Powered By Blogger

Saturday, March 14, 2026

மறுக்கா கேள்விகள் ..!

 நண்பர்களே 

வணக்கம்.GEN Z சந்தாவென்றெல்லாம் போடத் தயாரான பிற்பாடு - பழைய பஞ்சாங்கமாய் இருக்கப்படாது அல்லவா? So கடந்த பதிவு முதலாய் AI அண்ணாத்தையிடம் blog-க்கான மேட்டரைச் சொற்பொழிவாய் ஆற்றி வருகிறேன்! And நொடிப் பொழுதில் பிள்ளையாண்டன் அதனைத் தமிழில் டைப் அடித்துத் தள்ளி விடுகிறது! என்ன ஒரே சிக்கல் - நான் "ஆளே இல்லாத கடையிலே ராகிமால்ட் ஆத்துவானேன்?" என்று சொல்லி வைத்தால், அதுபாட்டுக்கு "அஞ்சரைக்குள்ள வண்டியிலே பஞ்சராகாதுனே!" என்ற ரேஞ்சுக்கு எதையாவது ஏடாகூடமாய் எழுதியும் வைக்கிறது! So ரொம்பவே சூதானமாய் இந்த AI கூட அன்னம் தண்ணி புழங்க வேணும் போலும்!  

​ரைட்டு... மார்ச்சின் நடுவாக்கில் இருக்கிறோம்! And சந்தேகமேயின்றி இது சற்றே lowkey மாதமே! டெக்ஸ் சிங்கிள் ஆல்பம்; சமீப வரவு சகுவாரோவின் சிங்கிள்  ஆல்பம்......and "மேற்கோ போ மவீரா" எனும் சிறுகதைகளின் collage என்ற கூட்டணியில் கூரையைப் பற்ற வைக்கும் firepower நிச்சயமாக ஒரு மிடறு குறைச்சலே தான்! ஆனால் ரெகுலர் தடத்தின் மொத்த இதழ்களின் எண்ணிக்கையே 30 தான் எனும் போது, எல்லா மாதங்களிலும் ஏவுகணைத் தாக்குதல் என்பது சிரமமாகிப் போகிறது! So இந்த வாரப் பதிவுமே அது சார்ந்த கேள்வி படலமே! 

And எப்போதும் போலவே கேள்விகளுக்கு முன்பாய் ஒரு disclaimer! "இதே கேள்விகளை ரெண்டு வருஷத்துக்கு முன்னமே கேட்டியேல்லே? மறுக்காலே எதுக்கு?" என்ற கண்சிவத்தல்கள் நடக்கக்கூடும் என்ற பயமே இந்த முன்ஜாக்கிரதை முத்துப்பாண்டி அவதாரின் பின்னணி !! ரசனை சார்ந்த சமாச்சாரங்களில் டெக்ஸ் வில்லரைத் தாண்டி, லக்கி லூக்கைத் தாண்டி, வேறு  ​எதுவுமே சாஸ்வதமல்ல என்பது கண்கூடு !! So ஓடிக்கொண்டேயிருக்கும் நதி நீரைப் போல நமது ரசனைகளும், நகர்ந்து கொண்டேயிருக்கவும் வாய்ப்புண்டு தானே? சில ஆண்டுகளுக்கு முன்னமே :OK" என்றோ ; "not okay" என்றோ; தென்பட்டிருக்கக்கூடிய சமாச்சாரங்களின் தற்போதைய நிலவரம் அதுவே தானா? அல்லது மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா? என்பதை உறுதி செய்து கொள்ளவே இந்த repeat முயற்சி!  

நாம் இப்போது இருப்பது என்னவோ வருஷத்தின் முதல் குவார்ட்டரில் தான்; ஆனால் வருஷத்தின் இறுதிக் குவார்ட்டரில் அறிவிக்க வேண்டிய 2027 சார்ந்த திட்டமிடல்கள் ஏற்கனவே துவங்கியாச்சு! ஏகப்பட்ட பதிப்பகங்கள், தொடர்கள் என்னும்போது ஒவ்வொருவரால் எல்லோரிடமும் சாவகாசமாகப் பேசி, கதைத் தேர்வுகளைச் செய்து; கோப்புகளை வரவழைக்க எக்கச்சக்கமாய் நேரம் பிடித்து விடுகிறது. அதிலும் மார்ச் முதல் ஜூன் முடிய தேசம் தேசமாய் புத்தக விழாக்கள் நடந்திடுவதால், அங்குமிங்கும் பறந்து செல்பவர்களிடமிருந்து பதில்கள் வாங்கிட நமக்கு நிறையவே சுஷின் தேவை ! அதனால் தான் சீக்கிரமே ஆரம்பிக்க வேண்டியுள்ளது!  

அடுத்தாண்டின் அட்டவணையில் யாரைப் பார்க்க விரும்புகிறீர்கள், யாரைப் பார்த்தால் லைட்டாக அயர்ச்சியாக உள்ளதென்று தெரிந்து கொள்ளவே இந்த முயற்சி! Moreso, ஆன்லைன் கொள்முதல்களின் சமீப மாதங்களின் நம்பர்களைப் பார்க்கும்போது ஒருவித pattern புலனாகிறது!  அதனை உங்களிடமிருந்தே உறுதி செய்து கொண்டால் நலமென்று நினைத்தேன். So here goes:  

​1. கார்ட்டூன்கள் in general:

லக்கி லூக், சிக் பில் & ப்ளூ கோட் தான் தற்போதைய கார்ட்டூன் பிரதிநிதிகள்! எனது முதல் கேள்வி பொதுவானது - நாயகர் சார்ந்ததல்ல ! 

ஒரு மாதத்து அட்டவணையில் கார்ட்டூன் இதழ்கள் இடம் பிடித்திருக்கும் பட்சத்தில், உங்களது வாசிப்பில் அது பிடித்திடக்கூடிய இடம் எதுவோ ? 

(a) முதலிடம்

(b) கடைசி இடம்

(c) அவை வாங்கவே மாட்டேன்.  

​2. ப்ளூகோட்ஸ் பட்டாளம் ?

(a) ஒற்றை ஸ்லாட்டுக்கு ஓகே.

(b) இப்போதெல்லாம் இந்த அணி  ஒரு உற்சாகத்தை வரவழைப்பதில்லை!  போதுமே !

​3. டிடெக்டிவ் ரூபின்  ?

(a) கேள்வியே தேவையில்லை! நிச்சயமான தேர்வாக இருக்க வேண்டும்.

(b) ம்... ஏனோ தெரியலை. பெருசாய் ரசிக்கவில்லை!  

​4. டேங்கோ ?

(a) காலத்தின் கட்டாயம்! Yes for sure !!

(b) சுமாராகவே ரசிக்குது! அத்தனை fire ஆக இல்லை!  

​5. ரிப்போர்டர் ஜானி?

(a) வருங்கால ஜனாதிபதி வாழ்க! வரட்டும் வரட்டும்!

(b) சத்தியமா முடியலே..! ரொம்பவே ஜவ்வாகிப் போச்சு!  

​6. ஸகுவாரோ...?

(a) களமே இப்போ தான் சூடு பிடிக்குது! Carry on!

(b) பெருசாய் ஈர்ப்பில்லை..!  

​7. மாடஸ்டி பிளைசி ?

(a) பில்டப் பாதி..பீலா மீதி ! மிடிலேப்பா ...மிடிலே ...!

(b) இளவரசி இல்லாங்காட்டி கதை கந்தல்..  

​8. XIII...?

(a) டெபினிட்லி, சர்வ நிச்சயமான வாசிப்பு!

(b) பெருங்காய டப்பா..! எஞ்சியிருப்பது வாசனை தான்!  

9. ஸ்டெர்ன் ?

(a) ரொம்பவே அரிதான முத்து! நிச்சயம் தேவை.

(b) ஏனோ எனக்கு ஒட்டவே மாட்டேன்கிறார்!  

​10. கிராபிக் நாவல்கள்:

(a) வித்தியாசமான வாசிப்புக் களத்திற்கு வீரியம் ஊட்டுவதே கி.நா.க்கள் தான்! A must!

(b) கோடி ரூபாய் கொடுத்தாலும் எனக்குப் படிக்க முடியறதில்லே! வேணாம் சாமி!  

​இவையே எனக்குக் கேட்க வேண்டிய கேள்விகள் folks! ஏற்கனவே கணிசமாய் வடிகட்டின பிற்பாடே 2026-ன் அட்டவணையில் நாயக/நாயகியர் இடம் பிடித்துள்ளனர் ! So இவர்களுள் மதில் மேல் பூனை கேசாய் யாரேனும் உள்ளனரா? அல்லது இவர்களெல்லாம் சறுக்கல்களுக்கு அப்பாற்பட்டவர்களா இன்றைய சூழலில்? என்பதே நான் தெரிந்து கொள்ள விழைவது!  

​A request please : ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு நிமிடச் சிந்தனையைத் தந்த பிற்பாடு பதில் சொல்லுங்கள்! நாயக/நாயகியரின் சமீப ஆல்பங்களைப் வாங்கி / படித்து விட்டீர்களா? அல்லது அவை தொங்கலில்  உள்ளனவா ? என்பதை சற்றே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்! அதற்கேற்ப உங்களது பதில்கள் அமையட்டுமே ப்ளீஸ் ? 

​அதே போல - முதல் வாசிப்புக்கே நேரமின்றிப்  போய் வரும் இந்தக் காலகட்டத்தில், மறுவாசிப்பினை ஊக்குவிக்கும் நாயக நாயகியர் யாரேனும் இருந்தால் அதனையும் highlight செய்து தெரிவித்துவிடுங்களேன் - please ?  

​டெக்ஸ் ; லக்கி லூக்  ; டின்டின் ; சிக் பில்; டைகர்; மார்ட்டின் மிஸ்டரி; போன்ற நாயகர்களெல்லாம் கேள்விகளுக்கே அவசியமில்லாத ஜாம்பவான்கள் என்பதால் அவர்கள் ராஜ்யசபா கோட்டாவில் டைரக்டாக எம்.பி.க்கள் ஆகிவிடுகின்றனர். தேர்தல்களில் நின்று பிரச்சாரம் பண்ணும் தேவைகள் அவர்களுக்கு லேது !

அதே போல க்ளாஸிக் நாயகப் பெருமக்கள் யாருமே வீதி வீதியாய் கொடி  பிடித்துப் போய் அண்டா, குண்டாவெல்லாம் தந்து வாக்கு சேகரிக்கவும் போவதில்லை !  அவர்களது கீர்த்திகளே அவர்களது கேடயங்களாகிடும் !. So they are exempt too!  

​சொல்லுங்கள் மக்களே - மேற்படி 10 கேள்விகளுக்குப் பதில்களை ! 

Have a great weekend folks ! See you around... Bye for now !  

And just a few reminders :

தற்சமயம் பிரத்தியேக முன்பதிவுகள் இவற்றுக்கு ஓடிக்கொண்டுள்ளன ! இன்னமும் முன்பதிவு செய்திருக்கா நண்பர்கள் செய்திடலாம் - ப்ளீஸ் ? 



  


82 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. 7 மட்டும் b

    மத்ததெல்லாம் a

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. 1 மட்டும் B. மற்றதெல்லாம் A.

    ReplyDelete
  5. வணக்கம். முதல் முறையாக 10 க்கு உள்ளே

    ReplyDelete
  6. 1) கார்ட்டூன் இதழ்கள்...

    நாயகர்களை பொறுத்து முதலிடம்..கடைசி இடம்...மொத்தத்தில் ஓகே ஆனால் எல்லா கார்ட்டூன் நாயகரும் அல்ல...

    ( நா சரியாதான் பேசறேனா...?!)


    2)ப்ளூகோட்ஸ் பட்டாளம்...

    ஓகே ஓகே...

    3)டிடெக்டிவ் ரூபின்..

    எனக்கு பெரிதாய் ரசிக்க தோன்றவில்லை..சில சாகஸங்கள் ஓகே சில சாகஸங்கள் சுமார்...

    4)டேங்கோ...

    அத்தனை பயர் இல்லை...எனக்கு சுமாரே...

    5)ரிப்போர்ட்டர் ஜானி..

    வருங்கால ஜனாதிபதி வாழ்க...பட் ஒன்லி ஓல்ட் ஜானி..

    6)ஸகுவாரே...

    முதல் சாகஸம் சூப்பர்..இரண்டாம் சாகஸம் சுமார்...எனவே சொல்ல தெரியவில்லை..இன்னும் சில சாகஸங்கள் வருகை தந்தால் தான் தீர்மானமாய் சொல்ல முடியும் சார்...

    7)இளவரசி..

    இல்லாட்டி கதை கந்தல்...

    8)பதிமூன்று...

    என்னை பொறுத்தவரை பெருங்காயமே...

    9) ஸ்டெர்ன்...

    ஓகே தேவை...


    10)கிராபிக் நாவல்...

    வித்தியாசமான வாசிப்பு களம்...ஓகே..

    ReplyDelete
    Replies
    1. 😘👍நான் வழி மொழிகிறேன் தலைவரே 👍

      Delete
  7. எட்டாவதாக, உள்ளேன் ஐயா

    ReplyDelete
  8. 1-a
    2-a
    3-a
    4-a
    5-a
    6-a
    7-b
    8-a
    9-a
    10... மதில் மேல் பூனை.
    மிகவும் சோக ரசம் வாசிக்கும் கிராபிக் நாவல்கள் மட்டும் வேண்டாம்.

    ReplyDelete
  9. Fab Five விளம்பரம் டிசைன் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  10. பதிவை முழுமையாக படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
  11. 1)A
    2)A
    3)A
    4)A
    5)B
    6)A
    7)A
    8)B
    9)A
    10)B (90% flop)

    ReplyDelete
  12. // "ஆளே இல்லாத கடையிலே ராகிமால்ட் ஆத்துவானேன்?" என்று சொல்லி வைத்தால், அதுபாட்டுக்கு "அஞ்சரைக்குள்ள வண்டியிலே பஞ்சராகாதுனே!" //

    🤣🤣🤣🤩😂

    ReplyDelete
  13. சார் AI கிட்ட ரொம்ப கவனமாக இருங்க சார். அது கொடுப்பதை ஒருமுறைக்கு மூன்று முறை படித்து சரி பார்த்து கொள்ளுங்கள் சார். இல்லை என்றால் பிக்னிக் ஸ்பாட் அடிக்கடி போக வேண்டி இருக்கும் சார்.

    ReplyDelete
  14. 6.a
    7.a


    மாடஸ்டி முடியல

    ReplyDelete
  15. 10.A

    கண்டிபாக வேண்டும் சார். காலத்தின் கட்டாயம். காமிக்ஸின் எதிர்காலம் கிராபிக்ஸ் கதைகளே சார்.

    ReplyDelete
    Replies
    1. 9. ஸ்டெர்ன் ?
      (a) ரொம்பவே அரிதான முத்து! நிச்சயம் தேவை.

      Delete
  16. சார் போங்காட்டாம்,
    பெரிய பதிவா கேட்டா
    எங்கிட்டே மறுக்கா கேள்வி கேட்டுட்டு போயிட்டீங்க

    ReplyDelete
  17. // மறுவாசிப்பினை ஊக்குவிக்கும் நாயக நாயகியர் யாரேனும் இருந்தால் அதனையும் highlight செய்து தெரிவித்துவிடுங்களேன் //

    டெக்ஸ், கார்ட்டூன் கதைகள் எல்லாம், மாயாவி கதைகள், ஸ்பைடர், சில கிராபிக்ஸ் கதைகள். மாடஸ்டி - கழுகு மலை கோட்டை?

    ReplyDelete
  18. 1 கார்ட்டூன்கள் in general:

    சில நேரங்களில் முதலிடம், சில நேரங்களில் கடேசி இடம், ஆனால் படித்து விடுவேன், எனக்கு கார்ட்டூன் பிடிக்கும்

    ​2. ப்ளூகோட்ஸ் பட்டாளம் ?

    (a) ஒற்றை ஸ்லாட்டுக்கு ஓகே


    ​3. டிடெக்டிவ் ரூபின் ?

    (a) கேள்வியே தேவையில்லை! நிச்சயமான தேர்வாக இருக்க வேண்டும்.


    ​4. டேங்கோ ?

    (a) காலத்தின் கட்டாயம்! Yes for sure !!

    ReplyDelete
    Replies
    1. 5. ரிப்போர்டர் ஜானி?
      (a) வருங்கால ஜனாதிபதி வாழ்க! வரட்டும் வரட்டும்!

      ​6. ஸகுவாரோ...?
      (a) களமே இப்போ தான் சூடு பிடிக்குது! Carry on!
      கண்டிப்பாக வேண்டும்

      ​7. மாடஸ்டி பிளைசி ?
      (b) இளவரசி இல்லாங்காட்டி கதை கந்தல்..
      மெய்யாலுமே கந்தல் ஆகிடும்

      ​8. XIII...?

      (a) டெபினிட்லி, சர்வ நிச்சயமான வாசிப்பு!

      Delete
    2. 9. ஸ்டெர்ன் ?
      (a) ரொம்பவே அரிதான முத்து! நிச்சயம் தேவை.
      இந்த புத்தக காதலர் வித்தியாசமான வெட்டியான்

      ​10. கிராபிக் நாவல்கள்:

      (a) வித்தியாசமான வாசிப்புக் களத்திற்கு வீரியம் ஊட்டுவதே கி.நா.க்கள் தான்!

      100% MUST

      Delete
  19. 1.ஒரு மாதத்து அட்டவணையில் கார்ட்டூன் இதழ்கள் இடம் பிடித்திருக்கும் பட்சத்தில், உங்களது வாசிப்பில் அது பிடித்திடக்கூடிய இடம் எதுவோ ?

    கண்டிப்பாக படிச்சுடுவேன்,அது முதலிடமா,கடைசி இடம் என்பது அப்போதைய மனநிலையைப் பொறுத்தது...

    ​2. ப்ளூகோட்ஸ் பட்டாளம் ?
    (a) ஒற்றை ஸ்லாட்டுக்கு ஓகே.

    ​3. டிடெக்டிவ் ரூபின் ?
    (a) கேள்வியே தேவையில்லை! நிச்சயமான தேர்வாக இருக்க வேண்டும்.

    ​4. டேங்கோ ?
    (a) காலத்தின் கட்டாயம்! Yes for sure !!

    ​5. ரிப்போர்டர் ஜானி?
    (a) வருங்கால ஜனாதிபதி வாழ்க! வரட்டும் வரட்டும்!

    ​6. ஸகுவாரோ...?
    (a) களமே இப்போ தான் சூடு பிடிக்குது! Carry on!

    ​7. மாடஸ்டி பிளைசி ?
    (b) இளவரசி இல்லாங்காட்டி கதை கந்தல்..

    ​8. XIII...?
    (b) பெருங்காய டப்பா..! எஞ்சியிருப்பது வாசனை தான்!

    9. ஸ்டெர்ன் ?
    (a) ரொம்பவே அரிதான முத்து! நிச்சயம் தேவை.

    ​10. கிராபிக் நாவல்கள்:

    (a) வித்தியாசமான வாசிப்புக் களத்திற்கு வீரியம் ஊட்டுவதே கி.நா.க்கள் தான்! A must!

    ReplyDelete
    Replies
    1. // ஸகுவாரோ...? //
      இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்தா டேங்கோ,மிஸ்டர் நோ,ஸாகோர் போல கொஞ்சம், கொஞ்சமா விஸ்வரூபம் எடுப்பார்னு தோணுது...

      // கிராபிக் நாவல்கள்//
      வாசிப்பை அடுத்தக் கட்டத்திற்கு அப்டேட் செய்வதே இவைதான்...அவசியம் தேவை...

      Delete
  20. கும்புட்டுக்கறேனுங்க!🙏

    ReplyDelete
  21. சனிக்கிழமை பதிவு கிடைச்சுடுச்சு
    ஆனால் சின்ன பதிவு

    ReplyDelete
  22. ஒரு மாதத்து அட்டவணையில் கார்ட்டூன் இதழ்கள் இடம் பிடித்திருக்கும் பட்சத்தில், உங்களது வாசிப்பில் அது பிடித்திடக்கூடிய இடம் எதுவோ ?
    (a) முதலிடம்

    ​2. ப்ளூகோட்ஸ் பட்டாளம் ?
    (a) ஒற்றை ஸ்லாட்டுக்கு ஓகே.

    ​3. டிடெக்டிவ் ரூபின் ?
    (a) கேள்வியே தேவையில்லை! நிச்சயமான தேர்வாக இருக்க வேண்டும்
    ​4. டேங்கோ ?
    (a) காலத்தின் கட்டாயம்! Yes for sure !!

    ReplyDelete
  23. ​// அதே போல - முதல் வாசிப்புக்கே நேரமின்றிப் போய் வரும் இந்தக் காலகட்டத்தில், மறுவாசிப்பினை ஊக்குவிக்கும் நாயக நாயகியர் யாரேனும் இருந்தால் அதனையும் highlight செய்து தெரிவித்துவிடுங்களேன் - please ? //
    உண்மையை சொல்லனும்னா மீள்வாசிப்பு கொஞ்ச காலமா பெருசா ஏதும் இல்லை,வதம் செய்வோம் வேங்கைகளே மட்டும் சமீபத்தில் உடனே மீள்வாசிப்பில் ஆழ்த்தியது,இன்னும் கொஞ்சம் நேரம் தேவை எனக்கு,அதற்குப் பின் மீள்வாசிப்பு சாத்தியமாகும் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
  24. புதிய Fab Five Design அருமை சார்

    ReplyDelete
  25. நீங்க AI யூஸ் பண்ணுங்க. நாங்க copy & paste செய்றோம், உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல சார் ☺️

    ReplyDelete
  26. //அதே போல - முதல் வாசிப்புக்கே நேரமின்றிப் போய் வரும் இந்தக் காலகட்டத்தில், மறுவாசிப்பினை ஊக்குவிக்கும் நாயக நாயகியர் யாரேனும் இருந்தால் அதனையும் highlight செய்து தெரிவித்துவிடுங்களேன் - please ? /?


    சோடா, தோர்கல், ஆல்பா

    ReplyDelete
  27. 1) கார்ட்டூன் இதழ்கள்...

    முதலில்


    2)ப்ளூகோட்ஸ் பட்டாளம்...

    ஓகே ஓகே...

    3)டிடெக்டிவ் ரூபின்..

    சந்தேகமே வேண்டாம்

    4)டேங்கோ...

    பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு...

    5)ரிப்போர்ட்டர் ஜானி..

    முடியலே!

    6)ஸகுவாரே...

    இன்னும் ரெண்டு மேட்ச் குடுங்க சார்!! அப்போ தானே சஞ்சு சாம்சனா, சங்கு
    சாம்சனானு தெரியும்....

    7)இளவரசி..

    கிழவியாகி மாமாங்கம் ஆச்சு!!

    8)பதிமூன்று...XIII

    என்னை பொறுத்தவரை செல்லக்குட்டி தான், வெல்லக் கட்டி தான்!

    9) ஸ்டெர்ன்...

    ஓகே தேவை...


    10)கிராபிக் நாவல்...

    வித்தியாசமான வாசிப்பு களம்...ஓகே..

    ReplyDelete
  28. 1.ஒரு மாதத்து அட்டவணையில் கார்ட்டூன் இதழ்கள் இடம் பிடித்திருக்கும் பட்சத்தில், உங்களது வாசிப்பில் அது பிடித்திடக்கூடிய இடம் எதுவோ ?

    a) முதலிடம்

    2. ப்ளூகோட்ஸ் பட்டாளம் ?
    (a) ஒற்றை ஸ்லாட்டுக்கு ஓகே.

    3. டிடெக்டிவ் ரூபின் ?
    (a) கேள்வியே தேவையில்லை! நிச்சயமான தேர்வாக இருக்க வேண்டும்.

    4. டேங்கோ ?
    (a) காலத்தின் கட்டாயம்! Yes for sure !!

    5. ரிப்போர்டர் ஜானி?
    (a) வருங்கால ஜனாதிபதி வாழ்க! வரட்டும் வரட்டும்!

    6. ஸகுவாரோ...?
    (a) களமே இப்போ தான் சூடு பிடிக்குது! Carry on!

    7. மாடஸ்டி பிளைசி ?
    (a) பில்டப் பாதி..பீலா மீதி ! மிடிலேப்பா ...மிடிலே ...!

    8. XIII...?
    (b) பெருங்காய டப்பா..! எஞ்சியிருப்பது வாசனை தான்!

    9. ஸ்டெர்ன் ?
    (a) ரொம்பவே அரிதான முத்து! நிச்சயம் தேவை.

    10. கிராபிக் நாவல்கள்:

    (a) வித்தியாசமான வாசிப்புக் களத்திற்கு வீரியம் ஊட்டுவதே கி.நா.க்கள் தான்! A must!

    ReplyDelete
    Replies
    1. ஒரே ஒரு மாற்றம்
      5 ரிப்போர்ட்டர் ஜானி

      b) சத்தியமா முடியலே..! ரொம்பவே ஜவ்வாகிப் போச்சு!

      மீதி எல்லாம் சரியான பதில்

      Delete
  29. ****** மேற்கே போ மாவீரா! ******

    ரொம்பவே வித்தியாசமான முயற்சி. ஒரே ஒரு தங்கக் கடிகாரம் - வெவ்வேறு காலகட்டம் - வேறுவேறு மனிதர்கள் - விதவிதமான போராட்டங்கள்!
    ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு ஓவியரால் வரையப்பட்டிருப்பது சிறப்பு! எல்லோருமே அசத்தியிருக்கிறார்கள்! கலரிங்கும் அபாரம்!!💐💐💐👏👏👏👏👏

    சித்திரங்களின் அளவு இன்னும் பெரிதாக இருந்திருக்கலாம். (ஒருவேளை இதன் ஒரிஜினல் சைஸ் - லக்கிலூக் அளவாக இருந்திருக்குமோ?) சில பேனல்களில் வசனப் பலூன்களின் ஆதிக்கத்தையும் தாண்டி காட்சியைப் புரிந்துகொள்ள ரொம்பவே மெனக்கெட வேண்டியிருக்கிறது! 😰

    செல்லும் இடமெல்லாம் மரணத்தை விதைத்துச் செல்கிறது அந்தக் கடிகாரம்! நமது தேசப் பிதா காந்தியடிகளின் இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரம் கூட இதே ரகமாக இருக்குமோ என்று இப்போது டவுட் வருகிறது!🧐🤔

    வைல்ட் வெஸ்ட் கதைகளில் வித்தியாசத்தை விரும்புபவர்களுக்கு இந்தப் படைப்பு ஒரு விருந்து!👍

    ReplyDelete
  30. 1.ஒரு மாதத்து அட்டவணையில் கார்ட்டூன் இதழ்கள் இடம் பிடித்திருக்கும் பட்சத்தில், உங்களது வாசிப்பில் அது பிடித்திடக்கூடிய இடம் எதுவோ ?

    கண்டிப்பாக வே
    ண்டும்.

    ​2. ப்ளூகோட்ஸ் பட்டாளம் ?
    (a) ஒற்றை ஸ்லாட்டுக்கு ஓகே.

    ​3. டிடெக்டிவ் ரூபின் ?
    (a) கேள்வியே தேவையில்லை! நிச்சயமான தேர்வாக இருக்க வேண்டும்.

    ​4. டேங்கோ ?
    (b) No fire

    ​5. ரிப்போர்டர் ஜானி?
    (a) வருங்கால ஜனாதிபதி வாழ்க! வரட்டும் வரட்டும்!

    ​6. ஸகுவாரோ...?
    (a) களமே இப்போ தான் சூடு பிடிக்குது! Carry on!

    ​7. மாடஸ்டி பிளைசி ?
    (b)

    ​8. XIII...?
    (b) பெருங்காய டப்பா..! எஞ்சியிருப்பது வாசனை தான்!

    9. ஸ்டெர்ன் ?
    (a) ரொம்பவே அரிதான முத்து! நிச்சயம் தேவை.

    ​10. கிராபிக் நாவல்கள்:

    (a) வித்தியாசமான வாசிப்புக் களத்திற்கு வீரியம் ஊட்டுவதே கி.நா.க்கள் தான்! A must!

    ReplyDelete
    Replies
    1. 7. Typo error - option A சத்தியமா மிடி பல

      Delete
  31. 1. சூப்பர்

    2. பரவாயில்ல

    3. ஏன்னாது. ரூபி பாப்பா வந்தே ஆவணும்.


    4, 6,7, இது இன்னமு இங்க தா கீதா.

    5,8 வேணுமான்னு ஓரு கேள்வியா.

    9. பரவாயில்ல

    10. நா வேணும்ன்னு கேட்டேனா. சார் நீங்க அத தரீங்க. நா ரொம்ப சூதானமா பரண்ல கொண்டு போய் பதிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ... பதுக்கி வைக்கிறேன்...

      Delete
    2. நீங்க கடேசியா படிச்ச புக் மஞ்சள் பூ மர்மம்னு நினைக்கிறேன் நண்பரே....!

      Delete
  32. 1 கார்ட்டூன்கள் in general:
    (a) முதலிடம்
    2. ப்ளூகோட்ஸ் பட்டாளம் ?
    (a) ஒற்றை ஸ்லாட்டுக்கு ஓகே.
    3. டிடெக்டிவ் ரூபின் ?
    (a) கேள்வியே தேவையில்லை! நிச்சயமான தேர்வாக இருக்க வேண்டும்.
    4. டேங்கோ ?
    (a) காலத்தின் கட்டாயம்! Yes for sure !!
    5. ரிப்போர்டர் ஜானி?
    (a) வருங்கால ஜனாதிபதி வாழ்க! வரட்டும் வரட்டும்!
    6. ஸகுவாரோ...?
    (a) களமே இப்போ தான் சூடு பிடிக்குது! Carry on!
    7. மாடஸ்டி பிளைசி ?
    (a) பில்டப் பாதி..பீலா மீதி ! மிடிலேப்பா ...மிடிலே ...!
    8. XIII...?
    (a) டெபினிட்லி, சர்வ நிச்சயமான வாசிப்பு!
    9. ஸ்டெர்ன் ?
    (a) ரொம்பவே அரிதான முத்து! நிச்சயம் தேவை.
    10. கிராபிக் நாவல்கள்:
    (a) வித்தியாசமான வாசிப்புக் களத்திற்கு வீரியம் ஊட்டுவதே கி.நா.க்கள் தான்! A must!

    ReplyDelete
    Replies
    1. இயவரசிக்கி நோ சொல்லி இருக்கீங்க..! குறிச்சிப்போம் மைனஸ் வோட் : 1

      Delete
  33. ப்ளைசி.. அவசியம்.. 13 அவசியம்.. ❤️👍🙏...

    ReplyDelete
  34. 1- (b) கடைசி இடம்
    2- (b) இப்போதெல்லாம் இந்த அணி ஒரு உற்சாகத்தை வரவழைப்பதில்லை! போதுமே !
    3- (b) ம்... ஏனோ தெரியலை. பெருசாய் ரசிக்கவில்லை!
    4- (a) காலத்தின் கட்டாயம்! Yes for sure !!
    5- (b) சத்தியமா முடியலே..! ரொம்பவே ஜவ்வாகிப் போச்சு!
    6- (a) களமே இப்போ தான் சூடு பிடிக்குது! Carry on!
    7- (b) இளவரசி இல்லாங்காட்டி கதை கந்தல்..
    8- (a) டெபினிட்லி, சர்வ நிச்சயமான வாசிப்பு!
    9- (a) ரொம்பவே அரிதான முத்து! நிச்சயம் தேவை.
    10- (a) வித்தியாசமான வாசிப்புக் களத்திற்கு வீரியம் ஊட்டுவதே கி.நா.க்கள் தான்! A must!

    ReplyDelete
    Replies
    1. கார்ட்டூன்ஸ் - நோ
      ப்ளூ கோட்ஸ் - நோ
      ஜானி - நோ

      Delete
  35. Yes sir... கிராபிக் நாவல் (காமிக்ஸ்..)அவசியம்...

    ReplyDelete
  36. 1) கார்ட்டூன் இதழ்கள்...

    முதலில்!!


    2)ப்ளூகோட்ஸ் பட்டாளம்...

    வருடத்திற்கு 2 என்றாலும் எனக்கு மகிழ்ச்சியே!

    3)டிடெக்டிவ் ரூபின்..

    ரூபின் இன்றி ஒரு அணுவும் அசையாது!

    4)டேங்கோ...

    இன்னும் ஒரு கதை கூட படித்ததில்லைங்க சார்!

    5)ரிப்போர்ட்டர் ஜானி..

    பழைய ஜானி ஓகே தான்!

    6)ஸகுவாரே...

    படித்தவரை ஓகே தான்!

    7)இளவரசி..

    😍😍😍

    8)பதிமூன்று...XIII

    வந்தாலும் ஓகே. வரலேன்னாலும் வருத்தமில்லை!

    9) ஸ்டெர்ன்...

    எனக்கு ரொம்ப பிடிக்கும்!😍😍😍


    10)கிராபிக் நாவல்...

    அவசியம் வேண்டும்!!😍😍😍

    ReplyDelete
  37. 1)A.
    அந்த மாசம் கார்ட்டூனை விட தூக்கலான கதை வந்தால் கார்டூன் கடைசி வாசிப்புதான்.
    ஆனாலும் கார்ட்டூனை விட முடியாது. கண்டிப்பாக தேவை.
    (முடிந்தால் ஸ்பூன் & வெய்ட் வெளியிடலாம்).

    2)A.
    அருமையான கதைக்கள கார்ட்டூன். ஒவ்வொரு கதையும் படிக்க ரெம்பவுமே பிடிக்கும். ❤️.

    3)B.
    கடைசியில் வந்த ஒரு கதை படிச்சது, ஏனோ பெரிதாக ஈர்ப்பில்ல. வந்தாலும் ஓகே, வராட்டியும் ஓகே.

    4)A.
    அருமையான ஆக்சன் தொடர். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். தொடர்ந்து வரனும்.

    5)B.
    வருசத்துக்கு ஒரு முறை தான் என்றாலும் இதுவும் வந்தாலும் வராட்டியும் ஓகேதான்.

    6)A.
    முதல் கதையும் சரி,இப்ப வந்த கதையும் சரி இரண்டிலும் எதிர்பார்ப்பை ஏமாற்றாத ஆக்சன் ஹீரோ. Welcome 🔥.

    7)B.
    ஏதாவது ஒரு விதத்தில் திருப்திப்படுத்தும் ஹீரோயின். வரட்டுமே.

    8) No comments.

    9)A.
    ஒவ்வொரு கதையிலும் அவருடனேயே பயணிக்கலாம்.நல்ல சுவாரஸ்யமான மனுசர்.
    நிச்சயம் வரனும்.

    10)A.
    நாம ரெகுலரா பார்க்கும் நாயக நாயகி சாகஸங்களில் இல்லாத ஒன்று நிச்சயம் இந்த க்ராபிக் நாவல்களில் உள்ளது.
    மாறுபட்ட சூழல், பில்டப் இல்லாத யதார்த்தமான கதாபாத்திரங்கள்,
    மிகைப்படுத்தப்படாத முடிவுகள் என
    பல வித்தியாசமான கதைகள் மாறுபட்ட காமிக்ஸ் உலகிற்கு அழைத்துப் போகிறது. இவற்றை நிச்சயம் மக்கள் ஒரு நாள் புரிந்து கொள்ளும் காலம் வரும்.
    ஒற்றை நொடி ஒன்பது தோட்டா, குற்ற நகரம் கல்கத்தா, பயணம், கண்ணான கண்ணே, இரவே இருளே கொல்லாதே மாதிரியான க்ரைம், த்ரில்லர் கதைகள் தொடர்ந்து வரனும்.

    விறுவிறுப்பான, போரடிக்காத கதைகள் எப்பவும் மறுவாசிப்புக்கு உண்டானதுதான்.
    சிகப்பு நதி,
    சிரிக்கும் விசித்திரம்,
    2025 லயன் தீபாவளி மலர்,
    சாய்கான் புதையல்,
    சாபம் வாங்கிய சுரங்கம்,
    போன்ற கதைகள் தாராளமாக மறுவாசிப்பு செய்ய பிடித்திருந்தது.

    ReplyDelete
  38. 1 to 6 and 9 to 10- *All (a)*😘🥰

    7&8- both(b) only 🥰😘

    ReplyDelete
  39. 1.b 2.b.3.b 4.a 5. b 6.b 7.a 8.b 9.b.10.a

    ReplyDelete
  40. 1 to 6 and 9 to 10 =*All (a)*😘🥰

    7&8= *Both (b) only*👍🥰😘

    ReplyDelete
  41. 1. லக்கி சிக்பில் இருந்தால் முதலிடம்.
    2. ப்ளூகோட்ஸ் - எனக்கு பிடிக்கலை.
    3. ரூபின் - யெஸ்.
    4. டேங்கோ - யெஸ்.
    5. ஜானி- நோ.
    6. சாகுவாரோ- சாக மாட்டார்
    7. மாடஸ்டி- பாயா பிடிக்கும். ஆயா பிடிக்காது.
    8. 13 - யெஸ்
    9. ஸ்டெர்ன் - I love Stern
    10. கி நா - செலக்டிவானா கிநாக்கள் யெஸ். உதாரணம் பயணம், சாம்பலின் சங்கீதம். மத்தபடி அழுகாச்சி கிநான்னா வேணா.

    ReplyDelete
  42. 1 . லக்கி மட்டும்
    2. B
    3. B
    4. B
    5. A
    6. B
    7. B
    8. B
    9. B
    10. B
    காமிக்ஸ் படிக்கிற நமக்கு வயதாகிறதோ என்னவோ அதனால் தான் எல்லாமே B யாக தோன்றுகிறது போல

    விவேக் காமெடி போல லெப்ட்ல இண்டிகேட்டர் போடனும் ரைட்ல கை காமிக்கனும் ஆனா நேரா போயிடனும்ன்னு சொல்வாரே அது போலத்தான் இருக்கு இப்போதைய நிலவரம் .. குடும்பம் வேலை தொழில் ன்னு இந்த சமயத்தில் இந்த வயதில போய்கொண்டிருக்கிற எல்லாரிடமும் படிப்பு வாசனை குறைந்து விட்டதுங்க டியர் எடி .. எல்லாரும் மறுக்கா மறுக்கா கேட்கிற மாதிரி பழைய நாயகர் களை மட்டுமே விரும்புகிறோம். புதுசை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் எல்லாரும் இல்லை .. வெளியே நான்லாம் அப்படி இல்லைன்னு சொல்லிக்கலாம் .. பட் நிதர்சனம் ன்னு ஒன்னு இருக்கிறது இல்லைங்களா .. காலத்தேவைக்கேற்ப மாற்றங்களை கொண்டு லாங்க டியர் எடி .. இங்க ஆகா ஓகோ ன்னு சொல்றவங்க.ஒரு 50 பேரை தாண்டி எத்தனை பேர் புதிய கதைகளை ரசிக்கிறாங்க. ??

    விற்பனைன்னு ஒன்னு இருக்குங்கள்ல ( புக் பேர்ல் விற்க்கும் விற்பனை இதில் சேராது )

    என் மனதில் பட்டதை சொன்னேன் டியர் எடி ..

    குறிப்பு : என்னை திட்டுறவங்க திட்டிக்கலாம் ..

    ReplyDelete
    Replies
    1. ꫝᧁᠻᦔꫀɀꪜꫝꪊ#%₹&ᧁᠻᦔ𝓳ꪶ𝓲

      😊 நீங்களே சொல்லிட்டதாலே

      Delete
  43. 5. ரிப்போர்டர் ஜானி?
    B

    இவருக்கு கொஞ்ச வருடங்களுக்கு ஓய்வு கொடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. நடப்பு சந்தாவில் இவர் ஒரு வீக் பாயிண்ட் சார்.

      Delete
  44. சார், கிட்டங்கியில் தூங்கும் நாயகர்/நாயகி யாராக இருந்தாலும் உடனடியாக ரெகுலர் சந்தாவில் இருந்து தாராளமாக தூக்கி விடுங்கள் சார்.

    ReplyDelete
  45. XIII - முதல் தொடர் போல தற்போது வரும் கதைகள் இல்ல சார். கொஞ்சம் நன்றாக இருக்கிறது.

    ஆனால் இவர் விற்பனையில் சாதிக்காமல் நமது குடோனில் வாடகை கொடுக்காமல் இருந்தால் என்றால் தாராளமாக இவருக்கு ஓய்வு கொடுங்கள் சார்.

    ReplyDelete
  46. // நமக்கு நிறையவே சுஷின் தேவை //

    சுஷின் என்றால் என்ன அர்த்தம் சார்?

    ReplyDelete