நண்பர்களே,
வணக்கம். காலை எழுந்தவுடன் சிரிப்பு ; பின்பு ஆபீஸுக்குச் சென்றதும் சிரிப்போ சிரிப்பு ; மாலை முழுவதுமே சிரிப்பு ; தூங்கும் வரைச் சிரிப்பு ! கடந்த நாலைந்து நாட்களாய் எங்களது முழு நேர agenda இது தான் ! உரக்க ; கூரையில் ஏறி நின்று சிரிக்காத குறை தான் ! 'ஆஹா...வெயில் திரும்பவும் ஒரு ரவுண்ட் அடிக்கத் துவங்கியது நிஜம் தான்...சிவகாசியில் கொஞ்சம் ஓவரோ ?' என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்தால் அது நியாயமே ! ஆனால் எங்களது தற்சமயச் சிரிப்பு - பெரும் புலவரின் வழிகாட்டலின் பொருட்டே ! 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று அவர் சொல்லி விட்டுச் சென்றான பின்னே, அதைப் பின்பற்றுவதைத் தாண்டி நமக்கெலாம் என்ன வேலை ?
கடந்த 3 வாரங்களாகவே தறி கட்டுப் பாயும் நமது இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரம் பிறந்த நாள் முதலாய் தினமொரு புதுப் பாதாளத்தைத் தேடித் பயணம் செல்வதை நீங்களும் கவனித்திருப்பீர்கள் ! இன்றைய யூரோ மதிப்பு : ரூ.92-50 !! சென்ற மாதமோ - ரூ.72 ! உழைப்பைத் தாண்டி சகலமுமே அயல்நாட்டுச் சங்கதிகளைக் கொண்ட நமது இதழ்களுக்கு ரூபாய் வாங்கிடும் இந்த தர்ம அடி இரத்தக் கண்ணீரை வரவழைக்காத குறை தான் ! கதைகளுக்கான ராயல்டி ; அச்சுக் காகிதம் ; அச்சு இங்க் ; அச்சுப் பிளேட்கள் என முக்காலே மூன்று வீசம் - டாலர்களிலும், யூரோக்களிலும் பணம் அனுப்ப அவசியமாகிடும் செலவினங்கள் நமக்கு ! வரலாறு காணா இந்த 'தொபுகடீர்' நம் கட்டுப்பாட்டில் இல்லா சங்கதி என்பதால், ஜாலியாக "நகுவதைத்' தாண்டி வேறென்ன செய்வதென்று இப்போதைக்குத் தெரியவில்லை ! இம்மாதத்திற்கும், அக்டோபருக்கும் அச்சுக் காகிதம் கையிருப்பு உள்ளதால் இப்போதைக்குத் தலை தப்பி விட்டது ! ஆனால் நவம்பரில் பேப்பர் வாங்கிடவிருக்கும் சமயம் நெஞ்சைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே தான் முயற்சித்தாக வேண்டும் என்பது தெளிவு ! ஆர்ட் பேப்பரின் விலை தான் விண்ணைத் தொடுகின்றதென்று இல்லாது, 'சமத்துவம், சகலத்திலும்' என்ற பாணியில் - uncoated பேப்பரின் விலைகளும் கண்ணுக்கு எட்டாத் தூரத்தை நோக்கிப் பயணம் செய்துள்ளன !
ஆகஸ்ட் 15 விடுமுறையின் போது 2014-க்கான அட்டவணையை கிட்டத்தட்ட பூர்த்தி செய்திருந்தேன் ! இனி back to the drawing board once again ! குட்டிக்கரணங்கள் அடித்தேனும் இந்தாண்டை எப்படியாவது நிர்ணயித்த விலைகளிலேயே கொண்டு சென்றிடுவோம் ; ஆனால் 2014-ல் நமது விலைகள் உயர்வதைத் தடுக்க வழியே புலப்படவில்லை!அதிலும் மாதந்தோறும் படைப்பாளிகளுக்கான ராயல்டி அனுப்பும் நாட்களை நினைத்தால் இப்போதே குளிர் ஜூரம் வருவது போலுள்ளது ! Phew ! சரி...நமது 'சிரிக்கும் படலம்' ஓவர்..ஓவர் ; இனி நமது updates பற்றி !
'செப்டெம்பர் இதழ்கள் எப்போது ?' என்று கடந்த பதிவினில் ஆங்காங்கே நண்பர்கள் பலரும் கோரியிருந்த போதிலும் என்னால் சரியான பதில் தர இயலாது போனதன் காரணத்தை வரும் செவ்வாயன்று வரவிருக்கும் புதிய பதிவைப் படிக்கும் போது நீங்களே புரிந்து கொள்வீர்கள் ! செப்டம்பர் 3-ஆம் தேதி இங்கிருந்து 2 இதழ்களுமே அனுப்பிடப்படும் ! So - அது வரை பொறுமை ப்ளீஸ் !
அப்புறம் நவம்பரில் வரவிருக்கும் டெக்ஸ் தீபாவளி மலரில் ஒரு surprise காத்துள்ளது என்று நான் எழுதி இருந்தது நினைவிருக்கலாம்....! அது என்னவாக இருக்குமென்ற கேள்விகளும், யூகங்களும் - பின்னூட்டங்களாகவும் சரி ; கடிதங்களாகவும் சரி, நிறையவே வந்து விட்டதால் - தேவையின்றி ஒரு suspense buildup வேண்டாமே என்று தோன்றியது ! தவிரவும் இந்த surprise -ல் உங்களின் பங்களிப்புகளும் இருக்கும் பட்சத்தில் இன்னமும் நிறைவாக இருக்குமே என்ற சிந்தனை மண்டைக்குள் சவாரி செய்வதால் - here goes ! நமது டாப் கௌபாய் டெக்ஸ் வில்லர் நமக்கெல்லாம் எத்தனை பிரத்யேகமானவர் என்பதை 1985 முதல் அவரது சாகசங்களைப் படித்து வரும் நாம் அனைவருமே அறிவோம் ! நமது இந்த 'டெக்ஸ் காதலை' நன்கு அறிந்து வைத்திருக்கும் இன்னொரு அணியும் உண்டு ; அது தான் இத்தாலியில் டெக்ஸ் கதைகளை உருவாக்கிடும் பொனெலி குழுமம் ! லட்சங்களில் இத்தாலிய மொழியிலும், கணிசமானதொரு எண்ணிக்கையில் ஸ்பானிஷ் பேசும் தென்னமெரிக்காவிலும் சக்கை போடு போடும் டெக்ஸ் - நமது தமிழ் பதிப்புகளில் ஒரு பெரும் எண்ணிக்கையினை முன்னிறுத்தியதில்லை தான் ! ஆனாலும் circulation ; நம்மால் திரட்ட இயலும் ராயல்டி என்ற நம்பர்களைப் பிரதானமாய்ப் பார்த்திடாது, அவர்களது தேசத்து செல்லப் பிள்ளை நமக்கும் எத்தனை வாஞ்சையானவர் என்பதைப் புரிந்து கொண்டு நமது முயற்சிகள் மீது எப்போதுமே நேசம் காட்டத் தவறியதில்லை !
சமீபமாய் அவர்களிடம் interact செய்து கொண்டிருந்த போது, டெக்சின் பின்னணி பற்றி ; அதன் தற்போதைய creative team பற்றிய கேள்விகளை முன்வைத்தால் என்னவென்று எனக்குள் தோன்றியது ! அதையே இன்னும் கொஞ்சம் develop செய்து, டெக்சின் கர்த்தாகளோடு ஒரு interview ஆகச் செய்ய முடிந்தால் சூப்பராக இருக்குமே என்ற எண்ணமும் உதித்தது ! 'மிகவும் பிஸியான வேலைப் பளுவினிடையே டெக்சின் கதாசிரியர் எவரேனும் நம் கேள்விகளுக்குப் பதிலளிப்பது சாத்தியமாகுமா ? ' என்று நான் கேட்ட போது - 'oh yes ! குழுமத்தின் தலைவரான திரு.டேவிட் பொனெலியெ உங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராக / ஆர்வமாக உள்ளார் ! என பத்தாவது நிமிடத்தில் பதில் மின்னஞ்சல் வந்து சேர்ந்தது - இன்ப அதிர்ச்சியாய் ! மறைந்த செர்ஜியோ பொனெலியின் புதல்வரும், இன்றைய அவர்களது கட்டமைப்பின் சகலமுமாய் திகழ்பவர் திரு டேவிட் ! அத்தனை பெரிய நிறுவனத்தை ஆள்பவரின் பணிச்சுமை எத்தகையது என்பதை நானறிவேன் ; இருப்பினும், நமது டெக்ஸ் நேசத்தை மதித்து, அவரே பதில் தர முன்வந்தது நமக்குக் கிட்டியதொரு பெருமை guys !! Pat yourself on the backs !! அவரைப் பேட்டி கண்டு, அதனை டெக்ஸ் தீபாவளி மலரில் உங்களுக்கொரு குட்டி surprise ஆக வெளியிடுவதை விட, அந்தக் கேள்விகளை frame செய்யும் பணிகளையே உங்களோடு பகிர்ந்து கொள்வது இன்னமும் அழகாக இருக்குமே என்று தோன்றியது ! So - உங்கள் அபிமான டெக்ஸ் பற்றி நீங்கள் கேட்க எண்ணிடும் கேள்விகளை இங்கு பதிவிடலாம் ; அல்லது நமக்கு மின்னஞ்சல்களாகவோ ; கடிதங்களாகவோ அனுப்பிடலாம் ! 'உங்கள் சர்குலேஷன் என்ன ?' பாணியிலான வினவல்களைத் தவிர்த்து விட்டு, 'டெக்ஸ் நேற்று-இன்று-நாளை ' பற்றிய வினாக்களை தொடுத்திடலாம் ! So, get cracking !!
சமீபமாய் அவர்களிடம் interact செய்து கொண்டிருந்த போது, டெக்சின் பின்னணி பற்றி ; அதன் தற்போதைய creative team பற்றிய கேள்விகளை முன்வைத்தால் என்னவென்று எனக்குள் தோன்றியது ! அதையே இன்னும் கொஞ்சம் develop செய்து, டெக்சின் கர்த்தாகளோடு ஒரு interview ஆகச் செய்ய முடிந்தால் சூப்பராக இருக்குமே என்ற எண்ணமும் உதித்தது ! 'மிகவும் பிஸியான வேலைப் பளுவினிடையே டெக்சின் கதாசிரியர் எவரேனும் நம் கேள்விகளுக்குப் பதிலளிப்பது சாத்தியமாகுமா ? ' என்று நான் கேட்ட போது - 'oh yes ! குழுமத்தின் தலைவரான திரு.டேவிட் பொனெலியெ உங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராக / ஆர்வமாக உள்ளார் ! என பத்தாவது நிமிடத்தில் பதில் மின்னஞ்சல் வந்து சேர்ந்தது - இன்ப அதிர்ச்சியாய் ! மறைந்த செர்ஜியோ பொனெலியின் புதல்வரும், இன்றைய அவர்களது கட்டமைப்பின் சகலமுமாய் திகழ்பவர் திரு டேவிட் ! அத்தனை பெரிய நிறுவனத்தை ஆள்பவரின் பணிச்சுமை எத்தகையது என்பதை நானறிவேன் ; இருப்பினும், நமது டெக்ஸ் நேசத்தை மதித்து, அவரே பதில் தர முன்வந்தது நமக்குக் கிட்டியதொரு பெருமை guys !! Pat yourself on the backs !! அவரைப் பேட்டி கண்டு, அதனை டெக்ஸ் தீபாவளி மலரில் உங்களுக்கொரு குட்டி surprise ஆக வெளியிடுவதை விட, அந்தக் கேள்விகளை frame செய்யும் பணிகளையே உங்களோடு பகிர்ந்து கொள்வது இன்னமும் அழகாக இருக்குமே என்று தோன்றியது ! So - உங்கள் அபிமான டெக்ஸ் பற்றி நீங்கள் கேட்க எண்ணிடும் கேள்விகளை இங்கு பதிவிடலாம் ; அல்லது நமக்கு மின்னஞ்சல்களாகவோ ; கடிதங்களாகவோ அனுப்பிடலாம் ! 'உங்கள் சர்குலேஷன் என்ன ?' பாணியிலான வினவல்களைத் தவிர்த்து விட்டு, 'டெக்ஸ் நேற்று-இன்று-நாளை ' பற்றிய வினாக்களை தொடுத்திடலாம் ! So, get cracking !!
காலம் சென்ற திரு. செர்ஜியோ பொனெலி (1932-2011) |
அக்டோபரில் இரத்தப் படலம் + பிளஸ் 6 வரிசையின் (புது) கார்டூன் அறிமுகம் ! நவம்பர் & டிசெம்பரில் தலா 3 இதழ்கள் ! (ஒரு லயன் / முத்து இதழ் ; ஒரு மறுபதிப்பு மற்றும் +6 வரிசைகளின் இவ்வாண்டுக்கான இறுதி 2 இதழ்கள் ) So இந்தாண்டின் இறுதிப் பகுதிகள் (எங்களுக்கு) செம tight ஆகப் பயணிக்கவிருப்பது இப்போதே அப்பட்டம் ! பணிச்சுமை கூடக் கூட, நான் இங்கு நமது வலைப்பதிவில் செலவிட சாத்தியமாகும் நேரம் குறைந்திடுவதை என்னால் உணர முடிகிறது ! அச்சமயங்களில் நண்பர்கள் காமிக்ஸ் பற்றி எழுதிடக் கூடிய சுவாரஸ்யம் தரும் பகுதிகளை இங்கே கொணர்ந்தால் என்னவென்று தோன்றியது ! ஏற்கனவே இந்த சங்கதி மீது மெலிதானதொரு விவாதத்தை நாம் துவக்கியது நினைவுள்ளது ; அதன் மீதொரு முடிவு எடுத்திடும் வேளை நெருங்குவதாய் மனதுக்குப் படுவதால் - இதன் சாதக-பாதகங்களைக் கொஞ்சம் அலசுவோமா ? What say folks ?
2014-க்கான அட்டவணை தயாரிப்பின் போது எனக்குள் எழுந்த கேள்விகள் சில ! அவற்றை ஒரு உரத்த சிந்தனையின் வெளிப்பாடாய்க் கூட எடுத்துக் கொள்ளலாம் ! கொஞ்சமாய் உங்களின் inputs கிட்டிடும் பட்சத்தில் எனது திட்டமிடல் தெளிவான வடிவம் பெற்றிடுவது சுலபமாகிடும் என்பதால் - here I go again :
- 2012 & (இது வரை )2013-ல் வெளியான கதைகளுள் - '2014-ல் வேண்டவே வேண்டாமே சாமி!' ரகத்தில் ஏதேனும் உள்ளனவா ? (எதைத் தேர்வு செய்வதென்ற கேள்வியை விட, எதைத் தவிர்த்தல் அத்தியாவசியம் என்ற புரிதல் முக்கியமாய் தோன்றுகிறது எனக்கு ! )
- கார்டூன்களுக்கு இப்போதிருக்கும் வாய்ப்புகள் ? >>>>> போதும் / கூட்டலாம் / குறைத்திடலாம் ?
- 'சரி வர பயன்படுத்திடவில்லை ; இவருக்குக் கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம் !' - என்ற ரகத்தில் நமது ஹீரோக்கள் யாரேனும் ஆழ்நித்திரையில் உள்ளனரா ? நினைவூட்டுங்களேன் ப்ளீஸ் ? (அதற்காக 'கபாலர் கழகம்' ரேஞ்சிலான புராதனங்களைத் தேடித் பிடித்திட வேண்டாமே ? ) இந்தக் கேள்வியை நான் முன்னிறுத்துவதன் காரணம் COMANCHE ! ஒற்றைக் கதையோடு கிடப்பிற்குச் சென்றவரை மீட்ட போது தான் ஒரு அழகான தொடரை மறந்த முட்டாள்தனம் எனக்கு உரைத்தது ! அந்தத் தவறு தொடர இடம் தர வேண்டாமே எனத் தோன்றியது !
- Filler pages பற்றிய உங்களின் சிந்தனைகள் என்ன ? வண்ணத்தில் 6-8 பக்கச் சிறுகதைகள் எனும் போது லக்கி லூக் ; மதியில்லா மந்திரி ; ஸ்டீல் பாடியார் நீங்கலாக - பெரிதாய் நமக்கு options கிடையாது என்பதை நினைவில் கொண்டு - இவைகள் நம் இதழ்களுக்குச் சேர்க்கும் value பற்றிய உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ?
- கார்ட்டூன் ; கௌபாய் ; டிடெக்டிவ் ; adventure ; கொஞ்சமாய் கிராபிக் நாவல் என்ற களங்களில் தற்போது சவாரி செய்து வருகிறோம் ! புதிதாய் நீங்கள் பார்த்திட விரும்பும் ஒரு கதை ரகம் எனில் - அது என்னவாக இருக்கும் ? Please make just 1 choice !
மேற்கண்ட வினாக்கள் முழுக்க, முழுக்க புது இதழ்களின் திட்டமிடலின் பொருட்டே என்பதால் - மறுபதிப்பு தொடர்பான பதில்கள் இவற்றிற்கு வேண்டாமே ? தனியாக இன்னொரு சந்தர்ப்பத்தில் மறுபதிப்புகள் பற்றிப் பேசிடுவோம் !
கிராபிக் நாவல்களின் களங்கள் சோகமோ ; வித்தியாசமான கதை பாணிகளோ (கிரீன் மேனர் ) மாத்திரமே என்ற நமது stereotype -ஐ சிதறச் செய்யும் விதத்திலிருந்த இருகதைகளை சமீபத்தில் படிக்க வாய்ப்புக் கிட்டியது ! இரண்டுமே பிரெஞ்சு ஆக்கங்கள் ; இரண்டுமே மூன்று பாகங்களானவை ! கதை சொல்லிய விதம் ; கதையின் புதுமை (நமக்கு) ; ஓவிய அசாத்தியம் என படித்த மாத்திரத்தில் திகைக்கச் செய்தன இரு நாவல்களும் ! இவற்றை எப்படியேனும் தமிழுக்குக் கொணர வேண்டுமே என்ற மண்டைக்குடைச்சல் அபரிமிதமாய் என்னுள் ! இது போன்ற கிராபிக் நாவல்களை நம் வாசிப்பு எல்லைகளுக்குள்ளே நுழைத்திடும் பட்சத்தில், நமது ஆக்க்ஷன் கதை ரசிகர்களும் நிச்சயம் குறை சொல்லிட மாட்டார்கள் என்பது உறுதி ! அவற்றில் ஒன்றை எப்படியேனும் 2014-ல் களமிறக்கிடுவோம் ; பிரயத்தனம் இரண்டையுமே கொணர்வதில் இருக்குமென்பதை நான் சொல்லிடவும் வேண்டுமா -என்ன ?
தூக்கத்தை நாடிப் புறப்படும் முன்னே சின்னதாய் இன்னுமொரு சந்தோஷ சேதியும் கூட : இன்று முதல் சென்னையின் 4 LANDMARK ஸ்டோர்களிலும் (ஸ்பென்சர் plaza ; அம்பா ஸ்கைவாக் mall ; சிடி சென்டர் ; நும்கம்பக்கம் ) நமது காமிக்ஸ்கள் சகலமும் (மீண்டும்) கிடைத்திட ஏற்பாடாகியுள்ளது ! :-)
See you around folks ! Take care !