Powered By Blogger

Sunday, August 17, 2014

Life after LMS.... !

நண்பர்களே,

வணக்கம். திருவிழாவின் வருகையை எதிர்பார்த்திருக்கும் சந்தோஷம் ஒரு தினுசெனில் ; திருவிழாவின் கொண்டாட்டாங்கள் இன்னொரு ரகமெனில் ; அதனில் திளைத்தான பின்னே எழும் ஒரு வெற்றிடத்தை நிரப்பும் அனுபவம் முற்றிலும் வேறு மாதிரியானது என்பதைப் புரிந்து வருகிறேன் ! கிட்டத்தட்ட 1 மாதமாய் லார்கோவின் நாட்களைப் போலிருந்த எனது பொழுதுகள் தற்சமயம் டிடெக்டிவ் ஜெரோமின் சாகசங்களைப் (!!!) போல சாதுவாய் இருப்பதை உணர முடிகிறது ! LMS எனும் மேளா நம் நினைவுகளுக்குள் சிறுகச் சிறுக அமிழ்ந்திடும் தருணமும் புலர்ந்து விட்டதால் 'பழைய நினைப்புடா பேராண்டி !' என்ற பாட்டுக்களை மூட்டை கட்டி விட்டு what next ? என்ற கேள்வியோடு நடையைத் தொடருவோமே ? அடுத்ததாய் முன்நிற்கும் செப்டெம்பர் மாதத்து வெளியீடுகளில் பணி செய்வதை நாங்கள் துவக்கி கொஞ்ச காலம் ஆகிவிட்டதால் - இம்மாத இறுதியினில் 3 இதழ்கள் உங்கள் கைகளில் இருந்திடும் ! LMS எனும் புஷ்டியானதொரு package-க்கென சமீபமாய் மாங்கு மாங்கென்று வேலை செய்து பழகியான பின்னே - மாதாந்திர 44 பக்கக் கதைகளைக் கையில் எடுக்கும் போது ஏதோ பச்சைப் பிள்ளையைத் தூக்கித் தோளில் வைத்தது போல் இலகுவாய்த் தெரிகிறது ! 

அதில் முதல் பிள்ளையானது நமது ப்ளூகோட் பட்டாளத்தின் "காதலிக்கக் குதிரையில்லை" ! இந்த ஸ்கூபி - ரூபி ஜோடியின் கதைகளை ஏற்கனவே நாம் ரசித்துள்ள போதிலும், இவற்றை முழுமையான நகைச்சுவை வரிசைக்குள் நுழைத்திடுவது சரியாகாது என்பதே எனது அபிப்ராயம் ! வரலாற்றுக் குறிப்புகள் ; போரின் சில நிஜ மனிதர்கள் ; உள்நாட்டுக் கலகங்களின் அர்த்தமின்மை ; யுத்தத்தின் மடமை என சகலத்தையும் தம் பாணியில் நையாண்டி செய்வதே இதன் படைப்பாளிகளின் நோக்கமாக நான் பார்க்கிறேன் ! சித்திர பணியினை இலகுவான கார்ட்டூன் ஸ்டைலில் அமைத்திருப்பதும், கவுண்டமணி-செந்தில் பாணியிலான இரு நாயகர்களின் மூலமாய் சொல்ல நினைக்கும் சேதியில் ஒரு நகைச்சுவைப் பூச்சு தந்திருப்பதுமே இத்தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பேன் ! இன்று வரைத் தொடரும் இத்தொடரின் கதை # 16 நமது செப்டெம்பர் வெளியீடாக வரவுள்ளது ! இதோ அதன் சின்னதொரு teaser : 


கவுண்டமணி-செந்தில் பற்றியான topic -ல் உள்ள போதே ஒரு ஜாலியான சேதியும் கூட ! நமது கார்ட்டூன் உச்ச நட்சத்திரங்களான மொட்டை பாஸ் ஷெரீப்பும் ; அட்டகாச ஆர்டின்னும் தொடரும் காலங்களில் நம்மைத் தரமான கதைகளோடு சந்திக்க ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன ! நமது அவ்வப்போதைய நச்சரிப்புகள் ஒரு பக்கமிருக்க, சிக் பில்லின் கதைகளை பெல்ஜியத்தில் முழுமையாய் மறுபதிப்பு செய்யும் எண்ணம் சூடு பிடித்து வருகின்றது ! அதன் பலனாய் சிக் பில்லின் துவக்க காலத்துத் (தரமான) கதைகளும் இப்போது டிஜிட்டல் கோப்புகளாய் உருமாற்றம் கண்டு வருகின்றன ! So 2015-ன் அட்டவணைக்குள் வுட்சிடி கோமாளிகளின் classic கதைகள் இடம்பிடிக்கும் வாய்ப்புகள் பிரகாசம் ! கடைசி கடைசியாய் இத்தொடரில் உருவாக்கப்பட்டு வந்த ஒற்றைப் பரிமாணக் கதைகளுக்கு டாட்டா சொல்லி விட்டு, சிக் பில் கூட்டணியின் early '70s டாப் சாகசங்களைத் தேர்வு செய்ய கொஞ்சம் கொஞ்சமாய் சாத்தியமாகும் !  
பிரான்கோ பெல்ஜிய மார்க்கெட்டில் மறுபதிப்புகள் அத்தி பூத்தார் போலத் தலைகாட்டும் அதே சமயத்தில், புதுப் புதுக் களங்களைத் தேடியலையும் அவர்களது வேட்கையும் பிரமிப்பை உண்டாக்குகிறது ! சமீபமாய் நமக்கு வந்துள்ள அவர்களது புது இதழ்களின் previews ; கதைச் சுருக்கங்கள் ;  சித்திர டிரைலர்கள் என பார்க்கும் போது தலைசுற்றாத குறை தான் எனக்கு ! 'எல்லைகளே கிடையாது எங்கள் தேடல்களுக்கு !' - என உரக்கக் கூவுவது போலுள்ளது தற்சமயத்துப் படைப்பாளிகளின் ஆற்றல்களைப் பார்க்கும் போது ! இது போன்ற சூழல்களில் என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு வித முறுக்கேருவதை உணர முடிகிறது ; என்ன ஆனாலும் இது போன்ற புதுமைகளை நாமும் முயற்சித்தே ஆக வேண்டுமென்று !! ஆனால் வேகம் மாத்திரமே வேலைக்கு ஆகாது என்பதை நரை முடிகளும், நடப்பு மார்கெட்டும் உணர்த்தும் போது சிறுகச் சிறுக கால்கள் தரைக்குத் திரும்புவதை தவிர்க்க இயலவில்லையே ! இன்றில்லாவிடினும், தொட்டு விடும் தொலைவிலான எதிர்காலத்திலாவது இந்த new wave காமிக்ஸ் படைப்புகளுக்கு நம் வாசல்களைத் திறக்கும் ஆர்வம் எனக்குள் உயிர் வாழ்ந்திடும் ! ("சார் - ஸ்பைடரின் "அந்த நீளமான கதை எப்போது ?"  என்ற கேள்வியும் என் காதுக்குள் இத்தருணத்தில் ரீங்காரமிடுவதை உணர முடிகிறது !!!)

Moving on to the land of Tex Willer - 2015-ன் அட்டவணையினில் இத்தாலிய நாயகர்களுக்கு ஒரு கௌரவமான இடம் தரும் எனது வேட்கைக்கு LMS -ன் ஒரு கூடுதல் உந்துதலாய் அமைந்துள்ளது என்றே சொல்லுவேன் ! டெக்ஸ் வில்லர் ; மர்ம மனிதன் மார்டின் + CID ராபின் ஆகிய மூன்றே இத்தாலியப் பரிச்சயங்கள் ஓரிரு மாதங்களில் ஒரு மினி கும்பலாய் மாறி விட்டது நமக்கொரு சந்தோஷ முன்னேற்றம் எனப்படுகிறது என் மனதுக்கு ! டயபாலிக் ; மேஜிக் விண்ட் ; டைலன் டாக் ; ஜூலியா என நமது இத்தாலிய உறவுகள் எண்ணிக்கையில் சட்டென்று உயர்ந்து விட்டனரே ! இதனில் ஜூலியா மட்டுமே இன்னும் முழுமையாய் நமது அபிமானத்தை சம்பாதிக்க வேண்டிய பொறுப்பைக் கையில் ஏந்தி நிற்கிறார் ! LMS-ல் வெளியான ஜூலியா சாகசம் (!!) அவரது ஆற்றல்களுக்கு முழு நியாயம் செய்ததென்று சொல்ல மாட்டேன் ; கதைக்களமும் அத்தகையது என்பதால் அங்கே மாடஸ்டி பிளைசியைப் போல காங்கோ வீசி எதிராளியை மடக்கிப் போடும் வாய்ப்புகளோ ; லேடி ஜேம்ஸ் பாண்ட் அவதாரம் எடுப்பதோ சாத்தியமாகி இராது ஜூலியாவுக்கு ! So அவரது துவக்க சாகசங்களில் இருந்து ஆரம்பித்து, இத்தொடரின் ஜீவனை நம்மாலும் உணர முடிகிறதா என்று பார்ப்போமே ? What say folks ? 2015-ல் ஜூலியாவையும் நமது வண்டியில் தொற்றிக் கொள்ள விடலாமா ? 

LMS -ன் டாப் கதைகளுள் ஒன்றாக "இறந்த காலம் இறப்பதில்லை" கிராபிக் நாவலை நண்பர்களில் நிறையப் பேர் தேர்வு செய்திருந்தது நிஜமாக என் முகத்திற்கொரு பெரிய புன்னகையைக் கொண்டு வந்தது !! வர்ண ஜாலங்களோ ; வள வளப்பான ஆர்ட் பேப்பரோ ; வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு கதைப் பின்னணியோ இல்லாமல் - ஒரு சராசரியான க்ரைம் கதையின் பின்புலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நுணுக்கமாய் ஒரு நாவலைப் புனைய முடியும் என நமக்குக் காட்டியுள்ளார் கதாசிரியர் பாவ்லோ மோரால்ஸ் ! துரதிர்ஷ்டவசமாய் இத்திறமைசாலி தற்போது உயிரோடில்லை - இது போன்ற கதைகளை நமக்கு இன்னும் இன்னும் வழங்கிட !! LMS -க்கென கதைகளைத் தேர்வு செய்யும் வேளையில் இந்த 110 பக்க slot-ல் போடும் பொருட்டு என் மண்டைக்குள் 2 கதைத் தேர்வுகள் இருந்தன ! முதலாவது நம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்ட  "சிப்பாய்க் கலகம்" பற்றிய கதை ! இரண்டாவதோ - "இறந்தகாலம் இறப்பதில்லை" கிராபிக் நாவல் !  முதல் தேர்வானது safe என்பதில்  ஐயமே கிடையாது ; கதை சற்றே சுமாராய் இருப்பினும் அதற்கொரு பெரிய விமர்சனம் எழுந்திட வாய்ப்புகள் குறைவு என்பதால் ! ஆனால் choice # 2 -ஐப் பொறுத்த வரை அது ஹிட் அடிக்கவும் வாய்ப்புண்டு ; தலையைப் பிராண்டச் செய்யவும் வாய்ப்புண்டு என்பது புரிந்தது ! LMS போன்றதொரு out & out entertainer-ல் இந்த ரிஸ்க் தேவை தானா என்ற பயமும் இருந்தது ! ஆனால் நமது ரசனைகளின் மீதான எனது நம்பிக்கை ரஸ்க் சாப்பிடுவது போல ரிஸ்க் எடுக்கத் துணியச் செய்தது ! இன்று அந்த கிராபிக் நாவல் உங்களின் பாராட்டுகளை ஈட்டும் போது அவற்றை உங்கள் பக்கமாகவே திருப்பி விடுவதே நியாயமாய் இருக்குமென்று தோன்றுகிறது ! ஸ்பைடர்களும்  , ஆர்ச்சிகளும் நிறைந்த உலகிலிருந்து நாம் பயணித்துள்ள தூரம் அசாத்தியமானது தானல்லவா ?

'இத்தாலி என்றாலே அட்டகாச சாகசங்கள் மட்டும் தானில்லை ; உயிரோட்டமான கிராபிக் நாவல்களும் எங்களுக்கு அத்துப்படி' என நிரூபிக்கும் இது போன்ற one shot கதைகள் அவ்வப்போது நம்மிடையே தலைகாட்டும் !  இத்தாலி பற்றிய பேச்சிலிருக்கும் வேளையில் நமது 'தல' பற்றிய சேதி இல்லாமலா ? இதோ வர்ணத்தில் இங்கே நீங்கள் பார்த்திடுவது எந்தக் கதையின் teaser என்பதை நான் சொல்லவும் வேண்டுமா - என்ன ? 
இந்தப் பதிவை நிறைவு செய்யும் முன்பாக இங்கே அவ்வப்போது நிகழும் - டெக்சா ? டைகரா ? குத்துச் சண்டை பற்றிய எனது two bits ! நான் சாலமன் பாப்பையாவுமல்ல ; இது நக்கீரன் பொருட்குற்றம் கண்டறியும் ரகத்திற்கொரு பஞ்சாயத்துமல்ல என்பதால் please don't take me serious guys !

சமீபமாய் நாம் படித்து வரும் டைகர் கதைகள் எல்லாமே சற்றே தடுமாற்றமான ரகத்தில் இருப்பதை தளபதியின் ரசிகர் மன்றம் கூட நிச்சயமாய் மறுக்காது ! சலிப்பூட்டும் ஒரே விதமான knot ; அதே கதைக்களம் ; டைகருக்கென பெரிதாய் எதுவும் திட்டமிடப்படா சாகசங்கள் என்றே இக்கதைகள் பயணிப்பதால் - தங்கக் கல்லறைகளையும், மின்னும் மரணங்களையும் பார்த்துப் பழகிப் போன நமக்கு அல்வாவில் உப்புப் போடப்பட்டிருப்பது போன்ற உணர்வு எழுவதில் வியப்பில்லை ! கடந்த மாதம் நமது படைப்பாளிகளை சந்தித்த போது கூட நைசாக - 'டைகர் விற்பனை எவ்விதம் உள்ளது ?' என்று கேட்டு வைத்தேன் ! "அந்தப் பெயருக்கே" போணியாகி விடும் எங்கள் மார்கெட்டில் என்று புன்சிரிப்போடு சொன்னார்கள் ! அடுத்த ஆல்பம் ( டைகரின் இளம் பருவம்) இந்தாண்டின் இறுதிக்குள் வந்து விடும் என்றும் உற்சாகமாய்ச் சொன்னார்கள் ! ரசனையில் அவர்களை விட நாம் மிகப் பெரிய அப்பாடக்கர்கள் என்பதை அக்கணம் நான் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது ! டைகர் போன்றதொரு ஜாம்பவான் சொதப்பினால் கூட நாம் அவரை மடக்கி விடுகிறோம் ; ஆனால் அங்கோ அவரது track record-ஐ மனதில் கொண்டு வாசகர்கள் அவரை 'அப்படியே' ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளனர் ! (ரசனை என வரும் போது நமது அளவுகோல்களே சரியானவை என்ற சிந்தனை மனதுக்குள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை !) ஒரிஜினல் கதாசிரியரின் மறைவுக்குப் பின்னே டைகர் வரிசையில் புதிது புதிதாய் பணியாற்றும் creators தொடருக்கு நியாயம் செய்வதில்லையே ? - என்று நான் கேள்வியைப் போட்டு வைக்க - ' there can be just 1 Giraud !' என்று சிம்பிளாகப் பதில் சொல்லி முடித்து விட்டனர் !


ஜிராடின் படைப்பில் இருந்த ஆழமோ ; ஆற்றலோ ஒரு தலைமுறைக்குப் ப்ரேத்யேகமானது ; அதனை சராசரியான படைப்பாளிகளைக் கொண்டு replicate செய்திட முனைவது - நடிகர் திலகத்தின் இடத்தை ஒரு திறமையான துணை  நடிகரைக் கொண்டு நிரப்புவதற்கு இணையானது என்பதை அவர்களும் அறியாதில்லை ! எத்தனை நேர்மையாய் முயற்சித்தாலும் அந்த சிம்ம கர்ஜனைக்கு எங்கே போவது ? So ஏற்கனவே பள்ளமாக இருக்கும் அந்த உடைந்த மூக்கரின் மூக்கை 'தல' ரசிகர்கள் போட்டுச் சாத்தி மேலும் உள்ளே தள்ள நினைப்பது யுத்த தர்மமாகாது guys !  

அதே சமயம், உலக அரங்கில் கௌபாய் தொடர்கள் என வரும் போது கேப்டன் டைகர் பெற்றுள்ள அங்கீகாரத்தை டெக்ஸ் பெறவில்லை என்பதும் நிஜமே ! கறுப்பு-வெள்ளை கதைகளை ஒரு தரமான படைப்பாய் பார்த்திட நிறைய நாடுகள் தயங்குகின்றன ! ஒரு காமிக்ஸ் படைப்பானது - கதை ; சித்திரங்கள் ; வர்ணக் கலவை - என 3 சரிவிகிதத் திறமைகளின் உள்ளடக்கம் என்பது நிஜமெனும் போது அதனில் ஒரு 1/3 rd குறைந்திடும் டெக்சின் black & white சாகசங்களை குறிப்பிட்ட நாடுகள் நீங்கலாக இதர தேசங்கள் உயர்வாய்க் கொண்டாடவில்லை என்பது கண்கூடு ! So கொஞ்சமாய்ப் படைத்து அதில் உலகளவில் ஸ்கோர் செய்தது டைகரின் சாதனை எனில், ஏராளமாய் உருவாக்கி உச்சாணியில் வீற்றிருப்பது டெக்சின் சாதனை ! இருவரையும் ரசிக்கவும், கொண்டாடவும் நமக்கொரு வாய்ப்பிருக்கும் போது - சின்ன ஜட்டிகளைப் போட்டுக் கொண்டு எதிராளியை மூக்கிலேயே குத்தும் WWF உல்டாக்கள் நமக்குத் தேவையா ? 

நேற்று முதலாய் துவங்கியுள்ள நாகர்கோயில் புத்தக விழாவினில் நமது ஸ்டால் எண்: 59 ! சரியாக அதற்கொரு நாள் முன்பாக நம்மிடம் அச்சகப் பிரிவில் பணியாற்றும் மூத்த பணியாளர் ஒருவர் மாரடைப்பால் காலமாகி விட்டதால் அலுவலகத்திற்கு விடுமுறை தந்திருந்தோம். So அதன் பின்பாக நேற்றைக்கு புத்தகங்களைப் பார்சல் செய்து கொண்டு நம் பணியாளர்கள் நாகர்கோவிலுக்கு பயணமாகியுள்ளனர் ! ரம்மியமான இந்நகரில் காமிக்ஸ் இதழ்களுக்கான வரவேற்பு எவ்விதம் இருக்குமென்று தெரியவில்லை ; எவ்விதம் இருப்பினும், முயற்சிகளின்றி வேரூன்றல் சாத்தியமாகாது என்பதால் நண்பிக்கையோடு காத்திருக்கிறோம் ! மீண்டும் சந்திப்போம் ! Bye for now folks !

P.S : ஆகஸ்ட் 8-12 தேதிகளுக்குள் (WORLDMART) ஆன்லைனில் செய்யப்பட ஆர்டர்கள் ஏதோ சர்வர் பிரச்னையால் எங்களுக்கு நேற்றைக்கே கிடைக்கப் பெற்றது என்பதால் நம்பர் 648-668 வரையிலான ஆர்டர்களுக்குரிய இதழ்களை நாளைய தினமே அனுப்பிடுவோம் ! எதிர்பாரா இத்தாமதத்திற்கு எங்கள் apologies !

அதே போல - மின்னும் மரணம் முன்பதிவுப் பட்டியல் வரும் இதழினில் வெளியாகும் ! So சற்றே பொறுமை ப்ளீஸ் ! ஸ்டெல்லா நீங்கலாய் அலுவலகத்தில் பணி புரிந்து வந்த இன்னொரு பெண்மணி தற்போது நம்மிடம் பணியாற்றவில்லை என்பதாலும், சுகவீனத்தால் இராதாகிருஷ்ணனும் ஒரு மாதமாய் அலுவலகம் வராது இருப்பதாலும், ரொம்பவே தடுமாற்றம் ஸ்டெல்லா ஒற்றை ஆளாய் சமாளிப்பதற்கு ! இதர 2 பையன்களும் ஒரு மாதமாய் நெல்லை ; ஈரோடு ; இப்போது நாகர்கோவில் என சுற்றி வருவதால் திணறல் ஜாஸ்தியாகியுள்ளது ! முயன்று வருகிறோம் புதிதாய் உதவியாளர்களை பணியமர்த்த ! Please bear with us for the moment folks ! 

428 comments:

  1. Can't wait to see the books on hand.

    ReplyDelete
  2. //So 2015-ன் அட்டவணைக்குள் வுட்சிடி கோமாளிகளின் classic கதைகள் இடம்பிடிக்கும் வாய்ப்புகள் பிரகாசம் ! //

    மகிழ்ச்சியான செய்தி.


    கார்சனின் கடந்த காலம்

    கலரில் பட்டய கெளப்பும் போல இருக்கே.!

    ReplyDelete
  3. ! முதலாவது நம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்ட "சிப்பாய்க் கலகம்" பற்றிய கதை !
    in 2015?

    ReplyDelete
  4. //LMS போன்றதொரு out & out entertainer-ல் இந்த ரிஸ்க் தேவை தானா என்ற பயமும் இருந்தது ! ஆனால் நமது ரசனைகளின் மீதான எனது நம்பிக்கை ரஸ்க் சாப்பிடுவது போல ரிஸ்க் எடுக்கத் துணியச் செய்தது ! இன்று அந்த கிராபிக் நாவல் உங்களின் பாராட்டுகளை ஈட்டும் போது அவற்றை உங்கள் பக்கமாகவே திருப்பி விடுவதே நியாயமாய் இருக்குமென்று தோன்றுகிறது ! ஸ்பைடர்களும் , ஆர்ச்சிகளும் நிறைந்த உலகிலிருந்து நாம் பயணித்துள்ள தூரம் அசாத்தியமானது தானல்லவா ?//

    +1

    ReplyDelete
    Replies
    1. sir salute or your confidence on readers! do bring in all Le Storie if possible plz.

      Delete
    2. //2015-ல் ஜூலியாவையும் நமது வண்டியில் தொற்றிக் கொள்ள விடலாமா ? //
      plz do it Edit, we expect to see more of her.

      Delete
  5. // சிக் பில்லின் துவக்க காலத்துத் (தரமான) கதைகளும் இப்போது டிஜிட்டல் கோப்புகளாய் உருமாற்றம் கண்டு வருகின்றன ! So 2015-ன் அட்டவணைக்குள் வுட்சிடி கோமாளிகளின் classic கதைகள் இடம்பிடிக்கும் வாய்ப்புகள் பிரகாசம்! //

    Great!

    // LMS -க்கென கதைகளைத் தேர்வு செய்யும் வேளையில் இந்த 110 பக்க slot-ல் போடும் பொருட்டு என் மண்டைக்குள் 2 கதைத் தேர்வுகள் இருந்தன ! முதலாவது நம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்ட "சிப்பாய்க் கலகம்" பற்றிய கதை ! //
    இந்தக் கதையை இந்தாண்டிலேயே வெளியிடமுடியுமா சார்? (Only if it is in full color )


    // What say folks ? 2015-ல் ஜூலியாவையும் நமது வண்டியில் தொற்றிக் கொள்ள விடலாமா ? //
    Sample'க்கு ஒரேவொரு கதை வேண்டுமானால் போட்டுப்பார்க்கலாம் எனத்தோன்றுகிறது - அதுவும் ஆண்டின் கடைசியில் :D

    ReplyDelete
    Replies
    1. //இந்தக் கதையை இந்தாண்டிலேயே வெளியிடமுடியுமா சார்? (Only if it is in full color )//
      +1

      Delete
  6. //மொட்டை பாஸ் ஷெரீப்அட்டகாச ஆர்டின்னும் தொடரும் காலங்களில் நம்மைத் தரமான கதைகளோடு சந்திக்க ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன //

    //2015-ன் அட்டவணைக்குள் வுட்சிடி கோமாளிகளின் classic கதைகள் இடம்பிடிக்கும் வாய்ப்புகள் பிரகாசம் !//

    //மூன்றே இத்தாலியப் பரிச்சயங்கள் ஓரிரு மாதங்களில் ஒரு மினி கும்பலாய் மாறி விட்டது நமக்கொரு சந்தோஷ முன்னேற்றம் எனப்படுகிறது என் மனதுக்கு !//

    //ஆனால் choice # 2 -ஐப் பொறுத்த வரை அது ஹிட் அடிக்கவும் வாய்ப்புண்டு ; தலையைப் பிராண்டச் செய்யவும் வாய்ப்புண்டு என்பது புரிந்தது !//

    //உலக அரங்கில் கௌபாய் தொடர்கள் என வரும் போது கேப்டன் டைகர் பெற்றுள்ள அங்கீகாரத்தை டெக்ஸ் பெறவில்லை என்பதும் நிஜமே !//

    //(ரசனை என வரும் போது நமது அளவுகோல்களே சரியானவை என்ற சிந்தனை மனதுக்குள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை !) //

    //இருவரையும் ரசிக்கவும், கொண்டாடவும் நமக்கொரு வாய்ப்பிருக்கும் போது - சின்ன ஜட்டிகளைப் போட்டுக் கொண்டு எதிராளியை மூக்கிலேயே குத்தும் WWF உல்டாக்கள் நமக்குத் தேவையா ? //

    அருமையாக எவ்வளவு விஷயங்களை அடுக்கடுக்காக காமிக்ஸ் பயணிக்கும் பாதை பற்றிய அலசல்கள்,அறிவிப்புகள் படிக்கபடிக்க காமிக்ஸ் உலகம்- உங்கள் கண்களால், எழுத்துக்களால்
    எனக்குள் தரிசிக்க முடிகிறது ஸார் !

    ReplyDelete
    Replies
    1. LMS-ல் வந்த கதைகள் பற்றி தர வரிசையை (எடிட்டர் உட்பட) நண்பர்கள்
      வரிசைப்படுத்திக்கொண்டிருக்க 30 வருடத்தில் 230+ பதிப்பில் மறக்கமுடியாத
      பதிப்பு பற்றிய எடிட்டரின் topten எது? அசத்தல் படங்களுடன் பார்க்க.....
      இங்கே'கிளிக்'

      Delete
  7. உடைந்த மூக்காருக்கு இப்படி ஒரு சோதனையா அய்யகோ?

    ReplyDelete
  8. LMS அருமை , மின்னும் மரணம் , மற்றும் கிட், ஆர்ட்டின் மறு பதிப்பு மிகவும் சந்தோசம் , வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  9. கார்சனின் கடந்த காலம் எப்போது சார்? தீபாவளிக்கு டெக்ஸ் வீட்டுக்கு வருவாரா?

    ReplyDelete
    Replies
    1. இந்த தீபாவளி தல தீபாவளி இல்லை.

      Delete
    2. தீபாவளிக்கு டெக்ஸ் கிடையாதா? oh my God... யாராவது வரிங்களா லயன் அலுவலகத்தின் முன் தீபாவளி வரைக்கும் உண்ணாவிரதம் இருக்க?

      Delete
    3. டெக்ஸ் இல்லாத தீபாவளி துளியும் சகிக்காது. போராட்டத்தில் குதிக்க நானும் தயார்!

      Delete
    4. //டெக்ஸ் இல்லாத தீபாவளி துளியும் சகிக்காது. போராட்டத்தில் குதிக்க நானும் தயார்!//


      அந்த ஆட்டுதாடி தாத்தாவோட ஆரம்பகாலம் தீபாவளிக்கு.வருமின்னுதான் நெனச்சிண்டிருக்கேன்

      Delete
    5. தீபாவளிக்கு டெக்ஸ் இல்லாவிட்டால், தாழம்பூ தடை செய்யும் போராட்டம் நடத்தப்படும் :P

      Delete
    6. தாழம்பூ தடை ?

      சார் இந்த மாதமே வரா விட்டால் ....

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. கார்சன்இன் கடந்த காலம் டிசம்பர் வெளியிடு என்று முன்பே அறிவித்துவிட்டாரே! அனேகமாக கிங் ஸ்பெஷல் தான் தீபாவளி ஸ்பெஷல் என்பது என் கணிப்பு !

      Delete
  10. ஆசிரியரே, நமது லயனின் அடுத்த ஆண்டு மலராக டெக்ஸ்ன் சோலோ சாகசமாக 2 அல்லது 3 கதைகளாக வண்ணத்தில் வெளியிடுங்களேன்.

    ReplyDelete
  11. ஜூலியா -வை வண்டியில் தொற்றி கொள்ள செய்வதென்ன .........

    முன் சீட்டிலேயே உட்கார வைக்கலாம் சார் .......

    யதார்த்த கதாபாத்திரங்களுக்கும் எங்கள் நெஞ்சில் எப்போதும் இடமுண்டு ......

    ஜூலியா -வின் பிற கதைகள் எப்படி சார் ?....

    ReplyDelete
    Replies
    1. விட்டா மடியில் உக்கார வைப்பீர் போல் உள்ளதே ............அப்புறம்....... ''அந்த'' கண்ணன் என்ன பண்ணுவாராம்.....

      Delete
  12. கார்சனின் கடந்த காலம் .......

    வண்ணத்தில் .........

    டீஸரை .....ஸ்டீல் பார்க்க வேண்டும் .......

    அவர் குதிக்கிற குதியில் ..............:)

    ReplyDelete
    Replies
    1. நண்பரே வண்ணத்தில் இது lms ஐ விட குறையாய் இருக்கலாம் ...ஆனால் எண்ணத்தில் இதில் இல்லாதது எண்ண என கேள்வி எழுப்புமளவு ஒரு கதை ! ஏன் வாழ்வில் இரத்த படலமும் சரி இந்த கிழவனின் கடந்த காலமும் சரி நான் படித்தவற்றிலே ஒரு மை கல் என்றால் மிகை அல்ல !

      Delete
    2. எனது கொண்டாட்டம் என்னால் விவரிக்க முடியாது...பிறரால் புரிந்து கொள்ளவும் முடியாது....பலருக்கும் இதே எண்ணம் இருக்கலாம் ...

      Delete
    3. //எனது கொண்டாட்டம் என்னால் விவரிக்க முடியாது.//

      எனக்கும் அவ்வாறேயுள்ளது.

      சில கதை நாயகர்கள் நெருங்கிய நண்பர்களாக தோன்றுவது எனக்கு மட்டும்தானா ?!

      Delete
  13. வுட் சிட்டி கோமாளிகள் மறுவருகை ........முகமலர்ச்சி ............

    ReplyDelete
  14. //சமீபமாய் நமக்கு வந்துள்ள அவர்களது புது இதழ்களின் previews ; கதைச் சுருக்கங்கள் ; சித்திர டிரைலர்கள் என பார்க்கும் போது தலைசுற்றாத குறை தான் எனக்கு ! '//

    அவற்றை சற்று விளக்கமாக எங்களுக்கும் தெரிவிப்பீர்களா சார்.?
    என் தலை இதுவரை சுற்றியதேயில்லை.(என் முதுகை நானே பார்க்க ஆசை.)

    ReplyDelete
    Replies
    1. சட்டையை மாற்றி போடுங்கள் ............முதுகு புறம் முன் பக்கம் வருமாறு .................


      எஸ்


      அப்பிடிதான்

      இப்ப முன்பக்க முதுகு ரெடி

      Delete
  15. //முதலாவது நம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்ட "சிப்பாய்க் கலகம்" பற்றிய கதை
    //

    இக்கதையை நாங்கள் தரிசிக்கும் வாய்ப்பு எப்போது வரும் சார்.?

    ReplyDelete
  16. Interesting post. Thanks Vijay for email update.

    ReplyDelete
    Replies
    1. டியர் விஸ்கி-சுஸ்கி,

      கோவையிலிருந்து ஈரோடு வெறும் 100 கிலோமீட்டர்கள்தானே? இந்த வருடமாவது ஈ.பு.திருவிழாவுக்கு வருவீர்களென எதிர்பார்த்தேன். :(

      சாக்குப் போக்கு எதுவும் சொல்லாமல் அடுத்த வருடமாவது வந்துசேர்வீர்களென எதிர்பார்க்கிறேன்...

      Delete
  17. வழக்கம் போல அட்டகாசமான, உற்சாகமான அப்டேட்ஸ்! சுவாரசியம்! மகிழ்ச்சி! அடுத்த இதழ்களை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.

    ReplyDelete
  18. * இயற்கை எய்திய நம் அச்சகப் பணியாளரின் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். :(

    * நாகர்கோயில் புத்தகத் திருவிழா வெற்றியடைய எனது வாழ்த்துகள்!

    * 'இறந்த காலம் இறப்பதில்லை' பெற்றுள்ள வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஒரேடியாய் டமால் டூமீல்களையே பார்த்திடாமல் அவ்வப்போது இதுபோன்ற 'மனதுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்' கதைகளையும் எதிர்பார்த்து மனம் ஏங்கிக்கிடக்கிறது.

    * 'சட்டம் அறிந்திரா சமவெளி' அடர்த்தியான வண்ணங்களையும், ஷார்ப்பான ஓவியங்களையும் தாண்டி பெரிதாய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரொம்பவே Flatஆகச் செல்லும் கதைக் களமும், பயமுறுத்தாத வில்லன்களும் பக்கங்களை வீணடித்திருப்பதை படித்து முடித்தபோது உணரமுடிந்தது. சமீபத்தில் வெளியான நில்-கவனி-சுடு, காவல் கழுகு ஆகியவற்றோடு ஒப்பிடும்போது டெக்ஸ் குழுவினர் இதில் சற்று குறைச்சலான மதிப்பெண்களையே பெறுகின்றனர்.

    * மார்ட்டினின் 'கட்டத்தில் ஒரு வட்டம்' - அட்டகாசமான த்ரில்லர்! சித்திரத் தரம் இதைப்போன்றே நன்றாக இருக்குமானால் மார்ட்டினுக்கு அடுத்தவருடம் கொஞ்சம் அதிக வாய்ப்புக் கொடுக்கலாம்.

    * ராபினின் 'நிழல்களின் நினைவுகள்' வழக்கம்போலவே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மங்கலான வண்ணங்கள்கூட பழைமையான கிராமம் சார்ந்த கதையுடன் பர்ஃபெக்கடாக ஒத்துப்போகிறது. அந்த கிராமத்துக்குள் நானும் புகுந்த வந்ததைப்போன்ற ஒரு உணர்வு!

    * 'காமெடி தல' ஆர்ட்டினின் மறுவரவுச் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.

    * வண்ணத்தில் 'கார்சனின் கடந்த காலத்தை' படித்து மகிழ, நான் ஏற்கனவே படித்ததை கஷ்டப்பட்டு மறந்து காத்திருக்கிறேன்.

    * ஜூலியாவிற்கு வண்டியில் இடம்கொடுக்கும் முன் அந்தப் பெண்ணை நன்றாக சாப்பிட்டு உடம்பைத் தேர்த்தச் சொல்லுங்கள். ரொம்பவே ஒல்லிப்பிச்சான் (லக்கிலூக்கிற்கு மேட்ச்சாக இருப்பாள்) பார்க்கப் பாவமாக இருக்கிறது.

    ReplyDelete
  19. Dear Editor,
    LMS வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. புத்தகத்தின் Making எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த வெற்றி நமக்கு உணர்த்துகிறது. என்னை பொருத்தவரை, LMSன் size, hardbound, paper quality, printing, color, ஆகியவற்றின் வெற்றியே இது. இந்த அம்சங்களில் குறை இருந்து, LMSன் கதைகள் மட்டுமே இருந்திருந்தால் இந்த வெற்றி கிட்டி இருக்காதென்பது எனது opinion. இனி வரும் இதழ்களில் இந்த தரத்தை கடைப்பிடிப்போமெனில், நமது இரண்டாம் inningsன் வெற்றிக்கு தடை ஏதும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

    ReplyDelete
  20. //" ! இந்த ஸ்கூபி - ரூபி ஜோடியின் கதைகளை ஏற்கனவே நாம் ரசித்துள்ள போதிலும், இவற்றை முழுமையான நகைச்சுவை வரிசைக்குள் நுழைத்திடுவது சரியாகாது என்பதே எனது அபிப்ராயம் ! //

    ஆனால் ஆகாயத்தில் அட்டகாசம் விலா நோக சிரிக்கவைத்ததே.?

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இது வரை வந்த இரண்டு கதைகளும் .....ஆசிரியர் கூட ஆழ்ந்து படிக்கவில்லை என்றே தோன்றுகிறது ! காமெடிக்கு பஞ்சமில்லா கதை !

      Delete
  21. LMS பார்த்து பார்த்து ரசிக்கும் ஒரு அருமையான மைல்கல் இதழ். அனைத்து கதைகளும் அருமையான தேர்வு.

    இறந்த காலம் இறப்பதில்லை: அருமையான க்ரைம் கதை. இறந்த காலம் & நிகழ்காலத்தை ஃப்ரேம் மூலமாக உணர்த்தும் விதம் நன்றாக இருந்தது. படித்தோம் முடித்தோம் என்றில்லாமல், படித்த பிறகும் யோசிக்கவும் அலசி ஆராயவும் தூண்டும் கதைக்களம். ரெனி கதாபாத்திரம் அருமை. Expecting more stories like this.

    Rintin: இந்த கதையில் நான் ரொம்ப ரசித்தது, முரண்பாடான வசனங்களை. நிறையே இடங்களில், எடிட்டர் வார்த்தை ஜாலங்கள் அருமையாக இருந்தது. சுற்றி இருப்பவர்கள் ஒன்று சொல்வதும், அதற்கு நேர் மாறாக Rintin யோசிப்பதும் ரசிக்கும் படியாக இருந்தது.

    மார்ஷல் டைகர்: 1st & last ஃப்ரேம் இல் மட்டும் தான் மார்ஷல் என்ற பெயர் உள்ளது. அதே போல் டைகர்ரும் அங்கொன்றும், இங்கொன்றும் ஃப்ரேம் களில் தலை காட்டுகிறார். ஓவியங்கள் அருமை.

    ஜூலியா: இவர் எப்படி பட்ட நாயகி என்பதை இந்த ஒரு கதையை வைத்து புரிந்து கொள்ள முடியவில்லை. பணிப்பெண் சிபில் தான் கதாநாயகி போல் தோன்றுகிறார். கதை ஹாலீவுட் படம் பார்ப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தியது. வில்லன் ஒருவன் துப்பாக்கியை தூக்கும் போதே, கதையின் முடிவை யூகிக்க முடிந்து விட்டது. ஜூலியா ஒரு அறையும் வாங்குகிறார். ஜூலியா ஒரு மீடியேடர் போலவே வந்து செல்கிறார். நுணுக்கமான சித்திரங்கள் அருமை.

    மார்ட்டின்: கதை நன்றாக உள்ளது. எப்படி புதிர் அரங்கத்தில் இருந்து, மார்ட்டின் & டயானா எப்படி வெளியே வருவார்கள் என்ற பதட்டம் கடைசி வரை இருந்தது. Expecting more stories.

    CID Robin: இந்த கதையின் நிறையே இடங்கள் யூகிக்க கூடியதாக இருந்தும், கதை சுவாரசியமாகவே சென்றது. எனக்கு துப்பறியும் கதைகள் ரொம்ப பிடிக்கும். Expecting more.

    Lucky Luke: காமெடீ & அதிரடியோடு கதை ரசிக்கும் படியாக இருந்தது.

    Dylan: வித்தியாசமான கதைக்களம். இது போல் கதைகளை இன்னும் நிறையே எதிர்பார்க்கிறேன். Colorful artwork அருமையாக இருந்தது.

    டெக்ஸ்: ஆரம்பம் முதல் இறுதி வரை, அதிரடி அதிரடி அதிரடி....என் வழி தனி வழி என்று கூறி டெக்ஸ், காலால் உதைத்து கதவை திறக்கும் இடம் தூள். வசனங்கள் & ஓவியங்கள் ரசிக்கும் படியாக இருந்தது.

    மொத்தத்தில், டெக்ஸ் & Robin தவிர மற்ற அனைத்து நாயகர்களும் கதையின் நடுவே சும்மா வந்து போகிறார்கள்.

    இதுபோல் ஒரு இதழ் வருடத்திற்கு ஒன்று கண்டிப்பாக வேண்டும் Sir

    ஒரு நாள் விடுமுறை எடுத்து படித்து முடித்தேன் LMS சை. Enjoyed the reading a lot...thanks for giving such mind blowing book for us.

    ReplyDelete
  22. //..நமது கார்ட்டூன் உச்ச நட்சத்திரங்களான மொட்டை பாஸ் ஷெரீப்பும் ; அட்டகாச ஆர்டின்னும் தொடரும் காலங்களில் நம்மைத் தரமான கதைகளோடு சந்திக்க ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன ! நமது அவ்வப்போதைய நச்சரிப்புகள் ஒரு பக்கமிருக்க, சிக் பில்லின் கதைகளை பெல்ஜியத்தில் முழுமையாய் மறுபதிப்பு செய்யும் எண்ணம் சூடு பிடித்து வருகின்றது ! அதன் பலனாய் சிக் பில்லின் துவக்க காலத்துத் (தரமான) கதைகளும் இப்போது டிஜிட்டல் கோப்புகளாய் உருமாற்றம் கண்டு வருகின்றன ! So 2015-ன் அட்டவணைக்குள் வுட்சிடி கோமாளிகளின் classic கதைகள் இடம்பிடிக்கும் வாய்ப்புகள் பிரகாசம் ! ..//

    சூப்பர் news...

    ReplyDelete
  23. //...இதோ வர்ணத்தில் இங்கே நீங்கள் பார்த்திடுவது எந்தக் கதையின் teaser என்பதை நான் சொல்லவும் வேண்டுமா - என்ன ? ..//

    வண்ணத்தில் வருவது மகிழ்ச்சி ... அதுவே Hard-bound-ல் வந்தால் மிக்க மகிழ்ச்சி :) அப்போது தான் இது ஒரு proper Collector's Edition ஆகும் ;) :D

    (என்ன ஒரு பேராசை.. கருப்பு வெள்ளை என்ற போது, வண்ணத்தில் வந்தே ஆகவேண்டும் என்று போராட்டம்.. இப்போது வண்ணத்தில் வருகிறது .. அத்தோடு Hard-bound-ல் வரவேண்டுமாம்ல ;) :)

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை lms போல ஆசிரியர் அமுக்கமாய் இருந்து விட்டால் ....

      Delete
    2. குறிப்பாக LMS-1 தரத்தில் அச்சிடப்படவேண்டும்....
      LMS -2 வது புத்தகம் போலில்லாமல் ...

      Delete
  24. Thanks vijay for the update on editor's new post.

    Interesting post with lot of updates.
    * chikbill classic stories reprint.
    * julia story - will comment after i finish the LMS story.
    * story about indian independence - i am not a big fan of indian independence stories in comics because it can make us sentimental / sad.

    Thanks steele for the reply in the last post. Will definetly write my review here about LMS stories.
    Based on our readers comments i am thinking of starting with the black and white stories.




    ReplyDelete
    Replies
    1. கருப்பு வெள்ளை படியுங்கள்..... உங்களை வண்ணமாக்குவது உறுதி !

      Delete
  25. எடிட்டர் சார் .......

    ரத்தபடலம் வண்ண பதிப்பை மட்டும் விதிவிலக்காக வைத்து விட்டு (அதைமட்டும் விட

    மனதே இல்லை ) இனி மறுபதிப்பு ஏதுமின்றி எல்லாமே புதிய கதைகளே நீங்கள்

    வெளியிடலாம் .........

    நீங்களே கூறுவது போல புதிய கதை களங்களும் கதாபாத்திரங்களும் நிரம்பி

    வழியும்போது மறுபதிப்பு எதற்கு ......( இதை சொல்ல தயக்கமாக இருந்தாலும்

    நம் காமிக்ஸ் வளர்ச்சிக்கு என்று பார்த்தால் இதுதான் நல்லது என தோன்றுகிறது ...

    இத்தனைக்கும் அருமையான பல பழைய கதைகள் என்னிடம் இல்லை .....

    பூம் பூம் படலம் கூட இப்போதுதான் படித்தேன் ....)

    ReplyDelete
  26. //ரத்தபடலம் வண்ண பதிப்பை மட்டும் விதிவிலக்காக வைத்து விட்டு (அதைமட்டும் விட

    மனதே இல்லை ) இனி மறுபதிப்பு ஏதுமின்றி எல்லாமே புதிய கதைகளே நீங்கள்

    வெளியிடலாம் ........//

    அந்த விதிவிலக்கு லிஸ்ட்டில் லக்கிலூக், ஆர்ட்டீன் இருவரையும் சேர்த்துகௌகொள்ளுங்கள்..
    வயிறுகுலுங்க சிரிக்கவைக்கும் ஆர்ட்டின் கதைகள் நிறைய உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன்.(தலைவாங்கும் தேசம், மலையோடுமல்யுத்தம்,மிஸ்டர் மஹாராஜா, நான் ரொம்ப சிரித்த ஆர்ட்டீன் கதைகளில் சில.)

    மற்ற கதைகளின் மறுபதிப்பு பற்றி கருத்து ஏதும் என்னிடமில்லை.

    ReplyDelete
    Replies
    1. அப்படியே இந்த விதிவிலக்கு லிஸ்ட்டில் நம்ப மூம்மூர்த்திகளையும் சேர்த்துகோங்க.. மத்தவங்களுக்கு ஒரு நியாயம்.. இவங்களுக்கு ஒரு நியாயமா; என்ன ஒரு ஓர வஞ்சனை.

      Delete
    2. மறுபதிப்புல ஊருக்கு ஒரு நியாயம் எங்க மூம்முர்த்திகளுக்கு ஒரு நியாயமா? என்ன கொடுமை விஜயன் சார்.

      Delete
    3. ஆசிரியரின் மெகா முயற்சிகளின் இப்போதைய சூழலில் இரத்தபடலம் கேட்க என்னால் இயலவில்லை ! ஆனால் மின்னும் மரணம் வெற்றிக்கு பின்னர் இரத்தபடலம் எனும் தீர்மானம் வேண்டும் .....

      Delete
    4. ரத்த படலம் போன்ற மெகா இதழ்களை மறு பதிப்பு கேட்பதை விட, டிடேட்டிவ் ஸ்பெஷல், மூம்மூர்த்திகள் டைஜெஸ்ட் என கேட்டலாமே! இவைகளை விற்பதில் உள்ள ரிஸ்க் குறைவு என்பது எனது எண்ணம்.

      சில மெகா இதழ்களை குறிபிட்ட இடைவெளி இல்லாமல் மறுபதிப்பு கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை!

      Delete
    5. //ரத்த படலம் போன்ற மெகா இதழ்களை மறு பதிப்பு கேட்பதை விட, டிடேட்டிவ் ஸ்பெஷல், மூம்மூர்த்திகள் டைஜெஸ்ட் என கேட்டலாமே! இவைகளை விற்பதில் உள்ள ரிஸ்க் குறைவு //
      +1


      ///சில மகா இதழ்களை குறிபிட்ட இடைவெளி இல்லாமல் மறுபதிப்பு கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை!//
      .+1

      Delete
  27. ஹாய் விஜயன் சார்,
    தங்களுக்கு இப்போதுதான் திருவிழா முடிந்ததென்றால் சில நாட்களின் முன்புதான் எங்களுக்கு ஆரம்பித்தது.நேற்றுத்தான் LMS ஐ முழுமையாக
    படித்து முடித்தேன்.LMS பல சுவைகளின் தொகுப்பாய் கல்யாணவிருந்து சாப்பிட்ட நிறைவை தந்தது.LMS ஓட அழகே ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கதைகளங்களும் முற்றிலும் வேறுபட்டு பயணிப்பதுதான். முதன்முதலில் புக்கை பார்சலிலிருந்து வெளியே எடுத்ததும் "என்னடி இது? பொன்னியின் செல்வன் புக் சைசில் இருக்கு"ன்னு அதை கையில் வாங்கி அம்மா புரட்டிப் பார்த்த போது ,"இங்க பாருங்கம்மா..புக்மார்க் கூட இருக்கு"ன்னு தம்பி குதித்த போது எனக்குள் அப்படி ஒரு கர்வம் தோன்றியது .(ஏதோ நான்தான் புக்கையே செஞ்ச மாதிரி) சுத்தி சுத்தி புக்கை பா்த்த பின் முதல் பக்கத்தை திறந்ததும் belongs to ; என்ற இடத்தில் எங்களிருவருக்கும் சண்டை தொடங்கியது; யாரோட பேரை எழுதுறதுன்னு..நல்ல வேளை நீங்க 3 லைன் விட்டதால புக்கு பொழைச்சது.
    ஏற்கனவே இங்கு நண்பர்கள் அனைத்து கதைகளையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்தலசியதை வாசித்ததனால் அதிலிருந்த அனைத்து கதைகளைப்பற்றிய ஒரு தெளிவு கிடைத்ததனால் புதிதாய் எந்த எதிர்பார்ப்புமின்றி அது எவ்வாறு இருக்கின்றதோ அதை அவ்வாறே ஏற்கும் மனப்பக்குவத்திலேயே கதையை படித்தேன். அதனாலோ என்னமோ எல்லாகதைகளுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தன.(அதாவது எங்குமே அதிகமாக எதிர்பார்த்து ஏமாற்றத்தை சந்திக்க நேரவில்லை)
    குறிப்பிட்டு சொல்வதானால் ஜூலியா கதை உண்மையிலேயே எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. நானே எதிர்பாரா திருப்பம் சிபில் அந்த வில்லனுடன் கூட்டு சேர்ந்ததுதான்.பரபரப்பான கதையோட்டம்.
    அடுத்தது பலர் ராபினின் சித்திரதரத்தைப்பற்றி குறிப்பிட்டிருந்தனர்.ஆனால்,எங்களை பொறுத்தவரை கதை நன்றாக இருந்தால் அதன் ஓவியத்தரம் கண்களை உறுத்துவதில்லை என்பதால் அது ஒரு விடயமாகவே தோன்றவில்லை.அவரது கதைகள் தொடர்ந்தால் சந்தோஷப்படுவோம்.(மார்வின்,சீஃப் பை எதிர்பார்த்து ஏமார்ந்தது தனிக்கதை)
    லயனில் வந்த திகில்கதைகளை நாங்க ரொம்ப மிஸ் பண்ணினோம்.அதை அதை அந்திமண்டலம் நிறைவாய் ஈடு செய்தது.(இதை அடிக்கடி எதிர் பார்க்கின்றோம்.)
    இறந்தகாலம் இறப்பதில்லை பல விடையறியா கேள்விகளை விதைத்து சென்ற போதும் நன்றாகவே இருந்தது,(Example:- ரெனி ஏன் சாக விரும்பினார்..உயிரோடிருந்து தொடர்ந்து மாக்ஸை காப்பாற்றிகொண்டிருந்திருக்கலாமே?)வித்தயாசமான கதை வடிவம்,ஆழமான மனவுணர்வுகளுடன் பயணித்த புதுமையான கதையோட்டம்.

    ReplyDelete
  28. இம்முறை வர்ணத்திலும் டெக்ஸ் அழகாகவே இருந்தது நிம்மதி.கார்ஸன் வாயைதிறந்தாலே சிரிப்பு சிரிப்பா வருது..டெக்ஸோட சாமர்த்தியமும் அவரது திட்டங்கள் பலிப்பதும் எதிரிகள் முழிப்பதும் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருந்தது. அப்படி இருக்கணும் எங்க டெக்ஸ். கதை முழுவதும் கூலாக எங்குமே சிறு தடுமாற்றம் கூட இல்லாம அவ்ளோ ஈசியா அவர் நடந்துகிட்டதும் பிளான் பண்றதும் AWSOME SIR! (அவர் கூலா இருந்தாருன்னு நான் சொன்னது அவர் பிளான் பண்றதை பத்திதான்.அடிதடியில அனல் பறக்குது.)
    மார்ட்டின்னோட கதை சற்றே குழப்பமாக சென்ற போதும்(வில்லன் காரெக்டர்டரை புரிஞ்சுக்கவே முடியல) வித்தியாசமான கதை என்பதால் ரசித்து படித்தேன்.
    டைகரோட கதையை தம்பி வாசிச்சுட்டிருந்தான்.திடீர்னு" What the ?"ன்னு கத்தினான். என்னடான்னு நான் பாய்ஞ்சோடிப் போய் கேக்கறேன் "என்னடா நடந்துச்சு"?ன்னு அவன் சொல்றான்.."இப்பதான் கதை தொடங்கப் போகுதுன்னு நினைக்கறச்சே முற்றும்னு போட்டுட்டாங்கடி..அடுத்த பாகம் எப்ப வருமோ?"ன்னு கடுப்பாயிட்டான்.நான் வாசிக்கறச்சேயும் அதே எண்ணம் தான் தோன்றியது. மிகுதி இருபாகங்களையும் ஒரே புக்கா போட்ட நல்லது சார்.
    லக்கியை ஜேனோட பார்க்கவே குஷியாக இருந்தது. ஜாலியான கதை. கதை தொடங்கியதிலிருந்து முடியும் வரை இதழ்களில் புன்னகை இருந்தது. கதையோட்டத்திற்கேற்ப அதன் நீளம் கூடுவதும்குறைவதுமாக இருக்கையில் அம்மா என் இளிச்சவாயை பார்த்துட்டு .."தயவு பண்ணி வெளியிடங்கள்ள இந்த புக்ஸை வாசிக்காதடி..பாக்கறவங்க உன்னை லூசுன்னு நினைக்கப் போறாங்கன்னு." அட்வைஸ் பண்ணாங்க (நான் அப்பவே டிசைட் பண்ணிட்டேன்..LMS ஐ எங்க கிளாசுக்கு கொண்டுபோய் பிரெஞ்சு காரங்களுக்கு அதை காட்டி சீன் காட்டியே தீர்றதுன்னு)
    ஜேனோட வரலாற்று குறிப்புக்களை இணைத்தது நல்ல ஜடியா சார்.I LIKE IT!
    ரின்டின் கேன் சிறப்பான புது வரவு.தொடரட்டும் அதன் அட்டகாசங்கள். நாங்களிருவரும் வாசித்து முடித்ததும் ஒவ்வொருமாதமும் LMS வந்தா நல்லாயிருக்குமில்ல?ன்னு தான் அபிப்பிராயப்பட்டோம்.(ஆசைப்படுறதுக்கு காசா? பணமா?LOL)
    இன்னொரு விடயம் விஜயன் சார் LMS நமக்கு மட்டும் லேட்டா கிடைப்பதுபோல அனுப்புறார்ன்னு மின்னும் மரணத்துக்கான முன்பதிவை LMS கைக்கு கெடைச்சாப்புலதான் பண்ணணும்னு நாங்க டிசைட் பண்ணதால இது வரை பண்ணாம பல்லை கடிச்சுட்டு இருந்தோம். (சின்னப்புள்ளதனமான கோவம்..மனசுல வச்சுக்காதீங்க..சரியா?)இப்போ முன்பதிவு பண்றதுக்கு எவ்ளோ EURO அனுப்பணும்னு சொன்னீங்கன்னா அனுப்பிடறோம்.western union ன் மூலமாகத்தான் பண்ணணும்.ஆனா paypal மூலமாகன்னால் இன்னும் easy ன்னு தம்பி சொல்றான். எது எப்படின்னு நீங்க சொன்னா அதன்படி நாங்க பண்ணிடறோம்.

    இறுதியாக LMS என்ற மைல்கல்லை எட்டிப்பிடித்ததற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சந்தோசம் இங்கே அலையாய் என்னுள்ளும் அருமை !

      Delete
  29. @எடிட்டர். //இருவரையும் ரசிக்கவும், கொண்டாடவும் நமக்கொரு வாய்ப்பிருக்கும் போது - சின்ன ஜட்டிகளைப் போட்டுக் கொண்டு எதிராளியை மூக்கிலேயே குத்தும் WWF உல்டாக்கள் நமக்குத் தேவையா ? //...................

    வரும் வாரம்''""ஒருவேளை நடைபெறலாம் "" என்றிருந்த டைகர் vs டெக்ஸ்

    வாதப்போர்
    ஆட்டோமேட்டிக்கலி கேன்சல் ........

    ReplyDelete
    Replies
    1. //நான் சாலமன் பாப்பையாவுமல்ல ; இது நக்கீரன் பொருட்குற்றம் கண்டறியும் ரகத்திற்கொரு பஞ்சாயத்துமல்ல//
      ஆசிரியர் இப்படி சொல்லிட்டு, கடைசில, டைகர்கு ஆதரவா தீர்ப்பு சொல்லிட்டாரு.......எத்துக்கிட்டு தான் ஆகணும்...நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுங்க...

      Delete
  30. விஜயன் சார்,
    இயற்கை எய்திய நம் மூத்த அச்சகப் பணியாளரின் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். :(

    // 2015-ல் ஜூலியாவையும் நமது வண்டியில் தொற்றிக் கொள்ள விடலாமா ? //
    கண்டிப்பாக! நமது காமிக்ஸ்-ல் கதாநாயகிகள் தற்சமயம் இல்லை, இருந்த ஒரு (மாடேஸ்டி) நாயகியையும் ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி அவர் கதைய போடுறது இல்லை.. இருக்கிற இவரையும் ஓரம் கட்டி விட்டால் நான் அழுதுடுவேன் :-( என்னால வேற என்ன செய்ய முடியும் :-(

    // ப்ளூகோட் பட்டாளத்தின் "காதலிக்கக் குதிரையில்லை" !//
    ஆர்வமுடன் எதிர் பார்கிறேன், இதற்கு முன்னால் வந்த ரெண்டு கதைகளும் எனக்கு பிடித்து இருந்தது; இவர்களின் கதைகள் நமது காமிக்ஸ்-ல் தொடர்ந்து வர வேண்டும்.

    ரின்-டின் கதை நான் ஏற்கனவே சொன்னது போல் சுமார்தான், இனி வரும் கதைகளில் காமெடி அதிகம் இருந்தால் மட்டும் இவர் நம்மிடம் தாக்குபிடிபார் என்பது எனது எண்ணம் எனவே இவரின் கதை தேர்வில் கவனம் செலுத்துவது நலம்.

    LMS - டெக்ஸ், டைலன், மற்றும் கிராபிக் நாவெல் கதைகளை படிக்க சரியான நேரம் அமையவில்லை.. உண்மைய சொல்லனும்னா படிக்க தோன்றவில்லை.

    ReplyDelete
    Replies
    1. /LMS - டெக்ஸ், டைலன், மற்றும் கிராபிக் நாவெல் கதைகளை படிக்க சரியான நேரம் அமையவில்லை.. உண்மைய சொல்லனும்னா படிக்க தோன்றவில்லை.//.........

      !!!!!!!!!!!!!!! ??????????!!!!!!!!!!!!!!!!!

      Delete
    2. //ரின்-டின் கதை நான் ஏற்கனவே சொன்னது போல் சுமார்தான், இனி வரும் கதைகளில் காமெடி அதிகம் இருந்தால் மட்டும் இவர் நம்மிடம் தாக்குபிடிபார் என்பது எனது எண்ணம்ரின்-டின் கதை நான் ஏற்கனவே சொன்னது போல் சுமார்தான், இனி வரும் கதைகளில் காமெடி அதிகம் இருந்தால் மட்டும் இவர் நம்மிடம் தாக்குபிடிபார் என்பது எனது எண்ணம்.//

      நேக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.
      தூங்கிண்டே படிச்சேளா பரணி.?

      Delete
    3. //LMS - டெக்ஸ், டைலன், மற்றும் கிராபிக் நாவெல் கதைகளை படிக்க சரியான நேரம் அமையவில்லை.. உண்மைய சொல்லனும்னா படிக்க தோன்றவில்லை. //

      Y திஸ் கொலவெறி D !

      Delete
    4. உண்மைய சொன்னா யாரு மதிக்கிறா, கடைசியில காமிக்ஸ் விமர்சனம் வரை.. என்னத்த சொல்ல!

      Delete
    5. இந்த உண்மை ரொம்பவே சுடுது .!

      Delete
    6. நானும் பரணி டைப் தான். அந்தந்த கதையைப் படிப்பதற்கான Mood வரும் வரை அவசரப்பட்டு படிப்பதில்லை. LMS பெரியது என்பதால் Finish பண்ண 20-30 நாள் ஆவதுகூட சகஜம்.

      Delete
    7. //படிப்பதற்கான Mood வரும் வரை அவசரப்பட்டு படிப்பதில்லை. //
      நிச்சயமாக அப்போதுதான் ரசிக்க முடியும் ! பொறுமை ....

      Delete
    8. Ramesh @ // படிப்பதற்கான Mood வரும் வரை //
      மற்றும் சரியான சந்தர்பம் வரும் வரை என சேர்த்து கொள்ளவும்.

      Delete
    9. // படிப்பதற்கான Mood வரும் வரை //
      // மற்றும் சரியான சந்தர்பம் வரும் வரை என சேர்த்து கொள்ளவும். //

      Exactly.

      Delete
  31. LMSல் கடைசியாய் எஞ்சியிருந்த ஜூலியாவின் கதையை இப்போதுதான் படித்து முடித்தேன். தான் ஒரு குற்றவியல் (துப்பறியும்?!) டாக்டர் என்பதற்காக சீன் போடாமல், இயல்பாக ஒரு பெண்ணுக்கே உரிய பயம், குழப்பம், பதட்டங்களைக் (கண்களாலேயே)காட்டி வித்தியாசப்படுகிறாள். எந்த நேரமும் TVயே கதியாகக் கிடக்கும் தாத்தாவும், TVயே பார்க்காத இன்னொரு தாத்தாவும் மிக அழகாக கதைக்கு திருப்புமுனை கொடுக்கின்றனர். இயல்பான வசனங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

    ஆஹா ஓஹோ ரகம் இல்லையென்றாலும், நிச்சயம் 'ஐயே...' ரகமில்லைதான்! இன்னும் ஓரிரு வாய்ப்புக் கொடுத்தால் ஜூலியாவை அனைவருக்கும் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

    ReplyDelete
  32. //..What say folks ? 2015-ல் ஜூலியாவையும் நமது வண்டியில் தொற்றிக் கொள்ள விடலாமா ? ..//

    தயவுசெய்து ஜூலியா இனிமேல் வேண்டாமே please ...

    ReplyDelete
  33. 'ஹாட்லைன்' மற்றும் 'வாசகர் கடிதம்' உருவான கதையும், மற்ற எடிட்டர்களைப் போல 'வாசகர்களே' என்று ஆரம்பிக்காமல் 'நண்பர்களே' என்பதன் காரணத்தையும் LMSல் வெளியான 'சி.சி.வயதில்' படித்துத் தெரிந்துகொண்டேன். நிறையவே ரசித்தேன் எடிட்டர் சார்!

    LMSல் எனக்குப் பிடித்த வரிசை:

    1. இறந்தகாலம் இறப்பதில்லை
    2. அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே
    3. நிழல்களின் நினைவுகள்
    4. கட்டத்தில் ஒரு வட்டம்
    5. அந்தி மண்டலம்
    6. மார்ஷல் டைகர்
    7. சட்டம் அறிந்திரா சமவெளி
    8. விண்வெளியில் விபரீதம்
    9. பேய் நகரம்

    ReplyDelete
    Replies
    1. லக்கிலூக்குக்கு கடைசி இடம் கொடுத்த உங்களை என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறேன்.

      மறுபடி ஒருமுறை படித்துபாருங்கள்.
      நல்ல கதைங்க அது.

      Delete
  34. //
    தயவுசெய்து ஜூலியா இனிமேல் வேண்டாமே please.//

    இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போமே.!

    ReplyDelete
  35. 2015ல் கறுப்புவெள்ளையில் ஒரு தனிஇதழ் மாதந்தோறும் வெளிவரும் என்று பரவலாக நம்பப்படுவதால்.(?),

    டெக்ஸ்
    ஜூலியா
    டயபாலிக்.(அவ்வ்வ்வ்வ்வ்.)
    மேஜிக்விண்ட்.(கறுப்புவெள்ளையே போதும்.)
    மார்ட்டீன்
    ராபின்
    இ.இறப்பதில்லை போன்ற extraordinary கதைகள் பெற வாய்ப்புள்ளது.
    தவிரவும் விலை குறைவு என்ற Plus pointம் உண்டு.
    எனவே அடுத்த வருடம் கறுப்புவெள்ளை தனிஇதழ் ஒன்று மாதந்தோறும் வெளிவர உங்களின் பலமான ஆதரவு குரல்கள் எடிட்டரை எட்டும்படி இருக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. +1
      மாதம் 4 புத்தகங்கள். அதில் ஒன்று கருப்பு-வெள்ளை என்பது நியாயமான, அவசியமான கோரிக்கைதான்!

      Delete
  36. //பிரான்கோ பெல்ஜிய மார்க்கெட்டில் மறுபதிப்புகள் அத்தி பூத்தார் போலத் தலைகாட்டும் அதே சமயத்தில், புதுப் புதுக் களங்களைத் தேடியலையும் அவர்களது வேட்கையும் பிரமிப்பை உண்டாக்குகிறது ! சமீபமாய் நமக்கு வந்துள்ள அவர்களது புது இதழ்களின் previews ; கதைச் சுருக்கங்கள் ; சித்திர டிரைலர்கள் என பார்க்கும் போது தலைசுற்றாத குறை தான் எனக்கு ! 'எல்லைகளே கிடையாது எங்கள் தேடல்களுக்கு !' - என உரக்கக் கூவுவது போலுள்ளது தற்சமயத்துப் படைப்பாளிகளின் ஆற்றல்களைப் பார்க்கும் போது ! இது போன்ற சூழல்களில் என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு வித முறுக்கேருவதை உணர முடிகிறது ; என்ன ஆனாலும் இது போன்ற புதுமைகளை நாமும் முயற்சித்தே ஆக வேண்டுமென்று !! //

    சார் உங்களது உற்சாகம் என்னையும் தொற்றி கொண்டது !
    lms ல் என்னை மிகவும் கவர்ந்ததே ஜூலியாதான் ......அடுத்தகதைகளுக்காக காத்திருக்கிறேன் ....உளவியல் ரீதியான தத்துவங்களும் , யதார்த்தமான சலிப்பில்லாத உரையாடல்களும் இதன் முக்கிய பலம் ...கதாநாயகி மட்டுமின்றி பிற பாத்திரங்களும் அதில் பட்டய கிளப்பின .

    ஸ்பைடர் உங்கள் காதுகளில் ரீங்காரமிடுவது உண்மையிலே அட்டகாசமான பாடலாய் ஒலிக்கிறது...அந்நாள் புலரும் பொழுது வெகு தொலைவில் இராது !

    லக்கியை விட என்னை கவர்ந்த சிக் பில் வருவது கூடுதல் சந்தோசம் .
    சந்தோசத்திலே பெரிய சந்தோசம் பெரியவரின் கடந்த காலம்தானே ...எத்தனையோ டெக்ஸ் வந்தாலும் இந்த சலிப்பில்லாமல் செல்லும் நட்பு, துரோகம், பழிவாங்கல் ,காதல் ,துப்பறிதல் என சகல பரிணாமங்களையும் தொட்டு நிற்கும் இந்த கதை தரமான தாளில் , வண்ணத்தில் ....என செல்லும் இந்த கதை டெக்ஸ்சின் டிராகன் நகரம் ,டைகரின் மின்னும் மரணம் என அனைத்தையும் மிஞ்சி மனதை சந்தோசத்திலும் , நட்புணர்வை விதைப்பதிலும், ஒரு இனம் புரியா சோகத்தில் சந்தோசத்தை கலப்பதிலும் உள்ள அருமை புதிய வாசகர்களுக்கும் புலனாகும் நாள் தொலைவில் இல்லை என்பதே மாபெரும் சந்தோசம்தானே !

    lms ஐ விட அதிக சந்தோசங்கள் இந்த பதிவில்....வாழ்க ! தொடர்க ....கொண்டாட்டமான வாழ்கை காமிக்ஸ் ரசிகர்களை விட யாருக்கு இங்கே கிடைக்கும் ! அருமை .

    அடுத்து காதலிக்க குதிரை இல்லை முதன் முறியாக மனம் கவர்ந்த செவிந்தியர்களுடன் என்பது இன்னும் எதிர் பார்ப்பை உயர்த்தி உள்ளது .

    சரிதான் கார்சனின் கடந்த காலம் இந்த மாதமே கிடைக்குமா ! ஸ்டீவினை கூட காட்டவில்லையே கண்ணில் !



    ReplyDelete
    Replies
    1. சார் , என்னதான் நிறை என்றாலும் நமக்குள்ள ஒரு குறை ஒற்றை கதை நாயகர்கள் இல்லாதது ! அதில் தங்கள் கவனம் செல்லும் என்பது கூடுதல் சந்தோசம் ! அதற்க்கு இறந்த காலம் இறப்பதில்லை , எமனின் திசை மேற்கு, ஒரு மாந்திரீகனின் கதை போன்ற கதைகள் ஒரு காரணமாய் இருக்கும் !

      Delete
  37. டியர் விஜயன் சார்,LMS உண்மையிலேயே காமிக்ஸ் வரலாற்றில் ஒ௫ மைல்கல் தான்.நம்முடைய வாசிப்பு ரசனை பல் மடங்கு உயர்த்தியுள்ளது.என்னுடைய வரிசை இதோ;1.ராபின் 2.மார்ட்டின் 3.டைலன் 4.கிராபிக் நாவல்5.டெக்ஸ்6.ஜுலியா7.டைகர் 8.லக்கி9.ரின்டின். ஆசிரிய௫க்கு வேண்டுகோள்;ஒரு மாடஸ்ட்டி ஸ்பெசல் ஒண்ணு முயற்ச்சி பண்ணலாம் சார், அப்படி ஒ௫ எண்ணம் இ௫ந்தால் என்னுடைய வரிசை;1.கழுகு மலைக் கோட்டை 2.மரணக்கோட்டை3.இஸ்தான்புல்லில் மாடஸ்டி 4.மாடஸ்டியின் கதை 5.கார்வினின் யாத்திரைகள்6.நடுக்கடலில் அடிமைகள்7.பழிவாங்கும்௩்கும் புயல்8.இரத்தக்காட்டேரி மர்மம்9.கார்வினும் மாடஸ்டியும் எதிர் அணியில் இய௩்குவார்கள் தலைப்பு நினைவில் இல்லை. இது நிச்சயம் ஒ௫ நல்ல தொகுப்பாக இ௫க்கும்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஙைஙை ஙை ஙை ஙை ஙை ஙை ஙை ஙை ஙைஙை ஙை.("காதல்." க்ளைமாக்ஸ்.)

      Delete
    2. parthiban @ // ஒரு மாடஸ்ட்டி ஸ்பெசல் ஒண்ணு முயற்ச்சி பண்ணலாம் //

      எனது ஆதரவு இதற்கு என்றும் உண்டு!

      Delete
    3. மாடஸ்டியின் ஆளுமை ரொம்பவே ஸ்பெஷல் ! அவளின் மன பலத்தை வெளிக்காட்டும் வகையில் நகரும் கதை சூழல்கள் மிகவும் பிடித்தமானது.

      Delete
    4. Meeraan @ மாடஸ்டி பற்றி அருமையாக சொன்னீர்கள்! மாடஸ்டி & கார்வின் இடையே உள்ள புரிதல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

      Delete
  38. டியர் எடிட்டர் ,

    எனக்கு இன்னும் LMS வந்து கிடைக்கவில்லை . ஏன் என்று காரணம் தெரியவில்லை . சுஜி -ஜெயா இன் பிரான்ஸ் இன் கமெண்ட்ஸ் மூலம் நேற்றுதான் அவர்களுக்கு கிடைத்தது என்று அறிய முடிகிறது . LMS கிடைத்தவுடன் , மின்னும் மரணம் பிரதிக்கு முன்பதிவு செய்ய பணம் அனுப்ப உள்ளேன் . ப்ளூ கோட் பட்டாளத்தின் அட்டகாசம் செய்ய வரவிருப்பது வரவேற்புக்குரியது . சார், அந்த நண்டு பிரை எப்போது பரிமாற உள்ளீர்கள் ? அதுதான் "கார்சனின் கடந்த காலம் "? மற்றும் "சிறகுகள் விரிப்போம் " என்ற அந்த விமான கதை வெளியீடு 3ம் வந்து விட்டது . மூன்றையும் ஒன்றாக வெளியிட முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. // "சிறகுகள் விரிப்போம் " என்ற அந்த விமான கதை வெளியீடு 3ம் வந்து விட்டது . மூன்றையும் ஒன்றாக வெளியிட முடியுமா?//

      அப்போ அதுவும் தொடர்கதையா.?
      அய்யய்யோ.!

      Delete
  39. சார் , ' அப்பாவி ' குழுமத்தினரின் இந்த பக்கம் இப்போதே வந்து விடுமோ என சந்தோசத்தில் திகைக்க வைப்பதற்க்கா அல்லது எப்போது வருமோ என பெருமூச்சு விடுவதற்க்கா ! பதில் சொல்வீர்களா....

    ReplyDelete
    Replies
    1. இந்த தீபாவளிக்கு 'கிராபிக் நாவலே' ஸ்பெஷல் இதழாக வரவிருப்பதால், அதை சரிகட்ட அக்டோபரில் கா. க. கா. அதனுடன் கைகோர்த்து வர வாய்ப்புகள் அதிகம்?

      Delete
  40. 2016 அட்டவணையில் மாதம் ஒரு கார்ட்டூன் இடம்பிடிக்கும் போல் தெரிகிறதே.!
    லக்கிலூக் -2
    சிக்பில் -2
    ப்ளூகோட் -2
    ரின்டின்கேன்-2
    சுட்டிலக்கி.-1
    யகாரி -1

    இரண்டு மறுபதிப்புகள்.
    (ஆக மொத்தம் முப்பது ,ச்சியர்ஸ்.)

    ReplyDelete
  41. //சலிப்பூட்டும் ஒரே விதமான knot ; அதே கதைக்களம் ; டைகருக்கென பெரிதாய் எதுவும் திட்டமிடப்படா சாகசங்கள் என்றே இக்கதைகள் பயணிப்பதால்//

    என்ன சார் படார்ன்னு இப்படி போட்டு உடைச்சிட்டிங்க !? பொதுவா இந்த குற்றசாட்டுக்களை டெக்ஸின் மீதே டைகர் ரசிகர்கள் வைக்கின்றனர்...! அவ்வாறில்லை இது பொதுவானது என்ற உண்மையை இங்கு வெளிப்படுத்தியதற்கு நன்றி சார் !

    ReplyDelete
  42. டியர் எடிட்டர்,

    ஜூலியா கண்டிப்பாக தேவைதான். கதையைப் பொறுத்து வேண்டுமானால் - action கதைகள் வெளியிடும் ஒரு மாதத்தில் இதனையும் இணைத்து விட்டால் சற்றே தளர் நடை இருந்தாலும் தெரியாது !

    ReplyDelete
  43. கர்நாடகாவில் எபோலா வைரஸ் முதல் தாக்குதல் ஆரம்பிச்சுடுச்சு ...........
    சீக்கிரம் மும்மூர்த்தி ஸ்பெசல் போட்டு விடுங்கள்..........
    புண்ணியமாக போகும்

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா தேவைங்கிறது.

      Delete
    2. அப்புறம் புளியூர் சரோஜா நடனமா கேக்க சொல்லுறீங்க .........

      Delete
  44. //மாதாந்திர 44 பக்கக் கதைகளைக் கையில் எடுக்கும் போது ஏதோ பச்சைப் பிள்ளையைத் தூக்கித் தோளில் வைத்தது போல் இலகுவாய்த்தெரிகிறது ! //

    "கண்ணா லட்டு திங்க ஆசையா??" என நீங்க இப்போ கேட்டீங்களா சார் ??நீங்க ரொம்ப பீல் பண்றனால LDS (லட்ஸ் ஸ்பெஷல்(!!!) ) லயன் தீபாவளி ஸ்பெஷல் ) ஒரு ஆயிரம்ப்பக்க புத்தகத்துக்கு ஒரு ஆர்டர். :-)

    இந்த மாதம் நோஞ்சான் பிள்ளைகள் ஆனாலும்,பிரசவத்திற்கு பிறகு பிள்ளைகளை பார்க்கும் ஆவலில் உள்ள தந்தையை போல,TRIPLETS என்பதால் கூடுதல் ஆர்வத்துடன் கையை பிசைந்துகொண்டு காத்திருக்கிறோம்.

    //இவற்றை முழுமையான நகைச்சுவை வரிசைக்குள் நுழைத்திடுவது ...........நோக்கமாக நான் பார்க்கிறேன் ! //

    EXACTLY!,இதே கருத்தைத்தான் நான் இதற்க்கு முன் இன்சிஸ்ட் செய்தேன். நகைசுவை தொடராக இதை நிச்சயம் என்னால் பார்க்கமுடியவில்லை. கதையை முடித்தவுடன் நகைசுவை உணர்வை விட போரின் அவலங்களின் தாக்கம் கூடுதலாக உள்ளது. இதை போல கதை சொல்லும் பாணி, படிப்பவர் மனதில் தாக்கம் ஏற்படுத்துவதற்கு மிகச்சிறந்த டெக்னிக் என்றாலும் "நகைசுவை" என இதை மையப்படுத்துவது தவறு. அது தவறான புரிதலுக்கு வழி வகுத்து விடும்.


    //நமது கார்ட்டூன் உச்ச நட்சத்திரங்களான மொட்டை பாஸ் ஷெரீப்பும் ; அட்டகாச ஆர்டின்னும் தொடரும் காலங்களில் நம்மைத் தரமான கதைகளோடு சந்திக்க ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன !//\\

    "கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா?"ன்னு இப்போ மறுபடியும் நீங்க கேக்கறீங்க. சிக்பில் கதைகளை பொறுத்தவரை ஐரோப்பிய புத்தகங்களை விட நமது புத்தகங்கள் கூடுதல் நகைசுவை கிளாஸ் கொண்டுள்ளது எனபது என் அனுமானம். அதற்க்கு காரணம் "தி ஒன் அன் ஒன்லி விஜயன் சார்". மொழிபெயர்ப்பை பெருத்தவரை லக்கியை விட சிக்பில் கதைகள், நகைசுவையில் அதகளம் செய்கின்றன. நமது ஆசிரியரின் நகைசுவை நடையும், கதை ஓவியங்களும் அப்படி ஒரு சிங்க் ஆகின்றன. அதுவும் எழுபதுகளில் வந்த தரமான கதைகள் எனும்போது மூல கதை ஆக்கத்துக்கும், நமது மொழிபெயர்ப்புக்கும் "சபாஷ் சரியான போட்டி" என சொல்ல தோன்றுகிறது. :-)


    //அவரது துவக்க சாகசங்களில் இருந்து ஆரம்பித்து, இத்தொடரின் ஜீவனை நம்மாலும் உணர முடிகிறதா என்று பார்ப்போமே ? What say folks ? 2015-ல் ஜூலியாவையும் நமது வண்டியில் தொற்றிக் கொள்ள விடலாமா ?//


    ஜூலியாவை பொறுத்தவரை, ஒரு அட்டகாசமான தொடர் இந்த கதையின் பின்புலத்தில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளம் தெரிகின்றன. காரணம்

    1. அருமையான எடிட்டிங். கதையின் ஆரம்பத்தில் காண்பிக்கப்படும் விமானநிலையக்காட்சிகள் ஒரு ஹோலிவுட் படத்திற்கு இணையாக பரபரப்பாக இருந்த உணர்வை தந்தது.

    2. தரமான ஓவியங்கள். நுணுக்கமான படைப்பு. பரபரப்பான காட்சிகளில் முகங்களில் வெளிப்படும் உணர்வுககளை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார் ஓவியர். இவ்வளவு உணர்சிகளை வெளிப்படுத்தும் ஓவியங்கள் வேறு தொடர்களில் வந்ததுண்டா??

    3.எதார்த்தமான நிகழ்வுகள். இதுவே சில சமயங்களில் கதையின் வீக்னெஸ் ஆகவும் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    பின் ஏன் இந்த கதை சோபிக்கவில்லை எனப்பார்த்தால் கதையின் செலக்சன் தவறாக அமைந்துவிட்டது எனபது என் அனுமானம். இந்த கதை "ட்வின் டவர்" சம்பவங்களின் போது படைக்கபபட்டிருக்க வேண்டும். வானத்தில் பறக்கும் எதைப்பற்றிய கதை என்றாலும் அப்போது ஹிட் அடித்துவிடும். இது ஒரு சிச்சுவேசனல்/டைமிங் ஹிட் போல தெரிகிறது. கதையை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் மக்களின் அப்போதைய எமோசன்ஸ்சை மையமாக கொண்டுபடைக்கப்பட்டிருக்கலாம். இந்த தொடரில் இன்னமும் கொஞ்சம் கிளறினால் அருமையான கதைகள் கிட்டலாம்.இன்னமும் கொஞ்சம் சான்ஸ் கொடுக்கலாம் சார்.

    ReplyDelete
    Replies
    1. //மொழிபெயர்ப்பை பெருத்தவரை லக்கியை விட சிக்பில் கதைகள், நகைசுவையில் அதகளம் செய்கின்றன. நமது ஆசிரியரின் நகைசுவை நடையும், கதை ஓவியங்களும் அப்படி ஒரு சிங்க் ஆகின்றன. //

      அதே! அதே!

      Delete
    2. அடடே.!ஆர்ட்டினுக்கு நான் மட்டுந்தான் குரல்குடுக்கணுமோன்னு ஃபீல் பண்ணேன்,
      ஆனா வரவேற்ப்பு அமர்க்களமா இருக்கே...
      (சிக்பில் கதைவரிசை காவு கொடுக்க மட்டுந்தான் என்று தவறாக நினைத்துவிட்டேன், ஸாரீ.)

      Delete
  45. Sir if possible try to publish that graphic novel based on our freedom fighters .. It ll be good to have an indian based story in our list ..

    ReplyDelete
  46. என்னாது தீபாவளிக்கு குண்டு புக் இல்லையா ..............

    விஜி சார்................

    காமிக் மளிகை லிஸ்ட் எழுதிகோங்க .........

    கண்டிப்பா
    லாரென்ஸ் டேவிட்ல ...................................ஒன்னு
    ச்பைடர்ல ........................................................ஒன்னு
    ஆர்ச்சில ...........................................................ஒன்னு

    டைகர்ல ............................................................ஒன்னு
    டேக்சல ..............................................................ஒன்னு
    டயபாலிக் ல ......................................................ஒன்னு

    இதெல்லாம் இல்லன்னா நான் சந்தா அனுப்ப மாட்டேன்னு(நேர்ல தான் வாங்குவேன்ன்னு ) அபிராமி முன் நின்று போராடுவார் ...........

    நான் கடைசி வரிசையில் நின்னு போராடுவேன் ..................

    ReplyDelete
    Replies
    1. ஹா !ஹா !........

      முன் வரிசையில் நின்னு போராடுறதா .......

      அது சுளுவான காரியமாச்சே ..........

      ஜூலியா -வை மடியில் உட்கார வச்சிக்கறது ...அப்டீங்கற மாதிரி ...

      கஷ்டமான வேலை இருந்தா ....சொல்லுங்களேன் ;)

      Delete
    2. ஜூலியா -வை மடியில்..................

      இப்பிடி பேஸ் வேண்டியது அப்புறமே மாடஸ்தி வேணான்னு சொல் வேண்டியது......

      ஹெல்லோ அபிராமி சார் ............

      நீங்க ஜூலியாவுக்கு தாய் மாமன் முறை


      அதாகப்பட்டது..............
      காது குத்த தாய் மாமன் செல்வம் மடியில் ஜூலியா.............. என்று திருத்தி வாசிக்கவும் பொது மக்கழே ...........

      Delete

  47. சமீபமாய் நாம் படித்து வரும் டைகர் கதைகள் எல்லாமே சற்றே தடுமாற்றமான ரகத்தில் இருப்பதை தளபதியின் ரசிகர் மன்றம் கூட நிச்சயமாய் மறுக்காது ! சலிப்பூட்டும் ஒரே விதமான knot ; அதே கதைக்களம் ; டைகருக்கென பெரிதாய் எதுவும் திட்டமிடப்படா சாகசங்கள் என்றே இக்கதைகள் பயணிப்பதால் - தங்கக் கல்லறைகளையும், மின்னும் மரணங்களையும் பார்த்துப் பழகிப் போன நமக்கு அல்வாவில் உப்புப் போடப்பட்டிருப்பது போன்ற உணர்வு எழுவதில் வியப்பில்லை !

    கறுப்பு-வெள்ளை கதைகளை ஒரு தரமான படைப்பாய் பார்த்திட நிறைய நாடுகள் தயங்குகின்றன ! ஒரு காமிக்ஸ் படைப்பானது - கதை ; சித்திரங்கள் ; வர்ணக் கலவை - என 3 சரிவிகிதத் திறமைகளின் உள்ளடக்கம் என்பது நிஜமெனும் போது அதனில் ஒரு 1/3 rd குறைந்திடும் டெக்சின் black & white சாகசங்களை குறிப்பிட்ட நாடுகள் நீங்கலாக இதர தேசங்கள் உயர்வாய்க் கொண்டாடவில்லை என்பது கண்கூடு !

    So ஏற்கனவே பள்ளமாக இருக்கும் அந்த உடைந்த மூக்கரின் மூக்கை 'தல' ரசிகர்கள் போட்டுச் சாத்தி மேலும் உள்ளே தள்ள நினைப்பது யுத்த தர்மமாகாது guys !

    நன்றி சார் .......

    எனவே இனி " உடைந்த மூக்காரின் " மூக்கை உடைக்க நாங்கள் வர போவதிலை முக்கியமாய் நான் .. என வேதனை உடன் அறிவித்து கொள்கிறோம் சார் ..... :-)

    ReplyDelete
  48. சார் ....என்னை பொறுத்த வரை "ப்ளூ கோட் " பட்டாளம் என்னை ஏமாற்ற வில்லை .அவரை தாராளமாய் தொடரலாம் .

    சிக் பில் மீண்டும் புதிதாய் ....மறு பதிப்பாய் வருவதில் மிக்க மகிழ்ச்சி சார் ...

    அப்போ ...அடுத்த வருடம் நீங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டு போன " விண்வெளியில் ஒரு எலி " கதையை எதிர் பார்க்கலாமா சார் ..? ப்ளீஸ் ...

    ஆனால் ஒன்று சார் ....இந்த வருடம் "தீபாவளி மலரில் " வெறும் கிராபிக் நாவலை மட்டும் வெளி இட்டு நண்பர்களை தீபாவளி கொண்டாட வைத்தால் "பெரும் பாவம் சிவகாசி முழுவதும் " வந்து அடையும் சார்.

    இப்பொழுது "சிவகாசியை " காப்பாற்றும் முழு பொறுப்பும் உங்கள் வசமே ..... கிராபிக் நாவல் வேண்டாம் என்று சொல்ல வில்லை ( ஆமாம் ..இறந்த காலம் இறப்பதில்லை கிராபிக் நாவலா சார் ? ).இணைப்பாக வேறு புத்தகமும் ...........

    முருகா ....இயேசு ....அல்லா .....ஆசிரியர் " மனதை " மாற்ற உடனே இறங்கி வாருங்கள் .......

    ReplyDelete
    Replies
    1. தவிக்குதே நெஞ்சம் தனிமையில்,
      தடையாய் பாதையில் பாவி செவ்விந்தியர்கள்,
      தப்பியோடி காணத்துடிக்கிறேன்,
      அந்த சின்னப்பெண்ணை.,
      என் அழகுச் சிலையை,
      அந்த அழகுச் சிலையை,
      நான் பிரிந்து வந்த என் காதல் தேவதையை.!

      ஊதைக்காற்று உடலைத் துளைக்குது.!
      கொட்டும் மழையோ பார்வையை மறைக்குது.!
      எண்ணமெல்லாம் அந்த சின்னப் பொண்ணைப்பற்றி...
      அழகு தேவதை அவள்...
      நான் விட்டுப் பிரிந்து வந்த கன்னிப்பெண் அவள்,,

      தப்பியோடி காணத் துடிக்கிறேன்
      அந்த சின்னப் பெண்ணை
      என் அழகுச் சிலையை.!!!

      லவ் யூ கார்சன்

      Delete
    2. ஏனுங்க... எதிலேங்க இந்த வசனம் ?

      Delete
    3. அது வஜனம் இல்லிங் சாமியோவ்
      ஆட்டுதாடியோட டைவா லீனா பாட்டியோட ஜாங்கு

      Delete
  49. லயன் 250 ஸ்பெஷல் ஒரே புக் 800 பக்கம் புல் கலர் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அட! ஆமாம்ல?! எடிட்டர் சார் நோட் பண்ணுங்க சார் நோட் பண்ணுங்க சார்!

      Delete
    2. LMS .....தந்து கொண்டிருக்கும் போதை ........

      மின்னும் மரணம் ...வரப்போகும் கிறக்கம் .........

      வண்ணத்தில் ..கா.க.கா....அறிவிப்பின் மனக்கிளர்ச்சி ......

      இத்தனையும் மீறி .......

      ராஜசேகர்வேதா உஷாராக இருந்து எடிட்டரை மாட்டி விட்டார் ......

      லயன் 250 சூப்பர் ஸ்பெஷல் வேண்டும் ..வேண்டும் ...வேண்டும் ...

      Delete
  50. என்னை பொறுத்தவரையில் LMS ல் முதல் இடம் Graphic novelக்கு, 2ம் இடம் மார்டின், 3வது இடம் ராபின், 4வது இடத்தை dylan dogம் juliaவும் பகிர்ந்து கொள்கிறார்கள்! டெக்ஸ் வில்லர் நில்!கவனி!சுடு ! அளவிற்கு சோபிக்கவில்லை! டெக்ஸ் வில்லர் கதைகளில் திருப்பங்கள் அதிகம் உள்ள கதைகளை மட்டும் தேர்வுசெய்து வெளியிடவும் ! விண்வெளியில் விபரிதம் ஓவிய பாணி அருமை ! million hits specialக்கு waiting continues!

    ReplyDelete
  51. கிறுக்கல் கிறுக்கனரே நாகர்கோவில் புத்தக திருவிழாவை பற்றி update செய்யலாமே !

    ReplyDelete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. Selvam laxmi@
    என்ன சொல்ல வரீங்க.?
    Million hits. :-தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல
    தீபாவளி மலர்.:-இரவே இருளே கொல்லாதே.

    எப்படி ஓரே இதழ்.?

    ReplyDelete
    Replies
    1. கண்ணன் !

      நீங்க எழுதும்போது அப்பப்போ ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்னு

      சொன்னீங்கதானே .....

      சில சமயம் நான் எழுதும்போது முச்சூடும் மிஸ்டேக் ஆயிடுது ........ஹி ...ஹி ....

      மொஹிதீன் சாரின் கமெண்டை தப்பாக புரிந்து அவசரகதியில் எழுதிவிட்டேன் .....

      Delete
    2. கண்ணா .........லட்டு திங்க ஆசை இல்லையா .............

      அதெல்லாம் பழைய லிஸ்ட்டு .............

      நாம கேக்க வேண்டியது ''புதுசு கண்ணா புதுசு ...........''

      எம்புட்டு நல்லா பாடுறீங்க இத கூட சொல்லி தரணுமா ..........

      Delete
  54. டெக்ஸ் எந்த வித கெட் அப் சேஞ் இலது வளம் வரும் நாயகன்.. டைகர் எப்டி வந்தாலும் உடைந்த மூக்குகரார் தானே??!!! ஜூலியா , டைலான் ஆகியோர்ருக்கு தரும் வாய்ப்பில் கொஞ்சூண்டு நம்ப உள்ளம் கவர் கள்வன் டைய போலிக் அவர்களுக்கு தரலாமே ???!!

    ReplyDelete
  55. LMSஐ முழுதாகப் படித்து முடித்தவுடன் இப்படித்தோன்றியது: ஆண்டுமலர் ஒரு புக் மட்டும்தான். புக் 2 தனியாகவும் வேறு சைஸிலும், மெலிதாகவும் இருப்பதனால் அதனை ஆண்டுமலர் என்கிற கண்ணோட்டத்துடன் இணைத்துப் பார்க்கவே முடியவில்லை.

    Best read (for me):
    1. சட்டம் அறிந்திரா சமவெளி (டெக்ஸ்)
    2. அந்தி மண்டலம் (டைலன்)
    3. பேய் நகரம் (லக்கி)

    சுமார்:
    1.விண்வெளியில் விபரீதம் (ஜுலியா)
    2. அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே (ரின்டின்)

    மிடியல:
    1. மார்ஷல் டைகர்
    2. கட்டத்தில் ஒரு வட்டம் (மார்ட்டின்)
    3. நிழல்களின் நினைவுகள் (ராபின்)
    4. இறந்தகாலம் இறப்பதில்லை (...)

    டிடெக்டிவ் அல்லது டிடெக்டிவ் மாதிரியான கதைகளின் பங்கு இம்முறை அதிகமாகிவிட்டதோ எனத் தோன்றுகிறது. (May be just for me). அட்வென்ச்சர் குறைவாகவும், கதையின் ட்விஸ்ட்களை மட்டுமே நம்பியும் இருக்கும் Professional Detective ரகக் கதைகள் தற்காலத்தில் டீவி, சினிமாக்களில் ஏதோ கொஞ்சம் ரசிக்கமுடிகிறதே தவிர காமிக்ஸ் வடிவில் ஈர்ப்பதாகத் தோன்றவில்லை. இதில் டைலனும், ஜுலியாவும் பரவாயில்லை.

    ReplyDelete
    Replies
    1. PS: "விண்வெளியில் விபரீதம்" என்ற தலைப்பைப் பார்த்து படிக்க ஆரம்பித்ததால் இதிலே விமானத்தைத் தாண்டி ஏதோ (Satellite?) சம்பந்தப்பட்டுள்ளது என மனதில் செட்டாகிவிட்டது - ஆனால் அப்படியேதும் வரவில்லை. ஒருவேளை "வான்வெளி" என்ற வார்த்தை வந்திருக்க வேண்டுமோ?

      Delete
    2. "விண்வெளியில் விபரீதம்" பொருத்தமான தலைப்பா? இது பட்டிமன்ற விவாத்திற்குரியது.

      Delete
    3. ரமேஷ்: வெல்சம் பேக் டு ஃபுல் ஃபார்ம்.

      Delete
    4. // டிடெக்டிவ் அல்லது டிடெக்டிவ் மாதிரியான கதைகளின் பங்கு இம்முறை அதிகமாகிவிட்டதோ எனத் தோன்றுகிறது. (May be just for me). //

      @Ramesh Kumar - என்ன இப்படி சொல்லிபுட்டீங்க. இப்போதான் Detective கதைகள் மறுபடியும் வர தொடங்கிவுள்ளது, நிச்சயமாக அதிகமாகவில்லை. That too if you compare with other genre like cowboy, comedy etc..

      இப்பவும் பலபேர் முன்பு அறிவித்த "Detective Special" வேண்டும் என்று அவ்வப்போது ஆசிரியரிடம் கோரிக்கை வைக்கின்றனர்,

      இந்த புது டீடெக்டிவ் கதைகள் அவர்களை [ என்னயும் சேர்த்துதான் :) ] ஓரளவு திரிப்தி படுத்தும்.

      Delete
    5. // இது பட்டிமன்ற விவாத்திற்குரியது //

      Team B யின் வாதப்படி, சிபில் என்பவர்(ள்) விமானத்தில் செய்யும் அழிச்சாட்டியங்களை வைத்துப் பார்க்கும்போது, "ஆகாயத்தில் அழிச்சாட்டியம்" என்ற பெயரைத்தவிர வேறு எந்த பெயரும் பொருந்தாத உணர்வையே தரும் :D

      @King Viswa, நன்றி!

      // என்ன இப்படி சொல்லிபுட்டீங்க. இப்போதான் Detective கதைகள் மறுபடியும் வர தொடங்கிவுள்ளது, நிச்சயமாக அதிகமாகவில்லை. That too if you compare with other genre like cowboy, comedy etc.. //

      அவை தனி இதழாக வரும்போது பிரச்சனையில்லை. நிறைய டிடெக்டிவ் கதைகள் LMS'ல் / ஒரே புத்தகத்தில் அமைந்தது ஒரு (தவிற்க இயலாத?) குறைதான்.

      Delete
    6. // அவை தனி இதழாக வரும்போது பிரச்சனையில்லை. நிறைய டிடெக்டிவ் கதைகள் LMS'ல் / ஒரே புத்தகத்தில் அமைந்தது ஒரு (தவிற்க இயலாத?) குறைதான் //

      அப்படி வரீங்களா நீங்க, அப்போ சரிதான்.

      Delete
  56. டியர் காமிரேட்ஸ்,

    சித்திரக்கதைகளை தயாரிப்பது என்பது ஒன்றும் சுலபமான வேலை அல்ல. ஒரு புதினம் எழுதுவதைவிட கடினமான வேலை சித்திரக்கதைகளை தயாரிப்பது. சித்திரக்கதைகளை தயாரிப்பது கிட்டதட்ட ஒரு சினிமா இயக்குனரின் வேலையைப்போன்றது.

    நன்றாக தயாரிக்கப்பட்ட ஒரு சித்திரக்கதை (கதை, ஓவியங்கள், வசனம், வண்ணம், அச்சு) ஒரு சிறப்பான கவிதையை போல. அதனை ரசிக்க ஒரு உயர் ரசனை வேண்டும்.

    உயர் ரசனையைப்பற்றி பேசும்போது நமது லயன் காமிக்ஸ் மேக்னம் ஸ்பெஷல் இதழில் லக்கிலூக் கதைகளின் துணை கதாபாத்திரம் ரின் டின் கேனை மைய்யமாக வைத்து வெளியான “அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே” கதையின் ஒரு பத்திரத்தை பற்றி பேசியே ஆகவேண்டும்.

    லக்கிலூக் கதைகளை சாதரணமாக எடை போட்டுவிடவேண்டாம். அதில் வெரும் ஒவ்வொரு பாத்திரமும் அமெரிக்க வன்மேற்க்கு வரலாற்றில் ஏதாவது ஒரு வகையில் முக்கிய பங்கு வகித்தவர்களாகவே இருப்பார்கள். உதாரணமாக இந்த லக்கிலூக் கதையில் வரும் கலாமிட்டி ஜேன்.

    நிற்க.

    இது ரின் டின் கேன் கதையை பற்றியது. குறிப்பாக 96-ஆம் பக்கத்தில் இரண்டாவது வரிசையில் குறிப்பிடப்படும் “பாவ்லோவ்” என்பவரைப்பற்றியது.

    (ஜெயில் அதிகரி: ரின் டின் கேன்னை அழைச்சுட்டு போறது உங்க தீர்மானம்’னா, வாடிக்கையா அதை கண்ணுக்கு கண்ணாக கவணிச்சுக்குற பாவ்லோவையும் கூடவே அழைச்சுட்டு போங்க}.

    நமது பதிவே இந்த பாவ்லோவைப்பற்றியதுதான். ஏனென்றால் இந்த பாவ்லோவ் ஒரு சாதரண ஆள் கிடையாது. 1849-ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்த இவான் பாவ்லோவ் 1904-ஆம் ஆண்டு மருத்துவ சோதனைகளுக்கான நோபல் பரிசு பெற்ற மாபெரும் விஞ்ஞானி.

    இவரது ஆராய்ச்சிகளின் விளைவுதான் பின்னாளில் மூளைச்சலவை (Brain-Wash) செய்வது எப்படி என்று பரிணாம வளர்ச்சி அடைந்தது.

    ReplyDelete
    Replies
    1. பாவ்லோவ்வின் ஆராய்ச்சிகள் Classical Conditioning என்று பெயரிடப்பட்டு கிட்டதட்ட அனைத்து துறைகளிலும் பாடமாக உள்ளன. நான் MBA படிக்கும்போதும், விளையாட்டாக Phsychology Course படித்தபோதும் பாவ்லோவ் பற்றி படித்ததுண்டு.

      கிட்டதட்ட 12 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து 1903-ஆம் ஆண்டு தன்னுடைய ஆராய்ச்சியின் முடிவுகளை வெளியிட்டார். தன்னுடைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பாவ்லோவ் நாய்களையே பெரிதும் பயன்படுத்தினார்.

      அவரது ஆராய்ச்சி மிகவும் சிம்பிளான ஒன்று: தன்னுடைய ஆய்வுக்கூடத்தில் நாய்களை வளர்த்துவந்த பாவ்லோவ், அவற்றிர்க்கு உணவளிக்கும்போது ஒரு சிறிய உத்தியை கையாண்டார்.

      நாய்களுக்கு உணவு அளிக்கும் முன் அவர் ஒரு மணியை ஒலிக்கச்செய்து ஓசைய எழுப்பி, அதன் பின்னரே நாய்களுக்கு உணவை அளித்தார். தினமும் இதனை செய்துவர, ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு மணியோசை கேட்ட உடனே நாய்கள் அடுத்து உணவு வரப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டன.

      பின்னர் உணவு அளிக்காமலேயே வெறும் மணியோசையை வைத்தே நாய்கள் Salaivate செய்வதையோ Digestive Glands உணவுக்காக தயார் ஆவதையோ கண்டுணர்ந்தார் பாவ்லோவ்.

      இதுதான் Behaviuoral Scienceன் ஆரம்ப நிலை ஆராய்ச்சி. இதனை தொடர்ந்தவர்களில் முக்கியமானவர்கள் இருவர்.

      1. Carl Jung – இவர்தான் மனிதர்களை வகைப்படுத்திவர் (Introvert, Extrovert etc)

      2. William Sargant – இவர்தான் Memory Implantation மூலம் மூளைச்சலவை (Brain-Wash) செய்யமுடியும் என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபித்தவர்.

      பாவ்லோவின் ஆராய்ச்சிகள் மற்றும் அவரது நாய்கள் இரண்டுமே மிகவும் புகழ்பெற்றவை. In Fact ரஷ்யாவில் அவரது சிலையை வைக்கும்போது நாயுடனே வைத்தார்கள்.

      அப்படிப்பட்ட ஒரு மாமேதைக்கு Tribute செய்யும் வகையில்தான் இந்த ரின் டின் கேன் கதையில் நமது சூப்பர் ஸ்டார் நாயின் பயிற்ச்சியாளராக வருபவரை பாவ்லோவ் என்று பெயரிட்டு மரியாதை செய்துள்ளனர்.

      பின்குறிப்பு:

      1. பாவ்லோவை பற்றி மேலும் தெரிந்துகொள்ள விக்கிப்பீடியா

      2. Classical Conditioning பற்றி மேலும் தெரிந்துகொள்ள விக்கிப்பீடியா

      Delete
    2. தேவை இல்லாத பின்குறிப்புகள்;

      1. பாவ்லோவை பற்றி பல சர்ச்சைகள் எழுந்ததுண்டு. 1901-ஆம் ஆண்டு முதல் 1903-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு, குறிப்பிட்ட ஒன்றை பற்றியில்லாமல் அகன்ற களத்தை கொண்ட ஆராய்ச்சிகள் என்பதால் நிராகரிக்கப்பட்டவர்.

      2. இவர் தன்னுடைய Classical Conditioning ஆராய்ச்சியில் மணியை உபயோகப்படுத்தவே இல்லை என்று குற்றம் சாட்டுபவர்களும் உண்டு.

      3. 1921-ஆம் ஆண்டு முதல் 1936-ஆம் ஆண்டு வரை இவர் நடத்திய புதன்கிழமை சந்திப்புகள் மிகவும் புகழ்பெற்றவை. எந்த குறிப்பிட்ட தலைப்பையும் எடுத்துக்கொள்ளாமல் அனைத்து ஆராய்ச்சி விஷயங்களையும் விவாதிக்கும் தளமே இந்த Wednesday Meeting’s.

      4. புகழ்பெற்ற எழுத்தாளர் H.G.Wells ஒருமுறை (1921) பாவ்லோவை பற்றி எழுதும்போது “பாவ்லோவ் தன்னுடைய ஆராய்ச்சிக்கூடத்தில் உருளைக்கிழங்கும், கேரட்டும் வளர்க்கிறார்” என்று எழுதவேண்டிய சூழல் உருவானது. கொஞ்சம் கூகுளாண்டவர் துணையுடன் தேடிப்படியுங்கள், சுவையாக இருக்கும்.

      Delete
    3. அரிய தகவல்கள்,சிறப்பான தகவல்கள்,மிக்க நன்றி நண்பரே.

      Delete
    4. நன்றி அறிவரசு சார்.

      காமிக்ஸ் மூலம் ஒரு விஞ்ஞானிக்கு மரியாதை செலுத்தும் அதே நேரத்தில் ஒரு உண்மையான போராளியை வில்லனாகவும் சித்தரிக்க முடியும் என்பதற்க்கும் உதாரணங்கள் உண்டு.

      அதுவும் நமது லயன் காமிக்ஸ் மேக்னம் ஸ்பெஷலில் வந்த ஒரு கதையிலேயே இப்படி நடந்துள்ளது.

      அதைப்ப்ற்றி விரைவில்.........

      Delete
    5. நீங்கள் ஒரு "விஸ்வாபீடியா."

      எத்தனை தகவல்கள்.
      அத்தனையும் பயணுள்ள ரசிக்கவல்ல தகவல்கள்.
      நன்றி கிங் விஸ்வா சார்.

      Delete
    6. Thanks Viswa, interesting information about paulo.

      Delete
    7. பயனுள்ள தகவல்களுக்கு நன்றி விஸ்வாஜி! ரின்-டின்-கேன் பற்றிய வரலாற்றுச் சம்பவம் ஏதாவது ...?

      Delete
    8. விஜய் சார்,

      //ரின்-டின்-கேன் பற்றிய வரலாற்றுச் சம்பவம் ஏதாவது?//

      இல்லாமலா?

      உண்மையில் நம்ம ரின் டின் கேன் என்பது Rin Tin Tin என்ற ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் (நாய்தான்)’ன் கிண்டல் வடிவமே! (Spoof).

      இந்த ஜெர்மன் ஷெப்பர்ட்நாய், 27 ஹாலிவுட் படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்றதோடில்லாமல் தனியாக ஒரு காமிக்ஸ் கதை வரிசையை உருவாக்கும் அளவுக்கு இதன் பிரபலம் இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

      இந்த ஒரிஜினல் ரின் டின் டின் மிகவும் புத்திசாலி. இதனை கிண்டல் செய்யும் வகையில்தான் நம்ம ரின் டின் கேன் இப்படி ஒரு மக்காக அமைக்கப்பட்டு இருக்கிறது.

      இதனைப்ப்ற்றி தனியாக, விரிவாக பேசுவோம் (இப்போதைக்கு நம்ம லயன் மேக்னம் ஸ்பெஷல் டெக்ஸ் வில்லர் கதையில் ஏன் அந்த கிழவர்கள் வந்து உதவுகிறார்கள்/ என்பது பற்றிய ஒரு பதிவை டைப் செய்துக்கொண்டு இருக்கிறேன்).

      Delete
    9. Thanks for interesting information sir...
      Expecting the below asap...
      //அதுவும் நமது லயன் காமிக்ஸ் மேக்னம் ஸ்பெஷலில் வந்த ஒரு கதையிலேயே இப்படி நடந்துள்ளது.//

      Delete
    10. //இப்போதைக்கு நம்ம லயன் மேக்னம் ஸ்பெஷல் டெக்ஸ் வில்லர் கதையில் ஏன் அந்த கிழவர்கள் வந்து உதவுகிறார்கள்/ என்பது பற்றிய ஒரு பதிவை டைப் செய்துக்கொண்டு இருக்கிறேன்)///

      ஆகட்டும் ஆகட்டும்!

      Delete
    11. Dasu bala சார்,

      அந்த மேட்டரைத்தான் நம்ம புனித சாத்தான் கீழே கமெண்ட்டில் வெளியிட்டு விட்டாரே?

      //மை டியர் மானிடர்களே !!!

      LMS - கேப்டன் டைகர் கதையில் வில்லனாக சித்தரிக்கப்பட்டுள்ள அபாச்சே பழங்குடி இனத்தலைவர் சாட்டோவின் ஒரிஜினல் புகைப்படம் மற்றும் தகவல்கள் இங்கே! //

      Delete
    12. இத்தனை நாளும் காமிக்ஸ்னு நம்ம்ம்பி ஏமாந்துட்டேன்.

      அத்தனையும் வரலாறு புத்தகங்கள்!

      Delete
  57. Now only completed reading all stories in LMS!!!
    டியர் விஜயன் சார்,LMS உண்மையிலேயே காமிக்ஸ் வரலாற்றில் ஒ௫ மைல்கல் சார்!!!

    Thala TEX rocksssss!!!
    Awaiting for Thalapathy's MINNUM MARANAM @ Chennai Book Fair!!!

    10th Erode Book Fair ல் Editor விஜயன் சார், Junior Editor விக்ரம் சார் மற்ற காமிக்ஸ் நண்பர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி!!!
    என்னுடைய நெடுநாள் ஆசைகளில் ஒன்று திரு. S.விஜயன் சார் அவர்களை சந்தித்து ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்பது... அந்த ஆசை ஈரோட்டில் நிறைவேறியது. மிகவும் நன்றி ஸார்…

    ReplyDelete
    Replies
    1. இ..இது என் அருமைத் தம்பி சத்தியமூர்த்தியா?

      Delete
  58. இறந்த காலம் இறப்பதில்லை !

    காமிக்ஸ் வேறு, கிராபிக் நாவல் வேறு ! இரண்டு இரசனைகளும் ஒன்றாக, ஒரு புள்ளியில் சங்கமிக்கும் என்று சொல்லவே முடியாது. கிராபிக் நாவலை ரசித்துப் படிக்கும் வாசகர்களுக்கு - லக்கி லூக், சிக் பில், ரின் டின் கேன், யகாரி, சுட்டி லக்கி போன்ற கார்ட்டூன் ரகக் கதைகள், குபீர் சிரிப்பை வரவைக்காமல் போகலாம். ஆனால், காமெடிக் கதைகளுக்கு விழுந்து விழுந்து சிரிக்கும் காமிக்ஸ் வாசகர்களுக்கு - பயங்கரமான தலைவலி வந்தே தீரும் என்பது மட்டும் நிச்சயம் !

    கிராபிக் நாவல் படிக்கும் போது, ஒவ்வொரு பக்கத்திற்கும் ஏன்?, ஏன்? என்ற கேள்வி எழும் ; விடை எங்கே?, எங்கே? என்று சிறுமூளையும் பெருமூளையும், மூலை முடுக்கெல்லாம் தேடும் ; இரணமானதொரு வலி சுவடின்றி, மனதிற்குள் மெல்ல மெல்ல குத்துக் காலிட்டு அமரும் ; கடைசியில் ஙா..ஙா..ஙா.. நை..நை..நை.. ஙன..ஙன.. ங்ன..ங்ன.. என்று, காதல் பரத் போன்று உங்களுக்குள் ஒரு ஃபீலிங் வந்தால், நீங்கள் ஒரு தீவிரமான காமிக்ஸ் வாசகர் மட்டுமல்ல, குழந்தை மனமும் கொண்டவர் என்று அர்த்தம் !

    இப்படிப்பட்ட குழப்பமான நிலையை நீங்கள் வெகுவாக ரசித்தால் - நீங்கள் ஒரு கிராபிக் நாவல் ரசிகர் என்று அர்த்தம் ; அதே சமயம்..

    விரைவில், இறந்த காலம் இறப்பதில்லை - முழு விமர்சனம் !

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் மரண்டையாரே.!
      உங்கள் கூற்றில் நான் மாறுபடுகிறேன்.

      காமெடி பிடித்தவர்க்கு டிராஜடி பிடிக்காது என்பதை மறுக்கிறேன்
      எனக்கு லக்கி பிடித்த அதே அளவுக்கு பிரளயத்தின் பிள்ளைகளும் பிடித்திருந்தது.
      என் ரசனை ஒரு வரைமுறைக்குட்படாதது.எப்படியென்றால்

      எனக்கு தி.ஜா.வும் பிடிக்கும்.,கி.ரா.வும் பிடிக்கும்.
      பாலகுமாரனும் பபடித்துள்ளேன்,பாக்கியம் ராமசாமியும் படித்துள்ளேன்.
      கல்கியும் தெரியும்.,சுஜாதாவும் புரியும்.
      ராஜேஷ்குமாரும் படிப்பேன்,சி.ஆர்.ரவீந்திரன்,மேலாண்மை பொன்னுசாமியும் படிப்பேன்.

      சுருக்கமாக சொல்லவேண்டுமெனில்,
      கமல் ரசிகனான எனக்கு
      மகாநதியும் பிடிக்கும்
      மகராசனும் பிடிக்கும்.

      (சொல்ல மறந்த கதைகளும் நிறைய உண்டு.)

      இப்போது சொல்லுங்கள்,
      என் ரசனையை எந்த வகையில் வகுப்பீர்கள்.(ரொம்ப கஷ்டம் நண்பரே.)

      Delete
    2. சாண்டில்னையும்..,ஜெயகாந்தனையும் விட்டுவிட்டேன்.(தெரிந்தால் திட்டுவார்கள்.)
      அவர்களையும் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்.

      Delete
    3. @Kannan Ravi,

      மிஸ்டர் மரமண்டை குறிப்பிடுவது ரசனைகளின் Wideness சம்பந்தப்பட்ட விஷயமில்லை, மாறாக Strain level சம்பந்தமானது என நினைக்கிறேன். காமிக்ஸை இலகுவான பொழுதுபோக்காக மட்டும் ஏற்பவர்கள் க்ராபிக் நாவல்களின் சிக்கலான Plot'களை ஏற்பது Rare case. அதே நேரம் கிராபிக் நாவலை விரும்புவோர் டாம் & ஜெர்ரியைகூட முழுமையாக (சிரித்தோ / சிரிக்காமலோ) பார்ப்பது சாத்தியம்.

      இறந்த காலம் இறப்பதில்லை, கதையை பொருத்தவரையில் எனக்கு இப்படி தோன்றியது. இவ்வளவு Strain பண்ணி இதை இப்போது படிப்பதற்கு பதிலாக அடுத்தவாரம் பார்த்துக்கலாமோ? எனக்கு லக்கி லூக்கை கையிலெடுக்கும்போது இம்மாதிரி தோன்றியதில்லை. So I can categorize myself as a simple / cartoon lover rather than a (graphic) novel lover.

      Delete
    4. // டாம் & ஜெர்ரியைகூட முழுமையாக (சிரித்தோ / சிரிக்காமலோ) பார்ப்பது சாத்தியம் //

      LOL :)

      Delete
    5. // டாம் & ஜெர்ரியைகூட முழுமையாக (சிரித்தோ / சிரிக்காமலோ) பார்ப்பது சாத்தியம் //

      Didn't expect this could turn into a joke! lol :D

      Delete
    6. Mr.Ramesh@

      நீங்கள் சொல்வது எனக்கு தெளிவாக புரிகிறது.
      என்னைப்பற்றி நான் சொல்லவந்தது என்ன்வென்றால் எல்லாவற்றையுமே ஆழ்ந்து ரசிக்கிறேன் என்பதே.
      உதாரணமாக
      சார்லி சாப்ளினை வாய்விட்டு சிரித்து ரசிக்கிறேன்.
      பாசமலரின் கைவீசம்மா கைவீசை கண்ணீர்விட்டு ரசிக்கிறேன்.
      (Wideness அல்ல deepness என்று சொல்லவந்தேன்.)

      Delete
    7. Kannan Ravi :

      உங்களுக்கான பதில், என்னுடைய விமர்சனம் முழுமையாக வரும் போது தங்களுக்கு கிடைக்கும் என்றே நினைக்கிறேன். அதற்கு முன் தங்களிடம் இருந்து ஒரு பதிலை எதிர்பார்க்கிறேன். காமிக்ஸ் வாசிப்பின் இரசனையும், கிராபிக் நாவல் வாசிப்பின் இரசனையும் ஒன்றானதா ரவிக்கண்ணன் ?

      Delete
    8. Ramesh Kumar :

      //*காமிக்ஸை இலகுவான பொழுதுபோக்காக மட்டும் ஏற்பவர்கள் க்ராபிக் நாவல்களின் சிக்கலான Plot'களை ஏற்பது Rare case. அதே நேரம் கிராபிக் நாவலை விரும்புவோர் டாம் & ஜெர்ரியைகூட முழுமையாக (சிரித்தோ / சிரிக்காமலோ) பார்ப்பது சாத்தியம்*//

      ஆஹா ! அருமையான எளிய விளக்கம் !

      Delete
    9. //. காமிக்ஸ் வாசிப்பின் இரசனையும், கிராபிக் நாவல் வாசிப்பின் இரசனையும் ஒன்றானதா ரவிக்கண்ணன் ?//

      அப்போ இதுவரை கிராபிக் நாவல் என்றபெயரில் படித்தவையெல்லாம் காமிக்ஸ் இல்லையா.?
      ஒரு வாசகரால் கார்ட்டூனையும் கிராபிக் நாவலையும் ஒரே ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்கிறீர்களா.?
      பொன்னியின் செல்வன் படிக்கும்போது வந்தியத்தேவனாகவும்,
      அ.த.அண்ணாத்தே படிக்கும் போது ரின்டின்கேனாகவும் உணர்வதற்க்கு ஒரே நபருக்கு சாத்தியமில்லை என்கிறீர்களா.?
      சுகிசிவத்தின் சொற்பொழிவை விரும்புவோரால் லியோனியின் பட்டிமன்றத்திற்க்கு சிரிக்க முடியாது என்று சொல்கிறீர்களா.?
      அல்லது உங்கள் பதிவின் சாரம்த்தை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லையா.?
      (கண்ண கட்டுது கடவுளே.)

      Delete
    10. Kannan Ravi :

      ஹா.. ஹா.. நான் கேட்டது ஒரே ஒரு கேள்வி தான். ஆனால் நீங்கள் கேட்டிருப்பதோ ஐந்து கேள்விகள் :) என் கேள்விக்கு, பதிலாகவே அளித்திருக்கலாம் ; ஆனால், கேள்வியையே பதிலாக அளிக்கும் போது அதற்கான பதில் இன்னொமொரு கேள்வியாகத் தானே இருக்க முடியும்?!

      படிப்பது என்பது வேறு ; ரசிப்பது என்பது வேறு ! எல்லாவற்றையும் படிக்கலாம், எல்லாவற்றிற்கும் படிக்கலாம். உதாரணமாக ரின் டின் கேன்/ஐ மறுமுறை படிப்பது, வாய்விட்டு சிரிப்பதற்காவும் இருக்கலாம் அல்லது விமர்சனம் எழுதுவதற்காகவும் இருக்கலாம் அல்லவா? எல்லாவற்றையும் படிப்பது என்பது, நம் வாசிப்புத் திறனை வளர்த்து கொள்ளவும் இருக்கலாம் அல்லது அறிவின் விசாலமானத் தேடலாகவும் இருக்கலாம். ஆனால், ரசித்து அதில் இலயிப்பது என்பது கடைசியில், ஏதோ ஒரு இரசனையில் தானே இருக்க முடியும் ?! தற்போதைக்கு காமிக்ஸ் வாசிப்பை மட்டுமே கருபொருளாக கொள்ளவும். அதாவது காமிக்ஸ் வாசிப்பும், கிராபிக் நாவலும் என்ற தலைப்பில் :)

      Delete
  59. மை டியர் மானிடர்களே !!!

    LMS - கேப்டன் டைகர் கதையில் வில்லனாக சித்தரிக்கப்பட்டுள்ள அபாச்சே பழங்குடி இனத்தலைவர் சாட்டோவின் ஒரிஜினல் புகைப்படம் மற்றும் தகவல்கள் இங்கே!

    இவரைப்பற்றிய மேலதிக விபரங்களை நமது காமிக்ஸ் உலக "என்பைக்கபிடிய்யா" ( எத்தனை நாளைக்குத்தான் சைக்கிளையே பிடிக்க சொல்றது;-) தானைத்தலைவர் கிங் விஸ்வா அவர்கள் கூறுவார்கள்!

    ReplyDelete
    Replies
    1. // என்பைக்கப்பிடிய்யா//

      ஹா ஹாஹாஹா!

      Delete
    2. சாத்தான் சார்,

      இதைப்பற்றி உங்க தனித்துவமான ஸ்டைலில் ஒரு பதிவு போடுங்க சார். அட்டகாசமாக இருக்கும்.

      Delete
    3. புனித சாத்தான் !

      (இதை இங்கே கூறுவதற்கு மற்ற நண்பர்கள் மன்னிக்க ......)

      உங்களது நல்ல பிசாசு வலைதளத்தை கூகுளில் தேடினால்

      நோ ரிசல்ட்ஸ் ஃபவுண்ட் ......என்றே வருகிறது .......

      நீங்கள் முன்னர் கொடுத்த லின்க் மூலம் உள்ள பழைய பக்கங்கள் மூலமாக

      மட்டுமே நுழைய முடிகிறது ....

      தமிழ் காமிக்ஸ் ....

      தமிழ் காமிக்ஸ் உலகம் ....

      தமிழ் காமிக்ஸ் கடந்த பாதை ....போன்றவற்றில் இந்த பிரச்சினை இல்லை ...

      கொஞ்சம் என்னவென்று பாருங்களேன் .....

      Delete
    4. // என்பைக்கப்பிடிய்யா//

      ha ha

      எப்படி ரூம் போட்டு யோசிப்பாங்களோ :) Only Possible by Satanji

      Delete
    5. திரு கிங் விஷ்வா !

      அற்புதமான மனிதர் நீங்கள் .....

      அரிய தகவல் பொக்கிஷ களஞ்சியம் கைவசம் வைத்துள்ளீர்கள் ......

      அவற்றை நண்பர்களித்தில் பகிர்ந்து கொள்ளுகையில் .....

      உங்கள் பாணியை சற்றே மாற்றி கொண்டால் ......

      1.மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் கொடுக்கலாம் ......

      உதாரணமாக .......

      பாவ்லோவ். (புலாவ் ...அல்ல ...டைனிங் டேபிளை விட்டு வாருங்கள் ...)

      2.மூளை சலவை ...(சாதாரணமாக மனித மூளையில் grey matter ,white

      matter என்று இரண்டு பிரிவு உண்டு ...மூளை சலவை செய்யபட்டோருக்கு

      grey matter white matter ஆக மாறி விடுமா என்றெல்லாம் கேட்க கூடாது :)....]

      இந்த வகையில் மெல்லிய humor -உடன் ஓர் உபரி தகவலும் கொடுத்தாகி

      விட்டது .....மூளையை பற்றி .....


      3. கவிதை என சொல்லி விட்டீர்கள் .....

      ஓர் குட்டி கவிதை சொல்லி விடலாமே .....

      மழை வேண்டாம் ...
      தூறல் போதும்

      மண் வாசம் ....

      அல்லது

      குப்பையை கிளறுவது

      கோழியல்ல

      கோணியுடன் சிறுவன் ..

      இதுபோல் ஏதேனும் ஒன்று ...

      படிப்பவர்களின் கவனத்தை அது கட்டி போடும் .....

      4.contemporary உதாரணங்கள் மேற்கொளிடலாம் .

      conditioning reflex பற்றி எழுதி விட்டீர்கள் ......

      மணியடிச்சா சோறு .....இது pleasant conditioning reflex ....

      வலி .....unpleasant conditioning reflex .....

      இதற்கு வேறெங்கும் போக வேண்டாம் ....

      Harry Potter 7th part -ல் டிராகனை கட்டுபாட்டில் வைத்திருக்க goblins

      உபயோக படுத்தும் clankers ஞாபமிருக்கிறதா ?

      என நீங்கள் எழுதும் பட்சம் அது நிறைய பேரின் கவனத்தை ஈர்க்க கூடும் ...

      ஓர் மிக சிறந்த மனிதருக்கு பதிப்பக உரிமையாளருக்கு அறிவு ஜீவிக்கு

      இப்படி நான் எழுதுவது அதிகபிரசங்கி தனமாக தோன்றினால் மன்னிக்கவும் ...


      நீங்கள் எழுதுவது எல்லோருக்கும் போய் சேரவேண்டும் என்ற எண்ணமே

      இதை எழுத தூண்டியது .......

      புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
      உய்ததகம் எல்லாம் நிறைப்பினும் -மற்றவற்றை
      போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்
      தேற்றும் புலவரும் வேறு ....

      ----- நாலடியார் -------

      மிகுந்த மரியாதையுடன் ......

      Delete
    6. @டியர் செல்வம் லக்ஷ்மி!!!

      ரொம்ப ஈசியான வழி ஸார்.மேலே உள்ள saint satan என்ற எழுத்தின் மேல் க்ளிக் செய்யுங்கள்.நல்ல பிசாசு கிடைப்பார்!

      @டியர் கிங் விஸ்வா!!!

      //இதைப்பற்றி உங்க தனித்துவமான ஸ்டைலில் ஒரு பதிவு போடுங்க சார். அட்டகாசமாக இருக்கும்.//

      சாட்டோ ஒரு நிஜமான கேரக்டர் என்று அடியேனிடம் பகர்ந்ததே தாங்கள்தான்.மறந்துவிட்டதா மாமன்னர் அவர்களே!( அத்வானிக்கு மாதிரி உங்களுக்கும் செலக்டிவ் அம்னீசியாவா...?;-)

      Delete
    7. சார்,

      உங்க தரிசனம் கிடைத்தவுடன் அந்த பிரகாச ஒளியில் அனைத்துமே மறந்துவிட்டது. (ஸ்சப்பா..... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கிறது சாமி).

      Delete
  60. LMS கொண்டாட்டத்திற்கு பின் மனம் என்னவோ போல்தானிருக்கிறது.
    பண்டிகைக்கு மறுதினம் போன்று ,
    வீட்டில் நடந்த சுபனிகழ்ச்சிக்கு பின் போல ,
    பிரியத்திற்குரிய நண்பனையோ , காதலியையோ அயல் தேசத்திற்கு பயணம் அனுப்பி வைத்த பின்பான மனனிலை இது.
    பழைய ஹிந்தி காதல் பாடல்கள் கேட்க தோன்றுகிறது.
    ஏன் இப்படியென்று உள்ளே கேள்வியெழுப்பினால் .,.?
    காம்ப்ளானுடன் வளராமல் நாங்கள் லயனுடன் வளர்ந்தவர்கள் என்பதாக பதில் கிடைக்கின்றது !

    ReplyDelete
    Replies
    1. // காம்ப்ளானுடன் வளராமல் நாங்கள் லயனுடன் வளர்ந்தவர்கள் என்பதாக பதில் கிடைக்கின்றது ! //
      Super!

      Delete
  61. நான் திரும்ப திரும்ப படித்த.(ரசித்த.) கதைகள்.:-
    அதிக முறை படித்த கதைகள் இறங்குவரிசை :-
    கார்சனின் கடந்த காலம்.
    இரத்தப் படலம்.(முழுதொகுப்பும்.)
    மின்னும் மரணம். (அரிஸோனாலவ் நீங்கலாக.)
    ஒரு கோச் வண்டியின் கதை
    தலைவாங்கும் தேசம்
    தங்க கல்லறை
    நள்ளிரவு வேட்டை
    எஎமனின் திசை மேற்க்கு
    ஒரு ஒப்பந்தத்தின் கதை
    என் பெயர் லார்கோ
    மரண முள்
    ஆகாயத்தில் அட்டகாசம்
    இரத்த பூமி

    நினைவுக்கு வந்தவை இவ்வளவே.!

    (மற்றபடி லக்கி,ஆர்ட்டின் கதைகள் அனைத்தையுமே எண்ணிலடங்கா முறைகள் படித்துக்கொண்டேயிருக்கிறேன்,(இருப்பேன்.) நான் ஒரு கார்ட்டூன் காதலன்.)

    நண்பர்களே இதுபோல் நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்களேன் please

    ReplyDelete
    Replies
    1. திரும்பத்திரும்ப படித்த/பிடித்த கதைகள்:

      நடுக்கடலில் எலிகள்!
      தவளை எதிரி + பனிப்பூதம் (தீபாவளி மலர் 1986)

      Delete
    2. அனைத்து லக்கிலூக் கதைகளும் + சிக் பில் கதைகளும்.

      Delete
    3. 1. Lucky Luke
      - "Super Circus", "பயங்கர பொடியன்" (அடிச்சிக்க முடியாது)
      2. Swiske & Wiske
      - "பயங்கர பயணம்" (My all time favorite, even though editor had later mentioned that he used to do lot of editing to make suskie & wiskie stories readable)
      3. Sherlock Holmes
      - "சிகப்பு தலை சாகசம்" (Villain will run a fraudulent scheme for red heads)
      4. Detective Robin
      - "பணியில் ஒரு பிணம்" (The art work in the first page where an ice skater discovers a body frozen in the ice ring, amazing - here again villain is a con guy).
      5. "Plan பட்டாபி"
      - This comics came in Kalki 3 pages every week and my mom collected them all. Here this whole comics is done by the local artist and its an very interesting read. I will try to post a blog spot about that in future.
      6. All Tiger stories
      before "இரத்த தடம்" :) அதன்பிறகு வந்த டைகர் கதைகளை ஒருதடவை படிப்பதற்குள் நாக்கு தொங்கி விடுகிறது.

      The list continues

      Delete
  62. LMS - J. சரவண குமாருடய "லயனும் நானும்" படித்தேன், அதில் வரும் இரண்டாம் பாகம் தான் என்னுடைய கதையும்.
    சரவணகுமார் இங்கு உள்ளாரா ?

    ReplyDelete
  63. டியர் காமிரேட்ஸ்,

    நம்ம லேட்டஸ்ட் காமிக்ஸ் லயன் காமிக்ஸ் மேக்னம் ஸ்பெஷல் இதழில் டெக்ஸ் வில்லர் கதையின் முடிவில் டெக்ஸ் வில்லரும் அவரது சகாக்களும் வில்லனையும், அடாவடி மோசக்கார ஷெரிப்பையும் சிறையில் அடைத்து விட்டு அமைதியாக அடுத்து என்ன செய்வது? என்பது போல சிறையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு காத்திருப்பார்கள்.

    அதாவது அந்த நகரத்தை தூய்மைபடுத்த அழைக்கப்பட்டவர்கள் முக்கிய வில்லனை சிறைபிடித்தபிறகும் கதை முடியாமல் இருப்பது ஏன்?

    வழக்கம்போல டெக்ஸ் கதைகளில் வருவதுபோல வில்லனை அடித்து துவம்ஸம் செய்தவுடனே கதையை முடிக்காமல் விட்டது ஏன்?

    காசுக்கு கொலை செய்யும் பட்டாளம் திரும்பி வரும் என்று எதிர்பார்த்து காத்திருப்பது எதனால்?

    சர்வ வல்லமை படைத்த கடவுள் ச்சே, மன்னிக்கவும், டெக்ஸ் வில்லருக்கு உதவ அந்த வயதான குழு வரும்படியாக ஏன் காட்சி அமைக்கப்பட்டது?

    அதுவும் சிறைச்சாலையை புகலிடமாக கொண்டு ஏன் க்ளைமேக்ஸ்?

    இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க விஷயம் ஒன்றினை புரிந்துகொள்ள வேண்டும்.

    ஒரு சாதாரண கதையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை Guest Role செய்ய சொல்லி,அதன்மூலம் ரஜினி ரசிகர்களையும் கவர்ந்து படத்தை பார்க்கசெய்வது ஒரு மார்க்கெட்டிங் தந்திரம்.

    அதைப்போல ஒரு புகழ்பெற்ற கதாபாத்திரத்துக்கு Tribute செய்வதுபோல கதையில் ஒரு காட்சியையோ அல்லது ஒரு ஓவியத்தையோ அமைத்து அதன்மூலம் அந்த புகழ்பெற்ற கதாபாத்திரத்தின் ரசிகர்களை கவர்வது லேட்டஸ்ட் பாணி.

    அப்படித்தான் நம்ம டெக்ஸ் வில்லரின் 600-ஆவது இதழில் (தமிழில் நிலவொலியில் ஒரு நரபலி) அட்டைப்படத்தில் ஹாலிவுட் வாத்தியார் Western SuperStar John Wayne நடித்த The Searchers பட போஸ்டரை சார்ந்து வரைந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். (அந்த படம் ஒரு அட்டகாசமான படம், குறிப்பாக அதில் வரும் That’ll be The Day என்ற வசனத்தை நான் இப்போதும் அடிக்கடி உபயோகப்படுத்துகிறேன்).

    அதைப்போலவே இந்த சட்டம் அறிந்திராத சமவெளி கதையும் ஒரு ஜான் வெய்ன் படத்தின் க்ளைமேக்ஸை Inspire ஆக கொண்டது.

    El Dorado என்ற வன்மேற்க்கு ஹாலிவுட் படம் 1967-ஆம் ஆண்டு வெளியானது. அதன் க்ளைமேக்ஸ் காட்சியை விவரிக்கிறேன்: வில்லனின் தம்பி சிறைக்கைதியாக இருக்கிறான். வில்லன் அடியாட்களுடன் வந்து நகரத்தையும், சிறையையும் சூழ்ந்துக்கொள்ள, ஜான் வெய்ன் மற்றும் அவரது நண்பரான குடிகார ஷெரிஃப் கொண்ட குழு போராட, ஒரு கட்டத்தில் வில்லன்களின் கை ஓங்க, அப்போது இவர்களது உதவியாளரான வயதான தாத்தா வந்து உதவி செய்ய, சில பல டைனமைட்களின் உதவியுடன் ஜான் வெய்ன் ஜெயிக்கிறார்.

    இப்போது இந்த கதையின் (சட்டம் அறிந்திரத சமவெளி) க்ளைமேக்ஸை மறுபடியும் படித்துப்பாருங்கள், அனைத்தும் சரியாக இருக்கும்.

    போனெல்லி குழுவில் இதைப்போல ஒவ்வொரு கதைக்கும் ஒரு Sub Text வைத்தே எழுத ஆரம்பிக்கிறார்கள்.

    கிட்டதட்ட அனைத்துமே பிரபல ஹாலிவுட் சமாச்சரங்களாகவே இருக்கிரதென்பது நாம் அறிந்த ஒன்றுதானே?

    தேவை இல்லாத பின் குறிப்பு:

    1. இந்த ஜான் வெய்ன் படமானது அவரது பாடம் புகட்டும் வரிசையில் இரண்டாவது படம். அது என்ன பாடம் புகட்டும் வரிசை? என்றுதானே கேட்கிறீர்கள்? அதைப்பற்றி தனியாக வேறொருநாள் பேசுவோமே? ஏனென்றால் அதற்க்கும் நம்ம கேப்டன் டைகர் கதைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு (ஈரோட்டில் நண்பர்கள் சிலரிடம் இதைப்பற்றி சொன்னமாதிரி ஞாபகம்).

    2. ஜூலியா கதையில் கூட இதைப்போல ஹாலிவுட் Inspired சமாச்சாரம் உண்டு. அதைப்பற்றி அடுத்த கமெண்ட்டில்.

    ReplyDelete
    Replies
    1. ச்சே, வர வர எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல நிறைய கமெண்ட்டுகள் இடுவதைப்போன்ற பிரம்மை ஏற்படுவதால் இப்போதைக்கு இந்த மாதிரி கமெண்ட்டுகளுக்கு ஒரு தாற்காலிக ஸ்டாப்.

      Delete
    2. டியர் கிங் விஸ்வா!!!
      நீங்கள் குறிப்பிட்டு பேசியது HIGH NOON படத்தை பற்றி.அந்த படத்தில் நடித்த நடிகை கிரேஸ் கெல்லி அந்த காலக்கட்டத்தில் உலக அளவில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பேரழகி.(அந்த இளைஞர்களில் அடியேனின் தந்தையும் ஒருவர்!)
      மொனாக்கோ நாட்டு இளவரசரை மணந்து அந்நாட்டின் இளவரசியாக இவர் வலம்வந்ததும் கார் விபத்து ஒன்றில் (டயானாவை போல்)சிக்கி பலியானதும் பிற்கால சோக நிகழ்வு!

      Delete
  64. கடவுளே.!
    இத்தனை டைனமைட்,பீரங்கி, வின்செஸ்டர்களுக்கு நடுவே ஒரு துருப்பிடித்த தோட்டா இல்லாத பழைய மாடல் பிஸ்டலாக என்னை உணர்கிறேன்.
    (நிறைகுடங்களின் நடுவில் நானோர் அரைகுடம்.)

    ReplyDelete
    Replies
    1. சார், இண்டெர்நெட் வசதி இருந்தால் அனைவருமே இதையெல்லாம் செய்யலாம். அதனால்த்தான் என்னுடைய லேட்டஸ்ட் கமெண்ட் (ச்சே, வர வர எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல நிறைய கமெண்ட்டுகள் இடுவதைப்போன்ற பிரம்மை ஏற்படுவதால் இப்போதைக்கு இந்த மாதிரி கமெண்ட்டுகளுக்கு ஒரு தாற்காலிக ஸ்டாப்).

      Delete
    2. //இண்டெர்நெட் வசதி இருந்தால் அனைவருமே இதையெல்லாம் செய்யலாம். //
      King viswa sir,
      இத்தனை தகவல்களும் Internet ஆல் கிடைத்தவை என்பதைவிட உங்களுடைய Interest ஆல் கிடைத்தவை என்பதே உண்மை.

      Delete
    3. //இப்போது இந்த கதையின் (சட்டம் அறிந்திரத சமவெளி) க்ளைமேக்ஸை மறுபடியும் படித்துப்பாருங்கள், அனைத்தும் சரியாக இருக்கும்.//

      //2. ஜூலியா கதையில் கூட இதைப்போல ஹாலிவுட் Inspired சமாச்சாரம் உண்டு. அதைப்பற்றி அடுத்த கமெண்ட்டில்//

      //டியர் கிங் விஸ்வா!!!
      நீங்கள் குறிப்பிட்டு பேசியது HIGH NOON படத்தை பற்றி.அந்த படத்தில் நடித்த நடிகை கிரேஸ் கெல்லி அந்த காலக்கட்டத்தில் உலக அளவில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பேரழகி.(அந்த இளைஞர்களில் அடியேனின் தந்தையும் ஒருவர்!)//

      //கடவுளே.!
      இத்தனை டைனமைட்,பீரங்கி, வின்செஸ்டர்களுக்கு நடுவே ஒரு துருப்பிடித்த தோட்டா இல்லாத பழைய மாடல் பிஸ்டலாக என்னை உணர்கிறேன்.
      (நிறைகுடங்களின் நடுவில் நானோர் அரைகுடம்.)//

      //இத்தனை தகவல்களும் Internet ஆல் கிடைத்தவை என்பதைவிட உங்களுடைய Interest ஆல் கிடைத்தவை என்பதே உண்மை.//
      அடடடா...புனித சாத்தான்-கிங் விஸ்வா-கண்ணன்ரவி-செல்வம்லக்ஷ்மி-என இவர்கள் சேர்ந்து கமெண்ட்அடிக்கும்போது -கிங் விஸ்வா குறிப்பிட்டதுபோலவே //ஈரோட்டில் நண்பர்கள் சிலரிடம் இதைப்பற்றி சொன்னமாதிரி ஞாபகம்).// சூப்பர் விஷயங்களை பகிர்ந்துகொண்ட(பகிந்துகொண்டோமா..?விஸ்வா சொல்ல ஆஆ வென்று கேட்டோம்)ஈரோடுக்கு அந்த பசுமையான நினைவுகளுக்குள் பின்நோக்கி அழைத்து சென்றுவிட்டார்கள் என்னை...!

      Delete
  65. டியர் எடிட்டர்,

    இன்று நானும் "மின்னும் மரணம் " saga இன் முன் பதிவுக்கு வெஸ்டேர்ன் யூனியன் மூலம் இன்று பணம் அனுப்பி விட்டேன் . ஆனால் ," தம்பி இன்னும் வடை வரலை" என்று வடிவேல் சொல்வது போல என்னை தனியே புலம்ப வைத்து விட்டிர்களே சார் . எனக்கு LMS இணை உரிய காலத்தில் அனுப்பிவிட்டிர்களா சார் ?

    ReplyDelete
  66. 200 போட்டா தள்ளாடும்னு சொன்னாங்க ..............அப்பிடி ஒன்னும் நடக்கலியே ...............

    ReplyDelete