நண்பர்களே,
வணக்கம். கொஞ்சம் இனிப்புகள் ; கொஞ்சம் பட்டாசுகள் ; ஊரெல்லாம் 'திடும்' 'திடும்' ஓசைகள் ; ஒரு மாறுதலுக்கு முழு நாளும் மின்சாரம் என்று இந்தாண்டுத் தீபாவளி பயணித்தது ! குடும்பத்தோடு சின்னதாய் ஒரு விடுமுறைக்கு வாய்ப்புக் கிட்டியதால் இந்த வாரம் முழுவதுமே இங்கே தலை காட்டிட இயலவில்லை ! இடைப்பட்ட நாட்களில் இங்கே நண்பர்கள் செம உற்சாகமாய் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதையும் ; நமது வலைப்பதிவின் பார்வைகளின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியதையும் ; ஒரு சில அற்புத நினைவாற்றலாளர்கள் எனது திருமணதினத்தைக் கூட நினைவு கூர்ந்திருப்பதைப் படிக்க முடிந்த போது - "நன்றி" என்ற ஒற்றைச் சொல்லிற்குள் எங்கள் உணர்வுகளை ; சந்தோஷங்களை இயன்றவரை அடக்கிட ஆற்றல் கொடுக்கக் கோருகிறோம் தமிழன்னையிடம் ! Thanks ever so much folks !
டிசம்பரில் ஜானியின் "மரணத்தின் நிசப்தம்" ரூபாய் பத்து விலையில் வரவுள்ளது ! குறைவான விலைகளில் ; கறுப்பு-வெள்ளை பாணிகளில் நாம் அத்தனை காலமாய்ப் பரிச்சயம் கொண்டிருந்த அந்தப் பயண சகாப்தத்தின் இறுதி இதழ் இதுவாகத் தானிருக்கும் ! திட்டமிட்டபடி டெக்ஸ் வில்லரின் "காவல் கழுகு" இதழை இதே பாணியில் 'சஸ்தாவாய்' வெளியிடுவதில் அதன் படைப்பாளிகளுக்கு சம்மதமில்லை. புத்தாண்டில், புது விலைகளில் ; புதுப் பொலிவுடன் டெக்ஸ் வில்லர் கதைகளை வெளியிடும் பொருட்டு அவர்களை நான் சமீபத்தில் சந்தித்த போது, இனியும் இந்தக் குறைவான தரத்தில் தங்களது டாப் ஹீரோவை படுத்தி எடுக்க வேண்டாமே என்றொரு அன்புக் கட்டளை போட்டனர் ! இத்தாலியில் ஒரு சகாப்தமாய் விளங்கும் அத்தனை பெரிய பதிப்பகம் நம்மிடம் வைக்கும் கோரிக்கையை நிராகரிக்கும் அளவிற்கு நாமொன்றும் பெரியதொரு அப்பாடக்கர் அல்ல என்பதாலும் ;பிப்ரவரியில் புது அவதாரமெடுக்கும் நம் இரவுக் கழுகை இனி ஒரிஜினலின் தரத்திலேயே ரசிப்பதும் முறையான ஏற்பாடு தான் என்று எனக்கும் மனதுக்குப்பட்டதாலும் , "காவல் கழுகு" பிறிதொரு நாளில் hi -tech அவதாரமெடுக்கும் வரை பரணில் தான் வாசம் செய்திடல் அவசியமாகிறது ! டெக்ஸ் ரசிகர்கள் 'நர நர' வென்று பல்லைக் கடிக்கும் சப்தம் கேட்டாலும், இப்போதைக்கு 'ஹி..ஹி' ..தவிர வேறு மார்க்கமில்லை எனக்கு ! Sorry guys !
NEVER BEFORE ஸ்பெஷல் இதழில் புது இணைப்பு Wayne Shelton நீங்கலாக பாக்கிக் கதைகள் தயார் நிலையில் உள்ளன என்பதே லேட்டஸ்ட் update ! நம் மின்வாரியத்தின் அசாத்தியத் தாண்டவம் இன்னும் தீர்ந்த பாடைக் காணோம் என்பதால் 16 மணி நேர மின்வெட்டை இப்போதெல்லாம் 'ஹாவ்' என்றதொரு கொட்டாவியோடே எதிர்நோக்கப் பழகி வருகின்றோம் ! NEVER BEFORE ஸ்பெஷல் என்ற பெயர் பொருத்தமோ என்னவோ -இது போன்ற மின்வெட்டுக்களையும் சரி ; இருளினுள் பணியாற்றும் பாணியையும் சரி....never before have we encountered them ! இதழின் இதர பக்கங்களை நிரப்பும் பணி இப்போது என் முன்னே ! இன்று ஓய்வில் இருந்தாலும் நம் காமிக்ஸ் முயற்சிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டு விட்ட என் தந்தையின் தலையங்கம் தான் முதற்பக்கத்தை அலங்கரிக்கப் போகின்றது. தொடரவிருப்பது நமது பணியாளர்களை உங்களுக்கு அறிமுகம் செய்திடவிருக்கும் புகைப்படப் பக்கங்கள் ! "விஜயன்" என்ற ஒற்றைப் பெயருக்குப் பின்னே ஓசையின்றி பல காலமாய்ப் பணியாற்றி வரும் நம் டீமின் முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிடவிருக்கிறேன் ! வழக்கம் போல் எனது 'காமிக்ஸ் டைம் ' பகுதி ; போஸ்ட் பாக்ஸ் ; சந்தா விபரங்கள் என்பதைத் தாண்டி இந்த landmark இதழில் உங்களது பங்களிப்பும் அவசியமென்று எனக்குப் பட்டது !
இது முழுக்க முழுக்க நமது முத்து காமிக்ஸ் கொண்டாட்டம் என்பதால் இங்கே நமது இதர வெளியீடுகள் பற்றிய சங்கதிகளை நுழைத்திடாது, exclusive ஆக முத்துவின் best பற்றிப் பேசிட சில பக்கங்கள் முதன்மைத் தேவை என்று மனதுக்குப் பட்டது ! So - முதலில் வருவது MUTHU COMICS TOP 5 இதழ்களைப் பற்றிய தேர்வு ! இது வரை வெளி வந்துள்ள நமது 316 இதழ்களில் அவரவர் ரசனைக்கேற்ப, மனம் கவர்ந்த டாப் 5 இதழ்களைத் தேர்வு செய்து அவற்றைப் பற்றிச் சுருக்கமாய் இங்கே எழுதிடலாம் ; அல்லது எனக்கு மின்னஞ்சலும் செய்திடலாம். சுவாரஸ்யமான தேர்வுகள் நமது NBS - ல் பிரசுரிக்கப்படும் ! அதற்கு முன்னே நமது இதழ்களின் முழுப் பட்டியலும் தேவை அல்லவா ? இதோ - நம் நண்பர் பாண்டிச்சேரி கலீலின் பிரமிக்கச் செய்யும் வலைப்பதிவிலிருந்து (http:/mudhalaipattalam.blogspot.in) 'லவட்டிய' லிஸ்ட் ! (நன்றிகள் கலீல் சார்!) நமது இன்றைய தலைமுறை நண்பர்களுக்கு இவற்றில் நிறைய பரிச்சயமில்லா இதழ்களாக இருந்திடுமென்பது எனக்குத் தெரியும். No worries ....நீங்கள் படித்த இதழ்களுக்குள் டாப் 5 தேர்வு செய்தும் எழுதிடலாம் !
1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி
2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி
3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி
4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி
5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்
6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி
7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்
8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி
9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ
10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி
11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்
12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ
13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி
14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்
15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ
16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி
17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்
18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ
19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி
20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ
21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்
22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி
23. கொலைக்கரம் - ஜானி நீரோ
24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ
25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும்புக்கை மாயாவி
26. தலை கேட்ட தங்கப் புதையல் - லாரன்ஸ் & டேவிட்
27. சிறைப் பறவைகள் - லாரன்ஸ் & டேவிட்
28. புதையல் வேட்டை - ரிப் கெர்பி
29. C. I .D. லாரன்ஸ் - லாரன்ஸ் & டேவிட்
30. கடத்தல் ரகசியம் - சார்லி
31. ஜானி IN லண்டன் - ஜானி நீரோ
32. கழுகு மலைக்கோட்டை - மாடஸ்டி பிளைசி
33. தங்க விரல் மர்மம் - ஜானி நீரோ
34. பனிக்கடலில் பயங்கர எரிமலை - லாரன்ஸ் & டேவிட்
35. காணாமல் போன கைதி - ஜானி நீரோ
36. ஜானி இன் ஜப்பான் - ஜானி நீரோ
37. ரோஜா மாளிகை ரகசியம் - ரிப் கெர்பி
38. ஒற்றன் வெள்ளை நரி - ஜார்ஜ்
39. குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் - சார்லி
40. மைக்ரோ அலைவரிசை -848 - ஜானி நீரோ
41. 10 டாலர் நோட்டு - ஜார்ஜ்
42. சிறை மீட்டிய சித்திரக்கதை - சார்லி
43. நெப்போலியன் பொக்கிஷம் - ஜார்ஜ்
44. கொள்ளைக்கார பிசாசு - இரும்புக்கை மாயாவி
45. மடாலய மர்மம் - காரிகன்
46. வைரஸ் - X - காரிகன்
47. ரயில் கொள்ளை - சிஸ்கோ
48. விசித்திர வேந்தன் - கில்டேர்
49. காணாமல் போன கலைப்பொக்கிஷம் - காரிகன்
50. தீவை மீட்டிய தீரன் - மிஸ்டர் பென்
51. இஸ்தான்புல் சதி - சார்லி
52. கொலை வழக்கு மர்மம் - ரிப் கெர்பி
53. பேய்த்தீவு ரகசியம் - சார்லி
54. கல் நெஞ்சன் - கில்டேர்
55. திக்குத் தெரியாத தீவில் - சார்லி
56. வெடிக்க மறந்த வெடிகுண்டு - சார்லி
57. கடலில் தூங்கிய பூதம் - காரிகன்
58. முகமூடி வேதாளன் - வேதாளர்
59. பகல் கொள்ளை - ரிப் கெர்பி
60. ஜும்போ - வேதாளர்
61. இரத்த வெறியர்கள் - சிஸ்கோ
62. பில்லி சூனியமா? பித்தலாட்டமா? - காரிகன்
63. இருளின் விலை இரண்டு கோடி - மாண்ட்ரெக்
64. மூன்று தூண் மர்மம் - ரிப் கெர்பி
65. விண்வெளி வீரன் எங்கே? - வேதாளர்
66. தீ விபத்தில் திரைப் படச்சுருள் - காரிகன்
67. விசித்திரக் கடற் கொள்ளையர் - வேதாளர்
68. பேய்க்குதிரை வீரன் - சிஸ்கோ
69. பழி வாங்கும் பாவை - காரிகன்
70. பட்லர் படுகொலை - ரிப் கெர்பி
71. மர்மத் தலைவன் - மாண்ட்ரெக்
72. ஆவியின் கீதம் - சிஸ்கோ
73. ராட்சத விலங்கு - வேதாளர்
74. பனித்தீவின் தேவதைகள் - காரிகன்
75. முகமூடிக் கள்வர்கள் - வேதாளர்
76 கள்ள நோட்டுக் கும்பல் - ரிப் கெர்பி
77. குறும்புக்கார சுறாமீன் - மாண்ட்ரெக்
78. வான்வெளி சர்க்கஸ் - காரிகன்
79. முத்திரை மோதிரம் - வேதாளர்
80. யார் குற்றவாளி? - சிஸ்கோ
81. விண்ணில் நீந்தும் சுறா - மாண்ட்ரெக்
82. பனிமலை பூதம் - காரிகன்
83. விசித்திர குரங்கு - ரிப் கெர்பி
84. வேதாளனின் சொர்க்கம் - வேதாளர்
85. முகமூடிக் கொள்ளைக்காரி - காரிகன்
86. சூனியக்காரியின் சாம்ராஜ்யம் - வேதாளர்
87. Mr. பயங்கரம் - காரிகன்
88. பிரமிட் ரகசியம் - ரிப் கெர்பி
89. கப்பல் கொள்ளையர் - வேதாளர்
90. மாண்ட்ரேக் கொள்ளைக்காரனா? - மாண்ட்ரெக்
91.கற்கோட்டை புதையல் - ரிப் கெர்பி
92. மரண வலை - காரிகன்
93. கீழ்த்திசை சூனியம் - வேதாளர்
94. காணாமல் போன வாரிசுகள் - ரிப் கெர்பி
95. விபரீத வித்தை - மாண்ட்ரெக்
96. விசித்திர மண்டலம் - காரிகன்
97. தலையில்லா கொலையாளி - இரும்புக்கை மாயாவி
98. பூ விலங்கு - வேதாளர்
99. சூரிய சாம்ராஜ்யம் - ரிப் கெர்பி
100. யார் அந்த மாயாவி - இரும்புக்கை மாயாவி
101. சர்வாதிகாரி - வேதாளர்
102. பறக்கும் தட்டு மர்மம் - காரிகன்
103. உதவிக்கு வந்த வஞ்சகன் - மாண்ட்ரெக்
104. கையெழுத்து மோசடி - ரிப் கெர்பி
105. இரண்டாவது வைரக்கல் எங்கே? - காரிகன்
106. ஆழ்கடலில் மாயாவி - இரும்புக்கை மாயாவி
107. கானகக் கள்வர்கள் - வேதாளர்
108. உலகே உன் விலை என்ன? - மாண்ட்ரெக்
109. யார் அந்த கொலையாளி - ரிப் கெர்பி
110. கூண்டில் தூங்கிய சர்வாதிகாரி - வேதாளர்
111. இராணுவ ரகசியம் - காரிகன்
112. கொலைக்கு விலை பேசும் கொடியவன் - மாண்ட்ரெக்
113. மரணக்குகை - ரிப் கெர்பி
114. பயங்கரவாதி Dr. செவன் - காரிகன்
115. நாலூகால் திருடன் - ரிப் கெர்பி
116. வழிப்பறிக் கொள்ளை - ரிப் கெர்பி
117. விபத்தில் சிக்கிய விமானம் - இரும்புக்கை மாயாவி
118. தலை நகரா? கொலை நகரா? - காரிகன்
119. மந்திர வித்தை - இரும்புக்கை மாயாவி
120. வாரிசு யார்? - ரிப் கெர்பி
121. விபரீத விளையாட்டு - ஜான் சில்வர்
122. ஒருநாள் மாப்பிள்ளை - சார்லி
123. விண்வெளி விபத்து - இரும்புக்கை மாயாவி
124. ரவுடிக்கும்பல் - ஜான் சில்வர்
125. விண்வெளி ஒற்றர்கள் - இரும்புக்கை மாயாவி
126. திகிலூட்டும் நிமிடங்கள் - லாரன்ஸ் & டேவிட்
127. யார் அந்த அதிஷ்டசாலி - சார்லி
128. சுறாமீன் வேட்டை - ஜார்ஜ்
129. துருக்கியில் ஜானி நீரோ - ஜானி நீரோ
130. சூதாடும் சீமாட்டி - டான்
131. கணவாய்க் கொள்ளையர் - ஜிம்மி
132. தவளை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி
133. ஃபார்முலா திருடர்கள் - லாரன்ஸ் & டேவிட்
134. பனியில் புதைந்த ரகசியம் - ஜார்ஜ்
135. நாடோடி ரெமி - ரெமி
136. கொலைகாரக் குள்ள நரி - இரும்புக்கை மாயாவி
137. திசை மாறிய கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்
138. களிமண் மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி
139. ஃப்ளைட்-731(மறு பதிப்பு ) - லாரன்ஸ் & டேவிட்
140. பறக்கும் பிசாசு - இரும்புக்கை மாயாவி
141. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ
142. ப்ளாக் மெயில் - இரும்புக்கை மாயாவி
143. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்
144. வான்வெளிக் கொள்ளையர் - இரும்புக்கை மாயாவி
145. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி
146. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்
147. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ
148. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்
149. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி
150. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ
151. நியூயார்க்கில் மாயாவி - இரும்புக்கை மாயாவி
152. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்
153. மாயாவிக்கோர் மாயாவி - இரும்புக்கை மாயாவி
154. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ
155. ஃபார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்
156. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி
157. இயந்திரப் படை - இரும்புக்கை மாயாவி
158. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ
159. பாம்புத் தீவு - இரும்புக்கை மாயாவி
160. தலை கேட்ட தங்கப் புதையல் - லாரன்ஸ் & டேவிட்
161. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ
162. கழுகு மலைக்கோட்டை - மாடஸ்டி பிளைசி
163. இரும்புக்கை மாயாவி - இரும்புக்கை மாயாவி
164. ஜானி IN லண்டன் - ஜானி நீரோ
165. சிறைப் பறவைகள் - லாரன்ஸ் & டேவிட்
166. கொள்ளைக்காரப் பிசாசு - இரும்புக்கை மாயாவி
167. முத்து ஸ்பெஷல் - ஜெஸ்லாங்
168. கடல் பிசாசு - லூயிஸ்
169. தலை வாங்கும் சிலை - ரோஜர் மூர்
170. மாயாவிக்கொரு சவால் - இரும்புக்கை மாயாவி
171. இரத்த இரவுகள் - ஜெஸ்லாங்
172. சைத்தான் சிறுவர்கள் - இரும்புக்கை மாயாவி
173. பயங்கரப் பனிரெண்டு - மார்ஷல்
174. ஆகாயக் கல்லறை - ஜான் சில்வர்
175. வழிப்பறிப் பிசாசு - செக்ஸ்டன் பிளேக்
176. சம்மர் ஸ்பெஷல் - ஜெஸ்லாங்
177. இரத்தப் பாதை - ஜான் சில்வர்
178. சிங்கத்தின் குகையில் - டேவிட்
179. பச்சை வானம் மர்மம் - மேடிஸன்
180. ஆழ்கடல் அதிரடி - ஜான் சில்வர்
181. கண்ணீர் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி
182. துரோகியைத் தேடி - ஜான் ஸ்டீல்
183. Mr. ஜோக்கர் - வெஸ்லேட்
184. மனித வேட்டை - ஜான் சில்வர்
185. தேவை ஒரு தோட்டா - வெஸ்லேட்
186. சார்லிக்கொரு சவால் - சார்லி
187. பிழைத்து வந்த பிணம் - ஜார்ஜ்
188. மைக்ரோ அலைவரிசை- 848 - ஜானி நீரோ
189. மரண மச்சம் - ஜார்ஜ்
190. பரலோகப் பயணம் - லாரன்ஸ் & டேவிட்
191. புயலோடு ஒரு போட்டி - இரட்டையர்கள்
192. தங்க விரல் மர்மம் - ஜானி நீரோ
193. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி
194. சிறை மீட்டிய சித்திரக்கதை - சார்லி
195. நாச அலைகள் - இரும்புக்கை மாயாவி
196. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும்புக்கை மாயாவி
197. பயந்து வந்த பயங்கரவாதி - லாரன்ஸ் & டேவிட்
198. காற்றில் கரைந்த கரன்ஸி - மாண்ட்ரெக்
199. பனியில் புதைந்த ரகசியம் - ஜார்ஜ்
200. மர்மச் சுரங்கம் - சிஸ்கோ
201. காலத்தோடு கண்ணாமூச்சி - மாண்ட்ரெக்
202. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி
203. ஊடு கொலைகள் - ஷெர்லக் ஹோம்ஸ்
204. எமனின் எண்- 8 - மாண்ட்ரெக்
205. துருக்கியில் ஜானி நீரோ - ஜானி நீரோ
206. உறை பனி மர்மம் - இரும்புக்கை மாயாவி
207. கொரில்லா வேட்டை - ஜார்ஜ்
208. இரத்த வாரிசு - சார்லி
209. திகிலூட்டும் நிமிடங்கள் - லாரன்ஸ் & டேவிட்
210. பேய்த்தீவு ரகசியம் - சார்லி
211. Mr.சில்வர் - சில்வர்
212. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி
213. தலைவாங்கும் தலைவன் - மாண்ட்ரெக்
214. திசை மாறிய சுரங்கம் - ஷெர்லக் ஹோம்ஸ்
215. கொலைகாரக் கபாலம் - ஜார்ஜ்
216. மயான மாளிகை - ஷெர்லக் ஹோம்ஸ்
217. விசித்திரக் கொள்ளையர் - மாண்ட்ரெக்
218. சிங்கத்திற்கொரு சவால் - ஜார்ஜ்
219. தலையில்லா கொலையாளி - இரும்புக்கை மாயாவி
220. பழி வாங்கும் பனி - ஜேம்ஸ்பாண்ட்
221. கொலையுதிர் காலம் - மாண்ட்ரெக்
222. ஒரு கைதியின் கதை - சார்லி
223. மோசடி மன்னன் - ஜார்ஜ்
224. கொலை வள்ளல் - ஜான் சில்வர்
225. பச்சை நரிப் படலம் - ஜெஸ்லாங்
226. நடக்கும் சிலை மர்மம் - ரோஜர்
227. நடு நிசிப் பயங்கரம் - மாண்ட்ரெக்
228. மந்திர வித்தை - இரும்புக்கை மாயாவி
229. மரணத்தின் முகம் - ஜெஸ்லாங்
230. மாண்டு போன நகரம் - ஜான் ஸ்டீல்
231. ஒரு வீரனின் கதை - பில் ஆடம்ஸ்
232. ஜானி இன் பாரிஸ் - ஜானி நீரோ
233. பாதாள பாசறை - மாண்ட்ரெக்
234. C. I. D லாரன்ஸ்(மறுபதிப்பு ) - லாரன்ஸ் & டேவிட்
235. சூதாடும் சூறாவளி - ஜேம்ஸ்பாண்ட்
236. யார் அந்த மாயாவி(மறுபதிப்பு ) - இரும்புக்கை மாயாவி
237. கல்லறையில் ஒரு கவிஞன் - ஜெஸ்லாங்
238. காணாமல் போன ஜோக்கர் - டிரேக்
239. தவளை மனிதர்கள்(மறுபதிப்பு ) - இரும்புக்கை மாயாவி
240. புயல் படலம் - டைனமைட் ரெக்ஸ்
241. ஒரு மாந்திரீகனின் கதை - டாமி
242. தங்கக் கல்லறை - 1 - கேப்டன் டைகர்
243. தங்கக் கல்லறை - 2 - கேப்டன் டைகர்
244. பனியில் ஒரு பிணம் - சி.ஐ.டி. ராபின்
245. ரவுடி ராஜ்யம் - அலெக்ஸாண்டர்
246. பென்குயின் படலம் - ஜார்ஜ்
247. நரகத்தின் நடுவில் - சி.ஐ.டி. ராபின்
248. விசித்திர வில்லன் - பெர்ரி மேஸன்
249. குற்ற வருஷம் - 2000 - ரிப்போர்ட்டர் ஜானி
250. இரும்புக்கை எத்தன் - கேப்டன் டைகர்
251. திகில் ஸ்பெஷல் - கருப்புக்கிழவி
252. ஒரு மர்ம இரவு - ஷெர்லக் ஹோம்ஸ்
253. பரலோகப் பாதை - கேப்டன் டைகர்
254. வீடியோவில் ஒரு வெடிகுண்டு - சி.ஐ.டி. ராபின்
255. மரணத்தின் நிறம் கறுப்பு - பெர்ரி மேஸன்
256. மின்னல் ஜெர்ரி - ஜெர்ரி
257. இருளின் தூதர்கள் - ரிப்போர்ட்டர் ஜானி
258. ஹாரர் ஸ்பெஷல - கருப்புக்கிழவி
259. மின்னும் மரணம் - கேப்டன் டைகர்
260. மாயக் குள்ளன் - மாண்ட்ரெக்
261. திகில் கனவு - ரிப்போர்ட்டர் ஜானி
262. மைடியர் மம்மி - சி.ஐ.டி. ராபின்
263. நள்ளிரவு நாடகம் - மாண்ட்ரெக்
264. வைர வேட்டை - சைமன்
265. சாத்தானின் சாட்சிகள் - ரிப்போர்ட்டர் ஜானி
266. உறைந்த நகரம் - ப்ரூனோ பிரேசில்
267. துரத்தும் தோட்டா - வெஸ்லேட்
268. திரில் ஸ்பெஷல் - கருப்புக்கிழவி
269. கொலை அரங்கம் - ஜான் ஸ்டீல்
270. சிலந்தியோடு சதுரங்கம் - சி.ஐ.டி. ராபின்
271. காற்றில் கறைந்த பாலர்கள் - மாண்ட்ரெக்
272. புயல் பெண் - சி.ஐ.டி. ராபின்
273. பறக்கும் பாவைப் படலம் - ஜேம்ஸ்பாண்ட்
274. சிறையில் ஒரு புயல் - கேப்டன் டைகர்
275. நிழலும் கொல்லும் - ஜேம்ஸ்பாண்ட்
276. எத்தர் கும்பல் - 8 - மாண்ட்ரெக்
277. திகில் டெலிவிஷன் - ரிப்போர்ட்டர் ஜானி
278. மரண மண் - வெஸ்லேட்
279. பழி வாங்கும் புகைப்படம் - ஜார்ஜ்
280. சிவப்புத் தலை சாகசம் - ஷெர்லக் ஹோம்ஸ்
281. பழிவாங்கும் பிசாசு - சி.ஐ.டி. ராபின்
282. டாலர் வேட்டை - ஜார்ஜ்
283. திசை திரும்பிய தோட்டா - கேப்டன் டைகர்
284. ஆழ் கடல் அதிசயம் - மாண்ட்ரெக்
285. மரண ரோஜா - ஜார்ஜ்
286. ஜன்னலோரம் ஒரு சடலம் - சி.ஐ.டி. ராபின்
287. தோட்டா தலைநகரம் - கேப்டன் டைகர்
288. கொலைப் பொக்கிஷம் - சி.ஐ.டி. ராபின்
289. மீண்டும் முதலைகள் - ப்ரூனோ பிரேசில்
290. யானைக் கல்லறை - ரேஞ்சர் ஜோ
291. குள்ள நரிகளின் இரவு - ப்ரூனோ பிரேசில்
292. அமானுஷ்ய அலைவரிசை - மார்ட்டின்
293. சரித்திரத்தை சாகடிப்போம் - மார்ட்டின்
294. இரத்தக் கோட்டை - கேப்டன் டைகர்
295. மேற்கே ஒரு மின்னல் - கேப்டன் டைகர்
296. தனியே ஒரு கழுகு - கேப்டன் டைகர்
297. மெக்சிகோ பயணம் - கேப்டன் டைகர்
298.புதையல் பாதை - ரேஞ்சர் ஜோ
299. செங்குருதிப் பாதை - கேப்டன் டைகர்
300. புயல் தேடிய புதையல் - கேப்டன் டைகர்
301. திசை திரும்பிய பில்லி சூன்யம் - ரிப்போர்ட்டர் ஜானி
302. மரண ஒப்பந்தம் - சி.ஐ.டி. ராபின்
303. பேழையில் ஒரு வாள் - மார்ட்டின்
304. காலத்திற்கொரு பாலம் - மார்ட்டின்
305. மரண மாளிகை - ரிப்போர்ட்டர் ஜானி
306. ஒரு திகில் திருமணம் - ஜார்ஜ்
307. காற்றில் கரைந்த கதாநாயகன் - ரோஜர் மூர்
308. சித்திரமும் கொல்லுதடி - சி.ஐ.டி. ராபின்
309. கதை சொல்லும் கொலைகள் - ஜான் ஸ்டீல்
310. பொன்னில் ஒரு பிணம் - மார்ட்டின்
311. நொறுங்கிய நாணல் மர்மம் - ஜூலியன்
312. நிழல் எது? நிஜம் எது? - மாண்ட்ரெக்
313. விண்ணில் ஒரு குள்ள நரி - ஜார்ஜ்
314. முத்துகாமிக்ஸ் சர்பிரைஸ் ஸ்பெஷல் - ஸ்பெஷல் -
315. சிகப்புக் கன்னி மர்மம்
316.தற்செயலாய் ஒரு தற்கொலை
316.தற்செயலாய் ஒரு தற்கொலை
- ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விடு பட்ட சித்திரக் கதைகள் -
1. திசை மாறிய கப்பல்கள் (மறுபதிப்பு) - லாரன்ஸ் & டேவிட்
2.இரண்டாவது வைரக்கல் எங்கே ? (மறுபதிப்பு) - காரிகன்
3. காணாமல் போன கைதி (மறுபதிப்பு) - ஜானி நீரோ
4. பார்முலா திருடர்கள் (மறுபதிப்பு) - லாரன்ஸ்& டேவிட்
மூச்சிரைக்க முழுப் பட்டியலையும் படித்து முடித்து விட்டு - இதில் எத்தனை ஞாபகத்தில் உள்ளன ; எத்தனை வெறும் பெயர்களாய் மாத்திரமே நினைவில் உள்ளன என்று உங்களின் நினைவாற்றலோடு மல்யுத்தம் போடும் முன்னே உங்களுக்கு தொடர்ந்து இன்னும் பணிகள் காத்துள்ளன !
- இந்தப் பட்டியலில் உங்களின் TOP 5 தலைப்புகள் எவை ?
- TOP 5 அட்டைப்படங்கள் எவை ?
- TOP 5 நாயகர்கள் யார்?
நிச்சயம் இது ஒரு கிறுகிறுக்கச் செய்யும் படலமென்பது நான் அறியாததல்ல ! ஆனால், சுவாரஸ்யமானதொரு தலைசுற்றலுக்கு இதை விட சுலபமான வழி(லி ) இருக்க முடியாதே ! So உங்களின் அந்த சிந்தனைத் தொப்பிகளைத் தேடி எடுத்து அணிந்து கொண்டு get cracking please ! அடுத்த வாரம் இன்னொரு NBS பதிவோடு உங்களை சந்திப்பேன் ! அது வரை have fun !
ஐ பர்ஸ்ட்
ReplyDeleteGood to see that NBS is going to be released on time! Eagerly waiting for 2013!!
ReplyDeleteDear Vijayan SIR, just to remind you about advertising our NBS in puthiyathalimurai magazine and TV! do you have any update on this?
ReplyDeleteHere is my top 5 list
ReplyDeleteஇயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி
காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்
துருக்கியில் ஜானி நீரோ - ஜானி நீரோ
பயங்கரவாதி Dr. செவன் - காரிகன்
தங்கக் கல்லறை - கேப்டன் டைகர்
ஒரு NBS தயாரிப்பதைவிடப் பல மடங்கு கஷ்டமான பணியை எங்களுக்கு கொடுத்துவிட்டு நீங்கள் ஹாயாக NBSன் பக்கங்களை நிரப்பும் வேலையைச் செய்துகொண்டிருப்பது எந்த வகையில் நியாயம், எடிட்டர் சார்? :)
ReplyDelete'காவல் கழுகு' இப்படி காத்திருக்கும் கழுகாகிவிட்டதே! :(
ReplyDeleteபிப்ரவரியிலிருத்து இரவுக்கழுகை அதன் ஒரிஜினல் தரத்திலேயே ரசிப்பது - அப்படியென்றால்?! சரியாக விளங்கவில்லையே! ஒருவேளை, 'வண்ணத்தில்' என்பதை அப்படிச் சொல்கிறீர்களா?!
ReplyDeleteவேறு வழியில்லை, விஜய் உங்கள் வாயில் டன் கணக்கில் சர்க்கரையை கொட்ட வேண்டியதுதான் அவ்வாறே நேர்ந்தால்!
Deleteகேட்டீர்களா எடிட்டர் சார்! ஸ்டீல் க்ளா கொடுக்கப் போகும் ஒரு டன் சர்க்கரையில் பாதியை உங்களுக்கு கொடுத்துவிட உத்தேசித்திருக்கிறேன். இனி முடிவு உங்கள் எண்ணங்களில் (மற்றும் வண்ணங்களில்).
Deleteஇரவுக் கழுகு இன்னமும் இத்தாலியிலேயே black & white -ல் பறந்து வரும் வேளையில் நமது இந்த "வண்ண வேட்கை" சாத்தியப்படப் போவதில்லை. நல்ல காகிதத்தில், ஒரிஜினல்கள் வந்திடும் அளவுகளில் நமது டெக்ஸ் & குழுவினர் february '13 முதல் நமது லயனில் ஆஜராவார்கள்.
Deleteஅப்புறம் அந்த அரை டன் சர்க்கரைக்குப் பதிலாக சந்தாக்களாய் வாங்கிக் கொள்கிறேனே !
NBSன் முதற்பக்கத்தை அலங்கரிக்கப்போகும் உங்கள் தந்தையின் தலையங்கம் மிகமிகப் பொருத்தமானதொரு sentimental touch!
ReplyDeleteNBSஐ கண்டிடும் அதிகரித்துக் கொண்டே வருகிறது சார்!
மேலே 'NBSஐ கண்டிடும் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது சார்!' - என்று படிக்கவும் (தூக்கக் கலக்கம்! ஹிஹி!)
Deleteஆஹா !
ReplyDeleteஎடிட்டர் மற்றும் நண்பர்களே,
எனக்கு வேலை சுலபம். இந்த வருடம் தான் முத்து காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தேன் (பழைய மாண்ட்ரேக் மற்றும் வேதாளர் பொக்கிஷங்கள் எண்பத்து ஒன்பதில் படித்தவையாதலால் பெயர்கள் நினைவினில் இல்லை - அதற்கும் முந்தய நாடோடி ரெமி தவிர - அது சினிமா வந்தபோது வந்ததால் இரண்டு பிரதிகள் வாங்கிய ஞாபகம்). எனவே எனக்கு பிடித்த டாப் 5:
- தங்கக் கல்லறை
- என் பெயர் லார்கோ
- வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல்
- தற்செயலாய் ஒரு தற்கொலை
- சிகப்பு கன்னி மர்மம்
வேலை முடிந்தது! ஆனால் ஒன்று மட்டும் நிஜம்: இவை ஐந்தும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன - இதே வரிசையினில். இந்தன் பிறகுதான் இந்த வருடம் வந்த லயன் வெளியீடுகள் எனது வரிசையில் !
Comics Lover : Short n' sweet :-)
Deleteடாப் 10 என்றாலே முழி பிதுங்கும்... அதற்குள்.. டாப் 5 வா? தலையே பிதுங்குகிறதே.... பெஸ்ட் என்பதை விட என்னுடைய சிறுவயதுக் காலத்தில் நான் படித்த கதைகளில் இன்றும் நினைத்துப் பார்க்கும்போதே சிலிர்க்கும் கதைகளை வைத்து முடிந்தவரை வரிசைப்படுத்தியிருக்கிறேன்....
ReplyDeleteமனம் கவர்ந்த டாப் 5:
1.மர்மத் தலைவன் - மாண்ட்ரெக்
(இரண்டு வர்ணத்தில் வந்த கதை. ஹோஜோதான் அந்த மர்மத் தலைவன் என்பது சுவாரஸ்யமான திருப்பம். அதற்கு முன் நடக்கும் விரட்டல்கள் விறுவிறுப்பு. இப்போது படித்தால் குழந்தைத் தனமான கதையாக இருக்கலாம் (புத்தகம் அழிந்துபோய்விட்டது). ஆனால், அன்று இதுதான் என் டாப் 1)
2.ஆவியின் கீதம் - சிஸ்கோ
(இந்தக் கதையை முதன் முதலில் வாசித்தது ஓர் இரவுப் பொழுதில். இந்த இதழுக்கான விளம்பரம்கூட இன்றும் மனதில் நிற்குமளவுக்கு பதிந்துபோன கதை. கூரையில் இருந்து இசைக்கருவி (பிடில்) வாசிக்கும் அந்த ஓவியம் இன்றும் கண்முன் நிழலாடுகிறது. வித்தியாசமான கதை. பாஞ்சோவின் முழி பிதுங்கும் காட்சிகள் ஹி..ஹி..)
3.சிறை மீட்டிய சித்திரக்கதை - சார்லி
(சார்லியின் கதைகளில் தனித்துவமான ஒன்று. இப்படியும் காமிக்ஸ் கதைகள் அமையுமா என்று ஆச்சரியப்படவைத்த கதைகளில் முக்கியமான ஒன்று.)
4.முத்திரை மோதிரம் - வேதாளர்
(சிறுவயதில் என்னை முழுமையாக ஆக்கிரமித்த கதாநாயகன் - வேதாளர். அதுவும் முத்து காமிக்ஸ் இதழ்களின் அற்புதமான அந்தக் காலத்து ஸைசில் வேதளர் கதைளைப் புரட்டிப் புரட்டிப் படிப்பதே தனி சுகம். இந்தக் கதையைப் படித்துவிட்டு வேதாளர் முத்திரைகளை அங்கங்கே பதித்துத் திரிந்தது தனிக்கதை. பாடசாலை மேசைகளிலெல்லாம் வரைந்து தள்ளியிருக்கிறேன்.)
5.நாலூகால் திருடன் - ரிப் கெர்பி
(இந்தக் கதையை நான் தேர்ந்தெடுத்ததைப் பார்த்துப் பலர் சிரிக்கக்கூடும் (ஆசிரியரே கூட). ஆனால், இந்தக் கதை சொல்லப்பட்ட விதமும், ரிப்பின் அலட்டலில்லாத கண்டுபிடிப்பும் அற்புதம். பூனைகளின்மேல் தனிப்பிரியம் கொண்டவன் என்பதால், இந்தக் கதை எனது லிஸ்ட்டில் இடம்பிடித்ததில் ஆச்சரியமில்லை!)
( இன்னும் சில....இரத்த வெறியர்கள் - சிஸ்கோ, விசித்திர குரங்கு - ரிப் கெர்பி, சூனியக்காரியின் சாம்ராஜ்யம் - வேதாளர், தலையில்லா கொலையாளி - இரும்புக்கை மாயாவி, பூ விலங்கு - வேதாளர், வாரிசு யார்? - ரிப் கெர்பி, மின்னும் மரணம் - கேப்டன் டைகர், மாண்டு போன நகரம் - ஜான் ஸ்டீல், ஊடு கொலைகள் - ஷெர்லக் ஹோம்ஸ்)
--------------------------------------------------
தலைப்புக்களில் டாப் 5:
தலைப்புக்களில் டாப் 5 என்பது உண்மையிலேயே அநியாயத்திலும் அநியாயம். ஆனாலும், விதிமுறை அதுதான் என்பதால் மற்றவை அடைப்புக்குறிக்குள்:
1.நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி
2.இருளின் விலை இரண்டு கோடி - மாண்ட்ரெக்
3.கீழ்த்திசை சூனியம் - வேதாளர்
4.கல்லறையில் ஒரு கவிஞன் - ஜெஸ்லாங்
5.குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் - சார்லி
(Extra: தலை கேட்ட தங்கப் புதையல் - லாரன்ஸ் & டேவிட், சரித்திரத்தை சாகடிப்போம் - மார்ட்டின், தீவை மீட்டிய தீரன் - மிஸ்டர் பென்)
--------------------------------------------------
TOP 5 அட்டைப்படங்கள்:
அட்டைப்படங்கள் எல்லாமே நினைவில் வந்து குழப்பியடிப்பதாலும், பல புத்தகங்கள் அட்டைப்படமின்றியே என்னிடம் இருப்பதால் தேடிப்பிடித்தாவது சொல்லமுடியாததாலும் நியாயமாக ஒதுங்கிக் கொள்கிறேன். மன்னியுங்கள்!
--------------------------------------------------
TOP 5 நாயகர்கள்:
1.வேதாளர்
2.ரிப் கெர்பி
3.லாரன்ஸ் & டேவிட்
4.இரும்புக்கை மாயாவி
5.ஷெர்லக் ஹோம்ஸ்
--------------------------------------------------
படிக்கவேண்டும் என்று துடித்து இதுவரை படிக்கக்கிடைக்காத இதழ்:
நாடோடி ரெமி - ரெமி
-------------------------------------
Note: ஆசிரியருக்கு: ஸார் இப்போது திருப்திதானே? என்னைப்போல இன்னும் எத்தனைபேருக்கு மூளை கிறுகிறுக்கப்போகிறதோ?
Podiyan : கிறுகிறுக்கச் செய்யும் பட்டியலிலிருந்து அழகாய் தேர்வுகள் செய்துள்ளீர்கள் ! வழக்கம் போல் மாயாவி..லாரன்ஸ் ; டேவிட் என்று தேர்ந்திடாது மாண்ட்ரெக் சாகசத்திற்கு முதன்மை இடம் தந்தது - வித்தியாசமான ரசனைக்கு சாட்சி ! "நாலுகால் திருடன்" என்னுடைய favorites -ல் ஒன்று .... !
Deleteஅப்புறம் "நாடோடி ரெமி" எனக்கும் ரொம்பவே நேசமானதொரு இதழ் ....கதைக்காக அல்ல - ஆனால் அதில் எனக்கிருந்த தொடர்பின் பொருட்டு !
ஒன்பதாம் வகுப்போ ; பத்தாம் வகுப்போ படிக்கும் சமயம் அதுவென்று நினைவு ; விடுமுறைகளின் போது என்னை சென்னையில் இருந்த உறவினர் ஒருவர் வரச் சொல்லி என் தந்தையிடம் கோரிட, என்னைப் பொட்டலம் போட்டு அனுப்பினார்கள் அந்தக் காலத்து மெட்ராஸ்-க்கு ! தேவி தியேடர்ஸ் நிறுவனம் "ரெமி" என்ற அந்த animated movie -இன் இந்திய விநியோக உரிமைகளைப் பெற்று இருந்ததாகவும் ; தமிழில் dub செய்து படத்தை ரிலீஸ் செய்யும் சமயத்தில் அதனை ஒரு காமிக்ஸ் புக்காகவும் வெளியிட்டால் சிறப்பாக இருக்குமென்று அவர்கள் எண்ணியதால் அந்தக் காலகட்டத்தில் தமிழில் இருந்திட்ட ஒரே காமிக்ஸான முத்து காமிக்ஸ் உடன் ஒரு tie -up செய்திட அவர்கள் பிரியப்பட்டதாகவும் மெட்ராஸ் வந்த பின்னே தெரிந்து கொண்டேன். இதில் நான் என்ன செய்வதென்று எனக்குத் துளியும் புரியவில்லை என்ற போதிலும், அந்த வயதில் எனக்குத் தரப்பட்டதொரு மரியாதையாக அதை எடுத்துக் கொண்டு பந்தாவாக preview show -க்கெல்லாம் சென்று படத்தின் முதல் screening -ஐ பார்த்திட்டேன்.
படம் பார்த்த போதே எனக்கு பெரிதாய் ஒரு அபிமானம் ஏற்படவில்லை ; அற்புதமான கிராபிக்ஸ்களைத் தாண்டி படத்தில் பெரிதாய் ஏதும் இருந்த மாதிரி எனக்குத் தோன்றவில்லை ! ஆனால் சென்னையில் இருந்த உறவினர் தேவி நிறுவனத்திடம் ஏற்கனவே வாக்குக் கொடுத்து வைத்திருந்தார் ; என் தந்தையும் இது போன்ற புது முயற்சிகளில் தயங்காது புகுந்திடும் ஆர்வலர் என்பதால், "நாடோடி ரெமி" எக்கச்சக்கமான செலவில் காமிக்ஸ் ஆனது ! அந்தக் காலங்களில் இன்றைய கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள் ஏதும் கிடையாதென்பதால் ; திரைபடத்தின் நெகடிவ்களில் இருந்தே கலர் பிரிண்ட்கள் போட்டு அவற்றிலிருந்து processing செய்து இதழ் தயாரிக்கப்பட்டது. எனக்கு இந்தப் பணிகளின் தொழில் நுட்பம் துளியும் அப்போது புரியாதது என்றாலும் அந்தப் பணிகளின் பெரும்பான்மையில் நானும் பராக்குப் பார்க்கும் பார்வையாளனாக உடனிருந்தேன் !
நிறைய publicity சகிதம் திரைப்படமும், காமிக்ஸும் வெளிவந்தன...வந்த வேகத்திலேயே திரைப்படம் அடங்கிப் போனது ! "நாடோடி ரெமி" காமிக்ஸ் இதழும் விற்பனையில் நாக்குத் தள்ளிப் போனது. 1986 -ல் என் தந்தைக்கும், அவர்தம் சகோதரர்களுக்குமிடையே பாகப் பிரிவு நடந்திட்ட போது கிட்டங்கிகள் காலி செய்யப் பட்ட போது "நாடோடி ரெமி" எக்கச்சக்கமாய் பழைய பேப்பர் விலைக்குப் போடப்பட்டது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது ! Phew !
ஆசிரியரிடமிருந்து இப்படியொரு பதிலூட்டம் (!) எதிர்பாராதது. தலை கிறுகிறுத்ததற்கு பலன் கிடைத்துவிட்டது.
Delete//கிட்டங்கிகள் காலி செய்யப் பட்ட போது "நாடோடி ரெமி" எக்கச்சக்கமாய் பழைய பேப்பர் விலைக்குப் போடப்பட்டது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது !//
ஐயோ! ஐயோ!! வயிறு எரியுதே!!!
நாடோடி ரெமி இப்போது வந்திருந்தால் நன்றாக ஓடியிருக்குமோ என்னவோ? It was too early for a graphic novel genre may be! Still, சுவையான நினைவுகள். கடந்த கால வலிகள் கூட இப்பொழுது நினைத்திட்டால் - சில நேரங்களில் - சிரிக்கத் தொன்றிடுமால்லவா? அது போல.
Delete//திரைபடத்தின் நெகடிவ்களில் இருந்தே கலர் பிரிண்ட்கள் போட்டு அவற்றிலிருந்து processing செய்து இதழ் தயாரிக்கப்பட்டது. எனக்கு இந்தப் பணிகளின் தொழில் நுட்பம் துளியும் அப்போது புரியாதது என்றாலும் அந்தப் பணிகளின் பெரும்பான்மையில் நானும் பராக்குப் பார்க்கும் பார்வையாளனாக உடனிருந்தேன் !//
Deleteஅப்படியென்றால் ஐஸ் ஏஜ் போன்ற படங்களும் அவ்வாறு தயாரிக்க சாத்தியம் உண்டா! சிபி அருளால் இந்த புத்தகம் கை வர பெற்றேன் ! சிபிக்கு நன்றிகள்!பரவா இல்லை ரகம்தான் ! வண்ணம் ,சைஸ் ஓகே !நீங்கள் மெல்ல மெல்ல இந்த தொழிலுக்கும் திணிக்க பட்டதுடன் ,ரசிகராகவும் அமைந்தது எங்களது பாக்கியமே !
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்டீல்கிளா நண்பரே... மனதில் தோன்றியதை அப்படியே களங்கமில்லாமல் எழுதும் உங்கள் வெள்ளை மனதுக்கு குறையின்றி வாழ வாழ்த்துகின்றேன்...
Deleteதமிழன்னையோடு நின்றுவிடாமல், ஆங்கில ஆன்ட்டியையும் துணைக்கு அழைத்திருக்கிறீர்களே?! :) உயர்தரத்தில் டெக்ஸ் வரப்போகிறார் என்பதால் பற்களை அனாவசியமாக கடித்திடப் போவதில்லை. பனிரெண்டோடு பத்து முடியப்போகிறது என்பதில் கூடுதல் சந்தோஷம்! 316-க்குள், டாப் ஐந்து செலக்ட் செய்யச் சொல்வதெல்லாம் டூ மச்! இவற்றில் இருநூறுக்கு முந்தைய இதழ்கள் என்னிடம் சொற்பமே! அதிலும் நூறுக்கு முந்தையவற்றை ஒரு கை விரல்களால் எண்ணிடலாம்! ஒரு ஃபுல் முத்து காமிக்ஸ் செட் பரிசாக அனுப்பி வைத்தால் படித்து விட்டு செலக்ட் செய்ய வசதியாக இருக்கும்! ;)
ReplyDeleteஉங்களுக்கும் சர்க்கரை உண்டு !
Delete:)
Deleteடியர் சார் !
ReplyDeleteஒரு வேண்டுகோள்!
இப்போது நாங்கள் கட்டும் சந்தாவில்
4 ல் ஒரு பாகம்
கொரியருக்கு போகிறது!
அனைத்து ஊர்களிலும்
ஒரு கடையிலாவது புத்தகம் கிடைக்கும் படி
ஏற்பாடு செய்ய இயலுமா?
காமிக்ஸ் விற்பனையில் ஆர்வம் காட்டிடும் விற்பனையாள நண்பர்கள் சொற்பமே ; அது மட்டுமல்லாது விலை நூறு ரூபாய் என்ற உடன் - 'வம்பு எதுக்கு?' என்று நிறையப் பேர் ஒதுங்கி விடுகின்றனர்.
Deleteஎனினும் காமிக்ஸ்களை ஆராதிக்கும் ஒரு வாசக வட்டம் உள்ளதென்பதை காலப்போக்கில் அவர்கள் உணர்ந்திடும் போது - தடைகள் நீங்கும் ! இப்போதைக்கு நமது இதழ்களை வாங்கி வரும் எந்த ஒரு விற்பனையாளருக்கும் 'கைகளில் இதழ்கள் தேங்கி விட்டன ' என்ற பிரச்னை எழுந்திடவே இல்லை ! சொல்லப் போனால் அனைவருமே, Comeback ஸ்பெஷலில் வாங்கியதை விட 30 % கூடுதல் பிரதிகள் வாங்கி வருகின்றனர் !
// 30 % கூடுதல்//
Deleteஆஹா! இனிக்கிறது!!
masakrates அருமையான கேள்வியை கேட்டீர்கள் நண்பா இதே எண்ணம் எனக்கும் நெடு நாட்களாய் உள்ளது எடிட்டர் என்னதான் சொல்வார் என்று பார்போம்
ReplyDeleteMSakrates மற்றும் கர்ணன் அவர்களே,
Deleteஉங்கள் ஊர் கடையில் கிடைத்திட பின்வரும் ஐடியாவை முயன்றுபாருங்களேன் :
இந்த வருடம் வெளியான இதழ்களில் உங்களிடம் இருப்பதையெல்லாம் ஒரு பையில்போட்டு எடுத்துச் சென்று, உங்கள் ஊரின் முக்கிய கடையில் அந்தப் புத்தகங்களைக் காட்டி, இப்போதைய புதிய தரம் பல வாசகர்களைக் கிறங்கடித்திருக்கும் உண்மையை எடுத்துச் சொல்லி, அப்படியே நம் லயன் அலுவலக டெலிபோன் எண்ணையும் அவர்களிடம் கொடுத்துவிட்டால்...
உங்கள் ஆசை நிறைவேற நிறைய சாத்தியமிருக்கிறது. இது என் தனிப்பட்ட கருத்தே!
Over to editor and friends.....
இதை விட சிறந்த யோசனை இல்லை,வாடிக்கையாளரே மிக சிறந்த விளம்பரம் ! அண்ணே அண்ணே படம் பார்த்த நண்பர்கள் இருந்தால் அதுவும் கை கொடுக்குமே !
Deleteஏதேனும் ஒரு கடையை மட்டும் குறி வைத்து அனைத்து நண்பர்களும் சென்றால் தேவைகள் அதிகம் என்பதை அவர்களும் உணர எதுவாக இருக்கும் ...பின்னர் பல கடைகளுக்கும் தானாகவே தீயாய் பரவும் .......கோவை என்றால் காந்திபுரம் கீதாலயா திரை அரங்கு(இப்போது இல்லை ) அருகே உள்ள ஒரு கடை ......
DeleteErode VIJAY : நண்பரே, உங்களின் திறமையான பதில் என்னை வியக்க வைக்கிறது ;)
Deleteஈரோடு விஜய் சார்!
ReplyDeleteஅப்படியே செய்து பார்த்து விடுவோம்!
நண்பர்கள் தங்கள் ஊர்களில் புத்தகம் கிடைக்கும் கடைகளின் முகவரிகளை பகிர்ந்து கொண்டால் உதவியாக இருக்கும்!
நமது தலைமை ஆசிரியரின் பகிர்தலை இது வரை படித்ததில்லை ஆதலால் இந்த புத்தகம் மேலும் எகிற வைக்கிறது ஆவலை ! அப்படியென்றால் வாரம் தோறும் ஒவ்வொரு எகிரவைக்கும் கொண்டாட்டங்கள் காத்திருப்பது உறுதி !எப்படி வரவிருக்கும் நாற்பது சொச்ச நாட்களை கடத்துவது என யோசிக்கும் போது
ReplyDeleteஅது குறித்த சுவாரஸ்யங்களை அடுத்தடுத்து அடுக்க போகிறீகள் என்பது ஆஹா ..............இதைவிட வேறு என்ன ரசிகர்களுக்கு ............கலக்குங்கள் சார் காத்திருக்கிறோம் கனவுகளுடன் ...............
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காமிக்ஸ் தேவனின் தூதர்களே தலைமை ஆசிரியரையும் ய் இங்கு வரச்சொல்லுங்கள் கொஞ்சம் வரச்சொல்லுங்கள் கனவுகளே ஆயிரம் கனவுகளே காமிக்ஸ் தேவனின் தூதர்களே என் காதலனை/ தலைமை ஆசிரியரை இங்கு வரவிடுங்கள் கொஞ்சம் வரவிடுங்கள்..............................................................
அடுத்து உள்ள ஐந்து வாரங்களும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை ........................நாற்பதிலும் ஆசை வரும் ..................காமிக்ஸ் மேல் காதல் வரும் ............
ஆஹா! ஸ்டீல் க்ளாவை வைத்து ஒரு இசை நிகழ்ச்சி நடத்திவிடலாம் போலிருக்கே!
Deleteஇடையிடையே நகைச்சுவை கச்சேரி உங்களது ..............
Deleteநமது டீமின் அறிமுகம் வண்ண புகை படங்களுக்கு நடுவே இருக்க வேண்டும்.....
Deleteஇவற்றை போல என்னை மிக கவர்ந்தது அ.கொ.தீ.க ,fear என்பதன் அற்புதமான ,மனதை சில்லிட வைக்கும் ,ஏதோ என பதைபதைக்க வைக்கும் ,நெஞ்சமெல்லாம் நடுநடுங்க வைக்கும் அழிவு கொள்ளை தீமை கழகத்தின் உயிரோட்டமான மொழி பெயர்ப்பின் , ஆர்வத்தை அதிகரித்த மொழிபெயர்ப்பின் வச்செகரத்தையும் சேர்த்து கொள்ளுங்கள் ............முமூர்த்திகளிடமும் வாலாட்டிய பெருமைக்குரிய பயங்கர வாதிகளின் சுருக்கமே ! அன்றைய சிந்தனை இன்றும் வியக்க வைக்கிறது .......
ReplyDeleteவசீகரம் என படியுங்கள் ..........
Deleteஇந்த லிஸ்டில் பாதிக்கு மேல் நான் படித்ததில்லை(கல்லூரிக் காலங்கள்): எனவே இந்த லிஸ்ட்டை படித்தாலே பெருமூச்சுதான் வருகிறது..எனவே எனக்கு தெரிந்தவரையில்
ReplyDeleteடாப் 5 என நான் கருதுவது
1.கொள்ளைக்கார பிசாசு (இது வண்ணத்தில் வந்ததாலும் எனது இளம் பிராய நினைவடுக்குகளில் இன்னும் பசுமையாக இருப்பதனால்)
2.மின்னும் மரணம் (வளவளவென்ற வசனங்களால் சலிப்போடு படிக்க ஆரம்பித்து லயித்து அனுபவித்து இப்போது everfavourite ஆகிப்போன இதழ்)
3.அமானுஷ்ய அலைவரிசை( ஒரு வித்தியாசமான sci-fic என்பதால் பிடித்தது)
4.யானைக் கல்லறை (அடர்ந்த காடுகளுக்குள் ஒரு அட்வென்ச்சர் பயணம் என்பதால் பிடித்தது)
5.தங்கக்கல்லறை(கேப்டன் டைகரின் மற்றொரு மெகாஹிட்)
டாப் 5 நாயகர்கள் : மாயாவி,கேப்டன் டைகர்,லாரன்ஸ் டேவிட்,ஜானி நீரோ,மார்ட்டின்.
டாப்5 அட்டை : கொள்ளைக்காரப் பிசாசு,பேழையில் ஒரு வாள், என்பெயர் லார்கோ,தங்கக் கல்லறை,நடுநிசிக் கள்வன்.
Raja Babu : மாறுபட்ட தேர்வுகள் !!
Delete
ReplyDeleteஉலகம் சுற்றும் வாலிபர்களாய் ,அவர்களுடன் அருகில் இருந்தும் ,யாரென்றே தெரியாமலும் ,ஊர்களுக்குள் அழைத்து செல்லும் நம்ப முடியாத நபர்களாலும்(இவர்களா ) அழிக்க படவிருக்கும் லாரன்ஸ் -டேவிட் கூட்டணி அப்பப்ப .. இப்போதும் புல்லரிக்க வைக்கும் நினைவுகள் ..........அ.கொ.தீ.க. அதன் தலைவர்களை தேர்ந்தெடுக்க இரைகளாய் நமது நாயகர்கள் என ரசிக்க வைக்கும் அற்புதமான வில்லன்கள் .....அதிலும் அந்த மடாலய தலைவர் நைசாரித் ....அந்த கதை படித்தவுடன் அதன் தாக்கத்தால் கதை சீக்கிரம் முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தால் வேறு ஏதாவது கதைகள் கிடைக்குமா என தேடி திரிந்தது பாலைவனத்தில் தாகத்தால் திரிந்த டைகருக்கு சற்றும் சளைத்ததல்ல எனது தாகம் ...........அந்த மடாலயத்தின் காட்ச்சிகள்,பாம்பை தூக்கி வீசும் தலைவர் ,மடாலயம் என்ற புதிதாய் அறிமுகமான தமிழ் வார்த்தை ,சிதை மேல் அடுக்கி வைக்க பட்ட லாரென்ஸ் கண்ணைவிட்டு அகலா ஓவியங்கள் அப்போது இப்போது போல டிவி களின் ஆதிக்கம் கிடையாது ,என்னை போன்ற சிறார்களுக்கு இது போன்ற ஓவியங்கள் வாய் பிளக்க வைத்த அற்புதங்கள் ,புதிதாய் காணும் சொப்பனங்கள்.......அப்போது காமிக்ஸ் படிக்காத நபர்களெல்லாம் நடந்து செல்ல மட்டுமே இயலும் சாதரணமானவர்கள் ,நானும் சைக்கிளில் மட்டுமே செல்லும் தகுதி படைத்திருந்தாலும், மாருதி கார் வைத்திருப்பது போல பெருமிதம் எனக்குள் இக்கதைகளை படிப்பதால் ,அது குறித்த பீற்றல்களும் ,எனது பெருமைகளும் அப்போதைய நண்பர்களுக்கே தெரியும் ....அந்த வித்தியாசமான கதையுடன் ,படத்துடன் படிக்க அமர்ந்தது என எனது நினைவுகளை கிளறினால் இன்னுமொரு சேரனின்/ஸ்டீல் க்ளாவின் ஆட்டோக்ராப் எடுக்கலாம் ............அக்கதை ஃப்ளைட் -731 என சொல்லவும் வேண்டுமோ மறுபதிப்பில் இந்த கதை தரமாக வரவிருப்பதால் இப்போது முன் பதிவு செய்த நண்பர்கள் நான் பெற்ற இன்பத்தை அடைவது திண்ணம்......ஆதரவாய் முன்பதிவுகளின் எண்ணிக்கை பெருகினால் நீங்களும் அன்றைய கால கட்டங்களுக்குள் செல்லலாம் ......பினோக்கி பார்ப்பதே சுவை என்பதால்தானே வரலாறுகள் படைக்க படுவதுடன் தேடி தேடி ரசிக்கபடுகிறது ,,,,,,,,,
அதனை போன்றே இப்போதும் என்னை ஆச்சரியமாய் கவர்ந்த லார்கோவே இரண்டாவது கதையின் நாயகர்.....இங்கே ஆச்சரியம் என்னவென்றால் இப்போதும் என்னால் ரசிக்க முடிகிறதே அன்று போலவே என்பதே ,வாசகர்களுக்குள் ரசனைகள் இறந்து விடவில்லை ,தூங்கி கொண்டிருக்கின்றன ........சத்தியமாய் அது சர்பிரைஸ் ஸ்பெசலே ............ஆர்வத்தை தூண்டும் ,விறுவிறுப்பான கதைகள் நிச்சயமாய் நம்மை இன்ப லோகத்திற்கே அழைத்து செல்லும் ,ஒவொருவரின் மனதுக்குள்ளும் துயின்று கொண்டிருக்கும் சிறுவர்களை தட்டி எழுப்பும் என்றால் மிகை அல்லவே ,என்ன தோழர்களே நான் சொல்வது சரிதானே .........சிறந்த கதைகள் தொடர்ந்தால் வாசகர்களின் ஆதரவும் தொடரும் என்பதே இப்போதைய வெற்றிக்கு/ஆர்வத்திற்கு காரணம் என்பது இனி அதிகரிக்கவிருக்கும் முன்பதிவுகள் சொல்லாமல் சொல்லும் ...
அடுத்த எனது தேர்வாய் மஞ்சள் பூ மர்மம் மற்றும் அந்த மாயாவியினை மணியடித்தால் கொல்ல வரும் இயந்திர சிலை .....தொடரும் ........................ஆனால் சிறந்த 5 இதழ்கள் மட்டுமே என்பது தங்களுக்கே நியாயமா ,.......சரியாக படுகிறதா ?
அடிமை; பாஸ் ஏன் தலையை கடல்லுக்குள் விட்டுகிட்டு இருக்கீங்க....?
ReplyDeleteமந்திரி; டேய் உப்பு தண்ணிக்குள்ள கண்டிப்பா நல்ல தண்ணி இருக்கும்னு நினச்சேன்............அதான் தலையை கடலுக்குள் விட்டேன் ......................அது உப்பா தாண்டா இருக்கு....!
(கருத்து; மந்திரிக்கு முத்து புக்கை எது நல்லது எது கெட்டதுன்னு பிரிக்க தெரியலை......சாரி சார்)
மதியில்லா மந்திரியாரே ! வரவிருக்கும் 2013 -ல் உங்களுக்கு நிறையவே வேலைகள் காத்துள்ளன ! So கடலுக்குள் விட்ட தலையை மறவாது வெளியே எடுத்து வையுங்கள் !
Deleteடாப் 5 கதைகள் 1 , தீவை மீட்டிய தீரன் , 2 , கழுகு வேட்டை , 3 , flight no 731 ,4 ,சிறை மீட்டிய சித்திர கதை 5 ,மின்னும் மரணம்
ReplyDeleteடாப் 5 அட்டைபடம் . என்னிடம் 75 % புத்தகத்திற்கு அட்டையே இல்லாததால் , அட்டைபடம் பற்றி நோ கமெண்ட்ஸ்
டாப் 5 ஹீரோஸ் . 1 , tiger , 2 , சார்லி அருமையான கதையோடதிற்காக 3 , எவர் கிரீன் இரும்புக்கை , 4 ,ரிப் அலட்டல் இல்லாத துப்பறியும் பாணிக்கு 5 , காரிகன் .
vijayan சார் , முத்து காமிக்ஸ் ல் பல முத்துகள் டாப் ரகம்தான் . அதில் 5 யை மட்டும் டாப் ரகத்தில் சேர்ப்பது ஏற்புடையது அல்ல .டாப் 5 என்று கேட்டதால் , எனக்கு பிடித்த 5 கதைகளை குறிப்பிட்டு உள்ளேன் . அடுத்த முறை டாப் 50 என்று அறிவித்தால் நலம் .
டியர் சார் .. எனது சிறு,சிறு தகவல்கள் (பதிவுகள் ) எவ்வகையிலியாவது
ReplyDeleteமற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான்
எனது வலைத்தளத்தை (முதலைப் பட்டாளம்) ஆரம்பித்தேன்.
உங்களுக்கே எனது பதிவு உதவியிருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாகவும்,
பெருமையாகவும் உள்ளது. மிகவும் நன்றி சார்.
உங்கள் blogspot பதிவுகளை படித்தேன் நண்பரே...என்னால் நம்பவே முடியவில்லை.காமிக்ஸ்கள் மீது இவ்வளவு காதலுடன் இருக்கும் உங்களைப் போன்ற நண்பர்களின் எழுத்துக்களை வாசிக்கும்போது சற்றுப் பெருமையாகவும் பொறாமையாகவும் கூட உள்ளது.இந்திரஜால் காமிக்ஸை வேதாளருக்காகவும்(பின் அட்டையில் உள்ள பாப்பின்ஸ் விளம்பரமும் டிங்கு சீரிஸும் சேர்த்துத்தான்),மேத்தா காமிக்ஸை ஜானுக்காகவும் வாங்கிய பசுமையான நினைவுகள் உங்களது பதிவுகளைப் படித்ததும் என்னுள் மலர்ந்தன.நன்றி.
Deleteதங்களின் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே ..
Deleteஉங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கமும்,
உற்சாகமும் தான் என்னை எழுத தூண்டுகிறது..
ஹலோ நண்பா ப்ரூனோ ப்ரேசில்,
Deleteநேற்றுதான் உங்கள் பினுடங்களை ஒன்று விடாமல் படித்தேன். அற்புதமாக தொகுத்து உள்ளீர்கள் அணைத்து பின்னுடுங்ககளையும். உங்கள் பனி சிறக்க என் வாழ்த்துகள் .
வித் லவ்,
கிரி
ஆவ்வ்வ் , இது அடுக்குமா... இந்த பட்டியலில் தரம் பிரித்து ஆராய்வதென்பது முடியுமா என்று தெரியவில்லை. காராணம் கடவுளின் பரிசானா ஞாபக மறதி :). மிகவும் முயன்று இந்த பட்டியலை படித்ததில் எனக்கு கிடைத்த ஒரு ஆச்சர்யம் பட்டியலின் முதல் பகுதி மற்றும் கடைசி பகுதி (1 to 100) ( 200 to 316) இவற்றில் பெரும்பாலான புத்தகங்கள் எனது சேகரிப்பில் வந்ததே.. நன்றி ரங்கா புக் ஸ்டால்.
ReplyDeleteஆனால் ஒரு சில இதழ்களின் தலைப்புகளை படித்த உடனே அதன் கதை நினைவுக்கு வரும். அப்படி ஒரு பட்டியல் எடுத்தால் எனது முதல் சாய்ஸ்
இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி (காரணம் நான் படித்த முதல் இரும்புக்கை மாயாவி கதை)
தலை கேட்ட தங்கப் புதையல் - லாரன்ஸ் & டேவிட்(இதனை வாங்க பணம் போதாமல் அப்பாவிடம் அன்பாக சுட்டு மாட்டிக்கொண்டது)
மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்(இந்த கதையினை வாங்க முயன்று நண்பனிடம் சண்டையிட்டு பிரிந்தது)
இவ்வாறு ஒரு சில நிகழ்வுகள் இக்கதைகள் என் மனதில் நீங்கா இடம் படித்தது. இத்துடன்,
ஒரு மாந்திரீகனின் கதை - டாமி
கொலையுதிர் காலம் - மாண்ட்ரெக்
இவ்விரு இதைகளும், எதோ ஒரு வகையில் மூளையின் ஓரத்தில் இன்றும் வாசம் செய்கிறது. நாயகர்கள் வரிசையில்,
மாயாவி , லாரன்ஸ் & டேவிட் , ரோஜெர் மூர் , ஜெஸ்லாங், ரிபோர்டர் ஜானி மற்றும் ஆல் டைம் நாயகர் கேப்டன் டைகர்.
My TOP 5 கதைகள்
ReplyDelete1. கழுகு மலைக்கோட்டை - மாடஸ்டி பிளைசி
2. தவளை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி
3. மோசடி மன்னன் - ஜார்ஜ்
4. நடக்கும் சிலை மர்மம் - ரோஜர்
5. வீடியோவில் ஒரு வெடிகுண்டு - சி.ஐ.டி. ராபின்
My TOP 5 Hero's
1.இரும்புக்கை மாயாவி
2.சி.ஐ.டி. ராபின்
3.லாரன்ஸ் & டேவிட்
4.கேப்டன் டைகர்
5.காரிகன்
My TOP 5 அட்டைபடம் - Going through covers of all books @ take 3 to 4 days....
டாப் 5 இதழ்கள்
ReplyDelete1. இதழ் எண் 1 to 63.2
2.இதழ் எண் 63.3 to 126.4
3.இதழ் எண் 126.5 to 189.6
4.இதழ் எண் 189.7 to 252.8
5.இதழ் எண் 252.9 to 316
1. நக்கல் ராஜா
Delete2. நையாண்டி ராஜா
3. ஆனவ ராஜா
4. அகம்பாவ ராஜா
5. அழிசாட்டிய ராஜா
இதில் எந்த நக்கல் நையாண்டியும் இல்லை நண்பரே . என்னை பொறுத்தவரை நமது காமிக்ஸில் எதுவுமே சோடை போன கதை அல்ல . ஒவ்வொரு ஹீரோ வுக்கும் ஒரு trade mark உண்டு
DeleteMy TOP 5 கதைகள்:
ReplyDelete1) தங்கக் கல்லறை,மின்னும் மரணம்,சிறையில் ஒரு புயல் saga - கேப்டன் டைகர்
2) யானைக் கல்லறை saga- ரேஞ்சர் ஜோ (A fascinating jungle adventure)
3) காணாமல் போன ஜோக்கர் - டிரேக்
4) வீடியோவில் ஒரு வெடிகுண்டு - சி.ஐ.டி. ராபின்
5) நடக்கும் சிலை மர்மம் - ரோஜர்
My TOP 5 Heroes:
கேப்டன் டைகர்
சி.ஐ.டி. ராபின்
இரும்புக்கை மாயாவி
ஜேம்ஸ்பாண்ட்
லாரன்ஸ் & டேவிட்
My TOP 6 :) அட்டைபடம்:
274. சிறையில் ஒரு புயல் - கேப்டன் டைகர்
300. புயல் தேடிய புதையல் - கேப்டன் டைகர்
243. தங்கக் கல்லறை - 2 - கேப்டன் டைகர் ( Is this design by our local artist ??. Wonderful design. )
249. குற்ற வருஷம் - 2000 - ரிப்போர்ட்டர் ஜானி
246. பென்குயின் படலம் - ஜார்ஜ்
245. ரவுடி ராஜ்யம் - அலெக்ஸாண்டர் (Anyone has info about the original for this series? author, original series title , etc )
சாத்தானின் டாப் 5;
ReplyDelete1.மின்னும் மரணம்.
2.மின்னும் மரணம்.
3.மின்னும் மரணம்.
4.மின்னும் மரணம்.
5.மின்னும் மரணம்.
பிடித்த டாப் ஹீரோ 5;
1.கேப்டன் டைகர்.
2.கேப்டன் டைகர்.
3.கேப்டன் டைகர்.
4.கேப்டன் டைகர்.
5.கேப்டன் டைகர்.
டாப் 5ஹீரோக்களையும்,கதைகளையும் தேர்ந்தெடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.(சாத்தான் ரொம்ப பிஸி .ஹி ஹி ).
ஹா ஹா ஹா!
Deleteஇன்று பள்ளிபாளையம் பகுதியிலிருந்து வரும் பதில்களெல்லாம் பட்டையைக்கிளப்புதே!
எடிட்டர் அவர்களே,
ReplyDeleteநான் சமீபத்தில் படித்து ரசித்திட்ட கிராபிக் நாவல் - உலகப் புகழ் பெற்ற Paulo Coelho அவர்களின் 'The Alchemist'. சுமார் எட்டு வருடங்களுக்கு முன் வந்த இந்த புத்தகம் 2010-ம் வருடம் graphic novel முறையினில் வெளியிடப்பட்டது. அதுவும் ஒரு சூப்பர் ஹிட்.
பேட்மேன் கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்து புகழ் பெற்ற Daniel Sampere இந்த புத்தகத்திற்கு அழகான, ஜீவனுள்ள ஓவியங்களைத் தீட்டியுள்ளார். Paulo Coelho அவர்களின் முன்னுரையில் "It was an old dream of mine to have The Alchemist as a graphic novel. This version exceeds my expectations and is a beautiful manifestation of what I originally imagined while crafting this story" என்று எழுதியுள்ளார்.
இதனை நாம் தமிழில் வெளியிட முடிந்தால் அமர்க்களமாக இருக்கும். ஆங்கிலத்தில் Harper Collins வெளியிட்டுள்ளனர்.
Comic Lover : "The Alchemist" கிராபிக் நாவலை Odyssey புக் ஸ்டோரில் ஆறு மாதங்களுக்கு முன் ஒரு மழை நாளில் புரட்டிக் கொண்டிருந்தேன்.வித்தியாசமான படைப்பாக இருந்தது என்றாலும், அந்தக் கதைக்களம் நம்மைக் கவருமா என்ற கேள்வி எனக்குள் இருந்தது.
Delete2013 -ல் நமது இதழ்களில் வெளியிடவென நான் shortlist செய்து வைத்துள்ள 2 கிராபிக் நாவல்கள் நிச்சயம் நம்மை லயிக்கச் செய்யுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! ஜனவரி வரை பொறுத்திருங்களேன்.. அவற்றின் முன்னோட்டங்களைப் பார்த்திட !
sir vethalar story ethavathu reprint pannungalen! pls!
ReplyDeleteTop-5 கதைகள்
ReplyDelete1. வீடியோவில் ஒரு வெடிகுண்டு - சி.ஐ.டி. ராபின்
ஒரு உண்மைச்சம்பவத்தோடு நூல் பிடித்து பின்னப்பட்ட கற்பனைக்கதை. இதனை பதினைந்து வருடங்களுக்கு முன்னர் படித்திருந்தாலும், மீண்டும் மீண்டும் படிக்கும்போது புதுவகையாக ஏதாவது ஒரு விஷயத்தை அவதானிப்பேன். யதார்த்தமான கதைபோக்கும் ஆர்பாட்டமில்லாத ஹீரோவும் நிச்சயம் ரசிக்கவைக்கும். எப்படி இவ்வாறாக கதைப்போக்கை பின்னியிருப்பார்கள் என்று வியக்கிறேன்.
2. சிறை மீட்டிய சித்திரக்கதை - சார்லி
மெல்லிய யதார்த்தமான கதை. இந்த கதையில், சித்திரக்கதை மூலமாக சிறையில் அடைபட்டிருக்கும் பெண்ணுக்கு தப்பும் உத்தியை விபரிக்கும் காட்சி ஆச்சர்யம். இதனை எடிட்டர் விஜயன் அவர்களும் தனது லிஸ்டில் இருப்பதாக சொன்னதன் பின்னரே இதனை ஒரு நண்பரிடம் இரவல் வாங்கி வாசித்தேன். விருப்பமில்லாமலே திருப்பி கொடுத்தேன். இதனை படித்த எல்லோரும், நிச்சயம் லிஸ்டில் இதற்காக ஒரு இடம் வழங்கி இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
3. அமானுஷ்ய அலைவரிசை - மார்ட்டின்
எனக்கு எழுத்தாளர்களின் இஷ்டத்துக்கு ஜோடித்து எழுதப்பட்ட Science Fiction கதைகள் எப்போதும் பிடிக்காது. ஆனால் அதனை ஓரளவுக்கேனும் நம்பும்படியாக புத்திசாலித்தனத்துடன் சொல்லப்படுமிடத்து அதனை ரசிக்கத்தயார், இதனை முதற்தடவையாக வாசிக்கும்போதே எனக்கு நன்றாக பிடித்திருந்தது. எனக்கு ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று அண்ணாவிடம் கேட்டேன் அவனுக்கும் பிடித்திருந்ததாக சொன்னான். Science Fiction கதைகளை நம்பும்படியாக சொல்வதில்தான் கஷ்டம் இருக்கிறது. அப்படியான கதைகளை வாசிப்பதில்தான் சுவாரஸ்யம் இருக்கும்.
4. காணாமல் போன ஜோக்கர் - டிரேக்
இரட்டை சகோதரர்கள். ஒருவன் கொலைகாரன். மற்றவன் சாது. கொலைகாரனை பிடிக்க போலீஸ் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றது. கொலைக்காரன் எவ்வாறு இரட்டையர் அடையாளத்தை ஏதுவாக பாவித்து தப்பிக்கிறான் என்ற சுவாரசியமான முடிச்சு கடைசியில் அவிழும். கிட்டத்தட்ட இப்படித்தான் சிலம்பரசனின் மன்மதன் படமும் என்று நினைக்கிறேன். இந்த புத்தகத்தை ஒரு நண்பரிடம் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இரவல் வாங்கி வாசித்தேன். இப்போதும் ஞாபகம் இருக்கிறது.
5. பறக்கும் பாவைப் படலம் - ஜேம்ஸ்பாண்ட்
நான் எப்போதுமே ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ் ரசிகன். இந்த கதை கிட்டத்தட்ட 120 பக்கங்கள் வந்த மெகா கதை. வழமையான ஜேம்ஸ்பாண்ட் பாணி கதைதான் ஆனாலும் சுவாரசியமான சம்பவங்களும் வித்தியாசமான பறக்கும் வில்லிகளும் அவர்களை இயக்கும் வில்லன் professorஉம் என்று சிறப்பாக யோசித்திருப்பார்கள்.
Vimalaharan : மாறுபட்ட ....அதே சமயம் சுவாரஸ்யமான தேர்வுகள் !! நான் ரொம்பவே ரசித்துப் பணியாற்றிய இதழ்கள் இவை அனைத்துமே என்பதால் கூடுதலாய் சந்தோஷம் தலை தூக்குகிறது !
Deleteமதிப்பிற்குறிய ஆசிரியர் அவர்களுக்கு
ReplyDeleteவணக்கம். தங்ககல்லறை இப்பொழுதுதான் படித்தேன். கவ்பாய் கதைகளை நான் அதிகம் ரசித்து வாசிப்பதால் இது என்னை மிகவும் கவர்ந்தது. மிக அற்புதமான வண்ணம், உயிரோட்டமான ஒவியம் , தெளிவான கதைக்களம் நல்லதொரு தமிழ் நடை என்று திக்கு முக்காட செய்துவிட்டது
ஏதோ வீட்டு வேலைகளுக்கு நடுவில் சற்று படிக்கலாம் என்று ஆரம்பித்தேன் முதலில் சற்று நிதானமாக ஆரம்பித்த கதை பின்னர் நல்ல வேகத்துடன் சென்ற பொழுது மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு முதல் பாகத்தை உடனே பட்டித்துவிட்டேன். இரண்டாம் பாகத்தை பின்மாலை வேலையில் படித்துமுடித்தேன். பொட்டல் காட்டுக்குள் நடக்கும் போராட்டம் நமது தமிழ் தென்னகங்களில் உள்ள தேரிக்காடுகளை நினைவூட்டியது. தண்ணீருக்காக ஏங்கும் இடங்களில் ஒவியரின் கைவண்ணம் அசாத்தியம். குறிப்பாக இறுதி கட்டங்கள் திரைப்படம் பார்த்த ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியது.
நான் விரும்பி படிக்கும் டெக்ஸ் வில்லரின் கதைகளையும் இவ்வாறு வண்ணத்தில் வெளியிட முடியுமா?
வரும் சென்னை புத்தக திருவிழாவில் உங்கள் அரங்கத்தை காணும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமென நினைக்கிறேன்.
முத்து காமிக்ஸின் பல இதழ்கள் படிப்பதற்கான வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்காததால் உங்களின் கேள்விகளுக்கு என்னால் பதில் எழுத முடியவில்லை.
பல நாட்களுக்குபின் இப்படி எழுதிட ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி!
வாசக சகோதரி
S.இசைசங்கரி
S.ESSAI SANKARI : பல நாட்களுக்குப் பின் உங்களை எழுதிடத் தூண்டியதொரு இதழ் அமைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சியே !
Deleteடெக்ஸ் வில்லர் கதைகளை வண்ணத்தில் ரசித்திடும் ஆர்வலர்கள் குழுவில் நீங்களும் ஐக்கியம் ஆகி உள்ளதைக் கவனித்தேன் :-) இப்போதைக்கு டெக்ஸ் black & white -ல் தான் வரக் காத்திருக்கிறார். டைகர் கதைகள் அனைத்துமே வண்ணத்தில் தான் வந்திடும்.
தொடர்ந்து எழுதுங்களேன் சகோதரி !
எனக்கு சிறுவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வம் அதிகம்...எண்பதுகளில் வேறு பொழுதுபோக்குகள் இல்லாததாலோ என்னவோ எனது வாசிப்புத்தேடல் அணில் அண்ணாவின் மாயாஜால கதைகள்,அழ.வள்ளியப்பா கதைகள்,வாண்டுமாமா கதைகள்(குறிப்பாக காகிதப்பாப்பா),ரஷ்யக் கதைகள்(குறிப்பாக மாயத்திருகாணியும் மந்திரப்பென்சிலும்) வேதளர் கதைகள், அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் ,பூந்தளிர்,முத்து வாரமலர்(ஆசிரியரின் தந்தை வெளியிட்டது) ஆகியவற்றோடு நில்லாமல் படிப்படியாக முத்துகாமிக்ஸ்,லயன்காமிக்ஸ், ராணிகாமிக்ஸ், மேத்தா காமிக்ஸ் ,திகில்,மினிலயன், ஜூனியர் லயன் என்று வளர்ந்து கல்லூரிக் காலங்களில் கிரைம் நாவல்கள் விஞ்ஞானக் கதைகள் என்று பயணித்து தொழிலில்(ஸ்வீட் ஸ்டால்) ஈடுபட்டு குடும்ப வாழ்க்கையில் மூழ்கியபின் அனைத்து வாசிப்புகளும் தேடல்களும் இப்போது சுருங்கிவிட்டன...இப்போதைக்கு எனது சிறுபிராய பொற்காலத்தின் மிச்ச நினைவுகள் நம் காமிக்ஸ்களைப் பார்க்கும்போதும் படிக்கும்போதும் மட்டுமே...சேர்த்து வைத்த இதழ்களை எல்லாம் என் அறுபது வயதிற்கு மேலான ஓய்வுகாலத்தில் படித்து ரசிக்க ஆசை...
ReplyDeleteRaja Babu : தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்னே உங்கள் நகரைத் தாண்டிப் பயணமான பொழுது பரபரப்பாய் நீங்கள் கடையில் விற்பனையில் ஈடுபட்டிருப்பதை ரசிக்க முடிந்தது ! தீபாவளி விற்பனை தூள் கிளப்பியிருக்குமென்று நினைக்கிறேன் !
Deleteஆண்டவன் அருளால் இந்த வருட விற்பனைக்கு குறைவில்லை சார்...ஆனால் நீங்கள் எங்கள் கடைக்கு வந்திருந்தால் மிகமிக மகிழ்ந்திருப்பேன் சார்...அடுத்த முறை எங்கள் ஊருக்கு வந்தால் நீங்கள் கண்டிப்பாக எங்கள் கடைக்கு வரவேண்டும் சார்...
Deleteஒரிஜினல் தரத்தில் இதழ்கள் வேண்டும் என்று கேட்டது தப்பாக போய்விட்டதோ ... டெக்ஸ் வில்லர் மீண்டும் வர
ReplyDeleteதாமதமாகிவிட்டதே .......கடவுளே .....அன்பு நண்பர் சுப்பிரமணியம் அவர்களுக்கு இன்றைய பதிப்பைப்பற்றி சொன்னேன் ..டெக்ஸ் வில்லர் இல்லைஎன்றவுடனே வருத்தப்பட்டார் .... வண்ணப்பதிப்புகளைப்பற்றி பேசுகையில் ....இரத்தப்படலம் வண்ணத்தில் ருபாய் 500 விலையில் முதல் 9 பாகங்களும் 6 மாதங்களுக்குப்பின் அதே ருபாய் 500
விலையில் மற்ற 9 பாகங்களும் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று சொன்னார் ..அப்படி வரும்பட்சத்தில் அவர் 5 இதழ்களாக வாங்க தயாராக இருப்பதாக கூறினார் ...நானும் 5 இதழ்களாக வாங்குவது என முடிவுசெய்துள்ளேன் ...அன்பு நண்பர் கலீல் அவர்களிடம் பேசினேன் ..இரத்தப்படலம் முழுவதையும் கலரில் வைத்துள்ளார் மனிதர் ...பொறாமையில் வெந்து போய்விட்டேன் ...எப்படித்தான் சாத்தியமாகிறதோ போங்கள் ....
Ahmed Pasha : பொறுத்தார் பூமியையே ஆள்வர் எனும் போது நம் சூப்பர் கௌபாய் டெக்ஸின் கதைகளைப் படிக்காது போவரா என்ன ?!!
Deleteகதைகள் டாப் 5:
ReplyDelete1.ஜும்போ - வேதாளர் கதை. யானை காலை தூக்கி வேதாளனை மிதிக்க போகும் சீன் பட்டையை கிளப்பும் இன்னமும். இன்னும் படிக்க சலிக்காத இதழ்களில் என்றும் முதலில்.
2. முகமூடி வேதாளன் - வேதாளர் தான் இதுவும், எவ்வாறு காட்டிலாகவை உருவாக்கினார் என்பதனால் மிகவும் கவர்ந்தது . செந்தாடி உடன் நடக்கும் சண்டைகள் அட்டகாசம்.
3. பனித்தீவின் தேவதைகள் - காரிகன் கதையின் சென்டிமென்ட் கிளைமாக்ஸ் டாப் 5 இல் இக்கதையை கொண்டு வருகிறது.
4. வான்வெளி சர்க்கஸ்-யூகிக்க இயலா வில்லன் இறுதி வரை , எதிர்பாரா கிளைமாக்ஸ் கொண்ட அருமையான கதை.
5. பனிக்கடலில் பயங்கர எரிமலை - லாரன்ஸ் டேவிட் கதை,ஆக்சன் கம்மி என்றாலும் நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ் ...
நாயகர்கள் டாப் 5:
1. ஜானி நீரோ (மூளை திருடர்கள், கொலை கரம் போன்றவைக்காக)
2. வேதாளன் (ஜூம்போ, முகமூடி வேதாளன் - டாப், விண்வெளி வீரன் எங்கே? ஐயோ சாமி ரகம் :) )
3. காரிகன் (நிறையவே சூப்பர் சூப்பர் கதைகள்)
4. சார்லி (பேய் தீவு ரகசியம், சிறை மீட்ட சித்திரகதை, திக்கு தெரியாத தீவில், யார் அந்த அதிர்ஷ்டசாலி போன்றவை!!!!! )
5. விங் கமாண்டர் ஜார்ஜ் (ஒற்றன் வெள்ளை நரி, நெப்போலியன் பொக்கிஷம் இதழ்களுக்காக மட்டுமே இந்த தேர்வு!!!!!!)
அட்டை படங்கள் டாப் 5:
1. முத்திரை மோதிரம் (வேதாளர் கால் மேல் கால் போட்டு தெனாவட்டாக போஸ் தந்ததால்)
2. பனிக்கடலில் பயங்கர எரிமலை (கப்பல் + எரிமலை எபக்ட்'காக )
3. வான்வெளி கொள்ளையர் (விமானம் ஹெலிகாப்ட்டர் ஐ விழுங்க இருக்கும் effect)
4. வைரஸ் X (பைக் இல் செல்லும் ஆள் மட்டமான ஆள் என்று பதிய வைக்கும் அட்டை)
5. ஆவியின் கீதம் (திகில், சோகம் மிகுந்த வண்ணங்களுக்காக)
பின் குறிப்பு: இந்த தேர்வில் 99% முதல் 100 குள் முடிந்து விட்டது, யார் அந்த அதிர்ஷ்டசாலி தவிர!!! ஹ்ம்ம் அது ஒரு பொற் காலம் என்பது மிகை அல்லவே !!!
புத்தக ப்ரியன் : இங்கே பரவலாய் நான் கவனித்த ; வியந்த விஷயம் நமது இரும்புக்கை மாயாவியின் பங்களிப்பைப் பற்றியானதே ! வன ரேஞ்சுர் Joe வாங்கியுள்ள வோட்டுக்களைக் கூட மாயாவி வாங்கிடவில்லை எனும் போது - Surprises never cease ! நமது ரசனைகள் கடந்து வந்துள்ள தூரத்தைப் புரிந்து கொள்ள இயல்கிறது !
Delete####################### எனது MUTHU COMICS TOP 5 #################
ReplyDelete1. தலை கேட்ட தங்கப் புதையல் - லாரன்ஸ் & டேவிட்
பாதிரியார் ஒருவர் எழுதிக்கொண்டு இருக்கும் பொழுது மேஜை அசைவதை உணர்ந்து என்னவென்று பார்க்கும் பொழுது மேஜைக்கு அடியில் உள்ள தரை கல் பெயர்த்து இருப்பதை கண்டு அதை அகற்றிய பொழுது அதில் புதையலுக்கான பழைய வரைபடம் இருப்பதை பார்த்தவுடன் அவருடைய பழைய ஆசைகள் மேலோங்குவது முதல்........................................ லாரன்ஸ் & டேவிட் ஹெலிஹாப்ட்டரை அஸ்டேக் இனத்தவரின் கோவில் குளத்தின் மேடையில் இறக்கும் பொழுது அது சரிவதை கண்டு, புதையலுக்காக தலைகள் தேவையில்லை அதற்க்கு ஈடான எடைக்கு கற்களையும் பாறைகளையும் உருட்டி விட்டு புதையலை காணும் வரை........................................ கதையில் சுவாரசியம்தான்.
2. பனியில் புதைந்த ரகசியம் - ஜார்ஜ்
விங் கமாண்டர் ஜார்ஜ் பயணம் செய்யும் க்ளைடர் விமானம் என்றால் இன்ஜின் இல்லாத விமானம் என்று அந்த சிறிய வயதில் எனக்கு விளக்கிய கதை. குதிரையை ஓட்டி பழகிய மங்கோலியன் ஜீப்பை அதிசயமாக கண்டு அதை ஓட்டி அடக்க முயற்சித்து தன் உயிரை விடுவது பரிதாபம், அதே சமயம் க்ளைடர் விமானத்தை ஜீப் விசையின் மூலம் மேலே எழ செய்வது சிறப்பான உதவி. விங் கமாண்டர் ஜார்ஜ் பலூனில் சீனர்கள் கண்ணில் படாமல் நேச நாடான இந்தியாவுக்கு பயணிப்பது கிளைமாக்ஸ்.
3. திக்குத் தெரியாத தீவில் - சார்லி
ஆளே இல்லாத தீவில் மாட்டிக்கொண்டு உணவுக்காக சங்கடப்படுவது கொடுமை. நாமே அங்கிருப்பது போல் ஓர் உணர்வை ஏற்படுத்தியது. உணவுக்காக பீனிக்ஸ் பறவை கழுத்தில் கயிறு கட்டி அது பிடித்த மீனை அது விழுங்க முடியாமல் செய்து சார்லி உண்பது தேவையின் உச்சகட்டம், அப்போதைய டிஸ்கவரி சானல். இப்படியும் பறவைகள் உண்டா என்று எண்ணி எல்லா பறவைகளை பற்றியும் படித்து தெரிந்து கொள்ள முற்பட்டது ஒரு அறிவு தேடல்.
4. வாரிசு யார்? - ரிப் கெர்பி
ரிப் கெர்பி பட்லர் டெஸ்மன்ட் உடன் துப்பறிவது அலாதியானது. இக் கதையில் ஏகப்பட்ட சொத்துகளுக்கு உரிமையுள்ள ஒரு வாரிசை கண்டுபிடிக்கும் அவரது முயற்சியும் எதிர் கோஷ்டியினர் ஆதாரங்களை மாற்றி வைப்பதும் ரிப் கெர்பி மருத்துவ மனையில் வாரிசு குழந்தையின் ரெகார்டுகளை தேடி மாற்றி வைக்கபட்டுள்ளதை கண்டு பிடித்து உண்மையான ரெகார்டை எடுத்து அதை உறுதி படுத்த இங்க் பரிசோதனை செய்வது அபாரமான துப்பறியும் முயற்சி. முடிவில் வாரிசாக தேர்ந்தெடுக்கபட்ட அழகி அவருக்கு உதவிய பட்லர் டெஸ்மன்ட்யை அரவணைப்பது படு டச்சிங். இதில் சித்திரங்கள் மனதை கொள்ளை கொண்டன.
5. யார் அந்த மாயாவி – இரும்புக்கை மாயாவி
முத்து காமிக்ஸ் -ன் நூறாவது இதழ் முழு கலரில் வந்தது. தமிழ் சினிமாக்கள் நூறு நாட்கள் என்ற முத்திரையில் சிக்கி தவித்த நேரம். முதல் பக்கத்திலேயே இரும்புக்கை மாயாவி படு சோக்காக போஸ் கொடுக்கும் காட்சி என் நினைவை விட்டு இன்றும் அகலவில்லை. இரும்புக்கை மாயாவி வெகுவாக இக்கதையில் தத்தளிப்பது, புரபசர் பாரிங்கரின் மருமகள் லூசி இரும்புக்கை மாயாவிக்கு உதவுவது வெகுவாக ஈர்த்தது. கூடவே இலவச இணைப்பாக வந்த கலிவரின் யாத்திரைகள் பாட புத்தகத்தின் கதையை நினைவு கூர்ந்தது. இலவச இணைப்புக்காக இரண்டு புதிய புத்தகங்கள் அப்பொழுது வாங்கியதை நினைக்கும் பொழுது ...............?
#################################################################################
பின் குறிப்பு: இந்த புத்தகத்தில் ஒன்று கூட இப்பொழுது என்னிடம் இல்லை. இவைகளை கடைசியாக நான் படித்து சுமார் இருபத்தி ஐந்து வருடங்கள் இருக்கும். ஆனால் இன்றும் இவைகள் பசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கிறது.
க. பரிமேலழகன்.
####################எனது TOP 5 தலைப்புகள் ####################
ReplyDeleteநாச அலைகள் – இரும்புக்கை மாயாவி
காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்
கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ
இருளின் விலை இரண்டு கோடி – மாண்ட்ரெக்
சித்திரமும் கொல்லுதடி - சி.ஐ.டி. ராபின்
க. பரிமேலழகன்
ReplyDelete####################எனது TOP 5 அட்டைப்படங்கள் ########################
1. இரும்புக்கை மாயாவி
இரும்புக்கை மாயாவின் முதல் படம். சீரியசாக இருப்பது போல இருக்கும். முத்து காமிக்ஸின் Trade மார்க் படம்.
2. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ
மூன்று வட்டங்களில் அமைந்திருக்கும். ஒன்றில் ஜானி நீரோ அமர்ந்து இருப்பது போல் இருக்கும்.
3– முத்திரை மோதிரம் - வேதாளர்
வேதாளர் கம்பீரமாக அமர்ந்திருப்பார்.
4. செங்குருதிப் பாதை - கேப்டன் டைகர்
குதிரை நிலைகுலைந்து கீழே விழுவது போலவும் கேப்டன் டைகர் அதிலிருந்து குதிப்பது போலவும் சித்திரம் அமைந்திருக்கும்.
5. மரண மாளிகை - ரிப்போர்ட்டர் ஜானி
வித்தியாசமான அட்டைப்படம். பல முகங்கள் இருக்கும். இப்பொழுது பிரபலமாக இருக்கும் பெண்ட ஹவுஸ் என்று எழுதி வீட்டின் மாதிரியுடன் இருக்கும்.
parimel : உங்கள் ஞாபகத் திறன் வியக்கச் செய்கிறது !
Deleteஅழகான தேர்வுகள் !!
############### எனது TOP 5 நாயகர்கள் ###############
ReplyDelete1. இரும்புக்கை மாயாவி
2. லாரன்ஸ் & டேவிட்
3. காரிகன்
4. ரிப் கெர்பி
5. கேப்டன் டைகர்
--க. பரிமேலழகன்
என்னுடைய காமிக்ஸ் வாசிப்பு வெறும் 18 வருடங்கள் மட்டுமே ."மந்திர வித்தை "யில் இருந்து முத்து காமிக்ஸ் படித்ததாக நினைவு.எனது பட்டியலிலிருந்து ,
ReplyDelete1.நடு நிசி கள்வன்(பின்னர் பழைய புத்தகக் கடையில் வாங்கியது )
2.பெய்ரூட்டில் ஜானி
3.தங்க கல்லறை
4.மின்னும் மரணம்
5.யானை கல்லறை ...........................................இன்னும் நிறைய .............
வாசகர்கள் பலர் தமக்குப் பிடித்த தலைப்புகளையும்,கதையின் கருவையும் சொல்லிருக்கின்றார்கள் .இவை அனைத்தும் மறுபதிப்பில் மிளிருமா ?நன்றி.
TOP 5 நாயகர்கள் யார்? 1.கேப்டன் டைகர் 2.ரிப்போர்ட்டர் ஜானி 3. வேதாளன் 4.இரும்புக்கை மாயாவி 5. ரிப்கிர்பி
ReplyDeleteTOP 5 அட்டைப்படங்கள் எவை ?
ReplyDelete1. நொறுங்கிய நாணல் மர்மம் 2.சூனியக்காரியின் சாம்ராஜ்யம் 3.நாடோடி ரெமி 4.உலகே உன் விலை என்ன 5.விண்வெளி கொள்ளையர்
மஞ்சள் பூ மர்மம் என்ன ஒரு அற்புதமான கதை .......வியக்க வைக்கும் உண்மை சம்பவம் போல அவ்வளவு அற்புதமான கதை அது !உலகம் விரும்பும் உன்னத பானம் கோலா என ஆரம்பமாகும் போது அதனை பச்சை நிறத்தில் கற்பனை செய்தது இன்னும் பசுமையாக நினைவில் ! இந்த கதையில் வில்லனாக அந்த விஷமிகள் கலக்கும் விசமும் ,மஞ்சள் நிற பூக்கள் எனும் அந்த மனதை அள்ளும் வரிகளுமே ! உலகமே ஸ்தம்பிக்கும் இந்த மலர்களை நினைக்கும் போது ஆகாய/வெங்காய தாமரைகள் குளத்தை ஆக்கிரமித்திருப்பது எனது மனதில் வந்து செல்லும் ! எந்த நீர்நிலைகளில் இவற்றை பார்த்தாலும் மஞ்சள் பூ மர்மம் வந்து செல்லும் நினைவில் ! இப்போதெல்லாம் இவை முழுவதும் குளத்தை மறைத்து விடுவது குறித்து புவியாளர்கள் அச்சம் தெரிவிப்பதை கண்டால் ஏதோ சதி வேலை நடந்துள்ளதோ விஷமிகளால் என என்ன தோன்றும் !
ReplyDeleteஎவளவு முயற்சி செய்தும் ,அட்டவணையை திரும்ப திரும்ப பார்த்தும் அந்த கதையின் பெயர் நினைவில் இல்லை !இருக்கு ஆனா இல்லை என்ற நிலையே ! பால் பிரபு என்ற ஒரு வில்லனால் அனுப்பி வைக்க படும் இயந்திர மனிதர்கள்,அவனது கையில் உள்ள குமிழை திருகினால் இயக்கம்/தூண்ட பெற்று அரிய தபால் தலைகளை கடத்தி செல்வதும் ,மாயாவியின் தலையீட்டால் சிதறி விழும் இயந்திர மனிதனும் ,அதனை பொறுக்கி செல்ல வண்டியுடன் வரும் பால் பிரபுவும் இப்போதும் மலைக்க செய்யும் விதமாய் நினைவுகளில் ! அதுவும் பிடி பட்ட மாயாவி கடிகாரத்தில் கட்டி வைக்க பட்டு நள்ளிரவு 12 மணிக்கு நகரும் எந்திர சிலை மூலம் கொள்ளும் படியான அமைப்பு ,அப்போதெல்லாம் இவை எங்களை பிரம்மிக்க வைத்தன புதுமையான விஷயங்களாய்!என்னை புதுமையான கற்பனை உலகிற்கு அழைத்து சென்ற ஆசிரியரின் தந்தை அளித்த இப்புத்தகங்களே எனக்கு வாசிக்கும் ஆர்வத்தை வளர்த்தன என்றால் மிகை அல்ல !தமிழை பிழையின்றி பேசவும் ,எழுதவும் உதவின என்றால் மிகை அல்ல !நான் முதலில் படித்தது லயனே எனினும் இந்த நாயகர்கள் எங்கோ கொண்டு சென்றனர் மனதை,இவைகளை படிப்பதாலே வாழ்க்கை சிறப்பானது என்ற நம்பிக்கைதனை ,எதிர் பார்ப்புகளை,துணிந்து எடுக்கும் தடாலடி முடிவுகளை ,பிறரை போல போதும் என்ற மனதை கட்டி போடாமல் தேடு தேடு தேடு ......எனவும் , உலகில் விவரிக்க இயலாத அற்புதங்கள் இருப்பதை, சந்தோசமாக ஆராதிக்க தூண்டின என்றால் மிகை அல்ல !இவைகள் ஒரு தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களாகவும் இப்போது என்னால் பார்க்க படுகின்றன ! காமிக்ஸ் பற்றி தெரியாதவர்கள் அற்பமாய் தெரிந்தது நினைவில் ஆடுகிறது !
ஐந்தாவது கதை என் முன்னே லாரான்சே வந்து வந்து (அனைத்து கதைகளும் )செல்கிறார் ,பச்சை வானம் மர்மம் வந்து செல்கிறது,வேதாளருடன் டெவில் வந்து குரைக்கிறது,கென்னடியை நியாபகபடுத்தும் வீடியோவில் ஒரு வெடி குண்டு வந்து செல்கிறது ,ஜானி வந்து குழப்புகிறார்,மனதை கிள்ளி ரத்தத்தை வர வைத்த மாந்த்ரீகனின் கதை வந்து செல்கிறது ......
முடியவில்லை மலைக்கிறேன் ,சந்தோஷ நினைவுகளில் திளைக்கிறேன் !என்ன செய்ய மனதை கவர்ந்த ,கௌ பாய் என்றால் மின்னலென சுட்டு கொண்டே செல்ல வேண்டும், என்ற நிலை மாற்றிய எதார்த்தமாக டைகரை கொண்டு வந்தே ஆக வேண்டுமல்லவா! தங்க கல்லறை என்னை கவர்ந்த தற்போதைய இதழ்களில் வண்ணங்களாலும்,கதை கலங்களாலும்,வில்லத்தனங்களாலும் ,வித்தியாசமான பழிவாங்கும் மனிதனாலும் மீண்டும் மீண்டும் 4 முறை ஒரே மாதத்தில் படிக்க வைத்த காரணத்தாலும் அந்த கதை 5 வது என்பது சற்றே வருத்தமளித்தாலும் பால்ய காலங்களுக்கே முதலிடம் என்பதால் இவைகளே எனது வரிசை!
சிறந்த நாயகர்கள் லாரென்ஸ் -டேவிட் ,லார்கோ,இரும்புக்கை மாயாவி,டைகர் ,ரோஜர் .....
Deleteசிறந்த ௫ தலைப்புகள் ,கண்டிப்பாக இயலாது தேறாத தலைப்புகள் 5 வேண்டுமானால் கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்து விடுவேன் !
Deleteமும்மூர்த்திகளில் மாயாவி தவிர பிறர் இன்னும் வந்து செல்ல வாய்ப்புள்ளது என நீங்கள் அறிவித்துள்ளீர்கள் ,லாரென்சின் கதைகள் சிறப்பாக தங்களுக்கு தோன்றினால் தயங்காது வெளி விட வேண்டுகிறேன் !
Deleteஅந்த புயல் படலம் ரெக்ஸ் என்னவானார் ! அலெக்ஸ்சாண்டர் என்னவானார் !
Deleteடியர் எடிட்டர்,
ReplyDelete55. திக்கு தெரியாத தீவில் - சார்லி யா....நான் படித்த வரையில் "இரட்டை வேட்டையர்" என்பதாய் ஒரு நினைவு.
முத்து வில் வந்த ''திக்கு தெரியாத தீவில்" சார்லி ஹீரோ.லயனில் வந்த அதே பெயர் கொண்ட கதையில் இரட்டை வேட்டையர் ஹீரோஸ்.
Deleteதகவலுக்கு நன்றி 'புத்தக ப்ரியன்' அவர்களே...
Deleteஇரும்புக்கை மாயாவி வந்தது "144. விண்வெளிக் கொள்ளையர்" அல்லவா...
Deleteசார் என் நினைவடுக்குகளில் இவற்றில் 99% இல்லை. அதனால் TOP 3 இதழ்கள் மட்டுமே
ReplyDelete1) Wild West Special
2) தங்க கல்லறை
3) Surprise ஸ்பெஷல்
கதாநாயகர்களில் டைகரை தவிர மற்றவர்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை. இதற்கு காரணம் 2011க்கு பின் வந்த இதழ்கள் மட்டுமே என்னிடம் உள்ளது. முன்பு படித்தவை ஞாபகம் இல்லை.
முத்துவில் டெக்ஸ் வரவில்லையா?
Tex is not in Lion my friend!
DeleteYou mean not in MUTHU comics, am i right?
Deleteமீ த செவன்டி போர்த், பின்னிட்டீங்க தல! அடிடா பொடியா.
ReplyDeleteடம்! டம்! டம்!
தங்களின் தரத்திற்கும்,தங்களின் நேர்மைக்கும் ஒப்பீடாக தமிழ் காமிக்ஸ் உலகில் இதுவரை யாரும் இருந்தததில்லை, இனி யாரும் வரப்போவதுமில்லை! அடிடா பொடியா.
டம்! டம்! டம்!
சிங்கம் எப்பொழுதும் சிங்கிளாத்தான் வரும்! அது எழுந்து நடந்து வரும்போதுதான் அதன் கம்பீரம் மத்தவங்களுக்கு தெரியும்!அடிடா பொடியா.
டம்! டம்! டம்!
பெரிய அப்பா-டக்கராக இருப்பதைவிட ஒரு காமிக்ஸ் வாசக ரசிகனாக இருப்பது செம டக்கரான விஷயம்! அடிடா பொடியா.
டம்! டம்! டம்!
// அடிடா பொடியா //
Delete:) :) :)
மர மண்டை : 74th ஆக வந்தே இந்தப் போடு போடுகிறீர்களே....!!
Deleteநம் பயணத்தில் இன்னும் எக்கச்சக்கமான தூரம் பாக்கியுள்ளது...அதன் நீளத்திற்கும் நான் ஒரு வாசக-ரசிகனாகவே இருந்திட்டால் அது எனது blessings ஆக இருந்திடும் ! Touch wood...
MUTHU COMICS TOP 5 1. நடக்கும் சிலை மர்மம் - ரோஜர்
ReplyDelete2.. முத்துகாமிக்ஸ் சர்பிரைஸ் ஸ்பெஷல் - ஸ்பெஷல் -
3.புதையல் பாதை +யானைக் கல்லறை - ரேஞ்சர் ஜோ(இதில் இரண்டாவதாக வெளிவந்த புதையல்பாதை தான் யானைகல்லறையின் முதல் பாகம். நண்பர்களே உங்களிடம் இக்கதையின் இரண்டு பாகமும் இருந்தால் இன்னும் ஒரு தடவை படித்து பாருங்கள் மிகஅருமையான கதை. ரேஞ்சுர் ஜோ வின் சிறுத்தைகள் சாம்ராஜ்யமும் ஒரு டாப் கிளாஸ் கதை)
4. மின்னும் மரணம் full saga - கேப்டன் டைகர். 5. பேழையில் ஒரு வாள் +காலத்திற்கொரு பாலம் - மார்ட்டின்
TOP 5 தலைப்புகள் எவை 1.நடு நிசிக் கள்வன். 2. சிறை மீட்டிய சித்திரக்கதை 3.கொலைகாரக் கலைஞன் 4. தனியே ஒரு கழுகு 5. கல்லறையில் ஒரு கவிஞன்
ReplyDeleteஎனது டாப் 5 கதைகள்
ReplyDelete1. ஒரு மாந்த்ரீகனின் கதை – கதையின் முடிவில் ஒரு யதார்த்தமும் சோகமும் கலந்திருக்கும். மிகவும் பிடித்த கதை.
2. தங்கக்கல்லறை
3. கானாமல் போன ஜோக்கர்
4. பனியில் ஒரு பிணம் – சி.ஐ.டி. ராபின்
5. யனைக்கல்லறை
டாப் 5 ஹீரோஸ்
1. சி.ஐ.டி. ராபின்
2. கேப்டன் டைகர்
3. ரிப்போர்ட்டர் ஜானி
4. இரும்புக்கை மாயாவி
5. மான்ட்ரேக்
ndsenthilkumar : இன்னொரு ஆச்சர்யம் - mandrake நிறையப் பேரின் தேர்வுகளில் இடம் பெற்றிடுவது ! நானும் ஒரு mandrake ரசிகனே !
DeleteDear Sir,
ReplyDeleteமுத்து காமிக்ஸின் 316 + 4 வெளியீடுகளில் சிறந்த 5 என்று கேட்டால் என்னைப் பொறுத்தவரை
1. மின்னும் மரணம்
2. இரத்தக் கோட்டை
3. தங்கக் கல்லறை
4. இரும்புக்கை எத்தன்
5. ஒரு வீரனின் கதை
என்று முதல் 4 இடங்களை (விட்டால் அனைத்தையுமே) எங்கள் டைகர் எளிதில் தட்டிச் சென்று விடுவார் :D. எனவே ஒரு ஹீரோவுக்கு ஒரு கதை என்ற வகையில் என் டாப் வரிசை:
1. மின்னும் மரணம்
2. முகமூடி வேதாளன்
3. ஒரு வீரனின் கதை
4. கழுகு மலைக் கோட்டை
5. இரத்த வெறியர்கள் (சிஸ்கோ கிட்)
6. மாண்டு போன நகரம்
7. சிறை மீட்டிய சித்திரக் கதை (சார்லி)
8. சிலந்தியோடு சதுரங்கம்
9. நடக்கும் சிலை மர்மம்
10. பழி வாங்கும் பனி
டாப் 5 HEROES:
1. டைகர்
2. ஷெர்லாக் ஹோல்ம்ஸ்
3. வேதாளர்
4. இரும்புக்கை மாயாவி
5. ரிப் கெர்பி
6. சிஸ்கோ கிட்
7. டிடெக்டிவ் ராபின்
8. மார்ட்டின்
9. மாண்ட்ரேக்
10. ஜானி நீரோ
டாப் 5 என்பது எனக்குப் போதவில்லை. SORRY சார் :D.
அட்டைப்படங்கள் நினைவுள்ளவற்றில்:
1. தங்கக் கல்லறை 2
2. விசித்திரக் கடற்கொள்ளை (வேதாளர்)
3. முத்திரை மோதிரம் (வேதாளர்)
4. இரத்த வெறியர்கள் (சிஸ்கோ கிட்)
5. சிங்கத்திற்கொரு சவால் - ஜார்ஜ்
ஹாவ் ............... ( சற்றே ஒரு சிறிய கும்பகர்ண தூக்கம் வேலை பளு காரணம் ஹி ஹி ஹி )
ReplyDeleteரொம்ப நாட்களுக்கு பிறகு வலைப்பூ பக்கம் வந்தால் ஏகப்பட்ட புதிய நண்பர்களின் வரவு
மற்றும் நமது வலைத்தளம் ஒரே கலக்கலாக இருக்கிறது இதற்கு மிக முக்கியமாக சொல்லப்பட வேண்டியவர்கள் நம்ம ஸ்டீல் கிளா , ஈரோடு விஜய் , புனித சாத்தான் , காமிக் லவர் , பொடியன், பெங்களூர் கார்த்திக் சோமலிங்கா மற்றும் பதிவிட்ட நமது அனைத்து நண்பர்களும் :))
.
மேலும் ஒருவரை குறிப்பிட தவறிவிட்டேன் அவர்தான் இந்த பதிவிற்கு காரணமானவர் பாண்டி கலீல் அவர்கள்
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே :))
.
Cibiசிபி : இன்னொருவரையும் மறந்து விட்டீர்களே சார்...!
Deleteஒரு வட்டத்திற்குள் பாயும் குதிரை மீது அமர்ந்திருக்கும் டெக்ஸ் வில்லரை தனது அடையாளமாக வைத்திருக்கும் நண்பர் அவர் !
இன்னொருவரான சிங்கத்தையும் மறந்து விட்டீர்களே !
Deleteடாப் 5 கதைகள்:
ReplyDelete1. தங்க கல்லறை
2. சிலந்தியோடு சதுரங்கம் (ராபின்) - சவாலான வில்லனையும் "அவன் என் பேரனை மிரள செய்திருக்க கூடாது" என்று தாத்தாவின் வசனத்துடன் முடியும் கிளைமேக்ஸையும் மறக்கவே முடியாது
3. யானை கல்லறை - புதையல் பாதை (ஜோ)
4. நியுயார்க்கில் மாயாவி - கிட்டதட்ட மாயாவி ரிடையர்டு ஆன பின் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தவன் என்ற முறை மாயாவி மேல் பெரியதொரு ஈர்ப்பும் கிடையாது வெறுப்பும் கிடையாது. யார் ஹீரோவாக இருந்தாலும் ஹிட் அடிக்க கூட்டிய கதை நடை.
5. சித்திரமும் கொல்லுதடி (ராபின்) - மிகவும் வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான கதை.
டாப் 5 நாயகர்கள்:
1. டைகர்
2. ராபின்
3. ரிப் கெர்பி
4. மார்ட்டின்
5. விங் கமெண்டர் ஜார்ஜ்
டாப் 5 அட்டைப்படம்: (தற்போது நினைவில் இருப்பவைகளில்)
1. மின்னும் மரணம் ((டைகர்)
2. பனியில் ஒரு பிணம் (ராபின்))
3. சித்திரமும் கொல்லிதடி (ராபின்)
4. ரவுடி ராஜ்ஜியம்
5. பேழையில் ஒரு வாள்
MUTHU COMICS TOP 5 stories. 1. நடக்கும் சிலை மர்மம் - ரோஜர்
ReplyDelete2.. முத்துகாமிக்ஸ் சர்பிரைஸ் ஸ்பெஷல் - ஸ்பெஷல் -
3.புதையல் பாதை +யானைக் கல்லறை - ரேஞ்சர் ஜோ(இதில் இரண்டாவதாக வெளிவந்த புதையல்பாதை தான் யானைகல்லறையின் முதல் பாகம். நண்பர்களே உங்களிடம் இக்கதையின் இரண்டு பாகமும் இருந்தால் இன்னும் ஒரு தடவை படித்து பாருங்கள் மிகஅருமையான கதை. ரேஞ்சுர் ஜோ வின் சிறுத்தைகள் சாம்ராஜ்யமும் ஒரு டாப் கிளாஸ் கதை)
4. மின்னும் மரணம் full saga - கேப்டன் டைகர். 5. பேழையில் ஒரு வாள் +காலத்திற்கொரு பாலம் - மார்ட்டின்
TOP 5 தலைப்புகள் எவை 1.நடு நிசிக் கள்வன். 2. சிறை மீட்டிய சித்திரக்கதை 3.கொலைகாரக் கலைஞன் 4. தனியே ஒரு கழுகு 5. கல்லறையில் ஒரு கவிஞன்
TOP 5 நாயகர்கள் யார்? 1.கேப்டன் டைகர் 2.ரிப்போர்ட்டர் ஜானி 3. வேதாளன் 4.இரும்புக்கை மாயாவி 5. ரிப்கிர்பி
TOP 5 அட்டைப்படங்கள் எவை ?
1. நொறுங்கிய நாணல் மர்மம் 2.சூனியக்காரியின் சாம்ராஜ்யம் 3.நாடோடி ரெமி 4.உலகே உன் விலை என்ன 5.விண்வெளி கொள்ளையர்
Vethalan!
ReplyDeleteநல்வரவு மஞ்சள் சட்டை மாவீரன் அவர்களே, வடபழனி வவ்வாலு அவர்களே, மரமண்டை அவர்களே, டெவில் அவர்களே, கர்ணன் அவர்களே, தனபாலன் அவர்களே, மாரியப்பன் அவர்களே, ராஜா பாபு அவர்களே தங்கள் அனைவரது வரவும் நல்வரவாகுக. தமிழ் கூறும் நல்லுலக காமிக்ஸ் உறுப்பினர்களை தெரிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி நான் ஜான் சைமன். எனது இருப்பிடம் http://johny-johnsimon.blogspot.in/. அடிக்கடி வர இயலாத சூழ்நிலை அதனால் தங்களது வரவுக்கு தாமதமாக எனது வரவேற்பை அளிக்கிறேன். தாமதத்திற்கு வருந்துகிறேன். திரு.கலீல் அவர்கள் http://mudhalaipattalam.blogspot.in/ முதலை பட்டாளம் என்ற பிளாக் வைத்து கடந்த 2008 முதல் நடத்தி வருகிறார். அவருடனும் நம்ம இரும்பு கையருடனும் கொஞ்சம் அளவளாவ முடிந்தது. நான் முதலையை பாராட்ட அவரோ அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றார். ஆனால் இங்கே அடுத்த சில தினங்களில் நம்ம விஜயன் சார் அவர்கள் முதலையை தூக்கி கொண்டு வந்து நாம் கைமா பண்ண சில திட்டங்களை தீட்டி விட்டு சென்று விட்டார். வாழ்த்துக்கள் கலீல் அவர்களே! நீங்க நிச்சயமாகவே முன்னோடி பதிவர் அய்யா! அடிக்கடி தங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம். வாங்க ஜி!
ReplyDeleteஎனது top 5 சித்திரக் கதைகள் -
ReplyDeleteகதை எண் -1- ஜூம்போ
படுகாயமுற்ற நிலையில் இருந்த குட்டி யானை ஜூம்போவை மீட்டு, அது
குணமடைந்தவுடன். திரும்பவும் அதை கொண்டு போய் காட்டில் விட்டு விடுகிறார் வேதாளர்.பல வருடங்களுக்குப் பின்னர்- கொடுங்கோல் ஆட்சி புரியும் அமீரின் ஆட்சியை முறியடிக்க செல்லும் வேதாளர் எதிர்பாரதவிதமாக அவனிடம் பிடிபடுகிறார். தனது பட்டத்து யானையை கொல்ல ஏவுகிறான் அமீர். அருகில் வந்த யானை. வேதாளரின் முகத்தை கண்டதும். தன்னை சிறு வயதில் காப்பாற்றிய மாவீரன் என்பதை உணர்ந்து கொண்டு, அவரை மீட்டு, அமீரின் ஆட்சிக்கு வேட்டு வைக்கவும் வேதாளருக்கு உதவுகிறது. நெஞ்சை நெகிழச் செய்த கதை.
கதை எண் -2- தங்கக் கல்லறை
தங்கப் புதையலை தேடிச் செல்லும் கேப்டன் டைகர், ஜிம்மி, கஸ்டாப், வாலி, கோலி, ஆகியோருடன் நம்மையும் பாலைவனத்திற்கே கொண்டு சென்று, மெய்மறக்கச் செய்த கதை
கதை எண் -3- முகமூடி வேதாளன்
பங்கல்லா கடற்கரையில் அட்டடூழியம் புரியும் கடற்கொள்ளையர்களின்.கொட்டத்தை அடக்கும் வேதாளர், அவர்களைக் கொண்டே கடலோர காவல் படையை உருவாக்கும் கதை, வேதாளரின் முத்திரை பதித்த கதை.
கதை எண் -4- மஞ்சள் பூ மர்மம்
தேம்ஸ் நதியெங்கும் மஞ்சள் மலர்களை வளரச் செய்து, நாடெங்கும் தண்ணீர் பற்றாக் குறையை ஏற்படுத்துகின்றனர் அ.கொ. தீ.க வினர். இவர்களின் சதியை முறியடிக்கச் செல்லும்
c.i.d லாரன்ஸ்& டேவிட் ஜோடியினர் அவர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை விறு,விறுப்புடன் நகரும் கதை.
கதை எண் -5- வைரஸ் -x
பேராபத்தை உருவாக்கக் கூடிய வைரஸ்-x அடங்கிய குப்பியை. ஆய்வுக் கூடத்தை சார்ந்த ஒரு ஆசாமி கவர்ந்து செல்கிறான். எதிர்பாரதவிதமாக வைரஸ் குப்பி பைக் ரவுடி கும்பலிடம் வந்தடைகிறது.
f.b.i ஏஜெண்ட் காரிகன் தன்னையும் பைக் ரவுடியாக மாற்றிக் கொண்டு. எதிரிகளிடம் இருக்கும் குப்பியை போராடி மீட்டு வரும் கதை.
டாப் 5 அட்டை படங்கள்-1-உலகே உன் விலை என்ன? 2.பாம்புத் தீவு (old ) 3. பில்லி சூனியமா? பித்தலாட்டமா ? 4.தங்கக் கல்லறை(மறுபதிப்பு ) 5. என் பெயர் லார்கோ
top 5 தலைப்புக்கள்- 1.விண்ணில் நீந்தும் சுறா 2.இருளின் விலை இரண்டு கோடி 3.குறும்புக்கார சுறாமீன் 4.உலகே உன் விலை என்ன? 5. தலை கேட்ட தங்கப் புதையல்
top 5 கதாநாயகர்கள்- 1.கேப்டன் டைகர் 2.வேதாளர் 3. இரும்புக்கை மாயாவி 4.காரிகன் 5. ரிப் கிர்பி
ஆசிரியரே ..டெக்ஸ் வில்லரை கிடப்பில் போடுவது நியாயமா ?ஏற்கனவே ஒரு வருடமாக காத்திருந்தோம் .மீண்டும் நமது டாப் ஹீரோ இல்லையென்றால் எப்படி ?தயவு செய்து SUMMER WITH WILLER அல்லது WILLER -SUMMER கோடை மலராக வெளியிடுங்களேன் ....ஒரிஜினல் தரம் என்னும்போது விலையில் மாற்றங்கள் இருக்கும் என்று நாங்கள் அனைவரும் அறிவோம் ..அது ஒரு பிரச்சினையாக இருக்க முடியாது ....நம் நண்பர்களின் கருத்துகளையும் கேட்கலாமே ....ஆனால் என்ன செய்வீர்களோ ஏதுசெய்வீர்களோ ....கோடை மலரில் டெக்ஸ் வில்லர் வந்தே ஆகா வேண்டும் ...இது ஒரு கட்டளை (அன்புக்கட்டளைதான் )
ReplyDeleteநண்பர்களே,
ReplyDeleteஒரு லாரன்ஸ்-டேவிட்டின் சாகசத்தில், எதிரி அவர்கள் இருவரையும் ஒரு மூங்கில் கழியின் முனையில் பிணைத்து, பிணைத்த கயிற்றின் மேல் வெல்ல பாகுவை கொட்டி, எறும்புகளை வரவழைத்து, கயிற்றை அரித்து சுறாக்களுக்கு இரையாக்க முயல்வார்....இந்த கதையின் தலைப்பு மறந்துவிட்டது...சிறுவயதில் நான் ரசித்த கதைகளில் இதுவும் ஒன்று...இது எந்த கதையென யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும். நான் இந்நேரம் வீட்டில் இருந்திருந்தால் என்னுடைய 'பொக்கிஷ மூட்டை'-யை (அப்படித்தான் என் அம்மா கூறுகிறார்) அவிழ்த்து ஒவ்வொரு இதழாய் புரட்டி இருப்பேன்.
எனக்கும் இதே போல திகில் காமிக்ஸில் ஒருகதையில் ஆர்தர் மன்னரின் வாளைத் தேடி கால யந்திரத்தில் சென்று மன்னர் தனது கழுத்து நரம்புகள் தெறித்து ரத்தம் தெறிக்க சங்கு மாதிரி ஒரு வாத்தியத்தை வாசித்து தனது வாள் யாருக்கும் பயன்படக் கூடாதென பாறையில் வெட்ட பாறை பிளவுபடும் காட்சி இன்னும் என் கண் முன்னே ஓடுகின்றது.ஆனால் கதைத் தலைப்பு மறந்துவிட்டது.மிகப் பழைய காமிக்ஸ்களும் என்னிடம் அதிகமாக இல்லை.அவற்றையும் ஆசிரியரின் தந்தை வெளியிட்ட முத்து காமிக்ஸ் கதைகளையும் (முக்கியமாக வேதாளர் கதைகள்) மறுபதிப்பு செய்தால் மிக மகிழ்வோம்...ஆசிரியர் நினைத்தால் கண்டிப்பாக முடியும்...
Deleteநீங்கள் கூறுவது "மர்ம கத்தி" என நினைக்கிறேன்...நண்பர்கள் உறுதிப்படுத்தினால் நலம்.
Delete@ Rajavel: அது லயன் காமிக்ஸில் வந்த "காணாமல் போன கடல்" நண்பரே. ஆனால் சுறாக்களுக்கு விருந்தாக அல்ல!!! நீங்கள் புத்தகத்தை திரும்பவும் புரட்டும் அறிகுறி இந்த ஞாபக மறதி :-)
Delete@ புத்தக ப்ரியன்: தகவலுக்கு நன்றி நண்பரே.....ஆனால் எனக்கு இன்னமும் அந்த கடலில் சுறாக்கள் நீந்துவதாய் ஒரு நினைவு ...அவைகளின் செதில்கள் (Fins) காட்டப்பட்டிருக்கும். அல்லது வேறு ஒரு கதையுடன் இதனை குழப்பிக்கொண்டதால் ஏற்பட்ட ஞாபக பிறழ்வாகவும் இருக்கலாம்.
Deleteமுதல் கேள்விக்கு பதில் - பார்முலா X 13 . இரண்டாவது -மர்மக் கத்தி . அது மாவீரன் ரோலானின் வாள் .
Deleteடியர் எடிட்டர் கிளாச்சிக் கலரில் எந்த புக் வெளியிடுவது என ஓட்டெடுப்புக்கு விட்டுளிர்கள் அதில் ரத்தபடலம் , ப்ளுபெர்ரி கதைகளும் உள்ளன . இப்பொழுது நாம் முன் பதிவுகளுக்கு மட்டுமே விற்பது என்ற பார்மேட்டில் உள்ளோம் எனவே மீண்டும் பாக பாகமாக பிரித்து வெளியிடுவது சரியா . ஏன் இந்த பிரச்னை . பாக பாகமாக வெளியிடுவது என்றால் தொடர்ந்து அடுத்த அடுத்த மாதங்களில் அதன் மற்ற பாகங்களை வெளியிடுவது என்றால் மட்டுமே பாகமாக பிரித்து வெளியிடவும் (ஏற்கனவே ப்ளுபெர்ரியின் 5 பாக கதையினை வெளியிட்டது போல் ). பதிலளிபிர்களா
ReplyDeletesame blood
DeleteDid I hit the hundredth "run" ? :)
ReplyDeleteஅப்புறம் "நாடோடி ரெமி" எனக்கும் ரொம்பவே நேசமானதொரு இதழ் ....கதைக்காக அல்ல//
ReplyDeleteஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை புனித சாத்தான் அவர்கள் நாடோடி ரெமி தனது கனவு புத்தகம் என ஒருமுறை சொல்லியுள்ளார் .
(இந்த நேரத்தில் cibi cibi அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன் )
"நாடோடி ரெமி" எனக்கும் ரொம்பவே நேசமானதொரு இதழ் ....கதைக்காக அல்ல ///
ReplyDeleteஒவொருவருக்கும் ஒரு ரசனை புனித சாத்தான் அவர்கள் "நாடோடி ரெமி" தனது கனவு இதழ் என ஒருமுறை சொல்லியுள்ளார்
(இந்த நேரத்தில் cibi சிபி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் )
Auditor raja : முத்து காமிக்ஸ் சரித்திரத்தில் அத்தனை நஷ்டத்தை ஏற்படுத்தித் தந்த இதழ் வேறு ஏதும் கிடையாது ! செலவுகளும் அப்படி...அதன் விற்பனையும் அத்தனை சுமார் ! திரைப்படத்தை விநியோகித்த நிறுவனமும் கையைச் சுட்டுக் கொண்டது !
Deleteஅன்றைய கால கட்டத்து ரசனைகள் பரீட்சார்த்த முயற்சிகளுக்கு ஆதரவைத் தரும் மனப்பான்மையில் இல்லை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல ?
டாப் 5 : (மலரும் நினைவுகளினால்)
ReplyDelete168. கடல் பிசாசு - லூயிஸ்
169. தலை வாங்கும் சிலை - ரோஜர் மூர்
172. சைத்தான் சிறுவர்கள் - இரும்புக்கை மாயாவி
189. மரண மச்சம் - ஜார்ஜ்
212. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி
டாப் 6 - 10 :
220. பழி வாங்கும் பனி - ஜேம்ஸ்பாண்ட்
226. நடக்கும் சிலை மர்மம் - ரோஜர்
266. உறைந்த நகரம் - ப்ரூனோ பிரேசில்
280. சிவப்புத் தலை சாகசம் - ஷெர்லக் ஹோம்ஸ்
289. மீண்டும் முதலைகள் - ப்ரூனோ பிரேசில்
என்னடா இதுல Captain Tiger காணமேன்னு சொல்லாதிங்க அவர் தான் காமிக்ஸ் உலகின் எவர்க்ரீன் டாப் 5 வில் இருக்காரே !!!
என்றும் கமிக்ஸுடன்
ஸ்ரீராம்....
முத்து காமிக்ஸில் வந்த அனைத்து இதழ்களும் பொக்கிஷம். இதில் டாப் 5 ஐ தேர்ந்தெடுப்பது என்பது ஒரு கடினமான காரியம்.
ReplyDeleteஆயினும் மிகுந்த சிரமத்துடன் தேர்ந்தெடுத்த எனது டாப் 5.
1. முகமூடி வேதாளன் : முத்து காமிக்ஸில் வேதாளரின் முதல் கதை. எப்படி வனக்காவல் படை அமைந்தது என்பதை விளக்கும் கதை. இதை வேதாளரின் காதல் மற்றும் action கதை என்றும் சொல்லிடலாம். வேதாளர் மனதில் காதலை வைத்துக்கொண்டு அதை கடைசிவரை சொல்லாமல் தடுமாறும் விதம் ஒரு ஹைக்கூ கவிதை. என்னுடைய ஆல் டைம் favorite கதை இது. எந்தனை முறை படித்திருப்பேன் என்று தெரியாது.
2. புதையல் வேட்டை : ரிப் கிர்பி - எனக்கு பிடித்த அமைதியான action ஹீரோ. புதையல் வேட்டையில் கதை அமைதியாக தொடங்கி ரிப் கிர்பி action னுடன் ஆர்ப்பாட்டமாக முடியும்.
3. ஜும்போ : Again comes வேதாளர். நான் ஏற்கனவே ஒரு முறை இக்கதையினை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளேன். காட்டில் ஒரு யானை குட்டியை காப்பாற்றும் வேதாளர் பின்னர் சில வருடம் கழித்து ஒரு சர்வாதிகாரியிடம் மாட்டிக்கொள்வார். அவருக்கு யானையால் மிதித்துக் கொல்லும் தண்டனை தரப்படும். அப்போது வேதாளர் முன்பு காப்பாற்றிய அதே யானை வேதாலரை கண்டுகொள்ளும் காட்சி ஒரு emotional சீன். சூப்பர்.
4. யார் அந்த மாயாவி : முழு வண்ணத்தில் இந்த முத்து காமிக்ஸின் 100வது இதழ் ஒரு வித்தியாசமான மாயாவி கதை. மாயாவிக்கு தெரிந்த ஒரு professor, மாயாவிபோல் உருமாறி குற்றம் புரிவார். பழி யாவும் மாயவிமேல் விழும். மாயாவியும் ஒன்றும் அறியாது அந்த professor இடமே தன்னை காப்பாற்றும்படி வேண்டுவார். கடைசியில் professor ன் மருமகள் உதவியுடன் உண்மை குற்றவாளியை மாயாவி கண்டு பிடிப்பது அட்டகாசமாக இருக்கும்.
5. பனியில் புதைந்த ரகசியம் : என்னுடைய favorite action hero என்றுமே விங் கமாண்டர் ஜார்ஜ் தான். ஜார்ஜின் ஒவ்வொரு கதையும் எனக்கு சூப்பர் தான், கடைசியாக வந்த "விண்ணில் ஒரு குள்ளநரி" உட்பட. பனியில் புதைந்த ரகசியம் ஒரு action adventure கதை. விமானம் செயல் இழந்து நேபாள எல்லையில் விழுந்தது முதல் ஒரு edge of the seat thriller வேகத்துடன் கதை நகரும்.
Special mention : விபரீத வித்தை : மாண்ட்ரேக்கும் அவரது சகோததரும் மந்திர பள்ளியில் பாடம் படிப்பதுதான் கதை. அனால் மாண்ட்ரேக்கின் சகோதரன் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தீயவனாக மாறுகிறான் என்பதை அருமையாக சொல்லியிருப்பார்கள்.
வைரஸ் X : காரிகன் ஒரு போக்கிரியாய் தன்னை மாற்றிக்கொண்டு போக்கிரி சாம்ராஜ்யத்தில் கலக்கும் கதை.
டாப் 5 தலைப்புகள்:
1. உதவிக்கு வந்த வஞ்சகன்
2. தலை கேட்ட தங்கப் புதையல்
3. குரங்கு தேடிய கொள்ளையர் புதையல்
4. கொலைகாரக் கலைஞன்.
5. வெடிக்க மறந்த வெடிகுண்டு
Top 5 அட்டைப்படங்கள்
1. இரும்புக்கை மாயாவி
2. முகமூடி வேதாளன்
3. பயங்கரவாதி டாக்டர் செவன்
4. துருக்கியில் ஜானி நீரோ
5. 10 டாலர் நோட்டு
Top 5 நாயகர்கள்
1. வேதாளர்
2. விங் கமாண்டர் ஜார்ஜ்
3. ரிப் கிர்பி
4. காரிகன்
5. கேப்டன் டைகர்
Radja : Unique choices !!
Deleteஆசிரியர் விஜயன் அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்:
ReplyDeletepart 1 of 4 :-
லேட்டா வந்தாலும் ரொம்ப லேட்டாத்தான் வந்திருக்கிறேன்.இதெற்கெல்லாம் பஞ்ச் டயலாக் தேடிகிட்டிருந்தா இன்னும் லேட்டாகும்.எங்க என்னோட ரசனையை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிட்டா இது மறை கழண்ட கேஸுனு நெனைச்சிடுவாங்கனு உள்ளுக்குள்ள ஒரு பயம்தான் வேறொன்னுமில்லை. அதனாலதான் 2 நாளு பொறுமையாக மிகுந்த பதட்டத்துடனும், பரபரவென்ற மனநிலையிலும், அமைதியிழந்த நிலையிலும் நிம்மதியாக இருந்தேன்!ஆனா அதுக்குள்ளே தலைவர் வேற ஒரு பதிவ போட்டுட்டா இந்தபக்கம் யாரும் எட்டிகூட பார்க்க மாட்டார்கள் என்பதால்தான் திடமனதுடன் இதை பதிவிடுகிறேன்.லேட்டா வந்தாலும் ஒரு அட்வான்டேஜ் இருக்கத்தான் செய்கிறது. end, page down, load more செய்யும்போது கடைசியில் இருக்கும் பதிவை ஒரு பத்து பேராவது ''படித்து பார்ப்பாங்க மன்னிக்கவும் பார்த்து படிப்பாங்க''. அந்த பத்து பேருக்கு இப்பவே என் நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன்! நன்றி நண்பா மிக்க நன்றி!.
பி.கு : (ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்: இப்படியாவது ஆசிரியரின் கவனத்தை ஈர்க்க முடியுமா என்ற நப்பாசைத்தான் காரணம் :D , யாரும் படிக்கலனா எழுதறதே சிரமம் சார் !) :-)
contd : part 2.
part 2 of 4 :- நான் இதுவரை படித்ததிலிருந்து....
Deletetop 5 கதைகள் :
1. புதையல் பாதை, யானைக் கல்லறை:
இப்படியும் ஒரு யானைக் கல்லறை இருக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு, அது எங்கே எப்படி இருக்கும் என்ற கற்பனை, கதையின் தொடக்கத்திலிருந்தே நமக்கு தொடங்கிவிடுவது ஒரு அற்புதசுகம்.அந்த ஆப்ரிக்க வனாந்தரமும், வன்மக்களும், காட்டு வழிப்பாதைகளும் நிச்சயமாக ஒரு wild west க்கு சிறிதும் சளைத்ததில்லை!
2.பேழையில் ஒரு வாள், காலத்திற்கு ஒரு பாலம்:
கதையை படித்து முடித்தவுடன், கற்பனைகள் எல்லாம் உண்மையெனவும், உண்மைகள் யாவும் கற்பனைகள் எனவும் கதையை படித்த பலருக்கு மண்டைக்குள் திணித்த அருமையான கதை!
3.என் பெயர் லார்கோ, யாதும் ஊரே யாவரும் எதிரிகள்:
மிகப்பெரிய, பிரமாண்டமான தொழிலதிபர்களின் நாணயத்தின் மறுப்பக்கத்தை உணரவைக்கும் வித்தியாசமான கதைகளம்.இன்றைக்கும் இங்கு செய்திகளில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்!
4.சரித்திரத்தை சாகடிப்போம்:
கடைசியில் அந்த அலெக்ஸாண்ட்ரியன் லைப்ரரி வெடித்து சிதறியபோது என் நெஞ்சம் பல நிமிடம் பதறிதுடித்து விட்டது. இன்றும் இங்கு பல ஆயிரம் புனிதர்களையும், நம் பண்பாடுகளையும்,கலாச்சாரங்களையும்,உறவின் மதிப்பு மரியாதைகளையும் சீர்குலைக்கும் இங்குள்ள அங்கி கும்பலுக்குமுன் அது சாதாரணமானது என்ற உண்மையை உணரவைத்த கதை!
5.கேப்டன் டைகரின் அனைத்து கதைகளும்:
கதைகளில் அவர் சந்திக்கும் போராட்டத்தையும்,அதிர்ஷ்ட தேவதை அவருக்கு மட்டும் அளந்து அளந்து கொடுப்பதையும்,அவர் கடந்து செல்லும்
பாதைகளையும்,பாதையின் ஓரத்தில் உள்ள மக்களையும் பார்க்கும்போது, அடடா ! நாம் இவ்வளவு சுகமான வாழ்வை பெற்றும் வாழத்தெரியாமல் அல்லாடுகிறோமே என்பதை ஒவ்வொருமுறை படிக்கும்போதும் உணரவைக்கும் கதைகள்!
contd part .3
part 3 of 4 :-
Deleteநான் இதுவரை படித்ததிலிருந்து....
top 5 நாயகர்கள்:
1.கேப்டன் டைகர்:
வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்! ஆனால் போராட்டமே ஒரு மனிதனாக அவதாரம் எடுத்து வாழ்ந்து வருவதைப்போல என்ன ஒரு தளராத போராட்டம். அதிலும் அந்த வாழ்க்கையில் அவனுக்கு இருக்கும் ஆனந்தம், அடடா அங்கதான் சார் அவன் நிக்கறான்!
நாமெல்லாம் வீட்டில் சிறு பிரச்சனை என்றால் கூட நொந்து நூலாகி விடுவோம், அவனைப் பாருங்கள் குளிக்காமல் கூட ப்பர பப்பரப் பப்பர ப்பரனு விசில் ஊதிட்டு!
2.வனரேஞ்சர் ஜோ:
அவரின் வேலையை எவ்வளவு ரசிச்சு செய்கிறார் பாருங்கள். போதும் என்ற மனம் மட்டுமல்ல, அப்பழுக்கற்ற நேர்மை,உதவும் குணம் கொண்டவர். ஜோ ரொம்ப நல்லவர் சார் !
3.மர்ம மனிதன் மார்ட்டின் :
உண்பது உறங்குவது மட்டும் வாழ்க்கையில்லை.அதற்கு மேலே அறிவை விசாலப்படுத்தவும், மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட சக்திகள் இன்னும் இருக்கு, அதற்கு முன்னால் நாம் சாதராணமானவர்கள் மற்றும் பெரிய அப்பா-டக்கர் அல்ல என்பதை நமக்கு உணர்த்தவும் இன்னும் கல்யாணம் கூட செய்து கொள்ளாமல் நமக்காக பாடுபடும் ஒரு நல்ல மனிதர்!
4.லார்கோ வின்ச் :
இத்தனை கோடிகளுக்கு அதிபதியான இவர் நன்றாக சாப்பிட்டு, நிம்மதியாக தூங்கி, ஜாலியாக உலகில் உள்ள எல்லாவற்றையும் அனுபவிக்க
ஏன் இவருக்கு தெரியவில்லை என்று நம்மை எல்லோரையும் ஆதங்கப்படவைப்பவர்! உணவு,தூக்கம்,ஒய்வு மட்டுமே இன்பம் அல்ல,ஓடி ஆடி கலைத்து முடியாமல் சற்று இளைப்பாறுவதில் தான் அலாதி சுகம் என்று நமக்கு புரியவைப்பவர்!
5.டிடெக்டிவ் டோனி ஜெரோம்:
ரொம்ப நேர்மையான அப்பாவி சார் இவர். தெரியாத்தனமா டிடெக்டிவ் தொழிலுக்கு வந்துவிட்டார்.அதிலும் அந்த ''சிகப்புக் கன்னி மர்மத்தில்'' ''ம்ம்...பழச்சாறு அல்லது தண்ணீர் இருந்தால் கொடுங்களேன்..'' என்று கேட்டுவிட்டு ''கொஞ்சம்.. ரொம்ப கொஞ்சமாக..'' என்று எல்லா ரவுண்டுக்கும் தாக்குப்பிடிப்பார் பாருங்கள் அதற்காகவே அந்த தம்பிக்கு என் வோட்டை போட்டுவிட்டேன்!
contd part .4
part 4 of 4 :-
Deleteநான் இதுவரை படித்ததிலிருந்து....
top 5 அட்டைப்படங்கள் :
1.தங்கக் கல்லறை (316)
2.
3.
4.
5.
நன்றி ,வணக்கம்.
தாராளமாக இந்த மரமண்டைக்கு ஒரு மணிகுடம் சூட்டலாம்.
Deleteஒவ்வொரு வரியும் இரசித்து எழுதப்பட்டிருக்கிறது.
பாராட்டுக்கள் தோழரே!
'மணிமகுடம்' ஹி!ஹி!
Deleteஒருவேளை அப்படி நடந்து விட்டால், தங்களுக்கு அன்பளிப்பாக ஸ்டீல் க்ளா கொடுப்பதாக சொன்ன டன் கணக்கிலான சர்க்கரையை கோயம்பத்தூரிலிருந்து ஈரோடு வரை போக்குவரத்து செலவின்றி தங்களிடம் கொண்டுவந்து சேர்க்கிறேன் :)
Deleteமர மண்டை : கவலையே வேண்டாம்...வார இறுதி வரைக்கும் அடுத்த பதிவிட எண்ணமில்லை ! அது மட்டுமல்லாது, உங்கள் பதிவுகளை நாங்கள் அனைவருமே படிக்கத் தான் செய்கிறோம் ! So தொடர்ந்து எழுதுங்கள் !
Deleteஇன்று பிறந்தநாள் விழா காணும் நமது அருமை நண்பர் கோயமுத்தூர் ஸ்டீல் க்ளா அவர்கள் இன்று போல் இன்னமும் பல ஆண்டுகள் மேலும் பல ப்ளோக்களில் நம்மையெல்லாம் மொக்கைபோட்டு நமது பொழுதுகளை உற்சாகமாக்க வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்...
ReplyDelete
Deleteஹாட்லைன் நண்பரே மிக ஹாட் ஆன செய்தி சொல்லியிருக்கிறீர்கள் இது உண்மையா நம்பலாமா ????!!!!!!
உண்மையாக இருக்கும் பட்சத்தில் நண்பர் " ஸ்டீல் க்ளா " அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அல்ல எனில் முன்கூட்டியே சொன்னதாக வைத்துக்கொள்ளட்டும் :))
.
HAPPY BIRTHDAY STEEL CLAW!!!!
Deleteவாழ்த்துக்கள் நம் தரப்பிலிருந்தும் ! :-)
Deleteஆஹா இதை விட பெரும் பேரு ஏது? நன்றி நண்பர்களே !
Deleteஇப்பொழுது தாங்களே உறுதி செய்துவிட்டதால் " MANY MORE HAPPY RETURNS OF THE DAY '' வாழ்த்துக்கள் மாயாவி அவர்களே!!!
Deleteமனமார்ந்த வாழ்த்துக்கள் இரும்புக்கை நண்பரே!
Deleteவாழ்த்துக்கள்!
Deleteபிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே.
Deleteநன்றி நண்பர்களே!
DeleteSteel Claw, Belated yet best birthday wishes. Was not well yesterday evening so had to say it today!
Deleteஎன்னது இரும்பு கைக்கே வயசாகி போச்சா?
Deleteஎன்னது இரும்பு கைக்கே வயசாகி போச்சா?
என்னது இரும்பு கைக்கே வயசாகி போச்சா?
என்னது இரும்பு கைக்கே வயசாகி போச்சா?
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா'!
DeleteMANY MORE HAPPY RETURNS OF THE DAY Steel Claw :)
Deleteஸ்டீல் க்ளா; பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
DeleteBelated, பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே.
Deleteநன்றி நண்பர்களே!
Deleteமந்திரியாரே ஆசிரியர்தான் வயதை குறைத்து விடுகிறாரே ! அடுத்த வருடம் இன்னும் வேகமாய் குறைந்து விடும் போலுள்ளதே !உங்களது பங்களிப்பும் அடுத்த வருடம் அதிகமல்லவா ?காத்திருக்கிறேன் அன்று போலவே, அதனை விட அதிக ஆர்வமாய் .......
Deleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா: சரி எப்போ திருமண விருந்து ? சீக்கிரமா போடுங்கப்பா.....
DeleteBelated பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே ...
Deleteரொம்ப கஷ்டபட்டு யோசித்ததில், எனக்கு பிடித்தவை கிழே.
ReplyDeleteடாப் 5 இதழ்கள்
1) திகிலூட்டும் நிமிடங்கள் - லாரன்ஸ் & டேவிட் - எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான கதை இது, ஹாலிவுட் ல் படமாக வர வேண்டிய கதை.
2) தங்கக் கல்லறை (1 & 2) - Tiger - எவர் கிரீன். எத்தணை தடவை படித்தாலும் சலிக்காத கதை.
3 )மனித வேட்டை - ஜான் சில்வர் - கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதிற்கு சாட்சியான கதை இது.
4 சிங்கத்திற்கொரு சவால் - ஜார்ஜ் . என்னால் திரும்ப திரும்ப படிக்க பட்ட மற்றும் ஓர் சூப்பர் கதை. ஹாலிவுட் action movie கு சற்றும் சளைத்தது அல்ல.
5) செக்ஸ்டன் பிளேக் - எனக்கு இந்த கதையின் பெயர் நியாபகம் இல்லை. ஒரு மர்ம கோட்டைகுள் மாட்டிகொண்ட ஹீரோ, ஓர் அம்பு வீரன் மற்றும் பல விதமான பொறிகளுக்கு பிறகு எப்படி வில்லனை முறியடிக்கிறார் என்பதுதான் கதை. ஐஸ் cube ல் செய்யப்பட்ட அம்பு ஓர் அற்புத கற்பனை. இது ஒரு மாயாவி கதையோடு வந்தது என்று நியாபகம். Guys please remember me the name of the story.
Top 5 நாயகர்கள்
1)கேப்டன் டைகர்
2)ஜான் சில்வர்
3)லாரன்ஸ் & டேவிட்
4)செக்ஸ்டன் பிளேக்
5)ஜெஸ்லாங்
TOP 5 அட்டைப்படங்கள் எவை
இது சற்று கடினமான கேள்வி. Have to review all the books to answer this question. It will take time....
With Love,
Giri
கதையின் பெயர் மர்மக் கோட்டை [செக்ஸ்டன் பிளேக் ].அது மாயாவிக்கொரு சவால் கதையுடன் வந்தது.
DeleteThanks Nithish :)
Deleteஓஹோ… வேதாளர்தான் ராணி காமிக்ஸில் வந்த முகமூடி வீரர் மாயாவியா? நண்பர்கள் உறுதி படுத்தவும். இது உறுதியெனில் ஆசிரியர் அவர்களே… தயவு செய்து அனைத்து வேதாளர் கதைகளை மறுபதிப்பு செய்யவும்...
ReplyDeleteyes
Deleteடாப் 5 இதழ்கள்
ReplyDeleteப்ளைட் -731
கழுகு மலைக்கோட்டை
தங்க விரல் மர்மம்
திகிலூட்டும் நிமிடங்கள்
தங்கக் கல்லறை - 1 -
தங்கக் கல்லறை - 2
எங்கள் ஊரில் அப்பொழுது ராணி காமிக்ஸ் மட்டும்தான் கிடைத்து வந்தது. முகமூடி வீரர் மாயாவி எங்களது பால்ய கால தோழர். அவரை மீண்டும் நமது லயன்-முத்து காமிக்ஸ் வழியாக சந்திக்க ஆசை. பூர்த்தி செய்வீர்களா ஆசிரியர் அவர்களே…
ReplyDeleteவிஜயன் சார் என் டாப் 5 இதழ்கள்
ReplyDelete1. தங்கக் கல்லறை - டைகர்
2. முத்துகாமிக்ஸ் சர்பிரைஸ் ஸ்பெஷல் - லார்கோ
3. சுறா மீன் வேட்டை - ஜார்ஜ்
4. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்
5. வழிப்பறிப் பிசாசு - செக்ஸ்டன் பிளேக்
TOP 5 நாயகர்கள்
1. டைகர்
2. லார்கோ
3. லாரன்ஸ் & டேவிட்
4. இரும்புக்கை மாயாவி
5. காரிகன்
உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா இதுக்கே தலைய சுத்துது மத்த ரெண்டும் அப்புறமா பாக்கலாம் ;-)
.
"பயங்கரப் பன்னிரண்டு" என்றதொரு இதழ் '88 வாக்கில் வெளியிட்டோம் ; நினைவுள்ளதா நண்பர்களே ? வெளியான போது ஏராளமான பாராட்டுக்களைக் குவித்ததொரு இதழ் அது !
ReplyDeleteநியாபகம் இருக்குது சார், என்னிடம் இரண்டு புத்தககங்கள் இருந்தது ஒன்றை R .T .முருகன் அவர்களுக்கு பல வருஷங்கலுக்கு(1994) முன்னால் விற்றதாக நியாபகம், மற்றொண்டு அப்படியே stapler pin கூட பிரிக்காமல் அப்படியே புத்தம் புதிதாக உள்ளது :). சூப்பர் கதை சார் அது. :)
Deleteதிருமண தின வாழ்த்துக்கள் சார்...ஜூனியர் சிங்கத்தையும் அவ்வப்போது களமிறக்கினால் மகிழ்வோம் சார்...
Deleteபல நாட்களாக இந்த இத்ழை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்க வில்லை . இப்பொழுது //ஏராளமான பாராட்டுக்களைக் குவித்ததொரு இதழ் அது // என்று எழுதி ஆர்வத்தை வேறு தூண்டிவிட்டீர்கள்
ReplyDeleteஅப்படிஎன்றால் நினைவு படுத்தி கொள்ள நமது ஹீரோக்களின் தொகுப்பினூடே, ஓரிரு கதைகளில் தலை காட்டிய ஹீரோக்களின் இந்த அற்புத கதைகளை ,பச்சைவானம் மர்மம் என இன்னும் சில ...என வெளிவிடலாமே !
Deleteஆசிரியர் விஜயன்: சுனாமி வருவதை நான் நேரில்பார்த்தேன். அப்பொழுது ஏற்படும் படபடப்பும், பரிதவிப்பும் எப்படி இருக்கும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.யாரும் நம்பமாட்டிர்கள் ஆனால் உண்மை அதுதான்! எல்லோருக்கும் பதில் அளிப்பதால் எனக்கும் பதிலிடுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்த எனக்கு அப்படித்தான் உணரமுடிந்தது. சந்தேகமிருந்தால் கீழே உள்ள frequency யை பாருங்கள் நண்பர்களே! எப்படி சார், நீங்க மட்டும் எல்லாவற்றிலும் ஸ்பெஷலா இருக்கிறிர்கள்?
ReplyDelete21.42, 21.52, 21.56, 22.01, 22.05, 22.08, 22.12, 22.14, 22.18, 20.20, 22.23, 20.32, 20.33, 20.35, 20.36, 20.39.
மர மண்டை: இப்படியெல்லாம்வேற ஆரய்ச்சி நடக்குதா?
ReplyDeleteநண்பரே, என் கடமையைத்தானே செய்தேன்....
Deleteடாப் 5 கதைகள் .
ReplyDelete------------------------------
1] மின்னும் மரணம் .
2] தங்க கல்லறை .
3] தலை கேட்ட தங்க புதையல் .
4] இரத்த கோட்டை .
5] சர்பிரைஸ் ஸ்பெசல் .
மின்னும் மரணம் full
Deleteஇரத்த கோட்டை full
டாப் 5 ஹீரோஸ்
ReplyDelete----------------------------
1] லாரன்ஸ் & டேவிட் .
2] டைகர் .
3] ரிப்போர்ட்டர் ஜானி .
4] மார்டின்
5] மாயாவி
டாப் 5 அட்டை படம் .
ReplyDelete-------------------------------------
1] புயல் தேடிய புதையல் .
2]தனியே ஒரு கழுகு .
3]தங்க கல்லறை new .
4]நாடோடி ரெமி [ இப்போ அட்டை ஞாபகம் இல்லை, அப்போ அதை கையில் வைத்து கொண்டுதான் தூக்கமே !]
5]கதை சொல்லும் கொலைகள்
டாப் 5 தலைப்புகள் .
ReplyDelete---------------------------------------
1]புயல் தேடிய புதையல் .
2]நடு நிசி கள்வன் .
3]காற்றில் கரைந்த கப்பல்கள் .
4]இருளின் விலை இரண்டு கோடி .
5]வெடிக்க மறந்த வெடி குண்டு .
சாத்தானின் சீரியஸான தேர்வுகள்;
ReplyDelete1.மின்னும் மரணம்.(ஐந்து பாகங்களும்)
2.கழுகுமலை கோட்டை.
3.நாடோடி ரெமி.
4.ஒரு வீரனின் கதை.
5.ரத்த கோட்டை (ஐந்து பாகங்களும்)
('த'வில் ஆரம்பித்து 'றை'யில் முடியும் கதையை பற்றி அடியேனிடம் கேட்காதீர்கள்.ஹிஹி ).
saint satan தலைவா அடங்க மாடீங்களா :)
Delete//saint satan தலைவா அடங்க மாடீங்களா :) //
Deleteவேதாளம் எப்போதும் மறுபடியும் முருங்க மரத்துலதான் ஏறும்
ReplyDeleteTOP 5 தலைப்புகள் நாட் ஸ்டோரீஸ்
மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ
சிறைப் பறவைகள் - லாரன்ஸ் & டேவிட்
வெடிக்க மறந்த வெடிகுண்டு - சார்லி
கீழ்த்திசை சூனியம் - வேதாளர்
ஆகாயக் கல்லறை - ஜான் சில்வர்
எக்ஸ்ட்ரா 5 hehehe
கொலையுதிர் காலம் - மாண்ட்ரெக்
இருளின் தூதர்கள் - ரிப்போர்ட்டர் ஜானி
கல்லறையில் ஒரு கவிஞன் - ஜெஸ்லாங்
குள்ள நரிகளின் இரவு - ப்ரூனோ பிரேசில்
சித்திரமும் கொல்லுதடி - சி.ஐ.டி. ராபின்
நான் படித்த எல்லா கதிகளுமே எனக்கு பிடித்திருந்ததால் டாப் 5 ஹீரோ தேர்வு செய்கிறேன்
ReplyDelete1. கேப்டன் டைகர்
2. ரிப்போர்ட்டர் ஜானி
3. மர்ம மனிதன் மார்டின்
4. ரிப் கெர்பி
5. மாயாவி
ஆசிரியர் அவர்களுக்கு நாளை 22.11.12, 7ம் கார்த்திகை அன்று "திருமண வாழ்த்துக்களை" அணைவரது சார்பிலும் தெறிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஇன்று போல் என்றும் காமிக்ஸ் பணியாற்ற வாழ்த்துக்கள்.
இப்படிக்கு லார்கோ நற்பணி மன்றம்.
திருமண வாழ்த்துக்கள்!
DeleteTop 5 கதை
ReplyDelete------------------
1. இரும்புக்கை மாயாவி
(முத்து காமிக்ஸ் முதல் இதழ் - சந்தேகமே இல்லாமல் இந்த 40 ஆண்டுகள் கொண்டாட( 50, 100 என்று கொண்டாட போகிற) வழி ஏற்ப்படுத்தி தந்த மிக ராசியான இதழ் என்பதால்)
2. தங்கக்கல்லறை 1&2 - முதல் பதிப்பு
(டைகர் (ப்ளுபெர்ரி) என்ற வித்தியாசமான கௌபாய் ஹீரோவை நமக்கு அறிமுகபடுத்திய இதழ் என்பதால்)
3. யானை கல்லறை
(முத்து காமிக்ஸ் இதழ்களில் நான் திரும்ப திரும்ப அதிக முறை படித்த இதழ் என்பதால்)
4. தலை கேட்ட தங்க புதையல்
(அட்டகாசமான விருவிருப்பான - லாரன்ஸ் & டேவிட் சாகசங்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த கதை என்பதால்)
5. முத்து சர்ப்ரைஸ் ஸ்பெஷல் - எமனின் திசை மேற்கு
(கிராபிக் நாவல் தமிழில் படிக்க முடியுமா என்ற ஏக்கத்தை நச்சுனு நிறைவேற்றியதால்)
Top 5 ஹீரோஸ்
--------------------------
1. காப்டன் டைகர்
2. லார்கோ வின்ச்
3. மும்மூர்த்திகள் என்று காமிக்ஸ் ரசிகர்களால் அழைக்கப்படும் மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ்&டேவிட்
4. ஜென்டில்மேன்கள் காரிகன், ரிப் கிர்பி, மாண்ட்ரேக்
5. டிடெக்டிவ் ஜெரோம் (நான் சிகப்பு மனிதன் படத்தில் வரும் பாக்கியராஜ் கேரக்டரை ஞாபக படுத்தியதால் - கண்டிப்பாக இன்னொரு வாய்ப்பு தரலாம்)
ஆனால்
இவர்களை எல்லாம் நமக்கு அறிமுகபடுத்திய ...........
முத்து காமிக்ஸ் நிறுவனர் - திரு. சவுந்தர பாண்டியன் அவர்கள்
மற்றும்
விடாமுயற்சியின் மறுபெயர் நம்ம எடி - திரு.S. விஜயன் அவர்கள்
இவர்களே உண்மையான ஹீரோக்கள்
Top 5 தலைப்புக்கள் & டாப் 5 அட்டைப்படங்கள்
-----------------------------------------------------------------------------
சாரி நோ ஐடியா
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பு நண்பர் ஸ்டீல் க்ளா அவர்களே ......
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பர் ஸ்டீல் க்ளா
Deleteநன்றி நண்பரே !
Deleteமுத்து ,லயன் .திகில் ,ஜூனியர் ,மினி அனைத்து இதழ்களும் எனக்கு மிகவும் பிடித்தவைதான் ......
ReplyDeleteஆனாலும் ஆசிரியருக்காக இதோ ......
1.மின்னும் மரணம் .
2.தங்கக்கல்லறை .
3.உறைந்த நகரம் .
4.பிளைட் ;731
5.கழுகு மலைக்கோட்டை .
..................................................................................................................................................................................................................................................
டாப் ஹீரோக்கள் .
1.கேப்டன் டைகர் .
2.லாரன்ஸ் @டேவிட் .
3.ப்ருனோ பிரேசில் .
4.மாயாவி .
5. ஜானி நீரோ .
..................................................................................................................................................................................................................................................
டாப் அட்டைப்படங்கள் .
1.தங்கக்கல்லறை (மறுபதிப்பு )
2.என் பெயர் லார்கோ .
3.ஆவியின் கீதம் .
4.மஞ்சள் பூ மர்மம்
5.நாடோடி ரெமி .
.......................................................................................................
அட போங்கப்பா .... இந்த ஆட்டத்துக்கு நான் வரலை ...... பனி மண்டலக்கோட்டை ,கார்சனின் கடந்தகாலம் ,டிராகன் நகரம் ,இரத்தப்படலம் ,இன்னும் எத்தனையோ இதழ்களெல்லாம் எல்லாம் நிகரற்றவை .
அண்ணே... ப்ரூனோ பிரேசில் - முத்து காமிக்ஸ்ல வரவில்லை என்று நினைக்கிறேன். அதேபோல - நம்ம டெக்ஸ் வில்லரும் லயனில்தான் (கார்சனின் கடந்தகாலம் ,டிராகன் நகரம்)...... இரத்தப்படலம்???
Deleteடெக்ஸ் வில்லரின் தற்போதைய நிலை என்ன ஆசிரியர் அவர்களே ......?எப்பொழுது வருவார் .....?தலையே வெடித்துவிடுமுன் விளக்குங்கள் ஐயா ......
ReplyDeleteஅருமை நண்பர் ஸ்டீல் க்ளா அவர்களுக்கு புனித சாத்தானின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(நான் ஒரு தடவை சொன்னா ரெண்டாவது தடவை சொல்லமாட்டேன்.ஏன்னா,மறந்துருவேன்.ஹிஹி ).
ReplyDelete//நான் ஒரு தடவை சொன்னா ரெண்டாவது தடவை சொல்லமாட்டேன்.ஏன்னா,மறந்துருவேன்.ஹிஹி //
Delete'த'வில் ஆரம்பித்து 'றை'யில் முடியும் கதையை மட்டும் மறக்கவே மாட்டீங்க அப்படித்தானே... ஹி ஹி....
எட்டு கர எத்தனின் சித்திர தரம் உலக தரம் .காட்சிகளை கண் முன் உயிரோடப்படுத்துகிறது .
ReplyDeletepart : 5
ReplyDeletetop 5 தலைப்புக்கள்:
1.இரும்புக்கை மாயாவி:
இன்று இப்படி கூறினால் நீங்கள் க்ராண்டேலை கூறுகிறீர்களா, இல்லை முத்து முதல் இதழை சொல்கிறீர்களா, அல்லது ஸ்டீல் க்ளாவை சுட்டிக்காட்டுகிறீர்களா என்று ஒரு பெரிய குழப்பமே தலைக்காட்டும்! ஆனால் தேர்வுக்கு காரணம், கதையும் கதாநாயகனும் ஒன்றாயிருப்பதில் உள்ள ஓர் அழகு!!! முதல் முத்து!!!
2.மூளைத்திருடர்கள்:
உலகத்தில் எதையெதையோ திருடுவார்கள் ஆனால் மூளையைத் திருடி என்ன செய்வார்கள்? எந்த ப்ரிட்ஜ்யில் வைப்பார்கள்? என்று ஒரு தூண்டுதலை ஏற்படுத்தும் தலைப்பு!!!
3.இரத்தப்பாதை:
நச்சுனு ஒரே வார்த்தையில் எல்லாமே புரிந்து விடுகிறது. wild west என்ற வார்த்தையின் நேரடி மொழிப்பெயர்ப்பே இரத்தப்பாதை. ஒரு முறை மனசுக்குள் சொல்லித்தான் பாருங்களேன்... உயிரோடு தோலுரிக்கும் அபாச்சேக்கள் உங்கள் கண் முன்னே வந்து நிற்பார்கள்!!!
4.பயங்கரப் பன்னிரெண்டு:
உலகம் இதுவரை, பயமுறுத்தும் பதிமூன்று என்பதை தான் சொல்லிக்கொடுத்துள்ளது. ஆனால் அது என்ன புதுசா ஒரு பன்னிரெண்டு என நானே யோசித்து கொண்டிருக்கிறேன்!!!
5.தங்கக் கல்லறை:
பலரை பலவாறு சிந்திக்க, பேச, விவாதம் புரிய வைத்த அற்புத தலைப்பு. நம் தமிழ் காமிக்ஸ் உலகில் அதிகமுறை உச்சரிக்கப்பட்ட, எழுதப்பட்ட தலைப்பு என்பதால் இந்த தேர்வு. அது மட்டுமல்ல பெயரிலேயே அது, இது, எது -னு குழப்பமான நிறைய விஷயங்களை உள்ளடிக்கி உள்ளது!!!
//நம் தமிழ் காமிக்ஸ் உலகில் அதிகமுறை உச்சரிக்கப்பட்ட, எழுதப்பட்ட தலைப்பு//
Deleteஉபயம் : புனித சாத்தான்
மற்றும் அழகாய் முகம் காட்டும் நண்பர்களும் ;)
Deleteஸ்டாலின்ஜி .மாபெரும் துடைத்தொழிப்பு (great purges)என்பது இதுதானோ?உக்ரைனை அழித்தது போல் சாத்தானையும் அழிக்க பார்க்கிறீர்களே.இது நியாயமா?
Delete(ஆமா.நீங்க நல்லவரா?கெட்டவரா?ஹிஹி).
இன்று ( 22/11/2012) தனது இருபதாவது திருமண ஆண்டு விழா காணும் ஆசிரியருக்கும் அவர்தம் இல்லத்தரசி அவர்களுக்கும் இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteததாஸ்து ;(அப்படியே ஆகட்டும் என்று சமஸ்கிருதத்தில் கூறினேன்.ஹிஹி).
Deleteஅப்படியே ஆகட்டும்
Deleteஅருமை நண்பர் வடபழனி வவ்வாலு எந்த மரத்தில் தொங்கிகொண்டிருந்தாலும் உடனே வந்து சேரவும்.(உங்க பேரு எனக்கு ரொம்ப புடிச்சிட்டுது.ஹிஹி).
ReplyDeleteநமது ஆசிரியர் அவர்களுக்கு, இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் .....
ReplyDeleteநமது ஆசிரியர் அவர்களுக்கு, இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பு ஆசிரியருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் !
ReplyDelete