நண்பர்களே,
வணக்கம். ‘அதோ வருது.... இதோ நெருங்கி விட்டது‘ என்று வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு விதமான எதிர்பார்ப்புகளை நம்முள் விதைத்திருந்த தீபத் திருநாள் இதோ புலர்ந்தும் விட்டது! ‘திடும்‘; ‘திடும்‘ என்று எழும் ஓசைகளும், ‘ஊஊஷ்ஷ்‘ என்ற சீற்றச் சத்தங்களும் சந்து பொந்தையெல்லாம் நிறைத்து உற்சாகமான தீபாவளிக் கொண்டாட்டங்களைப் பறைசாற்றுகின்றன ! நம் பங்குக்கு, இரவுக் கழுகாரும், டீமும் முழுவீச்சில் அதிரடி நடத்தும் தீபாவளி மலரின் மார்க்கமாய் சின்னதொரு சரவெடியைக் கோர்த்துவிட்ட சந்தோஷத்துடன் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறோம்! Have a wonderful & safe Diwali all!
நல்ல நாளும் பொழுதுமாய், ஆளாளுக்குச் சொந்த ஊர்ப் பயணம்; குடும்பங்களோடு புதுப் பட outing ; டி.வி.யில் பட்டிமன்ற லயிப்புகள் என்று பிஸியாக இருக்கும் இந்த வாரயிறுதியில் - ‘அது வந்துடா பேராண்டி... அந்தக் காலத்தில் எப்படியிருந்தோம் தெரியுமா ?‘ என்ற ரேஞ்சில் இன்னமுமொரு விசாலமான ப்ளாஷ்பேக்கை எடுத்து விட்டு உங்களை நான் கொலையாய்க் கொல்வதாகயில்லை ! மாறாக- நமது இந்த நெடும் பயணத்தின் ஒரு வெகு சமீப மைல்கல் தருணத்தைப் பற்றிச் சொல்லி விட்டு I am ஜுட்!
ஆண்டாண்டு காலமாய் இந்தக் காமிக்ஸ் துறையில் நாமுள்ளோம் தான் ; மூன்று தலைமுறைகளை இந்தப் பயணம் பார்த்து வருகிறது ; வண்டி வண்டியாய் இதழ்களை வெளியிட்டுள்ளோம் தான் ! ஆனால்- நமது முயற்சிகளை “2012க்கு முன்” & “2012க்குப் பின்” என்று வரலாறு (ஹி! ஹி! ஹி!) பிரித்துப் பார்க்குமென்பது உறுதி ! இந்த இரண்டாம் வருகையின் போது - பெரிய சைஸ்; வண்ணம்; தயாரிப்பில் இயன்ற முன்னேற்றங்கள் என்பதோடு கதைக் களங்களிலும் ஒரு புதுத்தேடல் இருப்பதை நாமறிவோம் ! இவற்றிற்கெல்லாம் உங்களது ஆரவாரமான பாராட்டுக்களும், சிலாகிப்புகளும் தொடர்ந்து இருந்து வருவதில் இரகசியமில்லை ! ஆனால் வெகு சமீபமாய் இவற்றிற்குக் கிட்டியுள்ளதொரு அசாத்திய அங்கீகாரம் - நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் ரகத்திலானது!
‘ஆலையிலா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை‘ என்ற கதையாக - நமது அந்நாட்களது பாக்கெட் சைஸ்கள் & நியூஸ் பிரிண்டில் b&w கதைகளும் உங்களின் வாஞ்சைகளுக்கு உகந்தவைகளாகவே இருந்து வந்துள்ளன ! நிஜத்தைச் சொல்லப் போனால் - ‘பழசா? புதுசா?‘ என்ற கேள்வியை இன்றைக்கு முன்வைத்தாலும் உங்களுள் ஏராளமானோர் - அந்நாட்களது ஆக்கங்களுக்கே ‘ஜே‘ போடுவீர்கள் என்பதை நானறிவேன் ! ஆனால் நமது குறுகிய காமிக்ஸ் வட்டத்தைத் தாண்டிய வேறு எவரும் அன்றைய நமது இதழ்களுக்கொரு இரண்டாவது பார்வையை நல்க ஆர்வம் காட்டியிருந்ததாக எனக்கு நினைவில்லை ! ‘இவை தான் நாங்கள் வெளியிடும் இதழ்கள் !‘ என்று பந்தாவாய் ஒரு ஸ்பைடரையோ; ஆர்ச்சியையோ நான் நீட்டினால் - படைப்பாளிகளில் முக்கால்பங்கினர் சின்னதொரு செயற்கையான புன்னகையோடே- ‘Nice!’ என்று சொல்லிக் கொள்வார்கள். என் தலை அந்தப் பக்கமாய் அகன்ற மறுகணமே அவற்றைக் குப்பைக்கூடைகளுக்கு அனுப்பியிருப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகங்கள் இருந்ததில்லை ! வெளிநாட்டினர் ஏன் ? - உள்ளுர்களிலேயே ஒரு லேண்ட்மார்க் புக்ஷாப்பிலோ; ஹிக்கின்ம்பாதம்ஸிலோ; இண்டியா புக் ஹவுஸிலோ நமது இதழ்களைப் பார்க்கும் போது ‘ஓஹோ! இது தான் உங்க ‘ஓஹோ புரொடக்ஷனோ?‘ என்ற மாதிரியே ஒரு லுக் விடுவதை நான் பல தடவைகள் அனுபவத்தில் கண்டிருக்கிறேன் ! ஆனால் அத்தனைக்கும் பிறகும் நமது படைப்பாளிகள் நம்மைக் கைவிடாது - தொடர்ந்து கதைகள் தந்து வந்தது எந்தச் சாமியின் புண்ணியமோ- சத்தியமாய்த் தெரியாது ! ஆனால் post 2012- நிலவரமே தலைகீழ் எனலாம்!
வழு வழு ஆர்ட் பேப்பரில் ; பளா பளா வண்ணத்தில் ; ஒரு தெளிவான சைஸோடு நாம் வலம் வரத் துவங்கிய நாள் முதலாய் - காமிக்ஸ் அபிமானமிலா புதியவர்கள் கூட நின்று நமது இதழ்களை ரசித்து வருவதை ஏகப்பட்ட புத்தகவிழாக்களில் கவனிக்க முடிந்துள்ளது ! அதையெல்லாம் விடப் பதிப்பகத்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட ஜாம்பவான்கள் பலரின் விழிகளிலும் ஒரு ஆச்சர்யம் தெறிப்பதை உள்ளுக்குள் சத்தமில்லாமல் ரசித்திருக்கிறேன் ! நம் மீதும், காமிக்ஸ் ரசனை மீதும் கொண்டுள்ள பிரியத்தின் காரணமாய், சில பல குறைகளை நீங்கள் ஒதுக்கி விட்டு பாராட்டுக்களை அள்ளித் தெளிப்பது இயல்பே ! ஆனால் இதே துறையிலுள்ள - இந்தச் சிரமங்களைப் புரிந்து வைத்திருக்கும் சக பத்திரிகையாளர்கள் வியப்புக் கொள்ளும் போது - அதனை ஒரு மெகா compliment ஆக எடுத்துக் கொள்வேன் ! சரி - நம்மூர் பாணிகளுக்கு இதுவொரு மேல்நோக்கிய மாற்றமே என்றாலும் - மேற்கத்திய நாடுகளின் தரங்கள் முன்பு இப்போதும் கூட ஜுஜுப்பிக்களே என்பதை நிச்சயமாய் மறுக்கப் போவதில்லை நான் ! ஆனால் நமது படைப்பாளிகளே கூட நம்மின் இந்த மாற்றங்களை- ‘அடடே!‘ என்று ரசிக்கத் துவங்கியிருப்பது நமது பயணப்பாதைக்கொரு பெட்ரோமேக்ஸ் வெளிச்சம் என்பேன் ! அத்தகையதொரு தருணத்தில் துளிர் விட்டது தான் இந்தப் பதிவிற்கானப் பின்னணிக் காரணம்!
இந்த ஆண்டின் துவக்கப் பகுதியினொரு மதியப் பொழுது அது ! பாரிசிலிருக்கும் நமது படைப்பாளிகளின் அலுவலகத்தில், அதிசயமாய் ஒரு செம relaxed சந்திப்புக்கு வாய்ப்புக் கிட்டியிருந்தது. பொதுவாகவே நான் ‘விசிட்‘ அடிக்கவிருக்கிறேன் எனில் - என்னென்ன பேசிடத் தேவையிருக்குமோ அவை அனைத்தையும் தயாராக வைத்திருப்பார்கள் ! ‘வாம்மா... மின்னல்‘ என்ற வேகத்தில் நான் ஆஜராகிட, லொட லொடவென மூச்சு வாங்காமல் பேசி விட்டு, திடுபுடுவென புறப்பட்டு விடுவேன் என்பது அவர்களுக்குத் தெரியும் ! நான் அத்தனை ‘ஆணி பிடுங்கும் பிஸி‘ என்பதை விடவும் - நமக்கென மெகாப் பரிவோடு ஒத்தாசை செய்து வரும் படைப்பாளிகளின் நேரத்தைத் தேவையின்றி ஸ்வாஹா செய்த பாவம் வேண்டாமே ! என்ற ஜாக்கிரதையுணர்வு தான் எனது ‘மின்னல் மனிதன்‘ அவதாரத்தின் பின்னணி! ஆனால் அன்றைய பொழுதுதோ அவர்களே ஜாலியாய் கொஞ்சம் அரட்டையடிக்கும் மூடில் இருக்கிறார்கள் என்பது புரிந்தது ! ‘அட்ரா சக்கை‘ என்ற துள்ளலோடு அவர்களைப் பேச அனுமதித்து விட்டுப் பராக்குப் பார்க்கத் தொடங்கினேன் ! ஊர்க்கதை, உள்ளுர்க்கதை என்றெல்லாம் பேசி விட்டு, நமது “இரத்தப் படலம்” மெகா b&w தொகுப்பை தனது மேஜையோரத்திலிருக்கும் ததும்பி வழியும் அலமாரியின் மேலிருந்து எடுத்தார் ! நன்றாகவே பழுப்பேறி விட்டிருந்தது அந்த நியூஸ் பிரிண்ட் இதழ் ! ஆனாலும் அதனை ஒரு சந்தோஷப் பார்வை பார்த்து விட்டு- “ஓவியர் வில்லியம் வான்ஸ் இதனில் 2 பிரதிகள் கேட்டு வாங்கினார் !” என்று ஜாலியாகச் சொன்னார் ! நான் பிரமித்துப் போனது போல முகத்தை வைத்துக் கொண்டேன் - ஏனெனில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இதே விஷயத்தை என்னிடம் ஒரு நாலைந்து தடவைகளாவது சொல்லியிருப்பார் ! ஆனால் இன்னமும் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அந்தத் தலையணை பருமன் இதழின் ஒரு வசீகரம் அவரையுமறியாது உற்சாகம் கொள்ளச் செய்யத் தவறுவதில்லை ! பேசிய கையோடு நமது “மின்னும் மரணம்” வண்ண இதழையும் அருகில் வைத்துக் கொண்டு- ‘you have come a long distance!” என்றார் ! நான் சட்டி, பெட்டியைக் கட்டிக் கொண்டு வந்திருக்கும் பயண தூரத்தை விடவும், நமது காமிக்ஸ் பயணத்தில் கடந்திருக்கும் தூரத்தைத் தான் அவர் குறிப்பிடுகிறார் என்பதால் வாயெல்லாம் மொச்சைக் கொட்டைப் பற்களானேன் ! கிட்டவே கிடந்த லார்கோ; சுட்டி லக்கி, XIII வண்ண இதழ்களையும் புரட்டிக் கொண்டே “ஆசியா முழுவதுமே தரம் கூடிச் செல்லும் காலத்தில், நீங்கள் மாத்திரமே பின்தங்கி நின்றது சற்றே வருத்தம் தந்தது தான் ; ஆனால் இப்போது தேறி விட்டீர்கள் ! You are doing o.k.!” என்றார். சீனாவில் வெளியாகும் லக்கி லூக் வண்ண இதழ்கள் அவர் மேஜையின் இன்னொரு ஓரத்தில் குந்திக் கொண்டிருந்ததை நான் ஏற்கனவே பார்த்திருந்தேன் ! நாமெல்லாம் பெருமூச்சு மட்டுமே விடக்கூடியதொரு தரத்தில் சீனப் பதிப்பகம் அமர்க்களப்படுத்தியிருந்தது ! அவர்களது விலைகளும் அதற்கேற்ற உச்சத்தில் இருப்பது எங்கள் பரஸ்பர கவனங்களுக்கு ‘டிமிக்கி‘ கொடுத்திருக்கவில்லை ! மெதுவாகப் பேச்சு அந்தப் பக்கமாய் பயணம் செய்தது!
”ஒரு யூரோவுக்கும் குறைவான விலையில், இத்தனை சின்ன சர்குலேஷன் வைத்துக் கொண்டு எப்படித்தான் தாக்குப் பிடிக்கிறீர்கள் ? இந்த சீனப் பதிப்பைப் பாருங்களேன்- விலையும் ஒப்பீட்டில் அதிகம் & they sell much much more than you do !” என்று சொன்னார்கள் ! “அடேய் கடன்காரா... எங்களுக்கு ராயல்டியாக நீ தரும் பணம் இங்கே பேரீச்சம்பழம் வாங்கத் தான் சரிப்படும்! என்ற புகார் வாசிக்கும் தொனியல்ல அது ! மாறாகக் கடந்த 30 வருடங்களாய் அவர்களுக்குப் பரிச்சயமானதொரு முகம் - இன்னும் சற்றே வளமாய் தொழிலில் கால் பதித்து நின்றால் சந்தோஷமாக இருக்குமே என்ற பரிவும், ஆதங்கமும் கலந்ததன் வெளிப்பாடு என்பதைச் சுலபமாய்ப் புரிந்து கொண்டேன் ! மந்தகாசமாய் ஒரு புன்னகையைப் பதிலாக்கி, வழக்கம் போல நமது பக்கத்து விற்பனைச் சங்கடங்களை லேசாகக் கோடி காட்டிவிட்டு நம்மிடமே காலம் காலமாய் அச்சகம் உள்ளதால் தயாரிப்புச் செலவுகளில் மிச்சம் பிடிக்கும் சாத்தியங்கள் ஓரளவுக்கு உண்டு என்பதையும் சொல்லி வைத்தேன் !
லேசாய் சிந்தனை வயப்பட்டவர், “எங்கள் தேசக் கலாச்சார மேம்பாட்டு மையங்கள், உலகின் சிலபல முக்கிய இடங்களில் உள்ளன ! எங்கள் மொழி சார்ந்த படைப்புகளுக்கு அவர்கள் சில சமயங்கள் ஏதாவதொரு விதத்தில் ஒத்தாசை செய்திடக் கூடுமென்று நினைக்கிறேன்!” என்றார் ! “ஓஹோ...?” என்று கேட்டுக் கொண்டு வேறு ஏதோ சமாச்சாரங்களைப் பேசிவிட்டு விடைபெற்றேன் ! அவர் குறிப்பிட்டிருந்த விஷயத்தைப் பற்றிப் பெரிதாய் அதன் பின்னர் சிந்திக்க நேரமும் இருக்கவில்லை ; ஞாபகமும் இருக்கவில்லை ! நாட்களும், மாதங்களும் விறுவிறுவென்று ஓட்டம்பிடிக்க, மே மாதம் புலர்ந்திருந்தது. பொதுவாக ஜனவரியில் உங்கள் சந்தாக்கள் + சென்னைப் புத்தக விழாவின் விற்பனை வரவுகளென்று ஆரோக்கியம் காட்டும் நமது வங்கிக் கணக்கானது, ஆண்டு மலர் வெளியாகும் ஜுலையின் போது டி.பி. பேஷண்ட் போல காட்சி தரத் தொடங்கும் ! ஆகஸ்டில் ஈரோட்டுப் புத்தக விழா கொஞ்சமாய் க்ளுகோஸ் ஏற்றித் தர, அதன் பின்னே கோவை, மதுரை என்று சிறுசிறு வைட்டமின் டானிக்குகளை உள்ளே தள்ளிக் கொண்டே டிசம்பர் வரை வண்டியை தள்ளிக் கொண்டே போன கதையாகயிருப்பது வாடிக்கை ! ஆனால் இம்முறை சென்னை வெள்ளங்கள் ; புத்தக விழாவின் மட்டுப்பட்ட விற்பனை காரணமாய் மே மாதமே நமது வங்கிக் கணக்கு கள் குடித்த குரங்கு போல தடுமாறத் தொடங்கியிருந்தது ! அப்போது தான் பாரிசின் அந்த மதிய வேளையில் எனக்குச் சொல்லப்பட்டிருந்த அறிவுரை லேசாக மண்டையில் பதிவாகத் துவங்கியது. விறுவிறுவென்று அவருக்கே ஒரு ஈ-மெயில் தட்டி விட்டு, இது தொடர்பாய் யாருக்குத் தொடர்பு கொள்வதென்று கேட்டு வைத்தேன் ! தலைநகரத்திலுள்ள பிரெஞ்சுத் தூதரகத்திலேயே மையம் இருப்பதாகப் பதில் கிட்டியது ! என்ன எதிர்பார்ப்பது என்ற ஐடியா துளியும் இல்லை என்றபோதிலும், நமது சமீப ப்ரான்கோ-பெல்ஜிய இதழ்கள் சகலத்திலும் ஒரு பிரதி வீதம் - மொத்தமாய் சேகரித்து ஒரு அழகான பார்சலாக்கினேன். காக்கைக்குத் தன் இளவல்கள் என்றைக்குமே 916 kdm ரகம் தான் என்றாலும் – ஒரு 4 ஆண்டு உழைப்பின் பலன்களை ஒட்டுமொத்தமாய் மேஜைமீது குவித்துப் பார்க்கும் போது எனக்கே லேசான மலைப்பு எழத் தவறவில்லை ! அந்த மெகா கத்தை இதழ்களோடு சின்னதொரு கடிதத்தையுட் இணைத்திருந்தேன் - நமது 1985 முதலான பிரெஞ்சுக் காமிக்ஸ் நேசங்கள் பற்றியும் ; நாமிதுவரை கைகோர்த்து வரும் பிரபல பிரெஞ்சுப் பதிப்பகங்கள் பற்றியும் எழுதி ! “எங்களது இந்தப் பதிப்புகளை உங்களது நூலகத்தில் ஒரு சிறு அங்கமாக்கின் பெருமிதம் கொள்வோம் !” என்றும் எழுதியிருந்தேன் ! DTDC கூரியரில் பார்சலை அனுப்பி விட்டு மாமூலான பணிகளுக்குள் ஐக்கியமாகியிருந்தேன் !
10 நாட்கள் கழித்துப் புதியதொரு முகவரியிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது ! அவ்வப்போது ஐரோப்பியக் காமிக்ஸ் சேகரிப்பாளர்களிடமிருந்து “ரோஜர் இதழ்கள் வேண்டும் ; சுஸ்கி விஸ்கி வேண்டும் !” என்று மின்னஞ்சல்கள் வருவது வழக்கமென்பதால் அந்தப் பிரெஞ்சுப் பெயர் தாங்கிய மின்னஞ்சல் என் புருவங்களை உயரச் செய்யவில்லை ! ஆனால் அதனை வாசிக்கத் தொடங்கிய போது - மின்சார துவாரத்திற்குள் நமது மாயாவிகாரு விரல் விடும் போது என்ன உணர்ந்திடுவாரோ அதனை நானும் உணர்ந்திட முடிந்தது ! "Dear Mr.Vijayan, உங்கள் கடிதமும், அந்தக் காமிக்ஸ் குவியலும் கிடைத்தன ! And we are simply stunned!” என்று துவங்கிய அந்த மின்னஞ்சலின் வரிகளைப் படிக்கப் படிக்க நமது சுட்டிப் புயல் பென்னியைப் போல நாலுமாடிக் கட்டிடங்களைத் தாண்டிக் குதிக்கக் கூடிய ஆற்றல் எனக்கு வந்ததைப் போல உணர்ந்தேன் !! “இந்தியாவின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு எங்கள் மொழியின் ஒரு அற்புத அங்கமான காமிக்ஸ்களை இத்தனை அழகாய் இத்தனை காலமாய் வெளியிட்டு வருகிறீர்களென்பது just incredible ! எங்களால் இயன்ற விதங்களில் உங்களுக்கு உதவிடத் தயாராகயிருப்போம்!” என்று தொடர்ந்தது அந்த மின்னஞ்சல் ! அந்தத் துறையின் நிர்வாகியே ஒரு காமிக்ஸ் ரசிகை என்பதால் - அவரது பால்யத்தில் பார்த்தும், படித்தும், ரசித்துமிருந்த எண்ணற்ற தொடர்களை ஒட்டுமொத்தமாய் இங்கு தமிழில் பார்க்க நேரிட்டது அவருக்கொரு திகைப்பான அனுபவமென்பது புரிந்தது !
தொடர்ந்த நாட்களில் நமது விற்பனை விபரங்கள் ; நமது இத்தனை கால அனுபவங்கள் ; தமிழக பதிப்புலக நிலவரங்கள் என சகலம் பற்றியும் மின்னஞ்சல்களும், புள்ளி விபரங்களும் குறுக்கும். நெடுக்கும் பயணமாகத் தொடங்கின ! பாரிஸிலிருக்கக் கூடிய அவர்களது தலைமையகத்துக்கும் அந்த மின்னஞ்சல்கள் copy அனுப்பப்பட, நமது நிலை பற்றியதொரு ஆய்வை அவர்கள் மேற்கொண்டார்கள் ! ஒரு சுபயோக சுபதினத்தில்- “உங்களின் புதிய முயற்சிகளுக்கு எங்கள் மையம் இயன்ற உதவிகளைச் செய்திடுவதென்று தீர்மானித்துள்ளது! உங்களது அடுத்த புதிய இலக்கு என்னவோ?” என்று கேட்டார்கள்! அது நமது Million & More ஸ்பெஷல் பற்றிய திட்டமிடலில் நானிருந்த தருணம் என்பதால் - புது நாயகர் JEREMIAH பற்றியும்; நமது வலைப்பதிவின் 20 இலட்சம் + பார்வைகளைக் கொண்டாடும் விதமாய் அதனை வெளியிடவிருப்பது பற்றியும் விளக்கினேன். “தயாரிப்புச் செலவுகளுக்கு உதவிட ; விளம்பரம் செய்திட உதவிட - எங்கள் மையத்தின் சார்பில் ஒரு தொகையினை மான்யம் போல உங்களுக்குத் தருவதென்றுத் தீர்மானித்துள்ளோம்! ஏற்கனவே நீங்கள் செய்து வரும் முயற்சிகள் அதன் போக்கில் பயணிக்கட்டும் ; புதிதாய் / சற்றே பெரிதாய் நீங்கள் திட்டமிடும் போது எங்கள் ஆதரவு உங்களுக்கு நிச்சயம் இருந்திடும் !” என்று அந்த அதிகாரபூர்வமான கடிதம் பாரிஸ் அமைச்சகத்திடமிருந்து கிட்டிய போது - 1985-ல் பச்சைக் குழந்தையாய் இந்தப் பிரான்கோ-பெல்ஜியக் காமிக்ஸ் உலகினுள் கால் பதிக்கக் கர்ணம் போட்டுத் திரிந்த நாட்கள் என் கண் முன்னே நிழலாடின ! சிட்டாயப் பறந்து விட்ட இந்த 30+ ஆண்டுகளில் நாம் பார்த்துள்ள பிரெஞ்சுத் தொடர்கள் தான் எத்தனை- எத்தனை ? அந்த தேசத்தோடும் ; அவர்களது படைப்புகளோடும் நமக்கு உருவாகியுள்ள அந்த ‘சங்கர் சிமெண்ட்‘ பந்தம் இன்றும் தொடர்வது நமது ரசனைகளுக்கொரு ஷொட்டு தானே ? And அதை நமக்குத் தந்திடும் தேசமே நம்மை இன்று அங்கீகரித்திருப்பது நம் அனைவரது தொப்பிகளிலும் ஒரு வண்மையான இறகல்லவா ? நமக்கு சாங்ஷன் ஆகியுள்ள தொகை நவம்பரில் கைக்குக் கிட்டிடும் ! தொகையின் அளவு எத்தகையாகயிருப்பினும்- அதன் பின்னுள்ள அன்பும், நட்பும், பாராட்டுக்களும் ஒரு மில்லியனுக்கும் அதிகமாகிடாதா ? Take a bow people ! இது உங்கள் அனைவரின் ஒட்டுமொத்த ரசனைகளுக்குமான பாராட்டுகளே ! உங்கள் பங்களிப்புகளின்றிப் போனால் - தண்டவாளமேது ? பயணம் தானேது ?
So- ஜெரமையா தொடரை பிரெஞ்சு அரசின் அன்பான உதவியோடு தொடங்கிடவுள்ளோம் ! இந்த ஏற்பாடுகளெல்லாம் பாதி வழியில் நமக்குக் கிடைத்தவை என்பதால் - Super 6-ன் முதல் இதழாக லக்கி லூக் Classics-ஐக் களமிறக்கி விட்டு, அதன் பின்பாக MILLION & MORE SPL-ஐ தயாரிப்பதெனத் தீர்மானித்துள்ளோம் ! ஈரோட்டுப் புத்தக விழாவின் வாசக சந்திப்பின் தருணத்தில் நான் லேசாகக் கோடிட்டுக் காட்டியது இந்த விஷயத்தையே ! எல்லாமே திடமாகி, நடைமுறை காணும் வரை அதைப் பற்றி வாய் திறக்க வேண்டாமென்று இந்தச் சமாச்சாரத்தை ஜுனியர் எடிட்டரோடு மட்டும் பகிர்ந்திருந்தேன் ! சீனியர் எடிட்டருக்கே இந்தப் பதிவைப் படிக்கும் போது தான் விஷயம் தெரிந்திடும் ! பெவிகால் பூச்சை இந்த நல்ல நாளில் களைவதில் தப்பில்லை என்று தோன்றியதால் இந்தப் பதிவு !! ‘ஒத்தாசை செய்திட நாங்க உள்ளோம்!‘ என்று அவர்கள் சொன்னதற்காக - அவர்களது கதவுகளைத் தினமும் தட்டி நின்று ‘ஹி... ஹி‘ என்று மண்டையைச் சொரியப் போவதெல்லாம் நிச்சயமிராது ! அது பிரியத்தையும், மரியாதையையும் அடமானம் வைக்கச் செய்த முயற்சியாகிவிடும் என்பதில் எனக்குள் சந்தேகமில்லை ! So வழக்கமான நமது தடத்தில் வழக்கம் போலப் பயணிப்போம் ! ஏதேனும் புது முயற்சிகளின் தருணங்களில் இத்தகைய ஒத்தாசை கிடைப்பின் அதனையும் கூட பைக்குள் திணித்துக் கொள்ளாது - இது நாள் வரை நமக்குச் சாத்தியமாகிடா விளம்பரங்களின் பொருட்டு செலவிடாமென்றுள்ளோம் ! பார்க்கலாமே !!
Alrite guys !! “சின்னதொரு பதிவு” என்று ஆரம்பித்து விட்டு ஜீனியஸ் ஸ்மர்ஃப் போல நீளமாய், விஸ்தீரணமாய் ; வேகமாய் ; விலாவாரியாய் ; விசாலமாய் ; மூச்சு விடாமல் ; மும்முரமாய் ; முத்தாய்ப்பாய் ; பேசிக் கொண்டே போகிறேன் ! இதற்கு மேலும் உங்களை இந்த வாரயிறுதியில் படுத்தி எடுக்காமல் புறப்படுகிறேன் ! மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள் ! உங்கள் “கனவு இதழ்கள்” பற்றியும் ; புது இதழ்களின் விமர்சனம் பற்றியும் தொடரும் நாட்களில் இங்கு தொடர்வோமே?! Have a ball all! Bye for now!
And - இதோ - சந்தா A ஒன்றினை யாருக்கேனும் பரிசளிக்கவொரு வாய்ப்பு !! வழக்கம் போலொரு caption போட்டி !!
And - இதோ - சந்தா A ஒன்றினை யாருக்கேனும் பரிசளிக்கவொரு வாய்ப்பு !! வழக்கம் போலொரு caption போட்டி !!
me first?
ReplyDeleteஆசிரியர் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் ஆசிரியரின் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநம் இணைய நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
AT Rajan : நன்றிகளும், வாழ்த்துக்களும் சார் !
Deleteமீ
ReplyDeleteI4
ReplyDeleteHappy diwali editor sir!
ReplyDeleteARVIND : Thank you ! Wishes to you too !
Deleteஎடிட்டர் சார்.
ReplyDeleteமுயற்சி திருவினையாக்கும்.
அதைத்தான் உங்களது பதிவு உணர்த்துகிறது..
+
DeleteHappy Deepawali Editor Sir to you and your family.
ReplyDeleteHappy Deepawali to all friends and your family
Mahesh : Thank you & Greetings !
Deleteஇனிய தீபாவளி திருநாளில் மகிழ்ச்சி மத்தாப்பாய் பொங்கும் இனிய பதிவு ...நிரம்ப நிரம்ப சந்தோசமாய் உள்ளது சார் ..வாழ்த்துக்களை மனதார தெரிவித்து கொள்கிறேன் ...
ReplyDeleteதங்களுக்கும் ..தங்கள் குடும்பத்தினர் ..பணியாளர்கள் ..காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ..
அனைவருக்கும் தீபஒளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவேதாள வேட்டை ...
ReplyDeleteஅட்டைப்படம் ஏமாற்றினாலும் உள்ளே சித்திரதரங்களும் ...கதையும் ...ராபினும் வழக்கம் போல ஏமாற்ற வில்லை ..வில்லன் யார் என ராபினை போலவே பாதியில் நாமும் அறிந்து கொண்டாலும் ஒரு ஜானி கதையை படித்த திருப்தி..
நன்று ...
அருமையான பதிவு....இரத்தபடலம் என படித்தவுடன் கொப்பளித்து ஆடிய ுணர்வு செல்ல செல்ல வடிந்து விட...விளம்பரத்திற்கான ுதவித் தொகை இதப் பாருடான்னு வியக்க வைக்க....தீபாவளியின் உச்ச சந்தோசம்...அதிஷ்ட தேவதை வாயில் கதவை தட்டுகிறாள் ...திறந்து விடுங்கள் கூச்சமின்றி கதவை...வேணும்னா பாருங்க.... இனி நமது இதழ்களின் விற்பனை நம்மை நம்மை ஸ்பைடரின் ஜெட்டில் பறக்கச் ச்வது நிச்சயம்...கொலைப்படைய ....கொஞ்சம் சீக்கிரம் முப்பத்தைந்தாம் ஆண்டு மலரர்ல அதே மாதிரி....
ReplyDelete@ ஸ்டீல்
Delete//அதிஷ்ட தேவதை வாயில் கதவை தட்டுகிறாள்//
ஏன்... கையால் தட்டவேண்டியதுதானே?!! ;)
வாயால் தட்னா முத்தம்..கையால் தட்னா சத்தம் ..அதான்
Deleteஎடிட்டர் சார்
ReplyDeleteபனிக்கடலில் பயங்கர எரிமலை
புத்தகம் உண்மையிலேயே எரிமலையில் சிக்கிய புத்தகமாகவே வந்திருக்கிறது சார்.
அட்டையை தவிர்த்து உள்ளே பாதிக்கும் அதிகமாக தாள்கள் கசங்கி கசங்கி கிழிந்து வந்துள்ளது சார். படிக்கவே முடியவில்லை.
AT Rajan : பிரதிகளை சரி பார்க்க ஆட்களை நியமித்தும் தவறுகள் நேர்வது வருத்தமளிக்கிறது சார் ! நாளை மாற்றுப் பிரதி அனுப்பப் செய்திடுகிறேன் !
Deleteதலயின் தீபாவளி சரவெடி "சர்வமும் நானே" அருனம, அசத்தல், அட்டகாசம் பார்க்க,படிக்க, தினக்க, இன்னும் இன்னும் என்ன சொல்ல? பார்த்து கொண்டே இருக்கேன்....
ReplyDeleteமுதல் ரவுண்ட் வாசித்து விட்டேன் , இரண்டாவது ரவுண்ட் ஆரம்பம், இன்று முழுவமும் தலயின் கனத மட்டும்தான் படிக்கிற வேனல.....
400 பக்க சித்தரகனத புனதயலில் மூழ்கி தேடலில் குதுத்து விட்டேன்.....
yazhisai selva : படிங்க..படிச்சிட்டே இருங்க !! புரட்டப் புரட்டப் பக்கங்கள் 400 உள்ளனவே !!
DeleteWow, nice to hear about the help we are getting for our new efforts, hope you publish 2 mega books in the first half and second half of every year. If possible please consider adding another mega project next year. This news has sown more expectations for new mega experiments. All the best sir.
ReplyDeleteஅருமையான சேதி... சிறப்பான அங்கீகாரம்... வாழ்த்துக்கள் சார்! :)
ReplyDelete+1
DeleteKarthik Somalinga : நன்றிகள் கார்த்திக் !
Delete//“தயாரிப்புச் செலவுகளுக்கு உதவிட ; விளம்பரம் செய்திட உதவிட - எங்கள் மையத்தின் சார்பில் ஒரு தொகையினை மான்யம் போல உங்களுக்குத் தருவதென்றுத் தீர்மானித்துள்ளோம்! ஏற்கனவே நீங்கள் செய்து வரும் முயற்சிகள் அதன் போக்கில் பயணிக்கட்டும் ; புதிதாய் / சற்றே பெரிதாய் நீங்கள் திட்டமிடும் போது எங்கள் ஆதரவு உங்களுக்கு நிச்சயம் இருந்திடும் !” என்று அந்த அதிகாரபூர்வமான கடிதம் பாரிஸ் அமைச்சகத்திடமிருந்து கிட்டிய போது///
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துகள் எடிட்டர் சார். You deserved it!!!! Keep flying high and high and We will be with you as air under your wings!!!!
Mohammed Harris : Thanks ever so much sir !
Deleteவணக்கம் சார்....
ReplyDeleteஅன்பின் ஆசிரியருக்கும், மூத்த ஆசிரியர் அய்யா செளந்திரபாண்டியன் அவர்களுக்கும், நம் அனைவரின் அன்னையார்க்கும் , ஆசிரியரின் பணியாளர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்
சேலம் Tex விஜயராகவன் : அனைவரின் சார்பிலும் நன்றிகள் & வாழ்த்துக்கள் சார் !
Deleteவிஜயன் சார், நமது லியொனார்டோ தாத்தா கடந்த முறை 6 அடிதார் என்றால் இந்த முறை 2*6 அடித்துவிதார்.
ReplyDeleteஎனது கைகள் சரியான உடன் விரிவான விமர்சனம்.
Kathirvel S : உடம்பை முதலில் கவனியுங்கள் சார் ; மற்றதெல்லாம் அப்புறமாய் !
Deleteஅனைத்து காமிக்ஸ் வாசகர்கள் மற்றும் ஆசிரியர்க்கும் தீபாவளி நல்வாழ்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆசிரியர் &டீமிற்கு தீபாவளி வாழ்த்துகள்.ஆஹா தீபஒளி திருநாளில் ஆனந்த பதிவில் அற்புதமான உதவும் கைகள்..அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteநம் பயணத்திற்கு பெட்ரோல் இன்னொரு இடத்தில் இருந்தும் வருகிறது என்றால் இனி வானமே எல்லை.ஏணியை தூக்கி தாராளமாக வானத்தை நோக்கி போட வேண்டியதுதானே.
அப்படியே கொஞ்சம் இத்தாலி பக்கமும் ஏதேனும் அமைப்பு இருக்கா என்று பாருங்களேன்.ஹீ.ஹீ ஹீ ஹீ ஹீ. ....
Saran Selvi : இத்தாலியில் இட்லியும், கெட்டிச் சட்னியும் தான் உள்ளதாம் !! விசாரிக்காமல் விடுவோமா ? :-) :-)
Deleteஇத்தாலி இட்லி ஒரு பார்சல்.
DeleteThis comment has been removed by the author.
Deleteஇன்றைய தீபாவளி நாளையும் தொடர வேண்டும் என்பதால் நாளையே சர்வமும் நானேயில் மூழ்க வேண்டும் ..ஆனால் அதற்கான விமர்சனம் எழுத தேவையில்லை என்றே நினைக்கிறேன் ..
ReplyDeleteகாரணம் டெக்ஸ் எவ்வளவு சிறப்பாக அமைந்தாலும் ..ம்ஹீம் ..அட்டை இல்லை என்றால் ஒரே கதை ஒரே ப்ளாட் என வருட கணக்கில் கூறி கொண்டே வரும் ரம்மி அவர்களே டெக்ஸின் இந்த கதையை பாராட்டி அலைபேசியில் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு வைத்து விட்டது எனில் அது ..
பிரம்மன் படைத்த படைப்பை பார்த்து பிரம்மனே மயங்கியது போல..
இனி எங்கள் விமர்சனமும் தேவைதானா என்ன...;-)
Paranitharan K : அட..இப்படியுமொரு ஹாட்லைன் ஓடிக் கொண்டுள்ளதா ?
Deleteநீங்கள் செய்திருக்கும் சாதனை மிகப்பெரியது. நான் "எப்படி நீங்கள் வெளிநாட்டு நிறுவனத்திடம் பேசி அதுவும் இரண்டாம் தர நிறுவனங்கள் கிடையாது முதல்தர நிறுவனங்களிடம் பேசி உரிமை வாங்கி வெளியீடுகிறிகள்" என்று நிறைய முறை வியந்தது உண்டு.
ReplyDeleteதண்ணீருக்குள் தூக்கிப் போடப்படும் பொழுது - தலை தப்பிக்கும் வேகத்தில் கடப்பாரை நீச்சலோ, வேறு ஏதொவொன்றோ தானாய் வந்து விடுமல்லவா ? அதே கதைதான் என் விஷயத்திலும் !
Deleteஜெயிக்காவிட்டால் நண்பர்களின் அச்சுக்கூடம் அல்லது பட்டாசு ஆலைகள் ஏதோவொன்றிலொரு குமாஸ்தா வேலைதான் என்ற நிலை எனக்கு 1984-ல் ! So "வெள்ளைக்காரர்கள் ; பெரிய நிறுவனங்கள்" என்ற மிரட்சியைவிடவும் தோல்வியெனில் எனக்கு காத்திருந்த வாழ்க்கையின் சிரமங்கள் பெரும் மிரட்டலாய்க் கண்ணில் பட்டது ! முட்டி மோதிப் பார்ப்போமே என்ற தெளிவு பிறந்தது அதன் பலனாகவே !
இன்றைக்கு, ஏழு கழுதை வயதாகி, எல்லோரிடமும் 30+ ஆண்டுகளாய் நேரடிப் பரிச்சயம் உண்டாகி ; உலகமே ஒரு குட்டியான உருண்டையாய் மாறிப் போய் விட்ட நிலையில் அந்நாட்களது மிரட்சிகள் இப்போது தலைதூக்குவதில்லை தான் ! ஆனால் மேஜையின் எதிர்புறம் இருந்து என் கையைக் குலுக்குவோர் எத்தனை பெரிய ஜாம்பவான் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என்பதை மனது மறந்திடாது !
அதிலும் அமெரிக்க நிறுவனங்களை சந்திக்கச் செல்லும் வேளைகளில் நம்மையும் அறியாமலோரு awe எழுவதைத் தவிர்க்க இயலாது !! இரண்டோ, மூன்றோ ஆண்டுகளுக்கு முன்பாய் DC காமிக்ஸின் நியூயார்க் அலுவலகத்துக்கு விசிட் அடித்த நாட்களை மறக்கவே முடியாது ! NY -ன் மையமான டைம்ஸ் சதுக்கத்திலிருந்து நடக்கும் தொலைவில் இருந்தது அவர்களது 30 மாடி அலுவலகம் ! அந்த சாலையின் இரு பக்கங்களுமே அமெரிக்க தொலைக்காட்சித் தொழிலின் ஜாம்பவான் நிறுவனங்களின் ஸ்டூடியோக்கள் ; அலுவலகங்கள் ! DC -ன் அலுவலகத் தரைத்தள லாபி ஒரு புட்பால் மைதானத்தின் அளவிருக்கும் ; ஆனால் ஒரு நாற்காலியோ ; சோபாவோ கிடையாது ! கறுப்பு கோட் சூட் அணிந்த இரு ஆறடி பீம்பாய்கள் மட்டும் ஒரு மெகா கணினிக்குப் பின்னே அமர்ந்திருந்தனர் ! யாரை - எந்தத் தளத்தில் சந்திக்க வந்துள்ளோம் என்பதை அவர்களிடம் பதிவு செய்து கொண்டால் - சம்பந்தப்பட்டவரிடம் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு மேலே செல்லும் லிஃப்டுக்கு இட்டுச் செல்கிறார்கள் ! அந்த லிப்ட் நாம் செல்ல வேண்டிய தளத்தில் மட்டுமே நிற்கிறது ! அங்கிருக்கும் வரவேற்பறையில் காத்திருந்தால் அருகாமையில் ஒரு ஆறரையடி உசரத்தில் பயில்வான் போலொரு BATMAN உருவம் !! இந்தப் பக்கமோ CLARK KENT அவதாரத்தில் சூப்பர்மேன் ! பராக்குப் பார்த்துக் கொண்டே வந்த வேலையை மறந்து போய் விடும் ஆபத்து அங்கே ஜாஸ்தி !
Entertainment துறையின் உலகத்த தலைநகரல்லவா ?
நான் சந்திக்கவிருந்த நண்பரைப் பார்த்துப் பேசிவிட்டுப் புறப்படும் முன்பாக அந்தத் தளத்தை மட்டுமே சுற்றிக் காட்டினார் ! உப்ப்ப்....ரெண்டே நிமிடங்களில் எனக்குத் தலை சுற்றிவிட்டது - உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்து !! எந்தப் பாதை வழியாக உள்ளே நுழைந்தோம் - எங்கே வாசல் என்று கண்டு பிடிக்கவே மர்ம மனிதன் மார்டினைத் துணைக்கு கூப்பிட வேண்டி வரும் போலும் என்று நினைத்துக் கொண்டேன் ! அதில் ஒரு சந்தோஷச் சேதி - அங்கு பணியாற்றுவதில் ஒரு குறிப்பிடும்படியான எண்ணிக்கையிலானோர் நம்மவர்கள் !!
அதே போல பிரஸ்ஸல்ஸ் நகரிலுள்ள லோம்பா அலுவலகமும் உள்ளே நுழைந்துவிட்டால் காமிக்ஸ் சொர்க்கத்துக்குள் புகுந்த திருப்தி தருமிடம் !!
Deleteஅடேயப்பா......
Deleteகுமாஸ்தா வேலை பார்க்கும் நிலைமை எத்தனை பேருக்கு வந்திருக்கிறது. ஆனால் மிக மிக சொற்பமன சிலரே வெற்றி பெற்று உள்ளனர்.
DeleteDear Lion Comics Team,
ReplyDeleteRecognition and reward from French government is heartening.
With this kind of assistance, you may target a Franco-Belgian Annual edition every year - with 4-5 albums collected - much like the MUTHU 45 special. Regularizing it for Jan, during Chennai book fair may also help in terms of publicity (at the fair) and collection!
Raghavan : பார்ப்போமே சார் !
Deleteஅப்புறம் இந்தாண்டின் சென்னைப் புத்தக விழா ஜனவரி 6-ல் துவங்குகிறது - பச்சையப்பா கல்லூரி வளாகத்தினுள் !! நகருக்குள்ளேயே இம்முறை விழா என்பதால் - ஸ்டால் கிடைப்பின், நிச்சயமாய் விற்பனை சிறப்பாக இருக்குமென்றே நினைக்கத் தோன்றுகிறது !
பச்சையப்பா காலேஜ் கிரௌண்ட் அண்ணா நகரை அடுத்த ஷெனாய் நகரில். முன்பு கூட இங்கே பலமுறைகள் நடந்திருக்கிறது. வசதியான இடம். ஸ்டால் கிடைத்தவுடன் ஒரு அறிவிப்பு செய்யுங்கள்.
Deleteஅனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்
ReplyDeleteThank you sir !
Deleteதாத்தா ...
ReplyDeleteஇதழில் வெளிவந்த சிங்கத்தின் சிறு வயதில் தங்களை மட்டுமல்ல சார் என்னையும் பால்ய வயதிற்கு கொண்டு சென்று விட்டது ..
திகில் லைப்ர்ரி என்ற தலைப்பு அப்போது நமது நிறுவனத்தின் படைப்பு என தெரிய வந்தாலும் உள்ளே புரட்டி பார்த்து அட நாவலா இது என ஏமாந்து போனது இன்னமும் நினைவில் ..சில சிறு சிறு சித்தர கதைகள் கண்ணில் பட்டாலும் அப்போது அது மனதை தொடவில்லை ..பிறகு சில வருடங்களுக்கு பிறகே அதனை ரசிக்க முடிந்தது. சில வருடங்களுக்கு முன்னர் வரை அது கைவசம் இருந்தாலும் நமது மாற்று காமிக்ஸ் இதழுக்காக அதனை ஒரு நண்பரிடம் மாற்றி கொண்டேன் ..
ஆனால் ..இதற்காக இது வரை வராத ஒரு வருத்தம் இம்மாத சி.சிறு வயதில் படித்தவுடன் ஆஹா ஆசிரியரின் எழுத்தாக்கத்தில் வந்த நாவல்களை மிஸ் பண்ணி விட்டோமே என்ற ஏக்கம் தன்னால் ஏற்படுகிறது..:-(
தாத்தாவை பற்றி ஏதும் சொல்ல வில்லையே என நினைக்க வேண்டாம் சார் ..அந்த இதழில் சி.சிறு வயதில் படித்த திருப்தியே எனக்கு போதுமானது ..:-)
////ஆசிரியரின் எழுத்தாக்கத்தில் வந்த நாவல்களை மிஸ் பண்ணி விட்டோமே என்ற ஏக்கம் தன்னால் ஏற்படுகிறது...///
Deleteஉண்மை தலீவரே! நானும் அந்த நாவல்களைப் படித்ததில்லை... பார்த்ததுகூட இல்லை! :(
தலீவர் & செயலாளர் : தப்பிச்சீங்க !!
Deleteநானும்
Deleteதலைவரே !
Delete/ /தாத்தாவைப்பற்றி ஏதுவும் சொல்லவில்லையே.//
நான் எப்பொழதுமே காமிக்சை கடமையே என்று பாடபுத்தகம் போல் படிப்பது இல்லை. காமிக்ஸை கண்டவுடன் நான் என்னையும் அறியாமல் இரும்பை கண்ட காந்தமாய் என்னை ஈர்த்துவிடும்.!
என் பெயர் டைகர் கதையை எப்படியாவது படித்துவிட வேண்டும் என்று இன்னும் முட்டி மோதுகின்றேன் ,சூதாட்ட டேபிலில் பசை போட்டு உட்கார்ந்தவர் எந்திரித்து சாகசம் செய்வார் என்று எதிர்பார்த்தேன்.அப்புறம் பெட்டில் செட்டில் ஆகி விட்டார்.அதற்கு மேல் ஒரு மழைகாலத்தில் படிக்கலாம் என்று ஓரம் கட்டிவிட்டேன்.தாத்தா கதையும் பத்து பக்கத்திற்கு மேல் தாண்ட முடியலை.! ஆக மழைக்காலத்தில் படிக்கவேண்டிய புத்தகங்கள் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டது.!
//சூதாட்ட டேபிலில் பசை போட்டு உட்கார்ந்தவர் எந்திரித்து சாகசம் செய்வார் என்று எதிர்பார்த்தேன்.அப்புறம் பெட்டில் செட்டில் ஆகி விட்டார்//
DeleteLOL. Super sir, படித்தவுடன் சிரித்துவிட்டேன் :-))
மாடஸ்தி சார் ..உண்மை..நானும் தாத்தாவை நான்கோ ..ஐந்து சிறுகதைகள் படித்தேன் ..ஆனால் ம்ஹீம் ராபின் அவர்களையோ..லாரன்ஸ் அவர்களையோ படித்து தாத்தாவை பிறகு பார்த்து கொள்ளலாம் என வைத்து விட்டேன் ..:-(
Deleteடெக்ஸ் என்னும் சூரியன் முன்னே மற்ற நட்சத்திரங்கள் ஒளியிழந்து போய்விட்டது. நானும் டெக்ஸ் & கோ வுடன் வல்லவனை தேடி போவது போல் ஒரு திகில் உணர்வு.!அடேயப்பா ராட்சஸ இதழாக இருப்பினும் கீழே வைக்க மனதில்லாமல் விறுவிறுப்புடன் செல்கிறது.!
Deleteஎடிட்டர் சமூகத்திற்கும், நண்பர் குழாமிற்கும் ஈனாவினாவின் இனிப்பான தீபாவளி வாழ்த்துகள்!!
ReplyDeleteநமது காமிக்ஸுக்கு ஒரு அங்கீகாரமோ அல்லது உதவியோ கிட்டிடும் செய்தி எட்டிடும்போது, வானத்து தேவதைகள் கூட்டமாய் இறங்கிவந்து வாஞ்சையோடு அணைத்துக்கொள்வதைப் போன்றதொரு உணர்வு எழுகிறது! பதிவைப் படிக்கத் தடையாய் விழிகளில் ஏனோ துளிநீர் சேர்ந்துகொண்டதும் உண்மை! எங்கிருந்து வருகிறது இப்படிப்பட்ட உணர்வுகள் என்று எனக்கு நானே ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன்!
கிடைக்கவிருக்கும் உதவிக்கு வாழ்த்துகள் எடிட்டர் சார்! உதவி செய்திடவிருக்கும் அந்த வெள்ளைக்கார நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல!
உதவிகள் கிடைக்கிறதோ இல்லையோ, இப்படிப்பட்ட அங்கீகாரங்கள் புதியதொரு உத்வேகத்தோடு நம் பயணத்தைத் தொடர்ந்திட பக்கபலமாய் இருந்திடும் என்பதும், எடிட்டர் தன் கட்டைவிரலை ஒருவித 'வெறியோடு' நோக்கிட பெரிதும் உதவிடுமென்பதிலும் ஐயமில்லை!
"இரத்தப்படலம் டீலக்ஸ் எடிசன் போடலாம்னு இருக்கோம்... உங்க நிதி உதவியை ஏதாச்சும் ஒரு கார்கோ சர்வீஸுல அனுப்பி வச்சுடுங்க"னு கூச்சப்படாமக் கேட்டுவாங்கிடுங்க எடிட்டர் சார்! ;)
Erode VIJAY : //எங்கிருந்து வருகிறது இப்படிப்பட்ட உணர்வுகள் என்று எனக்கு நானே ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன்!//
Deleteஒரு பொம்மைப் புத்தகத்துக்கு இந்த அலப்பரையா ? என்று வெளியிலிருந்து பார்த்திடுவோர்க்குத் தோன்றிடலாம் தான் ! ஆனால் உணர்வுபூர்வமான இந்த நேச உலகில் வசிக்கும் நமக்குத் தானே தெரியும் இங்கு நாம் சந்தித்திடும் ரம்யங்கள் என்னவென்று !
ஒருவிதத்தில் பார்த்தால் நாமும் அந்த SMURF கும்பலைப் போன்றவர்களே ! நமக்கென ஒரு குட்டி உலகம் ; இங்கே நமக்கே, நமக்கென ரசிக்க, ருசிக்க ஏராளம் ! And அங்கு போலவே இங்கும் பலதரப்பட்ட மாந்தர்கள் ! யாருக்கு - எந்த ரோல் என்பதைத் தீர்மானிப்பது சிரமமாகவே இராதல்லவா ?
எடிட்டர் smurf ரோல் எனக்கு டோய் !!
///ஒருவிதத்தில் பார்த்தால் நாமும் அந்த SMURF கும்பலைப் போன்றவர்களே ! நமக்கென ஒரு குட்டி உலகம் ; இங்கே நமக்கே, நமக்கென ரசிக்க, ருசிக்க ஏராளம் ! And அங்கு போலவே இங்கும் பலதரப்பட்ட மாந்தர்கள் ! யாருக்கு - எந்த ரோல் என்பதைத் தீர்மானிப்பது சிரமமாகவே இராதல்லவா ? ///
Deleteஹா ஹா! சூப்பரா சொன்னிங்க எடிட்டர் சார்!
///எடிட்டர் smurf ரோல் எனக்கு டோய் !!///
'அப்பாவி' ஸ்மர்ப் ரோல் - எனக்கு!
Erode VIJAY : அட...ஜோக்கர் SMURF ரோலை தேர்ந்தெடுப்பீர்கள் என்று நினைத்தேன் !!
Deleteதலீவரின் ரோலை நான் தேர்ந்தெடுத்தால் பதுங்குகுழி புகை மண்டலமாகிவிடாதா எடிட்டர் சார்? ;)
DeleteErode VIJAY : தலீவருக்கு "கடிதக் கணை " அவதார் ஒன்றும் உள்ளதால் - "எழுத்தாளர் SMURF " ஆக்கி விடுவோம் !
Deleteஆசிரியர் & செயலாளர் ..
Deleteஎன்னை வச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே...
ஒருவிதத்தில் பார்த்தால் நாமும் அந்த SMURF கும்பலைப் போன்றவர்களே ! நமக்கென ஒரு குட்டி உலகம் ; இங்கே நமக்கே, நமக்கென ரசிக்க, ருசிக்க ஏராளம் ! And அங்கு போலவே இங்கும்
Delete#####
உண்மையோ உண்மை சார் ..:-)
இந்த குட்டி உலகம் கொஞ்சம் கொஞ்சமாகவாது விரிவடையாதா என்ற ஏக்கமும் ...
அருமையான நாளில் இனிப்பான செய்தி சார் ... காமிக்ஸ் நண்பர்களுக்கும், தங்களுக்கும், சீனியர் மற்றும் ஜூனியர் எடிட்டர், தங்களது குடும்பத்தினர் மற்றும் நமது அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் _/\_
ReplyDeleteதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : நன்றிகளும், வாழ்த்துக்களும் சார் ! பென்னி ரசிகருக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்தைச் சொல்லி விடுங்கள் !
Deleteசீனியர் ஆசிரியர்
ReplyDeleteஆசிரியர்
ஜுனியர் ஆசிரியர்
மற்றும் காமிக்ஸ் நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்ள்
SURESH CHAND H : அனைவரின் சார்பிலும் நன்றிகள் சார் ! உங்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள் !
Deleteஆசிரியருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்
ReplyDeleteவாழ்த்துகள்
ganesh kv : நன்றிகளும், வாழ்த்துக்களும் நண்பரே !
Deleteஎங்கள் குடும்பத்தில் ஒருவரான
ReplyDeleteஆசிரியருக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
செந்தில் சத்யா : தீபாவளி வாழ்த்துக்களுக்கு இன்றைய நன்றிகள் ! உங்கள் இல்லத்திலொருவனாய் என்னைக் கருதுவதற்கு நித்தமும் நன்றிகள் சத்யா !!
Deleteவளமும், நலமும் பெருகட்டும் !
ஆசிரியரே இன்று மட்டுமல்ல என்றும் எனக்கு நீங்கள் ஆசிரியராக மூத்த சகோதரராக காமிக்ஸ் வழிகாட்டியாக இருப்பிர்கள் நான் உங்கள் சிஷ்யானக இளைய சகோதரனாக உங்களை
Deleteபின் தொடர்வேன்
Congrats Sir!!
ReplyDeleteஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
எடிட்டர் சார் மற்றும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பர்கள்
ReplyDeleteடெகஸ் விஜயராகவன்
மாயாவி சிவா
செயலாளர் ஈரோடு விஜய்
தலைவர் பரணிதரன்
கிட் ஆர்ட்டின் கண்ணன்
சி.பி.ஜீ
ரவி அறிவரசு
செல்வம் அபிராமி
ஜேடர்பாளையம் சரவணகுமார்
கரூர் குணா
கரூர் சரவணன்
மாடஸ்டி வெங்கடேஸ்வரன்
மயிலை ராஜா
ஸ்ரீதர் சொக்கப்பா
ஸ்பைடர் ஸ்ரீதர்
சுசீ
புனித சாத்தான்
ஸ்டாலின்
ரம்மி
நாகராஜன் சாந்தன்
ஸ்மார்ட் சத்யா
மகேந்திரன் பரமசிவம்
ஸ்டீல் க்ளா பொன்ராஜ்
சரவணன்.ஆர்
உதய்
பெங்களூர் பரணி
டெக்ஸ் சம்பத்
ஹசன்
ஷல்லும் பெர்ணான்டஸ்
கணேஷ் குமார்
தோழிகள்
கடல் யாழ் ரம்யா
விஷ்ணு பிரியா
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் பெயர் விடுபட்ட நண்பர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம் அவர்களூக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
இடை விடாமல் காமிக்ஸ் படித்தால் நமக்கு எப்போதுமே தீபாவளி தான்
நன்றி செந்தில் சத்யா அவர்களே! உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்!
Deleteஉங்கள் கை தேவலையா இப்போது?
This comment has been removed by the author.
Deleteசெயலாளரே 90 சதவிகிதம் கை சரியாகி விட்டது 3 மாத ஓய்விற்க்கு பிறகு 11 நாட்களாக வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன் விசாரித்ததற்க்கு நன்றி
Deleteநன்றி S.S
Delete😊
DeleteThanks
Deleteநன்றி செ. சத்யா அவர்களே ..தங்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் ..
Delete@ செந்தில் சத்யா
Deleteநன்றி.உங்களுக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் -With GUNA karur
நன்றி நண்பரே!
Deleteநான் கொஞ்சம் லேட்டு !
கூடிய விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துக்கள் !
தீபாவளி வாழ்த்துக்கள் சார்.மெய்யாலுமே இது தீபாவளி நற்செய்திதான் சார்.
ReplyDeleteஆசிரியர் & நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநண்பர்களே, அனைவர்க்கும்தீபத்திருநாள் வணக்கங்கள்.!
ReplyDeleteதிரு விஜயன் அவர்கள் சில நாள் முன்னாடி " உங்க கிளாஸிக் காமிக்ஸ்கதைகள் உள்ள கனவு குண்டு புக் எப்படி இருக்கும்ன்னு சொல்லுங்களேன்.." ன்னு பதிவில் கேட்டிருந்தார்.
பலரும் அவரவர்கள் விருப்பமான பட்டியல் நிறையவே சொல்லியிருந்தார்கள், கனவுகள் அழகா இருந்தாலும்கூட அவைகள் விற்பனையில் எப்படியிருக்கும் அப்படிங்கிறதை கொஞ்சம் யோசித்தால் பெரிய கேள்விதான் முன்னாடி வருது.!
எல்லோர் விருப்பமான, விற்பனையில் பட்டையை கிளப்பும் கிளாஸிக்தொகுப்பு எதுவாக இருக்கும்ன்னு நான் மாத்தியோசிச்சப்போ கிடைச்ச பதில் எல்லோருக்கும் பிடித்தமானத இருக்கணுமில்லையா..!
அது என்னான்னு சொல்றதை விட அந்த கனவுக்கு உருவம் கொடுத்தால்....
இதோ...விருப்பமும் விற்பனையும் கைகோர்த்த ஒரு பிரமாண்டமான இதழை கண்ணு விருந்து படைத்து, திரு விஜயன் அவர்களின் குடும்பத்தாருக்கும், உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் நண்பர்களே..!
இங்கே'கிளிக்'-1
இங்கே'கிளிக்'-2
நட்புடன்
மாயாவி.சிவா
mayavi.siva : சிஸ்கோ & பான்சோ நம் அனைவருக்கும் பிரியமானவர்கள் என்பதில் சந்தேகமே கிடையாது ! ஆனால் இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு இந்த ஜோடியைப் பற்றித் தெரியுமா என்பது தெரியவில்லையே !
Deleteதீபாவளி வாழ்த்துக்கள் சார் !
@ மாயாவி
Deleteஇரண்டாவது இங்கே க்ளிக் - செம! அந்த ஐடியா மற்றும் வடிவமைப்புக்கே அள்ளி அள்ளிக் கொடுக்கலாம்!
ஆசிரியர் அவாகளுக்கு
Deleteசிஸ்கோ & பான்சோ கதைகளில் சித்திரங்கள் மிக நன்றாக இருக்கும். எதிரியின் முகவாயில் சிஸ்கோ விடும் குத்து சூப்பரா? டெகஸ் விடும் குத்து சூப்பரா? என்று பட்டி மன்றமே வைக்கலாம்.
சிஸ்கோவிற்கு குண்டு புக் தயார் செய்த மாயாவி சிவாவிற்கு எனது வாழ்த்துக்கள். மாயாவி சிவாவிற்கு நமது காமிக்ஸ் நண்பர்கள் சிறப்பு பட்டம் ஒன்றை வழங்கலாம்.
எனது கனவு இதழ் சிஸ்கோ கிட், நிறைவேறுமா
Delete//இரண்டாவது இங்கே க்ளிக் - செம! அந்த ஐடியா மற்றும் வடிவமைப்புக்கே அள்ளி அள்ளிக் கொடுக்கலாம்!//
Delete+1
வெல்கம் பேக் மாயாசார்....
Deleteதீபாவளி திருநாளில் ஆசிரியரின் உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரம் காமிக்ஸ்சால் கணிந்த மன வானில் பகலவனின் ஆதிக்கத்திலும் வாணவேடிக்கைகள் நிகழ்திக்கொண்டிருக்க.....
மனசு நிறைந்திருக்கும் வேளையில் சொல்ல ஒன்றும் தோன்றாமல் திகைத்திருக்க, கனவு இதழ் எனும் சிஸ்கோ கிட் மத்தாப்பை கொளுத்தி நிகழ்காலம் திரும்ப செய்துட்டீர்கள்.
இதுமட்டும் நனவானால்,
குத்துவதில் கெத்து காட்டுவது டெக்ஸா , சிஸ்கோவா என் தெரிந்து விடும்...
அந்த நாட்டிய போட்டி பாட்டில் சொல்லும் வசனமான
"சபாஷ் சரியான போட்டி" --யை நாமும் உரக்க சொல்லிடலாம். ஆவண செய்யுங்கள் ஆசிரியர் சார்...
மீண்டு (ம்) வந்த மாயாஜீ அவர்களுக்கு ஒரு பலத்த வரவேற்பு ..
Deleteஅருமையான க்ளிக் ..எனது எண்ணத்தையும் பிரதிபலித்ததிற்கு நன்றி சார் ...
மெகா க்ளாசிக் ஸ்பெஷல் ..
அதே அதே ...அது எப்படி வருகை தந்தாலும் ...ஓகே ...:-)
தீபாவளிக்கு இனிப்பான செய்தி.! எது எப்படியோ எங்களுக்கு நிறைறைறையய காமிக்ஸ் வேண்டும்.!
ReplyDelete// ...அதிகாரபூர்வமான கடிதம் பாரிஸ் அமைச்சகத்திடமிருந்து கிட்டிய போது //
ReplyDeleteமிக மிக மிக உற்சாகமளித்த செய்தி.
கூடிய விரைவில் S.விஜயன் - செவாலியே S.,விஜயன் ஆக எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
தீபாவளி வாழ்த்துக்கள் சார்....
S.V.VENKATESHH : சார்....சார்...நல்லாத் தானே போய்க்கிட்டிருக்கு ?
Deleteசெவாலியே சிங்கமுத்து வாத்தியார்! ஆஹா!!!
DeleteErode VIJAY : ஊஹூம்...ஜோக்கர் SMURF இல்லே...குசும்பு SMURF தான் !
Deleteஹிஹி! அப்புறம்... தீபாவளிப் பலகாரங்களை வாயில் அடக்கிக் கொண்டே கம்ப்யூட்டரில் சரளமாக பதில் டைப்ப உங்களுக்கு எப்படி சாத்தியமாகிறது எடிட்டர் சார்? கீபோட்டு - வாட்டர் ஃப்ரூப் தானே? :P
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteஅல்லாருக்கும் ஏப்பீ தீவாளீ..!!
ReplyDeleteகடமையைச் செய். பலனை எதிர்பாராதே... அது தானே வரும். வர ஆரம்பிச்சுடுச்சு விஜயன் சார்..! வாழ்த்துகள்..!
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் மற்றும் உங்கள் அலுவலக நண்பர்கள் மற்றும் இதர காமிக்ஸ் காதல் நட்பூக்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும்,
இனிய பாதுகாப்பான தீபாவளி கொண்டா(ட்)ட வாழ்த்துகள்..!
வாழ்த்துக்கள் சார், இந்த நல்ல தருணத்தில் நமது கனவாகிய Phantom, mandrake, batman முயர்சி செய்யலாமே.
ReplyDeleteதாத்தா கதையினை படிக்க ஆர்வமே இல்லை. iஉறலைட் பனிக்கடலில் பயங்கர எரிமலைதான். தல எப்போதும் தலதான். காரிக்கன் இல்லாத குறையினை ராபின் போக்கிடுவார்.
ReplyDeleteஅனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDeleteநம் காமிக்ஸ் பற்றி நாம் பெருமை படக்கூடிய செய்தி.
கலாச்சாரத்தையும், பழைய பெருமையை போற்றுவதிலும் பிரெஞ்சுகாரர்களுக்கு நிகர் அவர்களே தான்.
இந்த தீபாவளித்திருநாளில் இப்படி ஒரு இனிப்பான செய்தி வழங்கிய உங்களுக்கு ஒரு பெரிய நன்றி.
பின்குறிப்பு : நீண்ட வருடங்களுக்குப் பிறகு, தீபாவளி நாளிலேயே நமது "தீபாவளி மலரை" படிக்கும் வாய்ப்பு இன்று மாலை கிடைக்கப்போகிறது. மிக்க மகிழ்ச்சி! இதற்காக உழைத்த உங்களுக்கும் உங்கள் டீமுக்கும் ஆயிரம் நன்றிகள்.
A- இங்க பாருப்பா டெக்ஸ் எனக்கும் வயதாகி விட்டது எனக்கு பின் நீ தான் என் மக்களை வழி நடாத்தியாக வேண்டும்.
ReplyDeleteB- மகிழ்ச்சி. என் கடமை அது செவ்விந்திய தலைவரே நீங்கள் சொல்ல வேண்டிய தேவையே இல்லை.
C- செவ்விந்திய தலைவரும் பொறுப்புக்களை இரவு கழுகாரிடம் ஒப்படைத்து விட்டார், நமது பாஸும் தலையாட்டி விட்டார் அரிசோனா முழுக்க பொடி நடையாக நடந்து எனது கால் தான் வலிக்க போகின்றது இது இவர்களுக்கு விளங்கவா போகின்றது அந்த கிழட்டு கார்சனாவது கூட இருப்பானாக இருந்தால் அவனின் விஸ்கி பாட்டிலில் நைசாக வாயை வைத்து கொஞ்சம் ஊத்தி கொண்டு வலி தெரியாமல் நடந்து இருக்கலாம் அந்த கிழவன் எந்த பாய் வீட்டு கல்யானத்தில் உற்கார்ந்து பிரியானி சாப்பிடுகிறாணோ?
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் சார், இந்த நல்ல தருணத்தில் நமது கனவாகிய Phantom, mandrake, batman முயர்சி செய்யலாமே.
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஇந்த நல்ல நாளில் பிரெஞ்சு அரசின் அங்கீகாரம் மிக்க மகிழ்ச்சியான செய்தி!
ReplyDelete103rd
ReplyDelete105th
ReplyDeleteஎடிட்டர் சார்
ReplyDeleteஎவ்வளவோ சிக்கல்கள், சவால்கள், சிரமங்கள், நிச்சயமில்லாத வருமானம் என்ற துறை நமது காமிக்ஸ் என்பதாலேயே பெரிய பத்திரிக்கை ஜாம்பவான்களும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த இந்த துறையில் தனிஒருவனாக நின்று போராடி ஜெயித்ததற்கான சிறிய அங்கீகாரம்தான் இன்றைய உங்களது பதிவினில் நீங்கள் தெரிவித்த விஷயம். இன்னும் எவ்வளவோ நல்ல செய்திகள் உங்களை தேடி வரப்போவது நிச்சயம். உங்களின் நேர்மை, நாணயம், உழைப்பு இவையெல்லாம் வீணாய்போக வாய்ப்பில்லை.
இனி "தன்னம்பிக்கைக்கு நல்ல உதாரணம் எங்கள் ஆசிரியர்" என்று நாங்களெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.
இதனை எழுதுகையில் புரட்சித்தலைவர் பாடல் வரிகளான "மாபெரும் சபைதனில் நீ நடந்தால்-உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றி புகழவேண்டும்" என்ற வரிகள் ஏனோ மனதில் வந்து போகிறது.
தீபாவளி களை கட்டி விட்டது. நன்றி
ReplyDeleteதிரு விஜயன் மற்றும் அவரது குழுவிட்கும் மேலும் நண்பர்கள் எல்லோருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்றும் நட்புடன்
ஓமனில் இருந்து ஆல்ட்ரின் ரமேஷ்
சந்தா B உறுப்பினர் நான் இம்மாதவேதாளவேட்டைஎனக்குஇன்னும் வரவில்லை ச.எ.5002
ReplyDeleteஅன்புள்ள எடிட்டர்,
ReplyDeleteIt's a great news & recognition for all your hard work. Congratulations !
அப்பறமென்ன தாராளமாக தங்களது இரு கால் கட்டை விரல்களையும் பதம் பார்க்க plan பண்ணிட வேண்டியது தானே ;)
தங்களுக்கும், நமது காமிக்ஸ் அலுவலக அன்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
பி.கு. எனக்கு இன்னும் பொட்டி வரல :( So, no 'தல' தீபாவளி
அன்புடன்,
பெரியார்
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! Great achievement sir. Congrats!
ReplyDeleteவிஜயன் சார், ஆனந்தக்கண்ணீர் ததும்பும் பதிவு. சந்தோசம். மனதில் பல அதிர்வுகளை கொடுத்து ஆனந்த அடைய செயது. கைகள் சரியான பின் மற்றவை.
ReplyDeleteஎடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteஆசிரியர் சார்... நல்ல நாளில் மிக சந்தோசமான செய்தி. அடுத்த வருடம் இன்னும் சிறப்பானதாக இருக்க வாழ்த்துகள்...
அன்பு எடி மற்றும் ஜு. எடி நண்பர்கள் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஆசிரியர்&அவர்தம் பணியாளர்கள் மற்றும்
ReplyDeleteநமது வெளியிடுகள் மாதம்தோறும் சிறப்பாக வெளிவர உதவும் நல் உள்ளங்களுக்கும் மற்றும் முகம் காணா முகநூல் நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
ஆசிரியருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் , ஊழியர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் .
ReplyDeleteஆசிரியர் அவரது குடும்பத்தினர், நமது காமிக்ஸ் நண்பர்கள் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாளித்திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteபிரெஞ்சு தேசத்தின் அங்கீகாரமும், ஆதரவும் இன்னுமொரு வடிவில் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி. உங்களது அமெரிக்க விஜயம் பற்றிய சுவாரஸ்ய தருணங்களையும் காமிக்ஸ் தொடர்புகள் பற்றியும் நிச்சயம் எழுதுங்கள் சார், ஆவலோடு எதிர்பார்க்கிறோம்....
எடிட்டருக்கு,
ReplyDeleteABCE சந்தாவை பெறுவதென 2தவணையின் முதல் தொகையாக ₹ 2,5000.00 கட்டியிருக்கிறேன்.
நான் இன்று வரை ஒவ்வொரு மாதமும் அலுவலகம் வந்தே புத்தகங்கள் வாங்கி
வந்து கொண்டிருக்கிறேன்.
நான் மீதி பணம் எவ்வளவு கொடுக்க வேண்டும்.
அலுவலக்கில் கேட்டதற்கு, உங்களிடம் இதை பற்றி கேட்பததற்கு யோசிக்கிறார்கள்.ஒரு வேளை உங்களிடம் பேசுவதற்கு அச்சமா, எனக்கு தெரியவில்லை. இந்த நான் கட்டிய பணத்தை கூட பெற்று கொள்ள அவர்கள் மறுத்தார்கள். ஆனால் என் சூழல் காசு என் வசம் இருந்தால், செலவு ஆகிவிடும் என்று கட்டியிருக்கிறேன். அவர்கள் என்னிடம் பணம் வாங்க மறுத்ததற்கு காரணம், நான் நேரில் வந்து பெற்று கொள்வதால் ,கொரியர் பணம் பற்றியே.
நான் கொரியருக்கான பணத்தை கழித்து விட்டு பணம் கட்ட வேண்டுமா என்பது பற்றித்தான்.
நான் மீதி பணம் எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரிவித்தால், எனது 2ம் தவணையை கட்ட முடியும். எனது பெயரை + 6 பதிப்பிலும் சேர்த்து கொள்ள வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன். அதையும் இணைத்து கட்டி விடுகிறேன்.இங்கு உங்களின் பதிவு செய்தாலும் அல்லது எனது போன் நம்பருக்கு தகவல் தந்தாலும் போதுமானது.
உடன் பதில் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்.
நண்பர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
தீபஒளி எங்கும் பரவட்டும்.
Shinesmile Foundation
Deleteமுதல் தவணை ₹25000/-மா!!!
நீங்கள் முதல் தவணை ₹25000/- என்று பதிவிட்டு பீதியை கிளப்பிவிட்டீர்கள் சார்!!!!
ஒரு வேளை பத்து சந்தாவுக்கான முதல் தவணை தொகையை குறிப்பிட்டிருக்கிறீர்களா?
AT Rajan Sir,
Deleteதங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.நான் பதிவு செய்த போது அதை சரி பார்க்க வில்லை.தவறுதலாக ஒரு பூஜ்யத்தை உடன் இணைத்திருக்கிறேன்.உங்கள் நட்புக்கு நன்றி.
Shinesmile Foundation : சார்..இதழ்களின் மொத்த விலையைக் கூட்டிக் கொள்ளுங்கள் ; அதனில் 10% கழிவு போட்டுக் கொள்ளுங்கள் - மீதம் தான் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ! என்னிடம் கேட்டலாக் கையிலில்லை இப்போது - இந்தக் கணக்கைப் போட்டுச் சொல்லிட !
DeleteShinesmile Foundation
Deleteசார் இதெற்கெதற்கு சார் நன்றிகளெல்லாம்.
உண்மையில் நான் எனது பதிவை இட்டபின் ஒருவேளை நீங்கள் தவறாக எண்ணிவிடுவீர்களோ என்று எண்ணியது நிஜம். ( இங்கு அப்படி பல பேரிடம் வாங்கிக் கட்டியுள்ளேன்)
நல்லவேளை அப்படியெதுவும் நடக்கவில்லை.
அதற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.
உங்களது பெருந்தன்மைக்கு நன்றிகள் சார்.
கப்ஷன் :
ReplyDeleteA: இரவுக்கழுகார் நலம்தானே?
B: ஆமாம், வெள்ளைக் குதிரையாரே! நீங்கள் எப்படி?
C: (மனதுக்குள்) தலைமுழுக்க றெக்கைகளைக் குத்தியிருக்காரு. அவரைப்போயி குதிரைங்கிறாரே நம்மாளு? காலக் கொடுமையப்பா..!
எனது போன் நம்பர்
ReplyDelete948 730 9782
அட! காலையில் நான் பதிவைப் படிக்கும்போது கேப்ஷன் போட்டி இல்லையே?!!
ReplyDeleteஉய்ய்ய்ய்............சான்ஸே இல்லை.! இதுவரை வந்த கதைகளிளே நெ.1 சாகஸம் " சர்வமும் நானே " தான்.காமிக்ஸ் வரலாற்றில் நீளளளளளளத்திலும் சரி அதிரிபுதிரி ஹிட்டிலும் சரி சர்வமும் இதுவே.! பெயருக்கு ஏற்ற கதை வெற்றிக்கு ஏற்ப தலைப்பு.! சூப்பருங்கோ.!!!!
ReplyDeleteவேதாள வேட்டை நல்ல சுவராசியமாக இருந்தது.! முத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்.தாத்தா கதையை தவிர அனைத்து கதைகளுமே சூப்பராக அமைந்துவிட்டது.இனி தாத்தா கதையை பொறுமையுடன் படிக்க வேண்டும்.கிட் ஆர்ட்டின் முகம் போல் அப்பாவி முகம் கொண்ட தனது உதவியாளனை அளவுக்கு மீறி இம்சை கொடுப்பதை ஜீரணிக்க முடியவில்லை.!
Deleteமாடஸ்டி வெங்கடேஸ்வரன். : //.கிட் ஆர்ட்டின் முகம் போல் அப்பாவி முகம் கொண்ட தனது உதவியாளனை அளவுக்கு மீறி இம்சை கொடுப்பதை ஜீரணிக்க முடியவில்லை.!//
Deleteஆல் மீது பரிவும், தாத்தா மீது கோபமும் வருவதே அந்தக் கதாசிரியரின் வெற்றியல்லவா சார் ?
தீபாவளிக்கு புதிய துணிகள் தைத்து முன்னரே வாங்கி வைத்திருந்தாலும்¸ தீபாவளி அன்றுதான் போட்டு அழகு பார்ப்போம். அது போலத்தான் இம்மாத காமிக்ஸ்களை போற்றி பாதுகாத்து புது துணி அணிந்து அதன்; பிறகு படித்து பரவசமடைந்தேன்.
ReplyDeleteநாம் பேருந்திலோ அல்லது புகைவண்டியிலோ செல்லும் பொழுது நிலக்கடலை வாங்கி கொரித்துக் கொண்டு செல்வோம். கடலை நன்றாக இருக்கிறது என்று தின்றுகொண்டு வந்து கடைசி கடலையை வாயில் போட்ட மெல்லும் பொழுது அது சொத்தக் கடலையாக இருந்தால் நமது முகம் எப்படி இருக்கும். அதுபோலத்தான் இன்று எனக்கு அனுபவம். அதாவது முதலில் டேவிட் அடுத்தது ராபின் மூன்றாவதாக தல கடைசியாக தாத்தா கதைகளை படித்த பொழுது ஏற்பட்ட அனுபவம் மேற்சொன்னது போன்றே!
தாத்தா தூள் பரத்தவில்லை.நான் பொன்னி காமிக்ஸ் கூட படித்திருக்கிறேன். ஆனால் அதைவிட அதிகமான பொறுமையினை சோதித்து வெறுப்பேற்றி விட்டது. ஒருவழியாக அதை படித்து முடித்த பிறகுதான் இந்த பதிவினை எழுதினேன். தாத்தா ரசிகர்கள் என்னை மன்னிக்கவும்.
Jegang Atq : ரசனை சார்ந்த விஷயங்களில் மன்னிப்பெல்லாம் கோர அவசியங்கள் ஏது சார் ? - இது உங்களுக்குத் பிடிக்கா சமாச்சாரம் ; அவ்வளவே !
Deleteஉங்களுக்குப் பெரிதும் பிடிக்கும் மறுபதிப்புகளைக் கழுவி ஊற்றும் ஒரு நூறு பேரும் இங்கே உண்டு தானே ? அவரவர் ரசனைகள் - அவரவர் கருத்துக் சுதந்திரங்கள் !
எடிட்டர் சார்
ReplyDeleteநடப்பாண்டு முடிவில் எக்ஸாம் ஒன்று வைப்பீர்கள் அல்லவா?
அதில் வரப்போகும் தலையாய கேள்விக்கான விடை அட்சுரசுத்தமாக தெரிந்துவிட்டது.
கேள்வி : இந்த வருடத்தின் டாப் இதழாக நீங்கள் கருதிடுவது?
பதில் : சர்வமும் நானே ... சர்வமும் நானே...சர்வமும் நானே ...!!!
கிட் ஆர்ட்டின் கண்ணன்.!
Deleteஅடடே!
நாட்டாமை.:
சாட்சி யாரு,? சேலம் டெக்ஸ் சுக்கு மாமாகாருவா .??? செல்லாது.! செல்லாது.!
நடப்பாண்டிற்க்கு மட்டுமல்ல.... இன்னும் சில ஆண்டுகளுக்கும் இது தான் டாப்...
Delete///நடப்பாண்டிற்க்கு மட்டுமல்ல.... இன்னும் சில ஆண்டுகளுக்கும் இது தான் டாப்...///
Deleteஇந்த சாட்சியாவது செல்லுமா நாட்டாமை!?? :-)
//நடப்பாண்டிற்க்கு மட்டுமல்ல.... இன்னும் சில ஆண்டுகளுக்கும் இது தான் டாப்...///...
Delete2016ன் "சர்வமும் நானே"-என்ற மந்திரத்தில் மயங்காதோரும் இந்த காமிக்ஸ் கனவுலகில் உண்டோ...!!!
தென்னையிளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது...!!!
தென்னைதனை சாய்த்துவிடும் புயலாக வரும்போது...!!!
புயலின் வேகத்துக்கும், ஆக்ரோசத்துக்கும் ஆவேசமான ரசிகர்கள் கூட்டம் ஒரு பக்கம்;
நிதானமான ஓட்டத்தில் இன்று மறுபக்கத்தில் இருந்தவர்களையும் தன் போக்கில் வாரிக்கொண்டு,
"சர்வமும் நானே" என ஆசிரியர் சென்றாண்டு ஈரோட்டில் அறிவித்த
டெக்ஸின் விஷ்வரூபத்தை வெற்றிகரமாக்கி இருக்கிறார் டெக்ஸ்...
அதற்கு சாட்சிகள் அல்ல ஆதாரங்கள் தான் நண்பர் ரம்மி போல , ஆண்டு முழுதும் மற்ற நாயகர்களின் தீவிர ரசிகர்கள் தெரிவித்த தீர்ப்புகள்...
@ ALL : செல்லாது...செல்லாது...பரீட்சை தேதியே அறிவிக்கும் முன்பாக விடையினை அவுட் பண்ணுவது செல்லாது !
Deleteஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்..
ReplyDeleteபாரீஸ் லெட்டர் சந்தோஷமான விஷயம். எடிட்டருக்கு
ReplyDeleteவாழ்த்துகள்
நல்ல முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம்..வாழ்த்துக்கள்.. காமிக்ஸ் அன்பர்கள் அனைவருக்கும் கிடைத்த
ReplyDeleteதீபாவளி பரிசு..ஆசிரியருக்கு நன்றி
rajaram.k.Kathalingam : நன்றிகள் சார் !
Delete400 புனதயலில் சிக்கி நான் சின்ற பிடிக்கப் பட்டுள்ளேன்.....
ReplyDeleteகனர திரும்பவில்னல....
3 வது முனறயாக வாசிக்கிறேன் இன்று மட்டும்.....
நல்ல திரு சித்திரக்கதை விருந்தளித்த ஆசிரியர் மற்றும் அவரது அலுவலக உதவியாளர்கள், பணியாளர்கள் அனனவருக்கும் நன்றிகள் பல .....
தீபாவளி வாழ்த்துக்கள் அனனவருக்கும்....
**** தப்பில்ல! நாலு பேர்க்கு சந்தா பரிசளிக்க முடியும்னா எத்தினி கேப்சன் போட்டில கலந்துக்கிட்டாலும் தப்பே இல்ல *****
ReplyDeleteA : வோ! செம தாகத்திலிருக்கும் இந்த சிட்டிங் போந்தா கோழிக்கு தன்னிடமுள்ள சீமைச் சரக்கில் சிறிதளவைக் கொடுப்பாரா இளகியமனம் படைத்த இரவுக்கழுகார்?
(சந்தா) B : ஹா ஹா! அடேய்... படவா ராஸ்கல்! தாடி மீசையை சிரைச்சுக்கிட்டு செவ்விந்திய உடுப்போட உட்கார்ந்திருந்தா உன்னைக் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சியா? 'வறுத்தகறியை தின்னுட்டு வாயை துடைக்காம திரியும் ஒரே ஒரு பிறவி இந்த உலகத்துல எது?'ன்னு கேட்டா என் குதிரை கூட பதில் சொல்லிடும்டா..!
C: டெஃபனட்லி.. டெஃபனட்லி! நீ கேளு தல! ஜாலிஜம்பர் மாதிரி நானும் கால்குளம்பாலயே கார்சன்'னு எழுதிக் காட்டி அசத்திப்புடுறேன் அசத்தி!
This comment has been removed by the author.
ReplyDeleteA: (கார்சன்) எந்த வேஷம் போட்டாலும் கண்டு பிடிச்சிவிடுகிரியே எப்படி தோஸ்த்?
DeleteB: (டெக்ஸ்) எந்த வேஷம் போட்டாலும் உன் வாயை திறந்தவுடன் அடிக்கும் அந்த வறுத்த கறி வாடையும் கடவாய் ஓரத்தில் ஒட்டி கொண்டு இருக்கும் பீன்ஸ் தூண்டையும் வைத்துதான் பெரிசு!
C: நல்லவேளை இந்த ஆடுத்தாடி ஆள் நம்பள வறுத்து சாப்பிடறதுக்குள்ள இவனை கண்டு பிடிச்சாங்களே! டகடும் டகடும் தகடும்!
கொஞ்சம் பட்டி டிங்கரின்க் பார்த்தது:
DeleteA: (கார்சன்) எந்த வேஷம் போட்டாலும் கண்டு பிடிச்சிவிடுகிரியே எப்படி தோஸ்த்?
B: (டெக்ஸ்) எல்லாத்தையும் மறைத்த நீ உன் வாயை திறந்தவுடன் அடிக்கும் அந்த வறுத்த கறி வாடையும் கடவாய் ஓரத்தில் ஒட்டி கொண்டு இருக்கும் பீன்ஸ் தூண்டையும் மறைக்காதது தான் காட்டிகொடுக்குது கிழ பெருசு.
C: ஓ இவன்தான் அந்த வறுத்தகறி வண்டையனா! இந்த ஆடுத்தாடி ஆள் நம்பள வறுத்து சாப்பிடறதுக்குள்ள விடு ஜூட்!
This comment has been removed by the author.
ReplyDeleteகமெண்ட் = பின்னூட்டம்
Deleteவிஜயன் சார்,
Deleteஇந்த மாதம் முதலில் படித்த இதழ் லாரன்ஸ் & டேவிட் கதை! இதற்கு முன் இந்த கதையை படித்து இல்லை, முதல் பக்கத்தில் இருந்து விறுவிறுப்பு, சுவாரசியமான முடிச்சுகள், தெளிவான கதை! டேவிட்டின் சொந்த நாடு மற்றும் அதன் பின்னணியை தெரிந்து கொள்ள செய்தது. இந்த கதையில் லாரன்ஸ் & டேவிட் அடிதடி குறைவுதான் என்றாலும் விறுவிறுப்பான கதை. ஒரே மூச்சில் படித்தபின் தான் கீழே வைத்தேன்! உண்மையில் டேவிட் படத்தை தான் இந்த கதையின் அட்டையில் போட்டு இருக்கவேண்டும், டேவிட்தான் இந்த கதையின் நாயகன்!
இன்றைய புதிய மற்றும் இளம் வாசகர்களுக்கும் இந்த கதை கண்டிப்பாக பிடிக்கும்!!
2 வாரம் இடைவேளைக்கு பின் மடிகணினி மூலம் எனது பின்னூட்டம்!!
எமது நீண்ட காமிக்ஸ் பயணத்தில் உங்களது இடைவிடாத முயச்சியின் காரணத்தாலேயே இந்த பரிசு கிட்டியிருக்கிறது . வாழ்த்துக்கள் . நீங்கள் கூறியது போல் பெரிய தொகையோ , சிறிய தொகையோ சரி , எமக்கு ஒரு துணை இருக்கிறது என்பதே பெரிய பலம் அல்லவா ?
ReplyDeleteபிரான்ஸ் இல் நானும் வாழ்கிறேன் என்று எண்ணி சிறு பெருமிதம் கொள்ளலாம் .
செவ்விந்திய தலைவர்.!
ReplyDeleteவோ.! சந்தா ஏ வில் மாடஸ்டி புத்தகம் இல்லையே இரவு கழுகாரே.??
டெக்ஸ்:(பாடுகிறார் )
பனியில்லாத மார்கழியா.?
படையில்லாத மன்னவனா.?
மாடஸ்டி இல்லாத சந்தாவா.?
குதிரை:(மனதினுள்)
அடடே! மரணக்கோட்டை கதையில் தன் உயிரை பணயம் வைத்து சிங்கத்திற்கு குதிரை இரையாகாமல் காத்த அந்த இரக்கமுள்ள இளவரசியின் கதை இந்த சந்தாவில் இல்லையா.?ஐயகோ.!
என்னுடைய கனவு இதழ்
ReplyDeleteசி.சி.வயதில், ஹாட்லைன், குண்டன் பில்லி, இவைகளோடு ஒரு கருப்புகிழவி கதை,மாண்ட்ரேக்,இவைகளோடு ஒரு டெக்ஸ் கதை (விற்பனையை அதிகப்படுத்த)
இந்த கதம்ப புக்கில் ஒன்று பிடிக்காத நாயகர் இருந்தாலும் இன்னொருவர் பிடித்துப்போகலாம்.
இதனுடன் ஸ்பைடர் சிறுகதையும்,மாயாவியும் சேர்த்து ஒரு
!!!நாஸ்டாலஜி ஸ்பெஷல்!!!
!!!நாஸ்டாலஜி ஸ்பெஷல்!!!
!!!நாஸ்டாலஜி ஸ்பெஷல்!!!
நாஷ்ட்டாவே லேது ஜி அப்புறம் எப்படி. ஸ்பேஷல்
Deleteகீ கீ. கீ
Caption 1
ReplyDeleteகோசைஸ் : இரவுக்கழுகார் செய்வது கொஞ்சமும் நியாயமில்லை. உங்களுக்கு துணைவியார் இல்லையென்பதால் உங்களுடைய நண்பர்களையும் கட்டை பிரம்மச்சாரிகளாகவே வைத்திருக்கிறீர்களே.! வெள்ளிமுடியாரும் சின்னக்கழுகாரும் போதாதென்று எங்களுடைய சகோதரர் டைகர் ஜாக்கையுமல்லாவா சேர்த்து கெடுத்து வைத்திருக்கிறீர்கள்?
டெக்ஸ் : கார்சனுக்கோ காதல் தோல்வி, அத்தோட கல்யாண வயசையெல்லாம் எப்பவோ தாண்டிட்டான்.
கிட்டுக்கு இப்போ என்ன அவசரம்? இன்னும் கல்யாண வயசே வரலையே.!?
டைகர் ஜாக்கோட வயசும் தெரியாது, அவனுக்கு என்ன பிரச்சினைன்னும் தெரியாது.
இதில் என்னோட தவறு என்ன இருக்கிறது கோஷைஸ்.!?
டைனமைட் (குதிரை) : க்க்கூம். . என்னைப்பத்தி யாராச்சும் கவலைப்படுறாங்களா? வயசு ஆசை எல்லாம் இருந்தும், இரவு கழுகாரோட சுத்துற ஒரே காரணத்தினாலே எனக்கும்தான் ஜோடியே அமைய மாட்டேங்குது. என்ன ராசியோ ஆண்டவா!?
Caption 2
ReplyDeleteகோசைஸ் : தொடுவானத்தில் தெரிந்த புதிரான புகை சமிக்ஞையை பற்றி அறிந்துகொண்டு வர சென்றீர்களே? புதிர் விளங்கிவிட்டதா இரவுக்கழுகாரே?
டெக்ஸ் : பெரிய புதர் ஒண்ணு அங்கே இருந்துச்சு ., நாலு பெருசுங்க அந்த புதர் மறைவுல உக்காந்து வாயில சுருட்டோட காலைக்கடனை முடிச்சிட்டு இருந்தாங்க. புதரை விலக்கிப்பாத்ததும் புதிர் விளங்கிடுச்சு தலைவரே.!!
டைனமைட் : கெரகம். .! இந்த கொடுமையை பாக்குறதுக்கு என்னைய வேற,, யாயாஹஹூ. . புயல் வேகத்துல போ டைனமைட்னு வெரட்டி வாயில நுரை தள்ள வெச்சிட்டாரு . .!!
கனவு இதழா பழசை கேட்டாதான் மதிப்பு போலிருக்கே.! எதுக்கு வம்பு ஊரோடேயே ஒத்துப்போயிடுவோம்.!
ReplyDeleteஎடிட்டர் சார்,
எனக்கும் கனவு இதழாக,
மாண்ட்ரேக் கதைகள் முப்பது கொண்ட ஒரு தொகுப்பு.
காரிகன் கதைகளை கத்தைகத்தையாய் ஒரு தொகுப்பு.
அப்புறம் டிடெக்டிவ் ஜூலியன் சாகசங்களும் ஒரு பெரிய்ய தொகுப்பு.
அப்புறம் ஐஃபில் டவர் மேலேருந்து குதிப்பாரே ஈகிள்மேன் அவரோட கதைகள் (வேற வேற டவர்லேருந்து குதிக்கிறா மாதிரி) ஒரு பத்து கொண்டதொரு தொகுப்பு.
அப்புறம் அந்த இரும்புக்கை உளவாளி இருப்பாரே, பேரு வந்து வில்சனோ நில்சனோ ஞாபகமில்லை (ஆனாலும் நான் அவரோட பெரிய விசிறியாக்கும்) , அவரோட சாகசங்கள் கொண்டதொரு குண்டு புக்கு.
ஹாலிவுட்டில் ஜாலி கதையில வருவாரே அந்த ஷெரீப். அவரோட கதைகள் கொண்டதொரு பெரிய ஆயிரம் பக்க இதழ்.
அப்படியே சாகச வீரர் ரோஜர் ஷ்பெசலும் ஒன்று.
தொடர்ந்து அதிரடி வீரர் சைமன், பெருச்சாளி பட்டாளம், முதலைப் பட்டாளம், ஜான்சில்வர், ஜார்ஜ் நோலன், ஹெர்குலஸ், கேப்டன் அலெக்ஸாண்டர், ராம்போ (ரம்பான்னு படிச்சிடாதிங்க), நாடோடி ரெமி இன்னும் பலருக்கும் தொகுப்பு கொண்டு வாங்க சார் ப்ளீஸ்.!!
//இரும்புக்கை உளவாளி இருப்பாரே, பேரு வந்து வில்சனோ நில்சனோ ஞாபகமில்லை (ஆனாலும் நான் அவரோட பெரிய விசிறியாக்கும்)//
Delete:-)
கண்ணா!
Deleteமிஸ்டர் ஜெட். சார்லி. புயல் வேக இரட்டையர் போன்றவற்றினையும் சேர்க்க வேண்டியது தானே?
///
Deleteமிஸ்டர் ஜெட். சார்லி. புயல் வேக இரட்டையர் போன்றவற்றினையும் சேர்க்க வேண்டியது தானே?///
கேட்டுட்டா போச்சு. குளிக்கும்போது கூட J, S ன்னு இனிசியல் போட்ட ஹெல்மெட்டை மாட்டிட்டு திரிவாங்களே, அவிங்கதானே புயல் வேக இரட்டையர்கள்?
சார்லியோட "பிரமிக்கத்தக்க " சித்திரங்கள் அடங்கிய பெரிய்ய தொகுப்பும் கேட்போம்.
மிஸ்டர் ஜெட், டிடெக்டிவ் ட்ரேசி இன்னும் என்னென்ன ஞாபகத்துல இருக்கோ அத்தனையும் கேட்போமே!!!! :-)
Caption 3
ReplyDeleteமாந்த்ரீகர் : உங்களை ஹிப்னாடிஷம் பண்ணப்போகிறேன் இரவுக்கழுகாரே! இந்த மந்திரக்கோலையே உத்துப்பாருங்க.! நீங்க பத்து வருசம் பின்னாடி போகப்போறிங்க.! ...ம்.. இப்போ உங்க கண்ணுக்கு என்ன தெரியுதுன்னு சொல்லுங்க!
டெக்ஸ் : மந்திரக்கோல்தான்யா தெரியுது. அதிலே மாட்டியிருக்குற மண்டையோட்டுக்குச் சொந்தக்காரனுக்கு எத்துப்பல்லுன்னு நினைக்கிறேன். ரெண்டு பல்லு வரிசை தப்பி வெளியே நிக்குது. .!
டைமைட் : (ஹிப்னாடிஷ மயக்கத்தில்) நான் என்னோட காதலி காஜலுடன் காட்டுல ஜாலியா சுத்திகிட்டு இருந்தேன். இந்த மனுசன் கழுத்துல சுருக்கு மாட்டி என்னை கடத்திகிட்டு வந்துட்டாரு. ஹூம்... காஜலையும் சேர்த்து கடத்தியிருந்தா நல்லா இருந்திருக்கும்.!
கிட் ஆர்டின் கண்ணன் ;
ReplyDeleteதூங்கிப்போன டைம் பாமை ஏன் கேட்கவில்லை.?
///தூங்கிப்போன டைம் பாமை ஏன் கேட்கவில்லை.?///
Deleteஒருவேளை, எடிட்டர் ஓகே சொல்லிடுவாரோங்குற பயத்துலதான் சார் கேட்கலை!! :-)
ஆனால் ஏஜென்ட் 327 எனக்கு பிடித்தே இருந்தது. ஜேம்ஸ்பாண்டை கலாய்த்து(spoof) வெளியான தொடர்னு நினைக்கிறேன்.!!
I like your caption 2
Deletei like your caption 3.
ReplyDeleteகோஸைஸ்:என் கண்ணையே(டைனமட்)உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் .பத்திரமா பார்த்து கொள்ளுங்கள்.
ReplyDeleteடெக்ஸ்: கவலையே படாதீங்க என் பிள்ளை மாதிரி பார்த்துகிறேன்.
டைனமட்:(மைன்ட் வாயிஸில்) கார்சனிடம் சென்று இருந்தாலாவது ரெஸ்ட் கிடைக்கும். இந்த ஆளுக்கிட்டே மாட்டிவிட்டியே .அப்பா புனித மானிடோ..
ஆசிரியர் அவர்களே
ReplyDeleteவழக்கமான ஞாயிறு பதிவு
என்னஆச்சு?????????
உங்கள் பதிவுதான் ஞாயிறு மற்றும்
அந்த வாரத்துக்கான BOOST.
ganesh kv : வாரமொருமுறைக்கே எனக்கு ஒரு லோடு பூஸ்ட் அவசியமாகிறது ! 24 மணி நேரங்களுக்கொரு பதிவென்றால் சுட்டிப்புயல் பென்னியிடம் கடன் கேட்க வேண்டியது தான் !!
DeleteA: ஊருக்கெல்லாம் மந்திரத்தாலேயே வைத்தியம்
ReplyDeleteபார்த்த எனக்கு வந்த வயித்து வலிக்கு கண்டிப்பா அறுவை சிகிச்சைதான் பண்ண வேணுமுன்னு அசலூர் வைத்தியன் சொல்லிபுட்டானே!
நான் அறுவைசிகிச்சை முடிஞ்சி கண் முழிக்கும் போது முதலில் என் மனைவியைத்தான் பார்க்க வேண்டும் இரவுக்கழுகாரே...
B: கவலைவேண்டாம் வைத்தியரே.
நீங்கள் கடவுளையே பார்ப்பீர்கள்!
C: அட முட்டாள் வைத்தியனே!
இத்தோடு நீ பூட்ட கேஸ்னு எங்க தல பூடகமா சொல்றது புரியாம பல்ல இளிச்சினுகீறியே! இத்தன வருசமா எப்படித்தான் நீயெல்லாம் ஒரு வைத்தியன்னு இந்த ஊர நம்பவச்சியோ!!!
பதிவக் காணோம்...
ReplyDeleteகனவு இதழுக்கான பதிலைக் காணோம்...
பிரெஞ்சுப் பார்ட்டிங்ககிட்ட என்ன டீல் அப்படிங்கறதுக்கான பிளான காணோம்...
எடிட்டர் சார் நீங்க எங்க இருக்கீங்ககககககககக...........
S.V.VENKATESHH : கனவுகள் சுகமானவைகளே.....ஆனால் நனவை செயல்படுத்திடலுக்கு முன்னுரிமையன்றோ ? சூப்பர் 6-ல் நேற்று முழுவதும் ஜாகையென்றால் - இன்றைக்கு ஜேசன் ப்ரைஸின் பாகம் இரண்டோடு மல்யுத்தம் !
Deleteலக்கி லூக்கின் கிளாசிக்சில் ஒரு கதையான "கோச்சுவண்டியின் கதை" - சிற் சிறு பட்டி-டிங்கரிங்கோடு தேறி விட்டது ; ஆனால் இரண்டாம் கதையான "ஜெஸ்ஸி ஜேம்ஸ் " சுத்தமாய்ச் சுளுக்கு எடுத்து விட்டது ! அந்நாட்களில் இதற்கான மொழிநடை முழுவதும் சுத்தத் தமிழாகவும் இல்லாமல், முழுவதும் பேச்சுத் தமிழாகவும் இல்லாமல் ஒரு கலப்பட பாணியில் இருந்துள்ளது ! அன்றைய நம் ரசனைகளுக்கு இது ஓ.கே.வாக இருந்திருக்கலாம் ; ஆனால் இன்றைக்கு நிச்சயமாய் அது நெருடவே செய்யும். ஒரே இதழில் ; ஒரே நாயகரின் இரு கதைகள் - இரு வெவ்வேறு பாணிகளில் இருப்பதும் ரொம்பவே உதைக்கும் என்று பட்டதால் - ரிப்பேரோ ரிப்பேர் அவசியமாகிப் போய்விட்டது ! முழுசையும் மறுபடியும் புதிதாய்க் கூட சுலபமாய் எழுதி விடலாம் - ஆனால் ஆங்காங்கே அந்த பழைய நடைகளுக்குள்ளேயே செய்ய வேண்டிய மாற்றங்கள் ஜீவனை கிறங்கச்செய்து விடுகின்றன !! And இன்றைக்கு "மறைக்கப்பட்ட நிஜங்கள்" - ஜேசனின் பாகம் 2-ல் பணி !! வாயோரம் லேசாய் நுரை தள்ளி நிற்கிறேன் ; அதைக் கொஞ்சமாய்த் துடைப்போமே என்று அவகாசம் எடுத்த வேளையில் இங்கே எட்டிப் பார்த்தேன் !
S.V.VENKATESHH : அப்புறம் பிளான்கள் என்ன ? கனவுகளுக்குப் பதிலென்ன ? என்பதெல்லாம் உரிய நேரங்களில் தெரிய வரும் ! 5 மாதமாய் பெவிக்காலுக்குப் பின்னே காத்திருந்தது தானே நேற்றைய பதிவின் பின்னணி ?!
Deleteஇன்னிக்குமொரு பதிவென்பது, பட்சணங்களை சாப்பிட்டுவிட்டுப் புளித்த ஏப்பம் எடுத்துக் கிடப்போர்க்கு மேற்கொண்டு ஒரு கவளத்தைத் திணித்தது போலிருக்கும் ! செரிக்கட்டுமே சார் !
@ Vijayan Sir
Deleteயாராவது புள்ளி வைக்கிறதும் , நீங்க கோலம் போடுவதும் கொஞ்சம் சிரமம்தான்
"கேப்சன் போட்டி"..(கொழம்பு "போட்டி" இல்லபா)
ReplyDeleteA:என்னா இரவுகழுகாரே இம்மாத காமிடி வெடி நமுத்துப்பூடிச்சாமே...???
B:கண்ணர் எப்போ நம்ம போட்டோவை பொரஃபைல்ல வெச்சாரே, அப்பவே கம்பார்ம்டு பெருசு...
C:யோவ் டெச்சு, இப்டியே பேசிட்டிருந்தியனா அந்த சேலம் டெக்ஸ் ஊட்ல செஞ்சுவெச்ச வறுத்தகறியை பூராவும் கார்சனே தின்னுப்புடுவாரு. பொறவு நீ வெறுங்கைய நக்கிட்டு போவேண்டியதுதான்...!!!
கேப்ஷன் போட்டியென்றால் நகைச்சுவை மட்டும்தானா?
ReplyDeleteசற்றே மாற்றி பார்ப்போமே....
A: இரவுக்கழுகாரே....
இந்த ஊரிலேயே வயதான மனுசன் நான்தான். என் முடிவு நெருங்கிவிட்டது. நான் கண் மூடுவதற்குள் என் பகுதி மக்களுக்கு சொல்ல உங்கள் அனுபவத்திலிருந்து நல்லதாக நாலுவார்த்தை சொல்லிவிட்டு
போங்களேன்....
B: பெரியவரே...உங்கள் அனுபவம் என் வயது. இருந்தாலும் நீங்கள் கேட்டு என்னால் மறுக்க இயலாது.
நீங்கள் கேட்டதற்காக நாலுவரி
சொல்கிறேன்.
"தோல்வியின் அடையாளம் தயக்கம்.
வெற்றியின் அடையாளம் துணிச்சல்.
துணிந்தவன் தோற்றதில்லை.
தயங்கியவன் வென்றதில்லை."
C : இதப்பாருய்யா....
நாம் சுமந்த மஞ்சள் சட்டை மாவீரரின் வெற்றியின் ரகசியம் இதுதானா?
இதைக்கேட்கையில் எனக்கே பிடறி மயிர் சிலிர்க்கிறதே....
இந்த மாவீரனை சுமக்க நான் செய்த புண்ணியம் என்னவோ?
சர்வமும் டெக்ஸே....
ReplyDeleteஅடேங்கப்பா ...சத்தியமாய் இந்த அளவிற்கு டெக்ஸ் குழுவினர் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்க வில்லை..ஒரு முழுநீள நானூறு பக்க சாகசத்தை எந்த குறுக்கீடும் இல்லாத அமைதியான சூழலில் தான் படிக்க வேண்டும் என்பதற்காகவே இன்று ஞாயிறு அலுவலகம் வருகை புரிந்தேன் ..காலை மணி பத்தரை ...
அரிசோனா எல்லைக்கு சற்று தெற்கே தள்ளி கலிபோர்னியா விரிகுடா பகுதியில் நுழைந்தேன் ..
கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் ..யார் இந்த ஆசாமி ...?
ஒரு பலமான பன்ச்சுடன் டெக்ஸ் வில்லர் என்று அறிமுகத்துடன் முடிந்த இந்த நேரத்தில் தான் புத்தகத்தையும் ..இருக்கையையும் விட்டு எழுகிறேன் ..ஒரு பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படத்தை பார்த்த திருப்தியை விட பல அதிகம் சர்வமும் நானே...உண்மையை சொல்கிறேன் சார்..இத்தாலிய மொழியில் டெக்ஸின் பிதாமகர்களே ஒரிஜினலில் டெக்ஸ் கார்சன் நட்பை ..கிட் ..கார்சனுக்கான பரிவையும் ...ஒரு ஆக்ஷன் கதையில் பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைக்கும் டெக்ஸ் கார்சன் உரையாடல்களையும் கொண்டு வந்திருப்பார்களா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது...
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தெனாவட்டு கொண்ட இன்னொரு ஆண்டவன் படைப்பாரா..
அப்பனின் குசும்பு அட்சுர சுத்தமாய் பிள்ளையிடம் ..
என் பொறுமையை சோதிக்காதே ..என் தந்தை அளவிற்கு இல்லாவிட்டாலும் நானும் சுமாராவது சில்லு மூக்குகளை சிதறடிப்பேன் ..ஜாக்கிரதை..
முதலில் பேச்சு வார்த்தை தான் ..
அதுதான் எனக்கு பீதியை கிளப்புகிறது .
இப்படி பல இடங்களில் வசனங்கள் வாய் விட்டு சிரிக்க வைத்தன எனில்
யோசிக்காமல் தீர்மானத்திற்கு வருவதில்லை ..தீர்மானத்திற்கு வந்த பின் யோசிப்பதில்லை ..
போன்ற அதிரடி வசனங்கள் டெக்ஸிற்கே உரிய அதிரடி பன்ச்சையும் ..
எதிரிகளிடம் தப்பிக்க நினைக்கும் பொழுது நீ முதலில் ஓடு பாதுகாப்பு நான் அளிக்கிறேன் என டெக்ஸ் கார்சன் இருவரது நட்பையும் ..
அதைவிட அட்டகாசமான டெக்ஸின் அந்த நாணயத்தை தூக்கி போட்டு சுடும் காட்சியும் ..
ம்ஹீம் இப்படி சொல்லி கொண்டே போனால் ஒவ்வொரு பக்கத்தையுமே பாராட்டி சொல்வதுடன் கதையையும் சொல்லி விட்டாயே என்ற குற்ற சாட்டிற்கு ஆளாகி விடுவேன் ..மொழி பெயர்ப்பில் உங்கள் உழைப்பு படிக்கும் பொழுது கண்கூடாக தெரிகிறது..டெக்ஸ் மட்டுமல்ல இந்த முறை அவர்மகன் கிட்டும் ..டைகரும் கலக்கி விட்டார்கள் ..நான்கு மணி நேரமாக டெக்ஸ் குழுவினரோடு டோனென் மட்டுமல்ல தாரை பரணியும் அவர்களுக்கு தெரியாமல் பாலைவனம் ..கப்பல் ..பனி மூட்ட தீவு ..என சுற்றி திரிந்த உணர்வு...இன்னும் ஏதோதோ எழுத தோன்றுகிறது ..முடியவில்லை ..
சிம்ப்ளி சூப்பர் ...
ஒன்றை மட்டும் சொல்லி கொண்டு விடைபெறுகிறேன் சார்
2016 சிறந்த நாயகன் ..சர்வமும் நானே டெக்ஸ் மற்றும் குழுவினர் ..
2016 சிறந்த அட்டைப்படம் ...சர்வமும் நானே மற்றும் ..
2016 சிறந்த கதை...சர்வமும் நானே மற்றும் ...
2016 சிறந்த வேறொண்ணும் இல்லை போலிருக்கே ...அப்படி ஏதாவது இருந்தா சர்வமும் நானே ..என தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் சார் ...
இந்த டெக்ஸ் குழுவினரோடு காலை முதல் சுற்றி கொண்டு இருந்த்தில் கார்சனை போலவே நானும் கொலை பட்டினி சார் ..போய் வருத்த கறியை சாரி வருத்த பீட்ரூட்டை சாப்பிட்டு பிறகு வருகிறேன் சார்..
தலீவரே...."சர்வமும் நானே " என்ற பிரகடனத்தை நம் இரவுக் கழுகாரன்றி வேறு நாயகர்கள் யாரேனும் செய்திருப்பின், காமெடி பீசாகிப் போயிருப்பது நிச்சயம் ! அந்தத் தெனாவட்டான பாத்திரப் படைப்பைக் கதாசிரியர்கள் கிளாடியோ நிஸ்ஸியும், மௌரோ போசெல்லியும் ஒரு புது உச்சத்திற்கு இட்டுச் சென்றுள்ளனர். நாம் ரசிப்பதும் அந்த எக்குக் கதாநாயக அவதாரத்தைத் தானே ?!
DeleteSo டெக்ஸுக்குப் பேனா பிடிக்கும் பொழுது வரிகளில் அந்த அக்னி இல்லாது போயின்கதையோட்டம் நமத்துப் போன பட்டாசாகிடக் கூடும் என்ற பயமுண்டு எனக்கு ! அதனாலேயே 2012-க்குப் பின்பாய் வெளி வந்துள்ள நமது அத்தனை டெக்ஸ் சாகசங்களிலும் வீரியத்தை ஒரு மிடறு தூக்கலாய்க் கொணர முயற்சித்திருக்கிறோம் !
நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை வரிகளுமே நான் ரொம்பவே லயித்து எழுதியவை ! கொஞ்சம் நீயூட்ரலாக வாசித்திடக் கூடிய நண்பர்களுக்கு நாம் டெக்ஸுக்கு ஓவராய் சாம்பிராணி போடுவது போலத் தோன்றிடலாம் தான் ; ஆனால் டெக்சின் இன்றைய நிலைக்கு நியாயம் செய்திட இது அத்தியாவசியம் என்றே நினைக்கிறேன் ! What say guys ?
சர்வமும் டெக்ஸ்ஸ் ஒரு ஆக்ஷன் சக்ச்ஸ். தீபாவளி, பொங்கல், ஆண்டு மலர் போன்ற தருணங்களில் tex மட்டுமாவது சட்ரு பெரிதாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
ReplyDeleteநான் சொன்னது size.கதையின் நீளம் அபாரம்.சர்வமும் TeX ஒரு சூப்பர் express.
ReplyDeleteஅடுத்த tex டைட்டில் சர்வமும் TeX பெயரைக் கேட்டால சர்வமும் ஒடுஙகும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete// “இந்தியாவின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு எங்கள் மொழியின் ஒரு அற்புத அங்கமான காமிக்ஸ்களை இத்தனை அழகாய் இத்தனை காலமாய் வெளியிட்டு வருகிறீர்களென்பது just incredible ! எங்களால் இயன்ற விதங்களில் உங்களுக்கு உதவிடத் தயாராகயிருப்போம்!” என்று தொடர்ந்தது அந்த மின்னஞ்சல் !//
ReplyDeleteWell deserved! Glad that they can understand it!
// தீப ஒளியும்...ஒரு சந்தோஷச் சேதியும் ! //
அந்த நல்ல செய்தியை இந்த விளக்கமான பதிவுக்குள்ளே தேடவைத்துவிட்டீர்களே சார்... சாராம்சத்தை முதல் பத்தியிலும் விவரிப்புகளைப் பின்னாலும் தொடர்ந்தால் உதவியாக இருக்கும்! 15+ வரிகளுக்கு மேலான பெரிய பெரிய பத்திகளுக்கிடையில் முக்கியமான 3-4 வரிகளை மிஸ்பண்ணிவிட்டு, ஏதோ இடிக்கிறதே என மீண்டும் முழு பதிவையும் படிப்பது இப்போதெல்லாம் எனக்கு சகஜமாகிவிட்டது.. என்னைப்போன்ற கேசுகள் கண்டிப்பாக நிறைய இருக்கும்! ;)
B : என்ன முதியவரே. நானெல்லாம் கல்யாணமே செஞ்சிக்காம காலத்தை கழிச்சிக்கிட்டிருக்கேன்! நீங்கள் என்பது வயதிலும் பத்து மனைவிகளை வைத்துக் கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள்?
ReplyDeleteA : பதினோராவது பொண்டாட்டியை
கேட்டுத்தான்....!!!
C : அடப்பாவி! கட்டையில போற வயசுல
பதினோரு கட்டில் கேக்குதாம்!!
நல்லவேளை நம்ம தல இருபது மனைவின்னு கேக்கல. கேட்டிருந்தா இருபத்தியோராவது பொண்டாட்டின்னு சொல்லிருப்பான்
போல....!!!
வாழ்த்துக்கள் விஜயன் பாஸ்!
ReplyDeleteமொத ப்ராஜெக்ட்டே ஒரு 1000 பக்கத்துக்கு பண்றோம் !
சும்மா பின்றோம் பாஸ் :)
Caption : 1
ReplyDeleteA :
என்ன !
இரவு கழுகாரே! இந்த பக்கம் அதிகம் வருவதே இல்லை !
B (டெக்ஸ்):
எங்கே! சில பல சில்லறை வேலைகள் முடிக்க வேண்டி இருந்தது !
C (குதிரை) :
ஹ்ம்ம்....ஆமா... ஆமா...
சில பல 'சில்லறைகளை' கல்லறைக்கு அனுப்பும் வேலைனு கரெக்ட்டா சொல்லுங்க தல !
Caption: 2
ReplyDeleteA :
கண்டிப்பாக இருந்து சாப்பிட்டுத்தான் போகணும் !
B (டெக்ஸ்):
இல்ல ! இல்ல !
நாங்க கொஞ்சம் அதிக தொலைவு அவசரமா பயணிக்க வேண்டி இருக்கிறது !
மீண்டும் வருகிறோம் !
C (குதிரை) :
ஆஹா...! அதிக தொலைவு ? அவசரமாவா ?
இவரு கொஞ்ச தூரம்னாலே நானுறு, ஐநூறு மைல் விரட்டுவாரு!
இன்னைக்கு நம்மள ஆயிரக்கணக்கான மைல் நிக்காம விரட்ட போறாரோ ?
Caption:3
ReplyDeleteA :
என்ன இரவு கழுகாரே!
ரொம்ப நேரம் பேசி விட்டோமோ?
பசியாறும் வேளை வந்து விட்டதோ ?
B (டெக்ஸ்):
இல்லை ! இல்லை !
என் நண்பன் கார்சன் வந்து விடட்டும் !
C (குதிரை) :
என்னாது....................!
அவரு பின் பக்கமா வந்து சரியா வறுக்காத கறிய கூட விட்டு வைக்காம தின்னுட்டார்னு தெரிஞ்சா....இவுரு என்ன அடிப்பாரா? இல்ல அவர அடிப்பாரா?
ஹ்ம்ம்....எதுக்கும் நம்ம கொஞ்சம் தள்ளியே நிப்போம் !
Caption: 4
ReplyDeleteA :
நா பார்த்தேன் டெக்ஸ்!
நா பார்த்தேன்!
டைகர் ஒடஞ்ச மூக்கோட சூதாடிக்கிட்டு இருக்கார் !
கை கால் எல்லாம் ஒடஞ்சும் திருந்தல.......இன்னும் திருந்தல…..!
B (டெக்ஸ்):
இல்லையே !
நம்ம பய அப்படி பட்ட ஆளு இல்லையே!
அவன் மூக்கும் நல்லா பொடப்பா இருக்குமே !
C (குதிரை) :
யோவ் பெரிசு!
தல எந்த டைகரை பத்தி கேட்டா.....
நீ எந்த டைகரை பத்தி சொல்ற....
உஹூம்ம்...இன்னைக்கு உனக்கு மூக்கு ஒடைய போறது உறுதி டோய்....!
சார் ..மேலே குறிப்பிட்ட வரிகள் மட்டுமல்லாமல் இந்த முறை கதைமுழுதுமே வீரியமான உரையாடல்களை காண முடிந்தது என்பதோடு கிட்டுக்கு ஆபத்து எனும் பொழுது டெக்ஸை விட கார்சன் தனது மகனுக்கு ஆபத்து என புயலாய் புறப்படுவது என நட்பையும் ..பாசத்தையும் ..பரிவையும் ..உறவையும் அழகுற எடுத்து காட்டுகிறது ..
ReplyDeleteரஜினிக்கு பாட்ஷா ...
கமலுக்கு நாயகன் ....
விஜயகாந்துக்கு கேப்டன் பிரபாகரன் ..
சத்யராஜ்க்கு வால்டர் வெற்றிவேல் ..
டெக்ஸ் வில்லருக்கு ..
சர்வமும் நானே...:-)