Powered By Blogger

Sunday, November 23, 2014

கதை சொல்லும் விமானங்கள் !

நண்பர்களே,

வணக்கம். 'கிராபிக் நாவலா ? ஆத்தாடீ !!' என்று (நண்பர்களில் ஒரு பகுதியினர்) தெறித்து ஓடும் பாங்கை 2014-ன் இது வரையிலான 'கி.நா.'க்கள் லேசாக செப்பனிட்டுள்ளன என்று சொல்லலாம் !  இந்தாண்டின் bestsellers பட்டியலின் பிரதான ஆக்கிரமிப்பாளர்கள் "கி.நா"க்கள் தான் ('விரியனின் விரோதி;தேவ ரகசியம் தேடலுக்கல்ல ; இரவே..இருளே..கொல்லாதே.. ; காலனின் கைக்கூலி ) எனும் போது சரியான கதைத் தேடல்கள் இருக்கும் பட்சத்தில் ரசனைகளின் மாற்றங்களும் சிறுகச் சிறுகவாவது நடந்தேறும் என்பது புரிகிறது ! அதற்காக அனைவரும் இந்த பாணிகளுக்கு overnight ரசிகர்களாகி விட்டதாகவோ ; பூரண மாற்றங்கள் நிகழ்ந்து விட்டதாகவோ நான் சொல்லப் போவதில்லை ! "நாங்கள் காமிக்ஸ் படிப்பதே பிரச்னைகளை மறக்கத் தான்; இதில் எனக்கெதற்கு இந்த "வித்தியாசமான " முயற்சிகள் ? என்ற கேள்விகளைத் தாங்கிய கடிதங்கள் அவ்வப்போது வந்து கொண்டே தான் உள்ளன ; 'போணியாகும் கதைகளாகப் போட்டு விட்டு 'சிவனே' என்று  போக வேண்டியது தானே ? கிராபிக் நாவல் ; கத்திரிக்காய்  என்று why this கொலைவெறி  ?' என்ற காரசார வினவல்களும் அடிக்கடி உண்டு !! ஆனால் காலமெல்லாம் மரத்தைச் சுற்றி டூயட் பாடும் பாணிகளுக்கும், எப்போதாவது ஒரு சின்ன லீவு விட்டால் தப்பில்லை என்ற தீர்மானத்துக்கு நான் வந்து ஏக காலமாகி விட்டதால் - கிராபிக் பயணங்கள் தொடரவே செய்யும் ! இது வறட்டுப் பிடிவாதமாய் ; கொழுப்பின் பிரதிபலிப்பாய் சில நண்பர்களின் கண்களுக்குத் தெரிந்தாலும், என்றைக்கோ ஒரு நாள் இந்தக் கதைகளும் கூட நம் ரசனைகளின் வரம்புகளுக்குள் நுழைந்திடும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன் ! ஆண்டின் இறுதி மாதத்தில் ; ஆண்டின் இறுதி கிராபிக் நாவலை அறிமுகம் செய்யும் வேளை இது என்பதால் தான் இந்த பில்டப் எல்லாம் என்பதை நீங்கள் நிச்சயம் புரிந்திருப்பீர்கள் !

இதோ - "வானமே எங்கள் வீதி - பாகம் 1 & 2"  இணைந்து வெளிவரவுள்ள டிசம்பர் இதழின் முதல் பார்வைகள் :

ஒரிஜினல் முதல் பாகத்து அட்டைப்படத்தை நம் பின்னட்டைக்கு அனுப்பியது தவிர, பெரிதாய் எவ்வித நோண்டல்களுமின்றி வெளியாகவுள்ள அட்டைப்பட டிசைன் இது ! உங்கள் கம்பியூட்டர் / செல்போன்  திரைகளில் தெரிவதை விட பின்னணி ப்ரௌன் வர்ணம் இதழின் ராப்பரில் அடர்த்தியாய்த் தெரியும் - ஒரு 'பளிச்' லுக்குடன் ! கதாசிரியர் + ஓவியர் + வர்ணங்கள் அமைத்த ஓவியரென மூவர் கூட்டணி இதழின் பின்னட்டையில் உள்ளதைக் காணலாம் ! உட்பக்கங்களின் டீசர்களும் இதோ :


டிரைலரைப் பார்த்து விட்டு -  'வழக்கம் போல் இன்னொரு உலக யுத்தக் கதையாக்கும் ?  கிராபிக் நாவல் என்பதால் கொஞ்சம் அழுகாச்சியும் இணைந்திருக்கும் !' என்பது தான் உங்களின் முதல் அபிப்ராயமாக இருக்கலாம் ; ஆனால் இது அந்தப் பட்டியலுக்குள் புகுந்திடும் கதையே அல்ல ! "வானமே எங்கள் வீதி" ஒரு நட்பின் கதை ; ஒரு யுத்தத்தின் கதை ; ஒரு மெல்லிய நேசத்தின் கதை ! இரண்டாம் உலக யுத்தம் துவங்குவதற்கு முன்பானதொரு ஜெர்மானிய பிராந்தியத்தில் வளரும் ஒரு சுட்டிப் பெண்ணும், இரு குட்டிப் பையன்களும் தான் இக்கதையின் மையங்கள் ! நான்காவது முக்கியக் கதாப்பாத்திரம் என்றால் அது இக்கதையில் ஆங்காங்கே 'பளிச்' 'பளிச்' என்று மிளிரும் விமானங்கள் ! பறக்கும்  மிஷின்கள் மீது இந்நாளே ஒரு மோகம் நம்மில் பலருக்கும் தொடரும் வேளையில் - கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பான குட்டீஸ்களுக்குக் கேட்கவா வேண்டும் ?  


நட்பெனும் புள்ளியில் துவங்கும் கதை - உலகப் போருக்குள் நுழைவதும் கூட மாமூலான "ரட்-டட்-டட்" மிஷின்கன் முழக்கத்தோடு அல்ல ! விண்வெளியில் நடந்த உச்சகட்ட hi -tech போராட்டத்தை பிரமிக்கச் செய்யும் சித்திரங்களோடு பார்க்கக் காத்துள்ளோம் ! இதில் highlight என்னவெனில் இந்த விண்கலங்களோ ; யுத்த நிகழ்வுகளில் தலைகாட்டும் கதாப்பாத்திரங்களோ ஆசிரியரின் கற்பனையின் குழந்தைகள் அல்ல ! இதோ பாருங்களேன் - கதையில் வரும் வினோத விமானங்களின் நிஜ போட்டோக்கள் ; ஓவியங்கள் !



வேய்ன் ஷெல்டன் கதைகளுக்கு ஓவியம் வரைந்தவருக்கு முரட்டு டிரக்குகள் மீதான காதலைப் போல - இக்கதையின் படைப்பாளிகளுக்கு விமானங்கள் மீதொரு மையல் நிச்சயமாய் இருந்திருக்க வேண்டும் ! அதன் பிரதிபலிப்பை கதை நெடுகிலும் பார்த்திடலாம் ! நட்பில் துவங்கி, யுத்தத்துக்குச் செல்லும் கதையில் ஒரு மெல்லிய நேசமும் இழையோடுவதை படிக்கும் போது உணர முடியும் ! காமிக்ஸில் காதல் கதைகள் வந்தாலென்னவென்று ஏங்கும் நண்பர்கள் தற்சமயத்துக்கு இதைக் கொண்டு மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான் !

இந்தக் கதையின் பக்கமாய் என் கவனம் திரும்பியதும் கூட ஒரு unique ஆன விதத்தில் தான் ! 2013-ன் எப்போதோ ஒரு வேளையில் ஸ்பெயினிலிருந்து ஒரு அதிகாலை விமானத்தைப் பிடித்து பாரிசுக்குச் சென்று கொண்டிருந்தேன் ! வழக்கமாய் அதிகாலை பயணம் எனும் போது ஜன்னலோரமாய் தலையைச் சாய்த்து - விட்டுப் போன தூக்கத்தைப் பிடிப்பது எல்லோருக்கும் வாடிக்கையாய் இருக்கும் ! ஏனோ அன்று எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை ; என்னருகே அமர்ந்திருந்தவருக்கும் அதே நிலை ! அவர் ஒரு பிரெஞ்சு புக்கில் sudoku போட்டுக் கொண்டிருக்க, நான் வழக்கம் போல் பைக்குள் வைத்திருந்த காமிக்ஸ் ஒன்றை (லார்கோ என்ற ஞாபகம்)  எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன் ! பயணங்களின் போது புது நண்பர்கள் பிடிப்பது எனக்குச் சுட்டுப் போட்டாலும் ஒத்து வராத கலையே ; உச்சா போகாத உராங்குடான் போல உர்ரென்ற முகத்தோடு தான் வலம் வருவேன் ! So அருகிலிருப்பவர் பேசுவாரென்ற எதிர்பார்ப்புகளும் என்னிடம் இருப்பதே கிடையாது ! அப்படியிருந்த நிலையில் பக்கத்து சீட் ஆசாமி என் புக்கினுள் எட்டிப் பார்ப்பதிலும்  ; நான் பேசுவேனா என்ற யோசனையில் என் முகத்தைப் பார்ப்பதிலும் செலவிட - நான் லேசாக அவர் பக்கமாய்த் திரும்பி ஒப்புக்கு ஒரு 'ஹலோ'வை சொல்லி வைத்தேன் ! மனுஷன் மறு நிமிஷம் உற்சாகமாய் கையை குலுக்கி விட்டு - தானுமொரு காமிக்ஸ் ரசிகரென்று அறிமுகப்படுத்திக் கொண்டார் ! தானும் கூட லார்கோ fan என்று சொல்லி விட்டு இன்னும் சில பெயர் புரியாத் தொடர்களையும் பற்றி பிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் சிலாகிக்க ஆரம்பிக்க , நான் கோவில் மாடு போல தலையை ஆட்டிக் கொண்டே இருந்தேன் ! பொதுவாய்  அங்குள்ள காமிக்ஸ் ரசிகர்களுக்கு கடலளவுக்கு choices இருப்பினும் - யாராவதொரு ஆதர்ஷ ஹீரோ அல்லது ஒரு ஆதர்ஷ படைப்பாளி மீது அபிமானம் பிரதானமாய் இருப்பதுண்டு ! இவரும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை அவர் BUCK BANNY என்றதொரு பெல்ஜிய தொடருக்கு உற்சாகமாய் சிபாரிசு செய்து பேசிய போது புரிந்து கொண்டேன் ! BUCK DANNY தொடர் முழுக்க முழுக்க விமானப்படை பற்றியதொரு தொடர் என்பது எனக்குத் தெரியும் ! நுணுக்கமான விமான விபரங்களோடு கூடிய அந்தத் தொடரெல்லாம் நமக்கு அவ்வளவாய் ரசிக்காது என்ற எண்ணத்தில் அதனை சீரியசாகப் பரிசீலித்ததில்லை ; ஆனாலும் எப்போதோ ஒரே ஒரு கதையைப் படித்தது மட்டும் நினைவிருந்தது ! பாரிசில் தரையிறங்கும் வரை பேசிக் கொண்டே வந்தவர் விமானங்கள் மீது அபரிமிதக் காதல் கொண்டவர் என்பதையும் , அந்தக் காதலானது  விமானங்கள் தொடர்பான காமிக்ஸ் வாசிப்பிலும்  பிரதிபலிப்பதை புரிந்து கொண்டேன் ! 'இந்தந்தக் கதைகளை எல்லாம் தவறாமல் வாசித்துப் பாரென்று' ஒரு குட்டி லிஸ்டைப் போட்டு என் கையில் திணிக்க, நானும் 'ஒ..பேஷாய் !' என்று சொல்லி விட்டு விடைபெற்றேன் ! ஊருக்குத் திரும்பிய பின்னொரு சோம்பலான நாளில் அந்த லிஸ்ட் என் கைகளில் சிக்க, பொழுது போகாமல் அந்தப் பட்டியலின் கதைகளை இணையத்தில் தேடி பார்த்த போது கிடைத்தது தான் 'வானமே எங்கள் வீதி !' சகல review களிலும் ஐந்துக்கு 4.2 மார்க்குகள் பெற்றிருந்த கதையென்ற பின்னே கூடுதலாய் தகவல் சேகரித்த கையோடு  - நமது படைப்பாளிகளிடமும் இது பற்றிக் கேட்டு வைத்தேன் ! அவர்களும் கதைச் சுருக்கம் ; முதல் ஆல்பத்தின் பைல்கள் என ஒட்டு மொத்தமாய் அனுப்பி வைக்க - ஒ.கே. சொல்ல எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை ! ஆண்டொன்று கழிந்த நிலையில் 'வா.எ.வீ ' இப்போது வெளியாகும் வேளையும் புலர்ந்து விட்டது ! இப்போதைக்கு இந்த அறிமுக ஜவ்வுமிட்டாய் போதுமென்பதால் - 'மிச்சத்தை வெள்ளித் திரையில் காண்க !' என்று சொல்லி விட்டு அடுத்த topic -க்கு நகர்கிறேன்!

டிசம்பரின் சந்தேகமில்லா top billing நம் இரவுக் கழுகாருக்கென்ற நிலையில் - இதோ அவரது KING SPECIAL -ன் அட்டைப்படம் !


இது 'தல'யின் அட்டகாசமான போஸா ? அல்லது பிசியானதொரு டிராபிக் போலீஸ்காரரின் செல்பியா ? என்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் guys ! போனெல்லியின் ஓவியர்கள் வரைந்ததொரு லைன் டிராயிங்கை நம்மவர்களின் துணையோடு develop செய்துள்ளோம் ! (பின்னணிப் பச்சையும் ராப்பரில் இதை விட அழுத்தமாய் காட்சி தரும் !) 336 பக்கங்களோடு ஒரு 3 அத்தியாய மெகா சாகசத்தோடு 'தல' வரவுள்ளார் - வெகு சீக்கிரமே !

அப்புறம் நடந்து முடிந்த சேலம் புத்தக விழாவைப் பற்றி

என்ன சொல்லுவது ? எங்கே தொடங்குவது ? என்ற தடுமாற்றம் தான் எனக்கு ! பொதுவாய்  BAPASI குடையினில் வந்திடா இது போன்ற மத்திம லெவல் புத்தக விழாக்களில் நாம் சமீப காலங்களில் நிறையவே அனுபவப்பட்டவர்கள் என்ற விதத்தில் சேலத்தின் மீது பெரியதொரு நம்பிக்கையெல்லாம் வைத்திடத் தோன்றவில்லை என்பதே நிஜம் ! இராமநாதபுரம் ; திருச்சி ; நெல்லை ; நாகர்கோவில் ; போன்ற ஊர்களில் இதே போல் அரங்கேறிய விழாக்களில் விற்பனை சுமார் தான் என்பதால் சேலத்தை ஒரு விளம்பர முயற்சியாக மாத்திரமே பார்க்கத் தோன்றியது - துவக்கத்திலாவது ! ஆனால் முதல் வார இறுதியின் போதே களைகட்டத் துவங்கிய விற்பனையும் ; நண்பர்களின் படையெடுப்பும் 'ஜிவ்'வென்று நாடித்துடிப்பை எகிறச் செய்தது ! தொடர்ந்து  வந்த வார நாட்களில் கூட not bad ரக விற்பனை ; சுவாரஸ்யம் மங்கிடா நம் நண்பர்கள் ராஜ்ஜியம் என தொடர்ந்திட - இறுதி 2 நாட்களும் icing on the cake என்று தான் சொல்ல வேண்டும் ! Decent விற்பனை ; வருகை புரியும் குடும்பங்கள் தவறாது கால் பாதிக்கும் ஸ்டால் நமதே என்ற நிலை ; புத்தகவிழாவின் அமைப்பாளர்களே நிமிர்ந்து பார்க்கும் ஒரு கௌரவம் என சகலமும் சாத்தியமானது ! 'காமிக்ஸ்' எனும் ஒரு மந்திரச் சொல்லின் மகிமைக்கு மட்டுமன்றி ; தேனீக்கள் போல் அயராது செயலாற்றிய நமது நண்பர்கள் பட்டாளத்தின் உழைப்பிற்கும் கிட்டிய வெற்றி - இந்த சேலத்து படலத்தின் வெற்றி ! 7 சந்தாத் தொகைகள் + 14 மின்னும் மரண முன்பதிவுகள் + தினசரி விற்பனை என ஒரு மொத்தமாய் ரூ.1.20 லட்சத்துக்கு collection என்பது பெரிய நிறுவனங்களுக்குப்  பொரிகடலையாய் தோன்றலாம் தான் ; ஆனால் நம்மைப் போன்ற 'பச்சாக்களுக்கு' இது பிராண வாயுவுக்கு சமானம் என்றால் மிகையாகாது ! அதிலும் ஆண்டின் இறுதிப் பகுதிகளில் முந்தய commitment களைப் பூர்த்தி செய்யவும் ; புத்தாண்டின் முதலீடுகளுக்கும் திணறிக் கொண்டிருக்கும் தருணத்தில் இது புதையலைப் போன்றதொரு மதிப்பு சார்ந்தது !! Thanks ever so much guys ...you have been simply awesome !! சகலமும் வணிகமயமாகி விட்ட இந்நாட்களில் - எவ்வித பிரதிபலன்களும் எதிர்பாராது இவ்வித உழைப்பை வழங்குவது நம் காமிக்ஸ் வாசகக் குடும்பத்துக்கு மட்டுமே சாத்தியமென்று தோன்றுகிறது ! செல்லும் ஒவ்வொரு ஊரிலும்  நம்மை திணறச் செய்யும் இந்த வாசக அன்பு மழை சேலத்தில் ஒரு உச்சத்தைத் தொட்டுள்ளது ! Take a bow folks !!

புத்தக விழாவின் சக்கரங்கள் அடுத்து நம்மை இட்டுச் செல்லக் காத்திருப்பது புதுச்சேரிக்கு ! டிசம்பர் 19-28 வரை பாண்டிச்சேரியில் நடக்கவிருக்கும் புத்தக விழாவினிலும் நமது (குட்டியான) ஸ்டால் இருந்திடும் வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன ! திருமண மண்டபம் ஒன்றில் நடக்கவிருக்கும் இவ்விழாவினில் பிரதான ஸ்டால்கள் சகலமும் புக் ஆகி விட்ட நிலையில், பாக்கியுள்ள குட்டி (8' x  8') ஸ்டால் ஒன்றை நமக்குத் தர அமைப்பாளர்கள் சம்மதித்துள்ளனர் ! So முதன்முறையாக புதுச்சேரிக்குச் செல்லும் நம் வண்டி அங்கு எவ்விதம் இயங்குகிறதென்று அடுத்த மாதம் தெரிந்து விடும் ! வழக்கம் போலவே நாம் எதிர்பார்த்திருக்கப் போவது அங்குள்ள நம் நண்பர்களின் சகாயங்களையே ! Please do guide us folks !! சமீபமாய் எந்த புத்தக விழாவிற்கும் நாம் புதிதாய் banner எதையும் தயார் செய்திருக்கவில்லை ! இம்முறை புதுவைக்கென ஒன்றிரண்டு banner கள் தயாரிப்போமா ? 8'க்கு 8 ஸ்டால் என்பதால் 6க்கு 6 banner சரியாக இருக்கும் ! அவகாசமிருப்பின் நண்பர்கள் டிசைன் செய்து அனுப்பிடலாமே ?

சந்தாக்கள் உற்சாகமாய் வரத் துவங்கியுள்ள போதிலும், இப்போது தான் எண்ணிக்கை 100-ஐத் தொட்டுள்ளது ! தொடரும் நாட்களில் / வாரங்களில் இன்னும் துரிதமாய் சந்தாக்களைத் தட்டி விட்டால் - நம் பாரம் கொஞ்சம் குறையும் என்பது நீங்கள் அறியாததா ? Please do chip in folks ! 2015-ன் சந்தா நண்பர்களுக்கு ஆண்டின் பயணத்தின் போது சின்னச் சின்ன surprises காத்துள்ளன என்பது கொசுறுச் சேதி ! அவை என்னவென்று நீங்களே அவ்வப்போது தெரிந்து கொள்வீர்கள் !  மீண்டும் சந்திப்போம்... ! அது வரையிலும் adios amigos ! Enjoy the Sunday ! 

322 comments:

  1. Replies
    1. புக் வெளிவந்ததும் படிச்சிட்டு விமர்சனம் பண்ணத்தான் முடியல...இதையாச்சும் செய்வோம்.

      Delete
    2. வானம் எங்கள் வீதி...இந்த வருடத்தின் மிகச்சிறந்த (முன்) அட்டைப்படம்.

      மேகம் கருக்கையில...Sunshine கீழதெரியுதம்மா...!?

      Delete
    3. //மேகம் கருக்கையில...Sunshine கீழதெரியுதம்மா...///

      ஹா ஹா ஹா! டைமிங் பாட்டு! :)

      Delete
  2. இருங்க படிச்சிட்டு வந்து பேசிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மஞ்சசட்ட எப்பவும் மஞ்சதுண்டு மாதிரி பெரிய சூப்பர்வைசர்தான்...முன் மற்றும் பின் அட்டைப்படங்கள் கலக்கல்.

      Delete
  3. இசுபெயின் போட்ட கோல் மாதிரி.....!?

    ReplyDelete
  4. என்ன ஒருத்தரையும் காணோம்...ஒரு வேளை Slow-cycle race-ல நாமதான் முன்னாடி வந்துட்டமோ.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா! அசத்தறீங்க ராஜவேல்! :D

      Delete
    2. ஹா ஹா ஹா சூப்பர் ஜி :))
      .

      Delete
  5. ME second after mm rajavel.good morning to editor and all friends . have a nice sunday

    ReplyDelete
  6. டியர் எடிட்டர் சர்ர்,

    இரவு வரும் என கரத்திருந்தரல் நரன் 12 ஆவதர? படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  7. ஐந்தாவது இடம் . தலையின் அட்டையை பார்த்து விட்டாச்சு. நிம்மதியாக இனி தூக்கம் வரும் .

    ReplyDelete
    Replies
    1. //-காமிக்ஸ்' எனும் ஒரு மந்திரச் சொல்லின் மகிமைக்கு மட்டுமன்றி ; தேனீக்கள் போல் அயராது செயலாற்றிய நமது நண்பர்கள் பட்டாளத்தின் உழைப்பிற்கும் கிட்டிய வெற்றி - இந்த சேலத்து படலத்தின் வெற்றி ! 7 சந்தாத் தொகைகள் + 14 மின்னும் மரண முன்பதிவுகள் + தினசரி விற்பனை என ஒரு மொத்தமாய் ரூ.1.20 லட்சத்துக்கு கலெக்சன் //- காமிக்ஸ் மீண்டும் தொடர்ந்து வருவதும் , வண்ண அவதாரும் , குறிப்பிட்ட தேதியில் அல்லது அதற்கு முன்பே நமது இதழ்கள் கிடைப்பதும் , அரைத்த மாவையே அரைக்காமல் புதுப்புது பாணியில் வருவதும் மற்றும் புத்தக விழாக்களில் நீங்களே நேரடியாக களம் இறங்கி வருவதும் தான் சார் , சேலத்தில் நமது காமிக்ஸ் க்கு கிடைத்த வரவேற்புக்கு முதல் காரணம் சார் . நாங்கள் சிறு வயதில் வளர்ந்து வரும் வேளையில் கார்ட்டூன் &பேண்டசி கதைகளும் , எங்கள் டீன் ஏஜ்ஜில் டெக்ஸ் வில்லர் கதைகளை அறிமுகப்படுத்தி தன்னம்பிக்கை ஊட்டியும் , டைகரின் பிரம்மாண்டமான கதை களத்தில் போராட்ட குணத்தையும் , இப்போது லார்கோ மூலம் சேர் மார்கட் & கம்பெனி விபரங்கள் வாயிலாக பிசினஸ் கற்று தந்தும் , கிராபிக் நாவல்கள் என்று எங்கள் ரசணையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றியும் , - காமிக்ஸ்ஐ எங்கள் வாழ்க்கையில் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகவும் செய்த உங்களுக்கு செய்யும் சிறு சேவையாக இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொண்டோம் சார் .சேல்ஸ் மேனாக இருந்து இன்சார்ச் ஆக மாறிய நான் , சேர்மார்க்கட் மற்றும் அனைத்து வித மார்க்கெட்டிங் அனுபவம் உள்ள மாயவி சிவா , ரெடிமேட் கடை வைத்துள்ள கண்ணன் , மருந்து மார்க்கெட்டிங் செய்யும் கார்த்திக் , RO plant மார்க்கெட்டிங் ஶ்ரீதர் , ஆட்டோ மொபைல் டீலர் சுசி மற்றும் முந்தைய 3புத்தக விழாக்களில் கற்ற முன்அனுபவத்துடன் விஜய் என முன்னின்று நடத்திய அத்தனை பேறும் அடிப்படையில் விற்பனையாளர்கள் எனும் போது எங்கள் பணி சுலபமாக வெற்றி இலக்கை அடைந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை சார் .

      Delete
  8. Good morni ng சார் கா.க.கா, சைத்தான் வீடு போன்ற புத்தகங்களை worldmart ல் தனியாக வாங்க listing செய்யுங்கள் சார். monthly packages ஆகவே உள்ளதால் தனியாக இப்புத்தகங்களை order போட வசதி செய்யுங்கள் சார். ப்ளீஸ்.. திருச்சியில் கடைகளில் இப்புத்தகங்கள் இன்னும் வரவில்லை. எனவே தனியாக order போட வசதி செய்யுங்கள் சார். நன்றி..

    ReplyDelete
  9. இந்த வார ஸ்டீல் க்ளா மேற்கிலிருந்து ம.ராஜவேலா......!!??

    ReplyDelete
    Replies
    1. @ கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

      என்னது'ஸ்டீல் க்ளா'வா....!?!?.

      பெருந்தலைகள் ஓய்வெடுக்கும் போதுதான் வெறுந்தலைகள் முகம் காட்டும்.

      Delete
    2. //பெருந்தலைகள் ஓய்வெடுக்கும் போதுதான் வெறுந்தலைகள் முகம் காட்டும்.///

      :) ஃபுல் ஃபார்ம்'ல இருக்கீங்க ராஜவேல்! :)

      Delete
    3. ஹாய் சார், காலை வணக்கம் நண்பர்களே.

      Delete
    4. மேற்கிலிருந்து ம. ராஜவேல். ://பெருந்தலைகள் ஓய்வெடுக்கும் போதுதான் வெறுந்தலைகள் முகம் காட்டும்.//

      Super !!

      Delete
  10. கா.க.கா, சைத்தான் வீடு ஆகியவை இரண்டு புத்தகங்கள் தேவைப்படுவதால் தனியாக listing இருப்பின் வாங்க எளிமையாக இருக்கும் என்பதால் இந்த வேண்டுகோள் சார் . நன்றி. please.

    ReplyDelete
  11. Tex and pondichery will rockzz in december ..

    ReplyDelete
  12. டியர் எடிட்டர் சர்ர்,
    "வரனமே எங்கள் வீதி" 1 & 2 டிசம்பரில் வருவது மகிழ்ச்சி. பரகம் 3 ஆ சர்ர்? தேடி எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. " தல" இன் அட்டை படம் அருமை. இம்முறை " கிட்" இல்லரமலர?

    ReplyDelete
    Replies
    1. பாகம் 3 -ன் ரிலீசே 2015 மே தான் சார் !!

      Delete
    2. இது தெரியரமல் நரன் பரகம் 3 இனை தேடினேன்.

      Delete
  13. டியர் எடிட்டர் சர்ர்,
    "சேலம் " புத்தக திருவிழரவில் 1.2 லட்சம் என்பது மிகப்பெரிய தொகை. இதை சரத்தியமரக்கிய நண்பர்களுக்கு தலை வணங்குகிறேன்.

    நன்றிகள் கோடி உருத்தரகுக.
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
    Replies
    1. திருச்செல்வம் சார் எல்லாம் உங்களை போன்ற நண்பர்களின் அன்பும் ஆதரவும் தான் சேலம் விழா வெற்றியாக அமைந்தது . கடவுளின் அருள் இருந்தால் எதனையும் சாதிக்கலாம் சார் . நாம் அனைவரும் தலை வணங்கவேண்டியது ஆண்டவன் ஒருவனுக்கு மட்டுமே சார் . உங்கள் நன்றியை நண்பர்கள் அனைவரும் நிச்சயம் ஏற்றுக் கொள்கிறோம் சார் .

      Delete
    2. சேலம் புத்தகதிருவிழா பற்றி நிறையவே நண்பர்கள் சொல்லிவிட்டார்கள். பல லட்சம் பிரதிகள் விற்கும் விகடன் பிரசுரத்தை அடுத்து, சேலம் புத்தகவிற்பனையில் லட்சத்தை தொட்ட top 10 ல் நமது காமிக்ஸும் ஒன்று என்பது சொல்லப்படவேண்டிய உற்சாகமான தகவல்...!

      Delete
    3. நண்பர்களே..ஒரு கொடைச்சலில் இருந்து ஒரு வாரம் விடுதலை...! பார்க்க...இங்கே'கிளிக்'

      Delete
    4. இன்பச் சுற்றுலா இனிமையாக அமைந்திட ஈரோடு விஜயின் வாழ்த்துகள் மாயாவியாரே! வரும்போது எனக்கொரு 'மங்கா' வாங்கிட்டு வாங்க! ;)

      Delete
    5. Enjoy மாயாவி.!
      (இது வெளியே.)

      யப்பாடி ஒரு வாரத்துக்கு தொல்லை வுட்டுச்சி.!
      (இது உள்ளே.)

      Delete
    6. // இன்பச் சுற்றுலா இனிமையாக அமைந்திட ஈரோடு விஜயின் வாழ்த்துகள் மாயாவியாரே! வரும்போது எனக்கொரு 'மங்கா' வாங்கிட்டு வாங்க! ;) //

      நம்ம விஸ்வா ஜி கிட்ட சொல்லி வையுங்க கிடைக்கும் :))
      .

      Delete
  14. சர்ர் டிசம்பரில் 5 தரனே? அல்லது 3 ஆ? தலையே வெடித்து விடும் போலுள்ளது.
    நரன் " மின்னும் மரணம்" முன் பதிவில் இருக்கின்றேனர? என தயவு கூர்ந்து அஅறிந்த தருவீர்களா பிளீஸ்??

    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
    Replies
    1. திருச்செல்வம் பிரபரனந் : " மின்னும் மரணம்" முன் பதிவில் நிச்சயம் இருக்கிறீர்கள் ! கவலையே வேண்டாம் !

      Delete
    2. //"மின்னும் மரணம் " முன்பதிவில் நிச்சயம் இருக்கிறீர்கள்.//
      நன்றிகள் கோடி சர்ர்.யிப்பீ! எனக்கு நிச்சயம் புத்தகம் உண்டு.
      உங்கள்
      திருச்செல்வம் பிரபரனந்

      Delete
  15. Sir,

    You have become a better publisher, by keeping suspense 'specials' for subscribers to attract subscriptions. I like it and looking for your special surprise, any clues please?

    ReplyDelete
    Replies
    1. I would like to thank you for the discounted courier rates for annual subscription.

      Delete
  16. //! 2015-ன் சந்தா நண்பர்களுக்கு ஆண்டின் பயணத்தின் போது சின்னச் சின்ன surprises காத்துள்ளன என்பது கொசுறுச் சேதி ! அவை என்னவென்று நீங்களே அவ்வப்போது தெரிந்து கொள்வீர்கள்//- துவக்கத்துலே வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கச் செய்து விட்டீர்கள் சார் . நண்பர்களே அது என்னவென்று ஊகிக்க முடிகிறாதா ?

    ReplyDelete
  17. Graphic Novelகளே எங்கள் வீதி என்று உரக்க சொல்வோம் உலகிற்கு!

    ReplyDelete
  18. சார் எங்க தலய மஞ்சள் சட்டை போட்ட ராமராஜன் கணக்க மாத்திட்டிங்களே :P

    ReplyDelete
    Replies
    1. டவுசரு நீண்டு போச்சி நைனா அத்த கவனிச்சிக்கோ! இன்னா நான் சொல்றது! தலை மஞ்சா சட்டைய வுட மாட்டேங்குரார்ப்பா!

      Delete
  19. இது 'தல'யின் அட்டகாசமான போஸா ? அல்லது பிசியானதொரு டிராபிக் போலீஸ்காரரின் செல்பியா ? என்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் guys ! _தலை எப்படி கைய நீட்னாலும் அட்வெஞ்சர் காத்திருக்குது அண்ணாத்தைங்களா! தலை வாழ்க!

    ReplyDelete
  20. புதுச்சேரியில் எங்கள் பங்களிப்பை நல்க ஆவலாய் உள்ளோம்.முந்தைய பிரஞ்சு மண்ணில் இன்றைய பெல்ஜிய ஹீரோக்கள்' தங்களின் பதிவை எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. //புதுச்சேரியில் எங்கள் பங்களிப்பை நல்க ஆவலாய் உள்ளோம்.///

      அசத்துங்கள் நண்பர்களே! அட்வான்ஸ் வாழ்த்துகள்!!

      Delete
    2. abujack ravanan : //முந்தைய பிரஞ்சு மண்ணில் இன்றைய பெல்ஜிய ஹீரோக்கள்'//

      ஆரம்பமே அமர்க்களமாய் உள்ளதே !!

      Delete
  21. அப்பாடீ,,,,, ஒரு வழியா உள்ள வந்துட்டேன். வணக்கம் நண்பர்களே.!

    ReplyDelete
    Replies
    1. மேச்சேரி -யிலயிலிருந்து உட்சிட்டி க்கு எவ்வளவு தூரம் ???....அந்நியன் -ல விக்ரம் கூட இத்தனை பேர் வச்சுக்கலையே ????...:-)

      ஏன் கண்ணன் இவ்வளவு நாள் லீவு ????..

      Delete
    2. இதை நான் கண்டீப்பா சொல்லியே ஆகணும்.!

      செல்வம் உள்ளிட்ட அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

      கடந்த பத்து நாட்களும் ஒரு குடும்ப விசேசம் தொடர்பான பணிகளும் ஃபங்க்ஷனும் முழுதாக என்னை ஆக்கிரமித்து கொண்டன.

      உறவினர் வருகையால் நிறைந்திருந்த வீட்டில் என்னுடைய மொபைல் குழந்தைகளிடம் மாட்டி படாதபாடு விட்டது.
      நேற்று ப்ளாக்கை பார்க்க முயற்சித்தபோதுதான் தெரிந்தது. கூகுள் ப்ளஸார் என்னிடம் கோபித்துக்கொண்டு அனைத்து செட்டிங்ஸிலும் குளறுபடி செய்துவிட்டார்.
      ஒருவழியாக மூணாவதூ ரவுண்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்ப்பட்டாலும் என்னுடைய அக்கவுண்டை சுத்தமாக லாக் செய்துவிட்டார்.
      பிறகு புது அக்கவுண்ட் ஆரம்பித்தபோது பெயர்மாற்றம் செய்ய வேண்டியதாகிவிட்டது. இனி தொடரலாம் நண்பர்களே.?

      Delete
  22. கதை சொல்லும் படங்கள் .

    ReplyDelete
  23. எடிட்டர் சார்,

    'கிங் ஸ்பெஷலின்' பின் அட்டை அசத்தல்! இதையே முன் அட்டையாக்கியிருந்தால் அனல் பறக்கும் ஒரு ஆக்௺ஸன் எஃபெக்ட் கிடைத்திருக்கும்! முன் அட்டையில் நெஞ்சுக்குக்கீழ் பேண்ட் போட்டதைப்போல நின்றிருக்கும் (ட்ராஃபிக் போலீஸ்) டெக்ஸைப் பார்க்கும்போது ஏனோ சிப்பு சிப்பாக வருகிறது! இந்த உடலளவு விகிதாச்சார மாறுபாடுகள் அவ்வப்போது எங்கள் 'தல'யை மட்டும் பதம் பார்த்துவிடுவதும் ஏனோ? மற்றபடி, அந்தப் பச்சை வண்ணப் பின்புலம் அசத்தல்!

    'தல'யின் 336பக்க சாகஸமான இந்தப் புத்தகத்தையே தீபாவளி மலராகக் களமிறக்கியிருந்திருப்பீர்களானால் பண்டிகைக் கொண்டாட்டங்கள் பன்மடங்காக இருந்திருக்கும். என்னதான் சூப்பர்ஹிட் க்ராபிக்-த்ரில்லராக இருந்தாலும் தீபாவளி போன்ற குஷியான தருணங்களில் 'இ.இ.கொ' போன்ற பரிட்சார்த்த முயற்சிகள் சில நண்பர்களுக்கு ஏமாற்றமாய் அமைந்துவிடுவதை இனிவரும் ஆண்டுகளில் தவிர்க்க முயற்சிக்கலாம் எ.எ.க!

    அப்புறம்... ஒரு தனித்துவமான, மென்மையான காதல் கதையைக் காமிக்ஸாகக் கேட்டால் ... ///காமிக்ஸில் காதல் கதைகள் வந்தாலென்னவென்று ஏங்கும் நண்பர்கள் தற்சமயத்துக்கு இதைக் கொண்டு மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான் !/// என்று சொல்லி ஏமாற்றிவிட்டீர்களே எடிட்டர் சார்! :)

    ReplyDelete
    Replies
    1. //'தல'யின் 336பக்க சாகஸமான இந்தப் புத்தகத்தையே தீபாவளி மலராகக் களமிறக்கியிருந்திருப்பீர்களானால் பண்டிகைக் கொண்டாட்டங்கள் பன்மடங்காக இருந்திருக்கும்.//
      +1
      ஆனால், எனக்கென்னவோ 'தல' டெக்ஸுடன் வந்திருந்தால் 'இ.இ.கொ' இந்தளவுக்கு கவனிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே...டெக்ஸ் கதையுடன் வந்திருந்தால் அதையும் ஒரு முறை மட்டுமே படித்துவிட்டு, அதோடு விட்டிருப்போம்...

      தனி இதழாக வந்ததால் தான் திரும்ப திரும்ப படித்து, அந்தப் புத்தகத்தின் சின்ன சின்ன நுணக்கங்களையெல்லாம் கண்டு வியந்தோம்...ரசித்தோம்...
      ஆகையால் தான் எடிட்டர் 'தல' டெக்ஸ் கதை ரெடியாயிருந்தும்...'இ.இ.கொ' வை மட்டும் வெளியிட்டார் போல...

      சரி...விடுங்க விஜய் அண்ணா..நம்ம 'தல' எப்ப வந்தாலும், எப்படி வந்தாலும் அந்த மாதம் தான் நமக்கு 'தீபாவளி', 'ரம்ஜான்' , 'கிறுஸ்துமஸ்' எல்லாம் தானே... :):):)

      //அப்புறம்... ஒரு தனித்துவமான, மென்மையான காதல் கதையைக் காமிக்ஸாகக் கேட்டால்//
      +100
      'Romance' genre ல் ஒரு காமிக்ஸ் try பண்ணலாமே எடிட்டர் சார்?

      Delete
    2. //ஒரு தனித்துவமான, மென்மையான காதல் கதையைக் காமிக்ஸாகக் கேட்டால் //


      //'Romance' genre ல் ஒரு காமிக்ஸ் try பண்ணலாமே எடிட்டர் சார்?//

      blog -ன் Casanova -க்கள் ;)......

      Delete
    3. ////ஒரு தனித்துவமான, மென்மையான காதல் கதையைக் காமிக்ஸாகக் கேட்டால் //
      +1

      Delete
    4. ////ஒரு தனித்துவமான, மென்மையான காதல் கதையைக் காமிக்ஸாகக் கேட்டால் //

      வேண்டாம் சாமி! why this கொலை வெறி?

      Delete
    5. @பரணி

      வழக்கமான detective, bang-bang, action ரகக் கதைகளினூடே (ஒரே)ஒரு மெல்லிய, விரசமில்லாத காதல் கதையைப் புகுத்திப் பார்ப்பதில் தவறென்ன நண்பரே?

      Delete
    6. போதும் விஜய்! நான் இந்த ஆட்டத்திற்கு வரவில்லை!

      என்னை பொறுத்தவரை காதல் கதைகள் காமிக்ஸ் வடிவில் வருவதை விட சாதாரண கதைகளாக வருவதே நன்றாக இருக்கும்.

      மீண்டும் ஒருமுறை எனக்கு நமது காமிக்ஸ்ல் காதல் கதைகள் தேவை இல்லை.

      Delete
    7. Erode VIJAY & others : யோசித்துப் பாருங்களேன் - பார்க்கில் உட்கார்ந்து ஒரு ஜோடி போடும் கடலையை ஓவியர் எத்தனை வித angle களில் தான் சித்தரிப்பார் ? அட..போங்கப்பா..என்று மூட்டையைக் கட்டி விட மாட்டாரா ? ஒருவரை ஒருவர் மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டே ஓசையின்றி பேசிக் கொள்ளும் போது டயலாக் எழுதவோ ; பஞ்ச் வைக்கவோ அவசியமே இராது !! அது ஒன்று தான் பிளஸ் point !

      Delete
  24. இனிய காலை வணக்கம் விஜயன் Sir
    எனக்கு விமானமித்தின் மீது காதல் உண்டு , ஆங்கிலத்தில் விமானம் பின்னணி உள்ள நாவல்கள் படிப்பதுண்டு
    கிராபிக் நாவல்- விமானம், நட்பு, நேசம், போர் கலந்த "வானமே எங்கள் வீதி" ரொம்ப ஆவலோட எதிர்பார்கிறேன்
    நான் NCC-Airwing Divisionல் இருந்த போது டிசம்பர் மாதத்தில் முதன் முறையாக இரண்டு சீட் விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைத்தது,
    டிசம்பர் மாதத்தில் "வானமே எங்கள் வீதி" நீங்கள் வெளி யீடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி

    ReplyDelete
    Replies
    1. தமிழில் முதல் கமெண்ட்? சூப்பர்!

      //நான் NCC-Airwing Divisionல் இருந்த போது டிசம்பர் மாதத்தில் முதன் முறையாக இரண்டு சீட் விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைத்தது, ///

      அதிர்ஷ்டசாலிதான்! :)

      Delete
    2. @ Vijay
      Thank You Friend, got lucky with that chance, but didn't get chance to learn to fly the plane

      This is not first time I'm posting comment in Tamil
      PC has some problems, whenever it works I use PC to post comments in Tamil :)


      Delete
    3. //நான் NCC-Airwing Divisionல் இருந்த போது டிசம்பர் மாதத்தில் முதன் முறையாக இரண்டு சீட் விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைத்தது, //

      tambi Mani school aah?

      Delete
    4. i had same experience in same NCC camp long ago in sulur aero drum!

      good to know you too had the same!

      :D

      Delete
    5. Nope , got the chance during my first year of college
      In Sitra Airport

      Delete
    6. SeaGuitar9 : ரொம்ப ரொம்ப காலத்துக்கு முன்பு - சிவகாசி போஸ்ட் ஆபீசில் ஏதோ training -ன் பொருட்டு திண்டுக்கல் நகரைச் சார்ந்ததொரு இளைஞர் வந்திருந்தார் ! சமயம் கிடைத்த போது நம் அலுவலகத்துக்கு வந்தவர் - தானொரு தீவிர ரோபோ ஆர்ச்சி ரசிகன் என்றும், அதன் காரணமாகவே எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒரு ஈர்ப்பு உண்டாகியுள்ளது என்றும், அது சார்ந்த படிப்பினில் நுழைந்திட முயற்சிக்கப் போவதாகவும் சொன்னது நினைவுள்ளது !

      அதைப் போல விமானங்கள் மீதொரு ஆர்வம் உண்டாகி அந்த மார்க்கத்தினுள் நம் நண்பர்கள் நுழைந்திட "வா.எ.வீ" போன்ற கதைகள் உதவினால் சூப்பர் தான் !!

      Delete
  25. புதியக் கதை ; புதியக் களம் ; அழகான சித்திரங்கள் ; அழுத்தமான வர்ணங்கள் - என ''வானமே எங்கள் வீதி'' மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஒரு நட்பின் கதை ; ஒரு யுத்தத்தின் கதை ; ஒரு மெல்லிய நேசத்தின் கதை - என்று என்ன தான் நீங்கள் கோடிட்டு காட்டியிருந்தாலும் கதை எப்படிபட்டதாக இருக்கும் என்று யூகிக்கவே இயலவில்லை. கதையைப் படிக்கும் போது ஏற்படும் உணர்வுகள் எப்படி இருக்கக் கூடும் என்று அறிய மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. +1
      me too ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் !

      Delete
    2. மிஸ்டர் மரமண்டை & Satishkumar S : காத்திருப்பு அதிக நாட்களுக்கல்ல !

      Delete
  26. டியர் விஜயன் சார் இந்த கிராபிக் நாவலை பற்றி எனக்கு அதிக எதிர்பார்ப்பு கிடையாது.நான் மட்டுமல்ல நண்பர்கள்பலரும் அடுத்த மாதம் எதிர்பார்திருப்பது டெக்ஸைதான்.நான் கல்லூரியில் படித்துகொண்டிருந்தபோது.பம்மல்Kசம்மந்தமும் அழகியும் ஓன்றாக வெளிவந்தது.முதலில் எல்லோருடைய சாய்சும் கமல் படம்தான் என்பதை நான் சொல்லவே தேவையில்லை,அழகி காற்று வாங்கியது.கடைசியீல் எது ஜெயித்தது என்பதை சொல்லவும் வேண்டுமா.அதனை போல சைலன்டாக வரும் கிராபிக் நாவலும் ஹிட் அடிக்குமா என்பதை பொருத்துதான் பார்க்கவேண்டும்.ஆனாலும் அடுத்த மாதம் புத்தகம் கைக்கு கிடைத்தவுடன் நான் முதலில் படிக்க விரும்புவது தலை கதையைதான் என்பதை சொல்லவும் வேண்டுமா.கிராபிக் நாவல் அழகியைபோல் வெற்றி பெறுமாஇல்லை லேட்டஸ்ட் தங்கர் படம்(டைட்டில் நியாபகம் இல்லை படத்தின்ஹூரோ சாந்தனுவை ஓரம் கட்டிவிட்டு இவர் தகரஅடி அடித்திருப்பாரே) பயங்கர விமர்சனத்தை சந்திக்குமா என்பதை கிராபிக் நாவல் ரசிகர் தவிர்த்து பாமர மாயாவி ரசிகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என நினைத்தாலே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது:-)

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar, Salem : மாயாவி ரசிகர்கள் பாமரர்கள் என்ற ரீதியிலான சிந்தனையே தவறாகாதா ?

      Delete
  27. To: Edit,
    அட்டைப்படங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் (நமது வழமையான பளீளீளீளீளீச்ச்ச்ச்ச்.. வர்ணங்கள் குறைவாக) அழகாக உள்ளன! இதே பாணியில் நமது மீள் வருகை நாயகர்களின் அட்டைகளையும் அமைத்து வித்தியாசமான அனுபவத்தை எமக்கு கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    'வானமே எங்கள் வீதி' கதைச் சித்திரங்கள் அருமையாக உள்ளன. எதிர்பார்ப்பு மேலும் மேலும் அதிகரிக்கிறது! உங்கள் மற்றும் ஜூனியரின் தேடல்கள் தொடரட்டும். நண்பர்கள் அவ்வப்போது கோடிட்டுக்காட்டும் தொடர்களையும் கவனத்தில் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    Note: இப்போது அட்டைகளில் கதைகளின் டைட்டில் டிசைனில் அவ்வளவாக நேரம் செலவிடுவதாக தெரியவில்லை. வானமே எங்கள் வீதி - மிக மிக சிம்பிளாக உள்ளது. வல்லவர்கள் வீழ்வதில்லை! - இந்த டைட்டில் அந்த பெயருக்கேற்ப பொருத்தமாக அதிரடியாக இருக்கவேண்டாமோ? கொஞ்சம் கவனியுங்கள். (இது இவை இரண்டுக்குமட்டுமல்ல - சமீப கால இதழ்களில் தொடர்ச்சியாக கவனித்தது!)

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. // 2015-ன் சந்தா நண்பர்களுக்கு ஆண்டின் பயணத்தின் போது சின்னச் சின்ன surprises காத்துள்ளன என்பது கொசுறுச் சேதி ! //

    சார்.! மியாவி ஏற்படுத்திய அதிர்ச்சியே இன்னும் குறையல. மறுபடியும் சர்ப்ரைஸா.???
    வேற மாதிரி இருந்தா நன்னாருக்கும் சார்.!!

    ReplyDelete
  30. புதுவை புத்தக திருவிழாவிற்கு முதல் முறையாக வருகைதரும் நமது காமிக்ஸ், சிங்கநடைபோட்டு சிகரம் தொட புதுச்சேரி காமிக்ஸ் நன்பர்கள் சார்பாக வரவேற்று வாழ்த்தி மகிழ்கிறோம்!!

    கூடவே எடிட்டர் அவர்களும் வருகை தந்தால் எங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்!

    ReplyDelete
  31. 2015-ன் சந்தா நண்பர்களுக்கு ஆண்டின் பயணத்தின் போது சின்னச் சின்ன surprises காத்துள்ளன என்பது கொசுறுச் சேதி ! // என்ன சார் அது ,சீக்கிரம் சொல்லுங்க

    ReplyDelete
  32. இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  33. King special gonna be a super hit
    Waiting for TeX and Carson's entry in December
    Where is Kit, missing on the poster
    Informed my Professor about Steel Claw's Re-entry in January,
    My professor is happy n planned to get them
    Happy Sunday Vijaysan Sir

    If possible in the coming year,please bring NBS also like Thanga Kallarai :)

    ReplyDelete
    Replies
    1. //If possible in the coming year,please bring NBS also like Thanga Kallarai :)//

      special +1

      Delete
    2. ஹ ...ஹா...ஹா ...நண்பர் seaguitar .....தனது கமெண்ட் -க்கு தானே +1 போடுவதை இப்போதுதான் பார்க்கிறேன் ....:-) .....நீங்கள் NBS -ஐ எவ்வளவு விரும்புகிறீர்கள் என என்னால் புரிந்து கொள்ள முடியும் ......அதற்காக நானும் ...

      special +100

      Delete
    3. SeaGuitar9 : அதே விலையில் திரும்பவும் விற்க முடிந்தால் தவிர அது 'மறுபதிப்பெனும்' பட்டியலுக்குள் அடங்காது ! தற்போதைய மறுபதிப்புப் programme -ல் உள்ள லார்கோ ; தங்கக் கல்லறை இதழ்களின் பின்னிருந்த black & white பக்கங்களைக் காலி செய்து விட்டு அதே ரூ.100 விலைக்குள் அடக்கிட வாய்ப்புள்ளது ! ஆனால் NBS -ஐ திரும்பவும் அதே விலையில் தயாரிக்க துளி கூட வாய்ப்பு கிடையாது ! தவிர, பைண்டிங்கில் அதுவொரு தலைநோவும் பணி ; சிறு அளவுகளுக்காக மீண்டுமொருமுறை செயல்படுத்துவது மிக மிகக் கடினமே !

      So இப்போதைக்கு நானும் +1 தான் போட்டுக் கொள்ள முடியும் !!

      Delete
    4. Good eve Vijayan Sir
      Was waiting for or replies to all :)
      Understood Sir, I know if has been a easy part, you would have done NBS reprint without us making request
      I became Largo fan too after going through his adventures
      If NBS is not possible
      Can You try for Largo's Concrete Kanagam Newyork alone Sir, not immediately in January, but in the middle of the year when there is time?

      Delete
    5. //ஆனால் NBS -ஐ திரும்பவும் அதே விலையில் தயாரிக்க துளி கூட வாய்ப்பு கிடையாது ! தவிர, பைண்டிங்கில் அதுவொரு தலைநோவும் பணி ; சிறு அளவுகளுக்காக மீண்டுமொருமுறை செயல்படுத்துவது மிக மிகக் கடினமே ! //

      but edit sir, it is land mark book! there is high demand in black market( :( ) do consider reprinting it as a limited edition or book fair book( if required do hike the price even double the price is less than black market price). or at-lest reprint Largo's Concrete Kanagam Newyork alone Edit sir!

      Delete
  34. வாவ்...'வானமே எங்கள் வீதி' & 'வல்லவர்கள் வீழ்வதில்லை' இரண்டு கதைகளுமே அட்டகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...
    'தல' வருவதால் டிசம்பரில் தான் எங்களுக்கு நிஜமான தீபாவளி!!!

    ஆனால், டெக்ஸ் முன் அட்டைப்படம் தான் லேசாக உறுத்துகிறது...
    'வல்லவர்கள் வீழ்வதில்லை' பின் அட்டைப்படத்தில் உள்ள 'தல' யின் கம்பீரம் முன் அட்டையில் இல்லையே எடிட்டர் சார்...
    முன் அட்டைப்படத்தைப் பார்க்கும்பொழுது, 'மச மச ன்னு உட்கார்ந்திருக்காம... போ...போய்...வறுத்த கறியும் பீன்ஸும் ரெடியாயிடுச்சானு பார்த்துட்டு வா" ன்னு சொல்ற மாதிரியல்ல இருக்கு?!!

    அனால், 'வானமே எங்கள் வீதி' யின் அட்டைப்படங்கள் இரண்டும் அருமையாக உள்ளது!!! நல்ல ரசனையான design!!!
    புத்தகத்தில் பார்க்கும்பொழுது இன்னும் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது....

    //2015-ன் சந்தா நண்பர்களுக்கு ஆண்டின் பயணத்தின் போது சின்னச் சின்ன surprises காத்துள்ளன என்பது கொசுறுச் சேதி ! அவை என்னவென்று நீங்களே அவ்வப்போது தெரிந்து கொள்வீர்கள் !//
    ஆஹா..என்ன surprise எடிட்டர் சார் அது...?
    நான் ஈரோடு ஸ்டாலின் அண்ணனிடமே 2 வருடங்களாக புத்தகம் வாங்கி வருவதால் அவரிடமே 2015 க்கும் order கொடுத்து விட்டேனே...திடீரென்று நீங்கள் என்னாடானா surprise அது இதுன்னு சொல்றீங்களே...
    courier charge free, discount போன்ற surprise என்றால் ok...ஆனால், 2015-ன் சந்தா நண்பர்களுக்கு மட்டுமென ஏதாவது காமிக்ஸ் புத்தகம் போட்டு விடாதீர்கள் சார்!!!

    'இரத்தப்படலத்தோடு' சரி, அதன்பிறகு தங்கள் வெளீயிட்டீன் எந்த புத்தகத்தையும் (மியாவி உட்பட) மிஸ் பண்ணாமல் வாங்கி வருகிறேன் எடிட்டர் சார்...

    ReplyDelete
  35. சார் ...சேலம் புத்தக காட்சியின் இந்த வெற்றியை நானும் எதிர் பார்க்க வில்லை என்பது தாம் உண்மை .காரணம் மூன்று ..,நான்கு வருடங்களுக்கு முன் சேலம் புத்தக காட்சியை நான் பார்க்கும் பொழுது ஒரே அரங்கமாக ( அனைத்து பதிபகதிற்க்கும் ஒரே குடையின் கீழ் ) காணும் நிலையும் ..,எப்பொழுது நோக்கினாலும் ஒருவரோ ...இருவரோ அங்கே நிற்பது தான் நான் பார்த்தது . நண்பர் வெங்கடஷ் அவர்கள் இங்கே நம்மை கலந்து கொள்ள இங்கே பதிவு இட்ட போது....அப்பொழுதே கண்டிப்பாக நாம் இங்கே "கடை விரித்தால் " உங்கள் கொஞ்சம் எதிர் பார்ப்பும் ஏமாந்து தான் போகும் என பதில் சொல்ல நினைத்தேன் . ஆனால் நண்பர் வெங்கடெஷ் அவர்கள் தவறாக நினைப்பார்களோ....என்ற எண்ணமும் ....முதல் முறையிலேயே "எதிர் சிந்தனை மாற்று கருத்தை " இங்கே திணிக்க வேண்டுமா என்ற சிந்தனையையும் தோன்றி நான் "மௌனம்மாகி " விட்டேன் .

    ஆனால் கடைசி நாள் நான் புத்தக காட்சி அன்று சென்ற பொழுது ஈரோட்டை போல பெரிதாக இல்லை எனினும் அங்கே போலவே சிறந்த முறையில் ஒவ்வொரு அரங்கமும் ....நமது ஸ்டாலில் நண்பர்களின் பங்களிப்பும் உண்மையில் வியக்க வைத்தது .நமது இந்த வெற்றிக்கு கண்டிப்பாக வெங்கடேஷ் அவர்களும் ....மற்றும் சேலத்து அனைத்து காமிக்ஸ் நண்பர்களும் தாம் ( கண்டிப்பாக நான் இல்லை.... எனது பங்கு ஒரு நாள் சென்றதுடன் மற்றும் சந்தா கட்டியதுடன் முடிந்து விட்டது ).....

    அவர்களுக்கு எனது மன மார்ந்த .....நன்றிகள் ...வாழ்த்துக்கள் நண்பர்களே ....

    ReplyDelete
    Replies
    1. "நான்தான் அப்போவே சொன்னேன்ல; விற்பனை ச்சும்மா பிச்சுக்கிட்டு போகும்னு" என்றெல்லாம் உதார் விடாமல், உள்ளதை உள்ளபடியே சொல்லிடும் உங்களின் நேர்மையான (வெள்ளை) மனதுக்கு ஈடுஇணையே கிடையாது தலீவர் அவர்களே! :)

      Delete
    2. தலீவர் பாட..செயலாளர் வாசிக்க - அட..அட..!

      Delete

    3. //தலீவர் பாட..செயலாளர் வாசிக்க - அட..அட..! //

      Lol +1

      Delete
  36. Just now noted, for "Vaname Engal Veethi" Coloring was done by a lady Artist, There are Lady artists in the field, but I guess this is the first a Lady Artist's Pic is appearig in our comics, the Coloring is superb, especially the blue

    ReplyDelete
    Replies
    1. //Just now noted, for "Vaname Engal Veethi" Coloring was done by a lady Artist, There are Lady artists in the field, but I guess this is the first a Lady Artist's Pic is appearig in our comics,//

      art have no gender bias
      +1

      Delete
    2. @ FRIENDS : பெண் படைப்பாளிகளும் நிறையவே இத்துறையினில் உண்டு ! சிறுகச் சிறுக வெளிச்சப் பார்வை படைப்பாளிகளின் மீதாய் விழும் வேளைகளில் அவர்களது அடையாளங்கள் வெளி வருகின்றன !

      இதிலொரு குட்டி highlight என்னவென்று சொல்லவா ? 'வானமே எங்கள் வீதியின்' வர்ண அமைப்பாளரின் நிஜப் பெயர் பாட்ரிசியா டில்கின் ! இக்கதையின் ஓவியர் ஆலன் தான் இவரது கணவரும் கூட ! So இதுவொரு குடும்பத் தயாரிப்பு !!

      Delete
    3. Getting to know about the Story Artists is very nice and interesting Sir

      Delete
  37. ஆசிரியர் சார் ....தாங்கள் கூறிய படி "கிராபிக் நாவல் " கதை வரிசையில் பழைய படி இல்லாமல் சிறந்ததை ரசிக்கிறோம் என்பது உண்மை .ஒரு சிப்பாயின் சுவடுகள் போலவோ ...கிரீன் மேனர் போலவோ இப்போது வரும் கிராபிக் நாவல்கள் எங்களை சோதனை செய்ய வில்லை என்பது உண்மை .படித்தவுடன் பரவாயில்லை ...கதை நல்லா இருக்கு என்ற எண்ணம் தலை தூக்கும் அதே சமயம் ...

    ஒரு டெக்ஸ் வில்லர் ..லார்கோ...ஷெல்டன் ..லக்கி ...போல ஒரு ஆவல் கலந்த எதிர் பார்ப்பை அது இன்னும் ஏற்படுத்த வில்லை என்பதும் உண்மை .எனவே "கிராபிக் நாவலை " பயன் படுத்துங்கள் சார் ...ஆனால் "தொட்டு கொள்வது " போல மட்டும் பரிமாறுங்கள் .....உணவாக வேண்டாம் :​)

    ReplyDelete
  38. சார் .."கிங் ஸ்பெஷல் " பின் அட்டை படத்தை முன் பக்கம் வைத்திருந்தால் கலக்கலாக இருந்திருக்கும் ....முன் அட்டை கொஞ்சம் "சுமார் "போல தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரிய வில்லை ....ஆனால் கதை கலக்கி விடும் என்பது 100% உண்மை ....
    ************************
    நண்பர் ஒருவர் கருத்து படி சந்தா கட்டியதற்கான " sms " தகவல் அளித்ததிற்கு நன்றி சார் ...பாராட்டுகள் ......

    *************************

    சந்தா கட்டுபவர்களுக்கு "ஒரு போனஸ் " வேறு காத்திருக்குதா....சூப்பர் சார் ....என்னவென்று ஆவலுடன் "ஆ ..." வென்று காத்திருக்கிறேன் :-)

    ****************************

    ReplyDelete
    Replies
    1. //சந்தா கட்டுபவர்களுக்கு "ஒரு போனஸ் " வேறு காத்திருக்குதா....சூப்பர் சார் ///

      தலைவர் அவர்கள் தாய விளையாட்டை கேட்டு வாங்க வேண்டியதிருக்குமோ என்னவோ! ;)

      Delete
    2. அப்படியே .....ஒரு "டெக்ஸ் " ப்ளோ -அப் " ஒன்றும் இருக்குமோ என்னவோ .....தெரியலையே ....செயலாளர் அவர்களே ......

      நீங்கள் எப்படியாவது ஒரு போராட்டம் செய்து "ஓட்டைவாய் உலக நாதன் "அவர்களை இங்கே வர வைக்க வேண்டும் .தலை வெடித்து விடும் போல உள்ளது .

      போராட்டம் முடியும் வரை நான் "உண்ணும் விரதத்தை "கடை பிடித்து விட்டு வந்து விடுகிறேன் . :-)

      Delete
  39. Hi,
    எனக்கு million special and தீபாவளி special வந்து சேர்ந்தது. நன்றி.
    2 புத்தகங்களுமே வண்ணத்தில் மிக அருமை.

    புத்தகங்களுடன் வந்த 2015 அட்டவணை பூரண திருப்தி மற்ற நண்பர்களை போலவே. B & W இல் இரசிக்க முடிகிற கதைகள் B & W இல் தொடறது தான் சிறப்பு. (tex , மார்ட்டின் , மாடஸ்டி போன்றவை). சில special களில் tex ஐ கலரில் வருவது ok ஆயினும், lion 250 spcial tex முழுமையாக வண்ணத்தில் என்னும் போது, 450 ரூ. எனும் budget (= LMS budget ) தான் இடிக்கிறது. டெக்ஸ் ஐ B & W இல் (கூடுதலாக )ரசிக்க முடிவதால்,அதே special B & W இல் வந்தால் என்னும் விலையை குறைக்க முடியும். அல்லது கதைகளை என்னும் கூட்டி குண்டு புத்தகமா மாற்ற முடியும். (எ.எ.க. :))

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன் niru!
      ஆனால்,
      "லயன் - 250வது ஆண்டு மலர்" என்ற சிறப்பு-அடையாளம் தாங்கியதொரு மைல்கல் இதழுக்கு 'முழுவண்ணம், சற்றே கூடுதல் விலை' ஆகியவை நியாயம் சேர்த்திடும் காரணிகளாக அமைந்திடுவதிலும் தவறில்லையல்லவா? :)

      Delete
    2. // டெக்ஸ் ஐ B & W இல் (கூடுதலாக )ரசிக்க முடிவதால்,அதே special B & W இல் வந்தால் என்னும் விலையை குறைக்க முடியும். அல்லது கதைகளை என்னும் கூட்டி குண்டு புத்தகமா மாற்ற முடியும். (எ.எ.க. :)) //
      but our color carson was big hit too( i understand its exceptional as best of TEX)) !
      your point is mostly true!

      Delete
    3. ஆனால்,
      "லயன் - 250வது ஆண்டு மலர்" என்ற சிறப்பு-அடையாளம் தாங்கியதொரு மைல்கல் இதழுக்கு 'முழுவண்ணம், சற்றே கூடுதல் விலை' ஆகியவை நியாயம் சேர்த்திடும் காரணிகளாக அமைந்திடுவதிலும் தவறில்லையல்லவா? :) #

      ஆனால் ...பாருங்கள் செயலாளர் அவர்களே ...நமது கொள்ளு பேரன் ..பேத்திகள் அனைவரும் நம்மை போல "தலையை "ரசிக்க வேண்டும் லயன் 250 வது ஆண்டு மலரில் என்ற உங்கள் உயர்ந்த மனதை பாராட்ட நினைத்தாலும் நம்மால் அதை ரசிக்க முடியுமா என்ற கோபமும் வருகிறது ...

      என்னமோ போங்க செயலாளர் அவர்களே ....நாலு போலீசாரும்...நல்லா இருந்த ஊரும் போல நாமளும் ..நம்ம போராட்ட குழுவும் ...:-)



      Delete
    4. niru : முழுக்க வண்ணத்தில் லயன் # 250 ஐப் பார்க்கும் போது நிச்சயமாய் குறையேதும் தோன்றாது ! தவிர, பக்கங்களைக் கூட்டி இன்னமும் (டெக்ஸ்) கதையொன்றைப் புகுத்துவதென்பது overkill ஆகிபோகும் !

      Delete
    5. Paranitharan K & ஈ.விஜய் @ "லயன் - 250வது ஆண்டு மலர்" - "லயன் - 250வது இதழ்" என்பதே சரியானது!

      Delete
    6. ஆங்! நன்றி பரணி! "லயன் 250வது இதழ்-ஆண்டு மலர்" என்பதே சரி! :)

      Delete
  40. மை டியர் மானிடர்களே !!!

    I Ritan.I Am Fain.I Cum Bag ;-)

    ("உன் இங்கிலீஸ்ல நைட்ரோ கிளிசரின ஊத்த" என்கிறீர்களா...ஹிஹி!!!)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா! Well cum bag சாதான்ஜி! :)

      Delete
    2. சாத்தான்ஜி !உடல் முழுமையாக தேறி விட்டது போல் காண்கிறது ....பழைய கிண்டல் அப்படியே !!!...:)........welcome back !

      Delete
    3. அய்யோ.!
      "மம்மி ' ரிட்டர்ன்ஸ்.!

      Delete
    4. அய்யோ.!
      "மம்மி " ரிட்டர்ன்ஸ்.!

      (அதுவும் டப்பிங் மம்மி.)

      Delete
    5. //"மம்மி " ரிட்டர்ன்ஸ்.!

      (அதுவும் டப்பிங் மம்மி.)//

      LOL. :D

      Delete
    6. Hello Saint Satan
      Good to know that U R I good shape

      Delete
    7. வருகைக்கு வாழ்த்துக்கள் சாத்தான் ஜி ... :-)


      Delete
    8. நன்றி நண்பர்களே ! வானமே நமது வீதி.வல்லவர்களாகிய நாம் வீழ்வதில்லை:)

      Delete
  41. சார் , விமானங்கள் மேல் ஆவல் எப்போதும் குறைய போவதில்லை .....பறவைகள் பறப்பதை ரசிக்கும் மனிதருக்கு ... அட்டை படம் அசத்தல் .....கதை காட்டி நீங்கள் கூறி உள்ள சுவாரஸ்யமான பதிவுகள் கதை மேல் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்புகளை விதைத்த போதிலும் , இப்போது அதனை மேலும் தூண்டி விட தயங்க வில்லை ! டெக்ஸ் கதையா விட இதனை பெரிதும் எதிர்பார்க்கிறேன் .
    டெக்ஸ் அடை படம் அசத்தல் டைகரை தவிர்த்து .....போ என எச்சறிக்கிறாரோ டெக்ஸ் .
    சேலம் வெற்றி சந்தோஷ பட வைக்கிறது. நண்பர்களுக்கு வாழ்த்துகள். மின்னும் மரணம் தயாராகுமா ஜனவ ரிக்கு !

    ReplyDelete
    Replies
    1. சார் அட்டை படத்தில் டெக்ஸ்ன் நண்பர் டைகருக்கு பதிலாக ...ப்ளூ பெர்ரி டைகர கொடுத்து வரைய சொன்னது யார்ன்னு தெரியனும்.....அத டெக்ஸ் கூட கண்டு பிடிச்சு வெளியே போ 'ன்னு வெரட்டுறாரே அதக் கூட நீங்க பாக்கலியா !

      Delete
    2. @ ஸ்டீல்

      //சார் அட்டை படத்தில் டெக்ஸ்ன் நண்பர் டைகருக்கு பதிலாக ...ப்ளூ பெர்ரி டைகர கொடுத்து வரைய சொன்னது யார்ன்னு தெரியனும்.....அத டெக்ஸ் கூட கண்டு பிடிச்சு வெளியே போ 'ன்னு வெரட்டுறாரே அதக் கூட நீங்க பாக்கலியா !///

      ஹாஹாஹா! அட்டகாசம் ஸ்டீல்! சிரிப்பை அடக்கவே முடியல! :D

      Delete
    3. //சார் அட்டை படத்தில் டெக்ஸ்ன் நண்பர் டைகருக்கு பதிலாக ...ப்ளூ பெர்ரி டைகர கொடுத்து வரைய சொன்னது யார்ன்னு தெரியனும்.....அத டெக்ஸ் கூட கண்டு பிடிச்சு வெளியே போ 'ன்னு வெரட்டுறாரே அதக் கூட நீங்க பாக்கலியா !//

      !



      //மின்னும் மரணம் தயாராகுமா ஜனவ ரிக்கு !//
      same quiestion Edit sir?

      Delete
    4. டொக்சு கதை வருதுன்னு தங்க தலைவனை வம்பிழுக்கிற வேலை எல்லா வேணா.... உங்க ஆளு உள்ளூர் ஸ்டாரு .... தங்க தலைவன் உலக சூப்பர் ஸ்டார் !!!

      Delete
    5. அண்ணன் கவுண்டரின் ஊரில் குசும்புக்குப் பஞ்சமா இருக்கப் போகிறது ??!

      Delete
  42. //"வானமே எங்கள் வீதி - பாகம் 1 & 2//

    details share are more than a teaser its more than a trailer too, thanks a lot Edit sir!

    Its making more curious to see the book, when it will be in our hands Edit sir?

    ReplyDelete
  43. வெல்கம் டு புதுச்சேரி சார்... நண்பர்கள் எங்களால் முடிந்த உதவிகளை செய்ய ஆவலுடன் இருக்கிறோம். நீங்களும் ஒரு விசிட் அடிக்கலாமே சார்..

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில் : நிச்சயம் முயற்சிப்பேன் !

      Delete
  44. டெக்ஸ் அட்டைப் படத்தைவிட., வா.எ.வீதி அட்டைப்படம் சூப்பர் சார்.! கதையும் கலக்கலாக இருக்கும் போலிருக்கே.?!

    ReplyDelete
    Replies
    1. கிட் ஆர்ட்டின் KANNAN : எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது !

      இம்மாத டெக்ஸ் சாகசம் கூட ஒரு offbeat முயற்சி !

      Delete
    2. //Edit: இம்மாத டெக்ஸ் சாகசம் கூட ஒரு offbeat முயற்சி ! //

      !

      :)

      Delete
  45. Seems like most of e people want "Minimum Maranam" in January
    Let's wait n get more bookings in Pondicherry and Chennai book fair, I hope Chennai book fair will get few more bookings for it
    With less numbers Minimum Maranam coming in January is not fair for Captain Tiger n for our comics

    ReplyDelete
  46. I am waiting eagerly for new genre comics(graphics, one shot hand drawn, new story in new field, etc...) Edit sir, no reason to worry bring it on, I am sure new generation will grace it, bring it with confidence Edit!

    ReplyDelete
  47. நண்பர்களே.!
    கடந்த பதிவில் நண்பர் யுவா கண்ணன் பற்றி நண்பர் ஈரோடு விஜய் ஒரு செய்தி சொல்லியிருந்தார்.!(விஜய்க்கு யாரோ அந்நிய சக்திகள் தவறான தகவல் தந்துள்ளனர்.)
    நண்பர் யுவா கண்ணன் தனது கடைக்கு லீவு விட்டு புக்ஃபேரில் கலந்துகொள்ளவில்லை. அவரது அண்ணன் (அவரும் காமிக்ஸ் வாசகர்தான்.) கடையில் இருந்துகொண்டே யுவா கண்ணனை ஸ்டாலுக்கு அனுப்பிவைத்தார்.
    எனவே சேலம் யுவா கண்ணன் தனது தொழிலை கெடுத்துக்கொண்டு ஸ்டாலில் நேரம் செலவிடவில்லை என்பதை தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறேன்.!,
    எனவே யாரும் "வருத்தப்பட"தேவையில்லை நண்பர்களே.!

    ReplyDelete
  48. விஜயன் சார், இந்த மாத லார்கோ கதை அருமை. சமுகத்தில் (உலகம் எங்கும்) இன்றும் நடந்து வரும் ஒரு கொடுமையை மையமாக கொண்டு ஒரு கதை, விறுவிறுப்பாக இருந்தது! வழக்கமான லார்கோவின் காதல் செட்டைகள் இல்லை, ஆனால் அந்த வேலையை இந்த முறை சைமன் பார்த்து கொண்டார்.

    நமது சேலம் புத்தக திருவிழா வெற்றி முழுவதும் நமது சேலம் சுத்துபட்டியில் உள்ளவர்களையே சாரும், அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

    வா.எ.வீ. முன் அட்டை படம் அருமை, இது நேரில் பார்க்கும் போது இன்னும் நன்றாக இருக்கும்; எனது மகள் விமான விரும்பி, அவள் இதில் உள்ள படம்களை ஆர்வமுடன் பார்க்க விரும்புவாள். ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன்.

    அடுத்த மாதம் வரும் புத்தகம்களின் எண்ணிக்கை பற்றி கடந்த பதிவில் கேட்டு இருந்தேன், முடிந்தால் இந்த முறை பதில் சொல்லவும்.

    அடுத்த வருடம் வரும் "C" சந்தாவில் 12 கதைகளுக்கு மேல் வரவுள்ளதாக மனதில் தோன்றுகிறது; அதில் அனேகமாக டெக்ஸ் வில்லரின் பழைய சிறந்த கதைகள் வரகூடும் என நினைக்கிறன்.

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் கதையின் பின் அட்டையில் ஒரே துப்பாக்கிமயமாக உள்ளது, ஒவ்வொருவரும் அவரவர் ஸ்டைல்ல போஸ் கொடுத்த மாதிரி இருக்கு. முன் அட்டையில் டெக்ஸ் போக்குவரத்தை சரிசெய்பவர் மாதிரி போஸ் கொடுத்துள்ளதை பார்த்தால் சிரிப்புத்தான் வருது.

      Delete
    2. Parani from Bangalore : //அடுத்த மாதம் வரும் புத்தகம்களின் எண்ணிக்கை பற்றி கடந்த பதிவில் கேட்டு இருந்தேன், //

      ஏற்கனவே ஆங்காங்கே பதிவிட்டிருந்தேனே - 5 என ! காமிக்ஸ் டைமில் கூட எழுதியதை ஞாபகம் !

      //அடுத்த வருடம் வரும் "C" சந்தாவில் 12 கதைகளுக்கு மேல் வரவுள்ளதாக மனதில் தோன்றுகிறது//

      Nopes ! மறுபதிப்பு டோஸ் இதுவே ஜாஸ்தியோ ஜாஸ்தி ! தவிர ஒரு தொகையை நிர்ணயம் செய்து வசூல் செய்தான பின்பு அதனில் additions ஏற்படுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாது ! திரும்பவும் நூறு ரூபாய் தேவை ; இருநூறு தேவை ! என்று இடையே கடைவிரிப்பது நிச்சயமாய் பெரும்பான்மையினரின் எரிச்சலையே சம்பாதித்துத் தரும் !

      Delete
    3. // திரும்பவும் நூறு ரூபாய் தேவை ; இருநூறு தேவை // நீங்கள் அப்படி கேட்க மாட்டிங்கன்னு தெரியும், வாங்கிய "C" சந்தாவில் அதிக புத்தகம் அல்லது கதைகள் வெளி வரும் வாய்ப்பு உண்டா?

      // ஏற்கனவே ஆங்காங்கே பதிவிட்டிருந்தேனே - 5 என ! காமிக்ஸ் டைமில் கூட எழுதியதை ஞாபகம் ! //
      3+1 பற்றி காமிக்ஸ் டைமில் சொல்லி இருந்தீங்க, 5 பற்றி அங்கு சொல்லாதனதால் இந்த கேள்வி!

      Delete
  49. டியர் விஜயன் சார்,

    //இந்தாண்டின் bestsellers பட்டியலின் பிரதான ஆக்கிரமிப்பாளர்கள் "கி.நா"க்கள் தான் ('விரியனின் விரோதி;தேவ ரகசியம் தேடலுக்கல்ல ; இரவே..இருளே..கொல்லாதே.. ; காலனின் கைக்கூலி )//

    XIII கிளைக் கதைகளைத் தவிர்த்து, கி.நா. முத்திரையுடன் வந்த தே.ர.தே. & இ.இ.கொ. ஆகிய 3 பாகக் கதைகள் ஏகத்துக்கும் இழுவையாக இருந்தன என்பது என் தனிப்பட்ட கருத்து! அழகான ஓவியம் (தே.ர.தே.), வித்தியாசமான கதை சொல்லல் (இ.இ.கொ.) ஆகிய சில அம்சங்களைத் தாண்டி அவற்றை ரசிக்க முடியவில்லை. சுமாரான ஹாலிவுட் Adventure / Whodunit படங்களைப் பார்த்த உணர்வே அவற்றைப் படித்த போது ஏற்பட்டது. ஒருவேளை, இக்கதைகளை ஓரிரு பாகங்களுடன் முடித்திருந்தால் அவற்றின் சுவாரசியம் அதிகரித்திருக்குமோ என்னவோ..

    உலகப் போர் சார்ந்த கதை வரிசையில் கடைசியாக "பிரளயத்தின் பிள்ளைகள்" வந்ததாக ஞாபகம். பொதுவாக WW2 கதைகளைப் படிக்கையில், அதில் வெவ்வேறு நாட்டுச் சிப்பாய்கள் அணியும் சீருடைகள் / தொப்பிகள், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் இவற்றை எல்லாம் ஆவலுடன் கவனிப்பது வழக்கம். அந்த வகையில், "வானமே எங்கள் வீதி"-யின் யுத்த விமானங்கள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

    வா.எ.வீ.-யின் சாக்லேட் ப்ரௌன் அட்டை கவர்கிறது! வ.வீ.-யின் மஞ்சள்+பச்சை அட்டை கவரவில்லை :)

    // டெக்ஸா.. அல்லது பிசியானதொரு டிராபிக் போலீஸ்காரரின் செல்பியா//
    டெக்ஸாவது பரவாயில்லை.. அவருக்கு கீழே ஒருவர் "ஆயா வடை சுடும் போஸில்" உட்கார்ந்திருக்கிறாரே... கவனித்தீர்களா? :P

    ReplyDelete
    Replies
    1. //டெக்ஸாவது பரவாயில்லை.. அவருக்கு கீழே ஒருவர் "ஆயா வடை சுடும் போஸில்" உட்கார்ந்திருக்கிறாரே... கவனித்தீர்களா?///

      ஹாஹாஹா! :D

      'வல்லவர்கள் வீழ்வதில்லை'னு டைட்டிலை வச்சுட்டு, அந்த வல்லவர்களில் ஒருவர் கீழே வீழ்த்து கிடக்கிற மாதிரி படம் போட்டிருக்கும் நம் எடிட்டரின் தைரியத்தைக் கவனித்தீர்களா? ;)

      Delete
    2. //...XIII கிளைக் கதைகளைத் தவிர்த்து, கி.நா. முத்திரையுடன் வந்த தே.ர.தே. & இ.இ.கொ. ஆகிய 3 பாகக் கதைகள் ஏகத்துக்கும் இழுவையாக இருந்தன என்பது என் தனிப்பட்ட கருத்து! ..//

      +2 என்னுடைய கருத்துமே

      தல, டெக்ஸ்-ன் அட்டைகள் சொதப்புவது கொஞ்சம் கூட நல்லாயில்லை

      //டெக்ஸாவது பரவாயில்லை.. அவருக்கு கீழே ஒருவர் "ஆயா வடை சுடும் போஸில்" உட்கார்ந்திருக்கிறாரே... கவனித்தீர்களா?///

      ROFL ..

      Delete
    3. Karthik Somalinga : 'இத்தாலியிலும் வடை உண்டு ! 'என்பதே இன்றைய கண்டுபிடிப்பு ; ஏனெனில் நமது இம்மாதத்து அட்டைப்பட டிசைன் பொனெல்லியின் pinup ஒன்றின் 100% நகலே ! பீட்சாவோடு வடை என்ற combo ??

      Delete
  50. // காமிக்ஸில் காதல் கதைகள் வந்தாலென்னவென்று ஏங்கும் நண்பர்கள் தற்சமயத்துக்கு இதைக் கொண்டு மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான் ! //

    இது ஈரோடு விஜய்க்காக சொல்லப்பட்ட வார்த்தைகள் தானே சார் :))
    .

    ReplyDelete
    Replies
    1. Prabakar T : எல்லாச் சாலைகளும் ரோமாபுரிக்கே என்பது போல எடுத்துக் கொண்டீர்களோ ? ஐயாம் எஸ்கேப் !

      Delete
  51. // இது 'தல'யின் அட்டகாசமான போஸா ? அல்லது பிசியானதொரு டிராபிக் போலீஸ்காரரின் செல்பியா ? என்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் guys //

    ஹா ஹா ஹா சூப்பர் சார் :))
    .

    ReplyDelete
  52. // சகலமும் வணிகமயமாகி விட்ட இந்நாட்களில் - எவ்வித பிரதிபலன்களும் எதிர்பாராது இவ்வித உழைப்பை வழங்குவது நம் காமிக்ஸ் வாசகக் குடும்பத்துக்கு மட்டுமே சாத்தியமென்று தோன்றுகிறது ! செல்லும் ஒவ்வொரு ஊரிலும் நம்மை திணறச் செய்யும் இந்த வாசக அன்பு மழை சேலத்தில் ஒரு உச்சத்தைத் தொட்டுள்ளது ! Take a bow folks !! //

    சேலம் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய ஜே :))
    .

    ReplyDelete
  53. // Please do chip in folks ! 2015-ன் சந்தா நண்பர்களுக்கு ஆண்டின் பயணத்தின் போது சின்னச் சின்ன surprises காத்துள்ளன என்பது கொசுறுச் சேதி ! அவை என்னவென்று நீங்களே அவ்வப்போது தெரிந்து கொள்வீர்கள் ! //

    மறுபடியுமா ஐ சூப்பர்

    ( ஏற்கனவே குரியர் செலவை மிச்சபடுத்தி விட்டீர்கள் ) :))
    .

    ReplyDelete
  54. டியர் எடிட்டர்ஜீ!!!

    கொஞ்சம் காலம்கடந்த கோரிக்கைதான்.மன்னியுங்கள் !

    கோரிக்கை...? ரீப்ரின்ட் பேக்கேஜ் குறித்து...!

    அடியேனுக்கு அதில் ஒரு சின்ன அதிருப்தி:-(

    லாரன்ஸ் & டேவிட் -ஓகே. நோ ப்ராப்ளம் :-)

    மாயாவி -டபுள் ஓகே :-))

    ஸ்பைடர் -ட்ரிபிள் ஓகே :-)))

    ஜானி நீரோ -? இங்கே தான் நிறைய உதைக்கிறது. ஜானி நீரோ கதைகளை யாருமே "ரீப்ரின்ட்" கோராதபோது , வலுக்கட்டாயமாக இவருடைய கதைகளை திணிப்பது ஏன்...? மாறாக...

    வேதாளர்,காரிகன்,மாண்ட்ரேக்,விங் கமாண்டர் ஜார்ஜ்,சார்லி சாயர்,மாடஸ்டி போன்றோரின் (ரிப் கிர்பி தவிர்க்கவும்) கதைகளிலிருந்து "ரேண்டமாக" சில நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ரீப்ரிண்டாக வெளியிடலாமே ஸார் ?

    ReplyDelete
    Replies
    1. கவலைபடாதிங்க அந்த 12 கதைகள் கூட மேலும் 6 ஆறு கதைகள் வர உள்ளன என நான் நினைக்கிறன் அதில் சில வாங்க/பார்க்க/கிடைக்காத சில கதைகள் வெளி வர உள்ளன என நீங்களும் நம்புங்கள்.

      Delete
    2. டியர் பரணி !!!

      அவ்வாறே நடக்கக் கடவதாக :-)

      Delete
    3. saint satan : ஜானி நீரோவுக்கு ரசிகர்கள் உண்டோ இல்லையோ - அந்தப் பெண் ஸ்டெல்லாவுக்கு எத்தனை ரசிகர்கள் உண்டென்பதை பல தருணங்களில் நானே நேரில் பார்த்துள்ளேன் சாத்தான்ஜி ! மொட்டைத் தலை டேவிட்டை ரசிக்கும் போது அழகாய், அமைதியாய் இந்தப் பெண்பிள்ளையும் ஒரு பக்கமாய் வந்து விட்டுப் போகட்டுமே..?!

      Delete
    4. // அந்தப் பெண் ஸ்டெல்லாவுக்கு எத்தனை ரசிகர்கள் உண்டென்பதை பல தருணங்களில் நானே நேரில் பார்த்துள்ளேன் சாத்தான்ஜி !//

      அதுல நானும் ஒருவனுங்கோ :-)

      Delete
  55. ஆக காதல் கதை வரப்போகுது.!
    எடிட்டர் சார்.,
    அப்படியே எனக்காக
    "வானத்தைப்போல " வெள்ளச்சாமி கதை,
    நம்ம "மாயாண்டி குடும்பத்தார் " கதை
    அப்புறம் "வீராச்சாமி "ய ஹீரோவா வெச்சு ஒரு கதை

    இதெல்லாம் போட முயற்சி செய்யுங்க சார் ப்ளீஜ்.!!!

    ReplyDelete
  56. சார் !...நல்லவர்கள் வீழ்வதில்லை .....சரி ....வல்லவர்கள் வீழ்வதில்லை ...?????.கொஞ்சம் நெகட்டிவ் இம்பாக்ட் இருக்கிற மாதிரி இல்ல ???? வல்லவர்கள் நல்லவர்களாக இல்லாத பட்சம் ....

    ReplyDelete
    Replies
    1. selvam abirami : கதையைப் படித்த பின்னே புரிந்து கொள்வீர்கள் - தலைப்பின் காரணத்தை !

      Delete
  57. டொக்சு கதை வருதுன்னு தங்க தலைவனை வம்பிழுக்கிற வேலை எல்லா வேணா.... உங்க ஆளு உள்ளூர் ஸ்டாரு .... தங்க தலைவன் உலக சூப்பர் ஸ்டார் !!!

    ReplyDelete
    Replies
    1. டியர் ரம்மி !!!

      //டொக்சு கதை வருதுன்னு தங்க தலைவனை வம்பிழுக்கிற வேலை எல்லா வேணா//

      ஹா..ஹா...சூப்பர்...இனிமே அவரோட பேரு "டொக்சு"-ன்னே வச்சிக்கலாம் ;-)

      Delete
    2. Rummi XIII & saint satan : அதானே, இது வரைக்கும் ஆரம்பிக்கவில்லையே என்று பார்த்தேன் !!

      Delete
  58. புதுவைக்கு தங்களை அன்போடு வரவேற்கிறோம் சார்! ஒரு கலக்கு கலக்குவோம் வாங்க!

    ReplyDelete
  59. டியர் எடிட்டர் சர்ர்,
    நரன் வைத்தியசாலையில் இருப்பதால் என் மனைவியை கொண்டு ABC சந்தர வரும் கிழமை கட்டுவதற்கான ஏற்பரடு செய்துள்ளேன். எப்படியோ எனக்கு "கரவல் கழுகு" ம் " என் பெயர் லார்கோ" ம் வரவில்லை. தயவு கூர்ந்து " வரும் புத்தகங்களோடு "கரவல் கழுகு" இனையும் அனுப்பி வைப்பீர்களர? என்னுடைய மிகுதியினையும் தெரியப்படுத்துவீர்களர? நரன் சந்தர அனுப்ப சுலபமரக இருக்கும்.
    உங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
    Replies
    1. திருச்செல்வம் பிரபரனந் : "என் பெயர் லார்கோ' இன்னமும் தயாரே ஆகவில்லை நண்பரே..!

      சந்தாவைப் பொறுத்த வரை பொறுமையாக நீங்கள் வீடு திரும்பிய பின்பே கூட செலுத்தலாம் ! நிச்சயமாய் பணமின்மையின் பொருட்டு உங்கள் சந்தா நிறுத்தப்படாது !

      Delete
    2. டியர் எடிட்டர் சர்ர்,
      //நிச்சயமரய் பணமின்மையின் பொருட்டு உங்கள் சந்தர நிறுத்தப்படமரட்டரது//.

      ரொம்ப நன்றிகள் சர்ர். ஆயினும்
      நான் என் மனைவியின் மூலம் சந்தர பணத்தை செலுத்தி விடுகிறேன். 10000/- செலுத்தினரல் போதுமர சர்ர்?

      Delete
  60. "வல்லவர்கள் வீழ்வதில்லை" முன் அட்டைப்படம் இன்னும் பிரிண்ட் செய்யப்படாமல் இருந்தால்,
    தயவு செய்து பின் அட்டைப்படத்தை முன் அட்டையில் போட்டுவிடுங்கள் சார். சற்றே உறுத்துகிறது!

    ReplyDelete
  61. சார்,
    புதுவையில் 'book fair special" வெளியீடு உண்டுதானே. (டயாபாலிக், மேஜிக் விண்ட்)

    ReplyDelete
    Replies
    1. salemkelamaran@gmail.com : ஸ்டால் உறுதியாகிடட்டுமே முதலில் ! :-)

      Delete
  62. அன்புள்ள எடிட்டருக்கு,

    அன்புள்ள எடிட்டருக்கு,

    இந்தப் படத்திலுள்ள (லயன், முத்து, திகில், மினி லயன் - மலர்கள்) அனைத்து "மலர்"-களும் அதே format-ல் reprint வேண்டும்.. கிடைக்குமா? கொஞ்சம் மனது வையுங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. Periyar : இந்த சைசிலான காகிதங்கள் இன்று நடைமுறைகளிலேயே கிடையாது ! பெரிய சைஸ் ரீல்களை வாங்கி நம் அளவுகளுக்கு ஏற்றார்போல வெட்டுவோம் அந்நாட்களில் ! இன்றைய விலைகளில் அதெல்லாம் கற்பனையில் தான் சாத்தியம் !

      தவிர இவையனைத்தும் அந்தக் காலத்து நெகடிவ்களில் உள்ளவை ! படைப்பாளிகளிடம் டிஜிட்டல் பைல்கள் இல்லாத கதைகளை நாம் திரும்பவும் மறுபதிப்பிடுவது நாக்குத் தொங்கும் வேலைகள் ! புது இதழ்கள் இத்தனை கொண்டதொரு schedule -க்கு மத்தியினில் 'தம்' இல்லை சார் அதற்கெல்லாம் இப்போது ! ரிடையர் ஆகி - ஜாலியாய் பணிகளை வேடிக்கை பார்க்கும் பொறுப்புகள் மட்டுமே என்னதாய் இருக்கக் கூடியதொரு எதிர்காலத்து நாளில் இதெற்கென மெனக்கெட நேரமிருக்கும் !

      Delete
  63. திருமண நாள் வாழ்த்துக்கள் அன்பு ஆசிரியரே ..

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே !

      Delete
    2. திருமண நாள் வாழ்த்துக்கள்.. sir

      Delete
  64. Sir,
    Is Rathapadalam Jumbo special available

    ReplyDelete
  65. To: Edit:
    'வானமே எங்கள் வீதி' கதையின் இராணுவ வீரர்களைப் பார்க்கும்போது, ஒரு காலத்தில் லயனில் கலக்கிய 'பெருச்சாளிப்பட்டாளத்தினர்' ஞாபகம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. கலரில் அவர்களின் கதைகள் வந்தால் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்பது நிச்சயம்! 'கமாண்டோ' ஆங்கில பதிப்புகளின் டைஜஸ்ட்களை படிக்கும்போது, ''தமிழிலும் வராதா?'' என்ற ஏக்கம் எழுவதுண்டு! வருமா சார்?

    ReplyDelete
  66. //படைப்பாளிகளிடம் டிஜிட்டல் பைல்கள் இல்லாத கதைகளை நாம் திரும்பவும் மறுபதிப்பிடுவது நாக்குத் தொங்கும் வேலைகள் ! //
    வரப்போகும் இரும்புக்கையார், லாரன்ஸ் டேவிட் கதைகள் - டிஜிட்டல் கோப்புக்களாக மாற்றப்பட்டவையா? இல்லை, நமது முன்னைய ரீப்ரிண்ட்களின் ஸ்கேன்களா?

    ReplyDelete
    Replies
    1. அவை டிஜிட்டல் ஃபைல்களாக படைப்பாளிகளால் மாற்றப்பட்டுள்ளன எனில், அடுத்த கட்டம் 'நிறம் தீட்டல்' ஆக இருக்குமோ? என்ற ஒரு எதிர்பார்ப்பு..

      Delete
  67. மை டியர் மானிடர்களே!!!

    பிசாசுல்லாம் காமிக்ஸ் வச்சிருந்தா எப்படியிருக்கும்?

    அந்த கொடுமைய பாக்க 'இங்க"க்ளிக் பண்ணுங்க :-)

    ReplyDelete
  68. விஜயன் சார், அடுத்த மாத 5 புத்தகம்களும் என்று எங்களுக்கு கிடைக்கும்? அனைத்தும் டிசம்பர் முதல் வாரத்தில் கிடைக்க வாய்ப்புகள் உண்டா? அப்படி செய்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. 3 புத்தகம் முதல் வாரம்.. 2 part புத்தகம் year end

      Delete
    2. நன்றி tex kit! அந்த year end புத்தகம்களை 20 தேதி நமது ஆசிரியர் அனுப்பினால் இன்னும் நன்றாக இருக்கும்.

      Delete