நண்பர்களே,
வணக்கம். அக்டோபரின் ஐந்தும் ding well, going strong என்பதில் செம ஹேப்பி அண்ணாச்சி. இப்போதெல்லாமே ஆபீஸுக்குள் நுழைந்த சற்றைக்கெல்லாம் எனது முதல் வேலையே, அன்றைய ஆன்லைன் ஆர்டர்களைப் பராக்குப் பார்ப்பதுதான். சந்தாவில் அல்லாது அவ்வப்போது தேவைகளுக்கேற்ப புக்ஸ் வாங்கிடும் நண்பர்களிடம் ஏதேனும் ஒரு pattern தென்படுகிறதா? என்பதை கண்டறிய ரொம்பவே மெனக்கெட்டுத்தான் பார்க்கிறேன். ஆனால் இரண்டே சமாச்சாரங்களைத் தாண்டி புதிதாய் வேறு எதையும் புரிந்து கொள்ளவே சாத்தியப்பட மாட்டேன் கிறது என்பதுதான் bottomline. நெடுநாள் கழித்து காமிக்ஸ் வாசிப்பைத் தொடரும் நண்பர்களாக இருப்பின் - அவர்களது ஆர்டர்களில் மாயாவி மாமா பிரதானமாய் இடம்பெற்றிருப்பார். அதேபோல சமீபமாய் வாசிப்பைத் தொடரத் தொடங்கி சூடுபிடித்திருக்கும் வண்டிகள் எனில், அவர்களது ஆர்டர்களில் டெக்ஸ்வில்லர் "சர்வமும் நானே" என்று கோலோச்சி நிற்பார். இந்த இரு சமாச்சாரங்களைத் தாண்டி வேறு எதையுமே புரிந்துகொள்ள முடிவதில்லை. உதாரணமாக போன மாதத்தின் Stern ஆல்பத்தையும், இம்மாதத்தின் கதிரவன் கண்டிரா கணவாய் இதழினையுமே சொல்லலாம். இரு இதழ்களுமே நமது வாட்சப் கம்யூனிட்டியிலும் சரி, blog பக்கத்திலும் சரி நிரம்பவே அலசல்களை உருவாக்கியிருந்த இதழ்கள் என்பதை நாம் அறிவோம். So நியாயப்படிப் பார்த்தால் இந்த இரு இதழ்களுமே ஆன்லைன் நண்பர்களின் வாசிப்புகளிலுமே பிரதானப்பட்டிருக்க வேண்டும் தான். ஆனால் எதார்த்தம் சொல்லும் கதையோ முற்றிலும் வேறு.
இங்குதான் கமர்ஷியல் களங்கள் பெரும்பாலும் ஸ்கோர் செய்திடுவதை பார்க்க முடிகின்றது. 'எனக்கு இந்த நொய்யா நொய்யா கதை பாணிகளெல்லாம் வேண்டாம்டா தம்பி. புஸ்தகத்தை கையில் எடுத்தோமா, டைனமைட்டில் ஏறி சிட்டாய்ப் பறக்கும் டெக்ஸைப் போல் வாசிப்பும் றெக்கை கட்டியதா? ஜாலியாய் படித்துவிட்டு ஜிலோன்னு போய்கிட்டே இருப்போம்' என்று நண்பர்கள் சொல்லாமல் சொல்வது போல் எனக்குத் தோன்றும். Of course கிராபிக் நாவல்களும், கனமான களங்களும் கொண்ட இதழ்களை வாங்கிடும் ஆன்லைன் நண்பர்களும் நிறையவே உண்டுதான். ஆனால், அவர்களது நம்பர்ஸ் இங்கே நாம் உருவகப்படுத்திடும் பரிமாணத்தில் இருப்பதில்லை என்பதுதான் வியப்பூட்டும் தகவல். இதை நான் குறிப்பிடக் காரணமுள்ளது. பொதுவாகவே நமது விற்பனை எனும் கேக்கை துண்டிடுவதாக இருப்பின், சந்தா நண்பர்கள் சரி பாதியை பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்கள். மீதப் பாதியை ஏஜென்ட் மூலமான விற்பனைகளிலும், ஆன்லைன் ஆர்டர்களிலும் புத்தக விழாக்களின் விற்பனைகளிலும் சமீப ஆண்டுகளில் நிரவல் செய்து வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நடப்பாண்டில் பெருநகரப் புத்தக விழாக்கள் தவிர்த்த மீத Tier 2 நகர விழாக்களெல்லாம் fade out ஆகி உள்ளன. இதோ சென்னை புத்தக விழாவின் தேதிகளை கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு முன்பாகவே அறிவித்துவிட்டு, அதுதான் அடுத்த major fair என்று சேதி சொல்லியுள்ளனர். So புத்தக விழாக்களின் அந்த மிஸ்ஸிங் விற்பனைப் பகுதியினை இன்று ஆன்லைன் ஆர்டர் செய்யும் நண்பர்களிடமே போணி பண்ண, இல்லாத குட்டிக் கரணமெல்லாம் அடித்து வருகின்றோம்.
அட்டவணை நெருங்கி வரும் இத்தருணத்தில் இது செம முக்கியமான factor ஆகிடுவதை மறுப்பதற்கில்லை ! இங்கு களைகட்டும் எல்லா இதழ்களுமே கமர்ஷியலாகவும் ஹிட் அடிக்கும் என்ற உத்தரவாதம் லேது எனும் போது நிரம்பவே யோசித்துச் செயலாற்ற வேண்டியுள்ளது. சுவர்களே நீங்கள் தான் எனும் போது, நீங்கள் ரசிப்பதற்கும் priority தர வேண்டியுள்ளது ; கமர்ஷியல் அவசியங்களுக்கும் செவி தர வேண்டியுள்ளது !! நிஜத்தைச் சொல்வதானால் ஆகஸ்டின் கடைசியிலேயே சந்தாவை அறிவிக்க just about everything was ready. ஆனால் ரெகுலர் சந்தா கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் எஞ்சி இருக்கும் நிலையில், Fab 5 & Terrific Tex என்ற தனித்தடங்களும் ரொம்பவே early days-ல் கால் பதித்து நிற்கும் நிலையிலும் புது சந்தாவை அறிவித்து வைத்தால், ஜனவரி பிறப்பதற்குள் அது போன வாரத்து பீட்சாவை போல ஆறி வெலவெலத்துப் போயிருக்கும் என்பது உரைத்தது. So எப்போதும் போலவே அக்டோபர் கடைசி வாரத்தில் அட்டவணையை அறிவித்தால் மதி என்ற மகா சிந்தனையோடு திட்டமிடலை புதுசாய் ஒருமுறை உற்றுநோக்கிடும் சமயம் ஏதேதோ புது சமாச்சாரங்கள் தலைக்குள் ஓடுவதை உணரமுடிந்தது. அவ்வப்போது 'காபி சாப்பிடுறீங்களா அண்ணாச்சி? டிபன் சாப்பிடுறீங்களா அண்ணாத்த? என்ற ரீதியில் உங்கள் முன்னே கம்யூனிட்டியில் கேள்விகளை நான் வைத்துக் கொண்டே சென்றதும் இதன் நீட்சியே ! சில முறைகள் நான் எதிர்பார்த்த பதில்கள் கிட்டுவதும் பல தடவைகள் நயமான பல்புகள் கிடைப்பதும் கடந்த சில மாதங்களின் வாடிக்கையாகவே அமைந்துள்ளது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் FAB 5 போலான மினி தனித்தடங்களே, இனி வரும் காலங்களுக்கான template ஆகிடும் என்று தோன்றுகிறது.
So சந்தாவில், அதாவது ரெகுலர் சந்தாவில் - universal ஆக அனைவரையுமே பாகுபாடின்றிக் கவர்ந்திடும் நாயகர்களும், எல்லோரது வாசிப்புகளிலுமே நெருடல்கள் இன்றி இடம்பெற்றிடக்கூடிய தொடர்களும் மட்டுமே இரு்த்திடல் நலம் என்பது ஸ்பஷ்டமாகவே புரிகிறது !. ஆகையால் சந்தாவில் - 'இதிலே நாலு - அதிலே மூணு - அந்த அதிலே அஞ்சு !' என்ற ரீதியில் டிசைன் டிசைனான எதிர்பார்ப்புகளை வளர்த்திட வேண்டாமே ப்ளீஸ். மெயின் பிக்சர் - இன்றும், இனியும், எப்போதும் கரம் மசாலாக்களாகவே தொடர்ந்திடட்டும். நாம் எதிர்பார்த்திடக்கூடிய ஸ்பிரிங் ரோல், டகிலோ, கபாப் போன்ற ஐட்டங்கள் சைடு மெனுவில், சந்தர்ப்பங்களுக்கேற்ப இடம்பெற்றிடட்டுமே.
இந்தப் பஞ்சாயத்துகளுக்கெல்லாம் அவசியங்களே இன்றி உசந்து நெடிதுயர்ந்து நிற்கும் தல டெக்ஸை இந்த நொடியில் வழக்கைக் காட்டிலும் ஒருமிடறு தூக்கலான awe சகிதம் பார்க்கத் தோன்றுகிறது. 1985-ல் நம் மத்தியில் அறிமுகமான மனுஷன் 41 ஆண்டுகள் கழித்து இன்னுமே நமது flagship ஹீரோவாகத் தொடர்ந்து வருகிறார். And இதோ இம்மாதத்து "நள்ளிரவின் நயனம்" கூட இவரது விஸ்வரூபத்தின் yet another ஊர்ஜிதம். ஏதேதோ வெரைட்டி கடைவிரிக்கப்பட்டிருக்கும் மாதத்திலும் 'தம்பிகளா - அப்படி ஓரமா போய் விளையாடுங்கடா !!' என்று மற்றவர்களிடமெல்லாம் சொல்லிவிட்டு center ஸ்டேஜை எப்போதும் போலவே தனதாக்கிக் கொள்வதெல்லாம் அசாத்தியங்களின் சமாச்சாரம். அந்த feel good ஆக்ஷன் மேளா என்பதை இன்னும் சில நாயக நாயகியர் தத்தம் பாணிகளில் replicate செய்திட முயல்கிறார்கள் தான். ஆனால் தலையின் ஸ்டைலே தனியாச்சே.
So எப்போதும் போலவே அட்டவணையில் நடுநாயகமாய் நம்மவர் இருப்பார் என்பது ஒரு given. வெண்ணை தின்னும் கண்ணனைப் போல Tex மையமாய் நின்று வசீகரிக்க, அவரைச் சுற்றி வலம் வரும் "மற்றும் சிலரே" இந்த ஆண்டிலுமே சந்தாவின் கதையாக இருந்திட உள்ளனர். இன்றைக்கு 3 T's மாத்திரமே டிக்கெட் வாங்கவோ, க்யூவில் நிற்கவோ, காத்திருக்கவோ அவசியமே இன்றி "தோ வந்துட்டேன்" என்று உங்களை டைரெக்டாகச் சந்திக்கும் ஆற்றல் பெற்று நிற்போர். அந்த 3 Ts வேறு யாருமல்ல, Tex, Tiger and Tintin தான். Of course மாயாவிக்கு இந்த மூவரைக் காட்டிலும் கூடுமான மஜா இன்னமும் தொடர்வது மறுக்க இயலா உண்மையே. மிகச்சமீபமாய் வந்த "கண்ணீர்த் தீவில் மாயாவி" அதற்கொரு prime example என்பேன். வெளியானது ஆகஸ்டில் ஈரோட்டில் and அதற்குப் பின்பாய் புத்தக விழாக்கள் சுத்தமாக எதுவும் கிடையாதுதான். எவ்வித சந்தா தளத்திலும் இந்த இதழ் இடமும் பிடித்திருக்கவில்லை. ஆனாலும் இன்னமும் ஒற்றை நாள் தாண்டிப் போவதில்லை - online-ல் மாயாவியின் ஆர்டர்கள் குவிந்திடாத பொழுதாய். Such is the power for the man with the Steel Claw. அவரது தொடரில் சகலத்தையும் முன்பே போட்டுத்தாக்கி விட்டாச்சு எனும் போது, மறுபதிப்புகளைக் கொண்டே மனுஷன் இப்படி ஒரு சிலம்பாட்டம் ஆடுகிறார் என்றால், புதுக்கதைகள் இருக்கும் பட்சத்தில் என்ன செய்திருப்பார் ? என்று யோசிக்கவே பிரமிப்பாக உள்ளது.
இங்கே ஒரு சுவாரசியத் தகவல்.
மாயாவியின் பெருங்கடலின் எல்லா கதைகளையுமே போட்டுத் தள்ளிவிட்டோம் என்று எண்ணியிருந்த நிலையில், இதோ - ஒற்றை சாகசம் மட்டும் இன்னமும் நாம் கண்ணில் பார்த்திராதது ஒன்று என்பது சமீப மாதங்களில் தெரிய வந்துள்ளது. செம அட்டகாசமாய் அற்புதமான art work-ல் காத்திருக்கும் இந்தப் புது மாயாவிதான் 2027-ன் show stealer-ஆக இருந்திடப் போகிறார் என்பதை இப்போதே தஞ்சாவூர் கல்வெட்டில் அல்லாது போயினும், சென்னை புத்தக விழாவின் நந்தனத்தில் சிக்கும் ஏதாச்சும் ஒரு பாறையில் செதுக்கி வைத்துவிடலாம் என்பேன். இவரை புது சாகசத்தோடு இணைத்தால் என்ன என்ற மகா சிந்தனையும் இந்த நொடியில் மண்டைக்குள் தாண்டவமாடி வருகிறது. Your thoughts on this please, folks ? புது சாகசத்துடனான மாயாவியாரை ரெகுலர் தளத்தில் போட்டால் சுகப்படுமா ? அல்லது அவரை எப்போதும் போலவே புத்தக விழாக்களின் செல்லப் பிள்ளையாகவே தொடர்ந்துவிட அனுமதிக்க வேண்டுமா?
என்னிடம் இன்னொரு கேள்வியுமே உள்ளது மக்களே. அது சாம்பலின் சங்கீதம் போன்ற கனமான களங்கள் பற்றியது. "கனமான" எனும்போது, நான் குறிப்பிடுவது அதே புத்தகக் கனத்தை அல்ல. மறுக்கா 450 பக்கங்களுடன் ஆவணம் போலானதொரு இதழை நீங்கள் வாசிக்கத் தயாராக இருந்தாலும் கூட இதுவரையிலும் நம் கண்ணில் அப்படியொரு படைப்பு பட்டிருக்கவில்லை என்பது நிஜம். நான் கேட்க விளைவதோ சாம்பலின் சங்கீதம் போல, கொஞ்சமாய் மனிதனின் வரலாறு சார்ந்த.... அதேசமயம் உலுக்கி எடுக்கக்கூடிய களங்களில் இன்னொரு யாத்திரை பண்ண நாம ரெடியா? கொஞ்ச கால முன்பாகவே எனக்கு பரிச்சயமானதொரு நெடும் கதையானது சமீபமாய் லேப்டாப்பை உருட்டிக் கொண்டிருக்கும்போது பார்வையில் மறுபடியும் பட்டது. அட சாம்பலின் சங்கீதத்தையே left hand-ல் டீல் செய்த நம்மவர்களுக்கு இதுவும் பிடிக்குமே என்ற எண்ணம் அந்த நொடியினில் துளிர்விட்டது. தற்சமயம் அதன் வாசிப்பில் தான் மூழ்கியுள்ளேன் ! Maybe அது சிறப்பாயிருக்கும் பட்சத்தில், உடனடியாக அல்லாது சிலபல மாதங்களுக்குப் பிறகு அவற்றிற்கான ஏற்பாடுகளை செய்து முடித்துவிட்டு "முன்பதிவு" எனும் முன்மொழிவோடு உங்கள் முன்னே வந்து நின்றால் உங்களது reaction என்னவாக இருக்கும் மக்களே?
Option A: 'பச்சக்'கென்று புக்கிங் செய்வோம்.
Option B: உனக்கு இதே சோலியா போச்சு... ஓரமா போய் நில்லுடே !என்று போய்க்கொண்டே இருப்போம்.
இரண்டு options-களில் ஏதேனும் ஒன்றை பின்னுாட்ட பதில்களில் மறவாது தெரிவியுங்கள் folks. Maybe 2027-க்கு வேண்டாம் - கமர்ஷியல் களங்களே இன்னும் கொஞ்சம் தொடரட்டும் என்று கருதும் பட்சத்தில் Option C என்று குறிப்பிட்டால் அதையும் புரிந்து கொள்வேன்.
இந்தப் பதிவின் கேள்வி # மூன்று காதில் தக்காளிச் சட்னி வருமளவிற்கு நாம் தோய்த்துத் தொங்கப்போட்ட சமாச்சாரமே. ஆனாலும், 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று நம்புவது போல, புதுசாய் ஒரு பொழுது புலர்ந்தால் ஒரு மார்க்கம் கண்ணில் தட்டுப்பட்டு விடாதா ? என்ற ஒரு நப்பாசையில்தான் மறுக்கா துண்டை விரித்துப் பார்க்கிறேன். அது வேறொன்றுமில்லை guys, கார்ட்டூன் சார்ந்த வினவலே . இப்போதெல்லாம் லக்கி லூக், சிக்பில் என்ற இரு நிரந்தரங்களைத் தாண்டி, ப்ளூகோட் பட்டாளம் ஒரு ஓரமாய் குந்தியிருக்கின்றனர். இந்த மூவரைத் தாண்டி, சொல்லிக் கொள்ளும் விதமாய் வேறு கார்ட்டூன் நாயகர்கள் மருந்துக்கும் கிடையாது என்பதே நிலவரம். ஒரு மினி பிரத்யேக கார்ட்டூன் சந்தா தனித்தடம் என்று அறிவிக்கும் பட்சத்தில் ஆர்வ மிகுதியைத் தாண்டி, வாசிக்கும் மெய்யான உத்வேகத்தில் உங்களில் எத்தனை பேர் கை தூக்குவீர்களோ ? என்று அறிந்திட ஆவல். நாமும் சந்தாவில் கார்ட்டூன்களை ஒரு முக்கிய அங்கமாக்கி கணிசமாய் மூக்கில் குத்துக்களையும் வாங்கிக் கொண்டதுதான் இஸ்திரி - எனும் போது இந்த தனித்தட ரூட்டிலாவது அதற்கு ஒரு விமோச்சனம் பிறக்கின்றதா ? என்றறியவே இந்த லேட்டஸ்ட் அத்தியாயக் கேள்வி. உலகெங்கும் comics வாசிப்புகளின் ஒரு இன்றியமையா பகுதியான கார்ட்டூன்கள் நம் மத்தியில் சவலைப் பிள்ளைகளாகவே தொடர்வதை எப்பாடுபட்டேனும் செப்பன் செய்ய வேண்டும் என்பது ஆசை. பச்சே செப்பல்ஸ் கொண்டு சாத்துவோம் என்பதுதான் பெரும்பான்மையின் பதிலாகவே இருந்து வருகின்றது. So "தனித்தடம்" எனும் சவாரியில் முயற்சிக்கும் பட்சத்தில் இந்த வேட்பாளருக்கு டெபாசிட் தேறுமா ? அல்லது வெற்றியைத் தருவீர்களா? ப்ளீஸ் உள்ளார்ந்த பதில்கள் மட்டுமே இந்நொடியில் நமக்குத் தேவை. So பின்னூட்டத்தில், "கார்ட்டூனுக்கு ஜே" என்றோ "கார்ட்டூனுக்கு நோ" என்றோ அவரென்ன நினைப்பார் ? இவர் என்ன சொல்லுவார் ? என்ற விசனங்களின்றி மனதில் தோன்றுவதை பதிவிட கேட்டுக் கொள்கிறேன்.
And காத்திருக்கும் வண்டி வண்டியான தீபாவளி மலர்களின் பணிகளுக்குள் ஐக்கியமாகி விடுவதற்கு முன்பாக ஒற்றை அறிவிப்புமே 'அக்டோபரில் சின்னதாய் ஒரு surprise தயாராகி வருகிறது !' என்று ஏற்கனவே சொல்லியிருந்தது நினைவில் இருக்கலாம். அது வேறொன்றும் இல்லை guys. மாமூலாய் இந்நேரத்திற்கு மதுரையிலோ, திருச்சியிலோ அல்லது சேலத்திலோ புத்தக விழாக்கள் ஏதேனும் அறிவித்திருப்பார்கள். And அவற்றுள் ஏதேனும் ஒன்றில் வெளியிடுவதற்கென ஒரு special இதழை தயார் செய்திருந்தோம். ஆனால் பிம்பிலிக்கா பிலாக்கி என்றான பிற்பாடு, அதை சென்னை வரை தேவுடு காக்க மனம் ஒப்பவில்லை. சரி ரைட்டு, ஏதாச்சும் "மொட்டை மாடியில் வத்தல் வடாம் காயப்போடும் திருவிழா" என்ற பெயரில் online மேளா இன்று நடத்திடலாமா ? என்ற யோசனையும் எழுந்ததுதான். ஆனால் நம்மில் பெரும்பகுதியினர் ஏற்கனவே கைவசம் வைத்திருக்கும் இதழ்களை பத்திரப்படுத்தவே சின்னதாய் வீடுகளைத் தேட (!!!) வேண்டிய ஒரு சூழலில், மறுக்கா உங்கள் தலையில் இந்த புத்தகங்களை டிஸ்கவுண்டில் போணி பண்ண வாய்ப்புகள் ரொம்பவே சொற்பம் என்றுபட்டது. பற்றாக்குறைக்கு சிலபல ஆர்வலர்கள், டிஸ்கவுண்டில் நம்மிடம் கொள்முதல் செய்து, நமது B-டீமிடம் கர்ம சிரத்தையாய் ஒப்படைப்பதும் சமீப ஆண்டுகளின் நிகழ்வு. So யாருக்கும் பெருசாய் சுவாரசியத்தை கிளப்பிடாத ஒரு online மேளா என்று நாமே பல்பு வாங்கிக் கொள்வதற்கு பதிலாக இந்த ஸ்பெஷல் இதழை சும்மா just like that தீபாவளியின் அணிவகுப்போடு கோர்த்து விட்டால் என்ன ? என்று தோன்றியது. So here you go guys.
The KING'S SPECIAL 4.
சமீப நாட்களின் template-ல் போலவே ஆறு ஜாம்பவான்களின் அதிரடிகளுடன் கிட்டத்தட்ட ரெடி ஆகிவிட்டது. கதைகளின் 90 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. தொடரும் நாட்களில் பாக்கியும் ready ஆகிவிட்டால் அச்சு and பைண்டிங் பணிகளே மிச்சம். sO உங்களது தீபாவளி wish list-ல் வேதாளர் & கோவை இணைத்துக் கொள்ளலாமே please ? இங்கு சின்னதாய் ஒரு news ! இந்த இதழினை துவக்க நாட்களின் Smashing 70s பாணியில் Maxi size-ல் hard cover-ல் தயாரித்திருக்கிறோம். நீங்கள் கோரி வரும் அந்த regular size-ற்கு இந்த strips comics-களை உருமாற்றுவது என்பது ரொம்பவே நோகடிக்கும் பணியாக இருந்து வருகிறது என்பதை பல தடவைகள் குறிப்பிட்டுள்ளேன். In fact, வேதாளர் & மாண்ட்ரேக் கதைகளை சைஸ் மாற்றம் செய்யும்போது, எனக்கே கிஞ்சித்தும் ரசிக்க முடியவில்லை. So, நீங்கள் சாத்துவீர்கள் என்று தெரிந்திருந்தாலும், நாம வாங்காத சாத்தா ? பார்க்காத முட்டுச் சந்தா ? என்ற தைரியத்தில் மீண்டும் மேக்ஸி. And, இதழில் ஒரு சின்ன சர்பிரைசும் காத்திருக்கும், அது வேதாளரின் சாகசம் கலரில் என்பதே ! மேக்சி சைஸில் பேனல்களை எவ்வித நோண்டல்களும் இன்றி அழகாய் செட் செய்ய முடிந்திருப்பதால் புக் கையில் ஏந்தும் போதே ஒரு ரம்யத்தைத் தரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இதோ, எப்போதும் போலவே வேதாளனர் சோலோவாக அட்டையில் காட்சி தரும் அட்டைப்படப் பிரீவ்யூ.
இந்த இதழ் மேக்சி சைஸ் என்பதாலும், தீபாவளி மலர்கள் சகலமும் ஏகமாய் டெக்ஸ் சைஸில் இருப்பதாலும் கொரியரில் அனுப்புவது சார்ந்த சிக்கல் மட்டும் தலைதூக்குகின்றது. ஏற்கனவே டெக்ஸ் தீபாவளி மலர், ZAGOR, மார்ட்டின் என்ற கூட்டணி ஒரு கிலோவிற்கு மேற்பட்ட எடையில் உள்ளது. அந்த பார்சலில் கிங் ஸ்பெஷலையும் நுழைக்கும் பட்சத்தில், சர்வநிச்சயமாய் 2 கிலோவிற்கான கொரியர் ரேட்டே போட்டுச் சாத்துவார்கள். தவிர, கொரியர் டப்பிக்குள்ளும் ஒரு மேக்சி சைஸ் புக் + மூன்று சின்ன சைஸ் புக்ஸ் எனும்போது பெட்டிகளை ரொம்ப ரொம்ப திக்காக செய்து வாங்குவது அவசியமாகிவிடும். எத்தனை பேருக்கு இது தெரியுமோ - தெரியாது, but சமீப மாதங்களில் பேக்கிங் மெட்டீரியலின் விலைகள் எக்குத்தப்பாய் ஏறியுள்ளன. மாதம்தோறும் அட்டைகள் உற்பத்தி செய்யும் மில்கள் விலைகளை மானாவாரியாய் ஏற்றிச் செல்வதால், இப்போதெல்லாம் அந்த பிரவுன் பெட்டிகள் கொள்முதல் செய்வது என்பது எங்காச்சும் கொள்ளை அடிக்கலாமா ? என்ற கேள்வியை முன்னிறுத்தும் வகையிலேயே இருந்துவருகின்றன. So, எக்ஸ்ட்ரா திக் பெட்டியை செய்து வாங்கி 2 கிலோவிற்கான கொரியர் கட்டணங்களை செலுத்துவதற்குப் பதிலாக ரெகுலர் தளத்து தீபாவளி புக்ஸை வழக்கம் போல கொரியரில் அனுப்பிவிட்டு, இந்த கிங் ஸ்பெஷல்-4 வாங்கிட எண்ணும் நண்பர்களிடம் மட்டும் தனியாக கொரியர் சார்ஜஸ் வசூலிக்க வேண்டிவரும். So, எப்போதும் போலவே புக்கின் விலை ரூபாய் 450 + கொரியர் கட்டணமாய் ரூபாய் 50 ஆக ரூபாய் 500 அனுப்பினால் இம்மாத இறுதியில் வேதாளரும் வீடு தேடி வருவார் - அதிரசங்களை ருசிக்க. And முன்போல எக்கச்சக்கமாய் புத்தக விழாக்கள் இனி இருக்கப்போவதில்லை என்றானதொரு சூழலில் பிரிண்ட் ரன்னை முன்போலவே அமைக்கும் சாத்தியங்கள் 'பச்சக்'கென குறைந்துவிட்டன. So, கிங் ஸ்பெஷல் 4 குறைவான பிரிண்ட் ரன் சகிதமே களம் காண உள்ளது. ஆகையால், கிளாசிக் நாயகர்களை ரசிக்க விரும்பும் நண்பர்கள் ப்ளீஸ் do rush !!
Bye all...மெபிஸ்டோவுடன் லூட்டி செய்யக் கிளம்புகிறேன் ! See you around ! Have a wonderful Sunday !

❤️
ReplyDeleteசூப்பர் தம்பி
Delete🙏🥹
Deleteசூப்பர் அக்கா 😄😄😄
Deleteஜம்பிங் தல😝😝😝
Deleteவணக்கம் நண்பர்களே
ReplyDelete3rd 🙏🏻
ReplyDeleteMe in😘👍💐😄😄😄
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteவேதாளருக்கு ஜே 😘😘😘😘😘💐
ReplyDeleteடெவிலுக்கு....?
DeleteGood morning to all
ReplyDeleteகாலை வணக்கம்
ReplyDeleteஇன்றைய பொழுது டெக்ஸ் மற்றும் கதிரவன் கண்டிராத கணவாய் மட்டும்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி சார்.
ReplyDelete🙏🙏🙏💐💐
ReplyDeleteமினி பிரத்யேக கார்ட்டூன் சந்தா தனித்தடம் - கண்டிப்பாக எனக்கு வேண்டும் சார் 😍😍😍😍
ReplyDeleteகிங் ஸ்பெஷல் 4 - எனக்கு வேண்டும் 😊
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteகிங் ஸ்பெசல். 4 தீபாவளிக்கு சூப்பர் ங்க சார் இதோ ரெடியாகி விடுகிறேன்
ReplyDeleteகார்ட்டூன் தனித்தடம் ஓ.கேங்க சார் சந்தா அட்டவணை அறிவிக்கும் போதே அறிவிச்சிடுங்க. தனித்தடத்திலும் லக்கி சிக் பில் வேண்டுங்க சார்
ReplyDeleteஎல்லாம் வேண்டும் என்று கேளுங்க சார்.
Deleteஉனக்கு மட்டும் கேளுல
DeleteHi
ReplyDeleteOption A
ReplyDeleteகார்ட்டூன் தனி சந்தாக்கு ஜே
சாம்பலின் சங்கீதம் போலான படைப்பு. 450 பக்கங்கள் என்றில்லாவிட்டாலும். தயாரிப்பில் ரெகுலர் இதழ்கள் போலவே இல்லாமல் ஒரு தனி வித்தியாசத்தில் ஏதேனும் புது விதத்தில் கொடுக்க முயற்சிக்கலாமேங்க சார்..எப்படி இருந்தாலும் ஓ.கே.
ReplyDelete*விதி எழுதிய விசாரணை..!*
ReplyDeleteஒரு Bank robbery நடக்கிறது. Police சில Italian immigrantsகளை கைது செய்கிறார்கள்.
ஏன்?
அவர்கள் உண்மையான கொள்ளையர்கள் என்பதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாலா...!?
இல்லை.
“இவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்” என்ற racist assumption.
Stern இதைப் பார்த்து அமைதியாக இருக்க முடியாத மனிதர். ஆனால் அதற்குள் situation மோசமாகி Sternஉம் கைது செய்யப்படுகிறார்.
அதற்குப் பிறகு அவர் ஒரு இளம் இத்தாலிய troublemakerஉடன் கைகளில் chain செய்யப்பட்ட நிலையில் இருக்கிறார்.
அதன் பிறகு நடப்பதெல்லாம், police procedure அல்ல...
கதையில் துப்பாக்கிகள் இருக்கின்றன. குதிரைகள் இருக்கின்றன. Prison இருக்கிறது. Manhunt பக்கத்துக்கு பக்கம் நடக்கிறது...
ஆனால் கதையில் எங்குமே உண்மையான villain ஒரு pistol எடுத்துக்கொண்டு நிற்கவில்லை.
இந்த கதையின் main வில்லன் prejudiceதான்....
ஒரு மனிதனின் முகத்தைப் பார்த்து அவனை criminal என்று முடிவு செய்வது.
ஒரு immigrantஐப் பார்த்து “இவன்தான் culprit” என்று நினைப்பது. Policeக்கு “நாங்கள் ஒருவரை பிடித்துவிட்டோம் case closed” என்று தோன்றுவது.
Maffre brothers உண்மையில் சொல்ல விரும்புவது “ஒருவனை குற்றவாளி என்று முடிவு செய்துவிட்டால், உண்மையைத் தேடுவதற்கு யாருக்கும் அவசியம் இல்லை" என்பதுதான்.
அதுவும் அந்தக் கடைசிப் பேனலில் அந்த வெறுமையான மரம்... அந்தக் கதையின் கொடுமையை பறைசாற்றுகிறது...
ஸ்டெர்ன்
மறக்க இயலாதவர்
⭐⭐⭐⭐⭐
வஞ்சம் தீர்க்கும் வேங்கைகளே!
ReplyDeleteஇந்தப் புத்தகத்தை சாதாரணமாக “ஒரு Samurai revenge story” என்று சொல்லிவிட்டால், இதன் சுவையே போய்விடும்.
கோபம் எப்படி ஒரு மனிதனை ஆயுதமாக மாற்றுகிறது என்பதுதான் கதை.
இந்த கதையை படித்து முடித்ததும் எனக்கு முதலில் தோன்றியது “இது ஒரு Samurai கதை மாதிரி ஆரம்பிக்கிறது… ஆனால் முடிவில் இது ஒரு பெண்ணின் கோபத்தைப் பற்றிய கதை.”
அதுதான் இதன் அழகு.
முதலில் ஒரு அமைதி... ஜப்பான். அரண்மனை. பாரம்பரியம். கிமோனோ. இசை. அழகு. எல்லாமே அமைதியாக இருக்கிறது.
ஆனால் அந்த அமைதிக்குக் கீழே அழுகல்.
அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
நீதிமான் தண்டிக்கப்படுகிறான்
குற்றவாளிகள் தப்பிக்கிறார்கள்.
அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு என்ன தெரியுமா?
அவர்கள் ஒரு பெண்ணின் துக்கத்தை சாதாரணமாக நினைத்து நகைத்ததுதான்...
அந்தப் பெண் Jun.
Junன் பயணம் மிகவும் சுவாரஸ்யமானது.
அவள் ஆரம்பத்திலேயே ஒரு super warrior கிடையாது. அவள் ஒரு மகள். அவள் தந்தையை இழக்கிறாள். அநீதியைப் பார்க்கிறாள்.அவளிடம் இருக்கும் ஒரே விஷயம்,
*கோபம்.*
அந்தக் கோபத்தை Ichi கவனிக்கிறான். அவன் அவளிடம், “மறந்து விடு” என்று சொல்லவில்லை. அதற்குப் பதிலாக...
“அதை என்ன செய்வது என்று கற்றுக்கொள்.” என்று சொல்லுவது போல அவளை ஒரு பாதையில் தள்ளுகிறான். அதுதான் புத்தகத்தின் மிகச் சிறந்த idea.
Ichiஐப் பற்றி பேசாமல் இந்தப் புத்தகத்தைப் பேச முடியாது.
Blind swordsman என்ற ஒரு பழைய archetype இருக்கிறது. ஆனால் இங்கே Ichi வெறும் “blind badass samurai” அல்ல. அவன் ஒரு catalyst. மற்றவர்களின் வாழ்க்கையில் சிறிய தள்ளுதல் கொடுத்து, அவர்கள் தங்களுடைய விதியைத் தாங்களே சந்திக்கச் செய்பவன்.
அவன் Junக்கு வாள் பயிற்சி மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை.
அவளுடைய கோபத்தை ஒரு வடிவமாக மாற்றுகிறான்.
அதனால் Ichi ஒரு heroவா?
இருக்கலாம்...
Mentorஆ?
Maybe...
ஆனால் அதைவிட முக்கியமாக, அவன் ஒரு ஆபத்தான மனிதன்.
ஏனென்றால் மற்றவர்கள் பயப்படும் இடத்தில், அவன் பழிவாங்கும் எண்ணத்திற்கு வழி காட்டுகிறான்.
இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய முரண்பாடு Jun மிகவும் அழகாக வரையப்பட்டிருக்கிறாள். அவளுடைய ஆடை. அவளுடைய முகம். அவளுடைய இசை. அவளுடைய உட்காரும் விதம். எல்லாமே delicate...
ஆனால் அந்த அழகை சில பக்கங்கள் கழித்து...
ஒரு கொலை இயந்திரமாகப் பார்க்கிறோம்.
இதுதான் Andrea Accardiயின் magic.
அவர் “பெண் warrior” என்று பெரிய எழுத்தில் அறிவிக்க வேண்டியதில்லை. அவள் எப்படி மாறுகிறாள் என்பதை visualsல் காட்டிவிடுகிறார்.
இது Hollywood style sword fight இல்லை.
இங்கே violence மிகவும் sudden.
அமைதி...
ஒரு பார்வை...
ஒரு movement...
ஷ்ராக்!
முடிந்தது.
அதனால்தான் சில சண்டைகள் இன்னும் brutal ஆகத் தெரிகின்றன. வாள் எடுப்பதற்கு முன்பே tension உருவாக்கப்படுகிறது.
இந்த நாவலின் ஒவியங்கள்தான் உண்மையான feast
நான் இந்தப் புத்தகத்தை கதைக்காக மட்டும் ரசிக்கவில்லை.
படங்களைத் திரும்பத் திரும்ப பார்ப்பதற்காகவே ரசித்தேன்.
Accardiயின் Japanese architecture, costumes, interiors, landscapes, எல்லாவற்றிலும் ஒரு oil paintingன் நேர்த்தி இருக்கிறது.
அதனால் ஒரு மனிதன் அமைதியாக உட்கார்ந்திருப்பதும்,
ஒருவன் வாளால் வெட்டப்படுவதும்,
இரண்டுமே narrativeல் equally important ஆகிறது.
வஞ்சம் தீர்க்கும் வேங்கைகளே!
என்று தமிழில் வைத்திருப்பது கூட ஒரு pulp adventure flavour கொடுக்கிறது. ஆனால் உள்ளே இருக்கும் கதை உண்மையில் melancholic.
இது “Revenge is awesome!” என்று சொல்லும் கதை இல்லை. மாறாக, “ஒரு மனிதன் நீதியைப் பெற முடியாமல் போனால், அவன் revengeஐத் தேர்ந்தெடுக்கிறான். அந்த revenge அவனை எங்கே கொண்டு செல்கிறது?” என்று கேட்கிறது.
அதனால் இது முழுக்க black and white morality அல்ல. இந்தப் புத்தகம் revengeஐ romanticise செய்யாமல், அதை beautifulஆக காட்டுகிறது.
இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
கதை ugly.
Violence ugly.
Grief ugly.
ஆனால் artwork...
அழகாக இருக்கிறது.
அந்த contradiction தான் புத்தகத்தின் soul.
இந்தக் கதையின் உண்மையான star Ichi அல்ல, Junதான். Ichi கதவைக் காட்டுகிறான்.
அந்தக் கதவைத் திறந்து, உள்ளே நடந்து சென்று, தன் உலகத்தையே மாற்றுகிறாள்Jun.
என் verdict
⭐⭐⭐⭐⭐
வித்தியாசமான பார்வையில் விமர்சனம். அருமை சார்.
Deleteகதிரவன் கண்டிரா கணவாய்
ReplyDeleteவெளிச்சத்தைத் தேடிச் செல்லும் பயணம்
சில கதைகளில் இருட்டு என்பது ஒரு சூழல்.
இதில் இருட்டே கதையின் முக்கிய கதாபாத்திரம்.
ஒரு பழைய சுரங்கத்துக்குள் இறங்கும் மூன்று மனிதர்கள்.
ஆரம்பத்தில் அது ஒரு adventure. கொஞ்சம் curiosity. கொஞ்சம் thrill. ஆனால் சில பக்கங்களுக்குப் பிறகு அந்தச் சுரங்கம் ஒரு இடமாக இல்லாமல் போய்விடுகிறது.
அது ஒரு சிறை.
வெளியில் இருக்கும் உலகம் மெதுவாக மறைந்து போகிறது.
நேரம் அர்த்தத்தை இழக்கிறது. திசை தெரியவில்லை.தண்ணீர் குறைகிறது. உடல் பலவீனமாகிறது.
முக்கியமாக, மனிதனுடைய நம்பிக்கை கரைய ஆரம்பிக்கிறது.
இதுதான் Christophe Becன் புத்திசாலித்தனம்.
இங்கே பெரிய monster ஒன்றை அனுப்பி நம்மை பயமுறுத்த வேண்டிய அவசியமே அவருக்கு இல்லை.
“நீங்கள் வெளியே போக முடியாது” என்ற ஒரே உண்மை போதும்.
இந்தக் கதையின் உண்மையான monster யார்?
சுரங்கமா?
இருட்டா?
பசியா?
தாகமா?
மரணமா?
இல்லை.
*நிச்சயமின்மை.*
அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாமல் இருப்பது.
நாம் பார்க்க முடியாத இடத்தில் இருப்பது.
நாம் கேட்கும் சத்தம் உண்மையா இல்லையா என்று தெரியாமல் இருப்பது.
நம்முடைய மூளை நம்மையே ஏமாற்ற ஆரம்பிக்கும் அந்த நிலை.
அங்கேதான் க.க.க ஒரு சாதாரண survival horrorலிருந்து psychological horrorஆக மாறுகிறது.
Bernard Khattouவின் ஓவியங்கள் மெருகுக்கு மெருகு சேர்க்கின்றன
இந்த graphic novelஐ colourல் கற்பனை செய்து பாருங்கள்.
அதன் பாதி magic போய்விடும்.
கருப்பு, வெள்ளை, சாம்பல்.
அதுதான் இந்த உலகத்திற்கு சரியான நிறங்கள்.
சுரங்கத்தின் சுவர்கள், ஈரப்பதம், குறுகிய பாதைகள், உடல்களின் சோர்வு எல்லாமே ஒரு பழைய nightmarish photograph போல இருக்கிறது.
சில panelsகளில் எதுவும் நடப்பதில்லை.
ஆனால் அந்த panelsஐ பார்ப்பதே uncomfortableஆக உள்ளது..
இன்னொரு சிறப்பம்சம், Bec எல்லாவற்றுக்கும் explanation கொடுக்கவில்லை. இதுதான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி.
கதையின் இறுதியில் நாம் “இதுதான் நடந்தது” என்று ஒரு neat answer எதிர்பார்க்கலாம்.
ஆனால் Bec கதவை முழுவதுமாகத் திறக்கவில்லை.
சில விஷயங்கள் உண்மை.
சில விஷயங்கள் மனதின் உருவாக்கமாக இருக்கலாம்.
சில அனுபவங்களுக்கு supernatural explanation இருக்கிறதா என்பதையும் அவர் நம்மிடமே விட்டுவிடுகிறார்.
அதனால் கடைசிப் பக்கத்தை முடித்த பிறகும் கதை முடிந்துவிடவில்லை.
அது நம்முடைய தலையில் தொடர்ந்து ஓடுகிறது.
ஒரு வருத்தம்..
ஆங்கில புத்தகத்தை போல் தமிழிலும் *கதிரொளி* (Sunlight) என வைத்திருந்தால் aptஆக இருந்திருக்கும்...
இதுதான் புத்தகத்தின் அழகான irony. அவர்கள் தேடுவது sunlight...
ஆனால் நேரம் செல்லச் செல்ல sunlight என்பது வெறும் சூரிய ஒளி அல்ல.
அது,
வெளியேறும் வழி.
உயிர்.
நம்பிக்கை.
வாழ்க்கை.
ஒருவேளை… மரணத்திற்குப் பிறகுள்ள ஏதோ ஒன்று.
கதையின் முடிவில் “வெளிச்சம்” என்ற வார்த்தைக்கே வேறு அர்த்தம் கிடைக்கிறது.
Characters மீது இன்னும் கொஞ்சம் emotional investment இருந்திருக்கலாம்.
சில இடங்களில் atmosphere கதையை விட வலிமையாக இருக்கிறது.
சில mystery threads இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கலாம் என்ற உணர்வு வருகிறது.
அதனால் இது perfect graphic novel அல்ல.
ஆனால்…
அது ஏற்படுத்தும் உணர்வு மிகவும் தனித்துவமானது.
கடைசியில்…
ககக என்பது “சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்ட மூன்று பேரின் கதை” என்று ஆரம்பிக்கிறது...
ஆனால் முடிவில் அது வேறு ஒரு கேள்வியாக மாறுகிறது
"வெளிச்சம் என்பது உண்மையா… அல்லது அவள் மனம் உருவாக்கிய கடைசி நம்பிக்கையா?”
அதற்கான பதிலை Christophe Bec நமக்குச் சொல்லவில்லை.
அதுதான் இந்த புத்தகத்தின் உண்மையான முடிவு.
ஒரு horror storyயாக மட்டும் அல்ல.
இருட்டு மற்றும் வெளிச்சம் இரண்டையும் பற்றிய ஒரு graphic novel.
இப்படிப்பட்ட கதைகளை நமக்கு தேடிப்பிடித்து கொணுரும் ஆசிரியருக்கு என் நன்றிகள் பல...
மேலும் பல Christophe Bec கதைகளை தமிழ்படுத்த வேண்டுகிறேன்...
⭐⭐⭐⭐⭐
ஆசிரியருக்கு இனிய காலை வணக்கம்
ReplyDeleteமுதல் கேள்விக்கு எனது விடை option C
இரண்டாவது கேள்விக்கு விடை cartoon சந்தா ok
ஆனால் maximum story lucky and chik bill வேண்டும்..
நன்றி
மு பாபு
ஆத்தூர்
பாபு ஆசிரியர் நல்ல கதைகளையே எப்போவும் கொடுப்பார். எனவே எனக்கு இப்படி தான் வேண்டும் என்று சொல்ல வேண்டாமே.
Deleteகார்ட்டூன் தனி சந்தா வருவதை முதலில் உறுதி செய்வோம்.
Blacksad
ReplyDeleteநிழல்களின் நிழலில்..
முதல் பக்கத்திலிருந்தே பரபரப்பு.. கதை சொல்லும் விதமோ hard-boiled crime fiction. ஆனால் இங்கே மனிதர்களுக்குப் பதிலாக மிருகங்கள். அதுவும் வெறும் gimmick ஆக இல்லை.
Blacksad ஒரு பூனை என்பதே character designன் முதல் layer. அவனுடைய கண்கள், முகபாவனைகள், body language எல்லாமே அவனை ஒரு world weary private detective ஆக மாற்றுகின்றன.
கதை simple
ஒரு கொலை.
ஒரு பழைய காதல்.
ஒரு detective.
ஒரு நகரம் முழுவதும் மறைத்து வைக்கப்பட்ட secrets.
ஆனால் அதன் presentation தான் magic.
Juanjo Guarnido வின் artwork இந்த volumeன் உண்மையான superstar. ஒவ்வொரு panelமும் animation background போல detailed.
Rain, shadows, interiors, night streets, cigarette smoke எல்லாமே 1950s American noir atmosphereஐ தூக்கி நிறுத்துகின்றன.
நமது ஆசிரியரின் writing அதற்கு சரியான counterpoint. Dialogue குறைவு, mood அதிகம்.
Blacksad பேசுவதைக் காட்டிலும் அவன் கவனிப்பதே அதிகம்.
மற்றொரு brilliant விஷயம், மிருகங்களின் speciesஐ characterisationஆக பயன்படுத்துவது.
ஆனால் அது குழந்தைகளுக்கான anthropomorphic fun அல்ல.
இங்கே fox, rhino, gorilla, dog, cat எல்லோரும் மனிதர்களைப் போலவே greedy, jealous, violent, corrupt, lonely என all shades of grey and black...
புத்தகம் முழுக்க, பல இடங்களில் ஒரு சிறிய visual joke இருக்கும், அடுத்த panelல் அதே உலகம் மிகவும் dark ஆகிவிடும்.
என்னை மிகவும் கவர்ந்தது
Blacksadன் silence.
அவன் typicalஆன "smart-ass detective" இல்லை. அதிகமாக பேசுவதில்லை. அதிகமாக explain செய்வதில்லை. அவன் பார்க்கிறான். புரிந்து கொள்கிறான். பிறகு only actionதான்..
அதுதான் characterக்கு ஒரு classic noir dignity கொடுக்கிறது.
ஒரு வரியில்,
Disney animals meet Raymond Chandler
//அவன் typicalஆன "smart-ass detective" இல்லை. அதிகமாக பேசுவதில்லை. அதிகமாக explain செய்வதில்லை. அவன் பார்க்கிறான். புரிந்து கொள்கிறான். பிறகு only actionதான்..//
Delete🔥🔥🔥
Option A: 'பச்சக்'கென்று புக்கிங் செய்வோம்.
ReplyDeleteகார்ட்டூனுக்கு ஜே
ReplyDeleteமினி பிரத்யேக கார்ட்டூன் சந்தா தனித்தடம் வேண்டும்
DeleteOption C
ReplyDeleteCartoon OK
Cartoon kku jey
ReplyDelete"கார்ட்டூனுக்கு ஜே"
ReplyDeleteகார்ட்டூனுக்கு ஜே..
ReplyDeleteங்ஙே....
Option *A*😘😘😘
ReplyDeleteகார்ட்டூன்னுக்கு ஜே 👍💐😘
மினி கார்ட்டூன் 👍😘💐🥰🥰🥰
வந்துட்டேன்
ReplyDelete🙋🏻♂️
ReplyDelete🙋🏽♀️
Delete1.மாயாவி மாமா REGULAR சந்தாவிலேயே வரட்டும் ..
ReplyDelete2.கார்ட்டூன்க்கு ஜே ..
3.OPTION A FOR GRAPHIC NOVEL ..
Option A.
ReplyDeleteதனித்தடத்தில் யார் வராங்க? லக்கி, சிக்பில் தாண்டி எதும் எனக்கு அவ்வளவா பிடிக்கலை. எனக்கு பிடிச்ச ரின்டின்கேன், மந்திரி மாதிரி கேரக்டர்கள் வர மாதிரி தெர்ல. ஆனா கோட்டைச்சாமி தலைகீழாத்தான் குதிப்பேன்னு குதிச்சா கூட சேந்து குதிக்க ரெடி.
வரட்டும் இவை எல்லாம் வரட்டும்.
Deleteஇரும்புக்கை மாயாவி புத்தக விழாக்களின் ஸ்பெசலாகவே வரட்டும்
ReplyDeleteநான் இதை தன்மையாக கண்டிக்கிறேன் 😘
Deleteஅப்பலிக்கா ஒண்ணு 👍 இப்பலிக்கா ஒண்ணு 😘🥰
நீங்க சொன்னா ஓகேதான் தல
Delete// இரும்புக்கை மாயாவி புத்தக விழாக்களின் ஸ்பெசலாகவே வரட்டும் //
Deleteஎனது எண்ணமும் இதுவே.
😘🥰👍💐🫅 King Special 4 க்கு ₹500 paid Sir 😄💐👍😘
ReplyDelete👏👏👏
Deleteஎனக்கு கார்டூனில் அனைத்தும் பிடிக்கும்
ReplyDeleteMayavi regular OK
ReplyDeleteCartoon J
King Spl ₹.500/ 👍
சூப்பர்
DeleteOption A
ReplyDeleteகார்ட்டூன் தனி சந்தாவுக்கு ஜே
கார்ட் டூன் 1000000
ReplyDelete55th
ReplyDeleteOption A
ReplyDeleteஇரும்புக்கை மாயாவி புத்தக விழாக்களின் ஸ்பெசலாகவே வரட்டும். இவர் அங்கு வருவதே சிறப்பு மற்றும் அவருக்கு தரும் மரியாதை 😍
ReplyDeleteஆமாம்
DeleteCartoon needed
ReplyDeleteமாயாவி புது சாகஸம் - புத்தக விழாவில் வரட்டும்.
ReplyDeleteகனமான கதைகளம் - option C
கார்ட்டூன் தனித்தடம் - கார்ட்டூனுக்கு ஜே
கார்ட்டூன் தனித் தடத்தில் சோடா & Spoon & white போன்ற கதைகள் இடம் பெறுமா சார்?
DeleteKings 4;special now only coming or already booked not sure...how tio check
ReplyDeleteIts new bro.
Deleteநன்றி கடல்யாழ்
Delete🤝🏽🤝🏽🤝🏽
Deleteமாயாவி = புத்தக விழா
ReplyDeleteஅவர் சூப்பர் Star
option = A
கார்ட்டூனுக்கு ஜே
கிங் ஸ்பெசல் சூப்பர்
கார்ட்டூனுக்கு ஜே
ReplyDeleteகாரிகன் மீது என்ன கோபம்... பின்னட்டையில் காரிகன் கூட உள்ள பெண் கலரில்... ஆனால் காரிகன் கருப்பு வெள்ளையில்!
ReplyDeleteNeed Cartoon
ReplyDeleteOption A -ok. கார்ட்டூன் தனித்தடம் ஒரு நல்ல ஐடியா.மாயாவி புத்தக திருவிழாக்களின் கதாநாயகன் என்பதால் அப்போதைக்கே வரட்டும். 450 பக்க க்ராபிக் நாவல் .ஓ.கே. தான்.ஆனால் கொஞ்சம் வேகமான கதையோட்டம் இருந்தால் நன்று.
ReplyDeleteEagerly waiting for KINGS SPECIAL--4
ReplyDeleteGold oldies தனித்தடம் 2027இல் முயலலாமே
ReplyDeleteமாயாவி evergreen ஹீரோ மட்டும் அல்ல Eveready ஹீரோ எந்த slot இல் நுழைத்தாலும் கலக்குவார் 🥰😍
ReplyDelete// 3 Ts வேறு யாருமல்ல, Tex, Tiger and Tintin தான். //
ReplyDeleteலக்கி லுக் இதில் கிடையாதா சார்?
Option A
ReplyDelete// சாம்பலின் சங்கீதம் போல, கொஞ்சமாய் மனிதனின் வரலாறு சார்ந்த.... அதேசமயம் உலுக்கி எடுக்கக்கூடிய களங்களில் இன்னொரு யாத்திரை பண்ண நாம ரெடியா? //
ReplyDeleteபச்சக் பச்சக்.😍😍😍😍😍
ரெடி
Delete//மெபிஸ்டோவுடன் லூட்டி செய்யக் கிளம்புகிறேன் !//
ReplyDelete🔥🔥🔥
ரெகுலர் நாயகர்களின் கதைகளுக்கு மத்தியில் ஒரு மாற்றம் கண்டிப்பாக தேவை அதை ஈடு செய்வது "கதிரவன் கண்டிரா கணவாய், பயணம்,மூன்றாம் தினம், வைகறைக் கொலைகள் போன்ற கதைகள் தான். சந்தாவில் இருந்தால்தான் சிலர் வாங்க விரும்பறதில்லை என்பதால் Fab 5 போன்ற தனித்தடத்தில் இவைகளை கொண்டு வருவது அடுத்தடுத்த காலங்களிலும் தொடர்ந்தால் அனைத்து ஜானர்கள் படிக்கும் வாசகர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாகும். பிறகு விருப்பமானவங்களும் வாங்கி படித்து மகிழலாம்.
ReplyDelete✅இரும்புக் கை மாயாவி வழக்கம்போல் ஸ்பெஷலாகவே வரட்டும் சார் அதுதான் அவருக்கு கெத்து.
✅ Option -A.
✅கார்டூன் கதைகளுக்கு எப்பவும்"ஜே" தான்.
✅ தீபாவளி ஸ்பெஷலுக்கே ஒரு ஸ்பெஷல்னா
விட மனது வருமா?. தீபாவளி மலர்களூடே போட்டு தாக்கலாம். தீபாவளி பட்டாசு கெளப்பும்.
✅கிங் ஸ்பெஷல் -4- எதிர்பார்த்த புக்தான்.
அடிச்சு விடுங்க.
அட்டைப்படம் செம்மா ஃபயர் 🔥🔥🔥.
இந்த கார்டூன் கதைகள் அலிபாபா மாதிரி கதைகள் இருந்தால் கொடுங்க சார்.
ReplyDeleteஅப்படியே மூன்றாம் நாள் கதைக்கு அடுத்த பாகங்கள் இருந்தாலும் எதிர்பார்க்கிறேன்.
நாமளா வேணும்னா, நாலாவது நாள், பதினாறாம் நாள்னு ஏதாச்சும் போட்டுக்கிடலாம் சார்! விக்ரம் கிட்டே சொன்னா போதும் 💪
Deleteசாரி சார் பெயர் மாத்தி போட்டுட்டேன்."காலனின் கால் தடத்தில்". இதுல அடுத்த பாகங்களும் இருந்தால் போடுங்க சார்.
Delete//மெயின் பிக்சர் - இன்றும், இனியும், எப்போதும் கரம் மசாலாக்களாகவே தொடர்ந்திடட்டும். நாம் எதிர்பார்த்திடக்கூடிய ஸ்பிரிங் ரோல், டகிலோ, கபாப் போன்ற ஐட்டங்கள் சைடு மெனுவில், சந்தர்ப்பங்களுக்கேற்ப இடம்பெற்றிடட்டும்
ReplyDelete////
காலத்திற்கேற்ற சரியான முடிவு சார்!!
////அட சாம்பலின் சங்கீதத்தையே left hand-ல் டீல் செய்த நம்மவர்களுக்கு இதுவும் பிடிக்குமே என்ற எண்ணம் அந்த நொடியினில் துளிர்விட்டது. தற்சமயம் அதன் வாசிப்பில் தான் மூழ்கியுள்ளேன் ! Maybe அது சிறப்பாயிருக்கும் பட்சத்தில், உடனடியாக அல்லாது சிலபல மாதங்களுக்குப் பிறகு அவற்றிற்கான ஏற்பாடுகளை செய்து முடித்துவிட்டு "முன்பதிவு" எனும் முன்மொழிவோடு உங்கள் முன்னே வந்து நின்றால் உங்களது reaction என்னவாக இருக்கும் மக்களே? ///
ReplyDeleteசூப்பர் சார்!! ஆவலுடன் காத்திருக்கிறேன்.. நீங்கள் எப்போது முன்பதிவை அறிவித்தாலும் ஓகே தான்!😍😍😍😍😍
பச்சக் பச்சக் தான்!!😍😍😍😍😍
Deleteஇளவரசே யாருக்கு 🤩
DeletePfB.. 😂😂😂 எல்லோருக்குமேதான்!!😝
Deleteமீண்டும் கைவிடப்பட்ட லாரன்ஸ் & டேவிட்!
ReplyDeleteஅவங்கள என்னிக்கி இடுப்பிலே ஏத்தி வைச்சிருந்தோம் ப்ரோ - இன்னிக்கி இறக்கி விட 🤔🤔
Deleteதவிர, அவற்றில் எஞ்சி உள்ள புதுக்கதைகளை வாசிச்சா, அடுத்த வாரம் வரை ரூம் போட்டு சுவர்களை சொறிஞ்சிட்டு இருக்கலாம்! எதைக் கற்பனை பண்ணிட்டு இவர்களை இம்புட்டு எதிர்பார்த்து காத்து இருக்கீங்களோ - சத்தியமா தெரில
:-)))))
Delete//
Deleteமீண்டும் கைவிடப்பட்ட லாரன்ஸ் & டேவிட்!
//
இது என்ன புது கதையாக இருக்கிறது 🤔
Atleast flight 737 story ah kings special ah include panni irukalam
Deleteஒய் திஸ் கொல வெறி 🥹🥹?
DeleteKing’s Special-la vara classic stories ellathulayum oru pazhamai vaadai irukku. Comparatively, Lawrence & David-oda Flight 731 story-um adhe ragam dhaan. Idhula enna prechana-nu neenga solla vareenga-nu theriyala. Rendu stories-ume outdated stories dhaan!
Deleteபதிவிற்கு நன்றி சார்....:-)
ReplyDelete///புது சாகசத்துடனான மாயாவியாரை ரெகுலர் தளத்தில் போட்டால் சுகப்படுமா ? அல்லது அவரை எப்போதும் போலவே புத்தக விழாக்களின் செல்லப் பிள்ளையாகவே தொடர்ந்துவிட அனுமதிக்க வேண்டுமா? ///
ReplyDeleteரெகுலர் தளத்தில் போட்டால் மாயாவி மற்றவர்களுக்கான ஒரு ஸ்லாட்டை அபகரித்துக் கொள்வார் சார்! புத்தகத் திருவிழா சிறப்புகளாகவே வரட்டும்!
//ரெகுலர் தளத்தில் போட்டால் மாயாவி மற்றவர்களுக்கான ஒரு ஸ்லாட்டை அபகரித்துக் கொள்வார் சார்! புத்தகத் திருவிழா சிறப்புகளாகவே வரட்டும்!//
Delete+9
கார்ட்டூனுக்கு ஜே!!
ReplyDeleteகார்ட்டூனுக்கு ஜே!!
கார்ட்டூனுக்கு ஜே!!
கார்ட்டூனுக்கு ஜே!!
தலீவர் NO போட்டுட்டார் - சங்கத்துக்குள் குயப்பம் 🥹🥹
Delete:-))))
Deleteகார்ட்டூன் கதைக்கு நோ சொன்ன காரணத்தால் புதிய தலைவராக எங்கள் செயலாளர் பொறுப்பேற்று கொள்ள் போகிறார்.
Deleteதல இத நாங்க எதிர் பார்க்கல 😄
சார் எனக்கு ஓர் டவுட்...கிங் ஸ்பெஷல் 4 ஏற்கனவே ஆர்டர் செய்தவர்களுக்கு தனி பார்சலில் வந்து விடும் அல்லவா...அல்லது இது இன்னமும் எந்த சந்தாவிலும் இல்லாத புது வெளியீடு இதழா ...ஒரே குயப்பமா இருக்கு சார்...:-)
ReplyDeleteதெய்வமே.... இதை இன்னிக்கி தான் அறிவிக்கவே செய்கிறோம்...! இது முந்தைய முன்பதிவுகளில் சேர்த்தி அல்லா!
Deleteஓ....கிங் ஸ்பெஷல் நான்கு என்றவுடன் ஏற்கனவே சந்தா கட்டியதில் மீத இதழா என குழப்பம் வந்து விட்டது சார்..எனக்கு மட்டுமல்ல வாட்ஸப்பில் சிலருக்கும் இதே சந்தேகம்..விளக்கமாக அறிவித்து விடுங்கள் சார்...தனி சந்தாவில் கட்டியதில் இந்த இதழ் மீத வருகை என பலர் நினைத்து வருகிறார்கள் என்னை போலவே...:-)
Deleteகிங் ஸ்பெஷல் - 4 அட்டைப்படம் அருமை!!
ReplyDeleteMaxi size - சர்ப்ரைஸ்!!
அட்டை படத்தில் மாயாவியை விட டெவில் தான் அட்டகாசமாக போஸ் கொடுத்திருக்கிறது!!😍😍😍
எனக்கு கார்ட்டூன் சிக்பில் ...லக்கி...ப்ளூகோட் இந்த மூவரும் தான் பிடித்து உள்ளனர்...மற்றவை ஏனோ கவர மாட்டேன் என்கிறது...இந்த மூவரை மாசம் மாசம் கார்ட்டூன் சந்தாவில் இணைத்து கார்ட்டூன் தடத்தை கொண்டு வந்து விடுங்கள் சார்...பச்சக்கன்னு பிடிச்சுக்கும்...:-)
ReplyDelete1. கனமான கதைக்கு ஆமாம். ச்பச்சக்
ReplyDelete2. பிரத்யேக தனி சந்தா கார்ட்டூன் ஆம். கைய தூக்கறேன்.
3. கிங் ஸ்பெஷல் 4 க்கு துண்டு போடறேன்.
கிங் ஸ்பெஷல் அட்டைப்படம் முன்..பின் பக்கம் இரண்டும் அருமை சார்...அட்டகாசமாய் இருக்கிறது...
ReplyDeleteஎனக்கு ஏதோ டெக்ஸ் அளவில் இந்த க்ளாசிக் நாயகர்கள் வருகை தந்தது தான் மேக்ஸி சைஸை விட பிடித்து இருந்தது...
தலீவரே.... அதே மாவு.... அதே சட்னி, அதே சாம்பார்.....! இந்த தோசையோட அளவு மட்டுமே பெருசு!
Delete:-)
Delete// இந்த தோசையோட அளவு மட்டுமே பெருசு //
Delete:-(
சார் அடுத்த வருடமாவது அந்த ஜான் மாஸ்டரின் அந்த இரு கதையும் வரும் அறவிப்பு இந்த அட்டவனையில் இருக்குமா....?!
ReplyDeleteதலீவரே.... விற்கும் சரக்கைத் தாண்டி வேறெதுவும் மறுபதிப்புகளில் இனி வராது! ஜான் மாஸ்டருக்கு ஆதரவு முழுமையாய் இருந்தால் ரைட்டு!
DeleteAnd மறுபதிப்புகள் ரெகுலர் சந்தாவில் இராதே!
Deleteமிகவும் நல்ல முடிவு சார்.
DeleteOk sir....:-)
Deleteஅ. Option A.
ReplyDeleteஉடனே பச்சக் என முன்பதிவு செய்திடுங்கள்
ஆ. காமிக்ஸ்க்கு ஜே ஜே !!!
ஏகேகே சாரின் அனைத்து கதைகளுக்குமான விரிவான விமர்சனங்களும் அட்டகாசம்...பாராட்டுகள் சார்....
ReplyDelete//// இதழில் ஒரு சின்ன சர்பிரைசும😍 காத்திருக்கும், அது வேதாளரின் சாகசம் கலரில் என்பதே///
ReplyDeleteசூப்பர் சார்! கலர் + கருப்பு-வெள்ளை காம்போ எப்போதுமே ஒரு வெற்றிக் கூட்டணி தான் சார்!!😍😍😍
இரும்புக் கையார் புதிய சாகசம் என்றால்... அதாவது 2.0 என்றால், ரெகுலர் சந்தாவில் ப்ளீஸ்...
ReplyDeleteஆனால் புதிய கதை... 2.0லாம் கிடையாது... நாம் வெளியிடாத ஒன்று எனும் பட்சத்தில்... புத்தக விழாக்களுக்கு மட்டுமே மதி...
2.0 விலே ஒண்ணு கீது - மாயாவியை Jack the Ripper கிரேடுக்கு சித்தரித்து! வாசிக்க ரெடியா?
Deleteசார், எனக்கு மாயாவி அந்தளவுக்கு interest கிடையாது...
Deleteபட்சே, மாயாவி 2.0ன்னா definiteஆ definiteஆ double triple ok...
அடுத்த மாதம் தீபாவளிக்கு குண்டாக இருந்தாலும் மூன்று இதழ்கள்தானா என வருத்ததுடன் காத்திருந்தால் இந்த கிங் ஸ்பெஷல் மூலம் மகிழ்ச்சியை கூட்டி விட்டீர்கள் சார்...மிக்க மிக்க நன்றி....
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்.
ReplyDelete1. மாயாவி மாமா@ புத்தக விழா
ReplyDelete2. Option A: 'பச்சக்'கென்று புக்கிங் செய்வோம்
3. கார்ட்டூனுக்கு ஜே
Sir online listing for kings special please
ReplyDeleteகார்ட்டூன்-மொத்த காமிக்ஸ்களையுமே என் அம்மா இப்படித்தான் அழைப்பார். ஆகவே ஒரு மெகா ஜே! சிக்பில், சுஸ்கி விஸ்கி போன்று அடித்து ஆடும் களங்கள் கண்முன்னே வந்து போகின்றன..
ReplyDeleteமகிழ்ச்சி ஜானி
Deleteகார்ட்டுனுக்கு ஜே!!!
ReplyDeleteமாயாவியை ரெகுலர் தடத்தில் விடலாம் சார்.
ReplyDeleteகார்டூன் தனித்தடம் சூப்பர்... Ok...
ReplyDeleteமாயாவிகாரு ரெகுலர் தடத்தில் விடலாம் சார்.
ReplyDelete// பற்றாக்குறைக்கு சிலபல ஆர்வலர்கள், டிஸ்கவுண்டில் நம்மிடம் கொள்முதல் செய்து, நமது B-டீமிடம் கர்ம சிரத்தையாய் ஒப்படைப்பதும் சமீப ஆண்டுகளின் நிகழ்வு. //
ReplyDeleteஇவர்கள் இப்படிதான் திருந்த போவதில்லை. எனவே நமது அப்ரோச்சை மாற்றிக்கொள்ள வேண்டியது தான் சார்.
மாயாவி தனியாகவே வரட்டும் சார்.
ReplyDeleteகிராபிக் நாவல் எஸ் டபிள் எஸ்
கார்டூன் ஜே ஜே ஜே
கிங்ஸ் ஸ்பெசல் சின்ன சர்ப்ரைஸ் இல்லை சார். பெரிய சர்ப்ரைஸ். நன்றி சார்.
// கிங்ஸ் ஸ்பெசல் சின்ன சர்ப்ரைஸ் இல்லை சார். பெரிய சர்ப்ரைஸ். நன்றி சார். //
Deleteமிகவும் சரி குமார். பெரிய சர்ப்ரைஸ் இது.
Option A, கார்ட்டூனுக்கு ஜே
ReplyDelete1. ஏற்கனவே இங்கே சந்தாவில் இடப்பற்றாக்குறை, இதில் இந்த இருப்புக்கையை நுழைக்க வேண்டாம்.
ReplyDeleteஅவர் தான் எங்கு இறக்கி விட்டாலும் score செய்கிறாரே, பிறகு எதற்கு சந்தாவில். தனி தடத்தில் வருவது தான் உகந்தது
2. கார்டூனுக்கு ஜே
3. நெடும் பக்கங்கள் கொண்ட கிராபிக் நாவல் வேண்டும். தள்ளிப்போட வேண்டாம்
.
கிங் ஸ்பெஷல் - 4 பணம் அனுப்பி விட்டேன் சார்.😊
ReplyDelete//ஜாக் தி ரிப்பர் ரேஞ்சுக்கு சித்தரித்து !//
ReplyDeleteவேண்டாம் சார். அரை நூற்றாண்டு சூப்பர் ஹீரோவை எங்கள் மனதில் ஹீரோவாகவே வாழ விடுங்கள்.
Option A
ReplyDeleteCartoon தனித்தடம் Double YES
Kings special 4 Yes
ஞாபகத்திற்காக
ReplyDeleteஅலிபாபா
டிம்மி & ஜெர்ரி
சிந்துபாத்
சுஸ்கி விஸ்கி
அங்கிள் ஸ்க்ரூஜ்
சுட்டி & நட்டி (கொள்ளைக்கார கார்)
ஹெர்லக் ஷோம்ஸ்
க்ளிப்டன்
மதியில்லா மந்திரி
ஏஜென்ட் 327
மியாவி
ஸ்மர்ஃப்ஸ்
மேக் & ஜாக்
ப்ளூ கோட்
ஜில் ஜோர்டன்
ஸ்பூன் & ஒயிட்
ரின் டின் கேன்
லியானர்டோ
லக்கி லூக்
சிக் பில்
டின் டின்
விச்சு கிச்சு
கபிஷ்
வாங்க சங்கர் சார்.
Delete✨✨✨✨✨
Deleteசெம
Delete((புது சாகசத்துடனான மாயாவியாரை ரெகுலர் தளத்தில் போட்டால் சுகப்படுமா ? அல்லது அவரை எப்போதும் போலவே புத்தக விழாக்களின் செல்லப் பிள்ளையாகவே தொடர்ந்துவிட அனுமதிக்க வேண்டுமா?))
ReplyDeleteரெகுலர் தடம் விருப்பமில்லை!
ஏன் : ஒரு புதிய புத்தகம் குறைவதை மனம் ஏற்காது!
((அது சாம்பலின் சங்கீதம் போன்ற கனமான களங்கள் பற்றியது _ Maybe 2027-க்கு வேண்டாம் - கமர்ஷியல் களங்களே இன்னும் கொஞ்சம் தொடரட்டும் என்று கருதும் பட்சத்தில் Option C என்று குறிப்பிட்டால் அதையும் புரிந்து கொள்வேன்))
DeleteOption C
ஏன்: சாம்பலின் சங்கீதம் - இன்னமும் படிக்கவில்லை!
((மினி பிரத்யேக கார்ட்டூன் சந்தா தனித்தடம் என்று அறிவிக்கும் பட்சத்தில் _ கார்ட்டூனுக்கு ஜே" என்றோ "கார்ட்டூனுக்கு நோ" என்றோ அவரென்ன நினைப்பார் ? இவர் என்ன சொல்லுவார் ? என்ற விசனங்களின்றி மனதில் தோன்றுவதை பதிவிட கேட்டுக் கொள்கிறேன்))
Delete"கார்ட்டூனுக்கு நோ"
ஒருவேளை, இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்று வெளி வருமானால் சந்தா கட்டிப் படிக்கவும் செய்வேன்!
1. Mayavi in Regular santha is ok
ReplyDelete2. Graphic Novel ok பச்சக்
3. Cartoon santha. Goid Idea. Ok
4. Kings Spls # 5 is an Unexpected Delight.OK
கார்ட்டூனுக்கு ஜே
ReplyDeleteகார்ட்டூனுக்கு ஜே"
கார்ட்டூனுக்கு ஜே"
Mayavi okay in regular sandha.
In fact this month there is no cartoon for kids. My daughter was upset and asking why you did not send the book....
Eternaut போன்ற graphic novels-ஐ தமிழில் குண்டு புக் சைஸில் பார்க்க முடியுமா?
ReplyDeleteNopes...ரிவர்ஸில் . 70 வருஷங்கள் போவதாகவெல்லாம் உத்தேசமில்லை ப்ரோ.... Sci-fi போடுவது என்றானால் ஒரு வண்டி recent படைப்புகள் உள்ளனவே - நாம் தேர்வு செய்ய!
Deleteஎடர்னாட் மற்றும் லைஃப் ஆஃப் சே இரண்டும் தமிழில் வரும்னு ரொம்பவே எதிர்பார்த்தேன்!
Deleteசூப்பர் சார்....இம்மாத டெக்ஸ் வேற லெவல்....பக்கங்கள் தானாய் புரள .....சும்மாவே தாண்டவமாடும் டெக்சார் நர்த்தனம் ஆடுவதில் வியப்பில்லயே....
ReplyDeleteஇதென்ன கேள்வி....இன்னோர் பாம் வரட்டும்...
இரும்புக்கையாரும் எப்படி வந்தாலும் சரி...
வேதாளரின் பிரம்மாண்டம் பிரம்மாண்டத்தை கூட்டட்டும்..அனுப்பியாச்சு சார் வரவேற்பு காகிதத்தை .
மாயவியாரை special வெளியீடாக விட்டால், ரெகுலர் தடத்தில் யாருக்காவது சீட் கிடைக்கும். எனவே இரும்பார் Special வந்தால் சிறப்பு...
ReplyDeleteOption A: 'பச்சக்'கென்று புக்கிங் செய்வோம்.
கார்ட்டூனுக்கு ஜே...
King Special அடுத்த மாதமே வருவது சிறப்பு... ஒரே கொரியராக பார்சலில் வந்தால் நன்றாக இருக்கும்.
ஏதாச்சும் ஒரு புக் னைந்து வந்து சேரும் நண்பரே - அது ஓகே தானா?
Deleteஅது எல்லாம் பிரச்சனை இல்ல என்று கரூர் குணா சொல்லிட்டார் சார் 😄
Deleteமாயாவி எப்படி வந்தாலும் ஓகே சார்.
ReplyDeleteசமீபத்தில் வராத கீழ் கண்ட கதைகளையும் மறுபதிப்பு செய்யலாம்.
*இரும்புக்கை மாயாவி:*
-பாதாள நகரம்
-கொள்ளைக்காரப் பிசாசு
*லாரன்ஸ்- டேவிட்:*
-பார்முலா X13
-திசை மாறிய கப்பல்கள்
*ஜானி நீரோ:*
-மைக்ரோ அலைவரிசை-848
- ஜானி in லண்டன்
-கொலைகாரக் கலைஞன்
இதில் பாதாள நகரம் போன வருடம் போட்டு ஸ்டாக் அவுட் ஆகிவிட்டதுங்க
Deleteகொலைகாரக் கலைஞன் ஸ்டாக் அவுட்
@ALL : தெறிக்க விட்டிருக்கிறீர்கள் folks.. 😍
ReplyDeleteஇன்றைய அறிவிப்பைத் தொடர்ந்து, கிங்ஸ் ஸ்பெஷல்-4 க்கான புக்கிங்களை அனல் பறக்க துவக்கி வைத்துள்ளீர்கள்! Simply wow!!!
நாங்க அப்படிதான் சார் 😊
Deleteஆபீஸ் லீவாச்சேன்னு இன்னிக்கு அனுப்பலீங்க சார்.. நாளைக்கு மதியம் அனுப்பிவைத்து 'தெறி லிஸ்டில்' நானும் இணைந்துகொள்வேன்!!
Deleteகட்டியாச்சு. நாங்களும் தெறி தான்!!😇
DeleteSuper Vijay
Deleteஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் சார்.
ReplyDeleteகிங்ஸ் 4 ஸ்பெஷலுக்கு பணம் அனுப்பிவிட்டேன் சார்.
சூப்பர் சரவணன்
DeleteMayavi in Regular santha double okay , itha thaan ethrparthen
ReplyDelete2. Graphic Novel / Gundu Book ok பச்சக்
3.கார்ட்டூனுக்கு நோ-
C
ReplyDeleteGraphic novel 👍
Mayavi.. Not in regular
Cartoon ..double ok
கார்ட்டூனுக்கு ஜே.
ReplyDeletesmurfs திரும்ப கொண்டு வாங்க சார்.
Deleteசார், ஒரு ஆலோசனை. காலேஜ் எல்லாம் 3 நாள் ஸ்டால் போட்டால் விற்பனை வாய்ப்பு இருக்குங்களா? , முதல் நாள் அவர்களிடம் பணம் குறைவாக இருக்கலாம் , இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில் பணம் கொண்டு வந்து வாங்க அதிக வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர் , ஈரோடு , நாமக்கல் , சேலம் மாவட்டங்களில் இளைஞர்களையும் புத்தகம் வாசிக்க ஒரு சிறிய முயற்சி .
ReplyDeleteOption AAA
ReplyDeleteoption A
ReplyDeleteவணக்கம் சார்,
ReplyDelete**இரும்புக்கை மாயாவி** – வழக்கமான சந்தா போதும் சார்\.
**இரண்டாவது கேள்விக்கு** – ஆப்ஷன் A\.
**மூன்றாவது கேள்விக்கு** – கார்ட்டூனுக்கு ஜெய்\!
**கிங்ஸ் ஸ்பெஷல் 4** – எனக்கு மேக்ஸிதான் பிடித்திருந்தது சார்\. வழக்கமான சைஸுடன் ஒப்பிடும்போது, மேக்ஸியில் படங்கள் தெளிவாக இருந்தன சார்\.
// எப்போதும் போலவே புக்கின் விலை ரூபாய் 450 + கொரியர் கட்டணமாய் ரூபாய் 50 ஆக ரூபாய் 500 அனுப்பினால் இம்மாத இறுதியில் வேதாளரும் வீடு தேடி வருவார் //
ReplyDeleteDouble Okay sir.
Option B
ReplyDeleteCartoon தனி சந்தா வேண்டாம்
ஒரு டவுட் சார்
ReplyDeleteகிங் ஸ்பெஷல் பழைய சந்தா முடிந்துவவிட்டதா? அல்லது கிங் ஸ்பெஷல் 4 உடன் முடிவடைகிறதா ங்க சார்
தனியாக பணம் செலுத்த வேண்டும்.
Deleteகார்ட்டூனுக்கு ஜே
ReplyDeleteகிங்ஸ் ஸ்பெஷல் ! அருமையான செய்தி! நாளைக்கே புக் பண்ணிவிடுகிறேன்
ReplyDelete180th
ReplyDeleteகார்ட்டூனுக்கு ஜே.....கிங் அட்டை கிங்காங்கா மிளிருது.....சின்னம்மை ஏனோ 80களுக்கு இழுக்குது.....அழகு
ReplyDeleteசின்னம்மை யா? எண்ட அம்மே!!!!!
Delete🤔🤔🤔
Deleteநல்லா யோசிங்க குமார் 🤣
Deleteகேள்வி #1
ReplyDeleteமாயாவியாரை புத்தக விழாக்களின் செல்லப் பிள்ளையாகவே தொடர்ந்துவிட வேண்டும்
கேள்வி #2
Option A: 'பச்சக்'கென்று புக்கிங் செய்வோம்
கேள்வி #3
கார்ட்டூனுக்கு ஜே
கார்ட்டூனுக்கு ஜே"👍👍👍👍👍. Waiting 👍👍👍
ReplyDeleteOctober 26 definitely a milestone , all the five comics were .awesome.
ReplyDeleteoption A, cartoon also ok, Mayavi for bookfair, lengthy GN welcome and waiting fort Kings special 4.
ReplyDeleteஇந்த வாரம் சனிக்கிழமை அட்டவணைப் பதிவை எதிர்பார்க்கலாமா சார்?
ReplyDeleteஇது ஒரு நல்ல கேள்வி 😉
DeleteOption A
ReplyDeleteகிங் ஸ்பெஷல் 4.- எல்லாம் ஓகே சார். மறுபடியும் ஏன் சார் மேக்ஸி சைஸ். 🤔
ReplyDeleteதோசை கொஞ்சம் பெருசு என்று சொன்னதால் அது மேக்ஸி சைஸ் ஆக இருக்குமோ என்பதால் எழுந்த கேள்வி இது சார்.
Delete1.Option A
ReplyDelete2.கார்ட்டூனுக்கு ஜே
சார் கனமான புத்தகங்களுக்கும் நான் ரெடி....
விலைவாசி உயர்வு என்பதற்காக நாம் அத்தியாவசிய அன்றாட தேவைகளுக்கு விலையைப் பற்றி யோசிப்பதில்லை...
அதேபோல் தான் சார் இதுவும்...
எங்களில் சிலருக்கு காமிக்ஸ் பொழுதுபோக்கல்ல சார்...
இது அத்தியாவசியமே....
So no problem sir👍👍
சூப்பர் பார்த்தீபன் சார்
Delete