Powered By Blogger

Monday, January 26, 2026

ஒரு ஜென் தத்துவமும், ஒரு மாலைப் பதிவும்...!

 நண்பர்களே,

வணக்கம். அப்பப்போ எங்கயாச்சும் ஜென் தத்துவங்கள்னு எதையாச்சும் படிச்சுப் போட்டா, அதை உங்ககிட்டே பகுமானமா இறக்கி வைக்கவொரு வாய்ப்பு கிடைக்காதான்னு மண்டைக்குள்ளே குடைவது வழக்கம். இதோ - ஒரு சமீபத்தைய வாசிப்பை உங்க மடிகளிலே இறக்கி வைக்க லட்டு போல் ஒரு வாய்ப்பு எழுந்துள்ளது - இந்தச் சென்னைப் புத்தக விழாவின் நிறைவோடு !! 

ரீல்ஸ் போடும் பொருட்டு ஒரு நதியில் இறங்கி நிக்குறோம்னு கற்பனை பண்ணிக்கோங்களேன்..."அடியேன் தாமிரபரணி ஆத்திலே நிக்கிறேன்...அண்ணாத்தே கூவத்துக்குள்ளே நிக்குறேன்" என்று குரல் கொடுப்போம் தானே ? ஆனால் ஜென் தத்துவத்தின்படி அது பிழையாம் !! (ஊஹூம்...ரீல்ஸ் போடுறதோ, கூவத்துக்குள்ளாற இறங்குவதோ தப்புன்னு ஜென் சொல்லலே..!) நதியின் உள்ளே கால்பதித்த நொடியினில் நம்மைத் தொட்டுச் சென்ற நீரானது, ஆற்றின் ஓட்டத்தில் அதுக்குள்ளாற அரை மைல் கடந்து போயிருக்கும் எனும் போது - ஆற்றினை ஒரே இடத்தில நிலைகொண்டிருக்கும் ஒரு சமாச்சாரமாகவே வகைப்படுத்த முடியாதாம் ! அது நிரந்தரமாய், இடைவிடாது  ஓடிக் கொண்டேயிருக்கும் ஒரு நிகழ்வாம் ! ஆக "ஒரு மனிதன் ஒரே நதியினில் இரண்டு முறைகள் இறங்கமுடியாது - ஏனெனில் அடுத்த முறை அவன் இறங்கும் போது அது அதே ஆறும் அல்ல, அவன் அதே மனிதனும் அல்ல !" என்கிறது அந்தத் தத்துவம் ! 

எப்புடி - நம்மவர் மெரி தெளிவா மண்டையை மாவு பிசைஞ்சு விட்டுட்டேனா ? லீவு நாளும் அதுவுமாய் உங்களை பரக்க பரக்க முழிக்க வைச்சாச்சா ? இனி ஹேப்பியா மேட்டருக்கு வர்றேன் !!

மாற்றங்கள் இல்லா விஷயங்கள் வாழ்க்கையில் almost எதுவுமே லேது தானே ?! So இந்த காமிக்ஸ் பயணத்திலும் பல மாற்றங்கள் தாமாகவும், சில  மாற்றங்கள் நம்மாலும் நிகழ்ந்திடுவதை தவிர்க்க வழி ஏது ? 2012 முதலாய் மறுவருகை என்ற போது தரத்தில், தயாரிப்பில், தேர்வுகளில், காலங்களுக்கு ஏற்ப மாற்றங்களுக்கு மனமுவந்து உட்பட்டோம் - and அது ஒன்றே நம்மை இங்கு வரை இட்டு வந்துள்ளது.  மாறிவரும் உங்களது ரசனைகளுக்கேற்ப நமது தேடல்களை மாற்றியமைத்துக் கொள்ளும் அவசியமானது இடைப்பட்ட காலங்களில் ஓசையின்றி நம்மிடையே நிலைகொண்டது ! மாயாவியையும், ஸ்பைடரையும் நம்பி ஆரம்பித்தவர்கள், நீங்கள் மண்டையில் தட்டும் முன்னமே லார்கோ, ஷெல்டன், தோர்கல், ரூபின், டேங்கோ, ஸ்டெர்ன், பவுன்சர் etc etc என மாற்றங்களைப் புகுத்திக் கொண்டோம் !  இதோ - ஒரு டஜன் ஆண்டுகளுக்குப் பிற்பாடு கூட நமது வாசிப்பில் ஒரு freshness தொடர்கிறதெனில், அதற்கு இந்த அத்தியாவசிய மாற்றங்களே காரணம் எனலாம். But இந்த நொடிதனில் நமது விற்பனைகள் சார்ந்த பாணிகளில் ஒரு quantum மாற்றத்தினை கொணரும் அவசியம் தலைதூக்கி இருப்பதே இந்தக் குடியரசு தினப் பதிவின் சாரம் !  லீவு நாள் தான் என்பதால் மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் நான் கொஞ்சம் அழுந்த விளக்க முற்படுவதை சகித்துக் கொள்வீர்களென்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு ஆரம்பிக்கிறேன் !!

அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கை (printrun) சார்ந்ததே ஒரு இதழின் விலை நிர்ணயம் என்பதை நாமறிவோம் ! So நமது செகண்ட் இன்னிங்ஸ் துவங்கிய நாளில் எவ்வளவு புக்ஸ் விற்கும் என்றோ ? இந்த வண்ணம், ஆர்ட்பேப்பர் போன்ற ஆடம்பரங்களை ஏற்றுக் கொள்வீர்களா ? என்றோ நமக்குத் தெரிந்திருக்கவில்லை ! கடைசியாய் black & white இதழ்களை நியூஸ்பிரிண்ட்டில் அச்சிட்டுக் கொண்டு 2007 ..2008 வாக்கில் மொக்கை போட்டுத் திரிந்த நாட்களில், நமது பிரிண்ட்ரன் 4000 பிரதிகள் & அவற்றுள் குறைந்தபட்சம் 1500 கையில் தேங்கி நிற்கும் ! முகவர்களிடமிருந்து 6 மாதங்கள் கழித்து இன்னும் கொஞ்சம் unsold returns ஆகத் திரும்பிடும். So யதார்த்தத்தில் அன்றைக்கு விற்றது தோராயமாய் 2000 பிரதிகளே ! And therefore அதே பழைய கணக்கினை துவக்கப் புள்ளியாகக் கொண்டு 2012 முதலாய் comeback செய்த சமயத்திலும் 2000 பிரதிகள் அச்சிட்டோம் !! ஒரு கடும் காமிக்ஸ் வறட்சிக்குப் பின்பாய் பஞ்சுமிட்டாயோடு ஆஜராகும் சாண்டா க்ளாஸைப் போல நாம் அந்நாட்களில் தென்பட்டிருப்போம் என்பதால் சும்மா தெறி சேல்ஸ் தான் !! இங்கே வலைப்பக்கமும் விற்பனைகளுக்கு செமத்தியான ஒத்தாசை செய்திட, டாப் கியரில் வண்டி ஓட்டமெடுத்து வந்தது ! கண்ணாலம் ஆன புச்சிலே தினப்படி "மானே..தேனே..பொன்மானே.."என்று லட்டர் போடுவதும், குழந்தை, குட்டிகள் ஆன பிற்பாடு "கொஞ்சம் பிசி பேபிம்மா !" என்று குறுந்தகவல் அனுப்புவதும் காலத்தின் கட்டாயங்கள் தானே ?! So அந்தத் துவக்கத்து பெரும் உத்வேகம்...euphoria சற்றே மட்டுப்பட்ட நாட்களில் விற்பனைகளும் மட்டுப்பட்டன, and அதன் நீட்சியாய் நமது பிரின்ட்ரன்னையும் குறைத்துக் கொண்டோம். கொரோனா காலகட்டங்களில் நிலவரம் கலவரமாகிட, கழுதை கட்டெறும்பே ஆகியும் போனது ! பிரிண்ட்ரன் குறையும் பொழுது விலைகள் ஏறுவது தவிர்க்க இயலா நிகழ்வென்பதால் படிப்படியாய் விலைகளும் ஏறிடவே செய்துள்ளன ! Cut to the present now !!

கொரோனாவுக்குப் பின்பான கடந்த சில ஆண்டுகளாகவே  நாம் அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கையில் சரி பாதியினையே அந்தந்த மாதங்களில் விற்பனை செய்து வருகிறோம் ! சந்தாக்களில் ஒரு நம்பர் ; முகவர்கள் மார்க்கமாய் இன்னொரு நம்பர் ; ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிடும் நண்பர்களின் வாயிலாய் ஒரு நம்பர் & இறுதியாய் புத்தக விழா விற்பனைகளில் மீதம் - என்பதே ஒரு இதழின் விற்பனை முழுமை காண வேண்டிய ரூட் ! Touch wood - உங்கள் அன்புகளின் புண்ணியத்தில் Route 1 (சந்தா) ; Route 2 (ஏஜெண்ட்ஸ்) & Route 3 (ஆன்லைன் வாடிக்கையாளர்கள்) சிக்கலின்றி ஓடி வருகின்றன ! ஆனால் கடந்த 5 ஆண்டுகளாகவே அந்த Route # 4 - அதாவது தமிழகப் புத்தக விழாக்களின் விற்பனைகளில் தலைதூக்கி வந்திருக்கும் very selective buying தான் விளிம்புநிலை நாயகர்களை நமக்கொரு தீரா பாரமாக்கியுள்ளது !! 

விளக்கிச் சொல்கிறேனே :

இந்த மாதம் சோடா, டெக்ஸ் & ப்ளூகோட்ஸ் - என்றொரு கூட்டணி என்று வைத்துக் கொள்வோமே ?! வாசிக்கிறீர்களோ, இல்லியோ - by default சந்தாவில் உள்ள அனைவருக்கும் சோடாவும் விற்றிருக்கும், டெக்ஸும் போணியாகி இருக்கும் & ப்ளூகோட்ஸ் புக்ஸும் சேல்ஸ் ஆகியிருக்கும். முகவர்களோ, சோடாவில் கம்மியாய் ஆர்டர் செய்வார்கள், but still கொஞ்சமாகவாச்சும் வாங்கி விடுவார்கள். இதே கதையே - ஆன்லைனில் செலெக்ட் செய்து வாங்கிடும் நண்பர்களின் நிலவரத்திலும்! 'கார்ட்டூன் நமக்கு கொத்தில்லா !" என சிலர் அதைத் தவிர்த்து விடுவர் ! 'சோடா - நீ போடா' என்றும் சொல்லி விடுவர் ! So அங்கேயும் ஒரு கணிச சுணக்கமிருக்கும். இவ்விதம் மிஞ்சிடக்கூடிய கையிருப்பினை ஒவ்வொரு புத்தக விழாவிலும் வாங்கிடும் casual வாசகர்களே காலி செய்ய முன்னெல்லாம் உதவிடுவார்கள் ! ஆக, variety என்ற தேடலில் நான் அடிக்கும் குட்டிக்கர்ணங்களின் பலன்கள் பெரியளவிற்கு சேதாரத்தினை விளைவித்ததில்லை ! Of course - கமான்சே ; லேடி S போலான தொடர்கள் துவக்கம் முதலே கோணலான ரூட்டில் போனது காலத்தின் கோலமென்று மனதைத் தெற்றிக் கொண்டேன் ! ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு சிறுநகர / பெருநகர விழாக்களிலும் சொல்லி வைத்தாற்போல ஒரே விற்பனை பாணியே தென்படுகிறது !! இந்த நாயகர்களின் ரசிகர்களை சங்கடம் கொள்ளச் செய்வது எனது நோக்கமே அல்ல ; வெற்றியோ-தோல்வியோ, அந்த நாயகப் பெருமக்களை இங்கு அறிமுகம் செய்தவனே நான் தான் எனும் போது அவர்களது முதல் ரசிகனாகவும் நானே இருப்பேன் என்பதில் ரகசியங்கள் ஏது ? Yet - நான் செல்லவிருக்கும் புள்ளி விபரங்கள் யதார்த்தத்தினை பறைசாற்றிட மாத்திரமே :
  • பவுன்சர் : (சாபம் சுமந்த தங்கம்) - சென்னை விழாவில் : 7 பிரதிகள் & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்வை 19 பிரதிகள் !!
  • சாகச வீரர் ரோஜர் (மஞ்சள் நிழல்) - சென்னை விழாவில் : 1 பிரதி & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்ளவை 4 பிரதிகள் !!
  • சோடா (தப்பிச் சென்ற தேவதை) - சென்னை விழாவில் : 1 பிரதி & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்ளவை 7 பிரதிகள் !!
  • சிஸ்கோ (கலாஷ்னிகோவ் காதல்) - சென்னை விழாவில் : 3 பிரதிகள்  & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்ளவை 20 பிரதிகள் !!
  • வஞ்சம் மறப்பதில்லை (ஜம்போ காமிக்ஸ்) - சென்னை விழாவில் : 1 பிரதி & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்ளவை 5 பிரதிகள் !!
இந்த ரீதியில் நான் அடுக்கிக் கொண்டே போகலாம் ; ஆனால் காதிலே கசியக்கூடிய தக்காளிச் சட்னியைக் கொண்டு அடையார் ஆனந்த பவனின் டிபன் வேளையையே சமாளித்து விடமுடியும் என்பதால் தொடராது நிறுத்திக் கொள்கிறேன் !

ஒவ்வொரு இதழிலும் குறைந்த பட்சமாய் 300 பிரதிகள் ஸ்டாக்கில் தேங்கி நிற்கிறதென்று வைத்துக் கொள்ளுங்களேன் - ஆண்டொன்றுக்கு நான்கும், ஏழுமாய் கையிருப்புகள் விற்றால் நம்ம கொள்ளுப் பேரப்பிள்ளைகள் காலம் வரைக்கும் இந்த ஸ்டாக் தாக்குப் புடிக்கும் !! இதில் இன்னொரு ஆகப் பெரிய கொடுமையும் உள்ளது !! சரி, ரைட்டு கையில் தேங்கியிருக்கும் புக்ஸை நஷ்டத்துக்குனாலும் விழாக்களுக்கு வரும் ஸ்கூல் பசங்களிடம் விற்பனை செய்திடலாம் ; அது எதிர்காலத்திற்கான முதலீடு என்று எடுத்தும் கொள்ளலாம் என்ற தீர்மானத்தில் செயல்பட்டு வருகின்றோம் - since 2023. ஆனால்...ஆனால்...புள்ளைங்க கிட்டே smurfs விற்கலாம் ; கிளிப்டன் விற்கலாம், பென்னி விற்கலாம், லியனார்டோ தாத்தா விற்கலாம் - ஆனால் பவுன்சரை ??? சோடாவை ??? கிராபிக் நாவல் தாத்தாக்களை ??? அவர்களை எந்தவொரு நிலையிலும் பிள்ளைகளிடம் தர இயலாதெனும் போது - இவை ஈச்ச மரங்களின் கனிகளுக்கு ஈடான வணிகத்துக்கே இனி பயனாகிடும் என்பதே இந்த நொடியில் குமட்டில் குத்துகிறது !! சோடா போன்ற ஒரு noir தொடரினை நிரம்பவே ஆசைகளோடு, அளப்பரிய எதிர்பார்ப்புகளோடு கொணர்ந்தேன் ! But அது பெரியளவில் click ஆகிடவில்லை எனும் போது நோகிட இங்கே யாருமில்லை !! பலருக்கும் அது ரசிக்கவில்லை எனும் போது அதன் பொருட்டு யாரையுமே குறை சொல்லிட இயலாதே ?! Just need to accept it and move on !! 

So இந்த நொடியினில் கையிருப்புகள் சார்ந்த ஒப்பாரியல்ல எனது பதிவின் நோக்கம் ! அவற்றை எவ்விதம் கையாள்வதென்பதை நிதானமாய் யோசித்துக் கொள்வோம் தான் ! மாறாக - இனி வரும் காலங்களில்,  விற்பனையின் செம Elite நாயகப் பெருமக்களைத் தாண்டிய இதர பார்ட்டிகளை எவ்விதம் கையாள்வதோ ? என்பதே எனது விசனம் ! மாயாவியாரும், வேதாளரும், டெக்ஸும், டின்டின்னும், லக்கி லூக்கும், லார்கோவும் இன்னும் சில முக்கியஸ்தர்களும்  சிந்தும் வியர்வைகளின் பலனில் தோர்கல்களும், பவுன்சர்களும்,ஷெல்டன்களும் இனியும் தொடர்ந்தால் நம்ம கிட்டங்கியும் தாங்காது, நம்பள் கி புட்டாணியும் தாங்காது ! கடவுள் புண்ணியத்தில் சாத்தியப்பட்டிருக்கும் ஒரு அட்டகாச சென்னையின் விற்பனை இந்தாண்டினை ஓரளவிற்குக் கடந்திடும் வழியினைக் காட்டியுள்ளது. தற்போதைய திருப்பூர் விழாவும் சரி, தொடரவுள்ள சேலம், நெல்லை, போன்ற விழாக்களிலும் சரி, விற்பனைகளின் முனைப்பு இதே போல தொடர்ந்தால் - ஆண்டின் இறுதி வரைக்கும் ஜானி நீரோவின் பழைய ஜாக்கிகளை இரவல் கோரிடாமலே தப்பித்து விடுவேன் ! அல்லாங்காட்டி தலீவரின் பதுங்குகுழிப் பக்கமாய் வந்து ஒண்ணோ-ரெண்டோ பட்டாபட்டிகளை லவட்டியே தீர வேண்டியிருக்கும் !      

இந்த நொடியினில் நம் முன்னே உள்ள options செம clear :

Option ஒன்று : மருவாதியா விற்பனை கண்டிடும் மகராசர்களோடு மட்டுமே இனி  வண்டியினை ஓட்டிட வேணும் ! விஷப்பரீட்சைகள் ; குட்டிக்கரணங்கள் என்பனவற்றை பேப்பரில் மட்டுமே எழுதி வாசித்துக் கொண்டாக வேண்டும் !

Option இரண்டு : விற்பனையில் ஒத்தாசை அவசியமாகிடும் நாயகப் பெருமக்களை திடு திடுப்பென கைகழுவாது அவர்களோடும் பயணிக்க வேண்டுமெனில் - "சாம்பலின் சங்கீதம்" போல அவர்களது எல்லா இதழ்களுக்குமே முன்பதிவுக்கேற்ப மட்டுமே பிரிண்ட்ரன் & விலைகள் நிர்ணயிக்க வேண்டி வரும் ! இதோ ஒரு உதாரணமே காட்டுகிறேன் :


இதோ - நமது அணிவகுப்பின் மணிமகுடங்களில் சிலவாக நான் கருதிடும் நாயகப் பெருமக்களின் கதைகள் கைவசம் உள்ளன !! ஆனாலும் அவர்களைக் களமிறக்கும் தகிரியம் இப்போதில்லை என்னிடம் ! நார்மலான விலைகளில், நார்மலான எண்ணிக்கையில் இவர்களது ஆல்பங்களை அச்சிட்டால் - இன்பநிதியின் பேரன் அரசியலில் குதிக்கும் நாளிலும் கூட ஸ்டாக் இருக்கும் என்பதே காரணம் ! So ஒவ்வொரு க்வாட்டருக்கும் இது போல் கி.நா.க்களில் ; second-tier கார்ட்டூன்களில் ; தோர்கல் போன்ற fantasy களங்களில் ;  நமது புதுத் தேடல்களில் ; அல்லது மறுபதிப்புகளில்  இருந்து இரு கதைகளைத் தேர்வு செய்து short term முன்பதிவுகளுக்கு அறிவித்தால் - ஒரு குறைந்தபட்ச நம்பர் தேறிடும் சமயத்தில் அதற்கேற்ப அச்சிட்டுக் கொள்ளலாம். And இவற்றில் இம்மி கூட excess பிரதிகள் இருக்காத விதத்தில், "சாம்பலின் சங்கீதம்" இதழுக்குச் செய்தது போல் மிகச் சரியாகத் தயாரித்தோமெனில் ஸ்டாக் எகிறாது & கிட்டங்கியும் குலுங்காது ! But in the bargain - விலைகள் சர்வ நிச்சயமாய் கூடுதலாகவே இருக்க நேரிடும் ! 

"கொஞ்ச காலத்துக்கு இந்தக் கூத்துக்கள் எதுவுமே வாணாமே ? விக்கிற பொஸ்தவங்களை மட்டும் போட்டுப்புட்டு, நிம்மதியா இருப்போம் !" என்று சொன்னீர்களெனில் ஓகே பாஸ் ! என்று கேட்டுக் கொள்வேன் ! மாறாக  - 

"இறங்கி ஆடித்தான் பார்ப்போமே" - என்று சொல்லிடும் பட்சங்களில் நீங்கள் செய்திட வேண்டிய காரியங்கள் மூன்று இருக்கும் : 

முதலாவது - வாங்குவதைத் தவறாது படிக்க நேரம் எடுத்துக் கொள்வது !! நீங்க டெக்ஸை நாலு நாள் முன்னேவோ, பின்னேவோ படிச்சாலும் அவரது அரண் இம்மியும் விரிசல் காணாது ! ஆனால் ஒரு மித வலு நாயகரையும், தலைமாட்டில் தேமே எனக் கிடத்தினால் அது அவரை சீக்கிரமே ICU-விற்கு இட்டுச் சென்று விடும் என்பதே அனுபவப்பாடம் ! 

இரண்டாவது - விலைகளில் இருக்கக்கூடிய jumps-களை பொறுத்துக்க வேண்டி வரும் !! ஓவர்னைட்டில் ஒபாமா ஆவது முழியாங்கண்ணனின் நோக்கமல்ல என்பதை நம்பிட வேண்டி வரும் !  சுணக்கங்களின்றி விற்பனையாகிடும் ஒரு ரெகுலர் நாயகரின் கலர் இதழ் மெயின் தடத்தினில் ரூ.135 விலையில் வருகிறதென்று வைத்துக் கொள்ளுங்களேன் ; அதே சைசில், அதே பக்கங்களுடன் இந்த முன்பதிவு முயற்சிகளில் வரக்கூடிய ஒரு  கி.நா. maybe ரூ.200 விலைக்கு வர நேரிடலாம் ! So க்ரூப்களில் கும்மியடிக்க முகாந்திரம் தேடும் பெருமக்கள் இத்தகையதொரு வாய்ப்பு கிட்டிடும் பட்சத்தில் செம குஷியாகி விடுவர் என்பதை யூகிக்க முடிகிறது ! But இத்தனை நாட்களாய் நாம் பழகி விட்டிருக்கும் variety-ஐ நிரந்தரமாய் காவு கொடுக்க வேணாமே ? என்ற உந்துதலே இந்த முன்மொழிவுக்கு என்னைத் தூண்டியுள்ளது ! And at this point of time - பகடிகளுமே போரடித்துப் போய்விட்டன ! கிண்டல்களின் புண்ணியத்தில் உரமேறுவதே எனது தனிப்பட்ட அனுபவமும் கூட !

மூன்றாவதான கோரிக்கை : இதில் opt செய்திடும் நண்பர்களின் மத்தியில் ரசனை சார்ந்த ஒற்றுமை அவசியமாகிடும் ! உதாரணத்துக்கு - எனக்கு "மேகி வேணாம்...தாத்தா மட்டும் போதும் !" என்றோ "தாத்தா வேணாம் - மேகி மட்டுமே மதி !" என்றோ pick & choose செய்திடக் கூடாது ! ஒவ்வொரு twin அறிவிப்பும் ஒரு குறிப்பிட்ட கதை பாணியினில் இருந்திடும் ! 
  • "கார்ட்டூன் Twins" என அறிவிக்கும் பட்சத்தில் maybe ஒரு ரின்டின் கேன் + ஒரு மேக் & ஜாக் இருந்திடக்கூடும் ! 
  • "Newbies Twins " என்று அறிவித்தால் - இரு இதழ்களுமே புது வரவுகளாக இருந்திடும் ! 
  • "Classic Twins" என அறிவித்தால் - maybe  இரட்டை வேட்டையரும், ஜான் மாஸ்டரும் இருக்கக் கூடும் ! 
So இந்த முயற்சிகள் எப்போது ; எவ்விதம் வந்தாலும் - இரட்டையர்களாகவே, இணைபிரியாதவைகளாகவே இருந்திடும் ! And ஆரம்பத்தில் ஒரு குறைந்தபட்ச நம்பருக்கென புக்கிங் செய்திட 45 நாட்களின் அவகாசங்கள் தந்து பார்ப்போம்  ; maybe முன்பதிவுகள் அதை விடவும் துரிதமாகவே கிட்டிடுகின்றன எனும் பட்சத்தில் அந்த முன்பதிவுச் சாளரத்தினை 30 நாட்களாகக் குறைத்துக் கொள்வோம் ! 

So இதுவே கொஞ்ச காலமாய் என்னுள் குடியிருந்த சிந்தனைகளின் வெளிப்பாடு ! நடப்பாண்டில் சென்னை விழாவின் விற்பனைகளைப் பார்த்தான பின்னே இது குறித்தொரு இறுதித் தீர்மானத்துக்கு வரலாமென்று நினைத்திருந்தேன். And now that அந்த விபரங்கள் கைக்கு வந்து விட்டன எனும் போது - பந்தை உங்கள் திக்கில் போட்டாச்சு folks !! எவ்விதம் ஆடுவதென்ற தீர்மானம் இனி உங்கள் கைகளில் !

இங்கொரு குறிப்புமே : Just maybe இந்த விஷப்பரீட்சைகள் தேவையற்ற ஆணிகளே என்றே தீர்மானிக்கிறீர்கள் எனும் பட்சத்தில், ரெகுலர் தடத்தினில் வரக்கூடிய பந்தயக் குதிரைகளின் எண்ணிக்கைகளில் எவ்வித குறைகளும் இராது ! ஆண்டுக்கு 30 to 32 புக்ஸ் என்ற அந்த ரெகுலர் சந்தாத் தடத்து நம்பர்கள் தொடர்ந்திடவே செய்யும் ; maybe டெக்ஸுக்கு, லக்கி லூக்குக்கு, டின்டினுக்கு, சிக் பில்லுக்கு, டைலனுக்கு slots கூடுதலாய் ஒதுக்குவோம் ! So மெனுவில் variety மட்டுப்படுமே தவிர, சுவையில் பங்கமிராது !!

Bye all...see you around ! Have a great week going ahead !

P.S : Going ahead, இதுவொரு முக்கிய பதிவு என்பதால் - SAFE OK /  RISK OK என்றேனும் ஏதாச்சுமொரு direction தந்திட நண்பர்கள் அனைவரும் முனைந்தால் நலமென்பேன் ! மௌனமே பெரும்பான்மையின் மொழியெனில் மருவாதியாய் safe option-ஐ தேர்வு செய்வதைத் தவிர்த்து நமக்கு வேறு மார்க்கமிராது !!  Please do write 🙏

104 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. எம்மாம் பெரிய பதிவு. படிச்சுட்டு வருகிறேன்

    ReplyDelete
  3. Option 2

    1 கோரிக்கை : உடன்படுகிறேன்
    2.கோரிக்கை : உடன்படுகிறேன்
    3.கோரிக்கை : உடன்படுகிறேன்

    ReplyDelete
  4. சார் இறங்கி ஆடித்தான் பார்ப்போமே...

    ReplyDelete
  5. சார் இந்த தனி தடம் காலத்தின் கட்டாயம். உங்களது அத்தனை ஆப்ஷன்களுக்கும் Yes.

    ReplyDelete
  6. மேகி+ தாத்தாக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.❤️

    ReplyDelete
  7. இந்த Cartoon Twins எல்லாம் always welcome.

    ReplyDelete
  8. Replies
    1. Yes to what sir - Option 1? Option 2?

      Delete
    2. Option 2😘😘

      நீங்க இறங்கி ஆடுங்க சார் 😘👍

      *தீ பரவட்டும்* 🔥🔥🔥

      Delete
  9. Yes
    இறங்கி ஆடிப் பார்த்திடலாம் சார்
    தயார் 💪💪💪

    ReplyDelete
  10. Option 2
    மூன்று கோரிக்கைகளும் Yes

    ReplyDelete
  11. காமிக்ஸ் சிங்கங்கள் சிங்கிளாக வந்தாலும், கூட்டணியோடு களம் காண வந்தாலும் எனது ஆதரவு என்றும் அவர்களுக்கு உண்டு.

    ReplyDelete
  12. A big *YES* for option 2 Sir😘💐

    I am waiting for *Twin Dhamakka*😘💐😄👍

    ReplyDelete
  13. இந்த காலத்து ஆறாம் வகுப்பு சிறார்கள் முதல் Naruto manga படிக்க ஆரம்பித்து விடுகின்றனர், அதில் Dark tone உள்ளது
    பதின்ம வயது சிறார்களுக்கு "சோடா" ஓகே சார்
    பவுன்சர் வேண்டாம்

    ReplyDelete
  14. //ஒரு மனிதன் ஒரே நதியினில் இரண்டு முறைகள் இறங்கமுடியாது - ஏனெனில் அடுத்த முறை அவன் இறங்கும் போது அது அதே ஆறும் அல்ல, அவன் அதே மனிதனும் அல்ல !" என்கிறது அந்தத் தத்துவம் ! //

    👌👌👌

    ReplyDelete
    Replies
    1. கூவத்துலே இறங்கும் பட்சத்தில் இது நெசம் தான்...!

      அடுத்த தபா இறங்கும் போது கூவம் கூடுதல் கலீஜா இருக்கும்... அப்புறம் இவனும் அதே இவனா இருக்க மாட்டான் - தோல் வியாதிஸ்தனா மாறி இருப்பான்!

      Delete
  15. Yes to the pre booking sir. Price will not be an issue. It will save books in shelf. When people choose , pay and buy the books, they will read quickly for sure.

    ReplyDelete
  16. என்னுடைய ஓட்டு "Yes".

    சா. ச போல முன்பதிவே சிறந்தது.
    வெரைட்டி கதை விரும்பிகள் இதை மறுக்க மாட்டார்கள்.

    விலையும் சற்று அதிகம் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  17. Sir - again a complicated thought process sir :-) Please keep it simple. We have the main track for popular heroes.

    For side-tracks:

    a) Decide what you want to publish
    b) Announce for limited print run
    c) When you get enough bookings to break-even, just knock it off

    No twin-packs, bun-packs, Just KISS sir - Keep It Simple and Straight !!

    ReplyDelete
    Replies
    1. //Sir தப்பா எடுத்துக்காதீங்க, என்னால தத்தாவா படிக்க முடியல. ஆன மேகி ரொம்ப பிடிக்கும். நா என்ன பண்றது. Print in run ok thaan. அத தனி தனி பூக்க குடுத்துடூங்களே.//

      சிம்பிளா Kiss ப்ளீஸ் சார்?

      Delete
    2. Simple logic sir... If I announce a pack of 6 books with a mix of genres, will end up mucking the deal...

      இப்போது "கார்ட்டூன் வேணாம்" என்போர் அந்த கார்ட்டூன் ட்வின்ஸ் பேக்கை ஸ்கிப் செய்தால் மட்டும் போதும். Will give them the liberty to choose their buys better...

      Delete
    3. Makes sense sir - but from what I have observed it is cartoons that have smaller interest group - others book 100% will read.

      Delete
    4. Not at all sir... I know becos I have a clear pattern on online sales preferences and bookfair purchases. There is a clear and selective bias...

      Sme don't buy graphic novels...some skip cartoons...some opt out of reprints.. One size doesn't fit them all sir... Never ever!

      Delete
  18. கார்ட்டூன் கதைகள் குறிப்பிட்ட முன் பதிவிற்கு வெளியிட முன்பே கேட்டிருந்தேன் சார்...

    என்னளவில் நீங்கள் வெளியிடும் அனைத்து கதைகளையும் வாங்குவேன்... படிப்பேன்...

    கதைகள் தொடர்ந்து வெளிவர, குறைந்த பிரின்ட் ரன்னில் முன் பதிவின் மூலம்
    உங்கள் கைகளை கடிக்காத வகையில் வெளியிடுங்கள் சார்..

    ReplyDelete
  19. பழைய சோறும், களியும்.. 😘
    உடம்புக்கு நல்லதுதான்.. 👍🥰

    அதே சமயம்..
    அத்தோவும், பாணி பூரியும் சாப்பிடலாம்.. 😘👍💐


    நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவுமே தப்பில்ல.. 😘😄

    ReplyDelete
  20. ஆ 1

    கோ 1: கொஞ்சம் சிரமம். புத்தகங்கள் வருடத்திற்கு ஒருக்கா தான் பெறுவதால்.
    கோ 2 & கோ 2: உடன்படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆ 1? ஷெரிஃப்? நம்ப முடியவில்லை..
      ஆப்ஷன் 2 க்குத்தானே கோரிக்கைகள் அப்ளிக்கபிள்..?

      Delete
  21. Sir தப்பா எடுத்துக்காதீங்க, என்னால தத்தாவா படிக்க முடியல. ஆன மேகி ரொம்ப பிடிக்கும். நா என்ன பண்றது. Print in run ok thaan. அத தனி தனி பூக்க குடுத்துடூங்களே.

    ReplyDelete
  22. // எப்புடி - நம்மவர் மெரி தெளிவா மண்டையை மாவு பிசைஞ்சு விட்டுட்டேனா ? லீவு நாளும் அதுவுமாய் உங்களை பரக்க பரக்க முழிக்க வைச்சாச்சா ? இனி ஹேப்பியா மேட்டருக்கு வர்றேன் !! // ROFL வாய் விட்டு சிரித்து விட்டேன் சார்.

    ReplyDelete
  23. Option 2 sir. முன்பதிவு போய்ரலாம்.

    ReplyDelete
  24. //இதோ - ஒரு சமீபத்தைய வாசிப்பை உங்க மடிகளிலே இறக்கி வைக்க லட்டு போல் ஒரு வாய்ப்பு எழுந்துள்ளது - //

    இரண்டு இரண்டு லட்டுகளா தரேங்கிறீங்க
    லட்டு சாப்பிட ரிஸ்க் ஓகே சந்தோசமா சாப்பிட தயார்

    ReplyDelete
  25. முன் பதிவு சரியான வழி. 60 சதவீதம் முன்னரே உறுதியாக விடும்.

    ReplyDelete
  26. Option 2 ...ana ungalukku ethu kattupadiyagutho athu ok sir

    ReplyDelete
  27. சார்
    வணக்கம். ஆப்ஷன்-1 ஐ நான் தேர்வு செய்வேன். சந்தாவில் இருப்பினும் சில புத்தகங்களை மீள் வாசிப்பு செய்ய முடியவில்லை.

    ReplyDelete
  28. Hi Editor sir,
    My choice is option 2 sir

    ReplyDelete
  29. இரண்டுக்குமே ஏதாவது விதத்தில் ஒரு பேலன்ஸ் தங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம் சார். அது எங்களுக்கும் எப்போதுமே சாதகமாக இருந்து வருகிறது.. நன்றி. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அந்த "ஏதாவது " என்னவென்றும் சொல்லிட்டா என் பாடு லேசாகிடுமே சார்?!

      Delete
  30. விருதுநகர் இன்று இரவு பயணம். நிதானமாக படித்து எனது கருத்துக்களை பதிவிடுகிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. நிதானமாகவே படிச்சிட்டு வாங்க சார்...

      Delete
  31. நீங்கள் முன் பதிவுக்காக புத்தகம் வெளியிடும் பட்சத்தில் நிச்சயம் நான் அதை முன்பதிவு செய்வேன். எனக்கு ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி. எனக்கு எப்படியாவது கார்ட்டூனும் கிராபிக் நாவலும் வந்தால் போதும். கார்ட்டூன் லிஸ்ட்ல மேகிய சேர்த்துட்டதால யாருக்கும் சந்தேகம் வராது

    ReplyDelete
  32. Print run option. இல் புதியவைகளை களம் இறக்கலாம் சார்! இல்லையெனில் காமிக்ஸ்ரசனை தேங்கி விடக்கூடும்.

    ReplyDelete
    Replies
    1. பதிவை முழுசாய் படிங்க சார்...

      Delete
  33. Sir I come under purchasing all the books category. I’m fine with whatever options. Engalucku comics venum… anh 😀🤩😀

    ReplyDelete
  34. V ll try twin options sir .. RISK OK .. WITHOUT VARIETY IT ll GET BORING SIR WITHOUT ANY EXCITEMENT ..

    ReplyDelete
  35. Safe ok
    தடுப்பாட்டம் ஆடலாம்.
    இறங்கி அடிப்பதென்றால் யோசிக்க வேண்டும்.

    ReplyDelete
  36. இதுவரை வாக்கு எண்ணிக்கைகளின் நிலவரம்...

    Safe OK. 06
    Risk OK 18

    ReplyDelete
  37. மஹீ,

    உங்க ஓட்டு எதற்கு...!? எனக்கு புரியல...

    ReplyDelete
    Replies
    1. Risk ok என்பதற்குங்க, சகோ
      உடனே படிக்க வாய்ப்பு அமையாது என்கிறார்

      Delete
  38. அபிஷேக் ஷர்மா ஆட்டம் தான் நமக்கு ரொம்ப பிடிக்கும் சார்

    ReplyDelete
  39. // "ஒரு மனிதன் ஒரே நதியினில் இரண்டு முறைகள் இறங்கமுடியாது - ஏனெனில் அடுத்த முறை அவன் இறங்கும் போது அது அதே ஆறும் அல்ல, அவன் அதே மனிதனும் அல்ல ! //

    சூப்பராக இருக்கிறது!

    வேலைக்கு வந்த பிறகு நானும் எனது நண்பனும் அடிக்கடி சொல்லிக்கொள்வது, மனிதன் ரோபோ கிடையாது. எந்த ஒரு விஷயத்தை மீண்டும் செய்யும் பொழுது அதே மாதிரி மீண்டும் செய்வான் என்று எதிர்பார்க்க கூடாது.

    ஓடி போய் விடுடா பரணி 😊

    ReplyDelete
    Replies
    1. ஆபீசிலே ஜென் தத்துவத்தை அவிழ்த்து விடுங்க சார் - தெறிச்சு ஓடிடுவாங்க 💪

      Delete
  40. ரிஸ்க் எடுக்க தயங்கினால் பதில் சுவையாக டெக்ஸ்..லக்கி ...சிக்பில் கூடுவார்கள் என்பதால் எனது ஆப்ஷன் SAFE OK என்பதே சார்....!

    ReplyDelete
  41. // நம்மவர் மெரி தெளிவா மண்டையை மாவு பிசைஞ்சு விட்டுட்டேனா ? லீவு நாளும் அதுவுமாய் உங்களை பரக்க பரக்க முழிக்க வைச்சாச்சா ? //

    நடக்கட்டும் நடக்கட்டும். ரொம்ப நாள் ஆசை போல் தெரிகிறது சார்.

    நேற்று கமல் பட வீடியோ ஏதாவது பார்த்தீங்களா 🤔

    ReplyDelete
  42. சார் நீண்ட நாட்கள் கழித்து பதிவு வந்த சில மணி துளிகளில் நூறை கடக்கும் கமெண்ட்ஸ்....:-)

    ReplyDelete
    Replies
    1. உங்க பட்டாப்பட்டி செண்டிமெண்ட் போல தலீவரே 💪

      Delete