Powered By Blogger

Saturday, December 21, 2024

சென்னை மேளா '25.....!!

 நண்பர்களே,

வணக்கம். நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாய் அகவையும், முன்மண்டையில் காலி ப்ளாட்டும் ஏறிக் கொண்டே போனாலும், குட்டிக் கரணப் படலம் என்னவோ குறைந்த பாடைக் காணோம்! இதைக் குசும்பென்பதா? கொழுப்பென்பதா? நமது டீமின் மீதுள்ள நம்பிக்கையென்பதா? குடாக்குத்தனமான கணக்கென்பதா? அறியில்லா!! But ஒரு புத்தாண்டின் துவக்கமும், புதுத் தடத்தின் முதல் புள்ளியும், சென்னைப் புத்தக விழாவும், ஒருசேரச் சந்திக்கும் போது மறை பச்சக்! என தானாய் கழன்று கொள்கிறது! So வெல்கம் guys to தி சென்னை மேளா “25...!!

சென்னைப் புத்தக விழா! ஆண்டுதோறும், சிறு நகரம், பெரு நகரமென புத்தகத் திருவிழாக்கள் அரங்கேறினாலும் சென்னை தான் அத்தினிக்கும் தாதா; பிஸ்தா; ஜித்து என்பதை ஊரறியும்! So ஒவ்வொரு வருடமும் மனசு நிறைய எதிர்பார்ப்புகளோடு, முந்தைய வருஷங்களின் அனுபவங்களைப் பாடமாக்கிய கையோடு களமிறங்க முனைவதே வாடிக்கை! And no different this time too!

வாங்கும் திறனிலும் சரி, வருகை தருவோரின் எண்ணிக்கையிலும் சரி, சென்னை வூடு கட்டி அடித்தாலும், சமீப ஆண்டுகள் வரையிலும் அங்கு நிகழ்ந்து வந்த (நமது) விற்பனைகளில் இருந்த வரைபடத்தினை கிரகிக்க நமக்கு சாத்தியப்பட்டிருக்கவில்லை! “ஜனம் வர்றாங்க... அந்த நொடியில் ஈர்த்திடும் இதழ்களை வாங்கிடுகிறார்கள்!” என்றே முன்னெல்லாம் நினைத்திருந்தோம்! ஆனால் 2022 முதலாய் ஜுனியர் எடிட்டர் அறிமுகம் செய்திருந்ததொரு விற்பனை சார்ந்த Software-ன் புண்ணியத்தில் இந்த 2 1/4 வார மேளாக்களின் முடிவில் ஸ்பஷ்டாய் ஒரு pattern இருப்பதைப் புரிந்திட இயன்றது! இங்கு வருகை தரும் நண்பர்களில் மிகக் கணிசமானோர் casual walk-in readers அல்ல; ஆண்டுதோறும் தங்களது ஆதர்ஷ நாயக / நாயகியரின் இதழ்களை ஸ்டாலில் தெளிவாய் வாங்கிச் செல்கின்றனர் என்பதும் புரிந்தது! தவிர, நாம் இங்கும் சரி, FB / வாட்சப் க்ரூப்களிலும் அலசி, சிலாகிக்கும் இதழ்களை நினைவில் வைத்திருந்து அவற்றைக் கச்சிதமாய் வாங்கிச் செல்கின்றனர்! So இங்கே Lady S மொத்து வாங்கியிருந்தால், அங்கே புத்தக விழாவிலும் அம்மணியின் வண்டி ஸ்டார்ட் எடுப்பதில்லை! SODA பரவலான தாக்கத்தை இங்கே ஏற்படுத்தாது போயிருந்தால், அதுவே சென்னை விற்பனையிலும் எதிரொலிப்பதைப் பார்க்க முடிந்தது! Ditto with மேக் & ஜாக்... Ditto with சில ஜம்போ காமிக்ஸ் இதழ்கள்! So இந்தப் புத்தக விழா அபிமானிகளின் ரசனைகளையோ, நினைவாற்றல்களையோ சற்றே குறைச்சலாய் எடை போட்டால் அது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூனியமாகிடும் என்பது புரிபட்டது!

மாயாவியார்!!

ஆட்சிகள் மாறியிருக்கலாம்... மெரினாவில் தினம் காணும் காட்சிகளும் மாறியிருக்கலாம்!

கரி எஞ்சின்களுக்கு கல்தா தந்திருக்கலாம்... வந்தே பாரத்துக்கு வந்தனம் சொல்லியிருக்கலாம்...!

மாருதி 800-ஐ வியந்து ரசித்த காலம் மலையேறியிருக்கலாம்; மெர்செடெஸ் பென்ஸை கொட்டாவியோடு பார்த்திடும் பொழுதுகளும் புலர்ந்திருக்கலாம்...

காப்பி க்ளப்புகள் இருந்த இடங்களில் இன்று KFCகள் காட்சி தரலாம்! 

but... 

கரெண்ட் துவாரத்துக்குள் விரலை விட்ட நொடியில் அரூபமாகிப் போகும் ஒரு காமிக்ஸ் ஜாம்பவானுக்கான மவுசு மட்டும் அன்றும், இன்றும், என்றும் தொடரும் என்பது ஒவ்வொரு வருஷமும் சென்னை சொல்லித் தரும் பாடம்! இடையில் ஒரு சின்னதொரு phase இருந்தது தான் - maybe 2018 & 2019... மாயாவி அவ்வளவாய் விற்பனை காணாதிருந்த நாட்களவை! ஆனால் 2022-ல் துவங்கி இரும்புக்கரத்தார் back in prime form ! சென்னையில் இன்னமுமே மாயாவியை மட்டுமே நலம் விசாரித்துப் போக வரும் சீனியர் வாசகர்களின் எண்ணிக்கையும் கணிசம்! So லாஜிக் அறியா இந்த மேஜிக் 2025-ல் தொடரவே செய்யும் என்ற நம்பிக்கையில் 2 மாயாவி மறுபதிப்புகள் ரெடி ! And அந்த இதழ்களுள் ஒன்று தான் :

“மும்மூர்த்திகள் ஸ்பெஷல்”!!!

முத்து காமிக்ஸின் துவக்க நாட்களில் களம் கண்ட

- இரும்புக்கை மாயாவி

- CID லாரன்ஸ் & டேவிட்

- ஜானி நீரோ & ஸ்டெல்லா

தான் நமது flagship நாயகப் பெருமக்களாய் அரை நூற்றாண்டுக்குப் பின்னரும் தொடர்கின்றனர் என்பது நாமறிந்ததே! இந்த மூவரில் யாரேனும் இருவர் முன்நாட்களில் காமிக்ஸ் க்ளாஸிக்கில் கூட்டணி போட்டு வெளிவந்திருப்பர்! ஆனால் மூவரது சாகஸங்களும் ஒந்றை ஆல்பத்தில் இதுவரை வந்ததில்லை என்ற போது, மும்மூர்த்திகளை ஒருங்கிணைக்கும் மகா சிந்தனை தோன்றியது! And ஏதோவொரு பதிவினில் நம்ம பொருளாளர்ஜி மாயாவிக்கொரு ஹார்ட்கவர் தந்தது இல்லையே? என்று ஆதங்கப்பட்டிருந்தது மண்டையின் ஓரத்தில் குந்தியிருந்தது! So 3 கதைகள் / 3 க்ளாஸிக் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நொடியில் அவர்களுக்கு ஹார்ட்கவர் மரியாதையினையும் இணைத்திட்டால் சிறப்பாக இருக்குமென்றுபட்டது! அதன் பலனே தகதகக்கும் இந்த இதழ்!

Oh yes - எண்ணிலடங்கா தடவைகள் இவை மறுபதிப்பு கண்டுள்ளன தான்; ஆனால் “விற்பனை” என்ற கோணத்தி்ல் இவையே சொல்லியடிக்கும் பந்தயக் குதிரைகள் எனும் போது, சென்னையில் மட்டுமாவது இது போன்ற initiatives அவசியமாகிடுகின்றன. So நமது ஸ்டாலுக்குள் நுழைந்த நொடியே மாயாவி மயக்கும் பார்வையோடு உங்களை வரவேற்கக் காத்திருப்பார்!



அருகிலேயே “பாதாள நகரம்” மறுபதிப்பிலும் மாயாவி தகதகத்துக் கொண்டிருப்பார்! இது போன ஆண்டே வந்திருக்க வேண்டிய இதழ்; நேரமின்மை காரணமாய் skip செய்திருந்தோம்!

And இங்கே இன்னொரு சுவாரஸ்யக் கொசுறு சேதியுமே! இதுவரை மறுபதிப்புக் கண்டிராத

1. ஒற்றைக்கண் மர்மம்

2. பறக்கும் பிசாசு

3. ப்ளாக்-மெயில்

4. இயந்திரப்படை

சாகஸங்களெல்லாம் அங்கே ரெடியாகி வருகின்றன! So அந்நாட்களில் நீங்கள் ரசித்த அதே டபுள் கலரில் / வண்ணத்தில் இவை இங்குமே களம் காணும் வேளைகள் not too far!

சென்னையின் அடுத்த டார்லிங் நம்ம லக்கி லூக் தான்! லைனாக அவரது புக்ஸ் அடுக்கி இருந்தால் அவற்றை லைனாக வாங்கிச் செல்ல நண்பர்கள் காத்திருப்பதுண்டு! In fact போன வருடம் வந்த “தலைக்கு ஒரு விலை” மறுபதிப்பு தான் விற்பனையின் டாப் இடத்தைப் பிடித்திருந்த இதழ்களுள் ஒன்று! அதற்கேற்ப இம்முறையும் 2 reprints வெயிட்டிங்! இரண்டுமே நமது இரண்டாவது இன்னிங்ஸின் போது வெளியானவை என்றாலும் ஒரு முழு வருஷம் கூட ஸ்டாக்கில் தாக்குப் பிடித்திருக்கவில்லை! புது அட்டைப்படங்களுடன் மெர்சலூட்டும் ப்ரிண்டிங் சகிதம் இந்த 2 க்ளாஸிக் கதைகள் மறுக்கா கிச்சுகிச்சு மூட்டக் காத்துள்ளன!

- பனியில் ஒரு கண்ணாமூச்சி

&

- எதிர்வீட்டில் எதிரிகள்



Next will be கபிஷ் ஸ்பெஷல்-2

சேலத்தில் முதல் இதழ் வெளியானது மட்டுமன்றி, விற்பனையிலும் அசத்தியிருந்த நமது அபிமான கபிஷ் இதோ - இரண்டாவது ஆல்பத்தோடும் ரெடி! இத்தொடரின் ஓவியரான திரு.மோகன்தாஸ் அவர்களே நமது கபிஷ் ஆல்பங்களைப் பார்த்த கையோடு எனக்கு ஃபோன் அடித்து அற்புதமாய் சிலாகித்திருந்தார். படைத்தவரே பாராட்டும் போது, அதை மிஞ்சிய திருப்தி வேறென்ன இருக்க முடியும் folks! இதோ - உங்களது பால்ய நினைவுகளுக்குத் தீனி போடவும், அடுத்த தலைமுறைக்குக் கதை சொல்ல வாகாகவும் கபிஷ் - மிளிரும் கலரில்!!


அடுத்த தலைமுறை” என்ற டாபிக்கில் இருக்கும் போதே அடுத்த 3+3 இதழ்களைப் பற்றிப் பேசிடல் பொருத்தமாக இருக்குமென்பேன்! பழமையை ஆராதிக்கும் வாசகர்களையும், சேகரிப்பாளர்களையும் target செய்திட ஒரு பக்கம் முனைகிறோமென்றால் - ஒரு புத்தம் புதிய, ஆக இளம் தலைமுறையினை காமிக்ஸ்களின் பக்கமாய் ஈர்த்திட பெருசாய் மெனக்கெட்டதில்லை என்பதே bottomline. சில வருஷங்களுக்கு முன்னமே இந்த “கதை சொல்லும் காமிக்ஸ்“ முயற்சியினை முன்னெடுத்திருந்தோம் தான் – சந்தாக்களை எதிர்பார்த்து! And அன்றுமே நமது target audience ஆக இருந்தோர் நம் வீட்டுக் குழந்தைகள் தான்! 

ஆனால் Jack & The Beanstalk கதையில் வரும் குட்டிப்பயல் ஜாக் யோக்கியனா? அயோக்கியனா? என்று ஆரம்பித்த அலசல்களில் அந்த முன்னெடுப்பின் முனைப்பே பணாலாகிப் போனது! உலகெங்கும் சொல்லப்படும் சிறார் கதைகளிலும் “லாஜிக்டா... நீதிடா... நேர்மைடா... நாயம்டா" என்று நாம்  தேடத் துவங்கிய போது ஓசையின்றி அந்தத் தடத்தை பரணுக்கு பேக்-அப் பண்ணியிருந்தோம் ! ஆனால் அதன் பின்பாய் தொடர்ந்த ஒவ்வொரு சிறுநகர / பெருநகரப் புத்தக விழாவிலுமே இந்த இதழ்கள் செம வாஞ்சையாய் விற்பனை கண்டது அந்த இதழ்களைக் கரை சேர்த்திருந்தது!

நிலவரம் அவ்விதமிருக்க, இங்கே நம்ம ஜுனியர் எடிட்டர் இந்த முயற்சியை reboot செய்திட்டால் என்னவென்ற கேள்வியை 2 மாதங்களுக்கு முன்பாக முன்வைத்த போது – “பேஷாய் முயற்சிக்கலாம்” என்று இசைவு சொல்லியிருந்தேன். So கதைத் தேர்வுகளிலிருந்து புத்தக வடிவமைப்பு வரை சகலமும் ஜுனியரின் முயற்சிகளே! As we know – இந்த ஆல்பங்களின் ஒரிஜினல் வார்ப்புகளில் ஒற்றை வரி கூட வசனமே கிடையாது. ஒரிஜினலில் முழுக்க முழுக்கவே சித்திரங்கள் மாத்திரமே கொண்ட மௌனக் கதைகள் இவை! ஆனால் நமக்கு அது சுகப்படாதென்பதை படைப்பாளிகளுக்குப் புரியச் செய்து அவர்களின் சம்மதத்தோடு முழுக்கவே புதுசாய் வசனங்கள் உருவாக்கி, இந்த புக்ஸ்களை அன்றும் சரி, இன்றும் சரி, ரெடி பண்ணியுள்ளோம்! இம்முறையோ கதைத் தேர்விலேயே குழந்தைகளைக் கவரும் அட்டைப்படங்களாகப் பார்த்து தேர்வு செய்வதில் தொடங்கி, வசனங்களிலும் குழந்தைகளை ஈர்க்கும் சுலப பாணிகளுக்கு முக்கியத்துவம் தந்துள்ளோம். 

“பண்றதுன்னு ஆச்சு... இவற்றை இங்கிலீஷிலுமே முயற்சி செய்து பார்த்தாலென்ன? என்று ஜுனியர் வைத்த அடுத்த கேள்விக்குமே மறுப்பு சொல்லத் தோன்றவில்லை. கணிசமான பெற்றோர் – ”ஓ... இங்கிலீஷிலே காமிக்ஸ் லேதுவா உங்களிடம்? வாடா கண்ணா... போலாம்!” என்று ஆர்வமாய் நுழையும் குழந்தைகளை இழுத்துக் கொண்டு வெளியேறுவதை ஸ்டாலில் பார்த்துள்ளதால் – இந்த ஆங்கிலப் பதிப்புகள் worth a try என்று பட்டது. ஆக Lion Books என்ற லேபிலுடன், ஜுனியர் எடிட்டரின் ஸ்க்ரிப்ட் சகிதம் ஆங்கிலப் பதிப்புகள் ரெடியாகி உள்ளன! And அந்த ஆங்கில வசனங்களை நம்மள் கி தமிழ் பதிப்புகளுக்கு மாற்றியெழுதுவதை மட்டும் அடியேன் செய்திருக்கிறேன்!

- The Princess of the Pea = பட்டாணி இளவரசி

- Alibaba & The 40 Thieves = அலிபாபாவும் 40 திருடர்களும்

- The Three Little Pigs = விடாமுயற்சி


மூன்று கதைகளுமே உலகெங்கும் பிரசுரமாகும் Fairy Tales தொகுப்புகளில் தவறாது இடம்பிடித்து வருபவை! 

  • சிறார் கதைகளின் உலகில் நீங்கா இடம் பிடித்திருக்கும் டென்மார்க்கைச் சேர்ந்த ஹான்ஸ் க்ரிஸ்டியன் ஆண்டர்சென் 1835-ல் எழுதிய கதை தான் “பட்டாணி இளவரசி”! 
  • 18ம் நூற்றாண்டில் சிரியாவில் சொல்லப்பட்ட கதை அலிபாபா! 
  • And 1886-ல் இங்கிலாந்தில் உருவான கதை தான் “விடாமுயற்சி”

So கிட்டத்தட்ட 140 வருடங்களைத் தாண்டியும் பயணித்து வரும் இந்தக் கதைகளை ஒரு காமிக்ஸ் பார்வையில், சுலபத் தமிழிலும், இங்கிலீஷிலும் நம் இல்லத்து அடுத்த தலைமுறைகளுக்கென உருவாக்கியுள்ளோம்! And yes – இவற்றை தொப்பையும், தாடியும் வைத்த “வளர்ந்த, குழந்தைகளுமே” படிக்கலாம் தான்! அதிலும் குறிப்பாக “பட்டாணி இளவரசி” புக்கைச் சொல்வேன் ; செம ஜாலியான புக் அது !




- நம் வீட்டுக் குழந்தைகளுக்கு வழங்கிட...

- பிறந்தநான் பரிசுகளாய் அனுப்பிட...

- நமது அப்பார்ட்மெண்ட் நூலகங்களுக்கோ...

- பள்ளி நூலகங்களுக்கோ அன்பளிப்பாக்கிட...

- பொடுசுகள் வரக்கூடிய க்ளினிக்களில் போட்டு வைக்கவோ...

இவை எல்லாமே  பிரமாதமாய் suit ஆகிடக்கூடும்! So பயன் தராது மூலையில் முடங்கிடும் இதழ்களாய் இவை சர்வ நிச்சயமாய் இராதென்று நம்பலாம் folks! “கதை சொல்லும் காமிக்ஸ்”க்கு நாங்க கியாரண்டி!

Last of the mela books – ஒரு புத்தம் புது திகில் கிராபிக் நாவல்! புத்தக விழாக்கள்தோறும் “ஹாரர்” என்ற ஜான்ராவுக்கொரு மவுசு இருந்து வருவது சமீபத்தைய trend! சொல்லப் போனால் 10 வருஷங்களுக்கு அப்பால் “இரவே.... இருளே... கொல்லாதே” இதழானது சக்கை போடு போட்டு வருகிறது! So அந்த இருண்ட, ஹாரர் பாணிக்கு ஒரு புதுவரவாய் “மூன்றாம் தினம்” black & white-ல் கலக்கிடவுள்ளது! However – லாஜிக் தேடும் நண்பர்கள் இந்த ஆல்பத்தினை காதவெளி தூரத்தில் வைத்திருப்பது நல்லது என்பேன்!

H.P.Lovectaft என்றதொரு அமெரிக்க எழுத்தாளர் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் ஒருவிதமான மாறுபட்ட திகில் நாவல்களை எழுதத் தொடங்கினார். மாமூலான பேய் – பிசாசு – ஆவி – ஆத்மா என்றெல்லாம் இல்லாது, திகிலுக்கு ஒரு அண்டவெளி அணுகுமுறையினைத் தந்து வெற்றி கண்டார்! "Cosmic Horror" என்று கொண்டாடப்பட்ட கதைகள் இவை! அதாவது இறைவனின் படைப்பில் மனுஷனானவன் ஆக அற்பமானதொரு பிறவி and எந்த நொடியிலும் மனித இனமானது நிர்மூலமாகிடக் கூடும் என்பதே அவரது concept. அதற்கு உரம் சேர்க்கும் விதமாய் விசித்திர ஜந்துக்கள்; அசாத்திய அசுரர்கள்; திகிலூட்டும் உயிரினங்கள் என பலரகப்பட்ட சமாச்சாரங்களை உருவகப்படுத்தி எழுதினார். ஒரு கட்டத்தில் இந்த பாணிக் கதைகள் செம பாப்புலர் ஆகிப் போய் ஒரு சிறு வட்டமாய் திகில் எழுத்தாளர்கள் ஒன்றுகூடி Lovecraft Circle என்றொரு அமைப்பை உருவாக்கி, இந்த ரகக் கதைகளை படைக்கவும் தொடங்கினார்கள்! இந்த Lovecraft யுனிவெர்ஸில் “The Call of Cthulhu” என்ற நாவல் செம பேமஸாம்! விக்கிப்பீடியாவுக்குப் போய் H.P.Lovecraft என்று அடித்தீர்களேயானால் வண்டி வண்டியாய் தகவல்களை அள்ளித் தரும்!

H.P.Lovecraft - 1936-ல்

On a totally different note – 1966-க்குப் போறோம்! பிரபல சர்வதேச திரைப்பட டைரக்டரான ரோமன் பொலான்ஸ்கியின் ‘Cul-de-Sac” திரைப்படம் பிரமாதமாய் சிலாகிக்கப்படுகிறது; விருதுகளை ஈட்டுகிறது! இரு கொள்ளைக்காரர்கள், சின்னதொரு தனித் தீவிலிருக்கும் ஆளரவமற்றதொரு கோட்டையில் தஞ்சம் தேடுகின்றனர். அங்கு வசிப்பதோ ஒருவித மனப்பிறழ்வு கொண்ட இங்கிலீஷ்காரரும், அவரது அழகான ப்ரெஞ்சு மனைவியும்! ஆரம்பத்தில் கொள்ளையர்கள் அந்த ஜோடியைப் பணயக் கைதிகளாக வைத்திருக்க, விரைவிலேயே அங்கொரு புதிரான, இருண்ட சக்தி தலைதூக்க ஆரம்பிக்கின்றது! இறுக்கமான சூழல்... இருண்ட சக்திகள்... மனித மனத்தின் சிதைவுகள் என்ற வட்டத்துக்குள் தடதடக்கிறது திரைப்படம்!

இப்போது H.P.Lovecraft-ன் அண்டவெளி திகிலையும்; ரோமன் பொலான்ஸ்கியின் Cul-de-sac படத்துப் பின்னணியினையும் ஒருங்கிணைத்து ஒரு செம டார்க்கான கிராபிக் நாவலை உருவாக்கினால் எவ்விதமிருக்கும்? இதோ - இந்த “மூன்றாம் தினம்” கி.நா. போலிருக்கும்!

மூன்றாம் தினம்” என்ற குறியீட்டிற்கு பைபிளில் ஒரு பொருளுண்டு! அந்த நாளில் தான் ஆண்டவர் புது உயிர்களைப் படைத்தாரென்று நம்பப்படுகிறது! சிலுவையில் அறையப்பட்டவரும் உயிர்த்தெழுந்தது அந்த மூன்றாம் நாளில் தான்! So இந்த கான்செப்டையுமே கிராபிக் நாவலுக்குள் புகுத்தி – போனெலியின் படைப்பாளிகள் களமிறக்கியுள்ள செம டார்க்கான ஆல்பமிது! துவக்கத்தில் சொன்னது போல – லாஜிக் தேடாதீர்கள் பாஸ் – இந்த இருள் பயணம் நிச்சயமாய் தெறிக்கவிடும்! And இதே முன்னுரையை புக்கிலும் தந்துள்ளோம் ; So இந்தத் தகவல்களை மனதில் இறுத்தியபடியே உங்களது வாசிப்புகளைத் துவக்கினால் would make for better readings!



ஆக சென்னை மேளா ’25-ன் வரிசை இதுவே! முழுக்க முழுக்கவே புத்தக விழா விற்பனை சார்ந்த பார்வைகளும்; அடுத்த தலைமுறையின் வாசிப்புகளை ஊக்குவிக்கும் முயற்சிகளுமே இங்கே பிரதானமாகியுள்ளது! ஒரு தீவிர சமகால காமிக்ஸ் ரசிகராக இருப்போருக்கு மே மாதத்து ஆன்லைன் புத்தக விழாவில் செம புல் மீல்ஸ் காத்துள்ளது! இம்மியும் மறுபதிப்புகளற்றதொரு pure new சாகஸ வரிசை அதற்கென இப்போதே ரெடியாகி வருகிறது! So “மறுபதிப்பே என் துணைவன்... மறுபதிப்பே என் வாழ்க்கை” என்று லயன் குழுமம் சவாரி பண்ண ஆரம்பிச்சிட்டது! என்ற கவலைகள் இந்த நொடியினில் தேவையில்லை folks! முன்னர் சொன்னதையே மறுஒலிபரப்பு பண்ணுகிறேன்! “பழசை ஆராதிப்போம்... புதுசை அரவணைப்போம்!” இரண்டுமே நமக்கு ஷத்ருக்களல்ல!



ரைட்டு... இவையே காத்துள்ள புத்தக விழாவின் 1 டஜன் வெளியீடுகள்! இவற்றோடு ரெகுலர் சந்தாத் தடத்தின் 3 இதழ்களையும் சேர்த்துக் கொண்டால் மொத்த எண்ணிக்கை 15 ஆகிறது – இந்த ஜனவரிக்கு! வேட்டிக்குள் கரப்பான் புகுந்து ஓடியாடினால் துள்ளிக் குதிக்கும் அதே பாணிகளில் இங்கே ஆபீஸில் அத்தினி பேரும் அடிக்காத பல்டிகள் எதுவும் கிடையாது! சகலத்தையும் வியாழனுக்குள் பூர்த்தி செய்து, புதுச்சந்தாக்களின் டெஸ்பாட்ச் + புத்தகவிழா டெஸ்பாட்சை நிறைவு செய்திட அத்தனை தெய்வங்களும் நமக்கு ஆற்றல் தந்திடட்டும்! Phewwwwwww !!!

Before I sign out - சென்னை புத்தக விழா சேதி !! இந்தாண்டு நமக்கான ஸ்டால் நம்பர்ஸ் : 93 & 94 !! ரொம்பவும் உள்ளே போக அவசியமின்றி, நுழைந்த சற்றைக்கெல்லாம் நம்மைப் பார்த்து விடலாம் !! So காத்திருக்கும் இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு குடும்பத்தோடு ஒரு விசிட் அடிக்க வேணுமாய் அன்போடு  கேட்டுக் கொள்கிறோம் !! புதுசு, பழசு, என 340+ டைட்டில்களோடு உங்களை எதிர்நோக்கி ஆவலாய்க் காத்திருப்போம் !!  The Welcome mat is out folks !!

ரைட்டு...மே மாத ஆன்லைன் புத்தக விழாத் திட்டமிடலினை இறுதி செய்திட ஞான் கிளம்புது !! Bye all, have a great Sunday !! See you around !! 

பின்குறிப்பு :  

சந்தாக்கள் சார்ந்த நினைவூட்டலுமே folks!

- TEX

- இளம் டைகர்

- வேதாள மாயாத்மா

என்ற 3 ஜாம்பவான்கள் முழுவண்ணத்தில் முதல் மாதமே களமிறங்கிடவுள்ளனர்! So இயன்றமட்டுக்குத் துரிதமாய் சந்தா எக்ஸ்பிரஸில் ஒரு சீட்டைப் போட்டு வைத்து விடலாமே – ப்ளீஸ்?!

And yes – இரு தவணைகளில் சந்தா செலுத்தவும் வாய்ப்புண்டு! 


61 comments:

  1. " பழமையை ஆராதிக்கும் வாசகர்களையும், சேகரிப்பாளர்களையும் target செய்திட ஒரு பக்கம் முனைகிறோமென்றால்"

    நல்ல விசயமா இருக்கே Sir, Classic கதைகளை Reprint கேட்கும் வாசகர்களை அபொதுவாக நக்கல் செய்வதுதான் நடக்கும், அவை நன்றாக விற்றாலுமே கூட, இந்த மாற்றம் நல்லது,,மகிழ்ச்சிக்குரியது

    ReplyDelete
  2. வருடத்திற்கு ஒரு மும்மூர்த்திகள் ஸ்பெஷல் வந்தால் சூப்பர் சார்

    ReplyDelete
  3. சென்னை புத்தக விழா விற்பனை சிறக்க வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  4. சூப்பர் சார்...மும்மூர்த்திகள் ஹாட் பௌண்டில்....அட்டைப்படம் தெறிக்க விடுது...
    பாதாள நகரம் அருமை....

    ஆனா இருவண்ணம்...வண்ணம்னு சொன்ன இதழ்களில் இமயத்தில் ஏற்றி விட்டீர்கள்...சூப்பர்

    அந்த சிறுவர் கதைகள் அட்டை ஈர்க்க...இப்பவே கதை சொல்ல தயாராகிட்டேன்...பீன்ஸ் கொடியில் ஜாக்கை முன்னூறு முறை ரசித்த மகனாருக்காய் ஆவலுடன் தந்தையார் வெய்ட்டிங்...அட்டை வண்ணங்கள் அதகளம்...அந்த மூன்றாவது அலிபாபா அட்டை வண்ணந்தாம் சுமாரா படுது...ஆனா நீங்க சொன்னது போல குழந்தைகளிடமே விட்டிடுவோம்....அருமை விக்ரம்

    அடுத்து எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுது...நம்ம ஹாரர் ஸ்பெசல் விவரிப்புகள்...மனம் பிறன்ற அந்த ஜோடின்னதும் நம்ம ஆங்கிள் டெர்ரி நினைவில் வராது போகலை...
    அதீத ஆவலுடன்...

    லக்கியாரின் அட்டகாச எதிர் வீட்டில் எதிரிகள் அட்டைப்படம் தூள்


    கபீஷ் சூப்பர்



    ReplyDelete
  5. லாரன்ஸ் & டேவிட் ஃப்ளைட் 731எதிர்பார்த்தேன் .பலரும் தேடிக் கொண்டிருக்கும் இதழ்.

    ReplyDelete
  6. இனிய காலை வணக்கங்கள் 💐💐💐

    ReplyDelete
  7. படித்துவிட்டு வருகிறேன்

    ReplyDelete
  8. அனைவருக்கும் வணக்கம்....

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. சென்னை புத்தகத் திருவிழாவில் மீண்டும் புதியதொரு சாதனையை ஈட்ட... வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  11. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  12. இதில் என்னிடம் இல்லாதது மற்றும் படிக்காதது அந்த ஒற்றை கிராபிக் நாவல் மட்டுமே. Waiting for MAY ஆன்லைன் புத்தக விழா. சென்னை புத்தக விழா விற்பனை சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. மும்மூர்த்திகள் ஹார்டு பவுண்டு அட்டை இந்த காம்போ சூப்பர் ஸார்.

    ReplyDelete
  14. கபிஷ் . ஓவியர் திரு . மோகன்தாஸ் சாரின் சிலாகிப்பு we all happy

    ReplyDelete
  15. 2025 சென்னை புத்தகத் திருவிழாவில் விற்பனை மற்றும் புதிய வாசகர்களிலூம் சாதனையை எட்டிட வாழ்த்துக்கள்💐💐💐💐🙏🙏

    ReplyDelete
  16. செம்ம பதிவு சார். உங்கள் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொள்கிறது. சென்னை 25 அத்தனை பழைய சாதனைகளையும் முறியடித்து புதிய சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வியாழன் அன்றே புத்தகங்கள் கிளம்பும் அடடே அப்போ வெள்ளி கிடைக்கும். செம்ம செம்ம செம்ம

    ReplyDelete
  18. புத்தகங்களின் அறிவிப்புகள் தூள் கிளப்புகிறது.

    ReplyDelete
  19. Horror கிராஃபிக் நாவல் சும்மா பட்டையை கிளப்புது சார். எல்லா புத்தகங்களையும் வாங்குவதா? இல்லை கிளாசிக் தவிர மற்ற புத்தகங்களை வாங்குவதா?

    Confusion confusion

    ReplyDelete
  20. ஒரே மாதத்தில் 15 புத்தகங்கள் இதற்கு முன்பு இது போல அதிக புத்தகங்கள் வந்த மாதம் எது? நண்பர் STV அவர்களே?

    ReplyDelete
  21. ஒரே மாதத்தில் 15 புத்தகங்கள் இதற்கு முன்பு இது போல அதிக புத்தகங்கள் வந்த மாதம் எது? நண்பர் STV அவர்களே?

    ReplyDelete
    Replies
    1. முத்து மினி காமிக்ஸ் வந்த மாதம்?

      Delete
  22. ஹய்யா... ஜாலி.. ஜாலி.. 😘🥰💐

    ஒற்றைக்கண் மர்மம்.. 😘😘😘💐

    எப்போ கிடைக்கும் சார்.. 👍💐

    ReplyDelete
  23. சார் இந்த வருடம் வந்தஆன்லைன் ஸ்பெஷல் புத்தகங்கள் மற்றும் ஈரோடு சேலம் ஸ்பெஷல் புத்தகங்கள் சென்னையில் கிடைக்குமா?

    ReplyDelete
  24. கிளாசிக் பிரியர்களுக்கு & சென்னை புத்தக விழாவில் மட்டும் காமிக்ஸ் வாங்கி படிக்கும் வாசகர்களுக்கு மும்மூர்த்திகள் ஸ்பெஷல் + லக்கி கதைகள் நல்ல விருந்து🍔🥗🍜

    தீவிர வாசகர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்க ' மூன்றாம் தினம் ' புத்தகம் சிறப்பான அறிவிப்பு🔥

    எல்லாவற்றையும் விட அடுத்த தலைமுறை காமிக்ஸ் வாசகர்களான சிறுவர்களை கவர்ந்து இழுக்க கபீஷ் & கதை சொல்லும் காமிக்ஸ் கதைகள்
    அற்புதமான தேர்வுகள்👏🥰

    மொத்தத்தில் சென்னை புத்தக விழா அறிவிப்புகள் புத்திசாலித்தனமான, அழகான, தெளிவான அறிவிப்புகள் சார்👏👏👏

    விற்பனை வழக்கத்தை விட உச்சம் தொட வாழ்த்துக்கள்💐🎊🎉

    (நமக்கு மே மாத -ஆன்லைன் புத்தக விழாவில் ஃபுல் மீல்ஸ் விருந்து காத்து உள்ளது, so no worry🙂)

    ReplyDelete
  25. ஒரே மாதத்தில் 15 வெளியீடுகளா!! பின்றீங்க எடிட்டர் சார்.. 😍😍💐💐💐

    ReplyDelete
  26. ///வேட்டிக்குள் கரப்பான் புகுந்து ஓடியாடினால் துள்ளிக் குதிக்கும் அதே பாணிகளில் இங்கே ஆபீஸில் அத்தினி பேரும் அடிக்காத பல்டிகள் எதுவும் கிடையாது! ////

    கொஞ்சம் கற்பனை பண்ணி பார்த்தேன்.. ஹி ஹி 😁😁😁😁

    ReplyDelete
  27. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. கதை சொல்லும் காமிக்ஸ் வரிசையை ரீபூட் செய்ததில் மகிழ்ச்சி சார்!

      Delete
  28. Ji, web site la, credit card மூலமாக ஆண்டு சந்தா பணம் செலுத்த முடியவில்லை.

    ReplyDelete
  29. மும்மூர்த்திகளுக்கு ஹார்ட் பவுண்டு குடுத்தது ஓகே சார், மகிழ்ச்சி. மிக சிறப்பு.

    ReplyDelete
  30. “மூன்றாம் தினம்” - ஆர்வத்தை கிளப்புகிறது .

    ReplyDelete
  31. Chennai புத்தக திருவிழா - நீங்கள் சென்னை போரீங்களா சார்? எந்த நாட்கள் என்று சொன்னால் நண்பர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட வசதியாக இருக்கும் சார்.

    ReplyDelete