Powered By Blogger

Sunday, July 20, 2014

ஒரு "முன்பதிவு" !

நண்பர்களே,
 
வணக்கம்.  ஜூலை முதல் வாரத்தில் Germany செல்ல வேண்டி இருப்பதாய்ச் சொல்லியது நினைவிருக்கலாம் ...LMS பணிகள் அச்சமயம் உச்சத்தினில் நடந்தேறி வந்தமையால் எங்கும் அசைய அவகாசமில்லாது போனது ! இப்போது என் வேலைகள்  பாக்கி ஏதுமில்லை என்பதால் ஐந்தாறு நாட்களில் ஐரோப்பிய வேலைகளை முடித்து விட்டுத் திரும்பிடும் எண்ணத்தில் மூட்டையைக் கட்டியுள்ளேன் !
 
நாளைய மதியப் பொழுது ஜெர்மனியில் என்பதால் அங்கிருந்து புதுப் பதிவை upload செய்கிறேன் ; so  சமீபமாய்ப் பரிச்சயமாகிப் போயுள்ள "ஞாயிறு பதிவை" காலையில் எதிர்பார்த்து disappoint ஆகிட வேண்டாமே - ப்ளீஸ் ? 
 
கிளம்பும் முன்பாக LMS - புக் 1-ன் மாதிரியைக் கையில் வைத்து அழகு பார்த்த கிறக்கம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை ! "பீற்றல் பெரியசாமி"யாகப் பார்க்கப்படும் வாய்ப்புகள் உள்ள போதிலும், இந்த ஒருமுறை மட்டும் அவையடக்கத்தைக் காற்றில் பறக்க விடுவதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது ! Stunning என்று சொன்னால் அது நிச்சயம் ஒரு understatement !!  நாளை சந்திப்போம் folks ! குட் நைட் !

99 comments:

  1. Wish You A Happy and Safe Journey! Waiting for the new post.

    ReplyDelete
  2. http://www.tamilinfotech.com/2014/07/Android-Tamil-Typing-Application.html

    ReplyDelete
  3. 10 க்குள் நானும் வந்துட்டேன்ல.!!!
    (அடடே ஆச்சர்யகுறி)

    ReplyDelete
  4. Is it summer in Germany?
    If yes then enjoy the trip.:)

    ReplyDelete
  5. ஏதாச்சும் உள்ளூர் பயணம் தான் கிளம்பியிருந்தீங்கன்னா எப்படியாச்சும் பின்தொடர்ந்து வந்து உங்ககிட்டே இருக்கும் LMSஐ ஆட்டையை போட்டிருப்போம்... ஹம்... :(

    ReplyDelete
  6. சீக்கிரமா ஜெர்மனில் இருந்து ஒரு செந்தேன் பதிவை இடுங்கள்.இன்றைய ஸ்பெஷல் என்ன.I am waiting.

    ReplyDelete
  7. இன்னும் இரு வாரங்கள்,சரியாக சொன்னால் 13 நாட்கள்.14ம் நாள் காமிக்ஸ் ரசிகர்களின் தீபாவளி.ஈரோட்டில் ஒரு வண்ணமயமான திருவிழா.நினைச்சாலே மனசுக்குள் மத்தாப்பு நண்பர்களே.

    ReplyDelete
  8. //LMS - புக் 1-ன் மாதிரியைக் கையில் வைத்து அழகு பார்த்த கிறக்கம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை !//
    We too waiting for LMS Dharisanam....

    ReplyDelete
  9. பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள். Hansrudi Wäscherன் Sigurd, Nick மற்றும் Tarzanஐ தழுவி வரையபட்ட Tibor, நம் ரசனைக்கு ஏற்புடையதாயிருக்கும் என எண்ணுகிறேன். சமயம் கிட்டினால், நமக்கு கட்டுபடியாகும் பட்சத்தில், அவற்றையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வரவும். LMS copy இருந்தால் அங்குள்ள பதிப்பகத்தாரிடம் காண்பிக்கவும், அவர்கள் அசந்து போவார்கள் என்பது நிச்சயம் !!

    ReplyDelete
  10. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் ..காமிக்ஸ் செல்வங்களை கொண்டு வந்து
    சேர்த்திடுவீர் ..பளா .பளா

    ReplyDelete
  11. வழக்கமான அசைவ பதிவுக்கு பதில் சைவ பதிவு ஹூம். பதிவுக்கே 36மணி நேரம் வெய்ட்டிங்கா?. அந்த அட்டை படத்தை பார்க்க 14நாள் வன வாசம் இருக்கனுமா சார் ?

    ReplyDelete
  12. புதிய பதிவுக்கு நீண்ட ...........காத்திருப்பு ! ஹூம் ......:-(

    ReplyDelete
  13. பயணம் வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துக்கள்!
    LMS பற்றி சொல்லி சொல்லி வெறி ஏற்றுகிறீர்கள்.... கடைசியில் நாம் LMS ஐ கடித்துச் சாப்பிடும் நிலைக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை...!

    ReplyDelete
    Replies
    1. தொட்டு கொள்ள ஒரு டொமட்டோ கெட்ச் அப் பார்ச .........ல் :-)

      Delete
    2. ''பொடியனு''க்கு ........அப்பிடியே ''பயங்கர பொடியனி''ல் விற்கும் கார சாஸ் ஊத்தினா இன்னும் மகிழ்ச்சி...............

      Delete
  14. lms ஜுரத்தை அதிகபடுத்தி ஜன்னி வர வைத்து விட்டீர்களே ! இன்னும் பதிமூன்று நாட்கள் ....மாத்திரையாக கார்சனின் கடந்த கால டெக்ஸ் , கிட் தோன்றும் பள பள மஞ்சள் உடை பக்கத்தை கண்ணில் காட்டுங்கள் .

    அப்புறம் மில்லியன் ஹிட்சை ஏறத்தாள நெருங்கி விட்டோம் , எனவே ஜெர்மனியிலிருந்து ஏதேனும் ஒரு அதிரடியை லவட்டி வாருங்கள் .

    சார் , அப்படியே எங்களுக்கு lms முதுகுபகுதியையாவது கண்ணில் காட்டுங்களேன் !

    ReplyDelete
  15. lms முதுகுபகுதியையாவது .............

    ReplyDelete
    Replies
    1. மந்திரியாரே என்ன சதித்திட்டம் தீட்டி கொண்டிருந்தீர்கள், இவ்வளவு நாளாய் காணோமே !

      Delete
    2. அப்பாடா ! இப்போதாவது வந்தீர்களே ! ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல்

      செய்யலாமா என யோசனை செய்து கொண்டிருந்தேன் .:-)

      Delete
    3. முந்நூறு கமெண்டுக்கு பிறகு ...........நான் கமெண்ட் போட்டால் ஆத்தா வையும் ............

      Delete
    4. சதி திட்டம் கீழே அம்பலம் ......கிளா

      Delete
  16. காத்திருக்கும் வேளையில் "ஆசிரியருடன் முதல் சந்திப்பு ", முதல் புத்தக திருவிழா

    அனுபவம் " ஆகியவை குறித்து முக்கியஸ்தர்களான ஸ்டீல் ,விஜய்,பரணீதரன் மிஸ்டர்

    மரமண்டை மற்றும் பலர் நேரம் அனுமதித்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் !

    படிக்க ஆவலாக உள்ளது .

    ReplyDelete
    Replies
    1. முக்கியஸ்தர்களான என்றுபுத்தகம் வாங்கும் அனைவரும் உண்டு நண்பரே .....அனுபவஸ்தர்கள் என்று மாற்றி கொள்ளுங்கள் !

      Delete
    2. ஆசிரியரை சந்திக்கும் வாய்ப்பை இழந்துள்ளேன் , அதனை பற்றி வேலையை முடித்து விட்டு வந்து பகிர்கிறேன் !

      Delete
    3. நண்பர்கள் என்னுடைய பதிவில் அனுபவஸ்தர்கள் என பிழை திருத்தம் செய்ய

      வேண்டுகிறேன் .(எழுதுவதில் என்னுடைய அனுபவம் போதாமையின்

      வெளிப்பாடு ஸ்டீல் !) காத்திருக்கிறேன் திரு ஸ்டீல் ............

      Delete
  17. ஆசிரியருமான என்னுடைய முதல் சந்திப்பு 2012 பெங்களூரு காமிக்கானில். அவருடைய வார்த்தைகளால் விவரிக்கிறேன் நண்பரகளே= " மறு நாள் காலை பத்து மணிக்கு விழா துவங்கிய போது, பெங்களுரு நண்பர்கள் நமக்கு முன்பே ஆஜர் அங்கே ! ஞாயிறு என்பதால் கூட்டமும் ரொம்ப சீக்கிரமே அலைமோதியது ! சற்றைகெல்லாமே நம் ஸ்டாலில் முதல் நாளைப் போலவே (புதியதொரு) வாசகக் குழமம் ! முதல் நாளை விட இன்றைக்கு குடும்பங்களின் வருகை அதிகமாய் இருந்தது highlight ! அப்போது சேலத்திலிருந்து வந்திருந்த நண்பர் தம் புதல்வர் மூலம் ஒரு giftwrap செய்யப்பட்ட டப்பாவைத் தந்திட, அதன் மேல் அழகாய் ஒரு வாழ்த்துச் சேதி !! உள்ளேயோ ஒரு மைசூர்பாகு டப்பா ! டெக்ஸ் வில்லரின் அதி தீவிர ரசிகரான இந்நண்பர் நம்மை சந்திக்கவே குடும்பத்தோடு புறப்பட்டு வந்திருந்தார் !! இனிப்பாய் அங்கே கரைந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகு மாத்திரமல்ல என்பதை நான் சொல்லிடத் தேவையும் உண்டா - என்ன "

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் சார் ! அருமை !அருமை !

      அப்போது உங்களது உணர்வுகள் குறித்து ......................

      Delete
    2. சேலம் Tex விஜயராகவன் @ நீங்க வந்ததும் எனக்கு தெரியாது.. ஒருவேளை காமிக்ஸ் நண்பர்களுடன்னான எனது முதல் சந்திப்பு என்பதால் உங்களை கவனிக்காமல் இருந்து இருப்பேன் :-(

      Delete
    3. பரணி @என்னுடைய புரோபைல் போட்டோ அப்போது ஆசிரியர் உடன் எடுத்தது நண்பரே

      Delete
  18. 2011 இல் சிவகாசி அலுவலகத்திற்கு நான் சென்றபோது கூட ஆசிரியரை சந்திக்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.அந்த அரிய வாய்ப்பு ஈரோட்டில் கிட்டும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  19. தாரை பரணிதரன் உடற்பயிற்சி செய்தது போதும் உள்ளே வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ...உடற்பயிற்சி எல்லாம் முடிந்து விட்டது .

      LMS போல ஆசிரியர் இன்னொரு டெக்ஸ் ஸ்பெஷல் கூட விட்டாலும் வாங்கவும் ..,தாங்கி பிடிக்கவும் நான் ரெடி ...ஆசிரியர் ரெடியா ..? & :-)

      Delete
  20. ஒரு தடாலடி சர்வே ..............

    லயன் காமிக்ஸ் அக்கௌன்ட் delete பண்ணி விட்டு வெளியே வந்தா தான் உன்னை கல்யாணம் பண்ணிபேன் ..........

    blog பக்கம் எட்டி பார்க்ககூடாதுன்னு ...........

    இப்பிடி உங்க காதலி சொன்ன என்ன ரியாக்சன் காட்டுவீங்க .........?

    ReplyDelete
    Replies
    1. மந்திரியாரே .....காதலி சொன்னா என்ன பன்னுவுன்னு தெரியலை ....

      ஆனா...மனைவி சொன்னா நான் வீட்டை விட்டு வெளியே போயிருவேன் .... :-)

      Delete
    2. அதாவது

      OPTION. A -காமிக்ஸ் க்கு மரியாதை

      OPTION B- காதலுக்கு மரியாதை

      இதற்கு பதில் சொல்ல போய் பட கூடாதவர்கள் கண்ணில் அந்த பதில் பட்டு

      விட்டால் ......குடும்பத்தில் குழப்பம் .............

      மந்திரியாரே ! சந்தேகமேயில்லை ........

      பயங்கரமான சதி திட்டமேதான் ........

      அஸ்கு .....புஸ்கு ....நான் பதில் சொல்ல மாட்டேன் :-)

      Delete
    3. தண்டவாளத்தில நிக்கிற சிவாஜினு நினைப்பு ..................

      பதில் சொன்ன உடனே ஸ்ரேயா தாவணிய கைல வச்சுட்டு
      நிறுத்துங்க
      நிறுத்துங்கனு...........ஓடியா வரப்போறாங்க ..............சும்மா பதில் சொல்லுங்க பாஸ் .........ஒரே ஒரு வாட்டி

      Delete
    4. ஆனா...மனைவி சொன்னா நான் வீட்டை விட்டு வெளியே போயிருவேன் .... :-)

      அதெல்லாம் இருக்கட்டும் .........போறப்ப எந்த பீரோவில காமிக்ஸை எல்லாம் வச்சுட்டு போவீங்க அத சொல்லுங்க பரணி சார்,,,,,,,,,,,,பாய்ண்டுக்கு வாங்க ,,,,,,,,,,,பாய்ஸ் கெட் ரெடி ...........

      Delete
    5. மந்திரி :
      தண்டவாளத்தில நிக்கிற சிவாஜினு நினைப்பு ..................

      பதில் சொன்ன உடனே ஸ்ரேயா தாவணிய கைல வச்சுட்டு
      நிறுத்துங்க
      நிறுத்துங்கனு...........ஓடியா வரப்போறாங்க .........#

      ஹா ....ஹா.....ஹி ..ஹீ .....ஹு ..ஹு .....வயறு வலிக்கிறது....

      Delete
    6. ஹ !ஹா ! சொன்னது சொன்னீங்க .........

      இதிலாவது ......

      ஒரு சன்னி லியோன் .....

      ஒரு ஆலியா பட் ........

      ஒரு தீபிகா படுகோன் .....

      ஹூம் ..........................

      Delete
    7. 1st ஒரு காதலி கிடைக்கணும்,
      2nd அந்த காதலியை திருமணம் செய்ய, மனைவியிடம் அனுமதி வாங்கணும்...
      இது ரெண்டும் நடந்த பிறகு தான், காதலி பேச்சை கேட்பதை பற்றி யோசிக்கனும்.....
      So அதுவரை no restriction for me to view & use Lion comics blog...
      ஹீ .....ஹு ..ஹு .....ஹீ .....ஹு ..ஹு .....ஹீ .....ஹு ..ஹு .....

      Delete
    8. எனக்குதான் காதலி இல்லையே ! அப்போ காமிக்ஸ்தானே காதலி ......

      Delete
  21. உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல,உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல,நீ இல்லாமல் நானும் நானல்ல,நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல.
    (L M S)

    ReplyDelete
    Replies
    1. குஷியா ஒரு பாட்டு பாடுங்க ...............

      Delete
  22. நண்பர் செல்வம் அபிராமி அவர்களுக்கு ..,

    ஆசிரியரின் எனது முதல் அறிமுகம் "கடிதம் " மூலம் தான் என்றால் நம்ப முடிகிறதா ? &:-)

    ஆனால் அது தான் உண்மை .நான் ஒரு வழி பாதையாக நமது லயன் புத்தகத்தின் விமர்சனத்தை மாதம் தோறும் எழுதி கொண்டு இருந்த பொழுது 10 ..,12 ..வருடங்களுக்கு முன் என் திருமணம் சமயம் (சில பிரச்சனைகளால் பத்திரிக்கை பலருக்கு கொடுக்க வில்லை ) ஆசிரியருக்கு தகவல் மட்டும் தெரிவித்தேன் .அவருக்கு உள்ள இடைவிடாத பணிகளில் அதை மறந்திருப்பார் என்றே நினைத்து நானும் மறந்து இருந்தேன் .ஆனால் திருமண மான ஒரே வாரத்திற்குள் அவர் கைப்பட எழுதி எனக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தார் .அந்த கடிதத்தை எத்துனை முறை அன்றே படித்து ..,படித்து இருப்பேன் என்பது கணக்கே இல்லை .இதில் வேறு புது மனைவியிடம் காட்டி..,காட்டி இவர் யார் தெரியுமா ..?இவர் யார் தெரியுமா என்று? குதித்து கொண்டே இருக்க கண்டிப்பாக அவளுக்கு ஆசிரியர் மேல் " பயங்கர கடுப்பு " வந்ததை என்னால் கணிக்க முடிந்தது .அதை பற்றி எல்லாம் கவலை பட வில்லை .அந்த கடிதத்தை இன்றும் "பொக்கிஷமாய் " பாது காத்து கொண்டு இருக்கிறேன் .

    ஆசிரியரை நேரில் பார்த்தது போன வருடம் ஈரோடு புத்தக காட்சியில் தான் .அன்று அவரை சந்தித்ததும் சார் ...தாரமங்கலம் பரணி என்று அறிமுக படுத்தி கொள்ள அவரோ ..ஆகா ...உங்களை மறக்க முடியுமா ? என்று பதில் உரைக்க நான் வானத்தில் மிதக்கும் உணர்வு ..ஆனால் என்ன செய்ய ...ஒரே மணி நேரத்தில் ஒரு நண்பரால் மனம் சங்கடம் அடைய மதியம் சென்று விட்டேன். ( அதை மறக்கவே நினைக்கிறேன் .எனவே அதை பற்றி வினவ வேண்டாம் .ப்ளீஸ் ).ஆனால் மதிய உணவு ஈரோட்டு நண்பர்கள் விஜய்...,ஸ்டாலின் ..,ஆடிட்டர் ராஜா..,புனித சாத்தான் ஆகியோரின் புண்ணியத்தால் ஆசிரியருடன் அமர்ந்து மதிய உணவு .ஆசிரியர் அருகில் அமர்ந்து உண்பதால் என்னவோ சாப்பிடவும் தடு மாற்றம் தான் .மனதில் வேறு அவரை பார்த்தவுடன் பள்ளி தலைமை ஆசிரியரை பார்த்த பயமும் அவ்வபோது .பேசவும் தடுமாற்றம் .விட்டால் போதும் ஒன்று ஓடி விட்டேன் . :-) ஆசிரியரிடம் .கடிதம் மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் பேசி விடலாம் .ஆனால் "பள்ளி தலைமை ஆசிரியரை "பார்க்கும் எண்ணம் வருவதால் நேரில் பயம் போக மாட்டேன் என்கிறது .பார்கலாம் இந்த முறை "உடற்பயிற்சி" எல்லாம் செய்து "தைரியமாக " தான் ஆசிரியரை சந்திக்க ஈரோடு வருகிறேன் . :-)

    பின் குறிப்பு :

    இந்த முறையும் கை ..,கால் நடுங்கினால் என்னை காப்பாற்ற " போராட்ட குழு உறுப்பினர்கள் " உதவி செய்ய வேண்டுகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. மிக நெடிய காமிக்ஸ் அன்புறவு .வாவ் !..........

      இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி திரு பரணீதரன் !

      Delete
    2. நெகிழ்ச்சியான நினைவலைகள்

      Delete
    3. Paranitharan K : //அதை மறக்கவே நினைக்கிறேன் .எனவே அதை பற்றி வினவ வேண்டாம் .ப்ளீஸ்//

      சென்ற ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடந்த இந்த சோகமான விஷயத்தை இதுவரை மூன்று முறை இங்கு குறிப்பிட்டு விட்டீர்கள். இருந்தாலும் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை. ஈரோடு ஸ்டாலினும் யாரிடமும் சொல்லப் போவதில்லை. எனவே நடந்ததை இங்கு கூறிவிடுவதே உங்களின் மன ஆறுதலுக்கு மருந்தாக அமையும் என்பது என் கருத்து !

      சொல்லாமல் இருந்தால் மனம் ஆறுதலடையாது !
      சொல்லிவிட்டால் மனம் இனியும் இரணமாய் அறுக்காது !

      பின்குறிப்பு : நானும் எவ்வளவு நாள் தான் காத்துக் கொண்டிருப்பது? இரகசியத்தை கேட்காமல் மண்டை வெடிக்குது ;)

      Delete
    4. Paranitharan K : //மறக்கவே நினைக்கிறேன் //
      அதை மறந்து விடுங்கள்! இங்கு அது பற்றி எழுதாமல் இருப்பதே நலம்.

      Delete
  23. அன்பு நண்பர் பரணிதரன் அவர்களே..உங்கள் மலரும் நினைவுகள் கண்டு என் இதயம் இனித்தது.

    கண்கள் பனித்தன .பளா .பளா

    ReplyDelete
  24. LMS வரவேற்பு குழு தயார் !

    ReplyDelete
  25. LMS சுமந்து தமிழகத்தில் பயணிக்க போகும் அதிர்ஷ்டசாலி courier ST Courier or Professional Courier?

    ReplyDelete
  26. இருவருடங்களுக்கு முன்பு... பெங்களூர் காமிக்கான்... எடிட்டரை, என் ஆதர்ஸ நாயகனை, 25+ வருடங்களாக எழுத்துக்களாக மட்டுமே அறிமுகமாகியிருந்தவரை முதன் முதலாக சந்திக்கப் போகிறேன் என்ற பரபரப்பு...
    அரங்கத்தில் நுழைந்ததும் இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்தது. நம்முடைய ஸ்டாலைத் தேடி கண்டுபிடித்ததும் உடனே அருகில் போகாமல், சற்று தூரத்திலேயே நின்றபடி எடிட்டர் விஜயன் யாராக இருக்குமென்று அங்கிருந்தவர்களை கணிக்க முயன்றேன். எடிட்டரை 55+ வயதில், குள்ளமாக, கருப்பாக, வேட்டிசட்டை சகிதம் (கிட்டத்தட்ட நடிகர் செந்திலைப் போல) எதிர்பார்த்திருந்தேன் என்பதுதான் உண்மை! அங்கிருந்தவர்களில் என் மனதிலிருந்தவரை ஒத்த உருவமுடையவராக, கையில் குறிப்பேடு-பேனா சகிதம் அங்கே தேமே என்று நின்றிருந்த 'பெங்களூர் சுப்ரமணியன்' அவர்களையே எடிட்டராக இருக்கும் என்றெண்ணினேன். என் கண்டுபிடிப்பை நானே
    மெச்சியபடியே ஸ்டாலுக்கு அருகில் சென்று அங்கே நின்றிருந்த (அப்போதுதான் முதன்முதலாக சந்தித்த) சில நண்பர்களிடம் (பிரசன்னா, டெக்ஸ்வில்லர், பழனிவேல் மற்றும் சிலர்) சென்று "இவுருதான் எடிட்டரா?" என்றேன். "எடிட்டர் அவருங்க" என்று சொல்லி விற்பனையாளரிடம் பேசிக் கொண்டிருந்தவரை காட்டவே, அவரே திரும்பி வணக்கம் சொல்லி வரவேற்றார். இன்ப அதிர்ச்சியில் எனக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. எடிட்டரை முதன்முதலாகப் பார்த்த அந்தக் கணத்தில் அத்தனை நாளும் நான் உருவகப் படுத்தியிருந்த நடிகர் செந்தில் சுக்குநூறாக வெடித்துச் சிதறினார். ஏனோ மனம் டெக்ஸ் வில்லருடன் எடிட்டரை ஒப்பிட்டது. தட்டுத்தடுமாறி அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். "உங்களைச் சந்திக்க வேண்டுமென்ற என் பல வருடக் கனவு இன்று நிறைவேறியதாக"ச் சொல்லி குதூகலித்தேன். பணி நிமித்தமாகச் சென்றிருந்ததால் அதிக நேரம் செலவிட முடியாமல் அங்கிருந்த நண்பர்களிடம் சில நிமிடங்களே பேசிவிட்டு, மனது நிறைய சந்தோசத்துடனும், ஒருவித பிரம்மிப்புடனும் அரங்கைவிட்டு வெளியேறினேன்.

    மறக்க முடியாத நிமிடங்கள் அவை! :)

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வித்தியாசமான அனுபவங்கள்!

      படிக்க மிகவும் சுவையாக உள்ளது.

      Delete
    2. விஜய், 2012 பெங்களூர் காமிக்-கான் வந்திங்களா? சொல்லவே இல்லே :-)

      Delete
    3. Do u think bang subra was editer? Then what u think whensaw our editerfirst time act kamal or prem?:-)

      Delete
    4. @ parani

      பணி நிமித்தம் வந்ததொரு திடீர் பயணம். அதனால் அங்கே அதிக நேரம் செலவிட முடியவில்லை. :(


      @ சுந்தர்

      எடிட்டரைப் பார்த்த அடுத்த நொடியே அவருக்கும் டெக்ஸுக்கும் ஆறு வித்தியாசங்களைத் தேட ஆரம்பித்துவிட்டேன் ( பேசிக் கொண்டே அவரது ஷூவின் பின் பகுதியில் 'முள் சக்கரம்' இருக்கிறதா என்றுகூட கவனித்தேன். மானசீகமாக அவருக்கு ஒரு கெளபாய் தொப்பியணிந்தும் பார்த்துக் கொண்டேன்).

      இதெல்லாம் உண்மையான டெக்ஸுக்குத் தெரியவந்தால் குறைந்தபட்சம் என் தாடையில் ஒரு குத்து நிச்சயம். :D

      Delete
    5. @ ஸ்டீல்

      என்னவொரு 'பொருத்தமான' எதிர்பார்ப்பு - அதானே? ;)

      Delete
    6. //இதெல்லாம் உண்மையான டெக்ஸுக்குத் தெரியவந்தால் குறைந்தபட்சம் என் தாடையில் ஒரு குத்து நிச்சயம். :D//

      அப்போ ஈரோட்டுல ................நிச்சயம் !

      Delete
    7. விஜய் அவர்களே .. .கிட்டத்தட்ட என்னுடைய அடையாளங்களோடு எடிட்டரை எதிர்பார்த்திருக்கிறீர்கள்,..என்னை எப்படி கற்பனை செய்து வைத்து இருக்கிறீர்கள்,



      Delete
    8. "மேச்சேரியின் அரவிந்த சுவாமி" என்றழைக்கப்படும் ரவிகண்ணன் அவர்களே...

      உடல் நலம் தேறிவிட்டீர்களா?

      Delete
  27. சேலம் விஜயராகவன்,சேலம் பரணிதரன்,சேலம் சுந்தர் யப்பா பெரிய தலைங்க நிறைய பேர் சேலத்துல இருப்பாங்க போல இருக்கே.

    ReplyDelete
    Replies
    1. நான்லாம் சின்ன தூசு அறிவரசு . இங்கே 500 காமிக்ஸ்க்கு மேலே வைத்து உள்ளவர்கள் பலர் உண்டு. இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல நடிப்பர் .

      Delete
  28. வாவ்,சூப்பர்,ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சுவையான பிளாஷ்பேக்.படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது.

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. இப்போது நேரம் இருப்பதால் நண்பர்களிடம் ஒரு உதவி !

    ரமேஷ் குமார் ,மிஸ்டர் மரமண்டை ஆகியோர் அடிக்கடி

    :P. :D போன்றவற்றை பயன்படுத்துகின்றனர் .இவற்றை internet slang ,internet jorgan

    Blog ,twitter lexicography ஆகியவற்றில் தேடி விட்டேன் . அவை காணபெறவில்லை .

    தெரிந்தவர்கள் சொல்லி கொடுக்கவும் . நன்றி !

    ReplyDelete
    Replies
    1. நன்றி மிஸ்டர் மரமண்டை !

      Delete
  31. தங்க நகரம்,மர்மகோயில் இந்த கதைகளின் நாயகர்கள் யாருக்காவது நினைவு இருக்கிறதா ..
    பளா ..பளா ..

    ReplyDelete
  32. Dear Sir,

    I read your last post on the LMS sales issue. I already subscribed for Super Six and will order two more today and gift it to someone to introduce lion comics.

    My suggestion on the options that you proposed in your previous post:

    I will prefer option 2 as I can afford it but we need to take our comics to every one. You can release collectors edition for coveted reprints and this will be based only on reservation. I don't understand our passion for1 big book with 900 pages or 800 pages. Instead we can release box set with two or three books of 200-300 page each. Instead of 1 book it will be 3 or 4. Readers can buy 1 after another or 1 box set. To attract readers to buy box set, you can sell box set 10% cheaper.

    It is all food for your thoughts and not demands. I have read many of the comics in English but I buy all of our comics as I love Lion and Muthu. I want them to continue forever. I am collecting and keeping them for my 4 year daughter. She loves Lucky Luke. Thanks a lot for your service to Tamil Comics.

    Thanks,
    Mahendran

    ReplyDelete
  33. டியர் விஜயன் சார்,

    என்னாச்சு...
    ஜெர்மனியில் நேரம் தற்போது மாலை 5.13..

    என்னாச்சு...
    இந்தியாவில் நேரம் தற்போது இரவு 8.43..

    என்னாச்சு...
    பதிவு இன்னும் வரலயே.. சார்..

    என்னாச்சு...
    ரெப்ரெஷ் செஞ்சு.. செஞ்சு கையெல்லாம் ஒரே வலி..

    என்னாச்சு...
    பதிவ படிக்காம தலை பயங்கரமா வலிக்குது..

    என்னாச்சு...
    நீங்க தான் சார் என்னாச்சுன்னு எங்களுக்கு சொல்லணும்... சீக்கிரமா சார் :)))))

    ReplyDelete
  34. மை டியர் மானிடர்களே!!!

    நம்பகமான வட்டாரத்திலிருந்து வந்த தகவல். யாரோ நல்ல பிசாசுன்னு ஒரு ஆசாமியாம்.அவர் ஏதோ புதிய பதிவு போட்டிருக்கிறாராம்.ஹிஹி...!!!

    ReplyDelete
  35. Edi said new post tomorrow , at 00:18sunday.So we can eexpect new post on Monday. Salem TeX viji

    ReplyDelete
    Replies
    1. டியர் விஜயன் சார்,

      என்னாச்சு...
      சார், இங்க எல்லாரும் குஜாலா இருக்காங்க சார்..

      என்னாச்சு...
      உங்க பதிவு Monday தான் வரும்னு சொல்றாங்க சார்..

      என்னாச்சு...
      யாரோ..dinesh deni அப்படின்னு ஒரு புது பார்ட்டி சொல்றார் சார்..

      என்னாச்சு...
      ரெப்ரெஷ் செஞ்சு.. செஞ்சு கையெல்லாம் ஒரே வலி சார்..

      என்னாச்சு...
      பதிவ படிக்காம தலை பயங்கரமா வலிக்குது சார்..

      என்னாச்சு...
      நீங்க தான் சார் என்னாச்சுன்னு எங்களுக்கு சொல்லணும்... சீக்கிரமா சார் :)))))

      Delete
    2. மிஸ்டர் மரமண்டை ! எல்லோரும் அவரவர் அனுபவம் குறித்து எழுதுகின்றனர் !

      உங்களது அனுபவம் குறித்து நீங்கள் எழுதவே இல்லையே ! எழுதுங்களேன் ! ப்ளீஸ் ......

      Delete
    3. கும்மிருட்டான் பட்டிக்குள் டார்ச் வெளிச்சத்தை வீசி எரிய பார்க்கிறீர்களா ?

      Delete
    4. selvam abirami :

      நன்றி நண்பரே.. எனக்கான பதிலை நண்பர் ஸ்டீல் உங்களுக்கு சொல்லி விட்டார் :) (ஜாலி கமெண்ட்)

      //கும்மிருட்டான் பட்டிக்குள் டார்ச் வெளிச்சத்தை வீசி எறிய பார்க்கிறீர்களா ?// ஸ்டீல் !

      Delete
  36. அவதார் பார்ட்-2 க்கு கூட இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்காது போலிருக்கே.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் ஆசிரியரே பார்த்து அசந்து போகும் பொது எதிர்பார்ப்பு குறைந்தாலும் பரவாயில்லை அட்டை படத்தையாவது கண்ணில் காட்ட மாட்டாரா என ஏங்குகிறேன் ! இது ஆசிரியரின் அவதார்தானே !

      Delete
  37. எடிட்டர் சார்,

    ஏற்கனவே கிட்டத்தட்ட 100 கமெண்ட்டுகளை எட்டிவிட்டதால், நீங்கள் போடவிருக்கும் பதிவைப் புதுப் பதிவாகவே போட்டு விடுங்களேன்? 'me the first' போட்டு நாங்களும் புதுசா ஆரம்பிப்போமில்லையா? எல்லாம் 'load more' பயம் தான்!

    ReplyDelete
  38. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete