Saturday, October 31, 2026

எல்லாம் சுகமே... !!

 நண்பர்களே,

வணக்கம். கடந்த 3 வாரங்களாய் நம் தரப்பில் அடித்து வரும் பல்டிகளை ஜெமினி சர்க்கஸின் சாகஸக்காரர்கள் கூட அடித்திருக்க மாட்டார்கள் ! இந்த அக்டோபர் புலர்ந்த நாள் முதலாகவே ஒவ்வொரு காலை புலரும் போதும் "ஆத்தீ... இன்னும் அந்த வேலை முடியலியே..? அம்மாடி... இன்னும் இந்தப் பணிகள் பெண்டிங் கிடக்கின்றனவே !" என்ற சிந்தனைகளே அலையடிக்கும் ! ஒன்றுக்கு மூன்றாய் தீபாவளி மலர்கள் & பற்றாக்குறைக்கு KING'S ஸ்பெஷல் - 4 சார்ந்த அறிவிப்பு எனும் போதே - பாதத்தின் முக்காலே மூணு வீசம் தொண்டைக்குழிக்குள் சொருகிட all set என்பது புரிந்தது ! And the daddy of them all - 2027-க்கான அட்டவணையுமே இதே நொடியினில் ரெடியாகிட வேண்டுமென்ற போது - மீதமிருந்த கால்வாசிக் காலியிடத்தையும் பாதங்களே ஆக்கிரமித்துக் கொண்டன !

464 பக்க டெக்ஸ் சாகஸம்... சாரி.. சாரி... மெஃபிஸ்டோ சாகஸம்... நோ.. நோ.. யமா சாகஸம்... ஊஹும்... ஊஹும்.. பத்மா சாகஸம்... இல்லேல்லே... நர்பாஸ் சாகஸம் தான் முதலும், ஆகப் பெரும் சவாலுமாக எதிரே நின்றது ! இந்த மாயாஜாலக் கதைக் களங்களுக்குள் நமது ரேஞ்சர்களை இறக்கி விடுவதில் எனக்குப் பெருசாய் நாட்டம் லேது என்பதில் இரகசியங்கள் கிடையாது தான் ! ஆனால் உங்களுக்கோ - இந்த மெஃபிஸ்டோ & டீமோடு நமது டெக்ஸ் & டீம் மோதுவதைக் காண்பதில் அலாதிப் பிரியமெனும் போது என்னால் தொடர்ந்து மறுக்க முடியவில்லை ! And இது மீண்டு(ம்) வந்த மாயன் சாகஸத்தின் அடுத்த அத்தியாயம் எனும் போது செம வெயிட்டான எதிர்பார்ப்புகளும் இருப்பது புரிந்தது ! கதைக்குள் நுழையும் போதே என்ன எதிர்பார்ப்பது ? என்பது குறித்து நிரம்பவே புரிதல் இருந்தது தான் ! ஆனாலும் பேனாவுடன் இந்த மாந்த்ரீகக் களத்தினுள் நுழைந்த சற்றைக்கெல்லாமே தெளிவானது - இதிலொரு மெகா ஹாலிவுட் பாணி ரகளை என்று ! கதாசிரியர் மௌரோ போசெல்லியின்  பாணி என்றைக்குமே தனித்துவமானது ! தெளிவான கதையோட்டம் ; திடமான எதிராளிகள் ; பயங்கரமான க்ளைமேக்ஸ் என்று பின்னியெடுப்பதில் ஜித்தர் ! இங்கோ லாஜிக்குக்கு பெருசாய் வேலையில்லாத களம் என்றான பின்னே - அடித்து டாப் கியரில் ஒரே தூக்காகத் தூக்கிவிட்டார் மாயாஜாலக் கோட்டாவை ! வழக்கமாய் மெஃபிஸ்டோவின் மகன் யமா ஓரமாய் அமர்ந்து மிக்சர் சாப்பிடுவதையே கண்டிருப்போம் ! ஆனால் இந்தமுறை மகனாரும் செம ரகளையாய் கதை நெடுக உலாற்றுகிறார் ! திடுமென அடுத்த கேரக்டராய் "பத்மா" என்ட்ரி ஆன போது 'அட்றா சக்கை... அட்றா சக்கை' என்று கவுண்டர் ஸ்டைலில் குதூகலிக்கத் தோன்றியது ! 'இதென்ன பிரமாதம் ? இன்னுமொரு பெசல் ஐட்டம் இருக்குல்லே ?' என்றபடியே "நர்பாஸ்" என்ற புது உருப்படியும் களம் காண - தீபாவளியானது ஒரு மாதத்துக்கு முன்னமே புலர்ந்து விட்டது போல் தோன்றியது எனக்கு ! And ஓவியர் Fabio Civitelli எனும் போது, சித்திர அதகளங்கள் பற்றிச் சொல்லவாவது தேவையா ? பக்கத்துக்குப் பக்கம் நம்மவர்கள் மாத்திரமன்றி எதிரணியின் மகளிரின் முகங்களுமே கண்ணைப் பறிக்க - "ஆ" வென்று வாய் பார்த்தபடியே எழுதிக் கொண்டே போனேன் ! "சுபம்" போட்ட நேரம் - காதுகளில் ஒரு மலர்க்காடே வளர்ந்திருப்பது போலிருந்தாலும், நமது நால்வர் அணியோடு நானுமே லொங்கு லொங்கென்று சுற்றித் திரிந்த ஃபீலிங் ! தீபாவளிக்கு படியுங்கள் மக்களே - செம ரகளையாய் இருக்குமென்பது உறுதி !





இந்தக் கூத்துக்களெல்லாம் கிஞ்சித்துமின்றி சீரான நீரோட்டமாய்ப் பயணிக்கிறது நம்ம V காமிக்ஸின் தீபாவளி மலர் ! கோடாரி மாயாத்மாவின் முழுநீள வண்ண சாகஸம் ஒரு வர்ணஜாலம் first & foremost ! லேட்டஸ்ட் டிஜிட்டல் கலரிங் என்பதால் கண்களுக்கு அப்படியொரு ரம்யம் ! And வழிநெடுக ஸாகோரின் சிகப்பு ட்ரெஸ் டாலடிக்க - இந்த இதழைப் புரட்டும் போதே மனம் சிறகடிக்கும் என்பது உறுதி ! அழகானதொரு கதைக்களம் ; கொஞ்சம் flashbacks சகிதம் எனும் போது செம smooth வாசிப்புக்கு கியாரண்டி உண்டு ! And ஒரிஜினல் அட்டைப்படம் நமது மெருகூட்டலில் சும்மா ஷோக்கா டாலடிக்கின்றது! நகைக்கும் நரகம் - an absolute breezy read !!


ஸாகோர் முதலில் நிறைவுற்றிருக்க, அடுத்ததாக மெஃபிஸ்டோவின் ரகளைகளும் அரங்கேறியிருக்க - மூன்றாவது இதழான மார்ட்டினைக் கையிலெடுத்தேன் ! உள்ளதைச் சொல்வதானால் - இந்தக் கலர் சாகஸம் மாமூலான b&w மார்ட்டினின் இடியாப்பங்கள் அளவிற்கு complicated ஆகத் தெரியவே இல்லை தான் ! ஒரே சீரான கதையோட்டம் 96 பக்கங்களில் நிறைவுறுவதாகப்பட்டது ! மெஃபிஸ்டோ & டீமோடு 464 பக்கங்களில் மல்லுக் கட்டி வந்திருந்தவனுக்கு இது செம ஆராமான பணியாகவே அமைந்தது. விறுவிறுவென எழுதிக் கொண்டே போயும் விட்டேன் தான் ! 'பச்சக்' என சுபம் போடும் பக்கத்தில் வந்து நின்ற போது வடிவேலுக்குப் பஞ்சாயத்துப் பண்ண வெள்ளையும், சொள்ளையுமாய் வந்திறங்கிய சங்கிலி முருகனைப் போலவே உணர்ந்தேன் ! "ஏய்... நான் சரியாத் தானே எழுதியிருக்கேன் ?" என்று என்னை நானே கேட்டுக் கொள்ளத் தோன்றியது - simply becos கதையினில் எண்ணற்ற சமாச்சாரங்கள் ஆரம்பமுமின்றி, முடிவுமின்றி அந்தரத்தில் தொங்குவது போலவே இருந்தது ! அரியாஸ்டோ அஸ்டால்டோ... ஆர்லான்டோ பியூரியோசா - என்று ஏதேதோ குறிப்புகளுக்குள் கதை ட்ராவல் செய்து கொண்டிருந்தது. ரைட்டு, அவற்றைக் கூட கூகுளின் உதவியோடு கற்றறிந்து சமாளித்துக் கொள்ளலாமென்று மனசைத் தேற்றிக் கொண்டேன் ! மார்ட்டின் கதைகளில் தான் இது போலான தேடல்கள் நமக்கு சகஜமாயிற்றே ? ஆனால் இங்கே எனக்கு முக்கியமாய் நெருடியது கதை மாந்தர்களே! இங்கே கதை நெடுக மார்ட்டினோடு நட்பும், விரோதமும் பாராட்டும் சில உருப்படிகளை யாரென்றே புரிந்து கொள்ள முடியவில்லை ! அவர்களுக்கெல்லாமே முந்தைய மார்ட்டின் சாகஸத்தில் இடமிருந்திருக்கும் போலும் என்று யூகிக்க முடிந்தது ! மெகா சீரியல்களில் வருவது போல "இவருக்குப் பதிலாய் இவர்" என்று போர்டு போடவெல்லாம் வாய்ப்பே இல்லை என்பது புரிந்தது. ஏற்கனவே மெஃபிஸ்டோ - யமா - நர்பாஸ் என்று மண்டை காய்ந்து வந்து சேர்ந்திருந்தவனுக்கு இது இன்னுமொரு மிடறு- ஜாஸ்தியான குயப்பமாய் தோன்றியது ! கொஞ்ச நேரமாய் மண்டையைப் பிறாண்டியபடியே இருந்த சமயத்தில் நமது வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் கூட இது பற்றி மீம்ஸ் போட்டிருந்தேன் ! என்ன செய்வதென்று தெரியாது பேந்தப் பேந்த முழித்த சமயத்தில் தான் நண்பர் (சென்னை) M.H.மொய்தீனின் கமெண்டைப் பார்த்தேன் "டக்கென்று மார்ட்டின் கதையை மாற்றி வேறொன்று வருமே..!!?? இந்த தபாவும் அதே மெரியா சார் ?" என்று கேட்டிருந்தார் ! இந்த சாகஸத்துக்கு முன்பான எந்த Martin ஆல்பத்தில் இந்த ஆசாமிகளெல்லாம் உலவுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து. அதனை முதலில் வெளியிட்டாலொழிய "நிறம் மாறிய நட்பு" உங்களுக்குத் துளியும் ரசித்திட வாய்ப்பில்லை என்பதால் நான் ஏற்கனவே மாற்று ஏற்பாடுகள் பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தேன் !

அந்த நேரம் ஆபத்பாந்தவனாய் கண்ணில்பட்டவன் தான் நமது செல்லாக்குட்டி கிட் ஆர்டின். டிசம்பரில் வந்திட வேண்டிய சிக் பில் சாகஸமானது ராப்பர் மட்டும் பிரிண்ட் ஆகி ரெடியாகியிருந்தது. கதையும் கைவசமிருந்தது. ஆனால் மொழியாக்கம் முழுசாய் பெண்டிங்! கண நேரமும் யோசிக்காது ஒரே தாவாய் உட்புகுந்தேன் - உட்சிடியின் சிரிப்புப் போலீஸுடன் ! கோவில் வாசலில் அன்னதானத்துக்கு க்யூவில் நிற்பவன் முன்னே Zomato பார்சலைக் கண்ணில் காட்டினால் மறுக்கவாவது முடியுமா ? தேதியோ அக்டோபர் 19 !! And "பணிகளையெல்லாம் போட்டுத் தாக்கி முடிச்சாச்சு !" என்ற மிதப்பு கலந்த நிம்மதியில் நான் குடியிருந்த நேரமது ! புதுசாய், முழுசாய் ஒரு சிக் பில் சாகஸத்தை அடுத்த ரெண்டு நாட்களுக்குள் எழுதித் தராவிட்டால், தீபாவளி டெஸ்பாட்ச் கோவிந்தா- என்பது அப்பட்டமாய்ப் புரிந்தது ! And சிக் பில் கதைகளானவை வாசிக்க சுளுவான ரகமாக இருந்தாலும், பணியாற்ற செம tough ! பக்கமொன்றுக்கு 11 அல்லது 12 பேனல்கள் இருப்பதுண்டு & கிட்டத்தட்ட ஒவ்வொன்றிலுமே 2 டயலாக்குகள் தவறாமல் இடம்பிடிப்பதுண்டு ! So பக்கத்துக்கு சுமாராக 25 டயலாக்குகள் x 44 பக்கங்கள் எனும் போது கணக்கிட்டுத் தான் பாருங்களேன்- எழுத வேண்டியதன் பரிமாணத்தை !

ப்ரெஞ்ச் to இங்கிலீஷ் தயாராக இருக்க, லூசாட்டம் மொத்த ஆபீஸுமே அந்த வாரத்தில் overdrive-ல் பணி செய்தோம் ! நான் எழுதும் வேகத்துக்கே DTP பணிகளும் அரங்கேறிக் கொண்டிருந்தன ! And இங்கே இன்னொரு பக்கமோ - "அட்டவணை ரெடியா அண்ணாச்சி ? பதிவு எப்போங்க அப்புச்சி ?" என்ற ரீதியில் உங்களது ஆர்வங்கள் அலையடித்துக் கொண்டிருந்தன ! பொதுவாய் இதுவரையிலான ஒவ்வொரு ஆண்டுமே அந்த அட்டவணைப் பதிவினை கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன்னமே ரெடி பண்ணிவிட்டு இறுதி நேர ஒட்டு + வெட்டு பற்றி மாத்திரமே யோசித்து வருவேன். ஆனால் இம்முறையோ பதிவுக்கு ஒற்றை தினம் முன்னே வரை எதுவுமே ரெடியில்லை ! பேய் வேகத்தில் நாம் மட்டுமே பணியாற்றினால் போதாதே - அதன் பின்பாய் அச்சு + பைண்டிங்கிலும் அதே வேகம் வேண்டுமே ?! So இங்கு பணி முடிந்த நொடியிலிருந்தே அடுத்த கட்டப் பணிகளுக்குள் கதகளி ஆட ஆரம்பித்தோம் ! And to cut a very long & familiar story short.. நமது பைண்டிங் டீம் பின்னிப் பெடல் எடுத்து விட்டனர் ! இதோ - நேற்றிரவு புக்ஸ் சகலமும் ஆபீஸுக்கு வந்து சேர, இன்று டெஸ்பாட்ச் நனவாகி விட்டது !

Maybe வயசாகி விட்டதால் - முன் போல பல்டியடிப்பதற்கு கொஞ்சம் தடுமாறுகிறதோ? என்ற கேள்வி எனக்குள் எழாதில்லை ! Becos இதற்கு முன்பான வேளைகளில் இதை விடவும் படு டைட்டான பணிகளையெல்லாம் ஊதித் தள்ளியிருக்கிறோம் தான். ஆனால் இம்முறை நிலவரம் கொஞ்சம் மாறுபட்டது ! பிரதானமாய் இந்த தீபாவளிக்கு முன்பான வாரங்களில் இப்போதெல்லாம் சிவகாசி அயல்கிரகப் படையெடுப்புகளுக்கு நிகராய் பட்டாசு வாங்கிட வரும் ஒரு வண்டி ஜனத்தால் திக்குமுக்காடி விடுகிறது ! So பேப்பர் ஸ்டோரிலிருந்து அச்சகத்துக்குப் பேப்பரை ஏற்றிப் போக வண்டி கிடைக்க முக்கால் நாளாகிறது ! பிரிண்ட் ஆனதை பைண்டிங்குக்கு எடுத்துப் போக அடுத்த தவம் ! அப்புறமாய் லேமினேஷன் ; box pasting என்று எக்கச்சக்கச் சில்லறை வேலைகளுமே ! எல்லா இடங்களிலுமே இறுதி நிமிட தீபாவளி ரஷ்ஷில் கண்விழிகள் பிதுங்க பணி செய்து வருகிறார்கள் எங்க ஊர் மக்கள் ! So இந்த தீபாவளி மாதத்தில் மட்டும் இப்போதெல்லாம் ரொம்பவே B.P. ஏறிப் போகிறது - புக்ஸைத் திட்டமிட்டபடியே உங்களிடம் ஒப்படைப்பதற்குள் ! பற்றாக்குறைக்கு நம்மிடம் DTP டீமில் ஆள் shortage எனும் போது அதனை ஈடு செய்யவும் செம tough ஆக உள்ளது ! So "வலை பின்னும் வைரம்" இதழை முடித்த நொடியினில் விட்ட பெருமூச்சு நாலு தெருக்களுக்குக் கேட்டிருக்குமென்பது உறுதி ! Phewwwwwww ! !

கதையைப் பொறுத்தவரை - சிக் பில் தொடரினில் வெகு காலம் கழித்து செம ஜித்தனானதொரு வில்லன் & செம சுவாரஸ்யமானதொரு கதைக்களம் ! சும்மா slapstick ரகக் காமெடியாக அல்லாது கதையோடு ஹ்யூமரைக் கலந்து தெளித்துள்ளனர் படைப்பாளிகள் ! நம்ம கிட் ஆர்டின் ஒரு சூப்பர் சிங்கர் அவதாரில் போட்டுத் தாக்க - இந்த ஆல்பம் கிட் ஆர்டின் சிக் பில் தொடரின் Top 3 க்குள் உறுதியாய் இடம் பிடிக்கும் என்பேன் !


இந்தக் கூத்துக்களையெல்லாம் நிறைவு செய்து விட்டு, போன சனியன்று தான் அட்டவணைப் பதிவுக்குள் நுழையவே முடிந்தது. ஞாயிறு காலையிலோ சென்னையில் சகோதரியின் வீட்டு விசேஷம் காத்திருக்க, மாலை 7 மணிக்கு ரெயிலைப் பிடிக்க வேண்டிய நெருக்கடி ! அடிச்சேன்... அடிச்சேன்... டைப் அடிச்சேன்... விரல்களும், கீ-போர்டும் தேயும் வரைக்கும் ! மறுநாள் ஊருக்குப் போய் விசேஷத்தில் போட்டுக் கொள்ள துணிகள் எடுத்து வச்சேனா -இல்லையா? என்பது நினைவில்லை ! ஆதார் அட்டையை எடுத்துக்கிட்டேனா- nopes ஞாபகமில்லை ! மாலை 6.30 வரை எழுதித் தள்ளிவிட்டு, ரயிலில் ஏறி, படு மொக்கையான நெட் கனெக்க்ஷனுக்கு மத்தியில் - பதிவைப் பூர்த்தி செய்திட தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்காத குறை தான் ! அதிகாலை 4.45 மணிக்கு தாம்பரத்தில் ரயில் நின்ற போது க்வாட்டரடிச்ச கோய்ந்த் பாணிக்கு கண்களெல்லாம் ஒரு சிகப்பு ! நொச நொசவென்று பெய்து கொண்டிருந்த மழைக்கு மத்தியில் ரூமுக்குப் போய்ச் சேர்ந்த போது மணி ஆறு ! 'ஜெய் பாகுபலி' - இனி புனித மனிடோவின் சித்தம் !!' என்றபடிக்கே Publish பட்டனை அமுக்கி விட்டு - கொஞ்ச நேரம் தூங்கலாமென்று நினைத்தால் - ஊஹும், வாய்ப்பில்லே ராஜா... என்றன கண் இமைகள் ! அட்டவணை தேறுதா ? இல்லையா ? உங்களது ரியாக்க்ஷன்ஸ் என்னவென்று தெரிந்திடாது உறக்கம் நெருங்கவாவது செய்யுமா ? படம் செம blockbuster ஹிட் என்பது ரொம்பச் சீக்கிரமே தெரிந்து விட, குஷியில் தூக்கம் தொலைந்தே போனது ! பத்து மணி வரை ப்ளாக்கில் பதில் போட்டு விட்டு, விழாவில் போய் பிசாசாட்டம் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்ததெல்லாம் வேறு கதை ! எது எப்படியோ - அட்டவணையும் சரி, கதைத் தேர்வுகளும் சரி, தெறி ஹிட்ஸ் ஆகியிருக்க - அது உங்களது சந்தாக்களின் ஸ்பீடிலேயே புரிந்து கொள்ள முடிந்தது ! முதல் 4 நாட்களிலேயே ஒரு செம decent நம்பர் தேறியுள்ளது & அவற்றுள் இருவரைத் தவிர்த்து பாக்கி அனைவருமே மார்ஷல்ஸ் தான் ! கூட்டாஞ்சோறுகள் எப்போதுமே எத்தனை அழகானவை என்பதை yet again நிரூபித்துள்ளோம் - இம்முறை இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டியின் குன்றாத உற்சாகத்தின் புண்ணியத்தில் ! Thanks a ton all ! எண்ணற்ற கடிகள் ; அறிவிப்புகள் ; polls ; கேள்விகள் என்று நான் அடித்த லூட்டிகள் சகலத்தின் இடையேயும் நமது அட்டவணைகள் சார்ந்த முக்கிய வினாக்களுமே இடம்பிடித்திருந்தன ! குன்றா உத்வேகங்களோடு நீங்கள் சகலத்திலும் கலந்து கொண்டதே இன்றைக்கு இந்த முழுமையான அட்டவணையைச் சாத்தியமாக்கியுள்ளது !

And இன்னுமொரு செம ஜாலியான சேதியுமே folks ! நாளையோடு திண்டுக்கல்லில் நடந்து வரும் புத்தக விழாவானது நிறைவு பெறுகிறது ! ஒரு பக்கம் உசிரை வாங்கும் மழை ; மறு பக்கம் ஊருக்கு வெளியிலானதொரு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கு - என லைட்டாக வயிற்றில் புளியைக் கரைத்தது தான் விழாவின் துவக்கத்துக்கு முன்பாக ! ஆனால் வர்ண பகவான் கருணை கொண்டு ஒதுங்கிக் கொள்ள - சுற்று வட்டாரப் பள்ளிகள் சகலத்திலிருந்தும் மாணவ / மாணவியர் விழாவினில் குவிந்து விட்டனர். And நமது ஸ்டால் அந்த இளைய தலைமுறையின் ஆதர்ஷ வேடந்தாங்கலாய் அமைந்து போக - absolutely stunning sales! ஒவ்வொரு பணிநாளின் பகல் பொழுதுகளிலும் நமது ஸ்டாலை முற்றுகையிட்டுத் தள்ளி விட்டனர் பிள்ளைகள் ! நம்மிடம் ஸ்டாக் ஜாஸ்தியாய் இருக்கும் சகல இதழ்களையும் அதிரடித் தள்ளுபடி விலைகளில் போட்டுத் தாக்கி வருகிறோம் & பசங்கள் அற்புதமான ஆர்வத்துடன் அள்ளிப் போய் வருகின்றனர் தினம்தோறும்! 150 ரூபாயிலான இதழ்களைக் கூட ஐம்பது ரூபாய்க்கு பிள்ளைகளுக்கு விற்று வருகிறோம் !  சிக் பில், க்ளிஃப்டன், மதியில்லா மந்திரி, லோன் ரேஞ்சரெல்லாம் இப்போது அந்த இளைய வட்டத்தின் மத்தியிலுமே பிரபலம்! இந்தப் பிள்ளைகளில் ஒரு பத்தே பத்து சதவிகிதத்தினர் நமது காமிக்ஸ் வாசிப்பினைத் தொடரும் வாசகர்களாக உருப்பெற்றால் செம பிரகாசமானதொரு எதிர்காலம் காத்துள்ளது என்பேன் !

இந்தச் சூழலில் தான்  சில "வல்லுனர்கள்" தமிழில் காமிக்ஸ் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், அரசாங்கம் தலையிட்டு உதவிட வேணுமென்றும்  பறை சாற்றியிருப்பதைப் பார்க்க முடிந்தது ! இந்த பூலோகம் பிரகாசமாய், அழகாய், அறிவாய், ஆற்றலாய் தொடர்ந்து இயங்கிக் கொண்டே தானுள்ளது என்பதற்கு நமது 54 ஆண்டு கால NOT OUT இருப்பே சாட்சி! இந்தச் சின்ன வட்டத்துக்கு எது பிடிக்கும் ? எது பிடிக்காது ? அவர்களது அபிலாஷைகள் என்ன ? எதிர்பார்ப்புகள் என்ன ? அவர்களது காமிக்ஸ் காதலின் பரிமாணம் என்ன ? என்பதையெல்லாம் உணர்ந்திருக்கும் யாருக்கும் நாஸ்ட்ரடாமஸ் அவதார் எடுக்கும் அவசியமே எழுந்திடாது என்பது தான் வார்னிஷ் கலவா நிஜம் ! இது ஊர் கூடிக் குதூகலித்து, இழுக்கும் தேர் & இதன் ஒவ்வொரு அங்குல நகர்விலும் அத்தனை பேரது நேசமும், பங்களிப்பும் உள்ளதென்பதை உணர்ந்தாலே போதும் - இது வரம் பெற்றதொரு முயற்சி என்பது புரியும்! Oh yes, நடுநடுவே தொய்வுகள் நிகழும் தான் ; சக்தி வாய்ந்த சமூக வலைத்தள பொழுதுபோக்கு சமாச்சாரங்களோடு போட்டியும் போட வேண்டும் தான் - ஆனால் சவால் இல்லா சாகசங்களில் சுவை தான் ஏது  ? ஒரு நூறு முறை மூ.ச. விசிட்ஸ் அடித்தாலும், உங்கள் முகங்களில் புன்னகையை மலரச் செய்யாது ஓய்வதில்லை - என்ற கங்கணம் தானே இந்தப் பயணத்தின் தலையாய த்ரில்லே  ? 

வெகு சமீபத்தில் கூட நமது நண்பரொருவர் - "சார்..நம்ம ரெகுலர் வாசகர்கட்கெல்லாம் வயசாகிட்ட பின்னே மறுபதிப்பா மட்டும் போட்டுத் தாக்குங்க !!" என்று தனிச்செய்தியில் சொல்லியிருந்தார் என்னிடம் ! நான் பதிலே பேசாது, அன்றைய தினத்தின் காலையில் மட்டுமே திண்டுக்கல் புத்தக விழாவினில் ஸ்கூல் & காலேஜ் பசங்களின் மத்தியிலான சேல்ஸ் விபரத்தை வாட்சப்பில் அனுப்பினேன் ! நண்பர் மிரண்டே போனார் !! "ஓசையின்றி ஒரு இளம் படையும் உருவாகி வருகிறது சார் நமக்கு !" என்று அப்புறமாய் மெசேஜ் அனுப்பினேன் !! இந்தப் பயணம் இன்னும் வெகு தொலைவைக் கடக்க வேண்டியுள்ளது என்பதே நிதர்சனம் !! ஸ்கூலில் எப்போதோ படித்த Robert Frost-ன் கவிதையினை ஒருக்கா நினைவு கூர்ந்திட மட்டுமே இந்த நொடியில் தோன்றுகிறது : 

The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

வரிகளில் உள்ள "I" க்குப் பதிலாய் "WE" என்று மட்டும் மாற்றிக் கொண்டால் கன கச்சிதம் என்பேன் !! Bye folks! See you around! Have a great weekend!

P.S :

1.நவம்பர் இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங்  : https://lion-muthucomics.com/home/1515-diwali-26-pack.html

2.KING'S SPECIAL -4 : அடுத்த வார டெஸ்பாட்ச்சுக்கு ஆனமட்டிலும் முயல்வோம் !! 

2.மொய்தீன் சார் - திங்களன்று ஒரு கிலோ சர்க்கரை கதவைத் தட்டும் !

150 comments:

  1. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. பத்துக்குள்ள வந்தாச்சு..!

    ReplyDelete
  4. omg 🫣 அப்போ KS-4 😘 தீபாவளிக்கு கிடைக்காதா 🤔🤔

    ReplyDelete
  5. தீபாவளிக்கு வருகை தரும் மஞ்சள் மற்றும் சிவப்பு சட்டையர்களை வரவேற்கிறோம் 😘👍💐

    ReplyDelete
  6. வணக்கம். படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
  7. வணக்கம் தீபாவளி இதழ்கள் வெற்றி பெற புனித மானிடோ வின் ஆசிகள்

    ReplyDelete
  8. அடடே நல்லதொரு மாற்றம். கிட் ஆர்டின் வருவதில் மகிழ்ச்சி. டெக்ஸ் அண்ட் ஸாகோர் செம்ம தீபாவளி...

    ReplyDelete
  9. happy diwali lion, lion team and readers. most expected story now transferred from tex to kid ardin.

    ReplyDelete
  10. சென்ற ஆண்டு அட்டவணையை பார்த்தபோது அசுரர்கள் அடங்குவதில்லை புத்தகம் எப்போது வரும் என்று எதிர்பார்த்து இருந்த அந்த நாட்கள் இப்போது கைகளில் வந்து சேர போகுது என்று நினைக்கும் போது மனதிற்கு இதமாக இருக்கிறது.. இப்போது இருந்து அடுத்த ஆண்டு வெளியேறப் போகும் திசைகள் ஏழு லயன் 500 ஆண்டு மலர் வருகைக்காக காத்திருக்க வேண்டியதுதான் ஆனாலும் காத்திருப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது ❤️❤️❤️❤️❤️ I love lion comics ❤️❤️❤️❤️

    ReplyDelete
  11. // திண்டுக்கல் புத்தக விழாவினில் ஸ்கூல் & காலேஜ் பசங்களின் மத்தியிலான சேல்ஸ் விபரத்தை வாட்சப்பில் அனுப்பினேன் ! நண்பர் மிரண்டே போனார் !! "ஓசையின்றி ஒரு இளம் படையும் உருவாகி வருகிறது சார் நமக்கு !" //

    சூப்பர். மகிழ்ச்சியான செய்தி சார்.

    ReplyDelete
  12. தீபாவளி அன்று மண்டையை பிய்த்துக் கொள்ள செய்யும் மாட்டின் சாகசத்திற்கு பதில் நகைச்சுவை வரவழைக்கும் சிக்பில்லை வரவேற்கிறேன்.சாரி...சாரி... கிட் ஆட்டினை வரவேற்கிறேன் 🤣🤣🤣🤣🤣.

    ReplyDelete
  13. தீபாவளி நேரத்தில் மார்ட்டின் கதை வருவது ஏதோ ஒரு உறுத்தலாகவே இருந்தது. காரணம் - தீபாவளி போன்ற கொண்டாட்டமான தருணங்களில் மார்ட்டின் போன்ற மண்டையைச் சொறிய வைத்திடும் கதைக்களங்கள் அவ்வளவாக எடுபடாது என்று நினைத்தேன். இப்போது மார்ட்டினுக்கு பதில் கிட்-ஆர்ட்டின் அண்டு கோ இணைந்துகொள்ள ஒரு முழு தீபாவளியைக் காணப்போகும் உற்சாகம் மனசுக்குள்! சிக்பில் கதைகளிலேயே இது முதல் மூன்றுக்குள் இடம் பிடிக்கும் என்று நீங்கள் அறிவித்திருப்பது இன்னும் உற்சாகத்தை அதிகரிக்கிறது! 😍😍😍

    மொய்தீன் ஜி க்கு நன்றிகளும், 1 கிலோ சர்க்கரையை பரிசாக அள்ளியதற்கு வாழ்த்துக்களும்!!💐💐💐

    திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் விற்பனையை ரணகளம் செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது!!😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. // தீபாவளி போன்ற கொண்டாட்டமான தருணங்களில் மார்ட்டின் போன்ற மண்டையைச் சொறிய வைத்திடும் கதைக்களங்கள் அவ்வளவாக எடுபடாது என்று நினைத்தேன். இப்போது மார்ட்டினுக்கு பதில் கிட்-ஆர்ட்டின் அண்டு கோ இணைந்துகொள்ள ஒரு முழு தீபாவளியைக் காணப்போகும் உற்சாகம் மனசுக்குள்! //

      எனது எண்ணமும் அதுவே! பண்டிகை தருணம்களில் கண்டிப்பாக டெக்ஸ் மற்றும் ஒரு காமெடி கதை இருக்கவேண்டும்! இதனை ஆண்டுதோறும் கடைபிடிக்க ஆசிரியருக்கு வேண்டுகோள் வைக்கிறேன்!

      Delete
  14. வணக்கம் நண்பர்களே..

    ReplyDelete
  15. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  16. "நடுநடுவே தொய்வுகள் நிகழும் தான் ; சக்தி வாய்ந்த சமூக வலைத்தள பொழுதுபோக்கு சமாச்சாரங்களோடு போட்டியும் போட வேண்டும் தான் - ஆனால் சவால் இல்லா சாகசங்களில் சுவை தான் ஏது?".அல்டிமேட் வரிகள் சார்.

    உற்சாகமான வரிகளின் உற்சாகத்துடன் தீபாவளியை இனிதே கொண்டாடுவோம் சார்.
    தீபாவளி மலர் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் பொலிவு.
    முத்து லயன் குழுமத்தின் அனைவருக்கும் தீபாவளி முன்பதிவு வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. எந்தவொரு துறையிலுமே மேடு பள்ளங்கள் எதிர்ப்படாது போகாது தானே சார்?! பள்ளங்களில் பற்களுக்கு சேதமின்றிப் பார்த்துக் கொண்டு, மேலெழும்பும் நாட்கள் நலமானவைகளாய் அமையுமென்று நம்புவது தானே நடைமுறை?

      Delete
  17. Hi sir,
    Glad to hear about book fair sales sir. Eagerly waiting for Diwali books

    ReplyDelete
  18. ஆஹா, நானே என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன் சார். நாம் சொன்னதுக் கூட நடக்குமா என்று...? அதுக் கூட பரவாயில்லை, அந்த வார்த்தைகளுக்கு மதிப்பளித்து 1 கி. சக்கரையை அனுப்பி வைக்கும் தங்களின் அன்பிற்கு நன்றி பல சார்.

    ReplyDelete
    Replies
    1. "வாக்குத் தவறப்படாது"ன்னு நாய்க்கர் பாபாவின் வாப்பா சொல்லி கீறார் சார்.....!எத்தினிவாட்டி அந்தப் படத்தைப் பாத்திருப்போம்? 🤔

      Delete
    2. சீக்கிரமே பருப்பு, பாமாயில், கிருஷ்ணாயில் உள்ளிட்ட அனைத்தும் வந்தடைய வாழ்த்துகள் ஜி!😁

      Delete
    3. ரேசன் கடைத் தவிர்த்து மற்ற சரக்கெல்லாம் வந்தால் மட்டும் போதுமே!!!

      Delete
    4. // மற்ற சரக்கெல்லாம் வந்தால் மட்டும் போதுமே!!! //
      எந்த சரக்கை சொல்லுறீங்க சார் :-)

      Delete
  19. புத்தக விழாக்கள் மறுபடியும் மாணவர்களுடன் காமிக்சுடனான பந்தத்தை ஏற்படுத்துவது மகிழ்ச்சியான சேதி. அருமை.

    ReplyDelete
    Replies
    1. Pulling out all stops sir.... விலைகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், போட்டுத் தாக்குகிறோம் பசங்களுக்கென!

      Delete
    2. கலாம் மாதிரி முன்மாதிரி தலைவர்களின் கதைகளை அந்த 20 ரூபாய் விலையில் போடுங்க சார். வருங்கால சமுதாயத்துக்கு உதவியாக இருக்கும்.

      Delete
    3. வரிசையாய் கமிங் சார் - ஜூனியர் எடிட்டர் ரெடி பண்ணித் தந்தாச்சு!

      Delete
    4. // விலைகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், போட்டுத் தாக்குகிறோம் பசங்களுக்கென! //

      மகிழ்ச்சி! மிகவும் தரமான செயல் சார்!

      Delete
  20. சித்தப்பு, சிக் பில் வாரேனா!\
    சிக்குன்னு சிக்குன்னு வாரேனா!

    சரவெடி கொளுத்திப் போடப் போறோனே!

    ReplyDelete
  21. சிக் பில் வண்ணங்கள் அருமை..

    மாயாஜால தீபாவளிக்கு நாங்க ரெடி...

    ஸ்மர்ஃப்ஸ், சுஸ்கி விஸ்கி, தோர்கல் இம்மூன்று கதைகளிலும் நாம் வேறு மாயாஜால உலகத்தில் உலாவ முடியும். நம் வாசகர்களிடம் வரவேற்பு இல்லாதது.. ஹ்ம்ம்...😤😤

    இந்நேரத்தில் அடுத்த ஆண்டு இவர்கள் இல்லாதது வருத்தமே..

    ReplyDelete
    Replies
    1. கோட்டச்சாமிக்கு எந்நேரமும் பகல் உறக்கம் தான் 😴😴

      Delete
    2. அப்துல் கலாம் சொல்லியபடி கனவு காணும் ஆள் சார் நான்.. ஒரு நாள் நனவாகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

      Delete
    3. சங்கர் சார்! உங்கள் எண்ணமே எனது எண்ணமும்! கண்டிப்பாக நமது கனவு ஒரு நாள் நனவாகும்! நமது நம்பிக்கையை கைவிட வேண்டாம்!

      Delete
  22. போன பதிவில் சிக்பில் கதைக்கு பேனா பிடிக்க போறேன்னு சொல்லும்போது யோசித்தேன், அட மெபிஸ்டோ, மார்டின் முடித்துவிட்டு டிசம்பர் மாத புத்தகங்கள் சீக்கிரமே ஆரம்பிச்சாச்சு என நினைத்து கொண்டேன்

    ReplyDelete
  23. திண்டுக்கல் விற்பனை செய்தி மகிழ்ச்சி அளிக்கிறதுங்க, தொடரட்டும் இந்த வெற்றி

    ReplyDelete
  24. தீபாவளிக்கு எல்லாமே காரமா (Tex/சாகோர் /மார்ட்டின் ) இல்லாம.. 😄

    காரத்தை கொறச்சிட்டு, ஸ்வீட்டு (கிட் ஆர்ட்டின் 😘) சேர்த்து கொடுக்கிறீங்க சார் 😘🙏😄

    உங்களுக்குத்தான் எங்க மேல எவ்வளவு அக்கறை 😄😄😄😘

    ReplyDelete
  25. //சிக் பில், க்ளிஃப்டன், மதியில்லா மந்திரி, லோன் ரேஞ்சரெல்லாம் இப்போது அந்த இளைய வட்டத்தின் மத்தியிலுமே பிரபலம்!//

    மகிழ்ச்சிகள் சார் 😍😍😍

    ReplyDelete
  26. No issues sir, Martin Mystery December-la வரட்டும்! பனிக்காலத்துல ஒரு tea-யோட Mystery படிக்கிறதுதான் சிறப்பா இருக்கும்! ☕, last year vantha Santa Claus adventure mathri

    ReplyDelete
  27. புத்தகமும் முன்கூட்டியே...பதிவும் முன்கூட்டியே ...மிக்க நன்றி சார்...:-)

    ReplyDelete
  28. டெக்ஸ் அட்டைப்படம் மூன்றுமே செம சூப்பர் சார்....ஒன்றை ஒன்று போட்டி போட்டு கொண்டு கண்ணை கவர்கிறது...

    போலவே ஸகோர் சிக்பில் அட்டைப்படமும்...

    ReplyDelete
  29. மார்ட்டின் பதிலாக சிக்பில் செம ஹேப்பி சார்...:-)

    ReplyDelete
  30. கூடவே விரைவில் கிங் ஸ்பெஷல் வேறு வருகிறது...


    உண்மையிலேயே தீபாவளி கொண்டாட்டம் சார்...

    முன்கூட்டியே தீபாவளி மகிழ்ச்சியை கொண்டுவந்த தங்களுக்கும் ..தங்கள் அலுவலகத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் சார்..


    ReplyDelete
  31. நவம்பர் இதழ்கள் அதீத எதிர்பார்ப்பினை ஏற்படுத்துகின்றன sir.

    ReplyDelete
  32. சார், குழந்தைகளுக்கு நமது புத்தகங்களை அதிரடி சலுகை விலையில் கொடுப்பதற்கு பாராட்டுகள் சார். அதுவும் இது போன்ற புத்தகவிழாவில் மட்டும் இதனை கொடுங்கள்; அப்படி செய்தால் மட்டும் உண்மையான குழந்தைகளுக்கு நமது காமிக்ஸ் கிடைக்கும்,. புதிய தலைமுறை வாசகர்களை காமிக்ஸ் பக்கம் கொண்டுவர உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும். பாராட்டுகள் சார்.

    ReplyDelete
  33. சூப்பர் சார்...தூள் கிளப்புறோம்...டெக்ஸ் பொட்டி சூப்பர் ஸ்பெசல் முதுக நினைவு படுத்த....நம்ம சாகோர் இது வரை வந்ததிலே நாந்தான் டாப்னு துள்ளறார்

    ReplyDelete
    Replies
    1. என்னல டெக்ஸ் பெட்டி உனக்கு வந்துடுச்சா 🤔

      Delete
    2. @பரணி சகோ
      Slipcase design நல்லா இருக்குனு சொல்றாரு எங்க கோவை கவிஞர்

      Delete
    3. அவனிடம் கொஞ்சம் வம்பு செய்ய விட மாடீங்க போல :-) அட தெரியும் ரம்யா; அவனின் எழுத்துதான் நமக்கு நன்றாக புரியுமே அவனை விட!

      Delete
    4. 😁😁😁
      அதானே பார்த்தேன்

      Delete
  34. தீபாவளி இதழ்கள் இன்று கிளம்பி விட்டன என்பது மகிழ்ச்சியான செய்தி சார்.
    அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் இருகரம் கூப்பி கோடான கோடி நன்றிகள் சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  35. //டெக்ஸ்,ஸாகோர் முடித்து விட்டு ரிலாக்ஸாக சிக் பில் //
    இதைவிட நிறைவான தீபாவளி இனிமேல் அமையுமா?"மார்ட்டினுக்கு மாற்று" என்று ஆலோசனை கொடுத்த மொய்தீன் சாருக்கும் நிறைவேற்றிய ஆசிரியருக்கும் கோடானுகோடி நன்றிகள்

    ReplyDelete
  36. // ! இது ஊர் கூடிக் குதூகலித்து, இழுக்கும் தேர் & இதன் ஒவ்வொரு அங்குல நகர்விலும் அத்தனை பேரது நேசமும், பங்களிப்பும் உள்ளதென்பதை உணர்ந்தாலே போதும் - இது வரம் பெற்றதொரு முயற்சி என்பது புரியும்//

    +9

    ReplyDelete
  37. சிக் பில்..... Ok.... பிரமாதம் 😍🥰

    ReplyDelete
  38. தீபாவளி இதழ்களோடு
    சிக்பில் கிட் ஆர்டன் வருவது
    மிகவும் சிறப்பு ...
    பண்டிகை நல்லபடியாக
    முடிய வேண்டும் என்று
    படபடப்போடு இருக்கும் போது
    தட தட க்கும் கதைகளோடு
    ஒரு கலகலக்கும் கதையும்
    வரும் போது முகத்தில் ஒரு புன்னகையோடு "பாத்துக்கலாம் " என்ற நிம்மதி வருகிறது சார்...
    நம் நிறுவனத்தில் பணிபுரியும்
    அனைவருக்கும் எனது இனிய (முன்கூட்டிய)தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் ...சார்...

    ReplyDelete
  39. // இந்த ஆல்பம் கிட் ஆர்டின் சிக் பில் தொடரின் Top 3 க்குள் உறுதியாய் இடம் பிடிக்கும் //
    மகிழ்ச்சி சார். தற்போது வரும் காமெடி நாயகர்களில் லக்கி-லூக் அடுத்த படியாக மிகவும் பிடித்தவர்கள் இந்த காமெடி கூட்டம்.
    தீபாவளிக்கு இந்த சிரிப்பு நண்பர்கள் பட்டாளமும் வருவது கூடுதல் சிறப்பு!

    ReplyDelete
  40. நாளைக்கு தீபாவளி ஆரம்பம்...

    ReplyDelete
  41. போன ஞாயிறு பதிவு, இந்த திங்கள் புத்தகம். இன்னும் கிங்ஸ் ஸ்பெசல் வேற வரப் போகுது. இந்த வாரம் முழுவதும் கொண்டாட்டம் தான்.

    நன்றி சார்.

    ReplyDelete
  42. புத்தகங்கள் கிடைத்து விட்டது. நன்றி.

    ReplyDelete
  43. 5 star கிடைத்து விட்டது. நன்றி.

    ReplyDelete
  44. சக வாசக நண்பர்களுக்கும், அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபாவளி அடங்காத அசுரர்கள் கூடவா, இல்லை Scene / மூக்குத்தி அம்மன் கூடவா தெரியல - India Post தயவு :(

    //"ஓசையின்றி ஒரு இளம் படையும் உருவாகி வருகிறது சார் நமக்கு !"//
    நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி, தலைமுறை கடந்து வாசர்கள் சேர்வது மிக்க மகிழ்ச்சி !!

    பார்சல் வந்தவுடன், இன்னொரு பதிவுக்கு முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
  45. வலை பின்னும் வைரம்

    Chick Bill-ல இந்த மாதிரி வித்தியாசமான கதைக்களம் எதிர்பார்க்கவே முடியாது! 😁

    Kid Ordinn-ஐ மையமாக வைத்து, அவரோட ஒரு வித்தியாசமான திறமையைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை. அதை வைத்து ஒரு German ஆசாமி போடும் திட்டமும், அதைச் சுற்றி நடக்கும் களேபரங்களும்தான் கதையின் சுவாரஸ்யமே!

    ஒரு பக்கம் வைரங்கள், இன்னொரு பக்கம் கொள்ளைத் திட்டம், நடுவில் நம்ம Kid Ordinn! 😂

    Tibet-ன் வழக்கமான நகைச்சுவையான character expressions, timing, காமெடி என Chick Bill ரசிகர்களுக்கு ஒரு ஜாலியான வாசிப்பு அனுபவம்.

    கதையின் மையக்கருவே வித்தியாசமா இருக்கும்போது, அதை spoiler இல்லாமல் ரசிப்பதுதான் நல்லது. Chick Bill ரசிகர்கள் தவறவிடக்கூடாத ஒரு ஜாலியான சாகசம்!

    Short-ah சொல்லணும்னா, The OG is back dii!! 🔥

    Last year Chick Bill சரியா போகலன்னு Sir சொன்னாரு. ஆனா இந்த title-ல ஒரு வெறித்தனமான comeback கொடுத்திருக்காரு! Chick Bill is back in form! 😎

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விமர்சனம்

      Delete
    2. //Chick Bill is back in form!//

      Nopes...நம்ம டாக் புல்லும் . கிட் ஆர்டினும் back in form !! இங்கு நிஜ ஹீரோக்களே அவர்கள் தானே ?!

      Delete
  46. Chick Bill, Tex, Zagor-னு மூணு books-ஓட artwork-உம் வேற லெவல்! Especially Tex title-ல Civitelli-யோட Black & White artwork வேற லெவல்! 🔥

    Tex-ஐ Diwali weekend-க்கு வானவேடிக்கையோட படிக்க plan பண்ணி இருக்கேன்! 😁

    இன்னொரு கோரிக்கை சார், Cartoons-ஐ colour-ல விடுங்க. மத்த heroes-ஐ Black & White-லயே விடுங்க! 🙏

    ReplyDelete
  47. *இந்தக் குளிருக்கு என்ன பதில்* - முதல் பக்கத்தில் இருந்து "எல்லாம் விறைச்சுக் கிடக்குது" இருக்கிறது என்று நம்ம ஓநாயார் காடு முழுக்க சொல்லிக்கிட்டு திரிய, காட்டில் உள்ள மற்ற மிருகங்களும் எதனால் ஓநாய் இப்படி சொல்லுகிறது என்ற யுகங்களுடன் ஓட, நமக்கும் இந்த ஓநாய் ஏன்டா இப்படி சொல்லுகிறது என்று ஆர்வத்துடன் பக்கம்களை புரட்ட கதை விறுவிறுப்பாக செல்கிறது. ஓநாயின் பிரச்சனை என என்று தெரியாமல் உதவ மற்ற மிருகங்கள் முயற்சிக்க, அவை பலனளிக்காமல்... மற்ற மிருகங்கள் உதவிக்கு என்று ஓநாய்க்கு அனுப்பிய மிருகங்களில் காணோம் என்று காடே கூட்டமாக ஓநாய் வீட்டுக்கு செல்ல அவர்களுக்கு ஓநாய் ஏன் "எல்லாம் விறைப்பாக இருக்கிறது" என்று புரிகிறது, அதனின் சமூக சிந்தனை நிஜமாலுமே சூப்பர்! இந்த சமூக சிந்தனை இல்லாததால் பல மெட்ரோ சிட்டியில் சாதாரண மனிதர்கள் காலம் தள்ள கடினமாகி வருகிறது.

    கதையில் ஒவ்வொரு பக்கத்தில் உள்ள சித்திரங்கள் பல விஷயம்களை கொண்டு உள்ளது, பட பட வென்று வசனங்களை மட்டும் படிக்காமல், அந்த சித்திரங்களில் என்ன உள்ளது என்று கொஞ்சம் நிதானமாக பார்த்து படியுங்கள், இன்னும் நிறைய ரசிக்கலாம், நமது குழந்தை பருவத்துக்கு அவை அழைத்து செல்லும்.

    அட்டகாசமான வாசிப்பு அனுபவம் ஒரு அருமையான சமூக கருத்துடன்! இது போன்ற கதைகள் இந்த கால குழந்தைகளுக்கு + நமக்கும் கண்டிப்பாக தேவை.

    ReplyDelete
    Replies
    1. //கதையில் ஒவ்வொரு பக்கத்தில் உள்ள சித்திரங்கள் பல விஷயம்களை கொண்டு உள்ளது, பட பட வென்று வசனங்களை மட்டும் படிக்காமல், அந்த சித்திரங்களில் என்ன உள்ளது என்று கொஞ்சம் நிதானமாக பார்த்து படியுங்கள்,//

      +101

      Delete
  48. வலை பின்னும் வைரம் - ரோபோ துடைப்பம்டா மடையா என்று ஆரம்பிக்கும் கதை ஒவ்வொரு பேனலிலும் சிரிப்பு உத்திரவாதம்! ஆசிரியர் சொன்னது போல இதுவரை வந்த சிக்-பில் கதைகளில் டாப்-3 கண்டிப்பாக இது இடம் பிடிக்கும்! 14 பக்கம்கள் முடித்து விட்டேன், முழுவதும் படித்து விட்டு விரைவில் விமர்சனம்!

    ReplyDelete
    Replies
    1. இதுதான் இசையுலகில் நவீன டெக்னிக் - செம டயலாக் 🤣

      Delete
    2. நான் ஆல்ரெடி “சொந்த சொரூபியாக்கும்” 🤣

      Delete
    3. ரொம்ப நாட்களுக்கு பிறகு சிக்-பில் குழுவின் அட்டகாசமான சிரிப்பு தோரணம் கதை நெடுக. கதையின் போக்கில் வசனங்கள் இயல்பாக முகத்தில் சிரிப்பை வரவழைக்கின்றன.

      தனி திறமை கொண்ட பாடகராக கிட் ஆர்டினை உருவாக்கி அதனை மையமாக கொண்ட ஒரு திருடன் மற்றும் அப்பாவி மக்களை சாமியார் என்ற போர்வையில் ஏமாற்றி பிழைக்கும் ஒருவன், இதனுடன் நமது உட் சிட்டி கும்பல் என்று ஒரு எளிதான அட்டகாசமான வாசிப்பு அனுபவத்தை கதாசிரியர் கொடுத்து இருக்கிறார்.

      சிறப்பு. மகிழ்ச்சி.

      Delete
  49. பொக்கிஷப் பொட்டி நேற்றே கிடைத்து விட்டது.

    நகைக்கும் நரகம், இந்த குளிருக்கு என்ன பதில் இரண்டையும் படித்து விட்டேன்.

    விமர்சனத்துடன் வருகிறேன் விரைவில்

    ReplyDelete
  50. ****நகைக்கும் நரகம்****

    Zagor-ஓட teenage days-ல நடக்கிற ஒரு வித்தியாசமான கதை!

    பிறவிக் குறைபாட்டால் முகத்தில் வித்தியாசமான தோற்றத்துடன் இருக்கும் ஒரு சிறுவன், பார்வையற்ற ஒரு பெண்ணுடன் நட்பாகிறான். பின்னர் அந்தச் சிறுவன் ஒரு murder case-ல மாட்டிக்கொள்வதுதான் கதையோட முக்கியமான திருப்பம்.

    வழக்கமான Zagor adventure-களில் இருந்து கொஞ்சம் மாறுபட்ட கதை. Friendship, humanity, society-யோட பார்வை, injustice-னு பல விஷயங்களை ரொம்ப இயல்பாகக் கதைக்குள் கொண்டு வந்திருக்காங்க.

    இந்த title-ல இருக்கிற புதிய digital art style-உம் குறிப்பிட வேண்டிய விஷயம். Colours, shading, lighting எல்லாமே ரொம்ப அழகா இருக்கு. குறிப்பாக background details மற்றும் characters-ஓட expressions நல்லா வந்திருக்கு.

    எத்தனை பேருக்கு இந்தக் கதை பிடிக்கும்னு தெரியல. வழக்கமான Zagor adventure feel இல்லாமல், ஒரு graphic novel படிக்கிற மாதிரியான அனுபவம் கொடுக்குது.

    ReplyDelete
  51. Giusfredi

    என்ன ஒரு அட்டகாசமான கதை, நான் இந்தளவிற்கு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. ஆரம்பம் முதல் இறுதி வரை சும்மா கதை பட்டாசாக பறக்குது. கதையாசிரியர் Giusfredi ( நாம் அடுத்த ஆண்டு பார்க்கவிருக்கும் யங் டெக்ஸ் 4 பாகக் கதை இந்த கதாசிரியரின் கை வண்ணமே) கதையை Non-Linear பாணியில் சமகால ஜாகோர் & இளம் வயது ஜாகோர் என ஜமாய்த்திருக்கிறார்.அதுவும் ஓவியர் மௌரோ லொரென்டீ அவர்களின் கைவண்ணத்தில் இளம் ஜாகோர் செம அழகாக காட்டி இருக்கிறார். அது மட்டுமல்ல, இந்த கதைக்கான சித்திரங்களும் வர்ண கலவையும் சும்மா கண்ணைக் கொள்ளை கொள்கிறது.

    இந்த கதை ஜாகோரின் ஆரம்ப கால விஷயங்களை சொல்கிறது. ஜாகோரின் பெற்றோர்கள், அவர்களின் கதி, அதற்கு காரணமானவன் & வளர்ப்பு தந்தை ஃபிட்ஸி மூலம் கற்கோடாரி பயிற்சி என கதையினூடே அழகாக விவரிக்கிறது.

    கண்தெரியாத அழகு மங்கை அதா வுடன் கூடவே இணைந்திருக்கும்
    நகைக்கும் நரகம் (கோமாளி) & இவர்களுக்கு உறுதுணையாக வரும் ஜாகோர்.

    க்ளைமாக்ஸை ஒரு வித எமோஷனல் உடன் முடித்திருக்கிறார்கள். அதற்கு
    முன்பாக வரும் அந்த "காக்கை சிகரம்" இடத்தில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் சும்மா பரபர ரகம். இந்த அட்டகாசமான கதைக்கு வழக்கம் போல் நம் எடிட்டர் & ரவிக்கண்ணனின் வசனங்கள் ஒரு பெரிய பலம்.

    என்னை பொருத்த வரையில் இதுவரை நான் பார்த்த ஜாகோர் கதையில் இதுவே இரண்டாவது பெஸ்ட் கதை என்று சொல்வேன். (முதல் கதை சிரிக்கும் விசித்திரம்.)

    ReplyDelete
    Replies
    1. சிரிக்கும் விசித்திரத்திலுமே அந்த விகார இளிப்பு உண்டு சார்...!

      Delete
  52. ஸாகோரின் நகைக்கும் நரகம்

    கயூகா செவ்விந்தியர்கள் இடையே சில மரணங்கள்
    பெர்சி யைப் போலவே முகம்வாய் கிழிக்கப்பட்டு இளிப்பது போல் இறந்துகிடக்க சந்தேகம் பெட்சியின்மேல் விழுகிறது !செவ்விந்தியர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் போர் ஏற்படும் சூழ்நிலை!குற்றவாளி யார்?

    பெர்சி,ரால்ஃப்,அதா

    கொலையாளிஇவர்களில் ஒருவரா ?அல்லது போர் ஏற்பட விரும்பும் வேறு யாரோ ஒருவரா?
    நட்பு பாசம் ,காதல் ,நகைச்சுவை ,ஆக்சன் ,ட்விஸ்ட்என அனைத்தும் சமவிகிதத்தில் கலந்து விறுவிறுப்பாகவிடையளித்து ஸாகோரின் டாப் 3 யில் இடம் பிடிக்கிறது நகைக்கும் நரகம்

    ReplyDelete
    Replies
    1. கலரில் ஸாகோர் நிரம்பவே score செய்கிறார் தான் சார் !

      Delete
  53. "வலை பின்னும் வைரம்"

    செல்லாக் குட்டி ஆர்டின் அல்ட்ரா மடையனாக அவதார் எடுக்க செரிப் டாக் புல் கடுப்பாக!பெருக்கெடுக்கும்நகைச்சுவையில் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிறது!
    வுட் சிடி கும்பலின் ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடிக்கும் கதை

    ReplyDelete
  54. செரீப். : இது ஒருரோபோ துடைப்பம் மடையா!

    ஆர்டின் ; இந்த மாதிரி ஒரு "ரோபோ துடைப்பம்" மடையா" வை நான் இப்போதான் முதல் தடவையாக பார்க்கிறேன்!

    செரீப் ; அது வெறும் ரோபோ துடைப்பம் தான்! "மடையா" ன்னது உன்னைச் சொன்னது.

    உன்னோட அந்த அல்ட்ரா-கில்ட்ரா விசயம் லாம்

    அட அல்ட்ரா கிறுக்கா!

    இதெல்லாம் இந்த தீபாவளிக்குஅல்ட்ரா சிரிப்புச் சரவெடி

    ReplyDelete
    Replies
    1. படிக்கும் போது இதனை ரொம்பவே ரசித்தேன். கதை நெடுக இது போன்று நிறைய டயலாக் சிரிப்பை வரவழைத்தது.

      Delete
  55. பாட்டுப் பாடி வில்லனின் கண்ணாடியை உடைக்கும் கிட் ஆர்டின் கட்டப்பட்டிருக்கும் நண்பர்களின் கட்டை அவிழ்த்து விடுகிறான்:
    ஆர்டின் :உலகத்திலேயே உங்களுக்குத் தான் இப்படி ஒரு அபூர்வமான டெபுடி வாய்ச்சிருக்கான்னு இப்பவாச்சும் ஒத்துக்குங்க

    செரீப் : மேல் அதிகாரிங்கறமரியாதை கொஞ்சமாச்சும் இருக்காடா உனக்கு ?முதல்ல என்னோட கட்டை அவிழ்த்து விட்டுட்டு அப்புறம் தானே மத்தவங்களை

    பக்கத்துக்கு பக்கம் புன்னகை

    ReplyDelete
    Replies
    1. முந்தைய சாகசத்தில் இசைக்கருவியை இயக்கப் படிக்க முனைந்தார் நம்மாள் ; இந்த தபா சூப்பர் சிங்கர் !!

      Delete
  56. கடந்த சில மாதங்கள் போலவே ! ஸாகோர், வுட் சிடி,
    Zen z என்றுபுத்தகங்கள் மறு மறு வாசிப்பை கோரஇம்மாத மும் டெக்ஸ் பக்கம் இன்னுமே திரும்ப முடியவில்லை .

    ReplyDelete
  57. நன்றிங்க பரணி ஜி

    Pfb :நான் உங்கள சொல்லல m. H.மொகிதீன்&அஜித்சிவா1000
    இவங்க கமெண்ட சொன்னேன்

    ReplyDelete
  58. """"""""டெக்ஸ்வில்லர் 200....* Tex Willer-200"""""

    1985ல் லயன் காமிக்ஸில் அறிமுகம் ஆகி மாதந்தோறும் ஒரு இதழ் வெளியாகும் அளவு வளர்ந்துள்ள *டெக்ஸ் வில்லர்* இதழ்கள் செய்துள்ள சாதனைகள் பல....

    *இம்முறை-2026ல் புதியதொரு மைல்கல்லை எட்டிப்பிடித்துள்ளார் இந்த அரிசோனா அதிகாரி!*

    *லயன் காமிக்ஸ் வரலாற்றில் """200""" இதழ்களில் இடம்பெறும் முதல் நாயகன் டெக்ஸ் வில்லரே...*

    லயன் காமிக்ஸில் அதிக ஸ்பெசல்களில் இடம்பெற்ற நாயகனும் இவரே...

    2026லயன் தீபாவளி மலராக வெளியாகியுள்ள "அசுரர்கள் அடங்குவதில்லை"- இதழ் 200வது டெக்ஸ் சாகஸம் *தமிழ் TeX book 200*

    ஒரு வாசகனின் பார்வையில் செய்யப்பட்ட கணக்கீடு இது. 42 தீபாவளிக்கு முன்பு ஆரம்பித்த இந்த பயணம் 200வது இதழை அதே தீபாவளிக்கு கண்டுள்ளது.
    விரைவில் 300,400,500...என வெளிவர புனித மனிடோ அருள் புரிவாராக....

    42ஆண்டுகள் முன்பிருந்து வரும் டெக்ஸ் புத்தகங்களை அலசி ஆராய்வது இந்த 50வயசு வாசகனுக்கு லேசுபட்ட விசயம் அல்லதான். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொருத்தருளுக.

    இதழ்களின் பட்டியல் இதோ....

    (தனித்தனி வெளியீடு எண்கள் உள்ள இதழ்கள் அனைத்தும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, தொடர்கதைகள்& மறுபதிப்புகள் உட்பட...)

    1.தலைவாங்கிக் குரங்கு-நவம்பர்1985

    2.பவளசிலை மர்மம-ஜூலை1986

    3.பழிவாங்கும் பாவை-1ஜனவரி987

    4.பழிக்குப்பழி-ஏப்ரல்1987

    5.ட்ராகன் நகரம்-மே1988

    6.இரத்த முத்திரை-நவம்பர்1988

    7.வைக்கிங் தீவு மர்மம்-ஏப்ரல்1989

    8.மாய எதிரி-ஜூலை1989(மாடஸ்தியின் நடுக்கடலில் அடிமைகள் புக்கில் இணைந்து வந்தது)

    9.அதிரடிக் கணவாய்-நவம்பர்1989

    10.எமனோடு ஒரு யுத்தம்-ஜூலை1990

    11.மரணத்தின் நிறம் பச்சை-பிப்ரவரி1991

    12.சைத்தான் சாம்ராஜ்ஜியம்-திகில் கோடைமலர்-ஏப்ரல்1991

    13.பழிவாங்கும் புயல்-பிப்ரவரி1992

    14.கழுகு வேட்டை-நவம்பர்1992

    15.இரத்த வெறியர்கள்-ஏப்ரல்1993

    16.இரும்புக் குதிரையின் பாதையில்...!-மே1994(லயன் சென்சுரி ஸ்பெசல்)

    17.பாலைவனப் பரலோகம்-மே1995(லயன் டாப்10 ஸ்பெசல்)

    18.மரண முள்-ஏப்ரல்1996

    19.நள்ளிரவு வேட்டை-நவம்பர்1996

    20.மரண நடை-மார்ச்1997

    21.கார்சனின் கடந்தகாலம்1-ஏப்ரல்1997

    22.கார்சனின் கடந்தகாலம்2-மே1997

    23.பாங்க் கொள்ளை-ஜூலை1997

    24.எரிந்த கடிதம்-பிப்ரவரி1998

    25.மந்திர மண்டலம்-மே1999

    26.இரத்த நகரம்-நவம்பர்1999

    27.எல்லையில் ஒரு யுத்தம்-ஜனவரி2000

    28.பழிவாங்கும் பாவை-CC-மறுபதிப்பு-மார்ச்2000

    29.மரண தூதர்கள்-நவம்பர்2000

    30.மெக்ஸிகோ படலம்-செப்டம்பர்2001

    31.தனியே ஒரு வேங்கை-பாகம்1-பிப்ரவரி2002

    32.கொடூர வனத்தில் டெக்ஸ்-பாகம்2-மார்ச்2002

    33.துரோகியின் முகம்-பாகம்3-மே2002

    34.பயங்கரப் பயணிகள்-பாகம்1-ஆகஸ்ட்2002

    35.துயிலெழுந்த பிசாசுகள்-பாகம்2-அக்டோபர்2002

    36.பறக்கும் பலூனில் டெக்ஸ்-ஜனவரி2003

    37.ஓநாய் வேட்டை-பாகம்1-மே2003

    38.இருளின் மைந்தர்கள்-ஜூன்2003

    39.இரத்த தாகம்-பாகம்2-ஜூலை2003

    40.சாத்தான் வேட்டை-அக்டோபர்2003

    41.கபால முத்திரை-பாகம்1-ஏப்ரல்2004

    42.சிவப்பாய் ஒரு சிலுவை-மே2004

    43.சதுப்பில் ஒரு சதிகார கும்பல்-பாகம்2-ஜூலை2004

    44.இரத்த ஒப்பந்தம்-பாகம்1-ஏப்ரல்2005

    45.தனியாத தணல்-பாகம்2-ஜூன்2005

    46.காலன் தீர்த்த கணக்கு-பாகம்3-ஆகஸ்ட்2005

    47.கானகக் கோட்டை-மே2006

    48.பனிக்கடல் படலம்-மே2007

    49.மரணத்தின் முன்னோடி-பாகம்1-ஏப்ரல்2008

    *50.காற்றில் கரைந்த கழுகு-பாகம்2-ஆகஸ்ட்2008*

    51.எமனின் எல்லையில்-பாகம்3-நவம்பர்2008

    52.தலை வாங்கிக் குரங்கு-CC-மார்ச்2012

    53.சிவப்பாய் ஒரு சொப்பனம்-ஜனவரி2013

    54.பூத வேட்டை-ஜூன்2013

    55.நிலவொளியில் ஒரு நரபலி(டெக்ஸ் முதல் கலர் இதழ்)-ஜூன்2013-சன்ஷைன் லைப்ரரி

    56.தீபாவளிமலர்-நவம்பர்2013-சன்ஷைன் லைப்ரரி (நீதியின் நிழலில், மரண தேசம் மெக்ஸிகோ )

    57.நில் கவனி சுடு-மே2014

    58.காவல் கழுகு-ஜூலை2014

    59.சட்டம் அறிந்திரா சமவெளி-ஆகஸ்ட்2014

    60.கார்சனின் கடந்த காலம்-அக்டோபர்2014-சன்ஷைன் லைப்ரரி-முதல் வண்ண மறுபதிப்பு

    61.வல்லவர்கள் வீழ்வதில்லை-டிசம்பர்2014

    62.தி லயன் 250-ஜூலை2015 (ஒக்லஹோமா,முகமில்லா மரண தூதன்,பிரம்மன் மறந்த பிரதேசம்)
    63.தீபாவளி வித் டெக்ஸ்-நவம்பர்2015
    (டைனோசரின் பாதையில், எமனின் வாசலில்)

    64.சட்டத்திற்கொரு சவக்குழி-சனவரி2016

    65.திகில் நகரில் டெக்ஸ்-பிப்ரவரி2016

    66.விதி போட்ட விடுகதை-மார்ச்2016

    67.தலையில்லாப் போராளி-ஏப்ரல்2016

    68.டாக்டர் டெக்ஸ்-மே2016

    69.பழிவாங்கும் புயல்-ஜூன்2016

    70.குற்றம் பார்க்கின்!-ஜூலை2016

    71.ஒரு கணவாயின் கதை-ஈரோட்டில் இத்தாலி முழுவண்ண இதழ்-ஆகஸ்டு2016

    72.துரோகத்திற்கு முகமில்லை-செப்டம்பர்2016

    73.தற்செயலாய் ஒரு ஹீரோ-அக்டோபர்2016

    74.சர்வமும் நானே!-நவம்பர்2016

    75.நீதிக்கு நிறமேது?-டிசம்பர்2016

    ReplyDelete
    Replies
    1. 76.ஆவியின் ஆடுகளம்-சனவரி2017

      77.அராஜகம் அன்லிமிடெட்-பிப்ரவரி2017

      78.இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்-மார்ச்2017

      79.ஒரு வெறியனின் தடத்தில்-ஏப்ரல்2017

      80.கவரி மான்களின் கதை-ஜூன்2017

      81.கியூபா படலம்-லயன்300-ஜூலை2017

      82.மரணத்தின் நிறம் பச்சை-ஆகஸ்ட் 2017

      83.கடற்குதிரையின் முத்திரை-செப்டம்பர்2017

      84.தீபாவளிமலர்-அக்டோபர்2017
      (ஒரு தலைவன் ஒரு சகாப்தம்
      அழகாய் ஒரு அராஜகம்)

      85.ட்ராகன் நகரம்-நவம்பர்2017
      86.ஒரு கணவாய் யுத்தம்-ஜனவரி2018

      87.விரட்டும் விதி-பிப்ரவரி2018

      88.வெண்பனியில் செங்குருதி-பிப்ரவரி2028

      89.பாலைவனத்தில் புலனாய்வு-மார்ச்2018

      90.கடைசிப்பலி-ஏப்ரல்2018

      91.பவளச்சிலை மர்மம்-ஏப்ரல்2018

      92.நடமாடும் நரகம்-ஜூன்2018

      93.இரவுக்கழுகின் நிழலில்-ஜூன்2018

      94.காற்றுக்கு ஏது வேலி-ஜூலை2018

      95.டெக்ஸ் மினி 3in1-விரட்டும் விதி-ஆகஸ்ட்2018

      96.சைத்தான் சாம்ராஜ்யம்-செப்டம்பர்2018

      97.மண்ணில் துயிலும் நட்சத்திரம்-செப்டம்பர்2018

      98.டைனமைட் ஸ்பெசல்-அக்டோபர்2018

      99.காதலும் கடந்து போகும்-நவம்பர்2018

      *100.புனிதப் பள்ளத்தாக்கு-நவம்பர்2018*

      101.காலனின் கானகம்-டிசம்பர்2018

      102.யார் அந்த மரண தூதன்-டிசம்பர்2018

      103.சாத்தானின் சீடர்கள்-ஜனவரி2019

      104.வைகிங் தீவு மர்மம்-பிப்ரவரி2019

      105.பாலைவனத்தில் ஒரு கப்பல்-மார்ச்2019

      106.டெக்ஸ் மினி3in1-2-புனிதப் பள்ளத்தாக்கு-ஏப்ரல்2019

      107.பச்சோந்திப் பகைவன்-ஏப்ரல்2019

      108.வெளிச்சத்துக்கு வந்த நிழல்-மே2019

      109.சிங்கத்தின் சிறுவயதில்-ஜூன் 2019.
      110.நட்புக்கு நாட்களேது-ஜூலை2019

      111.தகிக்கிம் நியூ மெக்சிகோ-ஆகஸ்ட்2019

      112.பழி வாங்கும் பாவை-ஆகஸ்ட்2019

      113.ஒரு ரெளத்திர ரேஞ்சர்-செப்டம்பர்2019

      114.புதைந்து போன புதையல்-அக்டோபர் 2019

      115.சர்க்கஸ் சாகசம்-தீபாவளிமலர்-நவம்பர்2019

      116.சூது கொல்லும்-டிசம்பர்2019

      117.ரெளத்திரம் மற-டிசம்பர்2019

      118.இருளின் மைந்தர்கள்1-சனவரி2020

      119.இருளின் மைந்தர்கள்2-சனவரி2020

      120.ரெளத்திரம் மற- 4in1 தொகுப்பு-சனவரி2020

      121.ஒரு துளி துரோகம்-பிப்ரவரி2020

      122.வானவில்லுக்கு நிறமேது!-மே2020
      123.கைதியாய் டெக்ஸ்-ஜூன்2020

      124.எதிரிகள் ஓராயிரம்-ஜூலை2020

      *125.பந்தம் தேடிய பயணம்-செப்டம்பர்2020*

      126.தலைவாங்கி குரங்கு-அக்டோபர் 2020

      127.தீபாவளிமலர்-நவம்பர்2020

      128.ஒரு கசையின் கதை-டிசம்பர்2020

      129.மரணமுள்-சனவரி2021

      130.மின்னும் சொர்க்கம்-பிப்ரவரி2021

      131.கழுகு வேட்டை-ஏப்ரல்2021

      132.நெஞ்சே எழு-மே2021.

      133.ஒரு பிரளயப் பயணம்-ஜூலை2021.

      134.புத்தம் புது பூமி வேண்டும்-லயன்400-ஆகஸ்ட்2021

      135.சிகப்பாய் ஓரு சிலுவை-ஆகஸ்ட்2021

      136.கண்ணே கொலைமானே-அக்டோபர்221

      137.தீபாவளிமலர்2021-நவம்பர்2021.

      138.திக்கெட்டும் பகைவர்கள்-டிசம்பர்2021

      139.டெக்ஸ் க்ளாசிக்1-பழிக்குப்பழி&கானகக் கோட்டை-ஜனவரி2022

      140.பாலைவனத்தில் பிணம் தின்னிகள்-மார்ச்2022

      141.சிகாகோவின் சாம்ராட்-ஏப்ரல்2022

      142.டெக்ஸ் க்ளாசிக்2- இரத்த வெறியர்கள்-பனிக்கடல் படலம்-ஏப்ரல்2022

      143.விடாது வஞ்சம்-மே2022

      144.ஒரு காதல் யுத்தம்-ஜூன்2022

      145.புயலில் ஒரு புதையல் வேட்டை-ஜூலை2022

      146.மெளன நகரம்-ஆகஸ்ட்2022

      147.சொர்க்கத்தில் சாத்தான்கள்-செப்டம்பர்2022

      148.தீபாவளி மலர்-அக்டோபர்2022

      149.பாலைவனப் பரலோகம்-அக்டோபர்2022

      *150.நிழல்களின் ராஜ்யத்தில்-டிசம்பர்2022.*

      Delete
    2. 151.பகை பல தகர்த்திடு-ஜனவரி2023

      152.பறக்க மறந்த பறவைகள்-பிப்ரவரி 2023

      153.ஓநாய் வனத்தில் டெக்ஸ்-மார்ச்2023

      154.கலவர பூமியில் கனவைத் தேடி-ஏப்ரல்2023

      155.டெக்ஸ் க்ளாசிக்4-மந்திர மண்டலம்&மரண நடை-மே2023

      156.ஒரு கெளபாய் காதலி-மே2023

      157.கரையெல்லாம் குருதி-ஜூன்2023

      158.கைதியாய் கார்சன்-ஜூலை2023

      159.மீண்டு(ம்) வந்த மாயன்- ஆகஸ்ட் 2023

      160.டெக்ஸ் க்ளாசிக்5-கார்சனின் கடந்த காலம்- ஆகஸ்ட் 2023

      161.The Supremo Special-Tex75-அக்டோபர்2023

      162.சகோதரனின் சகாப்தம்-V10-அக்டோபர்2023

      163.The Tex சிக்ஸர் ஸ்பெசல்-நவம்பர்2023

      164.உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி-டிசம்பர்2023

      165.கண்ணீருக்கு நேரமில்லை..!-ஜனவரி2024

      166.காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்...!-பிப்ரவரி2024

      167.புயலுக்குப் பின்னே பிரளயம்!-மார்ச்2024

      168.பகைவருக்குப் பஞ்சமேது?.-ஏப்ரல்2024

      169.டெக்ஸ் க்ளாசிக்6-ஓநாய் வேட்டை-மே2024

      170.சிறைப் பறவையின் நிழலில்-ஜூன்2024

      171.குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை-ஜூலை2024

      172.சினம் கொண்ட சின்ன கழுகு-செப்டம்பர்2024

      173.இறுதி ஆட்டம்-V22-அக்டோபர்2024

      174.தீபாவளி மலர்-பனிமண்டலப் போராளிகள்1-2024-நவம்பர்2024

      *175.தீபாவளி மலர்-பனிமண்டலப் போராளிகள்2-2024-நவம்பர்2024*

      176.The Magic Moment Special-டிசம்பர்2024

      177.டெக்ஸாஸ் ரேஞ்சர்ஸ்-டிசம்பர்2024

      178.இளமை எனும் பூங்காற்று-ஜனவரி2025

      179.தலைநகரில் தலைமகன்-பிப்ரவரி2025

      180.சாபம் வாங்கிய சுரங்கம்-மார்ச்2025


      181.சாபங்கள் சாய்வதில்லை-ஏப்ரல்2025

      182.மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெசல்-MMS2- மே2025

      183.சட்டத்தோடு சடுகுடு-ஜூன்2025

      184.உதிரம் பொழியும் நிலவே-ஆகஸ்ட்2025

      185.எட்டும் தூரத்தில் யுத்தம்-செப்டம்பர்2025

      186.மெக்ஸிகோவில் ஒரு மாய ரயில்-தீபாவளிமலர்-அக்டோபர்2025

      187.புயலில் ஒரு சூறாவளி-டிசம்பர்2025

      188.விதி எழுதிய வெற்றி வரிகள்-ஜனவரி2026

      189.என் இனிய பொய்யே-பிப்ரவரி2026

      190.கார்சனைக் காணோம்-மார்ச்2026

      191.மரணம் மறந்த மம்மி-ஏப்ரல்2026

      192.நித்திரையில்லா நித்தியன்-மே2026

      193.இரத்தம் ஓர் நிறம்-ஜூன்2026

      194.நிதிக்கு நீதி-ஜூலை2026

      195.எல்லையில் ஒரு யுத்தம்1-ஆகஸ்ட்2026

      196.எல்லையில் ஒரு யுத்தம்2-ஆகஸ்ட்2016

      197.ஓட்டமதைக் கைவிடேல்-செப்2026

      198.எமனுடன் ஒரு யுத்தம்-செப்2026

      199.நள்ளிரவின் நயணம்-அக்டோ2026

      *200.அசுரர்கள் அடங்குவதில்லை-தீபாவளி மலர்-நவம்2026*

      குறிப்பு:- வெளியீடு எண்கள் இல்லாத மினி டெக்ஸ்கள்:-

      1.இருளோடு யுத்தம்-மார்ச்2020 (சந்தா ஃப்ரீ கிஃப்ட்)

      2.விண்டர் ஸ்பெசல்- ஃப்ரீ வித் தீபாவளிமலர்-நவம்பர்2020

      3.பனியில் ஒரு புதுநேசம்- ஃப்ரீ வித் லயன்400-ஆகஸ்ட்2021

      4.குற்றத்தின் குரல்- சந்தா ஃப்ரீ -நவம்பர்2023

      5.பருந்துக்கொரு பொறி-சந்தா ஃப்ரீ-டிசம்பர் 2023

      6.சூறாவளியின் தடத்தில்-சந்தா ஃப்ரீ-ஆகஸ்ட்2024


      🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇

      Delete
  59. இந்த 200இதழ்களின் பின்னாள் உள்ள சில சுவாரஸ்யங்கள்....

    *டெக்ஸ் 42° ஆண்டுகள்---"""200"""- இதழ்கள்......*

    *டெக்ஸ் 200 Facts 1...*

    முதல் இதழாக அக்டோபர் 1985ல தீபாவளிமலராக வெளியானது *தலை வாங்கி குரங்கு*, 42வது ஆண்டில் 200வது தமிழ் டெக்ஸ் இதழாகவும் வெளியாகியுள்ளதும் தீபாவளி மலரே. *"அசுரர்கள் அடங்குவதில்லை"---டெக்ஸ் தீபாவளி மலர்2026.*

    ஆண்டு.....இதழ்கள்

    1985-----1
    1986-----1
    1987-----2
    1988-----2
    1989-----3
    1990-----1
    1991------2
    1992-----2
    1993-----1
    1994-----1
    1995------1
    1996-----2
    1997-----4
    1998-----1
    1999-----2
    2000----3
    2001-----1
    2002-----5
    2003-----5
    2004-----3
    2005-----3
    2006-----1
    2007-----1
    2008-----3
    2012-----1
    2013-----4
    2014-----5
    2015-----2
    2016----12
    2017----10
    2018----17
    2019----15
    2020----11
    2021----10
    2022----12
    2023----14
    2024----13
    2025----10
    2026----13

    ஆக மொத்தம் """" 200'""" நாட் அவுட்.

    ஒரு ஆண்டில் அதிகப்படியான இதழ்கள் வெளியானது 2018ல்---17இதழ்கள்.
    டெக்ஸ் இதழ்களின் பெஸ்ட் ஆண்டுகள் என 2016முதல் 2026யிலான 11ஆண்டுகளை குறிப்பிடலாம், ஆண்டுக்கு 10இதழ்களுக்கு மேலாக தொடர்ந்து வெளியாகி அசத்தி வரும் கோல்டன் பீரியட் இது....
    1980களை ஸ்பைடர் எரா, 1990களை டைகர் எரா என குறிப்பிட்டால், தற்போதைய காலத்தை
    *டெக்ஸ் ஏரோ* என சொல்லலாம்.


    *டெக்ஸ் 200 Facts 2...*

    *41ஆண்டுகளில் வெளியான டெக்ஸ் இதழ்கள்=200*

    கறுப்பு வெள்ளை இதழ்கள் 137

    வண்ண இதழ்கள் 58

    கறுப்பு வெள்ளை & வண்ணம் இணைந்த ஹைபிரீட் இதழ்கள் 5


    *டெக்ஸ் 200 Facts 3...*

    டெக்ஸின் தனி இதழ்கள் 180

    மற்ற நாயகர்களுடன் கூட்டணியில் 20 இதழ்கள்


    *டெக்ஸ் 200 Facts 4...*

    ரெகுலர் புதிய இதழ்கள் 172

    மறுபதிப்புகள் 28


    *டெக்ஸ் 200 Facts 5...*


    மிக நீளமான கதை: புயலுக்கொரு பிரளயம்-507பக்கங்கள்---டைனமைட் ஸ்பெசல்-2018,

    மிகச்சிறிய கதை: தகிக்கும் நியூ மெக்ஸிகோ-16பக்கங்கள்


    பாக்கெட் சைசில் நீளமான கதை: மரண தூதர்கள்-296 பக்கங்கள்.
    மிகச்சிறிய கதை-மாய எதிரி-25பக்கங்கள்

    *டெக்ஸ் 200 Facts 6...*


    மிக நீளமான டெக்ஸ் பிரத்யேக இதழ்கள்,.....

    1.டைனமைட் ஸ்பெசல்- 792பக்கங்கள்-2018---2கதைகள்

    2.சுப்ரீமோ ஸ்பெசல் -728பக்கங்கள்-2023---4கதைகள்

    3.தி லயன் 250- 680பக்கங்கள்-2015---3கதைகள்

    4.தீபாவளிமலர்2020-648பக்கங்கள்-3கதைகள்


    *டெக்ஸ் 200 Facts 7...*

    நீண்டகால இடைவெளியில் வண்ண மறுபதிப்பு...

    தலை வாங்கிக் குரங்கு-35ஆண்டுகள்
    முதல் பதிப்பு 1985; வண்ண மறுபதிப்பு 2020

    குறுகிய கால மறுபதிப்பு....

    ரெளத்திரம் மற- 1 மாதம்

    முதல் பதிப்பு டிசம்பர்2019; மறுபதிப்பு ஜனவரி 2020


    *டெக்ஸ் 200 Facts 8...*

    அதிகமுறை வெளியிடப்பட்ட இதழ்... 3- தலா 3முறைகள்

    1.தலைவாங்கி குரங்கு

    முதல்பதிப்பு:1985
    2ம் பதிப்பு: 2012
    3ம் பதிப்பு: 2020

    2.பழிவாங்கும் பாவை

    முதல்பதிப்பு:1987
    2ம் பதிப்பு: 2000
    3ம் பதிப்பு: 2019

    3.கார்சனின் கடந்த காலம்

    முதல்பதிப்பு:1997
    2ம் பதிப்பு: 2014
    3ம் பதிப்பு: 2023


    *டெக்ஸ் 200 Facts 9...*

    தனி இதழ்கள்: 177

    தொடராக வெளியான இதழ்கள்: 23

    23தொடர் இதழ்களில்,

    3இதழ்கள் கொண்ட தொடர்கள்=3 (3x3=9)

    2இதழ்கள் கோண்ட தொடர்கள்=7 (7x2=14)

    *லைப்ரரி-200 Facts 10...*


    டெக்ஸ் இதழ்கள் வெளியான ப்ரகாஷ் பப்ளிஷர்ஸ் ப்ராண்ட்களில்.....

    1.லயன் காமிக்ஸ்-173
    2.திகில் காமிக்ஸ்-1
    3.காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-2
    4.சன்ஷைன் லைப்ரரி-5
    5.மேக்ஸி டெக்ஸ்-4
    6.தி லயன் லைப்ரரி-10
    7.ஜம்போ-2
    8.V for We Comics-3

    மொத்தம்=200இதழ்கள்

    *டெக்ஸ் 200 Facts 11...*


    டெக்ஸ் இதழ்கள் வெளியான ஸ்பெசல் இதழ் வகைகள்.....

    1.லயன் பொங்கல் மலர்
    2.லயன் கோடைமலர்
    3.லயன் ஆண்டுமலர்
    4.லயன் தீபாவளி மலர்
    5.லயன்50வது, 100, 150, 200, 250, 300, 400...மைல்கல் ஸபெசல்ஸ்
    6.லயன் டாப் 10ஸ்பெசல்
    7.லயன் மில்லேனியம் ஸ்பெசல்
    8.லயன் சம்மர் ஸ்பெசல்1, 2
    9.Tex Classics
    10.லயன் மெகா ட்ரீம் ஸ்பெசல்
    11.லயன் ஜாலி ஸ்பெசல்
    12.லயன் கெளபாய் ஸ்பெசல
    13.Book Fair Special
    14.கிங் ஸ்பெசல்
    15.டெக்ஸ் மினிகள்
    16.டெக்ஸ் மினி கலக்சன்
    17.ஜம்போ
    18.டைனமைட் ஸ்பெசல்
    19.சுப்ரிமோ ஸ்பெசல்
    20.விஜயன் 1000 ஸ்பெசல்

    தொகுப்பு- STV

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் 200 facts 12....

      *வாமன டெக்ஸ்கள்.....*

      ரொம்ப நாட்களாக சந்தாவில் உள்ள வாசகர்களுக்கு ஏதாவது தம் அன்பு பரிசாக செய்யணும் என்ற எடிட்டர் சாரின் எண்ணத்தில் விளைந்தவை இவைகள்....

      அவ்வப்போது சின்ன சின்ன கிஃப்ட்ஸ் தந்திருந்தார் எடிட்டர் சார்... *2017ஜனவரியில் லயன் காலண்டர்* , தொடர்ந்த மாதங்களில் ஸ்டிக்கர்ஸ், போஸ்டர்ஸ், கலரிங் புக்ஸ், டைம்டேபிள், மேக்னட் ஸ்டிக்கர்னு விலையில்லாமல் கிடைத்து வந்தன. உச்சமாக இந்த வாமன டெக்ஸ்கள். மினி டெக்ஸ் புக்ஸ்..அதாவது பக்க அளவில் ரொம்ப குறைவானது, ஆனா கதை அளவில் எப்போதும் போல அதில் புதிரி....

      ""கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது"""- என்ற உவமையை மெய்ப்பிக்கும் வகையில் இவை சக்கை போடு போட்டன...இந்த மினி டெக்ஸ்களின் அளவை குறிப்பிட இந்த "வாமன" என்ற பதத்தை இவற்றிற்கு பொருத்தமாக சூட்டிய மருத்துவர் செல்வம் அபிராமி எ செனா அனாவுக்கு நன்றிகள்.🙏

      2017ன் இறுதியில் அறிவிக்கப்பட்ட *சந்தா2018ல்* இவைகள் நிறைய விவாதங்களை கிளப்பின...ஆனால் அவைகள் *2018ல ரீலீஸ் ஆனபோது சக்கை போடு போட்டன.....*😍😍😍😍

      2018ல 6கதைகள் இப்படி ஆல்டர்நேட் மாதங்களில் சந்தாதாரர்களுக்கு தரப்பட்டன....

      கடைகளில் & முகவர்களிடம் வாங்கும் ரசிகர்களுக்கு இந்த மினி டெக்ஸ் இல்லையா என்ற கடுமையான யதார்த்தமான கேள்வி எழ, 3 கதைகள் வந்தபின் ஒரு தொகுப்பாக வெளிவரும் ரூ90விலையில் என அறிவித்தார் எடிட்டர்....

      அதன்படி முதலில் வந்த இந்த

      *விரட்டும் விதி*
      *கடைசிப்பலி*
      *இரவுக்கழுகின் நிழலில்*

      ---3ம்இணைந்த தொகுப்பு ஆகஸ்ட் 2018ல வெளியானது, ஈரோடு விழாவில்... சரியான சேல்ஸ்... இதுவும்...😍😍😍

      4.மண்ணில் துயிலும் நட்சத்திரம்
      5.புனிதப் பள்ளத்தாக்கு
      6.யார் அந்த மரண தூதன்?

      என 2018ல 2வது பாதியில் இலவசமாக தரப்பட்டு,

      *டெக்ஸ் மினி3in1-புனிதப் பள்ளத்தாக்கு-ஏப்ரல்2019* ல தொகுப்பாக வெளியானது 🩷

      2018ன் தடாலடி வரவேற்பை தொடர்ந்து 2019லும் இந்த வாமன டெக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாக தர ப்ளானிங் பண்ணப்பட்டது....

      இம்முறை 3மாதங்களுக்கு 1மினி என 4 புத்தகங்கள் அறிவிக்கப்பட்டது...

      பின்னர் ஒரே தொகுப்பாக வெளியிடலாம் என்ற எண்ணம் போல...

      *1.வெளிச்சத்துக்கு வந்த நிழல்*

      *2.நட்புக்கு நாட்களேது*

      *3.தகிக்கிம் நியூ மெக்சிகோ*

      *4.ரெளத்திரம் மற*


      இம்முறையும் 2வது முறையாக இவைகள் பட்டையைக்கிளப்பின...😍😍😍

      ஒரே தொகுப்பாக ஜனவரி2020ல இது வெளியானது... வழக்கம்போல சில நாட்களிலேயே ஸ்டாக்கும் அவுட்😉😉😉

      *நட்புக்கு நாட்களேது..* . மை டாப் கதை...

      விளம்பரத்தில் அறிவிக்கப்பட்ட கைதியாய் கார்சன் தான் வெளிச்சத்துக்கு வந்த நிழலாகவும்,

      ஆறாது சினம், *ரெளத்திரம் மற*-"-வாகவும் பெயர் மாறிற்று..

      Delete
    2. The down trend of mini TeX.....

      இரு ஆண்டுகளின் அதிரடியான சக்சஸ் காரணமாக 3வது ஆண்டாக தொடர்ந்து 2020லயும் மினி TeX கள் ப்ளானிங் பண்ணப்பட்டன....

      ஆனா மொத கதையாக தேர்வான *இருளோடு யுத்தம்* அமானுஷ்ய பின்னணி கொண்டு மார்ச்2020ல வெளியானது.... கடுமையான விமர்சனத்தை எதிர் கொண்டது...!!!

      தொடர்ந்தது கொரானா பேரிடர் நாட்களின் முதல் அத்தியாயம்.... லாக்டவுன்1....

      இந்த இடைவெளியை அடுத்து ரெகுலர் இதழ்களே வெளியாக நிறைய பிரயத்தன முயற்சியை செய்தார்.... இலவச டெக்ஸ்கள் ஒத்தி வைக்கப்பட்டது.

      *The pinnacle of mini TeX*

      லாக்டவுன்1க்குப் பிறகு 2020ன் மீதி சந்தா இதழ்களையே ,2021மார்ச் வரை எடிட்டர் நீட்டித்தார்...

      இந்த மினி டெக்ஸின் உச்சம், பெரிய சைசில் 2020தீபாவளி மலருடன் இலவசமாக அளிக்கப்பட்ட *விண்டர் ஸ்பெசல்* என்ற 32 பக்க ஆயில் பெயிண்டிங் போன்ற வித்தியாசமான பாணி சித்திரக்கதையே....

      இத்தாலியில் *Prisoner of Apache* என வந்தகதையே இது... கடந்த மினி டெக்ஸில் விழுந்த அடியை இது ஈடுகட்டியதோடல்லாமல் சும்மா டாப்புக்கு போனது....

      *பெரும்பாலான நண்பர்கள் பார்வையில் மெயின் தீபாவளி மலர் புத்தகத்தை விட இதுவே டாப்...😍😍😍😍*

      *Merging of mini TeX*

      துவக்கத்தில் இலவச இணைப்பாக தனித்தனியாக வெளியிடப்பட்டன மினி TeX கள்...சந்தா வாசகர்கள் மட்டுமே படிக்க இயன்றது...

      பின்னர் விற்பனைக்கு அந்த இலவச புத்தகங்கள் ஒரே தொகுப்பாகவும் வெளியாகி, அனைத்து வாசகர்களையும் அடைந்தது.

      2020ல லாக்டவுன் காரணமாக ஒரு மினியோடு நிறுத்தப்பட்டு இருந்தது...

      அறிவிக்கப்பட்ட பாக்கி இரு மினிகளையும் ஒரே தொகுப்பாக்கி நேரடியாக விற்பனைக்கு கொண்டு வந்தார்கள்... சந்தா வாசகர்களுக்கு அதே புக், விலையின்றி வழங்கப்பட்டது...

      " *தங்கத்தின் பாதையில்* &
      *மின்னும் சொர்க்கம்** "- இரு மினி கதைகள் இடம் பெற்றிருந்தன....!!!

      2ம் நல்ல வரவேற்பைப் பெற்றன.....🩷🩷🩷

      சமீபத்திய காலங்களில் முக்கிய இதழ்களோடு இந்த மினி டெக்ஸ்கள் வெளிவருகின்றன.

      இதுவரை 18 மினி TeX கதைகள் வந்திருக்கு...

      மினி டெக்ஸ் வரிசை

      1.விரட்டும் விதி
      2.கடைசிப்பலி
      3.இரவுக்கழுகின் நிழலில்
      4.மண்ணில் துயிலும் நட்சத்திரம்
      5.புனிதப் பள்ளத்தாக்கு
      6.யார் அந்த மரண தூதன்?
      7.வெளிச்சத்துக்கு வந்த நிழல்
      8.நட்புக்கு நாட்களேது
      9.தகிக்கும் நியூ மெக்சிகோ
      10.ரெளத்திரம் மற
      11.இருளோடு யுத்தம்
      12.விண்டர் ஸ்பெசல்-Prisoner of Apache
      13.தங்கத்தின் பாதையில்
      14.மின்னும் சொர்க்கம்
      15.பனியில் ஒரு புது நேசம்.
      16.குற்றத்தின் குரல்
      17.பருந்துக்கொரு
      18.சூறாவளியின் தடத்தில்


      Delete
    3. நன்று மிக நன்று.
      தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல.

      Delete
  60. அசுரர்கள் அடங்குவதில்லை...


    எப்பொழுதும் நீண்ட பெரிய கதைகளை இறுதியாக வாசிக்கும் பழக்கம் இருந்தாலும் இந்த முறை டெக்ஸ் வில்லரின் அசுரர்கள் அடங்குவதில்லை சாகஸத்தின் முன் பாக கதையான மீண்டு(ம்) வந்த மாயனை நினைவிற்காக நான்கு ,ஐந்து நாட்களுக்கு முன்னர்தான் மீண்டும் மறுவாசிப்பில் வாசித்த காரணமாக சூட்டோடு சூடாக இந்த கதையின் தொடர்ச்சியே வாசித்து விடலாம் என முடிவெடுத்து உடனடியாக வாசிக்கும் ஆவலும் எழுந்த காரணத்தால் இந்த முறை டெக்ஸ்வில்லரின் சாகஸமே முதல் வாசிப்பாக இடம் பெற வைத்து விட்டது...

    இங்கே லாஜீக் எதுவும் பார்க்க வேண்டாம்...காதில் பூவோ பூ சுற்றும் சாகஸம் தான் ...ஆனால் திரையில் இது போலான காஞ்சனா..அரண்மனை போன்ற படங்களை எப்படி லாஜீக் இல்லாமல் பார்த்து ரசிக்க முடிந்ததோ அதே போல் தான் இந்த அசுரர்கள் அடங்குவதில்லை சாகஸமும்...கதை ஆரம்பத்தில் இருந்து இறுதி க்ளைமேக்ஸ் வரை டெக்ஸ் அன்ட் கோ மெபிஸ்டோவை துரத்து ,துரத்து என துரத்தி கொண்டே வந்தாலும் ஒவ்வொரு முறையும் அவர்கள் தோல்விகளையே சந்தித்து விட்டு வருவதும்...மெபிஸ்டோ விற்கு துனையாக இந்த முறை அவனது மகன்...மெபிஸ்டோ சகோதரி என பலரும் துணை நிற்க டெக்ஸ்ற்கு ஆதரவாக பத்மா ,மோரிஸ்கோ என துனை நிற்க துரத்தும் படலம் மிக விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டே போகிறது .... நம்ப முடியாத விதத்தில் கதை நகர்ந்தாலும் கதையில் வரும் கார்ஸனே பல இடங்களில் ஏப்பா இதெல்லாம் கற்பனையா ,நிஜமா பைத்தியமே புடிச்சிரும் போல இருக்கு என அவரே புலம்பி புலம்பி வர நம்மையும் உள்ளே அவரே இழுத்து கொள்கிறார்.. மெபிஸ்டோவை ஒழித்து கட்ட பல இடங்களில் பல விதங்களில் முயன்று இறுதியில் பல மாய தந்திர முடிவுகளின் இறுதியில் டெக்ஸ் எப்படி வென்றார் என்பதை மிக மிக மாயாஜால ..மந்திர..தந்திரங்களின் மூலம் கதையை நகர்த்தி கொண்டு சென்று மெபிஸ்டோ எப்படி மற்றவர்களை வசியம் செய்கிறனோ அதே போல் இந்த இதழை வாசிக்கும் நம்மையும் டெக்ஸ் அன்ட் கோ ஒரு வேறு மாயாஜால உலகில் நுழைய வைத்து நம்மையும் வசியம் செய்து விடுகிறார்கள்...இதுவும் ஓர் புதுவித அனுபவமே...அதுவும் மூன்று ,மூனரை மணி நேரத்திற்கும் அதிகமாக ஏதோ ஓர் கற்பனை உலகத்தில் நாமும் உலவி திரிந்த அனுபவம் உண்மையிலேயே வேறுவிதம் தான்...அந்த மாயலோக உலகில் கூடவே டெக்ஸ் குழுவும் இருக்கும் பொழுது சுவராஸ்யத்திற்கு பஞ்சமா என்ன...நம்ப முடியாத கதை...நம்ப முடியாத சம்பவங்கள்..நம்ப முடியாத வில்லன்கள்..நம்ப முடியாத தோழர்கள் என கதை முழுவதும் நம்ப முடியாத சாகஸங்கள் தான்...ஆனால் வாசிக்க தொடங்கி வாசித்து முடிக்கும்வரை அந்த நம்ப முடியாத உலகில் நாமும் பங்கு கொள்வது மட்டும் நம்ப முடியாத நிஜமே...அதுவும் சித்திரங்கள் அத்தனை அழகு...ஒவ்வொரு பக்கத்தையும் பொறுமையாக ஓவியங்களையும் ரசித்து ,ரசித்து கதையை வாசிக்கும் பொழுது நாமும் அந்த வன்மேற்கில் நுழைந்து கொள்வது மிகவும் சுலபமாக போய்விடுகிறது...சித்திரங்கள் தான் அப்படி எனில் இப்படிபட்ட கதை களத்திற்கு நம்மை அதனின் உள்ளே தூண்டில் போல் இழுக்க மிக முக்கிய காரணம் மொழி ஆக்கம் என்பதும் மறுக்க முடியாத உண்மை...எப்பொழுதும் தீபாவளி மலரில் நம்மை டெக்ஸ் ஒரு வன்மேற்கு உலகில் நுழைய வைப்பார்தான் ஆனால் இந்த முறை அதே வன்மேற்கு உலகில் மிக மிக மாறுபட்ட களத்தில...உலகத்தில் நம்மை நுழைய வைத்து வேறு விதத்தில் இந்த முறை அட்டகாசபடுத்தி விட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை...இந்த மெபிஸ்டோ மீண்டும் வருகை தந்தால் மறவாமல் அவரை கூட்டி வந்து விடுங்கள் சார்...மொத்தத்தில் அசுரர்கள் அடங்குவதில்லை காதில் பூ சுற்றும் சாகஸமே என்றாலும் அந்த பூவுமே மணம் வீசுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை...

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னா சரிதான் தல.
      நீண்ட விரிவான விமர்சனம் தல.

      Delete
  61. டெக்ஸ் விஜயராகவன் சார்

    டெக்ஸ் புத்தகங்கள் பற்றிய இந்தப் பதிவே ஒரு டெக்ஸ் கதையை வாசித்த அனுபவத்தை கொடுக்கிறது
    நன்றிகள்
    நன்றிகள்
    நன்றிகள்

    ReplyDelete
  62. வணக்கம் நணபர்களே.அன்னைவருக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  63. லயன் குழும உறுப்பினர்கள் , எடிட்டர் மற்றும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்🧨🧨🧨🧨🧨🎆🎆🎆🎇🎇🎇🧨🧨🧨🧨🧨🎆🎆

    ReplyDelete
  64. எடிட்டர், அவர்தம் குடும்பத்தினருக்கும், ஜூனியர் எடிட்டர் அவர்தம் குடும்பத்தினருக்கும், பணியாளர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
    🌈🌈🌈💥💥💥🌹🌹🎁🎁💐💐💐

    ReplyDelete
  65. ‎நகைக்கும் நகரம் (தீபாவளி மலர்)
    ‎
    ‎தொடக்கமும் முடிவும் மட்டுமே நிகழ்காலம்,
    ‎
    ‎95% கடந்த காலக் கதை.
    ‎
    ‎ஜாகோர் தன் நினைவுகளைச் சொல்லத் தொடங்கியவுடன், புத்தகம் முழுவதும் அவனது வாலிப பருவத்தில் (Young Zagor) நடக்கும் கதையாகவே நகரும்.
    ‎
    ‎அதாவது டார்க்வுட் காவலன்' அவதாரத்தை எடுக்காத இளமைத் தோற்றத்தில் , பருவத்தில் நடப்பதாக கதை அமைந்துள்ளது
    ‎
    ‎டார்க்வுட் காட்டின் ஒரு பகுதியில் நடக்கும் சில அசம்பாவிதங்களால், அந்தப் பகுதியில் விசித்திரமான முறையில் முகத்தில் (முகத்தில் உள்ள வாய் சிதைக்கப்பட்டு)ஒரு கொடூரமான புன்னகை செதுக்கப்பட்ட நிலையில் சிலர் தொடர்ச்சியாகக் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தத் தொடர் கொலையால் பழங்குடியின மக்களுக்கும் அப்பகுதிக்கும் இடையே போர் மூளாமல் தடுக்கவும் zagor வளர்ப்பு தந்தையானா பிட்சியும் இளம் ஜாகோரும் களமிறங்குகிறார்கள்.
    ‎
    ‎
    ‎ஜாகோர் தன் பெற்றோரின் மரணத்துக்கு பிறகு பழிவாங்கும் குணத்தோடு இருந்தவர், அந்த குணத்தைக் கைவிட்டு ஒரு மாபெரும் ஹீரோவாக மாறினான் என்ற அவனது உருவாக்கக் காலத்தை விவரிக்கும் உணர்வுப்பூர்வமான அத்தியாயம் இது.
    ‎
    ‎கடந்த காலக் கதையைக் கூறி முடிக்கும் ஜாகோர், பிட்சி தனக்குக் கற்றுக்கொடுத்த அந்த "நீதி" மற்றும் "மனிதநேயம்" தான் இன்றுவரை தன்னை வழிநடத்துகிறது என்று சிகோவிடம் கூறி நெகிழ்கிறான். ஜாகோரின் அசாத்தியமான குணத்திற்குப் பின்னால் இருக்கும் ஒரு மாபெரும் மனிதனின் கதையோடு இந்த அத்தியாயம் நிறைவடைகிறது.
    ‎
    ‎அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    ‎
    ‎

    ReplyDelete
  66. நமது அன்பு ஆசிரியருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அலுவலக நண்பர்களுக்கும், நமது காமிக்ஸ் குடும்ப நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🎇

    ReplyDelete
  67. வணக்கம் நண்பர்களே....

    இனிய தித்திக்கும்
    தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

    இந்நன்னாள் நன்னாளாய் வளமும் நலமும் பெற்று உவகையுடன் வாழ்ந்திட இறையருளை யாசிக்கின்றேன்.

    ReplyDelete
  68. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் in 💥💥💥💥🎇🎇🎇🎇🎇💥🧨🎆🎆🎆🎆

    ReplyDelete
  69. நவம்பர் இதழ்களில் ஓநாயும் கிட்டும் மட்டுமே பாக்கி.

    நவம்பர் டெக்ஸ் ஸாகோர் செம கதைகள்.

    வண்ணமும் கருப்பு வெள்ளையுமான இதழ்கள் சும்மா தெறி ரகம்.

    ReplyDelete
  70. அசுரர்கள் அடங்குவதில்லை - எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு! கடந்த ரெண்டு நாட்களாக இவர்களுடன் பயணம், நன்றாக இருக்கிறது! மாந்திரீகம் ஒருபக்கம் மலைக்க வைத்தது என்றால் டெக்ஸ் & கார்ஸன் டயலாக் இந்த முறை வழக்கத்தை விட ரொம்பவே ரசிக்க வைத்தது! டைலான், தோர்கல் & மார்ட்டின் போன்ற பாண்டஸி / அனுமாசியங்களை ரசிக்கும் நாம் இத்தனையும் கண்டிப்பாக ரசிக்கலாம்!

    ReplyDelete
  71. *நகைக்கும் நரகம்*

    தீபாவளி ஸாகோர் அட்டகாசமாய் ஸ்கோர் செய்கிறார்

    மனதை உருக்கிய எமோஷனல் கதை🥰
    வண்ணச்சேர்க்கை ரசிக்க வைத்தது.
    ஸீகோவின் பங்கு குறைவு என்றாலும் அவரின் பிரதான காட்சியில் ரசிக்க வைக்கிறார், ஸீகோ பங்கு பெறும் போட்டி என்றவுடன் சாப்பிடும் போட்டி என நினைத்து கண்டிப்பாக ஜெயிக்க போகிறார் என எண்ணி இருந்தேன் 😁😁😁.
    அதன்பின் நமக்கு எழும் சந்தேகங்களை கேட்கும் விதமாய் அவர் வருகிறார்.
    பழிவாங்குதல் எதற்கும் தீர்வாகாது, நீதி, நியாயம் இருபக்கமும் உண்டு என்று பிட்ஸி கூறுவதை ஏற்காமல் அனுபவத்தில் பாடம் படிக்கிறான் ஸாகோர்

    கர்மா தன் வேலையை செய்யும் என்பதை காட்டி உள்ளனர்👏
    சித்திரங்கள் வண்ணமும் அருமை
    ஆக்ஷன் காட்சிகள் சித்தரப்படுத்தி உள்ளார் ஓவியர்👏👏👏

    *ஸாகோருக்கு வருடம் 5-6 ஸ்லாட் குடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்*

    இக்கதைக்கு வசனம் எழுதிய மேச்சரி ஜமீனய்யாவிற்கு பாராட்டுகள்🙌🙌🙌

    ReplyDelete
    Replies
    1. ரம்யா நல்ல விமர்சனம். நன்றி.

      என்னை பொறுத்தவரை வருடத்துக்கு இவருக்கு 5-6 புத்தகங்கள் கேட்பது அதிகம்; வருடத்துக்கு 2 புத்தகங்கள் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

      Delete
  72. காலை வணக்கம். கிங் ஸ்பெஷல்-4 கிளம்பி விட்டதா சார்.

    ReplyDelete
  73. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  74. கிங்ஸ் ஸ்பெசல் வந்துவிட்டது. கிளாசிக் ஸில் இது வரை வந்ததிலேயே இதுதான் டாப் அட்டை. மெய் மறக்க செய்து விட்டது. அட்டை உருவாக்கத்திற்க்கு ஸ்பெசல் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  75. வேதாளரின் கூண்டில் தொங்கிய சதிகாரி கலரிங் அட்டகாசம்.

    ReplyDelete
  76. இந்த ஆண்டின் சிறந்த அட்டைகள் டாப் லிஸ்ட்,
    மற்றும் புத்தக உருவாக்கத்தில் கிங் ஸ் ஸ்பெசல் முதலிடம் பிடிக்கிறது

    ReplyDelete