Powered By Blogger

Monday, March 17, 2014

ஒரு just like that பதிவு..... !

நண்பர்களே,

வணக்கம். சென்ற வாரத்தின் முழுமையையும் கிழக்கு ஐரோப்பாவின் குளிருக்குள் சுற்றும் படலம் ஆக்ரமித்துக் கொள்ள இங்கு ஆஜராகவே நேரமில்லாது போனது. ஊர் சுற்றலில் போனசாகக் கிட்டிய முதுகு வலி வார இறுதியினையும் துண்டு போட்டு ரிசர்வ் செய்து கொள்ள - மேற்கொண்டு 2 நாட்களும் பணால்!  Anyways - புது இதழ்களுக்கான இறுதிக்கட்டப் பணிகள் தொடும் தூரத்தில் இருந்ததால்  -என் முதுகோடு சேர்த்து ஷெல்டனையும், லக்கியாரையும் பராமரிப்பதில் பொழுது ஓடி விட்டது ! 

கிழக்கு ஐரோப்பாவில் தான் எனக்கு வேலை என்ற போதிலும், சைக்கிள் கேப்பில் நமது படைப்பாளிகளை பெல்ஜியத்தில் சந்தித்து ஒரு சலாம் போட்டு வைக்கத் தவறவில்லை ! "சூப்பர் 6"-ன் பொருட்டு நான் டிக் செய்து வைத்திருந்த 2 புதுக் கதைகளின் உரிமைகளுக்கான இறுதிக் கட்டப் பேச்சு வார்த்தைகளையும் சந்தடி சாக்கில் ஜெயமாக்கிட முடிந்ததில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி !எல்லாப் புதுக் கதைகளின் அறிமுகச் சமயங்களிலும் சொல்லிடும்  "உலகத் தொலைக்கட்சிகளில் முதன்முறையாக" பாணியே தான் எனினும், இம்முறை இந்த இரு கதைகளோடும் அதனை சற்றே அழுத்திச் சொல்ல முகாந்திரம் இருப்பதாய் நான் கருதுகிறேன் ! Wait n' watch please ! இம்முறை படைப்பாளிகளின் முகங்களிலும் என்னைப் பார்த்த போது ஒரு சந்தோஷம் நிதர்சனமாய்த் தெரிந்தது ! நமது சமீப மாதத்து இதழ்களின் சகலத்தையும் அவர்களது மீட்டிங் ஹாலின் ஷோகேசில் பிரதானமாய், அழகாய் அடுக்கி வைத்திருந்தனர் ! என்னோடு பேச அமர்ந்த சமயம் அவற்றை வெளியே எடுத்து புரட்டிக் கொண்டே -"No more black and white !" என்று புன்னகையோடு அவர்கள் சொன்ன போது - இங்கு நம் நண்பர்கள் 'திரும்பவும் கறுப்பு-வெள்ளைக் கதைகளுக்கொரு வாய்ப்புக் கோரி வருவதும் மின்னலாய் என் தலைக்குள் ஓடியது ! வழக்கமாய் ஒரு குறுகிய அவகாசத்தை ஒதுக்கி விட்டு, அதற்குள்ளாக பரபரப்பாய் நம் சம்பந்தப்பட்ட வேலைகள் அனைத்தையும் அவர்கள் பேசி முடிப்பது வழக்கம். ஆனால் இம்முறையோ அந்த அவசரம் எதனையும் வெளிப்படுத்திடாமல் - சாவகாசமாய் நமது கதை வரிசைகளின் வெற்றிகள் / சுமார் ரகங்கள் பற்றி விசாரித்து விட்டு அவர்களது upcoming projects பற்றிய வெள்ளோட்டங்களையும் என்னிடம் பகிர்ந்து கொண்டனர் !  தவிர அவர்களது மார்கெட்டின் சமீப நிகழ்வுகளைப் பற்றியும் என்னிடம் பேசிய போது நம்மையும் ஒரு பொருட்டாக அவர்கள் கருதத் துவங்கும் நாள் புலர்ந்து விட்டது புரிந்தது ! 

அப்படியே XIII - இரத்தப் படலம் பற்றிய பேச்சு எழுந்தது ! புது கதாசிரியர் + ஓவியரின் கூட்டணிக்கு அங்கு நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது என்பதோடு - இந்தாண்டு நவம்பரில் அடுத்த பாகம் ரிலீஸ் ஆகவிருக்கும் விஷயத்தையும் சொன்னார்கள் ! பாகம் 22-ன் பக்கங்களைப் புரட்டிய போது ஏகப்பட்ட ஆக்க்ஷன் நிரம்பிய பாதையில் கதை பயணிப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது ! சரி - 2015-ல் பாகம் 22 & 23-ஐ வெளியிட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டேன் ! அத்தோடு அல்லாமல் - "XIII மர்மம் " என்ற தொடர் வரிசையில் - XIII கதைகளின் உப கதாபத்திரங்களைச் சித்தரிக்கும் முயற்சிக்கும் நல்ல வரவேற்பாம் ! இந்தாண்டு ஜூனில் BETTY -ன் பார்வையில் இரத்தப் படலத்தை சித்தரிக்கும் ஒரு ஆல்பம் வரவிருக்கிறதென்றும் ; இந்தாண்டே இவ்வரிசையில்  கூடுதலாய் ஒரு ஆல்பமும் கூட வெளியாகலாம் என்றும் சொன்னார்கள் ! எது எப்படியோ -  இப்போதைக்கு நண்பர் XIII -க்கு VRS கிடைக்கப் போவதில்லை என்பதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது ! 


'மங்கா காமிக்ஸ்கள் தற்போது பிரெஞ்சு மார்கெட்டில் அத்தனை பிராமதமாய் ஓடவில்லை !' என்று சொன்ன போது - 'இது ஓடினால் தானே ஆச்சர்யமே !!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் ! முதல் முறையாய் விற்பனை எண்ணிக்கையிலும் சரி ; விற்பனை வருமானங்களிலும் சரி - மங்கா லேசாய் ஒரு பின்னடைவை சந்தித்துள்ளதென்று சொன்னார்கள் ! நமக்கு இந்த ரக காமிக்ஸ் மீது என்றைக்குமே பெரிதாய் ஒரு ஈர்ப்பு இருந்ததில்லை என்பதால் பெரிதாய் நான் react செய்து கொள்ளவில்லை ! ஆனால் சீனாவைப் பற்றி அவர்கள் சொன்ன விஷயம் மெய்யாக என்னை சலனம் கொள்ளச் செய்தது ! மங்கா காமிக்ஸின் மையம் ஜப்பானியப் படைப்பாளிகளே என்பது உலகறிந்த விஷயம். ஆனால் சமீப காலமாய் சீனாவின் ஓவியர்கள் ;சீனாவின் கதாசிரியர்கள் - இந்த மங்கா பாணியை அழகாய் உள்வாங்கிக் கொண்டு மாறுபட்டதொரு பாதையில் புதுப் புது படைப்புகளுக்குப் பிள்ளையார்சுழி போட்டு வருகிறார்களாம் ! இன்று சர்வதேச காமிக்ஸ் படைப்பாளிகளின் வரைபடத்தில் சீனாவிற்கொரு முக்கிய இடம் உருவாகி வருவதாகவும், காமிக்ஸ் உலகினுள் சீனா அழுத்தமாய் முத்திரை பதிக்கப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும்  அவர்கள் சொன்ன போது என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை ! உலகின் முக்கிய தயாரிப்புத் துறைகளுக்குள் தான் சீனாவின் வெற்றிக் கொடி பறக்கிறதென்றால் - கற்பனைகள் கொடி கட்டும் ஒரு துறையினுள்ளும் அவர்களது பங்களிப்பு இருக்கப் போகிறதெனும் செய்தி வாய் திறக்கச் செய்தது ! சீக்கிரமே லக்கி லூக்கும் ; லார்கோவும் நூடுல்ஸ் நாட்டிலிருந்து வலிமையான போட்டியை சந்திக்கப் போகிறார்களோ - என்னவோ !!  (சீன பாஷை தெரிந்த நண்பர்கள் எவரேனும் இங்கிருப்பின் தயாராகிக் கொள்ளுங்கள் guys ! அடுத்த 5 ஆண்டுகளுக்குள் உங்கள் சகாயத்தை நாடி நாம் நிற்கக் கூடும் !!)

'அதெல்லாம் சரி - '70 களிலும் ; '80 களிலும் வெற்றி பெற்ற கதைத் தொடர்களுக்கு மீண்டும் உயிரூட்டினால் உங்களது இன்றைய மார்கெட்டில் எடுபடாதா ?' என்று கேட்டு வைத்தேன் ! அவர்கள் புண்ணியத்தில் கேப்டன் பிரின்ஸ்களும் ; அலி பாபாக்களும் ; ப்ரூனோ ப்ரேசில்களும் புதுக் கதைகளோடு தொடர்ந்திட்டால் நமக்குக் கொண்டாட்டம் அல்லவா ? "ஊஹூம் - இன்றைய எங்கள் வாசகர்களுக்கு புதுமைகள் அவசியம் ; classics ரகக் கதைகள் போணி ஆகாது !" என்று சொன்னவர் - 2013-ன் பிரெஞ்சு காமிக்ஸ் மார்கெட் பற்றியதொரு data sheet -ஐ என்னிடம் காட்டினார் ! சென்றாண்டில் பிரெஞ்சில் வெளியான காமிக்ஸ் ஆல்பம்களின் எண்ணிக்கை 5519 ஆம் !!!!! (இது மங்கா மொழிபெயர்ப்புகள் ; அமெரிக்க காமிக்ஸின்   மொழிபெயர்ப்புகள் ; பிரெஞ்சுப் படைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்த எண்ணிக்கை). அவற்றில் ஒரு கால் பங்கு மாத்திரமே தொடரும் கதைவரிசைகள் ; பாக்கி முக்கால் பங்கும் புத்தம் புது நாயகர்கள் ; கிராபிக் நாவல்கள் ; கதைகள் என்று ஏகப்பட்ட புது வரவுகள் ! ஒரு புதுத் தொடர் 3-4 ஆண்டுகளுக்குள் நல்ல விற்பனையைக் கண்டிடும் பட்சத்தில் அதற்கு நீண்டதொரு வாய்ப்பு வழங்குவார்களாம்  ; இல்லாவிட்டால் கட்ட வேண்டியது தான் மூட்டையை ! இப்போதெல்லாம் 20 ஆண்டுகள் ; 30 ஆண்டுகள் என தொடர்ச்சியாய் வெற்றி கண்டு வரும் கதை வரிசைகள் ரொம்பவே குறைவு என்று சொன்னவர் - அத்தகைய வெற்றி பெற்றதாய் அடுக்கிய பெயர்களில் நமக்குப் பரிச்சயமானவை - லார்கோ வின்ச் ; லக்கி லூக் ; தோர்கல் ; ப்ளூ கோட் பட்டாளம் ; XIII  மட்டுமே ! இவை தவிர இன்னும் அவர் குறிப்பிட்ட   சில popular கார்ட்டூன் கதை வரிசைகளைப் பற்றி 'ஆ'வென கேட்டுக் கொண்ட நான்  2015-ல் அவற்றை முயற்சித்துப் பாப்போம் என்று நினைத்துக் கொண்டேன் ! So உங்கள் வீட்டு வாண்டுகளை காமிக்ஸ் உலகினுள் மெதுவாய் அடியெடுத்து வைக்கச் செய்யும் அவா உங்களுக்கு இருப்பின் ; அவர்களுக்குக் கதை சொல்லிடும் பொறுமையும் உங்களுக்கு இருப்பின் - 2015-ல் அந்த இளம் பட்டாளத்திற்கொரு தனிப்பாதை போட blueprint தயார் !! What say folks ?

இந்தாண்டின் வெளியீடுகளின் அட்டவணையில் ஒரு slot மட்டும் காலியாக இருந்தது நினைவிருக்கலாம் ! அந்த இடத்தினில் டிடெக்டிவ் ஜெரோமை வண்ணத்தில் அமரச் செய்யலாமென்ற எண்ணம் இருந்தது ; but இந்தக் கண்ணாடிக்கார டிடெக்டிவ் நம்மில் நிறையப் பேருக்கு சிம்ம சொப்பனமாய் இருப்பதால் அந்த இடத்தை ஒரு அதிரடி ஆக்க்ஷன் பார்ட்டிக்கு ஒதுக்குவதெனத் தீர்மானித்துள்ளேன் !  அவர் யார் என்பதை மே மாதம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன் ! ஏப்ரல் இதழில் 'சூப்பர் 6"-ன் விலைகள் ; சந்தா ; லயன் 30-வது ஆண்டுமலரின் அறிவிப்பு என நிறைய "விளம்பரப் பக்கங்கள்" காத்துள்ளன ! 'இயன்ற மட்டில் உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வலு அவற்றிற்கு இருந்திட வேண்டுமே தெய்வமே !' என்ற வேண்டுதல் என் உதட்டில் ! எப்போதும் போலவே - fingers crossed !

விடை பெறும் முன்னே - இதோ சின்னதாய் ஒரு teaser !

விரைவில் நம் அணிக்குள் ஐக்கியம் ஆகக் காத்திருக்கும் இவருக்கொரு பெயர் சூட்டும் வைபவத்தை தொடங்கினால் என்ன ? Get cracking folks ?! 

432 comments:

 1. Replies
  1. அடேங்கப்பா ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் தான் முதலா? மத்தவங்களெல்லாம் பின்னாடி வாங்க

   Delete
  2. வாழ்த்துக்கள் சார்!!!

   Delete
  3. முதல் இடம் வந்தால் போதுமா கர்ணன்ஜி? கருத்துச் சொல்ல வேண்டாமா?

   ம்... காமிக்ஸில் சென்சார் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

   Delete
  4. சென்சார் பத்தி கேட்டீங்க அப்புறம் அவர் டென்சனார் ஆகிடுவார், ஆமா சொல்லிப்புட்டேன்.

   Delete
 2. விஜயன் சார், சிறுவர் சிறுமியர்களுக்கு என தனியாக காமிக்ஸ் ஆரம்பிக்காமல் மாதம் ஒரு காமெடி நாயகர்கள் கதைகளை நமது காமிக்ஸில் வெளி ஈடுவது நல்ல ஐடியா, இது சிறுவர்/சிறுமியர்களை கவர உதவும். இது போன்று காமெடி கதைகளை ஒவ்வொரு மாதம்மும் தொடர்ந்து வரும்படி செய்யவும்.

  ReplyDelete
  Replies
  1. +1
   Even though the kids were not showing big interest in my home. I want to try my best hopefully it will click with them at some point.

   Delete
  2. V Karthikeyan : விடா முயற்சி...விஸ்வரூப வெற்றி !!

   Delete
 3. //உங்கள் வீட்டு வாண்டுகளை காமிக்ஸ் உலகினுள் மெதுவாய் அடியெடுத்து வைக்கச் செய்யும் அவா உங்களுக்கு இருப்பின் ; அவர்களுக்குக் கதை சொல்லிடும் பொறுமையும் உங்களுக்கு இருப்பின் - 2015-ல் அந்த இளம் பட்டாளத்திற்கொரு தனிப்பாதை போட blueprint தயார் !! //
  --- Waiting (thuppaki style)

  ReplyDelete
 4. Magic Wind என்ற பெயரே நன்றாக உள்ளது. அதே பெயரை உபயோக படுத்தினால் என்ன?

  ReplyDelete
 5. I agree with Parani! Magic wind என்றே அழைக்கலாம் balloonகுள் பொருந்தி வருவதில் பிரச்னை இல்லையென்றால்! Frenchல் உள்ள mystery adventure ரக கதைகளை முயற்சிக்கலாமே ?

  ReplyDelete
  Replies
  1. senthilwest2000@ Karumandabam Senthil : எந்தக் கதைகளைச் சொல்கிறீர்கள் சார் ?

   Delete
 6. Whether "Magic Wind" is coming in the latest re-colored version or the original BW version ?. Hope you are able to release, at least 2 books per year, to complete the full list in the next 20 years.

  Sad to miss out a character like "Detective Jerome"; what about giving a single try in Color?

  Any plans for Jonathan Cartland or Corto Maltese in the near future ?

  Thanks!

  ReplyDelete
  Replies
  1. Rama Karthigai : கொஞ்சம் பதில்கள் தொடரும் விளம்பரங்களிலும் , நிறைய விடைகள் வரவுள்ள இதழ்களிலும் கிட்டிடும் ! பொறுத்திருந்து பாருங்களேன்..!

   Delete
 7. //XIII கதைகளின் உப கதாபத்திரங்களைச் சித்தரிக்கும் முயற்சிக்கும் நல்ல வரவேற்பாம் //
  so plz publish 13th series
  XIII Mystry the inquiry

  ReplyDelete
  Replies
  1. R.Anbu : நீங்கள் குறிப்பிடுவது ஒரு கதையல்ல நண்பரே ! அதுவொரு documentary !

   Delete
 8. // சீன பாஷை தெரிந்த நண்பர்கள் எவரேனும் இங்கிருப்பின் தயாராகிக் கொள்ளுங்கள் guys! அடுத்த 5 ஆண்டுகளுக்குள் உங்கள் சகாயத்தை நாடி நாம் நிற்கக் கூடும்!! //

  சீனர்கள் கொடுத்துவைத்தவர்கள். நம்முடைய ஒரு வார்த்தை அவர்களுக்கு ஒரே எழுத்தில் சுருங்கிவிடுவதால் அவர்களுக்கு பலுன் அளவில் பிரச்சனை இருக்காது. ஆனால் அவர்களுடைய பலூன் சைஸ் தமிழுக்குப் பொருந்துமா? :D

  // 2015-ல் அந்த இளம் பட்டாளத்திற்கொரு தனிப்பாதை போட blueprint தயார் !! What say folks ? //
  குழந்தைகளுக்குத் தனி Track அமைவதே Safe-ஆன Approach. தமக்குப் பொருந்தாத கதைகள் திணிக்கப்பட்டதாக பெரியவர்கள் கருதுவதை இது தவிற்கும். அதேநேரம் பெற்றோர்கள் தைரியமாக குழந்தைகளுக்கு வாங்கித்தரும் வாய்ப்பும் அதிகம்!

  (Personal'ஆக நான் ரசித்துப்படிப்பது லார்கோவைவிட Bambie, Chip n Dale வகையறா என்பதால் சிறார்கள் சாக்கில் எனக்குவேண்டியதும் வரும்போலத் தெரிகிறது :D)


  // MagicWind //
  மாயக்காற்று = மாயமாருதம்

  ReplyDelete
  Replies
  1. மோகினோ............. கியமோ ..........மயுன்ஜோ ..........இன்னைக்கு இத கத்துகிட்டா போதும்

   Delete
  2. Ramesh Kumar : //சிறார்கள் சாக்கில் எனக்குவேண்டியதும் வரும்போலத் தெரிகிறது :D)//

   +1

   Delete
 9. Art Attack vs Heart Attack :(

  டியர் விஜயன் சார்,

  எங்கள் ஆயுள் முடிவதற்குள் ஏதாவது நல்ல முடிவு சொல்லுங்கள் சார் ... ப்ளீஸ் சார் ...

  காமிக்ஸ் வெறி இருந்தும் - தமிழில் வாசிக்க வாய்ப்பு இல்லை !
  வாங்கும் சக்தி இருந்தும் - தமிழில் அனைத்தும் வாங்க வழியில்லை !

  சென்றாண்டில் பிரெஞ்சில் மட்டும் வெளியான காமிக்ஸ் ஆல்பம்களின் எண்ணிக்கை 5519 :(

  ReplyDelete
  Replies
  1. மிஸ்டர் மரமண்டை : இத்தாலிக்கு ஒரு சாராரும், பாக்கியுள்ளோர் பிரெஞ்சுக் குடியுரிமைக்கும் விண்ணப்பிப்போமா ?

   Delete
 10. டூரில் அள்ளிகிட்டு வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். எது வரப்போவுது? எப்ப வரப்போவுது? ஒண்ணும் புரியலை. நாளு வேற ஓடமாட்டேங்குது. நம்ப வாழ்க்கையே ஒரே மிஸ்ட்ரியா போய்கிட்டிருக்கு. கடாமுடானு முடிவு பண்ணி வாரம் ஒரு குண்டு புக்குனு போட்டுத்தள்ளுங்க..

  ReplyDelete
  Replies
  1. ஆதி தாமிரா : ஆந்தை விழியானை ஆயுசுக்கும் பேய் முழி முழிக்கச் செய்வதில் குண்டு புக் கழகத் தலைவருக்கு ஏன் அலாதி ஆசையோ ?

   Delete
 11. கிளிண்ட், ரெக்ஸ் , பெர்ரி , ஸ்டீல் , ரியோ , விண்டீஸ் , மலைக்கள்ளன் ?!!!!! சரி சரி ஏதோ ஒரு ஆர்வத்துல தெரியாம சொல்லிட்டேன் .. அப்டியே விட்ருங்க !!!

  ReplyDelete
  Replies
  1. தல நீங்க என்ன சொல்ல வரீங்க??!!! இந்த சிரிப்புக்கு பின்னால் ஏதோ சிவகாசி வெடி இருக்கும் போல!!!

   Delete
 12. நம் தாய்நாடு இந்தியாவில் ;

  நாம் ஒரு Bike வாங்க நினைத்தாலும் - குறைந்தது 40 ஆயிரத்திலிருந்து 43 இலட்சம் வரை எளிதாக வாங்கி விட முடியும் !

  நாம் ஒரு கார் வாங்க நினைத்தாலும் - குறைந்தது 1.50 இலட்சத்திலிருந்து 20 கோடி வரை எளிதாக வாங்கி விட முடியும் !

  போலவே, ஒவ்வொரு பொருளும் அவரவர் வசதிக்கேற்ப வாங்கும் வாய்ப்பும் வசதியும் பரந்து விரிந்து கிடக்கிறது. ஆனால் தமிழ் காமிக்ஸ் மட்டும் இன்னும் ரூபாய் 60 லிருந்து 120 க்குள் சுருங்கிக் கிடக்கிறது. பொதுவுடைமை நமக்கு அவசியாமானதொரு சிந்தனையா என்பதில் நான் கவனம் செலுத்தப் போவதில்லை ; இன்றைய உலக மயமாக்குதலில் எல்லாமே மாற்றம் கொண்டப் பின் - இன்னும் நாம் கம்யூனிசம் பேசி நம் காலத்தை தொலைத்து விடத்தான் வேண்டுமா என்பதே என் கேள்வி ?

  200 பக்க காமிக்ஸ் புத்தகத்தின் விலை ரூபாய் 2000 என்பது நம்மில் சிலருக்கு சாதாரணமான விலை ; சிலருக்கு மிகப்பெரிய விலை - ஆனால் இரண்டு பிரிவினருக்கும் வாய்ப்பு அளிப்பதே இன்றைய வர்த்தகம். உதாரணத்திற்கு நாம் வெளிநாடு செல்லும்போது 400 ரூபாய் சட்டை, 800 ரூபாய் ஜீன்ஸ் அணிந்து செலவதில்லை ; உடைக்காக மட்டுமே சில பல ஆயிரங்களை செலவு செய்கிறோம் ; நீங்களும் செலவு செய்து இருக்கலாம்...

  ஆனால் எங்களை மட்டும் செலவு செய்ய விடாமல் நீங்கள் தடுப்பது ஏன் என்பதே என் ஆதங்கம் :)

  1. collector's edition [ collection of 10 books x 100 pages ]
  2.limited edition [ collection of 10 books x 100 pages ]
  3.special edition [ collection of 10 books x 100 pages ]

  என வருடத்திற்கு - ஒவ்வொரு தலைப்பிலும் ஒவ்வொரு வெளியீடாக பதிப்பிக்கும் தருணத்தை நீங்கள் சிந்திக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் சார்.. தவறாக இருந்தால் பொருத்தருள வேண்டும் ; எனக்கு பிடித்த காமிக்ஸ் அனைத்தையும் - தமிழில் படிக்க இந்த ஜென்மம் போதாது என்பதாலேயே இந்த ஆதங்கம் :(

  ReplyDelete
  Replies
  1. மிஸ்டர் மரமண்டை : ஆசைகளும், ஆதங்கங்களும் நிச்சயம் தவிறில்லை தான் ; ஆனால் மெல்லியதொரு கம்பி மேல் நடக்கும் இந்த முயற்சியில் என்னை நானே நிலைப்படுத்திக் கொள்ள நிச்சயம் நிறைய அவகாசம் தேவை !

   எங்கள் சக்திக்குட்பட்டது 75% எனில் - நான் ஒவ்வொரு முறையும் முயற்சிப்பது 125% ! சவால்களை முன்னிறுத்திச் செயல்படுவது ஒரு விறுவிறுப்பான அனுபவம் தான் எனினும், சாத்தியங்களின் எல்லைகளுக்கு வெகு வெகு அப்பால் ஒரு இலக்கை நிர்ணயம் செய்து கொள்வது விவேகமாகாதே !! கொஞ்சம் கொஞ்சமாய் நம் உயரங்களை உயர்த்திப் பார்ப்போம் !

   Delete
  2. மிஸ்டர் மரமண்டை உங்கள் ஆசையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். அதிகபட்ச ஆசை ஆனால் நிச்சயமாக வரும்.
   ஆனால் அது நடைமுறைக்கு வருவதற்கு நாம் சில காலம் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

   Delete
 13. ஒரு விமர்சனம்: (என்னுடையது அல்ல. நம் சைட்டின் சைலண்ட் வாசகராக இருக்கும் என் நண்பருடையது)

  அவர்: சந்தாதாரர்கள் தவிர, பிறருக்கு புத்தகங்கள் கிடைக்க நிறுவனம் என்ன செய்கிறது? என்ன செய்யப்போகிறது?

  நான்: ஆன்லைன் பர்சேஸுக்கு கூடிய விரைவில் வழிபிறக்கும், பொறுப்பீர்!

  ஏன் அப்படியொரு கட்டாயம்? ஏன் நிர்ப்பந்தம்? ஏன் ஈபே, ப்ளிப்கார்ட், ஹிக்கின்பாதம்ஸ், லேண்ட்மார்க் போன்ற நிறுவனக்களுடன் தொழில் ஒப்பந்தம் போட இயலவில்லை?

  அதை அவர்கிட்டதான் கேட்கணும்.

  இல்ல, நானும் கோபமா கேட்கல, பிஸினஸ் விரிவாக்கத்தின் வழிகளை, காலத்தின் அவசியங்களை, மாற்றங்களைப் புரிந்துகொண்டு, நவீன வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வதுதானே நியாயம்? நம் நிறுவனம் ஏன் அதைப் பின்பற்றுவதில்லை என்ற ஆதங்கத்தில்தான் கேட்கிறேன். கிழக்கு பதிப்பகம் போல ஒவ்வொரு கிராமம் வரை ரீச்சாக முயற்சி எடுக்காவிட்டாலும் ஏன் ஒவ்வொரு பெருநகரங்களுக்கு மட்டுமாவது சென்றடைய முயலக்கூடாது? அதுவும் சென்னையில் விற்பனை கண்கூடு எனும் போது ஏரியாவுக்கு ஒரு பிரபல புத்தகக்கடையில் நம் புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்வதுதானே நியாயம்?

  ஒரு வேளை முன்பணம் அனுப்பாதவர்களுக்கு புக் இல்லை என்பது அவர்கள் பாலிஸியாக இருக்குமோ? முன் அனுபவம்! நல்லா அடிபட்டிருப்பாரோ?

  அப்போதைய நிலையும், இப்போதைய நிலையும் நமக்கு ஒப்பிடத்தெரியாது எனினும், பிரிண்ட் இண்டஸ்ட்ரி என்ன மாதிரியான பிஸினஸ் விதிமுறைகளைப் பின்பற்றுகிறதோ அதையே நாமும் பின் பற்றித்தானே ஆகவேண்டும். நாம் மட்டும் தனி விதிகளை வைத்துக்கொண்டால் (முன்பணம் தராதவர்களுக்கு புத்தகம் இல்லை என்பது போன்ற) எப்படி உலகோடு ஒட்டி ஒழுகமுடியும்? இப்படியே காலத்துக்கும் தனிச்சுற்று சிற்றிதழாகவே இருந்துவிடுவதுதான் அவர் நோக்கமா? உதாரணமாக சென்னை டிஸ்கவரி புக்பேலஸை எடுத்துக்கொண்டால்: குறைந்தபட்சம் இரண்டுமாதங்களாவது பணம் வர நேரம் தருவது நியாயம் என்று எனக்கே படுகிறது. அதன்பின்பும் விற்பனையான இதழ்களுக்கு பணம் வரவில்லை எனில் நிரந்தரமாக அந்தக்கடையோடு பிஸினஸை ரத்து செய்துகொள்ளலாமே? மாதம் குறைந்தபட்சம் ஐம்பது இதழ்கள் விற்பனை செய்த நிறுவனம் அது. அதன் வாசகர்கள் அனைவரும் இப்போது சந்தாதாரர்கள் ஆக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இது சரியா? நானே எத்தனை நபர்களுக்கு, (என் தொழில் -சினிமா- சார்ந்த நண்பர்கள் உட்பட) நம் புத்தகங்களை சிபாரிசு செய்திருக்கிறேன், எத்தனை முறை வாங்கி அன்பளிப்பு செய்திருக்கிறேன். அந்த எனது ஆர்வத்துக்கு இதுதான் மரியாதையா? இப்போது அதை நான் செய்யமுடிவதில்லையே! இது சரியா?

  இதுக்கெல்லாம் அவர்தான் பதில் சொல்லணும், நாமே அப்படி இப்படி என்று கற்பனை செய்து பேசிக்கொண்டிருப்பதைவிட அதுவே சிறந்தது. அவருக்கே தகவல் போட்டுவிடுவோம். மெயில் போடுவதை விட பப்ளிக்கா போட்டுடறேன். நிறைய பேருக்கு இந்தக்கோபம் இருக்கலாம். பதில் வருதானு பார்ப்போம்.

  (இதோ போட்டுட்டேன்)

  ReplyDelete
  Replies
  1. மிஸ்ஸிங் பாயிண்ட்:

   டிஸ்கவரியின் அந்த 50 வாடிக்கையாளர்களில் எத்தனை பேர் ஆன்லைன் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள்? எத்தனை பேர் சந்தாதாரர்களாகியிருப்பார்கள்? எத்தனை பேர் கிடைக்காவிட்டால் பரவாயில்லை என போயிருப்பார்கள்? எத்தனை பேர் புக் கிடைக்காத எரிச்சலில் இருப்பார்கள்.?

   இன்றைய நவீன உலகில் வாடிக்கையாளர்களை சகல வழிகளிலும் சென்றடைவது நுகர்பொருளின் (புத்தகங்களை அதுவும் காமிக்ஸை ஒரு சாதாரண நுகர்பொருளாக உருவகப்படுத்துவது என் நோக்கமல்ல, ஒரு பேச்சுக்காக!) பொறுப்பாக மாறியிருக்கிறது. எந்தச் சிரமத்தையும் வாடிக்கையாளருக்கு தராத பொருளே (கிரெடிட் கார்ட் தகவல்களை பொறுப்பாக கணினியில் டைப் செய்வதே கூட ஒரு சிரமம்தானே இன்றைய வாடிக்கையாளருக்கு!) விற்பனை வாய்ப்பைப் பெறுகிறது.

   நான் சொல்வதைப்போல இல்லாவிட்டாலும் குறைந்த பட்ச ரீச்சை, நம் புத்தகங்கள் அடையுமா அடையாதா? அல்லது சிரமம் மேற்கொள்பவர்கள் வாங்கினால் மட்டும் போதும். சர்குலேஷன் எனக்கு முக்கியமில்லை என்பதுதான் பதிலாக இருக்குமா?

   (இதுவும் அவர்தான்)

   Delete
  2. இதற்கு மனு ஆசிரியரின் பதில் அனேகமாக "மறுபடியுமா?" என்பதாகவே இருக்கும் :) ரத்தப் படலம் காலம் தொட்டே அவர் சொல்லி வரும் விஷயம் தான் இது. விற்ற பின் தான் காசு என்ற மாடல் லட்சக் கணக்கில் விற்கும் பத்திரிகைகளுக்குப் பொருந்தும். காமிக்ஸ் அப்படி இல்லையே? அத்துடன் விற்காத புத்தகங்கள் ரெடுக்ன் வரும் போது மறுபடியும் விற்க முடியாத அளவுக்கு நிறம் மங்கி முனை மடங்கி வரும். இதைப் பற்றி எல்லாம் அவர் அங்கங்கே சொல்லியிருக்கிறார். உண்மையில் 2012-நியூ லுக் ஸ்பெஷல் வரும் போது, நேரடி விற்பனையா/இழுத்து மூடுவதா என்பதே அவர் முன் இருந்த கேள்வி என்ற பொருள் பட அவர் சில இடங்களில் குறிப்பிட்டும் இருக்கிறார்.
   அவரே வந்து பதில் சொல்லும் முன் முந்திரிக்கொட்டை மாதிரி அவசரப் பட்டுட்டேனோ? எதற்கும் ஆசிரியரும் விளக்கம் தருவார் என நம்புகிறேன்.

   Delete
  3. ஆதி தாமிரா : ஒவ்வொரு விஷயத்தின் பின்னணியிலும் இரண்டு பரிமாணங்கள் இருக்குமென்பதை உங்கள் நண்பர் உணராதிருக்க வாய்ப்பில்லை ! அப்படி இருக்கையில் எங்களது தரப்பை துளியும் அறிந்திருக்காது இத்தனை ஆதங்கங்களைக் குவிப்பதில் எத்தனை நியாயம் உள்ளதோ - நானறியேன் ! ஒரு சின்ன திருத்தமும் கூட : உங்கள் நண்பர் குறிப்பிடும் சென்னை டிஸ்கவரி பாலஸ் புத்தகக் கடைக்கு 2013-ன் டிசம்பர் முதலாகவே இதழ்கள் அனுப்பப்படவில்லை. அப்படி இருக்கையில் இதழ்களின் சப்ளை திடு திடுப்பென இப்போது நிறுத்தப்பட்டது போலாகவும், அங்கு இதழ்களை வாங்கி வந்தோர் அனைவரும் இப்போது சந்தா செலுத்தியே தீர வேண்டுமாய் நிர்பந்திக்கப்படுவதாய் கவலை ரேகைகளை வெளிப்படுத்துவது எவ்விதம் பொருத்தமாகும் ? E-Bay விற்பனையின் முயற்சியில் எங்கள் மீது தவறே இல்லாத போதிலும் எங்கள் கணக்கு முடக்கப்பட்டு நாங்கள் இழந்துள்ளது சுமார் ரூ.30,000 !

   உங்கள் நண்பரின் விவரிப்புகளில் ; வியாபார நடைமுறைகள் பற்றிய புரிதல்களில் ஏராள ஓட்டைகள் இருப்பினும், அவற்றைச் சுட்டிக் காட்டுவது ; இதெல்லாம் எங்கள் தரப்பு நியாயங்கள் ; கஷ்டங்கள் blah..blah..வென ஒரு LIC கட்டிடத்தை இங்கே உருவாக்குவதை விட அமைதியாய் தாண்டிச் செல்வதே கண்ணியமாய் இருக்குமென்று கருதுகிறேன் ! ! நம் வீட்டுச் சலவையை வீதியில் போட்டுச் செய்வதில் துளியும் உடன்பாடு கிடையாதென்பதால் அமைதி காப்பதே உசிதம் ஆகாதா ?

   Delete
  4. டியர் ஸார்,

   கருத்து அவருடையதுதான் எனினும் அதில் என் ஒப்புதலும் இருந்ததாலேயே என் வார்த்தைகளில் அதை இங்கு ஏற்றினேன். நிச்சயம் உங்கள் தரப்பு என்றொரு வடிவம் இருக்கும் என்பதை நாங்கள் உணராதவர்கள் அல்லர். ஆனாலும், நாம் விரும்பும் ஒரு பொருள், தான் விரும்பும் ஒரு நியாயமான வழியில் கிடைக்காத ஒரு வாடிக்கையாளனின் ஆதங்கமாக மட்டுமே அதைக் காணும்படி கேட்டுக்கொள்கிறேன்.

   //உங்கள் நண்பரின் விவரிப்புகளில் ; வியாபார நடைமுறைகள் பற்றிய புரிதல்களில் ஏராள ஓட்டைகள் //

   எப்படி விநியோகம் செய்வது என்று உங்களுக்கு பாடமெடுக்கும் எண்ணம் நிச்சயம் எங்களுக்கு இல்லை. ஏதோ எங்களறிவில் இப்படியெல்லாம் யோசிக்கிறோமே, நியாயம் மாதிரிதானே இருக்கிறது, அப்படியென்ன அவர் பக்கம் காரணமிருக்கும் என்ற வியப்பும் கூட உண்டு.. என்பதைச் சொல்லவே இந்தக் கருத்துப்பதிவு. அதைத்தாண்டியும், நீங்கள் இதை ஒரு புன்னகையோடு தவிர்த்துச்செல்ல உங்களுக்கு உரிமை உண்டு. அதைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் எங்களுக்குண்டு! LIC கட்டவேண்டிய அவசியமில்லை என்று சொல்லவருகிறேன். ஹிஹி!!

   -------
   // டிஸ்கவரி பாலஸ் புத்தகக் கடைக்கு 2013-ன் டிசம்பர் முதலாகவே இதழ்கள் அனுப்பப்படவில்லை.//
   //அங்கு இதழ்களை வாங்கி வந்தோர் அனைவரும் இப்போது சந்தா செலுத்தியே தீர வேண்டுமாய் நிர்பந்திக்கப்படுவதாய் கவலை ரேகைகளை//
   //எங்கள் மீது தவறே இல்லாத போதிலும் எங்கள் கணக்கு முடக்கப்பட்டு நாங்கள் இழந்துள்ளது//

   இவையனைத்தையுமே எங்கள் கருத்துக்கான பதிலாக நான் கருதவில்லை. 1: அவர் இரண்டு மாதங்களுக்கு மேலாக புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார். நான் இங்கு இதைச்சொல்லத்தான் தாமதமாயிற்று. இதற்கும் நாங்கள் சொல்லவரும் கருத்துக்கும் தொடர்பில்லையே! அவர்கள் மாற்று ஏற்பாடு செய்யட்டும், பின்பு நான் வாங்கிக்கொள்கிறேன் என்பது அவர் நிலைப்பாடு. 2: யாரும் யாரையும் இங்கு நிர்ப்பந்திக்கவுமில்லை. நிர்ப்பந்திக்கவும் முடியாது. நான் கேட்கவந்தது அந்த 50 பேரும் நம் புத்தகத்தை இழந்தார்களா? அல்லது நாம் 50 வாடிக்கையாளர்களை இழந்தோமா? என்பதைத்தான். 3: தவறு யார் மீதென்பதை ஆய்ந்து தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுப்பதும், பணத்தை மீட்பதும், இனி தவறு நேராமல் கவனிப்பதும்தான் நியாயமே தவிர, இவையெல்லாம் ஒரு ஜன்னலை சாத்துவதற்கான காரணமாக இருந்துவிடக்கூடாதல்லவா? (அவர்களின் வியாபார வழிமுறைகள் ஒவ்வாத பட்சத்தில் விலகுவது என்பது வேறு.) குறைந்தபட்சம் இந்தப்பதில் பொதுவெளிக்கு பொருத்தமானது அல்ல என்பது என் கருத்து!

   Delete
  5. @பிருந்தாபன்,

   ஏற்கனவே ஆசிரியர் ஆங்காங்கே குறிப்புகள் தரக்கூடியவர்தான். பல விஷயங்களில் கவனித்திருக்கிறேன். இந்த விஷயம் குறித்த கருத்துகளை தவறவிட்டுவிட்டேனோ? ஆயின், மீண்டும் ‘உஸ்ஸ்ஸப்பா.. முடியலையே’ என்று ஆசிரியரைப் புலம்ப வைத்தமைக்கு ஒரு பெரிய ஸாரி!! ஸாரி ஸார்!!

   :-))))))

   Delete
 14. ஐரோப்பிய டூர் விஷயங்கள், வியக்க வைத்தன.

  ReplyDelete
 15. டியர் விஜயன் சார்,

  //Magic Wind - விரைவில் நம் அணிக்குள் ஐக்கியம் ஆகக் காத்திருக்கும் இவருக்கொரு பெயர் சூட்டும் வைபவத்தை தொடங்கினால் என்ன ?//

  Magic Wind - பெயர்க் காரணம்:
  ராணுவத்தைச் சேர்ந்த "Ned Ellis" என்ற வெள்ளையர், மூளையில் பட்ட பலத்த அடியின் காரணமாக நினைவுகளை இழக்கிறார்; அதன் (மற்றொரு) பக்க விளைவாக அமானுஷ்யங்களோடு தொடர்பு கொள்ளும் / பார்க்கும் சக்தி அவருக்குக் கிடைக்கிறது! புதிராக வீசும் ஒரு காற்று, சியோக்ஸ் இனத்தவர்கள் சிலரை, இவர் இருக்கும் திசையில் கொண்டு வந்து சேர்க்கிறது! இந்த வெள்ளையரை தங்களில் ஒருவராக இணைத்துக் கொள்ளும் சியோக்ஸ்கள், அவருக்கு "மேஜிக் விண்ட்" என்ற காரணப் (செவ்விந்தியப்) பெயரை சூட்டுகின்றனர்!

  கேள்வி:
  தமிழ் வெளியீட்டில், மேஜிக் விண்டுக்குப் பொருத்தமான பெயர் என்ன?

  Option A:
  - மாயக் காற்று (அ) மாயக் காற்றோன் (சுருக்கமாக, மாற்றோன்?!) :)
  - மந்திரக் காற்று (அ) மந்திரக் காற்றோன் (மந்திரன்?!) :P

  மேற்கண்ட நேரடித் தமிழ் மொழிபெயர்(ப்பு)கள், "இரவுக் கழுகு" போல, அப்படி ஒன்றும் ஈர்ப்பாக இல்லை தான்!

  Option B:
  * வாயு புத்ரா - Indianize செய்யப் பட்ட பெயர் - ஹிந்தி சூப்பர் ஹீரோ காமிக்ஸ் எஃபெக்ட் கிடைக்கும்! ராணி காமிக்ஸ் - அக்னி புத்ராவை நினைவிருக்கிறதா?! ;)

  Option C:
  இப்படி எல்லாம் கஷ்டப் படு(த்து)வதை விட, டாம் க்ரூஸ் போல தோற்றமளிக்கும் இந்த புதிய நாயகரை, "மேஜிக் விண்ட்" என்ற ஆங்கில அல்லது "மேஜிக் வெண்டோ" என்ற ஒரிஜினல் இத்தாலியப் பெயரிலேயே அழைக்கலாம்! சிட்டிங் புல், கிரேஸி ஹார்ஸ், டாக்கிங் டாம் போன்ற ஆங்கில மயமாக்கப் பட்ட செவ்விந்தியப் பெயர்களுக்கு நாம் பழக்கப் பட்டவர்கள் தானே? :D (விதிவிலக்கு - சுட்டி லக்கியில் வரும் செவ்விந்திய கதாபாத்திரங்களின் பெயர்கள்!)

  Option :-D
  இவற்றில் எதுவுமே இல்லை! :-D

  பி.கு.: //டாம் க்ரூஸ் போல தோற்றமளிக்கும்// ஆனால், இவர் Daniel Day-Lewis என்ற நடிகரை மனதில் வைத்து வரையப் பட்டிருக்கிறாராம்!

  ReplyDelete
  Replies
  1. நண்பரே நலம் பயக்கும் தகவல்களை நல்கியதர்க்கு நன்றிகள்!!!

   Delete
  2. டியர் கார்த்திக்!!!

   டேனியல்-டே-லூயிஸ் ....? அண்ணார் பட்டையை கிளப்பிய பல படங்களில் அடியேனை பெரிதும் கவர்ந்தது GANGS OF NEW YORK .அடேங்கப்பா....என்னா வில்லத்தனம்.சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை மூன்று முறை பெற்ற பெரும் நடிகர் அவர்!

   ///பி.கு.: //டாம் க்ரூஸ் போல தோற்றமளிக்கும்// ஆனால், இவர் Daniel Day-Lewis என்ற நடிகரை மனதில் வைத்து வரையப் பட்டிருக்கிறாராம்!///

   விடுங்க பாஸ்.சிங்கமுத்து வாத்தியார விட்டு நம்ம பவர் ஸ்டாரை மனசுல வச்சி ஒரு புது காமிக்ஸ் கேரக்டர உருவாக்கிறலாம் ;-)

   Delete
  3. Karthik Somalinga & saint satan & Friends : How's about - மாயச் சூறாவளி ?

   Delete
  4. Sir Maya sooravali can be a good title for a book..but could not fit for a name of a person( anyway it's my thought :) ..kaatrin puthalvan. Like ponniyin selvan

   Delete
  5. Editor Sir, மாயச் சூறாவளி that's the one I immediately flashed while reading your post and I was little bit hesitant to post that....seeing that you also thought that I am happy :-)

   Delete
  6. //இப்படி எல்லாம் கஷ்டப் படு(த்து)வதை விட, டாம் க்ரூஸ் போல தோற்றமளிக்கும் இந்த புதிய நாயகரை, "மேஜிக் விண்ட்" என்ற ஆங்கில அல்லது "மேஜிக் வெண்டோ" என்ற ஒரிஜினல் இத்தாலியப் பெயரிலேயே அழைக்கலாம்! சிட்டிங் புல், கிரேஸி ஹார்ஸ், டாக்கிங் டாம் போன்ற ஆங்கில மயமாக்கப் பட்ட செவ்விந்தியப் பெயர்களுக்கு நாம் பழக்கப் பட்டவர்கள் தானே?//

   +1
   மேஜிக் wind பெயரே அருமைதான் சார் !

   Delete
  7. // டாக்கிங் டாம் //

   ஹா ஹா ஹா!

   Delete
  8. @விஜயன் சார்:
   //How's about - மாயச் சூறாவளி ?//
   செவ்விந்தியப் பெயர்களை தமிழ் படுத்தும் போது, ஒரு காமெடி எஃபெக்ட் தான் கிடைக்கிறது (Sitting Bull - குந்திய எருது, Crazy Horse- கேனக் குதிரை, Lone Wolf - ஒண்டி ஓநாய்); அல்லது ஒரு இயற்கைக் காட்சி கண்களில் விரிகிறது (Red Cloud - செம்மேகம்)! அதுவே, Blue Cloud / Black Cloud என்று இருந்தால் கூட நீலமேகம் / கார்மேகம் என்று பக்கா உள்ளூர் பெயர்களாக மாற்றி விடலாம்! :D

   ஆனால், "மாயச் சூறாவளி / புயல் / காற்று" போன்றவற்றை ஒரு நபரின் பெயராக ஏற்றுக் கொள்ளச் செய்வது சற்று கடினம் தான்! அவற்றின் பின்னே, ஒரு "யார்" அல்லது ஒரு "யோன்" / "லோன்" /"றோன்" போட்டு தமிழ்ப் பெயராக மாற்ற முடியும் என்பது வேறு விஷயம்!

   சியோக்ஸ் / லகோடா மொழியில் "Magic Wind" என்பதை எப்படிச் சொல்வார்களோ அப்படி அழைக்கலாம் தான்... (நண்பர் சிவா அபாச்சே மொழியில் கூறி இருந்ததைப் போல)! :)

   wakȟáŋȟ’aŋ - magic
   tȟaté - wind

   ஆனால், மேற்கண்ட வினோதமான ஆங்கில உச்சரிப்பு எழுத்துக்களை ஒன்று சேர்த்து உச்சரிக்க முயன்றால் நம்முடைய நாக்கு நசுங்கி விடும் அபாயம் இருப்பதால்..... :) :) பரணி உள்ளிட்ட நண்பர்கள் பலரும் ஏற்கனவே சொல்லி இருப்பதைப் போல மேஜிக் விண்ட் என்ற பெயரே பொருத்தமாகப் படுகிறது (ஆங்கில மோகம் காரணம் அல்ல - அந்நிய நபர்களுக்கு அந்நியப் பெயரே பொருத்தம் என்பதால்!). அவ்வளவு ஏன்... Volkswagen புண்ணியத்தில் Magic Vento கூட பரிச்சயமான பெயராகவே படுகிறது! :)

   கிருஷ்ணாவின் கருத்தையொட்டி, முதல் இதழின் பெயரை "மாயச் சூறாவளி" என்று வைத்துக் கொள்ளலாம்! வேண்டுமானால், கதைக்குள் வரும் செவ்விந்தியர்கள் மட்டும் அவரை "மாயச் சூறாவளியார்" என்று அன்புடன் அழைத்துக் கொள்ளட்டும்! :D எ.எ.க. :)

   @balaji ramnath17 March 2014 22:00:00 GMT+5:30
   நன்றி நண்பரே!

   @saint satan:
   //சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை மூன்று முறை பெற்ற பெரும் நடிகர் அவர்!//
   அப்போ, மேஜிக் விண்டை "ஆஸ்கர் நாயகன்" என்று அழைக்கலாமா சாத்தான் ஜி?! :D அல்லது, ஈ.விஜய் ஸ்டைலில் மாயாண்டிக்கு பதிலாக விருமாண்டி என்று கூட அழைக்கலாம் இல்லையா?! ;)

   @ஸ்டீல்:
   //இக்கதைகளை படித்த வாய்ப்பு பெற்ற கார்த்திக் போன்ற நண்பர்கள்//
   இந்தத் தொடரை நான் படித்ததில்லை ஸ்டீல்!! நெட்டில் தட்டுப் பட்ட (சுட்டுப் போட்ட) தகவல்கள் அவை! :D சூறாவளியை, காற்று என்று தவறாக எழுதி இருந்தது போல மேலும் சில பிழைகள் இருக்கக் கூடும்! :)

   Delete
  9. // குந்திய எருது, கேனக் குதிரை, ஒண்டி ஓணாய் //

   ஹா ஹா ஹா! அய்யோ என்னால முடியலங்க. ஆனாலும், பெயர் சூட்டுவதில் உங்க பாணியே அலாதிதான் கார்த்திக்!

   // Magic vendo //
   இதுகூட நல்லாத்தான் இருக்கு!

   Delete
  10. மக்கா .....(மந்திர காற்று ) மங்கா னு இருக்கறப்போ மக்கானு இருக்க கூடாதா...?

   Delete
  11. // குந்திய எருது, கேனக் குதிரை, ஒண்டி ஓணாய் //

   +1 :)

   Delete
  12. //...செவ்விந்தியப் பெயர்களை தமிழ் படுத்தும் போது, ஒரு காமெடி எஃபெக்ட் தான் கிடைக்கிறது (Sitting Bull - குந்திய எருது, Crazy Horse- கேனக் குதிரை, Lone Wolf - ஒண்டி ஓநாய்); ..//

   கார்த்திக் - ROFL... .முடியல நீங்க ஏன் நமது காமிக்ஸ் மொழிபெயர்ப்பு குழுவில் சேரக்கூடாது? :)

   Delete
  13. // குந்திய எருது, கேனக் குதிரை, ஒண்டி ஓணாய் //   padithathil sirithadhu :-)

   Delete
  14. ஆக.. பலே வெள்ளையதேவா!!! தேரு நகர ஆரம்பிடிச்சிடோய் !!!

   Delete
 16. மந்திரப் புயல்
  மாயப்புயல்

  ReplyDelete
 17. டியர் எடிட்டர்ஜீ!!!

  மேஜிக் வின்ட் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும்போது அதை மொழிபெயர்க்கிறேன் பேர்வழி என்று மாயக்காற்று,மாய ஆவி,மாய தென்றல்,மாய புயல் என்றெல்லாம் தமிழில் பெயர் சூட்டுவது அடியேனுக்கு பொருத்தமாக படவில்லை என்றாலும் உங்கள் வேண்டுகோளை ஏற்று அடியேனும் ஒரு பெயரை ரெக்க"மண்டு"கிறேன் :-)

  "மந்திர மேனி"

  ReplyDelete
  Replies
  1. saint satan : கதையின் context -ல் இப்பெயர் ஒத்து வராது சாத்தான்ஜி !

   Delete
  2. டியர் எடிட்டர்ஜீ!!!

   இந்த (தமிழில்) பெயர் சூட்டும் வியாதிக்கு "மந்திரமேனியா"என்று பெயர் சூட்டலாமா;-)

   Delete
  3. Ramesh Kumar : இரும்புக்கரத்தாரின் ரசிகர்கள் கட்டி வைத்து உதைப்பார்கள் - "மாயாவி" எனப் பெயர் சூட்டிடும் பட்சத்தில் !!

   Delete
 18. டியர் எடிட்டர்,

  ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக, நிறைவாக முடித்துத் திரும்பியதற்கு வாழ்த்துக்கள்! படைப்பாளிகள் இப்போதெல்லாம் (குறுகிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருக்கும்) நம்மையும் உட்கார வைத்து விலாவாரியாய் பேசிட முக்கிய காரணமே நம் புதிய பாணியிலான தரமான படைப்புகளே என்ற உண்மையை சந்தோசமாய், பெருமிதமாய் உணரமுடிகிறது.

  அடுத்தமாத வெளியீட்டில் அடுக்கடுக்கான பல அறிவிப்புகள் காத்திருக்கிறது என்ற நினைப்பே உற்சாகத்தையும், ஆவலையும் பன்மடங்கு அதிகரிக்கிறது (ரொம்ப காக்க வச்சுடாதீங்க சார், தாங்காது!)

  இங்கே நண்பர்கள் பலரும் சொல்லியருப்பதுபோலவே எனக்கும் 'மேஜிக் விண்ட்' என்பதே பிடித்திருக்கிறது. எனினும், நீங்கள் வற்புறுத்திக் கேட்பதால் "மாயாண்டி" என்று அழகான தமிழில் பெயர் சூட்டுகிறேன் ( மாய உலகில் சஞ்சரிக்கும் வல்லமை படைத்த, ஊர்-பேர் தெரியாத ஆண்டி இவன் என்பதால் இந்தப் பெயர் ஹி ஹி)

  அடுத்த வருடத்தில் சிறுவர்களுக்கான காமிக்ஸ் உதயம் என்று சொல்லியெல்லாம் எங்களை நீங்கள் அவ்வளவு எளிதாய் ஓரம் கட்டிவிட அனுமதிக்க மாட்டோம். எதுவானாலும் நாங்களும் படிப்போம்! ('சுட்டி லக்கி' மாதிரியே 'சுட்டி டெக்ஸ்' எதனாச்சும் இருக்கா சார்? ஹி ஹி)

  ReplyDelete
  Replies
  1. // "மாயாண்டி" என்று அழகான தமிழில் பெயர் சூட்டுகிறேன் ( மாய உலகில் சஞ்சரிக்கும் வல்லமை படைத்த, ஊர்-பேர் தெரியாத ஆண்டி இவன் என்பதால் இந்தப் பெயர் ஹி ஹி) //

   ஹா ஹா ஹா!

   Delete
  2. Erode VIJAY : அறிவிப்புகள் மட்டுமன்றி - அடுத்தமாதத்துக் கதைகள் இரண்டுமே அட்டகாசமாய் வந்துள்ளன !

   Delete
  3. //அடுத்த மாதத்துக் கதைகள் இரண்டுமே அட்டகாசமாய் வந்துள்ளன //

   எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிறீர்கள் எடிட்டர் சார்!

   Delete
  4. Erode VIJAY : அதிலேயும் அந்த ஷெல்டன் கதைலே பார்த்தீங்கன்னா...ஆக்க்ஷன் சும்மா அமர்க்களமா இருக்கு !!

   Delete
  5. இந்தப்பக்கமா லெஃப்டில் கொஞ்சம் எரியாம இருக்கு பாருங்க எடிட்டர் சார், அங்கேயும் கொஞ்சம் ஊத்துங்க. ஆங்.. அப்படித்தான்!

   Delete
  6. @Vijayan Sir, கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாத புத்தகங்கள் 10 நான் முன்னாடியே டெலிவரி ஆவப்போவதாக குறிப்பிட்டிருந்தீங்களே - நன்றி சார்! :D

   Delete
  7. // இந்தப்பக்கமா லெஃப்டில் கொஞ்சம் எரியாம இருக்கு பாருங்க எடிட்டர் சார், அங்கேயும் கொஞ்சம் ஊத்துங்க. ஆங்.. அப்படித்தான் //

   கொஞ்சம் ஆசிட் இருந்த அப்படியே ஊத்தி விடுங்க சார் :)

   Delete
  8. மாயன் .......எப்டி

   Delete
  9. @ ஈ.விஜய்

   ஏற்கனவே நண்பர்கள்கிட்ட வாங்கறது பத்தாதுன்னு எடிட்டர் வேறயா

   நல்லது நடக்கட்டும்

   Delete
 19. சார் , அருமை ...பதிமூன்றின் படைப்புகள் பஞ்சமின்றி வருவது சந்தோசம் ! ஸ்பைடரை இழந்து கையறு நிலையில் வாடியது போல பத்தி மூன்று நம்மை கைவிட போவதில்லை என்பது கூடுதல் சந்தோசம் ! ஒவ்வொரு பாத்திரங்களும் பேச உள்ள கதைகளுக்காக காத்திருக்கிறேன் ! அதிலும் இப்போதைய பதிமூன்றின் கதை அதிரடியுடன் மாபெரும் வெற்றி பெற்றிருப்பது கூடுதல் சந்தோசம் ! என்னவோ தெரியவில்லை பதிமூன்று தொடர்ந்து வருவது ஒரு கற்பனையான நண்பர் எப்போதும் என் கை பிடித்து வருவது போன்ற உணர்வே எப்போதும் என்னுள்ளே ! ஆகவேபோரடித்து நேரம் கிடைக்கும் ஏதேனும் சில பக்கங்களை புரட்டுவேன் ! படிப்பேன்! அதிலும் இப்போதைய மறு வரவு இன்னும் சூப்பர் ! சீக்கிரமாய் ஒவொரு பாத்திரங்களுக்கும் சேர்த்து ஒரு சூப்பர் சிக்சில் இடம் ஒதுக்குங்கள் !

  ReplyDelete
  Replies
  1. // பதிமூன்று தொடர்ந்து வருவது ஒரு கற்பனையான நண்பர் எப்போதும் என் கை பிடித்து வருவது போன்ற உணர்வே எப்போதும் என்னுள்ளே //

   ஆஹா! என்னே ஒரு காமிக்ஸ் காதல்!!

   // ஒரு கற்பனையான நண்பர் எப்போதும் என் கை பிடித்து //

   எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையாவே இருங்க ஸ்டீல். எனக்கென்னவோ உங்க துருப்பிடிச்ச இரும்புக் கரத்தை அந்த ஆள் பழைய இரும்புக் கடையில் போட்டுடுவானோன்னு ஒரு டவுட் இருக்கு! :D

   Delete
  2. நானே இரும்புகடைதானே வைத்துள்ளேன் நண்பரே !

   Delete
 20. முப்பதாவது ஆண்டு மலர் அறிவிப்புகள் அடுத்த மாதம் பட்டய கிளப்ப போவது உறுதி !

  ReplyDelete
 21. தொடர்ந்து தரத்தினால் வெற்றி பெற்று வருகிறோம் ! இந்நிலை தொடர இறைவன் அருள்பாலிக்கட்டும் !

  ReplyDelete
  Replies
  1. @ ஸ்டீல்

   வாவ்! எழுத்துப்பிழைகள் இல்லாத பதிவுகள்.... இந்நிலை தொடர இறைவன் அருள்பாலிக்கட்டும்!

   Delete
 22. மேஜிக் விண்/ன்டை மூன்று பாகங்கள் இணைந்த தொகுப்பாய் வெளியிடுங்கள் சார் !

  ReplyDelete
 23. மாய மனிதன் !
  மந்திரன் !
  மந்திர காற்று !
  நினைவற்ற மாயாவி !
  மந்திர புயல் !
  மந்திர மாயாவி !

  ReplyDelete
 24. XIII கதைத் தொடரின் புதிய வெளியீடுகள் பற்றிய அறிவிப்புகள் மனதை கொள்ளை கொள்ள செய்கிறது.

  பல விளம்பர அறிவிப்புகளை தாங்கி வரும் அடுத்த இதழ்கள் எப்போது கைகளில் தவழும் என்று மனம் ஏங்குகிறது.

  மேஜிக் விண்ட என்ற பெயரே நன்றாகத்தான் உள்ளது. அப்படி இல்லையென்றால் "காத்துகருப்பு" என்று பெயர் வையுங்கள் நன்றாக இருக்கும்.

  "சூப்பர் 6"-க்கு 2 புது கதைகளின் உரிமை ஜெயம். அபாரம், என்னமோ சரர் ஒன்னு மட்டும் உண்மை நாம் சிகரத்தின் உச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை. தொடரட்டும் உங்கள் களப்பணி.........

  எங்களுக்கும் களப்பணி ஆரம்பமாகிவிட்டது..... இந்த தேர்தல் முடியும் வரை நமது வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிட முடியாது என்பது வருத்தமளிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. //"சூப்பர் 6"-க்கு 2 புது கதைகளின் உரிமை ஜெயம். அபாரம், என்னமோ சரர் ஒன்னு மட்டும் உண்மை நாம் சிகரத்தின் உச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை. தொடரட்டும் உங்கள் களப்பணி.........//
   +++

   Delete
 25. கருப்பு வெள்ளை குறித்து வாதாடியதற்கு நன்றிகள் !
  கருப்பு வெள்ளை நாயகர்கள் யாரேனும் புதிதாய் இணைகிறார்களா ?

  ReplyDelete
 26. மாய புயலோன் !
  மாயமாய் வந்தான் !
  யாரோ !
  காற்றின் மந்திரன் !

  ReplyDelete
 27. செஞ்சடையான்! ( சரி சரி தலைவர் படம் வர நேரம் அதான்) :)
  மாயவன்!
  நோடன் (அபேச்சே மொழியில் wind என்று பொருள்)

  ReplyDelete
 28. " புயல் "
  " மர்ம புயல் "
  " மாய புயல் "
  எப்படி இருக்கு ?

  ReplyDelete
  Replies
  1. இவன் பயல் இல்லடா .............பெரும் புயல் ..............................................னு பன்ச் பேச வசதியா இருக்கும்

   Delete
 29. டியர் எடிட்டர் ,

  "மாய காவலன் " என்ற பெயர் எப்படி உள்ளது? நமது நண்பர் XIII இன் saga இரு பாக ஆல்பம் ஆக வெளி வந்து விற்பனையில் கல்லா கட்டுகின்றது . அதை பார்த்தபோது அதற்கு முன்பே எமது லயனின் சாதனை ஏட்டில் முழு பாகங்களும் ஒரே "குண்டு மெகா" வெளியீடாக வந்துள்ளதை எண்ணி பெருமிதம் கொண்டதுடன் விற்பனை செய்யும் அலுவலரிடமும் பகிர்ந்து கொண்டு , அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினேன் . இதன் எல்லா புகழும் உங்களுக்கே .

  ReplyDelete
 30. XIII இன் mystery இல் வெளிவந்த எல்லா பாகங்கள் இனையும் வெளியிடவும் .

  ReplyDelete
 31. Magic windக்கு "மாயாண்டி" என்றுதான் பெயர்சூட்டுவேன் என்று எடிட்டர் அடம் பிடிக்கிறார் எனில், அதற்கு வலுசேர்த்திடும் நமது சமீபத்திய கெள-பாய் தலைப்புகளில் சில...

  * அட்லாண்டாவில் மாயாண்டி
  * ஒரு மாயாண்டியின் மாற்றம்
  * மத்தியானத்தில் ஒரு மாயக்குதிரை
  * மாயக் கொடூரன்
  * மாயம் உண்டு மாயாண்டி இல்லை

  'மாயாண்டி'யை short n sweet ஆக "மாயா" என்றும் அழைக்கலாமில்லையா! இரண்டே எழுத்து என்பதால் பலூனுக்கும் அடக்கிடவும் பிரச்சினை எழாது!


  ReplyDelete
  Replies
  1. அவரு ஏற்கனவே மேஜிக் வின்ட் தானே, பலூனுக்குள்ளயெல்லாம் ஈசியா பூந்துடுவாரு, நீங்க கவலை படாதீங்க

   Delete
  2. // "மாயா" என்றும் அழைக்கலாமில்லையா! //

   ஒற்றை வார்த்தைப் பெயர்கள் கதையின் வசனங்களில் எளிதாக இருக்கும். வில்லர், கார்சன் போன்ற பெயர்கள் வாசிப்பதை இலகுவாக்குவதைப்போல, மேஜிக் விண்ட்'க்கும் காரணப்பெயரல்லாத ஒற்றை வார்த்தை அமைந்தாலும் எளிதாகவே இருக்கும்.

   காத்ரா

   இது எப்படி இருக்கு? :D

   Delete
  3. காத்ரா....................ஏன் இப்படி எல்லாரும் கதைகிறீர்கள் என்று எனக்கு விளங்க இயலாது........
   பேசாமல் மாயா ருத்ரா என்று கதைத்து விடுங்கள்.....

   Delete
  4. மாயாண்டி - எனக்கு பிடிச்சிருக்கு :)

   Dear Editor, MagicWind-க்கு இந்தப் பெயரையே வைக்கவும் :)

   Delete
  5. மாயா, காத்ரா, ருத்ரா போன்றவை indianized'ஆக இருப்பதால் செவ்விந்திய பெயராக கதையோடு Fit ஆகாது :D

   ஆனால் இதே Tone'ல் யாருக்கும் புரியாத பயங்கரமானப் பெயர்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் Ex: மாய காப்ரா :D

   கதையின் வசனங்களில் "மாய" இல்லாமல் "காப்ரா" மட்டும் இருந்தால் அடையாளம் miss ஆகாது.

   Delete
  6. @ நாட்டாமை

   "காப்ரா" - சீறிடும் கோப்ரா! :)

   Delete
  7. மாய காப்ரா ..........ஏதோ டான்ஸ் பேர் மாதிரி இருக்கே .ம் ம் ம் ம் ம் ம் ம் ஓகே ஓகே

   Delete
  8. @ ஈ.விஜய்

   இந்த பெயர்கள் எல்லாம் ஈரோட்டில் ஓடும் மலையாள பலான படங்களின் பெயர்களா?

   Delete
  9. @ Senthil Madesh

   ச்சூ... உங்க கேள்வி எதுவானாலும் படம் முடிஞ்சதுக்கப்புறம் கேளுங்களேன் ப்ளீஸ்! :D

   Delete
  10. @ ஈ.விஜய்

   அப்ப அதேதானா! படம் நல்லாயிருந்தா எந்த தியேட்டர்ன்னு ரகசியமா சொல்லுங்க

   Delete
 32. Replies
  1. ஏலே பொன்ராசு,
   அப்படியே லைமிங்கா
   புயலின் புதல்வன்

   Delete
  2. "யார் அது போட்டிக்கு ??" - பிரபஞ்சத்தின் புதல்வனின் mind voice !!

   Delete
  3. மாயனின் மைந்தன்
   மாயா மாயவன் ! (எப்போதோ படித்தது )
   எங்கிருந்தோ வந்தான் !
   எலே எங்கிருந்தோ வந்தான் , நீ யாரு பெத்த புல்லளே செவிந்திய்ர் தலைவர் கேட்பது கேட்கிறதா !

   Delete
  4. சார், மாயனின் மைந்தன் சிறப்பாய் இருக்குமென எனக்கு படுகிறது !

   Delete
  5. //Magic Wind - பெயர்க் காரணம்:
   ராணுவத்தைச் சேர்ந்த "Ned Ellis" என்ற வெள்ளையர், மூளையில் பட்ட பலத்த அடியின் காரணமாக நினைவுகளை இழக்கிறார்; அதன் (மற்றொரு) பக்க விளைவாக அமானுஷ்யங்களோடு தொடர்பு கொள்ளும் / பார்க்கும் சக்தி அவருக்குக் கிடைக்கிறது! புதிராக வீசும் ஒரு காற்று, சியோக்ஸ் இனத்தவர்கள் சிலரை, இவர் இருக்கும் திசையில் கொண்டு வந்து சேர்க்கிறது! இந்த வெள்ளையரை தங்களில் ஒருவராக இணைத்துக் கொள்ளும் சியோக்ஸ்கள், அவருக்கு "மேஜிக் விண்ட்" என்ற காரணப் (செவ்விந்தியப்) பெயரை சூட்டுகின்றனர்!//
   இது கார்த்திக்கின் ஆராய்ச்சியின் கூற்று .

   உங்களது ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் அல்லது ஏதோ ஒரு பக்கத்தில் படித்தது , செவிந்தியர்கள் குழந்தை பிறக்கும் பொது காணும் காட்சிஏ அக்குழந்தைக்கு பெயர் என கூறினீர்கள் என நினைக்கிறேன் !
   மேலே கார்த்திக் கூறியது போல அம்மனுஸ்யங்கள் கைவர பெற்றவர் எனில்

   மாயனின் மைந்தன் அற்புதமாய் இருக்குமென நினைக்கிறேன் !

   Delete
  6. இரவு க்கழுகு இது போல வித்தியாசமாய் ஏதேனும் முயற்ச்சித்தால் அற்புதமாய் இருக்கும் !
   இக்கதைகளை படித்த வாய்ப்பு பெற்ற கார்த்திக் போன்ற நண்பர்கள் மண்டையை உருட்டலாமே !

   Delete
  7. மேஜிக் விண்ட்-க்கு 'மாயன்' என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்.......

   Delete
  8. 'மாயன்' -> simple and super name! I like this aravinth kumar!

   Delete
 33. தமிழ் காமிக்ஸ் மீது இவ்வளவு ஆர்வமும் காதலும் உள்ள நண்பர்கள் சந்தா எனும் ஒரு சிறிய தொகையை செலுத்திட உள்ள தயக்கத்திற்கும் தடைகளுக்கும் தான் எனக்கு இது வரையிலும் காரணங்கள் புரியவில்லை( உண்மையில் இது ஒரு சிறிய தொகை என்பதை எல்லோரின் மனசாட்சி ஒப்புக் கொள்ளும்)))்
  80/90 களின் ஒரு லென்டிங் லைப்ரரியை விட சர்குலேசன் சற்றே அதிகம் உள்ள ஒரே தமிழ் காமிக்ஸ்ஸை வாழ வைக்கும் பிராணவாயு அது தான் என்று புரிந்து கொள்ள மறுப்பதேன்????

  ஒரே ஒரு genre ஐ வைத்தே அயல்நாட்டு பதிப்பகங்கள் பிழைப்பை ஓட்டும் நிலையில் நாம் படிப்பதை நினைத்தால் நிறைவாக உள்ளது..
  ஆனாலும் நம் தேடல் தொடர்ந்து கொண்டே உள்ளது ஆசிரியரின் முயற்சிகள் மூலம்...

  நம்மையும் ஒரு பொருட்டாக பதிப்பகங்கள் நினைக்க தொடங்கி உள்ளார்கள் ... இது போல என் சொந்த வாழ்க்கையில் ஏங்கிய நாட்கள் பல (...அதுவும் +2 க்கு மேலே படிக்க வசதி இல்லாத போது)
  என்னை பொருத்த வரை நான் படித்த காமிக்ஸ் எல்லாமே என்னை ஒரு போராட்டகாரனாக மாற்றி உள்ளது( மின்னும் மரணம் ,xiii)...

  என்னால் சம்பாதிக்க முடியும் நாள் வரையில் காமிக்ஸ் சந்தா ஒரு தண்ட செலவில்லை என்னை பொருத்தவரையில்.

  m seal ஐ விடவும் இரத்தஇக்கோட்டை வண்ண மறுபதிப்பு அறிவிப்பே கசிவுகளை நன்றாக தடுக்கும் என்று fort javajoவிலிருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது...

  ReplyDelete
  Replies
  1. இரத்த கோட்டை வண்ண மறுபதிப்புக்கு கோடானு கோடி ஆதரவு

   Delete
  2. // m seal ஐ விடவும் இரத்தஇக்கோட்டை வண்ண மறுபதிப்பு அறிவிப்பே கசிவுகளை நன்றாக தடுக்கும் என்று fort javajoவிலிருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது... //

   சூப்பர் Rummi XIII :)

   Delete
 34. XIII மீண்டும் மீண்டு வந்திருப்பது மகிழ்ச்சி என்றால், ஏகப்பட்ட ஆக்‌ஸன் என்ற பிட்டு ஆர்வத்தை எகிற செய்கிறது...

  ஒரு டவுட்டு என்னுடைய புக்ஸ் டெலிவரி அட்ரசையும் பதிவு தபாலில் இருந்து கொரியர் முறைக்கு மாற்றவும் என்ன செய்ய வேண்டும்????

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, நமது லயன் அலுவலகத்திற்கு ஒரு போன் செய்து முகவரி மாற்றம் பற்றி தெரிவிக்கலாம் அல்லது விஜயன் சார் அவர்களது மெயில் id க்கு இது பற்றி உங்களது புதிய முகவரியுடன் ஒரு மெயில் செய்யலாம் :)

   04562 - 272649, 320993

   lioncomics@yahoo.com

   Delete
 35. மெச்சூர்டு, இம் மெச்சூர்டு இந்த இரண்டுக்கும் நேற்று வரைக்கும் வேறு அர்த்தம் நினைத்துக் கொண்டிருந்தேன்.
  ஆனால் இன்று புது பதிவில் சில கமெண்ட்களை பார்த்ததும்தான் இதற்கு உண்மையான அர்த்தமே புரிந்தது..... தெளிந்தது......... விளங்கியது..........

  இம்மெச்சூர்டு என்றால் பாராட்டு, குறைகள் அனைத்தையும் தன் பெயரிலேயே போட்டு சக நண்பர்களிடம் வாங்கி கட்டிக் கொள்வது.........

  மெச்சூர்டு என்றால் பாராட்டை மட்டும் தன் பெயரில் போட்டு நல்லபிள்ளை என்று பெயர் வாங்கி கொண்டு,
  குறைகளை நண்பன் சொன்னான், பக்கத்து வீட்டு ஆயா சொல்லுச்சி, எதிர்த்த வீட்டு மாமா சொன்னார் என்று தப்பித்துக் கொள்வது.

  நான் போன பதிவில் இட்ட கமெண்ட் என்னுடையது அல்ல. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சொன்னது.

  ReplyDelete
 36. நண்பர்களே, நமது காமிக்ஸ் தலைப்புகளில் அதிகம் உபயோகபடுத்திய வார்த்தை "மரணம்"... என நினைக்கிறேன் அவற்றில் சில

  மரண நடை
  மரணமுள்
  மரண மாஸ்டர்
  மரண ராகம்
  மரண மண்டலம்
  மரண மாளிகை
  மரண மண்
  மரணத்தின் நிறம் பச்சை
  மரணத்தின் நிறம் கருப்பு
  மரணத்தின் முன்னோடி
  மரணத்தின் நிசப்தம்
  மரணத்தை முறியடிப்போம்
  மரண நகரம் மிசோரி
  மின்னும் மரணம்

  ReplyDelete
 37. காமிக்ஸ் நண்பர்களே பெயர் சூட்டும் விழாவில் அதிரடியாக களம் இறங்கிய நீங்கள் எடிட்டரின் மாபெரும் அறிவிப்பான 2015/ல் இளம் பட்டாளத்திற்கொரு தனிப்பாதையை சரியாக கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டீர்களே?

  ReplyDelete
 38. நண்பர்களே,
  வர வர இந்த தளத்தில் சில குறிப்பிட்ட காமிக்ஸ்கள்/சி.சி.வ மறு/முழுபதிப்பு வேண்டும் என ஒவ்வொறு பதிவிலும் முன்வைக்கபடுவது நன்றாக இல்லை! இந்த கோரிக்கைகளுக்கு பலமுறை ஆசிரியர் பதில் சொல்லிவிட்டார், அவைகளை தொடர்ந்து கேட்பது சரி இல்லை! இங்கு பதிவிடும் நண்பர்கள் அனைவருக்கும் புரியும் சக்தி அதிகம் என நம்புகிறேன். இது போன்ற பதில் கிடைத்த கேள்விகளை இனியும் தொடராமல் புதியவைகளை பற்றி பேசுவது நலம் என்பது எனது எண்ணம்.

  ReplyDelete
 39. விஜயன் சார்,

  2012 இல் சென்னை புத்தக திருவிழாவில் comeback ஸ்பெஷல் மூலமாக ஆரம்பித்த நமது இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருவது மிகவும் சந்தோசமாக உள்ளது.

  2012 முடியும் பொழுது நமது காமிக்ஸ் வரலாற்றில் ஒரு மறக்க இயலாத ஆண்டாகவே அமைந்தது என நினைத்தேன் (என் பெயர் லார்கோ, தங்க கல்லறை, கிராபிக் நாவல் உதயம்... இன்னும் பல)

  ஆனால் அடுத்து வந்த 2013 முந்தைய ஆண்டை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டதை பார்த்தவுடன், அடடா உண்மையிலேயே 2013 தான் டாப், கலக்கல் என்ற எண்ணம் வந்தது. (NBS, தீபாவளி மலர், சிறிய குண்டு புத்தகங்கள், +6, வித்தியாசமான கதை களங்கள்)

  இப்போ 2014 ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே, இது எல்லாத்தையும் விட 2014 லே சூப்பர் டுப்பர் என தெரிந்து போயிற்று.

  இனி வரக்கூடிய ஒவ்வொரு வருடமும் அதன் முந்தைய வருடங்களை விட அருமையான ஆண்டாக அமையும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உள்ளது.


  தொடரட்டும் தங்களது காமிக்ஸ் சேவை ... அதுவே எப்பொழுதும் எங்களுக்கு தேவை ...


  திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்
  ReplyDelete
  Replies
  1. // தொடரட்டும் தங்களது காமிக்ஸ் சேவை... அதுவே எப்பொழுதும் எங்களுக்குத் தேவை... //

   +1

   ஏ டன்டணக்கா! ஏ டனக்குணக்கா!

   Delete
 40. சுழலும் சூறாவளி
  அடிக்க வராதீங்க கஷ்டப்பட்டு டைப் பண்ணியிருக்கேன்

  ReplyDelete
  Replies
  1. எப்பவுமே +1 போடுறவர் தானே ................குட் தொடரட்டும் உங்கள் கள பணி

   Delete
  2. கஷ்டப் பட்டாவது கமெண்ட் போட்டதுக்கே உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தலாம் அன்பு அவர்களே!

   Delete
 41. 1.மர்மயோகி
  2. கனல்வீரன் (கனல் - வாயு)
  3. காற்றுக்குதிரை

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. வாயு வேக வாசு ...........(கிழங்கு ,பூண்டு, மொச்சை சாப்பிடாதீங்க )

   Delete
  3. // வாயு வேக வாசு........ (கிழங்கு, பூண்டு, மொச்சை சாப்பிடாதீங்க) //

   ஹா ஹா ஹா! இந்த 'வாயு வேக வாசு' பெயரை எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே! வாண்டு மாமாவோ? :)

   Delete
 42. பெங்களூர் பரணி அவர்களுக்கு ....

  தாரமங்கலம் பரணி வரையும் அன்பு மடல் .நலம் .நலமா ...போன கடிதத்தில் தாங்கள் மீண்டும் ...மீண்டும் ...சிலவற்றை ஆசிரியரிடம் வேண்டா தீர்கள் என தெரிவித்து இருந்தீர்கள் .உண்மை .அது பழைய மறுபதிப்பு கதைகள் ..,ஹீரோகள் பற்றிய எண்ணம்..,விலை ..மொழி ஆக்கம் என்பனவற்றில் எனக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை .அதே சமயம் இதில் " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பை தயவு செய்து இணைக்காதிர்கள்.சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பு என்பது ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகனின் கைகளிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் .அதற்காக நாங்கள் எவ்வளவு போராட்டங்களை நடத்தி ...,ரத்தம் சிந்தி ..சங்கத்தை அபராதத்தில் ஓடும் அளவுக்கு நடத்தி கொண்டு இருக்கிறோம் என்பது சங்க உறுபினர்கள் மட்டுமே அறிந்த ரகசியம் .ஆனால் அதற்க்கு தான் ஆசிரியர் பதில் சொல்லி விட்டாரே ...மீண்டும் ..மீண்டும் வினவினால் மட்டும் தொகுப்பு வந்து விடுமா என்ற உங்கள் எண்ணம் எனக்கு புரியாமல் இல்லை .தள்ள..தள்ள தானே கிரைண்டரை நகர்த்தி வைக்க முடியும் .பாரம் அதிகம் என்பதால் சப்ளை இல்லாத இடத்திலய அதை வைத்திரிக்க முடியுமா ...?

  ஒரே ஒரு எடுத்து காட்டை மட்டும் தங்களுக்கு சொல்லி கொண்டு எனது கடிதத்தை முடித்து கொள்கிறேன் .நகர்த்த முடியாது ....அதற்க்கு வழிய இல்லை என்று ஆசிரயர் பலமுறையும் சொல்லியும் பல முறை நண்பர்கள் வேண்டி முறை இட்டதால் தானே 99 சதவீதம் நண்பர்கள் விரும்பிய " மின்னும் மரணம்" ( விரும்பாத அந்த ஒரு சதவீத நண்பர் நானே )இப்பொழுது உயிர் பெற்று உள்ளது .எனவே சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பு வேண்டி தொகுப்பு வரும் வரை மற்ற நண்பர்கள் எப்படியோ நான் குரல் கொடுத்து கொண்டே இருப்பேன் என்பதோடு இணைந்து குரல் கொடுக்க லட்ச கணக்கான சங்க உறுப்பினர்கள் இங்கே உண்டு ( அதில் பல உறுப்பினர்கள் மெளனமாக உரத்து குரல் கொடுப்பவர்கள்).எனவே தாங்கள் எங்களுக்கு துணையாக கிரைண்டரை தள்ள கை கொடுக்கா விட்டாலும் தயவு செய்து பின்னால் தள்ளாதிர்கள் .ஏற்கனவே வேர்த்து விறு ..விறுகக ..முக்கி ..முக்கி இங்கே நாங்கள் தள்ளி கொண்டு இருக்கிறோம் .தயவு செய்து தாங்கள் கிரைண்டரில் " அரிசியை " போட்டு பாரம் ஆக்காதிர்கள்...ப்ளீஸ் ..

  ஆசிரியர்க்கு ஒரு சிறு வேண்டு கோள்.இப்படி பல நண்பர்களின் பரிகாசத்துக்கு ..,வெறுப்புக்கு ..இன்னல்களுக்கு மீண்டும் ..மீண்டும் எங்களை ஆளாகாமல் தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும் .இதற்க்கு தாங்கள் எங்களக்கு ஒரே ஒரு உறுதி மொழி அளித்து விரைவில் சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பை பாய வையுங்கள் என்று பணிவுடனும் ..,வருத்ததுடனும் ....கோபத்துடனும் ..,அழுகையுடனும் ......தங்களை வேண்டி கொள்கிறோம் .

  எண்டென்றும் அன்புடன்

  பரணி தரன் .... :-(

  ReplyDelete
  Replies
  1. போராட்டக்குழு தலைவர் அவர்களே,

   பெங்களூர் பரணி உங்க கடுதாசிய படிச்சிட்டு குமுறி குமுறி அழுதிட்டிருப்பார் என்பது உறுதி. எடிட்டரையே கண்கலங்க வைத்தவராயிற்றே நீங்கள்; உங்களது கடுதாசிக்கு முன் இளகிய மனம் படைத்த பரணி எம்மாத்திரம்!
   கிரைண்டர், மிக்ஸின்னு விலையில்லா ஐட்டங்களாக உதாரணம் காட்டி ஜமாய்த்துவிட்டீர்கள் போங்கள்!

   இதோ நானும் தரப்பில்...
   @ Parani from Bangalore

   இப்படி போராட்டக் குழவின் முக்கியச் செயல்பாட்டுக்கே வேட்டு வச்சா எப்படி, பரணி அவர்களே? திரும்பத் திரும்ப கேட்பது என்பது ஒருவகையில் டிமாண்ட் க்ரியேட் செய்வது போலதான்! அல்லது, ஒருவகையான 'நினைவூட்டல்' என்றும் கொள்ளலாம். இதில் எடிட்டர் உள்ளிட்ட யாருக்குமே சங்கடம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! இது ஒரு தவறான விசயமாகவும் என்னால் எடுத்துக்கொள்ள இயலவில்லை (இது தவறுதான் என்று இங்கே இன்னும் சிலர் சொன்னால் என் மனம் ஏற்றுக்கொள்ளுமோ என்னவோ!).

   இதில் 'புரியும் சக்தி' என்பதெல்லாம் எங்கே வந்தது? 'தாய்கூட அழுகின்ற பிள்ளைக்குத் தானே பசி என்று பரிவோடு பாலூட்ட வருவாள்...
   உன் வீட்டு கண்ணாடி; ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே' என்கிறார் வைரமுத்து!
   'கேளுங்கள் தரப்படும் - தட்டுங்கள் திறக்கப்படும்' என்கிறார் இயேசு பிரான்!

   தொடர்ந்து தட்டுவோம் (அளவுக்கு மிகாமல்), கிடைக்கும்போது கிடைக்கட்டுமே! :)

   எங்கே, 'சிங்கத்தின் சிறுவயதில் தொகுப்பாக வேண்டும்' என்று ஒருமுறை சத்தமாகச் சொல்லுங்கள் பார்க்கலாம்! :)

   Delete
  2. பெங்களூர் பரணி கூறுவது ஒருவகையில் நியாயமாகப் படுகிறது. ஒரு 2-3 பேர் திரும்பத்திரும்ப ஒரே Request'ஐ வைப்பது கொஞ்சம் ஓவர்தான். அதே தேவையை வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு நபர்கள் முன்வைக்கும்போது +1 போடுவதே போதுமானது. Same applies for Reprints Digest etc.

   Delete
  3. நாட்டாமையும் சேர்ந்து கொள்வதால் எங்கள் தரப்பு சற்றே வழுவிழக்கிறது. மற்ற மறுபதிப்புத் தொடர்ப்பான குற்றச் சாட்டுகளை வேண்டுமானால் நான் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளத் தயார். ஆனால், 'சி.சி.வயதில்' தொகுப்பாக வேண்டுமென்பதில் எங்கள் போராட்டக்குழு உறுதியுடன் இருக்கிறது. இதற்காக நாட்டாமை எங்களை ஊரை விட்டே விலக்கி வைத்தாலும், எதிர்கொள்ளத் தயார்! :)

   Delete
  4. தாரமங்கலம் பரணிதரன், தங்கள் கடிதம் பார்தேன், நன்றி. தங்கள் நலம் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவர் நலம் அறிய ஆவல்.

   என்னை பொறுத்தவரை சில/பல கோரிக்கைகளை (உதாரணம்: கா.க, சி.சி.வ) பலமுறை இந்த தளத்தில் பதிவு செய்ய பட்டுள்ளது. நமது ஆசிரியர் அவைகளை கண்டிப்பாக மனதில் வைத்திருப்பார், மேலும் சரியான சமயம் கிடைக்கும் போது வெளி இடுவார் என நம்பிக்கை உள்ளது. என்னை விட ஆசிரியரை நன்கு அறித்தவர்கள் நீங்கள் மற்றும் ஈ.விஜய் :-)

   அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, கோரிக்கைகள் ஒரு சிலமுறை கூறினால் போதும்... மீண்டும் மீண்டும் எழும்போது வெறுப்பை கொண்டு வந்து விட கூடாது. இதுவே எனது பதிவுக்கு காரணம்.

   அப்பா ஒருவழியா முடிஞ்சது.... நீர் மோர் ப்ளீஸ்.
   கடவுளே... தாரமங்கலம் பரணிதரனை எனக்கு மீண்டும் கடிதம் எழுத வைத்து விடாதிங்க :-)

   Delete
  5. கோரிக்கைகள் இல்லாவிட்டால் மறுபதிப்புகள், வண்ண மறுபதிப்புகள் என்று வெளியிட எடிட்டர்

   சம்மதிப்பரா? அவர்களே கேட்பதை நிறுத்திவிட்டார்கள், அதனால் தேவையில்லை என்று

   நினைத்துவிட்டால்?

   Delete
  6. நண்பர் ரமேஷ் குமார் அவர்களுக்கு ..,

   ஒரே கருத்தை ஒரே பதிவில் ஒருவர் பல முறை வினவினால் அது போரடிக்கும் விஷயம் .எனவே தான் நாங்கள் தீவிரமாக போராடினாலும் ஒவ்வொரு பதிவுக்கும் ஒருவர் ஒரு முறை மட்டுமே நினைவில் கொள்கிறோம் .அது தவறு அல்ல .
   ( நாட்டாமை அவர்கள் சொம்பில் அரிசியை கொண்டு வந்து பெங்களூர் பரணி இடம் கொடுப்பதை எங்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது .)

   Delete
  7. @ Parani from Bangalore
   சி.சி. வ வேணும் வேணும் நாங்க போராட்டம் நடத்தினால்தான், அப்பப்ப வாழைப்பூ வடை, நண்டு வருவல், பால்கோவா என விருந்து கிடைக்கும்

   Delete
  8. நம்ம செந்தில் மாதேஷ் சொல்றதை நாட்டாமை அவர்களும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் .

   இந்த இந்தி காரருக்கு தெரியறது கூட பெங்களூர்காரர் அவர்களுக்கும் ..,நாட்டாமை அவர்களுக்கும் புரியலே ....என்ன கொடுமை இது ..?

   Delete
  9. @ PARANI FROM BANGALORE

   நம்ம சங்கத்தலைவர் கடிதம் எழுத முடிவெடுத்துவிட்டால் தாரமங்கலம் கைலாசநாதர் கூட

   அந்த முடிவில் தலையிடுவதில்லை தெரியுமா உங்களுக்கு....

   (ம்ம் தெரிந்திருந்தால் கடவுளிடம் முறையிடுவரா!)

   Delete
  10. இது அவ்வளவு சீரியஸ் Topic அல்ல என்றாலும் Sentiment'ஐ தள்ளிவைத்து கொஞ்சம் logic ஆக யோசிப்பதும் அவசியம் :)

   - இங்கே Silent'ஆன வாசகர்களே அதிகம். அவர்கள் நம் Comment'ப் பார்த்து "தொடர்ந்து Comment போடுபவர்கள்தான் நாம் கேட்க நினைப்பதையெல்லாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்களே" - என்ற எண்ணத்தில் Silent'ஆகவே இருந்துவிட வாய்ப்பு அதிகம். நாம் அளவோடு Request'களை வைத்தால் அவர்களும் அவ்வப்போது Request வைக்க காரணம்/Space கிடைக்கும். ஒருவேளை அதுவேகூட நல்ல ரிசல்டை தரலாம்.

   - ஒரு வாசகர் "சிங்கத்தின் சிறுவயதில் - தொடரின் பழைய பாகங்களை நான் படித்ததில்லை, Miss ஆகிவிட்டது. எனவே பழைய பாகங்களை தொகுத்து வெளியிடுங்கள்" என்று கேட்டால் அதில் ஒரு நியாயமான அத்தியாவசிம் உள்ளது (In fact இதுதான் Majority'ஆன Request'க்கு காரணம்).

   அதற்கு பதிலாக Machine மாதிரி "வேண்டும் வேண்டும்" என்று தொடர்ந்து ஒருசிலர் மட்டும் ஓசை எழுப்பினால் நீங்கள் மற்றவர்கள் கண்களுக்கு எப்படித்தோன்றுவீர்கள் தெரியுமா? Fanboy! நீங்கள் தொடரை முழுவதுமாகப் படித்துவிட்டும் சும்மாவே ஒரு Hype கிளப்புவதாகத் தோன்றும். அந்த முத்திரை வாங்கிவிட்டால் அடுத்த பிரச்சனை, சம்பந்தமேயில்லாவிட்டால் கூட ஒட்டுமொத்த Blog மீதும் / எடிட்டர்மீதும் - பழிவிழும் - encourage செய்வதாக. பரணிதரன் அவர்களின் விளையாட்டான கமெண்டை பாருங்கள் நான் சொல்வது புரியும்:

   Paranitharan K: //சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பு என்பது ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகனின் கைகளிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் .அதற்காக நாங்கள் எவ்வளவு போராட்டங்களை நடத்தி ...,ரத்தம் சிந்தி...//

   So be concious on public! அப்பாவியாக இருப்பதும் ஒரு உபத்திரவமே!

   Delete
  11. // அப்பாவியாக இருப்பதும் ஒரு உபத்திரவமே! //

   ஆனால், எடிட்டரும் ஒரு அப்பாவி தானே? ஒரு அப்பாவியிடம் மற்ற சில அப்பாவிகள் அப்பாவித்தனமாக எதையாவது கேட்டு வைத்தால், அது எப்படி குத்தமாகும்னேன்? :D

   Delete
  12. ஆனாலும் நம்ம நாட்டாம சொல்றது கொஞ்சம் யோசிக்கறமாதிரிதான் இருக்கு! என்னையும் ஃபேன் பாய், டேபிள் டாப் வெட்கிரைண்டர் பாய்னு சொல்லிடுவாங்களோன்னு பயமா இருக்கு. எங்க திரும்பினாலும் பயமா இருக்கு. யாரைப் பார்த்தாலும் பயமா இருக்கு. பயம் பயம்... கொஞ்ச நாள் எங்கனாச்சும் ஓடி ஒளிஞ்சாத்தான் சரிப்படும் போலிருக்கு...

   Delete
  13. நல்ல பூனையாரை பயமுறுத்துவது பாவம்!

   நானும் ஒரு Fanboy'தான்! :D புத்தகங்கள் / கதைகளின் மீது இருக்கும் ஆர்வம் வெளியிடுபவர் மீதும் இருப்பது இயல்புதான். இருந்தாலும் நம்முடைய Focus / பாராட்டுதல்கள் / புரிந்துகொள்ளுதல் எதில் அதிகமாகக் குவிகிறது என்பது முக்கியம்!

   Delete
 43. maya maindan , sigappu kavalan , katrin kavalan .

  ReplyDelete
 44. எடிட்டர்சார்

  XIII ன் தமிழ் பாகங்கள், நவம்பர்'2012 ல் பிரெஞ்ச்ல் வெளிவந்தவை, நாம் அதை 2013ல் வெளியிட்டோம்

  2013 நவம்பர்ல் வெளி வந்த பாகத்தை 2014 ல் வெளியிடாமல் 2015 க்கு தள்ளி வெய்ப்பது ஏன்??
  ReplyDelete
  Replies
  1. அப்படிக் கேளுங்க! ஹை-கோர்ட்டு வக்கீலு கணக்கா ச்சும்மா நச்சுனு கேட்டீங்க போங்க! :)

   Delete
 45. இன்று இனிய பிறந்த நாள் காணும் ஆசிரியர் அவர்களை
  வாழ்த்த வயதில்லை ஆகவே வணங்குகிறேன் :)

  அவர்கள் இன்று போல பற்பல மகிழ்ச்சியான செய்திகளையும்
  ஒவ்வொரு மாதமும் குண்டு புத்தகங்களை
  வெளியிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக :))
  .

  ReplyDelete
  Replies
  1. ஆகா ...சொல்லவே இல்லை ...

   எனது வாழ்த்துகளும் ....எங்கள் சங்கத்தின் வாழ்த்துகளும் .....ஆசிரியருக்கு ......

   இந்த இனிய பிறந்த நாளில் தனது தொண்டர்களின் வேண்டு கோளை ஏற்று சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்புக்கு ஆசிரியர் உறுதி கொடுக்குமாறு .....

   ( ஐயோ ....பெங்களூர் இல் இருந்து யாரோ அடிக்க ஓடியே வராங்க ....)

   Delete
  2. பிறந்தநாள் வாழ்த்துகள் சார்!

   Delete
  3. பிறந்தநாள் ஸ்பெஷல் இல்லயா ஆசான்

   Delete
 46. அடக்கடவுளே! இதை எப்படி மறந்தேன்! என் ஞாபக சக்தியில் இடி விழ! :(

  பிறந்தநாள் வாழ்த்துக்கள் எடிட்டர் சார்!

  இந்த சிறப்பானதொரு நன்னாளை மேலும் பொன்னாள் ஆக்கிட ஒரு சிறப்புத் தகவலோடு இங்கே வருகை புரியவிருக்கும் எடிட்டர் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்!

  (சரியான சமயத்தில் இங்கே பின்னூட்டமிட்டு நினைவுபடுத்திய திருப்பூர் சிபி அவர்களுக்கு நன்றிகள் பல!)

  ReplyDelete
  Replies
  1. ஒரு சிறப்பு தகவலோடு வருகை தர இருக்கும் #

   ஆசிரியர் கவனிக்க .....

   Delete
 47. ==So உங்கள் வீட்டு வாண்டுகளை காமிக்ஸ் உலகினுள் மெதுவாய் அடியெடுத்து வைக்கச் செய்யும் அவா உங்களுக்கு இருப்பின் ; அவர்களுக்குக் கதை சொல்லிடும் பொறுமையும் உங்களுக்கு இருப்பின் - 2015-ல் அந்த இளம் பட்டாளத்திற்கொரு தனிப்பாதை போட blueprint தயார்!! What say folks ?==
  +100
  சிறுவர்களுக்கான காமிக்ஸ் புத்தகங்கள் ஒரு தனி இதழாக வருவது நல்ல விஷயம்தான். இதன் மூலம் சிறுவர்களுக்கான கதைக்களங்களை இன்னும் விரிவுபடுத்தி நிறைய கதைகளை வழங்கலாம். அது அப்படியே ஒரு நல்ல சிறுவர் மாத இதழாக உருவாகும் பட்சத்தில் இன்னும் மகிழ்ச்சி. தம் குழந்தைகள் தமிழில் படிக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களுக்கு இப்பொழுது வாங்கிக்கொடுக்க புத்தகங்கள்தான் இல்லை. தமிழ்வழிக்கல்வி அரிதாகி வரும் இந்த காலத்தில் ஒரு நல்ல சிறுவர் இதழ்தான் தமிழில் படிக்கும் ஆர்வத்தை குழந்தைகளுக்கு உண்டாக்கும் என்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் நமது லயன் குழுமத்தில் இருந்து ஒரு பூந்தளிர் போல, ஒரு கோகுலம் போல, ஒரு நல்ல தரமான சிறுவர் மாத இதழ் வரவேண்டும். தமிழ் வாசிக்கும், வாசிக்க விரும்பும் ஒவ்வொரு குழந்தையும் அதைப்படிக்க வேண்டும். What say folks ? ;-)

  ReplyDelete
 48. நீங்கள் பலப்பல பிறந்த நாட்களை எங்கள் அக்கப்போருடன் சேர்ந்து கொண்டாட வாழ்த்துக்கள்

  ReplyDelete
 49. DEAR EDITER ,

  MANY MORE HAPPY RETURNS OF THE DAY.... HAPPY BIRTHDAY

  ReplyDelete
 50. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்...

  ReplyDelete
 51. "ஒரு just like that பதிவு..... !" வுக்கு "ஒரு just like that பின்னூட்டம்..... !"

  உங்கள் ஐரோப்பிய பயணம் சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது சார்.:)

  நம்மிடம் சரக்குகள் ஏராளமாக இருக்கும் போது புதிய புதிய "விரைவில் வருகிறது" விளம்பரங்களை ஒவ்வொரு பதிவிலும் சேர்த்து விடலாம். அதை தயார் செய்வதற்கு இங்கே designerகள் ஆர்வம் காட்டக்கூடும்.

  ReplyDelete
 52. பிறந்த நாள் வாழ்த்துக்கள்  ReplyDelete
 53. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்...

  ReplyDelete
 54. பிறந்த நாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்.
  இந்த நன்னாளில் ஒரு புது அறிவிப்பை வெளியிட்டு எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 55. @ நாட்டாமை

  கொஞ்ச நாட்களாகவே எனக்குள் இருந்த சிந்தனையை உங்களின் கமெண்ட் மேலும் ( நாம் கேட்க நினைத்ததைத்தான் தொடர்ந்து இங்கே கமெண்ட் போடுபவர்கள் கேட்டுவிடுகிறார்களே - என்று இதுவரை பதிவிடாத மெளனப் பார்வையாளர்கள் எண்ணுவது பற்றியது) அதிகரிக்கச் செய்திருக்கிறது.
  ஏனெனில், எனக்கு சில மாதங்களுக்கு முன் அறிமுகமான, கோவையைச் சேர்ந்த செல்வராஜ் என்ற தீவிர காமிக்ஸ் வாசகரும், இத்தளத்தின் மெளனப் பார்வையாளருமாகிய அந்த நண்பரிடம் நான் "ஏன் நீங்கள் கமெண்ட் இடுவதே இல்லை?" என்று கேட்டபோது அவர் அளித்த பதில் "அதான் எல்லாக் கேள்விகளையும் நீங்களே கேட்டு பதில் வாங்கிடுறீங்களே" என்பதுதான்! அப்போதிருந்தே மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு இருந்து வந்தாலும், அதீத ஆர்வம் அந்தக் குறுகுறுப்பை முடக்கிவிட்டிருந்தது.

  இப்போது நான்/என்னைப் போன்றவர்கள் செய்யவேண்டியது என்ன?
  * கமெண்டுகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்வதா?
  * கேள்விகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்வதா?
  * அல்லது, நானும் ஒரு மெளனப் பார்வையாளனாக மாறி விடுவதா?

  நாட்டாமை மற்றும் சபையோரின் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : நான் நாமாகவே இருப்போமே விஜய் ! நிச்சயமாய் இங்கு நம் அனைவரது சுபாவங்கள் ஜீவிக்க இடமும், ஒவ்வொருவரின் தனித்தன்மைகள் தழைக்க சுதந்திரமும் நிறையவே உண்டு ! மனதில் தோன்றுவதை எழுதும் சுதந்திரம் குறையும் நாளில் - எழுதுவதின் ரம்யம் குன்றி விடும் ! வேண்டாமே - நாமாய் நமக்குப் போட்டுக் கொள்ளும் இத்தகைய காப்புக்கள் !

   மௌனங்களுக்கும் ஒரு கம்பீரம் உண்டு ; உரத்த சிந்தனைகளிலும் ஒரு நேர்மை உண்டு எனும் போது இரண்டையும் நாம் நேசிப்போம் !

   இயந்திரமயமான இன்றைய உலகினில் முகங்களில் ஒரு புன்னகையைக் கொணரும் ஆற்றல் விலைமதிப்பற்றது ! பூனைகள் மியாவ் என்று சுற்றித் திரிவதே அழகு ; மௌன விரதங்களைக் கடைப்பிடிப்பதன்று !!

   Delete
 56. @ FRIENDS : பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன நண்பர்களுக்கும் ; மனதுக்குள் வாழ்த்திய இதர நண்பர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக !! ஜாலியானதொரு நண்பர் குழாமோடு நாட்களை நகற்றும் இந்த சந்தோஷ அனுபவங்கள் விலைமதிப்பற்றவை !! Thanks a ton folks !

  ReplyDelete
 57. தல கௌ பாய் ஸ்பெஷல் என்ன ஆச்சு??!!!

  ReplyDelete
 58. Happy birthday sir....

  My name suggestioins:
  1.மர்மயோகி
  2. கனல்வீரன் (கனல் - வாயு)
  3. காற்றுக்குதிரை
  4. மாயன்
  5. மாயக்கனல்

  ReplyDelete