நண்பர்களே,
வணக்கம். போன வாரயிறுதியில் வீட்டோடு புண்ணியம் தேடும் பயணம் - so இக்கட ஆஜராக முடியவில்லை ! ஆனால் "நீ வராங்காட்டி என்ன - உன்னைப் பத்தின நியூஸ் எங்களுக்கு வரும்லே ?" என்ற விதமாய் நிகழ்வுகள் ! பேத்திக்கு தமிழ் ரைம்ஸ் புக் வாங்க உள்ளூர் பொஸ்தவ கடைக்குப் போனா அதுவொரு FB சேதியாகிறது ! திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் போனை நோண்டிக்கினு நின்றால் அது candid கேமராவில் சிக்கி வலையில் ரவுண்டு வருது ! கும்பகோணத்தில் சாலையைக் கடந்தால் - திருப்பூர் நண்பர் கையைப் பிடித்துக் கொண்டு சிலாகிக்கிறார் ! வேற வழியே இல்லே - அஷ்டமி-நவமில்லாம் கழிஞ்ச பிற்பாடு, நாமளுமே ஒரு கச்சி -கிச்சி ஆரம்பிக்கலாமோ ? மூ.ச.மு.க. - எப்புடி கீது folks ?
Jokes apart, ஜூலை ரெகுலர் தட இதழ்களின் பணிகள் கிட்டத்தட்ட ஓவர் என்பதால் ஸ்பெஷல் தடத்தின் ஒரு அங்கமான தாத்தாஸுக்குள் பிஸியாகியுள்ளேன் - and உள்ளுக்குள் இனம்சொல்ல இயலா உணர்வுகள் பிரவாகமெடுக்கின்றன ! இம்முறை ஊர் விட்டு ஊர் - நாடு விட்டு நாடு சென்று பிழைக்க வேண்டியிருக்கும் புலம் பெயர்ந்த ஜனத்தின் குரலில் கதாசிரியர் Wilfrid Lupano பேசுவதை பிரமிப்புடன் பார்த்து வருகிறேன் ! And ஒரு மொழிபெயர்ப்பாளனாக இவற்றையெல்லாம் மிஞ்சிய சவால்கள் இனி வாய்த்திட வாய்ப்பே இல்லை என்ற சிந்தனை தலைக்குள் ! At the same time நம் மத்தியில் இந்த ஆல்பம் # 5 தான் இவர்களது இறுதித் தலைகாட்டலோ ? என்ற கேள்வி வயிற்றைப் பிசைகிறது !
தாத்தாஸ்களை இதுவரையிலும் ரெகுலர் சந்தாத்தடத்தில் உட்புகுத்தி இருந்ததால் எப்படியோ உங்கள் தலைகளில் கட்டி விட்டிருந்தோம் & வண்டியும் ஓடிவிட்டிருந்தது ! ஆனால் அது குறித்த விசனங்கள் நிறையவே எழுந்ததால் தனி முன்பதிவுக்கு நகற்றியதோடே சாயம் வெளுத்துவிட்டது ! இந்தக் கதை பாணிக்கான ரசிகர்களோ / ரசிக்கும் பொறுமை கொண்டோரோ ஆகக் குறைச்சல் என்பது கருப்பு வெள்ளையில் அப்பட்டமாகியுள்ளது ! இதில் irony என்ன தெரியுமா ? வெகு சமீபத்தில் ஒரு பிரெஞ்சு தேச காமிக்ஸ் சார்ந்த ஆய்விற்கென என்னைப் பேட்டி கண்ட போது நான் செம பீற்றலாய் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு சிலாகித்த சில தொடர்களுள் தாத்தாக்களும் அடக்கம் ! "இந்தியாவில் வேறு எந்தவொரு மொழியிலும் இந்தத் தொடரினை சுட்டுவிரலால் தொடக்கூட வாசகர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை - எங்க தமிழ் வாசகர்களைத் தாண்டி !" என்று பீப்பீ ஊதியிருந்தேன் ! பச்சே தாத்தாக்களுக்கு நம் மத்தியில் R.I.P போடவேண்டிய வேலை நெருங்கியிருக்க - just not able to swallow the disappointment !
தோல்விகள் நமக்குப் புதிதே அல்ல ! ஜானதன் கார்ட்லெண்ட் ; மேஜிக் விண்ட் ; கமான்சே ; லேடி S என்றெல்லாம் நிறையத் தொடர்களை மனம் நிறைந்த கற்பனைகளோடு அறிமுகம் செய்துள்ளோம் தான் & விழுந்த சாத்துக்களை "விழுப்புண்களாய்" கருதி ஒரு ஓரமாய்ப் போய் எச்சிலைத் தொட்டு மருந்து போட்டும் கொண்டோம் தான் ! அங்கு "கதை ஜவ்வு ; அம்மணியின் கதாப்பாத்திரம் டொக்கு ; பாண்டஸி ஓவரா கீது ; இது அரப் பழசு" - என ஸ்பஷ்டமாய் காரண-காரியங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது ! ஆனால் படைப்பின் அளவினில் துளியும் குறை சொல்ல இயலா அற்புதம் தாத்தாக்களின் தொடர் ! ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் உருவாக்கமும், அவர்கள் ஒவ்வொருவரின் வாயிலாகவும் கதாசிரியர் வெளிப்படுத்தும் சமூகக் கோபங்களும் - இன்றைக்கு நமக்கெல்லாம் நிரம்பவே ரசிக்கும் என்றே எதிர்பார்த்திருந்தேன் ! ஆனால் காலங்கள் மாறுகின்றன என்பதை இந்தத் தொடருக்கு கிட்டியுள்ள thumbs down சுட்டிக்காட்டுகிறது ! அதிகம் பேசப்பட்டிருந்தாலோ, அலசப்பட்டிருந்தாலோ, சிலாகிக்கப்பட்டிருந்தாலோ maybe தாத்தாஸ் நீடித்திருப்பார்களோ - என்னவோ ? But தனிப்பட்ட முறையில் ரசிக்காத ஒரு சமாச்சாரத்தை சிலாகிக்கச் சொல்வதும் நியாயமே இல்லை தான் ! So இங்கு சூழ்நிலையைத் தவிர்த்து வேறு யாரையும் / எதனையும் நொந்திட வழி லேது தான் !
இதனில் "விலை கூடுதல்" என்று காரணம் பிடித்த சில நண்பர்களின் discovery - தாத்தாக்கள் செய்யும் ப்ளாக் ஹ்யூமருக்கு நிகரானது ! சைக்கிள் கேப்பில் நாலு காசு பார்க்க நான் நினைத்திருக்கும் பட்சத்தில் , அதனை ஏற்கனவே இஸ்துகினு கிடைக்கும் ஒரு கிராபிக் நாவல் ஜான்ராவில் தானா முயற்சிப்பேன் ?? அத்தனை புத்தி கெட்ட பேமானியாகவா நான் போயிருப்பேன் guys ? முன்பதிவு அறிவித்த சமயம் நாம் எதிர்பார்த்தது 400 புக்கிங்ஸ் & maybe 50 பிரதிகள் ஏஜெண்ட்கள் வாயிலாக sales & இன்னொரு 50 பிரதிகள் புத்தக விழாக்களில் sales ! ஆக 500 இதழ்களின் ப்ரிண்ட்ரன் என்ற கணக்கீட்டில் விலையினை நிர்ணயித்திருந்தோம் ! அதுவே "கொள்ள விலை" என்ற கண்டுபிடிப்பினைச் செய்த நண்பர்கள் மட்டும் IPL மேட்ச்களின் வரவு-செலவு கணக்குத் தணிக்கையினில் இருந்திருந்தால் ஜூப்பராக இருந்திருக்கும் ! இன்றைய யதார்த்தமோ மொத்த பிரிண்ட்ரன்னே 250 என்பதே ! Phew..! இங்கே பணம் சார்ந்த சங்கடத்தைக் காட்டிலும், மனதுக்கு ரொம்பவே நெருக்கமானதொரு தொடருக்கு VRS கொடுக்க வேண்டியிருப்பதே அதிகமாய் சங்கடமூட்டுகிறது ! ரைட்டு - "தாத்தாக்களும் கடந்து போவர்" என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான் ! இல்லே - முழியாங்கண்ணன் இப்புடித் தான் சொல்லுவான் - but தொடர்ந்து வரும் பாருல்லே - என்ற மைண்ட் வாய்ஸ் கேட்டிங்ஸ் தான் ! But நிரம்ப சாரி மக்களே - பாக்கெட்டிலும் பலமில்லை ; மனதிலும் உரமில்லை - இந்தத் துக்ளியூண்டு நம்பருக்குள் வித்தைகளைக் காட்டிட ! கையிருப்பு இருந்தாலும் பின்னாட்களில் ஸ்கூல் பசங்களிடமாச்சும் சொற்ப விலைகளில் தள்ளி விடக்கூடிய கதைகளல்ல இவை எனும் போது -இனியும் கிட்டங்கிக்குள் இவர்களை தேக்கிட தம் லேது !
அப்புறம் ஆளில்லா கடையினில் டீ ஆத்தும் கஷ்டம் பற்றி - இப்போதும் 150 பேர் பதிவிட்டுப் போகும், சில பல மில்லியன் வியூஸ் கொண்டிருக்கும் தளத்திலிருந்து நான் பேசிக்கொண்டிருக்கும் போது - யாருமே இல்லாது போனாலும், "எனக்குப் பிடித்ததை பதிவு செய்வேன்" - என்று தொடரும் ஒரு நண்பரை என்னவென்பது ? இதோ திருவண்ணாமலை நண்பர் சுரேஷ் ஜீவாவின் தாத்தாக்கள் பற்றிய பதிவு !! நன்றிகள் சார் !! - உங்களிடம் கேட்காமலே சுட்டு விட்டிருக்கிறேன் !
=================================================================
கதை - LUPANO
ஓவியம் - CAUUET
மொழியாக்கம் - S விஜயன்
இந்த வார மறுவாசிப்பில் நான் எடுத்துக் கொண்ட புத்தகங்கள் தாத்தாஸ்
இந்தக் கதையை லயன் காமிக்ஸ் எடிட்டர் வெளியிடுவதாக அறிவித்த சமயம், அப்பொழுது தான் மார்கன் பிரீமேன் நடித்திருந்த GOING IN STYLE எனும் ஹாலிவுட் படத்தை பார்த்திருந்தேன். அந்த படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு கதை என்ற எண்ணவோட்டம், அப்பொழுது எனக்கு ஒரு ஆர்வத்தை தூண்டி விட்டிருந்தது.
முதல் புத்தகம் வந்த சமயம் அந்த ஹாலிவுட் படத்துக்கும், இந்த கி நா புதையலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. சம்பந்தம் என்று பார்த்தால் தங்கள் அந்திம காலத்தை, கழிக்க போராடும் மூன்று தாத்தாக்களின் கதை என்று மட்டுமே புரிந்தது. அது வரை ஆறு ஆல்பங்கள் வந்துள்ளது என்று எடிட்டரும் அறிவித்திருந்தார்.
ஓவியங்களை பொறுத்தவரை இந்த நான்கு அல்பங்களுக்கும் ஓவியர் ஒருவரே. ஒவ்வொரு தாத்தாக்களையும் அவர்களின் குண நலன்களுக்கு ஒப்ப (casting) வரைந்திருப்பது அருமை. வயதான முகங்களை சுருக்கங்களுடன் வரைவது சவாலான செயல். அதை திறம்பட செய்திருக்கிறார் ஓவியர். அப்புறம் இந்த கதையில் வரும் கிராமம். அந்த சிறு கிராமத்தை அவர் விவரித்துள்ள காட்சிகள் மூலம், நான் அந்த கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவன் போல மிகவும் பரிச்சயமுடன் நம்மை உலவ விட்டுள்ளார்.
மொழியாக்கம் குறித்து நான் பெரிதாக சிலாகித்தது இல்லை ஆனால் இந்த புத்தகங்களில் எடிட்டரின் மொழியாக்கம் simply awesome. நான்கு நண்பர்கள் அதுவும் நீண்ட நெடுங்கால நண்பர்களாகவே வாழ்ந்து வந்த தாத்தாக்களிடம் இருக்கும் அன்யோன்யம் வசனங்களில் தெறிக்கிறது. கொச்சையான மொழி என்று முகம் சுழிக்காதவாறு இது தான் யதார்த்தம் என்று வாசகர்களாகிய நம்மையும் கதையில் ஒன்ற வைத்ததில் சாதித்துள்ளார் நமது எடிட்டர்.
அந்துவான், பியரி, மில்சே என்று சிறு வயது முதல் நண்பர்களாக இருக்கும் மூன்று தாத்தாக்கள் மற்றும் அந்துவானின் பேத்தி சோபி,
ஒரு சின்ன கிராமம், அந்த கிராமமே நம்பி இருக்கும் ஒரு மருந்து தொழிற்சாலை. இதை விட ஒரு நல்ல கதையை உருவாக்க வேறு என்ன முகாந்திரம் வேண்டும்.
இதுவரை நான்கு புத்தகங்கள் தமிழில் வந்துள்ளது. இத்தனை ஆண்டு இடைவெளியில் அவர்கள் இன்னும் இரண்டு புத்தகங்களை போட்டுள்ளனர். ஆக இன்னும் நான்கு புத்தகங்கள் மீதம் உள்ளது. இந்த புத்தகங்கள் விற்காததற்கு காரணம் இந்த புத்தகத்தை வாங்கியவர்கள் இன்னும் பலர் படிக்கவில்லை என்பேன். இந்த புத்தகங்கள் குறித்து அலசவில்லை என்பேன். மறுவாசிப்பில் இந்த கதைகள் வேறு ஒரு கோணத்தை தருவதை நான் உணர்ந்ததை போல், பலரும் உணர்ந்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால் அடுத்த புத்தகம் எப்பொழுது சார் என்ற மில்லியன் டாலர் கேள்வி தான் தளத்தில் எதிரொலிக்கும். இனி ஒவ்வொரு புத்தகத்தை பற்றி ஒரு சிறு குறிப்புடன்..
*அந்தியும் அழகே*
இந்த கதை அந்துவான் தாத்தாவின் அட்டகாசங்கள்..
இந்தக் கதை, அந்துவானின் வாழ்க்கை பக்கங்களில் சிலவற்றை எடுத்து, நான்கு முக்கிய கதாபாத்திரங்களின் அற்புதமான அறிமுகமாக அமைத்திருக்கிறார்கள். சிறு வயதில் தாத்தாக்கள் அடிக்கும் லூட்டிகள் நமது சிறு வயது நினைவுகளை கிளறி விடுகிறது.
1970 80 களில் தமிழகத்தில் பிறந்தவர்கள், தங்கள் சிறு வயதில் தங்களை ஒரு கவ்பாயாக பாவித்துக் கொண்டு காடுகளிலும் மேடுகளிலும் வலம் வந்தது போல, இந்த தாத்தாக்களும் தங்களை ஒரு கடற்கொள்ளையராக கற்பனை செய்துக் கொண்டு சேட்டைகள் செய்வது அற்புதம்.
கதை எங்கெங்கோ சென்றாலும், வாசகர்கள் அலுத்துக் கொள்ளாதபடி, நக்கல் நையாண்டியை குழைத்து, படிப்பவர்களை குஷிப் படுத்தியிருக்கிறார் கதாசிரியர். நிகழ்காலம் கடந்த காலம் என்று மாறி மாறி பக்கங்கள் பறக்கும் கதையில் கலரிங் மூலமாக வாசகர்களாகிய நாம் குழம்பாமல் பயணிக்க எடுத்துக் கொண்ட சிரத்தை அபாரம்.
*துள்ளவதோ முதுமை*
இந்தக் கதை பியரி தாத்தாவின் பரிதாபங்கள்
இந்தக் கதை பியரியின் காதல், அவரது கொள்கை என்று அவருடன் பயணித்தபடியே நமக்கு பியரி ஏன் இப்படி இருக்கிறார் என நம்மை பியரியின் மீது ஆதங்கம் கொள்ள வைக்கிறது. அந்துவானுக்கு நேரெதிர் கேரக்டர் நம்ம பியரி என்பதை கதை வாயிலாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.
பிரஞ்சு நாட்டின் பழக்க வழக்கங்கள், அதை ஓரமாய் பகடி செய்தபடி கதை நகர்த்தும் விதம் தாத்தாக்களின் கதையில் உள்ள வீரியம். இந்தக் கதையில் இந்த பகடிகள் ஒருபடி குறைத்துக் கொண்டு, முழுக்க முழுக்க கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த கதாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார்.
*எல்லாம் கிழமயம்*
இந்தக் கதை மில்சே தாத்தாவின் மிரட்டல்கள்
அடுத்து யார் மில்சே தாத்தா தானே, முதல் அத்தியாயத்தில் மில்சே தாத்தாவின் மறுபக்கத்தை கோடிட்டு கதாசிரியர் அதை இங்கு develop செய்து, கூடவே மில்சே தாத்தாவின் மற்றொரு நண்பரான எர்ரோல் தாத்தாவையும் இணைத்து நால்வர் கூட்டணியாக இந்த கதையை சும்மா கொளுத்தி போட்டுள்ளார் கதாசிரியர். இந்தக்கதையில் வரும் ஒரு காட்சியை அப்படியே நமது தமிழ் சினிமாவில் தற்சமயம் செம ஹிட்டடித்த ஒரு படத்திலும் காட்சிப்படுத்தியிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆக நம் கிராபிக்ஸ் நாவல்களை சில பல டைரக்டர்கள் வாங்கி படிக்கிறார்கள் என்பது வெளிச்சமாகிறது.
எர்ரோலும் மில்சேவும் அடித்த லூட்டிகள் நம்மை திக்கு முக்காடி சிரிப்பின் விளிம்பில் நிறுத்தியிருந்த சமயத்தில், மில்சே தாத்தாவின் மறுபக்கத்தை கேட்டு அதிர்ந்து போன அவரது நண்பர்கள் போலவே நாமும் முழிக்க, ஒரு சில நிமிடங்களில் சோபியின் ருத்ர தாண்டவத்தில் வெடிச்சிரிப்பாய் மாற்றியிருந்தார் ஓவியர். தாத்தாக்களின் உண்மை முகம் பேத்திக்கு தெரிந்து விட்டது என்று கூனிக் குறுகுவது, வேற லெவல் திங்கிங்...
*மாயமில்லே மந்திரமில்லே*
SIMPLY SUPERB
தாத்தாஸ்களின் லூட்டி மிகவும் குறைவே, ஆனால் நம் ஹீரோ தாதாக்களை தவிர்த்து, இந்தக் கதையில் வரும் பிற தாத்தாக்கள் அடிக்கும் லூட்டி ஆகா ரகம். அதிலும் கேப்டன் பஸ்ஸு சில பேனல்களே வந்திருந்தாலும் தெறி ரகம்.
இந்த கதை முழுக்க முழுக்க சோஃபிக்கு நேர்ந்து விட்டிருக்கிறார் ஆசிரியர். நடுவில் சோஃபியை கலாய்ப்பது போல் சுய பகடி செய்துக் கொள்கிறார். அரசியல் நெடி அள்ளி வீசுகிறது. ஒவ்வொரு அரசியல் பார்வையின் மறுபக்கத்தை போகிற போக்கில் LEFT HANDடில் DEAL செய்து விட்டு போகிறார் ஆசிரியர்.
எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை என்பதே. அதை இந்த புத்தகம் உறுதி செய்கிறது. நீங்கள் வலதுசாரியோ அல்லது இடதுசாரியோ, இந்தக் கதை இரண்டு திசையிலும் பயணிக்கிறது.
சுற்றுச்சூழலை காக்கப் போராடும் ஒரு தாத்தா, வேலைவாய்ப்புக்காக சுற்றுச்சூழலாவது மண்ணாவது என்று போராடும் மற்றொரு தாத்தா, வேலை வாய்ப்பே முக்கியம் என்று ஒரு பார்வை, என்னடா வேலைவாய்ப்பு என்று அதை கிழித்து தொங்க விடும் மற்றொரு பார்வை, LGBTQ வுக்காக ஒரு கை ஓசை, மத வெறுப்புணர்விற்கு ஒரு குட்டு, என்று உலகில் உள்ள அரசியலின் அ முதல் அக்கன்னா வரை பிழிந்து தொங்க விட்டது ஹேப்பி அண்ணாச்சி.
நகைச்சுவையில் ஊற போட்டு அடித்துள்ளார் கதாசிரியர். அதிலும் அந்த 17 ஆம் பக்கம் மற்றும் 18 ஆம் பக்கம் சில நிமிடங்கள் மனதில் பயத்தை கிளப்பியது, எதோ ஒரு பக்கத்தை மிஸ் பண்ணிட்டாங்க என்று மொத்த புத்தகத்தையும் ஆராய்ந்து ஒரு வழியாய் திரும்பவும் 17 ஆம் பக்கத்துக்கும் 18 ஆம் பக்கத்துக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்போம் என்று கிளம்பி, ஓ இது தான் கதையா என்று அந்த இரண்டு பக்கத்தை புரிந்துக் கொள்ள நான் பட்ட பாடு, ஏண்டா கி.நா ன்னா இப்படி தெறிச்சு ஓடுறாங்க என்று புரிய வைத்தது. ஆனால் கி நா வின் அழகே இது போன்ற தலை சுற்றும் அம்சம் தான் என்பது தான் என் பார்வை.
எடிட்டர் அவர்கள் முந்தைய கதைகளை படித்து விடுங்கள் என்று கூறி இருந்தார். ஆனால் ஒரு சில விஷயங்கள் தவிர்த்து முன்னாடி வந்த கதைகளை படிக்காமல் இந்த புத்தகத்தை தொட்டாலும் நமக்கு ஒன்று இரண்டு கேள்விகளே எழும். அதுவும் இந்த கதையின் அழகில் தொலைந்தே போயிருக்கும்.
அதுவும் அந்த கடைசி பக்கமும் கடைசி மூன்று பேனலும், அந்த ஆசிரியரையும் அந்த ஓவியரையும் என்ன பாராட்டினாலும் தகும். ஒரு தந்தையாக நெடுநேரம் என் மனம் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தது.
கம்பியூட்டர் ஜித்து அர்னாட், நெட்ஒர்க் தேடி அலையும் காட்சிகள் செம. இது போல் ஒவ்வொரு கேரக்டருக்கும் எழுதிக் கொண்டே போகலாம். அதுக்கு பேசாம அந்த கதையை ஒரு தடவையாவது படிங்கன்னு இந்த புத்தகத்தை தூக்கி கையில் கொடுத்து விடலாம்.
கதை 10/10
ஓவியம் 10/10
மேக்கிங் 10/10
https://lion-muthucomics.com/111-thathas
==============================================================
Maybe இதைப் படித்த பின்னே ரெண்டோ- மூணோ புது நண்பர்கள் கூட தாத்தாக்களின் மீது மையல் கொள்ள நேரிட்டாலும் அது நண்பர் சுரேஷ் ஜீவாவுக்கும், இந்தக்கதாப்பாத்திரங்களுக்குமான வெற்றியாகவே அமைந்திடும் !
அராத்துகள் அடங்கிடுமோ ?
Bye all...see you around ! Have a great week ahead !!
கிட்டங்கியில் குடியிருந்து வரும் தாத்தாக்களுக்கு maybe நீங்களொரு வீடு தர ரெடியாக இருப்பின் - நாங்கள் more than willing !!
ஏற்கனவே கைவசமுள்ள 4 தாத்தாஸ் = ரூ.480
வரவிருக்கும் ஆல்பம் # 5 = ரூ. 200
இந்த 5 இதழ்கள் கொண்ட காம்போவினை ரூ.450 + கூரியர் என்ற விலைக்குத் தந்திட நாங்க ரெடி ! Anybody willing out there மக்களே ?







Hi Sir
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteMe 2nd
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteGood morning
ReplyDeleteHi..
ReplyDeletePresent sir
ReplyDelete1st❤️❤️❤️
ReplyDeleteFirst என்று டைப் அடிப்பதற்குள் 8வது இடமா.... என்னா வேகம் 😂😂😂😂😂
ReplyDeleteவணக்கம் தோழர்களே....
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteபாராட்டுகள் சுரேஷ் சகோ 💐💐💐💐💐
எல்லா புகழும் தாத்தாஸ்கே.. I am going to miss them
DeleteMe 2
Deleteபோஸ்ட் போட்ட ஒரு நிமிடத்திற்குள் ளாகவே படித்து விட்டு பர்ஸ்ட் என கமெண்ட் போட்டேன்.
ReplyDeleteபோஸ்ட் முழுவதும் காணவில்லை
நீங்க தேவலாம் சார் - நான் காலையிலே இதே போஸ்ட்ட ஒருவாட்டி அப்லோட் செய்துவிட்டுப் பார்த்தால் முதல் பாதியை மொத்தமா காணலை! புண்ணியத்துக்கு டைப் அடிச்சது save ஆகி இருந்ததால் பிழைச்சேன்!
Delete🤔🤔
Deleteதாத்தாஸ் அனைத்தும் வேண்டும் சார் எனக்கு.
ReplyDelete//ஆனால் "நீ வராங்காட்டி என்ன - உன்னைப் பத்தின நியூஸ் எங்களுக்கு வரும்லே ?" என்ற விதமாய் நிகழ்வுகள் ! பேத்திக்கு தமிழ் ரைம்ஸ் புக் வாங்க உள்ளூர் பொஸ்தவ கடைக்குப் போனா அதுவொரு FB சேதியாகிறது ! திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் போனை நோண்டிக்கினு நின்றால் அது candid கேமராவில் சிக்கி வலையில் ரவுண்டு வருது ! கும்பகோணத்தில் சாலையைக் கடந்தால் - திருப்பூர் நண்பர் கையைப் பிடித்துக் கொண்டு சிலாகிக்கிறார் ! //
ReplyDeleteஎங்களுக்கு நீங்கதான் செலிபிரேட்டி சார் 😁😁😁
//வேற வழியே இல்லே - அஷ்டமி-நவமில்லாம் கழிஞ்ச பிற்பாடு, நாமளுமே ஒரு கச்சி -கிச்சி ஆரம்பிக்கலாமோ ? மூ.ச.மு.க. - எப்புடி கீது folks //
ReplyDeleteஆரம்பிச்சுடலாம் சார் 😊😁
இந்த முறை பதிவு கொஞ்சம் வருத்தமான பதிவுதான் சார்...:-(
ReplyDeleteஆனால் எனக்கும் தாத்தா ஏன் பிடிக்கவில்லை என தெரியவில்லை..எதற்கும் நானும் ஒரு முறை மறுவாசிப்பில் ஈடுபடுகிறேன் சார்.
ஆஜர்
ReplyDeleteசார் சந்தா வில் ஒரு தாத்தாஸ் கதை அறிவிக்கப்பட்டது அது எப்போது வருகிறது?
ReplyDeleteநேக்குத் தெரியாமல் யாரு செஞ்ச அறிவிப்பா இருக்கும் 🥹🥹??
Deleteஅது GEN Z தாத்தா + பேத்தி கதை சார்!
😘😘😘😘💐😄Me in👍💐
ReplyDeleteமீதம் உள்ள தாத்தாஸ் கதைகளை முன் பதிவில் மொத்தமாக போட்டு விடலாம் சார்.....
ReplyDelete200 புக்ஸ் பிரிண்ட் ரன்னிலா சார் 🤕🤕?
Delete450+Courier. எப்போது அனுப்ப வேண்டும் சார்?
ReplyDeleteஎப்போன்னாலும் ஓகே தான் சார் !
Deleteசார் ரெகுலர்சந்தாவில் தாத்தாக்கள் இணையுங்கள் சார்.விளிம்பு நிலை ஹீரோ யாரையாவது தூக்கிட்டு தாத்தாக்கள் இணைக்கலாம் ப்ளீஸ்
ReplyDeleteஒரு படத்தில் தாதாவாய் வரும் விவேக் பற்றிச் சொல்லும் டயலாக் தான் நினைவுக்கு வருது சார் ! "உள்ளூரில் உதை பட்டது போதாதுன்னு இப்போ ஆந்திராவிலே கண்டெம்ன் ஆகப் போறோம்" !!
Deleteஉங்கள் கி ரோசனை தட் மொமெண்ட் #
நன்றிகள் சார் !! - உங்களிடம் கேட்காமலே சுட்டு விட்டிருக்கிறேன் !//
ReplyDeleteஎதுக்கு சார் கேக்கனும்.. இது நம்ம காமிக்ஸ் குடும்பத்துக்காகவே ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ சார்.. நன்றி சார்.
💛💙💚💜
Deleteஅருமையா எழுதியிருக்கீங்க சுரேஷ் ஜீவா ஜி! 👏👏👏👏💐💐💐💐உங்களை மாதிரியே நானும், மற்ற நண்பர்களும் ரசிச்சு பழகியிருந்தோம்னா இந்தத் தொடர் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும்! சில படைப்புகளின் தனித்துவமும், மேன்மையும் காலம் கடந்தே உணரப்படுகிறது!
ReplyDeleteஒரு நல்ல தொடரை ஏதேதோ சப்பையான காரணங்களுக்காக இழந்து கொண்டிருக்கிறோமோ என்ற வருத்தம் மேலிடுகிறது! 😔
ராஜசேகரன் சார் தனி செய்தியில் தாத்தாஸ் தொடர்ந்து வரணும்னு கேட்டு பார்ப்போம் என சொன்னார்.. அவருக்கு நான் எழுதிய பதில்...
Delete//கஷ்டம் சார். அவருக்கு விலை அதிகமாக வைக்க மனசு இல்ல.. வாசகர்களுக்கோ கம்மியான விலையில வாங்க மனசில்ல
ஒரு ஆகச் சிறந்த தொடருக்கு நாங்கள் அளித்த வரவேற்பும், ஆதரவும் ரொம்பவே கம்மிதான் எடிட்டர் சார். வாசகர்கள் மேல் விழுந்த - துடைத்தெறிய முடியாத கரும்புள்ளி இது!😔
ReplyDeleteஇதில் கொடுமை ஒண்ணும் சொல்லட்டுமா சார் ?
Delete"அந்தக் காலம் போல வருமா ? காமிக்ஸின் பொற்காலம்னா அது தான் !!" என்று நம்மவர்கள் கைக்கும், வாய்க்கும் சிலாகிப்பது - எண்பதுகளின் இறுதிகளையும், தொண்ணூறுகளின் ஆரம்பங்களையுமே ! I agree with them there - to a certain limit !!
ஆனால் அந்நாட்களின் அந்த golden age இதழ்களை ஒரு நோஸ்டால்ஜியா காதலின்றி நிதானமாய்ப் பார்த்தால் - அவற்றுள் காலத்தை வெல்லும் ஆற்றல் பாதிக்கும் மேற்பட்ட இதழ்களுக்கு இல்லை என்பது எனது பார்வை ! பச்சே நமது இரண்டாம் வருகைக்குப் பின் maybe 2017 முதலாய் - நாம் முயற்சித்துள்ளவற்றினுள் உள்ள ரகங்கள், variety தான் எத்தனை-எத்தனை ?!
இன்னும் 50 ஆண்டுகள் கழிந்தாலும் இவற்றுள் கணிசம் "நின்று பேசும் " !! Truly the best phase of this journey in my point of view !!
Sadly we are past that now....!
///ஆனால் அந்நாட்களின் அந்த golden age இதழ்களை ஒரு நோஸ்டால்ஜியா காதலின்றி நிதானமாய்ப் பார்த்தால் - அவற்றுள் காலத்தை வெல்லும் ஆற்றல் பாதிக்கும் மேற்பட்ட இதழ்களுக்கு இல்லை என்பது எனது பார்வை ! பச்சே நமது இரண்டாம் வருகைக்குப் பின் maybe 2017 முதலாய் - நாம் முயற்சித்துள்ளவற்றினுள் உள்ள ரகங்கள், variety தான் எத்தனை-எத்தனை ?!///
Delete100% உண்மை சார்!
நம்மில் பலர் அந்த 80 களிலேயே உறைந்து போய் விட்டோம் என்பது கசப்பான உண்மை!!
Oh yes - டெக்ஸ் வில்லர், டைகர், லக்கி லுக், ரிப்போர்ட்டர் ஜானி, பிரின்ஸ், சிக் பில் ; XIII போன்றோரெல்லாம் அந்த golden age-ன் பிள்ளைகளே !
Deleteஆனால் இன்று நாம் ட்ராவல் செய்திருக்கும் பாதை இன்னும் ஒரு லெவல் கூடுதல் என்பதே எனது எண்ணம் !
*நிஜங்களின் நிசப்தம்
*ஒரு தோழனின் கதை
*பயணம்
*சாம்பலின் சங்கீதம்
*ஒரு முடியா இரவு !
*நித்திரை மறந்த நியூயார்க்
*Smurfs
*ஸ்டெர்ன்
*பவுன்சர்
*அண்டர்டேக்கர்
*மேகி கேரிசன்
*தாத்தாஸ்
etc..etc..என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ! Phew !
இது முன்னாட்களின் நாயகப் பெருமக்களையோ, க்ளாஸிக் ரசிகர்களையோ மட்டம் தட்டும் முயற்சியோ அல்ல !
Deleteபின்னாட்களில் பரீட்சார்த்தமாக முயற்சிக்க முடிந்திருக்கும் களங்களின் விஸ்தீரணம் கூடுதல் என்பதே நான் சொல்ல விழைவது !
So - "இவுக பெருசுன்னா - அவுக பெருசில்லியா ?" என்று இந்த சம்பாஷணை தடம் மாறிட வேணாமே folks ?!
Delete///Oh yes - டெக்ஸ் வில்லர், டைகர், லக்கி லுக், ரிப்போர்ட்டர் ஜானி, பிரின்ஸ், சிக் பில் ; XIII போன்றோரெல்லாம் அந்த golden age-ன் பிள்ளைகளே !
ஆனால் இன்று நாம் ட்ராவல் செய்திருக்கும் பாதை இன்னும் ஒரு லெவல் கூடுதல் என்பதே எனது எண்ணம் !//
மறுக்க முடியாத உண்மை சார் 💯
+9 Sir
Deleteமூக்கால் அழுவது என்றான பிற்பாடு அதை முழுசுமாய் செய்து முடித்து விடுவோமா?
Deleteதோற்றுப் போன மற்ற தொடர்களில் ஆவது அதற்கென காரணம் இருந்திருக்கும்....!
*Maybe நீலப்பொடியர்கள் மொக்கை போட்டதற்கு அந்தப் பொடி பாஷை ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
*கமான்ச்சே கிளிக் ஆகாமல் போனதற்கு வீரியம் குறைவான ஆக்ஷன் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
*மேஜிக் விண்ட் நம் மத்தியில் எடுபடாமல் போனதற்கு ஃபேண்டஸி அளவுகள் அதனில் ஒரு மிடறு தூக்கலாக இருந்தது காரணமாக இருந்திருக்கலாம்.
*லேடி எஸ் தோற்றதற்கு கதாசிரியர் வான் ஹாமின் பாத்திரப் படைப்பே சிறியதொரு பிசறடிக்கச் செய்தது காரணமாய் இருந்திருக்கலாம்..
*ஜடாமுடி ஜானதன் மண்ணைக் கவ்வியது கதை அரதப் பழசாய் இருந்ததன் காரணமாக இருந்திருக்கலாம்.
So கதாசிரியரோ, மொழிபெயர்ப்பாளரோ அங்கே at fault என்று சொல்ல முடியும்தான். ஆனால் தாத்தாக்களின் விவகாரமோ முற்றிலும் வேறு.
கதாசிரியர் வில்ப்ரிட் லுபானோ பிரித்து மேய்ந்துள்ளார் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்துக்கள் இருக்க இயலாது.
அவர் தேர்வு செய்திருந்த களம் வறண்டது ; வித்தியாசமானதே தவிர, அதனில் அவர் போட்டுள்ள உழைப்பு துளிகூட குறை காணும் ரகமே அல்ல.
And பேனா பிடிக்கும் பொறுப்பில் இயன்ற அத்தனை குட்டிக்கரணங்களையும் நான் அடித்திருந்தேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. Maybe ரொம்பவே raw ஆக வசனங்கள் அமைந்திருந்தது நம்மில் சிலருக்கு ஒவ்வாதும் போயிருக்கலாம் என்பது புரியாதில்லை.ஆனால் கதைக்களத்தின் வீரியத்தை ; பாத்திரங்களின் தன்மைகளை கடத்த அந்த லாங்குவேஜில் சமரசமின்றி பயணிப்பது அவசியமென்றே எனக்குப் பட்டது.
So, இங்கு மூ.ச.வுக்குள் என்னை இழுத்துப் போகப் பெரியதொரு முகாந்திரம் இராது என்பதே எனது நம்பிக்கை.இத்தனைக்குப் பிறகும் தாத்தாக்கள் முட்டையிட்டிருப்பது - நம் பயணத்தின் ஒரு புரியாத பெரும் புதிர்.
//கதாசிரியர் வில்ப்ரிட் லுபானோ பிரித்து மேய்ந்துள்ளார் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்துக்கள் இருக்க இயலாது.
Deleteஅவர் தேர்வு செய்திருந்த களம் வறண்டது ; வித்தியாசமானதே தவிர, அதனில் அவர் போட்டுள்ள உழைப்பு துளிகூட குறை காணும் ரகமே அல்ல.//
உண்மைதாங்க சார்
வான் ஹாம்மே & மௌரோ போசெல்லி அடுத்து இவரது பேனாவுக்கு ரசிகையாகி விட்டேன்
எதிர்காலத்தில் தாத்தாஸ்களுக்கு மீண்டூம் கதவு திறக்கப்படட்டும் என விரும்புகிறேன்
கதவு டைட்டா கீதோ - என்னமோ ?! கொஞ்சம் எண்ணெய் போட்டு பாக்கச் சொல்லுவோம் !
Delete///கதாசிரியர் வில்ப்ரிட் லுபானோ பிரித்து மேய்ந்துள்ளார் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்துக்கள் இருக்க இயலாது.
Deleteஅவர் தேர்வு செய்திருந்த களம் வறண்டது ; வித்தியாசமானதே தவிர, அதனில் அவர் போட்டுள்ள உழைப்பு துளிகூட குறை காணும் ரகமே அல்ல.
And பேனா பிடிக்கும் பொறுப்பில் இயன்ற அத்தனை குட்டிக்கரணங்களையும் நான் அடித்திருந்தேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. Maybe ரொம்பவே raw ஆக வசனங்கள் அமைந்திருந்தது நம்மில் சிலருக்கு ஒவ்வாதும் போயிருக்கலாம் என்பது புரியாதில்லை.ஆனால் கதைக்களத்தின் வீரியத்தை ; பாத்திரங்களின் தன்மைகளை கடத்த அந்த லாங்குவேஜில் சமரசமின்றி பயணிப்பது அவசியமென்றே எனக்குப் பட்டது.
So, இங்கு மூ.ச.வுக்குள் என்னை இழுத்துப் போகப் பெரியதொரு முகாந்திரம் இராது என்பதே எனது நம்பிக்கை.இத்தனைக்குப் பிறகும் தாத்தாக்கள் முட்டையிட்டிருப்பது - நம் பயணத்தின் ஒரு புரியாத பெரும் புதிர்.///
ஆமாம் சார்! தாத்தாக்கள் தோற்றிருப்பது ஒரு பெரும் புதிரே!😟
//கதவு டைட்டா கீதோ - என்னமோ ?! கொஞ்சம் எண்ணெய் போட்டு பாக்கச் சொல்லுவோம் !//
Deleteநம்ம மூன்று தாத்தாஸ்களும் வழுக்கி விழுந்துடுவாங்க, சார்
//ஒரு ஆகச் சிறந்த தொடருக்கு நாங்கள் அளித்த வரவேற்பும் ,ஆதரவும் ரொம்பவே கம்மிதான் எடிட்டர் சார் .வாசகர்கள் மேல் விழுந்த துடைத்தெறிய முடியாத கரும்புள்ளி இது//
ReplyDeleteதாத்தாக்கள் தொடரின் ரசிகர்கள் ,மனதில் இருப்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள் இளவரசர் ஜி.🙏
ஆமாங்க
Deleteக்ளாசிக் கதைகளான ரிப் கிர்பி, மாண்ட்ரேக், இரும்புக்கை மாயாவி படித்து வளர்ந்த எனது அம்மாவிற்கு தாத்தாஸ் கதைகளை மிக பிடித்திருந்தது
ReplyDeleteபோன வருடமே தாத்தாஸ் கதையை ரொம்ப எதிர்பார்த்திருந்தார்.
இதற்கு அடுத்த பாகங்கள் தமிழில் வராது என சொன்னால் வருத்தப்படுவாங்க
🙋🏻♂️
ReplyDelete🙋🏽♀️
Deleteவேற வழியே இல்லே - அஷ்டமி-நவமில்லாம் கழிஞ்ச பிற்பாடு, நாமளுமே ஒரு கச்சி -கிச்சி ஆரம்பிக்கலாமோ ? மூ.ச.மு.க. - எப்புடி கீது folks ? //
ReplyDeleteபிரபலமானாலே இதெல்லாம் சகஜமாச்சே. இப்பவே ரீல்ஸ் போட்டு பழகிகுங்க சார். அடுத்த எலக்சன்ல உங்களை அமைச்சராக்கிடலாம். இங்கிருந்து வந்து ஓட்டுப் போடறேன்.
இந்த "ரீல்ஸ்"னா நம்ம ஊரு டூரிங் டாக்கீஸிலே ரவுண்டு ரவுண்டான டப்பிகளிலே, சினிமா படத்தோட நெகட்டிவ்களை சுருட்டி-சுருட்டி வைச்சிருப்பாங்களே - அது தானே ? அதை எங்கே கொண்டு போய் போடணும் ?
Deleteஇப்படி இருந்தா கவுன்சிலருக்கு கூட ஜெயிக்க முடியாது. நாம VA வை அரசியல்ல இறக்கிட வேண்டியது தான்.
Delete😂😂😂😂😂
DeleteYoutuve Video போட்டு ரொம்ப நாளாகுதுங்க, சார்
Deleteப்ளீஸ் ஒன்று புதிதாக பகிருங்களேன், சார்
தாத்தாஸ் எனக்கு பிடித்த தொடர். தாத்தாஸ் பண்ணும் காமெடியை விண தாத்தாஸ் பேசும் அரசியல் எனக்கு பிடிக்கும். இடது வலது என எல்லாரையும் லெப்ட் ரைட் வாங்கும் தாத்தாஸ் என்னோட பேவரைட்.
ReplyDeleteஎன்னன்னமோ கேக்க ஆசை தான். மிச்ச மீதி தாத்தாஸை ஒரு குண்டா போட்டு அந்த 250 பேருக்கு மட்டும் குடுத்துடுங்கன்னு கூட கேக்க ஆசை தான். ஆனா உங்க குடோன்ல ரியாலிட்டி டேன்சாடி அட்ராசிட்டி பண்ணுமேங்கறதால எதும் கேக்கத் தோணலை.
// நிரம்ப சாரி மக்களே - பாக்கெட்டிலும் பலமில்லை ; மனதிலும் உரமில்லை - இந்தத் துக்ளியூண்டு நம்பருக்குள் வித்தைகளைக் காட்டிட //
ReplyDelete:-( Feeling sad sir. :-(
// இந்த 5 இதழ்கள் கொண்ட காம்போவினை ரூ.450 + கூரியர் என்ற விலைக்குத் தந்திட நாங்க ரெடி ! Anybody willing out there மக்களே ? //
ReplyDeleteI need a copy to gift to my friend.
Sure sir...
Deleteஉண்மை மஹி... எனக்கும் அதே ஆசைதான்.. 😄❤️❤️👍👍🙏..
ReplyDeleteதாத்தாஸ் முழுத் தொகுப்பிற்கு பணம் அனுப்பியாச்சு சார்.
ReplyDeleteநன்றி சார் !
Deleteநல்ல படைப்புகளைத் தேடித் தரும் தாங்களுக்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் சார்.
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteசார், இது மாங்கா பற்றி நான் போடும் N-ஆவது கருத்து. ஒருநாள் இந்தக் கருத்து உங்களிடம் சேர்ந்தே தீரும் என்ற நம்பிக்கையில் மீண்டும் சொல்கிறேன்! 😄
ReplyDeleteGen Z வாசகர்களைப் பிடிக்க மாங்கா ஒரு அற்புதமான ஆயுதம். தயவுசெய்து ஒரு முறை பரிசீலனை செய்யுங்கள். ஆரம்பத்தில் Death Note போன்ற குறுகிய ஆனால் வலுவான மாங்கா தொடர்களை முயற்சி செய்தால், புதிய தலைமுறை வாசகர்களை கவர ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
நண்பரே, காதில் ரத்தம் கசியும் அளவுக்கு நானுமே மங்கா சார்ந்து பதில் போட்டு விட்டேன்! சுத்தமாய் 'தம் ' இல்லை - மறுக்கா அதையே ரிப்பீட் செய்திட!
Delete12 மில்லியன் ஜனத்தொகை கொண்ட நாட்டில் நீங்கள் குறிப்பிடும் Death Note மட்டுமே 30 மில்லியன் பிரதிகள் மார்க்கெட்டில் உள்ளன.
அவர்களிடம் போய் "8.25 மில்லியன் ஜனத்தொகை கொண்ட எங்க மாநிலத்தில் ஒரு ஆயிரம் பொஸ்தவங்க மட்டும் போட்டுக்கிறோம்" என்று கேட்டுப் பார்த்தால் பதில் என்னவாக இருக்குமென்பதை யூகிப்பது அத்தனை பெரிய கஷ்டமா - என்ன?
அங்கே நடப்பது IPL தொடர் சார் - நாம ஆடுவது தெருமுனை லப்பர் பந்து கிரிக்கெட்!
சற்றும் மனம் தளறாத விக்கிரமாதித்யன்...
Delete"சச்சின் வேணாம்... லாரா வேணாம்.... வைபவ் சூர்யவான்ஷியை மட்டும் சும்மா ரெண்டு கேம் எங்க தெருவிலே ஆட அனுப்புங்களேன்" என்று கேட்டால் எவ்விதம் react செய்வார்கள் சார்?
Deleteதவிர, "மங்கா in டமில் " என்று இன்றைய யூத் கிட்டே சொல்லித் தான் பாருங்களேன்?
Deleteசார், மாங்காவை தமிழில் கொண்டு வருவதில் இருக்கும் நிதிச் சவால்களும், உரிமம் பெறுவதற்கான நேரம் மற்றும் முயற்சியும் எனக்கு நன்றாகப் புரிகிறது.
Deleteமாங்காவை கொண்டு வந்தால் வாசகர் வட்டம் சற்று விரிவடையும் என நினைத்தேன்
if not IPL , ஒரு TNPL அடித்துப் பார்த்த திருப்தியாவது இருக்கும் என்ற சிறிய ஆசைதான்! 😊
This comment has been removed by the author.
Deleteஇன்னொரு யோசனை சார். தமிழில் ஏற்கனவே இருக்கும் கதைகள் மற்றும் நாவல்களை கிராபிக் நாவல் வடிவத்திற்கு மாற்றுவது பற்றி யோசித்திருக்கிறீர்களா?
Deleteஉதாரணமாக, எனக்கு ராஜேஷ் குமார் அவர்களின் குற்ற நாவல்கள் மிகவும் பிடிக்கும். அவற்றில் ஒரு கதையை கிராபிக் நாவலாக மாற்ற வேண்டும் என்றால் என்னென்ன சவால்கள் இருக்கும் சார்?
Hi
ReplyDelete