‘அதுவுந்தே.. இதுவுந்தே..’ என்ற டிபிகல் வட்டார வழக்கில் அவர் பேசுவதை கேட்டு ரசித்துக்கொண்டே இருக்கலாம். முகம் தெரியாவிட்டாலும், நட்பும், அன்பும் அலைபுரளும் அனுபவம் அலாதியானது, அதை தவறாது அனுபவித்துவரலாம். வாருங்கள், சந்திப்போம்!///

      ஆதி! செம்ம..!!

      படிக்கறச்சே அப்படியே நேர்ல பாக்கறா மாதிரியே இருக்கு..!!

      பின்குறிப்பு : ஃப்ரியா இருப்பீங்க போலிருக்கே :-)

      முக்கிய பின்குறிப்பு : ஃப்ரியா - Freeயா. , Priya இல்லை குருநாயரே..!!

      Delete
  72. ஆசிரியரே எங்கள் இதய சிறையில்
    நீங்கள் ஆயுள் கைதி

    ReplyDelete
    Replies
    1. @ கணேஷ் KV

      ரெண்டுவரி கவிதை அருமை..!

      Delete
    2. ஆனா எங்கியோ படிச்சாப்பலவே இருக்கு :P

      Delete
    3. ஓரிரு நாட்களாக நாம் இன்னும் முன்பதிவு செய்யவில்லையே என்ற குற்றவுணர்ச்சியில் இருந்தவனை செ.அ., ஈ.வி., கி.ஆ.க., கோவி.பெருமா, புதுவை செந்தில், செந்தில் சத்யா, ஏ.டி.ஆர்., ஆதிதாமிரா, மாயாவிசிவா, கருர் சரவணன், ஸ்டீல்கிளா ஆகியோர்களின் காமெடி கலாட்டாக்களால் வெளியே கொண்டு வந்து விட்டீர்கள்....

      வெகுநாட்களுக்குப் பிறகு முகமலர்ச்சியுடன் பொழுதுகள் கழிந்தன...

      எப்படியாவது கெஞ்சி கூத்தாடி தப்பித்தாவது ஈரோடு வரவேண்டிய சூழ்நிலையை செனா அனா அவர்களின் வருகை அறிவிப்பு உண்டாக்கிவிட்டது. செனா அனா அவர்களிடம் ஒரு ஆட்டோகிராப் ஏதாவது ஒரு புத்தகத்தில் வாங்கியே விட வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளேன். (ஹி..ஹி... கையெழுத்து மட்டுமல்ல புத்தகமும் அவருடைய செலவில்தான்...)

      Delete
    4. (ஹி..ஹி... கையெழுத்து மட்டுமல்ல புத்தகமும் அவருடைய செலவில்தான்...)
      இதுகூட நல்லா இருக்கு
      நானும் உங்க Idea வ Follow செய்கிறேன்

      Delete
  73. இரண்டு பதிவுகளுக்கு முன்னாடி
    படிச்சிருப்பிங்க

    ReplyDelete