Powered By Blogger

Thursday, January 26, 2012

ஒரு விடுமுறை நாள் படலம்..!


நண்பர்களே,

குடியரசு தின விடுமுறையில் , "மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்க்கும் ஆராய்ச்சிப் படலம்" நடந்தேறிடும் சமயம் எங்கெங்கோ என் நினைவுகள் ஓடின.....! நமது காமிக்ஸ் பற்றி...பழைய வெளியீடுகள் பற்றி .. பழைய கதைதொடர்கள் பற்றி...random thoughts ... !

பழசை அசை போடுவதிலும் ஒரு விதமான குஷி உண்டு தானே..?!

'அந்த சிந்தனைகளையே ; எண்ணங்களையே ஒரு பதிவாக்கினால் என்ன ?' என்று தோன்றியது..! அதன் பலனே வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த MPVPAP -பாகம் 1  !

நிறைய காமிக்ஸ் இதழ்கள்..'ஹிட்" கதைகள்...பலதரப்பட்ட ரசனைகளில் காமிக்ஸ்கள் என்று நாம் பயணித்துள்ளோம் .! But 1990 களின் மத்தியில் "திகில் லைப்ரரி" என்ற பெயரில் ஒரு விதமான 'பாதி நாவல் - பாதி காமிக்ஸ்' முயற்சி ஒன்றினை நாம் மேற்கொண்டது எத்தனை பேருக்கு நினைவுள்ளதோ தெரியாது...! ஆனால் இன்னமும் 'பளிச் ' என்று என் நினைவில் நிழலாடும் இதழ்களில் அதுவும் ஒன்று என்று சொல்வேன் !  இதோ...திகில் லைப்ரரி- இதழ் 2 பற்றிய ஒரு மினி flashback !



ஒரு வட்டத்துக்குள் சிக்கிடாமல் கொஞ்சமாச்சும் காமிக்ஸ் தாண்டியதொரு ரசனைக்குள் கால் பதித்திட வேண்டுமென எனக்குள்ளே ஒரு காய்ச்சல் இருந்திட்ட சமயம் அது...! தமிழ் புத்தக மார்க்கெட்டில் நிறைய நாவல்கள் வந்து கொண்டிருந்தன அப்போது..! பத்தோடு பதினொன்றாக இல்லாமல், ஆங்கிலத்தில் வந்திட்ட பிரபல crime நாவல் தொடர்களை தமிழில் செய்திட்டால் என்னவென்று நினைத்தேன்...!



சின்ன வயதில் பிரபல எழுத்தாளரான Erle Stanley Gardner -ன் Perry Mason  கதைகளின் பெரிய ரசிகன் நான்...! இந்தக் கதைவரிசையில் ஏராளமான த்ரில்லர்கள் உண்டென்பதால் இவற்றிற்கான தமிழ் உரிமைகளைப் பெற்றிட முயற்சி செய்தேன். அமெரிக்காவில் உள்ள Random House என்ற நிறுவனத்தில் இதற்கான rights இருந்திட்டதால் அவர்களோடு மல்லுக்கட்டி உரிமைகளை வாங்கிட்டேன். சர்வதேச அரங்கில் வெற்றி பெற்றதொரு நாவல் என்பதால் அவர்கள் கேட்ட ராயல்டி தொகை ரொம்பவே அதிகம் ; so கொஞ்சம் முன்ஜாக்கிரதையாக ஒரே ஒரு கதைக்கு மட்டுமே பணம் அனுப்பி இருந்தேன். அந்தக் கதை தான் திகில் லைப்ரரி - Volume 1 ! எக்கச்சக்கமாய் மண்டையை கசக்கி, முடிந்தளவு சுவாரஸ்யமாக மொழிநடையை அமைத்து, இடையிடையே கொஞ்சம் சித்திரங்களையும் சேர்த்திட்டு ஒரு சுபயோக சுபதினத்தில் இதழினை வெளியிட்டோம். "சொதப்பல்" என்று சொல்ல முடியாது...பட் "சூப்பர்" என்றும் சொல்ல இயலா ஒரு விதமான mild response .... !

'ஒரு முழு நீள நாவல் ' என்ற முயற்சி ஆரம்பத்திலேயே தள்ளாட ... இருக்கவே இருக்கு நமது காமிக்ஸ் கலவை என்று இதழ் # 2 பணியினைத் தொடங்கினேன்...இம்முறை எக்கச்சக்கமாய் பணம் அனுப்பி இன்னொரு அயல்நாட்டு உரிமையினைப் பெறும் ஜோலியே வேண்டாம் என்ற முடிவில், evergreen detective ஷெர்லோக் ஹோம்ஸ் நாவல்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து தமிழில் மொழிமாற்றம் செய்திட்டோம்.



"The Adventure of The Lion 's Mane " என்ற கதை அது ! கடலோரம் மர்மமாய், கோரமாய் மரணம் நிகழ்ந்திட ஹோம்ஸ் துப்பறிய முனைகிறார். வழக்கமாய் நாம் சந்திக்கும் ஒரு வில்லன் இந்தக் கதையில் கிடையாது...! கடலில் வசிக்கும் ஒரு விஷ ஜந்து தான் கொலையாளி ! 'சியானியா' என்ற இந்த கொலைகார ஜந்துவை ஹோம்ஸ் காலி செய்வதோடு இந்த குறு நாவலும் நிறைவு பெறுகிறது.

காமிக்ஸ் ஊறுகாய் சேர்த்திட 'புயல் ராத்திரி" என்று ஒரு திகில் சிறுகதை இந்த இதழின் முதல் பக்கங்களில் வந்திட்டது. எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று ! ஒரு தந்தையும் இளம் மகனும் பனியில் மீன்பிடிக்க ஒரு இரவில் செல்கின்றனர்...போகும் வழியில் , இருளில் ஒரு முதியவர் தன படகைத் தேடி செல்வதாக புலம்பிக் கொண்டே போவதை சிறுவன் கவனிக்கிறான். அவருக்கு உதவியாக இருக்கட்டுமே என்று பரிவோடு தங்கள் விளக்கை சிறுவன் அந்தக் கிழவரிடம் தந்து விட்டுப் போகிறான். இரவில், திடீரென புயல் வீச, தந்தையும் மகனும் ஒரு பனித் திட்டில் சிக்கிக் கொள்கின்றனர் ! மரணம் நிச்சயம் என்று கதிகலங்கிக் கிடக்கும் சமயத்தில் கடலோரமிருந்ததொரு பாழடைந்த கலங்கரை விளக்கிலிருந்து அதே முதியவர் வந்து ஒத்தாசை செய்கிறார் ! இரவில், குளிரில் சிறுவனுக்கு ஜுரம் தீயாய் அடிக்க பையனை அந்தப் புயலிலும் முதியவர் படகில் ஏற்றிச் சென்று கரை சேர்த்து காப்பாற்றுகிறார். விடியும் பொது சிறுவனின் தந்தை அந்த முதியவர் யாரென்று விசாரித்திட, அவர் ௫௦ ஆண்டுகள் முன்னே அந்த லைட் ஹவுசில் பணி புரிந்து, புயலில் மாண்டு போனவர் என்பது புலப்படுகிறது !  கருணை கொண்ட சிறுவனை காப்பாற்றிட வந்ததொரு ஆவியா ?? யார் அவர் ? என்ற கேள்வியோடு முடியும் touching story இது !



கறுப்புக் கிழவியின் "என்றும் நடிகன்" + "காலக் கடலில் ஒரு பயணம்" என்று 2 அற்புதமான திகில் த்ரில்லர்கள் காமிக்ஸ் கோட்டாவை நிறைவு செய்கின்றன..!

அப்புறமாக - திகில் நிஜ சம்பவங்களை விவரிக்கும் இரண்டு கட்டுரைகளும் இந்த இதழில் இடம் பெற்றிருந்தன..! "ஒரு ஆவி அறிக்கை" என்ற பெயரில், 1882 -ல் ஒரு வீட்டில் நடந்த அமானுஷ்ய சம்பவங்களின் துல்லியமான பதிவைப் பற்றியும் ; "கேமரா பொய் சொல்லுமா ? " என்றதொரு கட்டுரையில் உலகில் ஆங்காங்கே எடுக்கப்பட்ட சில "ஆவி" ரூபங்களின் புகைப்படங்கள் பற்றியும் எழுதி இருந்தேன். இன்டர்நெட் ; சுலப research என்பதெல்லாம் இல்லாத அந்த சமயம் நிறைய ஆவி ; அமானுஷ்யம் பற்றிய புத்தகங்களை மும்முரமாய்ப் படித்து எழுதிய சமாச்சாரங்கள் அவை !

மொத்தத்தில் 'பிரமாதம்'  என்று சொல்லும் ரகத்தில் இதழ் அமையவில்லை என்ற போதிலும் "மோசம் இல்லை" என்றே எனக்குத் தோன்றியது..! எக்கச்சக்கமான நம்பிக்கையோடு இதழினை விற்பனைக்கு அனுப்பினோம் ... ! but - 'விற்பனை மந்தம்'  என்பதே வந்திட்ட பதில்!

 'இனி ஆணியே புடுங்க வேண்டாம்'  என்று அந்த "நாவல்" முயற்சிக்கு ஒரு சலாம் போட்டேன்! தெரிந்ததை மட்டுமே செய்தால் முதுகு தப்பிக்கும் ; இந்த உட்டலாகுடி வேலையெல்லாம் நமக்கு ஆகாது என்ற தீர்மானத்துக்கு வந்தேன்...! But  still எப்போவாச்சும் திகில் லைப்ரரி இதழ்களை எடுத்துப் பார்க்கும் போது "இன்னும் கொஞ்சம் விடாமுயற்சி செய்திருக்கலாமோ?" ன்னு தோணும்..! ஹ்ம்ம்ம் !                    

14 comments:

  1. Sir,

    அருமையான ஒரு நாஸ்டால்ஜியா பதிவு. இந்த கதைகளை பற்றி நானும் ஒருமுறை ஏராளமான ஸ்கான் மற்றும் கொஞ்சமே கொஞ்சம் விவரங்களுடன் ஒரு பதிவிட்டு இருக்கிறேன்.

    விளம்பரமாக தோன்றினாலும் இங்கே அதற்க்கான லிங்க்'ஐ அளிக்கிறேன்: திகில் லைப்ரரி - தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  2. ஏன் தீடிர்ன்னு முதல் புக்கை விடு செகண்ட் புக் பத்தி பேசறீங்களோ... எனக்கு புரியல. ஆனா முதல் புக் படிச்சா நாள் இன்னைக்கும் நியாபகம் இருக்கு. அன்னைக்கு பேய் (அட டபுள் மீனிங் இல சார்) மழை. கரண்ட் as usual இல்ல. எங்க அப்பா ஊருக்கு போய்ட்டு அன்னைக்கு சாப்பாடும் காமிக்ஸ் libraryum வாங்கிட்டு வந்தாரு. அந்த இருட்டுலையும் விடாம உக்காந்து படிச்சேன். Especially, Edgar allan poe கதை இன்னும் என்னால மறக்க முடியாத விருந்து. புகழ்ச்சிக்காக சொல்லல, really You are a good Translator sir.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இன்னொரு விளம்பரம்! இந்த S. S. கார்த்திக் நான்தான் :) (thank you Viswa for the scan ;)

    http://lh4.ggpht.com/_ymLqylrIhm4/ShXOjOS2Q4I/AAAAAAAACsA/3X273EWI1Hs/s1600-h/Thigil%20Library%20Issue%20No%202%20Dated%201st%20Sept%201993%20Letters%202%5B4%5D.jpg

    ReplyDelete
  5. கருப்புகிழவியின் கதைகள் மிகவும் பிடித்தமான ஒன்று. க்ளாசிக் காமிக்ஸ் வரிசையில் அந்த திகில் கதைகளை மறுபடியும் வெளியிடலாமே. திகில் காமிக்ஸில் வந்த பல கதைகள் மிகவும் அருமையானவை.

    ReplyDelete
  6. http://www.comicvine.com/grimms-ghost-stories/49-18838/ கருப்புகிழவியின் கதைகளில் நிறைய வந்திருப்பது போல தெரிகிறது. அனைத்து உரிமையும் தங்களிடம் இல்லையா ? :(

    ReplyDelete
  7. ஒரு கோரிக்கை.
    ஜீனியர் லயனில் வந்த கார்டூன் கேரக்டர்கள், லக்கி, சிக்&பில் கதைகளை ஒரு ஸ்பெஷலாக கொண்டுவந்திடலாமே. நெடுநாள் வாசகர்கள் பலரிடம் கூட ஜீனியர் லயனில் வந்த கதைகள் இல்லை என்றே நினைக்கிறேன். பரிசீலிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

    ReplyDelete
  8. விஜயன் சார்,
    காலச்சக்கரத்தில் எங்களையும் பின்னோக்கி அழைத்து சென்று விட்டீர்கள். மிகவும் அருமையான கட்டுரை.

    அன்புடன்,
    ராஜா

    ReplyDelete
  9. Nice attempt to revive the thihil library once again to continue it on the stream... good luck

    ReplyDelete
  10. dear sir வார்த்தைகளே வரவில்லை இந்த புக் என்கிட்ட இருக்கு மீண்டும் படிக்கணும்

    ReplyDelete
  11. திகில் காமிக்ஸ் படிச்ச காலமெல்லாம் இன்னும் நெஞ்சுக்குள்ளயே இருக்கு. நேத்து நடந்தா மாதிரி இருக்கு… எத்தனை வருஷம் ஓடிருச்சு… மறுபடியும் காமிக்ஸ் கிளாசிக்ஸ்ல போடுங்க… மறுபடியும் படிக்கணும்போல இருக்கு… ஒரு தற்கொலை கவிதை பத்தி எல்லாம் போட்டிருந்தீங்க… அது ஒரு கனாக்காலம்!

    ReplyDelete
  12. அருமை சார்... என்ன தான் புதுசு புதுசா பீட்ஸா, பர்கர்னு வந்தாலும் பழைய சோறும் பச்சை வெங்காயமும் தர்ற டேஸ்ட்டை மறக்க முடியுமா? அப்பல்லாம், ஃப்ரண்ட்ஸ் 4,5 பேர் சேர்ந்து 10 10 பைசாவா சேத்து காமிக்ஸ் வாங்கிப் படிப்போம்... மனசுக்குள்ள மழையடிக்கிற நினைவுகள் அவை..!

    ReplyDelete
  13. 13th. சிங்கத்தின் சிறு வயதில் nostalgia starts here

    ReplyDelete
  14. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. ஆனா கிட்டங்கி ரொம்பி வழியுமே என்று நீங்கள் சொல்வது எனக்கு காதில் விழுது சார்

    ReplyDelete