நண்பர்களே,
வணக்கம். வருடத்தின் இறுதி 2 மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில் - நமது பார்வைகள் ஏற்கனவே 2015-ன் மீது நிலைகொண்டுள்ளது - 'நான் வளர்கிறேனே மம்மி' complan குழந்தையை நினைவுக்குக் கொண்டு வருகிறது ! உயரத்தில் மட்டுமன்றி விவேகத்திலும் வளரும் ஓர் வேளையாய் புதிய வருடம் நமக்குப் புலரும் பட்சத்தில் சந்தோஷமே ! சென்ற வாரப் பதிவில் 2015-ன் அட்டவணைக்குள் உரிமையோடு உட்புகும் TOP 5 நாயக-நாயகியரைப் பற்றிய preview பார்த்தோம்..! இம்முறையோ - எல்லைக்கோட்டில் நடனமாடிக் கொண்டிருக்கும் சில ஆசாமிகளை அடையாளம் பார்க்கும் பணிக்குள் தலை நுழைப்போமா ?
ஏற்கனவே நான் இங்கு பதிவிட்டிருந்தது போல - 2014-ன் பாடங்களை மறந்திடக் கூடாதென்பதிலும் ; கொஞ்சமே கொஞ்சமாய் சொதப்பும் நாயகர்களைக் கூட இம்முறை உப்புமூட்டை ஏற்றிக் கொள்வதில் நிறையவே யோசிக்கப் போகிறோம் என்பதிலும் தெளிவாக இருக்கிறேன் ! நம்மிடம் 'ஹீரோ பஞ்சம்' நிலவிடும் பட்சத்தில் - 'சரி..போனால் போகட்டும் ; இன்னும் கொஞ்சம் வாய்ப்புகள் நல்கிடலாம் !' என்று சிந்திக்கத் தோன்றிடும். ஆனால் நம்மிடமோ RAC ; Waiting List ; தத்கல் கோட்டா ; footboard பயணிகள் என்று எக்கச்சக்கமாய் ஆசாமிகள் இருக்கும் போது - தேர்வு அளவுகோல்களை சற்றே உயர்த்திப் பிடிப்பதில் தப்பில்லை தானே ?!
அதன் பலனாய் 2014-ன் முதல் மாதத்தை வரவேற்ற புண்ணியவானே இம்முறை முதல் தடுமாற்ற slot-ஐ தொட்டு நிற்கிறார் ! ! Yes - "சாக மறந்த சுறா" மூலமாய் மறுபிரவேசம் செய்த ப்ருனோ பிரேசில் தான் 2015-ன் danger zone-ல் நிற்கும் முதல் ஹீரோ ! என்ன தான் சித்திர வித்தகர் வான்சின் கைவண்ணம் மெருகூட்டினாலும் ; என்ன தான் ப்ருனோவின் "முதலைப் பட்டாளம்" நமது நேற்றைய ஆதர்ஷ நாயகர்களாக இருந்திருந்தாலும் - கதைக்களங்களின் புராதனம் நாசியில் புகுந்த மிளகாய் வற்றலாய் இன்றைக்கு கமறுவதைத் தவிர்க்க இயலவில்லை ! இக்கதைகள் உருவான 1970-களின் போது உலகெங்கும் திரைகளிலும். கதைகளிலும், ஜேம்ஸ் பாண்ட் எனும் ஒரு காந்த சக்தி வசீகரித்து வந்தது ! அதற்குப் போட்டியாய் - அதே சாயலில் உருவான ப்ருனோ - 45 ஆண்டுகள் கழிந்தான பின்னே - கீ கொடுக்கும் அந்நாளைய டைம்பீசை நினைவுபடுத்துவது காலச்சக்கரத்தின் சுழற்சிக்கு விதிவிலக்கு எவருமில்லை என்பதைப் புரியச் செய்கிறது ! "சாக மறந்த சுறா" நிறையப் பேரை "சட்டையைக் கிழிக்கச் செய்த சுறாவாக" அவதாரம் எடுத்ததெனில் - சில மாதங்களுக்குப் பின்னே வந்த "முகமற்ற கண்கள்" அதற்கு ஒரு படி மேலே போய் பீதியைக் கிளப்பியது ! இந்தக் கதை ஒரிஜினலாய் வெளியான நாட்களில் நிறைய சிலாகிக்கப்பட்டது என்பது மாத்திரமே எனக்கு ஞாபகத்தில் நின்ற நிலையில் - இந்த வண்ண மறுபதிப்பை தயார் செய்யும் பணிகளில் மறுவாசிப்பு செய்த போது "ஞே" முழி தான் மிஞ்சியது ! In any case, ப்ருனோ தொடரில் புதுக் கதைகள் ஜாஸ்தி இல்லை எனும் போது பின்பெஞ்ச் இருக்கைக்கு அவர் செல்ல நேரிட்டாலும் கூட - மறுபதிப்புகளுக்கு மாத்திரமே இடைஞ்சல் எனக் கருதலாம் !
2014-ல் இரண்டாம் மாதம் வந்தவர் தான் இரண்டாம் கத்திக்குக் கீழே துயிலும் பாக்கியவான் ! "காவியில் ஒரு ஆவி" புகழ் ஜில்லார் தான் அந்த dubious distinction -க்குச் சொந்தக்காரர் ! இங்கும் ப்ருனோவுக்குச் சொன்ன அதே set of reasons தான் - புராதனம் ; மிகவும் outdated ஆகத் தோன்றும் கதை பாணிகள் என்ற சிக்கல் ! இங்கு இன்னுமொரு பிரச்சனை என்னவெனில் - ஜில் ஜோர்டானின் சித்திர பாணிகள் கார்ட்டூன் ஸ்டைலில் அமைந்திருப்பதால் - அதனைக் கையில் எடுக்கும் போதே நாம் எதிர்பார்ப்பது ஒரு நகைச்சுவை விருந்தை என்றாகிப் போகிறது ! ஜில்லின் அசிஸ்டென்ட் வேறு நிமிஷத்துக்கு நாலு கடி ஜோக் விடும் ரகம் என்பதால் எதிர்பார்ப்புகள் கூடிப் போகின்றன ! ஆனால் Gil Jordan சிரிப்புப் போலீஸ் இல்லையென்பதால் இங்குமின்றி-அங்குமின்றி ஒரு விதத் திரிசங்கு நிலையில் இத்தொடர் தத்தளிப்பது கண்கூடு ! ஆனால் ஜில்லின் கதைகளை ஒரேடியாய் கடாசி விடப் போவதில்லை நாம் ; அவற்றுள் இன்னும் சிறப்பான கதைகளாகத் தேடி பிடித்து நிச்சயமாய் உருப்படியான வாய்ப்புகள் தருவோம் ! ஜில் maybe down..but certainly not out !!
மூன்றாவதாய் நான் யோசித்த பெயரைச் சொன்னால் நிறைய துடைப்பக்கட்டைகள் வெளிவருமென்பது சர்வ நிச்சயம் ! So - அதற்குப் பயந்தே எனது தீர்மானத்தை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ! இந்நேரமே நான் குறிப்பிடுவது "இளம் டைகரின்" சாகசங்களை என்பது உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும் ! "கேப்டன் டைகர்" என்ற பெயரை மாத்திரம் மாற்றி விட்டு - "கேப்டன் ஜான்" ; "கேப்டன் டிம்மி" என்று ஏதோவொரு பெயரை நுழைத்து - தற்போதைய இளம் டைகர் episodes-ஐ வெளியிடும் பட்சத்தில் இந்நேரத்திற்கு தர்ம அடி விழுந்திருக்கும் என்பது தான் கலப்படமில்லா நிஜம் ! "டைகர்" எனும் அந்த மந்திரப் பெயருக்குள்ள மவுசை மூலதனமாக்கி ஒரு அமர கதாப்பாத்திரத்தை நகற்றிச் செல்ல படைப்பாளிகளின் புது டீம் முயற்சிப்பது கண்கூடாய் தெரிகிறது ! ஆனால் எத்தனை முயற்சித்தாலும் அந்த ஒரிஜினல் மேஜிக் மீண்டு வராது போவதும் ; நாம் ஆண்டுக்கு 2 கதைகள் மட்டுமே என்ற ரீதியில் செல்வதும் இளம் டைகரை ஆரிய பதார்த்தமாய்த் தெரியச் செய்வது நிஜம் ! 2015-ல் மின்னும் மரணம்" மட்டும் திட்டத்தில் இல்லாதிருப்பின், இளம் டைகரின் ஒரு 5-6 கதைகளை ஒருங்கிணைத்து one shot ஆல்பமாக்கியிருப்பேன் - அப்படியாவது சுவாரஸ்யம் கூடுகிறதா என்ற வேட்கையில் ! பிரான்சில் ஆண்டுக்கொரு ஆல்பம் என young blueberry இன்னமும் தாட்டியமாய்த் தொடர்ந்து செல்ல - மெய்யாகவே புலி வாலைப் பிடித்த கதை நமக்கு ! இந்த டைகரை விடவும் மனதில்லை ; தொடர்வதும் சுலபமில்லை !! 2016-ல் ஒரு collection ஆக இளம் டைகரின் புதுக் கதைகளை வெளியிடுவது பற்றிய உங்கள் சிந்தனைகள் என்னவோ guys ? இடுப்பைச் சுற்றி ஒரு ஊசிப்பட்டாசுச் சரத்தைக் கோர்த்து விடும் வேட்கையில் தளபதி ரசிகர்கள் இருப்பார்கள் என்பது உறுதி ; ஆனால் - I'm just being honest guys !!
சிந்தனையை வரவழைக்கும் அண்ணன் # 4 - நமது சாகச வீரர் ! ஒரே கதையால் நிறையப் பேரை (தப்பான காரணங்களுக்காக) திகலடையச் செய்த பெருமைக்கு சொந்தக்காரராகிறார் ரோஜர் ! 2014-ன் best அட்டைப்படம் ; amongst the best சித்திரங்கள் என்ற பெருமைகளை இந்தாண்டின் இவரது "காலத்தின் கால்சுவடுகளில்" கொண்டிருப்பினும், கதையில் இருந்த வெற்றிடம் நிறைய thumbs down ஈட்டச் செய்துள்ளது ! ஒரு பானைக்கு ஒரு கவளம் மாத்திரமே சரியான சாம்பிள் ஆகாது என்றும் வாதிடலாம் ; 'அய்யா..இது தாராளமாகவே போதும் !' என்றும் குரல் எழுப்பலாம் ! எப்படியிருப்பினும் மதில் மேல் ஹீரோவாய் நிற்கும் நாயகர் # 4 - ரோஜர் ! இவரது கதைவரிசையினில் கிட்டத்தட்ட 60 புதுக் கதைகள் இன்னமும் எஞ்சி இருப்பது சிந்தனையைத் தூண்டும் ஒரு விஷயம் !
Danger Zone-ல் ஐந்தாம் இடத்தைப் பிடிப்பவர் கூட எனக்கு நிறைய சாத்துக்களை சம்பாதித்துத் தரும் ஆற்றல் கொண்டவர் ! அது வேறு யாருமில்லை - நமது சுட்டி லக்கி தான் ! அறிமுகம் கண்ட முதல் இதழே super duper hit ; நம்மிடம் கிட்டத்தட்ட ஸ்டாக் தீர்ந்து விட்ட இதழ் ; ஒவ்வொரு புத்தக விழாவிலும் சரளமாய் விற்ற இதழ் என்ற பெருமைகளுக்கு சுட்டி லக்கி சொந்தக்காரனே ! ஆனால் மொத்தம் 4 இதழ்கள் வெளியாகியுள்ள இந்த தொடரில் நகைச்சுவை விகிதம் ரொம்பவே குறைச்சல் என்பது நிஜம். "நாக்கார்..மூக்கார்..குதிரையார்..பூனையார்...
என்று ஏதோ 'ஜில்பான்ஸ்' வேலை செய்து முதல் இதழை கரைசேர்த்து விட்டொமென்றாலும் - basically அக்கதையில் சிரிப்பில் வயிற்றைப் பதம் பார்க்கும் நிகழ்வுகள் மிகக் குறைவே ! அதே சமாச்சாரம் தான் சுட்டி லக்கியின் சாகசம் # 2 ல் கூடவும் ! குட்டி டால்டன்கள் ; சுட்டி லக்கி இணைந்து பள்ளிக்குச் செல்வது போன்ற இந்தக் கதை OKLAHOMA JIM என்ற பெயரில் வெளிவந்துள்ளது ; but இது ஒரு சிரிப்பு வெடி ரகம் அல்ல ! சரி, இதை டீலில் விட்டுவிட்டு அடுத்த கதைக்குத் தாவுவோமே என்று பார்த்தால் - ஆல்பம் # 3 - ஒற்றைப் பக்க சுட்டி லக்கி ஜோக்குகளின் தொகுப்பு ; ஆகையால் நமக்கு அதனில் பெரிதாய் சுவாரஸ்யம் கிடையாது ! ஆல்பம் # 4-ஐ இன்னமும் பரிசீலனை செய்யவில்லை ; அதனை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்து அதன் பின்னர் ஒரு தீர்மானத்துக்கு வந்தாக வேண்டும் ! So கோட்டின் மேல் நிற்பது இந்தக் குட்டிப் பயலும் கூட !

எது எப்படியிருப்பினும் டைகர் நீங்கலாக பாக்கி 4 பேரும் சுத்தமாய் 2015-ன் பட்டியலில் கிடையாதென்று எண்ணிட வேண்டாமே...! குட்டி எழுத்துக்களில் "கடைசி நிமிட மாற்றங்களுக்கு உட்பட்டவை" என்ற rider அவசியமுண்டு ! So உள்ளே-வெளியே ஆட்டம் தொடரும் - நவம்பர் 1-ஆம் தேதி வரையிலும் !
சரி...2015-க்கு முழுக் கவனமும் கொடுத்திடும் வேளையில் நடப்புகளையும் கொஞ்சம் பார்த்தாக வேண்டும் தானே ?! இம்மாதத்து 3 இதழ்களும் ஒவ்வொரு பாணிகளில் மாறுபட்டவை என்பதில் ஐயமே கிடையாது ! எப்போதும் போல இத்தாலியக் கதைகள் (டெக்ஸ் & டைலன்) , படித்திட,புரிந்திட சுலபமெனில் - பிரான்கோ-பெல்ஜியக் கதைகள் வேறொரு தளத்தில் இருப்பதை highlight செய்கிறது "காலனின் கைக்கூலி" ! அழகாய் உருவாக்கப்பட்டுள்ள இந்த கிராபிக் நாவலைப் பொறுத்த வரை - எடிட்டிங் யுக்திகள் ; frames வடிவமைப்பு ; நிகழ்காலம் & கடந்த காலம் என நொடிக்கொரு முறை தாவும் கதை சொல்லும் பாணி என்று சகலமுமே புதுயுகக் கருவிகளோடு நகருமொரு படைப்பு என்பதைப் பார்த்து விட்டோம் ! ஆனால் எனக்கிருக்கும் ஒரே நெருடல் - XIII கதைத் தொடரே ஒரு சாம்பார் + நூடுல்ஸ் கூட்டணி எனும் போது அவற்றைச் சார்ந்து வரும் இந்த spin-offs எத்தனை தூரத்துக்குப் புது வாசகர்களைக் கவரும் என்பது மாத்திரமே ! இங்குள்ள நண்பர்களுள் சமீபகால வாசகர்கள் இருப்பின் இது பற்றி அவர்களது அபிப்ராயங்களைத் தெரிவித்தால் XIII-ன் குழப்பம் தீருகிறதோ -இல்லையோ - என்னுடைய குடைச்சலில் கொஞ்சம் அடங்கிடும் ! Would love to hear on this !
எதிர்நோக்கியுள்ள நவம்பர் இதழ்களைப் பொறுத்த வரை - தீபாவளிக்குள் மூன்று இதழ்களையும் உங்களிடம் கொண்டு சேர்ப்பது இயலாக் காரியம் என்பதோடு - 2015-ன் அட்டவணைக்கு எனக்கு அவகாசமும் சற்றே தேவைப்படும். So -சூப்பர் 6-ன் தீபாவளி மலரான "இரவே..இருளே..கொல்லாதே..!" இதழினை மட்டும் அக்டோபர் 18-க்கு இங்கிருந்து அனுப்பிடுவோம் - தீபாவளிக்கு முன்னதாக உங்களை எட்டிடும் வகையில் ! பாக்கி 2 இதழ்களும் (லார்கோ + சைத்தான் வீடு) ; 2015-ன் அட்டவணை சகிதமாய் நவம்பர் 3-ஆம் தேதி உங்களை வந்து சேரும் !
அதன் பின்னே எஞ்சி நிற்கப் போகும் 2014's biggie - THE KING SPECIAL மாத்திரமே ! அது பற்றிய அறிவிப்பு லார்கோவில் வந்திடும் - விபரமாய் ! So அது வரை யூகங்களின் ராஜ்ஜியமே ! யூகங்கள் என்ற தலைப்பில் இருக்கும் போதே - 2015-ன் புதுமுகங்கள் யாராக இருப்பர் என்பது பற்றிய உங்கள் அனுமானங்களையும் களம் இறக்கிடலாமே ? புதுவரவின் முதல் ஆசாமியை அடுத்த ஞாயிறுக்குக் கண்ணில் காட்டுகிறேன்..! அது வரை happy reading ! See you around soon !