Powered By Blogger

Sunday, March 30, 2014

புதிதாய் ஒரு தொப்பித் தலையன் !

நண்பர்களே,

இன்னுமொரு ஞாயிறு வணக்கம் ! கண்மூடித் திறக்கும் முன்பாக 7 நாட்கள் கடந்து சென்ற தடமே தெரியவில்லை ! சூரிய பகவானின் உஷ்ணம் ஒரு பக்கமிருக்க, இதழின் இறுதிக்கட்டப் பணிகள் தந்த பரபரப்பு  மறு பக்கமிருக்க, "சூப்பர் 6-ன்" அறிவிப்புகளைச் சரியாய்த் திட்டமிட வேண்டுமே என்ற தவிப்பு இன்னொரு பக்கமிருக்க - இவ்வாரக் கேச இழப்பு எக்கச்சக்கம் ! அதன் மத்தியினில் லேசாய் இளைப்பாற முடிந்ததெனில் - அது அழகாய் வந்துள்ள இம்மாத லக்கியாரின் புண்ணியமே ! "எதிர் வீட்டில் எதிரி"யும் பணி முடியும் தருணத்தை நெருங்கி விட்டதால் - அதன் பக்கங்களைப் புரட்டுவதே ஒரு ஜாலியான அனுபவமாய் இருந்தது ! என்ன தான் டெக்சும், டைகரும், ஷெல்டனும், லார்கோவும் அனல் பறக்க சாகசம் செய்தாலும் - கார்டூன்களின் இதமே ஒரு தனி ரகம் தான்  என்று எனக்குத் தோன்றியது ! அதிலும், இந்த இதழ் கூடுதல் ரம்யத்தை எனக்குக் கொடுத்ததற்கொரு காரணம் இல்லாதில்லை ! "எதிர் வீட்டில் எதிரிகள் !" இதழின் மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்துள்ளது ஜூனியர் எடிட்டர் விக்ரம் ! Of course அவனது primary மொழியாக்கத்தின் மீது நான் நிறைய திருத்தங்கள் ; மாற்றங்கள் செய்துள்ளேன் என்ற போதிலும் - ஒரு முழு நீளக் கதையின் பணியை அவன் ஏற்றுச் செய்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் - ஆந்தையாருக்குள் வசிக்கும் தந்தையிடம் லேசாகவொரு பெருமிதம் ! தொடரும் மாதங்களில் நமது உதவி ஆசிரியர் பிரகாஷின் மொழிபெயர்ப்போடும் நமது இதழொன்று வரவிருக்கிறது என்பதால் - கருணையானந்தம் அவர்களும், நானும் மாத்திரமே மாறி, மாறி எழுதுவதனால் நேரக் கூடியவொரு   மெல்லிய அயர்ச்சி தவிர்க்கப்படலாம் என்பதே இந்தப் புது முயற்சிகளின் பின்னணிச் சிந்தனை ! Anyways - எழுதுவது யாராக இருப்பினும், அதன் மீது இறுதியாய் நான் கை வைக்காது இருக்கப் போவதில்லை என்பதால் - உங்களுக்குக் பழக்கப்பட்டுள்ள அந்த ஸ்டைல் பெரிதாய் மாறித் தெரியாது தான் !  Is that a good thing ? Or a bad thing ? என்ற மண்டைச்சொரிதலில்  உங்களை விட்டு விட்டு - இம்மாத இதழின் அட்டைப்படத்தினை உங்கள் பார்வைக்கு வழங்குகிறேன் :  
மீண்டுமொரு படுக்கை வசத்திலான லக்கி ராப்பர் ! 
முன்னட்டை மாத்திரம் - in a closeup ! 
 இந்த இதழுக்கான ஒரிஜினல் அட்டைப்படத்தில் லக்கிக்கு இடமில்லை என்பது மட்டுமல்லாது - அதனை ஏகப்பட்ட தடவைகள் விளம்பரங்களுக்கும் நாம் பயன்படுத்தியுள்ளதால் அதனை முன்னட்டையாய் பயன்படுத்த மனசு ஒப்பவில்லை ! நம் ஆர்டிஸ்டும் ஒரு கார்டூனை வரைந்து ஏக காலமாகி விட்டது என்பதால் அவரிடம் இந்த டிசைனை ஒப்படைத்தேன் ! நமது இதழ்களில் படுக்கைவச ராப்பரைப் பார்த்தே யுகங்களாகி விட்டதே என்பதால் அதனையும் ஏன் விட்டு வைப்பானேன் என அதற்கேற்றார் போல ஒரு படத்தைத் தேர்வு செய்து கொடுத்தேன் ! இதோ - மாலையப்பனின் ஓவியத்தோடு பொன்னனின் பின்னணிச் சேர்க்கையும் இணைந்த முன்னட்டை ! Back கவர் ஒரிஜினலே என்பதால் அதனில் படைப்பாளிகளின் முகங்களை நுழைப்பதைத் தவிர்த்துப் பெரிதால் நமக்கு வேலை இருக்கவில்லை !  வழக்கம் போலவே இங்கு தெரிவதை விட - ராப்பரில் இன்னும் அழுத்தமாய் வர்ணங்கள் அச்சாகியுள்ளன ! So - இம்மாதது 2 இதழ்களும் கிட்டத்தட்ட ஒரே  color combination தான் !  இதோ உட்பக்கங்களில் இருந்து ஒரு preview -ம் உங்கள் பார்வைக்கு !  

இந்தக் கதை ஒரிஜினலாய் உருவானது 1962-ல் ! பெல்ஜியக் காமிக்ஸ் படைப்பாளிகளுள் 2 அசாத்திய ஜாம்பவான்களான Goscinny & Morris இணைந்து பணியாற்றிய லக்கி லூக் கதைகள் அனைத்துமே சூப்பர் ஹிட் ரகங்கள் ! அந்தப் பட்டியலில் இக்கதையும் ஒன்று என்பதால் - இது வரை இதனை ஆங்கிலத்திலோ, வேற்று மொழிகளிலோ படித்திருக்காத   நண்பர்களுக்கு ஒரு செம விருந்து காத்துள்ளது என்றே சொல்லுவேன் !  கதை தொடர்பான வேலைகளை பூர்த்தி செய்வதில் அதிக நேரம் பிடிக்கவில்லை ; ஆனால் இந்தாண்டின் highlight ஆன லயனின் 30-வது ஆண்டுமலரின் அறிவிப்பு ; அதன் கதைகள் பற்றிய விளம்பரங்கள் ; வழக்கம் போல் எனது ஹாட்லைன்கள் + சூப்பர் 6-ன் அறிவிப்பு என சகலத்தையும் இந்த இதழுக்குள் அடக்குவதற்குள் நாக்குத் தொங்கி விட்டது ! கடைசி நிமிடம் வரை 'இதைப் போடு - அதைக் காலி பண்ணு ' என்று நமது DTP பெண்மணியும், மைதீனையும் நான் குடலை உருவாத  குறை தான் ! Anyways - ஒரு landmark இதழின் அறிவிப்பு சிறப்பாக அமைய வேண்டுமே என்ற ஆர்வம் அடங்கியபாடில்லை எனக்குள் !

இவ்வாரம் புதன்கிழமை (April 2nd) புதிய இதழ்கள் இரண்டும் இங்கிருந்து despatch ஆகிடும் - மறு நாளில் உங்களை வந்து சேரும் விதமாய் ! இதழ்களைப் பார்க்கும் வரையாவது அந்த அறிவிப்புகளை இங்கே போட்டு உடைக்க வேண்டாமே என்பதால் பெவிகால் பெரியசாமி இப்போதைக்கு ஆஜர் ! 

சென்ற பதிவினில் KBT - சீசன் 2014 பற்றியும், மொழிபெயர்ப்புப் போட்டியினில் வெற்றி பெரும் நண்பருக்கு லயனின் ஆண்டுமலரில் பணியாற்றவொரு வாய்ப்பும் தர எண்ணுவதை பற்றி நான் எழுதி இருந்தேன் அல்லவா ? அதற்க்குக் கண்டனம் தெரிவித்து ஏராளமாய் மின்னஞ்சல்கள் ! 'ஒழுங்காய்ப் போய்க் கொண்டிருக்கும் விஷயத்தில் ஏன் விஷப் பரீட்சை ?' என்ற ரேஞ்சில் ஆரம்பித்து - ' வாசகர்களுக்குளே தேவையற்ற மன வருத்தங்கள் ; வீண் மனஸ்தாபங்கள் விதைய வழி வகுத்து விடும் முயற்சி இது !' என்ற ரீதியிலும் அபிப்ராயங்கள் !! எவ்வளவு தான் நான் எனது சிந்திக்கும் குல்லாவைப் போட்டுக் கொண்டு செயல்பட்டாலும் -  ஒவ்வொன்றையும் பல கோணங்களில் நோக்கும் நண்பர்களது எண்ணங்களை முழுமையாய் gauge பண்ண முடியவில்லை என்பதே நிஜம் ! எவ்வளவோ மாற்றங்களை நம்மால் வாழ்க்கையில் just like that ஏற்றுக் கொள்ள முடிந்தாலும்  - காமிக்ஸ் வாசிப்பென்று வரும் போது மாத்திரமே நாம் மாற்றங்களை கூடிய மட்டிலும் விரும்பாது போவது ஏனோ என்ற மகா சிந்தனையில் கேச இழப்பு அத்தியாயம் 2 தொடங்குகிறது எனக்குள் ! இதற்கு மேலும் தலையைப் பிய்த்துக் கொண்டால் - நண்பர் அஜய் சாமி வரைந்து அனுப்பியுள்ளது போலவே நானும் மெய்யாகவே ஒரு கௌபாய் தொப்பிக்கு ஆர்டர் தர வேண்டியதாகும் போல் படுகிறது ! பாருங்களேன் - நண்பரின் அட்டகாசத்தை ! 
See you soon folks ! Bye for now ! 

218 comments:

 1. சண்டேயில் சரவெடியாய் ஒரு பதிவு! சூப்பர்ர்ர்ர்!!

  ReplyDelete
 2. Hi Sir
  Somehow u didnt leak information on forthcoming specials
  Waiting eagerly regarding 30th year book
  Is it tex only or mix

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ்வுடன் கிட் லக்கி, ஒரு புதிய மங்கை அறிமுகம் என்பது என்னுடைய ஊகம்! மற்றவை புக் வருகைக்கு பின்னால் தான். 30-வது ஆண்டு மலர் தலைப்பு என்னாச்சு...?

   Delete
  2. ARVIND & MH Mohideen : பெவிகால் பெரியசாமி : 'உள்ளேன் அய்யா !' !

   Delete
 3. Vijayan sir,
  Thanks. awaiting eagerly to receive this month book and info about 30th year special.
  Thanks for introducing William Vance to us (hmm, it happened around 28 years before I guess).
  Is there a plan to publish Mr. Vance's books like Bruce J Hawker?
  Please share your opinion.
  Many thanks.
  Regards
  Mahesh

  ReplyDelete
  Replies
  1. Mahesh kumar S : வான்சின் சித்திர மாயாஜாலத்துக்கும் கதையெனும் முதுகெலும்பு அவசியம் தானே ?! அதுவும் நம் ரசனைக்கு ஏற்றார் போல் அமையும் போது அத்தொடர் நமக்கு tailormade ஆகிறது ! துரதிர்ஷ்டவசமாய் ப்ரூஸ் ஹாக்கர் அந்தப் பட்டியலுக்குள் அடங்க வழியில்லையே !

   Delete
  2. Vijayan sir,

   Thanks for your reply. It clarifies my doubts.

   With warm regards,
   Mahesh

   Delete
 4. அட்டை படம் சூப்பர், இந்த பதிவில் சூப்பர் 6 முன்னோட்டம் இருக்கும் என்று நினைத்தேன், டைகர் உடன் ஒரு துப்பாக்கி சண்டை இருந்தால் நன்றாக இருந்திருக்கும் (விஜயன் தான் வெற்றி பெற வேண்டும்)

  ReplyDelete
  Replies
  1. lion ganesh : ஏற்கனவே கடுப்பில் இருக்கும் கேப்டன் டைகரின் ரசிகர்கள் என் நடு மண்டையில் ஒரு போடு போடப் போகிறார்கள் நண்பரே !

   Delete
 5. Dear editor sir,
  Any idea to introduce scorpion series? A huge welcome to our junior editor.

  ReplyDelete
  Replies
  1. Mohamed Harris : தற்போதைக்கு இல்லையே !

   Delete
 6. இன்னும் ஐந்து நாட்கள் ............சரி காத்திருப்பு நம்ம லக்கி மற்றும் சூப்பர் சிக்ஸ் அறிவிப்புகளுக்கு

  எனும்போது அலுவலகத்தில் கொஞ்சம் வேலையும் செய்ய வாய்ப்பு

  ReplyDelete
  Replies
  1. Senthil Madesh : That's the spirit !!

   Delete
  2. CD மாறிப்போய், புத்தகங்கள் வந்து சேர 10 தேதி ஆச்சுதுன்னா... அலுவலகத்தில் வேலை செய்ய அதிக வாய்ப்பு... more spirit!

   கொரியர் பாய் புத்தகத்தை லவட்டிகிட்டு போய்ட்டா... மாசம் முழுக்கவே நிறைய அலுவலக வேலை... enormous spirit! :D

   Delete
 7. நண்பர் அஜய் சாமியின் கைவண்ணம் அட்டகாசம்... வரும்மாதம் புது புத்தகங்களை காணும் ஆவல் அதிகமாகிக்கொண்டே வருகிறது...

  ReplyDelete
 8. Eagerly waiting to meet luck and jolly this month!

  அஜய் சாமியின் Style பிரின்ஸ் கதை சித்திரங்களை நினைவுபடுத்துகிறது, Great work!

  // காமிக்ஸ் வாசிப்பென்று வரும் போது மாத்திரமே நாம் மாற்றங்களை கூடிய மட்டிலும் விரும்பாது போவது ஏனோ என்ற மகா சிந்தனையில் கேச இழப்பு அத்தியாயம் 2 தொடங்குகிறது எனக்குள் ! //

  Advertisement: எர்வாமேடினை உடனே பெற 40504050 என்ற எண்ணுக்கு Missed call குடுங்க!

  ReplyDelete
  Replies
  1. Ramesh Kumar : எர்வமடின் ; பெவிகால் என்று நிறைய வஸ்துக்களுக்கு brand ambassador ஆகும் தகுதி அடியேனுக்கு சிறுகச் சிறுக வளர்ந்து வருகிறது ! இதே ரேஞ்சுக்குப் போனால் என்றைக்காச்சும் ஒரு நாள் டி-வி விளம்பரத்தில் தலை காட்டப் போகிறேன் ஜாக்கிரதை !

   Delete
 9. ஸ்பெஷல் அறிவித்து அதனால் எங்களுக்கு pleasure-ரும் தங்களுக்கு pressure-ரும் கூடிவிட்டதை நன்றாவே உணர முடிகிறது! எங்கள் curious-யை புக் வெளிவரும் வரை தாங்கள் காப்பாற்ற மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் பெவிகால் உதவியுடன் மல்லுகட்டுவதென்பது உங்களுக்கொரு ஒரு அழகிய அவஸ்தைதான். எப்படியும் வரும் புதனன்று தங்கள் பிடித்திருக்கும் ஓட்டைவாய் உலகநாதன் ஓடக்கடவது....?

  ReplyDelete
  Replies
  1. MH Mohideen : மாதங்களாய் தாக்குப் புடித்து விட்ட பெ.பெ. க்கு இன்னும் 3 நாட்களொரு விஷயமா ? மின்னலாய் ஓடி விடாது நாட்கள் ?!

   Delete
 10. லக்கி பற்றி எதுவும் சொல்ல வேண்டியதில்லை. என்றென்றும் ரசிக்க கூடியதாகத்தான் இருக்கிறது.

  அஜய்சாமியின் கைவண்ணம் அருமை. அதைவிட அதில் உள்ள கோரிக்கை மிகவும் அருமை. (சிங்கத்தின் சிறு வயதிற்கு மட்டும் இன்னும் சிறிது காலம் காத்திருக்கலாம் என்பது என் எண்ணம். “பொறுத்தார் பூமி ஆள்வார்”)

  ஓவியத்தில் உள்ள நீலத் தொப்பி போட்டவருக்கு கோரிக்கை நிறைவேறும் வரை அன்னம், தண்ணி தர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Mugunthan kumar : //நீலத் தொப்பி போட்டவருக்கு கோரிக்கை நிறைவேறும் வரை அன்னம், தண்ணி தர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.//

   K.S.ரவிகுமார் படத்து நாட்டாமைகளின் பாதிப்பு நம்மில் நிறையவே உள்ளது தெரிகிறது !

   Delete
 11. இன்னும் ஐந்து நாட்கள் ............சரி காத்திருப்பு நம்ம லக்கி மற்றும் சூப்பர் சிக்ஸ் அறிவிப்புகளுக்கு
  ok.
  சிங்கத்தின்சி.வ.க்கு எத்தனை நாட்கள்?

  ReplyDelete
  Replies
  1. SalemLee : அதே ஐந்து நாட்கள் தான் ! சி.சி.வ.- பாகம் 36 தான் லக்கி லூக்கில் உண்டே ?!

   Delete
 12. தல மறுபடியும் டீல்ல விட்டுடிங்களே!! டெக்ஸ் ,டைய பாலிக் இவங்கலாம் ஸ்பெஷல் புக்ல இருங்காங்க தானே??

  ReplyDelete
  Replies
  1. balaji ramnath : ஐந்தே நாட்களில் விடை !

   Delete
 13. வணக்கம்,நான் இந்த வலைத்தளத்திற்கு புதிது.நேற்று சில புத்தகங்களை ஆன்லைனில் வாங்க ஓடர் கொடுத்தேன். ஒரு கட்டத்தில் எனது வங்கி பாதுகாப்பு காரணங்களிற்காக என் தொலைபேசி எண் கேட்டபோது அதை கொடுப்பதற்கு சிறிது தாமதம் ஆகையில் அந்த லிங்க் திடீரென காலாவதி ஆகிவிட்டது.இப்போது நான் என்ன செய்வது? மீண்டும் புதிதாக ஆர்டர் கொடுப்பதா? இல்லை இது பற்றி வங்கியோடு கலந்துரையாடுவதா?
  யாரேனும் சிறந்த ஆலோசனை தந்து உதவ இயலுமா?

  ReplyDelete
  Replies
  1. Welcome!I suggest you can call our comics office or else send a mail to our editor, they will get back to you!

   Delete
  2. suji jeya : நீங்கள் இருப்பது இந்தியாவுக்குள் தான் எனும் பட்சத்தில் மீண்டும் முயற்சிக்கலாமே ? உங்கள் payment ஒ.கே.ஆகும் முன்பை திரும்பவும் இதே போல் பிரச்னை எழும் பட்சத்தில் தகவல் சொல்லுங்கள் - உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம் !

   And welcome to the blog !

   Delete
  3. thanks for your reply sir! i am in France!
   thanks for your welcome friends!

   Delete
 14. நம்ப ஆபீஸ் க்கு போன் போட்டு கேட்டேன் .. எல்லா விபரங்களும் நல்லா சொன்னன்கப்பா!! இப்படி நான் சொன்ன நம்பவா போறீங்க ???

  ReplyDelete
  Replies
  1. இன்னும் ஒண்ணு சொல்லியிருப்பாங்களே
   அடிச்சு கேட்பாங்க அப்ப கூட சொல்லிடாதீங்கன்னு என் கிட்டயும் இதை தான் சொன்னாங்க
   உங்க கிட்டயுமா?

   Delete
  2. நம்மவர்களுக்கு காமிக்ஸ் ஞானம் குறைவே என்பதால், அடித்தோ - அடிக்காமலோ கேட்டாலும் - 'பெ பெ ' தான் பதிலாக இருந்திடும் !

   Delete
 15. Replies
  1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : அது என் மண்டைக்கேற்ப பிரத்யேகமாய்ச் செய்யப்பட தொப்பியாக்கும் !!

   Delete
  2. கடந்த முறை தலையில் கேசம் கேட்டதால் தானே இந்த தொப்பி

   Delete
 16. Nan athigamaga thirumpa thirumpa padikum kathaiklai aarainthu parthal... Adade..! Cartoonkal.. You are 100% right sir.

  ReplyDelete
  Replies
  1. Sarathi T.P. : நம்மைப் போல் நிறையப் பேர் உள்ளனர் நண்பரே ! புத்தக விழாக்களில் அனல் பறக்க விற்கும் கதைகளின் பெரும்பான்மை கார்டூன்களே !

   Delete
  2. :-) Thank you sir...
   Nanbar Ajay works are super. "Thoppithalaiyar" thontrum puthiya comics viraivil..

   Delete
 17. விஜயன் சார், கடந்த வருடம் வந்த லக்கி-லுகே கதைக்கு இது போல படுகைவாச அட்டை படம் உபயோகபடுத்திய ஞாபகம்! அட்டைப்படம் அருமை, படம் வரைய ஆர்வம்காட்டும் குழந்தைகளுக்கு முன் அட்டை ஒரு தூண்டு கோல்; எளிதில் வரைந்து பழக கூடிய சித்திரம்கள்!

  என்ன சார், அடுத்த மாத இதழ் வருவதற்கு முந்தைய இந்த பதிவிளாவது பெவிகால வாயில (சாரி கையில) இருந்து எடுத்து விட்டு "Surprise" என்ன அப்படின்னு சொல்லலாமே சார்!

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : New Look Special-க்கு அடுத்த படுக்கைவச அட்டை இது தானே !

   அப்புறம் பெவிகாலை அத்தனை சீக்கிரமாய்க் கழுவ முடியாது தானே ?!

   Delete
  2. ஆமா!

   கொஞ்சம் முயற்சி செய்தா முடியும்!

   Delete
 18. கிசு கிசு: நமது 30வது வருட இதழின் பெயர் "தி கிங் ஸ்பெஷல்"அப்படின்னு சிவகாசியில் நம்ப அலுவலகம் பக்கம் பேசிகிறாங்க.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : கிசு கிசுக்கள் பிசு பிசுப்பது தொன்று தொட்டு வரும் வாடிக்கையன்றோ ?

   Delete
  2. கிசு கிசுகள் தான் உண்மையான கதைகளும் உண்டுதானே அய்யா!

   Delete
 19. lukki : super

  2 m naal namathu veetai nokki : super

  nanbarin kaivannm : super o super..

  ReplyDelete
 20. ஞாயறு வணக்கம் டு ஆல் !
  லக்கியின் அந்த ஒரு பக்கத்தை பார்க்கும் போதே கதையின் வீரியத்தை நன்றாக உணர முடிகிறது.eaerly waiting!
  இந்த இதழின் அட்டைப்படம் படு சுமார்! :-(! flat வண்ணத்தில் characterகளை வரைந்துவிட்டு natural வண்ணத்தில் இருக்கும் back ground ஒரு பெரும் நெருடல்!
  welcome விக்ரம்! எடிட்டரின் மேற்பார்வையில் புதிய புதிய தரமான மொழிபெயர்பாளர்கள் நமது புத்தகத்தில் பணி செய்ய வேண்டும் எனும் எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.புலிக்கு பிறந்ததது பூனையாகுமா என்ன?? lets wait and watch! உதவி ஆசிரியர் பிரகாஸ் இதற்கு முன்பு மொழிபெயர்ப்பில் பணியாற்றியுள்ளாறா??welcome onboard sir!
  புதிய மொழிபெயர்பாளர்களை அறிமுகப்படுத்துவது நல்ல விஷயம் தான் என்றாலும் திடுதிப்பென்று நமது அல்பா இதழ்களில் அறிமுகப்படுத்துவதை விட சூப்பர்-சிக்ஸ் இதழ்களில் முதலில் experiment செய்வது better என தோன்றுகிறது.
  இங்கே பெரும்பாலோனோரை லயன் காமிக்ஸ்சுடன் பிணைத்து வைத்திருக்கும் உயிர் இணைப்பு, நமது எடிட்டரின் போதை தரும் மொழிபெயற்பே! அதை சட்டென்று இன்னொருவரிடம் தூக்கி கொடுப்பது எவ்வளவு தூரம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது போக போக தான் தெரியும்!
  அப்புறம் அஜய் சாமி சார், அருமையான படைப்பு! congrats!

  ReplyDelete
  Replies
  1. விஸ்கி-சுஸ்கி : எனது எழுத்துக்களை சிலாகித்துள்ளமைக்கு நன்றிகள் ! அனைத்து மொழியாக்கங்களும் இறுதியாய் என் மேஜையில் நேரம் செலவிடாது அடுத்த கட்டப் பணிகளுக்குச் செல்வதில்லை ; செல்லப் போவதுமில்லை ! So - நெருடல் தோன்றா விதத்தில் தொடரும் மொழியாக்கங்களும் அமையும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது !

   Having said that, விக்ரமோ, பிரகாஷோ தொடர்ச்சியாய் எழுதப் போகும் சாத்தியங்கள் குறைவே என்பதையும் இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். வாகான தருணங்களில் ஒரு மாற்றத்துக்காக இவர்களது முயற்சிகளைப் பயன்படுத்துவதாகவே உள்ளேன் !

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 21. விஜயன் சார்,
  // ஒரு முழு நீளக் கதையின் பணியை அவன் ஏற்றுச் செய்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் - ஆந்தையாருக்குள் வசிக்கும் தந்தையிடம் லேசாகவொரு பெருமிதம் ! தொடரும் மாதங்களில் நமது உதவி ஆசிரியர் பிரகாஷின் மொழிபெயர்ப்போடும் நமது இதழொன்று வரவிருக்கிறது என்பதால்//

  உண்மை! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு!

  விக்ரம் மற்றும் பிரகாஷ் அவர்கள் வரும் இதழ்களை மொழி பெயர்க்க உள்ளதை அறியும் போது இந்த வருட நமது காமிக்ஸ் சுமைகளை உங்களுடன் அவர்கள் பகிர்ந்து கொள்ள வருவது மகிழ்ச்சி! கண்டிப்பாக இந்தவருடம் இதுபோன்ற தோள்கள் தேவை! இவைகளை பார்க்கும் போது இந்த வருடம் நமது காமிக்ஸ் உலகின் மறக்க முடியா வருடமாக அமைய போவது உறுதி! வாழ்த்துகள்! அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்!

  ReplyDelete
 22. For the 1st time in recent times the front cover really rocks...usually I would Thought that we could have used the back cover as front cover but not this time.😀.......

  I can't avoid my laugh when I saw the furious face of jolly in the sample page.

  Though I have read it in English ...I would love to read it in Tamil.

  Translation looks gud.

  Like all I am very eager to see all the future announcements.

  ReplyDelete
 23. I forgot to mention about the awesome talent of Ajaysami.

  ReplyDelete
 24. //எவ்வளவோ மாற்றங்களை நம்மால் வாழ்க்கையில் just like that ஏற்றுக் கொள்ள முடிந்தாலும் - காமிக்ஸ் வாசிப்பென்று வரும் போது மாத்திரமே நாம் மாற்றங்களை கூடிய மட்டிலும் விரும்பாது போவது //
  its very true sir

  ReplyDelete
 25. கடந்த ஐந்து மணி நேரமா சொட்டு தண்ணி கூட கொடுக்கலன்னு

  ReplyDelete
  Replies
  1. R.Anbu : அஜய்க்குத் தான் என் மீது ஏதோ கோபம் என்றால் - அன்பிடமும் இல்லையா அன்பு ? ஆவ்வவ் !

   Delete
  2. உங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளோம் சார்.
   ஏனெனில் நாங்கள் கேட்காமலே நிறைய புக்ஸ் கொடுக்கறீங்க
   சிசிவ வையா கொடுக்காம இருக்க போறீங்க

   Delete
 26. * படுத்துக்கொண்டே பார்த்து ரசிக்க வசதியாக படுக்கை வசத்திலான லக்கியின் அட்டைப்படம் அருமை! ;) பொதுவாகவே சிவப்பு வண்ண பின்னணியில் அமைந்த அட்டைப்படங்கள் அதிக ஈர்ப்பைப் பெற்றுவிடுவதும் நமது இதழ்களில் ஒரு சிறப்பு! இதுவும் அவ்வாறே, பார்த்தவுடன் பச்சக்!

  * இம்முறை லக்கிக்கு முழுநீள மொழிபெயர்ப்பை வழங்கியிருக்கும் ஜூ.எடிட்டருக்கு வாழ்த்துக்கள்! தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற நம்பிக்கை உள்ளது! அசத்துங்கள் விக்ரம்!

  * விரைவிலேயே  மொழிபெயர்ப்பில் களமிறங்கவிருக்கும் உதவி ஆசிரியர் பிரகாஷ் அவர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

  * 30வது ஆண்டு மலருக்கான கதைகள், சூப்பர்-6 பற்றிய விரிவான அறிவிப்புகள், லக்கியின் சூப்பர் ஹிட் கதை என 'எ.வீ.எ' எதிர்பார்ப்புகளை எக்கசச்கமாய் எகிற வைத்திருக்கிறது.
  மேற்கூறிய காரணங்களால், 'இவர் ஒரு தனி ரகம்' என்று பில்ட்-அப் கொடுக்கப்பட்ட ஷெல்ட்டன் கொஞ்சம் தனிமைப்படுத்தப்பட்ட ரகமாகவே தெரிகிறார்.

  * அஜய் பழனிச்சாமி அள்ளுகிறார்!! இது எப்படி சாத்தியமாகிற்று என்ற ஆச்சர்யத்தில் திக்குமுக்காட வைக்கிறது இவரது படைப்பு! இதை உருவாக்கிய விதம்பற்றி இங்கே ஒரு பதிவிடலாமே அஜய்? ப்ளீஸ்! ('சி.சி.வயதில்' தொகுப்பாக வேண்டும் என்று டைகரை வைத்து மிரட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது. தூள்!!)

  * டைகர் தொடரின் படைப்பாளிகளிடம் சொல்லி ஜிம்மிக்குப் பதிலாக நம்ம எடிட்டரையே பயன்படுத்தினால் உலக அளவில் வியாபாரம் பிச்சிக்கிட்டுப் போகும் என்று உறுதியாக நம்புகிறேன். என்னா ஒரு எக்ஸ்பிரஷன்!!  ;)

  * இரண்டாம் தேதிக்கே புத்தகங்களை அனுப்பிவைப்பதற்கு நன்றி எடிட்டர் சார்! 3ம் தேதி காலையில் எங்கள் அன்புக்குரிய ஓ.வா.உலக நாதனுக்கும் ஒரு வாய்ப்பளித்தீர்களெனில், திரைகடல் ஓடியும் திரவியம் தேடிக்கொண்டிருக்கும் நமது நண்பர்கள் பலரும் மகிழ்ச்சியடைவார்களில்லையா?

  காமிக்ஸ் உலகில் என் ஒரே எதிரி ஃபெவிகால் பெரியசாமி தான்! கிடைக்கும் முதல் வாய்ப்பில் ஒரு பிறாண்டு பிறாண்டிவிடத் தயங்கமாட்டேனாக்கும். கிர்ர்ர்ர்...

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY :

   *ஓரங்கட்டப்பட்ட ஷெல்டனின் விஸ்வரூபத்தைப் பார்க்கத் தான் போகிறீர்கள் ; ரொம்ப காலம் பேசப்படவிருக்கும் ஒரு இதழாய் 'எஞ்சி நின்றவனின் கதை' அமையப் போவது உறுதி !

   *//டைகர் தொடரின் படைப்பாளிகளிடம் சொல்லி ஜிம்மிக்குப் பதிலாக நம்ம எடிட்டரையே பயன்படுத்தினால் உலக அளவில் வியாபாரம் பிச்சிக்கிட்டுப் போகும் என்று உறுதியாக நம்புகிறேன் //

   'அந்த ஆடு...அந்த அருவா ..! ; இந்த மனுஷன்...இந்த குடை !' ஏதோ ஒரு சம்பந்தம் இருப்பது போலவே தெரிவது எனக்கு மட்டும் தானா ?

   *பூனை வகைகளில் பெவிகால் பெரியசாமிக்குப் புடிக்காத ஒரே ரகம் - வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு குறட்டை விடுவதை செய்யாமல் ஆங்காங்கே நகங்களை கூர் தீட்டும் பூனையார்களே !

   Delete
  2. //ஓரங்கட்டப்பட்ட ஷெல்டனின் விஸ்வரூபத்தைப் பார்க்கத் தான் போகிறீர்கள் ; ரொம்ப காலம் பேசப்படவிருக்கும் ஒரு இதழாய் 'எஞ்சி நின்றவனின் கதை' அமையப் போவது உறுதி !//

   உய்ய்ய்ய்....
   ரொம்ப எதிர்பார்க்கிறேன் ஃ!
   நன்றி சார் !

   Delete
 27. வாவ் சார் அட்டைபடம் தூள் தூள் ! சான்சே இல்ல ! இனி படித்து விட்டு !

  ReplyDelete
 28. டியர் விஜயன் சார்,

  //ஒரு முழு நீளக் கதையின் பணியை அவன் ஏற்றுச் செய்திருப்பது இதுவே முதல் முறை - லேசாகவொரு பெருமிதம்//
  இருவருக்கும் வாழ்த்துகள்! :)

  //தொடரும் மாதங்களில் நமது உதவி ஆசிரியர் பிரகாஷின் மொழிபெயர்ப்போடும் நமது இதழொன்று வரவிருக்கிறது//
  நல்ல விஷயம் தான்! தரமான மொழிபெயர்ப்பு யாரிடம் இருந்து வந்தாலும் அதற்கு நிச்சயம் வரவேற்பு இருக்கும்!

  //உங்களுக்குக் பழக்கப்பட்டுள்ள அந்த ஸ்டைல் பெரிதாய் மாறித் தெரியாது தான் ! Is that a good thing ? Or a bad thing ? //
  நாயகன் பட டயலாக் மாதிரியே இருக்கே?! :P அதற்கான பதிலும் அந்த படத்திலேயே வருகிறது! :D

  அஜய் சாமி வழக்கம் போல கலக்கி இருக்கிறார்! அவரின் திறமையை ஃபில்லர் கதைகளுக்கு உபயோகித்தால் நன்றாக இருக்குமே?! ஹீரோவாக, ஜெய்ஷங்கர் ஸ்டைலில் ஒரு பக்கா தமிழ் கௌபாயை இறக்கினால், செமத்தியாக கலாய்க்கலாமே?! :) இந்த அரைபக்க கதையிலும், V போட்ட தொப்பியுடன் அப்படி ஒரு மனிதர் தென்படுகிறார்! ;) ஹீரோ பெயரும் ரெடி - Quick Gun விஜயன்! :D

  ReplyDelete
  Replies
  1. Karthik Somalinga : அட..'ஜெய்ஷங்கர் பாணியில் கௌபாய்' என்றவுடன் ஹீரோவாகத் தான் சான்ஸ் இருக்குமென்று கனாக் கண்டால் - 'செமத்தியாக கலாய்க்கலாமே?! என்ற இடைச்செருகல் !! Grrr !!

   Delete
 29. டியர் எடிட்டர்ஜீ!!!

  நண்பர் அஜய் சாமியின் விருப்பத்தை கொஞ்சம் மெனக்கெட்டால் தங்களால் நிறைவேற்ற முடியும்.2015 ஜனவரியில் வெளிவரும் மின்னும் மரணம் வண்ண மறுபதிப்போடு ஐந்து பாகம் கொண்ட ரத்தக் கோட்டை(FORT NAVAJO)
  வண்ண மறுபதிப்பையும் இணைத்தால் அஜய் சாமியின் விருப்பம் மட்டுமல்ல எங்கள் அனைவரின் நெடுநாள் விருப்பமும் நிறைவேறும்.

  இதுகுறித்து நண்பர்களின் கருத்து என்னவோ...?

  ReplyDelete
  Replies
  1. மிக மிக அற்புதமான யோசனை. எடிட்டர் இதனை கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும். காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் கருத்து வேறுபாடின்றி இந்த கோரிக்கையை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

   Delete
  2. saint satan & Mugunthan kumar : தோழர்களே...கொஞ்சம் கொஞ்சமாய்ப் பழகி 5 மணி நேரம் கூட தண்ணி இல்லாது தாக்குப் பிடித்து விடுவேன் ; ஆனால் இதற்கு மேல் முதுகு தாங்காது சாமி !! ஐ ஆம் எஸ்கேப் !

   Delete
 30. நண்பர் அஜய் சாமி அட்டகாசாம் அருமையோ அருமை :)
  டைகர் ரொம்ப கடுப்புடன் உள்ளதாக தெரிகிறது.

  புக்கில் ஹாட்-லைன் முதலில் படிப்பது போல் இனி ஒவ்வொரு வலை பதிவிலும் முதலில் ஆசிரியர் சம்பந்த பட்ட அட்டகாசம் பார்திட ஆசை . :)  நல்ல பதிவு ஸார்,வராத புத்தகங்கள் சீக்கிரம் அனுப்பிட ஓடினை வேண்டிக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Abisheg : ஓடின இருக்க பயமேன் ?!

   Delete
 31. Front cover is very good better than original. Can't wait for the announcements

  ReplyDelete
 32. முன், பின் & படுக்கை வச அட்டைப்படங்கள் அட்டகாசம்... வண்ணக்கலவைகளும் சூப்பர்..

  ReplyDelete
 33. லார்கோ வின்ச்...?
  அப்படி ஒரு கதாநாயகன் நம் இதழ்களில் எப்போதோ வலம் வந்ததாக ஞாபகம்...
  ஹ்ம்ம்ம்ம்..

  ReplyDelete
  Replies
  1. AHMEDBASHA TK : ஜூன் மாதம் வேட்டைக்குப் புறப்படுகிறார் நம் கோடீஸ்வரர் !

   சுடச் சுட இந்த ஞாயிறில் ஓடிக் கொண்டிருப்பது அவரது கதையின் மொழிபெயர்ப்பே !

   Delete
 34. Dear Sir,

  ஞாயிறு அன்று கூட ஒய்வில்லாத வேலை காரணமாக முன்பு போல் இங்கே கருத்துக்களைப் பகிர முடிவதில்லை. இன்றாவது முடிந்தது என்பதில் மகிழ்ச்சி.

  //முன்னட்டை// மிகவும் அழகாக இருக்கிறது :-)

  //ஒழுங்காய்ப் போய்க் கொண்டிருக்கும் விஷயத்தில் ஏன் விஷப் பரீட்சை ?'// same feeling .

  //எதிர் வீட்டில் எதிரிகள் !" இதழின் மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்துள்ளது ஜூனியர் எடிட்டர் விக்ரம் !// என்னைப் பொருத்தவரை ஜூனியர் நம் இதழ்களுக்கு மொழிபெயர்க்கும் முன்பாக நம் பழைய இதழ்களை படிக்க சொல்வது நல்லது சார். ஆங்கில இதழ்களில் இருந்து அப்படியே மொழிபெயர்த்தால் நம் ஹீரோ-க்களுக்கு என்று இதுவரை நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பாணியில் நிச்சயம் பிசிறடிக்கும். இருந்தாலும் உங்கள் திருத்தங்களுடன் வருவதால் ஓகே-தான்.

  //என்ன தான் டெக்சும், டைகரும், ஷெல்டனும், லார்கோவும் அனல் பறக்க சாகசம் செய்தாலும் - கார்டூன்களின் இதமே ஒரு தனி ரகம் தான்//

  வழக்கம் போல் உங்கள் FAVORITE லக்கியை உயர்த்திப் பிடிக்கும் கருத்து இது :P

  கீழே உள்ள டைகரின் மின்னும் மரணம் கதையிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கும் ஓவியங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. டைகர் டைகர்தான். ;-) :-)

  //லயனின் 30-வது ஆண்டுமலரின் அறிவிப்பு// ஆவல் அதிகரிக்கிறது சார். ஆண்டு மலர் மெகா ஹிட் ஆக அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. TSI-NA-PAH //ஆங்கில இதழ்களில் இருந்து அப்படியே மொழிபெயர்த்தால் நம் ஹீரோ-க்களுக்கு என்று இதுவரை நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பாணியில் நிச்சயம் பிசிறடிக்கும். //

   இதற்கு இன்னுமொரு கோணமும் உண்டு ! காலம் காலமாய் நாம் பழகிப் போனதொரு பாணியை முன்னுதாரணமாய்க் கொள்ளாது - சுதந்திரமாய் எழுதும் அனுமதி கிட்டும் போது ஒரு fresh approach காணக் கிடைக்கும் வாய்ப்புகள் நிறையவே உண்டு ! அதன் மேல் அவசியப்படும் திருத்தங்களை மாத்திரம் செய்தால் ஒரு புது சுவை உதயமாகிடாதா ?

   Delete
  2. ////எதிர் வீட்டில் எதிரிகள் !" இதழின் மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்துள்ளது ஜூனியர் எடிட்டர் விக்ரம் !// என்னைப் பொருத்தவரை ஜூனியர் நம் இதழ்களுக்கு மொழிபெயர்க்கும் முன்பாக நம் பழைய இதழ்களை படிக்க சொல்வது நல்லது சார். ஆங்கில இதழ்களில் இருந்து அப்படியே மொழிபெயர்த்தால் நம் ஹீரோ-க்களுக்கு என்று இதுவரை நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பாணியில் நிச்சயம் பிசிறடிக்கும். இருந்தாலும் உங்கள் திருத்தங்களுடன் வருவதால் ஓகே-தான்.//

   Delete
  3. //அதன் மேல் அவசியப்படும் திருத்தங்களை மாத்திரம் செய்தால் ஒரு புது சுவை உதயமாகிடாதா ?//
   +1
   பார்ப்போம் சார் !

   Delete
  4. Dear Sir,

   லக்கி லூக் கதைகளை சிறுவயதிலிருந்து படித்து அவரது ஸ்டைல் இப்படிதான் என்று ஒரு வரையறை மனதில் செட்டாகி விட்டதால் அதில் மாற்றம் ஏற்படுத்தினால் அவ்வளவாக மனம் ஏற்பதில்லை. டெக்ஸ் டைகர் கதைகளும் அப்படியே.

   //அதன் மேல் அவசியப்படும் திருத்தங்களை மாத்திரம் செய்தால் ஒரு புது சுவை உதயமாகிடாதா ?//

   //காமிக்ஸ் வாசிப்பென்று வரும் போது மாத்திரமே நாம் மாற்றங்களை கூடிய மட்டிலும் விரும்பாது போவது// நான் 80% இந்த ரகம் சார்.

   இருந்தாலும் வரவிருக்கும் மொழிபெயர்ப்பு சிறப்பாக அமைந்திருக்கும் (with your guidance) என்றே நம்புகிறேன்.

   பெரும்பாலும் லக்கி லூக்-கே பரிசோதனைக்கூட எலியாக மாறுவது வருத்தமளிக்கிறது.

   என் தனிப்பட்ட அபிப்ராயம்:

   புதிய மொழிபெயர்ப்பாளர்களை நமது புதிய அறிமுகங்களுக்கு பயன்படுத்தினால் எங்களுக்கும் எந்த உறுத்தலும் தெரியாது, அவர்களும் தங்கள் ஸ்டைலில் முழுச் சுதந்திரத்துடன் செயல்படலாம். அதில் "வெற்றி + அனுபவம்" ஈட்டியபின் நம் பழைய நாயகர்களுக்கு இதுவரை பழகிவிட்ட ஸ்டைல் மாறாமல் மொழிபெயர்க்க அனுமதிக்கலாம்.

   As always உங்களின் புதிய முயற்சிகளுக்கு நாங்கள் வழங்கும் சப்போர்ட் மாறப்போவதில்லை. புதிய முயற்சிகளும், முடிவுகளும் வெற்றிபெற வாழ்த்துக்கள் சார்.

   Delete
 35. ஞாயிறும் ஒரு ஞானோதயுமும் என்று தலைப்பு வைத்து இருக்கலாம் சார். உங்கள் புதிய முடிவுகளை இரு கரம் கூப்பி வரவேற்கிறேன் சார். ஜூனியர் மற்றும் உதவி மொழி பெயர்ப்பாளர்களை வாழ்த்தி வரவேற்கிறேன் சார். 30வது ஆண்டு மலர் மற்றும் சூப்பர் 6பற்றிய ஆவலை அதிகப்படுத்தி விட்டீர்கள் சார். 4நாட்களை ஓட்ட யாரும் வழி சொல்லுங்கள் நண்பர்களே.

  ReplyDelete
 36. விஜயன் சார், இந்த வருடம் காமிக்ஸ்-கான் பெங்களூர்-ல் நடைபெற வாய்ப்புகள் உண்டா? இது பற்றி தகவல் இருந்தால் தெரிவிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : (காமிக் கான்) வரும் ...ஆனால் (நம் காமிக்ஸ் ஸ்டால்) வராது !

   இது தான் இன்றைய COMIC CON நிலை - at least நம்மைப் பொறுத்த வரையிலாவது !

   Delete
  2. ஏன் சார் இந்த மாதிரி ஒரு முடிவு? காரணம் ஏதாவது?

   Delete
  3. எங்க மேல கோபம் இருந்தா சொல்லுங்க ... அஞ்சப்பர்ல சாப்பிடுகிட்டே சரி செய்திடலாம் :-)

   Delete
  4. நாமும் டி-ஷர்ட் விற்கும் நாளொன்று புலர்ந்தால் தவிர Comic Con -ல் சத்தியமாய் இனி நமக்கு ஜோலி கிடையாதென்பதே நிதர்சனம் !

   சென்னையினை அடுத்த COMIC CON -க்கான ஸ்தலமாகப் பரிசீலிக்கக் கோரியுள்ளேன் ; அவர்களுக்குமே அப்படியொரு சிந்தனை சன்னமாய் உள்ளது ! அது நிஜமாக 50-50 வாய்ப்புகள் உண்டு ! அப்படி இருப்பின் நிச்சயம் நாம் பங்கேற்போம் !

   Delete
  5. பதிலுக்கு நன்றி! வருடத்திற்கு இரண்டுமுறை சென்னைல உங்களை பார்க்கலாம்ன்னு சொல்லுங்க ; சென்னைவாசிகள் கொடுத்து வைத்தவர்கள் ... :-)

   Delete
 37. விஜயன் சார், கரண்ட் கட் எப்படி உள்ளது.. வரும் நாட்களில் நமக்கு மிகப்பெரிய எதிரி அவன்தான்!! அவனை வெல்ல ஏற்பாடுகள் ஏதாவது செய்து விட்டிங்களா?

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : இப்போது வரை சிக்கல் இல்லை ; தேர்தல்கள் முடியும் வரையிலும் இராதென்ற நம்பிக்கையுள்ளது ! அதன் பின்னே ? Fingers crossed என்று சொல்வதைத் தாண்டி வேறு என் செய்வது ?! நம்பிக்கை கொள்வோம் - காற்றுக் காலம் சீக்கிரமே துவங்குமென்று !

   Delete
  2. அப்ப தேர்தல் முடிவதற்குள் நம்ப 30 ஆண்டு மலர் வேலைய முடிசிடுவிங்கன்னு சொல்லுங்க :-)

   Delete
 38. விஜயன் சார், இந்த பதிவின் (புதிதாய் ஒரு தொப்பித் தலையன்) தலைப்பை முதலில் பார்த்த போது ஏதோ ஒரு புதிய கௌபாய் பற்றிய பதிவு என நினைத்தேன், படித்த பின்தான் புரிந்தது அந்த புதிய கௌபாய் (சாரி அந்த தொப்பி தலையன்) நீங்கதான் அப்படின்னு :-(

  ReplyDelete
 39. Vijayan @
  // கிசு கிசுக்கள் பிசு பிசுப்பது தொன்று தொட்டு வரும் வாடிக்கையன்றோ ?//

  கிசு கிசுகள் தான் உண்மையான கதைகளும் உண்டுதானே அய்யா!

  ReplyDelete
 40. Translatorஆக புதுபரிமாணம் எடுத்திருக்கும் Junior editorக்கு நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 41. விஜயன் சார், மாடஸ்டி கதை இந்த வருடமாவது வெளிவரும் வாய்ப்பு ஏதாவது உண்டா? லைன் 30 வருட மலர்ல இளவரசி கதை வருவதா கிளி ஜோசியகாரன் சொன்னது பலிக்குமா?

  ReplyDelete
  Replies
  1. V தொப்பி விஜயன் தோன்றும் … ''விடாக்கண்டன் கொடாக்கண்டன் ''புதிய சித்திர தொடர் ஆரம்பம் பம் பம்..........

   Delete
  2. ஹ ஹ ஹா விடாக்கண்டனாக பரணிதரனும் கொடா கண்டனாக ஆசிரியரும் ...கலக்குவார்கள் !

   Delete
 42. சார் , அட்டை படம் இரண்டுமே அருமை !
  புதிதாய் அரங்கேற இருக்கும் அரவிந், துணை ஆசிரியர் பிரகாஷ் இருவருக்கும் வாழ்த்துக்கள் !
  இருவரும் நிச்சயம் சிறப்பாய் செய்வார்கள் !
  தங்களது மேற்பார்வை தேவை இல்லை என சொல்லுமளவு சிறக்க மனமார வாழ்த்துகிறேன் !
  மொழி பெயர்பென்றால் நீங்களும் , கருணை ஆனந்தம் அவர்களும்தான் என ஓடி கொண்டிருந்த ரெட்டை மாட்டு வண்டி நிறைய புரவிகள் இணைந்து இழுத்து வரும் ரதமாய் காட்சி தருமென்று நினைக்கிறேன் !
  இருப்பினும் உங்கள் பாணியிலே நான் இது வரை படித்து வந்ததாலோ என்னவோ இந்த பக்கத்தில் லக்கி சொல்றான் ஜாலி செய்றான் போன்ற வசனங்கள் என்னவோ மாதிரி உள்ளது ! ஆகவே நமது பழைய புத்தகங்களை கொடுத்து மொழி பெயர்ப்பை அதே போல அமையுமாறு செய்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் ! பிற கட்டங்கள் நன்றாக உள்ளன ! சிறிய குறை போல எனக்கு தெரிவது இது போன்ற பேச்சுகளே ! முழு புத்தகமும் சிறப்பாய் இருக்குமென நினைக்கிறேன் ! இது திருத்த வேண்டும் என்ற நினைப்பில் எழுதவில்லை ! நிச்சயமாக படிக்கும் பொது எண்ணவோட்டம் மாற கூடாதே என்றே !

  ReplyDelete
  Replies
  1. அஜய் அசத்துகிறார் ! ஆசிரியர் கேள்வி கேட்கும் போதே கை விரிக்கிறாரே அருமை !

   Delete
 43. நாளை அனுப்புவீர்கள் என நினைத்தேன் ! இருப்பினும் பரவா இல்லை இரண்டு தினங்கள்தானே அதிகம் !

  ReplyDelete
  Replies
  1. இந்த அட்டை படம் , ஷெல்டனை மட்டுமே பெரிதாய் எதிர் பார்த்த எனக்கு லக்கியும் முக்கியமென உணர்த்தி விட்டது , மேலும் சுவை கூட்டும் விக்ரமின் மொழி பெயர்ப்பு , லயன் ஆண்டு மலர் விளம்பரங்களுக்காக காத்திருக்கிறேன் !

   Delete
 44. இந்த எதிர் வீட்டில் எதிரிகள் கதை 1990-95-களில் எனக்கு பிரெஞ்சு மொழியில் கிடைத்தது. அப்போதிலிருந்து வெறும் படங்களை பார்த்து கதையை புரிந்து கொள்ள முயற்சித்து வந்த எனக்கு ஜாக்பாட். ஆனால் இப்போது UK -ல் இருக்கும் எனக்கு எப்போது படிப்போம் என இருக்கிறது. ஹ்ம்ம்... காத்திருப்பு இன்னும் கொஞ்சம் காலம்.

  அட்டைப்படம் அருமை.

  ReplyDelete
 45. அட்டகாசமான பதிவு,விஜயன்,சார்.!

  சூப்பர் சிக்ஸ் + ஆண்டு மலர் குறித்த ஆச்சரியங்களை சிறிது இங்கே அறிமுகம் செய்திடவில்லை என்பது சிறிது ஏமாற்றம் தான் எனினும் இரு நாட்கள் மட்டுமே அதற்கான காத்திருப்பு என்பது ஆறுதல் தான்!
  (புத்தகங்கள் அனுப்பப்படும் (செவ்வாய்)அன்று பதிவினில் அறிவிப்புகள் சிலவற்றை எதிர்பர்க்காலமா?)

  லக்கி லூக்- அட்டைபடம் மிகவும் நன்றாக உள்ளது.

  உங்கள் கேச இழப்புக்கு நாங்களும் ஒரு காரணம்!!! என்பது ஒரு வகையில் வருத்தமே என்றாலும், அதன் மூலம் உங்களை கௌபாய் கெட் அப்-இல் பார்த்திடும் பொழுது சந்தோசமாகவே உள்ளது!

  கௌபாய் தொப்பியில் அட்டகாசமாக உள்ளீர்கள்,விஜயன் சார்! நிஜத்தில் ஒரு கௌபாய் தொப்பியுடன் ஒரு புகைப்படம் எடுத்திட ஆவல் பிறக்கின்றது.
  ( கற்பனையாக எண்ணி பாருங்களேன்,நண்பர்களே?! ஈரோடு புத்தக திருவிழா-வினில் நமது விஜயன் சார் கௌபாய் தொப்பியுடன் ஒரே ஒரு புகைப்படம் !)

  டெக்ஸ்வில்லர்,டைகர் என இருவரையும் கொண்டே சிங்கத்தின் சிறுவயதில் கேட்டிடும் நண்பர் அஜய் சாமி அவர்களுக்கு நன்றிகள். (நீங்கள் லக்கி -ஐ கொண்டும் இதே கேள்வியை கேட்க வேண்டுகிறேன்.)

  //கடைசி நிமிடம் வரை 'இதைப் போடு - அதைக் காலி பண்ணு ' என்று நமது DTP பெண்மணியும், மைதீனையும் நான் குடலை உருவாத குறை தான் ! //

  நமது மைதீன் அவர்களை பற்றி நீங்கள் ஏற்கனவே சொல்லி இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் புத்தகங்கள் எங்களுக்கு கிடைப்பதில் அவரின் பங்கு என்னவென்பதை முழுமையாக நாங்கள் அறியோம்! அவருக்கும் நமது லயன் முத்து டீம் மொத்தத்துக்கும் என்னுடைய மற்றும் காமிக்ஸ் நண்பர்கள் அனைவரின் சார்பாகவும் நன்றிகள் பல!

  ReplyDelete
  Replies
  1. // ஈரோடு புத்தகத் திருவிழாவில் நமது விஜயன் சார் கெளபாய் தொப்பியுடன் ஒரே ஒரு புகைப்படம் //

   அட! இதே ஆசையை நான் சென்றவருடம் ஈரோடு புத்தகத்திருவிழாவில் எடிட்டரிடமே நேரில் கேட்டுக்கொண்டேன். ஒரு (விஷமப்) புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.
   இம்முறை விடுவதாய் இல்லை! பிராண்டட் தொப்பியா அல்லது பிறாண்டல் at தொப்பையா என்பதை அவரே முடிவு செய்யட்டும்! ;)

   Delete
  2. நமது நண்பர்கள் ஒரு குழுவாக கௌபாய் தொப்பியுடனும்,துப்பாக்கியுடனும்(பொம்மை துப்பாக்கியுடன் தான்) சென்றாவது இம்முறை நிஜத்தினில் "குயிக் கன்" விஜயன் சாரை (நன்றி,கார்த்திக் சோமலிங்கா) புகைப்படமாக பிடித்து விடுங்கள்,விஜய்!

   இந்த முறையாவது நானும் வந்து விடுகிறேன்,எனக்கும் ஒரு தொப்பி வாங்கி வைக்கவும்,விஜய்!

   Delete
  3. நண்பர்களே அப்படியே ஒரு குதிரை ஏற்பாடு செய்யுங்கள் ! இரத்த படலம் , சி சி வ உடனடியாக விட மாட்டேன் என்று கூறினால் , நோட் செய்யுங்கள் நண்பர்களே உடனடியாக ...

   Delete
  4. குதிரைக்கு எல்லாம் நான் சரி பட்டு வரமாட்டேன்,ஸ்டீல் க்ளா!
   எனது உயரம் ஒரு விஷயம் என்றால் எனது "அனிமல் பியர்" ஒரு பக்கம்!
   எனவே கௌபாய் தொப்பி மட்டும் எனக்கு போதும்!

   Delete
  5. விடுங்க இருக்கிறாரே பூனையார் ! கோபம் வந்தால் பூனையும் குதிரை ஆகுமாமே !

   Delete
 46. நேற்று ஒருவர் சிங்கத்தின் சிறு வயதில் புத்தகம் விரைவில் வர வேண்டி பழனி சென்று வேண்டுதல் எல்லாம் செய்ததாக தகவல்

  ReplyDelete
  Replies
  1. @ ஷல்லூம்

   தங்கத்தில் ஒரு மாற்றுக் குறைந்து போய்விடினும், தகரத்தால் என்றும் குறைவிலாத பெருந்த'கை' தானே அவர்? ;)

   Delete
  2. அது மட்டுமல்ல அவர் சிசிவ வெளியானவுடன், 12 அடி அலகு குத்த போறாருன்னு சொன்னார்

   Delete
  3. // 12 அடி அலகு குத்தப் போறாருன்னு சொன்னார் //

   கையில மாட்டினார்னா நானே குத்தி விட்டுடலாம்னு இருக்கேன். 'தமிழ் தாய்' என் கனவில் வந்து கதறி அழுததற்குப் பின் இந்த முடிவு!

   Delete
  4. விஜய் நல்ல படிங்க !
   //12 அடி அலகு குத்த போறாருன்னு சொன்னார் //
   யாருக்குன்னு சொல்லலையே அவர் !
   உங்கள் உயரத்துக்கும் , ஆஜானுபாகுவான தோற்றத்துக்கும்தான் அந்த பெரிய வேல் !

   Delete
 47. // ஓரங்கட்டப்பட்ட ஷெல்டனின் விஸ்வரூபத்தைப் பார்க்கத் தான் போகிறீர்கள் ; ரொம்ப காலம் பேசப்படவிருக்கும் ஒரு இதழாய் 'எஞ்சி நின்றவனின் கதை' அமையப் போவது உறுதி !//

  சென்ற வருட அட்டவணையில் இந்த தலைப்பை பார்த்ததில் இருந்தே ஒரு ஈர்ப்பு!
  அட்டகாசம் செய்யவிருக்கும் ஷெல்டன்-ஐ காண இன்னும் இரண்டு நாட்கள்!

  ReplyDelete
  Replies
  1. முடியல நண்பரே ! நீளுகின்றன இரண்டு நாட்கள் ...

   Delete
  2. எனக்கும் தான்,இன்னைக்கும் நாளைக்கும் "ஒரு ஒப்பந்தத்தின் கதை"யினை படித்து சமாளிக்க முடிவு செய்துள்ளேன்,நான்!

   Delete
  3. கடந்த சில நாட்களாக வறட்சியின் காரணமாக சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலின் மாயாவி கதையைப் படித்துமுடிக்க முயன்றுகொண்டிருக்கிறேன், அது அவ்வளவு மோசமில்லை - இருந்தாலும் ஒருநாளைக்கு 4 பக்கத்துக்கு மேல் படித்தால் தூக்கம் வந்துவிடுகிறது :D

   Delete
  4. அப்ப மோசம்ன்னு எதை சொல்வீங்க ரமேஸ், புத்தகத்தை பார்த்தவுடன் தூக்கம் வந்தாவா?

   Delete
  5. // அப்ப மோசம்ன்னு எதை சொல்வீங்க ரமேஸ்,//

   அதே புக்கில் வந்த ஸ்பைடர் கதை! :D

   Delete
  6. //4 பக்கத்துக்கு மேல் படித்தால் தூக்கம் வந்துவிடுகிறது //

   மாயாவி தன் இரும்புக்கரத்திலுள்ள மயக்கவாயுவைப் பக்கத்துக்குப் பக்கம் பிரயோகிக்கிறாரோ என்னவோ? ;)

   இல்லேன்னா... இரும்புக்கைக்கு கேஸ் ட்ரபுளாகவும் இருக்கலாம்...

   Delete
  7. அந்த அழகான ஸ்பைடரை பொறுமையாக படியுங்கள் , மயங்கி விடுவீர்கள் ! அற்புதமான கதை !

   Delete
  8. Kind of agree with @steele

   Spider story and art work were way far better than Mayavi story except that we haven't seen Spider to lose this many times in a story :)

   But Mayavi story was like a TV Mega serial it never ends - page after page just plain boring.

   Delete
 48. March 31st tension முடிந்தது! இனி april 3 தேதி வரை எஞ்சி நின்றவனின் tension அதன்பிறகு Super Six tension !

  ReplyDelete
  Replies
  1. செந்தில் இந்த டென்சன்தானே வாழ்க்கையை அழகு படுத்துகிறது !

   Delete
  2. அதன் பின்பு லார்கோ டென்சன் , கோடை மலர் டென்சன் என ஏக பட்ட சந்தோசங்கள்....
   இங்கே மட்டும் ஏனோ டென்சன் என்றாலே சுகம் எனும் ஒரு பதம் பொருந்தி வருகிறது !

   Delete
 49. @Editor
  Just now read the Lucky Luke page, translation was definitely refreshing and it brings the smile/laugh - when i read "Lucky சொல்றான் jolly செய்றான்" i was smiling then when i read "Jolly நெனக்கிறான் Lucky சொல்றான்" i was laughing good counter dialogue

  ReplyDelete
 50. டியர் எடிட்டர்,

  லக்கி லூக்கின் "எதிர் வீட்டு எதிரிகள்" அட்டை படம் வர்ணத்தில் அள்ளுகிறது . வெல் கம், ஜூனியர் எடிட்டர் .

  ReplyDelete
 51. எடிட்டர் சார்,

  மாடஸ்டி பிளைஸி க்கும் வில்லி கார்வின் , மற்றும் லோரன்ஸ் & டேவிட் க்கும் ஒரு சான்ஸ் கொடுக்க கூடாதா? ப்ளீஸ் ?

  ReplyDelete
 52. ஆசிரியரின் அட்டகாசமான அடுத்த பதிவு

  ''முன்னோட்டங்களின் முன்னோடி''

  ReplyDelete
  Replies
  1. @ ஷல்லூம்

   உங்களது முதல் 'பலியாடு' நான்தான்! சந்தோஷம்தானே?

   ஏப்ரல் தின நல்வாழ்த்துகள்!! (நான் எனக்கே சொல்லிக்கிட்டேன்...)

   Delete
 53. சார் இன்று ஏப்ரல் ஃ பூல் ஸ்பெசல் ஒன்று வெளியிடுகிறீர்கள் என செய்தி கசிந்ததே உண்மையாகவா !

  ReplyDelete
 54. இன்றைய தத்துவம் :

  " ஏமாறுபவன் எல்லாம் முட்டாளுமல்ல,ஏமாறாமல் இருப்பவன் எல்லாம் புத்திசாலியும் இல்லை"

  :" தினந்தோறும் யாரையேனும் ஏதேனுமொரு முறையில் ஏமாற்றவும் , நான் ஏமாறவும் செய்கின்றேன்! எனவே இன்று மட்டும் (தெரிந்தே) நண்பர்களிடம் ஏமாறுவதில் எனக்கு ஆனந்தமே"

  ReplyDelete
  Replies
  1. பொதுமக்கள் மத்தியில் இறக்கிடவிடப்பட்ட ஸ்பைடர், எக்காளச் சிரிப்புடன் உயரே கிளம்பிய எதிரியை நோக்கி முஷ்டியை மடக்கி ஆக்ரோஷமாகக் கத்தினான்.
   " அடேய், சாக்கடைப் புழுவே! சர்வ வல்லமை படைத்த இந்த ஸ்பைடரின் காலடியில் நீ மண்டியிடும் நாள் வெகு தொலைவில் இல்லை"

   Delete
  2. @ Erode Vijay

   ?!?!?!? என்ன சொல்ல வர்றீங்க,விஜய்?

   Delete
  3. @ Siva subramanian

   எனக்கும் சரியாத் தெரியலைங்க! மேலே உங்க தத்துவத்தைப் படிச்சதும் எனக்கு ஸ்பைடரும், இந்த டயலாக்கும் ஞாபகம் வந்துடுச்சு.
   'அரக்கன் ஆர்டினி'யில் ஸ்பைடரின் நிலைமையை நினைச்சதுமே பொசுக்குனு கண் கலங்கிடுச்சு எனக்கு! 'இனிமே நம்ம உருட்டல் மிரட்டலெல்லாம் பலிக்காது'ன்னு நினைச்சாரோ என்னவோ... பொசுக்குனு ஒரு விண்கலத்துல ஏறி எங்கியோ கண்காணாமப் போய்ட்டாரு, பாவம்!

   Delete
  4. நான் "அரக்கன் ஆர்டினி" படித்ததில்லை,விஜய்!
   (வருகின்ற ஈரோடு புத்தக திருவிழா-வினில் கிடைக்குமா, சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் ?)

   உங்களுக்காவது ஸ்பைடர் நினைவுக்கு வந்தார்,விஜய்! எனக்கு இப்ப வரைக்கும் எதை நினைச்சு அந்த தத்துவத்தை எழுதினேன்னு நினைவுக்கு வரலை!

   Delete
 55. Sir, ஒரு நல்ல கதைய (preferably ராஜேஷ்குமார் / சுபா - அதுதான் நம்ம ஸ்டைல்க்கு சரிபட்டு வரும்.) எடுத்துக்கிட்டு அதுக்கு ஸ்டோரி போர்டு வரைஞ்சு அத நம்ம அஜய் கிட்ட குடுத்து ஒரு காமிக்ஸ் ஆக reddy பண்ணலாமே சார்???// வெளிநாட்ல ராயல்டி குடுக்கற காச இங்க செலவு பண்ணி முயற்ச்சிக்கலமே?

  ReplyDelete
 56. நண்பர்களே ஆசிரியர் நம்மை முட்டாள்களாக்கி விட்டார் , புத்தகம் வந்து விட்டது ! கொரியர் ஆபிசுக்கு சென்று வாங்கி கொள்ளுங்கள் ! தெரித்தால் நான் எட்டு மணிக்கே வாங்கி இருப்பேன் ! அட்டை படங்களில் நேரில் லக்கி தூள்
  மீதி படித்த பின் !

  ReplyDelete
  Replies
  1. ம், அப்புறம்?

   உள்ளே sinister-7 பற்றிய அறிவிப்பு, சி.சி.வயதில் தொகுப்பு பற்றிய அறிவிப்பு, இரத்தக் கோட்டை மறுபதிப்புப் பற்றிய அறிவிப்பு, காமிக்ஸ் லைப்ரரி திறப்பு விழா பற்றிய அறிவிப்பு - எல்லாம் இருக்கணுமே...?

   Delete
  2. எங்களை ஏமாத்தமுடியாது ஸ்டீல்! ஏப்ரல் ஃபூல் நாளுக்கு கொரியர் சர்வீஸ் விடுமுறைங்கறதுதான் ஊருக்கே தெரியுமே!

   Delete
  3. விஜெய் சி சி வ உண்டு ! ரமேஷ் யாரோ உங்கள ஏமாத்திட்டாங்க !

   Delete
 57. Replies
  1. ஃ பெர்னாண்டஸ் ஷெல்டனின் கதை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் ! அந்த நான்காம் பக்கம் நெஞ்சை அள்ளுமே !

   Delete
 58. எனக்கு ஆசிரியரே போன் செய்து என்ன என்ன கதை 30வது ஆண்டு மலரில் வருதுன்னு சொன்னார் நண்பர்களே. ஆனால் உங்க கிட்டலாம் சொல்ல கூடாதுன்னு சத்தியம் வாங்கி கொண்டார். ஹீ ஹீ ஹீ......

  ReplyDelete
  Replies
  1. நானும் சத்தியம் பண்றேன்,விஜயராகவன் சார்! நான் யாருக்கும் சொல்ல மாட்டேன், எனக்கு மட்டும் அதை சொல்லிடுங்க,ஒ.கே ?

   Delete
  2. @ TEX vijayaraghavan

   'SUNSHINE - Wild West Classics' என்ற பெயரில் கெளபாய்களுக்கென்றே ஒரு தனி இதழ் மாதாமாதம் வரயிருக்கிறதே... அந்த ரகசியத்தையுமா உங்ககிட்டச் சொல்லிட்டார்? ஒரு மாதம் - டெக்ஸ் கதையும், ஒரு மாதம் மற்ற கெளபாய்களுக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்படும் என்று நான் கேள்விப்பட்டது உண்மைதானா?

   Delete
 59. ஆசிரியர் அவர்களுக்கு ...,

  நானும் ...,எங்கள் போராட்ட குழுவும் " சிறு பிள்ளை தனமாக " போராடியாவது சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பை பெற முடியுமா என் இருக்கும் பொழுது நண்பர் அஜய் சாமி போல....மற்றும் போன பதிவில் டெக்ஸ் அவர்களை வைத்து வேண்டிய நண்பர்கள் போல இங்கே பலர் அந்த " தொகுப்பிற்கு " தீவிரமாக போராடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பது உடன் கண்டிப்பாக அந்த "தொகுப்பு " வரும் என்ற நம்பிக்கையும் வந்து விட்டது .எனவே இனி எங்கள் வினா 'சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வருமா ? என்பது கிடையாது .." எப்பொழுது வரும் " என்பதற்கான போராட்டமே அடுத்த கட்டம் .

  இன்னும் ஒரு நாளே இருப்பதால் அட்டைபடம் ..,தங்கள் புதல்வரின் மொழி ஆக்கம் மற்றும் ஆண்டு மலர் விளம்பரங்கள் அனைத்தையும் பற்றிய எனது எண்ணத்தை புத்தகம் பார்த்து விட்டே விமர்சனம் செய்து விடுகிறேன் .

  ஆவலுடன் " நாளை " எனப்படும் நாளை எதிர் நோக்கி ......

  ReplyDelete
  Replies
  1. // எனவே இனி எங்கள் வினா 'சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வருமா ? என்பது கிடையாது .." எப்பொழுது வரும் " என்பதற்கான போராட்டமே அடுத்த கட்டம் .
   //
   அப்படி சொல்லுங்க தலைவா!

   Delete
  2. புனித சாத்தானின் கோரிக்கையான மின்னும் மரணத்துடன், ரத்தக் கோட்டை 5 பாகமும் இணைந்து வரும் கௌபாய் ஸ்பெசலுக்கு, சிசிவ போராட்டக்குழு ஆதரவளித்தால் எங்களை போன்ற கௌபாய் ரசிகர்களும் சிசிவ/திற்கு ஆதரவளிக்கத் தயார்.

   Delete
  3. நாராயணா! நாராயணா!!

   Delete
  4. 'சி.சி.வயதில்' தொகுப்பாக வெளிவரும் நாளில் நமது சங்கத்தின் சார்பாக ஒரு வெற்றிவிழாவுக்கு ஏற்பாடு செஞ்சுடலாம், போராட்டக்குழு தலைவர் அவர்களே! அப்படியே எல்லாருக்கும் மிட்டாய் வழங்கிடலாம்.

   Delete
  5. சிங்கத்தின் சிறு வயதில் வரும் புத்தாண்டுக்கு என்பதை இங்கே புத்தகம் வாங்கிய நண்பர்கள் அறிந்திருக்கலாம் !

   Delete
  6. பரணி ஷெல்டனின் கதை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் ! அந்த நான்காம் பக்கம் நெஞ்சை அள்ளுமே !

   Delete
  7. STEEL, not that great! I am yet to read the full story ;-(

   Delete
  8. ஹ ஹ ஹ புஸ்ஸ்...
   நானும் எவ்ளோ நேரந்தான் அடி படாத மாதிரியே நடிக்குறது ....

   Delete
 60. சார் எஞ்சி நின்றவனின் கதை அருமை ! அட்டகாசம் ! ஷெல்டன் மகன் குறித்த உன்மைகள் , லார்கோ விஞ்சையே ஓரம் கட்டி விட்டார் ஷெல்டன் ! டைகரா டெக்ஸா போல லார்கோவா ஷேல்டனா என கேட்டால் ஷேல்டனுக்கே பல நண்பர்களின் ஓட்டு இருக்கும் ! அடுத்த ஷெல்டன் எப்போதோ !
  அதும் முப்பதாம் ஆண்டு மலர் நான்கு கதைகளை மட்டும் அறிமுக படுத்தி விட்டு விட்டீர்களே ! அடுத்த கதைகள் அறிவிப்புக்கு இன்னும் ஒரு மாதமா ! ஆ !

  ReplyDelete
 61. அஜய் சாமி vs ஆ.சாமிகள் (1)

  காமிக்ஸ் வாசக நண்பர்களே வணக்கம். வேலை பளு காரணமாக கடந்த சில தினங்களாக இங்கு பதிவிடவோ ; பங்கேற்கவோ இயலவில்லை. இன்று கிடைத்த முதல் தருணத்தில் இங்கு பார்வையிட்ட எனக்கு பேரதிர்ச்சி என்றால் அது குறையல்ல. ஏனெனில், உங்கள் ஓட்டு எங்கள் வேட்பாளர் ''அஜய் சாமிக்கே'' என்ற கோஷம் காதை கிழித்து விட்டது என்றே கூறலாம். அதில் ஒரு சில (வரிசைப் படி ) ;

  * அஜய் சாமியின் கைவண்ணம் அட்டகாசம்!
  *அஜய் சாமியின் Style பிரின்ஸ் கதை சித்திரங்களை நினைவுபடுத்துகிறது, Great work!
  *அஜய்சாமியின் கைவண்ணம் அருமை!
  *அப்புறம் அஜய் சாமி சார், அருமையான படைப்பு! congrats!
  *அஜய் பழனிச்சாமி அள்ளுகிறார்!!
  *ஆச்சர்யத்தில் திக்குமுக்காட வைக்கிறது இவரது படைப்பு!
  *அஜய் சாமி வழக்கம் போல கலக்கி இருக்கிறார்!
  *நண்பர் அஜய் சாமி அட்டகாசாம் அருமையோ அருமை :)
  *அஜய் அசத்துகிறார் ! ஆசிரியர் கேள்வி கேட்கும் போதே கை விரிக்கிறாரே அருமை !
  *அத நம்ம அஜய் கிட்ட குடுத்து ஒரு காமிக்ஸ் ஆக reddy பண்ணலாமே சார்???

  பின்குறிப்பு : என்னுடைய இந்த பதிவை படித்தவுடன் ''என்னடா இந்த மரமண்டைக்கு ஜெலுசில் [ Gelusil ] தேவைப்படுகிறதோ'' என்று யாரும் அவசரப்பட்டு முடிவு கட்டிட வேண்டாம் ; தொடரும் பதிவுகளையும் கொஞ்சம் படித்து தான் பார்க்கலாமே :)

  ReplyDelete
  Replies
  1. அஜய் சாமி vs ஆ.சாமிகள் (2)

   இத்தனை ஆரவாரமும் ஆர்ப்பாட்டங்களும் எதற்காக ? அப்படி அஜய் சாமி எதை உருவாக்கி விட்டார் ? ஒருவரின் புகைப்படத்தைப் பார்த்து ஓவியமாக வரைவது என்பது ஒரு சாதாராணமான விஷயம். அதில் படைப்புத் திறனோ (creativity) ; மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்கு சாதனையோ அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

   போலவே, அஜய் சாமியும் ஆசிரியர் விஜயனின் முகத்தை மிகவும் அழகாக வரைந்துள்ளார். ஆனால் ஆசிரியர் விஜயனின் - வலது கையை நோய் பீடித்துள்ளது போல் அகோரமாக்கியுள்ளது தான் நீங்கள் புகழும் ஓவியத் திறமையா நண்பர்களே ?

   தொடர்கிறது (3)

   Delete
  2. அஜய் சாமி vs ஆ.சாமிகள் (3)

   இங்கு - அஜய் சாமி வரைந்த ஓவியங்கள் மூன்றே மூன்று ; மூன்று விஜயன் ஓவியங்கள். அதில் முதல் ஓவியத்தில் விஜயன் சாரின் வலது காலைப் பாருங்கள்.. அவரின் தொடை - கணுக் காலாகவும் ; அவரின் முட்டி - தொடையின் அளவிலும் இருப்பதைத் தான் நீங்கள் அதிசயப்பட்டு பாராட்டினீர்களா நண்பர்களே ? இரண்டாவதில் உள்ள விஜயனின் வலது கை சிறிதும் வசீகரிக்கவில்லை ; ஓவியத்தில் வெறுப்பைத் தூவுவதாகவே அமைந்துள்ளது.

   பழைய டைகர் கதையிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கேனில் (scan) - விஜயன் சாரின் மூன்று ஓவியங்களை ஒட்டி விட்டால் ஒரு காமிக்ஸ் உருவாக்கும் அத்தனை திறமைகளும் வந்து விடுமா என்று எனக்குத் தெரியவில்லை ?! எதற்காக இந்த பதிவுகள் என்றால் - நண்பர்களே, உங்களின் பதிவுகளை பார்க்கும் வாசகர்களில் பலர் - இந்த முழு படைப்பையும் வாசகர் அஜய் சாமி தான் வரைந்துள்ளார் என்று நினைத்து விடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தினால் மட்டுமே :)

   இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால், திருவிளையாடல் படத்தில் வரும் ஒரு காட்சியை நினைவு கூறலாம் ; பிழையான பாடலுக்கு பாண்டியன் தரும் பரிசை தடுத்த நக்கீரரின் மனநிலையை இங்கு உதாரணமாகக் கொள்ளலாம் :)

   அடுத்து வருவது - சிங்கத்தின் சிறுவயதில் (8)

   Delete
  3. //இத்தனை ஆரவாரமும் ஆர்ப்பாட்டங்களும் எதற்காக ? அப்படி அஜய் சாமி எதை உருவாக்கி விட்டார் ? ஒருவரின் புகைப்படத்தைப் பார்த்து ஓவியமாக வரைவது என்பது ஒரு சாதாராணமான விஷயம். அதில் படைப்புத் திறனோ (creativity) ; மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்கு சாதனையோ அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும்.//


   தவறு நண்பரே! நீங்கள் நினைப்பது போல் ஒருவரின் புகைப்படத்தை பார்த்து ஓவியமாக வரைவது என்பது ஒரு சாதாராணமான விஷயம் அல்ல. எல்லோராரும் ஓவியம் வரைந்து விட முடியாது. அதற்கு தனி திறமை வேண்டும். இல்லாவிடில் புகைப்படத்தில் இருப்பதற்கும் வரைந்து முடித்த ஓவியத்திற்கும் நூறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கலாம்.

   படைப்புத்திறன் இல்லையென்று எதை வைத்து கூறுகிறீர்கள். கன்செப்ட் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு புத்தகமும் சி.சி.வ தொகுப்பும் ஆசிரியரிடம் கேட்பதுதான். இதற்கு 62 பக்கங்களில் ஓவியம் வரைந்து கொடுத்தால்தான் படைப்புத்திறன் உள்ளது என்று ஒத்துக்கொள்வீர்களா?

   ஓவிய நுனுக்கங்கள் மற்றும் வண்ணச் சேர்க்கைகளை நீங்கள் கவணிக்கவில்லை போலும். கறுப்பு வெள்ளை ஓவியங்களை விட அந்த கறுப்பு வெள்ளை ஒவியங்களுக்கும் வண்ணம் சேர்ப்பது என்பது அவ்வளது எளிதானது அல்ல.

   பாராட்டவேண்டாம் குறைகளை பெரிதாக சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஏனென்று புரியவில்லை.

   என்னவோ போங்க!!?

   Delete
  4. சிங்கத்தின் சிறு வயதில் (8)

   நண்பர்களே என்னுடைய முந்தைய பதிவுகளான சிங்கத்தின் சிறு வயதில் 1-7 பதிவின் மூலம் பல விஷயங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 'சிங்கத்தின் சிறு வயதில்' தொகுப்பை வெளியிடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்னவென்று உங்களுக்கும் தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கும்.

   எனவே அடுத்து வரும் பதிவான சிங்கத்தின் சிறு வயதில் (9) மூலம் உங்கள் ஆசை நிறைவேறி, அதன் மூலம் இந்த போராட்டக் குழுவிற்கும் சமாதானம் ஏற்பட்டு ; போராட்டக் குழுவை கலைத்து விட்டு வேறு ஏதாவது சுவாரசியமான பதிவுகளை தொடர்ந்து வழங்கி வருமென்றால் அதுவே நம் அனைவரையும் களிப்படையச் செய்யும் நிகழ்வாக அமையும் :)

   Delete
  5. நீங்கள் குறிப்பிட்ட ஒருசில குறைகள் எனக்கும் தெரிந்தது. மலைத்தொடர் உள்பட அனைத்தையும் அவர்தான் வரைந்திருப்பார் என்று நினைத்ததால் எனக்கு அதுஒரு சிறந்த முயற்சியாக தோன்றியது.
   ஆனால் ஒன்று, தனது கோரிக்கையை அனைவரையும் கவரும் விதத்தில் வெளிப்படுத்தியது பாராட்டுக்குரியது.

   Delete
  6. Pushparaj R

   //பாராட்டவேண்டாம் குறைகளை பெரிதாக சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஏனென்று புரியவில்லை//
   //என்னவோ போங்க!!?//

   என்னுடைய பதிவுகள் வரிசையாக வருவதன் காரணமே இதற்காகத் தான். அடுத்தவர் எந்த கோணத்தில் யோசித்தாலும் அதற்குண்டான நியாயமான பதில்கள் அவருக்கு கிடைக்க வேண்டும் என்பதால் தான் மொத்தமாக அத்தனை பதிவுகளும் ஒரே சமயத்தில் பதிவிடப் படுகின்றன. ஒருவரின் கேள்வியை மனதிற் கொண்டு, அதற்கான பதில்கள் அமைய வேண்டும் என்பதால் தான் பல முறை தொடர் பதிவுகள் அமைகின்றன.

   நீங்கள் எழுப்பியுள்ள அத்தனை கேள்விகளுக்குமான என் பதில் - மேலே உள்ள என்னுடைய மூன்று பதிவுகளிலேயே அமைந்துள்ளது. எனவே மீண்டும் பொறுமையாக படித்துப் பார்த்தால் என் பதிவுகளின் நோக்கம் தெளிவாகப் புரியும். நன்றி.

   Delete
  7. Mugunthan kumar : Pushparaj R :

   //நீங்கள் குறிப்பிட்ட ஒருசில குறைகள் எனக்கும் தெரிந்தது. மலைத்தொடர் உள்பட அனைத்தையும் அவர்தான் வரைந்திருப்பார் என்று நினைத்ததால் எனக்கு அதுஒரு சிறந்த முயற்சியாக தோன்றியது.//

   நன்றி மிஸ்டர் முகுந்தன்குமார். உங்கள் பதிவை Pushparaj R அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நண்பர் புஷ்பராஜ் அவர்கள் - என் பதிவுகளை மீண்டும் படித்து விட்டு, நண்பர் Mugunthan kumar அவர்களின் பதிவை படிக்க வேண்டுகிறேன்.

   [ //ஆனால் ஒன்று, தனது கோரிக்கையை அனைவரையும் கவரும் விதத்தில் வெளிப்படுத்தியது பாராட்டுக்குரியது// ] உண்மை தான் நண்பரே.. ஆனால் அவர் வரைந்தது விஜயன் சாரை மட்டுமே என்ற குறிப்பு எங்காவது அல்லது யாராவது இங்கு தெரியப் படுத்தியிருக்க வேண்டும் அல்லவா :)

   Delete
  8. ஒரு கார்ட்டூன் போல அவர் வரைந்திருக்கிறார் ! இதில் எண்ண குறை ! அவரை தாக்கி எங்கும் காணோமே !

   Delete
  9. அப்படி ஒரு வேலை மறைமுகமாய் கிண்டல் செய்திருந்தாலும் ஆசிரயர் குறைந்து பொய் விட போவதில்லை ! ஆகவே வருந்த வேண்டாமே !

   Delete
  10. கிண்டல் , கேலி செய்து யாரும் வளர்ந்து விட முடியாது !
   யார் நினைத்தாலும் காமிக்ஸ் சேவை செய்து வரும் ஆசிரியரை தாழ்த்தி விட முடியாது !
   அவர் செய்தாரோ இல்லையோ ஆனால் நீங்கள் ரொம்ப யோசித்து கிண்டல் செய்வது போல தெரிகிறதே !

   Delete
  11. @மிஸ்டர் மரமண்டை, ஏப்ரல் 1க்கும் இந்த தொடர்களுக்கும் சம்பந்தம் உண்டா? :D

   Delete
  12. சிங்கத்தின் சிறு வயதில் (9)

   போராட்டக் குழு தலைவர் - தாரமங்கலம் பரணிதரனின் பழைய அறிக்கைகளின் படி - சிங்கத்தின் சிறு வயதில் வெளிவந்துள்ள அத்தனை புத்தகங்களும் அவரிடம் இருந்தாலும், திரும்பத் திரும்ப படிக்க அவர் நினைக்கும் போது அது மிகவும் சிரமமாக இருக்கிறது என்பதாகும். ஒவ்வொரு முறையும் அத்தனை புத்தகங்களையும் வரிசையாக எடுத்து வைத்து படிப்பது என்பது தலைவருக்கு அயர்ச்சியை தருவதாக அமைந்துள்ளது என்பதே அவரின் கோரிக்கைக்கு முதற் காரணம். பரணிதரன் நினைத்த நேரத்தில் எடுத்து படிக்க சுலபமாக இருக்க வேண்டும் என்பதாலேயே அவர் அதை புத்தக வடிவமாக அல்லது தற்போதைய நிலைப்பாட்டின் படி தொகுப்பாக கேட்டு போராடி வருகிறார் என்பதே என் கணிப்பு !

   ஆசிரியர் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் - இதற்கு எளிதான இரு தீர்வுகள் உள்ளது ;

   1.அத்தனை பக்கங்களையும் ; அத்தனை பாகங்களையும் - job typingல் கொடுத்து, நமக்கு தேவையான புத்தக அளவில் ப்ரிண்ட் எடுத்துக் கொண்டு அதை புத்தகமாக பைண்ட் செய்துக் கொள்ளுதல் ஒரு வழியாம் !

   [ இப்படி செய்ய நினைக்கும் போது, அதற்குண்டான செலவு அதிகரிக்கலாம். உதாரணமாக A4 sheetக்கு Rs.10/copy என்று வைத்துக் கொண்டால் செலவு கைமீறும் என்றால் - போராட்டக் குழு உறுப்பினர்கள் நபருக்கு 200 வீதம் போட்டு இதை நடைமுறை படுத்தலாம் என்பது என் கருத்து ]

   2.அல்லது சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பை யாராவது வலையேற்றம் செய்ய வேண்டும். ஒரு புதிய blogspot ஓபன் செய்து அதில் சி.சி.வ. அத்தனை பாகங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பதிவிட வேண்டும். அதிலும் ஆசிரியர் வெளியிட்டுள்ளப் படி ; உள்ளது உள்ளபடி காற்புள்ளி, அரைப்புள்ளி, புள்ளி, etc., என அனைத்தும் இடம் மாறாமல் பதிவிட வேண்டும் !

   [ இதன் மூலம் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சிங்கத்தின் சிறு வயதில் தொடரை ஒரே சீராக படித்து களிப்புற முடியும். தேவைப்படுவோர் அதை ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு புத்தக வடிவிலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இப்படி type செய்வது என்பது நமக்கு எளிதான காரியம் அல்ல ; கண்முழி இரண்டும் வெளியே வந்து விடும் :) அதனால் அடுத்தவருக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் நானே அதை செய்வதாக முடிவு செய்துள்ளேன். சந்தோசம் தானே நண்பர்களே ?! ]

   இதோ உங்களுக்கான சிங்கத்தின் சிறுவயதில் தொகுப்பு :)

   இதோ உங்களுக்கான சிங்கத்தின் சிறுவயதில் தொகுப்பு !

   Delete
  13. Ramesh Kumar :

   இல்லை ரமேஷ் :)

   ச.பொன்ராஜ் :

   என் பதிவுகளை இதுவரை நீங்கள் புரிந்து கொண்டதே இல்லை !
   எனவே வீணாக நீங்களும் குழம்பி அடுத்தவரையும் குழப்பி விட வேண்டாமே :)

   Delete
  14. Great job Mr Maramandai. உங்கள் உழைப்பிற்கு என் வந்தனங்கள்!

   Delete
  15. /////////////////மிஸ்டர் மரமண்டை////////////////

   உங்கள் பதிவு கலகத்தில் ஆரம்பித்தாலும் சுபத்தில் முடிந்திருப்பது பாராட்டத்தக்கது. நீங்கள் செய்துள்ள காரியம் விலை மதிக்கமுடியாதது என்பதில் சிறிதளவு ஐயமில்லை.

   முதல் 8 பகுதியை அனுப்பியுள்ள தாங்கள் மற்ற அனைத்து பகுதிகளையும் வெளியிட்டால் அது நீண்ட நாள் கோரிக்கையான சிங்கத்தின் சிறுவயது புத்தகத்திற்கு சரியான மாற்று ஏற்பாடாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

   சிங்கத்தின் சிறுவயது புத்தகம் குறித்த உங்களுடைய கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்றே. இன்னும் சில பல வருடங்கள் கழித்து மெகா இதழாக வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்பதே என் அபிப்ராயம்.

   Delete
  16. Radja & Mugunthan kumar :

   தங்கள் இருவரின் அன்புக்கும் நன்றிகள் !

   முகுந்தன் குமார் : கோடை விடுமுறைக்கு ஏப்ரல் 23 - லிருந்து ஜூன் முதல் வாரம் வரை வெளியூர் பயணம் இருப்பதால் அதற்குள் முடித்து விட முடியுமா என்று தெரியவில்லை. முடிந்தவரை முயற்சிக்கிறேன். தவறினாலும் ஜூன் 20 க்குள் பாகம் 37 வரை முடித்து விடுவேன் என்றே நினைக்கிறேன்.

   இன்றைய அனுபவம் :

   சிலருக்கு நாக்குல சனி ; எனக்கு விரல்ல சனி :D

   Delete
  17. //நீங்கள் செய்துள்ள காரியம் விலை மதிக்கமுடியாதது என்பதில் சிறிதளவு ஐயமில்லை.//
   +1

   Delete
  18. நொந்து போக வேண்டியதில்லை நண்பரே ! இங்கே சந்தோசமாய் வந்து போவோமே ! இதற்குத்தான் பிறரை பற்றி விமர்சிக்காமல் , பொதுவாய் கதைகளை , அது தரும் அனுபவங்களை ரசிப்போம் , கருத்துகளை தெரிவிப்போம் என்பது ! உங்களை நோகடித்திருந்தால் மன்னியுங்கள் !

   Delete
  19. //சிங்கத்தின் சிறுவயது புத்தகம் குறித்த உங்களுடைய கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்றே. இன்னும் சில பல வருடங்கள் கழித்து மெகா இதழாக வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்பதே என் அபிப்ராயம்.//

   Delete
 62. இங்கு எனது சிறிய படைப்பை பாராட்டியவர்களுக்கு நன்றிகள். விமர்சித்தவர்களுக்கும் நன்றிகள். :) அந்த comic strip எடிட்டருடைய தனிப்பார்வைக்கு அனுப்பியது. அதில் சில பாறைகள் மாத்திரமே blueberry காமிக்ஸ் இல் இருந்து மாதிரியாக கொண்டு வரைந்தது. ஏனென்றால் அந்த சூழ்நிலை கேப்டன் டைகர் காமிக்ஸை நினைவுபடுத்தும் விதமாக. (even பின்னாட்களில் கேப்டன் டைகர் கதைகளுக்கு வரைந்த Colin Wilson & Michel Rouge ஓவியர்களே Moebius Giraud layout'களை inspiration'ஆக எடுத்தாளும்போது அவர்கள் முன்பு நான் ஒரு தூசி. morris லக்கி லூக் காமிக்ஸை தற்போது வரைந்து வரும் Achde அவர்கள் பல பேனல்களில் மோர்ரிசின் layout'ஐ எடுத்தாண்டுள்ளார். வான்சின் brother-in-law Felicísimo Coria'வின் சமீபத்திய ரோஜர் கதையில் ஸ்டீவ் ரொலண்ட்(xiii)'இன் பாதிப்பு ரொம்பவே இருக்கும். ஒரு காமிக்ஸை அதே ஸ்டைலில் தொடர சில props'களை ஓவியர்கள் follow செய்வது இயல்பே. இதை இத்தனை பெரிய issue'வாக எடுத்துக்கொண்டு பதிவிட்டு... OMG......!!! fo ur kind info, அது எடிட்டரை கேலி சேயும் நோக்கில் வரைந்ததல்ல. அதேபோல, அது ஸ்கேன் செய்யப்பட்டு தலை ஓட்டப்பட்டதல்ல. rough layout, thumbnail panel என ஒரு முழுமையான ப்ராசெசில் வரையப்பட்டதே frnd. :) :) :)

  ReplyDelete
  Replies
  1. Ajay sami :

   தங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றிகள். இது தனி நபர் சம்பந்தப்பட்ட ஆக்கம் என்பதால் நான் பெரிதாக எதையும் பதிவிடப் போவதில்லை. அதற்கு முன் சில விஷயங்களை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

   1.நீங்கள் ஆசிரியரை கிண்டல் செய்ததாக எங்கேயும் கூறவில்லை .
   2.தனிப்பட்டு உங்களை நான் எங்கேயும் விமர்சிக்கவில்லை.
   3.நீங்கள் கூறியது போல் 'எடிட்டருடைய தனிப்பார்வைக்கு அனுப்பியது' என்பதை நானும் அறிந்ததே.
   3.நண்பர் சூப்பர் விஜய் உங்களை வைத்து ஒரு காமிக்ஸ் உருவாக்கலாம் என்று கூறியதாலேயே பதிவிட நேர்ந்தது.

   இங்கே வாசகர்கள் அனைவரும் நீங்கள் இந்த ஆக்கத்தை கையாலேயே வரைந்து உள்ளதாக நினைத்தே அப்படி பதிவிட்டனர் என்பது என் கருத்து. எனவே தான் நான் அவ்வாறு பதிவிட்டுள்ளேன்.அதே போல் டைகர் மற்றும் இரு குதிரைகளில் காணப்படும் ஓவிய நேர்த்தி ஆசிரியர் விஜயனின் ஓவியத்தில் இல்லாததாலேயே அப்படி பதிவிட நேர்ந்தது. மற்றபடி உங்களை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏதுமில்லை :)

   Delete
 63. விஜயன் சார் உங்க அலுவலக தொலைபேசி எண் இதுதானே? 009104562320993 நான் முதலில் பல தகவல்களை அறிந்து கொள்ள இந்த எண்ணில் பலமுறை முயற்சி செய்தேன். ஆனால்,தொடர்பு கிடைக்கவில்லை.இன்று தங்கள் வங்கிகணக்குக்கு 125 Euro அனுப்பியுள்ளேன்.இது பற்றியும், தங்களுக்கான ஒரு கடிதத்தையும் இந்த முகவரிக்கு lioncomics@yahoo.com நானும் தம்பியும் அனுப்பியுள்ளோம்.(இந்த முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை நீங்கள் தான் படிப்பீர்களா?)
  தங்கள் மறுமொழியை ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. suji jeya :

   இந்த நேரத்தில் இன்னொரு வாசகருக்கு பதில் அளிப்பது என்பது, எந்தளவுக்கு என்னை அசடு வழிய வைக்கும் என்று தெரியவில்லை. இருந்தாலும் கண்ணில் தென்பட்ட ஒரு சிறு விஷயத்தை கூறாமல் இருக்க எனக்கு இருப்புக் கொள்ளவில்லை :)

   வெளிநாடுகளிலிருந்து இந்தியாவை தொடர்பு கொள்ளும் போது STD code வராது. எனவே 009104562320993 என்பதற்கு பதிலாக 00 91 4562 320993 அல்லது 00 91 4562 272649 என்று தொடர்பு கொள்ளவும். நன்றி.

   Delete
 64. நண்பர் மரமண்டை அவர்களுக்கு :

  பத்தி பத்தியாய் இருந்த உங்களின் பின்னூட்டங்களைப் படித்தேன் ! சத்தியமாக அதன் பின்னணி லாஜிக் எனக்குப் புரியவில்லை !

  நண்பர் அஜய் சாமி உகாதி தின வாழ்த்துக்களோடு எனக்கு சாதாரணமாய் அனுப்பி வைத்த மின்னஞ்சலின் இணைப்பு தான் அந்தச் சித்திரப் பக்கம். அதனை நான் இங்கு பிரசுரிப்பேன் என்ற எதிர்பார்ப்போ ; அதன் மூலமாய் நண்பர்களின் பாராட்டுக்களைப் பெறுவதோ அவரது agenda -வில் கிடையாது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். So இங்கே வெளியிடுவதென நானாக எடுத்த முடிவுக்கும், அந்தச் சித்திரங்கள் நம் நண்பர்களின் கவனத்தை ஈர்த்ததற்கும் அஜய் சாமியின் பங்களிப்பு பூஜ்யமே ! அதற்குள்ளாக நீங்கள் நக்கீரர் அவதாரம் எடுக்க இங்கு இழைக்கப்பட்ட குற்றம் என்னவாக இருக்குமென்று அஜய் வழங்கிய அந்தத் தொப்பியைக் கழற்றி விட்டுச் சிரத்தைச் சொரிந்து பார்த்தாலும் எனக்கு எதுவும் புலப்படவில்லை !

  ஓவியத்தின் முழுமையையும் அவரே வரைந்ததாக எங்கேனும் credit தேடிக் கொண்டாரா ? - அல்லது தன்னிச்சையாய்ப் பாராட்டுத் தெரிவித்த நண்பர்களை பின்னிருந்து இயக்கினாரா ? அல்லது தனது ஆக்கத்தின் துல்லியத்தைப் பற்றி எங்கேனும் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டாரா ? இவற்றில் எதுவும் இல்லை எனும் போது அவரை நோக்கிய அந்தக் கணைகளும், பாராட்டிய நண்பர்களுக்கு "ஆ.சாமி" என்ற இலவச இணைப்பும் அவசியம் தானா ?

  இங்கு தூரிகையைக் கையில் பிடிக்கும் ஒவ்வொருவரும் ஒரு வில்லியம் வான்சாகவோ ; ஒரு கிரிஸ்டியன் டினயெராகவோ இருந்தால் தான் ஆச்சு என்று நாம் அளவுகோல்களை நிர்மாணித்தால் - அதே திறமை அளவுகோல்கள் பாகுபாடின்றி அனைவருக்குமே பொருந்தும் தானே ? பேனா பிடிக்கும் நானே இங்கும் சரி, நமது மொழியாக்கங்களிலும் சரி - எத்தனை முறைகள் சொதப்பியுள்ளேன் என்பதை ஒரு கால இடைவெளிக்குப் பின்னே நமது இதழ்களைப் படிக்கும் போது உணர்ந்துள்ள சந்தர்ப்பங்கள் ஏராளம் ! ஒவ்வொரு முறையும் நெற்றிக்கண்கள் திறந்து மூடப்படுவது சகஜமாகிப் போயின், எங்கள் நகரப் பட்டாசு உற்பத்தியாளர்கள் பிழைப்பின்றிப் போவார்கள் !

  சந்தோஷமும், சுதந்திரமும் அடையாளங்களாய் இருத்தலே இத்தளத்தில் பிரதானம் என நினைப்பவன் நான் ! உங்களின் ஆதங்கங்களை கொட்டிடக் கிட்டிய அந்த சுதந்திரமும் , விமர்சனங்களை சகஜமாய் எடுத்துக் கொண்டதன மூலம் நண்பர் அஜய் இங்கு தொடரச் செய்துள்ள அந்த சந்தோஷமும் எனது நோக்கங்களை நிறைவேற்றி விட்டதாகவே சொல்லுவேன் ! Peace !

  ReplyDelete
  Replies
  1. டியர் விஜயன் சார்,

   எதிர்தரப்பு நண்பர்களுக்கு பதில் அளிக்க எப்பொழுது நான் முனைந்தாலும், அதற்கு சிறிது முன்பாக உங்களின் பதிவு என்னை முந்திக் கொள்கிறது :)

   படத்தில் உள்ள மற்ற ஓவியங்களில் உள்ள நேர்த்தி, உங்களின் ஓவியத்தில் இல்லாததாலேயே அவ்வாறு பதிவிட்டேன் என்பதே உண்மை. மற்றபடி எவரையும் மனம் நோகச் செய்ய வேண்டும் என்பது அல்ல என் எண்ணம். ஏற்கனவே தங்களின் பதிவு அத்தனை விஷயங்களையும் விளக்கி விட்டதால் மேலே நான் அஜய் சாமிக்கு அளித்துள்ள பதிலும் உபயோகமற்று போகும் என்றே நினைக்கிறேன்.

   //சந்தோஷமும், சுதந்திரமும் அடையாளங்களாய் இருத்தலே இத்தளத்தில் பிரதானம் என நினைப்பவன் நான் ! உங்களின் ஆதங்கங்களை கொட்டிடக் கிட்டிய அந்த சுதந்திரமும் , விமர்சனங்களை சகஜமாய் எடுத்துக் கொண்டதன மூலம் நண்பர் அஜய் இங்கு தொடரச் செய்துள்ள அந்த சந்தோஷமும் எனது நோக்கங்களை நிறைவேற்றி விட்டதாகவே சொல்லுவேன் ! Peace !//

   நன்றி சார் :)

   Delete
  2. //சந்தோஷமும், சுதந்திரமும் அடையாளங்களாய் இருத்தலே இத்தளத்தில் பிரதானம் என நினைப்பவன் நான் ! உங்களின் ஆதங்கங்களை கொட்டிடக் கிட்டிய அந்த சுதந்திரமும் , விமர்சனங்களை சகஜமாய் எடுத்துக் கொண்டதன மூலம் நண்பர் அஜய் இங்கு தொடரச் செய்துள்ள அந்த சந்தோஷமும் எனது நோக்கங்களை நிறைவேற்றி விட்டதாகவே சொல்லுவேன் ! Peace !//
   அருமை சார் !

   Delete
 65. This comment has been removed by the author.

  ReplyDelete