Sunday, July 06, 2014

இவை இறவாக் காலங்களே..!

நண்பர்களே,

வணக்கம். "தையத்தக்க" வென்று ஒரு குத்தாட்டம் போடலாம் என்று பார்த்தால் - 'தம்பி...... முட்டிங்கால் பத்திரம் !' என்று மைண்ட் வாய்ஸ் எச்சரிப்பது கேட்கிறது ! சரி...செமையாய் ஒரு பாட்டை எடுத்து விடுவோமென்று நினைத்தால்  - அண்டை வீட்டுக்காரர்கள் குடிமாறிப் போகும் அவலம் நேர்ந்திடுமே என்ற பச்சாதாபம் தலைதூக்குகிறது ! சரி - வம்பே வேண்டாம் - 'ஈஈஈ' என்று இளித்த வண்ணம் வலம் வருவது தான் யாருக்கும் சேதாரம் தரா யுக்தி என்ற தீர்மானத்தில் நேற்றிரவு முதலாய் பேட்மேன் கதையின் பிரதம வில்லனான ஜோக்கரைப் போலவே அடியேன்  நடமாடி வருகிறேன் !! லாட்டரியில் ஏதும் பம்ப்பர் அடித்த குஷியல்ல இது - கடந்த சில / பல வாரங்களாய் எனது மேஜையையும் ; மண்டையையும் ஆக்கிரமித்து நின்ற LMS -ன் (குண்டோ குண்டு) புக் # 1-ன் பணிகளை முடித்து விட்ட சந்தோஷமே இது ! ஹாட்லைன் + சிங்கத்தின் சிறுவயதில் பகுதிகளை ஓரிரு நாட்களுக்குள் எழுதி முடித்திடும் பட்சத்தில் இத்தாலிய ஐஸ்க்ரீமில் எனது பணிகள் பூரணமாய் முடிந்திருக்கும் ! தொடரும் 4-5 நாட்களுக்குள் (black & white) அச்சுப் பணிகளும் முடிந்திடுமெனும் போது - அடுத்து நிற்பது பைண்டிங் படலம் தான் !! இது போதாதா காது வரை பற்களை விரிய அனுமதிக்க ? LMS -ன் (பெல்ஜிய ) புக் # 2-ன் பணிகள் சகலமும்  பூர்த்தியாகி நிற்கும் நிலையில் அவற்றை அச்சுக்குக் கொண்டு செல்லும் வேலைகள் மட்டுமே அப்புறமாய் எஞ்சி நிற்கும் ! ஜூலை 20-க்குள் அதனையும் மங்களம் பாடி விடுவோமென்ற நம்பிக்கையுள்ளது ! Phew !!!! கடவுளின் துணையோடு எல்லாவற்றையும் முழுமையாய்ச் செயலாக்கி விட்டு, முதல் பிரதியின் மீது பார்வையை ஓட விடச்செய்யும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்பதை மெள்ள மெள்ள உணரும் போதே  வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகளின் 'மானாட மயிலாட' நிகழ்ச்சி தொடங்குவதையும் கூட உணர முடிகின்றது ! இத்தனை பணிகளைச் செய்வது பெரியதொரு சாதனையல்ல - அதன் end result உங்களைத் திருப்திப்படுத்தியாக வேண்டுமே !!! நம்பிக்கையோடு நாட்களை நகற்றுவேன்... !!

பொதுவாக வர்ணம் + black & white என்ற கூட்டணியில் ஒரு இதழ் உருவாகிடும் சமயம் எனது கவனத்தின் பெரும் பகுதி வண்ணப் பக்கங்களின் மீது லயித்திருப்பதே இயல்பு ! கருப்பு-வெள்ளைப் பக்கங்களில் ப்ராசசிங் பணிகளுக்கென அதிக அவகாசம் தேவைப்படாது என்பதால் கதையை டைப்செட் செய்த பிற்பாடு 'சட சட' வென வண்டியை ஒட்டி விட முடியும் தான் ! நானும் அந்தக் கோட்பாடை நம்பி black & white பக்கங்களை சுலபமாய் ஊதித் தள்ளி விடலாமென்ற மப்பில் தான் துவக்கம் முதலே இருந்து வந்தேன் ! தவிர, இம்முறை B &W கதைகள் மூன்றுமே இத்தாலியப் படைப்புகள் என்பதால் நேர் கோட்டில் பயணிக்கும் கதைகள் ; குழப்பமில்லா களங்கள் ; இடியாப்பமில்லா பொழுதுகளாய் அமையும் என்ற தைரியமும் கூட ! இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு முதலாவதாய் வந்து சேர்ந்த மர்ம மனிதன் மார்ட்டின் கதையானது எப்போதுமே ஓரளவிற்கு complex ரகமாய் இருக்குமென்பதை நினைவு கூர்ந்திடுவதில் சிரமமிருக்கவில்லை. சரி, இதைக் கடைசியில் பார்த்துக் கொள்ளுவோமே என்று ஓரம் கட்டி விட்டு, "ஜூலியா படலத்தைத்" துவக்கினோம் ! ஏற்கனவே நான் முந்தையப் பதிவில் சொல்லி இருந்தது போல, மேலோட்டமாய்ப் பார்க்கையில் சிக்கலில்லாக் கதையாய்க் காட்சி தந்த "விண்ணில் ஒரு விபரீதம்"  சுமாரான இத்தாலிய மொழிபெயர்ப்பினால் குறுக்கைக் கழற்றி விட்டது ! ஒரு மாதிரியாய் படைப்பாளிகளின் உதவிகளோடு ; இத்தாலிய காமிக்ஸ் ரசிகர் ஒருவரின் சகாயத்தையும் பெற்றுக் கொண்டு ஜூலியாவை திருப்தியாய் நிறைவு செய்ய முடிந்திருந்தது ! 
Graphic Novel.....
ரைட்டு...இனி எஞ்சி இருப்பது கிராபிக் நாவலான "இறந்த காலம் இறப்பதில்லை" மாத்திரமே ; அதுவும் ஒரு ஆக்க்ஷன் த்ரில்லராய்க் காட்சி தருவதால், சிரமம் இராதென்ற நம்பிக்கையில் கதையைத் தூக்கி கருணை ஆனந்தம் அவர்களிடம் அனுப்பினேன் -முதல் நிலை தமிழாக்கம் செய்ய ! இந்தக் கதைக்கான இத்தாலிய ஸ்கிரிப்ட் மெலிசாய் ; அதிகப் பக்கங்கள் இல்லாது இருந்ததும் எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கையைத் தந்தது ; 'வள வள' வென வசனங்கள் ஜாஸ்தி இருக்க வாய்ப்பில்லை என்று ! 10 நாட்களில் கதையும் மொழிபெயர்ப்போடு என்னை வந்து சேர, வழக்கம் போல் அதனை சரி பார்த்து விட்டு நான் final copy எழுதி இருக்க வேண்டும் ; ஆனால் இதர பணிகள் மலையாகக் குவிந்து கிடந்த சமயத்தில் பொறுமை இல்லாமல் போக, நேராக அந்த தமிழ் ஸ்க்ரிப்டை டைப்செட் செய்ய அனுப்பி விட்டேன் ! பட பட வென அதனை டைப்செட் செய்து அருணா தேவியும் சீக்கிரமே ஒப்படைக்க, சென்ற ஞாயிறு இங்கு பதிவிட்டான பின்னே சாவகாசமாய் "இ.கா.இ.இல்லை " கதைதனை கையில் எடுத்தேன் ! 'அட...ஆரம்பமே பிரமாதம் !' என்று மனசுக்குள் ஒரு சிலாகிப்போடு பக்கங்களைப் புரட்டப் புரட்ட என்றைக்கோ ஒரு காலத்தில் சிறு பிள்ளைகளாய் நாங்கள் இருந்த நாட்களில் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லா சமயம் அல்வா தயாரிக்க முனைந்தது தான் நினைவுக்கு வரத் தொடங்கியது ! எப்படிக் கிண்டினாலும் பதம் சரியாக வராமல் 'விழு விழு ' வென்று ஏதோ ஒரு வஸ்து சட்டிக்குள் இருந்து எங்களைப் பார்த்து 'யெஹெஹேஹே' என்று பல்லைக் காட்டியது போல "இ.கா.இ.இல்லை " கதை என்னைப் பார்த்து ஒரு தினுசாய்ச் சிரித்ததை அப்பட்டமாய் உணர முடிந்தது !! நிஜமாகவே வேர்த்துப் போய் விட்டேன் - 'இது என்ன சோதனை சாமி ?!!' என்று ! விஷப் பரீட்சையே வேண்டாம் ; இதை சத்தமில்லாமல் ஓரம் கட்டி வைத்து விட்டு என்னமாச்சும் ஒரு சால்ஜாப்பைச் சொல்லிக் கொண்டு இதன் இடத்தில் வேறு கதை எதையாவது திணித்திட வேண்டியது தான் என்பதே எனது லஞ்ச் hour தீர்மானமாக இருந்தது ! ஆனால் ஒரே ஒரு முறையாவது அறிவித்தபடியே ஒரு இதழை ; கதைகளில் மாற்றங்களின்றி , விளம்பரம் செய்த பாணியிலேயே வெளியிட வேண்டுமே என்ற வேகமும், 'இத்தாலிய ஐஸ்க்ரீம்' சொதப்பி விடுமே என்ற ஆதங்கமும் ; புதிதாய் 110 பக்க நீளத்துக்கு இனி ஒரு கதையைப் பிடித்து, எழுதி ; DTP செய்து தயாரிப்பதெனில் அநியாயமாய் ஒரு 10 நாட்களாவது விரயம் ஆகிப் போகுமே என்ற மண்டை நோவும் ஒட்டு மொத்தமாய் சேர்ந்து வாதம் செய்யத் துவங்க - மதியத்துக்கு மேலாய் "இ.கா.இ.இல்லை " பக்கங்களை திரும்பவும் கையில் எடுத்தேன் ! கதையில் சிக்கல் என்னவென்று நிதானமாய் அலசிப் பார்த்த போது தமிழாக்கத்தில் நிறைய இடங்களில் கோர்வை இல்லாது இருப்பதே குழப்பத்தின் முதற்காரணம் என்பது புரிந்தது. சரி - இத்தாலிய ஸ்க்ரிப்டையும் சேர்த்து வைத்துக் கொண்டு ஒத்துப் பார்ப்போம் என்ற போது அந்த முதல் கட்ட மொழியாக்கம் ரத்தினச் சுருக்கமான பாணியில் இருப்பதைக் காண முடிந்தது ! கதையின் பிரதான பாத்திரங்கள் பேசும் வரிகள் நீளத்தில் குறைவாய் இருப்பினும், சித்திரங்களின் உதவியோடு கதாசிரியர் ஒரு வித மௌன மொழியில் வாசகர்களோடு communicate செய்திருப்பது அப்போது தான் என் மண்டைக்கு உறைத்தது ! இந்தக் கதையை நான் LMS -கெனத் தேர்வு செய்திடும் முன்பாக இணையதளங்களில் நிறையவே உருட்டி, இக்கதை பெற்றிருந்த நிறைவான பாராட்டுக்கள் ; விமர்சனங்கள் என அனைத்தையுமே மனதில் இருத்தி இருந்தேன் ! 'அத்தனை பேரது அபிப்ராயங்கள் தவறாக இருக்க முடியாதே !' என்ற நெருடல் எனக்குள் வலுக்கத் துவங்க, திரும்பவும் ஆபத்பாந்தவனாய் கை கொடுத்தது இன்டர்நெட் தான் !! எங்கெங்கோ உருட்டி, இக்கதையின் plot பற்றிய மேலோட்டமானதொரு கட்டுரையைத் தேடித் பிடித்துப் படிக்க முடிந்த போது தான், 'ஆஹா...இது ஆழமான சங்கதிடா சாமி !!  என்ற புரிதல் எனக்குள் ! பரீட்சைக்கு நோட்ஸ் எடுப்பது போல் கதையின் மாந்தர்களின் பெயர்களை ; ஒவ்வொருவரும் தலை காட்டும் பக்கங்களின் துவக்க எண்கள் என்று வரிசையாய் எழுதி வைத்துக் கொண்டு, கதையை இப்பொது திரும்பவும் படிக்கத் தொடங்கினேன் ! சட்டியோடு ஒட்டிக் கொண்டு இது வரை சண்டித்தனம் செய்த அல்வா நெய் கோட்டிங்கோடு கொஞ்சம் கொஞ்சமாய் கரண்டிக்குப் பிடிபடுவதை இம்முறை உணர முடிந்தது ! கதாசிரியர் அமைத்திருந்த சிற்சிறு முடிச்சுகள் பலவற்றை முதல் நிலை தமிழாக்கத்தின் போது நம்மவர் சரியாகக் கவனித்திருக்கவில்லை என்பதும், நெட்டில் செய்த ஆராய்ச்சியில்லாது போயிருப்பின், நானும் கூட இந்தக் கதையை இதே போலத் தான் handle செய்திருப்பேன் என்பது புரிந்தது ! இரண்டாம் தடவையின் வாசிப்பின் போது கதையை 100% புரிந்து கொண்டேன் என்றும் சொல்ல முடியவில்லை ; ஆங்காங்கே - "இது ஏன் நடக்கிறது ?" ; "இவர் இதைச் சொல்ல என்ன முகாந்திரம் ?" என்று நிறையவே கேள்விகள் தொக்கி நின்றன என்னுள். மரியாதையாய் அவற்றையும் ஒரு தாளில் எழுதி வைத்துக் கொண்டு அதையே முறைத்துப் பார்த்துக் கொண்டு மணிகளை ஓட்டினேன் ! கதை சொல்லப்பட்டிருக்கும் பாணியைப் பற்றி இடைச்செருகலாய் ஒரு விஷயத்தை நான் குறிப்பிட்டே தீர வேண்டும் ! என்றோ நடந்ததொரு கொலைக்கும், நிகழ்காலத்தில் அரங்கேறும் பரபரப்புகளுக்கும் உள்ள தொடர்பினை கதாசிரியர் எக்கச்சக்க flashback shots சகிதம் சொல்லியுள்ளார் ! ஒரு frame -ல் நிகழ்காலம் ; மறு கட்டத்தில் பின்னோக்கிய பயணம் என்று கதையில் ஒரு எடிடிங் அதகளமே நிகழ்த்தப்பட்டுள்ளது !!  90 வயது முதியவரே இக்கதையின் ஹீரோ என்பதை கொஞ்சம் கொஞ்சமாய் நான் உணரத் தொடங்கிய போது, எனக்குள் இருந்த குழப்ப ரேகைகள் விலகத் தொடங்க, எனது கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ஆங்காங்கே கதாசிரியர் மிக நுணுக்கமான பதில்களை விதைத்து வைத்திருப்பதை கவனித்தேன் ! 
Julia..........
சீராய்ச் செல்லும் ஜூலியா கதையில் ஏதேனும் ஒரு முடிச்சு இருக்குமோ ; இருக்குமோ என்ற தேடலிலேயே என்னைக் குழப்பிக் கொண்டிருந்தேன் எனில், முடிச்சுகளின் மொத்தக் கிட்டங்கியான :"இ.கா.இ.இல்லை" கதையில் நேர் கோடாய் plot இருக்குமென்ற எதிர்பார்ப்பில் இடறி இருக்கிறேன் என்பதை உணர்ந்த போது அசட்டு முழி தான் முழிக்க முடிந்தது ! இதுவரை இந்த கிராபிக் நாவல் genre களில் அமெரிக்கப் படைப்புகள் ; பிரான்கோ-பெல்ஜியப் படைப்புகள் தான் பிரமாதம் என்று கொண்டிருந்த அபிப்ராயத்தை சென்ற ஞாயிறின் எனது அனுபவங்கள் நிறையவே மாற்றியுள்ளன என்று தான் சொல்ல வேண்டும் ; வண்ணங்கள், பெரியதொரு canvas என்ற ஆயுதங்களின்றி இந்தியன் இன்க் மட்டுமே துணையென கதாசிரியரும், ஓவியரும் கை கோர்த்து உருவாக்கியுள்ளதொரு இத்தாலிய கிராபிக் நாவல் எந்தப் போட்டிக்கும் கை தூக்கி நிற்க ஆற்றல் கொண்டது ! 'அழகானதொரு சின்ன knot -ஐ மட்டுமே கதையின் ஆதாரப் புள்ளியாய் எடுத்துக் கொண்டு அதனை இத்தனை திறன்பட பயன்படுத்தியுள்ளார்களே ; இதைப் புரிந்து கொள்ளாமல் கதையை ஓரம் கட்ட நினைத்தாயேடா பாவி !' என்று எனது மைண்ட் வாய்ஸ் திரும்பவும் சவுண்ட் கொடுக்க ; பதில் ஏதும் சொல்ல வாய்ப்பில்லை என்னால் !! கொஞ்சம் கொஞ்சமாய் புதிரின் ஒவ்வொரு துணுக்கும் அதனதன் இடத்தில் விழ, அழகாய் மலர்ந்து நிற்குமொரு படைப்பு நமக்காகக் காத்துள்ளது இப்போது ! ஒரிஜினலின் பாணியில் வாசகர்களுக்கு பெரிதாய் clues எதுவும் கொடுக்காமல், வாசிப்பின் போது அவர்களாகவே யூகித்து உணர்ந்து கொள்ளட்டும் என்று ஒரேடியாய் டீலில் விட்டால் - நமது இள வயது நண்பர்களுக்கு சிரமமமாய் இருக்கக் கூடும் என்பதால் ஆங்காங்கே, அவசியமாகும் சமயங்களில் மட்டும் மெல்லிய கோடுகள் போட்டிருக்கிறேன் ! எல்லாம் சரி, ஒற்றைக் கதைக்கு இத்தனை பில்டப் தேவை தானா ? என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றுவது சகஜமே ! ஆனால் கிராபிக் நாவல் என்றாலே மெஸ்சியைப் பார்த்த கோல்கீப்பர்களைப் போல மிரளும் சில நண்பர்களுக்கு இந்த பாணிக் கதைகளில் உள்ள தனித்துவத்தைப் புரியச் செய்தால் நலமே என்று தோன்றியது ! இத்தனைக்கும் பின்னே, கதையைப் படிக்கும் போது - 'அட போப்பா...!' என்று தூக்கிப் போடவும் வாய்ப்புகள் உண்டு தான் ; but நான் ரொம்பவே ரசித்து எழுதிய / பணியாற்றிய கதைகளின் பட்டியலில் இதற்கு நிச்சயமொரு நல்ல இடமுண்டு !! எல்லாவற்றையும் விட, காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள நிஜமான காரணமென நான் கருதுவது, இந்தக் கதையின் தலைப்புப் பொருத்தத்தின் பொருட்டே  !! ஒவ்வொரு முறையும் ஒரு கதையை அறிவிக்கும் சமயம் அதனை முழுசாய்ப் படித்து விட்டு, பின்னே "பெயர் சூட்டும் விழா" நடத்தும் சொகுசுகள் கிடைப்பது அரிது ; பக்கங்களைப் புரட்டி ; கதையின் ஓட்டத்தை சுமாராய் கிரஹித்துக் கொண்டு தலைக்குள் தோன்றும் பெயரை சூட்டுவது தான் நடைமுறை ! பின்னாட்களில் அந்தக் கதையில் முழுமையைப் பணியாற்றும் வேளைகளில் ' அட..பெயரை இப்படிக் கூட வைத்திருக்கலாமோ ?' எனத் தோன்றியது உண்டு ! ஆனால் இந்த கிராபிக் நாவலுக்கு அன்று இட்ட பெயர் இப்போது perfect ஆகப் பொருந்துவதை உணரும் போது குஷியாய் இருந்தது !! 
சரி...இலகுவென்று நினைத்த கஷ்டத்தைத் தாண்டியாகி விட்டது ; இனி கஷ்டமென எதிர்பார்த்துக் காத்திருக்கும் "கட்டத்துக்குள் வட்டம்" கதைக்குத் தாவுவோமே என்று புதன்கிழமைவாக்கில் மார்டினை மடியில் தூக்கி வைத்துக் கொண்டேன் ! ஆசாமி வழக்கம் போலவே - புராணம் ; வரலாறு ; இதிகாசம் ; விஞ்ஞானம் என்று எதையும் விட்டு வைக்காமல் அத்தனையையும் சாம்பாராய்க் கிண்டி படைத்திருப்பதை உணர முடிந்தது ! என் பணியின் மிகச் சிரமமான பகுதியாக நான் கருதுவது - டைப்செட் செய்யப்பட்டு வரும் முதல் படிவங்களின் மீது திருத்தங்கள் செய்வதைத் தான் ! எழுதும் போது 'ஏக் தம்மில்'  முழுவதையும் மொழிபெயர்த்தல் சாத்தியமில்லை என்பதால் ஒவ்வொரு கதைகளும் 8-10 நாட்கள் எடுக்கக் கூடும் ; ளார்கோ போன்ற கதைகளுக்கு இரண்டு மடங்கு ஜாஸ்தியாயும் நேரம் எடுப்பது உண்டு ! So என்ன தான் கவனமாய் எழுதினாலும், ஒவ்வொரு நாளின் எழுத்துக்களும் லேசான வேறுபாட்டோடு இருப்பது தவிர்க்க இயலாது ! என்றைக்காவது ஒரு நாள் வார்த்தைகள் அருவியாய் வெளிவரும் ; பல நாட்களில் சண்டித்தனம் செய்யும் ! டைப்செட் செய்தான பின்னே, கதையை முழுமையாய் - பலூன்களுக்குள் அடைக்கப்பட்ட வசனங்களோடு படிக்கும் சமயம் மொழிபெயர்ப்பின் அந்த கரடு முரடான முனைகள் புலனாகும் ! அவற்றை செப்பனிடும் பணி தான் முதல் படிவத்தின் மீதான பிரதான வேலை !! அதை செய்வதற்குள் பொறுமையெல்லாம் போயே விடும் ; அதுவும் மார்ட்டின் போன்ற complex கதைகளுக்குள் முழுவதுமாய் நுழைய எப்படியும் முதல் 20 பக்கங்களை தாண்டியாக வேண்டும் ; அந்த ஆரம்பப் பக்கங்களே எப்போதுமே ஸ்பீட் பிரேக்கர்களாய் அமைந்து வேலையை ஜவ்வாய் இழுப்பது வாடிக்கை ; மார்ட்டினும் இம்முறை அட்சர சுத்தமாய் அந்தக் கடமையை நிறைவேற்ற, தக்கி முக்கி - நேற்று இரவு தான் "கட்டத்துக்குள் வட்டத்தை நானும் போட்டு முடித்தேன் ! தொடர்ந்தது தான் "ஈஈஈ " இழிப்புள் படலமும், குத்தாட்ட ஆர்வங்களும் ! வண்ணப் பக்கங்கள் சுலபமாய் ; சிக்கலின்றி பயணித்திருக்க, மெய்யாக மல்யுத்தம் நடத்த அவசியம் கொண்டு வந்தவை B &W பக்கங்களே இம்முறை !! சிரமமாய் இருந்தாலும், கடந்த 2 வாரப் பணிகளில், ஜூலியா ; கிராபிக் நாவல் ; மார்டின் என ஒவ்வொரு கதையும் எனக்கு ஒரு புது விதப் பாடத்தை நடத்தியுள்ளது என்பதை பூரணமாய்ப் புரிந்து கொள்ள முடிகிறது ! 30 ஆண்டுகளும், நிறைய நரைமுடிகளும் என் பக்கபலமாய் உள்ள போதிலும், ஒவ்வொரு புதுத் துவக்கத்தின் போதும் நான் ஒரு மாணவனாய்த் தான் நிற்கிறேன் என்பதே இந்தப் பயணத்தை இத்தனை சுவாரஸ்யமாய்க் கொண்டு செல்ல உதவிடும் மந்திரம் என்று சொன்னால் அது மிகையாகாது ! சந்தோஷமாய்க் கற்கும் அனுபவங்களைத் தரும் நாட்கள்  ; அன்பான நண்பர்களோடு அவற்றைப் பகிர்ந்திடும் சுகங்கள் ; ஒரு இலக்கை நிர்ணயித்து விட்டு அதற்குள் பணிகளைப் பூர்த்தி செய்யப் பசித்திருக்கும் தருணங்கள் - இவை அத்தனையுமே என்னுள் இறவா நாட்களாய்த் தங்கிடும் என்பது நிச்சயம் !! See you around folks ! Bye for now !

P.S.: ஊரில் இல்லை என்பதாலும் , இன்றைய தினத்தை குடும்பத்தோடு செலவிடுவதெனத் தீர்மானித்ததாலும் சீக்கிரமே எழுந்து பதிவை எழுதும் பணிகளைத் துவக்கி விட்டேன் ! இத்தோடு வர வேண்டிய சித்திரங்கள் மின்னஞ்சலில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து எனக்குக் கிபைக்கும் என்பதால் - இப்போதைக்கு இதுவொரு படமில்லாப் பதிவாய் இருக்கும் ! சமயம் கிடைக்கும் போது preview பக்கங்களை நுழைத்து விடுகிறேன் !

263 comments:

  1. Replies
    1. தங்களது தங்கமான முயற்சிகளை எங்களுக்கு பகிர்வது மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது சார். உங்கள் முயற்சிகள் என்றும் அமர்க்களமே[ வாழ்க!

      Delete
  2. ஆஹா ! ஓஹோ !!!

    ReplyDelete
  3. * மாயமில்லை மந்திரமில்லை! *

    மேஜிக் விண்ட் கதை அருமையாக விறுவிறுப்பானதாக உருவாக்கப்பட்டுள்ளது.

    டெக்ஸ் கதைகளை விட இவரது கதைகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கலாம்!

    ஓடும் ரயிலில் வம்பு பண்ணும் வேட்டையனை அதிரடியாக விண்ட் வெளியே தள்ளும் இடம் செம சூப்பர்!

    நிகழ்காலமும் இழந்த காலமும் இணையும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும் கதையமைப்பு அபாரமாக உள்ளது.

    பக்கம் 60ல் வெளிப்படும் அந்த மனநோயாளியின் கோரத்தோற்றத்தின் காரணம் விவரிக்கப்படவில்லை, இனி வரும் பாகங்களில் விளக்கம் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் குறைவு...

    இவரது கதைகளில் நான் எதிர்பார்த்ததென்னவோ செவ்விந்தியர்களின் வாழ்வுப் போராட்டங்களையும், மாயஜால நம்பிக்கைகளையுமே,

    இந்தக்கதை நன்றாகவே உள்ள போதிலும், அமானுஷ்ய நாயகனென அறிவிப்புகள் செய்யபட்ட அளவுக்கு
    மாயமில்லை... மந்திரமில்லை...

    ReplyDelete
    Replies
    1. Msakrates : எல்லா சமயங்களிலும் பானைச் சோற்றுக்கு முதல் சட்டுவமே பதமாவதில்லை !

      பொறுத்திருந்து தான் பாருங்களேன்...!

      Delete
    2. //ஓடும் ரயிலில் வம்பு பண்ணும் வேட்டையனை அதிரடியாக விண்ட் வெளியே தள்ளும் இடம் செம சூப்பர்!//

      ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

      Delete
  4. டியர் விஜயன் சார்,

    இன்றைய பதிவில் முதல் பத்தியை தவிர, மற்ற விவரங்கள் அனைத்தும் ஒரு கிராபிக் நாவலை முதல் முறையாகப் படித்தது போலவே இருக்கிறது. மண்டையில் ஒன்றுமே பதியவில்லை. குழப்பமோ குழப்பம். கட்ட கடைசியில் இன்று உங்கள் பதிவு வந்ததா என்றே குழப்பம். மீண்டும் பொறுமையாக பல முறை படித்து விட்டு என் எண்ணங்களை பதிகிறேன் சார் :)

    ReplyDelete
  5. * ஆண்மை தவறேல்! *

    ரஜினியின் "படிக்காதவன்" படத்தில் ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் பாடலில் "அடங்காத காளை ஒன்னு அடிமாடாகப் போச்சுதடி" என்றொரு வரி வரும்.

    டெக்ஸ் வில்லர் எனும் ஆண்மை மிகு பாத்திரத்தை சில கதாசிரியர்கள் படுத்தும் பாட்டை பார்த்தால் அப்பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது...

    "காவல் கழுகி"ல் பல இடங்களில் மொள்ளமாரிகளை உடனுக்குடன் புரட்டி எடுக்கும் டெக்ஸ், பக்கம் 36ல் பார்ரெல்லிடம் மன்னிப்புக் கோரும் அளவுக்குப் பணிந்து போகிறார். பார்ரெல்லின் நேர்மை மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதை அடுத்தடுத்த பக்கங்களில் அவரது உரையாடல் மூலம் உணர முடிகிறது, அப்படிப்பட்ட ஒருவனிடம் டெக்ஸ் பணிவதாக காட்டுவது அவன் தன் சக அதிகாரி என்பதால் அல்ல... இந்தக் கதையின் கதாசிரியர் டெக்ஸ் கதாபாத்திரத்தை முழுமையாக உள் வாங்கிக்கொள்ளாமையே என்பேன்!

    இது போலவே சென்ற ஆண்டில் வெளியான "மரண தேசம் மெக்ஸிகோ" கதையில் டெக்ஸ் சிப்பாய் வேஷம் போட்டு ஒளிந்து திரிவதாகவும் எதிரிகள் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க முகத்தில் கரியை பூசிக்கொள்வதாகவும் அவரை படுத்தி எடுத்திருப்பார்கள்.

    டெக்ஸின் பழைய கதைகளில் இருந்த அந்த ஆண்மைமிகு பாத்திரப் படைப்பு மெல்ல மெல்ல தேய்ந்து ஒரு சராசரி கதாநாயகனாகவே இப்போதெல்லாம் உருவாக்கப்படுகிறார்!...

    ReplyDelete
    Replies
    1. // டெக்ஸின் பழைய கதைகளில் இருந்த அந்த ஆண்மைமிகு பாத்திரப் படைப்பு மெல்ல மெல்ல தேய்ந்து ஒரு சராசரி கதாநாயகனாகவே இப்போதெல்லாம் உருவாக்கப்படுகிறார்!... //
      +1

      Delete
    2. டெக்ஸ் இப்போது மாறி கொண்டே வருகிறார் ! தோற்றத்தில் மட்டுமில்லை ! காலத்தின் மாற்றம் ! நாமும் மாறினால் இந்த கதைகள் அற்புதமாய் இருக்கும் ! நான் இப்போது டெக்ஸ் என்று நினைத்தே படிப்பது கிடையாது ! டெக்ஸ் போல ஒருவன் ! கதாசிரியர்கள் தங்கள் எண்ணங்களை பிரதிபளிக்கிறார்களோ !

      Delete
    3. எப்போதும் டெக்ஸ் போகும் இடமெல்லாம் அவரைத் தெரிந்தவர்களே நிறைந்து இருந்தால் போர் அடிக்கும் நண்பர்களே! தெரியாத இடத்தில் அதிரடியாகப் பாய வாய்ப்பை எதிர் நோக்கி தான் வந்த வேலை வெற்றியடைய அடிமேல் அடி எடுத்து வைக்கும் வண்ணமாக இப்போது கதைகளைப் படைக்கின்றனர். இதுவும் கூட நல்லதொரு விஷயம்தான் என்பது அடியேனின் கருத்து. ஹீ ஹீ ஹீ

      Delete
  6. Replies
    1. இந்த மாதம் காவல் கழுகு பற்றி– அண்ணன் தம்பி இடையே ஏற்பட்ட பிரச்சனையை டெக்ஸ் தீர்த்து வைப்பது தான் கதை, வழக்கமான டெக்ஸ் கதையில் இருந்து மாறுபட்ட ஒரு கதை; அதனால் தான் என்னவோ டெக்ஸ்ன் அதிரடி மிகவும் குறைவு. பல இடம்களில் யதார்த்தமான நாயகனாக காட்டி உள்ளனர். குறிப்பாக’ அண்ணன் தம்பி இடையே சமாதானம் செய்யும் போது, சாட்சி பல்டி அடிக்கும் போது; வயது ஏற ஏற அனுபவம் டெக்ஸ்க்கு பொறுமையை கற்று கொடுத்து விட்டதோ என நினைக்க தோன்றுகிறது. இன்னும் கொஞ்ச நாளில் இவரும் நமது யதார்த்த நாயகர்கள் பட்டியலில் சேர்த்து விடுவாரோ என பயமாக உள்ளது.

      கதையின் அடிப்படை கரு, இப்போதும் நமது அரசியல்வாதிகள் தங்கள் பினாமிகள்/குடும்ப நண்பர்கள் பெயரில் நடத்தும் தொழிலில் ஏற்படும் தவறுகளை மறைக்க அப்பாவிகள் மேல் பலி போடும் விஷயத்தை ஞாபகபடுத்துகிறது.

      ஓவியம்களில் டெக்ஸ்சை அருகே காண்பிக்கும் இடத்தில் நன்றாக உள்ளது, தூரத்தில் காண்பிக்கும் போது, வேறு நபர் மாதிரி உள்ளார் (இது நமது தவறு ஒன்றும் இல்லை). இந்த கதையில் அனைத்து படம்களும் சுருக்கி சிறியதாக்கி உள்ளது போல் எனக்கு தோன்றுகிறது. இந்த கதை வண்ணத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்.

      மொத்தத்தில் சுமாரான கதை, யதார்த்தமான ஒரு கதையை படித்த உணர்வு. அதே போல் இந்த புத்தகத்தின் ரூ.35 விலை எனும் போது நிறைய பேர் வாங்க வாய்புகள் அதிகம். இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டும் என்பது எனது ஆவல்.

      சம்மந்தம் இல்லாத ஒரு கேள்வி: ஆ.அ மற்றும் கா.க புத்தகத்தில் மேலும் கீழும் சுமார் ¾” (மொத்தம் 1 1/2 “) விடப்பட்டு இருந்தது, இதனை வேறு வழியில் உபயோகபடுத்த முடியும்மா?

      Delete
  7. உங்கள் முதல் பத்தி உங்களது சந்தோசம் கண்டு தாள முடியாத சந்தோசம் என்னுள் ! நீங்கள் மொழி பெயர்த்த போது எந்த அளவிற்கு குழப்பங்கள் இருந்ததோ , அது போன்றே ஒவொரு வரியையும் இரண்டு முறை படித்த பின்னரே தாண்டி செல்ல முடிந்தது ! ஆனால் படிக்க படிக்க ஜிவ்வென்ற ஒரு உணர்வு ! புத்தகம் படிக்கும் பொது கிடைக்கும் உணர்வுக்கு ஈடானது உங்களது பதிவு ! மீண்டு மொரு அற்புதமான , இன்பமான பயணம் என்னுள்ளே !
    இறந்த காலம் இறப்பதில்லை படிக்கும் ஆவலை , படிக்க எடுத்து கொள்ள போகும் அதிகபடியானே நேரங்களை நினைத்தாலே ஜில்லேங்கிறது !
    அதுவும் அந்த பயணிகள் விமானத்தை மடக்க விரையும் போர் விமானங்களின் காட்சிய பார்க்கும் போது , லாரென்சின் விண்வெளி கொள்ளையரில் ஆகாய விமானங்களை விழுங்கும் பெரிய விமானம் கண்ணில் வந்து செல்கிறது ! இன்று காலை ஏழு மணி உறக்கத்தினூடே அந்த கதைதான் நினைத்து கொண்டிருந்தேன் ! இங்கே பார்த்தால் அதற்க்கினயான காட்சி ! உயிர்பயம் வயிற்றுக்குள் பந்தாய் சுருண்டு நிற்கும் வேலையில் திட சிந்தனைகள் காலாவதியாய் போவதும் இயற்கைதானன்றோ ! அருமை சார் !

    //ஆசாமி வழக்கம் போலவே - புராணம் ; வரலாறு ; இதிகாசம் ; விஞ்ஞானம் என்று எதையும் விட்டு வைக்காமல் அத்தனையையும் சாம்பாராய்க் கிண்டி படைத்திருப்பதை உணர முடிந்தது ! //

    ஹ ஹா ஹா ....மேயாலுமே எனக்கு நிரம்ப பிடித்தது சாம்பார் சாதம்தான் சார் ! அது போல பக்குவமாய் கதை இருக்குமென உங்கள் சாம்பார் வரிகள் உணர்த்தி விட்டன !

    மீண்டுமொரு முறை படித்து விட்டு வருகிறேன் !    ReplyDelete
  8. விஜயன் சார், வி.வி கதையில் தமிழ் ஆக்கம் உங்கள் பெயர் போட்டது போல், கா.க. உங்கள் பெயர் போடாததற்கு ஏதேனும் காரணம் உண்டா?

    ReplyDelete
  9. // அதன் end result உங்களைத் திருப்திப்படுத்தியாக வேண்டுமே !!! நம்பிக்கையோடு நாட்களை நகற்றுவேன்... !! //

    L.M.S கண்டிப்பாக வெற்றி பெறும் அதில் சந்தேகமே வேண்டாம்.

    ReplyDelete
  10. என்ன கொடும சார் இது?! உங்களால் வீட்ல சண்டை! ஞாயிற்றுக்கிழமை அதுவுமா மார்க்கெட்க்கு கிளம்பும்போது எதுக்கும் இங்கே கொஞ்சம் எட்டி பார்ப்போமேன்னு வந்தா வழக்கத்தை விட காலையிலேயே புது பதிவு! ம்ம்ம் அப்றம் என்ன திட்டு வாங்கிட்டு லேட்டா கிளம்பி போறேன்! :)

    ReplyDelete
    Replies
    1. எ'ண்ண' கொடும சார் !
      வீட்டுக்கும் போகாம ......
      அவதான் சொன்னாலே வரும் பொது மறக்காம இதயம் நல்லெண்ண வாங்கிட்டு வாங்கன்னு ....

      Delete
    2. P.Karthikeyan @ இங்கேயும் அதே கதைதான் :-)

      Delete
  11. * அச்சம் தவிர்! *

    வளர்ப்புத்தந்தையின் மீதான பாசத்தால் வன்முறைப் பாதையில் இறங்கும் மங்கூஸ், ஒரே ஒரு உயிரைக் காக்க தான் அமைதி இழக்கச்செய்யப் போகும் குடும்பங்களின் எண்ணிக்கையை எண்ணவேயில்லை...

    குற்றங்கள் தரும் போதையின் மீளமுடியாத அடிமையாகி விட்ட அவன் தன் மரணம் வரை தான் கற்ற பாடத்தை மறக்கவே இல்லை...

    //பயத்தை வென்று விடு...//

    இரத்தப்படலம் தொடருக்கும் இக்கதைக்கும் சில முரண்பாடுகளை உணர முடிகிறது.
    1.

    பக்கம் 8ல் "ஆலன் ஸ்மித்" என்ற பெயரை உச்சரிக்கிறான் மங்கூஸ், ஆனால் அந்தப் பெயர் இந்த கதையின் இறுதியில் ஸ்டீவ் ராலாண்டாக நடிக்கும் மக்லேன் மங்கூஸினால் நெற்றியில் சுடப்பட்டு நினைவாற்றலை இழந்து கடற்கரையில் ஒதுங்கிய பிறகு "ஆபோ ஷாலி" தம்பதியினரால் மக்லேனுக்கு வைக்கப்பட்டதாகும்.

    2.

    பக்கம் 43 ல் சிறுவன் காலினுடன் இருக்கும் தன் மனைவி கிம்மை சந்திக்கிறான் ஸ்டீவ் ராலாண்ட், ஆனால் இரத்தப்படலம் தொடரில் ராலாண்டும் கிம்மும் தனித்து வாழ்ந்ததாகவும், கிம்முக்கு காலின் என்ற மகன் இருப்பது ராலாண்ட் அறியாத ரகசியம் என்பதாகவும் கதை அமைக்கப்பட்டிருக்கும்.!

    3.

    பக்கம் 54 ல் படகுக்கு தானாக வரும் மக்லேன் கண்ணில் பட்டதும் சுடுகிறான் மங்கூஸ்...
    இரத்தப்படலம் தொடரிலோ [ பாகம் 8 ] கிம் மக்லேனை படகுக்கு அழைத்து வந்ததாவும், கிம் துரோகம் செய்தது தெரிய வந்ததும் மக்லேன் கொதிப்படைந்து ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் வரும்,...

    ஒரு பெரும் தொடரை மையமாகக்கொண்ட இக்கதையில் இவ்வகையான முரண்களை எப்படி அனுமதித்தார்களோ???

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஞாபகசக்தி என்னை வியக்க வைக்கிறது நண்பரே! என்னிடம் நேற்று படித்த கதையில் வரும் நபர்களின் பெயரை கேட்டால் கூட சரியாக சொல்ல தெரியாது :-)

      Delete
    2. கூர்மையாக அனுபவித்து படித்துள்ளீர்கள் நண்பரே ! இதனை ஆசிரியர் அவர்கள் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும் !

      Delete
    3. காமிக்ஸ் பண்டிட் ஜி!

      Delete
  12. பூம் பூம் ப. - இன்னும் படிக்கவில்லை, ஆனால் அந்த கதையில் வரும் ஸ்டேஷன் மாஸ்டர் படும்பாடு சிரிப்பின் உட்சம்; மறக்கமுடியாத ஒரு கதாபாத்திரம்.

    புரட்சி தீ;- சமிபத்திய மறு பதிப்பு படித்தேன்... (ஒரிஜினல் படிக்கவில்லை) பக்கத்திற்கு பக்கம் சிரிப்பு தோரணம். சண்டை நடந்து கொண்டு இருக்கும் போது குறிப்பு எடுத்து லக்கி-லூக்ன் தந்திரம்களை வெளி இடுவது எல்லாம் வாய்விட்டு சிரித்த இடம்கள். என்னை மிகவும் கவர்ந்த கதை.

    ReplyDelete
  13. டியர் எடிட்டர்ஜீ!!!

    இம்மாதம் வந்துள்ள நான்கு இதழ்களும் மிக அருமை.அச்சுத்தரத்திலும், பைண்டிங்கிலும் இரு இத்தாலிய இதழ்களும்,அசரவைக்கும் அட்டைப் படங்களோடு இரு பெல்ஜிய இதழ்களும் தூள் பரத்துகின்றன.கதைகளை பொறுத்தவரை இது முதல்,இது இரண்டாவது என்று வரிசைப்படுத்த அவசியப்படாத அளவிற்கு நான்கு கதைகளும் முதலிடம் வகிக்கின்றன.இம்மாதிரி ஒரு பேக்கேஜ் அமைவது ஒரு அபூர்வமே!

    டெக்ஸ் கதை சிறிதென்றாலும் சோடை போகவில்லை.கால்நடை திருட்டு என்ற புராதன கான்செப்டில் இன்னும் ஆயிரம் கதைகள் வந்தாலும் நமக்கு சலிக்காது போலும்.கதையும் புராதனம் என்பதால் டெக்ஸின் முகத்தை அடையாளம் கண்டறிவது சற்று சிரமமாகவே உள்ளது.

    அறிமுக ஆசாமியான மேஜிக் விண்ட் எதிர்பார்ப்பு அதிகமில்லாமல் வந்து நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார்.இவரது கதைவரிசையில் 130 கதைகள் உள்ளதால் முடிந்தவரை நல்ல ஆக்சன் கதைகளாக தேர்வு செய்து வெளியிட கோருகிறேன். ராணுவ வீரரான இவரை கௌ-பாய் ஹீரோ என்று நீங்கள் குறிப்பிட்டது ஏனோ...?

    லக்கியின் பூம்-பூம் படலம் முதல் பதிப்பு 19 ஆண்டுகளாக என் பீரோவில் உள்ளது. வருடத்திற்கு நான்கு முறையாவது எடுத்து படித்து விழுந்து விழுந்து சிரிப்பது அடியேனின் வாடிக்கை.வண்ண மறுபதிப்பு அட்டை டு அட்டை அமர்களமான தயாரிப்பு.புதிதாய் படிக்கும் வாசகருக்கு ஒரு அருமையான நகைச்சுவை விருந்து இந்த பூம்-பூம் படலம்.

    விரியனின் விரோதியான கீரிப்பிள்ளையின் கதை ரியலி பெண்டாஸ்டிக். கூலிக்கு கொலை செய்யும் ஒரு கொலையாளிக்கும் ரசிக்கவைக்கும் ஒரு பிளாஸ்பேக் சாத்தியமே என்பதை கதாசிரியர் டோரிசன் நிரூபித்திருக்கிறார்.ஓவியர் ரால்ப் மேயரும் அவருக்கு பக்கபலமாக நின்று கதையை விருவிறுப்பாக்கியிருக்கிறார்.மங்கூஸின் சிறுவயது தோற்றம் நம்பமுடியாத அளவு அற்புதமாக வரைந்திருக்கிறார்.உங்கள் மொழிபெயர்ப்பு வில்லனைக்கூட நாயகனாக்கும் வல்லமை கொண்டது!

    ஆனால் ஒரு சின்ன லாஜிக் மீறல் உங்கள் வசனத்தில் இருக்கிறது. நண்பர்கள் யாரேனும் சுட்டிக்காட்டுவார்கள் என்று பார்த்தால் யாருமே அதை கவனிக்கவில்லை.பக்கம் 31-இல் மங்கூஸ் இந்திய வர்த்தகரிடம் "கபில்தேவின் ஆட்டம் படு அட்டகாசம்" என்கிறார்.இக்கதையின் மேற்படி சம்பவம் நடக்கும் காலக்கட்டம் 1950-களின் இறுதியில் (என யூகிக்கிறேன்).கபில் தேவ் அப்போது கைக்குழந்தையாக மட்டுமே இருந்திருப்பார்.ஏனெனில் அவர் பிறந்த வருடம் 1959!!!

    ReplyDelete
    Replies
    1. // உங்கள் மொழிபெயர்ப்பு வில்லனைக்கூட நாயகனாக்கும் வல்லமை கொண்டது! //
      +1

      Delete
  14. சார் ...." கிராபிக் நாவலுக்கே " என்றே இந்த பதிவு ஆனதில் .......

    30 வது ஆண்டு மலரில் .....

    பலத்த முன் எச்சிரிக்கை உடன் தான் "இறந்த காலம் இறப்பதில்லை " கதையை .......

    படிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது

    சந்தோஷத்தில் தானா அல்லது ......பயத்தினாலா .....

    சொல்ல முடிய வில்லையே ....... :-)

    ஆனால் ஒன்று .....எப்பொழுதும் பல கதைகள் ஒன்றாக வரும் பொழுது "பிடிக்காத கதை " என தோன்றும் கதைகளை முதலில் படிப்பதும் பிறகு பிடித்ததை படிப்பதும் வழக்கம் .ஆனால் இம்முறை நீங்கள் வெளி இடும் வரிசையில் தான் படிக்க வேண்டும் என்ற முடிவு . காத்திருக்கிறேன் .

    ReplyDelete
  15. அட்டகாசமான பதிவு!! உண்மையிலேயே என்னை சிவகாசியின் உங்களது மேசைக்கே இட்டு சென்றுவிட்டது.உண்மையில் ஒரு அட்டகாசமான எழுத்து நடை!!

    முன்னோட்டங்கள் என்னை ஆர்வ கோளாறு ஆறுசாமியாக மாற்றி விட்டுள்ளது!!
    இன்னும் தங்க தலைவனை பற்றி ஒரு தகவலும் இல்லயே சார்????

    ReplyDelete
  16. இறந்தகாலம் இறப்பதில்லை முன்னோட்டம் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது . கதை இரட்டை கோபுர தாக்குதல் பற்றியதா?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ....விமானம் இடம் பெரும் கதை முன்னோட்டம் ஜூலியா சாகசம் ..

      "விண்ணில் ஒரு விபரீதம் "

      முதலில் காண படும் பக்க முன்னோட்டம் மட்டுமே " இறந்த காலம் இறப்பதில்லை " எனும் கிராபிக் நாவல் ...

      Delete
    2. //கதை இரட்டை கோபுர தாக்குதல் பற்றியதா?//
      அது ஒரு பன்ச் என்று நினைக்கிறேன் நண்பரே !

      Delete
  17. எடிட்டர் சார்,

    LMSன் பணிகளை முடித்துவிட்டு நீங்கள் ஆனந்தக் கூத்தாடுவது எங்களையும் குதூகலப்படுத்துகிறது. அதுவும் இந்தமாதம் இருபதாம் தேதியே புத்தகம் முழுமையடைந்தவிடும் என்பது ஆச்சர்யம்!! நீங்கள் ஏன் 21ம் தேதியே LMS வெளியீட்டு விழாவை வைத்துக்கொள்ளக்கூடாது? சிவகாசியிலேயே என்றாலும் ஓகே தான்! மேற்க்கொண்டு இருவாரங்கள் நாங்கள் காத்திருக்க வேண்டியதிருக்காதில்லையா?

    'இறந்த காலம் இறப்பதில்லை' பற்றிய உங்களது அனுபவங்களைப் படித்தபோது படு சுவாஸ்யமாய் ஒரு கிராபிக் நாவலைப் படித்ததைப் போல இருந்தது. என்ன ஒரு விவரிப்பு! என்ன ஒரு எழுத்து நடை!! காவல் கழுகில் உங்கள் ஹாட்லைனையும், சி.சி.வயதிலையும் காணாத கடுப்பிலிருந்த என்னைப் போன்றவர்களுக்கு உங்களின் இப்பதிவு சற்றே ஆறுதல் கொடுத்திருக்கிறது என்பேன். எங்களுக்காக உங்களின் இந்த அதிகாலைப் பதிவுக்கு நன்றி!

    சாத்தான்ஜி கூறியுள்ளதுபோல,சென்ற மாத நான்கு இதழ்களும் வரிசைப் படுத்த இயலாத அளவுக்கு ஒன்றுக்கொன்று பட்டையைக் கிளப்பியுள்ளன. எனினும் முதல் இடத்தை எதற்கு அளிப்பீர்களென என்னை யாராவது வற்புறுத்திக் கேட்டால் (அப்படி யாருங்க கேட்கப்போறாங்க; நானாகச் சொல்ல வேண்டியதுதான்!) நிச்சயம் என் பதில் 'விரியனின் விரோதி'யே! அப்பப்பா என்னவொரு கதைக்களம்! ஸ்தம்பிக்கச் செய்யும் வசனங்கள்!! உணர்வுகளை அழகாகப் பிரதிபலிக்கும் சித்திரங்கள்!! பல இடங்களில் 'மொழிபெயர்ப்பு' நிகழ்த்தியிருக்கும் ஜாலங்கள் விவரிக்க இயலாதவை!! இப்படியொரு வாசிப்பு அனுபவத்தை வழங்கிய உங்களுக்கும், பின்புலத்தில் உழைத்த பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்!!

    ReplyDelete
  18. வழக்கமாக கிராபிக் நாவல் படித்து விட்டுத்தான் குழம்பிய நிலையில் ஒரு 2அல்லது 3நாட்கள் ஓடும் சார். ஆனால் இப்போது அதைப்பற்றிய பதிவை படித்து விட்டே அவ்வாறு ஆகிவிட்டது சார். ஆனால் lmsஐ லயனின் the best special ஆக வெற்றி பெறச் செய்ய அதில் இடம்பெற இருக்கும் ஒவ்வொரு கதையையும் நீங்கள் இவ்வளவு சிரத்தையுடன் செதுக்குவது மிக தெளிவாக தெரிகிறது சார். மெஸ்ஸி, அர்ஜென்டினா அணியின் முதல் 4ஆட்டங்களிலும் மேன்ஆப் த மேட்ச் சார். lmsன் 10கதைகளிலும் அது நிச்சயமாக நீங்கள் தான் சார். மெஸ்ஸிக்கு ஜூலை 13ல் உலக கோப்பை. எங்களுக்கு ஆகஸ்ட் 2ல்!.

    ReplyDelete
  19. ஒரே வாராத்தில் தமிழ டைப்பிங் பழகுவது எப்படி?
    இன்னொரு தடவை பதிவை படிக்க வேண்டும்.எங்களுக்கு சாக்லேட் ஐஸ்கீறிம் உங்களுக்கு வியர்வை,தலைவலி!!!

    ReplyDelete
  20. ***********************************
    சில புத்தங்கங்கள் இணையத்தில் விட புத்தகத்தில் அதன் அட்டைப்படங்கள் அட்டகாசமாக இருக்கும் .சில புத்தகம் இங்கே பார்த்ததை விட கொஞ்சம் மாற்று குறைவாக இருக்கும் .இதில் " விரியனின் விரோதி " இரண்டாம் வகை என்பது என் தனி பட்ட கருத்து .பட் கதை கலக்கலாக இருக்கிறது என்பது இங்கே வரும் விமர்சனத்தில் அறிய முடிகிறது .இன்று தான் படிக்க வேண்டும் .

    சந்தேகம் 1 : "கிராபிக் நாவல் " என்றாலே சித்திரம் "இயற்கையாக " இருக்க கூடாது என்பது விதியா ? & :-) (விரியனின் விரோதி கொஞ்சம் பரவாயில்லை தான் )

    சந்தேகம் 2 : " கிராபிக் நாவல் " என்றாலே கதைகளை தவிர உங்கள் பங்கோ...., வாசகர் பங்கோ இருக்ககூடாது என்பதும் விதியா ? (அட்லீஸ்ட் அந்த..அந்த ...கிராபிக் கதைகளை பற்றிய தங்கள் எண்ணத்தை ஆவது இதழ்களில் பதியலாமே ...? )

    *************************************
    " பூம் பூம் படலம் " என்னிடம் உள்ள புத்தகம் என்பதாலும்.....பக்கம்மாக வந்த இதழ் என்பதாலும் ( 19 வருடம் என்பது பக்கமாக உள்ளதா என்ற எண்ணமும் புரிகிறது ) ஆவல் சற்று கம்மி தான் .ஆனால் கைகளில் அந்த இதழ் கிடைத்தவுடன் அதன் அளவும் ....அட்டைப்பட தரமும் ...அழகான அச்சு தரமும் ....மிக சிறந்த நகைசுவை கலந்த இந்த கதையும் எனது ஏமாற்றத்தை போக்கி விட்டது .முன்னர் வந்த தரத்திற்கு "பரிகாரம் " போல இந்த மறுபதிப்பை வெளி இட்டு உள்ளீர்கள். பாராட்டுகள் .படித்த எனக்கே இவ்வளவு சந்தோசம் என்றால் இது வரை படிக்காத நண்பர்களுக்கு "பூம் பூம் படலம் " டபுள் கொண்டாட்டம் ..

    ReplyDelete
  21. காவல் கழுகு ..,ஆத்மாக்கள் அடங்குவதில்லை ....இரண்டும் நேற்று படித்து முடித்தாகி விட்டது சார் .

    டெக்ஸ் சாகசம் " கடுகு " போல தோன்றினாலும் "காரம் " குறைய வில்லை .இந்த முறையும் ஏமாற்ற வில்லை எங்கள் தலை .இந்த சாகசத்தில் "டெக்ஸ் " மிக இளமையாக இருக்கிறார் .அதனால் தான் என்னவோ பல இடங்களில் "டெக்ஸ் " போலவே தோன்ற வில்லை :-)

    ஆத்மாக்கள் அடங்குவதில்லை அருமை .இனி வரும் சாகசம் இன்னும் அதகள படுத்தும் என்று நம்புகிறேன் .மொத்தத்தில் இந்த மாதம் வந்த நான்கு இதழ்களும் ஏமாற்ற வில்லை .வாழ்த்துகள் .

    நான்கு இதழ்களில் என்னை கவர்ந்த அட்டைப்படங்கள் 1 ) காவல் கழுகு 2) விரியனின் விரோதி 3 ) பூம் பூம் படலம் 4) ஆத்மாக்கள் அடங்குவதில்லை ..

    இந்த மாத நான்கு இதழ்களையும் கண்டவுடன் எனக்கு தோன்றிய எண்ணம்

    பெரிய சைசில் வந்த இதழ்களை விட நமது பழைய லயன் சைசில் வந்த காவல் கழுகு ..,ஆத்மாக்கள் அடங்குவதில்லை இரண்டும் மனதை கவர்கின்றன .காரணம் என்னதான் பெரிய சைஸ் என்றாலும் அது பக்க குறைவால் "குட்டி " புத்தகமாக தான் தோன்றுகிறது .ஆனால் காவல் கழுகு போன்ற இதழ்கள் "குண்டாக "தோன்றுவதால் எனது ஓட்டு சின்ன சைசில் வந்த "சின்ன குண்டு "புத்தங்களுக்கு தான் .மாதம் ஒரு புத்தகமாவது இப்படி வெளி வர வேண்டும் என்று எங்கள் போராட்ட குழு சார்பாக வேண்டி கொள்கிறோம் சார் .

    அடுத்து இந்த மாத இதழ்களில் மிக பெரிய குறையும் உண்டு .ஒன்றுக்கு நான்கு புத்தங்கள் .அதிலும் ஒன்றுக்கு இரண்டாக லயன் காமிக்ஸ் வந்தாலும் "பில்லர் பேஜ் "பக்கங்கள் மிகவும் கம்மி என்பதுடன் "சிங்கத்தின் சிறு வயதில் " தொடரை இந்த மாதம் காணாமல் போக செய்ததால் ஆசிரியருக்கு எங்கள் போராட்ட குழு சார்பாக "கண்டனத்தையும் " தெரிவித்து கொண்டு

    அடுத்த 30 வது ஆண்டு மலருக்கு வருகை தர ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறோம் .நன்றி .

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் ..மன்னிக்க வேண்டும் .. மே ல் உள்ள இரண்டு பதிவுகளும் மீள் பதிவு .

      காரணம் ஆசிரியர் பழைய பதிவில் "புத்தகம் வந்தவுடன் இப்பொழுது எல்லாம் நண்பர்கள் இங்கே கருத்துரைப்பது இல்லை என்ற எண்ணத்தை எடுத்துரைந்து இருந்தார் .எனது விமர்சனம் " தாமதம் " ஆனதால் அவர் பார்வைக்கு அங்கே காண கிடைத்ததா என்ற சந்தேக நோக்கில் ...

      மீண்டும் இங்கே ....

      மீண்டும் மன்னிக்க ....

      Delete
  22. விஜயன் சார், மீண்டும் ஒரு அருமையான பதிவு. வாசகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாவதை உணர்ந்து முன் எப்பொதும் இல்லாவன்னம் ஒரு கதையின் மொழி பெயர்ப்புக்கு நீங்கள் எடுத்து கொள்ளும் சிரமம் வியக்கவைக்கிறது; இது மிகவும் பாராட்ட கூடிய விஷயம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //வாசகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாவதை உணர்ந்து முன் எப்பொதும் இல்லாவன்னம் ஒரு கதையின் மொழி பெயர்ப்புக்கு நீங்கள் எடுத்து கொள்ளும் சிரமம் வியக்கவைக்கிறது;//
      பரணி ஆசிரியரின் பதிவுகளை படித்த பின்னர் இன்னும் எதிர்பார்ப்பு வாரா வாரம் ஆரவாரமாய் கூடிகொண்டே செல்கிறது !

      Delete
    2. கதைக்கே இவ்வளவு மெனக்கெடல் எனில் அதனை தாங்கி வரும் அட்டை படம் எத்தனை மாறுதல்களை சந்தித்ததோ ! இளையராஜாவிடம் திருப்தி படாமல் ஏகப்பட்ட டியூன்களை வாங்கிய பாரதி ராஜாவாக ஆசிரியரும் மாலயப்பனும் கண்முன்னே தெரிகின்றனர் ! சார் அட்டை படங்களை எப்போது வரிசை படுத்த போகிறீர்கள் !

      Delete
  23. அனைத்து அட்டை படங்களும் அருமையாக உள்ளது....

    Lucky: ஏற்கனவே படித்தது தான் ஆனால் கதை நினைவில் இல்லை...புதியதாக கலரில் படிப்பது மகிழ்ச்சி...கதை, அதிரடி காமெடியில் தோய்வில்லாமல் படு வேகத்தில் செல்கிறது.....Station master மனதை விட்டு நீங்க கொஞ்ச நாள் ஆகும்...பாவம் மனிதர்....டால்டன் சகோதரர்களின் ஆட்டூழியும் அதகளம் படுத்துகிறது..
    FB: இரண்டு இடத்தில் வசனம் balloon தவறுதலாக இடம் மாறி இருந்தது....

    Tex: எளிமையான கதை என்றாலும், படு வேகமாக கதை செல்கிறது....படித்து முடித்ததே தெரியவில்லை.....எனக்கு பிடித்து இருக்கிறது....
    FB:சில இடங்களில் டெக்ஸ் முகம் வேறு போல் உள்ளது...

    Magic Wind: Magic Wind ன் அமைதி & ஆக்ரோஷம் கவர்கிறது. அவரின் நினைவாற்றல் திரும்பும் விதமும், அவர் பழிவாங்கும் விதமும் வித்தியாசமாக உள்ளது, அவரின் இந்த செயல்முறை அவரை மற்ற Hero க்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது....அவர் எதிரியை தண்டிக்கும் விதமும், அவரின் நண்பர்களின் ஆத்மாவை சாந்தபபடுத்த, எதிரியை ஆத்மாகளின் கையில் விடுவதும், அவரின் அடுத்த கதையை எதிர்பார்க்க வைக்கின்றது....கருமை நிறம் உறுததினாலும், கதையின் தன்மையோடு ஒன்றி போவதால் ரசிக்க முடிகிறது...

    Mangoose: XIII ன் 18 பாகத்திலும் இருந்த சுவாரசியம் குறைய கூடாது என்ற கவனத்தோடு Mangoose ன் flashback உருவாக்க பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது...கொலையின் நாயகனாகவே பார்த்த Mangoose ஐ, உறவின் மேல் பாசம் உள்ளவனாகவும், அந்த உறவிர்க்காக அவன் எடுக்கும் முயற்சிகளும், அதன் காரணமாக அவன் பாதை மாறி செல்வதும் அருமையாக சித்தரிக்க பட்டுள்ளது. ஒரு கொடூரமான கொலைகாரனையும் நாம் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கும் விதத்தில் கதை சொல்லி இருப்பது பாராட்டூதலுக்குறியது....
    FB: அழகான XIII ஐ, இரண்டு இடத்திலும் யாரோ போல் வரைந்து இருப்பது ஏற்கமுடியவில்லை..

    மொத்தத்தில், அனைத்து கதையும் வெவ்வேறு விதத்தில் அமைந்து உள்ளது. So இதை வரிசைப்படுத்த இயலவில்லை என்னால்....என்னை பொருத்தவரை, அனைத்தும் முதலிடம் தான்....
    CLAP CLAP CLAP CLAP CLAP CLAP CLAP

    ReplyDelete
  24. அருமையான பதிவு, உங்களின் இந்த விளக்கங்கள், நாங்களும் உங்களுடன் அருகே இருந்து மொழிபெயர்ப்பு செய்வதை போன்று உணர்வை ஏற்படுத்துகிறது....LMS எப்பொழுது கைக்கு கிடைக்கும் என்று மனம் ஏங்குகின்றது...

    ReplyDelete
  25. ///30 ஆண்டுகளும், நிறைய நரைமுடிகளும் என் பக்கபலமாய் உள்ள போதிலும், ஒவ்வொரு புதுத் துவக்கத்தின் போதும் நான் ஒரு மாணவனாய்த் தான் நிற்கிறேன் என்பதே இந்தப் பயணத்தை இத்தனை சுவாரஸ்யமாய்க் கொண்டு செல்ல உதவிடும் மந்திரம் என்று சொன்னால் அது மிகையாகாது !///
    100% correct sir

    ReplyDelete
  26. Since u have mentioned Batman and Joker is it possible to publish them in our comics again .. At least the old ones in sunshine library ..

    ReplyDelete
  27. இத்தாலிய 3 B/W கதைகளும் தாங்கள் தயார் செய்ய தலைச் சுற்றிப் போயுள்ள நிலையில், அதை நாங்கள் படிக்கப்போகும் வேளையில் தலை தப்புமா என ஒரே உதறலாகவுள்ளது? சீக்கிரம் ஐஸ்கிரீம் உருகுவதற்குள் பருக வேண்டுமே என்ற ஆவல் அடக்க முடியவில்லை...? அப்படியே, அந்த பெல்ஜிய சாக்லேட்டையும் கொஞ்சம் கண்ணில் காட்டுங்க சார், சீக்கிரம்.

    LMS-ல் ‘மின்னும் மரணம்’ ஜனவரி ‘15ல் / முழுவண்ணத்தில் / மறுபதிப்பாக அட்டகாசமாக வருகிறது! என்ற ட்ரைலரை இடம் பெறச் செய்யுங்கள்.? மி. ம. ட்ரைலருக்கு LMS-ல் தான் நல்லதொரு ஒபெனிங்கா அமையும்!

    ReplyDelete
  28. நண்பர்களே, தற்போதுதான் ஆ.அ. படித்து முடித்தேன்; வித்தியாசமான கதைகளம், கதை சொல்லும் யுக்தி. இவரின் கதைகளை வருடம் 3 கதைகளாவது நமது இதழில் வருமாறு பார்த்து கொள்ளுங்கள் விஜயன் சார். இந்த வருடத்தில் அருமையான கதை தேர்வு.
    இந்த மாதம் இதுவரை படித்த 3 கதைகளை வரிசை படுத்த சொன்னால்
    1.ஆ.அ
    2.வி.வி
    3.கா.க

    ReplyDelete
  29. நல்லவேளை நண்பர்களே.. நான் அந்த வயிறு புடைத்த பெண்மணிதான் ஜூலியா என்று...

    ReplyDelete
    Replies
    1. எந்த சந்தர்ப்பத்திலும் தாய்மை

      மாண்புடையதுதானே தோழரே !

      Delete
    2. எந்த சந்தர்ப்பத்திலும் தாய்மை

      மாண்புடையதுதானே தோழரே !

      Delete
    3. அது ஜூலியாவோட அம்மா இல்லையா ..........?
      நான் கூட வயிற்றினுள் உள்ளது குட்டி ஜூலியானு ............................ஹி ஹி

      Delete
  30. விஜயன் சார், ஈரோடு புத்தக திருவிழாவில் நமது ஆண்டு மலர் வெளி இடும் நேரம் பற்றி தெரிவிக்க முடியுமா?

    நண்பர்களே, 2-தேதி மதியம் புத்தக திருவிழாவுக்கு வருகிறேன், அன்று இரவே பெங்களூர் திரும்புகிறேன். உங்கள் அனைவரையும் காண ஆவலுடன் :-)

    ReplyDelete
  31. இரண்டு கதைகளின் சித்திரங்களையும் பார்த்தால் விண்வெளியில் ஒரு விபரீதம் உயிர் துடிப்புடனும்,அற்புதமாகவும் இருப்பது தெரிகிறது.ஆகஸ்ட் 2 எப்போது வரும் ?

    ReplyDelete
  32. ) effort (

    டியர் விஜயன் சார்,

    தற்போது பதிவிடப் பட்டுள்ள 53 பின்னூட்டங்களில் - 5 பின்னூட்டங்கள் சென்ற பதிவிலிருந்து மீள்பதிவு செய்யப்பட்டவை. 3 விமர்சனப் பதிவுகள் உங்களின் புதிய பதிவுக்காக காத்திருந்து, பதிவிடப்பட்டவை. இதன் மூலம் எனக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது இங்கே பதிவிடப்படும் பின்னூட்டங்கள் யாவும், தங்களின் கவனத்தை ஈர்க்காத பட்சத்தில் - அதற்காக அந்தந்த வாசகர்கள் அளித்துள்ள பங்கு கேள்விக் குறியாக மாறிவிடுகிறதோ என்ற எண்ணம், பின்னூட்டமிட்ட அனைவருக்குள்ளும் எழுவதை என்னால் உணர முடிகிறது.

    தன் ஆபிஸ் மற்றும் சொந்த வேலைகளைக் கடந்து, தன்னுடைய பங்களிப்பை இங்கு அளிப்பதை பல வாசகர்கள் பெருமையாக கருதுகின்றனர் ; அந்த பங்களிப்பில் தங்களின் பார்வையும் படரும் போது அவர்கள் பெருமிதம் அடைகிறார்கள் என்பதை யாராலும் மறுக்க இயலாது என்பது என் கருத்து. இங்கு பதிவிடப்படும் கருத்துகள் யாவும் தங்களுடைய முதல் மரியாதையை - உங்களின் கவனத்திற்கு மட்டுமே வழங்க ஒவ்வொரு புதிய பதிவிலும் காத்திருக்கின்றன ; வேலைப்பளுவால் நீங்கள் படிக்காதப் பட்சத்தில், பின்னூட்டமிட்ட வாசகர்கள் அனைவரும் தங்களின் ஆர்வத்தில் கொஞ்சம் இழக்கிறார்கள் என்பது கண்கூடு !

    நான் கூட சென்ற பதிவில், ஜூலை top five ! - countdown ; காவல் கழுகு விமர்சனம் என்றெல்லாம் நிறைய பின்னூட்டம் பதிவிட்டிருந்தேன். நாம் எழுதுவதை யாருமே படிக்காவிட்டால் - எழுதுவது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் சார் :)

    கொஞ்சம் பெரிய மனசு பண்ணி நேரம் கிடைக்கும் போது, தங்களின் ஒவ்வொரு பதிவிலும் வரும் பின்னூட்டங்களை ஒரு முறையாவது தாங்கள் படிக்க வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள். இந்தப் பதிவை எனக்காக பதிவிடவில்லை - மாறாக அனைத்து அன்பான புள்ளை குட்டிக்கார வாசகர்கள் சார்பாகவும் இந்தக் கோரிக்கையை தங்களிடம் சமர்ப்பிக்கிறேன். நன்றி சார் !

    PS :ஏற்கனவே சென்ற பதிவில் உள்ள பின்னூட்டங்களை தாங்கள் படித்திருந்தால் மன்னிக்கவும். போலவே தாங்கள் படித்ததை புதிய பதிவில் சிறு குறிப்பாக உணர்த்தினால் அனைவருக்கும் சற்று ஆறுதலாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து !

    ReplyDelete
    Replies
    1. //3 விமர்சனப் பதிவுகள் உங்களின் புதிய பதிவுக்காக காத்திருந்து, பதிவிடப்பட்டவை.//
      Perfect analysis....

      Delete
    2. மிஸ்டர் மரமண்டை !

      எனக்கு என்னவோ எல்லாருடைய

      பதிவுகளையும் எல்லாரும் படிக்கின்றனர்

      என்றே தோன்றுகிறது !

      பதில் எழுத ஆசிரியர் உட்பட

      அனைவரையும் இடையூறு செய்வது

      கழுத்தை நெறிக்கும் பணி பளுவும்

      நேர பற்றாக்குறையும் மட்டுமே !

      அலுவல் உங்களை தமிழ் தேசம்

      விடுத்து மலையாள கடற்கரையோரம்

      வாசம் செய்ய வைக்கவில்லையா ?

      முந்தைய பதிவுக்கு முன் பதிவிலேயே

      பாதியில் திடீரென மாயமாகி

      விட்டீர்கள் !

      மிக நீண்ட பதிவுகளையும் விரிவான

      விமர்சனங்களையும் முன்

      வைப்பவர்களில் முக்கியமானவர்களில்

      நீங்களும் ஒருவர் ! உங்களையே

      பணிச்சுமை விட்டு வைக்கவில்லையே !

      போனவாரம் பலபேருக்கும் புக்ஸ்

      படிக்கவே நேரம் போதவில்லை என

      எழுதி இருந்தார்களே !

      நீங்கள் நிறைய எழுதுங்க !

      அப்புறம் ..... காவல் கழுகு விமர்சனம்

      தனில் இன்னும் பாரை விட்டு நீங்கள்

      வெளியே வரவேயில்லை !

      ம்...ம் ..எரணாகுளத்தில் நல்ல மழையா ?

      Delete
    3. selvam abirami :

      :-)

      மீண்டும், வரும் வெள்ளிக் கிழமையில் இருந்து ஊரில் இருக்க மாட்டேன் நண்பரே.. சிஸ்டம் மூலமாகவே கமெண்ட் போட்டுப் பழகி விட்டதால், மொபைல் மூலம் கமெண்ட் போடுவதில்லை. அதுவே நீண்ட இடைவெளிக்கான காரணமாக அவ்வப்போது அமைகிறது :))

      Delete
  33. டியர் சார்,

    LMS -ன் (குண்டோ குண்டு) புக்கின் தயாரிப்பு பணிகள், வரும் ஜூலை 20-க்குள் தயாராகி விடும் என்ற தங்களின் அறிவிப்பு - காமிக்ஸ் வாசகர்களான எங்களையும், சந்தோஷத்தில் தையத்தக்க வென்று ஒரு குத்தாட்டம் போடலாமா என்று காலையில் யோசிக்க வைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் கேலியாக நினைத்து விடுவார்களோ என்ற நினைப்பில் ஈஈஈ என்ற இளிப்பு கூட காணாமல் போய்விட்டது :)

    LMS பணிகள் அனைத்தும் இறைவன் அருளால் நல்லபடியாக நடந்தேறி, விற்பனையில் சரித்திரம் படைக்க வாழ்த்துகிறோம் விஜயன் சார். இரண்டே மாதத்தில் அனைத்து LMS புத்தகங்களும் விற்று புதிய சாதனைப் படைக்க வேண்டும் என்பதே என் ஆசை. புத்தக கையிருப்பு குறைந்து, பேங் கையிருப்பு அதிகமாக - இந்த ஈரோடு புத்தகக் கண்காட்சி அமையவேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறோம். ​ _/\_

    ReplyDelete
  34. LMS விருந்து வாசனை மூக்கை துளைக்கிறது! கமல்ஹாசன் கையாளும் சரித்திர (கடந்த) கால சம்பவங்களின் நிகழ்கால பிரதிபலிப்புகள் நம் காமிக்ஸ் or graphic novelயும் விட்டு வைக்கவில்லை என்று நன்றாக புரிகிறது ! புது முயற்சிகள் வெல்லட்டும் ! LMSல் பெரிதும் பேசப்பட்டு மனதை கவரபோவது B&W பக்கங்கள் என்பது என் கணிப்பு ! LMS விற்பனையிலும் சாதனை படைத்து SHS விற்பனை record செய்யப்படும் என நம்புகிறேன் !

    ReplyDelete
  35. LMS விருந்து வாசனை மூக்கை துளைக்கிறது! கமல்ஹாசன் கையாளும் சரித்திர (கடந்த) கால சம்பவங்களின் நிகழ்கால பிரதிபலிப்புகள் நம் காமிக்ஸ் or graphic novelயும் விட்டு வைக்கவில்லை என்று நன்றாக புரிகிறது ! புது முயற்சிகள் வெல்லட்டும் ! LMSல் பெரிதும் பேசப்பட்டு மனதை கவரபோவது B&W பக்கங்கள் என்பது என் கணிப்பு ! LMS விற்பனையிலும் சாதனை படைத்து SHS விற்பனை record break செய்யப்படும் என நம்புகிறேன் !

    ReplyDelete
  36. ரசனைகளின் வரையறை ஒவ்வொரு

    தனி நபருக்கும் வித்தியாசமானது !

    அதனால்தானோ என்னவோ டெக்ஸ்

    இந்த முறை எதிர்பார்ப்பை நிறைவு செய்ய

    வில்லை என எழுதுவதில் தயக்கமில்லை !

    Legends -க்கு உள்ள பிரச்சினை இதுதான் !

    ஒவ்வொரு முறையும் மீறுகின்ற

    எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் !

    பொதுவாக டெக்ஸ் ரஜினி மாதிரி !

    உடன் வெளியாகும் மற்றவற்றை எக்ளிப்ஸ்

    செய்யும் வல்லமை உள்ளவர் .

    கார்ஸன் ,கிட் ,நவஜோ தோழர்

    இல்லாமலேயே தனி ஆவர்த்தனம் செய்ய

    கூடியவர்தான் !

    இந்த முறை அவர்கள் இல்லாதது நாம்

    உணரும் வண்ணம் கதையோட்டம்

    இருப்பது சற்று நெளிய செய்கிறது !

    நில் கவனி சுடு-க்கு அப்புறம் வந்ததாலோ

    என்னவோ ?

    ReplyDelete
  37. மெஸ்ஸியும் நெய்மரும் எப்படியோ

    போகட்டும் !

    டீஸர் படங்கள் காலில் நைக் ஷூஸ் மாட்டி

    கொண்டு எங்கள் மனதை பிரேசிலின் பச்சை

    புற்களங்களில் மொத்துண்டு அலையும்

    பந்தினை போலவே உதைத்து

    விளையாடுகின்றன .

    ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே

    நாட்காட்டி தாள் கிழிக்க வேண்டுமென்று

    வேறு எல்லோரும் சொல்கின்றனர் !

    ReplyDelete
    Replies
    1. // ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே
      நாள்காட்டி தாள் கிழிக்க வேண்டுமென்று
      வேறு எல்லோரும் சொல்கின்றனர் //

      :)

      Delete
    2. நானெல்லாம் பத்து நாட்கள் கழிந்த பின்னர் ஓட்டு மொத்தமாக கிழிக்கிறேன் ! இது போல வரும் நாட்களையும் கிழிக்கும் வாய்ப்பை பெற்றால் .....

      Delete
    3. கிழிப்பதை நிறுத்திவிட்டு வரும் ஆகஸ்ட் 2 அன்று ஒட்டு மொத்தமாக கிழியுங்கள், நாட்கள் பறந்திருக்கும்!

      Delete
    4. ஹ ஹ ஹா .... அப்போ ஜனவரி வரை காத்திருக்க வேண்டியதுதான் !

      Delete
  38. டியர் விஜயன் சார்,

    விண்ணில் ஒரு விபரீதம் & இறந்த காலம் இறப்பதில்லை - இவற்றின், Behind the scenes சம்பவங்களை விரிவாகப் பகிர்ந்தது சுவாரசியம்! மொழிபெயர்ப்பு கதைகள் தான் என்றாலும்; அதன் பின்னணியில் இருக்கும் சிக்கல்கள், கதைத் தேர்வில் தேவைப்படும் கூடுதல் கவனம், வெவ்வேறு நாட்டு காமிக்ஸ் ரசிகர்களின் வாசிப்பு பாணியில் இருக்கும் வேறுபாடு - இவற்றை இப்பதிவுகள் தெளிவாக்குகின்றன! இருந்தாலும், கி.நா. ஆர்வலர்களிடையே(?!), இப்பதிவுகளின் மூலம், ஒரு அச்ச உணர்வை விதைத்து விட்டீர்களோ என்ற ஐயம் எழாமல் இல்லை! ;)

    மேக்னம் ஸ்பெஷலின் எடிட்டிங் வேலைகள் முடிந்து விட்ட நிலையில் - பிரிண்டிங், பைண்டிங், பேக்கிங் உட்பட்ட இதர மெகா பணிகளை, ஆகஸ்ட் தொடங்குவதற்குள் முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் நீங்கள்...! இந்த அசுர முயற்சியின் end result, நிச்சயம் வெற்றிகரமானதாகவே இருக்கும் என்பதில் ஐயம் இல்லை! முன்கூட்டிய வாழ்த்துகள்!

    ReplyDelete
  39. பூம் பூம் படலம்

    காட்சி மாறும் போது ''அங்கேயோ ''........... '' பிறிதொரு இடத்தில்''....... ''வேறிடத்தில்''......... என்று கட்டாயம் குறிப்பிடுங்கள் ..............அப்போது என் மூளை (?????) ரெடியா இருக்கும் ...............தல சுத்துது இவனுக எங்கே வந்தானுங்கனு

    ''லக்கியின் நிழழை கவனிக்கவும்னு'' ............பழைய இதழ்களில் வசனம் படித்ததாக நினைவு ............நாமும் நிறுத்தி லக்கியை ரசித்து .........விசில் அடித்து ...........''வாவ் என்ன வேகம்னு'' வாயை பிளந்து செல்வோம் ...........அதெல்லாம் இப்ப மிஸ்ஸிங்.............

    லார்கோவிலும் இதே பாடு தான் ..............பாரிசா...... இத்தாலியா.........ஆபிரிக்கவா .............

    ரயில் ரிவர்சில் வந்ததது எனக்கு புரியவில்லை ...............அப்போ குழந்தைகள் பாடு ........''ரயில் ரிவர்சில் வந்ததது என்று குறிப்பிட்டு இருக்கலாம் ..........

    வசனமில்லாமல் புரிய வைக்கும் முயற்சி சற்றே அயர்ச்சி ...............

    இரண்டாம் முறை படிக்கும் போது தான் புரியுது ............

    என் பையனுக்கு ..........அட போங்கப்பானு ..............தூக்கி போட்டு ஓடியே போய்ட்டான் ............

    ReplyDelete
    Replies
    1. காவல் கழுக்கில் .............ராணி காமிக்ஸில் வந்த டைகர் போலவே இருக்கார் ...........      மொத்தத்தில் காவல் கழுகு .............காவல் சேவல்

      Delete
    2. ட்டோட்டோ டாய்ங்..........னு போட்டு இருந்தால் அசல் ராணி காமிக்ஸ் டைகரே தான்

      Delete
  40. அல்வா என்றெழுதி உமிழ்நீர் சுரப்பிகளை

    ஓவர்டைம் செய்ய வைத்து விட்டீர்கள் !

    பல்லிடுக்கில் மாட்டிக்கொள்ளும கோதுமை

    அல்வா என இருந்த இ.கா .இறப்பதில்லையை

    வழுக்கி செல்லும் அசோகா அல்வா என

    பெருமுயற்சி செய்து மாற்றி உள்ளீர்கள்

    என்பது தெரிகிறது .

    அல்வா மட்டுமா வருகிறது ? ஒரு இனிப்பு

    கடையே அல்லவா வருகிறது !!!!!

    ReplyDelete
  41. விரியனின் விரோதி படித்தவுடன் மங்கூசை நோக்கி ஸ்டீவ் சுடும் போது மங்கூஸ் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமெ ஓங்கி இருந்தது ! இந்த கதைக்கு கிட்டிய வெற்றி . தொழிலுக்காக கொலை செய் , வஞ்சம் தீர்க்க வேண்டாம்.....உனக்காக வேண்டாம் ..... எனும் வரிகளை உயிர்பிக்க செய்கிறது கதை !
    நமது பதிமூன்றை விட பரிதாபமாய் காட்சி அளிக்கிறார் விரியனின் விரோதி ! அவருக்கு ஊன்று கோலாய் இருந்த இருவருமே இல்லை ! பணத்தை கடாசி விட்டு மன கொந்தளிப்பை அடக்க பதிமூன்றை சுடும் மங்கூஸ் வெறி கொண்ட மனிதனாய் மாறுகிறார் ! மீண்டும் அவரை தொழிலுக்கே வரவழைக்கும் அந்த புகை படம் என அருமையாக இரத்த படலத்தோடு பின்னி செல்கிறது கதை ! அங்கே விடு பட்ட பல புதிர்களுக்கு இங்கே விடை !
    நான் சுட்ட பொது தப்பித்து கொண்டாய் என இரத்தபடலத்தில் சொல்வார் .
    சார் தயவு செய்து காலனின் கைக்கூலியை விரைவில் அனுப்புங்கள் !
    இரத்த படலத்தை மிஞ்சும் வண்ணம் முடிச்சுகள் அவிழ்க்க படுகின்றன !
    நண்பர்களே இதனை படித்த பின்னர் ரத்த படலம் படிக்க அமர்ந்தால் பல உண்மைகள்; நமக்கும் புலனாகலாம் , அதனால் மனம் நிறைவாகலாம் !

    சார் வண்ணத்தில் மின்னும் மரணம் இதழ்கள் முழுதும் விற்று தீர்ந்தவுடன் மறுபதிப்பில் இரத்த படலம் வரும் என்ற அதீத நம்பிக்கையுடன் ......

    இந்த கதை மொழி பெயர்ப்பு மற்றும் கதை செல்லும் போக்கு என அனைத்துமே பிரம்மாண்டம் ! ஆசிரியரின் தேடலுக்கும் , எமது ஆவலுக்கும் கிடைத்த தீனியோ !

    ReplyDelete
    Replies
    1. கதையில் உள்ள சில ஓட்டைகளை மேலே நண்பர் சாக்ரடீஸ் சுட்டி காட்டி உள்ளார் ! இருப்பினும் படிக்கும் போது அற்புதமான உணர்வை தந்த கதை !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  42. ஆ. அ. அட்டகாசமான கதை. மேஜிக் விண்ட் தன நினைவையிழந்து தான் யாரென்றறிய பழைய அதே இடத்திற்கு வருவதாகட்டும், அதே இடத்திற்கு வரும் கார்மெடி / லோமாக்ஸ் மூலம் தான் யாரென்றறிந்து தன் தற்போதைய நிலைமைக்கு காரணமான அவனை வஞ்சம் தீர்த்து, நான் பழைய நெட் எல்லிஸ் அல்ல, விண்ட் மேஜிக் விண்ட் என்று சொல்லும் போது, அடடே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் இப்படி திடீரென்று எண்டு கார்டு போட்டு விட்டீர்களே...!

    ReplyDelete
  43. விரியனின் விரோதி அட்டகாசமான கதை. காலனின் கைக்கூலி படித்து முடித்துவிட்டால் மீண்டும் ஒரு முறை ரத்தப்படலாம் 1-18 வரை மீண்டும் ஒருமுறை படித்தால் முழு கதையும் நன்றாக புரியும். முடிச்சுகள் அவிழும் நேரம் இது.

    ReplyDelete
  44. மங்கூஸ் !

    அனைவருக்கும் வணக்கம். இங்கு பதிவிடப்பட்டுள்ள விமர்சன பதிவுகளை மேலோட்டமாகப் பார்க்கும் போது, அனைவரையும் கவர்ந்த கதை 'விரியனின் விரோதி' என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. எப்படி இவர்களை இந்த மொட்டையன் கவர்ந்தான் என்பது, இதுவரை XIII ல் சொல்லப்படாத ரகசியம் என்பதில் எந்தவித ஒளிவு மறைவும் இருக்கப் போவதில்லை.

    நான் இங்கு சிந்தித்துப் பார்க்கிறேன் ; ஒரு கதை நமக்கு பிடிக்க வேண்டுமானால் - முதலில் அதில் வரும் நாயகன் நம்மை வசீகரித்திருக்க வேண்டும். அல்லது அவனைப் போல் நாம் வாழ நினைத்த நினைவுகள் - நம் கடந்துப் போன நினைவடுக்கில் புதைந்துப் போன படிவங்களில் செல்லரித்த சுவடுகளாய் மெல்ல மெல்ல தன் அடையாளத்தை இழந்திருக்க வேண்டும்.

    நான் இங்கு சிந்தித்துப் பார்க்கிறேன் ; நம்மை கவர்ந்தது எது.. அந்த மொட்டைத் தலையா ? கொலை செய்வதை போதையாக கருதும் அந்த பேதையின் குணத்தையா ? நெறி, இலட்சியம், நியாயம், தர்மம், மனசாட்சி என்று எதுவுமே இல்லாமல், தன் சுக போகத்தை மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டு, தான் போகும் இடமெல்லாம் தடயமின்றி தடம் பதித்துச் செல்லும் அந்த கொடூர கல்நெஞ்ச கொலைக்காரனையா ?

    நான் இங்கு சிந்தித்துப் பார்க்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. மங்கூஸ் ! (2)

      நான் இங்கு சிந்தித்துப் பார்க்கிறேன் ; அவன் ஏன் கூலிக்கு கொலை செய்யும் கொலைக்காரனாய் மாறினான்? தன் தந்தை வேபருக்காக என்று சொல்பவர்களை - இந்த சமூகம் எளிதில் ஏமாற்றிவிடும் நண்பர்களே.. அனாதையான ஷ்ரைனெர் சிறுவயதில் ; போர்ச்சூழலில் மனதிற்குள் சுண்டெலியாய் வாழ்ந்தவன். உள்ளுக்குள் பாம்பையும் எதிர்க்கும் கீரியாய் கற்பனை உலகில் சயனித்தவன். அவன் கண்ட கனவின் நிழலாய் ; கற்பனையின் நிஜமாய் 'ஹான்ஸ்' அவதாரப் புருஷனாய் அவன் முன் திடிரென தோன்றினான்.

      இரஷ்யன் ஒருவனை, அவன் கதறித் துடிக்க துடிக்க - மரம் அறுக்கும் ரம்பத்தால், சரிபாகமாக மூக்கிலிருந்து பின் மண்டை வரை அறுத்து கொலை செய்த 'ஹான்ஸ்' நம் மொட்டையனுக்கு அவதாரப் புருஷனாய் தோன்றினான். அந்த கொடூரக் கொலை, அதுவரை ஷ்ரைனெர் மனதில் ஒளிந்து கொண்டிருந்த - கழுதைப்புலிக்கு தைரியத்தைக் கொடுத்தது என்பது தானே நிஜமாக இருக்க முடியும் ?

      நான் இங்கு சிந்தித்துப் பார்க்கிறேன்....

      Delete
    2. மங்கூஸ் ! (3)

      நான் இங்கு சிந்தித்துப் பார்க்கிறேன் ; ஷ்ரைனெர் எப்படி மங்கூஸானான் ? இனம் இனத்தோடு சேர்ந்தது ; அந்தத் துஷ்ட இனம், மற்றவர்களின் சுயலாபத்திற்காக பலரைக் கொன்று தன் பங்கு ரத்தத்தை சுவைத்து ; மகிழ்ந்து ; அதில் ஊறி ; அதையே இன்பமென காலமெல்லாம் கொண்டாடியது. தத்தம் உள்ளத்தில் குமைந்து கொண்டிருக்கும் ரத்தவெறிக்கு, சில கொலை மட்டுமே மருந்தாகாது என்பதால் அதையே தொழிலாகக் கொண்டு - அதற்கும் ஒரு ஞாயத்தை கற்பித்து - இங்கு தமிழ் வாசகர்கள் பலரின் உள்ளத்தையும் கொள்ளைக் கொண்டதை என்னவென்பது ?!

      நான் இங்கு சிந்தித்துப் பார்க்கிறேன் ; கொலைகாரனும், இரத்தவெறி மங்கூஸ்களும் நல்லவனாய் தெரியும் சமூகத்தில் அல்லவா நாம் வாழ்கிறோம் ? இங்கு இடறி விழுந்தாலோ ஏமாளியாவோம் ; தவறி வழி மாறினாலோ எருமை மந்தை இடறிய மேய்ச்சல் நிலமாவோம். நாலும் தெரிந்து, நெளிவு சுளிவு அறிந்து நாம் வாழா விட்டால், இவ்வுலக வாழ்க்கையை இழந்து இன்னல் பல பெற்று துன்பமெனும் நரகத்தில் வீழ்ந்து காலமெல்லாம் மங்கூஸ் காமிக்ஸ் அல்லவா படிப்போம் ?! :D

      பின்குறிப்பு: உள்குத்து, வெளிகுத்து என்று ஏதுமில்லாத ஒரு செம ஜாலியான விமர்சனப் பதிவாக மட்டுமே இதைப் பார்க்கவும் நண்பர்களே ! ஏனெனில் விமர்சனம் நபருக்கு நபர் மாறுபடும் தானே ?! :D

      Delete
    3. ////நான் இங்கு சிந்தித்துப் பார்க்கிறேன் ; நம்மை கவர்ந்தது எது.. அந்த மொட்டைத் தலையா ? கொலை செய்வதை போதையாக கருதும் அந்த பேதையின் குணத்தையா ? ////

      என்னை பொருத்தவரை, தன்னை பாதுகாத்து வாழ்விடம் தந்தவர்க்காக, அந்த நன்றிகடனை தீர்ப்பதற்கு வேறு வழி இல்லாமல் அவன் "ஹான்ஸ்" பாதையை தேர்ந்து எடுக்கும் காரணத்தால் தான் அவன் காவர்கிறான்...நம்மை சார்ந்தவர்களுக்காக மனம் தவிக்கும் போது, உலக நியதிகளை மனம் கடைப்பிடிக்காது...அதை தான் அவனும் செய்துள்ளான்...President கொலைக்கு கூட "வேபர்" தான் தூண்டில் புழுவாய் அவன் முன் வைக்கபபட்டார்....மொத்ததில் தன்னை சார்ந்தவருக்காக அவன் பாதை தவறுவதால் தான் அவன் மேல் நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறதே தவிர...அவன் செய்யும் கொலைகளுக்காக அல்ல....

      Delete
    4. //நன்றிகடனை தீர்ப்பதற்கு வேறு வழி இல்லாமல் அவன் "ஹான்ஸ்" பாதையை தேர்ந்து எடுக்கும் காரணத்தால்//

      ஹூஹும்... வேறு வழியே இல்லாமல் அல்ல ; வேறு வழியாக அவன் சிந்தனைச் செல்லவே இல்லை என்பதே உண்மை. தன தந்தை 'வேபர்' க்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படாதப் போதே அவன் எண்ணம் முழுவதும் ஹான்ஸ்/ன் கொலைத் தொழிலில் நாட்டம் கொண்டதாகவே இருக்கிறது.

      (பார்க்க பக்கம் 15)

      ஷ்ரைனெர் : வேலை என்றால் உங்களுடையது (வேபர்) மாதிரியா ? இல்லை ஹான்ஸினுடையது மாதிரியா ?

      Delete
    5. அவன் ஸ்ரைனர் இறந்தவுடன் அதாவது அவரை இழக்க காரணமான பதிமூன்றை கொன்ற நிறைவுடன் மனம் மாறி தச்சனாக வாழுகிறானே ! நான் வர போவதில்லை இனி தொழிலுக்கு என்கிறானே ! கண்ணாடியில் தன்னை பார்க்க கூசுகிரானே ! இங்கெல்லாம் கதாசிரியர் தனது நேர் எண்ணத்தை பதிவு செய்யவில்லையா !
      கதை என்று படிக்கும் பொது இது கதைதான் ! ஆனால் இதில் ஒளிந்துள்ள பல அற்புதமான தன்னம்பிக்கை பாடத்தை படியுங்கள் , மங்கூஸ் உங்கள் முன் ஹீரோவை மிளிர்வான் ! தவறானவர்கள் எப்போதும் சந்தோசமாய் வாழ முடியாது என்பதை உணர்த்த வருகிறார் ஆசிரியர் என்பதாய் தானே கதை செல்கிறது !

      //தன தந்தை 'வேபர்' க்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படாதப் போதே அவன் எண்ணம் முழுவதும் ஹான்ஸ்/ன் கொலைத் தொழிலில் நாட்டம் கொண்டதாகவே இருக்கிறது.//
      உண்மைதான் ஆனால் ஹான்ஸ் மற்றும் வேபர் இறந்த பின்னர் அவனது செயல் என்ன ! வேபருக்காகவே மாறினான் ! வேபாரால்(இறந்ததும் ) மாறினான் ! வேபாருக்காகவே மீண்டும் அலைக்கழிக்க படுகிறான் !

      Delete
    6. //இனம் இனத்தோடு சேர்ந்தது ; அந்தத் துஷ்ட இனம், மற்றவர்களின் சுயலாபத்திற்காக பலரைக் கொன்று தன் பங்கு ரத்தத்தை சுவைத்து ;//

      அப்படியென்றால் அந்த இனம் மனம் மாறவில்லையா !
      சுயலாபம் பணமா ! வீசி எரியவில்லையா ?
      கொலைகளா ! பதிமூன்றை தவிர வேறு யாரையும் கொல்ல வேண்டாம் என நினைக்கவில்லையா !

      Delete
    7. நமது எண்ணம் நமக்கு வேண்டியதை கிரகித்து கொள்கிறது !

      Delete
    8. ஆனால் எனக்கு வில்லனாய் தோற்றமளித்த மங்கூஸ் இங்கே ஹீரோவாய் தோற்றமளிப்பதால் .....அடுத்த கதையின் கதாபாத்திரமான ராலன்டு வில்லநாய் தெரிவானோ !

      Delete
    9. ///அவன் ஸ்ரைனர் இறந்தவுடன் அதாவது அவரை இழக்க காரணமான பதிமூன்றை கொன்ற நிறைவுடன் மனம் மாறி தச்சனாக வாழுகிறானே ! நான் வர போவதில்லை இனி தொழிலுக்கு என்கிறானே ! கண்ணாடியில் தன்னை பார்க்க கூசுகிரானே ! இங்கெல்லாம் கதாசிரியர் தனது நேர் எண்ணத்தை பதிவு செய்யவில்லையா ! ///
      +1

      Delete
    10. //நமது எண்ணம் நமக்கு வேண்டியதை கிரகித்து கொள்கிறது !//
      Well said...

      Delete
    11. //நமது எண்ணம் நமக்கு வேண்டியதை கிரகித்து கொள்கிறது//

      நமது எண்ணம் நமக்கு வேண்டியதை கிரகித்து கொள்கிறது ; அதுவே நம் உள்மன ஆசைகளின் பிரதிபலிப்பாகவும் அமைகிறது. மொட்டைத் தலையன் ; கூலிப்படை தலைவன் ; கொலைகாரன் ; இரத்தவெறியன் மங்கூஸ்/ஐ ஹீரோ என்று கூறுபவர்கள் எல்லாம் கொஞ்சம் கையைத் தூக்குங்கள் பார்ப்போம் ?!

      Delete
    12. //நமது எண்ணம் நமக்கு வேண்டியதை கிரகித்து கொள்கிறது//
      குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை !
      இங்கே மங்கூஸ் தனது நன்றி கடனை அடைக்கும் வண்ணம் செயல் பட்டான் ! நம்பிக்கையானவன் !
      அவனது தோல்விக்கு காரணம் குரு கூறிய விசயங்களை காற்றில் பறக்க விட்டதே !
      இரண்டு நாட்களுக்கு மேல் எந்த ஒரு பெண்னோடும் தொடர்பு வைத்து கொல்லாதே !
      உனக்காக கொலை செய்யாதே ! ஆத்திரத்தை அடக்கு !
      இதுவே மன்கூசின் அழிவு வரை காரணம!


      வில்லன்களை ரசிக்கவில்லையா !

      நாகரிகமென்று கூறி கொண்டாலும் மனித மனம் விலங்கிர்க்கொப்பானது ! மனது எப்போதும் எளிதான வழியே தேடும் சூழ்நிலைகள் அமைந்து விட்டால் ! ஆனால் பலர் மனசாட்சிக்கு பயந்து கடந்து செல்வதை விட தண்டனைக்கு பயந்தே செல்கிறோம் ! இங்கே மன்கூசை நியாய படுத்தினால் நம்மையும் குற்றவாளியாக பார்ப்பார்களோ என்ற என்னத்தை விதைக்கும் வண்ணம் உங்கள் கேள்விகள் உள்ளது !
      நீங்கள் கூட ஒரு வகையில் முகமூடி அணிந்தே பல நல்ல செயல்களில் ஈடு பட்டீர்கள் முன்பு அல்லவா !

      Delete
    13. //நீங்கள் கூட ஒரு வகையில் முகமூடி அணிந்தே பல நல்ல செயல்களில் ஈடு பட்டீர்கள் முன்பு அல்லவா !//
      இதனை நான் உங்களை குற்றம் சாட்டும் தோரணையில் சொல்லவில்லை ! நான் மேலே கூறியதற்கு எடுத்து காட்டாய் மட்டுமே பார்க்கவும் ! உங்களிடம் உள்ள அனைத்து விசயங்களும் ரசிக்கும் வண்ணம் உண்டு ! இது கூட .....குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ....

      Delete
    14. இரண்டு வகை கதைகளையும் உருவாக்கும் கதாசிரியர்களே மனித மனதிற்கு எடுத்து காட்டு ! நல்ல கதைகள் படைத்தார் நல்லவர், கெட்ட கதைகளை படித்தால் கெட்டவர் என்று கூறினால் , இரண்டையும் படைப்பவர் .....................?

      Delete
    15. //நாகரிகமென்று கூறி கொண்டாலும் மனித மனம் விலங்கிர்க்கொப்பானது !//
      //ஆனால் பலர் மனசாட்சிக்கு பயந்து கடந்து செல்வதை விட தண்டனைக்கு பயந்தே செல்கிறோம் !//

      அருமையாக சொன்னீர்கள் ஸ்டீல்...
      இது வெறும் கதை, இதுவரை தீயவனாக மட்டுமே சித்தரிக்க பட்டவனின் மனதிலும், தன் வளர்ப்பு தந்தையின் நிமித்தம் ஈரம் உள்ளது என்பதை கதையோட்டம் அருமையாக உணர்த்துகிறது...அதுவே அவன் மேல் ஈர்ப்பு வர காரணமாகிறதே தவிர, அவன் செய்யும் கொலைகளை ரசித்து ஈர்ப்பு உண்டாகவில்லை...

      Mangoose ன் செயல்பாடுகளை, வன்முறையை விரும்பாத கண்ணோட்டத்தில் Mr.M பார்ப்பதும், தன் வளர்ப்பு தந்தைக்காக அவன் செய்யும் நன்றி கடன் கண்ணோட்டத்தில் நாம் பார்ப்பதுமே இந்த விமர்சனங்களின் வெளிப்பாடு. இந்த அளவிற்கு, மங்கூசெ பற்றி அலசி ஆராய வைத்திருப்பது தான் இந்த கதையின் எழுத்தாளரின் வெற்றி.

      Delete
    16. இடம் : தமிழ் காமிக்ஸ் பள்ளிக்கூடம் ! Ref : 8 July 2014 10:00:00 GMT+5:30 ஏலேய் பொன்ராசு :)

      வகுப்பு : Comicology !Professor : வாத்தியார் பொன்ராசு ! பாடம் : மொட்டைத் தலையன் மங்கூஸ் !

      வாத்தியார் பொன்ராசு : டியர் ஸ்டூடண்ட்ஸ், நேற்றைய பாடத்திலிருந்து நாம் கற்றுக் கொண்ட நீதியை உங்களுக்கு ஆத்திசூடி போல் சுருக்கமாக தருகிறேன். நீங்கள் அனைவரும் இதை குறைந்தது பத்து முறை வீட்டுப் பாடமாக நாளை எழுதி வரவேண்டும் ; மனப்பாடமாக ஒப்புவிக்கவும் வேண்டும். பார்க்கலாம் உங்களில் யார் அந்த ஸ்டூடண்ட் நம்பர் 1 என்று ?!

      மங்கூஸ் குருவின் (ஹான்ஸ்) நீதி : (தமிழில் வாத்தியார் பொன்ராசு)

      1.கொலை குரு கூறும் விஷயங்களை காற்றில் பறக்க விடாதே !
      2.இரண்டு நாட்களுக்கு மேல் எந்த ஒரு பெண்னோடும் தொடர்பு வைத்து கொள்ளாதே !
      3.உனக்காக கொலை செய்யாதே ! கூலி வாங்கிக் கொண்டு மட்டுமே கொலை செய் !
      4.குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை எனவே மங்கூஸ் கொலைகாரன் அல்ல !
      5.ஆத்திரத்தை அடக்கு ! அடக்கி... அதை மொத்தமாய் உன்னால் கொலை செய்யப்படும் அப்பாவி மேல் காட்டு !

      Contd...

      Delete
    17. இடம் : தமிழ் காமிக்ஸ் பள்ளிக்கூடம் (2) Ref : 8 July 2014 10:00:00 GMT+5:30 ஏலேய் பொன்ராசு :)

      கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியை விலாவரியாக படித்து விட்டு, அதிலிருந்து ஒரே ஒரு கேள்வியை கேட்கவும் ;

      //நாகரிகமென்று கூறி கொண்டாலும் மனித மனம் விலங்கிர்க்கொப்பானது ! மனது எப்போதும் எளிதான வழியே தேடும் சூழ்நிலைகள் அமைந்து விட்டால் ! ஆனால் பலர் மனசாட்சிக்கு பயந்து கடந்து செல்வதை விட தண்டனைக்கு பயந்தே செல்கிறோம் //

      மாணவன் மரமண்டை : ஐயா.. விலங்கிற்கு ஐந்தறிவு... அப்போ மனிதர்களுக்கு எத்தனை அறிவு ?

      contd..

      Delete
    18. //
      இது வெறும் கதை, இதுவரை தீயவனாக மட்டுமே சித்தரிக்க பட்டவனின் மனதிலும், தன் வளர்ப்பு தந்தையின் நிமித்தம் ஈரம் உள்ளது என்பதை கதையோட்டம் அருமையாக உணர்த்துகிறது...அதுவே அவன் மேல் ஈர்ப்பு வர காரணமாகிறதே தவிர, அவன் செய்யும் கொலைகளை ரசித்து ஈர்ப்பு உண்டாகவில்லை...

      Mangoose ன் செயல்பாடுகளை, வன்முறையை விரும்பாத கண்ணோட்டத்தில் Mr.M பார்ப்பதும், தன் வளர்ப்பு தந்தைக்காக அவன் செய்யும் நன்றி கடன் கண்ணோட்டத்தில் நாம் பார்ப்பதுமே இந்த விமர்சனங்களின் வெளிப்பாடு. இந்த அளவிற்கு, மங்கூசெ பற்றி அலசி ஆராய வைத்திருப்பது தான் இந்த கதையின் எழுத்தாளரின் வெற்றி.//


      தாசு பாலா நச் ! ஒவோவோருவரும் மரமண்டை அவர்கள் கூறுவது போல


      //ஹூஹும்... வேறு வழியே இல்லாமல் அல்ல ; வேறு வழியாக அவன் சிந்தனைச் செல்லவே இல்லை என்பதே உண்மை. தன தந்தை 'வேபர்' க்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படாதப் போதே அவன் எண்ணம் முழுவதும் ஹான்ஸ்/ன் கொலைத் தொழிலில் நாட்டம் கொண்டதாகவே இருக்கிறது. //
      அவரவர் மனதில் உள்ள எண்ணங்கள் வலிமை பெற்று ....அதனால் மனதை திறக்கிறோம் !

      Delete
    19. நண்பர்களே, ஒரு க்ரைம் கதையில் காணக்கிடைக்கும் சுவாரசியம் என்பது வேறு ; அக்கதையில் வரும் கொடியவனை ஆராதிப்பது என்பது வேறு. தன் தந்தையின் மேல் பாசம் கொண்டவன் என்பதால் மட்டும் - அவனை ஆதர்ஷப் புருஷனாக கொண்டாடுவது என்பது உணர்வுகளின் முதல் நிலை. ஏனெனில் இம்மண்ணில் ஜனிக்கும் அத்தனை உயிர்களுக்கும், பாசம் கூடவே பிறக்கும் என்பதே பிறப்பின் ரகசியம்.

      ஏற்கனவே விடுபட்ட ரகசியங்கள் ; விறுவிறுப்பான திருப்பங்கள் ; தெளிவான கதையோட்டம் ; இரத்தவெறி ; அதற்கான ஒரு சுவையான பின்னணி என்று ஒரு கதையை கதாசிரியர் படைக்கும் போது, நிச்சயமாக அது வெற்றி பெறுவதில் எந்தவொரு தடையும் இருக்கப் போவதில்லை.

      அதே நேரம், அந்தக் கதையைப் படிக்கும் வாசகன் - அந்தக் கூலிப்படை கொலைவெறியன் மேல் பரிதாபம் கொள்வதோ ; அவன் தோற்க கூடாது என்ற ஆதங்கத்தை பதிவு செய்வதோ ; அவனை ஆதர்ஷப் புருஷனாக, ஹீரோவாக பாவிப்பதோ ; அவனுடைய ரசிகனாக மாற நினைப்பதோ நம் மனதின் பலவீனமேயன்றி அக்கதையில் வரும் நாயகனின் பலமாக என்றுமே மாறப்போவதில்லை.

      பின்குறிப்பு : இந்த தொடர் பதிவுகளை, கதையின் விவாதமாக மட்டுமே பார்க்கவும், சீரியஸாக எடுக்க வேண்டாம் :)

      Delete
    20. நண்பர் மரமண்டை அவர்களே விலங்கிற்கு தெரியுமா ....அதற்க்கு ஐந்தறிவு என்று . உதவி செய்யும் விலங்குகளை பார்த்திருக்கிறீர்களா ! தேவைக்காக வஞ்சமின்றி செயல்படும் விலங்குகள் .....தேவைக்குமேல் வஞ்சகமாய் செயல் படும் மனிதர்கள் ...... மனிதனில் விளங்கும் உண்டு ! விலங்குகளிடையே நம்மிடம் மட்டும் ஏதோ ஒன்று உண்டு என்று கூறுகிறோமே அந்த மனித தன்மையும் உண்டு ! அது போல அவனிடம் காணப்படும் அந்த நேர்மை பிடித்தது ..... அவனை ரசித்தால் கொலைகாரனாகி விடுவோமா .....

      Delete
    21. நண்பரே பாசம் என்பது இயற்கையாக வருவது ! மகன் மேல் பாசம் இல்லா தந்தை எங்கும் இல்லை ! அதே பாசத்தை தனயன் தந்தை மேல் கொள்வது குறைவு ! இது இயற்கையின் ரகசியம் ! இங்கே மங்கூஸ் தந்தை மேல் கொண்ட அளவற்ற பாசம் .....அந்த கொலைகளை செய்யும் அளவு தூண்டியது !

      Delete
    22. மனதளவில் மங்கூஸ் ஈர்ப்பதால் எங்கள் எண்ணத்தில், மனதில் ஏதேனும் பிறழ்வு வந்து விடுமா ...ஸ்பைடரை ரசிப்பதால் குற்ற சக்கரவர்த்தி ஆகி விட துடிக்கிரோமா !

      Delete
    23. நான் மேலே கூறியது அந்த மன்கூசின் ஆசிரியர் அவனுக்கு கற்று தந்த பாடம் ! அதனை மீறி அவன் சிக்கலில் சிக்குகிறான்...அவ்வளவே ....கதை அதனை சுற்றி அற்புதமாய் பின்ன பட்டுள்ளது ! இதற்க்கு ஈடாய் கலதிகள் கிடைக்குமா ....தெளிவான கதை ஓட்டமல்லவா ....ரசிக்கிறோம் !

      Delete
    24. //மனதளவில் மங்கூஸ் ஈர்ப்பதால் எங்கள் எண்ணத்தில், மனதில் ஏதேனும் பிறழ்வு வந்து விடுமா//

      நிச்சயமாக உங்களுக்கோ அல்லது நமக்கோ வராது ஸ்டீல்... ஆனால் நிகழ்காலத்தில், பெரும்பான்மையான மனிதர்கள் ஸ்லீப்பர் செல்லாக (Sleeper cell) மாறுவது இதுபோன்ற மனநிலையால் தான் என்பது உண்மையாக இருக்கலாம் அல்லவா ?!

      (இது ஒரு ஜாலியான விவாதம் மட்டுமே.. சீரியஸாக எவரும் எண்ணி விட வேண்டாமே.. ப்ளீஸ்..)

      Delete
    25. Dasu bala :

      //Mangoose ன் செயல்பாடுகளை, வன்முறையை விரும்பாத கண்ணோட்டத்தில் Mr.M பார்ப்பதும், தன் வளர்ப்பு தந்தைக்காக அவன் செய்யும் நன்றி கடன் கண்ணோட்டத்தில் நாம் பார்ப்பதுமே இந்த விமர்சனங்களின் வெளிப்பாடு. இந்த அளவிற்கு, மங்கூசெ பற்றி அலசி ஆராய வைத்திருப்பது தான் இந்த கதையின் எழுத்தாளரின் வெற்றி//

      +1

      Delete
    26. //ஆனால் நிகழ்காலத்தில், பெரும்பான்மையான மனிதர்கள் ஸ்லீப்பர் செல்லாக (Sleeper cell) மாறுவது இதுபோன்ற மனநிலையால் தான் என்பது உண்மையாக இருக்கலாம் அல்லவா ?!//
      இப்படி நடக்குமோ என பயந்தால் இழப்பு நமக்குதானே !
      ஒவொருவரும் ஏதோ ஒரு காரணத்தால் கோபம் கொள்கிறோம் ! நாட்கள் செல்ல செல்ல மறந்து விடுகிறோம் ! அது போலதான் இதுவும் ! ஸ்லீப்பர் செல்ஸ் என்பது ஒரு வகை கற்பனை ! இப்படி பயந்தால் வரும் கால தலை முறைகளை எங்கு சென்றாலும் கரம் பிடித்து அழைத்து செல்ல வேண்டி வரலாம் ! அது மிக பெரும் தொல்லையாக முடியலாம் ! நம்புவோமாக , அவ்வாறு நடக்காதென ! நம்பிக்கை மட்டுமே வாழ்கை !

      Delete
  45. டியர் எடிட்டர்,

    LMS-ல் வரும் கிராபிக் நாவல் பற்றிய உங்கள் பார்வையைப் படித்த பின், இதனை ரசிக்கக் கூடிய வாசகர்கள் Carto Maltese-ஐயும் ரசிப்பார்கள் என்று தோன்றுகிறது. எமனின் திசை மேற்கு போன்ற சிறந்த கிராபிக் நாவல்களுக்கு நான் விசிறி என்பதால் ஆவலுடன் waiting ...!

    எனினும் நண்பர் கார்த்திக் சொமலிங்கா கூறுவது போல உங்கள் பதிவு GN விரும்பாதவர்கள் மனதில் விதைத்து விடக்கூடிய எண்ணங்களை நினைத்தால் கொஞ்சம் கலக்கமாய்த்தான் இருக்கிறது.

    பைண்டிங் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

    அனுப்பியவுடன் கூரியர்காரர்கள், பார்சல் பிரிவுகளில் கைமாற்றும் பொது அந்த குண்டோ-குண்டு புக்கை தொம்-தொம்மென்று தூக்கி போடாமல் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. Ragavan @ சிறிய திருத்தும்

      அனுப்பியவுடன் கூரியர்காரர்கள், பார்சல் பிரிவுகளில் கைமாற்றும் பொது அந்த குண்டோ-குண்டு புக்கை தொம்-தொம்மென்று "யார் மேலேயும்" தூக்கி போடாமல் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் :-)

      Delete
    2. டியர் ராகவன்!!!

      LMS -முடிந்தவுடன் சுமார் ஆயிரம் பக்க அளவிற்கு கிராபிக் நாவல் ஸ்பெசல் ஒன்றை வெளியிட எடிட்டர் திட்டமிட்டிருப்பதாக ரகசிய தகவல் ஒன்று அடியேனுக்கு கிடைத்தது.அதில் நீங்கள் குறிப்பிட்ட கதையும் இடம்பெறக்கூடும்.நெஞ்சை பிழிந்து கதற கதற அழவைக்கும் மாபெரும் சோக காவியங்களின் தொகுப்பு.

      "லயன் அழுகாச்சி ஸ்பெசல்"

      இலவச இணைப்பாக ஒரு கர்சீப்பும், ஆரஞ்சு மிட்டாயும்.ஹிஹி!!!

      Delete
    3. "லயன் பரணிதரன் ஸ்பெஷல்" என்று பெயர் வைத்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் :P

      Delete
    4. // "லயன் பரணிதரன் ஸ்பெஷல்" // LOL

      Delete
    5. // லயன் பரணிதரன் ஸ்பெஷல் //

      :D LOL

      Delete
    6. இருந்தாலும், கி.நா. ஆர்வலர்களிடையே(?!), இப்பதிவுகளின் மூலம், ஒரு அச்ச உணர்வை விதைத்து விட்டீர்களோ என்ற ஐயம் எழாமல் இல்லை! ;) #

      நண்பர் கார்த்திக் அவர்களின் கூற்று உண்மைதானோ ..... :-)
      ***********************************************************************

      ஹும்.........." லயன் பரணி தரன் ஸ்பெஷல் " புத்தகத்திற்கு சந்தா கட்டலாமா ....வேண்டாமா ....?

      ஆண்டவா ....புரியலையே ... :-(

      *************************************************************************

      Delete
    7. saint ஜி,

      பரணிதரனிடமிருந்து அடுத்த கடிதம் வந்ததா என்று எடிட்டரை விசாரிக்க வேண்டும் ;-)

      சிங்கத்தின் சிறு-வயதில் தொகுப்பு வருதோ இல்லியோ 'பரணியின் பயங்கர கடிதங்கள்'னு ஒரு தொகுப்பு போடணும் !!!

      Delete
    8. // 'பரணியின் பயங்கர கடிதங்கள்' // I am ready to read :-)

      Delete
  46. Dear Lion comics team,
    I’ve been buying Comics via online since the very first issue (EBay). I’ve never complained about the quality of service (Books quality/delivery) till today. Comics reading is my PASSION like many other COMIC lovers and I regain my Childhood by reading … But due to my Job nature I can’t go for subscription and I’ve explained it to the team long before. Anyway I used to order online on the very first day since I’m a COMICS ADDICT. This time too I’ve placed the order on July 2nd (around 2 AM. The reason why I’m mentioning the time is, such much ADDICT I am. I used to check LION’s blogspot atleast thrice a day). Till today I’ve not received the books and the reason they gave me is simply non-sense (apologies for using such harsh words. ‘cause I’m vexed that much). I’ve been calling them repeatedly since July 4th. Let me wait with my fingers crossed until I receive the books (AS EDITOR ALWAYS SAYS). Is there any other options???…

    ReplyDelete
    Replies
    1. I can understand your frustration. You said yourself that so far they are very regular. So this time excuse them and talk to them and figure out how to get it quickly.

      Delete
    2. Dear Domo!
      Your agony of not able to get the books while most of the rest are enjoying
      Them is perfectly understandable ! I regret for this situation .
      May I suggest as..

      Short term remedy .....kindly read comrade karumandabam senthil'comment
      Written below .

      Long term remedy ......kindly subscribe whatever the shortcomings be !

      Wish you get the books very soon !

      Delete
  47. இந்த " காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் " ஓட்டுனர் திரு விஜயன் அவர்கள் இங்கே வராததால் "எக்ஸ்பிரஸ் " வேகம் குறைவாக போகிறதா .......இப்பொழுது ...

    சூடே இல்லையே ....

    ReplyDelete
    Replies
    1. பரணீதரன் சார் !
      காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் -ஐ ஆட்டோ
      பைலட் மோடில் போட்டுவிட்டு
      ஆசிரியர் LMS ஏரோப்ளேன் ஓட்ட
      போய்விட்டார் !ஏரோப்ளேன்
      நமக்காக என்பதால் எக்ஸ்பிரஸ்
      குட்ஸ் டிரெய்ன் மாதிரி வேகத்தில்
      போனாலும் கஷ்டமாக தெரியவில்லை !

      Delete
    2. பரணீதரன் சார் !
      காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் -ஐ ஆட்டோ
      பைலட் மோடில் போட்டுவிட்டு
      ஆசிரியர் LMS ஏரோப்ளேன் ஓட்ட
      போய்விட்டார் !ஏரோப்ளேன்
      நமக்காக என்பதால் எக்ஸ்பிரஸ்
      குட்ஸ் டிரெய்ன் மாதிரி வேகத்தில்
      போனாலும் கஷ்டமாக தெரியவில்லை !#

      நண்பர் செல்வம் அபிராமி அவர்களே....உண்மை தான் ...ஆனாலும் இந்த பதிவின் மூன்று நாள் கால இடைவெளியில் 150 கமெண்ட்ஸ் கூட இன்னும் எட்ட வில்லை என நினைக்கும் பொழுது அதற்கு காரணம் என்னவென்று புரிய வில்லை ..?

      ஒரு வேளை...காரணம் இந்த " கிராபிக் நாவல் " பதிவு தானோ என்ற சந்தேகமும் அனைவருக்கும் வர கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் அந்த பதிவு ... :-)

      Delete
  48. //ஹாட்லைன் + சிங்கத்தின் சிறுவயதில் பகுதிகளை ஓரிரு நாட்களுக்குள் எழுதி முடித்திடும் பட்சத்தில் //

    சார், உங்களுக்கு நிச்சயம் டைரி எழுதும் பழக்கம் இருக்க வேண்டும். எழுதிய டைரியை ஆண்டுவாரியாக பத்திரப்படுத்தும் பழக்கமும் இருக்க வேண்டும் என யூகிக்கிறேன். :-)!

    ///ஜூலை 20-க்குள் அதனையும் மங்களம் பாடி விடுவோமென்ற நம்பிக்கையுள்ளது ! Phew !!!!//

    // இது போதாதா காது வரை பற்களை விரிய அனுமதிக்க ?///

    அட, இந்த முறை உங்க வேலை ரொம்ப ஈசிய முடிச்சுட்டீங்க போல தெரியுதே! வாழ்த்துகள் சார்! அடுத்த முறை இத விட பெரிய ப்ராஜெக்ட் கையில் எடுப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ள நிலையில் எங்கள் மனம்
    மேலும் கற்பனையில் திளைத்து இன்புறுகிறது. :-))!

    //இத்தனை பணிகளைச் செய்வது பெரியதொரு சாதனையல்ல - அதன் end result உங்களைத் திருப்திப்படுத்தியாக வேண்டுமே !!! நம்பிக்கையோடு நாட்களை நகற்றுவேன்... !!//

    இது தான் நம்ம விஜயன் சாரின் ஸ்பெசாலிட்டி! always thinking about us! not much about sales! friends please note this
    point! நாம் எல்லோரும் அழகான ஒரு குடும்பதின் உறுப்பினர்கள் என்பதற்கு இங்கே இது ஒரு சான்று.குடும்பம் ஒற்றுமையுடன் மேலும் சிறப்புறும் என்பதில் ஐயமில்லை! :-))!


    ///..............இதைப் புரிந்து கொள்ளாமல் கதையை ஓரம் கட்ட நினைத்தாயேடா பாவி !'//

    அடேயப்பா! படிக்க படிக்க கதையின் மேல் ஆர்வம் அதிகமாகிறது.LMS ஹாட் லைனை இப்போதே படிப்பது போன்று ஒரு உணர்வு. ஒரு கதையானாலும் அதை சரியாக செய்யவேண்டும் எனும் உத்வேகத்துடன் நீங்கள் மேற்கொள்ளும் இந்த களப்பணி பாராட்டுக்குரியது.


    //நமது இள வயது நண்பர்களுக்கு சிரமமமாய் இருக்கக் கூடும் என்பதால் ஆங்காங்கே, அவசியமாகும் சமயங்களில் மட்டும் மெல்லிய கோடுகள் போட்டிருக்கிறேன் //

    இது வேணாமே சார்!கதைகளில் ஆங்காங்கே புதைந்துள்ள அர்த்தங்களை கண்டுபிடிப்பதில் தான் கிராபிக் நாவலின் த்ரில் அடங்கியுள்ளது. கதாசிரியர், ஓவியர் அசல் பதிப்பில் எவ்வாறு சில விஷ்யங்களை படிப்பவர்களின் யுகத்துக்கு விட்டுள்ளார்களோ, அவ்வாறே விடுவது தான் இந்த கதைக்கு சிறப்பு. மீண்டும் ஒரு முறை உங்களுடைய முடிவை பரிசீலனை செய்யவும் PLS !

    //ஒவ்வொரு புதுத் துவக்கத்தின் போதும் நான் ஒரு மாணவனாய்த் தான் நிற்கிறேன் என்பதே இந்தப் பயணத்தை இத்தனை சுவாரஸ்யமாய்க் கொண்டு செல்ல உதவிடும் மந்திரம் என்று சொன்னால் அது மிகையாகாது ! //

    GREAT ! இதனாலையோ என்னவோ ஒவ்வொரு மாதம் புது புத்தகக்கவர் வரும்போதும் , லயன் காமிக்ஸை பல ஆண்டுகளுக்கு முன், புதிதாய் படித்தபோது எவ்வாறு உற்சாகத்துடன் படித்தோமோ, அதே உற்சாகத்துடன் இன்றும் படிக்க முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ......இன்றும் அதே உற்சாகத்துடன்
      படிக்க முடிகிறது !.....
      +++++++++++++

      Delete
    2. ......இன்றும் அதே உற்சாகத்துடன்
      படிக்க முடிகிறது !.....
      +++++++++++++

      Delete
    3. விஸ்கி சுஸ்கி -யின் இறுதி வரிகளை ஒவ்வொருவரும் அனுபவித்து கொண்டே
      இருக்க வேண்டும் !
      வெளிறிய பச்சை நிற ஆடை அணிந்து ட்வைன் நூலில் முந்தானையை இறுக்கி பிடித்தபடி
      வந்திறங்கும் லயன் புத்தக கட்டு இளமையை மீட்டு தரும் காயகல்ப மங்கையே !
      மனதின் வயதை மட்டுமே குறைக்கும் விசித்திரமான வயக்ரா !

      Delete
    4. விஸ்கி .......
      பச்சை நிற ஆடை ............
      முந்தானை முடிச்சு .............
      மங்கை...............
      காயகல்பம்...........
      வயக்ரா..........
      சைமனை மிஞ்சி விடுவீர்கள் போல..............அபி

      Delete
  49. //GREAT ! இதனாலையோ என்னவோ ஒவ்வொரு மாதம் புது புத்தகக்கவர் வரும்போதும் , லயன் காமிக்ஸை பல ஆண்டுகளுக்கு முன், புதிதாய் படித்தபோது எவ்வாறு உற்சாகத்துடன் படித்தோமோ, அதே உற்சாகத்துடன் இன்றும் படிக்க முடிகிறது. //
    +1

    ReplyDelete
    Replies
    1. ////நமது இள வயது நண்பர்களுக்கு சிரமமமாய் இருக்கக் கூடும் என்பதால் ஆங்காங்கே, அவசியமாகும் சமயங்களில் மட்டும் மெல்லிய கோடுகள் போட்டிருக்கிறேன் //

      இது வேணாமே சார்!கதைகளில் ஆங்காங்கே புதைந்துள்ள அர்த்தங்களை கண்டுபிடிப்பதில் தான் கிராபிக் நாவலின் த்ரில் அடங்கியுள்ளது. கதாசிரியர், ஓவியர் அசல் பதிப்பில் எவ்வாறு சில விஷ்யங்களை படிப்பவர்களின் யுகத்துக்கு விட்டுள்ளார்களோ, அவ்வாறே விடுவது தான் இந்த கதைக்கு சிறப்பு. மீண்டும் ஒரு முறை உங்களுடைய முடிவை பரிசீலனை செய்யவும் PLS !
      //
      ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

      Delete
    2. மதியில்லா மந்திரியார் லார்கோவில் மட்டும் அல்ல லக்கி லூக்குக்கே இளவயது
      நண்பர்களுக்காக ஆங்காங்கே சிறு கோடுகள் இருக்கலாம் என்கிறார் !
      மற்ற நண்பர்களாகிய நீங்கள் எந்த கோடும் வேண்டாம் என்கிறீர்கள் !
      ஆசிரியர் என்ன செய்வாரோ ?
      யாருக்கும் சேதாரம் ஏற்படா வண்ணம் அங்கங்கே புள்ளிகள் மட்டும் வைங்க சார் :)

      Delete
    3. அட ஸ்டீல் கிளா .............அடிக்கடி மோனோ ரயில் விடுவதில் வல்லவர் ...............

      Delete
  50. இம்மாத புத்தகங்கள் அனைத்தும் படித்தவர்கள் பாக்கியவான்கள்!கைகெட்டும் தூரத்தில் உணவிருந்தும் பட்டினி இதுதான் என் நிலை!

    ReplyDelete
    Replies
    1. ஒரு வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் செந்தில் !
      LMS தரும் தாங்கொணா இன்ப வலியை கையில் உள்ள 4 புத்தகங்கள் படித்து தள்ளி
      போட்டு கொள்ளலாம் !

      Delete
    2. நீங்கள் பட்டினி என்று எழுதியவுடன் 'மணிமேகலை 'யில் வரும் ஒரு
      கதாபாத்திரமான " காயசண்டிகை " ஞாபகம் வருகிறது . "யானைத்தீ " என்ற
      பெரும் பசி நோயை சாபத்தினால் பெற்ற அந்த பெண்ணுக்கு எவ்வளவு உணவு
      உண்டாலும் பசி அடங்காது !
      நாமெல்லாம் ஒருவகையில் காமிக்ஸ் காயசண்டிகைகளே ! ஆசிரியர்
      எவ்வளவு கொடுத்து கொண்டே இருப்பினும் இந்த பசி அடங்காது !!!!

      Delete
    3. //நாமெல்லாம் ஒருவகையில் காமிக்ஸ் காயசண்டிகைகளே ! ஆசிரியர்
      எவ்வளவு கொடுத்து கொண்டே இருப்பினும் இந்த பசி அடங்காது !!!!//
      +1

      Delete
    4. அடடா எட்டாம் வகுப்பிற்கே கொண்டு சென்று விட்டீர்கள் ! உண்மை ~!

      Delete
    5. @ செந்தில்...நமக்கும் இன்னும் டீ (புத்தகங்கள்) - வரல. வந்ததும் 'விரியனின் விரோதி'-தான் முதல் choice. நண்பர்களின் விமர்சனத்தால் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.

      @ ஸ்டீல் FYI....'மணிமேகலை - காயசண்டிகை'...நான் படித்தது ஒன்பதாம் வகுப்பில் என்று நினைக்கிறேன்.

      Delete
    6. காவல் கோட்டம் என்று எட்டாம் வகுப்பில் என்றுதான் நினைத்தேன் ! எனக்கும் சந்தேகம்தான் நண்பரே !

      Delete
  51. மந்திரியார் துவங்கி வைத்தார் ! ஸடீல் க்ளா அதை பற்றி ஆசிரியர்க்கு அடிக்கடி
    நினைவூட்டி எழுதுகிறார் ! அடிக்கடி என் கனவில் வந்து போவது ..................

    அதேதான் !!!....ரத்த படலம் வண்ண பதிப்பு !!...........

    A DESPARATE COMIC LOVER'S DESTINY !!!

    ReplyDelete
    Replies
    1. மின்னும் மரணம் வெளியீட்டின் வெற்றிக்கு பின்னர் அதுதான் நண்பரே !

      Delete
    2. ஊஊஊஊஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

      Delete
  52. //ரத்த படலம் வண்ண பதிப்பு//
    +111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

    ReplyDelete
  53. ஒரு சின்ன அபிப்பிராயம் .இரத் தப்படலமும் சரி,மின்னும் மரணமும் சரி.ஏன் கார்சனின் கடந்தகாலமும் சரி .ஏற்கனவே பலமுறை படித்து புகழோவியமாக நெஞ்சில் நிலைத்து நிற்கும் classic கதைகள்.இவற்றை எல்லாம் வண்ணத்தில் பார்க்க படிக்க ஆசைதான்.ஆனால் ,பட்ஜெட் இடிக்கின்றதே அய்யா...குறைந்தது 500 ரூபாய் விலையில் இவற்றைபோ ட்டால் தான் கட்டுப்படியாகும்.500 ரூபாய்க்கு அற்புதமான புதிய கதைகள் நிறைய கிடைக்கும் போது ஏன் இந்த நிறைவேறாத ஆசைகள் ?சற்றே சிந்தித்து முடிவெடுக்குமாறு கேட்டு கொள்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. .500 ரூபாய்க்கு அற்புதமான புதிய கதைகள் நிறைய கிடைக்கும் போது ஏன் இந்த நிறைவேறாத ஆசைகள் ?சற்றே சிந்தித்து முடிவெடுக்குமாறு கேட்டு கொள்கிறேன் . #

      நண்பர் செல்வாஸ் அவர்களே .....நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை .இதை தான் நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன் .சிறந்த கதை என்றாலும் " வண்ணத்திற்காக " என்றே மட்டும் அவ்வளவு பெரிய கதைகளை மறுபதிப்பு செய்வதை விட அதற்கு பதிலாக அவ்வளவு விலையில் "புதிய கதைகள் " வந்தால் அனைவருக்கும் நலம் பயக்கும் .

      ( ஆனால் "மின்னும் மரணம் " வேலையை ஆசிரியர் இந்நேரம் பாதியாவது முடித்து இருப்பார் .இனி சொல்லி பயனில்லை .எனவே இனியாவது மறுபதிப்பை பார்த்து வினவினால் நன்று .)


      Delete
    2. -1ஐ பிளஸ் 1 என்று நினைத்து ஏமாந்து விட்டேன்' ஸ்டீல் claw ஸ்டீல் claw தான் .

      Delete
    3. - 100,I eagerly waiting for "minim maranum" reprint

      Delete
    4. -1....நண்பர் selvas...என்னதான் புது படங்கள் வந்தாலும், கர்ணன், நாடோடிமன்னன் போன்ற காவியங்களை புதிய re-mastering செய்து, Dolby, DTS இணைத்து இப்போதும் வெளியிடுகிறார்களே...அதுபோலதான்.

      Delete
    5. ஒரு காமிக்ஸ் மறுபதிப்பு வேண்டாம் என்று சொல்லும் வாசகர் ஒருவருக்கு உள்ள உரிமையைப் போல, அந்த மறுபதிப்பு வேண்டும் என்று சொல்லும் வாசகருக்கு இரண்டு மடங்கு உரிமை இருப்பதாக கருதுவதால் எனக்கு..

      1.மின்னும் மரணம் !
      2.இரத்தப் படலம் !
      3.இரத்தக் கோட்டை !

      ஆகிய மூன்று காமிக்ஸும் - உயர்ந்த தரத்தில் ; முழு வண்ணத்தில் ; ஒவ்வொரு கதையும் ஒரே பாகமாக ; கலெக்டர்ஸ் எடிஷனாக ; மறுபதிப்பில் வரவேண்டும் என்றே விரும்புகிறேன். மறுபதிப்பு என்பது Collector's Edition க்கான திட்டமிடலாக - விலையிலும் ; பதிப்பிலும் மாற்றத்தைப் பெரும் போது மட்டுமே... அதன் அருமையும் பெருமையும் அனைவருக்கும் தெரிய வருவது மட்டுமல்ல ; மிகவும் இலாபகரமான வெளியீடாகவும் அமையும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. பெயர் வேண்டும் எனும் போது பொருள் வருவதில்லை ; பொருள் வேண்டும் எனும் போது பெயர் வருவதில்லை ; இரண்டும் ஒரு சேர அமைய திட்டமிடும் போது, நம் புகழ் என்றுமே குறைவதில்லை. நன்றி !

      Delete
    6. 1.மின்னும் மரணம் !
      2.இரத்தப் படலம் !
      3.இரத்தக் கோட்டை !

      ஆகிய மூன்று காமிக்ஸும் - உயர்ந்த தரத்தில் ; முழு வண்ணத்தில் ; ஒவ்வொரு கதையும் ஒரே பாகமாக ; கலெக்டர்ஸ் எடிஷனாக ; மறுபதிப்பில் வரவேண்டும் என்றே விரும்புகிறேன்.
      +10000000000000000000

      Delete
    7. ஆமா........ ஆமா.......ஆமா

      Delete
    8. +1 for NO recent stories reprints
      1.மின்னும் மரணம் !
      2.இரத்தப் படலம் !
      3.இரத்தக் கோட்டை !

      +1 for OLD stories reprint like Detective special that editor had announced last year.

      Delete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. I have been reading comics from my school days. Tex willer is my favorite. I have made a couple of orders last year by Ebay. After that the Ebay store is closed. One of my friend told me about worldmart, where i recently made a bunch of orders and bought all Tex willer stories. I love the diwali special. You dont need to release books in colour. Content is more important than colour. I will be happy if you release full length stories of tex willer in black and white every month. Cost is not a problem.

    ReplyDelete
  56. அனைவருக்கும் வணக்கம் !

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் என்று தான் முதலில் எழுத நினைத்தேன்... ஆனால் நண்பர்கள் என்பவர்கள் யாருமே இங்கு இல்லாமையால்.. அல்லது தம்மை நண்பர் என்று வெளிகாட்டி கொள்ள விரும்பாமையால், பொதுவான ஒரு குறிப்பை விட்டுச் செல்வதே நம் சுய மரியாதைக்கு அழகாக அமையும் என்று கோவை கருமத்தம்பட்டி காத்தவராயன் கூறியதால் அனைவருக்கும் வணக்கம் என்று கூறும்படியாக என் பதிவு அமைகிறது.

    பெரிதாக ஒன்றுமில்லை... இன்று பொழுது போகாத காரணத்தால் தொலைக்காட்சி நியூஸ் சேனல்களில் ஒளிப்பரப்பாகும் செய்தியை பார்க்கும் போது, ஒரு விஷயத்தில் மனம் நெருடியது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில், யாருமே எதிர்ப்பார்க்காத அளவில் மிகக் கேவலமாக, தோற்றுப் போன பிரேசில் கால்பந்தாட்ட அணி தலைப்புச் செய்தியை ஆக்கிரமித்திருந்தது.

    காணும் டிவி தோறும்.. கதறியழும் பிரேசில் நாட்டு ரசிகர்களின் காட்சி ஊடகம் நம்மை கண்கலங்க வைக்கிறது. அதற்காக நான் அதிகமாக இங்கு எழுத விரும்பவில்லை... கதறியழும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் யாவரும் சொம்புகள் என்று அழைக்கப்படுவார்களா அல்லது தீவிர ரசிகர்கள் என்று அழைக்கப்படுவார்களா என்பதே என் கேள்வி ?! விடைத் தெரிந்த தைரியசாலிகள் இங்கு பதிலளிக்கலாம் ;)

    ReplyDelete
    Replies
    1. டியர் மரமண்டை!!!

      நீங்கள் குறிப்பிட்ட அந்த ஆட்டத்தில் பிரேஸில் அணியினர் எத்தனை ரன்கள் அடித்தார்கள்...? ஸ்கோர் டீடெயில் ப்ளீஸ் ...!

      Delete
    2. //நீங்கள் குறிப்பிட்ட அந்த ஆட்டத்தில் பிரேஸில் அணியினர் எத்தனை ரன்கள் அடித்தார்கள்...?//

      பிரேஸில் அணியினர் எத்தனை ரன்கள் அடித்தார்கள் என்று தெரியவில்லை. ( பேய் பிசாசு உலாவும் நடுநிசியில் விளையாடினால் யாரால் தான் பார்க்கமுடியும் :P ) ஆனால் அவர்கள் பிரேஸில் நாட்டு கால்பந்து ரசிகர்கள் அனைவரின் வயிற்றிலும் அடித்து விட்டார்கள் என்பது மட்டும், காட்சி ஊடகங்கள் மூலம் தெளிவாக தெரிய வருகிறது. அதை நிரூபிப்பதைப் போல ரசிகர்கள் அனைவரும் தத்தம் தலையில் அடித்துக் கொண்டு அழுவதைப் பார்க்கும் போது தான் மனம் இரணமாகிப் போகிறது சாத்தான் ஜி :(

      Delete
  57. அனைவருக்கும் வணக்கம். இங்கு நான் பதிவிட ஆரம்பித்த ஆரம்ப காலத்திலிருந்தே.. இங்கு பதிவிடப்படும் அனைத்து பின்னூட்டங்களையும் மிகவும் ரசித்துப் படித்து கொண்டு வருகிறேன். ஆனால் சமீப காலமாக நம் மக்களில் பலர் - தம்முடைய நன்மதிப்பில் கண்கொத்திப் பாம்பாக இருப்பது - உள்ளங்கை நெல்லிக்கனியாக நமக்கு தெரிகிறது.

    இதை தவறு என்று கூற யாருக்கும் உரிமையில்லை தான் ; அதே நேரம் நாம் காணும் சில விஷயங்களை, பொதுவாக இங்கு பதிவிடுதிலும் தவறொன்று இருப்பதாக இ.பி.கோ. சட்டம் எங்கும் கூறவில்லை. எனவே ஊருக்கு திரும்பி வந்தவுடன் ஒரு சுவையானப் பதிவை பதிவிடலாம் என்றிருக்கிறேன் அதாவது..

    சென்னை பீச்சில் ஒரு நாள் ;)

    ReplyDelete
  58. நண்பர் மரமண்டை அவர்களுக்கு .....,

    எனக்கு இங்கு வரும் அனைவருமே நண்பர்கள் தாம் ..என்னையும் ..,எனது கருத்தையும் எதிர்ப்பவர்கள் கூட ஆனால் ஆசிரியரை "தனி பட்ட " முறையில் எதிர்ப்பவர்கள் தவிர ....

    எனவே நண்பர் மரமண்டை அவர்களுக்கு ...

    ஒரு காமிக்ஸ் மறுபதிப்பு வேண்டாம் என்று சொல்லும் வாசகர் ஒருவருக்கு உள்ள உரிமையைப் போல, அந்த மறுபதிப்பு வேண்டும் என்று சொல்லும் வாசகருக்கு இரண்டு மடங்கு உரிமை இருப்பதாக கருதுவதால் எனக்கு.. #

    + 101

    ReplyDelete
  59. டியர் கலிபாக்களே ...........

    PLEASE TIE MONEY FOR SANDHA IN FRONT OF AUGUST........DANKS.....

    அருஞ்சொற்பொருள் ..........
    PLEASE .......தயவுசெய்து......
    TIE MONEY........பணத்தை கட்டவும் ........
    IN FRONT OF AUGUST..........ஆகஸ்டுக்கு முன்னால்
    DANKS...........நன்றி

    ReplyDelete
    Replies
    1. கடுமையான கண்டணங்கள மந்திரியாரே !
      ஊரார் என்னை மறை கழண்ட கேஸ் என்று நினைக்க வைப்பதற்காக !
      அவர்களை சொல்லியும் குற்றமில்லை ! செல்போனை கையில் வைத்து கொண்டு
      கெக்கபிக்க என்று சிரித்து கொண்டு இருந்தால் வேறு என்னதான் நினைப்பார்கள் ?
      செந்தமிழ் ,மெட்ராஸ் தமிழ் ,ஆங்கிலம் ,ஹிந்தி என எல்லா மொழிகளிலும் இப்படி
      வூடு கட்டி அடித்தால் எப்படி சிரிக்காமல் இருக்க முடியும் ?
      சந்தா இது வரை கட்டாதவங்க சீக்கிரம் கட்டிடுங்க என்பதை இதைவிட நயமாக
      யாராலும் சொல்ல முடியாது !

      Delete
    2. STATUARY WARNING
      மந்திரியின் பதிவுகளை படிப்பது மன நலனுக்கு கேடானது ..........(ஓகே தானே )

      Delete
  60. கடித மேதை தாரமங்கலத்தார் :

    நண்பருக்கு நண்பரின் வணக்கம். நலம் நலமறிய ஆவல். சுற்றம் சூழ்ந்து வாழ்ந்த காலம் யாவும் மலையேறிப் போனதால் - இன்று தத்தம் உறவுகள் யாவும் மடுவில் மறைந்தே போனது. இன்று எழுச்சிக் கொண்டிருக்கும் முகமறியா நட்பும் - உள்ளம் அறிய இயலாத காரணத்தால் காற்றில் கலையும் கருமேகமாய் கரைந்தோடுகின்றன. உண்மையும் உவகையும் அரவணைத்த காலம் மங்கி - மந்தியின் உணர்வுகளால் மனிதன் மதி மயங்கி கிடக்கிறான். மாலை மறைவதற்குள் மன மயக்கம் ; மயங்கி சரிந்தாலும் மஞ்சத்தில் துன்பத்தின் தாக்கம். காலையில் உதிக்கும் கதிரவனின் ஒளிக் கூட நம்மை உற்சாகப் படுத்துவதில்லை. உள்ளமும் உணர்வுகளும் ஒடுங்கி, உள்ளுக்குள் அழுத்தமாய் ஓங்கி - மனித வாழ்க்கையை இங்கு நரகமாக்கின்றன.

    இந்த அன்றாட நிகழ்வுகள் யாரோ ஒருவருக்கு மட்டுமே சொந்தமில்லை ; மாறாக அனைவருக்கும் பொதுவானது இந்த பொதுவுடைமை. இதில் நம் காமிக்ஸ் சங்கம் மட்டுமே தட்டுத் தடுமாறி - ஊழிக்கால வெள்ளத்தில் கரைசேர்க்கும் தாமரை இலை பரிசலாய் காட்சியளிக்கிறது. ஆனால் இங்கும் கூட நானென்றும் ; தானென்றும் தப்புத் தாளங்கள் சங்கேதமாய் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. இது நிற்க;

    contd..

    ReplyDelete
    Replies
    1. கடித மேதை தாரமங்கலத்தார் : (2)

      1.மின்னும் மரணம் !
      2.இரத்தப் படலம் !
      3.இரத்தக் கோட்டை !

      இந்த மூன்று மறுபதிப்பையும் ஆதரித்து பதிவு செய்தமைக்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்போதெல்லாம் பீட்ஸா, பர்கர் கலாச்சாரம் பெருகிவிட்டது ; நோ தேங்க்ஸ் என்ற பசப்பு வார்த்தைகளின் ஆதிக்கம் எங்கும் நிறைந்து விட்டது. ஊர் கூடி தேர் இழுத்தாலும் உற்றத் தோழன் யாரென்று நமக்கு தெரிவதில்லை. அதனால் தானோ என்னவோ, இன்றைய பெரும்புள்ளிகள் பலர் தம்முடைய சிறுவயதில் உற்றத் தோழனாய் விளங்கிய இரும்புக்கை மாயாவியையும், ஸ்பைடரையும் தேடி அலைகிறார்கள்.

      இங்கு வரும் பல பின்னூட்டங்கள் கூட white collar என்ற isi தரத்தோடு தான் வருகின்றன. சில பின்னூட்டங்களைப் படிக்கும் போது ''excuse me sir may i comment in'' என்ற ரீதியிலான சீமை தொரை கமெண்ட்கள் அதிகமாகி விட்டன. எனவே மீண்டும் பின்னூட்டங்கள் அதிகமாகி, காமிக்ஸ் உற்சாக எண்ணங்கள் இங்கு அளவின்றி பதிவிட வேண்டுமெனில் - அதற்கு பழைய வாசகர்கள் இனியும் வேலைக்கு ஆக மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. எனவே இங்கும் புது இரத்தம் பாய வேண்டும் ; புதிய வாசகர்கள் தம் எண்ணங்களையும், காமிக்ஸ் அனுபவங்களையும், புத்தக விமர்சனத்தையும் பதிவிட வேண்டும். அப்போது தான் முன் போல் காமிக்ஸ் நம் கவலையைத் தீர்க்கும் மருந்தாக அமையும் என்பது என் கருத்து.

      இத்தருணத்தில் இந்த வலைப்பூவின் புதிய வாசகர்களான selvam abirami ; Dasu bala ; Senthil Madesh ; சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் - இவர்களின் கள்ளம் கபடமற்ற தொடர் உற்சாக பங்களிப்பை பாராட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். பாராட்டுகள் தோழர்களே..! நாளை முதல் வெளியூர் வாசம் என்பதால் என்னால் சில தினங்களுக்கு கமெண்ட் போட இயலாது என்பதை தெரிவித்து கொண்டு விடை பெறுகிறேன். நன்றி !

      Delete
    2. கனிவான வார்த்தைகளுக்கு நன்றி நண்பரே

      Delete
    3. நீங்கள் கூறியுள்ளது போல், வலைப்பூவிற்கு மட்டுமே நான் புதியவன்(வலைப்பூவிற்கு வந்து 6 மாதம் ஆகிவிட்டது, இன்னும் புதியவனா?) நண்பரே...

      Delete
    4. //அதற்கு பழைய வாசகர்கள் இனியும் வேலைக்கு ஆக மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.//
      -1

      Delete
    5. மிஸ்டர் மரமண்டை ! என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது உங்களது பதிவு .

      இங்கு எல்லோரும் எல்லோருக்கும் நண்பர்களே !
      காமிக்ஸ் ஆர்வத்தில் ஏது பழைய புதிய பேதம் ?
      இந்த பதிவில்தானே விஸ்கி சுஸ்கி எழுதி இருந்தார் முதல் இதழ் படித்த அதே
      உற்சாகத்துடன் இப்போதும் படிப்பதாக .
      ஆசிரியர் சில வருடங்களுக்கு முன் நிலத்தில் விதையிட்டார் .அந்த நிலத்தை
      பண்படுத்தி நீர் பாய்ச்சி பூக்கள் குலுங்கும் நந்தவனம் என மாற்றியது யார் ?
      நண்பர்கள்
      ஸ்டீல் க்ளா
      நீங்கள்
      ஈரோடு விஜய்
      பரணீ ப்ரம் பெங்களூரு
      பரணீதரன்
      புனித சாத்தான்
      ஷல்லூம்
      மொகிதீன்
      மதியில்லா மந்திரி
      ராகவன்
      சேலம் டெக்ஸ் விஜய ராகவன்
      இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதி கொண்டே போகலாம் ........
      பழைய வாசகர்கள் என துவங்கி நீங்கள் எழுதி உள்ளது சரிதானா ?
      ஸ்டீல் க்ளாவின் வார்த்தைகளில் பீறிட்டு எழுகின்ற உற்சாகத்தை உணர்வு பூர்வமான
      வரிகளை உங்களால் உண்மையாகவே உணர முடியவில்லையா ?
      விளம்பர படங்களையே பிக்சல் பிக்சல் ஆக அனுபவித்து விமர்சித்ததும் "பழைய "
      வாசகர்கள்தானே ?
      மேலே குறிப்பிட பட்டோர் விடுபட்டோர் அனைவரும் எல்லோராலும் பெருமதிப்பு
      மற்றும் மரியாதை தர தக்க எல்லா தகுதியும் நிரம்ப பெற்றவர்களே .
      அவர்களின் காமிக்ஸ் ஆர்வம் மற்றும் உற்சாகம்" மார்கண்டேய "தனம் உள்ளது .
      மாறா யௌனம் வாய்ந்தது என்பதில் எள்முனையளவும் எனக்கு சந்தேகமில்லை !
      எல்லாரும் கஷ்டப்பட்டு உருவாக்கிய நந்தவனத்தில் பூத்த மலர்களின்
      நறுமணத்தால் கவரப்பட்டு நேற்று இங்கு வந்த நான் சொல்லித்தான் இந்த உண்மை
      தெரியவேண்டும் என்பதில்லை !
      மாயாவியோ மாண்ரக்கோ
      லார்கோவோ லக்கி லூக்கோ
      ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதர்ச புருஷன் இருக்கலாம் !
      அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் மேல் மதிப்பளிக்க வேண்டுவது நம் கடமை !
      டெக்ஸ் vs டைகர் கதையே வேறு !அவை தளத்தினை இயல்பான போக்கில் வைத்து
      இருக்கும் வேடிக்கை விவாதங்களே .
      எலும்பு மஜ்ஜைதனில் உருவாகும் சிவப்பு குருதி அணுக்கள் போலவே லயன்
      சித்திர கதை மஜ்ஜைகளில் இருந்து உருவாகும் காமிக்ஸ் ரத்தம் !
      ஒரு வேற்றுமை காமிக்ஸ் ரத்தம் மாறா புத்திளமை கொண்டது !
      ஆம் !ரத்தம் ஒரே நிறம் !

      Delete
    6. Good one!

      // ஸ்டீல் க்ளாவின் வார்த்தைகளில் பீறிட்டு எழுகின்ற உற்சாகத்தை உணர்வு பூர்வமான
      வரிகளை// Steel always write from his (younger) heart :-)

      Delete
  61. ஒரு விமர்சன பதிவு

    1. Wayne Shelton - விறுவிறுப்பாக சென்றது, நல்ல action கதை படித்த திருப்தி கிடைத்தது.
    2. Largo - லார்கோவின் Formula தெரிந்துவிட்டதால் முன்பு அளவிற்கு விறுவிறுப்பு இல்லை ஆனாலும் ஒரு Masala படம் பார்த்த உணர்வு
    3. Tex - "நில் கவனி சுடு" - மிக அருமை, டெக்ஸ் இன் கதை தரம் சமீபமாக மிக உயரந்துவிட்டது.
    4. Lucky Luke - ஆங்கிலத்தில் ஏற்கனவே படித்துவிட்டதால், only Ok
    5. Tiger + BlueCoats - படிக்க உந்துதலே இல்லை. எப்படியும் படித்துவிடுவேன் இருந்தாலும் தற்போது வருகிற Tiger கதைகள் வெகு சுமார்

    ReplyDelete
  62. காத்திருக்கும் விருந்துகள் !

    டைலன் டாக் -இருநூறு பக்கங்கள்
    கார்சனின் கடந்த காலம்
    லார்கோ ஒரு நிழல் நிஜமாகிறது +சதுரங்கம் லார்கோ ஸ்டைல்
    யார் இந்த டிடெக்டிவ் - - - - - விலக்க பட்டு விட்டார்
    நிழல் ஒன்று நிஜம் ஒன்று - - - - - இதற்க்கு பதிலாய் புரட்சி தீ வந்தது !
    செங்குருதி சாலைகள்
    காதலிக்க குதிரை இல்லை

    ReplyDelete
    Replies
    1. இது தவிர கிராபிக் நாவல்கள்
      இவற்றில் லார்கோவை மொழி பெயர்த்து முடித்திருப்பீர்கள் என நிஒனைக்கிறேன் (ஏற்கனவே கூறி விட்டீர்கள் )

      Delete
    2. மாதம் மூன்று புத்தகங்கள் எனில் 12 புத்தகங்கள் இன்னும் வேண்டும் ! இருப்பதோ ஏழு என்ன செய்வோம் ! லார்கோ இரண்டு என கொள்க !

      Delete
    3. திரு ஸ்டீல் ! ஏன் உண்மையையே எழுதுகிறீர்கள் ?கிராபிக் நாவல்கள் தவிர இன்னும்
      20 புத்தகங்கள் வரவேண்டும் என எழுதி வைப்போம் .ஆசிரியர் குழம்பி 20 புத்தகம்
      கொடுத்தாலும் கொடுத்து விடலாம் !(நிறைய புக்ஸ் கிடைக்க எதுவுமே தப்பில்லை )
      ஆசிரியர் ரொம்ப குடைந்து கேட்டால் ஒண்ணாப்புலேர்ந்து கணக்கில் வீக் என்று
      எஸ்கேப் ஆகிவிட்டால் போச்சு !

      Delete
    4. ஆனால் அதற்குண்டான தொகைதானே வாங்கி இருக்கிறார் ! இந்த மாதம் அனைத்து கதைகளும் ஹிட் என்பதாலோ என்னவோ அடுத்து வரும் மாதங்களின் மேல் எதிர்பார்ப்பு கூடுகிறது !

      Delete
  63. இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த காமிக்ஸ் or graphic novelல் best விரியனின் விரோதிதான் !Godfather படத்தில் ஒரு வசனம் "Only business, nothing personal" இந்த வசனம் விரியனின் விரோதிக்கும் பொருந்தும் !

    ReplyDelete
    Replies
    1. திரு செந்தில் ! விரியனின் விரோதியில் வரும் சில வசனங்கள் நமது
      வாழ்க்கைக்கே பொருந்தும் !
      மங்கூஸ் குருவின் வார்த்தைகள் -பாம்புகள் நிறைந்த குழியில் தள்ளப்பட்ட நிலையில்
      predator -க்கும் prey -க்கும் உள்ள வித்தியாசம் பயம் மட்டுமே !
      வாழ்க்கை குழியில் தள்ளப்பட்ட நம்மையும் சிக்கல்கள் ,பிரச்சினைகள் ,தடைகள்
      எனும் நாகங்கள் சூழ்கையில் பயம் விடுத்து மங்கூஸ் ஆக மாறி (இந்த வகையில்
      மட்டும் )அவற்றை வெல்ல வேண்டும் .(மன்னிக்கவும் !இரவு 2.30-க்கு எழுதுகையில்
      தத்துவ தத்து பித்தை தவிர்க்க முடியவில்லை :-)

      Delete
    2. அதற்க்கு பின்னர் தனது பயிற்சியாளரை வீழ்த்துவானே மங்கூஸ் , அங்கே ஓவியங்களை பாருங்கள் ....எதிரியின் கண்ணில் தெரியும் பயமே கவசம் என கருதி தனது கவசங்களை களையும் மன்கூசை கவனியுங்கள் ! அற்புதமாய் வசனமின்றி ஓவியர் விளையாடி இருப்பார் !
      கிம்மிடம் துவக்கத்தில் கூனி குறுகி நான் கொலைகாரனல்ல என கதறும் மன்கூசின் ஓவியங்கள் , body language என ஓவியமும் , வசனமும் கலந்து கட்டி அடிக்கும் கதை !

      Delete
    3. //விரியனின் விரோதியில் வரும் சில வசனங்கள் நமது
      வாழ்க்கைக்கே பொருந்தும் !//
      வாழ்வின் தத்துவமும் அதில் இருக்கும் நண்பரே !

      Delete
  64. ஈரோடு பஸ் நிலையத்தில் இப்போது மற்றுமொரு புத்தகக்
    கடையை நமது காமிக்ஸ் அலங்கரித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டு கடைகளிலுமே 'காவல் கழுகு' மட்டும் கண்ணில்படவில்லை. விசாரித்ததில், ஒரு வாரம் முன்பே அனைத்தும் விற்றுவிட்டதாம்!

    கடையை அலங்கரித்திட எத்தனையோ ஹீரோக்கள் இருந்தாலும், கல்லாவை அலங்கரிப்பதில் 'தல'க்கு நிகர் தலதான்!

    ReplyDelete
    Replies
    1. அதனால் தலைக்கென டெக்ஸ் காமிக்ஸ் என்றே ஒரு காமிக்ஸை மாதமொரு முறையோ அல்லது மாதமிரு முறையோ வெளி விடலாம் என்கிறீர்களா ?

      Delete
    2. @ ஸ்டீல்

      'தல'க்கென மாதாமாதம் தனிக் காமிக்ஸ் வெளியானால் அடுத்த பிறவியிலும் தமிழ் நாட்டில் பிறப்பதைப் பற்றி யோசிப்பேன். இல்லேன்னா நேரா இத்தாலிதான்! :)

      Delete
    3. சாரி , மாதமொரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று நீங்கள் கூறுவது காதில் விழுகிறது !

      Delete