Powered By Blogger

Tuesday, October 25, 2016

படப்பொட்டி புறப்பட்டாச்சு !

நண்பர்களே,

வணக்கம். ஊர்சுற்றும்  வேலைகள் என்னதான்  இருந்தாலும் கூட, நமது மாதாந்திர டெஸ்பாட்ச் தினத்திற்கு ஆபீசில் ஆஜராகி இருப்பதில் ரொம்பவே முனைப்பாக இருப்பேன் ! புத்தகங்களின் குவியலுக்கு மத்தியில் நம்மாட்கள் பேக்கிங் செய்யும் லாவகத்தை ரசிப்பதோடு - "ஆங்...இந்த டப்பாவுக்கு இன்னும் கொஞ்சம் டேப் ஓட்டுங்க ; இதிலே பெயர் தப்பா இருக்கு பாருங்க...; முடிஞ்ச பார்சல்களை ST-க்கு அனுப்பலியா  ? மெயின் ஆபீசுக்கா ? பிரான்ச் ஆபீசுக்கா ? - எங்கே அனுப்பப் சொன்னாங்க ?" என்று அவ்வப்போது சவுண்ட் கொடுப்பதில் அப்படியொரு சுவாரஸ்யம் கண்டிடுவேன் ! அந்த மாதத்துக் கதைகள் சூப்பர்-ஹிட்டா ? அல்லது மண்டையில் குட்டு வரவழைக்கப் போகும் மொக்கைகளா ? என்பதெல்லாம் அந்த நொடியில் மறந்து போய் ; எங்களது 30 நாள் உழைப்பின் பலனை உங்களிடம் காட்டும் ஆர்வமே மேலோங்கி நிற்கும் ! 

சின்ன வயதில் ஊர்கூடித் தேர் இழுப்பதை வேடிக்கை பார்ப்பதைவிடவும். தேரின் ஒரு ஓரத்தில் தொற்றிக் கொண்டு, ஒரு துண்டை இப்படியும், அப்படியுமாய் வீசிக் கொண்டே -"ஆங்..இங்கே தடியே போடுங்க...ஆங்..சக்கையை அங்கே வையுங்க...இழு..இழு..இழு,,,!!தள்ளு...தள்ளு..தள்ளு.."என்று குரல் கொடுக்கும் மேஸ்திரி போன்ற அந்த ஆசாமியைத் தான் பராக்குப் பார்த்து நிற்பேன் ! அந்தப் பழக்கமோ என்னவோ, பேக்கிங் வேலைகள் நடக்கும் பொழுது அலப்பரைகள் பண்ணும் ஆசை தொடர்கின்றது ! And இன்றைக்கும் அதற்கு விதிவிலக்கல்ல ! தீபாவளி மலர் தக தகவென்று காலையில் வந்திறங்க - ஆபீசில் அட்டை டப்பா மலைக்குள்ளே தான் இன்றைய பொழுது முழுவதும் தாண்டவமாடினோம் ! கூரியர் பார்சல்களின் சகலமும் மதியமே DTDC : STC : PFC ஆபீஸ்களில் தஞ்சம் புகுந்துவிட்டன ; அதே போல பார்சல்களும் இன்றே இங்கிருந்து கிளம்பிவிட்டன என்பதையும் உறுதி செய்து விட்டோம் ! So உங்கள் பக்கத்துக் கூரியர் நண்பர்கள் தான் இனி  மனது வைக்க வேண்டும், பட்டுவாடாக்களைத் தாமதப்படுத்திடாது ! 

தீபாவளிக்கு முன்பாகவே உங்கள் அனைவரிடமும் 'தல' யை ஒப்படைத்த திருப்தியில் - கார்டூனின் 'தல' ; மஞ்சள்சட்டை பென்சில்வீரன் லக்கியோடு அடுத்த சில நாட்களைக் கழிக்கத் தயாராகுகிறேன் ! SUPER 6 நேரமல்லவா ?!

நவம்பர் இதழ்கள் ஆன்லைனில் லிஸ்டிங் செய்துவிட்டோம் என்பதால் - தீபாவளி ஷாப்பிங் பட்டியலில் அவற்றையும் சேர்த்துக் கொள்ளலாமே ? (http://lioncomics.in/monthly-packs/250-november-2016-pack.html) பட்ஜெட்டில் மீதமிருப்பின், இருக்கவே இருக்கிறது 2017-ன் சந்தாக்களும் ! (http://lioncomics.in/2017-subscription/240-2017-subscription-abcde-tamilnadu-st-courier.html) அட்வான்ஸ் வாழ்த்துக்கள் all !!! Have a Cracking Diwali !!

161 comments:

 1. சற்று முன்கூட்டிய தீபாவளி வாழ்த்துகள் சார் !!!

  ReplyDelete
 2. ஆசிரியருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் , ஊழியர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 3. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நன்றி.எடிட்டர் சார் தங்களுக்கும்,குடும்பத்தினருக்கும்,அலுவலக நண்பர்களுக்கும்,காமிக்ஸ் குடும்ப உடன்பிறப்புகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. ....இடைவேளை....
  வணக்கம் சார்...
  வணக்கம் நண்பர்களே...

  லயன் தீபாவளி மலர்கள் பற்றிய ஆராய்ச்சியில் புரட்டாசி நல்ல படியாக செலவானது....
  மேலும் பழைய விசயங்கள் பலவற்றை ஞாபகப்படுத்தியது....

  அக்டோபர், நவம்பரில் வந்த லயன் புத்தகங்களை ஆராய்ந்து தீபாவளிமலர்னு ப்ரிண்ட் ஆகி இருந்தது, ஹாட்லைனில் வாழ்த்து சொல்லியது என பல இருந்தாலும், அந்த ஆண்டுகளில் ரெகுலர் விலையை விட கூடுதலான விலையில் இந்த தீபாவளி மாதங்களில் வெளியான இதழ்களையே தீபாவளி மலர் என கொண்டால் இதுவரை 18தீபாவளி மலர்கள் (என்னைப்பொறுத்து) வெளியாகியுள்ளன...
  இந்த 18ல் சர்ப்ரைஸ் ஆக நம் மறதி நண்பரும் இருக்கிறார்...

  இதுவரை பார்த்த முதல் 9தீபாவளி மலர்கள் பற்றிய தகவல்கள் தவிர, மீதி 9ம் அடுத்த ஆண்டு தொடர்வதே சரியாக இருக்கும்....

  நாளை வரப்போகும் 19வது தீபாவளிமலர் பெயரில் மட்டுமே "சர்வமும் நானே" அல்ல...
  இந்த ஆண்டு நிஜமாகவே சர்வமும் டெக்ஸ்...டெக்ஸ்... டெக்ஸே...

  அன்பின் ஆசிரியர்,
  நண்பர்கள்,
  சகோதர சகோதரிகள்,
  ஆசிரியரின் பணியாளர்கள் என அனைவருக்கும் முன்கூட்டிய தீபாவளி வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. நாளை வரப்போகும் 19வது தீபாவளிமலர் பெயரில் மட்டுமே "சர்வமும் நானே" அல்ல...
   இந்த ஆண்டு நிஜமாகவே சர்வமும் டெக்ஸ்...டெக்ஸ்... டெக்ஸே...


   So true

   Delete
 6. அனைவர்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. அன்புள்ள ஆசிரியருக்கும்,
  நண்பர்கள்,
  சகோதர சகோதரிகள்,
  காமிக்ஸ் பணியாளர்கள் என அனைவருக்கும் முன்கூட்டிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!

  எங்கள் சேந்தம்பட்டி குரூப்புக்கு நேற்றே காமிக்ஸ் தீபாவளி ஆரம்பித்துவிட்டது, நண்பர் காமிக்ஸ் வள்ளலின் அன்பளிப்போடு. அந்த சந்தோசத்தின் நீட்சியாக, இன்று உங்கள் பதிவு. நாளை "சர்வமும் டெக்ஸ்"!

  இதுவல்லவோ பழைய தீபாவளி!!!

  ReplyDelete
  Replies
  1. Hassan MOUGAMADOU : அட...சேந்தம்பட்டிக்கு கடல் கடந்தும் கிளைகளா ?!! Awesome !!

   Delete
 8. ஆஹா அருமை சார்...அனுப்பியாச்சா என மீண்டும் கேக்க வந்த என்னை ....சும்மா பட்டய கிளப்பி மிரட்டுது அட்டை...அருமை...நாளை தகதகக்கவிருக்க்ம் சூரியனோடு போட்டியிட வருகை தர கிளம்பியிருக்கும் மலருக்காக i am waiting

  ReplyDelete
 9. ஆசிரியர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. advance தீபாவளி வாழ்த்துக்கள் . காலை ரொம்ப வேலை இருக்கு கொரியர் அலுவலகம் போகனும்

  ReplyDelete
 11. பதிவை படிக்கும்போதும்,அடுக்கி வைத்துள்ள டெக்ஸ் இதழ்களை காணும் போதும் மனம் ஏனோ குதுகலம் அடைகிறது சார்.

  ReplyDelete
  Replies
  1. Arivarasu @ Ravi : அந்த ஒற்றை நொடி சந்தோஷ மின்னல்கள் தான் நம் காமிக்ஸ் நேசத்தை இன்னமும் ஜீவனோடு தழைக்கச் செய்கிறது சார் !

   Delete
 12. ஆசிரியருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ,
  ஊழியர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ,
  நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும்
  அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்
  ( நன்றி பிரபானந்த் ஜி )
  .

  ReplyDelete
 13. ''அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
  ஆரிருள் உய்த்து விடும்''

  ReplyDelete
 14. Dear Edi,

  Belated Happy Diwali to you and your team. Looking forward for the box set.

  ReplyDelete
  Replies
  1. I think he will be receiving these books after deepavali. His deepavali start after getting books in hand. Hence he said like this, I guess.

   Delete
  2. நண்பர் ரஃபீக் போன வருசம் தீபாவளி வாழ்த்துச் சொல்ல மறந்திருக்கலாம்... அதைத்தான் இப்பச் சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்! ;)

   Delete
 15. ஆசிரியர்,
  ஆசிரியரின் பணியாளர்கள், நண்பர்கள்,
  மற்றும் காமிக்ஸ் சிறப்பு நண்பர்கள்
  என அனைவருக்கும் முன்கூட்டிய தீபாவளி வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 16. தலயின் தாண்டவத்னத நான் 31/10/2016 அன்றுதான் வாங்க முடியும் தீபாவளி முன்னிட்டு ஊருக்கு வந்துவிட்டேன் ......
  எடிட்டர், அவரது அலுவலக ஊழியர்கள், வனலபதிவு நண்பர்கள் அன்னவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 17. தீபாவளி கொண்டாட்டம் நாளை முதல் தொடக்கம்!

  ReplyDelete
 18. ஆசிரியர் மற்றும் லயன், முத்து காமிக்ஸ் குழும உறுப்பினர்களுக்கும், அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளியை கொண்டாட புத்தாடை, பட்டாசுகளோடு, தீபாவளி மலரும் ரெடி. ஆசிரியருக்கு நன்றி

  ReplyDelete
 19. Vijayan sir, this month totally 8 books. 4 (October) and 4 (November), great show. Kudos to your team.

  ReplyDelete
  Replies
  1. Kathirvel S : ரயிலின் எஞ்சினானது பெட்டிகளை இழுத்துப் போவது வழக்கம் ! ஆனால் இங்கோ பெட்டிகள் ஒன்றிணைந்து எஞ்சினை உந்தும் போது - எஞ்சின் தன சக்திக்கு மீறியும் இழுத்தே தீரும் அல்லவா ? இங்கு நடப்பது அது தான் நண்பரே !

   Delete
 20. அன்பு ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. சூப்பர் எடிட்டர் சார்!
  தீபாவளி களைகட்டத் தொடங்கிவிட்டது!

  புத்தாடை ஆசை இல்லை...
  பட்டாசு ஆசை இல்லை...
  பலகாரம் தற்போது கைவசமில்லை...

  ஆனால்,

  'தீபாவளி மலர்' என்ற பெயர் தாங்கிய குண்டூஸை கையில் ஏந்திடும் அந்தக் கணத்தில் மனசுக்குள் ஒரு மத்தாப்பும், மண்டைக்குள் ஒரு சரவெடியும் வெடித்து உடம்பு முழுக்க ஒரு உற்சாகம் பரவும் பாருங்க... அந்த அனுபவம் மட்டும் எத்தனை வருடங்களானாலும் மாறுவதே இல்லை!

  மீண்டும் ஒரு அட்டகாச தீபாவளி தினத்திற்காக உழைத்த உங்களுக்கும், உங்கள் ஒட்டுமொத்த டீமிற்கும் நன்றிகள் பல!

  போலவே, தீபாவளி தினத்தன்று ஒரு சிறப்புப் பதிவையும் போட்டுத் தாக்கினீர்களென்றால் கொண்டாட்டத்திற்கும், குதூகலத்திற்கும் அந்நாளில் குறைவென்பதேது?

  நாளை கூரியர் கவரைப் பெற்றுக்கொண்டு கொண்டாட்டத்தில் மிதக்கப்போகும் நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : //தீபாவளி தினத்தன்று ஒரு சிறப்புப் பதிவையும் போட்டுத் தாக்கினீர்களென்றால் கொண்டாட்டத்திற்கும், குதூகலத்திற்கும் அந்நாளில் குறைவென்பதேது?//

   அதென்ன "தாக்கினீர்களென்றால் ?"
   போடுறோம் - தாக்குறோம் !!

   தீபாவளியும் அதுமாய் அவ்வளவு லேசாகத் தப்பிக்க விட்டு விடுவேனா - என்ன ?

   Delete
  2. ஹைய்யா!! உய்ய்ய்ய்ய்... உய்ய்ய்ய்ய்... உய்ய்ய்ய்ய்ய்... :)))))))))))

   Delete
  3. //'தீபாவளி மலர்' என்ற பெயர் தாங்கிய குண்டூஸை கையில் ஏந்திடும் அந்தக் கணத்தில் மனசுக்குள் ஒரு மத்தாப்பும், மண்டைக்குள் ஒரு சரவெடியும் வெடித்து உடம்பு முழுக்க ஒரு உற்சாகம் பரவும் பாருங்க... அந்த அனுபவம் மட்டும் எத்தனை வருடங்களானாலும் மாறுவதே இல்லை!//

   +9

   Delete
  4. டெக்ஸ் புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன், விஜயைப் போலவே எனக்கும் தோன்றியது.... எத்தனை பேர்களின் எத்தனை நாள் உழைப்புகளோ...! நிச்சயம் புத்தகமெல்லாம் ஜல்தியாக முழுவதும் விற்று தீர வேண்டும்.
   எவ்வளவு சீக்கிரம் என்னால் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் சந்தா தொகையினை அனுப்பிட விழைகிறேன்...
   விஜயன் சார் மற்றும் அவரது டீமிக்கிற்கும், காமிக்ஸ் நண்பர்களுக்கும் அட்வான்ஸ் தீப ஓளி வாழ்த்துக்கள். என்ஜாய் ரீடிங்...

   Delete
  5. சார் தீபாவள பதிவில் அட்டகாசமான கதைகளை கண்ணில் காட்டுங்கள்....வருடவாரியா தீபாவளி மலர் அட்டைகளயுமெ

   Delete
 22. ஈரோடு விஜய்.!

  சூப்பர்.! அனைவரின் உணர்வுகளையும் பிரதிபலித்துவிட்டீர்கள்.! க.க.க.போ.!

  ReplyDelete
 23. தீபாவளி அறிவிப்பா இரத்தப்படலம் வந்தா நல்லாருக்கும். சும்மா ஒரு ஆசை தான் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இப்படியே பேசிட்டிருங்க பூரிக்கட்டையால் அடி வாங்கி உங்களுக்கே ரத்தப்படலம் வ்ந்திடும்

   Delete
  2. எப்படியோ வந்தா சரிங்க

   Delete
 24. எடி சார், இப்பொழுது தான் இவையெல்லாம் மரணமே படித்து முடித்தேன். விறுவிறுப்பான ஆங்கில படம் பார்த்தது போலிருந்தது சார். சமீபத்தில் வந்த inferno படத்தின் சாயலும் தென்பட்டது. மார்டினை கலரல் கொண்டு வந்தால் இன்னும் பலத்த வரவேற்பு பெறுவார் சார்

  ReplyDelete
 25. Yipeee........
  டெக்ஸ் அட்டகாசமாய் உள்ளார்

  ReplyDelete
 26. Vijayan sir, thala styleley thanithan tharkolai pannurathu nallum thanathu kootathoda athuvum periya malai mela irunthu than viluvar!!!😀 naan deepavali attai padatha sonnen.😆

  ReplyDelete
 27. Magizchi.happy Deepawali today starts with tex.

  ReplyDelete
  Replies
  1. @ Sridhar

   உங்களைத்தான் வலை வீசித் தேடிக்கிட்டிருக்கோம்!! எடிட்டரின் முந்தைய பதிவைப் பார்த்தீர்களா இல்லையா?!!

   Delete
  2. அச்சச்சோ! பதில் சொல்ல மாட்டேன்றாரே...? ஒரு பரிசை வைத்துக்கொண்டு நான் படும்பாடிருக்கே....

   Delete
  3. வேணும்னா நான் என் அட்ரஸ தரவா

   Delete
 28. அன்பு ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. படப்பொட்டி வாங்கியாச்சு..

  ReplyDelete
 30. மாடஸ்டி பிளைசியின் தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete
 31. பொட்டி வாங்கிகுங்க ..

  என்ற ஆனந்த தகவலுடன் ....


  ஆசிரியர் ...அவர்தம் பணியாளர்கள் ...அவர்தம் குடும்பத்தினர் ...இங்கு கூடும் அனைத்து காமிக்ஸ் நண்பர்கள் ..அவர்தம் குடும்பத்தினர் என அனைவருக்கும் இனிய முன்கூட்டிய தீபாவளி வாழ்த்துக்கள் ....


  தீபாவளி அன்று மீண்டும் வகுப்பிற்கு வருகை தர இருக்கும் ஆசிரியர் அவர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் ..:-)

  ReplyDelete
 32. அடுத்த வருட துவக்கத்திற்கு முன்னரே இந்த வருடத்திலேயே இன்ப அதிர்ச்சிக்கு மேல் இன்ப அதிர்ச்சி கொட்டி கொண்டே இருக்கிறது ...


  முகமறியா நண்பர் ஒரு வருட சந்தாவை அனுப்பி இன்ப அதிர்ச்சி அளிக்க ...முகமறிந்த நண்பர் எனக்கு ...எனது வாரிசுகளுக்கு ...என டீசர்ட் குவியலுடன் எனது நீண்ட நாள் அதிரடியான விருப்ப கதையான அதிரடிபடை என்ற லயன் மூன்றாம் ஆண்டு மலருடன் மற்றும் சில அருமையான காமிக்ஸ் இதழ்களையும் அனுப்பி வைத்து தீபாவளிக்கு இன்ப வெடியை வெடித்து கொண்டே இருக்கிறார்கள் ....


  தீபாவளி பரிசை அனுப்பிய அந்த " சிபி சக்கரவர்த்தி " யை வாழிய வாழிய என வாழ்த்தி கொண்டு ....மனமாற நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் ...


  என்னே தவம் செய்தேன்...இம்மண்ணில்

  காமிக்ஸ் மானிடராய் பிறக்க ...

  ReplyDelete
  Replies
  1. நானும் அந்த பரிசு மழையில் நனைந்து மகிழ்ச்சியடைந்நேன் நண்பர்களே...
   நண்பர் சிபி சக்ரவர்த்தியின் தீபாவளி பரிசில் சில.....
   1.இரத்தபடலம் ஜம்மோ ஸ்பெசல்-2
   2.லயன் டாப்10 ஸ்பெசல்-1
   3.முத்து நெவர் பிபோர் ஸ்பெசல்-1
   4.கற்கால வேட்டை
   5.மீண்டும் ஸ்பைடர்
   6.மனித எரிமலை-2
   7.மந்திர மண்டலம்
   8.நீலப்பேய்மர்மம்
   9.தேவை ஒரு மொட்டை
   10.லயன் மெகா ட்ரீம்ஸ்பெசல்
   11.இரத்த முத்திரை
   12.மாயாவிக்கோர் சாவால்
   இன்னும் இன்னும் பலப்பல...
   திகைப்பில் நண்பர்கள்...
   இத்தகைய நல்ல உள்ளங்களை நண்பர்களாக அடைய காரணமான காமிக்ஸ்ஸை எண்ணி எண்ணி வியக்கிறேன்...

   "நட்பே காமிக்ஸ்...
   காமிக்ஸே கடவுள்..."

   Delete
  2. //கற்கால வேட்டை.//

   இளவரசியின் அற்புதமான சாகஸம்.........

   புறாவுக்காக உயிர் கொடுக்க துணிந்தார் அன்றைய சிபி சக்கரவர்தி.....

   நண்பர்களுக்கு புரதான விலைமதிப்பில்லாத பழைய காமிக்ஸ்களை அன்பளிப்பாக வழங்கிய தற்கால சிபி சக்ரவர்த்தி வாழ்க.! வாழ்க.!

   Delete
  3. லயன் டாப் 10 ஸ்பெஷலில் எங்கள் இளவரசியின் கதையும் ஒன்று...சித்திரங்களும் கதையும் கண்களில் ஒத்திக்கொள்ளலாம்.!

   Delete
 33. ST ன்னா ST தான். டான்னு 9 மணிக்கே போன் பண்ணிட்டாங்க. என்னாலதான் உடனே போய் வாங்க முடிய்லை.
  நன்றி எடிட்டர் சார் (STயில் மாற்றியதற்கு) .

  பட்டாசுகளும்
  புத்தாடைகளும்
  சரசரக்க. . .

  புன்னகைகளும், புதுக்
  கொண்டாட்டங்களும்
  பரபரக்க. . .

  இல்லமெலாம்
  ஒளிரட்டுமே
  தீப ஒளி...

  உள்ளமெலாம்
  மலரட்டுமே
  தீபாவளி..!

  ReplyDelete
 34. சர்வமும் நானே ....

  யீயீயீயீயீப்ப்ப்பீபீபீபீபீபீபீ...!!!

  ReplyDelete
 35. எடிட்டர் சார் எல்லா நாட்டிலுள்ளவர்களும் நேரடியாக உங்கள் வலைதலத்தில் காமிக்ஸ்களை வாங்க ஏற்பாடு செய்யுங்கள் சார் எங்களை போன்ற காமிக்ஸ் ரசிகர்களின் வேன்டுகோள் இது தயவு செய்து இதை செயற்படுத்துங்கள்

  ReplyDelete
  Replies
  1. Aashique.stark : ஏற்கனவே இதுபற்றி இம்மாதமே மூன்றுமுறைகள் எழுதி விட்ட ஞாபகம் உள்ளது ! நடைமுறை சாத்தியமில்லா விஷயமிது !

   கட்டணங்களில் விரயங்களைத் தவிர்க்க நினைத்தீர்களெனில் தற்போது வாங்கி வரும் முறையே சாலச் சிறந்தது !

   Delete
  2. நன்றி எடிட்டர் சார் சாதாரனமாக இலங்கையில் மிக தாமதமாகவே புத்தகங்கள் கிடைக்க பெறுகின்றன இன்னும் எங்களுக்கு செப்டம்பர் , ஒக்டோபர் மாத புத்தகங்கள் கிடைக்க பெறவில்லை சார் இப்படியான ஒரு துரதஸ்டவசமான சூழல் இங்கு நிலவுகிறது இலங்கைக்கான எங்கள் விநியோகஸ்தர்களின் தாமதமும் இதற்கு காரனம் இந்த தீபாவளி பட பொட்டி எங்கள் கைகளுக்கு கிடைக்க 2017 ஜனவரி அப்படி ஆகும் சார் பதிலுக்கு மிக்க நன்றி சார். இவ்வாறான நிலையை நீக்க முயற்சி மேற்கொண்டால் கோடி புன்னியம் எடிட்டர் சார் உங்களுக்கு.கடல் கடந்து உள்ள வாசகர்களின் நிலை மிகுந்த கவலை கிடமாக உள்ளது சார்

   Delete
  3. நண்பரே, இந்தியாவிலிருந்து இலங்கைக்கான தபால், கொரியர் கட்டணங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். விரைந்து தருவிப்பதானால் இப்போதுள்ள விலைகளின் இரண்டு மடங்கு விலையாகிவிடும். அதுமட்டுமல்லாமல் அதற்கான செலவுகளுக்கு முன்பணமாக நாம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அதற்கு நாமனைவரும் தயாரெனில் தருவிக்கும் நண்பர்களும் தயாராகவே உள்ளார்கள்.

   Delete
  4. புத்தகங்களே கிடைக்காத காலம்தாண்டி இப்போது தாமதமாகவேனும் புத்தகங்கள் கிடைக்கின்றன என்பதே எமக்கு ஆறுதலானது. 2012 முதல், நாம் பொறுமையோடிருந்து புத்தகங்களை வாசிக்கிறோம். நீங்கள் இந்த வட்டத்துக்குள் அண்மையில்தான் வந்திருக்கிறீர்கள். அதனால் இன்னமும் இதிலுள்ள சிரமங்களும் செலவினங்களும் உங்களுக்கு பிடிபடவில்லை. விரைவில் அதுதொடர்பிலான பின்னணியினை அனுபவ பூர்வமாக உணர்ந்திடுவீர்கள். அப்போது கடந்த நான்கு வருடங்களாக இலங்கையிலிருந்து ஆர்வத்தோடு இயங்கும் நண்பர்களின் வலிகளையும், சிரமங்களையும் காமிக்ஸ் மீதான ஈடுபாட்டையும் புரிந்திடுவீர்கள்.

   Delete
  5. உங்களைப்போலவே, இவ்வளவு தொழிநுட்பம் வளர்ந்திடா நாட்களில் ஆசிரியருக்கு மின்னஞ்சலுக்கு மேல் மின்னஞ்சல் சோகக் கதைகளை எழுதி கடுப்பேற்றியவன்தான் நானும்! அது ஒரு தனியான வரலாறு!!! :-P

   Delete
  6. HA HA காத்திருப்போம் காத்திருப்போம் இலங்கைக்கு பொட்டி வரும் வரை காத்திருப்போம்

   Delete
 36. இன்றய தினமலர் நாளிதழுடன் வந்த
  தீபாவளி புத்தகத்தில் நமது ஆசிரியரின்
  பேட்டியுடன் மாயாவி&டெக்ஸ் படங்களுடன் சிறப்பு செய்தி வெளியாகியுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ...உடனே வாங்கனுமே...ஆசிரியர் சார் இதெல்லாம் முன்கூட்டியே சொல்ல மாட்டீங்களா ...:-(

   Delete
  2. Paranitharan K : தலீவரே...மூன்று மாதங்களுக்கு முன்பான பேட்டி அது ! தீபாவளி மலரில் வருமென்று சொல்லித் தான் பேட்டி கண்டார்கள் !

   ஆனால் தலைமை அலுவலகத்திலிருக்கும் நியூஸ் எடிட்டருக்கு அது சுவாரஸ்யமாகப் பட்டாலொழிய பிரசுரம் ஆவது சிரமம் என்பதால் அவசரக்குடுக்கையாய் நான் வாயைத் திறக்கவில்லை ! இப்போதுகூட, இங்கே நண்பர் கணேஷின்பின்னூட்டத்தைப் பார்த்த பின்னரே தான் நானே புக்கை வாங்கிப் பார்த்தேன் !

   பேட்டிகளில் என்னதான் மாய்ந்து மாய்ந்து சமநாட்களின்சமாச்சாரங்களை பற்றி பேசியிருப்பினும், காமிக்ஸின் பரிணாம வளர்ச்சியினைப் பற்றிச் சொல்லியிருப்பினும் - பிரசுரமாகும் கட்டுரைகளில் "இரும்புக்கை மாயாவி"யில் ஆரம்பித்து, ஒருவித stereotyped சங்கதிகளே வெளியாவது வழக்கம். ஒரு காமிக்ஸ் வாசகனாய் / வாசகியாய் அல்லாத செய்தி சேகரிப்பாளர்களுக்கு நம் காமிக்ஸ் உலகின் ரம்யம் சரியாகப் புரிபடுவதில்லை ! So பேட்டிகள் வெளியாகும் வேளைகளில் எல்லாமே - 'சாமி...ஓரளவுக்காவது சுவாரஸ்யமாய் கட்டுரை அமைந்திருந்தால் தேவலையே என்ற நினைப்பு தான் மேலோங்கும் !

   ஆனால் இந்த மீடியாவின் வெளிச்ச வட்டங்கள் நமக்கு நல்கிடும் நலன்களின் மதிப்பை துளியும் மறந்திடுவதில்லை நான் !! அரைப்பக்க விளம்பரம் பல்லாயிரம் ரூபாய்களை கபளீகரம் செய்திடக்கூடிய முன்னணி இதழ்களில் நமக்கு கிடைக்கும் இத்தகைய விலையில்லா விளம்பரத்தின் பொருட்டு அவர்கள் அனைவருக்கும் நமது நன்றிகள் என்றென்றைக்கும் உண்டு !

   இந்த வாரம்கூட இன்னொரு பத்திரிகைக்கு நம்மைப் பேட்டி கண்டுள்ளனர் என்பது கொசுறுக் சேதி !!

   Delete
 37. ஆசிரியருக்கும், அவர் தம் குடும்பத்தினருக்கும், நம் காமிக்ஸ் பணியாளர்களுக்கும்,
  காமிக்ஸ் சகோதர, சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 38. தித்திக்கும் தீபஒளித் திருநாளில்
  எத்திக்கும் புகழ் மணக்கும் என்னருமை லயனே
  முத்தான முத்தே முத்தமிழின் சொத்தே
  சத்தான கதை பல தந்து
  சாகாவரம் பெற்று வாழி நீ வாழி ..

  ReplyDelete
 39. தீபாவளி நல்வாழ்த்துகள். என்ன முன்னமே சொல்லிவிட்டேன் என்று பார்க்கிறீர்களா.அது என்னமோ தீபாவளி மலர் என்று நமது லயனின் புத்தகம் எப்போது கிடைக்குதோ அன்று தானே நமக்கெல்லாம் தீபாவளி என்னநான் சொல்றது.
  அப்புறம் ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள் இப்படி புத்தகத்தை அடுக்கிவைத்து போட்டோவை போடாதீர்கள் என்றெனும் ஒரு நாள். யாராவது எல்லாவற்றையும் கொள்ளையடித்து விட போகிறார்கள். ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ. ...(நானாக கூட இருக்கலாம்.)
  தீபாவளி க்கு முன்பு புத்தகத்தை கொடுத்த தங்களுக்கும் குழு விற்கும் எனது மனமார்ந்த நன்றிகளுடன் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நன்றி

  ReplyDelete
 40. தீபாவளி "மலர்"ந்து விட்டது. நம்ம பெயரை நமக்கு பிடித்த புத்தகத்தில் பார்க்கும் போது கிடைக்கும் ஒரு மைண்ட் எஃபக்ட்டுக்கு ஜேம்ஸ் கேமரூன் பட க்ராஃபிக்ஸ் கூட பக்கத்தில் வர முடியாது.பண்டோரா மாதிரி லயன்டோரான்னு ஒரு கிரகமே சிருஷ்ட்டிச்சு போய்ட்டு வந்துட்டேன். :-)
  எடிட்டர் அவர்களுக்கு நன்றி்.

  எடிட்டர், அவர் குடும்பத்தினர், லயன் அலுவலகத்தினர், நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 41. வந்துட்டானே கொரியர் நபரு...
  தந்துட்டானே பார்சல் கவரு...
  வாங்கும் போதே நெஞ்சம் துள்ளுதே...
  பிரிக்கும் போதே பார்வை மருளுதே...

  டமார்...பட பட படார் பட பட சட சொய்ங் விய்ங் ஸ்ஸ்ஸ் வீவீவீ...

  சூப்பர்...மார்வலஸ்...பென்டாஸ்டிக்...
  ஸ்டன்னிங்...
  .....
  ......
  ......
  இன்னும் இன்னும் இருக்கும் எல்லா அட்ஜெக்டிவ்ஸ்களையும் போட்டாலும் விவரிக்க அவைகள் போதாது....

  சிம்ப்ளி அல்ல ரிச்லி அட்டகாசம் சார்..
  குங்குமச் சிவப்பில் தல டெக்ஸின் பேர் தக தகக்க, டெக்ஸ், கார்சன் உருவங்கள் ஜொலி ஜொலிக்க கையில் ஏந்திய 19வது தீபாவளிமலர் "சர்வமும் நானே"-- உரைப்பது "சர்வமும் விஜயரே"...
  இத்தகைய படைப்புக்கு நன்றி மட்டும் போதாது கூடவே நெகிழ்ச்சி & மகிழ்ச்சி...

  அட்டைப்படமே ஒரு வாரம் பார்த்து ரசிப்பேன்...
  395வண்ணப் பக்கங்களும் சிவகாசி ராக்கெட்டுகளாக மின்னலை அள்ளித் தெளிக்கின்றன்...
  இனி சர்வமும் டெக்ஸே....

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ...உடனே பாக்குனுமே ...மணி எப்போ ஆறாகும் ...:

   Delete
 42. சார் அட்டை படம் டெக்ஸ் அபாரம்....பின்னட்டையில் நிஜமாகவே மழை ஒழுகுவதான பிரம்மை...மின்னலை ஜிகு ஜிகுக்க வைத்திருந்நால் அருமையான ுயிரோட்டமாயிருந்திருக்கும் ...மழை ஒழுகுதோ எனும் பிரம்மிப்பு பிரம்மாண்டம்..தொடர்ந்து அட்டைகளில் பதுமைகளை புகுத்தி வரும் அந்தப் புதுமைப் பித்தனை தலை வணங்குகிறேன். அபாரம் சார்...

  ReplyDelete
  Replies
  1. புத்தகங்கள் கிடைத்து விட்டதா சகோதரரே
   சூப்பர்
   வானில் தான் மிதந்து கொண்டு இருப்பீர் :)

   Delete
 43. டெக்ஸ் அட்டை படமும் அதன் கணமும் தீபாவளி ஆரம்பித்து விட்டதை பறை சாற்றுகிறது ஆசிரியரின் தீபாவளி பரிசு கிடைத்து விட்டது குத்தாட்டம் போடும் படங்கள் நூறு

  ReplyDelete
  Replies
  1. //குத்தாட்டம் போடும் படங்கள் .//
   அடடே! சேலத்தில் தான் ஒருவர் குத்தாட்டம் போட்டு ரிக்டர் அளவை கூட்டிவிட்டார்.நீங்களுமா.??? பூமி தாங்காது சார்.!

   Delete
 44. ஈரோடு விஜய் சார், என்னையா தேடுகிரிர்கல்.என்ன சிர் விஷ்ச்யம்.போன பதிவு பற்றிய எதுவும் எனக்கு தெரியவில்லை. ஆசிரியர் என்ன சொல்லி இருந்தாலும் உடனே எனக்கு சொல்லவும். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. @ Sridhar

   அப்பாடா! வந்துட்டீங்களா?
   முதல்லயிருந்தே சொல்றேன்! அதாவது... போன வாரம் நம்ம எடிட்டர் ஒரு கேப்ஷன் போட்டி வச்சிருந்தார்... அதுல ஜெயிக்கிறவங்க அவங்களோட நண்பர் யாருக்காவது சந்தா A, B, C ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பரிசாக் கொடுக்கலாம்னு சொல்லியிருந்தார்! அதுல நானும், டாக்டர் ஹரியும் ஜெயிச்சோம்!

   அதைத் தொடர்ந்து...

   ///Erode VIJAY23 October 2016 at 10:46:00 GMT+5:30

   பரிசாகக் கிடைத்த சந்தாவை யாருக்குக் கொடுப்பது.....?

   இதுவரை காமிக்ஸ் வாசனையே இல்லாத ஒரு நண்பருக்கு இதைப் பரிசளித்து ( ஒருவேளை அவர் படிக்காதுபோனால்) மொத்த சந்தாவும் முடங்கிப்போவதைவிட, இத்தளத்திற்கு வருகைதரும் 'தேவையிருக்கும்' நண்பர் ஒருவருக்கு இதைப் பரிசளித்தால் என்னவென்று தோன்றியது!

   அதிகம் யோசிக்க அவசியமில்லாமல் உடனே ஞாபகத்துக்கு வந்தவர் 'விலை' குறித்து அவ்வப்போது தன் கருத்துக்களைத் தெரிவிக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த நண்பர் Sridhar அவர்களே! !
   அவர் இதுவரை சந்தா ஏதும் செலுத்தியிராதபட்சத்தில் இப்பரிசை அவருக்கே கொடுக்க விரும்புகிறேன்! A,B,Cக்களில் ஏதாவது ஒன்றை அவரே தேர்வு செய்துகொள்ளும் உரிமையை வழங்கும்படி எடிட்டர் சமூகத்தை வேண்டிக்கொள்கிறேன்!


   Vijayan23 October 2016 at 11:01:00 GMT+5:30 கும்பகோணத்தைச் சேர்ந்த நண்பர் Sridhar இதனை வாசித்திடும் பட்சத்தில் - கை தூக்கிடுங்களேன் ப்ளீஸ் ! ///

   இதான் நடந்துச்சு! எந்த சந்தாவை பரிசா வாங்கிக்கறதுன்னு இனி நீங்கதான் முடிவு பண்ணணும்!

   Delete
  2. @Erode VIJAY
   மூச்சு விடாம விலாவரியாக சொல்லி விட்டிர்கள் சகோதரரே

   Delete
  3. ஸ் அப்பாடி, இந்தாங்க விஜய் ஐஸ்பீர்...
   இம்புட்டு கன்டினியூவாவா பேசுறது, எனக்கு மூச் அடைக்குது...

   Delete
  4. நன்றி கடல் சகோ!

   க்ளக்.. க்ளக்.. க்ளக்.. நன்றி டெக்ஸ் விஜய்! இப்ப என்னோட கவலையெல்லாம் நண்பர் sridhar "ம்ஹூம்.. எனக்கு எதுவும் புரியலை. எடிட்டர் அப்படி என்னதான் சொன்னார்? மறுபடியும் மொதல்லேர்ந்து சொல்லுங்க"னு சொல்லிடுவாரோன்னு தான்! அப்படிக்கிப்படி ஏதாச்சும் நடந்துச்சுன்னா இனிமே கேப்ஷன் போட்டியிலயே கலந்துக்கறதில்லேனு முடிவு பண்ணியிருக்கேன்! :D

   Delete
  5. அந்த இரக்க சிந்தையுள்ள இளவரசன் கையில் பரிசுப்பொருளுடன் மீண்டும் Sridharக்காக காத்திருக்கத் தொடங்கினான்......

   Delete
  6. //அந்த இரக்க சிந்தையுள்ள இளவரசன் கையில் பரிசுப்பொருளுடன் மீண்டும் Sridharக்காக காத்திருக்கத் தொடங்கினான்......//

   LOLZ

   Delete
  7. ஈரோடு விஜய் @ அந்த "வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்"- படத்தில் ரோபோ சங்கர் க்ளைமாக்சில தொடர்ச்சியாக பேசும் வசன சீக்குவன்ஸ்...
   " அந்நிக்கு காலைல 6மணிக்கு கொக்கர கோ ன்னு கோழி கூவுச்சசா......"
   நடுவில் யாராவது டஸ்டர்ப் பண்ணா, மறுபடியும் அந்த "அந்நிக்கு..."-னு ஆரம்பித்து விடுவார்...
   கடைசி பணம் இருக்கும் இடம் சொல்லும் வரை ஒரு 20தடவை ஒவ்வொரு ஸ்டேஜ் ஆக இப்படி தடைப்பட...செம்ம ரகளயான ஜோக்கு...
   இன்னிக்கு அதே மாதிரி இந்த போட்டி கதையை நீங்கள் பேச போறீங்களா....ஐய் ஜாலி...

   Delete
  8. @சேலம் Tex விஜயராகவன்
   ஜாலிதான் சகோதரரே

   Delete
  9. ///அந்த இரக்க சிந்தையுள்ள இளவரசன் கையில் பரிசுப்பொருளுடன் மீண்டும் Sridharக்காக காத்திருக்கத் தொடங்கினான்......//

   ஹா...ஹா....

   பக்ஷே...இளவரசன் காதில் ஒரு சேதி....

   பரிசு...B or C சந்தா மாத்திரமே...

   Delete
  10. விஜய் அவர்கள் மன்னிக்கவும்.type seiya varavilai athan பிழை.எனது தேர்வு சந்தா B.உங்கள் முகவரியுடன் முகமரிய ஆவல்.எனக்கு தங்களது புதிய பரிசை அளித்தற்ற்கு மிக்க நன்றி.முன் மொழிந்த ஆசிரியர் சசமூகத்திற்கும் மனமார்ந்த நன்றி.
   இன்னும் நிரய எழுத வேண்டும். ஆனால் வார்த்தை வரவில்லை. எனது முகவரி.
   J.Sridharan
   16.birman kovil sstreet,
   Kumbakonam.612001.
   sridharanrckz@gmail.com
   9944005349.E.V நண்பா உங்கள் மின்னஞ்சல் please.

   Delete
  11. @ செனா அனா

   ச்சூ.. ச்சூ.. எனக்கும் அது தெரியும். போட்டி அறிவிச்சப்போ A,B,C யாக இருந்தது அப்பால முடிவு அறிவிக்கும்போது B,C ஆச்சு! நண்பர் சரவணனுக்கு சாய்ஸை அதிகப்படுத்திக் கொடுகத்தான் நானே A யை சேர்த்துப் போட்டேன்! ஆனா அதுக்கெல்லாம் அவசியமில்லைனு நம்ம நண்பர் Bஐ தேர்வு செஞ்சுட்டார்! :)

   Delete
  12. @ Sridhar

   நீங்கள் சந்தா-B யை தேர்வு செய்திருப்பது குறித்து மகிழ்ச்சி! இதைத்தான் தேர்வு செய்வீர்களெனவும் ஓரளவு யூகித்திருந்தேன்!
   உங்களுக்கு இந்தச் சந்தாவைப் பரிசளிக்க நானொரு கருவியேயன்றி உண்மையில் இந்தப் புண்ணியம் நம் மதிப்பிற்குரிய எடிட்டர் அவர்களையே சாரும் ( உண்மையான தயாளசிந்தையுடைய இளவரசர் இவரே)!

   இதோ... அடுத்த வருடத்திற்கான சந்தா-B உங்கள் வீடு தேடி வரும் என்ற இந்த சந்தோச தருணத்தில், கூடவே சந்தா A, Cக்கான தொகையை (கொஞ்சம் சிரமப்பட்டாவது) நீங்கள் செலுத்த நேரிட்டால் சந்தா எண்ணிக்கையில் ஒன்று கூடுமில்லையா? மெல்லக் கரைகண்டு வரும் நம் காமிக்ஸ் ஓடத்திற்கு நீங்களும் ஒரு துடுப்பாய் இருந்திட இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாமில்லையா? என்னுடைய இக்கருத்தை ஒரு ஆலோசனையாக மட்டும் எடுத்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ்?

   மற்றபடிக்கு, என்னுடைய வாழ்த்துகள் நண்பரே!

   ///உங்கள் முகவரியுடன் முகமரிய ஆவல்///

   என்னுடைய ப்ரொஃபைல் பிக்சரை ஒருமுறை பாருங்கள்... கிட்டத்தட்ட அப்படித்தான் இருப்பேன்! ;)

   என்னுடைய ஈமெயில் ஐடி : vijaymuns@gmail.com

   Delete
  13. ஸ்ரீதர் அவர்களே உங்களுக்கு சந்தா b யை பரிசளித்த ஈரோடு விஜய் அவர்களின் முகமறிய ஆவலா? சற்றே பின்னோக்கி 7 (Sunday ) August 2016 தினத்தைய ஈரோடு புத்தகவிழா பதிவுக்கு செல்லுங்கள். நண்பர்களின் புகைப்படங்களை காணலாம். அப்படியே கீழே வாருங்கள். தலைக்கு சற்றுமேலே கைகளை உயர்த்தி (ஓட்டு கேட்டு!!) கும்பிட்டுக்கொண்டுள்ளவர்தான் ஈரோடு விஜய் அவர்கள். அன்றைய தினங்களில் உடல்நிலை சரியில்லாதபோதும் வாக்கு சேகரிக்க sorry நண்பர்களை சந்திக்க வந்தவர் அவர். நண்பரே உங்கள் மனக்குறை தீர்ந்ததா?

   Delete
  14. திரு. ATR சார்,

   பேசாம ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவ எடுத்துக்கிட்டுப் போய் கும்பகோணத்துல இறங்கி "இங்க பாருங்க, இதுதான் நான்"னு காட்டிட்டு வந்துடலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்! ;)

   Delete
  15. அந்த இரக்க சிந்தை கொண்ட இளவரசன் தன் புகைப்படத்தைக் கையில் ஏந்தியபடி....

   Delete
  16. திரு.ஈரோடு விஜய்
   பாஸ்போர்ட் சைஸ் புகைப்படமெல்லாம் சரிப்படாது!
   என்னை மாதிரி "என்னத்த கன்னையா" டம்சு கண்ணை வைத்திருப்பவர்பாடு திண்டாட்டமாய் போய்விடும். ஒரு பேனரில் உங்களது ஈரோடு புத்தக விழா புகைப்படத்தை பெரிய அளவில் என்லார்ஜ் பண்ணி கையில் ஏந்தி கும்பகோணம் முழுக்க நகர் வலம் வரலாமா? அதைபற்றி சின்னதாக ஒரு கற்பனை!
   எனக்கு ஒரு கையில் பேனர்..மறுகையில் மைக்...!
   மைக்கில் நான் குரல் கொடுத்துக் கொண்டே வருகிறேன்.
   பின்னால் நீங்கள் இருபது பூனைகளுடன் நடந்து வருகிறீர்கள். இனி நான்...
   "இதோ வருகிறார்...வருகிறார்....
   பூனைகளின் காதலர்...
   பூனை மட்டுமல்ல...!
   சாரா வின் காதலர்..!
   சாரா மட்டுமல்ல.....!!
   கொஞ்சம்
   கறுப்பு ஆயாவின் காதலரும் கூட!
   இவருக்கு இன்னொரு பேரும் இருக்கு! அது...?
   இரக்க சிந்தனையுள்ள இளவரசன்!
   நக்கல் என்பது நமக்கெல்லாம்
   விக்கல் போல...
   (எப்போதாவதுதான் வரும்!)
   ஆனால்
   எங்கள் செயலாளர் ஈ.வி.க்கோ
   நக்கல்தான் வாழ்க்கை..!
   வாடிக்கை....!!
   (இடையில் மைக்கை நிறுத்தி என் மைன்ட்வாய்ஸ்...
   "என்ன செயலாளரே...
   மைக்கில் பாராட்டி பேசினால் கிடா வெட்டி விருந்து வைப்பதாக சொல்லி விட்டு காலையிலிருந்து நானும் 30 கிலோ மீட்டர் சுற்றி சுற்றி கத்தி வருகிறேன்..
   மணியோ மதியம் மூன்றாச்சு!
   இருக்கிற நிலையில் ஒரு தயிர்சாதம் கூட கிடைக்காது போலிருக்கே..! இருபது பூனைகளுடன் புறப்பட்ட நீங்கள் இரண்டு பூனைகளுடன் நடந்து வருகிறீர்கள்.மீதி பதினெட்டும் பசியில் அங்கங்கே சுருண்டுவிட்டன! இனி இதுக்கு நீ(ங்கள்) சரிப்படமாட்டே...வசனத்தை மாற்றி போடவேண்டியதுதான்")
   "இதோ வருகிறார்...வருகிறார்....
   பூனைகளை வேட்டையாடுபவர்..
   பூனை மட்டுமல்ல ....!
   சாரா போன்றவர்களையும் வேட்டையாடுவார்...!!
   சாரா மட்டுமல்ல...!.
   அப்படியே கொஞ்சம்
   கறுப்பு ஆயாக்களையும் வேட்டையாடுவார்....!!!
   இவருக்கு இன்னொரு திறமையும் இருக்கு!
   அது...?
   நள்ளிரவில் ஓடும் ரயிலில் அப்பர் பெர்த்தில் அமர்ந்தவாறே ஐந்து கிலோ கடலை மிட்டாயை ஆட்டை போட்டவர்.....! இப்படி மைக்கில் பேசியபடி திரும்பிப்பார்த்தால் தூரத்தில் தலைதெறிக்க ஓடும் ஒரு உருவம்....(அது நீங்கள்தான்) என் காலடியில் இரண்டு பூனைகளும் சுருண்டு கிடக்க அதற்குள் எந்த புண்ணியவானோ ப்ளூ க்ராஸூக்கு விலங்குகளை கொடுமை படுத்துவதாக தகவல் அளித்து விரைந்து வந்த அவர்கள் என்னை வண்டியிலேற்றி....
   மிச்சத்தை வந்து சொல்கிறேன்.
   வர்ட்டா.

   Delete
  17. This comment has been removed by the author.

   Delete
  18. @ திரு.ATR

   ஹா ஹா! நிஜமாகவே இருபது பூனைகளுடன் பேக்பைப்பர் ஸ்டைலில் சிவகாசிப் பக்கம் அப்படியே ஒரு ரவுண்டு போய்வரும் ஆசையை ஏற்படுத்திவிட்டீர்கள்! ;)

   Delete
  19. திரு.ஈ.வி.
   நான் கும்பகோணத்தை சுற்றிவரலாமென நினைத்தால் நீங்கள் சிவகாசிக்கே போக நினைத்துவிட்டீர்களே!
   அதுவும் நல்லதுக்குத்தான்..
   சீனியர் எடிட்டர், நம்ம எடிட்டர், ஜூனியர் எடிட்டர் அப்புறம் நம்ம அலுவலகத்துக்குள்ளும் ஒரு ரவுண்டு அடித்துவரலாம்தான்.
   குடோனில் பழைய பொக்கிஷங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் வாங்கிவரலாம். ம்..ம்.. இப்போதைக்கு கற்பனையில்தான் சுற்றிவரமுடியும்.

   Delete
 45. அனைவருக்கும் வணக்கம்.
  நண்பர் ஸ்டீல் அவர்களே ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் மொபைலுக்கு இங்கே அனுமதி கிடைத்துவிட்டது. எத்தனை நாள் மொபைல் இல்லாமலும் நமது தளத்தை பார்வையிடாமலும் இருக்கமுடியும்?
  இனிமேல்தான் கடந்த பதிவுகளையெல்லாம் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

  ReplyDelete
 46. பானை பிடித்தவள் பாக்கியசாலி
  இப்படி ஒரு படம் அந்தக் காலத்தில்.
  இன்றோ
  கூரியர் பெட்டியை பெற்றவர்கள்
  பாக்யசாலிகள்.

  ReplyDelete
 47. one word for tex cover page "Super"...mahizhchi...

  ReplyDelete
 48. டியர் சார்

  சர்வமும் நானே
  டெக்ஸ் லோகோ இரண்டு விதமான கலர்ல போட்டிருக்கீங்களா ??

  ReplyDelete
 49. என்னை வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றிகள்.அதுவும் கோவிலுக்குள் நுழைகையில் என் நினைப்பு ஒரு நண்பருக்கு வருகிறதென்றால்....
  நான் உண்மையில் பாக்யசாலிதான்.
  இந்த அன்பை மறக்க மாட்டேன் தோழரே.

  ReplyDelete
 50. சேலம் டெக்ஸ் சார்!
  கையை விட்டுப்போன இதழ்களை உங்கள் மலரும் நினைவுகள் மூலம் மறுபடி பார்த்த உணர்வினை உண்டாக்கி விட்டீரே. ஒரு மாத உழைப்பு!!! அசுரத்தனமான காரியம்தான்.அந்த கதைகளை இழந்த வருத்தத்தை சற்று நீக்கியது உங்களது பதிவுகள். காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்த மாதிரி பதிவுகளை மேய்ந்து கொண்டிருக்கிறேன். மறுபடி நிதானமாக படிக்கவேண்டும்.
  "என்னைப்" போய் மலரும் நினைவுகளை எழுதச் சொன்னீரே! நல்ல வேளை அதனை நான் செய்யவில்லை!
  கதைகளை சொல்வதில் நீங்கள் புலி என்றால் நானொரு எலி!
  கதைகளை சொல்வதில்
  நீங்கள் யானை என்றால் நானொரு பூனை!(நம்ம ஈரோட்டு பூனையார் அல்ல!)
  உங்களது முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கையில் தொடருங்கள்.
  இம்மாதிரியான முயற்சிகளுக்கு சற்று பலமான கரகோஷத்தை அளிப்போம் நண்பர்களே.

  ReplyDelete
 51. தீபாவளி விடுமுறையின் கடைசி வேளைநாள் என்பதால் இப்பொழுது கூரியரை வாங்கினேன்.டெக்ஸ் புத்தகம் அசத்தலாக இருந்தது.! ஏக்தம்மில் படிக்க எண்ணியுள்ளதால் மேலோட்டமாக அழகை ரசித்துவிட்டு பத்திரப்படுத்திவிட்டேன்.சி.ஐ.டி.லாரன்ஸ் கதையை இதுதான் முதல்முதலாக பார்க்கின்றேன். கதை எப்படி இருக்குமோ தெரியவில்லை.இதுவரை எடிட்டர் மறுபதிப்பு செய்யாதது ஆச்சர்யம்.டைகரின் இரத்தத்தடம் மாதிரி இல்லாமல் இருந்தால் சரிதான்.! லியனோ தாத்தா கதையில் வண்ண அச்சு கலவை மிகபிரமாதம்.!தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்னே கையில் ஒப்படைத்த எடிட்டருக்கு நன்றிகள் பல.!

  ReplyDelete
 52. \_புயலும் பதுங்கும் இவர் பெயர் சொன்னாலே\\

  அடடடே ஆச்சிரிய குறி!!!!!!

  பாவிப்பய DCTC இந்த முறை சீக்ிசறம் வேண்டாண்ணு நினைச்சா. எப்பவு லேட்டா வர DCTC சரியா பதினொரு மணிக்கு எல்லாம் டெலிவரி பண்ணிட்டா....

  ReplyDelete
 53. ஆசிரியர் அவர்களுக்கு சர்வமும் நானே புத்தகங்களின் மொத்த அணிவகுப்பை பார்க்கும்போது ஒரு சந்தேகம் எழுகிறது.tex என்ற எழுத்து சிகப்பு சிமெண்ட் என்று இருக்கிறதே?

  ReplyDelete
 54. நேற்று இரவு தீபாவளி விருந்து அடங்கிய பார்சல் பிரிக்க பட்டது ...என்ன தான் நான்கு விருந்து பதார்த்தங்கள் இருப்பினும் ....அடேங்கப்பா ...பார்வை சர்வமும் நானே என வந்து இறங்கிய ஜாங்கிரியை தவிர வேறெங்கும் பதிய தோண வில்லை ...சிம்ப்ளி சூப்பர் ...சிறிது நேரத்திற்கு பிறகே மற்ற பதார்த்தங்களின் பக்கம் பார்வை திரும்பியது ...

  முதலில் ...தாத்தா ....அட்டைப்படம் சிம்பிள் அன்ட் பெஸ்ட் ...உள்ளே ..வெளியே என அனைத்தும் அழகு ..இன்று படித்து விட்டு கருத்துக்களை பகிர்கிறேன் சார் ..

  லாரன்ஸ் டேவிட் மறுபதிப்பு ..

  அட்டைப்படம் ஓவியரால் அழகுற அமைந்துள்ளது ...என்னை பொறுத்த வரை அந்நாளைய மறுபதிப்பு இதழ்களுக்கு இதே போன்ற பழைய பாணி ஓவியங்கள் தான் சிறப்பு செய்வதாக ஓர் எண்ணம் ..எனவே அட்டைப்படம் அழகு ..அழகு ...அழகே ...மேலும் இதுவரை மறுபதிப்பு காணாத நான் படித்திராத கதை என்பதால் ஆவல் இன்னும் கூடுதலே...என்ன ஒன்று உள்ளே அந்த பழைய திக்கான ப்ரெள்ன் தாளாக இருந்திருப்பின் இன்னும் ஸ்பெஷலாக அமைந்திருக்கும்..( காரணத்தை தாங்கள் ஏற்கனவே தெரிவித்து விட்டாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை சார் ..மன்னிக்க ...


  வேதாள வேட்டை ...

  என்ன சொல்வது ...எப்பொழுதுமே ராபினின் அட்டைப்படங்கள் பட்டையை கிளப்பும்...ஆனால் இம்முறை உள்ளே அவ்வளவு தெளிவான அழகான சித்தர தரத்திற்கு அட்டைப்படம் சிறப்பு செய்யவில்லை என்பதே உண்மை ..அருமையான அந்த கறுப்பு பிண்ணனி மற்றும..சீட்டுக்கட்டுக்குள் ஓவியம் என்ற பாணி சிறந்த ஐடியா ...ஆனால் அந்த ஓவியம் ....?

  இந்த வருடத்தின் முதல் சுமாரான அட்டைப்படம் ராபினா ...நம்ப முடியவில்லை..:-(


  ஆனால் இதை மறக்க என்றே படா பட்டாசாய் இறங்கி மனதை கொள்ளை கொள்கிறார் தலைக்கு எல்லாம் தலயான நம்ம டெக்ஸ் ...முன்பின் இரு அட்டைப்படங்களும் ரசித்து கொண்டே இருக்க சொல்கிறது ..அந்த சிவப்பு வண்ண டெக்ஸ் தலைப்பு ..டெக்ஸ் ஓவியங்களின் வழவழப்பு ...பின் பக்கத்தில் பிரேமுக்கு வெளியே உள்ளே என அசத்தும் டெக்ஸ் ..என சூப்பரோ சூப்பர் எனில் சிறப்பு ஹார்ட் பைண்டிங் ..குண்டு ...என மனதை கூதுகலிக்க செய்கிறது ..உள்ளே சித்தரங்களோ செம கலக்கல் ..வண்ணம் அச்சு தரம் என அசத்தினால் ஒவ்வொரு பக்கமாக ஓவியங்களை ரசித்து பார்க்கலாம் என புரட்டினால் அந்த மஞ்சள் மாவீர்ர் வந்து கொண்டே இருக்கிறார் கடைசி வரை..இந்த முறை உண்மையாகவே அதிரடி அடிதடி தீபாவளியே ..

  இதனை தீபாவளி முன்னரே எங்கள் கைகளில் படர செய்த தங்களுக்கும் ..தங்கள் அணியினர்களுக்கும்...

  பிடியுங்கள் ஒரு பூங்கொத்து ...

  இனி படித்து விட்டு ....

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் விஜய ராகவன்.!


   டெக்ஸ் கதையில் முன் ப்க்க உள் அட்டை மற்றும் முதல் பக்கத்தில் ஏகப்பட்ட டெக்ஸ் அட்டை படங்கள் எப்பொழது நம் இதழில் வந்து உள்ளது.???

   Delete
  2. MV Sir @ 32ஆண்டில் மலர்ந்த இதழ்களில் வந்த காட்சிகள்...
   ஒரு பதிவே போடும் அளவு தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளன...

   Delete
  3. Please let me know the best app for typing in Tamil from phone.or let me know what app you are using.

   Delete
  4. செல்லினம் app download பண்ணி பாருங்கள் நண்பரே. நானெல்லாம் அதைத்தான் உபயோகிக்கிறேன்.

   Delete
 55. சி.சி.வ.
  ********

  நமது தலைவர் & செயலாளர் அவர்களின் விடாமுயற்ச்சி காரணமாக சி.சி.வ.தற்போது ரெகுலராக வருகிறது.ஆசிரியர் குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் காமிக்ஸ் வாசிப்பில் பனிகரடியின் நீண்டகால தூக்கம் போல் காமிக்ஸ் தொடர்புகள் இல்லாது இருந்தேன்.! ஆசிரியர் குறிப்பிட்ட ஆங்கி நாவல் கூத்துகள் எல்லாம் எனக்கு புதிய செய்திகள்.!அன்று நாவல் இன்று கிராபிக் நாவல்.ஹும் விடாது கருப்பு.!


  எடிட்டர் சார்.,

  இனி வரும் காலங்களில் நான்கு புத்தகங்களுக்கு ஒரே ஹாட் லைன் என்று இல்லாமல் ,எல்லா புத்தகங்களிலும் ஹாட்லைன் வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள் சார்.ஹாட் லைன் இல்லாத இதழ்கள் தோகை இல்லாத மயில் போலவும் , பிடறி முடிகள் இல்லாத சிங்கம் போல் படு கேவலமாக உள்ளது.

  இனிமேலும் ஹாட் லைன் இல்லாத புத்தகங்கள் வருமேயானால் எங்கள் தலைவர் & செயலாளர் அவர்களின் போர் முரசுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிளேன்.!

  நான்கு இதழ்கள் ஒன்றாக அச்சிட்டாலும் ,காலபோக்கில் இவை நான்கிற்கும் சம்மந்தமே இல்லையே சார்.!உதாரணமாக ஜாலி ஸ்பெஷலுடன் வந்த டால்டன் கதை இன்று ஒரு மூலையில் மதிப்பிழந்து கிடக்கிறது.!


  நாங்கள் ஹாட் லைன் பெரிதும் விரும்புவதற்கு காரணங்களில் ஒன்று ., கதையை பற்றியும் அதன் சூழல்களை அழகாகவும சுவராசியமாக கொடுக்கும் ஸ்டைல்.எனவே எல்லா புத்தகங்களிலும் ஹாட் லைன் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் சார்.ப்ளீஸ்.!

  ReplyDelete
  Replies
  1. @ M.V சார்,

   ///ஹாட் லைன் இல்லாத இதழ்கள் தோகை இல்லாத மயில் போலவும் , பிடறி முடிகள் இல்லாத சிங்கம் போல் படு கேவலமாக உள்ளது. ///

   நெத்தியடி!! +10000000000

   அட்லீஸ்ட் ஒரு அரைப்பக்கமாவது கதையைப் பற்றியோ, கதை மாந்தர்களைப் பற்றியோ அல்லது கதை குறித்த இவரது (எடிட்டர்) அனுபவங்களையோ எழுதலாம் தான்!

   கல்யாண மண்டபத்துல சில பெரியவர்கள் ( அல்லது சில இளம் பெண்கள்) பன்னீர் தெளித்து வரவேற்பார்களே... மண்டபத்துக்குள்ள நுழையும்போது அப்படியொரு வரவேற்பு கிடைத்தால் நம் மனசு ச்சும்மா ஜிவ்வ்வ்னு இருக்கும்!
   அதுவே வரவேற்க யாருமே இல்லேன்னா....? முன்னுரையில்லாத புத்தகங்களும் வரவேற்க ஆளில்லாத கல்யாண மண்டபம் போல தான்!

   போராட்டம் கீராட்டம்னு நடத்தினாத்தான் சிலர் சரிப்பட்டு வருவாங்கன்னா அப்புறம் வேறென்ன செய்ய?!!

   Delete
 56. டியர் எடிட்டர்

  தாத்தா விஞ்ஞானி மறுபடியும் six அடிக்கிறார் ! Had a hearty laugh !!

  tex புத்தகம் நன்றாக உள்ளது - ஆனால் - what's with the cover of every hard-bound issue? மீண்டும் சொதப்பல் - போன தீபாவளி தர்மேந்திரா கவர் பெட்டர் !

  இந்த Tex "கும்பலாக மலை மேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளும்" கவருக்கு பதிலாக inset Greeting Card படத்தை கவராக்கி இருக்கலாம் - அது சும்மா அள்ளுகிறது ! சிவகாசி கவிஞர் கவிதையும் இம்முறை ஓஹோ !!

  ReplyDelete
 57. Dear editor sir.
  Thank u very much sir .
  My address
  J.Sridharan.
  25/16 Brahman kovil street,
  Kumbakonam.612001.
  Cell.9944005349.
  தாங்கள் அளித்த பரிசு என் வாழ் நாளில் மறக்க இயலாத ஒன்று. வாழ்க வளமுடன். நன்றி.Mail அனுப்ப முயற்சித்தேன்.போகவில்லை.

  ReplyDelete
 58. பொட்டி நேற்றே வந்துவிட்டாலும் இன்றுதான் என்னால் கைப்பற்ற முடிந்தது! தீபாவளி என்றால் டெக்ஸ் என்று இதன்முலம் உறுதியாகிவிட்டது. ஒரே திருஷ்டி பரிகாரம் வேதாள வேட்டை அட்டைபடம்தான். கதை ஏமாற்றாது என நம்புகிறேன்! மேலும் நானும் தங்க அங்கத்தினர் ஆகிவிட்டேன் எனது எண் :1086!

  ReplyDelete
 59. நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

  அந்த ஒரு போட்டோ போதுமே......
  தலயே நேர்ல வந்து "சர்வமும் நானே"னு சொல்றப்பல இருக்கு !

  ReplyDelete
 60. Happy Deepaavali to all the Blog participants !

  ReplyDelete
 61. சார், எனக்கு இன்னும் பார்சல் வரவில்லை. லோக்கல் ST Courier-க்கு போன் செய்தால், consignment number-ஐ கேட்கின்றார். தங்களின் அலுவலகத்திற்கு போன் செய்தல் யாரும் எடுக்கவில்லை.

  Makeshkannan, Urapakkam.

  ReplyDelete
  Replies
  1. Mkesh kannan

   நேற்றைக்கே உங்கள் கொரியர் பெட்டியை நான் கண்ணால் பார்த்தேன் நண்பரே

   9787402305. எனது எண்

   Delete
 62. பனிக்கடலில் பயங்கர எரிமலை.

  தல யை தீபாவளி அன்றுதான் படிக்கவேண்டும் என்று பத்திரப்படுத்திவிட்டு.என்னை அதிகம் ஈர்த்த இந்த கதையை பெரிதும் எதிர்பார்த்தேன்.


  சிறு வயது முதல் கண்ணிலே படாமல் " தண்ணி " காட்டிய இதழ் என்பதால் மிகவும் ஆர்வத்துடன் முதலில் படித்தேன்.!


  நமது எடிட்டர் காமிக்ஸ் ரசனையில் கிங் என்பதால் அவரின் போக்கிலே புத்தக செலக்ஷனை விட்டுவிட வேண்டும் என்ற படிப்பினையை டைகரின் இரத்தத்தடம் தந்தது.அடம்பிடித்து தோளில் தொங்கி அடம் பிடிக்கும் வேதாளம் மாதிரி டார்ச்சர் கொடுத்து ஒரு இதழை வாங்கி பட்ட அவஸ்தையை நாங்கள் இன்னும் மறக்க வில்லை.

  ப.ப.எ. கதையை இதுவரை மறுமதிப்பு எடிட்டர் செய்யவில்லை என்பதால் இரத்தத்தடத்தை நினைத்துக்கொண்டே பயந்து கொண்டே படித்தேன்.ஆரம்பத்தில் சுவராசியமாக சென்றது.ஓவியங்கள் ஆரம்பத்து இளமைக்கால லாரன்ஸ் டேவிட் தோற்றம் போல் நன்றாக இருந்தது.கதை முழுக்க தொடர்ந்து இருவரும்
  " பல்பு " வாங்கிக்கொண்டே இருந்ததால் ,ப்ரண்ஸ் பட வடிவேல் மாதிரி " அட அப்ரண்டீஸ்களா " என்று சொல்ல தோன்றியது.!கதையின் இடையில் சற்று தொய்வுடன் சென்றாலும் எனக்கு பிடித்து இருந்தது.!

  ReplyDelete
 63. ஆசிரியருக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் மற்றும் காமிக்ஸ் பணியாளர்களுக்கும் இங்கு வருகைபுரியும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 64. சற்றுமுன்னர் அலைபேசி வழிவந்த அட்டகாசமானதொரு சங்கதியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

  இந்த வருட தீபாவளி மலரான "சர்வமும் நானே " வை படித்துமுடித்ததும் ஒரு அதிதீவிர(வாத) டைகர் ரசிகர் , அட்டையை கிழிச்சுட்டா அத்தனை டொக்சு கதையும் ஒரே மாதிரிதான் தெரியும், அதிர்ஷ்ட தேவதை லீவு போட்டுட்டா டெக்ஸோட கதி அதோகதிதான் என்று டெக்ஸ் கதைகளை சகட்டுமேனிக்கு கலாய்க்கும் ஒரு டைகர் ரசிகர், சொன்ன வார்த்தைகள் அப்படியே. . .

  இதுவரைக்கும் வந்த தீபாவளி மலர்கள்லயே இதுதான் பெஸ்ட்.
  இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு த்ரில்லரை ஒரே மூச்சில் நான் படித்ததேயில்லை.
  செம்ம க்ரைம் த்ரில்லர் மூவி பாத்த எஃபெக்டுங்க. .
  2016 தீபாவளி மலர்தான் டெக்ஸ் கதைகள்லயே பெஸ்ட் கதைன்னு சொல்லுவேன். இனிமேலும் இப்படி ஒரு கதையை படிப்பேனான்னு தெரியாதுங்க.
  மகா சோம்பேறியான என்னையவே ஒரே மூச்சுல படிக்க வெச்சிடுச்சுங்க இந்த கதை. .!!

  சூப்பருங்க. . இந்த சந்தோசத்தை வார்த்தையில விளக்க முடியலைங்க .. .
  நான் இன்னொருக்கா படிக்க போறேங்க. வெச்சிடறணுங்க. .!!

  தீபாவளி பரபரப்பு முடிந்து சாவகாசமாக அமைதியான தருணத்தில் படிச்சிக்கலாமேன்னு நினைச்சுட்டு இருந்த என்னை. .

  "திண்ணையில படுத்துட்டு இருந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் கல்யாணம் " ன்ற மாதிரி. .உடனே படிச்சாகணுங்குற வெறியை உண்டாக்கிய அந்த போன்காலுக்கு சொந்தக்காரர் நம்ம ரம்மி XIII தான் என்பதை சபை நாகரீகம் கருதி வெளியிட விரும்பவில்லை .

  சர்வமும் நானே வுடன் ஐக்கியமாகிவிட்டு வருகிறேன். . _/|\_/|\_/|\_

  ReplyDelete
  Replies
  1. ///"திண்ணையில படுத்துட்டு இருந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் கல்யாணம் " ன்ற மாதிரி. .உடனே படிச்சாகணுங்குற வெறியை உண்டாக்கிய அந்த போன்காலுக்கு சொந்தக்காரர் நம்ம ரம்மி XIII தான் என்பதை சபை நாகரீகம் கருதி வெளியிட விரும்பவில்லை . ///

   ஹா ஹா ஹா! :)))))

   Delete
  2. "திண்ணையில படுத்துட்டு இருந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் கல்யாணம்"
   இந்த மாதிரியெல்லாம் எப்படி யோசிக்கறீங்க?

   Delete
 65. சர்வமும் TeX. TeX TeX தான் தல அதிரடி ஆரம்பம்.non stop action. Please guys don't miss it.

  ReplyDelete
 66. கிட் ஆர்ட்டின் கண்ணன்.!


  டைகர் ரசிகர் இவ்வாறு கூறுவது " வசிஸ்டர் வாயால் பிரம்மஸ்ரீ பட்டம் வாங்கியமாதிரி.! "

  நான் இரண்டு மணிநேரமாய் மெய்மறந்து நிதானமாய் படித்துக்கொண்டிருக்கின்றேன்..கீழே வைக்கவே மனமில்லை.காதலியுடன் கடலை போடும் போது மணித்துளிகள் கூட நொடிப்பொழதாக தோன்றுவது போல் படிக்கும்போது நேரம் போனதே தெரியவில்லை.!

  ReplyDelete
 67. புதுப் பதிவு வந்தாத்தான் எல்லார்க்கும் தீபாவளி வாழ்த்து சொல்றதுன்ற முடிவுல இருக்கேனாக்கும்!

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியருக்கு மட்டுமே புதிப்பதிவில் வாழ்த்து...
   நண்பர்களுக்கு சொல்லியாச்சு...

   Delete
 68. ஒருவழியாக வீடு திரும்பி புத்தகங்களைப் பார்த்தாச்சு. டெக்ஸ் வில்லரின் தீபாவளி ஸ்பெஷலில் கிழிந்த பக்கங்களைக் கண்டு அதிர்ச்சி.

  நெகடிவ் விஷயங்கள் உள்ளன, அதையெல்லாம் அப்படியே சொன்னால் ஒரிஜினல் ஐடியிலும், நல்ல ஐடியிலும் வந்து அர்ச்சனை செய்வார்கள். அதுக்காக விட்டுட முடியுமா? கொஞ்சம் தெளிய வச்சி தெளிய வச்சி அடிப்பதைப் போல, நல்ல விஷய்ங்களை சொல்லிட்டு, (எனக்கு) தவறு என்று படுவதைச் சொல்லலாம் என்று இருக்கிறேன்.

  இதோ, முதலில் வரப்போவது ராபினின் வேதாள வேட்டை பற்றிய அலசல்.

  அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். குறிப்பாக சேலம் டெக்ஸ் விஜயராகவன் அவர்களுக்கு. அவரது ஒவ்வொரு தீபாவளி மலரைப்பற்றிய பதிவும் அருமை. ஒழுங்காக அதை பிளாகிலும் போட்டு வைக்கவும். அப்போதுதான் படிக்க வசதி (எங்கள் அலுவலகத்தில் முகநூல் தடை செய்யப்பட்டுள்ளதாக்கும்).

  ReplyDelete
  Replies
  1. 😊🔫💣பட்டாசுகள் சிதறுவது போல..✨கவலைகள் சிதறட்டும்...🎇🎆மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கட்டும்...😁 🍮🍘🍩🍪🍰இனிப்புப் பண்டங்களைப் போல வாழ்க்கை தித்திக்கட்டும்....😋
   ☺☺☺அனைத்து நண்பர்களுக்கும்🙏அவர்தம் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் இனிய 🔫🎆🎇தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

   தேங்யூ அருண் சார்...

   Delete
 69. ஒருமணி நேரமா வாசல்ல நின்னுக்கிட்டு ஒரே ஒரு ஊசிப் பட்டாசை வெடிக்கச் செய்ய நீங்க எடுத்த முயற்சியெல்லாம் போதும் எடிட்டர் சார். சட்டுபுட்டுனு வந்து பதிவப் போடும் வழியப் பாருங்க! :P

  ReplyDelete
 70. எடிட்டரின் தீபாவளி சிறப்புப் பதிவு ரெடி நண்பர்களே! :)

  ReplyDelete