நண்பர்களே,
சென்ற வார ஊர் சுற்றலின் போது நமது படைப்பாளிகள் சிலரையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது !
மப்பும் மந்தாரமுமாய் இருந்திட்ட ஒரு ஐரோப்பியக் காலையினில் அவர்களது அலுவலகத்தினுள் நுழைந்த மறுகணமே என் கண்ணில் பட்டது நமது XIII - ன் "
இரத்தப் படலம்" தொகுப்பு தான் ! உள்ளே போனவுடனேயே "இன்னும் குறைந்தது 3 பிரதிகளாவது உடனே அனுப்புங்கள் !" என்றார்கள் ; நான் மண்டையை ஆட்டிக் கொண்டே என்ன சமாச்சாரம் என்று விசாரித்தேன்...
ஆண்டுதோறும் ஜனவரி இறுதியினில் பிரான்சின் ஒரு சிறு நகரமான Angouleme -ல் ஒரு காமிக்ஸ் திருவிழா (!!) நடந்திடும். சின்னச் சின்ன கதாசிரியர்கள் ; வளர்ந்து வரும் ஓவியர்கள் அத்தனை பேரும் ; ஜாம்பவான்களில் ஒரு சிலரும் அங்கே காமிக்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் ஐக்கியமாகி இருப்பது வழக்கம். பதிப்பகங்கள் தத்தம் புது வெளியீடுகளை showcase செய்து அவற்றை promote செய்திடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்.
இந்த ஆண்டு நடந்த விழாவின் போது நமது "இரத்தப் படலம்" முழுத் தொகுப்பினை தங்களது ஸ்டாலில் வைத்திருந்தார்கள் போலும் ; அதனைப் பார்வையிட்ட பிரெஞ்சுக் காமிக்ஸ் ரசிகர்கள் ரொம்பவே சந்தோஷப்பட்டார்களாம்! தங்களது மொழியினில் வந்திட்டதொரு தொடரை அவர்களே இன்னும் முழுமையாக வெளியிடவில்லை எனும் போது எங்கோ தொலைதூரத்தில் உள்ளதொரு இந்திய மொழியில் இது போல ஒரு Complete Collection வந்திருப்பதைப் பார்த்த எல்லோருக்குமே பெருமிதமாம் !
அது மட்டும் அல்ல ....
 |
| William Vance |
காமிக்ஸ் உலகின் all -time great ஓவியரும் ; இந்தத் தொடரின் அசகாய வெற்றிக்குக் காரணமுமான வில்லியம் வான்ஸ் நமது இதழை பாராட்டினாராம் ! முதுமை காரணமாய் ஓய்வுக்குச் சென்று விட்ட வான்ஸ் தற்போது ஸ்பெயின் நாட்டில் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் அமைதியாகப் பொழுதைக் கழிக்கிறாராம் ! அவரது பிரத்யேக லைப்ரரி-க்கு ஒரு பிரதியும் ; கதாசிரியர் Van Hamme -க்கு ஒரு பிரதியும் அனுப்பிட வேண்டுமென்று அவர்கள் சொன்ன போது எனக்கு புல்லரித்துப் போனது ! எங்கோ ஒரு மூலையில் ; பீற்றிக் கொள்ளக் கூடிய circulation எதுவும் இல்லாத நமக்கு - இத்தனை பெரிய ஜாம்பவான்களிடமிருந்து கிடைத்த அங்கீகாரம் ஒரு இமாலய சாதனையாய்த் தோன்றியது !
ஒரு தரமான படைப்பை அழகாய் ரசித்து அதனை இத்தனை தூரம் கொண்டு வந்திட்ட உங்கள் அத்தனை பேருக்கும் அந்தப் பாராட்டில் சம பங்குண்டு guys !! Hats off !
சந்தோஷமாய் இருந்த அந்தத் தருணத்தை உங்களோடு அன்றே பங்கிட நினைத்தேன் ; ஆனால் எனது சாம்சங் Galaxy Tab-ல் தமிழில் டைப் செய்தால் தூர்தர்ஷனில் வரும் ஜுனூன் தமிழை தயாரித்துத் தந்து புண்ணியம் சேர்த்தது...so ஊர் திரும்பும் வரை பொறுமை காக்க வேண்டிய நிர்பந்தம் !
"பீலா படலம்" இன்னும் ஓயவில்லை ..இன்னும் கொஞ்சம் பாக்கி உள்ளது !
உலகின் வேற்று மொழிகளில் XIII தொடரின் கதைகள் மறுபதிப்பாகும் போது பெரும்பாலுமே ஒரிஜினலில் உள்ள அதே அட்டைப்பட டிசைன் தான் பயன்படுத்தப்படும். In fact புதிதாய் நாமாக ஒரு coverpage உருவாக்கிட நினைத்தால் கூட அதனை முன்கூட்டியே படைப்பாளிகளுக்கு அனுப்பி அவர்களது சம்மதத்தைப் பெற்றிட வேண்டும் என்பது தான் ஒப்பந்தம். ஆனால் ஆரம்பம் முதலே நமக்கு மட்டும் இதில் முழு சுதந்திரம் உண்டு...நமது அட்டைப்படங்கள் 'பளிச்' என்று வண்ணமயமாக இருப்பதால் நம்மை இந்த விதி கட்டுப்படுத்திடுவதில்லை ! இரத்தப் படலம் இதழுக்கான நமது அட்டைபடம், ஒரிஜினலின் சித்திரங்களை அப்படியே கொண்டு வண்ணக் கலவையில் மட்டும் சற்றே மாற்றம் செய்திருந்த ஒன்று !அது கூட ஒரிஜினலை விட 'பளிச்' என்று இருப்பதாய் அவர்கள் சொல்லக் கேட்ட போது எனது பல்வரிசையினை காட்சிப் பொருளாக்கினேன் !
 |
| ஒரிஜினலின் அட்டைபடம் |
Last but not the least, அடுத்த முறை ஸ்பெயின் நாட்டுக்குப் பயணமாகும் போது வில்லியம் வான்ஸ் அவர்களை சந்திக்க ஆசை என்று சொன்னேன்... !ஓய்வில் இருப்பதால் அவர் பெரும்பாலும் சந்திப்புகளை தவிர்ப்பதாகவும் ஒரே ஒரு முறை..சிறியதொரு சந்திப்புக்கு அவரிடம் பேசி ஏற்பாடு செய்து தருவதாக வாக்களித்துள்ளார்கள் !
சந்தடி சாக்கில் கதாசிரியர் Van Hamme அவர்களையும் சந்திக்க முடியுமாவென கேட்டு இருக்கிறேன் ! Fingers Crossed !!
 |
| Jean Van Hamme |
XIII புராணத்தில் இன்னும் ஒரே ஒரு சேதி !
இரத்தப் படலம் தொடர் மீண்டும் வரவிருப்பது பற்றி போன மாதம்
பதிவு செய்திருந்தேன் அல்லவா ? புதியதொரு ஓவியர் ; கதாசிரியர் கூட்டணியில் தொடருக்கு புற்றுயிர் ஊட்டி உள்ளார்கள் ! ஆண்டுதோறும் ஒரு புது ஆல்பம் இனி வெளி வரும் என்று தகவல். ஐரோப்பாவில் இந்த இதழுக்கு மிக அருமையான வரவேற்பு கிட்டி உள்ளதாம் !
 |
| இரத்தப் படலம் - புது வெளியீடு ! |
So 2012 -ன் இறுதிக்குள் தமிழில் இந்த புதிய சாகசத்தை நீங்கள் படிக்கப் போகிறீர்கள் ! இதற்கான பணிகள் தொடங்கி விட்டன !
இந்தப் பதிவுக்கு இத்தோடு மங்களம் ; but இன்றைக்கு இன்னும் சில (!) பதிவுகள் தொடர உள்ளன ! உஷார் !