Powered By Blogger

Saturday, June 06, 2015

ஹேப்பி அண்ணாச்சி !

நண்பர்களே,
வணக்கம்! இப்போதெல்லாம் வதனத்தில் ஒரு மழைமேக இருள் சூழ்வதற்கும்; கோடையின் வெளிச்சம் பரவுவதற்கும் மைய காரணிகளாக அமைவது அந்தந்த மாதத்து நம் இதழ்களின் தரங்களும்; அவை பெற்றிடும் வரவேற்போ / உதைகளோ தான்! BATMAN-ன் பரம வைரியைப் போல “ஈ.ஈ.ஈ.“யென்று பல்லைக் காட்டித் திரிகிறேன் என்றாலே அம்மாத இதழ்கள் ‘ஹிட்’ என்று இப்போதெல்லாம் நம்மாட்கள் புரிந்து கொள்கின்றனர்! மாறாக- வறுத்த கறியைக் காலமாய் கண்டிராத கார்சனைப் போல சுற்றித் திரிந்தால் - அது வீங்கிப் போன மண்டையை நான் நீவிக் கொள்ளும் ‘கி.நா’ மாதம் என்று பொருள் எடுத்துக் கொள்கின்றனர்! June மாதத்து இதழ்கள் மூன்றுமே தயாரிப்பில் அழகாய் அமைந்தது மட்டுமின்றி – குழப்பமிலாக் கதைக்களங்களின் புண்ணியத்தில் வரவேற்பைப் பெற்று விட்டதால் ஒரு சுமாரான‘க்ளோஸ்-அப்’ மாடலாக நடமாட முடிகிறது ! ரொம்பவே early days இவை என்பதும் ; நண்பர்களில் ஒரு சிறுபகுதியினர் மாத்திரமே இதுவரையிலும் thumbs up அபிப்பிராயங்களைப் பகிர்ந்துள்ளனர் என்ற போதிலும் – அந்த ஆரம்ப response தான் அம்மாதம் முழுவதுமே தொடர்வதை அனுபவத்தில் புரிந்து வைத்திருக்கிறேன்! So- thanks in advance guys!

இம்மாத surprise package என்று நான் பார்த்திடுவது காரட்தலை ஜில்லாரைத் தான்! ஒன்றரையாண்டு இடைவெளிக்குப் பி்ன்னே மனுஷன் தலைகாட்டுவது ஒரு பக்கமிருக்க – லார்கோக்களையும், ஷெல்டன்களையும் அக்குளுக்குள் அடைக்கலம் செய்து பழகிவிட்ட நம் நண்பர்களின் ஒரு பகுதிக்கு ஜில்லாரின் நேர்கோட்டு, சுலபக் கதைக்களங்கள் எவ்வித அனுபவத்தைத் தரக் காத்துள்ளதோ என்ற சின்ன ‘டர்ர்ர்’ எனக்குள்ளே இருந்தது தான் ! ஆனால் இடியாப்பங்களும், நூடுல்சும் நமது மெனுக்களில் முக்கிய இடம்பிடித்திருப்பினும் ஆவி பறக்கும் இட்லிகள் out of fashion ஆவதில்லை என்பதை உணர்த்தியுள்ளீர்கள் ! And எனது தயாரிப்புத் தரப்புப் பார்வையிலும் இது போன்ற கதைகளில் பணியாற்றுவது ஒரு ஜாலியான அனுபவமே – எப்போதுமே! எழுதத் துவங்கும் வேளைகளில் ஒரு பௌன்சரோ; ஒரு லார்கோவோ; ஒரு கிராபி்க் நாவலோ தரும் சவால்கள் இறுக்கமான விதங்களெனில் இது போன்ற ஜாலிக் கதைகள் / கார்ட்டூன் மேளாக்கள் வேறு விதமான சவால்களை முன்வைப்பது வாடிக்கை ! ‘காமெடி’ என்ற பெயரில் அபத்தமாய் எதையும் எழுதித் தொலைக்கக் கூடாதென்ற அவசியம் ஒரு பக்கம் என்றால் – தூய தமிழ் அல்லாத நடையை நிதானத்தோடு கையாண்டிட தேவைப்படுவது மறுபக்கம். ஆனால் எழுதும் போதும் சரி ; பின்னர் எடிட்டிங் செய்யும் போதும் சரி- வண்டி ‘சர்ர்ரென்று’ பயணமாகிடும். So- சுலபக் களங்கள் கொண்ட கதைகள் ஒன்றுக்கு இரண்டாய் அமைந்து விட்டதில் விஜயன் ஹேப்பி அண்ணாச்சி !

இந்த ‘ஹேப்பி நாட்களுக்கு’ ஆயுட்காலம் இன்னமும் ஜாஸ்தி என்பதை என் மேஜை மீது கிடக்கும் ஒரு கத்தைப் பக்கங்கள் பறைசாற்றுகின்றன! அந்தப் பக்கங்களின் முழுமையிலும் ‘டெக்ஸ்’ என்ற பெயருக்குத் திரும்பிப் பார்க்கும் ஒரு தொப்பிவாலாவின் ஆயிரம்வாலா அதிரடிகள் காத்துள்ளன எனும் போது என் எதிர்பார்ப்பின் பின்னணி உங்களுக்குப் புரிந்திருக்கும்! Yes- தொடரவிருக்கும் “The Lion 250“ மெகா இதழில் அதகளத் தாண்டவம் நடத்தவுள்ளார் நமது இரவுக் கழுகார் ! கதைகள் மூன்றும் நீளங்களில் மாறுபட்டிருப்பினும் – சுவாரஸ்யங்களிலும்; ஆக்ஷனிலும் ஒன்றின் கையை மற்றது பற்றிக் கொண்டு ஜாலியாக நடை போடுகின்றன ! 340 பக்க “ஓக்லஹோமா“ தான் இந்த இதழின் முதுகெலும்மே என்பதால் இந்த வாரத்தின் preview-ஐ அதன் மீது நிலைகொள்ளச் செய்வோமா ?

இத்தாலிய டெக்ஸை விதம் விதமாய்; மாறுபட்ட நீளங்களில்; சைஸ்களில் கொண்டாடுவது போனெல்லி குழுமத்தின் பொழுதுபோக்கு என்பதை நாமறிவோம்! அவற்றுள் MAXI என்ற வரிசையில் 330+ பக்க நீளங்களோடு வெளிவரும் தடிமனான கதைகள் ரொம்பவே பிரசித்தம் ! MAXI வரிசையில் 1991ல் வெளியான ‘தல’யின் அதிரடி தான் “ஓக்லஹோமா“! வழக்கம் போல – “சுண்டல் விற்ற சுப்பன்“ ; “பரலோகத்திற்கொரு பார்சல்“ என்ற ரீதியில் தலைப்புகளை வைக்காமல் – ஒரிஜினலின் பெயரையே இந்தக் கதைக்கு முன்மொழிய எனக்குத் தோன்றியதன் காரணத்தைக் கதையைப் படிக்கும் போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்! கதையின் முழுமைக்கும் மனிதர்கள் எத்தனை பிரதானமாய் வலம் வருகிறார்களோ; அதற்குத் துளிகூடக் குறைவில்லாமல் அந்த பூமியும் கதையோடு ஐக்கியமாகி நிற்பதைப் பார்த்திடப் போகிறீர்கள் ! So- இந்த ஒருமுறையாவது தலைப்பு பின்னிருக்கை எடுத்துக் கொள்ள, கதைக்கு முன்சீட்டை ஒப்படைப்போமே என்று பார்த்தேன்! அதே சமயம்- கதையைப் படித்தான பின்பு – பொருத்தமான / பரபரப்பான தலைப்பை நண்பர்கள் சூட்டினால் – நம் பால்மணம் மாறாத தலீவர் அதனைப் பார்த்து மகிழ்ந்திட ஒரு வாய்ப்பாகிடுமல்லவா?

கதையைப் பொறுத்த வரை – எனக்கு ஒரு விஷயத்தில் துளி கூடச் சந்தேகமே கிடையாது ! அதாவது இதன் ஆசிரியர் கியான்கார்லோ பெரார்டி சத்தமில்லாமல் பாலிவுட் & கோலிவுட் திரைப்படங்களை ரசித்து வந்திருக்கிறார் என்று ! டெக்ஸைத் தூக்கி விட்டு அதே இடத்தில் தலைவரையோ (தாரமங்கலத்தாரல்ல!!!!) ; இன்னும் சிலபல அட்டகாசமான நமது திரைநாயகர்களையோ குடிகொள்ளச் செய்தால் ஒரு மெகா-ஹிட் திரைப்படம் ரெடி என்று சொல்லலாம்! பட்டாசாய் வெடிக்கும் ஆக்ஷன்; குடும்ப சென்டிமெண்ட்; நட்பின் வலிமை; பாசத்தின் பிணைப்பு என்று சகலமும் இதனில் உண்டு! ஒரு குத்துப் பாட்டோ; entry song ஒன்றோ மட்டும் தான் இல்லை; பாக்கி ஜனரஞ்சகச் சமாச்சாரங்கள் அத்தனையும் ‘உள்ளேன் ஐயா!!’ என்று கைதூக்குகின்றன! குக்லியமொ லெட்டரீயின் அலட்டலில்லா சித்திர பாணியில் ‘தல’யும்; ‘தாத்தா’வும் சும்மா ‘தக தக’வென மின்ன – வண்ணத்தில் சொல்லவுமா வேண்டும்?
வழக்கமாய் இத்தனை நீ-ள-மா-ன கதையை எழுத; எடிட் செய்ய மலைப்பாகயிருக்கும்! ஆனால் கருணையானந்தம் அவர்களின் base writing மூன்றே வாரங்களில் ஓடி முடிய; அதன் மேலான எனது மாற்றங்கள்; ‘தல’யின் பன்ச் வசனங்கள்; தாத்தாவின் நையாண்டிகள் எல்லாமே படு ஸ்பீடாய் அரங்கேறின! சமீபமாய் நாம் சந்தித்த மெகா “மின்னும் மரணம்“ வசனப்பிரவாகத்தில் திளைத்ததெனில் இங்கே – “கும்“; “ணங்“; “டுமீல்“; க்ராஷ்“; “ஆஆஆ“; “படீர்“; “விஷ்ஷ்“ மயம் தான்! “The லயன் 250“ இறுதிப் பக்கத்தில் – "இந்த இதழில் மொத்தம் ‘எத்தனை தோட்டாக்கள் சுடப்பட்டன?’ ; ‘எத்தனை முகரைகள் மாற்றியமைக்கப்பட்டன?’ என்றதொரு பொது அறிவுப் போட்டியே நடத்திடலாமா என்ற யோசனை தலைக்குள் ஓடுகிறது!


அனல் பறக்கும் கதைகளாய் இந்த வாரம் முழுவதும் பார்த்தும் / படித்தும் எனக்கே நடையில் ஒரு swagger; மைதீனிடமும், ஸ்டெல்லாவிடமும் ‘பன்ச்’ டயலாக் பேசத் தோன்றும் ஒரு குறுகுறுப்பு; யாரையாவது ‘ணங்’ என்று நடுமூக்கில் குத்துவோமா? என்ற துடிதுடிப்பு குடிபுகுந்துள்ளது! அப்புறம் – தளபதியின் mega இதழில் “கவிதைச் சோலையொன்று"(!!!) இடம்பிடித்திருந்ததெனும் போது – ‘தல’யின் மெகா இதழில் ஒரு கட்டுரைப் போட்டியாவது வைக்காவிட்டால் வரலாறு மன்னிக்காதே ! :-) So :

1. இது வரையிலான டெக்ஸின் சாகஸப் பட்டியல் (நமது இதழ்களில்).
2. அவற்றுள் உங்களது Top 5 தேர்வுகள்.
3. டெக்ஸின் நிறைகள் / குறைகள் – உங்கள் பார்வைகளில்?

மேற்படி கேள்விகளுக்கு அவரவர் பதில்களை இப்போது முதலே இங்கே பதிவிடத் தொடங்கினால் இதழின் உட்பக்கங்களில் இயன்றவற்றை இணைக்க ஏதுவாயிருக்கும்! So- get cracking pardners! 
அப்புறம் – டெக்ஸின் இதழை ஜூலையில் அல்லாது ஆகஸ்டிற்கு, ஈரோட்டுப் புத்தக விழாவின் போது கொண்டு செல்லலாமே என்ற கேள்விக்கான பதில் நமது வெளியீட்டு நம்பர்களிலேயே உள்ளதெனும் போது – நான் பெரிதாய் மெனக்கெட அவசியமிராதென்று நினைக்கிறேன்! லயனின் இதழ் # 249 & முத்துவின் # 349-ம் தற்போதைய நமது இருக்கைகள் எனும் போது – தொடரும் மாதத்தில் வேறு இதழாக எதை நுழைத்தாலும் – 250 & 350-க்கென நாம் திட்டமிட்டுள்ள மைல்கல் இதழ்கள் redundant ஆகிடுமே? முன்பைப் போல சன்ஷைன் லைப்ரரி என்ற லேபில் இப்போது கிடையாதென்பதால் – இடைப்பட்ட ஜூலைக்கு அந்த லேபிலில் எதையாவது வெளியிட்டு ஒப்பேற்றுவதும் சாத்தியமில்லை அல்லவா? தவிர, ஒவ்வொரு ஸ்பெஷல் இதழுக்கும் நாம் சந்திப்பதென்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தான் என்றாலும் – அது ஒவ்வொரு தடவையும் பிரயாணச் செலவுகள் / வேலைகளைப் போட்டு விட்டு வருதல் போன்ற அசௌகரியங்களையும் உங்களுக்கு உண்டாக்குவதை மறப்பதற்கில்லை! கூடுதலாய் ஒரு மாத அவகாசம் கிடைத்திடும் பட்சத்தில் சாவகாசமாய் அச்சிட; பைண்டிங் செய்திட ஏதுவாகத் தானிருக்கும் – but ஜூலையில் "தற்காலிக லீவு" என்ற போர்டைத் தொங்க விட்டாலன்றி கணக்கு உதைக்குமல்லவா?
Moving on – ஆவலாய் எதிர்பார்க்கப்படும் கார்ட்டூன் ஸ்பெஷலின் 4 கதைகளும் ஒருவழியாகப் படைப்பாளிகளின் சம்மதங்களோடு கான்டிராக்ட்களாக உருமாறி விட்டன ! லியனார்டோ தாத்தா அந்த நான்கில் ஒன்று என்பது obvious ; அதே போல ஸ்மர்ஃப்கள் கதை # 2ன் இடத்தைப் பிடித்திருப்பதும் ஓட்டைவாய் உ.நா.வின் புண்ணியத்தில் அப்பட்டம்! பாக்கி 2 இடங்கள் யாருக்கென்ற யூகங்களை இன்னமும் சிறிது காலத்திற்குத் தொடருவோமே? - ‘தல’யின் மெகா இதழ் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கும் வரையிலாவது! இப்போதே அத்தனையையும் போட்டு உடைத்து விட்டால் 2 மாதங்களுக்குப் பின்னே இதழ் வெளிவருவதற்குள் ‘ஆறிப் போன பதார்த்தம்’ போலான உணர்வு தலைதூக்கி விடுமென்பதால் things will be under wraps!

கதைகளின் தேர்வுகளில் திரையிருப்பினும் இதழ்களின் அமைப்பினில் இரகசியம் தொடர்ந்திட காரணம் இருப்பதாக நான் நினைக்கவில்லை! இந்தாண்டின் ஜனவரி சென்னைப் புத்தக விழாவில் கார்ட்டூன் ஸ்பெஷலை அறிவித்த போதே மாறுபட்ட பல கதைகள் ஒரே இதழில் இடம்பிடிக்கவிருக்கும் சூழலில் - அவை வெவ்வேறு போட்டிப் பதிப்பகங்களின் படைப்புகளாக இருப்பதைத் தவிர்க்க இயலாதென்பதைப் புரிந்திருந்தேன். So அவை தனித்தனி இதழ்களாய் – ஆனால் ஒரே டப்பாவில் அடைக்கப்பட்ட gift set போல வெளிவந்திடுவது தான் தீர்வு எனத் தீர்மானித்திருந்தேன். ஜனவரியின் ambitious திட்டமிடலின் போது இந்த இதழினில் குறைந்தபட்சம் 6 கதைகள் என்ற ஆசை (பேராசை?!!) தலைக்குள் குடியிருந்த நிலையில் – “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக“ ஒரு கதம்ப ஸ்பெஷலாகவும் ; 6 தனித் தனி இதழ்களின் இணைப்பிலான தொகுப்பாகவும் அமைந்திடும் என்பதே plan – நாள் 1 முதலாய்! அதனால் தான் : கதம்ப ஸ்பெஷல் வேண்டும் / வேண்டாம்  ; சரி  / சரியில்லை என்ற தர்க்கம் சமீபமாய் இங்கே ஓடிக் கொண்டிருந்த போது கூட – ‘பொறுமை ப்ளீஸ்..உதைக்கும் அவசியம் எழும் பட்சத்தில், நானே நினைவுபடுத்திக் கேட்டு வாங்கிக் கொள்கிறேனே !" என்று சொல்லி வைத்திருந்தேன் ! இப்போது 4 கதைகள் மட்டும் தான் என்றாலும் கூட  - அவையும் மாறுபட்ட (போட்டி) நிறுவனங்களின் படைப்புகள் என்றான சூழலில் – the plan is definite !

4 இதழ்கள் x ரூ.60 = ரூ.240/- என்ற விலை கடைகளில் வாங்குவோர்க்கும்  ; ரூ.210/- விலைக்கான (அறிவிக்கப்பட்ட) ஓரிரு இதழ்களின் இடத்தினில் இந்த box-set சந்தாதாரர்களுக்கும் - என்பதே திட்டமிடல்! அட்டவணையை நோண்டாது – “கா.ஸ்பெஷல்“இதழுக்கென தனியாகப் பணமனுப்பக் கோரிடலாமென்ற ஆசை எனக்கு உண்டு தான் ; ஆனால் டாஸ்மாக் வாசலில் பரதம் பயிலும் பெருமான்களைப் போல வேலைப் பளுவும், நிதி நெருக்கடியும் ஆட்டுவித்து வரும் நிலையில் – ஓவர் ஆசை வேண்டாமென்று தீ்ர்மானிக்கும் கட்டாயம் நமதாகிறது! இதன் பொருட்டு சில முகம் சுளிப்புகள் + காதில் புகை சமிக்ஞைகளின் உற்பத்திகளும் நேர்ந்திடுமென்பது எதிர்பார்க்கக் கூடியதே என்பதால் – முதுகில் நயம் விளக்கெண்ணையாகத் தடவிக் கொண்டு ‘ஹெஹேஹே... வலிக்கலையே...!’ என்று போஸ் கொடுக்க வாகாக முதுகைக் காட்டிக் கொண்டு நின்று கொள்வதைத் தவிர்த்து வேறு வழி தெரியவில்லை ! அப்புறம் drop ஆகும் இதழ்கள் எவை என்பதைப் பற்றி "கா.ஸ்பெ" கதைகள் அறிவிப்புப் பதிவினில் சொல்கிறேனே..! அந்தக் கல்தாப் பட்டியலில் மாடஸ்டி கிடையாது என்ற சேதியோடு அடியேன் புறப்படுகிறேன்! June மாத விமர்சனங்கள + ‘தல’ இதழுக்கான contributions தொடரட்டுமே- ப்ளீஸ்?! See you around all...bye for now !!

P.S : ஈரோட்டில்..."தல" வெளிவர வாய்ப்பில்லாது போயின் கூட அவருக்கொரு மெகா tribute செய்திடவொரு யோசனை எனக்குள் உள்ளது ! பந்தியில் அமர நமக்கு இடம் உறுதியான பின்பு அதைப் பற்றிப் பேசுவோமே..! 

335 comments:

  1. Cartoon special is box set..Wow good news
    1St book set n tamil history

    But without Lucky luke / chikbill n a special??

    ReplyDelete
  2. நாலாவதா வந்ததால நானும் 'ஹேப்பி அண்ணாச்சி'.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் 3வது சாரே ,, வெண்கலம் அடுத்த முறை தங்கமாக மிளிரட்டும் ...

      Delete
  3. TeX the king... expecting lion 250 special very much...

    ReplyDelete
  4. Good night(morning) friends.. ம்... கிளப்புங்கள் குதிரைகளை... டெக்ஸ் பற்றி எழுதுவதற்கு... all the best...

    ReplyDelete
  5. டியர் எடிட்டர்,

    பாக்ஸ்-செட் முறைக்கு ஒரு விசில் .. and a lot of claps ...

    கார்ட்டூன் ஸ்பெஷல் விலை மற்றும் வகை பற்றியும் மகிழ்ச்சியே - ஆனால் அவ்விதழ்களை drop செய்யாமல் ஜனவரி planல் புகுத்தி விடலாமே - கண்காட்சியிலும் விற்பனைக்கு இரண்டு எக்ஸ்ட்ரா புத்தகங்கள் ஆச்சு.

    இப்போது படித்துக் கொண்டிருப்பது ஜில்லாரைத்தான். படித்தவரை பிடித்தது - simple and straight - முதல் கதையில் கோட்டை விட்ட ஜில் - இரண்டு மற்றும் மூன்றில் தனக்கென ஒரு இடத்தினை பிடிப்பதாய்ப் படுகிறது.

    ReplyDelete
  6. Replies
    1. பதிவு பற்றி தகவல் தந்ததற்கு நன்றி நண்பரே....

      Delete
  7. வந்துட்டேன் நண்பர்களே.....வணக்கம் சார் ....

    ReplyDelete
    Replies
    1. UEFA சேம்பியன் லீக் ஃபைனல் பார்சிலோனா வர்சஸ் யூவன்டஸ் பார்த்து கொண்டு இருந்தேன் ,, பார்சி ஆட்டம் தொடங்கிய உடனடியாக கோல் போட்டார்கள் .......இப்படி வந்தால் இங்கேயே ஆசிரியர் அதிரடி கோல் போட்டு துவக்கியுள்ளார் ...சூப்பர் சூப்பர் சார் ...

      Delete
  8. டெக்ஸ் வில்லரின் டாப் 5; 1பழிவாங்கும் புயல்,கழுகு வேட்டை 2மந்திர மண்டலம்,பழிவாங்கும் பாவை 3மரணமுள்,நள்ளிரவு வேட்டை 4இருளின் தூதர்கள்,பவளச்சிலை மர்மம் 5இரத்த நகரம்
    டிராகன் நகரம் .

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் பேக் யுவா , அடிக்கடி ஆஜராகுங்கள்.......

      Delete
    2. நல்ல மீள்வரவு யுவா.! (தமிழ்ப்பற்று) .

      டாப் 5 க்கு., 10 பெயர்களை எழுதியிருக்கீங்களே.? யாரோ உங்களை ரொம்ப கெடுத்து வெச்சிருக்காங்கன்னு நல்லாத் தெரியுது.

      Delete
    3. வாங்க யுவா கலக்குங்க.

      Delete
    4. யாரான்னு மறைமுகமாக சொல்லாதீர்கள் .........ஹி..ஹி....யாராவது என்னை பாராட்டினால் கூச்சம் வந்து விடும் எனக்கு ...

      Delete
  9. டெக்ஸ் சாகஸ பட்டியல்

    தலைவாங்கிகுரங்கு
    பவளச்சிலைமர்மம்
    பழிக்குப்பழி (எனக்கு தெரிந்து டெக்ஸ் மருத்துவமனையில் அடிபட்டு படுத்திருப்பது இக்கதை மட்டுமே)
    டிராகன் நகரம்
    எமனுடன் ஒரு யுத்தம்
    மரணத்தின் நிறம் பச்சை (மை பேவரைட்)
    பழி வா.புயல்
    மில்லனியம் ஸ்பெஷல்
    சாத்தான் ( நள்ளிரவு )வேட்டை
    நில் கவனி சுடு
    கா.க.காலம்

    ReplyDelete
  10. துணைக்கு வந்த தொல்லை படிக்கும்போது பலமுறை வாய்விட்டு சிரித்தேன். அருமை. ஜில் கதைகள் அடிக்கடி வரலாம்

    ReplyDelete

  11. எடிட்டர் சார்,

    * ஒரு சில இதழ்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு 'கார்ட்டூன் ஸ்பெஷல்'ஐ களமிறக்குவது அனைவருக்கும்/பெரும்பான்மையினருக்கு ஏற்றதொரு முடிவே! இந்த வையகம் உங்களை வாழ்த்தட்டும்!

    * 'The lion-250' மண்டைக்குள் ஒரு ரீங்காரத்தை ஏற்படுத்திவிட்டிருக்கிறது. கனமான அட்டையோடு, குண்ண்ண்டாய், வண்ண ஜாலங்களோடு 'தல'யின் தலகாணி சைஸ் புத்தகத்தைக் கையில் ஏந்திடும்வரை அந்த ரீங்காரமும் ஓய்ந்திடாது!

    * Box set'டாக கார்ட்டூன் ஸ்பெஷல் வரயிருப்பது நம் நண்பர்கள் சிலரின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் என்ற வகையில் எனக்கும் மகிழ்ச்சியே! சாதாரண Boxக்கு பதிலாக கொஞ்சம் பெரிய சைஸ் trunk பெட்டியில் புத்தகங்களைப் போட்டு அனுப்பமுடிந்தால் மற்ற புத்தகங்களையும் போட்டுவைக்க வசதியாக இருக்குமில்லையா? ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. //ஒரு சில இதழ்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு 'கார்ட்டூன் ஸ்பெஷல்'ஐ களமிறக்குவது அனைவருக்கும்/பெரும்பான்மையினருக்கு ஏற்றதொரு முடிவே//
      -1

      Delete
  12. ////கூடுதலாய் ஒரு மாத அவகாசம் கிடைத்திடும் பட்சத்தில் சாவகாசமாய் அச்சிட; பைண்டிங் செய்திட ஏதுவாகத் தானிருக்கும் – but ஜூலையில் "தற்காலிக லீவு" என்ற போர்டைத் தொங்க விட்டாலன்றி கணக்கு உதைக்குமல்லவா?/////--- அருமையான ஐடியாவாக உள்ளது சார் . பெரும்பாலான நண்பர்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் ஒரு மாதம் தற்காலிக விடுமுறை அளிக்கலாம் சார் . நீங்கள் கூறியது போல 0.01%கூட குறையில்லாத மெகா இதழாக அமையும் அல்லவா சார் . தொடர்ந்து பணி செய்யும் உங்களுக்கும் உங்கள் சிறியதொரு அணிக்கும் தேவையான சன்னமான ஓய்வாகவும் அது அமையும் சார் .

    ReplyDelete
    Replies
    1. நண்பா,
      ஆசிரியரின் பி்.கு. கவனிக்கலயா...?
      ஈரோட்டில் இடம் உறுதியானால் இன்னுமொரு ..........,........

      Delete
    2. வணக்கம்.!நண்பர்களே.!ஈரோடு விஜய் அவர்களே.!இரண்டு நாட்களாய் ஆளை காணமே.!

      Delete
    3. வணக்கம் MV அவர்களே! மொபைலில் ஏற்பட்ட சிறு பிரச்சினையை சரிசெய்ய நேரமில்லாத அளவுக்கு வேலைப்பளுவும் சற்று கூடுதலாய் இருந்ததால் இருந்ததால் நேற்றிரவுவரை இங்கே வர இயலவில்லை! ( 'மாடஸ்டி கதையை தூக்குவதில்லை' என்ற முடிவை எடிட்டர் உங்களுக்காகவே எடுத்திருப்பதைப்போல தோன்றுகிறது. வாழ்த்துகள்!!)

      Delete
    4. // பெரும்பாலான நண்பர்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் ஒரு மாதம் தற்காலிக விடுமுறை அளிக்கலாம் சார் .//
      -1

      Delete
    5. Dasu bala @ பள்ளி திறப்பு குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் ,வாட்டர் பாட்டில் ,ஸ்பூன் என சேலம் ஸ்டீலின் உயர் தர பொருட்கள் கடந்த 10நாளாக ஜோரான விற்பனை , கடும் கூட்டம் ,, கடுமையான வேலை எனக்கு . இம்மாத 3புத்தகங்களை அட்டைப்படம் பார்த்ததோடு சரி... எப்படா ஞாயிறு வரும் சற்றே ஓய்வாக இருப்போமே என 10நாட்களுக்கு நினைத்து விட்டேன் . கம்பேக் ஸ்பெஷல் இருந்து ஓய்வு கொஞ்சம் கூட இன்றி ஆசிரியர் பணி செய்து வருகிறார் ..அவர் அணியும் அப்படியே ...அவர்கள் ஒன்றும் எந்திர மனிதர்கள் அல்லவே.... ரிஃபெரஷ் எவ்வளவு முக்கியமான ஒன்று என சத்தியமாக உணர்ந்து கொண்ட தருணம் இது ....நிச்சயமாக சுயநலம் காரணமாக நான் எழுதவில்லை .... வாய்ப்பு இருந்து , பெரும்பாலான நண்பர்கள் விரும்பினால் மட்டுமே விடுமுறை .....

      Delete
  13. டெக்ஸ் டாப்5.
    1.பழிக்கு பழி(எத்தனை முறை படித்தாலும், போரடிக்காது.டெக்ஸின் தன்னம்பிக்கை,தைரியம் கதை படிக்கும்போது நம்மையும் தொற்றிகொள்ளும்)
    2.பழிவாங்கும் புயல்(டெக்ஸின் வழக்கமான டமால் டுமீலாக இருந்தாலும், இரு தரப்பிலும் உயிர்பழி நேராமல், அவர் ஆடும் கேம் நன்றாக இருக்கும்)
    3.இரத்தமுத்திரை(தறுதலையாக இருக்கும் ஒரு சகோதரன், தன் சகோதரிக்காக,உயிரை தியாகம் செய்யும் கட்டம் மனதை உருக்கும்.
    4.டிராகன் நகரம்.(காரணம் சொல்லவும் வேண்டுமா, நான் ஸ்டாப் ஆக்சன்)
    5.நள்ளிரவு வேட்டை(குறைந்த பட்சம் 50முறையாவது படித்திருப்பேன்.அருமையான கதை, எல்போராவை மறக்க இயலாது.
    டெக்ஸின்நிறை;எதையூம் பாஸிட்டிவ் அப்ரோச்சோடு பார்ப்பது, கதை படிக்கும்போது, டெக்ஸின், தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் பார்த்து,அந்த அளவுக்கு, இல்லையென்றாலும், ஒரளவுக்காவது நம்பிக்கையை வளர்த்து கொள்வது.
    குறை:-பழிக்கு பழி கதைக்கு பிறகு, ஒரு சரிசமமான வில்லன், டெக்ஸுக்கு கிடைக்காதது.அதனால், டெக்ஸ் கதையில்,ஒரு விறுவிறுப்பு குறைந்துவிடுகிறது என்பது என் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
    Replies
    1. @ Dr.Sundar

      விளக்கங்களோடு கூடிய உங்கள் டாப்-5 லிஸ்ட் - அருமை!

      Delete
    2. @ Dr.Sundar

      வரும் புத்தகத்தில் வரும் 110 பக்க கதையில் வலிமையான ஒரு எதிரியை சந்திக்கலாம் நணபரே....

      Delete
    3. டியர் சார் நேற்று இரவுதான் 3புத்தகங்களும் கிடைத்தன (உபயம் -தேசன் புக் ஷாப் )11.30க்கு ஜில் லாரைபடிக்க தொடங்கினேன் .சார் நீண்ட நாள்களுக்கு பிறகு நள்ளிரவில் வாய் விட்டு சிரித்தேன் .என் பின்னால் குடும்பமே பூரி கட்டை இன்னபிற ஆயுதங்ஆயுதங்கள் உடன் ஆஜர்ரான காட்சி வாழ்வில் மறக்க இயலாது இதற்கு தங்களுக்கு ஸ்பெஷல் நன்றி சார் .டெக்ஸ்பற்றிய பதிவு சூப்பர் இதோ பேனா வோடு உட்கார்ந்து விட்டேன் ஒரு. இனிய கட்டுரையுடன் வருகிறேன்

      Delete
    4. ஸ்பைடர் அப்படித்தான் இன்னும்,இன்னும் உங்ககிட்ட நாங்க நிறைய எதிர்பார்க்கிறோம்.

      Delete
  14. ///அந்தக் கல்தாப் பட்டியலில் மாடஸ்டி கிடையாது என்ற சேதியோடு அடியேன் புறப்படுகிறேன்!////-MV சார் வாழ்த்துக்கள் .....நிம்மதியாக இருங்கள்.....

    ReplyDelete
  15. ///4 இதழ்கள் x ரூ.60 = ரூ.240/- என்ற விலை கடைகளில் வாங்குவோர்க்கும் ; ரூ.210/- விலைக்கான (அறிவிக்கப்பட்ட) ஓரிரு இதழ்களின் இடத்தினில் இந்த box-set சந்தாதாரர்களுக்கும் - என்பதே திட்டமிடல்!///--- பாக்ஸ் செட் கேட்டு போராடிய நண்பர்கள் கார்த்திக் சோமலிங்கா , காமிக்லவர் ராகவன் ,ரஃபீக் மற்றும் பெயர் விட்டுப்போன அத்துணை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களால் அன்றோ லயன்-முத்து அடுத்த கட்ட பரிமாணத்தை அடைகிறது , சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பர்களே...பலத்த கரகோசம் எழுப்புகிறோம் அனைவரும் ....க்ளாப்...க்ளாப் ...க்ளாப் ...க்ளாப் ........................................................................................

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் விஜயராகவன்! மேற்கூறிய நண்பர்களுக்காக ஒருமுறை கைதட்ட ஒருபுறம் என் மனது துடித்தாலும்... நானொரு தீவிர குண்டுபுக் ரசிகன் என்பதை மேற்கோள் காட்டி மறுபுறம் என் மனசாட்சி முறைக்கிறது! அதனால் அவர்களுக்காக இங்கே ஒரு ஸ்மைல் மட்டும்! :)

      Delete
    2. இந்த முறை கதாநாயகன் வரிசையில் பிரிச்சு கோர்க்கும் வேலை இல்லை என்பதில் சந்தோஷமே ;)

      Delete
    3. ஆனா நம்ம ஆட்கள் மூன்று கதையில் எது சிறந்தது என்ற விவாதத்தில் இறங்கி விடுவார்கள்.ஹி,ஹி.

      Delete
  16. no books received for june month.not sure what is going on, every month facing issues and really disappointing.

    ReplyDelete
  17. எடிட்டர் சார்,

    மேலே முதலாவதாகக் கொடுத்துள்ள டீஸர் பக்கத்தில் டெக்ஸின் வசனத்தில் வரும் 'என் உள்ளங்கை' என்பதற்குப் பதிலாக 'என் முஷ்டிகள்' அல்லது 'என் குதிகால்' என்றிருந்தால் அது டெக்ஸின் கீர்த்திக்கு ஏற்றதாக இருந்திடுமோ? ( சில வார்த்தைகள் தோற்றுவிக்கும் கற்பனா சக்தியின் வலிமையை தாங்கள் அறியாதவரல்லவே? ;) )

    ReplyDelete
    Replies
    1. தவறாக ஏதேனும் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்! (அப்பாடி! முன்ஜாமீன் வாங்கியாச்சு! )

      Delete
    2. அந்த வரியில் உள்ள உடல் பாகத்தை அடித்து நொறுக்க உள்ளங்கை தானே சிறந்தது விஜய் !!!! எதிரியின் முகத்திற்கு தானே எஸ்பெசலி மூக்கிற்கு தானே முஷடியும் குதிகாலும் உபயோகிக்கும் வழக்கம் உள்ளவர் தலை ....

      Delete
    3. அடித்து நொறுக்க அதென்ன அப்பளமா விஜயராகவன்? ;)
      'அந்த' இடத்தை துவம்ஸம் செய்ய நம்ம தல'யின் ( ஸூ அணிந்த) கால் போதாதா? ;)

      Delete
  18. Good Morning editor Sir
    Box set is good idea and without collecting extra money making the process easy.But stories dropped for this purpose should be added in 2016

    ReplyDelete
  19. ஙே.???? இத்தனை இரவு கழுகுகாளா.???

    ReplyDelete
  20. //அந்தக் கல்தாப் பட்டியலில் மாடஸ்டி கிடையாது என்ற சேதியோடு அடியேன் புறப்படுகிறேன்!//


    அப்போ சிக்பில் கன்ஃபார்மா.??
    நற நற நற ...………………………………!!!

    ReplyDelete
    Replies
    1. சொந்த செலவில் சூனியம் வைப்பீர் போலுள்ளதே.........: (

      Delete
    2. கிட் ஆர்ட்டின்.!உங்கள் கலகம் (எனக்கு)நன்மையில் முடிந்து விட்டது.!நன்றி.!

      Delete
  21. Good Post about TEX! Thank you!

    // So அவை தனித்தனி இதழ்களாய் – ஆனால் ஒரே டப்பாவில் அடைக்கப்பட்ட gift set போல வெளிவந்திடுவது தான் தீர்வு எனத் தீர்மானித்திருந்தேன். //
    Good to hear this!

    ReplyDelete
  22. //4 இதழ்கள் x ரூ.60 = ரூ.240/- என்ற விலை கடைகளில் வாங்குவோர்க்கும் ; ரூ.210/- விலைக்கான (அறிவிக்கப்பட்ட) ஓரிரு இதழ்களின் இடத்தினில் இந்த box-set சந்தாதாரர்களுக்கும் - என்பதே திட்டமிடல்! //

    நல்லது சார். சந்தாதாரர்களுக்கு அவ்வபோது இப்படி சலுகைககள் அளிப்பது மகிழ்ச்சி சார். சந்தா எண்ணிக்கை அதிகரிக்கவும் ஏதுவாக இருக்கும்.!!

    ReplyDelete
  23. காலை வணக்கம் எடி சார் & நண்பர்களே, பதிவை படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  24. டெக்ஸின் நிறைகள் / குறைகள் – உங்கள் பார்வைகளில்?

    குறைகள் : -

    The only improvement, I would suggest will be of the size of art we are publishing currently. What about publishing at the original art size ?. If my memories are correct, பவளச்சிலைமர்மம் was the only one, I had come across with original art size from Lion.

    I had come across the english editions of Tex Willer's சாத்தான் வேட்டை in the art of legend Joe Kubert, in both B/W & Color editions through Dark Horse Comics. When compared with our Lion's edition, I can feel the size of the art & quality of the paper matters most. Than, whether it is in B/W or Color.

    Please avoid releasing Tex Willer in Color, if you are going reduce the art size further, than our currently released B/W size. Example: Recent color edition release of கா.க.காலம்..

    Please give more information about the artist and their achievements in our Tex Willer books. That will certainly open new avenue's for the other work of the artist among our readers. Most artist had achieved a lot, before drawing for Tex.

    நிறைகள்

    Lion had released Tex Willer stories drawn by various legendary artist like Joe Kubert, Manfred Sommer, Alfonso Font, etc. Please continue with that good work.

    Thanks!

    ReplyDelete
  25. // நடையில் ஒரு swagger; மைதீனிடமும், ஸ்டெல்லாவிடமும் ‘பன்ச்’ டயலாக் பேசத் தோன்றும் ஒரு குறுகுறுப்பு; யாரையாவது ‘ணங்’ என்று நடுமூக்கில் குத்துவோமா? என்ற துடிதுடிப்பு குடிபுகுந்துள்ளது//

    நல்லவேளை.! நான் ஆகஸ்டு வரை உங்கள் முன் நிற்கும் வாய்ப்புகள் இல்லை.!!!

    ReplyDelete
  26. //இடைப்பட்ட ஜூலைக்கு அந்த லேபிலில் எதையாவது வெளியிட்டு ஒப்பேற்றுவதும் சாத்தியமில்லை அல்லவா? //

    எந்த லேபிளும் இல்லாமல்., ஆர்டின்., லக்கி., ரின்டின் என சில இதழ்களை ஜூலையில் வெளியிட்டாலும் பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்கிறோம் சார்.!

    //ஈரோட்டில்..."தல" வெளிவர வாய்ப்பில்லாது போயின் கூட அவருக்கொரு மெகா tribute செய்திடவொரு யோசனை எனக்குள் உள்ளது ! //

    வில்லர் ரசிகர்களுக்கு வின்செஸ்டர் வழங்கப் போகிறீர்களா சார்.?? (ஸாரி ஃபார் த மொக்கை) .
    இன்னொரு குண்டு புத்தகம் (தல யோடது) வரப் போகுதா சார்.?

    ReplyDelete
  27. எடிட்டர் சார்.,
    ஜூலைக்கு தல மட்டுமே தனித் தாண்டவம் ஆடப்போகிறாரா.?? அல்லது வேறு ஹீரோக்களும் உண்டா.?

    ReplyDelete
  28. MY TOP FIVE


    ப.சி.மர்மம ( அதிரடிக்கு பஞ்சமில்லா கதை)

    ப.வா.பாவை அ பழி வா புயல் (துப்பாக்கி சண்டகளின்றி புத்தி சாதுர்யத்தால் வெல்வார்)

    மரணமுள் (விஞ்ஞானம் நூறுமுறையாவது படித்திருப்பேன்)

    மந்திர மண்டலம் (ஒரு தந்தையின் பாசக்கனல்)

    கா க காலம் (நட்பின் பரிமாணம்)

    ReplyDelete
  29. வணக்கம் எடிட்டர் சார் பாக்ஸ் செட்டாக கார்ட்டூன் வரவிற்பது மிக்க மகிழ்ச்சி ஈரோட்டில் தலைக்கு இன்னொரு குண்டு புக்கா?

    ReplyDelete
  30. // ஈரோட்டில்..."தல" வெளிவர வாய்ப்பில்லாது போயின் கூட அவருக்கொரு மெகா tribute செய்திடவொரு யோசனை எனக்குள் உள்ளது ! பந்தியில் அமர நமக்கு இடம் உறுதியான பின்பு அதைப் பற்றிப் பேசுவோமே..! //
    எடி சார், பந்தியில் அமர இடம் கண்டிப்பாக,உறுதியாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,இலைக்கு மெகா விருந்து இல்ல விட்டாலும் குறைந்த பட்சம் பாயசம் மட்டுமாவது கொடுப்பிர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    ReplyDelete
  31. //கல்தா பட்டியலில் மாடஸ்டி கிடையாது.//மிக்க நன்றி சார் .உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய............!!!(விசில் அடிக்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம்.)

    ReplyDelete
    Replies
    1. ஹி,ஹி அருமை நண்பரே.அடுத்த சாகசத்திலாவது இளவரசி பளிச்சென்று வரட்டும்.

      Delete
    2. //அடுத்த சாகசத்திலாவது இளவரசி பளிச்சென்று வரட்டும் //

      மஞ்சக் குளிச்சி, கண்டாங்கிச் சேலையோட வந்தா சரிப்படுமுங்களா ரவி அவர்களே? ;)

      Delete
    3. பூனையாரே க்க்கிகிர்ர்ர்,அப்ப நி.நி.யு வில் வார இளவரசியதான் உங்களுக்கு பிடிச்சிருக்கு போல.

      Delete
  32. அப்புறம் எடி சார்,தல டிரிபிள்ஷாட் சாகசம் மகிழ்ச்சி அளிக்கிறது,தல ஆகஸ்டில் தள்ளி போவதில் எனக்கு உடன்பாடில்லை,பொறுமையும் இல்லை.நல்லவேளை நீங்களும் நல்ல முடிவு எடுத்தது மகிழ்ச்சிக்குரியது.

    ReplyDelete
  33. // மெகா tribute செய்திடவொரு யோசனை எனக்குள் உள்ளது ! //
    எடி சார் "Tribute" என்ன தலைக்கு "Tenbute" கூட செய்யுங்கள் நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்.ஹி,ஹி.

    ReplyDelete
  34. அண்ணாச்சியின் ஹேப்பி'யை சற்றே மட்டுப்படுத்திட இதோ என்னாலான முயற்சி! :)

    நேற்றிரவுதான் புத்தகங்களைக் கைப்பற்ற முடிந்தது என்பதால் ...

    முதலில் படித்தது 'துணைக்கு வந்த தொல்லை' . 'காவியில் ஒரு ஆவி' கடும் விமர்சனத்திற்கு ஆளனதையடுத்து, அதளபாதாளத்திற்கு சென்றிருந்த ஜில்ஜோர்டானின் மார்க்கெட்டை மீட்டெக்கும் தலையாய பணி 'து.வ.தொ'க்கு இருப்பதாகத் தோன்றியதால் ஒரு அதீத ஆர்வம் எனக்குள்!

    முதல்பாதிவரை திருடன் ப்ரெடோவும் அவனுடைய கூட்டாளியும் நிறைய இடங்களில் கிச்சுக்கிச்சு மூட்டியிருப்பது உண்மை! 'அப்பாடா' என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தால்... இரண்டாவது பாதியில் புன்னகைக்க(க்கூட) அதிக வாய்ப்பில்லாதபடிக்கு சீரியஸான சேஸிங் காட்சிகளும், வைரத் திருட்டைப் பற்றிய ஃப்ளாஷ்பேக்கும்... ஷ்ஷபா....

    ஆடு திருட வந்த அசலூர்க்காரனை போல எப்போதும் இறுக்கமான முகத்துடன் வலம்வரும் ஜில்ஜோர்டானுக்கு இந்தக் கதையில் பெரிதாய் எந்த வேலையுமில்லை. ஜில்'லின் உதவியாளன் லிபெலுக்கும் அப்படியே! வைரத் திருடர்களைப் பிடிக்க இவர்கள் கி.மு 2000க்கு முந்தைய தந்திரம் ஒன்றினை திட்டமிடுவதைத் தாண்டி உருப்படியாய் துப்பறியவோ சிரிக்க வைக்கவோ இல்லை! ஒன்று - நன்றாகத் துப்பறியட்டும்; அல்லது - சிரிக்கவாவது வைக்கட்டும். இந்த இரண்டிலும் அடங்காமல் கார்ட்டூன் சித்திரங்களோடு வந்து நம்மைக் குழப்புவதே இக்கதைகளின் பலவீனமாகக் கருதுகிறேன் நான்!

    'காவியில் ஒரு ஆவி'யோடு ஒப்பிட்டால் இது நிச்சயம் பரவாயில்லை ரகம்தான்... எனினும், ஜில்ஜோர்டான் இன்னும் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து!

    ReplyDelete
    Replies
    1. ஜில்லார் மதில் பூனை ரகம் தான் இரண்டுலும் அடங்காமல் இருப்பது தான் அவரின் மிகப்பெரிய பலவீனம் என்று நினைக்கிறேன்.

      Delete
    2. // ஒன்று - நன்றாகத் துப்பறியட்டும்; அல்லது - சிரிக்கவாவது வைக்கட்டும். இந்த இரண்டிலும் அடங்காமல் கார்ட்டூன் சித்திரங்களோடு வந்து நம்மைக் குழப்புவதே இக்கதைகளின் பலவீனமாகக் கருதுகிறேன் நான்! //


      இத்தாலி விஜய் @,

      இதையே நான் ஜில்லுப் பயலின் பலமாக கருதுகிறேன்.!!!

      Delete
  35. // மாறுபட்ட பல கதைகள் ஒரே இதழில் இடம்பிடிக்கவிருக்கும் சூழலில் - அவை வெவ்வேறு போட்டிப் பதிப்பகங்களின் படைப்புகளாக இருப்பதைத் தவிர்க்க இயலாதென்பதைப் புரிந்திருந்தேன். So அவை தனித்தனி இதழ்களாய் – //
    எடி சார் வேறு வேறு நிறுவனத்தின் கதைகளாக இருப்பதால் ஒரே குண்டு புக்காக வருவதை அவர்கள் விரும்பமட்டார்கள் என்பதால் இந்த முடிவா?
    ஏது எப்படி ஆயினும் குண்டு புக்குக்கு தான் எனது ஓட்டு,இருந்தாலும் பாக்ஸ் செட் ஒரு வித்தியாசமான நல்ல உணர்வை கொடுக்கும் என்று நம்புவோமாக.

    ReplyDelete
  36. எனது லிஸ்ட்
    1.டிராகன் நகரம்(ஆயிரம் முறை படித்துஇருப்பேன்.!புத்தக நிலையை கொண்டு தற்போது படிப்பது இல்லை.
    2.பழிக்கு பழி.
    3.கழகு வேட்டை.
    4.சாத்தான் வேட்டை.
    5.பவளச்சிலை மர்மம்.
    #டெக்ஸ் வில்லர் நீதியின் மறு உருவம்.
    #நல்லவனாக இருந்தால் மட்டும்போதாது.வல்லவராய் இருக்க வேண்டும் என்பது.
    #மனதில் பட்டதை தன்னிச்சையாக செய்வது.
    #இனப்பாகுபாடு இல்லாமல் மனிதனை மனிதனாக நடத்துவது.வெள்ளையனோ,செவ்விந்தியனோ நீதி நேர்மையை மட்டும் பார்ப்பது.
    #இவை அனைத்தும் சீரியசாக சென்றாலும் கார்சன் வரும்போது சற்று ரிலக்ஸ்சாக ஜாலியாக செல்லும் கதையோட்டம்..மேலும் சொல்வது என்றால் சொல்லிக்கொண்டே போகலாம்.!

    ReplyDelete
  37. // மாறுபட்ட பல கதைகள் ஒரே இதழில் இடம்பிடிக்கவிருக்கும் சூழலில் - அவை வெவ்வேறு போட்டிப் பதிப்பகங்களின் படைப்புகளாக இருப்பதைத் தவிர்க்க இயலாதென்பதைப் புரிந்திருந்தேன். So அவை தனித்தனி இதழ்களாய் – //
    எடி சார் வேறு வேறு நிறுவனத்தின் கதைகளாக இருப்பதால் ஒரே குண்டு புக்காக வருவதை அவர்கள் விரும்பமட்டார்கள் என்பதால் இந்த முடிவா?
    ஏது எப்படி ஆயினும் குண்டு புக்குக்கு தான் எனது ஓட்டு,இருந்தாலும் பாக்ஸ் செட் ஒரு வித்தியாசமான நல்ல உணர்வை கொடுக்கும் என்று நம்புவோமாக.

    ReplyDelete
    Replies
    1. நானும் குண்டு புத்தகத்தின் தீவிரமான ரசிகன்தான்.ஆனால் என்ன செய்வது படைப்பாளிகள் இந்த விஷயத்தில் சின்னபுள்ளதனமா நடந்தது கொண்டால் என்ன செய்ய முடியும்.?"த்ரிஷா இல்லைன்ன திவ்யா"ன்னு மனசை தேத்திக்க வேண்டியதுதான்.!

      Delete
  38. டியர் விஜய், நீங்கள் புத்தகங்களை பற்றி, குறைகளே சொல்வதில்லை. ஆஹா,ஓஹோ வை தவிர, உங்களிடமிருந்து, புத்தகங்களை பற்றி, விமர்சனம் இல்லை, என்று பலர் நினைத்திருக்க, சிலர் பலஇடங்களில், சில பல ரூபங்களில், உங்களை தாக்கியிருக்க, ஜில்லுவை பற்றி, விமர்சித்து, அவர்களுக்கு நீங்க பதில் அளித்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.ஆனால்., கார்ட்டூன் கதைகளில், பக்கத்துபக்கம் சிரிப்பை எதிர்பார்த்தால், விஜயன் சாரே, நம் பக்கத்தில் உட்கார்ந்து, ஒவ்வொருவருக்கும் 'கிச்சுகிச்சு'மூட்டினால் மட்டுமே சாத்தியம்;-)

    ReplyDelete
    Replies
    1. ஹி,ஹி ஆனாலும் உங்களுக்கு குசும்பு அதிகம்தான்.

      Delete
    2. குறைகளும் நிறையவே சொல்லியிருக்கேன் நண்பரே! 'தடாலடி' வழிமுறையில் சொல்வதில்லை என்பதால் பலரது கண்களில் அவை சிக்குவதில்லையோ என்னமோ! ;)

      Delete
    3. //பக்கத்துபக்கம் சிரிப்பை எதிர்பார்த்தால், விஜயன் சாரே, நம் பக்கத்தில் உட்கார்ந்து, ஒவ்வொருவருக்கும் 'கிச்சுகிச்சு'மூட்டினால் மட்டுமே சாத்தியம்;-)//

      +1

      சும்மா கேசுவலா படிச்சிப்போட்டு போவிங்களா., அத வுட்டுப்போட்டு., சிரிப்பு வரல., த்ரில் இல்ல., தூக்கம் வரலன்னு கம்ப்ளைண்ட் பண்ணிக்கிட்டு ...…………!!!

      Delete
    4. மேற்கூறிய கமெண்ட்டு ஜில்லு சோருடான் கதைக்கு மட்டுந்தானுங்க நியாயமாஆஆஆரே.!!!!

      Delete
  39. ஆஹா ...இந்த பதிவு முழுவதும் சந்தோச சாரலை எழுப்புகிறது ...சார் ..

    தி லயன் 250 வெகு விரைவில் கைகளில் சுமக்க போகிறது என்பதை அறியும் பொழுது மனம் இப்பொழுது இருந்தே ஏங்க ஆரம்பிக்கிறது ..அதிலும் தலை யின் முதல் கதையின் உங்கள் ட்ரையல் எழுத்து ஒரு மெகா அதிரடிக்கு எங்களை காத்து கொண்டு இருக்க செல்கிறது .ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் சார் ..

    மாடஸ்தி நீக்கம் இல்லை என்ற செய்தியும் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது .என்னை பொறுத்த வரை மாடஸ்தி கார்வின் என்பவர்கள் லேடி வில்லர் &கார்ஸன் போன்றவர்கள் ..நன்றி சார் ..

    குண்டு புக் வெறியர்கள் பட்டியலில் பலரில் நானும் ஒரு அங்கத்தினர் என்ற முறையில் கார்ட்டூன் ஸ்பெஷல் இதழ் தனி தனியாக வருவது கொஞ்சம் ஏமாற்றத்தையே ஏற்படுத்துகிறது ..

    ஈரோட்டில் தங்களையும் நண்பர்களையும் சந்திக்க ஒரு வருடமாக காத்து கொண்டு இருக்கும் பொழுது நமக்கு இடம் கிடைக்காமல் போய் விடுமா சார் ..அப்படி நடந்தால் எங்கள் போராட்ட குழு தான் விட்டு விடுமா ..:)

    ReplyDelete
    Replies
    1. பரணியாரே தாரையில் இன்று காலை நில அதிர்வாமே,விசாரிச்சதில தல சாகசம் வர சந்தோஷத்தில வீட்ல நீங்க போட்ட ஆட்டம்தான் காரணமாமே ? உண்மையா ?

      Delete
    2. +111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111..................

      Delete
  40. டெக்ஸின் கதை லிஸ்ட் please....

    ReplyDelete
    Replies
    1. கரூர் சரவணன் : யாராச்சும் லிஸ்டைப் போடுங்களேன் !

      Delete
    2. நண்பரே,

      டெக்ஸ் வில்லரின் கதைகள் வரிசையை நண்பர்கள் ஈரோடு ஸ்டாலின் மற்றும் சேலம் டெக்ஸ் விஜய ராகவன் ஆகியோரது கூட்டு முயற்சியில் சில மாதங்களுக்கு (!) முன்பு வெளியிடப்பட்டது

      லிங்க் - http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2013/04/blog-post.html

      Delete
  41. 1.நிலவொளியில் ஒரு நரபலி(நீண்ட நாட்களாக பாக்கட் சைசில் டெக்ஸ் கலர் என்ற பலரின் கனவை ஓரளவுக்கு தீர்த்து வைத்த முதல் கதை)
    2.டிராகன் நகரம்(இதற்கு காரணம் சொல்ல தேவையே கிடையாது)
    3.மரண முள்(இதனை கலரில் படிக்க விரும்பாத நண்பர்கள் யாராவது உண்டா)
    4.நீதியின் நிழலில் (சமீபத்திய வரவில் எனக்கு பிடித்தது)
    5.வைகிங் தீவு மர்மம் (டெக்ஸ் கதையா இது என்று வியந்து படித்தது)

    ReplyDelete
    Replies
    1. rajasekarvedeha : "நிலவொளியில் ஒரு நரபலி " பெரியதொரு வெற்றி பெற்றிருக்காவிடினும், எனக்கு ரொம்பவே பிடித்ததொரு சாகசம் !

      Delete
  42. உண்மையாகவே தல டீசர் பட்டைய கிளப்புது சாரே,சந்தோசத்துல தலைகீழா நிக்கனும்போல தோணுது சாரே,கூடவேஹார்ட் பைண்ட் கவர் வேற,ஐயோ சாரே சந்தோசத்துல என்ன பண்றதுனே தெரியலேயே ?
    உண்மையாகவே தல பேன்ஸ் செம ஹாப்பி அண்ணாச்சி தான் சாரே.

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு அருள்! இன்னுமொரு மெளனப் பார்வையாளர் தன் மெளனம் கலைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! தொடர்ந்து ஜமாயுங்கள்! :)

      Delete
  44. \\\\\\\\\\\\\\ இது வரையிலான டெக்ஸின் சாகஸப் பட்டியல் (நமது இதழ்களில்). \\\\\\\\\\\\\
    \\\\\\\\\\\\\\ அவற்றுள் உங்களது Top 5 தேர்வுகள். \\\\\\\\\\\\\\\

    மேலே உள்ள 2 கேள்விகளுக்கும் நான் பதிலளிப்பதைவிட ஸ்டீல், விஜய், டெக்ஸ் விஜயராகவன், பரணிதரன் போன்றோர் சொன்னால்தான் நன்றாக இருக்கும். (( டாப் 5 இதழ்கள் தேர்வு செய்ய சொன்ன நோக்கமே ஈரோடு புத்தக திருவிழாவில் டெக்ஸ் மறுபதிப்பு ஸ்பெசல் ஒன்று போடும் எண்ணம் உங்கள் மனதில் உள்ளது என்று நினைக்கிறேன்.)) காமெடி ஸ்பெசலை சந்தாவுடன் சேர்த்தது இந்த சந்தேகத்திற்கு வலு சேர்க்கிறது.

    ///////////// டெக்ஸின் நிறைகள் / குறைகள் – உங்கள் பார்வைகளில்? ///////////

    இந்த கேள்விக்கு பதில் நான் சொன்னால்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    ///////// டெக்ஸின் நிறைகள் /////// அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?

    ///////// டெக்ஸின் குறைகள் //////// குறைகளை பட்டியலிட ஆரம்பித்தால் 2 LMS நீளத்திற்கு செல்லும், தங்கள் பட்ஜெட்டை உதைக்கும் என்பதால் விட்டு வைக்கிறேன். (( இந்த கேள்வியின் நோக்கமே யாராவது 4 பேர் டெக்சை திட்ட மாட்டார்களா, அதை நாம் காது குளிர நாம் கேட்போம் என்ற தங்களின் மனநிலைதான் காரணம் என்று நினைக்கிறேன்.))

    இந்த மாத புத்தகங்கள் 3ம் இன்னும் படிக்கவில்லை. ஜில் ஜோர்டானை நினைத்தால்தான் சிறிது வயிற்றை கலக்குகிறது. பெயரை வேற பொருத்தமாக மற்ற இரண்டு கதைகளுக்கும் துணைக்கு வந்த தொல்லை என்று வைத்துள்ளீர்கள். போன பதிவில் பல நண்பர்கள் ஜில்லை புகழ்ந்துள்ளதால் அதன் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இன்று 3 புத்தகங்களையும் படித்த முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. // ஈரோடு புத்தக திருவிழாவில் டெக்ஸ் மறுபதிப்பு ஸ்பெசல் ஒன்று போடும் எண்ணம் உங்கள் மனதில் உள்ளது என்று நினைக்கிறேன்///

      நல்லதொரு கணிப்பு! அப்படித்தானிருக்கும்! அட்ராசக்கை அட்ராசக்கை!!

      Delete
    2. Mugunthan Kumar //டாப் 5 இதழ்கள் தேர்வு செய்ய சொன்ன நோக்கமே ஈரோடு புத்தக திருவிழாவில் டெக்ஸ் மறுபதிப்பு ஸ்பெசல் ஒன்று போடும் எண்ணம் உங்கள் மனதில் உள்ளது என்று நினைக்கிறேன்//

      சாமி...நான் வரலை இந்த ஆட்டத்துக்கு !!

      Delete
  45. //ஈரோட்டில்..."தல" வெளிவர வாய்ப்பில்லாது போயின் கூட அவருக்கொரு மெகா tribute செய்திடவொரு யோசனை எனக்குள் உள்ளது ! //

    எனக்கென்னவோ ஈரோடு விஜய்க்கு பொனெல்லி ஆபீஸில் ஒரு வேலை வாங்கிக் கொடுத்து கண்ணீர் மல்க இத்தாலிக்கு அனுப்பிவைக்கும் ஒரு உன்னதமான வேலையாக இருக்குமோ எனத் தோனுகிறது!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : பள்ளிப்பாளையம், பெருந்துறை வழியாக மிலானுக்கு ஒரு பாயிண்ட் to பாயிண்ட் பஸ் விடச் சொல்லி தரைவழிப் போக்குவரத்துத் துறைக்கு அவசரமாய் ஒரு மகஜர் சமர்ப்பிக்க கையெழுத்துக்கள் நிறைய தேவைப்படும் போல் தெரியுதே..! ஈரோட்டில் அதைத் துவங்கினால் போச்சு !

      Delete
    2. பஸ்ஸோ, மாட்டு வண்டியோ; எப்படியாவது என்னை இத்தாலிக்கு அனுப்பிட்டீங்கன்னா சரிதான்! :)

      Delete
  46. ERODE BOOK FAIR ku THALA(tex) vararoo illayoo...... engalukuu editer sir vanthae aganum........
    Engalukuu Adalum padalum nikalchiya pootaa aganum,,,,,,,,,,,, ahhh...........

    ReplyDelete
  47. வில்லரின் டாப் 5 ஐ மறுபதிப்பு எண்ணத்தில் நீங்கள் கேட்டிருந்தால் என்னுடைய சாய்ஸ் :-
    1. ட்ராகன் நகரம்
    2.கழுகு வேட்டை
    3.பழிவாங்கும் புயல்
    4.வைகிங்தீவு மர்மம்
    5. பழிக்குப் பழி (அ) எமனுடன் ஒரு யுத்தம்.

    ஆனால் இதுவரை வெளியான டெக்ஸ் கதைகளில் என்னைக் கவர்ந்தவை எவையெனக் கேட்டால் லிஸ்ட் நிச்சயம் மாறுபடும். (பின்னர் கூறுகிறேன்.)

    ReplyDelete
  48. இம்மாத மூன்று இதழ்களையும் படித்தாகி விட்டது சார் ..

    கதையை விட்டு மற்ற பகுதிகளை பார்க்கும் பொழுது மூன்று புத்தகங்களும் குறை வைக்க வில்லை ..இரண்டு மூன்று புத்தகங்கள் வரும் பொழுது ஏதாவது ஒரு புத்தகத்தை தவிர மற்றவை அட்டை டூ அட்டை ஸ்டோரி ஆக மட்டுமே வந்து இது வரை கடுப்பேத்திய நிகழ்வு இம்முறை இல்லாமல் மூன்றிலும் விளம்பரங்கள் ..போஸ்ட் பாக்ஸ் ..சி.சிறுவலை ...ஹாட் லைன் என பல்சுவையோடு வந்தது இனிப்பை ஊட்டின .மாதம் தாங்கள் எத்தனை புத்தகங்கள் வெளியிட்டாலும் எப்போதும் இந்த முறையை பின்பற்றுங்கள் சார் ..
    மேலும் தி லயன் 250 இதழ் அடுத்த மாதமே என்ற விளம்பரத்தை கண்டதும் இன்ப அதிர்ச்சி ..மனது துள்ளி குதித்தது .என்னை பொறுத்த வரை அந்த இதழை எப்பொழுது அதை கைகளில் ஏந்துவோம் என்று ஏங்கி கொண்டே இருக்கிறேன் ..

    அடுத்து இம்மாத மூன்று அட்டைபடங்களும் ..சித்திர தரமும் ...அச்சு தரம் என அனைத்தும் மனதை நிறைவு செய்தது ..

    கதைகளை பொறுத்த வரை எனது பார்வையில் மூன்றாம் இடத்தை பெற்ற "விடுதலையே உன் விலை என்ன " கதை சுத்த மொக்கையாகவும் தோன்ற வில்லை ..அட்டகாசமான கதை என்ற தோற்றத்தையும் ஏற்படுத்த வில்லை எனினும் பரவாயில்லை ரகத்தை ஏற்படுத்தியது ..என்னை பொறுத்த வரை சந்தோசமே ...

    இரண்டாம் இடத்தை பிடித்த கதை ப்ளூ கோட் பட்டாளத்தின் "தங்கம் தேடிய சிங்கம் "வழக்கம் போலவே என்னை ஏமாற்ற வில்லை எனினும் நகைச்சுவை இன்னும் தூக்கலாக இருந்து இருக்கலாமோ என்ற எண்ணமும் ஏற்பட்டது கண்டிப்பாக உங்கள் குற்றம் அல்ல ..அதீத எதிர் பார்ப்பு என்ற ஏக்கமும் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம் ..ஆனால் கண்டிப்பாக ஏமாற்ற வில்லை ...


    முதல் இடத்தை பெற்ற ஜில் ஜோர்டன் அவர்களின் சாகஸமான "துனைக்கு வந்த தொல்லை "தான் சர்பரைஸ் ...சித்திரங்கள் கார்ட்டூன் பாணியாக இருந்தாலும் அதிகம் நகைச்சுவையை எதிர் பார்க்காதீர் என்ற தங்கள் அறிவிப்பும் ..அதே மன நிலையில் நானும் படிக்க ஆரம்பித்தால் முதல் முப்பது பக்கங்களும் என்னை வாய்விட்டு சிரிக்க வைத்தது.ஜில் அவர் உதவியாளர் பங்கு குறைவாக இருப்பினும் வில்லனின் இரண்டு அடியாட்களும் பட்டையை கிளப்பி விட்டார்கள் ..தயவுசெய்து இவரை காணாமல் போக வைக்க வேண்டாம் சார் ..

    மொத்ததில் இந்த மாதம் மூன்று அருமையான இதழை கொண்டு வந்த தங்களுக்கு நண்பர்கள் சார்பாக பாராட்டுக்கள தெரிவிக்கும் அதே சமயம் வழக்கம் போல இந்த முறையும் "சிங்கத்தின் சிறு வயதில் "பகுதியை காணாமல் போக வைத்ததிற்கு பலமான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. //"சிங்கத்தின் சிறு வயதில் "பகுதியை காணாமல் போக வைத்ததிற்கு பலமான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன் ..///

      +1. அப்படிப்போடுங்க தலீவரே!

      Delete
    2. தலைவரே! நானும் அப்படித்தான் தேடினேன்.ஆனால் மூன்றுமே முத்து காமிக்ஸ்.250&350 எண்ணிக்கையை அடைய நாலுகால் பாயச்சலில் செல்கிறது.!ஆனால் ஒன்று மட்டும் உண்மை எடிட்டரின் ஹாட்லைன்&சி.சி.வயதில் இல்லாத இதழ்கள் மேக்கப் இல்லாத நடிகை மாதிரிதான் உள்ளது

      Delete
    3. Madipakkam Venkateswaran : இதழ்கள் அழகாக உள்ளன என்பதை இப்படியா சுற்றி வளைத்துச் சொல்வது - விசு பாணியில் ? :-)

      Delete
    4. Paranitharan K //"விடுதலையே உன் விலை என்ன " கதை சுத்த மொக்கையாகவும் தோன்ற வில்லை ..அட்டகாசமான கதை என்ற தோற்றத்தையும் ஏற்படுத்த வில்லை எனினும் பரவாயில்லை ரகத்தை ஏற்படுத்தியது ..என்னை பொறுத்த வரை சந்தோசமே ...//

      அடடே..!! தலீவரும் ஹேப்பி !

      Delete
    5. //"விடுதலையே உன் விலை என்ன " கதை சுத்த மொக்கையாகவும் தோன்ற வில்லை ..அட்டகாசமான கதை என்ற தோற்றத்தையும் ஏற்படுத்த வில்லை எனினும் பரவாயில்லை ரகத்தை ஏற்படுத்தியது//
      +1

      Delete
  49. My top 5 Tex stories
    1. Marana mull
    2. Dragon nagaram
    3. Thalai vaangi kurangu
    4. Maranathin niram pachai
    5. Karsanin kadantha kalam

    ReplyDelete
  50. ///வண்ணத்தில் டெக்ஸ் அட்டகாசம், அமர்களம்.என்னுடைய ஒரே கவலை என்னவென்றால்,இந்த கதைகளில் வரும் டமால், டுமீல்களை, நம் சேலம் விஜய் படித்துவிட்டு, அவருடைய ஷாப்பிற்கு வரும் நபர்கள் ஏதாவது பேரம் பேசினால், என்னடா சொன்னேன்னு, மூக்கில் பஞ்ச் விடாமல் இருக்கவேண்டும் என்பதுதான்.򐠯////----- ஆசிரியர் சார் உங்களின் டமால் ,டூமீல் ,,கும் ,சதக் எண்ணிக்கை போட்டிக்கு என்னுடைய நெருங்கிய நண்பர் எனக்கு அளித்துள்ள பதில் பாருங்கள் .

    ReplyDelete
    Replies
    1. உங்களை பார்க்கும்போது நான் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வருவேன்.

      Delete
  51. இன்றையப் பதிவு முழுவதுமே சந்தோஷச் செய்திகள் என்றான போதிலும், Box set என்ற புதிய ஆறு வழிப் பாதையை, கொடி அசைத்து, துவக்கி வைத்த ஆசிரியரின் இந்த அறிவிப்பு, என்னை சந்தோஷத்தில் திளைக்கச் செய்வதாக அமைந்து விட்டது. மரமண்டை too ஹேப்பி அண்ணாச்சி !

    டெக்ஸ் ஐப் பற்றிய கட்டுரைப் போட்டி என்று வந்து விட்டப்பின், எதையுமே எழுதாமல் இருந்து விட்டால் இந்த வலையுலகமும், நம் வருங்கால சந்ததியும் என்னை மன்னிக்காது என்று டைகர் ரசிகர்கள் ஆங்காங்கே கூக்குரலிடுவது, தூரத்தில் எதிரொலியாய் கேட்கிறது. எனவே நான் தேர்ந்தெடுக்கப் போவது, வரிசையில் மூன்றாவதாக உள்ள தலைப்பே என்பதில் தான் விஷயமே இருக்கிறது :)

    ஏற்கனவே Mugunthan kumar, துண்டைப் போட்டு இடம் பிடித்திருந்தாலும், இன்னும் கூட 29 சீட்டு காலியாகவே இருக்கிறது என்பதால், சாவகாசமாக எழுதலாம் என்றிருக்கிறேன். எப்படியும் என் கட்டுரைக்கு பரிசு கிடைக்கப் போவதில்லை, குறைந்தப் பட்சம் டைகராவது வெற்றி பெறட்டுமே என்ற நல்ல எண்ணமே எனக்கு தூண்டுகோலாக இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி ! நன்றி ! நன்றி !

    ReplyDelete
    Replies
    1. அடடே!!

      மிஸ்டர் மரமண்டை இத்தளத்தில் பல மாதங்களாகக் காணாமல் போயிருப்பினும், எடிட்டரே ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு இடத்திலாவது 'மரமண்டை' என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி உங்களை நினைவுபடுத்தாமலில்லை! தவிர, விருது வழங்கி கெளரவித்தவர்களை அவ்வளவு எளிதில் மறந்துவிடுவோமா என்ன?! ;)

      Delete
    2. எப்படி மரமண்டை உன்னால மட்டும் இப்படி செய்ய முடியுது. முதல் நாள் மரமண்டை பெயரில் வந்து ஆசிரியருக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிற, மறுநாள் வேறு பெயரில் வந்து ஆசிரியர திட்டுற, என்னமோ.... போ.... நவீனகிளிமண்டை உன் திறமை இங்கு எவருக்கும் வராது.

      Delete
    3. டெக்ஸின் நிறைகள் / குறைகள் – உங்கள் பார்வைகளில்?

      நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். டெக்ஸ் வில்லரின் குறைகளைப் பற்றி இங்கு விலாவாரியாக ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்திருந்தேன்... அதன் தலைப்புக் கூட அழகாக உருவெடுத்து இருந்தது. அதாவது ''விசிலடிச்சான் குஞ்சுகளின் தலைவன் டெக்ஸ் வில்லர்'' என்ற தலைப்பின் கீழ், டெக்ஸ் வில்லரின் குறைகளைப் பெரிதாக அலச ஆவலாக இருந்தேன்... ஆனால்,

      இங்கு ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ள, பரிசுக்கு மிகப் பொருத்தமான கட்டுரைகளைப் படித்துப் பார்த்து, ஒரு கணம் திகைத்து நிற்கிறேன். ஒரு சாதாரண காமிக்ஸ் ஹீரோ, ரசிகர்களின் மனதில் இவ்வளவுப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மானசீகமாக அவர்களை வழி நடத்த முடியுமென்றால், அவரின் குறைகள் - இது இதுவென்று பட்டியலிடுவது, சிறுபிள்ளைத்தனமான விஷயமாக உணர்கிறேன். எனவே,

      டெக்ஸ் வில்லர் மீது, புழுதியை வீசி எறிந்து, நான் சிறுமை அடைய, என் மனம் ஒப்பவில்லை. எவன் ஒருவனால், பெருவாரியான மக்களை, நல்வழியில் வழிநடத்த முடிகிறதோ, அவனே மிகச் சிறந்த தலைவனாக உருவெடுக்கிறான் ; அம்மக்களை, அவனே - நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், அநீதியை எதிர்த்துப் போராடும் தீரர்களாகவும், நேர்மையாலர்களாகவும் மாற்றி, தத்தம் வாழ்க்கையில் வெற்றி பெற வைக்க இயலுமானால், அவன் சரித்திரம் போற்றும் தலைவனாக, இந்த உலகம் உள்ளவரை போற்றப் படுபவனாகிறான்.

      காமிக்ஸ் கனவு நாயகன், டெக்ஸ் வில்லரின் புகழை ஒரு கட்டுரைக்குள், எழுதி அடக்க முடியாது என்பதால், இத்துடன் நிறைவு செய்கிறேன். தன்னுடைய எதிரிகளையும், தன்னுடைய வீர தீர பராக்கிரம செயல்களினால், தம்மைப் போற்றிப் பாராட்டி, புகழ் பாட வைக்கும் திறன் கொண்டவராக இருப்பதே, டெக்ஸ் வில்லரின் நிறைகள் என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி !!

      Delete
  52. ஆசிரியருக்கும்,பதிவில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்..

    ReplyDelete
    Replies
    1. Geethan : மதிய வணக்கங்கள் நண்பரே !

      Delete
  53. 'தங்கம் தேடிய சிங்கம்'...

    சூப்பருக்கும் சுமாருக்கும் நடுவிலே ஒரு ரகம்!
    வழிகாட்டிகளின் கோணங்கித்தனங்கள் வழிநெடுக கிச்சுகிச்சு மூட்டுகின்றன. சிலபல இடங்களில் குபீர் சிரிப்புகளையும் கொண்டுவருகின்றன. பச்சைப்பசேல் வண்ணங்கள் கண்களுக்கு குளிர்ச்சி!
    ப்ளூகோட்ஸின் சமீபத்திய கதைகளில் black humour அறவே இல்லாமலிருப்பது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது ( எதேட்சையாக அமைந்தததா அல்லது உங்களுடைய மெனக்கெடலா எடிட்டர் சார்?)

    ப்ளூகோட்ஸ் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள இம்முறையும் தவறவில்லை எ.எ.க!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : ப்ளூ கோட்ஸ் தொடரின் எல்லா கதைகளும் black humor template -ஐப் பின்தொடர்வதில்லை என்பதே நிஜம் ! So எல்லாப் புகழும் கதாசிரியருக்கே !

      Delete
  54. டியர் விஜயன் சார்,

    முத்து 350, தனித்தனி புத்தகங்களின் பாக்ஸ் தொகுப்பாக வெளிவரப் போகிறது என்ற மட்டில் மகிழ்ச்சி. வெளியீடு எண் தான் இடிக்கிறது; பரவாயில்லை, நாலு கதைகளுக்கு - 250a, 250b, 250c & 250d என்று வைத்துக் கொள்ளலாம்! இந்த இரகசியத் (!) திட்டத்தைப் பற்றிய தகவலை நீங்கள் முன்னரே பதிவுகளில் கசிய விட்டிருந்தால், போன வாரப் பதிவில் வீணாக இ.அ. ஏற்றிக் கொண்டு கமெண்டு போடாமலாவது இருந்திருக்கலாம்! ;)

    அவரவர் படைப்புக்கள், வெவ்வேறு பதிப்பகங்களின் படைப்புகளுடன் இணைந்து வருவதை பொதுவாக அப்பதிப்பகங்கள் விரும்புவதில்லை என்பதான வியாபாரக் கட்டுப்பாடு, வருங்காலத்தில் "மிக்ஸ் அண்ட் மேட்ச்" குண்டு புத்தகங்கள் வெளிவரும் சாத்தியக்கூறுகளை, ஐம்பது சதவிகிதமாக கூறு போட்டுக் குறைத்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி! ஒரே பதிப்பகமாக இருந்தாலும், இதே வழிமுறையை பின்பற்றினால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. //250a, 250b, 250c & 250d//
      350a,b,c,d :)

      Delete
    2. மடிப்பாக்கம் சார்... ஓடிப்போய் ஒரு கோணிப்பையை எடுத்துட்டு வாங்க... கார்த்திக் சோமலிங்கா வந்திருக்கார்... விடாதீங்க... அமுக்குங்க... :D

      Delete
    3. வணக்கம் .!கார்த்திக் சோமலிங்கா அவர்களே.!!

      Delete
    4. @ M.V

      கோணிப்பையில் போடறதுக்கு முன்னாடி ஒரு கும்பிடும் போட்டுட்டீங்களா! வெரிகுட்! அப்படித்தான் இருக்கணும்! சரி, சட்டுபுட்டுனு வேலைய ஆரம்பியுங்க... ;)

      Delete
  55. அட்ராசக்க அட்ராசக்க அட்ரா...சக்க .....
    ஓக்லஹோமா ஏதோ கெட்ட வார்த்தை போல தெரியுதே....தலைப்பை மாத்துங்க தலைவா....

    ReplyDelete
    Replies
    1. Ravi Krishnan : ஒரு மாநிலத்தின் பெயர் தானே..? அது பாட்டிற்கு இருந்து விட்டுப் போகட்டுமே நண்பரே..!

      Delete
  56. அன்பின் ஆசானே...
    பதிவின் தலைப்பை பார்த்து ஆஹா நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணாச்சியின் உடல் நிலை பற்றிய பதிவு போலும் என ஆவலுடன் படித்த பின்னர் எழுந்தது எத்தகைய ஏமாற்றம் எனில்;
    1. இங்கு ஆஹா ஓஹோ அமர்க்களம் பேஷ் பேஷ் என்று புகழப்படும் விமர்சனங்களை பார்த்து கதையினை படித்ததும் வெளிப்படும் ஏமாற்றத்தினை போன்றது.
    2. அன்பின் ஆசான் பற்பல முறை சிவகாசியில் நம்மை போன்ற வாசகர்களுக்காக திறந்து பராமரிக்கும் லைப்ரரி போலவே இருக்கும்... இன்னுமா ஆசானே லைப்ரரி திறக்க வில்லை? ஒருவேளை ரொம்ப பெருசா இருக்குமோ!!! திறக்கவே இம்புட்டு நாள் ஆகுதுன்னா உள்ள போய் பார்க்க எம்புட்டு நாள் ஆகுமோ? :P
    3. ஏற்கனவே ஒரு பதிவினில் கூறியவாறு, எறும்பு கடிச்சிடுசிச்ன்னு அன்பின் ஆசான் காலை உதறினால் கூட "ஆஹா ஆஹா என்னமா நம்ம ஆசான் கதகளி ஆடுறாரு பாருங்கய்யா" என்று அலப்பரை கொடுக்கும் பில்டப் ஆசாமிகளை போன்றும்;
    4. Lion 250 இதழுக்கு ஒரு நல்ல பெயர் சூட்ட சொல்லி போட்டி எல்லாம் வச்சு, நம்ம வாசக அபிமானிகள் அயராது தூங்காது பல பெயர்களை சொன்ன பின்னாடி நீங்க நாட்டாமை போல ஒரு தீர்ப்பை சொன்னிங்களே நம்ம மக்கள் முகத்துள கரிய பூசுனா போல; அது போலவும்;
    5. பிட் இணைக்காத பலான படத்தினை போலவும் (நன்றி: டெக்ஸ்; மன்னிச்சு: பரணி பெங்களுரு),
    6. /“சுண்டல் விற்ற சுப்பன்“ ; “பரலோகத்திற்கொரு பார்சல்“ என்ற ரீதியில் தலைப்புகளை வைக்காமல்/ இது தானே வழமை இத்தனை நாளும்??? இப்போ மாற்ற வேண்டிய நிர்பந்தம் என்ன வந்தது என போராட தயார் ஆகும் போராட்ட குழுவினரை போன்றும்,
    7. /எத்தனை முகரைகள் மாற்றியமைக்கப்பட்டன?’ என்றதொரு பொது அறிவுப் போட்டியே நடத்திடலாமா என்ற யோசனை/ இந்த வலை பூவினில் அதற்கு எல்லாம் ஏது ஆசானே கணக்கு??? எல்லாத்தையும் துடைத்து போட்டுட்டு வந்தால் தான் இங்கு ஜீவிக்க முடியும் என்பது நமது காமிக்ஸ் காதலர்களுக்கு சாஸ்வதம் அல்லவே??? :P (பழைய வாசகர்கள் இங்கு விஜயம் செய்யாது இருப்பது ஒரு சான்று மட்டுமே!!!)
    8. /அக்குளுக்குள் அடைக்கலம் செய்து பழகிவிட்ட நம் நண்பர்களின் ஒரு பகுதிக்கு/ இது போன்ற முகம் சுளிக்க வைக்கும் வார்த்தை பிரயோகங்களையும் தான் பழகி கொண்டாயிற்று அன்பின் ஆசானே... அது போலவும்,
    9. 500 கமெண்ட் இல் 490 ஐ புகழவே பயன்படுத்தும் தீவிர அபிமானிகளை போலவும் சம்பந்தமே இல்லாது காமெடி என்ற பெயரில் கா(ம)நெடி தெளிக்கும் மக்களின் விமர்சனத்தை போலவும்,
    10. எப்புடி அட்டு கதைகளுக்கு எல்லாம் இங்கு ப்ளான் பண்ணி போடும் ஆஹா ஓஹோ புகழ்ச்சிகளை காணாது தாண்டி செல்வதை போலவும் உள. ஆயினும் மிகவும் இலகுவாக எங்களுக்கு மிக குறுகிய காலத்தில் சமஸ்க்ருதம் கற்று தந்த எங்கள் அன்பின் ஆசானுக்கு இந்த எளிய நவீன வள்ளுவனின் கமெண்ட் சமர்ப்பணம்.

    ReplyDelete
    Replies
    1. அடடே...வாங்க சார் ! மைக்ரோ வேவை கொஞ்சம் ஜாஸ்தியாய் ஓட விட்டீர்களோ ?

      Delete
    2. அடடே...வாங்க சார் ! மைக்ரோ வேவை கொஞ்சம் ஜாஸ்தியாய் ஓட விட்டீர்களோ ?

      Delete
    3. ஆஹா ஆஹா... பேரு பெற்றேன் அன்பின் ஆசானே... நீண்ட நாட்களுக்கு பிறகு எமக்கு நீங்கள் தந்த உங்கள் பதிலால் என் உள்ளம் குளிர்ந்தது... நன்றி ஆசானே... இந்த பதிவில் எனக்கு தான் முதல் மரியாதையா??? நன்றி நன்றி!!! (எப்புடி போட்டாலும் எங்கள் ஆசான் பதில் சொல்லுவாருன்னு புகழ்ந்து பாட ஆரம்பிக்காத வரை ஷேமமே, ஷேம் இல்லை மக்களே!!! இது ஷேமம்!!!) :P
      உங்கள் கேள்விக்கு என் மறுமொழி: எங்கள் பாண்டிய நாடு பக்கம் எல்லாம் விறகு அடுப்பு தான் ஆசானே. ஏனெனில் அதில் தான் அனல் அதிகம் :)

      Delete
    4. சரியோ தவறோ...
      உங்கள் கருத்துகளை தைரியமாக பதிவிடுகிறீர்கள்.
      வரவேற்கிறேன்.
      பதிவுகள் நீளமாய் உள்ளதால் படிக்காமல் விட்டு விடும் நிலையும் பல முறை ஏற்படுகிறது.
      சற்றே சுறுக்கி எழுதுங்களேன்...

      Delete
    5. எப்படி மரமண்டை உன்னால மட்டும் இப்படி செய்ய முடியுது. முதல் நாள் மரமண்டை பெயரில் வந்து ஆசிரியருக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிற, மறுநாள் வேறு பெயரில் வந்து ஆசிரியர திட்டுற, என்னமோ.... போ.... நவீனகிளிமண்டை உன் திறமை இங்கு எவருக்கும் வராது.

      Delete
  57. //அனல் பறக்கும் கதைகளாய் இந்த வாரம் முழுவதும் பார்த்தும் / படித்தும் எனக்கே நடையில் ஒரு swagger; மைதீனிடமும், ஸ்டெல்லாவிடமும் ‘பன்ச்’ டயலாக் பேசத் தோன்றும் ஒரு குறுகுறுப்பு; யாரையாவது ‘ணங்’ என்று நடுமூக்கில் குத்துவோமா? என்ற துடிதுடிப்பு குடிபுகுந்துள்ளது! //
    கொஞ்ச நாட்கள் நான் ஆசிரியர் எதிரே வராமல்இருப்பதே எனக்கு பாதுகாப்பு.
    பல டார்ச்சர் விமர்சனங்களினால் ஆசிரியரை ஏகத்திற்கு கடுப்பேத்தி இருப்பவன் என்ற முறையில் முகரையில் குத்துகள் எனக்கு நிச்சயம்.

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : நேற்றைய சமாச்சாரங்களை நேற்றோடே பார்சல் செய்து விடுவது தான் உத்தமம் சார் ; அதை ஏன் வேதாளத்தைப் போல தோளில் தூக்கிச் சுமப்பானேன் ? விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் இங்கு யாருமிலர் எனும் போது - அதன் பொருட்டு நிச்சயமாய் எவ்வித நெருடல்களுக்கும் அவசியமில்லை ! Chill !

      Delete
  58. எது எப்படியாயினும் எனக்கு RAMZAN பண்டிகைக்கு (ஜூலை18/19)டெக்ஸ் கையில் இருந்தாகணும்....
    அவ்வளவு தான்....
    சொல்லிபுட்டேன்.....

    ReplyDelete
  59. ஹய்!!! நல்ல யோசனை "ரம்ஜான் ஸ்பெஷல்."

    ReplyDelete
  60. டெக்ஸ்ஸின் குறைகளா.?அது நிறைய இருக்கே.!தனிமனிதனாக எதையும் சாதிக்க முடியாமல் நால்வர் குழுவோடு சுற்றுவது,சிரிப்பதற்கு கார்சன் மட்டுமே இருப்பது,வில்லன்களேல்லாம் ரேஞ்சர்னு பதவிய கண்டு பயப்படுவது,எதிரிகளால் சூழ்ச்சி வலையில் சிக்கவைக்கப்பட்டு தேசதுரோகி பட்டம் வாங்கி சிறைக்கே போகாமலிருப்பது.தன்னை விட வலு குறைந்த எதிரிகளை நொருக்குவது,அதிகாரத்தின் மேல்மட்ட நபர்களுடன் மோதாமல் இருப்பது,நவஜோக்களின் தலைவனாக எப்படியானார் என்ற ப்ளாஸ்பேக் இன்னும் தெரியாமல் இருப்பது,செவ்விந்திய மனைவியார்.?கிட் பிறந்த காலம்.?கார்ஸனும் டெக்ஸ்ஸிம் எப்படி நண்பர்களானார்கள்,இனி பப்ளிஸ் பண்ணிணால் பழையகஞ்சியாகிடும் இந்த ப்ளாஸ்பேக் கதைகள் வெளிவராதென்றே நினைக்கிறேன்.இன்னமும் நிறைய குறைகள் தற்போது நினைவுவரவில்லை.இப்போது டெக்ஸ் ரசிகர்கள் சண்டைக்கு வரலாம்.விமர்சனம்த்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாருமில்லை என்று கூறிக்கொண்டு அமர்கிறேன்.!

    ReplyDelete
    Replies
    1. நவஜோக்களின் தலைவன் ஆன பின்னணி ரத்தஒப்பந்தம் கதை தொடரில் உள்ளது நண்பரே !

      Delete
    2. //கார்த்திக்//தணியாத தாகம்,ரத்த ஒப்பந்தம் தொடரில் அவரது மனைவி மகன் பிறந்த கதை வந்துள்ளது.பழிவாஙகும் பாவையில் கர்னல் அலிங்ஸ்டன் என்ற கோட்டையின் தலைமை அதிகாரியுடன் மோதி ஜெயிப்பார்.!

      Delete
  61. எடிட்டர் சார் !,,ஒரு வேண்டுகோள்,.ஆதாம் ஏவாள் காலத்து ஈடன் கார்டன் போல் சந்தோசமாக தங்கள் கருத்துகளை பரிமாறி குதுகலத்துடன் இருக்கும்போது பாம்பு போல் முகம் தெரியாத அல்லது முகமூடி மாட்டிக்கொண்டு,உங்களையும் ,என்போன்ற மற்றகாமிக்ஸ் நண்பர்களையும் வேண்டும் என்றே புண்படுத்தவேண்டும் என போலி ஐ.டி.மூலம் நுழைகின்றனர்..பழைய வாசகர்களில் ஒரு சிலர் பழையகாமிக்ஸை விற்று ருசிகண்டபூனையாய்,காமிகஸ் பற்றையும் மீறி வெறிகொண்டு அலைகின்றனர்.விற்பதை பற்றி ஒன்று சொல்வில்லை அது அவரவர் இஷ்டம்.ஆனால் பொறாமையுடன் நம்மை பிராண்டுவதை ஏற்று கொள்ள முடியாது.பழைய வாசகர்கள் மௌன பார்வையாளர்களாக நம்முடன்தான் உள்ளனர்.!போலி ஐ.டி.யை நீங்கள் கட்டுபடுத்தாவிட்டால் ,கார்த்திக் சோமலிங்க போன்று நல்ல நண்பர்கள் விலகிபோய் விடுவார்கள். நீங்கள் கருத்து சுதந்திரம் கொடுங்கள்.இந்தமாதிரி போலி ஐ.டி.தாங்கள் தொழில் நுட்பத்தில் கிங்கு என்று நினைத்தாலும் அவர்களையும் விட அப்பாடக்கர் சைபர் க்ரைம் போலீஸ் இருக்கிறார்கள்.அது ஏன் நமக்கு.?ஒநாய் மனிதன் கதையில்,ரிப்போர்டர் ஜானி கடைசியாக வில்லனிடம் கூறுவார்."சட்டத்தின் பிடியில் நீ தப்பிவிடலாம் ஆனால் உன்னை அரித்துக்கொண்டு இருக்கும் மனச்சிதைவு நோயிலிருந்து நீ தப்பமுடியாது "என்பார்.அதைப்போலவே நாமும் இதுபோன்ற ஆட்களிடம் மாட்டி சித்தரவதையை அனுபவிக்கும் அவரது குடும்பத்ற்காக கடவுளை வேண்டிக்கொண்டு போய்க்கொண்டே இருப்போம்.!

    ReplyDelete
    Replies

    1. தைரியமான எழுத்துக்களுக்கு வாழ்த்துகள் M.V அவர்களே!
      ///
      சட்டத்தின் பிடியில் நீ தப்பிவிடலாம் ஆனால் உன்னை அரித்துக்கொண்டு இருக்கும் மனச்சிதைவு நோயிலிருந்து நீ தப்பமுடியாது "என்பார்.///
      +1
      காமிக்ஸில் சதா காலமும் ஊறிக்கிடப்பவர்களுக்கு இதுபோன்ற உதாரணங்கள் சாத்தியம்!

      திரை ஒன்று விலகி முகம் ஒன்று தெரியும் நாள் வரும்போது சிரிப்பாய்ச் சிரிக்கக் காத்திருங்கள்...

      Delete
    2. //திரை ஒன்று விலகி முகம் ஒன்று தெரியும் நாள் வரும்போது சிரிப்பாய்ச் சிரிக்கக் காத்திருங்கள்...//

      ஏற்கனவே கடந்த பதிவுகளில் என்னை வெகுவாக புகழ்ந்த நண்பர் ஒருவரின் முகத்தை சைபர் க்ரைம் நண்பர்கள் மூலம் 70%கண்டு கொண்டேன். அவரை நான் சந்திக்கும் போது என்ன பரிசு கொடுக்கலாம். சொல்லுங்கள் நண்பர்களே

      Delete
    3. //ஷல்லூம்.//அந்த பிரச்சினை வேறு.இந்த பிரச்சினை வேறு. அந்த நண்பரை நான் நன்கு அறிவேன்.சில கோடி சொத்துக்களுக்கு ஒரே வாரிசான அவரை நீங்கள்புண்படுத்தியது அபாண்டம் ,அடுக்காது.!!!!

      Delete
  62. டெக்ஸ் கதைகளில் நான் படித்தவற்றில் எனது டாப் 5 கார்சனின் கடந்த காலம், மரணத்தின் முன்னோடி தொடர், சாத்தான் வேட்டை,ரத்த ஒப்பந்தம் தொடர், பனிக்கடல் படலம்,

    ReplyDelete
  63. டெக்ஸ் கதைகளில் எதிர் பார்ப்பது பனிகடல் படலம் போன்ற வித்தியாசமான கதைகளம்.

    ReplyDelete
  64. இந்த மாத புத்தகங்கள் இன்னும் கைக்கு வராத நிலையில் நான் அவற்றை பற்றி என்ன சொல்ல ... (வெள்ளியன்று சென்னையில் இருந்து ஊருக்கு கிளம்பும் வரை வரவில்லை, நேற்று அல்லது இன்று வந்திருந்தால் நாளை சென்னை சென்ற பின்புதான் படிக்க இயலும்)

    ‘The Lion 250’ – காத்திருக்கிறோம் சார் ....


    டெக்ஸ் வில்லரின் top 5 தேர்வுகள் எனது பார்வையில் ....

    1) கழுகு வேட்டை – நான் முதன் முதலாக படித்த டெக்ஸ் கதை. இன்றும் என மனதில் பசுமையாக நினைவிருக்கும் இதழ்
    2) கார்சனின் கடந்த காலம்
    3) டிராகன் நகரம்
    4) சிவப்பாய் ஒரு சிலுவை
    5) மரண முள்


    டெக்ஸ் வில்லரின் நிறைகள்

    1) நேர்மைக்காக போராடுவது
    2) எவருக்கும் வளைந்து கொடுக்காத பண்பு
    3) மன உறுதி


    டெக்ஸ் வில்லரின் குறைகள்

    1) ஒரே மாதிரியான கதைகள் (சில சமயங்களில்)
    2) இப்பொழுது வரக்கூடிய செவ்விந்தியர் அல்லாத கதை களங்கள் முன்பு வந்த (செவ்விந்தியர் சம்பத்தப்பட்ட) கதைகளை போன்று அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை. அதற்காக பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. டெக்ஸ் + செவ்விந்தியர் = விறுவிறுப்பு --- எனது பார்வையில்

    ReplyDelete
    Replies
    1. // டெக்ஸ் + செவ்விந்தியர் = விறுவிறுப்பு // சூப்பர்!

      Delete
  65. டெக்ஸ் வில்லரின் நிறை குறை இரண்டும் என்னை பொறுத்தவரை ஒன்றுதான் அது நமது நமது நடிகர்கள் விஜய், விஷால் போன்று அதிரடி என்றபேரில் அயன் பண்ணிய சட்டை கூட கசங்காமல் சாகசம் செய்வது .

    ReplyDelete
  66. கார்டூன் ஸ்பெஷல் சந்தாவில் ஒரு பகுதி எனும்போது பர்சை பதம் பார்க்காது என்று ஒரு பக்கம் சந்தோசமாகவும் இன்னொரு புறம் கல்தா ஆக போகும் நாயகர்கள் அல்லது கதைகளை நினைத்தால் மனம் பீதியாகிறது!

    ReplyDelete
  67. விடுதலையே உன் விலையென்ன ?:

    சித்திரங்கள் அற்புதம், வியக்க தக்க சில சித்திர பெட்டிகளும் இருந்தன.

    நான் மிகவும் எதிர் பார்த்த single shot கதை ஏமாற்றமே கிட்டியது.La Grande Évasion என்ற தொடரில் எட்டாவதாக வந்த ஒரு கதை La Ballade de Tilman Razine. ஒரு போராளி காவியம் நமை(ME TOO) ஈர்க்கவில்லை (!)

    ReplyDelete
    Replies
    1. Green Manor, தேவ இரகசியம் தேடலுக்கல்ல , ஒரு சிப்பாயின் சுவடுகளில்...! இரவே..இருளே..கொல்லாதே..! வானமே எங்கள் வீதி..! வரிசையில் (பென்சர் இந்த வரிசையில் என்னால் சேர்க்க முடியவில்லை) நான் மற்றுமொரு மைல்கல் இதழை எதிர்பார்த்தேன் Editor sir.

      Please keep such one or two new genre/ single shot books in 2016 schedule Edit sir.

      Delete
  68. Top 5 தேர்வுகள்:

    கார்சனின் கடந்தகாலம்..!
    நில் கவனி சுடு ..!
    aspire to read below books:
    கழகு வேட்டை.
    ட்ராகன் நகரம்
    வைகிங் தீவு மர்மம்




    டெக்ஸின் நிறைகள் :
    1.He gives hope and confidence
    2.He stands for truth
    3.He defines his own moral
    4.He solves the problems in his brutal way

    குறைகள்

    1.Some of books have monotonous story line, its boring
    2.He solves the problems in his brutal way(!)

    ReplyDelete
    Replies
    1. didn't miss typed நிறைகள் 4th point and குறைகள் 2 point

      Delete
  69. சூரியனை கண்டதும் இருள் விலகுவது போல் டெக்ஸ் என்னும் நேர்மறை எண்ணம் மனக்கவலைகளை நீக்கும். டெக்ஸ் பற்றிய உங்கள் அறிவிப்பு எனக்கு ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி !

    ReplyDelete
  70. டெக்ஸின் டாப் 5 என்று எதுவுமே இல்லை , ஏனெனில் எல்லாமே டாப்தான்.

    மறக்கமுடியாத 5 இதழ்கள் என்றால்

    1) டிராகன் நகரம்

    2) பவளச்சிலை மர்மம்

    3) மரண முள்

    4) பழிக்குப் பழி

    5)தலை வாங்கி குரங்கு

    ReplyDelete
  71. மாலை வணக்கம் ஹேப்பி அண்ணாச்சி _/\_

    // பௌன்சரோ; ஒரு லார்கோவோ; ஒரு கிராபி்க் நாவலோ தரும் சவால்கள் இறுக்கமான விதங்களெனில் இது போன்ற ஜாலிக் கதைகள் / கார்ட்டூன் மேளாக்கள் வேறு விதமான சவால்களை முன்வைப்பது வாடிக்கை ! //

    நாளுக்குநாள் உங்களுடைய எழுத்தாற்றல் மெருகேறிக்கொண்டிருக்கிறது வாத்தியாரே

    ஆங்கிலத்தில் எப்படியோ தெரியவில்லை/படித்ததில்லை

    தமிழில் ஒருசில இடங்களில் உங்களுடைய வாசகம் சான்சே இல்ல அசத்துறீங்க

    // தல’யின் மெகா இதழில் ஒரு கட்டுரைப் போட்டியாவது வைக்காவிட்டால் வரலாறு மன்னிக்காதே ! :-) //

    அருமை மற்றும் உண்மை சார் :)

    ReplyDelete
  72. டெக்ஸின் நிறைகள்:

    * ஏனெனில், அவர் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். தன்னைப் பலி கொடுத்தாவது தன் நண்பர்களைக் காப்பாற்றப் போராடுகிறார் ( உதாரணம் : பவளச் சிலை மர்மம். இக்கதையின் ஹைலைட்டே கார்ஸனைக் காப்பாற்ற இவர் தன்னையே பலிகொடுக்க முடிவுசெய்வதுதான்)

    * ஏனெனில், அவர் நம்பிக்கையின்/மன உறுதியின் உரைவிடமாய்த் திகழ்கிறார். விடாமுயற்சியும், கூரிய மதிநுட்பமும், எதிரிகளைக் கணப்பொழுதில் கணித்துவிடும் ஆற்றலும், ஈடில்லா செயல்வேகத்தையும் தன் ஆயுதங்களாகக் கொண்டிருக்கிறார்.

    * ஏனெனில், டெக்ஸ் கதைகளில் விரசம் துளியும் இருப்பதில்லை!

    * ஏனெனில், தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை செவ்விந்தியர்களின் நலனுக்காக அர்ப்பணிக்கிறார். தீயவர்களிடமிருந்து செவ்விந்தியரைக் காக்கும் அரணாக விளங்குகிறார்.

    * ஏனெனில், நேர்கோட்டில் பயணிக்கும் கதைக் களங்கள் இவருடையவை. 7 முதல் 77 வரை யாரும் புரிந்துகொள்ள ஏதுவாய் இருக்கிறது!

    * நிஜ வாழ்க்கையில் நம்மால் செய்ய இயலாத காரியங்களை (அதாவது... அநீதியைக் கண்டு பொங்குவது) இவர் செய்யும்போது நமக்குள் ஏதோ ஓர் நிறைவு கிடைக்கிறது ( ம்... அப்படித்தான், அவன் முகரையில் ஒரு குத்து விடு தல. அதோ அந்த தாடிக்காரனின் பின்பக்கத்தில் எட்டி ஒரு உதைவிடு தல)

    * ஏனெனில், மேற்கூரிய காரணங்களே பெண்கள் அதிகம் படிக்கும் காமிக்ஸ் நாயகனாக டெக்ஸை நிலைநிறுத்துகிறது.

    * ஏனெனில், மேற்கூரிய காரணங்களே முதல்முறையாகக் காமிக்ஸ் படிப்பவர்களுக்கு தயக்கமின்றி பரிந்துரை செய்யவிழைகிறது.

    * ஏனெனில், மேற்கூறிய காரணங்களே தமிழில் அதிகப்பேரால் விரும்பிப் படிக்கப்படும் ஒரு காமிக்ஸ் நாயகனாக டெக்ஸை நம்பர்-1ல் தொடர்ந்து நிலைநிறுத்துகிறது.

    * ஏனெனில், அவர் டெக்ஸ் !

    ReplyDelete
    Replies
    1. சூப்பர். !பவளச்சிலை மர்மம் கதையில் நீங்கள் குறிப்பிட்ட அந்த சீனை படிக்கும்போது கார்சனுக்கு மட்டும் அல்ல எனக்கும்தான் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வரும்.!!

      Delete
  73. டெக்ஸ் பற்றி விக்கிப்பீடியாவில் மேய்ந்தபோது:
    //It is among the most popular characters of Italian comics, with translations to numerous languages all around the world. The fan base in Brazil is especially large, but it is very popular also in Finland, Norway, Turkey, Croatia, France, Tamil Nadu, Serbia and Spain. //

    டெக்ஸின் ரசிகர்கள் நிறைந்த இடமாக நம் தமிழ்நாட்டையும் பட்டியலில் காணும்போது ஏதோ ஒரு பெருமிதம் எனக்குள்! :)

    ReplyDelete
    Replies
    1. இத்தருணத்தில்...
      டெக்ஸை தமிழுக்கு அறிமுகப்படுத்தி, ஈடிணையற்ற மொழிபெயர்ப்பால் எங்களை கட்டுண்டு கிடக்கச்செய்யும் மந்திரவித்தைக்குச் சொந்தக்காரரான நம் எடிட்டர் அவர்களுக்கு டெக்ஸின் தமிழ் ரசிகர்கள் சார்பாக ஒரு கோடி நன்றிகளை உரித்தாக்குகிறேன்!

      Delete
    2. ஈரோடு விஜய் சூப்பர்.!எல்லா புகழும் எடிட்டருக்கே.!!

      Delete

  74. டெக்ஸின் குறைகள் :

    * அமெரிக்கப் பிராந்தியங்களில் சுற்றிச்சுழலும் இவரது கதைகள் இத்தாலியில் பிரபலமான அளவுக்கு அமெரிக்க மண்ணில் பிரபலமாகாதது!

    * இவரது எதிரியின் பலத்தைப் பொறுத்தே இவரது கதைகளின் வீரியமும் அமைந்திடுவது.

    * எப்போதாவது அணியும் இரவுக்கழுகு உடை தவிர, பெரும்பாலும் மஞ்சள் சட்டையை மட்டுமே அணிந்திருப்பது (யூனிஃபார்மாக இருக்குமோ?;) )

    * வாரக் கணக்கில் பாலைவனப் பகுதியில் தொடர்ந்து பயணித்தாலும் (தாடி இல்லாத) பளபளா முகத்துடனே காட்சி தருவது! (ஒருவேளை... குதிரையில் போய்க்கொண்டே ஷேவ் பண்ணிக்குவாரோ?! ;) )

    * தான் ஆபத்தைத் தேடிச் செல்வதோடு, தன் உடனிருப்பவர்களையும் சேர்த்து ஆபத்தில் இறக்கிவிடுவது!

    * பருவத்தை அடைந்து வெகுநாட்களாகியும் தன் மகன் கிட்டுக்கு காலாகாலத்தில் ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்காமலிருப்பது! ;)

    ReplyDelete
    Replies

    1. ம்க்கூம் .... ... வுன்னும் காதல் இளவரசன் கார்சனுக்கே கண்ணாலாம் ஆகலையாமாம்.! !!

      Delete
    2. கிட் ஆர்ட்டின்.!ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ.............!!

      Delete
  75. டெக்ஸ் கதைகள் டாப் 5

    1. கார்சனின் கடந்த காலம்

    2. டிராகன் நகரம்

    3.வல்லவர்கள். விழ்வதில்லை

    4. நள்ளிரவு. வேட்டை

    5. காலனின் கைகூலி

    ReplyDelete
  76. டெக்ஸ் கதைகள் டாப் 5

    1. கார்சனின் கடந்த காலம்

    2. டிராகன் நகரம்

    3.வல்லவர்கள். விழ்வதில்லை

    4. நள்ளிரவு. வேட்டை

    5. காலன் தீர்த்த கணக்கு

    ReplyDelete
  77. //4 இதழ்கள் x ரூ.60 = ரூ.240/- என்ற விலை கடைகளில் வாங்குவோர்க்கும் ; ரூ.210/- விலைக்கான (அறிவிக்கப்பட்ட) ஓரிரு இதழ்களின் இடத்தினில் இந்த box-set சந்தாதாரர்களுக்கும் - என்பதே திட்டமிடல்!//

    +1.

    //ஆதாம் ஏவாள் காலத்து ஈடன் கார்டன் போல் சந்தோசமாக தங்கள் கருத்துகளை பரிமாறி குதுகலத்துடன் இருக்கும்போது பாம்பு போல் முகம் தெரியாத அல்லது முகமூடி மாட்டிக்கொண்டு,உங்களையும் ,என்போன்ற மற்றகாமிக்ஸ் நண்பர்களையும் வேண்டும் என்றே புண்படுத்தவேண்டும் என போலி ஐ.டி.மூலம் நுழைகின்றனர்.//

    +1. அது மட்டுமில்லாமல் நிறைய வாசகர்கள் பதிவிடாமல் இருப்பதற்குக் காரணம் ஒரு குறிப்பிட்ட ஆட்கள் என்று அவர்கள் சொல்வதும் என்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. தினமும் ஒரு நாளைக்கு பத்து தடவை தளத்திற்கு வருகை புரிந்தாலும் நான் அதிகம் பதிவிடுவதில்லை. என்னை போன்ற நிறைய பேருக்கு எழுதுவதை விட படிப்பதே ஆனந்தம். பெரும்பாலும் எதிர்மறை பதிவுகளை, பதில் அளிக்காமல், கடந்து செல்வதே சரி.

    ReplyDelete
    Replies
    1. @ Mahendran Paramasivam

      // ஒரு நாளைக்கு பத்து தடவை தளத்திற்கு வருகை புரிந்தாலும் நான் அதிகம் பதிவிடுவதில்லை. என்னை போன்ற நிறைய பேருக்கு எழுதுவதை விட படிப்பதே ஆனந்தம். ///

      என்ன எழுதனும்றதை முதலில் யோசிச்சு...
      யோசிச்சதை கண்ணு வலிக்க (மொபைலிலேயே) டைப் செய்து...
      'இதனால ஏதாச்சும் பிரச்சினை வந்திடுமோ'ன்னு யோசிச்சு...
      'போங்கப்பு...நாங்க வாங்காத அடியா'னு மனசை தேத்திக்கிட்டு பப்ளிஷ் பண்ணி...
      முகம் தெரியாத அண்ணாச்சிகளின் 'அன்பான' வார்த்தைப் பிரயோகங்களை 'வலிக்கலையே...' பாணியில் வாங்கிக்கட்டிக்கொண்டு....

      நேரிலோ/ஃபோனிலோ துக்கம் விசாரிப்பவர்களிடம் "சேச்சே! இதெல்லாம் எனக்கு சாதாரணம்" என்று வழிவதைவிட,

      உங்கள் வழிமுறையைப் பின்பற்றியே நானும் 'ஆனந்தப் பட்டுக்கொள்ளலாமோ' என்ற சிந்தனை ஒரு கணமாவது எழாமலில்லை தான்!

      ஆனாலும் நானெல்லாம் திருந்தமாட்டேன்ங்க! ;)

      Delete
    2. மகேந்திரன்.,ஈரோடு விஜய்.!!+1

      Delete
  78. டெக்ஸ்சின் பழைய இதழ்கள் அதிகம் என்னிடம் இல்லை,மேலும் படித்த வரை பெரும்பாலான கதைகள் ஏதேனும் ஒரு வகையில் எனக்கு பிடித்தவையே.எனவே டாப் ஐந்து ஆட்டத்தில் நான் பங்கேற்கவில்லை.

    ReplyDelete
  79. நம்ம ஊரில் மஞ்சள் நன்மையின் அடையாளமாக பார்க்கப்படுவது ஒருவேளை டெக்ஸ் கதைகளின் ஆசிரியருக்கு தெரிந்திருக்குமோ என்னவோ ?! அதன் காரணமாக தீமையை அழிக்கும் டெக்ஸ் மஞ்சள் சட்டை அணிபவராக சித்தரிக்கப்பட்டிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. யோசிக்கசெய்யும் சிந்தனை!

      Delete
  80. டெக்ஸ் வில்லர் டாப் 5 :-

    1. கார்சனின் கடந்த காலம்.
    நண்பனால் ஆபத்து வராத வரை நட்புக்கு ஆபத்தில்லை என்று உரைத்த காவியம். நட்பு., காதல்., நம்பிக்கை துரோகம்., பாசம்., நன்றிக்ககடன் என பல பரிமாணங்களை தன்னகத்தே கொண்ட இக்கதையே எனது முதல் சாய்ஸ்.!

    2. மரண முள்.
    சயிண்ஸ் கலந்த சாகசம். எதிரி மனிதனல்ல என்று கண்டறிவதும் , அதனை அழிப்பதற்கான தீர்வை எதேச்சையாக கண்டறிவதும் அட்டகாசமாக இருக்கும். வில்லருக்கு வேலை குறைவென்றாலும் விறுவிறுப்புக்கு குறைவில்லா கதை.
    3. இருளின் மைந்தர்கள்.

    (இந்த தேர்வு பலருக்கு ஆச்சர்யம் அளிக்கலாம்) தொல்பொருள் ஆராய்ச்சியினர்., கண்டு பிடிக்கும் கோவிலில் இருந்து மம்மி க்கள் உயிர் பெற்று இரவில் நடமாடி., செவ்விந்தியர்களை வசப்படுத்தி விடுவர். ஏற்பட இருக்கும் விபரீதத்தை தடுக்க இருவரில் ஒருவரேனும் உயிரோடு சென்று எச்சரிக்கை செய்யவேண்டுமென வில்லரும் கார்சனும் மாற்றி மாற்றி பின்தங்கி., எதிரிகளை தேக்கி நிறுத்தி பயணம் செய்யும் இடம் அருமையான ஒன்று. மூடநம்பிக்கைக்கு எதிராக அதையே பயண்படுத்தி எதிரிகளை வெல்வது அட்டகாசமான அம்சம்.

    4. நள்ளிரவு வேட்டை .

    நண்பனின் கடைசி ஆசைக்காக., நண்பனின் பண்ணையை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி., அதன் பலன் நண்பனின் குழந்தைக்கு செல்லுமாறு வில்லர் கலக்கிய கதை. நவஜோக்களை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும்., கமான்சேக்களின் உதவியுடன் மிகப்பெரிய கும்பலை சமயோசிதமாக செயல்பட்டு சின்னாபின்னமாக்கும் இந்த சாகசமும் எனது டாப் லிஸ்ட்டில் எப்போதும் உண்டு.

    5.இரத்த நகரம்.

    (இதுவும் ஆச்சர்யமளிக்கலாம்) ஒருவரியில் சொல்லிவிடும் கதைக்கருதான் என்றாலும்., சொல்லப் பட்டிருக்கும் விதம் அட்டகாசம். ரவுடிகும்பலின் பிடியில் இருந்து நகரை மீட்கும் சராசரி கதை. வசனங்கள் பட்டையைக் கிளப்பும். உதாரணம் :- வில்லரை பார்த்து வில்லன் : வின்செஸ்டர், அட்டகாசமான ஆயுதம்தான். ஆனால் என்னுடைய ஆட்கள் அனைவரையும் ஏககாலத்தில் சுட உத்தரவிட்டால் வின்செஸ்டர் பயணற்றுப் போகும்.
    வில்லர் :- அப்படி ஒரு உத்தரவை நீ பிறப்பிக்க முடியாது.
    வில்லன் டோனி :- அவ்வாறு நீ அடித்தச் சொல்ல காரணம்.?
    கார்சன் (பின்னாலிருந்து) :- நான்தான். அப்படியொரு உத்தரவை நீ பிறப்பித்தால்., உன் முதுகில் விரித்த குடையை நுழைக்கும் அளவுக்கு ஓட்டை போட்டுவிடுவேன்.
    இதுபோல கதையெங்கும் வசனங்கள் விளையாடியிருக்கும். இரண்டு பக்கங்களை படித்துவிட்டால் கதையை முடிக்காமல் புக்கை மூட முடியாது.

    டெக்ஸ் வில்லரின் நிறைய கதைகள் என் மனதில் டாப்பாக இருந்தாலும் நீங்கள் கேட்டது ஐந்துமட்டுமே என்பதால் முடிக்க மனமில்லாமல் முடித்துக் கொள்கிறேன்.


    டெக்ஸ் வில்லரின் நிறைகள். :-

    1. ஒரு ஹீரோவுக்கான அனைத்து இலக்கணங்களையும் கொண்டவர்.
    2. "பேரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல " என்ற பஞ்ச்சு க்கு மிகப் பொருத்தமானவர்.
    3. நட்புக்கும் நம்பியவர்களுக்கும் மரியாதை அளிப்பவர்.
    4. நமக்குள் தூங்கிக் கொண்டோ அல்லது தூங்குவது போல் நடித்துக்கொண்டோ இருக்கும் சிங்கம்., எழுந்து உலாவுவது போன்ற குணமுடையவர்.
    5. கண்ணியம் குறையாத நடத்தை., உரிமையுள்ள நட்பை எள்ளி நகையாடுதல்., எடுத்துக்கொண்ட கடமைக்காக எந்த எல்லைக்கும் செல்லும் துணிவு., கம்பீரமான தோற்றம் , 650 கதைகளை தாண்டியும் அதகளம் செய்யும் பெருமை , தன்னிகரற்ற தலைவர் etc ,etc, etc என எப்போதும் எங்களின் எவர்க்ரீன் சூப்பர்ஸ்டார் "டெக்ஸ் வில்லர் "
    "டெக்ஸ் வில்லர் " "டெக்ஸ் வில்லர் " மட்டுமே.!!!

    குறைகள் :-

    1. சில இடங்களில் கார்சனை அளவுக்கு அதிகமாக மட்டம் தட்டுவது.
    2. இத்தாலியில் இருந்து வெறும் பத்து சதவிகித கதைகளில் மட்டுமே தமிழ் பேசியிருப்பது.
    3. கார்சனின் கல்யாணத்தில் அக்கறை கொள்ளாதது.
    4. மகனை சுதந்திரமாக திரியவிடாமல் கூடவே கூட்டிக் கொண்டு அலைவது. (யூத்தோட ஃபீலிங்ஸ் யூத்துக்குத்தானே தெரியும்)
    5. அடுத்த சாகசம் எப்போது வரும் என்று எங்களை ஏங்க வைப்பது. (ரொம்ப பெரிய்ய குறை இதுதான்.)


    நன்றிகள் பல.!!! _/\_

    ReplyDelete
    Replies
    1. //மகனை சுதந்திரமாக திரியவிடாமல் கூடவே கூட்டிக் கொண்டு அலைவது. (யூத்தோட ஃபீலிங்ஸ் யூத்துக்குத்தானே தெரியும்) //

      LOL :D

      Delete
    2. KiD ஆர்டின் KannaN @ அருமையாக சொன்னீங்க!

      Delete
    3. அழகாக, அருமையாக சொன்னீங்க.. .

      Delete
  81. விடுதலையே உன் விலையென்ன? ...

    * பிடித்திருக்கிறது!
    * வித்தியாசமான கதை. ஒரு அக்மார்க் GNக்கே உரித்தான பாத்திரப்படைப்புகள் - அபாரமான சித்திரங்கள் - வித்தியாசமான கோணங்கள் - பிரம்மிக்க வைத்திடும் வண்ணச் சேர்க்கை !
    * கடைசியில் அந்த 'டில்மான் ராஸைன்' யாரென்று தெரியவரும்போது கொஞ்சம் 'புஸ்ஸ்...'தான் என்றாலும், கதைக்கு அதுவும் அவசியமே!
    * (100 வருடங்களுக்கு முன்பே) பனிப்பாளங்களைத் தகர்த்து ஒரு ரயிலையே ஏற்றிச்செல்லும் தொழில்நுட்பத்துடன் ஒரு ஸ்டீமர்-கப்பல் இயங்கியிருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது!
    * ஜார் மன்னர் பயணிக்கும் ஒரு ரயிலில் பிரபலமான கொலைகாரன் ஒருவன் மாறுவேடத்தில் (அதுவும் சமூக அந்தஸ்துள்ள ஒரு முக்கியப் பிரமுகர் வேடத்தில்) வருவதைக்கூடவா அவரது மெய்க்காப்பாளர்களும், படை வீரர்களும் கவனிப்பதில்லை? நம்பமுடியவில்லை!

    ReplyDelete
  82. This comment has been removed by the author.

    ReplyDelete
  83. எங்கே, நானும் ஏதாவதொருக் கதைக்கு விமர்சனம் எழுதலாம்னு பார்த்தால் ஒன்னும் வேலைக்காக மாட்டேங்குது!
    எந்தக் கதையை, எங்கே, எப்படி, எப்போ படிப்பேன்னு என்னக்கே தெரியமாட்டேங்குது, சரியென்று, நேற்றிரவு இதற்காக நேரத்தை ஒதுக்கி நமது ஃபேவரைட் ப்ளு கோட்டின் 'தங்கம் தேடிய சிங்கம்' கையிலெடுத்து ஒரு 30 பக்கத்தை நெருங்கும் போது தூக்கம் சும்மா கண்களை சுழன்றடிக்க புஸ்தகத்தை மூடிவைக்க வேண்டியதாகிவிட்டது .(to be continued (reading))

    என்னுடைய தூக்கத்திற்கு காரணம், கதையின் தாக்கமா, அல்லது நள்ளிரவு நேரம் ஒரு மணி என்பதாலா என்று புரியாமல் தவிக்கிறேன்.

    ReplyDelete
  84. காமிக்ஸ் கதைகளில் பலவிதமான ஹீரோக்கள் சித்தரிக்கப் படுகின்றனர். அனேக ஹீரோக்கள் கற்பனையில் மட்டுமே நிகழும் சாத்தியமுள்ள கதாநாயகர்களாகவே உள்ளனர்.

    உண்மைக்கு நெருக்கமாக இயல்பு நிலையை ஒத்த கதாபாத்திரமாக "டெக்ஸ்" கதைகளில் உலவுவது படிக்கும் வாசகனை தன்னையே அந்த கதாபாத்திரமாக (டெக்ஸ்) ஒன்றச்செய்கிறது.

    அதுவே டெக்ஸ் ரசிகனின் நிஜ வாழ்வில் நெருக்கடியான சூழ்னிலையில் டெக்ஸ்வில்லரின் குண இயல்புகளை அவனிடம் ஏற்படுத்துகின்றன.

    அநீதியை துணிச்சலாக எதிர்க்கும் அவர் குணம், பாதிக்கப்பட்டவனுக்கு உதவும் நல் எண்ணம், நட்பை மதிக்கும் பண்பு, பயமே மனிதனின் முதல் எதிரி அதை ஒழித்தால் வெற்றி நிச்சயம் என்பதை வலியுறுத்தும் அவரது தைரியமான செயல்கள், நேர்மை தவறாது இருப்பது, எவ்வளவு நெருக்கடியான நிலையாக இருந்தாலும் பதட்டப்படாமல் செயல்படுவது, நிறத்தைக் கொண்டோ ,குலத்தைக் கொண்டோ மனிதனை மதிக்காமல் மனிதனின் நல்ல, கெட்ட குணங்களுக்கு ஏற்ப அவனை நடத்தும் தன்மை, சுருக்கமாக ஒரு ஆண்மகனின் ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்தும் நாயகனாக "டெக்ஸ்" சித்தரிக்கப் பட்டிருப்பது அவர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றாலும் அவர் மீது நல் அபிப்ராயத்தை ஏற்படுத்துகிறது.

    என் ஆள் மன தேடல் "டெக்ஸ்" கதாபாத்திரத்தின் குண இயல்புகளே, அதை சித்திரமாக கதைகளில் தரிசிக்கும் போது என் மனம் அடையும் நிம்மதி அலாதியானது.

    சிலர் டெக்ஸ் சட்டத்தை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டினை முன் வைக்கின்றனர். சட்டம் என்பது நீதியை நிலைநாட்டி, வாழும் சூழலை அமைதியாக வைக்கவே. நீதியை நிலை நாட்ட சட்டம் தடையாக இருக்கும் என்றால் அதை மீறுவதில் தவறில்லை என்பது என் கருத்து. உதாரணமாக போக்குவரத்து விதியை மீறி அதி வேகமாக செல்லும் வாகனத்தை அதை விடவும் வேகமாகச் செல்லும் காவலரே; விதியை மீறிய வாகனத்தை தடுத்து, நீதியை நிலை நாட்டுகிறார். "டெக்ஸ்" இதைதான் செய்கிறார். உண்மையில் 'டெக்ஸ்" என்று ஒரு நபர் வாழ்ந்து இருந்தால் அவர் வாழும் இடத்தில் நாம் வாழ்திருக்க மாட்டோமா என்று ஏங்கி இருப்பேன்.


    புரிந்து கொள்ள இலகுவாக , படிக்க சுலபமாக "டெக்ஸ்" கதைகள் உள்ளன. மறுமுறை வாசிப்பிற்கு என்னால் மிக,மிக,மிக,அதிகமாக வாசிக்கப்படுவது "டெக்ஸ்" கதைகளே. ஒவ்வொரு கதையும் எத்தனை முறை வாசிக்கப்பட்டன என்பது கணக்கில்லை.

    அடுத்து என்ன நிகழும்,அடுத்த வசனம் என்ன ,முடிவென்ன் என்று அனைத்தும் மிகத்தெளிவாகத் தெரிந்தும் கூட படிக்கப் போரடிக்காமல் இருக்கின்றன.

    அதற்கு மிக முக்கிய காரணம் கதையின் அமைப்பு,,மற்றும் டெக்ஸ் கதைகளுக்கென்றே பயன்படுத்தப்படும் தெறிக்கும் வசனங்கள். மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிரியிடம் கிண்டலாக டெக்ஸ் சொல்லும் பாணி எப்பேற்பட்ட விசயத்தையும் மிக சுலபமாக செய்யக்கூடிய ஆள் என்று டெக்ஸைப்பற்றி எதிரியிடம் மட்டுமல்லாது நம்மிடமும் தோன்றச்செய்கின்றன.

    நல்லவன் ஜெயிக்க வேண்டுமென்பது நம்முடைய விருப்பமாக உள்ளது. அது டெக்ஸ் கதைகளில் நிச்சயமாக நடந்து விடுகிறது, அதை வாசிக்கும் போது மனம் லேசாகின்றது , நல்லவனாக நாம் வாழ்வதால் தோற்றுப்போவதில்லை என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

    வாழ்வின் மீதான நம் நம்பிக்கைக்கு "டெக்ஸ்" கதைகள் நியாயம் செய்கின்றது.


    ReplyDelete
    Replies
    1. // நல்லவன் ஜெயிக்க வேண்டுமென்பது நம்முடைய விருப்பமாக உள்ளது. அது டெக்ஸ் கதைகளில் நிச்சயமாக நடந்து விடுகிறது, அதை வாசிக்கும் போது மனம் லேசாகின்றது , நல்லவனாக நாம் வாழ்வதால் தோற்றுப்போவதில்லை என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது //
      அருமை!

      Delete
    2. //என் ஆள் மன தேடல் "டெக்ஸ்" கதாபாத்திரத்தின் குண இயல்புகளே, அதை சித்திரமாக கதைகளில் தரிசிக்கும் போது என் மனம் அடையும் நிம்மதி அலாதியானது. /// +1

      Delete
  85. bookum varala onnum varalaa... feeling like living in mars....

    ReplyDelete
  86. இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பரும், டெக்ஸின் அதிதீவிர ரசிகரும், அசைவப் பிரியரும், Aதார்த்தவாதியும் ஆகிய டெக்ஸ் விஜயராகவன் அவர்களை வாழ்த்த வயதுண்டு. அதனால் வாழ்த்துகிறேன்!
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜயராகவன்! :)

    ReplyDelete
    Replies
    1. பிறந்தநாள் வாழ்த்துகள் டெக்ஸ் மாமா.!!! டெக்ஸும் கார்சனும் போல தங்கள் வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்க வேண்டுகிறேன்.

      வாழ்க.! வளர்க.!

      Delete
    2. காலங்காத்தாலே என்னைய வெச்சி காமெடி பண்ணிட்டாங்களே.!
      சரி வாழ்த்துனது வாழ்த்துனதாவே இருக்கும். வாழ்க! வளர்க!

      Delete
    3. தயவுசெய்து பிறந்த நாள் கொண்டாட்டங்களை நண்பர்கள் வருடம் ஒரு முறை மட்டுமே கொண்டாடுமாறு போராட்ட குழுவின் சார்பாக வேண்டி கொள்கிறேன் ...அவரு பிறந்த நாள் கொண்டாடி இன்னும் நாலு மாசம் கூட மிடியலை ...கிர்ர் ...

      Delete
    4. கம்பியூட்டர் அறிவில் ஆரம்ப புள்ளியில் உள்ளவன் நான் . பேஸ் புக் புரோபைல் உருவாக்கிய போது தவறாக அடித்து விட்டேன் . மன்னிக்கவும் நண்பர்களே. ஆயினும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ..

      Delete
    5. //தயவுசெய்து பிறந்த நாள் கொண்டாட்டங்களை நண்பர்கள் வருடம் ஒரு முறை மட்டுமே கொண்டாடுமாறு போராட்ட குழுவின் சார்பாக வேண்டி கொள்கிறேன் ..//

      சூப்பர் தலீவரே! LOL

      Delete
  87. This comment has been removed by the author.

    ReplyDelete
  88. டெக்ஸின் நிறைகள் / குறைகள் – உங்கள் பார்வைகளில்?

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். டெக்ஸ் வில்லரின் குறைகளைப் பற்றி இங்கு விலாவாரியாக ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்திருந்தேன்... அதன் தலைப்புக் கூட அழகாக உருவெடுத்து இருந்தது. அதாவது ''விசிலடிச்சான் குஞ்சுகளின் தலைவன் டெக்ஸ் வில்லர்'' என்ற தலைப்பின் கீழ், டெக்ஸ் வில்லரின் குறைகளைப் பெரிதாக அலச ஆவலாக இருந்தேன்... ஆனால்,

    இங்கு ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ள, பரிசுக்கு மிகப் பொருத்தமான கட்டுரைகளைப் படித்துப் பார்த்து, ஒரு கணம் திகைத்து நிற்கிறேன். ஒரு சாதாரண காமிக்ஸ் ஹீரோ, ரசிகர்களின் மனதில் இவ்வளவுப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மானசீகமாக அவர்களை வழி நடத்த முடியுமென்றால், அவரின் குறைகள் - இது இதுவென்று பட்டியலிடுவது, சிறுபிள்ளைத்தனமான விஷயமாக உணர்கிறேன். எனவே,

    டெக்ஸ் வில்லர் மீது, புழுதியை வீசி எறிந்து, நான் சிறுமை அடைய, என் மனம் ஒப்பவில்லை. எவன் ஒருவனால், பெருவாரியான மக்களை, நல்வழியில் வழிநடத்த முடிகிறதோ, அவனே மிகச் சிறந்த தலைவனாக உருவெடுக்கிறான் ; அம்மக்களை, அவனே - நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், அநீதியை எதிர்த்துப் போராடும் தீரர்களாகவும், நேர்மையாலர்களாகவும் மாற்றி, தத்தம் வாழ்க்கையில் வெற்றி பெற வைக்க இயலுமானால், அவன் சரித்திரம் போற்றும் தலைவனாக, இந்த உலகம் உள்ளவரை போற்றப் படுபவனாகிறான்.

    காமிக்ஸ் கனவு நாயகன், டெக்ஸ் வில்லரின் புகழை ஒரு கட்டுரைக்குள், எழுதி அடக்க முடியாது என்பதால், இத்துடன் நிறைவு செய்கிறேன். தன்னுடைய எதிரிகளையும், தன்னுடைய வீர தீர பராக்கிரம செயல்களினால், தம்மைப் போற்றிப் பாராட்டி, புகழ் பாட வைக்கும் திறன் கொண்டவராக இருப்பதே, டெக்ஸ் வில்லரின் நிறைகள் என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி !!

    ReplyDelete