Monday, July 08, 2013

நம்பர்களும் ..,நண்பர்களும்...!


நண்பர்களே,,  

வணக்கம். நம்பர்களுடனான நமது காதல் நித்தமும் தொடர்வதால் இந்தக் கணம் சற்றே விசேஷமாய்த் தோன்றுகிறதோ - என்னவோ ! பதிவு எண் : 100 ; மூன்றிலக்கங்களின் முதல் படி என்பதால் 99-க்கும் - 101-க்கும் இல்லாத மரியாதை இடையிலிருக்கும் திருவாளர் 100-க்கு சரளமாய்க் கிட்டுகிறது போலும் ! So இந்தப் பதிவை மாமூலானதொரு சமாச்சாரமாக்கிடாமல் 'விசேஷமாய்' ஏதேனும் அறிவிப்போடு வரச் செய்தால்  தேவலையே என நண்பர்கள் ஆங்காங்கே பதிந்திருப்பதைக் கவனிக்கத் தான் செய்தேன் ! ´'விசேஷ அறிவிப்பானது ' :

  • "மின்னும் மரணத்தின்' மறுபதிப்பு பற்றியதாகவோ ;
  • லயனின் 30-வது ஆண்டுமலர் பற்றியதாகவோ ;
  • அல்லது 2014-ன் வெள்ளோட்டங்கள் பற்றியதாகவோ 

இருத்தல் தேவலை என்ற உங்களது mind voices எனக்குக் கேட்காமலில்லை ! ஆனால் இந்தக் கணத்திற்கு மெருகூட்டும் ஒரே காரணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, எங்கோ தொலைவில் நிற்கும் சங்கதிகளின் மீது "சும்மாக்காச்சும்" இப்போவே வெளிச்சத்தைப் பாய்ச்ச முயற்சிப்பதை விட, மிக அருகாமையில் அடுத்த சில மாதங்களுக்குள் நம்மை எதிர்கொள்ளவிருக்கும் தீபாவளியைப் பற்றிப் பேசினால் என்னவென்று தோன்றியது எனக்கு !

நிஜத்தைச் சொல்வதானால் - இப்போதெல்லாம் மாதா மாதம் ரூ.100 / ரூ.200 என்று உங்கள் பர்ஸ்களுக்கு கண்ணி வெடி வைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தீபாவளி மலர் என்று தனியாகவொரு track வேண்டாமே என்பது தான் எனது எண்ணமாக இருந்தது ! ஆனால் ஒவ்வொரு சந்திப்பின் போதும், உங்களில் நிறையப் பேர் "தீபாவளி மலர்' இல்லாமல் நமது அட்டவணையில் ஒரு கிக் இல்லையே என்று ஆதங்கப்படுவதைக் கவனிக்கத் தான் செய்தேன் ! ஏறத்தாள 30 தீபாவளிகளுக்கு முன்பை ஒரு 'அக்மார்க்' உப்புமா இரும்பு மனிதன் ஆர்ச்சியின் கதையோடு துவங்கிய நமது தீபாவளிக் காதல்கள் வயதெனும் அரணையும் மீறி, இன்னமும் ஜீவனோடிருப்பது நிஜமாய் எனக்கு ஆச்சர்யமே ! பெரிய சைஸ்கள் ; பருமனான பாக்கட் சைஸ்கள் ; பல கதைக் combos ; சிங்கள் ஷாட் sagas ; என்று நிறைய நாம் பார்த்து விட்ட போதிலும், இன்றளவும் நமது 1987 லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் -ன் வெற்றியை வேறு எந்தத் திருநாளும் நமக்குக் காட்டியதில்லை ! 532 பக்கங்கள் ; 12 கதைகள் ; பாக்கட் சைஸ் - ரூ.10/ விலையில் என்பதை இன்று அசை போடும் போது, நாற்கால்ப் பாய்ச்சலில் குதி போடும் விலைவாசிகளின் தாக்கத்தை நன்றாகவே உணர முடிகிறது ! அன்று பத்து ரூபாயில் - 25% ஏஜென்ட் கமிஷன் கொடுத்த பின்னும் சாத்தியமான தயாரிப்பு budget - இன்று நமது வண்ண அவதாரில் வெறும் 10 பக்கங்களுக்கே போதாது ! Anyways , அக்டோபர் 1987 "சிங்கத்தின் சிறுவயதில்" பகுதியினில் கூப்பிடு தொலைவில் இருப்பதால் - மலரும் நினைவுகளை அங்கே தொடர்வதே உசிதம் !

Getting back on track -  இந்தாண்டு வரவிருக்கும் தீபாவளிக்கு நமது லயன்-முத்து அட்டவணையில் லார்கோவின் ஒரு ருத்ரதாண்டவம் மாத்திரமே திட்டமிடலில் இருந்தது. "ஆதலினால் அதகளம் செய்வீர்" திரைப்படமாகவும் வந்ததொரு action சரவெடி என்பதால் - அதனையும், துணைக்கு சன்ஷைன் லைப்ரரியில் மறுபதிப்பு ஒன்றையும் november-ல் தட்டி விட்டால் போதுமென்று நினைத்திருந்தேன் ! இடைச்செருகலாய் ஒரு தீபாவளி மலரைப் புதிதாய்த் திட்டமிட்டு, மீண்டுமொருமுறை இதற்கான பணம் அனுப்பச் சொல்லி உங்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதிலும் எனக்கு உடன்பாடில்லை ! தவிரவும் நமது front office பணியாளர்களுக்கு அவ்வப்போது நான் தந்து வரும் தலைநோவை இன்னமும் அதிகரித்திட வேண்டாமே என்ற தயாள சிந்தையும் பின்னணியில் உண்டு ! லயன்-முத்து சந்தாத் தொகை ரூ.1320 என்று சொல்லி வைத்தேன் முதலில் ; அப்புறமாய் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பிரதிகளுக்கென ரூ.540 வரும், அதனையும் சந்தாக்களில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றேன் ; தொடர்ந்த மாதங்களில் - காமிக்ஸ் க்ளாசிக்ஸ் என்பன இனி சன்ஷைன் லைப்ரரி என்ற லேபிலோடு வருமென்று தெரியப்படுத்தினேன் ; அப்புறமாக +6 உதயம் - ரூ.375 சந்தாவோடு என்றும் சொல்லி வைத்தேன் ! நமது காமிக்ஸ் 'கலாச்சாரங்களுக்கோ' ; செல்லும் பாதையில் ஒரு நூறு புது சிந்தனைகளுக்கு இடமளிக்கும் பாங்குகளுக்கோ  - நம்மவர்கள் பரிச்சயமற்றவர்கள் என்பதால் ஒவ்வொரு முறையும், ஏதாவதொரு மாற்றத்தையும் அவர்களுக்குத் தெரிவிக்கும் சமயங்களில் அவர்களது மிரண்ட விழிகள் எனக்குள் சின்னதாய் ஒரு சங்கடத்தை உருவாக்கும் !  -இந்நிலையில், 'தீபாவளி மலர்' ; இதற்கென புது புக்கிங் ; புது பண வரவுகள் என்று சொல்லி அவர்களிடத்தில் - 'இவரென்ன பாஸா ? இல்லே லூசா ?" என்ற சந்தேகத்தை ஏற்படுத்திட வேண்டாமே என்ற சிந்தனை ஓடியதால் - ஆபத்பாந்தவனாய் உதவிக்கு வந்தது நமது +6 !

எந்தவொரு அழுத்தமான திட்டமிடலும் இல்லாது அவ்வப்போது மனதில் தோன்றுவதைச் செயலாக்கிட ஒரு மார்க்கமிருந்தால் தேவலை என்பதே +6-ன் பின்னணி என்பதால் இந்தத் திடீர் தீபாவளி மலர் ஆவலைப் பூர்த்தி செய்யக் கச்சிதமாய் அது suit ஆகுமென்று புரிந்தது ! எனினும் இந்தாண்டு இன்னமும் எஞ்சியுள்ள வெளியீடுகளின் எண்ணிக்கை கணிசமாகவே பாக்கியுள்ளன எனும் போது ரொம்ப flashy ஆகவோ ; ஒரு மெகா இதழாகவோ திட்டமிட வாய்ப்புகளில்லை என்பதையும் நினைவில் இருத்திடும் அவசியமும் முன்னின்றது ! பெரிதாய் - விரிவாய் ஒரு canvas இன்றி 'சிக்' கென ஒரு சித்திரமே சாத்தியம் என்ற புரிதலோடு சிந்திக்கலானேன் !  ஆங்காங்கே, அவ்வப்போது நண்பர்கள் தெரிவிக்கும் சின்னச் சின்ன ஆசைகளுக்கு on the spot பைசல் செய்வதைக் கடைபிடிக்காது - ' உரிய சமயம் வரட்டுமே' என்ற பொறுமை காப்பதன் மூலம், உங்களில் பலரின் பொறுமைகளுக்கும் சோதனைகள் வைப்பதை நான் அறியாதில்லை ! எனினும், அந்த நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாய் கிடப்பிற்கு அனுப்பப்படுவதில்லை ! கொஞ்சகாலமாகவே நமது டெக்ஸ் வில்லரின் "அந்த" சைஸ் இதழொன்று வேண்டுமென்ற கோரிக்கை எழுவதும் ; நான் அதனைக் கண்டும், காணாதும் விடுவதும் நீங்கள் மறந்திருப்பினும், நான் மறக்கவில்லை ! So  - இந்தாண்டு "ரேஞ்சரோடு தீபாவளி' கொண்டாடத் தயாராகுங்கள் ! உங்கள் அபிமான டெக்ஸ் & கோ. ஒரு 456 பக்க black & white இதழில்,2 முழு நீள சாகசங்களோடு ரூ.100/ விலையில் அதிரடி செய்யக் காத்திருக்கின்றனர் ! "நீதியின் நிழலில்" + "மரண தேசம் மெக்சிகோ" இரு மாறுபட்ட கதைக் களங்கள் + ஓவியப் பாணிகளும் கூட ! சமீபமாய் சற்றே 'அமானுஷ்ய' ரூட்டில் சவாரி செய்து வந்து டெக்ஸ் & டீம் இம்முறை மோதுவதோ 2 கால் எதிரிகளோடு மாத்திரமே ! இந்த இதழின் highlight ஆக டெக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு pleasant surprise -ம்  காத்துள்ளது ! அது என்னவாக இருக்குமென்பதை உங்கள் யூகங்களுக்கே விட்டு விடுவோமே - இப்போதைக்கு ! ('இந்தாண்டு டெக்ஸ் சற்றே ஓவர்டோஸ் '  என்ற mind voice ஒலித்திடும்  நண்பர்களுக்கு : 2014-ல் இரவுக் கழுகார் 2 அல்லது 3 கதைகளில் மாத்திரமே தலை காட்டுவார் ! )
தீபாவளியை black & white -ல் கழிய அனுமதிக்க வேண்டாமே என்ற அவாவில், நவம்பரில் நமது +6-ன் இன்னொரு இதழையும் வண்ணத்தில் கொணர உத்தேசித்துள்ளேன் ! புதியதொரு அறிமுகம் என்பதால் - அதற்கான ஏற்பாடுகளை முழுமைப்படுத்தி விட்டு 'start music ' சொல்லலாமே ?! So தொடரும் வாரங்களில் அதைப் பற்றியதொரு பதிவும், அறிவிப்பும் காத்துள்ளது !

"3 மாதங்களுக்குப் பின் வரும் தீபாவளி மலர் அறிவிப்பெல்லாம் ஒ.கே. ; இந்த மாதம் வரவேண்டிய ALL NEW ஸ்பெஷல் என்னாச்சு ?" என்ற உங்களின் logical கேள்வி எழுவதை உணர்கிறேன் ! திடீர் பயணமாய் நான் ஸ்பெயின் நாட்டிற்குக் கிளம்பிட வேண்டிப் போனதால் - A.N.S அச்சுப் பணிகளைத் துவக்கி விட்டு பெட்டியைத் தூக்கி விட்டேன் ! இந்தப் பக்கங்களை நான் எனது டயரியில் எழுதுவது கூட பார்சிலோனா செல்லும் பிசாசு வேக ரயிலில் - அருகாமையிலிருக்கும் ஒரு முதியவரின் கேள்விக்குறியான பார்வையினில் அமர்ந்தபடியே !  தொடர்ச்சியாய் பணிகளைப் பூர்த்தி செய்து இன்று (8-ஜூலை) சந்தாப் பிரதிகள் அனைத்தையும் அனுப்பி விட்டார்களென மைதீன் update செய்துள்ளான் ; so நாளை உங்களது கூரியர் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டிடலாமே ?!  இதோ - A.N.S -ன் அட்டைப்படம் !

வழக்கம் போலவே, இங்கு தெரியும் வர்ணங்களை விட அழுத்தமாய் அட்டைப்பட அச்சில் தெரிந்திடும் ; குறிப்பாக பின்னணிச் சிகப்பில் !பின்னட்டையில் 4 கதைகளின் preview -ம் இருந்தால் தேவலையே என தோன்றியதால் - சின்னச் சின்ன சித்திரங்களைத் தவிர்த்திட இயலவில்லை ! முன்னட்டை ஒரிஜினல் படைப்பே - பின்புலங்களிலும், வண்ணக் கலவைகளிலும் மாற்றங்களோடு ! இம்முறை மறவாமல் அட்டையில் நமது birthday boy -க்கு இடமளித்து விட்டோம் !
அப்புறம் நமது "KAUN BANEGA TRANSLATOR - சீசன் 2" போட்டியின் வெற்றியாளரை அறிவிக்கும் வேளையும் இதுவன்றோ ?! (ஏதோ ஒரு மாமாங்கத்தில் அது நடந்தது போன்ற பிரம்மை எனக்கு மாத்திரம் தானா ?) 36 நண்பர்கள் இதில் பங்கேற்க ஆவல் தெரிவித்திருந்தனர் ; ஆனால் மொழியாக்கம் செய்து அனுப்பியோரின் எண்ணிக்கை குறைவே !  நம்பர்களில் குறைவிருந்த போதிலும், நண்பர்களின் முயற்சிகளின் தரத்தில் குறை இல்லை ! வந்திருந்த ஆக்கங்களுக்குள் சிறந்ததாய் எனக்குப் பட்டது நண்பர் கார்த்திக் சோமலிங்காவின் எழுத்துக்களே ! சென்ற முறைத் தவற விட்ட முதலிடத்தை இம்முறை 'லபக்'கிய கார்த்திக்கிற்கு காங்க்ரத்ஸ் ! இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது அன்றைய சுமார் மூஞ்சி குமார் என்ற ; இன்றைய சூப்பர் விஜயும் தான் !  Congrats too vijay ! கார்த்திக்கின் மொழியாக்கத்தை ANS -ல் பார்த்திட நாளை சாத்தியமாகும் என்பதால், இரண்டாமிடத்து (விஜயின்) translation -ஐ புதனன்று நான் ஊருக்குத் திரும்பியதும் ஏதாயினும் ஒரு தளத்தில் upload செய்து அதற்கான link இங்கு தர ஏற்பாடு செய்கிறேன் ! சென்ற போட்டிக்கான மதியில்லா மந்திரியின் சிறு கதைப் பாணி ஒரு விதமென்றால், இம்முறை வழங்கப்பட்டிருந்த Green Manor  முற்றிலும் மாறுபட்ட genre ! போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே அழகான முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தது ரசிக்கச் செய்தது ! A pat on the back guys ! Great job all...!

ANS -ன் பெரும்பான்மைப் பக்கங்களை ஆக்ரமிக்கும் "பிரளயத்தின் பிள்ளைகள்" கிராபிக் நாவலுக்கு உங்களின் response எவ்விதமென்று அறிந்திட நிஜமாய் ஆவலாய் உள்ளேன் ! வழக்கமான கதை பாணியோ ; இரண்டாம் உலக யுத்தத்தின் கோரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, நமது அனுதாபங்களைச் சம்பாதிக்கும் முயற்சியோ அல்ல இது ! ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் வாழ்க்கைப் பயணத்தில் யுத்தமெனும் பிரளயம் கொண்டு வரும் மாற்றங்களை ஒரு பயணமாய் சொல்லும் இந்தப் பக்கங்களுக்கு நாம் போடப் போகும் மார்க்குகள் என்ன ? Fingers crossed !

ரயில் பயணத்தின் போது தலைக்குள் ஓடிய சிந்தனைகளுள் -"அவ்வப்போது நான் காணாமல் போகிடும் தருணங்களில் இந்தப் பக்கத்தில் ஒரு சோம்பல் நிலவாதிருக்க என்ன செய்யலாம் ? " என்ற   எண்ணமும் சேர்த்தி ! நான் 'லீவு போட்டிடும்' வேளைகளில் மாத்திரம் உங்களில் ஒவ்வொருவராய்  turns எடுத்துக் கொண்டு இங்கு எழுதினால் எவ்விதமிருக்கும் ? காமிக்ஸ் பற்றிய தம் அனுபவங்கள் ; படித்து ரசித்த  (வேற்று மொழிப் படைப்புகளாக இருப்பினும் ) காமிக்ஸ்கள் பற்றி எழுதினால் - தொடர்ச்சியாய் எனது புராணங்களையே படித்து அயர்ச்சியை சந்திக்கும் நண்பர்களுக்குமொரு சின்ன மாற்றமாக இருந்திட வாய்ப்பாகுமே ? What say guys ? Worth a try ?

இந்த "100 பதிவுப் பயணம் " கொண்டாடப்பட வேண்டிய தருணம் என்றெல்லாம் நான் பகல் சொப்பனங்களில் ஆழ்ந்திருக்கவில்லை ! நமது பேங்க் விபரங்களை மாத்திரமே தாங்கி வந்த பதிவுகள் ; துவக்கத்தில் எழுதிய பல 10 வரிப் பதிவுகளும் இந்த 100-க்குள் ஐக்கியமென்பது நாம் அறிந்தது தானே ?! ஊர் கூடித் தேர் இழுக்கும் ஒரு அரங்கில் இளைப்பாற ஒரு இனிய தருணமாக இதைப் பார்ப்பதே பொருத்தமன்றோ ? ஆனால் கடந்த 18 மாதங்களில் என் வாழ்வில் ஒரு அங்கமாகி விட்ட இந்தப் பக்கத்தை - எனக்கே என்னைப் பல விதங்களில் அறிமுகம் செய்து வைத்துள்ளதொரு கருவியாய்ப் பார்க்க எனக்கு முடிகின்றது ! இங்கு பதிவிட்டுள்ள / பதிவிட்டு வரும் ஒவ்வொரு நண்பரின் எழுத்துக்களிலும் உணர சாத்தியமாகும்  காமிக்ஸ் காதல் ; சிந்தனைகளின் முதிர்ச்சி - ஒவ்வொரு வகையில் எனக்கு நிறையக் கற்றுத் தந்துள்ளதென்று சொல்வதற்கு  அவையடக்கம் காரணமாகாது ! "சிங்கத்தின் சிறு வயதில்" பகுதியைத் தொகுப்பாய் வெளியிட நினைப்பதை விட, இங்கு இந்த 4.75+ லட்சப் பார்வைகள் நல்கியுள்ள எண்ணிலடங்கா சந்தோஷத் தருணங்களை ; நகைச்சுவை மேளாக்களை ; ஒரு புத்தகம் ஆக்கிடும்  பட்சத்தில் - surefire ஹிட் ஆகுமென்பதில் ஐயமேது ?

இந்தப் 18 மாதங்களில் தான் எத்தனை - எத்தனை உணர்ச்சிப் பிரவாகங்கள் ? ஒரே நாளில் 2200+ பார்வைகள் என்ற உச்சம் ; 350+ பின்னூட்டங்கள் கொண்ட எக்கச்சக்கப் பதிவுகள் என்று அசத்திய அசாத்தியக் காமிக்ஸ் நேசம் ; அதே சமயம் ஒரு முழுப் பதிவையும், அது சார்ந்த பின்னூட்டங்களையும் மொத்தமாய் நீக்க நேர்ந்த சங்கட தினம் ; புதிதாய் நண்பர்கள் பலரை சம்பாதித்த சந்தோஷ வேளைகள் ; ஏதோவொரு மனத்தாங்கல் காரணமாய் அவர்களில் சிலர் தூரத்தை நாடிச் சென்ற துரதிர்ஷ்ட நேரங்கள் ; வெற்றிகளை வெறியோடு கொண்டாடிய நாட்கள் ; பிடித்தமில்லாது போன தங்கக் கல்லறைகளை துவைத்துத் தொங்கப் போட்ட சமயங்களென   - ஒரு 'சின்னப் புள்ளைங்க ' சமாச்சாரத்தின் பின்னே இத்தனை அனுபவங்கள் கதம்பமாய்ப் புனைந்திருப்பதை யார் தான் நம்புவர் ? அனுதினமும் இங்கு ஏதோ ஒரு வகையில் சந்தோஷத்தைப் பரப்பிட உதவிய அத்தனை 'சன்ஷைன் நெஞ்சங்களுக்கும் ' ஒரு salute ! ஏதோ ஒரு வகையில் உங்கள் ஒவ்வொருவரையும் எட்டிட நான் முயற்சித்துள்ளேன் ; அதில் வெற்றி கண்டேனா என்ற ஆராய்ச்சியை விட - எங்கோ சறுக்கி நண்பர்கள் சிலரை சங்கடப்படுத்தியுள்ளேன் என்பதை ஒத்துக் கொள்வதே பிரதானம் என்று தோன்றுகிறது ! எவரையும் காயப்படுத்திடும் எண்ணம் நிச்சயம் எனக்கில்லை ; எனினும் இந்த இணையப் பயணத்தில் என்னால் மனவருத்தம் கொள்ள நேரிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது unconditional apologies உரித்தாகட்டுமே  ! விலகி நின்றாலும் நாம் ஒரு நாளும் விரோதிகளல்ல என்பதையும் சரி ; காலத்தால் ஆற்றிட இயலாக் காயங்களே கிடையாதென்பதையும் ஒரு போதும் நான் மறவேன் ! Thanks guys - for being an integral part of life for me...!

நீண்டு செல்லும் இந்தப் பதிவை நிறைவு செய்யும் முன்னே சின்னதாய் ஒரு சந்தோஷப் பகிர்வு ! நம் நெடுநாள் காமிக்ஸ் நண்பரும் , இங்கு சமீபத்திய வருகையாளருமான பிரான்சிலிருக்கும் திருச்செல்வம் ப்ரபாநாத் - பிரான்சில் வசிக்கும் தமிழர்களிடையே நமது இதழ்களை அறிமுகம் செய்திடும் பொருட்டு முயற்சிகளைத் துவக்கியுள்ளார் ! தலை சுற்றச் செய்யும் air-mail கட்டணங்களையும் செலுத்தி நம்மிடமுள்ள சமீபத்திய இதழ்கள் அத்தனையிலும் ஒரு  சிறியளவுப் பிரதிகளைத் தருவித்துள்ளார் நண்பர் ! Let's wish him good luck !

நம்பர்கள் தராத பரிவை நண்பர்கள் தொடர்ச்சியாய் வெவ்வேறு ரூபங்களில் காட்டி வருவதே நாம் வாங்கி வந்த வரம் போலும்  !! Take care folks ! 

337 comments:

  1. Replies
    1. chennaivaasi ; ranjith ranjith : Attendance போடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் , ஏதாச்சும் எழுதவும் செய்யுங்களேன் பாஸ் !

      Delete
  2. உய்ய்ய்ய்ய்ய்..............
    சார் முதலில் தீபாவளி மலரை பார்த்து மறுபதிப்போ என மனது கொண்டாட, தொடரும் வரிகளில் வழக்கம் போல திண்டாட, டெக்ஸ் அறிவிப்பு மன ராக்கெட்டை விண்ணிற்கு ஏவிய ஒலியே அது......
    பல கோடி நன்றிகள் சார்

    ReplyDelete
  3. Replies
    1. அந்நியன்,அம்பி,ரெமோ மந்திரி : கலீபா ; ஜால்ரா பாய் நலமா ?

      Delete
  4. Hello.. Im MuthuKumaran.. Can I join with you..? Frenz..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே நமது காமிக்ஸ் பெயரும் தாங்கி வந்துள்ளீர்கள் .....
      தங்கள் வரவு நல்வரவாகுக

      Delete
    2. @Steal: Ada.. Amale.. 'Muthu' Comics.. I am too happy Ponraj Sir..

      Delete
    3. @Anniyan, Ambi, Remo Manthiri: Sir.. 'Spilit personality' yale naalaikku enne yarune keatturatheenge..

      Delete
    4. Frenz.. நான் முத்துக்குமரன், doing PhD at Pondicherry Central University. என்னுடய நீண்ட நாள் ஆசை இங்கு பதிவிட வேண்டுமென்பது.. அது சரியாக இன்று நிறைவேறுகிறது. என்னுடைய அப்பாவின் கருணையால் காமிக்ஸ் அனுபவம் கிடைக்கப்பெற்றது, நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் என்றே சொல்ல வெண்டும். என்னுடைய 5வது வயது என நினைவு.. 'சைத்தான் சிறுவர்கள்' ஆரம்பித்து வைத்தார்கள்.. அது 'அதிரடிபடை' என தொடர்ந்து 'டிராகன் நகரம்' என நீண்டது என் பால்யத்தின் சொர்க நாட்கள் அவை...

      என் அப்பா, அண்ணா, 2 அக்காள்கள் என என் குடும்பமே ஒரு 'காமிக்ஸ் குடும்ப'மாகி போனது தேவதையின் வரம் தான்.. இன்றும் எங்களுடைய வீட்டு நூலகத்தை வண்ணமயமாக அழகாக அலங்கரிப்பது நம்முடைய காமிக்ஸ்களே..

      காமிக்ஸ் ஸொடு வளர்ந்தொம்.. வாழ்கிறோம்.. சந்தெகெமென்னெ நண்பர்களே.... முதுமையிலும் காமிக்ஸ் தான் துணை நிற்க போகிறது..

      எடிட்டருக்கு வாழ்துக்களுடன் இப்பொது முடியும் இந்த பின்னூட்டம்... இனி அடிக்கடி எட்டி பார்க்கும்..

      Delete
    5. Welcome ji. I'm also new here. ( senior nanbarkak rack pannuvangalo? :-) )

      Delete
    6. வாங்க சாரதி.. நம்ம சீனியர்ஸ்தனே.. பாக்கலாம்..

      Delete
    7. Welcome to Muthukumaran and Sarathi T P.

      Delete
    8. Muthu Kumaran & Sarathi T.P : Welcome home !

      Delete
  5. நமது முன்னட்டை ஒரிஜினலை விட தூள் ,அதுவும் பிறந்த நாள் கொண்ட்ட்டும் சிங்கம் அருமை!
    வண்ணத்தின் ஈர்ப்பில் வழக்கம் போலவே .....
    பின்னட்டை பரவாயில்லை!

    நானும் காத்திருக்கிறேன் பிரளயத்திர்க்காக ....
    வெற்றி வெற்றி என எங்கும் ஓங்கி ஒலிப்போம்...

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : பின்னட்டையில் எனக்கும் அவ்வளவாகத் திருப்தி இல்லை தான் ; நிறைய டிசைன்கள் முயற்சித்து இறுதியில் இது தேவலை என்றானது ! சில சமயங்களில் சுலபமாய் செட் ஆகும்; சில நேரங்களில் எத்தனை முயற்சித்தாலும் எதிர்பார்த்தது சிக்கிடாது !

      Delete
  6. வண்ணத்தில் இன்னொரு தீபாவளி மலர் வித்தியாசமாய் இருக்கட்டும் சார் ,போர்கால கதைகள்,அல்லது பண்டைய நாகரிகங்கள் என

    ReplyDelete
  7. வாவ்.. தீபாவளி மலரில் இரண்டு டெக்ஸ் கதைகளா? சூப்பர் ... இதன் விளம்பரங்களையும் வெளியிட்டு
    இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். kpt ல் வெற்றி பெற்றுள்ள நண்பர் கார்த்திக் சோமலிங்காவுக்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பிரான்ஸில் வசிக்கும் தமிழர்களுக்கு நமது இதழ்களை அறிமுகம் செய்திடும் திருச்செல்வம் ப்ரபாநாத் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ப்ரூனோ ப்ரேசில் ://இதன் விளம்பரங்களையும் வெளியிட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும//

      புதனன்று இணைத்திடுவோம் !

      Delete
  8. நண்பர் கார்த்திக் சோமலிங்காவிற்கும், சூப்பர் விஜய்க்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. சார் இன்னொரு சூப்பர் ஐடியா அந்த லயன் சூப்பர் ச்பெசலை அப்படியே நூறு விலைக்கு வெளியிட்டால் என்ன ? ஆயிரம் ரூபாய்க்கு போவதாய் ஒரு வதந்தி வேறு உலவுகிறது!
    முடிந்தால் வேண்டுபவர்கல் எண்ணிக்கைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து தாங்களே வழங்கலாமே சூப்பர் ஹிட் இதழ்க்களை!

    ReplyDelete
    Replies
    1. 1987 தீபாவளி ரிப்ரின்ட்100 +டெக்ஸ் 100=200.இது உங்களால் முடியும் சார் ப்ளீஸ்

      Delete
    2. //சார் இன்னொரு சூப்பர் ஐடியா அந்த லயன் சூப்பர் ச்பெசலை அப்படியே நூறு விலைக்கு வெளியிட்டால் என்ன ? ஆயிரம் ரூபாய்க்கு போவதாய் ஒரு வதந்தி வேறு உலவுகிறது//


      அது வதந்திதான், ஏனென்றால் 1000 ரூபாய்க்கு கிடைக்கவில்லை, கிடைக்கும்னா எனக்கு ஒரு பார்ச்சேல்ல்ல்ல்...

      Delete
    3. அம்பி: வதந்திய உண்மை ஆக்கிடுங்கோ.......என்ன சொல்றேள்?
      அந்நியன் : அஞ்சஞ்சு பேரா அஞ்சஞ்சு வாட்டி அஞ்சஞ்சு நாள் கேட்டமனுனா கண்டிப்பா கிடைக்கும்
      ரெமோ : dont say nay..........sir

      Delete
    4. Its a very good idea and even editor had himself mentioned that this issue is most after sought issue so it should be number one in our reprint list.

      Delete
    5. @ friends : வெற்றி பெற்றதொரு இதழை மறுபதிப்பாக்கும் முயற்சியின் இடத்தில், அதனைத் தூக்கிச் சாப்பிடும் பாணியில் ஒரு புது இதழைத் திட்டமிட்டால் என்ன ?

      Delete
    6. That's a good thought, but you cant avoid reprints. As long as reprint stories are in good quality it doesn't matter whether it is a new one or reprint.

      Delete
  10. டியர் விஜயன் சார்,

    காமிக்ஸ் எடிட்டராக 29 ஆண்டுகளையும், வலையுலக ஆசிரியராக 100 பதிவுகளையும் நிறைவு செய்ததிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! :)

    KBT2 போட்டியில் எனது மொழிப்பெயர்ப்பை தேர்வு செய்ததிற்கு மிக்க நன்றி!

    கடகடவென பதிவைப் படித்ததில் கண்களுக்கு பிரதானமாக தெரிந்தது தீபாவளி மலரும், KBT2 முடிவுகளும்தான்! :p மீண்டும் ஒருமுறை சாவகாசமாக பதிவைப் படித்து விட்டு, நிதானமாக ஒரு பின்னூட்டம் போடுகிறேன்!! :)

    @சூப்பர் விஜய்: வாழ்த்துக்கள் நண்பரே! :)

    ReplyDelete
    Replies
    1. Thanks & Congrats Karthik

      Delete
    2. Karthik Somalinga : வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ! அந்த "29 ஆண்டு சமாச்சாரம்" இன்னமும் கூடுதலாய் இருந்திருக்க வாய்ப்புண்டு - 1980-ல் திட்டமிடப்பட்டிருந்த ஒரு புதிய இதழ் அன்றைய முத்து காமிக்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியாகி இருந்தால் ! "டிங் - டாங்" என்ற பெயரோடு ஏகப்பட்ட வேலைகள் செய்யப்பட்டு,ஏனோ takeoff ஆகாத அந்த முயற்சியில் அடியேன் பெரியதொரு பங்கேற்று இருந்தேன் ! அந்த ஏமாற்றத்தை அந்த வயதில் ஜீரணிக்க அவசியமான அவகாசம் ரொம்பவே அதிகம் ! ஆனால் தொழில் கற்கும் படலத்தின் ஆரம்பப் படிகள் அவைகளே என்பதை இப்போது உணர முடிகின்றது !

      Delete
    3. To: Editor,

      டிங் டாங் - இந்த இதழுக்கு மாட்டுவண்டி, சேவல் படமெல்லாம்போட்டு முத்து வில் விளம்பரங்கள் வந்ததாக ஞாபகம். ஓரிரு இதழ்களாவது வெளிவந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் நான். படைப்புக்கள் வெளியாகாமல் முடங்கிப்போவது, கரு உள்ளேயே கலைந்துபோகும் தாயின் வேதனைக்கு ஒப்பான வேதனையைத் தரவல்லது. ம்....

      Delete
    4. Podiyan : முழுதாய் 3 இதழ்கள் தயார் செய்தெல்லாம் வைத்திருந்தோம் ! "ஈகிள்மேன்" (பின்னாளில் நமது '86 லயன் கோடை மலரில் வந்தது) கதையெல்லாம் 'டிங்-டாங் ' உபயமே !

      Delete
  11. நண்பர் கார்த்திக் , மற்றும் நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள் ....
    திருச்செல்வம் ப்ரபாநாத் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...

    ReplyDelete
  12. ==So - இந்தாண்டு "ரேஞ்சரோடு தீபாவளி' கொண்டாடத் தயாராகுங்கள் ! உங்கள் அபிமான டெக்ஸ் & கோ. ஒரு 456 பக்க black & white இதழில்,2 முழு நீள சாகசங்களோடு ரூ.100/ விலையில் அதிரடி செய்யக் காத்திருக்கின்றனர் ! "நீதியின் நிழலில்" + "மரண தேசம் மெக்சிகோ" இரு மாறுபட்ட கதைக் களங்கள் + ஓவியப் பாணிகளும் கூட !==

    ஆஹா... சூப்பர் சார்...

    ReplyDelete
    Replies
    1. supero super.. two times action... this diwali...

      Delete
  13. "KAUN BANEGA TRANSLATOR - சீசன் 2" போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் கார்த்திக் மற்றும் விஜய் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. எங்க, வின் பண்ணது கார்த்திக் மட்டும் தாங்க, நம்ம ரெண்டாம் இடம் தான் ( இதுவே நம்ப முடியல )

      Delete
    2. சூப்பர் விஜய்,

      1 பெரிசா?

      2 பெரிசா?

      Better luck next time.

      Delete
  14. சரியான தீபாவளி விருந்து தான்.

    ReplyDelete
  15. நவம்பரில் லார்கோவின் அதகளம், டெக்ஸின் அதிரடி... சன்ஷைன் வண்ண மறுபதிப்பு.. +6 இல் புது வரவு...

    இந்த தீபாவளிக்கு காமிக்ஸ் சரவெடிதான்...

    ReplyDelete
  16. FYI - I recently had a plan to purchase few old Lion/Muthu comics through a blog. He was ready to exchance the old book for another one or he was quoting few thousands (about 7K) for one book.
    Instead of getting troubles into this, I'd really appreciate if Mr. Vijayan can publish some of the very old comics involving Spider, Archie, Tex, Johny Nero, Lawerance, etc.

    BTW, When we can expect the reprint of the tex willer story, "Carsonin Kadantha Kaalam"

    ReplyDelete
    Replies
    1. KIRUKKALGAL : No book is worth that kind of money for sure !! If you look around with patience I'm pretty sure you will find a broadminded reader who would loan you his copy to read & return ! Comics collection is a hobby alright ; but let's keep things in perspective too please !

      Rs.7000 is what would keep a couple of families running for a month !

      Delete
  17. Sup2Xதீபாவளி மலர் ---- சூப்பர் நியூஸ்...

    அப்பறம் எடிட்டர் சார், நீங்க காமிக்காண்ல என் மொழிபெயர்ப்பு நல்ல இருந்ததுனு சொன்னப்பவே நினைச்சேன், வின் பண்ண சான்ஸ் இல்லன்னு ஏன்னா, அவ்ளோ ஈசியா supenseஅ நீங்க open பண்ணமாடீங்கனு தெரியும். ஆனாலும் runner-up ஆக தேர்ந்தெடுததற்கு நன்றி சார்...

    அடுத்த போட்டி எப்போ சார்

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விஜய் : நிஜமாக நல்ல முயற்சி !

      அடுத்த போட்டி நம் வலை நண்பர்களுக்கு மாத்திரமன்றி - வலைக்கு அப்பாலுள்ள வாசகர்களும் பங்கேற்கும் விதமாய் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமன்றோ ?

      Delete
  18. நண்பர் கார்த்திக் சோமலிங்காவிற்கும், சூப்பர் விஜய்க்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. இது வாழ்த்தும் நேரம் : 100/100

    ப்ளாக் ஆரம்பித்து பதினெட்டே மாதங்களில் 100 ஆவது பதிவை பெரும் புகழுடன் எட்டியிருக்கும் ஆசிரியர் அவர்களுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்..! பூவோடு கலந்த நாராக என் எழுத்துகளும் இங்கு மேடையேற, பாலோடு கலந்த நீராக என் கருத்துகளும் இங்கு சங்கமிக்க இதுகாறும் எனக்கும் வாய்ப்பளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..!

    இந்த நூறாவது பதிவிலேயே 4.85 இலட்சம் ஹிட்ஸ் கடந்து விட்ட எண்ணிக்கையை பார்க்கும் போது தங்களின் பதிவுகளில் உள்ள ஈர்ப்பு தன்மையும், காந்த சக்தியும் தெள்ளத் தெளிவாக புரிவது மட்டுமல்ல, கமெண்ட் பதியும் வாசகர்கள் எங்கள் அனைவரையும் பெருமிதம் கொள்ளச் செய்வதாக அமைந்துள்ளது ஸார்..!

    தங்களின் இந்த நூறு இன்னும் பல நூறாக
    பாலோடு கலந்த தேனாக உங்களின் பதிவுகள் பல நூறாக
    காமிக்ஸ் எனும் கடலினில் பல நல்முத்துக்கள் அகழ்ந்து
    தங்கள் அறிவினில் நல்ல தெளிவினில் குன்றிலிட்ட விளக்காய்
    எங்கள் அனைவருக்கும் தமிழ் காமிக்ஸ் எனும் ஒளிவெள்ளம் தந்து
    வாழ்க வாழ்கவென பலவாறாய் வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன்...!!

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் மரமண்டை : 4.85 லட்சம் ஹிட்ஸ் என்பது நண்பர்களின் காமிக்ஸ் தீவிரத்திற்கும் ; அதற்கென அவர்கள் செலவழிக்கத் தயாராக இருக்கும் நேரத்திற்கும் ஒரு பறைசாற்றே ! இங்கு நிஜமான ஹீரோக்கள் உங்களில் ஒவ்வொருவருமே !

      Delete
  20. வெற்றி பெற்ற நண்பர்கள் கார்த்திக் சோமலிங்காவிற்கும் , சூப்பர் விஜய்க்கும் வாழ்த்துக்கள். சூப்பர் விஜயும் பெங்களூர் தானே ?

    ReplyDelete
    Replies
    1. பெங்களூரில் உள்ள பழனிக்காரன்...

      வாழ்த்துகளுக்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி

      Delete
  21. To: Editor,

    100ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். இது ஒரு எண்ணிக்கையே. இன்னும் பல பதிவுகள் பலமடங்கில் வரட்டும்.

    முன்னட்டையில் சிங்கத்தாருக்கு மீண்டும் இடம் வழங்கியமைக்கு நன்றி. கடந்த ஆண்டு மலரில் ('நியூ லுக் ஸ்பெஷல்') அவரை கழற்றிவிட்ட செயல் தந்த வேதனை இப்போதுதான் சற்று குறைந்திருக்கிறது. இனிவரும் வருடங்களில் இதுவே தொடரவேண்டும்!

    தீபாவளி ஸ்பெஷலாக ஏதாவது ஒரு 100 ரூபா இதழே வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், டெக்ஸ் இன் பட்டாசுகளோடு கொண்டாடப் போகிறோம் தீபாவளியை என்பது எதிர்பாரா மகிழ்ச்சி.

    நண்பர் கார்த்திக் மற்றும் விஜய் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். கார்த்திக் சம்மதம் தெரிவித்தால், நீங்கள் விரும்பினால், இந்தத் தொடருக்கு மொழிபெயர்ப்பு செய்யும் வாய்ப்பை முழுமையாக அவருக்கே வழங்கலாமே? (மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழங்கும் சன்மானத்தை அவருக்கு வழங்கி). இது, வெளியே கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கும் பல திறமையாளர்கள் இந்தப் பயணத்தில் கைகோர்க்க ஊக்குவிப்பாக இருக்குமல்லவா? அடுத்த போட்டி எப்போது? என்பது எமது அடுத்த எதிர்பார்ப்பு.

    உங்கள் தளத்தில் நண்பர்களுக்கும் எழுத வாய்ப்பளிப்பது மகிழ்ச்சி. ஏற்கனவே தாங்கள் பதிவிடாத எழுத்துக்களை நண்பர்கள் இந்தத் தளத்துக்கென பிரத்தியேகமாக எழுதவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

    ReplyDelete
    Replies
    1. Podiyan : //நண்பர் கார்த்திக் மற்றும் விஜய் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். கார்த்திக் சம்மதம் தெரிவித்தால், நீங்கள் விரும்பினால், இந்தத் தொடருக்கு மொழிபெயர்ப்பு செய்யும் வாய்ப்பை முழுமையாக அவருக்கே வழங்கலாமே? //

      இம்மாத தாமதத்தை ஈடு செய்யும் பொருட்டு "மனதில் மிருகம் வேண்டும்" அச்சுக் கோர்ப்பெல்லாம் முடிந்த தருவாயில் உள்ளது ! Maybe some other day ; some other title !

      Delete
    2. இந்த வார்த்தைகள் நம்பிக்கை தருகின்றன!

      Delete
  22. Dear Editor, Congratulations! for your 100th Post.

    All New Special - covers are Fantastic. Super.

    Congratulations! to Karthik Somalinga & Super Vijay.

    Excited about the news of "Tex Willer special" for Deepavali!

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள்
    எடிட்டருக்கு - 100 வது பதிவுக்காக
    எடிட்டருக்கு - பதிவுகளை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் அளவுக்கு எழுதுவதற்காக
    கார்த்திக் - மொழிபெயர்ப்பு போட்டியில் முதலிடம் பிடித்ததற்காக
    விஜய் - மொழிபெயர்ப்பு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்ததற்காக

    ஆவலுடன், ஆல் நியூ ஸ்பெஷல்காக வெயிட்டிங்...

    ReplyDelete
    Replies
    1. RAMG75 :// எடிட்டருக்கு - பதிவுகளை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் அளவுக்கு எழுதுவதற்காக//

      நன்றிகள் !! சந்தோஷங்களைப் பரிமாறும் போது, பணிகள் சுலபமாவது இயற்கை தானே ?

      Delete
  24. டெக்ஸ் கொஞ்சம் ஓவர் டோசாகப்போவது போல் [ எனக்கு ] தோன்றுகிறது......[ அளவுக்கு மிஞ்சினால்..........] டெக்ஸின் புதிய கதைகள் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதே உண்மை.......இப்போதும் ஒன்றும் கை மீறிவிடவில்லை......'' மின்னும் மரணம் '' ப்ளாக் அன்ட் வைட்டிலாவது[ஒரே தொகுப்பாக ] வெளியிடலாமே?

    ReplyDelete
    Replies
    1. சிவ.சரவணக்குமார் : நிறைய முறைகள் ஆங்காங்கே நான் பதிவிட்டிருக்கக் கூடிய கருத்தே இது என்ற போதிலும்,here I go again : ஒரு குறிப்பிட்ட களம் ; சுருக்கமான நாயகர்கள் குழு ; எல்லைகள் தாண்ட இயலா கட்டுப்பாடுகள் - இவற்றுக்குள் 630+ படைப்புகளை உருவாக்கும் போது அவை அனைத்துமே சூப்பர் ஹிட் அடிக்க வாய்ப்புகள் குறைவு தானே ? ஒவ்வொரு டெக்ஸ் கதையும் ஒரு டிராகன் நகரமாய் ; ஒரு கார்சனின் கடந்த காலமாய் அமைந்திட்டால் தான் நாமும் exclusive ஆக TEX -க்கென ஒரு தனி இதழை வெளியிட்டிட மாட்டோமா - என்ன ?

      மின்னும் மரணமும் ஜொலிக்க ஒரு நாள் புலரும் ; காத்திருப்போமே !

      Delete
    2. // மின்னும் மரணமும் ஜொலிக்க ஒரு நாள் புலரும் ; காத்திருப்போமே !//

      Yes Sir, We are waiting ....

      Delete
  25. My hearty wishes for your 100th Post sir :). Tex Willer special for Diwali !!! What a pleasant surprise!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!. Thanks for making us as happy as always :)

    ReplyDelete
    Replies
    1. Giridharan V : Many thanks Giri ! Happiness is courtesy TEX ; my part is in easing his travels from Arizona to Tamilnadu !

      Delete
  26. காத்திருந்தது வீண்போகவில்லை! தீபாவளிக்கு இரண்டு டெக்ஸ் வில்லர் கதைகளை தரப்போகும் ஆசிரியருக்கு பல கோடி நன்றிகள்! KBT வின்னர் கார்த்திக் மற்றும் ரன்னர் சூப்பர் விஜய் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள்! ஆல் நியூ ஸ்பெஷல் டிசைன் அட்டகாசம்! Keep rocking சார்!

    ReplyDelete
    Replies
    1. WillerFan@RajaG : நன்றிகள் நிஜமாய்த் தேவையல்லவே நண்பரே ; நண்பர்களே ! உங்கள் பணத்திற்கான பொருளை வழங்குவது என் கடமை தானே !

      Delete
    2. //நண்பர்களே ! உங்கள் பணத்திற்கான பொருளை வழங்குவது என் கடமை தானே !//
      நீங்கள் தருவது எங்கள் பணத்திற்கான பொருள் மட்டும் அல்ல.விலைமதிக்க முடியாத ஒரு "காமிக்ஸ் புதையல்",சார்.

      Delete
  27. Deepavali with texwiller super vijayan sir i am waiting

    ReplyDelete
  28. தங்களின் 100 அவது பதிவு பிரமாதம்..
    டெக்ஸ் வில்லர் ஸ்பெஷல் -- தீபாவளி மலர் சந்தோஷ மிகுதியில் நான்...
    கார்த்திக் வாழ்த்துகள் !!

    ReplyDelete
    Replies
    1. awaiting to know the surprise for Tex willer fans too... Seminoles cover art is one of my favourite sir... மிரட்டலான அட்டைபடம் அது....

      Delete
    2. Modesty Blaise : Yes - வித்தியாசமான அட்டைப்படம் !! நம் இதழையும் அலங்கரிக்கப் போவது ஒரிஜினல் சித்திரமே - வண்ண சேர்க்கைகளோடு !

      Delete
  29. vijayan sir

    diwalikku verum tex mattuma
    diwalkikku pattasu mattum podavae podadu
    pudu dressum sweetum kattayam vendum

    meaning atleast 200rs book podunga diwali special sollittu adae 100rs epdinga boss


    current cover is excellent only back cover "indha idhazil idam perum kadaikal ivai" konjam nerudal- stating the obvious

    ReplyDelete
    Replies
    1. Sathya ://back cover "indha idhazil idam perum kadaikal ivai" konjam nerudal- stating the obvious//

      ANSன் previews ; நமது சமீபத்திய திட்டமிடல்கள் - இவற்றை அறிந்திரா புது வாசகர்களும் இந்த இதழை பார்க்கும் போது புரிந்திட வேண்டும் அல்லவா ? இப்போதெல்லாம் ஆங்காங்கே கேள்விப்பட்டு - பெரியதொரு இடைவெளிக்குப் பின்னே நமது இதழ்களுக்கு enquiry அனுப்பும் வாசக நண்பர்களின் பட்டியல் மெதுவாய்க் கூடிக் கொண்டே செல்கிறது !

      Delete
  30. நண்பர் கார்த்திக் சோமலிங்காவிற்கும், சூப்பர் விஜய்க்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  31. My Soulful Greetings for the 100th Post Sir!

    ReplyDelete
  32. நூறாவது பதிவில் முதலாவதாக வந்த ஸ்டீல் க்ளா! அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. நான் 100ல் பதிவில் 51 comment

    ReplyDelete
  34. வூவ் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் தலைவர் டெக்ஸ் வாழ்க!!!!! நன்றி சார்

    ReplyDelete
  35. // "சிங்கத்தின் சிறு வயதில்" பகுதியைத் தொகுப்பாய் வெளியிட நினைப்பதை விட, இங்கு இந்த 4.75+ லட்சப் பார்வைகள் நல்கியுள்ள எண்ணிலடங்கா சந்தோஷத் தருணங்களை ; நகைச்சுவை மேளாக்களை ; ஒரு புத்தகம் ஆக்கிடும் பட்சத்தில் - surefire ஹிட் ஆகுமென்பதில் ஐயமேது ?// ஆனாலும் "சிங்கத்தின் சிறு வயதில்" தொகுப்பு வர வேண்டும் சார். (30வது ஆண்டு மலருடன்?! ) வாய்ப்பு உண்டா,சார்?

    ReplyDelete
    Replies
    1. Siva Subramanian : சிங்கத்தின் பயணம் இன்னும் தொலை தூரம் உள்ளது ; அது பாட்டிற்கு உலவட்டுமே - இப்போதைக்காவது !

      Delete
    2. பதிலுக்கு நன்றிகள்,விஜயன் சார்.
      ''உங்கள் விருப்பம் எனக்கான ஆணை " சார்,
      நீங்களே "சிங்கத்தின் சிறுவயதில் " பற்றிய அறிவிப்பு செய்யும் வரை காத்திருப்பேன்,சார்.(எவ்வளோ நாள் ஆனாலும்.
      (சிங்கத்தின் சிறுவயதில் -உங்களின் முதல் பிரான்க்பார்ட் அனுபவம் எனக்கு மிகவும் பிடித்தது.)

      Delete
  36. டியர் எடிட்டர்,

    * நூறாவது பதிவிற்கு நூறு வாழ்த்துக்கள்!

    * இந்த தீபாவளிக்கு ஒரு 'தீபாவளிமலர்' என்றாலே எங்களுக்கு உற்சாகம் பிய்த்துக்கொள்ளும்; அதுவும் இரண்டு டெக்ஸ் கதைகள் ஒன்றாக எனும்போது உற்சாகத்தில் ஒரு குத்தாட்டம் போட வேண்டும்போலிருந்தது! (இந்தப் பதிவை படித்தபோது என் முகத்தில் பல்பு எரிந்ததாக ஆபீஸில் என் சக நண்பர்கள் சொன்னார்கள்!). நிஜமாகவே 'அந்த' சைஸில் டெக்ஸ்வில்லரை காணப்போவதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு! கொஞ்சம் தாமதமானாலும் சொன்னதை நிறைவேற்றிக்காட்டிய உங்களுக்கு நன்றிகள் பல! 'அதில்' புரளும்போதெல்லாம் உங்களை நன்றியுடன் நினைத்துக்கொள்வேன்! :)

    * சமயோஜிதமாக யோசித்து, +6ஐ துள்ளவைக்கும் தீபாவளி மலராக மாற்றியதற்கு ஒரு சபாஷ்! எல்லா தரப்பினரையும் திருப்திபடுத்திடும் ஒரு இதழாக இது அமைந்திடுமென்பதில் சந்தேகமேயில்லை!

    * ANS அட்டைப்படம் கலக்கலாக வந்திருக்கிறது. நேரில் பார்க்கும்போது அந்த சிவப்பு நிறப் பின்னணி நிச்சயம் உள்ளத்தை அள்ளிடும் என்பதில் சந்தேகமில்லை!

    மொத்தத்தில் இந்த 100 வது பதிவு, தீபாவளி எப்போது வருமென்று காலாண்டரைப் புரட்ட வைத்திருக்கிறது! :)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : //இந்த 100 வது பதிவு, தீபாவளி எப்போது வருமென்று காலாண்டரைப் புரட்ட வைத்திருக்கிறது! :)//

      எங்கள் நகர நாள்காட்டிகளும், எங்கள் ஊர் பட்டாசுகளும் பங்கேற்கும் தீபாவளியில் ஏதோ நம்மால் ஆனதொரு சிறு பங்கு என்று வைத்துக் கொள்ளுங்களேன் :-)

      Delete
  37. KBT-2வில் வெற்றி வாகை சூடியிருக்கும் நண்பர்கள் கார்த்திக் மற்றும் சூப்பர் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  38. //நீதியின் நிழலில்" + "மரண தேசம் மெக்சிகோ"//
    அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க......உய்ய்ய்ய்ய்ய் ...........விஷ்ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ......டகர டகர டகர டகர......யே.........ஏ அஜக்..... ஏ அஜக்........ஏ அஜக் (வேர்க்க விறுவிறுக்க ஆடுகிறேனாக்கும் )

    ReplyDelete
    Replies
    1. இல்லை......முழிச்சிகிட்டேன்ன் ன் ன் ன் ன் ன் ............யாஹூ ......தலைவா நன்றி தலைவா .......

      Delete
    2. @ ரவி கிருஷ்ணா

      உங்களது இந்த உற்சாகக் கூவல்கள் அனைவரது கொண்டாட்டத்தையும் இருமடங்காக்குகின்றன! :)

      அட்ராசக்கை! அட்ராசக்கை!

      Delete
    3. Ravi Krishnan : சூப்பர்மேன் குத்தாட்டம் போடுவதை இப்போது தான் உலகமே பார்த்திருக்கும் :-)

      Delete
  39. // ரயில் பயணத்தின் போது தலைக்குள் ஓடிய சிந்தனைகளுள் -"அவ்வப்போது நான் காணாமல் போகிடும் தருணங்களில் இந்தப் பக்கத்தில் ஒரு சோம்பல் நிலவாதிருக்க என்ன செய்யலாம் ? " என்ற எண்ணமும் சேர்த்தி ! நான் 'லீவு போட்டிடும்' வேளைகளில் மாத்திரம் உங்களில் ஒவ்வொருவராய் turns எடுத்துக் கொண்டு இங்கு எழுதினால் எவ்விதமிருக்கும் ? காமிக்ஸ் பற்றிய தம் அனுபவங்கள் ; படித்து ரசித்த (வேற்று மொழிப் படைப்புகளாக இருப்பினும் ) காமிக்ஸ்கள் பற்றி எழுதினால் - தொடர்ச்சியாய் எனது புராணங்களையே படித்து அயர்ச்சியை சந்திக்கும் நண்பர்களுக்குமொரு சின்ன மாற்றமாக இருந்திட வாய்ப்பாகுமே ? What say guys ? Worth a try ? // காத்திருந்து படிப்பதும் ஒரு சுகம் தான்.
    // தொடர்ச்சியாய் எனது புராணங்களையே படித்து அயர்ச்சியை சந்திக்கும் நண்பர்களுக்குமொரு சின்ன மாற்றமாக இருந்திட வாய்ப்பாகுமே?/ / உங்கள் எழுத்துக்கள் எனக்கு அயர்ச்சியை ஒருபோதும் தந்ததில்லை,சார். நீங்களே தொடர வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @ Editor : உண்மை சார், இது பல கலவரங்கள் வெடிக்க வகை செய்யும்.. உங்கள் பதிவுகளை காத்திருந்து படிப்பதே காமிக்ஸ் படிப்பது போல் ஒரு சூப்பர் அனுபவம்.

      நாங்கள் காத்திருக்க தயார் , ஆனால் வாரம் ஒரு பதிவு, அதிகபட்சம் 10 நாட்களுக்கு ஒன்றாவது இருக்க வேண்டும்.

      Delete
  40. தினமும் ஒரு, நூறாவது பதிவு வர கூடாதா, டெக்ஸ் விசிறிகள் ஆகிய என்னை போன்ற்வர்களுக்கு அருமையான அறிவிப்பு, உங்களுடைய முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    \\நம்பர்கள் தராத பரிவை நண்பர்கள் தொடர்ச்சியாய் வெவ்வேறு ரூபங்களில் காட்டி வருவதே நாம் வாங்கி வந்த வரம் போலும்\\

    ரொம்ப கனமான வார்த்தைகள் சார், hats of to you

    ReplyDelete
    Replies
    1. Mahesh : தினமும் விசேஷங்களோடு பொழுதுகள் புலர்ந்தால் அவற்றின் ஈர்ப்பு குன்றிடும் தானே ?! பட்ஜெட்டும் அநியாயத்துக்குத் துண்டு விழத் துவங்கிடும் ! Joking apart - thanks a ton !

      Delete
  41. பதிவை மூன்று முறை படித்து விட்டேன். ஆனாலும் என்ன பதிவது என்று தான் எனக்கு புரியவில்லை. பத்தோடு பதினொன்றாக பதியவும் என் மனம் ஒப்பவில்லை. பதிவை பற்றி பதியா விட்டால் என் தூக்கத்திற்கு பரலோக பயணம் நிச்சயமாகி விடும். எதுவுமே பதியா விட்டால் அந்த தூக்கமே என் எழுத்துக்கும் பழகிவிடும். காரணம்;

    1. நீங்கள் எதை எழுதினாலும் என்னுள் ஒரு ஆத்ம திருப்தி உண்டாகி விடுகிறது.
    2. தங்களின் எந்த அறிவிப்பும் எனக்கு ஏமாற்றத்தை உணரச் செய்வதில்லை.
    3. தங்களின் பதிவுகளில் குறையென எதுவும் நான் உணர முடிவதில்லை.
    4. நிறையெனும் நிறைவை சொல்ல வார்த்தைகள் கிடைப்பதில்லை.
    5. பால்யம் வாலிபம் ஆகிவிட்டதால் உணர்ச்சி பிரவாகம் வார்த்தைகளாக உருமாற மறுக்கின்றன.

    ஆனால் ஒன்று, பதிவிடவே தடுமாற வைக்கும் அளவிற்கு உங்களின் நூறாவது பதிவு அமைந்து உள்ளதை பார்க்கும் போது கடந்த 6 நாட்களாக தங்களின் சிந்தனையும் தூக்கத்தை தொலைத்து விட்டிருக்கும் என்பதை உணரமுடிகிறது, உண்மைதானே சார்..?!

    ReplyDelete
    Replies
    1. I agree..this one is an emotional epic...from our beloved editor...i m overwhelmed....

      Delete
    2. மிஸ்டர் மரமண்டை ; AHMEDBASHA TK : இங்கு எல்லாப் புகழும் இறைவனுக்கு மாத்திரமன்றி - அவர் நமக்குக் காட்டியுள்ள காமிக்ஸ் எனும் புதையலுக்கே ! இந்தக் கணமும் சரி ; இந்த ஒன்றரையாண்டுக் காலமும் சரி - நம்மை ஜீவனோடு தொடரச் செய்வது "COMICS" எனும் அந்த காந்த சக்தியே !

      இது நிச்சயமாய் அவையடக்கத்தின் வெளிப்பாடல்ல guys - சத்தியமான வார்த்தைகள் !

      Delete
  42. > நூறாவது பதிவிற்கு எடிட்டருக்கு வாழ்த்துக்கள் !

    > லயன் காமிக்ஸ் 29 வது ஆண்டு மலர் ALL NEW ஸ்பெஷல் க்கு வாழ்த்துக்கள் !

    > KPT 2 வெற்றி பெற்ற நண்பர் கார்த்திக் சோமலிங்காவிற்கு வாழ்த்துக்கள் !

    > நண்பர் சூப்பர் விஜய்க்கும் வாழ்த்துக்கள் !

    > நூறாவது பதிவில் முதலாவதாக வந்த நண்பர் ஸ்டீல் க்ளா அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

    > தீபாவளி மலர் க்கு டெக்ஸ் ஐ தேர்ந்தெடுத்ததுக்கு நன்றிகள் !

    ReplyDelete
    Replies
    1. P.Karthikeyan : அரசியல் மேடையில் ஒரு வாழ்த்து வாசிப்பைக் கேட்ட உணர்வு !! :-)

      Delete
  43. //நம் நெடுநாள் காமிக்ஸ் நண்பரும் , இங்கு சமீபத்திய வருகையாளருமான பிரான்சிலிருக்கும் திருச்செல்வம் ப்ரபாநாத் - பிரான்சில் வசிக்கும் தமிழர்களிடையே நமது இதழ்களை அறிமுகம் செய்திடும் பொருட்டு முயற்சிகளைத் துவக்கியுள்ளார் ! தலை சுற்றச் செய்யும் air-mail கட்டணங்களையும் செலுத்தி நம்மிடமுள்ள சமீபத்திய இதழ்கள் அத்தனையிலும் ஒரு சிறியளவுப் பிரதிகளைத் தருவித்துள்ளார் நண்பர் ! Let's wish him good luck//

    நல்லவைகள் நாம் வேண்டுவதன் மூலம் நமக்கு நடப்பதில்லை. தன்னலமற்ற நல்ல சிந்தனைகளும் கடவுளின் கருணையின்றி நமக்கு தோன்றுவதில்லை. அப்படி ஒரு சிந்தனை நமக்கும் தோன்றும் பட்சத்தில் நாம் கடவுளுக்கு மிக அருகில் நிற்கும் பெரும் புண்ணியத்தை பெற்றவர்களாகின்றோம். அதனாலேயே நம்மையும் இறைவன் சில நற்செயலுக்காக நம்மை தேர்ந்தெடுக்கிறார். அதன்படி செயல்படவும் வாய்ப்பளிக்கிறார். தன்னலமற்ற சேவையை நம்முள் ஊக்குவிக்கிறார்.

    அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை, கடவுளின் பேரன்பை பெற்று விட்ட அன்பராக, இவ்வலைத்தள புதிய நண்பராக அவதாரம் கொண்டுள்ள நண்பர் திருச்செல்வம் ப்ரபாநாத் - பிரான்ஸ் அவர்களுக்கு மரியாதை செய்கிறேன்..!!

    நாம் நடக்கும் நல்ல பாதை கடவுளால் நமக்கு காட்டப்படுகின்றன. நாம் செய்யும் நற்செயல்கள் முன் ஜென்ம புண்ணியத்தால் சாத்தியமாகின்றன. நம்மிடத்தில் தோன்றும் நந்தவனங்கள் நமக்காகவே வாசம் வீசுகின்றன. உண்மையில் அவைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்ட விஷயங்களே. அதனால் நாம் கடவுளின் அன்புக்கு பாத்திரமானவர்களே. அதனால் நாம் செய்யும் நற்செயல் வெற்றியை தவிர வேறெதையும் ருசிப்பதில்லை.

    ஆதலினால் ஆசிரியர் திரு விஜயன் அவர்களையும் மற்றும் திருச்செல்வம் ப்ரபாநாத் - பிரான்ஸ் அவர்களையும் வாழ்த்தி வணங்குகிறேன்..!

    ReplyDelete
  44. நூறாவது பதிவிற்கும் . . வென்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் . .

    ReplyDelete
  45. 100 வது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள் சார்.
    இறுதியாக "அந்த" அளவில் டெக்ஸ் கதை தருவதற்கு நன்றிகள்.

    எனக்கு மிகவும் பிடித்த தீபாவளி மலர் டெக்ஸின் நள்ளிரவு வேட்டை தான்.
    சமீபத்தில் நண்பர் ஒருவரின் கருணையால் அந்த குண்டு புத்தகத்தை படிக்கு வாய்ப்பு கிடைத்தது.

    KBT2 வில் வெற்றி பெற்ற கார்த்திக் மற்றும் விஜய் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Krishna VV : "நள்ளிரவு வேட்டை " எனக்குமொரு favorite !

      Delete
  46. KBT போட்டியில் வெற்றி பெற்ற கார்த்திக் சோமலிங்காவிற்கும், சூப்பர் விஜய்க்கும் வாழ்த்துக்கள்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு B & W Special - வரவேற்கிறேன். Using the +6 subscription for Diwali special is a great idea.

    ANS - Green Manor மிகவும் எதிர்பார்கிறேன்

    திருச்செல்வம் ப்ரபாநாத்,
    Congrats and Best wishes on your journey to make our comics available to France Tamil people. I live in USA, will be glad if you share your plan or experience in how you are going to do this.I have been thinking about it myself to do in USA but i don't know what's the best way to reach out - Should i sell it or give it away for free or rent it etc..

    If you want to keep it private please email me @karthikeyan.veeravel@gmail.com

    ReplyDelete
  47. KBT-2வில் வெற்றி வாகை சூடியிருக்கும் நண்பர்கள் கார்த்திக் மற்றும் சூப்பர் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  48. ரயில் பயணத்தின் போது தலைக்குள் ஓடிய சிந்தனைகளுள் -"அவ்வப்போது நான் காணாமல் போகிடும் தருணங்களில் இந்தப் பக்கத்தில் ஒரு சோம்பல் நிலவாதிருக்க என்ன செய்யலாம் ? " என்ற எண்ணமும் சேர்த்தி ! நான் 'லீவு போட்டிடும்' வேளைகளில் மாத்திரம் உங்களில் ஒவ்வொருவராய் turns எடுத்துக் கொண்டு இங்கு எழுதினால் எவ்விதமிருக்கும் ? காமிக்ஸ் பற்றிய தம் அனுபவங்கள் ; படித்து ரசித்த (வேற்று மொழிப் படைப்புகளாக இருப்பினும் ) காமிக்ஸ்கள் பற்றி எழுதினால் - தொடர்ச்சியாய் எனது புராணங்களையே படித்து அயர்ச்சியை சந்திக்கும் நண்பர்களுக்குமொரு சின்ன மாற்றமாக இருந்திட வாய்ப்பாகுமே ?

    முதலாவதாக ஈரோடு விஜய் எழுதினால் எப்படி இருக்கும்?
    ( பூனையின் சிறு வயதில்?!)
    சும்மா தமாசு.

    ReplyDelete
    Replies
    1. COMICSPRIYAN@SALEM.AMARNATH : //( பூனையின் சிறு வயதில்?!) //

      :-)

      Delete
  49. 1987 தீபாவளி ரிப்ரின்ட்100 +டெக்ஸ் 100=200.இது உங்களால் முடியும் சார் ப்ளீஸ் சார்

    ReplyDelete
  50. 1987 தீபாவளி ரிப்ரின்ட்100 +டெக்ஸ் 100=200.இது உங்களால் முடியும் சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார்

    ReplyDelete
    Replies
    1. Guru Rajendran : இங்குள்ள நம் நண்பர்களில் பலரிடம் 1987 தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் நிச்சயம் இருக்கும் ; நீங்கள் படித்திருக்கா பட்சத்தில், அவர்களில் யாரையாவது சந்திக்க முடிந்தால் நிச்சயமாகப் படித்து விட்டுத் திரும்ப ஒப்படைக்க அனுமதிப்பார்கள் ! ஒரு இதழைப் படித்த திருப்தியோடு, ஒரு புது ஆயுட்கால நண்பரையும் சம்பாதித்த திருப்தியை அது நிச்சயம் தருமே !

      Delete
    2. 1987 மலர் பலரிடம் இல்லை ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது ....
      இன்றைய தினத்தில் காசு கூட நண்பர்கள் தந்துடுவாங்க ...ஆனால் காமிக்ஸ் நோ சான்ஸ் ........நண்பர்கள் என்ன சொல்ரேல்........
      அம்பியை அந்நியனா மாத்திடாதிங்க சார்.

      Delete
  51. விஜயன் சார், காமிக்ஸ் உலகில் ப்ளாக் ஆரம்பித்து 18 மாதம்களில் 100-வது பதிவு என்பது ஒரு சாதனை என்பது மறுக்க முடியாத உண்மை! இன்று 100 என்பது வரும் காலம்களில் 1000, 100000, 10000000 என உயர்ந்து மேலும் பல சாதனைகளை காமிக்ஸ் உலகில் படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!

    தீபாவளி மலர் பற்றி தங்களின் கம்ப்யூட்டர் முளை-இல் ஓடிய சிந்தனைகளை எழுதிய விதம் அருமை! இந்த வருடம் முதல் தீபாவளியை "லைன்" தீபாவளி என கொண்டாடும் படி காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரயும் அன்புடன் கேட்டு கொள்கிறேன் :-)

    ReplyDelete
  52. விஜயன் சார்,
    "இந்தாண்டு டெக்ஸ் சற்றே ஓவர்டோஸ் ' என்ற mind voice ஒலித்திடும் நண்பர்களுக்கு : 2014-ல் இரவுக் கழுகார் 2 அல்லது 3 கதைகளில் மாத்திரமே தலை காட்டுவார் ! )" --->
    இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்! டெக்ஸ் நமது குடும்பத்தில் ஒருவர் மேலும் அசைக்க முடியாத வாசகர் "வங்கியை" வைத்துள்ளார் எனவே டெக்ஸ் கதை 3 மாதத்திற்கு ஒன்று வெளிவரும்படி பார்த்து கொள்ளும்கள் :-)

    ReplyDelete
    Replies
    1. அப்படியே வரிக்கு வரி நானும் வழி மொழிகிறேன்!

      Delete
    2. Parani from Bangalore : // டெக்ஸ் நமது குடும்பத்தில் ஒருவர் மேலும் அசைக்க முடியாத வாசகர் "வங்கியை" வைத்துள்ளார் //

      நீங்கள் பாட்டிற்கு டெக்ஸ் "வங்கி" வைத்திருக்கிறார் என்று சொல்லிப் போட, 'என்ன வட்டிக்கு லோன் தருவாரென்று' யாராச்சும் விசாரிக்கப் போகிறார்கள் !

      Delete
    3. சென்ற வருடம் இதே போல் எல்லோரும் டைகரை தலையில் தூக்கிவைத்து ஆடினோம், இப்போ ஆள் அட்ரசே காணோம்.. (மின்னும் மரணம் கூக்குரல்கள் தவிர்த்து)
      அது போல் டெக்ஸ்ம் ஆகிடாம..

      Delete
    4. விஜயன் சார், இப்படி எல்லாம் ஜோக் அடித்து தப்பிக்க பார்க்காதிங்க ;-)

      Delete
  53. விஜயன் சார்,
    "சிங்கத்தின் சிறு வயதில்" e-book ஆக வெளி ஈடுவது சாத்தியமா? அவ்வாறு செய்யும் போது உங்களுக்கு வேலை குறையும் மேலும் நண்பர்களின் ஆசையும் நிறைவு பெறும். "சிங்கத்தின் சிறு வயதில்" e-book வேண்டும் நண்பர்கள் நமது பிளாக் மூலம் ஒரு குறைந்த கட்டணம் செலுத்தி டவுன்லோட் (Download) செய்யும் வசதியை ஏற்பாடு செய்தால் என்ன?
    இதில் சில குறைபாடு இருந்தாலும் நாம் முயற்சித்து பார்ப்பது நலம் மேலும் இதனால் உள்ள நன்மைகள் அதிகம்!

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : "சி.சி.வ." ஒரு மலரும் நினைவுகள் - சற்றே உரக்க ! அவ்வளவே ! தனியாக இதனை ஒரு இதழாக்கும் நோக்கம் துவக்கிய போதும் சரி ; தொடர்ந்திடும் போது சரி, நிச்சயமாய் என்னுள்ளே எழுந்தது கிடையாது !

      புதிதாய் நமது இதழ்களுக்கு வாசகர்களாகிடும் இன்றைய தலைமுறையினருக்கு இதனோடு relate செய்வதில் நிச்சயம் சிரமமிருக்கும் ! சுற்றிச் சுற்றி 'நான் frankfurt போனேன் ; லண்டன் போனேன் ; அதைச் செய்தேன் - இதைச் செய்தேன்' என்ற தம்பட்ட பாணி தூக்கலாய்த் தோன்றினால் நிச்சயம் பிழை அவர்களின் மேலிருக்காது ! ஜாலியாய் 2 பக்கங்கள் நம் இதழினில் என்ற quota இதற்கு நிச்சயம் போதுமே !

      இதற்கெனப் பணம் செலுத்திப் படிப்பது என்பதெல்லாம் - டூ டூ மச் :-)

      Delete

      Delete
    2. அப்ப ப்ரீ (free) இன்னு சொல்லிடுங்க .... நம்ப தாராபுரம் பரணிதரன் ரெடியா இருக்காரு :-)

      Delete
  54. விஜயன் சார்,
    "பூத வேட்டை" மற்றும் "குற்ற திருவிழா" கதைகள் இரு வேறு விதமான காகிதத்தில் வெளிவர என்ன காரணம்?, இனி வரும் காலம்களில் ஒரே மாதிரியான காகிதத்தில் வெளிஈடும்கள்!

    நிலவொளியில் ஒரு நரபலி புத்தக சைஸ் சுத்தமா பிடிக்கவில்லை! நமது காமிக்ஸ்-ல் கருப்பு வெள்ளை கதைளுக்கு ஒரு ஸ்டாண்டர்ட் (Standard Size) சைஸ் மற்றும் கலர் கதைகளுக்கு ஒரு ஸ்டாண்டர்ட் சைஸ் (Standard Size) என இருக்கவேண்டும்! நிலவொளியில் ஒரு நரபலி இரண்டும் கெட்டான் சைஸ்ல் வந்தது ஏற்று கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : பள்ளி நோட்டுக்களின் தயாரிப்புக்கு பயனாகும் காகித ரகம் அது ! தினமுமொரு விலை ; தினமொரு மில்லின் சரக்கு என்பதே மார்கெட் இப்போதெல்லாம் ! மொத்தமாய் வாங்கி கையிருப்பு வைக்கச் சாத்தியமாவதில்லை என்பதால் தேவைக்குக் கொள்முதல் செய்யும் போது, கிடைக்கும்சரக்கையே வாங்குவது தவிர்க்க இயலா சங்கடம் !

      Delete
  55. பொதுவாக இந்த எண்ணை தாங்கி வரும் பதிவுகள், அதன் வாசக நண்பர்களுக்கு நன்றி கூறுவதாகவே அமையும். இங்கு அவ்வாறில்லாமல், இத்தலத்திற்கு வருகை புரியும் வாசக நண்பர்களை இன்ப அதிர்ச்சியில், ஆழ்த்துவதாய் அமைந்துவிட்டது......


    அந்த சைஸ் , இதழ் அதுவும் எங்கள் இரவுக்கழுகார்....அருமை எடி சார். மேலும் இந்த மாத இதழ் அட்டைபடம் அருமையாக உள்ளது. நாளை புத்தகம் கைக்கு வந்துடன் கச்சேரியை வைத்துக்கொள்ள வேண்டும்.

    // இரண்டாம் உலக யுத்தத்தின் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் வாழ்க்கைப் பயணத்தில் யுத்தமெனும் பிரளயம் கொண்டு வரும் மாற்றங்களை// ஒரு வேலை இது யூதர்களை பற்றியதா??? ஆவல் அதிகரிக்கிறது.....

    ReplyDelete
    Replies
    1. சிம்பா : //ஒரு வேலை இது யூதர்களை பற்றியதா???//

      Nopes..gypsy இன மக்களின் வாழ்க்கை பற்றியதொரு சித்தரிப்பு !

      Delete
  56. வெற்றிபெற்ற நண்பர்களுக்கும் எங்களையும் எழுத வாய்ப்பளிக்கும் எடிட்டருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  57. // எங்கோ சறுக்கி நண்பர்கள் சிலரை சங்கடப்படுத்தியுள்ளேன் என்பதை ஒத்துக் கொள்வதே பிரதானம் என்று தோன்றுகிறது ! எவரையும் காயப்படுத்திடும் எண்ணம் நிச்சயம் எனக்கில்லை ; எனினும் இந்த இணையப் பயணத்தில் என்னால் மனவருத்தம் கொள்ள நேரிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது unconditional apologies உரித்தாகட்டுமே ! விலகி நின்றாலும் நாம் ஒரு நாளும் விரோதிகளல்ல என்பதையும் சரி ; காலத்தால் ஆற்றிட இயலாக் காயங்களே கிடையாதென்பதையும் ஒரு போதும் நான் மறவேன் !//

    வணக்கம் நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப்பின் வந்திருக்கிறேன் மேலேயுள்ள ஆசிரியரின் வரிகள் என்னை இங்கு இழுத்து வந்துள்ளது என்றால் அது மிகையல்ல. எனக்கு ஒரு புரிந்து கொள்ள முடியாத ஆச்சரியம் இன்னும் என்னைவிட்டு இன்னும் அகலவில்லை...நேற்று மதியம் ஈரோடு விஜய்யிடம் செல்லில் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது நான் அவரிடம் சொன்னேன் 'நான் போனமாதம் வாங்கி விற்ற புத்தகங்களில் டெக்ஸ் மட்டுமே அதிக அளவில் விற்றுள்ளது இது போல் டெக்ஸ் ஐ அதிக அளவில் வெளியிடச்சொன்னால் பரவாயில்லை காமிக்ஸ் விற்பனையும் அதிகரிக்கும் மேலும் இந்த மாதமும் 10 புத்தகம் வாங்கவேண்டும்'. என்று சொன்னேன். 'அப்படியானால் அதை நீங்களே பிளாக்கிள் பதிவு செய்யுங்கள்' என்றார். 'இல்லை நான் கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டேன் எனக்கு பிளாக்கிற்கு வர யோசிக்கனும்' என்றேன் 'பரவாயில்லை நாம் அனைவரும் ஒரே குடும்பம் போல் தானே மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாமல் வாருங்கள்' என்றார் நானும் சரி என்று சொல்லிவைத்தேன். இன்று ஆசிரியரின் பதிவை படித்த எனக்கு ஒரே அதிர்ச்சி. நான் சொல்ல நினைத்ததை (டெக்ஸ்) தீபாவளிக்கு நிறைவேற்றப்போகிறார் என்பதும் பிளாக்கிற்கு வரலாமா என்ற யோசனை ஆசிரியரின் பதிவே என்னை இழுத்தும் வந்துவிட்டது. ஆசிரியரின் இந்த வரிகள் என் மனதை லேசாக்கிவிட்டது என்ன நண்பர்களே இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் நான் செய்தது சரிதானே?

    ReplyDelete
    Replies
    1. Karnan L : நல்வரவு ! ஒரு பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி காமிக்ஸ் என்ற அந்த 4 எழுத்து வார்த்தைக்கு நம் வாழ்வில் எத்தனை பெரியதொரு இடமுள்ளது என்பதை உங்களின் பதிவு உணர்த்துகிறது !

      TEX எப்போதுமே வசூலில் குறை வைக்கும் ஹீரோவல்லவே !

      Delete
  58. ஆசிரியரின் இந்த பதிவு ஈரோடு விஜய்க்கும் ஆச்சரியமாகத்தனிருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் பேக் பாஸ்!

      Delete
    2. நல்வரவு கர்ணன்ஜி!

      உங்களது வார்த்தைகள் நெகிழ்ச்சியளிக்கின்றன! என் வேண்டுகோளுக்கும் மதிப்பளித்தமைக்கு நன்றி!

      இத்தளத்திற்கு passive visitorஆக மட்டுமே இருந்துவரும்/ எப்போதாவது 'லைட்டாக' எட்டிப்பார்கும் நண்பர்களும் இத்தருணத்திலாவது தங்கள் வருகையை இங்கே பதிவு செய்தால் நிச்சயம் மகிழ்வேன்!

      Delete
    3. வாங்க நண்பரே! இங்கே விரட்டினாலும் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் நண்பர்களே அதிகம். காரணம்: காமிக்ஸ் மீதான அதீத விருப்பு!!!

      Delete
    4. Podiyan : காந்தத்தைச் சுற்றி நிற்கும் இரும்புத் தாதுக்களன்றோ நாம் எல்லோருமே ?!!

      Delete
  59. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகளை உரித்தாக்குகிறேன்

      Delete
  60. Statistics மீது Obsession கொண்ட நாடு நமது. தோற்கிற மேட்ச்சில் கூட சச்சின் சதமடித்தால் அதைக்கண்டு மனதை தேற்றிக்கொண்டு ஆறுதல் அடைவது நம்மில் பெரும்பான்மையினரின் இயல்பே, இதில் நானும் விதிவிலக்கல்ல.

    அப்படி இருக்கையில் ஜெயிக்கிற மேட்ச்சில் சிக்சர் அடித்து சதமடிக்கும் சச்சின் போல இந்த பதிவு அட்டகாசமாக அமைந்து விட்டதற்கு காரணம் தீபாவளி மலரைப்பற்றிய அறிவிப்பே.

    இப்போதைய நூறுக்கும், சச்சின்-சேவாக் போல இருநூறுக்கும், ப்ரையன் லாராவைப்போல முன்னூறுக்கும், நானூறுக்கும் முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

    முதல் பதிவிலும் முதல் கமெண்ட்டும், நூறாவது பதிவில் நூறாவது கமெண்ட்டும் என்னுடையது தான் என்பதில் ஒரு ஈகோ கலந்த மகிழ்ச்சி (Sorry Again for Some Personal Stats).

    வாழ்த்துக்கள் சார்.

    இந்த வெற்றிக்கு காரணமாக இருக்கும் உங்கள் குழுவினருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நன்றிகள் பல.


    வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், இவர்கள் இல்லையென்றால் (இந்த ஆர்ப்பாட்டமான வரவேற்ப்பு இல்லையெனில்) கண்டிப்பாக இவ்வளவு சீக்கிரம் நீங்கள் சதமடிக்க முடியவே முடியாது.

    முக்கியமான நன்றி உங்கள் ஊர் மின்சார வாரியத்திற்கு, அவர்கள் இல்லையெனில் ஹும்,வேண்டாம் விடுங்கள்.

    பின்குறிப்பு: கேட்டால் கிடைக்கும் என்பது ஒவ்வொரு முறையும் உங்களால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு வருவதை நண்பர்கள் கவனிக்கிறார்களா? அப்படி எனில் தொடர்ந்து தட்டினால் மூடப்பட்ட பல கதவுகள் திறக்கும் போல இருக்கிறதே? Guys, ப்ளீஸ் நோட் இட்.

    பின் பின்குறிப்பு: இந்த தளத்தில் உங்கள் கருத்துக்களை மட்டுமே படிக்க ஆசை. உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் இணைய இணைப்பு என்பது கைகூடிய ஒன்று என இருக்கும் இந்த நாட்களில் அதிகபட்சமாக ஒரு வாரம் உங்கள் பதிவில்லாமல் காத்திருப்பதில் தவறில்லையே?

    அதைப்போலவே நண்பர்களில் பெரும்பான்மையினர் தனித்தனியாக வலைரோஜாக்களை வைத்து பூந்தோட்டம் கட்டி வருகின்றனர். அப்படி இருக்கையில் இங்கேயுமா?

    அப்படி வேறு ஒருவர் தான் இங்கே வந்து உங்களுக்கு பதிலாக பதிவிட வேண்டுமென்றால் அது ஏன் நமது ஜூனியர் எடிட்டராக இருக்கக் கூடாது? What Say, Folks?

    நீங்கள் வெளி நாட்டில் இருக்கும்பட்ச்ச்சதில் வருடத்திற்கு ஒன்றோ, இரண்டோ பதிவுகள் ஜூனியர் எடீட்டரின் கைவண்ணத்தில் வெளிவரலாமே? குறிப்பாக நிலவொளியில் ஒரு நரபலி கதையை அவர் தேர்ந்தெடுத்த கதை பற்றி அவர் எழுதலாமே? (பின்னாளில் சின்ன சிங்கத்தின் சிறு வயதில் தொகுக்க இப்போதே ஆரம்பித்து விடலாமே?)

    பின் பின் பின்குறிப்பு: சம்பந்தமே இல்லாமல் இன்று பலரும் கேலண்டரை எடுத்து தீபாவளி எந்த மாதம் என்று கவனித்திருப்பார்கள். அந்த தருணத்தில் தான் நமது இரவுக் கழுகார் ஜெயிக்கிறார். ஆமாம் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. //அப்படி வேறு ஒருவர் தான் இங்கே வந்து உங்களுக்கு பதிலாக பதிவிட வேண்டுமென்றால் அது ஏன் நமது ஜூனியர் எடிட்டராக இருக்கக் கூடாது? What Say, Folks?//
      சரியாக சொன்னீர்கள்!

      Delete
    2. King Viswa : முதல் பதிவு ; 50-வது பதிவு ; 100-வது பதிவு என - 'மைல்கல் பதிவுகளில் மாத்திரமே பங்கேற்கும் பாணியை மூட்டை கட்டலாமே ? :-)

      //வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், இவர்கள் இல்லையென்றால் (இந்த ஆர்ப்பாட்டமான வரவேற்ப்பு இல்லையெனில்) கண்டிப்பாக இவ்வளவு சீக்கிரம் நீங்கள் சதமடிக்க முடியவே முடியாது. //

      நிச்சயமாக ! தட்ட இரு கரங்கள் இல்லாவிடின் ஓசை ஏது ?

      //இந்த வெற்றிக்கு காரணமாக இருக்கும் உங்கள் குழுவினருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நன்றிகள் பல.//

      அத்தோடு - இந்த காமிக்ஸ் வலைப்பதிவு உலகிற்கொரு அங்கீகாரம் உண்டென்பதை எனக்கு உணர்த்திய "பிள்ளையார்சுளிக்காரர்" நண்பர் muthufan அவர்களுக்கும்; பின் தொடர்ந்து தீவிரமாய் எழுதிய "tamilcomicsulaga " உங்களுக்கும்; "comicology " ரபீக்குக்கும் இங்கு நன்றி சொல்வதும் அவசியமே ! இன்று தொடர்கிறீர்களோ, இல்லையோ - எனக்கொரு முன்மாதிரிப் பாதை போட்டுத் தந்த சகாயம் எப்போதுமே என் நினைவுகளிலிருந்து விலக வாய்ப்பில்லை !

      //அப்படி வேறு ஒருவர் தான் இங்கே வந்து உங்களுக்கு பதிலாக பதிவிட வேண்டுமென்றால் அது ஏன் நமது ஜூனியர் எடிட்டராக இருக்கக் கூடாது? What Say, Folks?//

      சீனியர் எடிட்டரும் "உள்ளேன் அய்யா " சொல்லத் தயாராக உள்ள போது - ஜூனியரின் நாட்கள் புலர இன்னமும் அவகாசம் தருவோமே !

      Delete
  61. டியர் விஜயன் சார்,

    தீபாவளி மலர் என்ற nostalgic flavor தரும் உவகை ஒரு புறம் இருக்க, அதை இரு மடங்காக்கிடும் வகையில் வழக்கமான காக்டெய்ல் ஸ்பெஷலாக இல்லாது ஒரே நாயகரை, அதுவும் (இரண்டு கால் ரக) டெக்ஸை களமிறக்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது! :)

    //நமது காமிக்ஸ் 'கலாச்சாரங்களுக்கோ' ; செல்லும் பாதையில் ஒரு நூறு புது சிந்தனைகளுக்கு இடமளிக்கும் பாங்குகளுக்கோ - நம்மவர்கள் பரிச்சயமற்றவர்கள் என்பதால்//
    எங்களுக்கே ஒரேடியாக குழப்புகிறது சார்! :) அதிலும் புதிதாக சந்தா கட்டலாம் என்று நினைப்பவர்களை நினைத்தாலே பாவமாக இருக்கிறது! ரெகுலர் ட்ராக்கில் ₹1200+கூரியர் (12*₹100 புதிய வெளியீடுகள்!) + ஆப்ஷனல் ட்ராக்கில் ஒரு ₹1000 அல்லது ₹1500 (+கூரியர்) வசூலித்து - அதை சூப்பர் ஸ்பெஷல் இதழ்கள், மறுபதிப்புக்கள், திடீர் (புதிய) வெளியீடுகள் இவை அனைவற்றிக்காகவும் என்று பொதுவாக நிர்ணயிப்பது மூலமாகவோ அல்லது இதை விட சிறப்பான வேறு வழிமுறைகளைக் கையாண்டோ சந்தா முறையை எளிமைப் படுத்தினால் நன்றாக இருக்கும்!

    //இந்த இதழின் highlight ஆக டெக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு pleasant surprise -ம் காத்துள்ளது//
    அதாவது இத்தாலி சென்று வர ஏர்-டிக்கட், மற்றும் பயண செலவுக்காக சில ஆயிரம் அமெரிக்க டாலர்கள் - அப்படித்தானே! :)

    ANS (வர வர நீளமான ஹிந்திப் பட பெயர்களை சுருக்குற மாதிரி ஷார்ட்டா பேச ஆரம்பிச்சுட்டோமோ?!) முன்னட்டை பளிச்சென்று உள்ளது! சிவப்புத் திரைக்கு பதிலாக பச்சைத் திரையை தொங்க விட்டிருந்தால், க்ரீன் மேனர் என்ற பெயருக்கு பொருத்தமாக... சரி சரி வேண்டாம் விடுங்கள்! :)

    //முதலிடத்தை இம்முறை 'லபக்'கிய கார்த்திக்கிற்கு காங்க்ரத்ஸ்//
    ஆஹா, என்னை காங்கிரஸில் எல்லாம் இழுத்து விடாதீர்கள் சார்; இப்போதுதான் காமிக்ஸ் அரசியலில் சிக்கிக் கொள்ளாமல் விலகி நிம்மதியாக இருக்கிறேன்! ;) பார்சிலோனா ரயில் என்பதால் இத்தோடு தப்பினேன்; இதுவே நம்ம ஊர் ரயிலில் பயணிக்கும் போது நீங்கள் டைப்பி இருந்தால், நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது! :)

    //நான் 'லீவு போட்டிடும்' வேளைகளில் மாத்திரம் உங்களில் ஒவ்வொருவராய் turns எடுத்துக் கொண்டு இங்கு எழுதினால் எவ்விதமிருக்கும் ?//
    வீண் குழப்பங்களை விளைவிக்கும்! :) லயன்-முத்து அதிகாரபூர்வ தளமான இதில் மற்றவர்களை எழுத வைப்பது சற்று நெருடலாகன விஷயமாகத் தெரிகிறது! ஆனால், மற்ற நண்பர்களின் விருப்பத்தின் பேரில் இதை நீங்கள் செயல் படுத்த முடிவெடுக்கும் பட்சத்தில் Guest Author permission யாருக்கு அளிப்பது என்று முன்னதாக தீர்மானித்து அவரை Non-admin team member ஆக தற்காலிகமாக நியமிக்கலாம்! அவருடைய போஸ்ட் வெளியானதும் இந்த permission-ஐ நீக்கி விடலாம்! Non-admin என்பதால் உங்களுடைய மற்ற போஸ்ட்களின் மீதோ அல்லது பின்னூட்டங்களின் மீதோ கை வைக்க முடியாது!
    https://support.google.com/blogger/answer/41440?hl=en

    //ஒரு 'சின்னப் புள்ளைங்க ' சமாச்சாரத்தின் பின்னே இத்தனை அனுபவங்கள் கதம்பமாய்ப் புனைந்திருப்பதை யார் தான் நம்புவர்//
    என்னது 'சின்ன புள்ளைங்க' சமாச்சாரமா?! நீங்களே இப்படி சொல்லலாமா?!

    இந்த குதூகலமான காமிக்ஸ் பயணத்தில் இன்னமும் அதிகம் பேரை பங்கேற்கச் செய்து, தமிழ் காமிக்ஸை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளை மேற்கொண்டு, மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்! :)

    ReplyDelete
    Replies
    1. ////இந்த இதழின் highlight ஆக டெக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு pleasant surprise -ம் காத்துள்ளது//
      அதாவது இத்தாலி சென்று வர ஏர்-டிக்கட், மற்றும் பயண செலவுக்காக சில ஆயிரம் அமெரிக்க டாலர்கள் - அப்படித்தானே! :)//

      ஈரோடு விஜய் ஏற்கனவே airport -ல் waiting !!

      // சந்தா முறையை எளிமைப் படுத்தினால் நன்றாக இருக்கும்!//

      நிச்சயமாக ! சென்றாண்டு இரண்டாவது இன்னிங்க்ஸ் துவக்கிய போது - 4/5 வண்ண இதழ்களை வெளியிட்டிருந்தாலும்,'what to expect ? ; what not to expect ?' என்று ஒரு தெளிவான கணிப்பு சாத்தியமாகிடவில்லை ! இந்தாண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவின் விற்பனையே 2013 முயற்சிகளை ஓசைஇன்றி kickstart செய்தது என்று சொல்லலாம் ! So -சென்றாண்டே சந்தா தொகை நிர்ணயம் செய்த போது தெளிவான ஒரு அணுகுமுறை சாத்தியப்படவில்லை !

      தவிர ஓராண்டுக்கு முதலீடு ; புத்தக ஸ்டாக் சமாளிப்பு ; கதைகளின் அட்வான்ஸ் கொள்முதல் இவற்றையெல்லாம் கணிக்க ; balance செய்ய என்ன தேவை என்பதை 2013 தான் எனக்கு பாடம் புகட்டி வருகின்றது. கற்றதை 2014 வரும் போது தெளிவாய் செயலாக்க முயற்சிப்பேன் !

      Delete
  62. KBT2:
    வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்! :)

    ReplyDelete
  63. 'அந்த' சைஸ் என்பது 'குட்டி தலையணை' சைஸ்-தானே நண்பர்களே!

    ReplyDelete
  64. விஜயன் சார்,

    நூறாவது பதிவின் அதிரடி அறிவிப்பு அட்டகாசம் . டெக்ஸ் வில்லர் எத்தனை முறை வந்தாலும் எனக்கு சந்தோஷம்தான்.
    இந்தப்பதிவில் நீங்கள் வெளியிட்டுள்ள டெக்ஸ் படம் அருமையாக இருக்கிறது. ஐரோப்பிய கிராமத்தின் (அமெரிக்க கிராமமாக நினைக்க முடியவில்லை !) நடுவே கடை வீதியில் குதிரை மீது டெக்ஸ் வரும் அழகே அழகு! இது போன்று கிராமங்கள் இன்னும் இங்கு இருக்கின்றன என்பது ஒரு கொசுறு தகவல்.

    KBT வெற்றி பெற்ற கார்த்திக் அவர்களுக்கும் runner up ல் வந்த சூப்பர் விஜய் அவர்களுக்கம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Radja from France : //டெக்ஸ் வில்லர் எத்தனை முறை வந்தாலும் எனக்கு சந்தோஷம்தான்.//

      இங்கு நீங்கள் எத்தனை முறை வந்தாலும் அனைவருக்கும் சந்தோஷமே !

      Delete
  65. டியர் எடிட்டர் ,
    காமிக்ஸ் காதலராகவும் , எடிட்டர் ஆகவும் 29 ஆண்டுகள் மற்றும் வலைதளத்தில் 100 பதிவுகள் என்பதையும் தாண்டி எங்களை போன்ற வாசக நெஞ்சங்களை தொடர்ந்து தனது எழுத்து ஆற்றலாலும் சேவையாலும் மகிழ்விக்கும் உங்களை எப்படி பாராட்டினாலும் தகும் . 100 வது பதிவு என்பது எமக்கு கூடுதல் சந்தோசம் தர வேண்டும் என்று நீங்கள் நிறையவே மெனக்கெட்டிருப்பது உணர முடிகிறது சார்.
    டெக்ஸ் வில்லர் இன் இரு கதைகள் தீபாவளி மலராக? சூப்பர் சார்.
    All New Special அட்டை வர்ணங்கள் பிரமாதம் ! அதிலும் நம்ம சிங்கம் தனது பிறந்த நாள் கொண்டாடும் லோகோ அருமையாக வந்துள்ளது . K B T S -2 போட்டியில் வெற்றியாளர்கள் கார்த்திக் சோமலிங்கா , சூப்பர் விஜய் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள் .
    எடிட்டர் சார் ,
    எனது சிறிய முயற்சிக்கு தங்களின் வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . தங்களின் நம்பிக்கையினை என்றென்றும் காப்பாற்றுவேன் . பிரான்ஸ் இல் வாழும் தமிழர்களில் என்னை போன்ற காமிக்ஸ் காதலர்களை நமது காமிக்ஸ் சென்றடைய சிறு முயற்சி .வாழ்த்துக்கள் தெரிவித்த புருனோ பிரேசில் , ஸ்டீல் கிளா , மிஸ்டர் மரமண்டை , V .Karthikeyan ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் . விரைவில் எமது வாசகர் எண்ணிக்கை பிரான்ஸ் இலிருந்து கூடும் Friends . Its a Promiss.
    எடிட்டர் சார், சிறு விண்ணப்பம் . நீண்ட நாட்கள் வலைப்பூ பக்கம் வராமல் இருந்து விடாதீர்கள் . தங்களின் பணி சிரமமானது என்று நானறிவேன் . இல்லாது விடில் அச்சு பணியை தொடக்கிவிட்டு , பார்சிலோன செல்லும் பிசாசு வேக ரயில் பெட்டியில் இருந்தபடி இவ்வாறு பதிடும் பொறுப்பும் அக்கறையும் எமக்கானது என்றும் உணர முடிகிறது .தங்களின் எழுத்தாற்றல் எம்மை கட்டி போட்டு விட்டது. மேலும் 1987 தீபாவளி மலர் மறுபதிப்பு ப்ளீஸ் ?

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : சந்தோஷங்களை இரட்டிப்பாக்குவதிலும் ; சங்கடங்களை பாதியாய் பகிர்ந்திடுவதிலும் நண்பர்களின் பங்கு இமாலய அளவிலானது தானே ?!

      இதில் நான் 'மெனக்கெடும்' பிரச்னைகள் நிச்சயமாய்க் கிடையாது !

      Delete
  66. அட்ராசக்கன்னானாம்.....நம்ம தலைவரு பதிவாலயே கர்ணனை இழுத்துகிட்டு வந்துட்டார்பா....உய் ய் ....உய்....வாங்க கர்ணன்....கவச குண்டலத்தோடும், வீரத்தோடும் வீர நடை போடுங்கள் சூரியனின் மகனே.....மனமார வரவேற்கிறேன் .....விஷ்..........விஷ்

    ReplyDelete
  67. அதிரடி கதைகள் தொடர்ச்சியாக அணிவகுக்க காத்திருக்கும் வேளையில், கார்ட்டூன் நாயகர்களுக்கும் உரிய வாய்ப்பளிக்க (ரீ-பிரிண்ட் மட்டுமல்லாது புதிய கதைகளோடு) வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Podiyan : காத்திருப்புக்கு பலனுண்டு - விரைவிலேயே !

      Delete
  68. இதோ நான் கொரியர் ஆஃபிசுக்கு கிளம்புகிறேன்,

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : நானே இன்றிரவு தான் பார்த்திடப் போகிறேன் ALL NEW SPECIAL -ஐ !

      Delete
  69. dear எடி, 100 வது பதிவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இதை அப்படியெ 200,300,400,500 வது பதிவு கலுக்கு வைத்து கொள்ளூங்கள்! DEEPAVALI TEX மலருக்கு SURPRISE GIFT என்ன சார்? DEEPAVALI துப்பாக்கியா:)
    2014 ல் வெளீ வரும் 3 TEX கதை களூம் 2 அல்லது 3 கதைகளாக இனைந்த மலர்களாக வந்தால் HAPPY !
    AND FINALLY இன்னா செய்தார்கும்,,,,,,,,,,,,,,,,, TAKE CARE GUYS...........
    DEAR EDI, OLD COMICS அனியாய RATEல் விற்க படுவது தாங்கள் அறீயாதது அல்ல! தயவு செய்து ERODE BOOK FAIR ல் DETECTIVE SPECIAL& MINI LIAN முதல் 4 இதல் கள் வெளீயிட்டால் SUPER!!!!!!!!!!!!!!!!
    TAKE CARE GUYS& TAKA CARE EDI    ReplyDelete
  70. 'சிங்கத்தின் சிறுவயதில்' பற்றி பல நண்பர்களும் வேண்டுகோள்விடுத்துவருவதால், அண்மையில் மதியில்லா மந்திரியின் 2வது மொழிபெயர்ப்பை இணைப்பாக கொடுத்த அளவில் சிறிய புத்தகமாக்கி, தீபாவளி ஸ்பெஷலுடன் இணைத்து கொடுத்தால் என்ன? (வாங்க நண்பர்களே! ஆதரவு கொடுங்க...)

    ReplyDelete
    Replies
    1. @ பொடியன்

      30 ஆண்டுகால பயணத்தை நினைவுகூர்ந்திடும் விதமாக 'சிங்கத்தின் சிறுவயதில்' 30 எபிசோடுகளுடன் இலவச இணைப்பாக அடுத்தவருட 'மெகா ஆண்டு மலருடன்' வருவதே சிறப்பாக இருந்திடும் என்பது என் கருத்து!

      தீபாவளிக்கு கண்டிப்பாக ஒரு இணைப்பு வேண்டுமென்றால் நாம் ஏன் 'காவல் கழுகை' கேட்கக்கூடாது?
      ( 'காவல் கழுகை' ஃபில்லர் பேஜாகப் போட்டாலும் சரிதான், ஹி ஹி!)

      Delete
  71. டியர் விஜயன் சார்,

    வாசகர்களை காமிக்ஸ் பற்றி எழுத ஊக்குவிப்பது ஆரோக்கியமான ஒன்றுதான்! அனுபவப் பகிர்வுகள், புத்தக விமர்சனங்கள், nostalgic நினைவுகள் என்ற அம்சங்களைத் தாண்டி பலரின் இந்த எழுத்துக்களும், தொடர்ச்சியான பங்களிப்பும், காமிக்ஸ் விழிப்புணர்வு பரவலாக மற்றவர்களையும் சென்றடைய நிச்சயம் உதவும்!

    வலைச்சரம் என்ற வலைப்பூ பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்! வாரம் ஒரு வலைப்பதிவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டு, அவரின் பார்வையில் அவருக்கு பிடித்தமான மற்ற பதிவர்களைப் பற்றிய அறிமுகங்கள் அவ்வாரம் முழுதும் வெளியாகும்!

    இதே பாணியில் நீங்கள் புதிதாக ஒரு காமிக்ஸ் வலைப்பூ துவங்கி வாரம் ஒன்று அல்லது இரண்டு வாசகர்களை காமிக்ஸ் பற்றி (மட்டும்) பதிவிடச் செய்தால் என்ன?! இது ஒரு பொதுவான தளம் என்பதால் தமிழ்மணத்தில் இணைப்பதிலும் சிக்கல் இருக்காது! வலைச்சரத்தின் நோக்கம் தமிழ் பதிவர்களை பலருக்கும் அறிமுகப் படுத்துவது; நமது நோக்கம் தமிழ் காமிக்ஸை அறிமுகப்படுத்துவது! :)

    உங்களிடம் ஏற்கனவே இருக்கும் கூகிள் ப்ளாக்கர் அக்கௌன்ட் மூலமாக இன்னொரு வலைப்பூவை எளிதாக தொடக்கலாம்!

    முன்னதாக அதற்கு நமது வலைப்பூ பெயரை ஒட்டி,
    http://lion-muthucomics-fans.blogspot.com
    என்றோ,

    அல்லது பொதுவாக,
    http://tamilcomicsfans.blogspot.com
    என்றோ,

    அல்லது இதற்காக ஒரு பெயர் வைப்பு போட்டியையோ நடத்திடலாம்! :)

    அதே போல நீங்களே ஒரு Facebook group-ஐ விரைவில் துவக்கினால், மற்ற தமிழ் காமிக்ஸ் குழுமங்களில் இணைய விருப்பமின்றி பார்வையாளர்களாக மட்டும் விலகி நிற்கும் வாசகர்கள் இந்த புதிய களத்திலும் active-ஆக பங்கேற்கும் வாய்ப்பு கிட்டும் அல்லவா? உடனடி தகவல் பரிமாற்றத்திற்கு ஈமெயில், சாட் போன்ற basic platform-களைத் தாண்டி, Social Network-களில் இணைய உலக அடியெடுத்து வைத்து சில வருடங்கள் கழிந்து விட்டது!

    Group அமைத்து அதை சமாளிப்பது கடினம் என்று நீங்கள் கருதினால் லயன்-முத்து காமிக்ஸ்காக ஒரு Official Page ஆவது துவக்குங்கள்! அதை வெறும் தகவல் அறிவிப்புப் பலகையாக மட்டும் உபயோகித்திடலாம்! அங்கே நமது வாசகர்கள் போடும் ஒவ்வொரு லைக்கும் அந்த பக்கத்தை பலருக்கும் கொண்டு சேர்க்கும்!

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : சமூக வலைத்தளங்களின்றி இன்று செயல்படுவது கடினமே என்பது கண்கூடு ! அதே சமயம், என்னால் hands on கவனம் செலுத்த இயலா முயற்சிகளில் ஈடுபடுவதிலும் எனக்கு பிரியமில்லை !

      பதில் கிட்டிடா மின்னஞ்சல்களும் ; கவனிக்கப்படா பதிவுகளும் உதாசீனத்தின் அறிகுறிகள் என்று கருதப்படும் வேளையினில்,நான் புதிதாக Facebook -ல் ஒரு பக்கத்தையும் துவங்கி,சரியாக கவனம் செலுத்த இயலாது போயின் நண்பர்களை சம்பாதிக்கும் வேகத்தை விட இழக்கும் வாய்ப்புகளே அதிகமாகிடுமோ என்ற பயமே என்னுள் !

      நானொரு முழு நேர பத்திரிகையாளனாக இருந்திடும் பட்சத்தில் நிச்சயம் உங்கள் suggestions அனைத்தையும் செயல்படுத்த முனைந்திருப்பேன் ; ஆனால் அங்கும் இங்குமாய் கால் பதித்து நிற்கும் வேளையில், இன்னுமொரு வலைப்பூவை manage செய்வது நிச்சயம் என் சக்திக்கு மீறிய செயல் !

      நீங்கள் கடைசியாய் தெரிவித்த 'Official Page - தகவல் அறிவிப்புப் பலகையாய் மாத்திரமே ' என்பது சுலபமான செயலாய்த் தோன்றுகிறது ! ஜூனியரிடம் அந்தப் பொறுப்பை விரைவில் ஒப்படைத்தால் போச்சு ! Many thanks for the suggestions !

      Delete
    2. ஜூனியர் எடிட்டருக்கு இந்த தகவல்கள் ஏற்கனவே தெரிந்திராத பட்சத்தில்:

      Page-ஐ create செய்த பிறகு கீழ்க்கண்ட security settings அமைப்பது அவசியம்!
      Edit Page Settings:
      - Posting Ability: Uncheck "Everyone can post" & "Every one can add photos and videos" to timeline
      - Posting Visibility: Hide posts by others on my page timeline
      - Messages: Uncheck "Allow people to contact my Page privately"
      - Tagging Ability: Uncheck "Allow others to tag photos"
      - Profanity Filter: Strong
      - Replies: Uncheck "Allow replies to comments"

      //பதில் கிட்டிடா மின்னஞ்சல்களும் ; கவனிக்கப்படா பதிவுகளும் உதாசீனத்தின் அறிகுறிகள் என்று கருதப்படும் வேளையினில்//
      அப்படியே அந்த Page-இன் முகப்பில் (About பகுதியில்) - இது அறிவிப்புகளுக்கான பக்கம் மட்டுமே! மேற்படி தகவல்களுக்கு எமது வலைப்பூவையோ அல்லது அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளுங்கள்!' என்ற ரீதியில் ஒரு அறிவிப்பையும் இணைத்து விடுங்கள்!!

      Delete
    3. Karthik Somalinga & Vijayan Sir, I believe we have our official web site and some time back it got expired I guess. We need to renew the same.

      Delete
    4. @Parani:
      நான் குறிப்பிட்டது வெப்சைட் பற்றி அல்ல, Official Facebook Page நிறுவுவது பற்றி! நமது வெப்சைட் எடிட்டரின் வலைப்பூ பதிவுகளின் exact mirror copy-ஆக அற்புதமாக வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது! :) :)
      http://www.lion-muthucomics.com/

      Delete
    5. Karthik Somalinga @ Thanks for the clarification Karthik!

      Delete
  72. 456 பக்கங்கள்… டெக்ஸின் இரு சாகசங்களுடன்… ஆரவாரப்படுத்தி விட்டது தீபாவளி மலர் அறிவிப்பு… ஆனால் இதே போன்று டைகருக்கும் பொங்கல் மலர்(அ) கோடை மலர் 500 பக்கத்தில் வெளியிட வேண்டுமென டைகர் ரசிகர் மன்ற சார்பில் கேட்டுக் கொள்கிறேன்…!

    ReplyDelete
    Replies
    1. krishna babu : ஆஹா....!!

      Delete
    2. // டைகருக்கும் பொங்கல் மலர்(அ) கோடை மலர் 500 பக்கத்தில் //

      இதனுடன் சேர்த்து மின்னும் மரணமும் :)

      Delete
  73. டியர் எடிட்டர் 100வது பதிவுக்க என் வாழ்த்துக்கள். உங்கள் தந்​தையால் ​தொடங்கப்பட்ட இந்த காமிக்ஸ் பயனம் உங்களால் பிறகு உங்கள் ​தமயன் அவரது வழித்​தோன்றல்கள் என (லக்கி லூக்கின் பயணம் ​போல) ​வெற்றிகரமாக முடியா பயணமாக அ​மைய எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மர்ம வீரன் பில்லி : வாழ்த்துக்களுக்கு நன்றிகள் !! இம்முனையில் நாங்கள் தொடர்வதை விட, மறு முனையிலும் காமிக்ஸ் நேசம் தழைப்பதும் தலையாய அவசியமே ! உங்கள் வீட்டு வாண்டுகளை பொறுமையாய் காமிக்ஸ் எனும் உலகினுள் இழுத்து வர முயற்சி செய்யுங்கள் நண்பரே !

      Delete
    2. நிச்சயமாய் சார்! அதற்கு கல்யாணம் பன்ன ​வேண்டும் அல்லவா :)

      Delete
    3. மர்ம வீரன் பில்லி : :-)

      Delete
  74. விஜயன் சார்,
    நிலவொளியில் ஒரு நரபலி புத்தக சைஸ் சுத்தமா பிடிக்கவில்லை! நமது காமிக்ஸ்-ல் கருப்பு வெள்ளை கதைளுக்கு ஒரு ஸ்டாண்டர்ட் (Standard Size) சைஸ் மற்றும் கலர் கதைகளுக்கு ஒரு ஸ்டாண்டர்ட் சைஸ் (Standard Size) என இருக்கவேண்டும்! நிலவொளியில் ஒரு நரபலி இரண்டும் கெட்டான் சைஸ்ல் வந்தது ஏற்று கொள்ள முடியவில்லை.

    "முடிந்தால் தங்கள் கருத்துக்களை அறிய ஆவல்"

    ReplyDelete
  75. இங்கே தீபாவளி மலர் 1987 மறுபதிப்பு கேட்கும் நண்பர்களிடம் ஒரு கேள்வி.

    அந்த இதழில் வெளியான ரத்தப்படலம் முன்பே முழு கலக்ஷனாக வந்துவிட்டது. அதில் வெளிவந்த லக்கி லுக் கதையும் சமீபத்தில் வந்துவிட்டது. ஜாணி கதையான ஊடு சூனியம் வரப்போகிறது. வேறு என்ன அந்த புத்தகத்தில் இருக்கிறது என்று மறுபதிப்பு கேட்கிறீர்கள்!?

    உப்புசப்பில்லாத ஸ்பைடர் மற்றும் சூப்பர்மென் சிறுகதைக்காகவா!?

    என்னுடைய கருத்து நிறைய புதிய படைப்புகள் நம் முன்னே குவிந்து கிடக்கும்போது குறிப்பாக இந்த புத்தகத்துக்கு மறுபதிப்புக்கு என் ஆதரவு இல்லை.

    ReplyDelete
  76. விஜயன் சார், விருப்ப படுபவர்கள் "சி.சி.வ" e-book download செய்து படிக்கட்டும், அதனை e-book ஆக நீங்கள் வெளி இடுவதினால் அதற்கு என நீங்கள் அதிகம் நேரம் ஒதுக்க தேவையில்லை! e-book soft copy தயார் ஆன உடன் ஜூனியர் எடிட்டர் இடம் வெளி இடும் பொறுப்பை ஒப்படைத்துவிடுங்கள்!

    ReplyDelete
  77. @ Karthik Somalinga 9 July 2013 00:47:00 GMT+5:30
    KBT2:
    வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்! :)

    Where is the party on week-end? RT Nagar or Malleshwaram :-)

    ReplyDelete
    Replies
    1. //Where is the party//
      பார்ட்டியை MG Road - க்ரீன் மேனர் பப்பில் வச்சுக்கலாமா? உங்க செலவில்தான்...! ;)
      Let us take this offline, ஹி ஹி ஹி! :)

      Delete
    2. சென்னையில் வைத்தால் எங்களுக்கும் சௌகரியமாக இருக்குமே நண்பர்களே :)

      Delete
  78. விஜயன் சார்,
    From my earlier post:
    கடந்த 6 மாதம்களில் அதிக முறை நமது காமிக்ஸ் சென்சார் பற்றி விவாதித் உள்ளோம், அவ்வாறு சென்சார் பிரச்னை வரும் எனும் கதைகளை அடுத்த ஆண்டு (2014) முதல் நமது 6+ இதழ்களின் வரிசையில் கொண்டு வந்தால் என்ன? முக்கியமாக ஷெல்டன் மற்றும் லார்கோ கதைகள்!

    ReplyDelete
  79. வாவ் சூப்பர் நியூஸ் விஜயன் சார்

    நமது நண்பர்கள் அனைவரின் எதிர் பார்ப்பான நூறாவது பதிவில் " தீபாவளி சரவெடியை" கொளுத்தி போட்டு விட்டீர்கள்

    மேலும் மேலும் உங்களது அதிரடி பதிவுகளை எதிர் பார்க்கிறோம் சார் ;-)

    அடுத்த மாதமே தீபாவளி வந்தால் எப்படி இருக்கும் எனும் ஒரு சிறு ஆசை மனதில் எழாமல் இல்லை

    ஹ்ம்ம்ம்ம்ம் இன்னமும் நான்கு மாதங்கள் காத்திருப்பது :((
    சொல்ல மறந்துவிட்டேன் ANS கிடைத்துவிட்டது Simply Superb :))
    .

    ReplyDelete
    Replies
    1. Cibiசிபி : ANS அதற்குள்ளாகவே கிடைத்து விட்டதா ? ST கூரியர் வாழ்க !

      இதழின் அமைப்பு நன்றாக வந்துள்ளதா ?

      Delete
  80. // KAUN BANEGA TRANSLATOR - சீசன் 2" நண்பர் கார்த்திக் சோமலிங்காவின் எழுத்துக்களே ! சென்ற முறைத் தவற விட்ட முதலிடத்தை இம்முறை 'லபக்'கிய கார்த்திக்கிற்கு காங்க்ரத்ஸ் ! இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது அன்றைய சுமார் மூஞ்சி குமார் என்ற ; இன்றைய சூப்பர் விஜயும் தான் ! Congrats too vijay ! //

    மனமுவந்த வாழ்த்துக்கள் நண்பர்களே :))
    .

    ReplyDelete