நண்பர்களே,
வணக்கம். எங்க ஊரில் மட்டும் தானா? அல்லது பரவலாகவே இது தான் நிலவரமா? என்று தெரியவில்லை ; ஆனால் கொஞ்ச காலமாகவே காலைகளில் குளிரானது ஜொய்ங் என போட்டுத் தாக்கி வருகிறது! வாக்கிங் போனால் வீடு திரும்பும் போது கலைஞரின் குரலுடன் தான் வந்து சேர முடிகிறது! திடீரென தொற்றிக் கொண்ட 'லேட்டஸ்ட்' ஜல்ப்போடு மல்லுக்கட்டியபடியே இந்தப் பதிவினை எழுத அமர்ந்திருக்கிறேன்!
மார்ச் மாத இதழ்களின் முக்கால்வாசி பிரிண்ட் ஆகி பைண்டிங்கில் இருக்க - மகளிர் தின ஸ்பெஷலான "புதைகுழிப் பூக்கள்" மாத்திரமே இன்னமும் பெண்டிங்! அடுத்த ஓரிரு நாட்களில் அதையும் பூர்த்தி செய்து விட்டால் "பிப்ரவரியில் மார்ச்" சாத்தியமாகியிருக்கும்! பார்க்கலாம்! பட்சே - இந்த வாரப் பதிவானது இன்னும் சற்று தள்ளி காத்திருக்கும் மே மாதம் சார்ந்தது! Oh yes - மே மாதத்தின் ஆன்லைன் மேளா பற்றிய உரத்த சிந்தனையே இது! கொரோனாவின் லாக்டவுன் தினங்களில் கொஞ்சமே கொஞ்சமாய் நாம் மூச்சு விட்டுக்கொள்ளவொரு வாய்ப்பாகத் திட்டமிட்ட இந்தச் சமாச்சாரம் இப்போதெல்லாம் நமது ஆண்டின் highlight-களுள் முக்கியமானதாக வளர்ந்து நிற்பது obvious. And பொதுவாகவே கடைசி நிமிடம் வரையிலும் காத்திருக்கும் மேளாவின் புக்ஸ் பற்றி வாயைத் திறக்காமலே பெவிகால் பெத்தபெருமாளாய் வலம் வருவது வழக்கம். ஆனால் - முன்செல்லும் காலங்களில் சந்தாவின் ரெகுலர் இதழ்களைத் தவிர்த்த பிற முயற்சி(களை) முன்கூட்டியே கடைவிரித்துப் போணி செய்திடப் பார்த்தே தீரணும் என்ற அவசியம் எழுந்துள்ளதால் - 'சளசலப்பு சண்முகநாதன்' அவதார் தவிர்க்க இயலாத ஒன்றாகி உள்ளது! So அதன் நீட்சியே இந்தப் பதிவு!
மே ஆன்லைன் மேளாவின் ரேஸில் ஓடிட முதல் ஆட்களாய் தயாராகி நிற்போர் - பல் போன தாத்தாக்களும், லண்டனின் வீதிகளை அளந்திடும் மேகி கேரிஸனும் தான்! ஒன்றை மாதம் முன்னரே இந்த இரு ஆல்பங்களுக்கான முன்பதிவினை அறிவிச்சாச்சு என்பதால் அவர்கள் பாதித் தொலைவை ஏற்கனவே கடந்தாச்சு! மார்ச் 31 வரைக்கும் அவர்களுக்கு இன்னமுமே அவகாசம் இருப்பதால் சிக்கலின்றி கிராபிக் நாவல் twins கரை சேர்ந்து விடுவர் என்று நம்பிக்கையுள்ளது! அவர்கள் நீங்கலாக வேறு யாரைக் களமிறக்கலாம்? One-shots களுள் எவற்றை முன்நிறுத்தலாம்? என்ற மகாசிந்தனை என்னுள்.
And for a change - இந்தவாட்டி நானே இன்கி-பிங்கி-பாங்கி போட்டுத் தேர்வுகளைச் செய்திடாது - உங்களையே செலக்ஷன் கமிட்டியாக உருமாற்றிட விழைகிறேன்! So இந்தத் தேர்வுக்கென யாரெல்லாம் பங்கேற்க ரெடியாக உள்ளனர்? என்பதை மெதுமெதுவாய் அறிவிக்கிறேன்! அவர்களுள் யாரைத் தேர்வு செய்யலாம் ? என்ற உங்களது பரிந்துரைகள் கிட்டட்டும்! ஏகோபித்த வழிகாட்டல் கிட்டினால் சிறப்பு - சிண்டைப் பிய்த்துக் கொள்ளாது அந்தப் பாதையிலேயே பயணித்து விடலாம். But தெற்காலே கொஞ்சம், கிழக்காலே கொஞ்சம் - என்ற ரீதியில் suggestions அமைந்திடும் பட்சத்தில், இருக்கவே இருக்கும் எனது கி.பி.பா. டெக்னீக் ! அதில் இன்னொரு வசதியுமே கீது ! "அக்காங்... என்கிட்டே யோசனை கேட்டுட்டு - அதைச் செயல்படுத்தலை" என்று கண்சிவந்து மூத்திரச் சந்துகளில் பிராது கொடுக்கவும் முகாந்திரங்கள் 'ஜிலோ'வென அமைந்து விடும் அல்லவா ?!
So ஆரம்பிக்கலாமாங்களா?
அநேகமாய் கி.மு, கி.பி காலத்தின் அறிவிக்கப்பட்ட ஜம்போ காமிக்ஸின் "வைகறைக் கொலைகள்" தான் என் நினைவுக்கு வந்திடும் முதல் ஆல்பம்! சொல்லப் போனால் maybe நான்கு - ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே இதன் அட்டைப்படமுமே பிரிண்ட் ஆகியாச்சு! So இந்த ஆல்பத்தினை நாம் 'டிக்' அடிக்கும் பட்சத்தில், ஜம்போவின் லோகோவோடு தான் இந்த புக் களம் காணும்! லக்கி லூக் சைசிலான பிளாக் அண்ட் ஒயிட் இதழ்; 52 பக்கங்கள் ; என்பதே இதன் template. எழுபதுகளில் பிரான்ஸில் அரங்கேறியதொரு கொலைச் சம்பவமும், அதைத் தொடர்ந்த கோர்ட் விசாரணையுமே இந்த ஆல்பத்தின் பின்னணி என்பதை முன்னரே சொல்லியிருந்தது நினைவிருக்கலாம் ! திரைப்படமாகக்கூட இந்த நிகழ்வு வெளிவந்துள்ளது என்றுமே எனது ஞாபகம் சொல்கிறது! இதழின் சிறப்பே கோட்டோவிய பாணியில் அல்லாது Grey shades சகிதம் தீட்டப்பட்டுள்ள பிரமாதமான ஓவியங்களே! இதன் மொழியாக்கம் ரொம்பவே டப்சாவாக அமைந்து போயிருந்தால் தான் திட்டமிட்டபடியே அந்நாட்களிலேயே இதழினை வெளியிடத் தீரவில்லை ! முழுசையுமே கடாசி விட்டு fresh ஆக எழுத வேண்டும் என்பது அன்றைய தேதிக்கு பெண்டைக் கழற்றும் முயற்சியாய் தென்பட்டதால் - பரணிற்கு பார்சல் பண்ணிவிட்டிருந்தேன்! இன்றைக்கும் நிலவரத்தில் மாற்றமில்லை - but ஒரு true life க்ரைம் களமானது நமக்கு ரசிக்கக் கூடுமே என்ற எண்ணமானது எனது சோம்பலை மண்டையில் தட்டுகிறது! What say மக்களே?
இதே போல அட்டைப்படமெல்லாம் ரெடியாகி, இதே போல பிளாக் அண்ட் ஒயிட்டில், இதே போல மொழியார்ப்பில் எழுந்த மொக்கைகளின் காரணத்தால் சயனத்தில் ஆழ்ந்திருக்கும் ஒரு ஆக்ஷன் நாயகரே அடுத்த பார்ட்டி! "என் பெயர் அந்நியன்" என்ற தலைப்புடன் சில விளம்பரங்களில் தலைகாட்டிய இந்த மனுஷன் போனெலியின் படைப்பே! இங்குமே பிள்ளையார் சுழி முதல் சுபம் வரையிலான மொழியார்ப்பினை fresh ஆகச் செய்ய இயன்றால் மாத்திரமே கரைசேர்ந்திட முடியும் என்ற நிலவரம் ! ஒரு வித இருண்ட கதைக் களம்; கம்யூனிஸ்ட் பெர்லினின் பின்னணியில் தெறிக்க விடும் spy action - என்று இந்த கறுப்புக் கண்ணாடிக்காரரை அடையாளம் காட்டிட இயலும்! உங்களது இசைவு கிட்டினால் இவருக்கான வாடிவாசல் திறந்திடும்!
Next in line is : "கதிரவன் கண்டிரா கணவாய்"...! இதுவும் முந்தைய இரு ஆல்பங்களைப் போலவே black & white! And முந்தைய 2 ஆல்பங்களைப் போலவே வெகு சுமாரான மொழியார்ப்பினை ரிப்பேர் பண்ணிட தம் இல்லாத காரணத்தால் பரணில் துயிலும் ஆல்பம்! எனது ஞாபகம் சரியெனில் - இதிலொரு 140 பக்கத் திரில்லர் & கொஞ்சமாய் டிக்கிலோனா sequence-களும் இங்கே உண்டு! One shot ஆல்பமே - but செம பரபரப்பான களம்!
பார்வையை பீரோவின் உள்தட்டுக்குள் நீளவிட்டால் நமது ஜம்பிங் மாயாத்மாவும் குடியிருப்பது தெரிகிறது! ஊஹூம் ... நம்ம 'தல' விழுப்புரத்திலிருந்து குடிமாறியிருக்கவில்லை - நான் குறிப்பிடுவது ஸாகோர் டி-நேயின் அழகானதொரு black & white சாகசத்தினை! இதுவொரு 192 பக்க - அமானுஷ்யம் கலந்ததொரு திரில்லர்! துவக்க நாட்களின் ஸாகோர் 'மினி' படைப்புகளுக்குப் பிற்பாடு வெளிவந்திருக்கும் முழுநீள சாகசங்கள் அனைத்துமே 'ஹிட்ஸ்' என்பதால் - சாகோருக்கு கூடுதலாய் வாய்ப்புத் தரும் நோக்கில் இந்த ஆல்பத்தினை ஏதோவொரு தருணத்தில் களமிறக்கலாமே என வாங்கிப் போட்டிருந்தோம். But ரெகுலர் தடத்தில் slots ரொம்பவே சட்டை-கிழிப் படலமாகிப் போவதால் கோடாரி மாயாத்மா waiting list-ல் அமர வேண்டிப் போனது! இவர் மே மாதம் களம் காண வேண்டுமென நீங்கள் நினைத்தால் எண்: 4-ஐ அழுத்தவும்!
And of course - "விஷம்"!! 5 அத்தியாயங்கள் கொண்ட இந்த மெகா கௌபாய் களமானது கிட்டத்தட்ட 4 பாகங்கள் வரை மொழியாக்கம் முடிந்து ரெடி! But இங்கே ஒரே சிக்கல் - மொத்தமாய் 5 அத்தியாயங்களையும் ஒரே தருணத்தில் ரிலீஸ் செய்வதாகவிருந்தால் பட்ஜெட் எகிறிவிடும்! சர்வ நிச்சயமாக ரூ. 800-க்கு மேல் ஒரு விலை அமைந்து விடும் & வேறு யாருக்குமே மே மாதம் வாய்ப்பே இல்லாது போய் விடும்! So "விஷம்" ஒரு long term பிரத்யேக முன்பதிவு project ஆக்குவதே நலம் என்பது எனது எண்ணம்!
அப்படியே பீரோவைத் துழாவும் போது 2026-ன் அட்டவணையில் கடைசி நிமிடம் வரையிலும் இடம் பிடித்திருந்து, மார்டினின் கலர் ஆல்பத்துக்காக தனது ஸ்லாட்டை விட்டுக் கொடுத்த டைலன் டாக் தென்படுகிறார். "பெளர்ணமியில் ஒரு பூதவேட்டை" என்ற ஆல்பத்துக்கு நமது வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் பெயரிடக் கோரியிருந்தது நினைவிருக்கலாம். இது அந்த ஆல்பமே. 96 பக்கங்கள் - black & white! நடப்பாண்டில் டைலனின் "The Good, The Bad & The Ugly" வெளிவருவதால் பெள. பூ. வே சற்றுத் துயிலட்டும் என எண்ணியிருந்தேன்!
துளாவும் படலத்தின் அடுத்த கட்டத்தில் கையில் சிக்கியவர் யாரென்று தெரிந்தால் திகைத்துப் போய் விடுவீர்கள்! ஆங் ... becos அது நமக்கெல்லாமே பிராணவாயுவாய் இருந்து வரும் இரவுக்கழுகார் தான்! "ஆத்தீ... டெக்ஸ் சாகசம் துயில் பயில்வானேன் ??" என்ற கேள்வி எழலாம்! உள்ளதைச் சொல்வதானால், இந்த 224 பக்க - கலர் - ஆக்ஷன் மேளா தான் 2026-ன் லயன் தீபாவளி மலராக இருந்திருக்க வேண்டியது! And அந்தத் திட்டமிடலில் கதையையும் ஆர்டர் செய்து, பணமும் அனுப்பி வாங்கியாச்சு! ஆனால் அட்டவணையினை வெளியிடவிருந்த தினத்துக்கு முந்தைய இரவில் தான் '2026-ல் மெபிஸ்டோவை சர்வ நிச்சயமாய் உங்கள் கண்ணில் காட்டுவேன்...!' என ஈரோட்டு சந்திப்பின் போது உங்களுக்கு promise செய்திருந்தது நினைவுக்கு வந்தது. "ஆஹா... சுத்தமாய் மறந்தே போயிட்டியேடா எருமை!" என்று என்னை நானே கபாலத்தில் குட்டிக் கொண்டு அவசரம் அவசரமாய் மீண்டு(ம்) வந்த மாயனின் தொடர்ச்சியான கதைக்கு ஆர்டர் செய்தோம்! அட்டவணையினை வெளியிடுவதற்கு 30 நிமிஷங்களுக்கு முன்னே செய்த மாற்றமிது! And "அசுரர்கள் அடங்குவதில்லை" என்ற அந்தத் தலைப்பினைச் சூட்ட எனக்கிருந்த அவகாசம் சில நொடிகள் மாத்திரமே! So மெபிஸ்டோ vs டெக்ஸ் - லயனின் தீபாவளிமலராகிட - அந்தக் கலர் டெக்ஸ் ஆல்பத்துக்கு இடமின்றிப் போனது. 'ரைட்டு....2027-ல் பார்த்துக் கொள்ள வேண்டியது தான்!' என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்! முழுவண்ண கலர் ஆல்பம் - ought to be ரூ. 400/- இன்னா ஒரு நிலவரம் பாருங்களேன் folks?
இன்னொரு முக்கியஸ்தர் - நம்ம டிடெக்டிவ் செக்ஸ்டன் ப்ளேக் தான் ! Fleetway நாயகரான இவரது சாகசங்கள் போன வருஷமே சேலம் புத்தக விழாவினில் வந்திருக்க வேண்டியது ! But சேலமே தள்ளிப் போய்விட்டதால் - இவரும் துயிலிங் ! இவருக்கும் ராப்பர் ரெடி !
இன்னமும் உள்ளே கிடக்கும் ஆல்பங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம் தான் - நம்மிடம் உறங்கும் கதைகளைக் கொண்டே ஓராண்டுக்கு சந்தா ரெடி பண்ணிவிடலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ?! But இப்போதைக்கு ஓவராய் options தந்து உங்களைச் சட்டையை கிழிக்கச் செய்ய வேண்டாமே என்று நினைத்தேன்! So "எல்லாத்தையும் போடுப்பா ராசா" என்ற பதிலாக அல்லாது - தெளிவான தேர்வுகளாய் any 3 books ப்ளீஸ்?
அப்புறம் "ஆஹாங்...இதிலே எதுவும் தேறாது ; எழாது மலைக்குப் பின்னாடி இருக்கிற எட்டாவது குளத்துக்குள்ளே இருக்க ஈரோவைப் போடலாம் !" என்ற ரீதியிலான மகாசிந்தனைகளும் இப்போதைக்கு வேணாமே ப்ளீஸ் ?
Bye all.. See you around! Have a great Sunday!
![]() |
| "வைகறைக் கொலைகள்" |
![]() |
| கதிரவன் கண்டிரா கணவாய் |
![]() |
| என் பெயர் அந்நியன் ! |
![]() |
| பவுர்ணமியில் ஒரு பூத வேட்டை ! |








Hi
ReplyDeleteஅட ரொம்ப நாளைக்கு பிறகு
Deleteவாழ்த்துகள் தம்பி
கார்த்திக் @ எல்லாம் புகழுக்கும் அவருக்கே 😉
Deleteme first
ReplyDeleteme first// 😂😂
Deleteஇரண்டில் ஒன்று
Deleteசாரி இந்த முறையும் நீங்கள் ரெண்டாவது
DeleteHi
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு முதல் கமெண்ட் 😍🫣
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎன் முதலிடத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் சகோ
Deleteசெம்ம.. சேம்ம.. அல்லாத்தையுமே போட்டுத் தாக்குங்க சாரே...
ReplyDeleteடெக்ஸூக்கு இதே அட்டைப்படம் வச்சிக்கலாம்.. தெறிக்க வுடுது.. 💥💥
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteசெக்ஸ்டனுக்கு ஜே..
ReplyDeleteவிஷம் தனியாகவே, குண்டாகவே வரட்டும்...
ReplyDeleteஎப்பவுமே ஆன்லைன் மேளாக்கள் உங்களது சாய்ஸாகவே இருக்கட்டும் சார்..
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்....
ReplyDelete🙏🙏🙏
உங்கள் 🥰🥰 பட்டியல் அனைத்துமே ஆவலைக் கிளப்புகின்றன...💐💐💥💥
ReplyDeleteHi..
ReplyDeleteஆஜர்
ReplyDelete20th
ReplyDeleteகதிரவன் கண்டிரா கணவாய்
ReplyDeleteடைலன்
ஸாகோர்
டெக்ஸ் எப்படியும் வந்துவிடும். விஷத்திற்கு வெயிட்டிங்
என்னுடைய மூன்று சாய்ஸ்
ReplyDelete1.டெக்ஸ்
2.ஸாகோர்.
3.கதிரவன் கண்டிராத கணவாய்
Or
டைலர் டாக்
இதே எனது சாய்ஸ் சாரே.
Delete//ஆனால் கொஞ்ச காலமாகவே காலைகளில் குளிரானது ஜொய்ங் என போட்டுத் தாக்கி வருகிறது//
ReplyDeleteபோன வாரத்துல ஆறு தென் மாவட்டங்களில்(விருதுநகரையும் சேர்த்தி) பலத்த மழைக்கான வாய்பபு என செய்தியில் சொல்லி கொண்டிருந்தனர், அதனால் அந்த குளிர் என நினைக்கிறேன், சார்
கோவையில் காலை குளிர் குறைந்து விட்டதுங்க
இப்பவே வெப்பம் 😖😖😖
குளிர் சீசன் முடிஞ்சு குளிரடிக்குதுன்னு சொல்றாரே.. 🤔
Deleteஆமாங்க இளவரசரே
Deleteவந்துட்டேன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎல்லாமே சிறந்த தேர்வுகள் தான்.
ReplyDeleteஎல்லாமே ஆன்லைன் விழாவுக்கு போடலாம்.
1)ஸாகோர் கண்டிப்பாக வேண்டும்
ReplyDeleteஇந்த வருடம் ஒரு ஸ்லாட்டில் இருப்பவர், அதனால் தேர்வு இல்லை
இவரே எனது முதல் சாய்ஸ்
2) கதிரவன் கண்டிரா கணவாய்
இரண்டு நாட்கள் முன்னர் தான் இந்த கதையை பற்றிய பதிவை படித்தேன், எப்ப வரும்னு நினைத்தேன், வாட் எ சர்ப்ரைஸ், ஆக இதுவே எனது இரண்டாவது சாய்ஸ்
3)வைகறைக் கொலைகள்
டைலன் டாக் அல்லது செக்ஸ்டன் ப்ளேக் - கோவை புவிக்கு கூட இறக்கி விடலாம்
டெக்ஸ் கண்டிப்பாக வேண்டும் சாய்ஸ் கிடையாது
கண்டிப்பாக ெதேனும் மூன்று தான் என்றால், டெக்ஸ் இருந்தே ஆக வேண்டும்
This comment has been removed by the author.
ReplyDeleteவிஷம்" அனைவரும் ரெம்பவும் எதிர்பார்க்கும் கதை,
ReplyDeleteடெக்ஸ் சோடை போகாத ரகம்,
அதன் பட்ஜெட்களை முன்கூட்டியே சொல்லி விட்டதால் "ஈரோடு ஸ்பெஷலாக" இவற்றை போடலாம் சார்.
அல்லது வரும் புத்தக விழா ஸ்பெஷலாக கூட போடலாம்.
ஆனால் இது தவிர உள்ள கதைகளில்
எனது தேர்வு.
1)வைகறைக் கொலைகள்.
2) என் பெயர் அந்நியன்.
3) ஸாகோர்.
கண்ணா லட்டு தின்ன ஆசையான்னு கேட்டுட்டு, 3 லட்டு மட்டுமேன்னு சொல்றது நியாயமா சாரே?...
ReplyDelete1. வைகறைக் கொலைகள்
ReplyDelete2. ஜாகோர்
3. செக்ஸ்டன் பிளேக்/ கதிரவன் கண்டிரா கணவாய்
1. பௌர்ணமியில் ஒரு பூத வேட்டை
ReplyDelete2. என் பெயர் அன்னியன்
3. கதிரவன் கண்டிரா கணவாய்
டெக்ஸ் நாம் அடிக்கடி சந்திப்பதுதான் ஆகையால் அந்த கதை எப்ப வேணா எப்படியோ வந்துடும்,
ReplyDeleteஆனால் ஸாகோர்க்கு இந்த வருடம் ஒரே ஸ்லாட் தான்,
அதே போல டைலன்,செக்ஸ்டன்,மற்ற கதைகள் இப்ப விட்டால் பிறகு வருவது சந்தேகமே.
ஆகவே வர்றப்ப மிஸ் பண்ணாமல் அந்த கதைகளை நண்பர்கள் தேர்வு செய்யவேண்டும்.
தேர்வு செய்தது போக மீத கதைகளை வரும் புத்தக விழாக்களில் போட்டு விடுங்க ஆசிரியர் சார்.
விஷம்
ReplyDeleteஎல்லாமே வேண்டும் சார்
ReplyDeleteOne and only Tex
ReplyDeleteசெக்ஸ்டன் மற்றும் என் பெயர் அந்நியன் தவிர அனைத்தும் வேண்டும். இந்த கதைகள் எனக்கு பெரிய ஆர்வத்தை கிளப்பவில்லை சார்.
ReplyDeleteவிஷம் பட்ஜெட் ஆன்லைன் மேளாவில் சேர்த்தால் பட்ஜெட் அதிகம் ஆகிவிடும். இதனை வேறு ஒரு சந்தர்பத்தில் வெளியிட முடிந்தால் நலம் சார்.
டெக்ஸ் மற்றும் ஜாகோர் கதைகள் ஆன்லைன் மேளாவில் கண்டிப்பாக இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள் சார்.
ReplyDeleteசார், ஆன்லைன் மேளாவில் கார்ட்டூன் கதைகள் ஏதாவது முடிந்தால் வெளியீடுங்கள் சார்.
ReplyDelete// கொஞ்ச காலமாகவே காலைகளில் குளிரானது ஜொய்ங் என போட்டுத் தாக்கி வருகிறது! //
ReplyDeleteஇங்கு நாள் முழுவதும் மின்விசிறி ஓடிக்கொண்டு இருக்கிறது. காலையில் கொஞ்சம் குளிர் உள்ளது.பகலில் வெயில் பட்டைய கிளப்புகிறது சார்.
சிவகாசி மக்கள் கொடுத்து வைத்தவர்கள் சார். என்ஜாய்.
கந்தக பூமியில் கடும்குளிர்!
Deleteஅடுத்த ஸாகோர் இதழுக்கு டைட்டில் ஆக்கிடலாமோ 🤔🤔
Deleteசெம டைட்டில் விஜய்
Deleteடைலனுக்கு கரெக்ட்டாக இருக்கும் சார் 😊😋
Deleteடெக்ஸ்க்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும்
Deleteதாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து புத்தகங்களுமே ஆர்வத்தை தூண்டும் வண்ணம் உள்ளது. எனவே அனைத்தையும் வெளியிடுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஅந்தத் தீர்ப்பு மட்டும் வாணாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் சார்!
Delete1) , 3) & Dylon dog
ReplyDeleteரிஸ்க் எடும்பான் ரோமியோ என்னாச்சுங்க, சார்
ReplyDeleteஅது குட்டிக் குட்டி gags... புத்தக விழா வேளைக்கு சரி வரும்!
Deleteசரிங்க சார்
Deleteஓகே. வெயிட்டிங்.
Deleteடெக்ஸ், சகோர் and டைலன் . ஆனா விஷம் இந்த வருஷம் போட டிரை பண்ணுங்க சார்
ReplyDeleteநான் எந்த / எல்லா கூத்துகளுக்கும் ரெடி நண்பரே 🥹🥹... நிங்கள் தான் ரெடியாகிக்க வேணும்!
Delete'எல்லாமே நல்லாத்தான் இருக்கும்' எனும்படியான எண்ணத்தை உங்கள் எழுத்துக்களே உருவாக்கிவிட்டதால், எதை தேர்வு செய்வதென்ற குழப்பம் இன்னமும் நீங்கியபாடில்லை!😅
ReplyDeleteஎல்லாமே வேண்டும் என்பதுதான் என் இறுதித் தீர்ப்பு!😍😍
//எல்லாமே வேண்டும் என்பதுதான் என் இறுதித் தீர்ப்பு!😍😍//
Delete+9
தீர்ப்பு revising கமிட்டிக்கு தான் போகணும் - பரால்லியா?
Delete1. Colour Tex
ReplyDelete2. விஷம்
3. டைலன் டாக்
1. லயன் கோடை மேளா ஸ்பெஷல் என்ற பெயரில் நமது தலயை இறக்கினால் மிகவும் நன்றாக இருக்கும். இல்லையேல் இரவில் மானிடோ தெய்வம் வந்து கண்ணை குத்தினல் நாங்கள் பொறுப்பல்ல... முடிந்தால் இந்த புக்கை இறக்குங்கள்.
ReplyDelete2. டைலன் டாக் அமானுஷ்யம் கலந்த கதை என்று சொல்லிவிட்டீர்கள் பிறகு என்ன அதையே இறக்கி விடுங்கள்.
3. செக்ஸ்டன் வந்தால் நன்றாக இருக்கும் சந்தித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.
🙏🌹🙏
1. Colour Tex
ReplyDelete2. டைலன் டாக்
3. Zagor
டெக்ஸ்
ReplyDeleteஎன் பெயர் அந்நியன்
கதிரவன் கண்டிரா கணவாய்
ஜூன்
விஷம்
Zagor
சார்.. 'வைகறைக் கொலைகள்' preview ல் சித்திரங்கள் அருமை! சித்திரங்களையும் பேனலின் சம்பவங்களையும் வைத்துப் பார்க்கும்போது இதுவொரு சூப்பஹிட் படைப்பென்றே தோன்றுகிறது!
ReplyDelete1. வைகறைக் கொலைகள்
ReplyDelete2. டெக்ஸ்
3. சாகோர்
4. கதிரவன் கண்டிராத கணவாய்
5. டைலான் டாக்
இந்த 5 கதைகள் எனது விருப்பம்.
Edi Sir
ReplyDeletePrint all these books in MAY MELA
We may plan to split th total costs in two equal payment for March end and April end.
Please release all your selections in single shot.
We may plan VISAM latter
Comicselva
இது சூப்பர் ஐடியா!!😍😍😍
Deleteதூங்கும் நபர்கள் எல்லோரையும்
ReplyDeleteதூக்கிட்டு வாங்க sir.. Art work எல்லாம் சூப்பர் ஆ இருக்கு... ❤️👍🙏
செக்ஸ் டன் ப்ளேக் கதைகளைப் படித்து வெகு நாட்களாகிவிட்டபடியால், மீண்டும் அவரது கதைகளைப்படிக்க ஆர்வம் எழுகிறதுங்க சார்...
ReplyDeleteசார்... நீங்கள் கொடுப்பது விஷமாகினும் - புன்னகையோடு பெற்றுக்கொள்ள நாங்கள் ரெடி! விஷம் கேட்டு மன்றாடுகிறோம் - மொந்தையில் அள்ளிக்கொடுங்கள் சார்..😍😍😍😋
ReplyDelete