Powered By Blogger

Saturday, February 22, 2025

ஒரு 10 பன் படலம் !!

 நண்பர்களே,

வணக்கம். நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமுமாய் நம்ம கிட்டங்கியின் விஸ்தீரணமானது- மசக்கையான அம்மணியின் வயிற்றைப் போல பெருகிப் போகிறது தான்! மாதா மாதம் போட்டுத் தாக்கும் இதழ்களெல்லாம் பிக்னிக் போகும் பள்ளிக்கூடப் பசங்களின் உற்சாகங்களோடு ஷெல்ப்களில் தொற்றிக் கொள்கின்றன தான்! டயட் இருக்கும் மாப்பிள்ளை சாராட்டம் அரும்பாடுபட்டு இழந்திடும் கிலோக்களை- "பச்சக்' "பச்சக்' என அடுத்தடுத்த மாதங்களின் வெளியீடுகளின் உபயத்தால் மறுக்காவும் எடையேற்றிக் கொள்கிறோம் தான்! இருந்தாலும் ஒரு ஓய்வான பொழுதில் "அடுத்த ப்ராஜெக்ட்டா இன்னா பண்ணலாம்?'' என்ற சிந்தனைகள் மட்டுப்படுவதுமில்லை..! அந்தத் தருணங்களில் கலர் கலரான உங்களது கோரிக்கைகள் கபாலத்திற்குள் ரவுண்டடிக்காமல் இருப்பதுமே இல்லை தான்! அவற்றின் நீட்சியே கடந்த வாரத்தில் நமது வாட்சப் கம்யூனிட்டியிலே - "சஸ்பென்ஸ் வைக்கிறேன் பேர்வழி!' என்றபடிக்கே நான் கோமாளியாட்டம் வாங்கிய பல்புகள் !!

"வ.வி.கி.' 

முதல் புதிராய் இதைத் தான் போட்டேன்- மக்களாலே யூகிக்கவே முடியாது என்ற நினைப்பில்! 

பொடனியோடு ஒரு போடாய்ப் போட்டு "வண்ணத்தில் - விச்சு & கிச்சு'' என்று பதிலளித்தார் நண்பர் சங்கர் செல்லப்பன்! 😁😁

ரொம்ப காலமாகவே நண்பர்களின் கோரிக்கை இது! குறிப்பாக ஆதியும், செந்தில் சத்யாவும் இதற்கோசரம் கொடி பிடித்து வந்தது நினைவில் இருந்தது! பெரிய பாரமில்லாத இதழாய், படிப்பதற்கு நமக்கும் சரி, நம் வீட்டுக் குட்டீஸ்களுக்கும் சரி சுகப்படும் புக்காக விச்சு & கிச்சு தொகுப்பானது அமைந்திடக் கூடுமென்று உறைத்தது! And இவற்றை கலர் புக்ஸாய் வெளியிட்டால் ரம்யமாக இருக்குமென்ற மகாசிந்தனையும் உதித்தது! அப்புறமென்ன- நம்ம காலு.. நம்ம கட்டைவிரல்...."லபக்''னு நாமளே ஒரு கடி கடிச்சிட்டாப் போச்சு! என்று தீர்மானித்தேன்!

இயன்றமட்டுக்கு நாம் இதுவரைப் படித்திராத கதைகளையாகச் சேகரித்து இந்தத் தொகுப்பினை உருவாக்கும் முஸ்தீபுகளில் உள்ளோம்! so உங்களுக்கு ஒரு பிரதி.. உங்க பசங்களுக்கு இன்னொன்று என்று திட்டமிட்டுக் கொள்ளுங்களேன் மகாஜனங்களே?

இங்குள்ள சித்திரங்கள் நெட்டில் கிட்டியவைகளே ; சும்மா விளம்பரத்துக்காக மட்டும் பயன்படுத்தியுள்ளோம் ! So "இது தானா கலரிங் தரம் ?" என்ற கச்சேரிகள் வாணாமே ?

வ.ஒ.க.ம :

போன தபா "ஜிலோ'ன்னு சொல்லி­ப்புட்டாங்க பதிலை.. இந்தப் புதிருக்கு சான்ஸே இல்லைன்னு கெத்தாகப் போட்ட இரண்டாவது புதிர் இது! 

"வடசட்டியில் ஒரு கரண்டி மட்டன்''

"வர வேண்டும் ஓடி கண்மனி மாடஸ்டி''

என்றபடிக்கே நம்மாட்கள் கதக்களி ஆடிக் கொண்டிருக்க- "பரிசு 10 ரவுண்டு பன்கள்'' என்று வேறு அறிவித்து வைத்தேன்! பொளேரென பிளந்தார் நண்பர் சென்னை மகேஷ்குமார்- "வருகிறது ஒற்றைக் கண் மர்மம்'' என்று! அதனை லைட்டாகத் திருத்தி- "வண்ணத்தில் ஒற்றைக் கண் மர்மம்''என்று அறிவித்தபடியே 10 பன்களை சென்னை நோக்கிப் பார்சல் பண்ணினோம்! முத்து காமிக்ஸ் வாரமலரில் கலரிலும், Black & White லும் வெளியான இந்த சாகஸத்தை மறுபதிப்பிடக் கோரி நிறைய நண்பர்கள் வருஷங்களாய்க் கேட்டு வருவதில் இரகசியமே லேது! அதிலும் சேலத்து பல் மருத்துவரும், நாமக்கல்­லி ன் ""ஜம்ப்பரும்'' சமீப சமயங்களில் கூட இது பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தனர்! கோப்புகள் அங்கே தயாராகும் போது இங்கே கோட்டு- சூட்டு போட்ட மாப்பிள்ளையும் தயாராகி விடுவாரென்று பதில் சொல்­ வைத்திருந்தேன்! ஒருவழியாக மாப்பிள்ளை சாருக்குக் கலர் கலராய் கோட்- சூட்கள் வாங்கிடும் நேரம் புலர்ந்து விட்டதால் அறிவிப்போடு ஆஜர்!

இதுவரையிலும் "காமிக்ஸ் சேவை ஆற்றுவோர் கழகத்தில்" மட்டுமே காமா- சோமாவென மறுபதிப்பாகியிருந்த இந்த சாகஸமானது rich ஆன, கலரிங்கில் நம்மிடையே ஒரு வாகான புத்தகவிழாத் தருணத்தினில் வெளியாக உள்ளது! இதற்கான கலரிங் பணிகளில் கடல் கடந்ததொரு தேசத்திலிருக்கும் டிஜிட்டல் ஓவியர் பிஸி! So வெயிட்டிங்!

Again - இது அவசரத்துக்கு நம்மாட்கள் கலரைத் தடவிய ஒரு பக்கமே ! 

தி.க.வ:

சிதம்பர இரகசியமே ஆனாலும், நம்மாட்கள் இடது கையாலேயே முடிச்சவிழ்த்து விடுவார்கள் என்பது புரிந்தாலும் விடாமுயற்சி வேதாளமாய் அடுத்து களமிறக்கிய புதிர்(?!!) இது தான்!

  • "திகம்பரசாமி கனவில் வந்தார்''
  • "திரிபுரசுந்தரிக்குக் கல்யாண வயசு''
  • "திங்கட்கிழமை கருவாடு வறுவல்''

என்ற ரேஞ்சுக்கு கவித்துவமான விளக்கங்களுக்கு மத்தியில் "வண்ணத்தில் திகில் காமிக்ஸ்'' என்று முதலாவதாகப் பதிவு செய்தார் நண்பர் சிவா! Again சின்னதொரு திருத்தம் - but 10 பன்கள் உண்டு இந்த யூகத்துக்கு! 

சரியான பதில் "திகில் கதைகள் வருகின்றன!'' என்பதே! புத்தகவிழாக்களுக்கு வரும் மாணாக்கர்கள் மத்தியில் ஹாரர் கதைகளுக்கு ஒரு செம ஆர்வம் இருப்பது சில காலமாகவே நம்மாட்கள் சொல்­ வரும் சேதி! And துவக்க நாட்களது நமது "திகில்' இதழ்களில் வெளியான சிறுகதைகள் இதற்கு செமத்தியாக set ஆகுமென்று பட்டது! பற்றாக்குறைக்கு நம்ம மகளிரணித் தலைவி ரம்யா கூட இவற்றை மறுக்கா வெளியிட்டால் சிறப்பாக இருக்குமென்ற பதிவை எங்கோ வாசித்த நினைவிருந்தது!

SCREAM ஸ்பெஷல் என்று அங்கே லண்டனில் இந்தப் பேய்க் கதைகளை அழகாய் டிஜிட்டல் கோப்புகளாக்கிய தகவலும் காதில் விழுந்த நொடியில் துண்டை விரித்து வைத்தேன்! சின்ன சின்னக் கதைகள்- அதே MAXI சைஸில் - அழகான புது அட்டைப்படங்களோடு போட்டால் ரசிக்குமென்று பட்டது! So here we are!!

வ.செ.பி. :

இங்கேயும் நம்மாட்களின் பரதநாட்டியங்களுக்குப் பஞ்சமே இருக்கவில்லை தான்!

  • வண்ணத்தில் செந்தமிழ் பிராட்டி
  • வடக்கே செல்லும் பிரியாணி
  • வடசென்னை பிள்ளையார்
  • வடசென்னையில பிரியா(ம)ணி

என்ற ரேஞ்சில் ரவுசுகள் அரங்கேறிக் கொண்டிருக்க தம்பி கார்த்திக்கும், சென்னை நண்பர் கவாஸ்கர் விஸ்வநாதனும் ஏக காலத்தில் "செக்ஸ்டன் பிளேக்' என்று சிக்ஸர் அடித்தார்கள்! 

மிகச் சரியாக அதே 6.05.p.m.க்கு இருவரது பதிவுகளும்! 

So ஆளுக்கு 5 பன்கள் வீதம் ரண்டு பார்சல் பண்ணனும் திங்கட்கிழமைக்கு! சரியான பதில்: "வருகிறார்- செக்ஸ்டன் பிளேக்'' இங்கேயுமே அந்த ஹாரர் பேய்க் கதைத் தேடல் தான் எனது பின்னணி- இவரது கதைகள் டிடெக்டிவ் வரிசையே என்றாலும் விதவிதமான ஆவிகள் சார்ந்த களங்களிலேயே சாகஸம் செய்திடுவார்! நேர்கோட்டுக் கதைகள்; அழகான Black & white சித்திரங்கள் - So புத்தகவிழாக்களில் நமக்குக் கைகொடுக்க செக்ஸ்டன் நிச்சயம் உதவிடுவார் என்று தீர்மானித்தேன்! 

வ.வ.ப.த.ரா:

9.48.p.m.க்கு இந்தப் புதிரைப் போட்டேன்! 9.52 p.m.க்கு "வண்ணத்தில் வருகிறார் பரட்டைத் தலை ராஜா' என்று போட்டுடைத்தார் டெக்ஸ் சம்பத்! 

மெய்யாலுமே மிரட்டல் தான்! பதில் என்னவென்று தெரிந்த பிற்பாடு இதில் பெரிதாய் கம்பு சுற்றும் ஜாகஜமெல்லாம் இல்லையென்று தோனிடலாம்! ஆனால், சும்மா வாசிக்கும் போது நிச்சயமாய்க் குழப்பிடும் புதிர் இது என்பதில் no doubts! ஆக, திங்களன்று திருப்பூருக்கும் 10 பார்சல்ல்ல்ல்ல்!!

Again இங்கே நண்பர்களின் கோரிக்கைகளே பிரதான காரணி! குறிப்பாக நண்பர் காங்கேயம் சதாசிவம்! தவிர, கபிஷ் இதழ்கள் ஈட்டிய புத்தகவிழா சந்தோஷங்கள்- நம்ம பரட்டை ராஜாவை உட்புகுத்த இன்னொரு காரணம்! So அழுத்தமில்லாத ஜாலியான வாசிப்புக்கு yet another addition!

"பன் வாங்கியே கம்பெனியை போண்டியாகிட்டான்பா!'' என்று வரலாறு சொல்­லிடப்படாது என்பதால் புதுசாய் ஒரு குண்டைத் தூக்கிப் போடவும் தீர்மானித்தேன்! இம்முறையோ in the real sense of the word!

அந்த "குண்டு" ஒரு ஆயிரம்வாலா சார்ந்த உரத்த சிந்தனையே !! 

"ஆயிரம் ரூபாய்க்கு பொஸ்தவம் ஒண்ணு போடலாமா"ன்னு முன்னே யோசிச்சோம் - பத்தாண்டுகளுக்கு முன்னமே அந்த மைல்கல்லைத் தாண்டிப் போட்டோம்!

Next "ஆயிரம் பக்கங்களுக்கு பொஸ்தவம்" என்று யோசிச்சோம்- இரத்தப் படலத் தொகுப்புகள் + புலன்விசாரணை என்று ரணகளம் செய்தோம்!

"ஆனால், அது மூன்றோ - நான்கோ புக்ஸ்களின் மொத்தப் பக்க எண்ணிக்கை தானே?! ஒற்றை புக்கை ஆயிரம் பக்கத்துக்குப் போடலை தானே?!" என்று மனசுக்குள் அந்தச் சமயமே ஒரு மினி சிந்தனை பளீரிட்டது! 2007-ல் போட்ட இரத்தப் படல கறுப்பு- வெள்ளைத் தொகுப்பு கூட 852 பக்கங்கள் தான்! So 1000 பக்க குண்டூடூடூடூ என்பது வெறும் சிந்தனையாகவே இருக்க, நாளாசரியாய் அதனை பரணில் ஏற்றிய கையோடு மறந்தும் போயிருந்தேன்!

அதை ஏணி போட்டு கீழே இறக்கி தலைக்குள் மறுக்கா தாண்டவமாடச் செய்த புண்ணியவான் நம்ம ஆஸ்டின்வாழ் மகேந்திரன் பரமசிவம்வாள் தான்! "டெக்ஸ் மறுபதிப்புகளில் அடுத்து எதைப் போடலாம்?" என்ற கேள்வியோடு நான் மொக்கை போட்டு வந்த சமயத்தில் - "டெக்ஸ் மறுபதிப்புகளின் ஒரு தொகுப்பை ஆயிரம் பக்க புக்காகப்  போட்டால் ஜிலோன்னு இருக்குமே?" என்று பதிவு பண்ணினார்! அந்த நொடியில் தாண்டிப் போய்விட்டாலும், தலைக்குள் இது குடியிருந்தே வந்தது ! And வூட்டிலே வெறும் புளியோதரை மாத்திரமே இருந்த ஒரு மதிய வேளையில், கடிச்சுக்க கட்டைவிரல் தான் இருக்குதே?! என்ற ஞாபகம் வந்தது! அதன் நீட்சியாய் அன்றைக்கு மதியமே ஆபீஸில் ஒரு 1000 பக்க இதழின் டம்மி புக்கை தயாரிக்கச் சொன்னேன் மைதீனிடம்! And இது தான் அது!!

1.65 கிலோ எடையோடு, 1000 வண்ணப் பக்கங்களோடு ஒரு டெக்ஸ் Almanac வெளியிட்டால் மேலுள்ள போட்டோவிலான புக்கைப் போலவே இருக்கும்! ஏற்கனவே TINKLE புக்ஸ் 1000 பக்கங்களில் வெளியிட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன் தான் - சென்னை ஓடிஸி புக் ஷாப்பில்! சரி, அதையும் ஆர்டர் போட்டு வாங்கிப் பார்த்து விடலாமென்று தீர்மானித்தேன்! ரெண்டே தினங்களில் அந்த புக்கும் வந்து சேர்ந்தது & நிதானமாய் அதனை அவதானித்தோம் ! அவர்களது சின்ன சைஸ்; வெள்ளைத் தாள் 1000 பக்க புக்கானது - 800 கிராம் எடையே உள்ளது! நாமோ - 'மணந்தால் மகாதேவியே' என்றபடிக்கே ஆர்ட் பேப்பரோடு குடும்பம் நடத்துவதால் புக்கின் வெயிட் இரண்டு மடங்காகிப் போகிறது! So இந்த நொடியில் எனது கேள்விகள் இவையே:

  • 1.65 கிலோ எடையிலான புக்- அட்டகாசமாக காட்சியளிக்கிறது தான்! படித்துவிடுவீர்களா மக்களே - கையில் ஏந்தி?
  • விலை உத்தேசமாய் ரூ.1800 ரேஞ்சுக்கு அமைவதைத் தவிர்க்க இயலாது! இது முன்பதிவுக்கானதொரு இதழாக மாத்திரமே இருக்க முடியும் என்பதால்- ரொம்பச் சின்னதாகவே பிரிண்ட்ரன் திட்டமிட வேண்டி வரும் ! நிறைய ப்ரிண்ட் செய்து, விலையினைக் குறைவாக வைத்திட இங்கு மார்க்கமிராது! So அந்த விலை பற்றியும் என்ன நினைக்கிறீர்கள் மக்களே?

"இது வாணாமே- விஷப் பரீட்சை!' என்பீர்களானால், அப்படியே ஓரம் கட்டிப்புடுவோம்! Definitely not a problem !! 

மாறாக "பேஷாகப் போடலாம்'' எனும் பட்சத்தில் நடப்பாண்டின் பிற்பகுதிகளுக்கென நிதானமாய்த் திட்டமிடலாம் !

"மறுபதிப்பா போட்டு- புதுக்கதைகள் வர்ற பாதையை அடைச்சிடறே! நீயே லந்தும் பண்ணிட்டு, நீயே இப்படியொரு முன்மொழிவையும் முகத்துக்கு முன்னே தூக்கி நிறுத்தறே!'' எனும் விசனம் கொள்ளும் நண்பர்களா ? டைப்படிக்கும் கஷ்டம் வேணாமே சார்ஸ் ?! டெக்ஸ் மறுபதிப்புகள் தான் வருஷத்தின் bestsellers & அவற்றின் பெயரைச் சொல்லியே ரெகுலர் தடத்தின் பல மிதரக நாயக/ நாயகியர் வண்டியோட்டி வருகின்றனர்! So மறுபதிப்பு சார்ந்த விமர்சனங்கள் டெக்ஸுக்கும், மாயாவிக்கும், லக்கி லூக்குக்கும் மட்டும் பொருந்தவே பொருந்தாது! நமக்கான பிராண வாயுவினை உருவாக்கித் தரும் விருட்சங்கள் இவர்கள்! So இவர்களுக்காக விதிகளை விசனமின்றித் தளர்த்திக் கொள்ளலாம் ! And இவை முன்பதிவுகளுக்கானவை மட்டுமே - யார் தலையிலும் வம்படியாக திணிக்கப்படாது ! 

அப்புறமேட்டு "பேங்கில் லோன் போட்டுத் தா இனிமே காமிக்ஸ் படிக்கணும்" என FB-ல் உரையாற்ற உத்வேகமா ? கொஞ்சமே கொஞ்சமாய் ஒருக்கா உங்க மனசுகளையே கேட்டுக் கொள்ளுங்களேன் - ஐஞ்சு ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் நாம் வெளியிட்ட vintage இதழ்களை இன்னா விலைகளுக்கெல்லாம் போணி பண்ணிட இயன்றது & இன்றைக்கு Fanmade என்ற பெயர்களில் கட்டப்படும் கல்லாக்களின் நம்பர்களும் என்னவென்று ?! அதற்குப் பின்பாகவுமே விலைகள் பற்றி உரையாற்றும் ஆவல் எழுந்தால் - sure !!

So இந்த "குண்டூடூடூடூடூடூ'' வெடிக்கணுமா? அல்லாங்காட்டி தண்ணீர் ஊற்றி நமத்துப் போகச் செய்ய வேணுமா? என்பதை நீங்களே தீர்மானித்தாக வேணும் folks ! "வேணும்" எனும் பட்சத்தில் அடுத்த ஸ்டெப் - அவற்றில் இடம்பிடித்திட வேண்டிய கதைகளை இறுதி செய்தல் & then முன்பதிவுப் படலம். கணிசமான அவகாசம் தந்து கொள்ளலாம் ; அட, 2026-க்குக் கூட இதனைத் திட்டமிட்டும் கொள்ளலாம் ! சர்வ நிச்சயமாய் அவசரம் அவசியமாகிடாது ! May மாதத்து ஆன்லைன் விழா புத்தம்புது ஆல்பங்கள் பலவற்றோடு வெயிட்டிங் என்பதால் இதை அடிச்சுப் புடிச்சு உடனே உட்புகுத்தும் முனைப்பெல்லாம் நிச்சயம் காட்டிட மாட்டோம் ! 

And இங்கே முக்கிய குறிப்புகள் please :

இதை MBBS 34 சைஸில், பக்கத்துக்கு 4 1/4 பேனல் வீதம் போட்டால் மட்டுமே சிறப்பு என்ற ரீதியிலான அகுடியாக்கள் வேணாமே ப்ளீஸ் - போட்டால் வழக்கமான டெக்ஸ் சைஸ் தான்!

அப்புறம் "கார்சனின் கடந்த காலம்'' மெரி மேக்ஸி சைஸிலே போட்டு, வேணும்னா இன்னொரு நூறு ரூபாய் ஏற்றிக்கலாமே தம்பி?!'' என்ற பரிந்துரைகளும் no can do ப்ளீஸ்! Will just not be possible !!

"இதை இம்மா விலையிலே பண்றது தப்பு! 1996-லே அந்த புக்- இவ்ளோ விலை தான்! இப்போ 29 வருஷ விலையேற்றத்துக்கு குஷன் வச்சுப் பார்த்தாலுமே இது இம்புட்டு விலையிலே தான் இருக்கணும்!'' என்று விலை சார்ந்த ஞானமூட்டல்களும் வேணாமே ப்ளீஸ்?! வழக்கமான ப்ரிண்ட்-ரன்னில் மூன்றில் ஒரு பங்குக்குத் திட்டமிடும் போது செலவினங்களை மட்டுப்படுத்த வழிகள் ரொம்பக் குறைச்சலே ! So let's keep our thoughts on this pretty simple guys!

*ஓ .கே !

*Not.ஓ .கே. 

என்பதே இந்த வினாக்கான விடையாக இருந்துவிட்டுப் போகட்டுமே ப்ளீஸ்? 

Moving on, இதோ காத்திருக்கும் மார்ச்சின் தோர்கல் பிரிவியூ :


பிதாமகர் வான் ஹாமின் கைவண்ணத்திலான இறுதி தோர்கல் ஆல்பம் இது & ஒரு கதைச்சுற்றுமே இதனோடு பூர்த்தி காண்கிறது ! தொடரவுள்ள பயணத்தில் ஜோலனே பிரதானமாகிடுவான் என்பது போலான குறியீடுகளோடு வான் ஹாம் விடைபெற்றுக் கொள்கிறார் ! And கடந்த சில ஆல்பங்களை போலவே, இங்கேயும் தோர்கல் செம மாத்து வாங்கிய ஒரு பெரியவராட்டமே வலம் வந்து கொண்டிருக்கிறார் !! தாடியும், மீசையுமாய் காட்சி தரும் அந்த நபர் தான் பிரபஞ்சத்தின் புதல்வன் !! Phewwww !! 

ரைட்டு...வான் ஹாம் டாட்டா சொல்லிக் கிளம்பி விட்டார் ; இந்தத் தொடருக்கு நாம் தொடர்ந்து பச்சக் கொடி காட்டுவதா ? அல்லது யோசிப்பதா ? உங்களின் சிந்தனைகள் ப்ளீஸ் மக்களே ? 

டெக்ஸ் தவிர்த்த பாக்கி புக்ஸ் சகலமும் அச்சாகி, பைண்டிங்கில் உள்ளன ! So காத்திருக்கும் வாரயிறுதிக்கு மார்ச் புக்ஸ்களை அனுப்பிட எண்ணியுள்ளோம் !! All depends on the binding works !! 

அப்புறம் சொல்ல மறந்திடப்படாது - டெக்சின் இந்த ஆல்பமும் செம அழுத்தம் !!! இன்னொரு தாறுமாறு ஹிட் லோடிங் என்றே தோன்றுகிறது !! முதல் பாதி முடிஞ்சது - இரண்டாம் பாகத்துக்குள் ஐக்கியமாகிடக் கிளம்புகிறேன் folks !! 

Bye for now ....see you around ! Have a fun Sunday !!

90 comments:

  1. பெரிய பதிவு... அருமை

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே ...

    ReplyDelete
  3. படிச்சிட்டு வாரேன் 😉

    ReplyDelete
  4. குண்டு புக் வருது.......

    ReplyDelete
  5. யப்பா பவரான மிக பவரான பாம் ஆசிரியரே குண்டு வெடிப்பில் முதல் முறையாக மகிழ்ச்சியடைகிறேன்

    ReplyDelete
  6. Happy Night dear all, Answer for your question is - We welcome the initiative. The sooner the better. Thanks sir

    ReplyDelete
  7. 💥💥💥💥💥The Bomb blast💥💥💥💥

    ReplyDelete
  8. டெக்ஸ் குண்டு double ஓகே

    ReplyDelete
  9. டெக்ஸ் வில்லரின் குண்டு (டைனமைட்) கண்டிப்பாக வேண்டும் ஆசிரியரே எத்தனை கதைகள் இடம் பெறும் என்று தெரிந்தால் கதைகளை தேர்வு செய்து விடலாம்

    ReplyDelete
    Replies
    1. 1000 பக்கங்களுக்குள் எம்புட்டு அடங்குமோ - அத்தனை !

      Delete
    2. பக்கம் 1000. வாக்கெடுப்பில் இடம் பெற்ற கதைகள்?

      Delete
    3. எமனோடு ஒரு யுத்தம்
      மரண தூதர்கள்
      நள்ளிரவு வேட்டை
      எல்லையில் ஓர் யுத்தம்
      டிராகன் நகரம்
      இரத்த ஒப்பந்தம் 3 பாக தொடர்
      இவைகள் இடம் பெற்றால் அருமையாக இருக்கும் சாத்தான் வேட்டை மட்டும் கார்சனின் கடந்த காலம் சைஸ் அதை அப்புறம் பார்க்கலாம்

      Delete
    4. 4 அல்லது 5 கதைகள்.

      Delete
  10. தோர்கல் கண்டிப்பாக தொடரலாம்

    ReplyDelete
  11. மற்ற அறிவிப்புகள் அதும் திகில் கதைகள் வருவது மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  12. குறிப்பாக ஆதியும், செந்தில் சத்யாவும் இதற்கோசரம் கொடி பிடித்து வந்தது நினைவில் இருந்தது!


    செவி சாய்த்தமைக்கு நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  13. குண்டு புக் மறுபதிப்பில் ஆர்வம் இல்லை. புதிய கதைகள் எனில் டபுள் ஓகே.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பில்லீங்க ; மாதா மாதம் 220 பக்கங்களில் பணியாற்றுவதே பிதுக்கி எடுக்கும் பணி ! ஆயிரம் பக்கங்கள் புதுசாய் என்றால் மற்ற ரெகுலர் பணிகள் சகலத்தையும் ஓரம் கட்ட வேண்டிப் போகும் ! Just not possible !

      Delete
    2. ஒரு நாள் அந்த சாதனையும் உங்கள் வசமாகும்.

      Delete
    3. வயசாகிட்டே போகுதுங்க நண்பரே ; மார்ச் வந்தா சீனியர் சிட்டிசன் 🥴

      Delete
  14. டெக்ஸ் குண்டுக்கு டபுள் ஓகே!!😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  15. 'திகில்' மீண்டும் வருவதில் கொள்ளை மகிழ்ச்சி!!😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  16. பரட்டைத் தலை ராஜாவை ரொம்பப் பிடிக்கும். 😍😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. இன்னும்
      வேட்டைக்கார வேம்பு& காக்கை காளி வந்து விட்டால் அமர்க்களப்படும்

      Delete
  17. மறுபதிப்பிற்க்கிடையிலும் விதி போட்ட விடுகதை மாதிரி ** ரணகளமா ஆராதிக்கிற ** ஒரு புதுகதையையும் போட்டிங்கன்னா சிறப்பு .. 😍❤❤💛💛💙💙💚💚💜💜

    ReplyDelete
  18. Tex குண்டு😘😘 ஓகே.. ஓ.கே... 😘🥰😘

    ReplyDelete
  19. ////"வடசட்டியில் ஒரு கரண்டி மட்டன்'////

    இருந்தாலும் இதுக்கு பரிசு குடுக்காம விட்டது அநியாயம் சார்...😩

    ReplyDelete
    Replies
    1. அன்றைய விளக்கங்களில் எனக்கு ரொம்ப பிடித்த விளக்கம் இது தான் சார்😂😂😂

      Delete
  20. 1000 பக்க குண்டு

    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    1000 பக்க குண்டு

    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    1000 பக்க குண்டு

    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    1000 பக்க குண்டு

    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    1000 பக்க குண்டு

    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    1000 பக்க குண்டு

    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    1000 பக்க குண்டு

    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    1000 பக்க குண்டு

    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    1000 பக்க குண்டு

    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    1000 பக்க குண்டு

    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "''

    ReplyDelete
    Replies
    1. போட்ருவாரு கவலப்படாதீங்க டாக்குடர்

      Delete
  21. ///திங்கட்கிழமை கருவாடு வறுவல்''///

    அடடா.. இதுக்கும் பரிசு இல்லையா..😩

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. ஒகே டெக்ஸ் குண்டு புக்

    ReplyDelete
  24. டெக்ஸ் ஆயிரம் பக்க இதழ் நீண்ட நாள் கனவு. டெக்ஸைத் தவிர வேற எந்த ஹீரோவாலும் இந்த சாதனையை செய்ய முடியாது. கண்டிப்பா வோணும். முன்பதிவை அறிவிச்சு பாருங்க. தெறிக்க விடறோம்.

    ReplyDelete
  25. சாதனை படைக்கும் டெக்ஸ் குண்டு ❤️❤️💐💐

    ReplyDelete
  26. அப்பறம் அந்த 1000 பக்க டிங்கிளை அனுப்பி எனக்கு ஆசைய தூண்டியவர் நம்ம விசித்ர வைத்யர் தான். இந்த முயற்சி நடைபெறும் போது அவருக்கு எங்க கனவுலகில ஒரு சிலைய வைச்சுடறோம்.

    ReplyDelete
  27. அனைவருக்கும் வணக்கம்..

    ReplyDelete
  28. ///"ஆயிரம் பக்கங்களுக்கு பொஸ்தவம்"///

    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''
    "பேஷாகப் போடலாம்''

    ReplyDelete
  29. Waiting for Tex colour reprint bomb, திகில் கதைகள் திரும்ப வருவதில் மிக்க மகிழ்ச்சி கருப்பு கிழவி கதைகளை மறந்து விடாதீர்கள்.

    ReplyDelete
  30. டெக்ஸ் குண்டு புக் டபுள் டிரிபிள் ஓகே சார்.

    கேட்கவே சந்தோசமா இருக்கு 😁😁

    ReplyDelete
  31. Tex குண்டு புக்- OKKKKKKKKKKK

    தோர்கல் - OKKKKKKKKKKKKKKK

    ReplyDelete
  32. அடுத்த அறிவிப்பு...
    ஒ.மொ.த.க.மே. சை...

    ReplyDelete
    Replies
    1. ஒட்டு மொத்த தங்க கல்லறை மேக்சி சைஸில்

      Delete
    2. No ரகு...!

      ஒட்டுமொத்த தங்கத்தலைவன் கதைகளும் மேக்சி சைஸில்..

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. // ஒட்டுமொத்த தங்கத்தலைவன் கதைகளும் மேக்சி சைஸில்.. //
      அடடே.. ஆமாம்..ஜஸ்ட் மிஸ்.

      ஒரே ஒரு வார்த்தைதான். "தலைவன் கதைகளை" எடுத்து "கல்லறை"யில் வைத்தால் சரி ஆகிவிடும்.

      Delete
  33. குண்டு tex - ok..! waiting to book..!

    ReplyDelete
  34. 1000 பக்க டெக்ஸ் புத்தக அறிவிப்பு மகிழ்ச்சி .. அதை கையில் ஏந்தி படிக்கும் வகையில் எடை குறைவாக வெளியிட முடிந்தால் நன்றாக இருக்கும்..

    ReplyDelete
  35. Tex குண்டு - இனி வருடத்திற்கு ஒரு முறை தொடரலாம் சார்👍

    ReplyDelete
  36. முதல் ஓட்டு குண்டு டெக்ஸ் தான்.... எத்தனை வருட காத்திருப்பு.... ஒரேயொரு ஆசை மட்டுமே இதில் ஒரு கதையானது புதியதாக இருப்பின் 1.மறுபதிப்பு கதை தானே என்ற அலட்சியம் வராது.
    2.கலேக்ஷன் புக்காக மட்டும் இல்லாமல் புதிய கதையை படிப்பதற்காக எங்களுடன் அன்னம் தண்ணீர் புழங்கும் சமயத்தில் கை கோர் க்கும் நண்பனாக இருக்கும்....
    முடியும் பட்சத்தில் நிறைவேற்றுவீர்களா ஆசிரியரே..

    ReplyDelete
  37. Tex குண்டு புக். Double ok

    ReplyDelete
  38. டெக்ஸ் 1000 பக்கங்கள் வெளியீடு.. இந்த வருடம் ஈரோடு புத்தக விழாவில் கிடைக்கும் வண்ணம் அறிவிப்பை ஆவலுடன்.. எதிர்பார்க்கிறேன் சார்...

    ReplyDelete
  39. இப்ப முன் பதிவை அறிவிச்சா ஆகஸ்ட்ல ஈரோட்டிலயோ அல்லது நவம்பர்ல சேலத்துலயோ போட்டுடலாம்.

    ReplyDelete
  40. டெக்ஸ் குண்டு புக்கை இந்த வருடமே செயலாற்ற முடிந்தால் பரம சந்தோஷம் கிட்டும் 🌹🌹🌹🌹🌹🌹🌹

    ReplyDelete
  41. தோர்கல் அடுத்த சுற்று கதைகளை போடலாம் சார்.

    அருமையான கதைத் தொடர்.

    பெரும்பாலானவர்கள் ரசிக்காமல் போவது கஷ்டமாகத்தான் உள்ளது.

    ReplyDelete
  42. அட்டகாசமான அறிவிப்புகள் சார்! வண்ணத்தில் என் பால்ய நண்பர்களான கிச்சு& விச்சு வர உள்ளது தித்திப்பாக உள்ளது. ஒற்றை கண் மர்மம் படித்ததில்லை. இப்போது வர்ணத்தில் வர உள்ளது. அருமை. திகில் கதைகள் எனும்போது, கறுப்பு கிழவி இன் திகில் கதைகளும் இதில் கலந்திருக்கட்டுமே சார் . செக்ஸ்டன் பிளேக் இன் மீள்வருகை சிறப்பு. பரட்டை தலை ராஜா இன் படைப்புகள் முதலில் எனக்கும், மகளுக்கும். தெறிகுண்டு- வெடிக்கட்டுமே சார். சிறப்பு , மிகச்சிறப்பு. மொத்தத்தில் எடிட்டர் கால்கட்டை விரலை, வாயினுள் திணித்தால்…. எமக்குதான் பலன்

    ReplyDelete

  43. குண்டு புக் :சில எண்ணங்கள்

    அதிக பக்கங்களைக் கொண்ட இதழ்களை வெளியிடுவது நமக்கு புதிதல்ல தான். ரத்த படலம் கருப்பு வெள்ளை வெளியிட்டதில் நிறைய நியாயம் இருந்தது. துண்டு துண்டாக வந்த இதழ்களை இன்னும் வராத பாகங்களோடு சேர்த்து வெளியிட்டது தர்க்க ரீதியாகவே நியாயம் தான். ( இருப்பில் அது வெகு காலம் இருந்தது வேறு ஒரு கதை தான் )

    மின்னும் மரணமும் இதே வகையை சேர்ந்தது தான். தனித்தனியாக வெளிவந்த இதழ் களோடு இன்னும் வெளி வராத பாகத்தையும் சேர்த்து ஆயிரம் ரூபாய் இதழாக வெளியிட்டது மிகப்பெரும் சாதனைதான்.

    இவை இரண்டுமே மாபெரும் பதிப்பாக வெளி வருவதற்கு முற்றிலும் தகுதியான கதைகள் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

    ரத்தப்படலம் வண்ண மறு மதிப்பு காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது.

    டெக்ஸ் கதைகள் தொகுப்பாக வருவதும் புதிதில்லை தான். மேக்னம் ஸ்பெஷல், ஈரோட்டில் இத்தாலி போன்றவை குறிப்பிடத் தகுந்த வெளியீடுகள்.

    ஆயிரம் பக்கங்களில் ஆன ஒரு இதழ் என்பது மறுபதிப்பு இதழ் என்பது வருத்தமளிக்கிறது. ஏறக்குறைய ஒரு சந்தாவின் மூன்றில் ஒரு பங்கு மதிப்புள்ள இதழ் ஒரு மறுபதிப்பு இதழ் என்பது ரசிக்கக் கூடிய விஷயமாக இல்லை.விலையைப் பற்றியோ பக்கங்களைப் பற்றியோ ஆட்சேபனை எதுவும் இல்லை. டெக்ஸ் வண்ண மறுபதிப்பு வருவது பற்றியும் எந்த மறுப்பும் இல்லை. எப்போதும் போல வண்ண மறுபதிப்பு டெக்ஸ் இதழ் தனித்தனி இதழ்களாகவே வரலாம்.

    ஆயிரம் பக்கங்களிலான ஒரு டெக்ஸ் இதழ் தனித்தனி கதைகள் ஆக புது கதைகளாக வருவது எல்லா தரப்பினருக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும்..

    இதை -ஆயிரம் பக்கங்களிலான புது கதைகள் அடங்கிய டெக்ஸ் இதழை -இந்த வருடம் இல்லாவிட்டாலும் அடுத்த வருடம் ஆவது வெளியிடலாம். நிதானமாக திட்டமிட்டு செயல்படுத்தலாம்.

    இந்தப் புது இதழுமே கூட முன்கூட்டியே அறிவித்து வாசகர்களுக்கு போதுமான அவகாசம் கொடுத்து அதற்குப் பின் வந்தாலே போதுமானது. காமிக்ஸ் மேல் உள்ள ஆர்வம் திடுமென ஒரு பொருளாதார சுமையை சில தரப்பினர் மேல் சுமத்தாமல் இருக்க அது வழி வகுக்கும். வணிகரீதியாக முதலீடு அல்லது சேகரிப்போர் ஒரு சிலர் வணிக சந்தையில் பெரும்பணம் கொடுத்து இதழ்களை வாங்க முற்படுவதை உத்தேசித்து எல்லா தரப்பினரையும் அதே துலாக்கோலி ல் எடை போடுவது தவறோ என மனதில் படுகிறது. இல்லாதவர் சொல் அம்பலம் ஏறுவதில்லை.

    வாங்கும் சக்திப்படைத்த என் போன்றோர் அதை சொல்வதே முறையானது.

    பிற : விச்சு கிச்சு, பரட்டைத் தலை ராஜா, போன்றவை வருவது மனமகிழ்வளிக்கக்கூடிய விஷயமே. சுட்டிக் குரங்கு கபிஷி ன் வெற்றி இதை சாத்தியமாக்கி இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. திகில் கதைகள், செக்ஸ்டன் பிளேக் போன்ற புத்தக விழா தருணங்களுக்காக வெளியிடப்படும் இதழ்களும் வரவேற்கப்பட வேண்டியவையே.







    ReplyDelete
  44. அனைத்தும் அருமையான அறிவிப்புகள்.

    டெக்ஸ் குண்ண்ண்ண்டு புக்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    விச்சு கிச்சுவுக்கு பன் கிடையாதா சார்...

    விச்சு கிச்சு, பரட்டைத்தலை ராஜா வண்ணத்தில் வருவது மகிழ்ச்சி.

    மற்ற டிங்கிள் நாயகர்களான காக்கை காளி, வேட்டைக்கார வேம்பு வண்ணத்தில் விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    நம்ம ஊர் ஆக்கங்களான ஓவியர் செல்லம் + வாண்டுமாமா கதைகளை வண்ணத்தில் முயற்சிக்கலாம்.

    அப்படியே இளவரசி ஸ்பெஷல் வண்ணத்தில் எப்போது வரும்னு சொல்லிடுங்க.

    மாதம் ஒரு கார்ட்டூன் கதை.

    டைகர் கதைகள் மேக்ஸி சைசில்...

    இப்போதைக்கு இவ்வளவு தான் சார்.. மற்றதை அப்புறமா கேட்டுக்கறேன்...

    நன்றி

    ReplyDelete
  45. King's special எப்போ வரும் சாரேய்

    ReplyDelete
  46. குண்டு book தாராளமாக போடலாம்

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. வாவ்.. விச்சு கிச்சு வண்ண தொகுப்பு... ஆட்டகாசம் சார்... 1988 முதலான எங்களின் எதிர்பார்ப்பு இந்த 2025ல் நிஜமாக போவதில் மட்டற்ற மகிழ்ச்சி... காமிக்ஸ் பக்கம் எவரையும் இழுத்து போடும் ஆற்றல் இந்த ஜோடிக்கு உண்டு...விச்சு கிச்சுவை பரிசளிப்பதில் எல்லோரையும் மிஞ்சி விடுவர். வண்ணம் போனஸ்.

    ReplyDelete
  49. ++++++1000000 @ செல்வம் அபிராமி.
    வரிக்கு வரி உடன் படுகிறேன் சார். டெக்ஸ் மறுபதிப்பு கதைகள் தான் நமது ஜீவ நாடி, அது தான் best seller எனில், தனி தனி கதைகளாக வெளியிட்டு அதிகமாக பிரிண்ட் போடலாமே. விளையும் கணிசமாக குறையும், விரும்பும் புத்தகங்களை வாசகர் வாங்கி கொள்ளலாம்.
    உதாரணம் : 5 கதைகள் கொண்ட தொகுப்பாக இருப்பின், எனக்கு இதில் இரண்டு கதைகள் மீது நாட்டம். மீதி மூன்று கதைகள் எனக்கு வேண்டாம் எனில் என்னைப் போன்றோர் என்ன செய்வது. ஒரு வாசகனாக இருந்து எங்கள் சங்கடங்களையும் கொஞ்சம் புரிந்து கொள்வீர்களாக. முதலில் வண்ணத்தில் வராதா பழைய டெக்ஸ் கதைகளை ஒரு முறை வழக்கம் போல் ஒரு ரவுண்டு போட்டு முடித்து விடுங்கள். நாங்களும் எங்களுக்கு தேவையான கதைகளை வாங்கி கொள்கிறோம். பிறகு டிமாண்டின் அடிப்படையில் வரும் காலங்களில் தேவை எனில் பார்த்து கொள்ளலாம்.
    ஆயிரம் பக்கங்கள் வேண்டும். ஆனால் அது புது கதைகளாக இருக்கட்டும் இப்போதைக்கு. இல்லையெனில் இது எங்களுக்கு சங்கட சுமையே ஆகும்

    ReplyDelete