நண்பர்களே,
வணக்கம். வயசுக்கேத்த தோரணையைத் தக்க வைத்துக் கொள்ள எத்தனை தான் மொக்கை போட்டாலும், உள்ளுக்குள்ளே பதுங்கிக் கிடக்கும் திருவாளர் சிறுபிள்ளை அவ்வப்போது துள்ளிக் குதிக்கத் தவறுவதில்லை என்பதே கடந்த 2 வாரங்களில் நான் படித்த அனுபவப் பாடம் ! "LMS எனும் ஒரு மெகா முயற்சியை அரங்கேற்றியாச்சு ; இனி அடுத்த வேலைகளுக்குள் ஐக்கியமாகிட வேண்டும் ; 2015-க்கான திட்டமிடல்களைக் கவனித்தாக வேண்டும் !' என்று என் மண்டை ஏதேதோ கட்டளைகளைப் பிறப்பிக்க, வேலை செய்ய அமர்ந்தால் மனம் எனும் வானரம் தன்வாக்கில் எங்கெங்கோ ஜாலியாய்ச் சுற்றித் திரிகிறது ! 900+ பக்கங்களை ஆஞ்சநேயர் வால் போன்றதொரு நீ----ண்-----ட பட்டியலில் எழுதி வைத்துக் கொண்டு வேலை செய்த நாட்கள் திரும்பத் திரும்ப மண்டைக்குள் குறுக்கும், நெடுக்குமாய் சாலடிக்க, கையிலிருக்கும் 44 பக்க கமான்சே கதையும், ப்ளூகோட் கதையும் என்னைப் பார்த்துக் கண்ணடிப்பது போல் படுகிறது !! 'ஓஹோ..இது தான் hangover என்பதோ ? என்று தலையைச் சொரிந்து கொண்டே நிறையப் பிரயத்தனத்தின் பேரில் காத்திருக்கும் பனிகளுக்குள் என்னை ஆழ்த்திக் கொண்டேன் !
இதோ - செப்டெம்பரின் வெளியீடு # 2-ன் preview - கமான்சேவின் "செங்குருதிச் சாலைகள்" ரூபத்தில் ! லயனின் ALL NEW ஸ்பெஷலில் இத்தொடரின் கதை # 1 வெளியானதும், இந்தாண்டின் துவக்கத்தில் ஆல்பம் # 2 வெளிவந்ததும் நமக்குத் தெரிந்த சங்கதி தான் என்றாலும், இதன் கதை # 3 - பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது லயனில் "ஓநாய் கணவாய் " என்ற பெயரில் வெளியாகியுள்ளது சமீப வாசகர்கள் அறிந்திருக்க இயலாதென்று நினைக்கிறேன் ! வரிசைகளுக்குப் பெரியதொரு முக்கியத்துவம் தந்திடா அந்நாட்களில் ஆக்க்ஷனும், அதிரடியும் தூக்கலாய்த் தென்படும் பட்சத்தில் அக்கதை ''சட்'டென்று தேர்வாவது வாடிக்கை ! So - கமான்சே தொடரைப் பரிசீலித்த போது பாகம் 1 & 2 சற்றே சாத்வீகமான பயணப் பாதையில் இருப்பதையும், ஆல்பம் # 3 முதலாய் பரபரப்பு பற்றிக் கொள்வதையும் உணர முடிந்த மறு கணமே நேரடியாக # 3 -க்குள் டைவ் அடித்தோம் அன்று ! அதிர்ஷ்டவசமாய் கமான்சேவின் கதைகள் சகலமும் தனித் தனியாய் படிக்கக் கூடிய பாணியில் இருப்பதால் என் பாடு சற்றே சுலபமாகிறது ! 'ஓநாய் கணவாய்' இப்போது வரை நம்மிடம் ஸ்டாக்கில் இருந்த இதழ் என்பதால் அதனை மறுபதிப்பாக்காது - நேரடியாக ஆல்பம் # 4-க்குள் புகுந்திருக்கிறோம் ! இதோ நமது ராப்பரும், ஒரிஜினல் சித்திரமும் :
பின்னணி வர்ணங்களில் மட்டுமே லேசாய் மாற்றங்கள் செய்து விட்டு, ஒரிஜினல் சித்திரத்தை அப்படியே பயன்படுத்தியுள்ளோம் ! இங்கு பார்ப்பதை விட, அச்சில் இன்னும் அழுத்தமாய் நமது அட்டைப்படம் தோற்றம் தருவதைக் காணப் போகிறீர்கள் ! கதையைப் பொறுத்த வரை படு வேகமான ; ஆக்க்ஷன் த்ரில்லர் இது என்று சொல்லுவேன் ! ஓவியர் ஹெர்மனின் சித்திர நுணுக்கங்கள் அற்புதங்கள் செய்கின்றன ; பாருங்களேன் ஒரே பக்கத்தில் top angle ; close up ; overview என்று வெவ்வேறு கோணங்களிலான சித்திர அமைப்புகளை !
கடந்த வாரம் முத்து காமிக்ஸின் ப்ளூகோட் பட்டாளத்தின் "காதலிக்கக் குதிரையில்லை" இதழின் preview-ல் அதன் அட்டைப்படத்தை உங்களிடம் காட்ட விடுபட்டுப் போயிற்று ; இதோ - மீண்டுமொரு background மாற்றத்தை மட்டுமே தாங்கியதொரு அட்டைப்படம் :
இரு அட்டைப்படங்களும் எவ்விதம் அமைந்துள்ளன என்ற ஆய்வை எப்போதும் போல் உங்களிடம் விட்டு விடுகிறேன் ! கடந்த சில நாட்களாகவே எங்கள் கந்தக பூமியிலும் வருண பகவான் அதிசயமாய் ஆட்சி செய்து வருவதால் இம்மாத இதழ்கள் செப்டெம்பர் 1-ஆம் தேதி தான் இங்கிருந்து புறப்படும். ஈர நாட்களாய் இருக்கும் சமயங்களில் அச்சுப் பணிகளை நிதானமாய்ச் செய்வது அவசியம் என்பதோடு பைண்டிங்கிலும் பொறுமை கடைபிடிக்கத் தேவையாகிறது ! So "மும்முனைத் தாக்குதல்" செப்டெம்பரின் இதழ் # 3 பற்றிய preview அடுத்த ஞாயிறிலும், இதழ்களின் டெஸ்பாட்ச் திங்கட்கிழமையிலும் அரங்கேறிடும் ! இடைப்பட்ட இந்த வாரத்தை 2015-ன் திட்டமிடலுக்கு அவசியமாகும் சில கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் செலவிடுவோமா ? சென்றாண்டு நவம்பரில் பெரியதொரு பழுப்புக் காகிதத்தில் கேள்விகளாய் கேட்டு உங்களுக்கு அனுப்பி இருந்தது நினைவிருக்கலாம் ; பூர்த்தி செய்யப்பட்டு வந்த பதில்களைப் படிக்க இயன்ற போது எங்களது கேள்வி கேட்கும் படலம் சற்றே தாமதமானதோ ? என்ற கேள்வி எனக்குள் எழுந்திட்டது ! So அதே தவறை இந்தாண்டும் செய்திடாமல் - 2015-ன் அட்டவணையை செதுக்கும் இறுதிக் கட்டங்களுக்கு முன்பாகவே உங்கள் அபிப்ராயங்களையும் அறிந்திடல் நலம் என்று தோன்றுகிறது ! Here goes:

- (இது வரையிலான) 2014-ன் TOP 3 இதழ்கள் உங்கள் பார்வையில் ? (LMS வேண்டாமே ஆட்டத்துக்கு !!)
- 2014-ன் 3 டப்பா இதழ்கள் ?
- கௌபாய் கதைகளை ரொம்பவே துவைத்துத் தொங்கப் போடுகிறது போல் உங்களுக்குத் தோன்றுகிறதா ? பதில் 'ஆமாம்' எனில் - 'கிளம்பு நைனா..' என்று யாரை மூட்டை கட்டச் சொல்லலாம் ? (தல ; தளபதி WWF இதற்குள் கண்டிப்பாக வேண்டாமே - ப்ளீஸ் ?!)
- Black & white இதழ்களை வரவேற்கிறீர்களா ? இவை தொடரலாமா ?
- 'Yes' எனில் அவற்றில் யாரைக் காண ஆவல் ? (ப்ளீஸ், மாட்சிமைதங்கிய மும்மூர்த்திகளை துயில் எழுப்பக் கோர வேண்டாமே ?!!)
- தோர்கல் பற்றிய உங்கள் அபிப்ராயம் ?
- 2013 & 2014-ன் நமது காமிக்ஸ் சேகரிப்பில் பெரியதொரு ஆர்வத்தைக் கிளப்பாது போன இதழ் எது ? இப்போது வரை படிக்கவே தோன்றவில்லை என்ற ரகத்தில் ஏதேனும் ....?
- தற்போதைய கேப்டன் டைகரின் இளம் பிராயத்து சாகசங்களை தொடரலாமா ? அல்லது 2015-க்கு - மின்னும் மரணமே போதுமென்று கருதிடலாமா ? (unbiased opinions ப்ளீஸ் ? ; தல, தளபதி ரசிகக் கண்மணிகளின் முத்திரைகளின்றி ?)
- ரிப்போர்டர் ஜானி ...? ப்ருனோ பிரேசில் ? சாகச வீரர் ரோஜர்...? இவர்களது எதிர்காலங்கள் எவ்விதமோ - நமது வாசிப்பு ரசனை வரிசையில் ?
- புதியதொரு தலைமுறை கொஞ்சமே கொஞ்சமாகவேனும் நமது காமிக்ஸ் குடும்பத்தில் இணைந்து வருவதைக் கவனிக்கிறேன். இந்த சூழலில் நமது எழுத்து பாணி ; மொழிபெயர்ப்பு ஸ்டைல் மாற்றங்களின்றி இப்படியே தொடர்வது பற்றி உங்களது அபிப்ராயம் ?
- புதிய கதைத்தொடர்களுக்காவது - மொழிபெயர்ப்புப் பொறுப்புகளைப் புதியவர்களிடம் ஒப்படைத்து புதிய பாணியொன்றைத் தேடும் ஒரு சிந்தனையினை நீங்கள் எவ்விதம் பார்ப்பீர்கள் ?
- ஆண்டவன் அருளோடு 2014-ன் அட்டவணை திட்டமிட்டபடியே பூர்த்தியாகும் பட்சத்தில் இந்தாண்டில் நாம் வாசித்திருக்கப் போகும் கதைகளின் எண்ணிக்கை 50-ஐத் தொடும் ! டூ..டூ. மச் ? Your thoughts ?
- வரக் காத்திருக்கும் "தேவ இரகசியம் தேடலுக்கல்ல.." ; "இரவே..இருளே..கொல்லாதே..!" - உங்களில் ஏற்படுத்துவது எதிர்பார்ப்புகளையா ? அல்லது - 'முட்டைக்கண்ணனுக்கு ஏன் இந்த கொக்கு மாக்கு வேலை ? " என்ற சிந்தனைகளா ?
- சிறார்களுக்கென கார்டூன்களை இன்னும் கொஞ்சம் அதிகமாய் நுழைக்கும் சிந்தனையை எவ்விதம் பார்ப்பீர்கள் ?
- 2015-ன் அட்டவணையில் நீங்கள் எதிர்பார்க்கப் போவது முத்திரை பதித்த நாயகர்களின் தொடர்ச்சிகளையா ? அல்லது புது வரவுகளையா ?
உங்களின் பதில்களை இங்கு பதிவிட்டாலும் சரி ; எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பினாலும் சரி - அவை நமது 2015 திட்டமிடலுக்கு நிறையவே பிரயோஜனப்படும் என்பது உறுதி ! So, please do spare time for this folks !!
Last minute Update :
இத்தாலிய ரசிகர் மன்றங்கள் கலக்கலைத் தொடர்ந்து வருகின்றன !! டைலன் டாக் மன்றமும், மர்ம மனிதன் மார்டின் மன்றமும் கரம் கோர்த்துக் கொண்டு ஒரே முரட்டு பார்சலாய் LMS -ல் 110 இதழ்களுக்கு ஆர்டர் தந்துள்ளனர் !! இவர்கள் தவிர தனிப்பட்ட சேகரிப்பாளர்கள் தந்திருக்கும் குட்டிக் குட்டி ஆர்டர்களும் உண்டு !! (@கார்த்திக் : டெக்ஸ் மன்றம் என்றொன்று இருப்பதற்கான அடையாளங்களே இல்லை தான் !! சென்றாண்டு டயபாலிக் ஆர்வலர்களின் வேகத்தைப் பார்த்த போதே இந்த நினைப்பு எனக்கும் உதித்தது !!)
மீண்டும் சந்திப்போம் folks ; bye until then !

.jpg)