நண்பர்களே,
வணக்கம். இது கூட ஒரு விளையாட்டென்று யாராவது சொன்னால் மண்டை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றதே...! இதயம் தட தடக்க ; கடித்தது போக மீதமிருக்கும் நகத்தையும், விரலையும் வைத்துக் கொண்டு முடிந்ததை டைப் செய்கிறேன் !! 'ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்து எப்படியேனும் நமது அணி வெற்றி காண வேண்டுமே தெய்வமே !' என்ற நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனைகளும் பயனின்றிப் போக - 'இதுவும் கடந்து போகும்' என்றெல்லாம் தத்துவம் பேசிட இதயம் மறுக்கின்றது !!
ஆனால் வெற்றியோ-தோல்வியோ - பூமி சுழன்றே தீர வேண்டும் ; காலை புலர்ந்தே ஆக வேண்டும் ; வழக்கம் போல் வயிறு பசிக்கவே செய்யும் ; கொத்தவால்சாவடியைக் கண்முன்னே கொணரும் முயற்சியில் "அந்த அலசல் - இந்த அலசல்" என்ற பெயரில் வெள்ளையும், சொள்ளையுமாய் நிறையப் பேர் - உச்சஸ்தாயியில், ஏக சமயத்தில் அரற்றித் தள்ளுவதை டி-வி.க்களில் எப்போதும் போல் பார்த்திடத் தான் போகிறோம் ; "இந்த வருஷம் வெயில் மண்டையைப் புளக்குதுலே பங்காளி ?" என்ற கேள்விகளை ஆங்காங்கே கேட்டுக் கொண்டே சிலபல கிலோ தர்பூசணிகளை துவம்சம் செய்யத் தான் போகிறோம்..! So அந்தப் பட்டியலோடு - மாதத்தின் முதல் தேதியினை அறிவிக்கும் விதமாய் ஒரு டப்பாவோடு, கூரியர் நண்பர்கள் நாளைக் காலை உங்கள் இல்லங்களின் கதவுகளைத் தட்டப் போகும் வைபவத்தையும் சேர்த்துக் கொள்வோமா ?
இன்று காலையே, சீக்கிரமாகவே உங்கள் சந்தாப் பிரதிகள் சகலமும் கூரியரிலும், பதிவுத் தபால்களிலும் பயணங்களைத் துவக்கி விட்டன என்பதால் நாளைய தினம் உங்கள் அனைவரின் கைகளிலும் நமது ஏப்ரல் இதழ்கள் குடியிருக்கப் போவது நிச்சயம் ! ஏகமாய் heavyweights நிறைந்த மாதம் இது என்பதோடு - முதல் முறையாக மெகா சைசில் நம் மெகா ஸ்டார் வலம் வரவிருக்கும் ஆல்பமும் இம்மாதப் பட்டியலில் சேர்த்தி என்பதால் - உங்களின் முதல் அபிப்பிராயங்களை ஆர்வமாய் எதிர்நோக்கிக் காத்திருப்போம் ! அது மட்டுமன்றி - 'தல'யின் இந்த ஸ்பெஷல் தருணத்தை காலத்துக்கும் நினைவில் நிலைக்கச் செய்யும் விதமாய் - SELFIE WITH டெக்ஸ்# என்ற பெயரோடு ஒரு க்ளிக் அனுப்புங்களேன் all ? அவற்றை நமது FB பக்கத்தில் வலையேற்றம் செய்வதோடு மட்டுமன்றி - இத்தாலிக்கும் அனுப்பி வைக்கலாம் ! இதோ என் சகோதரனின் குட்டீஸ்களின் கிளிக்கோடு ஆட்டத்தை ஆரம்பிக்கிறேன் !! (நீங்களும் இதற்கென இல்லத்துக் குட்டீஸ்களை நாடிட வேண்டுமென்றெல்லாம் இல்லை ; கையில் டெக்ஸ் சகிதம் உங்களையே ஒரு க்ளிக்கி அடித்தாலே போதுமே ! )
And of course - இதழ்களின் தயாரிப்புத் தரங்கள் பற்றி ; முதல் பார்வையின் மதிப்பீடுகள் பற்றித் தெரிந்து கொள்ள எப்போதையும் இட இப்போது கூடுதல் ஆர்வத்துடன் தேவுடா காத்துக் கிடப்போம் ! So நாளைய பொழுது சுவாரஸ்யமான பொழுதாய் அமைய வேண்டுமென்ற வேண்டுதலோடு புறப்படுகிறேன் guys ! ஞாயிறு காலை புதிய பதிவோடு உங்களை சந்திக்கிறேன் ! And இயன்றால் ஞாயிறு காலை 10-12 -ல் இம்மாத இதழ்களுள் லார்கோவையோ ; டெக்சையோ அலசும் வேலையைக் கையில் எடுத்துக் கொள்வோமா ? Do let me know please !
புறப்படும் முன்பாய் - இதோ ஸ்பைடர் caption போட்டியின் வெற்றி பெறும் என்ட்ரி ! சிலபல தீவிர ஸ்பைடர் ரசிகர்களின் கொலைவெறிக்கு ஆளாகிட எனக்குத் துணைக்கு இம்முறை சிக்கியிருப்பது ஈரோட்டுப் பூனையார் ! வாழ்த்துக்கள் நண்பரே !
![]() |
Artwork : Podiyan. Caption : ERODE Vijay |
1st comment
ReplyDeleteWarm welcome!
Delete2
ReplyDeleteசூப்பர் சார்....
ReplyDeleteதல ஸ்பெசல் படிக்க ஆவலாக உள்ளோம்....
காத்திருக்கிறோம் பொழுது புலர, ஏப்ரல் மாத காமிக்ஸ் பக்கங்களை படிக்க!
ReplyDeleteவணக்கம் சார் ....
ReplyDeleteவணக்கம் நட்பூஸ் ...
காலையில் கிடைக்கும் லட்டை எண்ணி நீர்வீழ்ச்சி ......
Hi.. Where can we get Lion-Muthu comics in Salem.. Any authorised dealers to get regularly??
Deleteதேசன் புத்தக ஷாப்,
Delete71-D-7,VRG காம்ப்ளக்ஸ்,
ஜங்சன் மெயின் ரோடு,
சேலம்-5 செல்: 9789660320
மேல் விவரங்களுக்கு...இங்கே'கிளிக்'
This comment has been removed by the author.
Deleteஎம்மாம் பெரிய டெக்ஸ் புக்கு Super
ReplyDeleteபுதிய பதிவு பற்றிய தகவலுக்கு நன்றி ரஞ்சித் சார்
ReplyDeleteஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய இரவு வணக்கங்கள்
ReplyDeleteHi everyone....
ReplyDeleteகிரிக்கெட் தல இன்று தோல்வியைத் தழுவியிருக்கலாம் ஆனால் நம் காமிக்ஸ் தல என்றைக்கும் தோல்வியை தழுவ மாட்டார்
ReplyDeleteசெந்தில்....!
Deleteஅருமையா சொன்னீங்க...!
ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய இரவு வணக்கங்கள்
ReplyDeleteI AM 12TH
ReplyDeleteஎல்லாருக்கும் வணக்கமுங்க.
நாளை கால டெக்ஸை வரவேற்போமே.
GOOD NIGHT HAVE A SWEET DREAMS.
வெற்றி பெற்ற நண்பர் இத்தாலி விஜய்க்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் எடிட்டர் சார்....!
ReplyDeleteவணக்கம் நண்பர்களே....!
விஜய்...! கலக்கிட்டீங்க போங்க...!வாழ்த்துகள்...!
ReplyDeleteஅப்புறம் கிட்டே வாங்களேன்.உங்க காதுல ஒரு சமாச்சாரம் சொல்லனும்....!
அது....வந்து...அது வந்து....என்னன்னா..
எடிட்டர் உங்களுக்கு கொடுக்கப்போற பழைய ஸ்பைடர் புக்க படிச்சுட்டு அப்டியே ஜேடர்பாளையத்து பார்சல் பண்ணிடுங்க...!
கண்ணுக்கு கண்ணா,உசுருக்கு உசுரா பத்ரமா பாத்துக்குவேனாக்கும்....!
///எடிட்டர் உங்களுக்கு கொடுக்கப்போற பழைய ஸ்பைடர் புக்க படிச்சுட்டு அப்டியே ஜேடர்பாளையத்து பார்சல் பண்ணிடுங்க...!////
Deleteபடிக்காமயே பார்சல் பண்ணிடறேனே, ப்ளீஸ்? :D
உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க...??!!
Deleteஸ்பைடர்.....புக்கா ?
Deleteநானும் கலுந்துகிட்டு இருப்பேனே ...!!!
இத்தாலி பூனையாருக்கு வாழ்த்துக்கள்
Deleteஸ்பைடர் புக்கோடு
ஒரு செல்பி போடுங்களேன்
விஜய் திறந்து பார்த்தாலோ ..வாங்கி பார்த்தாலோ இப்படி பேச ுங்களால் ஏலாது...மெஸ்மரித்து விடுவார் எங்கள் தலைவர்....கொரியரிடம் ஒரு போன் மட்டும் செய்து எனக்கு திருப்பி விடுங்கள் அந்த லேண்ட் லைனுக்காகும் தொகய தந்துடுறன்
Deleteவணங்கி வாழ்த்துகிறேன்
ReplyDeleteபுதிய பதிவு பற்றிய தகவல் தந்தமைக்கு நன்றி CP அண்ணா!
ReplyDeleteகிரிக்கெட் தோல்வியின் சோகத்தை மறக்க செய்த பதிவுக்கு நன்றி!
சூப்பர் ஐடியா சார்!செல்லக் குட்டிகளின் செல்பி!
ReplyDelete22வது
ReplyDeleteவெற்றி பெற்ற நண்பர் இத்தாலி விஜய் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . தொடர்ந்து கலக்குங்க. இதழ்கள் எப்போது வரும் என்று இப்போதே துடிப்பாக உள்ளது .
ReplyDelete@ Erode விஜய்
ReplyDeleteவாழ்த்துக்கள் ப்ரோ!
கலக்கிபோட்டிங்க போங்!
கண்டிப்பா படிச்சுட்டு அந்த துன்பத்தை எங்களோட பகிரிந்துகனும்!
(அட I mean இன்பத்தை....இன்பத்தை....)
We are எஸ்கேப் :)
ஈரோடு விஜய்.! & சரவணன்.!
Deleteவாழ்த்துக்கள் நண்பரே.!
// அந்த துன்பத்தை எங்களோட பகிர்ந்து கொள்ள வேண்டும்.//
+1,ஹாஹாஹாஹா.......
ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கங்கள்..
ReplyDeleteபெரியயயயயய டெக்ஸ் புத்தகம் வந்தாச்சு ST கொரியர் வாழ்க..
Deleteகுமார்...!
Deleteஇந்தமாசமாச்சும் சிங்கத்தின் சிறுவலையில் வந்திருக்கா...?
ஸாரி....
Deleteசிங்கத்தின் சிறுவயதில்....!
ஆசிரியர் தான் என் பெயர் டைகர் வருகிற வரைக்கும் சிறுவயதிற்கு விடுமுறை விண்ணப்பம் அளித்துள்ளாரே நண்பரே ...எனவே நோ சானஸ் ...;-)
Deleteஅடடா....அப்படியா..?
Deleteஇந்த பரட்டையால எடிட்டருக்கும் இமசை(மொழியாக்கம் செய்வதில்).நமக்கும் இம்சை(சி.சி.தாமதமாவதால்)
ஜேடர் பாளையத்தார்.!
Delete// இந்த பரட்டையால எடிட்டருக்கு இம்சை //
ஹாஹாஹா.............எப்படி இருந்த டைகர் இப்படி ஆயிட்டாரு......!
வணக்க்க்க்க்க்ககம்ம்ம்ம்.!!!!
ReplyDelete(இன்னும் கூரியர் ஆபீஸ் திறக்கலை)
காலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.
ReplyDeleteவாழ்த்துகள் பூனைக்குட்டி சார்...
ReplyDeleteவாழ்த்துகள் ஈ.வி மற்றும் பொடியனாரே!!!
ReplyDelete///! (நீங்களும் இதற்கென இல்லத்துக் குட்டீஸ்களை நாடிட வேண்டுமென்றெல்லாம் இல்லை ; கையில் டெக்ஸ் சகிதம் உங்களையே ஒரு க்ளிக்கி அடித்தாலே போதுமே ! )///
ReplyDeleteஹிஹிஹி.!!!
எங்கள் இல்லத்தில் குட்டீஸ் என்றால் அது அடியேன்தான் (Kid) .!!!
Present sir
ReplyDeleteபோட்டியில் வென்ற ஈரோடு விஜய்க்கு வாழ்த்துகள்.
ReplyDeleteபொடியன் நீங்கள் வரைந்த ஸ்பைடர் படம் நன்றாக உள்ளது, வாழ்த்துகள்.
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே!
ReplyDeleteநன்றி எடிட்டர் சார்!
இ..இப்படியாகும்னு நான் எதிர்பார்க்கல..!
கடைசியில என்னை விட்டுட்டு தாங்கள் மட்டும் வெற்றிக்கனியை சுவைத்துவிட்டீர்களே ஐயா.. வாழ்த்துகள்!
Delete(பூவ்..பூவ்..)
பூனையாருக்கு யோகம் தான் ...........
Deleteஹி...ஹி....யோகம் தான் மந்திரி ஜி...
Deleteஅந்த நக்கல் கமெண்ட்ஸ் ஐ படித்து விட்டு வெறியான ஸ்பைடர் தாத்தாக்கள் கடுப்பாகி ,இப்பத்தான் அதை மறந்து கூல் ஆகி வந்தனர் ...
ஆசிரியர் எப்படி கோத்து உட்டாரு பார்த்தீர்களா ...(கமெண்ட்ஸ் டாப்பா இல்லை ஆப்பான்னு மெதுவாக தான் தெரியும் )
ஒருவேளை ஏப்ரல் ஒன்னாம் தேதிக்கும் இதுக்கும் சமபந்தம் இருக்குமோ !!!!!!
Deleteம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்மம்மம்ம்ம்ம்
////இ..இப்படியாகும்னு நான் எதிர்பார்க்கல..! ////
Deleteநா கூடத்தான் .........
எப்பூடி ......கீ கீ கீ
கலக்கிட்டீங்க விஜய். வாழ்த்துக்கள்!
Deleteவாழ்த்துகள் விஜய்.
Delete//(கமெண்ட்ஸ் டாப்பா இல்லை ஆப்பான்னு மெதுவாக தான் தெரியும்// lol
// கமண்ட்ஸ் டாப்பா இல்லை ஆப்பா//
Deleteநல்ல டைமிங் நல்ல ரைமிங்......ஹாஹாஹா......
//ஏப்ரல் ஒன்னாம் தேதிக்கு சம்மந்தம் //
ஹாஹாஹா.........
நீங்கள் தேர்வு செய்த அட்டைப்படம் எதுன்னு உங்கள் சகோதரரின் குழந்தைகளை வச்சு தெரியப்படுத்திட்டீங்களே எடிட்டர் சார்! (அந்த ஃபோட்டோவிலிருக்கும் TVயில் சீனியர் எடிட்டரும் செல்ஃபி கொடுத்திருக்கார் போலிருக்கே...!!)
ReplyDeleteகொரியர் ஆபீஸிலிருந்து தல புத்தகத்தை கையில் வாங்கும்போது கிடைக்கும் அந்த பிரம்மாண்ட உணர்வை அனுபவித்திட ஆவல்!
Wowowow good news sir looking forward for the parcel sir. And congrats Vijay ji.
ReplyDeleteDear Editor & Friends,
ReplyDeleteபுத்தகங்கள் கிடைத்துவிட்டன
டெக்ஸ்ஸை
புதிய கோணத்தில்
புதிய சைசில்
பார்க்கவே அருமையாக உள்ளது
ஆசிரியர் இந்த மாத புத்தகம்களுடன் surprise உண்டு சொன்னது என்னது சம்பத்?
Deleteசஸ்பென்ஸ் அடுத்த மாதம் என்று தானே அறிவிப்பு பரணியாரே ...!!!
Deleteடெக்ஸ்புக் மார்க்தான் அது...இதப் போல அடுத்த மாதம் ஸ்மர்ஃப்புக்கும் தந்தால் சிறார்களை ஈர்க்கலாமே..
DeleteThis comment has been removed by the author.
DeleteI don't think the book marker is a surprise. He meant something else. Let our editor says what was surprised he planned earlier.
Deleteஅசத்தல் ஓவியர் பொடியனாருக்கும்
ReplyDeleteநக்கல் கமெண்ட்டார் பூனையாருக்கும் வாழ்த்துக்கள் ....
அப்புறம் விஜய் அந்த தீவிர சைபர் ச்சே ஸ்பைடர் வெறியர்கள் உங்களை துளவி வருவதாக வதந்தி....
ரானா .....பானா ........ரத்தத்தில் சாரி வண்ணத்தில் எப்போ ஆசான் ?
ReplyDeleteதூரமாய் ஒரு தினம் ......குறிப்பிட்டால் கூட போதும் .....!!!!
ஒரு 90லிருந்து 120 நாள் தொலவு போதுமா மந்திரியாரே..அத விட அதிக தொலவ கடந்தா இந்த மனசு வெடிச்சுறும்...ஓ......
DeleteBAPASI சென்னை புத்தகக் கண்காட்சி 2016:
ReplyDeleteஜூன் 1 முதல் ஜூன் 13 வரை தீவுத்திடலில் நடைபெறும்.
பயணம் செல்லவிருக்கும் அன்பர்கள் டிக்கெட் போட்டுவிட்டு புளியோதரை கட்டுச்சோறு எல்லாம் தயார் செய்து கொள்ளவும். :-)
என்னது ஜூன் 1ஆஆஆஆஆ...
Deleteஅட டா என்னய அன்றுதானே ஸ்கூலில் சேர்க்க இருக்கிறார்கள் , மொத நாளே எப்டி லீவு போட முடியும் ....ஹி..ஹி..
ஆமாம் அதானே.? அண்ணா.?
Deleteஇவிகளே இப்படின்னா இன்னும் பொறக்கதவங்கல்லாம் என்ன செய்யரதாம்!!!!!!!!
DeleteBAPASI சென்னை புத்தகக் கண்காட்சி 2016:
ReplyDeleteஜூன் 1 முதல் ஜூன் 13 வரை தீவுத்திடலில் நடைபெறும்.
பயணம் செல்லவிருக்கும் அன்பர்கள் டிக்கெட் போட்டுவிட்டு புளியோதரை கட்டுச்சோறு எல்லாம் தயார் செய்து கொள்ளவும். :-)
This comment has been removed by the author.
Deleteபோட்டியில் வென்ற நண்பர் ஈரோடு விஜய்க்கும், நண்பர் பொடியனுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteமுடிந்தால் ஏப்ரல் fool பண்ணுங்க ஆசான்.....
ReplyDelete
ReplyDeleteஎன்க்கு இப்போ கொன்ச்சம் டமில் வர்து. சாம்பிள் பாக்குறேளா?
ஆன்றோருக்கும் சான்றோருக்கும் என்னைப் போன்றோருக்கும் வணக்கம்ன்னேன்.
மாயாவி சாரே.!
ReplyDeleteபுத்துணர்வு முகாமில் குதூகலித்தது போதும்.டெக்ஸ் புத்தகத்தோடு "இங்கே ஒரு க்ளிக் " போடுங்களேன்.!
யாரங்கே
ReplyDeleteயாராவது
காலமாட்டி ஜாணுக்கு தமிழில் டைப்ப சொல்லி குடிங்கப்மா. //
தூய தமிழில் பிழையின்றி எனக்காக அக்கறையுடன் பதிவிட்ட நண்பர் கிறுக்கல் கிறுக்கன் அவர்களுக்கு நன்றி
ஈஈரோடு விஜய் சார்,
€{√¶\°^€ %?/;*(%?/ π√×=<€ :)
ஆஹா இரவே போட்டுத் தாக்கீட்டீங்களா ...
ReplyDeleteஈவி...ப்ரததீப்...பொடிப்பூனைகளுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்...
சிறிய கைகளிலே பெரிய புத்தகங்கள் மலைக்கச்செய்கிறது...காணும் ஆவலை உந்தித் தள்ளுகிறது...இரத்தப்படலம் ஒரே பெரிய புத்தகத்தை இன்னும் சில மாதங்களில் அழகிய ிந்த வரம் பெற்ற குழந்தைகள் தூக்கி கொண்டு நிற்பது பெரிய புத்தகத்தை தூக்ககி படிக்க முடியாதென கதறிய நண்பர்களின் மனக்கண் முன் தோன்றி அவர்கள் முகங்களிலே இளநகை பூக்கச் செய்வது காலப்பயணம் சென்று வந்த எனக்கு தெரிந்த காட்சியை நீங்களும் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை நண்பர்களே என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக் கொள்கிறேனே...
சார் நான் சொல்வது புருடா அல்ல என்பது தங்களுக்கு தெரியுமென்பதால் எந்த மாதமென்பதை மறந்து விட்ட எனக்கு நண்பர்கள் முன் மாதத்தை பறைசாற்றுங்களேன் ப்ளீஸ்..
Deleteவிஜயன் சார், இந்த வருட ஆரம்பத்தில் சந்தா புத்தகம்கள் கொரியரில் அனுப்பியவுடன் sms வந்து, ஆனால் கடத்த இரு மாதம்களாக இது வரவில்லை? ஏன்?
ReplyDeleteஆஹா ..செயலாளர் தான் வென்றாரா ..அப்ப பிரச்சினை இல்லை ...பழைய புத்தகம் தன்னால குழுவிற்கு வந்து விடும் ..வாழ்த்துக்கள் செயலாளர் அவர்களே ...;-)
ReplyDeleteதலைவரே ! ஸ்பைடர் புத்தகத்தின் பெயர் என்ன?
Deleteமடிப்பாக்கம் சார் அது ......ஆசிரியருக்கே வெளிச்சம் ...;-))
Deleteஇன்று அலுவலகம் விடுமுறை எடுத்த காரணமோ என்னமோ கொரியர் தகவலே காண வில்லை ....;-(
ReplyDeleteசார் இரண்டு நாட்களுக்குள் அனைவரும் படித்திருக்க முடியாது..விமர்சிக்க அரக்க பரக்க படித்தால் கதயில் லயிக்க முடியாது...சுவாரஷ்யம் கெடும் ....கதயே பிடிக்காமல் போகலாம்...லார்கோ மட்டும் விதிவிலக்காய் அமயலாம்....தூக்கினால் முடிக்காமல் வையோம்....ஆனால் முதலில் எடுப்போமா என்பதில் கேள்வியே...எனவே அடுத்த ஞாயிறு சுவாரஷ்யமாக படலாம்..விமர்சனங்கள் அதுவர வரடட்டும்...சுவாரஷ்யம் , சார் நான் சொல்வது புருடா அல்ல என்பது தங்களுக்கு தெரியுமென்பதால் எந்த மாதமென்பதை மறந்து விட்ட எனக்கு நண்பர்கள் முன் மாதத்தை பறைசாற்றுங்களேன் ப்ளீஸ்..அடுத்த வாரமெனில் அனைவரும் பங்கு பெற பலம் /ன் பெறுமே....
ReplyDeleteசார் இந்த சைசில் கௌவ் பாய் ஸ்பெசலில் டெக்ஸ்...
ReplyDelete// இந்த சைசில் கௌபாய் ஸ்பெஷல்.//
Deleteவாவ்.!சூப்பர்.!
அதுக்கும் மேல நண்பா...இரும்பு மனிதன் சைஸ் என நினைத்தேன்...தவறாக கூறி விட்டா் காமிக்ஸ் கூறும் நல்லுலகம் மன்னிக்காதே என ெண்ணி சதி வலைய வைத்துப் பாத்தா அதுக்கும் மேல..ஸார் கௌபாய் ஸ்பெசல் வாபஸ் ....தமிழ் காமிக்ஸ் உலகிலேயே இதுதான் முதல் பெரிய சைஸ் என நினைக்கிறேன் ...ஒரே வார்த்தைல சொல்லனும்னா இரத்த படலம் இந்த சைசுலதான் மலரணும்..
Deleteஅதுக்கும் மேலயா.? சூப்பர்தான்.ஆனால் என்னைப்போன்றவர்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது.கொலைப்படை சதிவலை ,விண்வெளிக் கொள்ளையர் போன்றவைகள் மள்ற புத்தகங்களுடன் வைத்து பாதுகாக்க முடியாமல் காலப்போக்கில் அழிந்து விட்டது.ஆனால் நான தற்போது அரைக்கிழம் ஆகிவிட்டதால் அந்த தவறு நடக்காது பார்த்துக்கொள்வேன்.!
Deleteஅவற்ற எல்லா இதே சைசுல வாங்கிருவோம் கவலபடாதீங்கோ...
Deleteசார் அந்த பகுதி கலந்துரயாடல் அந்த மாத கதைகளுக்கு மட்டுமே எனவும்....இன்னொரு லிங்க் வழக்கம் போல என இருந்தா பின்னர் படிப்போரும் பங்கு பெற உதவலாம்...லோட் மோரும் குறயலாம்...
Delete\\ஆனால் நான தற்போது அரைக்கிழம் ஆகிவிட்டதால் அந்த தவறு நடக்காது பார்த்துக்கொள்வேன்// ஒரு வழியா ஒருத்தர் உண்மைய ஒத்துக்கிட்டாச்சு. நாங்க இன்னும் குழந்தைனு அடம்பிடிக்கிற ரெண்டு பேர்(டெக்ஸ் விஜய் அண்ணா KID கண்ணண் அண்ணா)ஒத்துக்கமாட்டேங்கறாங்களே. ;-))))
Deleteசரி சரி சிவா தம்பீ ....
Deleteசந்தோசமா டெக்ஸ் புக்கை படித்து விட்டு தூங்குங்க...
இன்னும் ஆரேழு நாட்களில் 40ஐ கடந்து விடுவேன் , எங்க மாமா ஆர்டினார் என்னைய விட ஓரிரு நாட்கள் சிறியவர்,போதுமா...
ஹலோ..!மடிப்பாக்கத்தாரே..! திடீா்னு அம்பதுன்னு சொல்றீங்க..அப்பறமா நாப்பதுன்னு சொல்றீங்க..இப்ப அரைக் கிழம்னு சொல்றீங்க..!!! என்னாச்சு..!!??
Deleteகுணா சார்.!
Deleteஅரைக்கிழம் என்றால் நான் நாற்பது வயதுதான் என்று நினைத்துவிட்டேன்.என் வயது நாற்பத்து மூன்று.!
நாற்பதோ,ஐம்பதோ..காமிக்ஸ் வாசிக்கும் போது மட்டும் நாமனைவருமே விடலைகள் தானே..!!
Deleteதலே வந்திட்டாப்பிலே!!!
ReplyDeleteஇந்த மாசம் DTDC யிலருந்து!!!
(எலெக்ஷன் வரப்போறதாலே மீண்டும் பெருநகரமாயிடிச்சோ எங்க ஊரூ) :-)
கிட் ஆர்ட்டின் சார்.!
Deleteஅடடே! இம்மாத வெளியீட்டிற்கு இன்று புராஃபைல் மாற்றிவிட்டீர்களா ? சூப்பர்.!
ஹும் எங்களுக்குத்தான் அந்த கொடுப்பினையே இல்லையே.போற போக்கை பார்த்தால் அடுத்த வருடம் எங்களுக்கு மனதில் மட்டும்தான் இடம் கிடைக்கும் போல் உள்ளது.!.!
கவலை வேண்டாம் எம்.வி.சாா்..!அதான் கூடிய சீக்கிரமே இளவரசி டைஜஸ்ட் வரப்போகுதே..!
Deleteம.வெ.சார்....!
Deleteலக்கி,பிரின்ஸ்,ஜானி,ரோஜரெல்லாம் கலர்ல ரெண்டு கதைகளோடதான் வரப்போறாங்க...!நம்ம தலைவி,நம்ம இளவரசி,நம்ம தேவதை கருப்பு வெள்ளைல மூனு,நாலு கதைகளோட தூள் கிளப்புவாங்க பாருங்களேன்...!
ஐயோ சார் .சத்தியமா இந்த சைச நா எதிர்பாக்கலலலலலலல..ல.லா.லாலாஆஆ.லாலா லா
ReplyDeleteஹாஆஆஆ .....நேராவே வந்துறுச்சுங்க நேராவே வந்துருச்சு ...;-)
ReplyDeleteஇனி பார்சலை பொறுமையாக பிரித்து ..ரசித்து ...தடவி ...முகர்ந்து ...லயித்து ...மீண்டும் இங்கே வர இரவு ஆகி விடும் என்பதால் அனைவருக்கும் இனிய மதிய வணக்கத்தை தெரிவித்து கொண்டு நடையை கட்டுகிறேன் நண்பர்களே ...;-)
ReplyDelete//இனி பார்சலை பொறுமையாக பிரித்து ..ரசித்து ...தடவி ...முகர்ந்து ...லயித்து //
Deleteநல்லவேளையா தலீவருக்கு டேஸ்ட் பார்க்கும் பழக்கம் இல்லை! :D
ஈரோடு விஜய் சாா்..! ஹா..ஹா..ஹா..! ரசனையான நையாண்டி..!!
Deleteபரணி ஆசிரியர் கூறிய அந்த குட்டியூண்டு விசயம் டெக்ஸ் முகவரி என்று மட்டும் சொல்றன்...ஊப்பர் சார்
ReplyDeleteபட(கதை)ப்பொட்டி வந்திடிச்சு.
ReplyDeleteதலையில்லாப்போராளி. பெரிய அளவு படங்கள்.ஸ்பெஷல் சைஸ் புக்.
அருமையான பேப்பர். அட்டகாசமான சித்திரங்கள்.
இத இத த்தான் எதிர்பாரத்தேன்.
வெற்றி பெற்ற விஜய்..வாழ்த்துக்கள்...இன்னும் இது போல் பல வெற்றிகள் அடைய வாழ்த்துக்கள்
ReplyDeleteசார் கொரியர விரட்டி பிடித்து பெரிய சைசு பார்சல பாத்தும் ஏப்ரல் ஃபூலான நமக்கு உரைக்கல.....வீடு வந்து இரப்பர்பேண்ட பிரிக்கும் போது மாறுதல உணர்ந்த எனக்கு கணநேரம் கொலைப்படை வந்து மறைய....மறந்தே விட்டேன் மரமண்டயாலே...அப்புறம் லார்கோ வெளிய குதிச்ச ுடனதான் என்னடா இவ்ளோ சிறிசா இருக்கன்னு பாத்தா ..கண்டேன் கடவுள...ாச்சரியம் சந்தோச ஏமாற்றம் முட்டாள் தினத்தன்று ஆசிரியராலே.
ReplyDeleteமாற்றமே மாறாதது............ஏமாற்றமும்தானோ
Deleteஒரு அற்புதமான அட்டய பின் பக்கம் போட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்க...பின்னட்டயில அதே சிவப்புல நிழலுருவுல நண்பர்க நாலு பேரயு....செவ்விந்திய தலக அணிவகுப்பயு காட்டி மிரட்டி இருக்கலாம்...இந்த பிரம்மாண்டத்து முன்னே என்னை கவரா லார்கோ கவரோ மாயாவியோ பேரிதாய் சந்தோச படுத்தவோ , ஏமாற்றவோ இல்ல...தல அனைத்து சந்தோசங்களயும் துடைத்தெறிந்து விட்டு தானொருவரே சந்தோசத்தின் உச்சமென சிம்மாசனத்தில் அமர்கிறார்...அட்டகாசமான அட்டயுடன்....
Delete// லார்கோ இவ்வளவு சிறியதா //
Deleteஹாஹா எனக்கும் பார்சலை பிரித்ததும் அப்படித்தான் தோன்றியது.லார்கோவை பாக்கெட் சைசுக்கு மாற்றிவிட்டார்களோ என்ற எண்ணம் வந்துவிட்டது. சைசும் பெரியதாகவும் குண்டாக இருந்ததால் அந்த மாயத்தோற்றம் என்று புரிந்தது.
மாஸ்கோவில் மாஸ்டரில் ஒரு மாமிசமலை வில்லன் முன் ஜான் மாஸ்டர் சுல்லான் போல் தெரிவாரே.? அதுமாதிரி.!
அனைவருக்கும் காலை வணக்கங்கள்..!
ReplyDeleteகொஞ்ச நேரமா உடம்புல இரத்தவோட்டம் தாறுமாறா ஓடுது, நெஞ்சு படபடப்பு தலைசுற்றல்ன்னு ஒரே ரகளை..! காரணம் கையில் இந்த மாத புத்தகங்கள்..! கொஞ்சம் ஆசுவாஷம் படுத்திட்டு வர்றேன்..! அதுக்கு முன்னாடி இத்தாலி விஜய்க்கு வாழ்த்துக்களுடன் ஒரு... இங்கே'கிளிக்'
மாயாவி சார்.!
Deleteஅட்டகாசம்.! உங்களுக்கு கற்பனை வளம் அபாரம்.!
Oho
Deleteபொருத்தமான, காமெடியான 'இங்கே க்ளிக்' அட்டகாசம் மாயாவி அவர்களே! :)))) நன்றிகள் பல!
DeleteDear Vijayan, the quality of the three issues this month are very good. The mega size format of TEX is difficult to handle. Please stick to the usual A4 or A5 format only which are reader friendly. Thanks and keep it up.
ReplyDeleteSticking with the original art size will be always a great thing for me.
Deleteகொலைப்படை ...நதி அரக்கன்...இரும்பு மனிதன்...பார்த்து அது போல பிரம்மாண்டத்துக்கு ஏங்கிய பல பத்தாண்டுகள் கழிந்த பின்னே அதவிட பிரம்மாண்டமாய்...
ReplyDeleteவாவ்.....வாவ்....வாவ்....
ReplyDeleteஅசத்தல் ...
அட்டகாசம் ...
ஸ்டன்னிங் ...சார் ....
யம்மாம் பெரிய புதையல் ,,ஆம் புதையல் பெட்டியே தான் சார் ....
நேற்று டென்சன் ஆன மனச்சோர்வு நீங்கி,
ரெக்கை கட்டி பறக்குது விஜியோட(மை நிக் நேம் சாமிகளா ) மனசு சார்....
கொளபாய் ஸ்பெசல் ,பழைய லயன் மெகா சைசில் வந்து அனைத்து ரெக்கார்ட்ஸ் களையும் பிரேக் பண்ணி இம்மாத டெக்ஸின் சாகசம் கண்ணில் ஆனந்த கண்ணிரே வருகிறது சார் ..
ஆயிரம் வார்த்தைகள் நீங்கள் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாதவை கையில் ஏந்திய கணம் தெளிவாக தெரிந்து கொண்டேன் சார்...
இந்த பிரம்மாண்டமான முயற்சியில் வெற்றிகரமாக தேறியதற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் சார் ....
ஓவியங்கள் -சொல்ல வார்த்தைகள் இல்லை , நேரில் பார்ப்பது போல HD குவாலிட்டி சூப்பர் சார் ...
கருப்பு வெள்ளையின் விஸ்வரூபம் ...
சற்றே ஆசுவாசபடுத்திகொண்டு வருகிறேன் சார் ...
தங்க Tex ,மின்னும் ஜாலம் ....
பார்த்து,பார்த்து........ நீங்கள் குதிக்கிற குதியிலே சேலம் மாநகரமே குலுங்கி மக்கள் பூகம்பம் வந்துருச்சுன்னு பயந்திடப்போறாங்க.......!!!
Deleteகூரியரை வாங்கி விட்டேன்.!
Deleteநான் லார்கோவையே ஆவலுடன் எதிர்பார்த்தேன்.ஆனால் டெக்ஸ் புத்தகத்தை பார்த்தவுடன் கொஞ்ச நேரம் அப்படியே உறைந்து போய்விட்டேன்.சான்சே இல்லை .!ஒவ்வொரு மாதமும் டெக்ஸ் கதைகளுக்கு விதவிதமான சர்பிரைஸ் கொடுத்தாலும் இன்று ஒவர்.! எங்க இளவரசிக்கு இந்த கொடுப்பினை இல்லையே.?ஹும் என்னமோ போடா மாதவா.!!!
கேப்டன் க்கு தானே முதல் மரியாதை ....
Deleteதலயின் கனதயில் உள்ள சித்திர்ர் அல்லுது....
ReplyDeleteவண்ணத்தில் இருந்தால் இன்னும் நல்லா இருந்துருக்கும்.....
மற்ற கனதகள் தல முன்னால் நிக்கல.... தனலயில்லா போராளி கயில எடுத்த உடன்
அப்படியே மெர்சல் ஆகி 10 நிமிசம் உனறந்து விட்டேன்.....
வாசகர் கடிதங்களும் ஏங்குவது 13குறித்தே...xiii xii என்றே பதிவாகிறது.....சார் வயதான நண்பர்கள சந்தோச படுத்த...நாட்கள பிரம்மிப்பில் கழிக்க..நீங்க தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரே இதழ் xiiiம் அதன் கிளைகதைகளும்..வேற கிளைகள் அவசரமில்லை...விலை எவ்வளவானாலும் பரவாயில்லை டெக்ஸ் போல அதே சைசில் பிரம்மாண்டமாய் துள்ளியமாய் ஓவியங்கள இரசிக்க ஏதுவாய்...
ReplyDelete// வயதான நண்பர்களை சந்தோசப்படுத்த //
Deleteபக்கத்து இலைக்கு பாயாசமா.?
அவரு மாடஸ்டி ரசிகரும் கூட.......
ஆனாலும் ஓவிய ரசிகர் என்பதுடன் xiiiசூப்பர் என குறிப்பிட்டதை கவனிக்க..
Deleteஉண்மை.!
Deleteவிஜயன் சார்
ReplyDeleteகுடுங்க கைய சான்சே இல்ல ( பெரிய சைசில் போட முடிவு பண்ணியதற்கு )
அதற்கு அழகு சேர்ப்பது போல சித்திரங்கள்
பக்ககங்களை புரட்டும்போது 3D படம் பார்ப்பது போல சித்திரங்கள் அப்படியே அருகில் வந்து நிற்பதுபோல இருக்கிறது
சந்தேகமே இல்லாமல் தல அசத்துறாரு
தல போல வருமா ( போடுங்கையா தீம் மியூசிக் . . . . . . )
.
////பக்ககங்களை புரட்டும்போது 3D படம் பார்ப்பது போல சித்திரங்கள் அப்படியே அருகில் வந்து நிற்பதுபோல இருக்கிறது ////
Deleteடெக்ஸ் கதையில் வரும் அந்த அழகான யுவதியும் அப்படித்தானா சிபி அவர்களே? :D
வாழ்த்துக்கள் பூனையாரே :))
ReplyDeleteவாழ்த்துக்கள் பொடியன் அவர்களே :)
.
சார் முதல் பக்கத்தில் விரவிக் கிடக்கும் அந்த இரவும் அது சூழ்ந்த ஓவியங்களும் , அதை விட அங்கேயே அழைத்துச் செல்லும் வார்த்தை ஜாலங்களும் இன்னும் நீண்டிடாதா இக்கணம் ippakkam என தோன்றுவது மெய்.....மொழி வளம்தான் எவ்வளவு அழகு...எழுத்து நடை அட்டகாசம்...
ReplyDelete102nd
ReplyDeleteவழக்கம் போல பணியாற்றறும் sherif ...ஹ ஹ ஹா...அரும ...எதடா மொதல்ல படிக்க...நள்ளிரவு விடை சொல்லட்டும்..
ReplyDeleteவீட்டிலிருந்து போன், புக் வந்துடுச்சாம். இப்ப என்ன பண்றது நான்?
ReplyDeleteஆபீஸுக்கு ஒழுங்கா லீவு போடறதா, பர்மிஷன் போடுறதா? யார் கண்ணிலும் படாம நைஸா தவழ்ந்தே எஸ்கேப்பாவுறதா? இல்ல, டீசண்டா சப்ளையர் எண்ட் போறேனு புளுவிட்டு மட்டம் போடுறதா? இல்லை 6 மணி வரை வேலையப் பாக்குறதா? அவ்வ்வ்!
ஹிஹிஹி.......நான் லீவு போட்டுவிட்டேன்.இன்றைய வேலையை நாளை தள்ளி வைத்துவிட்டேன்.!
Deleteதலைவரும் வேலைக்கு போகாமல் மட்டம் போட்டுவிட்டார்.!
இந்த மாத டெக்ஸ்.......
ReplyDeleteஎன்னத்த சொல்ல....!!!!!!!!!!!!
சார் ஒரிஜினலும் இதான் சைசா ...இதோட சிறுசா..
ReplyDeleteதலையில்லா போராளி :-
ReplyDeleteஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாபாஆஆஆஆ!!!!
ஆனாலும் மொத மருவாதி ஆர்டினுக்குத்தேன்.!!!
Deleteடெக்ஸ்க்கு மொத மருவாதி இல்லீனு சொன்னவர் அலறல் தான் மேலே உள்ளது ....பயப்படாதீய மக்களே...
Deleteகுத்துனது டெக்ஸ் முஷ்டியே தான் ...ஹீ..ஹீ...ஹீ...
// டெக்ஸ் முஷ்டியேதான்//
Deleteஅய்யய்ய்யோ தல ரசிகர்கள் சும்மாவே ஆடுவாங்களே.? இந்த மாத வெளியீட்டின் வழியாக எடிட்டர் இவங்க காலில் சலங்கையை கட்டிவிட்டுட்டாரே.!! இவங்க ஆட்டம் தாங்க முடியாதே.?
உண்மையில் கதையும் அட்டகாசமாய் உள்ளது.படித்துக்கொண்டு உள்ளேன்.என்னை மாதிரி 40 வயதை தாண்டியவர்களுக்கு பெரிய எழத்துக்கள் அருமையாக உள்ளது.!
போன மாதம் 50ன்னு சொன்ன மாதிரி இருந்ததே,MV சார் ????.....
Deleteஅடுத்த மாசம் முப்பதுன்னு நினைக்கிறேன்..சாிதானே மடிப்பாக்கத்தாரே..!
Deleteகிட்டத்தட்ட ஒரு அடி உயரம்....,
ReplyDeleteகிட்டத்தட்ட ஒரு முக்கால் அடி அகலம்..,
226 பக்கங்கள்....,
ரசனையை ராப்பகலாய் பிழிந்தெடுத்து தூரிகை ரொப்பி வாா்த்தெடுத்த சித்திரங்கள்...,
பொிய,பொிய பிரேம்களில்...,
பொிய,பொிய எழுத்துக்களில்...,
பொிய,பொிய சித்திரங்களில்....,
ஈரோடு புத்தகத் திருவிழாவில் பறை அறிவிக்கப்பட்ட டெக்ஸின் விஸ்வரூபம்...,
கண் முன்னே வானுக்கும், பூமிக்குமாய்...,
நெடுங் காலம் பிாிந்திருந்த கணவனும்,மனைவியும் மீண்டும் சந்திக்கும் போது, வெறி கொண்டு கூடுவதைப் போன்றதொரு உணா்வு....,!!
தலையில்லா போராளி.....
அந்தமில்லா சூறாவளி...!!
//டெக்ஸின் விஸ்வரூபம்...,
Deleteகண் முன்னே வானுக்கும், பூமிக்குமாய்...,
நெடுங் காலம் பிாிந்திருந்த கணவனும்,மனைவியும் மீண்டும் சந்திக்கும் போது, வெறி கொண்டு கூடுவதைப் போன்றதொரு உணா்வு....,!!///
என்னவொரு வரிகள்!!! கலக்கறீங்க குணா!!
செம!!
:-)))
Deleteவாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்!
ReplyDeleteஅ..ஆனா பாருங்க... இடுப்பில் கைவைத்து வானுயர நின்றபடி 'ஹோ ஹோ ஹோ'வென ஸ்பைடர் என்னைப் பார்த்துச் சிரிப்பதான ஒரு பிரம்மை அடிக்கடி எழுகிறது!
போன வாரம் 'டாக்டர் டக்கர்'ஐ பாதி கூட படிக்காமல் மூடிப் பரணில் போட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் ( ஸ்பைடரின் ஆவியோ?!) இப்படியெல்லாம் நடக்குதுன்னு தோனுது! :P
நீங்கள் ஸ்பைடரை புறந்தள்ளினாலும்,அவன் உங்களைத் தேடி வந்து விட்டான் பாருங்கள்..! வாழ்த்துக்கள்..!
Deleteஒரு அதிகாலை நேரத்து ஆனந்த பைரவி
ReplyDeleteஒரு இதிகாச காலத்து இமயச் சிதறலின் துகள்
புதிதாய்ப் பிறப்பெடுத்த ஆப்பிள் ஐ போன்
எது என்னைப் பரவசப் படுத்தும்...எப்போது ?
எப்போதுமில்லை ...ஆனால் இப்போது
நீ வெ ற்றிக்கனி பறித்தாய் ..வாழிய தமிழ்
ஈரோட்டின் உற்சாகமே ..இதயக் கமலத்தின் எழுச்சியே..
விஜய் என்றாலே வெற்றி வெற்றியே வாழிய நீ வாழி
நன்றி வண்ணப்புறா அவர்களே!! :)
Deleteஉங்கள் கவிதை நடையிலான வாழ்த்து சிலிர்க்க வைக்கிறது! ( நேர்ந்துவிட்ட ஆடு சிலிர்ததுச்சுன்னா கபால்'னு வெட்டிடுவாங்களே... அந்த மாதிரி! :P )
///ஒரு அதிகாலை நேரத்து ஆனந்த பைரவி
ஒரு இதிகாச காலத்து இமயச் சிதறலின் துகள்
புதிதாய்ப் பிறப்பெடுத்த ஆப்பிள் ஐ போன்
எது என்னைப் பரவசப் படுத்தும்...///
அம்மாடியோவ்!! பிரம்மிக்கவைக்கும் வரிகள்!!!
செம!
அப்படியே டெக்ஸின் விஸ்வரூபம் பற்றியும் ஒரு கவிதை மழை வேணுமே சகோ வண்ணப்புறா அவர்களே...!!!
Deleteஈரோடு விஜய்.!
Deleteஅந்த ஸ்பைடர் கதையின் பெயர் என்ன ?
அப்புறம் நான் மாடஸ்டி போட்டியில் வென்று அரை பன்னும் ஒரு நாட்டு சக்கரை டீ யையும் வென்றதை மறந்திடாதீங்க.! உங்களிடம் அப்பாயின்மெண்ட் வாங்கி ஈரோடு வந்து பெற்றுக்கொள்கிறேன்.!
@ M.V
Delete////அந்த ஸ்பைடர் கதையின் பெயர் என்ன ? ///
தெரியலை சார். இன்னும் எந்த புக்கும் வரலை. டெக்ஸை மெகா சைஸில் தரிசிக்கமுடியாத வருத்தத்தில் படுத்துக் கிடக்கேன்.
பரிசா வரப்போகும் புத்தகம் - Sinister-7ஆகக் கூட இருக்கலாம். அல்லது விண்வெளிப் பிசாசாவும் இருக்கலாம். முதல்முறையாக ஸ்பைடர் கதையை ஆங்கிலத்தில் படிக்கப் போகிறேன்...
இப்போ மைன்டு வாய்ஸ்:
////அந்த ஸ்பைடர் கதையின் பெயர் என்ன ? ///
அத அணைச்சா என்ன... அணைக்காட்டி என்ன! :P
@ விஜய்
Deleteஆங்கிலத்தில் வந்த ஸ்பைடர் கதையெல்லாம் இல்லைங்க...!
லயன் காமிக்ஸ்ல வந்த பழைய ஸ்பைடர் புத்தகம்தான்.
எடிட்டருக்கு...,
ReplyDeleteஎன்ன சொல்வதென்றே தொியவில்லை சாா்..! நன்றி என்ற மூன்று எழுத்துக்களைத் தவிர, வேறு வாா்த்தைப் பிரயோகமே புலப்பட மறுக்கிறது சாா்..!
பிரம்மாண்டத்தின் உச்சம்!!!
இனிய மாலை வணக்கம் எடிட்டர் சார்!!!
ReplyDeleteஇனிய மாலை வணக்கம் நண்பர்களே!!!
வீட்டிலிருந்து போன், புக் வந்துடுச்சாம். இப்ப என்ன பண்றது நான்?
ReplyDeleteஆபீஸுக்கு ஒழுங்கா லீவு போடறதா, பர்மிஷன் போடுறதா? யார் கண்ணிலும் படாம நைஸா தவழ்ந்தே எஸ்கேப்பாவுறதா? இல்ல, டீசண்டா சப்ளையர் எண்ட் போறேனு புளுவிட்டு மட்டம் போடுறதா? இல்லை 6 மணி வரை வேலையப் பாக்குறதா? அவ்வ்வ்!
நன்றி: ஆதி தாமிரா :)
காலத்தை பின்னோக்கி திருப்புவோமா...திருப்புவது...விளம்பரங்கள் அருமை...
ReplyDeleteவாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
ReplyDeleteஅட்டகாசம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!
செம்மமமமமமமமமமம!!!
இன்னும் பல சந்தோஷமான எண்ணங்கள் உதித்தது இன்று காலை கூரியிரைப் பிரித்து 'தல' டெக்ஸின் மேக்ஸி புக்கைப் பார்த்தபோது...
ஏப்ரல் 1 ல் எங்களை ஏமாத்தாமல் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து விட்டீர்கள் சார்...
அதிலேயும் அந்த சிவப்புக் கலர் பின் அட்டையை அவ்வளவு பெரிய சைஸில் பார்க்கும்போது அடடா ஆனந்தமே என்று துள்ளிக் குதித்தேன் :-):-):-)
Deleteஅந்த அட்டை வீண் போகவில்லை சார்...
Deleteமோரிஸ்கோ.? அடடே! நம்ம மரண முள் கதையில் வரும் ஆராய்ச்சியாளர் அல்லவா.?
ReplyDeleteவிளம்பரங்களிலேயே கவனித்தேன் நண்பரே...அந்த கதயும் முதல் பக்கம்....அந்த கதய சொன்ன நவஜோ முதியவரும் கல்லறையில்..என மனதை ஏதோ செய்யும் வரிகளுடன் வரும்...அதே ஓவியரா
Deleteவாழ்த்துக்கள் விஜய் அண்ணா & பொடியன் நண்பரே :-):-):-)
ReplyDeleteகடந்த ஈரோடு விழா அன்று அறிவிக்கப்பட்ட இந்த டெக்ஸின் விஸ்வரூபம் விசாலமான வெற்றி ...
ReplyDeleteஅன்று அங்கே வைக்கப்பட்டிருந்த டெக்ஸின் ஆளுயர பேனரை லவட்டி சென்றது சாட்சாத் அடியேன் தான் ....
இன்றைய இதழின் தாக்கத்தால் மதியம் சோத்துக்கு ஊட்டுக்கு போன போது அந்த பேனரை எடுத்து பார்த்து ரசித்து விட்டே வந்தேன் .....
அன்றைய விழாவில் ஆசிரியர் இன்னும் கொஞ்சம் விலாவரியாக இந்த விஸ்வரூபம் பற்றி சொல்லி இருக்கனுமோ என இப்போது தோணுது ....
மாயா சார் அந்த போஸ்டருடன் நண்பர்கள் மற்றும் ஆசிரியர் -ஒருக்ளிக் ப்ளீஸ் ....
டெக்ஸ் உடனே சத்தம் காட்டாமல் வந்துள்ள லார்கோ மற்றும் ஆர்டினின் சாகசங்கள் இந்த பாஆஆகுபலியின் முன் சோபிப்பது கடினமே......
ஆண்டின் முதல் நாள் புதிய கணக்கு தொடங்கும் வேளை ,கண்ணாமூச்சி காட்டுவதால் ஞாயிறு தான் படிக்கனும். அதுவரை பார்வை ஒன்றே போதும் .....
@ டெக்ஸ்
Deleteநீங்கள் கேட்ட...இங்கே'கிளிக்'
நன்றிகள் பல மாயா சார் ....
Deleteஇந்த மகிழ்ச்சியான வேளையில் சிறிய வருத்தம் இந்தா சைசில் வண்ணத்தில் இருந்து இருந்தால் .......எப்படி இருந்து இருக்கும் .நினைக்கும் போதே நீர்வீழ்ச்சி கொட்டுதே ,டெக்ஸாஆஆஆஆஆஆஆ....
ReplyDeleteக்ளா சொன்ன மாதிரி இந்த அளவில் வண்ணத்தில் இரத்த படலம் -வந்தால் வந்தால் வந்தால் ......
.......
.......
.......
....
...
க்ளா,சத்யா,பழனிவேல் நீங்களே சொல்லுங்கள் ...
கருப்புதான் இதற்கு அழகு...இப இதுக்கு மேல சொல்லோணுமா என்ன ?
Deleteஇன்னும் புக்க பாக்கல ஆனா ஐயோ சொக்கா ஆயிரமும் பொண்ணா
Deleteக்ளா சொன்ன மாதிரி இந்த அளவில் வண்ணத்தில் இரத்த படலம் -வந்தால் வந்தால் வந்தால் ......
Deleteஉலகமே வியக்கும் உலகம் பூரா நம்ம புகழ் பரவும்
எப்படியோ உங்க காட்ல மழை அனுபவிங்க நாங்க வெயிட் பண்றோம்
Deleteபொறுங்கய்யா, உலகை வெல்லலாம் நீங்களும் ....
Deleteமுத்து காமிக்ஸ் ன் தி பெஸ்ட் ஆன "மின்னும் மரணத்தை "அவுக தட்டிட்டு போனாக ,....நீங்களும் லயன் காமிக்ஸ் ன் தி பெஸ்ட் ஐ தட்டும் நாட்கள் எண்ணப்படுகின்றன ...அட்வான்ஸ்ட் வாழ்த்துக்கள் ....
//இந்த அளவில் வண்ண இரத்தப்படலம் வந்தால்..//
Deleteஎடிட்டரின் மைண்ட் வாய்ஸ்.." நல்ல கிளப்புறாங்கயா பீதியை.! "
@டெக்ஸ் மாம்ஸ்:
Deleteஎனக்கும் இதே டெக்ஸ் புக் கலரில் வந்திருந்தால்...ஆத்தாடிடிடி இன்னும் பட்டயைக் கிளப்பியிருக்குமே என்றே தோன்றியது...
இதே அளவில் 'இரத்தப்படலம்' வந்தால் வந்தால்ல்ல்ல்ல்....
ஹய்யோ....அந்த நாளை எண்ணி தினம் தினம் தவமிருக்கிறேன் :-):-):-)
+1
Delete+1
Deleteஅடுத்தடுத்து வரும் டெக்ஸின் கதைகள் அனைத்தும் இதே மாதிாி மெகா சைஸில்.......!!!
ReplyDeleteபாத்து எதுனா ஏற்பாடு பண்ணுங்க எடி சாா்..!ஹி..ஹி..!!
இதுவரை வந்த அனைத்து சிறப்பிதழ்களையும் தூக்கிச் சாப்பிட்டு, ஏப்பம் விட்டு,ஒன்றுமே தொியாதது போல் முறுவலிக்கறது...இந்த மாத மெகா டெக்ஸ்!
ReplyDeleteகுணா சார்.!
Deleteஇன்றுகாலை வரை பெரிய சைஸ் வந்தால் மற்ற புத்தகங்களுடன் அடுக்கி கட்ட முடியாதே என்று கவலைப்பட்டுக்கொண்டுதான் இருந்தேன்.! புத்தகத்தை பார்த்ததும் கொஞ்ச நேரம் பிரமித்து போயிட்டேன். அசைவின்றி நின்றுவிட்டேன்.!
போனொலி குழுமம் பல தலைமுறைகளாக தொய்வின்றி உற்ச்சாகத்துடன் செல்ல இதுதான் காரணமோ ? ரூம் போட்டு யோசிப்பாங்களோ. ??? என்னமோ போடா மாதவா........!
எப்படிதான் ஓட்டை வாய் உலகநாதன் அவதாரத்தை கிளம்பவிடாமல் கட்டி போட முடிந்ததோ...யாராலயும் கண்டுபிடிக்க ஏலலேயேப்பாஆஆஆ...சத்தமில்லாம...
Deleteஎம்.வி.சாா்..!:-)))
DeleteWowwwwwwwwwwwww.... Megaaaaaaaaaa Size....Unbelievable...Thank you very much editor
ReplyDeleteJust received this month's issues.Amazed by the size and illustrations of 'Mega' Tex. Hats off editor and team 💐👌👍
ReplyDelete@Erode Vijay
ReplyDeleteசகோதரரே வாழ்த்துகள் :D
Profile dp.... so cute
Hmmm...
ReplyDeleteஎன்னென்னமோ சொல்றீங்க டெக்ஸ் புக்க பத்தி, ஆனாக்க இன்னும் இரண்டு நாள் கடந்து தான் என்னால் ஸ்பரிசிக்க முடியும்.
இப்படிக்கு,
ஆந்திர மாநிலம்
கர்னூலில்லிருந்து
பர்னால் :(
வருடத்தின் சிறந்த படைப்புகளை இம்மாதம் அளித்துள்ள அன்பு ஆசிரியருக்கு வாழ்த்துகள்...!
ReplyDeleteநேற்றிரவு இந்திய அணியின் தோல்வியால் தொலைந்து போயிருந்த சந்தோஷம், காலை இம்மாத இதழ்களை கண்டவுடன் குதூகலமாக தொற்றிக்கொண்டது்.
உலக கோப்பை யாருக்கு வேண்டும்....?போங்கய்யா....!!!!
அன்புள்ள எடிட்டருக்கு,
ReplyDeleteசிறிது நேரத்துக்கு முன்பு தான் டெக்ஸ்-ன் MEGA size இதழைக் கைப்பற்றினேன்.. இன்னும் படிக்கவில்லை ... அட்டையும், அளவும்(புத்தக size)... Wow ... அட்டகாசம் .. இவ்விதழை, இந்த size-ல் வெளியிட்டதற்கு நன்றிகள் பல..
பெரியார்
This comment has been removed by the author.
ReplyDeleteடெக்ஸ்: ஜூ. எ. சிந்தனையில் உதித்த இந்த டெக்ஸ் மெகா சைஸ் இதழ், இன்று செயல் வடிவம் பெற்று நம் கைகளில். இதழ் நல்லாவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. இதழை பார்க்கும் போதே ஒரு வித மிரட்சி, பிரம்மிப்பு, பிரம்மாண்டம் என ரவுண்டு கட்டி அடிக்கிறது. இந்த சைஸ் நம் காமிக்ஸின் அடுத்த லெவல். இதுப் போல் மெகா சைஸ் இதழ்கள் அடிக்கடி வருமா என நாங்கள் கேட்டாலும் அப்படி கேட்பதற்கான காரணத்திற்கு பொறுப்பாளி நாங்களல்ல! வெளிவரும் எல்லா இதழ்களையும் இந்த சைஸ்-ல் வெளியிட்டுவிட முடியாது/கூடாது. சித்திரத்தில் மாயம் புரியும் கதைகளே இந்த மெகா சைசில் வெகுவாக ரசிக்க முடியும். அது முதல் முயற்சிலேயே அழகாக பொருந்துகிறது. தூக்கிப் பிடிக்கும் கைகளுக்கு சற்று சிரம்மம்தான், எனினும் கண்களுக்கு இதம். யாருப்பா அங்கே, 2 கிளாஸ் ஹார்லிக்ஸ் சொல்லுங்கப்பா....
ReplyDeleteலார்கோ: என்னதான் இதழ் கைக்கு அடக்கமாகவும், மை வாசனையுடனும், ஆர்ப்பரிக்கும் சித்திரத்துடன் அழகான வண்ணமும், அட்டகாசமான பிரிண்டிங் இருந்தும்...மவனே, இன்னொருதபா இந்த டெக்ஸ்வுடன் கைகோர்த்துக் கொண்டு வந்த, அங்க அடிக்கிற வித விதமான புயலில் காணாமல் போயிடுவே...!
சிக் பில்: முதல் முறையாக ஒரு ஆரஞ்ச் நிறத்திலான ஒரு அழகான அட்டைப்படம். உள்ளேயோ சித்திரங்களின் வர்ணங்களைப் பார்க்கும் போது ஒரு புராண நெடி அப்பட்டமாகத் தெரிகிறது. கதை let wait & see.
மாயாவி: நான் என்ன சொல்ல...எப்படியிருந்தாலும் விற்பனையில் பட்டையைக் கிளப்பப் போற...(கொரில்லா (சாம்ராஜ்யம்) அடுத்தாண்டு தாவி விட்டபடியால், இந்த வருடத்தின் அடுத்த உன் குவார்டர்கான கதை என்னப்பா...)
//இதழை பார்க்கும் போதே ஒரு வித மிரட்சி, பிரம்மிப்பு, பிரம்மாண்டம் என ரவுண்டு கட்டி அடிக்கிறது.//
Delete+11111111
விஜயன் சார் நன்றி இந்த சைசில் டெக்ஸ் புக்கை தந்ததற்கு கதை செம சூப்பர் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படவில்லை சித்திரங்கள் மிக அருமை தொடர்ந்து நான்கு பந்துகளை (புத்தகங்களை )சிக்சருக்கு அனுப்பி விட்டார் டெக்ஸ்
ReplyDeleteமுன் அட்டையை பின் அட்டை தோற்கடித்து விட்டது ஆசிரியரே
விஜயன் சார் நன்றி இந்த சைசில் டெக்ஸ் புக்கை தந்ததற்கு கதை செம சூப்பர் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படவில்லை சித்திரங்கள் மிக அருமை தொடர்ந்து நான்கு பந்துகளை (புத்தகங்களை )சிக்சருக்கு அனுப்பி விட்டார் டெக்ஸ்
ReplyDeleteமுன் அட்டையை பின் அட்டை தோற்கடித்து விட்டது ஆசிரியரே
Dear Editor sir, all April releases are awesome.Largo and Tex - finished reading them. Attakaasam , Arumai , Aanandham!! - many thanks sir..
ReplyDeleteநண்பர்கள் பலரும் பகிர்ந்ததைப்போல டெக்ஸின் இந்த பெரிய சைஸ் நிச்சயமாய் ஒரு ஸ்மாஷ் ஹிட்தான். எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. சைஸ், தடிமன், ஓவியங்கள், பிரிண்ட், அட்டை, கதை(இதுமட்டும் படிக்காமலே சொல்கிறேன்) என ஒரே புக்கில் சிக்ஸர் அடித்திருக்கிறீர்கள். அதுவும் அட்டைப்படம் சற்றே சுமார் என்ற நிலையில் லார்கோ, டெக்ஸுடன் மோதமுடியாமல் போய்விட்டது.
ReplyDelete(என்ன இருந்தாலும் இப்போதைய ட்ரெண்டில், கதையம்சம் மற்றும் பல விஷயங்களிலும் லார்கோதான் நமது டாப்பர் என்பது வேறு விஷயம்)
சரி சரி, விஷயத்துக்கு வருவோம்.. டெக்ஸின் இந்த மேக்ஸி சைஸ் ஒரு வகையில் எனக்குப் பிடிக்கவில்லை. அதென்ன வகை? சொல்கிறேன் கேளுங்கள். ஷெல்பில் அழகாக வரிசையாக உட்கார்ந்திருக்கும் புத்தகங்களுக்கு மத்தியில் இது மட்டும் ஒவ்வாமல் இருக்கிறது. பெரிய சைஸ் ஒரு வரிசை, சின்ன சைஸ் ஒரு வரிசை என சீராக இருந்த வரிசையில் இப்போது இது மட்டும் தனியே! இந்தக்குறையப் போக்க இதே சைஸில் இன்னும் தொடர்ச்சியாக ஒரு நாலைந்து குண்டு புக்குகளைப் போட்டுவிட்டால் அதை ஒரு தனி வரிசையாக இருத்திவைக்கலாம். எப்புடி என் ஐடியா? போராட்டக்குழுவுக்கு வேலை வந்துவிட்டது.. (அப்படியே நண்டு பொரியலுக்கும் வேளை வந்துவிட்டது)
:-)))))))))))
ஆதி சார்..!!! செம...:-))
Delete@ ஈனா வினா...
நியாயமா நீங்க ஸ்பைடர கலாய்ச்ச கலாய்ச்சலுக்கு "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் " இன்னொரு காப்பி உங்களுக்கு அனுப்பி வச்சிருக்கனும்....:-)
@ எடிட்டர்....த.இ.போ அட்டையை பார்த்தவுடன் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது...இரவு படித்துவிடவேண்டும்......அட்டகாஷ்.....
I am in virudhunagar, will be here four days. If time permits plan to visit sivakasi.
ReplyDeleteஇனிய மதிய வணக்கம் நண்பர்களே!!!
ReplyDeleteஇனிய மதிய வணக்கம் எடிட்டர் சார்!!!
'தல' யின் 'தலையில்லாப் போராளி' சித்திரங்கள் அருமை...ஒவ்வொரு பக்கமும் பிரமாண்டம்...
ReplyDeleteகதையைப் படிக்காமல் சித்திரங்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!!!