Powered By Blogger

Wednesday, March 07, 2012

சல்யூட் கேப்டன் டைகர் !


நண்பர்களே,

இரண்டு நாட்களுக்கு உங்களை சஸ்பென்சில் விட வேண்டும் என்றெல்லாம் எண்ணம் கிடையாது ! But தமிழில் டைப் செய்து,போட்டோக்களை இணைத்து, உருப்படியாக ஒரு பதிவினை செய்திடுவென்பது நிறையவே நேரம் எடுக்கின்றது ! So திங்கட்கிழமை மேலும் ஒரு பதிவு செய்திட எனக்கு "தம்" இல்லை என்பதே விஷயம் !

பேப்பரும், பேனாவும் எடுத்துக் கொண்டு எழுதும் பொது வந்திட்டிடும் சரளம்...சிந்திப்பதில் பாதி ; டைப் அடிப்பதில் மீதி என்ற கம்ப்யூட்டர் சமாச்சாரத்தில் இன்னும் எனக்கு வரவில்லை என்றே சொல்லுவேன் !

முன்னுரையை இத்தோடு மூட்டை கட்டி விட்டு நேரடியாக விஷயத்துக்கு செல்வோமே ?


"படித்ததில் பிடித்தது எது?" என்ற கேள்வியினை நான் சமீபத்தில் இங்கே எழுப்பி இருந்ததும் சரி ...நமது இதழ்களின் "டாப் நாயகன்" என்று யாரைத் தேர்வு செய்வீர்களென்ற கேள்விக்கு வந்திருந்த பதில்களும் சரி..சந்தேகத்திற்கே இடமின்றி தெரிவித்த சமாச்சாரம் ஒன்றே :  

கேப்டன் டைகர் !!





சமீபத்தில் இங்கே வந்த பதிவுகளில் பெரும்பான்மையும் "டைகர் கதைகள் எப்போ?" என்ற தொனியில் இருப்பதை கவனிக்காமல் இருந்திருக்கவே முடியாது ! "அசைக்க முடியா ஹீரோ # 1" நமது கேப்டன் டைகர் தான் என்பது இங்கேயும் சரி ; நமது பிற வாசகர்களின் கடிதங்கள்..கருத்துக்களின் மூலமும் சரி, crystal clear ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது !

So நமது காமிக்ஸ்கள் ஒரு second wind எடுத்துக் கொண்டு ஆட்டத்தைத் துவக்கி இருக்கும் 2012 -ல் கேப்டன் டைகர் சாகசங்களும் இடம்பெற்றிட வேண்டும் என்று தீர்மானித்தேன். டைகர் கதைகள் ஆங்காங்கே தொடர்ச்சிகளை எதிர்பார்த்து நின்று கொண்டிருப்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்..So அவற்றை நியாயமான வரிசையில் தொடந்திடுவது என்ற தீர்மானத்தில் உள்ளேன் !

முதல் கட்டமாக..டைகரின் இளம் பிராய சாகசங்கள் "இளமையில் கொல்" மூலம் நமது லயன் காமிக்ஸின் 200 -வது இதழான "கௌபாய் ஸ்பெஷல்" தொடங்கி இருந்ததன அல்லவா ? முதல் மூன்று பாகங்கள் அந்த இதழில் வந்திருந்தன..!

அவற்றின் அடுத்த மூன்று கதைகளுக்கான உரிமைகளை வாங்கியாச்சு என்பதே இன்றைய பதிவின் சந்தோஷமான சேதி ! 

இதோ பாகம் 4 ; 5 மற்றும் 6 -ன் ஒரிஜினல் அட்டைப்படங்கள் !! 


பாகம் 4

பாகம் 5



இவை எப்போது வெளி வரும் என்பதை "லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" இதழில் அறிவிக்கவிருக்கிறேன் !

பாகம் 6 
அது வரை பொறுமை காக்க வேண்டுமே..ப்ளீஸ் !!


இந்த "புதன் பதிவு" திருப்தியான சேதி சொல்லும் பதிவாக இருந்திருக்குமென்ற
 நம்பிக்கையில் இப்போதைக்கு விடை பெறுகிறேன் !

'நிறையவே பதிவுகளோடு துவக்கியாச்சே...இன்னும் ஒரே ஒரு பதிவோடு இந்த வாரத்தை நிறைவு செய்திட்டாலென்ன' ? என்ற சிந்தனையுடன் ! So சனிக்கிழமை சந்திப்போமா திரும்பவும் ?

நான் ரெடி...நீங்க ரெடியா ?



45 comments:

  1. We are always ready.
    Great News!
    Aldrin Ramesh from Muscat

    ReplyDelete
  2. ஜில்லென்ற செய்தியை, சுடச்சுட தந்தீர்கள்.

    ReplyDelete
  3. ஏற்கனவே XIII இன் 2nd இன்னிங்க்ஸ்கு தயாராகி வருகிறார் . இப்போது டைகர். செம குசிதான் ஆனால் பிட்டு பிட்டா பிய்த்து போட்டு கதையை மறக்கும்படி செய்து வீடாதீர்கள். மொத்தமாக வெளி இடவும். அதுவும் வண்ணத்தில் . எதிர்பார்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஹாய் ஸ்டாலின்,

      அவ்வை சிறுவர் நுலகம் ஈரோடில் எங்கு உள்ளது ?

      நன்றி - நாகராஜன்

      Delete
  4. அன்ஜாவீரன், மைகேல் ஸ்டீவென் டானவன் ப்லுபெர்ரி, வருகிறார். வருகிறார், வருகிறார். paw! paw! paw!

    ReplyDelete
  5. டைகர் கதைகளின் ஸ்டைலும், சித்திரங்களும் அனைவரையும் ஈர்க்கும் தன்மை வாய்ந்தவை.

    கதை வேகம் பிடிக்கும்போது, தட தட வென்று கோச்சு வண்டியில் நாமும் விரைவதுபோன்ற பிரமை ஏற்படும்.

    உங்கள் இலகு தமிழ் நடையும் டைகர் கதைகளை நாம் இரசிக்க முக்கிய காரணம்.

    காக்க வைத்தாலும் - பதிவு தூக்கல் தான்!

    -Theeban (SL)

    ReplyDelete
  6. எனக்கு இப்போவே ஒரே மூச்சில் படிக்கவேண்டும் போல இருக்கு, plz மொழிபெயர்ப்பை ஆரம்பித்து விடுங்கள், வண்ணத்தில், உயர்தரதாளில், விலை பற்றி கவலைஇல்லை .

    ReplyDelete
  7. அற்புதம் !!!!

    உங்களுக்கு எங்களது ஆதரவு எப்பொழுதும் உண்டு.

    நண்பர்கள் சொன்னது போல முழு கதையும் (முடிந்தால் எல்லா டைகர் கதைகளையும்) வெளியிடவும்.

    முத்து 40 நாட் அவுட் ஸ்பெஷல் = டைகர் ஸ்பெஷல்

    ஓகே வா விஜயன் சார்.

    நாகராஜன் S

    ReplyDelete
    Replies
    1. நாகராஜன் S : வேகத்தில் நம் வாசகர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் சிறிதும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டே வருகிறீர்கள் ! முத்து காமிக்ஸ் ஸ்பெஷல் பற்றிய அறிவிப்புக்கு இன்னும் நிறையவே அவகாசம் உள்ளது...பொறுத்திருந்து பாருங்கள் ! நிச்சயம் disappoint ஆக மாட்டீர்கள் !

      Delete
  8. நல்லதொரு தொடக்கம்.. ப்ளுபெர்ரி கதைகளை ஒரே புத்தகமா போடவும்.... அல்லது ஒருமாதம் விட்டு ஒருமாதமாக வெளியீடு செய்யுங்கள்...

    ReplyDelete
  9. Dear Sir,

    Great News.

    //ப்ளுபெர்ரி கதைகளை ஒரே புத்தகமா போடவும்.... அல்லது ஒருமாதம் விட்டு ஒருமாதமாக வெளியீடு செய்யுங்கள்.// Same Feeling.

    (என்னுடைய பேராசை:
    அனைத்து இதழ்களுக்கும் முன் அடுத்த வெளியிடாக கேப்டன் டைகரை ரிலீஸ் செய்யுங்களேன். மூன்று பாகங்களையும் ஒரே இதழாக.)

    ReplyDelete
  10. நாங்க எப்பவோ ரெடி விஜயன் சார் . கலர் உயர் தர பேப்பர் வெளி எடுகள் விலை பற்றி கவலை இல்லை சார் 2012 மிகவும் சூப்பர் ஆன்டு இருக்கும் சார்
    ராஜகணேஷ் அரியலூர்

    ReplyDelete
  11. நல்ல துவக்கம் தான், ஆனால் புதிய தரமான காகிதம், மற்றும் வண்ண முறையில் டைகரை மீண்டும் அறிமுகம் செய்யும்போது, விட்டு போன கதையில் இருந்து தொடர்வதை விட, ஏற்கனவே வெளியான கதைகளை மீண்டும் மறுபதிப்புடன் தொடரலாமே.

    இன்னும் கேட்க போனால் டைகரின் இளமை கால கதை தொடர்கள், ப்ளுபெர்ரி ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பை பெறாத ஒன்று, என்ற அடிப்படையில், முன்பு நீங்கள் வெளியிட்ட கிளாசிக் ப்ளுபெர்ரி கதைகளை வண்ண தரமான தாள்களில் மறுபதிப்பு செய்வது சரியாக இருக்கும். மொழிமாற்ற வேலையும் மிச்சம், டைகர் ரசிகர்கள் தரமான இதழ்களை பேணி காக்கவும் முடியும்.

    ReplyDelete
    Replies
    1. athuvum thanga kallarai.. Chancea illa sir. avlo ariya super storyai eppovavathu full colouril veliyiduveergal enru nichayamaga nambugiren. Story line-i pathikathavaru same serialileye pottal nanragave irukkum enru karuthugiren.

      Delete
    2. Rafiq Raja ; John Simon : இந்த ஆசை..சிந்தனை எனக்குள்ளும் இல்லாது இல்லை...!

      கொஞ்சம் கொஞ்சமாய் புதிய பாணிக்கு...புதிய விலைக்கு..புதிய தரத்துக்கு நாங்களும் தயார் ஆகி வருகின்றோம்..! நேரடி விற்பனையே இப்போது உயிர்நாடி என்பதால், நமது சந்தா base இன்னும் சற்றே வலுவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தற்சமயம் சுமார் 450 ல் உள்ள எண்ணிக்கை, குறைந்த பட்சம் 1000 என்ற magic நம்பரைத் தொட்டு விட்டால் அலிபாபாவின் புதையல் கதவுகள் திறந்திட்ட மாதிரி ஆகிடும் !

      மாதம் ஒரு டாப் ஹீரோவின் வண்ண ஆல்பம் என்று கூட வெளியிட்டிட இயலும். அது வரை கொஞ்சம் அடக்கியே வாசிக்க வேண்டிய நிர்பந்தம் !

      மெதுவாய், ஆனால் உறுதியாய் சரியான இலக்கில் இப்போது பயணமாகி வருகிறோம்..! இந்த ஆண்டின் கடைசிப் பகுதியினில் பாருங்களேன்...என்னென்ன வாணவேடிக்கைகள் காத்துள்ளன என்று !!

      Delete
    3. en nanbargal inaiya thala thodarbil illai avargalidam ellam intha munnetrangal kurithu sonnal birammippaga parkirargal. ithellam sathiyamavena pala murai கேட்கிறார்கள்! kalakkunga sir!

      Delete
  12. //நல்ல துவக்கம் தான், ஆனால் புதிய தரமான காகிதம், மற்றும் வண்ண முறையில் டைகரை மீண்டும் அறிமுகம் செய்யும்போது, விட்டு போன கதையில் இருந்து தொடர்வதை விட, ஏற்கனவே வெளியான கதைகளை மீண்டும் மறுபதிப்புடன் தொடரலாமே.

    இன்னும் கேட்க போனால் டைகரின் இளமை கால கதை தொடர்கள், ப்ளுபெர்ரி ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பை பெறாத ஒன்று, என்ற அடிப்படையில், முன்பு நீங்கள் வெளியிட்ட கிளாசிக் ப்ளுபெர்ரி கதைகளை வண்ண தரமான தாள்களில் மறுபதிப்பு செய்வது சரியாக இருக்கும். மொழிமாற்ற வேலையும் மிச்சம், டைகர் ரசிகர்கள் தரமான இதழ்களை பேணி காக்கவும் முடியும்.//

    I AGREE .....

    Nagarajan S

    ReplyDelete
  13. சார் மெய்யாலுமே சூப்பர் நியூஸ் சார்

    "இளமையில் கொல்" - கருப்பு மற்றும் வெள்ளை பிரிண்ட்

    பாகம் 4 ; 5 மற்றும் 6 - கலர் பிரிண்ட் (அல்லது) கருப்பு மற்றும் வெள்ளை பிரிண்ட்

    அல்லது அனைத்து பாகங்களும் மீண்டும் கலர் பிரிண்ட் ஆக வருமா (ஒரு ஆசை ) என்று சொல்லுங்களேன் :))

    .

    ReplyDelete
  14. // சனிக்கிழமை சந்திப்போமா திரும்பவும் ?

    நான் ரெடி...நீங்க ரெடியா ? //

    கேட்கவும் வேண்டுமா

    Waiting...... Waiting... :))
    .

    ReplyDelete
  15. That was really a great news, I luv to read caption Tiger adventures on any cost...

    ReplyDelete
  16. Great. It's a good news. I hope we will be allowed to read these books in color.
    Thanks.
    Mahesh

    ReplyDelete
  17. Hi Vijayan sir,

    I been redaing our comics for mor than 24 years but I haven't seen you yet not even your photo. You are publishing all of our comic heroes in this blog however you are our real hero, I would like to see your photo, Could you please upload you photo. It's my humble request....please...

    Thanks.. Giri

    ReplyDelete
    Replies
    1. Giri,
      ஆசிரியரின் புகைப்படம் என்ன, அவரது வீடியோவே இங்கே இருக்கிறது. பாருங்கள்!
      http://www.youtube.com/watch?v=Rw9eop56rs8

      -Theeban (SL)

      Delete
    2. Theeban Nanbare,

      Mikka Nandri...:) :)

      Delete
  18. சார், வரவிருக்கும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் "தலைவாங்கிக் குரங்கு" க்கு அடுத்து, வெள்ளோட்டமாக உயர்தர காகிதத்தில், முழு வண்ணத்தில் கேப்டன் டைகரின் "தங்கக் கல்லறை" இரண்டு பாகங்களும் ஒரே இதழாக வெளியிட்டால் என்ன...?

    ReplyDelete
    Replies
    1. இதை நான் வழிமொழிகிறேன். :-) தங்கக் கல்லறை மற்ற டைகர் கதைகள் போல் ஐந்து, பத்து பாகங்கள் அல்லாமல் இரு பாகங்கள் மட்டுமே கொண்ட கதை. எனவே, தாரளமாக வண்ணத்தில் வெளியிடலாம். வேண்டுமானால் இதனுடன் சேர்த்து தோட்டா தலைநகரம் கதையையும் சேர்த்து வெளியிடலாம். விலை நூறு ரூபாயாக இருந்தாலும் ஓகே..

      Delete
    2. மறுபதிப்பிற்கு நல்ல தேர்வு .. நானும் இதை வழிமொழிகிறேன்.. அப்படியே "மின்னும் மரணத்தையும்" reprint செய்தால் நாங்கல்லாம் பிறவிப்பயன் அடைஞ்சடலாம்...

      Delete
  19. sir comics classic la vethalan(fantaman) story onnu podalame pls!

    ReplyDelete
  20. Dear Vijayan Sir,
    We are Happy to know that Captain Tiger stories are again appearing. Pls reprint Minnum maranam & thanga kalarai

    ReplyDelete
  21. ஆஹா, சார், சூப்பர்ஸ்டாரோட புது பட அறிவிப்பு மாதிரி அவ்ளோ சந்தோஷமா இருக்கு! விலை பத்தி கவலை இல்ல! இனி லயன்,முத்து பாதை சிங்க பாதை! :)

    ReplyDelete
  22. அருமையான முடிவு, கேப்டன் டைகரின் கதைகள் என்றைக்குமே திகட்டாத தேன் தானே....

    டைகரின் இளம் பராய சாகசங்களில் முதல் மூன்று சாகஸங்களின் ஓவியங்களை விட (இந்த மூன்று சாகஸங்களின் ஓவியங்கள் தான் டைகர் தொடரின் தரம் குறைந்த ஓவியங்களென்பது என் கருத்து) காலின் வில்சனின் கைவண்ணத்தில் வந்த இந்த கதைகளின் ஓவியங்கள் மிக நேர்த்தியானவை, அழகானவை என்பது என் கருத்து.

    இந்த நேர்த்தியான ஓவியங்கள் நம் எல்லோரையும் கவரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

    ReplyDelete
  23. சூப்பர், ஆவலோடு எதிர்பார்கிறோம்! நன்றி!

    நமது இதழில் Blueberry இயற்பெயர் காரணம் கூறியிருந்தாலும், இனிமேல் முக்கிய கதாபாத்திரங்களின் அசல் பெயரை மாற்ற வேண்டாமே, please!? ப்ளூபெர்ரி என்றே அவரை அறிமுக படுத்தி இருக்கலாம் :)

    நல்ல வேளை, டிஸ்கோ கிட் ரேஞ்சில் பெயர் மாற்றம் இல்லை ;) 'அவர்கள்' கையில் சிக்கி இருந்தால் தலைவர் ப்ளாக்பெர்ரி ஆகி இருப்பார் :D

    ReplyDelete
  24. //நல்ல வேளை, டிஸ்கோ கிட் ரேஞ்சில் பெயர் மாற்றம் இல்லை ;) 'அவர்கள்' கையில் சிக்கி இருந்தால் தலைவர் ப்ளாக்பெர்ரி ஆகி இருப்பார் :D//

    Ha Ha Ha

    ReplyDelete
  25. வருத்தமான செய்தி. Jean Giraud aka Moebius - மறைந்து விட்டார்... ப்ளுபெர்ரி என்ற காப்டன் டைகர் என்ற கதபதிரத்தின் வடிவமைப்பாளர் இவர்....
    http://translate.google.fr/translate?sl=fr&tl=en&js=n&prev=_t&hl=fr&ie=UTF-8&layout=2&eotf=1&u=http%3A%2F%2Fwww.actuabd.com%2F%2BDeces-de-Jean-Giraud-alias-Moebius%2B&act=url

    ReplyDelete
  26. காமிக்ஸ் ரசிகர்களுக்கு மார்ச் மாதம் பத்தாம் தேதி என்பது ஒரு மோசமான நாள் போலிருக்கிறது. குறிப்பாக கவ்பாய் ஹீரோக்களை பிரதானப்படுத்தி வரையும் ஓவியர்களுக்கு. இந்த தேதியில் தான் நம்முடைய டெக்ஸ் வில்லரின் ஆரம்பகால ஓவியர் அரேல்லியோ கல்லேப்பிணி (பிரியமாக காலேப்) பதினெட்டு வருடங்களுக்கு முன்பு இறைவனடி சேர்ந்தார். இதே தேதியில் இந்த ஆண்டு நம் தமிழ் காமிக்ஸ் உலகின் தற்போதைய சூப்பர் ஸ்டார் கேப்டன் டைகர் (ப்ளூபெர்ரி) கதைகளின் ஓவியர் ஆகிய ழான் ஜிராட் (புனைப்பெயர் மோபியஸ்) காலமானார்.

    சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக நண்பரொருவர் ஃபிரான்சில் இருந்து போன் செய்து இந்த தகவலை ஊர்ஜிதப்படுதியபோது மனம் பதைபதைத்தது. என்ன செய்வது என்றே தெரியாமல் இந்த பதிவினை டைப் செய்துக்கொண்டு இருக்கிறேன்.

    More in TCU Post.

    ReplyDelete
  27. பேப்பரும், பேனாவும் எடுத்துக் கொண்டு எழுதும் பொது வந்திட்டிடும் சரளம்...சிந்திப்பதில் பாதி ; டைப் அடிப்பதில் மீதி என்ற கம்ப்யூட்டர் சமாச்சாரத்தில் இன்னும் எனக்கு வரவில்லை என்றே சொல்லுவேன் !
    romba kashtamathan sir irukku.
    Mobiusku my deep condolence

    ReplyDelete
  28. Muthalil Irumbu kai ethan seriesai mudinga sir. Pavam romba nalla antharathil thongitiruku.

    ReplyDelete
  29. Muthalil Irumbu kai ethan seriesai mudinga sir. Pavam romba nalla antharathil thongitiruku.

    ReplyDelete
  30. வணக்கம் திரு விஜயன்,
    இரத்தப்படலம் அத்தனை பாகங்களும் ஒன்று சேர படித்தது மிக அருமையான அனுபவம். புத்தகம் பரிசளித்த சகோதரனுக்கு நன்றி. சென்னையில் லயன் காமிக்ஸ் எங்கே கிடைக்கிறது? லக்கி லூக் கதைகள் இப்பொழுது கிடைக்குமா? நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு ஜி ஏ அவர்களே தங்களுக்கு ஒரு தகவல் தற்போது லயன் காமிக்ஸ் சந்தா கட்ட ருபாய் 640 மட்டும் லயன் அலுவலகத்துக்கு அனுப்பவும் அதில் நான்கு ஸ்பெஷல் இதழ் உள்பட இவ்வருடம் வெளியாகும் அணைத்து புத்தகங்களும் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மேலும் தகவல்களுக்கு இந்த ப்ளாக் முழுவதையும் படிக்கவும். நன்றி

      Delete
    2. நன்றி திரு.ஜான் சைமன்

      Delete
  31. Tiger comes back on day of his creator's death

    Tiger No 1???? Its because the number of people reading the blog was very less

    ReplyDelete