Saturday, March 04, 2017

ஒரு கதையின் கதை...!

நண்பர்களே,
            
வணக்கம். இது எத்தனை காலம் நீடிக்குமென்ற ஆரூடமெல்லாம் சொல்லத் தெரியவில்லை ; ஆனால் தடதடக்கும் இந்த நாட்களை ரொம்பவே நேசிக்க முடிகிறது ! சாணித் தாளில், தம்மாத்துண்டு சைஸ்களில் கறுப்பு -வெள்ளையில் நமது இதழ்கள் வெளியான வேளைகளிலேயே கொண்டாடியவர்கள் நீங்கள் ! இன்றைக்கோ வண்ணத்தில் ; அயல்நாட்டு ஆர்ட்பேப்பரில் நாம் வலம் வரும் வேளைகளில் உங்கள் மகிழ்வுகள் ஒரு புது உயரத்தை தொடாது போய் விடுமா - என்ன ? 2017-ன் இது வரையிலான 3 வெவ்வேறு combo இதழ்களுமே வெவ்வேறு விதங்களில் சாதித்துள்ளது ஒரு பக்கமெனில், பாக்கெட் சைஸில், மறுபதிப்பில் score செய்துள்ள மாடஸ்டி திறந்துள்ள வாயில்களின் பின்னே நமக்குக் காத்திருக்கும் வாய்ப்புகள் ஓராயிரம் ! 

எத்தனை மலைகளேறி ; எத்தனை சமுத்திரங்களைக் கடந்து ; எத்தனை பால்மண்டலங்களைத் தாண்டிப் போய் நான் புதுக் கதைகளைத் தேடிப் பிடித்து வந்து உங்கள் முன்னே நிறுத்தினாலும் - அந்த “அரை நிஜார் நினைவுகள்” கலந்த பழைய சமாச்சாரங்களைத் தொனிக்க வாய்ப்புகள் லேது ! என்பதை ஆயிரத்து எட்டாவது முறையாக உணர்ந்துள்ளேன் இம்மாதமும் பால்யத்துக் காதல்களோடு அந்த பாக்கட் சைஸ் மோகமும் ஒன்றிணைந்து கொள்ளும் போது, உங்களின் பரபரப்புகளைச் சொல்லவும் வேண்டுமா - என்ன ? கடந்த 4  நாட்களுக்குள் கிட்டத்தட்ட 20  மின்னஞ்சல்கள் + அரை டஜன் கடிதங்கள் படையெடுத்துள்ளன - "ஆஹா..பாக்கெட் சைஸ் !!" என்ற கூத்தாடல்களோடு !! 

Truth to tell- இந்த மாத “கழுகு மலைக் கோட்டை” இதழினைக் களமிறக்கும் முன்னே எனக்குள் நிறையவே சந்தேகப் பேய்கள் ‘ஜிங்கு‘ ஜிங்கென்று குதித்துக் கொண்டிருந்தன ! அது மாத்திரமின்றி நிறையவே நடைமுறைச் சிக்கல்களும் சிந்தைப் பிய்க்கச் செய்தன ! "ஒரிஜினல் பாக்கெட் சைஸ்" என்று அறிவித்து விட்டு ; அதே அளவில் வர்ணப் பூச்சுகளையும், டைப்செட்டிங் பணிகளையும் செய்யச் சொல்லி விட்டு, எல்லாம் தயாராகியிருந்த ஜனவரியின் இறுதியில் தான் இதற்கென பேப்பர் வேட்டையில் இறங்கினேன் ! முன்பெல்லாம் நாம் தினுசு தினுசான பாக்கெட் சைஸ்களில் இதழ்களை நியூஸ் பிரிண்ட்டில் வெளியிட்ட வேளைகளில் அவை ரீல்களாகக் கிடைக்கும் ; இஷ்டப்பட்ட சைஸ்களுக்கு அவற்றை வெட்டி வாங்கி வந்து எனது குரங்குச் சேட்டைகளைச் செய்து வைப்பேன் ! ஆனால் இன்றைக்கோ நாமிருப்பது இறக்குமதி செய்யப்படும் ஆர்ட் பேப்பர் segment-ல் ; அதுவும் ஒரு சொற்பமான சர்குலேஷனோடு ! ஆர்ட் பேப்பரிலும் ரீல்கள் கிடைக்கும் தான் ; ஆனால் குறைந்த பட்சமாய் நாம் ஆர்டர் செய்யக் கூடியதே சில ஆயிரம் கிலோக்கள் எனும் போது அது பற்றிச் சிந்திக்கக் கூட வாய்ப்பிருக்கவில்லை ! மாமூலாய் கி்டைத்து வரும் காகிதமோ நமது லக்கி லூக் சைஸ் அல்லது டெக்ஸ் வில்லர் (ரெகுலர்) சைஸ்கள் மட்டுமே !! இந்த இரண்டையுமே ஒன்றுக்குப் பாதியாக்கிப் பார்த்தாலும் நமக்குத் தேவைப்படும் பாக்கெட் சைஸ் சாத்தியமாகிடவில்லை ! ‘நிலவொளியில் நரபலி‘ சைஸுக்கு இழை அமைத்து விட்டு -பெரிய பாக்கெட்டுகள் கொண்ட “பட்டாப்பட்டி டிராயர்களை" இந்த மாதத்திற்கு மட்டுமாவது போட்டுக் கொள்ளுங்க மக்களே !” என்று சொல்லிப் பார்ப்போமா ? என்று கூட சபலம் தட்டியது ! ஆனால் அந்த சைஸில் 192 பக்கங்கள் எனும் போது விலை எகிறிக் கொண்டு போவது புரிந்தது ! அது மட்டுமன்றி - “பாக்கெட் சைஸ்” என்று ஆசை காட்டி விட்டு - செந்திலின் டண்டராயர் பாக்கெட் சைசுக்கு அசடு வழியவும் அச்சமாகயிருந்தது ! பிப்ரவரியிலேயே வெளியாகியிருக்க வேண்டிய இந்த இதழுக்கென பேப்பர் வேட்டையைத் தீவிரமாய்த் தொடங்கிய போது தான் சிக்கலின் பரிமாணம் புரிந்தது ! .

‘வாழை மீன் இருக்குங்கிறான்...விண்மீன் இருக்குங்கிறான்....கெண்டை மீன் இருக்குங்கிறான்...கெழுத்தி மீன் இருக்குங்கிறான்- ஆனால் "ஜாமீன்" மட்டும் இல்லேங்கிற" கதையாக நமக்குத் தேவையான சைஸ் தவிர்த்து என்னென்னமோ சிக்கியது ! கேரளாவில் ஒரு ஸ்டாக்கிஸ்டிடம் நமக்குப் பிரயோஜனமான சைஸ் உள்ளதென்ற சேதி காதில் விழ - நம்மாட்களை மம்மூட்டி – மோகன்லால் தேசத்துக்கு பஸ் ஏற்றி விட்டேன் ! ஆனால் அங்கேயோ - "பத்து டன்னுக்குக் கொறைச்சலான ஆர்ட்ரோ ? ஓ... அது ஷெரி... !அடுத்த பஸ் ஏழரைக்கு ! போய்க்கோ..போய்க்கோ !"என்று காத்தைச் சேர்த்து அடித்துப்  பேக்-அப் பண்ணி விட்டார்கள் ! 

அப்போது நமது அச்சகத்தில் ஏதோவொரு புக் பிரிண்ட் பண்ண இளஞ்சிகப்பு நிறத்திலானதொரு பேப்பர் வந்திருந்ததை பார்த்தேன் ! அது ஆர்ட் பேப்ர் அல்ல ; ஆனால் நமக்குத் தோதான சைஸ் ! அதிலொரு பேப்பரை மடித்து எடுத்துக் கொண்டு போய் தலையணைக்குக் கீழே வைத்திருந்து,கோணம் கோணமாய்ப் பார்த்து  பல்லி விழுந்த டீயைப் பரிசீலனை பண்ணும் செந்திலைப் போல நாலு நாட்களுக்கு தொடர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினேன் ! ஐந்தாவது நாள் காலையில் அந்தப் பேப்பரையே காணோமே என்று தேடினால் - அது எங்கள் வீட்டில் சுட்ட பூரிக்கு blotting பேப்பர் அவதாரமெடுத்திருந்ததைப் பார்த்திட முடிந்தது ! ஏற்கனவே சிலபல இல்லங்களில் பூரிக்கட்டைகள் காங்கோக்களாக உருமாற்றம் பெற்றிடும் பௌதிக அதிசயங்களை நமது விழுப்புண் வீரர்கள்... சாரி... சாரி... நண்பர்கள் விவரித்திருந்தது நினைவுக்கு வந்ததால், "பூரி சூப்பர்” என்றபடிக்கே நடையைக் கட்டினேன் ! நிச்சயமாய் பெரும்தேவன் மனிடௌ ஒரு காமிக்ஸ் ரசிகரே என்பது ஒரு இலட்சமாவது தடவையாக அன்று பகல்பொழுதில் நிரூபணமாகியது - எனது நண்பரொருவர் வாயிலாக ! கம்ப்யூட்டர்களுக்கு கியாரண்டி கார்ட் / operation manuals போன்ற சமாச்சாரங்களைப் பிரத்யேகமாய் தயாரிப்பவர் அவர் ! அன்றைய பொழுது தற்செயலாய் சந்திக்க முடிந்த போது என்னென்னமோ பேசிய பின்னே, பேப்பர் இறக்குமதி பற்றி பேச்செழுந்தது. அவர்கள் சீஸனின் துவக்கத்திலேயே மொத்தமாய் இறக்குமதி செய்து ஸ்டாக் வைத்துக் கொள்ளும் ரொக்கப் புள்ளிகள் ! அட... சும்மானாச்சும் கேட்டுப் பார்ப்போமே...?” என்ற நினைப்பில் நமது சைஸைச் சொல்லி “இந்த சைஸில் ஏதேனும் இருக்கா ?” என்று கேள்வியைப் போ்ட்டு வைத்தால் - Oh yes! என்று பதில் சொன்னார் ! அப்புறமென்ன ? மேலே விழுந்து, புடுங்கிப், பிறாண்டி எடுத்து நமக்குத் தேவையான சிறிதளவை மட்டுமே வாங்கி விட்டேன் ! ஆர்ட் பேப்பர் கிடைத்த பிறகு தான் மூச்சே வந்தது எனக்கு ! நான் பாட்டுக்கு ஆர்ட் பேப்பர் அல்லாத அந்த இளஞ்சிகப்புக் காகிதத்தில் அச்சிட்டுத் தந்திருந்தால் - “இளவரசியைக் கவுத்துப்புட்டான் !” என்று தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு நாலு தெரு தள்ளியாவது ஒரு கல்வெட்டை “இ.மு.க.” நிர்மாணித்திருப்பது நிச்சயம் அல்லவா ?அந்த வரலாற்றுப் பழியிலிருந்து just miss !! எத்தனை உயர் ரகப் பேப்பரைப் பயன்படுத்தியிருந்தாலும், ஆர்ட் பேப்பரின் அந்தத் தகதகப்பு கிட்டாது என்பதும் எனக்குள் நெருடிய விஷயமே ! 

ஒரு வழியாய் பேப்பர் வாங்கியான பின்னே தான், எடிட்டிங் பணிகளுக்குள் தலைநுழைத்தேன் ! என்னுள் குடிகொண்டிருந்த பிரதான சந்தேகப் பேய்  நமது கலரிங் பாணிகளின் பொருட்டு ! கதை கழுகுமலைப் பிராந்தியத்தைத் தொட்ட பிற்பாடு ஏகப்பட்ட outdoors ஷாட்களோடு பயணிக்கத் தொடங்கியிருந்த வேளையில் நமது கலரிங் ஆர்ட்டிஸ்ட் அழகாய்ப் பணி செய்திருந்ததை உணர முடிந்தது ! ஆனால் அடைத்த ரூமுக்குள் ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருக்கும் பிரேம்களில் பேக்கிரவுண்டுக்கு என்ன கலர் தருவது ? மேஜை... நாற்காலி... டபரா இத்யாதிகளுக்கு என்ன வர்ணம் பூசுவதென்ற தடுமாற்றம் எழுவதையும் புரிந்து கொள்ள முடிந்தது ! மாடஸ்டி கதைகள் உருவாக்கப்பட்டதே out & out கறுப்பு – வெள்ளை பாணிகளை மனதில் கொண்டே எனும் போது - நல்ல நாளைக்கே இதற்கு வர்ண ஜாலம் நல்கிடுவது சிரமம்! இந்த அழகில், பக்கத்துக்கு இரண்டே கட்டங்கள் என்ற அமைப்போடு இந்த புக் உருவாக்கப்பட்டிருக்க - ‘பப்பரப்பா‘ என்று காலிப் பின்னணிகள் அடிக்கொருதரம் தலைகாட்டி, தலைநோவை அதிகமாக்கின ! So எனக்கு எட்டிய மட்டிற்குக் கலரிங் திருத்தங்களை செய்யச் சொல்லி ஒரு மாதிரி மனதைத் தேற்றிக் கொண்டேன் !

பாக்கெட் சைஸில் உட்பக்கச் சித்திரங்களும், எழுத்துக்களும் கச்சிதமாக இருப்பது போல்ப் பட்டபோதிலும், அட்டைப் படத்தில் பெரிய சைஸ்களுக்கானதொரு கம்பீரம் குறைவதாகத் தோன்றியது தான் பேய் # 2 ! பாக்கெட் சைஸில் அல்லாது, நண்பர் அஜயின் டிசைனை பெரியதொரு சைஸில் வெளியிட வாய்ப்பு இருந்திருப்பின் அதன் தாக்கம் இன்னமுமே ஒரு படி கூடுதலாய் இருந்திருக்குமென்ற ஆதங்கம் பெருச்சாளியைப் போல மனசைத் துளை போட்டுக் கொண்டிருந்தது ! ஆனால் “பாக்கெட் சைஸ்” என்ற லாஜிக்கிலா மாயாஜாலம் எப்படியேனும் நம்மைக் கரை சேர்த்து விடுமென்ற நம்பிக்கையோடு பணிகளுக்குள் முழுவீச்சில் புகுந்தேன் !

எடிட்டிங்கின் பொருட்டு கதையைக் கையில் ஏந்திய பிற்பாடு தான், "அடடே...பத்தோடு பதினொன்றல்ல  இது ;  ஒரு all time க்ளாசிக்கினைக் கையாளுகிறோம் !" என்ற புரிதல் புலர்ந்தது ! மாடஸ்டிக்கு நாம் புதியவர்களல்ல & vice versa...! ஆனால் இது மாடஸ்டி தொடரில் மட்டுமல்லாது ; எனது தனிப்பட்ட ஆதர்ஷ இதழ்களுள்ளும் ரொம்பவே செல்லமானதொரு இடத்தை ஆக்கிரமிக்கும் இதழ் எனும் போது ஒரு இனமறியாப் பரபரப்பு என்னோடு ஐக்கியமாகிக் கொண்டதை உணர முடிந்தது ! ரஷ்யாவும், அமெரிக்காவும் WWF பயில்வான்களைப் போல ஒருவரையொருவர் மிரட்டிக் கொண்டும், பழிப்புக் காட்டிக் கொண்டுமிருந்த ‘70-களின் cold war உலகம் பற்றிய பரிச்சயம் வரலாற்றுப் பாடப் புத்தகங்களைத் தாண்டி, இன்றைய தலைமுறைக்கு அதிகமிருக்க வாய்ப்புகள் குறைச்சல். ஆனால் ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள், சினிமாக்கள் ; அந்த யுகத்தின் தலைப்புச் செய்திகள் , கட்டுரைகள் என்று படித்து வளர்ந்த என் போன்ற வெள்ளிமுடியார்களுக்கு “கழுகுமலைக் கோட்டை” ஒரு பத்து சதவீதமாவது கூடுதலான தாக்கத்தைத் தாங்கிடுவது நிச்சயம் ! கதையின் ஒரிஜினல் மொழிபெயர்ப்பு நிச்சயமாய் அந்நாட்களிலேயே நமது கருணையானந்தம் அவர்களின் பேனாவின் உபயம் என்பதைப் பக்கங்களை புரட்ட ஆரம்பித்த இரண்டாம் நொடியே  ஸ்பஷ்டமாகப் புரிந்து கொள்ள முடிந்ததால் - எனக்குத் தலைநோவுகள் அதிகமிருக்கவில்லை ! கதையின் ஒரிஜினல் மொழியாக்கமே ‘பிரமாதமாய்த் தோன்றியதால், சிற்சிறு நகாசு வேலைகளைச் செய்ததைத் தவிர்த்து -  எனது திருக்கரங்களை ‘தேமே‘ என்று ஓரம் கட்டிடச் செய்தேன் !

கிட்டத்தட்ட 40+ ஆண்டுகளாய் நாமெல்லோரும் இதனை வாசித்த / நேசித்த கும்பலே எனும் போது கதையைப் பற்றிப் புதிதாக நான் சிலாகிக்க ஏதுமில்லை தான் ! இருந்தாலும் கதாசிரியரின் அந்த அசாத்தியக் கற்பனை வளத்தைக் கண்டு வாய்பிளக்காதிருக்க முடியவில்லை! சில கதைகளுக்கு ஒரு ஆயுள் நிர்ணயம் உண்டு ! குறிப்பிட்டதொரு காலகட்டத்துக்குப் பின்பாய், மீத்தேன் வாயுவைப் போலப் புறப்படும் புராதனத்தின் நெடி அதன் பலங்களைத் தரைமட்டமாக்கிடுவதுண்டு ! உள்ளதைச் சொல்வதானால்,  மாடஸ்டியின் தொடரிலேயே கூட இந்தக் குறைபாடோடு நிறையக் கதைகளுண்டு ! ஆனால் கழுகுமலைக் கோட்டையில் கதாசிரியர் சொல்ல முனைந்திருப்பது ஒரு கதையை அல்ல என்பேன் ! வழக்கம் போல அவர் இங்குமே ஒரு கதை சொல்லும் பணியையே பிரதானமாக கையிலெடுத்திருந்தால் - கால ஓட்டத்தின் முன்னே இந்த சாகசமுமே நிச்சயம் தளர்ச்சியை ஒப்புக் கொண்டிருக்கத்  தேவைப்பட்டிருக்கும் ! ஆனால் அவரிங்கு சித்தரிக்க முனைந்திருப்பதோ - சாகாவரம் படைத்த சில மானிட இயல்புகளை எனும் போது - காலமும், ரசனைகளும் தலைவணங்குவது கட்டாயமாகிப் போகிறது ! நட்பெனும் சங்கிலியின் வலிமையை highlight செய்வதே இங்கே கதாசிரியர் பீட்டர் ஓ டான்னெனின் முதல் இலட்சியம் என்று தோன்றுகிறது எனக்கு ! தன் ஆத்ம நண்பன் அரைப் பைத்தியமாகிக் கிடக்கும் போது come what may ; நான் அவரை மீட்காமல் விட மாட்டேன் என மார்தட்டும் (!!) இளவரசி ஒரு பக்கமெனில் ; குண்டடிபட்டுக் கிடப்பதாய் தான் நம்பும் மாடஸ்டியைக் காப்பாற்ற எந்தவொரு எல்லையையும் கடக்கத் தயாராகும் கார்வின் மறுபக்கம் ! இந்த வித்தியாசமான இரு ஜீவன்களுக்கு மத்தியில் கதாசிரியர் இழையோடச் செய்யும் நட்புக்கான அக்னிப் பரீட்சை தானே க.ம.கோ.? அது மாத்திரமன்றி - மனித மனத்தின் ஆழத்தை யாரொருவரும் கணிக்கவே முடியாது ; அவசியமென்றாகும் வேளைகளில் மாமலைகளும், தவிடுபொடியாகிடுவது இயல்பே என்பதை கார்வின் மனபிரமைகளைப் போராடிக் கொண்டே மலையிறங்கும் தருணங்களில் என்னமாய்ச் சித்தரித்துள்ளார் கதாசிரியர் ? இது கதை தான்... டூப் தான்... ரீல் தான்.... லுலுலாயி தான்... என்றெல்லாம் தெளிவாக மண்டைக்கு எட்டிடும் போதிலும், பக்கங்களைப் புரட்டப் புரட்ட அந்தச் சுடு பாலைவனத்தில் நாமும் பிரயத்தனங்கள் பல மேற்கொள்வது போலொரு உணர்வு வியாபித்திருப்பதைத் தவிர்க்க இயலவில்லை ! கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பின்பாய் இந்தக் கதையை நான் மீண்டும் படிக்கிறேன் என்பதாலோ என்னவோ, அந்தத் தாக்கத்தின் அதிர்வலைகள் சற்றே தூக்கலாய்த் தென்பட்டன ! நிறையப் பார்த்து விட்டேன்... நிறையப் படித்து விட்டேன்... இப்போதெல்லாம் கார்ட்டூன்கள் தவிர்த்த சீரியஸான கதைகளெல்லாம் என்னனை சுலபத்திற்குள் அசைத்துப் பார்ப்பதில்லை ! அதே போல மாடஸ்டியின் சிலபல சமீப கதைகள் average என்ற ரீதியிலேயே மார்க்குகள் பெற்றிருக்க, ஒரு சிகப்புக் கம்பள வரவேற்பை முன்வைக்க எனக்குத் தோன்றியிருக்கவில்லை ! ஆனால் லார்கோவின் “ஆதலினால் அதகளம் செய்வீர்” இதழுக்குப் பின்பாக என்னை impress செய்த கதைகளுள் “க.ம.கோ” ஒரு முக்கிய இடம் பெற்றிடும்  என்பேன் !

So இதழ் ஒரு வழியாகத் தயாராகி, அச்சாகி, பைண்டிங் முடிந்து என் கைகளுக்கு வந்தான போது - இன்னும் ஏதாவதொரு value addition செய்தாலென்னவென்று தோன்றிட dust jacket idea உதயமானது ! இதை முதலிலேயே நான் திட்டமிட்டிருந்தால், இதழைத் திறந்தவுடனான முதல் பக்கத்தில் க.ம.கோ.வின் ஒரிஜினல் ராப்பரை இடம்பெறச் செய்திருக்க மாட்டேன் ! ஆனால் நமக்கு மலரும் ஞானோதயங்கள் எல்லாமே நடுச்சாமங்களது பிள்ளைகள் தானே ? So அவதி அவதியாய் அவற்றையும் தயார் செய்து மாடஸ்டிக்கு அணிவித்து, பிரதிகளை உங்களுக்கு அனுப்பியான பின்னே ஒருவித திகிலோடு காத்திருந்தேன் ! மறு நாள் சிறுகச் சிறுக உங்கள் பின்னூட்டங்களை் வரத் தொடங்க... “ஆத்தா... இளவரசி பாஸாகிட்டா...!!” என்ற ஊர்ஜிதம் கிட்டக் கிட்ட... அமைதிப்படை நாகராஜ சோழன் M.A. சிறுகச் சிறுக வெளி வரத் தொடங்கினார்!

சூப்பர் 6-ன் ஒவ்வொரு இதழுமே ஒவ்வொரு விதத்தில் “சூப்பர்” என்ற அடைமொழிக்கு நியாயம் செய்திடும் விதமாய் இருந்திட வேண்டுமென்பதே என் கனவு ! Two down... 4 to go...! ஆண்டவன் துணை நிற்பாராக ! இளவரசியை வண்ணத்தில் ரசித்தான பின்னே, அடுத்ததொரு சந்தர்ப்பம் கிட்டும் போது இதை விடப் பட்டாசாய் இன்னுமொரு வண்ண இதழை தயாரிக்காமல் விட்டு விடுவோமா - என்ன? மாடஸ்டி தொடரின் இன்னுமொரு சூறாவளி சாகஸமான "பழி வாங்கும் புயல்" (“The Gabriel Setup”) நமது அடுத்த இலக்கு !! Again முழுவண்ணத்தில் & of course பாக்கெட் சைசில் !! எப்போது ? என்றெல்லாம் இப்போது கேட்காதீர்கள் ப்ளீஸ் !! வரும்... நிச்சயமாய் வரும் ! 
அவை மாத்திரமன்றி, ஜுனியர் லயனின் துவக்க பாக்கெட் சைஸ் வண்ண  இதழ்களையும் தூசித் தட்டி விடச் சொல்லியிருக்கிறேன் நம்மவர்களை ! பார்க்கலாமே, வரும் காலங்களின் பொழுதுகளுக்குள் அவற்றிற்குமொரு இடம் இருக்குமாவென்று ?!
மார்ச் இதழ்களின் விமர்சனங்களைத் தொடருங்கள் guys ! சந்தர்ப்பம் கிட்டினால் மார்ச்சின் ஏதேனுமொரு வாரத்தில் Thorgal & லக்கியை அலசுவோமா ? இரண்டுமே ரசனை அளவுகோல்களின் இரு வெவ்வேறு முனைகளே என்றாலும், ஜேசனையும், மந்திரியாரையும் பிப்ரவரியில் ரசித்த அதே லாவகத்தோடு இம்மாதத்து விசித்திரக் (கலர்) கூட்டணியையும் நீங்கள் கையாளுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! As always லக்கியை ரசிப்பது சுலபமே ; ஆனால் தோர்கல் நிச்சயமாயொரு மாறுபட்ட சமாச்சாரம் ! கடந்த ஆண்டுகளின் சில thorgal ஆல்பங்கள் முழுக்க முழுக்க விட்டலாச்சார்யா பட ரேஞ்சில் இருந்திட்டதால் அவற்றை ரசிப்பதில் சிரமம் எழுந்திருக்க வாய்ப்புகள் குறைவு ! ஆனால் இந்த மாதத்து இதழோ - பெயரளவிற்கே தோர்கலின் இளம் பிராய சித்தரிப்பு ; ஆனால் கதைகளுக்குள் கொஞ்சம் வைகிங் வரலாறு ; கொஞ்சம் சிந்துபாத் சமாச்சாரம் ; கொஞ்சம் sci-fi சங்கதிகள் என்று வான் ஹாம்மே கலந்து கட்டி அடித்திருக்கிறார் ! இந்தாண்டினில் இது வரையிலுமான மொழிபெயர்ப்புப் பணிகளில், மந்திரியார் ஒரு ஜாலியான சவாலாக அமைந்திருந்ததைத் தவிர்த்து பாக்கி சகலமும் அத்தனை பெரிய நோவுகளை முன்வைக்கவில்லை! ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து தோர்கல் இம்மாதம் ரொம்பவே சுளுக்கெடுத்து விட்டார் என்றே சொல்லுவேன் ! அதிலும் அந்தத் "தாயத்து" கதையினை,  இதழ் அச்சாக வேண்டியதற்கு முந்தைய இரவினில் எழுதிட முனைந்த போது வான் ஹாம்மே வசிக்கும் மேற்கு திசையை நோக்கிக் கும்பிட்டு "தெய்வம் அய்யா நீர் !!" என்று சொல்லத் தோன்றியது ! ஒரு மொழிபெயர்ப்புக்கே நமக்குத் தஸ்-புஸ்சென்று தொங்கும் நாக்கு, கதையை உருவகப்படுத்திடுவது மாத்திரமன்றி, அதற்கான ஒரிஜினல் வசன வரிகளையும் படைத்திட எத்தனை பாடு பட்டிருக்கும் ? Fantasy என்பதும் ஒரு மிக மிக சீரியஸான சமாச்சாரம் என்பதை "விண்வெளியின் பிள்ளை"க்குப் பேனா பிடித்த இரவுகள் மண்டைக்கு உறைக்கச் செய்தன ! So ஜேசனை அலசியது போலவே ஆரிசியாவின் ஆத்துக்காரரையும் அலசுவோமா -  சமயம் கிடைக்கும் பொழுது ?

சரி..இப்போதைக்கு கிளம்புகிறேன் ! மார்ச் விமர்சனங்களைத் தொடருங்கள் guys !! See you around; Bye for now !
உங்க வீட்டுக் குட்டீஸ் - டால்டன்களைத் தேடிப் புறப்படும் அழகை போட்டோக்களாக்கி அனுப்புங்களேன் ? இங்கே ரசிப்போம் ! 

299 comments:

 1. அட, அதுக்குள்ள அடுத்த பதிவா.

  ReplyDelete
 2. இரவு வணக்கம் நண்பர்களே....

  ReplyDelete
 3. வணக்கம் சார்...

  வாவ்...தொடர்ந்து 2ம் சனி முன்மாலை பதிவு...அட்டகாசம் சார்...

  ReplyDelete
  Replies
  1. சேலம் Tex விஜயராகவன் : ஞாயிறுக்கு "ஒரு வெறியனின் தடத்தில்" பயணம் காத்துள்ளது சார் ! So முந்திக் கொண்டேன் !

   தவிரவும், போன பதிவில் load more பிராணனை வாங்கி கொண்டிருப்பதும் புரிந்தது !!

   Delete
 4. யே... யப்பா!! தம்மாத்துண்டு மாடஸ்டி புக்குக்கு பின்னால இவ்ளோஓஓ பெரிய கதையா?!!!!!

  இதுக்கே இப்படின்னா... இரத்தப் படலத்தை 'த.இ.போ' சைஸில் போடும்போது, அந்த சைஸ் ஆர்ட் பேப்பருக்காண்டி ஏழு கடல், ஏழு மலை தாண்டிப் போகவேண்டியிருக்குமோ என்னமோ!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா
   நாம நினைக்கிறதை விட எடி நமக்கு முன்னாடியே யோசிச்சிடுறாரு!!!

   வேறென்ன சொல்றது மியாவ்

   Delete
  2. Erode VIJAY : மம்மூட்டி -மோகன்லால் தேசம் போய் வாங்கிய பல்ப் போதாதென்று, (ஏழுமலை தாண்டி !!) சிரஞ்சீவிகாரு-வெங்கடேஷ் நாட்டுக்குப் போயும் இன்னொண்ணு வாங்கணுமாக்கும் ?

   Delete
  3. சார் எங்களுக்காக வேண்டி போகாம இருப்பீங்களா என்ன...

   Delete
 5. Goodnight and advance goodmorning..

  ReplyDelete
 6. ////பாக்கெட் சைஸ் சாத்தியமாகிடவில்லை ! ‘நிலவொளியில் நரபலி‘ சைஸுக்கு இழை அமைத்து விட்டு -பெரிய பாக்கெட்டுகள் கொண்ட “பட்டாப்பட்டி டிராயர்களை" இந்த மாதத்திற்கு மட்டுமாவது போட்டுக் கொள்ளுங்க மக்களே !” என்று சொல்லிப் பார்ப்போமா ? என்று கூட சபலம் தட்டியது !///


  :)))))))


  ////இளவரசியை வண்ணத்தில் ரசித்தான பின்னே, அடுத்ததொரு சந்தர்ப்பம் கிட்டும் போது இதை விடப் பட்டாசாய் இன்னுமொரு வண்ண இதழை தயாரிக்காமல் விட்டு விடுவோமா - என்ன? மாடஸ்டி தொடரின் இன்னுமொரு சூறாவளி சாகஸமான "பழி வாங்கும் புயல்" (“The Gabriel Setup”) நமது அடுத்த இலக்கு !! Again முழுவண்ணத்தில் & of course பாக்கெட் சைசில் !! ////

  சூப்பர்!! மாடஸ்டி ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகள்!!

  ReplyDelete
 7. ////அவை மாத்திரமன்றி, ஜுனியர் லயனின் துவக்க பாக்கெட் சைஸ் வண்ண இதழ்களையும் தூசித் தட்டி விடச் சொல்லியிருக்கிறேன் நம்மவர்களை ! பார்க்கலாமே, வரும் காலங்களின் பொழுதுகளுக்குள் அவற்றிற்குமொரு இடம் இருக்குமாவென்று ?!////

  அட்ராசக்கை!
  அட்ராசக்கை!
  அட்ராசக்கை!
  அட்ராசக்கை!

  ReplyDelete
 8. /// ஜுனியர் லயனின் துவக்க பாக்கெட் சைஸ் வண்ண இதழ்களையும் தூசித் தட்டி விடச் சொல்லியிருக்கிறேன் நம்மவர்களை ! பார்க்கலாமே, வரும் காலங்களின் பொழுதுகளுக்குள் அவற்றிற்குமொரு இடம் இருக்குமாவென்று ?!///

  அப்படியே பதிவை படிச்சுண்டே வந்தேனா, மேற்கண்ட வரிகளை படிச்சதும், துள்ளிக் குதிச்சுட்டேன் போங்கோ. சொன்னா நம்பமாட்டேள், சந்தோசத்துல கண்ணுல ஜலமே வந்திடுச்சின்னா பாத்துக்கோங்களேன்.!

  எடிட்டர் சார்.,
  பாக்கெட் சைஸ் அதுவும் கலரில் கையில் பிடித்துப் பார்க்கவே மகிழ்ச்சி பொங்குகிறது. அதிலும் ஜூ.லயன் வரப்போகிறது என்றால் எப்படி விவரிப்பதென்றே தெரியவில்லை. அவசரம் எல்லாம் ஒன்றுமில்லை சார். ஒரு ரெண்டு மாதம் கழித்து போட்டுவிடுங்க போதும். :-)

  ReplyDelete
  Replies
  1. KiD ஆர்டின் KannaN : ஆனாலும் கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு பக்கங்களை புரட்டியே சீன போடுவதில் இத்தனை பில்டப் என்றால் - அதை மெய்யாலுமே படிக்கவும் செய்து விட்டால் - பூமி தாங்காதுடா சாமி !!

   Delete
 9. வணக்கம் நண்பர்களே.

  ReplyDelete
 10. Good night &good morning.
  இப்படியே உசுப்பேத்தாம அடுத்த சந்தாவ
  அறிவியுங்கள் ஆசிரியரே.
  பூனையாரே ஸ்டார்ட் மீஜிக்.

  ReplyDelete
  Replies
  1. ganesh kv : அட...பிழைத்துப் போகட்டும் சார் இங்கிலீஷ் ! வெறும் 26 எழுத்துக்கள் தான் உள்ளது !!

   Delete
 11. /// அங்கேயோ - "பத்து டன்னுக்குக் கொறைச்சலான ஆர்ட்ரோ ? ஓ... அது ஷெரி... !அடுத்த பஸ் ஏழரைக்கு ! போய்க்கோ..போய்க்கோ !"என்று காத்தைச் சேர்த்து அடித்துப் பேக்-அப் பண்ணி விட்டார்கள் ! ///

  ஹாஹா செம்ம..!!
  இன்றைய பதிவில் நிறைய இடங்களில் வாய்விட்டு சிரித்துவிட்டேன்.!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா :) :)

   கூடவே நானும் கண்ணண்

   Delete
  2. பிழைப்பு சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்த நாட்களின் வர்ணனை என்பதாலோ - என்னவோ, உங்களுக்கும் சிரிப்பு வந்திருக்கக்கூடும் guys !!

   Delete
 12. //ஜுனியர் லயனின் துவக்க பாக்கெட் சைஸ் வண்ண இதழ்களையும் தூசித் தட்டி விடச் சொல்லியிருக்கிறேன்//

  திஸ்..திஸ் வாட் வீ வான்ட்.. சூப்பரு.
  இம்மாத சர்ப்ரைஸ்தான் எங்க வீட்ல ஹிட்டு!!! என் ஜூனியருக்கு தமிழ் சொல்லி தந்த மாதிரியும் ஆச்சு, விளையாட்டுக்கு விளையாட்டாவும் ஆச்சு!!!

  நன்றிங்கோ எடிட்டர் சார்!!! :-)))

  ReplyDelete
  Replies
  1. Mohamed Harris : அட..அன்றைக்கு நாமே விளையாடினோம் ; இன்று அடுத்த தலைமுறை !! இந்த சந்தோஷத்தை உணர எங்களுக்குக் கிட்டிய வாய்ப்பல்லவா இது ?

   Delete
  2. சார் இப்பத்தய சூழல்ல தமிழ சிறார்க்கு , பாலகருக்கு எடுத்து செல்ல அரிய வாய்ப்பு

   Delete
 13. பத்து மணிக்கு தான் பார்த்துட்டு போனேன்.
  லேசா அசந்தாலே பதிவு போட்டுர்றாங்கப்பா...!!!

  ReplyDelete
  Replies
  1. T.K. AHMEDBASHA : ஒன்பது மணிக்கே வந்திருக்க வேண்டிய பதிவு சார்....; பட்டி-டிங்கரிங் பண்ண நேரம் பிடித்து விட்டது !!

   Delete
 14. ////விட்டார் என்றே சொல்லுவேன் ! அதிலும் அந்தத் "தாயத்து" கதையினை, இதழ் அச்சாக வேண்டியதற்கு முந்தைய இரவினில் எழுதிட முனைந்த போது ////

  ஆ..ஆனால் எடிட்டர் சார்... தோர்கல் மொழிபெயர்ப்பு முழுக்க சீனியர் எடிட்டர்'னில்ல நினைச்சுக்கிட்டிருந்தேன்? முந்தைய பதிவுல நீங்ககூட அப்படித்தானே சொன்னதாக ஞாபகம்?!!

  கன்பூசியஸ்...

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : முந்தைய கதைகளைப் போலவே இதுவும் இருக்குமென்ற நம்பிக்கையில் தான் சீனியரை இதனில் பேனா பிடிக்கச் சொல்லியிருந்தேன் ! ஆனால் இந்தக் கதையின் தன்மை இத்தனை complex எனும் பொழுது, எப்போதேனும் பேனா பிடிக்கும் சீனியருக்கு அது நிரம்பவே சிரமங்களைத் தருவதை புரிந்து கொள்ள முடிந்தது ! So அவர் எழுதியதில் ஒரு சிறு பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு பாக்கியை புதிதாய் எழுத வேண்டிப் போனது !

   Delete
 15. சென்ற வருடத்தில்
  தலையில்லா போராளி யை கண்டு அசந்தேன் இந்த வருடம் மாடஸ்டியை கையில் நடத்தியது ஆயுளுக்கும் மறக்காது
  மற்ற ஹீரோக்களை கலரில் பார்க்கும்போது கூட இவ்வளவு சந்தோஷப் பட்டதில்லை தேவதையை கலரில் பார்க்கும்போது கனவு போல் இருக்கிறது இந்த சந்தோஷக் கனவு தொடர வேண்டும் என ஆசிரியரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் ஆசிரியர் மறுத்தால் போராட்டத்தில் குதிக்கலாம் என நினைக்கிறேன் தடியடி வாங்கினால் கூட கவலையில்லை எனக்கு பழகி விட்டது தயவுசெய்து மாடஸ்டியின் அடுத்த கலர் சாகசத்தை மிக விரைவில் வெளியிடவும்

  ReplyDelete
 16. தரைக்கடியில் தங்கம் :-

  ஏற்கனவே இடம் கொள்ளாமல் இருக்கும் லக்கி லூக்கின் கிரீடத்தில் இன்னுமொரு வைரக்கல்.

  இக்கதையின் நம்பர் ஒன் காமெடியன் சந்தேகமே இல்லாமல் கிரிஸ்டல் பிங்கிள்தான். ஜெயிலில் எண்ணெய் ஊற்றை கண்டுபிடித்துவிட்டு வெளியேற மறுப்பதாகட்டும், பேர்ரி ப்ளாண்டை மடக்க லக்கி போடும் திட்டங்கள் தோற்கும் சமயத்திலெல்லாம் அதே குற்றத்திற்காக தன்னை கைது செய்து ஜெயிலில் அடைக்கும்படி அழிச்சாட்டியம் பண்ணுவதாகட்டும், ப்ளாண்டிடம் பயந்து கொண்டே வம்பிழுப்பதாகட்டும் ஆசாமி தோன்றும் இடங்களிலெல்லாம் விலாவை பதம்பார்கிறார்.

  அடுத்து டிடஸ்வில் பிரஜைகள் எண்ணெய் கிணறு தோண்ட இடம் தேர்ந்தெடுக்கும் அழகு இருக்கிறதே..!! கண்ணைக் கட்டிக்கொண்டு தொப்பியை தூக்கிப்போட்டு அது விழும் இடத்தை தேர்வு செய்வதும், சில மேதாவிகள் மண்வெட்டியை தூக்கிப்போட்டு மண்டைவீங்கி செல்வதும், நல்ல ஊற்றுக்கு அருகிலேயே அடுத்த கிணற்றைத் தோண்டி அதையும் சேர்த்து திவாலாக்குவதும் என காமெடியை தோரணம் கட்டி தொங்கவிட்டிருக்கிறார்கள்.

  படித்த டீசன்டான வில்லன் பேர்ரி ப்ளான்ட், அவருடைய அல்லக்கைககள், கர்னல் ட்ரேக் அவருடைய உதவியாளரான தாத்தா போன்றோரும் ரசிக்க வைக்கிறார்கள்.

  சுத்தியலுக்கு பதிலாக கோடாரியாலேயே அமைதி அமைதி என மேஜை தட்டும் ஜட்ஜ், அதுவும் எண்ணெய் கிடைக்கவில்லை என்ற சலிப்புடன் வழக்கை விசாரிக்கிறார். அவருடைய கிணற்றில் எண்ணெய் கிடைத்த சங்கதியை கேள்விப்பட்டதும் வழக்கை கடாசிவிட்டு ஓடுகிறார். பீப்பாவுக்கும் பாப்பாவுக்கும் வித்தியாசமே தெரியாது என்று அதுவரை சாதித்து வந்த கைதி, சல்லிசாக பீப்பா தருகிறேன் என்று ஜட்ஜ் பின்னாடி ஓடும் படத்தைப் பார்த்து சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

  கதை நெடுகிலும் இன்னும் நிறையவே இருக்கின்றன நகைச்சுவைகள்..!

  லக்கி லூக் எப்போதும் நம்பர் ஒன் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.

  தரைக்கடியில் தங்கம் - நகைச்சுவையில் சிங்கம்

  ரேட்டிங் - 15 / 10. (எக்ஸ்ட்ரா மார்க் ப்ரிண்டிங் தரத்திற்கு)

  ReplyDelete
  Replies
  1. KiD ஆர்டின் KannaN : ஜுனியர் எடிட்டரின் மேற்பார்வையில் நடந்த அச்சுப் பணிகள் !! அந்த எக்ஸ்டரா மார்க்குகளை அவரிடமும், நமது பணியாளர்களிடமும் சமமாய்ப் பிரித்துச் சேர்ப்பித்து விடுகிறேன் !!

   Delete
  2. ///ஜுனியர் எடிட்டரின் மேற்பார்வையில் நடந்த அச்சுப் பணிகள் !///

   வாவ். .!
   அசத்திட்டிங்க விக்ரம் சார்.!

   பணியாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.!

   Delete
  3. ////ஜுனியர் எடிட்டரின் மேற்பார்வையில் நடந்த அச்சுப் பணிகள் !///

   யே...யப்பா!! 'மேற்பார்வை'பார்த்ததுக்கே இவ்வளவு அழகா வந்திருக்குன்னா... ஜூ.எடி மட்டும் இன்னும் கொஞ்சம் ஆழமாப் பார்த்திருந்தார்னா என்னமா வந்திருக்கும்?!!!!

   Delete
  4. ஒரு முறை நமது வாசக சந்திப்பிற்கு பணியாளர்களையும் வரச் செய்ய வேண்டுமென்பது எனது ஆசை !

   ஒவ்வொரு நிறையினையும் நீங்கள் கொண்டாடும் விதங்களை அவர்களே நேரில் பார்க்க சாத்தியப்பட்டால் - தாங்கள் செய்வது ஒரு மாமூலான பணி மாத்திரமல்ல ; சில பல ஆயுட்கால சந்தோஷ நினைவுகளும் வித்திடுகிறோம் என்பதை உணர்வார்கள் !!

   Delete
  5. அழகாச் சொன்னிங்க எடிட்டர் சார்! நம் அலுவலகப் பணியாளர்கள் அனைவரையுமே நேரில் சந்தித்து பாராட்டுகளையும், வாழ்த்துகளைத் தெரிவிக்கவேண்டுமென்பது என் சிலவருட ஆசை!

   Delete
  6. எனக்கும் அந்த ஆசை உண்டு சார். ஒருமுறையாவது நேரில் வந்து இதழ் தயாரிப்பை முழுமையாக பார்த்து ரசிக்க வேண்டும். அந்த நல்லநாள் சீக்கிரத்தில் வரவேண்டும்.
   வாசக சந்திப்பில் நமது பணியாளர்களும் ஒருமுறையாவது கலந்துகொண்டு, நீங்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி அவர்தம் பணியைப்பற்றியும் மீட்டிங்கில் சொன்னால் நிறைவாக இருக்கும் சார். .!!

   Delete
 17. ஆங்! கழுகுமலைக் கோட்டை'யை பலப்பலப்பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படிச்சாச்சு!
  ப்ளெட்ஜர் என்ற தாத்தாவின் பெயரும், ஷீபா-சாலமன் என்ற கழுகுகளையும், இளவரசியை முதுகில் கட்டிக்கொண்டு கார்வின் நிகழ்த்தும் அந்த ஜீவமரணப் போராட்டமும், ஒருவருக்காக மற்றவர் உயிரைப் பணயம் வைத்துக்கொள்ளத் தயங்கிடாத அந்த நட்பும் - இத்தனை வருடங்களுக்குப் பிறகும் உள்ளக்கிடங்கில் உறைந்துபோன படிமங்களாய் தேங்கிக்கிடந்திருப்பது எனக்கும் ஆச்சரியமளிக்கிறது!

  சில கதைகள் - அவை நடக்கும் காலகட்டங்ளையும் மீறி - என்றென்றும் உணர்வுகளாய் ஜீவித்திருக்க வல்லவை என்பது இக்கதையைப் படிக்கும்போது புரிகிறது!

  * அழகான டஸ்ட் கவர்!
  * அஜய் சாமியின் அசரடிக்கும் அட்டைப்பட ஓவியங்கள்!
  * நீண்டநாட்களுக்குப்பிறகு நிஜமான ஒரு பாக்கெட் சைஸ்!
  * கம்ப்யூட்டரில் முழுவண்ண முயற்சி - சில இடங்களில் கவனக்குறைவுகள் இருப்பினும் - ஒட்டுமொத்தமாய் பாராட்டப்படவேண்டிய முயற்சி!

  அந்த 'ஆடை நீட்டிப்பு' சமாச்சாரம் மட்டும் - கிர்ர்ர் கிர்ரா உர்ர்ர்ர்...

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : //சில கதைகள் - அவை நடக்கும் காலகட்டங்ளையும் மீறி - என்றென்றும் உணர்வுகளாய் ஜீவித்திருக்க வல்லவை என்பது இக்கதையைப் படிக்கும்போது புரிகிறது!//

   +1
   ஒரு பொழுது போகா நாளில் - இத்தகைய "சாஸ்வத சாகசங்கள்" பட்டியல் ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறேன் !! சமயம் வாய்க்கும் போது அதனையொரு பதிவாக்கிடுகிறேன் !

   Delete
 18. கழுகு மலைக் கோட்டை :

  கைக்கு அடக்கமான கச்சிதமான சைசில் கொள்ளை கொள்ளுகிறது மனதை.
  வழவழ ஆர்ட் பேப்பரில் வண்ணங்கள் டாலடிக்கின்றன.
  டஸ்ட் கவருடன் கூடிய அட்டையும் அட்டைப்படமும் கூட அசத்தல் ரகம்.
  உட்பக்கங்களில் சித்திரங்கள் உறுத்தலில்லாத வண்ணத்தில் ஜொலிக்கின்றன.
  இதழை கையிலேந்தும் ஒவ்வொரு கணமும் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஒரு ஆறு இதழ்களாவது கொண்ட முழுவண்ண பாக்கெட் சைஸுக்கு தனி சந்தா கேட்டு சிவகாசி மாரியம்மன் கோவில் தெருவில் தர்ணா பண்ணவேண்டுமென துடிப்பாக இருக்கிறது.
  குறைந்தவிலை நிறைந்த தரம் சிறந்த சைஸ் என மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டது ABSன் இரண்டாவது வெளியீடு. .!!
  (ஓ...கதையா. . .அதை இன்னும் படிக்கலைங்க.) :-)

  ReplyDelete
  Replies
  1. KiD ஆர்டின் KannaN : போன பதிவிலேயே கிளம்பியிருக்க வேண்டிய ஆட்டோ ; நிச்சயம் நாளைக் காலையில் மடிப்பாக்கத்திலிருந்து சீறிப் புறப்படும் பாருங்க !!

   Delete
  2. கிட் அடுத்த கதை படிக்க கண்னு வேணும் உஷார் பெயர்ல இருக்குற கண் நேர்ல இல்லாம போகனுமா
   மாடஸ்டி சார் சிரிச்சுகிட்டு இருக்கும் போதே மாடஸ்டி யை புகழ்ந்து ஒரு கவிதை பாடி கண்ண காப்பாத்திக்கங்க
   சீக்கிரமே இ.மு.க.வில சேர்ந்திடுங்க

   Delete
  3. அய்யகோ..!

   கடமையில் கண்ணாய் இருப்பதால் ஒரு கண்ணை இழக்கவேண்டி வந்தாலும் கடமை தவற மாட்டேன் செந்தில். .! :-)

   Delete
 19. Dear Edi,

  A Big Thanks to you and your Team, for bringing a true tributary edition for this classic Modesty story.

  After seeing this, I believe all Daily Strips reprints in our comics, should follow this two panel per page format, and what more we could ask ig it's fully colored, by our artists. So good to know, another Modesty classic will be immortalized in the very near future.

  P.S.: Junior Lion Reprint is another Blockbuster announcement... Eagerly looking forward for that. This Pocket Size format should be our trademark for all Classic Reprints, going forward. Period.

  ReplyDelete
  Replies
  1. Rafiq Raja : பாக்கெட் சைசில் ஆரம்பித்தோம் 33 ஆண்டுகளுக்கு முன்னே !! ஒரு முழு வட்டம் சுற்றி இன்றைக்குத் திரும்பவும் அங்கேயே வந்திருக்கிறோம் !!

   பார்ப்போமே சார் இந்தப் "பாக்கெட் பயணம்" எவ்விதம் சிறகுகளை விரிக்க தயாராகிறதென்று ?!

   Delete
 20. பிரிச்சுப் படிக்கும்போது அடிக்கடி அந்த டஸ்ட் ஜாக்கெட்லேர்ந்து சரக் சரக்'னு புக்கு நழுவிக்கிட்டே இருந்தது சார்! அதுக்கு ஏதாச்சும் ஐடியா சொல்லுங்களேன்!

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : ஒரு தம்மாத்துண்டு செல்லோ டேப் ? முன்னேயும்..பின்னேயும் ?

   Delete
  2. ஒரு நாலைஞ்சு தடவை நழுவி நெஞ்சு மேலயே விழுந்துடுச்சு! நல்லவேளையா சின்ன சைஸ் புக்குன்றதால அடிகிடி படாமத் தப்பிச்சுட்டேன். நாளைக்குப் பின்னே 19 பாகங்களோட வரப்போற இரத்தப்படலம் இதே மாதிரி நழுவி விழுந்தா என் கதி என்னவாகும்!!

   Delete
  3. இரத்தப்படலத்தை குப்புறப்படுத்துக்கிட்டு படிக்கிறதுதான் சேஃப்டினு தோனறது எடிட்டர் சார்!

   Delete
  4. Erode VIJAY : வேணும்னா நம்ம நண்பர் ஸ்டீல் பொன்ராஜை கோவையிலிருந்து வரச் சொல்லி உங்களுக்கு கதையைப் படித்துக் காட்டச் சொல்லட்டுமா ? பொடியன் பில்லிக்கு அந்த தாத்தா படித்துக் காட்டுறே மாதிரியே ? புக் மேலே-கீழே-சைடிலே விழற அபாயமே இருக்காது, பாருங்க !!

   Delete
  5. ///இரத்தப்படலத்தை குப்புறப்படுத்துக்கிட்டு படிக்கிறதுதான் சேஃப்டினு தோனறது எடிட்டர் சார்!///

   குருநாயரே..!
   இரத்தப்படத்தை தலையில்லா போராளி சைசுல கேட்டு போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு, கோரைப்பாய் சைசுல கேட்டு போராட்டத்தை தொடங்கிடுவோம்.
   அதுமேலேயே உக்காந்து படிச்சிக்கலாம் பாருங்க..!! அடிபட்டுடுமோன்ற பயமும் கிடையாது இல்லீங்களா??

   Delete
  6. //கோரைப்பாய் சைசுல கேட்டு போராட்டத்தை தொடங்கிடுவோம்//

   ஓஓ...அது ஷெரி !!

   Delete
  7. ஈரோடு விஜய், எடிட்டர் சார்- ஹா ஹா ஹா சூப்பர்

   Delete
  8. @ KOK

   ஹி ஹி! இந்தத் தடவையும் உங்க ப்ளானை கரெக்டா கண்டுபிடிச்சுட்டாரே நம்ம எடிட்டர்! ;) :P

   Delete
  9. \\நெஞ்சு மேலயே விழுந்துடுச்சு\\

   இதுவரையில் நெஞ்சு உள்ளேயே இருந்த இளவரசி இப்ப நெஞ்சு மேலேயே வந்தாச்சா????

   Delete
 21. இந்த மாதத்தின் சர்ப்ரைஸும் சூப்பர்.
  வழக்கமான பாம்பு ஏணி போல் இல்லாமல், விளையாட்டின் விதிமுறைகள் நிறையவே வேறுபட்டு இருந்ததால் எங்க வீட்டு குட்டீஸ் இப்பவே விளையாடுவோம்னு நேத்தே வாங்கிட்டாங்க.

  நான் ரொம்பவே ஸ்ட்ரிட்டான ஆளுன்னு உங்களுக்கு எல்லாம் நல்லாவே தெரியும்.

  சம்மர் லீவுலதான் விளையாடணும்., போய் எக்ஸாமுக்கு படிங்கன்னு முறைச்சிகிட்டே மிரட்டிபுட்டேன் மிரட்டி. .!

  சும்மா சிரிப்பு காட்டிகிட்டு நிக்காம போய் வேலையப் பாருப்பான்னுட்டு வெளையாட ஆரம்பிச்சுட்டாங்க. (எல்லாம் அம்மாவைப் பாத்து கத்துகிட்டதுதான்.)

  எனக்கு வந்துச்சிப் பாருங்க கோவம் சுர்ருன்னு, அப்படியே பாஞ்சிப்போய் எனக்கும் ஒரு கை போடுங்கன்னு ஜாய்ன் பண்ணிகிட்டேன். .!!

  ReplyDelete
  Replies
  1. கலாமிட்டி ஜேன் இருந்த கட்டத்தைத் தாண்டியிருந்தாலும், பர்த்டே கேக்கோடு காற்றோட்டமாய் நிற்கும் அழகிகளின் கட்டத்தைத் தாண்டியிருக்கவே மாட்டீர்களே ?

   Delete
  2. ஹூம்..!!

   எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ!?!? :-)

   Delete
 22. HELLO ED, you are doing fantastic WORK in modesty story K M K. In grey market it going to nearly rs.1500/-, but you are excellent nneq colour book at affordable price of Rs.75/-. I request please publish this type of pocket size colour books in rare books. We always support you and with you. This month books are very excellent and modesty was a huge sensational hit the year 2017.

  ReplyDelete
  Replies
  1. Indira V Sundaravaradan : நன்றிகள் சார் ! இளவரசி முன்னேற்றக் கழகத்தினரின் பொருட்டு இந்த சந்தோஷம் இரட்டிப்பாகிறது எனக்கு !! விடா முயற்சியாய் தங்கள் தலைவி புகழ் பாடி வந்த பக்தர்களல்லவா ?

   Delete
 23. ஆசிரியர் அவர்களுக்கு ஜுனியரை தூசி தட்டினால் மட்டும் போதாது சீக்கிரமே 3,4 இதழ்களை சேர்த்து ஸ்பெஷலாக தரவும்.
  மாடஸ்டி&கார்வின் உறவை மற்ற காமிக்ஸ்கள் கொச்சை படுத்தும்போது தாங்கள் மட்டும் நட்பை கையில் எடுத்தது எப்படி? ஒரிஜினலாக இதன் கதாயாசிரிகள் எப்படி கையாளுகிறார்கள்?

  ReplyDelete
  Replies
  1. @ Saran selvi

   அருமையான கேள்வி!

   மாடஸ்டி மயங்கிக்கிடக்க, பக்கத்திலேயே படுத்துக்கொண்டு அவளது தலைகோதியபடியே கார்வினும் உறக்கத்தில் ஆழ்ந்துவிடும் அந்த நட்பைப் பார்த்தபோது - மனது நெகிழ்ந்துபோனது உண்மை! (பக்கம்: 176)

   Delete
  2. Saran Selvi : இந்தப் பாத்திரப் படைப்பின் பெருமை கதாசிரியரையே சாரும் ! ஒரு பரஸ்பர நேசமும், அவரவரது ஆற்றலின் மீது அடுத்தவருக்கு இருக்கும் அசைக்க இயலா நம்பிக்கைகளும் - பீட்டர் ஓ டொன்னெலின் கற்பனைவளம் தந்த முத்துக்கள் !

   இயன்றளவிற்கு அதனை கறைபடாது கொண்டு செல்ல முயற்சிப்பது மட்டுமே நமது பணி / பங்களிப்பு !

   Delete
  3. இது போன்ற பணிகளை மிக சவாலாக கையாலும் தாங்களின் தூரிகை இருக்கும் வரை நமது காமிக்ஸ்யை(தமிழில்)அடிக்க ஆளேது.

   Delete
  4. மாடஸ்டி கார்வின் நட்பை நூள் இழை வித்தியாசத்தை அப்படியே மொழி பெயர்த்த நம் எடிட்டரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.!!!

   Delete
 24. //மாடஸ்டி தொடரின் இன்னுமொரு சூறாவளி சாகஸமான "பழி வாங்கும் புயல்" (“The Gabriel Setup”) நமது அடுத்த இலக்கு !! Again முழுவண்ணத்தில் & of course பாக்கெட் சைசில் !!//
  ஆஹா ஆஹா . பேஷ் பேஷ் . அடுத்தடுத்து இன்ப செய்திகளை பதிவிடுகிறீகள் சார் . ஆவலுடன் காத்துள்ளேன் சார்- குத்தாட்டம் போட //ஜுனியர் லயனின் துவக்க பாக்கெட் சைஸ் வண்ண இதழ்களையும் தூசித் தட்டி விடச் சொல்லியிருக்கிறேன் நம்மவர்களை ! பார்க்கலாமே, வரும் காலங்களின் பொழுதுகளுக்குள் அவற்றிற்குமொரு இடம் இருக்குமாவென்று ?!//நிச்சயமாக இடம் இருக்கும் சார் . களம் இறக்கி பாருங்களேன் . ஏகோபித்த வரவேட்புகள் இருக்கும் . அப்படியே திகிலையும் கடைகண் பாருங்களேன் சார் . இது ஒரு வேண்டுகோள் .

  ReplyDelete
  Replies
  1. Thiruchelvam Prapananth : //திகிலையும் கடைகண் பாருங்களேன்//

   நிச்சயமாய் சார் !! கடைக்கண் மட்டுமென்ன - முழுக்கண்ணையும் கொண்டே பார்த்து விட்டால் போச்சு !!

   Delete
  2. ////முழுக்கண்ணையும் கொண்டே பார்த்து விட்டால் போச்சு////

   நீங்க அப்படிப் பார்க்கிறாப்ல கற்பனை பண்ணிப் பார்த்தாலே பத்து திகில் புத்தகங்களை ஒன்னா படிச்ச எஃபெக்ட், எடிட்டர் சார்! :D

   Delete
  3. ரொம்ப நன்றிகள் சார் .

   Delete
 25. இம்முறை பதிவு, தங்களின் தன்னம்பிக்கையின் இன்னுமொருபடி மேலானதான வெளிப்பாடாகவே என்னால் உணர முடிந்தது. இந்தப் பதிவின் எழுத்துருவும் (Font) BOLD ஆக இருப்பதன் பின்னணியும் அதுதானோ?

  ReplyDelete
  Replies
  1. Podiyan : சார்...என்ன தான்சில பல வங்கிக் கணக்கு விபரங்களை வாங்கி வைத்துக்கொண்டு யூத்தாக இருப்பது போல லுலாயி காட்டிடக் கோஷம் போடும் வேலைகளை ஏற்பாடு செய்தாலும், இங்கு நிறையவே வெள்ளிமுடியார்கள் உலாவுவது தானே நிஜம் ? So கொஞ்சம் பருமனான எழுத்துக்கள் உதவிடுமல்லவா ?

   Delete
  2. ////என்ன தான்சில பல வங்கிக் கணக்கு விபரங்களை வாங்கி வைத்துக்கொண்டு யூத்தாக இருப்பது போல லுலாயி காட்டிடக் கோஷம் போடும் வேலைகளை ஏற்பாடு செய்தாலும், இங்கு நிறையவே வெள்ளிமுடியார்கள் உலாவுவது தானே நிஜம் ? ///

   அ..அது சுவந்துல முட்டி முட்டிப் படிச்சதுல கொஞ்சூண்டு சுண்ணாம்பு ஆகியிருக்கும் சார்... அதைப் போயி நீங்க வெள்ளி, பித்தளைனுகிட்டு!

   (செனா அனா அவர்களே... சந்தோசமா உங்களுக்கு? கிர்ர்ர்ர்...)

   Delete
  3. எடிட்டர் சார்.!

   "ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சார்.!"

   உண்மையில் வாசன் ஐ கேரில் கண் பரிசோதனை செய்து கண்ணாடி போட்டு படிக்க ஆவலாய் இருந்தேன்.ஆனால் க.ம.கோ.கதைக்கு கண்ணாடியின் அவசியம் இருக்கவில்லை.இது போன்று இருந்தால் பாக்கெட் சைசும் சுகமே.!

   ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை நான் ஹாட்லைன் தீவிரமான ரசிகன் .ஆனால் தற்போது பொடி எழத்துக்காளாகவும் பற்றாக்குறைக்கு ஹாட்லைனை டிசைன் மீது பிரிண்ட் செய்வதாலும் படிக்க மிகவும் சிரமப்படுகிறேன்.இதற்கும் ஏதாவது ஐடியா செய்துகொடுங்களேன்.!!!!

   Delete
  4. Please sir print hotline in plain paper without any background. Also please change the font. Very difficult to read

   Delete
  5. ///என்ன தான்சில பல வங்கிக் கணக்கு விபரங்களை வாங்கி வைத்துக்கொண்டு யூத்தாக இருப்பது போல லுலாயி காட்டிடக் கோஷம் போடும் வேலைகளை ஏற்பாடு செய்தாலும், இங்கு நிறையவே வெள்ளிமுடியார்கள் உலாவுவது தானே நிஜம் ? ///

   அ..அது சுவந்துல முட்டி முட்டிப் படிச்சதுல கொஞ்சூண்டு சுண்ணாம்பு ஆகியிருக்கும் சார்... அதைப் போயி நீங்க வெள்ளி, பித்தளைனுகிட்டு! ////


   ஹா....ஹா...ஹா....

   //////செனா அனா அவர்களே... சந்தோசமா உங்களுக்கு? கிர்ர்ர்ர்...)//////


   ஹி...ஹி...ஹி.....

   Delete
  6. ஆர் பயங்கரப் பூனைகள் விளம்பரத்த விரைவில்னோ , அடுத்த வெளியீடுன்னோ போட்டதா நினைவு ..மூன்று வருடங்கள் முன்....அதயும் தூசி தட்டலாமே

   Delete
  7. /Please sir print hotline in plain paper without any background. Also please change the font. Very difficult to read//

   //தற்போது பொடி எழத்துக்காளாகவும் பற்றாக்குறைக்கு ஹாட்லைனை டிசைன் மீது பிரிண்ட் செய்வதாலும் படிக்க மிகவும் சிரமப்படுகிறேன்//

   அடுத்த இதழிலேயே சரி பண்ணிவிடுவோம் நண்பர்களே !!

   Delete
  8. மாடஸ்தி சார். ..கரீட்டா சொன்னாரு...நானும் ரொம்ப நாளா உங்க கிட்ட இதை சொல்லனும் என்றே நினைத்து கொண்டே இருந்தேன் சார்...ஹாட் லைன் எழுத்துருக்களின் மேல் இனி டிசைன் எதுவும் வேண்டாம் சார்..ப்ளீஸ்....

   Delete
 26. வண்ண பாக்கெட் சைஸ் மேலும் பல மறுபதிப்புகளை தூசி தட்ட வைத்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான சேதி! நன்றிகள் பல சார் !

  ReplyDelete
 27. விஜயன் சார், இந்த மாத surprise அந்த அளவு என்னை கவரவில்லை, வேறு ஏதாவது முயற்சி செய்து இருக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : சார்...அது உங்க வீட்டு அரை டிக்கெட்டுகளுக்கானது !!

   Delete
 28. தரைக்கடியில் தங்கம்: முதல் சில பக்கம்களை புரட்டியதில் சிரிப்புக்கு அதிக வாய்ப்புகள் உள்ள கதை என்பது புரிந்தது. கதையை நிதானமாக படித்துவிட்டு விரிவாக சிரிக்கிறேன் சாரி விமர்சிக்கிறேன்!

  ReplyDelete
 29. விஜயன் சார்,
  க.ம.கோ நமது காமிக்ஸ் வரலாறில் சத்தம் இன்றி மிகவும் முக்கியமான இடத்தை பிடித்து விட்டது என்றால் மிகையில்லை, அதுவும் (நமது பழைய) பாக்கட் சைஸ்ஸில் வந்த முதல் வண்ண இதழ் என்பது மறக்க முடியாத நிகழ்வாக அமைய போவது உறுதி.
  நன்றிகள் பல!

  நீங்கள் சொல்லவது போல் இது போன்ற கருப்பு வெள்ளை கதைகளுக்கு வண்ணம் தீட்டுவது ரொம்பவும் கஷ்டமான பணி. வெளி இடம்களில் (outdoor) வண்ணம் அருமையாக உள்ளது, குறிப்பாக மலை காட்சிகளில் வண்ணம் நன்றாக உள்ளது.

  புத்தக அமைப்பு நன்றாக உள்ளது, அட்டைபடம் & dj அருமை. மொத்தத்தில் ஒரு சிறப்பான புத்தகம். கோடி நன்றிகள்.

  பாக்கெட் சைஸ்ஸில் க.ம.கோ. வரும் என்று சொன்னதை செய்வதற்கு நீங்கள் எடுத்து முயற்சிகளுக்கு/பல்டிகளுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  பாக்கெட் சைஸுக்கு பதில் வேறு சைஸ்ஸில் இந்த புத்தகம் வந்து இருந்தால் இந்த அளவு எங்களிடம் தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தி இருக்காது. எல்லாம் கார்சனின் கடந்த காலத்தினால் கற்றுகொண்ட பாடம் என நினைக்கிறன்!

  ReplyDelete
 30. சார் பாக்கெட் சைஸ் 6 சந்தா ஒண்ணு..?
  ஐயோ
  அம்மா
  அடிக்காதிங்க
  நா சும்மா பொதுவா கேட்டேன்

  ReplyDelete
 31. அடிச்சாலும் பரவாயில்ல ஏதாவது வாய்ப்பு உண்டா சார்...?
  ஏ அடிக்காதிங்கப்பா...!

  ReplyDelete
 32. காலை வணக்கங்கள் ..காமிக்ஸ் சொந்தங்களே!!

  🙋 🙋 🙋

  ReplyDelete
 33. இளவரசியின் பொருட்டு எத்தனை எத்தனை மெனக்கெடல்கள்....
  இந்த அர்ப்பணிப்பு ஒன்றே,வெள்ளி முடி முளைத்த இந்த நாளிலும் நாம் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்,,,!!
  விஜயனின் விசிறிகள் என்பதில் பெருமை கொள்வோம் நண்பர்களே...!

  ReplyDelete
  Replies
  1. அன்பு வணக்கங்கள் எம்.வி.சார்!

   Delete
 34. தன்னிகரில்லா தானைத் தலைவன்,சிலந்தி மன்னன்,குற்றச் சக்ரவர்த்தி,வலை மன்னன்,நீதிக் காவலன்,எங்களின் மாமன்னன்,இன்றும்,அன்றும்,என்றும் காமிக்ஸ் உலக நிரந்தர சூப்பர் ஸ்டார் ஸ்பைடர் வாழ்க,வாழ்க..!!! அட்டைப் படம் கலக்கலோ கலக்கல்!!
  வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்..!

  ReplyDelete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. சட்டித் தலையனும் இருந்தால் நலம் பயக்கும்!!

   Delete
  2. ஸ்பைடர் தனியனாய் திரிவது வேதனையளிக்கிறது..!!
   சட்டித் தலையனை களமிறக்கலாமா நண்பர்களே.?!

   Delete
  3. ஆர்ச்சியை வரச்சொல்லுங்கள்

   Delete
  4. கரூர் குணா
   சீக்கிரமே ஆர்ச்சி முன்னேற்ற கழகம் ஆரம்பித்து விடுவோமா

   Delete
  5. செந்தில் சத்யா..
   ஆ.மு.கழகம்..!
   அருமை..அருமை...!!
   நாமலும் ஒன்ன ஆரம்பிச்சு வைப்போம்!!!!
   ஹா..ஹா..ஹா..!

   😂 😂 😂

   Delete
  6. @ FRIENDS : இப்போதைக்குப் பேரவைகள் தானே பேஷன் ?!!

   Delete
 36. பெளன்ஸரையும்,ட்யுராங்கோவையும் கெகாடுத்த நீங்கள்,இளவரசியின் கழுத்துக்குக் கீழே (கொஞ்சமாய்)மையைக்கொட்டியிருப்பது வன்மையாய் கண்டிக்கத்தக்கது,,
  😈

  😈

  😈

  ReplyDelete
  Replies
  1. அதான இது அநியாயம். இத தட்டி கேட்க இளைஞர் அணியினர் திரண்டு வரவும். வராதவர்கள். சீனியர் சிட்டிசன்களாக கருதபடுவர்.

   Delete
  2. போராடுவோம் போடுவோம் இனிமேல் ஆசிரியர் இளவரசியின் கழுத்துக்கு கீழே மையை கொட்ட வேண்டாம் என போராடுவோம்

   Delete
 37. இது ஒரு இளவரசியின் இனிய பதிவு....:-)

  ReplyDelete
 38. என்னது மீண்டும் வண்ணத்தில் பாக்கட் சைஸில் பழிவாங்கும் புயல்....ஜீனியர் லயன் காமிக்ஸ் அனைத்துமா ...


  வாரே வாவ் ....அடி தூள் ...சூப்பரப்பு.....

  ப.வா. புயலில் தான் இளவரசியின் இளமை சாகஸ சிறுகதை வந்த்தாக நினைவு சார்...எனில் அதுவும் வண்ணத்தில் உண்டுதானே....:-)

  ஜூனியர் லயன் இதழ்களில் ஒவ்வொரு இதழிலும் வந்த சிறுகதைகளையும் (இருப்பின்) மறவாமல் அனைத்தும் இனைத்து வெளியிடுவதுடன் வெளி வந்த அந்த நான்கு இதழ்களையும் ஒரே தொகுப்பாக "க்ளாசிக் ஜூனியர் ஸ்பெஷல்" என்ற பெயரில் சிறப்பு பாக்கெட் குண்டாக வந்தால் எப்படி இருக்கும்ல

  என்று இப்போதே மனம் துள்ளாடுகிறது...:-)

  ReplyDelete
  Replies
  1. Black and whit kku color aditchuteenga. Antha alibaba story ya pocket size please

   Delete
 39. எடிட்டர் சார்

  சட்டுபுட்டுன்னு

  பாக்கெட் சைசில் "பக்கா பத்து"

  அறிவிப்பு வெளியிட்டு சந்தா தொகையை சொன்னிங்கனா கட்டிபுட்டு பந்தாவா வலம் வருவம்ள ! :-)

  ReplyDelete
  Replies
  1. P.Karthikeyan : பக்காவாய் ஏற்பாடுகள் 100 செய்தால் தானே பக்காவாய்ப் 10 சாத்தியமாயிடும் சார் ?

   Delete
 40. இரும்பு குதிரையில் ஒரு தங்க புதையல் ...


  முதலில் அட்டைப்பட டெக்ஸ் ஓவியத்திற்கு பலத்த கரகோஷங்கள்..இந்த வருட வருகை தந்த மூன்றில் மட்டுமல்ல இனி வரும் அட்டைப்படங் களிலும் இது பெஸ்ட் ஆப் பெஸ்ட் ஆக இருக்கும் என்பது உறுதி...உள்ளே காணப்படும் சித்திரங்கள் ஆசிரியர் சொன்னது போல ஆரம்பத்தில் கீச்சலாக தென்பட்டாலும் போக போக அருமையாக ரசிக்க வைக்கிறது.டெக்ஸின் அக்மார்க் முக பாவனைகள் ..கார்சனின் இளமையான தோற்றம் ..பிண்ணனி காட்சிகளின் உயிரோட்டம் அனைத்தும் அட்டகாசம் ...ஓவியருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள்..


  கதை சொல்ல போவது இல்லை என்றாலும் .இதுவும் வித்தியாச டெக்ஸ் சாகஸமே...எப்படி எனில்...

  ஒன்று....


  முதல் பக்கத்தில் முதல் பேனலில் டெக்ஸ் கார்சன் இனைந்து வந்தாலும் அவர்கள் வில்லனை கண்ணில் காண்பது க்ளைமேக்ஸ்லில் தான் ..


  இரண்டு...


  இந்த சாகஸத்தில் உப வில்லன்கள் மரணமடைவது அதிகம் ...அதிகம் என்ன அனைவருமே டெக்ஸ் கார்சன் அதிரடிகளை விட வில்லனின் அதிரடிகளால் தான் மரணமடைகிறார்கள்..


  மூன்று....

  போன கதைகளில் கதை வெகு அருமையாக சென்று இருப்பினும் வில்லனுக்கு பவர் இல்லையே என குறைப்பட்ட நண்பர்கள் உண்டு...அந்த வில்லனுக்கும் சேர்த்தி இதில் வரும் வில்லன் வேய்ன் வில்லாதி வில்லனாக இருக்கிறான் ..(இதை டெக்ஸே வழிமொழிகிறார்..:-)


  நான்கு....

  இப்படி பட்ட அதிரடி வில்லனும் இறப்பது டெக்ஸ் கைகளினாலோ..தோட்டாவாலோ அல்ல...


  இப்படி சொல்லி கொண்டே போனாலும்....ஒன்று மட்டும் மாறவில்லை...


  அது ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரவென பாய்த்தோடும் அந்த அக்மார்க் டெக்ஸ் ஸ்பீட்....ஜெட் வேகத்தில் பாய்ந்தோடுகிறது இரும்பு குதிரை....


  மதிப்பெண் சூப்பர் என்பதை தாண்டி வேறு என்னதான் சொல்ல முடியும் ....

  ReplyDelete
  Replies
  1. தலைவரே.!

   டெக்ஸ் விமர்சனம் அருமை.! கடைசி பத்தி அருமை.!இதுதான் வஞ்சக புகழ்ச்சியோ.????

   Delete
 41. தரைக்கடியில் தங்கம்....  லக்கியின் வழக்கமான
  நகைச்சுவை வழக்கம் போலவே படிக்க படிக்க கெக்கே பிக்கே என சென்றது...:-)

  சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரை யில் புஷ்பா சித்திர கதா சஸ்பென்ஸ் முடிவுரையை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் ..திரும்ப ஒரு மாதம் விடுமுறை விட்டு விடாதீர்கள் ஆசிரியர் சார்..:-)

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : //திரும்ப ஒரு மாதம் விடுமுறை விட்டு விடாதீர்கள் ஆசிரியர் சார்..:-)

   தலீவரே.....நீங்க ஒரு நயமான நாஸ்ட்ரடாமஸ் !!

   ஏப்ரலில் காத்திருக்கும் பொடியன் பென்னியில் ஏற்கனவே கதையே 61 பக்கங்களை ஆக்கிரமித்து விடுகிறது ; 2 ஹாட்லைன் ; 1 பக்கம் அடுத்த வெளியீடு என்று அமைப்பதற்கே மாமூலை விடப் 12 பக்கங்கள் ஜாஸ்தியாக்கிடல் அவசியம் !!

   ஏப்ரலின் இன்னொரு வண்ண இதழோ சூப்பர் 6 -ன் MILLION & MORE SPECIAL !! அங்கே சின்னதாய் கதை பற்றிய ஒரு முன்னோட்டமும், அடுத்த பாகத்தின் விளம்பரமும் மட்டுமே !! எனது இராமாயண ; மஹாபாரதங்களை அங்கே இறக்கி வைத்தால் கல்லைக் கொண்டே அடிப்பார்கள் !!

   இந்த அழகில் லீவு காலத்தின் கட்டாயமல்லவா ?

   இந்தப் பின்னூட்டத்தில் முதல் வரியை மீண்டுமொருமுறை ஞாபகப்படுத்தி விடுகிறேன் தலீவரே !!

   Delete
  2. சார்......அதானே பாத்தேன்....சரி....இப்ப எல்லாம் ஒரு மாசம் விட்டு ஒரு மாசம் தான் சி.சி.வயதில் ன்னு போராட்ட குழு முடிவு பண்ணி ரொம்ப நாளாச்சு சார்....அதையாவது மாத்திபுடாதீங்க.....அப்புறம் போராட்டம் ஹெவியா மாறிவிடும் அபாய சூழல் நிகழ்ந்து விடும் ...:-(

   Delete
  3. /////தலீவரே.....நீங்க ஒரு நயமான நாஸ்ட்ரடாமஸ் !! /////

   ஹா...ஹா..ஹா...உங்கள் எழுத்துக்கள் ஏன் படிக்க எப்போதும் ஆர்வமூட்டுகின்றன என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் சார் இந்த பதில்!!

   Delete
 42. விண்வெளியின் பிள்ளை .....தோர்கல்...


  அட்டைப்படம் கொள்ளை அழகு....உள் பக்கங்களில் புரட்டி ரசிக்கும் பொழுது அதிக இடங்களில் முற்றும் ..முற்றும்....என தொடர ஆஹா மறுபடியும் துக்கடா கதைகள் ஆரம்பிச்சாச்சு போல....தேறுமா என்ற படியே தான் படிக்க ஆரம்பித்தேன் ...ஆனால் சிறு சிறு கதைகளாக தொடர்ந்தாலும் தொடர் அத்தியாயம் போல தொடர்ந்த காரணத்தால் ஏற்பட்ட அச்சம் இரண்டாம் அத்தியாயத்திலியே முடிந்து போனது...இது தோர்கலின் சாகஸமாக அல்லாமல் தோர்கலின் வரலாறாக இருப்பினும் பதிமூன்றை போல் ஏமாற்றாமல் சுறுசுறுப்பாக சுவையுடன் பரபரப்பாகவே சென்று அசத்தியது....மாயாஜால் கதை என்றாலும் கூட ஓவியரின் சித்திரங்களின் மாயாஜாலத்தால் அந்த உலகினுள் ஒன்றியே ரசிக்க முடிந்தது... முதல் பாகமாக இந்த இதழ் வந்து இருந்தால் இதற்கு முன் வந்த ஆரம்ப தோர்கல் இதழ்கள் இன்னும் சிறப்புடன் வெற்றி பெற்று இருக்கும் என்பது உண்மை...மாயாஜால லோகத்தில் இருந்து விண்வெளி லோக சாகஸமாக முடிவுற்றது ஆச்சர்யமே....

  மொத்ததில் தோர்கல் நன்று நன்று நன்று....


  பின்குறிப்பு ஒன்று....

  ஆரிசியாவை காண முடியுமா என காத்திருந்த ரசிக பெருமக்களே ...கவலை வேண்டாம் ஆரிசியா வருகிறார்....ஒரு பக்கத்தில்....ஒரு பேனலில் ....:எனவே என்ஜாய்...:-)

  பின்குறிப்பு இரண்டு....


  இதே கதை வேறு ஒரு இதழில் படித்த நினைவு....ஆனால் அந்த இதழில் இதே கதையை படித்து தலையும் புரியாமல் வாலும் புரியாமல் மண்டை குழம்பி போனது தான் மிச்சம் ..மாயலோக கதை யாக இருந்தாலும் ..விண்வெளி கதையாக இருந்தாலும் இப்பொழுது காத தூரம் ஓட காரணம் அப்படி பட்ட கதைகளை வேறு இதழ்களில் படித்த மொழி ஆக்க தரத்தால் தான் ...ஆனால் இதே கதை இதே தளங்கள் நமது இதழில் படிக்க ..படிக்க புரிவதுடன் எவ்வளவு சுவையாக கொண்டு செல்கிறார்கள் எனும் போது நமது மொழி பெயர்ப்பு திறனாளர்களின் திறமையை உணர முடிகிறது....அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை நல்கி விடுங்கள் சார்...இதன் காரணமாக தான் மொழி ஆக்கத்தில் விளையாட்டு வேண்டாம் என ஒருமுறை சாடியது சார்...:-)

  ReplyDelete
 43. எடிட்டரின் இந்த பதிவை படிக்க துவங்கியவுடன் இம்மாத டெக்ஸ் இதழான இரும்பு குதிரையில் ஒரு தங்க புதையல் கதைபோல் அவ்வளவு சுவராசியம் விறுவிறுப்பு.எச்சில் கூட விழுங்காமல் சீட் நுனியில் உட்கார்ந்து படித்தேன்.!!!


  பழி வாங்கும் புயல் மறுபதிப்பிற்கு அட்டகாசமான கதை.! கார்வின் மாடஸ்டி நட்பின் பெருமைக்கு ஒரு மைல் கல் இதழ்.! இன்றைய தலைமுறையினரும் ரசிக்க அருமையானதொரு வாய்ப்பு.இந்த புத்தகம் பெரும்பாலும் அழிந்துவிட்ட நிலைமையில் குடத்திலிட்ட விளக்காய் இருக்கும் இந்த இதழ் இனி குன்றில் இட்ட விளக்காய் ஜொலிக்கும் என்பதில் ஐயமில்லை.!!!

  இந்த கதையில் வில்லனான மாற்றுதிறனாளியான கேப்ரியலை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.! அடக்கியாள & சாதிக்க உடல் வலிமை தேவையில்லை.! ஊனமோ உருவமோ அதற்கு தடையில்லை. மனவலிமையே போதும் என்பதற்கு உதராணமாக விளங்கும் கேப்ரியலை எனக்கு ரொம்ப பிடிக்கும்.!

  பழிவாங்கும் புயல் கதையில் ஆறுபக்க மாடஸ்டி கதையையும் வெளியிடுங்கள் சார்.! அப்பொழதுதான் இக்கால யூத்களும் முழுமையாக படித்து ரசிக்க ஏதுவாக இருக்கும்.இந்த இளமைக்கால கதையை படித்து விட்டு நமது மேச்சேரியாரும் , குணா கமல்போல்" அபிராமி !அபிராமி !" என்பது போல " மாடஸ்டி!மாடஸ்டி! என்று எங்கள் ஜோதியில் ஐக்கியமாக வாய்ப்புகள் நிறைய உள்ளது.!!!

  ReplyDelete
  Replies
  1. ///அப்பொழதுதான் இக்கால யூத்களும் முழுமையாக படித்து ரசிக்க ஏதுவாக இருக்கும்.///

   இந்த ஒத்தை வார்த்தை போதும் MV சார்..!! கட்டாயம் படிச்சிடுவேன்.! :-)

   Delete
  2. இக்கால யூத் ன்னா.....அந்த கால sslc மாதிரி.....ஹீஹீ....:-)

   Delete
  3. KiD ஆர்டின் KannaN //குணா கமல்போல்"//

   கிழிஞ்சது போங்க......நீங்க பாட்டுக்கு கொடைக்கானல் சிகரங்களுக்குள்ளே இருக்கும் குணா குகைக்குள் போய் குந்திக்கிட்டால் ST கூரியர்காரர்கள் பொழப்பு நாறிடும் !!

   அப்புறம் அந்த குணா கமல் ஸ்டைல் கிராப் உங்களுக்கு சரி வரும்ங்கிறீங்க ?

   Delete
  4. ///அப்புறம் அந்த குணா கமல் ஸ்டைல் கிராப் உங்களுக்கு சரி வரும்ங்கிறீங்க ?///

   ஹேர்ஸ்டைல் ஒத்துவரல்லைன்னாலும் கேரக்டர் ஒத்துப்போகும் சார்..!

   குணா படத்தில் கமல் சார் என்னைப்போலவே ரெண்டு மறை லூசான கேரக்டரில்தானே நடித்திருப்பார். .!

   (நல்லவேளை , தசாவாதாரம் வின்செண்ட் பூவராகன் மாதிரியே இருக்கிங்கன்னு சொல்லாமா விட்டுட்டிங்க சார். .) :-)

   Delete
 44. Dear Editor,

  I’m not a big a fan of coloring of the classic art of Modesty Blaise.

  Whether modifying the original art and release in color will make Modesty Blaise a best seller? I don’t think so…


  It’s the story and then the original art that made Modesty Blaise as a British strip art classic; even though it started as another wannabe of James Bond!

  I’m curious to know the reasons behind your decisions to modify the original art, and whether the original creators are also in the same page as you.

  Thanks!

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் மாடஸ்டி B/W கதைகலே பிடித்தது இருக்கிறது.

   Delete
  2. Rama Karthigai : //Whether modifying the original art and release in color will make Modesty Blaise a best seller? I don’t think so…//

   மேலுள்ள பதிவை இன்னொருமுறை படியுங்களேன் சார் ? காலத்தை வென்ற கதைக்கே எனது சிலாகிப்பும் ! And ஒரு மறுப்பதிப்பை வித்தியாசப்படுத்திக் காட்டும் பொருட்டே இந்த வர்ணச் சேர்க்கையே தவிர, கதைக்கொரு star power கூட்டிடும் பொருட்டல்ல !

   வண்ணமும், பாக்கெட் சைசும் கேக்கின் மீதுள்ள செர்ரிப் பழங்கள் மட்டுமே என்பதில் யாருக்கும் ஐயமில்லை !

   Modifying artwork to suit reader sensitivities is a part of my job & முந்தைய பதிவினிலேயே இது பற்றியொரு பின்னூட்டத்துக்குப் பதிலும் சொன்ன நினைவுள்ளது !

   Delete
 45. இளவரசி க.ம.கோ பாக்கெட் சைஸ் எனக்கு அப்படி ஓன்றும் என்னால் ரசிக்க முடியவில்லை. ஆனால் நிறைய நண்பர்கள் இதை ரசிப்பதால் எனக்கு ஓ.கே தான்.

  ஆனால் உள்ளே சில பக்கங்களில் கண்ணு புருவம் எதுவும் இல்லாமல் இளவரசி மொழுக்கட்டி ன்னு இருக்காங்க...டஸ்ட் ஜக்கெட்டும் இல்லாமல் வந்துள்ளது... நாளை மெயில் போடுகிறேன் வேறு நல்ல காப்பி அனுப்பி வைக்கவும்.
  பக்கெட் சைஸ் பிடிக்க வில்லை எனக்கு வந்த பிரதியில் கலரிங் சரியில்லை என்றாலும், கதையின் கனம் குறையின் ஆழத்தை குறைத்து விட்டது.
  கார்வினை அந்த பெண் கண்டிப்பாக பின்னாடி இருந்து தாக்குவார் என்று கனித்த நான், மடஸ்டி அதே பெண்ணை திருப்பி தாக்குவார் என்று கணிக்க முடியவில்லை.. அதுவும் மாடஸ்டியால் தன்னை தாக்கவே முடியாது என்று அந்த பெண் நினைத்து கொண்டிருக்கும்(நாமும் கூட) மாடஸ்டியின் திடீர் தாக்குதல் எதிர்பாராதது
  அதன் பிறகு கதையின் ஓவ்வொரு பாக்கமும் திருப்பம் தான்....  ReplyDelete
  Replies
  1. // மாடஸ்டியின் திடீர் தாக்குதல் எதிர்பாராதது
   அதன் பிறகு கதையின் ஓவ்வொரு பாக்கமும் திருப்பம் தான்....//
   உண்மை சுவாரசியமான திருப்பங்கள்.


   Delete
 46. இந்த மாத இதழ்கள் ரேட்டிங் :
  1. லக்கி லூக்-10/10,
  2. இளவரசி. -9.75/10,
  3. டெக்ஸ். -9.5/10,
  4. தோர்கல். -9/10,
  5. ஸ்பைடர். -8/10.

  ReplyDelete
 47. பகடை ஆடும் பையனைவிட
  மெத்தையில் கிடக்கும்
  காமிக்ஸே அழகு.
  புதிய அறிமுகங்களை வரவேற்க்கும்
  எங்களுக்கு மறுபதிப்புகளை
  குண்டு குண்டாக வெளியிட்டால்
  தினம்தினம் தீபாவளிதான்.

  ReplyDelete
 48. பாக்கெட் சைஸில் கையில் எடுத்தவுடன் ஏற்பட்ட பரவசம்...
  வார்த்தைகள் இல்லை சார்.

  ஏற்கனவே பல முறை,தங்களிடம் முறையிட்டது தான்.
  முப்பது வருடங்களுக்கு முன் எங்களை இட்டுச்செல்லும் அதே சைஸ், மற்றும அதே அட்டைப்படங்கள் வேண்டும்.மாடஸ்டி இதழின் வடிவமைப்பு மூலம்,நமக்கு நாமே மீண்டும் ஒரு Benchmark செட் பண்ணியள்ளோம் என்பது மட்டும் நிச்சயம்.

  ReplyDelete
  Replies
  1. T.K. AHMEDBASHA : "தலையில்லாப் போராளி" சைஸையும் சிலாகிக்கிறோம் ; மூக்குப்பொடி டப்பி சைஸ் இதழையும் நேசிக்கிறோம் !! இனி ஒரு அணி பிறந்து, வளர்ந்து வந்தால் தானுண்டு - பன்முக ரசனைகளில் நம்மோடு போட்டியிட !!

   Delete
 49. மாடஸ்டி பிளைசி

  ReplyDelete

 50. ////மாயாஜால் கதை என்றாலும் கூட ஓவியரின் சித்திரங்களின் மாயாஜாலத்தால் அந்த உலகினுள் ஒன்றியே ரசிக்க முடிந்தது... முதல் பாகமாக இந்த இதழ் வந்து இருந்தால் இதற்கு முன் வந்த ஆரம்ப தோர்கல் இதழ்கள் இன்னும் சிறப்புடன் வெற்றி பெற்று இருக்கும் என்பது உண்மை...மாயாஜால லோகத்தில் இருந்து விண்வெளி லோக சாகஸமாக முடிவுற்றது ஆச்சர்யமே....//////
  @ தலீவர்

  தோர்கல்....விண்வெளியின் பிள்ளை....

  இம்மாத தோர்கல் கொஞ்சம் வித்தியாசமானது...

  FANTASY-ன் SUBGENRE – களில் ஒன்றான ARCANEPUNK என வகைப்படுத்தலாம்.
  அதாவது FANTASY –யும் SCI-FI –யும் ஒன்றாக இணைந்து உருவாகும் கதை ...
  கெட்ட நாகலோக தலைவன்,
  நல்ல சித்திர குள்ள தலைவன்
  நான்கு கை அரக்கன்,
  பறக்கும் பூனைகள்,
  கத்திகளுடன் கூடிய பல கைகளுடன் (வால் ?) பாம்பு,
  ப்ரிக் தேவதை,
  இறந்தவனை உயிர்ப்பிக்கும் செயல்
  இவை இன்னும் பல இக்கதை EPIC FANTASY ரகத்தை சேர்ந்தது என்பதை உணர்த்துகிறது
  ஆனால்...
  விண்வெளி கலம், லேசர் துப்பாக்கி சண்டை போன்றவை SCI-FI என்பதை காட்டுகின்றன.
  இவை இரண்டும் ஒன்றாக இணையும் மையப்புள்ளியாக கதையின் நாயகனே இருப்பதால்
  இது ARCANEPUNK FANTASY என்ற பேன்டசியின் உட்பிரிவாக மாறுகிறது.
  இதுகுறித்து கதையின் ஆரம்பத்தில் எனக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தது.....
  இவ்வகையில் ‘’ தாயத்து’’ –மூன்றாம் பகுதியில் ஜார்கோஸ் மனத்தொலை நோக்கி கருவியை ‘’ மந்திர பேழை ‘’ என குறிப்பிடும்போது சிறு உறுத்தல் ஏற்படுகிறது...
  போலவே.....
  மதகுருமார்கள் வழிகாட்டுதலின்படி அரசை நடத்தும் லெய்ப் ஹெரால்ட்சன்
  ஏழாம் பக்கத்தில் ‘’’ முரடர்களே !! ‘’ எனத்துவங்கும் உரையாடலை சக மாலுமிகளுடன் பேசுவதும் , பின்னர் 49-ம் பக்கத்தில் சிறுவன் தோர்கலுடன் நிகழ்த்தும் பகுத்தறிவு உரையாடலும் ஆச்சர்யபடுத்துபவை

  ReplyDelete
  Replies
  1. ////இது ARCANEPUNK FANTASY என்ற பேன்டசியின் உட்பிரிவாக மாறுகிறது////

   அடடே! இதுவேறயா!!!!
   இதுமாதிரி தகவல்களையெல்லாம் எங்கேர்ந்துதான் புடிக்கறீங்களோ!!!!!!

   Delete
  2. செனா அனா ஒரு என் சைக்கிள பிடிய்யா என்பதை அடிக்கடி மறந்திடுறிங்களே குருநாயர்..!!

   Delete
  3. சூப்பர் ....செனா அனா ஜீ....:-) அப்ப நானும் உள்வாங்கி தான் படிச்சு இருக்கேன் போல....:-)

   ரவி கண்ணரே சரியா சொன்னீங்க....

   Delete
  4. ///ARCANEPUNK FANTASY என்ற பேன்டசியின் உட்பிரிவாக மாறுகிறது.///... அற்புதம் செனா அனா ஜி.

   இப்போதெல்லாம் ஒவ்வொரு பதிவிலும் இதுபோன்ற தகவல்கள் என்ன தரப்போகிறீர்கள் என எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள் ஜி.

   எப்பவோ படித்த "விளக்கம் ப்ளீஸ் விவேக்" ஞாபகம் வருது ஜி. தொடர்ந்து அசத்துங்கள்.

   Delete
  5. //இது ARCANEPUNK FANTASY என்ற பேன்டசியின் உட்பிரிவாக மாறுகிறது //
   அடடே சுவாரஸ்யமான தகவல்.

   Delete
  6. @ FRIENDS : "காதிலே பூ" ; 'சிந்துபாத் கதை தானே ?" ; fantasy !! என்றெல்லாம் சுலபமாய் / ஏளனமாய் இனி யாரேனும் தோர்கல் (பாணியிலான) கதைகளை விமர்சித்தால், பதிலாக எடுத்துவிட நமக்குப் புதியதொரு வார்த்தை கிடைச்சாச்சு !! சும்மா இதை வைத்தே வண்டி துபாய் வரைக்கும் ஓடிடாது ?

   Delete
  7. selvam abirami : //ஏழாம் பக்கத்தில் ‘’’ முரடர்களே !! ‘’ எனத்துவங்கும் உரையாடலை சக மாலுமிகளுடன் பேசுவதும் , பின்னர் 49-ம் பக்கத்தில் சிறுவன் தோர்கலுடன் நிகழ்த்தும் பகுத்தறிவு உரையாடலும் ஆச்சர்யபடுத்துபவை//

   வான் ஹாம்மேவின் ஆற்றல்களின் ஒரு பரிமாணமே இந்த வரிகளும் ! சின்னப் பசங்களுக்கான கதைக் களம் போல தோற்றம் தந்தாலும், அதற்குள்ளும் ஆழத்தை விதைக்க மனுஷன் மெனக்கெடுவது அசாத்தியம் !

   P.S : சொன்ன தேதிகளில் வங்கிக் கணக்கில் "வளம்" தென்படுகிறதா சார் ? அல்லது "பேங்க் லீவு" ; "செக் கலெக்ஷனுக்குப் போயிருக்கிறது !" ; ""பாட்டிக்குப் பிறந்த நாள்"" என்று திருநெல்வேலி ஐட்டம் ஊட்டப்படுகிறதா ?

   Delete
  8. ///சூப்பர் ....செனா அனா ஜீ....:-) அப்ப நானும் உள்வாங்கி தான் படிச்சு இருக்கேன் போல....:-)///

   நீங்க சரியா உள்வாங்கலைன்னா அது கதையோட மிஸ்டீக்காதான் இரூக்கும் தலீவரே..!! :-)

   உங்க விமர்சனம் படிச்சிட்டுதான் டெக்ஸ்க்கு முன்னாடியே தோர்கலைப் படிக்கலாம்னு இருக்கேன். .!

   Delete
  9. /////P.S : சொன்ன தேதிகளில் வங்கிக் கணக்கில் "வளம்" தென்படுகிறதா சார் ? அல்லது "பேங்க் லீவு" ; "செக் கலெக்ஷனுக்குப் போயிருக்கிறது !" ; ""பாட்டிக்குப் பிறந்த நாள்"" என்று திருநெல்வேலி ஐட்டம் ஊட்டப்படுகிறதா ?//////

   :-)))) கையில காசு ; வாயில தோசை பாலிசி சார்!!!!!

   Delete
 51. சார் அருமை ! பழி வாங்கும் புயல் நண்பர்களும் ஏகமாய் சிலாகித்த இதழ் . அதற்காக காத்திருப்பேன் . மாடஸ்டி அட்டையில் அம்சா...சாரி அம்சம் .எப்டியோ அந்த தாள்கள கைப்பற்றி நண்பர்களின் உற்சாகத்த சம்பாதிச்சிட்டீங்க . அதே போல லக்கியும் சரி , மாடஸ்டியும் சரி ரியல் அட்டகாசமான ஞாபகார்த்தமான கலெக்டர்ஸ் எடிசனாய் மாறு பட்ட ,இருவேறு துருவங்களாய் வடிவமைப்பில் கொடி கட்டிப் பறப்பது அட்டகாசம் . லக்கி போல இந்த மாடஸ்டியும் ஏதேனும் நினைவுகள் தாங்கி வந்திருந்தால் இன்னும் ஒரு படி மேலே போயிருக்கும் .நண்பர் atr எழுதியத போல சிறப்பம்சங்கள் இருந்திருந்தாலும் அருமையாயிருக்கும் . ஆனாலும் வர வர ஏக்கங்கள் , இது வந்திருக்கலாம் ..அது வந்திருக்கலாம்னு கூடத்தானே செய்யும் .ஆர்பாட்டமான இதழாய் வந்ததற்கு மகிழ்ச்சி !

  ReplyDelete
 52. ஈவிக்கு ஸ்டீல் கதைபடித்து சொல்றதுன்னா அப்ப ஸ்டீல் தாத்தாவா
  ஆனால் ஈவி பயங்கரபொடியன்
  என்பதில் மாற்றமில்லை.

  ReplyDelete
 53. லக்கி லூக் கதையில் ஒரே ஒரு கட்டத்தில் ஒரே ஒரு பெண் பேசும் ஒரே ஒரு வசனம் வருகிறது. ஏன் இப்படி ? துணை கதாபாத்திரங்கள் போல் சில பெண்களை வசனமில்லாமல் உலவ விட்டிருக்கலாமே?

  ReplyDelete
  Replies
  1. ravanan iniyan : Set properties நமக்கு அவசியமில்லையென லக்கியின் பிதாமகர்கள் எண்ணியிருக்க வேண்டும் !

   Delete
 54. சார் லக்கிய எடுத்தேன்...வேலைக்கு மத்தில படிக்க நேரம் சரியாய் வாய்க்கல ...விரைவில் பகிர்கிறேன் .

  ReplyDelete
 55. ///ஜுனியர் லயனின் துவக்க பாக்கெட் சைஸ் வண்ண இதழ்களையும் தூசித் தட்டி விடச் சொல்லியிருக்கிறேன் நம்மவர்களை ! பார்க்கலாமே, வரும் காலங்களின் பொழுதுகளுக்குள் அவற்றிற்குமொரு இடம் இருக்குமாவென்று?!///...

  நானெல்லாம் பிறக்கும் முன்பு வந்த கதைகளை பார்க்க அருமையான வாய்ப்பு, இப்போதெல்லாம் கார்டூன்களும் கெளபாய்களுக்கு சவால் விடுவதால் சரியான போட்டி (ஆட்டி போட்டி அல்ல)யாக இருக்கும் சார்.

  என்னிடம் இருக்கும் ஒரே ஜூனியர் லயன் காமிக்ஸ் "அதிரடி மன்னனை" கையில் எடுத்து பார்த்து விட்டு டைப்புறேன் சார்.
  சைஸ் தான் பாக்கெட் சைஸ் போல, தற்போதைய ரெகுலர் சைசிலான பக்கத்தை அப்படியே சுருக்கி பாக்கெட் சைசில் தந்து உள்ளீர்கள் போல சார். ஒவ்வொரு பக்கத்திலும் 6பேனல்கள், வண்டி வண்டியாக டயலாக், மிக பொடி எழுத்துக்கள். மற்ற ஜூனியர் லயன்களும் இப்படித்தானா???

  இவைகள் தற்போதைய க.ம.கோ. யின் பாக்கெட் சைசில் போட எதுவம் சிறப்பு ஐடியா உள்ளதா சார்.
  இரண்டே பேனல்கள் என்பதால் க.ம.கோ. அழகு.

  மாயாசார்@ முடிந்தால் "அதிரடி அன்னன்" அந்த 6, 7வது பக்கத்தை ஒரு க்ளிக் போடுங்களேன் சார்.

  ReplyDelete
  Replies
  1. @ சேலம் இரவுகழுகார்

   நீங்கள் கேட்ட பக்கங்களை கிளின் பண்ணி போட்டிருக்கேன் பார்க்க...இங்கே'கிளிக்'

   உண்மையான பக்கங்களையும் க.ழு.கோ. அருகில் வைத்தும் போட்டோ எடுத்துள்ளேன்,பார்க்க...இங்கே'கிளிக்'

   புத்தகத்தின் மேல் ஒரு பேனாவை வைத்துள்ளேனே..அதுக்கு என்ன காரணம்ன்னு தெரியுதா.. ;)))

   Delete
  2. சூப்பர் நன்றிகள் சார்...

   பேனா வைத்துள்ளதற்கு சில காரணங்கள் இருக்கலாம் சார்.

   மிக பழைய புத்தகம், மெல்லிய தாள்கள் உடையும் நிலையில் இருக்க கூடும், பேனா வெயிட்டை தான் தாங்க இயலும்.

   சென்டர் பின் அடிக்கப்பட்டு உள்ளதால் இரண்டாக திறந்து வைக்கும் போது , மீண்டும் மூடிக்கொள்ளாமல் இருக்க பேனா வெயிட்டே போதுமானதாக இருக்கலாம்.

   மாறாக க.ம.கோ. சைடு பைண்டிங் , திறந்து வைத்து தாங்கி பிடிக்க செல், அல்லது ரிமோட் மாதிரி சாலிட் வெயிட் தேவைப்படும்.

   அந்த புத்தகத்தில் உள்ள டயலாக்குகளை எழுதினால் இந்த பேனாவே தீர்ந்து போகலாம்.

   இளம் ஆசிரியர் மொழிபெயர்ப்பு அட்டகாசமாக இருக்கும், ஒரு திருத்தமும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

   Delete
  3. பேனாவின் நீளமே இதன் உயரமும், எனவே சட்டைப் பாக்கெட்டிலேயே வைத்து கொள்ளலாம்.

   Delete
  4. ஹாஹஹா..அதுதான் கிடையாது டெக்ஸ்...இங்கதான் மாத்தியோசிகணும்..!

   வரும் மாதங்களில் மாதம் ஒரு பரிசு வரிசையில் நமக்கு ஒரு முத்து&லயன் லோகோ போட்டா பேனா ஒன்று பரிசாக கிடைக்கலாம்..! [தலைதெறிக்க ஓடும் சித்திரகுள்ளர்கள் படம் ஐந்து ]

   Delete
  5. சேலம் Tex விஜயராகவன் : ரெகுலர் சைசிலான பக்கத்தைப் பாக்கெட் சைசுக்குச் சுருக்கினால் - ஒரு மொத்தமாய் அத்தனை பேரும் வாசன் ஐ கேருக்குச் செல்ல வேண்டிய அவசியம் 1987-லேயே எழுந்திருக்கும் சார் ! ஒரிஜினலின் 1 பக்கம் - பாக்கெட் சைசில் 2 பக்கங்களாக உருமாற்றம் கண்டிருந்தன !

   Delete
  6. ஓவ்! தகவலுக்கு நன்றி சார்.

   1987ல் வந்த மினி புக்கில் 48பக்கங்கள், அப்படீனா
   ரெகுலர் சைசில் 24பக்கங்கள் தான் இந்த அதிரடி மன்னன், அட சிக்பில் வரிசையில் கூட சிறுகதையா சூப்பர் சார்.
   பாக்கெட் சைசில் எளிதாக ஹிட் அடிக்க இதுவும் ரெடி...

   இந்த புதிய பாக்கெட் சைஸ் வரிசையில் டெக்ஸ்கக்கு இடம் கிடைப்பதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா சார்...

   Delete
  7. சேலம் Tex விஜயராகவன் : //இந்த புதிய பாக்கெட் சைஸ் வரிசையில் டெக்ஸ்கக்கு இடம் கிடைப்பதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா சார்...//

   ஆஹா !!!

   Delete
  8. சேலம் Tex விஜயராகவன் : //இந்த புதிய பாக்கெட் சைஸ் வரிசையில் டெக்ஸ்கக்கு இடம் கிடைப்பதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா சார்...//

   ஆஹா !!!

   மெக்ஸிகோ படலம் சார்.(பாக்கெட் சைஸில் வந்த்தாக ஞாபகம்)

   Delete
 56. தோர்கல் ஒரு மெகா அலசல் துவக்கம்..!

  தமிழகத்தின் பல தேசம் பயணித்த அருமைநண்பர் தாரை பரணி சொன்னது மாதிரி நானும் கூட அந்த கதையை ராணிகாமிக்ஸில் படித்துள்ளேன்.பெயரை அவரிடமே கேட்டு மீண்டும் ஒருமுறை படித்துபார்த்தேன். [வீர சிறுவன்]

  சரியாக இருபது வருடங்களுக்கு முன் 1997-ல் முதல்கதையான பூலோகம் காணாத உலோகமும், அதன் இடைசொருகளாக நடுகடலில் நரபலி என கலந்துகட்டி கொடுத்திருந்தார்கள். பொதுவாக ஒரு புதியபதிப்பகத்தில் காப்பிரைட் கேட்கும்போது...முதலில் அது விற்பனையகுமா..? வாசகர்கள் ரசிப்பார்களா..? என பரிச்சித்து பார்க்க சேம்பிளுக்கு ஒன்று போட அனுமதிப்பார்கள் என நினைக்கிறன். அப்படி போட்ட ஒன்றுதான் ராணி காமிக்ஸில் போடப்பட்ட 'தோர்கலின் பிறப்பு' பற்றியதான இந்த கதையாக இருக்கும் என நினைக்கிறன்..!

  சிறுவர்களுக்கு புரியும்படியாக எளிதாக டயலாக் எழுதியிருக்கிறார்கள்,சில இடம் ஒரு வாக்கியத்தில் முடிக்கப்பட்டுள்ளது...கடைசியாக முடிவு படிக்கும் போது...குபுக்கென்று சிரித்துவிட்டேன்..! நீங்களே படிச்சு பாருங்களேன்...இங்கே'கிளிக்'

  ஒகே..விஷயத்திற்கு வருகிறேன்..அன்றைய தேதியில் அந்த தகவல்கள் போதுமானதாக இருந்தது, ஆனால் இன்று ஒரு படைப்பாளி என்ன கோணத்தில், என்ன விவரத்தை முன்வைத்து, எப்படிபட்ட உலகிற்கு நம்மை அழைத்துசெல்ல படைத்துள்ளாரோ...அந்த உலகிற்கு...அதுவும் அழகுதமிழில் பயணிக்க வைத்த திரு விஜயன் அவர்களுக்கு முதலில் இங்கு நன்றிகளை சொல்லிகொள்கிறேன்.!

  என்னாச்சி..??? பொதுவா இப்படி நன்றிசொல்ற ஆளுகிடையாதே மா.ஜி..??? என்ன வில்லங்கம் வரபோவோதோ..??? ன்னு உங்க பலபேரோட மைண்டுவாய்ஸ் நல்லாவே கேக்குதுங்க..ஹீ..ஹீ..!

  திரு விஜயன் அவர்களே தோர்கல் மொத்த செட்டையும் ஆபீஸ் முன்வரிசைக்கு கொண்டுவந்து வைங்க......ஏன்னா 'விண்வெளியின் பிள்ளை' படிக்கும்போது எனக்குள் தோன்றிய பல விஷயங்களை பல தளங்களில் பதிவிட உள்ளேன்.! பதிவுகள் பல... தோர்கலை நோக்கி படையெடுக்க நிறையவே வாய்ப்புள்ளதாக 'பட்சி' சொல்லுது..! [நம்பிக்கை தானே ஸார் எல்லாமே]

  ஆய்வுக்காக இன்று பிரிகிறேன்..நாளை சந்திப்போம்..!

  ReplyDelete
  Replies
  1. mayavi.siva & friends : //தோர்கல் மொத்த செட்டையும் ஆபீஸ் முன்வரிசைக்கு கொண்டுவந்து வைங்க......ஏன்னா 'விண்வெளியின் பிள்ளை' படிக்கும்போது எனக்குள் தோன்றிய பல விஷயங்களை பல தளங்களில் பதிவிட உள்ளேன்.! பதிவுகள் பல... தோர்கலை நோக்கி படையெடுக்க நிறையவே வாய்ப்புள்ளதாக 'பட்சி' சொல்லுது..!//

   காதைக் காட்டுங்கள் சார் !

   புதிதாய் எங்கேனும் நமது இதழ்களின் மீது ஒளிவட்டம் பாய்ந்தால், சம்பந்தப்பட்ட இதழ்களில் ஒரு 25 % விற்பனையாகிடுகிறது ! பாக்கி 75 % எங்கே செல்கிறதென்று கேட்கிறீர்களா ??

   வேறெங்கே ? நமது மாயாவி மாமாவின் மார்க்கத்திலும், ஜாக்கி ஜட்டிக் காரரின் பாதையிலுமே சங்கமமாகின்றன !!

   இப்போதைய புது trend நமது கூர்மண்டையரின் மறுபதிப்புகளும் செம போடு போடுவதே !! ஷப்பா !!

   Delete
  2. அத்தனை காமிக்ஸையும் துளியும் சேதப்படாமல் வைத்திருக்க மாயாவி சாருக்கு எப்படிதான் சாத்தியப்படுகிறதோ? அதுக்காகவே அவருக்கு பெரிதாக "ஓ" போடுவோம்.

   Delete
 57. தமிழகத்தின் பல தேசம் பயணித்த அருமைநண்பர்

  #####₹₹

  க்கும்.....பல உலகம் பயணித்த நண்பர் ன்னு சொன்னா கூட நம்புவாங்க மாயாஜீ...:-(

  ReplyDelete
 58. கழுகு மலை கோட்டை.....

  நிரம்ப நாள் கழித்து....ம்ஹீம் ...நிரம்ப வருடம் கழித்து பேண்ட் பாக்கட்டில் கழுகு மலை கோட்டையை கடத்தி சென்று பேருந்து பயணித்திலியே படித்து முடித்தாயிற்று....ஏற்கனவே படித்த கதை எனினும் வண்ணத்தில் மற்றொருமுறை புதிதாய் படித்த புது இதழாக எண்ணம் தோன்றியது உண்மை....இந்த சமயத்தில் வண்ண முழாம் பூசிய நமது படைப்பாளர்களுக்கு கண்டிப்பாக பெரிய பாராட்டை தெரிவித்து கொள்கிறேன் சார்...கருப்பு வெள்ளையை அசல் வண்ண இதழை போல அளித்த அவர்களின் திறமை அளப்பரிய ஒன்று....கதையை பற்றி விவரிக்க ஒன்றுமில்லை...வழக்கமாகவே மாடஸ்தி கார்வின் ஜோடிகள் பட்டையை கிளப்புவார்கள் ....இது அக்மார்க் மாடஸ்தி க்ளாசிக் எனும் போது சொல்லதான் வேண்டுமா என்ன......

  ReplyDelete
  Replies
  1. // அக்மார்க் மாடஸ்தி க்ளாசிக் எனும் போது சொல்லதான் வேண்டுமா என்ன....//
   அதே,அதே.

   Delete
 59. தரைக்கடியில் தங்கம் என்ற தலைப்பை பார்த்து வழக்கமாக தங்கத்தின் பொருட்டு செவ்விந்தியர்களிடம் நடக்கும் கலவரம் லக்கி பாணியில் சுவாரசியமாக வந்திருக்கும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால், தங்கத்திற்கு பதிலாக பெட்ரோல் என்று முற்றிலும் வித்யாசமாக இருந்தது. நான் எதிர்பார்த்த திருப்தியை டபுள் மடங்கு தந்து சந்தோஷப்படுத்தியது. தரைக்கடியில் எண்ணை என்று இருக்க தங்கம் என்று ஏன் பெயர் வைத்தீர்கள் சார்? அதில் ஏதேனும் சுவாரசியம் இருந்தால் பகிருங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. Jagath Kumar : தரைக்கடியிலிருந்து எடுக்கப்படும் பெட்ரோலுக்கு "கறுப்புத் தங்கம்" என்றொரு செல்லப் பெயருண்டு ஜகத் ! அதனால் தான் லக்கியின் இந்தக் கதையின் தலைப்பில் "தங்கம்" தொற்றிக் கொண்டது !

   Delete
 60. இந்த மாத இதழ்கள் ஒரு மினி பார்வை :
  1.தரைக்கடியில் தங்கம் - அற்புதமான பிரிண்டிங்,அசத்தல் அட்டைப்படம்,சித்திரங்கள் கலக்கல்,உற்சாகமான மொழிபெயர்ப்பு & கதைக்களம்.இந்த மாத டாப் இதுவே.
  2.கழுகுமழைக் கோட்டை -(முதல் வாசிப்பு) மாடஸ்டி கதைகளின் பலமே அவருக்கும்,கார்வினுக்கும் உண்டான புரிதலும்,ஆழமான நட்பும்தான்,அதற்கு வலு சேர்ப்பது போல் களம் அமைத்துள்ளது,கதையோட்டம் அபாரமான விறுவிறுப்பையும்,மாடஸ்டி இந்த சவால்களை எப்படி முறியடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.
  இளவரசியின் நண்பராக வரும் பிளட்சர் கதாபாத்திரம் கதைக்கு வலு சேர்க்கவும்,சுவாரஸ்யத்தையும் கூட்டுகிறது.
  வண்ணத்தில் வந்ததும்,பாக்கெட் சைஸும் கூடுதல் பலம்,வர்ணங்களை மீறி ஆங்காங்கே உறுத்தும் ஓவியங்கள் நெருடல்.
  3.இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல் - விடாக் கண்டன்,கொடாக் கண்டன் என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது,கடைசிவரை வில்லருக்கு கடுக்காய் கொடுக்கும் வில்லன்,அவர்களுக்குளேயே அடித்துக் கொள்ளும் வில்லன்கள்,விறுவிறுப்பான கதைக்களம்,ஆங்காங்கே விழும் முடிச்சுக்கள் கதையின் பலம்,அட்டைபடம் அசத்தல்,சித்திரங்கள் சில இடங்களில் நெருடினாலும் கதையோட்டம் அதை மறக்க செய்கிறது.
  4.விண்வெளியின் பிள்ளை - அட்டைபடம் இதம்,சித்திரங்கள்,பின்னணி வர்ணங்கள் ஓஹோ ரகம்,தோர்கலின் பின்னணி விளக்கம் நிறைவாக படைக்கப்படுள்ளது.மொத்தத்தில் நிறைவு.
  அடுத்த வருகை கனவு மெய்ப்பட வேண்டும் எதிர்பார்க்க வைக்கிறது.
  5.பழி வாங்கும் பொம்மை - ஏற்கனவே படித்திருந்தாலும் அவ்வளவாக நினைவில் இல்லை,மீள் வாசிப்பில் திருப்தி,ஆர்வத்தை கூட்டும் கதைக்களம்,எனக்கு பிடித்த ஸ்பைடரின் முக்கிய சாகசங்களில் இதுவும் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. Arivarasu @ Ravi : "கழுகு மலைக் கோட்டை" முதல் வாசிப்பா ? oh wow !!

   Delete
  2. /"கழுகு மலைக் கோட்டை" முதல் வாசிப்பா ? oh wow !!// me too sir

   Delete
 61. எனக்கு டீ (புக்) இன்னும் வரல

  ReplyDelete
 62. கேள்விகள் இரண்டு :

  1. நமது வெளியீடுகளில் பல, மருந்துக்கும் கூட பெண் வாடையே இல்லாமல் வந்திருப்பதை நாமறிவோம். அதைப்போலவே ஒரு ப்ரேமில் கூட ஆண்களே இல்லாத (முழுக்க முழுக்க யுவதிகள் மட்டுமே சாகஸம் புரியும்) முழுநீள காமிக்ஸ் ஏதேனும் உண்டா?

  2. 'இதை எந்த ஜானரிலுமே அடக்க முடியாது' என்பது போன்ற காமிக்ஸ் தொடர் ஏதேனும் உண்டா?

  மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் மெளனமாய் இருப்பவர்களின் கனவில் கருப்புக்கிழவி வந்து க்ளோஸ்-அப்பில் பல் இளிக்கக் கடவது!

  ReplyDelete
  Replies
  1. //ஒரு ப்ரேமில் கூட ஆண்களே இல்லாத (முழுக்க முழுக்க யுவதிகள் மட்டுமே சாகஸம் புரியும்) முழுநீள காமிக்ஸ் ஏதேனும் உண்டா? //

   முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே சாகசம் செய்யும் கதைகள் எக்கச்சக்கம் ; but அவற்றில் ஆண்கள் பிரேமில் கூடத் தலையே காட்டாது இருந்திருப்பார்களா ? என்பது சந்தேகமே !!

   2. 'இதை எந்த ஜானரிலுமே அடக்க முடியாது' என்பது போன்ற காமிக்ஸ் தொடர் ஏதேனும் உண்டா?

   செல்லும், செல்லாததுக்குச் செட்டியார் கணக்கு என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அத்தகையதொரு செட்டியார் தான் "கிராபிக் நாவல் " என்ற பெயரில் உலவிடுகிறாரே ? அதற்குள் போட்டு அடைக்க முடியாத genre தான் எது ?

   அப்புறம் எனக்கு 4 கேள்விகள் :

   1 .இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களா ?

   2 ."ஆம்" என்றால், அந்த லாட்ஜில் மாத வாடகை என்ன போடுகிறார்கள் ?

   3 .செனா.அனா payment (s ) ; லாட்ஜ் வாடகை ; இன்டர்நெட் பில் என்று மாதாமாதம் எப்படித் தாக்குப் பிடிக்கிறீர்கள் ?

   4 .கூவத்தூர் பக்கம் ஏதேச்சையாகப் போகும் வாய்ப்புக் கிட்டியதா ?

   Delete
  2. செயலர் வாகையே கூவத்தூர்ல தான் சார்.....அப்ப அப்ப ஈரோடு சேலம் வத்துட்டு போவாரு....:-)

   Delete
 63. க.ம.கோட்டை பலருக்கும் இந்த மாதம் அபார அனுபவத்தை அளிப்பது நிச்சயம் சார்,வருடம் ஒரு சாகஸத்தை இப்படி அளித்தால் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 64. டெக்ஸ் வில்லருக்கு எப்படி பழி வாங்கும் புயல் ஒரு எவர்கிரீன் சாகஸமோ,அதுபோல் மாடஸ்டிக்கு கழுகுமலை கோட்ட்ட்ட்டை.

  ReplyDelete
 65. ஐயா அந்த பாக்கெட் சைஸ் பத்து சந்தா எப்போ சார்

  ReplyDelete
 66. கழுகுமலைக்கோட்டை
  மாடஸ்டியின் இந்த பாக்கெட் நாவல்(?),மிண்ணும் மரணம் தலையில்லா போராளி போன்று மாபெரும் சரித்திர பதிவை நிகழ்த்தி விட்டது.
  முன்னொரு காலத்தில் மாடஸ்டி ஆண்டுக்கு ஓர் இடத்தை பெறுவதற்கு, ஆசிரியரிடம் மடிப்பாக்கம் பெரும் போராட்டமே நிகழ்த்தினார். மாடஸ்டிக்கு கிடைத்த இந்த வெற்றியை ருசிக்கும் உரிமைக்காரர் மடிப்பாக்கத்துக்காரர்தான்.இந்த வலை பக்கத்தில் ஒரே குரலாய் உறுதியாய் முழங்கிக்கொண்டே இருந்தார். அதுவே இங்கு மாபெரும் புரட்சியை விளைவித்திருக்கிறது.
  நாளை
  இரும்புக்கை மாயாவி,லாரன்ஸ்-டேவிட்,ஸ்டெல்லா-ஜான்நீரோ,ஸ்பெடர்,ஆர்ச்சிக்கும் ஓர் வண்ண இதழ் என பல பாக்கைட் சைஸ் காமிக்ஸ் நமக்கு கிடைக்கும்.

  ReplyDelete
 67. முன்னொரு காலத்தில் மாடஸ்டி ஆண்டுக்கு ஓர் இடத்தை பெறுவதற்கு, ஆசிரியரிடம் மடிப்பாக்கம் பெரும் போராட்டமே நிகழ்த்தினார். மாடஸ்டிக்கு கிடைத்த இந்த வெற்றியை ருசிக்கும் உரிமைக்காரர்


  ##########  100% உண்மை.....:-)

  ReplyDelete
  Replies
  1. ///முன்னொரு காலத்தில் மாடஸ்டி ஆண்டுக்கு ஓர் இடத்தை பெறுவதற்கு, ஆசிரியரிடம் மடிப்பாக்கம் பெரும் போராட்டமே நிகழ்த்தினார். மாடஸ்டிக்கு கிடைத்த இந்த வெற்றியை ருசிக்கும் உரிமைக்காரர் ///

   மறுக்க முடியாத உண்மை.

   Delete
 68. இரும்புக்குதிரையில் ஒரு தங்கப்புதையல்!
  ஓர் Open statement
  கதையின் துவக்கத்தில் இருக்கிற நெருப்பு, கதையின் கடைசி வரை அனலாய் பறக்கிறது.
  கதையின் அனைத்து மாந்தர்களும், டெக்ஸ்க்கு இணையாக காட்சி படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
  கதையின் மெயின் வில்லன்,கடைசி வரை சாகசம் செய்து,தன் உடன் ரவுடிகளை முட்டாள் ஆக்கி விட்டு, தன்னை வேட்டையாட வரும் அனைவரையும் காவு கொடுக்கிறான். டெக்ஸ் காவல் காக்கும் ரெயில்-அயே கன்னம் இட்டு, கிட்டத்தட்ட தப்பித்து விடும் சூழலில், கடைசிக்கட்டத்தில் தானே தனது முடிவுரையை எழுத்க்கொள்கிறான்.
  மற்ற பல கேரக்டரும், வலுவாகவே படைக்கப்பட்டிருக்கின்றன.
  நூல் இழையில் வல்லவர்கள் வீழ்வ தில்லை இமேஜை பெற தவறி விடுகின்றன.
  காரணம்
  1. கதையின் இடையில் 2 இன்ரவல் வருகிறது. காபி யாரும் போட்டு தராததால்,கேனில் இருந்த தண்ணியை குடித்து விட்டு,என்றோ வாங்கிய பக்கோடாவை தின்று விட்டு கதையை தொடர்ந்தேன்.
  2.கதையின் மனதை உருக்கும் சம்பவங்கள் இல்லை.அது மட்டும் Ok என்றிருந்தால்,Just நூலிலையில் மெகா வார்ப்பு என்ற தவற விட்டிருக்கிறது.
  மற்றபடி இது மறக்க முடியாத டெக்ஸ் அனுபவம் தான்.
  சூப்பர்-டூப்பர் இதழ் தான்.
  நீதி:
  1.எடிட்டர் மொக்கை என்று என்னும் டெக்ஸ்-ன் இந்திய கதை சார்ந்த இதழை,அவர் வெளிட்டே ஆகவேண்டும். அதை படித்து Super Hit ஆக்கியே தீருவதென்ற முடிவில் நாங்கள் இருக்கிறோம்,கதை அதோடு முடிந்து விடவில்லை,அதன் வண்ண பதிப்பை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற போராட்டத்தையும் எழுப்ப உள்ளோம்.
  2.டெக்ஸ் அனைத்து கதைகளிலும்,டெரர்களை தேடி தேடி போட்டு தள்ளுகிறார். இவரை போட்டு தள்ள வேண்டுமென்று, ஏதாவது கேங்க் டெக்ஸ்-அ தேடி அலையும் கதை உண்டா
  3.டெக்ஸை, ஜெயிலில் போட்டு தாக்கும் ஷெரிப் கதை, இந்த ஆண்டுக்கான Slot- ல் உள்ளதா

  ReplyDelete
  Replies
  1. //நூல் இழையில் வல்லவர்கள் வீழ்வ தில்லை இமேஜை பெற தவறி விடுகின்றன.
   காரணம்
   1. கதையின் இடையில் 2 இன்ரவல் வருகிறது. காபி யாரும் போட்டு தராததால்,கேனில் இருந்த தண்ணியை குடித்து விட்டு,என்றோ வாங்கிய பக்கோடாவை தின்று விட்டு கதையை தொடர்ந்தேன்.///

   ஹா.ஹா.ஹா..

   Delete