நண்பர்களே,
வணக்கம்.
பொன்
கிடைத்தாலும் கிடைக்கா புதனில்
பிப்ரவரி மாதத்து இதழ்கள்
இங்கிருந்து கூரியரில்
புறப்படவிருக்கின்றன!
இம்முறை
டெக்ஸின் உட்பக்கங்களது
தயாரிப்பினில் கொஞ்சம்
தாமதமாகிப் போய் விட்டது;
இத்தாலிய
மொழிபெயர்ப்பினில் எனக்கெழுந்த
சில சந்தேகங்களின் பொருட்டு!
என்னதான் கூகுள் translator-ல்
மொழிமாற்றங்கள் சாத்தியமாகினும்
– சில உள்ளூர் சொற்றொடர்களை
கணினிகள் உருமாற்றித் தரும்
போது தூர்தர்ஷனில் சீரியல்களைப்
பார்த்தது போலவே தோன்றுகிறது!
So எடிட்டிங்கின்
போது எனக்குக் கூடுதல் தெளிவு
அவசியமான பக்கங்களை கடைசி
நிமிடத்தில் இத்தாலிக்கு
அனுப்பி,
அவர்களிடமிருந்து
நான் எதிர்பார்த்த விதத்தில்
வரிகள் கிட்டிடுவதில்
கிட்டத்தட்ட ஒரு வாரம்
விரயமாகிப் போய் விட்டது!
அதனால்
இம்முறை கொஞ்சம் தாமதம் guys!
ஆனால்
ஒருமொத்தமாய் ‘தி.ந.டெக்ஸ்‘
படிக்கும் போது இந்தத் தாமதம்
ஒரு விஷயமேயல்ல என்று தோன்றப்
போவது நிச்சயம்!
And –
இதோ
பிப்ரவரி இதழ்களுள் நீங்கள்
இது வரைப் பார்த்திரா “மஞ்சள்
பூ மர்மம்”
மறுபதிப்பின் அட்டைப்பட
முதல் பார்வை!
இம்முறை
முன்னட்டை நமது ஓவியரின்
கைவண்ணமே – 100%!
லாரன்ஸும்,
டேவிட்டும்,
கோட்-சூட்-தொப்பியென
கலக்கலாகப் புன்னகைப்பது
போல எனக்குப்பட்டது;
So- கதையின்
உட்பக்கங்களிலிருந்து சேகரித்த
சித்திரங்களை நம்மவர் அட்டைப்பட
டிசைனாகத் தயாரித்துத் தந்த
போது சந்தோஷமாகயிருந்தது!
இந்த
இதழின் (தமிழ்)
முதல்
பதிப்பு வெளியான சமயம் கூட
– உட்பக்க சித்திரங்களின்
collage தான்
ஒரு மஞ்சளான பின்னணியில்
அட்டைப்படமாக்கப்பட்டிருந்தது
எனக்கு நினைவில் உள்ளது!
அதனை
இன்னமும் பத்திரமாய்
வைத்திருப்போர் உங்களுள்
இருக்கும்பட்சத்தில் அந்த
ராப்பரை ஸ்கேன் செய்து
அனுப்பிடுங்களேன் – நமது FB
பக்கத்தில்
போட்டு விடலாம்!
Moving
on – மார்ச்
மாதத்திற்கென காத்திருக்கும்
4 இதழ்களிலுமே
பணிகள் ஜரூராய் நடந்து
வருகின்றன!
And மீண்டுமொரு
முறை அதகள அதிரடியை தனதாக்கப்
போவது நமது இரவுக்கழுகாரே!
“விதி
போட்ட விடுகதை“
நிச்சயமாய் இன்னுமொரு
blockbuster
என்பதில்
எனக்குச் சந்தேகமேயில்லை!
ஒரு
விபத்தில் ஜுனியர் டெக்ஸ்
நினைவை இழந்திட,
சந்தர்ப்ப
சூழல்கள் அவரது தந்தையையே
எதிரியாக்கி அவர் முன்னே
நிறுத்திட – பக்கத்துக்குப்
பக்கம் பட்டாசு வெடிக்காத
குறை தான்!
“திகில்
நகரில் டெக்ஸ்”
நம்மவரை ஒரு டிடெக்டிவ்வாக
சித்தரிக்கிறதெனில் –
“வி.போ.வி.க”
வினில் ஒரு பாசமான தந்தையாய்
கதை நெடுகிலும் அவர் வலம்
வரவிருப்பதை ரசித்திடலாம்!
And இந்த
இதழுக்கென நமது டிசைனர்
தயாரித்துள்ள அட்டைப்படம்
உங்களை நிச்சயம் ‘மெர்சலாக்கும்‘!!
ஒரிஜினல்
போனெல்லி சித்திரம் – ஆனால்
பின்னணியில் ஒரு மெகா மாற்றம்
என்ற இந்த டிசைன் மார்ச்சின்
showstpper ஆக இருந்திடப் போகிறது –
without a doubt! இதோ மார்ச் அட்டைப்படத்திற்கென நாம் முயற்சித்த டிசைன் ஒன்றின் preview !! ஆனால் தேர்வாகியுள்ளது இதுவல்ல !! வரக் காத்திருக்கும் டிசைனை இன்னொரு நாளையப் பதிவில் கண்ணில் காட்டுகின்றேனே !! இது ஒரு சாம்பிளுக்கு மட்டுமே என்று வைத்துக் கொள்ளுங்களேன்.. !
This is NOT the cover we will be using though...! |
‘மாதந்தோறும்
டெக்ஸ்‘ என்ற விதமாய் அட்டவணையை
அமைத்த போது – ‘சாமி...
அணுகுண்டென
நினைத்துப் பற்ற வைக்கிறோம்;
ஆனால்
‘பிம்பிலிக்கா பிலாக்கி‘யென
புஸ்வாணமாகிடக் கூடாதே!‘
என்ற
சிறு பயம் எனக்குள் ஒரு ஓரமாய்
குடியிருந்தது நிஜமே!
என்ன
தான் டெக்ஸின் மாஸ் அப்பீல்,
வாசக
ஆதரவு என்ற சங்கதிகள் துணைநிற்கும் உறுதியிருந்த
போதிலும் – ஓவர்டோஸாகிடக்
கூடாதேயென்ற சிந்தனையும்
அவ்வப்போது டாலடித்துச்
சென்று கொண்டுதானிருந்தது என் மனதில் !
கதைகளின்
தேர்வில் இயன்ற வேறுபாடுகளைக்
கொணர நிறையப் பிரயத்தனம்
மேற்கொண்ட போதிலும் – ஒரு
கதைக்குள் முழுமையாய் இறங்கிப்
பணியாற்றும் சமயம் கிட்டிடும்
firsthand knowledge –
இன்டர்நெட்
ஆராய்ச்சிகளிலும்,
அபிப்பிராயக்
கோரல்களிலும்;
மேலோட்டமான
கதைச் சுருக்க வாசிப்பினிலும்
கிடைப்பதில்லை தானே?
So- தைரியமாய்
நிறைய பில்டப்களை முன்வைத்த
போதிலும் – கதைகள் ஹிட்டடித்தால்
தவிர எனது உதார்கள் எல்லாமே
வெற்று வரிகளாகிப் போய்விடுமென்றுப்
புரிந்தேயிருந்தேன்!
ஒரு
வழியாய் 2016-ம்
புலர்ந்தது!
மாதம்தோறும்
ஒரு கதைக்குள் குதிக்கும்
வாய்ப்புக் கிட்டிய போது –
‘டெக்ஸின் மேஜிக்‘ துளிப்
பிசிறின்றி நம்மைக்
கரைசேர்க்குமென்பது புரியத்
தொடங்கியது!
ஏப்ரலில்
காத்திருக்கும் பெரிய சைஸிலான
”தலையில்லா
போராளி”யினை
முழுமையாய் நான் படிக்க நேரம்
கிட்டவில்லை;
ஆனால்
அதன் சித்திரங்களைப் பற்றிக்
காலத்துக்கும் நாம் சிலாகிக்கப்
போகிறோமென்பது பக்கப்
புரட்டல்களின் போது அப்பட்டமாய்த்
தெரிகிறது!
ஓவியர்
சிவிடெல்லி படைத்துள்ள இந்தச்
சித்திர விருந்தை தினமும்
சில நிமிடங்களாவது புரட்டி கொண்டேயிருக்கிறேன்!
So- டெக்ஸின்
முதல் 4
மாதங்களது
செயல்பாட்டை தொடரும்
காலங்களுக்கானதொரு குறியீடாய்
நாம் பார்ப்பதெனி்ல் we
are on a winning track for sure!
இதழோரத்து
‘டெக்ஸ் ஜலப்பிரவாகம்‘ இதற்கு
மேல் வேண்டாமென்பதால் – இன்னொரு
பக்கம் சூடு பிடிக்கத்
தொடங்கியுள்ள நமது உடைந்த
மூக்காரின் ஸ்பெஷலின் பணிகள்
பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேனே...?
சமீப
வாரங்களி்ல் – நமது ஆன்லைன்
ஆர்டர்களுள் ஒரு பெரும் பகுதி
“என் பெயர்
டைகர்” (வண்ண)
இதழின்
முன்பதிவுகளாகவே இருந்து
வருகின்றன!
இடையிடையே
b&w பதிப்பிற்கும்
ஆர்டர்கள் வராதில்லை தான்!
நாம்
நிர்ணயித்திருந்த முன்பதிவு
இலக்கினைத் தொட்டு விட அதிக
தூரமில்லை என்பதால் இதழின்
வேலைகளைச் சுறுசுறுப்பாய்த்
தொடங்கி விட்டோம்!
இதுவரையில்
நீங்கள் பார்த்திராத புதுவித
(டைகர்)
சித்திர
பாணியோடு நகர்ந்து செல்லும்
”என் பெயர்
டைகர்” வசன
மழைக்கு மத்தியில் மிதந்திடும்
ஒரு சாகஸம்!
ஏராளமான
வரிகள்;
பக்கத்திற்கு
– சுமார் 40
பலூன்கள்
என்றெல்லாம் ஆங்காங்கே
சரளமாய்ப் பார்த்திட முடிகின்றது!
சென்றாண்டு
இதே வேளையில் “மின்னும்
மரணம்” இதழின்
பொருட்டு நமது ஒட்டுமொத்த
DTP பணியாளர்களையும்
பிசியாக்கியதைப் போலவே
இம்முறையும் பணிகளைப் பகிர்ந்து தந்து அனைவரையும் பெண்டு நிமிர்த்தத்
தொடங்கி விட்டேன்!
ஓரிரு
வாரங்களுள் ஒட்டுமொத்தமாய்
5 பாகங்களையும்
அவர்கள் என் மேஜையினில்
அடுக்கி விட்டுச் சென்றான
பின்பு – இன்று நான் செய்திடும்
நிமிர்த்தல்;
கழற்றல்
பணிகள் என் பின்பக்கத்தைத்
தேடிடத் தொடங்குவது நிச்சயம்!
And அட்டைப்பட
டிசைனுக்கென நமது தேடல்களையும்
தொடங்கி விட்டோம்!
இந்த
தொடரின் ஆல்பம் #
1 அட்டகாசமான
ஒரிஜினல் டிசைன் கொண்டதே
என்பதால் அதனையே கொஞ்சம்
வித்தியாசமான பாணியில்
பயன்படுத்திடவும் முயற்சிக்கப்
போகிறோம்!
எது
எப்படியோ – சித்திரையில்
முத்திரை பதிக்க நமது சிகுவாகுவா
சில்க்கின் காதலர் தயாராகிடுவார்!
ஏப்ரலில்
‘தல & தளபதி‘
மட்டும் தானென்றில்லாமல்
இன்னும் சில heavy
weight நாயகர்களைக்
களமிறக்குவதாக உள்ளேன்!
BAPASI நடத்திட
எண்ணியிருக்கும் (ஏப்ரல்)
சென்னைப்
புத்தக விழா வழக்கமான
பிரம்மாண்டத்துடன் அரங்கேறிடும்
பட்சத்தில்;
நமக்கங்கு
ஸ்டாலும் கிடைத்திடும்
பட்சத்தில் நிச்சயமாய் வாணவேடிக்கைகளுக்குப்
பஞ்சமிராதென்று பட்சி சொல்கிறது!
நம்பிக்கையோடு
காத்திருப்போம்!
And
தற்போது
திருப்பூரில் நடந்து வரும்
புத்தக விழாவில் மிதமான
வரவேற்போடு வண்டி ஓடிக்
கொண்டிருக்கிறது!
100+ ஸ்டால்கள்
மாத்திரமே என்பது மட்டுமன்றி,
விடுமுறைகள்
சகலமும் முடிந்து விட்ட
தருணமிது என்பதால் ‘ஆஹா...
ஓஹோ...‘
விற்பனைகளை
எதிர்பார்த்திடுவது நடைமுறை
சாத்தியமாகாது என்பது புரிகிறது!
வரும்
கூட்டத்தில் ஒரு கணிசமான
பங்கு நம் ஸ்டாலை ஆர்வத்தோடு
பார்வையிடுவதும்,
‘அட...
இன்னுமா
இதெல்லாம் வருகிறது?‘
என்ற
கேள்விகளையும் முன்வைக்கும்
போது – இது நிச்சயமாய் ‘விளம்பரம்‘
என்ற ரீதியிலும் நமக்கொரு
முதலீடாகவே பார்த்திடத்
தோன்றுகிறது!
கடைசி
நிமிட ஸ்டால் ஒதுக்கீடு;
திடீர்
திட்டமிடல்கள் என்பது ஒரு
பக்கமிருக்க – பிப்ரவரி
மாதத்து இதழ்களின் தாமதங்களை
ஈடு செய்திடும் பொருட்டு
நாங்கள் ஞாயிறன்றும் (இன்று) வேலை
செய்திடவுள்ளதால் என்னால்
திருப்பூர் டிரிப் அடித்திட
இயலவில்லை!
நமது நண்பர் பட்டாளம் திருப்பூரைத்
தாக்கவிருப்பதாய் சேதிகள்
கிட்டிய போதிலும்,
அவர்களைச்
சந்திக்க இயலாது போவதில்
எனக்கு நிஜமான வருத்தம்!
ஏப்ரலில்
சென்னையில் இதனை ஈடு செய்திடலாமென்ற
எண்ணம் தான் ஆறுதல் தருகிறது!
தவிர,
இங்கே
மேஜையில் குவியத் தொடங்கியிருக்கும்
கதைகளின் எண்ணிக்கைகளைப்
பைசல் பண்ணுவதற்கும் ஞாயிறுகள்
எனக்கொரு முக்கிய நாளாகிப்
போய் வருவதால் – அன்றைய நாளின்
பணிகள் தட்டிப் போய் விட்டால்
ரொம்பவே அல்லாட வேண்டியுள்ளது!
கர்னல்
க்ளிப்டனின் கூத்துக்கள்
பிரதானமாய் என் கவனங்களைக்
கோரி வருகின்றன தற்சமயமாய்! 'அட...
கார்ட்டூன்
கதைகள் தானே...?
ஊதித்
தள்ளி விடலாமென்ற' அசட்டு
நம்பிக்கைகளை குள்ளவாத்து
மீசைக்காரர் போன மாதம்
சேதப்படுத்தியிருந்தாரெனில்;
கேரட்
மீசைக்காரர் இப்போது ஆசை தீர
மூக்கில் குத்து மழையைப்
பொழிந்து வருகிறார்!
பிரிட்டிஷ்காரா்களின்
dry humour இழையோடும்
வசன நடையினைக் கையாள்வதும்
சரி; காமெடிக்குத்
தந்திட வேண்டிய முக்கியத்துவத்தைச்
சமாளிப்பதும் சரி-
துவைத்துத்
தொங்கப் போட்டு வருகிறது
என்னை! இன்னொரு
பக்கமோ நமது ஊதாக் குட்டி
மனுஷர்களின் அடுத்த கதையின்
வேலைகளும் நடந்து வருகின்றன!
பக்கத்திற்கு
சுமார் 15
கட்டங்களெனும்
போது அங்கேயும் no
cakewalk! சந்தா
C-ன்
கார்ட்டூன் மேளாவின் பெரும்பகுதிக்
கதைகளை ‘எனக்கே எனக்காய்‘
நான் கவ்விக் கொண்டிருப்பதால்
– ரின் டின் கேன்;
சுட்டி
பயில்வான் பென்னி;
டாக்புல்
& கோ
– என வரிசையாக சிரிப்புப்
பார்ட்டிகள் லைன் கட்டி
நிற்கிறார்கள்!
‘ஜாலியான
அவஸ்தை‘ என்ற சொல்லுக்கு
யாரேனும்,
என்றைக்காவது
அகராதியினில் அர்த்தம் பதிக்க
விரும்பிடும் பட்சத்தில்
அவர்கள் என்னிடம் பேசினால்
சரிவருமென்று தோன்றுகிறது!
கலப்படமிலா
சந்தோஷம் தரும் அனுபவம்;
அதே
சமயம் கத்தி மேல் நடப்பதற்கு
ஈடான ரிஸ்க் கொண்டது;
எழுத
எழுதக் குறையவே குறையாது
நீண்டு கொண்டே செல்லும்
பட்டியல் என்ற combo-வை
வர்ணிக்க ‘அழகிய அவஸ்தை‘
என்ற சொற்கள் பொருத்தமானவை
தானே? டெக்ஸின்
கதைகளையோ;
ஷெல்டன்;
கமான்சேக்களையோ
அடித்தம் திருத்தமின்றி
கடகடவென்று எழுதிப் போவது
எனக்கும் சரி,
நமது
கருணையானந்தம் அவர்களுக்கும்
சரி- பழகிய
பணியாகி விட்டது!
ஆனால்
‘பெளன்சர்‘ போன்ற வில்லங்கப்
பார்ட்டிகளையோ;
கார்ட்டூன்
உலகின் கிச்சுக் கிச்சு
மாந்தர்களையோ கையாளும் போது
– இரவின் எழுத்துக்கள் பகலில்
பல்லைக் காட்டுவது போலப்
படுவதும்,
பகலில்
எழுதுவது இரவில் பேத்தலாகத்
தெரிவதும் சகஜமாகவே இருந்து வருகின்றன !
ஏராளமான
அடித்தங்கள் – திருத்தங்கள்
என ரணகளமாய் பக்கங்கள் காட்சி
தருவதை நமது DTP
பெண்கள்
எப்படியோ சமாளித்து வருகின்றனர்!
அவர்களுக்கு
இங்கொரு நன்றி சொல்லியாக
வேண்டும்!
ஒரு சில updates :
1.CINEBOOK ஆங்கில இதழ்களுள் BLAKE & MORTIMER கதைகளின் விற்பனை திடீர் சூடு பிடித்துள்ளது !(http://comics4all.in/2853-blake-mortimer) And சென்னையில் THREE ELEPHANTS புத்தகக் கடையினிலும் இனி நமது CINEBOOK ஸ்டாக் கிடைத்திடும் !
3.அட்டைப்பட டிசைனிங்கில் முன்பு போல் வாசகர்கள் தங்கள் திறமைகளைக் காட்டிட விரும்பிடும் பட்சத்தில் - we are game for it! ஆர்வமுள்ள நண்பர்கள் கை தூக்குங்களேன் - ப்ளீஸ் ?
4.KING SPECIAL கிட்டத்தட்ட ஸ்டாக் காலி !! And surprise...surprise....! சமீப நாட்களின் கணிசமான ஆன்லைன் ஆர்டர்கள் "தேவ இரகசியம் தேடலுக்கல்ல" & "இரவே..இருளே..கொல்லாதே.." இதழ்களுக்கும் இருந்து வருகிறது !!
5.சிங்காரச் சென்னையை உருப்படிக் கணக்கில் கூட COMIC CON INDIA ஏற்றுக் கொள்வதாகத் தெரியக் காணோம் ! பிபரவரியில் புனே நகரில் புதிதாகக் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளனர் - ஆனால் "நீ அதுக்கு சரிப்பட மாட்டே...!!" என்றே சென்னைக்கு இன்னமும் முத்திரை தொடர்கிறது !!
மீண்டும்
அடுத்த வாரம் சந்திப்போம்
guys! அது
வரை – have fun!
Bye for now!