Powered By Blogger

Saturday, November 10, 2012

மாற்றம் மாத்திரமே மாறாததே !


நண்பர்களே,

வணக்கம். காரணங்கள் எதுவாக இருப்பினும், கடந்த பதிவு ஏற்படுத்தித் தந்த பரபரப்பு நம் 11 மாத blogging முயற்சிக்கு முற்றிலும் புதிதே !உச்சக்கட்டமாய்  ஒரே நாளில் 1788 பார்வைகள் ; ஏறத்தாழ 450 பின்னூட்டங்கள் ; பிரவாகமாய் எண்ணங்கள், கருத்துக்கள் என்று ஒரு அடைமழை effect ! இந்த அமளி துமளிக்கு மத்தியில் ஒரு விஷயம் 'பளிச்' என்று புலனாகிறது ! இன்டர்நெட் எனும் ஆற்றல்மிகு உலகில் சாதிப்பதும் சுலபம் ; சாத்து வாங்குவதும் சுலபமே போலும் ! Facebook ; Twitter ; Orkut இன்ன பிற சமூக வலைத்தளங்களின் தலைமுறையைச் சார்ந்தவனல்ல நான் என்பதால், இந்தக் கருத்து மோதல்கள் ; அனல் பறக்கும் online விவாதங்கள் எனக்குப் புதிதாகவே, புதிராகவே  படுகின்றன. எப்போதோ ஒரு Facebook குரூப் துவக்கி ஒரு வாரமோ ; இரண்டு வாரங்களோ அங்கே நான் தலையைக் காட்டிட முயற்சித்த சமயத்திலேயே நமது மின்னஞ்சல் முகவரியினை (lioncomics@rediffmail.com )யாரோ ஒரு புண்ணியவான் hack செய்து விட்டார் ! அத்தோடு  அந்த மின்னஞ்சல் முகவரியையும்,எனது வலைத்தள முயற்சிகளையும்  பரணிற்குப் பார்சல் பண்ணி விட்டு 'அக்கடா'வென அமர்ந்த என்னை திரும்பவும் இப்பக்கம் கொணர்ந்தது என் மகனே ! இங்கு எழுதத் துவங்கிய நாள் முதல் எனக்கும் சரி, நமது இதழ்களுக்கும் சரி ஒரு second wind கிட்டியிருப்பது அப்பட்டமான உண்மை. 

நம் இதழ்கள் சீராய் வந்து கொண்டிருந்த காலங்களில் கூட காமிக்ஸ்களுக்கென  செலவிட என்னிடம் இத்தனை நேரமோ ; பொறுமையோ  இருந்ததில்லை ; ஆனால் இப்போது அந்த extra bit முயற்சிகளை செலுத்திட எப்படியோ சாத்தியப்படுகின்றது ! புதிதாய்ப் பிரசன்னமாகியுள்ள அந்த உத்வேகம் வந்தது எங்கிருந்து என்று சிந்திக்க அதிகம் அவசியப்படவில்லை- ஏனெனில் அது ரொம்பவே obvious ! காரணம் # 1 : உங்களின் பெரும்பான்மையினரின் unconditional நேசமும், நம்மிடம் நீங்கள் தளராது வைத்துள்ள நம்பிக்கையும் ! காரணம் # 2 : வெகு சொற்பமான நண்பர்களின் செயல்பாடுகளே எனினும் வலைத்தளங்களில் அவ்வப்போது அரங்கேறிடும் நையாண்டிகளும் ; பரிகாசங்களும் கூடத் தான் என்று சொல்ல வேண்டும்  ! ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பென்று நினைக்கிறன் ;நண்பர் ஒருவர்  facebook link ஒன்றினை அனுப்பி அதனைப் படித்துப் பார்க்கும்படி ரொம்பவே ஆதங்கத்தோடு எழுதி இருந்தார். Curiosity மேலோங்க அதனைப் படித்த போது என்னை எக்கச்சக்கமாய் கலாய்த்து எழுதி இருந்ததைப் பார்த்திட முடிந்தது. படித்த கணத்தில் எரிச்சலும், ஆற்றமாட்டாமையும் மனதில் எழுந்த போதிலும் நான் அங்கே எதுவும் react பண்ணிடவில்லை. வேலைகளைத் தாண்டி இன்டர்நெட் பக்கம் வந்திடும் பழக்கம் அல்லாதவன் என்பதால் கொஞ்ச நாளுக்கெல்லாம் அந்த சங்கதி என் தலைக்குள் மறைந்து போவது சிரமமாக இருந்திடவில்லை! ஆனால் ஒரு நாள் நிச்சயம் மீண்டு(ம் ) வருவோம் ; இரத்தப் படலம் முழுத் தொகுப்பே நமது இறுதி இதழ் என்று உலவி வந்த பேச்சுக்கு செயலால் முற்றுப்புள்ளி வைப்போம் என்ற வைராக்கியம் என்னுள் தழைக்கத் துவங்கியதற்கும் அந்தப் பரிகாச நாட்கள் ஒரு விதத்தில் உதவின என்று தான் சொல்லிட வேண்டும். And reason # 3 : என்றும் என்னுள் உறையும் அந்தக் காமிக்ஸ் காதல் !

கற்றுக் கொள்ள நித்தமும் ஒரு நூறு விஷயங்கள் உண்டென்பதை நம் பயணம் எனக்கு உணர்த்தி வருகின்றது ! வண்ணத்தில் ; புது வடிவில் இதழ்களைத் தயாரிக்கத் தேவையான நுணுக்கங்களை fine tune செய்யப் படித்து வருவது ஒரு பக்கமென்றால், பாராட்டுக்களையோ ; பரிகாசங்களையோ ஒரே பக்குவத்தோடு அணுகக் கற்பதும் இந்த learning curve -ன் பிரதான பாடங்களாய் பார்த்திடப் பழகி வருகின்றேன். பிடிக்காத மொழிபெயர்ப்பு  "மீளாத் துயர்க்கும் " ; "தாளா வேதனைக்கும் "  வழி வகுத்துள்ளதென்பதைப் படித்த போது நேர்ந்த embarrassment , 'கேன்சரால் அவதியுறும்  தன் 3 வயதுக் குழந்தைக்கு சிகிச்சை தரப் பணமில்லை ; முடிந்தவர்கள் உதவுங்களேன்' என்று குரல் கொடுக்கும் ஒரு துரதிர்ஷ்டசாலித் தந்தையின் கண்ணீர் விளம்பரத்தை பேப்பரில் பார்க்கும் போது விலகிப் போகின்றது ! எது வேதனை ? ; எது துயர் ?என்பதன் அர்த்தங்கள் கூட சந்தர்ப்பங்களுக்கேற்ப மாறிடுவது புரியும் போது, சின்னச் சின்ன விமர்சனங்களோ, நையாண்டிகளோ பெரிதாய் ஒரு சங்கடத்தை ஏற்படுத்த அவசியமில்லை என்பதும் சுலபமாய்ப் புரிகிறது! மாற்றுக் கருத்துக்களோ ; அன்பான பாராட்டுக்களோ - அவற்றினுள் ஒரு ஆக்கபூர்வமான வளர்வுக்குப் பிரயோஜனப்படும் சங்கதி இருக்கும் பட்சத்தில் அதனை மாத்திரம் கிரஹித்துக் கொண்டு நகர்ந்து கொண்டே இருப்பதே சாலச் சிறந்தது என்பதை புரிந்து கொள்ள நான் ஐன்ஸ்டீன் ஆக இருக்கத் தேவை இல்லையே !

கிட்டத்தட்ட பத்து நாட்களாய் இங்கே பக்கம் பக்கமாய் அரங்கேறிய விவாதங்கள் எதற்கு உதவியுள்ளதோ இல்லியோ ; "தங்கக் கல்லறை" இதழின் online விற்பனைக்கு அசாத்தியமாய் உதவியுள்ளது ! தினமும் குவியும் E -Bay ஆர்டர்களே  அதற்கு சாட்சி! தங்கக் கல்லறை இப்போது history ;இதழ் நம்பர் 316 மாத்திரமே என்பதால் எதிர்வரும் நாட்களைப் பற்றிப் பேசிடுவதே இனி சரியான விஷயமாக இருக்கக் கூடும்  என்பதால் let's move on guys !

பிரஸ்ஸல்ஸ் நகரின் மைந்தனான ரிபோர்ட்டர் ஜானியின் உருவத்தை வீட்டின் முகப்பில் வரைந்து வைத்திருக்கிறார் ஒரு காமிக்ஸ் காதலர் !
இரண்டு ஆண்டுகளாய் என் மேஜையில் துயில் பயின்று வரும் ஜானியின் black & white சாகசத்தின் இறுதி இதழான "மரணத்தின் நிசப்தம்" டிசெம்பர் முதல் வாரத்தில் வந்திடும் ! அதன் அடுத்த இதழ் - புத்தாண்டின் முதல் இதழ், வரலாறு கண்டிராத 16 / 17 மணி நேர மின்வெட்டின் இடையில் உருவாகி வரும் நமது NEVER BEFORE ஸ்பெஷல் ! ஆனால் அதில் நீங்கள் அறியாத சில சமீபத்திய மாற்றங்களைப் பற்றிப் பேசிடவே இந்தப் புதிய பதிவு ! செப்டம்பர் முதற்கொண்டே NBS -ன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் எங்களது சின்ன டீம் மூச்சு வாங்கி வருவது நிஜமே ! வாய்க்குள் கால் கட்டை விரலை நுழைப்பது சுலபம் ; அதனை நோகாது வெளி எடுப்பது எத்தனை பெரிய சவால் என்பதை hands on அனுபவமாய் நான் உணர்ந்து வருகிறேன் ! இந்த சவாலில் சுவாரஸ்யம் உள்ளது என்பதையும் உணரும் போது பணியின் சுமை உறுத்தவில்லை !

லார்கோவின் 2 கதைகள் (94 பக்கங்கள்) முடிந்து விட்டன ; டைகரின் "கான்சாஸ் கொடுரன்" 2 கதைகள் (92 பக்கங்கள்) வரும் வாரத்தில் நிறைவு பெறும்  நிலையில் உள்ளன; மாடஸ்டி பிளைஸ் எப்போதோ தயார் ; திருவாளர் சிக் பில் பணிகள் தீபாவளி விடுமுறைகளின் சமயம் முடிந்து விடும் என்பதே சமீபத்திய நிலவரம். இன்னொரு வண்ணக் கதையான ௦" XIII - ஒரு தேடல் தொடர்கிறது " முடிந்து என் மேஜையில் ஒரு வாரமாய் அழகாய் மிளிர்கிறது. புது நாயகரான Gil Jordan வண்ணக் கதைக்கான அச்சுக்கோர்ப்புப் பணிகளும் ; மாயாவி ; ஜான் ஸ்டீல் b&w  கதைகளின் அச்சுக்கோர்ப்புமே பாக்கி என்ற நிலையில் தான் என் மண்டைக்குள் திரும்பவும் கொஞ்சம் சிந்தனைகள் !

XIII - ன் புதிய ஆர்டிஸ்ட் ; எழுத்தாளர் டீம் அழகாகப் பணியாற்றி புதியதொரு தண்டவாளத்தில் இந்தக் கதைத்தொடரினை பயணமாக்கிட முயற்சித்துள்ளார்கள் ! அழகான புதுப்பாணிச் சித்திரங்கள் ; இதமான வர்ணக் கலவைகள் என்று கண்ணுக்கு விருந்தாக இருப்பினும், கதையில் ஒரு புது இடியாப்ப சிக்கலுக்கான முதல் முடிச்சு மாத்திரமே உருவாக்கப்பட்டுள்ளது என்பது தான் நிஜம். புதிதாய் ஒரு திசையில் தொடரை செலுத்திடத் திட்டமிட்டுள்ளார்கள்   என்பது புரிகிறது ; ஆனால் அந்தத் திசை எது என்பது புலனாக; கதையின் கரு கொஞ்சமேனும் வலுப்பெற்றிட இன்னும் அடுத்த ஒரு பாகமோ ; இரண்டு பாகமோ வெளிவருவது அவசியம் போல் என் மனதுக்குப் படுகின்றது. கதையினை மொழிபெயர்க்கும் போது அவ்வளவாய்  மனதில் பதியாத கதையின் flow தயாராக இருக்கும் முழுக் கதையையும் இப்போது படித்துப் பார்க்கும் போது - கொஞ்சம் நெருடலைத் தருகிறது!இத்தனை விலையில் வெளிவரவிருக்கும் ஒரு இதழில் இது போன்ற நெருடல்கள் உங்களுக்குத் தோன்றிடக் கூடாதே என்பதால் தலைக்குள் சிந்தனைச் சக்கரங்கள் சுழலத் துவங்கின. நண்பர் XIII தன் தேடலை அடுத்த பாகமும் வெளியான பின்னே பிறிதொரு சமயத்தில் தொடரட்டும் என்று தீர்மானமாய் முடிவு செய்துள்ளேன். வெளியேறும் நாயகர் XIII மாத்திரமல்ல - ஜான் ஸ்டீலும் கூடத் தான் ! கறுப்பு வெள்ளையில் 32 பக்கங்களில் சாகசம் செய்யவிருந்த இவரது கதைகளில் வேறு மாதிரியான பிரச்னை. பக்கத்திற்கு இரண்டு கட்டங்கள் என்ற சின்ன சைசில் உருவாக்கப்பட்ட ஜான் ஸ்டீலை நமது பெரிய சைசிற்குக் கொணரும் போது படுக்க வசத்தில் ஒரு பக்கத்தில் நான்கு சித்திரங்கள் என்ற பாணியில் அமைத்திட வேண்டியுள்ளது ! ஒரு கிலோவிற்கும் கூடுதலான எடையுள்ளதொரு இதழைப் படுக்க வசத்தில் பிடித்து தொடர்ந்து வாசிப்பது ரொம்பவே அசௌகரியமான சங்கதி என்பதை practical ஆக உணர்ந்த போது ஜானுக்குக் கல்த்தா கொடுப்பது அவசியமாகிறது ! So XIII & ஜான் ஸ்டீல் are officially now out of NBS !
XIII
வெளியேறுவது இருவர் ; ஆனால் அவர்களது இடங்களை நிரப்பிட உள்ளே புகவிருப்பவர் ஒருவரே ; அவரும் ஒரு புதுமுகம் தான் ! Yes , பிரபல எழுத்தாளர் Van Hamme வின் இன்னொரு பரபரப்பான படைப்பான வேய்ன் ஷெல்டன் தனது அதிரடி ஆட்டத்தை NBS மூலம் துவக்குகிறார் ! இவரது 2 பாக துவக்க சாகசத்தின் பக்க நீளம் 57 + 62 = 119 ! முழுக்க முழுக்க வண்ணத்தில் ஆன இவரது சாகசத்தை பாதி கலரிலும் ; மீதி black & white -இல் வெளியிடுவது அபத்தமாய் இருந்திடும் என்பதால், தடாலடியாக NBS -ன் வண்ணப் பக்கங்களின் எண்ணிக்கையும் ; மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கையும் உயரே போகின்றது. வண்ணப் பக்கங்கள் 400 + black & white 56 - அக மொத்தம் 456 pages நம் NBS -ல் ! Wayne Shelton கதை ஒரு last minute தேர்வு என்பதால் மீண்டும் தலை தெறிக்க ஓட்டத்தைத் துவக்கியுள்ளோம் ! ஒரு விதத்தில் இது பொருத்தமே ; ஏனெனில் Wayne Shelton கதைகளும் ஒரு அசுர வேகப் பிரவாகமே ! ஆரம்பம் முதல் இறுதிப் பக்கம் வரை மூச்சிரைக்க நாமும் அவர்களோடு உயிரைப் பணயம் வைத்துப் பயணிப்பது போன்ற உணர்வைத் தந்திடும் இந்த முழு நீள ஆக்க்ஷன் ஹீரோவின் சித்திரங்களும் சரி ; அதிரடி வர்ணங்களும் சரி - அட்டகாசம் என்பதையும் தாண்டிய ரகம் ! Simply breathtaking !

Wayne Shelton & Co ! 
இந்த மாற்றம் எனக்கு நிஜமாக சந்தோஷமளிக்கிறது ! NBS -ல் இப்போது காத்திருக்கும் கதைகள் நிச்சயம் world class என்பது எனது நம்பிக்கை ! அந்த சிந்தனை சரியானது தான் என்று நீங்களும் ஆமோதிக்கும் நாள் அதிகத் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையோடு விடை பெற்றிடும் முன்னே அனைவருக்கும் எங்களது தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! எங்கள் நகரை நீங்கள் அன்பாய் நினைவு கூர்ந்திட எங்களது நகரப் பட்டாசுத் தொழில்கூடங்கள் சிந்திடும் வியர்வை எங்களுக்கெல்லாம் பெருமை தரும் விஷயமே !  ! Have a wonderful & safe Diwali !      

349 comments:

  1. மாற்றங்கள் மாற்றான் படம் போல மொக்கையாய் இராது என்பதால் மிகுந்த மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. மாற்றங்கள் மாற்றான்(13 /வேய்ன் ) தோட்டத்து மல்லிகை போல மணக்க இருக்கின்றன !

      Delete
  2. //எப்போதோ ஒரு Facebook குரூப் துவக்கி ஒரு வாரமோ ; இரண்டு வாரங்களோ அங்கே நான் தலையைக் காட்டிட முயற்சித்த சமயத்திலேயே நமது மின்னஞ்சல் முகவரியினை (lioncomics@rediffmail.com )யாரோ ஒரு புண்ணியவான் hack செய்து விட்டார் ! அத்தோடு அந்த மின்னஞ்சல் முகவரியையும்,எனது வலைத்தள முயற்சிகளையும் பரணிற்குப் பார்சல் பண்ணி விட்டு 'அக்கடா'வென அமர்ந்த//

    அப்பாடா, இப்போது தான் சார் நிம்மதி. ஏனென்றால் அந்த ஃபேஸ்புக் கும்பல் (சரியாக சொன்னால் ஐந்தரை பேர் தான் (கரெக்ட், நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் - 5 1/1 People) இதனையே சாக்காக வைத்துக் கொண்டு எங்கள் ஃபேஸ்புக் குழுமத்தில் விஜயன் சாரும் இருக்கிறார். அவரே எங்களைக் கண்டு கொள்வதில்லை, நீங்கள் எம்மாத்திரம் என்று சப்பை கட்டு கட்டி வந்தனர்.

    இப்போதாவது மற்றவர்களுக்கும் உண்மை புரியட்டும்.

    ReplyDelete
  3. சார்,
    வேய்ன் ஷெல்டன் கதைகளை படித்தவன் என்பதால் கேட்கிறேன் (தவறாக நினைக்க வேண்டாம்).

    வான் ஹாம் இந்த தொடரின் முதல் இரண்டு பாகங்களை மட்டுமே எழுதியுள்ளார். மற்ற பாகங்கள் வேறொரு எழுத்தாளரைக் கொண்டு வந்துள்ளன. மூன்றாவது நான்காவது மற்றும் ஐந்தாவது பாகங்களை நாம் தொடருவோமா?

    (of course it looks a very foolish question,i realised it only after typing it here).

    ReplyDelete
  4. லூசு - father of லூசு பையன் : வேய்ன் ஷெல்டன் கதைகளை பொறுத்த வரை overall plot முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதொன்று ! So வான் ஹாம்மே விட்டுச் சென்ற பின்னும் கூட தொய்வேதும் இன்றி கதை பயணிக்கிறது ! கலக்கம் தேவை இல்லை !

    ReplyDelete
    Replies
    1. உடனடி பதிலுக்கு நன்றி சார்.

      இந்த கதையின் முதல் இரண்டு பாகங்களை மட்டும் படித்துள்ளேன். அடுத்த மூன்று பாகங்களை வெறும் படம் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் (வேறென்ன, பாஷை தெரியாத பாவம்தான்). ஆகையால் தான் அந்த கேள்வி.

      Delete
  5. //தடாலடியாக NBS -ன் வண்ணப் பக்கங்களின் எண்ணிக்கையும் ; மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கையும் உயரே போகின்றது. வண்ணப் பக்கங்கள் 400 + black & white 56 - அக மொத்தம் 456 pages நம் NBS -ல்//

    அட்டகாசமான சங்கதி சார்.

    சரியாக 25 வருடங்களுக்கு முன்பு லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் என்று ஒரு இதழ் வெளியிட்டீர்கள் 532 பக்கங்கள் கொண்ட அந்த இதழ் ஒரு மெயில் கல் என்றால் இந்த இதழை என்ன சொல்வது?

    ReplyDelete
  6. லூசு - father of லூசு பையன் : கால் நூற்றாண்டுக்கான பரிணாம வளர்ச்சியோ ?

    ReplyDelete
  7. நீங்கள் எடுத்த முடிவுகள் சரியென்றே எனக்கும் படுகிறது. கூடுதல் பக்கங்கள் வேறு.. வரவேற்கபடவேண்டிய விசயம்தான் :)

    ReplyDelete
  8. Ithu nallathoru marrame nalla athiradi matrame engaluku + 56 colour pages newyear giftaga kidaika poguthu

    ReplyDelete
  9. சார்,

    இதுவரையில் வந்துள்ள விளம்பரங்களை கவனத்தில் கொண்டு இந்த லிஸ்ட்'டை தயாரித்துள்ளேன் (அப்கோர்ஸ் நெவர் பிஃபோர் ஸ்பெஷலில் முழு விவரங்களும் வந்து விடும் என்றாலும் தூக்கமில்லா இரவுகளில் காமிக்ஸை பற்றி கதைப்பதில் தானே சுகம்?)

    1.ஜனவரி: முத்து காமிக்ஸ் நெவர் பிஃபோர் ஸ்பெஷல்

    2.பிப்ரவரி மாதம்: லயன் காமிக்ஸ் - டேக்ஸ் வில்லர் எமனின் ஏஜெண்ட்

    3.மே மாதம் - முத்து காமிக்ஸ் கோடை மலர்: கேப்டன் டைகரின் இரத்தத் தடம் (இரும்புக் கை எத்தன் கடைசி பகுதிகள் பாகங்கள் 5 & 6)

    4.முத்து காமிக்ஸ் ப்ளாக் & வைட் ஸ்பெஷல் (மர்ம மனிதன் மார்டின் + டிடெக்டிவ் ராபின்)

    5.முத்து காமிக்ஸ்: லார்கோ வின்ச் - துரத்தும் தலைவிதி (பாகங்கள் 5 + 6)

    6.லயன் காமிக்ஸ்: காமெடி ஸ்பெஷல் (லக்கி லுக்:எதிர் வீட்டில் எதிரி + சிக்பில் குழு:சிரிப்பாய் 2 சிப்பாய்கள்)

    7.லயன் காமிக்ஸ் - மதியில்லா மந்திரி - ஒரு கம்பளப் பயணம்

    8.முத்து காமிக்ஸ்: ஃகிராபிக் நாவல் ஸ்பெஷல் (மரணம் மறந்த மனிதர்கள் + ஒரு சிப்பாயின் சுவடுகள்)

    9.லயன் காமிக்ஸ்: வில்லியம் வான்ஸ் ஸ்பெஷல் (ப்ருனோ ப்ரேசில்: சாக மறந்த சுறா + சாகச வீரர் ரோஜர்)

    10.லயன் காமிக்ஸ்: லக்கி லுக் ஸ்பெஷல்: மகாப் பிரபு பராக் + கானம் பாடும் கம்பிகள்

    11.முத்து காமிக்ஸ்: இலக்கில்லா யாத்திரை.

    இதில் விடுபட்டவை: ஏற்கனவே விளம்பரப் படுத்திய பின்வரும் இதழ்களே

    1.டெக்ஸ் வில்லர் - காவல் கழுகு

    2.சிக்பில் - பச்சையப்பா படலம்

    3.லக்கி லுக் - அழகிய அவஸ்தை

    இவற்றை பற்றிய அப்டேட் ஏதேனும் உண்டா சார்?

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசம் நண்பரே ,இவை எந்த வரிசையில் வந்தாலும் சரி ,ஆனால் கோடை மலர் எனில் இரும்புக்கை எத்தன் வாக்கெடுப்பில் முன்னணியில் இருப்பதால் அதுவே உறுதியாக இருப்பதால் கேப்டன் டைகரின் ரத்ததடம் தோய்ந்து மெகா ஸ்பெசலாக மலர்ந்தால் ஆஹா .........மேலும் ஒரே நாயர்களாக வராமல் ஒரு லக்கி ,ஒரு சிக் பில் என வந்தால் அற்புதமே என்பது எனது எண்ணம் .....

      Delete
  10. விஜயன் சார்,

    உங்கள் முடிவை முழுவதுமாக வரவேற்கிறேன். Wayne Shelton ஐ பிரெஞ்சில் படித்துள்ளேன். மிகவும் அற்புதமான மற்றும் விறுவிறுப்பான கதை தொடர். படங்களும் அட்டகாசமாக இருக்கும். மொத்தத்தில் இந்த இதழ் (NBS) ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமேயில்லை.

    ReplyDelete
  11. உண்மையிலேயே இந்தப் பதிவு தீபாவளி இனிப்புப் பரிசுதான் சார்...NBS என்னும4 சரவெடி தைப்பொங்கலுக்கு எதிர்பார்க்கலாமா சார்? நீங்க பக்கங்களையும் வண்ணங்களையும் மட்டும் கூட்டவில்லை...எங்கள் BPஐயும் கூட்டிவிட்டீர்கள்...456 பக்கங்கள் - அடேங்கப்பா...உலக அளவில் கூட இப்படி ஒரு இதழ் இதுவரை வந்திருக்கிறதா சார்?

    ReplyDelete
  12. "yes , பிரபல எழுத்தாளர் Van Hamme வின் இன்னொரு பரபரப்பான படைப்பான வேய்ன் ஷெல்டன் தனது அதிரடி ஆட்டத்தை NBS மூலம் துவக்குகிறார் ! இவரது 2 பாக துவக்க சாகசத்தின் பக்க நீளம் 57 + 62 = 119 ! முழுக்க முழுக்க வண்ணத்தில் ஆன இவரது சாகசத்தை பாதி கலரிலும் ; மீதி black & white -இல் வெளியிடுவது அபத்தமாய் இருந்திடும் என்பதால், தடாலடியாக NBS -ன் வண்ணப் பக்கங்களின் எண்ணிக்கையும் ; மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கையும் உயரே போகின்றது. வண்ணப் பக்கங்கள் 400 + black & white 56 - அக மொத்தம் 456 pages நம் NBS -ல் !"
    Wooooooooow!!!!!!!
    ஆசிரியர் அவர்களே!, இப்படி வண்ணப்பக்கங்களை வாரி வழங்கியிருக்கிறீர்களே ..நீங்கள் நிச்சயம் வள்ளல் தான் போங்கள் . இதனால் அனைத்து தரப்பினரும் திருப்தியடைவர் . எங்களுக்கோ கொண்டாட்டம் தான். வேய்ன் ஷெல்டனை வரவேற்கிறோம். தனிப்பட்டமுறையில் எனக்கும் XIII தொடர் இனியும் ஸ்பெஷலில் மற்ற கதைகளோடு வருவது பிடிக்கவில்லை... XIII தொடர் சோலோவாக வந்தால் தான் அழகே. வரவிருக்கும் சித்திர விருந்தான Never Before ஸ்பெஷல் மிகப்பெரிய சாதனையாவது உறுதி.
    கீழே உள்ள லிங்க் உங்கள் FACEBOOK ID இல்லையா? இல்லையென்றால் தயவுசெய்து உங்களது OFFICIAL FB PROFILE ID அறிவியுங்கள் சார். .
    https://www.facebook.com/vijayan.soundrapandian?ref=ts&fref=ts

    ReplyDelete
    Replies
    1. udhayan : என்னால் நேரடியாய்ப் பங்கேற்க இயலா எந்த முயற்சிக்குள்ளும் நான் அடி பதிக்க ஆர்வப்படுவதில்லை. இந்த நம் வலைப்பதிவினில் ஆஜராகி அவ்வப்போது உங்களின் பின்னூட்டங்களுக்குப் பதிலளிக்கவே அவகாசம் நிறைய தேவைப்படும் சமயத்தில் Facebook தளத்திலும் நான் எழுதிட முனைந்தால் அது நம் பணிகளை நிச்சயம் பாதிக்கும் ! அதனால் தான் ஒரு official Facebook பக்கத்தைத் துவக்கிடுவதில் நான் ஈடுபாடு காட்டவில்லை.

      என்றோ ஒரு போர் அடித்த ஞாயிற்றுக்கிழமை facebook -ல் எனது personal id பதிவு செய்தேன் என்ற நினைவு உள்ளது ; ஆனால் அதன் பின்னே அங்கே தலை வைத்துக் கூடப் படுக்கவில்ல்லை !

      நமது மற்றதொரு தொழிலான அச்சு இயந்திரங்கள் வாங்கி விற்கும் முயற்சிகளுக்கு மாத்திரமே facebook பதிவு உண்டு !

      Delete
    2. வாஸ்தவம் தான் சார். உங்கள் நேரத்தை அபகரிக்கும் எந்த விஷயமும் அவசியமற்றது தான்.

      ஆனால் Facebook க்கென தனியாக நீங்கள் பதிவேதும் இட தேவையில்லையே சார் . இங்கே வலைப்பூவினிலே நீங்கள் எதை பதிவிடுகிறீர்களோ அதை facebook க்கில் அப்படியே share (FB பட்டன் மூலம்) கொடுத்து விடலாம் தானே . இதனால் ப்ளாக் பார்க்க இயலாதவர்கள் இன்ஸ்டன்ட் ஆக அப்டேட் ஆகும் facebook கில் கம்ப்யூட்டர் அவசியமில்லாத மிக மிக சாதாரண மொபைல் போனில் கூட இன்னும் நிறைய வாசக நண்பர்கள் நமது ப்ளாக்கினை பார்த்துக் கொள்ளலாம். நமது காமிக்ஸ் விஷயங்களை அறிந்து கொள்ளலாமே. இதன் மூலம் இன்னொரு பயன் என்னவென்றால் facebook ல் வாசகர்கள் யாரும் தனியே சிதறிப்போகமாட்டார்கள்.. இது ஒரு அபிப்பிராயம் மட்டுமே.

      என்றாலும் facebook வேண்டாம் என நீங்கள் நினைத்தால் எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.

      Delete
  13. என்னுடைய ஆவலை அதிகம் தூண்டியது இலக்கில்லா யாத்திரைதான்.புதிய தொடர் என்று வேறு போட்டுவிட்டீர்களா?மனது பிறாண்டுகிறது...அதைப் பற்றியும் முன்பு நம் வாசக நண்பர்கள் குறிப்பிட்ட தோர்கல் கதைத் தொடர் பற்றியும் ஒரு கதைச் சுருக்கமாக பதிவு ஒன்றையாவது போடுங்கள் சார்...ஆங்கிலத்திலும் பிரெஞ்ச்சிலும் வந்த காமிக்ஸ்களை படிக்கத்தெரியாமல் நான் படுறபாடு இருக்கே...அய்யய்யய்யய்யோ...அந்தக் கதைகளை வெளியிடுகிறீர்களோ இல்லையோ அவற்றைப் பற்றிய ( முக்கியமாக தோர்கல்) சுவையான தகவல்களையாவது எழுதுங்களேன் ப்ளீஸ்...

    ReplyDelete
  14. ஆசிரியர் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், லயன் காமிக்ஸ் குழு அனைவருக்கும், காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய தீப ஒளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ithuvarai N.B.S
    mun pathivu ethahanai sir..?

    ReplyDelete
  16. Superb News sir,

    இரத்த படலம் தனி புத்தகமாக வருவதே சரியாக இருக்கும், தனியாக கலெக்ட் செய்வதற்கும் இதுவே சரியானதாக இருக்கும் சார்.

    ReplyDelete
  17. அடேங்கப்பா ............... சார் நிஜமாகவே கடைசி பத்திகளை படித்த போது என்னால் பேச முடியவில்லை ..........சத்தியமாக சிறு வயதில் கூட இவ்வளவு உற்ச்சாகமாய் எனது மனம் துள்ளி இருக்குமா என்பது சந்தேகமே !

    ReplyDelete
  18. XIII வெளியே போவது நல்லது. முழு புத்தகத்தையும் வண்ணத்தில் கொண்டு வர எண்ணமுண்டா ?

    எழுத்து பிழைகளை தயவு செய்து கவனியுங்கள் சார். தலைப்பிலேய எழுத்து பிழை இருப்பது proof reading கையே கேள்வி குறியாக்குகிறது. தேவை இல்லாத வட்டார மொழி வழக்கு வேண்டாமே. உதாரணத்துக்கு பேமானி கஸ்மாலம்.

    ReplyDelete
  19. எடிட்டர் சார்,

    சென்ற பதிவின் சில பின்னூட்டங்களினால் உங்கள் மனம் புண்பட்டுக் கிடக்கக்கூடும் என்றும், அதனால் அடுத்த பதிவுக்கு இன்னும் கொஞ்சநாள் தாமதமாகும் என்று நினைத்திருந்தேன். அட்டகாசமான, அர்த்தமுள்ள மாற்றத்தோடு வந்து எங்கள் எடிட்டரின்பால் நாங்கள் கொண்ட மரியாதையும், அன்பும் அர்த்தமுள்ளதே எனப் புரியவைத்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி சார்!
    வெய்ன் ஷெல்டனை ஆவலுடன் வரவேற்கிறேன்! அதிக பக்கங்களையும்தான்!

    'தங்கக் கல்லறை' நிச்சயம் ஒரு தங்கமான படைப்பு என்று மறுபடியும் சொல்லவேண்டும் போல தோன்றியது. சொல்லிவிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. விஜய் நானும் இரண்டு முறை படித்து விட்டேன் .....ஆசிரியரின் இந்த
      //உச்சக்கட்டமாய் ஒரே நாளில் 1788 பார்வைகள் ; ஏறத்தாழ 450 பின்னூட்டங்கள் ;
      பிரவாகமாய் எண்ணங்கள், கருத்துக்கள் என்று ஒரு அடைமழை effect !//
      இதற்க்கு முக்கிய காரணம் டைகர் மேல் உள்ள எதிர்பார்ப்பே என்றாலும் நமது சூப்பர் ஹீரோசின் வெற்றியே பல வாசகர்களை மீண்டும் இழுத்து வந்தது என கூறவும் வேண்டுமோ!

      Delete
    2. உண்மைதான் ஸடீல் க்ளா! பழைய வாசகர்களுக்கு நம் சூப்பர் ஹீரோக்கள் விசிட்டிங் கார்டு கொடுத்து வரவழைத்திருக்கும் பட்சத்தில் 80களில் நாம் பார்த்திட்ட அந்ந காமிக்ஸ் பிரவாகம் மீண்டும், வெகு விரைவில் எழவிருப்பதை உணரமுடிகிறது! Start music...

      Delete
  20. தங்கள் மேல் நம்பிக்கை வைத்து நான் இரண்டு புத்தகங்கள் வாங்கியதற்கு, எனது இந்த நம்பிக்கை எப்போதும் பொய்க்காது எனினும்,நம்பிக்கைதனை மேலும் உயர்த்தி விட்டீர்கள் ,தங்க கல்லறை விற்பனை சூடு பிடித்ததென்றால் ,தங்களது இந்த பதிவை இந்த அற்புதமான ஓவியங்களை படித்த பின்னர் NBS விற்பனை சீறி கொண்டு செல்ல போகிறது ,வாங்கவிருக்கும் நண்பர்கள் EBAY மூலமாக வாங்குவதை விட முன் பதிவு நமக்கு புத்தகத்தை விரைவில் கொண்டு வந்து சேர்க்கும் என அனைவரும் முன்பதிவை விரைந்து செலுத்தத்தான் போகிறார்கள் !

    ReplyDelete
  21. எடிட்டரின் இந்தப் பதிவில் எனக்கு இரட்டை சந்தோஷமே! சென்ற பதிவில் முதலில் 500 வது கமெண்ட் போடுபவருக்கு ஒரு மெகா treat அறிவித்திருந்தேன்.  என் பாக்கெட் பற்றித்தான் எடிட்டருக்கு எவ்வளவு அக்கறை!! இன்னும் ஒருநாள் தாமதித்திருந்தாலும் யாராவது (அனேகமாக, கிருஷ்ணா வ.வெ) எனக்கு வெற்றிக்களிப்புடன்
    அரைகூவல் விடுத்திருப்பார்களே!

    ஹா!ஹா! வடை போச்சே...!

    ReplyDelete
  22. சார் உண்மை என்ன என்பதை இப்பொழுதாவது எங்களுக்கு சொன்னீர்களே!!! இனி மேல் நாங்கள் பார்த்து கொள்வோம் அந்த நக்கல் மற்றும் பரிகாசம் செய்யும் அதிபுத்திசாலிகளை... மேலும் ஒரு கேள்வி மண்டைக்குள் குடைகிறது. ரூபாய் 400/- இலேயே இந்த எக்ஸ்ட்ரா பக்கங்களை அடக்கி விட இயலுமா என்ன? இல்லை விலை ஏற்றம் எனில் பிறகு அனுப்பி கொள்ளலாமா நாங்கள்?

    ReplyDelete
    Replies
    1. 400/- இலேயே இந்த எக்ஸ்ட்ரா பக்கங்களை அடக்கி விட இயலுமா என்ன?
      //இந்த கேள்வி குறித்தே !

      Delete
    2. ------------

      சாதாரணமாக ரூ 100 இதழ்களில் 98 பக்கங்கள் வண்ணங்களாக வந்தது. அந்தக் கணக்கில் 98*4 = 392 பக்கங்கள் இருக்க வேண்டுமே.. ஆனால் முதலில் அறிவிப்பில் கம்மியான வண்ணப் பக்கங்கள் இருந்தன. இதைப் பற்றி facebook-ல் விவாதம் நடந்தது. காமிக்ஸ் புத்தகங்களில் விலை வெறும் பக்கங்களின் எண்ணிக்கையில் இல்லை. வெவ்வேறு கதை, வெவ்வேறு ராயல்டி தொகை, எங்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே.

      இந்நிலையில், NBS பற்றிய அடுத்த பதிவில், ஏன் கம்மியான வண்ணப் பக்கங்கள் என அறிய ஆவலாக இருந்தோம். facebook-ல் நான் கண்டிப்பாக எடிட்டரிடம் இந்தக் கேள்வியைக் கேட்பேன் என்று கூறியிருந்தேன்.

      ஆனால் அனைத்துக்கும் முற்றுப் புள்ளியாக, கேள்விகள் கேட்க முடியா வண்ணம் அற்புதமான கூடுதல் பக்கங்கள் அறிவிப்பு மற்றும் புதிய கதைத் தொடர் என அமர்க்களமான அறிவிப்பு. தீபாவளி போனஸ் கிடைத்த சந்தோஷம் எனக்கு.

      XIII-ன் வெளியேற்றமும் வரவேற்புக்கு உரியதே. ஸ்டீல்க்ளா சொன்னதைப் போல தனி இதழாக வருவது நல்லதே.

      ------------

      @புத்தக ப்ரியன் - facebook-ல் எடிட்டர் பற்றி பல விவாதங்கள் நடக்கும். கிண்டல், கேலி, பாராட்டு, திட்டு என பலவிதமான விவாதங்களின் நானும் பங்கு கொண்டவன் என்ற முறையில் சொல்வது : இந்த அறிவிப்பினால் facebook கும்பலைப் பார்த்துக்கொள்வோம் என்று கூறியிருப்பது வருந்தத்தக்கது.

      என்னுடைய முழு பெயர் : Ramkumar Gopalakrishnan என்ற பெயரிலேயே facebook-ல் இருக்கிறேன் நண்பரே :-). ஓடி ஒளிந்து முகமூடி போட்டு எடிட்டர் பற்றி பேசும் பழக்கம் என்னிடம் இல்லை. எடிட்டரை நேரில் சந்தித்தால் என்ன கேள்விகள் கேட்பேனோ.. அதே மாதிரியான விவாதங்களில் facebook-ல் நான் ஈடுபடுகிறேன்.

      எடிட்டர் இந்தப் பதிவில் குறிப்பிட்டது போல, ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் நிறைய உங்கள் கண்களுக்கு அங்கு தென்படாதது ஆச்சரியமே :-).

      எடிட்டரின் அனுபவம் வைத்துப் பார்க்கும் போது, பாராட்டுக்களை விட விமர்சனங்களையே கூர்ந்து நோக்குகிறார் மற்றும் அதற்கு உரிய பதிலையும் கூறுகிறார். அந்த maturity-யே நம் காமிக்ஸ் இன்ன்மும் தரத்தில் முன்னேறி 2012-ஆம் வருட இதழ்களின் தரத்தையும் தாண்டி 2013-ஆம் ஆண்டு வெளிவரும் இதழ்கள் முன்னேறும் என்ற நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.

      ஒவ்வொரு ரஜினியின் பட வசூல் அவரது முன்பு வெளியான பட வசூலை முறியடிப்பதிலேயே அவரது வளர்ச்சி இருக்கிறது. அதே போல நம் காமிக்ஸ் 2013-ஆம் வருடத்தை BIG BANGயோடு தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சி.

      Delete
    3. ஒரு இதழின் தயாரிப்பில் நேர்ந்திடும் செலவுகளை இரண்டு வகைகளாகப் பிரித்துப் பார்ப்போம் ! ஒன்று நிலையான செலவுகள் - fixed costs ! அச்சிடப்படும் பிரதிகளின் எண்ணிக்கைக்கும் இந்தச் செலவினங்களுக்கும் துளி சம்பந்தமும் இருந்திடாது. உதாரணத்திற்கு டிசைன் செய்ய ஆகிடும் செலவுகள் ; அச்சுக்கோர்ப்புச் செலவுகள் ; ப்ராசசிங் செலவுகள் என்று சொல்லிடலாம். ஒரே ஒரு புக் அச்சிட்டாலும் சரி ; ஒரு லட்சம் பிரதிகள் அச்சிட்டாலும் சரி - இந்தச் செலவுகளில் மாற்றம் இருந்திடாது.

      இரண்டாம் வகை variable costs - அதாவது எண்ணிக்கைக்கு ஏற்ப ஏறி இறங்கும் செலவு வகைகள். பேப்பர் கொள்முதல் ; கூரியர் அனுப்பும் செலவுகள் ; பைண்டிங் செலவுகள் இத்யாதி இந்த வகையினில் சேரும்.

      நமது fixed costs இதழ் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் ஆகின்றது என்று ஒரு பேச்சுக்கு கணக்கிட்டால் - 3000 பிரதிகள் விற்பனை செய்தால் per book மீது ஏறும் சுமை Rs 33 ஆகும். இதே விற்பனை எண்ணிக்கை 5000 ஆக இருக்கும் பட்சத்தில் per book சுமை Rs.20 மாத்திரமே என்றாகும். So பிரதிகளின் எண்ணிக்கை கூடக் கூடத் தான் லாபமெனும் துளிர் தழைக்கும்.

      சின்னதொரு சர்குலேஷன் இருந்திடும் நம் போன்ற பத்திரிகைகளுக்கு இந்த நிலையான செலவுகள் பெரியதொரு பாரம். நமக்கு நேர்ந்திடும் செலவுகளின் பெரும்பான்மை இந்த ரகமே !

      ராயல்டி கூட ஒரு minimum guarantee என்ற முறையில் கூடுதலாய் நாம் செலுத்தி வருகின்றோம். சில ஆயிரங்களில் மாத்திரமே நமது விற்பனை உள்ளது என்ற காரணத்திற்காக பல லட்சங்களில் விற்பனையை சந்தித்து வரும் படைப்பாளிகள் உலகப் பிரசித்தி பெற்ற தம் கதாப்பாத்திரங்களை குறைச்சலான ராயல்டிக்கு வழங்கிட வேண்டுமென்று நாம் எதிர்பார்ப்பதும் practical அல்ல என்பதால், அவர்கள் கோரும் ஒரு குறைந்த பட்ச உத்தரவாத ராயல்டியை செலுத்தி விடுகிறோம்.

      Contd : Part 2 :-)

      Delete
    4. Part 2 :

      NBS இதழ் கூடுதலான விலை என்பதால் அதன் விற்பனை எண்ணிக்கை நமது மாமூலான நூறு ரூபாய் இதழ்களின் விற்பனை எண்ணிக்கையில் பாதியே ! ஆகையால் நூறு ரூபாய்க்கு இத்தனை பக்கம் ; நானூறு ரூபாய்க்கு நான்கு மடங்கு அதிகமாய்ப் பக்கங்கள் இருக்க வேண்டுமே என்ற வழக்கமான பெருக்கல் வாய்ப்பாடு இங்கே apply ஆகிடாது !

      அப்படி இருக்க இன்று பக்கங்களின் எண்ணிக்கையை திடுமென அதிகரிக்க முடிவது எவ்விதம் என்பது நியாயமானதொரு கேள்வியே ! முதற் காரணம் ; முக்கிய காரணம் - அவசியம் !! நானூறு ரூபாய்க்கு ஒரு இதழைத் தயாரிப்பது பெரிதல்ல ; அது வாங்கும் ஒவ்வொரு நண்பரையும் முழுமையாகத் திருப்திப்படுத்திட வேண்டும் என்பது தானே அத்தியாவசியம் ! எனக்கே ஒரு திருப்தி இல்லாத சூழ்நிலையில் லாபம் , நஷ்டம், costing இத்யாதி எல்லாமே முக்கியத்துவத்தில் பின்சீட்டுக்கு அனுப்பிடல் அவசியமாகிறது ! So பெரியதொரு சிந்தனைக்கெல்லாம் இடமளிக்காது மனதில் தோன்றிய first choice ஹீரோவை NBS ஜோதியில் ஐக்கியம் ஆக்கிடத் தீர்மானித்தேன் ! அவரது கதையின் நீளம் வழக்கத்தை விட ஜாஸ்தி என்பது கவனத்துக்கு வந்த சமயத்திற்குள் என் மனது fix ஆகிவிட்டிருந்தது ! So திரும்பவும் இன்னொரு தேடலைத் துவக்காது நண்பர் Wayne Shelton ஐ உறுதிப்படுத்தி விட்டேன்.

      காரணம் நம்பர் 2 : அதிகரித்து வரும் நமது முன்பதிவுகளின் வேகம் ! கடந்த பத்து நாட்களாய் தினமும் வந்து குவியும் NBS முன்பதிவுகள் + சந்தா புதுப்பித்தல்கள் நிரம்பவே உற்சாகமூட்டும் விதத்தில் உள்ளன ! நிச்சயம் ஆரம்பத்தில் நான் கணக்கிட்டதை விட சிறிதளவேனும் கூடுதலாய்ப் பிரதிகள் அச்சிட ; விற்பனை செய்திட சாத்தியப்படும் என்பது புலனாகியதால் தெம்பாய் அறிவிப்பு !

      காரணம் எண் 3 : வரவிருக்கும் நமது சென்னைப் புத்தகத் திருவிழா !

      காரணம் எண் 4 : எல்லாவற்றிற்கும் மேலாய் உங்கள் மேல் இருக்கும் அசாத்திய நம்பிக்கை !

      So NBS will still be priced the same !

      Delete
    5. ---------

      டியர் எடிட்டர்... மிக விரிவான விளக்கமளித்திருக்கிறீர்கள்...

      NBS அறிவிப்பு வந்த அடுத்த நாளிலேயே புக்கிங் செய்துவிட்டேன் :-). அதற்கு காரணம் தரும் பணத்திற்கு அதிக அளவிலேயே நீங்கள் இதுவரை எங்களுக்கு தருகிறீர்கள் என்பதனை மறுக்க இயலாது. WWS வந்த இரண்டு கதைகள் ஆங்கிலத்தில் சுமார் ரூ 1000 விலையில் விற்பது அனைவரும் அறிந்ததே.

      நீங்கள் கூறியபடி பெருக்கல் வாய்ப்பாடுபடி பக்கங்கள் அமையாது என்பதனை தெளிவுபடுத்தியுள்ளீர்கள்..

      - அதிக அளவில் NBS முன்பதிவுகள் வருகிறது என்பதனை நினைக்கையில் மகிழ்ச்சி.. உங்களின் இந்தப் பதிவுக்குப் பின் இன்னும் வேகம் அதிகரிக்கும் என எண்ணுகிறேன்.

      - புத்தகத் திருவிழாவில் உங்கள் கவனம் இருப்பதை நினைக்கையில் மகிழ்ச்சி.

      எங்களின் கேள்விகள் அது எந்த அளவில் இருந்தாலும், அதற்கு நீங்கள் விளக்கமளிக்கும் விதம் அருமை. இது பல சந்தேகங்களைத் தீர்த்துவைக்கவும், நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் உள்ளது.

      வியாபரத்தைத் தாண்டிய உங்களின் காமிக்ஸ் காதலால் எங்களுக்கு (வாசகர்களுக்கு) லாபம் அதிகம் :).

      --------

      Delete
    6. @ dear Editor,

      காரணம் நம்பர் 2 : அதிகரித்து வரும் நமது முன்பதிவுகளின் வேகம் ! கடந்த பத்து நாட்களாய் தினமும் வந்து குவியும் NBS முன்பதிவுகள் + சந்தா புதுப்பித்தல்கள் நிரம்பவே உற்சாகமூட்டும் விதத்தில் உள்ளன ! நிச்சயம் ஆரம்பத்தில் நான் கணக்கிட்டதை விட சிறிதளவேனும் கூடுதலாய்ப் பிரதிகள் அச்சிட ; விற்பனை செய்திட சாத்தியப்படும் என்பது புலனாகியதால் தெம்பாய் அறிவிப்பு !

      Amazing ! Manam niranithathu ithaip padiththavudan! This has been the FIFTH best thing in my life - that filled my heart - other four things being personal! This means that the spark you re-ignited in all of us this year will glow for years to come! Thanks to your team !!

      Delete
    7. //காரணம் எண் 4 : எல்லாவற்றிற்கும் மேலாய் உங்கள் மேல் இருக்கும் அசாத்திய நம்பிக்கை !//
      விற்பனைக்கு இன்னுமொரு காரணம் எங்களுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாய் உங்கள் மேல் இருக்கும் அசாத்திய நம்பிக்கை !
      இதனை தன்னம்பிக்கை என்றும் சான்றோர் கூறுவார் !

      Delete
  23. போன போஸ்டில் உள்ள கடைசி கட்ட விவாதங்களை பார்த்து உங்கள் கருத்தை இங்கு தெரிவித்தால் நன்றாக இருக்குமே. நேரம் இருப்பின் முயற்சிக்கவும்.

    ReplyDelete
  24. உங்கள் உள்ளே உறைந்த அந்த காமிக்ஸ் காதலை உறுதி படுத்தி விட்ட போதிலும் 13 குறித்த தங்கள் அறிவிப்பால் அதிர்ந்து போனாலும் ,அதற்க்கு காரணம் எங்களுக்கு தரமான கதைகளைத்தான் தர வேண்டும் என்ற தங்களது இந்த ஒரு வரி போதும் சார் நமது இதழின் முன்னேற்றம் நேர்த்தியான,கவிதையான ,அழகான பாதையில் செல்வது ,செல்ல இருப்பது உறுதியாகி விட்டது! நிச்சயமாக ஜானியின் புத்தகத்தை நான் பெரிதும் எதிர்பார்க்கவில்லை !நமது புத்தக வடிவின் தரம் உயர்ந்து விட்ட படியால் ,ஆனால் இந்த வீட்டில் வரைந்த புகை படத்தை பார்த்தவுடன் எதிர்பார்க்க வைத்து விட்டது !13 தரமாக வருவார் என நம்புவோமாக !என்னை மிகவும் கவர்ந்த ஜான் ஸ்டீலின் விசயத்தில் ஏமாற்றி விட்டீர்கள் ,ஆனால் இந்த வேய்ன் ஷெல்டனின் சென்ற முறை தாங்கள் வெளிவிட்ட ஓவியத்திலே என்னை மறந்த எனக்கு இந்த அட்டை படம் ,கதையின் ஒரு பக்கம் ,மேலும் இதுபோலதான் லார்கோவின் அறிமுகமும் நடந்தது அதன் மாபெரும் ஈர்ப்பு பற்றி வார்த்தைகளால் சொல்லவும் இயலுமா ,அது போலவே வந்து இதுவும் மனதை அள்ளபோகிறது அதில் எந்த மாற்றமும் இல்லை ,இருக்க போவதும் இல்லை .வேய்ன் பற்றி முதலில் என்னுடன் பகிர்ந்து கொண்ட நண்பர் சிபி எனக்கு மனதை மயக்கிய,எதிர்பாராத ,துள்ளி குதிக்க வைத்த தீபாவளி பரிசுகளை அனுப்பிய போது அடுத்தவருடம்தான் இந்த பரிசு எனினும் இந்த அறிவிப்பே தீபாவளி பரிசல்லவா அவருக்கும் சேர்த்தே ! வேய்ன் குறித்து தாங்களும் ,நண்பர்களும் இங்கே இவரை பற்றி லயிப்பதால் இந்த அதிரடி பரிசை வாழ்நாளிலே மறக்க இயலாத அளவிற்கு செய்து விட்டீர்கள் ! தங்க கல்லறை தீபாவளி பரிசு என நினைத்த நான் இதுவே தீபாவளி பரிசு என மனதிற்குள் வெடிப்பது தங்களுக்கும் கேட்டிருக்கும் இப்போதென நினைக்கிறேன் !தங்களை இங்கே அழைத்து வந்த மினி லயனுக்கும் எனது நன்றிகள் ,நான் மெயில் பார்ப்பது கூட கிடையாது ,இங்கே நிதம் தோறும் நமது காதலை எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ,ஒத்த எண்ணங்களை கொண்ட நண்பர்களுடன் உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்காக !

    ReplyDelete
  25. ______________________

    >> ஒரு கிலோவிற்கும் கூடுதலான எடையுள்ளதொரு இதழைப் படுக்க வசத்தில் பிடித்து தொடர்ந்து வாசிப்பது ரொம்பவே அசௌகரியமான சங்கதி என்பதை practical ஆக உணர்ந்த போது ஜானுக்குக் கல்த்தா கொடுப்பது அவசியமாகிறது ! So XIII & ஜான் ஸ்டீல் are officially now out of NBS !
    ________________________________


    Since ஜான் ஸ்டீல் is a 2 panel per page Fleetway story similar to Mayavi/Lawrence stories, why not add such stories (as well as thigil Jet ace Logan stories) to the CC digests instead of the large format issues?


    Also I wanted to mention before that the CC issue of Kollaikara Mayavi had many pages where the artwork had faded/deteriorated. So when you reissue this in the digest size, please make sure that the source material is in good shape.

    ReplyDelete
  26. //XIII - ஒரு தேடல் தொடர்கிறது " முடிந்து என் மேஜையில் ஒரு வாரமாய் அழகாய் மிளிர்கிறது.//
    ஏக்கம் இங்கே மிளிர்கிறது அழகாய் !பெரு மூச்சுதான்!

    ReplyDelete
  27. //லார்கோவின் 2 கதைகள் (94 பக்கங்கள்) முடிந்து விட்டன ; டைகரின் "கான்சாஸ் கொடுரன்" 2 கதைகள் (92 பக்கங்கள்) வரும் வாரத்தில் நிறைவு பெறும் நிலையில் உள்ளன; மாடஸ்டி பிளைஸ் எப்போதோ தயார் ; திருவாளர் சிக் பில் பணிகள் தீபாவளி விடுமுறைகளின் சமயம் முடிந்து விடும் என்பதே சமீபத்திய நிலவரம். இன்னொரு வண்ணக் கதையான ௦" XIII - ஒரு தேடல் தொடர்கிறது " முடிந்து என் மேஜையில் ஒரு வாரமாய் அழகாய் மிளிர்கிறது. புது நாயகரான Gil Jordan வண்ணக் கதைக்கான அச்சுக்கோர்ப்புப் பணிகளும் ; மாயாவி ; ஜான் ஸ்டீல் b&w கதைகளின் அச்சுக்கோர்ப்புமே பாக்கி என்ற நிலையில் தான் என் மண்டைக்குள் திரும்பவும் கொஞ்சம் சிந்தனைகள் !


    //எப்படி மின் இலாக்காவினரை நமது நண்பர்கள் அ.கொ.தீ .க வை நமது நாயகர்கள் வெற்றி கொண்டது போல வென்றார்கள் என ஒரு சுய முன்னேற்ற பதிவு வெளிவிடலாம் என நினைக்கிறேன் !

    ReplyDelete
  28. மாற்றங்கள் வரவேற்கப்படத்தக்கவையே! ஆனால், விலையிலும் மாற்றம் வருமா ஸார்?

    ReplyDelete
  29. எடிட்டர் மற்றும் நண்பர்களே,

    இன்னொரு அதிரடி சாதனையும் சத்தமில்லாமல் செய்யவிருக்கிறோம். இரண்டு லட்சம் பார்வைகளை இந்த வலைத்தளம் வெகு விரைவினில் கண்டிடப் போகிறது.

    ---

    Again, "wow"-ed by the announcements - I was also feeling that XIII was extending far beyond the original knot - never the less, தனி இதழைப் படித்திடல் நன்றெனத் தோன்றுகிறது.

    ---

    Welcome to Wayne Sheldon ...! Picture frames look wonderful. Looks like we are in for a huge treat !!

    ReplyDelete
  30. டியர் எடிட்,

    400 ரூபாய் ஸ்பெஷல் என்ற ஒரு முயற்சிக்கு, தமிழ் காமிக்ஸ் என்ற முறையில் எனது ஆதரவு உண்டு என்றாலும், ஒரு காமிக்ஸ் காதலன் என்ற முறையில் எனக்கு அவ்வளவாக பிடித்தம் இல்லை. மிக்ஸ்ட் மசாலா போலா எல்லா கதைகளை பார்சல் செய்வது, அதன் தனிபட்ட தன்மையை சிதைக்கும் முறை போல தெரிகிறது.

    நாம் அதிகம் நேசிக்கும் ப்ரெஞ்சு காமிக்ஸ் நிறுவனங்கள் கூட, தங்கள் விமரிசையான நேரங்களில் இப்படிபட்ட டைஜஸ்ட் அடித்துவிட்டதாக நியாபகம் இல்லை. பிரிட்டிஷ் காமிக்ஸ் கதைகலனே வார சஞ்ஜீகைகள் மூலம் என்பதால், அங்கு இப்படிபட்ட ஸ்பெஷல்கள் எடுபடலாம். முழு கதையையும் தனி தனி புத்தகமாக போடும் நமது வெளியீடுகளில், இப்படி ஸ்பெஷல்கள் வருவது சரியா என்றும் புரியவில்லை.

    எது எப்படியோ, புதிய தேர்வுகளான வெய்ன் ஷெல்டன் சற்று முன்னரே அறிமுகமாக போகிறார் என்பதில் மகிழ்ச்சி. கூடவே XIII ன் தொடருக்கு தனிபட்ட விதத்தில் புத்தகங்கள் வெளிவருவதையும் நான் வரவேற்கிறன். ஜம்போ ஸ்பெஷல் போன்ற முயற்சிக்கு பின் இனி அதன் தொடர்கள் தனியாக வெளிவருவதே சரியாக இருக்கும். அம்முறையில் 400 ரூபாய் ஸ்பெஷலில் அது தலைகாட்டாதது நன்றே.

    அடுத்த ஜானி சாகஸத்தை டிசம்பரில் படிக்கும் ஆர்வம் அதிகமாகி விட்டது. கூடவே டிசம்பரில் வெளிவர இருந்த டெக்ஸ் கதையும் வருகிறதல்லவா ?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ,இது ஒரு வெற்றி விழா மலர் என்பதால் அனைவரும் வந்தால் மாபெரும் மகிழ்ச்சியை தருவதுடன்,அன்றைய கோடை மலர் ,தீபாவளி மலர் என்ற ஒரு கலவைதனை இங்கே விரும்பும் நண்பர்களும் பலருண்டு ! அதன் வெற்றியே அன்றைய கால கட்டங்களில் வாசகர்களின் வரவேற்பால் மேலும் ஆசிரியர் அது போன்ற புத்தகங்களை வெளிவிட நேர்ந்தது !பின்னர் அது போன்ற ஹீரோக்களின் கதைகள் குறைந்ததாலே டெக்ஸ் ய் சுமந்த கதைகள் வந்தது . மேலும் அது போன்ற இப்போதைய தரமான ஹீரோக்கள் வலம் வர துவங்கி உள்ளார்கள் !இந்தியர்களுக்கென இப்பாணி தனி தன்மையாக இருந்து விடட்டுமே !

      Delete
    2. 40 வருட சாதனையை ரூ 400 NBS ஆக வருவது மகிழ்ச்சியே. ஆனால் எடிட்டர் முன்பு சொன்னது போல இது போல இதழ் 41ஆம் வருடம் வராது மேலும் இது போல வருடா வருடம் மெகா ஸ்பெஷல் வெளியிடும் திட்டமும் இல்லை எனக் கூறியிருந்தார். இது ஒரு மைல்கல்லை celebrate செய்யும் ஸ்பெஷல் இதழ்.

      Delete
  31. இந்த blog உருவாகக் காரணமான 'ஜூனியர் லயன்' விக்ரமிற்கு எங்கள் கோடானகோடி நன்றிகள்!
    இனிவரும் காலங்களிலும் விக்ரமின் பங்கு சற்றே கூடுதலாக இருந்திட்டால் நிச்சயம் மகிழ்வோம்.

    வரவேற்கிறோம் விக்ரம்!

    ReplyDelete
  32. டியர் எடிட்டர் சார்,
    மாறுதல் ஒன்று தான் மாறாத ஒன்று. அந்த வகையில் never before special இதழின் மாற்றங்கள் வரவேற்க தக்கது. புத்தாண்டில் never before ஸ்பெஷல் சரித்திர சாதனை படைப்பது உறுதி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் , அலுவலக ஊழியர்களுக்கும் மற்றும் நமது காமிக்ஸ் வாசகர்கள் அனைவர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
    எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  33. முடிக்குமுன், தங்கள் பதிவில் நான் அங்கம் வகிக்கும் பேஸ்புக் குழுமத்தை பற்றியும் ஒரு குறிப்பு இருப்பதால், அதன் மாட்ரேடர்களில் ஒருவன் என்ற முறையில் சில விளக்கங்களை கொடுக்க வேண்டியுள்ளது. லயன் காமிக்ஸ் முந்தைய தளத்தின் டிஸ்கஷன் போரோமில் அரட்டை அடித்து கொண்டிருந்த காலம் முடிந்ததும், காமிக்ஸ் பதிவர்கள் சிலரின் பதிவுகளில் காமிக்ஸ் அரட்டை அடித்து கொண்டு திரிந்திருக்கிறோம். ஒரு சமயத்தில், அங்கு ஒரு சாராரை மற்றுமே போற்றி புகழ வேண்டும் என்று கட்டாயம் எழுந்ததற்கு பிறகு, கோஷ்டி பூசல்களில் விலகி இருக்க வேண்டிய கட்டாயமும் சேர்ந்திற்று.

    இப்படிபட்ட காலத்தில் சுதந்திரமாக நமக்கு பிடித்த தமிழ் காமிக்ஸ் கதைகளையும், பிடிக்காதவற்றையும், அதன் ஆக்கம், மொழிபெயர்ப்பு இவற்றை பற்றி விமர்சிக்க உருவானதே அந்த பேஸ்புக் தளம். அவ்வப்போது சில நண்பர்கள் எல்லை மீறி விமர்சித்திருக்கிறார்கள். அதை செய்யும்போது அக்கறையுடன் அதை சுற்றிகாட்டுவது, கண்டிப்பது என்று அங்குள்ள மக்களும் செய்து கொண்டு தான் வருகிறார்கள். எது எப்படியாயினும், அங்கு நடக்கும் விவாதங்கள், அடிப்படையில் நமது தமிழ் காமிக்ஸ் மீது கொண்ட காதலின் அடிப்படையில் தான் என்பதை புரிந்து கொள்ள தனி மூளை தேவைபடாது. எடிட்டுக்கு அது வெளிச்சமே என்று அறிந்ததில் சந்தோஷபடும் முதல் ஜீவன் நானாக தான் இருப்பேன்.

    பொய் ஐடிகளில் உலவி திரியும் பழைய கோஷ்டியின், இன்றும் தங்கள் நாவில் விஷம் தடவி அங்கங்கு கருத்திட்டு கொண்டிருந்தாலும், எங்களது பேஸ்புக் கும்மிகளும் எடிட்டின் லயன் முத்து வின் உயர்ந்து வரும் தரத்துடனான மறு பிரயோகத்திற்கு உதவியது கண்டு மகிழ்ச்சி. மற்றவர்களை போல ஒவ்வொருவருக்கு முதுகு சொறிந்து விடும் வகையில் தனிபட்ட இமெயில்களையும், பூட்டபட்ட வலைதளங்களையும் கொண்ட கலந்துரையாடல் அங்கில்லை. அங்கு இருக்கும் அனைத்தும் எல்லாருக்கும் வெட்டவெளிச்சம். அவைகள் அறிவாழித்தனமானவர்கள் இக்கூட்டம் என்று பரைசாற்றும் முயற்சி அல்ல, அனைவரும் காமிக்ஸ் ரசிகர்கள் என்ற ஒரே அடிப்படையில், நான் பெரியவன் நீ சிறயவன் என்ற ஏற்ற தாழ்வுகள் இன்றி சம்பாஷனையில் ஈடுபடம் குழுமம்.

    நேரவசதிபடி புதிய கதைகளை நோக்கி உங்கள் பயணத்திற்கான ஆதரவும், நடக்கும் குறைகளை சுட்டிகாட்டும் ஒரு தளமாகவும் அங்கு தொடர்ந்து செய்லபடுவோம் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @Rafiq Raja:
      //அதை செய்யும்போது அக்கறையுடன் அதை சுற்றிகாட்டுவது, கண்டிப்பது என்று அங்குள்ள மக்களும் செய்து கொண்டு தான் வருகிறார்கள்//
      அந்த குழுவில் இந்த வருடம் இணைந்த உறுப்பினர் என்ற முறையில் உங்களின் இந்த கருத்தை ஆமோதிக்கிறேன்! மொத்த குழுமத்தையும் குறை கூறுவது தவறு!!!

      @RAMG75:
      //ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் நிறைய உங்கள் கண்களுக்கு அங்கு தென்படாதது ஆச்சரியமே :-)//
      மிகுந்த ஆச்சரியமூட்டும் உண்மை நண்பரே!

      இரும்புத்திரைக்கு பின்னே, யாரும் பார்க்க முடியா வண்ணம் எத்தனையோ காமிக்ஸ் ஃபேஸ்புக் க்ரூப்கள், வலைப்பூக்கள் இருக்கலாம் - அங்கு என்னென்ன நடக்கின்றதோ யார் கண்டார்?! அப்படி இல்லாமல், அனைவரும் காணும் வகையில் இருக்கும் இந்த ஃபேஸ்புக் க்ரூப்பில், பகிரப்படும் நல்ல கருத்துகளையும், சுவையான காமிக்ஸ் பற்றிய தகவல்களையும் பார்க்க முயற்சியுங்கள்! :)

      Delete
  34. டியர் எடிட்டர் சார்,
    nbs இதழுக்கு ரூபாய் 400/- இலேயே இந்த எக்ஸ்ட்ரா பக்கங்களை அடக்கி விட இயலுமா !? இல்லை விலை ஏற்றம் இருக்குமா சார்?
    எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  35. Dear Sir,

    Good Changes. Is the price remain same or increased proportionally to color pages?

    Regds,
    Boopathi L

    ReplyDelete
  36. டியர் சார்,

    இந்த "உள்ளே" "வெளியே" மாறுதல் எனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதிலும் ஜான் ஸ்டீலை வெளியே தள்ளியது மிகச்சரியான முடிவு நன்றி. கூடவே XIII தனி இதழாக வருவது பெரிய ஆறுதல். வரவேற்கிறேன்.

    ReplyDelete
  37. அருமையான சிந்தனை சார்! மிக்க நன்றி! கலக்கி விட்டீர்கள்! சீக்கிரம் வர இறைவனை வேண்டி கொள்கிறேன்! எந்தன் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  38. ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் நாடி நரம்புகள் அனைத்தும் ஆ ........டி அடங்கிடுச்சி ...பதிவைப்படித்த உடனே ஆடுகளம் படத்தில் ....ஒத்தே சொல்லாலே ....பாட்டிற்கு தனுஷ் ஆடுவதுபோல் .நான் ஆடுற மாதிரி .ஒரு பீலிங் சமீபத்தில் நான் இவ்வளவு புல்லரித்துப்போனது கிடையாது ...இது உண்மையிலேயே never before special ..தான் ....இதில் ஏதாவது மாற்றம் வந்தால் நான் பொல்லாதவன் ஆகிவிடுவேன் ....அப்புறம் ஆசிரியரே ...இரத்தபடலம் முழுத்தொகுப்பு நமது இறுதி இதழாக வர வாய்ப்பிருந்ததா ?குருவே ...ஹார்ட் அட்டாக் ...வரவெச்சிடாதீர்கள் ...இந்த மாதிரியான வார்த்தைகளை எழுதும்முன் எங்கள் வாழ்க்கைகளை நினைத்துக்கொள்ளுங்கள் ...நினைத்துப்பார்க்கவே வெறுப்பாக உள்ளது .....

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக ரத்த படலம் வரும் நண்பரே !அந்த நம்பிக்கை தங்க கல்லறை வெற்றி குறித்து ஆசிரியர் அறிவித்தவுடன் அதிகரித்திருக்கிறது எனக்கு !

      Delete
  39. ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் நாடி நரம்புகள் அனைத்தும் ஆ ........டி அடங்கிடுச்சி ...பதிவைப்படித்த உடனே ஆடுகளம் படத்தில் ....ஒத்தே சொல்லாலே ....பாட்டிற்கு தனுஷ் ஆடுவதுபோல் .நான் ஆடுற மாதிரி .ஒரு பீலிங் சமீபத்தில் நான் இவ்வளவு புல்லரித்துப்போனது கிடையாது ...இது உண்மையிலேயே never before special ..தான் ....இதில் ஏதாவது மாற்றம் வந்தால் நான் பொல்லாதவன் ஆகிவிடுவேன் ....அப்புறம் ஆசிரியரே ...இரத்தபடலம் முழுத்தொகுப்பு நமது இறுதி இதழாக வர வாய்ப்பிருந்ததா ?குருவே ...ஹார்ட் அட்டாக் ...வரவெச்சிடாதீர்கள் ...இந்த மாதிரியான வார்த்தைகளை எழுதும்முன் எங்கள் வாழ்க்கைகளை நினைத்துக்கொள்ளுங்கள் ...நினைத்துப்பார்க்கவே வெறுப்பாக உள்ளது .....

    ReplyDelete
  40. //இன்டர்நெட் எனும் ஆற்றல்மிகு உலகில் சாதிப்பதும் சுலபம் ; சாத்து வாங்குவதும் சுலபமே//
    எடிட்டர் சாரின் இந்த மாதிரியான ஜனரஞ்சகமான எழுத்துகள் தான் நம்மை மீண்டும் மீண்டும் இந்த தளத்திற்கு வரவழைக்கிறது

    ReplyDelete
  41. ஏனுங்க, இந்த டிசம்பர் மாசத்தை யாராவது fast forward பண்ணிடக்கூடாதா?!!

    ReplyDelete
    Replies
    1. விஜய்... ஜானி கதையும் forward ஆகிடுமே.. பரவாயில்லையா.. அதனால டிசம்பர் 5 ஆம் தேதிக்கு அப்புறம் straight ஆ ஜனவரிக்குப் போய்டுவோம் :)

      Delete
    2. வேகமா forward பண்ணும்போது, ஜானியின் புத்தகம் கிடைக்கும் நாளை மட்டும் play பண்ணிட்டு, திரும்பவும் fast forward; அதுவும் 128X speed ல்! ஹி!ஹி!

      Delete
    3. எனக்கு டிசம்பரே வேண்டாம் !ஜானி கதையா இந்த மாத கடைசி நாளுக்கு தந்திடலாமே !

      Delete
    4. ஆசிரியர் தரப்பில், நாட்களை ஸ்லோ மோஷன்ல நகர்த்தினா நல்லாருக்கும்னு யோசிக்கிறதாக் கேள்வி!

      Delete
    5. @ Erode VIJAY and friends,

      You know what I did to fast forward december? Two things:

      a) I have taken all my remaining vacation days for the year - assuming if I sleep and get up and sleep and get up half the days - it will go faster :)

      b) Transferred some money to order and read issues in stock - got 5 yesterday in amazing speed (Thanks to Ms.Stella!).

      c) Will transfer more and buy all remaining titles I like from existing stock - at the rate of two books per week I will spend 4 weeks of december reading old issues plus the new prince title!

      Try this folks !

      Delete
    6. பேசாம நான் எல்லாத்தையும் rewind பண்ணிக்கறேன்! :)

      Delete
  42. ------
    ஜனவரி என்றால் பொங்கல் என்பதற்கு முன்பு, சென்னை புத்தகக் காட்சி நினைவுக்கு வருகிறது.

    இந்த வருடம் NBS வெளியீடு புத்தக் காட்சியிலா ? (கம்பேக் ஸ்பெஷல் போல)

    மைல்கல் இதழை புத்தகக்காட்சியில் பிரபலங்களை வைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பது என் தனிபட்ட கருத்து..

    ------

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐடியா RAMG75! அப்படி நடந்தாலும் சந்தோஷமே!


      Delete
  43. டியர் விஜயன் சார்,

    போன பதிவில் நடந்த குழாயடிச் சண்டையில் கலந்து கொண்டவன் என்ற முறையில் ஒரு சில விஷயங்களை தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது! என்னைக் குறித்த நேரடி மற்றும் மறைமுக தாக்குதல்கள், ஏசல்கள் வந்ததாலேயே அவற்றிக்கு பதில் அளிக்க நேரிட்டது! ஆனால், அதற்குப்பிறகு அந்த சண்டையை தொடர வேண்டாம் என்ற நோக்கில் நானே இறுதியாக 'தகுதியான சில நண்பர்களிடம்' மட்டும் misunderstanding-க்கு மன்னிப்பு கோரி குழாயடியை விட்டு விலகியும் விட்டேன்! இனி எரிச்சல் படுத்தி, தாக்கி பேசுபவர்களின் பதிவுகளை முடிந்த வரை கண்டு கொள்ளாமல் கடந்து போவேன்! :)

    நான் உங்கள் வலைப்பூவில் வந்து எனது நீண்ட விமர்சனங்களை (காப்பி பேஸ்ட் சங்கதியையும் சேர்த்து) பகிர்வதில் உங்களுக்கு வருத்தம் இருந்தால் தெரிவியுங்கள். நான் உடனே நிறுத்திக் கொள்கிறேன்! உங்களைத் தவிர அதைச் சொல்லும் உரிமை இங்கு வேறு யாரிடமும் இல்லை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கார்த்திக், குழாயடி சண்டை என்று எல்லாம் மேலும் மேலும் சொல்லியே திரும்பவும் அணைந்து போன நெருப்பை ஏன் கிளருகிறிர்கள்? அதை (குழாயடி) விட்டு விலகி விட்டேன் என்று சொல்லி பிறகு எதற்கு இங்கு விஜயம் செய்ய வேண்டும் கார்த்திக்? உங்களை எரிச்சல் படுத்தி, தாக்கி பேசுவதால் இங்கு யாருக்கு என்ன லாபம்? நமது எடிட்டர்க்கு இது போன்ற கேள்விகளுக்கு பஞ்சாயத்து பண்ணி தருவது தான் மெயின் வேலையா ? அவரை NBS இல் கவனம் செலுத்த விடுவோமா? பிறரை விட தான் ஒரு பிரபலம் என நினைத்து கொள்வதால் வரும் பிரச்சனை இது என்ற எண்ணத்தை தயவு செய்து விதைக்காதீர்கள் எங்களுக்குள்.எல்லாம் சொல்லி விட்டு, வார்த்தை நெருப்பை கொட்டி விட்டு, இறுதியில் மன்னிப்பு கேட்டல் நல்லதொரு தீர்வாகாது கார்த்திக். அது முறையும் அல்ல. Comic லவர் உங்களுக்கு முன்னர் சொன்ன பதில் தான் நினைவில் பளிச்சிடுகிறது, 29 October 2012 "@Karthik Somalinga, Why do you take as if the points are directed at you mate? " மேலும் மேலும் இவற்றை நோண்டுவதால் காலம் தான் வீணே கழியும்......

      Delete
    2. Karthik Somalinga : நிச்சயமாய் எனக்குப் பிரச்னைகள் கிடையாது !நண்பர்கள் அனைவரும் இங்கே தயக்கங்களின்றிப் பங்கேற்க வேண்டுமென்பதே எனது அவா !

      Delete
    3. அப்புறம் என்ன கார்த்திக்?! ஆசிரியரே சொல்லிட்டார், அடிச்சு தூள் பண்ணுங்க!
      உங்க நடவடிக்கைகளை மேன்மைதகு விஜய் அவர்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள் :)

      Delete
    4. மிக்க நன்றி சார்!.

      உங்களுக்கும், லயன் அலுவலக மற்றும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

      Delete
    5. @ Erode VIJAY:
      வாங்க விஜய் :) உங்களோட மேற்பார்வையில் இனி எல்லாமே சுபமாக நடக்கும்! உங்க புதுப் படம் வேற ரீலீஸ் ஆகுது, ஹேப்பி தீபாவளி! :)

      Delete
    6. ஆங்! அந்தப் பயம் இருக்கட்டும்.
      நான் நடிச்ச படங்களை இப்பல்லாம் நானே பாக்கறதில்லை! ஹி ஹி!
      Anyway, thank u for your wishes. Wish u and your family members a very happy Diwali too!

      Delete
  44. //இது வரை இந்த ஆண்டில் வெளி வந்த இதழ்களிலேயே - அசாத்திய விறுவிறுப்போடு E -Bay -யிலும் சரி ; நமது முகவர்களிடமும் சரி, விற்பனை கண்டுள்ள இதழ் நம் சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் தான் !! குறிப்பாக இந்த இதழின் E -Bay விற்பனையின் வேகம் இது வரை நாங்கள் கண்டிராததொரு சங்கதி !!//

    //கிட்டத்தட்ட பத்து நாட்களாய் இங்கே பக்கம் பக்கமாய் அரங்கேறிய விவாதங்கள் எதற்கு உதவியுள்ளதோ இல்லியோ ; "தங்கக் கல்லறை" இதழின் online விற்பனைக்கு அசாத்தியமாய் உதவியுள்ளது ! தினமும் குவியும் E -Bay ஆர்டர்களே அதற்கு சாட்சி! தங்கக் கல்லறை இப்போது history ;//

    இதுதான் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. கடந்த இரு இதழ்களின் அமோக விற்பனையால், இதுவரை தாங்கள் மனதளவில் பட்ட கஷ்ட நஷ்டங்கள் காணாமல் போகட்டும். இந்த தீபாவளி உங்களுக்கும்,உங்கள் டீமிற்கும் ''தலைதீபாவளியாக'' மாறட்டும். நான் இந்த தீபாவளியை சந்தோஷமாக கொண்டாட இந்த ஒரு காரணம் மட்டுமே போதுமானது. மிக மிக சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தூள்! நடு மண்டையில நச்சுனு அடிச்ச மாதிரி சொன்னீங்க!

      Delete
    2. @ maramandai, totally agree with you and Erode Vijay - ultimately if our squabbles increase the sales of our books, I think me and Karthik Somalinga will be ready to fight daily :) :) :)

      HAPPY DEEPAVALI TO EDITOR AND FRIENDS! Have a great one !! Let us pray at the moment that we have years and years of LION COMICS left for all of us!!!

      A BIG BIG THANKS TO THE EDITORIAL TEAM - by your efforts sparks from our childhood have been re-ignited !! It was like rejoining a long lost friend !!!

      Delete
    3. I would be more than happy to join forces with you Comic Lover :) :) :) anything that helps to increase the sales is welcome! Sometimes bad publicity is a good publicity!!!

      Delete

    4. @ comic lover and karthik somalinga : நான் எழுதியதில் எந்த உள்ளர்த்தமும் கிடையாது. வரிகள் அனைத்தும் உள்ளது உள்ளபடி அப்படியே அர்த்தம் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு லாபம் அதிகமானால் என்ன ஆகும்? அவருக்கு ஊக்கம் அதிகமாகும், நமக்கு புத்தக மழை கொட்டும். அதை நினைத்தே நான் சந்தோஷப்பட்டேன்.

      இந்த மரமண்டைக்கு உண்மையாகவே கலாய்க்க தெரியாது.

      Delete
    5. @ comic lover and karthik::

      உங்க சண்டையில் என்னையும் சேர்த்துக்கோங்க! டைரக்டா சண்டைப் போடும் அளவுக்கு தில் இல்லைனாலும், தூரத்தில் நின்றுகொண்டு 'ஆ' 'ஊ' ன்னு குரல் கொடுப்பேன். :)

      Delete
    6. @ Erode VIJAY : எப்படி சார், உங்களால மட்டும் எல்லா பதிவுகள் மூலமும் சிரிக்க வைக்க முடிகிறது? திறமைசாலிதான் சார் நீங்கள்...

      Delete
    7. @ மர மண்டை

      யார்கிட்டயாவது செமத்தியா வாங்கிக் கட்டிக்கிட்டு ஒரு நான்கைந்து நாட்கள் இந்தப் பக்கமே நான் வராமல் போகும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை நண்பரே! :)

      Delete
  45. நமக்கு சந்தோசத்தை அளித்த ,அதிகரித்த ஆசிரியருக்கு,விற்குமா என்ற மலைப்பு இப்போது இருக்காது எனினும்,தீபாவளி பரிசாக இதுவரை முன் பதிவு செய்யாத நண்பர்கள் செய்யலாமே !செய்த பின்னர் அவர்கள் வரிசையில் எத்தனாவது எனவும் பகிர்ந்து கொள்ளலாமே !நண்பர்களை வூக்கபடுத்த இதுவும் உதவட்டுமே !

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐடியா, ஸ்டீல் க்ளா!

      Delete
    2. நவம்பர் - 15ஆம் தேதியுடன் முன்பதிவு முடிவதால், வேகம் அதிகரிக்கும் என நம்புவோம்.

      Delete
    3. never bfore spl .. register panna matum tha kedaikum nu soliteenga
      ... eBay la antha book kedaicha neenga .. engala emathureenganu nan solven... nejamvay athu kedaikalana ok... viyabara thanthiram panna mateenga nu nenaika vachidatheenga... enaku onnum problem illa advance ah panam anupa but if its availlable on ebay na .. athu cheating than...

      Delete
  46. அறிவாளியோ , மந்தமோ தாயிக்கு தனது அனைத்து குழந்தைகளும் ஒன்றுதான் அதுபோலத்தான் ஜான் ஸ்டீலும் சிறந்த ஹீரோதான்

    ReplyDelete
    Replies
    1. இதை டைப் பண்ணும்போது உங்க மம்மி பக்கத்துல இருந்தாங்களா, ஆடிட்டர் ராஜா அவர்களே?!

      Delete
  47. விஜயன் சார்,
    XIII தனி இதழாக வரப்போவது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய நாயகர் வேய்ன் ஷெல்டனை வரவேற்கிறோம். வண்ணப் பக்கங்கள் அதிகரிப்பதால் எடை கூடி படிக்க சிரமம் ஏற்படுத்திடாதே?!

    ReplyDelete
    Replies
    1. நல்லது நடக்கும் போது சிரமபட்டால் தான் என்ன

      Delete
  48. நெவர் before special ல் பக்கக்களை அதிக படுத்தி அனைவரும் இதை பற்றி பேச வைத்து விட்டிர்கள் நீங்கள் பெரிய சாணக்கியர் தான்

    ReplyDelete
  49. never bfore spl .. register panna matum tha kedaikum nu soliteenga
    ... eBay la antha book kedaicha neenga .. engala emathureenganu nan solven... nejamvay athu kedaikalana ok... viyabara thanthiram panna mateenga nu nenaika vachidatheenga... enaku onnum problem illa advance ah panam anupa but if its availlable on ebay na .. athu cheating than...

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் ஏற்கனவே தன்னுடைய பின்னூட்டத்தில் சொல்லிவிட்டார் நண்பரே, e-bay யில் வரும். ஆனா, அதுல லேட்டாத்தான் வரும்னு. வழமையான எண்ணிக்கையைவிட குறைவாகவே NBS பிரதிகள் அச்சிடப்படும் என்றது யதார்த்தம். முன் பணம் செலுத்தியவர்கள் போக, சென்னை புத்தகக் கண்காட்சியிலும் பிரதிகள் விற்பனைக்குக் கிடைக்கப்போகின்றன. அதன் பின்னர் மிஞ்சப்போகும் எண்ணிக்கையையே e-bay இல் வரப்போகிறது. அதில் எத்தனைபேருக்கு வாங்கக் கிடைக்கிறதோ? அத்தோடு இதில் சீட்டிங் எங்கே வந்தது என்று தெரியவில்லை. ஆசிரியர் ஏற்கனவே சொன்னதுபோல - இந்த இதழுக்கான செலவுகளைச்செய்ய இந்த முன்பதிவுகள் உதவிடும். ஒரு புத்தகத்துக்கு நீங்கள் முன்பதிவுசெய்வது பல பிரதிகள் அச்சிடுவதற்கு உதவிடுமல்லவா?

      Delete
    2. பாலா, இதே முறை ஜம்போ ஸ்பெஷலுக்கும் நடந்த ஒன்று தானே. முன்பதிவுகள் செய்யும் நண்பர்கள், முதலில் அப்புத்தகம் நமக்கு வந்து சேரும் என்ற நம்பிக்கையில் செய்கிறார்களே ஒழிய, தம்மை தவிர வேறு யாருக்கும் அப்புத்தகம் கிடைக்காமல் போககூடாது என்று எண்ணத்தில் அல்ல என்று கூறலாம்.

      எடிட்டை பொறுத்தவரை முன்பதிவுகள் தயாரிப்பு செலவுகளுக்கு உதவும், கூடவே இதுதான் எண்ணிக்கை என்ற ஒரு இலக்குடன் தயார் நிலைக்கு கொண்டு செல்லும். ஆனால் "முன்பதிவுகளுக்கு மட்டும் தான்", என்று ஒரு அடைமொழியுடன் புத்தகங்களை வெளியிடுவதை விட, "முன்பதிவுகளுக்கு முன்னுரிமை" என்ற சொற்தொடரை யூஸ் செய்தால் இப்பிரச்சனை முடிவுக்கு வரலாம்.

      முன்பதிவுகள் தற்போது அதிகமாகி உள்ள இந்நிலையில், அடுத்த இதழ் விளம்பரங்களில் இது மாற்றபடும் என்று நம்பலாம்.

      Delete
    3. @Bala

      எல்லோருக்கும் இதழ்கள் விரைவில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கினில் ஆசிரியர் கடைசி நொடியினில் என்ணத்தை மாற்றுவது தவறல்லவே? இது சீடிங் ஆகாது. நமக்குத் தெரிந்து அவர் முழு வியாபாரியாய் இருந்ததில்லை. இந்த விலையினில் குறைந்தது ஐந்நூறு புத்தகங்கள் பிரிண்ட் செய்திடும் அளவிற்கு முதல் அவசியமாகிடுவதே pre-booking செய்வதற்கு காரணம்.

      சென்னை Book Fair புண்ணியத்தால் இன்னும் significant numbers விற்பனையாகிடும் என்று தெரிந்தால் மற்றவர்க்கும் நம்முடன் அளிப்பது நன்றே. ஒரு நல்ல New Year Surprise ஆகிடுமே.

      Delete
  50. ''ஆச்சர்யமான முடிவு ! அருமையான கதை தேர்வு !'' Never Before ஸ்பெஷல் என்ற பெயருக்கு பொருத்தமாக உள்ளது.
    இதை குறைகூற வேண்டும் என்று, தனியாக உட்கார்ந்து யோசித்தால் கூட முடியாது.

    ReplyDelete
  51. சார் அற்புதம்...பக்கங்களை அதிகப்படுத்தி ஆச்சிரிய படுத்தி விட்டீர்கள்...நாங்கள் வேய்ன் ஷெல்டனை இவ்வளவு
    சீக்கிரம் படிக்க போகிறோம் என்று நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் குடும்பத்தாருக்கு இனிய
    தீபாவளி வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  52. எட்டாம் தேதி அனுப்பிய புக் பார்சல் எனக்கு இன்னும் வரலை சார் ....கொஞ்சம் செக் பண்ண சொல்லுங்களேன் ..ப்ளீஸ் ...[register post]

    ReplyDelete
  53. சார் CC -ல் மாயாவி,ஸ்பைடர்,ஆர்ச்சி கதைகளை தவிர்த்து மற்ற பழைய கதைகளை கொண்டு வரலாமே..தமிழ் காமிக்ஸ் உலகில்அற்ப்புதமான பல மாற்றங்களை செய்த நீங்கள் இதை செய்ய மாட்டீர்களா...மாயாவி டைஜஸ்ட்,ஸ்பைடர் டைஜஸ்ட்,ஆர்ச்சி டைஜஸ்ட் போன்ற விளம்பரங்களுக்கு பதிலாக டெக்ஸ்வில்லர் டைஜஸ்ட்,
    ராபின் டைஜஸ்ட்,லக்கிலுக் டைஜஸ்ட்,ஜான் ஸ்டில் டைஜஸ்ட் என்று பார்க்க ஆவலாக இருக்கிறோம்.மாற்றம் நிகழுமா..?

    ReplyDelete
  54. Pala kanakanum:

    ebay il N.B.S
    kidaippathu siramam than.!

    pirathikal stak
    irunthal mattume kidaikkum...

    Thamathamaka vanthu kettu
    aemara koodathu allava.!
    athanal than
    mun pathivu...

    ReplyDelete
  55. Ennudaiya N.B.S
    mun pathivu no 222

    intha ithazhin vipanai moolam edit sir ku
    perum vedriyai thedi thara vendum.!

    Mun pathivukku
    munthunkal nanparkale....

    ReplyDelete
  56. Good decision to publish Ratha Padalam in separate issue. Thanga Kalarai is unforgettable best story of the year! 2nd is Largo winch, 3rd Wild west special ,4th super hero special! Advance Diwali wishes to you, your family, your team members and all comic lovers!

    ReplyDelete
  57. இதுவரை மறுபதிப்பு கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்!!!

    வறுமையில் வாட்டம், தொழிலில் போராட்டம், கடனில் தள்ளாட்டம், வாழ்வதே ஒரு கரகாட்டம் என் வாழ்க்கையில் சற்று இளைப்பாறவே ஐந்தாவது எட்டை தொட்டு விடுகிறோம். அப்பொழுதும் வாழ்க்கை என்னும் வழக்காடு மன்றத்தில் நம் வாதம் வெற்றி பெறுவதில்லை. வாதம் புரிந்துக்கொண்டே நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது ! இந்த கால வெள்ளத்தில் முகம் தெரியாத நண்பர்களை நம்மிடம் கரை சேர்ப்பது நம் ரசனை ஓன்று மட்டும்தான். இளைப்பாறுதலை இனிமையாக்க நண்பர்களின் எண்ணங்களும் குளிர்ச்சி தரும் நிழல்களே. !

    மறுப்பதிப்பு கேட்பவர்கள் எல்லாம் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் அல்ல. ஆனால் தங்களின் comics எவ்வளவு விலை என்றாலும் எத்தனை வெளியீடுகள் என்றாலும் சந்தோஷமாக வாங்கக்கூடிய நிச்சயமான பணக்காரர்கள் தான். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வரும் இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் சரித்திரம் படைப்பவர்கள். அவர்களே சாதனையாளர்கள். குறையற்று எதுவும் இவ்வுலகில் இல்லை. நம் பார்வையை பொறுத்தே நம் சாதனை. என் முனைப்பும், முயற்சியும் போதும் என்றால் அது என் தனிப்பட்ட விளைவு. ஆசிரியர் vijayan முடிவு செய்தால் அது எங்களில் பலருக்கு மிகப்பெரிய இழப்பு.!!! 1991 -ல் மன்மோகன்சிங் எடுத்த தைரியமான முடிவு தான் இன்று கீரை விற்கும் பாட்டி கையில் உள்ள mobil போன் !!!

    வாய்ப்பு இருக்கிறது என்றால் வாங்கும் வசதி தானாக உருவாகி விடும். அன்று மிகச் சாதரணமாக 100 ரூபாயை சமாளித்து விட்ட தாங்கள் கூறிய அந்த சிறுவன் அதற்கு அடுத்த வாரம் இதேபோல் ஏன் மீண்டும் அதுபோன்ற வாய்ப்பை பெறமுடியாது என்று நினைக்கிறீர்கள் ? இன்றைய சிறுவர்களில் வசதியற்றவர்கள் என்றால் வீதி விளையாட்டுகளிலும்,TV கார்ட்டூன் சேனல்களிலும் , பணக்காரர்கள் என்றால் COMPUTER GAMES , FACEBOOK , ENGLISH COMICS என்றும் இடைவெளி இல்லாமல் காலம் ஓடுகிறது. இதில் விலை குறைவாக விற்றால் மாற்றம் வரும் என எப்படி நினைக்கமுடியும்.

    விதைக்கும் விதை முளைக்கவேண்டும் என்று வெளிச்சத்திற்காக , நிழல் தந்து பழம் தரும் மரத்தை வெட்டுவது என்ன நியாயம்? நாங்களும் ஒரு காலத்தில் வெளிச்சமும் தண்ணீரும் இல்லாமல் போராடி வளைந்தே வளர்ந்தவர்கள் தாம். வாழ்க்கை என்னும் கட்டாய ஓட்டப்பந்தயத்தில் ஓடிகளைத்து எப்படியோ வெற்றிக்கோட்டை தாண்டிவிட்டோம். வெற்றியா தோல்வியா என்பது முக்கியமல்ல, இனி அடுத்த தகுதி சுற்றுக்கு தயாராக வேண்டும். இந்த இடைவெளி இளைப்பாறுதலில் அவரவர் ரசனை எதுவோ அதை நாடுகிறோம். இதில் தவறென்ன ? அல்லது குறையென்ன? அடுத்தகட்ட இளைப்பாறுதலில் எங்களின் காமிக்ஸ் மட்டுமே இன்பத்தையும், அமைதியையும் , உணர்ச்சி கலந்த உயிரோட்டத்தையும் கொடுத்து எங்கள் சுற்றத்தை நாங்கள் சிறிதும் குறை காணாமல் வாழ கற்றுக்கொடுக்கும் என்று நம்புகிறோம்.. இதில் வயதென்ன ? வசதிஎன்ன ? எதுவுமில்லை எல்லாம் வாய்ப்பு மட்டும் தான். இன்று கேட்காமல் இன்னும் 10 வருடம் கழித்தா கேட்க முடியும்? இன்றே இப்படி நாளை யாரிவர் !!!


    ReplyDelete
    Replies
    1. "வாய்ப்பு இருக்கிறது என்றால் வாங்கும் வசதி தானாக உருவாகி விடும்"
      I Agree absolutely.

      Delete
  58. கலக்குறீங்க மிஸ்டர் மரமண்டை!
    உங்கள் எழுத்து நடைக்கும், புனைப் பெயருக்கும் துளியும் சம்மந்தமேயில்லை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே !

      Delete
  59. Part 2

    கரைந்துவிட்ட காலங்களாலும் , கலைந்து போன கனவுகளாலும் , சில சமயம் கற்பனைகள் கூட கசப்பாகவே உருவாகும் , தொலைந்துவிட்ட நித்திரையில் பலசமயம் நம்மை கேட்காமல் வரும் கனவுகள் கூட வலியையும், வேதனையையும் தருவதாகவே அமையும். வெற்றிடமான வானத்தை மல்லாந்து பார்த்து ரசிப்பதைப்போல வாழ்க்கையின் வழித்தடமான காமிக்ஸ் நோக்கி விழிவைத்து காத்துக்கிடப்பதும் சுகமானதே!!

    மறுப்பதிப்பு செய்யவேண்டும் என்றால் எப்படியும் செய்யலாம். ஆள் பலமும் , விலையில் பிரிமியம் அதிகமாகவும் சேர்த்துக்கொண்டால் ஏன் இயலாது? உதாரணமாக 1000 copy கட்டாயம் என்ற இடத்தில் 300 booking [printing அல்ல] கூட போதுமானது. இது வியாபார லாப நோக்கல்ல , ஓர் விரிவாக்க சிந்தனை. ஒரு பத்து பேருக்கு 2 வருட ஒப்பந்த வேலை தங்கள் மூலம் கிடைத்தது போலவும் இருக்கும், எங்களின் விருப்பமும் நிறைவேறும். தாங்களும் தமிழ் காமிக்ஸ் உலகின் முடிசூடிய மன்னனாக வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.!!!

    மறுபதிப்புகள் அனைத்தும் இன்றைய தரத்தில் வெளியிடுவதே சிறந்ததாக அமையும். இன்னும் 50 வருடத்திற்கும் மேலாக பாதுகாக்க பட வேண்டிய புத்தகங்களின் தரம் அப்படித்தானே இருக்க வேண்டும்? வருங்காலங்களில் தமிழ் வழிக் கல்வி எந்த அளவு இருக்கும் என்று கூற முடியாது. இன்றே பல சிறுவர்களுக்கு ஆறாம் வகுப்பு வரை தமிழ் படிக்க தெரிவதில்லை . வருங்காலத்தில் எப்படியோ? தமிழ் காமிக்ஸ் வெளியீடுகளும் எந்த அளவு வெற்றி பெறும் என்பதும் சொல்லமுடியாது அல்லவா? தயாரிக்க எளிதாகவும் , விலை குறைவாகவும் கொடுக்க வேண்டும் என்பதற்காக nokia 2000 வருடத்திற்கான மாடலை மீண்டும் அப்படியே கொண்டு வருவதில்லை. வாழ்க்கையின் வெற்றிக்கு உயர்வாகவும் , பெரிதாகவும் சிந்திப்பதும் ஒரு காரணிதானே !!!

    ReplyDelete
    Replies
    1. யப்பா பின்னிடிங்க... நீங்க மரமண்டை அல்ல நண்பரே, மரண மண்டை (பாரட்டும் பாணியில் சொல்கிறேன் !!!)...

      Delete
    2. @புத்தக ப்ரியன்:தங்களிடம் பாராட்டு பெறுவது என்பதே பெரும் பாக்கியம். நன்றி நண்பரே! மிகவும் சந்தோஷம்...

      Delete
    3. அட்டகாசம் நண்பரே சரியாக சொன்னீர்கள் !வாழ்க்கை பாடத்தை ,தத்துவத்தை ,உலக நீதியை ஓங்கி உரைத்துள்ளீர்கள் ,மேலும் ஆசிரியர் 1000 , விலைதனில் இரத்த படலத்தை வெளியிட யோசிக்காமல் முடிவெடுக்க இதுவும் உதவும் என நம்புவோமாக !தகுதி உள்ளன தப்பி பிழைக்கும் !பணத்தை சேமிக்க கற்று கொடுப்பதை விட செலவு செய்ய கற்று கொடு சம்பாதிக்க ஆரம்பிப்பான் என யாரோ சொன்னது நினைவில் ஆடுகிறது!

      Delete
  60. The alternative you have chosen(wayne) is really good. Somewhat lucky for us to read a new story line so soon than planned.

    Some of the comic strips you had posted are simply awesome.

    ReplyDelete
  61. NBS தைப்பொங்கலில் ரிலீஸ் ஆகிவிடுமா சார்? இப்போ நமது ஆசிரியர் இருக்கும் நல்ல ஃபார்முக்கு டிசம்பர் இறுதியிலே கிடைப்பதற்குக் கூட வாய்ப்பிருக்கும் போலத் தோன்றுகிறதே...all is well...

    ReplyDelete
    Replies
    1. பொங்கலா ,புத்தாண்டு விருந்தென ஆசிரியர் தயாராக உள்ள போது பின்னால் தள்ளலாமா ?

      Delete
  62. எடிட்டர் மற்றும் நண்பர்களே,

    சென்ற பதிவின் இருதியினில் நேற்று இரவு அடியேன் எழுதிய பின்னூட்டத்தினை இங்கு மறுபதிவு செய்கிறேன். தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அனைவரும் ஒரு மீள்பார்வை பார்க்க உதவிடும். Thank You.

    ----

    எடிட்டர் அவர்களே

    ஒரு யோசனை !

    சில பதிவுகளுக்கு முன் குழந்தைகளுக்கான ஒரு இதழ் கொணர்ந்திட வேண்டும் என நீங்களும் சில நண்பர்களும் கலந்தெழுதியது நினைவிருக்கலாம். இப்போது தூக்கம் வராமல் யோசித்த போதினில் இந்த எண்ணம் தோன்றியது.

    எண்பதுகளில் பம்பாயிலிருந்து வெளிவந்த Tinkle (இன்னும் வந்துகொண்டிருக்கின்றது) பற்றி நாம் அறிவோம். இவர்களது முதல் பதினைந்து வருடத்திற்கு உரிய கதைகள் அற்புதமானவை. கேரள நிறுவனத்தினரான Paico Classics தமிழகத்தில் பூந்தளிர் என்ற இதழ் மூலம் பல "டிங்கில்" கதைகளைத் தமிழில் கொண்டு வந்தார்கள் - ஆனால் டின்கிளைப்போல் முழு வண்ணத்தில் அல்ல. இரு நிறங்களில். நாம் கலாச்சாரத்தை ஒட்டிய கதைகள் சிறுவர்களுக்கு ஒரு வரப்ப்ரசாதமாய் அமைந்திருந்தது.

    அந்த பழைய டிங்கில் கதைகள் இப்போது TInkle Digest ரூபதினில் வந்துகொண்டிருப்பதை நம்மில் பலர் அறிவோம். Tinkle Digest 1 முதல் 100 வரை பழைய தரம் கொண்ட நல்ல கதைகளை உடையவை.

    எடிட்டர் அவர்கள் இந்த டைஜெஸ்ட்களை தமிழ் மொழியினில் கொண்டு வரலாமே? மீண்டும் ஜூனியர் லயன் பெயரினில். டைஜெஸ்ட் சைசினில் முழு வண்ணம் சாத்தியமில்லையெனில் தற்போதைய லயன் சைசினிலோ அல்லது இரு நிறங்களிலோ கொண்டு வரலாமே. பல தரமான உலகப்புகழ் பெற்ற கதைகளைக் கொண்டு வரும் நமக்கு இது கடினம் அல்லவே?

    ஆறு இதழ்கள் முயன்று பார்க்கலாமா? இக்கால சிறுவர்கள் பயன் பெறக்கூடும்,

    Again just a thought .....!

    ReplyDelete
    Replies
    1. @ comic lover : மன்னிக்கவேண்டும் நண்பரே, உலக பணக்காரரான பில்கேட்சும், வாரன் பப்பெட்டும் கூட இதற்கு மேல் சாதிக்க ஒன்றுமில்லை என்றபோதுதான் சமுதாய தொண்டிற்கு வந்து சேவையை தொடங்கினர். இன்னும் நமக்கே ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வரவேண்டியுள்ளது. இதில் எப்படி, அப்படி யோசிக்க முடியும்?. அதுவல்லாமல் நாம் எதிர்பார்த்து காத்திற்கும் இதுபோன்ற காமிக்ஸ் மட்டுமே நம்மை சிறகடித்து பறக்க வைக்கும்!!!

      Delete
    2. @ maramandai:

      @ மர மண்டை ,

      நான் சொல்லிடிவது சமுதாயத் தொண்டல்லவே ! இன்னொரு வயதுடைய சிறாரை காமிக்ஸ் பக்கம் இழுக்க ஒரு வழி அல்லவா? இவை அனைத்தும் ஒரு சீராய் வெளிவந்திடும் காலமும் வந்திடலாமே? !!

      மத்தபடி, உங்கள் கருத்தினைத் தெரிவிப்பதற்கு மன்னிப்பு ஏன் கேட்கவேண்டும்?

      Delete
  63. நாளை இரண்டு லட்சம் கடக்க போகிறோம் - page views ! Hip Hip Hip Hooray!!!

    ReplyDelete
    Replies
    1. நாளை அல்ல, இந்த இரவே [22.47 ] கடந்து விட்டோம்.

      Delete
  64. ஆசிரியரது சில பதிவுகளையும் நண்பர்கள் பலரது பின்னூட்டங்களையும் படிக்கும்போது 'நாம் நினைப்பதை இவர்கள் எப்படி இவ்வளவு துல்லியமாக எழுதினார்கள்?' என்ற வியப்பு எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது...உதாரணத்திற்கு ஞாபகமறதிக்கு நன்றி சொல்லி பழைய இதழ்களை மீண்டும் மீண்டும் படிப்பது,அட்டை டு அட்டை சிப் பை சிப்பாக ரசித்துப் படிப்பது, நமது காமிக்ஸ் ரசனைக்கும் நண்பர்கள் இருக்கின்றனரே என்ற மெல்லிய கர்வம்...என்ன சொல்ல? என்னை காமிக்ஸ் காதலனாக்கிய இறைவனுக்கும் ஆசிரியருக்கும் நன்றி சொல்வதைத் தவிர வேறு என்னதான் நான் செய்ய முடியும்?

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமானதொரு கோணத்தில் இந்தப் பின்னூட்டம் சற்றே நெகிழ வைக்கிறது நண்பரே! இந்த மாதிரியான உணர்வுகள் இங்கே நிறையப் பேருக்கு உண்டு; என்னையும் சேர்த்து!

      Delete
  65. Dear Sir,

    Will NBS be available for pre-order via ebay. This will make it very easy for fans like me who live outside the country. Please kindly help!

    ReplyDelete
  66. நெவர் பிபோர் ஸ்பெஷன் ஆன்லைன் முன்பதிவு கூப்பன் எங்கே உள்ளது ? இபேயில் இருக்கிறதா ? சுட்டி தரமுடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. அன்பு தம்பிக்கு!
      உன் அண்ணன் அன்புடன் வரையும் மடல்! நலம்! நலமே விழைகிறேன்!
      உன் வரவு மிக்க மகிழ்ச்சி! நான் எப்போது ஒரு வாடகை புத்தக நிலையம் பற்றி நினைத்தாலும், கண்டாலும் திருக்கோவிலூரில் நீ காண்பித்து உன்னோடு சேர்ந்து வாடகைக்கு வாங்கி படித்த, மகிழ்ந்த இரும்புக்கை நார்மன் போன்ற புத்தகங்களின் நினைவே வந்து தலை காட்டி விட்டு போகிறது!
      உன்னோடு வந்த நாட்களில்தான் திருக்கோவிலூரில் லயன், முத்து, ஜூனியர், திகில் காமிக்ஸ் விற்பனை எங்கே நடக்கிறது என்று அறிந்து கொண்டேன்.உன்னோடு வாங்கி ரசித்த சிரிக்கும் மரணம் எனும் பேட் மேன் கதை இன்றும் நினைவில் இருந்து மறையவில்லை!
      நிற்க!
      இந்த புத்தகம் குறைவான பிரதிகளே தயாராவதால் முன்பதிவு அவசியம். நீ வங்கி மூலமாக சிவகாசிக்கு அனுப்பி விட்டு அய்யா ராதா கிருஷ்ணன் அவர்களிடம் 919362217993 என்ற எண்ணில் பேசி விடு. அவர் மற்றதை எல்லாம் பார்த்து கொள்வார். இப்போது தமிழ் காமிக்ஸ் உலகம் மிக சிறப்பாக இயங்கி வருகிறது. இபேவில் வெளியீட்டுக்கு பின்னர் சற்று காலம் பொறுத்து வெளியிடப்படவிருக்கிறது. முன் பதிவுகள் மிக விரைவாக நடந்தேறி வருவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! சந்தா கட்டி விடு! இனி வரும் காமிக்ஸ் காலம் பொற்காலமாக அமைவது சந்தா தாரர்களின் எண்ணிக்கை வளர்ச்சியே நிர்ணயிக்க இருக்கிறது. நண்பர் கிங் விஸ்வா அவர்களை சந்திக்க சில நொடிகள் கிடைத்தன. உன்னை பற்றியும், காமிக்ஸ் உலக வளர்ச்சிகள் பற்றியும் அளவளாவினோம்!
      உன்னை இந்த இடத்தில் சந்தித்தது நான் செய்த பாக்கியமாகவே எண்ணி மகிழ்கிறேன்! அடிக்கடி வா! உன் கருதுகோள் பலவற்றையும் பதிவிடு. வீட்டில் அனைவரையும் கேட்டதாக கூறு. உன் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்!
      என்றென்றும் அதே அன்புடன்- உன் அண்ணன் ஜானி
      (பார்த்து பல யுகங்கள் ஆகி விட்டதப்பா!)

      Delete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. அனைவருக்கும் என் ''தீபாவளி நல்வாழ்த்துக்கள் ''

    அசைவ பிரியர்களுக்கு மட்டும்:ஒரு கிலோ மட்டன் 440/- ஆனால் நாம் ஒரு கிலோ மட்டும் வாங்கப்போவதில்லை. இன்னும் அதிகமாக 3,4,5கிலோ என்று வாங்குவோம். ஏனென்றால் தீபாவளி வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் வருகிறது என்பதால்...

    சைவ பிரியர்களுக்கு: ஒரு கிலோ pure ghee sweets - விலை தெரியவில்லை.[நான் சுத்த அசைவம்] ஆனால் நாம் ஒரு கிலோ மட்டும் வாங்கப்போவதில்லை. இன்னும் அதிகமாக 3,4,5 கிலோ என்று வாங்குவோம். ஏனென்றால் தீபாவளி வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் வருகிறது என்பதால்...

    ஆனால் வருடத்திற்கு ஒரே ஒரு முறை வரும் Never Before ஸ்பெஷல் 400/- மட்டுமே, என்ன செய்யலாம்,எப்படி செய்யலாம், எதுவுமே செய்யாவிட்டாலும் நம்மை குறை சொல்ல எவருமில்லை. ஆனால் நாம் மட்டும் விலை அதிகம் என்று எப்படி குறை சொல்ல முடியும்.?


    ReplyDelete
    Replies
    1. சரி விடுங்க, இதையே காரணமா வச்சு நான் இந்தத் தீபாவளிக்கு மட்டன் எடுக்கப் போறதில்லை.

      ஆனா, இந்த மாற்றத்துக்கு யார் காரணம்னு வீட்ல கேட்டா 'அது ஒரு மர மண்டை'னா நான் பதில் சொல்ல முடியும்?! :)

      Delete
    2. Erode VIJAY : உங்ககிட்ட வாதிட முடியாதுன்னு இப்ப புரிஞ்சிடுச்சி.. நான் ஒரு சரியான மரமண்டை...

      Delete
    3. ஹா ஹா நிறைய நாட்கள் ஆகி விட்டது மக்களே இது போல் வாய் விட்டு சிரித்து!!! அருமையான எழுத்து கோர்வை, கலக்கிடிங்க நண்பர்களே இருவரும் !!! அடி தடி இல் இருந்து வேறு தடம் மாறியது உங்கள் புண்ணியத்தால் தான்...

      Delete
    4. ஆசிரியரின் தலைப்பை படியுங்கள் நண்பரே ! மிக்க மகிழ்ச்சி !

      Delete
  69. ஆசிரியர் விஜயன், லயன் அலுவலக ஊழியர்கள் மற்றும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் "தீபாவளி நல்வாழ்த்துக்கள்"

    ReplyDelete
  70. என் இனிய தமிழ்,தெலுங்கு,கன்னட,மலையாள,ஸ்பானிஸ்,போர்சுகீஸ்,டச்சு,அபாச்சே,சியோக்ஸ்,நவஜோ இன மக்களே.உங்கள் அனைவருக்கும் புனித சாத்தானின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சாத்தான் அவர்களே! ம்... ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு... :-D

      Delete
    2. Erode VIJAY : சார் தூங்கபோகும்போது சிரிச்சிட்டு இருந்தா தூக்கம் வராது... Good night . போய் தூங்குங்க..

      Delete
    3. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன !................சுவாமி ......

      Delete
    4. வாங்க (saint) சோமசுந்தரம் சார்..!!!!
      உங்களைத்தான் எதிர்ப்பார்த்தோம்

      Delete
    5. எதுக்கு............?ஓதைக்கறதுக்கா ........?

      Delete
    6. ச்சே... ச்சே... என்ன வார்த்தை சொல்லி வீட்டீர்கள்!

      Delete
    7. ச்ச்சும்மா டமாசுக்கு ..........ஹி ஹி

      Delete
  71. இன்னும் இருபது பார்வையாளர்கள் மட்டுமே பாக்கி, அதனால் தான் தூங்காமல் முழித்து கொண்டிருக்கிறேன். இரண்டு லட்சத்தை பார்த்த பின்பு தான் Good night .''

    ReplyDelete
    Replies
    1. அடப்பாவிகளா இப்போதுதான் கவனித்தேன்!௮௦ பேர் அதிகரித்து விட்டார்களா !வாழ்த்துக்கள் சார் இது மிக பெரிய வெற்றி !

      Delete
  72. "'Good Night "' two lacs .....+

    ReplyDelete
  73. ஆசிரியர் விஜயன், லயன் அலுவலக ஊழியர்கள் மற்றும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் "தீபாவளி நல்வாழ்த்துக்கள்" ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு அட்வான்ஸ் 20வது திருமண நாள் வாழ்த்துக்கள் (22-11-12 )
    உபயம் - மிஸ்டர் சில்வர் - முத்து இதழ் 211

    ReplyDelete
    Replies
    1. @ lion ganesh, wow !

      @ Editor, Many happy returns of the day.

      Came back to see the 200000th page view!!!

      Delete
  74. காமெடி கர்னல்... எத்தனுக்கு எத்தன்.. (saint) சோமசுந்தரம்..!!!!
    எங்கிருந்தாலும் உடனே ப்ளாக் பக்கம் வரவும்...
    நீங்கள் இல்லாத இந்த பதிவு என்னவோ போலலிருக்கிறது ஐயா...

    ReplyDelete
    Replies
    1. என்னை நாளை டிஸ்சார்ஜ் செய்வதாக டாக்டர் சொல்லியிருக்கிறார்.வந்துகொண்டே இருக்கிறேன்.(கீழ்பாக்கத்திலிருந்து ............உங்கள் புனித சாத்தான்.ஹிஹி).

      Delete
    2. ஜனவரியில் மறுபடியும் அட்மிட் ஆகும் ஐடியா இருக்கிறதா, சாத்தான் அவர்களே?! :-D

      Delete
    3. ஜனவரி உங்கள் கோட்டா நண்பரே .........(:-)

      Delete
    4. எனக்கு அட்மிட் ஆகும் எண்ணமில்லை நண்பரே!

      எப்பவுமே ஹோம் ட்ரீட்மெண்ட் தான்! :-D

      Delete
  75. ஆசிரியருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...காமிக்ஸ் வாசிப்பை ஒரு மிகப் பிடித்தமான பொழுதுபோக்காகக் கொண்ட அருமையான நண்பர்கள் இங்கே இருப்பது மிகமிக மகிழ்வாக உள்ளது...ஏனெனில் சாதாரணமாக நம் காமிக்ஸை(10/- இதழ்) பொது இடங்களில் சற்றே கூச்சத்துடன் ஒளித்து வைத்தே படித்த சூழ்நிலை மாறி இப்போது வரும் 100/- இதழ்களை படிக்கையில் பிறரது பார்வையில் கேலி அறவே இல்லை..எனவே நமது ஊக்கமும் ஆசிரியரின் விடாமுயற்சியும் இந்த வெற்றிக்குக் காரணமென்றால் அது மிகையல்ல...ஆனால் காமிக்ஸ் உலகில் உள்ள பல பொக்கிஷங்களை அடைய இன்னும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது...அதுவரை ஆசிரியரின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு காமிக்ஸ் திருவிழாவைச் சுற்றிப்பார்த்துப் படிக்க அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே!

      Delete
    2. On the other hand, i feel a certain unknown satisfaction, a feel good sense and goodness when i read a lion comics pocket sized comics in black and white, which i could not feel in colour. I feel this is due to the fact we read like this, during the eighties.

      Having said this, i want to say that the big sized colour pages that have been getting rocks and is of high quality. People who see me with these books, are astonished and give a jealous look.

      May be vijayan sir, should give a separate track of atleast 12 Black and white issues for fans like us with separate subscription.

      Delete
  76. Friends, did you look at the reprint poll?

    Tiger crosses century and keeps batting ..!

    Lucky Luke crosses 50 ... still playing a steady innings ...!

    51 days to go .. let us see who wins ..!!

    ReplyDelete
  77. சார்,
    NBS மாற்றத்தை வரவேற்கிறேன்! அதைப்போல் அதற்கு ஈடாக கருப்பு & வெள்ளையில் ஒரு கலக்கல் ஸ்பெஷல் (குறைந்தது 6 கதைகள்) 2013 ல் இறுதியில் வெளியிட்டால் என்ன?
    மே மாதம் வெளிவரவிருக்கும் 'டைகரின்' இரத்ததடத்துடன் "இரும்புக்கை எத்தன்" முதல் 2 பாகங்களையும் இணைத் து (மறுபதிப்பாக)முழு வண்ணத்தில் வெளியிட்டால் ஒரு 'complete collection ' ஒரே இதழில் கிடைத்தாற்போல் இருக்கும். ஒரே கதைகளை கருப்பு & வெள்ளைப் பாதி, முழு வண்ணம் பாதி என்று பார்க்க மனம் ஏற்க மறுக்கிறது!
    இல்லையென்றால், இரத்ததடம் முழுவதையும் கருப்பு & வெள்ளையில் வெளியிடவும். (அது 100% முடியாது, சான்சே இல்ல, chorus சத்தம் கேட்கிறது?)
    அப்புறம், wayne shelton முதல் 2 பாக சாகசம் தங்களின் தேர்வு - 1. தி மிஷன் மற்றும் 2. தி betrayal கதைகள் தானே...?

    ReplyDelete
    Replies
    1. @ MH Mohideen,

      I like your idea - all 4 in one - full color special - the 7th comics classics full color reprint may be strategically combined with may regular issue to achieve this.

      ... and this will give us an opportunity to dive into many fat digests next year :-D

      Delete
    2. @ MH Mohideen ::

      நீங்கள் கேட்ட அந்த கருப்பு-வெள்ளை கலக்கல் ஸ்பெஷல் அடுத்த வருட தீபாவளி மலராக மலர்ந்தாலும் சந்தோஷமே; அட்டகாசமான ஒரு டெக்ஸ் கதையுடன்!
      ('கருப்பு-வெள்ளை கலக்கல் ஸ்பெஷல்' - அட்டகாசமான தலைப்பா இருக்கே! எடிட்டர் சார், நோட் பண்ணுங்க சார்!

      Delete
  78. wayne shelton ....எப்படிபட்டவர்.........சார்?அவருடைய பெயரை பார்த்தால் லார்கோ வின்ச் போல் கிழக்கு ஐரோப்பிய (ஸ்லாவ்)ஆசாமி போல தெரிய வில்லையே.?முகத்தில் மீசையுடன் சற்று வயதான தோற்றத்தில் இருக்கிறாரே?(அதாவது என்னை போல இருக்கிறாரே?ஹி ஹி).

    ReplyDelete
    Replies
    1. வேய்ன் அட்டை படத்தை பார்த்தால் அந்த நான்கு பெரும் உங்களை பார்த்தே முறைப்பதாக எனக்கு தெரிகிறது, தள்ளி நில்லுங்கள் ஜாக்கிரதை !

      Delete
  79. 400 கலர் பக்கங்கள்.....ஓ கே .....ஆனால் 56 கருப்பு-வெள்ளை பக்கங்கள் தேவையா?அதற்க்கு பதிலாக கூடுதலாக இருபது கலர் பக்கங்கள் போடலாமே சார்.?முழுமையான வண்ண இதழாக மலரட்டுமே nbs.(அப்படியே ஆககடவதாக...........என்ற உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் .ஹி ஹி ).

    ReplyDelete
    Replies
    1. இருந்துவிட்டுப் போகட்டுமே, சாத்தான்ஜி! கருப்பு-வெள்ளையை பக்கத்தில் வைத்தால்தானே கலரின் அருமை தெரியும்?! தவிர, கருப்பு-வெள்ளையின் அதிதீவிரக் காதலர்களும் (தொட்டில் பழக்கம்) இருக்கத்தானே செய்கிறார்கள்?!

      Delete
    2. Dear Vijayan sir, i feel the same as Saintji. if possible, You can convert the B & W pages to colour. so that it becomes a full colour issue. and you can increase the price to offset the costs. I know it will be very tough for you to consider this as your execution for bringing out NBS will be in an advanced stage and many people would have already paid for it.

      Delete
  80. காலை வணக்கம்! என் பெயர் மரமண்டை.எனக்கு ஒரு பிரச்சனை! என் computer 200 comments க்கு மேல் காட்டுவதில்லை, load more என்று கொடுத்தாலும் வருவதில்லை.நான் என்ன செய்ய வேண்டும்,அதை எப்படி செய்ய வேண்டும் என்று யாராவது இந்த மரமண்டைக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா? பழைய பதிவுகளிலும் 200 வரை உள்ள கமெண்ட்களை மட்டுமே படிக்க முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சிவ சரவணனுக்கும் சேர்த்தே சொல்லி விடுகிறேன் .காமிக் லவர் சொல்லியது உங்களுக்கு தெரியாதென நினைக்கிறேன் ,உங்களது கிணத்தை காணோம் கமெண்ட் பார்த்துக்கொண்டே இருந்தோம்,காமிக் லோவேரும் சலிக்காமல் கூறி கொண்டே இருந்தார் load more 4 முறை கேட்குமளவிற்கு பின்னூட்டங்கள் அதிகரித்து விட்டதே உங்களது பின்னூட்டங்கள் காணமல் போக காரணம் !இனி மேல் இப்படிதான் இருக்கும் கார்த்திக் உற்சசகமாக தயாராகி விட்டதாலும் ,நாரதர் கழகம் நன்மையில் முடிந்ததால் மீண்டும் தயாராகும் புனித சாத்தானும் தயாராக உள்ளது போல தெரிகிறது........மேலும் பழைய ,புதிய நண்பர்களும் பழைய ஆர்வத்துடன் புதிய பொலிவுடன்!.fire fox ,சிறப்பாக ஒத்துழைக்கும் .... எனக்கும் முன்பு இதே குழப்பம் தோன்றி உள்ளது!fire fox ப்ரௌசெரை பயன் படுத்தி பாருங்கள் பின்னர் load more optionai எல்லாவற்றிற்கும் கீழே இருக்கும்!

      Delete
    2. மாயாவி அவர்களே,fire box மூலம் முயற்சித்தும் லோட் ஆகவில்லை.

      Delete
    3. உங்க கம்ப்யூட்டருக்கு 200 க்கு மேல் எண்ணத் தெரியாதுபோலிருக்கே! இப்படி படிப்பறிவில்லாத கம்ப்யூட்டரையா வாங்குவது?! :-D

      Delete
    4. வாங்கும் போது என்னோட பெயர கேட்டாங்க, அதனால இப்படி இருக்குமோ?

      Delete
    5. நண்பரே (மரமண்டை...), இன்டர்நெட் இணைப்பு வேகம் குறைந்தாக இருந்தால் இந்தப் பிரச்னை வர வாய்ப்புண்டு. வேறு மார்க்கமிருந்தால் முயற்சி செய்துப் பாருங்களேன்.

      Delete
  81. கிரீச் கிரீச்.....

    எடிட்டரின் "மாற்றம் மாத்திரமே மாறாததே" பதிவும் அதனையொட்டிய மானுட விவாதங்களும் என் உறக்கத்தினை கலைத்து விட்டதே

    அடடே சாத்தானும் வந்துள்ளாரா? இன்று எனக்கு சிவகாலைதான் ;)

    கிரீச் கிரீச்.....

    ReplyDelete
    Replies
    1. // கிரீச், கிரீச் //

      இதைத்தான் 'மெட்டாலிக் வாய்ஸ்'னு சொல்வாங்களோ!! :)

      Delete
    2. ஈரோடு தளபதி அவர்களே "க்ரீச் க்ரீச்" உங்களுக்கு மெட்டாலிக் வாய்சா? நல்ல நகைச்சுவை உணர்வைய்யா உமக்கு!!!

      நானே உறக்கம் களைந்து வெடி சத்ததினால் நடுங்கி கொண்டுள்ளேன். நண்பர் சாத்தானும் எனோ அமைதியாக உள்ளார்? ஒன்றும் புரியவில்லையே.... :(

      Delete
    3. ஹி ஹி ..............எனக்கு உங்கள் பெயர் மிகவும் பிடித்துவிட்டது.விரைவில் கொய்யாபழத்துடன் உங்களை சந்திக்கிறேன் வவ்வாலு அவர்களே.

      Delete
    4. அடங்-கோய்யா....எனக்கு ரொம்ப பிடிக்குமே...வாங்கய்யா சாத்தான் அவர்களே :)

      Delete
  82. டியர் சார் ..
    நெவர் பிபோர் ஸ்பெஷலில் கூடுதல் பக்கங்கள் சேர்த்தது.
    வெய்ன் ஷெல்டன் கதையை இணைத்தது மிகவும் வரவேற்கத்தகுந்த முயற்ச்சி.
    வெல்டன் சார். இரத்தப் படலத்தை நீக்கியது சற்று வருத்தமான விஷயம்தான்.
    இதற்கு நீங்கள் கூறும் காரணங்கள் சரிதான். இரத்தப் படலத்தை தனிப் புத்தகமாக
    விரைவில் வெளியிட முயற்சியுங்கள். மற்றும் அடுத்தமாதம்(டிசம்பர்)
    வெளிவரும் ரிப்போட்டர் ஜானியின் மரணத்தின் நிசப்தம் கூட டெக்ஸ் வில்லரின் காவல் கழுகையும் இணைத்து 20 ரூபாய் விலையில் வெளியிடக் கூடாதா ? சார்.

    ReplyDelete
  83. To Editor,
    Please post pre order coupon Ebay. It is not necessory to send the books immediately. Preorder is possible in Ebay. Best thing is I can buy things on Ebay with credit card. Else you should create E commerce site to sell comics. I didn't buy many books in the beginning because money offer was the only option. Once I ordered the books but I didn't receive at all. Now the scenario it's changed. now I know what and when. Ebay gives the guaranty for receiving the books in time andnever missed any of the books. So I'm not interested in money transfer and callto someone to the lion comics office to specify the book names etc etc... It leads to human errors

    ReplyDelete
  84. This comment has been removed by the author.

    ReplyDelete
  85. To Editor,
    Please post pre order coupon Ebay. It is not necessory to send the books immediately. Preorder is possible in Ebay. Best thing is I can buy things on Ebay with credit card. Else you should create E commerce site to sell comics. I didn't buy many books in the beginning because money offer was the only option. Once I ordered the books but I didn't receive at all. Now the scenario it's changed. now I know what and when. Ebay gives the guaranty for receiving the books in time andnever missed any of the books. So I'm not interested in money transfer and callto someone to the lion comics office to specify the book names etc etc... It leads to human errors

    ReplyDelete
  86. Dear Editor and friends,

    வெகுநாட்களுக்குப் பிறகு இந்த வருடம் தீபாவளி மிகவும் இனிக்கிறது. காரணங்களில் மிக மிக முக்கியமானது - நமது காமிக்ஸின் அட்டகாசமான, புதிய வடிவிலான மறுபிறப்பும், கண்டிப்பாக இந்த வலைத்தளமும், அதைவிட அதி முக்கியமாக நிறைய காமிக்ஸ் நண்பர்களின் நேரடி, வலைப்பூ தொடர்புகளுமே ஆகும்.

    சிறுவயதில் நான் தீபாவளியை எதிர்நோக்கிட மிக முக்கிய காரணங்களில் ஒன்று; நம் 'தீபாவளி மலர்'!   ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட கதைகளை ஒறுங்கிணைத்து சற்றே 'புஷ்டியாய்' கைகளில் கிடைத்திடும் அந்த தீபாவளி மலரும், தீபாவளியன்று வெளியாகும் ரஜினி படமுமே கொண்டாட்டத்தில் பிரதான இடம் பிடிக்கும் அம்சங்களாய் இருந்திடும்.
    ஆனால், சமீப காலங்களில் ரஜினி படம் இந்த லிஸ்ட்டிலிருந்து அறவே நீங்கிவிட்டது. எனினும், நம் தீபாவளி மலர் ஆசை மட்டும் இன்னும் கொஞ்சமும் குறைந்தபாடில்லை!

    'தங்கக் கல்லறை' யின் மூலம் இந்தத் தீபாவளி நிறையவே சந்தோஷப்படுத்தியிருந்தாலும், அந்த புஷ்டியான 'தீபாவளி மலர்' என பெயரிடப்பட்ட நமது வெளியீடு எதுவுமில்லாதது சிறு குறையாகவே படுகிறது.
    இந்தக் குறை அடுத்த தீபாவளிக்கு நீங்கிட வேண்டுமென்று நம் எடிட்டர் அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்துவிட்டு, எடிட்டருக்கும், அவர் குழுவிற்கும், எல்லா காமிக்ஸ் நண்பர்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    WISH YOU ALL A VERY HAPPY DIWALI!!

    ReplyDelete
  87. இன்று ஞாயிற்றுக்கிழமை ...ஆசிரியரிடம் பேசலாம் என்று ஆசையில் போன் செய்தால் .off ...ஏகப்பட்ட அலப்பறை மற்றும் டார்ச்சர் கொடுத்தவர்கள் கவனிக்க ...ஆசிரியருக்கு ஒரு வேண்டுக்கோள் ...குறிப்பிட்ட பக்கங்களுக்குள் முழுக்கதையையும் கொண்டுவரவேண்டும் என்ற கட்டாயத்தில் .தயவு செய்து frame களை சின்னதாக்கிவிடதீர்கள் ...இரண்டுக்கதைகளுக்கு பதில் ஒன்றே ஒன்று கொடுத்தாலும் நாங்கள் சித்திரங்களை அதன் original தரத்தில் ரசிக்க ஒரு வாய்ப்பாக அமையும் ..அதற்காக தற்பொழுது சரியில்லை என்று அர்த்தமல்ல ...எதனால் சொல்லுகிறேன் என்றால் ..இரத்தப்படலம் ..தனித்தனியாக வந்தப்பொழுது இருந்த neatness ....முழுத்தொகுப்பில் இல்லை என்பது என் கருத்து ...மற்றப்படி எப்படி இருந்தாலும் ரசிப்பதற்கு நான் ரெடி ...

    ReplyDelete
    Replies
    1. //இரண்டுக்கதைகளுக்கு பதில் ஒன்றே ஒன்று கொடுத்தாலும் நாங்கள் சித்திரங்களை அதன் original தரத்தில் ரசிக்க ஒரு வாய்ப்பாக அமையும் ..அதற்காக தற்பொழுது சரியில்லை என்று அர்த்தமல்ல ...//
      ஆசிரயர் இதனை கவனிப்பார் என நினைக்கிறேன் !அனைத்து நண்பர்களின் வேண்டுகோளும் இதுவாகவே இருக்கும் என நினைக்கிறேன் .......எனது ஆசையும் இதுவே நண்பரே !

      Delete
    2. இதற்க்கு இன்னுமொரு சிறந்த வழி நமது புத்தகங்களின் பிரதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுமே !பார்ப்போம் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் எனும் நம்பிக்கை வலுத்து வருகிறது!

      Delete
  88. COMICS nanbargal anivarukum enathu iniya "VEDI" valthugal.
    Appuram sir maravamal NBS il saraiyana veliyeetu numbarai podavum. WWS il irundu mari varugirathu.

    ReplyDelete
  89. வணக்கம் நண்பர்களே! நான்தான் கர்ணன் என்னை நான்அறிமுக படுத்தனும் அல்லவா அதான். சுமார் 4 மாதங்களாக ப்ளாக்ஐ பார்த்து மிகவும் ஆச்சர்யம் அடைந்தேன் எத்தனை கேள்விகள் எத்தனை பதில்கள் மகிழ்ச்சியே . ஆனால் நடுவே காரசாரமான விவாதங்கள் எதற்கு என்று புரியவில்லை . மறு பிறப்பாக காமிக்ஸ் மீண்டு வந்தது குறித்து ...விற்பனை உயர்வை குறித்து விவாதங்கள் நடந்தால் நன்று என்று நினைக்கிறேன் . தற்பொழுது நமது ஆசிரியர் கூறியபடி புத்தகத்தின் எண்ணிக்கை அதிகமானால் பக்கங்களும் அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு விற்பனையை அதிகரிக்கும் விவாதங்கள் தேவை . மேலும் எனக்கு கமெண்ட்ஸ் போட தெரியாமல் தடுமாறி செயின்ட் சாத்தான் அவர்களிடம் தெளிவாக கேட்டு கமெண்ட்ஸ் போட்டேன் . புனை பெயரில் . முதல் கமெண்ட்ஸ் போட்டவுடன் சில நாட்கள் கழித்து நான் நமது காமிக்ஸ் ஐ படித்துகொண்டு இருக்கும் பொழுது எனது நண்பர் ஒருவர் என்னை பார்க்க வந்தவர் நான் வைத்து இருந்த காமிக்ஸ் ஐ பார்த்து "அட காமிக்ஸ் இன்னும் வருகிறதா பரவைல்லையே பலே பலே தரமும் உயர்ந்து இருக்கிறதே " என்றார் . பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம் . நமது ப்ளாக் ஐ பற்றி சொல்லி நானும் அதில் எனது எண்ணங்களை போட்டேன் என்று சொல்லி எனது கமெண்ட் ஐ நெட்டில் காட்டினேன் . அதை பார்த்த அவர் என்ன இது புனை பெயரில்....உன் ஒரிஜினல் பெயர் போடுவதுதானே எதற்கு புனை பெயர் . நீ காமிக்ஸ் படிக்கிறாய் என்று மற்றவர்களுக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்கிறாயா அப்படி பயந்து கொண்டு படிக்காதே இன்றைய வார மலரில் இருக்கும் கவர்ச்சியான போடோக்களோடு வரும் பக்கங்களை திருட்டு தனமாக படிப்பதை விட இது ஒன்றும் கேவலம் இல்லை என்றார் எனக்கு சுருக் என்றது . ஆமாம் நாம் ஏன் புனை பெயரில் இருக்கணும் நமது ஒரிஜினல் பெயரே இருக்கட்டும் -மேலும் எனது முகமும் இருக்கட்டும் என்று போட்டு விட்டேன் . மேலும் நாம் காமிக்ஸ் நண்பர்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாம் அல்லவா நமது அருகில் இருந்தாலும் தெரிவதில்லை இது உண்மைதானே நண்பர்களே ....

    ReplyDelete
    Replies
    1. வாங்க கர்ணன்ஜி! வெல்கம்!
      உங்களோட முதல் பின்னூட்டத்தில் 'புனித சாத்தான்' என்ற ஒற்றை வரியை பதிவிட்டு இந்த ப்ளாக்கில் காலடி எடுத்து வைத்தபோதே கவனித்துவிட்டேன்.
      ஈரோடு காமிக்ஸ் க்ளப் சந்திப்பிற்கு உங்களை எதிர்பார்த்தேன். பரவாயில்லை, அடுத்த சந்திப்பில் பார்க்கலாம்.
      'புனைப் பெயர்' குறித்த உங்களது கருத்து நபருக்கு நபர் மாறுபடும். சிலருக்கு புனைப்பெயர் ஒரு fantasy யாகவும், வேறு சிலருக்கு 'மற்றவர்களைப் போலவே நாமும்' என்ற பழக்கத்தாலும், மிகச் சிலரே ஒரு வகையான பாதுகாப்பு உணர்வாலும் இப்படி மாற்றுப் பெயர் தேடிக்கொள்கின்றர் என்று நினைக்கிறேன். இதில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! மற்றவர்கள் கருத்து எப்படியோ!!

      Delete
    2. தவிர, புனைப் பெயர்கள் ஒரு பெரும் கூட்டத்திலிருந்து ஒருவர் தன்னைத் தனியே அடையாளப் படுத்திக் காட்ட பெரிதும் உதவுமே!

      Delete
    3. கிரீச் கிரீச்....

      கூட்டிலுள்ள குஞ்சுகளுக்கு மாலை இறை தெடி திரும்ப நேரமாகி விட்டது.

      வணக்கம் திரு கர்ணன் அவர்களே. Welcome Aboard with self identity ;)

      நண்பர் ஈரோடு தளபதியின் கருத்தினை நானும் ஆமொதிக்கின்றேன். புனைப் பெயர்கள் ஒரு ஜாலிக்காகத்தான் என்பதே என் கருத்தும். அட இரை தீர்ந்து போயிற்றே. மீண்டும் வருகிறேன், சிறிது இடைவேளக்கு பிறகு

      கிரீச் கிரீச்....

      Delete
  90. வெல்கம் அருமை நண்பர் கர்ணன் அவர்களே.தொடர்ந்து உங்கள் கமெண்ட்கள் பட்டையை கிளப்ப வாழ்த்துக்கள்.

    ReplyDelete