நண்பர்களே,
வணக்கம். 'கிராபிக் நாவலா ? ஆத்தாடீ !!' என்று (நண்பர்களில் ஒரு பகுதியினர்) தெறித்து ஓடும் பாங்கை 2014-ன் இது வரையிலான 'கி.நா.'க்கள் லேசாக செப்பனிட்டுள்ளன என்று சொல்லலாம் ! இந்தாண்டின் bestsellers பட்டியலின் பிரதான ஆக்கிரமிப்பாளர்கள் "கி.நா"க்கள் தான் ('விரியனின் விரோதி;தேவ ரகசியம் தேடலுக்கல்ல ; இரவே..இருளே..கொல்லாதே.. ; காலனின் கைக்கூலி ) எனும் போது சரியான கதைத் தேடல்கள் இருக்கும் பட்சத்தில் ரசனைகளின் மாற்றங்களும் சிறுகச் சிறுகவாவது நடந்தேறும் என்பது புரிகிறது ! அதற்காக அனைவரும் இந்த பாணிகளுக்கு overnight ரசிகர்களாகி விட்டதாகவோ ; பூரண மாற்றங்கள் நிகழ்ந்து விட்டதாகவோ நான் சொல்லப் போவதில்லை ! "நாங்கள் காமிக்ஸ் படிப்பதே பிரச்னைகளை மறக்கத் தான்; இதில் எனக்கெதற்கு இந்த "வித்தியாசமான " முயற்சிகள் ? என்ற கேள்விகளைத் தாங்கிய கடிதங்கள் அவ்வப்போது வந்து கொண்டே தான் உள்ளன ; 'போணியாகும் கதைகளாகப் போட்டு விட்டு 'சிவனே' என்று போக வேண்டியது தானே ? கிராபிக் நாவல் ; கத்திரிக்காய் என்று why this கொலைவெறி ?' என்ற காரசார வினவல்களும் அடிக்கடி உண்டு !! ஆனால் காலமெல்லாம் மரத்தைச் சுற்றி டூயட் பாடும் பாணிகளுக்கும், எப்போதாவது ஒரு சின்ன லீவு விட்டால் தப்பில்லை என்ற தீர்மானத்துக்கு நான் வந்து ஏக காலமாகி விட்டதால் - கிராபிக் பயணங்கள் தொடரவே செய்யும் ! இது வறட்டுப் பிடிவாதமாய் ; கொழுப்பின் பிரதிபலிப்பாய் சில நண்பர்களின் கண்களுக்குத் தெரிந்தாலும், என்றைக்கோ ஒரு நாள் இந்தக் கதைகளும் கூட நம் ரசனைகளின் வரம்புகளுக்குள் நுழைந்திடும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன் ! ஆண்டின் இறுதி மாதத்தில் ; ஆண்டின் இறுதி கிராபிக் நாவலை அறிமுகம் செய்யும் வேளை இது என்பதால் தான் இந்த பில்டப் எல்லாம் என்பதை நீங்கள் நிச்சயம் புரிந்திருப்பீர்கள் !
இதோ - "வானமே எங்கள் வீதி - பாகம் 1 & 2" இணைந்து வெளிவரவுள்ள டிசம்பர் இதழின் முதல் பார்வைகள் :
ஒரிஜினல் முதல் பாகத்து அட்டைப்படத்தை நம் பின்னட்டைக்கு அனுப்பியது தவிர, பெரிதாய் எவ்வித நோண்டல்களுமின்றி வெளியாகவுள்ள அட்டைப்பட டிசைன் இது ! உங்கள் கம்பியூட்டர் / செல்போன் திரைகளில் தெரிவதை விட பின்னணி ப்ரௌன் வர்ணம் இதழின் ராப்பரில் அடர்த்தியாய்த் தெரியும் - ஒரு 'பளிச்' லுக்குடன் ! கதாசிரியர் + ஓவியர் + வர்ணங்கள் அமைத்த ஓவியரென மூவர் கூட்டணி இதழின் பின்னட்டையில் உள்ளதைக் காணலாம் ! உட்பக்கங்களின் டீசர்களும் இதோ :
டிரைலரைப் பார்த்து விட்டு - 'வழக்கம் போல் இன்னொரு உலக யுத்தக் கதையாக்கும் ? கிராபிக் நாவல் என்பதால் கொஞ்சம் அழுகாச்சியும் இணைந்திருக்கும் !' என்பது தான் உங்களின் முதல் அபிப்ராயமாக இருக்கலாம் ; ஆனால் இது அந்தப் பட்டியலுக்குள் புகுந்திடும் கதையே அல்ல ! "வானமே எங்கள் வீதி" ஒரு நட்பின் கதை ; ஒரு யுத்தத்தின் கதை ; ஒரு மெல்லிய நேசத்தின் கதை ! இரண்டாம் உலக யுத்தம் துவங்குவதற்கு முன்பானதொரு ஜெர்மானிய பிராந்தியத்தில் வளரும் ஒரு சுட்டிப் பெண்ணும், இரு குட்டிப் பையன்களும் தான் இக்கதையின் மையங்கள் ! நான்காவது முக்கியக் கதாப்பாத்திரம் என்றால் அது இக்கதையில் ஆங்காங்கே 'பளிச்' 'பளிச்' என்று மிளிரும் விமானங்கள் ! பறக்கும் மிஷின்கள் மீது இந்நாளே ஒரு மோகம் நம்மில் பலருக்கும் தொடரும் வேளையில் - கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பான குட்டீஸ்களுக்குக் கேட்கவா வேண்டும் ?
நட்பெனும் புள்ளியில் துவங்கும் கதை - உலகப் போருக்குள் நுழைவதும் கூட மாமூலான "ரட்-டட்-டட்" மிஷின்கன் முழக்கத்தோடு அல்ல ! விண்வெளியில் நடந்த உச்சகட்ட hi -tech போராட்டத்தை பிரமிக்கச் செய்யும் சித்திரங்களோடு பார்க்கக் காத்துள்ளோம் ! இதில் highlight என்னவெனில் இந்த விண்கலங்களோ ; யுத்த நிகழ்வுகளில் தலைகாட்டும் கதாப்பாத்திரங்களோ ஆசிரியரின் கற்பனையின் குழந்தைகள் அல்ல ! இதோ பாருங்களேன் - கதையில் வரும் வினோத விமானங்களின் நிஜ போட்டோக்கள் ; ஓவியங்கள் !
வேய்ன் ஷெல்டன் கதைகளுக்கு ஓவியம் வரைந்தவருக்கு முரட்டு டிரக்குகள் மீதான காதலைப் போல - இக்கதையின் படைப்பாளிகளுக்கு விமானங்கள் மீதொரு மையல் நிச்சயமாய் இருந்திருக்க வேண்டும் ! அதன் பிரதிபலிப்பை கதை நெடுகிலும் பார்த்திடலாம் ! நட்பில் துவங்கி, யுத்தத்துக்குச் செல்லும் கதையில் ஒரு மெல்லிய நேசமும் இழையோடுவதை படிக்கும் போது உணர முடியும் ! காமிக்ஸில் காதல் கதைகள் வந்தாலென்னவென்று ஏங்கும் நண்பர்கள் தற்சமயத்துக்கு இதைக் கொண்டு மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான் !
இந்தக் கதையின் பக்கமாய் என் கவனம் திரும்பியதும் கூட ஒரு unique ஆன விதத்தில் தான் ! 2013-ன் எப்போதோ ஒரு வேளையில் ஸ்பெயினிலிருந்து ஒரு அதிகாலை விமானத்தைப் பிடித்து பாரிசுக்குச் சென்று கொண்டிருந்தேன் ! வழக்கமாய் அதிகாலை பயணம் எனும் போது ஜன்னலோரமாய் தலையைச் சாய்த்து - விட்டுப் போன தூக்கத்தைப் பிடிப்பது எல்லோருக்கும் வாடிக்கையாய் இருக்கும் ! ஏனோ அன்று எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை ; என்னருகே அமர்ந்திருந்தவருக்கும் அதே நிலை ! அவர் ஒரு பிரெஞ்சு புக்கில் sudoku போட்டுக் கொண்டிருக்க, நான் வழக்கம் போல் பைக்குள் வைத்திருந்த காமிக்ஸ் ஒன்றை (லார்கோ என்ற ஞாபகம்) எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன் ! பயணங்களின் போது புது நண்பர்கள் பிடிப்பது எனக்குச் சுட்டுப் போட்டாலும் ஒத்து வராத கலையே ; உச்சா போகாத உராங்குடான் போல உர்ரென்ற முகத்தோடு தான் வலம் வருவேன் ! So அருகிலிருப்பவர் பேசுவாரென்ற எதிர்பார்ப்புகளும் என்னிடம் இருப்பதே கிடையாது ! அப்படியிருந்த நிலையில் பக்கத்து சீட் ஆசாமி என் புக்கினுள் எட்டிப் பார்ப்பதிலும் ; நான் பேசுவேனா என்ற யோசனையில் என் முகத்தைப் பார்ப்பதிலும் செலவிட - நான் லேசாக அவர் பக்கமாய்த் திரும்பி ஒப்புக்கு ஒரு 'ஹலோ'வை சொல்லி வைத்தேன் ! மனுஷன் மறு நிமிஷம் உற்சாகமாய் கையை குலுக்கி விட்டு - தானுமொரு காமிக்ஸ் ரசிகரென்று அறிமுகப்படுத்திக் கொண்டார் ! தானும் கூட லார்கோ fan என்று சொல்லி விட்டு இன்னும் சில பெயர் புரியாத் தொடர்களையும் பற்றி பிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் சிலாகிக்க ஆரம்பிக்க , நான் கோவில் மாடு போல தலையை ஆட்டிக் கொண்டே இருந்தேன் ! பொதுவாய் அங்குள்ள காமிக்ஸ் ரசிகர்களுக்கு கடலளவுக்கு choices இருப்பினும் - யாராவதொரு ஆதர்ஷ ஹீரோ அல்லது ஒரு ஆதர்ஷ படைப்பாளி மீது அபிமானம் பிரதானமாய் இருப்பதுண்டு ! இவரும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை அவர் BUCK BANNY என்றதொரு பெல்ஜிய தொடருக்கு உற்சாகமாய் சிபாரிசு செய்து பேசிய போது புரிந்து கொண்டேன் ! BUCK DANNY தொடர் முழுக்க முழுக்க விமானப்படை பற்றியதொரு தொடர் என்பது எனக்குத் தெரியும் ! நுணுக்கமான விமான விபரங்களோடு கூடிய அந்தத் தொடரெல்லாம் நமக்கு அவ்வளவாய் ரசிக்காது என்ற எண்ணத்தில் அதனை சீரியசாகப் பரிசீலித்ததில்லை ; ஆனாலும் எப்போதோ ஒரே ஒரு கதையைப் படித்தது மட்டும் நினைவிருந்தது ! பாரிசில் தரையிறங்கும் வரை பேசிக் கொண்டே வந்தவர் விமானங்கள் மீது அபரிமிதக் காதல் கொண்டவர் என்பதையும் , அந்தக் காதலானது விமானங்கள் தொடர்பான காமிக்ஸ் வாசிப்பிலும் பிரதிபலிப்பதை புரிந்து கொண்டேன் ! 'இந்தந்தக் கதைகளை எல்லாம் தவறாமல் வாசித்துப் பாரென்று' ஒரு குட்டி லிஸ்டைப் போட்டு என் கையில் திணிக்க, நானும் 'ஒ..பேஷாய் !' என்று சொல்லி விட்டு விடைபெற்றேன் ! ஊருக்குத் திரும்பிய பின்னொரு சோம்பலான நாளில் அந்த லிஸ்ட் என் கைகளில் சிக்க, பொழுது போகாமல் அந்தப் பட்டியலின் கதைகளை இணையத்தில் தேடி பார்த்த போது கிடைத்தது தான் 'வானமே எங்கள் வீதி !' சகல review களிலும் ஐந்துக்கு 4.2 மார்க்குகள் பெற்றிருந்த கதையென்ற பின்னே கூடுதலாய் தகவல் சேகரித்த கையோடு - நமது படைப்பாளிகளிடமும் இது பற்றிக் கேட்டு வைத்தேன் ! அவர்களும் கதைச் சுருக்கம் ; முதல் ஆல்பத்தின் பைல்கள் என ஒட்டு மொத்தமாய் அனுப்பி வைக்க - ஒ.கே. சொல்ல எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை ! ஆண்டொன்று கழிந்த நிலையில் 'வா.எ.வீ ' இப்போது வெளியாகும் வேளையும் புலர்ந்து விட்டது ! இப்போதைக்கு இந்த அறிமுக ஜவ்வுமிட்டாய் போதுமென்பதால் - 'மிச்சத்தை வெள்ளித் திரையில் காண்க !' என்று சொல்லி விட்டு அடுத்த topic -க்கு நகர்கிறேன்!
டிசம்பரின் சந்தேகமில்லா top billing நம் இரவுக் கழுகாருக்கென்ற நிலையில் - இதோ அவரது KING SPECIAL -ன் அட்டைப்படம் !
இது 'தல'யின் அட்டகாசமான போஸா ? அல்லது பிசியானதொரு டிராபிக் போலீஸ்காரரின் செல்பியா ? என்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் guys ! போனெல்லியின் ஓவியர்கள் வரைந்ததொரு லைன் டிராயிங்கை நம்மவர்களின் துணையோடு develop செய்துள்ளோம் ! (பின்னணிப் பச்சையும் ராப்பரில் இதை விட அழுத்தமாய் காட்சி தரும் !) 336 பக்கங்களோடு ஒரு 3 அத்தியாய மெகா சாகசத்தோடு 'தல' வரவுள்ளார் - வெகு சீக்கிரமே !
அப்புறம் நடந்து முடிந்த சேலம் புத்தக விழாவைப் பற்றி :

என்ன சொல்லுவது ? எங்கே தொடங்குவது ? என்ற தடுமாற்றம் தான் எனக்கு ! பொதுவாய் BAPASI குடையினில் வந்திடா இது போன்ற மத்திம லெவல் புத்தக விழாக்களில் நாம் சமீப காலங்களில் நிறையவே அனுபவப்பட்டவர்கள் என்ற விதத்தில் சேலத்தின் மீது பெரியதொரு நம்பிக்கையெல்லாம் வைத்திடத் தோன்றவில்லை என்பதே நிஜம் ! இராமநாதபுரம் ; திருச்சி ; நெல்லை ; நாகர்கோவில் ; போன்ற ஊர்களில் இதே போல் அரங்கேறிய விழாக்களில் விற்பனை சுமார் தான் என்பதால் சேலத்தை ஒரு விளம்பர முயற்சியாக மாத்திரமே பார்க்கத் தோன்றியது - துவக்கத்திலாவது ! ஆனால் முதல் வார இறுதியின் போதே களைகட்டத் துவங்கிய விற்பனையும் ; நண்பர்களின் படையெடுப்பும் 'ஜிவ்'வென்று நாடித்துடிப்பை எகிறச் செய்தது ! தொடர்ந்து வந்த வார நாட்களில் கூட not bad ரக விற்பனை ; சுவாரஸ்யம் மங்கிடா நம் நண்பர்கள் ராஜ்ஜியம் என தொடர்ந்திட - இறுதி 2 நாட்களும் icing on the cake என்று தான் சொல்ல வேண்டும் ! Decent விற்பனை ; வருகை புரியும் குடும்பங்கள் தவறாது கால் பாதிக்கும் ஸ்டால் நமதே என்ற நிலை ; புத்தகவிழாவின் அமைப்பாளர்களே நிமிர்ந்து பார்க்கும் ஒரு கௌரவம் என சகலமும் சாத்தியமானது ! 'காமிக்ஸ்' எனும் ஒரு மந்திரச் சொல்லின் மகிமைக்கு மட்டுமன்றி ; தேனீக்கள் போல் அயராது செயலாற்றிய நமது நண்பர்கள் பட்டாளத்தின் உழைப்பிற்கும் கிட்டிய வெற்றி - இந்த சேலத்து படலத்தின் வெற்றி ! 7 சந்தாத் தொகைகள் + 14 மின்னும் மரண முன்பதிவுகள் + தினசரி விற்பனை என ஒரு மொத்தமாய் ரூ.1.20 லட்சத்துக்கு collection என்பது பெரிய நிறுவனங்களுக்குப் பொரிகடலையாய் தோன்றலாம் தான் ; ஆனால் நம்மைப் போன்ற 'பச்சாக்களுக்கு' இது பிராண வாயுவுக்கு சமானம் என்றால் மிகையாகாது ! அதிலும் ஆண்டின் இறுதிப் பகுதிகளில் முந்தய commitment களைப் பூர்த்தி செய்யவும் ; புத்தாண்டின் முதலீடுகளுக்கும் திணறிக் கொண்டிருக்கும் தருணத்தில் இது புதையலைப் போன்றதொரு மதிப்பு சார்ந்தது !! Thanks ever so much guys ...you have been simply awesome !! சகலமும் வணிகமயமாகி விட்ட இந்நாட்களில் - எவ்வித பிரதிபலன்களும் எதிர்பாராது இவ்வித உழைப்பை வழங்குவது நம் காமிக்ஸ் வாசகக் குடும்பத்துக்கு மட்டுமே சாத்தியமென்று தோன்றுகிறது ! செல்லும் ஒவ்வொரு ஊரிலும் நம்மை திணறச் செய்யும் இந்த வாசக அன்பு மழை சேலத்தில் ஒரு உச்சத்தைத் தொட்டுள்ளது ! Take a bow folks !!
புத்தக விழாவின் சக்கரங்கள் அடுத்து நம்மை இட்டுச் செல்லக் காத்திருப்பது புதுச்சேரிக்கு ! டிசம்பர் 19-28 வரை பாண்டிச்சேரியில் நடக்கவிருக்கும் புத்தக விழாவினிலும் நமது (குட்டியான) ஸ்டால் இருந்திடும் வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன ! திருமண மண்டபம் ஒன்றில் நடக்கவிருக்கும் இவ்விழாவினில் பிரதான ஸ்டால்கள் சகலமும் புக் ஆகி விட்ட நிலையில், பாக்கியுள்ள குட்டி (8' x 8') ஸ்டால் ஒன்றை நமக்குத் தர அமைப்பாளர்கள் சம்மதித்துள்ளனர் ! So முதன்முறையாக புதுச்சேரிக்குச் செல்லும் நம் வண்டி அங்கு எவ்விதம் இயங்குகிறதென்று அடுத்த மாதம் தெரிந்து விடும் ! வழக்கம் போலவே நாம் எதிர்பார்த்திருக்கப் போவது அங்குள்ள நம் நண்பர்களின் சகாயங்களையே ! Please do guide us folks !! சமீபமாய் எந்த புத்தக விழாவிற்கும் நாம் புதிதாய் banner எதையும் தயார் செய்திருக்கவில்லை ! இம்முறை புதுவைக்கென ஒன்றிரண்டு banner கள் தயாரிப்போமா ? 8'க்கு 8 ஸ்டால் என்பதால் 6க்கு 6 banner சரியாக இருக்கும் ! அவகாசமிருப்பின் நண்பர்கள் டிசைன் செய்து அனுப்பிடலாமே ?
சந்தாக்கள் உற்சாகமாய் வரத் துவங்கியுள்ள போதிலும், இப்போது தான் எண்ணிக்கை 100-ஐத் தொட்டுள்ளது ! தொடரும் நாட்களில் / வாரங்களில் இன்னும் துரிதமாய் சந்தாக்களைத் தட்டி விட்டால் - நம் பாரம் கொஞ்சம் குறையும் என்பது நீங்கள் அறியாததா ? Please do chip in folks ! 2015-ன் சந்தா நண்பர்களுக்கு ஆண்டின் பயணத்தின் போது சின்னச் சின்ன surprises காத்துள்ளன என்பது கொசுறுச் சேதி ! அவை என்னவென்று நீங்களே அவ்வப்போது தெரிந்து கொள்வீர்கள் ! மீண்டும் சந்திப்போம்... ! அது வரையிலும் adios amigos ! Enjoy the Sunday !

.jpg)

சார் ரொம்ப நீநீநீளமா தொடர வேண்டாம் சார்.!
பயம்மா இருக்கு.!!
க்ரைம் த்ரில்லர்., ரொம்ப gap விட்டா புஸ்ஸுன்னு போயிடும்.!
அடுத்தடுத்து போட்டு முடிச்சிட்டா நல்லாருக்கும் சார்.!//