Powered By Blogger

Saturday, June 28, 2025

க. கா.? Po. Pa??

 நண்பர்களே,

வணக்கம்! "பயணம்'' அதற்குள்ளாக ஒரு தூரத்து நினைவானது போலுள்ளது- அடுத்தடுத்த பணிப் பயணங்களில் ஈடுபடும் மும்முரத்தில்! இதோ- ஜுலையில் ஒரு நேர்கோட்டு வாசிப்பு மாதத்துக்கு all is set! But first things first..!

நம்ம 53 ஆண்டு காமிக்ஸ் பயணத்திற்கு சைசில் மாத்திரமன்றி- விற்பனையின் துரிதத்திலுமே "பயணம்'' ஒரு மைல்கல்லாகிடும் போலும்! புத்தக விழாக்களில் விற்பனைக்கு / விளம்பரத்துக்குத் தேவை என கொஞ்சூண்டு புக்சை மட்டும் ஒதுக்கி வைத்துள்ளோம் - மற்றபடிக்கு ஸ்டாக் போயிண்டே! Of course - ­லிமிடெட் எடிஷன் தான்; சின்னதொரு ப்ரிண்ட்ரன் தான்! But still - மிரண்டே போனோம்-விற்பனையில் தெறித்துள்ள அனலைக் கண்டு! அதிலும் கணிசமான நண்பர்கள் மூன்று; நான்கு என்றெல்லாம் ஆர்டர் செய்துள்ளனர்- தத்தம் நட்பு வட்டங்களில் பகிர்வதெற்கென்று! இத்தனை பெரிய சைஸ் கையாள சுலபமே அல்ல தான்; சேமிப்பிற்கும் கஷ்டமே என்பது புரிகிறது! ஆனால், இந்த இதழை "ஹிட்'' என்ற நிலையிலி­ருந்து "சூப்பர்-டூப்பர் ஹிட்!'' என்ற நிலைக்கு உயர்த்தியிருப்பது அந்த மெகா சைஸ் தான் என்பேன்! என்ன ஒரே வருத்தம் - இது போலான எனது குட்டிக்கரணங்களை ரொம்பவே ரசிக்கும் சீனியர் எடிட்டரில்லை - இன்று இந்த இதழின் முதல் பிரதியை ரசித்திட..!

Down the line - என்னிடம் இரண்டு கேள்விகள் folks :

கேள்வி # 1 : தொடரும் ஆண்டுகளில் இந்த Father's Day போல வேறு ஏதாச்சும் முயற்சிக்கலாமா? அழுகாச்சிக் காவியங்களாகத் தான் என்றில்லாது - வித்தியாசமாய் ஏதாச்சும்?

கேள்வி # 2: இந்த "அப்புச்சி டே'; "அத்தாச்சி டே' போன்றவையெல்லாம் சற்றே மேற்கின் காப்பிகளாகத் தெரிந்திடும் பட்சத்தில் நமக்கு ஒத்துப் போவது போல் எதையேனும் 2026-க்கு முயற்சிக்கலாமா?

"சுப்ரமணியபுரம்!' படம் வந்து இருபது வருஷங்கள் ஆச்சு... 10 years of பாகுபலி­.. என்று பார்ட்டி கொண்டாடுவதைப் போல anything for 2026??

Back to the present- இதோ லக்கி லூக்கின் இரண்டு கலர் ஆல்பங்களி­லிருந்துமே தலா ஒரு பக்கப் பிரிவ்யூ! இரண்டிலுமே cast கிட்டத்தட்ட ஒன்றே எனும் போது - திரும்பிய திக்கெல்லாம் டால்டன்களும், ரின்டின் கேனும் தான் வலம் வந்தது போலிருக்கவுள்ளது!

ஜுலையின் அடுத்த கலர் ஆல்பத்தில் போட்டுத் தாக்கக் காத்திருப்பது நமது லோன் ஸ்டார்! 2022-ல் அறிமுகம் கண்ட சமகால மும்மூர்த்திகளி­லிருந்து எஞ்சியிருக்கும் ஒரே மனுஷரான "டேங்கோ' ஒரு all out ஆக்ஷன் த்ரில்லரில் தெறிக்க விடுகிறார்! But இந்த முறை ஒரு சின்ன வித்தியாசம்! மாமூலாய் நீலக்கடல்களின் ரம்யமும், புதுப்புது தேசங்களும் கண்முன்னே விரிவதுண்டு டேங்கோ சாகஸங்களில்! இம்முறை கதை நகர்வது ஆர்ஜென்டினியத் தலைநகரில் மட்டுமே! And கடல், கப்பல், படகு என்றெல்லாம் இல்லாது எல்லாமே நிகழ்வது நிலத்தில்! "வேட்டை மறக்கா வல்லூறுகள்!'' சித்திரங்களில் எப்போதும் போல பட்டாசாய் அனல் பறக்கச் செய்கிறதெனில் அந்த டிஜிட்டல் கலரிங் முற்றிலுமாய் வேறொரு லெவலுக்கு இட்டுச் செல்கிறது! இது 2020-ல் தான் உருவானதென்பதால் இன்றைய தொழில்நுட்பங்களின் ஜாலம் வசீகரிக்கிறது! கதை - வசனம் டைரக்ஷன் என்பனவெல்லாம் இரண்டாம் பட்சமே இங்கே ; is an absolute visual delight! பாருங்களேன்- ஒரிஜினல் அட்டைப்படத்தையும், உட்பக்க ப்ரிவியூவையும்!


And ஜுலையில் இன்னொரு highlight நம்ம ''இளவரசியார் பெசல்'' தான் என்பதை மறுக்கவோ, மறக்கவோ, மறுத­லிக்கவோ, முறைக்கவோ, வாய்ப்பே லேது என்பேன்- simply becos இம்முறை அமைந்துள்ள இரண்டு (புது) சாகஸங்களுமே தெறி ரகம்! Oh yes - நம்ம அம்மணியை வழக்கம் போல டாக்டர்களும், இம்முறை ஒரு மாற்றத்துக்கு புரபஸர்களும் உசிரை வாங்குவது தொடரவே செய்கிறது தான்! And சில பல காதுகளில் புகை வந்தாலும், சில குய்யாக்கோ - முய்யாக்களும் அரங்கேறிடாது இல்லை தான்! ஆனால், அவர்களையெல்லாம் ஓரமாய்ப் போய் பீடா போடச் சொல்­விட்டு கார்வினும், மாடஸ்டியுமாய் நடந்திடும் அதிரடிகள் அதிர்வேட்டு ரகம்!

ஹனிகன்

மரணப் பொறி!

மேற்படி இரண்டு சாகஸங்களுமே மாடஸ்டியின் "நெட்வொர்க்' நாட்களோடு தொடர்பு கொண்டவை! ஹனிகன் உருவானதோ 1996-ல்.. மரணப் பொறி - much before in 1977...! இரண்டிற்குமே ஓவியர் ரொமரோ தான் என்பதால் அந்தச் சித்திர லாவகம் அற்புதமாய் மிளிர்வதை இரண்டு சாகஸங்களிலுமே பார்த்திடலாம்! 

And இங்கே நமது மொழிபெயர்ப்பு டீமிற்கு ஒன்றரையாண்டுகளாய் வலு சேர்த்து வரும் Ms.சுகன்யாவுக்கு ஒரு shout-out! இரு கதைகளுக்குமே அவர் தான் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்! And yes - நம்ம புடைப்பான மூக்கு, எங்குமே பட்டி டிங்கரிங் பார்க்காது அமைதியாக இராதென்பதால் - இரண்டு ஆல்பங்களிலும் நிறையவே திருத்தங்கள்/ மாற்றங்கள் போட்டுள்ளேன் தான்! ஆனால், மாடஸ்டி கதைகளைக் கையாள்வதென்பது சுலபமே அல்ல ; and to her credit ரொம்பவே டீசென்டாக அவரது எழுத்துக்கள் இருந்ததால் - அதன் மேலே புல்டோசரை விட்டு ஏற்றிச் செப்பனிட அவசியமெல்லாம் எழவில்லை! ஜல்லி­ அடிச்சு, தார் ஊற்றி அவர் போட்டிருந்த அடித்தளத்தில், மேலாக்கா சிமெண்ட் பால் ஊற்றி இப்படியும், அப்படியுமாய் டோஸரை ஓட்டி, சாலையை நம்ம முன்மண்டையைப் போல வழுவழுப்பாய் ஆக்கும் பொறுப்பு மட்டும் நம்மள் வசம்!


And இந்த MAXI சைஸிலான இதழின் ஆகச் சிறந்த பஞ்சாயத்து - அட்டைப்படத்தில் மஞ்ச சொக்காயோடு மாடஸ்டி தந்த போஸ் தான்! பொதுவாய் மஞ்சள் சொக்காய்களை நம்ம ஆம்பளைப் பசங்க ஹீரோக்கள் போடும் போதெல்லாம் துளி கூட சிக்கல்கள் எழுந்ததில்லை! ஆனால், முதல் தபாவா மாடஸ்டியை ஒரு மஞ்சக்காட்டு மைனாவாய் சித்தரிக்க நினைத்த போது, ரொம்பவே எதிர்ப்பலைகள்! In fact நமது வாட்சப் கம்யூனிட்டியில் நடத்திய வோட்டெடுப்பில் செம tough fight!பொதுவாகவே இந்த வாக்கெடுப்புகளில் ஏதேனும் ஒரு தரப்பு மளமளவென வாக்குகளை வாரி landslide வெற்றி பெற்றுவிட்டால் என் பிழைப்பு செம சுலபமாகிப் போகும்! அதே போல மூன்றோ, நான்கோ, ஐந்தோ options இருந்து - இங்கே கொஞ்சம்; அங்கே கொஞ்சமென வாக்குகள் சிதறியிருந்தாலும் கூட மெஜாரிட்டி பக்கமாய் மண்டையை ஆட்டுவதுமே ஈஸி! ஆனால், இரண்டே தரப்புகள் and அதனில் இழுபறி என்றாலே நமக்கு "பிக்னிக் ஸ்பாட்"("அந்த'' சந்தின் புது நாமகரணம்) ரெடியாகி வருகிறது என்று அர்த்தம்! வேணும் என்போர் 95 - வேணாம் என்போர் 65 என்று அமைந்தாலுமே, டபுள் குட்டு வைக்க ஹாஸ்டல் முழுக்க லைனாக ரெடியாகிவிட்டதென்று எடுத்துக் கொள்ளலாம்!

ஆகையால், மண்டையைக் காத்துக் கொள்ளும் ஆர்வத்தில் இம்முறை தடுப்பாட்டம் ஆடியுள்ளோம்! இதோ- பொறுப்பாய் கத்தியோடு - 'கரீஸ்' கலரில் நிற்கும் கார்வினே ரெகுலர் அட்டைப்படம்! So புத்தக விழாக்களுக்கும், புத்தகக் கடைகளுக்கும் "க்ரீஸ்' கார்வினே ஆஜராவார்! 

அதே சமயம் மஞ்சள் மாடஸ்டியிடம் மனதைப் பறிகொடுத்த இல்லத்துப் பூரிக்கட்டைகளுக்குப் பயமற்ற வாலிபர்களுக்கென "மஞ்சள் மைனா மாடஸ்டி'' variant கவராக- பிரத்தியேகமாய் அமைந்திடுவார்!  

So "பூரிக்கட்டைக்குப் பயமில்லை" (Poori kattaiku Payamillai) என்பதைக் குறிக்கும் விதமாய் ''Po.Pa'' என்று மெஸேஜ் அனுப்பும் வீரர்களுக்கு யெல்லோ மாடஸ்டி! தேர்வு செய்திடும் இந்த option இரண்டே நாட்களுக்கே folks- டெஸ்பாட்ச் செவ்வாயன்று என்பதால்!

So Ka.Ga-வா ? Po.Pa-வா?என்பதை அர்ஜெண்டாக நமது கம்யூனிட்டி வாட்சப் நம்பருக்கு மட்டுமே அனுப்பிடக் கோருகிறேன்!

வாட்சப் நம்பர்:96000 61755

இந்த நம்பர் தவிர்த்த வேறு எந்த நம்பருக்கும் அனுப்பிட வேணாம்- ப்ளீஸ்!

And ரொம்ப முக்கியமான தகவலுமே மக்களே: "நேக்கு கரீஸ் கார்வின் வாணாம் - கறுப்பு ஒத்துக்காது..! அப்புறமா மஞ்சள் மைனாவும் வாஸ்துக்கு ஆவாது! அதனாலே உள்பக்கமா நாலு ஸ்பூன் நெய்விட்டு, வெளிப்பக்கமா மூணு ஸ்பூன் ஆயில் விட்டு, மழைச்சாரலாட்டம் லைட் ப்ளூ கலரிலே, இளவரசி சாரட் வண்டிலே வர்றா மெரி 3D-லே ஒரு அட்டைப்படம் போட்டு வேணும்! புக்கை டப்பியிலேர்ந்து பிரிக்கிறப்போவே "ராஜாவின் பார்வை... ராங்கியின் பக்கம்'னு பாட்டும் கேட்கணும்!'' என்ற ரீதியிலான special requests வாணாமே ப்ளீஸ்! நம்மாட்கள் பாவம்- நான் அடிக்கடி செய்யும் குரங்கு பல்டிகளிலேயே முக்கால் நாக்கு தொங்கி விடுகிறது அவர்களுக்கு! இதில் நீங்களுமே 'ஆட்றா ராமா - தாண்ட்றா ராமா' என்று குச்சிகளைக் கையிலெடுத்தால் அத்தினி பேரும் ஜார்கண்ட் பக்கமாய் ஓட்டமெடுத்து விடுவார்கள்! So சிம்பிளாய் இதை வைத்துக் கொள்வோமே!!

1.No message எனில் கரீஸ் கார்வின் ராப்பர்!

2.Po.Pa என்றால் மஞ்சள் மாடஸ்டி!

3. இந்த வாய்ப்பு முன்பதிவு செய்துள்ள Electric'80s சந்தா நண்பர்களுக்கு மட்டுமே!

4.நீங்கள் ஆன்லைனில் மட்டுமே அவ்வப்போது வாங்குவோராக இருப்பின் அங்கே 50 புக்ஸ் மட்டுமே மஞ்சள் மாடஸ்டியோடு சாத்தியமாகிடும்! அதன் பின்பாய் சகலமுமே கரிஸ் தான்!

தயை கூர்ந்து இதை விவாதிக்க நம்மாட்களுடன் திங்களன்று டெ­லிபோன் யுத்தங்களைத் தொடுக்காதீர்கள் மக்களே! இந்த மந்தி வேலைகள் முழுக்க முழுக்க நம்ம கைவண்ணமே! So அவர்களிடம் இதன் சாதக - பாதகங்களை விளக்கும் முயற்சியில் வீணாய் "தம்'' கட்ட வேணாமே ப்ளீஸ்! அதற்கென நம்ம 'பிக்னிக் ஸ்பாட்டில் ' காத்திருப்பேன் என்பதால் அக்கட வைத்துக் கொள்வோமே - பஞ்சாயத்துக்களை !!

Bye all.. டின்டின் கடைசிப் பத்து பக்கங்கள் அழைப்பதால் கிளம்புகின்றேன்! Have a great weekend! See you around!

59 comments:

  1. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. Replies
    1. இங்கே அல்ல சார். And கார்வின் அட்டைக்கு மெசேஜ் அனுப்ப தேவையும் கிடையாது

      Delete
    2. பரணி சகோ
      மஞ்சள் மாடஸ்டி வேண்டாம் என தீவரமாக இருப்பது புரிகிறது

      Delete
  4. ஆன்லைன் லிஸ்டில் போட்ட உடனே மாடஸ்டிக்கு ஆர்டர் போடனும் போலயே

    ReplyDelete
  5. பரணி 1 என பதிவிட்டிருந்தார் அதனை காணோமே?

    ReplyDelete
  6. எனது பதிவு ஒன்றும் காணவில்லை

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில் இப்படி நடப்பதுண்டு, எனக்கு நடந்துள்ளதுங்க, சகோ

      Delete
  7. கார்வின் அட்டைப்படத்தில் நல்லா இல்லை

    ReplyDelete
  8. டேங்கோ அட்டைப்படம் அசத்தல் 🔥🔥🔥

    ReplyDelete
  9. //"நேக்கு கரீஸ் கார்வின் வாணாம் - கறுப்பு ஒத்துக்காது..! அப்புறமா மஞ்சள் மைனாவும் வாஸ்துக்கு ஆவாது! அதனாலே உள்பக்கமா நாலு ஸ்பூன் நெய்விட்டு, வெளிப்பக்கமா மூணு ஸ்பூன் ஆயில் விட்டு, மழைச்சாரலாட்டம் லைட் ப்ளூ கலரிலே, இளவரசி சாரட் வண்டிலே வர்றா மெரி 3D-லே ஒரு அட்டைப்படம் போட்டு வேணும்! புக்கை டப்பியிலேர்ந்து பிரிக்கிறப்போவே "ராஜாவின் பார்வை... ராங்கியின் பக்கம்'னு பாட்டும் கேட்கணும்!'' என்ற ரீதியிலான special requests வாணாமே ப்ளீஸ்//


    😂😂😂😂😂
    நன்றாகவே தெரிந்து வைத்து உள்ளீர்கள், சார்

    ReplyDelete
  10. மாடஸ்ட்டி,செம விறுவிறுப்பான preview சார் அசத்தல்

    ReplyDelete
  11. ///பொதுவாய் மஞ்சள் சொக்காய்களை நம்ம ஆம்பளைப் பசங்க ஹீரோக்கள் போடும் போதெல்லாம் துளி கூட சிக்கல்கள் எழுந்ததில்லை!///

    🥺🥺🥺🥺🥺
    எங்கள் வீரதீர மாடஸ்டிக்கு வந்த சோதனை

    ReplyDelete
  12. கேள்வி 1

    கண்டிப்பாக தொடரலாம் சார்...
    Keep us surprising as always.

    ReplyDelete
  13. கேள்வி 2

    சீனியர் எடிட்டரின் நினைவாக

    அவர் பிறந்த நாளில் ஒரு special
    அவர் மறைந்த நாளில் ஒரு special

    ReplyDelete
    Replies
    1. இந்த இரண்டு நாட்களில் ஏதேனும் ஒரு நாள் தேர்ந்தெடுத்தால் நான் happy அண்ணாச்சி.

      Delete
  14. Replies
    1. வாட்சப் நம்பருக்கு அனுப்புங்க, இல்லைனா கார்வின் தான் வருவாருங்க, ஜமீனய்யா

      Delete
    2. எனக்கும் po. Pa தான். மெசேஜ் அனுப்பியாச்சு

      Delete
  15. கார்வின்லாம் வேணாம் சார்..

    ReplyDelete
  16. 'கரீஸ்' கலரில்" 😅😅🤣
    Dubbing Dabba உபயமா??

    ReplyDelete
  17. 1. Yes. fathers day வை நாம சீனியர் எடிட்டர் டே வா கொண்டாடலாம். அதற்கு ஏதுவா நல்ல actin adventure நிரம்பிய fun கதைகளாக செலக்ட் செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. Yes Father's day in the memory of Senior Editor. எந்த கதையாக இருந்தாலும் சரிதான். Action, அழுகாச்சி, Adventure, Detective ஆல் ஓகே

      Delete
  18. Edi Sir😘🥰..

    Me in.. 😘😘💐🥰

    ReplyDelete
  19. //கேள்வி # 1 : தொடரும் ஆண்டுகளில் இந்த Father's Day போல வேறு ஏதாச்சும் முயற்சிக்கலாமா? அழுகாச்சிக் காவியங்களாகத் தான் என்றில்லாது - வித்தியாசமாய் ஏதாச்சும்?//


    பண்ணலாங்க, சார்

    //கேள்வி # 2: இந்த "அப்புச்சி டே'; "அத்தாச்சி டே' போன்றவையெல்லாம் சற்றே மேற்கின் காப்பிகளாகத் தெரிந்திடும் பட்சத்தில் நமக்கு ஒத்துப் போவது போல் எதையேனும் 2026-க்கு முயற்சிக்கலாமா?//


    செய்யலாங்க, சார்

    ReplyDelete
  20. //"சுப்ரமணியபுரம்!' படம் வந்து இருபது வருஷங்கள் ஆச்சு... 10 years of பாகுபலி­.. என்று பார்ட்டி கொண்டாடுவதைப் போல anything for 2026??//


    நம்மிடம் நிறையாகவே உள்ளதுங்க, சார்

    2026 டீசம்பர் வந்தார் ப்ளாக் ஆரம்பித்து 15 வருடம் ஆகிவிடும்
    2026 ப்ளாக்கின் 15-வது என்றி சொல்லிடலாம்

    LMS ரிலீஸ் ஆகி 12 வருடம்
    மின்னும் மரணம் ரிலீஸ் ஆகி 11 வருடம்
    2012 புத்தக விழாக்கள் முதலாய் தாங்கள் வாசகர்கள் சந்திக்க ஆரம்பித்து 14 வருடம் ஆகிடும்
    இன்னும் ஸ்பெஷல் தருணங்கள் உள்ளன்
    ஜோக்காக சொல்லவில்லைங்க, நீங்க சிரித்தாலும் பரவாயில்லை 😊😁

    நமது ஈரோடு மீட் பெரிய களம் கண்டது 2016 லீஜார்டின் கீழ்தளத்தில், 10 வருடங்கள் ஆகிடும்
    பெர்ஸ்னலாய் எனக்கு,சிறுவயது முதல் ஹாட்லைன் மூலம் அறிந்திருந்த தங்களை நேரில் சந்தித்து 10 வருடங்களாகி விடுகிறது, சார்

    ReplyDelete
    Replies
    1. 1.லீஜார்டின் கீழ்தள பெசல் 💪
      2.மரத்தடி 14 பெசல் 🏝️
      3.மின்னி மரணி 11 பெசல் 🐎

      Delete
    2. ஒரு பொங்கல் ஸ்பெசல், ஒரு தைப்பூச ஸ்பெஷல்

      Delete
    3. நமக்கு மே மாதம் கோடை மலர், தீபாவளி மலர் ரெண்டும் மதி அதுக்கு மேல நீங்க என்ன Special போட்டாலும் போனஸ் தான் சாரே

      Delete
  21. டேங்கோ அட்டையை டக் என்று பார்க்கும் போது லார்கோ பார்ப்பது போலவே ஒரு ஃபீலிங் எனக்கு மட்டும் தானா?

    ReplyDelete
  22. //And இங்கே நமது மொழிபெயர்ப்பு டீமிற்கு ஒன்றரையாண்டுகளாய் வலு சேர்த்து வரும் Ms.சுகன்யாவுக்கு ஒரு shout-out! இரு கதைகளுக்குமே அவர் தான் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்!//

    வாழ்த்துகள் & பாராட்டுகள் சகோதரி சுகன்யாவிற்கு

    மாடஸ்டி கதைக்கு ஒரு பெண்ணை எழுதியதில் மகிழ்ச்சி, தாங்கள் பட்டி டிங்கரிங் பார்த்திருந்தாலும்

    இவர்கள் எழுதியதை போன வாரம் எங்களுக்கு கொஞ்சமாய் காட்டி இருந்தீங்க, நன்றாக இருந்தது

    ReplyDelete
    Replies
    1. ரூபினுக்கும் இவங்க தானே. நல்லா எழுதறாங்க. வாழ்த்துக்கள்

      Delete