நண்பர்களே,
வணக்கம். மெலிந்த தேகங்கள் ; தொள தொள பனியன்... வெயிலில் உரமேறிய காபி நிறச் சருமம் ; பளீர் வெண்பற்கள் ; முதுகில் ஒரு நம்பர் ! மாரத்தான் ஓட்டங்களை டி.வி.யிலோ ; நேரிலோ நாம் பார்த்திருக்கும் பட்சத்தில் அதனி்ல் தவிர்க்கஇயலா வெற்றி பெற்றிடும் ஆப்பிரிக்க வீரர்களுக்கு நான் மேலே சொன்ன அடையாளங்கள் கச்சிதமாய்ப் பொருந்துவதைப் புரிந்திட முடியும் ! ‘விதியே‘ என்று சீராய் ஓடிக் கொண்டேயிருக்கும் மனுஷன்கள் - முடிவுக்கோட்டின் மஞ்சள் ரிப்பனைத் தூரத்தில் பார்த்த மறுகணமே புயலாய் உருமாற்றம் கண்டு செம ஓட்டம் எடுப்பதையும் பல தடவைகள் வாய் பிளந்து ரசித்திருக்கிறேன்! ‘எங்கிருந்து தான் அந்த திடீர் எனர்ஜி ஊற்றடிக்கிறதோ?‘ என்று மண்டைக்குள் கேள்வி ஓடும் ! ஆனால் இம்முறை அதற்கான பதில் எனக்கே லேசாகத் தெரிவது போலொரு ஃபீலிங் !
“2016” எனும் 12 மாதப் படலம் காத்திருக்கும் டிசம்பரோடு தான் நிறைவுபெறுகின்றதென்றாலும் எங்களைப் பொறுத்தவரை வருஷம் கிட்டத்தட்ட இப்போதே நிறைவானது மாதிரித் தான்!
- லயன் தீபாவளி மலர் – ஆச்சு!
- வேதாள வேட்டை – ஒரு நாள் வேலை மட்டுமே பாக்கி !
- லியனார்டோ – ஆச்சு!
- பனிக்கடலில் பயங்கர எரிமலை – ஆச்சு!
டிசம்பர் :
- ஜேசன் ப்ரைஸ் (2) – எடிட்டிங் பணி பாக்கியுள்ளது !
-வானம் தந்த வரம்(ஸ்மர்ஃப்) – எடிட்டிங் பணிகள் பாக்கி
- நீதிக்கு நிறமேது (Tex) – ஆச்சு !
அட்டைப்படங்கள் சகலமும் எப்போதோ ரெடி ; இங்கும், அங்குமாய் சிற்சிறு நகாசு வேலைகள் மட்டுமே செய்து விட்டால் – டிசம்பரின் இதழ்களும் தயாராகி விடும் என்பது தலைக்குள் பதிவாகும் போதே ‘ஈஈஈஈஈஈ‘ என்றதொரு இளிப்பு முகம் முழுவதும் நிறைகிறது ! சமீபகாலத்து வழக்கப்படி இது இன்னுமொரு ஆண்டின் நிறைவு மட்டுமே என்ற போதிலும் - அந்த எல்லைக்கோடு கண்ணில் தெரியும் போது உள்ளே ‘ஜில்‘லென்று அடிக்கும் சாரலுக்குத் தான் ‘புளகாங்கிதம்‘ என்று பெயர் போலும் ! (ஹை !! ஆதலினால் அதகளம் செய்வீர்" க்கு அப்புறமாய் இந்த வார்த்தையை மறுபடியும் நுழைத்தாயிற்று !!)
“அட மக்குப் பையா...” டிசம்பர் முடிவதற்கு முன்பாக SUPER 6-ன் முதல் இதழ் (லக்கி classics) காத்துள்ளது ; அப்புறம் பின்னாடியே 2017 எனும் அடுத்த நெடும்பயணமும் ஜனவரி மாதத்துச் சென்னைப் புத்தகவிழாவோடு தொடங்கவுள்ளது ! So பல்லைக் காட்டுவானேன் ?” என்று மண்டை ‘லா பாயிண்ட்டைப் பிடித்தாலும் – “இப்போதைக்குக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக் கொள்கிறேனேடாப்பா!” என்ற பதில் தான் கிட்டுகிறது!
2017-ன் பக்கமாய் பார்வையை ஓடவிட்டால் - பிரெஞ்சு to ஆங்கில மொழிபெயர்ப்பு 100% முற்றுப்பெற்று, இந்த வாரம் முதல் 2018-க்குள் அடியெடுத்து வைத்திருக்கிறோமென்று சொன்னால் எனக்கே கொஞ்சம் ஓவராய்த் தோன்றுகிறது ! But those are the facts ladies & gentlemen ! அப்புறம் இத்தாலிய மொழிபெயர்ப்பு ஒரு 40% நிறைவு பெற்றிருக்கும் - அங்குள்ள 2 வெறித்தனமான ரசிகைகளின் புண்ணியத்தில் ! 224 பக்க டெக்ஸ் கதையினை ‘அவசரம்‘ என்ற ஒற்றை வார்த்தை மின்னஞ்சல்லைப் பார்த்த மறுகணத்தில் ஒரு வாரத்தில் முடித்துத் தூக்கி வீசும் திறனைக் கண்டு வாய்பிளக்கத் தான் முடிகிறது! So 2017-க்குள்ளும் ஏற்கனவே ரவுண்ட் கட்டிக் கொண்டிருக்கிறோமென்ற உணர்வே இதமாகவுள்ளது ! ஜுனியர் எடிட்டரின் புண்ணியத்தில் இப்போதொரு குரல் பதிவு app-ஐ ஃபோனில் போட்டு வைத்துக் கொண்டு, கூர்க்காக்களும், வேதாளங்களும் வீதியுலா போகும் சாமப் பொழுதுகளில் மொழிபெயர்ப்பினை பதிவு செய்து கொண்டேயிருக்கிறேன் ! வெளியிலிருந்து கேட்பவர்களுக்கு ஏதோ டிராமா ரிகர்சல் நடக்கிறது போலும் என்றும் தோன்றக் கூடும் ; அல்லது 'இது பூட்ட கேஸ் !' என்றும் படலாம் ! But கார்ட்டூன் கதைகளை மட்டும் எப்போதும் போல பேனா பிடித்து எழுதுவது ; தூய தமிழிலான சீரியஸ் கதைகளை voice record செய்து நம்மவர்களை டைப்செட் செய்யச் சொல்வது என்ற பாணி தான் இப்போது ! So பேப்பரும் மிச்சமாகிறது ; என் விரல் ரேகைகளும் இன்னும் கொஞ்சம் ஆயுள் நீட்டிப்புப் பெறுகின்றன !
“திரும்பிப் பார்க்கிறேன்” என்றொரு பதிவு போட்டு 2016-ஐ அலச இன்னமும் நேரம் நிறையவே உள்ள போதிலும் - சமீப ஆண்டுகளில் 2015 & 2016 நமக்கு landmark வருடங்கள் என்பதில் ஐயமேது ? இந்த 2 ஆண்டுகளின் output மட்டுமே 102 இதழ்கள் என்றால் எனக்கே லேசாகச் சுற்றுகிறது தலை ! இந்த எண்ணிக்கையில் மறுபதிப்புகளின் நம்பர் 30 என்பது ஒரு கணிசமான எண்ணமே என்றால் கூட- அவை நீங்கலாய் 24 மாத அவகாசத்தில் 72 புது (அல்லது புதுசு மாதிரியான பணிகளை அவசியப்படுத்தும்) இதழ்கள் எனும் போது- அத்தனையையும் தொய்வின்றி ரசித்தும், சிலாகித்தும் வரும் உங்களை எண்ணிக் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளாது இருக்க முடியவில்லை ! அதிலும் இந்த நடப்பாண்டில் டெக்ஸ் தனிச் சந்தா ; கார்ட்டூன் வழித்தடம் ; மறுபதிப்புகளுக்கு தனி ட்ராக் என்ற பிரிவுகளை உருவாக்கிய பின்னே பொதுவான வரவேற்பு எவ்விதமிருக்குமென்ற curiosity ரொம்பவே இருந்தது எனக்கு ! அதற்கான பதில்கள் கிட்டத்தட்ட தெரிந்திருக்கும் சூழலில் தோளிலிருந்ததொரு பளு இறங்கியதொரு உணர்வு ! என்னதான் ‘தல‘ நமக்குத் தலையாய நாயகரெனினும் “சர்வமும் நானே” என்று அவர் பறைசாற்றுவதை எத்தனை தூரம் நாம் ஏற்றுக் கொள்வோமென்ற சிறு தயக்கம் என்னுள் இருந்தது ! ஆண்டின் இறுதி stretch நெருங்கி நிற்கும் சமயத்தில் - ‘தல‘ மீதான வாஞ்சை கூடியுள்ளதைப் புரிந்து கொள்வதும் ஒரு சந்தோஷ அனுபவமே !
சரி, பின்னே பார்க்கிறேன் ; முன்னே பார்க்கிறேன் ! என்ற பிலாக்கனங்கள் போதுமென்பதால் - காத்திருக்கும் புது இதழ்கள் பக்கமாய்ப் பார்வைகளை ஓடச் செய்வோமா ? இதோ- நமது சோன்பப்டித் தாடித் தாத்தாவின் சாகஸம் (!) நம்பர் 2-ன் அட்டைப்பட முதல் பார்வை ! ஒரிஜினல் டிசைனை நமது டிசைனர் tweak செய்துள்ளார் ! பிரமாதமாக வந்துள்ளதாய் எனக்குத் தோன்றியது ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
“ஜீனியஸ் உறங்குவதில்லை” இதழினை மொழிபெயர்ப்பது ஜாலியான அனுபவமாக இருந்தது ! ஆங்காங்கே நகைச்சுவைகளின் பொருட்டு out of the way நான் ஜோடித்துள்ள வரிகள் ‘எக்ஸ்ட்ரா நம்பர்கள்‘ போல நண்பர்களுள் சிலருக்குத் தோன்றிடலாம் ! But trust me - இந்த மாதிரியானதொரு ஆல்பத்தில் பணியாற்றுவது சத்தியமாய் சுலபமான காரியமல்ல ! ஒவ்வொரு சிறுகதைக்கும் ; ஒவ்வொரு ஒற்றைப்பக்க gag-க்கும் நகைச்சுவை கோட்டா கணிசமாகவே இருந்திட வேண்டுமென்ற நமது பொதுவான எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்திடல் சுலபமே இல்லை என்பதை இந்தக் கதையின் பணிநாட்கள் எனக்கு மீண்டுமொரு முறை ஞாபகப்படுத்தின ! தாத்தாவின் மீதான தீர்ப்பு உங்கள் கைகளில் கணம் ஜுரியாரே ! ஏதோ பார்த்துப் பண்ணுங்க !
அப்புறம் போன வாரத்துப் பதிவில்- இங்கே பதிவிடும் நண்பர்களின் அடையாளங்களை உறுதி செய்து கொள்வது பற்றிய topic-க்குத் துவக்கம் தந்திருந்தோமல்லவா ? தற்போதைய Blogger தளத்தில் கீழ்க்கண்ட வழிமுறைகள் மட்டுமே சாத்தியம் என்பது புரிகிறது!
1. நண்பர்களது ஈமெயில் ஐடிக்களைக் கோரிப் பெறும் வேளையில் அவர்களது ஃபோன் நம்பர் இத்யாதிகளையும் சேர்த்தே வாங்கிக் கொண்டு, அவர்களைப் பதிவிற்கு invite செய்வது வழிமுறை # 1 ! ஆனால் இந்த முறையில் சிக்கலென்னவெனில் நமது வலைப்பக்கத்தை பதிவு செய்திருக்கா casual வாசகர்கள் பார்த்திடவே முடியாது ! முழுக்க முழுக்கவே இதுவொரு closed க்ரூப்பாகவே செயல்பட்டிட முடியும் !
2.அல்லது கொஞ்ச காலம் முன்பாக நாம் பயன்படுத்திய disqus கமெண்ட் பாணிக்கு மாறிட வேண்டும் ! ஆனால் அதனில் உள்ள சிக்கலை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம் - இதுவரையிலான முந்தைய பதிவுகள் சகலமும் காணாது போய் விடுமென்ற வகையில் ! So இது நிச்சயமாய் வேலைக்கு ஆகும் சமாச்சாரமல்ல !
3.அல்லது இந்த BLOGGER தளத்திலிருந்து நண்பர் கார்த்திக் சோமலிங்கா சுட்டிக் காட்டிய wordpress தளத்துக்குச் சட்டி, பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு கிளம்பிட வேண்டும் ! அங்கும் இந்த கமெண்ட் பில்டரிங் வசதி எவ்விதம் செயல்படுகிறது என்பதை சற்றே பொறுமையாய்ப் பார்த்திட வேண்டும் ! அதனில் வசதிகள் அதிகமென்பது உறுதியெனில் சலோ wordpress என்போம் ! ஆனால் இங்குள்ள பார்வை எண்ணிக்கைகள் தொடருமா, அல்லது அங்கே புதிதாய்ப் பிள்ளையார் சுழியிலிருந்து ஆரம்பித்தாக வேண்டுமாவென்பது தெரியவில்லை ! இந்த வாரம் முழுக்கவே தீபாவளி மலரின் இறுதிக்கு கட்டப் பணிகளுக்கும் நானும், ஜுனியர் .எ.வும் மூக்கை நுழைத்துக் கிடந்தபடியால், இந்தப் புதுக் தல ஆராய்ச்சி சாத்தியமாகிடவில்லை !
4.வழிமுறை # 4 : இங்கேயே COMMENTS MODERATION ! உங்கள் பின்னூட்டங்கள் முதலில் எனது மின்னஞ்சலுக்கு வந்திடும் - அதனைப் பிரசுரிப்பதா ? வேண்டாமா ? என்ற தீர்மானத்தைக் கோரி ! So நீங்கள் பதிவிட்ட மறு கணமே இங்கே கமெண்ட்ஸ் பிரசன்னமாவது நடவாது ; சின்னதொரு கால அவகாசத்துக்குப் பின்னாகவே பிரசுரமாகும் ! இங்கே ராக் கூத்துக்களும், உடனுக்குடன் உங்களுக்குள் கச்சேரிகள் நடத்துவதும் சாத்தியமாகாது ! தவிர, நான் ஊரில் இல்லா நாட்களில் ரொம்பவே சிரமமாகிப் போய்விடும் ! இந்த ஆலமரத்துப் பஞ்சாயத்து ; ஜமுக்காளம் சொம்பு சமாச்சாரங்களுக்கும், ஜுனியருக்கும் தூரம் ஜாஸ்தி என்பதால் அவரை இதனுள் நுழைக்க முனைவது சரியாகாது ! So இதனை செயல்படுத்துவது கஷ்டமே !
5.Made to order - நம் தேவைகளுக்கு ஏற்ப ஒரு discussion page தனை உருவாக்கி நமது வலைத்தளத்தில் இணைப்பது இதற்கொரு தீர்வாகுமா ? என்று நமது டாக்டர் பாலசுப்ரமணியனின் மைந்தரிடம் வரும் வாரத்தில் கேட்டாகணும் ! அது ஓ.கே. ஆகிடும் எனில் சூப்பர் !
So wordpress தளமாற்றம் அல்லது நமக்கே நமக்கொரு டிஸ்கஷன் பக்கமே தீர்வு என்று தோன்றுகிறது ! வரும் வாரத்தில் இது பற்றிய தீர்மானம் எடுத்திடுவோம் !
இப்போதைக்கு இந்த பிளேட் போதுமென்பதால் - விடைபெறும் முன்பாக இலகுவான விஷயங்கள் பக்கமாய்ப் பார்வையை ஓட விடுவோமே ? சந்தா E-ன் தேடலில் நாம் பரிசீலித்த கதைகள் ஒரு வண்டி தேறும் ! விலை சார்ந்த வரையறைகள் ஒரு முக்கிய காரணமாகிப் போனதால் அவற்றுள் நிறையவற்றை ஓரம் கட்ட வேண்டிப் போனது - at least தாற்காலிகமாகவாவது ! ஆனால் அவற்றை உங்கள் கண்களில் காட்டும் ஆவல் மண்டைக்குள் 'கொய்ங்ங்க்க்' என்று ரீங்காரமிடுவதால் - இதோவொரு குட்டி சாம்பிள் மட்டும் ! ஆங்கிலத் திரைப்படங்கள் ; நாவல்கள் ; காமிக்ஸ் இத்யாதிகளில் ZOMBIES பற்றிய ஆக்கங்கள் நிறையவே உண்டு ! பாதி செத்த நிலையில் திரியும் இந்த "மிருதன்களை" சமீபமாய்த் தான் தமிழ் சினிமாவிலும் பார்த்திருக்கிறோம் ! இதோ - கிட்டத்தட்ட அந்தப் படத்தின் பாணியிலேயே உள்ளதொரு கதையிலிருந்து ஒரு ஸ்டில் ! சந்தா E - சீசன் 2 ஆரம்பிக்கும் பொழுது - இதனை முயற்சிப்போமா ? What say folks ?
2.அல்லது கொஞ்ச காலம் முன்பாக நாம் பயன்படுத்திய disqus கமெண்ட் பாணிக்கு மாறிட வேண்டும் ! ஆனால் அதனில் உள்ள சிக்கலை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம் - இதுவரையிலான முந்தைய பதிவுகள் சகலமும் காணாது போய் விடுமென்ற வகையில் ! So இது நிச்சயமாய் வேலைக்கு ஆகும் சமாச்சாரமல்ல !
3.அல்லது இந்த BLOGGER தளத்திலிருந்து நண்பர் கார்த்திக் சோமலிங்கா சுட்டிக் காட்டிய wordpress தளத்துக்குச் சட்டி, பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு கிளம்பிட வேண்டும் ! அங்கும் இந்த கமெண்ட் பில்டரிங் வசதி எவ்விதம் செயல்படுகிறது என்பதை சற்றே பொறுமையாய்ப் பார்த்திட வேண்டும் ! அதனில் வசதிகள் அதிகமென்பது உறுதியெனில் சலோ wordpress என்போம் ! ஆனால் இங்குள்ள பார்வை எண்ணிக்கைகள் தொடருமா, அல்லது அங்கே புதிதாய்ப் பிள்ளையார் சுழியிலிருந்து ஆரம்பித்தாக வேண்டுமாவென்பது தெரியவில்லை ! இந்த வாரம் முழுக்கவே தீபாவளி மலரின் இறுதிக்கு கட்டப் பணிகளுக்கும் நானும், ஜுனியர் .எ.வும் மூக்கை நுழைத்துக் கிடந்தபடியால், இந்தப் புதுக் தல ஆராய்ச்சி சாத்தியமாகிடவில்லை !
4.வழிமுறை # 4 : இங்கேயே COMMENTS MODERATION ! உங்கள் பின்னூட்டங்கள் முதலில் எனது மின்னஞ்சலுக்கு வந்திடும் - அதனைப் பிரசுரிப்பதா ? வேண்டாமா ? என்ற தீர்மானத்தைக் கோரி ! So நீங்கள் பதிவிட்ட மறு கணமே இங்கே கமெண்ட்ஸ் பிரசன்னமாவது நடவாது ; சின்னதொரு கால அவகாசத்துக்குப் பின்னாகவே பிரசுரமாகும் ! இங்கே ராக் கூத்துக்களும், உடனுக்குடன் உங்களுக்குள் கச்சேரிகள் நடத்துவதும் சாத்தியமாகாது ! தவிர, நான் ஊரில் இல்லா நாட்களில் ரொம்பவே சிரமமாகிப் போய்விடும் ! இந்த ஆலமரத்துப் பஞ்சாயத்து ; ஜமுக்காளம் சொம்பு சமாச்சாரங்களுக்கும், ஜுனியருக்கும் தூரம் ஜாஸ்தி என்பதால் அவரை இதனுள் நுழைக்க முனைவது சரியாகாது ! So இதனை செயல்படுத்துவது கஷ்டமே !
5.Made to order - நம் தேவைகளுக்கு ஏற்ப ஒரு discussion page தனை உருவாக்கி நமது வலைத்தளத்தில் இணைப்பது இதற்கொரு தீர்வாகுமா ? என்று நமது டாக்டர் பாலசுப்ரமணியனின் மைந்தரிடம் வரும் வாரத்தில் கேட்டாகணும் ! அது ஓ.கே. ஆகிடும் எனில் சூப்பர் !
So wordpress தளமாற்றம் அல்லது நமக்கே நமக்கொரு டிஸ்கஷன் பக்கமே தீர்வு என்று தோன்றுகிறது ! வரும் வாரத்தில் இது பற்றிய தீர்மானம் எடுத்திடுவோம் !
இப்போதைக்கு இந்த பிளேட் போதுமென்பதால் - விடைபெறும் முன்பாக இலகுவான விஷயங்கள் பக்கமாய்ப் பார்வையை ஓட விடுவோமே ? சந்தா E-ன் தேடலில் நாம் பரிசீலித்த கதைகள் ஒரு வண்டி தேறும் ! விலை சார்ந்த வரையறைகள் ஒரு முக்கிய காரணமாகிப் போனதால் அவற்றுள் நிறையவற்றை ஓரம் கட்ட வேண்டிப் போனது - at least தாற்காலிகமாகவாவது ! ஆனால் அவற்றை உங்கள் கண்களில் காட்டும் ஆவல் மண்டைக்குள் 'கொய்ங்ங்க்க்' என்று ரீங்காரமிடுவதால் - இதோவொரு குட்டி சாம்பிள் மட்டும் ! ஆங்கிலத் திரைப்படங்கள் ; நாவல்கள் ; காமிக்ஸ் இத்யாதிகளில் ZOMBIES பற்றிய ஆக்கங்கள் நிறையவே உண்டு ! பாதி செத்த நிலையில் திரியும் இந்த "மிருதன்களை" சமீபமாய்த் தான் தமிழ் சினிமாவிலும் பார்த்திருக்கிறோம் ! இதோ - கிட்டத்தட்ட அந்தப் படத்தின் பாணியிலேயே உள்ளதொரு கதையிலிருந்து ஒரு ஸ்டில் ! சந்தா E - சீசன் 2 ஆரம்பிக்கும் பொழுது - இதனை முயற்சிப்போமா ? What say folks ?
And ரொம்ப நாளாகி விட்டதே ஒரு ஜாலியான caption போட்டியினைப் பார்த்து ?! அந்த வரலாற்றுப் பிழையை இன்றைக்குச் சரி செய்து விடுவோமா ? இதோ உள்ள இந்தப் படத்துக்குப் பொருத்தமாய் , நயமாயொரு வசனம் எழுதி அனுப்புங்களேன் ? வெற்றி பெறும் பேனாக்காரர் - சந்தா A அல்லது B அல்லது C -ஐ தேர்வு செய்து கொண்டு அவருக்கு வேண்டப்பட்ட யாருக்கேனும் அன்பளிப்பாக்கிடலாம் ! Get cracking guys !!
See you around !! Bye now !!
கிளம்பும் முன்பாய் ஒரு சந்தா நினைவூட்டலும் கூட !! இந்த வாரத்தில் சந்தா செலுத்தும் வாய்ப்புண்டாவென்று பாருங்களேன் guys ?
First
ReplyDeleteவாழ்த்துகள் texkit!
Delete'87th', '134th' போட்டுக்கிட்டிருந்த நீங்க மொதோ தபா மொத எடத்தைப் பிடிச்சிருக்கீங்க!
இதுக்காண்டியே கேப்ஷன் எழுதாமயே ஒரு பரிசு கொடுக்கலாம் உங்களுக்கு! ;)
Mutual Muraiyaga first..
ReplyDeleteSuper
ReplyDeleteவணக்கம்! Ergly waiting for subs 'E' season 2!!
ReplyDeleteMail Id: texkit2013@gmail.com
ReplyDeleteGd mrng friends
ReplyDelete//இதோ - கிட்டத்தட்ட அந்தப் படத்தின் பாணியிலேயே உள்ளதொரு கதையிலிருந்து ஒரு ஸ்டில் ! சந்தா E - சீசன் 2 ஆரம்பிக்கும் பொழுது - இதனை முயற்சிப்போமா ? What say folks ?//
ReplyDeletewalking dead is also very good to read.
தலைப்பு சரிதானா சார்வாள்
ReplyDeleteதிருத்தியாச்சு !
DeleteWaiting for diwali TeX dhamaka
ReplyDeleteVijayan sir, when you are going to release million hits book? Jramaya?
ReplyDeleteதமிழாக்கப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன ! விரைவில் அறிவிப்பும், அதைத் தொடர்ந்து இதழும் வந்திடும் !
Deleteநன்றி! அடுத்த மாதம் வந்துவிடும் என்று ஆர்வத்துடன் உள்ளேன்!
DeleteA : புனித தெய்வமே மானிடோ, எங்கள் இரவுக் கழுகை தீய சக்தியின் பிடியிலிருந்து காப்பாற்று. அவரை நலம்பெறச்செய்.
ReplyDeleteB: தீயெ சக்தியெலாம் எதுவுமில்லை. டெக்சுக்கு டெங்கு வந்துள்ளது. அவ்வளவுதான்.
C : யோவ், டெங்குவுமில்லை, ஒன்றுமில்லை. இப்போதான் கொரியர் ஆபிசுக்கு போய் எல்லாருக்கும் தீபாவளி இனாம் கொடுத்துட்டு வந்தேன். அவங்க ஒழுங்கா தீபாவளிக்கு முன்னமே காமிக்ஸ்சை டெலிவரி பண்ணும்ல?
// என்னதான் ‘தல‘ நமக்குத் தலையாய நாயகரெனினும் “சர்வமும் நானே” என்று அவர் பறைசாற்றுவதை எத்தனை தூரம் நாம் ஏற்றுக் கொள்வோமென்ற சிறு தயக்கம் என்னுள் இருந்தது ! ஆண்டின் இறுதி stretch நெருங்கி நிற்கும் சமயத்தில் - ‘தல‘ மீதான வாஞ்சை கூடியுள்ளதைப் புரிந்து கொள்வதும் ஒரு சந்தோஷ அனுபவமே ! //
ReplyDeleteஅது தன்னப்போல வந்திடும் எடி சார்
//தாவுத் திரியும் சிந்தனைகள் !//
ReplyDelete1. தாவு தீரும் சிந்தனைகள் + 2. தாவித் திரியும் சிந்தனைகள் = தாவுத் திரியும் சிந்தனைகள்.
எப்புடி?
தமிழ் சங்கதி.com சமீபமாய் செய்துள்ள மாற்றங்களில் தீர்ந்து போகும் தாவின் புண்ணியத்தில் !! திருத்திவிட்டேன் இப்போது !
DeleteNHM Writer தானே உபயோகிக்கிறீர்கள்? இல்லையெனில், உடனே பயன்படுத்திப் பார்க்கவும். சிறப்பாக உள்ளது.
DeleteCaption: A: "வோ!", B: "வோ!", C: "அடங்...!"
ReplyDelete:-)
Delete"இடிப்பாரை இல்லாத ஏமார மன்னன்
ReplyDeleteகெடுப்பார் இலானும் கெடும்"
குறள் எல்லாம் சரிதான். ஆன இடிக்கிறவங்க யாருன்னு சொல்லிட்டு இடிச்சா பாரவாயில்லை.
Deleteஏற்கனவே வெளி வந்த கடத்தல் குமிழிகள் கதையினை மறுபதிப்பு செய்ததிற்கு பதிலாக பாதாள போராட்டம்¸ தொடராக வெளி வந்த விண்வெளி பிசாசு போன்ற கதைகளை மறுபதிப்பு செய்யலாம். இதே போன்று ஸ்பைடருக்கு போட்டியாக போலி ஸ்பைடர் ஒருவன் தோன்றிய கதையினை மறுபதிப்பு செய்யலாம்.
ReplyDeleteடேஞ்சர் டயாபாலிக் நம் நாட்டில் மற்றவர்களிடம் போதிய வரவேற்பில்லை. ஸ்பைடர் டேஞ்சர் டயாபாலிக் இருவரும் குற்றவாளிகளே. ஆனால் ஸ்பைடர் வில்லனைக்; கூட சாகவிடமாட்டான்¸ டேஞ்சர் டயாபாலிக் எதிரியை தீர்த்துக் கட்டிவிடுவான். அதனாலேயே மன்னிக்கும் பெரும்தன்மையுள்ள ஸ்பைடர் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளான்.
Jegan G @
Delete// டேஞ்சர் டயாபாலிக் எதிரியை தீர்த்துக் கட்டிவிடுவான். அதனாலேயே மன்னிக்கும் பெரும்தன்மையுள்ள ஸ்பைடர் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளான். //
நன்றாக சொன்னீங்க!
tks
DeleteParani...sariya chonninga
DeleteHi
ReplyDeleteHi rum
Deleteஎன் முதல் கேப்சன் :
ReplyDelete-------------------------
A. : மாரியம்மா மாரியம்மா
திரிசூலியம்மா நீலியம்மா...
B. : வந்திடு வந்திடு தானா வந்திடு
இல்லைன்னா பாட்டு படிப்பேன் உடுக்கையடிப்பேன் சாத்தானோட மல்லுக்கு நிப்பேன்...
C. : அடப்பாவிங்களா !!
இந்த வருஷம் சந்தாவில ஒரு புக்கு குறையுதின்னேன்
அதுக்கு இப்படி என்னை படுக்கப் போட்டு அலும்பு பண்றானுங்களே !!
இது உங்களுக்கே அடுக்குமா ???
:)))
Delete12th
ReplyDeleteஎடி சார் இம்மாத புத்தகங்கள எந்த தேதி ரிலீஸ் பண்ணுவீங்க
ReplyDelete25th.October !
Deleteஇன்னும் 10நாட்கள் "சர்வமும் நானே..."-இந்ந தீபாவளிக்கு சர்வமும் இவரே....
DeleteHappy.what about sarvavum tex
ReplyDeleteA: ஏய்... டெக்ஸை யாரோ அடிச்சிட்டாங்க... அடிச்சிட்டாங்க...
ReplyDeleteB: டெக்சை அடிச்சவன் கை இன்னும் உடம்பிலே இருக்குன்னா நினைக்கிறே..???
C: அடப் போங்கடா.... இப்பிடி சொல்லி சொல்லியே இவரு( ஆசிரியர் ) என்னை வறுத்தெடுக்கிற கதையா தேடிப் பிடிச்சி போடுறாரு.. வறுத்தெடுக்கிறதுனா அந்த ஆட்டு தாடிக்காரன் நெனைப்பு தான் வரது...
ஹ ஹ ஹ சுப்பர.....
Deleteஇது ஏதாவது சனி இரவு உப பதிவா??? லக்கி சைசிலே தானே இருக்கு...
ReplyDeleteஆசிரியருக்கும் & நண்பர்களுக்கும் ஞாயிறு வணக்கங்கள்
ReplyDeleteDear Edi,
ReplyDeleteI would advise against moving to WordPress, since it's basically a restricted environment which depends on plugins to do most customization work.
Rather than, we could simply archive all previous blog post comments to html discussion pages and attach them to respective blog post (no new comments will be updated on them). And for new posts switch over to disqus. For archiving, you could consult with your Dr. Son for help, which should be easy enough.
Rafiq Raja : கொஞ்சமாய் புரிந்தது போலவும், புரியாதது போலவும் உள்ளது நண்பரே ! திங்கட்கிழமை துரை பிரசன்னாவிடம் விஷயத்தைச் சொல்லி தீர்வு தேடிட வேண்டியது தான் !
ReplyDeleteவிஜயன் சார் எல்லா நாட்டிலுள்ளவர்களும் ஆன்லைனில் நேரடியாக புத்தகங்களை வாங்கிட ஏட்பாடு செய்யுங்ளேன் இந்த வசதி டிஸ்கவரி புக் பேலஸ் , என் எச் எம் ஸ்டோர்களில் கானப்படுகிறதே உங்கள் வலைதளத்திலும் இவ் வசதி ஏட்பட்டால் நன்றாக இருக்கும் 2017 க்கு புது மாற்றங்களுடன் இதையும் இனைத்து கொள்ளளாமே
Deleteஆமாம் எடிட்டர் சார். எல்லா நாட்டில் உள்ள நண்பர்களும் ஆன்லைனில்புத்தகங்களை வாங்க தயவு செய்து ஏற்பாடு செய்யுங்கள் சார். பிளீஸ்
Deleteவணக்கம் சார்,
ReplyDeletewordpress ப்ளாக் மிகவும் நேர்த்தியான,ஒரு தொழில்ரீதியான பார்வையை தருவது நிச்சயம்... அதே சமயம் spam comments வண்டி வண்டியாக வரும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது... ஃபில்டெர் செய்வதற்கே நிறைய நேரம் செலவிட நேரலாம்... ஒருவேளை என்னுடைய தளம் paid தளமாக இருப்பதால் இந்த பிரச்சனை எனக்கு வந்திருக்கலாம் போலிருக்கிறது.இலவச wordpress ப்ளாக் எந்த பிரச்சனையும் வராமலும் போகலாம். எதற்கும் இருக்கும் இந்த தளத்தை விடாமல், ஒரு சில சோதனை பதிவுகளாக முயற்சி செய்து பாருங்கள், சார்...
Hai
ReplyDeleteகாலை வணக்கம்! தல சரவெடிக்கு தீபாவளி waiting!நானும் எங்கள் பணியில் இறுதி கட்டத்தில் இருப்பதால் 17ம் தேதி வரை பரபரப்புடன் செயல்படுகிறோம் So Bye for now!
ReplyDeleteலியனார்டோ அட்டைப்பட டிசைன் அருமை... typography கலக்கல் சார். ஏற்கனவே வந்த லியனார்டோ கதையும் சிறந்த நகைச்சுவையாக இருந்தது... இந்த வருடம் வந்த கார்ட்டூன் கதைகள் ஒன்றும் சோடை போகவில்லை.... smurf பொடியர்கள் வீட்டின் பொடிசுகளை கவரவாது தேவை தான்...
ReplyDeleteஇம்மாத லக்கி லூக் பற்றி சொல்லவே தேவையில்லை... செம்மையான கான்செப்ட்டில் ஆரம்பித்து ரின்டின் தயவில் நீண்ட நாளுக்கப்புறம் சத்தம் போட்டு சிரிக்க சிரிக்க படிக்க முடிந்தது...
காமெடி கர்னல் பட்டையை கிளப்புகிறார்... சிக்பில், supernatural பொடியன் எல்லா கதைகளும் ரசிக்கும்படியாகவே இருந்தது...
மொத்தத்தில் மினி லயன் லோகோ மட்டுமே மிஸ்ஸிங்... மாதாமாதம் டென்ஷன் போக்க நல்ல கார்ட்டூன் கதைகள் கிடைத்தது மகிழ்ச்சி தான்..
+11
DeleteCaption: 1
ReplyDeleteA : ஏஏஏஏ.....சந்தா A தனியா வேணும் !
B : ஊஊஊஊ........சந்தா B தனியா தந்தே ஆகணும் !
C தல(விஜயன்):
(மனதிற்குள்....)
அட பாவிகளா ! சந்தா C தனியா குடுக்கறன்னு சொன்னா கூட யாரும் கேக்க மாட்டாங்க போல!
(முனகலாக....)
ஹக்!
Gold.....Platinum....Silver.....Bronze..... !
Go ....Plat ...Sil ...Bro ....!
Aaa ...Bbb ... Ccc ... Ddd .... Eee .... !
aa... bb... cc... dd... eee....................................................!
வணக்கம் எடிட்டர் சார்...!
ReplyDeleteவணக்கம் நண்பர்களே...!
கேப்ஷன் :-
ReplyDeleteA :- ஐயகோ...! இது என்ன சோதனை..? இமயமே சரிஞ்சு படுத்திருச்சே...?
B:- அடச்சீ....வாயை மூடு...! தல என்ன சீக்கு வந்தா படுத்து கெடக்காரு...? ரெஸ்ட் எடுக்குறாருய்யா....? அண்ணே...நீங்க நல்லா அயர்ந்து தூங்குங்கண்ணே....! எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்....!
C:- ம்ம்ம்...! தூங்குனதுக்கு அப்புறம் பேண்ட் சட்டையெல்லாம் உருவிட்டு..இடுப்ப சுத்தி வேப்பிலைய கட்டிடுவானுகளோ....???
A:- சூப்பருபா....!
ReplyDeleteB:-டாப் டக்கருபா...!
C:- ச்சை....! எனக்கு C ன்னாலே புடிக்காது...!
:)))
Deleteமாடஸ்டி பிளைசி
ReplyDeleteவணக்கம்.!
Deleteஇளவரசி வாழ்க.! வாழ்க.!
இளவரசி வாழ்க.! வாழ்க.!! வாழ்க.!!!
Deleteஅடடே! நம்ம கரூர் சரவணன் சாரும் நம் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டாரா.?ரொம்ப சந்தோஷம்.!
Deleteதேவதை வாழ்க வளர்க
Deleteஹய்யா.! செந்தில் சத்யாவும் வந்துவிட்டார்.! நமக்கு யானை பலம் வந்துவிட்டது.!! சூப்பர்.!
DeleteA : ஏஏஏஏஏஏ... யாருடா.....!
ReplyDeleteயாருடா.... ஏன் தலய அடிச்சது !
தைரியம் இருந்த எங்கள 'தாண்டி' தொட்றா பார்க்கலாம் !!!
B : டாய்ய்ய்ய் ! மலைக்குடா மோது ! எங்க தலக்குடா மோததே!
டாய்......டடடாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..!
C (தல):
ஆஹா..! குதிரைல இருந்து தவறி விழுந்ததுக்கு எதுக்குடா இந்த பில்ட்அப்பு !
இப்போதைக்கு காது மட்டும்தான் கேக்குது!
அதயும் கேக்க விடாம பண்ணிருவாங்களோ!!!
அதிகாலை வணக்கம்
ReplyDeleteCaption : 3
ReplyDeleteA : என்ன தல ! எவ்ளோ பெரிய பிஸ்தாவுக்கு எல்லாம் தண்ணி காட்டிட்டு இப்படி பாறை சரிவுல மாட்டிக்கிட்டிங்களே !
B : ஹம்......! நம்ம வெள்ளி முடியார் மட்டும் கூட இருந்து இருந்தால் இப்படி ஆயிருக்குமா ?
C தல:
(முனகலாக....)
யாரு ! வெள்ளி முடியாரா ?
டே...பாறை ரொம்ப வீக்கா இருக்கு ! ஏழு கழுதை வயசானவங்கள எல்லாம் தாங்காதுனு சொன்னா...........
'ஹோய்! இளங்கன்று பயமறியாது'னு சொல்லி நில சரிவை ஏற்படுத்திட்டு, இப்போ ஒண்ணுமே தெரியாத பச்ச புள்ள மாதிரி நிக்கிறாரே அவரா !!!
லியனார்டோ அட்டைப்படம் அருமையாக உள்ளது. சிறப்பான அட்டைப்படம். துக்கடா கதைகள் எனக்கு பிடிப்பதில்லை விச்சு கிச்சு கதைகளைத்தவிர.
ReplyDeleteவிச்சு கிச்சு ப்ளஸ் மதியில்லா மந்திரி...
Deleteஎனக்கு...:-)
ஆம் மதியில்லா மந்திரியும் நன்றாக இருக்கும். நன்றி!
Deleteஎனக்கும் மதியில்லா மந்திரி ரொம்ப பிடிக்கும்.
Deleteமதியில்லா மந்திரியாரை எனக்கும் பிடிக்கும்
Deleteஎனக்கு இவங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும்! அதிலும் தாதா ரொம்பவே பிடிக்கும்!
Deleteதாத்தா அட்டைப்படம் அழகு சார் ....
ReplyDeleteஅந்த சிறுகதைகள் தாம் ....? காத்திருக்கிறேன்...;-)
அட்டைப்படம் அள்ளுது...சூபெபர்
ReplyDeleteA-அடேய் நம்ம தலைவரை எப்படியாவது காப்பாத்திடுடா......
ReplyDeleteB-கொஞ்சம் பொருங்க சிட்புல் பூசைய முடிச்சுக்குவோம்
C- இவன் பன்ற வேலைய பார்த்த என்ன காப்பத்த போறாங்களா இல்லை என்றால் மண்டை தொலியை உறிக்க போகிறார்களானே வி்ளங்கவில்லை எதுக்கும் நம்ம ரிவால்வர் பக்கத்துல கைய வெச்சுக்குவம் எந்த ஒரு விடயத்திலும் முன் ஜாக்கிரதையாக இருப்பது தப்பாகிடாது தான் என்ன (தலைவர் மைன்ட் வொய்ஸ்)
சார் ....எங்களின் மன முதிர்ச்சி சோதனைகளை முன்னிட்டு ...நீங்கள் "தள " சோதனைகளுக்காக நிரம்ப சிரம படவேண்டாமே ...
ReplyDeleteபழைய வீடு ஹால்ட்ரேஷன் கூட பரவாயில்லை....இதற்காக புது வீடு எல்லாம் பார்த்து சிரம பட வேண்டுமா...
இப்படியே கூட தொடருங்கள் ...
பதுங்கு குழியில் யோகா வகுப்பு கற்று கொண்டாவது அமைதியாகி விடுகிறோம் ..:-)
+1
Delete+123456789
Deleteஇதிலேயே இருப்போம் எதுவாயினும் ஒரு கை பார்ப்போம் சார்....
மூட்டை பூச்சிகளுக்கு பயந்து வீட்டை கொளுத்துவானேன்...
நீங்கள் இதையெல்லாம் மறந்துட்டு நல்ல குதிரைல போறவங்கா கதையா தேடி எடுங்கள் சார்...
தலைவரே.!
Deleteஉங்கள் பெருந்தன்மையும் , பக்குவத்தையும் கண்டு தலைவணங்குறேன்.!
தலைவரை யார் புண்படுத்தினாலும் ,அவர்களது கமெண்டை எப்போதும் படிக்க மாட்டேன்.தாண்டி சென்றுவிடுவேன்.!அன்னந்தம்பி பொழங்க மாட்டேன்.இது உறுதி.!
தலைவரே !
Deleteஇணைய தளத்தில் சேட்டை செய்பவர்ளை ,சைபர் கிரைம் போலீசார் கோழி அமுக்குவது போல் அமுக்கு கின்றனர். இனி வரும் காலங்களில் போலி ஐ.டி களின் பாடு திண்டாட்டம் தான்.இது ஒரு பிள்ளையார் சுழி.!!!
மடிப்பாக்கம் மாடஸ்தி சார் ..
Delete:-)))
சந்தா விளம்பரமும் சூப்பர் சார
ReplyDeleteஉள்ளேன் ஐயா. .!!
ReplyDeleteசற்று தாமதமாக இல்ல இல்ல ரொம்ப தாமதமாக "எழுதப்பட்ட விதி" விமர்சனம்
ReplyDeleteசித்திரங்கள் மிக அருமை.
ஒன்றுக்கு மேல் டுவிஸ்ட் வைத்து எழுதுவது அகதா கிறிஸ்டி யால் மட்டுமே முடியும் என்று நினைத்து இருந்தேன். அதே மதிரி ஓரு படைப்பு அதுவும் கமிக்ஸ் வடிவில் நிச்சயம் எதிர்பார்க்க வில்லை.
பிரைஸ் அடுத்த ஆண்டு டோடு நிறைவு பெறுகதா அல்லது. வேறு கதைகளில் வர வாய்ப்பு உள்ளதா????
இந்த காமிக்ஸ் படிக்க எனக்கு'விதி' இருந்து வரை மகிழ்ச்சி. மேலும் இதற்கு வாய்ப்பு ஏற்படித்து கொடுத்த ஆசிரியருக்கு நன்றி.
A....சந்தா B இந்த வருடம் தனியா இல்லைங்கிற ஒரே காரணத்துக்காக இவ்வளவு மனமுடைந்து போக வேண்டாம் இரவுகழுகாரே.....நமது காவல் தெய்வங்களிடம் இதற்காக பிரார்தனை செய்வோம் ...
ReplyDeleteB....தனக்காக என்னிக்கு இரவுகழுகார் கவலைபட்டு இருக்கார் ..எல்லாம் தனியா சந்தா c வரலையேன்னு தான் மனதுடைந்து போய்விட்டார் ...நான் நமது மாந்தீரிகரை கொண்டு மாபெரும் பிரார்தனைக்கு ஏற்பாடு செய்கிறேன் ...
C.....டேய்..டேய்...அப்ரண்டிஸ்களா இதெல்லாம் வேலைக்கு ஆகாது..இந்த கமெண்ட் வெற்றி பெறனும்னு பிரார்தனை பண்ணுங்கடா ..ஏதோ ஒண்ணாவது நடக்கும் ..
அப்புறம் டெக்ஸ்.
ReplyDeleteஎன்னத்த சொல்ல
வழக்கமா கூட இருக்ற அல்ல கைங்க "இவர்தான் உலகப் புகழ்பெற்ற டெக்ஸ் வில்லர். அணு குண்டே அண்ணாண பார்த்த பயப்படும்" போன்ற கதைக்கு அதி முக்கியமான டயலாக் சொல்லுவா..
ஆன டிராயர் போட்ட பொடியன் செல்றது இது தான் முதல் முறை நினைக்கிறேன்.
கூடிய விரைவில் பிறக்கும் குழந்தை அம்மா அம்மா கத்தம டெக்ஸ் டெக்ஸ் கத்த போகுது வாழ்த்க்கள்.
அப்புறம் லக்கி லுக்
ReplyDeleteஓரே ஓரு வர்த்தையில் "அருமை"
அதுவும் ரின்டின் சைடாக வந்தாலும். லக்கி யாரு கடைசி வரைக்கும் குழம்புவது செம கமெடி.
Caption
ReplyDeleteநடந்து முடிந்த சண்டயில் 420 சமூக விரோதிகளை தலை ஓரே ரிவால்வாரால் சாயத்து உள்ளார். என்னதான் இருந்தாலும் தலைய குறி வைச்சு சுடக் கூடாது தெரிந்து இருந்தும். தலையை ஓரு முட்டாள் கைல சுட்ருக்கா. அது கூட அவனா சுடல காத்து வேகமா அடிச்சதால குண்டு திசை மாறி தல கைல பட்ருச்சு ஐயகோ......
B
தலைக்கு அடிபட்ருக்கதால இன்னும் ஆறு தலைகறி சாப்பிட வேண்டாம் முடிவு எடுத்து இருக்கோம்.
C(டெக்ஸ்)
அந்த ஆறு வயசு பையன் என்ன புகழ்ந்து போசுனத ஓருத்தனும் சொல்ல மட்டேங்குறாங்க... சே..
:)))) LOL
Delete2016 அட்டவணையில் இடம்பெற்ற டெக்ஸ் வில்லரின் 'சிகப்புக் கொலைகள்' கதை வெளியாகவில்லையே?? ஏன் சார்?
ReplyDeletewhy?
Deleteநண்பர்களே இம்மாதம் லக்கிலூக் புத்தகத்தில் வந்துள்ள ஹாட்லைனில் தெளிவான விளக்கங்கள் தந்துள்ளரே, பாருங்கள்...
Deleteஹாட்லைன் இருவரும் படிக்கலனு தெரிய வருகிறது, ஹூம்....
@சேலம் Tex விஜயராகவன்
Deleteஆமாம் சார்! இப்போதான் ஹாட்லைனை பார்த்தேன்.
எங்கே சார்! படிக்க டைமே இல்லை. 'சிங்கத்தின் சிறு வயதில், ஹாட்லைன்' இதெல்லாம் ஆரம்ப காலத்தில் விரும்பி படிச்சதுதான். இப்பெல்லாம் 4 புக்கை வாங்கினால்,"இதெல்லாம் அப்புறம் படிச்சிக்கலாம்" என்று ஒதுக்கிவிட்டு கதைகளை மட்டும் படிக்கிறேன். இரவில் சாப்பிட்டு முடித்ததும் தூங்குவதற்க்கு முன்னால் கொஞ்ச நேரம் முந்தைய காமிக்ஸ் புத்தகங்களில் உள்ள 'ஹாட்லைன்', 'சிங்கத்தின் சிறு வயதில்' படித்து கொண்டிருப்பேன். இம்மாதம் வாங்கிய 4 புத்தகங்களும் இன்னும் ஹோட்டல்லதான் இருக்கு. இது நாலும் ரூமுக்கு போன பின்னால்தான் ஹாட்லைனை படிப்பேன்.
Caption :
ReplyDeleteA: ஏய் யாராது நடுவுல நீட்டிக்கினு படுத்து கிடக்கரது?
B:பொண்டாடிக்கிட்ட இருந்து போன் வந்திச்சு நம்ம பஞ்சாயத்து தலைவராண்ட சொன்னா மயங்கிய விழுந்தது கிடக்காரு....
C:போன தீபாவளிக்கு ரேசன் கடைல சாமான் வாங்கி வரச் சொன்ன பொண்டாடிக்கிட்ட இந்த தீபாவளி வரைக்கும் வீட்டிற்கு போகாம ஒங்க பஞ்சாயத்த பாத்தா இங்கதான் ஒங்க புருஷன் இருக்காருன்னு போன் குடுத்தா மயக்கம் போட்டு விழுந்தா மாதிரி ஆக்ட் குடுக்காம என்ன பண்ண?
மாந்திரீகர் #1: யாஹாஹா.. ஊஹாஹா.. ஹாஹாஹா! இரவுக்கழுகு சிறகடிக்கட்டும்... வானில் பறக்கும் வல்லமையை பெறட்டும்.
ReplyDeleteமாந்திரீகர் #2: இதோ, மயக்கம் தெளிகிறது.. நமது மாந்திரீகம் வேலை செய்யட்டும்... யாஹாஹா.. ஊஹாஹா.. ஹாஹாஹா! பொழுது விடிவதற்குள் பறந்துகாட்டுங்கள் இரவுக்கழுகாரே...
டெக்ஸ் (தனக்குள்): எவனடா அது.. என்னுடய டீ கப்பில் கஞ்சா இலையைப்போட்டு மயக்கடித்தது..? இவர்களோட சகவாசம் போதும்னு அன்றைக்கு கார்சன் சொன்னது சரியாகப்போச்சு! சூனியம் வைத்து என்னை ஈகிள்மேனாக மாற்றமுயலும் அளவுக்கு மாந்திரீகப்பபித்து முற்றிவிட்டதே..
super sir! this year gives lots of enjoyments. next year will be a great success.
ReplyDeleteதாத்தா அட்டைப்படம் அழகு சார் ....
ReplyDeleteஅந்த சிறுகதைகள் தாம் ....? காத்திருக்கிறேன்...;-)
/// ஒரிஜினல் டிசைனை நமது டிசைனர் tweak செய்துள்ளார் ! பிரமாதமாக வந்துள்ளதாய் எனக்குத் தோன்றியது ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ///
ReplyDeleteபிரமாதம்! குறிப்பாக, 'லியனார்டோ' என்ற எழுத்துருவின் வடிவமைப்பு! அதில் பல் சக்கரங்களைச் சுழல விட்டிருப்பது - ரசணை ரசணை!
என்னடா இது ...அலைபேசில ரெண்டு ரெண்டு தடவையா பப்ளிஷ் உடனுக்குடன் ஆவது பத்தி கேள்விபட்டிருக்கேன் ..இங்கே என்னடான்னா ரெண்டு மணி நேரம் கழிச்சு திரும்ப மறுபதிப்பு ஆகுது ..:-(
ReplyDeleteதலீவரே,
Deleteபின்னூட்டம் ரெண்டு ரெண்டா வந்தா பிரச்சினை இல்லை... அழிச்சுக்கலாம்! ஆனா உங்க கடுதாசி ரெண்டு ரெண்டாப் போச்சுன்னா எடிட்டரின் நிலையை நினைச்சுப் பாருங்க!
தலீவரே,
Deleteபின்னூட்டம் ரெண்டு ரெண்டா வந்தா பிரச்சினை இல்லை... அழிச்சுக்கலாம்! ஆனா உங்க கடுதாசி ரெண்டு ரெண்டாப் போச்சுன்னா எடிட்டரின் நிலையை நினைச்சுப் பாருங்க!
ஹீஹீ....செயலாளருக்கும் ரெண்டு ரெண்டா தான் வருது ..அப்ப ஓகே..:-)
Deleteசங்கம் எவ்ளோ ஒற்றுமையா இருக்குன்னு இதுலியே புரிஞ்சுக்கலாம் ..:-)
ReplyDeleteதமிழ்நாட்டுல உங்களுக்கு ரசிகர்கள் நிறைய இருப்பதென்னவோ உண்மைதான்... அதற்காக, 'அப்பல்லோவிலிருக்கும் அம்மா எழுந்து உட்காரும்வரை நானும் படுக்கையைவிட்டு எழுந்திரிக்கமாட்டேன்'னு அடம்பிடிக்கறது அவ்வளவு நல்லா இல்லை இரவுக்கழுகாரே!
ROTFL
Deleteசெம்ம... சூப்பர் விஜய்.... இதையே முழுசா develop பண்ணலாமே
DeleteGood morning
ReplyDeleteA+B+C+E(Sliver Santha)
ReplyDeleteNot showing in online. Edi plz Make it Ready. I planning to pay threw Online.
thkx.
Awaiting for Oct 25
ReplyDeleteCaption :-
ReplyDelete(முழுக்க முழுக்க கற்பனையே! யாரையும் குறிப்பிடுவன அல்ல!)
A : வோ! வோ! போலி ஐடி !
வோ! வோ! போலி ஐடி !
B : போலி ஐடி ஓடிப்போ!
போலி ஐடி ஓடிப்போ!
C : இவங்க நம்மளை படுக்க வெச்சிட்டாங்களே.!? இதுக்கு போலி ஐடிக்களே தேவலாம் போலிருக்கே!!
ஜேஸன் பிரைஸ் அருமையான படைப்பு.
ReplyDeleteCaption (சிரிக்க மட்டுமே)
ReplyDeleteமாட்டிக்கொண்ட மனிதன்:ஐயையோ விட்டுடுங்க ! தீபாவளி முடிஞ்சவுடனே, எல்லா சந்தாவையும் கட்டிறேன்!
Zombie: பசங்களா,சீக்கிரம் , அவன. கடிச்சி, நம்மளா மாத்துங்க, அப்பதான் விதம் விதமா சந்தா கேட்டு ஆசிரியர தொல்லை பண்ண மாட்டான். தம்பி இங்க பாருங்க எவ்வளவு பேரு join பண்ணிட்டோம். கேள்வி கேட்காம சட்டு, புட்டுனு வந்து சந்தா கட்ற வழிய பாருங்க.
😊 zombie படத்துக்கு caption sir!
ReplyDeleteநான் சிறுவயதில் ரசித்த ஜோக்.!
ReplyDeleteஒருவர்:(ரயில் நிலையத்தில் )
அடடே! என்ன ஆச்சர்யம் ! ,இன்று 7 மணிக்கு கரெக்ட் டைமுக்கு ரயில் வந்துடுச்சே???.
மற்றொருவர்.!
அடபோங்க சார்.! நேற்று காலை 7 மணிக்கு வரவேண்டிய ரயில் இது.!
இதே போல் லயன் காமிக்ஸ் ,வருடமே நான்கோ ஐந்துதான் வரும்.அதுவும் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. கடவுளுக்கும் எடிட்டருக்கு மட்டுமே தெரிந்த சிதம்பர ரகசியம்.!
இனி கேப்ஸன் போட்டி.!
A.
அக்டோபரில் , நவம்பர் ,டிசம்பர் இதழ்கள் ரெடியாகி விட்டது.எடிட்டர்.!
B.
2017, ன் பிரெஞ்சு டூ ஆங்கிலம் மொழிபெயர்ப்பு 100% முடிந்துவிட்டது.2018 ல் அடியெடுத்து வைக்கின்றோம்.!
C.
(தொப் !) அடக்கடவுளே.???? மெய்யாலுமா ????????
This wks blog design is very fine.
ReplyDeleteCAPTION :
ReplyDeleteA : "ஓ.!! மானுடோ.!! எங்கள் புனித தெய்வமே!! நம்ம இரவு கழுகாருக்கு திடீர்னு என்னவாயிற்று?? இப்படி உடம்பு வலியால் தரையில் புரண்டு துடிக்கிறாரே!! ஓ.!! எங்கள் காவல் தெய்வமே!! இரவு கழுகாரை ரட்சியும்."
B : "ஹூ....!!! ஹூ....!! ஹோ....!!!!!!! தீய சக்திகளே!!!! இரவு கழுகின் உடலை விட்டு வெளியேறுங்கள்.!"
C : "என்ன கொடுமைடா இது! தமிழர்கள் எல்லோரும் 2017 சந்தா கட்டனும்னு அவங்க கடவுள் முருகனை மனசுல நினைச்சிட்டு நான் அங்கப்பிரதட்சிணை பண்ணுனா என்னோட உடன் பிறப்புகள் இப்படி நினைக்கிறாங்களே!!"
4வது தீபாவளி மலர்.....
ReplyDeleteலயன் சூப்பர் ஸ்பெசல்.....
*1990களின் ஆரம்பத்தில் லயன் காமிக்ஸ் படிக்க
வந்து
நாய்அலை பேய் அலை என அலைந்ததன் பயனாக
பெரும்பாலான டெக்ஸ் புத்தகங்கள்
கிடைத்தன.
இப்போது ஓரிரு இதழ்களை கடையில் சுடச்சுட
வாங்கும் அளவு ஒரு காமிக்ஸ் ரசிகனாக
வளர்த்து(?) விட்டேன்.
*1994ல் சில மாதங்கள் கழித்து ரூபாய் 20க்கு
லயன் சென்சுரி ஸ்பெசல் வரும் என தகவல்
தெரிய ஆவலானேன். கடையில் 20ரூபாய்
கொடுத்து வாங்குவது இமாலய முயற்சி
என்னைப் பொறுத்து.
அந்த புத்தகத்தை கடையில் வாங்கிய அன்று
கிடைத்த ஆத்மதிருப்தி,மனமகிழ்ச்சி இதுவரை
கிட்டியதில்லை. அந்த புத்தகத்தில் இதுவரை
வந்த லயன் காமிக்ஸ்களின் பட்டியல் இருந்தது.
அந்த பட்டிலை சரியாக சொன்ன 9பேருக்கும்
பரிசு வழங்கப்பட்டு, அவர்களின் அட்ரஸ்சும்
இருந்தது. அவர்கள் எனக்கு காமிக்ஸ்
ஜாம்பவான்களாக தோன்றினார்கள் .
*அந்த லிஸ்ட்ல கோடைமலர் 86, தீபாவளி மலர் 86,
கோடைமலர் 87, லயன் சூப்பர் ஸ்பெசல் 87
( தீபாவளி மலர் 87என பிறகு தெரிந்து
கொண்டேன் ) என்ற வார்த்தைகள் நெஞ்சில்
மையம் கொண்டன. ரூபாய் 5க்கு இத்தகைய
இதழா ,இத்தனை கதைகளா என ஆச்சரியம்
அளித்தன. அவைகளை எப்படியும் தேடி
பிடிப்பது என முடிவு செய்தேன் .
*1994ல் +2 முடிவதற்குள் பெரும்பாலான
டெக்ஸ் கதைகளை சேர்த்து விட்டேன் . சில
பழைய புத்தக கடையில் ,சில எக்ஸ்சேஞ்
முறையில் ,ஓரிரு புத்தகங்களுக்கு 10க்கும்
அதிகமாக புக் தந்து தான் வாங்கினேன் .
ஆனாலும் என்ன குட்டிக்கரணம் அடித்தும் அந்த
கணவு இதழ்கள் 4ம் கண்ணால் பார்க்க கூட
இயலவில்லை. இடையில் ஒரு நண்பர் மூலம்
லயன் சூப்பர் ஸ்பெசல் படிக்க மட்டுமே
முடிந்தது .
*அவ்வப்போது நண்பர் ஒருவர் சில தகவல்கள்
சொல்லி பயமுறுத்துவார், அதாவது இந்த
சின்ன சைஸ் மிக்ஸர் கட்டி விற்பவர்கள் எளிதாக
உள்ளதால் கிழித்து விடுகிறார்கள்
என்பதுதான் அது . ஆனாலும் வேறு ஒரு
நண்பர் சொன்ன தகவல் ஓரளவு பொருந்தி
வந்தது . அதாவது இவைகள் விலை அதிகம்
என்பதால் அச்சடிக்கும்போதே குறைவான
எண்ணிக்கை யில் தான் அடிக்கப்பட்டு
இருக்கும் ,கொஞ்சம் பொறுமை வேண்டும்
என்பது தான் அது . இடையில் ஒரு நண்பரின்
தவறான வழிகாட்டலில் குறுக்கு வழியில்
அடைவது என்ற வழியில் இறங்கி ஓரிரு
நண்பர்களின் வெறுப்பை சம்பாதித்தது தான்
லாபம்.
* நம்பிக்கை இல்லாமல் சோர்ந்திருந்த சமயத்தில்
சேலத்தில் புதிய நண்பர்
ஒருவரின் அறிமுகம் கிடைத்தது . அவர் மூலம்
சூப்பர் ஸ்பெசல் கிடைத்தது ,மாற்றாக
ஸ்பைடரின் இருவண்ண பெரிய சைஸ்
கொலைப்படை புத்தகத்தை வாங்கி
கொண்டார் . அந்த சைபரு ச்சே ஸ்பைடரு
புக்கை நான் ஒரு புத்தகமாவே கருதியது
கிடையாது . அந்த சாதா(ஸ்பைடர் வெறியர்கள்
மன்னிப்பார்களாக) புக்குக்கு இப்படி ஒரு
வேல்யூவா என அசந்து போனேன் . அந்த
பெரிய சைசில் 3புத்தகங்கள் மட்டுமே
வந்துள்ளதாகவும் அவைகள் காமிக்ஸ்
சேகரிப்பாளர்பளிடம் பெரிய மதிப்பு மிக்கவை
என்றும் பின்னாளில் தெரிந்து கொண்டேன்......
......எது எப்படி ஆயினும் சூப்பர் ஸ்பெஷல்
Deleteகிடைத்தே பெரிய சந்தோசம். வெளிவந்து
10ஆண்டுகள் கழித்து1997 ல் நல்ல கன்டிசனில்
கிடைத்த அந்த இதழ் என்னிடம் இருக்கும்
இதழ்களில் பொக்கிசம் அதுவே......
4வது தீபாவளி மலர்....
"லயன் சூப்பர் ஸ்பெசல்"-----
12கதைகள், பாக்கெட் சைஸ், 532பக்கங்களில்
ராட்சத டைனமைட் லுக்கில் ரூபாய்
10விலையில்...அட்டைப்படம் ஸ்பெசல் எபக்டு
கலரில் இன்றும் வசீகரிக்கிறது......அதில் உள்ள
பெரும்பாலான கதைகள் மறுபதிப்பில்
வந்தாலும் , அந்த இதழுக்கான வேட்டை இன்றும்
தொடர்கிறது....
1.பயங்கரப் பொடியன்-லக்கிலூக்-வண்ணத்தில்(க
்ளைமாக்ஸ் கருப்பு வெள்ளையில்)
2.டைகர்ஸ் -மினி சாகசம்
3.விசித்திரப்பாடம்- கேப்டன் பிரின்ஸ்-மினி.
4.நடுக்கடலில் கொள்ளையர்கள்- லாரன்ஸ் &
டேவிட்- மினி.
5.விசித்திர சவால்- நீண்ட ஸ்பைடர் சாகசம்.
6.இரத்தபடலம்-பாஆஆஆகம்2.
7.ஹாங்காங்கில் ஆர்ச்சி-மினி.
8.கொலை அரங்கம்-இளவரசி.(எல்லா முக்கிய
இதழ்களிலும் எப்படியாவது இடம்பிடித்து
விடுகிறாள் இளவரசி)
9.கண்ணாடி கூண்டு-கறுப்புக்கிழவி.
10.ஊடூ சூனியம்-ஜானி.
11.பயங்கர பறவை-பேட்மேன்.
12.விச்சுகிச்சு....
அப்பாடி என்னா மாதிரி காம்பினேசன்.....
டெக்ஸ் வில்லர்-இடம்பெறாத இத்தகைய இதழ்
இன்று சாத்தியமா???
அன்றைய இளம் ஆசிரியர்க்கு இருந்த
நட்சத்திரங்கள் டெக்ஸ் எனும் மெகா ஸ்டாரையே
விஞ்சும் அளவு சாதித்து இருக்கிறார்கள்.
இன்றும் கூட காமிக்ஸ் வேட்டையர்களின்
கனவு இதழ் இந்த 4வது தீபாவளி மலர்....
இந்த 12கதைகளில் என்னுடைய டாப்3...
இரத்தபடலம்-2; பொடியன்; ஊடூ சூனியம்....
அந்த ஊடூ கதையை படித்த பின் கொஞ்ச
நாட்கள் எந்த பொம்மையை பார்த்தாலும்
பயந்து பயந்து வரும்......
இந்த இதழில் நம்ம ஜேடர்பாளையத்தார் எழுதிய
கடிதம் இடம்பெற்றுள்ளது. கடிதம் இடம்பெற்ற மற்ற நண்பர்கள்
யாராவது இங்கே இருக்கீங்களா???..
அன்று நேரடியாக இந்த இதழுடன் தீபாவளி
கொண்டாடிய சீனியர் நண்பர்கள் யாராவது
மறுஒளிபரப்பு செய்யுங்களேன்....
இதுவரை அந்த கனவு இதழை பார்க்காத நண்பர்கள் இங்கே
https://m.facebook.com/groups/1723924691198965?view=permalink&id=1778433122414788&refid=18&_ft_=qid.6341957093953222450%3Amf_story_key.1778433122414788%3Atl_objid.1778433122414788&__tn__=%2As
பார்க்கலாம்....
// எல்லா இதழ்களிலும் இளவரசி இடம்பிடித்து விடுகிறார்.!//
Deleteஹிஹிஹி......இளவரசி !,எடிட்டரின் செல்லப்பிள்ளை....!!!!!
பாயாசம் இல்லாத பந்தியா.? எங்கள் இளவரசி இல்லாத ஸ்பெஷல் இதழா.? எப்படியோ லயன் மைல்கல் இதழான லயன்300 இதழிலும் இளவரசிக்கு இடம் கொடுத்து இளவரசிக்கு கௌரவம் கொடுத்துவிட்டர் நமது எடிட்டர்.!நன்றி.! நன்றி.! நன்றி.!
// லயன் சூப்பர் ஸ்பெஷல் //
Deleteடெக்ஸ் விஜயராகவன் பழசை கிளறிவிட்டு ஏக்கத்தை உண்டாக்கி விட்டீர்கள்.!
அச்சு தொழில் மூன்று தலைமுறைகளாக கொடிகட்டி பறக்கும் நம் எடிட்டருக்கு இதேபோல் ஒரு இதழை மறுபதிப்பு செய்வது ஜுஜுப்பி மேட்டர்.மைதீன் கான் அவர்களிடம் சொன்னாலே போதும் சுலபமாக செய்துவிடுவார்.மனசு இருந்தால் மார்க்கம் உண்டு.!
👌
Delete👍 👍 👍
Delete@ டெக்ஸ் விஜய்
Deleteஎப்படியோ அலைந்து திரிந்தாவது விட்டதைப் பிடித்துவிட்டீர்களே! 'உங்களை மாதிரியே நானும் கொஞ்சம் உஷாரா இருந்திருக்கலாமோ'னு ஏங்க வைத்துவிட்டது உங்கள் பதிவு!
M.V சார் சொன்னதைப் போல ஏதாவது நடந்தால் சந்தோசமே!
டெக்ஸ் விஜய் @ very good one!
Deleteசேலம் Tex விஜயராகவன் : Phew !!!
Deleteமாடஸ்டி வெங்கடேஸ்வரன். //.மனசு இருந்தால் மார்க்கம் உண்டு.!//
Deleteநான் மனசு வைத்தால் மட்டும் போதாதே சார் ! "படைப்பாளிகள்" என்ற பெயர்பலகையை ஏந்தி நிற்கும் ஆசாமிகள் ஒத்துக் கொள்ள வேண்டுமன்றோ ?
***** ச்சும்மாகாண்டி ******
ReplyDeleteA : விஷக்காய்ச்சலுக்கான மருந்துடன் வெள்ளி முடியார் விரைந்து வந்துகொண்டிருப்பதாக புகை சமிக்ஞை வந்திருக்கிறது!
B : வோ! வெள்ளிமுடியாரின் பசிதீர விருந்துக்குத் ஏற்பாடு செய்யுங்கள்!
தல : (மனதுக்குள்) அச்சச்சோ...! கொஞ்சூண்டு வறுத்தகறி வாசம் வந்தாலே அந்தப்பய விஷக்காய்ச்சல் மருந்தை வீசியெறிஞ்சுட்டு விருந்துக் குடிலுக்குள்ள பாய்ஞ்சுடுவானே...!!
This one is a winner - Ha Ha :-)
Deleteஹா..ஹா.. கிடைக்கப்போகும் பரிசுக்கு வாழ்த்துக்கள்...
Delete@ ராகவன் ஜி & சரவணன் ஜி
Deleteநன்றி ஜீ'க்களே! உங்களின் பாராட்டுகளே ஒரு பரிசு மாதிரிதானே! :)
Erode VIJAY : யாருக்கு / எந்தச் சந்தா ? என்று யோசித்து வையுங்கள் !
Delete😊 zombie படத்துக்கு caption sir!
ReplyDelete// என்னதான் ‘தல‘ நமக்குத் தலையாய நாயகரெனினும் “சர்வமும் நானே” என்று அவர் பறைசாற்றுவதை எத்தனை தூரம் நாம் ஏற்றுக் கொள்வோமென்ற சிறு தயக்கம் என்னுள் இருந்தது ! ஆண்டின் இறுதி stretch நெருங்கி நிற்கும் சமயத்தில் - ‘தல‘ மீதான வாஞ்சை கூடியுள்ளதைப் புரிந்து கொள்வதும் ஒரு சந்தோஷ அனுபவமே ! //
ReplyDeleteதல ஒரு நவீன கிருஷ்னர் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
என்னமோ நடக்குது இங்கே.
Deleteஇதுக்கு மேலே என்னடா மாதவா...
தற்போது ஹிஸ்டரி சேனலில் , நியூஆர்லியன்ஸ் நகரத்தை பற்றிய பழங்காலத்தன் பெருமையை கூறிவருகிறார்கள்.அது டெக்ஸின் சதுப்பில் ஒரு சதிகார கும்பல் கதையை ஞாபகப்படுத்துகின்றமாதிரி தோன்றுகிறது.!
ReplyDeleteசந்தா E ஐ இரண்டு தவணையில் கட்டலாமா சார்?
ReplyDelete+55555
Deleteraj kumar : டிசம்பர் வரை அவகாசம் எடுத்துக் கொண்டு ஒரே தவணையாய் செலுத்த முடிகிறதாவென்று பாருங்கள் நண்பரே ; சிரமமாய்த் தோன்றிடும் பட்சத்தில் 2 தவணைகள் எடுத்துக் கொள்ளுங்கள் !
Deleteஜேஸன் பிரைஸ்
ReplyDeleteஅருமை. கருப்பு கிழவி வராத குறையை இவர் மட்டும் தான் தீர்க்கமுடியும்போலும். நிச்சயம் இவரின் அனைத்துக்கதைகளும் நாம் பதிப்பிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கக்கூடிய அளவிலான கதை.
Satishkumar S : துரதிர்ஷ்டவசமாக இதனில் உள்ளது மூன்று அத்தியாயங்கள் கொண்ட ஒரே கதையே !
Deleteஎவ்ளோ தைரியம் இருந்தா பால் குடம் தூக்காம இருப்பாங்க!
ReplyDeleteயார்ரா அங்க! தலையோட மெடிக்கல் ரிப்போர்ட்ட சோசியல் மீடியால போட்ட கார்சனையும் டைகரையும் அர்ரெஸ்ட் பண்ணுங்க
இவங்க பண்ற அளப்பறையில தீபாவளி சத்தம் கொறஞ்சிருமோ ,எப்டினாலும் நாம தான் படுத்துட்டே ஜெயிப்போம்ல .
ஜே
ஜனார்தன் . பொன்
igaidsag @gmail.com
Mega mind ஸ்பைடர்...
ReplyDeleteகடத்தல் குமிழிகள் விமர்சனம்.
ஆசிரியர் அவர்களுக்கும், காமிக்ஸ் நண்பர்களுக்கும் வணக்கம்...
ஊசிக்காது கோமாளி, கூர்மண்டையன் என இன்றைக்கு ஸ்பைடருக்கு பட்டமளிக்கும் நண்பர்கள், 1980 களின் இறுதியில் என் போன்ற எத்தனை சிறார்களின் அபிமான நாயகன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை... சர்க்கஸ் நிபுணனான இவன் செய்யும் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு பிரேமிலும் ஆரவாரமாக ரசித்த எங்கள் பகுதி பையன்களுக்கு தான் தெரியும் சிலந்தி மன்னன் அவனுடைய வலை மினுமினுப்பை போலவே வசீகரமானவன் என்று.
ஸ்பைடர் ஒருகாலத்தில் மோசமான குற்றவாளி பின் மனம் திருந்திய நீதிக்காவலன்... நான் புரிந்து கொண்டு படித்த முதல் ஸ்பைடர் கதை இராட்சஷ குள்ளன்.... சாகச வித்தைகள், யூக்தி, வலை மற்றும் வாயு துப்பாக்கி பிரயோகம், பஞ்ச் வசனங்கள் என்று அதுவரை படித்த அத்தனை நாயகர் கதைகளையும் மிஞ்சி மனதை கொள்ளை கொண்டான் ஸ்பைடர்.
அப்போதே அவன் செய்த வில்லனாக செய்திட்ட சாகசங்களை படித்திட ஆவல் பெருகியது...
1984ம் வருஷம் வந்த கடத்தல் குமிழிகள்... இதழை 1988ல் தான் நண்பன் மூலம் படித்திட முடிந்தது... பொதுவாக ஸ்பைடர் கதைகளை அவ்வளவு சுலபமாக படிக்க கொடுக்க மாட்டான் என் நண்பன்... இந்த கதையையும் வைத்து ரொம்பவே பாவ்லா காட்டி ஒரு வழியாக படிக்க கொடுத்தான்... பின்னர் ஒருநாள் எனக்கே எனக்கும் ஓர் பிரதி கிடைத்தது.
ஒருப்பக்கம் போலீஸ் மற்றும் இரட்டை துப்பறிவாளர்கள் ட்ராஸ்க், கில்மோர்... இன்னொரு பக்கம் திருட்டு கும்பல், பின் பக்கம் கூடவே இருந்து குழி பறிக்கும் ஆர்டினி, பெல்ஹாம்... எல்லாவற்றுக்கும் மேலே ஹாலிவுட் படத்தில் வருவது போல சூப்பர் natural சக்தி கொண்ட கடத்தல் குமிழியாகும் கோப்ரா எனும் வில்லன்.... தனியாளாக நம் வில்ல கதாநாயகன் எப்படி எதிர் கொண்டு தன் வெற்றியை உறுதி செய்கிறான், என்பது தான் கதை... புதிய எதிரியை கண்டு சற்று திணறினாலும் அஞ்சாமல் வியூகம் வைத்து கோப்ராவின் திட்டத்தை முறியடிக்கும் ஒவ்வொரு இடமும் அதகளமாக இருக்கும்... சித்திரத்தரம் அருமை... ஸ்பைடரின் சாகஸங்கள், சிலந்தி வலை, குமிழிகள், என ஒவ்வொரு விஷயமும் தெளிவாக 120 பக்கங்களில், கிட்டத்தட்ட 250 சித்திரங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கதையில் ஸ்பைடர் வில்லத்தனம் உச்ச லெவல்ல இருக்கும்.. செய்யும் சேஷ்டைகளும் ரசிக்கும்படி தான் இருக்கும்... இறுதியில் கொள்ளையடித்த வைரங்கள் வெடித்து சிதறிடும் போது, அவற்றை பொறுக்கி எடுப்பதை இழுக்கு என நினைத்து போலிசாருக்கே விட்டு கொடுத்து கெத்து காட்டும் இடம் ஸ்பைடரின் அந்த சூப்பர் வில்லன் இமேஜுக்கு வலுசேர்க்கும். கடைசியில் பொதுமக்களுக்கு பேரிடரை கொண்டு வந்த குமிழி மனிதன் கோப்ராவினை வியூகம் அமைத்து தீர்த்து கட்டி இந்த சூப்பர் வில்லன் நன்மையே செய்வான்.
பேட்மேன் கதைகளில் வருவதுபோல ஓவ்வொரு கதையிலும் ஒரு சூப்பர் வில்லன் ஸ்பைடர் கதைகளிலும் தோன்றுவான்... அப்படி ஒரு வில்லன் தான் இந்த கோப்ரா...
வில்லன் முடிவை நிர்ணயிப்பவர்கள் ஸ்பைடரின் சகாக்களே என்பது எனக்கும் சற்று ஏமாற்றம் தான்... ஆனால் வில்லனின் முடிவை ஒரு டேப்லெட் போன்ற மானிட்டரில் ரசிக்கும் காரியவாதி ஸ்பைடரை அப்போது படித்த 80,90 களின் வாசகர்கள் காதில் பூ நாயகன் என்று சொன்னால் கூட எதோ அர்த்தமிருக்கிறது... youtube ல் லைவ் வீடியோவை மொபைல் மற்றும் டேப்பில், பார்த்திடும் இன்றைய டெக்னாலஜி அறிந்தவர்கள் சொல்வது தான் வேடிக்கையாகயிருக்கிறது.
என்னைபொறுத்தவரை யதார்த்த கதைகள் என்றால் பிரளயத்தின் பிள்ளைகள், சிப்பாயின் சுவடுகளும், (கிரீன் மேனர் கதைகள் கூட) போன்ற வாசகர்களால் அழுகாச்சி காவியங்கள் என சொல்லப்பட்டவை தான்... மற்ற கதைகள் எல்லாம் கற்பனை திறன் வாய்ந்த கதாசிரியரின் காதில் பூ சுற்றும் கதைகளே தான். என்ன, கதைகளின் genreபடி அளவுகோல் மட்டும் வேறுபடலாம்... அவ்வளவே... சஸ்பென்ஸ், ஆக்ஷன், திகில் வகை கதைகளில் ஸ்பைடர் கதைகள்... பான்டஸி கலந்த த்ரில்லர் என்று சொல்லும் போது அறிவியலுடன் சேர்ந்து கொஞ்சம் மிகைப்படுத்தும் கற்பனை விவகாரம் இருப்பது அவசியம் தானே...
👌👍
Delete// என்னைபொறுத்தவரை யதார்த்த கதைகள் என்றால் பிரளயத்தின் பிள்ளைகள், சிப்பாயின் சுவடுகளும், (கிரீன் மேனர் கதைகள் கூட) போன்ற வாசகர்களால் அழுகாச்சி காவியங்கள் என சொல்லப்பட்டவை தான்... மற்ற கதைகள் எல்லாம் கற்பனை திறன் வாய்ந்த கதாசிரியரின் காதில் பூ சுற்றும் கதைகளே தான். என்ன, கதைகளின் genreபடி அளவுகோல் மட்டும் வேறுபடலாம்... //
DeleteWell said Udhay!
udhay & friends : செம ஆர்வமான ஸ்பைடர் ரசனை !! இன்றைக்கும் இவற்றை அந்நாட்களது உத்வேகத்தோடே ரசிக்க முடிகிறதெனில் கூர்மண்டையரின் முத்திரை உங்களிடம் எத்தனை ஆழமாய்ப் பதிந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது !
Deleteஸ்பைடரின் மறுபதிப்புகள் முதல் ஆண்டில் (2015) ரொம்பவே டல்லடித்த போது - கொஞ்சம் மிரட்சியாகத்தான் இருந்தது ; மிச்சம் சொச்சமுள்ள மறுபதிப்புகளை எவ்விதம் கரைசேர்ப்பது ? என்று ! ஆனால் இந்தாண்டு ஸ்பைடர் மேனியா seems to be back !
இந்த பிரிட்டிஷ் நாட்டு படைப்பான ஸ்பைடர் கதைகள் அமெரிக்க பிரபல படைப்பான ஸ்பைடர் மேன் கதைகளை விட சிறந்தவை என்று தான் சொல்வேன்...
ReplyDeleteஅட்டைப்படம் உண்மையாகவே அருமையான சித்திரம் தான். 1984ல் பாக்கெட் சைசில் வரும் போது அதை விட பெரிய சைஸில் லாமினேட் செய்யப்பட்ட 25 சதவீதம் குறைவான விலை கொண்ட ராணி காமிக்ஸுடன் போட்டி போட்டு ஜெயிக்க இந்த சித்திரத்தரம் தான் கை கொடுத்தது என சொல்ல முடியும். அதோடு ஸ்பைடர் என்னும் அந்த வசீகரம்... விற்பனைக்கு உத்தரவாதம் கொடுத்தது...
எத்தனுக்கு எத்தன், ராட்சச குள்ளன், சைத்தான் விஞ்ஞானி போன்ற ஸ்பைடரின் சூப்பர் கதைகள் அட்டகாசமான அட்டைப்படத்தோடு... தரமான பேப்பரில், சிறந்த அச்சுடன், நேர்த்தியான டைப்செட்டில் பெரிய சைஸில் மருப்பதிப்பாக வெளிவந்திருந்தாலும் அதை ஆரம்ப கால லயன் காமிக்ஸுடன் கொஞ்சமும் ஒப்பிட இயலாவண்ணம் அதன் ஒரிஜினல் சித்திரங்கள் முழுமையான நேர்த்தியுடன் ஸ்கேன் செய்யப்படாமல், படு மோசமாக காட்சியளித்தது... ஸ்கேன்னிங்கில் ஒரிஜினல் தரம் எப்படியோ மிஸ் ஆனதால் வாசகர் பலரும் அச்சுப் பிரச்சனை என தவறாக நினைத்து விட்டனர். இந்த காரணத்தால் ஸ்பைடரை ஆரவாரமாக வரவேற்க வேண்டிய கைகள் அசைவற்று போயின...
இதில் நம் இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ கதைகளும் அடுத்து வந்த டாக்டர் டக்கர் கதையும் மட்டும் கூடுதல் டிஜிட்டல் ஸ்கிரீன் நேர்த்தியோடு எப்படியோ கரைசேர்ந்துவிட்டார்கள்...
இப்போது வந்துள்ள கடத்தல் குமிழிகள் கதை மிக நேர்த்தியான, முழுமையான சித்திர ஸ்கேன்னிங்கோடு ஒரிஜினல் தரமாகவே வந்துள்ளது... இனிமேல் மறுப்பதிப்புகளை இதுபோல் ஆரம்ப கால தரத்தோடு வெளியிடுவீர்கள் என நம்புகிறோம்.
20000, 25000, 30000 என பிரிண்ட் ரன்னில் அமோகமாக விற்று தீர்ந்து அன்றைக்கு லயன் காமிக்ஸ் ஐ பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்ற உங்கள் லக்கி ஸ்டார் ஸ்பைடர் இன்றைக்கும் விற்பனையில் ஒரு கலக்கு கலக்கி உங்கள் முகத்தில் புன்சிரிப்பை உண்டாக்குவானாக...
யெஸ்... Spider mania is back...
பழமையை போற்றுவதுடன் நில்லாமல் உத்தரவாதம் தரும் golden era கதைகளை அடிக்கடி வெளியிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..
அன்புடன்
உங்கள் நலம்விரும்பி
உதய்
+987654321
Deleteஅருமை ...
அருமை நண்பரே ! அருமை ! ரசித்து ரசித்து எழுதி இருக்கிறீகள் . பாராட்டுக்கள் !
ReplyDeleteமிக்க நன்றி, திருச்செல்வம் பிரபாநாத் அவர்களே... மிக்க நன்றி!!
Deleteஅற்புதமான காலமது...ஹூம்...
Deleteஆஹா ...வலை மன்னனுக்கு இவ்வளவு நீளமான அழகான விமர்சனத்தை ஆசிரியரே எதிர்பார்த்திருக்க மாட்டார் ..
Deleteஅருமை நண்பரே ...உண்மையில் நானும் மற்ற மறுபதிப்புகளை விட இம்மாத கடத்தல் குமிழிகள் இதழை வாசிக்கும் பொழுது மிகுந்த விறுவிறுப்புடன் சுவாராஸ்யலாக சென்றதை உணர முடிந்தது... அதுவும் ஸ்பைடரின் கூட்டாளிகளே ஸ்பைடரை ஒழிக்க நினைப்பதும் பிறகு அவனிடம் மாட்டிகொண்டு பம்முவதும் லக்கியின் சிரிப்பை வரவழைப்பது நிஜம் ..
சூப்பர் உதய்...
Deleteஅந்நாளைய மெகா ஸ்டாருக்கு அட்டகாசமான விமர்சனம்...
ஆரம்பகாலத்தில் லயன் வெற்றிக்கு ஸ்பைடர் மிக முக்கிய பங்கு வகித்துள்ளார் என தெரிகிறது.
இந்த தீபாவளி மலர்கள் பற்றி தேடுகையில், ஆரம்பத்தில் ஸ்பைடர் கதைகளே ஆதீத முக்கியத்துவம் பெற்றவை என புரிந்து கொண்டேன்.அது உங்களின் இந்த விமர்சனத்தில் உறுதிப்படுகிறது.
தொடர்ந்து ஸ்பைடர் ஹிட் கதைகளாக வெளிவந்த காலம் அது என தெரிகிறது, இப்போதைய டெக்ஸ் போல அப்போது ஸ்பைடரின் ஆதிக்கம் நிலவியுள்ளது.
ஸ்பைடர் இல்லாத சிறப்பிதழ்கள் ஒன்று கூட இல்லை, இளவரசி மற்றும் ஆர்ச்சியும் அடுத்த இடங்களில் பெரும்பங்கு வகித்துள்ளனர்....
இப்போது டெக்ஸ் அட்டைப்படத்தில் இருந்தால் அந்த இதழ் நிச்சயம் வெற்றி, இதை டெக்ஸ் க்கு முன்பு ஸ்பைடர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
எனவே...லயன் காமிக்சின் ,
நேற்றைய சூப்பர் ஸ்டார்- ஸ்பைடர்
இன்றைய சூப்பர் ஸ்டார்- டெக்ஸ் வில்லர்
வருங்காலத்தில்.......?????
(என் 15வது வயதில் தாமதமாக காமிக்ஸ் படிக்க வந்ததால் முத்து காமிக்ஸ் பற்றி அதிகம் தெரியாது நண்பர்களே, இதேபோன்று முத்து காமிக்ஸ் ன் நேற்றைய, இன்றைய ஸ்டார் பற்றி யாராவது விவரிக்கலாமே)
ஆஹா ...வலை மன்னனுக்கு இவ்வளவு நீளமான அழகான விமர்சனத்தை ஆசிரியரே எதிர்பார்த்திருக்க மாட்டார் ..
Deleteஅருமை நண்பரே ...உண்மையில் நானும் மற்ற மறுபதிப்புகளை விட இம்மாத கடத்தல் குமிழிகள் இதழை வாசிக்கும் பொழுது மிகுந்த விறுவிறுப்புடன் சுவாராஸ்யலாக சென்றதை உணர முடிந்தது... அதுவும் ஸ்பைடரின் கூட்டாளிகளே ஸ்பைடரை ஒழிக்க நினைப்பதும் பிறகு அவனிடம் மாட்டிகொண்டு பம்முவதும் லக்கியின் சிரிப்பை வரவழைப்பது நிஜம் ..
@ ALL : நிஜத்தைச் சொல்லவா ? இதுவரையிலான ஸ்பைடர் மறுபதிப்புகளுக்குள் தலைநுழைக்கும் போதெல்லாம் - கணிசமான பொறுமை அவசியமாகிடும் ! ஆனால் "கடத்தல் குமிழிகள்" சார்ந்த பணிகள் மட்டும் எவ்விதச் சிரமங்களுமின்றி, வழுக்கிக் கொண்டு ஓடியது போலொரு பீலிங் எனக்கு ! ஏனென்று இன்னமும் சரியாகக் கணிக்கத் தெரியவில்லை - ஆனால் அடுத்த ஸ்பைடர் கதை சீக்கிரமே வந்தால் தேவலையே என்று தோன்றுகிறது !!
Deleteஆசிரியர் அவர்களுக்கு¸
ReplyDeleteமுத்து¸ லையன்¸திகில்¸ஜூனியர்¸மினி லையன் அனைத்து காமிக்ஸ்-களின் அட்டவணையினையும் ஆரம்பமுதல் இன்றைய வெளியீடுவரை வரிசைகிரமாக கேட்லாக் போன்று தனி புத்தகமாக வெளியீடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Jegang Atq : LMS : லயன் 250 ; NBS போன்ற இதழ்களில் எல்லாமே வெளியீட்டு வரிசையில் பட்டியலை வெளியிட்டுள்ளோமே சார் !
Deleteஆசிரியர் விடுமுறையை ரத்து செய்து விட்டு இன்றாவது வகுப்பிற்கு வருவாரா..?....:-(
ReplyDeleteஅடுத்த வாரம் இந்நேரம் சுடச்சுட தீபாவளி மலரை நம் கைகளில் கொடுக்க அயராது பாடுபடுகிறார்.!
Deleteதலீவர் & மாடஸ்டி வெங்கடேஸ்வரன். : தீபாவளி மலரில் மட்டுமன்றி, SUPER 6 இதழ்கள் பக்கமாகவும் பிசி !! தீபாவளி முடிந்த கையோடு அதற்குள்ளும் புகுந்திட வேண்டுமல்லவா ?
Deleteசார் எழுதப்பட்ட விதி அட்டகாசம்...எமனின் திசை மேற்கு போல என்னை கட்டிப் போட்ட கதை...எடுத்ததும் தெரியலை...முடித்ததும் தெரியலை...அந்த குதிரையில் கிளம்பும் போதே விரல் முறியுமென ெனக்கும் பட்து...இதுவும் எழுதப்பட்ட விதியா...கதையோடு ஒன்றச் செய்து விட்டது...ஓவியங்கள் அதகள உலகில் உயிர் பெற்றுத் திரிகின்றன....அந்த பிரத்யோக சிகப்பு மை இதன் மீது தங்களுக்கிருந்த நம்பிக்கையை தெரிய படுத்துகிறது...இந்த அளவிற்கு வண்ணம் துணை புரிய அந்த மைதான் காரணம் எனில் தாங்கள் மாபெறும் வெற்றி ஈட்டி விட்டீர்கள்...ரசிகனை தட்டி எழுப்பும் வகையில்...அற்புத பொக்கஷம் எனது கையில் உங்களை நம்பிய வகையில்...உங்கள் மெனக்கெடல்கள் வெற்றியைத் தருவது திண்ணம் மாஆஆஆஆஆஆஆஆஆஆ.........ஆஆஆஆ....பெரும் மகிழ்ச்சி .
ReplyDeleteஇந்தக் கதை வருங்காலத் தேடல் உலகில் மாபெரும் பொக்கிஷமாய் அலையச் செய்ய போவதுறுதி....
Deleteஸ்டீல் +111111111111111
Deleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : ரகளையான விமர்சனம் !! சிறுகச் சிறுக பரிச்சயமான பாதைகளை விட்டு அகன்றிட இது போன்ற கதைகள் உதவிடின் மகிழ்ச்சியே !! என்ன ஒரே ஆதங்கம் - அந்தப் பாலியல் சமாச்சாரங்களின்றிக் கதை பயணித்திருப்பின், இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் !
Delete///அந்தப் பாலியல் சமாச்சாரங்களின்றிக் கதை பயணித்திருப்பின், இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் !///
Deleteஉண்மை சார். கதையில் நெருடலாக தோன்றிய ஒரே விசயம் அது மட்டும்தான்.
துரோகத்துக்கு முகமில்லை நெகிழ்ச்சி...தொடருங்கள்
ReplyDelete5வது தீபாவளிமலர்.....
ReplyDelete5வது லயன் தீபாவளி மலர் வர ஆரம்பிக்கும்முன்பே லயனில் டெக்ஸன் ஆதிக்கம்தொடங்கிவிட்டது......
லயன் காமிக்ஸின் 50வது இதழான 1988
கோடைமலரிலேயே டெக்ஸ்க்கு
முக்கியத்துவம் ஆரம்பமாகிட்டது....
டிராகன் நகரம் வாயிலாக......
மே1988 ல் டிராகன் நகரத்தின்
அதகளத்தை பார்த்த நண்பர்கள், தீபாவளிக்கு என்ன அதிர்வெடியோ என ஏக எதிர்பார்புடன்
இருந்து இருப்பார்கள்...
1988ன் 5வது லயன் தீபாவளி மலரில் டெக்ஸின்ஆல் டைம் பெஸ்ட்டில் ஒன்றான இரத்த முத்திரை எனும் முழுநீள சாகசம் இடம்பெற்றது.... மற்றும்
சில மினி கதைகளும் இடம் பெற்றாலும் ,
ஃபோகஸ் ஒன்லி ஆன் டெக்ஸ்..டெக்ஸ்.. டெக்ஸ்....
மற்றொரு மாற்றம் இப்போது நாம் ரசிக்கும்
டெக்ஸ் சைஸ்.....1988 அக்டோபரில் வந்த இதன்
விலையும் ரூபாய் 5மட்டுமே, ஆச்சர்யம்...
ஆனால் ஒரே குறை பேப்பர் குவாலிட்டி
கொஞ்சம் டவுன் ஆகி , இப்போது எடுத்து
புரட்டினால் அப்படியே உடைந்து விடும்.....
1. எத்தனுக்கு எத்தன் -இரட்டைவேட்டையர்
ஜார்ஜ்&டிரேக்.
2. விசித்திர விடுமுறை-அதிரடிப்படை.
3.இரத்த முத்திரை-டெக்ஸ் வில்லர்.
4. கெக் தீவு மன்னன்- சிறுவன் பீட்டர்.
.....என 4கதைகள் இருந்தாலும் டெக்ஸ் சாகசமே
அதிக வரவேற்பை பெற்ற ஒன்று
இம்முறையும்...கதை சொல்லப்படும் கோணம்
மிக அற்புதமானது.
கதை சுருக்கம்...
போர்ட் ஆஃப் டாக்டன் மற்றும் கமான்ச்
மலைத்தொடர் இடையேயான நிலப்பரப்பில்,
டெல்மர் என்ற சிறு நகருக்கு அருகே தனியார்
இரயில்வே பாதை வர இருக்கிறது. இதற்காக
நிலங்களை சட்டத்திற்கு புறம்பாக
அச்சுறுத்தி கையகப்படுத்தும் ஈனத்தனத்தை
உள்ளூர் பேங்கர் பிக்பென் பெர்ரி மற்றும்
சில்வர் ஸ்டார் பண்ணை அதிபர் ரான்ஹோம்மர்
ஒரு அடியாள் கும்பலை வைத்து செய்து
வருகின்றனர்.
டெல்மருக்கு அருகே இருந்த பண்ணை
அதிபர்களை மிரட்டி பணிய வைக்கின்றனர்.
அச்சுறுத்தலுக்கு பணிந்து சொற்ப
விலைக்கு விற்கும் உரிமையாளர்கள்
மர்மமான முறையில் காணாமல் போகின்றனர்.
அடிபணிய மறுக்கும் நபர்கள் படுகொலை
செய்யப்படுகின்றனர். இதற்கு உள்ளூர்
செரீப்பும் உடந்தையாக இருக்கிறான்.
நிலத்தை விற்க மறுக்கும் பர்குஸ்
பண்ணையை முற்றுகையிட்டு , பண்ணை
வீட்டை கொளுத்தி பெரியவர் பர்குஸ் மற்றும்
அவர் மகன் ராயை உயிரோடு எரித்துக்கொல்ல
முயற்சி செய்யும் நேரத்தில் நம் அதிரடி
ஜோடி டெக்ஸ் & கார்சன் தலையிடுகிறது.
இரு
போக்கிரிகளை சுட்டு வீழ்த்தினாலும்
பர்குஸ்களை காப்பாற்ற இயல வில்லை.
4சடலங்களையும் வண்டியில் அள்ளி போட்டு
கொண்டு நகருக்கு வருகிறது நம் ஜோடி.
இதற்கிடையே தப்பி ஓடும் போக்கிரிகள்
ஹோமரிடம் நடந்ததை சொல்ல, டெக்ஸ் மற்றும்
கார்சனை கொல்ல மீண்டும் அவர்களை
ஏவுகிறான் அவன். அதிரடி மோதலின்
முடிவில் போக்கிரிகள் தப்பியோட டெக்ஸ்
ஜோடி நகரை அடைகிறது.
அந்நியர்களான டெக்ஸ் குழுவின் தலையீட்டை
விரும்பாத செரீப் இவர்களை நகரை விட்டு
வெளியேற சொல்கிறான். செரீப்புக்கு தக்க
பதிலடி தந்து விட்டு தாகம் தீர்க்க செய்ய
செல்கிறது டெக்ஸ் ஜோடி. இதற்கிடையே
நிலத்தை விற்க மறுக்கும் மற்றொரு நபரான
எவரெஸ்ட் மைரா என்ற இளம் விதவை மளிகை
சாமான்கள் வாங்க
நகருக்கு வருகிறாள். அவளை துரத்தி
அடிக்கவும் , உதவிக்கு டெக்ஸ்ம் கார்சனும்
வந்தால் அவர்களை போட்டு தள்ளவும் தன்
உதவியாளன் ஜிம்மையும் ,ரானின் அடியாள்
ஜெட்டையும் அனுப்புகிறான் பென்.
மைராவுக்கு உதவும் டெக்ஸ் ஜெட்டுடன்
மோதும் போது பேங்க் உச்சியில் இருந்து ஜிம்
டெக்ஸை சுட இருக்கிறான். தக்க தருணத்தில்
ஜிம்மை கார்சன் பார்த்து அவன் துப்பாக்கியை
சுட்டு டெக்ஸை பாதுகாக்க, ஜெட்டின்
கையை சுட்டு காயப்படுத்துகிறார் டெக்ஸ்.
டெக்ஸ் குழுபேங்குக்கு சென்று பென்னை
விசாரிக்க, பயந்து போகும் அவன் ஒரு
விசையை இழுக்க பாதாள குழியில்
விழுகின்றனர் டெக்ஸ்ம் கார்சனும்.....
....விற்ற நிலத்திற்கு பணத்தை வாங்க வரும்
Deleteஉரிமையாளர்களை இந்த வழியில் தான்
கொல்கிறான் பென் என கண்டறிகிறது டெக்ஸ்
குழு. கடினமான முயற்சியில் அந்த நிலத்தடி
நீர் குகையில் இருந்து வெளியேறும் டெக்ஸ்
ஜோடி , காக்ஸ்டன் சுனை என்ற அந்த இடத்தில்
பண்ணைக்கு திரும்பும் மைராவை
சந்திக்கிறது. மைராவுடன் அவள் பண்ணை
வரும் டெக்ஸ், அவளின் சோம்பேறி அண்ணன்
புல்' லுக்கு ஒழுக்கத்தை கற்று தருகிறார்.
மைராவுக்கு பாதுகாப்பாக கார்சனை
விட்டுவிட்டு, ஹோமர் பண்ணைக்கு அவனை
தேடி டெக்ஸ் செல்கிறார்.
இதற்கிடையே மைராவை கொல்ல செரீப்
தலைமையில் ஒரு குழுவை
அனுப்புகிறான் ஹோமர். கார்சனின் கடும்
பிரயத்தனமான முயற்சியில் தாக்குபிடிக்கின
்றனர். பல போக்கிரிகளை கார்சன் சுட்டு
தள்ளுகிறார். இந்த தாக்குதல் பற்றி அறியும்
டெக்ஸ் , ஹோமர் மற்றும் அவன் அடியாள்
ஜெட்டை கட்டி வண்டியில் போட்டு கொண்டு
மைராவின் பண்ணைக்கு திரும்புகிறார்.
மைராவின் பண்ணை வீட்டுக்கும் செரீப் கும்பல்
தீ வைத்து அவர்களை கொல்ல முயலும் போது
அங்கு வரும் டெக்ஸ் ,செரீப் கும்பலை சுட்டு
தள்ளி கார்சன் மற்றும் மைராவை
காப்பாற்றுகிறார். இதற்கிடையே வண்டியில்
உள்ள ஆட்கள் டெக்ஸின் உதவிக்கு வந்தவர்கள்
எனநினைத்து அவர்களை செரீப் தீர்த்து
கட்டுகிறான்.
செரீப் எஞ்சிய ஒரே ஒரு அடியாளை
பிணையாக வைத்து டெக்ஸ்ஸை அச்சுறுத்தி
துப்பாக்கியை கீழே போட வைத்து
மைராவை சுட பார்க்கிறான். தாங்கள்
அனைவரும் செரீப்பால் கொல்லப்பட்டு
விடுவோம் என்ற நிலையில் மைராவின்
சகோதரன் உள்ளே புகுந்து செரீப்பின்
வழியை மறிக்க , அவனை சுட்டு வீழ்த்தும்
செரீப் வில்லரையும் வீழ்த்த திரும்ப , செரீப்பை
அடித்து வீழ்த்துகிறார் வில்லர்.மைராவின்
சகோதரன் இறக்கிறான். மைராவிடம்
விடைபெற்று டெக்ஸ் ஜோடி நகருக்கு வர ,
இவர்கள் தப்பியதை அறியும் பென் ஜிம்மை
கொன்று விட்டு பேங்க்கில் உள்ள பணத்துடன்
தப்பி ஒடுகிறான். அப்போது அங்கே வரும்
டெக்ஸ் அவனை துரத்த வேகமாக ஓடும் வண்டி
தறிகெட்டு சாய பென் மாண்டுபோகிறான்.
கடமையை செய்ய அஞ்சாமல் எவரையும்
எதிர்த்து நிற்கும் சிங்கங்கள் இரண்டும்
விடைபெற்று கிளம்புகின்றன.
.....அந்நாளில் பட்டையை கிளப்பி இருக்கும் இந்த தீபாவளி
மலர்....
அதில் கெக் தீவு மன்னன் என்னை மிகக் கவர்ந்த கதை...அனாதை சிறுவர்களின் சாகசம் நம்மையும் துள்ள வைக்கும்
Deleteமாம்ஸ்!!
Deleteபின்றிங்கோ!!!
சேலம் Tex விஜயராகவன் : ஒரு நாள் MV சாருக்கும் உங்களுக்கும் ஒரு மேடையமைத்து இளவரசி Vs இரவுக் கழுகார் என்றொரு விவாதத்தை ஓடவிட்டால் - செமயாகப் பொழுது போகும் போலுள்ளது !
Deleteஅவரவர் ஆதர்ஷர்கள் மீது என்னவொரு வெறித்தனமான வாஞ்சை !!
சார் அடுத்த வருட அட்டவணையை புரட்டிய போது...ஒன்று விடுபட்டது புலப்படுகிறது... அடுத்த வருடம் முத்து 45வது ஆண்டு மலர்...கொரில்லா சாம்ராஜ்யம் வண்ணத்தில் வந்தால் ...நமது மைல் கல் நாயகனுக்கு சிறப்பு செய்வதுடன்..மைல் கல் இதழுக்கும் சிறப்பு சேர்க்குமே...மாற்றமே மாறாதது...
ReplyDeletehttps://m.facebook.com/photo.php?fbid=1427799257232004&id=100000058312103&set=gm.10154642675829776&source=57&refid=18&ref=m_notif¬if_t=group_comment&__tn__=E
ReplyDeleteA: ஓ காவல் தெய்வமே எங்கள் இரவுக் கழுகாரே உறக்கத்தில் ஆழ்த்து...
ReplyDeleteB: ஆவண செய்வாயாக!
C: இப்படி கத்துனா எப்படியா தூக்கத்தில ஆழ்றது
விஜயன் சார்
ReplyDeleteநாம எங்கேயும் போக வேண்டாம் இங்கேயே தொடரலாம்...
என்னா தலைவீங்கிய சில போலிகள் உங்களுக்கு அட்வைஸ் பண்ணுவதற்கே பிறந்தமாதிரி ஆக்ட்டு குடுப்பாங்க....
சும்மா எந்த ஓரு கமெண்ட் ம் இங்கே வந்து பேஸ்ட் பண்ணும்போது கூட
ஜால்ரா, கூட்டமா கும்மி அடிக்கிறாங்குனு வெத்து புகார் வாசிப்பாங்க...
அட யார் யார்னு சொல்றதுக்கு கூட தைரியம் இல்லாத வாய் வீச்சு தொடரும்...
கூட்டமா போயி கறிசோறு சாப்பிட்டதை தவிர வேறு என்ன செய்தீங்கனு பொறாமை படுவாங்க...
அவ்வளவு தானே விடுங்க சார் , எவ்வளவோ பார்த்துட்டம்,
இதையும் இனிமேல் தாண்டிபோய் பழகி கொள்கிறோம்...
ஏதாவது சொன்னாக்கா இந்த கண்ல படிச்சு அந்த கண்ல மறந்துட்டு போக பழகி கொள்கிறோம்...
முக்கியமாக யார் எதை "நல்லாயிருக்குனு" சொன்னாலும்
அவுங்களுக்கு நெஞ்சுல சின்ன சொம்புபடம்,
முதுகுபக்கம் பெரிய ஜால்ரா படம் போட்ட டீ சர்ட் அடிச்சி நாங்களே போட்டுக்கிறோம்.
ப்ராப்ளம் சால்வ்டு...என் பனியன் எண் நெ.23 போட்டது...
யார் யார்க்கு என்னா நெம்பர் போட்டு வேணும்னு சொன்னீங்கனா
ஆர்டர் கொடுத்து விடலாம் நண்பர்களே....
நன்றி....
எனக்கு அந்த 10ம் நம்பர ஒதுக்கி போடுங்க....
Delete7 for me.
Delete+13
Deleteஎனக்கு 7.5 ;)
Deleteசொம்புப் படம் நல்லா பெரிசாவே இருக்கட்டும். பளபளன்னு நல்ல வெண்கலச் சொம்பாப் போடுங்க யுவா!
எனக்கு 9 ஆம் நம்பர் பனியனை கொடுத்திடுங்கோ! ஏன்னா, எனக்கு அதான் லக்கி நம்பர்.!
Deleteசொம்பு, பித்தளை அல்லது வெண்கலம் ங்கறதாலே நல்ல கோல்டு கலர்ல பிரிண்ட் பண்ணிடுங்கோ.
அதே மாதிரி ஜால்ரா கருவியும் கோல்டு கலர்லயே இருக்கட்டும்.!
இவனென்ன, கோல்டு கோல்டுன்னு கூவிகிட்டு இருக்கானேன்னு பாக்குறிங்களா???
இன்னிக்குத்தான் சந்தா கோல்டு கட்டியிருக்கேன்., அதான் அப்படி ஹிஹி!!!
எனக்கு 5 ம் நம்பர் ...
Deleteஎனக்கு 8 ம் நம்பர்... ஆனாக்க கெடா வெட்டுன்னா எனக்குதான் மொதோ மருவாதி.. சொல்லிப்புட்டேன்...
Deleteகெடாவுக்கு கொடுக்குற அம்புட்டு மருவாதியும் உங்களுக்கும் கொடுத்துப்புடலாம்றேன்! ;)
Deleteஒன்னாம் நம்பருல தலீவருக்காண்டி துண்டு போட்டு வச்சிருக்கிறேன்... 'நான்தான் ஒன்னு'னு யாராச்சும் வந்து நின்னியலோ... தெரியும் சேதி!
Deletekannan s : வருஷமாய் இங்கே சுலபமாய், கட்டுப்பாடுகளின்றி உலா வந்துவிட்டு இன்றைக்கு வேறொரு தளம் தேடுவது எனக்கும் கஷ்டமாகத்தான் உள்ளது !! பார்க்கலாமே !
Delete///வருஷமாய் இங்கே சுலபமாய், கட்டுப்பாடுகளின்றி உலா வந்துவிட்டு இன்றைக்கு வேறொரு தளம் தேடுவது எனக்கும் கஷ்டமாகத்தான் உள்ளது !! பார்க்கலாமே !///
Deleteஇப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்பதே எனது விருப்பமும் சார்.!
மாற்றுக்கருத்துகளே இல்லாத தளம், ஒரே கட்சியை ஆதரிக்கும் நபர்கள் எதிரெதிரே அமர்ந்து அதே சார்புடைய ஊடகத்தில் செய்யும் விவாதமேடைக்குச் சமமான ஒன்றாகும்.!
தவிரவும் கட்டுப்பாடுகளோடு மூடிவைக்கப்பட்ட தளம் மிரட்சியோடு பார்க்கப்படும் அபாயமும் உண்டு.!!
Pls. allot no 25 for me
ReplyDeleteThanks :)
.
எனக்கு 16 நம்பரை கொடுத்து விடுங்கப்பா. என் வயதை நம்பரா போட்டுக்கிறேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@ ஃபினிக்ஸ்
Deleteகைநடுக்கத்துல ஒன்னும் ஆறும் இடம் மாறிடுச்சு போல இருக்கே?! சரி யுவா பிரின்ட் பண்ணும்போது கரெக்ட்டா போட்டுக்குவாரு! :P
குருநாயரே :):):)
Deleteகழுத எனக்கு 14 ம் நம்பர் கொடுத்துடுங்கன்னேன்.
Deleteசெயலாளருக்கு தன்னை விட சின்ன பசங்களை ராகிங் செய்யறதுல அப்படி ஒரு சந்தோஷம். சரி பரவாயில்லை. பெரியவர்கள் சந்தோசத்துக்காக எது வேணும்னாலும் செய்யலாம்
ReplyDeleteகடத்தல் குமிழிகள் :-
ReplyDeleteநம்ம ஹீரோ பில்லி, பள்ளிகூடத்துல ஏகப்பட்ட கலாட்டா பண்ணுதான்னு அவுக அப்பாருகிட்ட பெரியவாத்தியாரு கம்ப்ளீண்டு பண்ணுறாப்புல. கூட படிக்கிற நண்டு சிண்டுக எல்லாம் சேந்துகிட்டு, பில்லி எங்களோட சத்துணவையும் சேத்து தின்னுபுடுதான்னு சொல்லி ஓ ன்னு அழுவுதுக.!
இதையெல்லாம் கேட்ட பில்லியோட அப்பாருக்கு குடுமிக்கி மேல கோவம் கொப்புளிச்சிட்டு வந்திடுது. உன்னுமே பில்லிக்கு ஜேப்பிதுட்டே (அதானுங்க. . பாக்கெட்மணி) தரமாட்டேன்னு சொல்லிட்டு செருமிகிட்டே போயிடுதாரு.
பில்லிக்கு ஒரே சோகமா போயிடுது. இன்னுமே இந்த பள்ளியோடத்துல நம்ம இருக்கவே கூடாதுன்டு விடுகதையா இந்த வாழ்க்கைன்னு பாடிகிட்டே மழை வரதாதலே நனையாம வெளியே கெளம்பிடுதான்.
அங்கிட்டு போயி ஒரு கப்பல்ல வேலை கேக்குதான். அந்த கப்பல்ல இருக்குற அம்புட்டு பயலுவளும் களவாணிப் பயலுக. ராணுவ ரகசியம் இருக்குற டேப்பை களவாண்டுகிட்டு கப்பல்ல எஸ் ஆகப் பாக்குதானுக. அது தெரியாத அப்புராணி பில்லி அவுகளோட சேந்து கப்பல் ஏறிடுதான்.
கப்பல்ல டிபனு லஞ்சு டின்னருன்னு எப்பப்பாத்தாலும் அரிசிகஞ்சியே ஊத்தி கொலையா கொல்லுறானுக.
இதுல கடுப்பாகுற நம்ம பில்லி அரிசி மூடை பூராத்தையும் கடல்ல கொட்டப்போறான்.
அரிசிமூடையில தான் ராணுவ ரகசியத்தை களவாணிக பதுக்கி வெச்சிருக்காணுக ங்குற ரகசியத்தை அகஸ்மாத்தா தெரிஞ்சிக்கிற பில்லி, களவாணிக கையில மாட்டாம தப்பிச்சி, கப்பல் படைக்கு ரேடியோ மூலமா போனைப்போட்டு தகவலு சொல்லுதான்.
உன்னைய எப்புடிடா நாங்க கண்டுபுடிக்கிறதுன்னு அதிகாரி கேக்க, கடல்ல கொட்டியிருக்குற அரிசியப் ஃபாலோப்பண்ணி வாய்யா வென்றுன்னு பில்லி சொல்லுதான். ( அரிசியத் தண்ணியில கொட்டுனா முழுவிப்போயிடாதான்னு ஆராச்சும் கேட்டீக. . . அம்புட்டுதான்)
அவியளும் அரிசியப் பொறுக்கிட்டே களவாணிக் கப்பலுக்கு வந்து , பில்லியையும் டேப்பையும் மீட்டுகிட்டு களவாணிப் பயலுகளை கம்பி எண்றதுக்காக தூக்கிப்போட்டுகிட்டு போயிடுதாக.
இங்கிட்டு பில்லி ஓடிப்போயிட்டதை நெனைச்சு பெரிய வாத்தியாரைய்யாவும் சிநேகிதப் பயலுகளும் அண்ணந்தண்ணி ஆகாரம் இல்லாம அழுதுகிட்டே இருக்காக. பில்லியோட நல்ல கொணங்களெல்லாம் இப்பத்தேன் இவிகளுக்கு நாபகத்துக்கு வருது. பில்லி சீக்கிரம் வந்துட்டா கருப்புசாமிக்கி கெடா வெட்றதா வேண்டுதலு வெச்சிகிட்டு இருக்குறாக.
இந்த நெலமையில, கப்பல் அதிகாரி பில்லிய கூட்டிகிட்டு பள்ளியோடதுக்கு வராப்புல. பில்லி, பெரிய களவாணிக் கூட்டத்தையே புடிச்சி குடுத்து ராணுவ ரகசியத்தை காப்பாத்தியிருக்கான்னு சொல்லி பாராட்டிபுட்டு போயிடுறாப்புல.
பெரிய வாத்தியாரும், சிநேகிதமாரும் பில்லியை கட்டிபுடிச்சி பாராட்டுறாங்க. பில்லியோட அப்பாரும் இன்னுமே ஜேப்பிதுட்டை டபுள் மடங்கா குடுத்துடுறேன்னு சொல்லி கதையை சுபமா முடிச்சிப்புடுதாக. .!
குண்டன் பில்லி - ஒன்மேன் ஆர்மி .
ரேட்டிங் 7•5 /10
பின் குறிப்பு : நீங்க நினைக்கிறது சரிதான். இதே புக்குல இந்த கதைக்கு முன்னாடி ஒரு ஸ்பைடர் கதை இருப்பது உண்மைதான்.!! :-)
KiD ஆர்டின் KannaN : குற்றச் சக்கரவர்த்தியின் ரசிகக் கண்மணிகள் பர்மா தேக்கில் உருட்டுக் கட்டைகள் ஆர்டர் கொடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன் ! எதுக்கும் FLIPKART-ல் ஒரு மருவுக்கு உடனே ஆர்டர் போட்டு வைப்பது நலம் !
Delete@ கிட்ஆர்ட்டின்
Deleteஹாஹாஹா! செம நக்கலான விமர்சனம்! இஸ்பைடர் - பாவம்! :)))))
@ ALL : அட....இண்டெர்வலில் படம் பார்க்க வந்து விட்டு, கதை புரியாமல் பக்கத்து சீட்காரரை பேந்தப் பேந்த பார்ப்பது போலொரு பீலிங் எனக்கு !!
ReplyDelete"ஆளுக்கொரு நம்பர்" என்றவுடன் இது ஏதோ புது ஆட்டம் போலிருக்குதே என்று வேகமாய் மேலே scroll பண்ணினால் - இது ஏதோ வழக்கமான ஆலமரத்தடிப் பஞ்சாயத்து மேட்டர் போலத் தெரிகிறது ! சரி, அது என்னவாக இருந்துவிட்டுப் போனாலும், எனக்குமொரு டீ-ஷர்ட் மறந்துடாதீங்க சாமிகளா !
//அது என்னவாக இருந்துவிட்டுப் போனாலும், எனக்குமொரு டீ-ஷர்ட் மறந்துடாதீங்க சாமிகளா ! //
Deleteசந்தா கட்டுறவங்களுக்குத் தான் டீ-ஷர்ட் கிடைக்கும் எடிட்டர் சார்! இல்லேன்னா நாங்க வைக்கும் கேப்ஷன் போட்டியிலாவது ஜெயிக்க முயற்சி பண்ணுங்க! ;)
Erode VIJAY : இதெல்லாம் போங்கு ஆட்டம்...! நாங்கல்லாம் தருமிக்குச் சொந்தக்காரர்கள் - கேள்விகள் கேட்கத் தான் தெரியும் !
Deleteஅப்புறம் - எவ்வளவு பிழையுள்ளதோ - அவ்வளவுக்கு குறைத்துக் கொண்டு ஒரு S சைசிலாவது டி-ஷர்ட் ?!
///- எவ்வளவு பிழையுள்ளதோ - அவ்வளவுக்கு குறைத்துக் கொண்டு ஒரு S சைசிலாவது டி-ஷர்ட் ?!///
Deleteஅப்புறம் அது டீ -ஷர்ட்டாக இராது சார். . . . . . :-)
கிட்ஆர்ட்டின்
Deleteஹா ஹா! செம! :))))
நிஜாரிலா தலீவர் எவ்வழியோ.....
Delete:p :P
Deleteஷேம் ஷேம் பப்பி ஷேம் ! :)))
******* எழுதப்பட்ட விதி *****
ReplyDelete***** கதை விவரிக்கப்பட்டிருக்கிறது ****
இளம் பணக்கார அம்முணி தெரஸாவுக்கு ஒரு பழைய மர்ம நாவல் கிடைக்கிறது. அதில் அவளைப் பற்றித்தான் எழுதப்பட்டிருக்கிறது - அதுவும் அவள் எப்படிச் சாகப்போகிறாள் என்ற விவரங்களோடு! புத்தகத்தின் நடுவிலும், கடைசியிலும் தலா ஒரு பேப்பர் மிஸ்ஸிங்! அம்மணி நம்ம புது டிடெக்டிவ் ஜேசன் ப்ரைஸை துப்பறிய அழைப்பு விடுக்கிறாள்!
அந்த நாவலை எழுதிய எழுத்தாளரின் பெயர் மார்கன் ஃபட்டாய்'னு தெரியவருது! 'டைட்டானிக்' மூழ்கறதுக்கு 10 வருஷம் முன்னாடியே 'டைட்டன்'கற பேர்ல ஒரு நாவல் எழுதியிருந்தார்னும், அந்த நாவலில் இருந்த விவரங்களின்படிதான் டைட்டானிக் மூழ்கிச்சின்னும் தெரியவருது! ( இந்த இடத்துல அந்த எழுத்தாளர் ஒரு 'தீர்க தரிசி' ஆகிடறதை வாசகர்களான நாம் புரிஞ்சுக்கணும்)
சரி, எங்கே அந்த எழுத்தாளர்னு விசாரிச்சா அவர் திடீர்னு காணாமப் போயி சிலப்பல வருசங்களாச்சுனு தெரியவருது!
இதுக்கு நடுவுல, அந்த நாவல்ல எழுதியிருந்த மாதிரியே அம்முணி தெரஸாவின் சாவுக்கான சம்பிரதாய வழிமுறைகள் ஒன்னொன்னா நடக்க ஆரம்பிக்குது! மீன்கள் செத்து மிதக்குது... அண்டங் காக்கைகள் அலம்பல் பண்ணுது... மேகத்துல ஆர்ட்டின் ஷேப் தெரியுது... ( கிட் ஆர்ட்டின் கிடையாது.. கிர்ர்ர்...) ரத்த மழை பெய்யுது...
இதுக்கு நடுவுல, நாவல்ல காணாமப் போயிருந்த அந்தக் கடேசிப் பக்கமும் ஏதேச்சையா நம்ம அம்முணி தெரஸாவுக்கு கிடைச்சுடுது! பார்த்தா... அதுல கொலைகாரனோட பேரும் தெள்ளத் தெளிவா எழுதியிருக்கு!
இப்படி எல்லாமே தெரியவந்தும் அம்முணி தெரஸா தன்னைக் காப்பாத்திக்க முடியாமப் போகுது! ஆமா, அந்த புத்தகத்துல எழுதியிருந்தபடியே அவள் கச்சிதமாகக் கொல்லப்படுகிறாள்
* கொலைகாரன் யார்?
* ஜேசன் ப்ரைஸால் ஏன் அந்தக் கொலையை தடுக்கமுடியவில்லை?
* 'எழுதப்பட்ட விதி' என்ற தலைப்பு எவ்விதத்தில் பொருந்திப் போகிறது?
என்ற கேள்விகளுக்கு விடையறிய திக்திக் இதயத்துடன் 'எழுதப்பட்ட விதி'யை படியுங்கள்!
குறிப்பா, அந்தக் க்ளைமாக்ஸ் இருக்கே... அம்மாடியோவ்!!!!!
///சரி, எங்கே அந்த எழுத்தாளர்னு விசாரிச்சா அவர் திடீர்னு காணாமப் போயி சிலப்பல வருசங்களாச்சுனு தெரியவருது! ///
Deleteநம்ம எழுதியிருந்த மாதிரியே கச்சிதமா, ரோஸ் தப்பிச்சு ஜாக் சாகுறானான்னு பார்க்க வேண்டி, அதே கப்பல்ல பிரயாணம் போனதா கேள்வி. .!!