நண்பர்களே,
வணக்கம். ஒரு நெடும் விடுமுறைப் படலத்தின் மத்தியில் இருக்கும் இந்தத் தருணத்தில் எனது கைகளிலோ ஒரு கத்தைக் காகிதங்கள் ! 'ஏலே மொக்க...நீ சாமக் கோடங்கி போல கண்ட நேரத்திலே எழுதிக்கிட்டுத் திரியுற கதை தான் தெரியும்லலே...இதிலே என்ன புதுசா ?' என்று கேட்கிறீர்களா ? என் கைகளில் உள்ள இந்தக் கத்தை மாமூலான மொழியாக்கப் பணிகள் சார்ந்தவையல்ல folks ; நடந்து முடிந்திருக்கும் சென்னைப் புத்தக விழாவினில் நமது விற்பனை சார்ந்த விபரங்களும், நம்பர்களுமே !! And இவற்றை முழுமையாய் ஆராயவே ஒரு மேல்மட்டக் குழு அமைக்கணும் போலும் - அவ்வளவு தகவல்கள் இங்கு புதைந்து கிடக்கின்றன !! நம்மிடம் நாயகர் பட்டியலுக்கும் பஞ்சமில்லை ; கையிருப்பு இதழ்களின் எண்ணிக்கையிலும் குறைச்சலில்லை எனும் போது வேற வேற கோணங்களில் analyze செய்திட கணக்கிலடங்கா சமாச்சாரங்கள் உள்ளன ! Anyways - எனது முதல் பார்வையில் striking ஆகத் தென்பட்டுள்ள வெற்றியாளர்களைப் பற்றியும், குருவி ரொட்டி ஏந்தி நிற்போரைப் பற்றியும் இந்த முதல் பதிவில் எழுதிட முனைகிறேன் !! அதற்கு முன்பாய்......
சென்னைப் புத்தக விழா !!!
ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்குப் புறப்பட நம்மாட்கள் மூட்டைகளைக் கட்டிக்க கொண்டிருக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு ஆதங்கம் துளிர் விடுவதுண்டு ! 'போன வருஷம் 200 titles வைச்சிருந்தோம் ; ****** தொகைக்கு வித்துச்சு ; இந்த தபா 240 titles வைச்சிருக்கோம்.....ஒரு பத்து சதவிகிதமாச்சும் கூடுதலா விற்றா நல்லா இருக்குமே கடவுளே...!!' என்று நினைத்துக் கொள்வேன் ! But ஊஹூம் ....ஒலிம்பிக்சில் நம்ம பதக்கப் பட்டியலானது ஒரு குறிப்பிட்ட நம்பரை தாண்டிடவே மாட்டேனென்று அடம் பிடிப்பதைப் போல நமது விற்பனை நம்பரும் சண்டிமாட்டைப் போல அசைந்து கொடுக்காது நிற்பது வாடிக்கை ! ஆனால்...ஆனால்....பத்துப் பன்னிரண்டு வருஷங்களின் விடாமுயற்சிகளும், KFC மெனுவினைப் போல நம்மிடமுள்ள வண்டி வண்டியான வெரைட்டிகளும் சிறுகச் சிறுக பலன் நல்க ஆரம்பித்திருந்தன ! And அதன் பிரதிபலிப்பாய் போன வருஷம் ஒரு செம நம்பரைத் தொட நமக்கு சாத்தியப்பட்டிருந்தது ! நடப்பாண்டின் விழாவுக்கு ரெடியான தருணத்தில், 'போன வருஷத்தை முந்திட முடியுமா ?' என்றொரு சின்ன நப்பாசை உள்ளுக்குள் இருந்ததை மறுக்க மாட்டேன் ; but மாத இறுதியில் (டிசம்பர்) விழா துவங்கிடவுள்ளது ; பொங்கலுக்கு முன்பாகவே நிறைவும் பெற்று விடுகிறது ; so இந்தப் புதிய தேதிகள் எவ்விதம் set ஆகுமோ சென்னைக்கு ? என்ற பயமும் உள்ளுக்குள் இருந்ததால் - நமது விற்பனை இலக்குகளை ஒரு உசரத்தில் வைத்து விட்டு அப்புறமாய் ஏமாற்றம் கொண்டிடப்படாதே என்று நினைத்துக் கொண்டேன் ! And truth to tell - இம்முறை பிழிந்தெடுக்கும் கூட்டங்களெல்லாம் இல்லை தான் - at least நமது ஸ்டாலில் ! நாம் இருந்தது முதல் வரிசையில் என்பதால் அந்த வரிசைக்கு நேராய் டிக்கெட் கொடுத்த நாட்களில் ஜனம் களை கட்டுவது சுலபமாகியது ; மாறாக மறு திக்கில் டிக்கெட் கவுண்டர்கள் அமையும் தினங்களில் நாம் கட்டக்கடாசி வரிசையில் இருப்பது போலாகியிருக்க, அன்றைய நாட்களில் சுமார் மூஞ்சி கொமாராகவே நமது விற்பனை reports அமைந்திருந்தன ! ஆனால் ....ஆனால்...வாசல் எந்தத் திக்கில் இருக்க நேரிட்டாலும், முத்து காமிக்ஸ் ஸ்டாலை தேடிப் பிடிச்சிடுவோம்லே - என்று மார் தட்டி வந்த நண்பர்களின் சகாயத்தில் இந்தாண்டு எகிறி அடித்துள்ளோம் ஒரு புது உச்சத்தை !! Oh yes - இந்தாண்டு சென்னையில் வசூலாகியுள்ள தொகையானது - 2012 முதலாய் எண்ணற்ற ஊர்களில் நடந்திருக்கக்கூடிய புத்தக விழாக்களில் நாம் கண்டுள்ள வசூல்களுக்கெல்லாம் ஒரு புது உயரத்தை நிர்ணயித்துள்ளது !! புனித மனிடோவுக்கும், நம்மை நெஞ்சில் சுமக்கும் இந்த வாசக வட்டத்துக்கும், சென்னையின் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் ஒரு கோடி நன்றிகளை பிரித்துப் பகிர்ந்தளிக்கும் அந்த சந்தோஷ வேளையில் - இந்த நம்பர்களின் பின்னணியினையும் பார்க்கப் புறப்படுவோமா மக்களே ?
THE TOPSELLER(S) :
சென்னை என்றாலே மாயாவியாரின் பேட்டை ; இங்கே அவரு தான் கிங்கு ! என்பது ஒரு எழுதப்படா விதி ! இடைப்பட்ட ஒரு ரெண்டு வருஷங்கள் அந்த template உடைபட்டிருக்க, நாங்களும் 'ரைட்டு...மாம்ஸ் சகாப்தம் ஓவர் போலும்' என்று நினைத்திருந்தோம் ! ஆனால், "வந்துட்டேன்னு சொல்லு..போன மாதிரியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு !" என்று தலைவர் கபாலி ஸ்டைலில் லூயி கிராண்டேலும், அவரது இரும்புக்கரமும் மீள்வருகை தந்திருக்க, கடந்த சில ஆண்டுகளாகவே chart topper மாயாவி சார் தான் ! ஒவ்வொரு புத்தக விழாவின் இறுதியிலும், மாயாவி புக்ஸ், மற்றவற்றை விட எவ்வளவு ஜாஸ்தி மார்ஜினில் ஜெயம் கண்டுள்ளன ? என்ற கணக்கைத் தான் போட்டு வருவோம் !! இம்முறையும் நிலவரம் அதே தான்...அதுவே தான் என்று நானும், நீங்களும் நினைத்திருக்கும் போது ஒரு செம ட்விஸ்ட் !! சின்னதொரு வித்தியாசத்தில் மாயாவியின் "பாதாள நகரம்" ஆல்பத்தை இரண்டாமிடத்துக்கு அனுப்பி விட்டு, முதல் இடத்தை ஒரு ஈரோ கபக்கடீர்னு பற்றியுள்ளார் !
ஒரு வேலை அது தல டெக்சோ ?
அல்லங்காட்டி லக்கி லூக்கோ ?
No ..no ...நம்ம இளைய தளபதியோ ?
என்றபடிக்கே பேப்பர்களைப் புரட்டினால் - "கொஞ்சம் மேலே பாரு கண்ணா..." என்றொரு voice ! அண்ணாந்து மோட்டைப் பார்த்தால் - "அங்கே இல்லை ; மரத்துக்கு உஷைக்கே பாரு கண்ணா...!" என்றது அந்தக் குரல் ! பார்த்தால் - ஹேப்பியாக சிரித்துக் கொண்டு அமர்ந்திருப்பது நம்ம கபிஷ் !!!Oh yes guys - "கபிஷ் ஸ்பெஷல் # 2 " தான் நமக்கு இந்தப் புத்தக விழாவின் single highest selling album !!! மாயாவியார் இத்தனை காலத்தில் தொட்டிருக்கா நம்பரை ; டெக்சோ ; லார்கோவோ ; XIII ; தளபதி டைகரோ ; லக்கி லூக்கோ விற்றிருக்கா உச்சத்தை கபிஷ் கைப்பற்றியுள்ளது !! Absolutely stunning என்பேன் - இந்த சிம்பிளான வன விலங்குகள் கண்டுள்ள வெற்றியானது !! நோஸ்டால்ஜியா ஒரு காரணமா ? அல்லது பிள்ளைகளுக்கு ஆகச் சிறந்த தேர்வு என்று பெற்றோர் கருதியது காரணமா ? தயாரிப்புத் தரம் ஒரு கூடுதல் காரணமா ? சொல்லத் தெரியலை ; but கபிஷ் # 1 & # 2 இணைந்து கண்டிருக்கும் விற்பனையினை பிராங்கோ-பெல்ஜிய பெரும் புள்ளிகளில் அரை டஜன் பேர் இணைந்தாலும் தொட்டுப் பிடித்திட முடியாது !! And (சென்னையின் TOPSELLER யார் ?) என்ற இந்தக் கேள்வியினை இன்று பகலில் நமது வாட்சப் கம்யூனிட்டியில் கேட்டிருந்தேன் - பரிசாக Plum Cake(s) உண்டென்ற உத்திரவாதத்துடன் !! நான் பார்த்திருந்த வரைக்கும் நம்ம வழுக்குப்பாறை திருநாவுக்கரசர் முதலாவதாகவும், ஜம்பிங் பேரவையின் தலைவர் பாபுஜி இரண்டாவதாகவும், பதுங்குகுழி சங்கத்தின் பொருளாளர் செனா அனாஜி மூன்றாவதாகவும் சரியாக "கபிஷ்" என்று பதிவு செய்திருந்தனர் ! அவர்களுக்கு தலா ஒரு கேக் & நான்காவதாக ஒரு கேக்கை கபிஷின் மீள்வருகைக்கு பெரிதும் உதவியிருந்த நண்பர் ரபீக்குக்கும் நாளையே பார்சல் செஞ்சுப்புடலாம் !
இங்கே ஒரு சுவாரஸ்யமான / ஆதங்கப் பகிர்வும் !! மலையாளத்தில் கபீஷை மறுக்கா வருகை செய்யச் செய்திருந்த பதிப்பக உரிமையாளருக்கு நமது கபிஷ் இதழ்களை மரியாதை நிமித்தம் அனுப்பி, அவரது அபிப்பிராயங்களையும் கோரியிருந்தோம் ! புக்ஸ் இரண்டையும் பார்த்து விட்டு, "அட்டகாசம் !!" என்று பாராட்டியவர் - "உங்க ஊர் மீடியா கபிஷை கொண்டாடித் தீர்த்து விட்டார்களா ? இங்கே எங்க ஊடகங்கள் ஒண்ணு பாக்கியின்றி அழகாய் coverage தந்து விற்பனை சிறக்கச் செய்தார்கள் !" என்றார் !! "ஆங்...அது வந்து சார்...எங்க ஊரிலே சிக்கு மங்கு...சிக்கு மங்கு..சச்ச பப்பான்னு நெதத்துக்கும் ஆராச்சும் ஒரு சீரியல் நடிகையோட சித்தப்பாருக்கு பக்கத்து வீட்டு ஆன்டியின் home tour ; கிச்சன் டூர் ; தோட்டம் டூர் என்பதிலே பிஸிபேளா பாத் போடவே எங்காட்களுக்கு நேரம் போதாது ! அவங்கள்லாம் ஒரு (காமிக்ஸ்) குரங்கை கண்டுக்கவாச்சும் செய்வார்களா ?" என்று சொல்ல நினைத்தோம் - but நீட்டி முழக்கி, இங்கே வாஜகர்களே அம்புட்டையும் பார்த்துக்கிட்டாங்க சார் !" என்று சொல்ல வேண்டிப் போனது !! இதோ - இப்போது கூட "Kapish" என்று கூகுளை தட்டினால் - மலையாள கபிஷுக்கு அங்குள்ள முதல்நிலை ஊடகங்கள் தந்துள்ள அழகான கவரேஜ் தான் கண்சிமிட்டுகிறது !!
கபிஷிடம் முதலிடத்தை இழந்திருந்தாலும், அதன் பின்னே யாரிடமும் சறுக்கிடாது இரண்டாமிடத்தில் மாயாவியார் அதிரடி காட்டி வருகிறார் ! சென்னை விழா நெருங்க ஆரம்பித்து விட்டாலே, நம்மாட்களுக்கு இருக்கும் ஒரே கவலை - "மாயாவி கையிருப்பு" சார்ந்தது மட்டுமே !! 'சார்...நாசா அலைகள் இம்புட்டு தான் இருக்கு...இரும்புக்கை மாயாவி ரெண்டு கட்டு தான் மீதமிருக்கு...கொரில்லா சாம்ராஜ்யம் காலி..' என்று நாகப்பட்டினம் துறைமுகத்தில் புயல் சின்னத்துக்கு ஏற்றும் கொடிகளைப் போல எனக்கு warnings தந்து கொண்டே இருப்பார்கள் ! இம்முறையும் அதற்கு விதிவிலக்கல்ல ! அதன் பொருட்டே கொஞ்சம் முன்கூட்டியே அந்த "மும்மூர்த்திகள் ஸ்பெஷல்" concept-ஐ இம்முறை தேற்றி வைத்திருந்தேன் ! மூன்று துவக்க நாட்களது ஜாம்பவான்ஸ் - ஒரே hardbound இதழில் எனும் போது சென்னையில் நிச்சயம் ரசிக்கும் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது ! And அட்டைப்படத்தில் துவங்கி, தயாரிப்பின் எல்லாப் பரிமாணங்களும் சிறப்பாய் அமைந்து போக, இந்த இதழ் சென்னையில் ஒரு SMASH HIT !!! இதில் கூத்து என்னவென்றால், 'மூணு கதையுமே மாயாவி கதையா இருக்கா மெரி புக் எதுனாச்சும் உடலாம்லே ?' என்ற வினவல்கள் கணிசம் !! இன்னொரு பக்கம் "பாதாள நகரம்" தக தகக்கும் புது ராப்பருடன் ஆஜராகியிருக்க, நடப்பாண்டின் Second highest seller என்ற கொடியினை பற்றிக்கொண்டது ! போன வருஷம் மறுபதிப்பிட்ட "இரும்புக்கை மாயாவி" almost காலி ; நாச அலைகள் காலி ; மீதம் இருப்பவை மூன்றே மூன்று மாயாவி titles தானாம் - நம்மாட்கள் சொன்னார்கள் !! So இப்போவே அடுத்த கட்ட திட்டமிடல்ஸ் ஆரம்பிச்சாச்சு ; தொடரும் புத்தக விழாக்களுக்கோசரம் மாயாவி சாருக்கு என்ன ஏற்பாடுகள் பண்ணலாமென்று ? Phewwwww !!!
PART 2 :
மதுரையில் ஜிகர்தண்டா 'நச்'னு இருப்பது ஒரு காலத்தின் கட்டாயம்...!
கோவை அங்கண்ணன் பிரியாணி காரமின்றி இருப்பதும் அவ்விதமே..!
ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா டக்கராக இருப்பது மாற்றங்கள் காணா நிஜம் !
தமிழகத்தில் ஆட்டோ மீட்டர்கள் ஒரு அலங்காரப் பொருளாய், ஆட்டோ டிரைவரை காத்து-கருப்பு அண்டிடாது பாதுகாக்கும் வஸ்துவாக, ஊரெல்லாம் சுற்றி வருவது உலகுக்கே தெரியும் !
அதே போலவே செல்லும் இடமெல்லாம் - மொத்த விற்பனையில் ஒரு அசாத்தியப் பங்கெடுப்பது நம்ம தல "டெக்ஸ்" என்பதும் தான் ! இம்மியும் மாற்றம் காணா ஒரு நிரந்தரம் அது !!
Absolutely staggering - நடப்பாண்டினில் டெக்ஸ் இதழ்கள் கண்டுள்ள மொத்த விற்பனை ! And கிட்டத்தட்ட 25 அல்லது 30 டைட்டில்கள் நம்மிடம் டெக்சில் கைவசம் இருப்பதால், வாங்குவோருக்கு திருவிழா mood தான் மேலோங்குகிறது ! "பனிமண்டலப் போராளிகள்" (தீபாவளி மலர்'24) ; "மேஜிக் மொமெண்ட்ஸ் ஸ்பெஷல்" ; "இளமையெனும் பூங்காற்று" & டெக்சாஸ் ரேஞ்சர்ஸ் : இந்த 4 சமீபத்தைய டெக்ஸ் ஆல்பங்களும் அடித்திருப்பதெல்லாம் சாமான்யப்பட்ட ஸிக்ஸர்ஸ் அல்ல ; க்ரிஸ் கெயில் பொறாமைப்படக்கூடிய அசுரத்தனமான ஸிக்ஸர்ஸ் !! பற்றாக்குறைக்கு "காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்" பின்னிப் பெடலெடுத்த கையோடு stock காலி என்றும் ஆகி விட்டது ! எனது ஞாபகம் மொக்கை போடாத பட்சத்தில், இது 2024 பிப்ரவரியில் தான் வந்தது !! Is gone ...போயிண்டே ....! அதே போல "புதைந்து போன புதையல்" இதழும் டாட்டா..குடுபை சொல்லி கிட்டங்கிக்கு முழுசாய் விடை தந்துவிட்டது !! 'ஒரு பிரளயப் பயணம்" தரையைத் தொடும் எண்ணிக்கைக்கு நகர்ந்தாச்சு ; "நெஞ்சே எழு"வும் தான் ! நாளை ஆபீசுக்குப் போனால் தான் தெரியும், மற்ற இதழ்களின் இருப்பு நிலவரம் !! And இங்கொரு கொசுறு நியூஸுமே : 'தல' டெக்ஸுக்கு கணிசமாக மகளிர் ஆதரவும் உள்ளது ! ஏற்கனவே தெரிந்த சமாச்சாரம் தான் ; yet அவர்களது நம்பர்ஸ் கூடிச் செல்வது சென்னையில் கண்கூடு !! 'தல' .........நேற்று இல்லை ; நாளை இல்லை.....எப்போவும் நான் ராஜா !! தானென்று இசைக்கிறார் !! தலைவணங்குகிறோம் தலைமகன் முன்னே !!
கபிஷ் # 1
மாயாவி # 2
டெக்ஸ் # 3
என்ற வரிசைக்குப் பின்பாய், வழக்கப்படிப் பார்த்தால் ஒல்லிப்பிச்சான் லக்கி லூக் தான் இடம் பிடிப்பார் ! ஆனால் இம்முறை அங்கேயும் ஒரு twist !!
அதற்கடுத்த விற்பனை உச்சத்தைத் தொட்டிருப்பவர் நம்ம டென்காலி கானகத்தின் காவலர் - வேதாள மாயாத்மா தான் !! நம்மிடம் இருந்த அந்த மெகா சைஸ் black & white வேதாளர் கதைத்தொகுப்புகள் முற்றிலுமாய் எப்போதோ காலி ; but இன்னமும் அவற்றைக் கேட்டு படையெடுத்தோர் கணிசமோ, கணிசம் !! And கைவசம் இருக்கும் compact sized கலர் இதழ்கள் ஒவ்வொன்றும் தெறிக்க விட்டுள்ளன !! விலைகள் ரூ.100 என்றிருப்பதும் கைகொடுக்க - இந்த வருடத்து சென்னை விழாவில் மட்டுமன்றி, இதற்கு முன்பான மற்ற நகர விழாக்களிலும் வேதாளர் has been a top draw !! முன்செல்லும் காலங்களில் சந்தாக்களிலோ, தனித்தடங்களிலோ, புத்தக விழா ஸ்பெஷல்களிலோ - "வேதாளர்" ஒரு இன்றியமையா மேஜர் அங்கமாக இருந்திட வழி செய்திட வேணும் போலும் !!
PART 3 :
PERFORMER # 6 : நம்ம தளபதியார் தான் விற்பனையில் ஸ்லாட் # 6-ஐ பிடித்து நிற்கிறார் ! புது இதழான "ஒரு கொடூரனும், கடற்கன்னியும்" பட்டையைக் கிளப்பியுள்ளது ! "இது ஒண்ணு மட்டும் தான் இருக்கா ? வேற இல்லியா ?" என்ற கேள்விகளுக்கும் no பஞ்சம்ஸ் !! Thinkinggggggggg !!
PERFORMER # 7 : நம்ம பெல்ஜியத்து ஜாம்பவான் - டின்டின் தான் !! 2 ஆல்பங்கள் ஒன்றிணைந்த pack அழகாய் விற்றுள்ளது சென்னையில். போன தபா "திபெத்தில் டின்டின்" சிங்கிள் ஆல்பமாக அமைந்ததால் சற்றே கூடுதல் சேல்ஸ் ! But இருந்தாலும் "மாயப்பந்துகள் 7 + கதிரவனின் கைதிகள்" கூட்டணி has been rocking !! வேற ஆல்பம்ஸ் இல்லியா ? என்ற கேள்விகள் இங்கேயும் கணிசம் !!
ஒவ்வொரு ஆண்டும் யாராச்சும் ஒரு நாயகரோ, நாயகியோ சர்ப்ரைஸ் வெற்றி காண்பதுண்டு !! இம்முறை அந்த ஸ்லாட்டை தனதாக்கியுள்ளவர் நம்ம அமானுஷ்ய டிடெக்டிவ் "டைலன் டாக்" தான் ! அவரது குட்டிக் கதைகள் மாத்திரமன்றி, முந்தைய ஆல்பங்களும் செம brisk சேல்ஸ் கொண்டிருப்பது ஒரு ஆச்சர்யமே !! ஹாரர் தேடுவோர்க்கு இந்தக்கருப்புச் சட்டை டிடெக்டிவ் set ஆகிறார் என்பது புரிகிறது ! So சீக்கிரமே இவருக்கும் கொஞ்சமாச்சும் சீட்களை அதிகப்படுத்தணும் போலும் !!
அப்புறம் மிரட்டலான அட்டைப்படத்தில் புண்ணியத்தில், மிரட்டலான விற்பனையும் கண்டுள்ள இன்னொரு ஹாரர் இதழ் - "மூன்றாம் தினம்" !! இந்த ஒற்றை இதழ் விற்றுள்ள நம்பரை ஒரு பிரபல பிரான்க்கோ-பெல்ஜிய நாயகரின் ஒரு டஜன் இதழ்கள் சேர்ந்தும் நெருங்கக்கூடவில்லை ! அந்த ஜாம்பவான் யாரென்பதை அப்பாலிக்கா சொல்லுகிறேனே !
And வெளியான சமயத்தில் ருசிக்காத வெற்றியினை கடந்த 4 ஆண்டுகளாகவே ஒவ்வொரு புத்தக விழாவிலும் கண்டு வரும் "இரவே..இருளே..கொல்லாதே.." சென்னையிலும் ரகளை செய்துள்ளது !! இது போலான யதார்த்தமான ஹாரர் த்ரில்லர்ஸ் கண்ணில் பட்டால் கொஞ்சம் பரிந்துரை பண்ணுங்களேன் folks ?
ஹாரர் ஜான்ராவிலிருந்து அப்படியே ஒரு U-டர்ன் போட்டால் தான் அடுத்த bestsellers பக்கமாய் நாம் போக இயலும் !! அவை - "கதை சொல்லும் காமிக்ஸ்" வரிசையில் இம்முறை நாம் முயற்சித்துள்ள சிறார்களுக்கான Fairy Tales தான் !! மூன்று தமிழ் இதழ்கள் மட்டுமன்றி, இங்கிலீஷ் மூன்றுமே செமத்தியான ஹிட்ஸ் இம்முறை !! அட்டைப்படங்களில் ஆரம்பித்து, உட்பக்கச் சித்திரங்கள், தயாரிப்பு - என எல்லாமே இம்முறை classy ஆக அமைந்திருக்க, நமது ஸ்டாலுக்கு வந்த குட்டீஸ் மாத்திரமன்றி, பெற்றோர்களும் அவற்றைப் புரட்டாதி நகரவே இல்லை !! இந்த மூன்றில் "அலிபாபா" கணிசமான முன்னணி வகுக்கிறது விற்பனை நம்பர்களில் - but தொடர்ந்து காத்திருக்கும் புத்தக விழாக்களில் எல்லாக் கதைகளுமே கவனங்களைக் கோரிடும் என்று தைரியமாய் நம்பிடலாம் போலும் !! ஜூனியர் எடிட்டரின் இந்த முன்னெடுப்பு ஒரு புது காமிக்ஸ் வாசகத் தலைமுறையினை துளிர் விட இக்ளியூண்டாவது உதவிடும் என்றுமே நம்பிக்கை கொள்ளலாம் !
Surprises பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் நம்ம தானைத் தலைவர் ஸ்பைடரும் தான் !! கடந்த சில ஆண்டுகளாகவே மிதமான விற்பனை மட்டுமே சாத்தியப்பட்டது நம்ம வலைமன்னனுக்கு ! But இந்த முறை அந்த மெகா சைஸ் மேஜிக்கோ என்னவோ - "விண்வெளிப் பிசாசு' & 'பாட்டில் பூதம்' decent சேல்ஸ் !! And yes - "விண்வெளிப் பிசாசு" காலியாகிடுச்சுங்கோ !! உடனே டிஜிட்டல் பிரிண்ட் போட்டு கலைச்சேவை ஆற்ற நம்ம கல்வியாள ஆர்வலர் கச்சை கட்ட ஆரம்பிக்கலாம் !
Decent Sales லிஸ்ட்டில் அடுத்து இடம் பிடித்துள்ளோர் பின்வருமாறு :
மாயாஜால மன்னன் மாண்ட்ரேக்
ரிப் கிர்பி
சிக் பில்
இவர்கள் மூவருமே தெள்ளத்தெளிவாக - முதலுக்கு மோசமில்லாத பார்ட்டிகள் என்பதை நிரூபித்துள்ளனர் ! In fact - மாண்ட்ரேக்கின் விற்பனை ஒரு முன்னணி நாயகர் ரேஞ்சுக்கு அவரை உசத்திக் காட்டுகிறது ! காத்துள்ள KING'S SPECIAL கதம்ப இதழில், வேதாளருக்கு அப்புறமாய் மாண்ட்ரேக் + ரிப் கிர்பிக்கு முக்கியத்துவம் தந்திடணும் போலும் !
ஒரு ஜாலியான பார்ட்டி மிதமான விற்பனை கொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி ; and அவர் நம்ம நாலுகால் ஞானசூன்யம் ரின்டின் கேன் தான் !! ஒரேயொரு ஆல்பம் மட்டுமே கைவசம் இருக்க, 'பரால்லியே' என்று சொல்லும் விதத்தில் அதன் விற்பனை அமைந்துள்ளது ! Maybe தம்பிக்கு நடுவாக்கிலே ஒரு ஸ்லாட் தரணுமோ ? What say மக்களே ?
PART 4 :
Very steady ; without being spectacular - அதாகப்பட்டது நம்ம சூரியகுமார் யாதவ் மெரியோ, ரிஷப் பந்த் போலவோ கண்ணைப் பறிக்கும் டமால்-டுமீல் ஆட்டமெல்லாம் ஆடாது, நிதானமாய், அழகாய் ராகுல் டிராவிட் போல ஆடிடும் நாயகர்களுக்கு அடுத்தொரு பிரிவினை ஏற்படுத்தினால் - அங்கே இடம் பிடிப்போர் இவர்களாக இருப்பர் :
ரிப்போர்ட்டர் ஜானி
மிஸ்டர் நோ
டேங்கோ
பௌன்சர்
மாடஸ்டி
ஸாகோர்
ஏஜெண்ட் ராபின்
- ஸ்டெர்ன் : மாயா...எல்லாம் மாயா !
- ரூபின் : மங்கலமாய் ஒரு மரணம்
- ஸ்பூன் & ஒயிட் : சிறையில் ஒரு அழகி !
- க்ரே தண்டர் - தண்டர் in ஆப்ரிக்கா
- ப்ருனோ பிரேசில் 2.0
- வேங்கை என்றும் உறங்காது (ஜாரோப்)
- ப்ளூகோட் பட்டாளம்
- மர்ம மனிதன் மார்ட்டின்
- கர்னல் கிளிப்டன்
- வெகுஜன வெற்றி கண்டிருக்கும் தொடர்கள் / நாயகர்கள் அனைவருமே நேர்கோட்டுக் கதைக்களங்களின் பிரதிநிதிகள் !! கார்டூனோ ; ஆக்ஷனோ ; கௌபாயோ - ஜான்ரா எதுவாக இருந்தாலும், அதனை மூக்கைச் சுற்றாமல் இலகுவாய் சொன்னாலே மதி, என்று இந்த நம்பர்கள் சொல்லுகின்றன !!
- புத்தக விழா கொள்முதல்கள் இங்குள்ள உங்களின் ரசனைகளுக்குப் பெரிதும் மாறுபட்டவைகளே நஹி !! நீங்கள் போடும் பாதைகளில் ஜிலோன்னு அவர்களும் பின்தொடர்கிறார்கள் ! So in many ways - நீங்கள் அமெரிக்காவில் குடியேறக் கிளம்பிப் போன Mayflower கப்பல்கார் போலானோர் ! நீங்க ஒக்லஹோமாவிலோ ; அரிஸோனாவிலோ ; பாஸ்டனிலோ ஜாகைகள் அமைத்தால், அவர்கள் அங்கே அழகாய் குடியேறுகிறார்கள் ! So தமிழ் காமிக்ஸ் உலகின் முன்னோடிகள் நீங்களே !! அதனுடன் இணைந்திட்ட பொறுப்புகளும் உங்களைச் சாரும் guys !! இது சத்தியமாய் முகஸ்துதி அல்ல ; நிஜம் !
- சின்ன...ரொம்பச் சின்ன வட்டமே கிராபிக் நாவல்களை ரசிக்கின்றது ! அந்த வட்டம் விரிவாக்கம் காண வேணுமெனில் நம்மில் ஒரு கணிசமான நம்பர் அவற்றை ரசித்திடத் துவங்க வேண்டி இருக்கும் ! இங்கே போணியாகா சரக்கு, வேறெங்கும் தேறாது ! So 'எனக்குப் புடிச்ச இது வரலே...அது வரலியே' என்ற விசனங்களில் நேரங்களை செலவிடுவதற்குப் பதிலாக - உங்களுக்குப் பிடித்தவற்றை விரிவாய் அலசிட முனைந்தால், அதற்கு நிச்சயமாய் பலனிருக்கும் !! இதனை நாங்கள் சுலபமாய்க் கல்லா கட்டவொரு முகாந்திரமாய் நான் சொல்ல முனைந்திடவில்லை folks - மாறாக நல்ல தொடர்கள் ஓரம் கட்டப்படாதிருக்க உங்களின் முயற்சிகளும் அவசியமாகின்றன ! For instance - 4 ஆல்பங்கள் கைவசமுள்ள தாத்தாஸ் தொடரில், மொத்தமே பத்தோ, பன்னிரெண்டோ புக்ஸ் மட்டும் தான் போணியாகியுள்ளன ! படித்ததை ; பிடித்ததை பகிர்ந்தாலொழிய இவர்கள் போலானோர் காணாமல் போவதை தவிர்க்கவே இயலாது என்பது தான் சங்கடமான நிஜம் !!
- கார்ட்டூன்களுக்கும் இதுவே நிலவரம் என்றாலும், லக்கி லூக் ; சிக் பில் மட்டும் மானத்தைக் காப்பாற்றி வருகின்றனர் ! And இந்த "கதை சொல்லும் காமிக்ஸ்" முயற்சிகளுமே கார்ட்டூன் ஜான்ராவில் சேர்த்தி என்பதால் நிலவரம் அங்கு கலவரமில்லை !
- "கதை சொல்லும் காமிக்ஸ்" - பிரயாசை எடுத்து தொடரப்பட வேண்டியதொரு தடம் என்பது ஸ்பஷ்டம். அவற்றைப் பார்த்த நொடியில் முகம் மலர்ந்திடா சிறுசுகளே கிடையாது எனலாம் ! So இவற்றை அந்த இளம் தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் உத்திகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டி வரும் !! Maybe இந்த வரிசையில் இன்னும் ஒரு எட்டோ, பத்தோ titles அதிகப்படுத்திய பிற்பாடு ஆங்காங்கே உள்ள சூப்பர் மார்க்கெட்களில் பேசி,இவற்றிற்கென ஒரு விற்பனை களத்தினை உருவாக்கிட பிரயத்தனம் செய்ய வேணும் போலும் !!
- 'என்ன பண்ணினாலும் நாங்க காலி பண்ண மாட்டோமென்று' Rent Control Act சார்ந்த சட்டங்களைப் பேசிடும் குடித்தனக்காரர்களைப் போல கணிசமான ஆல்பங்கள் சிவகாசியை விட்டு அகல மாட்டோமென்று வைராக்கியமாய் இருப்பதும் புரிகிறது ! So எதிர்வரும் சிறுநகரப் புத்தக விழாக்களில் - மாணவர்களுக்கு அதிரடி விலைகளில் புக்ஸ் தரும் முனைப்புகள் கூடுதல் வேகத்தில் தொடர்ந்திடும் !! வேற வழியே தெரியலை - அவற்றை விற்றிட ! பேரீச்சம்பழத்துக்கு போடுவதற்குப் பதிலாய் பிள்ளைகளின் வாசிப்புகளுக்கு அவற்றை உரமாக்கிடவே தீர்மானித்துள்ளோம் ! So உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக சில hardbound புக்ஸ் கூட ஐம்பதுக்கோ, அறுபதுக்கோ கூவி விற்கப்படும் அரிய காட்சிகளைக் கண்டு மிரண்டு விடாதீர்கள் folks !!
- இன்னமும், 13 வருஷங்களின் மறுவருகைக்குப் பின்னேயும் "காமிக்சா ?? இதுலாம் இன்னமும் வருதா ??" என்ற கேள்விகளிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது போலும் ! விற்பனைகளில் பிரதிபலிக்கின்றனவோ, இல்லையோ - விளம்பரங்களை விடாப்பிடியாய் செய்து கொண்டே செல்ல வேண்டும் போலும் !!
Wow
ReplyDeleteவாழ்த்துகள்
DeleteSuper sir👏👏👏
DeletePresent sir
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDeletePresent Sir
ReplyDeleteThird
ReplyDelete6th
ReplyDelete7th
ReplyDeleteHi
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete7th
ReplyDeleteகபீஈஈஈஈஈஈஈஈஈஈஈஷன் வாழ்க
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteஹைய்யா.. பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லிட்டேன்..
ReplyDeleteதொடரும் பதிவு! அருமை
ReplyDeleteஅருமை...
ReplyDelete@ஆசிரியர் சார் தீர்ப்பை பரிசீலனை பண்ணுங்க..
ReplyDeleteமுதலில் கபீஷ் பெயரை சொல்லியுள்ளது வழுக்குப்பாறை திருநாவுக்கரசு.. எ திரு.
2வதாக கோடாலியார்
3வதாக பொருளாளர்
திருத்தியாச்சு சார் ; நம்ம மகளிரணித் தலைவி சுட்டிக்காட்டியிருந்தாங்க !
Deleteகேக் வென்ற
Delete*1. திரு @Thirunavu Comics டெக்ஸ் டீம் ஆல்ரவுண்டர்💪💪💪💪*
*2.@கோடாலி கொம்பர் @ஸாகோர் பாபுஜி*
3.செனா அனா
4.ரஃபிக்
*4வருக்கும் வாழ்த்துகள்💐💐💐💐💐*
Super sir👌
Deleteரம்யா sis, great observation 👏👏👏
😄😄😘💐💐🙏
Deleteஎதிர்பார்க்கவில்லை, செம
ReplyDeleteகபிஷ் வாழ்க
//கொஞ்சம் மேலே பாரு கண்ணா..." என்றொரு voice ! அண்ணாந்து மோட்டைப் பார்த்தால் - "அங்கே இல்லை ; மரத்துக்கு உஷைக்கே பாரு கண்ணா...!" என்றது அந்தக் குரல் ! பார்த்தால் - ஹேப்பியாக சிரித்துக் கொண்டு அமர்ந்திருப்பது நம்ம கபிஷ் !!!Oh yes guys - "கபிஷ் ஸ்பெஷல் # 2 " தான் நமக்கு இந்தப் புத்தக விழாவின் single highest selling album !!! //
ReplyDelete🥳🥳🥳🥳🥳
கபிஷ். மகிழ்ச்சி
ReplyDeleteகபிஷ் என்று முதலில் கூறியவர் நண்பர் வழுக்குப்பாறை திருநாவுக்கரசு ங்க sir....
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஇரும்பு, தல, வேதாளர் எல்லாத்துக்கும் பல்பு கொடுத்த கபீஷன்... செம..செம....💪💪💪💪💪
ReplyDelete😂👌👌👌
Deleteமகிழ்ச்சி
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி
ReplyDeleteஅடடே வந்துட்டேன்...
ReplyDeleteநானும் வந்துட்டேன்
Deleteவாங்க
Deleteசூப்பர் சார....:-)
ReplyDeleteஇ. சி. ஈ. இளவரசர் சொன்ன மாதிரி வாயில் வெடிச்சாலும் பரவாயில்லை. கேக் அனுப்பி வைங்க. 🤣. ஆத்தாடி.. எடிட்டர் கையால கேக் வாங்கறது எனது எத்தனையோ வருட கனவு...
ReplyDelete😂😂😂😂😂
DeleteSuper sir 😊
DeleteMedia va pathi pesatheenga
ReplyDelete..waste
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி.
ReplyDeleteஇரும்புக் கை மாயாவியாரை மறுக்கா கொண்டு வந்தால் - ஏற்கனவே 50₹ ல் வெளியான "இயந்திரத்தலை மனிதர்கள்" ஒரு ஆப்ஷனாக வைக்கலாம்.
மந்திர வித்தை, களிமண் மனிதர்கள்,
கொள்ளைக்கார பிசாசு இன்னொரு சாய்ஸ்.
'தல' .........நேற்று இல்லை ; நாளை இல்லை.....எப்போவும் நான் ராஜா !! தானென்று இசைக்கிறார் !! தலைவணங்குகிறோம் தலைமகன் முன்னே !!
ReplyDeleteகபிஷ் # 1
மாயாவி # 2
டெக்ஸ் # 3
சந்தோஷம் சார்
இரும்புக் கை மாயாவிக்கு எந்தளவுக்கு க்ளாசிக் ரசிகர்கள் உள்ளார்கள் ஓ அதே போல வேதாளரை தேடும் ரசிகர்கள் பலரும் உண்டு. ஆகவே வேதாளர் மறுபடியும் ஒரு ஹைஸ்பீட் ரவுண்டு வருவார். வேதாளர் ஸ்பெஷல் 1&2 கூட ரீபிரிண்ட் போடலாம்.
ReplyDeleteகண்டிப்பாக சார் 👌👌👌😍
Deleteசெம்ம சார். உற்சாகம் துள்ளும் பதிவு.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDelete@Edi Sir🥰😘..
ReplyDeleteMe in.. 🥰😘
இந்த முறை. மறுக்கா மறுக்கா பதிவு.. சூப்பர் சாரே 😘😘💐💐💐🙏
ReplyDeleteஜி,
ReplyDeleteவிற்பனையில் முதலிடத்தை பிடித்த இந்த மூன்று.
The phantom, கீழ் திசை சூனியம் போன்ற நல்ல artwork உள்ள தரமான கதைகள்,
இரும்பு கை மாயாவி மறு பதிப்பு செய்யாத கதைகள்,
டெக்ஸ் மறு பதிப்பு செய்யாத சில கதைகள், என்ற கணிசமாக புத்தகங்களை புத்தகத் திருவிழாவுக்கு கொண்டு வரலாம்.
தெளிய வெச்சு, தெளிய வெச்சு, அடிக்கிறீங்க சார்...
ReplyDeleteஸ்பைடர் விற்பனையில் சாதித்திருப்பது சந்தோஷம் ஆசிரியரே அப்படியே அந்த யார் அந்த மினி ஸ்பைடரை கொஞ்சம் கண்டுக்கங்க
ReplyDelete👌👌👌
Deleteசெய் சூப்பர் சார்...காளியாவயும் ஒரு 4 தலைப்பு அதிகரிங்க..சூழ்ச்சி மந்திரிக்கு பதிலா இத போட்டிருக்கலாம்.நாலு ஸ்டெப் முன்னால் போயிருப்போம்....கார்ட்டுன் கதைகள் திசைமாற வேண்டிய தருணம்...மிக்கி ...டொனால்ட் அல்லது வால்ட் டிஸ்னி சிறுகதைகள் பிடிக்க முயற்சிப்போம்
ReplyDelete///செய் சூப்பர் சார்...காளியாவயும் ஒரு 4 தலைப்பு அதிகரிங்க...///
Delete👌👌👌
அடடே மிக்கி டொனால்ட் சூப்பர் சூப்பர்
Deleteஆஹா கபீஷின் வால் போல பதிவு நீண்டு கொண்டே செல்கிறதே. சூப்பர் சூப்பர் சூப்பர்
ReplyDeleteவேதாளரின் இரண்டு கதைகளும் சூப்பர் சார்....அதுவும் அந்த வெள்ளை மருந்து இன்னும் நம்மை சீரழித்து கொண்டிருக்க...நமது தலைமுறைக்கும் வேதாளராய் ஒருவர் வரனும்...ஹாலோவீன் சில இடங்களில் ஓவியங்கள் குறையாய் பட வண்ணமும் கதைகளும் அதகளம்
ReplyDeleteமுதல் 3 இடம் பிடித்த guessing kings களுக்கும், ரபீக் சாருக்கும் வாழ்த்துக்கள்👏👏👏👏🎊🎊🎊🎊
ReplyDelete😄😄😘🙏💐Thanks JSVP ji😘
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete///முன்செல்லும் காலங்களில் சந்தாக்களிலோ, தனித்தடங்களிலோ, புத்தக விழா ஸ்பெஷல்களிலோ - "வேதாளர்" ஒரு இன்றியமையா மேஜர் அங்கமாக இருந்திட வழி செய்திட வேணும் போலும் !! ///
ReplyDeleteGREAT NEWS sir😍
கமாண்டர் (வேதாளர்) கண்டிப்பாக பலரது all time favourites களுள் ஒருவராக இருப்பார்...
எப்போதாவது (ex:புத்தக விழா) காமிக்ஸ் வாங்கி படிக்கும் வாசக நண்பர்களும் வேதாளரை கட்டாயம் ரசித்து வாங்குவர்... சிறுவர்களையும் வேதாளர் ஈர்ப்பார்...
எனவே வேதாளருக்கு இனி அதிக முக்கியத்துவம் கொடுங்கள் சார்🤗
// ஞானசூன்யம் ரின்டின் கேன் தான் !! ஒரேயொரு ஆல்பம் மட்டுமே கைவசம் இருக்க, 'பரால்லியே' என்று சொல்லும் விதத்தில் அதன் விற்பனை அமைந்துள்ளது ! Maybe தம்பிக்கு நடுவாக்கிலே ஒரு ஸ்லாட் தரணுமோ ? What say மக்களே ? //
ReplyDeleteமகிழ்ச்சி. எங்க தலைவனின் புதிய கதை ஒன்ற சீக்கிரம் ரெடி பண்ணி போடுங்க சார் 😍
+100
Delete+100
Deleteகபிஷ்+ கதை சொல்லும் காமிக்ஸ் களுக்கும் சந்தா இல்லாத தருணங்களிலும் இன்னும் slots தரலாம் sir...
ReplyDeleteஇவர்களையும் சேர்த்துக் கொண்டு கார்ட்டூன் ஜானருக்கு இனி வரும் வருடங்களில் more slots சந்தாவில் இடம் தந்து பார்க்கலாம் ஸார் 😊🙏
ஏற்கனவே கடந்து வந்த பாதை தானே சார் அது ?
Deleteரின் டின் கேன் க்கும் கண்டிப்பாக ஒரு ஸ்லாட் தரலாம் சார்... சிறுவர்களை கவரும்👍 (எந்த வகையில் கார்ட்டூன் புத்தகங்கள் extra கிடைத்தால் ஹேப்பி தான்)
ReplyDeleteயெஸ்
DeleteYes
Deleteரின் டின் கூடவே சுட்டி லக்கி கதைகளை திரும்பவும் முயற்சி செய்யலாம்
ReplyDeleteசிக் பில் பழைய கதைகள் எல்லாம் கொஞ்சம் reprint போட்டு வைக்கலாம் சார். வருடத்திற்கு ஒன்றோ ரெண்டோ முயற்சிக்கலாம் சார்.
ReplyDelete+100
DeleteMy no 1 favorite in கார்ட்டூன் ஜானர் சார் 😍
Deleteஉங்களுக்கு மட்டும் இல்லை விக்ரம் எனக்கு தெரிந்த நிறைய நண்பர்களுக்கு கார்ட்டூன் என்றாலே சிக் பில் தான் நம்பர் ஒன் சாய்ஸ்.
Deleteசெம்ம சார்...👌🤝
Deleteகேக்கவே ஹேப்பியா இருக்கு😍
+9
Deleteஅந்த நண்பர்களையெல்லாம் மீட்டு வர ஏதாச்சும் ஒரு சிந்துபாத் வேண்டி இருக்கும் போலவே சார் - 7 கடல், 7 மலை தாண்டில்லே அவுகள்லாம் இருக்கா மெரி தெரியுது ?!
Deleteநம்ம தலீவருக்கு தலப்பா கட்டி விட்டு சிந்துபாத் ஆக்கி அனுப்பிடலாம் !
சார்.. ஒரு இளவரசர் அந்தஸ்திலே இருப்பவர்க்கு கபிஷ் தான் விற்பனையில் முதலிடம் பிடிக்கும் என்று அனுமானிப்பதெல்லாம் சப்ப்ப்பை மேட்டர்! ஆனால் எனக்கு இந்த பிளம்கேக்கே பிடிக்காது என்பதால் தான் அந்த அனுமானத்தை வெளியிடவில்லை.
ReplyDeleteமற்றபடி, வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள்!!💐💐🤝 கபிஷ் தமிழில் வெளிவர உதவிட்ட நண்பர் ரஃபிக்கிற்கு மீண்டும் ஒருமுறை நன்றிகளும், வாழ்த்துக்களும்! அவருக்கு வாசகர்கள் சார்பாக (பிளம் கேக்கை விடவும் பல மடங்கு சுவை நிறைந்த) ஓரிரு ரவுண்டு பன்னுகளையும் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!
நண்பர்கள் உதவினால் தமிழ் காமிக்ஸ் இன்னும் பல உயரங்களைத் தொடும் என்பது உறுதி! இந்நேரத்தில், நேரடியாகவும், மறைமுகமாகவும் விற்பனைக்கு உதவிவரும் நண்பர்கள் அனைவருக்கும் தலா ஒரு மானசீகப் பூங்கொத்தை இன்று மூன்றாம்சாமத்தில் கனவில் அனுப்பிவைக்கிறேன்!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏
///ஒரு இளவரசர் அந்தஸ்திலே இருப்பவர்க்கு///
Deleteஅப்போ இளவரசர் இல்லையா😳
இத்தனை நாள் ஏமாந்திட்டேன் சார்🤕
😄😄😄😄😄😄🫣🫣🫣🫣🫣
Deleteமரண பங்கம் இளவரசே 🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️
@JSVP வச்சு செஞ்சுட்டாருப்பா... 😄😄
😂😂😂😂😂😂😂
Deleteஜம்பிங் தலைவரே, E.V சாரை ஏத்தி விடாதீங்க pls...🤗
Deleteஇளவரசரும், இளவரசர் அந்தஸ்தில் இருப்பவரும் equal தான் nu நான் ஏத்துக்கிறேன் சார்😜😍
ஹிஹிஹி விக்ரம் இதுக்கெல்லாம் பின் வாங்கினா எப்படி?
Deleteயானையின் கால்களால் இடற ஒரு கொழுத்த யானையை ரெடி பண்ணிட்டிருந்த நேரத்துல குற்றவாளி தன் தவறை ஒப்புகிட்டதால சினம் தணிந்து யானையை standby mode ல போட்டிருக்கேன் இப்ப!
Delete//விக்ரம் இதுக்கெல்லாம் பின் வாங்கினா எப்படி?//
😠😈👺👹 யானையோட டைரக்ஷன மாத்திவிடணும் போலிருக்கே!!🤨
ரண்டு நாட்களுக்கு முன்வரைக்கும் ஒரு ஆள் விட்ட சவுண்டு என்ன ? ரவுசு என்ன ? அரை கிலோ பொங்கலுக்குப் பிற்பாடு இன்னா ஒரு மாற்றம் ?!
Delete🙄🙄😐
Deleteசென்னையை அடுத்து திருப்பூரிலும் குட்டீஸ்களை கார்னர் பண்ணிடனும் சார்..
ReplyDeleteபண்ணிடுங்க சிவா !
Deleteமிக்க மகிழ்ச்சிங்க sir... வாழ்த்துக்கள்...❤️👍🙏🙏..
ReplyDeletePart 4 மேலே. இன்னும் பதிவு முடியல
ReplyDeleteWaiting for final part kumar
Deleteசுபம் போட்டாச்சு சார் !!
Deleteசார் இந்த வருடம் இன்னும் 2 ஸாகோர் புத்தக விழாவில் போடுங்க
ReplyDeleteDing !!! Credited in account from Namakkal !!
Delete@Kumar, Salem ji.. 😘🙏💐
ReplyDeleteசாகோர் பேரவை செயலாளர் என்பதை அவ்வப்போது நிரூபித்து கொண்டே இருக்கிறீர்கள்.. 😄🙏💐
நன்றி.. 😘😘😘🥰🥰🥰🥰
//அந்த ஜாம்பவான் யாரென்பதை அப்பாலிக்கா/////
ReplyDeleteகொடுமை லார்கோ வின் கதி இதா
லார்கோவா? தோர்கலா?
Deleteநான் தோர்கல் தான் nu நினைக்கிறேன் kumar sir...
Deleteஅப்படிதான் நானும் நினைத்தேன் விக்ரம் சார்.
DeleteBoth I guess
DeleteNopes..just 1....
DeleteLargo
Deleteவிவரிப்பை கூர்ந்து வாசியுங்கள் சார் !
Deleteதாதாஸ்
Delete@Edi Sir😘🥰..
ReplyDeleteஇன்னும் நாலு பார்ட் கூட போடுங்க சார்.. 🥰😘
படிக்க.. ரசிக்க.. நாங்க ரெடி.. 😘💐👍
நீங்க ப்ளம் கேக்கை சுவைச்சுக்கிட்டே வண்டி ஓட்டலாம் தல...இங்கே இந்தக் கத்தைப் பேப்பர்களின் செய்திகளை கிரகித்து - லொட்டு லொட்டென்று டைப்படித்துக் கடத்தும் வேலை நேக்கு தானே ?!
Delete🥳🎉😍
ReplyDelete// உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக சில hardbound புக்ஸ் கூட ஐம்பதுக்கோ, அறுபதுக்கோ கூவி விற்கப்படும் அரிய காட்சிகளைக் கண்டு மிரண்டு விடாதீர்கள் folks !! //
ReplyDelete😞🥲🥲🥲🥲🥲