Powered By Blogger

Friday, August 17, 2012

கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு !


நண்பர்களே,

வணக்கம். நெடியதொரு இடைவெளிக்குப் பின் மீண்டுமொரு பதிவிடுகிறேன் ! டபுள் த்ரில் ஸ்பெஷல் ஆகஸ்ட் 15 க்கு முன்னதாகவே உங்களைச் சென்றடைந்திட வேண்டுமென்ற வேகத்தில் நாங்களும் இயன்றளவு குட்டிக்கரணம் போட்டுப் பார்த்த போதிலும்,கடந்த ஒரு வாரமாய் சிவகாசியில் கண்ணாமூச்சி ஆடிடும் மின்சாரம் எங்களுக்கு "பெப்பெ" காட்டி விட்டது ! Anyways,  'டீ....துளியூண்டு பால்விட்டு ' என்ற கதையாக ஒரு மினி தாமதமாச்சும் நிகழ்ந்தால் தானே "இது நம்ம லயன் தான்" என்று  முத்திரையினைப் பதித்தது போல் இருக்கும் ! 

செப்டம்பர் 7 & 8 தேதிகளில் பெங்களுருவில் நடந்திடவிருக்கும் COMIC CON  2012 ன் போது நமது அடுத்த இதழான WILD WEST ஸ்பெஷல் விற்பனைக்குக் கிடைத்திட வேண்டுமென்பதால் அதன் தயாரிப்புப் பணிகள் ஒரு பக்கமும் ; நமது மெகா இதழான MUTHU COMICS NEVER BEFORE ஸ்பெஷல் இதழுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் இன்னொரு புறமும் நடந்தேறுவதால், இம்மாதம் வந்திருக்க வேண்டிய ஜானியின் "மரணத்தின் நிசப்தம்" (பத்து ரூபாய் இதழ்) அக்டோபருக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ! அது மாத்திரமே காரணம் என்றும் சொல்லிட மாட்டேன் ! ஜானியின் ஒரு சாகசத்தை முழு வண்ணத்தில் ; உயர்தர ஆர்ட் பேப்பரில் DOUBLE THRILL ஸ்பெஷலில் ரசித்து விட்டு, மறு பக்கம் சின்ன சைசில் ; கருப்பு வெள்ளையில் அதே ஜானியை மீண்டும் தரிசிப்பது நிச்சயம் ஒரு அபரிமித வேறுபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டிடுமென்ற பயமும் கூட ! 

வண்ணத்தின் வலிமையை ; அழகினை ரசிக்கும் அதே சமயம், black & white கதைகளின் மாறுபட்டதொரு அழகையும் நாம் மறந்திடாதிருத்தல் அவசியமென்பதாலேயே, நமது ஸ்பெஷல் இதழ்களின் பின்பக்கங்களில் தொடர்ந்து b&w சாகசங்களை வெளியிட்டு  வருகிறோம் ! அடுத்த ஆண்டில் சாகசம் செய்யத் தயாராகி வரும் டெக்ஸ் வில்லர் ; மர்ம மனிதன் மார்ட்டின் ; C.I.D. ராபின் ஆகியோர் black & white நாயகர்கள் என்பதால் இவர்களுக்காகவாது  நாம் "கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு " என்று கானம் பாடிடுவது அவசியம் ஆகும் !('டெக்ஸ் கலரில் கிடையாதா ?'என்ற கேள்வி நிச்சயம் எழுந்திடுமென்று அறிவேன் ; டெக்ஸ் இதழ்களின் மறுவரவு துவங்கிடும் சமயத்தில் அதனை அலசிடுவோம் !)2013 க்கான காலண்டரில் டெக்ஸ் வில்லர்  ; மார்ட்டின் ; சிக் பில் ; லக்கி லூக்; கேப்டன் டைகர் ; லார்கோ வின்ச் ஆகியோருடன், புதிதாய் அறிமுகமாகவிருக்கும் டிடெக்டிவ் கில் ஜோர்டான் ; அப்புறம் மதியில்லா மந்திரி ; சாகச வீரர் ரோஜர் என்று ஒரு பரபரப்பான பட்டாளமே தயாராகி வருகின்றது ! 1987 -ல் நமக்கு நேர்ந்திட்ட "எதை வெளியிடுவது ? ; எதை ஒத்தி வைப்பது ?" என்ற அந்த சந்தோஷமானதொரு குழப்பம் கால் நூற்றாண்டுக்குப் பின் மீண்டும் தலை தூக்கிடும் போல் தெரிகின்றது ! டெக்ஸ் கதைகளை நீளம் கருதாமல் ஒரே இதழாக வெளியிடுவது ஒரு option என்பதால் குட்டியானதொரு தலையணை சைசில் டெக்ஸின் இதழ்களைக் கண்டிடப் போகிறீர்கள் !

சாகச வீரர் ரோஜர்


கறுப்பு ; வெள்ளை நாயகர்களுக்கு நூறு ரூபாய் விலைகள் அவசியமாகிடாது என்பதால் - ரூபாய் 50 ; 30 விலைகளில அவர்களை உலா வரச் செய்திடல் - பாக்கெட்டில் பொத்தல் போடாதென்ற வகையில் விலையில் ஒரு சமரசமாகவும் ; அதே சமயம் நம் தேவைக்குப் பொருத்தமானதாகவும் அமைந்திடுமென்று தோன்றியது ! So கதையின் நீளத்தைப் பொருத்து டெக்ஸின் தடிமனான இதழ்களை ரூபாய் 50 (or) 60  விலைகளிலும் ; மர்ம மனிதன் மார்ட்டின் ; ராபின் போன்றோரின் standard format சாகசங்களை ரூபாய் 30 விலையிலும் தரமான பேப்பரில் அச்சிட்டு இடையிடையே அழகாய் வெளியிடுவது சரியாக இருக்குமென்று நினைத்தேன் ! What say folks ?

உங்களின் எண்ணங்களையும்;டபுள் த்ரில் ஸ்பெஷலுக்கான விமர்சனங்களையும் இங்கே நீங்கள் பதிவிடும் சமயத்திற்குள் - சுமார் 35 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றிடும் கால இயந்திரத்தினுள் நுழைந்திட முயற்சிக்கிறேன் - எனது அடுத்த பதிவின் மூலம் ! நாளைய பொழுதிற்குள் அதுவும் இங்கே அரங்கேறிடும் ! See you again ! 

120 comments:

 1. Nowadays they wait a week or two before sending issues to the US. In the old days, they used to send immediately after publication. So I will have to wait a month to see the double thrill special and comment.

  ReplyDelete
  Replies
  1. BN USA : Books were shipped yesterday !

   Delete
  2. Thank you. I just received the new look special last week. The story selections were nice. It was a bit hard to read the John Steel story in landscape mode. For the smaller 10 Rupees books, it is easy to hold them sideways and read, but for a big book like this it is inconvenient. Sorry to air so many complaints in this post.

   Delete
  3. BN USA : Constructive criticism is never out of place !! I agree with what you wish to convey ; but the Fleetway standard format of 2 strips each page makes it extremely tough to re-size ! Anyways point noted and we will do our best to make reading a pleasure !

   Delete
 2. படித்துவிட்டு வருகிறேன்! :)

  ReplyDelete
  Replies
  1. // குட்டியானதொரு தலையணை சைசில் டெக்ஸின் இதழ்களைக் கண்டிடப் போகிறீர்கள்//
   மகிழ்ச்சியான சேதி!

   30, 50 & 60 விலைகளில் இதழ்கள் - இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று! தரமான, கெட்டியான வெள்ளைத் தாள்கள் மற்றும் அட்டையுடன் - கருப்பு வெள்ளை நாயகர்களின் சாகசங்களை வரவேற்றிட நாங்கள் தயார்! அதற்காக, 100 ரூபாய் வண்ண இதழ்களின் எண்ணிக்கை குறைந்திடக்கூடாது என்ற தவிப்பும் இருக்கத்தான் செய்கிறது!

   Delete
 3. வாழ்த்துக்கள்

  மீண்டும் கருப்பு வெள்ளைக்கு செல்வது சிறிது வருத்தமே. ஒரிஜினல் வண்ணத்தில் இருந்தால் வண்ணத்திலேயே வெளியிடலாம்.

  விலை ஒரு பொருட்டல்ல.

  அன்புடன்

  அருணாசலம்

  ReplyDelete
  Replies
  1. அருணாசலம் : டெக்ஸ் வில்லர் கதைகளின் 95 %கறுப்பு வெள்ளைப் படைப்புகளே ! மர்ம மனிதன் மார்டின் & ராபின் கதைகளும் அதே ரகம் தான் ! So இவற்றை b&w-ல் ரசித்திடும் போது நிச்சயம் எந்த வேறுபாடும் தோன்றிடாது. அது மட்டுமல்லாது டெக்ஸ் கதைகளின் சமீபத்தியப் படைப்புகள் அசகாய சித்திரத் தரத்துடன் வருகின்றன ! வாணவேடிக்கைகளுக்குப் பஞ்சமே இராது !

   Delete
  2. விரைந்து ஆவன செய்யுங்கள் சார் ,டெக்ஸ் ஐ பார்த்து வெகு காலமாயிற்று .

   Delete
 4. Have you decided the stories for the old muthu reprint special yet? Which story have you selected to replace siraiparavaigal?

  As I mentioned in my prior post, I have been waiting since 2001 for the comics classics series to be completed. When there are so few issues that remain, please don't stop now. I fully agree with Mr. Rajendran who wrote in the new look special that you should not neglect the older stories. I also hope that you will reprint the already issued classics in the horrible pocket size back in the larger format like kolaigara kalaignan. I am touching 50 now, and my eyesight is not as it used to be, and reading those small pocket size pictures and letters is difficult, and it is not going to get any easier in the coming years. On the same note, can you please remove the word verification for posting. It is a strain on my already strained eyes.

  But when I see the comments opposing the reprinting of the Mayavi/lawrence/johnny stories, I feel that maybe it is time for us old timers to bow out and cancel our subscription and let the younger generation enjoy the new stories.

  ReplyDelete
  Replies
  1. [=============== 2013 ===============]

   January –> Muthu NEVER BEFORE Special (Rs. 400)
   January –> Classic THREE Special (Rs. 50) (Nayakaravil Maayavi, Vaanveli Kollaiar & Peirottil Johny Nero)
   March -> Classic DETECTIVE Special (Price Yet To Announce)

   VANAVELI KOLLAIYAR (MUTHU #19) is the replacement for SIRAI PARAVAIKAL ...
   வான்வெளி கொள்ளையர் (முத்து #19 )

   Delete
  2. BN USA : Reprints will go on...with Maayavi ; Lawrence David ; Johnny Nero & more golden oldies too ! There will also be occasional reprints in color of Tiger ; Captain Prince. Surely we need to look beyond the 39 stories that make up the Mayavi & Co. legacy as well.

   Delete
  3. Thank you! That's all I wanted to hear.

   I only hope I wouldn't have to wait another twelve years (If I live that long) for the reprints :)

   Delete
  4. // வான்வெளி கொள்ளையர் VANAVELI KOLLAIYAR (MUTHU #19) is the replacement for SIRAI PARAVAIKAL ... //

   Good selection. I remember in one scene, David using "எருமைக் கண் வெடி" (was it a translation of BullsEye?) :)

   Delete
 5. ஆசிரியரின் புதிய பதிவுக்கு மிக்க நன்றி. நீங்கள் முழு நலத்தோடு இருப்பதற்கு அடுத்த பதிவுக்கான அறிவித்தலே சாட்சி!

  எங்களுக்கு இங்கே இன்னமும் நியூ லுக் ஸ்பெஷலே வந்து சேர்ந்திடாத வேளையில் டபுள் த்ரில் ஸ்பெஷல் ஐ வெளியிட்டு இன்னும் ஆதங்கத்தை அதிகரித்துவிட்டீர்கள்.

  இலங்கைக்கு புத்தகங்கள் அனுப்புவது தொடர்பாக பல கோரிக்கைகள் அனுப்பிவைத்தும் அனைத்தும் சுவரில் அடித்த பந்தாக திரும்பியேனும் வராமல், எங்கோ பள்ளத்தாக்கில் விழுந்தவையாக காணாமலே போய்விட்டன. இன்றும்கூட காலையில் இரண்டு மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தேன். அதிசயமாய் அதற்கு பதில் கிடைத்தது.

  நமது காமிக்ஸ்கள் வேகமெடுத்து புறப்பட்டிருக்கும் இந்தக் காலப்பகுதியில், உங்கள் வேகத்திற்கு ஈடுகொடுக்காவிட்டாலும், சில கிலோ மீட்டர்கள் பின்னாலேனும் தொடர்ந்துவர எங்களுக்கும் வழிசெய்வீர்களா?

  சில வாரங்களுக்கு முன்னர் தொலைபேசியில் அழைத்தும் பேசமுடியாமல் தொழிநுட்பக் கோளாறு தடுத்துவிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். எதுவும் கேட்கவில்லை என்கிற உங்கள் எஸ்.எம்.எஸ் ஐ அவ்வப்போது எடுத்துப் பார்த்துப் பெருமூச்சுவிட்டுக்கொண்டிருக்கிறேன். எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பீர்களா?

  -Theeban (SL)

  ReplyDelete
  Replies
  1. Podiyan : உங்களின் மின்னஞ்சல் கிடைத்தது ; இங்குள்ள தபால் அலுவலகத்தில் ஒரு சாதகமான காரியம் சாதித்திடுவதென்பது டால்டன்களை சிறையிலிருந்து தப்பிடாமல் இருக்கச் செய்வதற்குச் சமானம் - மிக மிகக் கடினமே ! இலங்கைக்கு தரை வழி மார்க்கத்தில் பார்சல்கள் அனுப்பிட இயலாதென 'பட்'டென்று சொல்லிவிட்டார்கள். SAL (Surface Air Lifted) என்றொரு அனுப்பு முறை சமீபமாய் இந்தியத் தபால் துறை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது ; இது வான்வெளி அஞ்சலின் துரிதத்தை, தரைவழி மார்க்கத்தின் கட்டணங்களில் செயல்படுத்திடும் முயற்சியாம் ! குறிப்பிட்ட 39 தபால் அலுவலகங்களில் மாத்திரமே இந்தப் புதிய முறையில் பார்சல்கள் அனுப்பிட இயலுமாம். அதற்கான விபரங்களை சேகரிக்க இங்கும் அங்கும் விசாரித்து வருகின்றேன் ; அதற்கான கட்டணம் ; வழிமுறைகள் தெரியக் கிடைத்த உடனே உங்களுக்கு அனுப்பிடப்படும் !

   Delete
  2. நன்றி. நான் அனுப்பும் மின்னஞ்சல்கள் உங்களை வந்தடைகின்றனவா? அவ்வாறு வந்தாலும் அவற்றினைப் படித்திட உங்களுக்கு நேரமிருக்குமா? என்று என்னுள் இவ்வளவு நாட்களாக உழன்றுகொண்டிருந்த கேள்விகளுக்கு உங்கள் ஒரே பதிலில் விடை சொல்லிவிட்டீர்கள். உங்களைத் தொந்தரவு செய்கிறேன் என்று தெரிகிறது. ஆனால்.. எங்கள் ஆர்வம் உங்களுக்கு புரிந்திருக்கும் என்பதால் இதனை ஒரு தொந்தரவாக கருதமாட்டீர்கள் என்று ஒரு நம்பிக்கை.... நல்ல தகவல்களுக்காய் ஆவலோடு காத்திருக்கிறே(றோ)ன்(ம்)!!!

   Theeban (SL)

   Delete
 6. சார்,

  //1987 -ல் நமக்கு நேர்ந்திட்ட "எதை வெளியிடுவது ? ; எதை ஒத்தி வைப்பது ?" என்ற அந்த சந்தோஷமானதொரு குழப்பம் கால் நூற்றாண்டுக்குப் பின் மீண்டும் தலை தூக்கிடும் போல் தெரிகின்றது//

  உண்மையிலேயே வரவேற்க்கதக்க மாற்றம் இது. இதுபோலவே நீங்கள் உங்கள் தலைமுடியை தொடர்ந்து பிய்த்துக் கொள்ள வாழ்த்துக்கள், (இருப்பது நீங்கள் அடிக்கடி கூறுவது போல சொற்பமே ஆயினும்).

  //கறுப்பு ; வெள்ளை நாயகர்களுக்கு நூறு ரூபாய் விலைகள் அவசியமாகிடாது என்பதால் - ரூபாய் 50 ; 30 விலைகளில அவர்களை உலா வரச் செய்திடல் - பாக்கெட்டில் பொத்தல் போடாதென்ற வகையில் விலையில் ஒரு சமரசமாகவும் ; அதே சமயம் நம் தேவைக்குப் பொருத்தமானதாகவும் அமைந்திடுமென்று தோன்றியது//

  இதற்க்கு பதிலாக நீங்கள் ஏன் இது போன்ற மூன்று கதைகளை தொகுத்து ஒரு நூறு ருபாய் இதழாக வெளியிடக்கூடாது? சில நேரங்களில் புத்தகங்களை வாங்க இதுபோன்ற காமிபிநேஷன் தேவைப்படும். இப்போது நீங்கள் வெளியிடப்போகும் சூப்பர் ஹீரோ ச்பெஸ்லும் இதைப்போலத்தான். ஆர்ச்சி கதையை தனியாக முப்பது ரூபாயில் வெளியிட்டால் அநேகமாக பலர் வாங்க மாட்டார்கள். ஆனால் காம்பினேஷனில் வந்தால் வாங்குவர்.

  அதற்காக நீங்கள் சொதபலான ஒரு கதையை வாசகர்கள் தலையில் கட்டுகிறீர்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம். சில நேரங்களில் இதுபோல ஒரு நடவடிக்கை அவுட் ஆப் ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மென்களுக்கு தேவைப்படுகிறது. அதுபோலத்தான் இதுவும்.

  இப்படி தனியாக மார்டின், ராபின் கதைகளை வெளியிடும்போது அவற்றுடன் ரிப் கிர்பி, காரிகன் போன்றோரின் கதைகளையும் தொகுத்தது நூறு ரூபாயில் ஒரு ஸ்பெஷலாக வெளியிடலாமே?

  கோவையில் ஒரு குற்றம் - ஒரு காமிக்ஸ் கடத்தல்

  ReplyDelete
  Replies
  1. சார்,

   என்னை கேட்டால் ஒரு காரிகன், ஒரு ரிப் கிர்பி, ஒரு மர்ம மனிதன் மார்டின், ஒரு சிஐடி ராபின், ஒரு மாடஸ்டி என்று ஒரு கதம்பமாகவே வெளியிடலாம். இதைதவிர நீங்கள் விளம்பரப்படுத்திய லாரன்ஸ் டேவிட் கதைகள், தமிழில் வெளியிடப்படாத ஜேம்ஸ் பான்ட் கதைகள், எஜன்ட் ஜான் ஸ்டீல், ஸ்பை போன்றோரின் கதைகள் அனைத்துமே கருப்பு வெள்ளையில் இருப்பதால் அவற்றை இப்படி ஒரு ஸ்பெஷல் வெளியீடாகவே தொகுக்கலாம்.

   நேற்று நான் படித்த டபுள் த்ரில் ஸ்பெஷலில் வந்த கதைகளிலேயே பெஸ்ட் எதுவென்று கேட்டால் கருப்பு வெள்ளையில் வந்த கொலைகார பொம்மை என்றே கூறுவேன். இவ்வளவு ஏன்? இந்த ஆண்டு நீங்கள் வெளியிட்ட அணைத்து கதைகளிலுமே அதுதான் பெஸ்ட்.

   (அது கண்டிப்பாக ஒரு ஃப்ளீ ட்வே வெளியீடாகவே இருக்க வேண்டும்,சரிதானே?).

   கோவையில் ஒரு குற்றம் - ஒரு காமிக்ஸ் கடத்தல்

   Delete
  2. ஒலக காமிக்ஸ் ரசிகன் : கறுப்பு வெள்ளை மறு வருகை நமது சூப்பர் கௌபாய் டெக்ஸின் தலைமையில் துவங்கிடும் ; செல்லும் வழியில் improvise செய்து கொண்டே போய்ப் பார்ப்போமே ! நிறையக் கதைகளை இணைத்து ஒரு 100 ரூபாய் இதழாக வெளியிடுவது நல்லதொரு ஐடியா தான் ; ஆனால் அத்தனை கதைகளையும் பிரெஞ்சு / இத்தாலிய மூலங்களிலிருந்து ஒரு முறையும் ; அப்புறம் தமிழுக்கு இரண்டாம் முறையாகவும் மொழிபெயர்த்து ; டைப்செட் செய்து இதரப் பணிகளை முடிப்பதென்பது மூச்சிரைக்கச் செய்யும் பணி ! So அதனையும் கருத்தில் கொண்டே நமது schedule தயாரித்திடல் அவசியம் !

   "கொலைகார பொம்மை " - Fleetway கதை அல்ல..! இது வேறொரு independent publisher -ன் படைப்பு ! ஒரு இனம் புரியாத வசீகரம் கதையினில் இருப்பதாய் உணர்ந்திட்டதாலேயே இந்தக் கதை புராதன ரகமாய் இருந்தாலும் worth a gamble என்று நினைத்தேன் ! Glad it worked !

   Delete
  3. ஒலக காமிக்ஸ் ரசிகன் சொல்வது 100 சதவீதம் சரி. டபுள் த்ரில் ஸ்பெஷலிலேயே மிகச் சிறந்த கதை கொலைகார பொம்மைதான். அகதா கிரிஸ்டி நாவலையும் ஹிட்ச்காக்கின் படத்தையும் சேரந்து பார்த்து, படித்த மாதிரி இருந்தது. அதனால், டபுள் த்ரில் ஸ்பெஷல் என்பதைவிட ட்ரிபுள் த்ரில் ஸ்பெஷல் என்றே சொல்லலாம். டெக்ஸ் மீண்டும் என்ட்ரி ஆகிடப் போகிறார் என்பது பெருத்த மகிழச்சி அளிக்கும் செய்தி.

   Delete
  4. "கொலைகார பொம்மை" was the surprise hair-raiser, nice selection sir, as always :))

   Delete
  5. கருப்பு வெள்ளை என்ட்ரி டெக்ஸ்ல் இருந்தே ஆரம்பிக்கட்டும்,அடுத்து விரைவாக கலரில் உள்ள ஒரு கதையையும் வெளியிடுங்கள் சார் ..........

   Delete
  6. கதை தேராது என்றால் ஆர்ச்சி கதை எனினும் தவிர்த்து விடுங்கள்,காதில் பூச்சுற்றும் கதைகள் என தவிர்க்க வேண்டாம் ,ஹாலிவுட்டை பாருங்கள் தயக்கம் வேண்டாம் ..............

   Delete
  7. கதையின் தரத்தைதான் அதிகம் பார்க்கிறோமே ஒழிய அது காதில் பூச்சுற்றிய கதைகளா என யாரும் பார்ப்பதில்லை என்பது தங்களுக்கு தெரியாததல்ல ...........

   Delete
 7. தமிழ்மணத்தில் உங்கள் வலைப்பூ இன்னமும் பதிவாகவில்லை! எந்த முகவரியை பதிந்தீர்கள் சார்?
  http://lion-muthucomics.blogspot.com
  or
  http://lion-muthucomics.blogspot.in

  முடிந்தால் கூகிள் மூலம் ஒரு custom domain வாங்கி விடுங்கள்! வருடத்திற்கு பத்து டாலர்கள்!
  For example:
  http://lion-muthucomics.blogspot.com
  can be registered as:
  http://www.lion-muthu-comics.com/

  Another option:

  ஏற்கனவே உள்ள நமது வலைதளத்தை உங்களால் பராமரிக்க முடியாமல் இருப்பது கண்கூடு - அந்த முகவரியை (http://www.lion-muthucomics.com/) வேண்டுமானால் இந்த ப்ளாக்குடன் இணைத்து விடலாம்! தேவைப்பட்டால் ஒரு வெப் டிசைனரை வைத்து இந்த ப்ளாகையே ஒரு வெப்சைட் போல தோற்றமளிக்க செய்யலாம் - One time job, easy to maintain and will look professional too! :)

  ReplyDelete
  Replies
  1. Karthik Somalings : தமிழ் மணம் நமது வலைப்பதிவினை மறு நாளே நிராகரித்து விட்டார்கள் - காரணம் நானறியேன் !

   நமது வலைத்தளத்தை விரைவில் உயிர்பெற்றிடச் செய்யும் முயற்சிகளை ரொம்ப சீக்கிரமே செய்திடுவோம் !
   Many thanks for the suggestions as well !

   Delete
  2. எத்தனையோ வலைப் பதிவுகள் 20,000 views தொடவே சில வருடங்கள் எடுக்கும் போது ஆறு மாதத்தில் ஒரு லட்சம் views ஐத் தாண்டிவெற்றிகரமாகப் போகும் ஒரு வலைப் பதிவை தமிழ் மணம் நிராகரித்து விட்டதா? என்ன அநியாயம் இது?

   Delete
 8. //டெக்ஸ் கதைகளை நீளம் கருதாமல் ஒரே இதழாக வெளியிடுவது ஒரு option என்பதால் குட்டியானதொரு தலையணை சைசில் டெக்ஸின் இதழ்களைக் கண்டிடப் போகிறீர்கள் ! //


  100% SUPPORT BUT ONE NOTE, CONSIDER BLUEBERRY STORIES IN BIG SIZE.

  ReplyDelete
 9. நண்பர்களே

  நமது நிலவரம் இன்றைய தேதியில் .....


  [=============== 2012 ===============]

  July -> Lion New Look Special (Rs. 100) [ Received ]
  August –> Lion Double Thrill Special (Rs.100) [ Received ]
  September -> Wild West Special (Rs. 100 ) [ Waiting ]
  October –> Lion Super Hero Special (Rs. 100 - Diwali Malar)
  October -> Maranathin Nisaptham (Rs. 10)
  November –> Thanka Kallarai (Rs. 100)
  December -> Kaval Kazhuku (Rs. 10)


  [=============== 2013 ===============]

  January –> Muthu NEVER BEFORE Special (Rs. 400)
  January –> Classic THREE Special (Rs. 50) (Nayakaravil Maayavi, Vaanveli Kollaiar & Peirottil Johny Nero)
  March -> Classic DETECTIVE Special (Price Yet To Announce)


  ...... Awaiting for further(more) announcements :)

  ReplyDelete
  Replies
  1. வாவ் Updated List நன்றி நண்பரே

   .

   Delete
 10. வாவ் மிக மிக அருமையான செய்தி சார்

  மதியில்லா மந்திரி வருகிறாரா நல்லது நல்லது
  சாகச வீரர் ரோஜர் ( அவருடைய மர்ம கத்தி மறக்க முடியுமா சார் )

  டெக்ஸ் தலையணை சைசில் - சார் மெத்தை சைசில் வந்தாலும் எங்களுக்கு ஓக்கேதான் நாங்க ரெடி நீங்க ரெடியா ;-)
  .

  ReplyDelete
  Replies
  1. நாங்க ரெடி நீங்க ரெடியா ;-)

   நாங்க ரெடி நீங்க ரெடியா ;-)

   நாங்க ரெடி நீங்க ரெடியா ;-)

   நாங்க ரெடி நீங்க ரெடியா ;-)

   நாங்க ரெடி நீங்க ரெடியா ;-)

   நாங்க ரெடி நீங்க ரெடியா ;-)

   நாங்க ரெடி நீங்க ரெடியா ;-)

   Delete
  2. உங்களுடைய ஆதரவுக்கு நன்றி நண்பரே :))
   .

   Delete
 11. பரலோகப் பாதை பச்சை வந்துவிட்டது கொரியர் வீட்டிற்கு போகாமல் அப்படியே கடத்திக்கொண்டு வந்தாயிற்று

  பெயருக்கேற்றார் போல பச்சை வண்ணத்தில் பிரின்ஸ் கலக்கிவிட்டார் :))
  .

  ReplyDelete
 12. // கறுப்பு ; வெள்ளை நாயகர்களுக்கு நூறு ரூபாய் விலைகள் அவசியமாகிடாது என்பதால் - ரூபாய் 50 ; 30 விலைகளில அவர்களை உலா வரச் செய்திடல் - பாக்கெட்டில் பொத்தல் போடாதென்ற வகையில் விலையில் ஒரு சமரசமாகவும் ; அதே சமயம் நம் தேவைக்குப் பொருத்தமானதாகவும் அமைந்திடுமென்று தோன்றியது //

  அடிக்கடி இவ்வார்த்தைகளை சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே விஜயன் சார்
  உங்கள் எண்ணங்கள் எங்களுக்கு புரியாமல் இல்லை
  தடையற தொடருங்கள் காத்திருக்கிறோம் நாங்கள் :))
  .

  ReplyDelete
 13. // சுமார் 35 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றிடும் கால இயந்திரத்தினுள் நுழைந்திட முயற்சிக்கிறேன் //

  சார் அப்ப பதிவு முத்து காமிக்ஸ் நாயககர்களைப் பற்றியதா ;-)
  .

  ReplyDelete
 14. கதைகளுக்கு தலைப்பு எங்கிருந்து பிடிக்கிறீர்கள் சார்.?ஒவ்வொரு தலைப்பும் அற்ப்புதமாக இருக்கிறது.உங்கள் தமிழ் புலமை வியக்க வைக்கிறது.(சாத்தானின் தமிழ் புலமை வாழ்க்கையை வெறுக்க வைக்கும்.ஹிஹி).

  ReplyDelete
  Replies
  1. saint satan : புலமையெல்லாம் கொஞ்சம் பெரிய வார்த்தை ! மனதுக்குப் பிடித்தமானதை ; மனதில் பட்ட விதத்தில் எழுதிடும் போது அதில் ஒரு இயல்பான மெறுகு தெரிந்திடுவது உண்டு தானே ? இங்கு எழுதிடும் நம் நண்பர்கள் ஒவ்வொருவரின் வரிகளிலும் ஒரு அழகினை நான் ரசிக்கத் தான் செய்கிறேன் ! எழுதும் திறமைகளில் நம்மில் எவரும் சளைத்தவரல்ல என்பது நான் பெருமிதம் கொண்டிடும் சங்கதி !

   Delete
 15. Good News huuuurrray.
  Dear Editor,
  My only suggestion is to see more than one stories, in other words more pages for B&W issue. So it will create some expectation to look forward for B&W stories toooo.
  I am soooo excited about Muthu "Never Before Special" and already making plans to read which story first and which story last etc... Please keep reminding people about "Never Before Special"
  Thanks,
  Karthikeyan

  ReplyDelete
 16. amarkkalam! Attakaasam! athiradi!! viji sirkku oru Great "O"
  Valthukkal Sir! kalakkunga!

  ReplyDelete
 17. A pleasure to read your blog posts, as always. Thank you Editor Sir.
  And by the way, please do come to Bangalore for the Comic Con. Looking forward to meet you in person. :-)

  ReplyDelete
 18. பதிவு மன்னர் கோயமுத்தூர் ஸ்டீல் க்ளா எங்கே போய்விட்டார்?அண்ணாரின் நீண்ட பதிவுகள் சாத்தானுக்கு பிடிக்கும்.(சாத்தானின் பதிவுகள்தான் யாருக்கும் பிடிக்காது.ஹிஹி).

  ReplyDelete
  Replies
  1. நல்லாதானே போயிட்டிருக்கு ,உங்கள் கலகத்தை என்னிடமும் துவங்குகிறீர்களா,என்னை நெளிய வைக்கிறது உங்களது வார்த்தைகள் ................. ம்ம்ம்ம் உங்களுக்கு ஷாக் கொடுத்திருக்க வேண்டும் ............

   Delete
 19. Dear Vijayan Sir,

  I am very eager to see Tex willer in color, if you can publish atleast one color story of Tex in tamil it would be really great. Don't forget to publish it in a small pillow size.

  ReplyDelete
 20. டெக்ஸ் கதைகளை நீளம் கருதாமல் ஒரே இதழாக வெளியிடலாம்..............

  ReplyDelete
 21. பிரின்சின் கடைசி கதை என்பது கதையினை முடித்த போது எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்ததென்றால் மிகையாகாது.கிளம்பும் வரை ஏதேதோ பேசிவிட்டு ,கிளம்பும் போதும் பேச ஏதோ இருக்கிறது என்ற உணர்வில் பிரிந்து செல்லும் காதலர்களின் நிலைதான்,இந்த தரமான கதையும்.அதாவது கிளைமேக்சிலே ஒரு பஞ்ச் வைத்து செல்வார்களே சில சிறந்த படங்களில் அதை போல.கண்டிப்பாக பதிப்பாசிரியர்கள் மீண்டும் உயிர்ப்பிப்பார்கள் .
  நிஜம்தானா ,சொப்பனதில்தானே இப்படி எல்லாம் வரும் என கதை துவங்குகிறது,அதை போன்றே எனது எண்ணங்களும்,ஆசிரியர் அற்புதமாக துவங்கிய இந்த உயிரோட்டமிகு வரிகளே ,ஓவியத்தை ,ஓவியத்தின் சிறப்பினை கூறி விடுகிறது .படங்களின் ஒவொவொரு ஸ்லைடும் அற்புதம்,எந்த ஸ்லைடு நன்றாக வரவில்லை என போட்டி வைக்கலாம் ,ஒன்று கூட தேர்வாகாது என நினைக்கிறேன் அப்படியொரு தரம்,கதையில் வரும் அனைவரின் உடைகளின் வண்ணமாகட்டும்,தலை முடி நிறங்களாகட்டும் ,உடலின் வண்ணமாகட்டும் அட அடா முடியல.
  கதை தரமாக ,விறு விருப்பான படங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ,விரைந்து செல்லும் நீரினோட்டதில் விரைந்து செல்லும் கழுகு போல அற்புதமாக விறு விறுப்பாய் செல்ல தங்களது மொழி பெயர்ப்பு உதவியுள்ளது .20 வது பக்கத்தில் மலை போல ,பெரிய அந்த ஒரு பக்கத்தை நிறைக்கும் படம் அற்புதம்,இதை போன்றே இன்னும் வரும் கதைகளின் அழகாய் உள்ள படத்தை பெரிதாய் காட்டினால் அற்புதமாயிருக்கும் என நினைக்கிறேன். முதல் படத்தை இது போல காட்டியிருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்.
  டபுள் திரில் ஸ்பெசலில் இடம் பிடித்த டபுள் குமார்கலான உதயகுமாருக்கும் , ராஜ் குமாருக்கும் வாழ்த்துக்கள்.
  ஆசிரியர் அற்புதமாக யோசித்திருப்பார் போல ,என்னடா இவளவு அழகான கதையினை தருகிறோமே ,திருஷ்டி பட்டு விட்டால் ,அதன் விளைவு அட்டைபடம்.திருஷ்டி பொட்டு போல வட்டமாய் ,அவர் வித்தியாசமாய் யோசித்ததன் விளைவு சிகப்பு நிறம் வட்டத்திற்கு வெளியே விழுந்தது .
  நண்பர்களே கதையினை கூறி விட்டால் போரடித்து விடும் ,நீங்களும் தரிசித்த பின்பு இதை பற்றி விவாதிப்போம்.ஆசிரியருக்கு இந்த கதை தேர்விற்கு முழு மதிப்பெண்கள் .

  ReplyDelete
 22. அன்பு ஆசிரியருக்கு ,
  டெக்ஸ்ன் கதைகள் வண்ணத்தில்தான் ,இதில் அலச என்ன இருக்கிறது,அலசி வண்ணத்தை போக்கி விடாதீர்கள் சார் ,ஒரு கதையாவது ,வண்ணத்தில் வந்த ஒரிஜினல் கலர் கதையாவது ஒன்று வெளியிடுங்களேன்.
  ஆஹா 1987க்கு நீங்கள் பயணிப்பதை நினைத்தால் ஆனந்தமாயிருக்கிறது ,நீங்கள் வெளிவிட துடிக்கும் எக்கச்சக்கமான கதைகளை நினைத்தால் மீண்டும் அந்த பொற்க்காலம் கண் முன்னே வந்து செல்கிறது .
  டெக்ஸ்ன் தரமான கதைகள் ,முழு நீளத்தில்,அதுவும் வான வேடிக்கை நிறைந்த கதைகள் எனும் போது ஆஹா ,சீக்கிரம் வெளிவிடுங்களேன்.தலையணை என்ன மெத்தை என்றாலும் நாங்கள் ரெடி என சிபி கூறியதே பொருத்தமாயிருக்கும் .
  வண்ணத்தில் மாதம் தோறும் தவறாமல் 100 ரூபாய்க்கும்,அதனுடனே கருப்பு வெள்ளை 30 .......க்கும் என தாராளமாக நீங்கள் வெளியிடலாம் .1987 கால கட்டங்கள் மிக போதையான காலம் அங்கேயே தங்கி விடாமல் அடுத்த பதிவிற்கு தயாராகுங்கள் என .............
  .நீண்ட நாட்கள் ஆனாலும் அற்புதமான பதிவை வெளியிட்டு எங்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்த தங்களுக்கு நன்றிகள் பல பல பல .வேறு வழியில்லை டெக்ஸ் ,மார்டின்,ராபின் ஆகியோர் கருப்பு,வெள்ளை என்பதால் நானும் வேறு வழியின்றி பாடுகிறேன் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு ....................

  ReplyDelete
 23. இல்லை இல்லை கறுப்பும்தான் எனக்கு பிடிச்ச கலரு .................

  ReplyDelete
 24. " குட்டியானதொரு தலையணை சைசில் டெக்ஸின் இதழ்களைக் கண்டிடப் போகிறீர்கள் "

  Great news for Tex Willer fan's..waiting for it :-))

  ReplyDelete
 25. டியர் எடிட்டர்,
  காமிக்ஸ் கான் அன்றே எங்களுக்கும் wild west ஸ்பெஷல் கிடைத்துவிடுமா? அல்லது அதுக்கு பிறகா?
  டெக்ஸ் வில்லேர், ராபின், மார்டின் கதைகளுடன் நீங்கள் dampyr மற்றும் zagore கதைகளையும் பரிசீனையில் எடுத்து கொள்ளுங்கள். 30க்கு ஒரு கதையன்பதைவிடுத்தது 100க்கு ஐந்து அல்லது ஆறு கருப்பு வெள்ளை கதைகளை கொடுங்கள்.

  ReplyDelete
 26. டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகனான எனக்கு இந்த 'தலையணை சைஸ்' அறிவிப்பைவிட கொண்டாட்டமளிக்கும் சங்கதி வேறு என்னவாக இருந்திட முடியும்!
  2013 உடனே வந்துவிடாதா என மனம் ஏங்குவதைத் தவிர்க்கமுடியவில்லை. அடுத்தடுத்து கிடைக்கப்போகும் காமிக்ஸ் பொக்கிஷங்கள் வாழ்கையை அழகானதொரு பாதையில் அழைத்துச் செல்லப்போகிறதென்பதை அப்பட்டமாய் உணர்த்துகின்றன.

  ReplyDelete
  Replies
  1. i like even its b&w like ratha padalam ... please eeeeeee

   Delete
 27. Excellent Idea Sir.. ஏது எப்படியோ எங்களுக்கு நல்ல களம ஆரம்பிச்சாச்சு....

  ReplyDelete
  Replies
  1. காலம்ன்னு அடிச்சா களமன்னு வருது.. என்ன கொடுமை சார் இது..

   Delete
  2. NHM Writer என்ற தமிழ் தட்டச்சு மென்பொருள் உள்ளது. முயற்சித்துப் பாருங்கள் நண்பரே.

   Delete
 28. Pls dont change the subscription Amt .Rs100/- per month should be standard its not bother either it's in colour or in B/W. if it is in bw u can give us 5 to 6 stories or 2 full tex stories in a book.

  ReplyDelete
  Replies
  1. yessssssssssss this is correct pls fo this 100 rs per issue even if its 10 rs pack with 10
   or 50x2
   or 25x4 please do this
   ranjith
   new vasagar

   Delete
 29. Sorry Mr Vijayan

  I am forced to put this private mail to your organisation seeking clarification on the subscription balance , into the blog since it did not evoke any response even after 3 reminders.

  Hope you will issue suitable instructions.

  In you recent issue you have listed down the issues covered by the subscription and have indicated for the issues planned in September- December we have to remit Rs 400/-

  In my case I have remitted sums on different dates starting from January 2011 as per details given below against which I have started receiving issues and I have listed the issues that have been sent to me. After balancing for issues received and to be received after August 2012, I need to pay Rs 195 only, which I will remit after getting your confirmation. Once we reconcile this it will be easy for me to pay based on calls from you.

  Further for the Jumbo Special Can I remit the money (Rs 400) with this balance or should I have to send by as separate standalone remittance.  T Gopalakrishnan -

  Account : Prakash Publishers

  Date Particulars Amount sent Amount Balance
  Rs Rs Rs

  11-01-2011 ICICI Cheque no.471749 305 305
  18-01-2011 ICICI Cheque no.471755 130 435
  24-04-2012 Internet Transfer 620 1055
  Issues so far received XI 230 825 Received
  லயன் Come Back ஸ்பெஷல் 125 700 Received
  விண்ணில் ஒரு குள்ள நரி 15 685 Received
  கொலைகார கலைஞன் 15 670 Received
  சாத்தானின் தூதன் டாக்டர் 15 655 Received
  தலை வாங்கி குரங்கு 30 625 Received
  முத்து sueprise special 125 500 Received
  சிவப்பு கன்னி மர்ம்ம் 15 485 Received
  தற்செயலாய் ஒரு கொலை 15 470 Received
  Lion New Look Special 125 345 Received
  Lion Double Thrill Special 125 220 Received
  Proposed august despatches 15 205 To be received


  T Gopalakrishnan
  New #22 (Old #55) 48th Street
  Ashoknagar
  Chennai 600 083
  tgkmail@gmail.com; tgk48@airtelmail.in
  +919444010569

  ReplyDelete
  Replies
  1. I suggest you to talk to the lion comics office directly instead of dropping a message here or over the e-mail. It is really worth talking to them over phone!

   Delete
  2. tgopalakrishnan : Please do check your mail ; accounts have been sorted out. Thank you for the paience.

   Delete
 30. Can Any body willing to sell Cap-Tiger's Minnum maranam??"

  ReplyDelete
  Replies
  1. வேண்டாம் நண்பரே ஆசிரியரை மறு பதிப்பில் வெளியிட கோரலாமே ,அனைத்து நண்பர்களும் உரக்க குரல் கொடுங்களேன் தங்க கல்லறை தொடர்ந்து இதனை வெளிவிட ஆசிரியரை ஊக்கபடுத்தும் விதமாக ஒலிக்கட்டும் உங்கள் உற்ச்சாக குரல்கள் ,எனக்கும் வேண்டும் என ஒலிக்கட்டும்..............

   Delete
  2. kandippa Pearl"Chihuahua Silk" Vendum Vendum Colouril Vendum!! Hi! Hi! Hi!
   அற்புதமான அழுத்தமான கதை சார் அது!! கண்டிப்பா வேணும்!!! அதுவும் அடுத்த வருடமே வேணும் ஜி! நெவெர் பிபோர் வெற்றியை கொண்டாடும் விதமாக சார் கண்டிப்பா maru பதிப்பு arivippaar !

   Delete
  3. மின்னும் மரணம் தொடங்கி புயல் தேடிய புதையல் வரையிலான காமிக் தொடர் கேப்டன் டைகரின் கதைகளில் ஒரு CLASSIC. அற்புதமான கதை களம். நேர்த்தியான சித்திரங்கள். கண்டிப்பாக வண்ணத்தில் மறுபதிப்பாக வெளியிட எடிட்டர் ஆவன செய்வார்.

   Delete
  4. I am supporting this gesture to republish "MINNUM MARARANAM" in colour.

   Delete
 31. வாரா வாரம் புதிய அறிவுப்புகளை அறிவித்து எங்களை திக்கு முக்காட வைக்கின்றீர்கள் .
  லயன் காமிக்ஸ் -நான் ஸ்டாப் கொண்டாட்டம் .
  உங்களுடைய writing style அருமை.
  அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம் .நன்றி

  ReplyDelete
 32. ஆசிரியரே!

  அமைஞ்சிடுச்சு! அட்டகாசமா அமைஞ்சுடுச்சு!!

  நம்ம லயன் காமிக்ஸ் comeback ஸ்பெஷல் க்கு அப்புறம் வந்த எல்லாத்தையும் இந்த டபுள் த்ரில் தூக்கி சாப்டுருச்சு.

  அது, என்னைக்காச்சும் எதுக்குன்னே தெரியாம, வீட்ல சாம்பார் நச்சுனு அமைஞ்சுரும்.. "இன்னைக்கு என்னம்மா போட்ட!?"னு கேட்டா , தெரியலேடா, கைல தான் அள்ளி போட்டேன்னு அம்மா சிரிப்பாங்களே! அந்த மாதிரி, எப்டின்னு தெரியல.. இந்த சைஸ் பார்மட்டுக்கும், பேப்பர் குவாலிடிக்கும் ,கதைக்கும், படத்துக்கும் ' பரலோகப்பாதை பச்சை ' - மரணம். பஸ்ல தூக்கிட்டு படிக்குரதுல அவ்ளோ பெருமை. பக்கத்துல இங்கிலீஷ் பேப்பர் படிக்கிற பெருசு உத்து பாக்க.. நான் " தமிழ் காமிக்ஸ் தான். எப்புடி...! " தமிழ்ல இவ்ளோ அழகா ஒரு புக்கு... ஹையோ...!

  1. படம் ஒவ்வொன்னும் அச்சரம். கோயம்புத்தூர் ஸ்டீல் க்ளா சொன்ன மாதிரி hard to judge wihich one is the best!

  2. பெரிய பிளஸ் என்னன்னா, முந்தின specials-a விட இதுல close-up panels நிறைய வருது.. அதுவும் அம்சமா இருக்கு..

  3. கலர் selection தீ.( அட்டை படத்துக்கு மார்க் கம்மி தான் ஆசானே! ப்ளீஸ் )

  4. கதையும், வசனங்களும் அட்டகாசமா அமைஞ்சுடுச்சு. ( பலூனுக்கு உள்ள சின்னது, பெருசு வித்யாசம் 99.9% nill)

  5. இன்னும் மித்த secret incredients um சேர்ந்து ஏன்னே தெரியல.. really thrilled வித் திஸ் ஸ்பெஷல். ( udhayakumar, neenga oru theerkadarisi :) )

  இனி அசைச்சுக்க முடியாது.

  இனி... எல்லாம் வெற்றி தான் ஆசானே! நம்ம லயன் காமிக்ஸ் அமைஞ்சிடுச்சு!!! ஹூ ....யாஹீஈ.....!!!

  - சிவகாசிலருந்தே செந்தில்குமார்

  ReplyDelete
  Replies
  1. என்ன நண்பரே திடுமென இப்படி கூறி விட்டீர்கள் ,ராதாகிருஷ்ணன் அண்ணாச்சியை அலுவலகம் சென்று பாருங்கள் ,ஆசிரியர் மெனக்கெடுவது தெரியும்............
   நீங்கள் கூறிய அனைத்து நிறைகளும் கடின உழைப்பால் வந்ததே .............அருமையாக கூறினீர்கள்

   Delete
  2. thanks for your compliments... Senthil!
   But still i am a poor little comics reader....

   Delete
 33. Sir
  vara irukkum

  thanka kallarai...!

  Ithaludan

  Thigil 2 & 3 i

  serthu reprind pannunkal...!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த வருடத்தில் என் பாட்டிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க சார் ப்ளீஸ்!

   Delete
  2. Agreeing with Simon to bring back கறுப்பு கிழவி Stories . It can be used as filler pages in any special issue

   Delete
 34. //டெக்ஸ் கதைகளை நீளம் கருதாமல் ஒரே இதழாக வெளியிடுவது ஒரு option என்பதால் குட்டியானதொரு தலையணை சைசில் டெக்ஸின் இதழ்களைக் கண்டிடப் போகிறீர்கள் !//

  ஆசிரியர் அவர்களே டெக்ஸின் ஒரிஜினல் காமிக்ஸ் பிரதிகள் வெளியாகும் அளவிலேயே தமிழிலும் வெளியிட முடியுமா... வானம் தேன் சிந்துமா.... மாதம் மும்மாரி பெய்யுமா.....பூங்கதவு தாள் திறக்குமா..... :) ---குறைந்தபட்சம் காமிக்ஸ் கிளாசிக்கில் வெளியான தலை வாங்கி குரங்கின் அளவிலாவது.....

  மேலும் அண்மையில் இறைவன் பதம் சென்று சேர்ந்த ஓவியர் ஜோ குபெர்ட் அவர்களின் சித்திர திறமையில் உருவான டெக்ஸ் கதை தமிழில் சாத்தான் வேட்டை எனும் பெயரில் தீபாவளி சிறப்பிதழாக வந்து இருக்கிறது எனும் தகவலை அன்பு நண்பர் ரஃபிக் வெளியிட்டபோது மிகுந்த ஆச்சர்யம் உருவானது. பிரபலமான கதைகளை எல்லாம் சத்தமின்றி வெளியிட்டு விட்டு அமைதியாக இருந்து விடுகிறீர்கள்... :) இப்போது நான் சாத்தான் வேட்டையையும் மறுபதிப்பில் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன்.... இரக்கம் காட்டுவீர்களா.... :)

  டெக்ஸ்,மார்ட்டின்,நிக் ரைடர் போல இன்னம் புதிய இத்தாலிய கதை வரிசைகளை நீங்கள் தமிழில் அறிமுகப்படுத்துவீர்களா....[இத்தாலிய கலாச்சாரத்தின் ஒரு அங்கமான டெக்ஸ் வெளிவரும் அரிதான மொழிகளில் தமிழும் ஓன்று என்பது உங்களால் எங்களிற்கு கிடைத்திட்ட பெருமை அல்லவா....]

  இவ்வருடம் நீங்கள் அறிமுகப்படுத்தியதிலேயே மிகவும் அருமையான கதை... ஜெரோம் ப்ளாச்சின் கதைகளே... மிக நுட்பமான சமூக அலசலும், மென்நகைச்சுவையும், எதார்தமான கதை நகர்வும் கதை மாந்தர்களுமென அருமையான தெரிவு அது.... கதையினுள்ளே சொல்லாமல் செல்லும் கதைகளை வாசகனை படிக்க வைக்கும் நுட்பமான ஒரு ஆக்கம், துரதிர்ஷ்டவசமாக பல வாசக நண்பர்களை கதை கவர்ந்துவிடவில்லை என்பது வேதனையானதே.... தமிழ் மொழிபெயர்ப்பும் மிகச்சிறந்த ஒன்றாக இருந்திடவில்லை என்பதை இங்கு நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்... எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வகையான ஒரு நல்ல கதையை எமக்கு அறிமுகம் செய்தமைக்காக என் நன்றிகள்... [ வரும் காலத்தில் வண்ணத்தில் நல்ல மொழிபெயர்ப்பில் ஜெரோம் வந்தால் நான் அதை கண்டிப்பாக வரவேற்பேன் ]

  லார்கோ முதல் பாகத்தில் காணக்கிடைத்த எழுத்துப் பிழைகள், பிரதி சரி பார்க்கப்படாமலேயே அச்சிற்கு சென்று விட்டதோ எனும் எண்ணத்தை உருவாக்கியது.. மாறாக இரண்டாம் பாகம் எழுத்துப் பிழைகள் குறைவாகவும் நல்லதொரு மொழியாக்கம் கொண்டதாகவும் இருந்தது... குறிப்பாக இரண்டாம் பாகத்தின் இறுதிப்பகுதியில் லார்கோ நினைவுகூறுவதாக வரும் வரிகள்....

  லக்கிலூக் கதைகள் அசலிலேயே சிரிப்பை வரவழைக்க சிரமப்படும் காலமிது. இரு பழைய கதைகள் எனினும் ந்யூ லுக் அதிக சிரிப்பை வரவழைக்கவில்லை [அசலிலேயே அதுதான் நிலை].... லக்கி லூக்கை கலிபோர்னியாவிற்கு அழைத்து செல்வதற்காக சிறுவன் ஒப்பிக்கும் வரிகளும், தல தளபதிக்கு அடிவானில் புகை தகவலை விளக்கும் கட்டமும் அட்டகாசமான சிரிப்பை வரவழைத்தது.... லக்கி லூக்கை தமிழில் சிரிக்கும்படி ஆக்குவது சிரமமான காரியம்... அவ்வகையில் பாராட்டுக்கள்... ஆனால் லக்கிலூக்கை வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு கதைகளிற்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொண்டால் நல்லது என்று எண்ணுகிறேன்.... `எழுத்துப் பிழைகள் அரிதாக காணப்பட்ட இதழ் எனும் வகையில் மிக்க மகிழ்ச்சியை அளித்த பிரதி நியூ லுக்.

  அண்மையில் நண்பர் ஒருவருடன் உரையாடியபோது கறுப்பு கிழவி கதைகளை மிகவும் சிலாகித்து பேசினார். வாசக அன்பர்கள் அதை மொக்கை கதை என்று கூறியது குறித்து அவரிற்கு உடன்பாடு இல்லை. கறுப்பு கிழவி கதைகளின் முடிவுகள் அபாரமானவை என்பது அவர் வாதம். சிக்கல் என்னவெனில் நான் கறுப்பு கிழவி கதைகளை படித்தது இல்லை.... உங்கள் மறுபதிப்பு பட்டியலில் முதிய மூதாட்டியான கறுப்பு கிழவிக்கும் ஒரு இடம் தருவீர்களா....

  தங்க கல்லறை வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது எனும் அற்புதமான அறிவிப்பை உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஒரு அப்பாவி வாசகன்.

  சூஹீசூஸ் நல முன்னணி [ நாங்கள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறோம்]

  ReplyDelete
  Replies
  1. ஆஹா காதலரே பெரிய சைசே என்பதில் உறுதியாக நில்லுங்கள்,உங்கள் பதிவில் நீங்கள் வெளியிட்ட அந்த டெக்ஸ் கதை அற்புதமாயிருக்குமென நினைக்கிறேன்,பார்ப்போம் ஆசிரியர் அதை விட சிறந்த கதைகளையும் கொண்டிருக்கலாம் ,எப்படியோ முழு நீள டெக்ஸ் என்ற கனவுகள் பலித்தால் சரி


   //வரும் காலத்தில் வண்ணத்தில் நல்ல மொழிபெயர்ப்பில் ஜெரோம் வந்தால் நான் அதை கண்டிப்பாக வரவேற்பேன்//
   கண்டிப்பாக நானும் வழிமொழிகிறேன் ,சென்ற கதை ஏனோ பிடிக்கவில்லை .சூஹீசூஸ் நல முன்னணி உயிரோடிருப்பது உங்கள் பதிவால் வலுபடுத்தபட்டு விட்டது.ஆனால் தங்க கல்லறையை எதிர்ப்பது நியாயமா ?நமது சூஹீசூஸ் நல முன்னணி தலைவரை காணாது தள்ளாடும் போது ,நீங்கள் வெளிப்பட்டது உற்சாகத்தை தூண்டுகிறது .....................உங்கள் உறுதி வாழ்க லட்சியம் வெல்க (ஆசிரியரின் அறிவுப்பு உறுதியானதும் தான் தலை காட்டுவேன்)

   உங்கள் அன்புக்கு பதிவுக்கு தலைவணங்கும் சூஹீசூஸ் தொண்டன்

   Delete
  2. கனவுகளின் காதலன் : "சூஹீசூஸ் நல முன்னணி" நலமாய் இருந்திடுவது நிச்சயம் நற்சேதியே !

   டெக்ஸ் கதைகளை வெளியிடும் போது நமது மார்க்கெட்டில் கிட்டிடும் காகித அளவுக்கு ஏற்ப அதனை சிறிதளவு மாற்றியமைப்பது அவசியப்பட்டிடும் ; எனினும் நிரம்ப கத்தி/ கத்திரி போட்டிடாமல் நேர்த்தியாய் அமைத்திட நிச்சயம் ஆவன செய்வோம்.

   "சாத்தான் வேட்டை" ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் கைவசம் இருந்திட்டதொரு இதழ்.... நீங்கள் படிக்கத் தவறியது வியப்பே ! சமீபத்திய வெளியீடு என்பதால் நிச்சயம் நம் நண்பர்களுள் எவரேனும் ஒரு spare copy வைத்திருக்க வாய்ப்பிருக்குமென்றே தோன்றுகிறது ! "சாத்தான் வேட்டை" நம் லயனுக்கு வந்தது வேடிக்கையானதொரு சம்பவத்தின் பின்னணியிலேயே !எந்த வருடம் என்பது எனக்கு நினைவில்லை ; இத்தாலியில் டெக்ஸின் ஏஜென்ட்களை ஒரு Book Fair -ல் சந்தித்தேன் ! பரஸ்பர குசல விசாரிப்புகளுக்குப் பின்னே சமீபத்திய வெளியீடுகள் ; வரவிருக்கும் புது projects பற்றிய பேச்சு ஓடிய போது,அமெரிக்க காமிக்ஸ் மார்க்கெட்டில் டெக்ஸ் வில்லரை அறிமுகப்படுத்திட பிரபல ஓவியர் Joe Kubert -ன் கைவண்ணத்தில் புதியதொரு சாகசம் தயாராகி இருப்பதாகச் சொல்லி ஒரு ஆங்கில ஆல்பத்தை முன்னே தூக்கிப் போட்டார்கள்! நான் உற்சாகமாய் அதனைப் புரட்டிட அவர்களது முகங்களோ அழுது வடிந்திருந்தது ! என்ன சங்கதி என்று கேட்ட போது - டெக்ஸின் அமெரிக்க விஜயம் புஸ்வானம் ரகமே என்றும் - ஒட்டு மொத அமெரிக்காவிற்கு 1100 பிரதிகளுக்கு மேல் ஆர்டர்கள் சேகரிக்க முடியவில்லை என்றும் புலம்பினார்கள் ! இத்தாலியில் - பீட்சா ; ஆலிவ் ஆயிலுக்கு அடுத்த படியாக டெக்ஸ் வில்லரை நேசிக்கும் அந்தக் காமிக்ஸ் காதலர்களுக்கு இது ஜீரணிக்க இயலா சங்கதியாக இருந்ததில் வியப்பில்லை ! எனினும் அமெரிக்காவின் நஷ்டம், நமது லாபம் என்ற கதையாக அக்கதையின் உரிமைகளை அங்கேயே உறுதி செய்தேன்;சாத்தான் வேட்டையாய் அவதரித்ததும் அதுவே !

   டெக்ஸ் தவிர நமது காமிக்ஸ் galaxy -ல் இன்னும் பிற இத்தாலிய நாயகர்களும் உண்டு தானே ! NICK RAIDER தான் நமது C.I.D ராபின் ; Martin Mystere தான் நமது 'மர்ம மனிதன் மார்டின்" !

   லக்கி லூக் கதைகளைப் பொறுத்தவரை, நகைச்சுவை பின்னிப் பெடலெடுக்கும் top கதைகளை நாம் நிறையவே வெளியிட்டு விட்டோம் ; தற்சமயம் அதே தரத்திலான கதைகளை மீண்டும் கண்டுபிடித்திட போராட வேண்டியுள்ளது ! எனினும் லக்கி லூக் தொடரில் நாம் ரசித்திட இன்னும் நிறையவே சரக்கு உள்ளது ! Anyways 2013 -ல் லக்கி லூக்கின் இடத்தினை பிடித்திடவிருப்பவர்கள் சிக் பில் & குழுவினரும் ; மதியில்லா மந்திரியும் ! So லக்கி லூக்கிற்கு குட்டியாய் ஒரு ஒய்வு உண்டு தான் ! (கவனிக்க - "குட்டியான" ஒய்வு மட்டுமே!!)

   கறுப்புக் கிழவிகளின் கதைகள் எனது பால்ய காலத்து பரிச்சயமும் ; பிரியமும் ! அவற்றை நீங்கள் படிக்கத் தவறி இருப்பின் நிச்சயம் ஒரு அழகான கதை வரிசையினை miss பண்ணி இருக்கிறீர்கள் ! பார்ப்போமே...திகிலில் மறுபதிப்புகள் மலரும் சமயம் மூதாட்டிக்கு ஒரு புனர்ஜென்மம் தந்திட இயலுதாவென்று !

   Delete
  3. வேண்டும்! வேண்டும்! எங்க ஆயா! வேண்டும்! எல்லாரும் சீக்கிரமா கையை தூக்குங்க நண்பர்களே! கருப்பு கிழவிக்கு அருமை பாட்டிக்கு ஜே! அன்பு ஆயாவின் அறிவுரைகள் அற்புதமா இருக்கும் நண்பர் கூட்டமே! ஆசிரியர் இப்போ கேக்குற மன நிலையில ஜாலியா இருக்கார் இப்போவே பிட்டை போட்டு வைப்போம்! ஸ்டார்ட் மியூசிக்!!
   1.கருப்பு கிழவியின் "கோல்டன் கோலாகலம்; இது ஒரு கொலை காலம்"
   2.கொல்ல கொல்ல இனிக்குமடா மானிடா!
   3.கொன்றால்தான் வினை தீரும்!
   4 . கொலை என் கலை
   5 . கிழவிக்கும் ஒரு நியாயம்!
   ஹீ ஹீ ஹீ மானிட பதர்களே கிளப்புங்கள் பட்டையை காத்திருக்கிறாள் ஒரு கொலை வெறி கிழவி!

   Delete
  4. pls raise hands for KARUPPU KILAVI KATHAIGAL!
   She is a devil story teller and advices us to live with discipline! if not, see the attacks from the spirit world. very powerful and breath stopping stories line! give support her for re-born in our comics classics!

   Delete
  5. //லக்கி லூக் கதைகளைப் பொறுத்தவரை, நகைச்சுவை பின்னிப் பெடலெடுக்கும் top கதைகளை நாம் நிறையவே வெளியிட்டு விட்டோம் ; தற்சமயம் அதே தரத்திலான கதைகளை மீண்டும் கண்டுபிடித்திட போராட வேண்டியுள்ளது ! எனினும் லக்கி லூக் தொடரில் நாம் ரசித்திட இன்னும் நிறையவே சரக்கு உள்ளது !//

   சார், பூம் பூம் படலம் - வயிறு குலுங்க சிரிக்க வைத்த கதை. ஆனால், இரு வண்ணத்தில் வந்து ஏமாற்றிய கதை. இதை முழு வண்ணத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

   லக்கி லூக் ரசிகர்கள் / நண்பர்கள் அனைவரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டுகிறேன்.

   Delete
  6. டியர் ககா(கனவுகளின் காதலன் ),,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, சென்ற வாரம்,,,,,,,,,,ஜெயா பிளஸ் ,,,,,,,,,,,ல் கனவுகளின் காதலன் என்றொரு படம் trailor போட்டாங்க ,,,,,,,,,,,,அதன் நாயகன் நம்ப ராமராஜனுக்கு போட்டியா,,,,,,,,,,லிப்ஸ்டிக் கும் ,,,,,,,,, பவர் ஸ்டார் யை விட மிரட்சியான நடிப்பு ம்,,,,,,,,,,, வழங்கினர் ,,,,,,,,,,,,,,,, இந்த ஒரு horror படத்தையும் கண்டு பயப்படாத,,,,,,,,,,, என்னையும் பயப்பட வைத்து விட்டது ,,,,,,,,,,,,,,,,,,,,, நீங்க படத்தில ஹீரோ வா,,,,,,,,,,, நடிக்கிறது ,,,,,,,,,,,,,பற்றி சொல்லவே இல்லையே ,,,,,,,,,,,,,,,சூஹீசூஸ்,,,,,,,,,,,,,, ஹி ஹி ,,,,,,,,,,ஒன்னுமில,,,,,,,,,, பக்கத்தில ,,,,,,,,,ஒரு காக்கா,,,,,,,,,,,அது தான்,,,,,,,,,, விரட்டினேன் ,,,,,,,,,,,,,,,,, டேக் கேர் சங்கர் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

   Delete
  7. லூசு தம்பி, ட்ரெய்லரிற்கே இப்படி பயந்திட்டீங்களே.... சரி ஒரு மாத்திரை சாப்பிட மின்னாடி போட்டுக்கோங்க.... காக்காவை எச்சிக்கையாலதானே விரட்டினீங்க.... இப்ப பாருங்க அங்க இன்னுமொரு காக்கா நின்னுகிட்டு இருக்கும்....

   Delete
  8. நண்பர் கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா,

   இராவணன் வேடம் போட்டால் ராமர் க்ரூப்பை நோக்கி சில கற்களையாவது வீசியாகத்தானே வேண்டும்.... திருப்பி அடிக்காத வில்லனாக வேடமேற்பதில் சுவாரஸ்யம் இல்லையே.... பல நண்பர்களின் விருப்பம் தீபாவளி விருந்தாக வரவிருப்பது மகிழ்சியே.... சூஹீசூஸ் பட்டாஸ் வருதுங்க.... வெடிக்க தயாராகுங்க நண்பரே.... :)

   Delete
  9. கண்டிப்பாக காதலரே ,நீண்ட நெடும் நாட்களுக்கு பின் சரியான கனத்தில்,நிறைவான கணத்தில் ,அற்புதமான களத்தில் குதிக்க விருக்கும் தீபாவளி மலரை நினைத்தால் , காலச்சக்கரம் பின்னோக்கி சுழல தயாராகிறது மனதை லேசாக்கி கொள்ளுங்கள் .........................கனவே கலையாதே ............
   நிறைவாய் ,நிறைவுடன்
   இந்த வெற்றியை சரித்திரம் இனி(தீபாவளி அன்று ) சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ...............................

   Delete
 35. அன்பு ஆசிரியருக்கு,
  ஜானியின் கதை பனியில் ஆரம்பிப்பதால் வெளிறிய வண்ணங்கள் ,ஆனால் மிகைபடுத்தாமல் இருக்க தேவையே,நம்மையும் பனியினூடே அழைத்துசெல்லும் சேசிங் ,துப்பறியும் ஜானியின் திறன் என அக்மார்க் ஜானியின் கதை,வழக்கம் போல யாரை குற்றம் சாட்டுவார்கள் என நான் வழக்கம் போல திணறித்தான் போனேன்,வரம் கொடுத்த சிவனின் சிரத்தில் கரம் வைத்த நிலை...........அற்புதம் ,அபாரம் ,நண்பர்கள் படித்து களிக்கட்டும்.

  சிறு வயதில் முதன் முதலில் பள்ளியில் சேர்த்தபோது அம்மோனியா நெடியில் மணக்கும் புத்தகமும்,வண்ணங்களில் உள்ள படங்களும் எனது சிந்தையை ,புலன்களை ஈர்த்ததென்றால்,இப்போது இந்த புத்தகமும் புதிதாய் பார்க்கும் போது ஏற்படுத்திய பரவசத்தை ஏற்படுத்துவதை வார்த்தைகளால் வடிக்க இயலாது .......

  மேலும் மேலும் நான் கூறுவது ஒன்றே ,cc கதைகளை எவை எல்லாம் முடியுமோ அவற்றை பெரிய சைசிலே வெளி விடுங்கள் கதைகளின் எண்ணிக்கை குறைத்து (விலை காரணமெனில் ).டெக்ஸ்ன் கார்சனின் கடந்த காலம் கண்டிப்பாய் பெரிய சைஸ்தான் காரணமே தேவை இல்லை ,முடிந்தால் வண்ணத்தில் குழைத்து....

  ReplyDelete
  Replies
  1. மை டியர் மானிடர்களே.ஒரே நாளில் பதிமூன்று பதிவுகளை எழுதிய அண்ணன் கோயமுத்தூர் ஸ்டீல் க்ளா அவர்களுக்கு நூறு மெகாவாட் இலவச மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு சாத்தான் உத்தரவிடுகிறான்.(சாத்தானுக்கு ஒரு பதிவு எழுதவே நாக்கு தள்ளிவிடும்.ஹிஹி).

   Delete
  2. அதெல்லாம் சரி புத்தகத்தை படித்து முடித்தாயிற்றா ,படித்து முடித்திருந்தால் இதை கூறி கொண்டிருக்க மாடீர்களே ..................உங்கள் எண்ணங்களையும் எதிர்பார்த்து ............

   Delete
 36. Dear editor sir,
  Is it possible to increase the number of comments per page (currently it seems 200 comments/page) as most of our friends (especially new comers to our blog) are facing problem by the 'load more' option that appears at bottom of the page when total number of comments crosses more than 200.
  please, try to fix it if technically possible.

  ReplyDelete
 37. ஆசிரியருக்கு,

  லக்கி லூக்கிற்கு சிறிய ஓய்வு கொடுப்பது பரவாயில்லை. ஆனால், அவரது புதிய கதைகள் இல்லையென்று ஒரேயடியாக கிடப்பில் போட்டுவிடாதீர்கள். ஆரம்ப கால மெகா ஹிட்களான 'சூப்பர் சர்க்கஸ்', 'புரட்சித் தீ (பேப்பர் மையில் டீ போட்டுக் குடிப்பதெல்லாம் மறக்கக்கூடிய சாதனைகளா சார்?)' போன்ற கதைகளை மறுபடியும் எடுத்துவிடுங்கள். லாரன்ஸ் டேவிட், இரும்புக்கை மாயாவி, டெக்ஸ் போன்ற முரட்டு நாயகர்களை எத்தனை தடவை ரீப்பிரிண்டினாலும் ஏற்றுக்கொள்ளும் நம்மக்கள்ஸ் 'லவ்லி நாயகன்' (சூஹீசூஸ் மன்றத்தால் இந்த நிமிடத்தில் பட்டம் வழங்கப்படுகிறது) கதைகளையா வேண்டாம் என்று சொல்லப்போகிறார்கள்?

  இன்னுமொரு சின்ன விண்ணப்பம்: நம்ம குண்டன் பில்லி, ஜோக்கர், விச்சு-கிச்சு போல இன்னும் சிலரை அந்தக் கதைத் தொடர்களோடு பார்க்க முடிந்தது. ரசிக்கவும் முடிந்தது. அவர்களையும் கொஞ்சம் களத்தில் இறக்கினால் என்ன?

  -Theeban (SL)

  ReplyDelete
  Replies
  1. நண்பரே,வருடத்திற்கு ஒரு cc தான் கலரில் என ஆசிரியர் கூறியுள்ளார் ,எனவே மின்னும் மரணத்திற்கு முன்னுரிமை தருவோமே,ஆசிரியர் மனம் மாறும் தருணத்தில் இதையும் முன் வைப்போம் ,தங்களது மேலான செதுக்கிய எண்ணங்களை எதிர் பார்த்து ..............

   Delete
  2. Dear Editor sir,

   NEXT YEAR KINDLY CONSIDER "MINNUM MARANAM" IN CC-SPECIAL SIR.

   Delete
  3. நன்றி ... நண்பர் பொடியன் அவர்களே...... உண்மையில் லக்கி லூக்கின் மாஸ்டர் பீஸ் என்று சொல்லத்தக்கவை சூப்பர் சர்க்கஸ் மற்றும் புரட்சித்தீ ஆகும்......இரண்டையும் ஒரே இதழாக காமிக்ஸ் கிளாசிக்கில் வெளியிட்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்......எடி சார் .... நோட் பண்ணுங்க.......

   Delete
 38. 80 ya vanthaalum paaatikku support pannunga guys enru meendum meendum kaettukiren! Pesaama paatikku sangam aarambikkalaama!

  ReplyDelete
 39. நண்பர்கள் கூறுவது போல மூன்றாம் கதை சான்சே இல்லை,அந்த காலகட்டத்தை கண் முன்னே நிறுத்தியுள்ளது,சிறப்பான கதைக்கு ,விறுவிறுப்பான கதைக்கு ஹீரோயிசம் தேவை இல்லை என்பது எவளவு பெரிய உண்மை .முன்பே வந்துள்ள மாந்த்ரீகனின் கதை என இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .............அதில் சித்திரங்கள் பிரதானம் ,இதில் கதை ....................வாசகர் கடிதம்,மற்றும் சிங்கத்தின் சிறு வலை என்னதான் நெட்டில் பார்த்தாலும் புத்தகத்தில் படிக்கும் சுகமே தனிதான் ..........மேலும் நெவெர் பிஃபோர் ஸ்பெசல் விளம்பரங்களை அதே போல மாற்றி வெளியிடும் செயல் சூப்பர் ,மீண்டும் அடுத்த வெளியீடுகளிலும் தொடரட்டும் .ஆக மொத்தம் அடுத்த அற்புதமான விருந்து இனிக்க ,மணக்க ................

  அடுத்த வெளியீடு ஒரு வாரம் முன்பே .........ஆஹா

  சார் ஒரு சிறிய யோசனை தயக்கத்துடன் உங்களுக்கு எது சரி என படுகிறதோ அதனையே செயல் படுத்துங்கள்.அட்டை படம் நெட்டில் பார்த்து மீண்டும் பார்க்கும் பொது அலுப்பதாய் தோன்றுகிறது ,ஆகவே முன்பே வெளியிடுவதை யோசிக்கவும்..............

  ReplyDelete
 40. அடுத்த வருட காமிக்ஸ் கிளாசிக்கில் கார்சனின் கடந்த காலம் மின்னும் மரணம் , இடம் பெறுமா?
  தங்களது அடுத்த பதிவை எதிர்பார்த்து ......

  ReplyDelete
  Replies
  1. அது நண்பர்களின் கோசங்களில் இருக்கிறது நண்பரே,எனது எண்ணமும் அதுதான் ,கண்டிப்பாக 2013 ன் நடுவில் எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்,முன்னால் வந்தால் இன்னும் சந்தோசமே ,அதரவு தாருங்கள் நண்பர்களே...................

   Delete
 41. தலைவரே.

  பிரின்ஸ் கதைகளின் பக்கங்கள் மேல் கீழ் வாக்கில் இழுக்கப்பட்டிருக்கிறது, பெரிதாக எதுவும் தெரியவில்லை ஆனால் வித்தாயசத்தை உணர முடிந்தது.. மேலும் இப்பக்கங்களை பிரெஞ்சுப் புத்தக ஸ்கான்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நன்றாக தெரிகிறது, த வா கு வில் இருந்தது போலவே.

  தயவு கூர்ந்து இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்..

  ReplyDelete
  Replies
  1. தேவாரம் : தலை வாங்கிக் குரங்கில் - புதிய (பெரிய) காகித சைசிற்கு ஏற்றவாறு சித்திரங்களை உயர வாக்கில் மட்டும் பெரிது படுத்திட முயன்ற போது நேர்ந்திட்டது அந்த நீளும் effect !

   இப்போதைய பிரின்ஸ் கதையினில் அவ்விதம் இருந்திட வாய்ப்பே இல்லை ! பதிப்பகத்தினர் வழங்கிடும் ஒரிஜினல் Digital files களிலிருந்து சரியான proportion-ல் நேரடியாக அச்சிடுகிறோம். So வீம்புக்கு நாங்களே ஒரு நீளும் effect கொடுத்திட நினைத்தாலும் அது துளியும் சாத்தியமில்லை !

   நான்கு தனித்தனி வண்ணங்கள் இம்மியும் பிசகாமல் ஒன்றன் மேல் ஒன்று அமர்ந்திட்டாக வேண்டும் - அழகான அச்சு சாத்தியமாவதற்கு. இந்த நீட்டல் ; சுருக்கல் சங்கதியினை அதில் செய்திட நாங்கள் முயன்றால் பிரின்ஸ் & குழுவினர் தலா 2 அல்லது 3 கண்கள் ; புருவங்கள் என்று காட்சியளித்திருப்பார்கள் ! நிச்சயம் தவறான observation.

   Delete
  2. படிக்க ஆரம்பித்ததும் மிக சிறிதாக தோன்றிய சந்தேகம்.குறிப்பு:: "மிக சிறிதாக" . அப்படி இருக்கலாமோ என்று தோன்றிய சந்தேகம் இணையத்தில் இருக்கும் ச்கான்களை டவுன்லோட் செய்து ஒப்பிட்டு பார்க்க வைத்தது..

   அப்படி பார்க்கும் போது நீள வாக்கில் இழுக்கப்பட்டது நன்றாக தெரிகிறது.. இதை நீங்கள் இல்லை என்று மறுப்பதற்கு முன்பு இந்த லிங்க்கை வைத்து சரி பார்க்கவும்..

   பின் குறிப்பு எனது observation தவறாக இருக்கலாம், ஆனால் லிங்கில் உள்ள ஸ்கான்கள் தவறாக இருக்க வாய்புகள் மிக குறைவு இருப்பினும் ஒரு முறை உங்களிடத்தில் உள்ள இமேஜ்களை கம்பேர் செய்யவும்..

   https://rapidshare.com/files/3903894109/Bernard_Prince_4.zip

   Delete
  3. 1% சாத்தியம் கூட இல்லாத விஷயம். Technically impossible too..

   Delete
  4. இதை மேலும் அழுத்தமாக கூற இந்த இரண்டு லின்குகளையும் இமேஜ்களை பார்க்கவும், இடப்பக்கம் மற்றும் மேல உள்ள ருலர் தமிழுக்கும் ப்ரேஞ்சுக்கும் உள்ள வித்யாசத்தை காட்டுகிறது....

   இத்தவறை சுட்டிக்காட்டும் போது நான் ஜானி கதையை படிக்கவில்லை பிறகு அதிலும் அதே கதை தான் என்பது தெரிகிறது.. முகங்கள் இழுத்திருப்பதை இப்போது நன்றாக உணர முடிகிறதா???

   http://img337.imageshack.us/img337/5923/poisonvertvstamilcompar.jpg

   http://img545.imageshack.us/img545/5662/richochet.jpg

   Delete
  5. தேவாரம் : நீங்கள் இணையதளத்தில் பார்த்திடுவது படைப்பாளிகளின் ஒரிஜினல்கள் அல்ல...உயர்தர ஸ்கான்கள் மட்டுமே. அவற்றை மூலமாகக் கருதி,அவற்றோடு நமது பதிப்புகளை ஒப்பிடுவது - பின்னே இருந்து முன்னே போவது போல். Rapidshare-ல் இருக்கும் ஸ்கான்கள் தான் சரியானவை என்று உங்களை நம்பிடச் செய்வது எதுவோ ?

   Moreover உங்களின் comparison chart -ல் உள்ளது போல கிட்டத்தட்ட 1 இன்ச் நீளத்தை நாங்களாக நீட்டிப்பதென்றால் - நான்கு வண்ண அச்சில் களேபரம் ஆகிப் போகும் ! ஒரு மில்லிமீட்டர் வேறுபாடு வந்திட்டாலே அந்தத் தாளை பார்க்க சகிக்காது ; இதில் இத்தனை பெரிய நீட்டிப்பை செய்தால் அச்சுப் பணி கந்தலாகிப் போகும்.

   Delete
  6. தலைவரே!! நீங்கள் சொல்வதும் சரிதான் இரண்டு ச்கான்களை செய்தது வெவ்வேறு ஆட்களாக இருந்தாலும் ஒரே ஆளாக இருந்தாலும் ஸ்கான்கள் வேண்டுமென்றே தட்டையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.. அதே போல் என் கண்களுக்கும் மட்டும் தமிழில் உள்ளது நீளமாக தெரிந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது.. யாரும் அதை உணராததில் இருந்தே அது தெரிகிறது.. தொந்தரவுகளுக்கு மன்னிக்கவும்...

   Delete
  7. தேவாரம் : நீளமும் அகலமும் ஒரு சேர ;ஒரே proportion-ல் செய்யப்படாத எந்த ஒரு சைஸ் மாற்றமும் நிச்சயம் கண்களை உறுத்திடும் ! ஒரு சிறு விகாரம் சித்திரங்களில் தெரிந்திடுவது தவிர்க்க இயலாது போய்விடும் !

   எப்போதுமே இங்கு வைக்கப்படும் நிறை-குறை சுட்டிக்காட்டல்கள் நமது பயணத்தின் இன்றியமையா வழித்துணைகள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் கிடையாது. So மன்னிப்பெல்லாம் கோரிட துளியும் அவசியமில்லை ! And இவை தொந்தரவுகளும் அல்லவே !

   Delete
 42. டியர் எடி ,,,,,,,,,,,,,,, கருப்பு கலரு சிங்குச்சா,,,,,,,,,,,,,,,, இது நம்ம டெக்ஸ் க்கு,,,,,,,,,,,,,,,, பச்சை கலரு சிங்குச்சா ,,,,,,,,,, பச்சைல கலக்குன,,,,,,,,,,,,,, நம்ப வின்னிங் நாயகன் ,,,,,,,,,,,,, கடலின் நாயகன் ,,,,,,,,,,, பிரின்ஸ் ,,,,,,,,,,,,,, வெள்ளை கலரு சிங்குச்சா ,,,,,,,,,,,,, பனியில் கலக்கின ,,,,,,,,,, நம்ப jhony ,,,,,,,,,,,,,,,,,,,, சீக்கிரமே ,,,,,,, சிவப்பு கலரு சிங்குச்சா ,,,,,,,,,,,,,, சிகப்பில கலகபோற,,,,,,,,,,, நம்ப tiger க்கு ,,,,,,,,,,,,,,,,, சூஹீசூஸ்( என்ன பேர் இது ,,,,,,,,,,, எங்க ஊர்ல காக்கா விரட்டறத்துக்கு ,,,,,,,,,,,இப்படித்தான்,,,,,,,,,,,,, கத்துவோம் ,,,,,,,,,,,,, ஹி ஹி ,,,,,,,,,,,,,,,,,,),,,,,,,,,,,, சிகப்பின் நாயகன் tiger க்கு ஓங்கி குரல் கொடுப்போம் _CTAS (CAP tiger அடிபொடிகள் சங்கம் ),,,,,,,,, சூஹீசூஸ்,,,,,,,,,, பச்சா பசங்க எல்லாம் கொஞ்சம் ஓரமா போய் உச்சா போங்க ,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,, டியர் எடி ,,,,,,,,,,,, நாங்க எல்லாம் ஹட்ச் dog மாதிரி ,,,,,,,,,,, where ever u go we follows ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இன்னும் தலையண சைஸ் ல டெக்ஸ் கதைய போடுங்க ( அட யாருப்பா அது ,,,,,,,,,,, ஜோரா கை தட்டுறது ,,,,,,,,,,, அட நம்ப பாண்டிச்சேரி தம்பியா,,,,,,,,,,,,,,,, ),,,,,,,,,,,, நாங்க படிச்சு கிட்டே இருக்கோம் ,,,,,,,,,,,, நிஜ உலகம் மோசமாக அச்சுறுத்துகிறது ,,,,,,,,,,,,,,,இந்த காமிக்ஸ் கற்பனை உலகத்தேலேயே ,,,,,,,,,,,,,, இருந்து விட மாட்டோமா,,,,,,,,,,, என்று மனம் ஏங்குகிறது ,,,,,,,,,,,,,,,,,, இன்னும் jhony படிக்கல ,,,,,,,,,,,, kfc சிக்கன் & சண்டே க்கு waiting ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, டேக் கேர் guys ,,,,,,,,,,,,,,,,,,,,

  ReplyDelete
  Replies
  1. பாருங்க லூசுதம்பி உங்க ஊர்ல காக்கா விரட்டக்கூட உதவிக்கு சூஹீசூஸ் தான் வரவேண்டி இருக்கு.... கொஞ்சம் ஓரமா தள்ளிக்கிடுங்க இல்ல நனைஞ்சிடுவீங்க..... மனுஷன் சாப்பிடுவானா KFC ல.... என்சாய் த மீல்.... மாத்திரைகளை மறந்திடாதீங்க....

   Delete
  2. லூசு பையன்: நீங்க ஏங்க இப்படி டைப் அடிகிரிங்க.. ,,,,,,, ? ஏதாவது வேண்டுதலா? இல்லை...?

   Delete
 43. ஹாய் நானும் இணையலாமா ?

  ReplyDelete
  Replies
  1. அண்ணன் பள்ளிபாளையம் ஆடிட்டர் ராஜா வந்துவிட்டார்.பராக்.பராக்.கோயமுத்தூர் ஸ்டீல் க்ளா உஷார்.உஷார்.(சாத்தானின் மறுபெயர் சகுனி.ஹிஹி).

   Delete
 44. //('டெக்ஸ் கலரில் கிடையாதா ?'என்ற கேள்வி நிச்சயம் எழுந்திடுமென்று அறிவேன் ; டெக்ஸ் இதழ்களின் மறுவரவு துவங்கிடும் சமயத்தில் அதனை அலசிடுவோம் !)//

  நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்து விடும்

  கிடைக்கும் என்பார் கிடைக்காது ,கிடைக்காதென்பார் கிடைத்து விடும்........................

  ReplyDelete
 45. 1988 ஆம் வருடம், பாக்கெட் சைஸில் வெளிவந்தது “டெக்ஸ்வில்லரின் பழிவாங்கும் பாவை”. அந்த இதழில் மிகவும் தரமான வெள்ளைத்தாள்கள் உபயோகப்படுத்தப்பட்டன. அளவில் சிறியதாக இருந்தாலும் தாளின் தரத்தினால் மிகவும் அற்புதமான சித்திரமாக இருந்தது.

  எந்தக் கதையைப் பிரசுரிப்பது என்ற குழப்பம் என்று அறிந்து மகிழ்ந்தேன்.. :).

  ReplyDelete
 46. Dear Editor sir,

  NEXT YEAR KINDLY CONSIDER "MINNUM MARANAM" IN CC-SPECIAL SIR.

  ReplyDelete
 47. முன்பு போல கதைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மினி , ஜூனியர் , திகில் இதழ்களை கொண்டு வரலாமே எடிட்டர் சார் ?

  ReplyDelete
  Replies
  1. நண்பரே,மீண்டும் நல்ல கதைகள் அனைத்தையும் விட்டு விட்டு பின்னர் பழைய கதை போல,காமிக்ஸ் வர பல நாட்கள் காத்திருக்க வேண்டாமே.மாதம் தோறும் இப்போது போல அனைத்து கதைகளுமே,சூப்பர் எனும் நிலை தொடரட்டுமே.சிறந்த கதைகளை மட்டும் தேர்வு செய்ய இதுவே உதவியாக இருக்கும் என்பது எனது எண்ணம் .பொன் முட்டை இடும் வாத்தை ஒரே பொழுதில் அறுத்து பார்க்க வேண்டாமே.........................மாதம் தவறாமல் தங்க முட்டை கிடைத்தால் போதாதா நண்பரே ........................

   Delete
 48. Dear editor,
  2013 வருடத்திற்குரிய நமது வெளியீடுகள் பற்றிய அறிவிப்புகள் தயாராகிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில், எனக்குத் தோன்றிய ஒரு விஷயத்தை உங்கள் பரிசீலணைக்காக வைக்கிறேன்.

  ஒருவாரம் முன்பு ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவின்போது நமது ஸ்டால்களில் நான் கவனித்தவை::

  1. Lion new look special - அனைத்துத் தரப்பினரையும் (குறிப்பாக இளம் வாசகர்களை) கவர்ந்து, விற்பனையிலும் தூள்கிளப்பியது. காரணம்,
  * அட்டகாசமான அட்டைப்படத் தரம்.
  * இளம் வாசகர்களை சுண்டியிலுக்கும் கார்ட்டூன் பாணியிலான நமது லக்கிலூக்.

  2. என் பெயர் லார்கோ - அதிகம் கவரவில்லை. காரணம்,
  * வண்ணங்கள் குறைந்த, சோம்பலான அட்டைப்படம்.
  * அதிகம் அறிமுகமில்லாத லார்கோ.

  இனிவரும் காலங்களில் லார்கோ கலக்கப்போகிறார் என்றாலும், அட்டைப் படத்தில் நீங்கள் செய்திருந்ததைப் போல பரிட்சார்த்த முயற்சிகள் வேண்டாம் என்று தோன்றுகிறது.
  இளம் வாசகர்களைக் கவர அவ்வப்போது நம் கார்ட்டூன் கதாநாயகர்களான லக்கிலூக், சிக்பில் குழுவினருக்கும் சற்றே அதிக வாய்ப்பளிக்கலாமே!

  இதில் நண்பர்களின் கருத்துக்களை அறியவும் ஆவலாய் இருக்கிறேன்.

  ReplyDelete
 49. டெக்ஸ் மறுபிரவேசமே ஓராண்டு் கழித்து தானா?

  ReplyDelete