நண்பர்களே,,
வணக்கம். நம்பர்களுடனான நமது காதல் நித்தமும் தொடர்வதால் இந்தக் கணம் சற்றே விசேஷமாய்த் தோன்றுகிறதோ - என்னவோ ! பதிவு எண் : 100 ; மூன்றிலக்கங்களின் முதல் படி என்பதால் 99-க்கும் - 101-க்கும் இல்லாத மரியாதை இடையிலிருக்கும் திருவாளர் 100-க்கு சரளமாய்க் கிட்டுகிறது போலும் ! So இந்தப் பதிவை மாமூலானதொரு சமாச்சாரமாக்கிடாமல் 'விசேஷமாய்' ஏதேனும் அறிவிப்போடு வரச் செய்தால் தேவலையே என நண்பர்கள் ஆங்காங்கே பதிந்திருப்பதைக் கவனிக்கத் தான் செய்தேன் ! ´'விசேஷ அறிவிப்பானது ' :
வணக்கம். நம்பர்களுடனான நமது காதல் நித்தமும் தொடர்வதால் இந்தக் கணம் சற்றே விசேஷமாய்த் தோன்றுகிறதோ - என்னவோ ! பதிவு எண் : 100 ; மூன்றிலக்கங்களின் முதல் படி என்பதால் 99-க்கும் - 101-க்கும் இல்லாத மரியாதை இடையிலிருக்கும் திருவாளர் 100-க்கு சரளமாய்க் கிட்டுகிறது போலும் ! So இந்தப் பதிவை மாமூலானதொரு சமாச்சாரமாக்கிடாமல் 'விசேஷமாய்' ஏதேனும் அறிவிப்போடு வரச் செய்தால் தேவலையே என நண்பர்கள் ஆங்காங்கே பதிந்திருப்பதைக் கவனிக்கத் தான் செய்தேன் ! ´'விசேஷ அறிவிப்பானது ' :
- "மின்னும் மரணத்தின்' மறுபதிப்பு பற்றியதாகவோ ;
- லயனின் 30-வது ஆண்டுமலர் பற்றியதாகவோ ;
- அல்லது 2014-ன் வெள்ளோட்டங்கள் பற்றியதாகவோ
இருத்தல் தேவலை என்ற உங்களது mind voices எனக்குக் கேட்காமலில்லை ! ஆனால் இந்தக் கணத்திற்கு மெருகூட்டும் ஒரே காரணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, எங்கோ தொலைவில் நிற்கும் சங்கதிகளின் மீது "சும்மாக்காச்சும்" இப்போவே வெளிச்சத்தைப் பாய்ச்ச முயற்சிப்பதை விட, மிக அருகாமையில் அடுத்த சில மாதங்களுக்குள் நம்மை எதிர்கொள்ளவிருக்கும் தீபாவளியைப் பற்றிப் பேசினால் என்னவென்று தோன்றியது எனக்கு !
நிஜத்தைச் சொல்வதானால் - இப்போதெல்லாம் மாதா மாதம் ரூ.100 / ரூ.200 என்று உங்கள் பர்ஸ்களுக்கு கண்ணி வெடி வைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தீபாவளி மலர் என்று தனியாகவொரு track வேண்டாமே என்பது தான் எனது எண்ணமாக இருந்தது ! ஆனால் ஒவ்வொரு சந்திப்பின் போதும், உங்களில் நிறையப் பேர் "தீபாவளி மலர்' இல்லாமல் நமது அட்டவணையில் ஒரு கிக் இல்லையே என்று ஆதங்கப்படுவதைக் கவனிக்கத் தான் செய்தேன் ! ஏறத்தாள 30 தீபாவளிகளுக்கு முன்பை ஒரு 'அக்மார்க்' உப்புமா இரும்பு மனிதன் ஆர்ச்சியின் கதையோடு துவங்கிய நமது தீபாவளிக் காதல்கள் வயதெனும் அரணையும் மீறி, இன்னமும் ஜீவனோடிருப்பது நிஜமாய் எனக்கு ஆச்சர்யமே ! பெரிய சைஸ்கள் ; பருமனான பாக்கட் சைஸ்கள் ; பல கதைக் combos ; சிங்கள் ஷாட் sagas ; என்று நிறைய நாம் பார்த்து விட்ட போதிலும், இன்றளவும் நமது 1987 லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் -ன் வெற்றியை வேறு எந்தத் திருநாளும் நமக்குக் காட்டியதில்லை ! 532 பக்கங்கள் ; 12 கதைகள் ; பாக்கட் சைஸ் - ரூ.10/ விலையில் என்பதை இன்று அசை போடும் போது, நாற்கால்ப் பாய்ச்சலில் குதி போடும் விலைவாசிகளின் தாக்கத்தை நன்றாகவே உணர முடிகிறது ! அன்று பத்து ரூபாயில் - 25% ஏஜென்ட் கமிஷன் கொடுத்த பின்னும் சாத்தியமான தயாரிப்பு budget - இன்று நமது வண்ண அவதாரில் வெறும் 10 பக்கங்களுக்கே போதாது ! Anyways , அக்டோபர் 1987 "சிங்கத்தின் சிறுவயதில்" பகுதியினில் கூப்பிடு தொலைவில் இருப்பதால் - மலரும் நினைவுகளை அங்கே தொடர்வதே உசிதம் !
Getting back on track - இந்தாண்டு வரவிருக்கும் தீபாவளிக்கு நமது லயன்-முத்து அட்டவணையில் லார்கோவின் ஒரு ருத்ரதாண்டவம் மாத்திரமே திட்டமிடலில் இருந்தது. "ஆதலினால் அதகளம் செய்வீர்" திரைப்படமாகவும் வந்ததொரு action சரவெடி என்பதால் - அதனையும், துணைக்கு சன்ஷைன் லைப்ரரியில் மறுபதிப்பு ஒன்றையும் november-ல் தட்டி விட்டால் போதுமென்று நினைத்திருந்தேன் ! இடைச்செருகலாய் ஒரு தீபாவளி மலரைப் புதிதாய்த் திட்டமிட்டு, மீண்டுமொருமுறை இதற்கான பணம் அனுப்பச் சொல்லி உங்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதிலும் எனக்கு உடன்பாடில்லை ! தவிரவும் நமது front office பணியாளர்களுக்கு அவ்வப்போது நான் தந்து வரும் தலைநோவை இன்னமும் அதிகரித்திட வேண்டாமே என்ற தயாள சிந்தையும் பின்னணியில் உண்டு ! லயன்-முத்து சந்தாத் தொகை ரூ.1320 என்று சொல்லி வைத்தேன் முதலில் ; அப்புறமாய் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பிரதிகளுக்கென ரூ.540 வரும், அதனையும் சந்தாக்களில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றேன் ; தொடர்ந்த மாதங்களில் - காமிக்ஸ் க்ளாசிக்ஸ் என்பன இனி சன்ஷைன் லைப்ரரி என்ற லேபிலோடு வருமென்று தெரியப்படுத்தினேன் ; அப்புறமாக +6 உதயம் - ரூ.375 சந்தாவோடு என்றும் சொல்லி வைத்தேன் ! நமது காமிக்ஸ் 'கலாச்சாரங்களுக்கோ' ; செல்லும் பாதையில் ஒரு நூறு புது சிந்தனைகளுக்கு இடமளிக்கும் பாங்குகளுக்கோ - நம்மவர்கள் பரிச்சயமற்றவர்கள் என்பதால் ஒவ்வொரு முறையும், ஏதாவதொரு மாற்றத்தையும் அவர்களுக்குத் தெரிவிக்கும் சமயங்களில் அவர்களது மிரண்ட விழிகள் எனக்குள் சின்னதாய் ஒரு சங்கடத்தை உருவாக்கும் ! -இந்நிலையில், 'தீபாவளி மலர்' ; இதற்கென புது புக்கிங் ; புது பண வரவுகள் என்று சொல்லி அவர்களிடத்தில் - 'இவரென்ன பாஸா ? இல்லே லூசா ?" என்ற சந்தேகத்தை ஏற்படுத்திட வேண்டாமே என்ற சிந்தனை ஓடியதால் - ஆபத்பாந்தவனாய் உதவிக்கு வந்தது நமது +6 !
எந்தவொரு அழுத்தமான திட்டமிடலும் இல்லாது அவ்வப்போது மனதில் தோன்றுவதைச் செயலாக்கிட ஒரு மார்க்கமிருந்தால் தேவலை என்பதே +6-ன் பின்னணி என்பதால் இந்தத் திடீர் தீபாவளி மலர் ஆவலைப் பூர்த்தி செய்யக் கச்சிதமாய் அது suit ஆகுமென்று புரிந்தது ! எனினும் இந்தாண்டு இன்னமும் எஞ்சியுள்ள வெளியீடுகளின் எண்ணிக்கை கணிசமாகவே பாக்கியுள்ளன எனும் போது ரொம்ப flashy ஆகவோ ; ஒரு மெகா இதழாகவோ திட்டமிட வாய்ப்புகளில்லை என்பதையும் நினைவில் இருத்திடும் அவசியமும் முன்னின்றது ! பெரிதாய் - விரிவாய் ஒரு canvas இன்றி 'சிக்' கென ஒரு சித்திரமே சாத்தியம் என்ற புரிதலோடு சிந்திக்கலானேன் ! ஆங்காங்கே, அவ்வப்போது நண்பர்கள் தெரிவிக்கும் சின்னச் சின்ன ஆசைகளுக்கு on the spot பைசல் செய்வதைக் கடைபிடிக்காது - ' உரிய சமயம் வரட்டுமே' என்ற பொறுமை காப்பதன் மூலம், உங்களில் பலரின் பொறுமைகளுக்கும் சோதனைகள் வைப்பதை நான் அறியாதில்லை ! எனினும், அந்த நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாய் கிடப்பிற்கு அனுப்பப்படுவதில்லை ! கொஞ்சகாலமாகவே நமது டெக்ஸ் வில்லரின் "அந்த" சைஸ் இதழொன்று வேண்டுமென்ற கோரிக்கை எழுவதும் ; நான் அதனைக் கண்டும், காணாதும் விடுவதும் நீங்கள் மறந்திருப்பினும், நான் மறக்கவில்லை ! So - இந்தாண்டு "ரேஞ்சரோடு தீபாவளி' கொண்டாடத் தயாராகுங்கள் ! உங்கள் அபிமான டெக்ஸ் & கோ. ஒரு 456 பக்க black & white இதழில்,2 முழு நீள சாகசங்களோடு ரூ.100/ விலையில் அதிரடி செய்யக் காத்திருக்கின்றனர் ! "நீதியின் நிழலில்" + "மரண தேசம் மெக்சிகோ" இரு மாறுபட்ட கதைக் களங்கள் + ஓவியப் பாணிகளும் கூட ! சமீபமாய் சற்றே 'அமானுஷ்ய' ரூட்டில் சவாரி செய்து வந்து டெக்ஸ் & டீம் இம்முறை மோதுவதோ 2 கால் எதிரிகளோடு மாத்திரமே ! இந்த இதழின் highlight ஆக டெக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு pleasant surprise -ம் காத்துள்ளது ! அது என்னவாக இருக்குமென்பதை உங்கள் யூகங்களுக்கே விட்டு விடுவோமே - இப்போதைக்கு ! ('இந்தாண்டு டெக்ஸ் சற்றே ஓவர்டோஸ் ' என்ற mind voice ஒலித்திடும் நண்பர்களுக்கு : 2014-ல் இரவுக் கழுகார் 2 அல்லது 3 கதைகளில் மாத்திரமே தலை காட்டுவார் ! )
தீபாவளியை black & white -ல் கழிய அனுமதிக்க வேண்டாமே என்ற அவாவில், நவம்பரில் நமது +6-ன் இன்னொரு இதழையும் வண்ணத்தில் கொணர உத்தேசித்துள்ளேன் ! புதியதொரு அறிமுகம் என்பதால் - அதற்கான ஏற்பாடுகளை முழுமைப்படுத்தி விட்டு 'start music ' சொல்லலாமே ?! So தொடரும் வாரங்களில் அதைப் பற்றியதொரு பதிவும், அறிவிப்பும் காத்துள்ளது !
"3 மாதங்களுக்குப் பின் வரும் தீபாவளி மலர் அறிவிப்பெல்லாம் ஒ.கே. ; இந்த மாதம் வரவேண்டிய ALL NEW ஸ்பெஷல் என்னாச்சு ?" என்ற உங்களின் logical கேள்வி எழுவதை உணர்கிறேன் ! திடீர் பயணமாய் நான் ஸ்பெயின் நாட்டிற்குக் கிளம்பிட வேண்டிப் போனதால் - A.N.S அச்சுப் பணிகளைத் துவக்கி விட்டு பெட்டியைத் தூக்கி விட்டேன் ! இந்தப் பக்கங்களை நான் எனது டயரியில் எழுதுவது கூட பார்சிலோனா செல்லும் பிசாசு வேக ரயிலில் - அருகாமையிலிருக்கும் ஒரு முதியவரின் கேள்விக்குறியான பார்வையினில் அமர்ந்தபடியே ! தொடர்ச்சியாய் பணிகளைப் பூர்த்தி செய்து இன்று (8-ஜூலை) சந்தாப் பிரதிகள் அனைத்தையும் அனுப்பி விட்டார்களென மைதீன் update செய்துள்ளான் ; so நாளை உங்களது கூரியர் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டிடலாமே ?! இதோ - A.N.S -ன் அட்டைப்படம் !
வழக்கம் போலவே, இங்கு தெரியும் வர்ணங்களை விட அழுத்தமாய் அட்டைப்பட அச்சில் தெரிந்திடும் ; குறிப்பாக பின்னணிச் சிகப்பில் !பின்னட்டையில் 4 கதைகளின் preview -ம் இருந்தால் தேவலையே என தோன்றியதால் - சின்னச் சின்ன சித்திரங்களைத் தவிர்த்திட இயலவில்லை ! முன்னட்டை ஒரிஜினல் படைப்பே - பின்புலங்களிலும், வண்ணக் கலவைகளிலும் மாற்றங்களோடு ! இம்முறை மறவாமல் அட்டையில் நமது birthday boy -க்கு இடமளித்து விட்டோம் !
அப்புறம் நமது "KAUN BANEGA TRANSLATOR - சீசன் 2" போட்டியின் வெற்றியாளரை அறிவிக்கும் வேளையும் இதுவன்றோ ?! (ஏதோ ஒரு மாமாங்கத்தில் அது நடந்தது போன்ற பிரம்மை எனக்கு மாத்திரம் தானா ?) 36 நண்பர்கள் இதில் பங்கேற்க ஆவல் தெரிவித்திருந்தனர் ; ஆனால் மொழியாக்கம் செய்து அனுப்பியோரின் எண்ணிக்கை குறைவே ! நம்பர்களில் குறைவிருந்த போதிலும், நண்பர்களின் முயற்சிகளின் தரத்தில் குறை இல்லை ! வந்திருந்த ஆக்கங்களுக்குள் சிறந்ததாய் எனக்குப் பட்டது நண்பர் கார்த்திக் சோமலிங்காவின் எழுத்துக்களே ! சென்ற முறைத் தவற விட்ட முதலிடத்தை இம்முறை 'லபக்'கிய கார்த்திக்கிற்கு காங்க்ரத்ஸ் ! இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது அன்றைய சுமார் மூஞ்சி குமார் என்ற ; இன்றைய சூப்பர் விஜயும் தான் ! Congrats too vijay ! கார்த்திக்கின் மொழியாக்கத்தை ANS -ல் பார்த்திட நாளை சாத்தியமாகும் என்பதால், இரண்டாமிடத்து (விஜயின்) translation -ஐ புதனன்று நான் ஊருக்குத் திரும்பியதும் ஏதாயினும் ஒரு தளத்தில் upload செய்து அதற்கான link இங்கு தர ஏற்பாடு செய்கிறேன் ! சென்ற போட்டிக்கான மதியில்லா மந்திரியின் சிறு கதைப் பாணி ஒரு விதமென்றால், இம்முறை வழங்கப்பட்டிருந்த Green Manor முற்றிலும் மாறுபட்ட genre ! போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே அழகான முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தது ரசிக்கச் செய்தது ! A pat on the back guys ! Great job all...!
ANS -ன் பெரும்பான்மைப் பக்கங்களை ஆக்ரமிக்கும் "பிரளயத்தின் பிள்ளைகள்" கிராபிக் நாவலுக்கு உங்களின் response எவ்விதமென்று அறிந்திட நிஜமாய் ஆவலாய் உள்ளேன் ! வழக்கமான கதை பாணியோ ; இரண்டாம் உலக யுத்தத்தின் கோரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, நமது அனுதாபங்களைச் சம்பாதிக்கும் முயற்சியோ அல்ல இது ! ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் வாழ்க்கைப் பயணத்தில் யுத்தமெனும் பிரளயம் கொண்டு வரும் மாற்றங்களை ஒரு பயணமாய் சொல்லும் இந்தப் பக்கங்களுக்கு நாம் போடப் போகும் மார்க்குகள் என்ன ? Fingers crossed !
ரயில் பயணத்தின் போது தலைக்குள் ஓடிய சிந்தனைகளுள் -"அவ்வப்போது நான் காணாமல் போகிடும் தருணங்களில் இந்தப் பக்கத்தில் ஒரு சோம்பல் நிலவாதிருக்க என்ன செய்யலாம் ? " என்ற எண்ணமும் சேர்த்தி ! நான் 'லீவு போட்டிடும்' வேளைகளில் மாத்திரம் உங்களில் ஒவ்வொருவராய் turns எடுத்துக் கொண்டு இங்கு எழுதினால் எவ்விதமிருக்கும் ? காமிக்ஸ் பற்றிய தம் அனுபவங்கள் ; படித்து ரசித்த (வேற்று மொழிப் படைப்புகளாக இருப்பினும் ) காமிக்ஸ்கள் பற்றி எழுதினால் - தொடர்ச்சியாய் எனது புராணங்களையே படித்து அயர்ச்சியை சந்திக்கும் நண்பர்களுக்குமொரு சின்ன மாற்றமாக இருந்திட வாய்ப்பாகுமே ? What say guys ? Worth a try ?
இந்த "100 பதிவுப் பயணம் " கொண்டாடப்பட வேண்டிய தருணம் என்றெல்லாம் நான் பகல் சொப்பனங்களில் ஆழ்ந்திருக்கவில்லை ! நமது பேங்க் விபரங்களை மாத்திரமே தாங்கி வந்த பதிவுகள் ; துவக்கத்தில் எழுதிய பல 10 வரிப் பதிவுகளும் இந்த 100-க்குள் ஐக்கியமென்பது நாம் அறிந்தது தானே ?! ஊர் கூடித் தேர் இழுக்கும் ஒரு அரங்கில் இளைப்பாற ஒரு இனிய தருணமாக இதைப் பார்ப்பதே பொருத்தமன்றோ ? ஆனால் கடந்த 18 மாதங்களில் என் வாழ்வில் ஒரு அங்கமாகி விட்ட இந்தப் பக்கத்தை - எனக்கே என்னைப் பல விதங்களில் அறிமுகம் செய்து வைத்துள்ளதொரு கருவியாய்ப் பார்க்க எனக்கு முடிகின்றது ! இங்கு பதிவிட்டுள்ள / பதிவிட்டு வரும் ஒவ்வொரு நண்பரின் எழுத்துக்களிலும் உணர சாத்தியமாகும் காமிக்ஸ் காதல் ; சிந்தனைகளின் முதிர்ச்சி - ஒவ்வொரு வகையில் எனக்கு நிறையக் கற்றுத் தந்துள்ளதென்று சொல்வதற்கு அவையடக்கம் காரணமாகாது ! "சிங்கத்தின் சிறு வயதில்" பகுதியைத் தொகுப்பாய் வெளியிட நினைப்பதை விட, இங்கு இந்த 4.75+ லட்சப் பார்வைகள் நல்கியுள்ள எண்ணிலடங்கா சந்தோஷத் தருணங்களை ; நகைச்சுவை மேளாக்களை ; ஒரு புத்தகம் ஆக்கிடும் பட்சத்தில் - surefire ஹிட் ஆகுமென்பதில் ஐயமேது ?
இந்தப் 18 மாதங்களில் தான் எத்தனை - எத்தனை உணர்ச்சிப் பிரவாகங்கள் ? ஒரே நாளில் 2200+ பார்வைகள் என்ற உச்சம் ; 350+ பின்னூட்டங்கள் கொண்ட எக்கச்சக்கப் பதிவுகள் என்று அசத்திய அசாத்தியக் காமிக்ஸ் நேசம் ; அதே சமயம் ஒரு முழுப் பதிவையும், அது சார்ந்த பின்னூட்டங்களையும் மொத்தமாய் நீக்க நேர்ந்த சங்கட தினம் ; புதிதாய் நண்பர்கள் பலரை சம்பாதித்த சந்தோஷ வேளைகள் ; ஏதோவொரு மனத்தாங்கல் காரணமாய் அவர்களில் சிலர் தூரத்தை நாடிச் சென்ற துரதிர்ஷ்ட நேரங்கள் ; வெற்றிகளை வெறியோடு கொண்டாடிய நாட்கள் ; பிடித்தமில்லாது போன தங்கக் கல்லறைகளை துவைத்துத் தொங்கப் போட்ட சமயங்களென - ஒரு 'சின்னப் புள்ளைங்க ' சமாச்சாரத்தின் பின்னே இத்தனை அனுபவங்கள் கதம்பமாய்ப் புனைந்திருப்பதை யார் தான் நம்புவர் ? அனுதினமும் இங்கு ஏதோ ஒரு வகையில் சந்தோஷத்தைப் பரப்பிட உதவிய அத்தனை 'சன்ஷைன் நெஞ்சங்களுக்கும் ' ஒரு salute ! ஏதோ ஒரு வகையில் உங்கள் ஒவ்வொருவரையும் எட்டிட நான் முயற்சித்துள்ளேன் ; அதில் வெற்றி கண்டேனா என்ற ஆராய்ச்சியை விட - எங்கோ சறுக்கி நண்பர்கள் சிலரை சங்கடப்படுத்தியுள்ளேன் என்பதை ஒத்துக் கொள்வதே பிரதானம் என்று தோன்றுகிறது ! எவரையும் காயப்படுத்திடும் எண்ணம் நிச்சயம் எனக்கில்லை ; எனினும் இந்த இணையப் பயணத்தில் என்னால் மனவருத்தம் கொள்ள நேரிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது unconditional apologies உரித்தாகட்டுமே ! விலகி நின்றாலும் நாம் ஒரு நாளும் விரோதிகளல்ல என்பதையும் சரி ; காலத்தால் ஆற்றிட இயலாக் காயங்களே கிடையாதென்பதையும் ஒரு போதும் நான் மறவேன் ! Thanks guys - for being an integral part of life for me...!
நீண்டு செல்லும் இந்தப் பதிவை நிறைவு செய்யும் முன்னே சின்னதாய் ஒரு சந்தோஷப் பகிர்வு ! நம் நெடுநாள் காமிக்ஸ் நண்பரும் , இங்கு சமீபத்திய வருகையாளருமான பிரான்சிலிருக்கும் திருச்செல்வம் ப்ரபாநாத் - பிரான்சில் வசிக்கும் தமிழர்களிடையே நமது இதழ்களை அறிமுகம் செய்திடும் பொருட்டு முயற்சிகளைத் துவக்கியுள்ளார் ! தலை சுற்றச் செய்யும் air-mail கட்டணங்களையும் செலுத்தி நம்மிடமுள்ள சமீபத்திய இதழ்கள் அத்தனையிலும் ஒரு சிறியளவுப் பிரதிகளைத் தருவித்துள்ளார் நண்பர் ! Let's wish him good luck !
நம்பர்கள் தராத பரிவை நண்பர்கள் தொடர்ச்சியாய் வெவ்வேறு ரூபங்களில் காட்டி வருவதே நாம் வாங்கி வந்த வரம் போலும் !! Take care folks !