Saturday, August 09, 2014

LMS - Lovely Memories Special !

நண்பர்களே,

வணக்கம். (நிர்மலா பெரியசாமியைப் போல வ-ண-க்-க-ம் !! என்று அழுத்தமாய்ச் சொல்ல ஆசை தான் ; but இங்கே sound effect -க்கு வழியில்லை என்பதால் அடக்கியே வாசிக்கிறேன் !!) சிரம் தாழ்த்துகிறோம் - சிந்தையில் நீச்சலடிக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் மாத்திரமே போதாதென்பதால் !! ஒரு அழகான வெற்றியை சாத்தியமாக்கியது உங்கள் முதல் சாகஸமெனில்  ; அதனை ஒரு திருவிழாவாய் ஈரோட்டிலும், இங்கேயும் கொண்டாடியது தான் icing on the cake !! 1985-ல் ஸ்பைடரின் "சைத்தான் விஞ்ஞானி" துவக்கி வைத்த நமது  'ஆண்டுமலர்'  கலாச்சாரத்தை - தொடர்ந்த வருடங்களில் நிறைய அழகான இதழ்கள் அலங்கரித்திருப்பினும், தற்போதைய LMS எனும் 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு' ஏற்படுத்தியுள்ள impact முற்றிலும் மாறுபட்ட ரகம் என்பதில் ஐயமில்லை ! ஆனால் கோலம் எத்தனை அழகாய் வந்திருப்பினும், அதனை ரசிக்கவும், உற்சாகத்தின் உச்சியிலிருந்து முழு மனதாய்ப் பாராட்டவும் ஒரு பக்குவம் தேவை தானே ?! அதனில் துளியும் குறை வைக்காது கடந்த வாரத்தை ஒரு அசாத்தியக் காமிக்ஸ் மேளாவாய் மாற்றித் தந்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள் ஒரு கத்தையாய் !! You are an editor's dream folks !!! Thanks a ton...and more !!!

மகத்தான வெற்றி ; நாங்கள் துளியும் எதிர்ப்பார்த்திடா சந்தோஷம் இது ;  ஆஹா..ஓஹோ...!! என்றெல்லாம் நான் இத்தருணத்தில் உதார் விடப் போவதில்லை ! LMS நிச்சயமாய் நமக்கொரு மறக்க இயலா இதழாய் அமைந்திடும் என்பதை இதழின் தயாரிப்புப் பணிகள் பாதி முடிந்த நிலையிலேயே என்னால் உணர முடிந்தது ! இது  ரொம்பவே கொழுப்பானதொரு பிரகடனமாய்த் தெரியலாம் தான் ; ஆனால் வெற்றி தந்த மமதையில் சத்தியமாய் இதனை நான் சொல்லவில்லை ! எடிட்டர் ; மொழிபெயர்ப்பாளன் ; கத்திரிக்காய் என்ற போர்வைகளுக்குள்ளே அடிப்படையில் நானும் ஒரு காமிக்ஸ் ரசிகன் என்ற முறையில் டெக்சையும், டைலனையும் 'பளீர்' வண்ண அச்சில் ; compact ஆன இந்த அளவினில் பார்த்த போதே ஒரு ஜிலீர் உணர்வு எனக்குள் !  நமது ஓவியர் மாலையப்பன் போட்டுக் கொண்டு வந்திருந்த அழகான அட்டைப்படங்களைப் பார்த்த போது எனது உற்சாக லெவல் ஒரு பங்கு கூடியதென்றால் ; நமது டிசைனர் பொன்னனின் உதவியோடு அவற்றை மெருகூட்டிய போது சந்தோஷ மீட்டர் இன்னும் ஜாஸ்தியானது ! Hardcover என்ற எண்ணம் என் தலைக்குள் லேசாய் முளைக்கத் துவங்கிய தருணமும் அதுவே ! அனைத்தும் அழகாய் அமைந்து வரும் ஒரு அபூர்வமான தருணத்தில் ஏதாவது வித்தியாசமாய்ச் செய்தால் இதுவொரு நினைவில் நிற்கும் இதழாக உருப்பெற்றுவிடும் என்ற நம்பிக்கை என்னுள் திடமானது அன்றே ! அதன் பின்னர் பைண்டிங்கினை கண்காணிப்பதோ ; அதற்காகப் பெரிய கம்பு சுழற்றுவதோ  என் முன்னே நின்ற மிகப் பெரிய சவாலாக இருந்திடவே இல்லை ; மாறாக எனது ஓட்டைவாயை LMS-ன் ரிலீஸ் தேதி வரையிலும் மூடி வைத்திருப்பதே பெரும் கஷ்டமாக முன்நின்றது ! இடைப்பட்டதொரு தருணத்தில் 'முன்பதிவுகள் குறைவு...செலவுகள் ஜாஸ்தி !' என்ற பஞ்சப்பாட்டைப் பதிவில் இங்கே பாடும் வேளையில் ' HARDCOVER BINDING ' என்ற சங்கதியைப் போட்டு உடைத்து விடுவோமே ? விலையேற்றத்திற்கொரு நியாயம் கற்பித்தது போல் இருக்குமே ? என்ற சபலம் மனதில் பலமாய்த் தோன்றியது ! ஆனால் கடைசித் தருணம் வரை மௌனத்தைக் கடைப்பிடித்தால், LMS டப்பாவை உடைக்கும் வேளையில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குட்டியான surprise தந்தது போலிருக்குமே என்ற உணர்வு மேலோங்க, பெரும் சிரமத்தோடு 'ஓட்டைவாய் உலகநாதனை' ஓரம் கட்டி வைத்திருந்தேன் ! எல்லாம் கைகூடி ; பைண்டிங்கில் நம்மவர்கள் அசகாயம் செய்து ; முதல் பிரதியை என் கையில் தந்த போது எங்கள் அணியின் உழைப்பின் ஒட்டு மொத்தப் பிரதிபலிப்பை அதனில் பார்க்க முடிந்தது ! ஏராளமானோரின் இந்த வியர்வைகள் நிச்சயமாய் சோடை போகாது என்ற நம்பிக்கை எனக்குள் ஆழமாகியதும் அன்றே !! இதழ் வெளியாகி, அதனை நீங்களும் ரசித்து, சிலாகித்தான பின்னே - நமது ரசனைகளின் பெரும்பான்மை ஒன்றாய் இணைந்து பயணிப்பது மீண்டுமொருமுறை ஊர்ஜிதமாகியுள்ளதை நினைத்து மகிழ்கிறோம் !

நிறைய இதழ்களுக்குப் பணி செய்து விட்டோம் ; ஸ்பெஷல் வெளியீடுகளுக்கு நாம் புதியவர்கள் அல்ல ; ஏகப்பட்ட சைஸ்கள் ; விலைகள் என்று வானரமாய் மரத்துக்கு மரம் தாவிய அனுபவமும் நமக்கு நிறையவே உண்டு - ஆனால் இம்முறை இந்த மெகா முயற்சிக்குள் தலை நுழைத்த போது எப்போதுமே இருந்திரா ஒரு புதுப் பளு எங்கள் தோள்களில் இருந்ததை உணர முடிந்தது ! உங்களின் எதிர்பார்ப்புகள் எனும் invisible சங்கதி தான் அது !! NBS வெளியான சமயம் - 'நாம் மீண்டு வந்ததே ஒரு பெரும் விஷயம் !'  என்ற ரீதியில் ஒரு பச்சாதாப உணர்விலாவது தலை தப்பித்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது ! ஆனால் அதன் பின்னே ஒன்றரை ஆண்டுகளில் நாம் படிப்படியாய் ரசனைகளின் மேலோக்கிய பயணத்தில் ஆழ்ந்திருக்கும் வேளைதனில் - LMS உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்யாவிடின் தர்ம அடி நிச்சயம் ! என்ற சிந்தனை தலைக்குள் இல்லாமலில்லை ! So LMS -ன் திட்டமிடல்கள் துவங்கிய போது - 'சிவனே' என்று 2 மெகா டெக்ஸ் வண்ண சாகசங்களோடு ரிஸ்க் ஏதும் எடுக்காமல் இந்த இதழை அமைத்து விடலாமே ! என்ற சிந்தனை எனக்குள் இருந்தது ! இன்னும் சொல்லப் போனால் தற்போதைய 'சட்டம் அறிந்திரா சமவெளி" + இன்னுமொரு புது டெக்ஸ் சாகசம் என்று கதைகளைக் கூட shortlist செய்து வைத்திருந்தேன் ! ஆனால் உங்களிடம் அது பற்றிய அபிப்ராயக் கோரலை முன்வைத்த தருணத்தில்  "MIX N MATCH "-பாணியில் கதம்பமாய் ஒரு ஸ்பெஷலுக்கே எங்கள் ஒட்டு !' என்று பெரும்பான்மை  வாக்களித்த  பின்னர் - எனது துவக்கத்து சிந்தனையை கடாசி விட்டு combo தேடலைத் தொடங்கினோம் ! அதன் பின்னே போனெல்லி குழுமத்தின் கதைகள் நமக்கு வாகாய் அமைந்ததும், இந்த இதழ் ஒரு shape பெற்றதும் இனி லயன் 'மலரும் நினைவுகளின்' ஒரு அங்கம் தானே ?!  

உங்களில் இன்னமும் முக்காலே மூன்று வீசத்தினர் LMS-ன் கதைகள் சகலத்தையும் படித்திருக்கவில்லை என்பதாலும்  ; மெதுமெதுவாய்   ஒவ்வொரு கதையினையும் நீங்கள் ரசித்து அசை போட்டு வருவதாலும் - LMS பற்றிய எனது review-ஐ ஒட்டு மொத்தமாய் இப்போதே, இங்கேயே  எழுதி  - உங்களின் சுவாரஸ்யத்துக்கு வெடி வைக்கப் போவதில்லை ! இத்தாலிய ஐஸ்க்ரீம் இதழின் முதல் 3 கதைகளை (Tex ; Dylan ; Robin) majority நண்பர்கள் கடந்து வந்து விட்டபடியால் அந்த மூன்றைப் பற்றி மட்டுமே நானும் இங்கே பதிவிடுகிறேன் ! ஆட்டத்தைத் துவக்குவது  'தல' டெக்சின் "சட்டம் அறிந்திரா சமவெளி" எனும் போது எனது விமர்சனப் பார்வையையும் அங்கிருந்தே தொடங்கலாம் தானே ?!
Claudio NIzzi 
224 பக்கங்கள் ஓடும் இக்கதையின் மொத்தக் கருவையும் உள்ளங்கையில் எழுதிய பின்னே நிறைய இடம் மீதமிருக்கும் என்பதே நிஜம் ! அதுவும் கதை துவங்கிய முதல் ஐந்தாறு பக்கங்களுக்குள்ளாகவே plot என்னவென்று ஒப்பித்து விடுவது "டெக்ஸ்" எனும் இமயத்தின் மீது கதாசிரியருக்கு உள்ள அசைக்க இயலா நம்பிக்கையைப் பறை சாற்றுகிறது ! இன்னும் ஒரு படி மேலேசென்று சொல்வதாயின் கதாசிரியர் கிளாடியோ நிஸ்ஸி நிச்சயமாய் நம்மை விட ஒரு மகத்தான டெக்ஸ் காதலர் என்றே சொல்லுவேன் !! சமீபமாய் வெளியான 'நில்..கவனி..சுடு..' கூட ஒரு அதிரடி மேளா தான் என்ற போதிலும், இங்கே நாம் காண்பதோ ஒரு ஒற்றை மனிதனின் ரௌத்திர தாண்டவம் ! கதையில் மொத்தம் எத்தனை பேருக்கு டெக்சின் முஷ்டி  முத்தம் பதிக்கின்றது ? என ஒரு போட்டியே நடத்தி விடும் அளவுக்கு இது ஒரு "கும்...ணங்..சத்.." படலம் ! So பெரிதாய் கதையையோ ; திருப்பங்களையோ எதிர்பாராமல் 'தல' ரசிகர்களாய் மாத்திரமே முன்வரிசையில் அமர்ந்து விசில் அடித்துப் பார்க்க வேண்டிய ஒரு action  மசாலா இது ! இதற்குப் பெரும் மெருகூட்டுவது வண்ணங்களின் செழுமை என்பதில் எனக்கு சந்தேகமே கிடையாது ! அந்த பளீர் மஞ்சள் சட்டையை அப்பாவும் சரி , பிள்ளை கிட்டும் சரி கதை நெடுக போட்டு நடமாட - பின்னணி வர்ணங்கள் சகலமும் அழுத்தமான bright shades-ல் இருந்திட - ஒவ்வொரு பக்கமும் வசீகரிப்பது கண்கூடு ! So - "சட்டம் அறிந்திரா சமவெளி" - "ஒரு மஞ்சள் மசாலா மேளா "!! (எங்களுக்கு அச்சு மை சப்ளை செய்திடும் விற்பனையாளர் இப்போதெல்லாம் டெக்சின் தீர ரசிகர் ஆகி விட்டார் என்பது கொசுறுச் சேதி !! )

LMS -ன் கதை # 2 தான் இத்தாலிய ஐஸ்க்ரீமின் டாப் flavour எனது பார்வையில் ! டைலன் டாக் தொடர் ரொம்ப ரொம்ப காலமாய் என் கைக்குள்ளும், காலுக்குள்ளும் சுற்றி வந்ததொரு தொடர் என்றே சொல்ல வேண்டும் ! 1985-ல் டெக்ஸ் வில்லரின் உரிமைகளுக்காக போனெல்லி குழுமத்தோடு தொடர்புகளைத் தொடங்கிய ஓராண்டுக்குப் பின்பாய் அறிமுகம் கண்ட இந்த dark தொடர் மீது எனக்கொரு லயிப்பு அந்நாட்களிலேயே இருந்தது ! ஆனால் அன்றைய நமது "ஆணழகர்" பிரிட்டிஷ் ஹீரோக்களின் மத்தியில் இந்த வத்தலான ஆசாமியோ ; சற்றே கீச்சலாய் (அந்நாள்களில்) தெரிந்த சித்திர பாணிகளோ எடுபடுமா ? என்ற தயக்கமும் நிறையவே இருந்தது ! தவிர இணைய தளம் இருந்திருக்கா அன்றைய நாட்களில் டைலனின் கதை பற்றியதொரு சரியான புரிதலோ ; அவற்றை நம்மால் சமாளிக்க முடியுமா ? என்ற ஊர்ஜிதமும் எனக்குக் கிட்ட வாய்ப்பிருக்கவில்லை ! So ஒவ்வொரு நாலைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை டைலனின் சாம்பிள் பிரதிகளைப் புரட்டுவது ; பின்னே பரணில் போடுவது என்ற வாடிக்கை தொடர்ந்தது ! ஆனால் நம் ரசனைகளின் பரிமாணங்களைப் பற்றிய சந்தேகம் துளியும்  இல்லா இத்தருணத்தில் டைலனை எப்படியும் களம் இறக்கியே தீர வேண்டுமென சென்றாண்டின் இறுதியில் தீர்மானித்தேன் ! 2014-ன் அட்டவணைக்கென போனெல்லியிடம் நாம் கொள்முதல் செய்த கதைகள் 3 ! அவற்றைத் தரம் பிரிப்பதெனில் - கதை # 1 : நிச்சயமாய் ரசிக்க முடியும் ; ஓவராக fantasy கலப்பிலா சாகசம் ; கதை # 2 : இதுவும்  ஒரு ரசிக்கக் கூடிய கதை ; துளியூண்டு அமானுஷ்யத்தின் கலப்போடு ; கதை # 3 - ஏராளமாய் fantasy ; அமானுஷ்யம் ; கற்பனைகளின் எல்லைகளைத் தொடும் சங்கதிகள் கொண்டது ; புரிந்த மாதிரியும்    இருக்கும் ; கேசக் கற்றைகளைக் கையோடு பிடுங்கச் செய்யவும் ஆற்றல் கொண்டது ! LMS -ல் டைலனை அறிமுகம் செய்வதென்று தீர்மானமான பின்னே, நான் முதலில் தேர்வு செய்தது ரிஸ்க் இல்லா - கதை # 2 தான் ! "நள்ளிரவு நங்கை" என்ற பெயரோடு அதன் விளம்பரமும் கூட துவக்கத்தில் உலா வந்தது நினைவிருக்கலாம் ! ஆனால் டைலனின் கதைகளை அறிமுகம் செய்வதென்று துணிந்தான பின்னே, அதில் முழு மனதாய் இறங்கினால் போச்சு என்ற சிந்தனை மேலோங்க - சீக்கிரமே கதை # 3-ஐத் தேர்வு செய்தேன் ! அது தான் "அந்தி மண்டலம்" ! விஞ்ஞானம் ; தெளிந்த சிந்தைகள் ; ஞானத்தின் எல்லைகள் சதா காலமும் விரிவாகிக் கொண்டே செல்லும் இந்த யுகத்திலும் கூட - 'மரணத்துக்குப் பின்னே என்ன ?' ; ஆன்மாவின் பயணம் எது நோக்கி ? என்ற கேள்விகளுக்கு நம்மிடம் பதிலேது ? So இதனைக் கையில் எடுத்துக் கொண்டு கதைகள் ; புதினங்கள் ; திரைப்படங்கள் மட்டுமல்லாது நிறையவே காமிக்ஸ் தொடர்களுமே உருவாகியுள்ளன ! டைலனின் 'அந்தி மண்டலமும்' இது போன்றதொரு முயற்சி தான் எனினும்,  கதாசிரியர் அதனைக் கையாண்டுள்ள விதம் அழகான (!!!) சித்திரங்களோடு ; கண்ணைப் பறிக்கும் வர்ணங்களோடு கை கோர்க்கும் போது கிடைப்பது ரொம்பவே மாறுபட்டதொரு படைப்பு ! "அபத்தம்" என்று ஒற்றை வார்த்தையில் இதனைப் புறம்தள்ளவும் முடியும் ; "என்னமோ சொல்றாங்களே....!!" என்று புருவங்களை சிந்தனையில் உயர்த்தவும் முடியும் ; "ஒ ..வாவ் ! " என பிரமிக்கவும் முடியும் ! எது எப்படி இருப்பினும், மீண்டுமொரு மழை நாளில் இதனைப் புரட்டும் ஆர்வம் மட்டும் மட்டுப்படாது என்பது என் அபிப்ராயம் ! ஹாரர் கதைகள் உருப்படியாய் நம்மிடம் இல்லையே என்பது ஒரு குறையாக இருந்து வந்த நிலையில் டைலன் அதனை நிச்சயம் நிவர்த்தி செய்வார் என்றே நினைக்கிறேன் ! (டைலனின் தொடரும் சாகசங்கள் வண்ணத்திலா - black & white போதுமா folks ?) இங்கே ஒரு wow சேதியும் கூட !! டைலன் டாக் இத்தாலிய ரசிகர் மன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டு அவர்களது ஆதர்ஷ டைலனின் கதை இடம்பெற்றிருக்கும் நமது LMS புக் # 1-ல் 75 பிரதிகள் கோரியுள்ளனர் !!! மர்ம மனிதன் மார்டின் ரசிகர் மன்றம் இப்போது விபரம் கோரி மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர் !!

LMS -ன் வர்ணக் கதைகளில் # 3 - CID ராபினின் சாகசம் ! நெடியதொரு ஓய்வுக்குப் பின்னே திரும்பும் ராபின் தன ஆதர்ஷக் களமான நியூ யார்க்கிலிருந்து வெளியேறி - கிராமம் தேடிச் செல்லும் போதே இது high voltage ரக சாகசமாக இராதென்பது புரிகிறது ! அமைதியான கதை ; ரிபோர்டர் ஜானியின் பாணியில் இடியாப்ப நுணுக்கங்கள் இல்லா சீரான ஓட்டம் என நான் ரசித்தேன் இக்கதையை ! நண்பர்களில் சிலர்  plot  ரொம்பவே யூகிக்கக் கூடிய விதமாய் இருந்ததென்று குறைபட்டிருந்தனர் ; ஆனால் மொத்தமே ஐநூறோ ; ஆயிரமோ மட்டுமே வசிக்கும் ஒரு குக்கிராமத்தில் நிறைய முடிச்சுகளை இணைப்பது இயல்பாய் இராதே என கதாசிரியர் நினைத்திருக்கலாம் ! தவிரவும் ஒவ்வொரு நிஜ புலனாய்வின் பின்னணியிலும் நாம் கதைகளில் ; திரைகளில் பார்த்து ரசிப்பது போன்ற த்ரில் நிகழ்வுகள் ஏராளமாய்க் குவிந்து கிடக்குமா என்பது சந்தேகமே ! So யதார்த்தத்தின் பிரதிபலிப்பான இக்கதைக்கு 6/10 போடலாம் என்பதே எனது எண்ணம் ! வண்ணக் கலவை நெருடலாய் இதனில் இருந்ததை நானும் ஏற்றுக் கொள்கிறேன் ; ஆனால் அதனில் நமது பங்கு ஏதுமில்லை ! போனெல்லி தங்களது ராட்சச கதைகளின் வைப்பறையில் ராபினின் இக்கதைக்கான டிஜிட்டல் பைல்களை தேடி எடுக்க முடியவில்ல என கை விரித்து விட்டார்கள் கடைசித் தருணத்தில் ! So அவர்களே அச்சான இதழ் ஒன்றினை ஸ்கேன் செய்து அந்த பைல்களை நமக்கு அனுப்பித் தந்தார்கள் ! அவற்றை இங்கு நாம் லேசாக பட்டி-டின்கெரிங்க் பார்த்தாலும் கூட - ஒரிஜினலின் அழுத்தம் இதனில் கிடைக்காது போனது ! ராபினின் கதை # 100 & 200 மட்டுமே வண்ணத்தில் என்பதால் - கதை - 200-ஐ இதன் இடத்தில் அனுப்பவா ? என போனெல்லியிலிருந்து கேட்டார்கள் ; ஆனால் மீண்டுமொரு இத்தாலிய மொழிபெயர்ப்பிற்கு அவகாசம் இல்லாத வேளையில் இந்தக் கோப்புகளைக் கொண்டே தொடர வேண்டிய நெருக்கடி ! ராபினை b&w-ல் வெளியிட்டு விட்டு, அதன் பதிலாய் மார்டினையோ ; ஜூலியாவையோ  வண்ணத்தில் வெளியிட்டுப் பார்ப்போமா ? என்ற சிந்தனை எழுந்த போதும் சிக்கல்கள் தொடர்ந்தன ! அதே மொழிபெயர்ப்புப் பிரச்னைகள் ஒருபக்கமிருக்க மார்டின் # 100 & ஜூலியா # 100 கதைகளின் சித்திர பாணிகள் செம சொதப்பலாய் இருந்தன ! So வேறு மார்க்கமின்றி தொடர்ந்தோம் ! Sorry guys !

இப்போதைக்கு LMS பற்றிய எனது பார்வையை இத்தோடு நிறுத்திக் கொண்டு - ஈரோடில் சென்ற சனிக்கிழமை நடந்த நண்பர்களுடனான குதூகலச் சந்திப்பைப் பற்றியும் புத்தக விழாவின் விற்பனை பற்றியும் பார்ப்போமே ? !

ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலைக்குள் இங்கே நம் அலுவலகத்தின் திருவிழாக் கோலத்தை முழுமையாய் ரசித்த பின்னே ; உங்கள் LMS பிரதிகளை கூரியருக்கு அனுப்பி விட்டு ஈரோட்டுக்கு நானும் ஜூனியரும் ரயில் ஏறினோம். அரங்கம் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலின் வாசலில் தான் என்பதால் சனிக்கிழமை காலையில் 10-30 மணிவாக்கில் அங்கே சென்றால் நமக்கு முன்பாகவே ஈரோட்டு நண்பர்கள் மட்டுமல்லாது வெளியூர் நண்பர்கள் மட்டுமல்லாது ; வெளிநாட்டு நண்பரும் அங்கே உற்சாகமாய், ஆஜராகி நிற்பதை காண முடிந்தது ! பிரான்சில் இருந்து வந்திருந்த நண்பர் ராட்ஜா மறு தினம் தன மகளின் பரத அரங்கேற்றத்தை பாண்டிசேர்ரியில் வைத்திருந்த நிலையிலும், இங்கு நண்பர்களை சந்திக்கும் பொருட்டு புறப்பட்டு வந்திருந்ததைக் கேட்டுத் தெரிந்து கொண்ட போது இந்த வாசகக் குடும்பத்தின் உறவுகளின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது ! 'பளிச்' மஞ்சள் டி-ஷர்டில் பெரியதொரு வேதாளர் படத்தோடு முன்வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்ட நண்பர் மாயாவி சிவா (!!) "மின்னும் மரணம்" முன்பதிவுக்கு உதவும் விதமாய் ஒரு டைகர் படம் கொண்ட பிரிண்ட் அவுட் + ஒரு பெரிய ப்ளெக்ஸ் banner சகிதம் அசத்தினார் !

அரங்க வாசலிலேயே நண்பர்கள் ஒவ்வொருவராய் சேர்ந்து கொள்ள, உள்ளே நம் ஸ்டாலுக்குச் சென்றோம் ! இந்தாண்டு நமது லயன் ; முத்து காமிக்ஸ் இதழ்களோடு - ஆங்கில காமிக்ஸ் ரகங்கள் சிலவற்றையும் வாங்கி நமது ஸ்டாலில் விற்பனைக்கு அடுக்கி வைத்திருந்தோம் ! ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் விறு விறு வென்று நம் ஸ்டாலுக்குள்   நுழைந்து விட்டு - "இங்கிலீஷில் காமிக்ஸ் இல்லையா ?" என்ற கேள்வியோடு  நடையைக் கட்டும் 'ஆங்கில ஆர்வல பெற்றோர்களின்' தேர்வுக்கென இம்முறை இந்த முயற்சி ! லக்கி லூக் ; மதியில்லா மந்திரியார் + ஆர்ச்சி (அமெரிக்க ஆர்ச்சி !!) காமிக்ஸ்கள் நம் ஸ்டாலின் ஒரு கோடியை ஆக்கிரமித்திருந்தன ! (லக்கியார் மாத்திரம் கொஞ்சமே கொஞ்சமாய் விற்பனையாகின ; பாக்கி இதழ்கள் நம்மைப் பார்த்துப் புன்சிரிப்பை மாத்திரமே உதிர்க்கின்றன என்பது வேறு விஷயம் !! )  


நம் ஸ்டாலில் LMS பிரதிகள் பண்டல்களில் காத்திருந்த போதிலும், அவை அதுவரை வெளியே எடுத்திருக்கப்படவில்லை! இனியும் தாமதம் வேண்டாமென நான் கையில் கொண்டு சென்றிருந்த gift wrapped LMS பிரதியினை நண்பர்களின் மத்தியில் பிரித்து வெளியெடுக்க hardbound கவர் + இதழின் அழகான பருமனில் அனைவரும் மெய்மறந்து போனதைக் காணும் அதிர்ஷ்டம் எங்களுக்குக் கிட்டியது ! தினுசு தினுசான செல்போன் காமெராக்களும், வீடியோ காமெராக்களும் பளிச் பளிச் என்று ஒளி உமிழ நம் ஸ்டாலின் முன்பாக நண்பர்களின் திரள் கூடிக் கொண்டே போனது ! காலை 11 மணி தான் விழாவின் துவக்க நேரம் என்பதால் பார்வையாளர்களின் வருகை இன்னும் துவங்கி இருக்கா நிலைதனில், இதர ஸ்டால்களின் மிகச் சன்னமான கூட்டமே ; ஆனால் இங்கு நமது ஸ்டாலில் நிமிடத்துக்கு நிமிடம் கூடிச் சென்ற நண்பர்களின் எண்ணிக்கையும், கரைபுரண்டோடும் உற்சாகமும், அக்கம்பக்கத்துப் புருவங்களை உயரச் செய்தன !  பள்ளிகளிலிருந்து வருகை தந்திருந்த சிறார்கள் நம் ஸ்டாலைத்   தாண்டிச் செல்லும் போது - என்னமோ ; ஏதோவென மலங்க மலங்க வெறித்துப் பார்த்துக் கொண்டே சென்றதையும் பார்க்க முடிந்தது ! ஆளுக்கொரு LMS பிரதியை கையில் ஏந்திக் கொண்டு பக்கங்களைப் புரட்டுவது ; இது நாள் வரை இங்கு வெறும் பெயர்களாய் மாத்திரமே இருந்து வந்த தோழர்களோடு மெய்மறந்து அரட்டையடிப்பது ; போட்டோக்கள் எடுத்துக் கொள்வதென கொஞ்ச நேரத்தில் அந்த இடமே ஒரு காமிக்ஸ் சரணாலயமானதென்று சொன்னால் அது மிகையாகாது !கொஞ்ச நேரத்துக்கெல்லாம் "ஸ்பைடர் எப்போ ? " ;  "இரத்தப் படலம் எப்போ ?" ; "புதுசாய் என்ன வருது ?" ; "கிங் ஸ்பெஷல் இதழில் யார் ஹீரோ ?" ; "மில்லியன் ஹிட்ஸ் எப்படி இருக்கும் ?" என்ற ரீதியில் கேள்விகள் படலம் துவங்கியது ! நமது ஸ்டாலின் மறு பக்கமிருந்தது நடைபாதை என்பதால் அங்கே ஓரம்கட்டிட அரட்டை அதகளமானது !! LMS பற்றாதென "மின்னும் மரணம்" மறுபதிப்பும் அறிவிக்கப்பட்டிருந்ததால் நண்பர்களின் உற்சாகத்தின் அளவுகள் விண்ணைத் தொடும் நிலையில் இருப்பதை நன்றாகவே உணர முடிந்தது ! 'அதற்கும் hardcover தானே ?' ; 'இரத்தக் கோட்டை' 5 பாகங்களையும் மீள்பதிப்பு செய்து விடுங்களேன்' என்ற ரீதியில் வேண்டுகோள்களும், கேள்விகளும் டெக்ஸ் வில்லரின் தோட்டாக்களைப் போல 'விஷ்.'விஷ்' என்று எனது மொழு மொழு முன்மண்டையைத் தாண்டிப் பறந்து சென்றன ! நான் விடிய விடிய விளக்கங்கள் சொன்ன பிறகும் "இரத்தப் படலம் வண்ணத்தில் எப்போது சார் ?" என்ற கேள்வியை உடும்புப் பிடியைப் பிடித்து நின்றார் நமது இரும்புக்கரத்தார் !! போராட்டக் குழுத் தலைவரோ அமைதியாய் வேடிக்கை பார்த்து நின்றவர் இது வரை நமது இதழ்கள் பற்றிய செய்தித் தாள் குறிப்புகள் ; நமது சுவாரஸ்யமான பதிவுகள் என நிறைய printout எடுத்து அதனை ஒரு புக்காகவே பைண்டிங் செய்து கொண்டு வந்து காட்டி விட்டு, 'சிங்கத்தின் சிறுவயதில்' தொகுப்பு எப்போது ? எனக் கேள்வியினை முன்வைத்தார் ! அது என்றைக்கு முடிகிறதோ  - அன்று ஒரு புக்காகப் போட்டு விடுவோம் என்று நான் பதிலளிக்க குழுத்தலைவர் போராட்டத்தைக் கைவிடுவதாக ஒப்புக் கொண்டார் ! வாழைப்பூக்கள் தப்பின !! இம்முறை நம்மை சந்திக்க வருகை தரும் நண்பர்களின் பெயர்கள் சகலத்தையும் குறித்துக் கொண்டாக வேண்டும் ; எனது காமெராவில் படங்கள் எடுத்தாக வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன் ; ஆனால் நண்பர்களின் உற்சாகத்தின் மத்தியினில் அத்தனையும் காற்றில் போயே போச்சு !  சேலம் நகரிலிருந்து வருகை தந்திருந்த நண்பர்கள் குழு - சேலம் ஸ்டீலின் பிரத்யேகத் தயாரிப்பான gift set ஒன்றினை என் கையில் திணிக்க ; சேலம் நகரிலிருந்து ஆண்டுதோறும் நம்மை சந்திக்கும் ஒரு அற்புதக் காமிக்ஸ் ஆர்வக் குடும்பம் 4 பாக்கெட் இனிப்புகளை தந்து அந்த இடத்தையே இன்னும் இனிப்பாக்கினார்கள் ! வாசக நண்பரும் , அவர்தம் தமக்கையும் நமது காமிக்ஸின் தீரா அபிமானிகள் ; இருப்பினும் அவர்களையும் விட ஒருபடி மேலே சென்று அவர்களது தந்தையார் மிகுந்த கரிசனத்தோடு நம்மை நலம் விசாரித்ததும், நமக்கு நல்லறிவுரைகள் சொன்னதும் மறக்க இயலா நிமிடங்கள் ! உங்களின் ஆசீர்வாதங்கள் எங்களை என்றும் வழிநடத்தும் !!

Salem Steel..!!

தூரங்களைத் துளியும் பொருட்படுத்தாது எங்கெங்கிருந்தோ வருகை தந்திருந்த நண்பர்கள் குழாம் சந்தோஷமாய் தோளோடு தோள் சேர்த்து நின்றது நிச்சயமாய் ஒரு மறக்க இயலா அனுபவமே ! மதியத்துக்கு மேலே மீண்டும் அரட்டை களை கட்ட, மாலை வரை தொடர்ந்தது ! திருப்போர் நகரிலிருந்து நண்பர் சிபி அன்று மாலை வர இருப்பதாகவும், அன்றைய தினம் அவரது பிறந்த நாள் என்பதால் அங்கேயே கொண்டாடி விடுவோமா ? என நண்பர்கள் வினவ - அதற்கான ஏற்பாடுகள் துவங்கின ! அந்தி சாயும் சமயம் நண்பரும் வந்திட, அரங்கின் பின்னே இருந்த மரத்தினடியில் அவரை அதிரடியைக் கேக் வெட்டச் செய்தனர் ! நண்பருக்கு சந்தோஷத்தில் வார்த்தைகள் வரவில்லை என்பதை அருகில் நின்ற என்னால் புரிந்திட முடிந்தது ! காமிக்ஸ் எனும் ரசனையின் புதல்வர்கள் என்ற ஒரே அடையாளத்தை மட்டும் சுமந்து கொண்டு ; எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி ; எங்கெங்கோ பிறந்து, வளர்ந்த 'முழு நிஜார் பாலகர்களால்' இத்தனை சந்தோஷத்தை பரிமாறிக் கொள்ள முடிவதை மாறா வியப்போடு நான் ரசித்தேன் ! Privileged to be a part of this family folks !!மறக்க இயலா ஒரு நாளின் இறுதியில் விடைபெறும் வேளை நெருங்கும் முன்பாக ஈரோட்டில் 2015-க்கான அறிவிப்பு என்னவென்று நண்பர்கள் பட்டாளம் ஒட்டுமொத்தமாய் மறியல் செய்ய ; 'பெவிகால் பெரியசாமி' அவதாரத்தை சற்றே தளர்த்திடும் அவசியம் நேர்ந்தது ! 2015-ல் இரட்டை TEX மெகா சாகசங்கள் (தலா 336 பக்கம் !!) வரக்காத்திருக்கும் ரகசியத்தை (?!) போட்டு உடைத்தேன் - 'தல' ரசிகர்களின் உற்சாகக் கூக்குரல்களுக்கு மத்தியினில் ! டைகர் ரசிகர்களும் தங்கள் தளபதிக்கொரு "மின்னும் மரணம்"  காத்திருக்கும் சந்தோஷத்தில் பெருந்தன்மையாய் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர் !! அன்றிரவு நானும், ஜூனியரும் ரூமுக்குத் திரும்பிய போது என் முதுகும், காலும் பிசாசாய் வலித்த போதும், மண்டைக்கு அது துளியும் பதிவாகவில்லை ! ஒருவித மிதக்கும் நிலையில் இருந்தது போன்றதொரு உணர்வு !"சந்தோஷம்" எனும் வார்த்தைக்கு ஒவ்வொருவரின் அகராதிகளிலும் வெவ்வேறு பொருள்கள் இருப்பது இயல்பே ; சூழல்களுக்கேற்ப அவை மாறும் என்பதெல்லாம் புரிகிறது தான் ! ஆனால் நாம் நேசிக்கும் இந்த சித்திரக்கதை உலகிற்கு சந்தோஷத்தை உற்பத்தி செய்திடும் ஆற்றல் இத்தனை கணிசமாய் உள்ளதென்பதை மீண்டும் ஒருமுறை உணர முடிந்த போது - இத்துறையினில் கால் பதிக்கும் ஒரு வாய்ப்பை நமக்குத் தந்த கடவுளுக்கு ஒரு மௌன நன்றியை சொல்வதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை !
அடுத்த தலைமுறைகளும் மெள்ள மெள்ள நம் உலகினுள் வரும் மாயாஜாலம் நிகழாது இல்லை !
நண்பர்களின் ஆரவாரங்கள் என் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கும் போதிலும், மண்டைக்குள் அடுத்த மாதத்து இதழ்களின் பணிகள் பற்றிய அலாரம் அடிக்கத் துவங்கிடும் போது தான் புரிகிறது - LMS இனி நம் முதுகுக்குப் பின்னுள்ளதொரு மைல்கல் என்று ! தீராப் பசி கொண்ட நம் காமிக்ஸ் குடும்பத்திற்கென புதிதாய் இலக்குகளும், புதிதாய் பயணங்களும் காத்துள்ளன என்பதால் fresh guard எடுத்துக் கொண்டு ஆட்டத்தைத் தொடர வேண்டியது அவசியம்  அல்லவா ? அடுத்த பந்தில் கிளீன் போல்ட் ஆனால் சதம் அடித்த சந்தோஷங்கள் வெறும் நினைவுகளாக மாத்திரமே இருந்திடும் என்பதால் இன்றைய தினத்தின் இந்த உத்வேகத்தையும், உற்சாகத்தையும் மாத்திரமே தக்க வைத்துக் கொண்டு இன்னும் வேகமாய் நடை போட விழைவோம் !! அடுத்த இலக்காய்  'மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல்' வெகு வெகு விரைவில் காத்திருப்பதால் எங்களின் டீமுக்கு ஸ்டார்ட் மியூசிக் தான் மறுபடியும் !!

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே...!! ஒரு மறக்க இயலா அனுபவத்தை நல்கியமைக்கு என்றென்றும் எங்கள் நன்றிகள் !! We feel truly blessed & humble !!

Before I wind up சில happy சேதிகளும் !!
 • டைலன் டாக் இத்தாலிய ரசிகர் மன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டு அவர்களது ஆதர்ஷ டைலனின் கதை இடம்பெற்றிருக்கும் நமது LMS -ல் 75 பிரதிகள் கோரியுள்ளனர் !!! 
 • மர்ம மனிதன் மார்டின் ரசிகர் மன்றம் இப்போது விபரம் கோரி மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர் !! 
 • ஈரோட்டில் முதல் இரண்டு நாட்களின் நமது LMS 170 பிரதிகள் விற்பனையாகியுள்ளன !! 
 • இது வரையிலான மின்னும் மரணம் முன்பதிவு எண்ணிக்கை 110-ஐத்  தொட்டுள்ளது ! ஏழே நாட்களின் பதிவுகள் என்ற முறையில் great going !!!
 • நமது ஈரோடு விற்பனையாளர் LMS-ல் 100 பிரதிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார் !!
 • LMS வெளியான தினத்தன்று நமது Worldmart தளத்தின் பார்வைகள் எண்ணிக்கை 1093 ! இங்கு நம் பதிவுப் பக்கத்தில் 3100 !!
 • கடந்த பதிவிற்கு இது வரை கிட்டியுள்ள பார்வைகளே நமது record என்று நினைக்கிறேன் - இப்போது வரையிலும் 6430 ! 
P.S : எப்போதும் போலவே, ஈரோட்டில் நமக்கு அற்புதமாய் ஒத்தாசைகள் செய்து வரும் அத்தனை நண்பர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் !!

457 comments:

 1. Replies
  1. வாழ்த்துக்கள் விஜயன் சார்! எத்தனை விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் உங்கள் புத்த சிரிப்பினால் எங்கள் ரசிகர்களை சிறை வைத்து விடுகிறீர்கள்! எத்தனை தடைகள் வந்தாலும் எதிர்கொண்டு சாதித்து விடுகிறீர்கள்! தங்கள் தங்கமான உள்ளத்துக்கு ஒரு பலத்த ஓ!!!
   மின்னும் மரணம் புத்தகத்துக்கு பணம் ட்ரான்ஸ்பர் செய்து விட்டேன். அலுவலகத்திலும் தெரிவித்து விட்டேன். ஹீ ஹீ ஹீ அந்த முதலில் பதிவு செய்தோர் பட்டியலை பிரசுரிக்கும்போது நம்ம பேரை விட்டுடாதேள்! ஹீ ஹீ ஹீ! மகத்தான வெற்றி பெறக் காத்திருக்கிறது எங்கள் ஒளி வீசும் மஞ்சள் நிற உலோகக் காவியம்!

   Delete
 2. Glad to know LMS is a big success. We hope, we would get many more such issues. :)

  ReplyDelete
 3. Kudos for the efforts and time you & your team have put in for such a memorable thing, Sir!!!!!!

  ReplyDelete
 4. சந்தோசமான பதிவு

  ReplyDelete
 5. Still haven't read the stories in LMS but I got a big surprise while opening the parcel. Awesome work. Kudos to your team.

  ReplyDelete
 6. Thanks for bringing us a treasure like LMS. Enjoyed and loved the whole album. Hope this is only the first of its kind (LMS-One) and we are waiting for many more to come. Thanks a million for announcing the Minnum Maranam & TEX 772. Extraordinary work by you & your team.. Hats off Sir....

  ReplyDelete
  Replies
  1. Mohamed Harris : //Hope this is only the first of its kind (LMS-One) and we are waiting for many more to come.//

   God willing...!!

   Delete
 7. மதுரை புத்தக திருவிழாவில் நமது காமிக்ஸ் ஸ்டால் இடம்பெறுமா sir ?

  ReplyDelete
  Replies
  1. Thilagar, Madurai : சந்தேகமே சார் ! கடும் ஆட்பற்றாக்குறை நம்மிடம் ! கடந்த ஒரு மாதமாய் நம்மவர்கள் ஊர் ஊராய் சுற்றித் திரிந்த வண்ணம் உள்ளனர் ! Maybe next year..!

   Delete
  2. ராதாகிருஷ்ணன் அண்ணாச்சியை நிறைய பேர் மிஸ் பண்றாங்க தலைவரே! அவரும் வேலும் ஒரு அதிரடிக் கூட்டணி! சீக்கிரம் அவர் தன் பழைய நிலைமைக்குத் திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்!

   Delete

 8. டியர் எடிட்டர்,

  புக் 1: இத்தாலிய ஸ்பெஷல் தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் - டாப் 5ல் கண்டிப்பாக ! டெக்ஸ் தவிர அனைத்துக்கதைகளும் படித்துவிட்டேன் - மிக அருமை. இத்தாலியக் கதைகளில் இவ்வளவு வகைகள் இருப்பது இப்போதுதான் புலனானது. That ONE SHOT STORY is the icing on the LMS cake !

  பல நூறு பக்கத் தொடர்கள் இப்போது கிடைத்திவிட்டன - வணிகத்தின் பொருட்டும் ! இவ்வாறான வித்யாசமான களங்களையும், MHS போன்ற புதிய கதைகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் !

  புக் 2 : Grrr .. நற நற நற *$^$%(%% - ரின் டின் கேன் தவிர :-)

  கடைசியாக இன்று evening show - சூப்பர் ஸ்டார் படம் (டெக்ஸ்) !!

  ReplyDelete
  Replies
  1. Raghavan : ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பாணி எனினும் அவை சகலத்தையும் நம்மால் ரசிக்க இயல்வதே ஒரு அசாத்திய விஷயம் ! On a scale of 1 to 10 நமது ரசனைகளுக்கு மிக உயர்வான மதிப்பெண்கள் நிச்சயம் !!

   ஈவ்னிங் ஷோவின் ரிசல்ட் பற்றியும் அறிந்திட ஆவல் !

   Delete
 9. ஈரோட்டில் உங்களையும் ஜூனியர் அவர்களையும் சந்தித்த தருணத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை பகிராமல் இருக்க இயலவில்லை.. ஜூனியர் மிகுந்த மரியாதையுடனும், மென்மையாகவும் பேசினார் (வளர்ப்பு ) !!! நிறைய கேள்விகள் ஆசிரியரிடம் கேட்க நினைத்து அவரை பார்த்த பரவசத்தில் ஒரே ஒரு கையெழுத்து மட்டும் பெற்று கொண்டு ஜூனியர் கிட்டே போய் சில நிமிடங்கள் மொக்கை போட்டு , கடைசியில் நீங்க டெக்ஸ் . அ? டைகர். அ? என்று கேட்டபோது அவர் கூறிய பதில் ... அதை இங்க சொன்ன ஒரு புயல் உருவாகும்.. இருந்தாலும் சொல்ல ஆசை ... என்ன விடை என்பது உங்களுக்கே தெரியும் காமிக்ஸ் காதலர்களே !!!

  ReplyDelete
  Replies
  1. balaji ramnath : //ஜூனியர் மிகுந்த மரியாதையுடனும், மென்மையாகவும் பேசினார் //

   சந்தோஷம் கொள்ளச் செய்யும் வார்த்தைகள் !!

   Delete
 10. விஜயன் சார், ஜூலியா கதை அருமை. வேவ்வேறு பாத்திரம்கள் கடைசியில் ஒரு கோட்டில் இணைவது அருமை. கதையின் நாயகி நல்ல அறிமுகம், தொடரட்டும் இவரது சாகசம். இந்த கதையில் சித்திரம்கள் மிக அருமை, குறிப்பாக விமான நிலையம் மற்றும் விமானத்தின் உள் பகுதியை கண் முன் அப்படியே கொண்டு வந்தது "simply super"; விமான நிலையத்தில் நடக்கும் உரையாடல்கள், வயதான இரண்டு நபர்களின் உரையாடல்... இரண்டாம் நண்பர் சுய நினைவு அடிக்கடி இழப்பவர் என்பது இரண்டாம் முறை படித்தால்தான் புரியும்.

  நீங்கள் இதற்கு முன்னால் இதன் மொழி பெயர்ப்பு அனுபவம் பற்றி சொன்னது கதையை படிக்கும் போது புரிந்து கொள்ள முடிந்தது.

  இந்த கதையை மீண்டும் ஒருமுறை படிக்க முடிவு செய்துள்ளேன்.

  ஒரு புதிய அருமையான கதையை கொடுத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : //விமான நிலையத்தில் நடக்கும் உரையாடல்கள், வயதான இரண்டு நபர்களின் உரையாடல்... இரண்டாம் நண்பர் சுய நினைவு அடிக்கடி இழப்பவர் என்பது இரண்டாம் முறை படித்தால்தான் புரியும். //

   ஆழ்ந்து படிக்கும் போது இவை தானாய்ப் புரியும் என்பதாலேயே சூழ்நிலை விளக்க guide களை ஆங்காங்கே விதைக்க நான் முனையவில்லை ! அதே போல 'இறந்த காலம் இறப்பதில்லை' கதையிலும் கூட - சடார் சடாரென நிகழும் காட்சி மாற்றங்கள் ; கால மாற்றங்கள் கூர்ந்து படிக்கும் போது நமக்கே தென்படும் என்பதால் அதனையும் simplify செய்திட முயற்சிக்கவில்லை ! உயர்ந்துள்ள நம் ரசனைகளின் மீதான எனது நம்பிக்கையின் வெளிப்பாடாகப் பார்க்கலாம் இவற்றை !!

   Delete
 11. விஜயன் சார், மாட்டின் கதை வித்தியாசமான அருமையான கதை, மிகவும் ரசித்த கதை. இதற்கு முன்னால் வந்த இவரின் கதைகள் அந்த அளவு பிடிக்கவில்லை :-( படம்கள் அருமை, ஒரு விறு விறுப்பான கதை.

  ராபின் கதை நன்றாக இருந்தது, கலரின் வித்தியாசமாக இருந்தது. இவரின் கதை வண்ணத்தை விட கருப்பு வெள்ளையில் வருவது நலம், வண்ணத்தில் வருவதற்கு இவரின் கதை சித்திரம்களுக்கு ஓவியர்கள் அந்த அளவு முக்கியதுவம் தராதது நான் இவ்வாறு சொல்ல காரணம்.

  ReplyDelete
 12. டியர் விஜயன் சார்,

  இதைச் சொன்னால் என்னை கட்டி வைத்து உதைத்தாலும் உதைப்பீர்கள்.. ஆனால், சில காரணங்களால் "LMS பார்சல்" திறப்பு விழாவை இன்று காலையில் தான் நடத்தினேன்! :D

  கதைகளை இன்னமும் படிக்கத் துவங்கவில்லை - கதைகளுக்கான விமர்சனங்கள், LMS Book No. 1-ஐப் பொருத்த வரை இரண்டாம் பட்சமே! ஆனால், புத்தகத்தை புரட்டுவதற்கு முன்னதாகவே, அதன் தரம் நம்மை புரட்டிப் போட்டு விடுகிறது! டாலடிக்கும் அட்டை, வசீகரிக்கும் ஓவியம், உறுதியான பைண்டிங், புத்தகத்தின் கனம் என, Book 1-ன் மிகச் சிறப்பான தயாரிப்புத் தரம் காமிக்ஸ் படிக்காத வாசகர்களையும் முதல் பார்வையிலேயே கவர வல்லது!

  மேலோட்டமாக பார்த்த வரையில், புத்தகத்தின் உட்பக்கங்களும் சிறப்பாக உள்ளன (நிக் ரைடர் தவிர்த்து). குறிப்பாக, டெக்ஸ் மற்றும் டைலன் இத்தாலியக் கதைகளின் வண்ணத் தீட்டல்கள், நாம் பார்த்துப் பழகிய பிரான்கோ-பெல்ஜியன் கதைகளின் மிதமான வண்ணக் கலவைகளில் இருந்து ஒரு 'பளீர்' மாறுதல்!

  ஈரோட்டில் LMS சிறப்பாக விற்பனையாகி இருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஒட்டு மொத்தமாக வாங்கிக் குவிக்கும் இத்தாலிய ரசிகர்களுக்கும் ஒரு பெரிய சல்யூட் - நிக் ரைடரின் ரசிக கோடிகளை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது! ;) அப்புறம், LMS Book 1-ன் சாம்பிளை, Dupuis / Dargaud-க்கு அனுப்ப வேண்டாம் சார்; அப்படியே அனுப்பினாலும், Book 2 உடன் இணைத்து அனுப்ப வேண்டாம் - செம கடுப்பாகி விடுவார்கள்! :D

  சிரிப்பைத் தவிர்த்து சீரியஸாக சொல்வதானால்....

  இத்தனை சிறப்புகளுக்குரிய ஒரு சிறப்பிதழ் அதற்குரிய கவனத்தை, காமிக்ஸ் வட்டத்தைத் தாண்டி பெறாமல் போகிறதே என்ற வருத்தம் எனக்கு! சென்னை புத்தக விழாவில், மேலும் பலரது கவனத்தை LMS ஈர்க்கும் என நம்புகிறேன்.

  பி.கு: சென்னையில், LMS-க்குப் போட்டியாக MMTCS-ம் களமிறங்கப் போகிறது என்பதால், இரண்டையும் வாங்க மனமில்லா புதிய வாசகர்கள் எந்த புத்தகத்தை தேர்ந்தெடுப்பார்கள் என்பது தான் தற்போதைய மில்லியன் ரூபாய் கேள்வி! :) அதற்கான பதில் மின்னும் மரணத்தின் அட்டை ஓவியம் மற்றும் பைண்டிங் + பிரிண்டிங் நேர்த்தியில் அடங்கி உள்ளது! It is going to be Tiger Vs Tex at Chennai! ;-)

  ReplyDelete
  Replies
  1. // இத்தனை சிறப்புகளுக்குரிய ஒரு சிறப்பிதழ் அதற்குரிய கவனத்தை, காமிக்ஸ் வட்டத்தைத் தாண்டி பெறாமல் போகிறதே என்ற வருத்தம் எனக்கு! //

   +1 Same here.

   ரெகுலர் இதழ்களிலும் சாத்தியமாகும் இடங்களில் இதே தரத்தை Replicate செய்யமுடிந்தால் நன்றாக இருக்கும்.

   Delete
  2. // இத்தனை சிறப்புகளுக்குரிய ஒரு சிறப்பிதழ் அதற்குரிய கவனத்தை, காமிக்ஸ் வட்டத்தைத் தாண்டி பெறாமல் போகிறதே என்ற வருத்தம் எனக்கு! //

   நியாயமான வருத்தம் நண்பர்களே :-(

   Delete
  3. //அதற்கான பதில் மின்னும் மரணத்தின் அட்டை ஓவியம் மற்றும் பைண்டிங் + பிரிண்டிங் நேர்த்தியில் அடங்கி உள்ளது! It is going to be Tiger Vs Tex at Chennai! ;-)// +1

   Delete
  4. Karthik Somalinga : //இத்தனை சிறப்புகளுக்குரிய ஒரு சிறப்பிதழ் அதற்குரிய கவனத்தை, காமிக்ஸ் வட்டத்தைத் தாண்டி பெறாமல் போகிறதே என்ற வருத்தம் எனக்கு! //

   இன்றைய விதைச்சலுக்கு இன்றே பலன் என்ற யோகம் நமக்கு இல்லாது போகலாம் தான் ; ஆனால் காமிக்ஸ் எனும் இந்த சிறுபான்மை ரசனைக்கும் சிறுகச் சிறுக ஒரு அங்கீகாரம் கிட்ட LMS போன்ற முயற்சிகள் long run-ல் பலன் தரும் என்ற நம்பிக்கை எனக்குள் நிறைய உள்ளது ! இந்தத் தரத்தை உடும்புப் பிடியாய்ப் பிடித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ளும் நாள் நமக்குப் புலரும் போது கவனங்களும் தானாய் வந்து சேராதா நம் பக்கமாய் ?!!

   Delete
 13. இரண்டு முறை பெங்களூர் காமிக்ஸ்கானில் நண்பர்களை சந்தித்த போதும் ஈரோடு புத்தக திருவிழா எனது மனதை சில தினம்கள் ஒரு போதையில் வைத்து இருந்தது என்றால் அது மிகையில்லை; யோசித்த போது ஈரோடு மற்றும் சுத்து வட்டாரத்தில் இருந்து வந்த இயல்பான நண்பர்களில் இயல்பான அன்பு ஒன்றே காரணம். அடுத்த வருடம் மீண்டும் அங்கு உங்கள் அன்பு மழையில் நனைய ஆசை. நன்றி நண்பர்களே.

  ReplyDelete
 14. மகிழ்ச்சி & நெகிழ்ச்சியான பதிவு... உங்களின் பதிவை படிக்கும் போதே, உங்களின் உற்சாகம், சந்தோஷம் . . அனைத்தும் எங்களிடம் பரவி, உங்களின் உணர்வை முழுதாய் உணர்கின்றேன்...நன்றிகள் அனைத்தும் உங்களுக்கே உரியது...

  ReplyDelete
  Replies
  1. Dasu bala : நன்றிகள் கடவுளுக்கே !!

   Delete
 15. டைலன் கதைகள் வண்ணத்தில் வெளியிடுங்கள் எடிட்டர் சார் !

  கீச்சலான ஓவியங்கள் .....அந்தி மண்டலம் ....??????????????????

  அப்படி ஒன்றும் தெதெரியவில்லையே .........

  ReplyDelete
 16. //கதைகளுக்கான விமர்சனங்கள், LMS Book No. 1-ஐப் பொருத்த வரை இரண்டாம் பட்சமே!///
  +11111111111111111111111111111

  ReplyDelete
 17. //புத்தகத்தை புரட்டுவதற்கு முன்னதாகவே, அதன் தரம் நம்மை புரட்டிப் போட்டு விடுகிறது!//
  +1111111111111111111111111111111

  ReplyDelete
 18. //டாலடிக்கும் அட்டை, வசீகரிக்கும் ஓவியம், உறுதியான பைண்டிங், புத்தகத்தின் கனம் என, Book 1-ன் மிகச் சிறப்பான தயாரிப்புத் தரம்//.
  +111111111111111111111111111111111111111

  ReplyDelete
 19. மறக்க முடியாத அனுபவம் ....ஆசிரியரையும் அன்பு நண்பர்களையும் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆசை பூர்த்தியாகிவிட்டது.ஒரே வாரத்தில் இரண்டு பண்டிகைகள் கொண்டாடிவிட்டேன்.எல்லா புகழும் இறைவனுக்கே. ..ஒரே வார்தையில் சொல்ல வேண்டுமானால் LMS-ஒரு பிரமிப்பு ....கிட்டதட்ட இரண்டு நாட்கள் எங்கே போனாலும் LMS-கையோடு வைத்துக்கொண்டு சுத்தினேன் ...
  வீட்டில் எல்லோருக்கும் நமது லயன் பற்றி Daily -class தான்.......
  உற்சாகம் ,பிரமிப்பு அடங்கவே இல்லை ..அருமையான பரிசுக்கு நன்றி அன்பு ஆசிரியரே....
  டெக்ஸும்,டைலனும் உலக தரம்..
  Hard bound ...சான்சே இல்லை ,
  வண்ணங்கள் ,Binding quality ......Matchless....மொத்தத்தில் LMS-ஒரு பொக்கிஷம் ..

  ReplyDelete
  Replies
  1. AHMEDBASHA TK : //இரண்டு நாட்கள் எங்கே போனாலும் LMS-கையோடு வைத்துக்கொண்டு சுத்தினேன் ...வீட்டில் எல்லோருக்கும் நமது லயன் பற்றி Daily -class தான்.......//

   பாவம் சார் வீட்டார் !! நம் கச்சேரியை நமக்குள் வைத்துக் கொள்வோம் !! :-)

   Delete
 20. உணர்ச்சி பூர்வமான பதிவு .சந்தோசம் என்பது மனதை பொறுத்த விஷயம் என்பதை
  அழகாக சொன்ன எடிட்டர் அவர்களுக்கு நன்றி //. நாம் நேசிக்கும் இந்த சித்திரக்கதை உலகிற்கு சந்தோஷத்தை உற்பத்தி செய்திடும் ஆற்றல் இத்தனை கணிசமாய் உள்ளதென்பதை மீண்டும் ஒருமுறை உணர முடிந்த போது - இத்துறையினில் கால் பதிக்கும் ஒரு வாய்ப்பை நமக்குத் தந்த கடவுளுக்கு ஒரு மௌன நன்றியை சொல்வதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை //இன்னும் இன்னும் பல நூற்றாண்டு காலம் உங்கள்
  பணி தொடரட்டும் .

  ReplyDelete
  Replies
  1. // இன்னும் இன்னும் பல நூற்றாண்டு காலம் உங்கள் பணி தொடரட்டும் . //

   தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்!

   Delete
  2. BAMBAM BIGELOW : சிரம் தாழ்த்தி ஏற்கிறோம் உங்கள் வாழ்த்துக்களை !

   Delete
 21. விஜயன் சார்,
  லக்கி-லூக் கதையில் உள்ள சிரிப்பை விட அதன் வண்ணதிற்குதான் முதலிடம்; அச்சில் செலுத்திய கவனத்திற்கு எனது நன்றிகள். விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுவிற்கு காமெடி கதை இல்லை என்றாலும் போரடிக்கவில்லை. மேலும் லக்கி-லூக்கதைகள் எல்லாம் காமெடி தோரணமாக (புரட்சி தீ போல) இருக்க வேண்டும் என நினைப்பது தவறு என்பது எனது எண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. //லக்கி-லூக் கதைகள் எல்லாம் காமெடி தோரணமாக (புரட்சி தீ போல) இருக்க வேண்டும் என நினைப்பது தவறு என்பது எனது எண்ணம்.//

   Very true ! அனைத்து ரகத் தொடர்களுக்குமே இந்தக் கருத்து பொருந்தும் ! ஒவ்வொரு டைகர் கதையும் ஒரு மின்னும் மரணமாகவோ ; ஒவ்வொரு மாடஸ்டி கதையும் ஒரு கழுகுமலைக் கோட்டையாகவோ ; ஒவ்வொரு டெக்ஸ் சாகசமும் ஒரு டிராகன் நகரமாகவோ இருத்தல் சாத்தியம் ஆகாதே !!

   Delete
 22. சார் எல்லா கதைகளையும் இரண்டு முறை படித்து விட்டேன் அருமை,NBS ஐ விடவும்
  LMS தான் top

  ReplyDelete
  Replies
  1. எப்படி வீரையன் அதற்கு உள்ளார :-)

   Delete
 23. விஜயன் சார், ரின்-டின் நல்ல தேர்வு நமது காமிக்ஸ் குடும்பத்திற்கு, சிறியவர்களை விட பெரியவர்களுக்கு பிடிக்க வாய்புகள் அதிகம். இதில் உள்ள காமெடியை ஒரு பக்குவப்பட்ட வாசகர்களால் மட்டும் ரசிக்க முடியும் என்பது எனது கருத்து, அதாவது 15 வயதிற்கு மேற்பட்ட வாசகர்கள் படித்து ரசிக்க சிரிக்க முடியும்.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : குழந்தைகளிடம் , விலங்குகளின் மீதொரு தீரா fascination என்றென்றும் இருந்திடும் ! ஒரு முறை மட்டும் கதை சொல்லிப் புரிய வைத்த பின்னே பாருங்களேன் - குட்டீஸ் ரி.டி.கே.வை எவ்விதம் ரசிக்கிறார்கள் என்று !

   Delete
  2. முயற்சி செய்யபட்டு தோல்வி அடைததானால் :-)

   Delete
 24. அருமை நண்பர் பரணி அவர்களே..மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.ஆர்வம் மட்டுமல்ல

  டைலன் டாக் ,இறந்தகாலம் இறப்பதில்லை ,ஜூலியா கதைகள் எல்லாமே இரண்டு முறை

  படித்தும் இன்னும் படிக்க தூண்டுகின்றன புரிபட ..

  ReplyDelete
  Replies
  1. VETTUKILI VEERAIYAN : //டைலன் டாக் ,இறந்தகாலம் இறப்பதில்லை ,ஜூலியா கதைகள் எல்லாமே இரண்டு முறை படித்தும் இன்னும் படிக்க தூண்டுகின்றன புரிபட ..//

   ஒவ்வொரு மறுவாசிப்பின் போதும் புதிதாய் ஒன்று புலனாகும் பாருங்களேன்...!!

   Delete
 25. ஈரோடு வரும் வாய்ப்பிழந்த என் போன்றோர்க்கும் மனநிறைவு அளிக்கும்படியான

  பதிவு எடிட்டர் சார் !

  LMS ,MMCS போன்றவை உங்களது நெடிய காமிக்ஸ் பயணத்தின் சிகரங்கள் என்ற

  திருப்தி உணர்வை தந்து விடாது இதனினும் மேலான புதிய முயற்சிகள் செய்ய

  சந்தர்ப்பங்களையும் சக்தியையும் உங்களுக்கு இறைவன் வழங்க வேண்டுகிறேன் .....


  ReplyDelete
  Replies
  1. selvam laxmi : நளபாகமே உணவாய் அமைந்தாலும் கூட , அடுத்த வேளை புலர்ந்தவுடன் வயிற்றின் inbuilt கடிகாரம் 'பசி..பசி..' என்று கூவத் தொடங்கி விடுவது தானே வாழ்க்கை ? So LMS ; MMS என்று எத்தனை உயரங்களை நாம் எதிர்கொண்டாலும், திரும்பவும் தொடங்குவோம் முதல் புள்ளியில் இருந்தே !

   நமது பசி - தீராப் பசி......அகோரப் பசி..! So கவலையே வேண்டாம் நண்பரே...!

   Delete
  2. //நமது பசி - தீராப் பசி......அகோரப் பசி..! So கவலையே வேண்டாம் நண்பரே...!//
   Very true sir

   Delete
  3. //நமது பசி - தீராப் பசி......அகோரப் பசி..! So கவலையே வேண்டாம் நண்பரே...!//
   குதூகலிக்க வைக்கும் வார்த்தைகள் ..

   Delete
 26. //ஈரோடு வரும் வாய்ப்பிழந்த என் போன்றோர்க்கும் மனநிறைவு அளிக்கும்படியான பதிவு எடிட்டர் சார் !///
  +1111111111111111111111

  ReplyDelete
 27. LMS இதழை கண்டபோது மெய்மறந்து போனேன்! சர்வதேச தரத்தை நோக்கி நமது பயணம் செல்ல ஆரம்பித்து விட்டதோ என்ற எண்ணம் தோன்றாமலில்லை! இப்படி ஒரு சர்ப்ரைசை தந்தமைக்காக நன்றிகள் பல ஆசிரியரே!
  2015 அதகள ஆண்டாக அமையப்போகிறது என்பது கண்கூடாக தெரிகிறது!
  "மின்னும் மரணம்" மற்றும் "டெக்சின் இரட்டை அதிரடி சாகசங்கள்" என இப்போதே ஆட்டத்துக்கு தயாராகிறோம் என்பது இனிது இனிது! Thank You சார்!

  ReplyDelete
  Replies
  1. //LMS இதழை கண்டபோது மெய்மறந்து போனேன்! சர்வதேச தரத்தை நோக்கி நமது பயணம் செல்ல ஆரம்பித்து விட்டதோ என்ற எண்ணம் தோன்றாமலில்லை! //+1

   lets make LMS as standard, lets make LMS as starting point for long journey!

   Delete
 28. Erode Friends are really awesome! Kudos to you friends!

  ReplyDelete
 29. // டைலனின் தொடரும் சாகசங்கள் வண்ணத்திலா - black & white போதுமா folks ? //
  கலர்! அந்தி மண்டலத்தின் சைஸும் கலரும் மிகப்பெரிய Plus Point! எனவே இதே விதத்தில் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்!

  // இது வரையிலான மின்னும் மரணம் முன்பதிவு எண்ணிக்கை 110-ஐத் தொட்டுள்ளது ! ஏழே நாட்களின் பதிவுகள் என்ற முறையில் great going !!! //
  Great News!

  @Vijayan Sir,
  LMS மூலமாக சாத்தியமான இத்தாலிய கதைகளின் Experiment, 2014 ஆம் ஆண்டின் சிறப்பான முயற்சிகளுள் ஒன்று என்றே தோன்றுகிறது. 2015'ன் திட்டமிடலில் இக்கதை தொடர்களின் பங்கு பிரதானமாக இருந்தால் மகிழ்ச்சியே. குறிப்பாக கலர் டெக்ஸ் கதைகளும் டைலன் டாக் கதைகளும்.

  ReplyDelete
  Replies
  1. //LMS மூலமாக சாத்தியமான இத்தாலிய கதைகளின் Experiment, 2014 ஆம் ஆண்டின் சிறப்பான முயற்சிகளுள் ஒன்று என்றே தோன்றுகிறது. 2015'ன் திட்டமிடலில் இக்கதை தொடர்களின் பங்கு பிரதானமாக இருந்தால் மகிழ்ச்சியே. குறிப்பாக கலர் டெக்ஸ் கதைகளும் டைலன் டாக் கதைகளும்.//
   +1 கூடவே ஜூலியாவும் மாடஸ்டி எல்லாம் தள்ளி நிற்க வேண்டும் ! மனதை மென்மையாக கவர்ந்து செல்கிறார் தெளிவான விளக்கங்கள் மூலம் !

   Delete
  2. Ramesh Kumar : //LMS மூலமாக சாத்தியமான இத்தாலிய கதைகளின் Experiment, 2014 ஆம் ஆண்டின் சிறப்பான முயற்சிகளுள் ஒன்று என்றே தோன்றுகிறது. 2015'ன் திட்டமிடலில் இக்கதை தொடர்களின் பங்கு பிரதானமாக இருந்தால் மகிழ்ச்சியே. //

   பிரதானமாக இல்லாவிடினும், 2015-ல் நிறைவானதொரு இடம் தரப்படும் 'தேவாலயங்களின் தேசத்துக்கு' ! அவர்களின் படைப்புகளோடு மல்லுக்கட்ட தொடரும் மாதங்களில் பிரான்கோ பெல்ஜிய அதகளங்கள் சில காத்துள்ளன !!

   Delete
 30. எடிட்டர் திரு விஜயன் அவர்களுக்கு வணக்கம்,

  //எடிட்டர் ; மொழிபெயர்ப்பாளன் ; கத்திரிக்காய் என்ற போர்வைகளுக்குள்ளே அடிப்படையில் நானும் ஒரு காமிக்ஸ் ரசிகன் என்ற முறையில் டெக்சையும், டைலனையும் 'பளீர்' வண்ண அச்சில் ; compact ஆன இந்த அளவினில் பார்த்த போதே ஒரு ஜிலீர் உணர்வு எனக்குள் ! //
  உஙகளுக்கே அவ்வளவு ஜிலீர் உணர்வு என்றால் எங்களுக்கு எவ்வளவு உணர்வுகள்
  ஏற்பட்டிருக்கும் சார் கொஞ்சம் யோசித்து பாருங்கள் !!!
  ஒரு அசாரி சொல்ல வேண்டும் இங்கே...NBSக்கு பின் தமிழ்காமிக்ஸ் உலகம் பயணித்த வழி தடம் ஒரு புதிய உத்வேகம்( நீங்களும்) பெற்று வேகம் எடுத்து விட்டது எல்லோரும் உணர்ந்தஒன்று !
  இப்பொழுது LMS வௌியீடப்பட்ட விதம், காமிக்ஸ் பிரியர்களுக்குள் அங்கு ஏற்பட்ட உற்சாகஉணர்வுகள், அது தொடர்பாக இனி ஏற்ப்படும் அலை, MMS( மின்னும்மரணம் ஸ்பெஷல்) வௌி வந்ததும்,அந்த அலை சுனாமியாக மாறப்போகிறது சார்!!
  SMS,செல் போன், கம்பியூட்டர், நெட், டாப், டிவி என சுற்றி சுற்றி சலித்து போன 7முதல் 77வரை உள்ள எல்லோரையும் அடிக்க போகும் சுனாமி அள்ளிகொண்டுவந்து காமிக்ஸ்
  பக்கம் கொட்டப்போகிறது பாருங்கள், அப்போது தெரியும் புரட்சி !!!
  ஜூனியரே தயாராக இருங்கள் வேட்டைக்கு எடிட்டர் ஸ்பைடர் இறக்கியது போல காமிக்ஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கோச்சுவண்டியில் பறக்க வேண்டிஇருக்கும் வேட்டைக்கு !!!

  ReplyDelete
  Replies
  1. எடிட்டர் சார் விடுபட்ட ஒரு முக்கிய விஷயம்...

   காமிக்ஸ் மேல் உள்ள ஆர்வத்தில் நான் செய்த சிறு முயற்சியை இங்கு தாங்கள்முதல் விஷயமாக சுட்டிகாட்டுவதுடன் இல்லாமல், என் புகைபடத்தையும்முதலில்போட்ட உங்கள் பரந்தமனம்....

   சிறு அசைவுக்கே விருந்துவைத்து, விழாஎடுத்து, கேடயமும்கொடுத்தது, போல்
   உள்ளதுசார் !!!
   என்னை அங்கிகரித்த அன்புக்கும், அடையாளப்படுத்தி பன்பிற்க்கு
   நான் நிறைய கடமை பட்டுள்ளேன் சார் !!!
   ஒன்றுமே செய்யாத என்னை நீங்கள்பெருமைபடுத்திய விதம், ஒரு பெரிய திருவிழாவிற்கு நான் பணி செய்யவேண்டிய கடமையை இங்கு உணர்கிறேன் !

   (என்னை பற்றி பதிவையும் புகைபடத்தையும் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட ஜிலீர்
   உணர்வு வேறுயாருக்கும் ஏற்பட்டிருக்காது)

   Delete
  2. //ஜூனியரே தயாராக இருங்கள் வேட்டைக்கு எடிட்டர் ஸ்பைடர் இறக்கியது போல//+1

   Delete
  3. mayavi sivakumar : //ஜூனியரே தயாராக இருங்கள் வேட்டைக்கு //

   "என் பிள்ளை" என்ற தகுதியைத் தாண்டி அவன் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் நாள் புலரும் போது கடிவாளம் ஓசையின்றிக் கை மாறும் ! அது வரைக்கும் அடியேனிடமிருந்து அத்தனை சுலபமாய் விடுதலை கிட்டாது நண்பரே ! :-)

   Delete
 31. Edit good going, we expect LMS print quality in rest of books also. happy to see LMS doing good! its important such a risk pay you back positive handful, its happy to hear its doing good.

  you never fail us Vijayan sir, lets make LMS as a standard and lets move forward! once angain happy LMS friends !!!!!

  there is Bangalore comics-con between Sep12-14 can I hope to visit Lion stall that time sir?!

  ReplyDelete
  Replies
  1. Satishkumar S : Sorry, no more Comic Cons for us ; until they find a way into Chennai !

   Delete
  2. :( its going to be world comics under one roof but will miss you sir, it will be like Indian comics crown with out our precious southern jewel in the middle, no glory! hope there will be visitors dairy to pen this.

   Delete
 32. விஜயன் சார் மற்றும் நமது காமிக்ஸ் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும், நமக்கு உரிய (குறைந்த) பட்ஜெட்-ல், இருக்கும் குறைந்த பணியாளர்கள், மற்றும் குறைந்த இயந்திரம் (resources) இவைகளை வைத்துகொண்டு மிக சிறந்த/தரமான இதழை எங்கள் அனைவருக்கும் கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்; இது போன்ற தரமான புத்தகத்தை இது போன்று குறைந்த விலையில் யாராலும் கொடுக்க முடியாது, இதை நிகழ்த்தி காட்டியது உங்களின் காமிக்ஸ் காதல் மற்றும் தொழில் பக்தி. அனைவருக்கும் எனது நன்றிகள் பல.

  இந்த இதழில் குறை என்ற ஒன்றை சொல்லவேண்டும் என்றால் அது மிகவும் கடினம், அதையும் மீறி கண்டிப்பாக ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அது ஆங்காங்கே தென்படும் சில எழுத்து பிழைகள் மட்டுமே!

  ReplyDelete
  Replies
  1. சுருங்க சொல்லனும்னா நம்மிடம் உள்ள சிறிய வட்டத்தில் அழகாக வீடு கட்டி (மகிழ்ச்சியில் எங்களை) அடித்து போல்!

   Delete
 33. மார்ஷல் டைகர் கதையின் ஆரம்பம் என்ற காரணத்தினால் இந்த கதையில் வழக்கமான நமது நாயகனின் சாகச பராகிரமம்கள் குறைவுதான்; ஆனால் இந்த கதையின் தொடர்ச்சியாக அடுத்து வரும் இரண்டு பாகம்களும் இதனை நேர் செய்யும் என நம்புகிறேன். ஆனால் இந்த கதையின் அச்சு, சித்திரம்கள், மற்றும் வண்ணகலவை மிகவும் அருமை.

  விஜயன் சார், மார்ஷல் டைகர் கதையின் அடுத்த இரண்டு பாகம்களை, ஒரே புத்தகமாக வெளி ஈடும்படி கேட்டு கொள்கிறேன். டைகர் கதைகளை முடித்த அளவு ஒரே புத்தகமாக வெளி ஈட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : மார்ஷலின் பாகம் 2 விரைவில் - வான்ஸ் சித்திரங்களோடு ! ஆனால் பாகம் 3 ரொம்பவே சுமாரான ஓவியங்கள் கொண்ட கதை !! டைகர் ரசிகர்கள் பாவம் தான் !!

   Delete
  2. இப்படி சொல்லி அடுத்த 2 பாகம்களின் சுவாரசியத்தை குறைத்து விட்டது போல் உள்ளது. அப்படி என்றால் இது போன்ற கதையை தவிர்க்கலாமே சார்?

   Delete
 34. ஆங்கில வெளியீடுகளின் வெற்றி சென்னை போன்ற பெருநகரங்களில் சாத்தியமே !

  வெகுகாலம் முன்பாகவே ஆங்கிலத்தில் ஸ்பைடர் கதையை நீங்கள் வெளியிட்டு

  ஆச்சரியம் ஏற்படுத்தி இருந்தீர்கள் ........

  ஆங்கில இதழ்களை பொறுத்தவரை நீங்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்

  (அவை விற்பனையாக ) என தோன்றுகிறது ..........

  டமில் புக்ஸ் .......டோன்ட் மேக் ஃபன் அவுட் ஆஃப் மீ .....என உதார் விட்டு திரியும்

  என் மகளை போன்றோரை சமாளிக்க அவை உதவ கூடும் ........

  அதற்கு நேர் மாறாக என் மைந்தன் தமிழில் சில வார்த்தைகளை கற்று கொண்டதே

  லயன் காமிக்ஸ் மூலம் என இப்போதுதான் முதன் முறையாக சொன்ன போது .....

  வியப்பில் ஆழ்ந்தேன் .......

  ரம்மியமான மாலைப்பொழுது ....

  தோதாக .....

  வாஸ்தவமான பேச்சு .....

  இன்னும் எத்தனையோ .......

  பள்ளி பருவத்தில் இருக்கும் அவனது ஆல்டைம் பெஸ்ட் கதை

  க்ரீன் மேனர் கதைகள் ....?????????????????????

  ஸ்பிலிட் பெர்சனாலிடி ரேஸ் டிரைவர் வரும் கதையொன்றை மிகவும் சிறந்த

  கதைகளில் ஒன்றாக சிலாகித்து பேசிய போது இந்த தலைமுறையின் ரசனைகளை

  புரிந்து கொள்வது கடினம் என தோன்றியது ...(அந்த கதையின் பெயர் என்ன ....

  நான் தெரிந்தது போல் சமாளிக்க வேண்டியிருந்தது ....)

  ஆங்கில இதழ்களின் பெயரை இணையத்தில் நம் ஹோம் பேஜ்ஜிலாவது நீங்கள்

  வெளியிடலாம் ......வாங்க ஏதுவாக இருக்கும் .....

  ReplyDelete
  Replies
  1. ரேஸ் டிரைவர் கதை மிக பழைய வெளியீடுகளில் ஒன்று ....

   கதை எனக்கும் ஞாபகத்தில் இருப்பினும் பெயர் ஞாபகம் இல்லை .....

   எடிட்டர் சார் .....உங்களின் மொழிபெயர்ப்பு வல்லமையை நான்

   பரிபூரணமாக உணர்ந்த தருணம் இது .......

   (எனது விருப்பங்களை நான் எனது குழந்தைகளின் மேல் திணிப்பதில்லை

   என்பதையும் கணக்கில் எடுத்து கொண்டால் உங்களது தமிழ் நடையின் வீச்சு

   புதிய தலைமுறையின் கவனத்தை வெகுவாக ஈர்க்க வல்லது என்றே சொல்ல

   தோன்றுகிறது )

   Delete
  2. selvam laxmi : இளைய தலைமுறையும் சிறுகச் சிறுக நம் (தமிழ்) காமிக்ஸ் குடும்பத்தில் இணைந்து வருவதை இம்முறை கண்கூடாய்க் காண முடிந்தது !

   'நான் படித்த முதல் காமிக்ஸ் இதழே "சிப்பாயின் சுவடுகளில்..." தான் ; அற்புதமாய் இருந்தது ! தொடர்ந்து இது போன்ற கதைகளை வெளியிடுங்கள் !" என்ற கோரிக்கையை வைத்த 20 வயது மாணவனை ஈரோட்டில் சந்திக்க முடிந்த போது உள்ளம் நிறைவாய் உணர்ந்தேன் !

   Delete
  3. 'நான் படித்த முதல் காமிக்ஸ் இதழே "சிப்பாயின் சுவடுகளில்..." தான் ; அற்புதமாய் இருந்தது ! தொடர்ந்து இது போன்ற கதைகளை வெளியிடுங்கள் !" என்ற கோரிக்கையை வைத்த 20 வயது மாணவனை ஈரோட்டில் சந்திக்க முடிந்த போது உள்ளம் நிறைவாய் உணர்ந்தேன் !

   +1 bring in more offbeat stories hope to see wider variety of stories, I am sure gen-next will take it with arms wide open.

   Delete
 35. விஜயன் சார்,
  // இந்தாண்டு நமது லயன் ; முத்து காமிக்ஸ் இதழ்களோடு - ஆங்கில காமிக்ஸ் ரகங்கள் சிலவற்றையும் வாங்கி நமது ஸ்டாலில் விற்பனைக்கு அடுக்கி வைத்திருந்தோம் !//
  இதனை சென்னை புத்தக திருவிழாவிலும் தொடர வேண்டும், அங்கு இது நமக்கு கண்டிப்பாக உதவும்.

  ReplyDelete
  Replies
  1. // டைலன் டாக் இத்தாலிய ரசிகர் மன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டு அவர்களது ஆதர்ஷ டைலனின் கதை இடம்பெற்றிருக்கும் நமது LMS -ல் 75 பிரதிகள் கோரியுள்ளனர் !!! //

   இப்படியே போனால் நமது காமிக்ஸ் இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, லண்டன், சிங்கபூர், மற்றும் உலகம் எங்கும் கிளைகள் ஆரம்பிக்க வேண்டும் போல :-). நல்ல விஷயம் நமது காமிக்ஸ் உலகம் எங்கும் பிரபலம் அடைவது.

   Delete
  2. Parani from Bangalore : கோபால் பல்பொடி விளம்பரம் நினைவுக்கு வருவது எனக்கு மட்டும் தானா ? :-)

   Delete
  3. உண்மை, போகிற போக்கில் இங்க விட வெளி நாடுகளில் நமது காமிக்ஸ் ரசிகர்கள் அதிகமானாலும் ஆச்சிரியபடுவதற்கில்லை :-)

   Delete
 36. My View on LMS story's:

  ரின்டின்- new entry with loads of fun its gave welcome kick (4/5)
  மார்ஷல் tiger - its another adventure from Tiger revolves around his journey to stop a war with red-Indianans (4/5), its having best of art among all LMS story's Vance makes his impression.
  லக்கி லூக்கின் பேய் நகரம் - Calamity Jane impress with her abnormal behavior its fun! (3/5), its Calamity Jane story where lucky makes guest appearance.
  மார்டினின் கட்டத்துக்குள் வட்டம்- story conduct business in new floor, Indiana type adventure thriller(3/5)
  ராபின் நிழல்களின் நினைவுகளில்- predictable story flow, less impressive casual art work(2/5)
  இறந்தகாலம் இறப்பதில்லை- spoiler- there is coldblooded antihero, who stands as center part of story, where rest revolve around.
  Half way mark I felt the shadow of harry potter. art work did a job in conveying the half of story in pictures. its head turner and it did his job(5/5).
  அந்தி மண்டலம்- its horror story. I felt story line is good, but its having mix of good and average art work(2.5/5)
  விண்ணில் ஒரு விபரீதம்- story line is impressive. Julia's character is not defined clearer, ex: criminologist getting surprise slap from air host?. most of individual pictures covering long shots, artist handled the minute details of log shots spotless. I enjoyed the plot (3/5).

  ReplyDelete
  Replies
  1. Satishkumar S : அடி, உதை வாங்காதவரையே அவர்கள் ஹீரோக்களும், ஹீரோயின்களும் என்ற கோட்பாடுகளெல்லாம் யதார்த்த பாணிகளுக்குத் தேவை கிடையாதே நண்பரே ! ஜூலியா அத்தகையதொரு நாயகி தானே ?!

   Delete
  2. we welcome Julia Kendall with open heart Edit, she is different, handles situation with her flexible attitude rather ridged mind. I enjoyed the story. since I am conventional supper hero reader it took time for me to convince my self to digest that slap. looking forward to see more of her ! she is no doubt flattering specialy with that dimple in her rare smile ! :P

   Delete
  3. சட்டம் அறிந்திரா சமவெளி- Tex celebrating his depavali in LMS, full action pack, lets welcome color TEX with warm welcome. Its never boring 225 pages, where you will not keep it down till the end card. Its TEX I don't want to rate our best selling supper hero, thumbs up!, but I like to see more TEX in B&W also.

   Delete
 37. திருச்சி ஆனந்த் புக்ஸ் பார்க் புத்தக கடைக்கு LMS எப்போது வரும் சார்? Egarly waiting sent it soon...

  ReplyDelete
  Replies
  1. Sankar.R : புதிய விற்பனையாளர் ; ரூ.550 விலையிலான இதழ்களை தருவிக்கும் அளவிற்கு அவர் இத்தனை சீக்கிரமே தயாராகி இருப்பது சந்தேகமே ! நம்மிடம் நேரடியாய் வாங்கி விடுங்களேன்..!

   Delete
  2. ஆனந்த் புக்ஸ் பார்க் திருச்சியில் எங்கு உள்ளது சங்கர் ?

   Delete
  3. At Periyasamy towers, chathiram bus stand sir..

   Delete
 38. Replies
  1. சார் தொடர்ந்து தங்களை பழைய கதைகளை கேட்ட பொது.....தங்கள் ஐநூறு கதைகளுக்கு மேல் உள்ளன தர என கூறியது புரிகிறது.....இது போன்ற சிறந்த கதைகள் இருக்குமெனில் அவை தேவை இல்லை ! புதிய நாயகர்களை களமிறக்குங்கள் ....அதே 1980 களின் கோட்டையை பிடித்து விடலாம் !

   Delete
 39. Replies
  1. வருங்காலத்தில்...!

   Delete
  2. அடுத்த மாதத்தில் அந்த வரும் காலம் நிகழ காலமாகவேண்டும் ......அதற்க்கு எல்லாம் வல்ல தாங்கள் மனம் குவிக்க வேண்டும் !

   Delete
 40. அன்புள்ள ஆசிரியருக்கு வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி கோவை கைத்தறி மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. தாங்கள் இதில் பங்கு கொண்டு நமது லயன் முத்து காமிக்ஸின் மீள்வருகையை இங்குள்ளோருக்கு தெரிவிக்கும் விதமாக பங்கு கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். புத்தக கண்காட்சி அமைப்பாளர் தொடர்புக்கு - 9843478623

  ReplyDelete
  Replies
  1. Muthu Kumar : சாரி நண்பரே...நாகர்கோவில் புத்தக விழாவும் இதே தேதிகளில் ! நாம் அங்கு ஒரு மாதம் முன்பாகவே பதிவு செய்துள்ளோம் ! Maybe next year !! Thanks !!

   Delete
 41. மார்ட்டின் கதையில் .......

  நாகத்தின் உடல் பருமன் மற்றும் அது ஊர்நது செல்லும் புதிர் அரங்க பாதையின் அகலம்

  குறித்த ரேஷியோ வைத்து அந்த நாகத்தை வெல்லும் யுக்தி ........

  நடைமுறை லாஜிக் .........

  ஆர்ப்பாட்டம் பெரிதுமின்றி .....மிகப்பெரிய இக்கட்டையும் சிந்திக்கும் திறனால்

  வீழ்த்தும் மனித மூளையின் லாவக வலிமை .......

  ReplyDelete
 42. ரின் டிண் ........சிரிக்க வைக்கும் கதைதான் .............

  ரின் டிண் ஐகு-வை விட கர்னலின் ஐகு கம்மியாக இருப்பதால் நாமும் கர்னலின்

  அளவுக்கு நமது IQ வை குறைத்து கொண்டு கதையை படிக்க வேண்டிய நிலை ..........


  ஆனால் ......அப்படி படிப்பதில் எந்த சிரமமும் இல்லை என்பதுதான் +++

  ரின் டிண் atpar with லக்கி லூக் ...........

  ReplyDelete
  Replies
  1. selvam laxmi : வெற்றி பெரும் தொடர்களின் துணைப்பாத்திரங்களைக் கொண்டு spin-off தொடர்கள் உருவாக்குவது அவ்வப்போது நடந்தேறும் விஷயங்களே...! (XIII தொடரின் வெற்றியைத் தொடர்ந்து "XIII மர்மங்கள்" என்ற பெயரினில் மங்கூஸ் ; பெட்டி ; கர்னல் ஆமோஸ் என்ற உபபாத்திரங்களுக்குக் கதைகள் செதுக்கியது போல..)

   அந்த யுக்தியை 1987-லேயே ரின் டின் கேன் விஷயத்தில் செயல்படுத்தி இருகிறார்கள் எனும் போது - கதைக் களங்களில் வலுவாக இருக்கும் நம்பிக்கை படைப்பாளிகளுக்கு நிறையவே இருந்திருக்க வேண்டும். அவ்விதம் இல்லாது போயின் இத்தொடர் 35 அல்பம் நீளத்திற்கு நீண்டிருக்காது ! தொடரும் கதைகளில் ரி.டி.கே இன்னும் சூட்டிக்கையாய் விலா எலும்புகளை நிமிண்டி விடுமென்று எதிர்பார்க்கிறேன் !

   நேற்றைக்குத் தான் தொடரின் கதைகள் # 2 & 3 வந்தன ; முதல் பார்வைக்கே அமர்க்களமாகத் தென்படுகிறது ரி.டி.கே. !

   Delete
 43. //அதன் பதிலாய் மார்டினையோ ; ஜூலியாவையோ வண்ணத்தில் வெளியிட்டுப் பார்ப்போமா ? என்ற சிந்தனை எழுந்த போதும் சிக்கல்கள் தொடர்ந்தன ! அதே மொழிபெயர்ப்புப் பிரச்னைகள் ஒருபக்கமிருக்க மார்டின் # 100 & ஜூலியா # 100 கதைகளின் சித்திர பாணிகள் செம சொதப்பலாய் இருந்தன ! So வேறு மார்க்கமின்றி தொடர்ந்தோம் ! Sorry guys !//
  இதற்க்குக் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் ! அதனால்தானே கருப்பு வெள்ளையில் அற்புதமான ஜூலியாவின் இந்த அற்புதமான கதை கிடைத்தது ! எல்லாம் நன்மைக்கே !

  ReplyDelete
  Replies
  1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : ஜூலியா கதைகளை ரசிக்க யதார்த்தத்தின் மீதான காதல் மிகுந்திருக்க வேண்டும் ! ஸ்பைடர் பாசறையின் தளபதிக்கும் ஜூலியா லயிப்பை வழங்கி இருப்பது அதன் படைப்பாளிகளுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம் !

   Delete
  2. சார் இதற்க்கு முக்கிய காரணம் அந்த உரையாடல்கல்தாம் ! அதற்க்கு லயிக்க செய்யும் மொழி பெயர்ப்புக்கு முக்கிய நன்றி ! இரண்டிலுமே கிங்காய் லயன் தொடரட்டும் !

   Delete
  3. நண்பரே எடிட்டர் கூட LMS வௌியிடு பற்றிய உணர்வுகளை பகிர்ந்து கொண்டுவிட்டார்.
   தாங்களின் பேட்டிகள் ,விடியோக்கள் என்ன ஆயிற்று நண்பரே..! (செல் திரும்ப ஸ்டக்கா..)
   அல்லது நான் கவனிக்க தவறிவிட்டேனா ?

   Delete
  4. நண்பரே போன பதிவில் ஒன்றை போட்டு விட்டேன் ! அந்த நண்பர் பேட்டி அழிந்து விட்டது என நான் நினைத்து நாம் இருவரும் அவரை வினவியது வந்து விட்டது .....மீண்டும் உங்களுக்காக keele inaippu ! முதலில் எடுத்த பேட்டி அழிந்து விடவில்லை அதனை upload செய்து கொண்டிருக்கிறேன் ஆசிரியருக்காக .ஏனென்ற விளக்கம்தனை அதனோடு இணைக்கிறேன் !


   //நண்பர்களே ,தலை கீழாய் ஒரு தினம்
   தலை கீழாய் ஆசிரியர் ------தலை கீழாய் வாசகர்
   இதில் பெட்டி அளிப்பவர் அரசு பள்ளியில் ஒரு ஓவிய ஆசிரியர் . அவரது பெயர் நினைவில் இல்லை . ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டு கோள் . அவரது பெயரை இணைக்கவும் .
   நான்--மாயாவி சிவா (கேள்விகள் கேட்பது )
   இதற்க்கு நண்பர்கள் ஆஸ்கார் சிபாரிசு செய்ய வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் !


   கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்8 August 2014 08:45:00 GMT+5:30

   வாசகர் கழுவுகிறார்---ஆசிரியர் நழுவுகிறார் . விட்டு விடுவோமா ?


   https://www.youtube.com/watch?v=wcnJrNUr2L8

   //

   Delete
 44. ராபின் .............

  ஒரு மர்டர் மிஸ்டரி .......

  அகதா கிறிஸ்டி -யின் அனைத்து கதைகளையும் படித்து வாங்கி பீரோவில் பூட்டி

  வைத்து இருக்கும் என் போன்றவர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தாத கதை ...

  பிற நண்பர்களின் கருத்து எப்படி இருப்பினும் இடைவேளை ஏதுமின்றி ஒரே மூச்சில்

  படித்து முடிக்க வைத்த கதை இதுவே ..........

  ReplyDelete
 45. Dylan வண்ணத்திலேயே தொடரலாம், மார்டின் , ஜூலியா கூட வண்ணத்தில் முயற்சிக்கலாம் ஆனால் ராபின் வண்ணத்தில் என்றுமே வேண்டாம்!

  ReplyDelete
  Replies
  1. senthilwest2000@ Karumandabam Senthil : எஞ்சி இருப்பது ஒரே ஒரு மார்டின் வண்ண சாகசம் மாத்திரமே ! அதனை நீங்கள் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும் போது நிச்சயம் மனதை மாற்றிக் கொள்வீர்கள் !!

   Delete
 46. LMS புக் 2ல் முதலிடம் வகிப்பது rintin, Vanceன் ஒவியங்களுக்காக Marshal Tiger வகிக்கும் 2, லக்கி லூக் இம்முறை கடைசி இடத்தினேயே பெறுகிறார் என்பது வருத்தமான விஷயம்தான் ! மார்ஷல் Tigerன் அடுத்த பாகம் எப்போது ?

  ReplyDelete
 47. ஒரு கேள்வி: மின்னும் மரணம் USA பதிவுத் தொகை எவ்வளவு?

  ஒரு கோரிக்கை: டெக்ஸ் இன் 336 + 336 ஸ்பெஷல் என்றால் அது 672 தான் வருகிறது. LMS-1 ஐ விட சிறியது. இன்னுமொரு 104 (அல்லது 224/336 என்றாலும் ஓகே. ஹி ஹி..) பக்கத்தையாவது, B&W ஆக இருந்தாலும் பரவாயில்லை, சேர்த்து விட்டால் நீங்கள் LMS-1 இல் செய்த சாதனையைத் தாண்டியது போல் இருக்குமே?
  இல்லையென்றால் 336+336+336 என்றால் 1000+ என்ற இலக்கையும் எட்டியது போல் இருக்கும் (LMS இல் தவற விட்ட இலக்கு). டெக்ஸ் நிச்சயம் விற்று விடும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. Prunthaban : //LMS-1 இல் செய்த சாதனையைத் தாண்டியது போல் இருக்குமே?//

   சர்க்கரைப் பொங்கலே ஆனாலும் நித்தமும் சாப்பிட்டால் சலித்துப் போகும் நண்பரே..!

   Delete
  2. No Editor sir.. Tex stories are promising. It will definitely sold out.

   Delete
 48. //நேற்றைக்குத் தான் தொடரின் கதைகள் # 2 & 3 வந்தன ; முதல் பார்வைக்கே அமர்க்களமாகத் தென்படுகிறது ரி.டி.கே. !//

  #2&3. இரண்டு கதைகளையும் 2015ல் எதிர்பார்க்கலாமா சார்.?

  ReplyDelete
  Replies
  1. Kannan Ravi : //#2&3. இரண்டு கதைகளையும் 2015ல் எதிர்பார்க்கலாமா சார்.?//

   ஒன்று நிச்சயம் ; இரண்டு லட்சியம் சார் !

   Delete
 49. //குழந்தைகளிடம் , விலங்குகளின் மீதொரு தீரா fascination என்றென்றும் இருந்திடும் ! ஒரு முறை மட்டும் கதை சொல்லிப் புரிய வைத்த பின்னே பாருங்களேன் - குட்டீஸ் ரி.டி.கே.வை எவ்விதம் ரசிக்கிறார்கள் என்று !//

  இது எங்கள் வீட்டில் இன்று நடந்த நிகழ்ச்சி. என் பிள்ளைகள் ரின் டின் கேனை ரொம்பவும் ரசித்தார்கள்..(துல்லியமான கணிப்பு, சூப்பர் சார்.)

  ReplyDelete
 50. To: Editor, ஈரோடு புத்தகத் திருவிழாவில் மேக்னம் ஸ்பெஷல்க்கு கிடைத்த மகத்தான 'ஓபனிங்' கிற்கு வாழ்த்துக்கள் சார். கடல் கடந்திருக்கும் எமக்கு இதழ்களைக் கையில் வைத்துப் புரட்டும் வாய்ப்பு விரைவில் கிட்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

  நல்ல கதைத் தேர்வுகள் என்றும் சோடைபோகாது என்பதற்கு 'ஒரு சிப்பாயின் சுவடுகள்' பற்றி இளம் வாசகர் சொன்ன வார்த்தைகளே சான்று!

  ReplyDelete
  Replies
  1. Podiyan : //நல்ல கதைத் தேர்வுகள் என்றும் சோடைபோகாது என்பதற்கு 'ஒரு சிப்பாயின் சுவடுகள்' பற்றி இளம் வாசகர் சொன்ன வார்த்தைகளே சான்று!//

   அந்த இளம் வாசகரின் போட்டோவை நாளை இங்கே upload செய்கிறேன் !

   Delete
  2. //நல்ல கதைத் தேர்வுகள் என்றும் சோடைபோகாது என்பதற்கு 'ஒரு சிப்பாயின் சுவடுகள்' பற்றி இளம் வாசகர் சொன்ன வார்த்தைகளே சான்று!// sir there is strong and steady response for good offbeat stories please bring it in with confidence +1

   Delete
 51. மேக்னம் ஸ்பெஷலக்கு அடுத்த மெகா பாய்ச்சல் என்ன? என்ற கேள்வி மனதைக் குடைய, நீங்கள் தூக்கம் வராமல் தவிப்பதாக செய்தி அடிபடுகிறதே? உண்மையா? ;-)

  ReplyDelete
  Replies
  1. Podiyan : சர்க்கஸ் வேலைகள் செய்வதெனத் தீர்மானித்தால் தாவும் கிளைகளுக்கா பஞ்சம் ? அதிலும் சமீபமாய் தேடித் பிடிக்க முடிந்துள்ள புதுத் தொடர்களைப் பார்க்கும் போது தாவித் திரியும் சிந்தனைகளுக்குப் பஞ்சமில்லை ! ஆனால் அவற்றிற்கான சந்தர்ப்பங்கள் அமையும் வரைப் பொறுமை காப்போம் என்பதே நிதர்சனம் ! :-)

   Delete
  2. காத்திருத்தல் எப்போதுமே சுகம்தான் சார். அதற்கு நாங்க எப்போதுமே ரெடி!!

   Delete
 52. L M S. அற்புதம் 9,
  விண்வெளியில் விபரீதம்,

  எனக்கு மாடஸ்டி கதைகளில் மாடஸ்டியின் பாத்திர அமைப்பு சுத்தமாக பிடிப்பதில்லை.(ஏனென்ற விளக்கமும் தேவையற்றதென நினைக்கிறேன்.)
  நல்லவேளையாக ஜூலியா மாறுபட்டிருக்கிறார்.
  இனி கதைக்கு வருவோம்,
  அமரர் சுஜாதா அவர்களின் நாவல் ஒன்றை காமிக்ஸாக படித்தது போல் இருந்தது.
  அபாரமான கதையோட்டம்.,
  நிறைய திருப்பங்கள்.(சிலவற்றை யூகிக்க முடிந்தது,சில முடியவில்லை. உதாரணமாக அந்த கார் விபத்து.)
  அழகான சித்திரங்கள். .,
  டக்டக்கென மாறும் காட்சிகள்,
  அபாரமான வசனங்கள்,
  ரசிக்க இன்னும் நிறையவிசயங்கள் உள்ளன.

  குறை ஏதாவது சொல்லியாக வேண்டுமென கேசங்களை களையெடுத்து யோசித்தவை.

  ஜூலியா பார்க்க பாவமாக இருக்கிறார், தோற்றத்தில் கவனம் செலுத்த வேண்டுவது அவசியம்.
  க்ரிமினாலஜிஸ்ட் என்ற சொல்லுக்கு எவ்வித நியாயமும் "இக்கதையில்." ஜூலியாவால் தரப்படவில்லை.
  சிபிலின் மனமாற்றத்திற்க்கு சரியான விளக்கம் கதையில் இல்லை.
  அப்புறம் அந்த கார் விபத்து.,,,,,,,,,,,,,,,
  (இரண்டாம் முறை படித்தால் தெளிவடைவேனோ என்னவோ.?)

  ஆனால் கதை வேகமும் காட்சி மாற்றங்களும் கவர்ந்தது உண்மை.
  Welcome Julia, ,,,,,
  Thank you sir

  ReplyDelete
  Replies
  1. ஜூலியா வசனங்களில் கிரிமினாலஜிஸ்ட்டாய் மிளிர்கிறார் , அந்த பெண்ணை கையாளும் போதும்...ஆனால் அந்த விமானம் கடத்தும் பெண் அந்த துறையில் மிளிர்கிறார் !
   சிபில்தான் சாதித்து விட்டாளே ! அந்த துப்பாக்கி தாங்கிய தீவிரவாதியை சமாளிக்க அவர் பின்னர் போடும் நாடகமே .....அது விமானப் பனி பெண்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி ....மீண்டுமொருமுறை படியுங்கள் ....அந்த கார் விபத்து அந்த நெருக்கடி வேளையிலும் ஆலனின் ஹீரோயிசத்தை/மனிதாபிமானத்தை காட்ட


   ஏதோ எனக்கு புரிந்தவரை நண்பரே !

   Delete
  2. O.k. steel மறுபடியும் முதல்லருந்து வர்றேன்.
   அதாவது டெக்ஸிலிருந்து.

   Delete
  3. //எனக்கு மாடஸ்டி கதைகளில் மாடஸ்டியின் பாத்திர அமைப்பு சுத்தமாக பிடிப்பதில்லை//

   Kannan Ravi :

   சபாஷ் ரவிக்கண்ணன் ! எனக்கும் மடஸ்டி கதைகள் பிடிப்பதே இல்லை. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு நபருடன் உல்லாசம் ; ஒழுக்கம் என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கும் சல்லாபம் ! கூடவே ஆறுதல் சொல்லவும், அம்மாஞ்சியாக அசடு வழியவும் (இளவரசி.. இளவரசி.. அபிராமி..அபிராமி.. என்று) வில்லி கார்வின் என்ற பெயரில் நண்பன் ஒருவன்.. இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது - உறவுகளின் அபத்தத்திற்கும் அத்துமீறலுக்கும் பெயர் போன செல்வராகவனின் தமிழ் சினிமா தான் ஞாபகம் வருகிறது. போதும்.. வெறுத்து விட்டது. வீரம் மட்டுமே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அல்ல ; ஒழுக்கமும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நெறியாகும்.

   புனையப்பட்ட கதைகள் தான் என்றாலும் ; புரிதலுக்கான கற்பனைகள் தான் என்றாலும் - எனக்கு மடஸ்டி ப்ளைசி/யின் கதைகள் பிடிப்பதே இல்லை. மாடஸ்டி கதைகள் அறுசுவை விருந்தாக இருந்தாலும், அவளின் ஒழுக்கம், ஒரு துளியே அதிகமான உப்பாக கரிக்கிறது !

   பாராட்டுகள் மிஸ்டர் ரவிக்கண்ணன் !

   Delete
  4. நன்றி நண்பரே.!
   //. வீரம் மட்டுமே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அல்ல ; ஒழுக்கமும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நெறியாகும். //

   +1

   Delete
  5. I tooo dont like மாடஸ்டி....i dont have any specific reason but her story never impressed me....

   Delete
  6. எனக்கும் மாடஸ்டி கதைகளில் ஈடுபாடு வந்ததில்லை - ஆனால் அதற்கு காரணம் மாடஸ்டியின் Life style அல்ல. அப்படிப்பார்த்தால் அதே life Style காரணங்களால் XIII, லார்கோ, வேய்ன் ஷெல்டனையும் நாம் வெறுப்பதில்லையே.

   Delete
  7. மரமண்டை அவர்களே எனக்கும் ஒரு சபாஸ் போடுங்கள் ! ஆனால் அந்த பாத்திரம் ஒழுக்கம் காரணமாக என்று கூற மாட்டேன் ..... அந்த கதைகள் அப்போதிருந்தே பெரிதும் ஈர்க்கவில்லை . ஆனால் நண்பர்கள் சிலாகிப்பதை பார்க்கும் பொது கழுகு மலை கோட்டை எப்படியாவது படிக்க வேண்டும் என்றிருக்கிறேன் ! நமது ஆசிரியருக்கு மாடஸ்டி கதைகள் மிகவும் பிடிக்கும் என்பது ஒரு விஷயம் . ஒரு ஓட்டெடுப்புக்கு ஆசிரியர் ஏற்பாடு செய்யலாம் .!

   Delete
  8. //எனக்கும் மாடஸ்டி கதைகளில் ஈடுபாடு வந்ததில்லை - ஆனால் அதற்கு காரணம் மாடஸ்டியின் Life style அல்ல. அப்படிப்பார்த்தால் அதே life Style காரணங்களால் XIII, லார்கோ, வேய்ன் ஷெல்டனையும் நாம் வெறுப்பதில்லையே. //
   +1

   Delete
  9. ////எனக்கும் மாடஸ்டி கதைகளில் ஈடுபாடு வந்ததில்லை - ஆனால் அதற்கு காரணம் மாடஸ்டியின் Life style அல்ல. அப்படிப்பார்த்தால் அதே life Style காரணங்களால் XIII, லார்கோ, வேய்ன் ஷெல்டனையும் நாம் வெறுப்பதில்லையே. //

   ஏற்றுக்கொள்கிறேன்.

   Xlllமா அப்படி,
   ஜேம்ஸ்பாண்டை விட்டு விட்டீர்கள்.

   டெக்ஸுக்கும். லக்கிக்கும் நான் ரசிகனாயிருப்பது, ஏனென்று புரிகிறதா நண்பர்களே.,?

   Delete
  10. // டெக்ஸுக்கும். லக்கிக்கும் நான் ரசிகனாயிருப்பது, ஏனென்று புரிகிறதா நண்பர்களே.,? //

   யோசிக்கவேண்டிய விஷயம். டெக்ஸ் & லக்கி அனைவரையும் கவரும் காரணங்களுள் Conduct'ம் முக்கியமான ஒன்றாக இருக்கலாம். லக்கி லூக், வாசகர்களுக்காக சிகரெட் பழக்கத்தையே கைவிட்ட உத்தமர்.

   Delete
 53. சிப்பாயின் சுவடுகளில்,
  நல்ல கதைன்னு அது வெளியானப்பவே நான் லெட்டர்ல தெளிவா எழுதியிருந்தேனே சார்.?
  இப்பத்தான் உங்க எல்லாருக்கும் தெரியுது போல.
  ANSல் வெளியான பிரளயத்தின் பிள்ளைகள கூட பாராட்டி எழுதியிருந்தேன். அது எப்ப புரியப்போவுதோ ஆண்டவா.?(அது கொஞ்சம் அழுகாச்சி காவியந்தான்,ஆனாலும் அதுலயும் ரசிக்க நெறய்ய்ய்ய்ய்யா விசயமிருந்தது. ."சித்திரதரமும் வண்ணச்சேர்க்கையுந்தான்." வேறொன்னுமில்ல.)

  ReplyDelete
  Replies
  1. வளைதளங்களில் விளையாட்டுத்தனமான விமர்சனங்களால் பலியான நல்ல கதைகளுள் ஒன்றுதான் ஒ.சி.சு. நமது காமிக்ஸ் வட்டத்தைத் தாண்டிய எந்தவொரு புத்தக ஆர்வலரும் ஒ.சி.சு வை புறந்தள்ள வாய்ப்பு குறைவு. (If reached through proper channels)

   பிடித்த கதைகளை ஆதரிக்கும் அதே உத்வேகத்தோடு பிடிக்காத கதைகளை எதிர்க்கும் விளையாட்டுத்தனமான குணத்தை நாம் குறைத்துக்கொள்ளவேண்டியது அவசியமோ என்ற எண்ணம் எழுவதை தவிற்கமுடியவில்லை. (கொஞ்சம் ஓவரா பேசிட்டனோ?... கை கால் வெட வெடங்குது...)

   Delete
  2. சில ஆயிரம் பேர் படிக்கும் காமிக்ஸில், அதிக அளவிலான நெகடிவ் கமெண்ட் வாங்கிய
   - ஒ.சி.சு
   - க்ரீன் மேனார்
   - ஹெர்லாக்

   இதில் என்னும்டைய ஆல் டைம் க்ளாஸிக் க்ரீன் மேனார். ஒவ்வொரு கதையிலும் என்ன ஒரு ட்விஸ்ட், ஐடியா, சித்திரம். AMAZING. என் அண்ணன் இதைப் படித்துவிட்டு அசந்து விட்டார். அவர் லக்கிலூக் கதைகள் மட்டுமே காமிக்ஸில் படிப்பவர்.

   காமிஸ் பற்றி பெரிய அளவில் தெரியாதவர்கள் க்ரீன் மேனார் படித்தால், இது சிறுபிள்ளை விளையாட்டு இல்லை என்று தெரியவரும். இன்னும் சில வருடங்கள் கழித்து, இந்த புத்தகம் பெரிய அளவில் தேடப்படும் என நம்புகிறேன்.

   Delete
 54. L M S அற்புதம் 10,
  ஹாட்லைன்,

  கதை ஆரம்பித்த சில வரிகளிலேயே நம்மை அந்த எழுத்துக்களின் வசீகரம் கட்டிப்போட்டுவிடுகிறது.
  நான்கு பக்கங்களில் முடிந்துவிடும் சிறுகதையென்றாலும் இனம்புரியாத ஒரு கவர்ச்சி மீண்டும் படிக்க தூண்டுகிறது.
  இக்கதையின் நாயகர்.,,",,,,,,,,

  என்னாது அது கதையில்லயா.,?

  ஸாரி ஸாரி வெரீ ஸாரி

  ஒரு வாரமா எதப்படிச்சாலும் விமர்சனம் எழுத சொல்லுது. அந்த ஞாபகத்துல.",,,,,,,,,
  ஹி ஹி ஹி

  ReplyDelete
 55. டியர் காமிரேட்ஸ்,,
  லயன் காமிக்ஸின் முப்பதாவது ஆண்டு மலரை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு உள்ள லயன் மேக்னம் ஸ்பெஷல் புத்தகத்தை பற்றிய கருத்து இது (இதுவரையில் வாங்காமல் இருந்து இருந்தால்……… Kindly fill up the blanks yourself).

  எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதையை பற்றி இங்கே சற்றே அளவளாவுவோம்.

  கம்பராமாயணத்தில் சீதையின் திருமணக்காட்சியை விவரிக்கும்போது, சீதையை தாதிப்பெண்கள் அலங்கரிப்பது “அழகுக்கு அழகு சேர்ப்பது போல” என்று கம்பர் எழுதி இருப்பார்.

  அதைப்போல ஏற்கனவே நாம் ரசித்து படித்த கதையின் பின்புலத்தில் வேறு சில சுவையான சங்கதிகள் இருந்தால் அது அந்த கதையின் மதிப்பையும், நமது ரசனையையும் வேறொரு தளத்துக்கு உயர்த்தி செல்லும்.இது எப்படி என்றால் பெட்ரோலுடன் ஆயிலையும் சேர்ப்பது போல. ஆந்திரா மெஸ்சில் பொடியுடன் நெய் கலப்பது போல, ஏற்கனவே இருக்கும் சுவையை கூட்டி புதிய சுவையை கொடுக்கும். சரி, சரி, ஓவர் பில்ட் அப் வேண்டாம். விஷயத்திற்க்கு வருவோம்.

  டைலன் டாக் என்ற இத்தாலிய நாயகரின் தமிழக வருகையை பற்றிய கமெண்ட் இது.

  லயன் மேக்னம் ஸ்பெஷல் இதழில் டைலன் டாக்கின் அந்தி மண்டலம் என்ற அமானுஷ்ய ஃகிராபிக் நாவல் வெளியாகி இருக்கிறது. அந்த கதைக்குள் நடக்கும் ஒரு விஷயத்தை விவரிக்கும்போது ஒரு கதாபாத்திரம் Edgar Allan Poe எழுதிய The Facts in the Case of M.Valdemar என்ற சிறுகதையை டைலன் டாக்கிடம் விரிவாக சொல்வார்.

  The Facts in the Case of M.Valdemar கதை சுருக்கம்: Tuberculosis-ஆல் தாக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருக்கும் எர்னஸ்ட் வால்டெமார் என்ற எழுத்தாளரின் வேண்டுகோளுக்கிணங்கி அவரை மனோவசியப்படுத்துகிறார் ஒரு மருத்துவ நண்பர். அதுவரையில் சாகப்போகும் நபரை யாரும் மனோவசியப்படுத்தியது கிடையாதென்பதால் சாட்சிகளுடன் அவரை மெஸ்மரிசம் செய்து, மூச்சு பேச்சில்லாமல் ஏழு மாதங்கள் ஒரு விதமான திரிசங்கு நிலையில் வால்டெமாரை தக்கவைக்கிறார் அந்த மருத்துவ நண்பர். பின்னர் அவரை மறுபடியும் மனோவசியம் செய்து பழைய நிலைக்கு கொண்டுவர முயலும்போது அவர் திட-திரவ சாம்பல் போல கரைந்து விடுகிறார் வால்டெமார்.

  ReplyDelete
  Replies
  1. சாகும் ஒருவரை எதற்க்காக மனோவசியம் செய்து அவரை சாகவும் விடாமல், வாழவைக்க வகையும் தெரியாமல் வைத்திருக்கவேண்டும்?

   இப்படிப்பட்ட குரூரமான சிந்தனையுள்ள கதையை எதற்க்கு ஆலன் போ எழுதினார்?

   அதற்க்கு என்ன தேவை?

   இதுபோன்ற கேள்விகள் எனக்கும் எழுந்தது. பதில் அளிக்கும்முன் சில சுவையான சம்பவங்கள்;

   1. இந்த கதையை முதலில் வெளியிட்ட போது (20th December 1845), பலரும் இதனை உண்மை என்றே நம்பிவிட்டனர். இதனை உண்மை என்று நம்பி பலரும் இதைப்போலவே சம்பவங்கள் நடந்ததாகவும், பலரை உயிர்ப்பித்ததாகவும் கதைகளை பரப்ப துவங்கினர். இதனை Case Study ஆக எடுத்துக்கொண்டு தாமஸ் சவுத் என்பவர் ஒரு புத்தகத்தையே எழுதிவிட்டார். மக்கள் பலரும் இது உண்மையா என்று ஆலன் போவிடம் கேட்க, அவர் இதனை ஒரு கட்டுக்கதை என்றே சொல்லிவிட்டார்.

   2. Daily Tribune என்ற அமெரிக்க News Paperன் Editor திரு Horace Greeley அவர்கள் இது உண்மையல்ல என்று தன்னுடைய தினசரியில் செய்தி வெளியிட்ட பின்புதான் பெரும்பான்மையான மக்கள் இது கதையே என்பதை ஒப்புக்கொண்டனர். இந்த ஹோராஸ் க்ரீலி யாரென்று தெரிகிறதா? அட, நம்ம புரட்சி தீயின் எடிட்டர் தான் இவர். ஞாபகம் வருகிறதா?

   சரி, ஓக்கே, இதெல்லாம் கேட்க (அதாவது படிக்க) நன்றாக இருந்தாலும் இதுக்கும் கதைக்கும் என்ன லின்க்? எதனால் இந்த கதை கொண்டடப்படுகிறது? என்றுதானே கேட்கிறீர்கள்?

   1945-ஆம் ஆண்டு இந்த கதையை எழுதும்போது ஆலன் போவின் மனைவி (இந்த கதையில் வரும் வால்டெமாரைப்போல) Tuberculosis நோயால் பாதிக்கப்பட்டு நான்கு வருடங்கள் தொடர்ந்து படுக்கையிலேயே தன் வாழ்க்கையை கழித்து 1847-ஆம் ஆண்டு மரணமடைந்தார். தன்னுடைய மனைவியின் மேல் தீராக்காதல் கொண்டிருந்த ஆலன் போ அவரை இந்த எப்படியாவது காப்பாற்ற முடியுமா? என்று சிந்தித்து கொண்டு இருந்தபோது (1845) எழுதியதே இந்த கதை.

   நாம் அன்பு செலுத்துபவர்கள் மரணமடையப்போகிறார்கள் என்பது ஊர்ஜிதமானால் அவரை காப்பாற்ற எந்த அளவுக்கும் மனிதர்கள் துணிவார்கள் என்பதை சான்றளிக்கும் மற்றுமொரு கதையே இது (Stephen King எழுதிய Pet Cemetary ஞாபகம் வருகிறதா?). இதற்க்கு எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல என்பதை ஆலன் போ இந்த கதையின் மூலம் நிரூபித்துள்ளார்.

   இப்போது நமது காமிக்ஸில் வந்துள்ள (அந்தி மண்டலம்) கதியின் உள்ளே சொல்லப்படுள்ள கதையை மறுபடியும் ஒருமுறை படித்துப்பாருங்களேன்? வேறொரு Feeling கிடைக்கும். எதற்க்காக இந்த கதையை ஆலன் போ எழுதி இருப்பார் என்பது இப்போது புரிகிறதல்லவா?

   பின் குறிப்பு: பிரபல ஹாலிவுட் இயக்குனர் George A Romero இந்த கதையை திரைப்படமாகவும் இயக்கியுள்ளாராம் ( 1990 – Two Evil Eyes ). தொடர விரும்பும் நண்பர்கள் டவுண்லோடி பார்க்கவும்.

   Delete
  2. தேவை இல்லாத சில குறிப்புகள்;

   1. இந்த கதையை முழுவதுமாக ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக்கவும்.

   2. ஆலன் போவுக்கு திருமணம் நடந்தபோது வயது 27, அவருடைய மனைவிக்கு வயது 13. மனைவி இறக்கும்போது அவரது வயது 24.

   3. எட்கர் ஆலன் போவின் கவிதைகளுல் எனக்கு மிகவும் பிடித்தது The Raven. இதனை 1975-ஆம் ஆண்டு Comix International இரண்டாவது இதழில் ஓவிய மேஸ்ட்ரோ Richard Corben அவர்களின் வண்ணதூரிகையில் ஒரு காமிக்ஸ் கதையாக மாற்றி வெளியிட்டு இருந்தார்கள். ஆன்லைனில் டவுண்லோடு கிடைக்கிறது. தேடிப்பிடித்து என்சாய்.

   Delete
  3. அப்புறம் ஒரு விளம்பரம்: (இது சத்தியமா தேவையே இல்லைதான்).

   எட்கர் ஆலன் போவின் கதைகள் நமக்கொன்றும் புதியதல்லவே? ஏற்கனவே நமது எடிட்டர் அவரது சிறுகதை ஒன்றை தமிழில் மொழிபெயர்த்து படிக்க கொடுத்துள்ளார்.

   எங்கே?

   எப்போது?

   விடை காண படியுங்கள்; திகில் லைப்ரரி - எடிட்டர் எஸ் விஜயன் அவர்களின் ஒரு புதிய முயற்ச்சி

   Delete
  4. நண்பரே சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி ! நிச்சயமாக மீண்டுமொருமுறை படிப்பேன் இன்றே ! அந்த பெண்தான் இந்த போவின் மனைவியோ !

   Delete
 56. //இறந்த காலம் இறப்பதில்லை கதை அருமை ! நிஜம்மாய் கடைசியில் எனக்கு புரியவில்லை ! நண்பர் ரவி கண்ணனின் விளக்க பதிவை பார்த்த பின்னரே தெளிந்தேன் . அந்த கடைசி password மரியா என வந்ததால் ஒரு கேள்வி அந்த கொலையாளி அவள் மேல் உள்ள காதலால்தான் அந்த கொலையை செய்தானா ? அல்லது வயிற்றில் குழந்தையுடன் காணப்பட்ட மரியா மேல் இரக்கத்தால் அந்த பிள்ளையை வளர்த்தானா ! படித்தவர்கள் விளக்குங்களேன் //

  ஸ்டீல்.,
  அதையெல்லாம் அனுபவிக்கனும்
  ஆராயக்கூடாது.!

  உங்கள் கேள்விக்கு ஸீரியஸ் விளக்கம்.:-
  1.ரெனி கூலிக்காக பீட்டரை கொல்கிறான்.
  2.பீட்டரின் மனைவி மரியாவை நிறைமாத கர்ப்பினியாக பார்த்ததும் வருந்துகிறான்.
  3.எனவே மரியாவின் மீதுள்ள காதலால் பீட்டரை ரெனி கொல்லவில்லை.
  4.மரியாவின் மகன் மார்க்ஸை ரெனி வளர்ப்பதில்லை.
  5.மரியாவின் பரிதாப நிலைக்கு தானே காரணம் என்ற குற்ற உணர்வே ரெனி மரியாவுக்கு ஆதரவளிக்க முதல் காரணம்.பின்னர் அதுவே காதலாக மாறுகிறது.
  6.மரியாவின் பெயர் பாஸ்வேர்டானதிற்க்கு இதுவே காரணம்..
  7.மரியாவின் மகன் ரெனியால் வளர்க்கப்பட்டது போல் கதையமைப்பில் இல்லை.
  8.எனக்கு புரிந்தது இவ்வளவுதான் ஸ்டீல் க்ளா.!

  ReplyDelete
  Replies
  1. //மரியாவின் மகன் ரெனியால் வளர்க்கப்பட்டது போல் கதையமைப்பில் இல்லை.//
   உண்மை ....யாரென திடுக்கிடுகிறாரே ...

   Delete
  2. <------------------spoiler alert------------------->
   -> ரெனி is hit-man who murders Marks father as a assignment.
   -> he gets apathy with maria when he saw her as a pregnant women, hope he don't know he killed a husband during the time where his wife was in paternity pain.
   -> ரெனி don't know Mariya, he introduce himself to maria, during her paternity bed rest time.
   -> he takes care of Mariya after she gave birth to Mark probably fall in love/ deep relationship with maria, but she was terminated too.
   -> after that ரெனி not in picture till he saw a news coverage by mark
   -> ரெனி gets the red bulb when he saw a new coverage by மார்க் about osirin 2, (things we need to assume: he recalls news's original reporter peter, tracks the news, founds and covers Mark)

   art details are WOW kind ... ! most hilarious and kicking fact is artist achieved his way of story telling with 4,5 front head hair difference!

   rest for readers to read and enjoy, its best of best for crime comics readers !

   Delete
 57. டியர் காமிரேட்ஸ்,

  நம்ம ரின் டின் கேன் கதையிலும் இப்படி ஒரு பின்புல தகவல் உண்டு. ஆனால் இப்போதே தூக்கம் கண்ணை சொக்குவதால் அதனை நாளைக்கு கமெண்ட்டுகிறேனே?

  ReplyDelete
 58. hmm everbody started to discuss the story, but i didnt get the book yet. Hoping it will reach US next week.
  @Editor - LMS was already sent to US, am i right? please confirm.

  ReplyDelete
 59. East or West SUNDAY is the best !

  ஆ..! சனிக்கிழமை மாலையே எடிட்டரின் பதிவா..? ஆ..! அதற்குள் எல்லா வாசகர்களுக்கும் ஆசிரியரின் பதில்களா..? ஆ..! அதற்குள் 125 கமெண்ட்ஸா..? விஜயன் சார், எப்பொழுதும் போல் தங்களின் பதிவை இனி ஒவ்வொரு ஞாயிறு அன்று மட்டுமே பதிவிடலாமே சார்..?

  டியர் விஜயன் சார்,

  அருமையான பதிவு. பதிவில் உள்ள தங்கள் எழுத்துகளில் தென்படும் உற்சாகம், உங்களையும், படிக்கும் வாசகர்களின் உள்ளங்களையும் ஆக்கிரமிக்க மறுக்கிறதோ என்று ஒரு சந்தேகம் மட்டுமே ஒரு நெருடல். மேலும் இங்குள்ள விற்பனை இலக்கங்கள் வருத்தப்பட செய்வதாக இருக்கிறது. உதாரணமாக LMS 75+170+100+ஒரு 400 முன் பதிவுகள்.. மற்றும் மின்னும் மரணம் முன்பதிவு எண்ணிக்கை 110.

  ஹ்ம்ம்.. நாம் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருக்கிறது என்றே தோன்றுகிறது !

  ReplyDelete
  Replies
  1. // அருமையான பதிவு. பதிவில் உள்ள தங்கள் எழுத்துகளில் தென்படும் உற்சாகம், உங்களையும், படிக்கும் வாசகர்களின் உள்ளங்களையும் ஆக்கிரமிக்க மறுக்கிறதோ என்று ஒரு சந்தேகம் மட்டுமே ஒரு நெருடல். //

   உங்களைக் கண்டு ஏன் பலரும் அரண்டுபோகிறார்கள் என்பதற்கு இம்மாதிரி எடக்கான கருத்துகளே கட்டியம் கூறுகிறது.ஒரு பதிவு, நீங்கள் எதிர்பார்த்த நாளுக்கு ஒருநாள் முன்னால் வருவதைக்கூட தங்களால் ஜீரணிக்கமுடியவில்லை. These are sweet-casual inconstancies we come across our daily life.

   இப்படி இருக்கும்போது ஒரு பொதுதளத்தில் மற்றவர்களின் உற்சாகத்தை Accurate'ஆக மீட்டர் போட்டு அளவிட்டு Value போதுமானதா என கணக்கிடும் திறன் தங்களுக்கு உள்ளதென்பதை எப்படி ஏற்கமுடியும்?

   எண்ணிக்கைகள் நிச்சயம் உற்சாகமளிப்பதாகவே உள்ளது.

   // ஹ்ம்ம்.. நாம் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருக்கிறது என்றே தோன்றுகிறது ! //
   ஐயா... Just கடந்த சில பதிவுகளுக்குமுன் மின்னும் மரணம் குறித்து பேசும்போது 1000 முன்பதிவுகள் சாத்தியம் என ஓவராக அளந்த நீங்கள் - தற்போது நிம்மதி தரும் ஒரு எண்ணிக்கையை எடிட்டர் குறிப்பிட்டாலும், அலுத்துக்கொள்வதில் அவசரப்படுவது ஏன்? Don't play with others emotion please.

   Delete
  2. //ஐயா... Just கடந்த சில பதிவுகளுக்குமுன் மின்னும் மரணம் குறித்து பேசும்போது 1000 முன்பதிவுகள் சாத்தியம் என ஓவராக அளந்த நீங்கள் - தற்போது நிம்மதி தரும் ஒரு எண்ணிக்கையை எடிட்டர் குறிப்பிட்டாலும், அலுத்துக்கொள்வதில் அவசரப்படுவது ஏன்? Don't play with others emotion please.//

   Ramesh Kumar :

   மயிலே.. மயிலே.. என்றால் இறகு கிடைக்காது என்பதை நீங்கள், உங்கள் விஷயத்தில் புரிய வைத்து விட்டீர்கள். ஏம்பா நாட்டாமை..(இப்ப அந்த பதவி இல்லை என்பது வேறு விஷயம்.. ப்ளீஸ்.. யாரும் சிரிக்கதீங்கப்பா.. ப்ளீஸ்..) நான் மேலே சொன்னதாக கூறும் என்னுடைய பதிவை கொஞ்சம் மீள்பதிவு செய்ய இயலுமா..? (//*1000 முன்பதிவுகள் சாத்தியம் என ஓவராக அளந்த நீங்கள்*//)

   Delete
  3. //*உங்களைக் கண்டு ஏன் பலரும் அரண்டுபோகிறார்கள் என்பதற்கு இம்மாதிரி எடக்கான கருத்துகளே கட்டியம் கூறுகிறது.ஒரு பதிவு, நீங்கள் எதிர்பார்த்த நாளுக்கு ஒருநாள் முன்னால் வருவதைக்கூட தங்களால் ஜீரணிக்கமுடியவில்லை*//

   Ramesh Kumar :

   நீங்கள் கடந்த 25 நாட்களாக அரண்டு, மிரண்டு போய் இருப்பது நன்றாகவே தெரிகிறது ;) எனக்கு ஜீரணமாகவில்லை என்று - உங்களிடம் ஜெலுஸில் வாங்கியதைப் போலல்லவா கட்டியம் கூறுகிறீர்கள்..?! பார்த்து சார்.. உங்களின் அஜீரணத்தால் உங்களுக்கு அல்சர் வந்து விடப்போகிறது ;))

   Delete
  4. அது என் வேலையல்ல. அடிக்கடி உங்கள் பழைய கமெண்டுகளை Copy Paste செய்யும் பழக்கமுள்ள நீங்கள் அந்த 1000 முன்பதிவு சம்பந்தமான கமெண்டுகளை தேடும் பொறுப்பை அடுத்தவர் தலையில் கட்டுவது ஏனோ?

   // நாட்டாமை //
   ரோட்டில் நாலுபேர் மீது உரசிச்செல்லும் ஆசாமிகளை கடிந்து கொள்பவர்களை நாட்டாமை என நக்கலடித்தால் - அது நக்கல் மட்டுமே. உங்கள் Crime Rate'ஐ உயர்த்திக்கொள்ளாதீர்கள்.

   Delete
  5. //அது என் வேலையல்ல. அடிக்கடி உங்கள் பழைய கமெண்டுகளை Copy Paste செய்யும் பழக்கமுள்ள நீங்கள் அந்த 1000 முன்பதிவு சம்பந்தமான கமெண்டுகளை தேடும் பொறுப்பை அடுத்தவர் தலையில் கட்டுவது ஏனோ?//

   Ramesh Kumar :

   அய்ய்..! இப்படி சொல்லி விட்டால், நீங்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மையாகி விடும் என்ற நினைப்பா ரமேஷ் குமார்? நீங்கள் அபத்தமாக கூறிய விஷயத்தை, நீங்கள் நிரூபிக்காமல் இருந்தால் உங்களின் நம்பகத் தன்மையையே அது கெடுத்து விடுவதாக அமையும் என்ற சாதாரண விஷயம் கூட உங்களுக்குப் புரியவில்லையே.. ஐயோ.. பாவம் சார் நீங்கள் ;)

   //ரோட்டில் நாலுபேர் மீது உரசிச்செல்லும் ஆசாமிகளை கடிந்து கொள்பவர்களை நாட்டாமை என நக்கலடித்தால் - அது நக்கல் மட்டுமே. உங்கள் Crime Rate'ஐ உயர்த்திக்கொள்ளாதீர்கள்.//

   உனக்கேன் இவ்வளவு அக்கறை..? யாருக்கும் இல்லாத அக்கறை..? என்று பராசக்தி பட 'பஞ்ச' டையலாக் பேச விரும்பவில்லை. ஆனால் அதற்குப் பெயர் தான் சின்ன நாட்டாமை செய்வது அல்லது உங்கள் ஸ்டைலில் சின்ன கட்டப்பஞ்சாயத்து செய்வது என்றும் வைத்துக் கொள்ளலாம் ;)

   Delete
  6. Ramesh Kumar :

   ஒரு முக்கியமான பதிவின் சாராம்சத்தையே குட்டிச் சுவராக்கிய பெருமை உங்களையேச் சேரும் ரமேஷ். என் பெயரை கேவலமாக எழுதிய அன்றே, உங்களுக்கு சரியானபடி பதில் அளித்திருந்தால், இப்படி தொடர்ந்து அனாவசியமாக மூக்கை நுழைத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். பதிவைப் பற்றி எழுதும் போது - ஏன் தான் இப்படி திசை திருப்ப ஆசைப்படுகிறீர்களோ என்று தெரியவில்லை.

   போங்க சார்.. போய் உங்களுக்கு எது தோணுதோ அதை தனிப் பதிவாக பதிவிடுங்கள். அடுத்தவர் கருத்தை திசை திருப்ப நினைக்காதீர்கள் :( நன்றி !

   Delete
  7. நான் அந்த கமெண்டை Paste செய்யப்போவதில்லை. ஆனால் அந்த கமெண்ட் அந்த பதிவில் நிரந்தரமாக நிர்ப்பதை இப்போதும் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். Paste செய்வது இந்த பதிவுக்கு அநாவசியம்.

   உங்களுக்குதான் இந்த மாதிரி விஷயங்களில் பொறுப்பே இல்லையே. போய் படியுங்கள் உங்கள் கமெண்டுகளை - வழவழா என இழுக்காமல்.

   Delete
  8. இங்கு பதிவாகும் அனைத்து கருத்துகளையும்.,
   காமிக்ஸ் மீதான நேசமாகவே நான் பார்க்கிறேன்.
   எல்லாவித கருத்துகளும் காமிக்ஸ் வளர்ச்சிக்கு என்றே நான் பார்க்கிறேன்.(அது தவறான பார்வையாக கூட இருக்கலாம்.)
   பாராட்டுகளையும் விமர்சனங்களையும் எடிட்டர் ஒரே மாதிரிதான் ஏற்றுகொள்கிறார் என நான் நினைக்கிறேன்.
   இங்கு பதிவிட தூண்டுவது காமிக்ஸ் காதல் மட்டுமே.!(குறைந்த பட்சம் என்னை பொறுத்தவரையிலாவது.)

   Delete
  9. // பாராட்டுகளையும் விமர்சனங்களையும் எடிட்டர் ஒரே மாதிரிதான் ஏற்றுகொள்கிறார் என நான் நினைக்கிறேன் //

   எல்லாவித விமர்சனங்களுக்கும் இங்கே இடமுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

   யதார்த்தமாக மனதில் உள்ளதை பதிவிடும் சக வாசகர்களின் Spirit'ஐ மரமண்டை அவசியமேயில்லாமல் Down செய்வதைதான் குறிப்பிட்டேன். இதற்கு முன்பும் நான் தலையிட்டதெல்லாம் பொத்தம்பொதுவாக எல்லாரையும் இவர் விமர்சித்ததாலேயே. இதுவொரு தொடர்கதையாக இருப்பதாலேயே கொஞ்சம் Importance கொடுக்கவேண்டியதாயிற்று Sorry.

   Delete
  10. //இதுவொரு தொடர்கதையாக இருப்பதாலேயே கொஞ்சம் Importance கொடுக்கவேண்டியதாயிற்று Sorry.//
   அது உங்கள் உரிமை.
   அய்யய்யோ ஸாரி எல்லாம் பெரிய வார்த்தை.தேவையுமற்றது.
   உங்களை வருந்த செய்வது என் நோக்கமுமல்ல.!யாருடைய மனமும் புண்பட வேண்டாமென்று பொதுவாக கூறினேன்.
   அந்த கருத்து உங்களுக்காக மட்டுமல்ல நண்பரே.(அவ்வாறு அழைக்கலாமா.?)

   Delete
 60. டியர் விஜயன் சார்,

  ஒரு ஐய(கோ)ம் :P

  டயபாலிக் கதைகளை தமிழில் வெளியிட்டால், அவரது இத்தாலிய ரசிகர்கள் லைனில் நின்று வாங்குகிறார்கள்... டைலன் டாக்கின் விசிறிகள், சைலன்ட்டாக 75 பிரதி ஆர்டர் செய்கிறார்கள்... மார்ட்டின் ரசிகர் மன்றக் கண்மணிகளும் மெயில் அனுப்பி விசாரிக்கிறார்கள்... ஆனால்....

  இத்...தனை வருடங்களாக, இத்தாலிய டாப் நாயகர் டெக்ஸ் வில்லரின் பல கதைகளை, விதவிதமான சைஸ்களில் வெளியிட்டும், LMS அட்டையில் பிரதான இடம் கொடுத்தும், அவரது இத்தாலிய ரசிகப் படை இந்(தியா)தப் பக்கமாக எட்டிக் கூடப் பார்க்கவில்லையா?! ஐயகோ... என்ன கொடும கார்ஸன் இது! :)

  ReplyDelete
  Replies
  1. ஏறத்தாள அதிக மொழிகளில் டெக்ஸ் படைஎடுப்பதால் .....வாங்கி வாங்கி அலுத்திருப்பார்களோ !

   Delete
  2. //டயபாலிக் கதைகளை தமிழில் வெளியிட்டால், அவரது இத்தாலிய ரசிகர்கள் லைனில் நின்று வாங்குகிறார்கள்... டைலன் டாக்கின் விசிறிகள், சைலன்ட்டாக 75 பிரதி ஆர்டர் செய்கிறார்கள்... மார்ட்டின் ரசிகர் மன்றக் கண்மணிகளும் மெயில் அனுப்பி விசாரிக்கிறார்கள்... ஆனால்..//

   ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்புட்டாகோ.
   அமேரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்புட்டாகோ.

   இந்த வசனம் ஏனோ நினைவுக்கு வந்தது.

   அதுமட்டுமின்றி

   அடாஅடா.! இவுரு ஊதறதையும் இந்த பொண்ணு ஆடறதையும் பாத்தா.,,,,,,,,,,,,,,,,,

   போன்ற விளம்பரங்கள் டெக்ஸுக்கு பயணில்லை,,

   இதை நீங்க காமெடியாத்தான் எடுத்துக்கணும்.

   Delete
  3. // ஐய(கோ)ம் //
   // இந்(தியா)தப் பக்கமாக //

   Go(o)d!

   Delete
 61. தீபாவளி திருநாள் :

  டியர் விஜயன் சார்,

  NBS வெளியீட்டின் போதே இப்படிச் சொல்ல நினைதேன் ; LMS வெளியீட்டிற்கும் சொல்லாமல் விட்டால் அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்பதால் இந்தப் பதிவு. சிறு வயதில் நாங்கள் தீபாவளிக்காக கிட்டத்தட்ட இரண்டு மதங்களுக்கு முன்பாகவே திட்டமிடுவோம் ; தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே எங்களை உற்சாகம் பிடித்துக் கொள்ளும். அதன் வீரியம் ஒவ்வொரு நாள் புலரும் வேளையிலும் வீரியம் கொண்டு எழும். அதன் சுகம் எழுத்தில் வடிக்க இயலாததாய் அன்று இருந்தது. அதுவும் தீபாவளியின் முந்தைய இரவுகளில் பெரும்பாலும் தூங்கியதே கிடையாது ; விடிந்ததும் அடையும் குதூகலத்திற்கும், உற்சாகத்திற்கும் அளவு என்று ஒன்று இருந்ததே இல்லை.

  அன்றைய தினத்தின் நேரம் ஓட ஓட நம் உற்சாக வெள்ளமும் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கும் . மாலைவேளை நம் கண்முன்னே மறைவதைப் போன்றே - கரைப் புரண்டோடிய நம் மகிழ்ச்சி வெள்ளமும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, காணல் நீரோ என்று தோன்றும். மறுநாள் காலை, அத்தனையும் கனவோ அல்லது கடந்துப் போன நினைவோ என்ற வருத்தமே மிஞ்சி நிற்கும் !

  அது போல் தான் NBS ; LMS வெளியீட்டிற்குப் பிறகும் ஒரு விதமான வெறுமை எங்களை ஆட்டிப் படைக்கிறதோ என்று தோன்றுகிறது. தங்களின் அளவிட இயலாத உழைப்புக்கு மிக்க நன்றி விஜயன் சார் !

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கூறும் ஒவ்வொரு வரிகளும் அசத்தலாய் எனக்கும் ! பட்டாசு வாங்கி வைத்து இரவெல்லாம் பார்த்து ரசிப்பது , பட்டாசு வெடிக்கும் போது கரைந்து கொண்டிருக்கிறதே எனும் ஏக்கம் இன்னும் நினைவில்......!

   Delete
 62. mayavi sivakumar @
  // காமிக்ஸ் மேல் உள்ள ஆர்வத்தில் நான் செய்த சிறு முயற்சியை இங்கு தாங்கள்முதல் விஷயமாக சுட்டிகாட்டுவதுடன் இல்லாமல், என் புகைபடத்தையும்முதலில்போட்ட உங்கள் பரந்தமனம்.... //

  அமைதியாக நமது காமிக்ஸ் வளர்ச்சிக்கு உங்களால் முடித்ததை சத்தம் இல்லாமல் நடத்தி காட்டியது மிகவும் பாராட்டுக்கு உரியது! தொடரட்டும் இது போன்ற சத்தம் இல்லா முயற்சிகள்! வாழ்த்துகள்.

  ReplyDelete
 63. //LMS வெளியீட்டிற்குப் பிறகும் ஒரு விதமான வெறுமை எங்களை ஆட்டிப் படைக்கிறதோ என்று தோன்றுகிறது. தங்களின் அளவிட இயலாத உழைப்புக்கு மிக்க நன்றி விஜயன் சார் !//
  +1111111111111

  ReplyDelete
  Replies
  1. +1 true there is Empty feeling after overwhelming happiness.

   Delete
  2. வெறுமை என ஏன் சொல்கிறீர்கள் எனத்தெரியவில்லை. என்னைப்பொருத்தவரையில், தரத்தில் ஒரு High Jump செய்யப்பட்டிருப்பதால் Future வெளியீடுகளின் Possibility ஒரு பெரிய திருப்தியை தருகிறது. உதாரணத்துக்கு ரின் டின் Series மற்றும் புது Variety இத்தாலிய கதைகள் etc.

   Delete
 64. சார் .....உங்கள் பதிவு மீண்டும் "ஈரோட்டில் " குடியிருந்த சந்தோசத்தை அளிக்கிறது.

  நேற்று தான் புத்தகம் ஒன்றை முடித்துள்ளேன் சார் .இன்று மதியத்தில் இருந்து புத்தகம் இரண்டை ரசிக்க காத்திருக்கிறேன் .அனைத்தும் ரசித்து முடித்தவுடன் எனது விமர்சனத்தை தெரிவிக்க நினைக்கிறேன்.

  ஆனால் ஒன்றை மட்டும் மறக்காமல் தெரிவிக்கிறேன் .இந்த வாரத்தை மறக்க முடியாத அனுபவத்தை அளித்து இருக்கிறேர்கள் சார் .மிக்க நன்றி .

  ReplyDelete
 65. //அன்றைய தினத்தின் நேரம் ஓட ஓட நம் உற்சாக வெள்ளமும் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கும் . மாலைவேளை நம் கண்முன்னே மறைவதைப் போன்றே - கரைப் புரண்டோடிய நம் மகிழ்ச்சி வெள்ளமும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, காணல் நீரோ என்று தோன்றும். மறுநாள் காலை, அத்தனையும் கனவோ அல்லது கடந்துப் போன நினைவோ என்ற வருத்தமே மிஞ்சி நிற்கும் //
  அப்பப்பா.!
  அந்த வயதுகளின் உணர்வுகளை துல்லியமாக வார்த்தைகளில் வடித்துவிட்டீர்கள் ,திரு மரமண்டையாரே.

  வரம் பெற்றவர் நீங்கள்.
  வார்த்தை பிரயோகம்.,எழுத்து பிரயோகம், இவை எல்லோருக்கும் எளிதில் வாய்த்துவிடுவதில்லை.எனவேதான் உங்களை வரம் பெற்றவர் என்று கூறினேன்.
  சிறு குழப்பத்திற்காக தயக்கம் வேண்டாம்.வாருங்கள் நண்பர் அவர்களே.!
  இந்த ப்ளாக்கை சுவைபட வைத்திருப்பதில் நீங்களும் ஒருவர்.
  உங்கள் சேவை -இந்த
  ப்ளாக்கிற்க்கு தேவை.!
  நன்றிகளுடன் நண்பன்

  ReplyDelete
  Replies
  1. Kannan Ravi : //*நன்றிகளுடன் நண்பன்*// !

   மனப்பூர்வமான நன்றிகள் நண்பரே ! போலவே உங்களின் அகடவிகடமான பதிவுகளுக்கு நான் ரசிகன் என்பதே உண்மை ! நண்பன் என்ற தங்களின் உணர்வுப் பூர்வமான வார்த்தைகள், என்னை இங்கு மனம் திறந்து பேச வைப்பதாக அமைந்து விட்டது. எனவே இதற்கான/எனக்கான பதில் அளிப்பதை தாங்கள் தவிர்த்து விட வேண்டும் என்பதே என் வேண்டுகோள் ! இல்லாவிட்டால் நம்மை துதிபாடிகள் ; சுயபுராண பார்ட்டிகள் என தூற்ற, சிலர் கம்ப்யூட்டர்/ம் கையுமாக அலைந்து கொண்டிருப்பார்கள் ;)

   கடந்த சில மாதங்களாகவே எனக்குள் ஒரு சிறு சலனம் - இங்கு தொடர்ந்து பதிவிடுவதில் இருந்து விலகி நிற்கலாமா என்று? அதற்கான தருணம் எதுவென்று அறியாத காரணத்தால் - தொடர்ந்து பதிவிட்டு வந்தேன் என்பதே உண்மை. அதற்கான காரணம் என்று பல விஷயங்களைக் கூறலாம். அதில் சில் ;

   1.unlimited broadband - 920 !
   2.mobile internet - 1400 plus or minus (fb ; blog) !
   ஆக, ஒரு வருடச் சந்தா - ஒவ்வொரு மாதமும் தேவையே இல்லாமல் விரயம் ஆகிறது என்பது ஒரு காரணம் !

   3.மிகப் பெரிய கால விரயம் !
   4.வீண் சச்சரவுகளால் நம் நற்பெயருக்கு கேடு !
   ஆக, தேவையில்லாமல் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் கருத்து வேறுபாடுகள் என்பது இரண்டாவது காரணம் !

   5. myntra ; flipkart ; bagittoday - என ஒவ்வொரு மாதமும் தேவையே இல்லாமல் அதிகமான online shopping !
   6.வீடே typing institute போல் ஆகிவிட்டது என்று, மனைவியின் சமீபத்திய புகார்.. (டக்..டக்.. என்ற சத்தம்) !
   7.ஈரோடு விஜயைப் போல் எனக்கும் கண்ணில் சிறு உறுத்தல் ஏற்பட ஆரம்பித்து விட்டது :) !

   இதற்கெல்லாம் ஒரே தீர்வாக internet கலாச்சாரத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி நிற்க ஆசைப்படுகிறேன். என்னுடைய fb account/ஐ இம்மாதம் முதல் தேதியிலிருந்து delete செய்து விட்டேன். smartphone/லிருந்து internet வசதியில்லாத phone/க்கு மாறப்போகிறேன். எனக்கு அவசியமே இல்லாத computerக்கு, அனாவசியமாக இருக்கும் unlimited broadband connection/ஐ வரும் மாதம் கொண்டு துறக்கப் போகிறேன். அதனால் தான் LMS விமர்சனப் பதிவுகளைக் கூட இங்கு பதிவிடாமல் மௌனம் காத்து வந்தேன். இதோ.. அதற்கான தருணம் வந்து விட்டதாக தெரிகிறது. இருந்தாலும் சில காரணங்களுக்காக என் சிஷ்யக்கோடிகள் மட்டும் அவ்வப்போது இங்கு, browsing center வழியாக உலா வருவார்கள் என்பது எனக்கு ஒரு ஆறுதலான விஷயமாக கருதுகிறேன் நண்பரே ! எனக்கு இவ்வகையில் பதிவிட வாய்ப்பு அளித்த தங்களுக்கு மிக்க நன்றிகள் மிஸ்டர் ரவிக்கண்ணன் !

   Delete
 66. நண்பர்களே மிக அற்புதமான சந்தோசங்களை மிக சாதாரண விசயங்களே எப்போதும் கொண்டு வரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களுக்காக .....எனது சாதாரனமான வீடியோவில் அசாதாரணமான நண்பர்களால் சந்தோசங்கள் பூக்கட்டும் !

  நான் உள்ளே நமது ஸ்டாலை வீடியோவில் உங்கள் கண்களால் பார்வை இட்டு கொண்டிருக்கும் போது

  https://www.youtube.com/watch?v=XzDnx1z03ZQ&feature=youtu.be

  அகப்படுகிறார் நம்மை போன்றே ஏக்கங்களை சுமந்து வந்த ஒரு நண்பர்

  https://www.youtube.com/watch?v=Ni9WePWNRD8&feature=youtu.be

  இவரது உரையாடல்களை எடுத்து முடித்த போது .....வருகிறார் ஆசிரியர் ! சார் இந்த பதிவை பாருங்கள் என்று அந்த நண்பர் ஆசை படுகிறார் ! ஆசிரியர் அவரது தோளில் கை போட்ட வாறு நிற்கிறார் ! நான் ஆசிரியர் பிஸியாக இருப்பார் பின்னர் காட்டி கொள்ளலாம் என்கிறேன் ! ஆனால் ஆசிரியர் பரவாயில்லை காட்டுங்கள் நானும் பார்க்கிறேன் என ஆர்வபடுகிறார் ! கை பேசியில் சில பிரசினை காரணமாக ஏதும் வரவில்லை ! வழிந்தவாறே .....அழிந்து விட்டதோ என அஞ்சி வேறு ஒரு பேட்டியும் எடுத்தேன் ! சார் அன்று ரொம்ப ஆசை பட்டு நீங்கள் பார்க்க விரும்பிய 'வீடியோவில் ஒரு வெடிகுண்டு '

  https://www.youtube.com/watch?v=DOEA2k2BW9w&feature=youtu.be

  இது அழிந்திருக்கும் என நான் நினைத்து நண்பர் மாயாவி சிவாவுடன் சுவாரஸ்யமாய் எடுத்த மறு பதிவு
  https://www.youtube.com/watch?v=wcnJrNUr2L8

  ReplyDelete
 67. hi friends,
  i am a silent watcher of this blog also posted few comments.since from then i didn't post comment due to some heavy work.but after the editors post on lms success .i can't keep silent. it;s really wonderful as our comics getting more welcome whenever it comes.as lion comic lover it makes me very proudful. editor g continue the good work. we always with you.

  ReplyDelete
  Replies
  1. +1 good to see your post friend.

   do express your liking in post/email to edit, it will help editor to consolidate exactly what readers feeling, what genre they are willing to read. it will help our most loved brand to grow! its by expressing we get/give.

   Delete
  2. இதுதான் புதிய அவதாரம் எடுத்த ஆசிரியரின் lms ன் வெற்றி என்றால் மிகை அல்ல நண்பர்களே ! நேரமிருக்கும் போதெல்லாம் இரண்டு வரிகள் எழுதுங்கள் !

   Delete
 68. இதோ இன்னுமொரு அரை டஜன் அரை ட்ரௌசர் வாண்டுகளின் கொண்டாட்டங்கள் .......
  https://www.youtube.com/watch?v=Kcs_DnITmc8&feature=youtu.be

  ReplyDelete
 69. அந்தி மண்டலம் படித்து முடித்து விட்டேன் ! இந்த கதைக்கு மாபெரும் பிளஸ் என இருப்பின் அந்த வண்ணங்கள்தாம் ! பசுமையான காட்சிகளாகட்டும், சூழும் நீர் ஆகட்டும் , வெண்மேக பணியாகட்டும் எங்கும் வண்ணங்கள் அற்புதமாய் போர்த்தபட்டுள்ளன ! இதை விட சிறப்பாய் வண்ண சேர்க்கை அமையுமா என சவால் விடுகின்றன ! ஓவியங்கள் மூலம் திகில் ஏற்படுவதை காட்டிலும் , வரிகளினால் ...உரையாடல்களால் அவர்கள் மேல் பரிதாபம்தான் ஏற்படுகிறது ! மாறும் மனதை மாற்ற .....மாற்றத்தை விரும்ப கூடாது என முடிவில் அந்த டாக்டர் அழுத்தமாய் கூறுவது அந்த நகருக்கு அழிவில்லை என தோன்றுகிறது ....அடுத்த கதை எப்போது சார் ....

  ReplyDelete
  Replies
  1. இருநூறு பக்க இரண்டு சாகசங்கள் நமது லயனில் வழக்கம் போல சந்தாவிற்க்கு என கூறினீர்களே அது வண்ணத்தில் உண்டா !

   Delete
 70. அந்த பெரிய ரவுண்டு குருப் போட்டோவில் நானும் ஒரு ஆளுங்கோ...!
  என்னுடைய நெடுநாள் ஆசைகளில் ஒன்று திரு. s.விஜயன் அவர்களை சந்தித்து ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்பது... அந்த ஆசை ஈரோட்டில் நிறைவேறியது. மிகவும் நன்றி ஸார்.

  ReplyDelete
 71. LMS போன்ற மெகா முயற்சி இவ்வளவு கஷ்டங்களை தாண்டி வெற்றி பெறாமல் போக வாய்ப்பில்லை என்பது
  எதிர்பார்த்ததே!!! Hard Cover - a pleasant surprise..Storied so far very good..

  வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

  ஆனால் LMS டெலிவரீ .ஆக wednesday ஆகிவிட்டது....

  மின்னும் மரணம் வெளியீடு Chennai Book Fair-இல் என்பதால் நேரடியாகவே வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்..

  இருப்பினும் முன்பதிவு செய்து confirm செய்ய ஆசை...Courier Charges இன்றி முன்பதிவு செய்யலாமா??????

  ReplyDelete
 72. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. // please guide me how to run this blog smoothly.//

   Wrong address please . :D

   Delete
  2. hello friends ,
   i forget to say onething.today i have started a new blogspot where i am going to post phantom indrajal,mandrake,garth, captain blueberry,astrix&obelix,flashgardon,etc.this is not for advertising.dont take me wrong.here after i am going to share everything with you guys. i need your visits to my blog friends here is the link

   http://vickycomics.blogspot.in/

   i understand vijay.sorry for the inconvenience

   Delete
 73. I LIKE VERY MUCH IN ERODE FRIENDZ MEETING AND UPTO 11.30 PM WE TALKED ABOUT THE LMS.

  SHAM1881@GMAIL.COM

  ReplyDelete
 74. LMS இதழ் வெளியீடு பற்றி எடிட்டர் மற்றும் வாசகர்களின் அனுபவத்தைப் படிக்கும் போது, இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை புத்தககாட்சியில் எடிட்டர் மற்றும் பலரை சந்தித்த அனுபவம் நினைவுக்கு வருகிறது. நிறைய நண்பர்களை முதல் முறையாக நேரில் பார்க்கும் போது, நரைத்துப் போன தலைகளுடன், வாசக சிறார்கள், என்று வித்தியாசமான அனுபவம். இந்த அனுபவமே, காமிக்ஸ்சை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
  --------
  இந்த முறை எடிட்டர், LMS பற்றிய விபரங்களைச் சிறிது சிறிதாக வெளியிட்டு, ஏற்கனவே இருந்த எதிர்ப்பார்ப்பை பல மடங்கு உயர்த்திவிட்டது. ஆங்கில நாவல்கள் வெளியீடு போல, மிக ப்ரொபஷனலாக, கடின அட்டை விஷயத்தை கடைசி வரை சஸ்பென்சாக வைத்து இன்ப அதிர்ச்சி தந்துவிட்டார் எடிட்டர். அருமை.
  ------
  புத்தகம் மிக மிக அருமையாக பேக் செய்ய்பட்டிருந்தது. அருமையான பிரிண்டிங். டெக்ஸ் கதைகள் இவ்வளவு அழகாக கலரில் இருப்பதைப் பார்க்கும் போது நன்றாக இருந்தது. எல்லாக் கதைகளையும் படித்துவிட்டேன். எனது தர வரிசை
  -ரின் டின் கேன்
  -அந்திமண்டலம்
  -டெக்ஸ்
  -டைகர்
  -ஜீலியா
  -ராபின்
  -க்ராஃபிக் நாவல்
  -----------
  புத்தகம் - 1ல் எனது காப்பியில் 26 பக்கங்கள் இல்லாமல் இருத்தது. மெயில் அனுப்பிய உடன், இரண்டு நாட்களில் புதிய செட் ஒன்றை அனுப்பிவிட்டார்கள். மிக்க நன்றி. புதிதாக வந்த புத்தகத்திலும் டைலன் கதையில், ராபின் கதையின் 6 பக்கங்கள் கலந்து வந்திருந்தது. இவ்வளவு பெரிய புத்தகத்தை பைண்ட் செய்யும் போது இந்த பிரச்சினைகள் வந்திருக்கின்றது என நினைக்கிறேன். மின்னும் மரணம் புத்தகம் அனுப்பும் போது, இந்தப் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

  மின்னும் மரணம் புத்தகத்திற்காகவும், சென்னை புத்தக விழாவிற்காகவும் இப்பொழுதே வெயிட்டிங்..

  ReplyDelete