Sunday, October 25, 2026

புனித மனிடோவுடன் 2027...!

​நண்பர்களே, 

வணக்கம் தேசத்தின் பட்ஜெட் பேப்பர்களை அச்சிடும் பணியை துவக்குவதற்கு முன்பாக ஒரு முரட்டு அண்டாவில் ஒரு வண்டி அல்வா கிண்டி அனைவரும் குஷியாய் சாப்பிட்ட பிற்பாடே வேலைகள் ஆரம்பிக்குமாம் ஆண்டுதோறும் இந்த அட்டவணை வேளையில் எனக்குமே அதே போல அல்வா கிண்டி, உங்களுக்கு வாய்  நிறையத்  திணிப்பது போலவே ஒரு ஃபீலிங் மேலோங்குவது உண்டு!! Simply becos அட்டவணைக்கான பில்டப் வாரங்களில் "காபி சாப்பிடுறீங்களாண்ணா...?" ; "டிபன் சாப்பிடுறீங்களாண்ணா ?"...லட்டு வேணுமாண்ணா...? புட்டு  வேணுமாண்ணா ? என்று கேட்டுவிட்டு, அட்டவணையைக்  களமிறங்கும் சமயத்தில், 'இங்கே பட்ஜெட் துண்டு விழுது ;  அங்கே டப்பு பத்தலை...!" என்று எதையாச்சும் சொல்லிவிட்டு உங்களுக்கு நயம் மஸ்கோத் அல்வா தருவதும் கடந்த ஒரு டஜன் ஆண்டுகளின் நடைமுறைதானே ? ஆனால் முதன்முறையாக காதுகளை தரையில் பதித்து, உங்களது விருப்பு வெறுப்புகளை முழுமையாய் உள்வாங்கிக் கொண்டு, எனது தனிப்பட்ட நேசங்களை ; துவேஷங்களை ஓரங்கட்டிவிட்டு, ஒரு அட்டவணையை உருவாக்க இந்த 2027-க்கு மெனக்கெட்டுள்ளோம். இதுவுமே அல்வா ரகம்தானா ? அல்லது முதன்முறையாக உங்களில் பெரும்பான்மையை திருப்திப்படுத்தும் ஒரு விருந்தா ? என்பது அடுத்த கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடுமே..!  So without more ado, let's get on with the planning for 2027. 

எப்போதும் போலவே, யார் உள்ளே ? யார் வெளியே ? என்ற ஆட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக, கணுக்கால் வரையல்ல...இடுப்பு வரையல்ல...  கழுத்து வரையிலும் கான்கிரீட்  பதித்துவிட்டு அட்டவணைக்குள் செம ஸ்டெடியாக நிற்கும் சில நிரந்தரர்களை முதலில் டிக் செய்யும் வேலைக்குள் புகுந்திட நினைத்தேன். And இப்போதெல்லாம் The Three T's அந்தப்  பட்டியலில் சாலிடாக இடம் பெறுகிறார்கள். முதல் T - சந்தேகமே இன்றி தலைமகன் T அதாவது நம்ம TEX & Team !! ஆண்டின் முதல் கேள்வியே - "எத்தினி டெக்ஸ் ?" &  அவருக்கென என்ன பட்ஜெட் ?"  என்பதே ! So அந்த கேள்விக்கு ஒரு விடை கண்டுபிடித்த பின்பு மற்ற பணிகளுக்குள் இறங்கிடுவது கடந்த சில ஆண்டுகளின் டெம்ப்ளேட். பெரும்பாலும் ஆண்டுக்குப் பத்தோ, பதினொன்றோ டெக்ஸ் இதழ்களைத் திட்டமிடும் போது,  அதற்கேற்ற பட்ஜெட்டும் ஒதுக்கிட வேண்டிப் போகும் - which means இதர இதழ்களுக்கான தொகைகளில் துண்டு விழும் ! ஆனால் இம்முறை ஆபத்பாந்தவனாக TERRIFIC TEX அமைந்திருக்கிறது ! 

Running into 2027 - இந்தத் தனித்தடத்தின் உபயத்தில் குறைந்த பட்சமாய் மூன்று color இதழ்களாவது அடுத்தாண்டினில் உண்டு & அதனில் ஒன்று புது சாகசம் என்பதால் - 2027-ன் ரெகுலர் தடத்தினில் ஒன்பது டெக்ஸ் சாகசங்களை ஸ்லாட் இன்  செய்துள்ளோம் !! So ஏதேனும் ஒரு ரூபத்தில், "மாதம் ஒரு டெக்ஸ் இருந்தே தீரனும்" என்ற எழுதப்படாத விதியினை செயல்படுத்திட TERRIFIC TEX நிரம்பவே உதவுகிறது. Oh yes - "இது வேறு.... அது வேறு....!! அதை இந்தக்  கணக்கில் சேர்க்கலாகாது & இதை அந்தக் கணக்கில் கூட்டலாகாது !" என்றெல்லாம் குரல்கள் ஒலிக்கும் என்பது தெரியாதில்லை தான் folks ! ஆனால் நடைமுறை எதார்த்தம் எனும் சமாச்சாரத்திற்கு காது கொடுக்கும் அவசியமும் நமக்குள்ளதே ?! So அட்டவணையில் டெக்ஸ்க்கான ஒன்பது ஸ்லாட்டுகள் என்பதோடு ஆட்டத்தை ஆரம்பிக்கிறோம். And இங்கே ஒரு அசாத்திய ஹைலைட் வெயிட்டிங் ! ஜவ்விழுப்பது போல், அதை பின்னே இழுத்துப்போகாது, துவக்கத்திலேயே சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன்.

அது வேறொன்றுமில்லை மக்களே - காத்திருக்கும் லயன் # 500 என்ற SPECIAL மைல்கல் சார்ந்ததே !! இப்போதெல்லாம் ஒட்டு மொத்தமாய் ஆண்டின் 30 இதழ்களையும் ஒரு சேர அறிவித்து விட்டு, "இவுக முத்துவுக்கு ; அவுக லயனுக்கு ; அப்பச்சி V காமிக்ஸுக்கு !" என்று பங்கு பிரித்து விடுவதால் எல்லா லேபில்களிலும் ஒரு சீராய் வெளியீட்டு வேகம் இருப்பதில்லை ! லயனுக்கு எப்போதுமே கூடுதலாய் கேரக்டர்கள் இருப்பதால் லயனின் வெளியீட்டு எண்ணிக்கையானது காத்திருக்கும் 2027-ல் ஐநூறைத் தொடவுள்ளது ! அந்த இதழ் # ஐநூறே, லயனின் நாற்பத்தி மூன்றாவது ஆண்டுமலராகவும்  அமையவிருப்பது இன்னொரு ட்விஸ்ட் ! And இந்தத் தருணத்தை சிறப்பிக்க, நம்ம தல சகாப்தத்தின் alltime favorite ஆன "கார்சனின் கடந்த காலத்தின்" அடுத்த அத்தியாயம் வெளி வந்தால் எப்படி இருக்கும் ? அதுவும் கலரில்.. ? அதுவும் ஹார்ட் கவரில்.. ? Yes guys - "திசைகள் ஏழு ...!!" தான் அந்த மைல்கல் தருணத்தைத் தெறிக்கச்  செய்யவுள்ள அதிரடி இதழாக அமையவுள்ளது ! இப்படி ஒரு ஆல்பம் உருவாகி இருப்பது ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பேதான் எனக்கு தெரியவந்தது. And ஏதேனும் ஒரு காரணமாய் அப்போது தட்டிப் போக, இதோ 2027-ல் அதிரடியாய் இந்த மூன்று அத்தியாய, 330 paged சாகசம் மிரட்டக் காத்துள்ளது !! 

And இம்முறை இன்னொரு highlight கூட உண்டு - டெக்ஸ் வரிசையினில் ! திட்டமிடப்பட்டுள்ள 9 டெக்ஸ் ஆல்பங்களுள் 5 கருப்பு வெள்ளையில் & கலரில் 4 !! இந்த template 2027-ன் டெக்ஸ் வரிசைக்கு மாத்திரமே என்றுமில்லை ; ஒட்டு மொத்த சந்தாவிலேயே 70%  முழுவண்ணத்தில் தான் - which means கண்களுக்குமே ஒரு விருந்து வெயிட்டிங் !! And டெக்ஸ் வரிசையில் நான் குறிப்பாக எதிர்பார்த்திடும் இதழ்களும் சில உள்ளன !! 

விடாது கர்மா ..!

சட்டம் ஒன்று... சித்தம் ரெண்டு..! 

புனித பூமியில் ஒரு புதையல் வேட்டை !

செத்தும் கெடுத்தான் சதிகாரன் !! 

to name a few !! And of course - இளம் டெக்ஸும் உண்டு தான் - இம்முறையோ 4 அத்தியாய சாகசத்தை தொகுப்பினில் !!






Moving on, அடுத்த T - நமது கேப்டன் டைகர் !! எண்ணிக்கையில் டெக்சினை தொடச்  சாத்தியமே அற்றதொரு  தொடரின் நாயகன் என்றாலும், இன்றளவிற்கும் நமது flagship நாயகருக்கு tough தரும் ஆற்றல் கொண்ட ஒரே நாயகர் இவர் தானே ?! இன்னமும் இரண்டோ, மூன்று இளம் டைகர் ஆல்பங்கள் மட்டுமே வெளியிட வெயிட்டிங் என்ற நிலையில், சென்றாண்டினில் 60 YEARS OF BLUEBERRY -  என்றதொரு ஸ்பெஷல் தருணத்தில், பிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகின் சமகால ஜாம்பவான்களில் 29 பேர் கரம் கோர்த்து "டைகரின் பயணப்பாதையில்" என்ற தலைப்பில் ஒரு 128 பக்க ஸ்பெஷல் ஆல்பத்தினை உருவாக்கியுள்ளது தெரிய வந்தது ! அது மாத்திரமன்றி 2019 வாக்கில் புதியதொரு படைப்பாளி டீமின் கைவண்ணத்தில் மறுக்கா துவங்கியது கேப்டன் டைகரின் புதுக் கதைகளின் முயற்சி ! ஒரு டபுள் ஆல்ப சாகசமெனத் திட்டமிட்டு விட்டு, முதல் பாகத்தை ரிலீசுக்கு செய்திருந்தார்கள் ! ஆனால்  நம்ம நேரமோ என்னவோ, அதன் ஆசிரியர் வேறொரு முக்கிய பணிக்குள் தலைநுழைத்து விட, இரண்டாம் பாகத்தை கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு அந்தரத்தில் தொங்க விட்டு விட்டனர் ! ஒரு மார்க்கமாய் இந்த 2026 ஆகஸ்ட்வாக்கில் அந்த க்ளைமாக்ஸ் ஆல்பமும் வெளி வந்து விட்டது ! So ரொம்ப காலம் கழித்து டைகர் தொடரினில் - பரோட்டாவா ? முட்டை தோசையா ? சில்லி சப்பாத்தியா ? என்று யோசிக்கச் செய்யும் options அமைந்து போயின ! இங்கே தான் நீங்கள் சீனுக்குள் வந்தீர்கள் !! நமது வாட்சப் கம்யூனிட்டியினில் இதுவா ? அதுவா ? அந்த அதுவா ? என்ற வினாவினை முன்வைத்த போது 'பச்சக்' என டைகரின் அந்த 60-ம் ஆண்டு ஸ்பெஷலையே தேர்வு செய்தீர்கள் ! அப்புறமென்ன - எனது பணி சுலபமாகிப் போக "வேங்கையின்  வழித்தடத்தில்" - ஜனவரியில், முத்துவின் 55-வது ஆண்டுமலராய், மிளிரக்காத்துள்ளது !! நமது உடைந்த மூக்காரின் ரசிகர்களுக்கு இதுவொரு MUST HAVE இதழென்பது சர்வ நிச்சயம் !!


The third T -97 ஆண்டுகளாய் உலக அரங்கினை தனது உள்ளங்கைக்குள் வைத்திருக்கும் டின்டின் தான் ! இவரது ஆல்பங்கள் மாயாவியைப் போல வருஷம் முழுக்கவே விற்பனை கண்டிடும் star material !! So காத்திருக்கும் 2027-லும் 2 சிங்கிள் ஆல்பங்களோடு டின்டின் கம்பு சுழற்றுகிறார் ! அந்த இரண்டுமே செம ஜாலி வாசிப்புகள் என்றாலும் - "மாளிகையில் ஒரு மங்காத்தா !" வேற மாதிரி !! தமிழாக்கத்தில் இதனை செம ஜாலி வாசிப்பாய் அமைத்திட ஆர்வமாய் வெயிட்டிங் !! 



உறுதியான இடம் பிடித்து விட்ட மூன்று ஜாம்பவான்களுக்குப் பிற்பாடு -  "சீட் சார்ந்த குயப்பமே  நஹி !" என்ற தகிரியத்துடன் வலம்  வரும் நாயகர்கள் பக்கமாய் நம்ம அகன்ற விழிகளை இன்னும் அகலமாக்கிச் சுழல விட்ட போது  தென்பட்டோர் மூவர் & மூவருமே பிராங்கோ-பெல்ஜியப்  பிள்ளைகள் ! அவற்றுள் முதலாமவர் நமது ஒல்லிப்பிச்சான் லக்கி லூக்   ! கடந்த நாலைந்து ஆண்டுகளாய் லயன் ஆண்டுமலர்களில்  டபுள் ஆல்பங்களில் களம்கண்டு கொண்டிருந்தார் தான் ! ஆனால் அவரது சிங்கிள் ஆல்பங்கள் விற்பனையில் பறக்கும் வேகத்திற்கு டபுள் ஆல்பங்களால் ஈடு தர இயலவில்லை என்பதே நிலவரம் ! தவிர, லக்கி தொடரின் சூப்பர் ஹிட் கதைகளில் 95 சதவிகிதத்தைப் போட்டு முடித்து விட்டோம் எனும் போது, டபுள் ஆல்பத்துக்கென 2 நல்ல கதைகளை உருட்டுவது வர வர ரொம்பவே சிரமக்காரியமாகி வருகிறது ! So லக்கி காத்திருக்கும் ஜூலையில் வருகிறார் தான் - but சிங்கிள் ஆல்பத்தில் ! And எப்படியோ இது வரையிலுமே நாம் போட்டுத் தாக்கியிராததொரு கோசினி + மோரிஸ் கூட்டணியிலான அட்டகாச vintage ஆல்பம் கண்ணில்பட்டிருக்க - "நடுவிலே கொஞ்சம் நசுங்கிட்டாரு.. !!" என்று ஆஜராகிறார் ஜாலி ஜம்பரின் முதலாளி ! An absolute riot !!

இடம் சார்ந்த விசனங்களின்றி அட்டவணைக்குள் நுழையும் பார்ட்டீஸ் # 2 & 3 வேறு யாருமல்ல  : டிடெக்டிவ் ரூபின்  & லோன்ஸ்டார் டேங்கோ தான் ! இருவருமே சமீப வரவுகள் தான் என்றாலும், by the sheer weight of their performances, ஸ்மூத்தாக நம் மத்தியில் செட் ஆகி விட்டனர் ! டேங்கோவுக்கு  in particular - அட்டகாசமான சித்திர பாணியும்,  வித்தியாசமான கதைக்களங்களும் செம ப்ளஸ் !  And சிகாகோ cop ரூபினோ -ஒவ்வொரு வித்தியாசமான கதையிலும் அற்புதமாய் மிளிர்வதால், ஆட்டோமேட்டிக் தேர்வாகிறார் ! In fact இப்போதெல்லாம் மகளிர் அணியின் கொடியை ஏந்தி உயரப்பிடித்து வருபவரே இவர் மட்டும் தான் ! So ரூபின் & டேங்கோ டீமானது 2027- ன் முத்து காமிக்ஸ் கோடைமலராகிறது !! And இந்த ஆல்பத்தில் காத்திருக்கும் ரூபின் சாகசம் எப்போதும் போலவே செம சமகால த்ரில்லர் ! கதாசிரியர் Walthery இப்படிப்பட்ட offbeat கருக்களை எப்படித்தான் உருவாக்கப்படுத்துகிறாரோ - தெரியலை ; செம தெறி  !!


9 டெக்ஸ் + 1 டைகர் + 2 டின்டின் + 1 லக்கி லுக் + 1 கோடைமலர் = 14 புக்ஸ் = 6 நாயகப்பெருமக்கள். 

நிஜத்தைச் சொல்வதானால் இந்த அறுவருக்கு பிற்பாடு தொடர்ந்திடப்போகும் நாயகர்கள் அனைவரின் பின்னணியிலும் கிட்டத்தட்ட ஒரு கதை உண்டு என்பேன் !! And அந்தக் கதையினில் பிரதான பங்கு உங்களுக்கு உண்டு என்பது தான் நிஜம் !! இந்தப் பதிவின் துவக்கத்தில் சொன்னதொரு வரியினை இங்கே மறுக்கா மேற்கோளாக்கிட விழைகிறேன் : அது வேறொன்றுமில்லை guys - இந்தாண்டின் அட்டவணைத் திட்டமிடலின் போது காதை தரையோடு இருத்தி , நடைமுறை யதார்த்தங்களுக்கும், உங்களது விருப்பு-வெறுப்புகளுக்கும் தந்திருக்கும் முக்கியத்துவம் சார்ந்தது ! அதன் முதல் பயனாளி இன்னொரு ஒல்லிப்பிச்சான் - இம்முறையே சீரியஸான களத்துக்காரர் !! அது போன மாதம் நம்மையெல்லாம் வசீகரித்த நவீன வெட்டியான் ஸ்டெர்ன் தான் !! உள்ளதைச் சொல்வதானால் 2027-ன் அட்டவணையினை ஆகஸ்ட்டில் இறுதியிலே அறிவிப்பது என்பதே திட்டம் & நமது ஈரோட்டுச் சந்திப்பின் போது நான் உங்களிடம் கேட்டிருந்த கேள்விகள் were the finishing touches ! அந்நேரத்தினில் நான் தயார் செய்திருந்த அட்டவணையினில் ஸ்டெர்ன் இடம் பிடித்திருக்கவில்லை ! ஆனால் கொள்ளை போகுதென்று அட்டவணையினை நான்கு மாதங்களுக்கு முன்னமே வெளியிட்டு சாதிக்கப் போவதை விட, பாதிக்கப் படப்போகும் சாத்தியங்களே ஜாஸ்தி என்பதை உணர்ந்த பிற்பாடு, அட்டவணையை அக்டோபர் இறுதிக்கு ஒத்தி வைத்த போது , இடைப்பட்ட செப்டெம்பர் & அக்டோபர் releases சில பல திட்ட மாற்றங்களை அவசியமாக்கின !! போன மாதம் வெளி வந்த ஸ்டெர்ன் ஆல்பம் ஏற்படுத்திய தாக்கத்தின் பரிமாணம் எத்தகையது என்பதை நாமறிவோம் ! டெக்ஸ் & இளம் டெக்ஸ் களம் கண்டிருந்த மாதத்திலேயே, ஒரு கிராபிக் நாவல்  அவர்கள் இருவரையும் outshine செய்வதென்பது கனவில் வரும் சமாச்சாரம் ! ஆனால் ஸ்டெர்ன் அதை நனவாக்கிக் காட்டியிருக்க, வெகு சமீபமாய் அவரது தொடரின் ஆல்பம் # 6 வெளிவந்திருக்கும் சேதியைப் படித்த போது, சூட்டோடு சூடாய் மனுஷனை உள்ளே இழுத்துப் போடுவதே மதி - என்று பட்டது ! So உங்களது புண்ணியத்திலேயே "தனிமையே என் துணைவன்" என்கிறார் ஸ்டெர்ன் ! Of course, உடனடியாக இல்லாவிட்டாலும், maybe in 2028 or 2029 - இந்த சாகசம் வெளிவந்திருக்கும் தான் ! ஆனால் இரும்பு சூடாய் இருக்கும் போதே அடிப்பது தானே நல்லதொரு தொழில்காரனின் பாணி ? So நீங்க முன்மொழிஞ்சீங்க ; நாம ரோடு போட்டோம் ! 

And அட்சரம் பிசகாது உங்களுக்கே கிரெடிட் தர வேண்டிய அடுத்த உட்புகுத்தல் - மௌனப்புயல் ட்யுராங்கோ சார்ந்தது !! பொழுது போகாத நாட்களில் நமது பரணிலிருக்கும் நட்சத்திரங்களை கையைப் பிடித்து இழுப்பது எனது பொழுதுபோக்கு ! அவர்களுள் யாரையாச்சும் மறுக்கா சந்திக்கும் உத்வேகம் உங்களிடம் துளிர் விட்டுள்ளதா ? என்று அறிவதே எனது அந்நேரத்து அவாக்கள் ! So ஒவ்வொரு ஹீரோவையாய் தூசு தட்டி , கொஞ்சம் பவுடர் பூசி உங்கள் முன்னே கொணர்ந்து நிறுத்திப் பார்ப்பேன் நமது வாட்சப் கம்யூனிட்டியில் ! பார்க்கும் அத்தனை பெண்களையும் "ஆங்... புடிக்குது !!" என்று தலையாட்டும் 35 வயதைக் கடந்த முரட்டு சிங்கிள்ஸைப் போல, எல்லா பரண் பார்ட்டீஸ்களையும் நம் மத்தியிலுள்ள ஆர்வலர்கள் தீவிரமாய் வரவேற்பதுண்டு தான் ! ஆனாலும் "வாணாமே.. " ; "மிடிலே.." என்ற குரல்கள் நடு நடுவே ஒலிப்பதையும் கவனிக்க முடியும் ! So கிட்டத்தட்ட 90%  YES என்ற குரல்கள் ஒலித்தாலொழிய - பரண் பிரஜைகள் குடி பெயர்வதில்லை ! அதே போலானதொரு சோம்பலான தினத்தில் நான் எழுப்பிய கேள்வி தான் ட்யுராங்கோ பற்றியது ! மும்மூன்று ஆல்பங்களாய் இவரது தொடரை நாம் கையாண்டிருந்ததால் - 17 ஆல்பங்கள் மட்டுமே கொண்டிருந்த இத்தொடரின் கட்டக்கடைசியை ரொம்பவே சுளுவாய் தொட்டிருந்தோம் ! ஒரேயொரு சிங்கிள் ஆல்பம் மட்டும் மீதமுள்ளது & அதுவுமே ஒரு புதிய ஓவியரின் கைவண்ணத்தில் என்றான போது, மனதளவில் ட்யுராங்கோவுக்கு மங்களம் பாடியிருந்தேன் ! வெகு சமீபமாய் அவரது தொடரை நீட்டிக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட சமயத்தில் தான் கேஷூவலாக "மௌனப் புயல் முழங்கலாமா ?" என்று வினவியிருந்தேன் ! Honestly - அதற்குக் கிட்டிய ரெஸ்பான்ஸ் என்னை மிரட்டியே விட்டது ! டெக்ஸ், டைகர் வரிசையில் # 3 ஸ்பாட் இவருக்கே என்று நீங்கள் ஏகோபித்த குரலில் சொன்னீர்கள் ! அப்போதும் நாம் விடலையே - "புச்சான  ஓவியர் தான்  இனிமே வருவாரு ; இதோ - இப்புடி தான் படம்ஸ்லாம் இருக்கும் ! இது ஓகே தானுங்களா ? அப்பாலிக்கா இந்த மூ.ச. பக்கமா ஒரு வாக்கிங் போவோமா கண்ணுன்னு என்னைக் கூப்பிடப்படாது !! " என்று முன்ஜாக்கிரதை முருகேசன் அவதார் எடுத்தும் பார்த்தேன் ! Again கிட்டிய பதில்களில் ஒலித்த அந்த உறுதி - பரபரவென என்னை மறுக்கா அட்டவணைக்குள் பிடித்துத் தள்ளியது - ட்யுராங்கோவுக்கு கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கிட ! So இந்தத் தேர்வுமே முழுக்க முழுக்க உங்களது தான் folks ! 2027-ல் சிங்கிள் ஆல்பம் & 2028-ல் டபுள் ஆல்பம் என்பது கூடுதல் தகவல்  !!

"நேயர் விருப்பம்" இன்னமும் தொடர்கிறது folks - இம்முறை கார்ட்டூன் களத்தினில் ! நமது நீலச் சீருடையினர் எனது "ஆகஸ்ட் அட்டவணையில்" இடம் பிடித்திருக்கவில்லை தான் ! இவர்களுக்குப் பதிலா வேறொரு option திட்டமிட்டிருந்தேன் ! ஆனால் செப்டெம்பரில் வந்த "கோட்டையில் ஒரு குட்டிப் புயல்" இரண்டு விதங்களில் மனமாற்றத்தினையும், மடைமாற்றத்தினையும் நடத்திக் காட்டியது ! இந்த இதழுக்கு நீங்கள் தந்த reception absolutely fab ரகம் !! "ஆஹா.... இந்த ரேஞ்சுக்கு சாதித்திருக்கும் கூட்டணிக்கு அடுத்த வருஷ எலெக்ஷனில் சீட் லேது என்று சொன்னால் காதைக் கடிச்சுப்புடுவீங்களோ ? என்ற பயம் மேலோங்கியது ! தவிர, இந்த இதழுக்குப் பணியாற்றிய சமயம் பேனா பிடிக்கும் படலமானது செம ஜாலியாய் அமைந்து போக, அடுத்தாண்டிற்கும் ப்ளூகோட்ஸ் இருந்தால் தேவலாமென்று பட்டது !! As a result -"லிங்கன் லூட்டி !!" காத்துள்ளது வரும் ஆண்டிற்கு ! இங்குமே வாட்சப் கம்யூனிட்டியில் நீங்கள் தந்து வரும் feedbacks செம பயனுள்ளதாய் அமைந்ததை மறுக்கவே முடியாது !! So அங்கே அவ்வப்போது அரங்கேறும் ஜாலியான கும்மீஸுக்கு மத்தியில், முக்கிய பாலிசி தீர்மானங்களுமே எடுக்கப்படுகின்றன என்பது கண்கூடு !! 

Yet another செப்டெம்பர் / அக்டொபர் இதழ்களின் ரூட்டில் உட்புகுந்திருக்கும் அடுத்த நாயகர் ஒரு பூனைத்தலை OG !! போன மாதம் களம்கண்ட ப்ளாக்சாட் தான் நான் குறிப்பிடும் ஹீரோ என்பது புரிந்திருக்கும் ! இவரது முதல் ஆல்பத்துக்கு செம refreshing வரவேற்பு கிட்டியிருக்க, 2027-க்கு ஆல்பம் # 2 ஆட்டோமேட்டிக்காய் தேர்வாகியது !  மரத்தைச் சுற்றி ஓடியாடி பாட்டுப் பாடும் மாமூல் டிடெக்டிவ் அல்ல இவர் எனும் போது, நமது அணிவகுப்பினில் இவர் நிரம்பவே அத்தியாவசியமென்று நினைத்தேன் ! And again, இங்கே எனது பேனாவின் வாக்களிப்பும் கணிசமாக  உதவியது  ! 460 பக்க டெக்ஸ் வில்லர் கதைகளுக்குள் உலவும் அனுபவம் ஒரு விதமெனில், அதனில் பத்தில் ஒரு பங்குப் பக்கங்கள் கொண்ட BLACKSAD போலான noir களங்களுக்குள் பேனா சுழற்றுவதென்பது வேறு பாணியிலான சுகம் !! அதிலும் இந்தக் கடுவன் பூனைக்கான "எவனா இருந்தா எனக்கென்ன ?" ஸ்டைல் வசன நடையினை அமைப்பது அட்டகாசச் சவால் ! So அதன் பொருட்டும் "ஆர்டிக் தேசம்" செலக்ட் ஆனது தான் ! உலகின் 29 மொழிகளில் அடித்து தூள் கிளப்பி வரும் இந்த டார்க் த்ரில்லர் நம் மத்தியில் தில்லாய்த் தொடர்ந்திடும் ! 

And டார்க் களங்களில் தொடர்ந்திடும் இன்னொரு நாயகரும்  அடுத்தபடியாக செலெக்ட் ஆகினார் ! அவர் நடப்பாண்டில் அறிமுகமாகி, முதல் ஆல்பத்திலேயே முத்திரை பதித்த கௌபாய் !! சில மாதங்களுக்கு முன்பாய் "குருதியின் கூலி" என்ற வெஸ்டர்ன் த்ரில்லர் வழியாக நமக்கு அறிமுகமான ரெட் கன் தான் அவர் !! இதுவரையில் மொத்தமே 2 ஆல்பங்கள் மாத்திரமே வெளிவந்திருக்கும் இந்த செம சமீபத் தொடரின் இரண்டாம் ஆல்பம் "நிசப்தமாய் ஒரு கூக்குரல்" தந்திட வெயிட்டிங் ! சொல்லப்போனால், முதல் ஆல்பத்தைக் காட்டிலும் இந்த இரண்டாவதில் ஆக்ஷன், ஆழம் என எல்லாமே ஒரு மிடறு தூக்கலாய் இருப்பதாக எனக்குப் படுகிறது ! And நாயர்கடை சாயா போல நமக்கு இன்றியமையா சமாச்சாரமாகிப் போயிருக்கும் கௌபாய் ரகக்கதைகளுக்கு இவரொரு ஷார்ப்பான தேர்வு என்றே நினைத்தேன் ! So here he is...!


இன்னொரு "கட்டாயக்  கோட்டா" அனுமதிசீட்டினைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் நாயக்கரும் உண்டு தான் ! அவருமே ஒரு கௌபாய் நாயகரே ! And அவருமே வெகு சமீப வரவு - நம் மத்தியினில் ! நான் குறிப்பிடுவது, சென்றாண்டு "குருதியில் பூத்த குறிஞ்சி மலர்" வாயிலாய் அறிமுகமான வைல்ட் கேட் நாயகரையே ! இதோ, காத்திருக்கும் டிசம்பரில் அவரது ஆல்பம் # 2 - "நரகத்திற்கொரு புரவி" awaits !! மூச்சிரைக்கச் செய்யும் சித்திரங்களுடன் தட தடக்கும் இந்த ஆல்பம் செம்மையாய் பில்டப் செய்திடும் சாகசத்தை க்ளைமாக்ஸ் - டபுள் ஆல்பங்களில் நிறைவு பெறுகிறது ! இந்தத் தொடரிலேயே மொத்தமே 4 ஆல்பங்கள் தான் எனும் போது 2025 ; 2026 & 2027 என்று சுபம் போட்டு விடலாம். "சமவெளியின் சாசனம்" ஒரு அசாத்திய சித்திர விருந்தாகவும் அமையவுள்ளது !! And ஒரு  மினி தொடராக இருந்தாலும், அதனை டக்கென்று எடுத்தோம்-முடித்தோம் என்ற திருப்தி இங்கும் நமக்குக் கிடைக்கக்கூடியது கூடுதல் ப்ளஸ் !! ரெட் கன் 2/2 ....ஸ்டெர்ன் 6/6 ...டேங்கோ 7/9 வைல்ட்கேட் 4/4 - எனும் போது  மனசுக்கு நிறைவாய் உள்ளது guys !! What say ?

Next up, காத்திருப்பது நம் மத்தியில் ஒரு சரளமான பரிச்சயம் கொண்டிருக்கும் 87 வயதான பிரான்க்கோ-பெல்ஜிய ஜாம்பவானின் படைப்பே ! அந்த சாதனை எழுத்தாளர் நம்ம ஷான் வான் ஹாம் தான் & அந்த படைப்பு : XIII மர்மம் தொடரின் ஆல்பம் # 14. கொஞ்ச காலம் ஓய்வுக்குள் சென்றிருந்த வான் ஹாம் - சமீப ஆண்டுகளில் மறுக்கா பேட்டை தூக்கிக் கொண்டு கிரவுண்டுக்கு வரத் துவங்கியிருக்கிறார் ! அதன் நீட்சியில் உருவானதே "சிலந்தி வலையில் சிந்தனைகள்" என்ற spin-off  !! "போதுமே ஜேசனுடனான கூட்டணி" என பாகம் 19 வரையில் இரத்தப் படலம் தொடரினில் பணியாற்றிய வான் ஹாம் - அதன் இரண்டாவது சுற்றில் பங்கேற்றிருக்கவில்லை ! அதே போல XIII spinoff ஆனால் தொடருக்குள்ளும் பெரிதாய் ஆர்வம் காட்டியிருக்கவில்லை ! ஆனால்  13 என்ற நம்பர் மனுஷனுக்கு நிரம்பவே பிடிக்குமோ - என்னவோ ; spinoff # 13 க்கு பேனா பிடித்திருந்தார் !! அது நிரம்பவே டிக்கிலோனாஸ் நிறைந்த ஜூடித் வார்னரின் கதையே !! அதற்குப் பின்னே வந்த # 14 தான் - "சிலந்தி வலையில் சிந்தனைகள்" In fact இதனில் வான் ஹாம் மாத்திரமன்றி, புதுயுகப் படைப்பாளிகளுமே கரம் கோர்த்துள்ளனர் !! இந்த ஆல்பத்துக்கான உரிமைகளை 2025 ன் மத்தியிலேயே  வாங்கி விட்டிருந்தோம் தான் ; ஆனால் இடம் ஒதுக்க முடியாது போனதால் நடப்பாண்டினில் இதனை நுழைக்க வழியின்றிப் போனது ! இன்னமும் live ஆகத் தொடர்ந்து வரும் இந்த iconic தொடருடன் நமது பரிச்சயத்தை ஏதோவொரு ரூபத்தில் தொடர்ந்திடுவதே நலம் என்பதால் here we are ! அது சரி, வான் ஹாமின்  "ஜூடித் வார்னர்" 13 ம் நம்பர் ஆல்பத்தைப் போடாம 14 க்குள் குதிப்பானேன் ? என்கிறீர்களா ? Simply becos அது ஏகமாய் ஸ்பூன்லிங்ஸ் கொண்டதொரு ஆல்பமாய் இருப்பதால் ஒதுங்கியிருக்கிறோம். "இல்லே... அதை கும்மாங்கோ ஸ்கேன்லேஷனிலேயே படிச்சுப் போட்ட அஞ்சாநெஞ்சர்களாக்கும் நாங்க ; உருப்படியாய் படைத்தால் ரசிக்காம விட மாட்டோம் !!" என்றீர்கள் எனில் - maybe sometime in 2027 - ஏதேனும் புத்தக விழா ஸ்பெஷலாய் போட்டுப்புடலாம் ! 

அடுத்து களமிறங்கும் ஆட்டக்காரர் or ஆட்டக்காரர்ஸ் நம்ம உட்ஸிட்டியின் கரகாட்ட கோஷ்டி !! டாக் புல் & கிட் ஆர்டினின் தலைமையில் சிக் பில்லும், பொடியனும் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டே கம்பெனி கொடுக்க - ஒரு முழுநீள காமெடி கச்சேரி காத்துள்ளது - "அசடு வழிந்தால் ஆபத்து !" வாயிலாக !! கார்ட்டூன்களின் கொடியினை காலமாய் லக்கி லூக் தாங்கிப்பிடித்திருக்க, அவர் அளவிற்கு இல்லையெனினும் , சோடை போகாது maintain  செய்து வரும் இந்த சிரிப்புப் போலீஸ் ஆண்டுக்கொரு ஸ்லாட் என்பதை கச்சிதமாய்த் தொடர்ந்து வருகின்றனர் ! Again - இவர்களுக்கு பேனா பிடிப்பதென்பது ஜாலிலோ அனுபவம் என்பதால், எனது தனிப்பட்ட ஓட்டும் சேர்ந்து கொள்கிறது !! இதோ, நடப்பாண்டினில் வெகு விரைவில் வரவிருக்கும் சிக் பில் சாகசத்தினை இப்போது தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் எனும் போது, பிரெஷாக வோட் போடாமல் இருக்க முடியுமா ? அநேகமாய் இதுவொரு ஏகோபித்த தேர்வே என்று சொல்லலாமா folks ? 

கடைசி நிமிடத்தில் , உங்களின் உபயத்தில் இடத்தைத்  தடாலடியாகப்  பிடித்திருக்கும் நாயகரை அடுத்துப் பார்க்கலாமா ? அவர் வேறு யாருமல்ல - நம்ம ஒற்றைக்கர பெளன்சர்  தான் ! இவருக்கும் எனது ஆகஸ்ட் அட்டவணையினில் நோ ரூம் ; இவருக்குப் பதிலாய் அண்டர்டேக்கர் தான் இடம் பிடித்திருந்தார் ! ஆனால் again வாட்சப் கம்யூனிட்டியில் இவரா ? அவரா ? என்ற கேள்வியை முன்வைத்த போது பெரும்பான்மையின் தேர்வு பவுன்சராகவே இருப்பதை பார்க்க முடிந்தது ! "ஆஹா.... மாறி மாறி பல்பு வாங்குறியேடா முருகேசா !!" என்றபடிக்கே அட்டவணையில் திருத்தம் போட்டேன் !! So "குருதி மழை" எனும் high octane த்ரில்லரில் இந்த கரடு முரடான நாயகர் வருகை தந்திடவுள்ளார் ! Doubtless - அண்டர்டேக்கர் 2028-ல் தலை காட்டுவார் உங்களிடம் !! 

மறுக்கா-மறுக்கா உங்களது தேர்வுகள் ஜெயம் கண்ட கதையே "பேய் காத்த புதையல் !!" இங்கேயோ உங்களிடம் 2 கேள்விகளை முன்வைத்திருந்தேன் & இரண்டுக்குமே உங்களின் பெரும்பான்மை தந்திருந்த பதில்களே தீர்மானத்தினை எனது சார்பில் செய்திருந்தன !! நான் வைத்திருந்த முதல் வினா : 2 க்ளாஸிக் நாயகர்களின் கூட்டணியிலான கலர் மறுபதிப்பு இதழா ? அல்லது ஒரு புது ஆக்ஷன் ஒன்-ஷாட்டா ? என்பதே !! பல்பு முருகேசனின் தேர்வோ - க்ளாஸிக் மறுபதிப்பாகவே இருந்தது & அட்டவணையிலும் அதனை டிசைன் செய்து நுழைத்திருந்தோம் ! பச்சே surprise ...surprise ....உறுதியாய் சொல்லியிருந்தீர்கள் : "ஆக்ஷன் ஒன்-ஷாட்டே எங்களது தேர்வு" என்று !! 'பாருடா ...!!' என்றபடிக்கே அடுத்த கேள்வியினையும் சமர்ப்பித்தேன் : "நான் குறிப்பிடும் ஒன்-ஷாட்டின் கலர் பதிப்பு rustic & dark கலர்களில் இருப்பதைக் காட்டிலும், black & white -ல் மிரட்டுகின்றன ! என்ன செய்யலாம் ?" என்று !! மறுக்காவும் surprise : "Black & White மதி சாரே" ...என்று ஜட்ஜ் ஜம்புலிங்ஸ் அவதார் எடுத்திருந்தீர்கள் ! செம சந்தோஷ ஆச்சர்யம் மேலோங்கிட, இந்த இதழினை MAXI சைசில் போட்டுத் தாக்குவதென தீர்மானித்தேன் !! So get ready for a visual feast guys !!

"எல்லாம் ரைட்டுடா முருகேசா - ஆனா அரைச்ச மாவையே அரைச்சுக்கினு கீறியே ..? புச்சா ஆரையும் காணோமே ?" எனும் உங்களின் மைண்ட்வாய்ஸ் எனக்குக் கேட்காதில்லை !! புதுசின்றி அட்டவணை இருக்கவாச்சும் முடியுமா ? இருக்கார்கள் தான் ! But இப்போவெல்லாமே புது நாயகர்களைத் தேடும் போதே, அவர்களது தொடர்கள் - இந்தி ஈரோயின்களின் ஸ்கர்ட்களைப் போல சிக்கென்று இருக்கின்றனவா ? என்று தான் பார்த்து வருகிறோம். அந்நாட்களின் பாணியில், எழுபது / எண்பது கதைகள் கொண்ட தொடர்களெல்லாம்  இப்போது பெரிதாய் ஏதும் உருவாவது இல்லை தான். But   still - இன்றைக்கு நமது பொறுமைகளின் சாளரங்கள் மட்டுப்பட்டிருப்பதால் short & crisp தொடர்களுக்கே முன்னுரிமை தருகிறோம். தவிர ரெகுலர் தடத்திலாவது - "நோ கார்ட்டூன்ஸ் ; நோ அழுகாச்சீஸ் ; நோ விஷப்பரீட்சைஸ் ; நோ கிராபிக் நாவல்ஸ் என்றான பிற்பாடு, புதுசாய் எதைத் தேடுவது ? என்று சிரத்தை சிரத்தையோடு பிய்த்துக் கொள்ள வேண்டிப் போகிறது ! ஆனாலும் தோண்டும் படலத்தை நாம் கைவிடுவதில்லையே... ? அதன் பலனாய், நமது மேற்படி கண்டிஷன்கள் சகலத்தையும் பூர்த்தி செய்திடும் பொண்ணு ஒண்ணு இருப்பதை கவனித்தேன் ! Or rather - மாப்பிள்ளை இருப்பதைக் கவனித்தேன் ! And சமகால பிரெஞ்சு படைப்புலகில் ஜாம்பவான்களுள் அவரும் ஒரு முக்கியஸ்தர் ! இவரது கைவண்ணத்தில் உருவானதொரு XIII மர்மம் இதழினையுமே (காலனின் கைக்கூலி - ஸ்டீவ் ரோலண்ட்) நாம் ஏற்கனவே ரசித்திருக்கிறோம் தான் ! அந்தக் கதாசிரியர் Fabien Nury & நான் குறிப்பிடும் புது நாயகரின் பெயர் டைலர் க்ராஸ்  !! எக்கச்சக்கமான விருதுகளை வாங்கிக்  குவித்திருக்கும் இந்தத் தொடரில் மொத்தமே 3 ஆல்பங்கள் தான் !! And இங்கேயுமே கதைக்களமானது அந்த 1950-களின் அமெரிக்கா தான் !! என்னவோ தெரியலை, ஆனால் அந்தக் காலகட்டத்து அமெரிக்கா உலகே பொறாமை கொள்ளும் ஒரு தேசமாய் இருந்திருக்கணும் போலும் - இல்லாவிடின் கதாசிரியர்கள் பச்சக் பச்சக்கென அங்கு சென்று டென்ட் போட்டிருக்க மாட்டார்கள் ! டைலர் க்ராஸ் - நல்லவன், வல்லவன், நாலும் தெரிஞ்சவனெல்லாம் கிடையாது ! காசுக்கு ஆட்களை போட்டுத் தள்ளும் ஒரு செம ஜித்து hitman ! அவனது உலகில் நியாய தர்மங்கள் - வீசம்படி எவ்வளவு ? என்ற கதை தான் ! சரியான பணத்துக்கு, யாரையும் சம்பவம் பண்ண ரெடி இந்த மனுஷன் ! ஆனால் சம்பவக்காரனே சம்பவத்தின் இலக்காகிடும் போது அனல் பறக்காது போகுமா - என்ன ? தகிக்கும் அமெரிக்கப்  பாலைவன நகரில் அரங்கேறிடும் மனுஷ வேட்டையே "கேம் ஓவர் !!" இந்த நாயகரை எனக்கு நிரம்ப காலமாகவே தெரியும் தான் ; ஆனால் இத்தனை காலமாய் அவரைக் கண்ணில் காட்டாது இருந்ததற்கொரு காரணமுண்டு !! அது தான் இதற்கான ஓவிய பாணி ! ரொம்பவே new age பாணியில் இங்கே சகலமும் வரையப்பட்டிருக்கும் ! So ஜேம்ஸ் பாண்ட் போலான  கம்பீரமான நாயகரைத் தேடினால் வேலைக்கு ஆகாது !! ஆனால் கதையின் வீரியம் சித்திரங்களையும் சேர்த்தே இழுத்துப் போய்விடுமென்ற நம்பிக்கையில் இவரை இட்டாந்துள்ளேன் !! டைலர் க்ராஸ் - கத்தி மேல் நடனம் என்பது தெரிந்தே தான் நர்த்தனமாட தீர்மானித்துள்ளேன் !! மூ.ச. கொண்டோர் விசனம் கொள்ளேல் தானே மக்களே !! ஏதோ - கொஞ்சம் பாத்துப் பண்ணுங்க ஓனர்ஸ்  !!

புதுவரவுகளின் இன்னொரு டீமோ - கிஞ்சித்தும் ரிஸ்க் அற்ற தொடர் !! கௌபாய் வன்மேற்கு  !! அழகான பெண்பிள்ளை + வலுவான ஆண்மகன் என்ற கூட்டணி ! இத்தாலிய உருவாக்கம் ! அதுவும் கலரில்... !! இது போதாதுங்களா - இந்தத் தொடர் "ஹிட்" என இப்போதே பீப்பீ ஊதிட ? வெல்கம் - பெல்லா & ப்ராங்கோ !! மொத்தமே 16 ஆல்பங்கள் கொண்ட தொடர் இது & ஒவ்வொரு இதழும் 64 பக்கங்கள் தான் ! பெல்லா ஒரு சலூன் நடத்தும் அம்மணி ! ப்ராங்கோவோ ஒரு படித்த, நாகரீகமான செவ்விந்திய ஜென்டில்மேன்  ! இவர்களது பாதைகள் ஒரு எதிர்பாரா நிகழ்வால் ஒன்றிணைய - தொடரும் வன்மேற்கிலான சாகசப் பயணம் செம சுவாரஸ்யம் !! "20 கிலோ சாத்தான்" இவர்களது அறிமுக ஆல்பம் & இது நம்மிடையே பெவிகால் போல ஒட்டிக்கொள்ளும் பட்சத்தில், இவர்களுக்கென ஏதாச்சுமொரு பிரேத்யேகத் திட்டமிடலை செய்து விடலாம் ! சின்ன விலையினில், கலரில், crisp வன்மேற்குத் தொடர் எனும் போது - ought to do well with us என்பதே எங்களது நம்பிக்கை ! Again up to ஜட்ஜ் ஜம்ப்ளிங்ஸ் - இறுதித் தீர்ப்புக்கு ! 

நடப்பாண்டினில் வந்திருக்க வேண்டிய "பவுர்ணமியில் ஒரு பூத வேட்டை" தான் அடுத்த செலெக்ஷன் ! இது டைலன் டாக் தொடரின் சமீப உருவாக்கங்களில் ஒன்று என்பதால் புராதனம் தெறிக்கும் ஸ்டைல்கள் இருந்திடாது ! அந்த அசிஸ்டன்ட் மொக்கை போடும் படலமும் இங்கு படுத்தாது !! Should be a pretty decent read for sure !!! அமானுஷ்யங்கள் ஆய்வாளர் - புத்தக விழாக்களில் "ஹாரர் கதை இருக்குதா ?" என்று தேடி வரும் புதுத் தலைமுறையின் டார்லிங்குமே என்பது கொசுறுத் தகவல் !  

அடுத்தவருமே இத்தாலியர் & போனெலியின் செல்லப் பிள்ளை ! இவர் பற்றி தொடரும் நாட்களில் நிறையவே பேசிடவும் உள்ளோம் ! Enter மர்ம மனிதன் மார்ட்டின் ! கதைத் தேர்வுகளில் கிறுகிறுக்கச் செய்யும் மனுஷாளில் இவருக்கு முக்கிய இடமுண்டு - becos என்ன தான் ஹோம்ஒர்க் செய்துவிட்டு இவரது கதைகளைத் தேர்வு செய்தாலும் இவரது ரூட்டை கணிக்கவே முடியாது - கதைக்குள் புகுந்து பணியாற்றும் நொடி வரையிலும் !! "களவாடிய காலங்கள்" hopefully should work well !! 

இத்தாலியப் படையெடுப்பு தொடர்கிறது - இம்முறை நம்ம கோடாரி மாயாத்மா ஸாகோரின் வருகையுடன் ! 224 பக்கங்கள் black & white-ல் எனும் போது டெக்சின் அதே template ! தவிர இந்தக் கதை நீளம் கிட்டும் போதெல்லாம் சாகோர் சரளமாய் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்க முடிகின்றது !! "கரம் கோர்த்த காரிகை" ஹிட்டடிக்க கூடுதலாயொரு காரணமுள்ளது - உடனிருக்கும் ஒரு யௌவன யுவதியின் புண்ணியத்தில் ! முழுநீள ஆக்ஷன் மேளா !! 

Before we wind up, இதோ - போனெல்லியின் இன்னொரு ஹிட் வரிசை - சமுராய்களின் புக் # 3 

ஆக மொத்தம் 30 புக்ஸ் சகிதம் சந்தா 2027 இனிதே நிறைவுறுகிறது ! இம்முறையும் இரண்டே சந்தாப் பிரிவுகளே !! மொத்த 30 புக்ஸும் வாங்குவதாயின் அது "மார்ஷல் சந்தா" ஆகிடும் and will cost Rs.6700. அதே சமயம் தேர்வு செய்யப்பட 18 முக்கிய புக்ஸ் போதும் என்பீர்களேயானால் - that will be "ஷெரிப் சந்தா' ! அதன் கட்டணமோ ரூ.4700. வெளி மாநிலங்களுக்கெனில் தலா ரூ.250 கூட்டிக் கொள்ள வேண்டும் ! இவை தவிர்த்த வேறு கூட்டணிகள் இந்தவாட்டி கிடையாது folks ! ஆக, நீங்கள் மார்ஷலா ? ஷெரீப்பா ? என்பது மாத்திரமே choice ! உங்களது தேர்வு ஏதுவாக இருப்பினும் - நமது அன்புடன் ஒரு சந்தா EXCLUSIVE ஆக, "காத்துவாக்கில் ஒரு கொலை" - கலரில், நமது அன்புடன் உண்டு ! "நாளை போய் நேற்று வா" கி.நா. நினைவுள்ளது தானே ? அதே இத்தாலியக் கதாசிரியரின் ஒன்-ஷாட் க்ரைம் த்ரில்லர் இது ! பிப்ரவரி '27 இதழ்களுடன் இந்த இதழ் சந்தா நண்பர்களுக்கு அனுப்பிடப்படும் ! 

நடப்பாண்டின்  சந்தாத் தொகையினை விட வெறும் நூறு ரூபாய்கள் மட்டுமே 2027-ன் சந்தா கூடிடுகிறது ! சந்தாத் தொகைகள் அந்த 6500 என்ற ரேஞ்சிலிருந்து நிரம்ப கூட்டிடக்கூடாது என்ற கட்டளையை முதலில் பிறப்பித்துக் கொண்டு, அடுத்த ஸ்டெப்பாக டோட்டலை முதலில் போட்டு விட்டு, அதனுள்ளே ஒரு கல்யாண வீட்டு ஜானவாசத்தின் திரளை நுழைப்பதற்கு சமானமானதொரு முயற்சி எனும் போது - "இவுக இல்லியா ?"...."அவுக இல்லியா..? " என்ற கேள்விகளும், விசனங்களும் எழும் என்பது அனுபவப்பாடம் ! So எப்போதும் போலவே உங்க மைண்ட்வாய்ஸ்களை வாசிக்கும் முயற்சியினை முன்னெடுத்து, பதில்களையும் சொல்லி விடும் - "கேள்வி by முட்டைக்கண்ணன் & பதில்கள் by முழியாங்கண்ணன் " section இதோ வருகிறது : 

வினா # 1 :

யோவ், இளவரசி எங்கே ? தொழிலதிபர்களும், டாக்டர்களும் கொந்தளிச்சா இன்னா ஆகும்னு தெரியும்லே ? 

பதில் : பேஷா தெரியும் ஓய்  ! அம்மணி இல்லாத வருஷம் புலரவாவது செய்யுமா ? 2027-ல் மாடஸ்டி உண்டு - இதோ ஊர்ஜிதம் !! 

இளவரசி மட்டுமல்ல, வேதாளர் மட்டுமல்ல, ரிப் கிர்பி  மட்டுமல்ல, மாண்ட்ரேக் மட்டுமல்ல, காரிகன் மட்டுமல்ல, விங்-கமாண்டர் ஜார்ஜ் மட்டுமல்ல - நமது 40 ஆண்டு நண்பர்களுமே  ஒரு க்ளாஸிக் தனித்தடத்தினில் 2027-ன் வாகானதொரு தருணத்தினில் ஆஜராகிடவுள்ளனர் ! 

வினா # 2 : ரிப்போர்ட்டர் ஜானி எங்கே மேன் ? 

வர்றாருங்கோ - மேலே குறிப்பிட்டிருக்கும் தனித்தடத்தில் !! Truth to tell - அந்த black & white புது ஒன்- ஷாட் த்ரில்லர் வேணுமா ? அல்லது கலரில் டபுள் ஆல்ப மறுபதிப்பு வேணுமா ? என்ற கேள்வியை நான் முன்வைத்ததே இந்த ஆல்பத்தின் திட்டமிடலுடன் தான் guys 👀.....! ரெகுலர் தடத்துக்குள் மறுப்பதிப்பை நுழைத்து குழப்பிக்காது இருப்பதும் நலமே என்று நானும் சொல்பேச்சு சிங்காரமாய் கீழ்ப்படிந்தேன் ! But கூட்டணி போட்டு வருவார்கள் நம்மவர்கள் - அடுத்தாண்டின் இறுதிக்கு முன்பாக - ஒரே இதழில் ; ஹார்டகவர் பைண்டிங்கில் !! ! வாட்சப் கம்யூனிட்டியில் இது குறித்த கோரிக்கைகளை நான் மறந்திருக்கலை folks !!

வினா # 3 : Thorgal அரோகராவா ? 

அப்டின்னு வெளிப்படையா சொல்ல முடியாது ; ஆனா ஒரு யூகமா சொல்லலாமோ ? விற்பனையில் ரொம்பவே திணறிடும் இந்த fantasy நாயகருக்கு இனி ரெகுலர் தடங்களில் பெரிதாய் இடமிராது போலும் ! முன்பதிவுத் தடங்களில் மட்டுமே இனி தோர்கல் களமாடுவார் - நீங்கள் மனசு வைத்தால் ! அங்கேயும் அவருக்கு பெருசாய் மவுசு இன்றிப் போகும் பட்சத்தில், நண்பர் சரவணகுமாரின் நினைவுகளில் மட்டுமே இந்த நாயகர் தொடர்ந்திடக்கூடும் ! 

வினா # 4 : மிஸ்டர் நோ என்ன ஆனார் நைனா ???  

இதோ விடை ரெடியா கீது மக்களே !!  

உள்ளதைச் சொல்வதானால் இந்த விளம்பரம் சற்றே மாற்றி அமைக்கப்பட்ட ஒன்று ! ஒரிஜினலாக அது இருந்தது இப்படியே !!

கொஞ்சம் ஆர்வங்களை நம்மாட்கள் மட்டும் அடக்கி வாசித்திருக்கும் பட்சத்தில் - இந்த அறிவிப்பினை  செய்திருப்போம் ! But புஸ்ஸு புஸ்ஸு என்று காற்று ஊதப்பட்ட பலூனாய் blog இன்றைக்குக் காட்சி தந்திட, ப்ராஜெக்ட் stands postponed a bit.😇 

வினா # 5 : சாம்பலின் சங்கீதம் மெரி ஏதேனும் உண்டோ வரும் ஆண்டிற்கு ?


👀👀👀👀

வினா # 6 : தடம் தடமாய், தனித் தனித்தடமாய் கூத்தடிப்பதற்குப் பதிலாக, ஒரே மெகா அறிவிப்பாய் செய்தாலென்ன ?

செய்யலாம் தான் மக்களே ; but எனக்கே அன்றைக்குக்  காலையில் கண்முழிக்கும் வரையிலும், நான் எந்த மரத்தில் ஏறப் போகிறேன் என்பதே தெரியாதே ?! Again சூழல்கள் மாறிக் கொண்டே செல்லும் போது அவற்றிற்கேற்ப திட்டமிடல்களையும் fluid ஆக வைத்திருக்கத் தேவைப்படுகிறது !  ! புத்தக விழாக்கள் ரெகுலராய்த் தொடர்ந்தால் அதற்கேற்ப ஒரு பிளானிங் ; இல்லாவிடின் இன்னொரு திட்டமிடல் ; முன்பதிவுகள் ஒர்க் அவுட் ஆவதை  பொறுத்த மாற்றங்கள் - என டிசைன் டிசைனாய் நம் முன்னிருக்கும் landscapes மாறிக் கொண்டே செல்லும் போது , நாமும் அதற்கேற்ப நெளிந்தும், வளைந்தும் செல்ல சுதந்திரம் அத்தியாவசியமாகின்றன folksSo இதுவொரு தவிர்க்க இயலா இடர் guys & இஷ்டத்துக்கு நாம் போடக்கூடிய இண்டிகேட்டர்களை யூகிப்பதுமே இந்தப் பயண ஜாலியின் ஒரு அங்கமல்லவா ? 

வினா # 7 : SODA ; மேக் & ஜாக் போலானோர் இன்னொரு வாய்ப்புக்குத் தகுதியற்றவர்களா ? இன்னா ரங்கா - ஜோக்காடுறியா ? ஜோக்கா ??  

நடப்பாண்டின் பயணப் பாதைகளும், அடுத்தாண்டின் திட்டமிடலின் முதுகெலும்புகளுமே மேற்படி வினாவுக்கான பதில்கள் தந்திட வேணும் என்பேன் ! உங்களது உரத்த, ஏகோபித்த குரல்கள் நம் செவிகளில் புகுந்திடத் தவறுவதே இல்லை ! Maybe அவை நடைமுறை கண்டிட சில காலமாகலாம் - but பெரும்பான்மையின் ஆதரவு இருக்கும் எந்தவொரு கோரிக்கையும் பலனின்றிப் போகாது !! ஓ.கே.வா ஸ்ரீதரன் சார் ? நாளைக்கா - நாளன்னிக்கா ? என்று கேட்காதீர்கள் ப்ளீஸ் ; FAB 5 ; TERRIFIC TEX தனித்தடங்கள் எல்லாமே பூர்த்தி கண்ட பிற்பாடே எதுவும் சாத்தியம்! So பொறுமை ப்ளீஸ்!


So இத்தோடு அட்டவணைப் பதிவு சுபமாய் நிறைவு காண்கிறது !! சர்வ நிச்சயமாய் ஆளுக்கொரு பார்வையில், ஆளுக்கொரு தீர்ப்பினை வழங்கிடுவீர்கள் என்பதில் no doubts !! ஆனால் சின்னதொரு அப்பத்தை கணிசமான பிள்ளைகளுக்கு பிய்த்துத் தர வேண்டிய தருணத்தில், சிக்கனம் அத்தியாவசியமாகிடும் தானே ? And "என் பங்கு சின்னதாய் கீது ; அவனுக்கு பெருசா அமைஞ்சிடித்து !!" என்ற விசனங்கள் எழலாம் என்பது உறுதி ! But please stay assured - உங்கள் ஒவ்வொருவரின் கோணத்திலிருந்தும் சிந்திக்க நிரம்பவே முயன்றுள்ளோம் ! 

இனி பந்து உங்கள் கோர்ட்டில் guys ; சடுதியாக சந்தா ரயிலில் சீட் புக் செய்து, எப்போதும் போலவே இந்தப் பயணத்தை ரம்யமாக்கிட கூப்பிய கரங்களோடு வரவேற்கின்றோம் !! உங்களது அன்பும், நேசமுமே சிக்கலான பொழுதுகளிலும் கப்பல் குடை சாயாது பயணிக்க உதவி வந்திருக்கின்றன !! காத்திருக்கும் 2027 ன் பயணத்திலும் அதே உத்வேகத்தோடு கரம் கோர்த்திட புனித மனிடோ அருள் புரியட்டும் - முதல் சீட்டே அவருக்குத் தானே ?!  Bye all...have a lovely Sunday & see you around !! 

And கிளம்பும் போது சின்னதாயொரு quiz !! Adios amigos !!! 

P. S : ரைட்டு, காத்திருப்பு ஓவர் & அட்டவணை கையில் - என்றான பிற்பாடு ஒருவித வெறுமை தோணவும் செய்யுமே - நம்மில் சிலருக்கு? "இன்னும் பெட்டராக பண்ணியிருக்கலாமோ நம்ம ஆந்தையன்?" என்று தோன்றிடவும் கூடுமே? அது வேறொன்றுமில்லை guys - பிரசவத்துக்குப் பிற்பாடான ஒருவித baby blues போலானதே தான்! தப்பு உங்கள் மீதும் நஹி, உங்களது எதிர்பார்ப்புகளிலும் லேது, என் மீதும் அல்லா!

கர்ப்பமான ஒன்பது மாதங்களுக்கும் ஒருவித excitement உள்ளுக்குள் குடிக்கொள்ளும் தானே? And தினமும் 'ஜுஸ் குடிச்சியாமா? வாக்கிங் போனியாமா? ஜாக்கிரதையா படியேறு மா...! ' என்ற ரீதியில் அன்பு மழை தொடர்ந்து பொழிந்து கொண்டே இருப்பதும் சகஜமல்லவா..? "பொண்ணு தான் பொறக்கும்...பேபி மமிதா பைஜு மெரி இருக்கப் போது...! இல்லே.. இல்லே... பையன் தான் - அதர்வா மெரி இருக்கப் போறான்...! என்றெல்லாம் நாளுக்கொரு கற்பனையில் சிறகடிப்பதும் அன்றாடம் தானே? Then one fine day, சுகப்பிரசவமும் ஆகி, 2.75 கிலோவில் ஒரு மகாராணியோ, ஒரு இளவரசனோ கையிலிருப்பார்.(நெச இளவரசன்ங்க - இங்கே சுத்திக்கினு இருக்கும் டப்சா - 2.75 கிலோலாம் இருக்கவாச்சும் முடியுமா ?) And ஒட்டுமொத்த உபசரிப்பும், அன்பும், கவனமும், புது வருகைக்கு மடை மாறிவிடும் அல்லவா? அந்த நொடியில் மகிழ்வும் , "ஷப்பா - பிரசவித்து விட்டோமே" என்ற நிம்மதியும் பிரவாகம் எடுத்தாலும் , மம்மிக்கு ஒருவித வெறுமை சூழுமாம்! நேற்று வரை தொடர்ந்த அந்தப் பரபரப்பு இனி இராது ; இன்று முதலாய் சிறுகச் சிறுக யதார்த்த வாழ்விற்குத் திரும்பிட வேணுமே என்ற புரிதல் புலர ஆரம்பிப்பதன் பலனே அந்த வெறுமையாம் ! பிழையென்று அங்கு யார் மீதும் இராது - yet ஒரு சன்னமான empty feeling இழையோடுமாம்! 

அட்டவனை எனும் புது பேபியை உருவகப்படுத்தியது நானாக இருந்தாலும், இங்குள்ள ஒவ்வொருவருமே மம்மி ஸ்தானத்தில் இருந்து, இதைக் கர்ப்பமாய் சுமந்து, இன்று இறக்கி வைத்திருப்பர் என்பதில் எனக்கு ஐயங்களே கிடையாது ! So இந்த நொடியில் உற்சாகம், சந்தோசம், ஆரவாரம் என்பதோடு ஒரு இனம் சொல்ல இயலா வெறுமையும் குடி கொண்டிருப்பின், தப்பே இல்லை மக்களே! புது மம்மியாக yet another time ஒரு புது அட்டவணையினை பிரசவித்துள்ளீர்கள்....! And this is the subsequent baby blues ! மறுக்கா பிள்ளையை ஏந்திக் கொஞ்சுங்கள் - எல்லாமே சரியாகிடும்!! 😎😎

174 comments:

  1. Netflix-ல் *Dorothy* பார்த்துக்கொண்டிருந்தேன். இரும்புக்கை மாயாவி பற்றிய குறிப்பு வந்தபோது, என்னை அறியாமலேயே ஒரு புன்னகை வந்துவிட்டது! 😊nnமெயின்ஸ்ட்ரீம் திரைப்படங்களில் நம்ம தமிழ் காமிக்ஸ் பற்றிய குறிப்புகள் வருவது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது! ❤️

    ReplyDelete
    Replies
    1. ஆனா லோகோவை மறைச்சிடுவாக படைப்பாளிப் பெருமக்கள் 🥹🥹

      Delete
    2. நான் தியேட்டர்ல பார்த்த போது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது நண்பா. இனி 80களின் தமிழ் வரலாறு எழுதப்படும் போது இளையராஜாவோடு இரும்புக்கை மாயாவியும் இணைந்து ஆகிவிடுவார்.

      Delete
    3. @vijayan விடுங்க சார், அதுவும் ஒரு Illuminati சதி! 😂

      Delete
  2. அருமையான அறிவிப்பு . 2027 க்காக காத்திருப்போம்🥰🥰🥰🥰

    ReplyDelete
  3. ரிப்போர்ட்டரை காணோமே என பதை பதைத்துக் கொண்டே இருந்த மனது கடைசியில் இடம் பிடித்து சிக்ஸர் அடித்து விட்டார் 🙏🙏🙏

    ReplyDelete
  4. Replies
    1. படிச்சாச்சா சார் முழுசும்?

      Delete
  5. சார் முழுதும் படிச்சிட்டு தான் எனும் என் வேகத்தை மட்டுபடுத்துது ....கார்சனின் கடந்த காலம் தாகம்.....இப்படியோரிதழா.....அடுத்த மாதமே வாராயோ....விரைவில் வருகிறார் டெக்ஸ் வில்லர் என 80 கமில் அறிமுகம் தந்து அதே உற்சாகம்....அடுத்த இதழ் என்னன்னு வாங்கியதும் புரட்டிய மனதுக்கு ஸ்பைடர் ஆர்ச்சி இரும்புக் கை மாயாவி...லாரன்ஸ் டேவிட் இருந்தா...தந்த அதே மகிழ்ச்சி....மீண்டும் வாய்ந்த அந்த தருணம்...வேற லெவல் வெளியீடு500....அடே சொக்கா அத்தனையும் தங்கமா....சூப்பர் சார்...கால் தரையில் பதியல எனக்கே...வாழ்த்துக்கள் ஆயிரம் மயில்களாய் செந்தூரான் அருளுடன் மாற

    ReplyDelete
  6. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  7. ரிப்போர்ட்டர் ஜானியின், "இரத்தக் காட்டேரி மர்மம்" மறுபதிப்புக்கு நன்றி !

    ReplyDelete
  8. இரத்த காட்டேறி மர்மம்
    பணி மண்டலக் கோட்டை
    சிக்பில் கிளாஸிக் சூப்பர் சூப்பர் ஆசிரியரே

    ReplyDelete
  9. கார்சனின் கடந்த காலம் அடுத்த அத்தியாயம் wow உண்மையிலேயே டைனைமைட் ஆசிரியரே

    ReplyDelete
  10. வாவ். வாசித்து விட்டு வருகிறேன். உடனே பகிர்ந்த நண்பர் திரு.சாய்பாபு அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  11. சார் டேங்கோ வேட்டை மறவா வல்லூறு கள் போன வாரம்தான் கையில் எடுத்தேன்...என்னா வேகம் ....கீழ் பட்னா வச்சா இடிச்சிடுவமோன்னு பயந்து பிரேக் பிடிக்காம ஓடியது அந்த அழகான பக்கங்களுக்காகவுமே

    ReplyDelete
  12. முடியாது..முடியாது..ஒத்துக்க முடியாது. வேண்டும்..வேண்டும்..வேதாளர் வேண்டும்.
    வேண்டும்..வேண்டும்.. மாடஸ்தி வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சரிங்கண்ணா... பதிவ படிக்க தான் செய்யல... பொம்ம படமாச்சும் பாக்கலாம்ல?

      Delete
  13. மொத்தம் 33 நிமிடம் ஆனது சார்.

    ReplyDelete
    Replies
    1. 🥹🥹🥹 டைப் பண்ண எவ்ளோ நேரம் பிடித்திருக்கும் என்று guess சார்?

      Delete
    2. 3 மணி நேரம் சார்.. Layout செய்ய 30 நிமிடம் சார்

      Delete
    3. சான்ஸே இல்லை சார் 🤕🤕

      Delete
  14. ஸ்டெர்ன் அந்த ஓவியங்கள் கடத்திய உணர்வுகள்....அந்த வந்தேறி எனும் வலிகள் அதன் ஓலங்கள்...ம்ஹும்....

    ReplyDelete
  15. வாவ்...காலையிலேயே சுடச்சுட பதிவு...சூப்பர் சார்...வாசித்து விட்டு...:-)

    ReplyDelete
    Replies
    1. தலீவரே.... இப்போ தானா விடியுது? வாட் இஸ் திஸ்?

      Delete
  16. Missing தாத்தாஸ்.. இன்னும் இந்த தொடரில் எத்தனை உள்ளது சார.

    டியூரங்கோ இன்ப அதிர்ச்சி

    Stern - very happy அண்ணாச்சி

    Saguaro ???

    ReplyDelete
    Replies
    1. தாத்தாஸ் லைவ் தொடர் சார் - 9 ஆல்பங்களைக் கடந்து தொடர்ந்து கொண்டுள்ளது! அதை ரெகுலர் சந்தாவில் ஒருக்காலும் எதிர்பார்க்க வாய்ப்பில்லை சார்!

      Delete
  17. போன வருடத்து அட்டவணைய விட இந்த வருடத்து அட்டவணை பெட்டரா இருக்கற மாதிரி பீலிங்குங்கோ.

    கிட் ஆர்டின் ஸ்பெசல், மிஸ்டர் நோ ஸ்பெசல், ஜானி ஸ்பெசல் எல்லாமே 2027 ல் கட்டாயம் வோணும். மறுபதிப்பு கதைகள் நாலுமே அற்புதமான கதைகள். ஏற்கனவே க. வெ. யில் வெளிவந்த அத்தனை கிட்ஆர்டின் கதைகளையும் ஒரு குண்டு புக்கா போட்டாலும் வாங்க நான
    ரெடி.

    அப்பறம் அடுத்த வருசம் டெர்ரிபிக் டெக்ஸ் சீசன் 2 உண்டு தானே?

    ReplyDelete
    Replies
    1. மொத சீசனை முடிச்சிக்குவோம் சாரே மொதல்ல 🥹

      Delete
  18. இன்று பதினோரு நாளாக ஒரு குழந்தையை பதைப்புடன் தேடி திரியும் போது...குழந்தையோடு வரும் பூனையார் கிடைத்து விட்டது என சந்தோ....சத்தை கூட்டுறார்...லிங்கனும்...ஒல்லிப் பிச்சானும்...ஷிநாபாவுமே

    ReplyDelete
  19. எனது எல்லா விருப்பங்களையும் இந்த அட்டவணை 2027 நிறைவு செய்து விட்டது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  20. சார் இரட்டை வேட்டையர் ஜான் மாஸ்டர் யார் அந்த மினி ஸ்பைடர் இவங்கெல்லாம் புத்தக விழாவிற்கு இந்த முறையாவது விஜயம் செய்வார்களா

    ReplyDelete
  21. 13 யார் வரைந்தாலும் அழகாய் வரும் 13.... வான்ஹாம்மே மீண்டும் எனும் போது....அடடா....அந்த ஜீடித்தயும் கொஞ்சம் ஒட்டு போட்டு

    ReplyDelete
  22. பௌன்சரை விட அண்டர் டேக்கரை தேடும் மனதுக்கு ....அடுத்த வருடம் என தள்ளி போவதும் அழகே விளம்பரம் பார்த்து...அந்த என் ஷாட் பேயா....ஆஹா....ரெட் கன் படிக்கலன்னு நினைக்கிறேன்...வைல்ட் கேட் அழகு

    ReplyDelete
  23. அதகள அட்டவணை. 2027 அனல் பறக்கப் போகிறது என்பது பட்டியலிடப்பட்டிருக்கும் நாயக நாயகியர் வரிசைகளைப் பார்த்தாலே தெரிந்து விடுகிறது.. தொடரட்டும் இந்த வெற்றிச் சரிதம்.. அனைத்து ஆங்கிளிலும் நிறைவான 2027 சந்தா மற்றும் அதிரடி ஆட்டங்களின் தொகுப்பாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள் அன்பு ஆசிரியருக்கும் டீமுக்கும் வாசக செல்வங்களுக்கும்..லயன் பீடு நடை போடும் பொன்னான தருணத்தைக் கொண்டாடுவோம்..

    ReplyDelete
  24. Replies
    1. சிஸ்கோ நினைவுக்கு வாரார்...ஜெயில்லருந்து எப்ப அவர் விடுவிப்பீங்க எனும் மில்லியன் டாலர் கேள்விகளுடன்

      Delete
  25. Hi editor sir,
    Vanakam !

    For me to complete , it took me 40 minutes.
    Next year attavanai is simply awesome! I mean it sir.
    As like everyone I was also eagerly waiting for this.
    I liked it and happy that classic hero’s will continue next year .

    ReplyDelete
    Replies
    1. க்ளாசிக்ஸ் ரசிக்க ஒரு அணி இருக்கும் வரை, vintage நாயகர்கள் தொடர்வார்கள் சார்!

      Delete
  26. அருமை அருமை அருமை...

    Durango

    Bouncer

    தங்கத் தலைவன்...

    2027 அடி தூள்...

    So happy...

    😘😘😘😘😘

    ReplyDelete
    Replies
    1. Belgian Brothers விட்டுட்டீங்க சார் 🤔

      Delete
  27. பெல்லோ ஈர்க்க...நம்ம டைலன் அழகாய் விளம்பரம் கவர்...மார்ட்டினும்...சாமுராய் முதல் கதை போன வாரம் படித்தேன்....இரண்டாம் பாகம் தொடர குறுக்கீடுகள் வேற லெவல் கதைகள் ...இலவச சந்தாவும் வழக்கத்தை விட எதிர் பார்ப்பதை எகிற வைக்கும் தேர்வுகள்....ஒன்று கூட சோடை போகாது

    ReplyDelete
  28. வந்துட்டேன். இனி தான் படிக்க வேண்டும்

    ReplyDelete
  29. சந்தா போட்டாச்சு சார்! நல்ல கதைத்தேர்வுகள்,தனித்தட அறிவிப்பு களுக்காக வெயிட்டிங்

    ReplyDelete
  30. ஒரே ஒரு குறை சார். பவுன்சர் மற்றும் பேய் காத்த புதையல் தவிர்த்து மீதி எல்லாமே AI. அந்த கதையின் ஓவியங்கள் அறிவிப்பில் இருந்து இருந்தால் இன்னமும் அட்டவணையுடன் ஒன்றி இருக்க முடியும் என்பது எனது கருத்து. தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. AI பின்னணிகள் மட்டுமே சார் - பெட்டிகளுக்குள் உள்ள படங்கள் கதைகளில் இருந்தே...

      Delete
  31. ஒரே ஈடு செய்ய இயலா இழப்பு தோர்கள்னா....நோ விழி பிதுங்கி செய்ய...உடனே துள்ளி குதிக்க வச்சது 800....அடடா...வேற லெவல்....காற்றோடு கரைந்திடு தலைப்பும் படமும் என்னமோ செஞ்சு வசீகரிக்குது...சீக்கிரமா வந்தா தேவலாம்

    ReplyDelete
  32. வணக்கம் அனைவருக்கும்.

    ReplyDelete
  33. அட்டவணையை படிக்க ஆன நேரம் 40 நிமிடங்கள். பல அறிவிப்புகள் வாவ் சொல்ல வைத்தது. லயன் 500, முத்து ஆண்டு மலர், டின்டின் இரண்டு இதழ்கள், ரூபின், டேங்கோ இணைந்து வரும் இதழ், Blacksad, வைல்ட் கேட், ரெட் கன் என்று எல்லா அறிவிப்பும் அருமை.

    ReplyDelete
  34. குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...

    என சொல்ல தோன்றுகிறது சார்...

    முழு திருப்தியான அட்டவனை...

    ReplyDelete
  35. அதே சமயம் அட்டவனை புகைப்படங்களில் ஏஐ சித்திரப்பபுகைப்படங்கள் வழக்கமான ஓவிய பாணியின் விளம்பரங்களை போல் ஓர் நெருக்கத்தை ஏற்படுத்த தவறுவது போல் ஓர் எண்ணம் சார்...

    ReplyDelete
  36. எல்லாம் இருந்தும் ஏதோ குறை மனதில்....ஆனால் வெகு சிறப்பான தேர்வுகள்...போதாது எனும் மனதை பொறுக்க வைக்குமா சந்தோச ஆர்ட்டின் ஈரிதழ்கள்...நன்றிகள் சார்...அதிரடி இதழ்கள் ஆங்காங்கே தலைதூக்கி ஏக்கத்தை பூர்த்தி செய்யட்டும்

    ReplyDelete
  37. சிக்பில் க்ளாசிக்...ரிப்போர்ட்டர் ஜானி க்ளாசிக் செம மகிழ்ச்சி என்றால் மிஸ்டர் நோ 800 + பக்க கதையா நம்ப முடியாத ஆச்சர்யம் சார்....சூப்பர்...

    ReplyDelete
  38. அட்டவனை முகப்பு அட்டையில் முதல்முறையாக தல டெக்ஸ் இல்லாமல் வெளியிடுகிறீர் சார்...ஆமாம்...இது சரி இல்லை சார்...:-)

    ReplyDelete

  39. But this year attavanai is really awesome.
    I could see some heros who introduced last year are continuing red gun and others

    Captain prince reprint is surprise sir .
    Also the XiII

    ReplyDelete
  40. 2027 அட்டவணை சிறப்பாக உள்ளது ஐயா...! முடிந்த வரையில் எல்லா தரப்பினரையும் திருப்திப்படுத்தும் தேர்வுகள்!

    ஒரு வேண்டுகோள் - 13ன் 13வது மர்மத்தையும் 14 உடன் சேர்த்து போட்டு விடுங்கள்.

    ஒரிஜினல் ஆசிரியர் வான் ஹாம் உள்ளே வந்திருக்கிறார் எனும் போது, வேறு எதையும் யோசிக்கத் தோன்றவில்லை...!

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஸ்பூன்லிங் இதழ் சார் நிறைய இடங்களில்... 🥹🥹

      Delete
  41. பதிவை வாசித்து முடிக்க சரியாக 35 நிமிடங்கள் சார்....காலை ஆரம்பமே மகிழ்வு தான்...மிக்க நன்றி சார்....

    ReplyDelete
  42. கதை தேர்வுகள் பிடிச்சுருக்கு

    ReplyDelete
  43. எட்டு மணிக்கு தான் பதிவு என்று நினைத்து தூங்கிவிட்டேன். 7.35 எந்திரிச்சி பார்த்தால் அட்டவணையும் வந்துவிட்டது. நண்பர்களும் ஆஜர். சந்தோஷம். முழுதாய் படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  44. எல்லா கட்டங்களையும் டிக் அடிக்கும் நிறைவான அட்டவணை சார்!!!

    75% sure shot கதைகள்.. 25% புதிய மற்றும் experiment..

    கிளாசிக் தனித்தடம்.. முன்பதிவு தனித்தடம்... புத்தக விழா ஸ்பெஷல்...

    அட்டகாசமான ஜெயிலர் 2 ஃபார்முலா !!!

    ReplyDelete
    Replies
    1. நாமளும் படிச்சுப்புப்போம்லே 😎

      Delete
  45. அடடே... சர்ப்ரைஸ்...
    இந்த வாரமே அட்டவணைப்பதிவு...
    (நான் அடுத்த வாரம் வரை காத்திருந்தேன் ... ஒரு சோகம் தான்... அடுத்த வருடம் 6 மாதம் கழித்து எப்படி இதழ்களை பெறப் போகிறேன் என்று...
    பணி ஓய்வு...அதன் பின்னர் யாதும் ஊரே ... யாவரும் கேளீர் ...
    என்று எங்கு இருப்பேன் என்றே
    தெரியாத குழப்பம்...)
    அட்டவணை AI உபயத்தில்
    தெறி ரகம்...
    இவர்கள் எல்லாம் வருவது தெரியும் தானே என்று புன்னகையுடன் படிக்கும் போது
    இன்ப அதிர்ச்சி x 111 டியூராங்கோ டைகர் சிக்பில் தனியாக என்று...

    ReplyDelete
    Replies
    1. அட, நம்ம செட்டா நீங்க 😎

      Delete
  46. வணக்கம் சார். மார்ஷல் சந்தா மகிழ்ச்சி.

    ReplyDelete
  47. Missing Gen z....but can understand...
    Durango and Bouncer feels good

    ReplyDelete
  48. அப்றம் இன்ன இன்னாரை
    காணோமே என்று சோக கீதம் (மாடஸ்டி ii ரிப்ஜானி ) பாடலாம் என்றால் அதிலும் இன்ப அதிர்ச்சி ...
    மாடஸ்டி உண்டு...
    ரிப்ஜானி உண்டு
    கூடுதல் போனஸாக கேப் பிரின்ஸ் ம் உண்டு ...
    அதையும் தாண்டி சிக்பில் க்ளாஸிக் ...
    மிகவும் சிறப்பு...
    சூரீ சொல்ற மாதிரி "நம்ம ல்லாம் சொன்னா யாரு கேட் பாங்க... சிரிச்சிருவாங்க... " ன்னு
    மனசுக்குள்ளேயே நினைத்துக் கொண்டிருந்தது ... வடிவம் கிடைத்துவிட்டதே சார்...
    அதாவது நமது இதழ்களின் ஹீரோக்களின் முதல் இதழ்களை ஒரு பேக்கேஜ் ஆக வெளியிட கோரலாமே என்றிருந்தேன்..
    மூன்று இதழ்களை அறிவித்து விட்டீர்கள்...
    இனி மீதி இதழ்களையும்
    பரிசீலிக்கலாமே சார்...
    1 மாடஸ்டியின் கத்தி முனையில் மாடஸ்டி (+ மாடஸ்டி in இஸ்தான்புல்)
    2 ஸ்பைடர் "எத்தனுக்கு எத்தன்..
    3. ஆர்ச்சி முதல் சாகசம்
    4. லக்கிலூக் "சூப்பர் சர்க்கஸ் (மட்டும்)
    5. சிக்பில் அதிரடி மன்னன் ...
    6. மர்ம சவப்பெட்டிகள் ப்ரூனோ பிரேசில்...
    7. ரிப் ஜானி
    8. கேப் பிரின்ஸ்
    9 டெக்ஸ்வில்லர் - (தலை வாங்கி குரங்கு)
    B&W லக்கிலூக் சைஸ் ( பக்கத்திற்கு 6 கட்டங்கள் தான் )
    இதில் பாதி அறிவித்து விட்டீர்கள் ... மீதியையும் அறிவித்தால் சிறப்பாக இருக்கும் சார்...

    ReplyDelete
  49. Reporter Johnny மற்றும் கிட் ஆர்டின் classic titles reprint பண்றது ஒரு sweet surprise! 😍

    Mister No Mega Sagasam-க்கு மரண waiting! Colour-ஆ / B&W-ஆன்னு கேட்டா, எனக்கு Black & White தான் வேணும்!

    சார், Agent Robin என்ன ஆனார்?2025 Deepavali-க்கு வந்த Saravedi Robin!
    300+ page Tex train sagasam, அதுவும் Nizzi–Ortiz கூட்டணியில வர்ற title-ஐ எவனாச்சும் தொட்டுப் பார்க்க முடியுமான்னு இருந்தப்போ, வந்தாரு நம்ம Dancing Rose Robin slip cover-ல! Vera level tough kudukka!

    2026-லயும் ஒரே ஒரு ending story மட்டும்தான் வந்துச்சு! Very disappointed to see Agent Robin missing out!

    ஆனா, பகல் நேரத்துலயே torch அடிச்சுப் பார்த்த Red Gun artwork-க்கு இன்னொரு chance!

    Once again, classic list-ல கழுவுற மீன்ல நழுவுற மீனா காணாம போனார் Lawrence and David!


    ReplyDelete
  50. டைகர் கதை சாய்ஸ் சூப்பர்

    ReplyDelete
  51. அட்டவணை 2027 வந்ததே! மனசு நிறைந்த காதைகளை அள்ளி வந்ததே.....

    ReplyDelete
  52. Any option to pay subscription amount in two terms .

    ReplyDelete
  53. Loving the package and all the stories. Waiting for special releases too... Thanks for bringing in all the nostalgic flavors and New Gen releases. One kind request, if you can get in any 1 detective series or characters - spy kids kind - it might attract young readers. The suggestion was given by my daughter of grade 11. Do consider as they find the words from our comics are at times making them loose the plot.

    I am very happy with the choices 🥰

    ReplyDelete
  54. Capt prince கதை எதுவும் பாக்கி இல்லையா

    ReplyDelete
  55. வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  56. மேக்ஸி சைஸ் டெக்ஸ் சாகஸம் அடுத்த வருடம் இல்லையா, சார்
    விசம் அடுத்த வருடமும் இல்லையா, சார்

    ReplyDelete
  57. As there will be UPI charges above 2000 from Nov (likely) any plan for subscribers to split and pay .or Neft is the only option to avoid it

    ReplyDelete
    Replies
    1. That will be on the vendor நண்பரே... Not on you...

      Delete
  58. Replies
    1. அட்டவணையில் எந்த நெருடலும் இல்லை. இது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

      அட்டவணையில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த one ஷாட் action thriller in maxi size

      AI உதவியுடன் வடிவமைக்கப்பட்டது தான் ஒரு சிறு உறுத்தல்.

      Delete
  59. அனைவரையும் திருப்திப்படுத்திய அட்டவணை இது.
    யார் யார் என்னென்ன கேட்டாங்களோ அத்தனையும் இந்த அட்டவணைகள் இருக்கு
    500 ஆவது இதழ் 43வது ஆண்டு விழா டெக்ஸ் வில்லர்
    Super sir

    ReplyDelete
  60. சார், 2027-ல Nizzi–Ortiz கூட்டணியில் வரும் Tex கதைகள் இருக்கா?

    ReplyDelete
  61. Stern அடுத்த வருடமே தலை காட்டுவதில் மகிழ்ச்சிகள் பல

    ReplyDelete
  62. அட்டவணையில் பெரிதாக எந்த குறையும் இல்லை சார் . இது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது..

    Apart from BIG T S ரூபின், டேங்கோ ,ரெட் கன், வைல்ட் கேட், ப்ளாக் சாட் , STERN , DURANGO , BOUNCER , DYLAN , MARTIN , ZAGOR வருவது மகிழ்ச்சி ..

    MORE OF கிட் ஆர்டின் வருவது மகிழ்ச்சி(CLASSIC REPRINTS AND NEW ) ..

    XIII வருவது பற்றி சொல்ல தெரியவில்லை .. வான் ஹாம்மே என்பதால் ஓகே தான் .. கிராபிக் நாவல் மாக்ஸி சைஸ்ல் வருவது எதிர்பார்ப்பு ..

    அறிமுகங்கள் பற்றிய ஒன் லைன் எதிர்பார்ப்பு உருவாக்கி உள்ளது ..
    இந்த வருடம் வரும் என்று சொன்ன ப்ருஸ் hawker கதை எப்போது வருகிறது சார் ..

    சோடா, THORGAL மற்றும் மேக் அண்ட் ஜாக் இல்லாதது ஏமாற்றமே .. சோடா கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன் .. BUT U VE TOLD THERE S TILL CHANCE FOR THEM ..

    BELGIAN BROS SPECIAL IS SURPRISE SIR .. GOOD MODESTY HAS BEEN SENT TO CLASSIC CATEGORY .. ONE SLOT S SAVED ..

    WAITING FOR MR.NO MEGA ISSUE புக்கிங் அறிவிப்பு ..

    சந்தா EXCLUSIVE புக் IS A VERY GOOD MOVE SIR .. HOPE IT STAYS EXCLUSIVE ONLY FOR சந்தாதாரர்கள் ..

    OVERALL A VERY GOOD SELECTION OF STORIES , GENRES , HEROES TO SATISFY ALL SIR ..

    ReplyDelete
  63. இந்த ஆண்டு சந்தா இணைப்பாக, சந்தாதாரர்க்கு வருவதாக இருந்த காமென்சே வந்து விட்டதா.

    ReplyDelete
  64. புத்தக விவரங்களின் தயாரிப்பு அருமை.

    எனக்கு இருக்கும் ஒரே கவலை, டெக்ஸ் வில்லரின் 9 புத்தகங்கள் போதுமானதாக இல்லை என்பதுதான்.

    கார்ட்டூன்களுக்குப் பதிலாக, கூடுதலாக 3 டெக்ஸ் வில்லர் இடங்களை நாம் சேர்க்கலாம்.

    கார்ட்டூன் புத்தகங்களுக்குத் தனிச் சந்தாக்களை அறிமுகப்படுத்தலாம்.

    ReplyDelete
  65. சிறப்பான தேர்வுகள், திருப்தியான அட்டவணை 2027, cowboyகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், பல வருடமாக எதிர்பார்த்த classic நாயகர்கள், குறிப்பாக எனது ஃபேவரிட் சிக் பில் இன் அதிரடி மன்னன், அதிரடி அட்டவணை. Welcome 2027

    ReplyDelete
  66. வாவ் 2027 ... 😍🤩🥳🥰😘💥💢✨🌟⭐💫⚡

    💯%🔥

    இத்தினி வருசத்தில ?? இந்த வருசம்தான் மக்காஸ் கேள்வி கேட்கப்பிடாது & மூ.ச க்கு கூட்டிட்டு போய்டக்கூடாதுன்னு தெளிவா முடிவெடுத்து அருமையான கதைத்தேர்வுகளை கொடுத்திருக்கீங்க பாஸ் .. ஹேண்ட் ஷேக் பண்ணணும் கைய கொடுங்க பாஸ்..
    என் கையை நானே கிள்ளிப் பார்த்துக்கறேன் ..
    இது நெசம்தானான்னு ..

    அப்புறம்
    ஸாரே ..
    எந்தெந்த மாசம் எந்தெந்த புக்கு வருமுன்னு முன்னாடியே இன்னொரு லிஸ்ட் 🧾 போட்டிட்டா நெம்ப சந்தோசமா 💥💥 இருக்கும்ல ..

    கதைத்தேர்வுகளுக்கு 10000 க்ளாப்ஸ்🎉🎊 ஸாரே .. 👏👏👏

    ( பி.கு :

    மீ : இரும்பு கையாரை காணோம் .. டைகர் 🐅 கதைக்கு விலை கொஞ்சம் அதிகம் போல தெரியுது .. 🤔

    மு.👀 / மு.👀 : அதாம்லே போன வருசத்த விட இந்த வருசம் 💯/- ஓவா அதிகம்ன்னு சொன்னோம்ல அந்த 💯/- ஓவாதாம்ல இது.. சாட. மாடயா சொன்னா புரிஞ்சுக்கங்கப்பு 😤

    மீ : பிரிஞ்சூ சார் பிரிஞ்சூ .. 😉😉) Fun Only ..

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. அப்புறம் சாந்தாவ .காட்டுறதுக்கான வாய்ப்புகள ரெண்டா , மூணா , நாலா பிரிச்சு கொடுப்பிங்கதானே சாரே

    ReplyDelete
  70. மிகமிக திருப்தியான அட்டவணையாக எனக்கு தொன்றுகிறது சார்.சத்தியமாய் சொல்வதாக இருந்தால் கதைத்தேர்வுகளும்,ஹீரோக்களின் தேர்வுகளும் பிரமாதம் சார்.அதிலும் கார்சனின் கடந்தகாலம் கதையின் அடுத்த அத்தியாயம் இருப்பது நிஜமாகவே சர்ப்ரைஸ்.. (பார்க்கலாம்..இதிலாவது கார்சனுக்கு ஏதேனும் 'நல்லது' நடக்குதான்னு)அடுத்த சர்ப்ரைஸ் சிக்பில்&கோ-வின் சூப்பர்ஹிட் கதைகளின் மறுபதிப்பு.மற்றும் நம்ம ரிப்போர்ட்டர் ஜானியின் அட்டகாசமான கதைகளின் மறுபதிப்பு... சந்தோஷத்துக்கு அளவே இல்லை போங்கள்.

    ReplyDelete
  71. XIII + Van Hamme அதிரடி வருகை... 🤩🤩🤩
    Judith Warner தொங்கலில்... 😕

    Bouncer Bouncing Back.. 😘😘😘
    Undertaker missing out.. 😭

    இளவரசி, ரூபின் இருவருக்கும் ஒரு slot.. 😍😍😍

    Bernard Prince + Reporter Johnny... கலரில், Hardcoverல்...
    தெய்வமே..!
    தெய்வமே...!!
    நன்றி சொல்வேன் தெய்வமே...!!!
    🙏🙏🙏🥹🥹🥹

    Castofiore Emeralds எனனளவில் weakஆன ஆங்கில வெர்ஷன் காமெடி... உங்கள் நகைச்சுவை எழுத்தில் கண்டு களிக்க ஆவலுடன் waiting...

    Red Sea Sharks.. பாட்டாசான கதை... அதிரடி action.... 💥💥💥

    Stern, Blacksad, Tango தங்கள் இடங்களை தக்க வைத்ததில் ஆச்சர்யம் இல்லை...👍👌🏼👌🏼

    Redgun, Wild cat இரண்டாம் இன்னிங்கஸ்க்கு ஆவலுடன் waiting... 😻😻😻

    Saguaro missing எதிர்பார்க்கவில்லை... But OK.. ஹார்ஸ்ஸ் ஃபார் கோர்ஸஸ்...

    Tex பத்தி பெரிதாக கூறவேண்டியதில்லை.. உள்ளங்கை நெல்லிக்கனி.. கலரில், hardcoverல் Tex வருவது double மகிழ்ச்சி... 🏆🏆🏆

    Classicsஐ பொருத்தவரை...

    1. Rip
    2. Corrigan
    3. Spider 2.0
    4. Steel Claw 2.0
    இவற்றை எதிர்பார்த்து... 🥳🥳🥳

    Nic Raider missingஆ...!?
    இல்லை நான்தான் miss பண்ணிவிட்டேனா..!? 🤔

    மொத்தத்தில்... பல வருடங்களுக்குப் பிறகு... மிக மிக மிக நிறைவான சந்தா அறிவிப்பு..

    பல முறை classics இருந்தால் புதியவை அடிபடும்... புதியவை இருந்தால் classics பின்வாங்கும்... ஆனால் இம்முறை மிக மிக perfect combination...

    Tyler Cross, Bonnie&Clyde (இதான் முதல்ல தோணுச்சு), பார்ப்போம் new entries எப்படி போகுதுன்னு... 👍

    PS: SODA, Undertaker எதாவது சந்துல சிந்து பாடமுடியுமான்னு try பண்ணி பாருங்க சார்... 🙏

    ReplyDelete
  72. ஜானியின் "ரத்தக் காட்டேரி மர்மம்"
    பிரின்ஸ் இன் "பனி மண்டலக் கோட்டை " !இரண்டும் எதிர் பார்த்தவை. இணைந்தே வருவதில் மகிழ்ச்சி!. திருப்தியான அட்டவணை!

    ReplyDelete
  73. பூதக் கண்ணாடி வச்சு குறை கண்டு பிடிக்க, தேடியதில் கிங் ஸ் ஸ்பெசல் அட்டையில் ( 'யெஸ் அட்டையில்!' )'சார்லி' காணோம்

    ReplyDelete
    Replies
    1. எனக்கே தெரியாம கிங்ஸ் ஸ்பெஷல் அட்டையை யாரோ போட்டிருக்காங்களோ 🤔🤔

      Delete
  74. கிங்ஸ் ஸ்பெசல் வில் இளவரசி இணைந்ததில் திருப்தி

    ReplyDelete
  75. லயன் ஆண்டு மலர் டெக்ஸ் கதையை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். எப்போது அட்டவணையில் இடம் பிடிக்கும் என எதிர்பார்த்த இதழ் சார்.

    85% ok, திரும்பவும் இந்த வருடம் அண்டர்டேக்கர் இல்லை!!! விஷம் எப்போது சார்?

    கார்ட்டூன் தனித்தடம் லேது?

    ReplyDelete
    Replies
    1. //கார்ட்டூன் தனித்தடம் லேது?//

      வாசிக்க ஆள் வேணாமா சார்?

      Delete
  76. ஆஹா..... மனம் நிறைந்துஉள்ளது 2027 அட்டவணை அறிவிப்புகளால். Editor இப்படி தீபாவளி மற்றும் New year கான Sweet ஐ advance ஆக எங்களுக்கு கொடுத்ததின் மூலம் வெற்றி பெற்று விட்டார். 😍🥰👍🤝

    ReplyDelete
  77. 2027 அட்டவணையில் எனக்குள்ள சில மனக்குறைகள்
    ஒன்று அண்டர்டேக்கர் இல்லாதது.
    இரண்டு காமெடி ஜோடிகள் மேக் ஜாக் இல்லாதது.

    ReplyDelete
    Replies
    1. மேக் & ஜாக் தான் பரணுக்குப் போய் வருஷம் 2 ஆச்சே சார்? அதைத் தேடுவானேன்?

      Delete
  78. நிரம்ப மகிழ்ச்சி சார்.

    ReplyDelete
  79. The Terrific Tex தனித்தடத்தை தொடரவும்

    ReplyDelete
  80. சூப்பரான அட்டவணைக்கு பாராட்டுக்களும் - வாழ்த்துக்களும் சார்👌❤️💐👏👏👏👏👏.

    நிறுத்தி நிதானமாக -
    சரியாக வடிகட்டி,
    தேர்ந்தெடுக்கப்பட்ட பெஸ்ட் ஆப்ஷன்ஸ் அட்டவணை.

    கடந்த சில வருசம் வரவேற்பு கிடைக்காத ஹீரோக்களை ஒரங்கட்டியது மட்டுமின்றி,
    அதற்கு பதிலாக புதிய கதைகளை இறக்கி விட்டு, ஓரம்கட்டிய ஹீரோக்களுக்கு ஸ்பெஷல் தனித்தட அறிவிப்பு நல்ல ஐடியா.

    ப்ளாக்ஸாட்க்கு ஒரு இடம்,
    மீண்டும் பெளன்சர்,
    அதிரடி ரெட்கன்க்கு மீண்டும் வாய்ப்பு,
    சித்திரங்களில் மிரட்டும் வைல்ட்கேட் இவர்களுக்கெல்லாம் மறுவாய்ப்பு கொடுத்தது பெரிய ஆசுவாசம்.

    மிஸ்டர் நோ கூட தனித்தடம் ஓகேதான்.
    ஆனா ஏன் இந்த லிஸ்ட்ல ஸாகுவாரோ வை விட்டுட்டீங்க? நல்ல தொடராச்சே சார். விட்டா அப்டியே நின்னு போகும்.

    ரத்தக் காட்டேரி மர்மம் & பனிமண்டல கோட்டை & கிட் ஆர்டின் ஸ்பெஷல் என்ற இந்த அறிவிப்பே உற்சாக டானிக்.

    தோர்கல் கழன்டதில் சின்ன வருத்தம்தான் - ஆனா வரவேற்பு இல்லாத பட்சத்தில் வேற வழியில்லை. ஏதாவது ஸ்பெஷல் தடத்தில் போடலாம்.

    சென்ற முறை சில கதைகளை குறை சொல்லி,
    வாங்காம விட்டவங்க கூட இந்த முறை எதும் பேச முடியாது. அவ்வளவு நேர்த்தியான தேர்வுகள்.

    எது தேவையோ அதுக்கு தகுந்தவாறு
    நிறைவான கதைகள், திருப்தியான அட்டவணைக்கு மீண்டும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சார்❤️.

    ReplyDelete
  81. மிக்க மகிழ்ச்சி சார்.

    நல்லதொரு திட்டமிடல்.

    பொறுமையாக படிக்க 45 நிமிடங்கள் ஆனது.

    மிகச் சிறப்பான தேர்வுகள்.

    விரைவில் மார்ஷல் சந்தாவில் இணைவேன் சார்.

    ReplyDelete
  82. பெல்ஜியம் ஸ்பெஷல்னு ஜானியின் அதிரிபுதிரி ஹிட்டையும், பிரின்ஸ்யும் ,
    மினி லயனில் வந்த கிட் ஆர்டின் கதைகளை ஆர்டின் ஸ்பெஷலாக,
    ஒரே இதழில் இணைத்த அறிவிப்பு அந்நாளைய கதம்ப இதழை நினைவுபடுத்துகிறது. அதும் அப்ப வந்த சூப்பர் ஹிட் கதைகள் என்கிறப்ப
    புத்தும்புது எனர்ஜி.

    ReplyDelete
  83. செம்ம அட்டவணை சார்... 💥💥💥
    ஒவ்வொன்றும் பட்டை தீட்டிய வைரங்கள்.. பக்கா மாஸ்... 💥💥💥

    ReplyDelete
  84. அப்படியே சதுரங்க வெறியன் + யார் அந்த மினி ஸ்பைடர் காம்போவா போட்டு தாக்குங்க.. 😘😘😘

    ReplyDelete
  85. அப்படியே க்ளாசிக்ல நம்ம சட்டி தலையனுக்கும் ஏதாவது வாய்ப்பு குடுங்க சார்.. ப்ளீஜ்.. 🙏🙏🙏

    ReplyDelete
  86. அண்டர்டேக்கர் இல்லாதது கொஞ்சம் வருத்தமே..

    ReplyDelete
  87. திசைகள் ஏழு.

    நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  88. பௌன்ஸர் வந்ததில் மகிழ்ச்சி.. 🥰🥰

    ReplyDelete
  89. துப்பறியும் சிங்கம் ரிப்போர்ட்டர் ஜானி க்கு ஒரு ஸ்லாட்டா ? பத்தலை பத்தலை பத்தலை old is gold அதுவும் மறுபதிப்பு

    ReplyDelete
  90. மிஸ்டர் நோ வின் மெகா ஸ்பெஷலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. 😘😘

    ReplyDelete
  91. சிக்பில் க்ளாசிக் செம்ம.. 💥💥💥

    ReplyDelete
  92. // எதையாச்சும் சொல்லிவிட்டு உங்களுக்கு நயம் மஸ்கோத் அல்வா தருவதும் கடந்த ஒரு டஜன் ஆண்டுகளின் நடைமுறைதானே //

    ஆமாம் சார் ஆமாம்!

    தேசத்தின் பட்ஜெட் உடன் நமது காமிக்ஸ் அட்டவணை செம காம்பரிசின் சார்!

    ReplyDelete
  93. மனம் நிறைந்திருக்கிறது சார்.
    சிறப்பான தேர்வுகள். பார்த்து பார்த்து செதுக்கி இருக்கின்றீர்கள்.

    உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை சார்.

    ReplyDelete
  94. டிடெக்டிவ் ராபின் இல்லையா சார்?

    ReplyDelete
  95. // முதன்முறையாக காதுகளை தரையில் பதித்து, உங்களது விருப்பு வெறுப்புகளை முழுமையாய் உள்வாங்கிக் கொண்டு, எனது தனிப்பட்ட நேசங்களை ; துவேஷங்களை ஓரங்கட்டிவிட்டு, ஒரு அட்டவணையை உருவாக்க இந்த 2027-க்கு மெனக்கெட்டுள்ளோம். //

    நன்றி சார்! அட்டவணையை முழுமையாக படித்து விட்டு வருகிறேன்! கண்டிப்பாக உங்கள் மெனக்கெடல் எப்போதும் போலவே எங்களை திருப்பதிபடுத்தும்!!!

    ReplyDelete
  96. சார்... சொல்ல வார்த்தைகளே இல்லை சார்.. மகிழ்ச்சியில், உற்சாகத்தில் மனசு நிரம்பி வழிகிறது! 🥰🥰🥰🥰🫠🫠🫠🫠

    சுமார் 1 மணி எடுத்துக்கொண்டு ஒரு தடவை மட்டும் படித்திருந்தாலும் கூட முதல் படிப்பிலேயே இது ஒரு அட்டகாசமான அட்டவணை என்பது புரிந்து விட்டது! சிக் என்று செம க்யூட்டான அட்டவணை என்று கூட சொல்லுவேன்!😍😍😍😍

    அட்டவணையின் ஒவ்வொரு பக்கமும் அதிரச் செய்கிறது!
    தலைப்புகள் எல்லாம் - வேற லெவல்!
    கதை தேர்வுகள் எல்லாமே பட்டாசு கிளப்புகிறது!
    புது வரவுகள் எல்லாமே பூரிக்க செய்கிறது!

    இன்னும் ஓரிரு முறை படித்தால் ஒருவேளை ஓரிரு குறைகள் தென்படலாமோ என்னவோ, ஆனால் என் முதற் பார்வையிலேயே உங்களுடைய கச்சிதமான திட்டமிடலையும், அதற்கான உழைப்பையும், எல்லோருக்கும் பிடித்த மாதிரியான அட்டவணையை அமைப்பதிலான உங்களுடைய மெனக்கெடலும் நன்றாக புரிகிறது!

    இம்முறை இலவசக் கூப்பனைத் தவிர்த்து, இரண்டு வகை சந்தாவுக்குமே இலவச புத்தகத்தை பரிசளித்திருப்பது அபாரம் சார்!!

    💐💐💐💐💐💐🙏🙏🙏🙏

    ReplyDelete
  97. மிஸ்டர் நோவின் மகா மெகா சாகஸம் கண்டிப்பா வேண்டும் சார்.

    ப்ளீஸ் சார்.

    ReplyDelete
  98. // "மாதம் ஒரு டெக்ஸ் இருந்தே தீரனும்" என்ற எழுதப்படாத விதியினை செயல்படுத்திட TERRIFIC TEX நிரம்பவே உதவுகிறது. //

    உண்மை சார்.

    ReplyDelete
  99. // "கார்சனின் கடந்த காலத்தின்" அடுத்த அத்தியாயம் வெளி வந்தால் எப்படி இருக்கும் ? அதுவும் கலரில்.. ? அதுவும் ஹார்ட் கவரில்.. ? Yes guys - "திசைகள் ஏழு ...!!" தான் அந்த மைல்கல் தருணத்தைத் தெறிக்கச் செய்யவுள்ள அதிரடி இதழாக அமையவுள்ளது ! //

    கார்சனின் கடந்த காலத்தின் - அட இதற்கு பார்ட் 2 இருக்கிறதா சார்! அருமை! லயன் 500 இதழுக்கு மிகவும் சரியான தேர்வு சார்! மகிழ்ச்சி!

    ReplyDelete
  100. // ஒட்டு மொத்த சந்தாவிலேயே 70% முழுவண்ணத்தில் தான் - which means கண்களுக்குமே ஒரு விருந்து வெயிட்டிங் !! //

    வாரே வா! வாழை இலையோடு பந்தியில் முதல் ஆளாக விருந்து சாப்பிட காத்துகொண்டு இருக்கிறேன்!

    ReplyDelete