Saturday, November 17, 2012

நினைவுகளுக்கு வயது நாற்பது !


நண்பர்களே,

வணக்கம். கொஞ்சம் இனிப்புகள் ; கொஞ்சம் பட்டாசுகள் ; ஊரெல்லாம் 'திடும்' 'திடும்' ஓசைகள் ; ஒரு மாறுதலுக்கு முழு நாளும் மின்சாரம் என்று இந்தாண்டுத் தீபாவளி பயணித்தது ! குடும்பத்தோடு சின்னதாய் ஒரு விடுமுறைக்கு வாய்ப்புக் கிட்டியதால் இந்த வாரம் முழுவதுமே இங்கே தலை காட்டிட இயலவில்லை ! இடைப்பட்ட நாட்களில் இங்கே நண்பர்கள் செம உற்சாகமாய் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதையும் ; நமது வலைப்பதிவின் பார்வைகளின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியதையும் ; ஒரு சில அற்புத நினைவாற்றலாளர்கள் எனது திருமணதினத்தைக் கூட நினைவு கூர்ந்திருப்பதைப் படிக்க முடிந்த போது - "நன்றி" என்ற ஒற்றைச் சொல்லிற்குள் எங்கள்  உணர்வுகளை ; சந்தோஷங்களை இயன்றவரை அடக்கிட ஆற்றல் கொடுக்கக் கோருகிறோம் தமிழன்னையிடம் ! Thanks ever so much folks !

டிசம்பரில் ஜானியின் "மரணத்தின் நிசப்தம்" ரூபாய் பத்து விலையில் வரவுள்ளது ! குறைவான விலைகளில் ; கறுப்பு-வெள்ளை பாணிகளில் நாம் அத்தனை காலமாய்ப் பரிச்சயம் கொண்டிருந்த அந்தப் பயண சகாப்தத்தின் இறுதி இதழ் இதுவாகத் தானிருக்கும் ! திட்டமிட்டபடி டெக்ஸ் வில்லரின் "காவல் கழுகு" இதழை இதே பாணியில் 'சஸ்தாவாய்'   வெளியிடுவதில் அதன் படைப்பாளிகளுக்கு சம்மதமில்லை. புத்தாண்டில், புது விலைகளில் ; புதுப் பொலிவுடன் டெக்ஸ் வில்லர் கதைகளை வெளியிடும் பொருட்டு அவர்களை நான் சமீபத்தில் சந்தித்த போது, இனியும் இந்தக் குறைவான தரத்தில் தங்களது டாப் ஹீரோவை படுத்தி எடுக்க வேண்டாமே என்றொரு அன்புக் கட்டளை போட்டனர் ! இத்தாலியில் ஒரு சகாப்தமாய் விளங்கும் அத்தனை பெரிய பதிப்பகம் நம்மிடம் வைக்கும் கோரிக்கையை நிராகரிக்கும் அளவிற்கு நாமொன்றும் பெரியதொரு அப்பாடக்கர் அல்ல என்பதாலும் ;பிப்ரவரியில் புது அவதாரமெடுக்கும் நம் இரவுக் கழுகை இனி ஒரிஜினலின் தரத்திலேயே ரசிப்பதும் முறையான ஏற்பாடு தான் என்று எனக்கும் மனதுக்குப்பட்டதாலும் , "காவல் கழுகு" பிறிதொரு நாளில் hi -tech அவதாரமெடுக்கும் வரை பரணில் தான் வாசம் செய்திடல் அவசியமாகிறது ! டெக்ஸ் ரசிகர்கள் 'நர நர' வென்று பல்லைக் கடிக்கும் சப்தம் கேட்டாலும், இப்போதைக்கு 'ஹி..ஹி' ..தவிர வேறு மார்க்கமில்லை எனக்கு ! Sorry guys ! 

NEVER BEFORE ஸ்பெஷல் இதழில் புது இணைப்பு Wayne Shelton நீங்கலாக பாக்கிக் கதைகள் தயார் நிலையில் உள்ளன என்பதே லேட்டஸ்ட் update ! நம் மின்வாரியத்தின் அசாத்தியத் தாண்டவம் இன்னும் தீர்ந்த பாடைக் காணோம் என்பதால் 16 மணி நேர மின்வெட்டை இப்போதெல்லாம் 'ஹாவ்' என்றதொரு கொட்டாவியோடே எதிர்நோக்கப் பழகி வருகின்றோம் ! NEVER BEFORE ஸ்பெஷல் என்ற பெயர் பொருத்தமோ என்னவோ -இது போன்ற மின்வெட்டுக்களையும் சரி ; இருளினுள் பணியாற்றும் பாணியையும் சரி....never before have we encountered them ! இதழின் இதர பக்கங்களை நிரப்பும் பணி இப்போது என் முன்னே ! இன்று ஓய்வில் இருந்தாலும் நம் காமிக்ஸ் முயற்சிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டு விட்ட என் தந்தையின் தலையங்கம் தான் முதற்பக்கத்தை அலங்கரிக்கப் போகின்றது. தொடரவிருப்பது நமது பணியாளர்களை உங்களுக்கு அறிமுகம் செய்திடவிருக்கும் புகைப்படப் பக்கங்கள் ! "விஜயன்" என்ற ஒற்றைப் பெயருக்குப் பின்னே ஓசையின்றி பல  காலமாய்ப் பணியாற்றி வரும் நம் டீமின் முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிடவிருக்கிறேன் ! வழக்கம் போல் எனது 'காமிக்ஸ் டைம் ' பகுதி ; போஸ்ட் பாக்ஸ் ; சந்தா விபரங்கள் என்பதைத் தாண்டி இந்த landmark இதழில் உங்களது பங்களிப்பும் அவசியமென்று எனக்குப் பட்டது ! 

இது முழுக்க முழுக்க நமது முத்து காமிக்ஸ் கொண்டாட்டம் என்பதால் இங்கே நமது இதர வெளியீடுகள் பற்றிய சங்கதிகளை நுழைத்திடாது, exclusive ஆக முத்துவின் best பற்றிப் பேசிட சில பக்கங்கள் முதன்மைத் தேவை என்று மனதுக்குப் பட்டது ! So - முதலில் வருவது MUTHU COMICS TOP 5 இதழ்களைப் பற்றிய தேர்வு ! இது வரை வெளி வந்துள்ள நமது 316 இதழ்களில் அவரவர் ரசனைக்கேற்ப, மனம் கவர்ந்த டாப் 5 இதழ்களைத் தேர்வு செய்து அவற்றைப் பற்றிச் சுருக்கமாய் இங்கே எழுதிடலாம் ; அல்லது எனக்கு மின்னஞ்சலும் செய்திடலாம். சுவாரஸ்யமான தேர்வுகள் நமது NBS - ல் பிரசுரிக்கப்படும் ! அதற்கு முன்னே நமது இதழ்களின் முழுப் பட்டியலும் தேவை அல்லவா ? இதோ - நம் நண்பர் பாண்டிச்சேரி கலீலின் பிரமிக்கச் செய்யும் வலைப்பதிவிலிருந்து (http:/mudhalaipattalam.blogspot.in) 'லவட்டிய' லிஸ்ட் ! (நன்றிகள் கலீல் சார்!) நமது இன்றைய தலைமுறை நண்பர்களுக்கு இவற்றில் நிறைய  பரிச்சயமில்லா இதழ்களாக இருந்திடுமென்பது எனக்குத் தெரியும். No worries ....நீங்கள் படித்த இதழ்களுக்குள் டாப் 5 தேர்வு செய்தும் எழுதிடலாம் !   

1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி

2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி

3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி

4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி

5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்

6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி

7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்

8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி

9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ

10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி

11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்

12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ

13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி

14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்

15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ

16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி

17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்

18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ

19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி

20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ

21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்

22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி

23. கொலைக்கரம் - ஜானி நீரோ

24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ

25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும்புக்கை மாயாவி

26. தலை கேட்ட தங்கப் புதையல் - லாரன்ஸ் & டேவிட்

27. சிறைப் பறவைகள் - லாரன்ஸ் & டேவிட்

28. புதையல் வேட்டை - ரிப் கெர்பி

29. C. I .D. லாரன்ஸ் - லாரன்ஸ் & டேவிட்

30. கடத்தல் ரகசியம் - சார்லி

31. ஜானி IN லண்டன் - ஜானி நீரோ

32. கழுகு மலைக்கோட்டை - மாடஸ்டி பிளைசி

33. தங்க விரல் மர்மம் - ஜானி நீரோ

34. பனிக்கடலில் பயங்கர எரிமலை - லாரன்ஸ் & டேவிட்

35. காணாமல் போன கைதி - ஜானி நீரோ

36. ஜானி இன்  ஜப்பான் - ஜானி நீரோ

37. ரோஜா மாளிகை ரகசியம் - ரிப் கெர்பி

38. ஒற்றன் வெள்ளை நரி - ஜார்ஜ்

39. குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் - சார்லி

40. மைக்ரோ அலைவரிசை -848 - ஜானி நீரோ

41. 10 டாலர் நோட்டு - ஜார்ஜ்

42. சிறை மீட்டிய சித்திரக்கதை - சார்லி

43. நெப்போலியன் பொக்கிஷம் - ஜார்ஜ்

44. கொள்ளைக்கார பிசாசு - இரும்புக்கை மாயாவி

45. மடாலய மர்மம் - காரிகன்

46. வைரஸ் - X - காரிகன்

47. ரயில் கொள்ளை - சிஸ்கோ

48. விசித்திர வேந்தன் - கில்டேர்

49. காணாமல் போன கலைப்பொக்கிஷம் - காரிகன்

50. தீவை மீட்டிய தீரன் - மிஸ்டர் பென்

51. இஸ்தான்புல் சதி - சார்லி

52. கொலை வழக்கு மர்மம் - ரிப் கெர்பி

53. பேய்த்தீவு ரகசியம் - சார்லி


54. கல் நெஞ்சன் - கில்டேர்


55. திக்குத் தெரியாத தீவில் - சார்லி


56. வெடிக்க மறந்த வெடிகுண்டு - சார்லி


57. கடலில் தூங்கிய பூதம் - காரிகன்


58. முகமூடி வேதாளன் - வேதாளர்


59. பகல் கொள்ளை - ரிப் கெர்பி


60. ஜும்போ - வேதாளர்


61. இரத்த வெறியர்கள் - சிஸ்கோ


62. பில்லி சூனியமா? பித்தலாட்டமா? - காரிகன்


63. இருளின் விலை இரண்டு கோடி - மாண்ட்ரெக்


64. மூன்று தூண் மர்மம் - ரிப் கெர்பி


65. விண்வெளி வீரன் எங்கே? - வேதாளர்


66. தீ விபத்தில் திரைப் படச்சுருள் - காரிகன்


67. விசித்திரக் கடற் கொள்ளையர் - வேதாளர்


68. பேய்க்குதிரை வீரன் - சிஸ்கோ


69. பழி வாங்கும் பாவை - காரிகன்


70. பட்லர் படுகொலை - ரிப் கெர்பி


71. மர்மத் தலைவன் - மாண்ட்ரெக்


72. ஆவியின் கீதம் - சிஸ்கோ


73. ராட்சத விலங்கு - வேதாளர்


74. பனித்தீவின் தேவதைகள் - காரிகன்


75. முகமூடிக் கள்வர்கள் - வேதாளர்


76 கள்ள நோட்டுக்  கும்பல் - ரிப் கெர்பி


77. குறும்புக்கார சுறாமீன் - மாண்ட்ரெக்


78. வான்வெளி சர்க்கஸ் - காரிகன்


79. முத்திரை மோதிரம் - வேதாளர்


80. யார் குற்றவாளி? - சிஸ்கோ


81. விண்ணில் நீந்தும் சுறா - மாண்ட்ரெக்


82. பனிமலை பூதம் - காரிகன்


83. விசித்திர குரங்கு - ரிப் கெர்பி


84. வேதாளனின் சொர்க்கம் - வேதாளர்


85. முகமூடிக்  கொள்ளைக்காரி - காரிகன்


86. சூனியக்காரியின் சாம்ராஜ்யம் - வேதாளர்


87. Mr. பயங்கரம் - காரிகன்


88. பிரமிட் ரகசியம் - ரிப் கெர்பி


89. கப்பல் கொள்ளையர் - வேதாளர்


90. மாண்ட்ரேக் கொள்ளைக்காரனா? - மாண்ட்ரெக்


91.கற்கோட்டை புதையல் - ரிப் கெர்பி


92. மரண வலை - காரிகன்


93. கீழ்த்திசை சூனியம் - வேதாளர்


94. காணாமல் போன வாரிசுகள் - ரிப் கெர்பி


95. விபரீத வித்தை - மாண்ட்ரெக்


96. விசித்திர மண்டலம் - காரிகன்


97. தலையில்லா கொலையாளி - இரும்புக்கை மாயாவி


98. பூ விலங்கு - வேதாளர்


99. சூரிய சாம்ராஜ்யம் - ரிப் கெர்பி


100. யார் அந்த மாயாவி - இரும்புக்கை மாயாவி

101. சர்வாதிகாரி - வேதாளர்

102. பறக்கும் தட்டு மர்மம் - காரிகன்


103. உதவிக்கு வந்த வஞ்சகன் - மாண்ட்ரெக்


104. கையெழுத்து மோசடி - ரிப் கெர்பி


105. இரண்டாவது வைரக்கல் எங்கே? - காரிகன்


106. ஆழ்கடலில் மாயாவி - இரும்புக்கை மாயாவி


107. கானகக் கள்வர்கள் - வேதாளர்


108. உலகே உன் விலை என்ன? - மாண்ட்ரெக்


109. யார் அந்த கொலையாளி - ரிப் கெர்பி


110. கூண்டில் தூங்கிய சர்வாதிகாரி - வேதாளர்


111. இராணுவ ரகசியம் - காரிகன்


112. கொலைக்கு விலை பேசும் கொடியவன் - மாண்ட்ரெக்


113. மரணக்குகை - ரிப் கெர்பி


114. பயங்கரவாதி Dr. செவன் - காரிகன்


115. நாலூகால் திருடன் - ரிப் கெர்பி


116. வழிப்பறிக் கொள்ளை - ரிப் கெர்பி


117. விபத்தில் சிக்கிய விமானம் - இரும்புக்கை மாயாவி


118. தலை நகரா? கொலை நகரா? - காரிகன்


119. மந்திர வித்தை - இரும்புக்கை மாயாவி


120. வாரிசு யார்? - ரிப் கெர்பி


121. விபரீத விளையாட்டு - ஜான் சில்வர்


122. ஒருநாள் மாப்பிள்ளை - சார்லி


123. விண்வெளி விபத்து - இரும்புக்கை மாயாவி


124. ரவுடிக்கும்பல் - ஜான் சில்வர்


125. விண்வெளி ஒற்றர்கள் - இரும்புக்கை மாயாவி


126. திகிலூட்டும் நிமிடங்கள் - லாரன்ஸ் & டேவிட்


127. யார் அந்த அதிஷ்டசாலி - சார்லி


128. சுறாமீன் வேட்டை - ஜார்ஜ்


129. துருக்கியில் ஜானி நீரோ - ஜானி நீரோ


130. சூதாடும் சீமாட்டி - டான்


131. கணவாய்க் கொள்ளையர் - ஜிம்மி


132. தவளை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி


133. ஃபார்முலா திருடர்கள் - லாரன்ஸ் & டேவிட்


134. பனியில் புதைந்த ரகசியம் - ஜார்ஜ்


135. நாடோடி ரெமி - ரெமி


136. கொலைகாரக் குள்ள நரி - இரும்புக்கை மாயாவி


137. திசை மாறிய கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்


138. களிமண் மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி


139. ஃப்ளைட்-731(மறு பதிப்பு ) - லாரன்ஸ் & டேவிட்


140. பறக்கும் பிசாசு - இரும்புக்கை மாயாவி


141. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ


142. ப்ளாக் மெயில் - இரும்புக்கை மாயாவி


143. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்


144. வான்வெளிக் கொள்ளையர் - இரும்புக்கை மாயாவி


145. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி


146. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்


147. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ


148. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்


149. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி


150. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ

151. நியூயார்க்கில் மாயாவி - இரும்புக்கை மாயாவி


152. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்


153. மாயாவிக்கோர் மாயாவி - இரும்புக்கை மாயாவி


154. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ


155. ஃபார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்


156. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி


157. இயந்திரப் படை - இரும்புக்கை மாயாவி


158. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ


159. பாம்புத் தீவு - இரும்புக்கை மாயாவி


160. தலை கேட்ட தங்கப் புதையல் - லாரன்ஸ் & டேவிட்


161. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ


162. கழுகு மலைக்கோட்டை - மாடஸ்டி பிளைசி


163. இரும்புக்கை மாயாவி - இரும்புக்கை மாயாவி


164. ஜானி IN லண்டன் - ஜானி நீரோ


165. சிறைப் பறவைகள் - லாரன்ஸ் & டேவிட்


166. கொள்ளைக்காரப் பிசாசு - இரும்புக்கை மாயாவி


167. முத்து ஸ்பெஷல் - ஜெஸ்லாங்


168. கடல் பிசாசு - லூயிஸ்


169. தலை வாங்கும் சிலை - ரோஜர் மூர்


170. மாயாவிக்கொரு சவால் - இரும்புக்கை மாயாவி


171. இரத்த இரவுகள் - ஜெஸ்லாங்


172. சைத்தான் சிறுவர்கள் - இரும்புக்கை மாயாவி


173. பயங்கரப் பனிரெண்டு - மார்ஷல்


174. ஆகாயக் கல்லறை - ஜான் சில்வர்


175. வழிப்பறிப் பிசாசு - செக்ஸ்டன் பிளேக்


176. சம்மர் ஸ்பெஷல் - ஜெஸ்லாங்


177. இரத்தப் பாதை - ஜான் சில்வர்


178. சிங்கத்தின் குகையில் - டேவிட்


179. பச்சை வானம் மர்மம் - மேடிஸன்


180. ஆழ்கடல் அதிரடி - ஜான் சில்வர்


181. கண்ணீர் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி


182. துரோகியைத் தேடி - ஜான் ஸ்டீல்


183. Mr. ஜோக்கர் - வெஸ்லேட்


184. மனித வேட்டை - ஜான் சில்வர்


185. தேவை ஒரு தோட்டா - வெஸ்லேட்


186. சார்லிக்கொரு சவால் - சார்லி


187. பிழைத்து வந்த பிணம் - ஜார்ஜ்


188. மைக்ரோ அலைவரிசை- 848 - ஜானி நீரோ


189. மரண மச்சம் - ஜார்ஜ்


190. பரலோகப் பயணம் - லாரன்ஸ் & டேவிட்


191. புயலோடு ஒரு போட்டி - இரட்டையர்கள்


192. தங்க விரல் மர்மம் - ஜானி நீரோ


193. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி


194. சிறை மீட்டிய சித்திரக்கதை - சார்லி


195. நாச அலைகள் - இரும்புக்கை மாயாவி


196. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும்புக்கை மாயாவி


197. பயந்து வந்த பயங்கரவாதி - லாரன்ஸ் & டேவிட்


198. காற்றில் கரைந்த கரன்ஸி - மாண்ட்ரெக்


199. பனியில் புதைந்த ரகசியம் - ஜார்ஜ்


200. மர்மச் சுரங்கம் - சிஸ்கோ

201. காலத்தோடு கண்ணாமூச்சி - மாண்ட்ரெக்


202. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி


203. ஊடு கொலைகள் - ஷெர்லக் ஹோம்ஸ்


204. எமனின் எண்- 8 - மாண்ட்ரெக்


205. துருக்கியில் ஜானி நீரோ - ஜானி நீரோ


206. உறை பனி மர்மம் - இரும்புக்கை மாயாவி


207. கொரில்லா வேட்டை - ஜார்ஜ்


208. இரத்த வாரிசு - சார்லி


209. திகிலூட்டும் நிமிடங்கள் - லாரன்ஸ் & டேவிட்


210. பேய்த்தீவு ரகசியம் - சார்லி


211. Mr.சில்வர் - சில்வர்


212. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி


213. தலைவாங்கும் தலைவன் - மாண்ட்ரெக்


214. திசை மாறிய சுரங்கம் - ஷெர்லக் ஹோம்ஸ்


215. கொலைகாரக் கபாலம் - ஜார்ஜ்


216. மயான மாளிகை - ஷெர்லக் ஹோம்ஸ்


217. விசித்திரக் கொள்ளையர் - மாண்ட்ரெக்


218. சிங்கத்திற்கொரு சவால் - ஜார்ஜ்


219. தலையில்லா கொலையாளி - இரும்புக்கை மாயாவி


220. பழி வாங்கும் பனி - ஜேம்ஸ்பாண்ட்


221. கொலையுதிர் காலம் - மாண்ட்ரெக்


222. ஒரு கைதியின் கதை - சார்லி


223. மோசடி மன்னன் - ஜார்ஜ்


224. கொலை வள்ளல் - ஜான் சில்வர்


225. பச்சை நரிப் படலம் - ஜெஸ்லாங்


226. நடக்கும் சிலை மர்மம் - ரோஜர் 


227. நடு நிசிப் பயங்கரம் - மாண்ட்ரெக்


228. மந்திர வித்தை - இரும்புக்கை மாயாவி


229. மரணத்தின் முகம் - ஜெஸ்லாங்


230. மாண்டு போன நகரம் - ஜான் ஸ்டீல்


231. ஒரு வீரனின் கதை - பில் ஆடம்ஸ்


232. ஜானி இன் பாரிஸ் - ஜானி நீரோ


233. பாதாள பாசறை - மாண்ட்ரெக்


234. C. I. D லாரன்ஸ்(மறுபதிப்பு ) - லாரன்ஸ் & டேவிட்


235. சூதாடும் சூறாவளி - ஜேம்ஸ்பாண்ட்


236. யார் அந்த மாயாவி(மறுபதிப்பு ) - இரும்புக்கை மாயாவி


237. கல்லறையில் ஒரு கவிஞன் - ஜெஸ்லாங்


238. காணாமல் போன ஜோக்கர் - டிரேக்


239. தவளை மனிதர்கள்(மறுபதிப்பு ) - இரும்புக்கை மாயாவி


240. புயல் படலம் - டைனமைட் ரெக்ஸ்


241. ஒரு மாந்திரீகனின் கதை - டாமி


242. தங்கக் கல்லறை - 1 - கேப்டன் டைகர்


243. தங்கக் கல்லறை - 2 - கேப்டன் டைகர்


244. பனியில் ஒரு பிணம் - சி.ஐ.டி. ராபின்


245. ரவுடி ராஜ்யம் - அலெக்ஸாண்டர்


246. பென்குயின் படலம் - ஜார்ஜ்


247. நரகத்தின் நடுவில் - சி.ஐ.டி. ராபின்


248. விசித்திர வில்லன் - பெர்ரி மேஸன்


249. குற்ற வருஷம் - 2000 - ரிப்போர்ட்டர் ஜானி


250. இரும்புக்கை எத்தன் - கேப்டன் டைகர்

251. திகில் ஸ்பெஷல் - கருப்புக்கிழவி


252. ஒரு மர்ம இரவு - ஷெர்லக் ஹோம்ஸ்


253. பரலோகப் பாதை - கேப்டன் டைகர்


254. வீடியோவில் ஒரு வெடிகுண்டு - சி.ஐ.டி. ராபின்


255. மரணத்தின் நிறம் கறுப்பு - பெர்ரி மேஸன்


256. மின்னல் ஜெர்ரி - ஜெர்ரி


257. இருளின் தூதர்கள் - ரிப்போர்ட்டர் ஜானி


258. ஹாரர் ஸ்பெஷல  - கருப்புக்கிழவி


259. மின்னும் மரணம் - கேப்டன் டைகர்


260. மாயக் குள்ளன் - மாண்ட்ரெக்


261. திகில் கனவு - ரிப்போர்ட்டர் ஜானி


262. மைடியர் மம்மி - சி.ஐ.டி. ராபின்


263. நள்ளிரவு நாடகம் - மாண்ட்ரெக்


264. வைர வேட்டை - சைமன்


265. சாத்தானின் சாட்சிகள் - ரிப்போர்ட்டர் ஜானி


266. உறைந்த நகரம் - ப்ரூனோ பிரேசில்


267. துரத்தும் தோட்டா - வெஸ்லேட்


268. திரில் ஸ்பெஷல் - கருப்புக்கிழவி


269. கொலை அரங்கம் - ஜான் ஸ்டீல்


270. சிலந்தியோடு சதுரங்கம் - சி.ஐ.டி. ராபின்


271. காற்றில் கறைந்த பாலர்கள் - மாண்ட்ரெக்


272. புயல் பெண் - சி.ஐ.டி. ராபின்


273. பறக்கும் பாவைப் படலம் - ஜேம்ஸ்பாண்ட்


274. சிறையில் ஒரு புயல் - கேப்டன் டைகர்


275. நிழலும் கொல்லும் - ஜேம்ஸ்பாண்ட்


276. எத்தர் கும்பல் - 8 - மாண்ட்ரெக்


277. திகில் டெலிவிஷன் - ரிப்போர்ட்டர் ஜானி


278. மரண மண் - வெஸ்லேட்


279. பழி வாங்கும் புகைப்படம் - ஜார்ஜ்


280. சிவப்புத் தலை சாகசம் - ஷெர்லக் ஹோம்ஸ்


281. பழிவாங்கும் பிசாசு - சி.ஐ.டி. ராபின்


282. டாலர் வேட்டை - ஜார்ஜ்


283. திசை திரும்பிய தோட்டா - கேப்டன் டைகர்


284. ஆழ் கடல் அதிசயம் - மாண்ட்ரெக்


285. மரண ரோஜா - ஜார்ஜ்


286. ஜன்னலோரம் ஒரு சடலம் - சி.ஐ.டி. ராபின்


287. தோட்டா தலைநகரம் - கேப்டன் டைகர்


288. கொலைப் பொக்கிஷம் - சி.ஐ.டி. ராபின்


289. மீண்டும் முதலைகள் - ப்ரூனோ பிரேசில்


290. யானைக் கல்லறை - ரேஞ்சர் ஜோ


291. குள்ள நரிகளின் இரவு - ப்ரூனோ பிரேசில்


292. அமானுஷ்ய அலைவரிசை - மார்ட்டின்


293. சரித்திரத்தை சாகடிப்போம் - மார்ட்டின்


294. இரத்தக் கோட்டை - கேப்டன் டைகர்


295. மேற்கே ஒரு மின்னல் - கேப்டன் டைகர்


296. தனியே ஒரு கழுகு - கேப்டன் டைகர்


297. மெக்சிகோ பயணம் - கேப்டன் டைகர்


298.புதையல் பாதை - ரேஞ்சர் ஜோ


299. செங்குருதிப் பாதை - கேப்டன் டைகர்


300. புயல் தேடிய புதையல் - கேப்டன் டைகர்

301. திசை திரும்பிய பில்லி சூன்யம் - ரிப்போர்ட்டர் ஜானி


302. மரண ஒப்பந்தம் - சி.ஐ.டி. ராபின்


303. பேழையில் ஒரு வாள் - மார்ட்டின்


304. காலத்திற்கொரு பாலம் - மார்ட்டின்


305. மரண மாளிகை - ரிப்போர்ட்டர் ஜானி


306. ஒரு திகில் திருமணம் - ஜார்ஜ்


307. காற்றில் கரைந்த கதாநாயகன் - ரோஜர் மூர்


308. சித்திரமும் கொல்லுதடி - சி.ஐ.டி. ராபின்


309. கதை சொல்லும் கொலைகள் - ஜான் ஸ்டீல்


310. பொன்னில் ஒரு பிணம் - மார்ட்டின்


311. நொறுங்கிய நாணல் மர்மம் - ஜூலியன்


312. நிழல் எது? நிஜம் எது? - மாண்ட்ரெக்


313. விண்ணில் ஒரு குள்ள நரி - ஜார்ஜ் 

314. முத்துகாமிக்ஸ் சர்பிரைஸ் ஸ்பெஷல் - ஸ்பெஷல் -

315. சிகப்புக் கன்னி மர்மம்

 316.தற்செயலாய் ஒரு தற்கொலை 
- ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விடு பட்ட சித்திரக் கதைகள் - 


1. திசை மாறிய கப்பல்கள் (மறுபதிப்பு) - லாரன்ஸ் & டேவிட் 


2.இரண்டாவது வைரக்கல் எங்கே ? (மறுபதிப்பு) - காரிகன் 


3. காணாமல் போன கைதி (மறுபதிப்பு) - ஜானி நீரோ 


4. பார்முலா திருடர்கள் (மறுபதிப்பு) - லாரன்ஸ்& டேவிட் 

மூச்சிரைக்க முழுப் பட்டியலையும் படித்து முடித்து விட்டு  - இதில் எத்தனை ஞாபகத்தில் உள்ளன ; எத்தனை வெறும் பெயர்களாய் மாத்திரமே நினைவில் உள்ளன என்று உங்களின் நினைவாற்றலோடு மல்யுத்தம் போடும் முன்னே  உங்களுக்கு தொடர்ந்து இன்னும் பணிகள் காத்துள்ளன ! 

  • இந்தப் பட்டியலில் உங்களின் TOP 5 தலைப்புகள் எவை ? 
  • TOP 5 அட்டைப்படங்கள் எவை ?
  • TOP 5 நாயகர்கள் யார்? 
நிச்சயம் இது ஒரு கிறுகிறுக்கச் செய்யும் படலமென்பது நான் அறியாததல்ல ! ஆனால், சுவாரஸ்யமானதொரு தலைசுற்றலுக்கு இதை விட சுலபமான வழி(லி ) இருக்க முடியாதே ! So உங்களின் அந்த சிந்தனைத் தொப்பிகளைத் தேடி எடுத்து அணிந்து கொண்டு get cracking please ! அடுத்த வாரம் இன்னொரு NBS பதிவோடு உங்களை சந்திப்பேன் ! அது வரை have fun ! 

Saturday, November 10, 2012

மாற்றம் மாத்திரமே மாறாததே !


நண்பர்களே,

வணக்கம். காரணங்கள் எதுவாக இருப்பினும், கடந்த பதிவு ஏற்படுத்தித் தந்த பரபரப்பு நம் 11 மாத blogging முயற்சிக்கு முற்றிலும் புதிதே !உச்சக்கட்டமாய்  ஒரே நாளில் 1788 பார்வைகள் ; ஏறத்தாழ 450 பின்னூட்டங்கள் ; பிரவாகமாய் எண்ணங்கள், கருத்துக்கள் என்று ஒரு அடைமழை effect ! இந்த அமளி துமளிக்கு மத்தியில் ஒரு விஷயம் 'பளிச்' என்று புலனாகிறது ! இன்டர்நெட் எனும் ஆற்றல்மிகு உலகில் சாதிப்பதும் சுலபம் ; சாத்து வாங்குவதும் சுலபமே போலும் ! Facebook ; Twitter ; Orkut இன்ன பிற சமூக வலைத்தளங்களின் தலைமுறையைச் சார்ந்தவனல்ல நான் என்பதால், இந்தக் கருத்து மோதல்கள் ; அனல் பறக்கும் online விவாதங்கள் எனக்குப் புதிதாகவே, புதிராகவே  படுகின்றன. எப்போதோ ஒரு Facebook குரூப் துவக்கி ஒரு வாரமோ ; இரண்டு வாரங்களோ அங்கே நான் தலையைக் காட்டிட முயற்சித்த சமயத்திலேயே நமது மின்னஞ்சல் முகவரியினை (lioncomics@rediffmail.com )யாரோ ஒரு புண்ணியவான் hack செய்து விட்டார் ! அத்தோடு  அந்த மின்னஞ்சல் முகவரியையும்,எனது வலைத்தள முயற்சிகளையும்  பரணிற்குப் பார்சல் பண்ணி விட்டு 'அக்கடா'வென அமர்ந்த என்னை திரும்பவும் இப்பக்கம் கொணர்ந்தது என் மகனே ! இங்கு எழுதத் துவங்கிய நாள் முதல் எனக்கும் சரி, நமது இதழ்களுக்கும் சரி ஒரு second wind கிட்டியிருப்பது அப்பட்டமான உண்மை. 

நம் இதழ்கள் சீராய் வந்து கொண்டிருந்த காலங்களில் கூட காமிக்ஸ்களுக்கென  செலவிட என்னிடம் இத்தனை நேரமோ ; பொறுமையோ  இருந்ததில்லை ; ஆனால் இப்போது அந்த extra bit முயற்சிகளை செலுத்திட எப்படியோ சாத்தியப்படுகின்றது ! புதிதாய்ப் பிரசன்னமாகியுள்ள அந்த உத்வேகம் வந்தது எங்கிருந்து என்று சிந்திக்க அதிகம் அவசியப்படவில்லை- ஏனெனில் அது ரொம்பவே obvious ! காரணம் # 1 : உங்களின் பெரும்பான்மையினரின் unconditional நேசமும், நம்மிடம் நீங்கள் தளராது வைத்துள்ள நம்பிக்கையும் ! காரணம் # 2 : வெகு சொற்பமான நண்பர்களின் செயல்பாடுகளே எனினும் வலைத்தளங்களில் அவ்வப்போது அரங்கேறிடும் நையாண்டிகளும் ; பரிகாசங்களும் கூடத் தான் என்று சொல்ல வேண்டும்  ! ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பென்று நினைக்கிறன் ;நண்பர் ஒருவர்  facebook link ஒன்றினை அனுப்பி அதனைப் படித்துப் பார்க்கும்படி ரொம்பவே ஆதங்கத்தோடு எழுதி இருந்தார். Curiosity மேலோங்க அதனைப் படித்த போது என்னை எக்கச்சக்கமாய் கலாய்த்து எழுதி இருந்ததைப் பார்த்திட முடிந்தது. படித்த கணத்தில் எரிச்சலும், ஆற்றமாட்டாமையும் மனதில் எழுந்த போதிலும் நான் அங்கே எதுவும் react பண்ணிடவில்லை. வேலைகளைத் தாண்டி இன்டர்நெட் பக்கம் வந்திடும் பழக்கம் அல்லாதவன் என்பதால் கொஞ்ச நாளுக்கெல்லாம் அந்த சங்கதி என் தலைக்குள் மறைந்து போவது சிரமமாக இருந்திடவில்லை! ஆனால் ஒரு நாள் நிச்சயம் மீண்டு(ம் ) வருவோம் ; இரத்தப் படலம் முழுத் தொகுப்பே நமது இறுதி இதழ் என்று உலவி வந்த பேச்சுக்கு செயலால் முற்றுப்புள்ளி வைப்போம் என்ற வைராக்கியம் என்னுள் தழைக்கத் துவங்கியதற்கும் அந்தப் பரிகாச நாட்கள் ஒரு விதத்தில் உதவின என்று தான் சொல்லிட வேண்டும். And reason # 3 : என்றும் என்னுள் உறையும் அந்தக் காமிக்ஸ் காதல் !

கற்றுக் கொள்ள நித்தமும் ஒரு நூறு விஷயங்கள் உண்டென்பதை நம் பயணம் எனக்கு உணர்த்தி வருகின்றது ! வண்ணத்தில் ; புது வடிவில் இதழ்களைத் தயாரிக்கத் தேவையான நுணுக்கங்களை fine tune செய்யப் படித்து வருவது ஒரு பக்கமென்றால், பாராட்டுக்களையோ ; பரிகாசங்களையோ ஒரே பக்குவத்தோடு அணுகக் கற்பதும் இந்த learning curve -ன் பிரதான பாடங்களாய் பார்த்திடப் பழகி வருகின்றேன். பிடிக்காத மொழிபெயர்ப்பு  "மீளாத் துயர்க்கும் " ; "தாளா வேதனைக்கும் "  வழி வகுத்துள்ளதென்பதைப் படித்த போது நேர்ந்த embarrassment , 'கேன்சரால் அவதியுறும்  தன் 3 வயதுக் குழந்தைக்கு சிகிச்சை தரப் பணமில்லை ; முடிந்தவர்கள் உதவுங்களேன்' என்று குரல் கொடுக்கும் ஒரு துரதிர்ஷ்டசாலித் தந்தையின் கண்ணீர் விளம்பரத்தை பேப்பரில் பார்க்கும் போது விலகிப் போகின்றது ! எது வேதனை ? ; எது துயர் ?என்பதன் அர்த்தங்கள் கூட சந்தர்ப்பங்களுக்கேற்ப மாறிடுவது புரியும் போது, சின்னச் சின்ன விமர்சனங்களோ, நையாண்டிகளோ பெரிதாய் ஒரு சங்கடத்தை ஏற்படுத்த அவசியமில்லை என்பதும் சுலபமாய்ப் புரிகிறது! மாற்றுக் கருத்துக்களோ ; அன்பான பாராட்டுக்களோ - அவற்றினுள் ஒரு ஆக்கபூர்வமான வளர்வுக்குப் பிரயோஜனப்படும் சங்கதி இருக்கும் பட்சத்தில் அதனை மாத்திரம் கிரஹித்துக் கொண்டு நகர்ந்து கொண்டே இருப்பதே சாலச் சிறந்தது என்பதை புரிந்து கொள்ள நான் ஐன்ஸ்டீன் ஆக இருக்கத் தேவை இல்லையே !

கிட்டத்தட்ட பத்து நாட்களாய் இங்கே பக்கம் பக்கமாய் அரங்கேறிய விவாதங்கள் எதற்கு உதவியுள்ளதோ இல்லியோ ; "தங்கக் கல்லறை" இதழின் online விற்பனைக்கு அசாத்தியமாய் உதவியுள்ளது ! தினமும் குவியும் E -Bay ஆர்டர்களே  அதற்கு சாட்சி! தங்கக் கல்லறை இப்போது history ;இதழ் நம்பர் 316 மாத்திரமே என்பதால் எதிர்வரும் நாட்களைப் பற்றிப் பேசிடுவதே இனி சரியான விஷயமாக இருக்கக் கூடும்  என்பதால் let's move on guys !

பிரஸ்ஸல்ஸ் நகரின் மைந்தனான ரிபோர்ட்டர் ஜானியின் உருவத்தை வீட்டின் முகப்பில் வரைந்து வைத்திருக்கிறார் ஒரு காமிக்ஸ் காதலர் !
இரண்டு ஆண்டுகளாய் என் மேஜையில் துயில் பயின்று வரும் ஜானியின் black & white சாகசத்தின் இறுதி இதழான "மரணத்தின் நிசப்தம்" டிசெம்பர் முதல் வாரத்தில் வந்திடும் ! அதன் அடுத்த இதழ் - புத்தாண்டின் முதல் இதழ், வரலாறு கண்டிராத 16 / 17 மணி நேர மின்வெட்டின் இடையில் உருவாகி வரும் நமது NEVER BEFORE ஸ்பெஷல் ! ஆனால் அதில் நீங்கள் அறியாத சில சமீபத்திய மாற்றங்களைப் பற்றிப் பேசிடவே இந்தப் புதிய பதிவு ! செப்டம்பர் முதற்கொண்டே NBS -ன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் எங்களது சின்ன டீம் மூச்சு வாங்கி வருவது நிஜமே ! வாய்க்குள் கால் கட்டை விரலை நுழைப்பது சுலபம் ; அதனை நோகாது வெளி எடுப்பது எத்தனை பெரிய சவால் என்பதை hands on அனுபவமாய் நான் உணர்ந்து வருகிறேன் ! இந்த சவாலில் சுவாரஸ்யம் உள்ளது என்பதையும் உணரும் போது பணியின் சுமை உறுத்தவில்லை !

லார்கோவின் 2 கதைகள் (94 பக்கங்கள்) முடிந்து விட்டன ; டைகரின் "கான்சாஸ் கொடுரன்" 2 கதைகள் (92 பக்கங்கள்) வரும் வாரத்தில் நிறைவு பெறும்  நிலையில் உள்ளன; மாடஸ்டி பிளைஸ் எப்போதோ தயார் ; திருவாளர் சிக் பில் பணிகள் தீபாவளி விடுமுறைகளின் சமயம் முடிந்து விடும் என்பதே சமீபத்திய நிலவரம். இன்னொரு வண்ணக் கதையான ௦" XIII - ஒரு தேடல் தொடர்கிறது " முடிந்து என் மேஜையில் ஒரு வாரமாய் அழகாய் மிளிர்கிறது. புது நாயகரான Gil Jordan வண்ணக் கதைக்கான அச்சுக்கோர்ப்புப் பணிகளும் ; மாயாவி ; ஜான் ஸ்டீல் b&w  கதைகளின் அச்சுக்கோர்ப்புமே பாக்கி என்ற நிலையில் தான் என் மண்டைக்குள் திரும்பவும் கொஞ்சம் சிந்தனைகள் !

XIII - ன் புதிய ஆர்டிஸ்ட் ; எழுத்தாளர் டீம் அழகாகப் பணியாற்றி புதியதொரு தண்டவாளத்தில் இந்தக் கதைத்தொடரினை பயணமாக்கிட முயற்சித்துள்ளார்கள் ! அழகான புதுப்பாணிச் சித்திரங்கள் ; இதமான வர்ணக் கலவைகள் என்று கண்ணுக்கு விருந்தாக இருப்பினும், கதையில் ஒரு புது இடியாப்ப சிக்கலுக்கான முதல் முடிச்சு மாத்திரமே உருவாக்கப்பட்டுள்ளது என்பது தான் நிஜம். புதிதாய் ஒரு திசையில் தொடரை செலுத்திடத் திட்டமிட்டுள்ளார்கள்   என்பது புரிகிறது ; ஆனால் அந்தத் திசை எது என்பது புலனாக; கதையின் கரு கொஞ்சமேனும் வலுப்பெற்றிட இன்னும் அடுத்த ஒரு பாகமோ ; இரண்டு பாகமோ வெளிவருவது அவசியம் போல் என் மனதுக்குப் படுகின்றது. கதையினை மொழிபெயர்க்கும் போது அவ்வளவாய்  மனதில் பதியாத கதையின் flow தயாராக இருக்கும் முழுக் கதையையும் இப்போது படித்துப் பார்க்கும் போது - கொஞ்சம் நெருடலைத் தருகிறது!இத்தனை விலையில் வெளிவரவிருக்கும் ஒரு இதழில் இது போன்ற நெருடல்கள் உங்களுக்குத் தோன்றிடக் கூடாதே என்பதால் தலைக்குள் சிந்தனைச் சக்கரங்கள் சுழலத் துவங்கின. நண்பர் XIII தன் தேடலை அடுத்த பாகமும் வெளியான பின்னே பிறிதொரு சமயத்தில் தொடரட்டும் என்று தீர்மானமாய் முடிவு செய்துள்ளேன். வெளியேறும் நாயகர் XIII மாத்திரமல்ல - ஜான் ஸ்டீலும் கூடத் தான் ! கறுப்பு வெள்ளையில் 32 பக்கங்களில் சாகசம் செய்யவிருந்த இவரது கதைகளில் வேறு மாதிரியான பிரச்னை. பக்கத்திற்கு இரண்டு கட்டங்கள் என்ற சின்ன சைசில் உருவாக்கப்பட்ட ஜான் ஸ்டீலை நமது பெரிய சைசிற்குக் கொணரும் போது படுக்க வசத்தில் ஒரு பக்கத்தில் நான்கு சித்திரங்கள் என்ற பாணியில் அமைத்திட வேண்டியுள்ளது ! ஒரு கிலோவிற்கும் கூடுதலான எடையுள்ளதொரு இதழைப் படுக்க வசத்தில் பிடித்து தொடர்ந்து வாசிப்பது ரொம்பவே அசௌகரியமான சங்கதி என்பதை practical ஆக உணர்ந்த போது ஜானுக்குக் கல்த்தா கொடுப்பது அவசியமாகிறது ! So XIII & ஜான் ஸ்டீல் are officially now out of NBS !
XIII
வெளியேறுவது இருவர் ; ஆனால் அவர்களது இடங்களை நிரப்பிட உள்ளே புகவிருப்பவர் ஒருவரே ; அவரும் ஒரு புதுமுகம் தான் ! Yes , பிரபல எழுத்தாளர் Van Hamme வின் இன்னொரு பரபரப்பான படைப்பான வேய்ன் ஷெல்டன் தனது அதிரடி ஆட்டத்தை NBS மூலம் துவக்குகிறார் ! இவரது 2 பாக துவக்க சாகசத்தின் பக்க நீளம் 57 + 62 = 119 ! முழுக்க முழுக்க வண்ணத்தில் ஆன இவரது சாகசத்தை பாதி கலரிலும் ; மீதி black & white -இல் வெளியிடுவது அபத்தமாய் இருந்திடும் என்பதால், தடாலடியாக NBS -ன் வண்ணப் பக்கங்களின் எண்ணிக்கையும் ; மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கையும் உயரே போகின்றது. வண்ணப் பக்கங்கள் 400 + black & white 56 - அக மொத்தம் 456 pages நம் NBS -ல் ! Wayne Shelton கதை ஒரு last minute தேர்வு என்பதால் மீண்டும் தலை தெறிக்க ஓட்டத்தைத் துவக்கியுள்ளோம் ! ஒரு விதத்தில் இது பொருத்தமே ; ஏனெனில் Wayne Shelton கதைகளும் ஒரு அசுர வேகப் பிரவாகமே ! ஆரம்பம் முதல் இறுதிப் பக்கம் வரை மூச்சிரைக்க நாமும் அவர்களோடு உயிரைப் பணயம் வைத்துப் பயணிப்பது போன்ற உணர்வைத் தந்திடும் இந்த முழு நீள ஆக்க்ஷன் ஹீரோவின் சித்திரங்களும் சரி ; அதிரடி வர்ணங்களும் சரி - அட்டகாசம் என்பதையும் தாண்டிய ரகம் ! Simply breathtaking !

Wayne Shelton & Co ! 
இந்த மாற்றம் எனக்கு நிஜமாக சந்தோஷமளிக்கிறது ! NBS -ல் இப்போது காத்திருக்கும் கதைகள் நிச்சயம் world class என்பது எனது நம்பிக்கை ! அந்த சிந்தனை சரியானது தான் என்று நீங்களும் ஆமோதிக்கும் நாள் அதிகத் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையோடு விடை பெற்றிடும் முன்னே அனைவருக்கும் எங்களது தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! எங்கள் நகரை நீங்கள் அன்பாய் நினைவு கூர்ந்திட எங்களது நகரப் பட்டாசுத் தொழில்கூடங்கள் சிந்திடும் வியர்வை எங்களுக்கெல்லாம் பெருமை தரும் விஷயமே !  ! Have a wonderful & safe Diwali !      

Friday, November 02, 2012

சித்திரமும் பேசிடுமே..!


நண்பர்களே,

வணக்கம். இன்னுமொரு மாதத் துவக்கம் - இன்னுமொரு புதிய இதழோடு துவங்கிடும் சந்தோசம் மீண்டும் ஒரு முறை கிட்டியுள்ளது ! சரியாகச் சொல்வதானால் இது "புது" இதழ் அல்ல தான் என்ற போதிலும், அமைப்பில் ; வண்ணத்தில் ; பாணியில் எல்லாமே ஒரு முழுமையான makeover சகிதம் வந்திடும் "தங்கக் கல்லறை" யில் பழமை நெடி எங்கும் அடித்திடாது என்பது எனது நம்பிக்கை !  

இன்று காலையிலேயே அத்தனை சந்தாக்களுக்கும் ஒட்டு மொத்தமாகப் பிரதிகள் அனுப்பி விட்டோம் - அயல்நாட்டுச் சந்தாக்கள் உட்பட ! So - கூரியர் நண்பர்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் - நாளைய தினம் உங்களின் பெரும்பான்மையினரிடம் இதழ் பத்திரமாக வந்து சேர்ந்திருக்க வேண்டும் ! 

  
ஒரிஜினல் அட்டைப்படங்களோடு வந்திடும் இந்த இதழில் டைகரை முழு வண்ணத்தில் ரசித்த கையோடு நிச்சயம் எங்களைத் திட்டப் போகிறீர்கள் என்பது உறுதி ! வண்ணத்தில் மிளிரும் இத்தனை வீரியமானதொரு கதையை black & white -ல் - அதுவும் சின்ன சைசில் வெளியிட்டதற்காக 17 ஆண்டுகள் தாமதமானால் கூட அர்ச்சனை காத்துள்ளது என்றே நினைக்கத் தோன்றுகிறது !உங்களைக் குளிர்விக்க நமக்குத் தெரிந்த ஒரே சங்கதி தான் உள்ளதே...! அவற்றை எடுத்து விட இதை விட வேறு பொருத்தமான தருணம் உண்டா  -என்ன ? So here  goes :  










2013 -க்கு திட்டமிடப்பட்டிருக்கும் புது இதழ்களின் ஒரு சின்ன ட்ரைலர் இது ! இன்னும் விரிவாய்...இன்னும் சில புதுமுகங்களோடு ; எந்த மாதங்களில் எந்த இதழ்கள் ; என்ன விலைகளில் என்பதெல்லாம் - NEVER BEFORE ஸ்பெஷல் இதழுடன் வரவிருக்கும் booklet -ல் பார்த்திடலாம் !

இம்முறை நீளமாய் நான் எழுதிட அவசியமில்லை என்றே நினைக்கிறேன் - இந்தச் சித்திரங்களே மேடையேறிப் பேசிடுமே ! நாளைய பொழுது உங்களின் விமர்சனங்களால் புலரப் போவதை எண்ணும் போது - ரிசல்ட் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவனின் சிந்தனைகளே என்னுள் ! Fingers crossed !

இப்போதைக்கு  - Adios amigos...!

பின்குறிப்பு : 2013 -க்கான சந்தா தொகையில் சின்னதாய் ஒரு மாற்றம் ! தமிழகத்துக்குள் கூரியரில் பெற்றிட : Rs.1320  ; பதிவுத் தபாலில் பெற்றிட : Rs.1420  ; தமிழகத்துக்கு வெளியே ( இந்தியாவுக்குள் ) : Rs.1520. ஏற்கனவே சந்தாக்களைப் புதிப்பித்துள்ள நண்பர்கள் இந்த சின்ன வித்தியாசத்தை பின்னர் ஒரு சமயம் அனுப்பிக் கொள்ளலாம் ! காமிக்ஸ் க்ளாசிக்ஸ் சந்தாத் ொகையில் மாற்றம் ஏதும் கிடையாது.