Sunday, February 22, 2015

காதலுக்குக் கை எதற்கு ?

நண்பர்களே,

வணக்கம். சீனப் புத்தாண்டு சில நாட்களுக்கு முன்பாய்ப் புலர்ந்துள்ளதென்று படித்தேன் ; இந்தாண்டு அவர்களது நம்பிக்கைகளின்படி செம்மறியாட்டின் வருஷமாம் ! நமக்கும் இது போன்ற நம்பிக்கைகளிருப்பின் இந்தாண்டை குதிரைகளின் ஆண்டென்று அறிவித்திருப்போம் ! அதிலும் இந்த மாதம் - திரும்பிய திசையெல்லாம் குதிரைகள் தலைகாட்டி வருவதால் வீட்டுக்குப் புறப்படத் தயாராகும் போது ஆபீஸ் வாசலில் குதிரைகளைத் தேடாத குறை தான் !! மார்ஷல் டைகர் ஒரு பக்கம் 'லொக்கடி..லொக்கடி..' என்று குதிரையில் வலம் வருகிறார் என்றால்  ; இன்னொரு திசையில் பௌன்சரும் 176 பக்கங்களுக்கு நகர்வலம் வருகிறார் திருவாளர் குதிரை மீதேறி ! 'அட..போங்கப்பா..!' என்று இம்மாதத்து black & white இதழான ராபினின் 'எத்தர்களின் எல்லைக்குள்" தலை நுழைத்தால் - அங்கேயும் கதைக்களம் டெக்சாஸ் மாநிலத்தில் என்பதால் - அட்டைப்படத்திலேயே குதிரை மீதேறிய போலீஸ்காரர் காத்திருக்கிறார் ! So 'அவனின்றி ஓரணுவும் அசையாது ! ' என்பது உலகுக்கே பொருந்துமெனில் - 'குதிரையின்றி ஒரு ஹீரோவும் குப்பை கொட்டலாகாது !' என்பதே நம் காமிக்ஸ் நாயகர்களின் தாரக மந்திரமாய் இருக்க முடியும் போலும் ! கடந்த சாகஸத்தில் லார்கோ கூட குதிரைச் சவாரி செய்தாகி விட்ட நிலையில் - நரைமுடி நாயகரும், பச்சை குத்திய பார்ட்டியும் மாத்திரமே இந்த ஜோதியில் இன்னமும் ஐக்கியமாகாது இருக்கும் ஆசாமிகள் என்று நினைக்கிறேன் !  Correct me if I'm wrong please..? 

Jokes apart, இதோ மார்ச்சின் வண்ண இதழ் # 2-ன் அறிமுகப் படலம் ! நமது கிராபிக் நாவல் வரிசையில் (சந்தா B ) இதழ் நம்பர் 2-ம் இதுவே ! சர்ப்பங்களின் சாபம் - 3 ஆல்பங்களில் பயணிக்கும் ஒரே கதையின் 176 பக்கங்களிலான தொகுப்பு ! கதையின் பக்க எண்ணிக்கை அதிகமென்ற போதிலும், பிரேக் இல்லா எக்ஸ்பிரஸ் ரயிலைப் போல 'தட தட'க்கும் சாகஸமிது  ! பிடரியில் அறையும் வன்முறை பாணிகள் ;  அந்நாட்களது கரடு முரடான வாழ்க்கைகளின் சித்தரிப்புகள்  ; 'ஞே' என்று விழிக்கச் செய்த சில பல பகுதிகள் ; கையில்லாவிடினும் காதல் லீலைகளில் துளியும் சளைக்கா  நாயகன் என்று இந்தக் கதையும் ஒரு சர்ச்சையின் குழந்தையாகவே களம் காணக் காத்துள்ளது ! முதல் இதழைப் போலவே இங்கும் அட்டகாச ஓவிய நுணுக்கங்கள் ; ரொம்பவே rustic கலரிங் பாணி ; அனல் பறக்கும் ஸ்கிரிப்ட் என்று அமைந்திருப்பதால் - இதனில் பணியாற்றுவது ஒரு அக்மார்க் சவாலாகவே அமைந்திருந்தது ! வழக்கமாய் இத்தனை நீளமான கதையெனில் அதனை மொழிபெயர்த்திட குறைந்த பட்சம் 3 வாரங்ககளாவது பிடிக்கும் - வெகு சுலபமாய் ! அதிலும் 'மின்னும் மரணம்' மெகா இதழின் மீது ஒரு கண் சதா நேரமும் இருப்பது அவசியமாகும் இத்தருணத்தில் இன்னமும் கூடுதல் நேரத்தை விழுங்கக் கூடும் என்று தான் எதிர்பார்த்தேன் !ஆனால் இந்த firecracker ரகக் கதை பாணியின் சுவாரஸ்யமும்  ; நிறையப் பக்கங்கள் மிகக் குறைவான வசனங்களோடு பயணிப்பதும் கைக்கோர்த்து ஒரே வாரத்தில் பணியை முடிக்க வழிவகுத்துத் தந்தன ! ஓவரான புலமை இது போன்ற கதைகளுக்கு உபத்திரவமே என்ற பாலிசியை இம்முறையும் மறக்கவில்லை  ; கதையினில் வரும் ஒரு சீனப் பெண்மணியின் வசனங்கள் நீங்கலாக ! அந்தப் பெண் கதை நெடுகிலும் தத்துவங்களாய் பொழியும் ஒரு கதாப்பாத்திரம் என்பதால் அவளுக்கு மட்டும் கலப்படமிலா சுத்தத் தமிழ் ஒதுக்கப்பட்டுள்ளது ! 

இதோ - ஒரிஜினல் டிசைன்களோடு நமது கவர்பேஜ் ! முதல் பாகத்தின் அட்டைப்படம் நமது பின்னட்டையிலும், இரண்டாம் பாகத்து டிசைன் நமது front கவராகவும் வந்திருப்பது மாத்திரமே மாற்றம் என்று சொல்லலாம் ! முன்னட்டையின் ஒரு ஓரத்தில் பாவமாய் நிற்கும் அந்த நாய் இந்த ஆல்பத்தில் மட்டுமன்றி ; தொடரக் காத்திருக்கும் அடுத்த ஆல்பத்திலும் ஒரு முக்கிய பங்கேற்பதால் அதனை நீக்கத் தோன்றவில்லை ! வேதாளனோடு டெவில் (வாலி ?) வலம் வந்த நாட்களுக்குப் பின்னே அட்டைப்படத்தில் மிஸ்டர். நாயார் ஒருவர் இடம்பிடிப்பதும் இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்..! Correct me again..if I'm wrong please ?  

பௌன்சர் தொடரினில் தலை காட்டும் வில்லன்கள் அனைவருமே ஒரு மார்க்கமான கொடூரன்கள் என்பதை இம்முறையும் பார்த்திடத் தான் போகிறீர்கள் ! இதோ - துவக்கப் பக்கங்களிலேயே அரங்கேறும் ஒரு பகீர் ஆக்ஷன் sequence ! 
வர்ணக் கலவைகளும் ரொம்பவே ஒரு புராதன காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் விதமாய் - நிறைய pastel  shades + நிறைய dark tones கொண்டிருப்பதைப் பார்க்கப் போகிறீர்கள் ! So பக்கங்களைப் புரட்டும் போதே கதையின் அந்த mood நம்மைத் தொற்றிக் கொள்வது நிகழக் காத்துள்ளது  ! 

என்றேனும் ஒரு கரம் மசாலா நெடியோடு ஒரு சினிமா எடுக்க நம்முள் யாரேனும் தயாராகிடும் பட்சத்தில் இந்த பிரான்கோ-பெல்ஜியக் கையிலா காதலனை மறக்க முடியாதென்று நினைக்கிறேன் ! இப்போதைக்கு இந்த பில்டப் போதும் என்பதால் இந்த டீசர்களோடு பௌன்சர் புராணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு அடுத்த topic பக்கமாய் நம் கவனத்தைத் திருப்புவோமா?  

"மின்னும் மரணம்" முன்பதிவுகள் நம் இலக்கான 500-ஐத் தாண்டி ; இப்போது 600-ஐத் தொட்டு விடும் தொலைவில் நிற்பது சந்தோஷச் சேதி ! So ஏப்ரலின் மத்தியினில் நமது சப்பை மூக்காரின் இந்த மெகா இதழ் வெளிவருவது உறுதி ! இன்னமும் ஒரே ஒரு பாகம் மட்டுமே டைப்செட்டிங் செய்யப்பட வேண்டிய நிலை என்பதால் அது முடிந்தான பின்னே எடிட்டிங் & பிராசசிங் பணிகளை ஜரூராய்த் துவங்கிடலாம் ! இதுவொரு மைல்கல் இதழின் தொகுப்பு எனும் போது இதனுள் என் 'சவ சவப்புகளோ' ; இன்ன பிற filler pages இடம்பிடிப்பதோ நிகழப் போவதில்லை ! ஆகையால் இதிலும் வழக்கமான நமது பார்முலாவைத் தேடிட வேண்டாமே ! 

ஏப்ரலின் மறுபதிப்புப் படலமானது மி.மி.யோடு நிறைவு பெறுவதாக இல்லை ; துணைக்கு கறுப்பு-வெள்ளையில் நமது இரும்புக்கையாரும் ; லாரன்ஸ் -டேவிட் ஜோடியும் வரவுள்ளனர் - 
  • கொள்ளைக்கார மாயாவி 
  • பிளைட் 731 

மறுபதிப்புகளோடு ! 'அதே ஒரிஜினல் மொழிபெயர்ப்பு போதுமே..!' என்ற கொடி உயரப் பறப்பது தொடரவே செய்கிறது ! In fact நண்பரொருவர் - "பொன்னியின் செல்வன்" எத்தனை மறுபதிப்புகள் கண்டாலும் அதே ஒரிஜினல் நடையோடு தானே வருகிறது ; நீங்கள் மட்டும் அந்த golden  oldie வசனங்களை மாற்ற நினைப்பது ஏனோ ? என்ற ஆதங்கத்தோடு எழுதியிருந்தார் !! பழமை மீது காதல் கொள்வதெல்லாம் ஒ.கே. தான் ; ஆனால் தவழப் படித்துக் கொண்டிருந்த நாட்களில் நம் வீட்டுச் சிறுசுகள் கிறுக்கி வைக்கும் ஆத்தி சூடிகளை - ஒரு காவியத்தோடு ஒப்பிடுவது அபத்தத்தின் உச்சமாகாதா ? அந்த nostalgia factor-ஐ ஓரிரு கணங்கள் கோணிப்பைக்குள் போட்டு மூடி விட்டு நிதானமாய் அந்நாட்களது நமது மொழிநடைகளைப் படித்துத் தான் பாருங்களேன் :"மாயாவி சண்டை செய்தார்"...;  "மாயாவி ஓங்கி ஒரு குத்து விட்டார்" என்ற ரீதியிலான வரிகளைப் படிக்கும் போது பல்லெல்லாம் ஆடுவது எனக்கு மட்டும் தானா ? 'தாக்குப் பிடிக்கவே முடியவில்லை' என்று பட்ட இடங்களில் மட்டும் கொஞ்சமாய் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளேன் ; நண்பர்களிடம் விளக்குமாற்றுப் பூசை வாங்கும் ஆபத்துள்ள போதிலும் ! பிளைட் 731 கூடப் பரவாயில்லை ; கொ.மா.வில் நெருடல்கள் ஏராளமா - ஏராளம் ! 

இனி வரும் நாட்களிலும், முழுசாய் எழுத நேரம் கிட்டுகிறதோ - இல்லையோ ; அவசியப்படும் மாற்றங்களை மட்டும் செய்திடவாவது நிச்சயம் முனைவோம் ! புதிதாய் இன்று இந்த மறுபதிப்புகளைப்  படிக்கும் இள வாசகர்கள் கதையின் புராதனத்தைக் கண்டு பேஸ்த்தடித்துப் போவது பற்றாதென்று - சிலந்திவலை படர்ந்து கிடக்கும் வரிகளாலும் சங்கடத்துக்கு ஆளாகிட வேண்டாமே - ப்ளீஸ் ?! பிளைட் 731 கதையில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் விமானம் பாயிண்ட் டு பாயிண்ட் பஸ் போல ஊர் ஊராய் நின்று போவதெல்லாம் இன்றைய jet-setting தலைமுறைகளுக்கு தரையில் உருண்டு புரண்டு சிரிப்பை வரவழைக்கும் விஷயமாகிடும் ஆபத்துள்ள நிலையில் - இதிலாவது அவர்களைக் காப்பாற்றி விடும் சாக்கில் நாமும் கொஞ்சம் தலை தப்பிக் கொள்வோமே (பழமை விரும்பிடும்)  நண்பர்களே ! "ஏற்றி விட்ட ஏணியை உதைக்கிறான் " ; "இவன் முத்திரை பழைய கதைகளிலும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் இதெல்லாம் செய்கிறான் " என்ற அர்ச்சனைகள் வேண்டாமே - please ?! 

அப்புறம் சமீபமாய் வலைக்குள் தலைவிட்டிருந்த வேளையில் கண்ணில் பட்ட சில விஷயங்கள் நமக்கு சுவாரஸ்யம் தந்திடக் கூடுமென்று பட்டது ! அட்டைப்பட டிசைன்களில் படைப்பாளிகள் அதகளம் செய்திடும் பின்னணியைத் தான் சற்றே பாருங்களேன் !! 


இது நாம் சுட்ட தோசை !!
இதே போல நாம் அவ்வப்போது, ஆங்காங்கே சுட்டுள்ள தோசைகள் நிறைய தேறும் ! அவற்றை நேரம் கிடைக்கும் போது எடுத்து விடப் பார்க்கிறேன் !


இப்போதைக்கு சொப்பன உலகிற்கு நடையைக் கட்டுகிறேன்  ! காலையில் நம்மவர்கள் மெல்போர்னில் கலக்கும் போது குறட்டை விட்டுக் கிடக்கக் கூடாதென்பதால் நாலு மணி நேரக் கோழித் தூக்கமாவது போட்டால் தான் உண்டு ! Adios for now all ! See you around ! 

255 comments:

  1. # பேய் தூங்கும் நேரத்தில் அதகள பதிவு.

    # சினிமா படங்களும், காமிக்சும் - ஓடமும், வண்டியும் போலவே. சில டைரக்டர்கள், தங்கள் படங்களின் காட்சி அமைப்பை காமிக்ஸ்-ல் இருந்து சுட்டதாக படித்திருக்கிறேன். 'தளபதி'யின் கதையில் அப்படியே உல்டா.


    # மி.மி. 600*...அட்டகாசம்.

    நான் ஏற்கனவே 2 முன்பதிவு செய்திருக்கிறேன். நம் இலக்கான 500-ஐ தாண்டி இருப்பதை பார்த்தால் இப்போதே இன்னும் சில(பல)வும் வாங்கிப்போடத் தோன்றுகிறது, ஊர்க்கோடி இடம் போல...!?

    (கத புக் வாங்குறது முக்கியந்தேன்...ஆனா வேற யாருக்கும் கெடைக்காத அளவுக்கு வாங்கிப்புடணும். அதான் ஒவ்வொரு காமிக்ஸ்- collector-க்கும் பெரும. கத வாங்குன ஒடனே பத்தாயிரத்துக்கு விக்கமுடியுமோ. கொஞ்ச நா போகணும்....அதுக்கப்புறம் பிளாக்-ல கூட கெடக்காத நெலம வரும். நம்ம அண்ணாச்சி மறுபதிப்புகெல்லாம் மறுபதிப்பு போடமுடியாதுன்னு சொல்லுவாரு...அப்ப விக்கணும். இன்னிக்கு நா வாங்குறேன். நாளக்கி நீ விப்ப. அப்பொறம் உம்மவன் விப்பான். அதுக்கப்புறோம் அவன்மவன் விப்பான். அதையெல்லாம் பாக்க நானிருக்க மாட்டேன். ஆனா 'கத' நான் வாங்குனது. இதெல்லாம் பெருமயா, கடம. ஒவ்வொரு காமிக்ஸ்- collector-ரோட கடம.)

    ReplyDelete
    Replies
    1. "போற்றிப் பாடடி பொண்ணே
      காமிக்ஸ் காதலர் கண்ணே "

      Delete
    2. மேற்கிலிருந்து ம. ராஜவேல். : அந்த 'சிம்மக் குரலை' இங்கே உணராத குறை தான் !! :-)

      Delete
    3. // மி.மி. 600*...அட்டகாசம். //
      +1

      Delete
  2. ஆ! அதிகாலை 3:43க்கு ஒரு பதிவா?!! உண்மையான இரவுக்கழுகே நீங்கதான் சார்! எங்க 'தல' தன் புனிதப் பட்டையை உங்களுக்கு அனுப்பிவைத்து கெளரவிக்கக் கடவது!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : இந்தப் பதிவை நான் டைப் செய்தது நம் அலுவலகத்தில் இருந்து....! பௌன்சரின் அச்சு வேலைகள் நடைபெற்று வருவதால் சாமக்கூத்துக்கள் அவசியமாகிப் போனது !

      காத்திருக்கும் நேரத்தில் பதிவை தயார் செய்து விட்டால் காலையில் கிரிக்கெட்டைப் பார்க்கலாமே என்ற முன்னேற்பாடு தான் !

      Delete
  3. ஹை.! படிச்சிப் போட்டு வாரனுங்.!!!

    ReplyDelete
  4. இதிகாலை 1.15க்கு இந்தப் பக்கமாக வந்தபோது பதிவு வந்திருக்கவில்லை. எனவே, காலையில்தான் பதிவு இருக்கும் என்று பார்த்தால்... காலை வணக்கம் அனைவருக்கும்!

    ReplyDelete
  5. உங்க பதிவுக்காக எல்லாரையும் ஆந்தை மாதிரி விழிக்க வச்சிருக்கீங்க.நன்றி.காத்திருப்பது சுகமே

    ReplyDelete
    Replies
    1. ravanan abujack : பதிவைப் படித்து விட்டு விழித்தால் தான் சிக்கலே...!

      அதில்லாதவரைக்கும் ஆந்தை விழியார் ஹேப்பி அண்ணாச்சி !

      Delete
  6. சுட்ட அட்டைபடங்களின் designகளின் மூலம் கண்டு மெய்மறந்து போனேன் ! march இதழ்கள் எப்போது எங்களை வந்தடையும் ?

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : தொடரும் நாட்களில் அறிவிப்பு வரும் நண்பரே. இம்மாதம் துவக்கம் இயன்றளவுக்கு புத்தகங்களை சரி பார்த்தான பின்னரே சந்தாக்களை அனுப்புவதாக உள்ளோம் ! So - சற்றே பொறுமை ப்ளீஸ் !

      Delete
  7. Dear vijayan sir..மின்னும் மரணம் ஏப்ரலில் மின்ன தயாராகி விட்டது, சந்தோஷமே.கொள்ளைகார மாயாவி வண்ணத்தில் வந்த புத்தகம், மறுபதிப்பிலும் வண்ணத்தில் வந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் வருவதை தவிர்க்கமுடியவில்லை..கார்சனின் கடந்தகாலம் கருப்பு வெள்ளையில் அறிவித்துவிட்டு,இன்பஅதிர்சியாக வண்ணத்தில் வெளியிட்டதுபோல், கொள்ளைகாரமாயாவிக்கும் இன்ப அதிர்ச்சி செய்வீர்கள் என்ற ஆவலுடன்,

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar,Salem. : சின்ன திருத்தம் டாக்டர் ; அந்நாட்களில் வண்ணத்தில் வந்தது "கொள்ளைக்காரப் பிசாசு" தானேயன்றி - கொள்ளைக்கார மாயாவி அல்ல ! So அன்று போலவே இன்றும் கறுப்பு-வெள்ளையில் தான் வெளியாகும் !

      Delete
  8. காலை வணக்கங்கள் நண்பர்களே

    எடிட்டர் சார்
    ஞாயிற்றுகிழமை உங்கள் பதிவை பார்க்காவிட்டால் மண்டைவெடித்துவிடும் போலிருக்கிறது சார்

    ReplyDelete
    Replies
    1. Jaya Sekhar : எல்லாமே காமிக்ஸ் மீதான நேசமும், நண்பர்களோடு கலந்துரையாடும் சந்தோஷமும் செய்யும் வேலை நண்பரே !

      Delete
  9. இனிய காலை வணக்கம் விஜயன் Sir :)
    இனிய காலை வணக்கம் நண்பர்களே :)

    ReplyDelete
    Replies
    1. SeaGuitar9 : போன வாரத்துக்கு இந்த வாரம் தேவலை என்று நினைக்கிறேன் ; இனிய மதிய வணக்கங்களோடு ஆஜராகவாவது முடிந்துள்ளதே ! Good afternoon ramya !

      Delete
  10. சுட்ட கதை
    இதற்கே நீங்கள் தனியாக ஒரு போஸ்ட் போடனும் சார்

    மி.ம
    600 எட்டிப்பிடித்ததே இமாலய காரியம்

    இரும்புக்கையரை அதே ஒரிஜினல் கலரில் கொடுத்தால் நலமே ஐயா!
    கலக்ஷனுக்காக தேடும் நண்பர்களுக்கு இது நல்லதொரு விஷயமாய் அமைந்திடுமே
    ஆவன செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  11. இலக்கண மீறல்கள் இருந்தாலும் பௌன்சர் ஒரு சுவாரஸ்யமான கதை என்பதால் அதை
    வரவேற்க தயார்

    ReplyDelete
    Replies
    1. VETTUKILI VEERAIYAN : ஒற்றைக் கரத்தான் இம்முறையும் உங்களை disappoint செய்திட மாட்டார் !

      Delete
    2. //இலக்கண மீறல்கள் இருந்தாலும் பௌன்சர் ஒரு சுவாரஸ்யமான கதை என்பதால் அதை
      வரவேற்க தயார்//
      +1

      Delete
  12. டியர் எடிட்டர்ஜீ !!!

    மின்னும் மரணம் 500 இலக்கையும் தாண்டி 600 ஐ எட்டியிருப்பது குறித்து மகிழ்ச்சி.ஏப்ரலுக்குள் மேலும் 200 க்கும் அதிக சந்தாக்கள் சேர வாய்ப்பிருக்கிறது.ஆக, இந்த ஆண்டு கோடை காலம் தளபதியின் துணையோடு வறுத்தெடுக்கும் வனாந்தர மேற்கிலும், மெக்ஸிக்கோவிலும் வேர்க்க விறுவிறுக்க நாங்கள் ஒரு சாகச சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்த உங்களுக்கு நெஞ்சார்ந்த சுக்ரியாஸ் !!!

    தளபதியின் அட்டைப்படங்கள் ஹாலிவுட்டிலிருந்து சுடப்பட்டிருப்பது சுவாரசியமான தகவல்.அதுவும் ARIZONA LOVE அட்டைக்கு GONE WITH THE WIND -லிருந்து சுட்டிருப்பது அருமை.எங்கள் தளபதிக்கு "கிளார்க் கேபிள்" கூட மாடல் செய்கிறார்.ரொம்ப பொருத்தம்.அட்டகாசம்.இதேபோல் மஞ்ச சொக்காய்காரருக்கு நம்ம ராமராஜன் நடித்த "கரகாட்டக்காரன்" படத்திலிருந்து ஏதாவது ஒரு சீனை சுட்டு அட்டைப்படத்துக்கு பயன்படுத்தலாமே ஸார் :-) டெக்ஸ் வில்லருக்கு நல்ல பொருத்தமான மாடல் நம்ம ராமராஜன் தானே? ஹிஹி!!!

    ( ஊப்ஸ்ஸ்ஸ்...இந்த "பிட்"டுக்கு "பூனையார்" குழுவிலிருந்து அடியேன் வாங்கப்போகும் அடி உதை எவ்வளவோ...? ;-)

    ReplyDelete
    Replies
    1. //தளபதியின் அட்டைப்படங்கள் ஹாலிவுட்டிலிருந்து சுடப்பட்டிருப்பது சுவாரசியமான தகவல்.அதுவும் ARIZONA LOVE அட்டைக்கு GONE WITH THE WIND -லிருந்து சுட்டிருப்பது அருமை.எங்கள் தளபதிக்கு "கிளார்க் கேபிள்" கூட மாடல் செய்கிறார்.ரொம்ப பொருத்தம்.அட்டகாசம்.இதேபோல் மஞ்ச சொக்காய்காரருக்கு நம்ம ராமராஜன் நடித்த "கரகாட்டக்காரன்" படத்திலிருந்து ஏதாவது ஒரு சீனை சுட்டு அட்டைப்படத்துக்கு பயன்படுத்தலாமே ஸார் :-) டெக்ஸ் வில்லருக்கு நல்ல பொருத்தமான மாடல் நம்ம ராமராஜன் தானே? ஹிஹி!!!//

      +1 :)

      Delete
    2. saint satan : //மஞ்ச சொக்காய்காரருக்கு நம்ம ராமராஜன் நடித்த "கரகாட்டக்காரன்" படத்திலிருந்து ஏதாவது ஒரு சீனை சுட்டு அட்டைப்படத்துக்கு பயன்படுத்தலாமே ? //

      அப்படியானால் கவுண்டமணி வேஷம் கார்சனுக்கா ? செந்தில் வேஷம் யாருக்கோ ? :-)

      Delete
    3. சாத்தான்ஜி,

      நான் பள்ளிபாளையம் பக்கமா வந்து ரொம்ப நாள் ஆச்சில்ல... அதான் துளிர்விட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன். சீக்கிரம் வரேன், ஒரு பின்புற பிறாண்டலை எதிர்கொள்ள ஆயத்தமா இருங்க!

      Delete
    4. வெல்கம் மிஸ்டர் மியாவ் மியாவ் :-)

      Delete
    5. டியர் சாத்தான்ஜி,
      டெக்ஸ் வில்லருக்கு நல்ல பொருத்தமான மாடல் நம்ம ராமராஜன் தானே?
      ஒரு காலத்தில் ராமராஜன் பட ரிலீசுடன் சேர்ந்து தனது படத்தினை வெளியிட சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் தயங்கிய அதிரடி வசூல் மன்னன் நம்ம ராமராஜன் என்பதையும் மறந்து விட வேண்டாமே.!!!! அது போலவே எங்கள் தல”” வசூல் சக்கரவர்த்தி தான்!!!

      Delete
    6. // மஞ்ச சொக்காய்காரருக்கு நம்ம ராமராஜன் நடித்த "கரகாட்டக்காரன்" படத்திலிருந்து ஏதாவது ஒரு சீனை சுட்டு அட்டைப்படத்துக்கு பயன்படுத்தலாமே ஸார் //
      +1

      Delete
  13. வணக்கம் சார் . மின்னும் மரணம் -600முன்பதிவுகள் காலையில் சந்தோஷம் தரும் செய்தி சார் . கலக்டர்ஸ் ஸ்பெசல் -என்ற ஐட்டம் நமக்கும் ஏற்புடையது என்பது தெளிவு சார் . இனி வரும் ஒவ்வொரு ஆண்டிலும் இதுபோன்ற ஒரு ஸ்பெசல் நிச்சயம் வேண்டும் சார் .// மெல்போர்ன் னில் நம்மவர்கள் கலக்கும் போது //-உங்களின் நல்வாக்கு இன்று மெய்க்கட்டும்சார்.இதுவரை தென் ஆப்பிரிக்கர்களை நம்மவர்கள் ,உலக கோப்பையில் அசைக்க இயலவில்லை , இன்று நல்ல வாய்ப்பு. வெல்கம் டூ MCG சார் .

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : // மெல்போர்ன் னில் நம்மவர்கள் கலக்கும் போது //

      காலைப் பொழுதைப் போலவே, மதியமும் கலக்கலாய் அமைந்து விட்டால் - மாலைப் பொழுது நமக்கெல்லாம் ஜாலிலோ ஜிம்கானா தான் !

      Delete
    2. நிச்சயமாக அமையும் சார் . அனல் அடிக்கும் பவுலிங் உடன் தான் ஆரம்பிக்கப்பட்டது சார்

      Delete
  14. All gentlemen good morning , Ian 25th person .

    Sham1881@erode

    ReplyDelete
  15. உண்மைதான் Sir
    அதே வசனங்கள் இன்றைக்கு படிக்கும்போது ஒத்து வரவில்லை
    ஜனவரில் வந்த நமது மறுபதிப்புகளிலும் "மாயாவி சண்டை செய்தார்" போன்று வசனங்கள் இருந்தன
    இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு கதையோட்டத்திற்கு பொருந்துமாறுஅமைந்தால் நன்றாக இருக்கும்
    இப்போதும் நமது பழைய காமிக்ஸ் புத்தகங்கள் எடுத்து படித்தால் அந்த வரிகள் பிடித்திருக்கிருது, பாக்கெட் சைசில் "மாயாவி வில்லனை நோக்கி நடந்தார்" என்ற வரிகள் நன்றாக தான் இருந்தன
    ஆனால் இப்போதைய கதைகளை படித்துவிட்டு
    மறுபதிப்புகளில் "மாயாவி ஓங்கி ஒரு குத்து விட்டார்" போன்ற வரிகள் கதையோட்டத்திற்கு பொருத்தமாக இல்லை, கதையில் எதோ மிஸ்ஸிங் ஆகிற மாதிரி Feeling, அதுவும் ஜானி கதையில் இம்மாதிரியான வசனங்கள் பொருந்தவில்லை

    ReplyDelete
    Replies
    1. // "மாயாவி ஓங்கி ஒரு குத்து விட்டார்" போன்ற வரிகள் கதையோட்டத்திற்கு பொருத்தமாக இல்லை, கதையில் எதோ மிஸ்ஸிங் ஆகிற மாதிரி Feeling //

      எனக்கும் அப்படியே!

      Delete
    2. @ FRIENDS : No worries....வரும் நாட்களில் மாயாவி ஓங்கியே குத்து விட்டாலும், அவை இனி பதம் பார்ப்பது நமது தாடைகளாக இராது ! அவசியப்படும் மாற்றங்களை இயன்ற வரை செய்திடுவோம் !

      Delete
  16. காலை வணக்கம் எடி சார் & நண்பர்களே.பதிவை படிச்சிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  17. // இனி வரும் நாட்களிலும், முழுசாய் எழுத நேரம் கிட்டுகிறதோ - இல்லையோ ; அவசியப்படும் மாற்றங்களை மட்டும் செய்திடவாவது நிச்சயம் முனைவோம் ! //
    நிச்சயமாய் சார்,மாற்றங்கள் அவசியப்படும் பட்சத்தில் மாறிக்கொள்வதே புத்திசாலித்தனம்.அது ஏற்புடையதாயின் வரவேற்கத்தக்கதே.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : நெருடல் எழா ஸ்க்ரிப்ட்களை நோண்டும் அவசியமே இருக்கப் போவதில்லை ; ரொம்பவே புராதனம் தலைவிரித்தாடும் தருணங்களில் மட்டுமே மாற்றங்களைச் செய்திடுவோம் ! So பழமை விரும்பிகளுக்கும் கூட இதனில் பெரியதொரு எதிர்ப்பிராது என்றே நம்புவோம் !

      Delete
  18. // இதே போல நாம் அவ்வப்போது, ஆங்காங்கே சுட்டுள்ள தோசைகள் நிறைய தேறும் ! //
    எடி சார்,சுட்ட தோசையாக இருந்தாலும் அது சுவையான தோசையாக இருப்பது முக்கியம்.

    ReplyDelete

  19. // "மின்னும் மரணம்" முன்பதிவுகள் நம் இலக்கான 500-ஐத் தாண்டி ; இப்போது 600-ஐத் தொட்டு விடும் தொலைவில் நிற்பது சந்தோஷச் சேதி //
    சூப்பர் சார், மிக்க மகிழ்ச்சி வெளியிட்டு தேதிக்குள் இன்னும் நூறு முன்பதிவுகள் வந்தால் இன்னும் மகிழ்ச்சி.தளபதி கொண்டாட்டதோடு கோலாகலமாய் வெளிவருவார்.

    ReplyDelete
  20. // துணைக்கு கறுப்பு-வெள்ளையில் நமது இரும்புக்கையாரும் ; லாரன்ஸ் -டேவிட் ஜோடியும் வரவுள்ளனர் -

    கொள்ளைக்கார மாயாவி
    பிளைட் 731 //
    வாவ் சூப்பர் சார்,ஆனால் ஒரு குட்டி வருத்தம் துணைக்கு கூடவே நமது வலை மன்னரையும்,ஜானி யையும் அனுப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்,வாய்ப்பிருந்தால் முயரிசி செய்யவும்.
    இவனுங்களை திருப்திபடுத்தவே முடியாதோ எனும் உங்கள் மைன்ட்வாய்ஸ் கேட்கிறது,
    என்ன செய்ய மனசு கேட்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : //ஒரு குட்டி வருத்தம் துணைக்கு கூடவே நமது வலை மன்னரையும்,ஜானி யையும் அனுப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்//

      ஒவ்வொரு தீர்மானத்தின் பின்னணியிலும் ஒரு உருப்படியான காரணம் உண்டு ! சமயம் வரும் போது புரிந்து கொள்வீர்கள் நண்பரே.!

      Delete
  21. Replies
    1. கட்டினா பில்டிங் பில்டிங்கா கட்டவேண்டியது, இல்லேன்னா 'follow up'னு ஒரு குச்சிய மட்டும் நட்டுவச்சிட்டு நடையை கட்டிடவேண்டியது... என்ன பழக்கமோ போங்க!

      Delete
    2. ஒற்றைக் குச்சி...ஒன்பது skyscraper ...! "தலைப்பு" தேவலை இல்லியா ?

      Delete
  22. // கதையின் பக்க எண்ணிக்கை அதிகமென்ற போதிலும், பிரேக் இல்லா எக்ஸ்பிரஸ் ரயிலைப் போல 'தட தட'க்கும் சாகஸமிது //
    நீங்க சொன்னா பவுன்சர் ரொம்பவே வேற மாதிரி தான் சார்,கதைக்களம் முற்றிலுமே வேறு மாதிரிதான் உள்ளது,வர்ணக்கலவைகளும் வேறுபாணியில் உள்ளது,பவுன்சரோடு நம்மை பொருத்திக்கொண்டால் மாறுபட்ட ஒரு அனுபவம் நமக்கு கிட்டும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //பவுன்சரோடு நம்மை பொருத்திக்கொண்டால் மாறுபட்ட ஒரு அனுபவம் நமக்கு கிட்டும் என்று நினைக்கிறேன்.///

      அழகாச் சொன்னீங்க ரவி அவர்களே!

      Delete
    2. //நீங்க சொன்னா பவுன்சர் ரொம்பவே வேற மாதிரி தான் சார்,கதைக்களம் முற்றிலுமே வேறு மாதிரிதான் உள்ளது,வர்ணக்கலவைகளும் வேறுபாணியில் உள்ளது,பவுன்சரோடு நம்மை பொருத்திக்கொண்டால் மாறுபட்ட ஒரு அனுபவம் நமக்கு கிட்டும் என்று நினைக்கிறேன்//

      +1

      Delete
  23. // இதுவொரு மைல்கல் இதழின் தொகுப்பு எனும் போது இதனுள் என் 'சவ சவப்புகளோ' ; இன்ன பிற filler pages இடம்பிடிப்பதோ நிகழப் போவதில்லை ! //

    இதனை கண்டிப்பாக ஒத்துக்கொள்ள முடியாது விஜயன் சார்

    எந்த புத்தகம் வந்தாலும் நாங்கள் முதலில் படிப்பது
    உங்களுடைய ஹாட்லைன் பகுதியைத்தான்

    ஆகையால் கண்டிப்பாக இதுபோன்றதொரு மைல்கல் இதழுக்கு
    தங்களின் தலையங்கத்தை கண்டிப்பாக
    நாங்கள் எதிர்பார்க்கிறோம் சார்

    எங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள் என்று நம்புகிறோம்

    நன்றி சார் :))

    ReplyDelete
    Replies
    1. Prabakar T : இதுவொரு அசாத்தியப் படைப்பாளிக் குழுவின், அசாத்திய சாகசம் நண்பரே ! இதனில் அவர்களது footprints மாத்திரமே பிரத்யேகமாய் இருப்பது தான் நாம் அவர்களுக்குச் செய்திடக் கூடிய கெளரவம் !

      'காட்டுக்குப் போனேனா..? ; வில்லை எடுத்தேனா..?' என்ற ரீதியிலான எனது புலிக்கேசிக் கதைகளை இங்கும் விட்டால் அது நெருடலாய் இருக்கும் ! அதற்குப் பதிலாய் மி.மி. அரங்கேறிய நாட்களிலிருந்து சில சுவாரஸ்யத் தகவல்களை ; வரலாற்றுச் செய்திகளை போட்டோக்களோடு போடுவது இன்னும் சிறப்பாய் இருக்குமல்லவா ?

      Delete
    2. \\மி.மி. அரங்கேறிய நாட்களிலிருந்து சில சுவாரஸ்யத் தகவல்களை ; வரலாற்றுச் செய்திகளை போட்டோக்களோடு போடுவது இன்னும் சிறப்பாய் இருக்குமல்லவா \\
      +1

      Delete
  24. இதுவொரு மைல்கல் இதழின் தொகுப்பு எனும் போது இதனுள் என் 'சவ சவப்புகளோ' ; இன்ன பிற filler pages இடம்பிடிப்பதோ நிகழப் போவதில்லை !...... Please try to have few pages ..... this is a big collection and your writing (filler pages) will only make it more worth and interesting. The book deserves it....Atleast you can write about the intersting facts about Tiger, the creators of Tiger and your own experiance of getting those rights and how it became one of the successful hero for Lion comics..

    ReplyDelete
  25. அந்த nostalgia factor-ஐ ஓரிரு கணங்கள் கோணிப்பைக்குள் போட்டு மூடி விட்டு நிதானமாய் அந்நாட்களது நமது மொழிநடைகளைப் படித்துத் தான் பாருங்களேன் :"மாயாவி சண்டை செய்தார்"...; "மாயாவி ஓங்கி ஒரு குத்து விட்டார்" என்ற ரீதியிலான வரிகளைப் படிக்கும் போது பல்லெல்லாம் ஆடுவது எனக்கு மட்டும் தானா ? 'தாக்குப் பிடிக்கவே முடியவில்லை' என்று பட்ட இடங்களில் மட்டும் கொஞ்சமாய் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளேன் ; நண்பர்களிடம் விளக்குமாற்றுப் பூசை வாங்கும் ஆபத்துள்ள போதிலும் !

    This is true...in some places I really felt that those old writings could have been changed. You have all the rights to do the changes to make it more perfect.... this not because you are the Editor, it is because you are the best critic of your own work...Thank you for the Reprints anyway...

    ReplyDelete
    Replies
    1. Comic Rider Arul : புரிதலுக்கு நன்றிகள் !

      Delete
  26. // நம்மவர்கள் மெல்போர்னில் கலக்கும் போது //
    உங்கள் வாக்கு பலிக்கட்டும் சார் :))
    .

    ReplyDelete
  27. சார் ....மார்ச் மாத இதழ்கள் எப்போது கைக்கு கிடைக்கும் என தெரிவித்து இருக்கலாம் ..காத்திருக்கிறோம் ....

    என்னை பொறுத்த வரை மறுபதிப்பில் புது மொழி ஆக்கம் வருத்தமான விஷயமே ...

    மறுபதிப்பு இதழ்களில் அடுத்து வருபவை ஸ்பைடர் மட்டுமே காமிக்ஸ் கிளாசிக் இதழ்களில் வராத ஒன்று என்பதால் அதனை தான் அதிகம் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் ...

    நமது மறுபதிப்பு இதழ்களில் அப்போது வந்த கதைகளுடன் இணைத்து வந்தவை களும் இணைத்து வெளி இடலாமே சார் .உதாரணமாக சைத்தான் வி........கதை உடன் ஆர்ச்சி சாகசமும் இணைந்து வந்த நினைவு ...அதையும் தாங்கள் இணைத்து வெளி இட்டு இருந்தால் கலக்கலாக இருந்திருக்கும் .இனி வரும் இதழ்களில் அதை கடை பிடிக்க முடியுமா சார் ...ப்ளீஸ் ....

    ஒரு தேவை இல்லாத பின் குறிப்பு :

    டைகர் சாகசத்தை விட "பௌன்சர் " சாகசத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் ...

    ஒரு தேவை உள்ள பின் குறிப்பு :

    இன்றைய கிரிக்கெட் ஆட்டத்தில் யார் எத்தனை "கோல்" போட்டால் வெற்றி பெறுவார்கள் என்ற ஆர்வம் எல்லாம் எனக்கு இல்லாதால் தாங்களும் அங்கேயே மூழ்கி விடாமல் இங்கே அவ்வப்போது தலை காட்டுமாறு வேண்டி கொள்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. 'பின் குறிப்பு'கள்லயே பின்னியெடுக்கறீங்க தலீவரே! :)

      Delete
    2. //நமது மறுபதிப்பு இதழ்களில் அப்போது வந்த கதைகளுடன் இணைத்து வந்தவை களும் இணைத்து வெளி இடலாமே சார் .உதாரணமாக சைத்தான் வி........கதை உடன் ஆர்ச்சி சாகசமும் இணைந்து வந்த நினைவு ...அதையும் தாங்கள் இணைத்து வெளி இட்டு இருந்தால் கலக்கலாக இருந்திருக்கும் .இனி வரும் இதழ்களில் அதை கடை பிடிக்க முடியுமா சார் ...ப்ளீஸ் ....//
      +1

      Delete
    3. @ FRIENDS : நிஜத்தைச் சொல்வதானால் புதிய தலைமுறைக்கு நம் சட்டித் தலையன் ஆர்ச்சியை அறிமுகம் செய்து வைப்பதாகயிருப்பின், "கார்ட்டூன் ஸ்பெஷல்" தான் அதற்கு ஏற்ற வாய்ப்பாக இருந்திட முடியும் !!

      ரெகுலர் இதழ்களிலும் நமது இரும்புத் 'தல'யைக் கொண்டு வந்து - நாமே காமெடி ஸ்பெஷல் ஆகிக் கொள்ள வேண்டாமே ?

      Delete
    4. //புதிய தலைமுறைக்கு நம் சட்டித் தலையன் ஆர்ச்சியை அறிமுகம் செய்து வைப்பதாகயிருப்பின், "கார்ட்டூன் ஸ்பெஷல்" தான் அதற்கு ஏற்ற வாய்ப்பாக இருந்திட முடியும் !! ///

      நல்லதொரு தீர்மானம்! அ..அப்படியானால், நமது சட்டித் தலையன் ஆர்ச்சி விரைவில் வண்ணத்தில் வரயிருக்கிறாரா?!!

      Delete
    5. //நல்லதொரு தீர்மானம்! அ..அப்படியானால், நமது சட்டித் தலையன் ஆர்ச்சி விரைவில் வண்ணத்தில் வரயிருக்கிறாரா?!!//
      +1

      Delete
  28. // இதுவொரு மைல்கல் இதழின் தொகுப்பு எனும் போது இதனுள் என் 'சவ சவப்புகளோ' ; இன்ன பிற filler pages இடம்பிடிப்பதோ நிகழப் போவதில்லை ! //

    இதனை கண்டிப்பாக ஒத்துக்கொள்ள முடியாது விஜயன் சார்

    எந்த புத்தகம் வந்தாலும் நாங்கள் முதலில் படிப்பது
    உங்களுடைய ஹாட்லைன் பகுதியைத்தான்

    ஆகையால் கண்டிப்பாக இதுபோன்றதொரு மைல்கல் இதழுக்கு
    தங்களின் தலையங்கத்தை கண்டிப்பாக
    நாங்கள் எதிர்பார்க்கிறோம் சார் #

    பிளஸ் 600 .......

    ReplyDelete
  29. // "மின்னும் மரணம்" முன்பதிவுகள் நம் இலக்கான 500-ஐத் தாண்டி ; இப்போது 600-ஐத் தொட்டு விடும் தொலைவில் நிற்பது சந்தோஷச் சேதி ! So ஏப்ரலின் மத்தியினில் நமது சப்பை மூக்காரின் இந்த மெகா இதழ் வெளிவருவது உறுதி ! //

    மிக்க சந்தோசமான செய்திதான் சார்

    சார் நமது நண்பர்கள் சென்ற பதிவில் கேட்ட அதே கேள்விதான்
    ஏப்ரல் 15ல் புத்தகத் கண்காட்சியில்வெளியிடப்படுமா

    நன்றி சார் :))
    .

    ReplyDelete
    Replies
    1. Prabakar T : புத்தகக் கண்காட்சியின் தேதியே இன்னமும் அறிவிக்கப்பட்டதாய் தெரியாத நிலையில் அது பற்றி திட்டவட்டமாய்ச் சொல்வது பொருத்தமாக இராதே..! ஏப்ரல் 20-க்கு முன்னதாக மி.மி. தயாராகிடும் என்பது மட்டும் உறுதி !

      Delete
  30. எடிட்டர் சார்,

    'மி.ம' முன்பதிவு 600ஐ நெருங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. '300 முன்பதிவுகளையே தாண்டாதுப்பா. இது சொதப்பப்போவது உறுதி' என்று வேறுசில தளங்களில் நமது நண்பர்களில் சிலர் ஆரூடம் சொன்னபோது துளியூண்டாவது வயிற்றில் புளியைக் கரைத்தது உண்மை! இலக்கை எட்டிப்பிடிக்க ஓரிரு மாதங்கள் தாமதமாகியிருப்பினும் எல்லா வகையான எதிர்மறை ஆரூடங்களையும் தவிடுபொடியாக்கி ஒரு வரலாற்று வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பது நிறையவே உற்சாகமளிக்கிறது! நண்பர்களின் அடுத்த கவலையான 'பிசகில்லாத அச்சுத்தரமும்' எப்பாடுபட்டாயினும் உறுதிசெய்யப்பட்டுவிடுமாயின் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் 'ஏப்ரலில் ஒரு தீபாவளி' காத்திருக்கிறது!

    ஃபில்லர்பேஜ் அதிகம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் நண்பர்கள் சிபி, அருள் உள்ளிட்டோர் இங்கே கூறியபடியே, குறைந்தபட்சம் உங்களது 'காமிக்ஸ் டைம்' ஆவது இடம்பெறவேண்டும் சார். உப்பில்லாத ஒரு பத்திய சாப்பாடுபோல செய்துவிடாதீர்கள் ப்ளீஸ்!

    கிளாஸிக் மறுபதிப்புகளில் காலத்திற்கேற்ப சில மொழிபெயர்ப்பு மாற்றங்களைப் புகுத்துவதை நானும் வரவேற்கிறேன் .

    நாம் 'சுட்ட தோசைகளையும்' உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பகிருங்கள் . கண்டு ரசிக்க ஆர்வமாய் இருக்கிறோம்.

    'மிஸ்டர் ப்ளூபெர்ரி' மற்றும் நமது ஜூனியரின் 'கார்ட்டூன் ஸ்பெஷ௬ல்' பற்றிய அறிவிப்பைப்பற்றி..... (ஓ.வா. உலகநாதன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!)

    ReplyDelete
    Replies
    1. //'மிஸ்டர் ப்ளூபெர்ரி' மற்றும் நமது ஜூனியரின் 'கார்ட்டூன் ஸ்பெஷ௬ல்' பற்றிய அறிவிப்பைப்பற்றி..... (ஓ.வா. உலகநாதன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!)//

      +1

      Delete
    2. நண்பர்களின் அடுத்த கவலையான 'பிசகில்லாத அச்சுத்தரமும்' எப்பாடுபட்டாயினும் உறுதிசெய்யப்பட்டுவிடுமாயின் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் 'ஏப்ரலில் ஒரு தீபாவளி' காத்திருக்கிறது!
      +1

      Delete
    3. விஜயன் சார்,
      நான் என் நண்பர்களுக்கு பரிசளிப்பதற்காக சில பிரதிகள் முன் பதிவு செய்துள்ளேன்!
      அச்சு தரம் நன்றாக இருந்தால் நன்று.

      Otherwise non-comic readers may not like it.
      Please take care. Thank you.

      Regards,
      Mahesh

      Delete
    4. @ ALL : யாருக்கும் எதையும் நிரூபிக்கும் பொருட்டல்ல நம் முயற்சிகள் எனும் போது இந்த ஆரூடங்கள்...கணிப்புகள்... இத்யாதிகளை ஜாலியாக எடுத்துக் கொள்வோமே..? முழுசாய் ஐந்தாறு லட்சம் ரூபாய்களை வசூலித்து விட்டு அந்த முயற்சியில் முழுமூச்சாய் நாம் இறங்கிடாது போவோமென்று எதிர்பார்த்தல் தான் practical ஆகுமா ? Relax...!

      Delete
    5. Vijayan Sir,

      Thanks for the clarification.
      Sorry for bothering you.

      With warm regards,
      Mahesh kumar

      Delete
  31. விஜயன் சார்,
    மறுபதிப்பில் சில மாற்றம் அவசியமாகபடுவது உண்மைதான், அதன் முலம் மேலும் சிலர் அதனை வாங்கி குவித்தால் சந்தோசம்தான். இதனை இந்த கதைகளோடு விட்டுவிடாமல் அனைத்து மறுபதிபிலும் தொடர வேண்டும்; பின் நாட்களில் நேரம் இல்லை என இதனை அப்படியே விட்டு விட கூடாது.

    சில பதிவுகளுக்கு முன் மறுபதிப்புக்கு புதிய மொழி பெர்யர்ப்பு வேண்டாம் என கூற காரணம், இதற்கு பிறரைவைத்து செய்வது நன்றாக இருக்காது, மேலும் தங்களின் நேரம் இதில் அதிகம் செலவிட வேண்டாம் என்ற காரணம் மட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. //சில பதிவுகளுக்கு முன் மறுபதிப்புக்கு புதிய மொழி பெர்யர்ப்பு வேண்டாம் என கூற காரணம், இதற்கு பிறரைவைத்து செய்வது நன்றாக இருக்காது, மேலும் தங்களின் நேரம் இதில் அதிகம் செலவிட வேண்டாம் என்ற காரணம் மட்டுமே//

      +1

      Delete
  32. பௌன்சர் அட்டை படம் நன்றாக உள்ளது
    ஒரு ஓரத்தில் அந்த நாய் பாவமாய் நிற்பது போன்று தோன்றவில்லை
    பௌன்சரின் தோழனாக, நண்பனுடன் சேர்ந்து அதகளத்தில் இறங்க ரெடியாக இருப்பது போல் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. அந்த நாய்க்கும் ஒரு கால் இல்லாததைக் கவனித்தீர்களா சகோ? பாவம்ல?

      Delete
    2. கவனித்தேன் சகோதரரே , பௌன்சர் பற்றிய intro அப்போ நீங்கதான் அதை முதலில் கவனித்து அதை சொன்னீங்க சகோதரரே

      நமது பௌன்சர்கிற்கு ஏற்ற தோழன்
      கதையில் நாய் தோழனின் பங்களிப்பு என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது

      Delete
    3. SeaGuitar9 : நாலு கால் பயலின் பெயர் மோச்சோ !

      Delete
    4. ' Mocho'வுக்கு அர்த்தம் தேடியதில் ஸ்பானிஷ் மொழியில் "he's missing an arm, he only has one arm" என்று வருகிறது! என்னவொரு பொருத்தம்!! (அந்தப் படைப்பாளி பயபுள்ளைங்க நாய்க்கு பேர் வைக்கும்போதுகூட என்னாவொரு பர்ஃபெக்ஷனைக் கடைபிடிக்கறாய்ங்க!!)

      Delete
    5. //நாலு கால் பயலின் பெயர் மோச்சோ ! //

      அது மூன்று கால் பயல் தானே ;-)

      Delete
  33. //மெல்போர்ன்னில் நம்மவர்கள் கலக்கும் போது //

    செளத் ஆப்பிரிக்க அணியின் நேர்த்தியான ஃபீல்டிங் மற்றும் பெளலிங்கைப் பார்த்தால் 'மெல்போர்னில் நம்மவர்கள் கலங்கும்போது' என்று நீங்கள் எழுதியிருந்தால் பொருத்தமாயிருக்கும்போல தோன்றுகிறதே சார்! ;)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : அட..நம்பிக்கையோடு காத்திருப்போமே..!! மாலைக்குள் தெரிந்திடுமே !!

      Delete
  34. //ஃபில்லர்பேஜ் அதிகம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் நண்பர்கள் சிபி, அருள் உள்ளிட்டோர் இங்கே கூறியபடியே, குறைந்தபட்சம் உங்களது 'காமிக்ஸ் டைம்' ஆவது இடம்பெறவேண்டும் சார். உப்பில்லாத ஒரு பத்திய சாப்பாடுபோல செய்துவிடாதீர்கள் ப்ளீஸ்!//
    +1

    ReplyDelete
  35. விஜயன் சார், மி.ம முன் பதிவு எண்ணிக்கை தாண்டி வெற்றி நடை போடுகிறது என்பது சந்தோஷமான விஷயம். இந்த மைல்கல் இதழ் கண்டிப்பாக வெளிவர வேண்டும் என முன் பதிவு செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : //இந்த மைல்கல் இதழ் கண்டிப்பாக வெளிவர வேண்டும் என முன் பதிவு செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.//

      வார்த்தைகள் மாத்திரமே போதாது அந்த நன்றியை வெளிப்படுத்த ! எத்தனை மெகா பங்களிப்பு !!

      Delete
  36. // அட்டைப்பட டிசைன்களில் படைப்பாளிகள் அதகளம் செய்திடும் பின்னணியைத் தான் சற்றே பாருங்களேன் //
    எனக்கு என்னமோ காமிக்ஸ் அட்டை படத்தை பார்த்துதான் மற்றவர்கள் காபி அடித்தது போல உள்ளது.

    அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே, ரின் டின் நமது காமிக்ஸ்ன் பின் அட்டை மற்றும் கதையின் உள் பக்க அட்டையில் இடம் பிடித்ததாக ஞாபகம்.

    ReplyDelete
  37. அட்டைப்படத்திலிருக்கும் அந்த நாயைப் பார்த்ததும் எனக்கு நம்ம ரின்-டின்-கேன் ஞாபகம் வந்துடுச்சு. வி மிஸ் யூ ஸோ பேட்லி டியர் ரின்டின்! பூஊஊவ்...

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : நாயை நேசிக்கும் பூனையா ? ஆவ்வ் !! :

      Delete
    2. SeaGuitar9 : Not too long a wait...! பாக்தாத் பார்டிக்கள் விரைவிலேயே தலைகாட்டுவார்கள் !

      Delete
  38. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  39. இந்த மாத ஷெல்டனின் கதை பட்டாசக இருந்தது. அதிரடி, நகைச்சுவை என மாறி மாறி நகர்ந்தது சிறப்பாக இருந்தது.

    ReplyDelete
  40. எடிட்டர் சார் டெவில் கம்பிரமாக இருக்கும் ஆனால் இந்த நாய் நோஞ்ஞான் போல் உள்ளதே Anyway அட்டைபடம் super. பின் அட்டையில் உள்ள பாம்பு அருமை. I am babu snake babu

    ReplyDelete
    Replies
    1. ricky_tbm Ramesh : நாயகனே ஒச்சத்தொடு காட்சி தரும் ஒரு தொடரில் - நாலு கால் பிராணி இந்தளவுக்குத் தானே இருந்திட முடியும் ? But இக்கதையில் கவனத்தை ஈர்க்கும் character அது !

      Delete
  41. நாம் சுட்ட தோசை அருமை. ஆனால் தக்காளி சட்னி சட்டையுடன் இன்னும் அருமை. அடுத்த முரை மசால் தோசை இரண்டு பார்சல்

    ReplyDelete
  42. காலை வணக்கங்கள் நண்பர்களே,

    // "மின்னும் மரணம்" முன்பதிவுகள் நம் இலக்கான 500-ஐத் தாண்டி ; இப்போது 600-ஐத் தொட்டு விடும் தொலைவில் நிற்பது சந்தோஷச் சேதி ! So ஏப்ரலின் மத்தியினில் நமது சப்பை மூக்காரின் இந்த மெகா இதழ் வெளிவருவது உறுதி ! //

    எனக்குள் 'டைகர் ஜீரம்' துவங்கிவிட்டது...இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. //எனக்குள் 'டைகர் ஜீரம்' துவங்கிவிட்டது... ///

      இப்போது இந்தியாவையே பயமுறுத்திக்கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சல், குரங்குக் காய்ச்சல் வகையறாக்களில் இந்த ஜுரமும் பயங்கரமானதுதான்! ;)

      Delete
    2. ஃபேக்ட்...ஃபேக்ட்...!

      Delete
  43. ஏற்கனவே கேட்டதுதான் தாங்கள் ஒன்றும் கூறவில்லை. இந்த வருடம் 46 இதழ்கள்+1மி.ம+முத்த 350 வது இதழ் 1+கார்ட்டுன் ஸ்பெசல் 1=மொத்தம் 49 இதழ்கள். 50 வது இதழ் அறிவிப்பு உண்டா?. Please consider this request. 250 Not out போல் 50 Not out இருக்கட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. சரியான கணக்குத்தான்!

      Delete
    2. ricky_tbm Ramesh : அகவை ஐம்பதாகும் நாளில் (எனக்கல்ல !!) 50 Not Out வெளியிட்டால் பொருத்தமாய் இருக்கும் ! இந்தாண்டின் கோட்டா இப்போதே ஓவரோ ஓவர் என்ற நிலையில் நிற்கிறது !

      Delete
    3. சார் 2 குறையுது 50ஐ தாண்டினா தான் அது ஓவர்

      Delete
  44. அன்புள்ள விஜயன் ஸார்,

    மின்னும் மரணம் செய்தியில் மகிழ்ச்சி :) இந்தப் பட்டீயளில் இலங்கை வாசகரையும் சேர்த்துக் கொள்ள மறந்துவிடாதீர்கள்.

    இலங்கைக்கு தங்கள் புத்தகங்கள் எமக்கு தரும் கோகுலம் நண்பர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டு அறிந்து ஒரு சில கதைகளை தவிர்த்தாவது அவர்களுக்கு முடிந்தளவு உதவி செய்யவும்.இங்கு விலைகள் தாங்க முடியாத அளவில் இருப்பினும் உங்களுக் கென்று நிரந்தரமான வாசகர் பட்டாளம் உள்ளோம்.காத்திருக்க முடியவில்லை.

    பாகம் 9 இல் பச்சை குத்தியவரும் குதிரையில் வாழைதோட்டத்தில் சவாரி செய்கிறார் ஸார்!

    ReplyDelete
    Replies
    1. @ abisheg

      நீங்கள் சொன்னது மிக சரி ! 381 வது பக்கத்தில் XIII குதிரையில் !
      பார்க்க....இங்கே'கிளிக்'

      Delete
    2. அபிஷேக்கின் நினைவுத் திறனையும், அதற்குப் புயல்வேக செயல்வடிவம் கொடுத்த மாயாவி சிவாவையும் வியக்காமலிருக்க முடியவில்லை!!!

      Delete
    3. @ Abisheg : துரதிர்ஷ்டவசமாய் ஏர்மெயில் தபால் கட்டணங்கள் தலை தெறிக்கச் செய்யும் உயரங்களில் உள்ளனவே...!! அந்தக் கட்டணங்கள் + உங்கள் நாட்டின் இறக்குமதி வரிகளும் ஒன்றிணையும் போது - phew !!

      Delete
  45. 1)இந்த மாசத்துக்கு மறு பதிப்புகள் இல்லையா
    2) கை இல்லா பௌன்சர் கைகளில் தவளட்டும்
    3)டைகர் சீறும் நாள் வந்து விட்ட தோ
    4)டைகர் கடைசி பாகத்துலயவது கல்யாணம் பண்ணி கிட்டாரான்னு பாப்போம்

    ReplyDelete
    Replies
    1. j : அடுத்த மறுபதிப்புகள் ஏப்ரல் & மே மாதங்களில் தான் !

      Delete
  46. தங்க தலைவன் மீது அப்படி என்ன ஓர வஞ்சனை என்றே புரியவில்லை .... தங்க தலைவனை பற்றிய பதிவு என்றால் இன்டெர்நெட் இணைப்பே இல்லாத இடத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி அனுப்புறது ...தலைப்பு வைப்பதில் பல பட்டங்கள் வாங்கியிருந்த போதிலும் வஞ்சப்புகழ்ச்சியாக தலைப்பு வைப்பது ... தலைவனை பதிவுகளில் நையாண்டி செய்வது ....
    //மார்ஷல் டைகர் ஒரு பக்கம் 'லொக்கடி..லொக்கடி..' என்று குதிரையில் வலம் வருகிறார் என்றால்/// ..... என்ன இருந்தாலும் 1000 ரூபாய்க்கு வந்த ( வரப்போகும் ) முதல் தமிழ் காமிக்ஸ் தங்க தலைவனுடையது தான் .. ஒரு ஹோண்டா காருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கும் இடையே உள்ள வித்தியாசம் தான் மற்ற கௌபாய் கதைகளுக்கும் தங்க தலைவன் கதைகளுக்கும் .....

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : தங்கத் தலைவனோடு எனக்கு வாய்க்கால் வரப்புத் தகராறா இருந்திட போகிறது நண்பரே ? இன்டர்நெட் இல்லா ஊரிலிருக்கும் வேளையும், டைகரின் அறிவிப்புக்கான நேரமும் ஒன்றிணைந்தால் அதனிலும் அயல்நாட்டுச் சதியா இருந்திட முடியும் ?

      Delete
    2. ////// ரம்மி //////

      இன்றுதான் இதை கண்டுபிடித்தீர்களா என்ன? இந்த விசயத்தை நான் ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டேன். டைகர் கதை வரும்பொழுது எல்லாம் கதை சொதப்பல் என்ற வார்த்தையையும் அடிக்கடி ஆசிரியர் உபயோகப்படுத்துவதுதான் வேதனைக்குரியது. இதனால் எடிட்டர் மீதுள்ள பிரியமும் போய்விட்டது. இந்த தளத்திற்கு வருவதற்கான ஆர்வமும் குறைந்துவிட்டது.

      ஒரு விசயத்தை கவனித்தீர்களா, எல்லா சினிமா Heroக்களின் ரோல்மாடலாக இருப்பது டைகர்தான் என்பது மேலே உள்ள படங்களை பார்த்தாலே தெரிகிறது.

      Delete
    3. //இதனால் எடிட்டர் மீதுள்ள பிரியமும் போய்விட்டது. இந்த தளத்திற்கு வருவதற்கான ஆர்வமும் குறைந்துவிட்டது.//
      +1

      Delete
  47. இதுவொரு மைல்கல் இதழின் தொகுப்பு எனும் போது இதனுள் என் 'சவ சவப்புகளோ' ; இன்ன பிற filler pages இடம்பிடிப்பதோ நிகழப் போவதில்லை ! ஆகையால் இதிலும் வழக்கமான நமது பார்முலாவைத் தேடிட வேண்டாமே ! இது ஏற்று கொள்ள முடியாதது .... மின்னும் மரணம் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான தகவலை ஹாட் லைனில் அல்லது சி.சி .வயதிலோ நிச்சயமாக வேண்டும்

    ReplyDelete
  48. ஆங் இப்படி வச்சுக்கலாம் - இன்றைய போட்டியில் இந்தியா ஜெயிச்சுடுச்சுன்னா நம்ம எடிட்டர் இந்த வருடத்தின் 50வது இதழைப் பற்றி இங்கே அறிவிப்பாராம்...

    ReplyDelete
    Replies
    1. @ Vijay...அப்போ 50 வது இதழ் தயாரிக்க வேண்டிய நேரம் வந்தாச்சி...

      @ Vijayan-- நம்மவர்கள் கோப்பையை கைப்பற்றினால் 'கோப்பை-ஸ்பெஷல்' என்ற ஒன்றை அறிவித்து 50 ஆக்கி விடுங்களேன்.

      Delete
    2. சிவகாசியில் ஒருவர் காதல் பட கிளைமாக்ஸ் முருகன் மாதிரி ங ங ங ங ங...ன்னு சொல்லிட்டே ஆபீஸில் வேலை பார்க்க போவது கன்பார்ம் .......ஆண்டு முடிவு சமயத்தில்

      Delete
    3. //சிவகாசியில் ஒருவர் காதல் பட கிளைமாக்ஸ் முருகன் மாதிரி ங ங ங ங ங...ன்னு சொல்லிட்டே ஆபீஸில் வேலை பார்க்க போவது கன்பார்ம் .......ஆண்டு முடிவு சமயத்தில் ///

      இப்படியே ராவெல்லாம் கண்ணு முழிச்சு வேலை பார்த்துக்கிட்டிருந்தா ஆண்டு இறுதிவரை நாம் அந்த ங ங ங ங சவுண்டுக்காக காத்திருக்கவேண்டிய அவசியம் இருக்காது! :D

      Delete
    4. @ FRIENDS : நான் படுத்தி எடுக்கும் பாட்டில் நம் பணியாளர்களில் பல 'முருகன்கள்' ஏற்கனவே எங்கள் தெருக்களில் உலா வருகின்றனர்...! So துணைக்கு ஆள் இருக்கப் போவது உறுதி !

      Delete
  49. பெருமைப்படத்தக்க இந்தியா வின் வெற்றி..மின்னும் மரணம் டார்கெட்டை த்தாண்டிய வெற்றி..
    ஒற்றைக்கையனின் காதல் சாகச வெற்றி மார்ச்சில்....இனி நமது காமிக்ஸ்க்கு எதைதொட்டாலும்
    வெற்றி..வெற்றி மட்டுமே,,

    ReplyDelete
    Replies
    1. BAMBAM BIGELOW : அட...நம்மவர்கள் மட்டும் கோப்பையை தக்க வைத்து விடட்டும் சார் - ரகளையாய்க் கொண்டாடிடுவோம் !

      Delete
  50. மின்னும் மரணம் சந்தா 500ஐ தாண்டியதால அதுக்கு ஒரு ஸ்பெசல் போட்டுறலாம்
    என்ன நான் சொல்லறது?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா! சூப்பர் அன்பு அவர்களே! :)

      Delete
  51. உங்க பதிவுக்காக எல்லாரையும் ஆந்தை மாதிரி விழிக்க வச்சிருக்கீங்க.நன்றி.காத்திருப்பது சுகமே

    ReplyDelete
  52. மின்னும் மரணம் முன்பதிவு 500 இலிருந்து 600 இனை தொட்டது எதிர்பர்ர்க்கமுடியரத மகிழ்ச்சி சர்ர். நள்ளிரவு வீட்ட போகரமல் மின்னும் மரணத்திற்கரக ஆபிஷில் தங்கி இருந்து ஒரு பதிவர? சூப்பர் ஸர்ர். 4 மணி நேரம் தூங்குவதற்கு முன்னிரவுகளில் கொளபரய் மரதிரி குதிரையில் போகின்றீர்களர?

    ReplyDelete
  53. டியர் எடிட்டர் ஸர்ர்,
    ஏப்ரலில் மின்னும் மரணத்துடன் மறுபதிப்புகள் 2 உம் சேர்த்து கும்பமேளரதரன் ஸர்ர். இனி மறுபதிப்புகள் மே, யூன் மரதங்களில்தரனர? பொளன்சரின் பரகம்-2 ஆன " சர்ப்பங்களின் சரபம் " அட்டைபடம் சூப்பர். சித்திரங்கள் , மற்றும் வண்ணங்கள் அருமை.

    ReplyDelete
  54. பெளன்சர் போலவே நரயும் 3 கரல்தரன். நல்ல பொருத்தம் போங்கள்.

    ReplyDelete
  55. //பௌன்சர் தொடரினில் தலை காட்டும் வில்லன்கள் அனைவருமே ஒரு மார்க்கமான கொடூரன்கள் என்பதை இம்முறையும் பார்த்திடத் தான் போகிறீர்கள் !//

    இன்னும் "ரௌத்திரம் பழகு " ரால்டனையே மறக்க முடியவில்லை.
    இந்த வில்லன் எப்படி வரப்போகிறாரோ தெரியவில்லை.
    ஆனாலும் பௌன்சர் கதைகளின் வரைமுறைகள் இன்னதென்று ஓரளவு தெளிவடைந்து விட்ட காரணத்தால்,. இனி எப்படிப்பட்ட கொடூரன்களையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்.
    வரட்டும் பார்த்துவிடலாம். ..

    ReplyDelete
  56. //அட்டைப்பட டிசைன்களில் படைப்பாளிகள் அதகளம் செய்திடும் பின்னணியைத் தான் சற்றே பாருங்களேன் !! //

    டைகரின் அட்டைப்பட போஸைப் பார்த்துவிட்டுத்தான் ஹீரோக்களே தங்கள் படங்களில் அந்த ஸ்டைலை காப்பி அடிக்கிறார்கள்.
    ஆஹா.! என்னே டைகரின் பெருமை.!

    இது எப்படி இருக்குன்னா., "பிள்ளையப் போல தாய் " . அப்படீன்னு சொல்ற மாதிரி இருக்கு.!

    கரகாட்டக்காரன் மேட்டருக்கு அப்பால வரேன்.!! :)

    ReplyDelete
    Replies
    1. வெற்றியின் சின்னமான மஞ்ச சொக்காவை சில காட்சிகளில் போட்டு ராமராசன் அவர்கள் நடித்த கரகாட்டக்காரன் வசூலில் செய்த சாதனைகளை மறந்துவிட வேண்டாம்.!
      மஞ்ச சொக்கா மாவீரர்கள் :-
      டெக்ஸ் வில்லர்
      லக்கி லூக்
      CSK. (சூப்பர் கிங்ஸ்)

      Delete
  57. //இதுவொரு மைல்கல் இதழின் தொகுப்பு எனும் போது இதனுள் என் 'சவ சவப்புகளோ' ; இன்ன பிற filler pages இடம்பிடிப்பதோ நிகழப் போவதில்லை !//

    அய்யய்யோ.! இது தவறான முடிவு சார்.
    போற்றிப் பாதுகாக்கப்படும் ஒரு மைல்கல் இதழில் ஒரு இரண்டு பக்க தலைய்ங்கம் கூட இல்லையென்றால் எப்படி சார்.?
    மின்னும் மரணம் முதல் பாகத்தில் இருந்து புயல் தேடிய புதையல் வரை, அவை வெளியான நாட்களில் நடந்த சுவையான சம்பவங்கள், அன்றைய விற்பனை நிலவரங்கள் போல எங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விசயம் உங்களிடம் இருக்கக்கூடும்.
    அவற்றில் சிலவற்றையாவது., ஒரு இரண்டு பக்க காமிக்ஸ் டைமில் பகிர்ந்து கொள்ளுங்கள் சார்.
    அட்டையை தாண்டியதும் கதை தென்படுவதிலும், கதையின் கடைசி பக்கத்திற்கு அடுத்து பின்னட்டை வருவதும் ..,என்றுமே ஒரு நிறைவான இதழாய் எனக்கு தோன்றியதே இல்லை.
    புத்தகத்தை பிரித்ததும் நான் பார்ப்பது வருகிறது விளம்பரங்கள். அடுத்து ஹாட்லைன் (காமிக்ஸ் டைம்) , அடுத்து ஃபில்லர் பேஜஸ். இறுதியாக மெயின் கதை. இந்த ஆர்டர் தவற நேரிடும் வேளைகளில் ஏதோ ஒரு மனக்குறையுடனேயே அந்த இதழை புரட்ட முடிகிறது. தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்தால் பரவாயில்லை சார்.!

    ReplyDelete
    Replies
    1. கண்ணன் ...ஏன் நீட்டி முழக்கறீங்க ?...எடிட்டர் ஹாட் லைன் இல்லாத மின்னும் மரணம் "கிடா விருந்து "இல்லாத காது குத்து அப்டின்னு சொன்னா எல்லாருக்கும் பட்னு
      புரிஞ்சுரும்லே .....:-)

      Delete
  58. விஜயன் சார், பௌன்சர் கதையின் அட்டை படம் அருமை, trade mark பௌன்சரின் அட்டை படம்.

    மி.ம புத்தகம் எந்த அளவில் வெளி வருகிறது? வழக்கமான டைகர் கதை புத்தகம்களின் அளவா? அல்லது நமது LMS புத்தக அளவா? புத்தகம்கள் ஏப்ரல் இறுதி என கிட்டதட்ட முடிவானதால் இதனை கேட்கிறேன்.

    நீங்களே நமது சட்டி தலையன் "கார்ட்டூன் ஸ்பெஷல்" வர போகிறார் என்பதை உறுதிபடுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  59. Replies
    1. ஹா ..ஹா ..உரிக்கறதுக்கு வசதியான வாழைப்பழ மண்டை தொலி ...:-)

      Delete
  60. டியர் எடிட்டர் சர்ர்,
    உங்களுடைய ஹரட்லைன் இல்லரத ஒரு மைல்கல் புக்கர மின்னும் மரணம்? பந்தியில் பரயரசம் இல்லரத ஒரு சரப்பரடு போல் , என்னவோ போல இருக்குமே ஸர்ர். நரன் விரும்பி படிப்பதே முதலில் உங்கள் ஹரட்லைன்தரன் ஸர்ர். பிளீஸ் மறுபரிசீலனை பண்ணுங்கள் ஸர்ர்.

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : அட..இதுக்கெல்லாம் 'ப்ளீஸ்' தேவையா - என்ன சார் ? பார்ப்போமே..!

      Delete
  61. சுட்ட தோசை ..ஹா ..ஹா ...அப்டி பாத்தா AJ பாகப்பிரிவினை ஒரு கை சிவாஜி -சரோஜாதேவி ஜோடியோட ஸ்டில் பாத்துதான் பௌன்ஸர் -நவோமி ஜோடிக்கு கற்பனை குதிரைய தட்டி வுட்ருப்பாரோ ???

    ReplyDelete
  62. மின்னும் மரணம் புத்தகத்தில் தங்கள் ஹாட் லைன் இல்லை எனில் எங்கள் போராட்ட குழு மூலம் தமிழகமே நடுநடுங்க வைப்போம் என ஆசிரியரை எச்சரிக்கை செய்கிறோம்.

    இனி எந்த வாழை பூ வடைக்கும் ...நண்டு வறுவலுக்கும் எங்கள் போராட்ட குழு மயங்காது என்பதையும் இச்சமயத்தில் தெரிவிக்க கடமை பட்டுள்ளோம் ....

    டைகர் புத்தகத்தை பொறுத்த வரை படிப்பது போல இருப்பது தங்கள் ஹாட் லைன் மட்டுமே என்றெல்லாம் எங்கள் செயலாளர் சொல்ல வில்லை என்பதையும் இங்கே தெரிவிக்க கடமைபட்டுள்ளேன் ...

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : தலைவரே...'பள்ளிப்பாளையம் சிக்கன்' ரொம்ப ஸ்பெஷல் என்று கேள்வி ! சங்கச் செயலாளர் கூடபள்ளிப்பாளையம் பக்கமாய் கிளம்புவதாய் தகவல் ! ஏற்கனவே சங்கம் அபராதத்தில் ஓடுவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரத் தகவல்கள்..!

      என்னமோ சொல்லணும் போல் தோணுச்சு..!

      Delete
    2. //டைகர் புத்தகத்தை பொறுத்த வரை படிப்பது போல இருப்பது தங்கள் ஹாட் லைன் மட்டுமே என்றெல்லாம் எங்கள் செயலாளர் சொல்ல வில்லை என்பதையும் இங்கே தெரிவிக்க கடமைபட்டுள்ளேன் ...//

      பரணிஜி !....எவ்வளவு முயன்றும் இதை படித்த பின் வாய் விட்டு சிரிக்காமல் இருக்கவே முடியவில்லை ....

      Delete
    3. ஹா...பள்ளி பாளையம் சிக்கனா ....செயலாளர் அவர்களே நம்ம தொண்டர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்களே ....எதுக்கும் போராட்டத்தின் போது என் கையை கொஞ்சம் கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள் செயலாளர் அவர்களே ...அதுவும் போராட்டம் செய்து பல யுகங்கள் ஆகி விட்டது.கொஞ்சம் கவனம் தேவை .

      Delete
    4. தலீவரே,

      செயலாளரையே பகடைக் காயாக்கி நீங்கள் ஆடிய ஆட்டத்தை செல்வம் அபிராமியைப் போலவே நானும் வெகுவாய் ரசித்தேன்; குட்டியாய் எட்டிப்பார்த்த கொலைவெறியோடு!
      ;)
      அப்புறம்....மட்டன்-சிக்கனையே சீண்டாத அந்த எதிர்க்கட்சித் தலைவரின் பசப்பு வார்த்தைகளுக்குப் பலியாகிவிடாதீர்கள்! நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் மனவுறுதியுடன் போராடும் எங்கள் தலீவரின் பேனா முனை சிந்திடும் மையைத் தானே தவிர, அவரது கடைவாயோரம் பிரவாகமெடுக்கும் பிசுபிசுப்பான திரவத்தையல்ல!

      'மி.ம'ல் இரண்டு பக்கங்களுக்காவது 'காமிக்ஸ் டைம்' இல்லையென்றால் வெளியீட்டு விழாவின்போது வெளிநடப்புச் செய்வோம்!
      'மி.ம'வைக் கொண்டுவரும் கொரியர் பாயை சிறை வைப்போம்!
      'Arizona Love'ஐப் படிக்காமல் படங்களை மட்டும் புரட்டிடுவோம்!

      ஒன்றுபட்ட போராட்டம் - ஒன்றே நமது துயரோட்டும்!

      Delete
    5. Paranitharan K. : தலீவரே...ஏற்கனவே புல் கட்டு கட்டி விட்டு, உங்களுக்குப் புல்கட்டை மட்டும் தரக் காத்திருக்கும் கழகக் கண்மணிகளை நம்பி நட்ராற்றில் தடுமாற வேண்டாம்..!

      இதழோர நயாகராவை இன்னமும் மறைப்பானேன்..? புறப்படுவோம் ப.பா. நோக்கி...!

      Delete
    6. //புல் கட்டு கட்டி விட்டு, உங்களுக்குப் புல்கட்டை மட்டும் தரக் காத்திருக்கும் ///

      :D

      " குழந்தைச் சிரிப்போடு வினை செய்யும் தலீவரை
      குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே" அப்படீன்னு'மாட்டுக்கார வேலன்'ல் நம்ம எம்ஜியார் பாடியாதக ஞாபகம். சரிதான்! ;)

      Delete
    7. தலைவரே...'பள்ளிப்பாளையம் சிக்கன்' ரொம்ப ஸ்பெஷல் என்று கேள்வி ! சங்கச் செயலாளர் கூடபள்ளிப்பாளையம் பக்கமாய் கிளம்புவதாய் தகவல் ! ஏற்கனவே சங்கம் அபராதத்தில் ஓடுவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரத் தகவல்கள்..!
      +1

      Delete
    8. 60+ ஒரே மாதிரியான கதைகளுக்கு விதவிதமான ஹாட்லைன் எழுதிய ஆசிரியர் தமிழ் காமிக்ஸ் உலகின் கீதை எனப்படும் மின்னும் மரணத்திற்கு எழுதாமல் விட்டு விடுவாரா என்ன ?????

      Delete
  63. டுப் டுப் என்ற பிஸ்டல் ஐக் காட்டிலும்
    டுமீல் டுமீல் என்ற ரிவால்வர் ஐ தான் மிகவும் பிடிக்கும்.

    Pasupathy.R

    ReplyDelete
    Replies
    1. l like them both as long as I am on the trigger side :-)

      Delete
    2. எனக்குக்கூட 'விர்ர்ரூஊஊம்'களைக் காட்டிலும் 'டகடும் டகடும்'களையே பிடிக்கிறது!

      Delete
    3. //எனக்குக்கூட 'விர்ர்ரூஊஊம்'களைக் காட்டிலும் 'டகடும் டகடும்'களையே பிடிக்கிறது!//

      +1

      கூடவே "லொக்கடி லொக்கடி " க்களையும் பிடிக்கிறது. ஹிஹிஹி.!

      டகடூம் டகடூம். - கௌபாய் எக்ஸ்பிரஸ்.
      ஆஹா.! அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே.!!!

      Delete
  64. எனதருமை காமிக் நண்பர்களே,

    இடையில் அயர்ந்து இருந்த சில காமிக் வலைப்பூக்கள் மறுபடியும் பூக்க ஆரம்பித்து இருக்கின்றன. உங்களின் கவனத்துக்கு:

    பயங்கரவாதி டாக்டர் செவனின் அகொதீக: இங்கே கிளிக்

    முத்து விசிறியின் காமிக்ஸ் வலைப்பூ: இங்கே கிளிக்

    ஒலக காமிக்ஸ் ரசிகரின் தளம்: இங்கே கிளிக்

    பால கணேஷின் மேய்ச்சல் மைதானம்: இங்கே கிளிக்

    கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம்: இங்கே கிளிக்

    கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் 2: இங்கே கிளிக்

    ஜாலி ஜம்ப்பரின் (நானேதான்) தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்: இங்கே கிளிக்

    ReplyDelete
    Replies
    1. ஒன்றா... ரெண்டா கிளிக்குகள்...
      எல்லாம் கிளிக்கவே...
      ஓர்நாள் போதுமா...

      Delete
    2. Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் : Super !! More..the merrier !!

      Delete
    3. ஆஹா....அயர்ந்து இருந்த ஆறு காமிக் வலைப்பூக்கள் மறுபடியும் பூக்க ஆரம்பித்து இருப்பதை பார்க்க...இங்கே கிளிக்...சூப்பர்...!
      என் பங்குக்கு ஒரு....இங்கே'கிளிக்'
      (குறிப்பு:கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் 2 என ஒன்று உள்ளது உங்கள் மூலமாக தான் தெரிந்து கொண்டேன் நன்றிகள் ஜாலி ஜம்பர்..இப்படி பார்ட் 2 இருப்பதை விஸ்வா சொல்லவேயில்லை...அயராமல் தொடர்கிறது )

      Delete
  65. 'சென்ற வருடத்தின் மிகச் சிறந்த காமெடி கதை எது'வென்று என்னை யாராவது கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு 'அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே' என்பேன்! மூன்றாவது தடவையாகப் படித்துக்கொண்டிருக்கிறேன் ( சமீப காலங்களில் ஒரு கதையை மறுமுறை புரட்டுவதென்பது ரொம்பவே அரிதாகி வருவதைக் கவனத்தில் கொள்க). பக்கத்துக்குப் பக்கம் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது. ரின்டின்கேனின் முகபாவங்களும், அதற்கு அட்டகாசமாகப் பொருந்திப் போகும் காமெடி வசனங்களும் பட்டையைக் கிளப்புகின்றன!
    கிட்ஆர்ட்டின்-ஷெரீப் தூள்கிளப்பிய 'ஒரு கழுதையின் கதை' க்குப் பிறகு நான் பக்கத்திற்குப் பக்கம் சிரித்து ரசித்த கதை இதுதான்! சமீபத்திய லக்கி-லூக் கதைகளைக் காட்டிலும் பன்மடங்கு மேல் என்றும் சொல்வேன்!

    பக்கத்துக்குப் பக்கம் சிரித்துவிட்டு பகலிரவாய் கண்விழித்து வேலை செய்தவர்களைப் பாராட்டாமல் படுக்கைக்குச் செல்வது பண்பாடாகாது இல்லையா?

    நன்றி எடிட்டர் சார்!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : உங்களைப் போலவே ஆதங்கம் கொண்ட இன்னொருத்தரும் உண்டு ! அவர் நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளைச் செய்திடும் இல்லத்தரசி ! எழுதும் போதே சிரித்து சிரித்துப் புண்ணாகிப் போனேன் என்ற ஒற்றை வரி கமெண்ட் சகிதம் அந்த ஆங்கில மொழியாக்கத்தை நமக்கு அனுப்பியிருந்தார் ! 2015-க்கு ரின் டின் கேன் இல்லியா ? ...என்ற வருத்தமும் அவருக்கு !!

      ஏனோ தெரியவில்லை - நண்பர்களில் பலருக்கும் ரி.டி.கே. அத்தனை சுவாரஸ்யத்தை உருவாக்கிடவில்லை !

      Delete
    2. //'சென்ற வருடத்தின் மிகச் சிறந்த காமெடி கதை எது'வென்று என்னை யாராவது கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு 'அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே' என்பேன்!//
      இதைத்தான் நான் அப்பவே சொன்னேன்.
      போங்கப்பு! நீங்க ரொம்ப லேட் பிக்கப்பு.!
      எதற்க்கும் பேய் நகரத்தையும் மறுபடி படிச்சு பாருங்க.! (ரேட்டிங்குல அதுக்கு நீங்க கடோசி இடம் குடுத்து இருந்திங்க.!)

      Delete
    3. //ஏனோ தெரியவில்லை - நண்பர்களில் பலருக்கும் ரி.டி.கே. அத்தனை சுவாரஸ்யத்தை உருவாக்கிடவில்லை !//
      எடிட்டர் சார்.!
      விராட் கோலி, ஷிகார் தவான். இவர்களின் சதங்கள், சுரேஷ் ரைனா, அஜிங்கே ரஹானே போன்றோரின் அற்புத (அதிவேக) பங்களிப்பை மறைத்து விட்டதைப்போல, LMS ல் கற்றை கதைகளுடன் வெளியிடப்பட்ட காரணத்தால் ரின்டின் கேனின் அருமை பலருக்கு புரியவில்லை. தவிரவும் வசனங்களை விட., காட்சிகளிலேயே அதிக காமெடிகளை புகுத்தி இருந்தது சில நண்பர்களின் பார்வைக்கு புலப்படாமல் கூட இருந்திருக்கலாம். பொருமையாக படங்களை ரசித்துப் பார்க்கும் போது நிச்சயம் அவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்., ரின்டின் கேன் ஒரு டாப் காமெடி கதாநாயகன் என்று.
      வருடத்திற்கு குறைந்தது இரண்டு சாகசங்களையாவது வெளியிடுங்கள் சார்.
      போகப்போக தெரியும் - அந்த
      பூவின் வாசம் புரியும்.

      Delete
    4. நான் சொல்ல முடியாம (தெரியாம?) தவிச்சுக்கிட்டிருந்த கருத்தை அழகா, தெளிவா, அட்டகாசமாச் சொல்லிட்டீங்க கிட்ஆர்ட்டின்! நன்றி!

      Delete
  66. அம்பின் பாதையில்.:-

    மனசாட்சிக்கு நேர்மையா சொல்லணும்னா., இந்த கதையை படித்தேன் என்பதைவிட பார்த்தேன் என்பதே சரியான வார்த்தையாக இருக்கும். (சில கைக்குட்டைகளும் தேவைப்பட்டன என்பதை தனியாக சொல்ல வேண்டுமா என்ன.?)
    கலர்ஃபுல் கல்யான ஆல்பம் (நன்றி திரு சேரோடு விஜய்) .ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டுவதற்க்கு படாதபாடு படவேண்டி இருந்தது.
    கதைமாந்தர்களான பெட்டி., அன்னிகா,ஜூலியானா,ஜூடித் மற்றும் துணை பாத்திரங்கள் அத்தனை பேரும் கொள்ளை அழகு.
    ஜூடித்தை ஆறாவது பாகத்தில் பார்த்ததை விட இப்போது இளமையாக படைத்து உள்ளனர்.
    பெட்டி டார்லிங் பற்றி தனிப் பதிவே போடவேண்டும்.
    அன்னிகா.., அநேகமாக அடுத்த பாகத்தில் ஜேசனுக்காக உயிர்தியாகம் செய்யும்வாய்ப்பு இருக்கிறது .(ஒரு யூகம்தான்.)
    சரி இதற்கு மேலும் இயற்கையை வர்ணித்துக் கொண்டே போனால் சலிப்பூட்டக்கூடும். எனவே.. .,
    முந்தைய பாகங்களில் மேஃப்ளவரில் ஒரு குழு பயணித்ததாக தெரிந்தது இப்போது மூன்று குழுக்கள் பயணித்ததாக சொல்லப் படுகிறது. இறுதி பாகத்தில் இன்னும் இரண்டு குழுக்கள் சேர்ந்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.
    நிறைய வரலாற்று பாடங்கள் இருந்தாலும் ஜேஸனுக்கே உரிய அதிரடிகள் , பரபர தேடல்கள் அனைத்தும் நிறைவாக இருந்தன.
    அடுத்த பாகத்துடன் கதை முடிந்ததும் ஐந்து பாகங்களையும் மீண்டும் நிதானமாக படிக்க (பார்க்க) வேண்டும்.
    இறுதி பாகம் எப்போது வருமென்றுதான் தெரியவில்லை.!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : இறுதிப் பாகம் நவம்பர் 30'2015-ல் ! அங்கே வெளியாகும் அதே தருணத்தில் நாமும் கூட வெளியிடலாம் தான் - ஆனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நமது அட்டவணையை நோண்ட வேண்டி வரும் !

      So ஜனவரி' 16 maybe...!

      Delete
    2. //இறுதி பாகத்தில் இன்னும் இரண்டு குழுக்கள் சேர்ந்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ///

      :D

      Delete
  67. விஜயன் சார், ரி.டி.கே நமது கார்ட்டூன் ஸ்பெஷல் புத்தகத்தில் நுழைத்தால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
  68. ஆம் .....வரும் கார்ட்டூன் சிறப்பிதழ் இதழில் வர வேண்டிய நாயகர்கள் ...

    லக்கி ...

    சுட்டி லக்கி ...

    சிக் பில் ..

    ரின் -டின் ..

    .ஸ்கூபி ..ரூபி ...

    சுஸ்கி விஸ்கி மறுபதிப்பு ஒன்று

    பிளஸ்

    டைகர் சிறுகதை ஒன்று :-)

    ReplyDelete
  69. ஆம் .....வரும் கார்ட்டூன் சிறப்பிதழ் இதழில் வர வேண்டிய நாயகர்கள் ...

    லக்கி ...

    சுட்டி லக்கி ...

    சிக் பில் ..

    ரின் -டின் ..

    .ஸ்கூபி ..ரூபி ...

    சுஸ்கி விஸ்கி மறுபதிப்பு ஒன்று

    பிளஸ்

    டைகர் சிறுகதை ஒன்று :-)

    ReplyDelete
    Replies
    1. //பிளஸ்

      டைகர் சிறுகதை ஒன்று//

      ஹாஹாஹா! பின்றீங்க தலீவரே! ஆனால், டைகர் கதைகளை காமெடி வரிசையில்(கூட) கொண்டுவர முடியாதில்லையா?

      ம்ம்ம்.... 'என் பெயர் டைகர்' -ஐ Horror special ஆக அறிவிக்கும்படி ஒரு போராட்டம் நடத்துவதைப் பற்றி என்ன நினைக்கறீங்க? ;)

      Delete
    2. ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சக்கரை .... வேறென்ன சொல்ல ???

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  70. விஸ்வா ஜீ....திரைப்பட உலகில் இருப்பதால் அவரிடம் ஒரு சின்ன கோரிக்கை ...

    திரைப்பட தலைப்பு வைக்கவே பல லட்சம் செலவு செய்கிறார்கள்.சமீபத்திய ஒரு படத்திற்காக ஏற்கனவே வைத்த படத்தின் தலைப்பு வைக்க 25 லட்சம் கைமாறியதாக தகவல் .பேசாமல் தலைப்புக்காக முடியை பிடித்து கொண்டிருக்கும் இயக்குனர் ..தயாரிப்பாளர் அனைவரையும் நமது ஆசிரியரிடம் கொண்டு வந்து கதையை சொல்லி சிறிது செலவிலேயே தலைப்பை வாங்கி கொண்டு போக சொல்லுங்கள் .மாதம் அத்தனை தலைப்பு வைப்பவர் படத்திற்காக வைக்க மாட்டாரா என்ன ...அந்த பணத்தின் மூலம் இன்னும் கொஞ்சம் காமிக்ஸ் சேர்ந்து வரும் சார் ..

    எப்படி நமது ஐடியா :)

    ReplyDelete
  71. தலைவரே...
    நீங்க எங்கயோ போய்ட்டிங்க..!

    ReplyDelete
    Replies
    1. தாரமங்கலம் பரணி, இந்த டயலாக் வர்ற படத்துல ஜனகராஜோட நிலைமைய அப்ப அப்ப நினைச்சுகொங்க... சொல்லும்னு தோனுச்சி!

      Delete
  72. வணக்கங்கள் நண்பர்களே,
    'க.கொ.க.கூ = கடத்தல் கொலை கலகக்கூட்டமைப்பு' என்ற நண்பர் 'காமிக்ஸ் ப்ரியன்' ப்ளாக்கில் ஓவியர் சுதர்சன் பற்றிய பதிவை நீண்ட இடைவெளிக்குபின் (2011 க்கு பின் )இன்று பதிவிட்டுள்ளார்..!
    காலம் போகும் வேகத்திற்கு இப்படியெல்லாம் பதிவு போட, நினைவு கூற நினைத்த...சித்திரஉலகில் எங்கோ மறைந்துள்ள ஓவியரை பெருமைபடுத்திய முயற்சிக்கு வாழ்த்துக்கள் காமிக்ஸ் ப்ரியன்...!
    இந்த கேலி சித்திரங்கள் மிக பழக்கப்பட்டவையாக தோன்ற...கொஞ்சம் பழைய கல்கி (1965-70) இதழ்களை அலசிப்பார்த்தேன்..!
    கிடைத்த சித்திரங்களும், குட்டி தகவல்களும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்,
    எனது பாணியில்... இங்கே'கிளிக்'

    ReplyDelete
  73. என் பெயர் டைகரை ஹாரர் ஸ்பெஷலாக அறிவிப்பதில் ஆட்சேபனையில்லை, இனி டெக்ஸ் கதைகள் காமெடி,கிச்சுகிச்சு, ஸ்பெசல் என்ற தலைப்புகளில் வரும் பட்சத்தில்.,Jokesapart.எனக்கு டெக்ஸ் கதைகளும் பிடிக்கும். டைகர் கதைகளும் பிடிக்கும். டெக்ஸ் கதை மொக்கையாகஇருக்கும் பட்சத்தில் எனக்கு டைகரை சற்று அதிகமாகவே பிடிக்கும்.டைகர் கதை மொக்கையாக இருக்கும் பட்சத்தில் டெக்ஸை சற்று அதிகம்பிடிக்கும்...,டெக்ஸா, டைகரா போட்டியை வாட்ஸ்அப் குரூப்புகளில் வைத்துகொண்டால் நம் பிளாக் தப்பிபிழைக்கும்....நன்றி.

    ReplyDelete
  74. 60+ ஒரே மாதிரியான கதைகளுக்கு விதவிதமான ஹாட்லைன் எழுதிய ஆசிரியர் தமிழ் காமிக்ஸ் உலகின் கீதை எனப்படும் மின்னும் மரணத்திற்கு எழுதாமல் விட்டு விடுவாரா என்ன ?????

    ReplyDelete