நண்பர்களே,
வணக்கம். ஒரு வருடத்திற்கு விடைதரும் மாதமானது தொடும் தூரத்தில் காத்திருக்க - உள்ளுக்குள்ளே கலவையாய் எண்ணச் சிதறல்கள்! நம்மளுக்குப் பெண் பிள்ளை கிடையாதென்பதால் - கண்ணாலம் முடிந்து புகுந்த வீட்டுக்கு அவள் புறப்படும் வேளைகளில், சீரியல் நைனா போல குலுங்கி அழும் அனுபவங்கள் லேது! ஆனால் கடந்த ஒரு டஜன் ஆண்டுகளாகவே மெகா சீரியல் ரேஞ்சுக்கு இல்லாங்காட்டியும், தூர்தர்ஷன் டிராமா டாடி ரேஞ்சுக்காவது, டிசம்பரில் ஒரு பர்பார்மன்ஸ் ஓசையின்றி இங்கு நிகழ்வதுண்டு! வேறொன்றுமில்லை folks - ஆண்டின் பயணத்துக்கான அட்டவணைகளை அறிவிக்கத் துவங்கிய வருஷம் முதலாய், அந்தந்த டிசம்பர்களில் பணிகளை பூரணமாய் முடித்து நிற்கும் நொடியில் மனதில் ஒரு இனம் புரியா உணர்வு டான்ஸ் ஆடுவதுண்டு! கடந்திருக்கும் 12 மாதங்களின் ஒவ்வொரு நாளிலும், அந்த அட்டவணையோடும், அதனில் அறிவிக்கப்பட்டிருக்கும் இதழ்களோடும் - இல்லாத அத்தனை குட்டிக்கரணங்களையும் அடித்து முடித்திருக்கும் நிலையில் நியாயப்படிப் பார்த்தால் - "ஹப்பாடா... ஒரு வழியா பரீட்சை முடிஞ்சுதுடா சாமி!" என்ற பெருமூச்சு தான் மேலோங்கிட வேணும்! Truth to tell பந்தாவாய் அட்டவணையை அறிவித்து விட்டாலும், அதன் tough ஆன இதழ்களைக் கண்டு உள்ளுக்குள் முன்கூட்டியே உடுக்கை அடிப்பதுண்டு தான்! "ஆத்தீ... தீபாவளி மலருக்கு 450 பக்கங்கள் !!! ... ஷப்பா... கிராபிக் நாவலுக்கு 300 பக்கங்கள் எழுதணுமே?!" என்று கணிசமான மிரட்சியோடே ஆண்டின் ஒவ்வொரு மாதத்தையும் கடந்திடுவோம் தான்! ஆனாலும் அவை அனைத்தினையும் தக்கி முக்கி சமாளித்து, உங்களிடம் அவற்றை முழுமையாய் ஒப்படைத்த கையோடு டாட்டா காட்டி நிற்கும் வேளையில், அந்த ஆண்டின் பல நூறு தருணங்கள் கிரிவலம் போகும் பக்தர்களைப் போல மனசுக்குள் வரிசையாய் அணிவகுப்பதுண்டு! நேற்று வரை குறுக்கை முறிக்கும் பணிகளாய்த் தென்பட்ட இதழ்கள் இன்று விடைபெறும் சூட்டிக்கையான மாணவனைப் போலத் தென்படுவதுண்டு! Oh yes - புதுசாயொரு ஆண்டும், அடுத்த லாரி லோடுப் பணிகளும் காத்திருக்கும் தான்! இருந்தாலும் ஓராண்டின் முழுமைக்கும், எங்களுக்கு எல்லாமுமாய் இருந்து வந்த அத்தனை இதழ்களும் "கதம்; முடிஞ்சு போச்" எனும் போது லைட்டாகத் தொண்டை கமறுவதைத் தவிர்க்க இயலவில்லை! And no different this December as well! Adios the class of 2026...! You have all been simply awesome - at least to me !! அகவைகள் கூடிச் செல்வதாலோ என்னவோ - இப்போதெல்லாம் மிளகு ரசம், தக்காளி ரசத்தோடு சென்டிமென்ட் ரசமும் சித்தே சாஸ்தியாய் ரசிக்கத் துவங்குகிறது! Sighhhh!!!
66 இதழ்கள்!!
இந்த தபா மூர்த்தி அண்ணாவைப் போல தில்லாய் குரல் கொடுக்க இன்னொரு காரணமும் உள்ளது folks! எனது உருட்டுப்பொதிக் கணக்கு மட்டும் சரியாயிருக்கும் பட்சத்தில் இந்த நடப்பாண்டில் சிறுசும், பெருசுமாய் நாம் போட்டுத் தாக்கியிருக்கும் இதழ்களின் மொத்த எண்ணிக்கை 66!! முந்தைய வருஷங்களில் இதற்கு இணையாகவோ, ஜாஸ்தியாகவோ வெளியிட்டிருக்கிறோமா, இல்லையா? என்பது தெரியலை.... but இதுவொரு அசாத்திய நம்பர் என்பதில் ஐயங்களே கிடையாது. "பச்ச்ச் ...தமிழ் காமிக்ஸிற்கு பீப்பி ஊதியாச்சு" என்று வல்லுனர்கள் பறைசாற்றுவதன் மத்தியில் இந்த நம்பரைப் பார்க்கும் போது - விக்ரமன் படத்தில் வருவது போல கார்த்திகைப் பாட்டு பாடத் தான் தோன்றுகிறது!
Of course ஜுனியரின் கைவண்ணத்தில் உருவான AI காமிக்ஸ்களுமே இந்த "66" என்ற நம்பருக்குள் ஐக்கியம் தான்! ஆனால் நமது பயணத்தில் அவையுமே முக்கிய அங்கங்கள் - at least for me! 'ஒரேயொரு குருக்கள் வரார்' என்ற கதையாக ஒரேயொரு இத்னியூண்டு டீமை வைத்துக் கொண்டு, 52 வாரங்களில் 66 இதழ்களை ரெடி பண்ணுவதென்பது சொப்பனங்களின் சமாச்சாரம் தானுங்களே? So தங்கப்பதக்கம் S.P. சௌத்ரியைப் போல நம்ம performance ஒரு மிடறு தூக்கலாய் தென்பட்டால் - இந்தவாட்டி மட்டும் எச்சூஸ் ப்ளீஸ் folks!
ரைட்டு - இந்த "66" எனும் நம்பரை உருவாக்கிட கடைசித் தவணையாய் கரம் கொடுத்திடும் இதழ்களின் பக்கமாய்ப் பார்வைகளை இனி ஓடவிடலாமா? இம்மியும் சந்தேகமின்றி - டிசம்பரின் highlight நமது டின்டின் தான் என்பது உறுதி! "கருப்புத் தங்க பூமியில்...!" டின்டின் தொடரை இங்கிலிஷில் ரசித்து வந்திருக்கும் நண்பர்களுக்கு Land of Black Gold என்ற இந்த இதழின் ரவுசு கட்டும் கதைக்களம் பற்றி ஸ்பஷ்டமாய் தெரிந்திருக்கும் என்பது உறுதி. இந்தக் கதைக்குப் பின்னால் ஒரு கதை இருப்பதுதான் கூத்தே. ஒரிஜினலாய் இதனை கதாசிரியர் Hergé எழுதத் துவங்கியது 1939-ல். அந்நாட்களில் ஒரு காமிக்ஸ் பத்திரிகையில் தொடராக டின்டின் வந்துகொண்டிருக்கும். ஆனால் இரண்டாம் உலகப்போர் அதே 1939-ல் துவங்கியிருக்க, மறுவருடம் பெல்ஜியம் ஜெர்மானிய ஆக்கிரமிப்பில் வீழ்ந்து போனது. நாஜிக்கள் ஊடகங்கள் மீது மொத்தமாய் ஒரு போர்வையைப் போர்த்து சாத்தி வைத்ததால், சகலமும் திடுதிடுப்பென நிறுத்தப்பட்டன. And டின்டின் கதையுமே துவங்கிய கொஞ்ச காலத்திலேயே அந்தரத்தில் தொங்கிக் கொண்டு நின்றது. யுத்தமெல்லாம் முடிந்த பிற்பாடு 1948-ல் கதையை Hergé தொடர்ந்தார். ஓராண்டுக்கு தொடராய் வந்த பிற்பாடு 1950-ல் இதனை தொகுத்து முதல் முழு இதழாக வெளியிட்டனர். ஆக 11 ஆண்டுகள் Hergé அவர்களின் கற்பனையில் குடியிருந்த டின்டின் இந்த சாகசத்தில் பயணம் செய்வதோ மத்திய கிழக்கிற்கு. And இம்முறை டின்டின் and ஸ்நொயி கூட்டணியோடு இங்கே கும்மியடிக்கக் காத்திருப்பது நமது தாம்சன் & தாம்ப்ஸ்ன் இரட்டையர்களே. பாலைவனத்திற்குள் இந்த இருவரும் அடிக்கும் லூட்டி இந்த இதழின் highlight என்பேன். And எப்போதும் போலவே பேனா பிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை. எழுதுவதில் சிரமம் என்று பெரிதாய் ஏதும் இல்லைதான். ஆனால் ஒவ்வொரு பக்கத்திற்கும் எக்கச்சக்கமான சித்திரங்கள் and எக்கச்சக்கமான வரிகள் எனும்போது ரீம் கணக்கில் பேப்பர் வாங்காத குறைதான். And வழக்கமான mega size-ல் அட்டகாசமான கலரில், பிரமாதமாய் டின்டின் ரெடி ஆகி உங்களுக்கென வெயிட்டிங் . மொத்தம் 23 இதழ்கள் கொண்ட டின்டின் தொடரில் இத்தோடு ஆல்பம் நம்பர் 7 பூர்த்தி காண்கிறது. So இன்னும் காத்திருப்பவை 16 சாகசங்கள்.
டிசம்பரின் வன்மேற்குக் களம் நமது வைல்ட் கேட் சகிதம். சென்றாண்டு "குருதியில் பூத்த குருதிமலர்" என்ற ஆல்பத்தோடு நம் மத்தியில் அறிமுகம் கண்ட வைல்ட் கேட் இம்முறை வளர்ந்த இளைஞனாய் இந்த "நரகத்திற்கொரு புரவி"யில் வலம் வருகிறார். இந்தத் தொடரை எனக்கு ரொம்பவே சுவாரசியப்படுத்திக் காட்டியதன் பிரதான காரணம் ஒரு அட்டைப்படம் தான். And அதுதான் இம்முறை இந்த ஆல்பத்துக்கான முன்னட்டையுமே. வன்மேற்கில் ரயில் பாதைகள் அமைப்பது மாமூலான template தான். ஆனால் அதனையே பிரமாதமானதொரு அட்டையாக சிருஷ்டித்திருந்தது கண்ணில்பட்ட பின்புதான் "அடடே... இது என்ன கதைத்தொடர் ?" என்று ஆர்வத்துடன் உள்ளே புகுந்து பார்க்கத் தோன்றியது. And ஏற்கனவே நமது வாட்சப் கம்யூனிட்டியில் நான் அறிவித்திருந்தது போல இவற்றின் சித்திரங்கள் உருவானபோதே வண்ணத்தில் painting போல செய்யப்பட்டவை. So கலரிங் பாணி முற்றிலும் வேறொரு லெவெலில் இருப்பதை காணப்போகிறீர்கள். And கதையைப் பொறுத்தவரை மொத்தமே 4 ஆல்பங்கள் கொண்ட ஆகச் சிறிய தொடர் என்பதால் நூலிழை போல் கதையின் knot - 4 ஆல்பங்கள் வழியாகவும் பயணிப்பது தவிர்க்க இயலா சமாச்சாரமாகிறது. So சென்றாண்டின் "கு.பூ.கு.ம." இதழினை ஒரு தபா எடுத்துப் புரட்டிவிட்டு இந்த ஆல்பத்துக்குள் புகுந்தால் நலம் என்பேன். And இதன் climax - இருபாக அத்தியாயம் காத்திருக்கும் பிப்ரவரியில் "சமவெளியின் சாசனம்" மார்க்கமாக முற்றுப் பெறுகிறது. So பழகிப் பரிச்சயமான வன்மேற்கில் yet another சித்திரப் பயணம் உங்கள் முன் இம்மாதம் காத்துள்ளது என்பேன்.
And இங்கே முன்கூட்டியே சின்னதொரு விஷயத்தையும் குறிப்பிட நான் விரும்புகிறேன். புக் கையில் கிடைத்த பிற்பாடு உள்ளே புரட்டும்போது, ஓரிரு பக்கங்களில் சீராய் 4 தரப்புகளிலும் வெள்ளை பார்டர் இருப்பதைப் பார்க்க முடியும். அப்பாலிக்கா திடீரென சில பக்கங்கள் பார்டரே இல்லாமல் முழுப் பக்கத்தையும் ஆக்கிரமித்து நிற்கவும் செய்யும். அதன் பின்னே சில பக்கங்கள் கீழே மட்டும் பார்டர் , மேலே ஏதும் கிடையாது என்ற பாணியிலும் இருக்கத் துவங்கும். So பார்த்த மறுகணமே "பைண்டிங்கில் போட்டுத் தள்ளிட்டானுங்கோ, புக்கை கெடுத்துப்புட்டானுங்கோ!!" என்று குரல் எழுப்ப வேண்டாமே ப்ளீஸ் . ஏனெனில் இதன் ஒரிஜினல் உருவாக்கமே இது போலவே.
இதை நான் மெனக்கெட்டுக் குறிப்பிட காரணம் உள்ளது guys. போன மாதத்து தீபாவளி மலர் சாகோர் வந்திருந்த சற்றைக்கெல்லாம், "புக்கை கெடுத்துப்புட்டாய், வருஷத்துக்கு ஏதாச்சும் ஒரு புக்கை கொத்துக்கறி போடுவதே உனக்கு பொழப்பா போச்சு, ஏகப்பட்ட புக்ஸ் போடுவதால் உரிய கவனம் கொடுக்காமல் நீ பாட்டுக்கு புக்கை சிதைச்சிப்புட்டாய்!' என்றெல்லாம் ஒரு பாட்டம் பாடம் எடுத்து நண்பர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார் எனக்கு. ஆரம்பத்தில் தலையும் புரியவில்லை தூரும் புரியவில்லை - எதைக் குறிப்பிடுகிறார் என்று. சாகோர் இதழை கையில் எடுத்து பரக்கப் பரக்க புரட்டியும் பார்த்தேன். அருகில் கிடந்த டெக்ஸ் மெபிஸ்டோ தீபாவளி மலரோடு ஒப்பிட்டும் பார்த்தேன். அளவுகளில் இம்மி கூட குறைச்சலும் இல்லை, அச்சும் சிறப்பாக இருந்தது ! அப்புறம் தான் தெரிய வந்தது - உட்பக்கங்களில், மேலும் கீழும் கணிசமாய் வெள்ளை border இருப்பதைப் பார்த்துவிட்டு "நீ கவனக்குறைவா படத்தை சின்னதா போட்டுப்புட்டே ; நாஸ்தி பண்ணிப்புட்டே !!" என பொங்கியுள்ள சமாச்சாரம் ! சமீப காலங்களில் நான் விமர்சனங்களுக்கு பெருசாய் ரியாக்ட் செய்வதில்லைதான். ஆனால் அன்றைக்கோ மண்டை சட்டென்று உஷ்ணமாகிப் போனது, becos பாட்டம் பாட்டமாய் பாடம் எடுத்திருந்தார் தனிச்செய்தியில் !! மேலோட்டமாய் சில விஷயங்களை மட்டும் குறிப்பிட்டு விட்டு - "நக்கீரர் அவதார் எடுக்க முனையும் முன்பாய், கொஞ்சம் இந்த விஷயங்களில் ஞானத்தை வளர்த்திடலாமே ?" என்றபடிக்கே உரையாடலுக்கு அன்று முற்றுப்புள்ளி வைத்திருந்தேன்.
நண்பருக்கு புரிந்திருக்காத ஒரு விஷயம் இதனில் உள்ளதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எல்லா சித்திரங்களுக்குமே "proportion" அதாவது "அளவீட்டு விகிதாச்சாரம் " என்றொரு சமாச்சாரம் உண்டு. இத்தனை இன்ச் உயரம் - இத்தனை இன்ச் அகலம் என்று அவர்களது ஒரிஜினல் பதிப்புக்கு ஏற்றவாறு ஓவியர்கள் சித்திரங்களை தீட்டி விடுவார்கள். பின்நாட்களில் அவற்றை வெவ்வேறு மொழிகளில் அச்சிடும் சமயம், இயன்ற மட்டிலும் original-ன் அதே காகித சைஸ் கிடைத்துவிடும் பட்சத்தில் ஒரிஜினலில் வெளியிட்ட அதே பாணியில் பப்ளிஷ் செய்வது சாத்தியமாகிவிடும். ஆனால் இந்தியா போலான மிகக் குறைச்சலான variety கொண்ட காகிதச் சந்தைகளில் இதுவெல்லாம் சாத்தியப்படுவதில்லை. ஆக நமக்கு இங்கே மார்க்கெட்டில் கிடைக்கும் பேப்பரில் எது ஒரிஜினலுக்குக் கிட்டக்க நெருங்கிப் போகுமோ, அதை வாங்கி அச்சிடுவதே வாடிக்கை. இத்தாலிய மொழியில் ஒரிஜினலாய் சாகோர் வெளிவருவது ஒருவித சதுரமான சைசில். So அவர்களது சித்திரங்களில் அகலம் ஜாஸ்தியாகவே இருந்திடும். ஆனால் நம்மூர்களில் அந்த சைஸ் கிடையாதென்பதால், சற்றே நீளவாக்கில் உள்ள பேப்பரில் Zagor, Tex, Martin என சகல போநெல்லி கதாபாத்திரங்களையும் பிரிண்ட் செய்து வருகிறோம். "சரி, ரைட்டு - நீளவாக்கில் பேப்பரில் தான் மேலும் கீழும் வெள்ளையிடம் காலியாக உள்ளதே..? படத்தை அதற்கேற்ப பெருசாக்கிக் கொள்ளலாமே..?" என்று நினைத்தால், இந்த proportion என்ற அளவீட்டு விகிதாச்சாரக் கணக்கு காதோடு பளேர் என்று போட்டுவிடும். குறிப்பிட்ட உயரத்தில், குறிப்பிட்ட அகலத்தில் தீட்டப்பட்டுள்ள சித்திரத்தை - பெரிதோ, சிறிதோ ஆக்குவதாக இருப்பின், அதே விகிதாச்சாரத்தில் தான் முன்னும் பின்னும் பயணிக்க வேண்டி வரும். ஏதேனும் ஒரு சைடில் மட்டும் நான் நீட்டிக் கொள்கிறேன் ; அல்லது குறைத்துக் கொள்கிறேன் என்றால் - சித்திரங்கள் stretch ஆகிடும் ! அல்லது சப்பையாக compress ஆகிடும். பார்த்த நொடியிலேயே அந்த வித்தியாசம் கண்ணில் தெரிந்துவிடும் and நீங்கள் சாத்துகிறீர்களோ இல்லையோ போனெல்லியில் ட்ரம்முக்குள் ஊறப்போட்டு, டின் கட்டி விடுவார்கள். So ஒரிஜினலின் விகிதாச்சாரப்படியே இயன்ற அகலத்தில் ஸாகோரை செட் செய்துவிடும் போது, மேலும், கீழும் காலி இடம் விடுவதை தவிர்க்க வழி கிடையாது. 'சரி, அப்படியானால் எதுக்கு வெட்டியா மேலும் கீழும் வெள்ளை இடம் விடணும் ? கழுதைய வெட்டி கீழே போட்டு விட வேண்டியதுதானே ?' என்று கேட்கலாம். அவ்விதம் செய்தோமேயானால், கையில் டெய்லர் டேப்புடன் கிளம்பி, புக்கை அளந்து பார்த்துப்புட்டு விஜய் TV ராமர் ஸ்டைலில் "மறுக்கா சிதைச்சுப்புட்டான், ஒக்குட்டுப்புட்டான்!" என்ற குரல் எழும்தான்.
இதற்கொரு classic உதாரணம், இந்த மாதம் வெளிவந்திருக்கும் "இந்த குளிருக்கென்ன பதில் ?" ஜாக்கி போட்ட ஓநாயின் 2-வது சாகசமே. புக்கை எடுத்துப் பார்த்தீர்களேயானால் - Tex, Zagor இதழ்களை விட இது கட்டையாக இருக்கும். ஆனால் ஒரிஜினலாய் இதற்கென நாம் பயன்படுத்தியது டெக்ஸ்க்கும், சாகோருக்கும் வாங்கிடும் அதே பேப்பர் தான். இங்கே ஒரிஜினல் சித்திர பாணியினில் சுத்தமாய் நான்கு தரப்புகளிலும், வெள்ளை பார்டர் மருந்துக்கும் கிடையாது. சித்திரங்கள் மேலிருந்து கீழ் வரை கச்சிதமாய் edge to edge இருக்க வேண்டும் என்பதற்காக உயர வசத்தில், கூடுதலாய் இருந்த காகிதத்தை வெட்டிக் கீழே போட்டுவிட்டு, புக்கை சரியாக ஒரு வித சதுர சைசில் படைத்துவிட்டு நகன்றிருந்தோம். அதனால்தான் அந்த இதழில் ஒரிஜினல் படைப்பிற்கேற்ப கச்சிதமான சித்திர அமைப்பு சாத்தியமானது. நிறைய ப்ராங்கோ - பெல்ஜியன் கதைகலுமே மேலேயும் கீழேயும் காலி இடம் இருக்கும் விதமாகவே original சித்திர அமைப்புகள் உண்டு. காலியிடம் கண்ணை உறுத்தாது இருக்க வேண்டுமெனில் பேப்பரின் அளவில் கத்திரி போட்டாகணும் & "புக் சைஸை கொத்துக்கறி போட்டுவிட்டாய் !" என்று குரல்வளையைக் கடிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்க வேண்டாமே என்றுதான் புக் அதே சைஸ் ஆக இருந்தாலும், உள்ளுக்குள் சித்திரங்கள் சற்றே உள்ளடித்து இருப்பது போல் தெரியும் விதமாய் செய்து வருகிறோம். இதைப் புரிந்து கொள்ளாமல் குய்யோ முறையோ என்று நண்பர் குரல் எழுப்பி இருந்தது இம்மாதத்து இதழைப் பார்க்கும்போதும் தொடரக்கூடும் என்பதாலேயே முன்கூட்டிய இந்த விளக்கம்.
Next in line நெவாடா. 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான இந்த mini தொடர் முதல் இதழின் அண்டங்காக்காய் பாணியிலான உட்பக்க கலரிங் காரணமாய் சொதப்பியிருந்தது நினைவிருக்கலாம். கதை நெடுக மணிரத்னம் படத்து இருட்டு போல விரவிக் கிடந்ததால், சித்திரங்களையோ, கலரிங்கையோ பெரிதாய் ரசித்திருக்க முடிந்திருக்கவில்லை. ஆனால் இந்தத் தொடருக்கு இளம் டைகரின் ஓவியரான காலின் வில்சன் போட்டுள்ள சித்திரங்கள் மெய்யாலுமே ரசிக்கும் விதத்திலானவை. And முதல் இதழுக்குப் பிற்பாடு காத்திருக்கும் பாக்கி சொற்ப ஆல்பங்களில் கலரிங் ரொம்பவே அழகாய், இயல்பாய் இருப்பதால் முதல் ஆல்பத்தின் சிக்கல் இங்கே தலைதூக்க வாய்ப்பிராது என்ற நம்பிக்கை உள்ளது. நடப்பாண்டின் அட்டவணையில் மார்ட்டினை ஏற்கனவே விளக்கிய காரணங்களால் சற்றே தள்ளிப்போட வேண்டியிருப்பதால் அந்த ஸ்லாட்டுக்குள் நெவாடா புகுந்திருக்கிறார். இதோ ரூட் 99 என்ற தலைப்பில் காத்திருக்கும் ஒரு ஆக்ஷன் கதையின் அட்டைப்பட preview. இந்த கதை நிகழும் காலகட்டம் கிட்டத்தட்ட சகுவாரோ கதைகளில் வரும் time frame போலவே. நாகரீகமாகி வரும் வன்மேற்கும் வேகமெடுத்து வரும் ஹாலிவுட் திரையுலகும் சந்திக்கும் ஒரு புள்ளியில் நெவாடாவின் கதைகள் அரங்கேறுகின்றன. உங்களின் புரிதலுக்காக முதல் ஆல்பத்தைப் பற்றிய சின்னதொரு கதைச்சுருக்கத்தோடே புக் 2 ஆரம்பமாகிறது.
'எல்லாம் சரிப்பு, ஆனா அடுக்கிக்கிட்டே போறியே தவிர இந்த மாசத்துக்கு டெக்சை கண்ணில் காட்டலையே?' என்ற குரல் எழுப்பும் அவசியத்தை உங்களுக்கு வைக்கப் போவதில்லை. Becos - Terrific Tex உபயத்தில் வண்ணத்தில் அதிரடி செய்ய காத்திருக்கிறார் நம்ம தல. இதோ நள்ளிரவு வேட்டை வழக்கம் போல் 2 ஆல்பங்களாய். 90-களின் இறுதிகளில் வெளியான சமயமே இந்த சாகசம் ஹிட் என்பதாக எனது ஞாபகம். அந்த ஒரிஜினல் டெக்ஸ் முத்திரை கதை நெடுக விரவி இருப்பதைப் பார்க்கலாம், பெரியவர் போநெல்லியின் கைவண்ணத்துடனும் ஓவியர் Galep-ன் ரகளைகளுடனும். எப்போதும் போலவே கண்ணைப்பறிக்கும் வண்ணங்கள் வலு சேர்க்க அடித்து தூள் கிளப்புகிறார் நம்மவர். இதோ ஆல்பம் 1 and 2 அட்டைப்பட previews.
Andஇம்மாதம் இன்னொரு டெக்ஸ் இதழும் உண்டு தான் - குட்டி கலர் டெக்ஸ் உபயத்தில் ! COLOR TEX என்ற வரிசையில் இத்தாலியில் சிறுகதைகளின் தொகுப்பாய் போனெல்லி வெளியிடும் அந்த பாணியை நாம் மறுக்கா கையில் எடுத்துள்ளோம் 2027 -க்கென ! GEN Z தடத்தில் அறிவித்திருந்த 2 மாண்ட்ரேக் சாகசங்கள் KINGS SPECIAL மறுவருகையினுள் ஐக்கியமாகி விட்டதால் - அந்த ஸ்லாட்களில் ஒரு ஜூனியர் டிடெக்டிவ்ஸ் குட்டி புகையும், ஒரு கலர் டெக்ஸ் குட்டி புக்கையும் நுழைக்கத் தீர்மானித்தோம் ! So here they are !!








ஹாய்
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteமாட்டேன் இல்லையா
வணக்கம்
ReplyDelete// ஒரு டன் சென்னை புத்தக விழா ஸ்பெஷல்ஸ் வெயிட்டிங் //
ReplyDeleteசூப்பர். அட்டகாசமான வருடமாக இருக்க வாழ்த்துக்கள் சார்.
வணக்கம்
ReplyDeletePresent sir
ReplyDelete// 2026 எனும் நடப்பாண்டின் ரெகுலர் தடங்களின் இதழ்கள் இனிதே நிறைவுறுகின்றன //
ReplyDeleteஇந்த ஆண்டின் எல்லா இதழ்களுமே அருமையான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது, ஒரு சில இதழ்களை தவிர. பாராட்டுகள் சார், ஒரு அட்டகாசமான காமிக்ஸ் ஆண்டை கொடுத்ததற்கு.
🙋🏻♂️
ReplyDeleteMe in😘💐👍😄
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDelete// தற்சமயம் சேலத்தில் சக்கை போடு போட்டு வரும் புத்தக விழாவின் நமது ஸ்டாலில் கூட சந்தா செலுத்தலாம் ! //
ReplyDeleteநேற்று ஆச்சுங் சார்...